திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
தேவார பதிகங்கள்
இரண்டாம் திருமுறை முதல் பகுதி
உள்ளுறை
திருப்பூந்தராய் மின்பதிப்பு
திருவலஞ்சுழி மின்பதிப்பு
திருத்தெளிச்சேரி மின்பதிப்பு
திருவான்மியூர் மின்பதிப்பு
திருவனேகதங்காபதம் மின்பதிப்பு
திருவையாறு மின்பதிப்பு
திருவாஞ்சியம் மின்பதிப்பு
திருச்சிக்கல் மின்பதிப்பு
திருமழபாடி மின்பதிப்பு
திருமங்கலக்குடி மின்பதிப்பு
சீகாழி மின்பதிப்பு
திருவேகம்பம் மின்பதிப்பு
திருக்கோழம்பம் மின்பதிப்பு
திருவெண்ணியூர் மின்பதிப்பு
திருக்காறாயில் மின்பதிப்பு
திருமணஞ்சேரி மின்பதிப்பு
திருவேணுபுரம் மின்பதிப்பு
திருமருகல் மின்பதிப்பு
திருநெல்லிக்கா மின்பதிப்பு
திருஅழுந்தூர் மின்பதிப்பு
திருக்கழிப்பாலை மின்பதிப்பு
திருக்குடவாயில் மின்பதிப்பு
திருவானைக்கா மின்பதிப்பு
திருநாகேச்சரம் மின்பதிப்பு
திருப்புகலி மின்பதிப்பு
திருநெல்வாயில் மின்பதிப்பு
திருஇந்திரநீலப்பருப்பதம் மின்பதிப்பு
திருக்கருவூரானிலை மின்பதிப்பு
திருப்புகலி மின்பதிப்பு
திருப்புறம்பயம் மின்பதிப்பு
திருக்கருப்பறியலூர் மின்பதிப்பு
திருவையாறு மின்பதிப்பு
திருநள்ளாறு மின்பதிப்பு
திருப்பழுவூர் மின்பதிப்பு
திருக்குரங்காடுதுறை மின்பதிப்பு
திருஇரும்பூளை மின்பதிப்பு
திருமறைக்காடு மின்பதிப்பு
திருச்சாய்க்காடு மின்பதிப்பு
திருக்ஷேத்திரக்கோவை மின்பதிப்பு
திருப்பிரமபுரம் மின்பதிப்பு
திருச்சாய்க்காடு மின்பதிப்பு
திருஆக்கூர் மின்பதிப்பு
திருப்புள்ளிருக்குவேளூர் மின்பதிப்பு
திருஆமாத்தூர் மின்பதிப்பு
திருக்கைச்சினம் மின்பதிப்பு
திருநாலூர்த்திருமயானம் மின்பதிப்பு
திருமயிலாப்பூர் மின்பதிப்பு
திருவெண்காடு மின்பதிப்பு
சீகாழி மின்பதிப்பு
திருஆமாத்தூர் மின்பதிப்பு
திருக்களர் மின்பதிப்பு
திருக்கோட்டாறு மின்பதிப்பு
திருப்புறவார் மின்பதிப்பு
திருப்புகலி மின்பதிப்பு
திருத்தலைச்சங்காடு மின்பதிப்பு
திருவிடைமருதூர் மின்பதிப்பு
திருநல்லூர் மின்பதிப்பு
திருக்குடவாயில் மின்பதிப்பு
சீகாழி மின்பதிப்பு
திருப்பாசூர் மின்பதிப்பு

திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
தேவார பதிகங்கள்
இரண்டாம் திருமுறை முதல் பகுதி
திருப்பூந்தராய்
பண் இந்தளம்
திருச்சிற்றம்பலம்
செந்நெ லங்கழ னிப்பழ னத்தய லேசெழும்
புன்னை வெண்கிழி யிற்பவ ளம்புரை பூந்தரா
துன்னி நல்லிமை யோர்முடி தோய்கழ லீர்சொலீர்
பின்னு செஞ்சடை யிற்பிறை பாம்புடன் வைத்ததே
எற்று தெண்டிரை யேறிய சங்கினொ டிப்பிகள்
பொற்றி கழ்கம லப்பழ னம்புகு பூந்தரா
சுற்றி நல்லிமை யோர்தொழு பொன்கழ லீர்சொலீர்
பெற்ற மேறுதல் பெற்றிமை யோபெரு மானிரே
சங்கு செம்பவ ளத்திரள் முத்தவை தாங்கொடு
பொங்கு தெண்டிரை வந்தலை கும்புனற் பூந்தரா
துங்க மால்களிற் றின்னுரி போர்த்துக தீர்சொலீர்
மங்கை பங்கமும் அங்கத்தொ டொன்றிய மாண்பதே
சேம வன்மதில் பொன்னணி மாளிகை சேணுயர்
பூம ணங்கம ழும்பொழில் சூழ்தரு பூந்தரா
சோம னும்மர வுந்தொடர் செஞ்சடை யீர்சொலீர்
காமன் வெண்பொடி யா கடைக்கண் சிவந்ததே
பள்ள மீனிரை தேர்ந்துழ லும்பகு வாயன
புள்ளும் நாடொறுஞ் சேர்பொழில் சூழ்தரு பூந்தரா
துள்ளும் மான்மறி யேந்திய செங்கையி னீர்சொலீர்
வெள்ள நீரொரு செஞ்சடை வைத்த வியப்பதே
மாதி லங்கிய மங்கைய ராடம ருங்கெலாம்
போதி லங்கம லமது வார்புனற் பூந்தரா
சோதி யஞ்சுடர் மேனிவெண் ணீறணி வீர்சொலீர்
காதி லங்குழை சங்கவெண் தோடுடன் வைத்ததே
இப்பதிகத்தில் ம் செய்யுள் மறைந்து போயிற்று
வருக்க மார்தரு வான்கடு வன்னொடு மந்திகள்
தருக்கொள் சோலை தருங்கனி மாந்திய பூந்தரா
துரக்கும் மால்விடைமேல்வரு வீரடி கேள்சொலீர்
அரக்க னாற்றல் அழித்தரு ளாக்கிய ஆக்கமே
வரிகொள் செங்கயல் பாய்புனல் சூழ்ந்த மருங்கெலாம்
புரிசை நீடுயர் மாடம் நிலாவிய பூந்தரா
சுருதி பாடிய பாணியல் தூமொழி யீர்சொலீர்
கரிய மாலயன் நேடியு மைக்கண் டிலாமையே
வண்ட லங்கழ னிம்மடை வாளைகள் பாய்புனற்
புண்ட ரீகம லர்ந்து மதுத்தரு பூந்தரா
தொண்டர் வந்தடி போற்றிசெய் தொல்கழ லீர்சொலீர்
குண்டர் சாக்கியர் கூறிய தாங்குறி யின்மையே
மகர வார்கடல் வந்தண வும்மணற் கானல்வா
புகலி ஞானசம் பந்தன் எழில்மிகு பூந்தரா
பகவ னாரை பரவுசொல் மாலைப தும்வல்லார்
அகல்வர் தீவினை நல்வினை யோடுட னாவரே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவலஞ்சுழி
பண் இந்தளம்
திருச்சிற்றம்பலம்
விண்டெ லாமல ரவ்விரை நாறுதண் டேன்விம்மி
வண்டெ லாம்நசை யாலிசை பாடும் வலஞ்சுழி
தொண்டெ லாம்பர வுஞ்சுடர் போலொளி யீர்சொலீர்
பண்டெ லாம்பலி தேர்ந்தொலி பாடல் பயின்றதே
பாரல் வெண்குரு கும்பகு வாயன நாரையும்
வாரல் வெண்டிரை வாயிரை தேரும் வலஞ்சுழி
மூரல் வெண்முறு வல்நகு மொய்யொளி யீர்சொலீர்
ஊரல் வெண்டலை கொண்டுல கொக்கவு ழன்றதே
கிண்ண வண்ணமல ருங்கிளர் தாமரை தாதளாய்
வண்ண நுண்மணல் மேலனம் வைகும் வலஞ்சுழி
சுண்ண வெண்பொடி கொண்டுமெய் பூசவ லீர்சொலீர்
விண்ண வர்தொழ வெண்டலை யிற்பலி கொண்டதே
கோடெ லாம்நிறை யக்குவ ளைம்மல ருங்குழி
மாடெ லாம்மலி நீர்மண நாறும் வலஞ்சுழி
சேடெ லாமுடை யீர்சிறு மான்மறி யீர்சொலீர்
நாடெ லாமறி யத்தலை யின்னற வேற்றதே
கொல்லை வென்றபுன திற்குரு மாமணி கொண்டுபோய்
வல்லை நுண்மணல் மேலனம் வைகும் வலஞ்சுழி
முல்லை வெண்முறு வல்நகை யாளொளி யீர்சொலீர்
சில்லை வெண்டலை யிற்பலி கொண்டுழல் செல்வமே
பூச நீர்பொழி யும்புனற் பொன்னியிற் பன்மலர்
வாச நீர்குடை வாரிடர் தீர்க்கும் வலஞ்சுழி
தேச நீர்திரு நீர்சிறு மான்மறி யீர்சொலீர்
ஏச வெண்டலை யிற்பலி கொள்வ திலாமையே
கந்த மாமலர சந்தொடு காரகி லுந்தழீஇ
வந்த நீர்குடை வாரிடர் தீர்க்கும் வலஞ்சுழி
அந்த நீர்முதல் நீர்நடு வாமடி கேள்சொலீர்
பந்த நீர்கரு தாதுல கிற்பலி கொள்வதே
தேனுற் றநறு மாமலர சோலையில் வண்டினம்
வானுற் றநசை யாலிசை பாடும் வலஞ்சுழி
கானுற் றகளிற் றின்னுரி போர்க்கவல் லீர்சொலீர்
ஊனுற் றதலை கொண்டுல கொக்க வுழன்றதே
தீர்த்த நீர்வ திழிபுனற் பொன்னியிற் பன்மலர்
வார்த்த நீர்குடை வாரிடர் தீர்க்கும் வலஞ்சுழி
ஆர்த்து வந்த அரக்கனை யன்றடர தீர்சொலீர்
சீர்த்த வெண்டலை யிற்பலி கொள்வதுஞ் சீர்மையே
உரம னுஞ்சடை யீர்விடை யீரும தின்னருள்
வரம னும்பெற லாவதும் எந்தை வலஞ்சுழி
பிரம னுந்திரு மாலும் அளப்பரி யீர்சொலீர்
சிரமெ னுங்கல னிற்பலி வேண்டிய செல்வமே
வீடு ஞானமும் வேண்டுதி ரேல்விர தங்களால்
வாடி ஞானமென் னாவதும் எந்தை வலஞ்சுழி
நாடி ஞானசம் பந்தன செந்தமிழ் கொண்டிசை
பாடு ஞானம்வல் லாரடி சேர்வது ஞானமே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் காப்பகத்தீசுவரர் தேவியார் மங்களநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருத்தெளிச்சேரி
பண் இந்தளம்
திருச்சிற்றம்பலம்
பூவ லர்ந்தன கொண்டுமு போதுமும் பொற்கழல்
தேவர் வந்து வணங்கு மிகுதெளி சேரியீர்
மேவ ருந்தொழி லாளொடு கேழற்பின் வேடனாம்
பாவ கங்கொடு நின்றது போலுநும் பான்மையே
விளைக்கும் பத்திக்கு விண்ணவர் மண்ணவ ரேத்தவே
திளைக்கு தீர்த்த மறாத திகழ்தெளி சேரியீர்
வளைக்கு திண்சிலை மேலைந்து பாணமு தானெய்து
களிக்குங் காமனை யெங்ஙனம் நீர்கண்ணிற் காய்ந்ததே
வம்ப டுத்த மலர்ப்பொழில் சூழ மதிதவழ்
செம்ப டுத்த செழும்புரி சைத்தெளி சேரியீர்
கொம்ப டுத்ததொர் கோல விடைமிசை கூர்மையோ
டம்ப டுத்தகண் ணாளொடு மேவல் அழகிதே
காரு லாங்கட லிப்பிகள் முத்தங் கரைப்பெயு
தேரு லாநெடு வீதிய தார்தெளி சேரியீர்
ஏரு லாம்பலி கேகிட வைப்பிட மின்றியே
வாரு லாமுலை யாளையொர் பாகத்து வைத்ததே
பக்க நுந்தமை பார்ப்பதி யேத்திமுன் பாவிக்குஞ்
செக்கர் மாமதி சேர்மதில் சூழ்தெளி சேரியீர்
மைக்கொள் கண்ணியர் கைவளை மால்செய்து வௌவவே
நக்க ராயுல கெங்கும் பலிக்கு நடப்பதே
தவள வெண்பிறை தோய்தரு தாழ்பொழில் சூழநற்
றிவள மாமணி மாட திகழ்தெளி சேரியீர்
குவளை போற்கண்ணி துண்ணென வந்து குறுகிய
கவள மால்கரி யெங்ஙனம் நீர்கையிற் காய்ந்ததே
கோட டுத்த பொழிலின் மிசைக்குயில் கூவிடுஞ்
சேட டுத்த தொழிலின் மிகுதெளி சேரியீர்
மாட டுத்த மலர்க்கண்ணி னாள்கங்கை நங்கையை
தோட டுத்த மலர்ச்சடை யென்கொல்நீர் சூடிற்றே
கொத்தி ரைத்த மலர்க்குழ லாள்குயில் கோலஞ்சேர்
சித்தி ரக்கொடி மாளிகை சூழ்தெளி சேரியீர்
வித்த கப்படை வல்ல அரக்கன் விறற்றலை
பத்தி ரட்டி கரம்நெரி திட்டதும் பாதமே
காலெ டுத்த திரைக்கை கரைக்கெறி கானல்சூழ்
சேல டுத்த வயற்பழ னத்தெளி சேரியீர்
மால டித்தல மாமல ரான்முடி தேடியே
ஓல மிட்டிட எங்ஙன மோருரு கொண்டதே
மந்தி ரந்தரு மாமறை யோர்கள் தவத்தவர்
செந்தி லங்கு மொழியவர் சேர்தெளி சேரியீர்
வெந்த லாகிய சாக்கிய ரோடு சமணர்கள்
தந்தி றத்தன நீக்குவி தீரோர் சதிரரே
திக்கு லாம்பொழில் சூழ்தெளி சேரியெஞ் செல்வனை
மிக்க காழியுள் ஞானசம் பந்தன் விளம்பிய
தக்க பாடல்கள் பத்தும் வல்லார்கள் தடமுடி
தொக்க வானவர் சூழ இருப்பவர் சொல்லிலே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் பார்வதீசுவரர் தேவியார் சத்தியம்மாளம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவான்மியூர்
பண் இந்தளம்
திருச்சிற்றம்பலம்
கரையு லாங்கட லிற்பொலி சங்கம்வெள் ளிப்பிவன்
திரையு லாங்கழி மீனுக ளுந்திரு வான்மியூர்
உரையெ லாம்பொரு ளாயுல காளுடை யீர்சொலீர்
வரையு லாமட மாதுட னாகிய மாண்பதே
சந்து யர்ந்தெழு காரகில் தண்புனல் கொண்டுதஞ்
சிந்தை செய்தடி யார்பர வுந்திரு வான்மியூர
சுந்த ரக்கழல் மேற்சிலம் பார்க்கவல் லீர்சொலீர்
அந்தி யின்னொளி யின்னிற மாக்கிய வண்ணமே
கான யங்கிய தண்கழி சூழ்கட லின்புற
தேன யங்கிய பைம்பொழில் சூழ்திரு வான்மியூர
தோன யங்கம ராடையி னீரடி கேள்சொலீர்
ஆனையங் கவ்வுரி போர்த்தன லாட வுகந்ததே
மஞ்சு லாவிய மாட மதிற்பொலி மாளிகை
செஞ்சொ லாளர்கள் தாம்பயி லுந்திரு வான்மியூர்
துஞ்சு வஞ்சிரு ளாடலு கக்கவல் லீர்சொலீர்
வஞ்ச நஞ்சுண்டு வானவர கின்னருள் வைத்ததே
மண்ணி னிற்புகழ் பெற்றவர் மங்கையர் தாம்பயில்
திண்ணெ னப்புரி சைத்தொழி லார்திரு வான்மியூர
துண்ணெ னத்திரி யுஞ்சரி தைத்தொழி லீர்சொலீர்
விண்ணி னிற்பிறை செஞ்சடை வைத்த வியப்பதே
போது லாவிய தண்பொழில் சூழ்புரி சைப்புற
தீதி லந்தணர் ஓத்தொழி யாத்திரு வான்மியூர
சூது லாவிய கொங்கையொர் பங்குடை யீர்சொலீர்
மூதெ யில்லொரு மூன்றெரி யூட்டிய மொய்ம்பதே
வண்டி ரைத்த தடம்பொழி லின்னிழற் கானல்வா
தெண்டி ரைக்கட லோதமல் குந்திரு வான்மியூர
தொண்டி ரைத்தெழு தேத்திய தொல்கழ லீர்சொலீர்
பண்டி ருக்கொரு நால்வர்க்கு நீருரை செய்ததே
தக்கில் வந்த தசக்கிரி வன்றலை பத்திற
திக்கில் வந்தல றவ்வடர தீர்திரு வான்மியூர
தொக்க மாதொடும் வீற்றிரு தீரரு ளென்சொலீர்
பக்க மேபல பாரிடம் பேய்கள் பயின்றதே
பொருது வார்கட லெண்டிசை யுந்தரு வாரியால்
திரித ரும்புகழ் செல்வமல் குந்திரு வான்மியூர்
சுருதி யாரிரு வர்க்கும் அறிவரி யீர்சொலீர்
எருது மேல்கொ டுழன் றுக தில்பலி யேற்றதே
மைத ழைத்தெழு சோலையின் மாலைசேர் வண்டினஞ்
செய்த வத்தொழி லாரிசை சேர்திரு வான்மியூர்
மெய்த வப்பொடி பூசிய மேனியி னீர்சொலீர்
கைத வச்சமண் சாக்கியர் கட்டுரை கின்றதே
மாதொர் கூறுடை நற்றவ னைத்திரு வான்மியூர்
ஆதி யெம்பெரு மானருள் செய்ய வினாவுரை
ஓதி யன்றெழு காழியுள் ஞானசம் பந்தன்சொல்
நீதி யால்நினை வார்நெடு வானுல காள்வரே
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் மருந்தீசுவரர் தேவியார் சுந்தரமாது அல்லது சொக்கநாயகி
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவனேகதங்காபதம்
பண் இந்தளம்
திருச்சிற்றம்பலம்
நீடல் மேவுநிமிர் புன்சடை மேலொர் நிலாமுளை
சூடல் மேவுமறை யின்முறை யாலொர் சுலாவழல்
ஆடல் மேவுமவர் மேய அனேகதங் காவதம்
பாடல் மேவுமன தார்வினை பற்றறு பார்களே
சூல முண்டுமழு வுண்டவர் தொல்படை சூழ்கடல்
ஆல முண்டபெரு மான்றன் அனேகதங் காவதம்
நீல முண்டதடங் கண்ணுமை பாகம் நிலாயதோர்
கோல முண்டள வில்லை குலாவிய கொள்கையே
செம்பி னாருமதில் மூன்றெரி யச்சின வாயதோர்
அம்பி னாலெய்தருள் வில்லி யனேகதங் காவதங்
கொம்பின் நேரிடை யாளொடுங் கூடிக்கொல் லேறுடை
நம்பன் நாமநவி லாதன நாவென லாகுமே
தந திந்தத்தட மென்றரு வித்திரள் பாய்ந்துபோ
சிந்த வெந்தகதி ரோனொடு மாசறு திங்களார்
அந்த மில்லவள வில்ல அனேகதங் காவதம்
எந்தை வெந்தபொடி நீறணி வார்க்கிட மாவதே
பிறையு மாசில்கதி ரோனறி யாமை பெயர்ந்துபோய்
உறையுங் கோயில்பசும் பொன்னணி யாரசும் பார்புனல்
அறையும் ஓசைபறை போலும் அனேகதங் காவதம்
இறையெம் மீசனெம் மானிட மாகவு கந்ததே
தேனை யேறுநறு மாமலர் கொண்டடி சேர்த்துவீர்
ஆனை யேறுமணி சாரல் அனேகதங் காவதம்
வானை யேறுநெறி சென்றுண ருந்தனை வல்லிரேல்
ஆனை யேறுமுடி யானருள் செய்வதும் வானையே
வெருவி வேழம்இரி யக்கதிர் முத்தொடு வெண்பளிங்
குருவி வீழவயி ரங்கொழி யாவகி லுந்திவெள்
ளருவி பாயுமணி சாரல் அனேகதங் காவதம்
மருவி வாழும்பெரு மான்கழல் சேர்வது வாய்மையே
ஈர மேதுமில னாகி யெழுந்த இராவணன்
வீர மேதுமில னாக விளைத்த விலங்கலான்
ஆரம் பாம்பதணி வான்றன் அனேகதங் காவதம்
வார மாகிநினை வார்வினை யாயின மாயுமே
கண்ணன் வண்ணமல ரானொடுங் கூடியோர கையமாய்
எண்ணும் வண்ணமறி யாமையெ ழுந்ததோ ராரழல்
அண்ணல் நண்ணுமணி சாரல் அனேகதங் காவதம்
நண்ணும் வண்ணமுடை யார்வினை யாயின நாசமே
மாப தம்மறி யாதவர் சாவகர் சாக்கியர்
ஏப தம்பட நின்றிறு மாந்துழல் வார்கள்தாம்
ஆப தம்மறி வீருளி ராகில் அனேகதங்
காப தம்மமர தான்கழல் சேர்தல் கருமமே
தொல்லை யூழிப்பெயர் தோன்றிய தோணி புரத்திறை
நல்ல கேள்வித்தமிழ் ஞானசம் பந்தன்நல் லார்கள்முன்
அல்லல் தீரவுரை செய்த அனேகதங் காவதஞ்
சொல்ல நல்லஅடை யும்மடை யாசுடு துன்பமே
இத்தலம் வடதேசத்திலுள்ளது
சுவாமிபெயர் அருள்மன்னர் தேவியார் மனோன்மணியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவையாறு
பண் இந்தளம்
திருச்சிற்றம்பலம்
கோடல் கோங்கங் குளிர்கூ விளமாலை குலாயசீர்
ஓடு கங்கை ஒளிவெண் பிறைசூடு மொருவனார்
பாடல் வீணைமுழ வங்குழன் மொந்தைபண் ணாகவே
ஆடு மாறுவல் லானும் ஐயாறுடை ஐயனே
தன்மை யாரும் அறிவாரில்லை தாம்பிறர் எள்கவே
பின்னு முன்னுஞ் சிலபே கணஞ்சூழ திரிதர்வர்
துன்ன ஆடை யுடுப்பர் சுடலைப்பொடி பூசுவர்
அன்னம் ஆலு துறையானும் ஐயாறுடை ஐயனே
கூறு பெண்ணுடை கோவணம் உண்பதும் வெண்டலை
மாறி லாருங்கொள் வாரிலை மார்பி லணிகலம்
ஏறும் ஏறி திரிவரிமை யோர்தொழு தேத்தவே
ஆறும் நான்குஞ் சொன்னானும் ஐயாறுடை ஐயனே
பண்ணின் நல்லமொழி யார்பவ ளத்துவர் வாயினார்
எண்ணின் நல்லகுண தாரிணை வேல்வென்ற கண்ணினார்
வண்ணம் பாடிவலி பாடித்தம் வாய்மொழி பாடவே
அண்ணல் கேட்டுக தானும் ஐயாறுடை ஐயனே
வேன லானை வெருவவுரி போர்த்துமை யஞ்சவே
வானை யூடறு கும்மதி சூடிய மைந்தனார்
தேன்நெய் பால்தயிர் தெங்கிள நீர்கரும் பின்தெளி
ஆனஞ் சாடும் முடியானும் ஐயாறுடை ஐயனே
எங்கு மாகி நின்றானும் இயல்பறி யப்படா
மங்கை பாகங் கொண்டானும் மதிசூடு மைந்தனும்
பங்க மில்பதி னெட்டொடு நான்கு குணர்வுமாய்
அங்க மாறுஞ் சொன்னானும் ஐயாறுடை ஐயனே
ஓதி யாருமறி வாரிலை யோதி யுலகெலாஞ்
சோதி யாய்நிறை தான்சுடர சோதியு சோதியான்
வேதி யாகிவிண் ணாகிமண் ணோடெரி காற்றுமாய்
ஆதி யாகி நின்றானும் ஐயாறுடை ஐயனே
குரவ நாண்மலர் கொண்டடி யார்வழி பாடுசெய்
விரவு நீறணி வார்சில தொண்டர் வியப்பவே
பரவி நாடொறும் பாடநம் பாவம் பறைதலால்
அரவ மார்த்துக தானும் ஐயாறுடை ஐயனே
உரைசெய் தொல்வழி செய்தறி யாஇலங் கைக்குமன்
வரைசெய் தோளடர தும்மதி சூடிய மைந்தனார்
கரைசெய் காவிரி யின்வட பாலது காதலான்
அரைசெய் மேகலை யானும் ஐயாறுடை ஐயனே
மாலுஞ் சோதி மலரானும் அறிகிலா வாய்மையான்
காலங் காம்பு வயிரங் கடிகையன் பொற்கழல்
கோல மாய்க்கொழு தீன்று பவள திரண்டதோர்
ஆல நீழ லுளானும் ஐயாறுடை ஐயனே
கையி லுண்டுழல் வாருங் கமழ்துவ ராடையால்
மெய்யை போர்த்துழல் வாரும் உரைப்பன மெய்யல
மைகொள் கண்ட தெண்டோ ள்மு கணான்கழல் வாழ்த்தவே
தேர்ந்தளி பானும்ஐ யாறுடை ஐயனே
பலிதி ரிந்துழல் பண்டங்கன் மேயஐ யாற்றினை
கலிக டிந்தகை யான்கடல் காழியர் காவலன்
ஒலிகொள் சம்பந்தன் ஒண்டமிழ் பத்தும்வல் லார்கள்போய்
மலிகொள் விண்ணிடை மன்னிய சீர்பெறு வார்களே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவாஞ்சியம்
பண் இந்தளம்
திருச்சிற்றம்பலம்
வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு கூவிளம்
பொன்னி யன்ற சடையிற் பொலிவித்த புராணனார்
தென்ன வென்றுவரி வண்டிசை செய்திரு வாஞ்சியம்
என்னை யாளுடை யானிட மாகவு கந்ததே
கால காலர்கரி கானிடை மாநட மாடுவர்
மேலர் வேலைவிட முண்டிருள் கின்ற மிடற்றினர்
மாலை கோலமதி மாடமன் னுந்திரு வாஞ்சியம்
ஞாலம் வந்துபணி யப்பொலி கோயில் நயந்ததே
மேவி லொன்றர்விரி வுற்ற இரண்டினர் மூன்றுமாய்
நாவின் நாலர்உட லஞ்சினர் ஆறர்ஏ ழோசையர்
தேவில் எட்டர்திரு வாஞ்சிய மேவிய செல்வனார்
பாவ தீர்ப்பர்பழி போக்குவர் தம்மடி யார்கட்கே
சூல மேந்திவளர் கையினர் மெய்சுவண் டாகவே
சால நல்லபொடி பூசுவர் பேசுவர் மாமறை
சீல மேவுபுக ழாற்பெரு குந்திரு வாஞ்சியம்
ஆல முண்டவடி கள்ளிட மாக அமர்ந்ததே
கையி லங்குமறி யேந்துவர் காந்தளம் மெல்விரல்
தையல் பாகமுடை யாரடை யார்புரஞ் செற்றவர்
செய்ய மேனிக்கரி யம்மிடற் றார்திரு வாஞ்சி
தையர் பாதமடை வார்க்கடை யாவரு நோய்களே
அரவம் பூண்பரணி யுஞ்சிலம் பார்க்க அகந்தொறும்
இரவில் நல்லபலி பேணுவர் நாணிலர் நாமமே
பரவு வார்வினை தீர்க்கநின் றார்திரு வாஞ்சியம்
மருவி யேத்தமட மாதொடு நின்றவெம் மைந்தரே
விண்ணி லானபிறை சூடுவர் தாழ்ந்து விளங்கவே
கண்ணி னாலனங் கன்னுட லம்பொடி யாக்கினார்
பண்ணி லானஇசை பாடல்மல் குந்திரு வாஞ்சி
தண்ண லார்தம்அடி போற்றவல் லார்க்கில்லை அல்லலே
மாட நீடுகொடி மன்னிய தென்னிலங் கைக்குமன்
வாடி யூடவரை யாலடர தன்றருள் செய்தவர்
வேட வேடர்திரு வாஞ்சியம் மேவிய வேந்தரை
பாட நீடுமன தார்வினை பற்றறு பார்களே
செடிகொள் நோயின்அடை யார்திறம் பார்செறு தீவினை
கடிய கூற்றமுங் கண்டக லும்புகல் தான்வரும்
நெடிய மாலொடயன் ஏத்தநின் றார்திரு வாஞ்சி
தடிகள் பாதமடை தாரடி யாரடி யார்கட்கே
பிண்ட முண்டுதிரி வார்பிரி யுந்துவ ராடையார்
மிண்டர் மிண்டுமொழி மெய்யல பொய்யிலை யெம்மிறை
வண்டு கெண்டிமரு வும்பொழில் சூழ்திரு வாஞ்சி
தண்ட வாணனடி கைதொழு வார்க்கில்லை அல்லலே
தென்றல் துன்றுபொழில் சென்றணை யுந்திரு வாஞ்சி
தென்று நின்றஇறை யானையு ணர்ந்தடி யேத்தலால்
நன்று காழிமறை ஞானசம் பந்தன செந்தமிழ்
ஒன்று முள்ளமுடை யாரடை வாருயர் வானமே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் வாஞ்சியநாதர் தேவியார் வாழவந்தநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருச்சிக்கல்
பண் இந்தளம்
திருச்சிற்றம்பலம்
வானுலா வுமதி வந்துல வும்மதின் மாளிகை
தேனுலா வுமலர சோலைமல் குந்திகழ் சிக்கலுள்
வேனல்வே ளைவிழி திட்டவெண் ணெய்ப்பெரு மானடி
ஞானமா கநினை வார்வினை யாயின நையுமே
மடங்கொள் வாளைகுதி கொள்ளும் மணமலர பொய்கைசூழ்
திடங்கொள் மாமறை யோரவர் மல்கிய சிக்கலுள்
விடங்கொள் கண்டத்து வெண்ணெய்ப்பெரு மானடி மேவியே
அடைந்து வாழுமடி யாரவர் அல்லல் அறுப்பரே
நீல நெய்தல்நில விம்மல ருஞ்சுனை நீடிய
சேலு மாலுங்கழ னிவ்வள மல்கிய சிக்கலுள்
வேலொண் கண்ணியி னாளையொர் பாகன்வெண் ணெய்ப்பிரான்
பால வண்ணன்கழ லேத்தநம் பாவம்ப றையுமே
கந்தமு தக்கைதை பூத்துக்க மழ்ந்துசே ரும்பொழிற்
செந்துவண் டின்னிசை பாடல்மல் குந்திகழ் சிக்கலுள்
வெந்தவெண் ணீற்றண்ணல் வெண்ணெய்ப்பி ரான்விரை யார்கழல்
சிந்தைசெய் வார்வினை யாயின தேய்வது திண்ணமே
மங்குல்தங் கும்மறை யோர்கள்மா டத்தய லேமிகு
தெங்குதுங் கப்பொழிற் செல்வமல் குந்திகழ் சிக்கலுள்
வெங்கண்வெள் ளேறுடை வெண்ணெய்ப்பி ரானடி மேவவே
தங்கு மேற்சர தந்திரு நாளுந்த கையுமே
வண்டிரை தும்மது விம்மிய மாமலர பொய்கைசூழ்
தெண்டிரை கொள்புனல் வந்தொழுகும் வயற் சிக்கலுள்
விண்டிரை தம்மல ராற்றிகழ் வெண்ணெய்ப்பி ரானடி
கண்டிரை தும்மன மேமதி யாய்கதி யாகவே
முன்னுமா டம்மதில் மூன்றுட னேயெரி யாய்விழ
துன்னுவார் வெங்கணை யொன்று செலுத்திய சோதியான்
செந்நெலா ரும்வயற் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மானடி
உன்னிநீ டம்மன மேநினை யாய்வினை ஓயவே
தெற்ற லாகிய தென்னிலங் கைக்கிறை வன்மலை
பற்றி னான்முடி பத்தொடு தோள்கள் நெரியவே
செற்ற தேவன்நஞ் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மானடி
உற்று நீநினை வாய்வினை யாயின ஓயவே
மாலி னோடரு மாமறை வல்ல முனிவனுங்
கோலி னார்குறு கச்சிவன் சேவடி கோலியுஞ்
சீல தாமறி யார்திகழ் சிக்கல்வெண் ணெய்ப்பிரான்
பாலும் பன்மலர் தூவ பறையும்நம் பாவமே
பட்டை நற்றுவ ராடையி னாரொடும் பாங்கிலா
கட்ட மண்கழு கள்சொல்லி னைக்கரு தாதுநீர்
சிட்டன் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மான்செழு மாமறை
பட்டன் சேவடி யேபணி மின்பிணி போகவே
கந்த மார்பொழிற் காழியுள் ஞானசம் பந்தன்நல்
செந்தண் பூம்பொழிற் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மானடி
சந்தமா சொன்ன செந்தமிழ் வல்லவர் வானிடை
வெந்த நீறணி யும்பெரு மானடி மேவரே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் நவநீதநாதர் தேவியார் வேனெடுங்கண்ணியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருமழபாடி
பண் இந்தளம்
திருச்சிற்றம்பலம்
களையும் வல்வினை யஞ்சல்நெஞ் சேகரு தார்புரம்
உளையும் பூசல்செய் தானுயர் மால்வரை நல்விலா
வளைய வெஞ்சரம் வாங்கியெய் தான்மது தும்பிவண்
டளையுங் கொன்றை தார்மழ பாடியுள் அண்ணலே
காச்சி லாதபொன் நோக்குங் கனவயி ரத்திரள்
ஆச்சி லாதப ளிங்கினன் அஞ்சுமுன் ஆடினான்
பேச்சி னாலு காவதென் பேதைகாள் பேணுமின்
வாச்ச மாளிகை சூழ்மழ பாடியை வாழ்த்துமே
உரங்கெ டுப்பவன் உம்பர்க ளாயவர் தங்களை
பரங்கெ டுப்பவன் நஞ்சையுண் டுபக லோன்றனை
முரண்கெ டுப்பவன் முப்புர தீயெழ செற்றுமுன்
வரங்கொ டுப்பவன் மாமழ பாடியுள் வள்ளலே
பள்ள மார்சடை யிற்புடை யேயடை யப்புனல்
வெள்ளம் ஆதரி தான்விடை யேறிய வேதியன்
வள்ளல் மாமழ பாடியுள் மேய மருந்தினை
உள்ளம் ஆதரி மின்வினை யாயின ஓயவே
தேனு லாமலர் கொண்டுமெ தேவர்கள் சித்தர்கள்
பால்நெய் அஞ்சுடன் ஆட்டமுன் ஆடிய பால்வணன்
வான நாடர்கள் கைதொழு மாமழ பாடியெங்
கோனை நாடொறுங் கும்பிட வேகுறி கூடுமே
தெரிந்த வன்புரம் மூன்றுடன் மாட்டிய சேவகன்
பரிந்து கைதொழு வாரவர் தம்மனம் பாவினான்
வரிந்த வெஞ்சிலை யொன்றுடை யான்மழ பாடியை
புரிந்து கைதொழு மின்வினை யாயின போகுமே
சந்த வார்குழ லாளுமை தன்னொரு கூறுடை
எந்தை யான்இமை யாதமு கண்ணினன் எம்பிரான்
மைந்தன் வார்பொழில் சூழ்மழ பாடிம ருந்தினை
சிந்தி யாவெழு வார்வினை யாயின தேயுமே
இரக்க மொன்றுமி லான்இறை யான்திரு மாமலை
உரக்கை யாலெடு தான்றன தொண்முடி பத்திற
விரற்ற லைந்நிறு வியுமை யாளொடு மேயவன்
வரத்தை யேகொடு கும்மழ பாடியுள் வள்ளலே
ஆலம் உண்டமு தம்மம ரர்க்கருள் அண்ணலார்
காலன் ஆருயிர் வீட்டிய மாமணி கண்டனார்
சால நல்லடி யார்தவ தார்களுஞ் சார்விடம்
மால யன்வணங் கும்மழ பாடியெம் மைந்தனே
கலியின் வல்லம ணுங்கருஞ் சாக்கி பேய்களும்
நலியும் நாள்கெடு தாண்டஎன் நாதனார் வாழ்பதி
பலியும் பாட்டொடு பண்முழ வும்பல வோசையும்
மலியும் மாமழ பாடியை வாழ்த்தி வணங்குமே
மலியு மாளிகை சூழ் மழபாடியுள் வள்ளலை
கலிசெய் மாமதில் சூழ்கடற் காழி கவுணியன்
ஒலிசெய் பாடல்கள் பத்திவை வல்லார்உலகத்திலே
இப்பதிகத்தின் ம் செய்யுளின் பின்னிரண்டடிகள் சிதைவுற்றன
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் வச்சிரத்தம்பேசுவரர் தேவியார் அழகாம்பிகையம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருமங்கலக்குடி
பண் இந்தளம்
திருச்சிற்றம்பலம்
சீரி னார்மணி யும்மகில் சந்துஞ் செறிவரை
வாரி நீர்வரு பொன்னி வடமங்க லக்குடி
நீரின் மாமுனி வன்நெடுங் கைகொடு நீர்தனை
பூரி தாட்டியர சிக்கஇ ருந்த புராணனே
பணங்கொ ளாடர வல்குல்நல் லார்பயின் றேத்தவே
மணங்கொள் மாமயி லாலும்பொ ழில்மங்க லக்குடி
இணங்கி லாமறை யோரிமை யோர்தொழு தேத்திட
அணங்கி னோடிரு தானடி யேசர ணாகுமே
கருங்கை யானையின் ஈருரி போர்த்திடு கள்வனார்
மருங்கெ லாம்மண மார்பொழில் சூழ்மங்க லக்குடி
அரும்பு சேர்மலர கொன்றையி னானடி யன்பொடு
விரும்பி யேத்தவல் லார்வினை யாயின வீடுமே
பறையி னோடொலி பாடலும் ஆடலும் பாரிடம்
மறையி னோடியல் மல்கிடு வார்மங்க லக்குடி
குறைவி லாநிறை வேகுண மில்குண மேயென்று
முறையி னால்வணங் கும்மவர் முன்னெறி காண்பரே
ஆனி லங்கிளர் ஐந்தும் அவிர்முடி யாடியோர்
மானி லங்கையி னான்மண மார்மங்க லக்குடி
ஊனில் வெண்டலை கையுடை யானுயர் பாதமே
ஞான மாகநின் றேத்தவல் லார்வினை நாசமே
தேனு மாயமு தாகிநின் றான்றெளி சிந்தையுள்
வானு மாய்மதி சூடவல் லான்மங்க லக்குடி
கோனை நாடொறும் ஏத்தி குணங்கொடு கூறுவார்
ஊன மானவை போயறும் உய்யும் வகையதே
வேள் படுத்திடு கண்ணினன் மேருவில் லாகவே
வாள ரக்கர் புரமெரி தான்மங்க லக்குடி
ஆளு மாதி பிரானடி கள்ளடை தேத்தவே
கோளு நாளவை போயறுங் குற்றமில் லார்களே
பொலியும் மால்வரை புக்கெடு தான்புகழ தேத்திட
வலியும் வாளொடு நாள்கொடு தான்மங்க லக்குடி
புலியின் ஆடையி னானடி யேத்திடும் புண்ணியர்
மலியும் வானுல கம்புக வல்லவர் காண்மினே
ஞாலம் முன்படை தான்நளிர் மாமலர் மேலயன்
மாலுங் காணவொ ணாஎரி யான்மங்க லக்குடி
ஏல வார்குழ லாளொரு பாகமி டங்கொடு
கோல மாகிநின் றான்குணங் கூறுங் குணமதே
மெய்யின் மாசினர் மேனி விரிதுவ ராடையர்
பொய்யை விட்டிடும் புண்ணியர் சேர்மங்க லக்குடி
செய்ய மேனி செழும்புனற் கங்கைசெ றிசடை
ஐயன் சேவடி யேத்தவல் லார்க்கழ காகுமே
மந்த மாம்பொழில் சூழ்மங்க லக்குடி மன்னிய
எந்தை யையெழி லார்பொழிற் காழியர் காவலன்
சிந்தை செய்தடி சேர்த்திடு ஞானசம் பந்தன்சொல்
முந்தி யேத்தவல் லாரிமை யோர்முத லாவரே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் புராணவரதேசுவரர் தேவியார் மங்களநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

சீகாழி
பண் இந்தளம்
திருச்சிற்றம்பலம்
நல்லானை நான்மறை யோடிய லாறங்கம்
வல்லானை வல்லவர் பான்மலி தோங்கிய
சொல்லானை தொன்மதிற் காழியே கோயிலாம்
இல்லானை யேத்தநின் றார்க்குள தின்பமே
நம்மான மாற்றி நமக்கரு ளாய்நின்ற
பெம்மானை பேயுடன் ஆடல் புரிந்தானை
அம்மானை அந்தணர் சேரு மணிகாழி
எம்மானை ஏத்தவல் லார்க்கிட ரில்லையே
அருந்தானை யன்புசெய் தேத்தகில் லார்பால்
பொருந்தானை பொய்யடி மைத்தொழில் செய்வாருள்
விருந்தானை வேதிய ரோதி மிடைகாழி
இருந்தானை யேத்துமின் நும்வினை யேகவே
புற்றானை புற்றர வம்மரை யின்மிசை
சுற்றானை தொண்டுசெய் வாரவர் தம்மொடும்
அற்றானை அந்தணர் காழி யமர்கோயில்
பற்றானை பற்றிநின் றார்க்கில்லை பாவமே
நெதியானை நெஞ்சிடங் கொள்ள நினைவார்தம்
விதியானை விண்ணவர் தாம்வி தேத்திய
கதியானை காருல வும்பொழிற் காழியாம்
பதியானை பாடுமின் நும்வினை பாறவே
செப்பான மென்முலை யாளை திகழ்மேனி
வைப்பானை வார்கழ லேத்தி நினைவார்தம்
ஒப்பானை ஓதம் உலாவு கடற்காழி
மெய்ப்பானை மேவிய மாந்தர் வியந்தாரே
துன்பானை துன்பம் அழித்தரு ளாக்கிய
இன்பானை யேழிசை யின்னிலை பேணுவார்
அன்பானை அணிபொழிற் காழி நகர்மேய
நம்பானை நண்ணவல் லார்வினை நாசமே
குன்றானை குன்றெடு தான்புயம் நாலைந்தும்
வென்றானை மென்மல ரானொடு மால்தேட
நின்றானை நேரிழை யாளொடுங் காழியுள்
நன்றானை நம்பெரு மானை நணுகுமே
இப்பதிகத்தில் ம் செய்யுள் மறைந்து போயிற்று
சாவாயும் வாதுசெய் சாவகர் சாக்கியர்
மேவாத சொல்லவை கேட்டு வெகுளேன்மின்
பூவாய கொன்றையி னானை புனற்காழி
கோவாய கொள்கையி னாணடி கூறுமே
கழியார்சீ ரோதமல் குங்கடற் காழியுள்
ஒழியாது கோயில்கொண் டானை யுகந்துள்கி
தழியார்சொல் ஞானசம் பந்தன் தமிழார
மொழிவார்கள் மூவுல கும்பெறு வார்களே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவேகம்பம்
பண் இந்தளம்
திருச்சிற்றம்பலம்
மறையானை மாசிலா புன்சடை மல்குவெண்
பிறையானை பெண்ணொடா ணாகிய பெம்மானை
இறையானை யேர்கொள்க சித்திரு வேகம்ப
துறைவானை யல்லதுள் காதென துள்ளமே
நொச்சியே வன்னிகொன் றைமதி கூவிளம்
உச்சியே புனைதல்வே டம்விடை யூர்தியான்
கச்சியே கம்பம்மே யகறை கண்டனை
நச்சியே தொழுமின்நும் மேல்வினை நையுமே
பாராரு முழவமொ தைகுழல் யாழொலி
சீராலே பாடலா டல்சிதை வில்லதோர்
ஏரார்பூங் கச்சியே கம்பனை யெம்மானை
சேராதார் இன்பமா யந்நெறி சேராரே
குன்றேய்க்கு நெடுவெண்மா டக்கொடி கூடிப்போய்
மின்றேய்க்கு முகில்கள்தோ யும்வியன் கச்சியுள்
மன்றேய்க்கு மல்குசீ ரான்மலி யேகம்பஞ்
சென்றேய்க்குஞ் சிந்தையார் மேல்வினை சேராவே
சடையானை தலைகையே திப்பலி தருவார்தங்
கடையேபோய் மூன்றுங்கொண் டான்கலி கச்சியுள்
புடையேபொன் மலருங்கம் பைக்கரை யேகம்பம்
உடையானை யல்லதுள் காதென துள்ளமே
மழுவாளோ டெழில்கொள்சூ லப்படை வல்லார்தங்
கெழுவாளோ ரிமையாரு சியுமை யாள்கங்கை
வழுவாமே மல்குசீ ரால்வள ரேகம்ப
தொழுவாரே விழுமியார் மேல்வினை துன்னாவே
விண்ணுளார் மறைகள்வே தம்விரி தோதுவார்
கண்ணுளார் கழலின்வெல் வார்கரி காலனை
நண்ணுவா ரெழில்கொள்க சிநக ரேகம்ப
தண்ணலா ராடுகின் றவலங் காரமே
தூயானை தூயவா யம்மறை யோதிய
வாயானை வாளர கன்வலி வாட்டிய
தீயானை தீதில்க சித்திரு வேகம்பம்
மேயானை மேவுவா ரென்றலை மேலாரே
நாகம்பூண் ஏறதே றல்நறுங் கொன்றைதார்
பாகம்பெண் பலியுமேற் பர்மறை பாடுவர்
ஏகம்பம் மேவியா டுமிறை யிருவர்க்கும்
மாகம்பம் அறியும்வண் ணத்தவ னல்லனே
போதியார் பிண்டியா ரென்றிவர் பொய்ந்நூலை
வாதியா வம்மினம் மாவெனுங் கச்சியுள்
ஆதியார் மேவியா டுந்திரு வேகம்பம்
நீதியாற் றொழுமினும் மேல்வினை நில்லாவே
அந்தண்பூங் கச்சியே கம்பனை யம்மானை
கந்தண்பூங் காழியூ ரன்கலி கோவையால்
சந்தமே பாடவல் லதமிழ் ஞானசம்
பந்தன்சொற் பாடியா டக்கெடும் பாவமே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்கோழம்பம்
பண் இந்தளம்
திருச்சிற்றம்பலம்
நீற்றானை நீள்சடை மேல்நிறை வுள்ளதோர்
ஆற்றானை அழகமர் மென்முலை யாளையோர்
கூற்றானை குளிர்பொழிற் கோழம்பம் மேவிய
ஏற்றானை யேத்துமின் நும்மிடர் ஏகவே
மையான கண்டனை மான்மறி யேந்திய
கையானை கடிபொழிற் கோழம்பம் மேவிய
செய்யானை தேன்நெய்பா லுந்திகழ தாடிய
மெய்யானை மேவுவார் மேல்வினை மேவாவே
ஏதனை யேதமி லாஇமை யோர்தொழும்
வேதனை வெண்குழை தோடுவி ளங்கிய
காதனை கடிபொழிற் கோழம்பம் மேவிய
நாதனை யேத்துமின் நும்வினை நையவே
சடையானை தண்மல ரான்சிர மேந்திய
விடையானை வேதமும் வேள்வியு மாயநன்
குடையானை குளிர்பொழில் சூழ்திரு கோழம்பம்
உடையானை உள்குமின் உள்ளங்கு ளிரவே
காரானை கடிகமழ் கொன்றையம் போதணி
தாரானை தையலோர்பால்மகிழ தோங்கிய
சீரானை செறிபொழிற் கோழம்பம் மேவிய
ஊரானை யேத்துமின் நும்மிடர் ஒல்கவே
பண்டாலின் நீழலா னைப்பரஞ் சோதியை
விண்டார்கள் தம்புரம் மூன்றுட னேவேவ
கண்டானை கடிகமழ் கோழம்பங் கோயிலா
கொண்டானை கூறுமின் உள்ளங் குளிரவே
சொல்லானை சுடுகணை யாற்புரம் மூன்றெய்த
வில்லானை வேதமும் வேள்வியு மானானை
கொல்லானை உரியானை கோழம்பம் மேவிய
நல்லானை யேத்துமின் நும்மிடர் நையவே
விற்றானை வல்லர கர்விறல் வேந்தனை
குற்றானை திருவிர லாற்கொடுங் காலனை
செற்றானை சீர்திக ழுந்திரு கோழம்பம்
பற்றானை பற்றுவார் மேல்வினை பற்றாவே
நெடியானோ டயனறி யாவகை நின்றதோர்
படியானை பண்டரங்க வேடம்ப யின்றானை
கடியாருங் கோழம்பம் மேவிய வெள்ளேற்றின்
கொடியானை கூறுமின் உள்ளங் குளிரவே
புத்தரு தோகையம் பீலிகொள் பொய்ம்மொழி
பித்தரும் பேசுவ பேச்சல்ல பீடுடை
கொத்தலர் தண்பொழிற் கோழம்பம் மேவிய
அத்தனை யேத்துமின் அல்லல் அறுக்கவே
தண்புன லோங்குதண் ணந்தராய் மாநகர்
நண்புடை ஞானசம் பந்தன்நம் பானுறை
விண்பொழிற் கோழம்பம் மேவிய பத்திவை
பண்கொள பாடவல் லார்க்கில்லை பாவமே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் கோகுலேசுவரர் தேவியார் சவுந்தரியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவெண்ணியூர்
பண் இந்தளம்
திருச்சிற்றம்பலம்
சடையானை சந்திர னோடுசெங் கண்ணரா
உடையானை உடைதலை யிற்பலி கொண்டூரும்
விடையானை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியை
உடையானை யல்லதுள் காதென துள்ளமே
சோதியை சுண்ணவெண் ணீறணி திட்டவெம்
ஆதியை ஆதியும் அந்தமு மில்லாத
வேதியை வேதியர் தாந்தொழும் வெண்ணியில்
நீதியை நினையவல் லார்வினை நில்லாவே
கனிதனை கனிந்தவ ரைக்கல தாட்கொள்ளும்
முனிதனை மூவுல குக்கொரு மூர்த்தியை
நனிதனை நல்லவர் தாந்தொழும் வெண்ணியில்
இனிதனை யேத்துவ ரேதமி லாதாரே
மூத்தானை மூவுல குக்கொரு மூர்த்தியா
காத்தானை கனிந்தவ ரைக்கல தாளாக
ஆர்த்தானை அழகமர் வெண்ணியம் மான்றன்னை
ஏத்தாதா ரென்செய்வார் ஏழை பேய்களே
நீரானை நிறைபுனல் சூழ்தரு நீள்கொன்றை
தாரானை தையலோர் பாகமு டையானை
சீரானை திகழ்தரு வெண்ணிய மர்ந்துறை
ஊரானை உள்கவல் லார்வினை யோயுமே
முத்தினை முழுவயி ரத்திரள் மாணிக்க
தொத்தினை துளக்கமில் லாதவி ளக்காய
வித்தினை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியில்
அத்தனை யடையவல் லார்க்கில்லை அல்லலே
காய்ந்தானை காமனை யுஞ்செறு காலனை
பாய்ந்தானை பரியகைம் மாவுரி தோன்மெய்யின்
மேய்ந்தானை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியில்
நீந்தானை நினையவல் லார்வினை நில்லாவே
மறுத்தானை மாமலை யைமதி யாதோடி
செறுத்தானை தேசழி யத்திகழ் தோள்முடி
இறுத்தானை யெழிலமர் வெண்ணியெம் மானென
பொறுத்தானை போற்றுவா ராற்ற லுடையாரே
மண்ணினை வானவ ரோடுமனி தர்க்குங்
கண்ணினை கண்ணனும் நான்முகனுங் காணா
விண்ணினை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியில்
அண்ணலை அடையவல் லார்க்கில்லை அல்லலே
குண்டருங் குணமிலா தசமண் சாக்கிய
மிண்டர்கள் மிண்டவை கேட்டு வெகுளன்மின்
விண்டவர் தம்புரம் எய்தவன் வெண்ணியில்
தொண்டரா யேத்தவல் லார்துயர் தோன்றாவே
மருவாரு மல்குகா ழித்திகழ் சம்பந்தன்
திருவாரு திகழ்தரு வெண்ணி யமர்ந்தானை
உருவாரும் ஒண்டமிழ் மாலை யிவைவல்லார்
பொருவாக புக்கிரு பார்புவ லோகத்தே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் வெண்ணிநாயகர் தேவியார் அழகியநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்காறாயில்
பண் இந்தளம்
திருச்சிற்றம்பலம்
நீரானே நீள்சடை மேலொர் நிரைகொன்றை
தாரானே தாமரை மேலயன் தான்றொழுஞ்
சீரானே சீர்திக ழுந்திரு காறாயில் ஊரானே யென்பவர் ஊனமி லாதாரே
மதியானே வரியர வோடுடன் மத்தஞ்சேர்
விதியானே விதியுடை வேதியர் தாந்தொழும்
நெதியானே நீர்வயல் சூழ்திரு காறாயிற்
பதியானே யென்பவர் பாவமி லாதாரே
விண்ணானே விண்ணவ ரேத்திவி ரும்புஞ்சீர்
மண்ணானே மண்ணிடை வாழுமு யிர்க்கெல்லாங்
கண்ணானே கடிபொழில் சூழ்திரு காறாயில்
எண்ணானே யென்பவர் ஏதமி லாதாரே
தாயானே தந்தையு மாகிய தன்மைகள்
ஆயானே ஆயநல் லன்பர்க்க ணியானே
சேயானே சீர்திக ழுந்திரு காறாயில்
மேயானே யென்பவர் மேல்வினை மேவாவே
கலையானே கலைமலி செம்பொற் கயிலாய
மலையானே மலைபவர் மும்மதில் மாய்வித்த
சிலையானே சீர்திக ழுந்திரு காறாயில்
நிலையானே யென்பவர் மேல்வினை நில்லாவே
ஆற்றானே ஆறணி செஞ்சடை யாடர
வேற்றானே ஏழுல கும்மிமை யோர்களும்
போற்றானே பொழில்திக ழுந்திரு காறாயில்
நீற்றானே யென்பவர் மேல்வினை நில்லாவே
சேர்த்தானே தீவினை தேய்ந்தற தேவர்கள்
ஏத்தானே யேத்துநன் மாமுனி வர்க்கிடர்
காத்தானே கார்வயல் சூழ்திரு காறாயில்
ஆர்த்தானே யென்பவர் மேல்வினை யாடாவே
கடுத்தானே காலனை காலாற் கயிலாயம்
எடுத்தானை யேதமா கம்முனி வர்க்கிடர்
கெடுத்தானே கேழ்கிள ருந்திரு காறாயில்
அடுத்தானே யென்பவர் மேல்வினை யாடாவே
பிறையானே பேணிய பாடலோ டின்னிசை
மறையானே மாலொடு நான்முகன் காணாத
இறையானே யெழில்திக ழுந்திரு காறாயில்
உறைவானே யென்பவர் மேல்வினை ஓடுமே
செடியாரும் புன்சமண் சீவர தார்களும்
படியாரும் பாவிகள் பேச்சு பயனில்லை
கடியாரும் பூம்பொழில் சூழ்திரு காறாயில்
குடியாருங் கொள்கையி னார்க்கில்லை குற்றமே
ஏய்ந்தசீ ரெழில்திக ழுந்திரு காறாயில்
ஆய்ந்தசீ ரானடி யேத்தி யருள்பெற்ற
பாய்ந்தநீர காழியுள் ஞானசம் பந்தன்சொல்
வாய்ந்தவா றேத்துவார் வானுல காள்வாரே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் கண்ணாயிரநாதர் தேவியார் கயிலாயநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருமணஞ்சேரி
பண் இந்தளம்
திருச்சிற்றம்பலம்
அயிலாரும் அம்பத னாற்புர மூன்றெய்து
குயிலாரும் மென்மொழி யாளொரு கூறாகி
மயிலாரும் மல்கிய சோலை மணஞ்சேரி
பயில்வானை பற்றிநின் றார்க்கில்லை பாவமே
விதியானை விண்ணவர் தாந்தொழு தேத்திய
நெதியானை நீள்சடை மேல்நிகழ் வித்தவான்
மதியானை வண்பொழில் சூழ்ந்த மணஞ்சேரி
பதியானை பாடவல் லார்வினை பாறுமே
எய்ப்பானார கின்புறு தேனளி தூறிய
இப்பாலா யெனையும் ஆள வுரியானை
வைப்பான மாடங்கள் சூழ்ந்த மணஞ்சேரி
மெய்ப்பானை மேவிநின் றார்வினை வீடுமே
விடையானை மேலுல கேழுமி பாரெலாம்
உடையானை ஊழிதோ றூழி உளதாய
படையானை பண்ணிசை பாடு மணஞ்சேரி
அடைவானை யடையவல் லார்க்கில்லை யல்லலே
எறியார்பூங் கொன்றையி னோடும் இளமத்தம்
வெறியாருஞ் செஞ்சடை யார மிலைத்தானை
மறியாருங் கையுடை யானை மணஞ்சேரி
செறிவானை செப்பவல் லார்க்கிடர் சேராவே
மொழியானை முன்னொரு நான்மறை யாறங்கம்
பழியாமை பண்ணிசை யான பகர்வானை
வழியானை வானவ ரேத்து மணஞ்சேரி
இழியாமை யேத்தவல் லார்க்கெய்தும் இன்பமே
எண்ணானை யெண்ணமர் சீரிமை யோர்கட்கு
கண்ணானை கண்ணொரு மூன்று முடையானை
மண்ணானை மாவயல் சூழ்ந்த மணஞ்சேரி
பெண்ணானை பேசநின் றார்பெரி யோர்களே
எடுத்தானை யெழில்முடி யெட்டும் இரண்டுந்தோள்
கெடுத்தானை கேடிலா செம்மை யுடையானை
மடுத்தார வண்டிசை பாடும் மணஞ்சேரி
பிடித்தார பேணவல் லார்பெரியோர்களே
சொல்லானை தோற்றங்கண் டானும் நெடுமாலுங்
கல்லானை கற்றன சொல்லி தொழுதோங்க
வல்லார்நன் மாதவ ரேத்து மணஞ்சேரி
எல்லாமாம் எம்பெரு மான்கழல் ஏத்துமே
சற்றேயு தாமறி வில்சமண் சாக்கியர்
சொற்றேயும் வண்ணமொர் செம்மை உடையானை
வற்றாத வாவிகள் சூழ்ந்த மணஞ்சேரி
பற்றாக வாழ்பவர் மேல்வினை பற்றாவே
கண்ணாருங் காழியர் கோன்கரு தார்வித்த
தண்ணார்சீர் ஞானசம் பந்தன் தமிழ்மாலை
மண்ணாரும் மாவயல் சூழ்ந்த மணஞ்சேரி
பண்ணார பாடவல் லார்க்கில்லை பாவமே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் மணவாளநாயகர் தேவியார் யாழ்மொழியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருவேணுபுரம்
பண் இந்தளம்
திருச்சிற்றம்பலம்
நிலவும் புனலும் நிறைவா ளரவும்
இலகுஞ் சடையார கிடமாம் எழிலார்
உலவும் வயலு கொளியார் முத்தம்
விலகுங் கடலார் வேணு புரமே
அரவார் கரவன் அமையார் திரள்தோள்
குரவார் குழலா ளொருகூ றனிடங்
கரவா தகொடை கலந்தா ரவர்க்கு
விரவா கவல்லார் வேணு புரமே
ஆகம் மழகா யவள்தான் வெருவ
நாகம் உரிபோர தவனண் ணுமிடம்
போக தருசீர் வயல்சூழ் பொழில்கள்
மேக தவழும் வேணு புரமே

காச கடலில் விடமுண் டகண்ட
தீசர கிடமா வதுஇன் னறவ
வாச கமல தனம்வன் றிரைகள்
வீச துயிலும் வேணு புரமே
அரையார் கலைசேர் அனமென் னடையை
உரையா வுகந்தா னுறையும் இடமாம்
நிரையார் கமுகின் நிகழ்பா ளையுடை
விரையார் பொழில்சூழ் வேணு புரமே
ஒளிரும் பிறையும் முறுகூ விளவின்
தளிருஞ் சடைமே லுடையா னிடமாம்
நளிரும் புனலின் னலசெங் கயல்கள்
மிளிரும் வயல்சூழ் வேணு புரமே
இப்பதிகத்தில் ம் செய்யுள் சிதைந்து போயிற்று
ஏவும் படைவே தன்இரா வணனை
ஆவென் றலற அடர்த்தா னிடமா
தாவும் மறிமா னொடுதண் மதியம்
மேவும் பொழில்சூழ் வேணு புரமே
கண்ணன் கடிமா மலரிற் றிகழும்
அண்ணல் இருவர் அறியா இறையூர்
வண்ண சுதைமா ளிகைமேற் கொடிகள்
விண்ணிற் றிகழும் வேணு புரமே
போகம் மறியார் துவர்போர துழல்வார்
ஆகம் மறியா அடியார் இறையூர்
மூகம் மறிவார் கலைமு தமிழ்நூல்
மீகம் மறிவார் வேணு புரமே
கலமார் கடல்போல் வளமார் தருநற்
புலமார் தருவே ணுபுர திறையை
நலமார் தருஞா னசம்ப தன்சொன்ன
குலமார் தமிழ்கூ றுவர்கூர் மையரே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருமருகல் விடந்தீர்த்ததிருப்பதிகம்
பண் இந்தளம்
திருச்சிற்றம்பலம்
சடையா யெனுமால் சரண்நீ
விடையா யெனுமால் வெருவா விழுமால்
மடையார் குவளை மலரும் மருகல்
உடையாய் தகுமோ இவள்உள் மெலிவே
சிந்தா யெனுமால் சிவனே
முந்தா யெனுமால் முதல்வா எனுமால்
கொந்தார் குவளை குலவும் மருகல்
எந்தாய் தகுமோ இவள்ஏ சறவே
அறையார் கழலும் மழல்வா யரவும்
பிறையார் சடையும் முடையாய் பெரிய
மறையார் மருகல் மகிழ்வா யிவளை
இறையார் வளைகொண் டெழில்வவ் வினையே
ஒலிநீர் சடையிற் கரந்தா யுலகம்
பலிநீ திரிவாய் பழியில் புகழாய்
மலிநீர் மருகல் மகிழ்வா யிவளை
மெலிநீர் மையளா கவும்வேண் டினையே
துணிநீ லவண்ணம் முகில்தோன் றியன்ன
மணிநீ லகண்ட முடையாய் மருகல்
கணிநீ லவண்டார் குழலாள் இவள்தன்
அணிநீ லவொண்கண் அயர்வா கினையே
பலரும் பரவ படுவாய் சடைமேல்
மலரும் பிறையொன் றுடையாய் மருகல்
புலரு தனையு துயிலாள் புடைபோ
தலரும் படுமோ அடியா ளிவளே
வழுவாள் பெருமான் கழல்வாழ் கவெனா
எழுவாள் நினைவாள் இரவும் பகலும்
மழுவா ளுடையாய் மருகல் பெருமான்
தொழுவா ளிவளை துயரா கினையே
இலங்கை கிறைவன் விலங்க லெடுப்ப
துலங்கவ் விரலூன் றலுந்தோன் றலனாய்
வலங்கொள் மதில்சூழ் மருகற் பெருமான்
அலங்கல் லிவளை அலரா கினையே
எரியார் சடையும் மடியும் மிருவர்
தெரியா ததோர்தீ திரளா யவனே
மரியார் பிரியா மருகற் பெருமான்
அரியாள் இவளை அயர்வா கினையே
அறிவில் சமணும் மலர்சா கியரும்
நெறியல் லனசெய் தனர்நின் றுழல்வார்
மறியே துகையாய் மருகற் பெருமான்
நெறியார் குழலி நிறைநீ கினையே
வயஞா னம்வல்லார் மருகற் பெருமான்
உயர்ஞா னமுணர தடியுள் குதலால்
இயன்ஞா னசம்ப தனபா டல்வல்லார்
வியன்ஞா லமெல்லாம் விளங்கும் புகழே
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருநெல்லிக்கா
பண் இந்தளம்
திருச்சிற்றம்பலம்
அறத்தா லுயிர்கா வலமர தருளி
மறத்தால் மதில்மூன் றுடன்மாண் பழித்த
திறத்தால் தெரிவெய் தியதீ வெண்டிங்கள்
நிறத்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே
பதிதா னிடுகா டுபைங்கொன் றைதொங்கல்
மதிதா னதுசூ டியமை தனுந்தான்
விதிதான் வினைதான் விழுப்பம் பயக்கும்
நெதிதான் நெல்லிக்கா வுள்நிலா யவனே
நலந்தா னவன்நான் முகன்றன் தலையை
கலந்தா னதுகொண் டகபா லியுந்தான்
புலந்தான் புகழா லெரிவிண் புகழும்
நிலந்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே
தலைதா னதுஏ தியதம் மடிகள்
கலைதான் திரிகா டிடம்நா டிடமா
மலைதா னெடுத்தான் மதில்மூன் றுடைய
நிலைதான் நெல்லிக்கா வுள்நிலா யவனே
தவந்தான் கதிதான் மதிவார் சடைமேல்
உவந்தான் சுறவே தனுரு வழி
சிவந்தான் செயச்செய் துசெறு துலகில்
நிவந்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே
வெறியார் மலர்க்கொன் றையந்தார் விரும்பி
மறியார் மலைமங் கைமகிழ தவன்றான்
குறியாற் குறிகொண் டவர்போ குறுகும்
நெறியான் நெல்லிக்கா வுள்நிலா யவனே
பிறைதான் சடைச்சேர தியஎ தைபெம்மான்
இறைதான் இறவா கயிலை மலையான்
மறைதான் புனலொண் மதிமல் குசென்னி
நிறைதான் நெல்லிக்கா வுள்நிலா யவனே
மறைத்தான் பிணிமா தொருபா கந்தன்னை
மிறைத்தான் வரையா லரக்கன் மிகையை
குறைத்தான் சடைமேற் குளிர்கோல் வளையை
நிறைத்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே
தழல்தா மரையான் வையந்தா யவனுங்
கழல்தான் முடிகா ணியநா ணொளிரும்
அழல்தான் அடியார கருளா பயக்கும்
நிழல்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே
கனத்தார் திரைமாண் டழற்கான் றநஞ்சை
எனத்தா வெனவாங் கியதுண் டகண்டன்
மனத்தாற் சமண்சா கியர்மாண் பழிய
நினைத்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே
புகரே துமிலா தபுத்தே ளுலகின்
நிகரா நெல்லிக்கா வுள்நிலா யவனை
நகரா நலஞா னசம்ப தன்சொன்ன
பகர்வா ரவர்பா வமிலா தவரே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் நெல்லிவனேசுவரர் தேவியார் மங்களநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருஅழுந்தூர்
பண் இந்தளம்
திருச்சிற்றம்பலம்
தொழுமா றுவல்லார் துயர்தீ ரநினை
தெழுமா றுவல்லார் இசைபா டவிம்மி
அழுமா றுவல்லார் அழுந்தை மறையோர்
வழிபா டுசெய்மா மடம்மன் னினையே
கடலே றியநஞ் சமுதுண் டவனே
உடலே உயிரே உணர்வே யெழிலே
அடலே றுடையாய் அழுந்தை மறையோர்
விடலே தொழமா மடம்மே வினையே
கழிகா டலனே கனலா டலினாய்
பழிபா டிலனே யவையே பயிலும்
அழிபா டிலராய் அழுந்தை மறையோர்
வழிபா டுசெய்மா மடம்மன் னினையே
வானே மலையே யெனமன் னுயிரே
தானே தொழுவார் தொழுதாள் மணியே
ஆனே சிவனே அழுந்தை யவரெம்
மானே யெனமா மடம்மன் னினையே
அலையார் புனல்சூழ் அழுந்தை பெருமான்
நிலையார் மறியும் நிறைவெண் மழுவும்
இலையார் படையும் மிவையே துசெல்வ
நிலையா வதுகொள் கெனநீ நினையே
நறவார் தலையின் நயவா வுலகிற்
பிறவா தவனே பிணியில் லவனே
அறையார் கழலாய் அழுந்தை மறையோர்
மறவா தெழமா மடம்மன் னினையே
தடுமா றுவல்லாய் தலைவா மதியம்
சுடுமா றுவல்லாய் சுடரார் சடையில்
அடுமா றுவல்லாய் அழுந்தை மறையோர்
நெடுமா நகர்கை தொழநின் றனையே
பெரியாய் சிறியாய் பிறையாய் மிடறுங்
கரியாய் கரிகா டுயர்வீ டுடையாய்
அரியாய் எளியாய் அழுந்தை மறையோர்
வெரியார் தொழமா மடம்மே வினையே
மணீநீள் முடியான் மலையை அரக்கன்
தணியா தெடுத்தான் உடல நெரித்த
அணியார் விரலாய் அழுந்தை மறையோர்
மணிமா மடம்மன் னியிரு தனையே
முடியார் சடையாய் முனநா ளிருவர்
நெடியான் மலரான் நிகழ்வா லிவர்கள்
அடிமே லறியார் அழுந்தை மறையோர்
படியாற் றொழமா மடம்பற் றினையே
அருஞா னம்வல்லார் அழுந்தை மறையோர்
பெருஞா னமுடை பெருமா னவனை
திருஞா னசம்ப தனசெ தமிழ்கள்
உருஞா னமுண்டாம் உணர்ந்தார் தமக்கே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் வேதபுரீசுவரர் தேவியார் சவுந்தராம்பிகையம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்கழிப்பாலை
பண் இந்தளம்
திருச்சிற்றம்பலம்
புனலா டியபுன் சடையாய் அரணம்
அனலா கவிழி தவனே அழகார்
கனலா டலினாய் கழிப்பா லையுளாய்
உனவார் கழல்கை தொழுதுள் குதுமே
துணையா கவொர்தூ வளமா தினையும்
இணையா கவுக தவனே இறைவா
கணையால் எயிலெய் கழிப்பா லையுளாய்
இணையார் கழலே தவிடர் கெடுமே
நெடியாய் குறியாய் நிமிர்புன் சடையின்
முடியாய் சுடுவெண் பொடிமுற் றணிவாய்
கடியார் பொழில்சூழ் கழிப்பா லையுளாய்
அடியார கடையா அவலம் மவையே
எளியாய் அரியாய் நிலம்நீ ரொடுதீ
வளிகா யமென வெளிமன் னியதூ
ஒளியாய் உனையே தொழுதுன் னுமவர
களியாய் கழிப்பா லையமர தவனே
நடநண் ணியொர்நா கமசை தவனே
விடநண் ணியதூ மிடறா விகிர்தா
கடல்நண் ணுகழி பதிகா வலனே
உடன்நண் ணிவணங் குவனுன் னடியே
பிறையார் சடையாய் பெரியாய் பெரியம்
மறையார் தருவாய் மையினா யுலகிற்
கறையார் பொழில்சூழ் கழிப்பா லையுளாய்
இறையார் கழலே தவிடர் கெடுமே
முதிருஞ் சடையின் முடிமேல் விளங்குங்
கதிர்வெண் பிறையாய் கழிப்பா லையுளாய்
எதிர்கொள் மொழியால் இரந்தே துமவர
கதிரும் வினையா யினஆ சறுமே
எரியார் கணையால் எயிலெய் தவனே
விரியார் தருவீழ் சடையாய் இரவிற்
கரிகா டலினாய் கழிப்பா லையுளாய்
உரிதா கிவணங் குவனுன் னடியே
நலநா ரணன்நான் முகன்நண் ணலுற
கனலா னவனே கழிப்பா லையுளாய்
உனவார் கழலே தொழுதுன் னுமவர
கிலதாம் வினைதான் எயிலெய் தவனே
தவர்கொண் டதொழிற் சமண்வே டரொடு
துவர்கொண் டனநுண் துகிலா டையரும்
அவர்கொண் டனவி டடிகள் ளுறையும்
உவர்கொண் டகழி பதியுள் குதுமே
கழியார் பதிகா வலனை புகலி
பழியா மறைஞா னசம்ப தனசொல்
வழிபா டிவைகொண் டடிவாழ தவல்லார்
கெழியார் இமையோ ரொடுகே டிலரே
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
சுவாமிபெயர் பால்வண்ணநாதர் தேவியார் வேதநாயகியம்மை
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்குடவாயில்
பண் இந்தளம்
திருச்சிற்றம்பலம்
திகழு திருமா லொடுநான் முகனும்
புகழும் பெருமான் அடியார் புகல
மகிழும் பெருமான் குடவா யில்மன்னி
நிகழும் பெருங்கோ யில்நிலா யவனே
ஓடு நதியும் மதியோ டுரகம்
சூடுஞ் சடையன் விடைதொல் கொடிமேல்
கூடுங் குழகன் குடவா யில்தனில்
நீடும் பெருங்கோ யில்நிலா யவனே
கலையான் மறையான் கனலே துகையான்
மலையா ளவள்பா கம்மகிழ தபிரான்
கொலையார் சிலையான் குடவா யில்தனில்
நிலையார் பெருங்கோ யில்நிலா யவனே
சுலவுஞ் சடையான் சுடுகா டிடமா
நலமென் முலையாள் நகைசெய் யநடங்
குலவுங் குழகன் குடவா யில்தனில்
நிலவும் பெருங்கோ யில்நிலா யவனே
என்றன் உளமே வியிரு தபிரான்
கன்றன் மணிபோல் மிடறன் கயிலை
குன்றன் குழகன் குடவா யில்தனில்
நின்ற பெருங்கோ யில்நிலா யவனே
அலைசேர் புனலன் னனலன் னமலன்
தலைசேர் பலியன் சதுரன் விதிருங்
கொலைசேர் படையன் குடவா யில்தனில்
நிலைசேர் பெருங்கோ யில்நிலா யவனே
அறையார் கழலன் னமலன் னியலிற்
பறையாழ் முழவும் மறைபா டநடங்
குறையா அழகன் குடவா யில்தனில்
நிறையார் பெருங்கோ யில்நிலா யவனே
வரையார் திரள்தோள் அரக்கன் மடியவ்
வரையா ரவொர்கால் விரல்வை தபிரான்
வரையார் மதில்சூழ் குடவா யில்மன்னும்
வரையார் பெருங்கோ யில்மகிழ தவனே
பொன்னொ பவனும் புயலொ பவனு
தன்னொ பறியா தழலாய் நிமிர்ந்தான்
கொன்னற்</