திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த
தேவார பதிகங்கள்
நான்காம் திருமுறை முதற் பகுதி
பாடல்கள்
உள்ளுறை
திருவதிகைவீரட்டானம் மின்பதிப்பு
திருக்கெடிலவடவீரட்டானம் மின்பதிப்பு
திருவையாறு மின்பதிப்பு
திருவாரூர் மின்பதிப்பு
திருவாரூர்ப்பழமொழி மின்பதிப்பு
திருக்கழிப்பாலை மின்பதிப்பு
திருஏகம்பம் மின்பதிப்பு
சிவனெனுமோசை மின்பதிப்பு
திருஅங்கமாலை மின்பதிப்பு
திருக்கெடிலவாணர் மின்பதிப்பு
நமச்சிவாயப்பதிகம் மின்பதிப்பு
திருப்பழனம் மின்பதிப்பு
திருவையாறு மின்பதிப்பு
தசபுராணம் மின்பதிப்பு
பாவநாசத்திருப்பதிகம் மின்பதிப்பு
திருப்புகலூர் மின்பதிப்பு
திருவாரூர் அரநெறி மின்பதிப்பு
விடந்தீர்த்ததிருப்பதிகம் மின்பதிப்பு
திருவாரூர் மின்பதிப்பு
திருவாரூர் மின்பதிப்பு
திருவாரூர்திருவாதிரைப்பதிகம் மின்பதிப்பு

கோயில் மின்பதிப்பு
கோயில் மின்பதிப்பு
திருவதிகைவீரட்டானம் மின்பதிப்பு
திருவதிகைவீரட்டானம் மின்பதிப்பு
திருவதிகைவீரட்டானம் மின்பதிப்பு
திருவதிகைவீரட்டானம் மின்பதிப்பு
திருவதிகைவீரட்டானம் மின்பதிப்பு
திருச்செம்பொன்பள்ளி மின்பதிப்பு
திருக்கழிப்பாலை மின்பதிப்பு
திருக்கடவூர் மின்பதிப்பு
திருப்பயற்றூர் மின்பதிப்பு
திருமறைக்காடு மின்பதிப்பு
திருமறைக்காடு மின்பதிப்பு
திருவிடைமருது மின்பதிப்பு
திருப்பழனம் மின்பதிப்பு
திருநெய்த்தானம் மின்பதிப்பு
திருவையாறு மின்பதிப்பு
திருவையாறு மின்பதிப்பு
திருவையாறு மின்பதிப்பு
திருச்சோற்றுத்துறை மின்பதிப்பு
திருத்துருத்தி மின்பதிப்பு
திருக்காஞ்சிமேற்றளி மின்பதிப்பு
திருஏகம்பம் மின்பதிப்பு
திருவொற்றியூர் மின்பதிப்பு
திருவொற்றியூர் மின்பதிப்பு
திருக்கயிலாயம் மின்பதிப்பு
திருஆப்பாடி மின்பதிப்பு
திருக்குறுக்கை மின்பதிப்பு
திருக்குறுக்கை மின்பதிப்பு

திருவதிகைவீரட்டானம்
பன் கொல்லி
திருச்சிற்றம்பலம்
கூற்றாயின வாறுவி லக்ககிலீர்
கொடுமைபல செய்தன நானறியேன்
ஏற்றாயடி கேஇர வும்பகலும்
பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே
குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன்அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே
நெஞ்சம்மு கேயிட மாகவைத்தேன்
நினையாதொரு போதும் இருந்தறியேன்
வஞ்சம்மிது வொப்பது கண்டறியேன்
வயிற்றோடு துடக்கி முடக்கியிட
நஞ்சாகி வந்தென்னை நலிவதனை
நணுகாமல் துரந்து கரந்துமிடீர்
அஞ்சேலுமென் னீர்அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே
பணிந்தாரன பாவங்கள் பாற்றவல்லீர்
படுவெண்டலை யிற்பலி கொண்டுழல்வீர்
துணிந்தேயு காட்செய்து வாழலுற்றாற்
சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்
பிணிந்தார்பொடி கொண்டுமெய் பூசவல்லீர்
பெற்றமேற்றுக தீர்சுற்றும் வெண்டலைகொண்
டணிந்தீரடி கேள்அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மனே
முன்னம்மடி யேன்அறி யாமையினான்
முனிந்தென்னை நலிந்து முடக்கியிட
பின்னையடி யேனு காளும்பட்டேன்
சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்
தன்னையடை தார்வினை தீர்ப்பதன்றோ
தலையாயவர் தங்கட னாவதுதான்
அன்னநடை யார்அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே
காத்தாள்பவர் காவல் இகழ்ந்தமையாற்
கரைநின்றவர் கண்டுகொ ளென்றுசொல்லி
நீத்தாய கயம்புக நூக்கியிட
நிலைக்கொள்ளும் வழித்துறை யொன்றறியேன்
வார்த்தையிது வொப்பது கேட்டறியேன்
வயிற்றோடு துடக்கி முடக்கியிட
ஆர்த்தார்புன லார்அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே
சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்
தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன்
உன்னாமம் என்னாவின் மறந்தறியேன்
உலர்ந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய்
உடலுள் ளுறுசூலை தவிர்த்தருளாய்
அலந்தேன்அடி யேன்அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே
உயர்ந்தேன்மனை வாழ்க்கையும் ஒண்பொருளும்
ஒருவர்தலை காவலி லாமையினல்
வயந்தேயு காட்செய்து வாழலுற்றால்
வலிக்கின்றது சூலை தவிர்த்தருளீர்
பயந்தேயென் வயிற்றின கம்படியே
பறித்துப்புர டியறு தீர்த்திடநான்
அயர்ந்தேன்அடி யேன்அதி கைக்கெடில
வீரட்டா னாத்துறை அம்மானே
வலித்தேன்மனை வாழ்கை மகிழ்ந்தடியேன்
வஞ்சம்மன மொன்று மிலாமையினாற்
சலித்தாலொரு வர்துணை யாருமில்லை
சங்கவெண்குழை காதுடை எம்பெருமான்
கலித்தேயென் வயிற்றி னகம்படியே
கலக்கி மலக்கிட்டு கவர்ந்துதின்ன
அலுத்தேனடி யேன்அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே
பொன்போல மிளிர்வதொர் மேனியினீர்
புரிபுன்சடை யீர்மெலி யும்பிறையீர்
துன்பேகவ லைபிணி யென்றிவற்றை
நணுகாமற் றுரந்து கரந்துமிடீர்
என்போலிக ளும்மை இனித்தெளியார்
அடியார்படு வதிது வேயாகில்
அன்பேஅமை யும்மதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே
போர்த்தாயங்கோ ரானையின் ஈருரிதோல்
புறங்காடரங் காநட மாடவல்லாய்
ஆர்த்தானர கன்றனை மால்வரைக்கீழ்
அடர்த்திட்டருள் செய்த வதுகருதாய்
வேர்த்தும்புரண் டும்விழு தும்மெழுந்தால்
என்வேதனை யான விலக்கியிடாய்
ஆர்த்தார்புனல் சூழ்அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே
இத்தலம் நடுநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் வீரட்டானேசுவரர் தேவியார் திருவதிகைநாயகி
இப்பதிகம் சூலைநோய்தீர ஓதியருளியது
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்கெடிலவடவீரட்டானம்
திருவதிகைவீரட்டானம் என்பதும் இது
பண் காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
சுண்ணவெண் சந்தன சாந்துஞ்
சுடர திங்க சூளாமணியும்
வண்ண உரிவை யுடையும்
வளரும் பவள நிறமும்
அண்ணல் அரண்முர ணேறும்
அகலம் வளாய அரவும்
திண்ணன் கெடில புனலும்
உடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவ தியாதொன்று மில்லை
அஞ்ச வருவது மில்லை
பூண்டதோர் கேழல் எயிறும்
பொன்றிகழ் ஆமை புரள
நீண்டதிண் டோ ள்வலஞ் சூழ்ந்து
நிலாக்கதிர் போலவெண் ணூலுங்
காண்டகு புள்ளின் சிறகுங்
கலந்தக டங கொடியும்
ஈண்டு கெடில புனலும்
உடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவ தியாதொன்று மில்லை
அஞ்ச வருவது மில்லை
ஒத்த வடத்திள நாகம்
உருத்திர பட்ட மிரண்டும்
முத்து வடக்கண் டிகையும்
முளைத்தெழு மூவிலை வேலுஞ்
சித்த வடமும் அதிகை
சேணுயர் வீரட்டஞ் சூழ்ந்து
தத்துங் கெடி புனலும்
உடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவ தியாதொன்று மில்லை
அஞ்ச வருவது மில்லை
சித்தவடம் என்பது இத்தலத்துக்கு சமீபத்திலிருப்பது
மடமான் மறிபொற் கலையும்
மழுபாம் பொருகையில் வீணை
குடமால் வரைய திண்டோ ளுங்
குனிசிலை கூத்தின் பயில்வும்
இடமால் தழுவிய பாகம்
இருநில னேற்ற சுவடு
தடமார் கெடில புனலும்
உடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவ தியாதொன்று மில்லை
அஞ்ச வருவது மில்லை
பலபல காமத்த ராகி
பதைத்தெழு வார்மன துள்ளே
கலமல கிட்டு திரியுங்
கணபதி யென்னுங் களிறும்
வலமே திரண்டு சுடரும்
வான்கயி லாய மலையும்
நலமார் கெடில புனலும்
உடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவ தியாதென்று மில்லை
அஞ்ச வருவது மில்லை
கரந்தன கொள்ளி விளக்குங்
கறங்கு துடியின் முழக்கும்
பரந்த பதினெண் கணமும்
பயின்றறி யாதன பாட்டும்
அரங்கிடை நூலறி வாளர்
அறி படாததோர் கூத்தும்
நிரந்த கெடில புனலும்
உடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவ தியாதொன்று மில்லை
அஞ்ச வருவது மில்லை
கொலைவரி வேங்கை அதளுங்
குலவோ டிலங்குபொற் றோடும்
விலைபெறு சங குழையும்
விலையில் கபால கலனும்
மலைமகள் கைக்கொண்ட மார்பும்
மணியார திலங்கு மிடறும்
உலவு கெடில புனலும்
உடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவ தியாதொன்று மில்லை
அஞ்ச வருவது மில்லை
ஆடல் புரிந்த நிலையும்
அரையில் அசைத்த அரவும்
பாடல் பயின்ற பல்பூதம்
பல்லா யிரங்கொள் கருவி
நாடற் கரியதோர் கூத்தும்
நன்குயர் வீரட்டஞ் சூழ்ந்து
ஓடுங் கெடில புனலும்
உடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவ தியாதொன்று மில்லை
அஞ்ச வருவது மில்லை
சூழு மரவ துகிலு
துகில்கிழி கோவண கீளும்
யாழின் மொழியவள் அஞ்ச
அஞ்சா தருவரை போன்ற
வேழ முரித்த நிலையும்
விரிபொழில் வீரட்டஞ் சூழ்ந்து
தாழுங் கெடில புனலும்
உடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவ தியாதொன்று மில்லை
அஞ்ச வருவது மில்லை
நரம்பெழு கைகள் பிடித்து
நங்கை நடுங்க மலையை
உரங்களெல் லாங்கொண் டெடுத்தான்
ஒன்பதும் ஒன்றும் அலற
வரங்கள் கொடுத்தருள் செய்வான்
வளர்பொழில் வீரட்டஞ் சூழ்ந்து
நிரம்பு கெடில புனலும்
உடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவ தியாதொன்று மில்லை
அஞ்ச வருவது மில்லை
இப்பதிகம் சமணர்களேவிய யானை அஞ்சும்படி ஓதி அருளியது
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவையாறு
பண் காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
மாதர பிறைக்கண்ணி யானை
மலையான் மகளொடும் பாடி
போதொடு நீர்சு தேத்தி
புகுவா ரவர்பின் புகுவேன்
யாதுஞ் சுவடு படாமல்
ஐயா றடைகின்ற போது
காதன் மடப்பிடி யோடுங்
களிறு வருவன கண்டேன்
கண்டே னவர்திரு பாதங்
கண்டறி யாதன கண்டேன்
போழிளங் கண்ணியி னானை
பூந்துகி லாளொடும் பாடி
வாழியம் போற்றியென் றேத்தி
வட்டமி டாடா வருவேன்
ஆழி வலவனின் றேத்தும்
ஐயா றடைகின்ற போது
கோழி பெடையொடுங் கூடி
குளிர்ந்து வருவன கண்டேன்
கண்டே னவர்திரு பாதங்
கண்டறி யாதன கண்டேன்
எரிப்பிறை கண்ணியி னானை
யேந்திழை யாளொடும் பாடி
முரித்த இலயங்க ளிட்டு
முகமலர தாடா வருவேன்
அரித்தொழு கும்வெள் ளருவி
ஐயா றடைகின்ற போது
வரிக்குயில் பேடையொ டாடி
வைகி வருவன கண்டேன்
கண்டே னவர்திரு பாதங்
கண்டறி யாதன கண்டேன்
பிறையிளங் கண்ணியி னானை
பெய்வளை யாளொடும் பாடி
துறையிளம் பன்மலர் தூவி
தோளை குளிர தொழுவேன்
அறையிளம் பூங்குயி லாலும்
ஐயா றடைகின்ற போது
சிறையிளம் பேடையொ டாடி
சேவல் வருவன கண்டேன்
கண்டே னவர்திரு பாதங்
கண்டறி யாதன கண்டேன்
ஏடு மதிக்கண்ணி யானை
ஏந்திழை யாளொடும் பாடி
காடொடு நாடு மலையுங்
கைதொழு தாடா வருவேன்
ஆட லமர்ந்துறை கின்ற
ஐயா றடைகின்ற போது
பேடை மயிலொடுங் கூடி
பிணைந்து வருவன கண்டேன்
கண்டே னவர்திரு பாதங்
கண்டறி யாதன கண்டேன்
தண்மதி கண்ணியி னானை
தையல்நல் லாளொடும் பாடி
உண்மெலி சிந்தைய னாகி
உணரா வுருகா வருவேன்
அண்ண லமர்ந்துறை கின்ற
ஐயா றடைகின்ற போது
வண்ண பகன்றிலொ டாடி
வைகி வருவன கண்டேன்
கண்டே னவர்திரு பாதங்
கண்டறி யாதன கண்டேன்
கடிமதி கண்ணியி னானை
காரிகை யாலொடும் பாடி
வடிவொடு வண்ண மிரண்டும்
வாய்வேண் டுவசொல்லி வாழ்வேன்
அடியிணை ஆர்க்குங் கழலான்
ஐயா றடைகின்ற போது
இடிகுர லன்னதோர் ஏனம்
இசைந்து வருவன கண்டேன்
கண்டே னவர்திரு பாதங்
கண்டறி யாதன கண்டேன்
விரும்பு மதிக்கண்ணி யானை
மெல்லிய லாளொடும் பாடி
பெரும்புலர் காலை யெழுந்து
பெறுமலர் கொய்யா வருவேன்
அருங்கலம் பொன்மணி யுந்தும்
ஐயா றடைகின்ற போது
கருங்கலை பேடையொ டாடி
கலந்து வருவன கண்டேன்
கண்டே னவர்திரு பாதங்
கண்டறி யாதன கண்டேன்
முற்பிறை கண்ணியி னானை
மொய்குழ லாளொடும் பாடி
பற்றி கயிறறு கில்லேன்
பாடியும் ஆடா வருவேன்
அற்றருள் பெற்றுநின் றாரோ
டையா றடைகின்ற போது
நற்றுணை பேடையொ டாடி
நாரை வருவன கண்டேன்
கண்டே னவர்திரு பாதங்
கண்டறி யாதன கண்டேன்
திங்கள் மதிக்கண்ணி யானை
தேமொழி யாளொடும் பாடி
எங்கருள் நல்குங்கொ லெந்தை
எனக்கினி யென்னா வருவேன்
அங்கிள மங்கைய ராடும்
ஐயா ரடைகின்ற போது
பைங்கிளி பேடையொ டாடி
பறந்து வருவன கண்டேன்
கண்டே னவர்திரு பாதங்
கண்டறி யாதன கண்டேன்
வளர்மதி கண்ணியி னானை
வார்குழ லாளொடும் பாடி
களவு படாததோர் காலங்
காண்பான் கடைக்கணி கின்றேன்
அளவு படாததோ ரன்போ
டையா றடைகின்ற போது
இளமண நாகு தழுவி
ஏறு வருவன கண்டேன்
கண்டே னவர்திரு பாதங்
கண்டறி யாதன கண்டேன்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் செம்பொற்சோதீசுவரர் தேவியார் அறம்வளர்த்தநாயகி
இது இந்தத்தலத்திலிருக்கும் ஆலயமே
கயிலாசமாக சுவாமி தரிசனங்கட்டளையிட்டபோது ஓதியருளிய பதிகம்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவாரூர்
பண் காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
பாடிளம் பூதத்தி னானும்
பவளச்செவ் வாய்வண்ண தானுங்
கூடிள மென்முலை யாளை
கூடிய கோலத்தி னானும்
ஓடிள வெண்பிறை யானும்
ஒளிதிகழ் சூலத்தி னானும்
ஆடிளம் பாம்பசை தானும்
ஆரூ ரமர்ந்தஅம் மானே
நரியை குதிரைசெய் வானும்
நரகரை தேவுசெய் வானும்
விரதங்கொண் டாடவல் லானும்
விச்சின்றி நாறுசெய் வானும்
முரசதிர தானை முன்னோட
முன்பணி தன்பர்கள் ஏத்த
அரவரை சாத்திநின் றானும்
ஆரூ ரமர்ந்தஅம் மானே
நீறுமெய் பூசவல் லானும்
நினைப்பவர் நெஞ்சத்து ளானும்
ஏறுக தேறவல் லானும்
எரிபுரை மேனியி னானும்
நாறு கரந்தையி னானும்
நான்மறை கண்டத்தி னானும்
ஆறு சடைக்கர தானும்
ஆரூ ரமர்ந்தஅம் மானே
கொம்புநல் வேனி லவனை
குழைய முறுவல்செய் தானுஞ்
செம்புனல் கொண்டெயில் மூன்று
தீயெழ கண்சிவ தானும்
வம்புநற் கொன்றையி னானும்
வாட்கண்ணி வாட்டம தெய்த
அம்பர ஈருரி யானும்
ஆரூ ரமர்ந்தஅம் மானே
ஊழி யளக்கவல் லானும்
உகப்பவர் உச்சியுள் ளானு
தாழிளஞ் செஞ்சடை யானு
தண்ணமர் திண்கொடி யானு
தோழியர் தூதிடை யாட
தொழுதடி யார்கள் வணங்க
ஆழி வளைக்கையி னானும்
ஆரூ ரமர்ந்தஅம் மானே
ஊர்திரை வேலையுள் ளானும்
உலகிற தொண்பொரு ளானுஞ்
சீர்தரு பாடலுள் ளானுஞ்
செங்கண் விடைக்கொடி யானும்
வார்தரு பூங்குழ லாளை
மருவி யுடன்வை தவனும்
ஆதிரை நாளுக தானும்
ஆரூ ரமர்ந்தஅம் மானே
தொழற்கங்கை துன்னிநின் றார்க்கு
தோன்றி யருளவல் லானுங்
கழற்கங்கை பன்மலர் கொண்டு
காதல் கனற்றநின் றானுங்
குழற்கங்கை யாளையுள் வைத்து
கோல சடைக்கர தானும்
அழற்கங்கை ஏந்தவல் லானும்
ஆரூ ரமர்ந்தஅம் மானே
ஆயிர தாமரை போலும்
ஆயிரஞ் சேவடி யானும்
ஆயிரம் பொன்வரை போலும்
ஆயிர தோளுடை யானும்
ஆயிர ஞாயிறு போலும்
ஆயிர நீண்முடி யானும்
ஆயிரம் பேருக தானும்
ஆரூ ரமர்ந்தஅம் மானே
வீடரங் காநிறு பானும்
விசும்பினை வேதி தொடர
ஓடரங் காகவை தானும்
ஓங்கியோ ரூழியுள் ளானுங்
காடரங் காமகிழ தானுங்
காரிகை யார்கள் மனத்துள்
ஆடரங் கத்திடை யானும்
ஆரூ ரமர்ந்தஅம் மானே
பையஞ் சுடர்விடு நாக
பள்ளிகொள் வானுள்ள தானுங்
கையஞ்சு நான்குடை யானை
கால்விர லாலடர தானும்
பொய்யஞ்சி வாய்மைகள் பேசி
புகழ்புரி தார்க்கருள் செய்யும்
ஐயஞ்சின் அப்புற தானும்
ஆரூ ரமர்ந்தஅம் மானே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவாரூர்ப்பழமொழி
பண் காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்த
மேனியான் தாள்தொ ழாதே
உய்யலா மென்றெண்ணி உறிதூக்கி
யுழிதந்தென் உள்ளம் விட்டு
கொய்யுலா மலர்ச்சோலை குயில்கூவ
மயிலாலும் ஆரூ ரரை
கையினாற் றொழா தொழிந்து
கனியிரு காய்கவர்ந்த கள்வனேனே
என்பிருத்தி நரம்புதோல் புகப்பெய்தி
டென்னையோர் உருவ மாக்கி
இன்பிருத்தி முன்பிருந்த வினைதீர்த்தி
டென்னுள்ளங் கோயி லாக்கி
அன்பிருத்தி அடியேனை கூழாட்கொண்
டருள்செய்த ஆரூ ரர்தம்
முன்பிருக்கும் விதியின்றி முயல்விட்டு
காக்கைப்பின் போன வாறே
பெருகுவித்தென் பாவத்தை பண்டெலாங்
குண்டர்கள்தஞ் சொல்லே கேட்டு
உருகுவித்தென் உள்ளத்தின் உள்ளிருந்த
கள்ளத்தை தள்ளி போக்கி
அருகுவித்து பிணிகாட்டி ஆட்கொண்டு
பிணிதீர்த்த ஆரூ ரர்தம்
அருகிருக்கும் விதியின்றி அறமிருக்க
மறம்விலைக்கு கொண்ட வாறே
குண்டானா தலைபறித்து குவிமுலையார்
நகைகாணா துழிதர் வேனை
பண்டமா படுத்தென்னை பால்தலையிற்
றெளித்துத்தன் பாதங் காட்டி
தொண்டெலா மிசைபாட தூமுறுவல்
அருள்செய்யும் ஆரூ ரரை
பண்டெலாம் அறியாதே பனிநீராற்
பரவைசெ பாவி தேனே
துன்னாக தேனாகி துர்ச்சனவர்
சொற்கேட்டு துவர்வா கொண்டு
என்னாக திரிதந்தீங் கிருகையேற்
றிடவுண்ட ஏழை யேன்நான்
பொன்னாக தடியேனை புகப்பெய்து
பொருட்படுத்த ஆரூ ரரை
என்னாக திருத்தாதே ஏதன்போர
காதனாய் அகப்ப டேனே
பப்போதி பவணனா பறித்ததொரு
தலையோடே திரிதர் வேனை
ஒப்போட வோதுவித்தென் உள்ளத்தின்
உள்ளிருந்தங் குறுதி காட்டி
அப்போதை கப்போதும் அடியவர்க
காரமுதாம் ஆரூ ரரை
எப்போது நினையாதே இருட்டறையின்
மலடுகற தெய்த்த வாறே
கதியொன்றும் அறியாதே கண்ணழல
தலைபறித்து கையில் உண்டு
பதியொன்று நெடுவீதி பலர்காண
நகைநாணா துழிதர் வேற்கு
மதிதந்த ஆருரில் வார்தேனை
வாய்மடுத்து பருகி உய்யும்
விதியின்றி மதியிலியேன் விளக்கிருக்க
மின்மினித்தீ காய்ந்த வாறே
பூவையா தலைபறித்து பொறியற்ற
சமண்நீசர் சொல்லே கேட்டு
காவிசேர் கண்மடவார கண்டோ டி
கதவடைக்குங் கள்வ னேன்றன்
ஆவியை போகாமே தவிர்த்தென்னை
யாட்கொண்ட ஆரூ ரரை
பாவியேன் அறியாதே பாழூரிற்
பயிக்கம்பு கெய்த்த வாறே
ஒட்டாத வாளவுணர் புரம்மூன்றும்
ஓரம்பின் வாயின் வீழ
கட்டானை காமனையுங் காலனையுங்
கண்ணினொடு காலின் வீழ
அட்டானை ஆரூரில் அம்மானை
ஆர்வச்செற் றக்கு ரோத
தட்டானை சாராதே தவமிருக்க
அவஞ்செய்து தருக்கி னேனே
மறுத்தானோர் வல்லரக்கன் ஈரைந்து
முடியினொடு தோளு தாளும்
இறுத்தானை எழில்முளரி தவிசின்மிசை
இருத்தான்றன் தலையி லொன்றை
அறுத்தானை ஆரூரில் அம்மானை
ஆலாலம் உண்டு கண்டங்
கறுத்தானை கருதாதே கரும்பிருக்க
இரும்புகடி தெய்த்த வாறே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்கழிப்பாலை
பண் காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
வனபவள வாய்திறந்து வானவர்க்கு
தானவனே என்கின் றாளாற்
சினபவள திண்டோ ள்மேற் சேர்ந்திலங்கு
வெண்ணீற்றன் என்கின் றாளால்
அனபவள மேகலையோ டப்பாலை
கப்பாலான் என்கின் றாளாற்
கனபவளஞ் சிந்துங் கழிப்பாலை
சேர்வானை கண்டாள் கொல்லோ
வண்டுலவு கொன்றை வளர்புன்
சடையானே என்கின் றாளால்
விண்டலர்ந்து நாறுவதோர் வெள்ளெருக்க
நாண்மலருண் டென்கின் றாளால்
உண்டயலே தோன்றுவதோர் உத்தரி
பட்டுடையன் என்கின் றாளாற்
கண்டயலே தோன்றுங் கழிப்பாலை
சேர்வானை கண்டாள் கொல்லோ
பிறந்திளைய திங்களெம் பெம்மான்
முடிமேல தென்கின் றாளால்
நிறங்கிளருங் குங்குமத்தின் மேனி
யவன்நிறமே யென்கின் றாளால்
மறங்கிளர்வேற் கண்ணாள் மணிசேர்
மிடற்றவனே யென்கின் றாளாற்
கறங்கோத மல்குங் கழிப்பாலை
சேர்வானை கண்டாள் கொல்லோ
இரும்பார்ந்த சூலத்தன் ஏந்தியோர்
வெண்மழுவன் என்கின் றாளாற்
சுரும்பார்ந்த மலர்க்கொன்றை சுண்ணவெண்
ணீற்றவனே என்கின் றாளாற்
பெரும்பால னாகியோர் பிஞ்ஞக
வேடத்தன் என்கின் றாளாற்
கரும்பானல் பூக்குங் கழிப்பாலை
சேர்வானை கண்டாள் கொல்லோ
பழியிலான் புகழுடையன் பால்நீற்றான்
ஆனேற்றன் என்கின் றாளால்
விழியுலாம் பெருந்தடங்கண் இரண்டல்ல
மூன்றுளவே என்கின் றாளாற்
சுழியுலாம் வருகங்கை தோய்ந்த
சடையவனே என்கின் றாளாற்
கழியுலாஞ் சூழ்ந்த கழிப்பாலை
சேர்வானை கண்டாள் கொல்லோ
பண்ணார்ந்த வீணை பயின்ற
விரலவனே என்கின் றாளால்
எண்ணார் புரமெரித்த எந்தை
பெருமானே என்கின் றாளாற்
பண்ணார் முழவதிர பாடலோ
டாடலனே என்கின் றாளாற்
கண்ணார் பூஞ்சோலை கழிப்பாலை
சேர்வானை கண்டாள் கொல்லோ
முதிருஞ் சடைமுடிமேல் முழ்கும்
இளநாகம் என்கின் றாளால்
அதுகண் டதனருகே தோன்றும்
இளமதியம் என்கின் றாளாற்
சதுர்வெண் பளிக்கு குழைகாதின்
மின்னிடுமே என்கின் றாளாற்
கதிர்முத்தஞ் சிந்துங் கழிப்பாலை
சேர்வானை கண்டாள் கொல்லோ
ஓரோத மோதி உலகம்
பலிதிரிவான் என்கின் றாளால்
நீரோத மேற நிமிர்புன்
சடையானே என்கின் றாளாற்
பாரோத மேனி பவளம்
அவனிறமே என்கின் றாளாற்
காரோத மல்குங் கழிப்பாலை
சேர்வானை கண்டாள் கொல்லோ
வானுலா திங்கள் வளர்புன்
சடையானே என்கின் றாளால்
ஊனுலாம் வெண்டலைகொண் டூரூர்
பலிதிரிவான் என்கின் றாளாற்
தேனுலாங் கோதை திளைக்கு
திருமார்பன் என்கின் றாளாற்
கானுலாஞ் சூழ்ந்த கழிப்பாலை
சேர்வானை கண்டாள் கொல்லோ
அடர்ப்பரிய இராவணனை அருவரைக்கீழ்
அடர்த்தவனே என்கின் றாளாற்
சுடர்ப்பெரிய திருமேனி சுண்ணவெண்
ணீற்றவனே என்கின் றாளால்
மடற்பெரிய ஆலின்கீழ் அறம்நால்வர
கன்றுரைத்தான் என்கின் றாளாற்
கடற்கருவி சூழ்ந்த கழிப்பாலை
சேர்வானை கண்டாள் கொல்லோ
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் பால்வண்ணநாதர் தேவியார் வேதநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருஏகம்பம்
பண் காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
கரவாடும் வன்னெஞ்சர கரியானை கரவார்பால்
விரவாடும் பெருமானை விடையேறும் வித்தகனை
அரவாட சடைதாழ அங்கையினில் அனலேந்தி
இரவாடும் பெருமானை என்மனத்தே வைத்தேனே
தேனோக்குங் கிளிமழலை உமைகேள்வன் செழும்பவள
தானோக்கு திருமேனி தழலுருவாஞ் சங்கரனை
வானோக்கும் வளர்மதிசேர் சடையானை வானோர்க்கும்
ஏனோர்க்கும் பெருமானை என்மனத்தே வைத்தேனே
கைப்போது மலர்தூவி காதலித்து வானோர்கள்
முப்போதும் முடிசாய்த்து தொழநின்ற முதல்வனை
அப்போது மலர்தூவி ஐம்புலனும் அகத்தடக்கி
எப்போதும் இனியானை என்மனத்தே வைத்தேனே
அண்டமாய் ஆதியாய் அருமறையோ டைம்பூத
பிண்டமாய் உலகுக்கோர் பெய்பொருளாம் பிஞ்ஞகனை
தொண்டர்தாம் மலர்தூவி சொன்மாலை புனைகின்ற
இண்டைசேர் சடையானை என்மனத்தே வைத்தேனே
ஆறேறு சடையானை ஆயிரம்பே ரம்மானை
பாறேறு படுதலையிற் பலிகொள்ளும் பரம்பரனை
நீறேறு திருமேனி நின்மலனை நெடுந்தூவி
ஏறேறும் பெருமானை என்மனத்தே வைத்தேனே
தேசனை தேசங்கள் தொழநின்ற திருமாலாற்
பூசனை பூசனைகள் உகப்பானை பூவின்கண்
வாசனை மலைநிலநீர் தீவளிஆ காசமாம்
ஈசனை எம்மானை என்மனத்தே வைத்தேனே
நல்லானை நல்லான நான்மறையோ டாறங்கம்
வல்லானை வல்லார்கள் மனத்துறையும் மைந்தனை
சொல்லானை சொல்லார்ந்த பொருளானை துகளேதும்
இல்லானை எம்மானை என்மனத்தே வைத்தேனே
விரித்தானை நால்வர்க்கு வெவ்வேறு வேதங்கள்
புரித்தானை பதஞ்சந்தி பொருளுருவாம் புண்ணியனை
தரித்தானை கங்கைநீர் தாழ்சடைமேல் மதில்மூன்றும்
எரித்தானை எம்மானை என்மனத்தே வைத்தேனே
ஆகம்ப தரவணையான் அயன்அறிதற் கரியானை
பாகம்பெண் ணாண்பாக மாய்நின்ற பசுபதியை
மாகம்ப மறையோதும் இறையானை மதிற்கச்சி
ஏகம்ப மேயானை என்மனத்தே வைத்தேனே
அடுத்தானை உரித்தானை அருச்சுனற்கு பாசுபதங்
கொடுத்தானை குலவரையே சிலையா கூரம்பு
தொடுத்தானை புரமெரி சுனைமல்கு கயிலாயம்
எடுத்தானை தடுத்தானை என்மனத்தே வைத்தேனே
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் ஏகாம்பரநாதர்
தேவியார் காமாட்சியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

சிவனெனுமோசை
பண் பியந்தைக்காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
சிவனெனு மோசையல்ல தறையோ வுலகிற்
றிருநின்ற செம்மை யுளதே
அவனுமோ ரையமுண்ணி யதளாடை யாவ
ததன்மேலொ ராட லரவங்
கவணள வுள்ளஉண்கு கரிகாடு கோயில்
கலனாவ தோடு கருதில்
அவனது பெற்றிகண்டு மவனீர்மை கண்டு
மகநேர்வர் தேவ ரவரே
விரிகதிர் ஞாயிறல்லர் மதியல்லர் வேத
விதியல்லர் விண்ணு நிலனு
திரிதரு வாயுவல்லர் செறுதீயு மல்லர்
தெளிநீரு மல்லர் தெரியில்
அரிதரு கண்ணியாளை ஒருபாக மாக
அருள்கார ணத்தில் வருவார்
எரியர வாரமார்பர் இமையாரு மல்லர்
இமைப்பாரு மல்லர் இவரே
தேய்பொடி வெள்ளைபூசி யதன்மேலோர் திங்கள்
திலகம் பதித்த நுதலர்
காய்கதிர் வேலைநீல ஒளிமா மிடற்றர்
கரிகாடர் காலோர் கழலர்
வேயுட னாடுதோளி அவள்விம்ம வெய்ய
மழுவீசி வேழவுரி போர
தேயிவ ராடுமாறும் இவள்காணு மாறும்
இதுதா னிவர்க்கோ ரியல்பே
வளர்பொறி யாமைபுல்கி வளர்கோதை வைகி
வடிதோலும் நூலும் வளர
கிளர்பொறி நாகமொன்று மிளிர்கின்ற மார்பர்
கிளர்காடு நாடு மகிழ்வர்
நளிர்பொறி மஞ்ஞையன்ன தளிர்போன்ற சாய
லவள்தோன்று வாய்மை பெருகி
குளிர்பொறி வண்டுபாடு குழலா லொருத்தி
யுளள்போல் குலாவி யுடனே
உறைவது காடுபோலு முரிதோ லுடுப்பர்
விடையூர்வ தோடு கலனா
இறையிவர் வாழும்வண்ண மிதுவேலு மீச
ரொருபா லிசைந்த தொருபால்
பிறைநுதல் பேதைமாதர் உமையென்னு நங்கை
பிறழ்பாட நின்று பிணைவான்
அறைகழல் வண்டுபாடும் அடிநீழ லாணை
கடவா தமர ருலகே
கணிவளர் வேங்கையோடு கடிதிங்கள் கண்ணி
கழல்கால் சிலம்ப அழகார்
அணிகிள ராரவெள்ளை தவழ்சுண்ண வண்ண
மியலா ரொருவ ரிருவர்
மணிகிளர் மஞ்ஞையால மழையாடு சோலை
மலையான் மகட்கு மிறைவர்
அணிகிள ரன்னவண்ணம் அவள் வண்ணவண்ணம்
அவர்வண்ண வண்ணம் அழலே
நகைவலர் கொன்றைதுன்று நகுவெண் டலையர்
நளிர்கங்கை தங்கு முடியர்
மிகைவளர் வேதகீத முறையோடும் வல்ல
கறைகொள் மணிசெய் மிடறர்
முகைவளர் கோதைமாதர் முனிபாடு மாறு
மெரியாடு மாறு மிவர்கை
பகைவளர் நாகம்வீசி மதியங்கு மாறு
மிதுபோலும் ஈச ரியல்பே
ஒளிவளர் கங்கைதங்கு மொளிமா லயன்ற
னுடல்வெந்து வீய சுடர்நீ
றணிகிள ராரவெள்ளை தவழ்சுண்ண வண்ணர்
தமியா ரொருவ ரிருவர்
களிகிளர் வேடமுண்டோ ர் கடமா வுரித்த
உடைதோல் தொடுத்த கலனார்
அணிகிள ரன்னதொல்லை யவள்பாக மாக
எழில்வேத மோது மவரே
மலைமட மங்கையோடும் வடகங்கை நங்கை
மணவாள ராகி மகிழ்வர்
தலைகல னாகவுண்டு தனியே திரிந்து
தவவாண ராகி முயல்வர்
விலையிலி சாந்தமென்று வெறிநீறு பூசி
விளையாடும் வேட விகிர்தர்
அலைகடல் வெள்ளமுற்று மலற கடைந்த
அழல்நஞ்ச முண்ட வவரே
புதுவிரி பொன்செயோலை யொருகாதோர் காது
சுரிசங்க நின்று புரள
விதிவிதி வேதகீத மொருபாடு மோத
மொருபாடு மெல்ல நகுமால்
மதுவிரி கொன்றைதுன்று சடைபாக மாதர்
குழல்பாக மாக வருவர்
இதுஇவர் வண்ணவண்ணம் இவள்வண்ண வண்ணம்
எழில்வண்ண வண்ண மியல்பே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருஅங்கமாலை
பண் சாதாரி
திருச்சிற்றம்பலம்
தலையே நீவணங்காய் தலை
மாலை தலைக்கணிந்து
தலையா லேபலி தேரு தலைவனை
தலையே நீவணங்காய்
கண்காள் காண்மின்களோ கடல்
நஞ்சுண்ட கண்டன்றன்னை
எண்டோ ள் வீசிநின் றாடும் பிரான்றன்னை
கண்காள் காண்மின்களோ
செவிகாள் கேண்மின்களோ சிவன்
எம்மிறை செம்பவள
எரிபோல் மேனிப்பி ரான்றிறம் எப்போதுஞ்
செவிகள் கேண்மின்களோ
மூக்கே நீமுரலாய் முது
காடுறை முக்கணனை
வாக்கே நோக்கிய மங்கை மணாளனை
மூக்கே நீமுரலாய்
வாயே வாழ்த்துகண்டாய் மத
யானை யுரிபோர்த்து
பேய்வாழ் காட்டக தாடும் பிரான்றன்னை
வாயே வாழ்த்துகண்டாய்
நெஞ்சே நீநினையாய் நிமிர்
புன்சடை நின்மலனை
மஞ்சா டும்மலை மங்கை மணாளனை
நெஞ்சே நீநினையாய்
கைகாள் கூப்பித்தொழீர் கடி
மாமலர் தூவிநின்று
பைவா பாம்பரை யார்த்த பரமனை
கைகள் கூப்பித்தொழீர்
ஆக்கை யாற்பயனென் அரன்
கோயில் வலம்வந்து
பூக்கை யாலட்டி போற்றி யென்னாதவிவ்
வாக்கை யாற்பயனென்
கால்க ளாற்பயனென் கறை
கண்ட னுறைகோயில்
கோல கோபுர கோகர ணஞ்சூழா
கால்க ளாற்பயனென்
உற்றா ராருளரோ உயிர்
கொண்டு போம்பொழுது
குற்றா லத்துறை கூத்தனல் லால்ந
குற்றார் ஆருளரோ
இறுமா திருப்பன்கொலோ ஈசன்
பல்கண தெண்ணப்பட்டு
சிறுமா னேந்திதன் சேவடி கீழ்ச்சென்றங்
கிறுமா திருப்பன்கொலோ
தேடி கண்டுகொண்டேன் திரு
மாலொடு நான்முகனு
தேடி தேடொணா தேவனை என்னுளே
தேடி கண்டுகொண்டேன்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்கெடிலவாணர்
பண் காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
முளைக்கதிர் இளம்பிறை மூழ்க வெள்ளநீர்
வளைத்தெழு சடையினர் மழலை வீணையர்
திளைத்ததோர் மான்மழு கையர் செய்யபொன்
கிளைத்துழி தோன்றிடுங் கெடில வாணரே
ஏறினர் ஏறினை ஏழை தன்னொரு
கூறினர் வேதம்
ஆறினர் ஆறிடு சடையர் பக்கமுங்
கீறின வுடையினர் கெடில வாணரே
விடந்திகழ் கெழுதரு மிடற்றர் வெள்ளைநீ
றுடம்பழ கெழுதுவர் முழுதும் வெண்ணிலா
படந்தழ கெழுதரு சடையிற் பாய்புனல்
கிடந்தழ கெழுதிய கெடில வாணரே
விழுமணி அயிலெயிற் றம்பு வெய்யதோர்
கொழுமணி நெடுவரை கொளுவி கோட்டினார்
செழுமணி மிடற்றினர் செய்யர் வெய்யதோர்
கெழுமணி அரவினர் கெடில வாணரே
குழுவினர் தொழுதெழும் அடியர் மேல்வினை
தழுவின கழுவுவர் பவள மேனியர்
மழுவினர் மான்மறி கையர் மங்கையை
கெழுவின யோகினர் கெடில வாணரே
அங்கையில் அனலெரி யேந்தி யாறெனும்
மங்கையை சடையிடை மணப்பர் மால்வரை
நங்கையை பாகமு நயப்பர் தென்றிசை
கெங்கைய தெனப்படுங் கெடில வாணரே
கழிந்தவர் தலைகல னேந்தி காடுறை
திழிந்தவ ரொருவரென் றெள்க வாழ்பவர்
வழிந்திழி மதுகர மிழற்ற மந்திகள்
கிழிந்ததேன் நுகர்தருங் கெடில வாணரே
கிடந்தபாம் பருகுகண் டரிவை பேதுற
கிடந்தபாம் பவளையோர் மயிலென் றையுற
கிடந்தநீர சடைமிசை பிறையும் ஏங்கவே
கிடந்துதான் நகுதலை கெடில வாணரே
வெறியுறு விரிசடை புரள வீசியோர்
பொறியுறு புலியுரி யரைய தாகவும்
நெறியுறு குழலுமை பாக மாகவுங்
கிறிபட உழிதர்வர் கெடில வாணரே
பூண்டதோர் அரக்கனை பொருவில் மால்வரை
தூண்டுதோ ளவைபட அடர்த்த தாளினார்
ஈண்டுநீர கமலவாய் மேதி பாய்தர
கீண்டுதேன் சொரிதருங் கெடில வாணரே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

நமச்சிவாயப்பதிகம்
பண் காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணை திருந்தடி பொருந்த கைதொழ
கற்றுணை பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே
பூவினு கருங்கலம் பொங்கு தாமரை
ஆவினனு கருங்கலம் அரனஞ் சாடுதல்
கோவினு கருங்கலங் கோட்ட மில்லது
நாவினு கருங்கலம் நமச்சி வாயவே
விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்
பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை
நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே
இடுக்கண்ப டிருக்கினும் இரந்தி யாரையும்
விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம்
அடுக்கற்கீழ கிடக்கினு மருளின் நாமுற்ற
நடுக்கத்தை கெடுப்பது நமச்சி வாயவே
வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம்
அந்தணர கருங்கலம் அருமறை யாறங்க
திங்களு கருங்கல திகழு நீண்முடி
நங்களு கருங்கலம் நமச்சி வாயவே
சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்
நலமிலன் நாடொறு நல்கு வான்நலன்
குலமில ராகிலுங் குலத்திற் கேற்பதோர்
நலமி கொடுப்பது நமச்சி வாயவே
வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினார் அந்நெறி கூடி சென்றலும்
ஓடினே னோடிச்சென் றுருவங் காண்டலும்
நாடினேன் நாடிற்று நமச்சி வாயவே
இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே
முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்
தன்னெறி யேசர ணாதல் திண்ணமே
அந்நெறி யேசென்றங் கடைந்த வர்க்கெலாம்
நன்னெறி யாவது நமச்சி வாயவே
மாப்பிணை தழுவிய மாதோர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி பொருந்த கைதொழ
நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்ப
தேத்தவல் லார்த கிடுக்க ணில்லையே
இது சமணர்கள் கற்றூணிற்கட்டி கடலிலே வீழ்த்தினபோது ஓதியருளியது
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருப்பழனம்
பண் பழந்தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
சொன்மாலை பயில்கின்ற குயிலினங்காள் சொல்லீரே
பன்மாலை வரிவண்டு பண்மிழற்றும் பழனத்தான்
முன்மாலை நகுதிங்கள் முகிழ்விளங்கு முடிச்சென்னி
பொன்மாலை மார்பன்என் புதுநலமுண் டிகழ்வானோ
கண்டகங்காள் முண்டகங்காள் கைதைகாள் நெய்தல்காள்
பண்டரங்க வேடத்தான் பாட்டோ வா பழனத்தான்
வண்டுலா தடமூழ்கி மற்றவனென் தளிர்வண்ணங்
கொண்டநாள் தானறிவான் குறிக்கொள்ளா தொழிவானோ
மனைக்காஞ்சி இளங்குருகே மறந்தாயோ மதமுகத்த
பனைக்கைமா வுரிபோர்த்தான் பலர்பாடும் பழனத்தான்
நினைக்கின்ற நினைப்பெல்லாம் உரையாயோ நிகழ்வண்டே
சுனைக்குவளை மலர்க்கண்ணாள் சொற்றூதா சோர்வாளோ
மனைக்காஞ்சியென்பது வீட்டுக்கு சமீபத்திலிருக்குங் காஞ்சிமரம்
புதியையாய் இனியையாம் பூந்தென்றால் புறங்காடு
பதியாவ திதுவென்று பலர்பாடும் பழனத்தான்
மதியாதார் வேள்விதனை மதித்திட்ட மதிகங்கை
விதியாளன் என்னுயிர்மேல் விளையாடல் விடுத்தானோ
மண்பொருந்தி வாழ்பவர்க்கும் மாதீர்த்த வேதியர்க்கும்
விண்பொருந்து தேவர்க்கும் வீடுபேறாய் நின்றானை
பண்பொருந்த இசைபாடும் பழனஞ்சேர் அப்பனையென்
கண்பொருந்தும் போழ்தத்துங் கைவிடநான் கடவேனோ
பொங்கோத மால்கடலிற் புறம்புறம்போய் இரைதேருஞ்
செங்கால்வெண் மடநாராய் செயற்படுவ தறியேன்நான்
அங்கோல வளைகவர்ந்தான் அணிபொழில்சூழ் பழனத்தான்
தங்கோல நறுங்கொன்றை தாரருளா தொழிவானோ
துணையார முயங்கிப்போ துறைசேரும் மடநாராய்
பணையார வாரத்தான் பாட்டோ வா பழனத்தான்
கணையார இருவிசும்பிற் கடியரணம் பொடிசெய்த
இணையார மார்பன்என் எழில்நலமுண் டிகழ்வானோ
கூவைவாய் மணிவரன்றி கொழித்தோடுங் காவிரிப்பூம்
பாவைவாய் முத்திலங்க பாய்ந்தாடும் பழனத்தான்
கோவைவாய் மலைமகள்கோன் கொல்லேற்றின் கொடியாடை
பூவைகாள் மழலைகாள் போகாத பொழுதுளதே
கூவைவாய்மணி என்பது பூமியினிடத்தில்
பொருந்திய முத்துக்கள் அவையாவன
யானைக்கொம்பு பன்றிக்கொம்பு நாகம் பசுவின்பல்
மூங்கிற்கணு கொக்கின்கழுத்து கற்புள்ள
மாதர்கண்டம் என்னுமிவ்விடங்களி லுண்டாயிருக்கு
முத்துக்களாம்
காவிரிப்பூம்பாவைவாய் முத்து என்பது நீர்முத்து
எனக்கொள்க அவை சங்கு இப்பி மீன் தாமரைமலர்
என்னு மிவைகளி லுண்டாகு முத்துக்கள் இதனை
சிறைகொள் நீர்த்தரள திரல்கொணித்திலத்த என
திருமாளிகைத்தேவர் அருளிச்செய்த திருவிசைப்பா
வது பதிகம்
புள்ளிமான் பொறியரவம் புள்ளுயர்த்தான் மணிநாக
பள்ளியான் தொழுதேத்த இருக்கின்ற பழனத்தான்
உள்ளுவார் வினைதீர்க்கும் என்றுரைப்பர் உலகெல்லாங்
கள்ளியேன் நான்இவற்கென் கனவளையுங் கடவேனோ
வஞ்சித்தென் வளைகவர்ந்தான் வாரானே யாயிடினும்
பஞ்சிக்காற் சிறகன்னம் பரந்தார்க்கும் பழனத்தான்
அஞ்சிப்போ கலிமெலிய அழலோம்பும் அப்பூதி
குஞ்சிப்பூ வாய்நின்ற சேவடியாய் கோடியையே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் ஆபத்சகாயர் தேவியார் பெரியநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவையாறு
பண் பழந்தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
விடகிலேன் அடிநாயேன் வேண்டியக்கால் யாதொன்றும்
இடைகிலேன் அமணர்கள்தம் அறவுறைகே டலமலந்தேன்
தொடர்கின்றேன் உன்னுடைய தூமலர்ச்சே வடிகாண்பான்
அடைகின்றேன் ஐயாறர காளாய்நான் உய்ந்தேனே
செம்பவள திருவுருவர் திகழ்சோதி குழைக்காதர்
கொம்பமருங் கொடிமருங்கிற் கோல்வளையா ளொருபாகர்
வம்பவிழும் மலர்க்கொன்றை வளர்சடைமேல் வைத்துகந்த
அம்பவள ஐயாறர காளாய்நான் உய்ந்தேனே
நணியானே சேயானே நம்பானே செம்பொன்னின்
துணியானே தோலானே சுண்ணவெண் ணீற்றானே
மணியானே வானவர்க்கு மருந்தாகி பிணிதீர்க்கும்
அணியானே ஐயாறர காளாய்நான் உய்ந்தேனே
ஊழித்தீ யாய்நின்றாய் உள்குவார் உள்ளத்தாய்
வாழித்தீ யாய்நின்றாய் வாழ்த்துவார் வாயானே
பாழித்தீ யாய்நின்றாய் படர்சடைமேற் பனிமதியம்
ஆழித்தீ ஐயாறார காளாய்நான் உய்ந்தேனே
சடையானே சடையிடையே தவழுந்தண் மதியானே
விடையானே விடையேறி புரமெரித்த வித்தகனே
உடையானே உடைதலைகொண் டூரூருண் பலிக்குழலும்
அடையானே ஐயாறர காளாய்நான் உய்ந்தேனே
நீரானே தீயானே நெதியானே கதியானே
ஊரானே உலகானே உடலானே உயிரானே
பேரானே பிறைசூடீ பிணிதீர்க்கும் பெருமானென்
றாராத ஐயாறர காளாய்நான் உய்ந்தேனே
கண்ணானாய் மணியானாய் கருத்தானாய் அருத்தானாய்
எண்ணானாய் எழுத்தானாய் எழுத்தினுக்கோர் இயல்பானாய்
விண்ணானாய் விண்ணிடையே புரமெரித்த வேதியனே
அண்ணான ஐயாறர காளாய்நான் உய்ந்தேனே
அருத்தனாயென்பதற்கு உண்ணப்படும் பொருள்களாயின
என பொருள்படுகின்றது
மின்னானாய் உருமானாய் வேதத்தின் பொருளானாய்
பொன்னானாய் மணியானாய் பொருகடல்வாய் முத்தானாய்
நின்னானார் இருவர்க்குங் காண்பரிய நிமிர்சோதி
அன்னானே ஐயாறர காளாய்நான் உய்ந்தேனே
முத்திசையும் புனற்பொன்னி மொய்பவளங் கொழித்துந்த
பத்தர்பலர் நீர்மூழ்கி பலகாலும் பணிந்தேத்த
எத்திசையும் வானவர்கள் எம்பெருமா னெனஇறைஞ்சும்
அத்திசையாம் ஐயாறர காளாய்நான் உய்ந்தேனே
கருவரைசூழ் கடலிலங்கை கோமானை கருத்தழி
திருவிரலால் உதகரணஞ் செய்துகந்த சிவமூர்த்தி
பெருவரைசூழ் வையகத்தார் பேர்நந்தி என்றேத்தும்
அருவரைசூழ் ஐயாறர காளாய்நான் உய்ந்தேனே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

தசபுராணம்
பண் பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்
பருவரை யொன்றுசுற்றி அரவங்கை விட்ட
இமையோர் இரிந்து பயமா
திருநெடு மால்நிறத்தை அடுவான் விசும்பு
சுடுவா னெழுந்த விசைபோ
பெருகிட மற்றிதற்கொர் பிதிகார மொன்றை
அருளாய் பிரானே எனலும்
அருள்கொடு மாவிடத்தை எரியாமல் உண்ட
அவனண்டர் அண்ட ரரசே
நிரவொலி வெள்ளமண்டி நெடுவண்ட மூட
நிலநின்று தம்ப மதுவ
பரமொரு தெய்வமெய்த இதுவொப்ப தில்லை
யிருபாலு நின்று பணி
பிரமனு மாலுமேலை முடியோடு பாதம்
அறியாமை நின்ற பெரியோன்
பரமுத லாயதேவர் சிவனாய மூர்த்தி
யவனா நமக்கோர் சரணே
காலமு நாள்கள்ஊழி படையா முன்ஏக
உருவாகி மூவர் உருவில்
சாலவு மாகிமிக்க சமயங்க ளாறின்
உருவாகி நின்ற தழலோன்
ஞாலமு மேலைவிண்ணோ டுலகேழு முண்டு
குறளாயோ ராலின் இலைமேல்
பாலனு மாயவற்கோர் பரமாய மூர்த்தி
யவனா நமக்கோர் சரணே
நீடுயர் மண்ணுவிண்ணும் நெடுவேலை குன்றொ
டுலகேழு மெங்கு நலி
சூடிய கையராகி இமையோர் கணங்கள்
துதியோதி நின்று தொழலும்
ஓடிய தாருகன்றன் உடலம் பிளந்து
ஒழியாத கோபம் ஒழிய
ஆடிய மாநடத்தெ மனலாடி பாதம்
அவையா நமக்கோர் சரணே
நிலைவலி இன்றியெங்கும் நிலனோடு விண்ணும்
நிதனஞ்செய் தோடு புரமூன்
றலைநலி வஞ்சியோடி அரியோடு தேவர்
அரணம் புகத்தன் அருளாற்
கொலைநலி வாளிமூள அரவங்கை நாணும்
அனல்பாய நீறு புரமா
மலைசிலை கையிலொல்க வளைவித்த வள்ள
லவனா நமக்கோர் சரணே
நீலநன் மேனிசெங்கண் வளைவெள் ளெயிற்ற
னெரிகேசன் நேடி வருநாள்
காலைநன் மாலைகொண்டு வழிபாடு செய்யும்
அளவின்கண் வந்து குறுகி
பாலனை ஓடவோட பயமெய்து வித்த
உயிர்வவ்வு பாசம் விடு
காலனை வீடுசெய்த கழல்போலும் அண்டர்
தொழுதோது சூடு கழலே
உயர்தவ மிக்கதக்கன் உயர்வேள்வி தன்னில்
அவியுண்ண வந்த இமையோர்
பயமுறு மெச்சனங்கி மதியோனு முற்ற
படிகண்டு நின்று பயமாய்
அயனொடு மாலுமெங்க ளறியாமை யாதி
கமியென் றிறைஞ்சி யகல
சயமுறு தன்மைகண்ட தழல்வண்ணன் எந்தை
கழல்கண்டு கொள்கை சரணே
நலமலி மங்கைநங்கை விளையாடி யோடி
நயன தலங்கள் கரமா
உலகினை ஏழுமுற்றும் இருள்மூட மூட
இருளோட நெற்றி ஒருகண்
அலர்தர அஞ்சிமற்றை நயனங்கை விட்டு
மடவாள் இறைஞ்ச மதிபோல்
அலர்தரு சோதிபோல அலர்வித்த முக்கண்
அவனா நமக்கோர் சரணே
கழைபடு காடுதென்றல் குயில்கூவ அஞ்சு
கணையோன் அணைந்து புகலும்
மழைவடி வண்ணன்எண்ணி மகவோனை விட்ட
மலரான தொட்ட மதனன்
எழில்பொடி வெந்துவீழ இமையோர் கணங்கள்
எரியென் றிறைஞ்சி யகல
தழல்படு நெற்றிஒற்றை நயனஞ் சிவந்த
தழல்வண்ணன் எந்தை சரணே
தடமலர் ஆயிரங்கள் குறைவொன்ற தாக
நிறைவென்று தன்க ணதனால்
உடன்வழி பாடுசெய்த திருமாலை யெந்தை
பெருமான் உகந்து மிகவும்
சுடரடி யான்முயன்று சுழல்வி தரக்கன்
இதயம் பிளந்த கொடுமை
அடல்வலி ஆழியாழி யவனு களித்த
அவனா நமக்கோர் சரணே
கடுகிய தேர்செலாது கயிலாய மீது
கருதேலுன் வீரம் ஒழிநீ
முடுகுவ தன்றுதன்ம மெனநின்று பாகன்
மொழிவானை நன்று முனியா
விடுவிடு வென்றுசென்று விரைவுற் றரக்கன்
வரையுற் றெடுக்க முடிதோள்
நெடுநெடு இற்றுவீழ விரலுற்ற பாதம்
நினைவுற்ற தென்றன் மனனே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

பாவநாசத்திருப்பதிகம்
பண் பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்
பற்றற் றார்சேற் பழம்பதியை
பாசூர் நிலாய பவளத்தை
சிற்றம் பலத்தெ திகழ்கனியை
தீண்டற் கரிய திருவுருவை
வெற்றி யூரில் விரிசுடரை
விமலர் கோனை திரைசூழ்ந்த
ஒற்றி யூரெம் உத்தமனை
உள்ள துள்ளே வைத்தேனே
வெற்றியூரென்பது வைப்புத்தலங்களிலொன்று
ஆனை காவில் அணங்கினை
ஆரூர் நிலாய அம்மானை
கான பேரூர கட்டியை
கானூர் முளைத்த கரும்பினை
வான பேரார் வந்தேத்தும்
வாய்மூர் வாழும் வலம்புரியை
மான கயிலை மழகளிற்றை
மதியை சுடரை மறவேனே
மதியங் கண்ணி ஞாயிற்றை
மயக்க தீர்க்கும் மருந்தினை
அதிகை மூதூர் அரசினை
ஐயா றமர்ந்த ஐயனை
விதியை புகழை வானோர்கள்
வேண்டி தேடும் விளக்கினை
நெதியை ஞான கொழுந்தினை
நினைந்தேற் குள்ளம் நிறைந்ததே
புறம்ப யத்தெம் முத்தினை
புகலூர் இலங்கு பொன்னினை
உறந்தை யோங்கு சிராப்பள்ளி
உலகம் விளக்கு ஞாயிற்றை
கறங்கு மருவி கழுக்குன்றிற்
காண்பார் காணுங் கண்ணானை
அறஞ்சூழ் அதிகை வீரட்ட
தரிமான் ஏற்றை அடைந்தேனே
உறந்தையென்பது உறையூர்
கோல காவிற் குருமணியை
குடமூ குறையும் விடமுணியை
ஆலங் காட்டி லந்தேனை
அமரர் சென்னி யாய்மலரை
பாலிற் றிகழும் பைங்கனியை
பரா துறையெம் பசும்பொன்னை
சூல தானை துணையிலியை
தோளை குளிர தொழுதேனே
குடமூக்கென்பது கும்பகோணம்
மருக லுறையுமா ணிக்கத்தை
வலஞ் சுழியின் மாலையை
கருகா வூரிற் கற்பகத்தை
காண்டற் கரிய கதிரொளியை
பெருவே ளூரெம் பிறப்பிலியை
பேணு வார்கள் பிரிவரிய
திருவாஞ் சியத்தெஞ் செல்வனை
சிந்தை யுள்ளே வைத்தேனே
எழிலார் இராச சிங்கத்தை
இராமே சுரத்தெம் எழிலேற்றை
குழலார் கோதை வரைமார்பிற்
குற்றா லத்தெங் கூத்தனை
நிழலார் சோலை நெடுங்களத்து
நிலாய நித்த மணாளனை
அழலார் வண்ண தம்மானை
அன்பி லணைத்து வைத்தேனே
மாலை தோன்றும் வளர்மதியை
மறைக்கா டுறையும் மணாளனை
ஆலை கரும்பி னின்சாற்றை
அண்ணா மலையெம் அண்ணலை
சோலை துருத்தி நகர்மேய
சுடரிற் றிகழு துளக்கிலியை
மேலை வானோர் பெருமானை
விருப்பால் விழுங்கி யிட்டேனே
சோற்று துறையெஞ் சோதியை
துருத்தி மேய தூமணியை
ஆற்றிற் பழன தம்மானை
ஆல வாயெம் மருமணியை
நீற்றிற் பொலிந்த நிமிர்திண்டோ ள்
நெய்த்தா னத்தெ நிலாச்சுடரை
தோற்ற கடலை அடலேற்றை
தோளை குளிர தொழுதேனே
புத்தூ ருறையும் புனிதனை
பூவ ணத்தெம் போரேற்றை
வித்தாய் மிழலை முளைத்தானை
வேள்வி குடியெம் வேதியனை
பொய்த்தார் புரமூன் றெரித்தானை
பொதியில் மேய புராணனை
வைத்தேன் என்றன் மனத்துள்ளே
மாத்தூர் மேய மருந்தையே
மாத்தூரென்பது திருவாமாத்தூர்
முந்தி தானே முளைத்தானை
மூரி வெள்ளே றூர்ந்தானை
அந்தி செவ்வான் படியானை
அரக்க னாற்றல் அழித்தானை
சிந்தை வெள்ள புனலாட்டி
செஞ்சொன் மாலை யடிசேர்த்தி
எந்தை பெம்மான் என்னெம்மான்
என்பார் பாவ நாசமே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருப்புகலூர்
பண் இந்தளம்
திருச்சிற்றம்பலம்
செய்யர் வெண்ணூலர் கருமான் மறிதுள்ளுங்
கையர் கனைகழல் கட்டிய காலினர்
மெய்யர் மெய்ந்நின் றவர்க்கல்லா தவர்க்கென்றும்
பொய்யர் புகலூர புரிசடை யாரே
மேகநல் ஊர்தியர் மின்போல் மிளிர்சடை
பாக மதிநுத லாளையோர் பாகத்தர்
நாக வளையினர்
போகர் புகலூர புரிசடை யாரே
பெருந்தாழ் சடைமுடி மேற்பிறை சூடி
கருந்தாழ் குழலியு தாமுங் கலந்து
திருந்தா மனமுடை யார்திற தென்றும்
பொருந்தார் புகலூர புரிசடை யாரே
அக்கார் அணிவடம் ஆகத்தர் நாகத்தர்
நக்கார் இளமதி கண்ணியர் நாடொறும்
உக்கார் தலைபிடி துன்பலி கூர்தொறும்
புக்கார் புகலூர புரிசடை யாரே
ஆர்த்தார் உயிரடும் அந்தகன் றன்னுடல்
பேர்த்தார் பிறைநுதற் பெண்ணின்நல் லாள்உட
கூர்த்தார் மருப்பிற் கொலைக்களிற் றீருரி
போர்த்தார் புகலூர புரிசடை யாரே
தூமன் சுறவ துதைந்த கொடியுடை
காமன் கணைவலங் காய்ந்தமு கண்ணினர்
சேம நெறியினர் சீரை யுடையவர்
பூமன் புகலூர புரிசடை யாரே
உதைத்தார் மறலி உருளவோர் காலாற்
சிதைத்தார் திகழ்தக்கன் செய்தநல் வேள்வி
பதைத்தார் சிரங்கரங் கொண்டுவெய் யோன்கண்
புதைத்தார் புகலூர புரிசடை யாரே
கரிந்தார் தலையர் கடிமதில் மூன்று
தெரிந்தார் கணைகள் செழுந்தழ லுண்ண
விரிந்தார் சடைமேல் விரிபுனற் கங்கை
புரிந்தார் புகலூர புரிசடை யாரே
ஈண்டார் அழலி னிருவருங் கைதொழ
நீண்டார் நெடுந்தடு மாற்ற நிலையஞ்ச
மாண்டார்தம் என்பு மலர்க்கொன்றை மாலையும்
பூண்டார் புகலூர புரிசடை யாரே
கறுத்தார் மணிகண்டங் கால்விர லூன்றி
இறுத்தார் இலங்கையர் கோன்முடி பத்தும்
அறுத்தார் புலனைந்தும் ஆயிழை பாகம்
பொறுத்தார் புகலூர புரிசடை யாரே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் அக்கினீசுவரர்
தேவியார் கருந்தார்குழலியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவாரூர் அரநெறி
பண் இந்தளம்
திருச்சிற்றம்பலம்
எத்தீ புகினும் எமக்கொரு தீதிலை
தெத்தே யெனமுரன் றெம்முள் உழிதர்வர்
முத்தீ யனையதோர் மூவிலை வேல்பிடி
தத்தீ நிறத்தார் அரநெறி யாரே
வீரமும் பூண்பர் விசயனொ டாயதோர்
தாரமும் பூண்பர் தமக்கன்பு பட்டவர்
பாரமும் பூண்பர்நற் பைங்கண் மிளிரர
வாரமும் பூண்பர் அரநெறி யாரே
தஞ்சவண் ணத்தர் சடையினர் தாமுமோர்
வஞ்சவண் ணத்தர்வண் டார்குழ லாளொடு
துஞ்சவண் ணத்தர்துஞ் சாதகண் ணார்தொழும்
அஞ்சவண் ணத்தர் அரநெறி யாரே
விழித்தனர் காமனை வீழ்தர விண்ணின்
றிழித்தனர் கங்கையை யேத்தினர் பாவங்
கழித்தனர் கல்சூழ் கடியரண் மூன்றும்
அழித்தனர் ஆரூர் அரநெறி யாரே
துற்றவர் வெண்டலை யிற்சுருள் கோவண
தற்றவர் தம்வினை யானவெல் லாமற
அற்றவர் ஆரூர் அறநெறி கைதொழ
உற்றவர் தாமொளி பெற்றனர் தாமே
கூடர வத்தர் குரற்கிண் கிணியடி
நீடர வத்தர்முன் மாலை யிடையிருள்
பாடர வத்தர் பணமஞ்சு பைவிரி
தாடர வத்தர் அரநெறி யாரே
கூடவல் லார்குறி பில்லுமை யாளொடும்
பாடவல் லார்பயின் றந்தியுஞ் சந்தியும்
ஆடவல் லார்திரு வாரூர் அரநெறி
நாடவல் லார்வினை வீடவல் லாரே
பாலை நகுபனி வெண்மதி பைங்கொன்றை
மாலையுங் கண்ணியு மாவன சேவடி
காலையு மாலையுங் கைதொழு வார்மனம்
ஆலயம் ஆரூர் அரநெறி யார்க்கே
முடிவண்ணம் வானமின் வண்ணந்தம் மார்பிற்
பொடிவண்ண தம்புக ழூர்தியின் வண்ணம்
படிவண்ணம் பாற்கடல் வண்ணஞ்செஞ் ஞாயி
றடிவண்ணம் ஆரூர் அரநெறி யார்க்கே
பொன்னவில் புன்சடை யானடி யின்னிழல்
இன்னருள் சூடியெள் காதுமி ராப்பகல்
மன்னவர் கின்னரர் வானவர் தாந்தொழும்
அன்னவர் ஆரூர் அரநெறி யாரே
பொருள்மன் னனைப்பற்றி புட்பகங் கொண்ட
மருள்மன் னனையெற்றி வாளுட னீந்து
கருள்மன் னுகண்டங் கறுக்க நஞ்சுண்ட
அருள்மன்னர் ஆரூர் அரநெறி யாரே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் வன்மீகநாதர் தேவியார் அல்லியங்கோதையம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

விடந்தீர்த்ததிருப்பதிகம்
பண் இந்தளம்
திருச்சிற்றம்பலம்
ஒன்றுகொ லாமவர் சிந்தை யுயர்வரை
ஒன்றுகொ லாமுய ரும்மதி சூடுவர்
ஒன்றுகொ லாமிடு வெண்டலை கையது
ஒன்றுகொ லாமவர் ஊர்வது தானே
இரண்டுகொ லாமிமை யோர்தொழு பாதம்
இரண்டுகொ லாமிலங் குங்குழை பெண்ணாண்
இரண்டுகொ லாமுரு வஞ்சிறு மான்மழு
இரண்டுகொ லாமவர் எய்தின தாமே
மூன்றுகொ லாமவர் கண்ணுத லாவன
மூன்றுகொ லாமவர் சூலத்தின் மொய்யிலை
மூன்றுகொ லாங்கணை கையது வில்நாண்
மூன்றுகொ லாம்புர மெய்தன தாமே
நாலுகொ லாமவர் தம்முக மாவன
நாலுகொ லாஞ்சன னம்முதற் றோற்றமும்
நாலுகொ லாமவர் ஊர்தியின் பாதங்கள்
நாலுகொ லாமறை பாடின தாமே
அஞ்சுகொ லாமவர் ஆடர வின்படம்
அஞ்சுகொ லாமவர் வெல்புல னாவன
அஞ்சுகொ லாமவர் காயப்ப டான்கணை
அஞ்சுகொ லாமவர் ஆடின தாமே
ஆறுகொ லாமவர் அங்கம் படைத்தன
ஆறுகொ லாமவர் தம்மக னார்முகம்
ஆறுகொ லாமவர் தார்மிசை வண்டின்கால்
ஆறுகொ லாஞ்சுவை யாக்கின தாமே
ஏழுகொ லாமவர் ஊழி படைத்தன
ஏழுகொ லாமவர் கண்ட இருங்கடல்
ஏழுகொ லாமவர் ஆளு முலகங்கள்
ஏழுகொ லாமிசை யாக்கின தாமே
எட்டுக்கொ லாமவர் ஈறில் பெருங்குணம்
எட்டுக்கொ லாமவர் சூடு மினமலர்
எட்டுக்கொ லாமவர் தோளிணை யாவன
எட்டுக்கொ லாந்திசை யாக்கின தாமே
ஒன்பது போலவர் வாசல் வகுத்தன
ஒன்பது போலவர் மார்பினில் நூலிழை
ஒன்பது போலவர் கோல குழற்சடை
ஒன்பது போலவர் பாரிட தானே
பத்துக்கொ லாமவர் பாம்பின்கண் பாம்பின்பல்
பத்துக்கொ லாமெயி றுந்நெரி துக்கன
பத்துக்கொ லாமவர் காயப்ப டான்றலை
பத்துக்கொ லாமடி யார்செய்கை தானே
இது அப்பூதிநாயனார் புத்திரரை தீண்டியவிடம்
நீங்கும்படி அருளிச்செய்தது
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவாரூர்
பண் சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
சூல படையானை சூழாக வீழருவி
கோலத்தோ குங்குமஞ்சேர் குன்றெ டுடையானை
பாலொத்த மென்மொழியாள் பங்கனை பாங்காய
ஆலத்தின் கீழானை நான்கண்ட தாரூரே
பக்கமே பாரிடங்கள் சூழ படுதலையிற்
புக்கவூர பிச்சையேற் றுண்டு பொலிவுடைத்தா
கொக்கிறகின் தூவல் கொடியெடுத்த கோவணத்தோ
டக்கணிந்த அம்மானை நான்கண்ட தாரூரே
சேய உலகமுஞ் செல்சார்வு மானானை
மாயப்போர் வல்லானை மாலைதாழ் மார்பனை
வேயொத்த தோளியர்தம் மென்முலைமேல் தண்சாந்தின்
திடையானை நான்கண்ட தாரூரே
ஏறேற்ற மாவேறி எண்கணமும் பின்படர
மாறேற்றார் வல்லரணஞ் சீறி மயானத்தின்
நீறேற்ற மேனியானாய் நீள்சடைமேல் நீர்ததும்ப
ஆறேற்ற அந்தணனை நான்கண்ட தாரூரே
தாங்கோல வெள்ளெலும்பு பூண்டுதம் ஏறேறி
பாங்கான வூர்க்கெல்லாஞ் செல்லும் பரமனார்
தேங்காவி நாறு திருவாரூர தொன்னகரில்
பூங்கோயி லுள்மகிழ்ந்து போகா திருந்தாரே
எம்பட்டம் பட்ட முடையானை யேர்மதியின்
நும்பட்டஞ் சேர்ந்த நுதலானை அந்திவா
செம்ப டுடுத்து சிறுமா னுரியாடை
அம்ப டசைத்தானை நான்கண்ட தாரூரே
போழொத்த வெண்மதியஞ் சூடி பொலிந்திலங்கு
வேழ துரிபோர்த்தான் வெள்வளையாள் தான்வெருவ
ஊழித்தீ யன்னானை ஓங்கொலிமா பூண்டதோர்
ஆழித்தேர் வித்தகனை நான்கண்ட தாரூரே
வஞ்சனையா ரார்பாடுஞ் சாராத மைந்தனை
துஞ்சிருளில் ஆடல் உகந்தானை தன்தொண்டர்
நெஞ்சிருள் கூரும் பொழுது நிலாப்பாரி
தஞ்சுடராய் நின்றானை நான்கண்ட தாரூரே
காரமுது கொன்றை கடிநாறு தண்ணென்ன
நீரமுது கோதையோ டாடிய நீள்மார்பன்
பேரமுத முண்டார்கள் பெருங்கடல்நஞ்
சாரமுதா வுண்டானை நான்கண்ட தாரூரே
தாட வுடுக்கையன் தாமரைப்பூஞ் சேவடியன்
கோடலா வேடத்தன் கொண்டதோர் வீணையினான்
ஆடரவ