திருமுருகாற்றுப்படை
ஆசிரியர் மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரர்


























©









சங்க கால நூல்களான பத்து பாட்டுக்களில் ஒன்றாவதான
திருமுருகாற்றுப்படை
பாடியவர் மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரர்
பாடப்பட்டவன் முருகப்பெருமான்
திணை பாடாண்திணை
துறை ஆற்றுப்படை
பாவகை ஆசிரியப்பா
மொத்த அடிகள்
திருப்பரங்குன்றம்

உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு
ஓவற இமைக்கும் சேண்விளங்கு அவிரொளி
உறுநர தாங்கிய மதனுடை நோன்றாள்
செறுநர தேய்த்த செல்லுறழ் தடக்கை
மறுவில் கற்பின் வாணுதற் கணவன்
கார்கோள் முகந்த கமஞ்சூல் மாமழை
வாள்போழ் விசும்பில் வள்ளுறை சிதறி
தலைப்பெயல் தலை இய தண்ணறுங் கானத்து
இருள்பட பொதுளிய பராரை மராஅத்து
உருள்பூ தண்டார் புரளும் மார்பினன்
மால்வரை நிவந்த சேணுயர் வெற்பிற்
கிண்கிணி கவைஇய ஒண்செஞ் சீறடி
கணைக்கால் வாங்கிய நுசுப்பின் பணைத்தோள்
கோப தன்ன தோயா பூந்துகில்
பல்காசு நிரைத்த சில்காழ் அல்குல்
கைபுனைந்து இயற்றா கவின்பெறு வனப்பின்
நாவலொடு பெயரிய பொலம்புனை அவிரிழை
சேணிகந்து விளங்கும் செயிர்தீர் மேனி
துணையோர் ஆய்ந்த இணையீர் ஓதி
செங்கால் வெட்சி சீறிதழ் இடையிடுபு
பைந்தா குவளை தூவிதழ் கிள்ளி
தெய்வ வுத்தியடு வலம்புரி வயின்வைத்து
திலகம் தைஇய தேங்கமழ் திருநுதல்
மகர பகுவாய் தாழமண் ணுறுத்து
துவர முடித்த துகளறு முச்சி
பெருந்தண் சண்பகஞ் செரீஇ கருந்தகட்டு
உளைப்பூ மருதின் ஒள்ளிணர் அட்டி
கிளைக்கவின்று எழுதரு கீழ்நீர செவ்வரும்பு
இணைப்புறு பிணையல் வளைஇ துணைத்தக
வண்காது நிறைந்த பிண்டி ஒண்டளிர்
நுண்பூண் ஆகம் திளைப்ப திண்காழ்
நறுங்குறடு உரிஞ்சிய பூங்கேழ தேய்வை
தேங்கமழ் மருதிணர் கடுப்ப கோங்கின்
குவிமுகிழ் இளமுலை கொட்டி விரிமலர்
வேங்கை நுண்டாது அப்பி காண்வர
வெள்ளிற் குறுமுறி கிள்ளுபு தெறியா
கோழி ஓங்கிய வென்றடு விறற்கொடி
வாழிய பெரி¦’தன்று ஏத்தி பலருடன்
சீர்திகழ் சிலம்பகம் சில பாடி
சூரர மகளிர் ஆடும் சோலை
மந்தியும் அறியா மரன்பயில் அடுக்கத்து
சுரும்பும் மூசா சுடர்ப்பூங் காந்த
பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன்
பார்முதிர் பனிக்கடல் கலங்கவுள் புக்கு
சூர்முதல் தடிந்த சுடரிலை நெடுவேல்
உலறிய கதுப்பின் பிறழ்பற் பேழ்வா
சுழல்விழி பசுங்கண் சூர்த்த நோக்கின்
கழல்க கூகையடு கடும்பாம்பு தூங்க
பெருமுலை அலைக்கும் காதின் பிணர்மோட்டு
உருகெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள்
குருதி ஆடிய கூருகிர கொடுவிரற்
கண்தொ டுண்ட கழிமுடை கருந்தலை
ஒண்டொடி தடக்கையின் ஏந்தி வெருவர
வென்றடு விறற்களம் பாடித்தோள் பெயரா
நிணம்தின் வாயள் துணங்கை தூங்க
இருபே ருருவின் ஒருபே ரியாக்கை
அறுவேறு வகையின் அஞ்சுவர மண்டி
அவுணர் நல்வலம் அடங கவிழிணர்
மாமுதல் தடிந்த மறுவில் கொற்றத்து
எய்யா நல்லிசை செவ்வேற் சேஎய்
சேவடி படரும் செம்மல் உள்ளமொடு
நலம்புரி கொள்கை புலம்புரி துறையும்
செலவுநீ நயந்தனை யாயின் பலவுடன்
நன்னர் நெஞ்சத்து இன்னசை வாய்ப்ப
இன்னே பெறுதிநீ முன்னிய வினையே
செருப்புகன்று எடுத்த சேணுயர் நெடுங்கொடி
வரிப்புனை பந்தொடு பாவை தூங்க
பொருநர தேய்த்த போரரு வாயில்
திருவீற் றிருந்த தீதுதீர் நியமத்து
மாடமலி மறுகின் கூடற் குடவயின்
இருஞ்சேற்று அகல்வயல் விரிந்துவாய் அவிழ்ந்த
முட்டாள் தாமரை துஞ்சி வைகறை
கட்கமழ் நெய்தல் ஊதி எற்பட
கண்போல் மலர்ந்த காமர் சுனைமலர்
அஞ்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும்
குன்றமர்ந்து உறைதலும் உரியன் அதாஅன்று

திருச்சீர் அலைவாய்

வைந்நுதி பொருத வடுவாழ் வரிநுதல்
வாடா மாலை ஓடையடு துயல்வர
படுமணி இரட்டும் மருங்கின் கடுநடை
கூற்றத்து அன்ன மாற்றரு மொய்ம்பின்
கால்கிளர தன்ன வேழ மேல்கொண்டு
ஐவேறு உருவின் செய்வினை முற்றிய
முடியடு விளங்கிய முரண்மிகு திருமணி
மின்உறழ் இமைப்பின் சென்னி பொற்ப
நகைதாழ்பு துயல்வரூஉம் வகையமை பொலங்குழை
சேண்விளங்கு இயற்கை வாண்மதி கவைஇ
அகலா மீனின் அவிர்வன இமைப்ப
தாவில் கொள்கை தந்தொழில் முடிமார்
மனனேர்பு எழுதரு வாள்நிற முகனே
மாயிருள் ஞாலம் மறுவின்றி விளங்க
பல்கதிர் விரிந்தன்று ஒருமுகம்ஒருமுகம்
ஆர்வலர் ஏத்த அமர்ந்தினி தொழுகி
காதலின் உவந்து வரங்கொடு தன்றேஒருமுகம்
மந்திர விதியின் மரபுளி வழாஅ
அந்தணர் வேள்விஓர கும்மேஒருமுகம்
எஞ்சிய பொருள்களை ஏமுற நாடி
திங்கள் போல திசைவிள கும்மேஒருமுகம்
செறுநர தேய்த்து செல்சமம் முருக்கி
கறுவுகொள் நெஞ்சமொடு களம்வே டன்றேஒருமுகம்
குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின்
மடவரல் வள்ளியடு நகையமர தன்றே
ஆங்குஅம் மூவிருமுகனும் முறைநவின்று ஒழுகலின்
ஆரம் தாழ்ந்த அம்பகட்டு மார்பின்
செம்பொறி வாங்கிய மொய்ம்பின் சுடர்விடுபு
வண்புகழ் நிறைந்து வசிந்துவாங்கு நிமிர்தோள்
பன்னிரு கைகள்
விண்செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது
ஒருகை உக்கம் சேர்த்தியது
நலம்பெறு கலிங்கத்து குறங்கின்மிசை அசைஇயதொருகை
அங்குசங் கடாவ ஒருகை இருகை
ஐயிரு வட்டமொடு எ·குவல திரிப்ப
ஒருகை மார்பொடு விளங்க
ஒருகை தாரொடு பொலிய
கீழ்வீழ் தொடியடு மீமிசைக்கொட்ப ஒருகை
பாடின் படுமணி இரட்ட ஒருகை
நீனிற விசும்பின் மலிதுளி பொழிய ஒருகை
வானர மகளிர்க்கு வதுவை சூட்ட
ஆங்குஅ பன்னிரு கையும் பாற்படஇயற்ற
அந்தர பல்லியம் கறங்க திண்காழ்
வயிர்எழு திசைப்ப வால்வளை ஞரல
உரந்தலை கொண்ட உருமிடி முரசமொடு
பல்பொறி மஞ்ஞை வெல்கொடி அகவ
விசும்பஆ றாக விரைசெலல் முன்னி
உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீர்
அலைவா சேறலும் நிலைஇய பண்பேஅதான்று
திருவாவினன்குடி

முனிவர்
சீரை தைஇய உடுக்கையர் சீரொடு
வலம்புரி புரையும் வால்நரை முடியினர்
மாசுஅற இமைக்கும் உருவினர் மானின்
உரிவை தைஇய ஊன்கெடு மார்பின்
என்புஎழுந்து இயங்கும் யாக்கையர் நன்பகல்
பலவுடன் கழிந்த உண்டியர் இகலொடு
செற்றம் நீக்கிய மனத்தினர் யாவதும்
கற்றோர் அறியா அறிவினர் கற்றோர்க்கு
தாம்வரம்பு ஆகிய தலைமையர் காமமொடு
கடுஞ்சினம் கடிந்த காட்சியர் இடும்பை
யாவதும் அறியா இயல்பினர் மேவர
துனியில் காட்சி முனிவர் முற்புக
கந்தருவர்
புகைமுக தன்ன மாசில் தூவுடை
முகைவாய் அவிழ்ந்த தகைசூழ் ஆகத்து
செவிநேர்பு வைத்த செய்வுறு திவவின்
நல்லியாழ் நவின்ற நயனுடை நெஞ்சின்
மென்மொழி மேவலர் இன்னரம்பு உளர
கந்தருவ மகளிர்
நோயின்று இயன்ற யாக்கையர் மாவின்
அவிர்தளிர் புரையும் மேனியர் அவிர்தொறும்
பொன்னுரை கடுக்கும் திதலையர் இன்னகை
பருமம் தாங்கிய பணிந்தேந்து அல்குல்
மாசில் மகளிரொடு மறுவின்றி விளங்க
திருமால்
கடுவொடு ஒடுங்கிய தூம்படை வால்எயிற்று
அழலென உயிர்க்கும் அஞ்சுவரு கடுந்திறல்
பாம்புபட புடைக்கும் பல்வரி கொடுஞ்சிறை
புள்ளணி நீள்கொடி செல்வனும் வெள்ளேறு
உத்திரன்
வலைவயின் உயரிய பலர்புகழ் திணிதோள்
உமையமர்ந்து விளங்கும் இமையா முக்கண்
மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வனும்
நூற்றுப்பத்து அடுக்கிய நாட்டத்து நூறுபல்
வேள்வி முற்றிய வென்றடு கொற்றத்து
ஈரிரண்டு ஏந்திய மருப்பின் எழில்நடை
தாழ்பெரு தடக்கை உயர்த்த யானை
எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனும்
நாற்பெரு தெய்வத்து நன்னகர் நிலைஇய
உலகம் காக்கும் ஒன்றுபுரி கொள்கை
பலர்புகழ் மூவரும் தலைவ ராக
ஏமுறு ஞால தன்னில் தோன்றி
தாமரை பயந்த தாவில் ஊழி
நான்முக ஒருவற் சுட்டி காண்வர
முப்பத்து மூவர்
பகலிற் றோன்றும் இகலில் காட்சி
நால்வேறு இயற்கை பதினொரு மூவரொடு
ஒன்பதிற்று இரட்டி உயர்நிலை பெறீஇயர்
மீன்பூ தன்ன தோன்றலர் மீன்சேர்பு
வளிகிளர தன்ன செலவினர் வளியிடை
தீயெழு தன்ன திறலினர் தீப்பட
உரும்இடி தன்ன குரலினர் விழுமிய
உறுகுறை மருங்கிந்தம் பெறுமுறை கொண்மார்
அந்தர கொட்பினர் வந்துடன் காண
தாவில் கொள்கை மடந்தையடு சின்னாள்
ஆவினன்குடி அசைதலும் உரியன் அதான்று
திரு ஏரகம்

அந்தணர்
இருமூன்று எய்திய இயல்பினின் வழாஅது
இருவர சுட்டிய பல்வேறு தொல்குடி
அறுநான்கு இரட்டி இளமை நல்லியாண்டு
ஆறினிற் கழிப்பிய அறன்நவில் கொள்கை
மூன்றுவகை குறித்த முத்தீ செல்வத்து
இருபிற பாளர் பொழுதறிந்து நுவல
ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்
புலரா காழகம் புலர உடீஇ
உச்சி கூப்பிய கையினர் தற்புகழ்ந்து
ஆறெழுத்து அடக்கிய அருமறை கேள்வி
நாஇயல் மருங்கில் நவில பாடி
விரையுறு நறுமலர் ஏந்தி பெரிந்துஉவந்து
ஏரகத்து உறைதலும் உரியன் அதான்று
குன்றுதோறு ஆடல்

வேலன்
பைங்கொடி நறைக்காய் இடையிடுபு வேலன்
அம்பொதி புட்டில் விரைஇ குளவியடு
வெண்கூ தாளம் தொடுத்த கண்ணியன்
நறுஞ்சாந்து அணிந்த கேழ்கிளர் மார்பின்
குறமகளிர்
கொடுந்தொழில் வல்விற் கொலைஇய கானவர்
நீடமை விளைந்த தேக்கள் தேறல்
குன்றக சிறுகுடி கிளையுடன் மகிழ்ந்து
தொண்டக சிறுபறை குரவை அயர
விரலுளர்ப்பு அவிழ்ந்த வேறுபடு நறுங்கால்
குண்டுசுனை பூத்த வண்டுபடு கண்ணி
இணைத்த கோதை அணைத்த கூந்தல்
முடித்த குல்லை இலையுடை நறும்பூ
செங்கால் மராஅத்த வாலிணர் இடையிடுபு
சுரும்புண தொடுத்த பெருந்தண் மாத்தழை
திருந்துகாழ் அல்குல் திளைப்ப உடீஇ
மயில்கண் டன்ன மடநடை மகளிரொடு
செய்யன் சிவந்த ஆடையன் செவ்வரை
செயலை தண்டளிர் துயல்வருங் காதினன்
கச்சினன் கழலினன் செச்சை கண்ணியன்
குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன்
தகரன் மஞ்ஞையன் புகரில் சேவலங்
கொடியன் நெடியன் தொடியணி தோளன்
நரம்பார தன்ன இன்குரல் தொகுதியடு
குறும்பொறி கொண்ட நறுந்தண் சாயல்
மருங்கிற் கட்டிய நிலன்நேர்பு துகிலினன்
முழவுறழ் தடக்கையின் இயல ஏந்தி
மென்றோ பல்பிணை தழீஇ தலைத்தந்து
குன்றுதொ றாடலும் நின்றதன்பண்பே அதான்று
பழமுதிர் சோலை

முருகன் உறையும் இடங்கள்
சிறுதினை மலரொடு விரைஇ மறியறுத்து
வாரண கொடியடு வயிற்பட நிறீஇ
ஊரூர் கொண்ட சீர்கெழு விழவினும்
ஆர்வலர் ஏத்த மேவரும் நிலையினும்
வேலன் தைஇய வெறியயர் களனும்
காடும் காவும் கவின்பெறு துருத்தியும்
யாறும் குளனும் வேறுபல் வைப்பும்
சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும்
மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினும்
முருகாற்றுப்படுத்தல்
மாண்டலை கொடியடு மண்ணி அமைவர
நெய்யடு ஐயவி அப்பி ஐதுரைத்து
குடந்தம் பட்டு கொழுமலர் சிதறி
முரண்கொள் உருவின் இரண்டுடன் உடீஇ
செந்நூல் யாத்து வெண்பொரி சிதறி
மதவலி நிலைஇய மாத்தா கொழுவிடை
குருதியடு விரைஇய தூவெள் ளரிசி
சில்பலி செய்து பல்பிரப்பு இரீஇ
சிறுபசு மஞ்சளடு நறுவிரை தெளித்து
பெருந்தண் கணவீர நறுந்தண் மாலை
துணையற அறுத்து தூங்க நாற்றி
நளிமலை சிலம்பின் நன்னகர் வாழ்த்தி
நறும்புகை எடுத்து குறிஞ்சி பாடி
இமிழிசை அருவியடு இன்னியம் கறங்க
உருவ பல்பூ தூஉய் வெருவர
குருதி செந்தினை பரப்பி குறமகள்
முருகியம் நிறுத்து முரணினர் உட்க
முருகாற்று படுத்த உருகெழு வியல்நகர்
ஆடுகளம் சில பாடி பலவுடன்
கோடுவாய் வைத்து கொடுமணி இயக்கி
ஓடா பூட்கை பிணிமுகம் வாழ்த்தி
வேண்டுநர் வேண்டியாங்கு எய்தனர் வழிபட
ஆண்டாண்டு உறைதலும் அறிந்த வாறே
ஆண்டாண்டு ஆயினும் ஆக காண்தக
முந்துநீ கண்டுழி முகனமர்ந்து ஏத்தி
கைதொழூஉ பரவி காலுற வணங்கி
‘நெடும்பெருஞ் சிமையத்து நீல பைஞ்சுனை
ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப
அறுவர் பயந்த ஆறமர் செல்வ
ஆல்கெழு கடவு புதல்வ மால்வரை
மலைமகள் மகனே மாற்றோர் கூற்றே
வெற்றி வெல்போர கொற்றவை சிறுவ
இழையணி சிறப்பின் பழையோள் குழவி
வானோர் வணங்குவில் தானை தலைவ
மாலை மார்ப நூலறி புலவி
செருவில் ஒருவ பொருவிறல் மள்ள
அந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொல்மலை
மங்கையர் கணவ மைந்தர் ஏறே
வேல்கெழு தடக்கை சால்பெருஞ் செல்வ
குன்றம் கொன்ற குன்றா கொற்றத்து
விண்பொரு நெடுவரை குறிஞ்சி கிழவ
பலர்புகழ் நன்மொழி புலவர் ஏறே
அரும்பெறல் மரபின் பெரும்பெயர் முருக
நசையுநர்க்கு ஆர்த்தும் இசைபே ராள
அலந்தோர்க்கு அளிக்கும் பொலம்பூண் சேஎய்
மண்டமர் கடந்தநின் வென்றாடு அகலத்து
பரிசிலர தாங்கும் உருகெழு நெடுவேஎள்
பெரியோர் ஏத்தும் பெரும்பெயர் இயவுள்
சூர்மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி
போர்மிகு பொருந குரிசில்’ எனப்பல
யானறி அளவையின் ஏத்தி ஆனாது
‘நின்னள தறிதல் மன்னுயிர கருமையின்
நின்னடி உள்ளி வந்தனென் நின்னொடு
புரையுநர் இல்லா புலமை யோய்’என
குறித்தது மொழியா அளவையிற் குறித்துடன்
வேறுபல் உருவின் குறும்பல் கூளியர்
சாறுஅயர் களத்து வீறுபெற தோன்றி
‘அளியன் றானே முதுவாய் இரவலன்
வந்தோன் பெருமநின் வண்புகழ் நயந்¦’தன
இனியவும் நல்லவும் நனிபல ஏத்தி
தெய்வம் சான்ற திறல்விளங்கு உருவின்
வான்தோய் நிவப்பின் தான்வ தெய்தி
அணங்குசால் உயர்நிலை தழீஇ பண்டைத்தன்
மணங்கமழ் தெய்வத்து இளநலங் காட்டி
‘அஞ்சல் ஓம்புமதி அறிவல்நின் வர¦’வன
அன்புடன் நன்மொழி அளைஇ விளிவின்று
இருள்நிற முந்நீர் வளைஇய உலகத்து
ஒருநீ யாகி தோன்ற விழுமிய
பெறலரும் பரிசில் நல்கும்அதி பலவுடன்
அருவி
வேறுபல் துகிலின் நுடங்கி அகில்சுமந்து
ஆர முழுமுதல் உருட்டி வேரற்
பூவுடை அலங்குசினை புலம்பவேர் கீண்டு
விண்பொரு நெடுவரை பரிதியிற் றொடுத்த
தண்கமழ் அலரிறால் சிதைய நன்பல
ஆசினி முதுசுளை கலாவ மீமிசை
நாக நறுமலர் உதிர ஊகமொடு
மாமுக முசுக்கலை பனி பூநுதல்
இரும்பிடி குளிர்ப்ப வீசி பெருங்களிற்று
முத்துடை வான்கோடு தழீஇ தத்துற்று
நன்பொன் மணிநிறம் கிளரப்பொன் கொழியா
வாழை முழுமுதல் துமி தாழை
இளநீர் விழுக்குலை உதிர தாக்கி
கறிக்கொடி கருந்துணர் சா பொறிப்புற
மடநடை மஞ்ஞை பலவுடன் வெரீஇ
கோழி வயப்பெடை இரி கேழலொடு
இரும்பனை வெளிற்றின் புன்சாய் அன்ன
குரூஉமயிர் யாக்கை குடாவடி உளியம்
பெருங்கல் விடரளை செறி கருந்கோட்டு
ஆமா நல்லேறு சிலைப்ப சேணின்று
இழுமென இழிதரும் அருவி
பழமுதிர் சோலை மலைகிழ வோனே

திருமுருகாற்றுப்படை முற்றிற்று