திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
தேவார பதிகங்கள்
மூன்றாம் திருமுறை முதல் பகுதி
உள்ளுறை
கோயில் மின்பதிப்பு
திருப்பூந்தராய் மின்பதிப்பு
திருப்புகலி மின்பதிப்பு
திருஆவடுதுறை மின்பதிப்பு
திருப்பூந்தராய் மின்பதிப்பு
திருக்கொள்ளம்பூதூர் மின்பதிப்பு
திருப்புகலி மின்பதிப்பு
திருக்கடவூர்வீரட்டம் மின்பதிப்பு
திருவீழிமிழலை மின்பதிப்பு
திருஇராமேச்சுரம் மின்பதிப்பு
திருப்புனவாயில் மின்பதிப்பு
திருக்கோட்டாறு மின்பதிப்பு
திருப்பூந்தராய் மின்பதிப்பு
திருப்பைஞ்ஞீலி மின்பதிப்பு
திருவெண்காடு மின்பதிப்பு
திருக்கொள்ளிக்காடு மின்பதிப்பு
திருவிசயமங்கை மின்பதிப்பு
திருவைகல்மாடக்கோயில் மின்பதிப்பு
திருஅம்பர்ப்பெருந்திருக்கோயில் மின்பதிப்பு
திருப்பூவணம் மின்பதிப்பு
திருக்கருக்குடி மின்பதிப்பு
திருப்பஞ்சாக்கரப்பதிகம் மின்பதிப்பு
திருவிற்கோலம் மின்பதிப்பு
திருக்கழுமலம் மின்பதிப்பு
திருந்துதேவன்குடி மின்பதிப்பு
திருக்கானப்பேர் மின்பதிப்பு
திருச்சக்கரப்பள்ளி மின்பதிப்பு
திருமழபாடி மின்பதிப்பு
மேலைத்திருக்காட்டுப்பள்ளி மின்பதிப்பு
திருஅரதைப்பெரும்பாழி மின்பதிப்பு
திருமயேந்திரப்பள்ளி மின்பதிப்பு
திருஏடகம் மின்பதிப்பு
திருஉசாத்தானம் மின்பதிப்பு
திருமுதுகுன்றம் மின்பதிப்பு
திருத்தென்குடித்திட்டை மின்பதிப்பு
திருக்காளத்தி மின்பதிப்பு
திருப்பிரமபுரம் மின்பதிப்பு
திருக்கண்டியூர்வீரட்டம் மின்பதிப்பு
திருஆலவாய் மின்பதிப்பு
தனித்திருவிருக்குக்குறள் மின்பதிப்பு
திருவேகம்பம் மின்பதிப்பு
திருச்சிற்றேமம் மின்பதிப்பு
சீகாழி மின்பதிப்பு
திருக்கழிப்பாலை மின்பதிப்பு
திருவாரூர் மின்பதிப்பு
திருக்கருகாவூர் மின்பதிப்பு
திருஆலவாய் மின்பதிப்பு
திருமழபாடி மின்பதிப்பு
நமச்சிவாயத்திருப்பதிகம் மின்பதிப்பு
திருத்தண்டலைநீணெறி மின்பதிப்பு
திருஆலவாய் மின்பதிப்பு
திருஆலவாய் திருவிராகம் மின்பதிப்பு
திருவானைக்கா திருவிராகம் மின்பதிப்பு
திருப்பாசுரம் மின்பதிப்பு
திருவான்மியூர் மின்பதிப்பு
திருப்பிரமபுரம் மின்பதிப்பு
திருவொற்றியூர் மின்பதிப்பு
திருச்சாத்தமங்கை மின்பதிப்பு
திருக்குடமூக்கு மின்பதிப்பு
திருவக்கரை மின்பதிப்பு
திருவெண்டுறை மின்பதிப்பு
திருப்பனந்தாள் மின்பதிப்பு
திருச்செங்காட்டங்குடி மின்பதிப்பு
திருப்பெருவேளூர் மின்பதிப்பு
திருக்கச்சிநெறிக்காரைக்காடு மின்பதிப்பு
திருவேட்டக்குடி மின்பதிப்பு

கோயில்
பண் காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
ஆடினாய்நறு நெய்யொடு பால்தயிர்
அந்தணர்பிரி யாதசிற் றம்பலம்
நாடினாயிடமா நறுங்கொன்றை நயந்தவனே
பாடினாய்மறை யோடுபல் கீதமும்
பல்சடைப்பனி கால்கதிர் வெண்திங்கள்
சூடினாயருளாய் சுருங்கஎம தொல்வினையே
கொட்டமேகம ழுங்குழ லாளொடு
கூடினாயெரு தேறினாய் நுதல்
பட்டமேபுனை வாய்இசைபாடுவ பாரிடமா
நட்டமேநவில் வாய்மறை யோர்தில்லை
நல்லவர்பிரி யாதசிற் றம்பலம்
இட்டமாவுறை வாயிவைமேவிய தென்னைகொலோ
நீலத்தார்கரி யமிடற் றார்நல்ல
நெற்றிமேலுற்ற கண்ணி னார்பற்று
சூலத்தார்சுட லைப்பொடிநீறணி வார்சடையார்
சீலத்தார்தொழு தேத்துசிற் றம்பலஞ்
சேர்தலாற்கழற் சேவடி கைதொழ
கோலத்தாயரு ளாயுனகாரணங் கூறுதுமே
கொம்பலைத்தழ கெய்திய நுண்ணிடை
கோலவாண்மதி போல முகத்திரண்
டம்பலைத்தகண் ணாள்முலைமேவிய வார்சடையான்
கம்பலைத்தெழு காமுறு காளையர்
காதலாற்கழற் சேவடி கைதொழ
அம்பலத்துறை வான்அடியார கடையாவினையே
தொல்லைஆரமு துண்ணநஞ் சுண்டதோர்
தூமணிமிட றாபகு வாயதோர்
பல்லையார்தலை யிற்பலியேற்றுழல் பண்டரங்கா
தில்லையார்தொழு தேத்துசிற் றம்பலஞ்
சேர்தலாற்கழற் சேவடி கைதொழ
இல்லையாம்வினை தானெரியம்மதி லெய்தவனே
ஆகந்தோயணி கொன்றை யாய்அனல்
அங்கையாய்அம ரர்க்கம ராஉமை
பாகந்தோய்பகவா பலியேற்றுழல் பண்டரங்கா
மாகந்தோய்பொழில் மல்குசிற் றம்பலம்
மன்னினாய்மழு வாளினாய் அழல்
நாகந்தோயரையாய் அடியாரைநண் ணாவினையே
சாதியார்பலிங் கின்னொடு வெள்ளிய
சங்கவார்குழை யாய்திக ழப்படும்
வேதியாவிகிர்தா விழவாரணி தில்லைதன்னுள்
ஆதியாய்க்கிட மாயசிற் றம்பலம்
அங்கையாற்றொழ வல்லடி யார்களை
வாதியாதகலு நலியாமலி தீவினையே
வேயினார்பணை தோளியொ டாடலை
வேண்டினாய்விகிர் தாஉயிர் கட்கமு
தாயினாய்இடு காட்டெரியாட லமர்ந்தவனே
தீயினார்கணை யாற்புர மூன்றெய்த
செம்மையாய்திகழ் கின்றசிற் றம்பலம்
மேயினாய்கழலே தொழுதெய்துதும் மேலுலகே
தாரினார்விரி கொன்றை யாய்மதி
தாங்குநீள்சடை யாய்தலை வாநல்ல
தேரினார்மறு கின்திருவாரணி தில்லைதன்னு
சீரினால்வழி பாடொழி யாததோர்
செம்மையாலழ காயசிற் றம்பலம்
ஏரினாலமர தாயுனசீரடி யேத்துதுமே
வெற்றரையுழல் வார்துவ ராடைய
வேடத்தாரவர் கள்ளுரை கொள்ளன்மின்
மற்றவருலகின் அவலம்மவை மாற்றகில்லார்
கற்றவர்தொழு தேத்துசிற் றம்பலங்
காதலாற்கழற் சேவடி கைதொழ
உற்றவருலகின் னுறுதிகொள வல்லவரே
நாறுபூம்பொழில் நண்ணிய காழியுள்
நாண்மறைவல்ல ஞானசம் பந்தன்
ஊறும்இன்றமி ழாலுயர்ந்தாருறை தில்லைதன்னுள்
ஏறுதொல்புக ழேந்துசிற் றம்பல
தீசனைஇசை யாற்சொன்ன பத்திவை
கூறுமாறுவல்லார் உயர்ந்தாரொடுங் கூடுவரே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருப்பூந்தராய்
பண் காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
பந்துசேர்விர லாள்பவ ளத்துவர்
வாயினாள்பனி மாமதி போல்முக
தந்தமில்புக ழாள்மலைமாதொடும் ஆதிப்பிரான்
வந்துசேர்விடம் வானவ ரெத்திசை
யுந்நிறைந்து வலஞ்செய்து மாமலர்
புந்திசெய்திறைஞ் சிப்பொழிபூந்தராய் போற்றுதுமே
காவியங்கருங் கண்ணி னாள்கனி
தொண்டைவாய்கதிர் முத்தநல் வெண்ணகை
தூவியம்பெடை யன்னநடைச்சுரி மென்குழலாள்
தேவியுந்திரு மேனியோர் பாகமாய்
ஒன்றிரண்டொரு மூன்றொடு சேர்பதி
பூவிலந்தணன் ஒப்பவர்பூந்தராய் போற்றுதுமே
பையராவரும் அல்குல் மெல்லியல்
பஞ்சின்நேரடி வஞ்சிகொள் நுண்ணிடை
தையலாளொரு பாலுடையெம்மிறை சாருமிடஞ்
செய்யெலாங்கழு நீர்கமலம் மலர
தேறலூறலின் சேறுல ராதநற்
பொய்யிலாமறை யோர்பயில்பூந்தராய் போற்றுதுமே
முள்ளிநாண்முகை மொட்டியல் கோங்கின்
அரும்புதேன்கொள் குரும்பைமூ வாமரு
துள்ளியன்றபைம் பொற்கலசத்திய லொத்தமுலை
வெள்ளிமால்வரை யன்னதோர் மேனியின்
மேவினார்பதி வீமரு தண்பொழிற்
புள்ளினந்துயில் மல்கியபூந்தராய் போற்றுதுமே
பண்ணியன்றெழு மென்மொழி யாள்பகர்
கோதையேர்திகழ் பைந்தளிர் மேனியோர்
பெண்ணியன்றமொய்ம் பிற்பெருமாற்கிடம் பெய்வளையார்
கண்ணியன்றெழு காவி செழுங்கரு
நீலமல்கிய காமரு வாவிநற்
புண்ணியருறை யும்பதிபூந்தராய் போற்றுதுமே
வாணிலாமதி போல்நுத லாள்மட
மாழையொண்கணாள் வண்தர ளந்நகை
பாணிலாவிய இன்னிசையார்மொழி பாவையொடுஞ்
சேணிலாத்திகழ் செஞ்சடையெம்மண்ணல்
சேர்வதுசிக ரப்பெருங் கோயில்சூழ்
போணிலாநுழை யும்பொழிற்பூந்தராய் போற்றுதுமே
காருலாவிய வார்குழ லாள்கயற்
கண்ணினாள் புயற்காலொளி மின்னிடை
வாருலாவிய மென்முலையாள்மலை மாதுடனாய்
நீருலாவிய சென்னி யன்மன்னி
நிகருநாமம்மு நான்கு நிகழ்பதி
போருலாவெயில் சூழ்பொழிற்பூந்தராய் போற்றுதுமே
காசைசேர்குழ லாள்கய லேர்தடங்
கண்ணிகாம்பன தோட்கதிர் மென்முலை
தேசுசேர்மலை மாதமருந்திரு மார்பகல
தீசன்மேவும் இருங்கயி லையெடு
தானைஅன்றடர தான்இணை சேவடி
பூசைசெய்பவர் சேர்பொழிற்பூந்தராய் போற்றுதுமே
கொங்குசேர்குழ லாள்நிழல் வெண்ணகை
கொவ்வைவா கொடியேரிடை யாளுமை
பங்குசேர்திரு மார்புடையார்படர் தீயுருவாய்
மங்குல்வண்ணனும் மாமல ரோனும்
மயங்கநீண்டவர் வான்மிசை வந்தெழு
பொங்குநீரின் மிதந்தநன்பூந்தராய் போற்றுதுமே
கலவமாமயி லார்இய லாள்கரும்
பன்னமென்மொழி யாள்கதிர் வாணுதற்
குலவுபூங்குழ லாளுமைகூறனை வேறுரையால்
அலவைசொல்லுவார் தேரமண் ஆதர்கள்
ஆக்கினான்றனை நண்ணலு நல்குநற்
புலவர்தாம்புகழ் பொற்பதிபூந்தராய் போற்றுதுமே
தேம்பல்நுண்ணிடை யாள்செழுஞ் சேலன
கண்ணியோடண்ணல் சேர்விட தேன்அமர்
பூம்பொழில்திகழ் பொற்பதிபூந்தராய் போற்றுதுமென்
றோம்புதன்மையன் முத்தமிழ் நான்மறை
ஞானசம்பந்தன் ஒண்டமிழ் மாலைகொண்
டாம்படியிவை யேத்தவல்லார்க்கடை யாவினையே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருப்புகலி
நாலடிமேல் வைப்பு
பண் காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
இயலிசை யெனும்பொரு ளின்திறமாம்
புயலன மிடறுடை புண்ணியனே
கயலன அரிநெடுங் கண்ணியொடும்
அயலுல கடிதொழ அமர்ந்தவனே
கலனாவது வெண்டலை கடிபொழிற் புகலிதன்னுள்
நிலனாள்தொறும் இன்புற நிறைமதி யருளினனே
நிலையுறும் இடர்நிலை யாதவண்ணம்
இலையுறு மலர்கள்கொண் டேத்துதும்யாம்
மலையினில் அரிவையை வெருவவன்தோல்
அலைவரு மதகரி யுரித்தவனே
இமையோர்கள்நின் தாள்தொழ எழில்திகழ் பொழிற்புகலி
உமையாளொடு மன்னினை உயர்திரு வடியிணையே
பாடினை அருமறை வரல்முறையால்
ஆடினை காணமுன் அருவனத்திற்
சாடினை காலனை தயங்கொளிசேர்
நீடுவெண் பிறைமுடி நின்மலனே
நினையேயடி யார்தொழ நெடுமதிற் புகலிந்நகர்
தனையேயிட மேவினை தவநெறி அருளெமக்கே
நிழல்திகழ் மழுவினை யானையின்தோல்
அழல்திகழ் மேனியில் அணிந்தவனே
கழல்திகழ் சிலம்பொலி யலம்பநல்ல
முழவொடும் அருநட முயற்றினனே
முடிமேல்மதி சூடினை முருகமர் பொழிற்புகலி
அடியாரவ ரேத்துற அழகொடும் இருந்தவனே
கருமையின் ஒளிர்கடல் நஞ்சமுண்ட
உரிமையின் உலகுயிர் அளித்தநின்றன்
பெருமையை நிலத்தவர் பேசினல்லால்
அருமையில் அளப்பரி தாயவனே
அரவேரிடை யாளொடும் அலைகடல் மலிபுகலி
பொருள்சேர்தர நாடொறும் புவிமிசை பொலிந்தவனே
அடையரி மாவொடு வேங்கையின்தோல்
புடைபட அரைமிசை புனைந்தவனே
படையுடை நெடுமதிற் பரிசழித்த
விடையுடை கொடிமல்கு வேதியனே
விகிர்தாபர மாநின்னை விண்ணவர் தொழப்புகலி
தகுவாய்மட மாதொடு தாள்பணி தவர்தமக்கே
அடியவர் தொழுதெழ அமரரேத்த
செடியவல் வினைபல தீர்ப்பவனே
துடியிடை அகலல்குல் தூமொழியை
பொடியணி மார்புற புல்கினனே
புண்ணியா புனிதாபுக ரேற்றினை புகலிந்நகர்
நண்ணினாய் கழலேத்திட நண்ணகிலா வினையே
இரவொடு பகலதாம் எம்மானுன்னை
பரவுதல் ஒழிகிலேன் வழியடியேன்
குரவிரி நறுங்கொன்றை கொண்டணிந்த
அரவிரி சடைமுடி ஆண்டகையே
அனமென்னடை யாளொடும் அதிர்கடல் இலங்கைமன்னை
இனமார்தரு தோளடர திருந்தனை புகலியுளே
உருகிட வுவகைத துடலினுள்ளால்
பருகிடும் அமுதன பண்பினனே
பொருகடல் வண்ணனனும் பூவுளானும்
பெருகிடும் அருளென பிறங்கெரியாய்
உயர்ந்தாயினி நீயெனை ஒண்மலரடி யிணைக்கீழ்
வயந்தாங்குற நல்கிடு வளர்மதிற் புகலிமனே
கையினி லுண்பவர் கணிகைநோன்பர்
செய்வன தவமலா செதுமதியார்
பொய்யவ ருரைகளை பொருளெனாத
மெய்யவ ரடிதொழ விரும்பினனே
வியந்தாய்வெள் ளேற்றினை விண்ணவர் தொழுபுகலி
உயர்ந்தார்பெருங் கோயிலுள் ஒருங்குடன் இருந்தவனே
புண்ணியர் தொழுதெழு புகலிந்நகர்
விண்ணவ ரடிதொழ விளங்கினானை
நண்ணிய ஞானசம் பந்தன்வாய்மை
பண்ணிய அருந்தமிழ் பத்தும்வல்லார்
நடலையவை யின்றிப்போய் நண்ணுவர் சிவனுலகம்
இடராயின இன்றித்தாம் எய்துவர் தவநெறியே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவாவடுதுறை
நாலடிமேல் வைப்பு
பண் காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
இடரினு தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே
வாழினுஞ் சாவினும் வருந்தினும்போய்
வீழினும் உனகழல் விடுவேனல்லேன்
தாழிள தடம்புனல் தயங்குசென்னி
போழிள மதிவைத்த புண்ணியனே
இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே
நனவினுங் கனவினும் நம்பாவுன்னை
மனவினும் வழிபடல் மறவேன்அம்மான்
புனல்விரி நறுங்கொன்றை போதணிந்த
கனலெரி யனல்புல்கு கையவனே
இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே
தும்மலோ டருந்துயர் தோன்றிடினும்
அம்மல ரடியலால் அரற்றாதென்நா
கைம்மல்கு வரிசிலை கணையொன்றினால்
மும்மதிள் எரியெழ முனிந்தவனே
இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே
கையது வீழினுங் கழிவுறினுஞ்
செய்கழல் அடியலால் சிந்தைசெய்யேன்
கொய்யணி நறுமலர் குலாயசென்னி
மையணி மிடறுடை மறையவனே
இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே
வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும்
எந்தாயுன் அடியலால் ஏத்தாதென்நா
ஐந்தலை யரவுகொண் டரைக்கசைத்த
சந்தவெண் பொடியணி சங்கரனே
இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே
வெப்பொடு விரவியோர் வினைவரினும்
அப்பாவுன் னடியலால் அரற்றாதென்நா
ஒப்புடை யொருவனை உருவழிய
அப்படி அழலெழ விழித்தவனே
இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே
பேரிடர் பெருகியோர் பிணிவரினுஞ்
சீருடை கழலலாற் சிந்தைசெய்யேன்
ஏருடை மணிமுடி இராவணனை
ஆரிடர் படவரை யடர்த்தவனே
இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே
உண்ணினும் பசிப்பினும் உறங்கினும்நின்
ஒண்மல ரடியலால் உரையாதென்நா
கண்ணனுங் கடிகமழ் தாமரைமேல்
அண்ணலும் அளப்பரி தாயவனே
இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே
பித்தொடு மயங்கியோர் பிணிவரினும்
அத்தாவுன் அடியலால் அரற்றாதென்நா
புத்தருஞ் சமணரும் புறனுரைக்க
பத்தர்க கருள்செய்து பயின்றவனே
இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே
அலைபுனல் ஆவடு துறையமர்ந்த
இலைநுனை வேற்படை யெம்மிறையை
நலம்மிகு ஞானசம் பந்தன்சொன்ன
விலையுடை யருந்தமிழ் மாலைவல்லார்
இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருப்பூந்தராய்
ஈரடிமேல் வைப்பு
பண் காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
தக்கன் வேள்வி தகர்த்தவன் பூந்தராய்
மிக்க செம்மை விமலன் வியன்கழல்
சென்று சிந்தையில் வைக்க மெய்க்கதி
நன்ற தாகிய நம்பன்தானே
புள்ளி னம்புகழ் போற்றிய பூந்தராய்
வெள்ள தாங்கு விகிர்தன் அடிதொழ
ஞால தில்லுயர் வாருள்கு நன்னெறி
மூல மாய முதல்வன்தானே
வேந்த ராயுல காள விருப்புறிற்
பூந்தராய் நகர் மேயவன் பொற்கழல்
நீதி யால்நினை தேத்தி யுள்கிட
சாதி யாவினை யானதானே
பூசு ரர்தொழு தேத்திய பூந்தராய்
ஈசன் சேவடி யேத்தி யிறைஞ்சிட
சிந்தை நோயவை தீர நல்கிடும்
இந்து வார்சடை யெம்மிறையே
பொலிந்த என்பணி மேனியன் பூந்தராய்
மலிந்த புந்திய ராகி வணங்கிட
நுந்தம் மேல்வினை யோட வீடுசெய்
எந்தை யாயஎம் ஈசன்தானே
பூதஞ் சூழ பொலிந்தவன் பூந்தராய்
நாதன் சேவடி நாளும் நவின்றிட
நல்கு நாடொறும் இன்ப நளிர்புனல்
பில்கு வார்சடை பிஞ்ஞகனே
புற்றில் நாகம் அணிந்தவன் பூந்தராய்
பற்றி வாழும் பரமனை பாடிட
பாவ மாயின தீர பணித்திடுஞ்
சேவ தேறிய செல்வன்தானே
போத கத்துரி போர்த்தவன் பூந்தராய்
காத லித்தான் கழல்விரல் ஒன்றினால்
அரக்கன் ஆற்றல் அழித்தவ னுக்கருள்
பெருக்கி நின்ற எம்பிஞ்ஞகனே
மத்த மான இருவர் மருவொணா
அத்த னானவன் மேவிய பூந்தராய்
ஆள தாக அடைந்துய்ம்மின் நும்வினை
மாளு மாறருள் செய்யுந்தானே
பொருத்த மில்சமண் சாக்கியர் பொய்கடி
திருத்தல் செய்த பிரான்இமை யோர்தொழ
பூந்த ராய்நகர் கோயில் கொண்டுகை
ஏந்து மான்மறி யெம்மிறையே
புந்தி யால்மிக நல்லவர் பூந்தராய்
அந்த மில்லெம் மடிகளை ஞானசம்
பந்தன் மாலைகொண் டேத்தி வாழுநும்
பந்த மார்வினை பாறிடுமே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்கொள்ளம்பூதூர்
ஈரடிமேல் வைப்பு
பண் காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
கொட்ட மேகமழுங் கொள்ளம் பூதூர்
நட்டம் ஆடிய நம்பனை யுள்க
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே
கோட்ட கக்கழனி கொள்ளம் பூதூர்
நாட்ட கத்துறை நம்பனை யுள்க
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே
குலையி னார்தெங்கு சூழ்கொள்ளம் பூதூர்
விலையி லாட்கொண்ட விகிர்தனை யுள்க
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே
குவளை கண்மலருங் கொள்ளம் பூதூர
தவள நீறணி தலைவனை யுள்க
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே
கொன்றை பொன்சொரியுங் கொள்ளம் பூதூர்
நின்ற புன்சடை நிமலனை யுள்க
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே
ஓடம் வந்தணையுங் கொள்ளம் பூதூர்
ஆடல் பேணிய அடிகளை யுள்க
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே
ஆறு வந்தணையுங் கொள்ளம் பூதூர்
ஏறு தாங்கிய இறைவனை யுள்க
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே
குரக்கினம் பயிலுங் கொள்ளம் பூதூர்
அரக்கனை செற்ற ஆதியை யுள்க
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே
பருவ ரால்உகளுங் கொள்ளம் பூதூர்
இருவர் காண்பரி யான்கழ லுள்க
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே
நீர கக்கழனி கொள்ளம் பூதூர
தேர மண்செற்ற செல்வனை யுள்க
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே
கொன்றை சேர்சடையான் கொள்ளம் பூதூர்
நன்று காழியுள் ஞானசம் பந்தன்
இன்றுசொன் மாலைகொண் டேத்தவல் லார்போய்
என்றும் வானவ ரோடிருப்பாரே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் வில்வவனேசுவரர் தேவியார் சவுந்தராம்பிகையம்மை
இது ஓடக்காரனில்லாமல் அவ்வோடம் ஆற்றிற்சென்று
கரைசேரும்படி அருளிச்செய்த பதிகம்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருப்புகலி
பண் காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
கண்ணுத லானும்வெண் ணீற்றினா னுங்கழ லார்க்கவே
பண்ணிசை பாடநின் றாடினா னும்பரஞ் சோதியும்
புண்ணிய நான்மறை யோர்களே தும்புக லிந்நகர
பெண்ணின்நல் லாளொடும் வீற்றிரு தபெரு மானன்றே
சாம்பலோ டுந்தழ லாடினா னுஞ்சடை யின்மிசை
பாம்பினோ டும்மதி சூடினா னும்பசு வேறியும்
பூம்படு கல்லிள வாளைபா யும்புக லிந்நகர்
காம்பன தோளியோ டும்மிரு தகட வுளன்றே
கருப்புநல் வார்சிலை காமன்வே வக்கடை கண்டானும்
மருப்புநல் லானையின் ஈருரி போர்த்த மணாளனும்
பொருப்பன மாமணி மாடமோங் கும்புக லிந்நகர்
விருப்பின்நல் லாளொடும் வீற்றிரு தவிம லனன்றே
அங்கையில் அங்கழல் ஏந்தினா னும்மழ காகவே
கங்கையை செஞ்சடை சூடினா னுங்கட லின்னிடை
பொங்கிய நஞ்சமு துண்டவ னும்புக லிந்நகர்
மங்கைநல் லாளொடும் வீற்றிரு தமண வாளனே
சாமநல் வேதனு தக்கன்றன் வேள்வித கர்த்தானும்
நாமநூ றாயிரஞ் சொல்லிவா னோர்தொழும் நாதனும்
பூமல்கு தண்பொழில் மன்னு தண்புக லிந்நகர
கோமள மாதொடும் வீற்றிரு தகுழ கனன்றே
இரவிடை யொள்ளெரி யாடினா னும்மிமை யோர்தொழ
செருவிடை முப்புர தீயெரி தசிவ லோகனும்
பொருவிடை யொன்றுக தேறினா னும்புக லிந்நகர்
அரவிடை மாதொடும் வீற்றிரு தஅழ கனன்றே
சேர்ப்பது திண்சிலை மேவினா னுந்திகழ் பாலன்மேல்
வேர்ப்பது செய்தவெங் கூற்றுதை தானும்வேள் விப்புகை
போர்ப்பது செய்தணி மாடமோங் கும்புக லிந்நகர்
பார்ப்பதி யோடுடன் வீற்றிரு தபர மனன்றே
கன்னெடு மால்வரை கீழர கன்னிடர் கண்டானும்
வின்னெடும் போர்விறல் வேடனா கிவிச யற்கொரு
பொன்னெடுங் கோல்கொடு தானு தண்புக லிந்நகர்
அன்னமன் னநடை மங்கையொ டுமமர தானன்றே
பொன்னிற நான்முகன் பச்சையான் என்றிவர் புக்குழி
தன்னையின் னானென காண்பரி யதழற் சோதியும்
புன்னைபொன் தாதுதிர் மல்கு தண்புக லிந்நகர்
மின்னிடை மாதொடும் வீற்றிரு தவிம லனன்றே
பிண்டியும் போதியும் பேணுவார் பேச்சினை பேணாததோர்
தொண்டருங் காதல்செய் சோதியா யசுடர சோதியான்
புண்டரீ கம்மலர பொய்கைசூழ தபுக லிந்நகர்
வண்டமர் கோதையொ டும்மிரு தமண வாளனே
பூங்கமழ் கோதையொ டும்மிரு தான்புக லிந்நகர
பாங்கனை ஞானசம் பந்தன்சொன் னதமிழ் பத்திவை
ஆங்கமர் வெய்திய ஆதியா கஇசை வல்லவர்
ஓங்கம ராவதி யோர்தொழ செல்வதும் உண்மையே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்கடவூர்வீரட்டம்
பண் காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
சடையுடை யானும்நெய் யாடலா னுஞ்சரி கோவண
உடையுடை யானுமை ஆர்ந்தவொண் கண்ணுமை கேள்வனுங்
கடையுடை நன்னெடு மாடமோங் குங்கட வூர்தனுள்
விடையுடை யண்ணலும் வீரட்டா னத்தர னல்லனே
எரிதரு வார்சடை யானும்வெள் ளையெரு தேறியும்
புரிதரு மாமலர கொன்றைமா லைபுனை தேத்தவே
கரிதரு காலனை சாடினா னுங்கட வூர்தனுள்
விரிதரு தொல்புகழ் வீரட்டா னத்தர னல்லனே
நாதனு நள்ளிரு ளாடினா னுந்நளிர் போதின்கண்
பாதனும் பாய்புலி தோலினா னும்பசு வேறியுங்
காதலர் தண்கட வூரினா னுங்கல தேத்தவே
வேதம தோதியும் வீரட்டா னத்தர னல்லனே
மழுவமர் செல்வனும் மாசிலா தபல பூதமுன்
முழவொலி யாழ்குழல் மொந்தைகொ டம்முது காட்டிடை
கழல்வளர் கால்குஞ்சி தாடினா னுங்கட வூர்தனுள்
விழவொலி மல்கிய வீரட்டா னத்தர னல்லனே
சுடர்மணி சுண்ணவெண் ணீற்றினா னுஞ்சுழல் வாயதோர்
படமணி நாகம் அரைக்கசை தபர மேட்டியுங்
கடமணி மாவுரி தோலினா னுங்கட வூர்தனுள்
விடமணி கண்டனும் வீரட்டா னத்தர னல்லனே
பண்பொலி நான்மறை பாடியா டிப்பல வூர்கள்போய்
உண்பலி கொண்டுழல் வானும்வா னின்னொளி மல்கிய
கண்பொலி நெற்றிவெண் டிங்களா னுங்கட வூர்தனுள்
வெண்பொடி பூசியும் வீரட்டா னத்தர னல்லனே
செவ்வழ லாய்நில னாகிநின் றசிவ மூர்த்தியும்
முவ்வழல் நான்மறை யைந்துமா யமுனி கேள்வனுங்
கவ்வழல் வாய்க்கத நாகமார தான்கட வூர்தனுள்
வெவ்வழ லேந்துகை வீரட்டா னத்தர னல்லனே
அடியிரண் டோ ருடம் பைஞ்ஞான் கிருபது தோள்தச
முடியுடை வேந்தனை மூர்க்கழி தமுதல் மூர்த்தியுங்
கடிகம ழும்பொழில் சூழு தண்கட வூர்தனுள்
வெடிதலை யேந்தியும் வீரட்டா னத்தர னல்லனே
வரைகுடை யாமழை தாங்கினா னும்வளர் போதின்கண்
புரைகடி தோங்கிய நான்முக தான்புரி தேத்தவே
கரைகடல் சூழ்வையங் காக்கின்றா னுங்கட வூர்தனுள்
விரைகமழ் பூம்பொழில் வீரட்டா னத்தர னல்லனே
தேரரும் மாசுகொள் மேனியா ருந்தெளி யாததோர்
ஆரருஞ் சொற்பொரு ளாகிநின் றஎம தாதியான்
காரிளங் கொன்றைவெண் டிங்களா னுங்கட வூர்தனுள்
வீரமுஞ் சேர்கழல் வீரட்டா னத்தர னல்லனே
வெந்தவெண் ணீறணி வீரட்டா னத்துறை வேந்தனை
அந்தணர் தங்கட வூருளா னையணி காழியான்
சந்தமெல் லாமடி சாத்தவல் லமறை ஞானசம்
பந்தன செந்தமிழ் பாடியா டக்கெடும் பாவமே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவீழிமிழலை
பண் காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
கேள்வியர் நாடொறும் ஓதும்நல் வேதத்தர் கேடிலா
வேள்விசெய் அந்தணர் வேதியர் வீழிமி ழலையார்
வாழியர் தோற்றமுங் கேடும்வை பாருயிர் கட்கெலாம்
ஆழியர் தம்மடி போற்றியென் பார்கட்க ணியரே
கல்லின்நற் பாவையோர் பாகத்தர் காதலி தேத்திய
மெல்லின தார்பக்கல் மேவினர் வீழிமி ழலையார்
நல்லின தார்செய்த வேள்விசெ குத்தெழு ஞாயிற்றின்
பல்லனை துந்தகர தாரடி யார்பாவ நாசரே
நஞ்சினை யுண்டிருள் கண்டர்பண் டந்தக னைச்செற்ற
வெஞ்சின மூவிலை சூலத்தர் வீழிமி ழலையார்
அஞ்சன கண்ணுமை பங்கினர் கங்கையங் காடிய
மஞ்சன செஞ்சடை யாரென வல்வினை மாயுமே
கலையிலங் கும்மழு கட்டங்கம் கண்டிகை குண்டலம்
விலையிலங் கும்மணி மாடத்தர் வீழிமி ழலையார்
தலையிலங் கும்பிறை தாழ்வடஞ் சூல தமருகம்
அலையிலங் கும்புன லேற்றவர கும்மடி யார்க்குமே
பிறையுறு செஞ்சடை யார்விடை யார்பிச்சை நச்சியே
வெறியுறு நாட்பலி தேர்ந்துழல் வீழிமி ழலையார்
முறைமுறை யாலிசை பாடுவா ராடிமுன் தொண்டர்கள்
இறையுறை வாஞ்சியம் அல்லதெ போதுமென் உள்ளமே
வசையறு மாதவங் கண்டுவ ரிசிலை வேடனாய்
விசையனு கன்றருள் செய்தவர் வீழிமி ழலையார்
இசைவர விட்டியல் கேட்பித்து கல்லவ டமிட்டு
திசைதொழு தாடியும் பாடுவார் சிந்தையு சேர்வரே
சேடர்விண் ணோர்கட்கு தேவர்நல் மூவிரு தொன்னூலர்
வீடர்மு தீயர்நால் வேதத்தர் வீழிமி ழலையார்
காடரங் காவுமை காணஅண் டத்திமை யோர்தொழ
நாடக மாடியை யேத்தவல் லார்வினை நாசமே
எடுத்தவன் மாமலை கீழவி ராவணன் வீழ்தர
விடுத்தருள் செய்திசை கேட்டவர் வீழிமி ழலையார்
படுத்துவெங் காலனை பால்வழி பாடுசெய் பாலற்கு
கொடுத்தனர் இன்பங் கொடுப்பர் தொழக்குறை வில்லையே
திக்கமர் நான்முகன் மாலண்டம் மண்டல தேடிட
மிக்கமர் தீத்திர ளாயவர் வீழிமி ழலையார்
சொக்கம தாடியும் பாடியும் பாரிடஞ் சூழ்தரும்
நக்கர்த நாமந மச்சிவா யவ்வென்பார் நல்லரே
துற்றரை யார்துவ ராடையர் துப்புர வொன்றிலா
வெற்றரை யார்அறி யாநெறி வீழிமி ழலையார்
சொற்றெரி யாப்பொருள் சோதிக்க பால்நின்ற சோதிதான்
மற்றறி யாவடி யார்கள்தஞ் சிந்தையுள் மன்னுமே
வேதியர் கைதொழு வீழிமி ழலைவி ரும்பிய
ஆதியை வாழ்பொழில் காழியுள் ஞானசம் பந்தனா
தோதிய ஒண்டமிழ் பத்திவை யுற்றுரை செய்பவர்
மாதியல் பங்கன் மலரடி சேரவும் வல்லரே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருஇராமேச்சுரம்
பண் காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
அலைவளர் தண்மதி யோடய லேயட கியுமை
முலைவளர் பாகமு யங்கவல் லமுதல் வன்முனி
இலைவளர் தாழைகள் விம்முகா னல்இரா மேச்சுரம்
தலைவளர் கோலநன் மாலையன் தானிரு தாட்சியே
தேவியை வவ்விய தென்னிலங் கைத்தச மாமுகன்
பூவிய லும்முடி பொன்றுவி தபழி போயற
ஏவிய லுஞ்சிலை யண்ணல்செய் தஇரா மேச்சுரம்
மேவிய சிந்தையி னார்கள்தம் மேல்வினை வீடுமே
மானன நோக்கிவை தேகிதன் னையொரு மாயையால்
கானதில் வவ்விய காரர கன்னுயிர் செற்றவன்
ஈனமி லாப்புக ழண்ணல்செய் தஇரா மேச்சுரம்
ஞானமும் நன்பொரு ளாகிநின் றதொரு நன்மையே
உரையுண ராதவன் காமமென் னும்முறு வேட்கையான்
வரைபொரு தோளிற செற்றவில் லிமகிழ தேத்திய
விரைமரு வுங்கட லோதமல் கும்இரா மேச்சுர
தரையர வாடநின் றாடல்பே ணும்அம்மான் அல்லனே
ஊறுடை வெண்டலை கையிலே திப்பல வூர்தொறும்
வீறுடை மங்கையர் ஐயம்பெய் யவிற லார்ந்ததோர்
ஏறுடை வெல்கொடி யெந்தைமே யஇரா மேச்சுரம்
பேறுடை யான்பெய ரேத்தும்மா தர்பிணி பேருமே
அணையலை சூழ்கடல் அன்றடை துவழி செய்தவன்
பணையிலங் கும்முடி பத்திறு தபழி போக்கிய
இணையிலி என்றுமி ருந்தகோ யில்இரா மேச்சுர
துணையிலி தூமலர பாதமே தத்துயர் நீங்குமே
சனிபுதன் ஞாயிறு வெள்ளிதிங் கட்பல தீயன
முனிவது செய்துக தானைவென் றவ்வினை மூடிட
இனியருள் நல்கிடென் றண்ணல்செய் தஇரா மேச்சுரம்
பனிமதி சூடிநின் றாடவல் லபர மேட்டியே
பெருவரை யன்றெடு தேந்தினான் தன்பெயர் சாய்கெட
அருவரை யாலடர தன்றுநல் கியயன் மாலெனும்
இருவரும் நாடிநின் றேத்துகோ யில்இரா மேச்சுர
தொருவனு மேபல வாகிநின் றதொரு வண்ணமே
இப்பதிகத்தில் ம் செய்யுள் சிதைந்து போயிற்று
சாக்கியர் வன்சமண் கையர்மெய் யில்தடு மாற்றத்தார்
வாக்கிய லும்முரை பற்றுவி டுமதி யொண்மையால்
ஏக்கிய லுஞ்சிலை யண்ணல்செய் தஇரா மேச்சுரம்
ஆக்கிய செல்வனை யேத்திவாழ் மின்னரு ளாகவே
பகலவன் மீதியங் காமைக்கா தபதி யோன்தனை
இகலழி வித்தவன் ஏத்துகோ யில்இரா மேச்சுரம்
புகலியுள் ஞானசம் பந்தன்சொன் னதமிழ் புந்தியால்
அகலிட மெங்கும்நின் றேத்தவல் லார்க்கில்லை அல்லலே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருப்புனவாயில்
பண் காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
மின்னியல் செஞ்சடை வெண்பிறை யன்விரி நூலினன்
பன்னிய நான்மறை பாடியா டிப்பல வூர்கள்போய்
அன்னம்அன் னந்நடை யாளொ டும்மம ரும்மிடம்
புன்னைநன் மாமலர் பொன்னுதிர கும்புன வாயிலே
விண்டவர் தம்புரம் மூன்றெரி துவிடை யேறிப்போய்
வண்டம ருங்குழல் மங்கையொ டும்மகிழ தானிடங்
கண்டலும் ஞாழலும் நின்றுபெ ருங்கடற் கானல்வா
புண்டரீ கம்மலர பொய்கைசூழ தபுன வாயிலே
விடையுடை வெல்கொடி யேந்தினா னும்விறற் பாரிடம்
புடைபட வாடிய வேடத்தா னும்புன வாயிலிற்
தொடைநவில் கொன்றை தாரினா னுஞ்சுடர் வெண்மழு
படைவலன் ஏந்திய பால்நெய்யா டும்பர மனன்றே
சங்கவெண் தோடணி காதினா னுஞ்சடை தாழவே
அங்கையி லங்கழ லேந்தினா னும்மழ காகவே
பொங்கர வம்மணி மார்பினா னும்புன வாயிலிற்
பைங்கண்வெள் ளேற்றண்ண லாகிநின் றபர மேட்டியே
கலிபடு தண்கடல் நஞ்சமுண் டகறை கண்டனும்
புலியதள் பாம்பரை சுற்றினா னும்புன வாயிலில்
ஒலிதரு தண்புன லோடெரு கும்மத மத்தமும்
மெலிதரு வெண்பிறை சூடிநின் றவிடை யூர்தியே
வாருறு மென்முலை மங்கைபா டநட மாடிப்போ
காருறு கொன்றைவெண் திங்களா னுங்கனல் வாயதோர்
போருறு வெண்மழு வேந்தினா னும்புன வாயிலிற்
சீருறு செல்வமல் கவ்விரு தசிவ லோகனே
பெருங்கடல் நஞ்சமு துண்டுக துபெருங் காட்டிடை
திருந்திள மென்முலை தேவிபா டந்நட மாடிப்போ
பொருந்தலர் தம்புரம் மூன்றுமெய் துபுன வாயிலில்
இருந்தவன் தன்கழ லேத்துவார் கட்கிட ரில்லையே
மனமிகு வேலனவ் வாளர கன்வலி யொல்கிட
வனமிகு மால்வரை யாலடர தானிட மன்னிய
இனமிகு தொல்புகழ் பாடலா டல்லெழின் மல்கிய
புனமிகு கொன்றை தென்றலார தபுன வாயிலே
திருவளர் தாமரை மேவினா னுந்திகழ் பாற்கடற்
கருநிற வண்ணனுங் காண்பரி யகட வுள்ளிடம்
நரல்சுரி சங்கொடும் இப்பியு திந்நலம் மல்கிய
பொருகடல் வெண்டிரை வந்தெறி யும்புன வாயிலே
போதியெ னப்பெய ராயினா ரும்பொறி யில்சமண்
சாதியு ரைப்பன கொண்டயர துதளர் வெய்தன்மின்
போதவிழ் தண்பொழில் மல்கு தண்புன வாயிலில்
வேதனை நாடொறும் ஏத்துவார் மேல்வினை வீடுமே
பொற்றொடி யாளுமை பங்கன்மே வும்புன வாயிலை
கற்றவர் தாந்தொழு தேத்தநின் றகடற் காழியான்
நற்றமிழ் ஞானசம் பந்தன்சொன் னதமிழ் நன்மையால்
அற்றமில் பாடல்ப தேத்தவல் லாரருள் சேர்வரே
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் புனவாயிலீசுவரர்தேவியார் கருணையீசுவரியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்கோட்டாறு
பண் காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
வேதியன் விண்ணவ ரேத்தநின் றான்விளங் கும்மறை
ஓதிய வொண்பொரு ளாகிநின் றானொளி யார்கிளி
கோதிய தண்பொழில் சூழ்ந்தழ கார்திரு கோட்டாற்றுள்
ஆதியை யேநினை தேத்தவல் லார்க்கல்லல் இல்லையே
ஏலம லர்க்குழல் மங்கைநல் லாளிம வான்மகள்
பாலம ருந்திரு மேனியெங் கள்பர மேட்டியுங்
கோலம லர்ப்பொழில் சூழ்ந்தெழி லார்திரு கோட்டாற்றுள்
ஆலநீ ழற்கீழ் இருந்தறஞ் சொன்ன அழகனே
இலைமல்கு சூலமொன் றேந்தினா னும்இமை யோர்தொழ
மலைமல்கு மங்கையோர் பங்கனா யம்மணி கண்டனுங்
குலைமல்கு தண்பொழில் சூழ்ந்தழ கார்திரு கோட்டாற்றுள்
அலைமல்கு வார்சடை யேற்றுக தஅழ கனன்றே
ஊனம ரும்முட லுள்ளிரு தவ்வுமை பங்கனும்
வானம ரும்மதி சென்னிவை தமறை யோதியு
தேனம ரும்மலர சோலைசூழ ததிரு கோட்டாற்றுள்
தானம ரும்விடை யானும்எங் கள்தலை வனன்றே
வம்பல ரும்மலர கோதைபா கம்மகிழ் மைந்தனுஞ்
செம்பவ ளத்திரு மேனிவெண் ணீறணி செல்வனுங்
கொம்பம ரும்மலர் வண்டுகெண் டுந்திரு கோட்டாற்றுள்
நம்பனெ னப்பணி வார்க்கருள் செய்யெங்கள் நாதனே
பந்தம ரும்விரல் மங்கைநல் லாளொரு பாகமா
வெந்தம ரும்பொடி பூசவல் லவிகிர் தன்மிகுங்
கொந்தம ரும்மலர சோலைசூழ ததிரு கோட்டாற்றுள்
அந்தண னைநினை தேத்தவல் லார்க்கில்லை அல்லலே
துண்டம ரும்பிறை சூடிநீ டுசுடர் வண்ணனும்
வண்டம ருங்குழல் மங்கைநல் லாளொரு பங்கனு
தெண்டிரை நீர்வயல் சூழ்ந்தழ கார்திரு கோட்டாற்றுள்
அண்டமும் எண்டிசை யாகிநின் றஅழ கனன்றே
இரவம ருந்நிறம் பெற்றுடை யஇலங் கைக்கிறை
கரவம ரக்கயி லையெடு தான்வலி செற்றவன்
குரவம ரும்மலர சோலைசூழ ததிரு கோட்டாற்றுள்
அரவம ருஞ்சடை யான்அடி யார்க்கருள் செய்யுமே
ஓங்கிய நாரணன் நான்முக னும்முண ராவகை
நீங்கிய தீயுரு வாகிநின் றநிம லன்நிழற்
கோங்கம ரும்பொழில் சூழ்ந்தெழி லார்திரு கோட்டாற்றுள்
ஆங்கம ரும்பெரு மான்அம ரர்க்கம ரனன்றே
கடுக்கொடு ததுவ ராடையர் காட்சியில் லாததோர்
தடுக்கிடு கிச்சம ணேதிரி வார்கட்கு தன்னருள்
கொடுக்ககில் லாக்குழ கன்அம ருந்திரு கோட்டாற்றுள்
இடுக்கணின் றித்தொழு வார்அம ரர்க்கிறை யாவரே
கொடியுயர் மால்விடை யூர்தியி னான்திரு கோட்டாற்றுள்
அடிகழ லார்க்கநின் றாடவல் லஅரு ளாளனை
கடிகம ழும்பொழிற் காழியுள் ஞானசம் பந்தன்சொற்
படியிவை பாடிநின் றாடவல் லார்க்கில்லை பாவமே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் ஐராபதேசுவரர்
தேவியார் வண்டமர்பூங்குழலம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருப்பூந்தராய்
பண் காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
மின்னன எயிறுடை விரவ லோர்கள்த
துன்னிய புரம்உக சுளிந்த தொன்மையர்
புன்னையம் பொழிலணி பூந்த ராய்நகர்
அன்னமன் னந்நடை அரிவை பங்கரே
மூதணி முப்புர தெண்ணி லோர்களை
வேதணி சரத்தினால் வீட்டி னாரவர்
போதணி பொழிலமர் பூந்த ராய்நகர்
தாதணி குழலுமை தலைவர் காண்மினே
தருக்கிய திரிபுர தவர்கள் தாம்உக
பெருக்கிய சிலைதனை பிடித்த பெற்றியர்
பொருக்கடல் புடைதரு பூந்த ராய்நகர
கருக்கிய குழலுமை கணவர் காண்மினே
நாகமும் வரையுமே நாணும் வில்லுமா
மாகமார் புரங்களை மறித்த மாண்பினர்
பூகமார் பொழிலணி பூந்த ராய்நகர
பாகமர் மொழியுமை பங்கர் காண்மினே
வெள்ளெயி றுடையவவ் விரவ லார்களூர்
ஒள்ளெரி யூட்டிய வொருவ னாரொளிர்
புள்ளணி புறவினிற் பூந்த ராய்நகர
கள்ளணி குழலுமை கணவர் காண்மினே
துங்கியல் தானவர் தோற்ற மாநகர்
அங்கியில் வீழ்தர வாய்ந்த வம்பினர்
பொங்கிய கடலணி பூந்த ராய்நகர்
அங்கய லனகணி அரிவை பங்கரே
அண்டர்க ளுய்ந்திட அவுணர் மாய்தர
கண்டவர் கடல்விட முண்ட கண்டனார்
புண்டரீ கவ்வயற் பூந்த ராய்நகர்
வண்டமர் குழலிதன் மணாளர் காண்மினே
மாசின அரக்கனை வரையின் வாட்டிய
காய்சின வெயில்களை கறுத்த கண்டனார்
பூசுரர் பொலிதரு பூந்த ராய்நகர
காசைசெய் குழலுமை கணவர் காண்மினே
தாமுக மாக்கிய அசுரர் தம்பதி
வேமுக மாக்கிய விகிர்தர் கண்ணனும்
பூமகன் அறிகிலா பூந்தராய் நகர
கோமகன் எழில்பெறும் அரிவை கூறரே
முத்தர அசுரர்கள் மொய்த்த முப்புரம்
அத்தகும் அழலிடை வீட்டி னார்அமண்
புத்தரும் அறிவொணா பூந்த ராய்நகர
கொத்தணி குழலுமை கூறர் காண்மினே
புரமெரி செய்தவர் பூந்த ராய்நகர
பரமலி குழலுமை நங்கை பங்கரை
பரவிய பந்தன்மெ பாடல் வல்லவர்
சிரமலி சிவகதி சேர்தல் திண்ணமே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருப்பைஞ்ஞீலி
பண் காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
ஆரிடம் பாடிலர் அடிகள் காடலால்
ஓரிடங் குறைவிலர் உடையர் கோவணம்
நீரிடஞ் சடைவிடை யூர்தி நித்தலும்
பாரிடம் பணிசெயும் பயில்பைஞ் ஞீலியே
மருவிலார் திரிபுரம் எரிய மால்வரை
பருவிலா குனித்தபைஞ் ஞீலி மேவலான்
உருவிலான் பெருமையை உளங்கொ ளாதவ
திருவிலார் அவர்களை தெருட்ட லாகுமே
அஞ்சுரும் பணிமலர் அமுதம் மாந்தித்தேன்
பஞ்சுரம் பயிற்றுபைஞ் ஞீலி மேவலான்
வெஞ்சுர தனிலுமை வெருவ வந்ததோர்
குஞ்சரம் படவுரி போர்த்த கொள்கையே
கோடல்கள் புறவணி கொல்லை முல்லைமேல்
பாடல்வண் டிசைமுரல் பயில்பைஞ் ஞீலியார்
பேடலர் ஆணலர் பெண்ணும் அல்லதோர்
ஆடலை யுகந்தஎம் அடிகள் அல்லரே
விழியிலா நகுதலை விளங்கி ளம்பிறை
சுழியிலார் வருபுனற் சூழல் தாங்கினான்
பழியிலார் பரவுபைஞ் ஞீலி பாடலான்
கிழியிலார் கேண்மையை கெடுக்க லாகுமே
விடையுடை கொடிவல னேந்தி வெண்மழு
படையுடை கடவுள்பைஞ் ஞீலி மேவலான்
துடியிடை கலையல்கு லாளோர் பாகமா
சடையிடை புனல்வைத்த சதுரன் அல்லனே
தூயவன் தூயவெண் ணீறு மேனிமேற்
பாயவன் பாயபைஞ் ஞீலி கோயிலா
மேயவன் வேய்புரை தோளி பாகமா
ஏயவன் எனைச்செயு தன்மை யென்கொலோ
தொத்தின தோள்முடி யுடைய வன்றலை
பத்தினை நெரித்தபைஞ் ஞீலி மேவலான்
முத்தினை முறுவல்செய் தாளோர் பாகமா
பொத்தினன் திருந்தடி பொருந்தி வாழ்மினே
நீருடை போதுறை வானும் மாலுமா
சீருடை கழலடி சென்னி காண்கிலர்
பாருடை கடவுள்பைஞ் ஞீலி மேவிய
தாருடை கொன்றை தலைவர் தன்மையே
பீலியார் பெருமையும் பிடகர் நூன்மையுஞ்
சாலியா தவர்களை சாதி யாததோர்
கோலியா வருவரை கூட்டி யெய்தபைஞ்
ஞீலியான் கழலடி நினைந்து வாழ்மினே
கண்புனல் விளைவயற் காழி கற்பகம்
நண்புணர் அருமறை ஞான சம்பந்தன்
பண்பினர் பரவுபைஞ் ஞீலி பாடுவார்
உண்பின வுலகினி லோங்கி வாழ்வரே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் நீலகண்டேசுவரர் தேவியார் விசாலாட்சியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவெண்காடு
பண் காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
மந்திர மறையவை வான வரொடும்
இந்திரன் வழிபட நின்ற எம்மிறை
வெந்தவெண் ணீற்றர்வெண் காடு மேவிய
அந்தமு முதலுடை அடிக ளல்லரே
படையுடை மழுவினர் பாய்புலி தோலின்
உடைவிரி கோவணம் உகந்த கொள்கையர்
விடையுடை கொடியர்வெண் காடு மேவிய
சடையிடை புனல்வைத்த சதுர ரல்லரே
பாலொடு நெய்தயிர் பலவு மாடுவர்
தோலொடு நூலிழை துதைந்த மார்பினர்
மேலவர் பரவுவெண் காடு மேவிய
ஆலம தமர்ந்தஎம் அடிக ளல்லரே
ஞாழலுஞ் செருந்தியும் நறுமலர புன்னையு
தாழைவெண் குருகயல் தயங்கு கானலில்
வேழம துரித்தவெண் காடு மேவிய
யாழின திசையுடை இறைவ ரல்லரே
பூதங்கள் பலவுடை புனிதர் புண்ணியர்
ஏதங்கள் பலஇடர் தீர்க்கும் எம்மிறை
வேதங்கள் முதல்வர்வெண் காடு மேவிய
பாதங்கள் தொழநின்ற பரம ரல்லரே
மண்ணவர் விண்ணவர் வணங்க வைகலும்
எண்ணிய தேவர்கள் இறைஞ்சும் எம்மிறை
விண்ணமர் பொழில்கொள்வெண் காடு மேவிய
அண்ணலை அடிதொழ அல்ல லில்லையே
நயந்தவர கருள்பல நல்கி இந்திரன்
கயந்திரம் வழிபட நின்ற கண்ணுதல்
வியந்தவர் பரவுவெண் காடு மேவிய
பயந்தரு மழுவுடை பரம ரல்லரே
மலையுடன் எடுத்தவல் லரக்கன் நீள்முடி
தலையுடன் நெரித்தருள் செய்த சங்கரர்
விலையுடை நீற்றர்வெண் காடு மேவிய
அலையுடை புனல்வைத்த அடிக ளல்லரே
ஏடவிழ் நறுமலர் அயனும் மாலுமா
தேடவு தெரிந்தவர் தேர கிற்கிலார்
வேடம துடையவெண் காடு மேவிய
ஆடலை யமர்ந்தஎம் அடிக ளல்லரே
போதியர் பிண்டியர் பொருத்த மில்லிகள்
நீதிகள் சொல்லியும் நினைய கிற்கிலார்
வேதியர் பரவுவெண் காடு மேவிய
ஆதியை யடிதொழ அல்ல லில்லையே
நல்லவர் புகலியுள் ஞான சம்பந்தன்
செல்வன்எஞ் சிவனுறை திருவெண் காட்டின்மேற்
சொல்லிய அருந்தமிழ் பத்தும் வல்லவர்
அல்லலோ டருவினை அறுதல் ஆணையே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்கொள்ளிக்காடு
பண் காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
நிணம்படு சுடலையின் நீறு பூசிநின்
றிணங்குவர் பேய்களோ டிடுவர் மாநடம்
உணங்கல்வெண் டலைதனில் உண்ப ராயினுங்
குணம்பெரி துடையர்நங் கொள்ளி காடரே
ஆற்றநல் அடியிணை அலர்கொண் டேத்துவான்
சாற்றிய அந்தணன் தகுதி கண்டநாள்
மாற்றல னாகிமுன் அடர்த்து வந்தணை
கூற்றினை யுதைத்தனர் கொள்ளி காடரே
அத்தகு வானவர காக மால்விடம்
வைத்தவர் மணிபுரை கண்ட தின்னுளே
மத்தமும் வன்னியும் மலிந்த சென்னிமேல்
கொத்தலர் கொன்றையர் கொள்ளி காடரே
பாவணம் மேவுசொன் மாலை யிற்பல
நாவணங் கொள்கையின் நவின்ற செய்கையர்
ஆவணங் கொண்டெமை யாள்வ ராயினுங்
கோவணங் கொள்கையர் கொள்ளி காடரே
வாரணி வனமுலை மங்கை யாளொடுஞ்
சீரணி திருவுரு திகழ்ந்த சென்னியர்
நாரணி சிலைதனால் நணுக லார்எயில்
கூரெரி கொளுவினர் கொள்ளி காடரே
பஞ்சுதோய் மெல்லடி பாவை யாளொடும்
மஞ்சுதோய் கயிலையுள் மகிழ்வர் நாடொறும்
வெஞ்சின மருப்பொடு விரைய வந்தடை
குஞ்சரம் உரித்தனர் கொள்ளி காடரே
இறையுறு வரிவளை இசைகள் பாடிட
அறையுறு கழலடி ஆர்க்க ஆடுவர்
சிறையுறு விரிபுனல் சென்னி யின்மிசை
குறையுறு மதியினர் கொள்ளி காடரே
எடுத்தனன் கயிலையை இயல் வலியினால்
அடர்த்தனர் திருவிர லால்அ லறிட
படுத்தன ரென்றவன் பாடல் பாடலுங்
கொடுத்தனர் கொற்றவாள் கொள்ளி காடரே
தேடினா ரயன்முடி மாலுஞ் சேவடி
நாடினா ரவரென்று நணுக கிற்றிலர்
பாடினார் பரிவொடு பத்தர் சித்தமுங்
கூடினார கருள்செய்வர் கொள்ளி காடரே
நாடிநின் றறிவில்நா ணிலிகள் சாக்கியர்
ஓடிமுன் ஓதிய வுரைகள் மெய்யல
பாடுவர் நான்மறை பயின்ற மாதொடுங்
கூடுவர் திருவுரு கொள்ளி காடரே
நற்றவர் காழியுள் ஞான சம்பந்தன்
குற்றமில் பெரும்புகழ கொள்ளி காடரை
சொற்றமிழ் இன்னிசை மாலை சோர்வின்றி
கற்றவர் கழலடி காண வல்லரே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் அக்கினீசுவரர் தேவியார் பஞ்சினுமெல்லடியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவிசயமங்கை
பண் காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
மருவமர் குழலுமை பங்கர் வார்சடை
அரவமர் கொள்கையெம் அடிகள் கோயிலாங்
குரவமர் சுரபுன்னை கோங்கு வேங்கைகள்
விரவிய பொழிலணி விசய மங்கையே
கீதமுன் இசைதர கிளரும் வீணையர்
பூதமுன் இயல்புடை புனிதர் பொன்னகர்
கோதனம் வழிபட குலவு நான்மறை
வேதியர் தொழுதெழு விசய மங்கையே
அக்கர வரையினர் அரிவை பாகமா
தொக்கநல் விடையுடை சோதி தொன்னகர்
தக்கநல் வானவர் தலைவர் நாடொறும்
மிக்கவர் தொழுதெழு விசய மங்கையே
தொடைமலி இதழியு துன்எ ருக்கொடு
புடைமலி சடைமுடி யடிகள் பொன்னகர்
படைமலி மழுவினர் பைங்கண் மூரிவெள்
விடைமலி கொடியணல் விசய மங்கையே
தோடமர் காதினன் துதைந்த நீற்றினன்
ஏடமர் கோதையோ டினித மர்விடங்
காடமர் மாகரி கதற போர்த்ததோர்
வேடம துடையணல் விசய மங்கையே
மைப்புரை கண்ணுமை பங்கன் வண்டழல்
ஒப்புரை மேனியெம் முடைய வன்னகர்
அப்பொடு மலர்கொடங் கிறைஞ்சி வானவர்
மெய்ப்பட அருள்புரி விசய மங்கையே
இரும்பொனின் மலைவிலின் எரிச ரத்தினால்
வரும்புரங் களைப்பொடி செய்த மைந்தனூர்
சுரும்பமர் கொன்றையு தூய மத்தமும்
விரும்பிய சடையணல் விசய மங்கையே
உளங்கையி லிருபதோ டொருப துங்கொடாங்
களந்தரும் வரையெடு திடும்அ ரக்கனை
தளர்ந்துடல் நெரிதர அடர்த்த தன்மையன்
விளங்கிழை யொடும்புகும் விசய மங்கையே
மண்ணினை யுண்டவன் மலரின் மேலுறை
அண்ணல்கள் தமக்கள பரிய அத்தனூர்
தண்ணறுஞ் சாந்தமும் பூவும் நீர்கொடு
விண்ணவர் தொழுதெழு விசய மங்கையே
கஞ்சியுங் கவளமுண் கவணர் கட்டுரை
நஞ்சினுங் கொடியன நமர்கள் தேர்கிலார்
செஞ்சடை முடியுடை தேவன் நன்னகர்
விஞ்சையர் தொழுதெழு விசய மங்கையே
விண்ணவர் தொழுதெழு விசய மங்கையை
நண்ணிய புகலியுள் ஞான சம்பந்தன்
பண்ணிய செந்தமிழ் பத்தும் வல்லவர்
புண்ணியர் சிவகதி புகுதல் திண்ணமே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் விசயநாதேசுவரர் தேவியார் மங்கைநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவைகன்மாடக்கோயில்
பண் காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
துளமதி யுடைமறி தோன்று கையினர்
இளமதி யணிசடை எந்தை யாரிடம்
உளமதி யுடையவர் வைக லோங்கிய
வளமதி தடவிய மாட கோயிலே
மெய்யகம் மிளிரும்வெண் ணூலர் வேதியர்
மையகண் மலைமக ளோடும் வைகிடம்
வையகம் மகிழ்தர வைகல் மேற்றிசை
செய்யகண் வளவன்முன் செய்த கோயிலே
கணியணி மலர்கொடு காலை மாலையும்
பணியணி பவர்க்கருள் செய்த பான்மையர்
தணியணி உமையொடு தாமு தங்கிடம்
மணியணி கிளர்வைகல் மாட கோயிலே
கொம்பியல் கோதைமுன் அஞ்ச குஞ்சர
தும்பிய துரிசெய்த துங்கர் தங்கிடம்
வம்பியல் சோலைசூழ் வைகல் மேற்றிசை
செம்பியன் கோச்செங்க ணான்செய் கோயிலே
விடம்அடை மிடற்றினர் வேத நாவினர்
மடமொழி மலைமக ளோடும் வைகிடம்
மடவனம் நடைபயில் வைகல் மாநகர
குடதிசை நிலவிய மாட கோயிலே
நிறைபுனல் பிறையொடு நிலவு நீள்சடை
இறையவ ருறைவிடம் இலங்கு மூவெரி
மறையொடு வளர்வுசெய் வாணர் வைகலில்
திறையுடை நிறைசெல்வன் செய்த கோயிலே
எரிசரம் வரிசிலை வளைய ஏவிமுன்
திரிபுரம் எரிசெய்த செல்வர் சேர்விடம்
வரிவளை யவர்பயில் வைகல் மேற்றிசை
வருமுகி லணவிய மாட கோயிலே
மலையன இருபது தோளி னான்வலி
தொலைவுசெய் தருள்செய்த சோதி யாரிடம்
மலர்மலி பொழிலணி வைகல் வாழ்வர்கள்
வலம்வரு மலையன மாட கோயிலே
மாலவன் மலரவன் நேடி மால்கொள
மாலெரி யாகிய வரதர் வைகிடம்
மாலைகொ டணிமறை வாணர் வைகலில்
மாலன மணியணி மாட கோயிலே
கடுவுடை வாயினர் கஞ்சி
பிடகுரை பேணிலார் பேணு கோயிலாம்
மடமுடை யவர்பயில் வைகல் மாநகர்
வடமலை யனையநன் மாட கோயிலே
மைந்தன திடம்வைகல் மாட கோயிலை
சந்தமர் பொழிலணி சண்பை ஞானசம்
பந்தன தமிழ்கெழு பாடல் பத்திவை
சிந்தைசெய் பவர்சிவ லோகஞ் சேர்வரே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் வைகனாதேசுவரர் தேவியார் வைகலம்பிகையம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருஅம்பர்ப்பெருந்திருக்கோயில்
பண் காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
எரிதர அனல்கையில் ஏந்தி எல்லியில்
நரிதிரி கானிடை நட்டம் ஆடுவர்
அரிசிலம் பொருபுனல் அம்பர் மாநகர
குரிசில்செங் கண்ணவன் கோயில் சேர்வரே
மையகண் மலைமகள் பாக மாயிருள்
கையதோர் கனலெரி கனல ஆடுவர்
ஐயநன் பொருபுனல் அம்பர செம்பியர்
செய்யகண் ணிறைசெய்த கோயில் சேர்வரே
மறைபுனை பாடலர் சுடர்கை மல்கவோர்
பிறைபுனை சடைமுடி பெயர ஆடுவர்
அறைபுனல் நிறைவயல் அம்பர் மாநகர்
இறைபுனை யெழில்வளர் இடம தென்பரே
இரவுமல் கிளமதி சூடி யீடுயர்
பரவமல் கருமறை பாடி யாடுவர்
அரவமோ டுயர்செம்மல் அம்பர கொம்பலர்
மரவமல் கெழில்நகர் மருவி வாழ்வரே
சங்கணி குழையினர் சாமம் பாடுவர்
வெங்கனல் கனல்தர வீசி யாடுவர்
அங்கணி விழவமர் அம்பர் மாநகர
செங்கண்நல் இறைசெய்த கோயில் சேர்வரே
கழல்வளர் காலினர் சுடர்கை மல்கவோர்
சுழல்வளர் குளிர்புனல் சூடி யாடுவர்
அழல்வளர் மறையவர் அம்பர பைம்பொழில்
நிழல்வளர் நெடுநகர் இடம தென்பரே
இகலுறு சுடரெரி இலங்க வீசியே
பகலிடம் பலிகொள பாடி யாடுவர்
அகலிடம் மலிபுகழ் அம்பர் வம்பவிழ்
புகலிடம் நெடுநகர் புகுவர் போலுமே
எரியன மணிமுடி இலங்கை கோன்றன
கரியன தடக்கைகள் அடர்த்த காலினர்
அரியவர் வளநகர் அம்பர் இன்பொடு
புரியவர் பிரிவிலா பூதஞ் சூழவே
வெறிகிளர் மலர்மிசை யவனும் வெந்தொழிற்
பொறிகிளர் அரவணை புல்கு செல்வனும்
அறிகில அரியவர் அம்பர செம்பியர்
செறிகழல் இறைசெய்த கோயில் சேர்வரே
வழிதலை பறிதலை யவர்கள் கட்டிய
மொழிதலை பயனென மொழியல் வம்மினோ
அழிதலை பொருபுனல் அம்பர் மாநகர்
உழிதலை யொழிந்துளர் உமையு தாமுமே
அழகரை யடிகளை அம்பர் மேவிய
நிழல்திகழ் சடைமுடி நீல கண்டரை
உமிழ்திரை யுலகினில் ஓதுவீர் கொண்மின்
தமிழ்கெழு விரகினன் தமிழ்செய் மாலையே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் பிரமபுரிநாதேசுவரர் தேவியார் பூங்குழனாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருப்பூவணம்
ஈரடிமேல் வைப்பு
பண் காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
மாதமர் மேனிய னாகி வண்டொடு
போதமர் பொழிலணி பூவ ணத்துறை
வேதனை விரவலர் அரணம் மூன்றெய்த
நாதனை யடிதொழ நன்மை யாகுமே
வானணி மதிபுல்கு சென்னி வண்டொடு
தேனணி பொழில்திரு பூவ ணத்துறை
ஆனநல் லருமறை யங்கம் ஓதிய
ஞானனை யடிதொழ நன்மை யாகுமே
வெந்துய ருறுபிணி வினைகள் தீர்வதோர்
புந்தியர் தொழுதெழு பூவ ணத்துறை
அந்திவெண் பிறையினோ டாறு சூடிய
நந்தியை யடிதொழ நன்மை யாகுமே
வாசநன் மலர்மலி மார்பில் வெண்பொடி
பூசனை பொழில்திகழ் பூவ ணத்துறை
ஈசனை மலர்புனை தேத்து வார்வினை
நாசனை யடிதொழ நன்மை யாகுமே
குருந்தொடு மாதவி கோங்கு மல்லிகை
பொருந்திய பொழில்திரு பூவ ணத்துறை
அருந்திறல் அவுணர்தம் அரணம் மூன்றெய்த
பெருந்தகை யடிதொழ பீடை யில்லையே
வெறிகமழ் புன்னைபொன் ஞாழல் விம்மிய
பொறியர வணிபொழிற் பூவ ணத்துறை
கிறிபடு முடையினன் கேடில் கொள்கையன்
நறுமலர் அடிதொழ நன்மை யாகுமே
பறைமல்கு முழவொடு பாடல் ஆடலன்
பொறைமல்கு பொழிலணி பூவ ணத்துறை
மறைமல்கு பாடலன் மாதோர் கூறினன்
அறைமல்கு கழல்தொழ அல்லல் இல்லையே
வரைதனை யெடுத்தவல் லரக்கன் நீள்முடி
விரல்தனில் அடர்த்தவன் வெள்ளை நீற்றினன்
பொருபுனல் புடையணி பூவ ணந்தனை
பரவிய அடியவர கில்லை பாவமே
நீர்மல்கு மலருறை வானும் மாலுமா
சீர்மல்கு திருந்தடி சேர கிற்கிலர்
போர்மல்கு மழுவினன் மேய பூவணம்
ஏர்மல்கு மலர்புனை தேத்தல் இன்பமே
மண்டைகொண் டுழிதரு மதியில் தேரருங்
குண்டருங் குணமல பேசுங் கோலத்தர்
வண்டமர் வளர்பொழில் மல்கு பூவணங்
கண்டவர் அடிதொழு தேத்தல் கன்மமே
புண்ணியர் தொழுதெழு பூவ ணத்துறை
அண்ணலை யடிதொழு தந்தண் காழியுள்
நண்ணிய அருமறை ஞான சம்பந்தன்
பண்ணிய தமிழ்சொல பறையும் பாவமே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்கருக்குடி
பண் காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
நனவிலுங் கனவிலும் நாளு தன்னொளி
நினைவிலும் எனக்குவ தெய்தும் நின்மலன்
கனைகடல் வையக தொழு கருக்குடி
அனலெரி யாடுமெம் மடிகள் காண்மினே
வேதியன் விடையுடை விமலன் ஒன்னலர்
மூதெயில் எரியெழ முனிந்த முக்கணன்
காதியல் குழையினன் கருக்கு டியமர்
ஆதியை அடிதொழ அல்லல் இல்லையே
மஞ்சுறு பொழில்வளம் மலி கருக்குடி
நஞ்சுறு திருமிட றுடைய நாதனார்
அஞ்சுரும் பார்குழல் அரிவை யஞ்சவே
வெஞ்சுர தனில்விளை யாட லென்கொலோ
ஊனுடை பிறவியை அறுக்க வுன்னுவீர்
கானிடை யாடலான் பயில் கருக்குடி
கோனுயர் கோயிலை வணங்கி வைகலும்
வானவர் தொழுகழல் வாழ்த்தி வாழ்மினே
சூடுவர் சடையிடை கங்கை நங்கையை
கூடுவ ருலகிடை யையங் கொண்டொலி
பாடுவ ரிசைபறை கொட்ட நட்டிருள்
ஆடுவர் கருக்குடி அண்ணல் வண்ணமே
இன்புடை யாரிசை வீணை பூணரா
என்புடை யாரெழில் மேனி மேலெரி
முன்புடை யார்முத லேத்தும் அன்பரு
கன்புடை யார்கரு குடியெம் மண்ணலே
காலமும் ஞாயிறு தீயு மாயவர்
கோலமும் முடியர வணிந்த கொள்கையர்
சீலமும் உடையவர் திரு கருக்குடி
சாலவும் இனிதவ ருடைய தன்மையே
எறிகடல் புடைதழு விலங்கை மன்னனை
முறிபட வரையிடை யடர்த்த மூர்த்தியார்
கறைபடு பொழில்மதி தவழ் கருக்குடி
அறிவொடு தொழுமவர் ஆள்வர் நன்மையே
பூமனு திசைமுகன் தானும் பொற்பமர்
வாமனன் அறிகிலா வண்ண மோங்கெரி
ஆமென வுயர்ந்தவன் அணி கருக்குடி
நாமன னினில்வர நினைதல் நன்மையே
சாக்கியர் சமண்படு கையர் பொய்ம்மொழி
ஆக்கிய வுரைகொளேல் அரு திருந்ந
காக்கிய அரனுறை யணிக ருக்குடி
பூக்கமழ் கோயிலே புடைப டுய்ம்மினே
கானலில் விரைமலர் விம்மு காழியான்
வானவன் கருக்குடி மைந்தன் தன்னொளி
ஆனமெய்ஞ் ஞானசம் பந்தன் சொல்லிய
ஊனமில் மொழிவலார குயரும் இன்பமே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் சற்குணலிங்கேசுவரர் தேவியார் சர்வாலங்கிரதமின்னம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருப்பஞ்சாக்கரப்பதிகம்
பண் காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
துஞ்சலு துஞ்சலி லாத போழ்தினும்
நெஞ்சக நைந்து நினைமின் நாடொறும்
வஞ்சகம் அற்றடி வாழ்த்த வந்தகூற்
றஞ்சவு தைத்தன அஞ்செ ழுத்துமே
மந்திர நான்மறை யாகி வானவர்
சிந்தையுள் நின்றவர் தம்மை யாள்வன
செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர
கந்தியுள் மந்திரம் அஞ்செ ழுத்துமே
ஊனிலு யிர்ப்பை ஒடுக்கி ஒண்சுடர்
ஞானவி ளக்கினை யேற்றி நன்புல
தேனைவ ழிதிற தேத்து வார்க்கிடர்
ஆனகெ டுப்பன அஞ்செ ழுத்துமே
நல்லவர் தீயரெ னாது நச்சினர்
செல்லல் கெடச்சிவ முத்தி காட்டுவ
கொல்லந மன்தமர் கொண்டு போமிட
தல்லல்கெ டுப்பன அஞ்செ ழுத்துமே
கொங்கலர் மன்மதன் வாளி யைந்தக
தங்குள பூதமும் அஞ்ச வைம்பொழில்
தங்கர வின்படம் அஞ்சு தம்முடை
அங்கையில் ஐவிரல் அஞ்செ ழுத்துமே
தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்
வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்
இம்மை வினையடர தெய்தும் போழ்தினும்