பரஞ்சோதி முனிவர் அருளிய
திருவிளையாடற் புராணம்
திருவாலவாய் மான்மியம்
திருச்சிற்றம்பலம்
முதலாவது மதுரை காண்டம்
பாயிரம் முதல் பதிக படலம் வரை
¸¡ôÒ
விநாயகர் காப்பு

சத்தி யாய்ச்சிவ மாகி தனிப்பர
முத்தி யான முதலை துதிசெ
சுத்தி யாகிய சொற்பொருள் நல்குவ
சித்தி யானைதன் செய்யபொற் பாதமே
சொக்கலிங்கமூர்த்தி காப்பு

வென்றுளே புலன்க ளைந்தார் மெய்யுணர் உள்ள தோறுஞ்
சென்றுளே யமுத மூற்று திருவருள் போற்றி யேற்று
குன்றுளே யிருந்து காட்சி கொடுத்தருள் கோலம் போற்றி
மன்றுளே மாறி யாடு மறைச்சிலம் படிகள் போற்றி
அங்கயற்கண்ணம்மை காப்பு

சுரம்புமுரல் கடிமலர்ப்பூங் குழல்போற்றி
யுத்தரி தொடித்தோள் போற்றி
கரும்புருவ சிலைபோற்றி கவுணியர்க்கு
பால்சுரந்த கலசம் போற்றி
இரும்புமனங் குழைத்தென்னை யெடுத்தாண்ட
வங்கயற்கண் எம்பிராட்டி
அரும்புமிள நகைபோற்றி யாரணநூ புரஞ்சிலம்பு
மடிகள் போற்றி
நூற்பயன்

திங்களணிதிருவால வாயெம் மண்ண றிருவிளையா
டிவையன்பு செய்துகேட்போர்
சங்கநிதி பதுமநிதி செல்வ மோங்கி
தகைமை தரு மகப்பெறுவர் பகையை வெல்வர்
மங்கலநன் மணம்பெறுவர் பிணிவ தெய்தார்
வாழ்நாளு நனிபெறுவர் வானா டெய்தி
புங்கவராய் அங்குள்ள போக மூழ்கி
புண்ணியரா சிவனடிக்கீழ் நண்ணி வாழ்வார்
வாழ்த்து

மல்குக வேத வேள்வி வழங்குக சுரந்து வானம்
பல்குக வளங்கள் எங்கும் பரவுக வறங்க ளின்ப
நல்குக வுயிர்க கெல்லா நான்மறை சைவ மோங்கி
புல்குக வுலக மெல்லாம் புரவலன் செங்கோல் வாழ்க
கடவுள் வாழ்த்து
பரமசிவம்

பூவண்ணம் பூவின் மணம்போலமெ போத வின்ப
மாவண்ண மெய்கொண் டவன்றன்வலி யாணை தாங்கி
மூவண்ண றன்ச நிதிமுத்தொழில் செய்ய வாளா
மேவண்ண லன்னான் விளையாட்டின் வினையை வெல்வாம்
பராசக்தி

அண்டங்கள் எல்லாம் அணுவாக வணுக்க ளெல்லாம்
அண்டங்க ளாக பெரிதாய்ச்சிறி தாயி னானும்
அண்டங்க ளுள்ளும் புறம்புங்கரி யாயி னானும்
அண்டங்க ளீன்றா டுணையென்ப ரறிந்த நல்லோர்
சொக்கலிங்கமூர்த்தி

பூவி னாயகன் பூமக ணாயகன்
காவி னாயக னாதி கடவுளர்க்கு
ஆவி நாயகன் னங்கயற் கண்ணிமா
தேவி நாயகன் சேவடி யேத்துவாம்
அங்கயற்கண்ணம்மை

பங்கயற்க ணரியபாம் பரனுருவே தனக்குரிய படிவமாகி
இங்கயற்க ணகனுலக மெண்ணிறந்த சராசரங்கள் ஈன்று தாழா
கொங்கயற்கண் மலர்க்கூந்தற் குமரிபாண்டியன்மகள் போற் கோலங் கொண்ட
அங்கயற்க ணம்மையிரு பாதப்போ தெப்போது மகத்துள் வைப்பாம்
நடேசர்

உண்மையறி வானந்த வுருவாகி வெவ்வுயிர்க்கு முயிராய் நீரின்
தண்மையனல் வெம்மையென தனையகலா திருந்துசரா சரங்க ளீன்ற
பெண்மையுரு வாகியதன் னாநந்த கொடிமகிழ்ச்சி பெருக யார்க்கும்
அண்மையதா யம்பலத்து ளாடியருள் பேரொளியை யகத்துள் வைப்பாம்
சௌந்தரபாண்டியர்

சடைமறைத்து கதிர்மகுட தரித்துநறுங் கொன்றையந்தார் தணந்துவேப்ப
தொடைமுடித்து விடநா கலனகற்றி மாணிக்க சுடர்ப்பூ ணேந்தி
விடைநிறுத்தி கயலெடுத்து வழுதிமரு மகனாகி மீன நோக்கின்
மடவாலை மணந்துலக முழுதாண்ட சுந்தரனை வணக்கஞ் செய்வாம்
தடாதகை பிராட்டியார்

செழியர்பிரான் திருமகளா கலைபயின்று முடிபுனைந்து செங்கோ லோச்சி
முழுதுலகுஞ் சயங்கொண்டு திறைகொண்டுந்திகண முனைப்போர் சாய்த்து
தொழுகணவற் கணிமணமா லிகைசூட்டி தன்மகுடஞ் சூட்டி செல்வ
தழைவுறுதன் னரசளித்த பெண்ணரசி யடிக்கமல தலைமேல் வைப்பாம்
கான் மாறி நடித்தவர்

பொருமாறிற் கிளர்தடந்தோள் ஒருமாறன் மனங்கிடந்த புழுக்க மாற
வருமாறிற் கண்ணருவி மாறாது களிப்படைய மண்ணும் விண்ணும்
உருமாறி பவக்கடல்வீழ தூசலென தடுமாறி யுழலு மாக்கள்
கருமாறி கதியடை கான்மாறி நடித்தவரை கருத்துள் வைப்பாம்
தஷிணாமூர்த்தி

கல்லாலின் புடையமர்ந்து நான்மறையா றங்கமுதற் கற்ற கேள்வி
வல்லார்க ணால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்க பாலாய்
எல்லாமாய் அல்லதுமா யிருந்ததனை யிருந்தபடி யிருந்து காட்டி
சொல்லாமற்சொன் னவரை நினையாமனினை துபவ தொடக்கை வெல்வாம்
சித்தி விநா கடவுள்

உள்ளமெனுங் கூடத்தில் ஊக்கமெனு தறிநிறுவி யறுதியாக
தள்ளரிய வன்பென்னு தொடர்பூட்டி யிடை படுத்தி தறுக பாச
கள்ளவினை பசுபோத கவளமிட களித்துண்டு கருணையென்னும்
வெள்ளமதம் பொழிசித்தி வேழத்தை நினைந்து வருவினைக டீர்ப்பாம்
சுப்பிரமணி கடவுள்

கறங்குதிரை கருங்கடலுங் காரவுண பெருங்
கடலுங் கலங கார்வ
துறங்குசிகை பொருப்புஞ்சூ ருரப்பொருப்பும்
பிளப்பமறை யுணர்ந்தோராற்றும்
அறங்குலவு மகத்தழலு மவுணமட வார்வயிற்றி னழலும் மூள
மறங்குலவு வேலெடுத்த குமரவேள் சேவடிகள் வணக்கம் செய்வாம்
சரசுவதி

பழுதகன்ற நால்வகை சொன் மலரெடுத்து
பத்திபட பரப்பி திக்கு
முழுதகன்று மணந்துசுவை யொழுகியணி பெற
முக்கண்
மூர்த்தி தாளிற்
றொழுதகன்ற வன்பெனுநார் தொடுத்தலங்கல்
சூட்டவரி
சுரும்பு தேனும்
கொழுதகன்ற வெண்டோட்டு முண்டக தாளடி
முடி
மேற்கொண்டு வாழ்வாம்
திருநந்தி தேவர்

வந்திறை யடியிற் றாழும் வானவர் மகுட கோடி
பந்தியின் மணிகள் சிந்த வேத்திர படையாற் றாக்கி
அந்தியும் பகலும் தொண்ட ரலகிடுங் குப்பை யாக்கும்
நந்தியெம் பெருமான் பாத நகைமலர் முடிமேல் வைப்பாம்
திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார்

கடியவிழ் கடுக்கை வேணி தாதைபோற் கனற்கண் மீன
கொடியனை வேவ நோக்கி குறையிர தனையான் கற்பிற்
பிடியன நாயனார் வேண்ட பின்னுயி ரளித்து காத்த
முடியணி மாட காழி முனிவனை வணக்கஞ் செய்வாம்
திருநாவுக்கரசு நாயனார்

அறப்பெருங் செல்வி பாக தண்ணலஞ் செழுத்தா லஞ்சா
மறப்பெருஞ் செய்கை மாறா வஞ்சகர் இட்டநீல
நிறப்பெருங் கடலும் யார்க்கும் நீந்துதற் கரிய வேழு
பிறப்பெனுங் கடலு நீத்த பிரானடி வணக்கஞ் செய்வாம்
சுந்தர மூர்த்தி நாயனார்

அரவக லல்கு லார்பா லாசைநீ தவர்க்கே வீடு
தருவமென் றளவில் வேதஞ் சாற்றிய தலைவன் றன்னை
பரவைதன் புலவி தீர்ப்பான் கழுதுகண் படுக்கும் பானாள்
இரவினிற் றூது கொண்டோன் இணையடி முடிமேல் வைப்பாம்
மாணிக்கவாசக சுவாமிகள்

எழுதரு மறைக டேறா விறைவனை யெல்லிற் கங்குற்
பொழுதறு கால தென்றும் பூசனை விடாது செய்து
தொழுதகை தலைமே லேற துளும்புகண் ணீருண் மூழ்கி
அழுதடி யடைந்த வன்பன் அடியவர கடிமை செய்வாம்
சண்டேசுர நாயனார் முதலிய திருத்தொண்டர்

தந்தைதா ளடும்பிறவி தாளெறிந்து
நிருத்தர்இரு தாளை சேர்ந்த
மைந்தர்தாள் வேதநெறி சைவநெறி பத்திநெறி
வழாது வாய்மெய்
சிந்தைதா னரனடிக்கே செலுத்தினரா
சிவானுபவ செல்வ ராகி
பந்தமா தொடக்கறுத்த திருத்தொண்டர்
தாள்பரவி பணிதல் செய்வாம்
கடவுள் வாழ்த்து சுபம்
பாயிரம்
முதனூல்

அண்ணல்பாற் றெளிந்த நந்தி யடிகள்பாற் சனற்கு மாரன்
உண்ணிறை யன்பி னாய்ந்து வியாதனு குணர்த்த வந்த
புண்ணிய முனிவன் சூதற் கோதிய புராண மூவா
றெண்ணிய விவற்று காந தீசசங் கிதையின் மாதோ
நூல் யாத்தற்கு காரணம்

அறைந்திட பட்ட தாகு மாலவா புகழ்மை யந்த
சிறந்திடும் வடநூல் தன்னை தென்சொலாற் செய்தி யென்றிங்
குறைந்திடும் பெரியோர் கூற கடைப்பில துறுதி யிந்த
பிறந்திடும் பிறப்பி லெய்த பெறுதுமென் றுள்ள தேறோ
மொழி பெயர்த்த முறை

திருநகர் தீர்த்த மூர்த்தி சிறப்புமூன் றந்த மூர்த்தி
அருள்விளை யாட லெட்டெ டருச்சனை வினையொன் றாக
வரன்முறை யறுப தெட்டா மற்றவை படல மாக
விரிமுறை விருத்த செய்யுள் வகைமையால் விளம்ப லுற்றேன்
பாயிரம் சுபம்
அவையடக்கம்

நாயகன் கவிக்குங் குற்ற நாட்டிய கழக மாந்தர்
மேயவ தலத்தி னோர்கென் வெள்ளறி வுரையிற் குற்றம்
ஆயுமா றரிதன் றேனு நீர்பிரி தன்ன முண்ணு
தூயதீம் பால்போற் கொள்க சுந்தரன் சரித தன்னை

கவைக்கொ ழுந்தழனா சுவை கண்டவூனிமையோர்
சுவைக்க விண்ணமு தாயினம் துளக்கமில் சான்றோர்
அவைக்க ளம்புகு தினியவா யாலவா யுடையார்
செவிக்க ளம்புகு தேறுவ சிறியனேன் பனுவல்

பாய வாரியுண் டுவர்கெடு துலகெலாம் பருக
தூய வாக்கிய காரென சொற்பொருள் தெளிந்தோர்
ஆய கேள்வியர் துகளறு தாலவா யுடைய
நாய னார்க்கினி தாக்குப நலமிலேன் புன்சொல்

அல்லை யீதல்லை யீதென மறைகளு ம்அன்மை
சொல்லி னாற்றுதி திளைக்குமி சுந்தர னாடற்
கெல்லை யாகுமோ வென்னுரை யென்செய்கோ விதனை
சொல்லு வேனெனு மாசை யென் சொல்வழி கேளா

அறுகாற்பீ டத்துயர்மால் ஆழிகடை தமுதையரங் கேற்று மாபோல்
அறுகாற்பே டிசைபாடுங் கூடன்மான் மியத்தையரு தமிழாற் பாடி
அறுகாற்பீ டுயர்முடி யார் சொக்கேசர் சந்நிதியி லமர சூழும்
அறுகாற்பீ டத்திருந்து பரஞ்சோதி முனிவனரங் கேற்றி னானே
அவையடக்கம் சுபம்
பாண்டி திருநாட்டு படலம்

கறைநி றுத்திய கந்தர சுந்தர கடவுள்
உறைநி றுத்திய வாளினாற் பகையிரு ளதுக்கி
மறைநி றுத்திய வழியினால் வழுதியா செங்கோன்
முறைநி றுத்திய பாண்டிநா டணியது மொழிவாம்

தெய்வ நாயகன் நீறணி மேனிபோற் சென்று
பௌவ மேய்ந்துமை மேனிபோற் பசந்துபல் லுயிர்க்கும்
எவ்வ மாற்றுவான் சுரந்திடு மின்னரு ளென்ன
கௌவை நீர்சுர தெழுந்தன கனைகுரல் மேகம்

இடித்து வாய்திற தொல்லென வெல்லொளி மழுங்க
தடித்து வாள்புடை விதிர்த்துநின் றுஇந்திர சாபம்
பிடித்து நீளம்பு கோடைமேற் பெய்துவெம் பெரும்போர்
முடித்து நாமென வருதல்போன் மொய்த்தன கொண்மூ

முனித னீள்வரை யுச்சிமேன் முழங்கிவா னிவந்து
தனித நீர்மழை பொழிவன தடஞ்சிலை யிராமன்
கனித னீர்மையா லாலவா கண்ணுதல் முடிமேற்
புனித நீர்த்திரு மஞ்சனம் ஆட்டுவான் போலும்

சுந்த ரன்றிரு முடிமிசை தூயநீ ராட்டும்
இந்தி ரன்றனை யொத்தகா ரெழிழிதென் மலைமேல்
வந்து பெய்வல தனிமுதன் மௌலிமேல் வலாரி
சிந்து கின்றகை போதென பன்மணி தெறிப்ப

உடுத்த தெண்கடன் மேகலை யுடையபார் மகள்தன்
இடத்து தித்தபல் லுயிர்க்கெலா மிரங்கித்தன் கொங்கை
தடத்து நின்றிழி பாலென தடவரை முகடு
தொடுத்து வீழ்வன விழுமென தூங்குவெள் ளருவி

கருநிற மேக மென்னுங் கச்சணி சிகர கொங்கை
அருவியா தீம்பால் சோர வகன்சுனை யென்னுங் கொப்பூழ
பொருவில்வே யென்னு மென்றோ பொதியமாஞ் சைல பாவை
பெருகுதண் பொருநை யென்னும் பெண்மக பெற்றாள் அன்றே

கல்லென கரைந்து வீழுங் கரும்புனற் குழவி கான
தொல்லென தவழ்ந்து தீம்பா லுண்டொரீஇ திண்டோண் மள்ளர்
சொல்லென தெழிக்கும் பம்பை தீங்குரல் செவிவா தேக்கி
மெல்லென காலிற் போகி பணைதொறும் விளையாட்டு எய்தி

அரம்பைமென் குறங்கா மாவி னவிர்தளிர் நிறமா தெங்கின்
குரும்பைவெம் முலையா வஞ்சி கொடியிரு நுசுப்பா கூந்தல்
சுரும்பவிழ் குழலா கஞ்சஞ் சுடர்மதி முகமா கொண்டு
நிரம்பிநீள் கைதை வேலி நெய்தல்சூழ் காவில் வைகி

பன்மலர் மாலை வேய்ந்து பானுரை போர்வை போர்த்து
தென்மலை தேய்ந்த சாந்த மான்மத சேறு பூசி
பொன்மணி யார தாங்கி பொருநையாங் கன்னி முந்நீர
தன்மகிழ் கிழவ னாக தழீஇகொடு கலந்த தன்றே

வல்லைதா யிருபால் வைகுஞ் சிவாலய மருங்கு மீண்டு
முல்லையா னைந்து தேனு திரைக்கையான் முகந்து வீசி
நல்லமான் மதஞ்சா தப்பி நறுவிரை மலர் தூய் நீத்தஞ்
செல்லலாற் பூசை தொண்டின் செயல்வினை மாக்கள் போலும்

அரும்பவி ழனங்க வாளி யலைதர வாகம் பொன்போர
திரங்கிவா லன்ன மேங்கதி யிருகையும் சங்கஞ் சிந்தி
மசுங்குசூழ் காஞ்சி தன்னவரம்பிற வொழுகும் மாரி
பரம்பரற் கையம் பெய்யும் பார்ப்பன மகளிர் போலும்

வரைபடு மணியும் பொன்னும் வைரமும் குழையும் பூட்டி
அரைபடு மகிலுங் சாந்து மப்பியின் னமுத மூட்டு
கரைபடு மருத மென்னும் கன்னியை பருவ நோக்கி
திரைபடு பொருநை நீத்தஞ் செவிலிபோல் வளர்க்கு மாதோ

மறைமுதற் கலைக ளெல்லா மணிமிடற் றவனே யெங்கும்
நிறைபர மென்றும் பூதி சாதனநெறி வீடென்றும்
அறைகுவ தறிந்து தேறா ரறிவென கலங்கி யங்கி
முறையின்வீ டுணர்ந்தோர் போல தெளிந்தது மூரி வெள்ளம்

மறைவழி கிளைத்த வெண்ணெண் கலைமகள் போல் வருநீர் வெள்ள
துறைவழி யொழுகும் பல்கால் சோலைதண் பழனஞ் செய்தேன்
உறைவழி யோடை எங்கு மோடிமன் றுடையார கன்பர்
நிறைவழி யாத வுள்ள தன்புபோ னிரம்பிற் றன்றே

இழிந்த மாந்தர்கை பொருள்களும் இகபர தாசை
கழிந்த யோகியர் கைப்படிற் றூயவா களங்கம்
ஒழிந்த வாறுபோ லுவரியுண் டுவர்கெடு தெழிலி
பொழிந்த நீரமு தாயின புவிக்கும்வா னவர்க்கும்

ஈறி லாதவள் ஒருத்தியே யைந்தொழி லியற்ற
வேறு வேறுபேர் பெற்றென வேலைநீ ரொன்றே
யாறு கால்குளங் கூவல்குண் டகழ்கிடங் கெனப்பேர்
மாறி யீறில்வான் பயிரெலாம் வளர்ப்பது மாதோ

களமர்கள் பொன்னேர் பூட்டி தாயர்வா கனிந்த பாடற்
குளமகிழ் சிறாரி னேறு மொருத்தலு முவகை தூங்க
வளமலி மருதம் பாடி மனவலி கடந்தோர் வென்ற
அளமரு பொறிபோ லேவ லாற்றவள் வினையின் மூண்டார்

பலநிற மணிகோ தென்ன பன்னிற வேறு பூட்டி
அலமுக விரும்புதேய வாள்வினை கருங்கான் மள்ளர்
நிலமகள் உடலங் கீண்ட சால்வழி நிமிர்ந்த சோரி
சலமென நிவந்த நெங்கேழ தழன்மனி யிமைக்கு மன்னோ

ஊறுசெய் படைவாய் தேய வுழுநரு நீர்கால் யாத்து
சேறுசெய் குநரு தெய்வம் தொழுதுதீஞ் செந்நெல் வீசி
நாறுசெய் குநரும் பேர்த்து நடவுசெய் குநரு தெவ்வின்
மாறுசெய் களைகட்டோம்பி வளம்படு குநரும் ஆனார்

பழிபடு நறுவ தன்னை கடைசியர் பருகி செவ்வாய்
மொழி தடுமாற வேர்வை முகத்தெழ முறுவல் தோன்ற
விழிசிவ துழல கூந்தன் மென்றுகில் சோர வுள்ள
கழிபெருங் களிப்பு நல்கி கலந்தவ ரொத்த தன்றே

பட்பகையாகு தீஞ்சொற் கடைசியர் பவள செவ்வா
குட்பகை யாம்ப லென்று மொண்ணறுங் குவளை நீலங்
கட்பகை யாகு மென்றுங் கமலநன் முகத்து கென்றும்
திட்பகை யாகு மென்றுங் செறுதல்போற் களைதல் செய்வார்

கடைசியர் முகமும் காலும் கைகளும்கமல மென்னார்
படைவிழி குவளை யென்னார் பவளவாய் குமுத மென்னார்
அடையவுங் களைந்தார் மள்ளர் பகைஞரா யடுத்த வெல்லை
உடையவ னாணை யாற்றா லொறுப்பவர குறவுண் டாமோ

புரையற வுணர்ந்தோர் நூலின் பொருளினுள் ளடங்கி யந்நூல்
வரையறை கருத்து மான வளர்கரு புறம்பு தோன்றி
கரையமை கல்வி சாலா கவிஞர்போ லிறுமாந்து அந்நூல்
உரையென விரிந்து கற்பின் மகளிர்போ லொசிந்த தன்றே

அன்புறு பத்தி வித்தி யார்வநீர் பாய்ச்சு தொண்டர
கின்புரு வான வீச னின்னருள் விளையு மாபோல்
வன்புறு கருங்கான் மள்ளர் வைகலுஞ் செவ்வி நோக்கி
நன்புல முயன்று காக்க விளைந்தன நறுந்தண் சாலி

அகனில வேறு பாட்டின் இயல்செவ்வி யறிந்து மள்ளர்
தகவினை முயற்சி செ காமநூல் சாற்று நான்கு
வகைநலார் பண்புசெல்வி யறிந்துசேர் மைந்தர கின்பம்
மிகவிளை போகம் போன்று விளைந்தன பைங்கூ ழெல்லாம்

கொடும்பிறை வடிவிற் செய்த கூனிரும் பங்கை வாங்கி
முடங்குகால் வரிவண் டார்ப்ப முள்ளரை கமல நீலம்
அடங்கவெண் சாலி செந்நெல் வேறுவே றரிந்தீடாக்கி
நெடுங்கள தம்பொற் குன்ற நிரையென பெரும்போர் செய்தார்

கற்றைவை களைந்து தூற்றி கூப்பியூர காணி தெய்வம்
அற்றவர கற்ற வாறுஈ தளவைகண் டாறி லொன்று
கொற்றவர் கடமை கொள்ள பண்டியிற் கொடு போ தென்னா
டுற்றவர் சுற்ற தெய்வம் விருந்தினர கூட்டியுண்டார்

சாறடு கட்டி யெள்ளு சாமைகொள் ளிறுங்கு தோரை
ஆறிடு மதமால் யானை பழுக்குலை யவரை யேனல்
வேறிபல் பயறோ டின்ன புன்னில விளைவு மற்றும்
ஏறோடு பண்டி யேற்றி யிருநிலங் கிழிய வுய்ப்பார்

துறவின ரீச சேனச தொண்டினர் பசிக்கு நல்லூண்
டிறவினை பிணிக்கு தீர்க்கு மருந்துடற் பனிப்பு காடை
உறைவிடம் பிறிது நல்கி யவரவ ரொழிகி செய்யும்
அறவினை யிடுக்க ணீக்கி யருங்கதி யுய்க்க வல்லார்

நிச்சலு மீச னன்பர் நெறிப்படிற் சிறார்மேல் வைத்த
பொச்சமில் அன்பு மன்னர் புதல்வரை கண்டாலன்ன
அச்சமுங் கொண்டு கூசி யடிபணி தினிய கூறி
இச்சையா றொழுகி யுள்ள குறிப்பறி தேவல் செய்வார்

நறைபடு கனிதேன் பெய்த பாலொடு நறுநெய் வெள்ளம்
நிறைபடு செம்பொன் வண்ண புழுக்கலா னிமிர்ந்த சோறு
குறைவற வுண்டு வேண்டும் பொருள்களும் கொண்மி னென்ன
மறைமுத லடியார் தம்மை வழிமறி தருத்துவார்கள்

பின்னெவ னுரைப்ப தந்த பெருந்தமிழ் நாடாங்கன்னி
தன்னிடை யூர்க ளென்னு மவயவ தாங்க செய்த
பொன்னியற் கலனே கோயின் மடமற புறநீர சாலை
இன்னமு தருத்து சாலை யெனவுரு தரித்த தம்மா

இன்ற டம்புனல் வேலிசூழ் இந்நில வரைப்பிற்
குன்ற முல்லைதண் பணைநெய்தல் குலத்தினை நான்கும்
மன்ற வுள்ளமற் றவைநிற்க மயங்கிய மரபின்
ஒன்றோ டொன்றுபோய் மயங்கிய திணைவகை யுரைப்பாம்

கொல்லை யானிரை மேய்ப்பவர் கோழிணர குருந்தின்
ஒல்லை தாயதிற் படர் கறி கருந்துண ருகுப்ப
முல்லை சோறென தேன்விராய் முத்திழை சிற்றில்
எல்லை யாயமோ டாடுப வெயின்சிறு மகளிர்

கன்றோ டுங்களி வண்டுவாய் நக்கவீர்ங் கரும்பு
மென்று பொன்சொரி வேங்கைவா யுறங்குவ மேதி
குன்றி ளந்தினை மேய்ந்துபூங் கொழுநிழன் மருதஞ்
சென்று தங்குவ சேவகம் எனமுற செவிமா

எற்று தெண்டிரை யெறிவளை யெயிற்றியர் இழைத்த
சிற்றில் வாய்நுழை தழிப்பவ சிறுமியர் வெகுண்டு
பற்றி லாரென சிதறிய மனவணி பரதர்
முற்றி லாமுலை சிறுமியர் முத்தொடும் கோப்ப

முல்லை வண்டுபோய் முல்லையாழ் முளரிவாய் மருதம்
வல்ல வண்டினை பயிற்றிப்பின் பயில்வன மருதங்
கொல்லை யான்மடி யெறிந்திளங் குழவியென்று இரங்கி
ஒல்லை யூற்றுபால் வெள்ளத்து ளுகள்வன வாளை

கரும்பொற் கோட்டிளம் புன்னைவா கள்ளுண்டு காளை
சுரும்பு செவ்வழி பாண்செ கொன்றைபொன் சொரிவ
அருந்த டங்கடல் வளையெடுத்து ஆழியான் கையில்
இருந்த சங்கென விறைகொள பூவைமே லெறிவ

கழிந்த தெங்கினொண் பழம்பரீஇ முட்பலா கனிகீண்
டழிந்த தேனுவர கேணிபா தகற்றுவ வுவரை
வழிந்த தேன்மடற் கேதகை மலர்நிழல் குருகென்
றொழிந்த தாமரை போதுபுக்கு ஒளிப்பன கெண்டை

ஆறு சூழ்கழி புலால்பொறா தசைந்துகூன் கைதை
சோறு கால்வன வாம்பல்வாய் திறப்பன துணிந்து
கூறு வாரென குவளைகண் காட்டிட கூடி
தூறு வாரென சிரித்துஅலர் தூற்றவ முல்லை

துள்ளு சேல்விழி நுளைச்சியர் சுறவொடு மருந்த
கள்ளு மாறவும் கூனலங்காய் தினை யவரை
கொள்ளு மாறவுங் கிழங்குதேன் கொழுஞ்சுவை கன்னல்
எள்ளு மாறவும் அளப்பன விடைக்கிடை முத்தம்

அவமி கும்புல பகைகட துயிர்கெலா மன்பாம்
நவமி குங்குடை நிழற்றிமெ செய்யகோ னடாத்தி
சிவமி கும்பர ஞான மெ திருவொடும் பொலிந்து
தவமி ருந்துஅர சாள்வது தண்டமிழ பொதியம்

வான யாறுதே துயரிய மலயமே முக்கண்
ஞான நாயக னம்மலை போர்த்தகார் நால்வாய்
ஆனை யீருரு யம்மழை யசும் பதன் புண்ணீர்
கூனல் வான்சிலை குருதிதோய் கோடுபோன்று அன்றே

சுனைய கன்கரை சூழல்வா சுரும்புசூழ் கிடப்ப
நனைய விழ்ந்தசெங் காந்தண்மேல் நாகிள வேங்கை
சினைய விழ்ந்தவீ கிடப்பபொன் றோய்கல தெண்ணீர்
அனைய பொன்சுடு நெருப்பொடு கரியிரு தனைய

குண்டுநீர்ப்படு குவளைவா கொழுஞ்சினை மரவம்
வண்டு கூப்பிட செம்மறூ புதுமது வார்ப்ப
அண்டர் வாய்ப்பட மறைவழி பொரிசொரி துஆனெய்
மொண்டு வாக்கிமு தீவினை முடிப்பவ ரனைய

அகிலு மாரமு தழன்மடு தகழ்ந்தெறி தழல்கால்
துகிரு மாரமு தொட்டெறி தைஐவனம் தூவி
புகரின் மால்கரி மருப்பினால் வேலிகள் போக்கி
இகலில் வான்பயிர் ஓம்புவ வெயினர்தஞ் சீறூர்

அண்ட வாணருக்கு இன்னமு தருத்துவோர் வேள்வி
குண்ட வாரழற் கொழும்புகை கோலு குன்றிற்
புண்ட வாதவே லிறவுளர் புனத்தெரி மடுப்ப
உண்ட காரகிற் றூமமு மொக்கவே மயங்கும்

கருவி வாள் சொரி மணிகளுங் கழைசொரி மணியும்
அருவி கான்றபன் மணிகளு மகன்றலை நாக
திரவி கான்றெசெம் மணிகளும் புனங்கவ ரினமான்
குருவி வீழ்ந்திட கொடிச்சியர் கோத்துஎறி கவண்கல்

மாய வன்வடி வாயது வையமால் உந்தி
சேய மங்கய மாயது தென்னனா டலர்மேற்
போய மென்பொகு டாயது பொதி பொகுட்டின்
மேய நான்முக னகத்தியன் முத்தமிழ் வேதம்

ஏக மாகிய மேருவும் பொதியமே யிரும்பொன்
ஆகு மேருவை சூழ்ந்தசாம் பூநத யாறும்
நாக ராடுதண் பொருநையே நாவலா றுடுத்த
போக பூமியும் பெருநைசூழ் பூமியே போலும்

சிறந்த தண்டமிழ் ஆலவாய் சிவனுல கானாற்
புறந்த யங்கிய நகரெலாம் புரந்தரன் பிரமன்
மறந்த யங்கிய நேமியோ னாதிய வானோர்
அறந்த யங்கிய வுலகுரு வானதே யாகும்

வளைந்த நுண்ணிடை மடந்தையர் வனமுலை மெழுகி
களைந்த குங்கு கலவையுங் காசறை சாந்தும்
அளைந்த தெண்டிரை பொருநையோ வந்நதி ஞாங்கர்
விளைந்த செந்நெலுங் கன்னலு வீசும் அவ் வாசம்

பொதியி லேவிளை கின்றன சந்தனம் பொதியின்
நதியி லேவிளை கின்றன முத்த நதிசூழ்
பதியி லேவிளை கின்றன தரு பதியோர்
மதியி லேவிளை கின்றன மறைமுதற் பத்தி

கடுக்க வின்பெறு கண்டனு தென்றிசை நோக்கி
அடுக்க வந்துவ தாடுவான் ஆடலி னிளைப்பு
விடுக்க வாரமென் காறிரு முகத்திடை வீசி
மடுக்க வுந்தமிழ் திருச்செவி மாந்தவு மன்றோ

விடையு கைத்தவன் பாணினி கிலக்கண மேனாள்
வடமொ ழிக்குரை தாங்கியன் மலயமா முனிக்கு
திடமு றுத்தியம் மொழிக்கெதிர் அக்கிய தென்சொன்
மடம கட்காங் கென்பது வழுதிநா டன்றோ

கண்ணு தற்பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து
பண்ணு றத்தெரிந்து ஆய்ந்தவி பசுந்தமி ழேனை
மண்ணி டைச்சில விலக்கண வரம்பிலா மொழிபோல்
எண்ணி டை பட கிடந்ததா வெண்ணவும் படுமோ

தொண்டர் நாதனை தூதிடை விடுத்தலும் முதலை
உண்ட பாலனை யழைத்தது மெலும்புபெண் ணுருவா
கண்ட தும்மறை கதவினை திறந்துங் கன்னி
தண்ட மிழ்சொலோ மறுபுல சொற்களோ சாற்றீர்

வெம்மை யால்விளை வ·கினும் வேந்தர்கோல் கோடி
செம்மை மாறினும் வறுமைநோய் சிதைப்பினுஞ் சிவன்பாற்
பொய்மை மாறிய பத்தியும் பொலிவுகுன் றாவா
தம்மை மாறியும் புரிவது தருமம் அந்நாடு

உலகம் யாவையு மீன்றவ ளும்பரு ளுயர்ந்த
திலக நாயகி பரஞ்சுடர் சேயென மூன்று
தலைவ ரான்முறை செய்தநா டி·தன்றி சல்தி
சுலவு பாரினுண் டாகுமோ துறக்கத்தும் அ·தே
பாண்டி திருநாட்டு படலம் சுபம்
மதுரை திருநகர படலம்

மங்க லம்புனை பாண்டிநா டாகிய மகட்கு
சங்க லம்புனை தோளிணை தடமுலை யாதி
அங்க மாம்புற தழுவிய நகரெலா மனைய
நங்கை மாமுக மாகிய நகர்வளம் பகர்வாம்

கொங்கை யேபரங் குன்றமுங் கொடுங்குன்றுங் கொப்பூழ்
அங்க மேதிரு சுழியல்அவ் வயிறுகுற் றாலஞ்
செங்கை யேடக மேனியே பூவண திரடோள்
பொங்கர் வேய்வன திருமுக மதுரையாம் புரமே

வடுவின் மாநில மடந்தைமார் பிடைக்கிட திமைக்க
படுவில் ஆரமே பாண்டிநா டாரமேற் பக்க
திடுவின் மாமணி யதன்புற நகரெலா மிவற்றுள்
நடுவி னாயக மாமணி மதுரைமா நகரம்

திரும கட்கொரு தாமரை கூடமே திருமான்
மரும கட்குவெண் டாமரை மாடமே ஞான
தரும கட்கியோ கத்தனி பீடமே தரையாம்
பெரும கட்குஅணி திலகமே யானதி பேரூர்

திக்கும் வானமும் புதையிரு டின்றுவெண் சோதி
கக்கு மாளிகை நிவப்புறு காட்சி நகருள்
மிக்க வாலிதழ தாமரை வெண்மகள் இருக்கை
ஒக்கு மல்லது புகழ்மக ளிருக்கையு மொக்கும்

நெற்க ரும்பென கரும்பெலா நெடுங்கமு கென்ன
வர்க்க வான்கமு கொலிகலி தெங்கென வளர்ந்த
பொற்க வின்குலை தெங்குகார பந்தரை பொறுத்து
நிற்க நாட்டிய காலென நிவந்ததண் பணையே

சிவந்த வாய்க்கருங் கயற்கணாள் வலாரியை சீறி
கவர்ந்த வான்றரு குலங்களே கடிமணம் வீசி
உவந்து வேறுபல் பலங்களும் வேண்டினர குஉதவி
நிவந்த காட்சியே போன்றது நிழன்மலர சோலை

ஒல்லொ லிக்கதிர சாவிகள் புறந்தழீஇ யோங்க
மெல்லி லைப்பகங் கொடியினால் வீக்குறு பூகம்
அல்லெ னுங்கள தண்ணற னணிவிழா தருப்பை
புல்லொ டும்பிணி புண்டபொற் கொடிமரம் போலும்

சீத வேரியுண்டு அளிமுரல் கமலமேற் செருந்தி
போத வேரியு மலர்க்களுஞ் சொரிவன புத்தேள்
வேத வேதியர் செங்கரம் விரித்துவாய் மனுக்கள்
ஓத வேமமு முதகமு முதவுவா ரனைய

விரைசெய் பங்க சேக்கைமேற் பெடையொடும் விரவி
அரச வன்னநன் மணஞ்செய வம்பு பொய்கை
திரைவ ளைக்கையா னுண்டுளி செறிந்தபா சடையாம்
மரக தக்கல தரளநீ ராஞ்சனம் வளைப்ப

இரும்பின் அன்னதோள் வினைஞரார தெறிந்துவாய் மடுக்குங்
கரும்பு தின்றிடி யேற்றொலி காட்டியின் சாறு
சுரும்பு சூழ்கிட தாற்றிட சொரிந்துவெஞ் சினத்தீ
அரும்பு கட்களி றொத்தன வாலையெ திரங்கள்

பள்ள நீர்குடை தஞ்சிறை பாசிபோர்த்து எழுந்த
வெள்ளை யன்னத்தை காரன மெனப்பெடை வீழ்ந்த
உள்ள மீட்டல மரச்சிற குதறியுள் ளன்பு
கொள்ள வாசையிற் றழீஇக்கொடு குடம்பைசென் றணையும்

இரவி யாழியொன் றுடையதே ரீர்த்தெழும் இமையா
புரவி நாநிமிர தயில்வன பொங்கர்வா தளிர்கள்
கரவி லார்மக தெழுபுகை கற்பக நாட்டிற்
பரவி வாட்டுவ பனியென பங்க பொய்கை

பிறங்கு மாலவா யகத்துளெம் பிரான்அரு ளால்வ
தறங்கொ டீர்த்தமா யெழுகட லமர்ந்தவா நோக்கி
கறங்கு தெண்டிரை பெரும்புற கடலும்வ திவ்வூர
புறங்கி டந்ததே போன்றது புரிசைசூழ் கிடங்கு

எறியும் வாளையு மடிக்கடி யெழுந்துடல் பரப்பி
பறியு மாமையும் வாளடு கேடகம் பற்றி
செறியு நாண்மலர் அகழியுஞ் சேண்டொடு புரிசை
பொறியு மேயொன்றி யுடன்றுபோர் புரிவன போலும்

கண்ணி லாதவெங் கூற்றென கராங்கிட தலைப்ப
மண்ணி னாரெவ ரேனுமிம் மடுவிடை வீழ்ந்தோர்
தெண்ணி லாமதி மிலைந்தவர கொப்பென சிலரை
எண்ணி னார்இரு ணரகநீ தேறினு மேறார்

குழிழ லர்ந்தசெ தாமரை கொடிமுகிழ் கோங்கின்
உமிழ்த ரும்பா ஞானமுண் டுமிழ்ந்தவாய் வே
தமிழ றிந்துவை திகமுடன் சைவமு நிறுத்தும்
அமிழ்த வெண்டிரை வைகையும் ஒருபுற தகழாம்

பிள்ளை யும்பெடை யன்னமுஞ் சேவலும் பிரியா
கள்ள முண்டக செவ்வியாற் கண்டவர் கண்ணும்
உள்ள முந்திரும் பாவகை சிறைப்படுத்து ஓங்கும்
புள்ள லம்புதண் கிடங்கிது புரிசையை புகல்வாம்

மாக முந்திய கடிமதில் மதுரைநா யகர்கை
நாக மென்பதே தேற்ற நகர்மதில் விழுங்கி
மேக நின்றசை கின்றதவ் வெஞ்சின பணிதன்
ஆக மொன்றுதோ லூரிபட நெளிவதே யாகும்

புரங்க டந்தபொற் குன்றுகோ புரமென சுருதி
சிரங்க டந்தவர் தென்னரா யிருந்தனர் திருந்தார்
உரங்க டந்திட வேண்டினும் உதவிசெய் தவரால்
வரங்க டந்திட பெறவெதிர் நிற்பது மானும்

சண்ட பானுவும் திங்களும் தடைபட திசையும்
அண்ட கோளமும் பரந்துநீண் டகன்றகோ புரங்கள்
விண்ட வாயிலால் வழங்குவ விடவரா வங்கா
துண்ட போல்பவு முமிழ்வன முழலா

மகர வேலையென் றியானைபோன் மழையரு தகழி
சிகர மாலைசூ ழம்மதி றிரைக்கர துழாவி
அகழ வோங்குநீர் வைகையால் அல்லது வேற்று
பகைவர் சேனையாற் பொரப்படும் பாலதோ வன்றே

எல்லை தேர்வழி தடைசெயு மிம்மதிற் புறஞ்சூழ
தொல்லை மேவலர் வளைந்துழி யுடன்றுபோர் ஆற்றி
வெல்ல மள்ளரும் வேண்டுமோ பொறிகளெ
வல்ல வம்மதிற் பொழிசெயு மறஞ்சிறி துரைப்பாம்

மழுக்கள் வீசுவன நஞ்சு பூசுமுனை வாள்கள் முத்தலை
கழுக்கள் வீசுவன குந்த நேமியெரி கால காலனேர்
எழுக்கள் வீசுவன கப்ப ணங்கள் விடமென்ன வன்னெடுங்
கொழுக்கள் வீசுவன கற்க வண்கயிறு கோத்து வார்த்தரோ

நஞ்சு பில்குதுளை வாளெ யிற்றரவு நாநிமிர தெறியு மலையரா
வெஞ்சி னங்கொண்முழை வாய்தி றந்துபொரு வாரை விக்கிட விழுங்குமாற்
குஞ்ச ரங்கொடிய முசலம் வீசியெதிர் குறுகு வார்தலைகள் சிதறுமால்
அஞ்சு வெம்பொறி விசைப்பி னுங்கடுகி யடுபு லிப்பொறி யமுக்குமால்

எள்ளி யேறுநரை யிவுளி மார்பிற வெறிந்து குண்டகழி யிடைவிழ
தள்ளி மீளுமுருள் கல்லி ருப்புமுளை தந்து வீசுயுடல் சிந்துமாற்
கொள்ளி வாயலகை வாய்தி றந்துகனல் கொப்பு ளிப்பவுடல் குப்புற
துள்ளி யாடுவன கைகள் கொட்டுவன தோள்பு டைப்பசில கூளியே

துவங்கு சங்கிலி யெறிந்தி ழுக்குமரி தொடர்பி டித்தகை யறுக்கவி
டுவக்கு மொன்னலர்க டலைக ளைத்திருகி யுடனெ ருக்குமா நிலைகளாற்
சுவைக்கொ ழுந்தழல் கொளுத்தி வீசுமெதிர் கல்லு ருட்டியடும் ஒல்லென
குவைக்க டுங்கன்மழை பெய்யு மட்டமணல் கொட்டு வேவலர்கள் கிட்டவே

உருக்கி யீயமழை பெய்யு மாலய வுருக்கு வட்டுருகு செம்பினீர்
பெருக்கி வீசும்விடு படையெ லாமெதிர் பிடித்து விட்டவர் தமைத்தெற
செடுக்கி வீசுநடை கற்ற மாடமொடு சென்று துடி முரசொடும்
பெருக்கி மீளுநடை வைய மேனடவி யெய்யும் வாளிமழை பெய்யுமால்

வெறிகொள் ஐம்பொறியை வெல்லி னும்பொருது வெல்லுதற்கரிய காலனை
முறிய வெல்லினும் வெலற்க ருங்கொடிய முரண வாயமர ராணெலாம்
அறிவி னானிறுவு கம்மி யன்செயவு மரிய வாயவனர் புரியுமி
பொறிகள் செய்யும்வினை யின்ன பொன்னணி புரத்து வீதிக ளுரைத்துமால்

கழையும் தாமமும் சுண்ணமு மணிநிழற் கலணுங்
குடையு தூபமு தீபமுங் கும்பமு தாங்கி
தழையுங் காதலர் வரவுபார தன்பக ததும்பி
விழையுங் கறிபினா ரொத்தன விழாவறா வீதி

ஆலநின்றமா மணிமிடற் றண்ணலா னந்த
கோல நின்றசே வடிநிழல் குறுகினார் குணம்போல்
வேலை நின்றெழு மதியெதிர் வெண்ணிலா தெண்ணீர்
கால நின்றன சந்திர காந்தமா ளிகையே

குன்ற நேர்பளி குபரிகை நிரைதொறுங் குழுமி
நின்ற பல்சரா சரமு நீழல்வாய் வெள்ளி
மன்ற கம்பொலி தாடிய மலரடி நிழல்பு
கொன்றி யொன்றறல் கலந்தபல் லுயிர்நிலை யனைய

கறிந்த ருந்துபுற் குவைகழீஇ காற்றொடர் பரி
தெறித்த கன்றயன் மரகத சித்திரத்து எற்றி
எறித்த பைங்கதிர கொழிந்தையு மெட்டிநா வளைத்து
பறித்து மென்றுவா யசைப்பன பசலையான் கன்று

சிறுகு கண்ணவா காற்றெறி செவியவா பாசம்
இறுகு காலவா கோட்டுமா னினம்வழங் காறுங்
குறுகு நுண்மருங் கிறுத்தெழு கோட்டுமா னினம்போம்
மறுகும் வண்டுசூழ திறைகொள மான்மத நாறும்

மாட மாலையு மேடையு மாளிகை நிரையும்
ஆட ரங்கமு மன்றிவே ளன்னவர் முடியும்
ஏட விழ்ந்ததா ரகலமு மிணைத்தட தோளுஞ்
சூடு மாதரார் சீறயி பஞ்சுதோய் சுவடு

மரு செம்புன லாறிட மாறடு கோட்டு
பரு செங்கண்மால் யானையின் பனைக்கையு மறைநூல்
அருமை செம்பொரு ளாய்ந்தவர கரும்பொருள் ஈவோர்
தரு செங்கையு மொழுகுவ தானநீ ராறு

பரிய மாமணி பத்தியிற் பதித்திரு படலம்
பொரிய வில்லிட குயிற்றிய பொன்னர மியமும்
தெரிய மாமுர சொலிகெழு செம்பொனா டரங்கும்
அரிய மின்பயோ தரஞ்சு தாடுவ கொடிகள்

வலம்ப டும்பு தாடவர் மார்ப்மேற் புலவி
கலம்ப டர்ந்தபூண் முலையினார் காலெடு தோ
சிலம்ப லம்பிசை மழுங்கமுன் னெழுமவர் தேந்தார
புலம்பு வண்டுநொ தரற்றிய பொங்குபேர் ஒலியே

தைய லார்மதி முகங்களு தடங்களுங் குழைய
மைய ளாவிய விழிகளு மாடமுங் கொடிய
கையு நாண்மலர பொதும்பருங் கறங்குஇசைவண்ட
நெய்ய வோதியும் வீதுயு நீளற னெறிய

மலரு திங்கடோய் மாடமுஞ் செய்வன மணங்கள்
அலரு தண்துறை யுங்குடை தாடுவ தும்பி
சுலவுஞ் சோலையு மாதரு தூற்றுவ வலர்கள்
குலவும் பொய்கையு மனைகளுங் குறைபடா வன்னம்

ஊடி னாரெறி கலன்களு மம்மனை யுடன்ப
தாடி னார்பரி யாரமு மடியினாற் சிற்றில்
சாடி னாரொடு வெகுண்டுகண் டதும்புமு திறைப்ப
வாடி னார்பரி நித்தில மாலையும் குப்பை

ஐய வென்னுரை வரம்பினை வாகுமோ வடியர்
உய்ய மாமணி வரிவளை விறகுவிற் றுழன்றோன்
பொய்யில் வேதமுஞ் சுமந்திட பொறாதகன் றரற்றுஞ்
செய்ய தாண்மலர் சுமந்திட தவம்செய்த தெருக்கள்

தோரண நிரைமென் காஞ்சி சூழ்நிலை நெடுந்தே ரல்குற்
பூரண கும்ப கொங்கை பொருவின்மங் கலமா மங்கை
தாரணி தார தூக்கி சந்தகி றிமிர்ந்து பாலி
சீரணி முளைவெண் மூரல் செய்துவீற் றிருக்கு மன்னோ

திங்களை சுண்ணம் செய்து சேறுசெய் தூட்டி யன்ன
பொங்குவெண் மாட பந்தி புண்ணியம் பூசு தொண்டர்
தங்கண்மெய் வேட தன்னை தரித்தன சால கண்கொண்
டங்கணன் விழவு காண்பா னடைந்தென மிடைந்த வன்றே

தேரொலி கலின பாய்மான் சிரிப்பொலி புரவி பூண்ட
தாரொலி கருவி யைந்தும் தழங்கொலி முழங்கு கைம்மான்
பேரொலி யெல்லா மொன்றி பெருகொலி யன்றி யென்றும்
காரொலி செவிம டாது கடிமணி மாட கூடல்

இழிபவ ருயர்ந்தோர் முத்தோ ரிளையவர் கழியர் நோயாற்
கழிபவர் யாவ ரேனும் கண்வலை பட்டு நெஞ்சம்
அழிபவர் பொருள்கொண் டெள்ளு கெண்ணெய்போ லளந்து காட்டி
பழிபடு போகம் விற்பா ராவண பண்பு சொல்வாம்

மெய்படு மன்பி னார்போல் விரும்பினார கருத்து தங்கள்
பொய்படு மின்பம் யார்க்கும் புலப்பட தேற்று வார்போல்
மைபடு கண்ணார் காமன் மறைப்பொருள் விளங்க தீட்டி
கைபட சுவரா தோன்ற சித்திரங் காண செய்வார்

திருவிற்கான் மணிப்பூ ணாகம் பலகையா தெண்மு தார
அருவிக்கால் வரைமென் கொங்கை சூதொட்டி யாடி வென்றும்
மருவிக்கா முகரை தங்கள் வடிக்கண்வேன் மார்ப தைப்ப
கருவிச்சூ தாடி வென்றும் கைப்பொருள் கவர்தல் செய்வார்

தண்பனி நீரில் தோய்த்த மல்லிகை தாம நாற்றி
விண்படு மதி தீண்டும் வெண்ணிலா முற்ற திட்ட
கண்படை யணைமேற் கொண்டு காமனுங் காமுற் றெய்த
பண்பல பாடி மைந்த ராவியை பரிசில் கொள்வார்

குரும்பைவெம் முலையிற் சிந்து சாந்தமுங் குழலிற் சிந்தும்
அரும்பவிழ் மாலை தாது மளிநுகர தெச்சி லாகி
பொரும்பரி காலிற் றூளா போயர மாதர் மெய்யும்
இருங்குழற் காடுஞ் சூழ்போ யியன்மணம் விழுங்கு மன்னோ

ஆலவா யுடையா னென்று மங்கயற் கண்ணி யென்றும்
சோலைவாழ் குயிலி னல்லார் சொல்லியாங் கொருங்கு சொல்லும்
பாலவாங் கிளிகள் பூவை பன்முறை குரவ னோதும்
நூலவா சந்தை கூட்டி நுவன்மறை சிறாரை யொத்த

ஔவிய மதர்வேற் கண்ணா ரந்தளிர் விரன டாத்தும்
திவ்விய நரம்புஞ் செவ்வா தித்திக்கு மெழாலும் தம்மிற்
கௌவிய நீர வாகி காளையர் செவிக்கா லோடி
வெவ்விய கா பைங்கூழ் விளைதர வளர்க்கு மன்றே

கட்புல னாதி யைந்து முவப்புற கனிந்த காமம்
விட்புல தவரே யன்றி வீடுபெற் றவரும் வீழ்ந்து
பெட்பமுற் றமுதும் கை பெரும்குல கற்பி னார்போல்
நட்பிடை படுத்தி விற்கு நல்லவ ரிருக்கை யீ தால்

வழுக்கறு வாய்மை மாண்புங் கங்கைதன் மரபின் வந்த
விழுக்குடி பிறப்பு மூவர் ஏவிய வினைகே டாற்றும்
ஒழுக்கமு மமைச்சாய் வேந்தர குறுதிசூழ் வினையுங் குன்றா
இழுக்கறு மேழி செல்வர் வளமறு கியம்ப லுற்றாம்

வருவிரு தெதிர்கொண் டேற்று நயனுரை வழங்கு மோசை
அருகிரு தடிசி லூட்டி முகமனன் கறையு மோசை
உரைபெறு தழிழ்பா ராட்டு மோசைகே டுவகை துள்ள
இருநிதி யளிக்கு மோசை யெழுகட லடைக்கு

அருந்தின ரருந்தி செல்ல வருந்துகின் றாரு மாங்கே
இருந்தினி தருந்தா நிற்க இன்னமு தட்டு பின்னும்
விருந்தினர் வரவு நோக்கி வித்தெலாம் வயலில் வீசி
வருந்திவிண் ணோக்கு மோரே ருழவர்போல் வாடி நிற்பார்

வானமும் திசையும் பொங்கும் புகழ்மையும் வானம் பேணும்
ஞானமும் பொறையுங் குன்றா நன்றியு மூக்க பாடு
தானமுங் கொடையு மன்பும் வரிசையு தகைசா னண்பும்
மானமு தவஞ்செய் தீன்ற மகவுபோல் வளர்க்க வல்லார்

புல்லியோர் பண்டங் கொள்வார் வினவின பொருடம் பக்கல்
இல்லெனி னினமா யுள்ள பொருளுரை தெதிர்ம றுத்தும்
அல்லத பொருளுண் டென்னின் விலைசுட்டி யறுத்து நேர்ந்துஞ்
சொல்லினு மிலாபங் கொள்வார் தொன்பர பிருக்கை சொல்வாம்

நீல வேதிமேற் பளிங்கினா னிழற்சுவர் நிறீஇமின்
கால வாலிய வைரவாள் கானிரை தும்பர
கோல வாணிலா சொரிமணி குயிற்றிவெண் மாடம்
மாலை போல்வரு தியற்றின பீடிகை மறுகு

திரைய ளிப்பவு திரைபடு தீம்புனல் வேலி
கரைய ளிப்பவுங் கரையிலா னிரைபடு கான
தரைய ளிப்பவு தரைகிழி தூன்றிவிண் டாங்கும்
வரைய ளிப்பவும் வாங்கிவாய் மடுப்பன மாடம்

கரிய கம்பல கிடுகின் மேற் கதிர்விடு பவள
தெரியல் பொன்னரி மாலிகை தெண்ணிலா சொரியும்
பரிய நித்தல மணிவட மரகத பசுந்தார்
விரிய விட்டன விந்திர வின்னிசை யனைய

நாள்க ளுங்குளிர் திங்களு ஞாயிறு மேனை
கோள்க ளுங்குளிர் விசும்பொரீஇ குடிபுகு தாங்கு
வாள்கி டந்திரா பகலொளி மழுக்கலால் வணிகர்
ஆள்க லம்பகர் பீடிகை துறக்கநா டனைய

பன்னி றத்தபல் பெருவிலை பட்டெலா மவண
அன்ன பட்டின்மேம் படுவிலை பருத்தியு மவண
எந்நி லத்தரும் பொருள்பதி னெழுபுல வணிகர்
மன்னி ருக்கையு மரும்பெறல் வளனெலா மவண

மரக தத்தினா லம்மிகள் வைரவா ளுலக்கை
உரல்கள் வெள்ளியா லடுப்பகில் விறகுலை பனிநீர்
அரிசி முத்தழல் செம்மணி யடுகலன் பிறவும்
எரிபொ னாலிழை தாடுப விவர்சிறு மகளிர்

செயிரிற் றீர்ந்தசெம் பொன்னினால் திண்ணிலை கதவம்
வயிர தாழுடை தவர்கடை வாயிலு மென்றால்
அயிரிற் றீந்தபே ரறிஞரு மனையர்தஞ் செல்வ
தியலிற் றாமென வரையறு திசைப்பதை யெவனோ

எரிக்கு றும்பொறி யனையசெம் மணிசுட ரெறிபொன்
வரிச்சு ரும்புநேர் மரகத முத்துவாள் வைர
தெரிப்ப ருந்துகிர் சிந்தின செல்லுநா ளன்றும்
கரிப்பர் கையக படுவன வாயிர திரட்டி

பாய தொன்மர பறவைபோற் பயன்கொள்வான் பதினெண்
தேய மாந்தருங் கிளந்தசொற் றிரட்சிதான் றூய
மாயை காரிய வொலி யன்றி வான்முதற் கருவின்
ஆய காரிய வோசையே யாய்க்கிட தன்றே

ஒழிவில் வேறுபல் பொருளுமே ழுலோகமும் பிறவும்
வழுவில் வேறுபல் கலைகளு மரபுளி வகுத்து
தழுவி வேண்டினர் தாங்கொள தக்கவா பகரா
அழிவி லாமறை போன்றன வாவண வீதி

திக்கெலாம் புகழ் மதுரையை சிவபுர மாக்கி
முக்க ணாயக னரசுசெய் முறையினு கேற்ப
தக்க தோழனோ டளகைமா நகருறை தயக்கம்
ஒக்கு மந்நகர் வாணிக ருறையுள்சூழ் நிகமம்

ஒற்றை யாழியா னுலகிரு ளதுக்குமா போல
செற்ற நேமியாற் கலி யிரு டின்றுகோ லோச்சி
மற்ற டம்புய வலியினான் காறடு சீற்ற
கொற்ற மன்னவர் விழுக்குடி கோமறு குரைப்பாம்

தரங்க வேலைக டம்மையே தாளுற பிணித்து
துரங்க மாவென தொகுத்த துறைபல வருவி
இரங்கு மோரறி வுயிர்வரை யாவையும் பெய்ர்த்து
மரங்கொல் யானைபோற் பிணித்தகூ டம்பல மன்னோ

மழுக்கள் வச்சிரங் கார்முகம் வாளிமு குடுமி
கழுக்கள் சக்கர முடம்பிடி கப்பண நாஞ்சில்
எழுக்க ணாந்தகம் பலகைதன் டிவைமுதற் படையின்
குழுக்க ளோடிகல் விந்தைவாழ் கூடமும் பலவால்

துளைய கல்லைமா லெனக்கொண்டு சுழற்றியுஞ் செந்தூள்
அளையும் யானைபோற் பாய்ந்துமல் லாற்றியும் ஆற்றல்
விளைய வாளடு கேடகம் வீசியும் வென்றி
இளைய ராடமர் பயில்வன வெண்ணிலா கூடம்

தேசவிர் நீல மாடஞ் செம்மணி சென்னி மாடங்
காசறு கனக மாடஞ் சந்திர காந்த மாடம்
மாசற விளக்கு மின்ன மாடநீண் மாலை கூடற்
பாசிழை மடந்தை பூண்ட பன்மணி கோலை யன்ன

விரையகல் கதும்பி னல்லார் வீங்கிளங் கொங்கை போழ்ந்த
வரை யகன் மார்ப மன்றி வடுப்படார் தமக்கன் பில்லார்
உரையகன் மான வாற்றா லொழுகுவார் பலகை யொள்வா
கரையகல் விஞ்சை வீரர் கணம்பயில் காட்சி தெங்கும்

மின்னைவா ளென்ன வீசி வீங்குவார் தம்மிற் போர்மூண்
டென்னவான் மருப்பு நீட்டி யெதிரெதிர் புதை குத்தி
அன்னவா னென்ன வாய்வி டதுவென செந்நீர் சோர
பொன்னவா மகன்ற மார்பர் பொருகளி றாட்டு வார்கள்

தூண்டுவா ருளமு தங்கள் பின்னிட துவக்குண் டீர்த்து
தாண்டுமா னொற்றை யாழி தேரினும் துள்ளி துள்ள
பாண்டில்வா பசும்பொன் றே பார்மகண் முதுகுகீண்டு
சேண்டிசை போய்மடங்க செல்வத்தேர் நடாத்து வார்கள்

மைந்தர்த நெருக்கிற் சிந்து கலவையும் மகளிர் கொங்கை
சந்தமுங் கூந்தல் சோர்ந்த தாமுமுஞ் சிவிறி வீசு
சிந்துர பொடியும் நாற தேனொடு மெழுந்து செந்தூள்
அந்தர வயிறு தூர்ப்ப வடுபரி நடாத்துவார்கள்

தம்முயிர கிரங்கார் ஆகி தருக்கொடு மான மீர்ப்ப
தெம்முனை யெதிர்ந்தா ராற்றுஞ் செருவென குருதி செங்கேழ
கொய்ம்மலர குடுமி சேவல் கோழிள தகர்போர் மூட்டி
வெம்முனை நோக்கி நிற்பார் வேறவற் றூறு நோக்கார்

பெண்முத்த மனைய பேதை சிறுமியர் பெருநீர் வைகை
வெண்முத்த மிழைத்த சிற்றில் சிதைபட வெகுண்டு நோக்கி
கண்முத்தஞ் சிதற சிந்தும் கதிர்முத்த மாலை தட்ப
தெண்முத்தி னகைத்து செல்வ சிறார்கடே ருருட்டு வார்கள்

கொடிமுகி றுழாவு மிஞ்சி கோநகர் வடகீழ் ஞாங்கர்
முடிமிசை வேம்பு நாற முருகவி ழாரும் போந்தும்
அடிமிசை நாற தென்னர் வழிவழி யரசு செய்யும்
இடிமுர சுறங்கா வாயி லெழுநிலை மாட கோயில்

ஆத்திக ருண்டென் றோது மறமுதற் பொருள்கள் நான்கும்
நாத்திகம் பேசும் வஞ்சர் நாவரி கருவி யாக
ஆத்தனா லுரைத்த வேத வளவுகண் டுள்ள தேறி
தீர்த்தராய் முத்தீ வேட்குஞ் செல்வர்தம் இருக்கை சொல்வாம்

முஞ்சிநாண் மருங்கின் மின்ன பொன்செய்த முளரி வேய்ந்த
குஞ்சிநான் றசை தானை சொருக்குமுன் கொய்து தூங்க
பஞ்சிநாண் கலைந்தோன் மார்பும் பலாசக்கோல் கையும் தாங்கி
எஞ்சிநாண் மறைநூல் கற்போர் கிடைகளே யில்ல மெல்லாம்

தீவினை யந்த ணாளர் சிறார்பயி றெய்வ வேதம்
நாவரு வேற்ற கேட்டு கிளிகளோ நவிலும் வேற்று
பூவையும் பயின்று புத்தே ளுலகுறை புது தார
காவுறை கிளிக கெல்லாங் கசடற பயிற்று மன்னோ

வேதமு மங்க மாறு மிருதியும் புராண நூலின்
பேதமும் தெரிந்தோ ராலும் பிறமதங் களைய வல்ல
வாதமும் மதமேற் கொண்டு மறுத்தலும் நிறுத்த வல்ல
போதமு முடையோ ராலும் பொலிந்தன கழக மெல்லாம்

உறிபொதி கர கைய ரொளிவிடு செங்கற் றோய்த்த
அறுவைய ருயிர்க்கூ றஞ்சு நடையின ரவிச்சை மாள
எறிசுடர் மழுவா ளென்ன கோவணம் யாந்த கோலர்
மறைமுடி வன்றி தேறா மாதவர் மடங்க ளெங்கும்

அட்டில்வா புகையு மாட தகில்படு புகையும் வேள்வி
விட்டெழு புகையும் ஒன்றி விரிசுடர் விழுங கங்குல்
பட்டது பலரு தந்தம் பயில்வினை யிழக்க நங்கை
மட்டவிழ் கடுக்கை யான்கண் புதைத்தநாண் மானு மன்னோ

தெய்வ நீறுமை தெழுத்துமே சிதைக்கல னாக
எவ்வ மாசிரு வினையுடம் பெடுத்துழல் பிறவி
பௌவ மேழையும் கடந்தரன் பதமலர கரைசேர்
சைவ மாதவர் உறைமட தனிமறு குரைப்பாம்

எங்கு மீசனை பூசைசெய் திகபர மடைவார்
எங்கு மன்பரை பூசைசெய்து எழுபிற பறுபார்
எங்கு மாகமஞ் செவிமடு தெதிர்வினை தடுப்பார்
எங்கு நாயகன் வடிவுணர திருள்மலங் களைவார்

அழிவி லானுரை யாகமம் இலக்கமா தவற்றுள்
விழிமி தாகிய விதியினும் விலக்குனு மடியை
தழுவு தொண்டர்கண் மைந்தர்கள் சாதகர் பாசம்
கழுவி வீடருள் போத காட்சியர் பலரால்

மறைகள் ஆகமம் பொதுச்சிற பெனச்சிவன் வகுத்து
முறையி னோதிய விதிவில குரைகளு முடிவில்
அறையும் வீடுமொன் றிரண்டெனும் பிணக்கற வமைத்த
குறைவி லாச்சிவ யோகியர் குழாங்களும் பலவால்

குழலும் தும்புரு நாரதர் பாடலும் குனித்து
சுழலுங் கொம்பனார் ஆடலு மூவர்வா துதியும்
விழவின் செல்வமுஞ் சுருதியு திசையெலாம் விழுங்கும்
முழவுங் கண்டுயி லாதது முன்னவன் கோயில்

மடங்கல் இன்றிவிண் பிளந்துமேல் வளர்ந்துவெள் ளேற்று
விடங்கர் வெள்ளிமன் றிமைத்தெழு வெண்சுடர் நீட்டம்
முடங்கல் வெண்பிறை கண்ணியான் கயிலைமூ வுலகும்
ஒடுங்கு கின்றநா ளோங்கிய வோக்கமே யொக்கும்

கரந்து தேன்றுளி தலர்களும் சொர்ந்துவண் டரற்ற
நிரந்து சுந்தரற் கொருசிறை நின்றபூங் கடம்பு
பரந்து கட்புனல் உகப்பல மலர்கடூ பழிச்சி
இரந்து நின்றரு சனைசெயு மிந்திர னிகரும்

உழல்செய் தீவினை புருப்பற வுயிர்க்கெலா மடியின்
நிழல்செய் வார்க்குநீ ணிழல்செயா நின்றபூங் கடம்பின்
குழல்செய் வண்டுகற் பகமது கொணர்ந்துவ தூட்டி
தழல்செய் காமமென் பேடையின் ஊடனோய் தணிக்கும்

ஆரு நீர்க்கட லன்றது வெனநிறை யகழ்கார்
ஊரு மாழியன் றதுவென வோன்கெயி லெட்டா
சாரு நேமியன் றதுவென சமைந்தகோ புரம்பொன்
மேரு வன்றது வெனச்சுடர் விசும்பிழி விமானம்

வேத வந்தமு துளக்கற மெய்ப்பொருள் விளங்கும்
நாத வந்தமுங் கடந்ததோர் நடுநிலை பொருளின்
பாத வந்தனை பத்தியின் பாலரா பயில்வோர்
மாத வந்தரு பயனென தழைத்தபல் வளனும்

பொறிகள் ஐந்தினு கூட்டுபல் போகமு மிதப்ப
செறிகொ ணீரவா லுவர்ப்பவ திருநகர் மாக்கள்
நெறிகொள் செஞ்சடை பிறைமுடி நிருமல கொழுந்தின்
வெறிகொ ணான்மல ரடிதழீஇ வீடுபெற் றார்போல்

முன்ன வன்னர சிருக்கையால் அந்நகர் முளரி
பொன்னை யீன்றதா லதுபல பொருணிறை செல்வ
தன்னை யீன்றதா லதுபல தருமமென் றுரைக்கும்
மின்னை யீன்றத· தீன்றதால் விழுத்தகு புகழே

எழுக்க டந்ததோ ளுருத்திர வுலகமென் றியாரும்
வழுத்த நின்றவி நகர்வயின் உம்பரின் மாண்ட
விழுத்த கும்பல செல்வமும் வியந்துபார துள்ள
தழுக்க றாமையா லின்னமு மமரர்கண் ணுறங்கார்

விரைய வீழ்ந்ததார் மீனவர் வாகைவேல் விடுத்து
திரைய வென்றது முடிதகர திந்திரன் செருக்கு
கரைய வென்றதுங் கார்தளை யிட்டதுங் கனக
வரைய வென்றதும் இந்நகர் வலியினா லன்றோ

எங்கு நாவுமா யெங்கணுங் கண்ணுமா யெங்கு
தங்கு பேரொளி யல்லதி தனிநகர செல்வஞ்
செங்க ணாயிர நாவினான் செப்பவும் எதிர்க்கண்
டங்க ணாயிர முடையவ னளக்கவும் படுமோ

புண்ணி யம்புரி பூமிபா ரதில்வரு போகம்
நண்ணி யின்புறு பூமிவா னாடென்ப நாளும்
புண்ணி யம்புரி பூமியு மதில்வரு போகம்
நண்ணி யின்புறு பூமியு மதுரைமா நகரம்

பண்கனி தனைய சொல்லார் நரப்பிசை பாணி தேவர்
உண்கனி யமுதுங் கைப்ப செவிதுளை தூண்ட வுண்டும்
பெண்களின் அமுத மன்னார் பெருமித நடன முண்ண
கண்களை விடுத்துங் காலங் கழிப்பவ ரளவி லாதார்

கலவிவி தாக வூடி கட்புனல் குளிக்கு நல்லார்
புலவிதீர் செவ்வி நோக்கி புனர்முலை போக துய்த்தும்
நிலைநிலை யாமை நோக்கி நெறிப்படு தரும தானங்
கலைஞர்கை பெய்துங் காலங் கழிப்பவ ரெண்ணி லாதார்

சந்தித்து மீனநோக்கி தலைவனை மூன்று போதும்
வந்தித்தும் ஈசன் பூசை மரபுளி முடித்தும் வேதம்
அந்தித்து மறியான் செய்த திருவிளை யாடல் கேட்டுஞ்
சிந்தித்து மன்பர் பூசை செய்துநாள் கழிப்பார் பல்லோர்

கற்பவை கற்றுங் கேட்டுங் கேட்டவை கருத்துள் ஊற
சொற்பொரு ணினைந்துங் கேட்போர குணர்த்தியு டுளக்க தீர்த்தும்
எற்பக லிரவு நீங்கு மிடத்துமெய் யறிவா னந்த
அற்புத வெள்ள தாழா தாழ்ந்து நாள் கழிப்பார் சில்லோர்

தன்னிகர் உயர்ச்சி யில்லான் காப்பி தலைவனாக
முன்னவர் மொழிந்த தேனோர் தமக்கெலா முகம னன்றோ
அன்னது தனதே யாகு மண்ணிலே பாண்டி வேந்தாய்
இந்நகர கரச னாவா னிக்கவி கிறைவ னாவான்

என்னென வுரைப்பேன் இந்த விறைமகன் பண்மை யேனை
மன்னவர் வானோர் போல மதித்துரை விரிக்கற் பாற்றோ
அன்னவ னாணை யாற்றா டைப்பதிவ் வகில மென்றான்
முன்னவன் செய்த வாடல் வரவினை முறையிற் சொல்வேன்
மதுரை திருநகர படலம் சுபம்
திருக்கயிலாய வருணனை படலம்

வரங்க டந்தரு ளெனமுது வானவர் முனிவோர்
கரங்க டந்தலை முகிழ்த்திட கருணைசெய் தவிச்சை
உரங்க டந்துரை யுணர்வெலாங் கடந்தரு மறையின்
சிரங்க டந்தவன் இருப்பது திருக்கயி லாயம்

புரந்தர் ஆதிவா னவர்பதம் போதுறை புத்தேள்
பரந்த வான்பதஞ் சக்கர படையுடை பகவன்
வரந்த வாதுவார் பதமெலா நிலைகெட வருநாள்
உரந்த வாதுநின் றூழிதோ றோங்குமவ் வோங்கல்

அரம்பை மாதரா ராடலி னரவமும் பாடல்
நரம்பி னோசையு முழவதிர் சும்மையு நால்வாய்
வரம்பில் ஓதையு மருவிவீ ழொலியுமா றாது
நிரம்பி வானமு திசைகளு நிமிர்வன மாதோ

வெந்த நீற்றொளி வெண்மையும் விமலனை யகங்கொண்
டந்த மின்றியே யசைவற விருக்கையு மருவி
வந்த கண்களும் கொண்டவ ணிருக்குமா தவர்க்கு
தந்த தாலரன் கயிலையி தனதுசா ரூபம்

ஆங்கு வெண்டுகில் விரித்தென கல்லென வார்த்து
வீங்கு காலரு வித்திரள் வெள்ளமே யன்றி
ஓங்கு நான்மறை குடுமியின் உள்ளளி நோக்கி
தூங்கு மாதவர் கண்களும் சொரிவன வெள்ளம்

கோட்டு மாமலர் நிலமலர் குண்டுநீர் எடுத்து
காட்டு மாமலர் கொடிமலர் கொண்டுமு கரைந்த
பாட்டு மாமலர் கொண்டுநம் பரஞ்சுட ரடியிற்
சூட்டு மாதவர் தொகுதியுஞ் சூழ்வன வொருபால்

கைய நாகமும் காய்சின வுழுவையுங் கடுவா
பைய நாகமு தங்கிளை பரவிய முக்கண்
ஐய னாகமெய் யருந்தவர் தமையடைந்து அன்பு
செய்ய நாகமும் வையமும் புகழ்வத சிலம்பு
திருக்கைலாய வருணனை படலம் சுபம்
புராண வரலாற்று படலம்

அளந்தி டற்கரி தாயவ குன்றின்மேல்
களங்க றுத்துவிண் காத்தவன் கோயின்முன்
விளம்ப ருஞ்சிவ தீர்த்தத்தின் மிக்கதாய்
வளம்பெ றுஞ்சிவ தீர்த்தத்தின் மாடது

தண்ட ருங்கதிர சந்திர காந்தத்திற்
பண்ட யங்க நவமணி பத்திசெய்
தண்டர் தச்சன் அனேக தவஞ்செய்து
கண்ட தாயிர கான்மண் டபமரோ

ஆன பான்மையி னால்அந்த மண்டபம்
ஞான நாயக னாண்மலர தாடொழ
வான மீனொடு வந்து பதங் குறி
தூன மின்மதி வைகுவ தொத்ததே

அன்ன மண்டப தன்னு ளருந்தவம்
என்ன வேங்கை யதண்மேல் இருந்தனன்
பன்னு வேள்வி பதினெண் புராணமும்
சொன்ன மாதவ சூத முனிவனே

அந்த வேலையி லச்சிவ தீர்த்தத்தில்
வந்து மூழ்கியம் மண்டப தேறியே
சந்தி யாகி தவமுடி தீறிலா
இந்து சேகரன் றாணினைந்து ஏத்தியே

சம்பு பத்தன் சதானந்தன் உத்தமன்
அம்பு யத்த னனைய மகோதரன்
உம்ப ரஞ்சிய வுக்கிர வீரியன்
நம்பு வேள்வி பிரசண்ட நற்றவன்

ஆதி மாதவர் யாவரும் அன்புமை
பாதி யாய்முற்று மாகும் பராபர
சோதி பால்வைத்த சூதனை தோத்திரம்
ஓதி யஞ்சலி தொன்று வினாவினார்

வேத வாகம புராணமே மிருதியே முதலா
ஓது நூல்களின் றுணிபொரு ளுலகெலாம் பயந்த
பேதை பாகனே பரமென தேர்ந்துணர் பெரிய
போத மாதவ வுனக்கியாம் புகல்வது ஒன்று றுலதால்

மேரு மந்தரங் கைலைபர பதமுதல் விடைமேல்
ஊரு மந்தர நாடவன் உறைபதி யனந்தம்
ஆரு மந்தமில் போகம்வீ டடைவதென் றவற்றின்
கார ணங்களோ டுரைத்தனை கருத்தினு கிசைய

ஐய மாதிமு குற்றமும் அகலநீ யருளி
செய்ய வுந்தெளி திலேங்கள்யாஞ் சிற்றறி வுடையேம்
மைய னெஞ்சினே மாகையான் மயக்கற வின்னும்
உய்யு மாறருள் செய்தியென் றுரைத்தனர் மன்னோ

தலங்க டம்மின்மி குள்ளதா தகுதிசா றீர்த்த
குலங்க டம்மின்மி குள்ளதா குறையிர தோர்க்கு
நலங்க டந்தருண் மூர்த்தியாய் நாதவே தாந்த
புலங்க டந்தபேர் ஒளியுறை தலனொன்று புகலாய்

என்ற போதெதிர் முகமலர திருண்மல வலியை
வென்ற சூதனு தலங்களின் விசேடமா தம்பொற்
குன்ற வார்சிலை யானிடங் கொண்டுறை பதியுள்
ஒன்று கேட்கவீ டளிப்பதாய் உளதுமற் றதுதான்

முற்ற வோதிய புராணமூ வாறினு காந்தம்
பெற்ற தாறுசங் கிதையவை யாறுந்தம் பெயராற்
சொற்ற பேர்சனற் குமரமா முனிவரன் சூதன்
கற்றை வார்சடை சங்கரன் மால்அயன் கதிரோன்

இன்ன வாறனு சங்கர சங்கிதை யென்று
சொன்ன நூலினை யுணர்த்தினான் சங்கரன் துணைவி
கன்ன போதவண் மடியினி லிருந்துகே டதனை
மின்னு வேல்பணி கொண்டவேள் வெளிப்பட வுணர்ந்தாள்

குன்றே றிந்தவேள் வழிபடு குறுமுனி குரைத்தான்
அன்று தொட்ட· தகத்திய சங்கிதை யாகி
நின்ற தன்னது கேட்பவர கரனடி நீழல்
ஒன்றும் இன்பவீ டளிப்பதா வொருதல னுரைக்கும்

அதிக வப்பதி யாதெனி னாலவாய் கேட
கதிய ளிப்பதென் றோதிய சூதனை கதியின்
மதியை வைத்தவர் அன்னதை பகரென வந்த
விதியி னிற்புகல் கின்றனன் வியாதன்மா ணாக்கன்

புதிய தாமரை வேவிய பழமறை புத்தேள்
விதியி னாற்கடு நடைப்பரி மகஞ்செய்வான் வேண்டி
கதியை மாய்ந்தவர குதவுதண் டுறைகெழு காசி
பதியின் மைந்தரோடு எய்தினான் பண்டொரு வைகல்

அகத்தியன் வியாத னாரதன் சனகன் ஆதிநான் முனிவர்கோ தமனூற்
சிகைத்தெளி வுணர்ந்த பராசரன் வாம தேவன்வான் மீகியே வசிட்டன்
சகத்தியல் கடந்த சுகன்முதன் முனிவர் தம்மொடும் பத்துவெம் பரிமா
மகத்தொழின் முடித்து மற்றவர குள்ள மகிழ்வுற வழங்குந வழங்கா

சத்திய வுலகிற் சரோரு கிழவன் சார்ந்தபின் புலப்பகை சாய்த்த
அத்திரு முனிவர் அனைவரும் காசி யடிகளை யடைந்தனர் பணிந்து
முதல் மண்டபத்தி னறமுத னான்கு மொழிந்தருண் மூர்த்திச நிதியிற்
பத்தியா யிருந்து நாரத முனியை பார்த்தொரு வினாவுரை பகர்வார்

தலமுதன் மூன்றுஞ் சிறந்ததோர் சைவ தலமுரை யென்னநா ரதன்றான்
கலைமுழு துணர்ந்த சனற்குமா ரன்பாற் கற்றவன் வியாதனாம் அவன்பால்
நலமுற கேண்மி னெனவவன் கதிர்வே னம்பிபான் மறைமுத லனைத்தும்
அலைவற வுணர்ந்தோன் குறுமுனி யாகு மவனிடை கேண்மென விடுத்தான்

மலயமா தவனை யடைந்துகை தொழுது வாழ்த்திவா தாவிவில் வலனை
கொலையுரி தரும மூர்த்தியே விந்த குன்றட கியதவ குன்றே
அலைகடல் குடித்த வருட்பெருங் கடலே யருந்தமிழ கொண்டலே தென்பார்
துலைபெற நிறுத்த களைகணே யென்று சுருதியா யிரமென துதித்தார்

மூவகை சிறப்பு முள்ளதோர் தான மொழிகென முகமலர தருள்கூர
தியாவையும் உணர்ந்தோன் முத்திமண் டபத்தி னீரிரு தொகையின்வ திறக்கும்
சேவல்க டமையு மைங்கரன் றனையுஞ் சேவலங் கொடியுடை வடிவேற்
காவலன் றனையும் வடநிழ லமர்ந்த கண்ணுதற் பரனையும் பணியா

அங்கயற் கண்ணி தன்னையு மெந்தை யாலவா யானையும் இதய
பங்க திருத்தி சமாதியி லிருந்து பரவச மடைந்துபார பதிக்கு
சங்கர னருளி செய்தசங் கிதையை தாரக னுடலிரண் டாக
செங்கைவேல் விடுத்த சேவக னெனக்கு தெருட்டினா னனையசங் கிதையில்

பெறற்கரு தவஞ்செய் தகந்தெளி தரிதிற் பெறுங்கதி கேட்பவர கெளிதா
யுறப்படு தலநீர் வினாயமு சிறப்பு முள்ளதெ தலத்தினுங் கழிந்த
சிறப்பினாங் கெண்ணெண் டிருவிளை யாடல் செய்தருள் வடிவெடு தென்றும்
மறைப்பொருள் விளங்கு மாலவாய் அதனை மண்ணின்மேற் சிவனுல கென்னும்

அத்தல தனைய மூவகை சிறப்பும் அளவிலா வுயிர்க்கெலாங் கருணை
வைத்தவன் செய்த திருவிளை யாட்டும் வரையுரங் கிழியவே லெடுத்த
வித்தக னெனக்கு விளம்பிய வாறே விளம்புவ னுமக்கென வந்த
உத்தம முனிவர் யாவருங் கேட்க வுணர்த்துவான் கடலெலா முண்டான்
மதுரை காண்டம்
தல விசேட படலம்

நாட்டமொரு மூன்றுடைய நாயகனு கன்புடையீர் நயந்து நீவிர்
கேட்டதலம் ஈண்டுரைத்த திருவால வாயதனு கிளைத்து பொன்ன
தோட்டலர்தா மரைமுளைத்த தொருதடமுஞ் சுந்தரச்செஞ் சோதி ஞான
ஈட்டமென முளைத்தசிவ லிங்க மொன்று முளவின்னு மிசைப்ப கேண்மின்

திருவால வாய்க்கிணையா மொருதலமும் தெயவமணஞ் செய்ய பூத்த
மருவார்பொற் கமலநிகர் தீர்த்தமு தீர்த்தத்தின் மருங்கின் ஞான
உருவாகி யுறைசோம சுந்தரன்போ லிகபரந்த துலவா வீடு
தழிவானு முப்புவன தினுமில்லை யுண்மையிது சாற்றின் மன்னோ

அவ்வகைய மூன்றின் முதற் றலப்பெருமை தனைச்சுருக்கி யறை கேண்மின்
எவ்வகைய வுலகத்து தருமதல மதிகமவற் றீறிலாத
சைவதல மதிகமவற் றறுபத்தெ டதிகமவை தமிலீ ரெட்டு
தெய்வதல மதிகமவற் றதிகதல நான்கவற்றை செப்ப கேண்மின்

அன்னமலி வயற்புலியூர் காசிநகர் காளத்தி யால வாயாம்
இன்னவளம் பதினான்கிற் றிருவால வாயதிக மெவ்வாறு என்னின்
மின்னவிரம் பலங்காண காசிநகர் வதிந்திறக்க வியன்கா ளத்தி
பொன்னகரம் பத்தியினால் வழிபாடு செயவளிக்கும் போகம் வீடு

அறந்தழையு திருவால வாய்கேட்ட வுடன்போக மளிக்கும் ஈண்டு
பிறந்திறவா பேரின்ப கதியளிக்கும் இதுவன்றி பிறழா தெங்கும்
நிறைந்தபர னெத்தலமும் படைப்பானி தலத்தைமுத னிருமி திங்ஙன்
உறைந்தருளி னானன்றி யின்னமுள திதன்பெருமை யுரைப்ப கேண்மின்

திருவால வாயென்று கேட்டவரே யறம்பெறுவர் செல்வ மோங்கு
திருவால வாயென்று நினைத்தவரே பொருளடைவர் தேவ தேவை
திருவால வாயிடத்து கண்டவரே யின்பநலஞ் சேர்வ ரென்று
திருவால வாயிடத்து வதிந்தவரே வீட்டுநெறி சேர்வர் அன்றே

சுரநதிசூழ் காசிமுதற் பதிமறுமை கதியளிக்கு தூநீர் வைகை
வரநதிசூழ் திருவால வாய்சிவன் முத்திதரும் வதிவோர்க்கு ஈது
திரனதிகம் பரகதியும் பின்கொடுக்கு மாதலினி சீவன் முத்தி
புரனதிக மென்பதெவ னதற்கதுவே யொப்பாமெ புவன துள்ளும்

ஆதலினி பதிவிட்டு பிரபதியிற் போய்நோற்போர் அங்கை கொண்ட
சீதளவா னமுதேய்ப்ப தித்திக்க தேம்பெய்து செய்த தீம்பால்
ஓதனத்தை கைவிட்டு புறங்கையை நக்குவா ரொப்பா ரிந்த
மாதலத்தின் பெருமைதனை யாவரே யளவிட்டு வழுத்தற் பாலார்

மற்றைய தலங்க டம்மிற் பரிமகம் வாச பேயம்
அற்றமில் சோடசாக மக்கினி டோமம் யார்க்கும்
முற்றரு மிராசு சூய முதன்மக முடித்த பேறுஞ்
செற்றமி றரிச பூர்ண முதலிட்டி செய்த பேறும்

எள்ளிழு தன்னங் கன்னி யிவுளிதே ரியானை யில்லம்
வெள்ளியான் பொன்பூ ணாடை விளைவொடு பழனமுன்னா
தள்ளரும் அடிமையாதி தானங்கள் செய்த பேறும்
வள்ளறன் காசியாதி பதிகளில் வதிந்த பேறும்

கங்கைகா ளித்தி வாணி காவிரி கண்ண வேணி
துங்கப திரைதீம் பாலி தூயதன் பொருநை முன்னா
சங்கையி னதிகண் முற்றும் ஆடிய தவத்தின் பேறும்
மங்கல மதுரை தன்னில் வைகலும் வதிவோர கெய்தும்

அன்னிய தலங்க டம்மில் ஆற்றிய பிரம கத்தி
பொன்னினை களவு செய்தல் கள்ளுண்டல் புனித வாசான்
பன்னியை புணர்த லின்ன பாதக மனைத்து மென்று
தன்னிக ரால வாயில் வதிபவர் தமைவி டேகும்

மற்றைய தலத்தின் சாந்தி ராயண மதியந்தோறும்
உற்றபே றிங்கு கங்கு லூண்டியால் அடைபே றாகும்
மற்றைய தலத்தின் மாத பட்டினி பலத்தின் பேறிங்
குற்றொரு வைக லுண்டி யொழிந்தவர் பெறும்பே ராகும்

அயனக ரடைந்து நான்கு திங்களோன் பாற்றும் பேறிவ்
வியனக ரடைந்து நோற்கும் அட்டமி விரத நல்கும்
அயனக ரெய்தி யாறு திங்கணோன் பாற்றும் பேறிவ்
வியனகர சோம வார விரதமே யளிக்கு மன்றே

ஏனைய தலத்தி லோராண் டுணவொழி தியற்று நோன்பால்
ஆனபே றிங்கு நோற்குஞ் சிவனிரா வளிக்கும் இங்கே
ஊனவைம் பொறியும் வென்றோன் முப்பொழு துண்டு வைகி
தானமர தாலுங் காலுண் டியற்றுமா தவத்தோ னாகும்

இந்தநான் மாட மோங்கும் ஆலவா யிடத்தியா ரேனும்
அந்தணர் தமக்கோர் முட்டி யருந்தவர் பிச்சை
தந்தவர் புறம்பு செய்த சோடச தான தம்மால்
வந்தபே றடைவர் பல்வே றுரைப்பதென் மதியான் மிக்கீர்

பல்வகை தலங்கள் எல்லாம் வைகிய பயனு மென்றும்
பல்வகை தீர்த்த மெல்லா மாடிய பயனு மென்றும்
பல்வகை தான மெல்லா நல்கிய பயனு மென்றும்
பல்வகை தான பூசை பண்ணிய தவத்தின் பேறும்

பல்வகை தவங்கள் எல்லாம் முற்றிய பயனு தூய
பல்வகை மந்தி ரத்தி லெய்திய யயனு நூலின்
பல்வகை கேள்வி யெல்லா மாய்ந்துணர் பயனும் யோகம்
பல்வகை ஞான மெல்லாம் பயின்றுணர தடங்கும் பேறும்

அனையதொல் பதியி லென்றும் வைகுவோர் அடைவ ரென்றால்
இனையதொல் பதிக்கு நேர்வே றில்லையி பதியின் மேன்மை
தனையறி பவரா ரீசன் றானன்றி யாத லலே
வினைனைவெல் பவரங் கெய்தி வதிவதே வேண்டு மாதோ

கைத்தலநான் கிரண்டுடைய மலர்க்கடவுண் மோலொருநா கயிலையாதி
எத்தலமு மொருதுலையி டித்தலமும் ஒருதுளையி டிரண்டு தூக்க
உத்தமமா திருவால வாய்மிகவுங் கனத்ததுகண் டுலகின் மேலா
வைத்ததல மிதுவென்றா லிதன்பெருமை யாவரே வழுத்தர் பாலார்

அத்திருமா நகரின்பேர் சிவநகரங் கடம்பவனம் அமர்ந்தோர் சீவன்
முக்திபுரங் கன்னிபுர திருவால வாய்மதுரை முடியா ஞானம்
புத்திதரும் பூவுலகிற் சிவலோகஞ் சமட்டிவிச்சா புரந்தென் கூடல்
பத்திதரு துவாதசா தத்தலமென் றேதுவினாற் பகர்வர் நல்லோர்

என்றுதல சிறப்புரைத்த குறுமுனிவ னெதிரறவோர் இறும்பூ தெய்தி
நன் றுதல பெருமையருள் செய்தனைகே டுடலெடுத்த நயப்பா டெல்லாம்
இன்றடைந்தே மினிச்சுவண புண்டரிக சிறப்பதனை யிசைத்தி யென்ன
குன்றமட கியகருணை குன்றனையான் வரன்முறையாற் கூறு கின்றான்

விரதமா தவத்தீர் காணின் வெவ்வினை யெல்லாம் வீட்டி
சரதமா போக நல்கு தபனிய முளரி வந்த
வரவு கனக கஞ்ச பெருமையும் வளனு நன்கா
உரைசெய்துங் கேண்மி னென்னா முனிவரன் உரைக்கு மன்னோ
தலவிசேட படலம் சுபம்
தீர்த்த விசேட படலம்

கண்ணகன் குடுமி மாட கடிபொழி லால வாயின்
அண்ணலம் பெருமை யாரே யளப்பவ ரவிர்தண் முத்த
வெண்ணகை யுமையா ளன்பு விளைமுக செவ்வி போல
தண்ணறும் கமலம் பூத்த தடப்பெரு தகைமை சொல்வாம்

ஆற்றுனு கரசாங் கங்கை காவிரி யாதி யாறும்
வேற்றுரு வாய முந்நீர் வேலையும் பிறவுங் காரு
தோற்றுமுன் றன்னை யாட்ட சுந்தர மூர்த்தி செங்கண்
ஏற்றினன் கண்ட தீர்த்த மாகுமீ தெவ்வா றென்னின்

அகளமா யுலக மெல்லாம் ஒடுக்கி நெறியே யார்க்கும்
நிகளமாம் விருத்தி தோன்ற நினைவற நினைந்து நிற்கு
குகளிலா வறிவா னந்த சுந்தர சோதி மேனா
சகளமா முருவங் கொண்டு தானொரு விளையா டாலே

முக்கணன் அரவ பூண நூலினன் முகிழ்வெண் டிங்க
செக்காஞ் சடையன் சூல கபாலத்தன் செங்க ணேற்றன்
மைக்கருங் கயலுண் கண்ணி வாமத்தன் முன்னும் பின்னும்
பக்கமு நந்தி யாதி கணாதிபர் பாவி சூழ

சென்றுதன் தேனி தேசாற் றிசையெலாம் விளங்க செங்கண்
வென்றிகொள் உரக வேந்த னகரமும் விபுதர் வேந்தன்
பொன்றிகழ் நகரும் வேதன் புரமுமால் புரமு மேலை
தன்றிரு நகருஞ் சென்று சஞ்சரி தாடி மீள்வான்

அன்னபோ தயனு தேவர கரசனும் ஆழி வேந்தும்
முன்னர்வ திறைஞ்சி யேத்த முனிவரும் பேறு நல்கி
தன்னக ரடைந்து நீங்கா தனிப்பெருங் கணத்தி னோரை
இன்னருள்சுரந்து நோக்கி யிலிங்கத்திற் புகுது மெல்லை

வேத்திர படையோன் ஆதி கணாதிபர் வீழ்ந்து பால
நேத்திர வன்பர கன்ப நிரஞ்சன நிருத்தா னந்த
சாத்திர முடிவு தேறா தனிமுக லொருவ வென்னா
தோத்திர வகையா லேத்தி தொழுதொன்று வினாவல் செய்வார்

ஐயவிவ் விலிங்க மூர்த்தி காட்டவு மடியே மூழ்கி
உய்யவுங் கங்கை யாதி நதிகளும் உலகத்துள்ளோர்
மை யறு தடாச நீரு மற்றிலை யிருமை பேறுஞ்
செய்யவோர் தீர்த்த மிங்குண் டாக்கென செப்ப வேண்டும்

அத்தகை யிலிங்க மூர்த்தி கடுத்ததென் கீழ்சா ராக
முத்தலை வேலை வாங்கி நாட்டினான் முதுபார் கீண்டு
பைத்தலை பாந்தள் வேந்தன் பாதலங் கீண்டு போயெண்
கைத்தல பிரமன் அண்ட கடாகமுங் கீண்ட தவ்வேல்

அவ்வழி புறம்பு சூழ்ந்து கிடந்தபேர் ஆழி யூழி
பௌவநீ ரென்ன வோங்க பாணியா லமைத்து வேணி
தெய்வநன் னீரை தூவி கலந்துமா தீர்த்த மாக்கி
கைவரை கபாலி நந்தி கணத்தினை நோக்கி கூறும்

இன்னமா திர்த்த தன்னை யெனைப்பல தீர்த்தங் கட்கு
முன்னம்யாம் இங்கு கண்ட முதன்மையா லாதி தீர்த்தம்
என்னலா மினியுண் டாக்கு தீர்த்தங்க ளெவைக்கு மேலாய்
மன்னலாற் பரம தீர்த்த மெனப்பெயர் வழங்க லாகும்

மருட்கெட மூழ்கி னோர்நன் மங்கலம் பெறலா னாமம்
அருட்சிவ தீர்த்த மாகும் புன்னெறி யகற்றி யுள்ள
திருட்கெட ஞான தன்னை யீதலான் றிதற்கு நாமம்

குடைந்துதர பணமுஞ் செய்து தானமுங் கொடுத்தும் மாடே
அடைந்தெழு தைந்தும் எண்ணி யுச்சரி தன்பா லெம்மை
தொடர்ந்துவ திறைஞ்சி சூழ்ந்து துதித்தெமை யுவப்ப செய்தோர்
உடம்பெடு ததனா லெந்த வுறுதியுண் டதனை சேர்வார்

இந்தநீ ரெம்மை யாட்டி னேழிரண் டுலகின் மிக்க
அந்தமி றீர்த்த மெல்லாம் ஆட்டிய பயன்வ தெய்தும்
வந்திதின் மூழ்கி யிங்கு வைகுநங் குறியை யுங்கள்
சிந்தையி லார்வம் பொங்க பூசனை செய்மி னென்னா

விண்ணவர் தம்மின் மேலாம் வேதிய னாகி நின்ற
பண்ணவன் றான நீரிற் படிந்துதன் னனுச்சை யாலே
அண்ணலங் கணத்தி னோரை மூழ்கிவி தனாதி யாய
புண்ணிய விலிங்க தன்னு புகுந்தினி திருந்தான் மன்னோ

அந்தமா நீரா னந்தி யாதியோர் விதியாற் சோம
சுந்தரன் முடிமேல் ஆட்டி துகளற பூசை யாற்றி
சிந்தையில் விழைந்த வெல்லா மடைந்தனர் செம்பொற் கஞ்சம்
வந்தவா றிதுவ தீர்த்த மகிமையு முரைப்ப கேண்மின்

வளையெறி தரங்க ஞான வாவியை நோக்கிற் பாவ
தளையறு மூழ்கின் வேண்டுங் காமியம் எல்லாஞ் சாரும்
உளமுற மூழ்கு மெல்லை முழுக்கொன்றற் குலக துள்ள
அளவறு தீர்த்த மெல்லா மாடிய பயன்வ தெய்தும்

மெய்யைமண் ணாதி கொண்டு விதிவழி சுத்தி செய்து
மையறு வருண சூத்த மந்திர நவின்று மூழ்கிற்
றுய்யமா தீர்த்த மெல்லா தோய்ந்துநான் மறையு மாய்ந்தோர்
கையிலெ பொருளும் ஈந்த காசறு பேறு நல்கும்

தெய்வவி தீர்த்த தன்னை நினைவின்றி தீண்டினாலும்
அவ்விய வினையு னீந்தி யரும்பெறல் வீடு சேர்வர்
இவ்வுரை மெய்யே யாகும் என்னெனின் மனத்தா றன்றி
வெவ்வழ றீண்டி னாலுஞ் சுடுமன்றி விடுமோ வம்மா

ஆரு நீரி லென்று மாடினார் சீவன் முத்தி
சேருவ ரந்நீ ராடுஞ் சிறப்புறு பயனு கொவ்வா
வாருண மாக்கி னேய மந்திரம் இவைமுன் னான
பேருணர் வளிக்கு நானஞ் செய்தவர் பெறும்பே றெல்லாம்

அன்னநீர் தனையுமாடி யாலவா யுடைய நாதன்
றன்னையும் பணிவோன் மேலை பாகதி தன்னை சாரும்
என்னநன் னூலிற் சொன்ன பவித்திரம் எவைக்கு மேலா
பன்னரும் புனித மான பவித்திர மாகி நிற்கும்

ஆதர விலனா யந்நீ ராடினோன் சுவர்க்கன் சேரும்
ஆதர வுளனாய் மூழ்கி வானவ ராதி யானோர
காதர வரிசி யெள்ளு தருப்பண மமை செய்தோன்
ஆதர வேள்வி முற்று மாற்றிய பயனை சேரும்

ஏனைமா தலங்க டம்மி லிருந்துசெய் விரதம் பூசை
தானமா தரும மோ தவஞ்செப தியான தம்மால்
ஆனமா பயனிற் கோடி யதிகமாம் அடைந்து மூழ்கி
ஞானமா தீர்த்த ஞாங்க ரிருந்தவை நயந்து செய்யின்

பிறந்தநா ளந்னீர் மூழ்கின் மேலைவெம் பிறவி பௌவம்
மறிந்திடு மறிதேள் கும்ப மதிகளின் மூழ்கி தென்பால்
உறைந்தவர் பொருட்டு பிண்ட முதலினா லவர்தாம் ஆழ்ந்து
நிறைந்திடு பிறவி பௌவ நின்றுமே லெழுவ ரன்றே

அத்தட மருங்கின் யாவர் தென்புல மடைந்தோர் தங்கள்
சித்தமா சகற்ற வேண்டி செய்கடன் முடிக்கி னன்னோர்
எத்தனை யெண்ணேர தாலும் எள்ளுக்கா யிரமாண் டாக
அத்தனை யாண்டு மட்டு மவரைவிண் ணான வைப்பார்

மூவகை யுலகில் உள்ள தீர்த்தமு முறையா லென்றுஞ்
சேவகஞ் செய்யு மிந தீர்த்தமெ நாளு மூழ்கி
ஏவா நீரா லென்று மீசனை பூசை செய்வோர்
ஆவரி பிறவி தன்னி லவர்கதி கரையை சார்வார்

விடுத்திடல் அரிய நித்த வேள்வி விரதம் வேத
தடுத்திட லரிய தான தவமிவை தரும்பே றெல்லாம்
அடுத்ததன் கரையில் வைகி யீசனை யருச்சி போர்க்கு
கொடுத்திடு புண்ணி யத்திற் கோடியி லொன்று கொவ்வா

உம்மையிற் பிறவி தோறு நியமநல் லொழுக்கம் பூண்டு
பொய்மையில் விரத தான தவஞ்செய்து புனிதராகி
செம்மைநன் னெறியி னின்ற சித்தழி கலதி தீர்த்தம்
இம்மையில் அடைந்து நித்தமாடுதற் கெய்தா தன்றே

மதிகதிரோ னிடத்தொடுங்கு தினந்திங்க பிறப்பரவம் வாயங் காந்து
கதிர்கடமை விழுங்குதினம் விதிபாத மிந்நாளிற் கருதி மூழ்கி
துதிகடரு பணந்தானம் புரிதன்மனு வோதுதல தொகையொன் றற்கொன்
றதிகபல னம்முறைநூ றாயிரநூ றாயிரமோர் அநந்த மாகும்

பொருவரிய தகர்த்திங்க டுலாத்திங்கள் இவை யுதிக்கும் போது மூழ்கின்
ஒருபதினா யிரமடங்காஞ் கறவுகவை தாளலவ னுதிப்பின் மூழ்கின்
இருபதினா யிரமடங்கா மிந்திரவி யிடத்தொடுங்கு மிந்து வாரம்
வருவதறி தாடிமனு வோதன்முதற் செயினனந்த மடங் குண்டாகும்

பிரயாகை தனின்மகர மதிநாண்மு பதுங்குடைந்து பெறும்பே றிந
திரையார்பை தடத்தொருநாண் மூழ்குவோன் பெறும்விரத சீலம் பூண்டு
வரையாமல் ஒருவருடம் படிந்துமையை யமரர்சிகா மணியாம் வேத
உரையானை வழிபடுமேன் மலடிக்கு நன்மகப்பே றுண்டா மன்னோ

எண்டிசைய நதிவாவி வடிவான மாதீர்த்தமெல்லா மிப்பொற்
புண்டரிக தடத்திலொரு கோடியிலோர் கூறுநிகர் போதா வீது
கண்டதனா லறந்தீண்ட பெற்றதனா னற்பொருளங் கையால் அள்ளி
கொண்டதனா லின்பநலங் குடைந்ததனாற் பேரின்பங் கொடுக்கு மன்றோ

முன்னவ னருளி செய்த காரண முறையால் அன்றி
இன்னமி புனித வாவி கேதுவா லெய்து நாமம்
மின்னவிர் சடையான் சென்னி மேவிய கங்கை நீரிற்
பின்னது கலந்த நீராற் பெறுஞ்சிவ கங்கையென்றும்

அலகிலா தீர்த்த தம்மு ளதிகவு தம்மா தோன்றி
இலகலா லிதனை தீர்த்த வுத்தம மென்பர் ஆராய்ந்தோர்
பலவிதழ் விரித்து செம்பொற் பங்கய மலர்ந்த நீரால்
உலகவர் யாரும் பொற்றா மரையென வுரைப்ப ரன்றே

தருமமுன் னாகு நான்கு தருதலாற் றரும தீர்த்தம்
அருமைசால் அருத்த தீர்த்த மரும்பெறற் காம தீர்த்தம்
இருமைசேர் முத்தி தீர்த்த மென்பதா மீனைய தீர்த்தம்
வெருவரு பாவமென்னும் விறகினு கெரியா மன்றே

இவ்வரு தலத்தி னாற் பெருமையும் எரிகால் செம்பொற்
றெய்வத பதும தீர்த்த பெருமையுஞ் செப்ப கேட்டேன்
எவ்வமில் போகம் வீடு பெறுவரென் றிசைத்தான் முந்நீர
பௌவமுண் டமரர் வேந்தன் பரிபவ விழு தீர்த்தோன்
தீர்த்த விசேட படலம் சுபம்
மூர்த்தி விசேட படலம்

ஆலவா யலர்ந்த செம்பொ னம்பு பெருந்தீர தத்தின்
மேலவாம் பெருமை தன்னை விளம்புவா ரெவரே யங்கண்
நீலமா மிடற்று முக்க ணிராமய னறிவா னந்த
மூலமா விலிங்கமேன்மை முறையினா லறைய லுற்றாம்

பொன்னெடு மேரு வெள்ளி பொருப்பு தரங்கே தாரம்
வன்னெடும் புரிசை சூழந்த வாரண வாசி யாதி
பன்னரு தலங்க டம்மிற் பராபர விலிங்க தோன்றும்
முன்னரி கடம்பின் மாடே முளைத்ததி சைவ லிங்கம்

அப்பதி யிலிங்க மெல்லா மருட்குறி யிதனிற் பின்பு
கப்புவி டெழுந்த விந்த காரணமிரண்டி னாலும்
ஒப்பரி தான ஞான வொளிதிரண் டன்ன விந
திப்பிய விலிங்க மூல மா சிறக்கு மன்னோ

இந்தமா விலிங்க தெண்ணான் கிலக்கண விச்சை மேனி
அந்தமி லழகன் பாக துமையொடு மழகு செய்து
சந்ததம் விளக்கஞ் செய்யு தகைமையை நோக்கி சோம
சந்தர னென்று நாமஞ் சாத்தினார் துறக்க வாணர்

திறப்படு முலக மெங்கும் வியாபியா ய்ச்சிறந்துநிற்கும்
அறப்பெருங் கடவுள் சோமசுந்தர னதனா லன்றே
கறைக்கதிர் வடிவேற் றென்னன் கையிற்பொற் பிரம்புபட்ட
புறத்தடி தழும்பு மூன்று புவனமும் பட்டதன்றே

சொற்றவி சமட்டி யான சோமசு தரனை காண
பெற்றவர் வியட்டி யான பிறபதி யிலிங்கங் காணல்
உற்றவ ராவ ரென்னென் றுரைக்கின்வே ரூட்டு நீர்போய்
மற்றைய சினைக ளெல்லா தழைவிக்கு மரத்தின் மாதோ

எத்தல தியாவ னெண்ணெண் டிருவிளை யாடல் செய்தான்
அத்தல தவனு கொப்பு மதிகமாஞ் சிறப்பும் பெற்ற
உத்தம னென்று மெந்த வுலகிலு மில்லை யந்த
வித்தக னதிக தன்மை யெனைத்தெனின் விளம்ப கேண்மின்

பொருப்பினு டலைமை யெய்தும் பொன்னெடுங் குடுமி மேரு
தருக்களிற் றலைமை சாரு தண்ணறு தெய்வ தாரு
விருப்புறு கேளிவி தம்முண் மேம்படும் புரவி மேதம்
அருட்படு தான தம்முள் விழுமிதா மன்ன தானம்

மனிதரி லுயர்ந்தோ ராதி மறையவர் தேவர் தம்மிற்
பனிதரு திங்கள் வேணி பகவனே யுயர்ந்தோன் வேட்டோர
கினிதருள் விரத தம்மு ளதிகமா மிந்து வாரம்
புனித திரங்க டம்மு போதவை தெழுத்து மேலாம்

மின்மைசான் மணியிற் சிந்தா மணிவரம் விழுப்ப நல்கு
தன்மைசா லறங்க டம்மின் மிகுஞ்சிவ தரும மென்ப
இன்மைசா னெறி நின் றோரு கேற்குநற் கலங்க டம்மின்
நன்மைசான் றவரே முக்க ணாதனு கன்பு பூண்டோர்

தீயவான் சுவை ப்பா லாவிற் றேவரா வதிகம் பல்வே
றாயமா தீர்த்த தம்மு ளதிகமாஞ் சுவண கஞ்சம்
மாயமா சறுக்க வெல்லா தலத்திலும் வதிந்து மன்னு
தூயவா னவரிற் சோம சுந்தரன் சிறந்தோ னாகும்

அந்தமு முதலு மில்லா வகண்டபூ ரணமா யார்க்கும்
பந்தமும் வீடு நல்கும் பராபர சோதி தானே
வந்தனை புரிவோர கிமை மறுமைவீ டளிப்பா னிந்த
சுந்தர விலிங்க தென்றும் விளங்குவான் சுருதி யேத்த

இத்தகு சயம்பு தன்னை யேனைய வெல்லாம்
நித்தமும் தரிசி தேகு நிருமல வொளியா மிந்த
உத்தம விலிங்கங் கண்டோ ருரையுணர் வொடுங்க வுள்ளே
சித்தமா சொழி தோன்றுஞ் சிவபரஞ் சுடரை கண்டோர்

இத்தனி சுடரை நேர்கண் டிறைஞ்சினோர் பாவ மெல்லாங்
கொத்தழற் பொறிவா பட்ட பஞ்சுபோற் கோப மூள
மெய்த்தவஞ் சிதையு மாபோன் மருந்தினால் வீயு நோய்போல்
உத்தம குணங்க ளெல்லா முலோபத்தா லழியு மாபோல்

கலிகடல் இரவி தோன்ற கருகிரு ளுடையு மாபோல்
ஒலிகெழு பெருங்கா றள்ள வுடைபடு மேகம் போல
வலிகெழு மடங்கல் சீற மாயுமால் யானை போல
குலிசவல் லேறு தாக்க பொடிபடுங் குன்றம் போல

மருட்சிசெய் காம நோயான் மதிகெடு மாறு போல
அருட்சிவ ஞான நோக்கால் வலிகெடும் அவிச்சை போல
தருக்கறு முவணஞ் சீற தழலரா விளியு மாபோற்
செருக்குற வழியுங் கற்ற கல்விபோற் சிதையு மன்றோ

புலரியிற் சீவன் முத்தி புரேசனை காண பெற்றால்
அலைகட னான்கு பட்ட வவனிமா தானஞ் செய்த
பலனுறுங் கதிர்கால் உச்சி வைகலிற் பணி பெற்றாற்
கலைஞர்பா னூற்று பத்து கபிலைமா தான பேறோம்

விண்ணிடை பரிதி புத்தேண் மேலைநீர் குளிக்கும் எல்லை
அண்ணலை வணங்கிற் கோடி யானின தான பேறோம்
பண்ணவர் பரவும் பாதி யிருள்வயிற் பணி பெற்றால்
வண்ணவெம் புரவி மேத மகம்புரி பெரும்பே றெய்தும்

இன்னன வதிக மாம்பே றறிந்துபோ யெத்தே வர்க்கும்
முன்னவன் சமட்டி விச்சா புரமுறை முதல்வன் றன்னை
சொன்னவி கால தோறும் இறைஞ்சியு தொழுதுஞ் சூழ்ந்தும்
பொன்னடி கன்ப ராகி வழிபடும் புனித சீலர்

உம்மையில் வினைக ளென்னும் பிணியவிழ தொருவி தூய
செம்மைய ராகி யானா திருவொடு செல்வ மோங்க
வெம்மையில் போகமூழ்கி மலவிருள் வீக்க நீந்தி
மைம்மலி கண்ட தெங்கோன் மலரடி நீழல் வாழ்வார்

அறவுருவன் ஆலவா யானாமஞ் செவிமடுத்தா லடைந்த பத்து
பிறவிவினை யறுநினைந்தா னூறுபெரும் பவப்பாவ பிணிபோங் கூடல்
இறைவனையின் றிறைஞ்சுதுமென் றெழுதுமனை புறம்போந்தா லீரைஞ்ஞாறு
மறமுறுவெம் பவத்திழைத்த பாதகவல் வினையனைத்து மாயு மன்னோ

புழைக்கைவரை தொலைத்தானை தரிசித்தோர் ஆயிரமாம் புரவி வேள்வி
தழைத்தபெரும் பயன்பெறுவ ருருத்திரசூ தம்மதனாற் றவவா னோர்கள்
தொழற்கரியான் றனைத்துதித்தோர் கணத்துக்கா யிரராச சூய யாகம்
இழைத்தபெரும் பயன்பெறுவர் சமட்டிவடி வாகியவவ் விலிங்க தன்னை

அங்கையள வாகியநன் னீராட்டி பூசித்தோ ரளவி லேனை
துங்கதல துறையிலிங்க மூர்த்திகளை சிவாகமநூல் சொன்ன வாற்றான்
மங்கலமா கியமுகம னீரெட்டும் வழுவாது வாச தோய்ந்த
செங்கனசு மணிக்கலச புனலாட்டி மாபூசை செய்தோ ராவார்

அவ்வண்ணஞ் சுந்தரனை யைந்தமுத மானுதவு மைந்து தீந்தேன்
செவ்வண்ண கனிசாந்த சேறுமுதன் மட்டித்து தேவர் தேறா
மெய்வண்ணங் குளிரவிரை புனலாட்டி மாபூசை விதியாற் செய்தோர்
மைவண்ண வினைநீந்தி யறமுதனாற் பொருளடைந்து மன்னி வாழ்வார்

நல்லவகை முகமனீ ரெட்டுள்ளும் வடித்தவிரை நன்னீர் ஆட்ட
வல்லவர்நூ றாயிரமா மேதமக பயன்பெறுவர் வாச நானம்
எல்லவிர்குங் குமஞ்சாந்த மிவைபலவு மட்டித்தோ ரெழிலார் தெய்வ
முல்லைநகை யாரோடும் விரைக்கலவை குளி தின்ப மூழ்கி வாழ்வார்

நன்மலரொன் றாலவா யான்முடிமேற் சாத்தினா யைந்து நூறு
பொன்மலர்கொண் டயற்பதியுற் பூசித்த பயனெய்தும் புனித போக
தன்மைதரு சுந்தரக்கு தூபமொரு காற்கொடு போர் தமக்கு தாங்கள்
சொன்மனமெய் யுற செய்த குற்றம் ஆயிரம் பொறுப்பன் சுருதி நாதன்

திருவமுது நிவேதிப்போர் அவிழொன்றற் குகமொன்றா சிவலோ கத்தின்
மருவிநிறை போகமுடன் வைகுவர்தாம் பூலமுக வாச மீந்தோர்
பொருவரிய கடவுளராண் டொருநூறு கோடிசிவ புரத்து வாழ்வார்
ஒருபளித விளக்கிடுவோர் வெண்ணிறமுங் கண்ணுதல முடைய ராவார்

நறுந்திருமஞ் சனமெடு குடமாட்ட மணிக்கலச நல்ல வாசம்
பெறுந்தகைய தூபக்கா றீபக்கான் மணியின்ன பிறவுங் கங்குல்
தெறுங்கதிர்கான் மணிமாட மதுரைநா யகர்க்கீந்தோர் செய்த பாவம்
வெறுந்துகள்செய் தைம்பொறிக்கும் விருந்தூட்டும் பெருங்காம வெள்ள தாழ்வார்

கயலிசைய கண்ணுமைகோன் றிருமுன்னர பல்லியமுங் கல்லென் றார்ப்ப
இயலிசைய பாடலினோ டாடலிவை செய்விப்போர் இறுமா பெய்தி
புயலிசைய வியங்கலிப்ப மூவுலகு தொழவரசா பொலங்கொம் பாடுஞ்
செயலிசைய வணங்கனையா ராடரங்கு கண்டின்ப செல்வ தாழ்வார்

ஒருகால டாங்கமுடன் பஞ்சாங்க முடநாத லெண்செங் கால்வெண்
குருகாலு மலர்த்தடஞ்சூழ் கூடனா யகற்பணிவோர் கோலொன் றோச்சி
பொருகாலின் வருபரித்தேர் மன்னவரா யாவருந்தம் புடைவ தெய்தி
இருகாலு தலைவருட வெக்காலு தமைவணங்க விருப்பர் அன்றே

இத்தகைய திருவால வாயுடையான் றிருமுன்னர் இயற்று மோமம்
மெய்த்தவ திரந்தான மின்னவணு வளவெனினு மேரு வாகும்
உத்தமமா மிவ்விலிங்க பெருமையெலாம் யாவரள துரைப்பர் வேத
வித்தகரே சிறிதறிந்த வாறுரைத்தே மினிப்பலகால் விளம்பு மாறென்

இத்தலத்து கொப்பாக வொருதலமும் பொற்கமலம் என்னு மிந்த
உத்தமமா தீர்த்தத்து கொப்பதொரு தீர்த்தமுமெய் யுணர்வா னந்த
வித்தனைய விலிங்கமிதற் கொப்பாவோ ரிலிங்கமும்பார் விண்மே லென்னும்
முத்தலத்து மிலையந்த மூர்த்திதிரு நாமங்கண் மொழி கேண்மின்

கருப்பூர சுந்தரன்பூங் கடம்பவன சுந்தரனு கரவா தொண்டர்
விருப்பூருங் கலியாண சுந்தரனல் லறவடிவாய் விளங்கு மேற்று
பொருப்பூரும் அபிராம சுந்தரன்றேன் புடைகவிழ பொன்னிற் பூத்த
மருப்பூசௌ சண்பகசு தரன்மகுட சுந்தரன்றான் வாழி மன்னோ

மான்மதசு தரன்கொடிய பழியஞ்சு சுந்தரனோர் மருங்கின் ஞான
தேன்மருவி யுறைசோம சுந்தரன்றேன் செவ்வழியாழ் செ பூத்த
கான்மருவு தடம்பொழில்சூழ் ஆலவா சுந்தரன்மீன் கணங்கள் சூழ
பான்மதிசூழ் நான்மாட கூடனா யகன்மதுரா பதிக்கு வேந்தன்

சிரநாலோன் பரவரிய சமட்டிவிச்சா புரநாதன் சீவன் முத்தி
புரநாதன் பூவுலக சிவலோகா திபன்கன்னி புரேசன் யார்க்கும்
வரநாளு தருமூல விலிங்கமென விவைமுதலா மாட கூடல்
அரனாம வின்னமள பிலவாகும் உலகுய்ய வவி லிங்கம்

பாதாள மேழுருவ முளைத்தெழுந்த தவ்விலிங்க படிவ தன்னுள்
அதார மாகவமர தறுபத்து நாலுவிளை யாடல் செய்த
போதான தன்பெருமை நங்குரவன் மொழிப்படியே புகன்றோ மென்றான்
வேதாதி கலைதெரிந்த மலயமுனி கேட்டறவோர் வினாதல் செய்வார்

அருட்கடலே யிறைவிளையா டறுபத்து நான்கென்றா யவையா னந்த
பொருட்கடவுள் எக்கால தியாவர்பொரு டாடினனெம் போத தேறி
தெருட்படர வரன்முறையாற் செப்புகென கரங்குவித்தார் தென்பால் வெற்பில்
இருப்பவனும் வினாயபடி கிறை நிரம்ப தொகுத்துவிரி தியம்பு கின்றான்
மூர்த்தி விசேட படலம் சுபம்
பதிக படலம்

வானவர்கோன் பழிதொலைத்த விளையாட்டுங் கரிசாப மாய்த்த வாறும்
மீனவர்கோன் காடெறிந்து புரங்கண்ட பெருஞ்சிறப்பு மீனநோக்கி
ஆனதடா தகையழல்வா யவதரித்து பாராண்ட வருளும் ஈசன்
தானவளை மணஞ்செய்து முடிதரித்து மண்காத்த தகைமை பாடும்

புலிமுனியும் பணிமுனியு தொழவெள்ளி மன்றுணடம் புரிந்த வாறும்
வலிகெழுதோ குண்டகட்டு குறட்கன்ன குன்றளித்த வகையும் பின்னும்
நலிபசிநோய் கெடவன்ன குழியசைத்து கொடுத்துநீர் நசைக்கு வைகை
அலைபுனல்கூ யருத்தியதும் பொன்மாலை கெழுகடலும் அழைத்த வாறும்

அந்தரர்கோ னாதனத்தில் உறைமல துவசனை மீண்டழைத்த வாறுஞ்
சுந்தரவு கிரகுமர னவதரித்த வாறும்வளை சுடர்வேல் செண்டு
தந்தையிட தவன்பெற்ற வாறுமவ னவ்வடிமேல் சலதி வீறு
சிந்தவிடு ததுமகவான் முடியைவளை யெறிந்திறைவன் சிதைத்த வாறும்

பொன்னசல தனைச்செண்டாற் புடைத்துநிதி யெடுத்ததுவும் புனிதர்க்கு ஈசன்
பன்னரிய மறைப்பொருளை பகர்ந்ததுவு மாணிக்கம் பகர்ந்த வாறு
தொன்னகர்மே னீர்க்கிழவன் வாவிடுத்த கடல்சுவற தொலைத்த வாறும்
அன்னதனி தொன்மதுரை நான்மாட கூடனக ரான வாறும்

வட்டங்கொள் சடையுடைய சித்தர்விளை யாடியதோர் வனப்புங் கையிற்
கட்டங்க தரித்தபிரான் கல்லானை கரும்பருந்த காட்டு மாறும்
உட்டங்கு வஞ்சனையால் அமணர்விடு வாரணத்தை யொழித்த வாறும்
இட்டங்கொள் கௌரிமுனம் விருத்தனிளை யோன்குழவி யான வாறும்

செய்யதாண் மாறிநட மாடியதும் பழியஞ்சு திறனு தாயை
மையலாற் புணர்ந்தமகன் பாதகத்தை மாற்றியது மதியா தாசான்
தையலா டனைவிரும்பு மாணவனை வாளமரிற் றடிந்த வாறும்
பையரா வெய்ததுவும் படிற்றமணர் விடுத்தபசு படுத்த வாறும்

அறவேற்று பரியுகைத்து மெய்க்காட்டு கொடுத்தவிளை யாட்டுங் காட்டு
சுறவேற்று கொடியரசன் றனக்குலவா கிழிகொடுத்த தொடர்பு நாய்கர்
நறவேற்ற மலர்க்குழலார் மனங்கவர்ந்து வளைபகர்ந்த நலனு மாறு
மறவேற்கண் மாதரார்க்கு அட்டமா சித்திபெற வகுத்த வாறும்

சென்னிபொரு டெயில்வாயி றிறந்தடைத்து விடைபொறித்த செயலுஞ் சென்னி
மன்னிகலி டமர்விளைப்ப மீனவற்கு நீர்ப்பந்தர் வைத்த வாறும்
பொன்னனையாள் பொருட்டிரத வாதவினை முடித்ததுவும் புகார்க்கு வேந்தன்
தன்னையகன் குழிவீட்டி தென்னவற்கு மறவாகை தந்த வாறும்

மனக்கவலை கெடவுலவா கோட்டையடி யாற்களித்த வகைய மாமன்
எனக்கருணை வடிவாகி வழக்குரைத்து பொருள் வணிகற் கீந்த வாறுஞ்
சினக்கதிர்வேல் வரகுணற்கு சிவலோகங் காட்டியது திலவு கோலான்
தனக்கடிமை யெனவிறகு திருமுடிமேற் சுமந்துபகை தணித்த வாறும்

அப்பாணற் கிருநிதியஞ் சேரனிடை திருமுகமீ தளித்த வாறும்
அப்பாணன் மனைவியிசை பகைவெல்ல வண்ணலவை யடைந்த வாறும்
அப்பாண னாளென்றோன் முலையருத்தி பன்றியுயி ரளித்த வாறும்

வயவேன குருளைகளை மந்திரிகள் ஆக்கியதும் வலியுண் டா
கயவாய்க்கு குருமொழிவை தருளியது நாரைக்கு கருணை நாட்ட
தயவால்வை தருண்முத்தி நல்கியதுங் கூடனகர் தன்னை சித்தர்
புயநாகம் போய்வளைந்து திருவால வாயாக்கி போந்த வாறும்

சுந்தரனென் றெழுதியகூ ரம்பெய்து செம்பியன் போர் தொலைத்த வாறுஞ்
செந்தமிழோர கியற்பலகை யருளியது தருமிக்கு செம்பொன் பாடி
தந்ததுவு மாறுபடு கீரற்க்கு கரையேற்ற தந்த வாறும்
விந்தமட கியமுனியாற் கீரனியற் றமிழ்தெளிய விடுத்த வாறும்

ஊமனாற் புலவரிக லகற்றியதும் இடைக்காட னுடன்போ கொன்றை
தாமனார் வடவால வாயமர்ந்த பரிசும்வலை சலதி வீசி
பூமனாய் குழலியைவே டருளியதும் வாதவூர புனிதர கேற
தேமனாண் மலரடிகண் முடிசூட்டி யுபதேசஞ் செய்த வாறும்

நரிகள்பரி யாக்கியதும் பரிகணரி யாக்கியது நாகம் பூண்டோன்
அரியதிரு மேனியின்மேல் அடிசுமந்து மண்சுமந்த வருளு தென்னன்
எரியடுவெஞ் சுரந்தணித்த வாறுமம ணரைக்கழுவி லிட்ட வாறுங்
கரியதென வன்னிகிண றிலிங்கங்கூய் வணிகமக காத்த வாறும்

எனத்தொகையால் அறுபத்து நான்கிவற்றை நிறுத்தமுறை யீறிலாத
வினைத்தொகையா றகன்றீரெ காலமெவர் பொருட்டெனநீர் வினாய வாற்றான்
மனத்தளவி லன்புமடை யுடைந்தொழுக திருவால வாயான் றாளை
நினைத்தளவி லானந்தம் பெருகவிரி துரைப்பலென நெரியாற் கூறும்
பதிக படலம் சுபம்
பரஞ்சோதி முனிவர் அருளிய
திருவிளையாடற் புராணம்
திருவாலவாய் மான்மியம்
திருச்சிற்றம்பலம்
இரண்டாவது கூடற் காண்டம்
நான் மாட கூடலான படலம் முதல் நாகமெய்த வரை
நான் மாட கூடலான படலம்

பூதங்கள் அல்ல பொறி வேறு புலன் உள்ள
பேதங்கள் அல்ல இவை அன்றி நின்ற பிறிது என்று பெருநூல்
வேதம் கிடந்து தடுமாறும் வஞ்ச வெளி என்ப கூடல் மறுகில்
பாதங்கள் நோவ வளை இந்தன் ஆதி பகர் வாரை ஆயும் அவரெ

திருமகள் வலக்கண் வாக்கின் சேயிழை இடக்கண் ஞான
பெருமகன் நுதல் கணக பெற்று வான் செல்வம் கல்வி
அருமை வீடு அளிப்பாள் யாவன் அவன் உயிர துணைவன் காண
ஒரு முலை மறைந்து நாணி ஒசிந்த பூம் கொம்பின் நின்றாள்

கதிர் மதி மிலைந்த வேணி கண்ணுதல் வருணன் ஏய
அதிர் கடல் வறப்ப செய்த ஆடல் ஈது அனையான் ஏய
முதிர் மழை ஏழின் மேலும் முன்னை நால் முகிலும போக்கி
மதுரை நான் மாட கூடல் ஆக்கிய வண்ணம் சொல்வாம்

எற்று தெண் திரை நீர சேர்ப்பன் தன் செயல் இழுக்கி நாணம்
உற்று இரு கண்ணும் சேப்ப உடன்று எழு கோப செம் தீ
பற்றிட ஆகம் வெம்பி பரவையும் ஆறும் வெந்து
வற்றிட வெகுண்டு நின்றான் மானமும் வலியும் குன்றான்

நளிர் புனல் மதுரை மூதுர் நாயகன் ஆடல் தன்னை
தௌ¤கிலன் ஆகி பின்னும் செழு முகில் ஏழும் கூவி
குளிர் கடல் வறந்தது என்ன குடித்து எழுந்து இடித்து பெய்யா
ஒளி வளர் மதுரை முற்றும் ஒல் என களைமின் என்றான்

பொள் என மேகம் ஏழும் புகுந்து பார் தெரிய முந்நீர
பள்ளமும் வறப்ப முற்ற பருகி மெய் கருகி மின்னி
தௌ¢ளரும் திசையும் வானும் செவிடு உற பிலமும் பாரும்
விள்ளாமல் வரைகள் எட்டும் வெடிபட மேரு சாய

ஊழிநாள் வெடிக்கும் அண்ட கடாகத்தின் ஒலிபோல் ஆர்த்து
பாழிவான் உருமு வீழ பணாடவி மணிகள் சிந்தி
ஆழி நீர் ஞாலம் தாங்கும் அரா உடல் நௌ¤ய திக்கில்
சூழி மால் யானை நின்ற நிலை கெட துணுக்கம் கொள்ள

வெள்ளிய நீறு பூத்து முழவென வீங்கு காய் போல்
தௌ¢ளிய வாலி சிந திரண்ட திண் பளிக்கு நூண்போல்
ஒள்ளிய தாரை சோர உம்பர் மீன் கணங்க ளோடும்
துள்ளிய திரையில் ஆடு மீன் கணம் துடித்து வீழ

ஆர்த்து எழு கொண்மூ ஏழும் சராசரம் அனைத்தும் சூழ்ந்து
போர்த்தன ஞாலம் உண்ண புக்கது ஓர் வடிவம் கொண்ட
தீர்த்தனில் விசும்பும் பாரும் திசைகளும் தெரியா ஆக
பார்த்த கண் நுழையா வாக பரந்து இருள் கான்ற அன்றே

பைஞ்சுடர் எறிக்கும் பச்சை கார் ஒளி பரப்பு நீலம்
புஞ்ச வாள் உடுக்கள் அன்ன நித்திலம் பொன்னம் குப்பை
செம் சுடர் மணிகள் துப்பு சிதறுவ கணவ ரோடும்
விஞ்சையர் மகளிர் ஊடி வெறுத்து எறி கலன்கள் போல

கடிய கால் உதை பெய்யும் கடும் செல எழிலி மாட
கொடிய நீள் கரை சூழ்ந்து புதைத்தலும் கோல் ஒன்று ஓச்சி
படி எலாம் புரக்கும் கோனும் நகர் உளார் பலரும் ஞாலம்
மடியும் நாள் இதுவே என்னா மயங்கினார் உயங்கினாரே

கண் நுதல் மூர்த்தி தானே இன்னமும் காக்கும் என்னா
புண்ணிய நகரோடும் பொருக்கென கோயில் எய்தி
விண் இழி விமான வாழ்க்கை விடையவன் அடிக்கீழ் வீழ்ந்தான்
அண்ணலார் ஆடல் முன்னும் அறிந்து கை கண்ட வேந்தன்

விடையினை ஆலம் உண்ட மிடற்றினை கங்கை தாங்கு
சடையினை கூற்றை வென்ற தாளினை மேரு சா
படையினை அடியேம் துன பாட்டினை நீக்கி ஆளும்
நடையினை ஆகி எங்கள் நல் உயிர் காத்தல் வேண்டும்

என்னலும் தென்னர்க்கு என்றும் எய்திய இடுக்கண் தீர்க்கும்
முன்னவன் முன்போல் நான்கு முகிலையும் நோக்கி இன்ன
தொல் நகர் எல்லை நான்கும் சூழ்ந்து நான் மடம் ஆகி
வின் நெடு மாரி ஏழும் விலக்குமின் என விடுத்தான்

வந்து நான் மாடம் ஆகி வளைந்து நால் திசையும் சூழ்ந்து
சந்து வாய் தெரியாது ஒன்றி தாம் ஒரு குடிலாய் மாட
பந்தி கோபுரம் செய் குன்றம் கால்கள் போல் பரி போர்த்த
இந்து வார் சடையோன் ஏய எழிலிமா நகரம் எங்கும்

அன்ன நான் மாடத்துள்ளும் நகர் உளார் அமைச்சர் வேந்தன்
அன்ன நால் கருவி தானை சராசரம் பிறவும் தாழ்ந்து
முன்னை நாள் தனினும் இன்பம் மூழ்கி நன்கு இருந்தார் ஊழில்
பொன்ன நாள் பாகன் தாளில் புக்கு அமர்ந்து இருந்தார் ஒத்தார்

கழை கெழு வரையின் உச்சி கவிழ்கின்ற புயல் போல் கார் சூழ்ந்து
இழை மணி மாடத்து உம்பர் எறிதுளி உடைந்து துள்ள
தழை கடல் வறப்ப வாங்கி தம் உடல் வற பெய்து
மழைகளும் வெள்கி நின்ற வருணனும் நின்றான்

நடுங்கினன் கழிந்த அச்சம் நாணம் மீதுர மானம்
ஒடுங்கினான் உள்ளத்து ஓர் உவகை வந்து எய்த பொன்பூத்து
தடம் கரை குறுகா முன்னோய் தணிந்து பின் தோய்ந்து பாசம்
மடங்கினன் அடங்கா அன்பின் வள்ளலை பூசை செய்வான்

புனித நீராடி கண்டி பூண்டு வான் கங்கை ஆதி
வனிதையர் பசும் பொன் கும்ப வாசநீர் வடித்து நீட்ட
பனிமலர் சந்தம் கந்தம் அணிகலன் பசும் பொன் ஆடை
இனையன பிறவும் ஈன்று கற்பகம் எடுத்து காட்ட

ஐம் கனி அமுதம் ஐந்து கௌவிய அமுதும் தூபம்
செம் கதிர் விளக்க மின்ன தேவரான் கொடுப்ப சேல்கண்
நங்கை தன் பதியை பூசித்து ஆயிரம் நாமம் கூறி
பைங்கதிர் முத்தம் சாத்தி தொழுது அடி பணிந்து நின்றான்

அருச்சனை உவந்த ஆதி அமலன் நீ யாது வேண்டிற்று
உரைத்தி என்று ஓத நீர கோன் ஒல்லை தாழ்ந்து ஒன்றினாலும்
கரைத்திட அரிய இந்த கடிய என் வயிற்று நோய் நின்
திரை தடம் ஆடும் முன்னே தீர்ந்திட பெற்றேன் எந்தாய்

வேத முதல் கலை காட்சி அளவை விரிஞ்சன் விண்ணோர்
சோதனை உள் அகப்படா சோதி உனை சோதிக்க துணிந்தேன் அந்தோ
பேதைமையேன் இடத்து என்ன குணம் கண்டு என் பிணி தீர்த்து பெற்றாய் ஆசை
கோதம் இலாய் குற்றமே குணம் கொள்வது நின் குணமோ ஐயா

பொன் நகரான் காலம் தாழ்த்து உனை அருச்சித்து அயர்ச்சியோடும் போனவாறும்
என் என யான் வினவியதும் வலாரி இறை கொடுத்ததும் அவ் இறைக்கு நேர்
பின்னை வினாயதும் அவன் சொல் வழி உன்னை சோதித்த பெற்றி தானும்
முன்னவனே உன் அருளால் என் பிணிக்கு மருந்தாகி முடிந்த வாறே

ஆறு மதி முடி அணிந்த அருள் கடலே வயிற்று நோய் அன்றி மேல் நாள்
மாறுபடு இரு வினையும் மனவலியும் கெட வீட்டின் வழியும் பெற்றேன்
வேறு இனி மந்திரம் என்னை மணி மருந்து மெய்ம்மை
தேறும் அவர்க்கு இப்புனித தீர்த்தமே பிணி அனைத்தும் தீர்ப்பது அன்றோ

அடியனேன் முன்னம் செய்த அபராதம் இரண்டும் தீரும்
படி பொறுத்து அருள்வாய் என்று பன் முறை பரவி தாழ்ந்து
மடி விலா மகிழ்ச்சி பொங்க வரங்களும் சிறிது வேண்டி
கடியதன் நகரம் புக்கான் குடதிசை காவல் வேந்தன்

வன் திறல் வருணன் விட்ட மாரியை விலக்க ஈசன்
மின் திகழ் சடையினின்று நீங்கிய மேகம் நான்கும்
குன்று போல் நிவந்து நான்கு கூடமா கூடலாலே
அன்று நான் மாட கூடல் ஆனது ஆன் மதுரை மூதூர்
நான் மாட கூடலான படலம் சுபம்
எல்லாம் வல்ல சித்தர் திருவிளையாடற் படலம்

சத்த நால் மறை பொருள் வரை தள்ளு நீள் முடிமேல்
வைத்த கார்கள் நான் மாடமாய் மதுரை மேல் வருணன்
உய்த்த மாரியை தடுத்தவாறு உரைத்துமே உயர்த்தோர்
சித்தராய் விளையாடிய செயல் சிறிது உரைப்பாம்

தேட அரும் கதிர் மணி முடி செழியனும் பாண்டி
நாடரும் திரு எய்தி மேல் நல்ல வீடு எய்த
கூடல் அம் பதி மேவிய குணம் குறி கடந்த
வேடர் அங்கு ஒரு சித்த மெய் வேடராய் வருவார்

வட்ட வார் சடை குஞ்சியும் பூண நூல் மார்பும்
இட்ட நீறு அணி திலகமும் இணை குழை தூங்க
விட்ட வெள்ளை முத்திரையும் தோல் விரித்த பட்டிகையும்
சுட்ட வெண் பொடி பொக்கணம் தூக்கிய தோளும்

துய்ய வெண் பொடி அழிந்து மெய் சிவந்திட சுவடு
செய்யும் வெண்திரள் படிக நீள் மாலையும் சிவந்த
கையில் அங்கு கட்டங்கமும் கண்டவர் மனம் சென்று
உய்ய வன்புற வீக்கிய உதர பந்தனமும்

அட்ட வேங்கை ஈர் உரிவை கீண்டு அசைத்த கோவணமும்
ஒட்ட வீக்கிய புலி அதன் உடுக்கையும் இட தோள்
இட்ட யோக பட்டிகையும் பொன் இடை கட்ட
பட்ட சு·றொலி வேத்திர படைக்கையும் படைத்து

வேத கிங்கிணி சிலம்பு சூழ்ந்த அடிகளில் மிழற்ற
ஓத அரும் பத முளரி ஊறு அருண் மது ஒழுக
போத ஆனந்த மது நுகர்ந்து அலர் முகம் பொலி
பாத பங்கய உப நிடத பாதுகை சூட

சிறிது மூரலும் வெயர் வையும் திருமுகத்து அரும்ப
குறுகி ஆவணம் சித்திர கூட நால் சந்தி
மருகு சூளிகை உபரிகை மாளிகை வாயில்
அறுகு சூழ் நிரைத்த தெற்றி இவ் விடம் தொறும் அடைந்து

தெற்கு இருப்பவர் போல் வடதிசை வயில் சென்று
புக்கு இருப்பதும் கிழக்கு உள்ளார் போல மேல் திசையில்
நக்கு இருப்பதும் யாவரும் நாடினர் அறி
தக்கது அன்றியே இந்திர சாலமா தணந்தும்

சேய வெற்பினை அணியதா செய்து மற்று அணித்தாய்
மேய வெற்பினை சேயதா விடுத்தும் மெய்ம் முது மூப்பு
ஆய மக்களை இளையவர் ஆக்கியும் குதலை
வாய மக்களை கழிமுது மக்களாய் வகுத்தும்

ஆணை பெண் உரு ஆக்கியும் பெண்ணை ஆண் உருவாய்
மாண காட்டியும் மலடியை மக பெற செய்தும்
கோணல் கூன் செவிடு ஊமை கண்குருடு பங்கு எவரும்
காண தீர்த்து நாலு லோகமும் கனகமா செய்தும்

செல்வர் தம் மனை பொருள் எல்லாம் வறுமையில் சிறந்தோர்
இல்லம் எய்தவும் நட்டவர் இகல் இன்றி தம்மின்
மல்லு வெம் சமர் இழைப்பவும் காஞ்சிர மரத்தின்
நல்ல தீம் கனி பழுப்பவும் விஞ்சைய கண் ஐந்தும்

பருவம் மாரிய பருவத்தில் வைகை நீர் பரந்து
வருவது ஆக்கியும் மீளவும் வறந்திட செய்தும்
பொருவி தீம் சுவையோடு அடையும் பொய்கையும் உவர்ப்பு
தருவ ஆக்கியும் உவரியின் சுவையவா தந்தும்

வீசி மாத்திரை கோலினை விண்ணில் நட்டு அதன்மேல்
ஊசி நாட்டி இட்டு ஊசிமேல் பெருவிரல் ஊன்றி
ஆசு இல் ஆடியும் ஊசிமேல் அவை கிழக்காக
மாசு இல் சேவடி போதுவான் மலர்ந்திட சுழன்றும

சண்ட வெம் பணி பகை என பறந்து விண் தாவி
கொண்டலை பிடித்து இடி யொடும் குடித்த நீர் பிழிந்து
கண்டவர்க்கு அதிசயம் பெற காட்டியும் காண
விண் தலத்தினில் பண்டுபோல் இறை கொள விடுத்தும்

எல் இடை படும் பொருள் களை இரா எழ பார்த்தும்
அல் இடை படும் பொருள் களை பகல் வர அமைத்தும்
வல் அழல் புனல் உளர் வலி கெட பார்த்தும்
நல்ல போது காய் கனி இலா நாள் பட கண்டும்

பீளையால் விழி கிழவரை பிரம்பினால் வருடி
காளை ஆடவர் ஆக்கி கணவருக்கு இசைய
ஈளை வாய் முது கற்பினார் கரு அடைந்து இளமை
ஆள வேத்திரம் வருடி நீறு அளித்து அருள் செய்தும்

அகரம் ஆதி மூன்று ஆகிய ஆகருடணமே
புகர் இலா அதிரிச்சிய அஞ்சனம் பொருவில்
வகரம் ஆதி மூன்று ஆகிய வசியமே வாதம்
இகல் இலா வயத்தம்பம் என்று இன்னவை செய்தும்

வேத நூல் தௌ¤யார்கள் கலைகளும் விளங்க
பூதி நாவினில் சிதறியும் பூழியன் காதன்
மாதராரொடும் பயில் புது மணமலர காவில்
காதநீண்ட கோள் தெங்கினை கரும் பனை செய்தும்

ஏனை வான் தரு குலங் களை புட்களை இருகோட்டு
ஆனை ஆதி பல் விலங்கினை ஒன்றை ஒன்று ஆக
நான நோக்கினால் நோக்கியும் நாடிய இளையோர்
மானின் நோக்கியர் ஆகிலோம் என எழில் வாய்த்தும்

நாக நாடு பொன் நாட்டு உள பொருளும் நகருள்
ஆக ஆக்கியும் இன்னணம் விச்சைகள் அனந்தம்
மாக நாயகன் மலைமகள் மதுரை
ஏக நாயகன் திரு விளையாடல் செய்து இருந்தான்

சித்த யோகிகள் செய்கின்ற ஆடல் மேல் செலுத்தி
வைத்த கண்களும் சிந்தையும் வாங்கலர் திகைத்து
தந்த மாள் வினை தொழில் மறந்து இருந்தனர் தகைசால்
முத்த வேதியர் ஆதிய முதுநகர் மாக்கள்

இனைய செய்தியை உழையரால் இறைமகன் அறிந்தான்
அனைய சித்தரை இங்ஙனம் தருக என அடுத்தார்
தனை அகற்றினன் சித்தரை சார்ந்தவர் தாமும்
வினைய வென்றவர் ஆடலை வியந்து கண்டு இருந்தார்

அமைச்சர் தங்களை விடுத்தனன் அமைச்சரும் சித்தர்
அமைச்சர் அண் பணிந்து அரசன் முன் வருக என தவத்தோர்
எமக்கு மன்னனால் என் பயன் என மறுத்திட மண்
சுமக்கும் மன்னவன் தம்மவர் தொழுதனர் போனார்

மன்னன் முன் அமைச்சர் சித்தர் மறுத்து உரை மாற்றம் கூற
முன்னவன் அருள் பெற்று இம்மை மறுமையும் முனிந்த யோகர்
நில வேந்தர் மட்டோ இந்திரன் அயன் மால் ஏனோர்
தன்னையும் மதிப்பரோ என்று இருந்தனன் தரும வேந்தன்
எல்லாம் வல்ல சித்தரான திருவிளையாடற் படலம் சுபம்
கல்லானைக்கு கரும்பருத்திய படலம்

செல்லார் பொழில் சூழ் மதுரா புரி சித்தர் எல்லாம்
வல்லார் அவர் ஆடலை யார் உரை செய்ய
எல்லாரும் வியப்பு உற தனி சித்த சாமி
கல்லானை தின்ன கரும்பு ஈந்த கதையும் சொல்வாம்

பின்னேய அச்சம் பெருக பெரியோரை எண்ணாது
என்னே எளியார் என யான் இகழ்ந்து இங்ஙன நீண்ட
சொன்னேன் அவர்க்கு என்குறை என்னில் உருவி நானே
தன்னேர் இலாதார் தமை காண தகுவன் என்னா

ஆனந்த சித்தர் தமை காண்பல் என்று அன்பு கூர்ந்த
மீனம் தரித்த கொடி வேந்தன் குறிப்பு நோக்கி
மோனம் தரித்த சிவயோகரும் முந்தி தம்பொன்
மானம் தனக்கு வட மேல் திசை வந்து இருந்தார்

அருகாத செல்வத்து அவன் அன்று தை திங்கள் தோற்றம்
வரு காலம் ஆக மதுரேனை வந்து வந்தித்து
உருகா தரத்தால் கழிந்து உள் வலமாக மீள
வருவான் அவன் முன் வரு காஞ்சுகி வன்கண் மாக்கள்

சீறிட்ட வேங்கை அதள் சேக்கையர் சீறி ஐந்தும்
பாறிட்ட வேடர் யோக பட்டத்தர் கட்டங் கத்தில்
ஏறிட்ட கையர் இறுமாந்து இருப்பாரை நோக்கி
மாறிட்டு நீக்கி எழ போக என வந்து சொன்னார்

பின்னா வரு தென்னர் பிரான் பெரியோரை நோக்கி
என் நாடு நும் ஊர் நுமக்கு வரும் யாது வேண்டும்
நும் நாமம் ஏது நுவல் மின் என வைய எந்தன்
நல் நாது எந்த நகர் உள்ளும் திரிவம் அப்பா

ஆனாலும் இப்போது அணி கான்மிர நாட்டில் காசி
தான் நாம் இருக்கும் தலம் ஆகும் அநாதர் ஆகி
ஆனாத பிச்சை பெரு வாழ்வு உடையார் நமரா
நாள் நாளும் விஞ்சை நடா திரி சித்தரேம் யாம்

ஆனந்த கானம் தொடுத்து இங்கு உள ஆன சைவ
தானம் பலவும் தொழுதல் பரமாகி வந்தேம்
ஞானம் தரும் நகர் இம்மையில் சிவன் முத்தி
ஆனந்தம் ஆன பர முத்தி மறுமை நல்கும்

ஈண்டு உள்ளவர்க்கு எம் விளை யாடலை காட்டி இச்சை
வேண்டும் பலசித்தியும் நல்குவம் வேதம் ஆதி
மாண்டு அங்கு எண் கலை ஞானமும் வல்லம் அல்லால்
சேண் தங்கு எல்லா பொருளும் வல்ல சித்தரேம் யாம்

உன்னால் நமக்கு பெறல் வேண்டுவது ஒன்றும் இல்லை
தென்னா என உள் நகை செய்தனர் சித்தயோகர்
மன்னா இவர் தம் இறுமாப்பும் செருக்கும் வீறும்
என்னால் அளவிட்டு அறிவேன் என எண்ணி தேர்வான்

தேறும் பொழுது ஓர் உழவன் ஒரு செல்வ கன்னல்
ஆரும் கமுகு என்ன வயிர உற கொண்டு தாழ
பாரும் திசையும் புகழ் பங்க செங்கை தாங்கி
நீரும் பிறையும் கரந்தார் தமை நேர்ந்து சொல்வான்

வல்லாரில் வல்லேம் என உம்மை மதித்த நீர்
கல் ஆனைக்கு இந்த கரும்பை அருத்தின் எல்லாம்
வல்லாரும் நீரே மதுரை பெருமானும்
அல்லால் எவர் நும் மனம் வேட்டது அளிப்பன் என்றான்

என்னா முகிலை தளை இட்டவன் கூற கேட்டு
தென்னா வருதி என புன்னகை செய்து சித்தர்
நின்னால் வருவது எமக்கு ஏது நினக்கு நாமே
உன் ஆசை தீர தருகின்றது அலாமல் உண்டோ

செல்லா உலகத்தினும் சென்று ஒரு விஞ்ஞை கற்றோர்
பல்லாரும் நன்கு மதிக்க பயன் எய்துவார்கள்
எல்லாம் அறிந்த எமக்கு ஒன்றிலும் ஆசை இல்லை
கல் ஆனை கன்னல் கறிக்கின்றது காண்டி என்றார்

கடைக்கண் சிறிதே குறித்தார் முன் கடா கல் யானை
மடை கண் திறந்து மதம் மூன்றும் வழிய விண் வாய்
அடைக்கும் படிவாய் திறந்து ஆர்த்து புழைக்கை நீட்டி
தொடை குன்று அனான் கை சுவை தண்டை பறித்தது அன்றே

பறித்து கடைவாய் வழிசாறு அளி பாய்ந்து
கறித்து குதட்டி பருகி கரம் ஊசல் ஆட
நெறித்து தருக்கி நிழல் சீறி நிமிர்ந்து நிற்ப
மறித்து கடைக்கண் குறித்தார் பினும் மாயம் வல்லார்

மட்டு உற்ற தாரான் கழுத்தில் கண்ட மாலை தன்னை
எட்டி பறித்த இகல் காஞ்சுகி மாக்கள் சீறி
கிட்டி களிற்றை புடைப்பான் கிளர் கோல் கொண்டு
சிட்டத்தவர் கண் சிவந்து ஆனையை சீறி நோக்க

கண்டா வளியை களிறு உண்டது கண்கள் சேப்பு
கொண்டான் அரசன் சிவ யோகரில் கோபம் மூள
தண்டா அரசன் தமருள் தறு கண்ணர் சீறி
வண்டார் இதழி மறைத்தாரை அடிக்க வந்தார்

அப்போது இள மூரல் அரும்பி சித்த சாமி
கைப்போது அமைத்து கடிந்தோர் தமை நின்மின் என்ன
மை போதக மன்னவர் வைத்த அடி போக்கல் ஆற்றாது
போது அரிய நிலை ஓவியம் போல நின்றார்

மத்த களிற்றான் வெகுளி தழல் மாறி அன்பு
பொத்த புதைந்த மனத்து அற்புதம் பொங்கி சோர
சித்த பெருமான் அடிமா முடி தீண்ட பாச
பெ தமியேன் பிழையை பொறும் என்று வீழ்ந்தான்

அன்புக்கு இரங்கும் கருணை கடல் ஆன வையர்
இன்பு உற்று வேண்டும் வரம் கேள் என தாழ்ந்து வேந்தன்
நல் புத்திர பேறு அருள் வாய் என நல்கி செம் கை
வன்பு உற்ற வேழ மிசை வைத்து அருள் நாட்டம் வைத்தார்

தழைக்கும் நீள் கதிர தண் முத்த மாலையை
புழைக்கை நீட்டி கொடுத்தது போதகம்
மழைக்கை நீட்டினன் வாங்கினன் நீதியில்
பிழைக்கல் ஆத பெருந்தகை வேந்தனே

முத்த மாலிகை வாங்குமுன் முன் நின்ற
சித்த சாமி திரு உரு கண்டிலன்
மத்த யானை வடிவமும் ஏனைய
ஒத்தது ஆக உரவோன் வெருவினான்

இந்த ஆடல் எமக்கு உயிர் ஆய இவ்
அந்தம் இல்லி அருள் விளையாட்டு எனா
முந்தை வேத முதல் வனை மீளவும்
வந்து வந்தனை செய்தனன் மன்னனே

முழுது உணர்ந்த முதல்வ நின் ஆடலை
இழுதையேன் அறியாது அளந்தேன் எனா
அமுது இறைஞ்சி அபராதம் ஈந்து கை
தொழுது நின்று துதிக்க தொடங்கினான்

வேதியாய் வேத விளை பொருளாய் வேதத்தின்
நீதியாய் நீதி நெறி கடந்த நீள் ஒளியாய்
ஆதியாய் ஈராய் நடுவாய் அவை கழிந்த
சோதியாய் நின்றாய் என் சோதனைத்தோ நின் இயல்பே

நின்னான் மொழிந்த மறை நின் அடிகள் வந்தித்தும்
பல் நாள் அருச்சித்தும் பாதம் தலை சுமந்தும்
உன் நாமம் வாசித்தும் உன்னை அறியேன் என்று
சொன்னால் அடியனேன் சோதனைத்தோ நின் இயல்பே

பெரியதினும் பெரியதும் சிறியதினும் சிறியதும் ஆய்
அரியதினும் அரியதும் ஆய் எளியதினும் எளியதும
கரியதும் ஆய் காண்பானும் காட்சியும் அவை கடந்த
துரியமும் ஆய் நின்றய் என் சோதனை தோ நின் இயல்பே

என்று பல முறை பழிச்சி மனை எய்தி விக்கிரமனை ஈன்று பன்னாள்
ஒன்று முறை கோல் ஓச்சி விக்கிரமன் சுவன் மிசை பார்சுமத்தி பாசம்
வென்று களைந்து அருள் சித்த சாமி திரு நோக்கால் விளை பேரின்ப
மன்றல் மது வீழ் வண்டில் கலந்து இருந்தான் அபிடேக மாறன் மன்னோ
கல்லானைக்கு கரும்பருத்திய படலம் சுபம்
யானை எய்த படலம்
கட்டு அவிழ் கடுக்கையர் கல்யானை கழை தின்ன
இட்டது இது பஞ்சவன் இடத்து அமணர் ஏவி
விட்ட மத யானை விழ மேவலர் புரத்தை
சுட்ட கணை விட்டு உயிர் தொலைத்த முறை சொல்வாம்
விக்கிரம பாண்டியன் வெலற்கு அரிய செம் கோல்
திக்கு நிலனும் திறை கொள் செல்வம் நிறைவு எய்த
அக்கிரம வெம்கலி அரும் பகை ஒதுங்க
சக்கரம் உருட்டி இடர் சாய்த்து முறை செய்வான்
புத்தர் அமண் அதிய புறக்களை அகழ்ந்து
நித்த மறை ஆகம நெறி பயிர் வளர்த்து
மெய்த்த விதி பத்தியின் விளைந்த பயன் யாரும்
துய்த்திட மனு தொழில் நடத்தி வரு தூயோன்
மரு இதழியான் உறையும் வான் இழி விமானத்து
அருகு வட பக்கம் உற ஆலயம் எழுப்பி
உருவரு இரண்டினையும் ஒருவி வரு சித்தர்
திரு உருவு கண்டு பணி செய்து ஒழுகு நாளில்
செய்ய கதிரோன் வழிய செம்பியன் ஒருத்தன்
கையன் அவன் வென்றி பயில் காஞ்சி நகர் உள்ளான்
பொய் அமணர் கட்டுரை புற துறையின் நின்றான்
மையின் மதி மாற னொடு மாறு பட நின்றான்
முடங்கல் மதி செம் சடை முடித்து விடை ஏறும்
விடங்கரது சேவடி விழுங்கிய மனத்து
மடங்கல் நிகர் தென்னன் எதிர் வந்து பொர ஆற்றாது
தடங்கல் ஓர் வஞ்சனையினால் அட மதித்தான்
அஞ்சனம் கவுஞ்சம் கோவர்த்தனம் திரிகூடம் காஞ்சி
குஞ்சரம் சையம் ஏம கூடமே விந்தம் என்னும்
மஞ்சு இவர் வரைகள் எட்டும் வைகுறு அமணர் தம்மில்
எஞ்சல் இல் குரவர்க்கு ஓலை வேறு எழுதி விட்டான்
வடிவு போல் உள்ளம் எல்லாம் மாசு இருள் புதைய நின்ற
அடிகள்மார் ஆவார் எண்ணாயிர வரும் ஆர்த்தார் வேய்ந்த
முடி கெழு வேந்தன் விட்ட முடங்கலை நிமிர்த்து வாசித்து
இடி கெழு கார் போல் குன்றின் இழிந்து வேறு இடத்தில் செல்வார்
யாவரும் ஒருங்கு கூடி இருள் வழி கொள்வது ஏய்ப்ப
காவல் வல் அரணம் சூழ்ந்த காஞ்சி மா நகரத்து எய்தி
பூ அலர் தாரான் கோயில் புறம் கடை புகுந்து வேந்தன்
ஏவலர் விடுப்ப உள் போய் இறைமகன் இருக்கை புக்கார்
மன்னவன் முடிமேல் பீலி வைத்தனர் ஆக்கம் கூற
அன்னவன் அவரை நோக்கி வசிய முன் ஆறும் வல்லீர்
தென்னனை யாபி சாரம் செய்து உயிர் செகுத்தால் உங்கட்கு
என்னது நாடு பாதி தருவல் போய் இயற்றும் என்றான்
தவம் புரிந்து அவமே செய்வார் தாம் அதற்கு உடன் பட்டு ஏகி
சிவந்த தெண் திரை நீர பாலி நெடும் கரை காதம் மூன்றில்
கவர்ந்து அகன் சாலை கோலி யோசனை அகலம் கல்லி
அவம் படு வேள்வி குண்டம் கோணம் எட்டு கண்டார்
விடம் பொதி காட்டம் பெய்து நிம்ப நெய் விராய நஞ்சின்
உடம் புடை உயிரின் கோ ழூன் கறி பொடி ஊறு எண்ணெய்
இடம் பட வாயம் காத்த வெரி குழி புதை பெய்து
கொடும் பழி வேள்வி செய்தார் கொல்லாத விரதம் பூண்டார்
மாடு உள பொதும்பர் நந்த வனம் சோலை
காடு உள கருகி கயல் ஓடை உள்ள
கோடு உள வாவி உள்ள குளம் வறப்ப தாவி
சேடு உள முகிலும் தீ சிகை எழு குண்ட தீவாய்
கூற்று எழு தோற்றம் போல அஞ்சன குன்றம் போல
காற்று எழு செவியும் நால்வாய் கௌவிய மருப்பும் மாறா
ஊற்று எழு மதமும் ஊசல் ஆடிய ஒற்றை கையும்
ஏற்று எழு விடம் போல் சீறி எழுந்தது ஓர் தறுகண் யானை
அந்த மா வேள்வி தீயும் அவிய மும் மதமும் சோர
வந்தமா களிற்றை நீ போய் வழுதியை மதுரை யோடும்
சிந்தவே தொலைத்தி என்னா தென் திசை செல்ல ஏவி
முந்தவே விடுத்த மாசு மூழ்கு உடல் அமண பேய்கள்
அருள் அற்று இருள் உடலில் புதை அமண கயவர்களுள்
அருள் அற்று மறையில் படர் செயல் இக பர மெ
பொருள் அற்றவன் அனிக தொடு புறம் மொய்த்திட மதமா
வெருள் அற்று இடி குரலில் வெடி பட்டிட வரும் ஆல்
அடியின் அளவு அகல் பாதல முடியின்
இடியின் அளவு எழுகார் செவி எறி கால அகிலம்
மடியும் அளவு உளர் கான் மத மழையின் உலக
முடிவின் எழு கடல் கண் அழல் அளவாம் முது வடவை
கூற்று அஞ்சிய வரும் கரி குரல் அம் செவி முழைவாய்
ஏற்றம் செய மடங்கும் செவி எறி கால் வழி விழித்தீ
ஊற்றம் செய மடைவாய் உடைத்து ஒழுகும் கட மத நீர்
நாற்றம் செ திசை வேழமும் நடுக்கம் செய்து நலியும்
இடிக்கும் புயல் வயிற்றை கிழித்து இடி ஏற்றினை உதிர்க்கும்
வெடிக்கும் பிளிர் ஒலியால் திசை விழுங்கி செவிடாக்கும்
துடிக்கும் புழை கை ஓச்சிவிண்தொடு குன்றினை சுற்றி
பிடிக்கும் கடல் கலக்கும் தனி பெரு மத்து என திரிக்கும்
உருமு குரல் ஒலி இற்றுளர் விட்டுஎறி
இரு முள் பிறை எயிற்றில் அழல் எரி கண் உடலில்
தருமு கடல் வருவித்து உரல் அடி இற்றென நிலம் மேல்
வரும் உக்கிர வடவை கனல் வரின் ஒப்பது மதமா
தெழிபட்ட தி கயத்தின் செவி தீ பகையோடும்
வழிபட்டு ஒரு கடும் கூற்று என வரு குஞ்சர வரவை
விழிபட்டவர் மொழியால் உணர் விரை பட்டலர் வேம்பன்
சுழி பட்டலை புனல் போல் மனம் சுழன்றான் நினைந்து அழன்றான்
மை போதகம் பொறை ஆற்றிய மணி கோயின்முன் குறுகா
கை போதகம் உரித்தான் கழல் கால் உற தாழ்ந்து
போதகம் தனையும் தொலைத்து எனை காத்தி என்று இரந்தான்
போது அகல் வானின்று ஒரு திருவாக்கு எழுந்தன்றே
விட்டார் வலி கெட நாம் ஒரு வில் சேவகனாகி
ஒட்டார் விட வரும் வெம் கரி உயிர் வெளவுது முதல் நின்
மட்டார் பொழில் கடி மாகர் அயல் கீட்டிசை மருங்கு ஓர்
அட்டாலை மண்டபம் செய்க என அது கேட்டு எழுந்து அரசன்
அகம் கவ்விய களிப்பு எய்தி வந்து அட்டாலை மண்டபம் பொன்
நகம் கவ்வியது என தூண் ஒரு நானான் கினில் எடுத்தே
சகம் கவ்விய புகழான் செ தறுகண் கனை மதமா
முகம் கவ்விய வில் சேவகன் வருவான் அது மொழிவாம்
நீல் நிறம் நீத்த நிழல் மதி இரண்டு உண்டு என்ன
வானிற வல சங்கவார் குழை நுழைவித்து அம் பூம்
பால் நிற வெகினம் காண படர் சடை மறைத்து தோற்றும்
கான் நிறை குஞ்சி சூட்டில் களிமயில் கலாபம் சூடி
கரும் கடல் முளைத்த செ கதிர் என குருதி கச்சை
மாங்குற வீக்கி சோரி வாய் உடை வாளும் கட்டி
இரங்கு நான் மறைகள் ஏங்க இருநிலம் தீண்டு தாளில்
பொருங்கழல் வளைத்து வாளி புட்டிலும் புறத்து வீக்கி
வீங்கிய தடம் தோள் இட்ட வார் சிலை வில்லினோடும்
பாங்குறை பாவை பாதியே அன்றி முற்றும்
வாங்கிய வண்ணம் போன்றும் அல்லது மாலும் ஓர்பால்
ஓங்கிய வண்ணம் போன்று ஒளி நிறம் பசந்து தோன்ற
காமனும் காமுற்று அஞ்சும் காளை ஆம் பருவ தோன்ற
தாம் உலகு அளந்த வென்றி தனிவில் சேவகனா தோன்றி
மா மறை மகுடம் அன்ன மண்டபத்து ஏறி தென்னர்
கோமகன் இடுக்கண் தீர்ப்பான் குஞ்சர வரவு நோக்கா
அஞ்சு கூவிளி சேய்த்து என்ன வதுவர வறன் இலாதான்
வெம் சின கோலி நோன்தாள் மிதித்து மெய் குழைய வாங்கி
செம் சிலை நெடு நாண் பூட்டி திரு விரல் தெறித்து தாக்கி
குஞ்சரம் எட்டும் அஞ்ச கோளரி முழக்கம் காட்டி
இங்கித நெடும் கோதண்டம் இடம் கையில் எடுத்து நார
சிங்க வெம் கணை தொட்டு ஆகம் திருக முன இடத்தாள் செல்ல
அங்குலி இரண்டால் ஐயன் செவி உற வலித்து விட்டான்
மங்குலின் முழங்கும் வேழ மத்தகம் கிழிந்தது அன்றே
கொண்டலின் அலறி சீறி வீழ்ந்தது கொடிய வேழம்
பிண்டது பாரும் சேடன் சென்னியும் பிளந்த தண்டம்
விண்டது போலும் என்ன துண் என வெருவி போன
பண்டைய தருக்கும் வீறும் படைத்தன திசை மால் யானை
புதை பட கரித்தோல் போர்த்த புண்ணிய மூர்த்தி தாளால்
உதை பட கிடந்த கூற்றம் ஒத்தது மத்த யானை
சுதைபடு மதிக்கோ வேந்தன் தொழுகுல சிறுவன் ஒத்தான்
பதை படும் அமணர் கால படர் என படரில் பட்டார்
இருள் கிடந்தது அனைய தானை இட்ட சிந்துரங்கார் மாலை
இருள் முகத்து ஒதுங்கி செல்லும் இரவி செம் கிரணம் போன்ற
இருள் முழுதும் உண்ண காலை எழு கதிர் வட்டம் அன்ன
இருளினை மறைத்த கண்டன் எய்தவாய் பெய்யும் செந்நீர்
பொய் அறா மனத்தார் தேற்றும் புன்நெறி ஒழுக்கம் பூண்ட
வெய்ய கோன் கொடுங்கோல் தன்னை வெண் மருப்பு ஆக தாங்கி
மையன் மா வடிவம் கொண்டு வந்த வெம் கலியை தென்னன்
செய்ய கோல் ஐயன் சிங்க வாளியா சிதைந்தது அன்றே
உருமு வீழ உண்ட குன்றினும் பன்மான் அம்பு தொட்ட
பெருமுழை வாயும் பெருகின அருவி சோரி
கருமுகில் மான சேனம் கழுதுகள் பூதம் மொய்த்த
திருமணி தடம் தோள் வீங்க தென்னவன் உவகை பூத்தான்
ஆனையின் புண் நீர் உண்ண அடுத்த கார் உடல பேய் என்ன
சேனை பின் செல்ல போந்த திணி இருள் அமணர தம்மை
மீனவன் கண்டு சீற வேந்து அவன் குறிப்பில் நிற்கும்
மான வெம் சின வேல் மள்ளர் வல்லை போய் முடுகல் உற்றார்
எடுத்தனர் கையில் தண்டம் எறிந்தனர் மறிந்து சூழ் போ
தடுத்தனர் கரகம் தூள் தகர்த்தனர் பீலி யோடும்
தொடுத்தனர் உடுத்த பாயை துணி பட கிழித்து கால்வாய்
விடுத்தனர் மானம் போக்கி விட்டனர் சில்லோர் தம்மை
எறி உண்டு செய்த மாயம் இழ புண்டு சேனையோடு
முறியுண்டு நடுக்கம் பாவம் மூழ்குண்டு மாழ்கி சாம்பி
பறி உண்ட தலையர் யாரும் பழிப்பு உண்டு பாயும் தாமும்
உறி உண்ட கரகத்தோடும் ஒதுங்கு உண்டு பதுங்கி போனார்
மாதங்கம் தடிந்து தட்டாலை மண்டபத்து இருந்த வீரன்
பாதங்கள் கையால் பற்ரி பாண்டியன் இரந்து வேண்டி
போதங்கள் கடந்தாய் என்றும் பொலிய இங்கு இருத்தி என்ன
வேதங்கள் அருத்தம் சொன்ன வேதியன் அதற்கு நேர்ந்தான்
பின்னும் சில் வரங்கள் நல்க பெற்று நான் மாட கூடல்
மன்னும் சின் மயனை வந்து வந்தித்து வருநாள் காமன்
என்னும் சில் மலர பூம் தண்தார் இராச சேகரனை பெற்று
மின்னும் சில்லியம் தேர் வேந்தன் மேதினி புரக்கும் மன்னோ
வம்புளாய் மலர்ந்த வார் ஆன் வரவிடு மத்த குன்றில்
சிம்புளாய் வடிவம் கொண்ட சேவகன் ஏவல் செய்த
அம்புளா தூணம் வள்ளவன் அவதரித்தவா போல்
செம்புளா கொடிய நார சிங்கம் ஆய் இருந்தது அன்றெ
உலகு எலாம் அழித்து மீள உண்டாக்கும் உருத்திரன் விர சத்தியினில்
சில தரித்து இறவா அவுணன் பிடந்த சிங்க நாயகனை அங்கு எய்தி
அலகுஇல் மாதவம் செய் உரோமசன் தன் பேர் அறிய ஓர் தீர்த்தம் உண்டாக்கி
இலகு பேர் அடைந்தான் பிரகலாதனும் நோற்று ஈறு இலா பெருவரம்
யானை எய்த படலம் சுபம்
விருத்த குமார பாலரான படலம்
தழை உலாங் கையர் ஏவிய தந்திமேல் விடை மேல்
அழகர் சேவகம் செய்தவாறு அறைந்தனம் அவரே
கிழவன் ஆகி பின் காளை யா கிஞ்சுக செவ்வாய்
குழவியாய் விளையாடிய கொள்கையை பகர்வாம்
தென்னன் விக்கிரமன் பு திரு நில செல்வி
மன்னி வாழும் நாள் மதுரையின் மறையவன் ஒருவன்
அன்னவன் விருபாக்கன் ஆம் அவன் குடி வாழ்க்கை
மின்னல் ஆள் வட மீன் பெயர் சுப விரதை
அனையர் தங்களுக்கு அரும் பெறல் மகவு இன்றி அநந்தம்
புனித நல் அறம் செய் தொழில் ஒழுக்கமும் பூண்டு
நனைய வார் குழல் அன்னையர் எழுவர் பால் அண்ணி
இனிய மாதவம் செய்து ஒரு பெண் மகவு ஈன்றார்
பேரும் கௌரி என்று அழைத்தனர் பிராயம் ஒர் ஐந்தில்
சாரும் கௌரியும் பிறவிநோய் தணிப்பதற்கு உறுதி
தேறும் சிந்தையால் தன் தந்தையை வணங்கி செனனம்
ஈரும் தெய்வத மந்திரம் யாது என வினவ
அந்தணாளனும் அதிசயித்து அரும் பெறல் மகட்கு
சிந்தை ஆர்வமோடு இறைவி தன் மனுவினை செப்ப
தந்தை பால் அது தௌ¤ந்து நா தழும்பு உற பயின்றாள்
முந்தை நாள் அரும் தவ குறை முடித்திட வந்தாள்
தாதை தன் தவ கொழுந்தினுக்கு இசைய மா சைவ
மாதவத்தனா ஆதி ஆச்சிரமத்தில் வழங்கும்
வேத வித்தும் ஆய் மரபினான் மேம் படுவான்
போது போதும் என்று உளத்தொடு புகன்று கொண்டு இருந்தான்
பருவம் நால் இரண்டு ஆக மேல் கடிமண
வருவது ஆக அங்கு ஒரு பகல் வைணவ படிவ
பிரம சாரியா கடை தொறும் பிச்சை புக்கு உண்பான்
ஒருவன் வந்தனன் பலிக்கு அவண் அயல் புலத்து உள்ளான்
பிச்சை வேண்டினான் அவற்கு தன் பெண்ணினை கொடுப்பான்
இச்சை கூர்ந்து அரும் தவத்தினால் வருந்தி ஈன்று எடுத்த
விச்சை வேதியன் மனையொடு சுற்றமும் வினவாது
அச்சம் இன்றி நீர் எடுத்து அவன் அங்கையில் பெய்தான்
கலிக்கும் நூபுர சீறடி கன்னி தன் விதியும்
பலிக்கு வந்தவன் நல் வினை பகுதியும் துரப்ப
ஒலிக்கும் மந்திர சிரக நீர் ஒழுக்கினான் முந்தி
சலிக்கும் அன்னையும் தமர்களும் கேட்டு உளம் தளர்வார்
குலனும் ஓர்கிலன் கோத்திரம்
நலனும் ஓர்கிலன் ஒழுக்கமும் கல்வியும் நண்ணும்
தலனும் ஓர்கிலன் கன்னியை தத்தம் செய்தான்
புலனும் ஓர்ந்தவன் விதி வழி மதி என புலர்ந்தார்
மற்று அவன் குடி கோத்திரம் சூத்திரம் மற்றும்
உற்று அறிந்து நம் மரபினுக்கு ஒக்கும் மான் மாயோன்
சொற்ற தந்திர வைணவ தொடக்குண்டு திரியும்
குற்றம் ஒன்று இனி மறுப்பது என் கொடுப்பது என்று இசைந்தார்
தாயும் ஒக்கலும் ஒத்தபின் தாதையும் வேதத்து
ஆயும் எண் மணத்து ஆதி ஆம் அறநிலை ஆற்றால்
தேயும் நுண் இடை கன்னியை செம் பொனால் புதைத்து
காயும் ஆர் அழல் முன்னர் காளை கை கொடுத்தான்
தெய்வ மங்கல வரிசைகள் செய்து தான் பயந்த
மௌவல் அம் குழல் கன்னியை மணமக னோடும்
கௌவை அம் புனல் வேலி சூழ் கடிநகர் விடுத்தான்
சைவ மங்கல வேதி தாபதன் இப்பால்
இல்லார்க்கு கிழிஈடு நேர் பட்டால் என பல்லார்
இல்ல தோறும்
செல்லா நின்று இரந்து உண்டு திரிந்த மகன் மணமகனா
செல்வ நல்க
வல்லாளை மணந்து வருவான் போற்றும் மனை புகுத
வன்கண் சீல
பொல்லாராய் வைணவத்து புக்கு ஒழுகு தாய் தந்தை
பொறார்கள் ஆகி
வந்த மணவாட்டி சிவ சிந்தனையும் சைவ தவ வடிவு நோக்கி
வெந்த உடல் போல் மனமும் வெந்தவளை வேறு ஒதுக்கி வேண்டார் ஆகி
நிந்தனை செய்து ஒழுகுவார் அவளை ஒரு நாணீத்து நீங்கி வேற்றூர
தந்த அமர் மங்கலம் காண்பார் தனியே வைத்து அகம் பூட்டி தாங்கள் போனார்
உள் மாசு கழுவுவது நீறு என்றே உபநிடதம் உரைப்ப கேட்டும்
மண் மாசு பட பூசும் வடிவு உடையார் அகன்ற அதன் பின் மனையில் வைகும்
பெண் மாசு கழிய ஒரு சிவன் அடியார் தமை காண பொறாமல் இன்று என்
கண் மாசு படுவது என கனிந்து ஒழுகு தலையன் பால் கவலை கூர்வாள்
சிவன் அடியார்க்கு அன்பு இலா சிந்தையே இரும்பு ஏவல் செய்து நாளும்
அவன் அடியார் திறத்து ஒழுகா ஆக்கையே மரம் செவி கண் ஆதி ஐந்தும்
பவன் அடியார் இடை செலுத்தா படிவமே பாவை மறை பரவுஞ் சைவ
தவ நெறி அல்லா நெறியே பவ நெறியான் தனியாளா தளர்வாள் பின்னும்
எனைத்து உயிர்க்கும் உறுதி இக பரம் என்ப அவை கொடுப்பார் எல்லாம் தானாய்
அனைத்து உயிர்க்கும் உயிராகும் அரன் என்ப அவன் அறிவார்க்கு அங்கம் வாக்கு
மனத்து உறு மெ பத்தி வழி வரும் என்ப
வினை துயர் தீர்த்திட எடுத்த வடிவு என்பது அவன் அடியார் வேடம் அன்றோ
என்ன இருந்து அலமருவாள் இருக்கும் இடத்து அவள் உள்ளத்து எண்ணி ஆங்கே
தென்னவனாய் இருந்து அரசு செய்த பிரான் அவட்கு அருளும் செவ்வி நோக்கி
கன்னம் உரம் கரம் சிரம் தோள் கண்டமும் கண்டிகை பூண்டு கையில் தம்போல்
பல் நெடும் நாள் பழகியது ஓர் தனி பெரிய புத்தகமும் பக்கம் சேர்த்தி
கரிந்த நீள் கயல் உன்னின் அரையும் முது திரை கவுளும் கனைக்கும் நெஞ்சும்
சரிந்த கோவண உடையும் தலை பனிப்பும் உத்தரியம் தாங்கும் தோளும்
புரிந்த நூல் கிடந்து அலையும் புண்ணிய நீறு அணி மார்பும் பொலிய நீழல்
விரிந்தது ஓர் தனி குடையும் தண்டு ஊன்றி கவிழ்ந்த அசையும் மெய்யும் தாங்கி
ஒருத்தராய் உண்டி பல பகல் கழிந்த பசியினர் போல் உயங்கி வாடி
விருத்த வேதியராய் வந்து அகம் புகுத கண்டு எழுந்து மீதூர் அன்பின்
கருத்தளா தவிசு இருத்தி கை தொழுது சிவனை இங்கு காண என்ன
வருத்த மா தவம் உடையேன் என முனிவர் பசி துன்பால் வந்தேம் என்றார்
இல் பூட்டி போயினர் எமரங்கள் என கௌரி இயம்ப மேரு
வில் பூட்டி புரம் பொடித்த வேதியர் நின் கை தொட்டு விடு முன் யாத்த
கொல் பூட்டு விடும் திறந்து கடிது அடிசில் சமைத்து இடுதி என குமரி தாளில்
அல் பூட்டு மடவாலும் அவ்வாறே அட்டில் புகுந்து அடிசில் ஆக்கி
தையல் மா தவ கொழுந்து புறம் போந்து சிரக நீர் தளிர்கை தாங்கி
ஐயனே அமுது செய எழுந்து அருளும் என எழுந்த அடிகள் பாத
செய்ய தாமரை விளக்கி அந்நீர் தன் சென்னின் மேல் தௌ¤த்து பாச
ஐயன் மாசு இருள் கழுவி அகம் புகுவித்து ஆசனம் மேல் வைத்து பின்னர்
நகை மலர் இட்டு அருச்சித்து நல்ல பரிகலம் திருத்தி நறு வீ முல்லை
முகை அனைய பால் அடிசில் வெள்ளி மலை என பருப்பு முதுகில் செம்பொன்
சிகரம் என பல்வேறு அருகு அனை புறம் தழீ கிடந்த சிறு குன்று ஈட்ட
வகை என நெய் அருவி என படைத்து அனைய சிற்றுண்டி வகையும் பெய்து
செய்ய வாய் இடை இடையே முகமன் உரை இன் அமுது செவியில் ஊட்ட
தையலாள் வளைக்கை அறு சுவை அமுது வாய் ஊட்ட தளர்ந்த யாக்கை
ஐயர் தாம் திரு அமுது செய் உண்டவர் என மூப்பு அகன்று பூவில்
கையதே மலர் வாளி காளை வடிவாய் இருந்தார் கன்னி காண
பூசிய வெண் நீறு போய் கலவை ஆய் கண்டிகை போ பொன் செய் பூணும்
காசு அணி பொன் குண்டலமும் கடகமும் ஆய் மூப்பு போய் காளை ஆன
தேசு உருவம் கண்டு நடு நடுங்கி வளை கரம் நெரித்து திகைத்து வேர்த்து
கூசி ஒரு புறத்து ஒதுங்கி நின்றாள் கற்பு மலர் கெம்பர் அன்னாள்
ஆன பொழுது அரும் கடி நல் மணம் குறித்து மனையில் தீர்ந்து அயலூர் புக்க
தேன் ஒழுகு துழாய் அலங்கல் தீர்த்தனுக்கு அன்பு உடையார் போல் திரியும் வஞ்ச
மானம் உடையார்மீண்டு மனை புகலும் பதினாறு வய வயதின் மேய
பால் நல் மணி கண்டன் நுதல் காப்பு அணிந்தோர் பசும் குழவி படிவம் கொண்டான்
எழுத அரிய மறை சிலம்பு கிடந்து புறத்து அலம்ப அன்பர் இதயம் என்னும்
செழு மலர் ஓடையின் மலர்ந்து சிவானந தேன் ததும்பு தெய்வ கஞ்ச
தொழுதகு சிற்றடி பெரிய விரல் சுவைத்து மை கணிர் துளும்ப வாய்விட்டு
அழுது அணையா ஆடையில் கிடந்தான் தனை
அனைத்து உயிரும் ஈன்று காத்து அழிக்கும் அப்பன்
தாய் விட்டு போனது ஒரு தனி குழவி என கலங்கி தாங்கி தேடி
ஆய் விட்டு பிரமன் அழ மறைகள் அன்புடையாள் அன்பில் பட்டு
வாய்விட்டு கிடந்து அழுத மகவினை கண்டு அணங்கு அனையாள் மாமி என்னும்
காய் விட்டு மத கொடியாள் இம் மகவு ஏது என கேட்டாள் கௌரி தன்னை
நத்தம் அனயன் தனக்கு அரிய நாயகனுக்கு அன்பு உடையாள் நவில்வாள் தேவ
தத்தனயன் தரு மனைவி யொடு போந்து சிறு போது தையல் ஈண்டு
தனயன் தனை பார்த்து கோடி என வைத்து அகன்றான் என்னா முன்னம்
சித்த நயனம் கலங்க சீறி மணவாட்டி தன் மேல் செற்றம் கொண்டாள்
என்பு பூண்டு இடு காட்டில் பொடி ஆடும் உருத்திரனுக்கு இடை அறாத
அன்பு பூண்டான் மகவுக்கு உடையாய் நீயும் எமக்கு ஆகா என்னா
துன்பு பூண்டு அயர்வாளை மகவையும் கொண்டு அகத்தை துரத்தினார்கள்
வன்பு பூண்டு ஒழுகு வைணவம் பொறை இரக்க மான நீத்தோர்
தாய் இலா பிள்ளை முகம் தனை நோக்கி தெருவின் இடை தளர்வாள் உள்ளம்
கோயிலா கொண்டு உறையும் கூடல் நாயகனை மன குறிப்பில் கண்டு
வேயில் ஆக்கிய தடம் தோள் கௌரி திரு மந்திரத்தை விளம்ப லோடும்
சேயிலா கிடந்து அழுத குழவி விசும்பு இடை மேல் தெரி கண்டாள்
மழவு உருநீத்து அடல் ஏற்றின் வருவார் தம் இடத்து அணங்கின் மனுவை ஓதி
பழகிய பார்ப்பன மகளை பார்ப்பதியின் வடிவு ஆக்கி பலரும் கண்டு
தொழ விடை மேல் ஏற்றி விசும்பு ஆறு ஆக மலர் மாரி சுரர்கள் ஊற்ற
அழகர் எழுந்து அருளினார் களிதூங்கி அதிசயித்தார் அவனி மாக்கள்
விருத்த குமார பாலரான படலம் சுபம்
கால் மாறி ஆடின படலம்
திருத்தராய் மதுரா புரி மேவிய சித்தர் ஆகி செல்வர்
விருத்தராய் இளையவரும் ஆய் மழவும் வேடம் கொண்டு அடல் ஏற்றின்
ஒருத்தர் ஆய் விளையாடிய ஆடலை உரைத்தனம் இனி மன்றுள்
நிருத்தர் ஆயவர் மாறி நின்று ஆடிய நிலை சிறிது உரை செய்வாம்
வேந்தன் மீன வண் கொடியவன் ஆகிய விக்கிரமன் தன் தோள்
வந்து மண் பொறை இராச சேகரன் புயத்து இறக்கி ஐந்தரு நாடன்
பூம் தண் மா மலர் வேதியன் மாதவன் புரத்தின் மேல் பொலிந்து ஓங்கும்
சாந்த நீறு என கண்ணித்த புண்ணி தனி முதல் நகர் சார்ந்தான்
கண்ணகன் புவி இராச சேகரன் பொது கடிந்து செங்கோல் ஓச்சி
வண்ண வெண் குடை நிழற்றுவான் ஆனந்த வடிவமாய தனி மன்றுள்
அண்ணால் ஆடிய திரு நடனத்து அன்பினால் ஆடல் நூல் ஒழித்து ஏனை
எண்ணி மூ இரு பத்து முக்கலையும் கற்று இறை முறை செய்யும் நாளில்
சிலம்பி வாயின் நூல் இழைத்திடும் பந்தரில் செம் கண் மால் தொழ வைகும்
அலம்பு தெண் திரை பொன்னி அம் தண் துறை ஆனைக்கா இறைக்கு அன்பு
கலந்த சிந்தையான் மூ இருபத்து நால் கலைகளும் பயின்று உள்ளம்
மலர்ந்தவன் கரிகால் பெருவளத்தவன் வையம் புரக்கின்றான்
பொன்னி நாடவன் வாயில் உள்ளான் ஒரு புலவன் வந்து அலர் வேம்பின்
கன்னி நாடனை கண்டு முன் பரவுவான் கனைகழல் கரிகால் எம்
மன்னவற்கு அறுபத்து நால் கலைகளும் வரும் வாராது உனக்கு ஒன்று
தென்னர் ஏறு அனையால் அது பரத நூல் தெரிந்திலை என சொன்னான்
கேட்ட மீனவன் மறு புல விஞ்சையன் கிளத்து சொல் இகல் மானம்
மூட்ட ஆகுலம் மூழ்கிய மனத்தனாய் முது மறை சிர மன்றுள்
நாட்டம் மூன்று உடை நாயகன் ஆடலை நானும் ஆடுதற்கு உள்ளம்
வேட்டதே கொலாம் இதுவும் எம் பிரான் விதி என அது கற்பான்
ஆடல் நூல் வரம்பு கண்டவர் ஆகி அவ்வழி ஆடாலும் பயின்ற
நாடக நடை தேர் புலவரைத்துருவி நண்ணிய அவர்க்கு எலாம் மகிழ்ச்சி
வீடரும் சிறப்பால் அறுவையும் பூணும் வெறுக்கையும் வெறுத்திட கொடுத்து
பாடல் வண்டாற்றும் தாரினான் பரத பனுவலும் கசடு அற பயில்வான்
பாவமோடு ராகம் தாளம் இம் மூன்றும் பகர்ந்திடும் முறையினால் பரதம்
ஆவியின் அங்கம் முபாங்கமே பிரத்தியாங்கமே அலர் முக ராகம்
ஓவறு சீர்சால் கரப்பிரசாரம் உவமையில் சிரக்கர கருமம்
தாவறு கரகேந்திரம் கரகரணம் தானகமே சுத்த சாரி
விண்டிடா தேசி சாரியே நியாயம் விருத்தியே பிரவி சாரம் பூ
மண்டலம் உடனா ஆகாச மண்டலமே மாசு இல் சுத்த கரணம் சீர்
கண்ட உற் புலித கரணமே அங்க காரமே இரேசதம் என்ன
கொண்ட நாலைந்து பேதமும் கற்று கோது அற பயின்றபின் அவற்றுள்
வருத்தம் இல் மனோ பாவம் ஆதி ஆம் எட்டுவகை நிருத்தங்களில் சாரி
நிருத்தம் ஆகிய தாண்டவம் அக மார்க்கம் நிகழ்த்திடும் தேசியும் வடுகே
அருத்தம் ஆகிய சிங்களம் என மூன்றாம் அது நிலை ஆறு மூ இரண்டு
திருத்தம் ஆம் பதமும் திகழ் இரேகை ஆதி செப்பிய அங்கம் ஈர் எட்டும்
நால் வகைத்து ஆகும் கரணமும் மேலோர் நாட்டிய இருவகை கரமும்
கால்வகை புரிகை முதல் பதினாறும் கவான் மனை ஆதி ஆம் இரண்டும்
பாலது மடிப்பு வகை எழு நான்கும் பழிப்பு அறு சுத்த சாரி எனும்
ஏல் உறு பூ சாரிகள் பதினாறும் இத்துணை ககன சாரிகளும்
ஏற்ற திக்கிரந்தம் ஆதி ஆம் முப்பது இருவகை தேசி சாரிகளும்
காற்றினும் கடும் தேர சக்கர முதல் ஆம் ககன சாரிகை கள் ஏழ் ஐந்தும்
சாற்று வித்து வற்பிராந்தம் ஆதிய வாம் சாரிபத்து ஒன்பதும் ஆக
போற்றி இவை அனைத்தும் உட்பட புட்ப கடத்து இலக்கண முதல் பொருள்கள்
ஆச வாத்தியம் முன் பொருள் முதல் களாசம் ஆதி ஆம் பாட பேதங்கள்
பேசிய பதினாறு ஒன்பதும் படக பேதம் ஒன்று ஒழிந்த நால் ஐந்தும்
மாசு அறும் அளகம் ஆதி ஆம் பாட வகைகள் நால் ஏழும் மற்று அவற்றில்
பூசல் வார்த்திகம் தொட்டு ஐவகை சச்சபுட ஆதி ஆம் தாள மாத்திரையும்
கிளந்த மாத்திரையின் கதிகளும் சொல்லும் கீதமும் படமும் எழுத்தும்
வளம் தரு மணிபந்தம் ஆதி கீதத்தின் வகுத்த கட்டளை எழு நான்கும்
அளந்திடும் சரளை ஆதி கட்டளை ஏழ் ஐந்து நன்கு அமைந்த பா
விளம்பிய மூன்று கலப்பும் ஈறு ஆக விளைத்திடும் கூத்த மார்க்கம்
உரைத்த கூத்து கற்கும் போது தன் உடன் பிறப்பில் சால
வருத்த நோய் எய்தி இந்த நான் மறையும் தேறா
அருத்தமாய் அறிவாய் வெள்ளி அம்பலத்து ஆடி நின்ற
நிருத்தனார் தமக்கும் உண்டே என்பது நினைவில் கொண்டான்
கரிய தாமரை கண்ணானும் கமல நான் முகனும் காண்டற்கு
அரிய தாள் ஒன்றெ நோவ வாற்ற நாணி நிற்பது அந்தோ
உரியதாம் இதனை கற்று வருத்தம் உற்று ஓர்ந்தும ஈது
தெரிய நான் இருப்பதே யோ அறன் என சிந்தை நோவான்
வடுப்படு பிறவி பௌவ வரம்பு காண்கின்ற நாள் வந்து
அடுப்பவர் யாவரேனும் அவர்க்கு எலாம் போகம் வீடு
கொடுப்பவர் செய்யும் இந்த கூத்தை எப்படி நான சென்று
தடுப்பது தகாது அன்று ஏனும் வருந்துமே சரணம என்னா
இதற்கு இது துணிவு என்று உன்னி எழுந்து போ சிவன் இராவில்
கத களிற்று ஒருத்தல் ஏந்தும் கதிர்மணி குடுமிக கோயில்
மதக்கரி உரியினாற்கு வரம்பு அற சிறந்த பூசை
விதப்பட யாமம் நான்கும் விதிவழி இயற்றல் செய்யா
விண்டக மலர்த்தாள் ஏத்தி வெள்ளி அம் பலத்துள் அன்பர்
தொண்டகம் மலர நின்ற சோதி மெய்ஞ் ஞான கூத்தை
கண்டக மகிழ்ந்து தாழ்ந்து கண்புனல் சேர செம்கை
முண்டக முடிமேல் ஏற்றி முகிழ்த்து நின்று இதனை வேண்டும்
நின்ற தாள் எடுத்து வீசி எடுத்ததாள் நிலமீது ஊன்ற
இன்று நான் காண மாறி ஆடி என் வருத்தம் எல்லாம்
பொன்று மாசு எய்தி அன்றேல் பொன்றுவல் என்னா அன்பின்
குன்று அனான் சுரிகை வாள் மேல் குப்புற வீழ்வேன் என்னா
நாட்டினான் குறித்து பாய நண்ணும் முன் இடத்தாள் ஊன்றி
நீட்டினான் வலத்தாள் வீசி நிருமலன் மாறி ஆடி
காட்டினான் கன்னி நாடன் கவலையும் பாசம் மூன்றும்
வீட்டினான் பரமானந்த வேலையுள் வீட்டினானே
விளைகள் வாய் வீழ்ந்த வண்டின் மெய் அறி இன்பம் என்னும்
அளவு இலா முந்நீர் வெள்ளத்து ஆழ்ந்தவன் எழுந்து பின்னும்
உளமும் வாசகமும் மெய்யும் உடையவன் அதுவே ஆக
பளகிலா அன்பு தானே படிவமா பழிச்சல் உற்றான்
பெரியாய் சரணம் சிறியாய்
கரி ஆகிய அம் கணனே சரணம்
அரியாய் எளியாய் அடி மாறி நடம்
புரிவாய் சரணம் புனிதா
நதி ஆடிய செம் சடையாய் நகை வெண்
மதியாய் மதியாதவர் தம் மதியில்
பதியாய் பதின் எண் கணமும் பரவும்
துதியாய் சரணம் சுடரே
பழையாய் புதியாய் சரணம் பணில
குழையாய் சரணம் கொடுவெண் மழுவாள்
உழையாய் சரணம் உருகாதவர் பால்
விழையாய் சரணம் விகிர்தா
இருளாய் வெளியாய் சரணம் எனையும்
பொருளாக நினைந்து புரந்தரன் மால்
தெருளாத நடம் தெரிவித்து எனை ஆள்
அருளாய் சரணம் அழகா
அயனத்தன் எனப்படும் ஆடு அரவ
சயனத்தவனை தரு தத்துவ நால்
வயனத்து தவ வானவர் வானவ சேல்
நயனத்தவள் நாயகனே சரணம்
கத வெம் கரியின் உரியாய் சரணம்
முதல் அந்தம் இலா முதலே சரண் என்று
அதிர் பைங் கழல் நூபுர வண்டு அலரும்
பத பங்கயன் முன்பு பணிந்து அரசன்
என்று இப்படியே இந திருநடம் யாரும் காண
நின்று அருள் செய்ய வேண்டும் நிருமலமான வெள்ளி
மன்றவ அடியேன் வெண்டும் வரம் இது என்று தாழ்ந்தான்
அன்று தொட்டு இன்று எம் கோன் நட நிலையாய் நின்றான்
கால் மாறி ஆடின படலம் சுபம்
பழி அஞ்சின படலம்
ஈறு இலான் செழியன் அன்புக்கு எளியவன் ஆகி மன்றுள்
மாறி ஆடிய கூத்து என்சொல் வரம்பினது ஆமே கங்கை
ஆறுசேர் சடையான் தான் ஓர் அரும் பழிக்கு அஞ்சி தென்னன்
தேறலா மனத்தை தேற்றும் திருவிளை ஆடல் சொல்வாம்
இனைய நாள் சிறிது செல்ல இராச சேகரன் காதல்
தனையன் ஆம் குலோத்துங்கற்கு தன் அரசு இருக்கை நல்கி
வினை எலாம் வென்று ஞான வெள்ளி அம்பலத்துள் ஆடும்
கனை கழல் நிழலில் பின்னி கலந்து பேரின்பம் உற்றான்
குரவன் செம்கோல் கை கொண்ட குலோத்துங்க வழுதி செம்கண்
அரவு அங்கம் பூண்ட கூடல் ஆதி நாயகனை நித்தம்
பரவு அன்பின் வழிபாடு ஆனா பத்திமை நியமம் பூண்டான்
இரவு அஞ்சும் கதுப்பின் நல்லார் ஈர் ஐயா இரவர் உள்ளான்
அப்பதின் ஆயிரவர்க்கு ஒவ் வொருத்திக்கு அவ் ஆறாய்
ஒப்பரிய அறுபதினாயிரம் குமரர் உளர் அவருள்
செப்ப அரிய வல் ஆண்மை சிங்க இள ஏறு அனையான்
வைப்பு அனையான் முதல் பிறந்த மைந்தன் பேர் அனந்த குணன்
கலை பயின்று பரி நெடும் தேர் கரி பல
சிலை பயின்று வருகுமரர் திறல் நோக்கி மகிழ் வேந்தன்
அலை பயின்ற கடலாடை நில மகளை அடல் அணி தோள்
மலை பயின்று குளிர் தூங்க மகிழ்வித்து வாழும் நாள்
செய் ஏந்து திருப்புத்தூர் நின்று ஒரு செழு மறை யோன்
பை ஏந்தும் அரவு அல்குல் மனைவி யொடும் பால் நல் வாய்
கை ஏந்தும் குழவி யொடும் கடம் புகுந்து மாதுலன் பால்
மை ஏந்தும் பொழில் மதுரை நகர் நோக்கி வருகின்றான்
வருவான் உண்ணு நீர் வேட்டு வருவாளை வழி நிற்கும்
பெரு வானம் தடவும் ஒரு பேர் ஆலின் நீழலின் கீழ்
ஒருவாத பசுங் குழவி உடன் இருத்தி நீர் தேடி
தருவான் போய் மீண்டு மனை இருக்கும் இடம் தலை படுமுன்
இலைத்தலைய பழு மரத்தின் மிசை முன் நான் எய்த ஒரு
கொலை தலைய கூர் வாளி கோப்புண்டு கிடந்தது கால்
அலைத்து அலைய வீழ்ந்து உம்மை வினை உலப்ப ஆங்கிருந்த
வலை தலைய மான் நோக்கி வயிறு உருவ தைத்தது என்றால்
அவ்வாறு அவ் அணங்கு அனையாள் உயிர் இழந்தாள் உவ் வேலை
செவ் வாளி ஏறிட்ட சிலை உடையான் ஒரு வேடன்
வெவ் வாளி ஏறு அனையான் வெயிற்கு ஒதுங்கும் நிழல் தேடி
அவ் ஆல நிழல் எய்தி அயல் நின்றன் இளை பாற
தண்ணீருக்கு போய் ஆவி தலை பட்ட மறையவனும்
உண் நீர கை கொண்டு மீண்டு ஒருங்கு இருந்த குழவி யோடும்
புண் நீர் வெள்ளத்துக்கா தாழ்ந்து உயிரை புறம் கொடுத்த
பண் நீர மழலை மொழி பார்ப்பனியை கண் உற்றான்
அயில் போலும் கணை ஏறுண்டு அவ்வழி புண் நீர் சோர
மயில் போல உயிர் போகி கிடக்கின்றாள் மருங்கு அணைந்து என்
உயிர் போல்வாய் உனக்கு இது என் உற்றது என மத்து எறி தண்
தயிர் போல கலங்கி அறிவு அழுந்து மனம் சாம் பினான்
இனையது ஒர் பெண் பழியை யார் ஏற்றார் என தேர்வான்
அனையது ஒர் பழு மரத்தின் புறத்து ஒரு சால் அழல் காலும்
முனையது ஒர் கணையோடு முடக்கி அகை சிலை ஏந்தி
வினையது ஓர்ந்து எதிர் நின்ற விறல் வேடன் தனை கண்டான்
காப்பு அணி தானன் வாளடு வீக்கிய கச்சாளன்
கூர பகழி கோல் ஏறிடு வில்லன் கொலை செய்வான்
ஏற்பன கை கொண்டு இவ் இடை நின்றான் இவனே என்
பார பனியை கொன்று இன் உயிர் உண்டு பழி பூண்டான்
என்ன மதித்தே ஏடா வேடா என் ஏழை
தன்னை வதைத்தாய் நீயே என்னா அழல் கால் கண்
மின்னல் எயிற்று குற்று என வல் வாய் விட்டு ஆர்த்து
மன்னவன் ஆணை பாசம் எறிந்து வலித்து ஏகும்
மாண்டவளை தன் வெ இடை இட்டான் மகவு ஒக்கல்
தாண்ட அணைத்தான் தாய் முலை வேட்டு அழும தன் சேயை
காண் தொறும் விம்மா கண் புனல் சோர கடிது ஏகா
ஆண் தகை மாறன் கூடல் அணைந்தான் அளி அன்றான்
மட்டு அவிழ் தாரான் வாயின் மருங்கே வந்து எய்தா
உள் துகள் இல்லா வேடனை முன் விட்டு உயிர் அன்னாள்
சட்டக நேரே இட்டு எதிர் மாறன் தமர் கேட்ப
கண்துளி சிந்தா முறை யிடு கின்றன் கை ஓச்சா
கோமுறை கோடா கொற்றவர் ஏறே முறையே யோ
தாமரையாள் வாழ் தண் கடி மார்பா முறையேயோ
மா மதி வானோன் வழிவரு மைந்தா முறையே யோ
தீமை செய்தாய் போல் செங்கை குறைத்தாய் முறையே யோ
பிறங்கும் கோலான் மாறடு கொற்றம் பெறு வேந்தன்
உறங்கும் போதும் தன் அருள் ஆணை உலகு எங்கும்
அறம் குன்றாவா காப்பதை என்ப அ·தி யாதி இம்
மறம் குன்றாதான் செய் கொலை காவா வழி என்றான்
வாயில் உளார் தம் மன்னவன் முன் போய் மன்னா நம்
கோயிலின் மாடு ஓர் வேதியன் மாதை கொலை செய்தான்
ஆயினன் என்று ஓர் வேடனை முன் விட்டு அவிந்தாளை
ஆயினன் வந்து இங்கு இட்டு அயர் கின்றான் தமியன என்றார்
இறை மகன் அஞ்சா என் குடை நன்று ஆல்
அறம் மலி செம்கோல் அஞ்சு பயம் தீர்த்து அரசு ஆளும்
முறைமையும் நன்றன் மண் கலி மூழ்கா முயன்று ஏந்தும்
பொறைமையும் நன்றல் என்று புலந்து புறம் போந்தான்
வேதியன் நிற்கும் தன்மை தெரிந்தான் மெலிவு உற்றான்
சாதியின் மிக்காய் வந்தது உனக்கு என் தளர் கின்றாய்
ஓதுதி என்ன காவலனை பார்த்து உரை சான்ற
நீதி உளாய் கேள் என்று உரை செய்வான் நிகழ் செய்தி
இன்று இவளை கொண்டு ஓர் வட நீழல் இடை விட்டு
சென்று தணீர் கொண்டு யான் வருமுன் சிலை வேடன்
கொன்று அயல் நின்றான் என்று உலை ஊட்டும் கொலை வேல்போல்
வன்திறல் மாறன் செவி நுழைவித்தான் மறையோன் ஆல்
அந்தணன் மாற்றம் தன்னையும் கொண்டு அற நோக்கும்
சந்தன வெற்பன் மறவனை நோக்க தாழ்ந்து அன்னான்
எந்தை பிரானே நாய் அடியேன் நின்று எய்ப்பாற
வந்து புகுந்தேன் அந்த மரத்தின் மருங்கே ஓர் சார்
ஐயே நானும் கொன்றவன் அல்லேன் கொன்றாரை
கையேன் வேறும் கண்டிலன் என்றான் இவள் ஆகத்து
எய்யேறு உண்ட வாறு என் என்றார் எதிர் நின்றார்
மெய்யே ஐயா யான் அறியேன் இவ் விளைவு என்றான்
கொலை செய்தான் யான் அலன் என்னா துள என்ன
தக்கவ னேயோ தறுகண் மறவன் உரை மெய்யோ
சிக்க ஒறுத்தால் அல்லதை உண்மை செப்பான் என்று
ஒக்க உரைத்தார் மந்திரர் உள்ளார் பிறர் எல்லாம்
மன்னன் தானும் மற்று அது செய்மின் என மள்ளர்
பின்னம் தண்டம் செய்தனர் கேட்க பிழை இல்லான்
முன்னம் சொன்ன சொல் பெயரானாய் மொழியா நின்று
இன்னல் தீர தேருமின் என்றான் என்செய்வான்
ஆற்ற ஒறுக்கும் தண்டமும் அஞ்சான் அறைகின்ற
கூற்றமும் ஒன்றெ கொன்ற குறிப்பு முகம் தோற்றான்
மாற்றவரேயோ மாவோ புள்ளோ வழி வந்த
கோல் தொடியை கொன்று என் பெற வல்லான் கொலை செய்வான்
கைதவன் ஆம் கானவனேயோ பிறரேயோ
செய்தவர் யாரே கொலை வேட்டம் செய்தோர் மா
எய்த இலக்கில் தப்பிய கோல் தான் ஏறு உண்டு இம்
மை தவழ் கண்ணான் மாய்ந்தன ளேயோ அறியேன் ஆல்
என்னா உன்னி தென்னவன் இன்னம் இது முன்னூல்
தன்னால் ஆயத்தக்கது அதை என்றன் தகவிற்று தன்
அன்னார் அந்நூல் ஆய்ந்து இது நூலால் அமையாது ஆல்
மன்னா தெய்வ தாலே தேறும் வழி என்றார்
வேந்தர்கள் சிங்கம் வேதியனை பார்த்து இது தீர
ஆய்ந்து உனது உள்ள கவலை ஒழி பேன் அஞ்சேன்
ஏந்திழை ஈமக்கடன் நிறுவிப்போது என்றேஇ
தேந்து உணர் வேங்கை தார் மறவோனை சிறை செய்தான்
மின் அனையாள் செய்கடன் முற்றா மீண்டோனை
தன்னமர் கோயில் கடை வயின் வைத்து தான் ஏகி
கொன்னவில் வேலான் தங்கள் குடிக்கு ஓர் குல தெய்வம்
என்ன இருந்தார் அடிகள் பணிந்தான் இது கூறும்
மன்று ஆடும் மணியே இம் மறவன் தான் பார்ப்பனியை
கொன்றானோ பிறர் பிறிதால் கொன்றதோ இது அறநூல்
ஒன்றலும் அளப்பரிது கிடந்தது ஆல் உன் அருளால்
என் தாழ்வு கெட தேற்றாய் என்று இரந்தான் அவ் வேலை
திரு நகரின் புறம்பு ஒரு சார் குலவணிக தெருவின் கண்
ஒரு மனையின் மணம் உளது அங்கு அந்தணனோடு ஒருங்கு நீ
வருதி உனது உளம் தேறா மாற்றம் எலாம் தேற்றுதும் என்று
இரு விசும்பின் அகடு கிழித்து எழுந்தது ஆல் ஒருவாக்கு
திரு வாக்கு செவி மடுத்து செழியன் தன் புறம் கடையில்
பெருவாக்கு மறையவனோடு ஒருங்கு எய்தி பெரும் பகல் போ
கருவாக்கும் மருள் மாலை கங்குல் வா தன்னை வேற்று
உருவாக்கி கடிமனைபோய் ஒரு சிறை புக்கு இனிது இருந்தான்
அன்று இறைவன் அருளால் அங்கவர் கேட்க அம் மனையின்
மன்றல் மகன் தனக்கு அளந்த நாள் உலப்ப மறலி இருள்
குன்றம் இரண்டு என விடுத்த கொடும் பாச கையினர் வாய்
மென்று வரும் சினத்தவரில் ஒருவன் இது வினவும் ஆல்
இன்றே இங்கு இவன் உயிரை தருதிர் எனும் இரும் பகட்டு
குன்று ஏறும் கோன் உரையால் கொள்வது எவன் பிணி உடம்பின்
ஒன்றேன் உமிலன் ஒரு காரணம் இன்றி உயிர் கொள்வது
அன்றே என் செய்தும் என மற்றவன் ஈது அறைகிற்பான்
ஆற்று ஆல் ஏறு உண்ட கணை அருகு ஒதுங்கும் பார்ப்பனியை
காற்றுஆல் வீழ்த்து எவ்வாறு கவர்ந்தோம் அப்படி இந்த
சாற்று ஆரவாரத்தில் தாம்பு அறுத்து புறம் நின்ற
ஈற்று ஆவை வெருள விடுத்து இவன் ஆவி கவர்க என்றான்
அந்த மொழி கேட்டு அரசன் அரு மறையோய் கேட்டனையோ
இந்த மொழி என பனவன் இவன் இவ்வாறு சிறந்தால் என்
பைந்தொடியாள் இறந்ததும் அப்படியே என் மனக்கவலை
சிந்த இது காண்பேன் என்று ஒருங்கு இருந்தான் தென்னனோடும்
ஒட்டிய பல் கிளை துவன்றி ஒல் ஒலிமங்கலம் தொடங
கொட்டிய பல்லியம் முழங குழுமிய ஓசையின் வெருண்டு
கட்டிய தாம்பிற புனிற்று கற்றா ஒன்று அதிர்ந்து ஓடி
முட்டிய தால் மண மகனை முடிந்தது ஆல் அவன் ஆவி
மண மகனே பிண மகனாய் மண பறையே பிணப்பறையாய்
அணி இழையார் வாழ்த்து ஒலிபோய் அழுகை ஒலியா கழி
கணம் அதனில் பிறந்து இறும் காயத்தின் வரும் பயனை
உணர்வு உடையார் பெறுவர் உணர் ஒன்றும் இலார்க்கு இலை
கண்டான் அந்தணன் என்ன காரியம் செய்தேன் எனத்தன்
வண்டு ஆர் பூம் குழல் மனைவி மாட்சியினுங் கழி துன்பம்
கொண்டான் மற்று அவனொடும் தன் கோயில் புகுந்து அலர் வேப்ப
தண் தாரான் அமைச்சர்க்கும் பிறர்க்கும் இது சாற்றினான்
மறையவனை இன்னும் ஒரு மண முடித்து கோடி என
நிறைய வரும் பொருள் ஈந்து நீ போதி என விடுத்து
சிறை அழுவத்து இடைக்கிடந்த செடி தலையஇடி குரல
கறை உடல் வேடனை தொடுத்த கால் யாப்பு கழல்வித்து
தௌ¤யாதே யாம் இழைத்த தீத்தண்டம் பொறுத்தி என
விளி ஆவின் அருள் சுரந்து வேண்டுவன நனி நல்கி
அளி ஆனாம் மனத்து அரசன் அவனை அவன் இடை செலுத்தி
கனி யானை விழ எய்த கௌரியனை போ பணிவான்
ஆதரம் பெருக பாவியேன் பொருட்டு எம் மடி கணீர் அரும் பழி அஞ்சு
நாதராய் இருந்தீர் எந்தையர குண்டோ நான் செ தக்கது ஒன்று என்னா
காதலில் புகழ்ந்து பன் முறை பழிச்சி கரையின் மா பூசனை சிற பித்து
ஏதம் அது அகற்றி உலகினுக்கு குயிராய் இருந்தனன் இறை குலோத்துங்கன்
பழி அஞ்சின படலம் சுபம்
மாபாதகம் தீர்த்த படலம்
வேத நாயகன் வெம் பழி அஞ்சிய
நாதன் ஆன நலன் இது நல்கிய
தாதையை கொலை செய்த தனயன் மா
பாதகம் தனை தீர்த்தமை பாடுவாம்
விரை செய் மாலை குலோத்துங்க மீனவன்
திரை செய் நீர் நிலம் செம் கோல் செல தனி
அரசு செய்யும் நாளில் அவந்தி என்று
உரை செய் மா நகர் ஆன் ஒரு பூசுரன்
வெருவும் காய் சின மாறிய வேதியன்
மருவும் காதல் மனை எனும் பேரினாள்
திருவும் காமன் நல் தேவியும் மண் புனை
உருவும் காமுறு ஒப்புஇல் வனப்பினாள்
படி இல் ஓவி பாவை ஒப்பு ஆகிய
வடிவில் ஆள் அவள் பான் மகன் என்று ஒரு
கொடிய பாவி பிறந்து கொலை முதல்
கடிய பாவ கலன் போல் வளரும் நாள்
கோடி அடும் சிலை
கோடி கொடும் கணை பூட்டியே
கோடி விகாரமும் கூட்டியே
கோடி அனங்கர் எய்தார் கொலோ
இளமை செவ்விய யாக்கையன் மையல்கூர்
வளமை காமமும் வல் வினையும் நிறை
தளைவிட்டு ஈர்த்தலில் தன்னை வயிற்று இடை
விளைவித்து ஈன்றவள் தன்னை விரும்பினான்
அன்னை எனும் அழிதகை யாள் அகத்து
இன் உயிர துணையும் மன காவலாய்
மன்னும் நாணம் மடம் முதல் நால்வரும்
தன்னை நீங்கலில் ஊனும் ஒத்தாள் அரோ
இன்பமோ சிறிது ஆகும் இதில் வரும்
துன்பமோ கரை இல்லா தொடு கடல்
என்பது ஆரும் இவனால் அறிய இவ்
வன்பது ஆன வினையால் வருந்துவான்
மையன் ஆக மதியை விழுங்க
கையன் ஆயை கலந்து ஒழுகும் செயல்
ஐயன் தான் குறிப்பால் கண்டு அயல் செவிக்கு
உய்யலா வண்ணம் உள்ளத்து அடக்கினான்
வேற்று ஓர் வைகல் வெளிப்பட கண்டு அறம்
சாற்று நாவினன் வேறு ஒன்றும் சாற்றிலன்
சீற்றம் மேல் கொடு செல்வன் கொல்வேன் என
ஏற்று எழுந்தனன் ஈன்றாள் விலக்குவாள்
தாயிலின் இன்பம் நுகர்ந்தனை தந்தையை
காயில் என் பெறுவாய் என காமுகர்க்கு
ஆயில் அன்னையில் பனி என் பயன்
ஏயிலின் அருள் என் அறம் என்றான்
மண் தொடும் கருவிப்படை வன் கையில்
கொண்டு தாதை குரவன் என்று ஓர் கிலான்
துண்டம் ஆக துணித்தான் ஆய் வாய்முகம்
துண்ட காம நறவால் உணர்வு இலான்
மை கரும் கங்குல் வா கொன்ற தாதைக்கு
தக்க தீ தவிசு இட்டு அன்னை தன்னொடும்
கைக்கு அடங்கு பொருளடும் கல் நெறி
புக்கனன் புடைசூழ்ந்தார் புளி நரே
எய்யும் கோலொடு வில்லர் இடிக்கு நேர்
செய்யும் சொல்லினர் செல்லலை நில் என
கையில் உள்ளவும் கை கொண்டு காரிகை
தையல் தன்னையும் தாம் கொடு போயினார்
சென்று சேண் இடை சிக்கு அற வாழலாம்
என்ற எண்ணம் ஒன்று எய்திய வண்ணம்
ஒன்று நாம் என்ன தெய்வம் எண்ணியது
என்ற வார்த்தை இவன் இடை பட்டது ஆல்
தாதை தன் தனயற்கு இனி யார் துணை
மாதர்யாயை மறவர் கை கொள்ள
போது தான் துணை என்பவன் போன்றுமா
பாத கத்து உருவாய் வந்து பற்றினான்
ஆவ என்னும் அழும் சிவ தா எனும்
பாவம் பழி இதுவோ வைய
கோ எனும் கை குலைத்து எறியும் நிழல்
பாவை போல விடாது பின் பற்றும் ஆல்
நல்ல தீர்த்தம் சிவ தலம் நலோர் பக்கமும்
செல்ல ஒட்டாது அரன் சீர்த்தி நாமம் செவி
புல்ல ஒட்டாது உளம் புகுத நா
சொல்ல ஒட்டாது கண்துயில அரோ
சுற்று முன் பின் புற சூழ்ந்து தன் கொடுக்கினில்
பற்றிநின்று ஈர்க்கு மா பாதகத்தால் அலைந்து
எற்றினில் செய்வது என் ஆற்றலால் இடர் உழந்து
உற்றவே உலகு எலம் அச்சம் உற்று உழலும் ஆல்
உறுகணோ ஆற்ற நாள் உற்று உழன்று உலகு எலாம்
மறுகவே திரியும் மா பாதகன் வலி எலாம்
சிறுகுவான் சிவன் அருள் செயலினில் பாதகம்
குறுகு நாள் கூடலை
அழிதகன் குறுகு வான் முன் அங் கயல் கண்ணி தந்த
குழை இரு காதும் கோத்து கொலை கெழு புலி பல் தாலி
நுழை மயிர் நெடு நாள் பின்னல் நோன் பிடர் அலை பூண்டோர்
பழி தகையாத வேட பாவை யா படிவம் கொள்ள
கொலை இரும் பழிக்கு அன்று அஞ்சும் கூடல் எம் பெருமான் கொன்றை
மிலை இரும் குஞ்சி வேங்கை மெல் இணர கண்ணி வேய்ந்து
கலை இரு மருப்பில் கோடி காது அளவோடும் தாடி
சிலை இரும் தடக்கை வேடம் திரு உரு கொண்டு தோன்றி
கொண்டல் கண் படுக்கும் மாட கோபுர மருங்கில் போந்து இன்
கண்ட கருக்கு வாய குரைக்கும் நாய் கதுவி கா
புண் தளை வாளி வில்லோர் புறம் கிடந்து இமைப்ப திங்கள்
உண்ட வாள் நுதலாளோடும் சூது போர் ஆடல் செய்வான்
வெரு வரு வேழம் உண்ட வெள்ளில் போல் வறியன் ஆகி
பருவரல் உடன் ஆங்கு எய்தும் பாதகன் வரவு நோக்கி
ஒருவரு உள்ளத்தாலும் உன்னரும் கொடிய பாவி
வருவது காண்டி என்னா மாதரை நோக்கி கூறும்
அணங்கு நோய் எவர்க்கும் செய்யும் அனங்கனால் அலைப்பு உண்டு ஆவி
உணங்கினார் உள்ளம் செல்லும் இடன் அறிந்து ஓடி செல்லா
குணம் குலம் ஒழுக்கம் குன்றல் கொலை பழி பாவம் பாரா
இணங்கு இன் உயிர்க்கும் ஆங்கே இறுதி வந்து உறுவது எண்ணா
கள் உண்டல் காமம் என்ப கருத்து அறை போக்கு செய்வ
எள் உண்ட காமம் போல எண்ணினில் காணில் கேட்கில்
தள் உண்ட விடத்தின் நஞ்சம் தலை கொண்டால் என்ன ஆங்கே
உள் உண்ட உணர்வு போக்கா உண்டபோது அழிக்கும் கள் ஊண்
காமமே கொலை கட்கு எல்லாம் காரணம் கண் ஓடாத
காமமே களவுக்கு எல்லாம் காரணம் கூற்றம் அஞ்சும்
காமமே கள் உண்டற்கும் காரணம் ஆதலாலே
காமமே நரக பூமி காணியா கொடுப்பது என்றான்
கொலைப்பழி கோ பட்டு ஆங்கே குறுகியான் முகம் கண்டு ஏட
அலைப்படர் உழந்து சாம்பி அழிவது என் பார்ப்பான் என்ன
கலைப்படு திங்கள் வேணி கானவன் அருள் கண் நோக்கம்
தலைப்பட சிறிது பாவம் தணிந்து தன் அறிவு தோன்ற
முற் பகல் இழைத்த பாவ முதிர்ச்சியால் பிறந்து தந்தை
தன் பகன் ஆன ஆறும் தாதையை வதைத்த
பிற் பகல் அந்த பாவம் பிடித்து அலைத்து எங்கும் தீராது
இப்பதி புகுந்த வாறு எடுத்து உரைத்து இரங்கி நின்றான்
மற பெரும் படிவம் கொண்டு மனத்து அருள் சுரந்து நின்ற
அற பெரும் கருணை மூர்த்தி அழி தகை அவனை பார்த்து
திற பழி ஆங்கு சென்று ஈங்கு அன்றி தீராது என்ற
கறை பழி தீரும் வண்ணம் கருதி ஓர் உறுதி கூறும்
வருதி நின் நாமம் சொன்னோர் வருக்கமும் நரகில் வீழ
கருதி நீ செய்த பாவம் கழிப்பவர் எவர் யா நோக்கம்
தருதலால் எளிதில் தீர சாற்றுதும் அய்யம் கை ஏற்று
ஒருபொழுது உண்டி ஈசன் உறுதவர் ஏவல் செய்தி
செம்கதிர கடவுள் வானம் தீண்டு முன் எழுந்து தீம் தண்
பைங் கதிர் அறுகு கொய்து பசுக்களை அருத்தி ஆர்வம்
பொங்கமு போதும் கோயில் புற தொட்டி தீர்த்தம் ஆடி
சங்கரன் தனை நூற்று எட்டு மெய்வலம் சார செய்தி
இத்தவ நெறியில் நின்றால் இப்பழியும் கழியும் என்னா
சித்த அன்பு உடைய வேட திரு உரு கொண்ட கொன்றை
கொத்தவன் உரைத்தான் கேட்டு கொடிச்சியாய் இருந்த அம்மை
மத்தவன் கரித்தோல் போர்த்த மறவனை வினவுகின்றாள்
ஐய கொடியோன் செய்த பாவத்துக்கு அளவு இல் காலம்
வெய்ய நால் ஏழு கோடி நரகு இடை வீழ்ந்தாள் ஏனும்
உய்வகை இலாத பாவி இவனுக்கு என் உய்யும் தேற்றம்
செய்வகை என்று கேட்ப செம்கண் மால் விடை யோன் செப்பும்
அடுபழி அஞ்சா நீசர் ஆயினும் நினைக்கின் அச்சம்
படு பழி அஞ்சான் செய்த பாதக தொடக்கு உண்டு எங்கும்
விடு வகை இன்றி வேறு களை கணும் வீ
கடவனை காப்பது அன்றோ காப்பு என்றன் கருணைமூர்த்தி
நெய்தல் போது அனைய உண் கண் நேரிழை நீயாது ஒன்றும்
செய்தற்கும் செய்யாமைக்கும் வேறு ஒன்று செயற்கும் ஆற்றல்
மெய் தக்க கருணை வள்ளல் வேண்டின் எவ் வினைஞர் ஏனும்
உய்தக்கோர் ஆதல் செய்கை உன் அருள் விளையாட்டு அன்றோ
என்று அக மகிழ்ச்சி பொங்க இயம்பினாள் இயம்ப லோடும்
குன்றக நாட்ட வேட குழகனும் மறைந்து வெள்ளி
மன்று அகம் நிறைந்தான் மேகம் மறைந்திட மறைந்து செல்லும்
மின் தக விடாது பின் போம் விளங்கு இழை மடந்தை யோடும்
ஆததாய் இயும் கண்டு ஆனா அற்புதம் அடைந்து கூடல்
நாதனார் நவின்ற ஆற்றான் நல்நெறி விரத செய்கை
மாதவ ஒழுக்கம் தாங்கி வரு முறை மதிய மூன்றில்
பாதகம் கழிந்து தெய்வ பார்ப்பன வடிவம் ஆனான்
சொல்பதம் கடந்த எந்தை சுந்தர நாதன் தாளில்
பல வடசொல் மாலை பத்தியில் தொடுத்து சாத்தி
தற்பர அறிவு ஆனந தனி உரு உடைய சோதி
பொன் பத மருங்கில் புக்கான் புண்ணிய மறையோன் அம்மா
அன்னையை புணர்ந்து தாதை குரவன் ஆம் அந்தணாளன்
தன்னையும் கொன்ற பாவம் தணித்து வீடு அளித்தது என்றால்
பின்னை நீர் இழி நோய் குட்டம் பெரு வயிறு ஈளை வெப்பு என்று
இன்ன நோய் தீர்க்கும் தீர்த்தம் என்பதோ இதற்கு மேன்மை
அழிந்த வேதியன் மா பாதகம் தீர்த்தது அறிந்து வேந்து அமைச்சர் ஊர் உள்ளார்
ஒழிந்த பார் உள்ளார் வான் உளார் வியப்பம் உற்று நல் உரை உணர்வு எல்லாம்
கழிந்த பேர் அருளி கயவன் மேல் வைத்த காரணம் யாது என கண்ணீர்
வழிந்து நான் மாட கூடல் நாயகனை வழுத்தினார் மகிழ்ச்சியுள் திளைத்தார்
மாபாதகம் தீர்த்த படலம் சுபம்
அங்கம் வெட்டின படலம்
வேதகம் தரத்து முக்கண் வேதியன் மறையோன் செய்த
பாதகம் தவிர்த்தவாறு பகர்ந்தனம் விஞ்சை ஈந்த
போதகன் மனைக்கு தீங்கு புந்தி முன்னாக செய்த
சாதகன் தனை போர் ஆற்றி தண்டித்த தண்டம் சொல்வாம்
கூர்த்த வெண் கோட்டி யாவை குலோத்துங்க வழுதி ஞாலம்
காத்து அரசு அளிக்கும் நாளில் கடிமதில் உடுத்த கூடல்
மா தனி நகருள் வந்து மறு புலத்தவனாய் யாக்கை
மூத்தவன் ஒருவன் வைகி முனைய வாள் பயிற்றி வாழ்வான்
வாள் வினை குரவன் அன்னான் வல் அமண் விடுத்த வேழம்
தோள் வினை வலியால் அட்ட சுந்தரவிடங்கன் தன்னை
ஆள் வினை அன்பும் தானும் வைகலும் அடைந்து தாழ்ந்து
மூள் வினை வலியை வெல்லும் மூது அறிவு உடையன் அம்மா
கை வினை மறவாள் விஞ்சை காவலன் அவனை தாழ்ந்து
தெவ் வினை வெல்வான் கற்கும் சிங்க ஏறு அனையார் தம் முன்
உய்வினை உணரா பாவி சித்தன் என்று ஒருவன் உள்ளான்
அவ்வினை நிரம்ப கற்றன் ஆகல் ஊழ் வலியால் அன்னான்
மானவாள் விஞ்சை யாலே தனை நன்கு மதிக்க தக்க
ஆனது ஓர் செருக்கின் ஆற்றல் தன் ஆசிரியற்கு மாறா
தானும் ஒர் விஞ்சை கூடம் சைமத்து வாள் பலரும் கற்க
ஊன் உலாம் படை வல்லானில் ஊதியம் மிதப்ப கொள்வான்
ஒருத்தனே இருவர் வாளின் விருத்தியும் ஒருங்கு கொள்ளும்
கருத்தனாய் விருத்தன் ஊரில் கழிவது கருதி அன்னான்
வருத்து வாள் இளையர் தன் பால் வர மனம் திரித்து நாளும்
விருத்தமே செய்வான் தாயை விரும்பினோன் கிளையோன் அன்னான்
தொட பொறுக்கும் திண்மைத்து ஒன்னில மனையான்
இடத்தவன் தேவிபால் போய் இடன் உண்டே
அடுத்து அஞ்சாது என்றும் கேட்டு கேட்டு அகல்வான் ஆக
நடை தொழில் பாவை அன்ன நங்கை வாளாது இருந்தான்
பின் ஒரு பகல் போ செம்கை பிதித்தனன் வலிப்ப தள்ளி
வல்நிலை கதவு நூக்கி தாழக்கோல் வலித்து மாண்ட
தன் நிலை காப்பு செய்தாள் தனி மன காவல பூண்டாள்
அந்நிலை பிழைத்த தீயோன் அநங்க தீ வெது போனான்
அறம் கடை நின்றாள் உள்ளம் ஆற்றவும் கடையன் ஆகி
புறம் கடை நின்றான் செய்த புலமை தன் பதிக்கும் தேற்றாள்
மறம் தவிர் கற்பினாள் தன் மனம் பொதிந்து உயிர்கள் தோறும்
நிறைந்த நான் மாட கூடல் நிமலனை நினைந்து நொந்தாள்
தாதக நிறைந்த கொன்றை சடையவன் புறம்பு செய்த
பாதகம் அறுக்கும் கூடல் பகவன் எவ்வுயிர்க்கும் தானே
போதகன் ஆகி தேற்றும் புண்ணியன் புலைஞன ்செய்த
தீது அகம் உணர்ந்து தண்டம் செய்வதற்கு உள்ளம் கொண்டான்
கோள் உடை குரவனே போல் சித்தனை குறுகி சித்தா
காளையாய் நீயும் சால கழிய மூப்பு அடைந்த யாமும்
வாள் அமர்ஆடி நம் தம் வலிகளும் அளந்து காண்டும்
நாளைவா வருதும் நாமும் நகர் புறத்து ஒரு சார் என்றான்
நாதன் ஆம் குரவன் கூற நன்று என உவந்து நாலாம்
பாதகன் அதற்கு நேர்ந்தான் படைக்கல குரவன் மீண்டும்
போதரும் அளவில் வையம் புதை இருள் வெள்ளத்து ஆழ
ஆதவன் வைய முந்நீர் வெள்ளத்து ஆழ்ந்தது அம்ம
ஆசி நல் குரவற்கு இன்னா ஆற்றினோன் பாவம் போல
மாசு இருள் திணிந்த கங்குல் வலிகெட வடிவாள் விஞ்சை
தேசிகன் ஒருவன் அன்னான் திணி உடல் சிதைப்ப தீட்டும்
காய் சின வாள் போல் கீழை கல் இடை முளைத்தான் வெய்யோன்
நன்றியை கொன்று தின்றோன் நாயகன் ஆணைக்கு அஞ்சம்
வன் திறல் அரி மான் ஊர்தி தெய்வதம் வழிபட்டு ஏத்தி
வென்றி வாள் பரவி கச்சு வீக்கி பலகை ஏந்தி
சென்று வாள் உழவன் சொன்ன செருக்களம் குருகினானே
மதுகை வாள் அமர்க்கு நென்னல் வந்து அறை கூவிப ்போன
முதுகடும் புலி ஏறு அன்ன முடங்கு உடல் குரவன் தானும்
அதிர் கழல் வீக்கி கச்சும் அசைத்து வெண் நீறும் சாத்தி
கதிர் கொள்வாள் பலகைதாங்கி கயவனுக்கு எதிரே வந்தான்
மடங்கல் ஏறு ஒன்றும் பைம் கண் அரி ஒன்று மலைந்தால் என்ன
முடங்கல் வான் திங்கள் ஒன்று முக்கணும் நான்கு தோளும்
விடம் கலும் மிடறும் தோறா வென்றி வாள் விஞ்சை வேந்தும்
அடங்கல் தானும் நேரிட்டு அமர் ஆடல் செய்வார்
எதிர்ப்பர் பின் பறிவர் நேர் போய் எழுந்து வான் ஏறு போல
அதிர்ப்பர் கேடகத்துள் தாழ் உற்று அடங்குவர் முளைப்பவர் வாளை
விதிர்ப்பர் சாரிகை போய் வீசி வெட்டுவர் விலக்கி மீள்வர்
கொதிப்பர் போய் நகைப்பர் ஆண்மை கூறுவர் மாறி நேர்வர்
வெ இடுவார் போல் போவர் வட்டித்து விளித்து மீள்வர்
கொன் இடு வாண் மார் பேற்பர் குறி வழி பிழைத்து நிற்பர்
இந்நிலை நாலைங் கன்னல் எல்லை நின்று ஆடல் செய்தார்
அந்நிலை அடு போர் காண்பார் அனைவரும் கேட்க ஐயன்
குரத்தியை நினைத்த நெஞ்சை குறித்து உரை நாவை தொட்ட
சரத்தினை பார்த்த கண்ணை காத்தனை கோடி என்று
உரைத்து உரை தவற்றுக்கு எல்லாம் உறும் முறை தண்டம் செய்து
சிரத்தினை தடிந்து வீட்டி திரு உரு மறைந்து நின்றான்
போர் கெழு களம் கண்டாருள் பொரு படை கேள்வி செல்வர்
வார் கெழு கழல் காலானை கண்டிலர் மனையில் தேடி
ஏர் கெழு கற்பினாளை எங்கு உற்றான் குரவன் என்ன
கூர் கெழு வடிவேல் கண்ணாள் போயினார் கோயிற்கு என்றாள்
என்ற அப்போதே கோயிற்கு ஏகினான் மீண்டான் தேடி
சென்றவர் சித்தன் தன்னை செரு களத்து அடுபோர் செய்து
வென்றனையே பின் அந்த வெம் களத்து எங்கும் தேடி
நின்றனை காணாது இங்கு நேர்ந்தனம் யாங்கள் என்றார்
விரை செய் தார் அவன் யான் அங்கம் வெட்டினேன் அல்லேன் நீங்கள்
உரை செய்வது எவன் யார் என்போல் சித்தனை உடன்று மாய்த்து
வரை செய் தோள் விந்தைக்கு ஈந்தார் மற்று இது சுற்றம் வைகை
திரை செய் நீர கூடல் எந்தை திரு உள செயல் கொல் என்றான்
மட்டித்த கலவை கொங்கை மனைவியும் சித்தன் தன்னை
கிட்டி பல் காலும் வந்து கேட்டது நெருநல் வாய்
தொட்டு தன் கையை பற்றி ஈர்த்ததும் உள்ளம் வெந்து
தட்டி போய் கதவம் தாழ் இட்டு இருந்ததும் சாற்றினாளே
அம்மனை அருளி சொன்னபடி எலாம்
தெம் முனை அடுவாள் வீரர் சித்தனை மாய்த்தார் ஈது
மெய்மை ஆம் என்று கண்ட மைந்தரும் விளம்ப கேட்டான்
எம்மை ஆளுடை கூடல் இறை விளையாடல் என்றான்
கொடியை நேரிடையாள் ஓடும் கொற்ற வாள் இளைஞ ரோடும்
கடிய நான் மாட கூடல் கண்ணுதல் அடிக்கீழ தாழ்ந்து
நெடியன் நான் முகனும் தேறா நெறியது சிறிய ஏழை
அடியனேன் அளவிற்றே நின் அருள் விளையாடல் என்றான்
தண்மதி வழி வந்தோனும் நகர் உளார் தாமும் பாதி
விண் மதி மிலைந்த வேணி விடையவன் ஆடல் நோக்கி
கண்மலர் வெள்ளத்து ஆழ்ந்து கனை கழல் அடியில் தாழ்ந்து
பண் மலர் கீதம் பாடி ஆடினார் பழிச்சி நின்றார்
அடியவருக்கு எளியர் இவர் பரதேசி காவலர் என்று அடி வீழ்ந்து ஏத்தி
வடி அயில் வேல் குலோத்துங்கன் மாணிக்க மாலை எனும் மனையா ளோடும்
தொடி அணி தோள் முது மகனை களிறு ஏற்றி நகரை வலம் சூழ்வித்து இப்பால்
முடி அணிவித்து அனந்த குண பாண்டியற்கு தன் இறைமை முழுதும் ஈந்தான்
நிலை நிலையா பொருள் உணர்ந்து பற்று இகந்து கரணம் ஒரு நெறியே செல்ல
புலன் நெறி நீத்து அருள் வழி போ போதம் ஆம்
தன் வலியை பொத்தி நின்ற
மலவலி விட்டு அகல அரா உமிழ்ந்த மதி போல் விளங்கி மாறி ஆடும்
தலைவன் அடி நிழல் பிரியா பேரின்ப கதி
அடைந்தான் தமிழ்ர் கோமான்
அங்கம் வெட்டின படலம் சுபம்
நாகமெய்த படலம்
செம் கண் மால் விடை மேல் விடங்கர் செருக்களத்து இடை வாள் எடுத்து
அங்கம் வெட்டிய சேவகத்தை அறைந்தனம் தமிழ் மாறன் மேல்
சங்கை அமனிசரார் ஆற்றிய தறு கண் வேள்வி முளைத்து ஓர்
வெம் கண் வாள் அரவை துணித்து விளித்தவாறும் விளம்புவாம்
கோது இலாத குனத்து அனந்த குண பெரும் தகை மீனவன்
ஆதி நாயகன் உருவம் ஆகிய ஐந்து எழுத்தொடு கண்டி வெண்
பூதி சாதனம் ஆவதே பொருள் என்று பத்திமை பூண்டு தன்
தாதையே முதலாய மன்னவர் தம் மினும் தலை ஆயினான்
அத்தகை சிவ சாதனம் தனில் அன்பு மிக்கவன் ஒழுகலால்
அத்தன் மெ திரு ஐந்து எழுத்து ஒலியால் நீற்று ஒலியாலும் உள்
பைத்த வல் இருளும் புற சிதைந்து பராபரன்
வித்தக திருவேடம் ஆனது மீனவன் திரு நாடு எல்லாம்
நாயினும் கடை ஆன மாசுடன் இருள் புரை நெஞ்சு அரண்
ஆயினும் சமண் வேடர் அன்ன தறிந்து கொண்டு வெகுண்டு அழற்று
இரும்பு என மான வெம் கனல் சுட்டிடத்தரியார் களாய்
மாயிரும் தமிழ் மாறனை தெற வஞ்ச வேள்வி இயற்றுவார்
எல்லை காதம் அளந்து சாலை எடுத்து அழல் படு குண்டமும்
கல்லி ஆர் அழல் இட்டு எழும் புகை கௌவி எண் திசைகளும் உற
செல்லவான உடுக்களும் பொரியில் பொரிந்தன சிதற நீள்
ஒல்லைதாவி விசும்பு தைவர ஒட்டி வெம் கனல் மூட்டினார்
அத்து அழன்று எரி குண்டம் நின்றும் அகன் பிலத்து எழுவான் என
பத்து துஞ்சிருள் வாயும் வாய் இருபாலும் வலிய பகிர் மதிக்கு
ஒத்தும் நஞ்சு இனம் ஒழுகு பற்களும் ஊழி ஆரல் விழிகளும்
வைத்து அசைந்து ஒரு வெற்பு வந்து என வந்துளான் தானவன்
உதித்த செம் கண் அரக்க வஞ்சகன் உருத்து எழுந்து எரிவடவையில்
கொதித்து அடும் பசி தாகமும் கொடிதால் என கொடியோரை நீர்
விதித்திடும் பணி யாது எனக்கு என மீனவன் தனை மதுரை யோடு
எதிர்த்து எடுத்து விழுங்கிவா என ஏவினார் உடன் ஏகினான்
பாய் உடை அவர் விட நாக படிவு கொள் இசி சர நிலன் அண்டம்
தோய் உடலின் உடல் விட மூறி சொரி துளை எயிற்றினன் வடவை செந்தீ
தீ உடையன என எரி கண்ணன் திணி இருள் வரை முழை விண்ட
வாய் உடையவ னொடு நெறி முன்னி மழைநுழை வரை என வருகின்றான்
அரவு இறை உறை பிலம் வெளி காண வரை உடல் புதை பட நிலம் விள்ள
வரு விழி அழல் எழ உயிர் கான் முன் வளி உளர் கிளர் வலி விளி எய்த
பொருசின விழி எதிர் படு பைங்கூழ் புகை எழ வன மரை பொரி பொங்கர்
கருகிட முது சினை இறை கொள்ளும் கக நிரை சிறை சுருள் படவீழ
அகல் நிலம் வெரு உற நிலன் ஏந்து மர இறை
பகல் மதி வெரு உற இவை கௌவும் பணிகளும் அகல்
புகர் மலை வெருஉற வடு தண்ட புரவலன் வெரு உற வரு செம் கண்
நகை மதி புரை எயிறவன் மாட மகர் எதிர் குடவயின் வரும் எல்லை
கண்டவர் கடிநகர் கடிது ஓடி கௌரியன் அடி தொழுது கேள்
கொண்டல் கண் வளர் மதில் வளை கூடல் குடவயின் ஒரு பெரு விடநாகம்
அண்டமும் அகிலமும் ஒரு வாய் இட்டு அயிர வருவதை என நீள்
விண்டு கொண்டு அனைவதை என லோடும் வெரு வலன் மதிகுல மறவீரன்
மற்று இது முன் மதகரி விட்டோர் வரவிட வருவதை என எண்ணம்
உற்று இது அனையும் விளத்தற்கு எம் உடையவர் விடையவர் விட நாகம்
சுற்றிய சடையினர் உளர் என்னா சுரர் உலகு இழி சுடர் என நிற்கும்
கல் தளி இடை உறை இறை முன் போ கனைகழல் அடி தொழுது அறை கிற்பான்
வழி அடிமை செய்து ஒரு போது மறவலன் வழிபடும்
மொழி வழி முறை செய்து வருவேன் இம் முது நகர் அடையவும் அமண் ஈசர்
அழிவது கருதினர் விடு நாகம் அடைவது அருள்வழி அதன் ஆவி
கழிவது கருதிய அடியேனை கருணை செய்து அருளியது கடன் என்றான்
அனுமதி கொடு தொழுது இறை பாத மகமதி புறன்
பனிமதி வழி வரு தமிழ் மாறன் பகழி யொடு அடுசிலை யினன் ஏகி
குனி மதி தவழ் தரு நீடும் கொடி அணி குட கடை குறுகா முன்
தனிவரை என நிகர் தரு கோபத்தழல் விழி அரவினை எதிர் கண்டான்
பல் பொறி பகுவா படம் புடை பரப்பி பக்கம் எண் திசை யொடு விசும்பில்
செல் கதிர் புதைத்து திணி இருள் பரப்ப திங்களின் பகிர் புரை நஞ்சம்
பில் எயிறு அதுக்கி பெரிது உயிர்த்து அகல் வாய் பிளந்து மா நகர் எலாம் ஒருங்கே
ஒல் என கௌவி விழுங்கு வான் சீறி உறுத்தனன் உரக வாள் அவுணன்
அடுத்தனன் அரச சிங்க ஏறு இடி அஞ்ச ஆர்த்து அம் கையில்
எடுத்தனன் நெடு நாள் இருதலை வணக்கி எரி மு கூர்ங்கணை தொடுத்து
விடுத்தனன் விடுத்த சரம் எலாம் உரகன் வெறும் துகள் பட கறித்து உமிழ்ந்து
படுத்தனன் பொறது பஞ்சவன் புராரி பங்க சேவடி நினையா
கொடிய தோர் பிறைவாய் அம்பினை விடுத்து கோள் அரா வளை உடல் துணித்தான்
இடியதோ என ஆர்த்து எரி நிற குருதி இரங்கி வீழ் அருவியில் கவிழ
நெடியது ஓர் உடலம் புரள் பட கூர் வான் எளி விளிபவன் மேலை
கடியது ஓர் ஆல கால வெள்ளம் போல கக்கினான் கறை இருள் நஞ்சம்
தீவிடம் உருத்து திணி இருள் கடுப்ப திருநகர் எங்கணும் செறிந்த
காவிடம் கூவல் கயம் தலை சதுக்கம் கழகம் ஆவணம் அகழ் இஞ்சி
கோவிடம் மாடம் உபரிகை மேடை கோபுர அரங்கம் எலாம் பரந்து
தாவிட மயங்கி உறங்கினார் போல சாம்பினார் தனிநகர் மாக்கள்
நிலை தளர்ந்து உடலம் திமிர்ந்து வேர் அரும்பி நிறை புலன் பொறி கரணங்கள்
தலை தடுமாறி உரை மொழி குழறி தழு தழுப்பு அடைந்து நா உணங்கி
மலை தரு கபம் மேல் நிமிர்ந்து உணர்வு அழிந்து மயங்கி மூச்சு ஒடுங்கி உள் ஆவி
அலை தர ஊசல் ஆடினார் கிடந்தார் அன்ன தொல் நகர் உளார் எலாம்
தென்னவன் விடம் கண்டு அஞ்சும் ஆல் போல சினகரம் அடைந்து தாழ்ந்து எந்தாய்
முன்னவ ஆதி முதல்வ வித்தின்றி முளைத்தவ முடிவு இலா முனிவ
என்னவ அன்பர்க்கு எளிய யாவர்க்கும் இறையவ நகர்க்கு என்றும்
மன்னவ அநாதி மறையவ முக்கண் வானவ நினை சரண் அடைந்தேன்
அடுத்து வந்து அலைக்கும் ஆழியை துரந்தும் ஆழி
உண்டு ஏழும் ஒன்றாக
தொடுத்து வந்து அலைக்கும் பெருமழை தடுத்து துளைக்கை
விண் துழவ வெண் பிறை கோடு
எடுத்துவந்து அலைக்கும் களிற்றினை விளித்து இந்நகர்
புரந்தனை இன்று
மடுத்து வந்து அலைக்கும் விடத்தினான் மயங்கும்
வருத்தமும் களைதி என்று இரந்தான்
அருள் கடல் அனைய ஆதிநாயகன் தன் அவிர் சடை அணி மதி கொழுந்தின்
பெருக்கு அடை அமு தண் துளி சிறிது
பிலிற்றினான் பிலிற்றிடலோடும்
பொருக்கு என எங்கும் பாலினில் பிரை போல் புரை அற கலந்து பண்டு உள்ள
திருக்கிளர் மதுரா நகரம் புனிதம் செய்த அச்சிறுதுளி அம்மா
இரவி முன் இருள் அது என இறை அருண் இருண் மல வலி
பரவிய அமுதால் விடம் அகன்று அவச படி ஒழிந்து யாவரும் இன்பம்
விரவிய களிப்பின் மேவினார் இருந்தார் மீனவர பெரும் தகை வேந்தன்
அரவு அணி சடையார்க்கு அன்பு உரு தானே ஆகி
மண் காவல் செய்தி இருந்தான்
நாகமெய்த படலம் சுபம்
பரஞ்சோதி முனிவர் அருளிய
திருவிளையாடற் புராணம்
திருவாலவாய் மான்மியம்
திருச்சிற்றம்பலம்
மூன்றாவது திருவாலவா காண்டம்
திருவாலவாயான படலம் முதல் வலை வீசின வரை
திருவாலவாயான படலம்
பாய் உடையார் விடுத்த பழி அழல் வழுதி உடல் குளி
பதிகம் ஓதும்
சேய் உடையார் அணை திளைக்கும் செவியுடையார்
அளவு இறந்த திசைகள் எட்டும்
தோய் உடையார் பொன் இதழி தொடையுடையார் விட
அரவும் சுற்றும் ஆல
வாய் உடையார் புகழ் பாட பெறு வேமேல் வேண்டுவது
இம் மனித யாக்கை
வேதன் நெடு மால் ஆதி விண் நாடர் மண்
யோகர்
மாதவர் யாவரும் காண மணி முறுவல் சிறிது அரும்பி
மாட கூடல்
நாதன் இரு திரு கரம் தொட்டு அம்மியின் மேல்
வைத்தகையான் நாட்ட செல்வி
பாதமலர் எழுபிறவி கடல் நீந்தும் புணை என்பர் பற்று
இலாதோர்
ஓலவாய் மறைகள் தேறா ஒருவன் தன் உலகம் தன்னை
சேலவாய் உழலும் நாரைக்கு அருளிய செயல் ஈது அம்ம
நீலவாய் மணி நேர் கண்ட நெடிய நான் மாட கூடல்
ஆலவாய் ஆக செய்த அருள் திறம் எடுத்து சொல்வாம்
சித்திர மேரு வென்ற திரண்ட தோள் சுகுணன் பின்பு
சித்திர விரதன் சித்ர பூடணன் திண்தேர் வல்ல
சித்திர துவசன் வென்றி வருமன் வன் தோள்
சித்திர சேனன் சீர்சால் சித்ர விக்கிரமன் என் போன்
மணி கெழு தேரி இராச மார்த்தாண்டன்
மணி அணி முடி இராச சார்த்தூல வழுதி சிந்தா
மணி நிகர் துவிசராச குலோத்தமன் மடங்கா வென்றி
மணிதிகழ் பொலம் பூண் ஆய் அயோதன பிரவீணன்
மன்னோ
இயம்பரும் திறலி ராச குஞ்சரன் பரவி
பயங்கரன் கைக்கும் பைந்தார் உக்கிர சேனன் பாரை
சயம் கெழு தோள் மேல் ஏந்து சத்துரும் சஞ்சயன்
வீமத்தேர்
வயம் கெழு மன்னன் வீம பராக்கிரம வழுதி மாதோ
பெய் வளை விந்தை சேர்ந்த பிரதாப மார்த்தாண்ட பேர
தெவ்வடு சிலையான் தேர் விக்கிரம கஞ்சுகன் தேரார்
போர
வெளவிய சமர கோலாகலன் எனும் வாகை வேலான்
அவ்வியம் அவித்த சிந்தை அதுல விக்கிரமன் என்போன்
எழில் புனை அதுல கீர்த்தி என இருபத்திரண்டு
வழி மைந்தர் ஆகி வையகம் காத்த வேந்தர்
பழி தவிர் அதுல கீர்த்தி பாண்டியன் தன்பால் இன்பம்
பொழிதர உதித்த கீர்த்தி பூடணன் புரக்கும் நாளில்
கரும் கடல் ஏழும் காவல் கரை கடந்து ஆர்த்து
பொங்கி
ஒருங்கு எழுந்து உறுத்து சீறி உம்பரோடு இம்பர் எட்டு
பொரும் கட கரியும் எட்டு பொன் னெடும் கிரியும் நேமி
பெருங் கடி வரையும் பேர பிரளயம் கோத்தது அன்றே
அப்பெரும் சலதி வெள்ளத்து அழிந்தன அழி விலாத
எப்பெரும் பொழிலும் ஏழு திபமும் இவற்றுள் தங்கி
நிற்பன செல்வ ஆன திணைகளும் நீண்ட சென்னி
பர்ப்பத வகையும் ஈறு பட்டன ஆக அம் கண்
தேன் இழி குதலை தீம் சொல் சேல் நெடும் கண்ணி
கோயில்
வன் இழி விமானம் பொன் தாமரை விளையாட்டின் வந்த
கான் இழி இடப குன்றம் கரிவரை நா
ஆன் இழி வரை வராக முதல் அழிவு இலாத
வெள்ளநீர் வறப்ப ஆதி வேதியன் ஞாலம் முன்போல்
உள்ளவாறு உதிப்ப நல்கி உம்பரோடு இம்பர் ஏனை
புள்ளடு விலங்கு நல்கி கதிர் உடல் புத்தேள் மூவர்
தள்ளரு மரபின் முன் போல் தமிழ் வேந்தர் தமையும்
தந்தான்
அங்கியை மதி மரபு எனும் ஆழியுள்
தங்கிய கலை எண் நான்கு இரட்டி தன்னொடும்
பொங்கிய நிலா மதி போல தோன்றினான்
வங்கிய சேகர வழுதி மன்னனே
தாள் அணி கழலினான் தங்கள் நாயகன்
கோள் அணி புரிசை சூழ் கோயில் சூழ ஓர்
வாள் அணி கடி நகர் சிறிது வைக வைத்து
ஆள் அரி யேறு என அவனி காக்கும் நாள்
செய்யகோன் மனு வழி செலுத்து நீர்மையால்
பொய் கெழு கலிப்பகை புறம் தந்து ஓடத்தன்
வையகம் பல்வளம் சுரப்ப வைகலும்
மெய் கெழு மன்பதை மிக்காஅல் அரோ
பல்கு உறு மானுட பரப்பு எலாம் ஒருங்கு
கல் குற விடங்குறைவாக வாய் மது
பில்குறு தாரினான் பிறை முடித்தவன்
மல்குறு கோயிலின் மருங்கர் எய்தினான்
கறை அணி கண்டனை தாழ்ந்து கை தொழுது
இறையவ நின் அருள் வலியின் இந்நில
பொறையது ஆற்று வேற்கு ஈண்டு இப்போது ஒரு
குறையது உண்டாயினது என்று கூறுவான்
இத்தனை மாக்களும் இருக்க தக்கதா
பத்தனம் காணவி பதிக்கண் ஆதியே
வைத்து அறை செய்திடும் வரம்பு காண்கிலேன்
அத்தம் அற்று அதனை இன்று அறி காட்டு என்றான்
நுண்ணிய பொருளினும் நுண்ணிது ஆயவர்
விண் இழி விமான நின்று எழுந்து மீனவன்
திண்ணிய அன்பினுக்கு எளிய சித்தரா
புண்ணிய அரு கடல் ஆகி போதுவார்
பாம்பினால் கடி சூத்திரம் கோவணம் பசும் தாள்
பாம்பினால் புரிநூல் சன்ன வீரம் வெம் பகு வா
பாம்பினால் குழை குண்டலம் பாத கிண் கிணி நாண்
பாம்பினால் கர கங்கணம் பரித்தனர் வந்தார்
வந்த யோகர் மா மண்டப மருங்கு நின்று அம்கை
பந்த ஆலவாய் அரவினை பார்த்து நீ இவனுக்கு
இந்த மாநகர் எல்லையை அளந்து காட்டு என்றார்
அந்த வாள் அரா அடிபணிந்து அடிகளை வேண்டும்
பெரும் நகர் அடியனேன் பெயரினால் விளங
கருணை செய்தி என்று இரந்திட அம் கடலும்
அருள் நயந்து நேர்ந்து அனையதே ஆகென பணித்தான்
உருகெழும் சின உரகமும் மெல் என செல்லா
கீழ திசை தலை சென்று தன் கேழ் கிளர் வாலை
நீட்டி மா நகர் வலம் பட நிலம் படிந்து உடலை
கோட்டி வாலை வாய் வைத்து வேல் கொற்றவற்கு எல்லை
காட்டி மீண்டு அரன் கங்கணம் ஆனது கரத்தில்
சித்தர் தம் சின கரத்து எழுந்து அருளினார் செழியன்
பைத்த ஆலவாய் கோலிய படி சுவர் எடுத்து
சுத்த நேமிமால் வரையினை தொட்டு அகழ்ந்து எடுத்து
வைத்தது ஆம் என வகுத்தனன் மஞ்சு சூழ் இஞ்சி
தென் திசை பரங் குன்றமும் வடதிசை இடப
குன்றமும் குட கேடக நகரமும் குணபால்
பொன்றல் அம் கிழித்து எழு பொழில் பூவண நகரும்
என்று நால் பெரு வாயில் கட்கு எல்லையாய் வகுத்தான்
அனைய நீள் மதில் ஆலவாய் என
நனைய வார் பொழில் நகரமும் ஆலவாய் நாமம்
புனையல் ஆயது எப்போதும் பொன்னகர் தன்னை
கனைய வார் கழல் காலினான் பண்டு போல் கண்டான்
கொடிகள் நீள் மதில் மண்டபம் கோபுரம் வீதி
கடி கொள் பும் பொழில் இன்னவும் புதியவா கண்டு
நெடிய கோளகை கிரீடம் வாள் நிழல் மணியால் செய்து
அடிகள் சாத்திய கலன்களும் வேறு அமைத்தான்
பல்வகை பெரும் குடிகளின் பரப்பு எலாம் நிரப்பி
செல்வ வானவர் புரந்தரன் புரத்தினும் சிறப்ப
மல்லன் மா நகர் பெருவளம் துளும் பிட வளர்த்தான்
தொல்லை நாள் குலசேகரன் போல் வரு தோன்றல்
திருவாலவாயான படலம் சுபம்
சுந்தர பேரம்பெய்த படலம்
அம் கணர் உரகம் அணிந்து அருள் வடிவம் அடைந்து
அரசு அகம் மகிழ
கங்கண விட அரவம் கொடு கடி நகர் கண்டு அருண்
முறை இதுவாம்
சங்கு அணி குழையினர் பஞ்சவன் வழிபடு தம் பெயர்
எழுதிய கூர்
வெம் கணை கொடு வன் படை முடுகிய வென்றியை
இனி மொழிவாம்
வெம் கயல் நீள் கொடி வங்கிய சேகரன் வெண்குடை
நீழலின் வாய்
வங்கம் உலாவிய தெண் கடல் ஞாலம் அடைந்து ஐயுள்
மாசு அறு சீர
செம் கமல ஆலய மங்கையும் வாலிய திண் பதும அலயம்
மேல்
நங்கையும் ஓவற மங்கல மான நயம் பெற வாழ்வு உறு
நாள்
வேழ மறப்படை சூழ எதிர்த்தவர் வீறு கொடுத்து அடியில்
தாழ அடர்த்தி கல் வாகை தொடுத்து அலர் தார் புனை
விக்கிர
சோழன் மதிக்குல நாயகனை பொரு சூள் கருதி
தொலையா
ஆழ் கடலுக்கு இணை ஆம் அனிக தொடு மாட
அமருக்கு எழுவான்
கயபதி காய்சின நரபதி பாய் துரகத பதியே முதலா
வயமிகு தோள் வட திசையின் நராதிபர் வலி கெழு
சேனையினோடு
இயம் இடி ஏரி இமிழ் இசை என வாய்விட விரதம் ஏறி
நடா
பயன் மலி காவிரி நதி அருகே உறை பதி கொடு
மேயினன் ஆல்
சிலைத்து எழு செம்பியன் வெம் படை மள்ளர் செயிர்த்து
மதி கடவுள்
குலத்தவன் நாட்டில் இருந்து எழில் ஆன் நிரை கொண்டு
குறும்பு செய்து
மலர்த்தம் ஏரி உடைத்து நகர்க்கு வரும் பல பண்டமும்
ஆறு
அலைத்து முடுக்கி நடுக்கம் விளைத்து அமர்க்கு அடி
இட்டனர் ஆல்
மாறன் அறிந்து இனி என் செய்தும் நேரியன் வன்
படையோ அளவு இன்று
ஏறி எதிர்ந்து அமர் ஆடல் எனக்கு அரிது குறையை
பிறையோடு
ஆறு அணி பூரண சுந்தரன் எந்தை அடித்தல முன்
குருகா
கூறி இரந்து வரம் பெறுகென் இறை கோயில் அடைந்தனன்
ஆல்
அடைந்து பணிந்து அருள் நாயகனே அடியேனொடு
விக்கிரமன்
தொடர்ந்து அமர் ஆடல் அயல் புல மன்னர்
தொகையொடு பாசறை வா
படர்ந்து இறை கொண்டனனே பொர ஒத்த பதாதி எனக்கு
இலையே
மிடைந்து வரும் படை மிக்க விடத்து அரண் வேறு
உளதோ இறைவா
என்னை இனி செயும் ஆறு என மாறன் இரந்து
மொழிந்திடலும்
முன்னவன் வான் இடை நின்று அசரீரி மொழிந்து
அருள்வான் முதல் நீ
அன்னவனோடு அமர் ஆடு பின் நாமும் அடைந்து
உதவி துணையாய்
நின்னது வாகை என பொருகின்றனன் நீ இனி அஞ்சல்
என
சிந்தை களித்து இரு கண் துளித்து செம்கை
இறைவன்
அந்தி மதிச்சடை அந்தணனை தொழுது அன்று புறப்பட
முன்
வந்தனன் ஒற்றுவன் அந்தி வரைக்கயல் வந்தது விக்கிரமன்
வெம் தறு கண் படை என்று அரசற்கு விளம்பினன்
அப்பொழுதே
அரசனின் இயம் பல அதிர வலம்புரி அலற வலங்கு உளை
மான்
இரதம் அணைந்திட விசை கொடு சிந்தை பினிட வலவன்
கடவ
புரசை நெடும் கரி திரை எறியும் கடல் பொரு
பரிவிண்தொடு தேர்
விரைசெய் நறும் தொடை விருதர் கணம் புடைவிரவ
நடந்தனன் ஆல்
அளந்து சூழ் திரு ஆலவாய் மதில் இன்புற தக
ஆழிபோல்
வளைந்த சோழ நெடும் படைக்கு எதிர் வஞ்சி வேய்ந்து
எழு பஞ்சவன்
கிளர்ந்த சேனை அதிர்ந்து கிட்டின கிட்டி அவ் இரு
படைஞரும்
களம் சிறந்திட வஞ்சினம் கொடு கை வகுத்து அமர்
செய்வர் ஆல்
சையம் ஒத்து எழு தேரினாரொடு
தேரரும்
மையன் மைக்கரி வீர ரோடு எதிர்
வீரரும்
கொய்யுளை பரி வயவரோடு இகல்
வயவரும்
கை அழல் படை வீசி மின் விடு கார் என பொருவார்
அரோ
முடங்கு வெம் சிலை வில்லவ ரோடு முடங்க
வில்லரும்
விடங்கலுழ்ந்திடு வேலரோடு விடம் கலுழ்ந்திடும் வேலரும்
இடம்கை தோல் வல வாளரோடு இடங்கை
வாளரும்
மடங்கல் ஏறு மலை பது என்ன
ஆல்
அரவினன் நில அம்புயம் பொறை ஆற்று மீனவன்
ஆற்றல் கூர்
புரவியின் நிரை வையம் மேல் கொடு போந்த நேரியர்
வேந்தன் நேர்
விரவி மின்னிய முரசு இயம்ப மிடைந்து வெம்சமர் ஆடு
மாறி
இரவி தன்னொடு மதியவன் பொர ஏகினான் நிகர் ஆகும்
ஆல்
துள்ளு மா ஒலி தான யாரு துளும்பும்
தேர்
தள்ளு மா ஒலி படையொடும் படை தாக்கும்
பொருநர் ஆர்த்து
தௌ¢ளு மா ஒலி மள்ளர் பைம் கழல் ஏங்கு
வீங்கி
தௌ¢ளு மா ஒலி வேறு பாடு திரிந்து கல் எனல் ஆயதே
துடித்த வாள் அரவு என்ன வீசிய தூங்கு கையின வீங்கு
நீர்
குடித்த காரொடு கார் மலைந்திடும் கொள்கை போல
உடன்று
இடித்த ஆயின அசனி ஏறு இன் இருப்பு உலக்கை எடுத்து
எறிந்து
அடித்த சோரி யொடு ஆவி சோர விழுந்த வெம் சின
ஆனையே
எய்த வாளி விலக்குவார் பிறிது எய்யும் வாளிதம் மார்பு
தோள்
செய்த போது அவர் ஆண்மை கண்டு சிரித்து வென்றி
வியப்பரால்
வைத வா வடி வேல் எறிந்திட வருவதை குறி வழியினால்
கொய்த தார் மற வாள் எறிந்து குறைத்து வேறு படுத்துவார்
பின்னிடாது இருபடையும் ஒத்து அமர் ஆடும் எல்லை
பெரும் படை
சென்னி தன் துணை ஆன உத்தர தேய மன்னவர்
படையொடும்
துன்னி ஞாலம் முடிக்கு நாள் எழு சூறை தள்ள அதிர்ந்து
எழும்
வன்னி என்ன உடன்று எதிர்ந்தனன் வழுதி சேனை
உடைந்ததே
மின்னல் அங்கு இலை வாளடும் சிலை வில் இழந்தனர்
வீரரே
பன்னல் அம் புனை தேரொடும் கரி பரி இழந்தனர்
பாகரே
தென்னவன் பொருவலி இழந்தனன் என்று செம்பியன்
வாகையும்
தன்னது என்று தருக்கு மேல் கொடு சங்கு எடுத்து
முழக்கினான்
அந்த வேலையின் முன் அரும் தமது அருள் எனக்குளிர்
கடிபுனல்
பந்தர் நீழல் அளித்தும் ஓடை படுத்தியும் பகை சாயவே
வந்த வேடர் அவ்வண்ணமே ஒரு மான வேட அரசாய்
வலம்
சிந்த ஆகுலம் மூழ்கு மீனவன் சேனை காவலர் ஆயினார்
குன்ற வில் வேடன் சாபம் குழைவித்து சுந்தரேசன்
என்ற தன் நாமம் தீட்டி இட்ட கூர்ங் கணைகள் தூண்டி
வென்றனம் என்று வாகை மிலைந்து வெண்சங்கம் ஆர்த்து
நின்றவன் சேனைமீது நெறி பட செலுத்தா நின்றான்
அம் முனை வாளி ஒவ் ஒன்று அடல் புனை நூற்று நூறு
தெம் முனைவீரர் தம்மை செகுத்து உயிர் உண்ண நோக்கி
இம்முனை வாளி ஒன்றுக்கு இத்துணை வலியாது என்னா
வெம் முனை மற வேல் சென்னி வியந்து அனுமானம்
எய்தா
அன்ன கூர் வாளி தன்னை கொணர்க என அதனை
வாசித்து
இன்னது சுந்தரேசன் என வரைந்திருப்பது ஈது
தென்னவற்கு ஆலவாயன் துணை செய்த செயல் என்று
அஞ்சி
பொன்னி நாடு உடையான் மீண்டு போகுவான்
போகுவானை
செருத்துணை ஆகி வந்த உத்தர தேயத்து உள்ளார்
துருக்கர் ஒட்டியர் வேறு உள்ளார் யாவரும் சூழ்ந்து நில்
என்று
உருத்தனர் வைது நீ போர்க்கு உடைந்தனை போதி ஈது
உன்
கருத்து எனின் ஆண்மை யாவர் கண்ணது உன் மானம்
என்னாம்
செல்லலை வருதி என்னா செயிர்த்து எழுந்து இடியின்
ஆர்த்து
கல் எழு அனைய திண்தோள் கௌரியன் மடைமேல்
சென்று
வில் இற வலித்து வாங்கி வேறு ஆகி நின்று
சொல்லினும் கடிய வாளி தொடுத்தனர் விடுத்தார் தூர்த்தார்
வடுத்தவா மரு செம்புண் மற மகனாகி நின்ற
கடுத்தவா மிடற்று முக்கண் கண்ணுதல் சாமி தான் முன்
எடுத்தவா அக வில் என்ன இரும் சிலை வாளி ஒன்று
தொடுத்த ஆடவர் தாம் விட்ட சுடு சரம் தொலைத்து
பின்னும்
பத்து அம்பு தொடுத்து நூற்று மான்
சாய்த்தான்
பத்து அம்பு தொடுத்து நூற்று வெம் களிற்றை
மாய்த்தான்
பத்து அம்பு தொடுத்து நூற்று வாம் பரியை
கொன்றான்
பத்து அம்பு தொடுத்து நூற்று மானுடரை
வென்றான்
நூறு அம்பு தொடுத்து நூற்று வெம் பரிமேல்
நூறு அம்பு தொடுத்து நூற்று வெம் கரிமேல் பெய்தான்
நூறு அம்பு தொடுத்து நூற்று தேர் சிதைய விட்டான்
நூறு அம்பு தொடுத்து நூற்று சேவகரை அட்டான்
ஆயிரம் வாளியான் நூறு பரியை
ஆயிரம் வாளியான் நூறு கரியை வென்றான்
ஆயிரம் வாளியான் நூறு தேரை சாய்த்தான்
ஆயிரம் வாளியான் நூறு பேரை தேய்த்தான்
தடிந்தன தோளும் தாளும் தகர்ந்தன சென்னி மண்ணில்
படிந்தன மடிந்தோர் யாக்கை பரிந்தன தும்பை தாமம்
மடிந்தன மையல் யானை மாண்டன தாண்டும் பாய்மான்
ஒடிந்தன கொடிஞ்சி மான் தேர் ஒதுங்கின ஒழிந்த சேனை
ஆவி முன் ஏக தாமும் அருக்க மண்டலத்து ஆரு
தாவுவ என்ன ஆடும் தலை பல சிலைவாள் பட்டு
கூவிளி எழுத்து விழும் குறைத்தலை ஆட பாதி
சாவு உடல் நின்று கைகள் கொட்டுவ தாளம் என்ன
தறை விழ தனது சென்னி வீட்டினர் தம்மை நின்ற
குறை உடல் கை வேல் குத்தி நூக்குவ குரவை பாடி
எறி பது தலைகள் வாய்மென்று எயிறது கறித்து வீழ்ந்து
கருவின மார்பம் தட்டி நிற்பன கவந்தயாக்கை
ஒரு வழி பட்டு வீழும் இருதலை ஒன்றற்கு ஒன்று
மருவிய கேண்மைத்து ஆகி வால் எயிறு இலங்க நக்கு
பிரிவு அற வந்தாய் நீயும் என்று எதிர் பேசி
பரிவு உற மொழிந்து மோந்து பாடி நின்று ஆடல் செய்த
மாக வாறு இயங்கு சேனம் வல் இரு குவை இன்
அன்ன
காகம் வன் கழுகு வெம்போர களன் இடை அவிந்து
வீழ்ந்தோர்
ஆகம் மேல் சிறகு ஆதி கொண்டு அசைவன வேடை
நீக்க
பாகம் நின்று ஆல வட்டம் பணிப்பன போன்ற அன்றே
வெள்ளமா சோரி ஈர்ப்ப மிதக்கின்ற தேர்கள்
வெம்பே
பிள்ளைகள் மூழ்கி கீழ் போய் மறித்து என வீழ்வ
தௌ¢ளுநீர கடலின் மீதூர் சிதைக்கல நிரையும் தாக்கி
துள்ளி மற்று அவற்றை சாய்க்கும் சுறவமும் போன்ற
அன்றே
கத்தி நின்று ஒருபால் ஈர்ப்ப கருங் கொடி சேனம்
துண்டம்
கொத்தி நின்று ஒருபால் ஈர்ப்ப குட வயிற்று அழல்
கண் பூத
பத்தி நின்று ஒருபால் ஈர பட்டவர் ஆகம் கூளி
பொத்தி நின்று ஒருபால் ஈர்ப்ப அம் பொறி போல
மன்னோ
துடுவை வான் முறம் கால் தள்ளும் துணை செவி அரிசி
கோட்டின்
உடுவை நேர் மணியின் குப்பை உரல் அடி உலக்கை
திண்கோ
அடுகலம் கடம் தி சோரி மத்தக அடுப்பு என்று யானை
படுகளம் வி செல்வி அடுமடை பள்ளி மானும்
பிணத்தினை கோலி புண் நீர் ஆற்றினை பெருக்கி
உண் பே
கணத்தினை உதைத்து நூக்கி கரை உடைத்து ஒருவன்
பூதம்
நிணத்தொடும் வரும் நீத்தம் நேர் பட விருந்து
கையால்
அணைத்து வாய் மடுக்கும் வைகை அருந்திய பூதம்
என்ன
புரத்தினுள் உயர்ந்த கூடல் புண்ணியன் எழுதி எய்த
சரத்தினுள் அவிந்தார் சென்னிக்கு உற்றுழி சார்வாய்
வந்த
அரத்தினை அறுக்கும் வை வேல் அயல் புல வேந்தர்
நச்சு
மரத்தினை அடுத்து சந்துங் கதழ் எரி மடுத்தது என்ன
மாசு அறு காட்சியான் தன் வாளியால் அவிந்தோர்
தம்மை
மூசு வண்டு என்ன சூழ்ந்து மொய்த்தன பைத்த கூளி
காய் சின சேனம் காகம் கழுகு இனம் பற்றி ஈர்த்து
பூசல் இட்டு ஒன்றோடு ஒன்று போர் செய்வான்
தொடங்கிற்று அம்ம
வெம்சின மறக்கோன் நம்பி விடுகணை வெள்ளத்து
ஆழ்ந்து
வஞ்சினம் உரு தன் சேனை மடிந்தது கண்டு மாழாந்து
எஞ்சின படையும் சூழ ஏதிலார் நகையும் சூழ
துஞ்சின மறமும் சூழ சோழனும் உடைந்து போனான்
வில்லொடு மேகம் அன்ன வெம்சிலை வேட வேந்தன்
மல்லொடு பயின்ற தென்னவன் மலர் முக செவ்வி
நோக்கி
அல்லொடு மதி வந்தது என்ன அருள் நகை சிறிது பூத்து
செல்லொடு பகை போல் கொண்ட திரு உரு மறைந்து
போனான்
பாடுவாய் அளி தேன் ஊட்டும் பைந்தொடை செழியன்
வென்றி
கோடுவாய் வைத்திட்டு ஆர்த்து குஞ்சர முகட்டில் ஏறி
தோடுவாய் கிழிக்கும் கண்ணார் மங்கலம் துவன்றி ஏந்த
நீடுவார் திரை நீர் வேலி நீள் மதி நகரில் புக்கான்
சிலைவில் சேவகம் செய்து வாகை வாங்கி திரு அளித்த
சேவகற்கு சிறந்த பூசை
நிலை நித்தாய் மணி பொலம் பூண் இறு வி சாத்தி
நிழல் விரிக்கும் வெயில் மணியான் நெடிய மேரு
மலைவில் தான் என்ன வரி சிலையும் நாமம்
வரைந்த கடும் கூர்ங் கணையும் வனைந்து சாத்தி
அலைவித்து ஆழ் கடல் உலகு அகல செங்கோல்
அறம் பெருக்கும் வங்கிய சேகரன் ஆம் அண்ணல்
சுந்தர பேரம்பெய்த படலம் சுபம்
சங்க பலகை கொடுத்த படலம்
வேடு உரு ஆகி மேரு வில்லி தன் நா கோல் எய்து
ஆடு அமர் ஆடி தென்னன் அடுபகை துரந்த வண்ணம்
பாடினம் சங்கத்தார்க்கு பகை தந்து அவரோடு ஒப்ப
கூடி மு தமிழின் செல்வம் விளக்கிய கொள்கை
சொல்வாம்
வங்கிய சேகரன் கோல் வாழும் நாள் மேலோர் வைகல்
கங்கை அம் துறை சூழ் கன்னி கடிமதில் காசி தன்னில்
பங்கயசூ முளரி புத்தேள் பத்து வாம் பரிமா வேள்வி
புங்கவர் மகிழ்ச்சி தூங்க மறை வழி போற்றி செய்தான்
நிரப்பிய வழி நாள் நவ் நீர் ஆடுவான் நீண்ட வீணை
நரப்பிசை வாணி சாவித்திரி எனும் நங்கை வேத
வரப்பிசை மநு ஆம் ஆயத்திரி எனும் மடவா ரோடும்
பரப்பிசை கங்கை நோக்கி படருவான் எல்லை
நானவார் குழலினாரம் மூவருள் நாவின் செல்வி
வான ஆறு இயங்கும் விஞ்சை மாதராள் ஒருத்தி பாடும்
கானவாறு உள்ளம் போக்கி நின்றனள் கமலயோனி
ஆனவால் அறிவன் ஏகி நதி கரையை சேர்ந்தான்
நாமகள் வரவு தாழ்ப்ப நங்கையர் இருவரோடும்
தாமரை கிழவன் மூழ்கி தடம் கரை ஏறும் எல்லை
பாமகள் குறுகி என்னை அன்றி நீ படிந்த வாறு என்
ஆம் என வெகுண்டாள் கேட்ட அம்பயத்து அண்ணல்
சொல்வான்
குற்றம் நின் மேலது ஆக நம்மை நீ கோபம் கொள்வது
எற்று என வினைய தீங்கை எண்ணறு மாக்கள் தோற்றம்
உன் தனை ஒழித்தி என்னா உரைத்தனன் சாபம் ஏற்கும்
பொன் தொடி மடந்தை அஞ்சி புலம்பு கொண்டு
அவலம் பூண்டாள்
ஊன் இடர் அகன்றோய் உன் ஆருயிர துணை ஆவேன்
இந்த
மானிட யோனி பட்டு மயங்கு கோ என்ன வண்டு
தேனிடை அழுந்தி வேதம் செப்பும் வெண் கமல செல்வி
தாள் இடர் அகல நோக்கி சதுர் முக தலைவன் சாற்றும்
முகிழ்தரு முலை நின் மெய்யா முதல் எழுத்து ஐம்
தொன்றில்
திகழ்தரு ஆகார் ஆதி ஹாகாரம் ஈறா செப்பி
புகழ் தரு நாற்பத்து எட்டு எண் புலவர் ஆகி
அகழ் தரு கடல்சூழ் ஞாலத்து அவதரித்து இடுவாக
தகு வருணம் எல்லாம் ஏறி நின்று அவற்றின்
மெய்த்தகு தன்மை எய்தி வேறு இயக்கம் தோன்ற
உய்த்திடும் அகாரத்திற்கு முதன்மையாய் ஒழுகும் நாதர்
முத்தமிழ் ஆலவாய் எம் முதல்வர் அம் முறையான்
மன்னோ
தாம் ஒரு புலவர் ஆகி திரு உரு தரித்து சங்க
மாமணி பீடத்து ஏரி வைகியே நாற்பத்து ஒன்பது
ஆம் அவர் ஆகி உண்ணி நின்று அவர்க்கு அறிவு
தோன்றி
ஏமுற புலமை காப்பார் என்றனன் கமல புத்தேள்
அக்கரம் நாற்பத்து எட்டும் அவ்வழி வேறு
மக்களா பிறந்து பல் மாண் கலைகளின் வகைமை
தேர்ந்து
தொக்க ஆரியமும் ஏனை சொல் பதினெட்டும் ஆய்ந்து
தக்க தென் கலை நுண் தேர்ச்சி புலமையில் தலைமை
சார்ந்தார்
கழுமணி வயிரம் வேந்த கலன் பல அன்றி கண்டி
கொழுமணி கலனும் பூணும் குளிர்நிலா நிற்று மெய்யர்
வழுவற தெரிந்த செம் சொல் மாலையால் அன்றி ஆய்ந்த
செழு மலர் மாலையானும் சிவ அர்ச்சனை செய்யும் நீரார்
புலம் தொறும் போகி புலமையால்
வென்று
மலர்ந்த தண் பொருனை நீத்த வளம் கெழு நாட்டில் வந்து
நிலம் தரு திருவின் ஆன்ற நிறை நிதி செழியன் செம்
கோல்
நலம் தரு மதுரை நோக்கி நண்ணுவார் நண்ணும் எல்லை
பல கலைமாண் தேர்ச்சி பனுவலின் பயனாய்
அற்புத மூர்த்தி எந்தை ஆலவாய் அடிகள் அங்கு ஓர்
கற்பமை கேள்வி சான்ற கல்வியின் செல்வர் ஆகி
சொற்பதம் கடந்த பாதம் இரு நிலம் தோய வந்தார்
அவ் இடை வருகின்றாரை நோக்கி நீர் யாரை நீவிர்
எவ்விடை நின்றும் போது கின்றனிர் என்ன அன்னார்
வெவ்விடை அனையீர் யாங்கள் விஞ்சையர் அடைந்தோர்
பாவம்
வெளவிடு பொருனை நாட்டின் வருகின்றேம் என்ன
லோடும்
தனி வரு புலவர் நீவிர் தண் தமிழ் ஆலவாய் எம்
நனி வரு கருணை மூர்த்தி கனைகழல் இறைஞ்சல்
வேண்டும்
இனி வருகென்ன நீரே எங்களுக்கு அளவு இல் கோடி
துனி வரு வினைகள் தீர்க்கும் சுந்தர கடவுள் என்றார்
மறையினால் ஒழுகும் பன்மாண் கலைகள் போல் மாண்ட
கேள்வி
துறையின் ஆறு ஒழுகும் சான்றோர் சூழ மீண்டு ஏகி
கூடல்
கறையினார் கண்டத்தாரை பணிவித்து கரந்தார்
ஒற்றை
பிறையினார் மகுட தோற்றத்தார் அறிஞராய் வந்த
பெம்மான்
விம்மிதம் அடைந்து சான்றோர் விண் இழி விமானம் மேய
செம்மலை வேறு செய்யுளால் பரவி ஏத்தி
கைம் மலை உரியினார் தம் கால் தொழுது இறைஞ்சி
மீண்டு
கொய்ம் மலர் வாகை செவ்வேல் செழியனை குறுகி
கண்டார்
மறவலி நேமி செம்கோல் மன்னவன் வந்த சான்றோர்
அறமலி கேள்வி நோக்கி அவைக்கள கிழமை நோக்கி
திறமலி ஒழுக்கம் நோக்கி சீரியர் போலும் என்னா
நிறை மலி உவகை பூத்த நெஞ்சினான் இதனை செய்தான்
திங்கள் அம் கண்ணி வேய்ந்த செக்கர் சடில
மங்கலம் பெருகு கோயில் வட குட புலத்தின் மாடு ஓர்
சங்க மண்டபம் உண்டாக்கி தகைமை சால் சிறப்பு நல்கி
அங்கு அமர்ந்து இருத்திர் என்ன இருத்தினான் அறிஞர்
தம்மை
வண் தமிழ் நாவினார்க்கு மன்னவன் வரிசை நல
கண்டு உளம் புழுங்கி முன்னை புலவர் கழக
தோரை
மண்டினர் மூண்டு வாது செய் ஆற்றன் முட்டி
பண்டைய புலனும் தோற்று படர் உழந்து எய்த்து
போனார்
இனையர் போல் வந்து மறுபுலத்து இருக்கும்
வினைஞரும் மதம் மேல் கொண்டு வினாய் வாதம்
செய்து
மனவலி இளைப்ப வென்று வைகுவோர் ஒன்றை வேண்டி
புனை இழை பாக நீங்கா புலவர் முன் நண்ணினாரே
முந்து நூல் மொழிந்தார் தம்மை முறைமையால் வணங்கி
எம்மை
வந்து எவரும் வாதம் செய்கின்றார் வரிசையாக
அந்தம் இல் புலமை தூக்கி அளப்பதாம் எம் மனோர்க்கு
தந்து அருள் செய்தி சங்க பலகை ஒன்று என்று
தாழ்ந்தார்
பாடிய பாணற்கு அன்று வலியவே பலகை இட்டார்
பாடிய புலவர் வேண்டில் பலகை தந்து அருளார்
கொல்லோ
பாடிய புலவர் ஆகும் படி ஒரு படிவம் கொண்டு
பாடிய புலவர் காண தோன்றினார் பலகை யோடும்
சதுரமாய் அளவின் இரண்டு சாண் அதி பலகை அம்ம
மதியினும் வாலிது ஆகும் மந்திர வலியது
முதிய நும் போல் வார்க்கு எல்லாம் முழம் வளர்ந்து
இருக்கை நல்கும்
இது நுமக்கு அளவு கோலாய் இருக்கும் என்று இயம்பி
ஈந்தார்
நாமகள் உருவாய் வந்த நாவலர் தமக்கு வெள்ளை
தாமரை அமளி தன்னை பலகையா தருவது என்ன
காமனை முனிந்தார் நல கை கொடு களிறு தாங்கும்
மாமணி கோயில் தன்னை வளைந்து தம் கழகம் புக்கார்
நாறு பூம் தாமம் நாற்றி நறும் பனி தோய்ந்த சாந்த
சேறு வெண் மலர் தூசு செழும் புகை தீபம் ஆதி
வேறு பல் வகையால் பூசை வினை முடித்து இறைஞ்சி
கீரன்
ஏறினான் கபிலனோடு பரணனும் ஏறினானே
இரும் கலை வல்லோர் எல்லாம் இம் முறை ஏறி
ஒருங்கு இனிது இருந்தார் யார்க்கும் ஒத்து இடம் கொடுத்து
நாதன்
தரும் சிறு பகை ஒன்றே தன் உரை செய்வோர்க்கு எல்லாம்
சுருங்கி நின்று அகலம் காட்டி தோன்று நூல் போன்றது
அன்றே
மேதகு சான்றோர் நூலின் விளை பொருள் விளங்க
தம்மில்
ஏதுவும் எடுத்து காட்டும் எழுவகை மதமும் கூறும்
போதவை தௌ¤ந்த கிள்ளை பூவையே புறம்பு போந்து
வாது செய்வார்கள் வந்தான் மறுத்து நேர் நிறுத்து
மன்னோ
ஆய ஆறு எண் புலவரும் ஆய்ந்து உணர்
பாய கேள்வி பயன் பெற மாட்சியால்
தூய பாடல் தொடங்கினர் செய்து கொண்டு
ஏய வாரு இருந்தார் அந்த எல்லை வாய்
பலரும் செய்த பனுவலும் மாண் பொருள்
மலரும் செல்வமும் சொல்லின் வளமையும்
குலவும் செய்யுள் குறிப்பும் ஒத்து ஒன்றியே
தலை மயங்கி கிடந்த தன்மையால்
வேறு பாடு அறியாது வியந்து நீர்
கூறு பாடல் இது என்றும் கோது இல் என
தேறு பாடல் இது என்றும் செஞ் செவே
மாறு பாடு கொண்டார் சங்க வாணரே
மருளு மாறு மயக்கு அற வான் பொருள்
தெருளு மாறும் செயவல்ல கள்வர் சொல்
பொருளும் ஆம் மதுரேசர் புலவர் முன்
அருளும் நாவலராய் வந்து தோன்றினார்
வந்த நாவலர் வந்திக்கும்
சிந்தை ஆகுலம் செய்ய மயக்குறும்
பந்த யாப்பை கொணர்க என பாவலர்
எந்தை ஈங்கு இவை என்று முன் இட்டனர்
தூய சொல்லும் பொருளின் தொடர்ச்சியும்
ஆய நாவலர் அவ் அவர் தம் முது
ஆய பாடல் வகை தெரிந்து அவ் அவர்க்கு
ஏயவே எடுத்து ஈந்தனர் என்பவே
வாங்கு சங்க புலவர் மனம் களித்து
ஈங்கு நீர் எமரோடு ஒருத்தராய்
ஓங்கி வாழ்திர் என்று ஒல் என தங்களை
தாங்கு செம் பொன் தவிசில் இருத்தினார்
பொன்னின் பீடிகை என்னும் பொன் ஆரமேல்
துன்னு நாவலர் சூழ் மணி ஆகவே
மன்னினார் நடு நாயக மாமணி
என்ன வீற்றிருந்தார் மது ரேசரே
நதி அணிந்தவர் தம் மொடு நாற்பத்து ஒன்
பதின்மர் என்ன படும் புலவோர் எலாம்
முதிய வான் தமிழ் பின்னு முறை
மதி விளங்க தொடுத்து அவண் வாழும் நாள்
வங்கிய சேகரன் சூடா மணி
பொங்கி தேசார் முடி புனை வித்து புவி நல்கி
இங்கு இயல் பாச வினை பகை சாய இருந்து ஆங்கே
சங்கு இயல் வார் குழையான் அடி ஒன்றிய சார்பு உற்றான்
சங்க பலகை கொடுத்த படலம் சுபம்
தருமிக்கு பொற்கிழி அளித்த படலம்
சொற்குவை தேரும் பாவலர் மேவ தொகு பீடம்
அற் குவை கண்டத்து அண்ணல் அளித்தது அறைந்தேம்
ஆல்
தற்குவை தந்தால் உய்குவல் என்னும் தருமிக்கு
பொற் குவை நல்கும் வண்ணம் எடுத்து புகல்கிற்பாம்
மன்னவர் மன்னன் வங்கிய சூடா மணி மாறன்
தென்னவர் ஆகி திகிரி உருட்டும் தென்கூடல்
முன்னவர் அன்னம் கண்டு அறியாத முடிக்கு ஏற்ற
பன் மலர் நல்கு நந்தனம் வைக்கும் பணி பூண்டான்
மாதவி பாதிரி தாதகி கூவிளம் மந்தாரம்
தாது அவிழ் மல்லிகை முல்லை இலஞ்சி தடம் கோங்கம்
வீதவழ் கொன்றை கரந்தை செழுங்கரம் வீரம் தண்
போது அவிழ் நந்தி செருந்தி குருந்தம் புன்னாகம்
முண்டகம் மென்கடி நீலம் முதல் பல முப்போதும்
எண் திசையும் கமழும் படி நந்தன மெங்கும் தேன்
உண்டு இசை வண்டு படிந்து முரன்றிட உண்டாக்கி
வண்டு இமிர் சண்பக நந்தனமும் தனி வைத்தான் ஆல்
பொய்த்திடு நுண் இடை மங்கல மங்கையர் பொன்
பூண்டார்
ஒத்து எழு சண்பகம் மொய்த்து அரும்பு உடைந்து எங்கும்
வைத்திடு நந்தன வாசம் விழுங்கி மணம் கான்று
பைத்து மலர்ந்தன கண்டு மகிழ்ந்து பரித்தேரான்
செருக்கிய வண்டு விழா மலர் கொய்து தெரிந்து ஆய்ந்து
செருக்கிய இண்டை நிரை தொடை தொங்கல் நெடும்
தாமம்
மருக்கிளர் கண்ணி தொடுத்து அணிவித்து வணங்கு ஆரூர்
கருக்கிய கண் நுதலார் திருமேனி கவின் செய்தான்
அன்ன வியன் பொழில் மா மதுரேசர் அடித்தாழ் வோன்
பொன் அவிர் சண்பக மாலை புனைந்த புது கோல
தன்னை வியந்து இவர் சண்பக சுந்தரர் தாம் என்னா
முன்னர் இறைஞ்சினன் நிம்பம் அணிந்த முடி தென்னன்
அன்னது ஒர் நாமம் பெற்றனர் இன்று மணி கூடல்
முன்னவர் அந தாமம் அவர்க்கு முடிக்கு ஏற்றும்
இன்னது ஓர் நீரார் சண்பக மாறன் என்ற பேர்
மன்னி விளங்கினன் வங்கிய சூடா மணிதானும்
சண்பக மாறன் சுந்தரர் தம்
நண்பக மாறா நல் பணி செய்யும் நாளில்
பண்பகர் சொல்லார் தம் புடை மாரன் படுபோர் மூண்டு
எண்பக வெய்யவான் ஆகிய வந்தது அன்று இளவேனில்
மனிதர் வெம் கோடை தீர்க்கும் வசந்த மென் காலும்
வேறு
துனிதவிர் இளம் கால் வேண்டும் சோலையும் சோலை
வேண்டும்
புனித நீர தடமும் வேறு புது மலர் ஓடை வேண்டும்
பனி தரு மதியும் வேறு பால் மதி வேண்டும் காலம்
அண்ட வான்தரு மேல் சீறி சிவந்து எழுந்தாங்கு
தேமா
தண் தளிர் ஈன்று வானம் தைவர நிவந்த காசு
கொண்டு இடை அழுத்தி செய்த குழை அணி மகளிர்
போல
வண்டு இறை கொள்ள பூத்து மலர்ந்தன செருந்தி
எல்லாம்
செம்கதிர் மேனியான் போல் அவிழ்ந்தன செழும் பலாசம்
மங்குல் ஊர் செல்வன் போல மலர்ந்தன காஞ்சி திங்கள்
புங்கவன் போல பூத்த பூம் சினை மர அம் செங்கை
அம் கதிர் ஆழியான் போல் அலர்ந்தன விரிந்த காய
தரை கிழித்து எழுநீர் வைகை தடம் கரை எக்கர்
அல்குல்
அரமே கலை சூழ்ந்து என்ன அலர்ந்து தாது உகுப்ப
ஞாழல்
மரகதம் தழைத்து வெண் முத்து அரும்பி பொன்
மலர்ந்து வாங்கும்
திரை கடல் பவளக்காடு செய்வன கன்னி புன்னை
ஊடினார் போல வெம்பி இலை உதிர்ந்து உயிர்
அன்னாரை
கூடினார் போல எங்கும் குழை வர தழைத்து நீங்கி
வாடினார் போல கண்ணீர் வார மெய் பசந்து மையல்
நீடினார் அலர் போல் பூத்து நெருங்கின மரங்கள்
எல்லாம்
விழைதரு காதலார் தாம் மெலிவுற மெலிந்து நெஞ்சம்
குழைவுற குழைந்து நிற்கும் கோதிலா கற்பினார் போல்
மழை அறும் கோடை தீப்பமரம் தலை வாட வாடி
தழைவுற தழைத்து நின்ற தழீஇய பைங் கொடிகள்
எல்லாம்
சேட்டிகை தென் காற்று தள்ள தௌ¢ மது சிதற
தும்பி
நீட்டிசை முரல சாயா நின்று பூம் கொம்பர் ஆடல்
நாட்டி புலவன் ஆட்ட நகை முகம் வெயர்வை சிந்த
பாட்டிசைத்து ஆடா நின்ற பாவைமார் போன்ற அன்றே
மலர்ந்த செவ் அந்தி போதும் வகுளமும் முதிர்ந்து வாடி
உலர்ந்து மொய்த்து அளி தேன் நக்க கிடப்பன
உள்ளமிக்க
குலம் தரு நல்லோர் செல்வம் குன்றினும் தம்பால்
இல்லென்று
அலந்தவர்க்கு உயிரை மாறி யாயினும் கொடுப்பர்
அன்றோ
நாறிய தண் அம் தேமா நறும் தளிர் கோதி கூவி
ஊறிய கா பேட்டை உருக்குவ குயில் மென் சேவல்
வீறிய செம்கோல் வேந்தன் வெளிப்பட தேயம் காவல்
மாறிய வேந்தன் போல ஒடுங்கின மயில்கள் எல்லம்
பொங்கரின் நுழைந்து வாவி புகுந்து பங்கயம் துழாவி
பைங்கடி மயிலை முல்லை மல்லிகை பந்தர் தாவி
கொங்கு அலர் மணம் கூட்டு உண்டு குளிர்ந்து மெல்
என்று தென்றல்
அங்கு அங்கே கலைகள் தேரும் அறிவன் போல்
இயங்கும் அன்றே
தாமரை களாஞ்சி தாங்க தண் குயின் முழவம் ஏங்க
மா மருது அமரும் கிள்ளை மங்கலம் இயம்ப தும்பி
காமரம் இசைப்ப முள் வா கைதை வாள் எடுப்ப
வேனில்
கோமகன் மகுடம் சூடி இருப்பது குளிர் பூம் சோலை
கலையினால் நிறைந்த இந்து காந்த மண்டபத்தும் செய்த
மலையினும் எழுது மாட மருங்கினும் நெருங்கு சோலை
தலையினும் கமல வாவி தடத்தினும் தண் முத்து ஆரம்
முலையினும் அன்றி கோடை முடிவிடம் காணார் மைந்தர்
நிலம் தரு திருவின் ஆன்ற நிழல் மணி மாட கூடல்
வலந்தரு தடம் தோள் மைந்தர் வானமும் வீழும் போக
நலம் தரு மகளிரோடு நாக நாடவர் தம் செல்வ
பொலம் தரு அனைய காட்சி பூம் பொழில் நுகர் வான்
போவார்
மா தாண் மதமான் எருத்தின் மடங்கல் என செல்வாரும்
பூத்தார் ஒலிவாம் பரிமேல் புகர் மா என போவாரும்
பார்த்தார் பரிதி என வாம் பரித்தேர் உகைத்து ஊர்வாரும்
தேத்தார் உளர் வண்டு அலம்ப சிலம்பின் நடக்கின்றாரும்
நீல பிடிமேல் பிடிப்போன் நெறி கொள்வாரும் தரள
மாலை சிவிகை மிசை வெண் மலராள் என செல்வாரும்
ஆலை கரும்பன் துணை போல் அணித்தார
பரியூர்வாரும்
கோல தடக்கை பற்றி கொழுநருடன் போவாரும்
சுருப்பு கமழ் தேம் கண்ணி தொடுபைங் கழல்
ஆடவரும்
கருப்பு சிலை மன்னவனால் கருவி படை அன்னவரும்
விருப்புற்று எறிநீர் வையை வெள்ளை தரளம் தௌ¢ளி
பொருப்பில் குவிக்கும் புளினம் புறம் சூழ் சோலை புகுவார்
கூந்தல் பிடியும் பரியும் ஊர் வார் கொழுநர் தடம் தோள்
ஏந்த சயமாது என்ன தழுவா இழிந்து பொழில் வா
பூ தொத்து அலர் பொன் கொடி தாது உகு மாறு என்ன
புனைந்த
சாந்த கலவை புக போய் வனமங்கையர் போல்
சார்ந்தார்
ஏமா சல மென் முலையார் நடை ஓவியமே என்ன
பூ மாதவி சேர்வாரும் புன்னை நிழல்
தேமா நிழல் சேர்வாரும் செருந்தி
காமாயுத சாலைகள் போல் கைதை நிழல் சேர்வாரும்
கோடும் பிறை வாண் நுதலார் குழலை கருவி கார்
என்று
ஆதும் தோகை அவர் கண் நோக்கி கணை என்று
அஞ்சி
ஒடும் கொடியின் அன்னார் உரு மாந்தளிர் என்று
அயில் வான்
நாடும் குயில் அன்னவர் பண் இசை கேட்டு ஒதுங்கி
நாணும்
நீடும் தரங்கம் இரங்கு நிறைநீர் நிலையே அன்றி
பாடும் சுரும்பு உண் கழுநீர் பைந்தாள் குமுதம் பதுமம்
கோடும் பூத்த என்ன கொடியேர் இடையார் குழையும்
தோடும் கிடந்த வதன தொகையால் பொலிவ சோலை
பிடிகள் என்ன நடந்தார் உடன் போ கொழுநர் பெரும்
தண்
கொடிகள் மிடைந்த வில்லில் இயக்கர் போல குறுகி
கடி கொள் பனிநீர் தௌ¤த்து வேடை தணித்தும் கன்றும்
அடிகள் பிடித்தும் சேடியவர் கைக்கு உதவி ஆவார்
மைவார் தடம் கண் மடவார் வளைப்பர் கொம்பின்
மலரை
கொய்வார் குமிழ் போந்து உயிர்ப்பார் குழையும்
செவியும் குழலும்
பெய்வார் மகிழ்ச்சி செய்வார் பேரா மையல் கூர
எய்வார் கணைபோல் தைப்ப கொழுநர் மார் பத்து
எறிவார்
முத்து ஏர் நகையார் வளைப்ப முகை விண்டு அலர் பூங்
கொம்பர
புத்தேள் வண்டும் பெடையும் புலம்பி குழலில் புகுந்து
தெத்தே என பாண் செய்து தீந்தேன் அருந்தும்
துணையோடு
ஒத்து ஏழ் இசை பாதி கள் உண்ணும் பாணர் ஒத்தே
இம்பர் வீடு அளிக்கும் தெய்வ மகளிரே என்பார் கூற்றம்
வம்பல மெய்யே போலும் வளைக்கையார் வளைப்ப
தாழ்ந்து
கம்பம் உற்று அடி பூ சிந்தி மலர் முகம் கண்ணீர்
சோர
கொம்பரும் பணிந்தது என்றால் உலகியல் கூறல் பாற்றோ
மை கணாள் ஒருத்தி எட்டா நிமிர் கொம்பை வளைக்கும்
தோறும்
கைக்கு நேர் படாமை வாடும் கடிமலர கொடிபோல்
நிற்ப
தைக்கும் பூம் கணை வேள் அன்ன ஒருமகன் தலைபட்டு
என்னை
எய்க்கின்றாய் தோள் மேல் ஏறி பறி என ஏந்தி
நின்றான்
தையலாள் ஒருத்தி எட்டா மலர கொம்பை தளிர்க்கை
நீட்டி
ஐய நுண் மருங்குல் நோவ வருந்தலும் ஆற்றா கேள்வன்
ஒய் யென இதுவும் என்னை யூடிய மகளிர் ரேயோ
கொய் என வளைத்து நின்றான் கண் முத்தம் கொழிப்ப
நின்றாள்
மைக்குழல் ஒருத்தி காதில் வட்ட பொன் ஒலை யூடே
தி கயம் அனையான் கொய்த செருந்திப்பூ செருகி
நோக்கி
குழை அழகிது என்றான் இடும் எம் கைக்கு இடுதி
என்னா
குழை யோடும் வீசி அன்பனுக்கு அலக்கண்
செய்தாள்
மயில் இளம் பெடை அன்னாள் ஓர் மாதர் மாங் குடம்பை
செல்லும்
குயில் இளம் பெடை தன் ஆவி சேவலை கூவ நோக்கி
அயில் இளம் களிறு அன்னானை கடை கணித்து
அளியும் தேனும்
பயில் இளம் சோலை மாடு ஓர் மாதவி பந்தர் சேர்ந்தாள்
பாசி இழை ஒருத்தி ஆற்றா புலவியாள் பைந்தாரான்
முன்
பூசு அகில் வாசம் காலில் போக்கியும் புனைபூண் காஞ்சி
ஓசையை செவியில் உய்த்தும் கலவியின் உருவம் தீட்டும்
தூசினை உடுத்தும் போர்த்தும் தூது விட்டவள் போல்
நின்றாள்
வாய்ந்த நாள் மலர் கொய்து ஈவான் மெய்யில் அம் மலர
தேம் தாது
சாந்த மான் மதம் போல் சிந்தி கிடப்ப ஓர் தையல்
யாரை
தோய்ந்த சாந்து என்றாள் உள்ளத்து உன்னையும் சுமந்து
கொய்த
ஆய்ந்த சண்பக தாது என்றான் நெய் சொரி அழலின்
நின்றாள்
பிணி அவிழ் கோதையாள் ஓர் பேதை தன் பதி
ஊடல்
தணிய வந்து அடியில் வீழ தன்னிழல் அனையான்
சென்னி
மணி இடை கண்டு கங்கை மணாளனை ஒப்பீர் எம்மை
பணிவது என் என்று நக்கு பரிவு மேல் செய்தாள்
மதுகை வாள் ஒருவன் அங்கு ஓர் மங்கை தன் வடிவை
நோக்கி
பதுமமே அடிகை காந்தள் பயோதரம் கோங்கு காவி
புது மலர் விழிவாய் ஆம்பல் போது நும் மூரல்
ஒப்பபோது
அதனை வாய் திறந்து காட்டி போமின் என்று
அடுத்து நின்றான்
விடை தனி ஏறு அன்னான் ஓர் விடலை
கண்ணாள்முன்
கிடைத்து நும் இடத்து என் நெஞ்சம் கெட்டு வந்து
ஒளித்தது அல்குல்
தட திடை ஒளித்ததேயோ தனத்திடை ஒளித்ததோ
பூம்
படத்தினை திறந்து காட்டி போ கென பற்றி
சென்றான்
மாந்தளிர் அடியார் சாய்ப்ப வளைந்த பூம் சினை வண்டு அன்னார்
கூந்தலில் கிடந்த செம்மல் கோதை மேல் வீழ்ந்த கற்பின்
ஏந்திழை அவரை நீத்து பலர் நுகர்ந்து எச்சில் ஆக்கும்
பூந்தொடியவரை துய்க்கும் பேதையர் போன்ற தன்றே
புல்லி மைந்தர் பொருள் கவர்ந்தார் என
வல்லி அன்ன மடந்தையர் கொய்தலின்
அல்லி நாண்மலர் அற்றபின் கை பொருள்
இல்லி என்ன விளைத்தன கா எலாம்
மை உண் கண்ணியர் மைந்தரோடு அம்மலர்
கொய்யும் செல்வ நுகர்ந்து கொழுங்கணும்
மெய்யும் தோயில் கொழுநரின் வேற்றுமை
செய்யும் பொய்கை திளைப்ப சென்றாரரோ
அன்ன மன்னவர் ஆடும் கயம் தலை
நன்னர் நீல நளினம் குமுதம் என்று
இன்ன அன்றி எழில் முல்லை சண்பகம்
பொன் அம் கோங்கமும் பூத்தது போன்றதே
குரவ ஓதியர் கயம் தலை குறுகுமுன் கயலும்
அரவும் ஆமையும் அலவனும் அன்ன அமும் அகன்ற
பருவரால் களும் இரிந்தன பகைஞர் மேல் இட்டு
வருவரேல் எதிர் நிற்பரோ வலி இழந்தவரே
பண் எனும் சொலார் குடை தொறும் பல் மலர் வீழ்ந்த
தண் எனும் திரை அலை தொறும் நிரை தாக்கல்
கண்ணும் நீலமும் முகங்களும் கமலமும் வாயும்
வண்ண ஆம்பலும் தத்தம்மின் மலைவன அனைய
குழை பாசியின் விரிந்திட மகிழ்ந்து நீர் குடையும்
மாழை உண் கணார் கொங்கையும் முகங்களும் மருங்கர்
சூழ் அரும் பொடு மலர்ந்த செந்தாமரை தொகுதி
ஆழ் தரங்க நீர் இடை கிடந்து அலைவன அனைய
தூய நீர் குடைந்து ஏரும் தன் துணைவியை துணைவன்
வாயும் கண்களும் வேறு உற்ற வண்ணம் கண்டு என் கண்
ஏய இன்னுயிர் அனையவள் எங்கு உளாள் என்றான்
காயும் வேல் கணாள் முலை குளி பாட்டினாள் கண்ணீர்
மங்கை நல்லவள் ஒருத்தி நீர் ஆடுவான் மகிழ் நன்
அங்கை பற்றினள் ஏகுவாள் அவன் குடைந்து ஏறும்
பங கணாள் ஒருத்தியை பார்த்தலும் சீசீ
எங்கை எச்சில் நீர் ஆடலேன் என கரை நின்றாள்
வனைந்த பைங் கழலான் புனல் ஆடலின் மார்பின்
நனைந்த குங்கு தலை எறி நளின மொட்டு அழுந்த
புனைந்த கொங்கையால் வடு பட பொறித்தவள் யார்
என்று
இனைந்து அழுகினாள் நெய் சொரி எரி என ஒருத்தி
வீழ்ந்த காதலன் செய்த தீங்கு ஆகிய வேலால்
போழ்ந்த நெஞ்சினாள் புலவி நோய் பொறாள் அவன்
காண
ஆழ்ந்த நீர் இடை அமிழ்த்து வாள் போன்று அயர்ந்து
அயலே
தாழ்ந்த அன்னத்தை நோக்கி கை தா என இரந்தாள்
கரும்பு போல் மொழியாள் ஒரு காரிகை வதனம்
சுரும்பு சூழ் கமலங்களுள் கமலமா தோன்ற
விரும்பு காதலன் ஐயுற்று மெலிந்தனன் மெல்ல
அரும்பு முல்லை கண்டு ஐயத்தின் நீங்கி சென்று
அணைந்தான்
களித்த காதலன் மொக்குள் வா தன் நிழல் கண்டு
தௌ¤த்து வாள் நகை செய்ய மாற்றாள் என்று சீறி
தளிர்க்கை நீட்டினாள் கண்டிடல் தடவினள் சலத்துள்
ஒளித்தியோ எனா உதைத்தனள் பேதை மாது ஒருத்தி
நாறு சுண்ணம் மென் கலவையும் நானமும் தம்மின்
மாரி வீசி நின்று ஆடுவார் மாலை தாழ் அகலத்து
ஊறு பாடு அற வந்து அந்தரத்து அளிகவர்ந்து உண்ப
ஆறு செல்பவர் பொருள் வெளவும் ஆரட்டரே போல
கொய்யும் நீலமும் கமலமும் கொண்டு கொண்ட நங்கன்
எய்யும் வாளியின் எறிவரால் எறிந்திடு மலரை
கையினால் புடைத்து எறிந்தவர் கதிமுகம் படக்கண்டு
ஐது வாள் நகை செய்து அக மகிழ்ச்சியுள் ஆழ்வார்
வாச மென் பனி நீரோடு சுண்ணமும் வாரி
வீசுவார் இளம் பிடியொடு வேழ மா நிரை போல்
காசு உலா தொடி வில்லிட கைகளால் அள்ளி
பூசு சாந்து அவை அழிந்திட புனித நீர் இறைப்பார்
பெரும் புனல் தடம் குடைந்து ஆடுவார் ஆயத்து
ஒப்ப அரும் தனி ஒருமகள் ஒருவன் தன் முகத்து
துப்பை வென்ற செம் துவர் இதழ செய்ய வா தூநீர்
கொப்பளித்தனள் ஆம்ப அம் தேன் என குடித்தான்
ஆழம் அவ்விடை செல்லலை நில் என அடுத்தோர்
வேழ மன்னவன் விலக்குவான் போல் ஒரு வேல் கண்
ஏழை தன்னைக்கையால் வளைத்து ஏந்தி வண்டு அறை
தார்
சூழு மார் பணைத்து இரதி தோள் தோய்ந்தவன் ஒத்தான்
மாசுஇல் நானமும் சூடிய மாலையும் மெய்யில்
பூசு சாந்தமும் ஆரமும் பொய்கைக்கு கொடுத்து
வாச மெய்யினில் அம்புய வசமும் மயங்க
ஆசை மைந்தரோடு இளையவர் அகன் கரை அடைவார்
தையலார் சிலர் நனைந்த நுண் தானையுள் பொதிந்த
மெய் எலாம் வெளி பட கரை ஏறுவான் வெள்கி
ஐய தா பொலம் துகில் என அன்பரை கூ கண்
செய்ய மாயனை கேட்கும் சிறுமியர் ஒத்தார்
உலத்தை வென்ற தோள் ஆடவர் உச்சிமேல் பொறித்த
அலத்து அகத்தொடு குங்குமம் அனைந்து செம் புனலாய்
மலர தடம் குடைந்து அவர்க்கு நீராஞ்சன வட்ட
கலத்தை ஒத்தன சுற்றி நின்றார் ஒத்த கடிக்கா
பட்டும் பல் நிற கலிங்கமும் பன் மணி கலனும்
கொட்டும் சாந்தமும் நானமும் குங்கு சேறும்
கட்டும் தாமமும் தமது கட்டழகு எலாம் கவர
மட்டு உண் கோதையர் ஆடவர் மனம் எலாம் கவர்ந்தார்
காவியும் கமல போதும் கள் ஒழுகு ஆம்பல்
வாவியுள் பூத்த போல வாடி உள் பூப்ப நோக்கி
ஏய் இரண்டு அன்ன கண்களால் அனங்கனை ஏவல்
கொள்ளும்
பூவிரி பொலம் கொம்பு அன்னார் புது மது நுகர
புக்கார்
பொன்னினும் வெள்ளியானும் பளிங்கினும் புலவன் செய்த
நன்னிற கலத்தில் கூர் வாள் நட்டு என ஆக்கி சேடி
மின் அனார் அளித்த தேறல் சிறு துளி விரலில் தௌ¢ளி
துன்னி வீழ் களி வண்டு ஒச்சி தெண்டை அம் கனிவாய்
வைப்பார்
வள்ளத்து வாள் போல் வாக்கு மது குடம் தன்பால்
பெய்த
கொள்ளை தேன் மதுவை கொள்ளை கொள வந்த
வள்ளம் ஈது என்று
உள்ளத்து வெகுண்டு வை வாள் ஊன்றி மார் பிடப்பது
ஒத்த
கள்ளை சூழ் காளை வண்டு செரு செயல் காண்பது
ஒத்த
தணியல் உண்டு உள்ளம் சோரும் ஒருமள் தன் இயல்
உண்பான்
பிணி அவிழ் கோதையாள் ஒர் பெண் மகள் கலத்தில்
வாக்கும்
துணிமது தாரை தன்னை வாள் என துணிந்து பேதாய்
திணிகதிர் வாளால் வள்ளம் சிதைத்தியோ என்று நக்காள்
மலர் தொறும் சிறு தேன் நக்கி திரிவண்டு மடவார்
தம்கை
தலம் எடுத்து ஓச்ச ஓடா தழி தடம் சாடி மொய்ப்ப
இலம் என பல்லோர் மாட்டும் இரந்து தன்மை
நீங்கா
அலமரும் வறியோர் வைத்த நிதி கண்டு அகல்வரே யோ
உண்டவள் ஒருத்தி கள்வாய் உதிக்கும் தன் முகமும்
கண்ணும்
கண்டு தாமரைகள் வேலை முளைத்த கள்ளை ஆர
மொண்டு உணா பேதை தும்பி அம்மது முளரி வார்
தேன்
நுண் துளி செறிவது என்னா நொடித்து கை புடைத்து
நக்காள்
மங்கையாள் ஒருத்தி தான் உண்டு எஞ்சிய மதுவுள்
தோன்றும்
திங்களை நோக்கி என்னை பிரிவின்கண் தீயா
சுட்டாய்
இங்கு வந்து அக பட்டாயே இனி விடேன் கிடத்தி
என்னா
அங்கு ஒரு வள்ளம் கொண்டு சேமித்தாள் அருந்தல்
செய்யாள்
வெவ்விய நறவம் உண்ட விளங்கு இழை ஒருத்தி கையில்
கௌவிய வாடி தன்னில் கரும் கயல் நெடும் கண் சேப்பும்
கொவ்வை வாய் விளர்ப்பு நோக்கி என் நலம் கூட்டு
உண்டு ஏகும்
ஓளவிய மனத்தான் யார் என்று அயர்கின்றாள் அயலார்
எள்ள
ஒருத்தி கள் உண்கின்றாள் தன் உருவம் நறவுள்
தோன்ற
ஒருத்தி என்னுடன் வந்து உண்பாள் காண் என உண்ட
தோழி
ஒருத்தி வந்து என் செய்வாள் தன் உருவமும் நோக்கி
பேதாய்
ஒருத்தியோ இருவர் என்றாள் எச்சில் என்று உகுத்து
நக்காள்
சாடி உண் நறவம் உண்டாள் தன் உரு வேறு பாட்டை
ஆடியுள் நோக்கி நானோ அல்லனோ எனைத்தான்
கைக்கொண்டு
ஓடினர் பிறரும் உண்டோ உயிர் அன்னான் வந்து இங்கு
என்னை
தேடி என் செய்கேன் என்னை தேடித்தா சேடி என்றாள்
களித்தவள் ஒருத்தி நின்ற வாடியுள் கணவன்றன் பின்
ஒளித்தவன் உருவும் தானு நேர் பட உருத்து நோக்கி
துளித்த கண்ணீர் ஆகி ஏது இலாள் தோய் தோய்ந்து
இன்பம்
குளித்தனை இருத்தியோ என்று உதைத்தனள் கோபம்
மூண்டாள்
இளம் புளிந்தயிர் விராய இன் சுவை பொதிந்த சோறு
வளம் பட விருத்தினோடும் அருந்துவார் வசந்த வீணை
களம் படும் எழாலினோடும் கைவிரல் நடாத்தி காமன்
உளம் புகுந்து அலைப்ப வெண்ணெ பாவை போல்
உருகி சோர்வார்
இவ் இள வேனில் காலத்து இன்னுயிர துணைவி யோடும்
செவ்விய செங்கோன் நேமி செண்பக மாறன் ஓர் நாள்
கைவினை வல்லோன் செய்த கதிர்விடு காந்த குன்றில்
வெவ்விய வேடை நீப்பான் இருந்தனன் வேறு வைகி
மாந்தளிர் ஈன்று கோங்கு வண்டள அரும்பி தண்தேன்
காந்தள் செம் கமலம் ஆம்பல் சண்பகம் கழுநீர் புத்து
சாய்ந்த மென் கொடியும் தானும் தனி இடத்து இருப்பான்
நேரே
வாய்ந்த ஓர் நாற்றம் தோன்ற அசைந்தது வசந
தென்றல்
வெவ்விய வேலான் வீசும் வாச மோந்து ஈது வேறு
திவ்விய வாசம் ஆக இருந்தது தென்றல் காவில்
வெளவிய வாசம் அன்று காலுக்கும் இல்லை
எவ்வியல் வாச மேயோ இது என எண்ணம் கொள்வான்
திரும்பித்தன் தேவி தன்னை நோக்கினான்
ஐம்பால்
இரும்பித்தை வாசம் ஆகி இருந்தது கண்டில்
சுரும்பிற்கும் தெரியாது என்னா சூழ்ந்து இறும் பூது
கொண்டீ
தரும்பிதை இயல்போ செய்கையோ என ஐயம்
கொண்டாள்
ஐயுறு கருத்தை யாவராயினும் அறிந்து பாடல்
செய்யுநர் அவர்க்கே இன்ன ஆயிரம் செம்பொன் என்ற
கையுறை வேலான் ஈந்த பொன் கிழி கை கொண்டு ஏகி
மெய் உணர் புலவர் முன்னா தூக்கினார் வினைசெய்
மாக்கள்
வங்கத்தார் பொருள் போல் வேறு வகை அமை கேள்வி
நோக்கி
சங்கத்தார் எல்லாம் தம்மில் தனித்தனி தேர்ந்து
துங்க தார் வேம்பன் உள்ளம் சூழ் பொருள் துழாவி
உற்ற
பங்கத்தார் ஆகி எய்த்து படருறு மனத்தர் ஆனார்
அந்த வேலையில் ஆதி சைவரில்
வந்த மாணவன் மணம் செய் வேட்கையான்
முந்தை ஆச்சிம முயலும் பெற்றியான்
தந்தை தாய் இலான் தருமி என்று உளான்
ஒருவன் நான் முகத்து மார்பு
திருவன் நாடரும் தேவனாலும் உரு
அருவ நாலகன் தானை தன் கலி
வெருவ நாடி முன் வீழ்ந்து வேண்டுவான்
தந்தை தாய் இலேன் தனியன் ஆகிய
மைந்தனேன் புது வதுவை வேட்கையேன்
சிந்தை நோய் செயும் செல்ல தீர்ப்பதற்கு
எந்தையே இது பதம் என்று ஏத்தியே
நெடிய வேத நூல் நிறைய ஆகமம்
முடிய ஓதிய முறையினில் நிற்கு எனும்
வடி இல் இல்லற வாழ்க்கை இன்றி நின்
அடி அரு சனைக்கு அருகன் ஆவனோ
ஐய யாவையும் அறிதியே கொலாம்
வையை நாடவன் மன கருத்து உணர்ந்து
உய்ய ஓர் கவி உரைத்து எனக்கு அருள்
செய்ய வேண்டும் என்று இரந்து செப்பினான்
தென்னவன் குல தெய்வம் ஆகிய
மன்னர் கொங்கு தேர் வாழ்க்கை இன் தமிழ்
சொல் நலம் பெற சொல்லி நல்கினார்
இன்னல் தீர்ந்து அவன் இறைஞ்சி வாங்கினான்
பொன் தனிச்சடை புவன நாயகன்
சொற்ற பாடல் கை கொண்டு தொல் நிதி
பெற்று எடுத்தவன் போன்று பீடு உற
கற்ற நாவலர் கழகம் நண்ணினான்
கல்வியாளர் தம் கையில் நீட்டினான்
வல்லை யாவரும் வாங்கி வாசியா
சொல்லின் செல்வமும் பொருளும் தூக்கியே
நல்ல என்று உவகை நண்ணினார்
அளக்கு இல் கேள்வியார் அரசன் முன்பு போய்
விளக்கி அக்கவி விளம்பினார் கடன்
உள்ள கருத்து நேர் ஒத்தலால் சிரம்
துளக்கி மீனவன் மகிழ்ச்சி தூங்கினான்
உணர்ந்த கேள்வியார் இரரோடு ஒல்லை போ
புணர்ந்த ஆயிரம் பொன்னும் இன் தமிழ்
கொணர்ந்த வேதியன் கொள்க இன்று என
மணந்த தாரினான் மகிழ்ந்து நல்கினான்
வேந்தன் ஏவலால் விபுதர் தம் ஒடும்
போந்து மீண்டு அவை புறம்பு தூங்கிய
ஆய்ந்த பொன் கிழி அறுக்கும் நம்பியை
நேர்ந்து கீரன் நில் என விலக்கினான்
குற்றம் கவிக்கு என்று கூறலும்
கற்றிலான் நெடும் காலம் வெம் பசி
உற்றவன் கலத்து உண்ணும் எல்லை கை
பற்ற வாடினான் பண்பு பற்றினான்
உலர்ந்த நெஞ்சு கொண்டு ஒதுங்கி நாயகன்
நலம் தரும் கழல் நண்ணினான் அவன்
மலர்ந்தபாடல் கொண்டு அறிஞர் வைகிடத்து
அலர்ந்த சிந்தை கொண்டு அடைந்த மைந்தனே
செய்யுள் கொண்டு போ திருமுன் வைத்து உள
பையுள் கொண்ட பனவன் என்னை நீ
மையுள் கண்ட இவ் வழுவு பாடலை
கையுள் நல்கினாய் கதி இலேற்கு எனா
வறுமை நோய் பிணி பல் நாள் வழிபடு அடியேன்
நின்பால்
பெறு பொருள் இழந்தேன் என்று பேசில் என் யார்க்கும்
மேலாம்
கறை கெழு மிடற்றோய் நின்றன் கவிக்கு குற்றம் சில்
வாழ்நாள் சிற்
அறிவு உடை புலவர் சொன்னால் யார் உனை மதிக்க
வல்லார்
எந்தை இவ் விகழ்ச்சி நின்னது அல்லதை எனக்கு யாது
என்னா
சிந்தை நோய் உழந்து சைவ சிறுவன் இன்று இரங்க
யார்க்கும்
பந்தமும் வீடும் வேத பனுவலும் பயனும் ஆன
சுந்தர விடங்கன் ஆங்கு ஓர் புலவனா தோற்றம்
செய்தான்
கண்டிகை மதாணி ஆழி கதிர்முடி வயிரம் வேய்ந்த
குண்டலம் குடி கொண்டு அகத்து அழகு எலாம்
கொள்ளை கொள்ள
தண் தமிழ் மூன்றும் வல்லோன் தான் என குறி இட்டு
ஆங்கே
புண்டர நுதலில் பூத்து பொய் இருள் கிழித்து தள்ள
விரிகதிர படாத்திற் போர்த்த மெ பையுள் அடங்கி
பக்கத்து
எரி மணி கடகத்திண் தோள் இளையவர்
அடப்பையோடும்
குருமணி களாஞ்சி அம் பொன் கோடிகம் தாங்க
முத்தால்
புரிமதி குடை கீழ பொன் கால் கவரி பால் புரண்டு
துள்ள
சொல் வரம்பு இகந்த பாதம் என்பது தோன்ற வேத
நல்ல பாதுகையா சூட நவின்றன கற்று பாட
வல்லவர் மறையின் ஆறு மனு முதல் கலை போல் பின்பு
செல்ல நூல் ஆய்ந்தோர் வைகும் திருந்து அவை
களத்தை சேர்ந்தான்
ஆரவை குறுகி நேர் நின்று அங்கு இருந்தவரை நோக்கி
யாரை நங் கவிக்கு குற்றம் இயம்பினார் என்னா
முன்னம்
கீரன் அஞ்சாது நானே கிளத்தினேன் என்றான் நின்ற
சீரணி புலவன் குற்றம் யாது என தேரா கீரன்
சொல் குற்றம் இன்று வேறு பொருள்
தூய
பொன் குற்ற வேணி அண்ணல் பொருள் குற்றம் என்னை
என்றான்
தன் குற்றம் வருவது ஓரான் புனைமல்ர சார்பால் அன்றி
அல் குற்ற குழற்கு நாற்றம் இல்லையே என்றான் ஐயன்
பங்கய முக மென் கொங்கை பதுமினி குழலோ என்ன
அங்கு அதும் அனைத்தே என்றான் ஆலவாய் உடையான்
தெய்வ
மங்கையர் குழலோ என்ன அன்னதும் மந்தாரத்தின்
கொங்கலர் அளைந்து நாரும் கொள்கையால் செய்கைத்து
என்றான்
பரவி நீ வழிபட்டு ஏத்தும் பரம் சுடர் திருக்காளத்தி
அரவு நீர சடையார் பாகத்து அமர்ந்த ஞான
பூங்கோதை
இரவி நீர்ங் குழலும் அற்றோ என அ·தும் அற்றே
என்னா
வெருவிலான் சலமே உற்ற சாதித்தான் விளைவு
நோக்கான்
கற்றை வார் சடையான் நெற்றி கண்ணினை சிறிதே
காட்ட
பற்றுவான் இன்னும் அஞ்சான் உம் பரார் பதி போல்
ஆகம்
முற்று நீர் கண் ஆனாலும் மொழிந்த நும் பாடல் குற்றம்
குற்றமே என்றான் தன் பால் ஆகிய குற்றம் தேரான்
தேய்ந்த நாள் மதி கண்ணியான் நுதல் விழி செம் தீ
பாய்ந்த வெம்மையில் பொறாது பொன் பங்க தடத்துள்
ஆய்ந்த நாவலன் போய் விழுந்து ஆய்ந்தனன் அவனை
காய்ந்த நாவலன் இம் என திரு உரு கரந்தான்
சங்க பலகை கொடுத்த படலம் சுபம்
கீரனை கரையேற்றிய படலம்
மாரனை பொடி கண்டவர் அந்தண மைந்தனுக்கு
ஆர நல் கன கிழி ஈந்தது அறைந்தனம்
ஏர் அனத்திரள் சூழ் மலர் ஓடை இடத்தினும்
கீரனை கரை ஏற்றிய வாறு கிளத்துவாம்
தாழ்ந்த வேணியன் நெற்றி முளைத்த அழல் கணால்
போழ்ந்த நாவலன் ஆடக பங்க போய்கைவாய்
வீழ்ந்து அரும் படர் வேலையில் வீழ்ந்தனன் விம்முற
சூழ்ந்த நாவலர் கண்டு போறாது துளங்குவார்
ஏன்ற வேந்தன் இலாக்குடி ஈட்டமும் மின் கதிர்
கான்ற நாயக மாமணி போகிய கண்டியும்
ஆன்ற நானம் இலாதவர் கல்வியும் ஆனதே
சான்ற கீரன் இலாத அவை கூடிய சங்கமே
ஐய சொல் பொருள் தன் வடிவானவர் ஆலவாய்
மை தழைத்த மிடற்றினார் தம்மொடும் வாது தான்
செய்த இப்பிழையோ பெரிது எப்படி தீருமோ
உய்வது அற்பதமே என யாவரும் உன்னினார்
எய்தி வெள்ளி மலை பெயர்த்தானும் இறுத்த தன்
கையில் வீணை தொட்டு இன்னிசை பாட கனிந்தவன்
செய்த தீங்கு பொறுத்ததும் அன்றி திண் தேரோடும்
மொய் கொள் வாளும் கொடுத்தனன் புண்ணிய மூர்த்தியே
யாவராலும் அகற்ற அரிது இப்பிழை யாவர்க்கும்
தேவர் ஆம் அவரே திரு உள்ளம் திரும்பினால்
போவதே இதுவே துணிபு என்று புகன்று போ
பாவலோர் பரன் தாள் நிழலில் பணிந்து ஏத்துவார்
திருத்தனே சரணம் மறை சென்னி
நிருத்தனே சரணம் நிறை வேத நூல்
அருத்தனே சரணம் திரு ஆலவாய்
ஒருத்தனே சரணம் சரணங்கள் உனக்கு நாம்
பாயும் மால் விடை மேல் வருவோய் பல் உயிர்க்கு எலாம்
தாயும் தந்தையும் ஆகும் நின் தண் அளி தாமரைக்கு
ஏயும் மாதவன் போல் அல்ல தீய இயற்றினார்க்கு
ஆயும் இன்பமும் துன்பமும் ஆக்குவது ஆதலால்
அத்த கற்ற செருக்கின் அறிவழி கீரனின்
வித்த கவியை பழுது என்ற விதண்டையான்
மத்த கண் விழித்து வெதுப்பின் மலர்ந்த பொன்
முத்த கமலத்து இடை வீழ முடுக்கினாய்
இருள் நிறைந்த மிடற்று அடிகேள் இனி இப்பிழை
கருணை செய்து பொறுத்து அருள் என்று கபிலனும்
பரணனும் முதல் ஆகிய பாவலர் யாவரும்
சரணம் என்று விழுந்து இரந்தார் அடி சாரவே
அக்கீர வேலை ஆலம் அயின்ற எம் கருணை வள்ளல்
இக்கீர மழலை தீம் சொல் இறைவியோடு எழுந்து போந்து
நக்கீரன் கிடந்த செம் பொன் இன பூ தடத்து ஞாங்கர
புக்கீர மதுர தீம் சொல் புலவர் தம் குழாத்துள் நின்றான்
அனல் கணான் நோக்கினான் பின் அருள் கணால் நோக்க வாழ்ந்த
புனல் கணே கிடந்த கீரன் பொறி புலன் கரணம் எல்லாம்
கனல் கணார் தமவே யா கருணை மா கடலில் ஆழ்ந்து
வினை கணே எடுத்த யாக்கை வேறு இல் அன்பு உருவம் ஆனான்
போதையார் உலகம் ஈன்ற புனிதையார் பரஞான பூம்
கோதையார் குழற்கு தீங்கு கூறிய கொடிய நாவின்
தீதை யார் பொறுப்பரேயோ அவர் அன்றி
திருக்காளத்தி
காதையார் குழையினாரை காளத்தி கயிலை என்னா
எடுத்த சொல் மாறி இசைய நேரிசை
தொடுத்த அந்தாதி சா துணை செவி மடுத்து நேர்
வந்து
அடுத்தவன் கையை பற்றி அகன் கரை ஏற்றினார் தாள்
கொடுத்து எழு பிறவி வேலை கொடுகரை ஏற்ற வல்லார்
கை தந்து கரையேறிட்ட கருணை அம் கடலை தாழ்ந்து
மை தந்த கயல் கணாளை வந்தித்து தீங்கு நன்கு
செய் தந்தோர்க்கு இகலும் அன்பும் செய்தமை பொருளா
செய்யுள்
பெய் தந்து பாடுகின்றான் பிரான் அருள் நாடுகின்றான்
அறன் இலான் இழைத்த வேள்வி அழித்த பேர் ஆண்மை
போற்றி
மறன் இலா சண்டிக்கு ஈந்த மாண் பெரும் கருணை
போற்றி
கறுவி வீழ் கூற்றை காய்ந்த கனைகழல் கமலம்
போற்றி
சிறுவனுக்கு அழியா வாழ் நாள் அளித்து அருள் செய்தி
போற்றி
சலந்தரன் உடலம் கீண்ட சக்கர படையாய் போற்றி
வலம் தரும் அதனை மாயோன் வழிபட கொடுத்தாய்
போற்றி
அலர்ந்த செம் கமல புத்தேள் நடு சிரம் அரிந்தாய்
போற்றி
சிலந்தியை மகுடம் சூட்டி அரசு அருள் செல்வம்
போற்றி
திரிபுரம் பொரிய நக்க சேவகம் போற்றி மூவர்க்கு
அருளிய தலைமை போற்றி அனங்கனை ஆகம் தீய
எரி இடு நயனம் போற்றி இரதி வந்து இரப்ப மீள
கரியவன் மகனுக்கு ஆவி உதவிய கருணை போற்றி
நகைத்தட வந்த நகுசிரம் திருகி
சிகைத்திரு முடிமேல் வைத்த திண் திறல் போற்றி கோயில்
அகத்து அவி சுடரை தூண்டும் எலிக்கு அரசாள மூன்று
சகத்தையும் அளித்த தேவர் தம்பிரான் சரணம் போற்றி
பொருப்பு அகழ்ந்து எடுத்தோன் சென்னி புயம் இற
மிதித்தாய் போற்றி
இருக்கு இசைத்து அவனே பாட இரங்கி வாள் கொடுத்தாய்
போற்றி
தருக்கொடும் இருவர் தேட அழல் பிழம்பு ஆனாய்
போற்றி
செருக்கு விட்டு அவரே பூசை செய்ய நேர் நின்றாய்
போற்றி
பரும் கை மால் யானை ஏனம் பாய் புலி அரிமான் மீனம்
இரும் குறள் ஆமை கொண்ட இகல் வலி கடந்தாய்
போற்றி
குரங்கு பாம்பு எறும்பு நாரை கோழி ஆண் அலவன்
தேரை
கருங்குரீஇ கழுகின் அன்புக்கு இரங்கிய கருணை
போற்றி
சாலநான் இழைத்த தீங்குக்கு என்னையும் தண்டம் செய்த
கோலமே போற்றி பொல்லா கொடியனேன் தொடுத்த புன்
சொல்
மாலை கேட்டு என்னை ஆண்ட மலைமகள் மணாள
போற்றி
ஆலவாய் அடிகள் போற்றி அம்மை நின்
போற்றி
ஆவல் அலந்தனே அடியனேற்கு அருளல் என்னா
கோவமும் பிரசாதமும் குறித்து உரை பனுவல்
பா அலங்கலால் பரனையும் பங்கில் அம் கயல் கண்
பூவை தன்னையும் முறை போற்றி என்று ஏத்தா
தேவ தேவனான பின் பெரும்
தாவில் ஏழ் இசை ஏழுகூற்று இருக்கையும் சாத்தி
பூவர் சேவடி சென்னி மேல் பூப்ப வீழ்ந்து எழுந்தான்
பாவலோர்களும் தனித்தனி துதித்தனர் பணிந்தார்
துதித்த கீரனுக்கு இன்னருள் சுரந்து நீ முன் போல்
மதித்த நாவலர் குழாத்து இடை வதி என மறைநூல்
உதித்த நாவினார் கருணை செய்து உருக்கரந்து அயன்
சேய்
விதித்த கோயில் புக்கு அமர்ந்தனர் விளங்கு இழையோடும்
கற்ற கீரனும் கலைஞரும் கழக மண்டபத்தில்
உற்ற ஆட கிழி அறுத்து அந்தணற்கு உதவி
கொற்ற வேந்தனும் வரிசைகள் சில செ கொடுப்பித்து
அற்றம் நீங்கிய கல்வியின் செல்வராய் அமர்ந்தார்
சம்பக மாறன் என்னும் தமிழ்நர்தம் பெருமான் கூடல்
அம்பகல் நுதலினானை அங்கயல் கண்ணி னாளை
வம் பக நிறைந்த செந்தா மரை அடி வந்து தாழ்ந்து
நம்பக நிறைந்த அன்பால் பல் பணி நடாத்தி வைகும்
கீரனை கரையேற்றிய படலம் சுபம்
கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம்
கொன்றை அம் தெரியல் வேய்ந்த கூடல் எம் பெருமான்
செம்பொன்
மன்றல் அம் கமலத்து ஆழ்ந்து வழிபடு நாவலோனை
அன்று அகன் கரை ஏறிட்ட அருள் உரை செய்தேம்
இப்பால்
தென் தமிழ் அனையான் தேற தெருட்டிய திறனும்
சொல்வாம்
முன்பு நான் மட கூடல் முழு முதல் ஆணையால் போய்
இன்புற அறிஞர் ஈட்டத்து எய்தி ஆங்கு உறையும் கீரன்
வன்புறு கோட்டம் தீர்ந்து மதுரை எம் பெருமான் தாளில்
அன்பு உறு மனத்தன் ஆகி ஆய்ந்து மற்று இதனை
செய்வான்
கட்டு அவிழ் கடுக்கை அண்ணல் கண்ணினால் அவிந்த
காளை
மட்டு அவிழ் மலரோனாலும் மாயவனாலும் காக்க
பட்டவன் அல்லன் நல் நுதல் விழிப்படு தீ நம்மை
சுட்ட போது உருப்பம் தீர்த்து காத்தது சுவண
கஞ்சம்
பெரும் தடமே எம்மை எம்மையும் காப்பது என்னா
கப்பிலா மனத்தான் மூன்று காலமும் மூழ்கி
அப்பனை ஆலவாய் எம் அடிகளை அடியார் சேம
வைப்பினை இறைஞ்சி நித்தம் வழிபடும் நியமம் பூண்டான்
மையறு மனத்தான் வந்து வழிபடு நியமம் நோக்கி
பை அரவாரம் பூண்ட பரஞ்சுடர் மாட கூடல்
ஐயனும் அணியன் ஆகி அகம் மகிழ்ந்து அவனுக்கு ஒன்று
செய்ய நல் கருணை பூத்து திரு உளத்து இதனை
தேர்வான்
இலக்கணம் இவனுக்கு இன்னும் தௌ¤கில இதனால்
ஆய்ந்த
நலத்த சொல் வழூ என்பது அறிகிலன் அவை தீர்
கேள்வி
புலத்தவர் யாரை கொண்டு போதித்து இவனுக்கு என்னா
மலை தனு வளைத்த முக்கண் மன்னவன் உன்னும்
எல்லை
பங்க செங்கை கூப்பி பாலின் நேர் மொழியாள்
சொல்வாள்
அங்கணா அம்கை நெல்லி கனி என அனைத்தும் கண்ட
புங்கவா நினது சங்கைக்கு உத்தரம் புகல வல்லார்
எங்குளர் ஏனும் என் நெஞ்சு உதிப்பது ஒன்று இசைப்பேன்
ஐயா
பண்டு ஒரு வைகல் வெள்ளி பனிவரை இடத்து உன்
பாங்கர
புண் தவழ் குலிச கோமான் பூ மகன் மா புத்தேள்
அண்டரும் சனகன் ஆதி இருந்தவர் பிறரும் ஈண்டி
கொண்டனர் இருந்தார் இந்த குவலயம் பொறாது மாதோ
தாழ்ந்தது வடகீழ் எல்லை உயர்ந்தது தென் மேற்கு
சூழ்ந்தது கண்டு வானோர் தொழுது உனை பரவி ஐய
ஊழ்ந்திடும் அரவம் பூண்டோய் ஒருவன் நின் ஒப்பான்
அங்கே
வாழ்ந்திட விடுத்தால் இந்த வையம் நேர் நிற்கும் என்றார்
பைத்தலை புரட்டு முந்நீர பௌவம் உண்டவனே எம்மை
ஒத்தவன் அனையான் வாழ்க்கைக்கு உரியளாகிய உலோபா
முத்திரை இமவான் பெற்ற முகிழ் முலை கொடி ஒப்பாள்
என்று
இத்திரு முனியை நோக்கி ஆயிடை விடுத்தாய் அன்றே
விடை கொடு போவான் ஒன்றை வேண்டினான் ஏகும்
தேயம்
தொடை பெறு தமிழ் நாடு என்று சொல்லுப வந்த நாட்டின்
இடை பயில் மனித்தர் எல்லாம் இன் தமிழ் ஆய்ந்து
கேள்வி
உடையவர் என்ப கேட்டார்க்கு உத்தரம் உரைத்தல்
வேண்டும்
சித்தம் மாசு அகல அந்த செம் தமிழ் இயல் நூல்
தன்னை
அத்தனே அருளி செய்தி என்றனன் அனையான் தேற
வைத்தனை முதல் நூல் தன்னை மற்று அது தௌ¤ந்த
பின்னும்
நித்தனும் அடியேன் என்று நின் அடி காண்பேன் என்றான்
கடம்பமா வனத்தில் எம்மை கண்டனை இறைஞ்சி
உள்ளத்து
திடம் பெற யாது வேட்டாய் அவை எலாம் எம்பால்
பெற்று
திடம் பெற மலயத்து எய்தி இருக்க என விடுத்தாய்
சென்று
குடம் பெறு முனியும் அங்கே இருக்கின்றான்
கொடியினோடும்
இனையது உன் திரு உள்ளத்துக்கு இசைந்ததேல் இவற்கு
கேள்வி
அனைய மாதவனை கூவி உணர்த்தென வணங்கு கூற
இனைய நாண் இகழ்ச்சி எல்லா மறந்திடாது இன்று
சொன்னாய்
அனையதே செய்தும் என்னா அறிவனை நினைத்தான்
ஐயன்
உடைய நாயகன் திருவுளம் உணர்ந்தனன் முடிமேல்
அடைய அஞ்சலி முகிழ்த்தனன் அரும் தவ விமானத்து
இடை புகுந்தனன் பன்னியோடு எழுந்தனன் அகல்வான்
நடையன் ஆகி வந்து அடைந்தனன் நற்றமிழ் முனிவன்
இயங்கு மாதவ தேரினும் பன்னியோடு இழிந்து
புயங்கன் ஆலயம் புகுந்து நாற்புயம் புடை கிளைத்து
தயங்கு செம் பவளா சலம் தன்னையும் அதன்பால்
வயங்கும் இந்திர நீலமால் வரையையும் பணியா
பெருகும் அன்பு உளம் துளும்ப மெய் ஆனந்தம் பெருக
அருகு இருந்தனன் ஆவயில் கீரனும் அம் பொன்
முருகு அவிழ்ந்த தாமரை படிந்து இறைவனை முன்போல்
உருகு அன்பினால் இறைஞ்சுவான் ஒல்லை வந்து
அடைந்தான்
இருந்த மாதவ செல்வனை எதிர் வர நோக்கி
அருந்த வாவிற்கு இயல் தமிழ் அமைந்தில எம்பால்
தெரிந்த நீ அதை அரி தப தெருட்டு என பிணியும்
மருந்தும் ஆகிய பெருந்தகை செய்யவாய் மலர்ந்தான்
வெள்ளை மாமதி பிளவு அணி வேணி அம் கருணை
வள்ளலார் பணி சிர தினு மனத்தினும் தாங்கி
பள்ளம் ஏழையும் பருகினோன் பணியும் நக்கீரன்
உள்ளம் மாசு அற வியாகரணத்தினை உரைக்கும்
இருவகை புற உரை தழீஇ எழுமதமொடு நால்
பொருளடும் புணர்ந்து இரு குற்றமும் போக்கி
ஒரு விலை இரண்டு அழகொடு முத்தி எண் நான்கும்
மருவு ஆதி நூலினை தொகை வகை விரி முறையால்
கருத்து கண் அழி ஆதிய காண்டிகை யானும்
விருத்தியான் நூல் கிடை பொரு துளக்கற விளக்கி
தெரித்து உரைத்தனன் உரைத்திடு திறம் கண்டு நூலின்
அருத்த மே வடிவு ஆகிய ஆதி ஆசிரியன்
தருக்கு இன்பமும் கருணையு தழைய மா தவனை
திருக்கரங் களான் மகிழ்ச்சியுள் திளைத்திட தடவி
பெருக்க வேண்டிய பேறு எலாம் பீடுற நல்கி
இருக்கையில் செல விடுத்தனன் ஆலவாய் இறைவன்
பொன்னாளடும் குறு முனி விடை கொடு போன
பின்னை ஆர் உயிர கிழத்தி தன் பிரானை நேர் நோக்கி
என்னை நீ இவற்கு உணர்த்திடாது தவ பொதியின்
மன்னனால் உணர்த்தியது என மதுரை நாயகனும்
தன்னை நித்தலும் வழிபடும் தகுதியோர் சால
பொன் அளிப்பவர் தொடுத்த மற்சரம் இலா புனிதர்
சொன்னசொல் கடவாதவர் துகள் தவிர் நெஞ்சத்து
இன்னவர்க்கு நூல் கொளுத்துவது அறன் என இசைப்ப
இவன் மடுத்த மற்சரத்தினால் யாம் உணர்த்தாது
தவனை விட்டு உணர்த்தினம் என சாற்றினான் கேட்டு
கவலை விட்டு அக மகிழ்ச்சி கொண்டு இருந்தனள் கதிர்
கால்
நவ மணிக்கலம் பூத்தது ஓர் கொடி புரை நங்கை
கற்ற கீரனும் பின்பு தான் முன் செய்த கவிகண்
முற்றும் ஆய்ந்து சொல் வழுக்களும் வழா நிலை முடிபும்
உற்று நோக்கினான் அறிவின்றி முழுதொரும் உணர்ந்தோன்
சொற்ற பாடலில் பொருள் வழு சொல்லினேன் என்னா
மறையின் அந்தமும் தொடாத தாள் நிலம் தொட வந்த
நிறை பரம் சுடர் நிராமய நிருத்தற்கு பிழைத்தேன்
சிறிய கேள்வியோர் கழியவும் செருக்கு உடையோர் என்று
அறிஞர் கூறிய பழம் சொல் என் அளவிற்றே அம்ம
அட்ட மூர்த்தி தன் திருவடிக்கு அடியனேன் பிழைக்க
பட்ட தீங்கினால் எனை அவன் நுதல் விழி படுதீ
சுட்டது அன்றி என் நெஞ்சமும் சுடுவதே என்று
உட்டதும்பிய விழுமநோய் உவரியுள் ஆழ்ந்தான்
மகவை ஈன்ற தாய் கைத்திடு மருந்து வாய் மடுத்து
பகைபடும் பிணி அகற்றிடும் பான்மைபோல் என்னை
இகல் இழைத்து அறிவுறுத்தினாற்கு ஏழையேன் செ
தகுவது யாது என வரம்பிலா மகிழ்சியுள் தாழ்ந்தான்
மாதவன் தனக்கு ஆலவாய் மன்னவன் அருளால்
போதகம் செய்த நூலினை புலவரே னோர்க்கும்
ஆதரம் செ கொளுத்தி இட்டு இருந்தனன் அமலன்
பாத பங்கயம் மூழ்கிய பத்திமை கீரன்
கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம் சுபம்
சங்கத்தார் கலகம் தீர்த்த படலம்
காமனை பொடியா கண்ட கண் நுதல் தென் நூல் கீர
நாம நல் புலவற்கு ஈந்த நலம் இது பொலம் பூம்
கொன்றை
தாமன சங்கத்து உள்ளார் தலை தடுமாற்றம் தேற
ஊமனை கொண்டு பாடல் உணர்த்திய ஒழுக்கம்
சொல்வாம்
அந்தம் இல் கேள்வி ஓர் எண் அறுவரும் வேறு
செந்தமிழ் செய்து தம்மில் செருக்குறு பெருமை கூறி
தந்தமின் மாறா தத்த தராதரம் அளக்க வல்ல
முந்தை நூல் மொழிந்த ஆசான் முன்னர் வந்து
எய்தினாரே
தொழுதனர் அடிகள் யாங்கள் தொடுத்த பாடல் தம்
முள்
விழுமிதும் தீதும் தூக்கி வேறுபாடு அளந்து காட்டி
பழுதறுத்து ஐயம் தீர பணிக்க என பணிந்தார் கேட்டு
முழுது ஒருங்கு உணர்ந்த வேத முதல்வனாம் முக்கண்
மூர்த்தி
இருவரும் துருவ நீண்ட எரி அழல் தூணில் தோன்றும்
உரு என அறிவான் அந்த உண்மையால் உலகுக்கு
எல்லாம்
கரு என முளைத்த மூல இலிங்க துணின்றும் காண்டற்கு
அரிய தோர் புலவனாகி தோன்றி ஒன்று அருளி
செய்வான்
இம் மா நகர் உள்ளான் ஒரு வணிகன் தனபதி என்று
அம் மா நிதி கிழவோன் மனை குண சாலினி அனையார்
தம் மாதவ பொருட்டால் வெளிற்று அறிவாளரை
தழுவும்
பொய் மாசு அறவினன் போல அவதரித்தான் ஒரு புத்தேள்
ஓயா விறல் மதனுக்கு இணை ஒப்பான் அவன்
சேய் ஆம் அவன் இடை நீர் உரை செய்யுள் கவி எல்லாம்
போய் ஆடுமின் அனையானது புந்திக்கு இசைந்தால் நன்று
யாவரும் மதிக்கும் தமிழ் அதுவே என அறைந்தான்
வன் தாள் மழ விடையாய் அவன் மணி வாணிகன் ஊமன்
என்றால் அவன் கேட்டு எங்கன் இப்பாடலின் கிடக்கும்
நன்று ஆனவும் தீது நயந்து ஆய்ந்து அதன்
தன்மை
குன்றா வகை அறைவான் என மன்று ஆடிய கூத்தன்
மல்லார் தடம் புய வாணிக மைந்த தனக்கு இசை
சொல் ஆழமும் பொருள் கண்டான் முடி
துளக்கா
கல்லார் புயம் புளகித்து உளம் தூங்குவன் கலகம்
எல்லாம் அகன்றிடும் உங்களுக்கு என்று ஆலயம்
சென்றான்
பின் பாவலர் எலாம் பெரு வணி குல மணியை
அன்பால் அழைத்து ஏகி தமது அவையத்து இடை
இருந்தா
நன் பால் மலர் நறும் சாந்து கொண்டு அருச்சித்தனார்
நயந்தே
முன்பால் இருந்து அரும் தீம் தமிழ் மொழிந்தார் அவை
கேளா
மகிழ்ந்தான் சிலர் சொல் ஆட்சியை
பொருளை
இகழ்ந்தான் சிலர் சொல் வைப்பினை
பொருளை
புகழ்ந்தான் சிலர் சொல் இன்பமும் பொருள்
ஒருங்கே
திகழ்ந்தான் சிலர் சொல் திண்மையும் பொருள்
தேர்ந்தே
தன்மையன் ஆகி கலை வல்லோர் தமிழ் எல்லாம்
சித்தம் கொடு தெருட்டும் சிறு வணிகன் தெருள் கீரன்
மு தண் தமிழ் கபிலன் பரணன்
தன் மையன் அறியும் தொறும்
எல்லாம்
நுழைந்தான் பொருள் தொறும் சொல் நுண்
சுவை உண்டே
தழைந்தான் உடல் புலன் ஐந்தினும் தனித்தான் சிரம்
பனித்தான்
குழைந்தான் விழிவிழி வேலையுள் குளித்தான் தனை
அளித்தான்
விழைந்தான் புரி தவ பேற்றினை விளைத்தான் களி
திளைத்தான்
பல் காசொடு கடலில் படு பவளம் சுடர் தரளம்
எல்லாம் நிறுத்து அளப்பான் என இயல் வணி குமரன்
சொல் ஆழமும் பொருள் துலை நா என தூக்க
நல்லாறு அறி புலவோர்களும் நட்டார் இகல் விட்டார்
உலகினு பெருகி அந்த ஒண் தமிழ் மூன்றும் பாடல்
திலகமா சிறந்த வாய்ந்த தெய்வ நாவலரும் தங்கள்
கலகமா நவையில் தீர்ந்து காசு அறு பனுவல் ஆய்ந்து
புலம் மிகு கோட்டி செய்து பொலிந்தனர் இருந்தார்
போலும்
கத்தார் கலகம் தீர்த்த படலம் சுபம்
இடை காடன் பிணக்கு தீர்த்த படலம்
குடைக்காடன் பசிக்கு அன்ன குழி அருத்தி வேட்கை
அற கொடுத்த கங்கை
சடை காடன் புலவர் இகம் தணிவித்த முறை இது மேல்
தன்னை பாடும்
தொடை காடன் பகன் திகழ்ந்த தென்னவனை முனிந்து
தன்னை தொழுது போன
இடை காடன் உடன் போ பின்பு எழுந்து அருளி
பிணக்கு அறுத்த இயல்பு சொல்வாம்
இந்திரன் தன் பழி துரத்தி அரசு அளித்து பின்பு கதி
இன்பம் ஈந்த
சுந்தரன் பொன் அடிக்கு அன்பு தொடுத்து நறும்
சண்பகத்தார் தொடுத்து சாத்தி
வந்தனை செய் திருத்தொண்டின் வழிக்கு ஏற்ப சண்பக
பூமாற வேந்தன்
அந்தர சூட மணியாம் சிவ புரத்து நிறை செல்வம்
அடைந்தான் இப்பால்
ஆற்றல் மிகு பிரதப சூரியன் வங்கிசத்துவன் அளவு இல்
சீர்த்தி
சாற்ற அரிய இரிபும மருத்தனன் சோழ வங்கி சாந்தகன்
தான் வென்றி
மாற்ற அரிய புகழ சேர வங்கி சாந்தகன் பாண்டி
கேசன்
தோற்றம் உறு பரித்தேர் வங்கி சிரோமணி பாண்டீ சுரன்
தான் மன்னோ
துணிவுடைய குலத்துவசன் வங்கிச பூடண மாறன்
சோம சூடா
மணிகுல சூடா மணியே இராச
போற்றி
பணிய வரும் பூப சூடா மணியே குலேச பாண்டியனே
என்ன
கணிதம் உறு பதினைவர் வழி வந்து உதித்து நிலம்
காவல் பூண்டோர்
அத்தகைய பாண்டியருள் குலேச பாண்டியன் என்னும்
அரசன் தோள் மேல்
வைத்தவன் இத்தலம் புரபோன் இலக்கணமும் இலக்கியமும்
வரம்பு கண்டோன்
எத்தகைய பெருநூலும் எல்லை கண்டோன் ஆதலினால்
இவனுக்கு ஏற
முத்தமிழோர் பயில் சங்கம் இடங்கொடுத்தது அனைய மணி
முழவு தோளான்
கழிந்த பெரும் கேள்வியினான் என கேட்டு முழுது
உணர்ந்த கபிலன் தன் பால்
பொழிந்த பெரும் காதல் மிகு கேண்மையினான் இடை
காட்டு புலவன் தென் சொல்
மொழிந்து அரசன் தனை காண்டும் என தொடுத்த
பனுவலோடு மூரி தீம் தேன்
வழிந்து ஒழுகு தாரனை கண்டு தொடுத்து உரை
பனுவல் வாசித்தான் ஆல்
வழுக்காத சொல் சுவையும் பொருள்
அருந்த வல்லோன் உள்ளத்து
அழுக்காற்றால் சிரம் துளக்கான் அகம் மகிழ்ச்சி சிறிது
முகத்து அலர்ந்து காட்டான்
எழுக்காயும் திணி தோளான் ஒன்றும் உரையான் வாளா
இருந்தான் ஆய்ந்த
குழுக்காதன் நண்புடையான் தனை மானம் புறம் தள்ள
கோயில் புக்கான்
சந்நிதியில் வீழ்ந்து எழுந்து தமிழ் அறியும் பெருமானே
தன்னை சார்ந்தோர்
நல் நிதியே திரு ஆலவாய் உடைய நாயகனே நகுதார்
வேம்பன்
பொன் நிதி போல் அளவு இறந்த கல்வியும் மிக்கு உளன்
என்று புகல கேட்டு
சொல் நிறையும் கவி தொடுத்தேன் அவமதித்தான் சிறிது
முடி துளக்கான் ஆகி
பரிவாயின் மொழிதொடுத்து வருணித்தோர்க்கு அகம்
மகிழ்ந்தோர் பயனும் நல்கா
விரிவாய தடம் கடலே நெடும் கழியே அடும் கான
விலங்கே புள்ளே
பொரிவாய பராரை மரநிரையே வான் தொடு குடுமி
பொருப்பே வெம்பும்
எரிவாய கொடும் சுரமே என இவற்று ஓர் அ·ரிணை
ஒத்து இருந்தான் எந்தாய்
என்னை இகழ்தனனோ சொல் வடிவாய் நின்னிடம் பிரியா
இமை பாவை
தன்னையும் சொல் பொருளான உன்னையுமே இகழ்ந்தனன்
என் தனக்கு ஆகியது என்னா
முன்னை மொழிந்து இடை காடன் தணியாத முனி ஈர்ப்ப
முந்தி சென்றான்
அன்ன உரை திருச்செவியின் ஊறுபாடு என உறைப்ப
அருளின் மூர்த்தி
போன இடை காடனுக்கும் கபிலனுக்கும் அகத்து உவகை
பொலியும் ஆற்றான்
ஞான மயம் ஆகிய தன் இலிங்க உரு மறைத்து உமையா
நங்கை யோடும்
வானவர் தம் பிரான் எழுந்து புறம் போய் தன் கோயிலின்
நேர் வடபால் வைகை
ஆன நதி தென்பால் ஓர் ஆலம் கண்டு அங்கண் இனிது
அமர்ந்தான் மன்னோ
சங்கவான் தமிழ தெய்வ புலவரோடும் உடன் எழுந்து
சைல வேந்தன்
மங்கை நாயகன் போன வழிபோய் அங்கு இருந்தார் அவ்
வழி நாள் வைகல்
கங்குல்வாய் புலரவரும் வை கறையில் பள்ளி உணர்
காலாத்து எய்தி
அங்கண் நாயகன் அடியார் சேவிப்பார் இலிங்க உரு
அங்கு காணார்
என்ன அதிசயமோ ஈது என்று அயிர்த்தார் இரங்கினார்
இதனை ஓடி
மன்னவனுக்கு அறிவிப்பான் வேண்டும் என புறப்பட்டு
வருவார் ஆவி
அன்னவரை பிரிந்து உறையும் அணங்கு அனையார்
எனவும் மலர் அணங்கு நீத்த
பொன் அவிர் தாமரை எனவும் புலம்பு அடைந்து பொலிவு
அழிந்த புரமும் கண்டார்
அரசன் இடை புகுந்து உள்ளம் நடு நடுங்கி நா உணங்கி
அரசே யாம் ஒன்று
உரை செய அஞ்சுதும் உங்கள் நாயகனை திருப்பள்ளி
உணர்ச்சி நோக்கி
மரை மலர் சேவடி பணி புகுந்தனம் இன்று ஆங்கு
அவன் தன் வடிவம் காணேம்
புரமும் நனி புலம் படைந்தது என்று அழல் வேல் என
செவியில் புகுதலோடும்
வழுதி அரியணையிலிருந்து அடி இற வீழ் பழுமரம் போல்
மண்மேல் யாக்கை
பழுது உற வீழ்ந்து உயிர் ஒடுங்க அறிவு ஓடுங்கி மண்
பாவை படிந்து ஆங்கு ஒல்லை
பொழு கிடந்து அறிவு சிறிது இயங்க எழுந்து அஞ்சலி
கை போது கூப்பி
அழுது இரு கண்ணீர் வெள்ளத்து ஆழ்ந்து அடியேன் என்
பிழைத்தேன் அண்ணா அண்ணால்
கொலையினை ஓர் அவுணர் புரம் நோடி வரையில்
பொடியா குனித்த மேரு
சிலையினையோ பழைய சிவ புரத்தினையோ அருவி மணி
தெறிக்கும் வெள்ளி
மலையினையோ தம்மை மறந்து உனை நினைப்பார்
மனத்தினையோ வாழ்த்தும் வே
தலையினையோ எங்கு உற்றாய்
என்று தளரும் எல்லை
சிலர் வந்து மன்னா ஓர் அதிசயம் கண்டனம் வைகை
தென் சாராக
அலர் வந்தோன் படைத்த நாள் முதல் ஒரு காலமும்
கண்டது அன்று கேள்வி
தலை வந்த புலவரொடு ஆலவய் உடைய பிரான் தானே
செம்பொன்
மலைவந்த வல்லியொடும் வந்து இறை கொண்டு உறை
கின்றான் மாதோ என்றார்
அவ்வுரை தன் செவி நுழைந்து புகுந்து ஈர்ப்ப எழுந்து
அரசன் அச்சத்து ஆழ்ந்து
தெவ்வர் முடி தொகை இடறும் கழல் காலான் அடந்து
ஏகி செழுநீர் வைகை
கௌவை நெடும் திரை கரத்தால் கடிமலர் தூய உய்ப்ப
பணி தென் கரைமேல் வந்து
மௌவல் இள முகை மூரல் மாதி னொடும் இருக்கின்ற
மணியை கண்டான்
படர்ந்து பணிந்து அன்பு உகுக்கும் கண்ணீர் சோர்ந்து
ஆனந்த பௌவத்து ஆழ்ந்து
கிடந்து எழுந்து நாக்குழறி தடுமாறி நின்று இதனை
கிளக்கும் வேதம்
தொடர்ந்து அறியா அடி சிவப்ப நகர புலம்ப உலகு
ஈன்ற தோகை யோடு இங்கு
அடைந்து அருளும் காரணம் என் அடியேனால் பிழை
உளதோ ஐயா
அல்லதை என்று அமரால் என் பகைஞரால் கள்வரால்
அரிய கானத்து
எல்லை விலங்கு ஆதிகளால் இடையூறு இன் தமிழ்
நாட்டில் எய்திற்றலோ
தொல்லை மறையவர் ஒழுக்கம் குன்றினரோ தவம்
தருமம் சுருங்கிற்றாலோ
இல்லறனும் துறவறனும் பிழைத்தனவோ யான் அறியேன்
எந்தாய்
கள் ஏறு கடுக்கை நறும் சடையானே போற்றி பெரும்
கருணை போற்றி
வெள்ஏறு கொடி உயர்த்த விடையானே போற்றி அருள்
விகிர்தா போற்றி
புள் ஏறு கொடி உயர்த்த புனிதன் அயன் அன்று தேறாத
புனிதா போற்றி
வள் ஏறு சிறு குழவி மதி நுதல் அம் கயல் கண்ணி
மணாள போற்றி
பாத மலர் இணை போற்றி பன்னிரண்டு கையானை
பயந்தாய் போற்றி
வேத முடி கடந்த பர ஞானத்தில் ஆனந்த விளைவே
போற்றி
போத வடிவாய் நால்வர்க்கு அசைவிறந்து நிறைந்த பரம்
பொருளே போற்றி
மாதவள நீறு அணிந்த மன்னா அம் கயல் கண்ணி
மணாள போற்றி
பொக்கம் உடையார் செய்யும் பூசை தவம் கண்டு நகும்
புராண போற்றி
தக்கன் மகம் பொடி ஆக திரு புருவம் நெரித்த
கொடும் தழலே போற்றி
செக்கமல கண்ணிடந்த கண்ணனுக்கு திகிரி அருள்
செல்வா போற்றி
மை குவளை அனைய மணிகண்ட அம் கயல் கண்ணி
மணாள போற்றி
தென்னவன் இன்ன வண்ணம் ஏத்தினான் செம் பொன்
கூடல்
மன்னவன் கேட்டா ஆகாய வாணியால் வைகை நாட
உன்னது சோத்த நாம் கேட்டு உவந்தனம் இனிய தாயிற்று
இன்னம் ஒன்று உளது கேட்டி என்றனன் அருளி
செய்வான்
இயம்ப அரும் பதிகள் தம்முள் ஆலவாய் ஏற்றம் ஈங்கு
சயம்புவாய் அனந்தம் உள்ள தானவர் இயக்கர் சித்தர்
வயம் புரி அரக்கர் வானோர் முனிவரர் மனிதர் உள்ளார்
நயம் பெற விதியால் கண்ட நம் குறி அனந்தம் உண்டு
ஆல்
குறிகளின் மேம் பட்ட குறி அறுபத்து நான்காம்
குறிகளின் மேம் பட்ட குறிகள் எட்டு இனைய எட்டு
திக்கு உறை வானோர் பூசை செய்தன அவற்றில் யாம்
வந்து
புக்கு உறை குறி நம் தோழன் பூசித்த குறிய தாகும்
அறைந்தவி தெய்வத்து ஆன அனைத்தும் ஓர் ஊழி
காலத்து
இறந்த நம் தோழன் கண்ட இலிங்கமாம் அதனால் இங்கே
உறைந்தனம் உறைதலாலே உத்தர ஆலவாய்
சிறந்திட தகுவது இன்று முதல் இந தெய்வ தானம்
ஓங்கு தண் பணைசூழ் நீப வனத்தை நீத்து ஒரு போ
தேனும்
நீங்குவம் அல்லேம் கண்டாய் ஆயினும் நீயும் வேறு
தீங்கு உளை அல்லை காடன் செய்யுளை இகழ்தலாலே
ஆங்கு அவன் இடத்தில் யாம் வைத்த அருளினால்
வந்தேம் என்னா
பெண்நினை பாகம் கொண்ட பெரும் தகை பரம யோகி
விண் இடை மொழிந்த மாற்றம் மீனவன் கேட்டு வானோர்
புண்ணிய சிறியோர் குற்றம் பொறுப்பது பெருமை அன்றோ
எண்ணிய பெரியோர்க்கு என்னா ஏத்தினான்இறைஞ்சி
னானே
அடி பணிந்து ஏத்தினானை அருள் சுரந்து அசையு
மின்னு
கொடி அணி மனையில் போக்கி கோமன வல்லியோடும்
உடன் உறை புலவரோடு ஒல்லை தன் கோயில் புக்கான்
வட திரு ஆல வாயில் வந்து வீற்று இருந்த வள்ளல்
மின் மதி சடையினான்பின் அடைந்து போய் விடை
கொண்டு ஏகும்
மன்னவன் தன்னை பாடி வந்தவன் தன்னை மாட்சி
தன்மை சால் சங்க வாணர் தம் மொடும் கொடுபோய்
என்றும்
பொன்மகள் காணி கொண்ட புரிசை சூழ் கோயில் புக்கான்
விதி முறை கதலி பூகம் கவரி வால் விதானம் தீபம்
புதிய தார் நிறை நீர கும்பம் கதலிகை புனைந்த மன்றல்
கதிர்மணி மாட தம் பொன் சேக்கை மேல் கற்றோர் சூழ
மதி புனை காடன் தன்னை மங்கல அணி செய்து ஏற்றி
சிங்கமான் சுமந்த பொன் அம் சேக்கை மேல் இருந்து
வெள்ளை
கொங்கு அவிழ் தாமம் தூசு குளிர் மணி ஆரம் தாங்கி
மங்கல முழவம் ஆர்ப்ப மறையவர் ஆக்கம் கூற
நங்கையர் பல்லாண்டு ஏத்த நல் மொழி பனுவல் கேட்டு
அறிவுடை காடனுக்கும் அருமை மாண் புலமை
யோர்க்கும்
முறைமையால் ஆரம் தூசு முகிழ் முலை கொடியின்
அன்னார்
நிறை நிதி வேழம் பாய்மான் விளை நிலம் நிரம்ப நல்கி
அறை கழல் காலில் பின்னே ஏழடி நடந்து இதனை
வேண்டும்
புண்ணி புலவீர் யான் இப்போது இடை காடனார்க்கு
பண்ணிய குற்றம் எல்லாம் பொறுக்க என பரவி
தாழ்ந்தான்
நுண்ணிய கேள்வி யோரும் மன்னநீ நுவன்ற சொல்லாம்
தண்ணிய அமுதால் எங்கள் கோபத்தீ தணிந்தது என்னா
இன்னமும் ஆலவாய் எம் இறைவன் கருணை நோக்கால்
பன்னரும் புகழ்மை குன்றா பாக்கியம் உனக்கு உண்டாக
என்ன நல் வாக்கம் கூறி ஏகினார் ஆக அந
தென்னவன் குலேசன் செய்த தவம் உரு திரிந்தால்
என்ன
எரி மருத்து அவனி முன்னா எண் வகை மூர்த்தி அன்பு
புரி மருத்துவனை சூழ்ந்த பொரு பழி துடைத்தோன்
சோதி
விரிமருத்து உடல் வான் திங்கள் மிலைந்தவன் அருளின்
வந்தான்
அரி மருத்தனன் ஆம் தென்னன் அரி குருளை
அன்னான்
பரிசிலை புலவருக்கு அருள் குலேசன் பல பகல் கழீஇ
திரி மருப்பு இரலை வெம் மழு எடுத்தவன் மதி
சென்னிமேல்
வரிசிலை படை பொறித்தவன் என பெறு வர
மைந்தனாம்
அரி மரு தனன் இடத்து அவனி வைத்து அரன் அடி
எய்தினான்
இடை காடன் பிணக்கு தீர்த்த படலம் சுபம்
வலை வீசின படலம்
மின் திரித்து அன்ன வேணி வேதியன் இடைக்காடன் பின்
சென்று மீண்டனை யான் கொண்ட பிணக்கினை தீர்த்த
வண்ணம்
இன்று உரை செய்து முந்நீர் எறிவலை வீசி ஞாழன்
மன்றல் அம் குழலினாளை மணந்து மீள் வண்ணம்
சொல்வாம்
அந்தம் இல் அழகன் கூடல் ஆலவாய் அமர்ந்த நீல
சுந்தரன் உலகம் ஈன்ற கன்னிஅம் கயல் கண்ணாள் ஆம்
கொந்து அவிழ் அலங்கல் கூந்தல் கொடிக்கு வேறு
இடத்து வைகி
மந்தணம் ஆன வேத மறை பொருள் உணர்த்தும்
மாதோ
நாதனின் அருளால் கூறு நான் மறை பொருளை எல்லாம்
யாது காரணத்தான் மன்னோ அறிகிலை எம் பிராட்டி
ஆதரம் அடைந்தாள் போல கவலையும் சிறிது தோன்ற
ஆதரம் இலள் கேட்டாள் அ·து அறிந்த அமல
சோதி
அரா முகம் அனைய அல்குல் அணங்கினை நோக்கி
ஏனை
இரா முகம் அனைய உள்ளத்து ஏழைமார் போல எம்பால்
பரா முகை ஆகி வேத பயன் ஒரு படாது கேட்டாய்
குரா முகை அவிழ்ந்த கோதாய் உற்ற இக்குற்றம் தன்னால்
விரதமும் அறனும் இன்றி மீன் படுத்து இழிஞர் ஆன
பரதவர் மகளா கென்று பணித்தனன் பணித்தலோடும்
அரதன ஆரம்தாழ்ந்த வார மென் முலையாள் அஞ்சி
வரத நிற் பிரிந்து வாழ வல்லனோ என்று தாழ்ந்தாள்
வீங்கு நீர சடையான் நீங்கு மெல்லியல் பரிவு நோக்கி
வாங்கு நீர கானல் வாழ்க்கை வலைஞர் கோன் மகளாய்
வைகி
ஆங்கு நீர் வளர் நாள் யாம் போந்து அரும் கதி
முடித்தும் என்னா
தேங்கு நீர் அமுது அன்னாளை செல விடுத்து இருந்தான்
இப்பால்
அன்னது தெரிந்து நால்வாய் ஐங்கர கடவுள் தாதை
முன்னர் வந்து இதனால் அன்றோ மூண்டது செய்தி
எல்லாம்
என்ன ஈர்ங் கவளம் போல் ஆங்கு இருந்த புத்தகங்கள்
எல்லாம்
தன் நெடும் கரத்தால் வாரி எறிந்தனன் சலதி மீது ஆல்
வரை பக எறிந்த கூர்வேல் மைந்தனும் தந்தை கையில்
உரை பெறு போத நுலை ஒல் என பறித்து வல்லே
திரை புக எறிந்தான் ஆக செல்வ நான் மாட கூடல்
நரை விடை உடைய நாதன் நந்தியை வெகுண்டு நோக்கா
அடுத்து நாம் இருக்கும் செவ்வி அறிந்திடாது இவரை
வாயில்
விடுத்து நீ இருந்தாய் தீங்கு விளைந்தது உன் தனக்கும்
இந
தொடுத்த தீங்கு ஒழிய இன்று ஓர் சுற உரு ஆகி
வையம்
உடுத்த காரோத நீர் புக்கு உழல்க என பணித்தான்
மன்னோ
வெரு வரு செலவின் வேழ முகத்தனை விதித்த சா
பெருவலி தன்னை சாரும் பெற்றியால் சாபம் கூறான்
அருவரை நெஞ்சு போழ்ந்த வள் இலை வடிவேல் செம்
கை
முருகனை வணிகர் தம்மின் மூங்கை யாகு என்றன்
இப்பால்
நாயகன் ஏவலாலே நாயகி வலைஞர் மாதர்
ஆயது நந்தி புத்தேள் அடுசுற ஆகி முந்நீர்
மேயதும் கருணை வள்ளல் மீன் படுத்து அணங்கை
வேட்டு
போயதும் அவட்கு கேள்வி புகன்றது முறையில்
சொல்வாம்
சூழும் வார் திரை வையை அம் துறை கெழு நாட்டுள்
கீழையார் கலி முகத்தது நெய்தல் அம் கீழ் நீர்
ஆழ நீள் கரும் கழி அகழ் வளைந்து கார் அளைந்த
தாழை மூது எயில் உடுத்தது ஓர் தண் துறை பாக்கம்
முடங்கு முள் இலையார் புதைந்து எதிர்
நுடங்கு கைதை போதொடு வளி நூக்க நின்று அசைவ
மடங்கு மெய்யரா கையிரும் கேட்க வட்டத்து
அடங்கி வாள் பனித்து ஆடம் அரற்றுவார் அனைய
புலவு மீன் உணக்கு ஓசையும் புட்கள் ஓப்பு இசையும்
விலை பகர்ந்திடும் அமலையும் மீன் கொள் கம்பலையும்
வலை எறிந்திடும் அரவமும் வாங்கும் மா
அலை எறிந்திடும் பரவை வாய் அடைப்பன மாதோ
வாட்டு நுண் இடை நுளைச்சியர் வண்டல் அம் பாவை
கூட்டுகின்ற சோறு அருகு இருந்து உடைந்த பூம் கைதை
பூட்டுகின்றன நித்திலம் பொரு கடல் தரங்கம்
சூட்டுகின்றன கடிமலர் சூழல் சூழ் ஞாழல்
நிறைந்த தெண் கடல் ஆதி நீள் நெறி இடை
செல்வோர்க்கு
அறம் தெரிந்த போல் பொதிந்த சோறு அவிழ்ப்பன தாழை
சிறந்த முத்தொடு பசும் பொனும் பவளமும் திரட்டி
புறம் தெரிந்திட கொடுப்பன மலர்ந்த பூம் புன்னை
கொன்று மீன் பகர் பரதவர் குரம்பைகள் தோறும்
சென்று தாவி மேல் படர்வன திரை படு பவளம்
மன்றல் வார் குழல் நுளைச்சியர் மனையின் மீன்
உணக்கும்
முன்றில் சீப்பன கடல் இடு முழு மணி குப்பை
கூற்றம் போன்ற கண் நுளைச்சியர் குமுத வாய் திறந்து
மாற்றம் போக்கினர் பகர் தரும் கயற்கு நேர் மாறாம்
தோற்றம் போக்கு அவர் விழி துணைகள் கயல்மீன்
நாற்றம் போக்குவது அவர் குழல் நறு மலர கைதை
அலர்ந்த வெண் திரை கருங் கழி கிடங்கரின் அரும்பர்
குலைந்து அழிந்து தேன் துளும்பிய குமுதமே அல்ல
கலந்து அரும் கடல் எறி கருங்கால் பனம் கள்வாய்
மலர்ந்து அருந்திய குமுதம் மொய்ப்பன வண்டு
ஆய பட்டினத்து ஒருவன் மேல் ஆற்றிய தவத்தால்
தூய வானவர் தம்மினும் தூயனா சிறிது
தீய தீவினை செய்தியால் ஆற்றி திண் திமில் வாணர்
மேய சாதியில் பிறந்துளான் மேம்படும் அனையான்
செடிய கார் உடல் பரதவர் திண் திமில் நடத்தா
நெடிய ஆழியில் படுத்த மீன் திறை கொடு நிறைக்கும்
கடிய வாயிலோன் அவர்க்கு எலாம் காவலோன் ஏற்று
கொடிய வானவன் அடிக்கு மெய் அன்பு சால்
குணத்தோன்
மகவு இலாமையல் ஆற்ற நால் மறுமை யோடு இம்மை
புகல் இலான் என வருந்துவான் ஒரு பகல் போது
தகவு சால் பெரும் கிளை யொடும் சலதி மீன் படுப்பான்
அகல வார் கலிக்கு ஏகுவான் அதன் கரை ஒருசார்
தக்க மேரு மலைமகனோடு அடையில் தவத்தான்
மிக்க மீனவன் வேள்வியில் விரும்பிய மகவா
புக்க நாயகி தன்பதி ஆணையால் புலவு
தொக்க மீன் விலை வலைஞன் மேல் தவ பயன் துரப்ப
இச்சையால் அவன் அன்பினுக்கு இரங்குவாள் போல
செச்சை வாய் திறந்து அழுது ஒரு திரு மகவு ஆகி
நெய்ச்ச பாசிலை புன்னை நல் நீழலில் கிடந்தாள்
மைச்ச கார் உடல் கொடும் தொழில் வலைஞர் கோன்
கண்டான்
கார் கொல் நீர திருமாது கரந்து நீர்
வார் கொள் பூண் முலை மடந்தை கொல் வன துறை
வாழ்க்கை
தார் கொள் பூம் குழல் அணங்கு கொல் தடங்கணும்
இமைப்ப
ஆர் கொலோ மகவு ஆகி ஈண்டு இருந்தனள் என்னா
பிள்ளை இன்மை யெற்கு இரங்கி எம் பிரான் தமிழ
கூடல்
வள்ளல் நல்கிய மகவு இதுவே என வலத்தோள்
துள்ள அன்பு கூர் தொடுத்து திரு தோள் உற புல்லி
தள்ளரும் தகை கற்பினாள் தனது கை கொடுத்தான்
பிறவி அந்தகன் தெரிந்து கண் பெற்றென கழிந்த
வறியன் நீள் நிதி பெற்றென வாங்கினாள் வலைஞர்
எறியும் வேலையின் ஆர்த்தனர் கை எறிந்து இரட்டி
குறிய வாள் நகை வலைச்சியர் குழறினார் குரவை
பிழை இல் கற்பு உடை மனைவியும் பெறாது பெற்று எடுத்த
குழவியைத்தடம் கொங்கையும் கண்களும் குளிர
தழுவி முத்தம் இட்டு உச்சி மோந்து அன்பு உளம் ததும்ப
அழகிது ஆகிய மணி விளக்காம் என வளர்ப்பாள்
புலவு மீன் விலை பசும் பொனால் செய்த பல் பூணும்
இலகு ஆரமும் பாசியும் காசி இடை இட்டு
குலவு கோவையும் சங்கமும் குலத்தினுக்கு இசைய
அலகு இலாதபேர் அழகினுக்கு அழகு செய்து அணிந்தாள்
தொண்டை வாய் வலை சிறுமியர் தொகையொடும் துறை
போய்
வண்டல் ஆடியும் நித்தில மாமணி கொழித்தும்
கண்டன் ஞாழல் சூழ் கானல் அம் கடி மலர் கொய்தும்
கொண்டல் ஓதி பின் தாழ்தர குரை கடல் குளித்தும்
தளர்ந்த பைங்கொடி மருங்குலும் தன் உயிர தலைவன்
அளந்த வைகலும் குறை பட அவனிடத்து ஆர்வம்
கிளர்ந்த அன்பு ஒண் கொங்கையும் கிளர நாள் சிறிதில்
வளர்ந்து வைகினாள் வைகளும் உயிர் எலாம் வளர்ப்பாள்
ஆலவாய் உடை நாயகன் ஏவிய வாறே
மாலை தாழ் இள மதி சடை மகுடமும் கரங்கள்
நாலும் ஆகிய வடிவு உடை நந்தியும் சுறவ
கோலம் ஆகி வெண் திரை கடல் குளித்து இருந்தான்
குன்று எறிந்த வேல் குழகனும் கரி மு கோவும்
அன்று எறிந்த தந்திரம் எலாம் சிரமிசை அடக்கா
கன்று எறிந்தவன் அறிவரும் கழல் மனத்து அடக்கா
நின்று எறிந்த கல் மத்து என உழக்கிடா நிற்கும்
கிட்டும் தோணியை படகினை கிழிபட விசை போ
தட்டும் சோங்கினை மேலிடு சர கொடும் கவிழ
முட்டும் சீறி மேல் வரும் பல சுற வெலாம் முடுக்கி
வெட்டும் கோடு கோத்து ஏனைய மீன் எலாம் வீசும்
தரங்க வாரி நீர் கலக்கலால் தந்திரம் கொடு மேல்
இரங்குவான் புலவோர்க்கு அமுது ஈகையால் எண்ணார்
புரங்கண் மூன்றையும் பொடித்தவன் ஆணையால் புனலில்
கரங்கள் நான்கையும் கரந்த மீன் மந்தரம் கடுக்கும்
தள்ளு நீர்த்திரை போய் நுளை சேரிகள் சாய்ப்ப
துள்ளு நீர் குடித்து எழு மழை சூல் இற பாயும்
முள்ளு நீர் மருப்பு உடைய மீன் மொய் கலம் அந
தௌ¢ளு நீர துறை நடையற இன்னணம் திரியும்
எற்றித்தால் என துறை மகன் யாம் இது பிடிக்கும்
பெற்றி யாது என கிளையொடும் பெருவலை பாசம்
பற்றி ஆழி ஊர் படகு கை தெறிந்தனன் படகை
சுற்றி வாய் கிழித்து எயிற்று இற பாய்ந்தது சுறவம்
பட உடைப்ப ஓர் தோணி மேல் பாய்ந்து
விடவுற தெறித்து எறிந்திட விசைத்து ஒரு சோங்கின்
இடை புகுந்து நீள் வலை எறிந்து இங்ஙனம் வெவ்வேறு
உடல் புகுந்து உழல் உயிர் என பரதனும் உழல்வான்
முன்னர் வீசினால் பின்னுற முளைத்து எழும் முயன்று
பின்னர் வீசினால் முன்னுற பெயர்த்து எழும் வலத்தில்
உன்னி வீசினால் இடம் பட உருத்து எழும் இடத்தின்
மன்னி வீசினால் வலத்து எழும் மகர வேறது தான்
எறி வலை படு அகம் மலர்ந்து ஈர்ப்பவன் உள்ளம்
மறு தலை பட வலையினும் வழீஇ பொருள் ஆசை
நெறி மலர குழல் நல்லவர் நினை வென நினைவுற்று
அறிபவர்க்கு அறிதாம் பரம் பொருள் என அகலும்
ஏவலாளரோடு இன்னவாறு இன்ன மீன் படுத்தற்கு
ஆவதாம் தொழில் இயற்றவும் அக படாது ஆக
யாவரே இது படுப்பவர் என்று இரும் கானல்
காவலாளனும் பரதரும் கலங்கஞர் உழந்தார்
சங்கு அலம்பு தண் துறை கெழு நாடன் சலதி
துங்க மந்தரம் என கிடந்து அலமரும் சுறவை
இங்கு அணைந்து எவன் பிடிப்பவன் அவன் யான் ஈன்ற
மங்கை மங்கல கிழான் என மனம் வலித்து இருந்தான்
நந்தி நாதனும் இனையனாய் அம் கயல் நாட்டத்து
இந்து வாண் நுதலாளும் அங்கு அனையளாய் இருப்ப
தந்தி நால் இரண்டு ஏந்திய தபனிய விமானத்து
உந்து நீர சடையார் மணம் உன்னினார் மன்னோ
உயர்ந்த சாதியும் தம்மினும் இழிந்த என்று உன்னி
கயந்த நெஞ்சுடை வலைக்குல கன்னியை வேட்பான்
வியந்து கேட்பது எவ்வாறு அவர் வெறுக்குமுன் அவருக்கு
இயைந்த மீன் வலை உரு எடுத்து ஏகுதும் என்னா
கருகிருள் முகந்தால் அன்ன கச்சினன் கச்சோடு ஆர்த்த
சுரிகையன் தோள்மேல் இட்ட துகிலின் குஞ்சி சூட்டும்
முருகு கொப்பளிக்கும் நெய்தல் கண்ணியன் மூத்த
வானோர்
இருவரும் மறையும் தேடி இளைப்ப ஓர் வலைஞன்
ஆனான்
முழுது உலகு ஈன்ற சேல் கண் முதல்வியை அருள் இலார்
போல்
இழி தொழில் வலை மாதாக சபித்தவாறு என்னே என்றும்
பழி படு சாபம் ஏறார் பரதராய் வரவும் வேண்டிற்று
அழகிது நன்று எம் ஆலவாய் அடிகள் செய்கை
தன் பெரும் கணத்து உளான் ஓர் தலைவனும் சலதி
வாணன்
என்பது தோன்ற வேடம் எடுத்து எறி வலை தோள் இட்டு
என் புற மலைப்ப காவி மீன் இடு குடம்பை தாங்கி
பின்புற நடந்து செல்ல பெருந்துறை பாக்கம் புக்கான்
கழித்தலை கண்டற் காடும் கைதை அம் கானும் நெய்தல்
சுழித்தலை கிடங்கும் நீத்து சு·றெனும் தோட்டு
பெண்ணை
வழித்தலை சுமந்து வார் கள் வார்ப்ப வாய் அங்காந்து
ஆம்பல்
குழித்தலை மலர் பூம் கானல் கொடு வலை சேரி
சேர்ந்தான்
பெருந்தகை அமுது அன்னாளை பெறாது பெற்று
எடுப்பான் நோற்ற
அருந்தவ வலைஞர் வேந்தன் அதிசயம் அகத்துள் தோன்ற
வரும்தகை உடைய காளை வலை மகன் வரவு நோக்கி
திருந்து அழகு உடைய நம்பி யாரை நீ செப்புக என்றான்
சந்த நால் மறைகள் தேறா தனி ஒரு வடிவா தோன்றி
வந்த மீன் கொலைஞன் கூறு மதுரையில் வலைஞர்க்கு
எல்லாம்
தந்தை போல் சிறந்து உளான் ஓர் தனி வலை உழவன்
நல்ல
மைந்தன் யான் படைத்து காத்து துடைக்கவும் வல்லன்
ஆவேன்
அல்லது வான் மீன் எல்லாம் அகப்பட வலை கொண்டு
ஓச்ச
வல்லவன் ஆவேன் என்ன மற்று இவன் வலைஞன்
கோலம்
புல்லிய மகன் கொல் முன்னம் புகன்ற சொல் ஒன்றில்
இப்போது
சொல்லியது ஒன்று இரண்டும் சோதனை காண்டும் என்னா
தொண்டு உறை மனத்து கானல் துறைமுகம் அ·தேல்
இந
தண் துறை இடத்து ஓர் வன்மீன் தழல் என கரந்து
சீற்றம்
கொண்டு உறைகின்ற ஐய குறித்தது பிடித்தியேல் என்
வண்டு உறை கோதை மாதை மணம் செய்து தருவேன்
என்றான்
சிங்க ஏறு அனையான் காலில் செல் நடை படகில்
பாய்ந்து
சங்கு எறி தரங்கம் தட்ப தடம் கடல் கிழித்து போகி
கிங்கரன் ஆன காளை வரை என கிளைத்த தோள் மேல்
தொங்கலில் கிடந்து ஞான்ற தொகு மணி வலையை வாங்கி
செவ்விதின் நோக்கி ஆகம் திருக நின்று எறிந்தான் பக்கம்
கௌவிய மணிவில் வீச இசை ஒலி கறாங்கி பா
பை விரித்து உயிர்த்து நாகம் விழுங்க வா பட்ட மீன்
போல்
வெவ் வினை சுறவேறு ஐயன் விடு வலை பட்டது
அன்றே
மாசு அறு கேளிர் அன்பின் வலை படும் வலைஞர்
கோன் தாய்
வீசிய வலையில் பட்ட மீனினை சுருக்கி வாங்கி
காசு எறி தரங்க முந்நீர கரை இடை இட்டான் கள்
வாய்
முசு தேன் என்ன ஆர்த்து மொய்த்தன் பரத சாதி
கிளையும் நம் கோனும் வீசு வலைஞரா கிளர் தோள்
ஆற்றல்
விளைவொடு முயன்று பல் நாள் வினை செ படாத
மீன் இவ்
இளையவன் ஒருவன் தானே ஒரு விசை எறிந்தான்
ஈத்தான்
அளிய நம் குலத்தோர் தெய்வ மகன் இவன் ஆகும்
என்றார்
கைதை சூழ் துறைவன் ஓகை கை மிக பம்பை ஏங்க
நொய்து எனும் நுசுப்பில் கள்வாய் நுளைச்சியர் குரவை
தூங்க
பைதழை பகுவா கச்சை பரதவன் கலங்கன் ஞாழல்
செய்த பூம் கோதை மாதை திருமணம் புணர்த்தினானே
அந்நிலை வதுவை கோலம் ஆயின மருகனாரும்
மின் நிலை வேல் கணாளும் விண் இடை விடை மேல்
கொண்டு
தன் நிலை வடிவா தோன்ற தடம் கரை மீனம் தானும்
நல்நிலை வடிவே போன்று நந்தியாய் முந்தி தோன்ற
கொற்ற வெள் விடை மேல் காட்சி கொடுத்தவர் கருணை
நாட்டம்
பெற்றலின் மேலை சார்பால் பிணித்த பிறவி
யாக்கை
சிற்றறிவு ஒழிந்து முந்நீர சேர்ப்பன் நல் அறிவு தோன்ற
பொன் தனு மேரு வீரன் பூம் கழல் அடிக்கீழ தாழ்ந்தான்
இரக்கம் இல் இழிந்த யாக்கை எடுத்து உழல் ஏழை
ஏனை
புரக்க இன்று என்போல் வந்த புண்ணிய வடிவம் போற்றி
அறக்கு எறி பவள செவ்வாய் அணங்கினை மணந்து என்
பாசம்
கரக்க வெள் விடை மேல் நின்ற கருணையே போற்றி
என்றான்
அகவிலான் பரவி நின்ற அன்பனை நோக்கி பல் நாள்
மகவு இலா வருத்தம் நோக்கி உமை நாம் மகளா தந்து
தகவினான் மணந்தேம் நீ தரணியில் தனதன் என்ன
நகவிலா போகம் மூழ்கி நம் உலகு அடைவாய் என்ன
பெண்ணினை வதுவைக்கு ஈந்த பெருந்துறை சேர்ப்பற்கு
அன்று
தண் அளி சுரந்து நல்கி தருமமால் விடைமேல் தோன்றி
விண் இடை நின்றான் சென்றான் வேத்திர படையா
னோடும்
உள் நிறை அன்பரோடு உத்தர கோச மங்கை
அங்கு இருந்த அநாதி மூர்த்தி ஆதி நால் மறைகள்
ஏத்தும்
கொங்கு இரும் கமல செவ்வி குரை கழல் வணங்கி
கேட
பங்கு இருந்து அவட்கு வேத பயன் எலாம் திரட்டி
முந்நீர
பொங்கு இரும் சுதை போல் அட்டி புகட்டினான்
செவிகள் ஆர
அவ்வேலை அன்புடையார் அறு பதினாயிரவர்
அவர்க்கும் அளித்து பாச
வெவ்வேலை கடப்பித்து வீடாத பரானந்த வீடு நல்கி
மைவ் வேலை அனைய விழி அம் கயல் கண்
நங்கையொடு மதுரை சார்ந்தான்
இவ் வேலை நிலம் புரக்க முடி கவித்து பாண்டியன்
என்று இருந்த மூர்த்தி
வலை வீசின படலம் சுபம்