திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த
தேவார பதிகங்கள்
ஐந்தாம் திருமுறை முதற் பகுதி
பாடல்கள்
உள்ளுறை
கோயில் மின்பதிப்பு
கோயில் மின்பதிப்பு
திருவரத்துறை மின்பதிப்பு
திருவண்ணாமலை மின்பதிப்பு
திருவண்ணாமலை மின்பதிப்பு
திருவாரூர் மின்பதிப்பு
திருவாரூர் மின்பதிப்பு
திருஅன்னியூர் மின்பதிப்பு
திருமறைக்காடு மின்பதிப்பு
திருமறைக்காடு மின்பதிப்பு
திருமீயச்சூர் மின்பதிப்பு
திருவீழிமிழலை மின்பதிப்பு
திருவீழிமிழலை மின்பதிப்பு
திருவிடைமருதூர் மின்பதிப்பு
திருவிடைமருதூர் மின்பதிப்பு
திருப்பேரெயில் மின்பதிப்பு
திருவெண்ணியூர் மின்பதிப்பு
திருக்கடம்பந்துறை மின்பதிப்பு
திருக்கடம்பூர் மின்பதிப்பு
திருக்கடம்பூர் மின்பதிப்பு
திருவின்னம்பர் மின்பதிப்பு
திருக்குடமூக்கு மின்பதிப்பு
திருநின்றியூர் மின்பதிப்பு
திருவொற்றியூர் மின்பதிப்பு
திருப்பாசூர் மின்பதிப்பு
திருவன்னியூர் மின்பதிப்பு
திருவையாறு மின்பதிப்பு
திருவையாறு மின்பதிப்பு
திருவாவடுதுறை மின்பதிப்பு
திருப்பராய்த்துறை மின்பதிப்பு
திருவானைக்கா மின்பதிப்பு
திருப்பூந்துருத்தி மின்பதிப்பு
திருச்சோற்றுத்துறை மின்பதிப்பு
திருநெய்த்தானம் மின்பதிப்பு
திருப்பழனம் மின்பதிப்பு
திருச்செம்பொன்பள்ளி மின்பதிப்பு
திருக்கடவூர்வீரட்டம் மின்பதிப்பு
திருக்கடவூர்மயானம் மின்பதிப்பு
திருமயிலாடுதுறை மின்பதிப்பு
திருக்கழிப்பாலை மின்பதிப்பு
திருப்பைஞ்ஞீலி மின்பதிப்பு
திருவேட்களம் மின்பதிப்பு
திருநல்லம் மின்பதிப்பு
திருவாமாத்தூர் மின்பதிப்பு
திருத்தோணிபுரம் மின்பதிப்பு
திருப்புகலூர் மின்பதிப்பு
திருவேகம்பம் மின்பதிப்பு
திருவேகம்பம் மின்பதிப்பு
திருவெண்காடு மின்பதிப்பு
திருவாய்மூர் மின்பதிப்பு
கோயில் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
அன்னம் பாலிக்கு தில்லைச்சிற் றம்பலம்
பொன்னம் பாலிக்கு மேலுமி பூமிசை
என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற
இன்னம் பாலிக்கு மோவி பிறவியே
அரும்பற் றப்பட ஆய்மலர் கொண்டுநீர்
சுரும்பற் றப்பட தூவி தொழுமினோ
கரும்பற் றச்சிலை காமனை காய்ந்தவன்
பெரும்பற் றப்புலி யூரெம் பிரானையே
அரிச்சுற் றவினை யால்அடர புண்டுநீர்
எரிச்சுற் றக்கிட தாரென் றயலவர்
சிரிச்சுற் றப்பல பேசப்ப டாமுனம்
திருச்சிற் றம்பலஞ் சென்றடை துய்ம்மினே
அல்லல் என்செயும் அருவினை
தொல்லை வல்வினை தொந்தந்தான் என்செயும்
தில்லை மாநகர சிற்றம் பலவனார
கெல்லை யில்லதோர் அடிமைபூண் டேனுக்கே
ஊனி லாவி உயிர்க்கும் பொழுதெலாம்
நானி லாவி யிருப்பனென் னாதனை
தேனி லாவிய சிற்றம் பலவனார்
வானி லாவி யிருக்கவும் வைப்பரே
சிட்டர் வானவர் சென்று வரங்கொளுஞ்
சிட்டர் வாழ்தில்லை சிற்றம் பலத்துறை
சிட்டன் சேவடி கைதொழ செல்லு
சிட்டர் பாலணு கான்செறு காலனே
ஒருத்த னார்உல கங்க கொருசுடர்
திருத்த னார்தில்லை சிற்றம் பலவனார்
விருத்த னார்இளை யார்விட முண்டவெம்
அருத்த னார்அடி யாரை அறிவரே
விண்ணி றைந்ததோர் வெவ்வழ லின்னுரு
எண்ணி றைந்த இருவர கறிவொணா
கண்ணி றைந்த கடிபொழில் அம்பல
துண்ணி றைந்துநின் றாடும் ஒருவனே
வில்லைவ டப்பட வாங்கி அவுணர்தம்
வல்லைவ டம்மதின் மூன்றுடன் மாய்த்தவன்
தில்லைவ டந்திசை கைதொழு வார்வினை
ஒல்லைவ டங்கட தோடுதல் உண்மையே
நாடி நாரணன் நான்முக னென்றிவர்
தேடி யுந்திரி துங்காண வல்லரோ
மாட மாளிகை சூழ்தில்லை யம்பல
தாடி பாதமென் னெஞ்சுள் இருக்கவே
மதுர வாய்மொழி மங்கையோர் பங்கினன்
சதுரன் சிற்றம் பலவன் திருமலை
அதிர ஆர்த்தெடு தான்முடி பத்திற
மிதிகொள் சேவடி சென்றடை துய்ம்மினே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
கோயில் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
பனைக்கை மும்மத வேழ முரித்தவன்
நினைப்ப வர்மனங் கோயிலா கொண்டவன்
அனைத்து வேடமாம் அம்பல கூத்தனை
தினைத்த னைப்பொழு தும்மற துய்வனோ
தீர்த்த னைச்சிவ
மூர்த்தி யைமுத லாய ஒருவனை
பார்த்த னுக்கருள் செய்த சிற்றம்பல
கூத்த னைக்கொடி யேன்மற துய்வனோ
கட்டும் பாம்புங் கபாலங் கைமான்மறி
இட்ட மாயிடு காட்டெரி யாடுவான்
சிட்டர் வாழ்தில்லை யம்பல கூத்தனை
எட்ட னைப்பொழு தும்மற துய்வனோ
மாணி பால்கற தாட்டி வழிபட
நீணு லகெலாம் ஆள கொடுத்தவன்
ஆணி யைச்செம்பொன் அம்பல துள்நின்ற
தாணு வைத்தமி யேன்மற துய்வனோ
பித்த னைப்பெருங் காடரங் காவுடை
முத்த னைமுளை வெண்மதி சூடியை
சித்த னைச்செம்பொன் அம்பல துள்நின்ற
அத்த னையடி யேன்மற துய்வனோ
நீதி யைநிறை வைமறை நான்குடன்
ஓதி யையொரு வர்க்கு மறிவொணா
சோதி யைச்சுடர செம்பொனின் அம்பல
தாதி யையடி யேன்மற துய்வனோ
மைகொள் கண்டனெண் டோ ளன்மு கண்ணினன்
பைகொள் பாம்பரை யார்த்த பரமனார்
செய்ய மாதுறை சிற்றம்ப லத்தெங்கள்
ஐய னையடி யேன்மற துய்வனோ
முழுதும் வானுல கத்துள தேவர்கள்
தொழுதும் போற்றியு தூயசெம் பொன்னினால்
எழுதி மேய்ந்தசிற் றம்பல கூத்தனை
இழுதை யேன்மற தெங்ஙனம் உய்வனோ
காரு லாமலர கொன்றை தாரனை
வாரு லாமுலை மங்கை மணாளனை
தேரு லாவிய தில்லையு கூத்தனை
ஆர்கி லாவமு தைமற துய்வனோ
ஓங்கு மால்வரை ஏந்தலுற் றான்சிரம்
வீங்கி விம்முற ஊன்றிய தாளினான்
தேங்கு நீர்வயல் சூழ்தில்லை கூத்தனை
பாங்கி லாத்தொண்ட னேன்மற துய்வனோ
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
திருவரத்துறை திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
உடலு ளானையொ பாரியி லாதவெம்
அடலு ளானை அரத்துறை மேவிய
சுடரு ளானைக்கண் டீர்நா தொழுவதே
கரும்பொ பானை கரும்பினிற் கட்டியை
விரும்பொ பானைவிண் ணோரு மறிகிலா
அரும்பொ பானை அரத்துறை மேவிய
சுரும்பொ பானைக்கண் டீர்நா தொழுவதே
ஏறொ பானையெல் லாவுயிர கும்மிறை
வேறொ பானைவிண் ணோரு மறிகிலா
ஆறொ பானை அரத்துறை மேவிய
ஊறொ பானைக்கண் டீர்நா தொழுவதே
பரப்பொ பானை பகலிருள் நன்னிலா
இரப்பொ பானை இளமதி சூடிய
அரப்பொ பானை அரத்துறை மேவிய
சுரப்பொ பானைக்கண் டீர்நா தொழுவதே
நெய்யொ பானைநெய் யிற்சுடர் போல்வதோர்
மெய்யொ பானைவிண் ணோரு மறிகிலார்
ஐயொ பானை அரத்துறை மேவிய
கையொ பானைக்கண் டீர்நா தொழுவதே
நிதியொ பானை நிதியிற் கிழவனை
விதியொ பானைவிண் ணோரு மறிகிலார்
அதியொ பானை அரத்துறை மேவிய
கதியொ பானைக்கண் டீர்நா தொழுவதே
புனலொ பானை பொருந்தலர் தம்மையே
மினலொ பானைவிண் ணோரு மறிகிலார்
அனலொ பானை அரத்துறை மேவிய
கனலொ பானைக்கண் டீர்நா தொழுவதே
பொன்னொ பானைப்பொன் னிற்சுடர் போல்வதோர்
மின்னொ பானைவிண் ணோரு மறிகிலார்
அன்னொ பானை அரத்துறை மேவிய
தன்னொ பானைக்கண் டீர்நா தொழுவதே
காழி யானை கனவிடை யூருமெய்
வாழி யானைவல் லோருமென் றின்னவர்
ஆழி யான்பிர மற்கும் அரத்துறை
ஊழி யானைக்கண் டீர்நா தொழுவதே
கலையொ பானைக்கற் றார்க்கோ ரமுதினை
மலையொ பானை மணிமுடி யூன்றிய
அலையொ பானை அரத்துறை மேவிய
நிலையொ பானைக்கண் டீர்நா தொழுவதே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
திருவண்ணாமலை திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
வட்ட னைமதி சூடியை வானவர்
சிட்ட னைத்திரு வண்ணா மலையனை
இட்ட னையிகழ தார்புர மூன்றையும்
அட்ட னையடி யேன்மற துய்வனோ
வான னைமதி சூடிய மைந்தனை
தேன னைத்திரு வண்ணா மலையனை
ஏன னையிகழ தார்புர மூன்றெய்த
ஆன னையடி யேன்மற துய்வனோ
மத்த னைமத யானை யுரித்தவெஞ்
சித்த னைத்திரு வண்ணா மலையனை
முத்த னைமுனி தார்புர மூன்றெய்த
அத்த னையடி யேன்மற துய்வனோ
காற்ற னைக்கல கும்வினை போயற
தேற்ற னைத்திரு வண்ணா மலையனை
கூற்ற னைக்கொடி யார்புர மூன்றெய்த
ஆற்ற னையடி யேன்மற துய்வனோ
மின்ன னைவினை தீர்த்தெனை யாட்கொண்ட
தென்ன னைத்திரு வண்ணா மலையனை
என்ன னையிகழ தார்புர மூன்றெய்த
அன்ன னையடி யேன்மற துய்வனோ
மன்ற னைமதி யாதவன் வேள்விமேற்
சென்ற னைத்திரு வண்ணா மலையனை
வென்ற னைவெகுண் டார்புர மூன்றையுங்
கொன்ற னைக்கொடி யேன்மற துய்வனோ
வீர னைவிட முண்டனை விண்ணவர்
தீர னைத்திரு வண்ணா மலையனை
ஊர னையுண ரார்புர மூன்றெய்த
ஆர னையடி யேன்மற துய்வனோ
கருவி னைக்கடல் வாய்விட முண்டவெ
திருவி னைத்திரு வண்ணா மலையனை
உருவி னையுண ரார்புர மூன்றெய்த
அருவி னையடி யேன்மற துய்வனோ
அருத்த னையர வைந்தலை நாகத்தை
திருத்த னைத்திரு வண்ணா மலையனை
கருத்த னைக்கடி யார்புர மூன்றெய்த
அருத்த னையடி யேன்மற துய்வனோ
அரக்க னையல றவ்விர லூன்றிய
திருத்த னைத்திரு வண்ணா மலையனை
இரக்க மாயென் உடலுறு நோய்களை
துரக்க னைத்தொண்ட னேன்மற துய்வனோ
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
திருவண்ணாமலை திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
பட்டி ஏறுக தேறி பலஇலம்
இட்ட மாக இரந்துண் டுழிதரும்
அட்ட மூர்த்திஅண் ணாமலை கைதொழ
கெட்டு போம்வினை கேடில்லை காண்மினே
பெற்ற மேறுவர் பெய்பலி கென்றவர்
சுற்ற மாமிகு தொல்புக ழாளொடும்
அற்ற தீர்க்கும்அண் ணாமலை கைதொழ
நற்ற வத்தொடு ஞான திருப்பரே
பல்லி லோடுகை யேந்தி பலஇலம்
ஒல்லை சென்றுணங் கல்கவர் வாரவர்
அல்லல் தீர்க்கும்அண் ணாமலை கைதொழ
நல்ல வாயின நம்மை அடையுமே
பாடி சென்று பலிக்கென்று நின்றவர்
ஓடி போயினர் செய்வதொன் றென்கொலோ
ஆடி பாடிஅண் ணாமலை கைதொழ
ஓடி போகுநம் மேலை வினைகளே
தேடி சென்று திருந்தடி யேத்துமின்
நாடி வந்தவர் நம்மையும் ஆட்கொள்வர்
ஆடி பாடிஅண் ணாமலை கைதொழ
ஓடி போம்நம துள்ள வினைகளே
கட்டி யொக்குங் கரும்பி னிடைத்துணி
வெட்டி வீணைகள் பாடும் விகிர்தனார்
அட்ட மூர்த்திஅண் ணாமலை மேவிய
நட்ட மாடியை நண்ணநன் காகுமே
கோணி கொண்டையர் வேடமுன் கொண்டவர்
பாணி நட்டங்க ளாடும் பரமனார்
ஆணி பொன்னினண் ணாமலை கைதொழ
பேணி நின்ற பெருவினை போகுமே
கண்ட தான்கறு தான்காலன் ஆருயிர்
பண்டு கால்கொடு பாய்ந்த பரமனார்
அண்ட தோங்கும்அண் ணாமலை கைதொழ
விண்டு போகுநம் மேலை வினைகளே
முந்தி சென்றுமு போதும் வணங்குமின்
அந்தி வாயொளி யான்றன்அண் ணாமலை
சிந்தி யாஎழு வார்வினை தீர்த்திடுங்
கந்த மாமலர் சூடுங் கருத்தனே
மறையி னானொடு மாலவன் காண்கிலா
நிறையும் நீர்மையுள் நின்றருள் செய்தவன்
உறையும் மாண்பின்அண் ணாமலை கைதொழ
பறையும் நாஞ்செய்த பாவங்க ளானவே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
திருவாரூர் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
எப்போ தும்மிறை யும்மற வாதுநீர்
முப்போ தும்பிர மன்றொழ நின்றவன்
செப்போ தும்பொனின் மேனி சிவனவன்
அப்போ தைக்கஞ்சல் என்னும்ஆ ரூரனே
சடையின் மேலுமோர் தையலை வைத்தவர்
அடைகி லாவர வைஅரை யார்த்தவர்
படையின் நேர்தடங் கண்ணுமை பாகமா
அடைவர் போல்இடு காடர்ஆ ரூரரே
விண்ட வெண்டலை யேகல னாகவே
கொண்ட கம்பலி தேருங் குழகனார்
துண்ட வெண்பிறை வைத்த இறையவர்
அண்ட வாணர கருளும்ஆ ரூரரே
விடையும் ஏறுவர் வெண்டலை யிற்பலி
கடைகள் தோறு திரியுமெங் கண்ணுதல்
உடையுஞ் சீரை உறைவது காட்டிடை
அடைவர் போல்அரங் காகஆ ரூரரே
துளைக்கை வேழ துரியுடல் போர்த்தவர்
வளைக்கை யாளையோர் பாக மகிழ்வெய்தி
திளைக்கு திங்க சடையிற் திசைமுழு
தளக்கஞ் சிந்தையர் போலும்ஆ ரூரரே
பண்ணின் இன்மொழி யாளையோர் பாகமா
விண்ணி னார்விளங் கும்மதி சூடியே
சுண்ண நீறுமெ பூசி சுடலையின்
அண்ணி யாடுவர் போலும்ஆ ரூரரே
மட்டு வார்குழ லாளொடு மால்விடை
இட்ட மாவுக தேறும் இறைவனார்
கட்டு வாங்கங் கனல்மழு மான்றனோ
டட்ட மாம்புய மாகும்ஆ ரூரரே
தேய்ந்த திங்கள் கமழ்சடை யன்கனல்
ஏந்தி எல்லியுள் ஆடும் இறைவனார்
காய்ந்து காமனை நோக்கின கண்ணினார்
ஆய்ந்த நான்மறை யோதும்ஆ ரூரரே
உண்டு நஞ்சுகண் டத்துள் அடக்கியங்
கிண்டை செஞ்சடை வைத்த இயல்பினான்
கொண்ட கோவண ஆடையன் கூரெரி
அண்ட வாணர் அடையும்ஆ ரூரரே
மாலும் நான்முக னும்மறி கிற்கிலார்
கால னாய அவனை கடந்திட்டு
சூல மான்மழு வேந்திய கையினார்
ஆலம் உண்டழ காயஆ ரூரரே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
திருவாரூர் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
கொக்க ரைகுழல் வீணை கொடுகொட்டி
பக்க மேபகு வாயன பூதங்கள்
ஒக்க ஆட லுகந்துடன் கூத்தராய்
அக்கி னோடர வார்ப்பர்ஆ ரூரரே
எந்த மாதவஞ் செய்தனை நெஞ்சமே
பந்தம் வீடவை யாய பராபரன்
அந்த மில்புகழ் ஆரூர் அரனெறி
சிந்தை யுள்ளுஞ் சிரத்துளு தங்கவே
வண்டு லாமலர் கொண்டு வளர்சடை
கிண்டை மாலை புனைந்தும் இராப்பகல்
தொண்ட ராகி தொடர்ந்து விடாதவர
கண்டம் ஆளவும் வைப்பர்ஆ ரூரரே
துன்பெ லாமற நீங்கி சுபத்தராய்
என்பெ லாம்நெக்கி ராப்பக லேத்திநின்
றின்ப ராய்நினை தென்றும் இடையறா
அன்ப ராமவர கன்பர்ஆ ரூரரே
முருட்டு மெத்தையில் முன்கிட தாமுனம்
அரட்டர் ஐவரை ஆசறு திட்டுநீர்
முரட்ட டித்தவ தக்கன்றன் வேள்வியை
அரட்ட டக்கிதன் ஆரூர் அடைமினே
எம்மை யாரிலை யானுமு ளேனலேன்
எம்மை யாரும் இதுசெய வல்லரே
அம்மை யாரென கென்றென் றரற்றினேற்
கம்மை யாரைத்த தார்ஆரூர் ஐயரே
தண்ட ஆளியை தக்கன்றன் வேள்வியை
செண்ட தாடிய தேவர கண்டனை
கண்டு கண்டிவள் காதலி தன்பதா
கொண்டி யாயின வாறென்றன் கோதையே
இவண மைப்பல பேச தொடங்கினாள்
அவண மன்றெனில் ஆரூர் அரனெனும்
பவணி வீதி விடங்கனை கண்டிவள்
தவணி யாயின வாறென்றன் தையலே
நீரை செஞ்சடை வைத்த நிமலனார்
காரொ தமிடற் றர்கனல் வாயரா
ஆர தர்உறை யும்மணி ஆரூரை
தூர தேதொழு வார்வினை தூளியே
உள்ள மேயொன் றுறுதி யுரைப்பன்நான்
வெள்ள தாங்கு விரிசடை வேதியன்
அள்ளல் நீர்வயல் ஆரூர் அமர்ந்தவெம்
வள்ளல் சேவடி வாழ்த்தி வணங்கிடே
விண்ட மாமலர் மேலுறை வானொடுங்
கொண்டல் வண்ணனுங் கூடி அறிகிலா
அண்ட வாணன்றன் ஆரூர் அடிதொழ
பண்டை வல்வினை நில்லா பறையுமே
மையு லாவிய கண்டத்தன் அண்டத்தன்
கையு லாவிய சூலத்தன் கண்ணுதல்
ஐயன் ஆரூர் அடிதொழு வார்க்கெலாம்
உய்ய லாமல்லல் ஒன்றிலை காண்மினே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
திருஅன்னியூர் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
பாற லைத்த படுவெண் டலையினன்
நீற லைத்தசெம் மேனியன் நேரிழை
கூற லைத்தமெய் கோளர வாட்டிய
ஆற லைத்த சடைஅன்னி யூரரே
பண்டொ தமொழி யாளையோர் பாகமாய்
இண்டை செஞ்சடை யன்னிருள் சேர்ந்ததோர்
கண்ட தன்கரி யின்னுரி போர்த்தவன்
அண்ட தப்புற தான்அன்னி யூரரே
பரவி நாளும் பணிந்தவர் தம்வினை
துரவை யாக துடைப்பவர் தம்மிடங்
குரவம் நாறுங் குழலுமை கூறராய்
அரவ மாட்டுவர் போல்அன்னி யூரரே
வேத கீதர்விண் ணோர்க்கும் உயர்ந்தவர்
சோதி வெண்பிறை துன்று சடைக்கணி
நாதர் நீதியி னாலடி யார்த
காதி யாகிநின் றார்அன்னி யூரரே
எம்பி ரான்இமை யோர்கள் தமக்கெலாம்
இன்ப ராகி இருந்தவெம் மீசனார்
துன்ப வல்வினை போக தொழுமவர
கன்ப ராகிநின் றார்அன்னி யூரரே
வெந்த நீறுமெய் பூசுநன் மேனியர்
கந்த மாமலர் சூடுங் கருத்தினர்
சிந்தை யார்சிவ னார்செய்ய தீவண்ணர்
அந்த ணாளர்கண் டீர்அன்னி யூரரே
ஊனை யார்தலை யிற்பலி கொண்டுழல்
வானை வானவர் தாங்கள் வணங்கவே
தேனை யார்குழ லாளையோர் பாகமா
ஆனை யீருரி யார்அன்னி யூரரே
காலை போய்ப்பலி தேர்வர் கண்ணார்நெற்றி
மேலை வானவர் வந்து விரும்பிய
சோலை சூழ்புறங் காடரங் காகவே
ஆலின் கீழற தார்அன்னி யூரரே
எரிகொள் மேனியர் என்பணி தின்பரா
திரியு மூவெயில் தீயெழ செற்றவர்
கரிய மாலொடு நான்முகன் காண்பதற்
கரிய ராகிநின் றார்அன்னி யூரரே
வஞ்ச ரக்கன் கரமுஞ் சிரத்தொடும்
அஞ்சு மஞ்சுமோ ராறுநான் கும்மிற
பஞ்சின் மெல்விர லாலடர தாயிழை
அஞ்ச லஞ்சலென் றார்அன்னி யூரரே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
திருமறைக்காடு திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
ஓத மால்கடல் பாவி உலகெலாம்
மாத ரார்வலங் கொண்மறை காடரை
காதல் செய்து கருத படுமவர்
பாத மேத்த பறையுநம் பாவமே
பூக்கு தாழை புறணி அருகெலாம்
ஆக்க தானுடை மாமறை காடரோ
ஆர்க்குங் காண்பரி யீர்அடி யார்தமை
நோக்கி காண்பது நும்பணி செய்யிலே
புன்னை ஞாழல் புறணி அருகெலாம்
மன்னி னார்வலங் கொண்மறை காடரோ
அன்ன மென்னடை யாளையோர் பாகமா
சின்ன வேடம் உகப்பது செல்வமே
அட்ட மாமலர் சூடி அடம்பொடு
வட்ட புன்சடை மாமறை காடரோ
நட்ட மாடியும் நான்மறை பாடியும்
இட்ட மாக இருக்கும் இடமிதே
நெய்த லாம்பல் நிறைவயல் சூழ்தரும்
மெய்யி னார்வலங் கொண்மறை காடரோ
தையல் பாகங்கொண் டீர்கவர் புன்சடை
பைதல் வெண்பிறை பாம்புடன் வைப்பதே
துஞ்சும் போது துயிலின்றி ஏத்துவார்
வஞ்சின் றிவலங் கொண்மறை காடரோ
பஞ்சின் மெல்லடி பாவை பலிகொணர
தஞ்சி நிற்பதும் ஐந்தலை நாகமே
விண்ணு ளார்விரும் பியெதிர் கொள்ளவே
மண்ணு ளார்வணங் கும்மறை காடரோ
கண்ணி னாலுமை காண கதவினை
திண்ண மாக திறந்தருள் செய்ம்மினே
திருவி னார்செல்வ மல்கு விழாவணி
மருவி னார்வலங் கொண்மறை காடரோ
உருவி னாளுமை மங்கையோர் பாகமாய்
மருவி னாய்கங்கை யைச்சென்னி தன்னிலே
சங்கு வந்தலை குந்தடங் கானல்வாய்
வங்க மார்வலங் கொண்மறை காடரோ
கங்கை செஞ்சடை வைப்பது மன்றியே
அங்கை யில்லனல் ஏந்தல் அழகிதே
குறைக்கா டான்விட்ட தேர்குத்த மாமலை
இறைக்கா டியெடு தான்றலை ஈரைந்தும்
மறைக்கா டானிறை ஊன்றலும் வாய்விட்டான்
இறைக்கா டாயெம் பிரானுனை ஏத்தவே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
திருமறைக்காடு திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
பண்ணி னேர்மொழி யாளுமை பங்கரோ
மண்ணி னார்வலஞ் செய்ம்மறை காடரோ
கண்ணி னாலுமை காண கதவினை
திண்ண மாக திறந்தருள் செய்ம்மினே
ஈண்டு செஞ்சடை யாகத்துள் ஈசரோ
மூண்ட கார்முகி லின்முறி கண்டரோ
ஆண்டு கொண்டநீ ரேயருள் செய்திடும்
நீண்ட மாக்கத வின்வலி நீக்குமே
அட்ட மூர்த்திய தாகிய அப்பரோ
துட்டர் வான்புரஞ் சுட்ட சுவண்டரோ
பட்டங் கட்டிய சென்னி பரமரோ
சட்ட விக்கத வந்திற பிம்மினே
அரிய நான்மறை யோதிய நாவரோ
பெரிய வான்புரஞ் சுட்ட சுவண்டரோ
விரிகொள் கோவண ஆடை விருத்தரோ
பெரிய வான்கத வம்பிரி விக்கவே
மலையில் நீடிரு கும்மறை காடரோ
கலைகள் வந்திறைஞ் சுங்கழ லேத்தரோ
விலையில் மாமணி வண்ண வுருவரோ
தொலைவி லாக்கத வந்துணை நீக்குமே
பூக்கு தாழை புறணி அருகெலாம்
ஆக்கு தண்பொழில் சூழ்மறை காடரோ
ஆர்க்குங் காண்பரி யீர்அடி கேள்உமை
நோக்கி காண கதவை திறவுமே
வெந்த வெண்பொடி பூசும் விகிர்தரோ
அந்த மில்லி அணிமறை காடரோ
எந்தை நீயடி யார்வ திறைஞ்சிட
இந்த மாக்கத வம்பிணி நீக்குமே
ஆறு சூடும் அணிமறை காடரோ
கூறு மாதுமை கீந்த குழகரோ
ஏற தேறிய எம்பெரு மானிந்த
மாறி லாக்கத வம்வலி நீக்குமே
சுண்ண வெண்பொடி பூசுஞ் சுவண்டரோ
பண்ணி யேறுக தேறும் பரமரோ
அண்ண லாதி அணிமறை காடரோ
திண்ண மாக்கத வந்திற பிம்மினே
விண்ணு ளார்விரும் பியெதிர் கொள்ளவே
மண்ணு ளார்வணங் கும்மறை காடரோ
கண்ணி னாலுமை காண கதவினை
திண்ண மாக திறந்தருள் செய்ம்மினே
அரக்க னைவிர லாலடர திட்டநீர்
இரக்க மொன்றிலீர் எம்பெரு மானிரே
சுரக்கும் புன்னைகள் சூழ்மறை காடரோ
சரக்க விக்கத வந்திற பிம்மினே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
திருமீயச்சூர் இளங்கோயில் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
தோற்றுங் கோயிலு தோன்றிய கோயிலும்
வேற்று கோயில் பலவுள மீயச்சூர
கூற்றம் பாய்ந்த குளிர்புன் சடையரற்
கேற்றங் கோயில்கண் டீரிளங் கோயிலே
வந்த னையடை கும்மடி தொண்டர்கள்
பந்த னைசெய்து பாவிக்க நின்றவன்
சிந்த னைதிரு துந்திரு மீயச்சூர்
எந்த மையுடை யாரிளங் கோயிலே
பஞ்ச மந்திர மோதும் பரமனார்
அஞ்ச ஆனை யுரித்தன லாடுவார்
நெஞ்சம் வாழி நினைந்திரு மீயச்சூர்
எந்த மையுடை யாரிளங் கோயிலே
நாறு மல்லிகை கூவிளஞ் செண்பகம்
வேறு விரித்த
ஆறு கொண்டுக தான்றிரு மீயச்சூர்
ஏறு கொண்டுக தாரிளங் கோயிலே
வெவ்வ வண்ணத்து நாகம் வெருவவே
கவ்வ வண்ண கனல்விரி தாடுவர்
செவ்வ வண்ண திகழ்திரு மீயச்சூர்
எவ்வ வண்ணம் பிரானிளங் கோயிலே
பொன்னங் கொன்றையும் பூவணி மாலையும்
பின்னுஞ் செஞ்சடை மேற்பிறை சூடிற்று
மின்னு மேகலை யாளொடு மீயச்சூர்
இன்ன நாள்அக லாரிளங் கோயிலே
படைகொள் பூதத்தன் பைங்கொன்றை தாரினன்
சடைகொள் வெள்ளத்தன் சாந்தவெண் ணீற்றினன்
விடைகொ ளூர்தியி னான்றிரு மீயச்சூர்
இடைகொண் டேத்தநின் றாரிளங் கோயிலே
ஆறு கொண்ட சடையினர் தாமுமோர்
வேறு கொண்டதோர் வேடத்த ராகிலுங்
கூறு கொண்டுக தாளொடு மீயச்சூர்
ஏறு கொண்டுக தாரிளங் கோயிலே
வே தானென்பர் வேள்வியு ளானென்பர்
பூ தானென்பர் புண்ணியன் றன்னையே
கீ தான்கிள ருந்திரு மீயச்சூர்
ஏத தீர்க்கநின் றாரிளங் கோயிலே
கடுக்கண் டன்கயி லாய மலைதனை
எடுக்க லுற்ற இராவணன் ஈடற
விடுக்க ணின்றி வெகுண்டவன் மீயச்சூர்
இடுக்கண் தீர்க்கநின் றாரிளங் கோயிலே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
திருவீழிமிழலை திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
கரைந்து கைதொழு வாரையுங் காதலன்
வரைந்து வைதெழு வாரையும் வாடலன்
நிரந்த பாரிட தோடவர் நித்தலும்
விரைந்து போவது வீழி மிழலைக்கே
ஏற்று வெல்கொடி ஈசன்ற னாதிரை
நாற்றஞ் சூடுவர் நன்னறு திங்களார்
நீற்று சந்தன வெள்ளை விரவலார்
வேற்று கோலங்கொள் வீழி மிழலையே
புனைபொற் சூலத்தன் போர்விடை யூர்தியான்
வினைவெல் நாகத்தன் வெண்மழு வாளினான்
நினைய நின்றவன் ஈசனை யேயெனா
வினையி லார்தொழும் வீழி மிழலையே
மாட தாடு மனத்துடன் வைத்தவர்
கோட தார்குரு கேத்திர தார்பலர்
பாட தார்பழி பார்பழி பல்லதோர்
வேட தார்தொழும் வீழி மிழலையே
எடுத்த வெல்கொடி யேறுடை யான்றமர்
உடுப்பர் கோவண முண்பது பிச்சையே
கெடுப்ப தாவது கீழ்நின்ற வல்வினை
விடுத்து போவது வீழி மிழலைக்கே
குழலை யாழ்மொழி யாரிசை வேட்கையால்
உழலை யாக்கையை யூணும் உணர்விலீர்
தழலை நீர்மடி கொள்ளன்மின் சாற்றினோம்
மிழலை யானடி சாரவிண் ணாள்வரே
தீரன் தீத்திர ளன்சடை தங்கிய
நீரன் ஆடிய நீற்றன்வண் டார்கொன்றை
தாரன் மாலையன் றண்ணறுங் கண்ணியன்
வீரன் வீழி மிழலை விகிர்தனே
எரியி னாரிறை யாரிடு காட்டிடை
நரியி னார்பரி யாமகிழ் கின்றதோர்
பெரிய னார்தம் பிறப்பொடு சாதலை
விரியி னார்தொழு வீழி மிழலையே
நீண்ட சூழ்சடை மேலோர் நிலாமதி
காண்டு சேவடி மேலோர் கனைகழல்
வேண்டு வாரவர் வீதி புகுந்திலர்
மீண்டும் போவது வீழி மிழலைக்கே
பாலை யாழொடு செவ்வழி பண்கொள
மாலை வானவர் வந்து வழிபடும்
ஆலை யாரழல் அந்தண ராகுதி
வேலை யார்தொழும் வீழி மிழலையே
மழலை யேற்று மணாளன் திருமலை
சுழல ஆர்த்தெடு தான்முடி தோளிற
கழல்கொள் காலிற் றிருவிர லூன்றலும்
மிழலை யானடி வாழ்கென விட்டதே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
திருவீழிமிழலை திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
என்பொ னேயிமை யோர்தொழு பைங்கழல்
நன்பொ னேநல தீங்கறி வொன்றிலேன்
செம்பொ னேதிரு வீழி மிழலையுள்
அன்ப னேயடி யேனை குறிக்கொளே
கண்ணி னாற்களி கூரக்கை யாற்றொழு
தெண்ணு மாறறி யாதிளை பேன்றனை
விண்ணு ளார்தொழும் வீழி மிழலையுள்
அண்ண லேயடி யேனை குறிக்கொளே
ஞால மேவிசும் பேநல தீமையே
கால மேகரு தேகரு தாற்றொழுஞ்
சீல மேதிரு வீழி மிழலையுள்
கோல மேயடி யேனை குறிக்கொளே
முத்த னேமுதல் வாமுகி ழும்முளை
ஒத்த னேயொரு வாவுரு வாகிய
சித்த னேதிரு வீழி மிழலையுள்
அத்த னேயடி யேனை குறிக்கொளே
கருவ னேகரு வாய்த்தெளி வார்க்கெலாம்
ஒருவ னேஉயிர பாய்உணர் வாய்நின்ற
திருவ னேதிரு வீழி மிழலையுள்
குருவ னேயடி யேனை குறிக்கொளே
காத்த னேபொழி லேழையுங் காதலால்
ஆத்த னேஅம ரர்க்கயன் றன்றலை
சேர்த்த னேதிரு வீழி மிழலையுள்
கூத்த னேயடி யேனை குறிகொளே
நீதி வானவர் நித்தல் நியமஞ்செய்
தோதி வானவ ரும்முண ராததோர்
வேதி யாவிகிர் தாதிரு வீழியுள்
ஆதி யேயடி யேனை குறிக்கொளே
பழகி நின்னடி சூடிய பாலனை
கழகின் மேல்வைத்த காலனை சாடிய
அழக னேயணி வீழி மிழலையுள்
குழக னேயடி யேனை குறிக்கொளே
அண்ட வானவர் கூடி கடைந்தநஞ்
சுண்ட வானவ னேஉணர் வொன்றிலேன்
விண்ட வான்பொழில் வீழி மிழலையுள்
கொண்ட னேயடி யேனை குறிக்கொளே
ஒருத்தன் ஓங்கலை தாங்கலுற் றானுரம்
வருத்தி னாய்வஞ்ச னேன்மனம் மன்னிய
திருத்த னேதிரு வீழி மிழலையுள்
அருத்த னேயடி யேனை குறிக்கொளே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
திருவிடைமருதூர் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
பாச மொன்றில ராய்ப்பல பத்தர்கள்
வாச நாண்மலர் கொண்டடி வைகலும்
ஈச னெம்பெரு மான்இடை மருதினிற்
பூச நாம்புகு தும்புன லாடவே
மறையின் நாண்மலர் கொண்டடி வானவர்
முறையி னான்முனி கள்வழி பாடுசெய்
இறைவன் எம்பெரு மான்இடை மருதினில்
உறையும் ஈசனை உள்குமென் உள்ளமே
கொன்றை மாலையுங் கூவிள மத்தமுஞ்
சென்று சேர திகழ்சடை வைத்தவன்
என்று மெந்தை பிரான்இடை மருதினை
நன்று கைதொழு வார்வினை நாசமே
இம்மை வானவர் செல்வம் விளைத்திடும்
அம்மை யேற்பிற வித்துயர் நீத்திடும்
எம்மை யாளும் இடைமரு தன்கழல்
செம்மை யேதொழு வார்வினை சிந்துமே
வண்ட ணைந்தன வன்னியுங் கொன்றையுங்
கொண்ட ணிந்த சடைமுடி கூத்தனார்
எண்டி சைக்கும் இடைமரு தாவென
விண்டு போயறும் மேலை வினைகளே
ஏற தேறும் இடைமரு தீசனார்
கூறு வார்வினை தீர்க்குங் குழகனார்
ஆறு செஞ்சடை வைத்த அழகனார
கூறி யூறி உருகுமென் உள்ளமே
விண்ணு ளாரும் விரு படுவர்
மண்ணு ளாரும் மதிக்க படுபவர்
எண்ணி னார்பொழில் சூழிடை மருதினை
நண்ணி னாரைநண் ணாவினை நாசமே
வெந்த வெண்பொடி பூசும் விகிர்தனார்
கந்த மாலைகள் சூடுங் கருத்தனார்
எந்தை யென்னிடை மருதினில் ஈசனை
சிந்தை யால்நினை வார்வினை தேயுமே
வேத மோதும் விரிசடை அண்ணலார்
பூதம் பாடநின் றாடும் புனிதனார்
ஏத தீர்க்கும் இடைமரு தாவென்று
பாத மேத்த பறையுநம் பாவமே
கனியி னுங்கட்டி பட்ட கரும்பினும்
பனிம லர்க்குழற் பாவைநல் லாரினு
தனிமு டிகவி தாளு மரசினும்
இனியன் றன்னடை தார்க்கிடை மருதனே
முற்றி லாமதி சூடும் முதல்வனார்
ஒற்றி னார்மலை யாலர கன்முடி
எற்றி னார்கொடி யாரிடை மருதினை
பற்றி னாரைப்பற் றாவினை பாவமே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
திருவிடைமருதூர் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
பறையின் ஓசையும் பாடலின்
மறையின் ஓசையும் வைகும் அயலெலாம்
இறைவன் எங்கள் பிரானிடை மருதினில்
உறையும் ஈசனை உள்குமென் உள்ளமே
மனத்துள் மாயனை மாசறு சோதியை
புனிற்று பிள்ளைவெள் ளைம்மதி சூடியை
எனக்கு தாயையெம் மானிடை மருதனை
நினைத்தி டூறி நிறைந்ததென் னுள்ளமே
வண்ட ணைந்தன வன்னியும் மத்தமுங்
கொண்ட ணிந்த சடைமுடி கூத்தனை
எண்டி சைக்கும் இடைமரு தாவென
விண்டு போயறும் மேலை வினைகளே
துணையி லாமையிற் றூங்கிரு பேய்களோ
டணைய லாவதெ மக்கரி தேயெனா
இணையி லாஇடை மாமரு தில்லெழு
பணையி லாகமஞ் சொல்லுந்தன் பாங்கிக்கே
மண்ணை யுண்டமால் காணான் மலரடி
விண்ணை விண்டயன் காணான் வியன்முடி
மொண்ணை மாமரு தாவென்றென் மொய்குழல்
பண்ணை யாயமு தானும் பயிலுமே
மங்கை காண கொடார்மண மாலையை
கங்கை காண கொடார்முடி கண்ணியை
நங்கை மீர்இடை மருதரி நங்கைக்கே
எங்கு வாங்கி கொடுத்தார் இதழியே
இப்பதிகத்தில் ம் செய்யுட்கள் சிதைந்து போயின
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
திருப்பேரெயில் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
மறையு மோதுவர் மான்மறி கையினர்
கறைகொள் கண்ட முடைய கபாலியார்
துறையும் போகுவர் தூயவெண் ணீற்றினர்
பிறையுஞ் சூடுவர் பேரெயி லாளரே
கணக்கி லாரையுங் கற்றுவல் லாரையும்
வணக்கி லாநெறி கண்டுகொண் டாரையு
தணக்கு வார்தணி பாரெ பொருளையும்
பிணக்கு வாரவர் பேரெயி லாளரே
சொரிவி பார்மழை சூழ்கதிர திங்களை
விரிவி பார்வெயிற் பட்ட விளங்கொளி
எரிவி பார்தணி பாரெ பொருளையும்
பிரிவி பாரவர் பேரெயி லாளரே
செறுவி பார்சிலை யால்மதில் தீர்த்தங்கள்
உறுவி பார்பல பத்தர்கள் ஊழ்வினை
அறுவி பாரது வன்றியும் நல்வினை
பெறுவி பாரவர் பேரெயி லாளரே
மற்றை யாரறி யார்மழு வாளினார்
பற்றி யாட்டியோர் ஐந்தலை பாம்பரை
சுற்றி யாரவர் தூநெறி யால்மிகு
பெற்றி யாரவர் பேரெயி லாளரே
திருக்கு வார்குழற் செல்வன சேவடி
இருக்கு வாய்மொழி யாற்றனை யேத்துவார்
சுருக்கு வார்துயர் தோற்றங்க ளாற்றற
பெருக்கு வாரவர் பேரெயி லாளரே
முன்னை யார்மயி லூர்தி முருகவேள்
தன்னை யாரெனிற் றானோர் தலைமகன்
என்னை யாளும் இறையவ னெம்பிரான்
பின்னை யாரவர் பேரெயி லாளரே
உழைத்து துள்ளியும் உள்ளத்து ளேயுரு
இழைத்து மெந்தை பிரானென் றிராப்பகல்
அழைக்கும் அன்பின ராய அடியவர்
பிழைப்பு நீக்குவர் பேரெயி லாளரே
நீரு லாநிமிர் புன்சடை யாவெனா
ஏரு லாவனங் கன்றிறல் வாட்டிய
வாரு லாவன மென்முலை யாளொடும்
பேரு ளாரவர் பேரெயி லாளரே
பாணி யார்படு தம்பெயர தாடுவர்
தூணி யார்விச யற்கருள் செய்தவர்
மாணி யாய்மண் ணளந்தவன் நான்முகன்
பேணி யாரவர் பேரெயி லாளரே
மதத்த வாளர கன்மணி புட்பகஞ்
சிதைக்க வேதிரு மாமலை கீழ்ப்புக்கு
பதைத்தங் கார்த்தெடு தான்பத்து நீண்முடி
பிதக்க வூன்றிய பேரெயி லாளரே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
திருவெண்ணி திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
முத்தி னைப்பவ ளத்தை முளைத்தவெ
தொத்தி னைச்சுட ரைச்சுடர் போலொளி
பித்த னைக்கொலும் நஞ்சினை வானவர்
நித்த னைநெரு நற்கண்ட வெண்ணியே
வெண்ணி தொன்னகர் மேயவெண் டிங்களார்
கண்ணி தொத்த சடையர் கபாலியார்
எண்ணி தம்மை நினைந்திரு தேனுக்கு
அண்ணி திட்டமு தூறுமென் நாவுக்கே
காற்றி னைக்கன லைக்கதிர் மாமணி
நீற்றி னைநினை பார்வினை நீக்கிடுங்
கூற்றி னையுதை திட்ட குணமுடை
வீற்றி னைநெரு நற்கண்ட வெண்ணியே
நல்ல னைத்திகழ் நான்மறை யோதியை
சொல்ல னைச்சுட ரைச்சுடர் போலொளிர்
கல்ல னைக்கடி மாமதில் மூன்றெய்த
வில்ல னைநெரு நற்கண்ட வெண்ணியே
சுடரை போலொளிர் சுண்ணவெண் ணீற்றனை
அடருஞ் சென்னியில் வைத்த அமுதினை
படருஞ் செஞ்சடை பான்மதி சூடியை
இடரை நீக்கியை யான்கண்ட வெண்ணியே
பூத நாதனை பூம்புக லூரனை
தாதெ னத்தவ ழும்மதி சூடியை
நாத னைநல்ல நான்மறை யோதியை
வேத னைநெரு நற்கண்ட வெண்ணியே
ஒருத்தி யையொரு பாக தடக்கியும்
பொருத்தி யபுனி தன்புரி புன்சடை
கருத்த னைக்கறை கண்டனை கண்ணுதல்
நிருத்த னைநெரு நற்கண்ட வெண்ணியே
சடைய னைச்சரி கோவண ஆடைகொண்
டுடைய னையுணர் வார்வினை தீர்த்திடும்
படைய னைமழு வாளொடு பாய்தரும்
விடைய னைநெரு நற்கண்ட வெண்ணியே
பொருப்ப னைப்புன லாளொடு புன்சடை
அருப்ப னையிள திங்களங் கண்ணியான்
பருப்ப தம்பர வித்தொழு தொண்டர்கள்
விருப்ப னைநெரு நற்கண்ட வெண்ணியே
சூல வஞ்சனை வல்லவெஞ் சுந்தரன்
கோல மாவருள் செய்ததோர் கொள்கையான்
காலன் அஞ்ச வுதைத்திருள் கண்டமாம்
வேலை நஞ்சனை கண்டது வெண்ணியே
இலையி னார்கொன்றை சூடிய ஈசனார்
மலையி னாலர கன்றிறல் வாட்டினார்
சிலையி னான்மதி லெய்தவன் வெண்ணியை
தலையி னாற்றொழு வார்வினை தாவுமே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
திருக்கடம்பந்துறை திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
முற்றி லாமுலை யாளிவ ளாகிலும்
அற்ற தீர்க்கும் அறிவில ளாகிலுங்
கற்றை செஞ்சடை யான்கடம் பந்துறை
பெற்ற மூர்தியென் றாளெங்கள் பேதையே
தனகி ருந்ததோர் தன்மைய ராகிலும்
முனகு தீர தொழுதெழு மின்களோ
கனக புன்சடை யான்கடம் பந்துறை
நினைய வல்லவர் நீள்விசும் பாள்வரே
ஆரி யந்தமி ழோடிசை யானவன்
கூரி யகுண தார்குறி நின்றவன்
காரி கையுடை யான்கடம் பந்துறை
சீரி யல்பத்தர் சென்றடை மின்களே
பண்ணின் இன்மொழி கேட்கும் பரமனை
வண்ண நன்மல ரான்பல தேவருங்
கண்ண னும்மறி யான்கடம் பந்துறை
நண்ண நம்வினை யாயின நாசமே
மறைகொண் டமன தானை மனத்துளே
நிறைகொண் டநெஞ்சி னுள்ளுற வைம்மினோ
கறைகண் டனுறை யுங்கடம் பந்துறை
சிறைகொண் டவினை தீர தொழுமினே
நங்கை பாகம்வை தநறுஞ் சோதியை
பங்க மின்றி பணிந்தெழு மின்களோ
கங்கை செஞ்சடை யான்கடம் பந்துறை
அங்க மோதி அரனுறை கின்றதே
அரிய நான்மறை ஆறங்க மாயைந்து
புரியன் தேவர்க ளேத்தநஞ் சுண்டவன்
கரிய கண்டத்தி னான்கடம் பந்துறை
உரிய வாறு நினைமட நெஞ்சமே
பூமென் கோதை உமையொரு பாகனை
ஓமஞ் செய்தும் உணர்மின்கள் உள்ளத்தாற்
காமற் காய்ந்த பிரான்கடம் பந்துறை
நாம மேத்த தீவினை நாசமே
பார ணங்கி வணங்கி பணிசெய
நார ணன்பிர மன்னறி யாததோர்
கார ணன்கடம் பந்துறை மேவிய
ஆர ணங்கொரு பாலுடை மைந்தனே
நூலால் நன்றா நினைமின்கள் நோய்கெட
பாலான் ஐந்துடன் ஆடும் பரமனார்
காலால் ஊன்றுக தான்கடம் பந்துறை
மேலால் நாஞ்செய்த வல்வினை வீடுமே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
திருக்கடம்பூர் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
தளருங் கோளர வத்தொடு தண்மதி
வளருங் கோல வளர்சடை யார்க்கிடங்
கிளரும் பேரிசை கின்னரம் பாட்டறா
களருங் கார்க்கடம் பூர்க்கர கோயிலே
வெலவ லான்புலன் ஐந்தொடு வேதமுஞ்
சொலவ லான்சுழ லுந்தடு மாற்றமும்
அலவ லான்மனை யார்ந்தமென் றோளியை
கலவ லான்கடம் பூர்க்கர கோயிலே
பொய்தொ ழாது புலியுரி யோன்பணி
செய்தெ ழாவெழு வார்பணி செய்தெழா
வைதெ ழாதெழு வாரவர் எள்கநீர்
கைதொ ழாவெழு மின்கர கோயிலே
துண்ணெ னாமன தால்தொழு நெஞ்சமே
பண்ணி னான்முனம் பாடல துசெய்தே
எண்ணி லாரெயில் மூன்றும் எரித்தமு
கண்ணி னான்கடம் பூர்க்கர கோயிலே
சுனையுள் நீல மலரன கண்டத்தன்
புனையும் பொன்னிற கொன்றை புரிசடை
கனையும் பைங்கழ லான்கர கோயிலை
நினையும் உள்ள தவர்வினை நீங்குமே
குணங்கள் சொல்லியுங் குற்றங்கள் பேசியும்
வணங்கி வாழ்த்துவர் அன்புடை யாரெலாம்
வணங்கி வான்மலர் கொண்டடி வைகலுங்
கணங்கள் போற்றிசை குங்கர கோயிலே
பண்ணி னார்மறை பல்பல பூசனை
மண்ணி னார்செய்வ தன்றியும் வைகலும்
விண்ணி னார்கள் வியக்க படுவன
கண்ணி னார்கடம் பூர்க்கர கோயிலே
அங்கை ஆரழ லேந்திநின் றாடலன்
மங்கை பாட மகிழ்ந்துடன் வார்சடை
கங்கை யானுறை யுங்கர கோயிலை
தங்கை யாற்றொழு வார்வினை சாயுமே
நங்க டம்பனை பெற்றவள் பங்கினன்
தென்க டம்பை திருக்கர கோயிலான்
தன்க டன்னடி யேனையு தாங்குதல்
என்க டன்பணி செய்து கிடப்பதே
பணங்கொள் பாற்கடல் பாம்பணை யானொடும்
மணங்க மழ்மலர தாமரை யானவன்
பிணங்கும் பேரழல் எம்பெரு மாற்கிடங்
கணங்கள் போற்றிசை குங்கர கோயிலே
வரைக்கண் நாலஞ்சு தோளுடை யான்றலை
அரைக்க வூன்றி அருள்செய்த ஈசனார்
திரைக்கு தண்புனல் சூழ்கர கோயிலை
உரைக்கும் உள்ள தவர்வினை ஓயுமே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
திருக்கடம்பூர்க்கரக்கோயில் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
ஒருவ ராயிரு மூவரு மாயவன்
குருவ தாய குழகன் உறைவிடம்
பருவ ரால்குதி கொள்ளும் பழனஞ்சூழ்
கருவ தாங்கடம் பூர்க்கர கோயிலே
வன்னி மத்தம் வளரிள திங்களோர்
கன்னி யாளை கதிர்முடி வைத்தவன்
பொன்னின் மல்கு புணர்முலை யாளொடும்
மன்னி னான்கடம் பூர்க்கர கோயிலே
இல்ல கோலமும் இந்த இளமையும்
அல்லற் கோலம் அறுத்துய வல்லிரே
ஒல்லை சென்றடை யுங்கடம் பூர்நகர
செல்வ கோயில் திருக்கர கோயிலே
வேறு சிந்தை யிலாதவர் தீவினை
கூறு செய்த குழகன் உறைவிடம்
ஏறு செல்வ திமையவர் தாந்தொழும்
ஆறு சேர்கடம் பூர்க்கர கோயிலே
திங்கள் தங்கிய செஞ்சடை மேலுமோர்
மங்கை தங்கும் மணாளன் இருப்பிடம்
பொங்கு சேர்மணற் புன்னையும் ஞாழலு
தெங்கு சேர்கடம் பூர்க்கர கோயிலே
மல்லை ஞாலத்து வாழும் உயிர்க்கெலாம்
எல்லை யான பிரானார் இருப்பிடங்
கொல்லை முல்லை கொழுந்தகை மல்லிகை
நல்ல சேர்கடம் பூர்க்கர கோயிலே
தளரும் வாளர வத்தொடு தண்மதி
வளரும் பொற்சடை யாற்கிட மாவது
கிளரும் பேரொலி கின்னரம் பாட்டறா
களரி யார்கடம் பூர்க்கர கோயிலே
உற்றா ராயுற வாகி உயிர்க்கெலாம்
பெற்றா ராய பிரானார் உறைவிடம்
முற்றார் மும்மதி லெய்த முதல்வனார்
கற்றார் சேர்கடம் பூர்க்கர கோயிலே
வெள்ளை நீறணி மேனிய வர்க்கெலாம்
உள்ள மாய பிரானார் உறைவிடம்
பிள்ளை வெண்பிறை சூடிய சென்னியான்
கள்வன் சேர்கடம் பூர்க்கர கோயிலே
பரப்பு நீரிலங் கைக்கிறை வன்னவன்
உரத்தி னாலடு கல்லெடு கல்லுற
இரக்க மின்றி இறைவிர லாற்றலை
அரக்கி னான்கடம் பூர்க்கர கோயிலே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
திருவின்னம்பர் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
என்னி லாரும் எனக்கினி யாரில்லை
என்னி லும்மினி யானொரு வன்னுளன்
என்னு ளேஉயிர பாய்ப்புறம் போந்துபு
கென்னு ளேநிற்கும் இன்னம்பர் ஈசனே
மட்டுண் பார்கள் மடந்தையர் வாட்கணால்
கட்டுண் பார்கள் கருதுவ தென்கொலோ
தட்டி முட்டித்தள் ளாடி தழுக்குழி
எட்டு மூர்த்தியர் இன்னம்பர் ஈசனே
கனலுங் கண்ணியு தண்மதி யோடுடன்
புனலுங் கொன்றையுஞ் சூடும் புரிசடை
அனலுஞ் சூலமும் மான்மறி கையினர்
எனலும் என்மன தின்னம்பர் ஈசனே
மழைக்கண் மாமயி லாலும் மகிழ்ச்சியான்
அழைக்கு தன்னடி யார்கள்தம் அன்பினை
குழைக்கு தன்னை குறிக்கொள வேண்டியே
இழைக்கு மென்மன தின்னம்பர் ஈசனே
தென்ன வனென்னை யாளுஞ் சிவனவன்
மன்ன வன்மதி யம்மறை யோதியான்
முன்ன மன்னவன் சேரலன் பூழியான்
இன்னம் இன்புற்ற இன்னம்பர் ஈசனே
விளக்கும் வேறு படப்பிறர் உள்ளத்தில்
அளக்கு தன்னடி யார்மன தன்பினை
குளக்கும் என்னை குறிக்கொள வேண்டியே
இளக்கும் என்மன தின்னம்பர் ஈசனே
சடைக்க ணாள்புன லாள்அனல் கையதோர்
கடைக்க ணால்மங்கை நோக்கிம வான்மகள்
படைக்க ணாற்பரு கப்படு வான்ந
கிடைக்க ணாய்நின்ற இன்னம்பர் ஈசனே
தொழுது தூமலர் தூவி துதித்துநின்
றழுது காமுற் றரற்றுகின் றாரையும்
பொழுது போக்கி புறக்கணி பாரையும்
எழுதுங் கீழ்க்கண கின்னம்பர் ஈசனே
விரியு தண்ணிள வேனலில் வெண்பிறை
புரியுங் காமனை வேவ புருவமு
திரியும் எல்லையில் மும்மதில் தீயெழு
தெரிய நோக்கிய இன்னம்பர் ஈசனே
சனியும் வெள்ளியு திங்களும் ஞாயிறும்
முனிவ னாய்முடி பத்துடை யான்றனை
கனிய வூன்றிய காரண மென்கொலோ
இனிய னாய்நின்ற இன்னம்பர் ஈசனே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
திருக்குடமூக்கு திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
பூவ ணத்தவன் புண்ணியன் நண்ணியங்
காவ ணத்துடை யானடி யார்களை
தீவ ணத்திரு நீறுமெய் பூசியோர்
கோவ ணத்துடை யான்குட மூக்கிலே
பூத்தா டிக்கழி யாதேநீர் பூமியீர்
தீத்தா டித்திறஞ் சிந்தையுள் வைம்மினோ
வேர்த்தா டுங்காளி தன்விசை தீர்கென்று
கூத்தா டியுறை யுங்குட மூக்கிலே
நங்கை யாளுமை யாளுறை நாதனார்
அங்கை யாளொ டறுபத தாழ்சடை
கங்கை யாளவள் கன்னி யெனப்படுங்
கொங்கை யாளுறை யுங்குட மூக்கிலே
ஓதா நாவன் திறத்தை யுரைத்திரேல்
ஏதா னுமினி தாகும் மியமுனை
சேதா ஏறுடை யானமர தவிடங்
கோதா விரியுறை யுங்குட மூக்கிலே
நக்க ரையனை நாடொறும் நன்னெஞ்சே
வக்க ரையுறை வானை வணங்குநீ
அக்க ரையோ டரவரை யார்த்தவன்
கொக்க ரையுடை யான்குட மூக்கிலே
துறவி நெஞ்சின ராகிய தொண்டர்காள்
பிறவி நீங்க பிதற்றுமின் பித்தராய்
மறவ னாய்ப்பார்த்தன் மேற்கணை தொட்டவெங்
குறவ னாருறை யுங்குட மூக்கிலே
தொண்ட ராகி தொழுது பணிமினோ
பண்டை வல்வினை பற்றற வேண்டுவீர்
விண்ட வர்புரம் மூன்றொரு மாத்திரை
கொண்ட வன்னுறை யுங்குட மூக்கிலே
காமி யஞ்செய்து காலம் கழியாதே
ஓமி யஞ்செய்தங் குள்ள துணர்மினோ
சாமி யோடு சரச்சுவ தியவள்
கோமி யும்முறை யுங்குட மூக்கிலே
சிரமஞ் செய்து சிவனுக்கு பத்தரா
பரம னைப்பல நாளும் பயிற்றுமின்
பிரமன் மாலொடு மற்றொழி தார்க்கெலாங்
குரவ னாருறை யுங்குட மூக்கிலே
அன்று தானர கன்கயி லாயத்தை
சென்று தானெடு கவுமை யஞ்சலும்
நன்று தான்நக்கு நல்விர லூன்றிப்பின்
கொன்று கீதங்கே டான்குட மூக்கிலே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
திருநின்றியூர் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
கொடுங்கண் வெண்டலை கொண்டு குறைவிலை
படுங்க ணொன்றில ராய்ப்பலி தேர்ந்துண்பர்
நெடுங்கண் மங்கைய ராட்டயர் நின்றியூர
கடுங்கை கூற்றுதை திட்ட கருத்தரே
வீதி வேல்நெடுங் கண்ணியர் வெள்வளை
நீதி யேகொள பாலது நின்றியூர்
வேத மோதி விளங்குவெண் தோட்டரா
காதில் வெண்குழை வைத்தவெங் கள்வரே
புற்றி னார்அர வம்புலி தோல்மிசை
சுற்றி னார்சுண்ண போர்வைகொண் டார்சுடர்
நெற்றி கண்ணுடை யாரமர் நின்றியூர்
பற்றி னாரைப்பற் றாவினை பாவமே
பறையின் ஓசையும் பாடலின்
மறையின் ஓசையும் மல்கி அயலெலாம்
நிறையும் பூம்பொழில் சூழ்திரு நின்றியூர்
உறையும் ஈசனை உள்குமென் உள்ளமே
சுனையுள் நீலஞ் சுளியும் நெடுங்கணாள்
இனைய னென்றென்று மேசுவ தென்கொலோ
நினையு தண்வயல் சூழ்திரு நின்றியூர
பனையின் ஈருரி போர்த்த பரமரே
உரைப்ப கேண்மின்நும் உச்சியு ளான்றனை
நிரைப்பொன் மாமதில் சூழ்திரு நின்றியூர்
உரைப்பொற் கற்றைய ராரிவ ரோவெனிற்
திரைத்து பாடி திரிதருஞ் செல்வரே
கன்றி யூர்முகில் போலுங் கருங்களி
றின்றி ஏறல னாலிது வென்கொலோ
நின்றி யூர்பதி யாக நிலாயவன்
வென்றி யேறுடை எங்கள் விகிர்தனே
நிலையி லாவெள்ளை மாலையன் நீண்டதோர்
கொலைவி லாலெயில் எய்த கொடியவன்
நிலையி னார்வயல் சூழ்திரு நின்றியூர்
உரையி னாற்றொழு வார்வினை ஓயுமே
அஞ்சி யாகிலும் அன்புப டாகிலும்
நெஞ்சம் வாழி நினைநின்றி யூரைநீ
இஞ்சி மாமதில் எய்திமை யோர்தொழ
குஞ்சி வான்பிறை சூடிய கூத்தனே
எளிய னாமொழி யாஇலங் கைக்கிறை
களியி னாற்கயி லாய மெடுத்தவன்
நெளிய வூன்ற வலானமர் நின்றியூர்
அளியி னாற்றொழு வார்வினை யல்குமே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
திருவொற்றியூர் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
ஒற்றி யூரும் ஒளிமதி பாம்பினை
ஒற்றி யூரு பாம்பும் அதனையே
ஒற்றி யூர வொருசடை வைத்தவன்
ஒற்றி யூர்தொழ நம்வினை ஓயுமே
வாட்ட மொன்றுரை கும்மலை யான்மகள்
ஈட்ட வேயிரு ளாடி இடுபிண
காட்டி லோரி கடிக்க எடுத்ததோர்
ஓட்டை வெண்டலை கையொற்றி யூரரே
கூற்று தண்டத்தை அஞ்சி குறிக்கொண்மின்
ஆற்று தண்ட தடக்கு மரனடி
நீற்று தண்டத்த ராய்நினை வார்க்கெலாம்
ஊற்று தண்டொப்பர் போலொற்றி யூரரே
சுற்றும் பேய்சுழ லச்சுடு காட்டெரி
பற்றி யாடுவர் பாய்புலி தோலினர்
மற்றை யூர்களெல் லாம்பலி தேர்ந்துபோய்
ஒற்றி யூர்பு குறையும் ஒருவரே
புற்றில் வாளர வாட்டி உமையொடு
பெற்ற மேறுக தேறும் பெருமையான்
மற்றை யாரொடு வானவ ருந்தொழ
ஒற்றி யூருறை வானோர் கபாலியே
போது தாழ்ந்து புதுமலர் கொண்டுநீர்
மாது தாழ்சடை வைத்த மணாளனார்
ஓது வேதிய னார்திரு வொற்றியூர்
பாத மேத்த பறையுநம் பாவமே
பலவும் அன்னங்கள் பன்மலர் மேற்றுஞ்சுங்
கலவ மஞ்ஞைகள் காரென வெள்குறும்
உலவு பைம்பொழில் சூழ்திரு ஒற்றியூர்
நிலவி னானடி யேயடை நெஞ்சமே
ஒன்று போலும் உகந்தவ ரேறிற்று
ஒன்று போலும் உதைத்து களைந்தது
ஒன்று போலொளி மாமதி சூடிற்று
ஒன்று போலுக தாரொற்றி யூரரே
படைகொள் பூதத்தர் வேதத்தர் கீதத்தர்
சடைகொள் வெள்ளத்தர் சாந்தவெண் ணீற்றினர்
உடையு தோலுக தாருறை யொற்றியூர்
அடையு முள்ள தவர்வினை யல்குமே
வரையி னாருயர் தோலுடை மன்னனை
வரையி னால்வலி செற்றவர் வாழ்விட
திரையி னார்புடை சூழ்திரு வொற்றியூர்
உரையி னாற்பொலி தாருயர தார்களே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
திருப்பாசூர் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
முந்தி மூவெயி லெய்த முதல்வனார்
சிந்தி பார்வினை தீர்த்திடுஞ் செல்வனார்
அந்தி கோன்றன கேயருள் செய்தவர்
பந்தி செஞ்சடை பாசூ ரடிகளே
மடந்தை பாகம் மகிழ்ந்த மணாளனார்
தொடர்ந்த வல்வினை போக்கிடுஞ் சோதியார்
கடந்த காலனை கால்கொடு பாய்ந்தவர்
படர்ந்த நாகத்தர் பாசூ ரடிகளே
நாறு கொன்றையும் நாகமு திங்களும்
ஆறுஞ் செஞ்சடை வைத்த அழகனார்
காறு கண்டத்தர் கையதோர் சூலத்தர்
பாறி னோட்டினர் பாசூ ரடிகளே
வெற்றி யூருறை வேதிய ராவர்நல்
ஒற்றி யேறுக தேறு மொருவனார்
நெற்றி கண்ணினர் நீளர வந்தனை
பற்றி யாட்டுவர் பாசூ ரடிகளே
மட்ட விழ்ந்த மலர்நெடுங் கண்ணிபால்
இட்ட வேட்கைய ராகி யிருப்பவர்
துட்ட ரேலறி யேனிவர் சூழ்ச்சிமை
பட்ட நெற்றியர் பாசூ ரடிகளே
பல்லில் ஓடுகை யேந்தி பகலெலாம்
எல்லி நின்றிடு பெய்பலி யேற்பவர்
சொல்லி போய்ப்புகும் ஊரறி யேன்சொலீர்
பல்கு நீற்றினர் பாசூ ரடிகளே
கட்டி விட்ட சடையர் கபாலியர்
எட்டி நோக்கிவ தில்புகு தவ்வவர்
இட்ட மாவறி யேனிவர் செய்வன
பட்ட நெற்றியர் பாசூ ரடிகளே
வேத மோதிவ தில்புகு தாரவர்
காதில் வெண்குழை வைத்த கபாலியார்
நீதி யொன்றறி யார்நிறை கொண்டனர்
பாதி வெண்பிறை பாசூ ரடிகளே
சாம்பற் பூசுவர் தாழ்சடை கட்டுவர்
ஓம்பல் மூதெரு தேறு மொருவனார்
தேம்பல் வெண்மதி சூடுவர் தீயதோர்
பாம்பு மாட்டுவர் பாசூ ரடிகளே
மாலி னோடு மறையவன் றானுமாய்
மேலுங் கீழும் அளப்பரி தாயவர்
ஆலின் நீழல் அறம்பகர தார்மிக
பால்வெண் ணீற்றினர் பாசூ ரடிகளே
திரியு மூவெயில் செங்கணை யொன்றினால்
எரிய வெய்தன ரேனும் இலங்கைக்கோன்
நெரிய வூன்றியி டார்விர லொன்றினாற்
பரியர் நுண்ணியர் பாசூ ரடிகளே
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் பாசூர்நாதர்
தேவியார் பசுபதிநாயகி
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
திருவன்னியூர் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
காடு கொண்டரங் காக்கங்குல் வாய்க்கணம்
பாட மாநட மாடும் பரமனார்
வாட மானிறங் கொள்வர் மணங்கமழ்
மாட மாமதில் சூழ்வன்னி யூரரே
செங்கண் நாகம் அரையது தீத்திரள்
அங்கை யேந்திநின் றார்எரி யாடுவர்
கங்கை வார்சடை மேலிடங் கொண்டவர்
மங்கை பாகம்வை தார்வன்னி யூரரே
ஞானங் காட்டுவர் நன்னெறி
தானங் காட்டுவர் தம்மடை தார்க்கெலா
தானங் காட்டித்தன் றாளடை தார்கட்கு
வானங் காட்டுவர் போல்வன்னி யூரரே
இம்மை அம்மை யெனவிரண் டும்மிவை
மெய்ம்மை தானறி யாது விளம்புவர்
மெய்ம்மை யால்நினை வார்கள்தம் வல்வினை
வம்மின் தீர்ப்பர்கண் டீர்வன்னி யூரரே
பிறைகொள் வாணுதற் பெய்வளை தோளியர்
நிறையை கொள்பவர் நீறணி மேனியர்
கறைகொள் கண்டத்தர் வெண்மழு வாளினர்
மறைகொள் வாய்மொழி யார்வன்னி யூரரே
திளைக்கும் வண்டொடு தேன்படு கொன்றையர்
துளைக்கை வேழத்தர் தோலர் சுடர்மதி
முளைக்கு மூரற் கதிர்கண்டு நாகம்நா
வளைக்கும் வார்சடை யார்வன்னி யூரரே
குணங்கொள் தோளெட்டு மூர்த்தி இணையடி
இணங்கு வார்க கினியனு மாய்நின்றான்
வணங்கி மாமலர் கொண்டவர் வைகலும்
வணங்கு வார்மன தார்வன்னி யூரரே
இயலு மாலொடு நான்முகன் செய்தவம்
முயலிற் காண்பரி தாய்நின்ற மூர்த்திதான்
அயலெ லாம்அன்ன மேயும்அ தாமரை
வயலெ லாங்கயல் பாய்வன்னி யூரரே
இப்பதிகத்தில் ம் செய்யுள் சிதைந்து போயிற்று
நலங்கொள் பாகனை நன்று முனிந்திடா
விலங்கல் கோத்தெடு தானது மிக்கிட
இலங்கை மன்னன் இருபது தோளினை
மலங்க வூன்றிவை தார்வன்னி யூரரே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
திருவையாறு திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
சிந்தை வாய்தலு ளான்வந்து சீரியன்
பொந்து வார்புலால் வெண்டலை கையினன்
முந்தி வாயதோர் மூவிலை வேல்பிடி
தந்தி வாயதோர் பாம்பர்ஐ யாறரே
பாக மாலை மகிழ்ந்தனர் பான்மதி
போக ஆனையின் ஈருரி போர்த்தவர்
கோக மாலை குலாயதோர் கொன்றையும்
ஆக ஆன்நெய்அஞ் சாடும்ஐ யாறரே
நெஞ்ச மென்பதோர் நீள்க தன்னுளே
வஞ்ச மென்பதோர் வான்சுழி பட்டுநான்
துஞ்சும் போழ்துநின் நா திருவெழு
தஞ்சு தோன்ற அருளும்ஐ யாறரே
நினைக்கும் நெஞ்சினுள் ளார்நெடு மாமதில்
அனைத்தும் ஒள்ளழல் வாயெரி யூட்டினார்
பனைக்கை வேழ துரியுடல் போர்த்தவர்
அனைத்து வாய்தலுள் ளாரும்ஐ யாறரே
பரியர் நுண்ணியர் பார்த்தற் கரியவர்
அரிய பாடலர் ஆடல ரன்றியுங்
கரிய கண்டத்தர் காட்சி பிறர்க்கெலாம்
அரியர் தொண்டர கெளியர்ஐ யாறரே
புலரும் போது மிலாப்பட்ட பொற்சுடர்
மலரும்