சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த
தேவார பதிகங்கள்
ஏழாம் திருமுறை இரண்டாம் பகுதி
பாடல்கள்
உள்ளுறை
திருவாரூர் மின்பதிப்பு
திருவாலங்காடு மின்பதிப்பு
திருக்கடவூர் மயானம் மின்பதிப்பு
திருவொற்றியூர் மின்பதிப்பு
திருப்புன்கூர் மின்பதிப்பு
திருநீடூர் மின்பதிப்பு
திருவாழ்கொளிபுத்தூர் மின்பதிப்பு
திருக்கழுமலம் மின்பதிப்பு
திருவாரூர் மின்பதிப்பு
திருவிடைமருதூர் மின்பதிப்பு
திருவேகம்பம் மின்பதிப்பு
திருக்கோலக்கா மின்பதிப்பு
நம்பிஎன்ற திருப்பதிகம் மின்பதிப்பு
திருத்தினைநகர் மின்பதிப்பு
திருநின்றியூர் மின்பதிப்பு
திருவாவடுதுறை மின்பதிப்பு
திருவலிவலம் மின்பதிப்பு
திருநள்ளாறு மின்பதிப்பு
திருவடமுல்லைவாயில் மின்பதிப்பு
திருவாவடுதுறை மின்பதிப்பு
திருமறைக்காடு மின்பதிப்பு
திருவலம்புரம் மின்பதிப்பு
திருவாரூர் மின்பதிப்பு
திருத்துருத்தியும் திருவேள்விக்குடியும்
மின்பதிப்பு
திருவானைக்கா மின்பதிப்பு
திருவாஞ்சியம் மின்பதிப்பு
திருவையாறு மின்பதிப்பு
திருக்கேதாரம் மின்பதிப்பு
திருப்பருப்பதம் மின்பதிப்பு
திருக்கேதீச்சரம் மின்பதிப்பு
திருக்கழுக்குன்றம் மின்பதிப்பு
திருச்சுழியல் மின்பதிப்பு
திருவாரூர் மின்பதிப்பு
திருக்கானப்பேர் மின்பதிப்பு
திருக்கூடலையாற்றூர் மின்பதிப்பு
திருவன்பார்த்தான்பனங்காட்டூர் மின்பதிப்பு
திருப்பனையூர் மின்பதிப்பு
திருவீழிமிழலை மின்பதிப்பு
திருவெண்பாக்கம் மின்பதிப்பு
கோயில் மின்பதிப்பு
திருவொற்றியூர் மின்பதிப்பு
திருப்புக்கொளியூர் அவிநாசி மின்பதிப்பு
திருநறையூர்ச்சித்தீச்சரம் மின்பதிப்பு
திருச்சோற்றுத்துறை மின்பதிப்பு
திருவாரூர் மின்பதிப்பு
திருவாரூர்ப்பரவையுண்மண்டளி மின்பதிப்பு
திருநனிபள்ளி மின்பதிப்பு
திருநன்னிலத்துப்பெருங்கோயில் மின்பதிப்பு
திருநாகேச்சரம் மின்பதிப்பு
திருநொடித்தான்மலை மின்பதிப்பு

சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த
தேவார பதிகங்கள்
ஏழாம் திருமுறை இரண்டாம் பகுதி
திருவாரூர்
பண் பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்
பத்திமையும் அடிமையையுங்
கைவிடுவான் பாவியேன்
பொத்தினநோ யதுவிதனை
பொருளறிந்தேன் போய்த்தொழுவேன்
முத்தினைமா மணிதன்னை
வயிரத்தை மூர்க்கனேன்
எத்தனைநா பிரிந்திருக்கேன்
என்னாரூர் இறைவனையே
ஐவணமாம் பகழியுடை
அடல்மதனன் பொடியாக
செவ்வணமா திருநயனம்
விழிசெய்த சிவமூர்த்தி
மையணவு கண்டத்து
வளர்சடையெம் மாரமுதை
எவ்வணம்நான் பிரிந்திருக்கேன்
என்னாரூர் இறைவனையே
சங்கலக்கு தடங்கடல்வாய்
விடஞ்சுடவ தமரர்தொழ
அங்கலக்கண் தீர்த்துவிடம்
உண்டுகந்த அம்மானை
இங்கலக்கும் உடற்பிறந்த
அறிவிலியேன் செறிவின்றி
எங்குலக்க பிரிந்திருக்கேன்
என்னாரூர் இறைவனையே
இங்ஙனம்வ திடர்ப்பிறவி
பிறந்தயர்வேன் அயராமே
அங்ஙனம்வ தெனையாண்ட
அருமருந்தென் ஆரமுதை
வெங்கனல்மா மேனியனை
மான்மருவுங் கையானை
எங்ஙனம்நான் பிரிந்திருக்கேன்
என்னாரூர் இறைவனையே
செப்பரிய அயனொடுமால்
சிந்தித்து தெரிவரிய
அப்பெரிய திருவினையே
அறியாதே அருவினையேன்
ஒப்பரிய குணத்தானை
இணையிலியை அணைவின்றி
எப்பரிசு பிரிந்திருக்கேன்
என்னாரூர் இறைவனையே
வன்னாகம் நாண்வரைவில்
அங்கிகணை அரிபகழி
தன்னாகம் உறவாங்கி
புரமெரித்த தன்மையனை
முன்னாக நினையாத
மூர்க்கனேன் ஆக்கைசு
தென்னாக பிரிந்திருக்கேன்
என்னாரூர் இறைவனையே
வன்சயமாய் அடியான்மேல்
வருங்கூற்றின் உரங்கிழிய
முன்சயமார் பாதத்தால்
முனிந்துகந்த மூர்த்திதனை
மின்செயும்வார் சடையானை
விடையானை அடைவின்றி
என்செயநான் பிரிந்திருக்கேன்
என்னாரூர் இறைவனையே
முன்னெறிவா னவர்கூடி
தொழுதேத்தும் முழுமுதலை
அந்நெறியை அமரர்தொழும்
நாயகனை அடியார்கள்
செந்நெறியை தேவர்குல
கொழுந்தைமற திங்ஙனம்நான்
என்னறிவான் பிரிந்திருக்கேன்
என்னாரூர் இறைவனையே
கற்றுளவான் கனியாய
கண்ணுதலை கருத்தார
உற்றுளனாம் ஒருவனைமுன்
இருவர்நினை தினிதேத்த
பெற்றுளனாம் பெருமையனை
பெரிதடியேன் கையகன்றி
டெற்றுளனா பிரிந்திருக்கேன்
என்னாரூர் இறைவனையே
ஏழிசையாய் இசைப்பயனாய்
இன்னமுதாய் என்னுடைய
தோழனுமாய் யான்செய்யு
துரிசுகளு குடனாகி
மாழையொண்கண் பரவையைத்த
தாண்டானை மதியில்லா
ஏழையேன் பிரிந்திருக்கேன்
என்னாரூர் இறைவனையே
வங்கமலி கடல்நஞ்சை
வானவர்கள் தாமுய்ய
நுங்கிஅமு தவர்க்கருளி
நொய்யேனை பொருட்படுத்து
சங்கிலியோ டெனைப்புணர்த்த
தத்துவனை சழக்கனேன்
எங்குலக்க பிரிந்திருக்கேன்
என்னாரூர் இறைவனையே
பேரூரும் மதகரியின்
உரியானை பெரியவர்தஞ்
சீரூரு திருவாரூர
சிவனடியே திறம்விரும்பி
ஆரூரன் அடித்தொண்டன்
அடியன்சொல் அகலிடத்தில்
ஊரூரன் இவைவல்லார்
உலகவர்க்கு மேலாரே
இது திருவொற்றியூரிற் சங்கிலிநாச்சியாருடன்
இருக்கும்போது வீதிவிடங்கப்பெருமானுடைய
திருவோலக்கதரிசன ஞாபகம்வர ஓதியருளிய பதிகம்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவாலங்காடு
பண் பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்
முத்தா முத்தி தரவல்ல
முகிழ்மென் முலையா ளுமைபங்கா
சித்தா சித்தி திறங்காட்டுஞ்
சிவனே தேவர் சிங்கமே
பத்தா பத்தர் பலர்போற்றும்
பரமா பழைய னூர்மேய
அத்தா ஆலங் காடாவுன்
அடியார கடியேன் ஆவேனே
பொய்யே செய்து புறம்புறமே
திரிவேன் றன்னை போகாமே
மெய்யே வந்திங் கெனையாண்ட
மெய்யா மெய்யர் மெய்ப்பொருளே
பையா டரவம் அரைக்கசைத்த
பரமா பழைய னூர்மேய
ஐயா ஆலங் காடாவுன்
அடியார கடியேன் ஆவேனே
தூண்டா விளக்கின் நற்சோதீ
தொழுவார் தங்கள் துயர்தீர்ப்பாய்
பூண்டாய் எலும்பை புரமூன்றும்
பொடியா செற்ற புண்ணியனே
பாண்டாழ் வினைக ளவைதீர்க்கும்
பரமா பழைய னூர்மேய
ஆண்டா ஆலங் காடாவுன்
அடியார கடியேன் ஆவேனே
மறிநேர் ஒண்கண் மடநல்லார்
வலையிற் பட்டு மதிமயங்கி
அறிவே அழிந்தே னையாநான்
மையார் கண்ட முடையானே
பறியா வினைக ளவைதீர்க்கும்
பரமா பழைய னூர்மேய
அறிவே ஆலங் காடாவுன்
அடியார கடியேன் ஆவேனே
வேலங் காடு தடங்கண்ணார்
வலையு பட்டுன் நெறிமறந்து
மாலங் காடி மறந்தொழிந்தேன்
மணியே முத்தே மரகதமே
பாலங் காடி நெய்யாடி
படர்புன் சடையாய் பழையனூர்
ஆலங் காடா உன்னுடைய
அடியார கடியேன் ஆவேனே
எண்ணார் தங்கள் எயிலெய்த
எந்தாய் எந்தை பெருமானே
கண்ணாய் உலகங் காக்கின்ற
கருத்தா திருத்த லாகாதாய்
பண்ணா ரிசைக ளவைகொண்டு
பலரும் ஏத்தும் பழையனூர்
அண்ணா ஆலங் காடாவுன்
அடியார கடியேன் ஆவேனே
வண்டார் குழலி உமைநங்கை
பங்கா கங்கை மணவாளா
விண்டார் புரங்க ளெரிசெய்த
விடையாய் வேத நெறியானே
பண்டாழ் வினைகள் பலதீர்க்கும்
பரமா பழைய னூர்மேய
அண்டா ஆலங் காடாவுன்
அடியார கடியேன் ஆவேனே
பேழ்வா யரவி னணையானும்
பெரிய மலர்மே லுறைவானு
தாழா துன்றன் சரண்பணி
தழலாய் நின்ற தத்துவனே
பாழாம் வினைக ளவைதீர்க்கும்
பரமா பழையனூர் தன்னை
ஆள்வாய் ஆலங் காடாவுன்
அடியார கடியேன் ஆவேனே
எம்மான் எந்தை மூத்தப்பன்
ஏழேழ் படிகால் எமையாண்ட
பெம்மான் புறங்காட்டிற்
பேயோ டாடல் புரிவானே
பன்மா மலர்க ளவைகொண்டு
பலரும் ஏத்தும் பழையனூர்
அம்மா ஆலங் காடாவுன்
அடியார கடியேன் ஆவேனே
பத்தர் சித்தர் பலரேத்தும்
பரமன் பழைய னூர்மேய
அத்தன் ஆலங் காடன்றன்
அடிமை திறமே அன்பாகி
சித்தர் சித்தம் வைத்தபுகழ
சிறுவன் ஊரன் ஒண்டமிழ்கள்
பத்தும் பாடி ஆடுவார்
பரமன் அடியே பணிவாரே
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் ஊர்த்துவதாண்டவேசுவரர் தேவியார் வண்டார்குழலியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்கடவூர் மயானம்
பண் பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்
மருவார் கொன்றை மதிசூடி
மாணி கத்தின் மலைபோல
வருவார் விடைமேல் மாதோடு
மகிழ்ந்து பூத படைசூழ
திருமால் பிரமன் இந்திரற்கு
தேவர் நாகர் தானவர்க்கும்
பெருமான் கடவூர் மயானத்து
பெரிய பெருமா னடிகளே
விண்ணோர் தலைவர் வெண்புரிநூல்
மார்பர் வேத கீதத்தர்
கண்ணார் நுதலர் நகுதலையர்
கால காலர் கடவூரர்
எண்ணார் புரமூன் றெரிசெய்த
இறைவ ருமையோ ரொருபாகம்
பெண்ணா ணாவர் மயானத்து
பெரிய பெருமா னடிகளே
காயும் புலியின் அதளுடையர்
கண்டர் எண்டோ கடவூரர்
தாயு தந்தை பல்லுயிர்க்கு
தாமே யாய தலைவனார்
பாயும் விடையொன் றதுவேறி
பலிதேர துண்ணும் பரமேட்டி
பேய்கள் வாழும் மயானத்து
பெரிய பெருமா னடிகளே
நறைசேர் மலரைங் கணையானை
நயன தீயாற் பொடிசெய்த
இறையா ராவர் எல்லார்க்கும்
இல்லை யென்னா தருள்செய்வார்
பறையார் முழவம் பாட்டோ டு
பயிலு தொண்டர் பயில்கடவூர
பிறையார் சடையார் மயானத்து
பெரிய பெருமா னடிகளே
கொத்தார் கொன்றை மதிசூடி
கோள்நா கங்கள் பூணாக
மத்த யானை உரிபோர்த்து
மருப்பும் ஆமை தாலியார்
பத்தி செய்து பாரிடங்கள்
பாடி ஆட பலிகொள்ளும்
பித்தர் கடவூர் மயானத்து
பெரிய பெருமா னடிகளே
துணிவார் கீளுங் கோவணமு
துதைந்து சுடலை பொடியணிந்து
பணிமே லிட்ட பாசுபதர்
பஞ்ச வடிமார் பினர்கடவூர
திணிவார் குழையார் புரமூன்று
தீவா படுத்த சேவகனார்
பிணிவார் சடையார் மயானத்து
பெரிய பெருமா னடிகளே
பஞ்சவடியாவது மயிர்ப்பூணநூல் இது மாவிரதியரென்னும்
உட்சமயத்தாரணிவது மேலும் அவர்களணியுமணி எலும்பினாலாகிய
மணிகள் இவற்றை மானக்கஞ்சாறநாயனார் புராணத்து வது
திருவிருத்தத்தானுமுணர்க
காரார் கடலின் நஞ்சுண்ட
கண்டர் கடவூர் உறைவாணர்
தேரார் அரக்கன் போய்வீழ்ந்து
சிதைய விரலா லூன்றினார்
ஊர்தான் ஆவ துலகேழும்
உடையார கொற்றி யூராரூர்
பேரா யிரவர் மயானத்து
பெரிய பெருமா னடிகளே
வாடா முலையாள் தன்னோடும்
மகிழ்ந்து கானில் வேடுவனா
கோடார் கேழற் பின்சென்று
குறுகி விசயன் தவமழித்து
நாடா வண்ணஞ் செருச்செய்து
ஆவ நாழி நிலையருள்செய்
பீடார் சடையார் மயானத்து
பெரிய பெருமா னடிகளே
வேழம் உரிப்பர் மழுவாளர்
வேள்வி அழிப்பர் சிரமறுப்பர்
ஆழி அளிப்பர் அரிதனக்கன்
றானஞ் சுகப்பர் அறமுரைப்பர்
ஏழை தலைவர் கடவூரில்
இறைவர் சிறுமான் மறிக்கையர்
பேழை சடையர் மயானத்து
பெரிய பெருமா னடிகளே
மாட மல்கு கடவூரில்
மறையோ ரேத்தும் மயானத்து
பீடை தீர அடியாரு
கருளும் பெருமா னடிகள்சீர்
நாடி நாவ லாரூரன்
நம்பி சொன்ன நற்றமிழ்கள்
பாடு மடியார் கேட்பார்மேற்
பாவ மான பறையுமே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் பிரமபுரீசுவரர் தேவியார் மலர்க்குழல்மின்னம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவொற்றியூர்
பண் தக்கேசி
திருச்சிற்றம்பலம்
அழுக்கு மெய்கொடுன் றிருவடி அடைந்தேன்
அதுவும் நான்பட பாலதொன் றானாற்
பிழுக்கை வாரியும் பால்கொள்வர் அடிகேள்
பிழைப்பன் ஆகிலு திருவடி பிழையேன்
வழுக்கி வீழினு திருப்பெய ரல்லால்
மற்று நான்அறி யேன்மறு மாற்றம்
ஒழுக்க என்கணு கொருமரு துரையாய்
ஒற்றி யூரெனும் ஊருறை வானே
கட்ட னேன்பிற தேன்உன காளாய்
காதற் சங்கிலி காரண மாக
எட்டி னாற்றிக ழுந்திரு மூர்த்தி
என்செய் வான்அடி யேன்எடு துரைக்கேன்
பெட்ட னாகிலு திருவடி பிழையேன்
பிழைப்ப னாகிலு திருவடி கடிமை
ஒட்டி னேன்எனை நீசெய்வ தெல்லாம்
ஒற்றி யூரெனும் ஊருறை வானே
கங்கை தங்கிய சடையுடை கரும்பே
கட்டி யேபலர குங்களை கண்ணே
அங்கை நெல்லியின் பழத்திடை அமுதே
அத்தா என்னிடர் ஆர்க்கெடு துரைக்கேன்
சங்கும் இப்பியுஞ் சலஞ்சலம் முரல
வயிரம் முத்தொடு பொன்மணி வரன்றி
ஒங்கு மாகடல் ஓதம்வ துலவும்
ஒற்றி யூரெனும் ஊருறை வானே
ஈன்று கொண்டதோர் சுற்றமொன் றன்றா
லியாவ ராகிலென் அன்புடை யார்கள்
தோன்ற நின்றருள் செய்தளி திட்டாற்
சொல்லு வாரைஅல் லாதன சொல்லாய்
மூன்று கண்ணுடை யாய்அடி யேன்கண்
கொள்வ தேகண குவழ காகில்
ஊன்று கோல்என காவதொன் றருளாய்
ஒற்றி யூரெனும் ஊருறை வானே
வழித்த லைப்படு வான்முயல் கின்றேன்
உன்னை போல்என்னை பாவிக்க மாட்டேன்
சுழித்த லைப்பட்ட நீரது போல
சுழல்கின் றேன்சுழல் கின்றதென் னுள்ளங்
கழித்த லைப்பட்ட நாயது போல
ஒருவன் கோல்பற்றி கறகற இழுக்கை
ஒழித்து நீயரு ளாயின செய்யாய்
ஒற்றி யூரெனும் ஊருறை வானே
மானை நோக்கியர் கண்வலை பட்டு
வருந்தி யானுற்ற வல்வினை கஞ்சி
தேனை ஆடிய கொன்றையி னாய்உன்
சீல முங்குண முஞ்சிந்தி யாதே
நானும் இத்தனை வேண்டுவ தடியேன்
உயிரொ டும்நர கத்தழு தாமை
ஊனம் உள்ளன தீர்த்தருள் செய்யாய்
ஒற்றி யூரெனும் ஊருறை வானே
மற்று தேவரை நினைந்துனை மறவேன்
எஞ்சி னாரொடு வாழவும் மாட்டேன்
பெற்றி ருந்து பெறாதொழி கின்ற
பேதை யேன்பிழை திட்டதை அறியேன்
முற்றும் நீஎனை முனிந்திட அடியேன்
கடவ தென்னுனை நான்மற வேனேல்
உற்ற நோயுறு பிணிதவிர தருளாய்
ஒற்றி யூரெனும் ஊருறை வானே
கூடினாய் மலை மங்கையை நினையாய்
கங்கை ஆயிர முகம்உடை யாளை
சூடி னாயென்று சொல்லிய புக்கால்
தொழும்ப னேனுக்குஞ் சொல்லலு மாமே
வாடி நீயிரு தென்செய்தி மனனே
வருந்தி யானுற்ற வல்வினை கஞ்சி
ஊடி னாலினி ஆவதொன் றுண்டே
ஒற்றி யூரெனும் ஊருறை வானே
மகத்திற் புக்கதோர் சனிஎன கானாய்
மைந்த னேமணி யேமண வாளா
அகத்திற் பெண்டுகள் நானொன்று சொன்னால்
அழையேற் போகுரு டாஎன தரியேன்
முகத்திற் கண்ணிழ தெங்ஙனம் வாழ்கேன்
முக்க ணாமுறை யோமறை யோதீ
உகைக்கு தண்கடல் ஓதம்வ துலவும்
ஒற்றி யூரெனும் ஊருறை வானே
ஓதம் வந்துல வுங்கரை தன்மேல்
ஒற்றி யூருறை செல்வனை நாளும்
ஞால தான்பர வப்படு கின்ற
நான்ம றையங்கம் ஓதிய நாவன்
சீல தான்பெரி தும்மிக வல்ல
சிறுவன் வன்றொண்டன் ஊரன் உரைத்த
பாடல் பத்திவை வல்லவர் தாம்போ
பரகதி திண்ணம் நண்ணுவர் தாமே
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் படம்பக்கநாதர் மாணிக்கத்தியாகர்
தேவியார் வடிவுடையம்மை
இது உன்னைப்பிரிந்துபோவதில்லையென்று சங்கிலி நாச்சியாருக்கு
சூளுரைசெய்து மணந்துமகிழ திருக்கையில் திருவாரூர்
வீதிவிடங்கப்பெருமானுடய திருவோலக்க தரிசனஞ்செய்வதற்கின்றி
நெடுநாள் பிரிந்திருக்கின்றோமேயென்னும் ஞாபகமுண்டாக
பரமசிவத்தின் திருவிளையாட்டால் முன்கூறிய சூளுரையைமறந்து
திருவொற்றியூரெல்லையை கடந்தவளவில் நேத்திரங்களுக்கு
அபாவந்தோன்ற வருந்தி துதிசெய்த பதிகம்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருப்புன்கூர்
பண் தக்கேசி
திருச்சிற்றம்பலம்
அந்த ணாளன்உன் அடைக்கலம் புகுத
அவனை காப்பது காரண மாக
வந்த காலன்றன் ஆருயி ரதனை
வவ்வி னாய்க்குன்றன் வன்மைகண் டடியேன்
எந்தை நீயெனை நமன்றமர் நலியின்
இவன்மற் றென்னடி யானென விலக்குஞ்
சிந்தை யால்வந்துன் றிருவடி அடைந்தேன்
செழும்பொ ழிற்றிரு புன்கூர் உளானே
வைய கமுற்றும் மாமழை மறந்து
வயலில் நீரிலை மாநில தருகோம்
கொள்கமற் றெங்களை என்ன
ஒலிகொள் வெண்முகி லாய்ப்பர தெங்கும்
பெய்யும் மாமழை பெருவெள்ள தவிர்த்து
பெயர்த்தும் பன்னிரு வேலிகொண் டருளுஞ்
செய்கை கண்டுநின் றிருவடி அடைந்தேன்
செழும்பொ ழிற்றிரு புன்கூர் உளானே
ஏத நன்னிலம் ஈரறு வேலி
ஏயர் கோனுற்ற இரும்பிணி தவிர்த்து
கோத னங்களின் பால்கற தாட்ட
கோல வெண்மணற் சிவன்றன்மேற் சென்ற
தாதை தாளற எறிந்ததண் டிக்குன்
சடைமி சைமலர் அருள்செ கண்டு
பூத ஆளிநின் பொன்னடி அடைந்தேன்
பூம்பொ ழிற்றிரு புன்கூர் உளானே
நற்ற மிழ்வல்ல ஞானசம் பந்தன்
நாவினு கரையன் நாளைப்போ வானுங்
கற்ற சூதன்நற் சாக்கியன் சிலந்தி
கண்ண பன்கணம் புல்லனென் றிவர்கள்
குற்றஞ் செய்யினுங் குணமென கருதுங்
கொள்கை கண்டுநின் குரைகழல் அடைந்தேன்
பொற்றி ரள்மணி கமலங்கள் மலரும்
பொய்கை சூழ்திரு புன்கூர் உளானே
கோல மால்வரை மத்தென நாட்டி
கோள ரவுசுற் றிக்கடை தெழுந்த
ஆல நஞ்சுகண் டவர்மிக இரிய
அமரர் கட்கருள் புரிவது கருதி
நீல மார்கடல் விடந்தனை உண்டு
கண்ட தேவைத்த பித்தநீ செய்த
சீலங் கண்டுநின் றிருவடி அடைந்தேன்
செழும்பொ ழிற்றிரு புன்கூர் உளானே
இயக்கர் கின்னரர் யமனொடு வருணர்
இயங்கு தீவளி ஞாயிறு திங்கள்
மயக்கம் இல்புலி வானரம் நாகம்
வசுக்கள் வானவர் தானவர் எல்லாம்
அயர்ப்பொன் றின்றிநின் றிருவடி அதனை
அர்ச்சி தார்பெறும் ஆரருள் கண்டு
திகைப்பொன் றின்றிநின் றிருவடி அடைந்தேன்
செழும்பொ ழிற்றிரு புன்கூர் உளானே
போர்த்த நீள்செவி யாளர்அ தணர்க்கு
பொழில்கொள் ஆல்நிழற் கீழறம் புரிந்து
பார்த்த னுக்கன்று பாசுப தங்கொடு
தருளி னாய்பண்டு பகீரதன் வேண்ட
ஆர்த்து வந்திழி யும்புனற் கங்கை
நங்கை யாளைநின் சடைமிசை கரந்த
தீர்த்த னேநின்றன் றிருவடி அடைந்தேன்
செழும்பொ ழிற்றிரு புன்கூர் உளானே
மூவெ யில்செற்ற ஞான்றுய்ந்த மூவரில்
இருவர் நின்றிரு கோயிலின் வாய்தல்
காவ லாளரென் றேவிய பின்னை
ஒருவ நீகரி காடரங் காக
மானை நோக்கியோர் மாநடம் மகிழ
மணிமு ழாமுழ கஅருள் செய்த
தேவ தேவநின் றிருவடி அடைந்தேன்
செழும்பொ ழிற்றிரு புன்கூர் உளானே
அறிவி னால்மிக்க அறுவகை சமயம்
அவ்வ வர்க்கங்கே ஆரருள் புரிந்து
எறியு மாகடல் இலங்கையர் கோனை
துலங்க மால்வரை கீழடர திட்டு
குறிகொள் பாடலின் இன்னிசை கேட்டு
கோல வாளொடு நாளது கொடுத்த
செறிவு கண்டுநின் றிருவடி அடைந்தேன்
செழும்பொ ழிற்றிரு புன்கூர் உளானே
கம்ப மால்களிற் றின்னுரி யானை
காமற் காய்ந்ததோர் கண்ணுடை யானை
செம்பொ னேயொக்கு திருவுரு வானை
செழும்பொ ழிற்றிரு புன்கூர் உளானை
உம்பர் ஆளியை உமையவள் கோனை
ஊரன் வன்றொண்டன் உள்ள தாலுக
தன்பி னாற்சொன்ன அருந்தமிழ் ஐந்தோ
டைந்தும் வல்லவர் அருவினை இலரே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் சிவலோகநாதர் தேவியார் சொக்கநாயகியம்மை
சுந்தரமூர்த்திசுவாமிகள் திருப்புன்கூருக்கெழுந்தருளியபோது அந்தத்தலத்தார்
கண்டு தொழுது சுவாமீ இங்கு நெடுநாளாக மழைபொழிதலின்றி
வருந்துகிறோம் ஆதலால் கிருபைபாலிக்கவேண்டுமென்று விண்ணப்பஞ்செய்ய
மழைபொழிந்தால் சுவாமிக்கியாது தருவீர்களென்ன அவர்கள் பன்னிரண்டு
வேலி நிலந்தருகிறோமென்ன கிருபை கூர்ந்து இந்தப்பதிகமோதியருளலும்
மழை அதிகமாய்ப்பெய்ய அவர்களுடையவேண்டுதலினால்
பெய்யும்படிசெய்து முன்னமவர்கள் சொல்லிய பன்னிரண்டுவேலி நிலமேயன்றி
மீட்டும் பன்னிரண்டுவேலி நிலங்கொடுக்கப்பெற்றருளியது
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருநீடூர்
பண் தக்கேசி
திருச்சிற்றம்பலம்
ஊர்வ தோர்விடை ஒன்றுடை யானை
ஒண்ணு தல்தனி கண்ணுத லானை
கார தார்கறை மாமிடற் றானை
கருத லார்புரம் மூன்றெரி தானை
நீரில் வாளை வரால்குதி கொள்ளும்
நிறைபு னற்கழ னிச்செல்வ நீடூர
பாரு ளார்பர வித்தொழ நின்ற
பரம னைப்பணி யாவிட லாமே
துன்னு வார்சடை தூமதி யானை
துயக்கு றாவகை தோன்றுவி பானை
பன்னு நான்மறை பாடவல் லானை
பார்த்த னுக்கருள் செய்தபி ரானை
என்னை இன்னருள் எய்துவி பானை
ஏதி லார்த கேதிலன் றன்னை
புன்னை மாதவி போதலர் நீடூர
புனித னைப்பணி யாவிட லாமே
கொல்லும் மூவிலை வேலுடை யானை
கொடிய காலனை யுங்குமை தானை
நல்ல வாநெறி காட்டுவி பானை
நாளும் நாம்உ கின்ற பிரானை
அல்ல லில்லரு ளேபுரி வானை
ஆடு நீர்வயல் சூழ்புனல் நீடூர
கொல்லை வெள்ளெரு தேறவல் லானை
கூறி நாம்பணி யாவிட லாமே
தோடு காதிடு தூநெறி யானை
தோற்ற முந்துற பாயவன் றன்னை
பாடு மாமறை பாடவல் லானை
பைம்பொ ழிற்குயில் கூவிட மாடே
ஆடு மாமயில் அன்னமோ டாட
அலைபு னற்கழ னித்திரு நீடூர்
வேட னாயபி ரானவன் றன்னை
விரும்பி நாம்பணி யாவிட லாமே
குற்ற மொன்றடி யாரிலர் ஆனாற்
கூடு மாறத னைக்கொடு பானை
கற்ற கல்வியி லும்மினி யானை
காண பேணும வர்க்கெளி யானை
முற்ற அஞ்சு துறந்திரு பானை
மூவ ரின்முத லாயவன் றன்னை
சுற்று நீள்வயல் சூழ்திரு நீடூர
தோன்ற லைப்பணி யாவிட லாமே
காடில் ஆடிய கண்ணுத லானை
கால னைக்கடி திட்டபி ரானை
பாடி ஆடும்பரி சேபுரி தானை
பற்றி னோடுசுற் றம்மொழி பானை
தேடி மாலயன் காண்பரி யானை
சித்த முந்தெளி வார்க்கெளி யானை
கோடி தேவர்கள் கும்பிடு நீடூர
கூத்த னைப்பணி யாவிட லாமே
விட்டி லங்கெரி யார்கையி னானை
வீடி லாதவி யன்புக ழானை
கட்டு வாங்க தரித்தபி ரானை
காதி லார்கன கக்குழை யானை
விட்டி லங்குபுரி நூலுடை யானை
வீந்த வர்தலை யோடுகை யானை
கட்டி யின்கரும் போங்கிய நீடூர
கண்டு நாம்பணி யாவிட லாமே
மாய மனங்கெடு
மனத்து ளேமதி யாய்இரு பானை
காய மாயமும் ஆக்குவி பானை
காற்று மாய்க்கன லாய்க்கழி பானை
ஓயு மாறுரு நோய்புணர பானை
ஒல்லை வல்வினை கள்கெடு பானை
வேய்கொள் தோள்உமை பாகனை நீடூர்
வேந்த னைப்பணி யாவிட லாமே
கண்ட முங்கறு திட்டபி ரானை
காண பேணும வர்க்கெளி யானை
தொண்ட ரைப்பெரி தும்முக பானை
துன்ப முந்துற தின்பினி யானை
பண்டை வல்வினை கள்கெடு பானை
பாக மாமதி யாயவன் றன்னை
கெண்டை வாளை கிளர்புனல் நீடூர
கேண்மை யாற்பணி யாவிட லாமே
அல்லல் உள்ளன தீர்த்திடு வானை
அடைந்த வர்க்கமு தாயிடு வானை
கொல்லை வல்லர வம்மசை தானை
கோல மார்கரி யின்னுரி யானை
நல்ல வர்க்கணி யானவன் றன்னை
நானுங் காதல்செய் கின்றபி ரானை
எல்லி மல்லிகை யேகமழ் நீடூர்
ஏத்தி நாம்பணி யாவிட லாமே
பேரோர் ஆயிர மும்முடை யானை
பேரி னாற்பெரி தும்மினி யானை
நீரூர் வார்சடை நின்மலன் றன்னை
நீடூர் நின்றுக திட்டபி ரானை
ஆரூ ரன்னடி காண்பதற் கன்பாய்
ஆத ரித்தழை திட்டவிம் மாலை
பாரூ ரும்பர வித்தொழ வல்லார்
பத்த ராய்முத்தி தாம்பெறு வாரே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் சோமநாதேசுவரர் தேவியார் வேயுறுதோளியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவாழ்கொளிபுத்தூர்
பண் தக்கேசி
திருச்சிற்றம்பலம்
தலைக்க லன்றலை மேல்தரி தானை
தன்னைஎன் னைநினை கத்தரு வானை
கொலைக்கை யானைஉரி போர்த்துக தானை
கூற்றுதை தகுரை சேர்கழ லானை
அலைத்த செங்கண்விடை ஏறவல் லானை
ஆணை யால்அடி யேன்அடி நாயேன்
மலைத்தசெ நெல்வயல் வாழ்கொளி புத்தூர்
மாணிக்க தைமற தென்நினை கேனே
படைக்க சூலம் பயிலவல் லானை
பாவி பார்மனம் பரவிக்கொண் டானை
கடைக்கட்பி சைக்கிச்சை காதலி தானை
காமன்ஆ கந்தனை கட்டழி தானை
சடைக்க கங்கையை தாழவை தானை
தண்ணீர்மண் ணிக்கரை யானைத்த கானை
மடைக்கண்நீ லம்அலர் வாழ்கொளி புத்தூர்
மாணிக்க தைமற தென்நினை கேனே
வெந்த நீறுமெய் பூசவல் லானை
வேத மால்விடை ஏறவல் லானை
அந்தம் ஆதிஅறி தற்கரி யானை
ஆறலை தசடை யானைஅம் மானை
சிந்தை யென்றடு மாற்றறு பானை
தேவ தேவனென் சொல்முனி யாதே
வந்தென் உள்ளம்புகும் வாழ்கொளி புத்தூர்
மாணிக்க தைமற தென்நினை கேனே
தடங்கை யான்மலர் தூய்த்தொழு வாரை
தன்னடி கேசெல்லு மாறுவல் லானை
படங்கொள் நாகம்அரை ஆர்த்துக தானை
பல்லின்வெள் ளைத்தலை ஊணுடை யானை
நடுங்க ஆனைஉரி போர்த்துக தானை
நஞ்சம் உண்டுகண் டங்கறு தானை
மடந்தை பாகனை வாழ்கொளி புத்தூர்
மாணிக்க தைமற தென்நினை கேனே
வளைக்கை முன்கைமலை மங்கை மணாளன்
மார னார்உடல் நீறெழ செற்று
துளைத்த அங்கத்தொடு தூமலர கொன்றை
தோலும்நூ லுந்துதை தவரை மார்பன்
திளைக்கு தெவ்வர் திரிபுரம் மூன்றும்
அவுணர் பெண்டிரும் மக்களும் வேவ
வளைத்த வில்லியை வாழ்கொளி புத்தூர்
மாணிக்க தைமற தென்நினை கேனே
திருவின் நாயகன் ஆகிய மாலு
கருள்கள் செய்திடும் தேவர் பிரானை
உருவி னானைஒன் றாவறி வொண்ணா
மூர்த்தி யைவிச யற்கருள் செய்வான்
செருவில் ஏந்தியோர் கேழற்பின் சென்று
செங்கண் வேடனாய் என்னொடும் வந்து
மருவி னான்றனை வாழ்கொளி புத்தூர்
மாணிக்க தைமற தென்நினை கேனே
எந்தை யைஎந்தை தந்தை பிரானை
ஏத மாயஇடர் தீர்க்கவல் லானை
முந்தி யாகிய மூவரின் மிக்க
மூர்த்தி யைமுதற் காண்பரி யானை
கந்தின் மிக்ககரி யின்மரு போடு
கார கில்கவ ரிம்மயிர் மண்ணி
வந்து வந்திழி வாழ்கொளி புத்தூர்
மாணிக்க தைமற தென்நினை கேனே
தேனை ஆடிய கொன்றையி னானை
தேவர் கைதொழு
ஊனம் ஆயின தீர்க்க வல்லானை
ஒற்றை ஏற்றனை நெற்றிக்கண் ணானை
கான ஆனையின் கொம்பினை பீழ்ந்த
கள்ள பிள்ளைக்குங் காண்பரி தாய
வான நாடனை வாழ்கொளி புத்தூர்
மாணிக்க தைமற தென்நினை கேனே
காளை யாகி வரையெடு தான்றன்
கைகள் இற்றவன் மொய்தலை எல்லாம்
மூளை போத ஒருவிரல் வைத்த
மூர்த்தி யைமுதல் காண்பரி யானை
பாளை தெங்கு பழம்விழ மண்டி
செங்கண் மேதிகள் சேடெறி தெங்கும்
வாளை பாய்வயல் வாழ்கொளி புத்தூர்
மாணிக்க தைமற தென்நினை கேனே
திருந்த நான்மறை பாடவல் லானை
தேவர குந்தெரி தற்கரி யானை
பொருந்த மால்விடை ஏறவல் லானை
பூதி பைபுலி தோலுடை யானை
இருந்துண் தேரரும் நின்றுணுஞ் சமணும்
ஏச நின்றவன் ஆருயிர கெல்லாம்
மருந்த னான்றனை வாழ்கொளி புத்தூர்
மாணிக்க தைமற தென்நினை கேனே
மெய்யனை மெய்யின் நின்றுணர் வானை
மெய்யி லாதவர் தங்களு கெல்லாம்
பொய்ய னைப்புரம் மூன்றெரி தானை
புனித னைப்புலி தோலுடை யானை
செய்ய னைவெளி யதிரு நீற்றில்
திகழு மேனியன் மான்மறி ஏந்தும்
மைகொள் கண்டனை வாழ்கொளி புத்தூர்
மாணிக்க தைமற தென்நினை கேனே
வளங்கி ளர்பொழில் வாழ்கொளி புத்தூர்
மாணிக்க தைமற தென்நினை கேனென்
றுளங்கு ளிர்தமிழ் ஊரன்வன் றொண்டன்
சடையன் காதலன் வனப்பகை அப்பன்
நலங்கி ளர்வயல் நாவலர் வேந்தன்
நங்கை சிங்கடி தந்தை பயந்த
பலங்கி ளர்தமிழ் பாடவல் லார்மேல்
பறையு மாஞ்செய்த பாவங்கள் தானே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் மாணிக்கவண்ணர்
தேவியார் வண்டமர்பூங்குழலம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்கழுமலம்
பண் தக்கேசி
திருச்சிற்றம்பலம்
சாதலும் பிறத்தலு தவிர்த்தெனை வகுத்து
தன்னருள் தந்தஎ தலைவனை மலையின்
மாதினை மதித்தங்கோர் பால்கொண்ட மணியை
வருபுனல் சடையிடை வைத்தஎம் மானை
ஏதிலென் மனத்துக்கோர் இரும்புண்ட நீரை
எண்வகை ஒருவனை எங்கள்பி ரானை
காதில்வெண் குழையனை கடல்கொள மிதந்த
கழுமல வளநகர கண்டுகொண் டேனே
மற்றொரு துணையினி மறுமைக்குங் காணேன்
வருந்தலுற் றேன்மற வாவரம் பெற்றேன்
சுற்றிய சுற்றமு துணையென்று கருதேன்
துணையென்று நான்தொழ பட்டஒண் சுடரை
முத்தியும் ஞானமும் வானவர் அறியா
முறைமுறை பலபல நெறிகளுங் காட்டி
கற்பனை கற்பித்த கடவுளை அடியேன்
கழுமல வளநகர கண்டுகொண் டேனே
திருத்தினை நகர்உறை சேந்தன் அப்பன்என்
செய்வினை அறுத்திடுஞ் செம்பொனை அம்பொன்
ஒருத்தனை அல்லதிங் காரையும் உணரேன்
உணர்வுபெற் றேன்உய்யுங் காரண தன்னால்
விருத்தனை பாலனை கனவிடை விரவி
விழித்தெங்குங் காணமா டாதுவி டிருந்தேன்
கருத்தனை நிருத்தஞ்செய் காலனை வேலை
கழுமல வளநகர கண்டுகொண் டேனே
மழைக்கரும் பும்மலர கொன்றையி னானை
வளைக்கலுற் றேன்மற வாமனம் பெற்றேன்
பிழைத்தொரு கால்இனி போய்ப்பிற வாமை
பெருமைபெற் றேன்பெற்ற தார்பெறு கிற்பார்
குழைக்கருங் கண்டனை கண்டுகொள் வானே
பாடுகின் றேன்சென்று கூடவும் வல்லேன்
கழைக்கரும் புங்கத லிப்பல சோலை
கழுமல வளநகர கண்டுகொண் டேனே
குண்டலங் குழைதிகழ் காதனே என்றுங்
கொடுமழு வாட்படை குழகனே என்றும்
வண்டலம் பும்மலர கொன்றையன் என்றும்
வாய்வெரு வித்தொழு தேன்விதி யாலே
பண்டைநம் பலமன முங்களை தொன்றா
பசுபதி பதிவின விப்பல நாளுங்
கண்டலங் கழிக்கரை ஓதம்வ துலவுங்
கழுமல வளநகர கண்டுகொண் டேனே
வரும்பெரும் வல்வினை என்றிரு தெண்ணி
வருந்தலுற் றேன்மற வாமனம் பெற்றேன்
விரும்பிஎன் மனத்திடை மெய்குளிர பெய்தி
வேண்டிநின் றேதொழு தேன்விதி யாலே
அரும்பினை அலரினை அமுதினை தேனை
ஐயனை அறவனென் பிறவிவேர் அறுக்குங்
கரும்பினை பெருஞ்செந்நெல் நெருங்கிய கழனி
கழுமல வளநகர கண்டுகொண் டேனே
அயலவர் பரவவும் அடியவர் தொழவும்
அன்பர்கள் சாயலுள் அடையலுற் றிருந்தேன்
முயல்பவர் பின்சென்று முயல்வலை யானை
படுமென மொழிந்தவர் வழிமுழு தெண்ணி
புயலினை திருவினை பொன்னின தொளியை
மின்னின துருவை என்னிடை பொருளை
கயலினஞ் சேலொடு வயல்விளை யாடுங்
கழுமல வளநகர கண்டுகொண் டேனே
நினைதரு பாவங்கள் நாசங்க ளாக
நினைந்துமுன் தொழுதெழ பட்டஒண் சுடரை
மலைதரு மலைமகள் கணவனை வானோர்
மாமணி மாணிக்க தைம்மறை பொருளை
புனைதரு புகழினை எங்கள தொளியை
இருவரும் ஒருவனென் றுணர்வரி யவனை
கனைதரு கருங்கடல் ஓதம்வ துலவுங்
கழுமல வளநகர கண்டுகொண் டேனே
மறையிடை துணிந்தவர் மனையிடை இருப்ப
வஞ்சனை செய்தவர் பொய்கையும் மா
துறையுற குளித்துள தாகவை துய்த்த
உண்மை யெனுந்தக வின்மையை ஓரேன்
பிறையுடை சடையனை எங்கள்பி ரானை
பேரரு ளாளனை காரிருள் போன்ற
கறையணி மிடறுடை அடிகளை அடியேன்
கழுமல வளநகர கண்டுகொண் டேனே
செழுமலர கொன்றையுங் கூவிள மலரும்
விரவிய சடைமுடி அடிகளை நினைந்தி
டழுமலர கண்ணிணை அடியவர கல்லால்
அறிவரி தவன்றிரு வடியிணை இரண்டுங்
கழுமல வளநகர கண்டுகொண் டூரன்
சடையன்றன் காதலன் பாடிய பத்து
தொழுமலர் எடுத்தகை அடியவர் தம்மை
துன்பமும் இடும்பையுஞ் சூழகி லாவே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் பிரமபுரியீசுவரர்
தேவியார் திருநிலைநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவாரூர்
பண் தக்கேசி
திருச்சிற்றம்பலம்
பொன்னும் மெய்ப்பொரு ளுந்தரு வானை
போக முந்திரு வும்புணர பானை
பின்னை என்பிழை யைப்பொறு பானை
பிழையெ லாந்தவி ரப்பணி பானை
இன்ன தன்மையன் என்றறி வொண்ணா
எம்மா னைஎளி வந்தபி ரானை
அன்னம் வைகும் வயற்பழ னத்தணி
ஆரூ ரானை மறக்கலு மாமே
கட்ட மும்பிணி யுங்களை வானை
காலற் சீறிய காலுடை யானை
விட்ட வேட்கைவெ நோய்களை வானை
விரவி னால்விடு தற்கரி யானை
பட்ட வார்த்தை படநின்ற
வாரா மேதவி ரப்பணி பானை
அட்ட மூர்த்தியை மட்டவிழ் சோலை
ஆரூ ரானை மறக்கலு மாமே
கார்க்குன் றமழை யாய்ப்பொழி வானை
கலைக்கெ லாம்பொரு ளாயுடன் கூடி
பார்க்கின் றஉயிர குப்பரி தானை
பகலுங் கங்குலும் ஆகிநின் றானை
ஓர்க்கின் றசெவி யைச்சுவை தன்னை
உணரும் நாவினை காண்கின்ற கண்ணை
ஆர்க்கின் றகட லைமலை தன்னை
ஆரூ ரானை மறக்கலு மாமே
செத்த போதினில் முன்னின்று நம்மை
சிலர்கள் கூடி சிரிப்பதன் முன்னம்
வைத்த சிந்தைஉண் டேமனம் உண்டே
மதிஉண் டேவிதி யின்பயன் உண்டே
முத்தன் எங்கள்பி ரானென்று வானோர்
தொழநின் றதிமில் ஏறுடை யானை
அத்தன் எந்தைபி ரான்எம்பி ரானை
ஆரூ ரானை மறக்கலு மாமே
செறிவுண் டேல்மன தாற்றெளி வுண்டேல்
தேற்ற தால்வருஞ் சிக்கன வுண்டேல்
மறிவுண் டேல்மறு மைப்பிற புண்டேல்
வாணாள் மேற்செல்லும் வஞ்சனை உண்டேல்
பொறிவண் டாழ்செய்யும் பொன்மலர கொன்றை
பொன்போ லுஞ்சடை மேற்புனை தானை
அறிவுண் டேஉட லத்துயிர் உண்டே
ஆரூ ரானை மறக்கலு மாமே
பொள்ளல் இவ்வுட லைப்பொரு ளென்று
பொருளுஞ் சுற்றமும் போகமும் ஆகி
மெள்ள நின்றவர் செய்வன எல்லாம்
வாரா மேதவிர கும்விதி யானை
வள்ளல் எந்த கேதுணை என்று
நாள்நா ளும்அம ரர்தொழு தேத்தும்
அள்ள லங்கழ னிப்பழ னத்தணி
ஆரூ ரானை மறக்கலு மாமே
கரியா னைஉரி கொண்டகை யானை
கண்ணின் மேலொரு கண்ணுடை யானை
வரியா னைவரு தங்களை வானை
மறையா னைக்குறை மாமதி சூடற்
குரியா னைஉல கத்துயிர கெல்லாம்
ஒளியா னைஉக துள்கிநண் ணாதார
கரியா னைஅடி யேற்கெளி யானை
ஆரூ ரானை மறக்கலு மாமே
வாளா நின்று தொழும்அடி யார்கள்
வான்ஆ ளப்பெறும் வார்த்தையை கேட்டும்
நாணா ளும்மலர் இட்டுவணங் கார்
நம்மை ஆள்கின்ற தன்மையை ஓரார்
கேளா நான்கிட தேஉழை கின்றேன்
கிளைக்கெ லாந்துணை யாமென கருதி
ஆளா வான்பலர் முன்பழை கின்றேன்
ஆரூ ரானை மறக்கலு மாமே
விடக்கை யேபெரு கிப்பல நாளும்
வேட்கை யாற்பட்ட வேதனை தன்னை
கடக்கி லேன்நெறி காணவும் மாட்டேன்
கண்கு ழிந்திர பார்கையி லொன்றும்
இடக்கி லேன்பர வைத்திரை கங்கை
சடையா னைஉமை யாளையோர் பாக
தடக்கி னானைஅ தாமரை பொய்கை
ஆரூ ரானை மறக்கலு மாமே
ஒட்டி ஆட்கொண்டு போயொளி திட்ட
உச்சி போதனை நச்சர வார்த்த
பட்டி யைப்பக லையிருள் தன்னை
பாவி பார்மன தூறு தேனை
கட்டி யைக்கரும் பின்றெளி தன்னை
காத லாற்கடல் சூர்தடி திட்ட
செட்டி யப்பனை பட்டனை செல்வ
ஆரூ ரானை மறக்கலு மாமே
ஓரூ ரென்றுல கங்களு கெல்லாம்
உரைக்க லாம்பொரு ளாயுடன் கூடி
காரூ ருங்கமழ் கொன்றைநன் மாலை
முடியன் காரிகை காரண மாக
ஆரூ ரைம்மற தற்கரி யானை
அம்மான் றன்றிரு பேர்கொண்ட தொண்டன்
ஆரூ ரன்னடி நாயுரை வல்லார்
அமர லோக திருப்பவர் தாமே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவிடைமருதூர்
பண் தக்கேசி
திருச்சிற்றம்பலம்
கழுதை குங்கு தான்சு தெய்த்தாற்
கைப்பர் பாழ்புக மற்றது போல
பழுது நான்உழன் றுள்தடு மாறி
படுசு ழித்தலை பட்டனன் எந்தாய்
அழுது நீயிரு தென்செய்தி மனனே
அங்க ணாஅர னேயென மாட்டா
இழுதை யேனுக்கோர் உய்வகை அருளாய்
இடைம ருதுறை எந்தைபி ரானே
நரைப்பு மூப்பொடு பிணிவரும் இன்னே
நன்றி யில்வினை யேதுணி தெய்த்தேன்
அரைத்த மஞ்சள தாவதை அறிந்தேன்
அஞ்சி னேன்நம னாரவர் தம்மை
உரைப்பன் நானுன சேவடி சேர
உணரும் வாழ்க்கையை ஒன்றறி யாத
இரைப்ப னேனுக்கோர் உய்வகை அருளாய்
இடைம ருதுறை எந்தைபி ரானே
புன்னு னைப்பனி வெங்கதிர் கண்டாற்
போலும் வாழ்க்கை பொருளிலை நாளும்
என்னெ னக்கினி இற்றைக்கு நாளை
என்றி ருந்திடர் உற்றனன் எந்தாய்
முன்ன மேஉன சேவடி சேரா
மூர்க்க னாகி கழிந்தன காலம்
இன்னம் என்றன குய்வகை அருளாய்
இடைம ருதுறை எந்தைபி ரானே
முந்தி செய்வினை இம்மைக்கண் நலிய
மூர்க்க னாகி கழிந்தன காலம்
சிந்தி தேமனம் வைக்கவும் மாட்டேன்
சிறுச்சிறி தேஇர பார்கட்கொன் றீயேன்
அந்தி வெண்பிறை சூடும்எம் மானே
ஆரூர் மேவிய அமரர்கள் தலைவா
எந்தை நீயென குய்வகை அருளாய்
இடைம ருதுறை எந்தைபி ரானே
அழிப்பர் ஐவர் புரவுடை யார்கள்
ஐவ ரும்புர வாசற ஆண்டு
கழித்து காற்பெய்து போயின பின்னை
கடைமு றைஉன கேபொறை ஆனேன்
விழித்து கண்டனன் மெய்ப்பொருள் தன்னை
வேண்டேன் மானுட வாழ்க்கையீ தாகில்
இழித்தேன் என்றன குய்வகை அருளாய்
இடைம ருதுறை எந்தைபி ரானே
குற்ற தன்னொடு குணம்பல பெருக்கி
கோல நுண்ணிடை யாரொடு மயங்கி
கற்றி லேன்கலை கள்பல ஞானங்
கடிய ஆயின கொடுமைகள் செய்தேன்
பற்ற லாவதோர் பற்றுமற் றில்லேன்
பாவி யேன்பல பாவங்கள் செய்தேன்
எற்று ளேன்என குய்வகை அருளாய்
இடைம ருதுறை எந்தைபி ரானே
கொடுக்க கிற்றிலேன் ஒண்பொருள் தன்னை
குற்றஞ் செற்றம் இவைமுத லாக
விடுக்க கிற்றிலேன் வேட்கையுஞ் சினமும்
வேண்டில் ஐம்புலன் என்வசம் அல்ல
நடுக்கம் உற்றதோர் மூப்புவ தெய்த
நமன்த மர்நர கத்திடல் அஞ்சி
இடுக்கண் உற்றனன் உய்வகை அருளாய்
இடைம ருதுறை எந்தைபி ரானே
ஐவ கையர் ஐயரவ ராகி
ஆட்சி கொண்டொரு காலவர் நீங்கார்
அவ்வ கையவர் வேண்டுவ தானால்
அவர வர்வழி ஒழுகிநான் வந்து
செய்வ கையறி யேன்சிவ லோகா
தீவ ணாசிவ னேயெரி யாடீ
எவ்வ கையென குய்வகை அருளாய்
இடைம ருதுறை எந்தைபி ரானே
ஏழை மானுட இன்பினை நோக்கி
இளைய வர்வ பட்டிரு தின்னம்
வாழை தான்பழு கும்ந கென்று
வஞ்ச வல்வினை யுள்வலை பட்டு
கூழை மாந்தர்தஞ் செல்கதி பக்கம்
போக மும்பொருள் ஒன்றறி யாத
ஏழை யேனுக்கோர் உய்வகை அருளாய்
இடைம ருதுறை எந்தைபி ரானே
அரைக்குஞ் சந்தன தோடகில் உந்தி
ஐவ னஞ்சு தார்த்திரு பாலும்
இரைக்குங் காவிரி தென்கரை தன்மேல்
இடைம ருதுறை எந்தைபி ரானை
உரைக்கும் ஊரன் ஒளிதிகழ் மாலை
உள்ள தால்உக தேத்தவல் லார்கள்
நரைப்பு மூப்பொடு நடலையும் இன்றி
நாதன் சேவடி நண்ணுவர் தாமே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் மருதீசுவரர் தேவியார் நலமுலைநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவேகம்பம்
பண் தக்கேசி
திருச்சிற்றம்பலம்
ஆல தானுக தமுதுசெய் தானை
ஆதி யைஅம ரர்தொழு தேத்துஞ்
சீல தான்பெரி தும்முடை யானை
சிந்தி பாரவர் சிந்தையு ளானை
ஏல வார்குழ லாள்உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபட பெற்ற
கால காலனை கம்பனெம் மானை
காண கண்அடி யேன்பெற்ற வாறே
உற்ற வர்க்குத வும்பெரு மானை
ஊர்வ தொன்றுடை யான்உம்பர் கோனை
பற்றி னார்க்கென்றும் பற்றவன் றன்னை
பாவி பார்மனம் பரவிக்கொண் டானை
அற்ற மில்புக ழாள்உமை நங்கை
ஆத ரித்து வழிபட பெற்ற
கற்றை வார்சடை கம்பனெம் மானை
காண கண்அடி யேன்பெற்ற வாறே
திரியும் முப்புரம் தீப்பிழம் பாக
செங்கண் மால்விடை மேற்றிகழ் வானை
கரியின் ஈருரி போர்த்துக தானை
காம னைக்கன லாவிழி தானை
வரிகொள் வெள்வளை யாள்உமை நங்கை
மருவி யேத்தி வழிபட பெற்ற
பெரிய கம்பனை எங்கள்பி ரானை
காண கண்அடி யேன்பெற்ற வாறே
காமாட்சியம்மையால் பூசிக்கப்பட்ட ஏகாம்பர
நாதரே பெரியகம்பர்
குண்ட லந்திகழ் காதுடை யானை
கூற்று தைத்த கொடுந்தொழி லானை
வண்டலம் புமலர கொன்றையி னானை
வாள ராமதி சேர்சடை யானை
கெண்டை யந்தடங் கண்ணுமை நங்கை
கெழுமி யேத்தி வழிபட பெற்ற
கண்டம் நஞ்சுடை கம்பனெம் மானை
காண கண்அடி யேன்பெற்ற வறே
வெல்லும் வெண்மழு ஒன்றுடை யானை
வேலை நஞ்சுண்ட வித்தகன் றன்னை
அல்லல் தீர்த்தருள் செய்யவல் லானை
அரும றையவை அங்கம்வல் லானை
எல்லை யிற்புக ழாள்உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபட பெற்ற
நல்ல கம்பனை எங்கள் பிரானை
காண கண்அடி யேன்பெற்ற வாறே
உருத்திரராற் பூசிக்கப்பட்ட சிவலிங்க பெருமானுக்கு
நல்லகம்பனென்றுபெயர்
திங்கள் தங்கிய சடையுடை யானை
தேவ தேவனை செழுங்கடல் வளருஞ்
சங்க வெண்குழை காதுடை யானை
சாம வேதம் பெரிதுக பானை
மங்கை நங்கை மலைமகள் கண்டு
மருவி ஏத்தி வழிபட பெற்ற
கங்கை யாளனை கம்பனெம் மானை
காண கண்அடி யேன்பெற்ற வாறே
விண்ண வர்தொழு தேத்தநின் றானை
வேத தான்விரி தோதவல் லானை
நண்ணி னார்க்கென்றும் நல்லவன் றன்னை
நாளும் நாம்உ கின்றபி ரானை
எண்ணில் தொல்புக ழாள்உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபட பெற்ற
கண்ணும் மூன்றுடை கம்பனெம் மானை
காண கண்அடி யேன்பெற்ற வாறே
சிந்தி தென்றும் நினைந்தெழு வார்கள்
சிந்தை யில்திக ழுஞ்சிவன் றன்னை
பந்தி தவினை பற்றறு பானை
பாலோ டானஞ்சும் ஆட்டுக தானை
அந்த மில்புக ழாள்உமை நங்கை
ஆத ரித்து வழிபட பெற்ற
கந்த வார்சடை கம்பனெம் மானை
காண கண்அடி யேன்பெற்ற வாறே
வரங்கள் பெற்றுழல் வாளர கர்தம்
வாலி யபுரம் மூன்றெரி தானை
நிரம்பி யதக்கன் றன்பெரு வேள்வி
நிரந்த ரஞ்செய்த நிட்கண் டகனை
பரந்த தொல்புக ழாள்உமை நங்கை
பரவி யேத்தி வழிபட பெற்ற
கரங்கள் எட்டுடை கம்பனெம் மானை
காண கண்அடி யேன்பெற்ற வாறே
எள்க லின்றி இமையவர் கோனை
ஈச னைவழி பாடுசெய் வாள்போல்
உள்ள துள்கி உகந்துமை நங்கை
வழிபட சென்று நின்றவா கண்டு
வெள்ளங் காட்டி வெருட்டிட அஞ்சி
வெருவி ஓடி தழுவவெளி பட்ட
கள்ள கம்பனை எங்கள் பிரானை
காண கண்அடி யேன்பெற்ற வாறே
திருமாலாற் பூசிக்கப்பட்ட சிவலிங்க
பெருமானுக்கு கள்ளக்கம்பனென்றுபெயர்
பெற்றம் ஏறுக தேறவல் லானை
பெரிய எம்பெரு மானென்றெ போதுங்
கற்ற வர்பர வப்படு வானை
காண கண்அடி யேன்பெற்ற தென்று
கொற்ற வன்கம்பன் கூத்தனெம் மானை
குளிர்பொ ழிற்றிரு நாவலா ரூரன்
நற்ற மிழ்இவை ஈரைந்தும் வல்லார்
நன்னெ றிஉல கெய்துவர் தாமே
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் ஏகாம்பரநாதர் தேவியார் காமாட்சியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்கோலக்கா
பண் தக்கேசி
திருச்சிற்றம்பலம்
புற்றில் வாளர வார்த்த பிரானை
பூத நாதனை பாதமே தொழுவார்
பற்று வான்துணை எனக்கெளி வந்த
பாவ நாசனை மேவரி யானை
முற்ற லார்திரி புரமொரு மூன்றும்
பொன்ற வென்றிமால் வரைஅரி அம்பா
கொற்ற வில்லங்கை ஏந்திய கோனை
கோல காவினிற் கண்டுகொண் டேனே
அங்கம் ஆறும்மா மறைஒரு நான்கும்
ஆய நம்பனை வேய்புரை தோளி
தங்கு மாதிரு உருவுடை யானை
தழல்ம திச்சடை மேற்புனை தானை
வெங்கண் ஆனையின் ஈருரி யானை
விண்ணு ளாரொடு மண்ணுளார் பரசுங்
கொங்கு லாம்பொழிற் குரவெறி கமழுங்
கோல காவினிற் கண்டுகொண் டேனே
பாட்ட கத்திசை யாகிநின் றானை
பத்தர் சித்தம் பரிவினி யானை
நாட்ட கத்தேவர் செய்கையு ளானை
நட்ட மாடியை நம்பெரு மானை
காட்ட கத்துறு புலியுரி யானை
கண்ணோர் மூன்றுடை அண்ணலை அடியேன்
கோட்ட கப்புன லார்செழுங் கழனி
கோல காவினிற் கண்டுகொண் டேனே
ஆத்தம் என்றெனை ஆளுக தானை
அமரர் நாதனை குமரனை பயந்த
வார்த்த யங்கிய முலைமட மானை
வைத்து வான்மிசை கங்கையை கரந்த
தீர்த்த னைச்சிவ னைச்செழு தேனை
தில்லை அம்பல துள்நிறை தாடுங்
கூத்த னைக்குரு மாமணி தன்னை
கோல காவினிற் கண்டுகொண் டேனே
அன்று வந்தெனை அகலிட தவர்முன்
ஆள தாகஎன் றாவணங் காட்டி
நின்று வெண்ணெய்நல் லூர்மிசை ஒளித்த
நித்தி லத்திரள் தொத்தினை முத்தி
கொன்றி னான்றனை உம்பர் பிரானை
உயரும் வல்லர ணங்கெட சீறுங்
குன்ற வில்லியை மெல்லிய லுடனே
கோல காவினிற் கண்டுகொண் டேனே
காற்று தீப்புன லாகிநின் றானை
கடவு ளைக்கொடு மால்விடை யானை
நீற்று தீயுரு வாய்நிமிர தானை
நிரம்பு பல்கலை யின்பொ ருளாலே
போற்றி தன்கழல் தொழுமவன் உயிரை
போக்கு வான்உயிர் நீக்கிட தாளாற்
கூற்றை தீங்குசெய் குரைகழ லானை
கோல காவினிற் கண்டுகொண் டேனே
அன்ற யன்சிரம் அரிந்ததிற் பலிகொண்
டமர ருக்கருள் வெளிப்படு தானை
துன்று பைங்கழ லிற்சிலம் பார்த்த
சோதி யைச்சுடர் போலொளி யானை
மின்ற யங்கிய இடைமட மங்கை
மேவும் ஈசனை வாசமா முடிமேற்
கொன்றை யஞ்சடை குழகனை அழகார்
கோல காவினிற் கண்டுகொண் டேனே
நாளும் இன்னிசை யாற்றமிழ் பரப்பும்
ஞான சம்பந்த னுக்குல கவர்முன்
தாளம் ஈந்தவன் பாடலு கிரங்கு
தன்மை யாளனை என்மன கருத்தை
ஆளும் பூதங்கள் பாடநின் றாடும்
அங்க ணன்றனை எண்கணம் இறைஞ்சுங்
கோளி லிப்பெருங் கோயிலுள் ளானை
கோல காவினிற் கண்டுகொண் டேனே
அரக்கன் ஆற்றலை அழித்தவன் பாட்டு
கன்றி ரங்கிய வென்றியி னானை
பரக்கும் பாரளி துண்டுக தவர்கள்
பரவி யும்பணி தற்கரி யானை
சிரக்கண் வாய் செவி மூக்குயர் காயம்
ஆகி தீவினை தீர்த்தஎம் மானை
குரக்கி னங்குதி கொண்டுகள் வயல்சூழ்
கோல காவினிற் கண்டுகொண் டேனே
கோட ரம்பயில் சடையுடை கரும்பை
கோல காவுளெம் மானைமெய்ம் மான
பாட ரங்குடி அடியவர் விரு
பயிலும் நாவலா ரூரன்வன் றொண்டன்
நாடி ரங்கிமுன் அறியு நெறியால்
நவின்ற பத்திவை விளம்பிய மாந்தர்
காட ரங்கென நடம்நவின் றான்பாற்
கதியும் எய்துவர் பதியவர கதுவே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் சத்தபுரீசுவரர் தேவியார் ஓசைகொடுத்தநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

நம்பி என்ற திருப்பதிகம்
பண் தக்கேசி
திருச்சிற்றம்பலம்
மெய்யைமுற் றப்பொடி பூசியோர் நம்பி
வேதம்நான் கும்விரி தோதியோர் நம்பி
கையிலோர் வெண்மழு ஏந்தியோர் நம்பி
கண்ணு மூன்றுடை யாயொரு நம்பி
செய்யநம் பிசிறு செஞ்சடை நம்பி
திரிபுர தீயெழ செற்றதோர் வில்லால்
எய்தநம் பியென்னை ஆளுடை நம்பி
எழுபிற பும்எங்கள் நம்பிகண் டாயே
திங்கள் நம்பிமுடி மேலடி யார்பால்
சிறந்தநம் பிபிற தஉயிர கெல்லாம்
அங்கண் நம்பியருள் மால்விசும் பாளும்
அமரர் நம்பிகும ரன்முதல் தேவர்
தங்கள் நம்பிதவ துக்கொரு நம்பி
தாதை என்றுன் சரண்பணி தேத்தும்
எங்கள் நம்பிஎன்னை ஆளுடை நம்பி
எழுபிற பும்எங்கள் நம்பிகண் டாயே
வருந்த அன்றுமத யானை உரித்த
வழக்கு நம்பிமுழ குங்கடல் நஞ்சம்
அருந்தும் நம்பிஅம ரர்க்கமு தீந்த
அருளென் நம்பிபொரு ளால்வரு நட்டம்
புரிந்த நம்பிபுரி நூலுடை நம்பி
பொழுதும் விண்ணும்முழு தும்பல வாகி
இருந்த நம்பிஎன்னை ஆளுடை நம்பி
எழுபிற பும்எங்கள் நம்பிகண் டாயே
ஊறு நம்பிஅமு தாஉயிர கெல்லாம்
உரிய நம்பிதெரி யம்மறை அங்கங்
கூறு நம்பிமுனி வர்க்கருங் கூற்றை
குமைத்த நம்பிகுமை யாப்புலன் ஐந்துஞ்
சீறு நம்பிதிரு வெள்ளடை நம்பி
செங்கண்வெள் ளைச்செழுங் கோட்டெரு தென்றும்
ஏறு நம்பிஎன்னை ஆளுடை நம்பி
எழுபிற பும்எங்கள் நம்பிகண் டாயே
குற்ற நம்பிகுறு காரெயில் மூன்றை
குலைத்த நம்பிசிலை யாவரை கையிற்
பற்று நம்பிபர மானந்த வெள்ளம்
பணிக்கும் நம்பிஎன பாடுத லல்லால்
மற்று நம்பிஉன கென்செய வல்லேன்
மதியி லேன்படு வெந்துயர் எல்லாம்
எற்று நம்பிஎன்னை ஆளுடை நம்பி
எழுபிற பும்எங்கள் நம்பிகண் டாயே
அரித்த நம்பிஅடி கைதொழு வார்நோய்
ஆண்ட நம்பிமுன்னை ஈண்டுல கங்கள்
தெரித்த நம்பிஒரு சேவுடை நம்பி
சில்பலி கென்றக தோறுமெய் வேட
தரித்த நம்பிசம யங்களின் நம்பி
தக்கன்றன் வேள்விபு கன்றிமை யோரை
இரித்த நம்பிஎன்னை ஆளுடை நம்பி
எழுபிற பும்எங்கள் நம்பிகண் டாயே
பின்னை நம்பும்பு தான்நெடு மாலும்
பிரமனும் என்றிவர் நாடியுங் காணா
உன்னை நம்பிஒரு வர்க்கெய்த லாமே
உலகு நம்பிஉரை செய்யும தல்லால்
முன்னைநம் பிபின்னும் வார்சடை நம்பி
முழுதிவை இத்தனை யுந்தொகு தாண்ட
தென்னை நம்பிஎம் பிரானாய நம்பி
எழுபிற பும்எங்கள் நம்பிகண் டாயே
சொல்லை நம்பிபொரு ளாய்நின்ற நம்பி
தோற்றம் ஈறுமுத லாகிய நம்பி
வல்லை நம்பிஅடி யார்க்கருள் செய்ய
வருந்தி நம்பிஉன காட்செய கில்லார்
அல்லல் நம்பிபடு கின்றதென் நாடி
அணங்கொரு பாகம்வை தெண்கணம் போற்ற
இல்ல நம்பியிடு பிச்சைகொள் நம்பி
எழுபிற பும்எங்கள் நம்பிகண் டாயே
காண்டு நம்பிகழற் சேவடி என்றுங்
கலந்துனை காதலி தாட்செய்கிற் பாரை
ஆண்டு நம்பியவர் முன்கதி சேர
அருளும் நம்பிகுரு மாப்பிறை பாம்பை
தீண்டுநம் பிசென்னி யிற்கன்னி தங்க
திருத்து நம்பிபொ சமண்பொரு ளாகி
ஈண்டு நம்பிஇமை யோர்தொழு நம்பி
எழுபிற பும்எங்கள் நம்பிகண் டாயே
கரக்கும் நம்பிகசி யாதவர் தம்மை
கசிந்தவர கிம்மையோ டம்மையில் இன்பம்
பெருக்கும் நம்பி பெரு கருத்தா


இச்செய்யுளின் பிற்பகுதி சிதைந்து போயிற்று
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருத்தினை நகர்
பண் தக்கேசி
திருச்சிற்றம்பலம்
நீறு தாங்கிய திருநுத லானை
நெற்றி கண்ணனை நிரைவளை மடந்தை
கூறு தாங்கிய கொள்கையி னானை
குற்றம் இல்லியை கற்றையஞ் சடைமேல்
ஆறு தாங்கிய அழகனை அமரர
கரிய சோதியை வரிவரால் உகளுஞ்
சேறு தாங்கிய திருத்தினை நகரு
சிவக்கொ ழுந்தினை சென்றடை மனனே
பிணிகொள் ஆக்கை பிறப்பிற பென்னும்
இதனைநீக்கி ஈசன் திருவடி யிணைக்காள்
துணிய வேண்டிடிற் சொல்லுவன் கேள்நீ
அஞ்சல் நெஞ்சமே வஞ்சர்வாழ் மதின்மூன்
றணிகொள் வெஞ்சிலை யால்உக சீறும்
ஐயன் வையகம் பரவிநின் றேத்து
திணியும் வார்பொழில் திருத்தினை நகரு
சிவக்கொ ழுந்தினை சென்றடை மனனே
வடிகொள் கண்ணிணை மடந்தையர் தம்பால்
மயல துற்றுவஞ் சனைக்கிட மாகி
முடியு மாகரு தேலெரு தேறும்
மூர்த்தி யைமுத லாயபி ரானை
அடிகள் என்றடி யார்தொழு தேத்தும்
அப்பன் ஒப்பிலா முலைஉமை கோனை
செடிகொள் கான்மலி திருத்தினை நகரு
சிவக்கொ ழுந்தினை சென்றடை மனனே
பாவ மேபுரி தகலிட தன்னிற்
பலப கர்ந்தல மந்துயிர் வாழ்க்கை
காவ என்றுழ தயர்ந்துவீ ழாதே
அண்ணல் தன்றிறம் அறிவினாற் கருதி
மாவின் ஈருரி உடைபுனை தானை
மணியை மைந்தனை வானவர கமுதை
தேவ தேவனை திருத்தினை நகரு
சிவக்கொ ழுந்தினை சென்றடை மனனே
ஒன்ற லாவுயிர் வாழ்க்கையை நினைந்தி
டுடல்த ளர்ந்தரு மாநிதி இயற்றி
என்றும் வாழலாம் எமக்கென பேசும்
இதுவும் பொய்யென வேநினை உளமே
குன்று லாவிய புயமுடை யானை
கூத்த னைக்குலா விக்குவ லயத்தோர்
சென்றெ லாம்பயில் திருத்தினை நகரு
சிவக்கொ ழுந்தினை சென்றடை மனனே
வேந்த ராயுல காண்டறம் புரிந்து
வீற்றி ருந்தஇவ் வுடலிது தன்னை
தேய்ந்தி றந்துவெ துயருழ திடுமி
பொக்க வாழ்வினை விட்டிடு நெஞ்சே