திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த
தேவார பதிகங்கள்
ஆறாம் திருமுறை முதற் பகுதி
பாடல்கள்
உள்ளுறை
கோயில் மின்பதிப்பு
கோயில் மின்பதிப்பு
திருவீரட்டானம் மின்பதிப்பு
திருவதிகைவீரட்டானம் மின்பதிப்பு
திருவீரட்டானம் மின்பதிப்பு
திருவதிகைவீரட்டானம் மின்பதிப்பு
திருவீரட்டானம் மின்பதிப்பு
திருக்காளத்தி மின்பதிப்பு
திருஆமாத்தூர் மின்பதிப்பு
திருப்பந்தணைநல்லூர் மின்பதிப்பு
திருப்புன்கூர் திருநீடூர் மின்பதிப்பு
திருக்கழிப்பாலை மின்பதிப்பு
திருப்புறம்பயம் மின்பதிப்பு
திருநல்லூர் மின்பதிப்பு
திருக்கருகாவூர் மின்பதிப்பு
திருவிடைமருது மின்பதிப்பு
திருவிடைமருது மின்பதிப்பு
திருப்பூவணம் மின்பதிப்பு
திருவாலவாய் மின்பதிப்பு
திருநள்ளாறு மின்பதிப்பு
திருவாக்கூர் மின்பதிப்பு
திருநாகைக்காரோணம் மின்பதிப்பு
திருமறைக்காடு மின்பதிப்பு
திருவாரூர் மின்பதிப்பு
திருவாரூர் மின்பதிப்பு
திருவாரூர் மின்பதிப்பு
திருவாரூர் மின்பதிப்பு
திருவாரூர் மின்பதிப்பு
திருவாரூர் மின்பதிப்பு
திருவாரூர் மின்பதிப்பு
திருவாரூர் மின்பதிப்பு
திருவாரூர் மின்பதிப்பு
திருவாரூர் மின்பதிப்பு
திருவாரூர் மின்பதிப்பு
திருவெண்காடு மின்பதிப்பு
திருப்பழனம் மின்பதிப்பு
திருவையாறு மின்பதிப்பு
திருவையாறு மின்பதிப்பு
திருமழபாடி மின்பதிப்பு
திருமழபாடி மின்பதிப்பு
திருநெய்த்தானம் மின்பதிப்பு
திருநெய்த்தானம் மின்பதிப்பு
திருப்பூந்துருத்தி மின்பதிப்பு
திருச்சோற்றுத்துறை மின்பதிப்பு
திருவொற்றியூர் மின்பதிப்பு
திருஆவடுதுறை மின்பதிப்பு
திருஆவடுதுறை மின்பதிப்பு
திருவலிவலம் மின்பதிப்பு
திருக்கோகரணம் மின்பதிப்பு
திருவீழிமிழலை மின்பதிப்பு

கோயில் பெரியதிருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
அரியானை அந்தணர்தஞ் சிந்தை யானை
அருமறையி னகத்தானை அணுவை யார்க்கு
தெரியாத தத்துவனை தேனை பாலை
திகழொளியை தேவர்கள்தங் கோனை மற்றை
கரியானை நான்முகனை கனலை காற்றை
கனைகடலை குலவரையை கலந்து நின்ற
பெரியானை பெரும்பற்ற புலியூ ரானை
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே
கற்றானை கங்கைவார் சடையான் றன்னை
காவிரிசூழ் வலஞ்சுழியுங் கருதி னானை
அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள்செய் வானை
ஆரூரும் புகுவானை அறிந்தோ மன்றே
மற்றாரு தன்னொப்பா ரில்லா தானை
வானவர்க ளெப்பொழுதும் வணங்கி யேத்த
பெற்றானை பெரும்பற்ற புலியூ ரானை
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே
கருமானின் உரியதளே உடையா வீக்கி
கனைகழல்கள் கலந்தொலிப்ப அனல்கை யேந்தி
வருமான திரள்தோள்கள் மட்டி தாட
வளர்மதியஞ் சடைக்கணிந்து மானேர் நோக்கி
அருமான வாண்முகத்தா ளமர்ந்து காண
அமரர்கணம் முடிவணங்க ஆடு கின்ற
பெருமானை பெரும்பற்ற புலியூ ரானை
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே
அருந்தவர்கள் தொழுதேத்தும் அப்பன் றன்னை
அமரர்கள்தம் பெருமானை அரனை மூவா
மருந்தமரர கருள்புரிந்த மைந்தன் றன்னை
மறிகடலுங் குலவரையும் மண்ணும் விண்ணு
திருந்தொளிய தாரகையு திசைக ளெட்டு
திரிசுடர்கள் ஓரிரண்டும் பிறவு மாய
பெருந்தகையை பெரும்பற்ற புலியூ ரானை
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே
அருந்துணையை அடியார்தம் அல்லல் தீர்க்கும்
அருமருந்தை அகல்ஞால தகத்துள் தோன்றி
வருந்துணையுஞ் சுற்றமும் பற்றும் விட்டு
வான்புலன்கள் அகத்தடக்கி மடவா ரோடும்
பொருந்தணைமேல் வரும்பயனை போக மாற்றி
பொதுநீக்கி தனைநினைய வல்லோர கென்றும்
பெருந்துணையை பெரும்பற்ற புலியூ ரானை
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே
கரும்பமரும் மொழிமடவாள் பங்கன் றன்னை
கனவயிர குன்றனைய காட்சி யானை
அரும்பமரும் பூங்கொன்றை தாரான் றன்னை
அருமறையோ டாறங்க மாயி னானை
சுரும்பமருங் கடிபொழில்கள் சூழ்தென் னாரூர
சுடர்க்கொழுந்தை துளக்கில்லா விளக்கை மிக்க
பெரும்பொருளை பெரும்பற்ற புலியூ ரானை
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே
வரும்பயனை எழுநரம்பி னோசை யானை
வரைசிலையா வானவர்கள் முயன்ற வாளி
அரும்பயஞ்செ யவுணர்புர மெரி கோத்த
அம்மானை அலைகடல்நஞ் சயின்றான் றன்னை
சுரும்பமருங் குழல்மடவார் கடைக்கண் நோக்கிற்
துளங்காத சிந்தையரா துறந்தோ ருள்ள
பெரும்பயனை பெரும்பற்ற புலியூ ரானை
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே
காரானை ஈருரிவை போர்வை யானை
காமருபூங் கச்சியே கம்பன் றன்னை
ஆரேனு மடியவர்க கணியான் றன்னை
அமரர்களு கறிவரிய அளவி லானை
பாரோரும் விண்ணோரும் பணிய நட்டம்
பயில்கின்ற பரஞ்சுடரை பரனை எண்ணில்
பேரானை பெரும்பற்ற புலியூ ரானை
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே
முற்றாத பால்மதியஞ் சூடினானை
மூவுலகு தானாய முதல்வன் றன்னை
செற்றார்கள் புரமூன்றுஞ் செற்றான் றன்னை
திகழொளியை மரகதத்தை தேனை பாலை
குற்றால தமர்ந்துறையுங் குழகன் றன்னை
கூத்தாட வல்லானை கோனை ஞானம்
பெற்றானை பெரும்பற்ற புலியூ ரானை
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே
காரொளிய திருமேனி செங்கண் மாலுங்
கடிக்கமல திருந்தயனுங் காணா வண்ணஞ்
சீரொளிய தழற்பிழம்பாய் நின்ற தொல்லை
திகழொளியை சிந்தைதனை மயக்க தீர்க்கும்
ஏரொளியை இருநிலனும் விசும்பும் விண்ணும்
ஏழுலகுங் கடந்தண்ட தப்பால் நின்ற
பேரொளியை பெரும்பற்ற புலியூ ரானை
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

கோயில் புக்கதிருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
மங்குல் மதிதவழும் மாட வீதி
மயிலாப்பி லுள்ளார் மருக
கொங்கிற் கொடுமுடியார் குற்றா லத்தார்
குடமூக்கி லுள்ளார்போ கொள்ளம் பூதூர
தங்கு மிடமறியார் சால நாளார்
தரும புரத்துள்ளார் தக்க ளூரார்
பொங்குவெண் ணீறணிந்து பூதஞ் சூழ
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே
நாக மரைக்கசைத்த நம்ப ரிந்நாள்
நனிபள்ளி யுள்ளார்போய் நல்லூர தங்கி
பாக பொழுதெல்லாம் பாசூர தங்கி
பரிதி நியமத்தார் பன்னி ருநாள்
வேதமும் வேள்வி புகையு மோவா
விரிநீர் மிழலை எழுநாள் தங்கி
போகமும் பொய்யா பொருளு மானார்
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே
துறங்காட்டி யெல்லாம் விரித்தார் போலு
தூமதியும் பாம்பு முடையார் போலும்
மறங்காட்டி மும்மதிலு மெய்தார் போலும்
மந்திரமு தந்திரமு தாமே போலும்
அறங்காட்டி அந்தணர்க்கன் றால நீழல்
அறமருளி செய்த அரனா ரிந்நாள்
புறங்கா டெரியாடி பூதஞ் சூழ
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே
வாரேறு வனமுலையாள் பாக மாக
மழுவாள்கை யேந்தி மயான தாடி
சீரேறு தண்வயல்சூழ் ஓத வேலி
திருவாஞ்சி யத்தார் திருநள் ளாற்றார்
காரேறு கண்டத்தார் காமற் காய்ந்த
கண்விளங்கு நெற்றியார் கடல்நஞ் சுண்டார்
போரேறு தாமேறி பூதஞ் சூழ
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே
காரார் கமழ்கொன்றை கண்ணி சூடி
கபாலங்கை யேந்தி கணங்கள் பாட
ஊரா ரிடும்பிச்சை கொண்டு ழலும்
உத்தம ராய்நின்ற ஒருவ னார்தாஞ்
சீரார் கழல்வணங்கு தேவ தேவர்
திருவாரூர திருமூல தான மேயார்
போரார் விடையேறி பூதஞ் சூழ
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே
காதார் குழையினர் கட்டங் கத்தார்
கயிலாய மாமலையார் காரோ ணத்தார்
மூதாயர் மூதாதை யில்லார் போலும்
முதலு மிறுதியு தாமே போலும்
மாதாய மாதர் மகிழ வன்று
மன்மதவேள் தன்னுடலங் காய்ந்தா ரிந்நா
போதார் சடைதாழ பூதஞ் சூழ
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே
இறந்தார்க்கு மென்றும் இறவா தார்க்கும்
இமையவர்க்கும் ஏகமாய் நின்று சென்று
பிறந்தார்க்கு மென்றும் பிறவா தார்க்கும்
பெரியான்றன் பெருமையே பேச நின்று
மறந்தார் மனத்தென்றும் மருவார் போலும்
மறைக்கா டுறையும் மழுவா செல்வர்
புறந்தாழ் சடைதாழ பூதஞ் சூழ
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே
குலாவெண் டலைமாலை யென்பு பூண்டு
குளிர்கொன்றை தாரணிந்து கொல்லே றேறி
கலாவெங் களிற்றுரிவை போர்வை மூடி
கையோ டனலேந்தி காடு றைவார்
நிலாவெண் மதியுரிஞ்ச நீண்ட மாடம்
நிறைவயல்சூழ் நெய்த்தான மேய செல்வர்
புலால்வெண் டலையேந்தி பூதஞ் சூழ
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே
சந்தித்த கோவணத்தர் வெண்ணூல் மார்பர்
சங்கரனை கண்டீரோ கண்டோ மிந்நாள்
பந்தித்த வெள்விடையை பாய வேறி
படுதலையி லென்கொலோ ஏந்தி கொண்டு
வந்திங்கென் வெள்வளையு தாமு மெல்லாம்
மணியாரூர் நின்றந்தி கொள்ள கொள்ள
பொன்றி மணிவிளக்கு பூதம் பற்ற
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே
பாதங்கள் நல்லார் பரவி யேத்த
பத்திமையாற் பணிசெய்யு தொண்டர் தங்கள்
ஏதங்கள் தீர இருந்தார் போலும்
எழுபிறப்பும் ஆளுடைய ஈச னார்தாம்
வேதங்க ளோதியோர் வீணை யேந்தி
விடையொன்று தாமேறி வேத கீதர்
பூதங்கள் சூழ புலித்தோல் வீக்கி
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே
பட்டுடுத்து தோல்போர்த்து பாம்பொன் றார்த்து
பகவனார் பாரிடங்கள் சூழ நட்டஞ்
சிட்டரா தீயேந்தி செல்வார் தம்மை
தில்லைச்சிற் றம்பலத்தே கண்டோ மிந்நாள்
விட்டிலங்கு சூலமே வெண்ணூ லுண்டே
ஓதுவதும் வேதமே வீணை யுண்டே
கட்டங்கங் கையதே சென்று காணீர்
கறைசேர் மிடற்றெங் கபாலி யார்க்கே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவீரட்டானம் ஏழைத்திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
வெறிவிரவு கூவிளநற் றொங்க லானை
வீரட்ட தானைவெள் ளேற்றி னானை
பொறியரவி னானைப்புள் ளூர்தி யானை
பொன்னிறத்தி னானை புகழ்த கானை
அறிதற் கரியசீ ரம்மான் றன்னை
அதியரைய மங்கை அமர்ந்தான் றன்னை
எறிகெடில தானை இறைவன் றன்னை
ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே
வெள்ளிக்குன் றன்ன விடையான் றன்னை
வில்வலான் வில்வட்டங் காய்ந்தான் றன்னை
புள்ளி வரிநாகம் பூண்டான் றன்னை
பொன்பிதிர தன்ன சடையான் றன்னை
வள்ளி வளைத்தோள் முதல்வன் றன்னை
வாரா வுலகருள வல்லான் றன்னை
எள்க இடுபிச்சை ஏற்பான் றன்னை
ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே
முந்தி யுலகம் படைத்தான் றன்னை
மூவா முதலாய மூர்த்தி தன்னை
சந்தவெண் டிங்கள் அணிந்தான் றன்னை
தவநெறிகள் சாதிக்க வல்லான் றன்னை
சிந்தையில் தீர்வினையை தேனை பாலை
செழுங்கெடில வீரட்ட மேவி னானை
எந்தை பெருமானை ஈசன் றன்னை
ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே
மந்திரமும் மறைப்பொருளு மானான் றன்னை
மதியமும் ஞாயிறுங் காற்று தீயும்
அந்தரமு மலைகடலு மானான் றன்னை
அதியரைய மங்கை அமர்ந்தான் றன்னை
கந்தருவஞ் செய்திருவர் கழல்கை கூப்பி
கடிமலர்கள் பலதூவி காலை மாலை
இந்திரனும் வானவரு தொழச்செல் வானை
ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே
ஒருபிறப்பி லானடியை உணர்ந்துங் காணார்
உயர்கதிக்கு வழிதேடி போக மாட்டார்
வருபிறப்பொன் றுணராது மாசு பூசி
வழிகாணா தவர்போல்வார் மனத்த னாகி
அருபிறப்பை அறுப்பிக்கும் அதிகை யூரன்
அம்மான்றன் அடியிணையே அணைந்து வாழா
திருபிறப்பும் வெறுவியராய் இருந்தார் சொற்கே
டேழையே னான்பண் டிகழ்ந்த வாறே
ஆறேற்க வல்ல சடையான் றன்னை
அஞ்சனம் போலு மிடற்றான் றன்னை
கூறேற கூறமர வல்லான் றன்னை
கோல்வளைக்கை மாதராள் பாகன் றன்னை
நீறேற்க பூசும் அகல தானை
நின்மலன் றன்னை நிமலன்
ஏறேற்க ஏறுமா வல்லான் றன்னை
ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே
குண்டாக்க னாயுழன்று கையி லுண்டு
குவிமுலையார் தம்முன்னே நாண மின்றி
உண்டி யுகந்தமணே நின்றார் சொற்கே
டுடனாகி யுழிதந்தேன் உணர்வொன் றின்றி
வண்டுலவு கொன்றையங் கண்ணி யானை
வானவர்க ளேத்த படுவான் றன்னை
எண்டிசைக்கு மூர்த்தியாய் நின்றான் றன்னை
ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே
உறிமுடித்த குண்டிகைதங் கையிற் றூக்கி
ஊத்தைவா சமணர்க்கோர் குண்டா கனா
கறிவிரவு நெய்சோறு கையி லுண்டு
கண்டார்க்கு பொல்லாத காட்சி யானேன்
மறிதிரைநீர பவ்வநஞ் சுண்டான் றன்னை
மறித்தொருகால் வல்வினையேன் நினைக்க மாட்டேன்
எறிகெடில நாடர் பெருமான் றன்னை
ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே
நிறைவார்ந்த நீர்மையாய் நின்றான் றன்னை
நெற்றிமேற் கண்ணொன் றுடையான் றன்னை
மறையானை மாசொன் றிலாதான் றன்னை
வானவர்மேல் மலரடியை வைத்தான் றன்னை
கறையானை காதார் குழையான் றன்னை
கட்டங்க மேந்திய கையி னானை
இறையானை எந்தை பெருமான் றன்னை
ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே
தொல்லைவான் சூழ்வினைகள் சூழ போந்து
தூற்றியே னாற்றியேன் சுடராய் நின்று
வல்லையே இடர்தீர்த்திங் கடிமை கொண்ட
வானவர்க்கு தானவர்க்கும் பெருமான் றன்னை
கொல்லைவா குருந்தொசித்து குழலு மூதுங்
கோவலனும் நான்முகனுங் கூடி யெங்கும்
எல்லைகாண் பரியானை எம்மான் றன்னை
ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே
முலைமறைக்க பட்டுநீ ராட பெண்கள்
முறைமுறையால் நந்தெய்வ மென்று தீண்டி
தலைபறிக்கு தன்மையர்க ளாகி நின்று
தவமேயென் றவஞ்செய்து தக்க தோரார்
மலைமறிக்க சென்ற இலங்கை கோனை
மதனழி செற்றசே வடியி னானை
இலைமறித்த கொன்றை தாரான் றன்னை
ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவதிகைவீரட்டானம் அடையாளத்திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
சந்திரனை மாகங்கை திரையால் மோத
சடாமகுட திருத்துமே சாம வேத
கந்தருவம் விரும்புமே கபால மேந்து
கையனே மெய்யனே கனக மேனி
பந்தணவு மெல்விரலாள் பாக னாமே
பசுவேறு மேபரம யோகி யாமே
ஐந்தலைய மாசுணங்கொண் டரையார கும்மே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே
ஏறேறி யேழுலகும் உழிதர் வானே
இமையவர்கள் தொழுதேத்த இருக்கின் றானே
பாறேறு படுதலையிற் பலிகொள் வானே
படவரவ தடமார்பிற் பயில்வி தானே
நீறேறு செழும்பவள குன்றொ பானே
நெற்றிமேல் ஒற்றைக்கண் நிறைவி தானே
ஆறேறு சடைமுடிமேற் பிறைவை தானே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே
முண்டத்திற் பொலிந்திலங்கு மேனி யானே
முதலாகி நடுவாகி முடிவா னானே
கண்டத்தில் வெண்மருப்பின் காறை யானே
கதநாகங் கொண்டாடுங் காட்சி யானே
பிண்டத்தின் இயற்கைக்கோர் பெற்றி யானே
பெருநிலநீர் தீவளிஆ காச மாகி
அண்டத்து கப்பாலாய் இப்பா லானே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே
செய்யனே கரியனே கண்டம் பைங்கண்
வெள்ளெயிற்றா டரவனே வினைகள் போக
வெய்யனே தண்கொன்றை மிலைத்த சென்னி
சடையனே விளங்குமழு சூல மேந்துங்
கையனே காலங்கள் மூன்றா னானே
கருப்புவிற் றனிக்கொடும்பூண் காமற் காய்ந்த
ஐயனே பருத்துயர்ந்த ஆனேற் றானே
அவனாகி லதிகைவீ ரட்ட னாமே
பாடுமே யொழியாமே நால்வே தமும்
படர்சடைமேல் ஒளிதிகழ பனிவெண் டிங்கள்
சூடுமே அரைதிகழ தோலும் பாம்புஞ்
சுற்றுமே தொண்டைவாய் உமையோர் பாகங்
கூடுமே குடமுழவம் வீணை தாளங்
குறுநடைய சிறுபூதம் முழக்க மாக்கூ
தாடுமே அந்தடக்கை அனலே தும்மே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே
ஒழித்திடுமே உள்குவார் உள்ள துள்ள
உறுபிணியுஞ் செறுபகையும் ஒற்றை கண்ணால்
விழித்திடுமே காமனையும் பொடியா வீழ
வெள்ள புனற்கங்கை செஞ்சடைமேல்
இழித்திடுமே ஏழுலகு தானா கும்மே
இயங்கு திரிபுரங்க ளோரம் பினால்
அழித்திடுமே ஆதிமா தவத்து ளானே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே
குழலோடு கொக்கரைகை தாளம் மொந்தை
குறட்பூதம் முன்பாட தானா டும்மே
கழலாடு திருவிரலாற் கரணஞ் செய்து
கனவின்கண் திருவுருவ தான்கா டும்மே
எழிலாரு தோள்வீசி நடமா டும்மே
புறங்காட்டில் தோறும்
அழலாடு மேயட்ட மூர்த்தி யாமே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே
மாலாகி மதமிக்க களிறு தன்னை
வதைசெய்து மற்றதனின் உரிவை கொண்டு
மேலாலுங் கீழாலு தோன்றா வண்ணம்
வெம்புலால் கைகலக்க மெய்போர தானே
கோலாலம் படவரைந டரவு சுற்றி
குரைகடலை திரையலற கடைந்து கொண்ட
ஆலால முண்டிருண்ட கண்ட தானே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே
செம்பொனாற் செய்தழகு பெய்தாற் போலுஞ்
செஞ்சடையெம் பெருமானே தெய்வ நாறும்
வம்பினார் மலர்க்கூந்த லுமையாள் காதல்
மணவாள னேவலங்கை மழுவா ளனே
நம்பனே நான்மறைகள் தொழநின் றானே
நடுங்காதார் புரமூன்றும் நடுங்க செற்ற
அம்பனே அண்டகோ சரத்து ளானே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே
எழுந்ததிரை நதித்துவலை நனைந்த திங்கள்
இளநிலா திகழ்கின்ற வளர்ச டையனே
கொழும்பவள செங்கனிவா கா கோட்டி
கொங்கையிணை அமர்பொருது கோலங் கொண்ட
தழும்புளவே வரைமார்பில் வெண்ணூ லுண்டே
சாந்தமொடு சந்தனத்தின் அளறு தங்கி
அழுந்தியசெ திருவுருவில் வெண்ணீற் றானே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே
நெடியானும் நான்முகனும் நேடி காணா
நீண்டானே நேரொருவ ரில்லா தானே
கொடியேறு கோலமா மணிகண் டனே
கொல்வேங்கை அதளனே கோவ ணவனே
பொடியேறு மேனியனே ஐயம் வேண்டி
புவலோக திரியுமே புரிநூ லானே
அடியாரை அமருலகம் ஆள்வி கும்மே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவீரட்டானம் போற்றித்திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
எல்லாஞ் சிவனென்ன நின்றாய் போற்றி
எரிசுடராய் நின்ற இறைவா போற்றி
கொல்லார் மழுவா படையாய் போற்றி
கொல்லுங் கூற்றொன்றை உதைத்தாய் போற்றி
கல்லாதார் காட்சி கரியாய் போற்றி
கற்றா ரிடும்பை களைவாய் போற்றி
வில்லால் வியனரணம் எய்தாய் போற்றி
வீரட்டங் காதல் விமலா போற்றி
பாட்டுக்கும் ஆட்டுக்கும் பண்பா போற்றி
பல்லூழி யாய படைத்தாய் போற்றி
ஓட்டகத்தே யூணா உகந்தாய் போற்றி
உள்குவார் உள்ள துறைவாய் போற்றி
காட்டகத்தே ஆடல் மகிழ்ந்தாய் போற்றி
கார்மேக மன்ன மிடற்றாய் போற்றி
ஆட்டுவதோர் நாகம் அசைத்தாய் போற்றி
அலைகெடில வீரட்ட தாள்வாய் போற்றி
முல்லையங் கண்ணி முடியாய் போற்றி
முழுநீறு பூசிய மூர்த்தி போற்றி
எல்லை நிறைந்த குணத்தாய் போற்றி
ஏழ்நரம்பி னோசை படைத்தாய் போற்றி
சில்லை சிரைத்தலையில் ஊணா போற்றி
சென்றடைந்தார் தீவினைகள் தீர்ப்பாய் போற்றி
தில்லைச்சிற் றம்பல மேயாய் போற்றி
திருவீர டானத்தெஞ் செல்வா போற்றி
சாம்பர் அகல தணிந்தாய் போற்றி
தவநெறிகள் சாதித்து நின்றாய் போற்றி
கூம்பி தொழுவார்தங் குற்றே வலை
குறிக்கொண் டிருக்குங் குழகா போற்றி
பாம்பும் மதியும் புனலு தம்மிற்
பகைதீர துடன்வைத்த பண்பா போற்றி
ஆம்பல் மலர்கொண் டணிந்தாய் போற்றி
அலைகெடில வீரட்ட தாள்வாய் போற்றி
நீறேறு நீல மிடற்றாய் போற்றி
நிழல்திகழும் வெண்மழுவாள் வைத்தாய் போற்றி
கூறே றுமையொருபாற் கொண்டாய் போற்றி
கோளரவம் ஆட்டுங் குழகா போற்றி
ஆறேறு சென்னி யுடையாய் போற்றி
அடியார்க காரமுத மானாய் போற்றி
ஏறேற என்றும் உகப்பாய் போற்றி
இருங்கெடில வீரட்ட தெந்தாய் போற்றி
பாடுவார் பாட லுகப்பாய் போற்றி
பழையாற்று பட்டீ சுரத்தாய் போற்றி
வீடுவார் வீடருள வல்லாய் போற்றி
வேழ துரிவெருவ போர்த்தாய் போற்றி
நாடுவார் நாடற் கரியாய் போற்றி
நாகம் அரைக்கசைத்த நம்பா போற்றி
ஆடுமா னைந்தும் உகப்பாய் போற்றி
அலைகெடில வீரட்ட தாள்வாய் போற்றி
மண்டுளங்க ஆடல் மகிழ்ந்தாய் போற்றி
மால்கடலு மால்விசும்பு மானாய் போற்றி
விண்டுளங்க மும்மதிலும் எய்தாய் போற்றி
வேழ துரிமூடும் விகிர்தா போற்றி
பண்டுளங்க பாடல் பயின்றாய் போற்றி
பார்முழுது மாய பரமா போற்றி
கண்டுளங காமனைமுன் காய்ந்தாய் போற்றி
கார்க்கெடிலங் கொண்ட கபாலி போற்றி
வெஞ்சினவெள் ளேறூர்தி யுடையாய் போற்றி
விரிசடைமேல் வெள்ளம் படைத்தாய் போற்றி
துஞ்சா பலிதேரு தோன்றால் போற்றி
தொழுதகை துன்ப துடைப்பாய் போற்றி
நஞ்சொடுங்குங் கண்டத்து நாதா போற்றி
நான்மறையோ டாறங்க மானாய் போற்றி
அஞ்சொலாள் பாகம் அமர்ந்தாய் போற்றி
அலைகெடில வீரட்ட தாள்வாய் போற்றி
சிந்தையாய் நின்ற சிவனே போற்றி
சீபர்ப்ப தஞ்சிந்தை செய்தாய் போற்றி
புந்தியா புண்டரிக துள்ளாய் போற்றி
புண்ணியனே போற்றி புனிதா
சந்தியாய் நின்ற சதுரா போற்றி
தத்துவனே போற்றியென் தாதாய் போற்றி
அந்தியாய் நின்ற அரனே போற்றி
அலைகெடில வீரட்ட தாள்வாய் போற்றி
முக்கணா போற்றி முதல்வா
முருகவேள் தன்னை பயந்தாய் போற்றி
தக்கணா போற்றி தருமா
தத்துவனே போற்றியென் தாதாய் போற்றி
தொக்கணா வென்றிருவர் தோள்கை கூப்ப
துளங்கா தெரிசுடராய் நின்றாய் போற்றி
எக்கண்ணுங் கண்ணிலேன் எந்தாய் போற்றி
எறிகெடில வீரட்ட தீசா போற்றி
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவதிகைவீரட்டானம் திருவடித்திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
அரவணையான் சிந்தி தரற்றும்மடி
அருமறையான் சென்னி கணியாமடி
சரவணத்தான் கைதொழுது சாரும்மடி
சார்ந்தார்க கெல்லாஞ் சரணாமடி
பரவுவார் பாவம் பறைக்கும்மடி
பதினெண் கணங்களும் பாடும்மடி
திரைவிரவு தென்கெடில நாடன்னடி
திருவீர டானத்தெஞ் செல்வனடி
கொடுவினையா ரென்றுங் குறுகாவடி
குறைந்தடைந்தார் ஆழாமை காக்கும்மடி
படுமுழவம் பாணி பயிற்றும்மடி
பதைத்தெழுந்த வெங்கூற்றை பாய்ந்தவடி
கடுமுரணே றூர்ந்தான் கழற்சேவடி
கடல்வையங் காப்பான் கருதும்மடி
நெடுமதியங் கண்ணி யணிந்தானடி
நிறைகெடில வீரட்டம் நீங்காவடி
வைதெழுவார் காமம்பொய் போகாவடி
வஞ்சவலை பாடொன் றில்லாவடி
கைதொழுது நாமேத்தி காணும்மடி
கணக்கு வழக்கை கடந்தவடி
நெய்தொழுது நாமேத்தி யாட்டும்மடி
நீள்விசும்பை ஊடறுத்து நின்றவடி
தெய்வ புனற்கெடில நாடன்னடி
திருவீர டானத்தெஞ் செல்வனடி
அரும்பித்த செஞ்ஞாயி றேய்க்கும்மடி
அழகெழுத லாகா அருட்சேவடி
சுரும்பித்த வண்டினங்கள் சூழ்ந்தவடி
சோமனையுங் காலனையுங் காய்ந்தவடி
பெரும்பித்தர் கூடி பிதற்றும்மடி
பிழைத்தார் பிழைப்பறிய வல்லவடி
திருந்துநீர தென்கெடில நாடன்னடி
திருவீர டானத்தெஞ் செல்வனடி
ஒருகால தொன்றாகி நின்றவடி
ஊழிதோ றூழி உயர்ந்தவடி
பொருகழலும் பல்சிலம்பும் ஆர்க்கும்மடி
புகழ்வார் புகழ்தகைய வல்லவடி
இருநிலத்தார் இன்புற்றங் கேத்தும்மடி
இன்புற்றார் இட்டபூ ஏறும்மடி
திருவதிகை தென்கெடில நாடன்னடி
திருவீர டானத்தெஞ் செல்வனடி
திருமகட்கு செந்தா மரையாமடி
சிறந்தவர்க்கு தேனாய் விளைக்கும்மடி
பொருளவர்க்கு பொன்னுரையாய் நின்றவடி
புகழ்வார் புகழ்தகைய வல்லவடி
உருவிரண்டு மொன்றோடொன் றொவ்வாவடி
உருவென் றுணர படாதவடி
திருவதிகை தென்கெடில நாடன்னடி
திருவீர டானத்தெஞ் செல்வனடி
உரைமாலை யெல்லா முடையவடி
உரையால் உணர படாதவடி
வரைமாதை வாடாமை வைக்கும்மடி
வானவர்கள் தாம்வணங்கி வாழ்த்தும்மடி
அரைமா திரையில் லடங்கும்மடி
அகலம் அளக்கிற்பார் இல்லாவடி
கரைமாங் கலிக்கெடில நாடன்னடி
கமழ்வீர டான காபாலியடி
நறுமலராய் நாறு மலர்ச்சேவடி
நடுவாய் உலகநா டாயவடி
செறிகதிரு திங்களுமாய் நின்றவடி
தீத்திரளா யுள்ளே திகழ்ந்தவடி
மறுமதியை மாசு கழுவும்மடி
மந்திரமு தந்திரமு மாயவடி
செறிகெடில நாடர் பெருமானடி
திருவீர டானத்தெஞ் செல்வனடி
அணியனவுஞ் சேயனவு மல்லாவடி
அடியார்க காரமுத மாயவடி
பணிபவர்க்கு பாங்காக வல்லவடி
பற்றற்றார் பற்றும் பவளவடி
மணியடி பொன்னடி மாண்பாமடி
மருந்தா பிணிதீர்க்க வல்லவடி
தணிபாடு தண்கெடில நாடன்னடி
தகைசார் வீரட்ட தலைவனடி
அந்தாம ரைப்போ தலர்ந்தவடி
அரக்கனையும் ஆற்றல் அழித்தவடி
முந்தாகி முன்னே முளைத்தவடி
முழங்கழலாய் நீண்டவெம் மூர்த்தியடி
பந்தாடு மெல்விரலாள் பாகன்னடி
பவள தடவரையே போல்வானடி
வெந்தார் சுடலைநீ றாடும்மடி
வீரட்டங் காதல் விமலனடி
இத்தலம் நடுநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் திருவீரட்டேசுவரர்
தேவியார் திருவதிகைநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவீரட்டானம் காப்புத்திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
செல்வ புனற்கெடில வீரட்டமுஞ்
சிற்றேம மும்பெருந்தண் குற்றாலமு
தில்லைச்சிற் றம்பலமு தென்கூடலு
தென்னானை காவுஞ் சிராப்பள்ளியும்
நல்லூரு தேவன் குடிமருகலும்
நல்லவர்கள் தொழுதேத்து நாரையூருங்
கல்லலகு நெடும்புருவ கபாலமேந்தி
கட்டங்க தோடுறைவார் காப்புக்களே
தீர்த்த புனற்கெடில வீரட்டமு
திருக்கோவல் வீரட்டம் வெண்ணெய்நல்லூர்
ஆர்த்தருவி வீழ்சுனைநீர் அண்ணாமலை
அறையணி நல்லூரும் அரநெறியும்
ஏத்துமின்கள் நீரேத்த நின்றஈசன்
இடைமரு தின்னம்பர் ஏகம்பமும்
கார்த்தயங்கு சோலை கயிலாயமுங்
கண்ணுதலான் தன்னுடைய காப்புக்களே
சிறையார் புனற்கெடில வீரட்டமு
திருப்பா திரிப்புலியூர் திருவாமாத்தூர்
துறையார் வனமுனிக ளேத்தநின்ற
சோற்று துறைதுருத்தி நெய்த்தானமும்
அறையார் புனலொழுகு காவிரிசூழ்
ஐயாற் றமுதன் பழனம்நல்ல
கறையார் பொழில்புடைசூழ் கானப்பேருங்
கழுக்குன்று தம்முடைய காப்புக்களே
திரையார் புனற்கெடில வீரட்டமு
திருவாரூர் தேவூர் திருநெல்லிக்கா
உரையார் தொழநின்ற ஒற்றியூரும்
ஓத்தூரும் மாற்பேறும் மாந்துறையும்
வரையா ரருவிசூழ் மாநதியும்
மாகாளங் கேதாரம் மாமேருவுங்
கரையார் புனலொழுகு காவிரிசூழ்
கடம்ப துறையுறைவார் காப்புக்களே
செழுநீர புனற்கெடில வீரட்டமு
திரிபுரா தகந்தென்னார் தேவீச்சரங்
கொழுநீர் புடைசுழிக்குங் கோட்டுக்காவுங்
குடமூக்குங் கோகரணங் கோலக்காவும்
பழிநீர்மை யில்லா பனங்காட்டூரும்
பனையூர் பயற்றூர் பராய்த்துறையுங்
கழுநீர் மதுவிரியுங் காளிங்கமுங்
கணபதீ சரத்தார்தங் காப்புக்களே
தெய்வ புனற்கெடில வீரட்டமுஞ்
செழுந்தண் பிடவூருஞ் சென்றுநின்று
பவ்வ திரியும் பருப்பதமும்
பறியலூர் வீரட்டம் பாவநாசம்
மவ்வ திரையும் மணிமுத்தமும்
மறைக்காடும் வாய்மூர் வலஞ்சுழியுங்
கவ்வை வரிவண்டு பண்ணேபாடுங்
கழிப்பாலை தம்முடைய காப்புக்களே
தெண்ணீர புனற்கெடில வீரட்டமுஞ்
சிக்காலி வல்ல திருவேட்டியும்
உண்ணீரார் ஏடகமும் ஊறல்அம்பர்
உறையூர் நறையூர் அரணநல்லூர்
விண்ணார் விடையான் விளமர்வெண்ணி
மீயச்சூர் வீழி மிழலைமிக்க
கண்ணார் நுதலார் கரபுரமுங்
காபாலி யாரவர்தங் காப்புக்களே
தெள்ளும் புனற்கெடில வீரட்டமு
திண்டீ சரமு திருப்புகலூர்
எள்ளும் படையான் இடைத்தானமும்
ஏயீ சரமுநல் லேமங்கூடல்
கொள்ளு மிலயத்தார் கோடிகாவுங்
குரங்கணில் முட்டமுங் குறும்பலாவுங்
கள்ளருந தெள்ளியா ருள்கியேத்துங்
காரோண தம்முடைய காப்புக்களே
சீரார் புனற்கெடில வீரட்டமு
திருக்காட்டு பள்ளி திருவெண்காடும்
பாரார் பரவுஞ்சீர பைஞ்ஞீலியும்
பந்தணை நல்லூரும் பாசூர்நல்லம்
நீரார் நிறைவயல்சூழ் நின்றியூரும்
நெடுங்களமும் நெல்வெண்ணெய் நெல்வாயிலுங்
காரார் கமழ்கொன்றை தாரார்க்கென்றுங்
கடவூரில் வீரட்டங் காப்புக்களே
சிந்தும் புனற்கெடில வீரட்டமு
திருவாஞ் சியமு திருநள்ளாறும்
அந்தண் பொழில்புடைசூழ் அயோகந்தியும்
ஆக்கூரு மாவூரு மான்பட்டியும்
எந்தம் பெருமாற் கிடமாவது
இடைச்சுரமும் எந்தை தலைச்சங்காடுங்
கந்தங் கமழுங் கரவீரமுங்
கடம்பூர கரக்கோயில் காப்புக்களே
தேனார் புனற்கெடில வீரட்டமு
திருச்செம்பொன் பள்ளிதிரு பூவணமும்
வானோர் வணங்கும் மணஞ்சேரியும்
மதிலுஞ்சை மாகாளம் வாரணாசி
ஏனோர்க ளேத்தும் வெகுளீச்சரம்
இலங்கார் பருப்பதத்தோ டேணார்சோலை
கானார் மயிலார் கருமாரியுங்
கறைமிடற்றார் தம்முடைய காப்புக்களே
திருநீர புனற்கெடில வீரட்டமு
திருவளப்பூர் தெற்கேறு சித்தவடம்
வருநீர் வளம்பெருகு மானிருபமும்
மயிலாப்பில் மன்னினார் மன்னியேத்தும்
பெருநீர் வளர்சடையான் பேணிநின்ற
பிரமபுரஞ் சுழியல் பெண்ணாகடங்
கருநீல வண்டரற்றுங் காளத்தியுங்
கயிலா தம்முடைய காப்புக்களே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்காளத்தி திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
விற்றூணொன் றில்லாத நல்கூர தான்காண்
வியன்கச்சி கம்பன்காண் பிச்சை யல்லால்
மற்றூணொன் றில்லாத மாசது ரன்காண்
மயானத்து மைந்தன்காண் மாசொன் றில்லா
பொற்றூண்காண் மாமணிநற் குன்றொ பான்காண்
பொய்யாது பொழிலேழு தாங்கி நின்ற
கற்றூண்காண் காளத்தி காண பட்ட
கணநாதன் காணவனென் கண்ணு ளானே
இடிப்பான்காண் என்வினையை ஏகம் பன்காண்
எலும்பா பரணன்காண் எல்லாம் முன்னே
முடிப்பான்காண் மூவுலகு மாயி னான்காண்
முறைமையால் ஐம்புரியும் வழுவா வண்ணம்
படித்தான் தலையறுத்த பாசு பதன்காண்
பராய்த்துறையான் பழனம்பைஞ் ஞீலி யான்காண்
கடித்தார் கமழ்கொன்றை கண்ணி யான்காண்
காளத்தி யானவனென் கண்ணு ளானே
நாரணன்காண் நான்முகன்காண் நால்வே தன்காண்
ஞான பெருங்கடற்கோர் நாவா யன்ன
பூரணன்காண் புண்ணியன்காண் புராணன் றான்காண்
புரிசடைமேற் புனலேற்ற புனிதன் றான்காண்
சாரணன்காண் சந்திரன்காண் கதிரோன் றான்காண்
தன்மைக்கண் தானேகாண் தக்கோர கெல்லாங்
காரணன்காண் காளத்தி காண பட்ட
கணநாதன் காணவனென் கண்ணு ளானே
செற்றான்காண் என்வினையை தீயா டிகாண்
திருவொற்றி யூரான்காண் சிந்தை செய்வார
குற்றான்காண் ஏகம்பம் மேவி னான்காண்
உமையாள்நற் கொழுநன்காண் இமையோ ரேத்துஞ்
சொற்றான்காண் சோற்று துறையு ளான்காண்
சுறாவேந்தன் ஏவலத்தை நீறா நோ
கற்றான்காண் காளத்தி காண பட்ட
கணநாதன் காணவனென் கண்ணு ளானே
மனத்தகத்தான் தலைமேலான் வாக்கி னுள்ளான்
வாயார தன்னடியே பாடு தொண்டர்
இனத்தகத்தான் இமையவர்தஞ் சிரத்தின் மேலான்
ஏழண்ட தப்பாலான் இப்பாற் செம்பொன்
புனத்தகத்தான் நறுங்கொன்றை போதி னுள்ளான்
பொருப்பிடையான் நெருப்பிடையான் காற்றி னுள்ளான்
கனத்தகத்தான் கயிலா துச்சி யுள்ளான்
காளத்தி யானவனென் கண்ணு ளானே
எல்லாம்முன் தோன்றாமே தோன்றி னான்காண்
ஏகம்ப மேயான்காண் இமையோ ரேத்த
பொல்லா புலனைந்தும் போக்கி னான்காண்
புரிசடைமேற் பாய்கங்கை பூரி தான்காண்
நல்லவிடை மேற்கொண்டு நாகம் பூண்டு
நளிர்சிரமொன் றேந்தியோர் நாணா யற்ற
கல்லாடை மேற்கொண்ட காபா லிகாண்
காளத்தி யானவனென் கண்ணு ளானே
கரியுருவு கண்டத்தெங் கண்ணு ளான்காண்
கண்டன்காண் வண்டுண்ட கொன்றை யான்காண்
எரிபவள வண்ணன்காண் ஏகம் பன்காண்
எண்டிசையு தானாய குணத்தி னான்காண்
திரிபுரங்கள் தீயிட்ட தீயா டிகாண்
தீவினைகள் தீர்த்திடுமென் சிந்தை யான்காண்
கரியுரிவை போர்த்துகந்த காபா லிகாண்
காளத்தி யானவனென் கண்ணு ளானே
இல்லாடி சில்பலிசென் றேற்கின் றான்காண்
இமையவர்கள் தொழுதிறைஞ்ச இருக்கின் றான்காண்
வில்லாடி வேடனா யோடி னான்காண்
வெண்ணூ லுஞ்சேர்ந்த அகல தான்காண்
மல்லாடு திரள்தோள்மேல் மழுவா ளன்காண்
மலைமகள்தன் மணாளன்காண் மகிழ்ந்து முன்னாள்
கல்லாலின் கீழிருந்த காபா லிகான்
காளத்தி யானவனென் கண்ணு ளானே
தேனப்பூ வண்டுண்ட கொன்றை யான்காண்
திருவேகம் பத்தான்காண் தேனார துக்க
ஞானப்பூங் கோதையாள் பாக தான்காண்
நம்பன்காண் ஞான தொளியா னான்காண்
வானப்பே ரூரு மறிய வோடி
மட்டித்து நின்றான்காண் வண்டார் சோலை
கானப்பே ரூரான்காண் கறைக்கண் டன்காண்
காளத்தி யானவனென் கண்ணு ளானே
இறையவன்காண் ஏழுலகு மாயி னான்காண்
ஏழ்கடலுஞ் சூழ்மலையு மாயி னான்காண்
குறையுடையார் குற்றேவல் கொள்வான் றான்காண்
குடமூக்கிற் கீழ்க்கோட்டம் மேவி னான்காண்
மறையுடைய வானோர் பெருமான் றான்காண்
மறைக்கா டுறையும் மணிகண் டன்காண்
கறையுடைய கண்டத்தெங் காபா லிகாண்
காளத்தி யானவனென் கண்ணு ளானே
உண்ணா வருநஞ்ச முண்டான் றான்காண்
ஊழித்தீ யன்னான்காண் உகப்பார் காண
பண்ணார பல்லியம் பாடி னான்காண்
பயின்றநால் வேதத்தின் பண்பி னான்காண்
அண்ணா மலையான்காண் அடியா ரீட்டம்
அடியிணைகள் தொழுதேத்த அருளு வான்காண்
கண்ணார காண்பார்க்கோர் காட்சி யான்காண்
காளத்தி யானவனென் கண்ணு ளானே
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் காளத்திநாதர்
தேவியார் ஞானப்பூங்கோதையாரம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருஆமாத்தூர் திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
வண்ணங்கள் தாம்பாடி வந்து நின்று
வலிசெய்து வளைகவர்ந்தார் வகையால் நம்மை
கண்ணம்பால் நின்றெய்து கனல பேசி
கடியதோர் விடையேறி காபா லியார்
சுண்ணங்கள் தாங்கொண்டு துதை பூசி
தோலுடுத்து நூல்பூண்டு தோன்ற தோன்ற
அண்ணலார் போகின்றார் வந்து காணீர்
அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே
வெந்தார்வெண் பொடிப்பூசி வெள்ளை மாலை
விரிசடைமேற் றாஞ்சூடி வீணை யேந்தி
கந்தார தாமுரலா போகா நிற
கறைசேர் மணிமிடாற்றீ ரூரே தென்றேன்
நொந்தார்போல் வந்தென தில்லே புக்கு
நுடங்கே ரிடைமடவாய் நம்மூர் கேட்கில்
அந்தா மரைமலர்மேல் அளிவண் டியாழ்செய்
ஆமாத்தூர் என்றடிகள் போயி னாரே
கட்டங்க தாமொன்று கையி லேந்தி
கடிய விடையேறி காபா லியார்
இட்டங்கள் தாம்பேசி இல்லே புக்கு
இடும்பலியும் இடக்கொள்ளார் போவா ரல்லர்
பட்டிமையும் படிறுமே பேசா நின்றார்
பார்ப்பாரை பரிசழிப்பார் போல்கின் றார்தாம்
அட்டிய சில்பலியுங் கொள்ளார் விள்ளார்
அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே
பசைந்தபல பூதத்தர் பாட லாடல்
படநா கச்சையர் பிச்சை கென்றங்
கிசைந்ததோ ரியல்பினர் எரியின் மேனி
இமையாமு கண்ணினர் நால்வே தத்தர்
பிசைந்ததிரு நீற்றினர் பெண்ணோர் பாகம்
பிரிவறியா பிஞ்ஞகனார் தெண்ணீர கங்கை
அசைந்த திருமுடியர் அங்கை தீயர்
அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே
உருளுடைய தேர்புரவி யோடும் யானை
ஒன்றாலுங் குறைவில்லை ஊர்தி வெள்ளே
றிருளுடைய கண்டத்தர் செந்தீ வண்ணர்
இமையவர்கள் தொழுதேத்தும் இறைவ னார்தாம்
பொருளுடைய ரல்லர் இலரு மல்லர்
புலித்தோ லுடையாக பூதஞ் சூழ
அருளுடைய அங்கோதை மாலை மார்பர்
அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே
வீறுடைய ஏறேறி நீறு பூசி
வெண்தோடு பெய்திடங்கை வீணை யேந்தி
கூறுடைய மடவாளோர் பாகங் கொண்டு
குழையாட கொடுகொட்டி கொட்டா வந்து
பாறுடைய படுதலையோர் கையி லேந்தி
பலிகொள்வா ரல்லர் படிறே பேசி
ஆறுடைய சடைமுடியெம் மடிகள் போலும்
அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே
கையோர் கபாலத்தர் மானின் றோலர்
கருத்துடையர் நிருத்தரா காண்பார் முன்னே
செய்ய திருமேனி வெண்ணீ றாடி
திகழ்புன் சடைமுடிமேல் திங்கள் சூடி
மெய்யொரு பாக துமையை வைத்து
மேவார் திரிபுரங்கள் வேவ செய்து
ஐயனார் போகின்றார் வந்து காணீர்
அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே
ஒன்றாலுங் குறைவில்லை ஊர்தி வெள்ளே
றொற்றியூர் உம்மூரே உணர கூறீர்
நின்றுதான் என்செய்வீர் போவீ ராகில்
நெற்றிமேற் கண்காட்டி நிறையுங் கொண்டீர்
என்றுந்தான் இவ்வகையே இடர்செய் கின்றீர்
இருக்குமூர் இனியறிந்தோம் ஏகம் பமோ
அன்றித்தான் போகின்றீர் அடிக ளெம்மோ
டழகியரே ஆமாத்தூர் ஐய னாரே
கல்லலகு தாங்கொண்டு காள தியார்
கடியவிடை யேறி காண காண
இல்லமே தாம்புகுதா இடுமின் பிச்சை
என்றாரு கெதிரெழுந்தேன் எங்குங் காணேன்
சொல்லாதே போகின்றீர் உம்மூ ரேது
துருத்தி பழனமோ நெய்த்தானமோ
அல்லலே செய்தடிகள் போகின் றார்தாம்
அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே
மழுங்கலா நீறாடும் மார்பர் போலும்
மணிமிழலை மேய மணாளர் போலுங்
கொழுங்குவளை கோதை கிறைவர் போலுங்
கொடுகொட்டி தாள முடையார் போலுஞ்
செழுங்கயி லாயத்தெஞ் செல்வர் போலு
தென்னதிகை வீரட்டஞ் சேர்ந்தார் போலும்
அழுங்கினார் ஐயுறவு தீர்ப்பார் போலும்
அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே
இத்தலம் நடுநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் ஆமாத்தீசுவரர்
தேவியார் அழகியநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருப்பந்தணைநல்லூர் திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
நோதங்க மில்லாதார் நாகம் பூண்டார்
நூல்பூண்டார் நூல்மேலோ ராமை பூண்டார்
பேய்தங்கு நீள்காட்டில் நட்ட மாடி
பிறைசூடுஞ் சடைமேலோர் புனலுஞ் சூடி
ஆதங்கு பைங்குழலாள் பாகங் கொண்டார்
அனல்கொண்டார் அந்திவாய் வண்ணங் கொண்டார்
பாதங்க நீறேற்றார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே
காடலாற் கருதாதார் கடல்நஞ் சுண்டார்
களிற்றுரிவை மெய்போர்த்தார் கலன தாக
ஓடலாற் கருதாதார் ஒற்றி யூரார்
உறுபிணியுஞ் செறுபகையு மொற்றை கண்ணாற்
பீடுலா தனைசெய்வார் பிடவ மொந்தை
குடமுழவங் கொடுகொட்டி குழலு மோங்க
பாடலா ராடலார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே
பூத படையுடையார் பொங்கு நூலார்
புலித்தோ லுடையினார் போரேற் றினார்
வே தொழிலார் விரும்ப நின்றார்
விரிசடைமேல் வெண்திங்க கண்ணி சூடி
தொலிகடல்வாய் நஞ்ச முண்டார்
உம்பரோ டம்பொன் னுலக மாண்டு
பா தொடுகழலார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே
நீருலாஞ் சடைமுடிமேல் திங்க ளேற்றார்
நெருப்பேற்றார் அங்கையில் நிறையு மேற்றார்
ஊரெலாம் பலியேற்றார் அரவ மேற்றார்
ஒலிகடல் வாய்நஞ்சம் மிடற்றி லேற்றார்
வாருலா முலைமடவாள் பாக மேற்றார்
மழுவேற்றார் மான்மறியோர் கையி லேற்றார்
பாருலாம் புகழேற்றார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே
தொண்டர் தொழுதேத்துஞ் சோதி யேற்றார்
துளங்கா மணிமுடியார் தூய நீற்றார்
இண்டை சடைமுடியார் ஈமஞ் சூழ்ந்த
இடுபிணக்கா டாடலா ரே தோறும்
அண்டத்து கப்புறத்தார் ஆதி யானார்
அருக்கனா யாரழலாய் அடியார் மேலை
பண்டை வினையறுப்பார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே
கடமன்னு களியானை யுரிவை போர்த்தார்
கானப்பேர் காதலார் காதல் செய்து
மடமன்னு மடியார்தம் மனத்தி னுள்ளார்
மானுரிதோள் மிசைத்தோளார் மங்கை காண
நடமன்னி யாடுவார் நாகம் பூண்டார்
நான்மறையோ டாறங்கம் நவின்ற நாவார்
படமன்னு திருமுடியார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே
முற்றா மதிச்சடையார் மூவ ரானார்
மூவுலகு மேத்தும் முதல்வ ரானார்
கற்றார் பரவுங் கழலார் திங்கள்
கங்கையாள் காதலார் காம்பேய் தோளி
பற்றாகும் பாகத்தார் பால்வெண் ணீற்றார்
பான்மையா லூழி உலக மானார்
பற்றார் மதிலெரித்தார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே
கண்ணமரும் நெற்றியார் காட்டார் நாட்டார்
கனமழுவா கொண்டதோர் கையார் சென்னி
பெண்ணமருஞ் சடைமுடியார் பேரொன் றில்லார்
பிறப்பிலார் இறப்பிலார் பிணியொன் றில்லார்
மண்ணவரும் வானவரும் மற்றை யோரும்
மறையவரும் வந்தெதிரே வணங்கி யேத்த
பண்ணமரும் பாடலார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே
ஏறேறி யேழுலகு மேத்த நின்றார்
இமையவர்கள் எப்பொழுது மிறைஞ்ச நின்றார்
நீறேறு மேனியார் நீல முண்டார்
நெருப்புண்டார் அங்கை யனலு முண்டார்
ஆறேறு சென்னியார் ஆனஞ் சாடி
அனலுமிழும் ஐவா யரவு மார்த்தார்
பாறேறு வெண்டலையார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே
கல்லூர் கடிமதில்கள் மூன்று மெய்தார்
காரோணங் காதலார் காதல் செய்து
நல்லூரார் ஞானத்தார் ஞான மானார்
நான்மறையோ டாறங்கம் நவின்ற நாவார்
மல்லூர் மணிமலையின் மேலி ருந்து
வாளரக்கர் கோன்றலையை மாள செற்று
பல்லூர் பலிதிரிவார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் பசுபதீசுவரர்
தேவியார் காம்பன்னதோளியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருப்புன்கூர் திருநீடூர் திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
பிறவாதே தோன்றிய பெம்மான் றன்னை
பேணாதார் அவர்தம்மை பேணா தானை
துறவாதே கட்டறுத்த சோதி யானை
தூநெறிக்கு தூநெறியாய் நின்றான் றன்னை
திறமாய எத்திசையு தானே யாகி
திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நிறமா மொளியானை நீடூ ரானை
நீதனே னென்னேநான் நினையா வாறே
பின்றானும் முன்றானு மானான் றன்னை
பித்தர்க்கு பித்தனாய் நின்றான் றன்னை
நன்றாங் கறிந்தவர்க்கு தானே யாகி
நல்வினையு தீவினையு மானான் றன்னை
சென்றோங்கி விண்ணளவு தீயா னானை
திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நின்றாய நீடூர் நிலாவி னானை
நீதனே னென்னேநான் நினையா வாறே
இல்லானை எவ்விடத்தும் உள்ளான் றன்னை
இனியநினை யாதார கின்னா தானை
வல்லானை வல்லடைந்தார கருளும் வண்ணம்
மாட்டாதார கெத்திறத்தும் மாட்டா தானை
செல்லாத செந்நெறிக்கே செல்வி பானை
திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நெல்லால் விளைகழனி நீடூ ரானை
நீதனே னென்னேநான் நினையா வாறே
கலைஞானங் கல்லாமே கற்பி தானை
கடுநரகஞ் சாராமே காப்பான் றன்னை
பலவாய வேடங்கள் தானே யாகி
பணிவார்க கங்கங்கே பற்றா னானை
சிலையாற் புரமெரித்த தீயா டியை
திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நிலையார் மணிமாட நீடூ ரானை
நீதனே னென்னேநான் நினையா வாறே
நோக்காதே எவ்வளவும் நோக்கி னானை
நுணுகாதே யாதொன்றும் நுணுகி னானை
ஆக்காதே யாதொன்று மாக்கி னானை
அணுகாதா ரவர்தம்மை அணுகா தானை
தேக்காதே தெண்கடல்நஞ் சுண்டான் றன்னை
திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நீக்காத பேரொளிசேர் நீடு ரானை
நீதனே னென்னேநான் நினையா வாறே
பூணலா பூணானை பூசா சாந்த
முடையானை முடைநாறும் புன்க லத்தில்
ஊணலா வூணானை யொருவர் காணா
உத்தமனை யொளிதிகழும் மேனி யானை
சேணுலாஞ் செழும்பவள குன்றொ பானை
திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நீணுலா மலர்க்கழனி நீடூ ரானை
நீதனே னென்னேநான் நினையா வாறே
உரையார் பொருளு குலப்பி லானை
ஒழியாமே எவ்வுயிரு மானான் றன்னை
புரையா கனமாயாழ தாழா தானை
புதியனவு மாய்மிகவும் பழையான் றன்னை
திரையார் புனல்சேர் மகுட தானை
திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நிரையார் மணிமாட நீடூ ரானை
நீதனே னென்னேநான் நினையா வாறே
கூரரவ தணையானுங் குளிர்தண் பொய்கை
மலரவனுங் கூடிச்சென் றறிய மாட்டார்
ஆரொருவ ரவர்தன்மை யறிவார் தேவர்
அறிவோமென் பார்க்கெல்லா மறிய லாகா
சீரரவ கழலானை நிழலார் சோலை
திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நீரரவ தண்கழனி நீடூ ரானை
நீதனே னென்னேநான் நினையா வாறே
கையெலாம் நெய்பா கழுத்தே கிட்ட
கால்நிமிர்த்து நின்றுண்ணுங் கையர் சொன்ன
பொய்யெலாம் மெய்யென்று கருதி புக்கு
புள்ளுவரா லகப்படா து போந்தேன்
செய்யெலாஞ் செழுங்கமல பழன வேலி
திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நெய்தல்வா புனற்படப்பை நீடூ ரானை
நீதனே னென்னேநான் நினையா வாறே
இகழுமா றெங்ஙனே ஏழை நெஞ்சே
இகழாது பரந்தொன்றாய் நின்றான் றன்னை
நகழமால் வரைக்கீழி டரக்கர் கோனை
நலனழித்து நன்கருளி செய்தான் றன்னை
திகழுமா மதகரியி னுரிபோர தானை
திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நிகழுமா வல்லானை நீடூ ரானை
நீதனே னென்னேநான் நினையா வாறே
இத்தலங்கள் சோழநாட்டிலுள்ளன திருப்புன்கூரில்
சுவாமிபெயர் சிவலோகநாதர்
தேவியார் சொக்கநாயகியம்மை
திருநீடூரில்
சுவாமிபெயர் சோமநாதேசுவரர்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்கழிப்பாலை திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
ஊனுடுத்தி யொன்பது வாசல் வைத்து
ஒள்ளெலும்பு தூணா வுரோம மேய்ந்து
தாமெடுத்த கூரை தவிர போவார்
தயக்கம் பலபடைத்தார் தாம ரையினார்
கானெடுத்து மாமயில்க ளாலுஞ் சோலை
கழிப்பாலை மேய கபால பனார்
வானிடத்தை யூடறுத்து வல்லை செல்லும்
வழிவைத்தார கவ்வழியே போது நாமே
முறையார்ந்த மும்மதிலும் பொடியா செற்று
முன்னுமா பின்னுமாய் முக்க ணெந்தை
பிறையார்ந்த சடைமுடிமேற் பாம்பு கங்கை
பிணக்கந்தீர துடன்வைத்தார் பெரிய நஞ்சு
கறையார்ந்த மிடற்றடங கண்ட எந்தை
கழிப்பாலை மேய கபால பனார்
மறையார்ந்த வாய்மொழியான் மாய யாக்கை
வழிவைத்தார கவ்வழியே போது நாமே
நெளிவுண்டா கருதாதே நிமலன் றன்னை
நினைமின்கள் நித்தலும்நே ரிழையா ளாய
ஒளிவண்டார் கருங்குழலி யுமையாள் தன்னை
ஒருபாக தமர்ந்தடியா ருள்கி யேத்த
களிவண்டார் கரும்பொழில்சூழ் கண்டல் வேலி
கழிப்பாலை மேய கபால பனார்
வளியுண்டார் மா குரம்பை நீங்க
வழிவைத்தார கவ்வழியே போது நாமே
பொடிநாறு மேனியர் பூதி பையர்
புலித்தோலர் பொங்கரவர் பூண நூலர்
அடிநாறு கமலத்தர் ஆரூ ராதி
ஆனஞ்சு மாடுமா திரையி னார்தாங்
கடிநாறு பூஞ்சோலை கமழ்ந்து நாறுங்
கழிப்பாலை மேய கபால பனார்
மடிநாறு மேனியிம் மாயம் நீங்க
வழிவைத்தார கவ்வழியே போது நாமே
விண்ணானாய் விண்ணவர்கள் விரும்பி வந்து
வேதத்தாய் கீதத்தாய் விரவி யெங்கும்
எண்ணானாய் எழுத்தானாய் கடலே ழானாய்
இறையானாய் எம்மிறையே யென்று நிற்குங்
கண்ணானாய் காரானாய் பாரு மானாய்
கழிப்பாலை யுள்ளுறையுங் கபால பனார்
மண்ணானாய் மா குரம்பை நீங்க
வழிவைத்தார கவ்வழியே போது நாமே
விண்ணப்ப விச்சா தரர்க ளேத்த
விரிகதிரோன் எரிசுடரான் விண்ணு மாகி
பண்ணப்பன் பத்தர் மனத்து ளேயும்
பசுபதி பாசுபதன் தேச மூர்த்தி
கண்ணப்பன் கண்ணப்ப கண்டு கந்தார்
கழிப்பாலை மேய கபால பனார்
வண்ண பிணிமாய யாக்கை நீங்க
வழிவைத்தார கவ்வழியே போது நாமே
பிணம்புல்கு பீறற் குரம்பை மெய்யா
பேத படுகின்ற பேதை மீர்காள்
இணம்புல்கு சூலத்தர் நீல கண்டர்
எண்டோ ளர் எண்ணிறைந்த குணத்தி னாலே
கணம்புல்லன் கருத்துகந்தார் காஞ்சி யுள்ளார்
கழிப்பாலை மேய கபால பனார்
மணம்புல்கு மா குரம்பை நீங்க
வழிவைத்தார கவ்வழியே போது நாமே
இயல்பாய ஈசனை எந்தை தந்தை
என்சிந்தை மேவி யுறைகின் றானை
முயல்வானை மூர்த்தியை தீர்த்த மான
தியம்பகன் திரிசூல தன்ன கையன்
கயல்பாயுங் கண்டல்சூழ் வுண்ட வேலி
கழிப்பாலை மேய கபால பனார்
மயலாய மா குரம்பை நீங்க
வழிவைத்தார கவ்வழியே போது நாமே
செற்றதோர் மனமொழிந்து சிந்தை செய்து
சிவமூர்த்தி யென்றெழுவார் சிந்தை யுள்ளால்
உற்றதோர் நோய்களைந்திவ் வுலக மெல்லாங்
காட்டுவான் உத்தமன்றா னோதா தெல்லாங்
கற்றதோர் நூலினன் களிறு செற்றான்
கழிப்பாலை மேய கபால பனார்
மற்றிதோர் மா குரம்பை நீங்க
வழிவைத்தார கவ்வழியே போது நாமே
பொருதலங்கல் நீண்முடியான் போர ரக்கன்
புட்பகந்தான் பொருப்பின்மீ தோடா தாக
இருநிலங்கள் நடுக்கெய்த எடுத்தி டுதலும்
ஏந்திழையாள் தான்வெருவ இறைவன் நோக்கி
கரதலங்கள் கதிர்முடியா றஞ்சி னோடு
கால்விரலா லூன்று கழிப்பா லையார்
வருதலங்க மா குரம்பை நீங்க
வழிவைத்தார கவ்வழியே போது நாமே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் பால்வண்ணநாதர்
தேவியார் வேதநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருப்புறம்பயம் திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
கொடிமாட நீடெருவு கூடல் கோட்டூர்
கொடுங்கோளூர் தண்வளவி கண்டி யூரும்
நடமாடு நன்மருகல் வைகி நாளும்
நலமாகு மொற்றியூ ரொற்றி யாக
படுமாலை வண்டறையும் பழனம் பாசூர்
பழையாறும் பாற்குளமுங் கைவி டிந்நாள்
பொடியேறு மேனியரா பூதஞ் சூழ
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே
முற்றொருவர் போல முழுநீ றாடி
முளைத்திங்கள் சூடிமு நூலும் பூண்டு
ஒற்றொருவர் போல வுறங்கு வேன்கை
ஒளிவளையை யொன்றொன்றா எண்ணு கின்றார்
மற்றொருவ ரில்லை துணை யெனக்கு
மால்கொண்டாற் போல மயங்கு வேற்கு
புற்றரவ கச்சார்த்து பூதஞ் சூழ
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே
ஆகாத நஞ்சுண்ட அந்தி வண்ணர்
ஐந்தலைய மாசுணங்கொண் டம்பொற் றோள்மேல்
ஏகாச மாவிட்டோ டொன்றே திவ
திடுதிருவே பலியென்றார கில்லே புக்கேன்
பாகேதுங் கொள்ளார் பலியுங்
பாவியேன் கண்ணுள்ளே பற்றி நோக்கி
போகாத வேடத்தர் பூதஞ் சூழ
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே
பன்மலிந்த வெண்டலை கையி லேந்தி
பனிமுகில் போல்மேனி பவந்த நாதர்
நென்மலிந்த நெய்த்தானஞ் சோற்று துறை
நி துருத்தியும் நீடூர் பாச்சில்
கன்மலி தோங்கு கழுநீர குன்றங்
கடனாகை காரோணங் கைவி டிந்நாள்
பொன்மலிந்த கோதையரு தாமு மெல்லாம்
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே
செத்தவர்த தலைமாலை கையி லேந்தி
சிரமாலை சூடி சிவந்த மேனி
மத்தகத்த யானை யுரிவை மூடி
மடவா ளவளோடு மானொன் றேந்தி
அத்தவத்த தேவர் அறுப தின்மர்
ஆறுநூ றாயிரவர காடல் காட்டி
புத்தகங் கைக்கொண்டு புலித்தோல் வீக்கி
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே
நஞ்சடைந்த கண்டத்தர் வெண்ணீ றாடி
நல்ல புலியதள்மேல் நாகங் கட்டி
பஞ்சடைந்த மெல்விரலாள் பாக மாக
பராய்த்துறை யேனென்றோர் பவள வண்ணர்
துஞ்சிடையே வந்து துடியுங் கொட்ட
துண்ணென் றெழுந்திருந்தேன் சொல்ல மாட்டேன்
புன்சடையின் மேலோர் புனலுஞ் சூடி
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே
மறியிலங்கு கையர் மழுவொன் றேந்தி
மறைக்காட்டே னென்றோர் மழலை பேசி
செறியிலங்கு திண்டோ ள்மேல் நீறு கொண்டு
திருமுண்ட மாவிட்ட திலக நெற்றி
நெறியிலங்கு கூந்தலார் பின்பின் சென்று
நெடுங்கண் பனிசோர நின்று நோக்கி
பொறியிலங்கு பாம்பார்த்து பூதஞ் சூழ
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே
நில்லாதே பல்லூரும் பலிகள் வேண்டி
நிரைவளையார் பலிபெய்ய நிறையுங் கொண்டு
கொல்லேறுங் கொக்கரையுங் கொடுகொ டியுங்
குடமூக்கி லங்கொழி குளிர்தண் பொய்கை
நல்லாலை நல்லூரே தவிரே னென்று
நறையூரிற் றாமு தவிர்வார் போல
பொல்லாத வேடத்தர் பூதஞ் சூழ
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே
விரையேறு நீறணிந்தோ ராமை பூண்டு
வெண்தோடு பெய்திடங்கை வீணை யேந்தி
திரையேறு சென்னிமேல் திங்கள் தன்னை
திசைவிளங்க வைத்துகந்த செந்தீ வண்ணர்
அரையேறு மேகலையாள் பாக மாக
ஆரிடத்தி லாட லமர்ந்த ஐயன்
புரையேறு தாமேறி பூதஞ் சூழ
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே
கோவாய இந்திரனுள் ளிட்டா ரா
குமரனும் விக்கின விநாய கனும்
பூவாய பீடத்து மேல யனும்
பூமி யளந்தானும் போற்றி சை
பாவாய இன்னிசைகள் பாடி யாடி
பாரிடமு தாமும் பரந்து பற்றி
பூவார்ந்த கொன்றை பொறிவண் டார்க்க
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் சாட்சிவரதநாதர்
தேவியார் கரும்பன்னசொல்லம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருநல்லூர் திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
நினைந்துருகும் அடியாரை நைய வைத்தார்
நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார்
சினந்திருகு களிற்றுரிவை போர்வை வைத்தார்
செழுமதியின் தளிர்வைத்தார் சிறந்து வானோர்
இனந்துருவி மணிமகுட தேற துற்ற
இனமலர்கள் போதவிழ்ந்து மதுவா பில்கி
நனைந்தனைய திருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே
பொன்னலத்த நறுங்கொன்றை சடைமேல் வைத்தார்
புலியுரியின் அதள்வைத்தார் புனலும் வைத்தார்
மன்னலத்த திரள்தோள்மேல் மழுவாள் வைத்தார்
வார்காதிற் குழைவைத்தார் மதியும் வைத்தார்
மின்னலத்த நுண்ணிடையாள் பாகம் வைத்தார்
வேழத்தி னுரிவைத்தார் வெண்ணூல் வைத்தார்
நன்னலத்த திருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே
தோடேறும் மலர்க்கொன்றை சடைமேல் வைத்தார்
துன்னெருக்கின் வடம்வைத்தார் துவலை சிந்த
பாடேறு படுதிரைக ளெறிய வைத்தார்
பனிமத்த மலர்வைத்தார் பாம்பும் வைத்தார்
சேடேறு திருநுதன்மேல் நாட்டம் வைத்தார்
சிலைவைத்தார் மலைபெற்ற மகளை வைத்தார்
நாடேறு திருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே
வில்லருளி வருபுருவ தொருத்தி பாகம்
பொருத்தாகி விரிசடைமே லருவி வைத்தார்
கல்லருளி வரிசிலையா வைத்தார் ஊரா
கயிலாய மலைவைத்தார் கடவூர் வைத்தார்
சொல்லருளி யறநால்வர கறிய வைத்தார்
சுடுசுடலை பொடிவைத்தார் துறவி வைத்தார்
நல்லருளாற் றிருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே
விண்ணிரியு திரிபுரங்க ளெரிய வைத்தார்