சிலப்பதிகாரம் புகார காண்டம்
இளங்கோ அடிகள் இயற்றியது
ன
சிலப்பதிகாரம் புகார காண்டம்
மின்னுரையாக்கம் முனைவர் பத்ரிநாராயணன் சேஷாத்ரி சென்னை இந்தியா
பிழைதிருத்தம் முனைவர் வெங்கடரமணன்
தோக்கியோ ஜப்பான்
திரு அன்பு ஜெயா சிட்னி ஆஸ்திரேலியா
உயருரை குறிமொழியாக்கம் முனைவர் வெங்கடரமணன்
தோக்கியோ ஜப்பான்
இம்மின்னுரை தகுதர தமிழெழுத்துக்களிலாக்க பெற்றது எனவே இதனை படிக்க தங்களுக்கு
தகுதர தமிழ்
எழுத்துரு தேவை பல்வேறு கணனி இயக்குதளங்களுக்கு தகுதர எழுத்துக்கள் இலவசமா
கிடைக்கின்றன
இவற்றை பின்வரும் வலையகங்களில் ஏதாவதொன்றிலிருந்து தங்களால் தருவிக்கவியலும்
மேலதிக உதவிக்கு தொடர்புகொள்ள வேண்டிய முகவரி
ன மதுரை திட்டம்
மதுரை திட்டம் தமிழ செவ்விலக்கியங்களை மின்னுரைவடிவில் தளையின்றி ஊடுவலையின் மூலம்
பரப்பும் ஒரு திறந்த தன்னார்வ உலகளாவிய முனைப்பாகும் இத்திட்டம் குறித்த மேலதிக
விபரங்களை பின்வரும் வலையகத்திற் காணலாம்
இம்மின்னுரையை இம்முகப்பு பக்கத்திற்கு மாற்றமின்றி தாங்கள் எவ்வழியிலும்
பிரதியாக்கமோ மறுவெளியீடோ செய்யலாம்
இளங்கோ அடிகள் இயற்றிய சிலப்பதிகாரம்
புகார காண்டம்
பதிகம்
இணைக்குறள் ஆசிரியப்பா
குணவாயில் கோட்டத்து அரசுதுறந்து இருந்த
குடக்கோ சேரல் இளங்கோ வடிகட்கு
குன்ற குறவர் ஒருங்குடன் கூடி
பொலம்பூ வேங்கை நலங்கிளர் கொழுநிழல்
ஒருமுலை இழந்தாள்ஓர் திருமா பத்தினிக்கு
அமரர்க்கு அரசன் தமர்வந்து ஈண்டிஅவள்
காதல் கொழுநனை காட்டி அவளொடுஎம்
கட்புலம் காண விண்புலம் போயது
இறும்பூது போலும்அஃது அறிந்தருள் நீயென
அவனுழை இருந்த தண்தமிழ சாத்தன்
யான்அறி குவன்அது பட்டதுஎன் றுரைப்போன்
ஆரங் கண்ணி சோழன் மூதூர
பேரா சிறப்பின் புகார்நக ரத்து
கோவலன் என்பான்ஓர் வாணிகன் அவ்வூர்
நாடகம் ஏத்தும் நாட கணிகையொடு
ஆடிய கொள்கையின் அரும்பொருள் கேடுற
கண்ணகி என்பாள் மனைவி அவள்கால்
பண்ணமை சிலம்பு பகர்தல் வேண்டி
பாடல்சால் சிறப்பிற் பாண்டியன் பெருஞ்சீர்
மாட மதுரை புகுந்தனன் அதுகொண்டு
மன்பெரும் பீடிகை மறுகிற் செல்வோன்
பொன்செய் கொல்லன் தன்கை காட்ட
கோப்பெரு தேவிக்கு அல்லதை இச்சிலம்பு
யாப்புறவு இல்லைஈங்கு இருக்கயென்று ஏகி
பண்டுதான் கொண்ட சில்லரி சிலம்பினை
கண்டனன் பிறன்ஓர் கள்வன் கையென
வினைவிளை காலம் ஆதலின் யாவதும்
சினையலர் வேம்பன் தேரா னாகி
கன்றிய காவலர கூஉய்அ கள்வனை
கொன்றுஅ சிலம்பு கொணர்க ஈங்கென
கொலைக்கள பட்ட கோவலன் மனைவி
நிலைக்களம் காணாள் நெடுங்கண் நீர்உகுத்து
பத்தினி யாகலின் பாண்டியன் கேடுற
முத்தார மார்பின் முலைமுக திருகி
நிலைகெழு கூடல் நீள்எரி ஊட்டிய
பலர்புகழ் பத்தினி யாகும் இவள்என
வினைவிளை காலம் என்றீர் யாதுஅவர்
வினைவிளைவு என்ன விறலோய் கேட்டி
அதிரா சிறப்பின் மதுரை மூதூர
கொன்றையஞ் சடைமுடி மன்ற பொதியிலில்
வெள்ளியம் பலத்து நள்ளிரு கிடந்தேன்
ஆர்அஞர் உற்ற வீரப தினிமுன்
மதுரைமா தெய்வம் வந்து தோன்றி
கொதியழல் சீற்றம் கொங்கையின் விளைத்தோய்
முதிர்வினை நுங்கட்கு முடிந்தது ஆகலின்
முந்தை பிறப்பில் பைந்தொடி கணவனொடு
சிங்கா வண்புகழ சிங்க புரத்து
சங்கமன் என்னும் வாணிகன் மனைவி
இட்ட சாபம் கட்டியது ஆகலின்
வார்ஒலி கூந்தல்நின் மணமகன் தன்னை
ஈர்ஏழ் நாளகத்து எல்லை நீங்கி
வானோர் தங்கள் வடிவின் அல்லதை
ஈனோர் வடிவில் காண்டல் இல்என
கோட்டம்இல் கட்டுரை கேட்டனன் யான்என
அரைசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற்று ஆவதூஉம்
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம்
சூழ்வினை சிலம்பு காரண மாக
சிலப்பதி காரம் என்னும் பெயரால்
நாட்டுதும் யாம்ஓர் பாட்டுடை செய்யுள்என
முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது
அடிகள் நீரே அருளுகஎன் றார்க்குஅவர்
மங்கல வாழ்த்து பாடலும் குரவர்
மனையறம் படுத்த காதையும் நடம்நவில்
மங்கை மாதவி அரங்கேற்று காதையும்
அந்தி மாலை சிறப்புசெய் காதையும்
இந்திர விழவூர் எடுத்த காதையும்
கடலாடு காதையும்
மடல்அவிழ் கானல்வரியும் வேனில்வ திறுத்தென
மாதவி இரங்கிய காதையும் தீதுடை
கனாத்திறம் உரைத்த காதையும் வினாத்திறத்து
நாடுகாண் காதையும் காடுகாண்
வேட்டுவர் வரியும் தோட்டலர் கோதையொடு
புறஞ்சேரி இறுத்த காதையும் கறங்குஇசை
ஊர்க்காண் காதையும் சீர்சால் நங்கை
அடைக்கல காதையும் கொலைக்கள
ஆய்ச்சியர் குரவையும் தீத்திறம் கேட்ட
துன்ப மாலையும் நண்பகல் நடுங்கிய
ஊர்சூழ் வரியும் சீர்சால் வேந்தனொடு
வழக்குரை காதையும் வஞ்சின மாலையும்
அழல்படு காதையும் அருந்தெய்வம் தோன்றி
கட்டுரை காதையும் மட்டலர் கோதையர்
குன்ற குரவையும் என்றுஇவை அனைத்துடன்
காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்
வாழ்த்து வரந்தரு காதையொடு
இவ்வா றைந்தும்
உரையிடை இட்ட பாட்டுடை செய்யுள்
உரைசால் அடிகள் அருள மதுரை
கூல வாணிகன் சாத்தன் கேட்டனன்
இது பால்வகை தெரிந்த பதிகத்தின் மரபென்
புகார காண்டம்
மங்கல வாழ்த்து பாடல்
சிந்தியல் வெண்பாக்கள்
திங்களை போற்றுதும்
கொங்கலர்த்தார சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ்
வங்கண் உலகுஅளித்த லான்
ஞாயிறு போற்றுதும்
காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு
மேரு வலம்திரி தலான்
மாமழை போற்றுதும்
நாமநீர் வேலி உலகிற்கு அவனளிபோல்
மேநின்று தாஞ்சுரத்த லான்
பூம்புகார் போற்றுதும்
வீங்குநீர் வேலி உலகிற்கு அவன்குலத்தொடு
ஓங்கி பரந்துஒழுக லான்
மயங்கிசை கொச்ச கலிப்பா
ஆங்கு
பொதியில் ஆயினும் இமயம்
பதிஎழு அறியா பழங்குடி கெழீஇய
பொதுஅறு சிறப்பின் புகாரே ஆயினும்
நடுக்கின்றி நிலைஇய என்பது அல்லதை
ஒடுக்கம் கூறார் உயர்ந்தோர் உண்மையின்
முடித்த கேள்வி முழுதுணர தோரே
அதனால்
நாகநீள் நகரொடு நாகநாடு அதனொடு
போகம்நீள் புகழ்மன்னும் புகார்நகர் அதுதன்னில்
மாகவான் நிகர்வண்கை மாநாய்கன் குலக்கொம்பர்
ஈகைவான் கொடியன்னாள் ஈராறுஆண்டு அகவையாள்
அவளுந்தான்
போதில்ஆர் திருவினாள் புகழுடை வடிவென்றும்
தீதிலா வடமீனின் திறம்இவள் திறம்என்றும்
மாதரார் தொழுதுஏத்த வயங்கிய பெருங்குணத்து
காதலாள் பெயர்மன்னும் கண்ணகிஎன் பாள்மன்னோ
ஆங்கு
பெருநிலம் முழுதாளும் பெருமகன் தலைவைத்த
ஒருதனி குடிகளொடு உயர்ந்தோங்கு செல்வத்தான்
வருநிதி பிறர்க்குஆர்த்தும் மாசாத்து வான்என்பான்
இருநிதி கிழவன்மகன் ஈரெட்டுஆண்டு அகவையான்
அவனுந்தான்
மண்தேய்த்த புகழினான் மதிமுக மடவார்தம்
பண்தேய்த்த மொழியினார் ஆயத்து பாராட்டி
கண்டுஏத்தும் செவ்வேள்என்று இசைபோக்கி காதலால்
கொண்டுஏத்தும் கிழமையான் கோவலன்என் பான்மன்னோ
அவரை
இருபெருங் குரவரும் ஒருபெரு நாளால்
மணஅணி காண மகிழ்ந்தனர் மகிழ்ந்துழி
யானை எருத்தத்து அணிஇழையார் மேல்இரீஇ
மாநகர்க்கு ஈந்தார் மணம்
அவ்வழி
முரசுஇயம்பின முருகுஅதிர்ந்தன
முறைஎழுந்தன பணிலம்வெண்குடை
அரசுஎழுந்ததொர் படிஎழுந்தன
அகலுள்மங்கல அணிஎழுந்தது
மாலைதாழ் சென்னி வயிரமணி துணகத்து
நீல விதானத்து நித்திலப்பூம் பந்தர்க்கீழ்
வான்ஊர் மதியம் சகடுஅணைய வானத்து
சாலி ஒருமீன் தகையாளை கோவலன்
மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட
தீவலம் செய்வது காண்பார்க்கண் நோன்புஎன்னை
விரையினர் மலரினர் விளங்கு மேனியர்
உரையினர் பாட்டினர் ஒசிந்த நோக்கினர்
சாந்தினர் புகையினர் தயங்கு கோதையர்
ஏந்துஇள முலையினர் இடித்த சுண்ணத்தர்
விளக்கினர் கலத்தினர் விரித்த பாலிகை
முளைக்குட நிரையினர் முகிழ்த்த மூரலர்
போதொடு விரிகூந்தல் பொலன்நறுங் கொடிஅன்னார்
காதலற் பிரியாமல் கவவுக்கை ஞெகிழாமல்
தீதுஅறுக எனஏத்தி சின்மலர் கொடுதுவி
அங்கண் உலகின் அருந்ததி அன்னாளை
மங்கல நல்அமளி ஏற்றினார் தங்கிய
இப்பால் இமயத்து இருத்திய வாள்வேங்கை
உப்பாலை பொன்கோட்டு உழையதா எப்பாலும்
செருமிகு சினவேல் செம்பியன்
ஒருதனி ஆழி உருட்டுவோன் எனவே
மனையறம்படுத்த காதை
நிலைமண்டில ஆசிரியப்பா
உரைசால் சிறப்பின் அரைசுவிழை திருவின்
பரதர் மலிந்த பயம்கெழு மாநகர்
முழங்குகடல் ஞாலம் முழுவதும் வரினும்
வழங்க தவாஅ வளத்தது ஆகி
அரும்பொருள் தருஉம் விருந்தின் தேஎம்
ஒருங்குதொ கன்ன உடைப்பெரும் பண்டம்
கலத்தினும் காலினும் தருவனர் ஈட்ட
குலத்திற் குன்றா கொழுங்குடி செல்வர்
அத்தகு திருவின் அருந்தவம் முடித்தோர்
உத்தர குருவின் ஒப்ப தோன்றிய
கயமலர கண்ணியும் காதல் கொழுநனும்
மயன்விதி தன்ன மணிக்கால் அமளிமிசை
நெடுநிலை மாடத்து இடைநிலத்து இருந்துழி
கழுநீர் ஆம்பல் முழுநெறி குவளை
அரும்புபொதி அவிழ்ந்த சுரும்புஇமிர் தாமரை
வயற்பூ வாசம் அளைஇ அயற்பூ
மேதகு தாழை விரியல்வெண் தோட்டு
கோதை மாதவி சண்பக பொதும்பர
தாதுதேர்ந்து உண்டு மாதர்வாள் முகத்து
புரிகுழல் அளகத்து புகல்ஏ கற்று
திரிதரு சுரும்பொடு செவ்வி பார்த்து
மாலை தாமத்து மணிநிரைத்து வகுத்த
கோல சாளர குறுங்கண் நுழைந்து
வண்டொடு புக்க மணவா தென்றல்
கண்டு மகிழ்வுஎய்தி காதலில் சிறந்து
விரைமலர் வாளியொடு வேனில்வீற் றிருக்கும்
நிரைநிலை மாடத்து அரமியம் ஏறி
சுரும்புஉண கிடந்த நறும்பூஞ் சேக்கை
கரும்பும் வல்லியும் பெருந்தோள் எழுதி
முதிர்க்கடல் ஞாலம் முழுவதும் விளக்கும்
கதிர்ஒருங் கிருந்த காட்சி போல
வண்டுவாய் திறப்ப நெடுநிலா விரிந்த
வெண்தோட்டு மல்லிகை விரியல் மாலையொடு
கழுநீர பிணையல் முழுநெறி பிறழ
தாரும் மாலையும் மயங்கி கையற்று
தீரா காதலின் திருமுகம் நோக்கி
கோவலன் கூறும்ஓர் குறியா கட்டுரை
குழவி திங்கள் இமையவர் ஏத்த
அழகொடு முடித்த அருமைத்து ஆயினும்
உரிதின் நின்னோடு உடன்பிறப்பு உண்மையின்
பெரியோன் தருக திருநுதல் ஆகஎன
அடையார் முனையகத்து அமர்மேம் படுநர்க்கு
படைவழங் குவதுஓர் பண்புண்டு ஆகலின்
உருவி லாளன் ஒருபெருங் கருப்புவில்
இருகரும் புருவ மாக ஈக்க
மூவா மருந்தின் முன்னர தோன்றலின்
தேவர் கோமான் தெய்வ காவல்
படைநினக்கு அளிக்கஅதன் இடைநினக்கு இடையென
அறுமுக ஒருவன்ஓர் பெறுமுறை இன்றியும்
இறுமுறை காணும் இயல்பினின் அன்றே
அம்சுடர் நெடுவேல் ஒன்றுநின் முகத்து
செங்கடை மழைக்கண் இரண்டா ஈத்தது
மாஇரும் பீலி மணிநிற மஞ்ஞைநின்
சாயற்கு இடைந்து தண்கான் அடையவும்
அன்னம் நல்நுதல் மெல்நடைக்கு அழிந்து
நல்நீர பண்ணை நனிமலர செறியவும்
அளிய தாமே சிறுபசுங் கிளியே
குழலும் யாழும் அமிழ்தும் குழைத்தநின்
மழலை கிளவிக்கு வருந்தின வாகியும்
மடநடை மாதுநின் மலர்க்கையின் நீங்காது
உடன்உறைவு மரீஇ ஒருவா ஆயின
நறுமலர கோதைநின் நலம்பா ராட்டுநர்
மறுஇல் மங்கல அணியே அன்றியும்
பிறிதுஅணி அணி பெற்றதை எவன்கொல்
பல்இருங் கூந்தல் சின்மலர் அன்றியும்
எல்அவிழ் மாலையொடு என்உற் றனர்கொல்
நானம் நல்அகில் நறும்புகை அன்றியும்
மான்மத சாந்தொடு வந்ததை எவன்கொல்
திருமுலை தடத்திடை தொய்யில் அன்றியும்
ஒருகாழ் முத்தமொடு உற்றதை எவன்கொல்
திங்கள்முத்து அரும்பவும் சிறுகுஇடை வருந்தவும்
இங்குஇவை அணிந்தனர் என்உற் றனர்க்கொல்
மாசறு பொன்னே வலம்புரி முத்தே
காசறு விரையே கரும்பே தேனே
அரும்பெறல் பாவாய் ஆர்உயிர் மருந்தே
பெருங்குடி வாணிகன் பெருமட மகளே
மலையிடை பிறவா மணியே என்கோ
அலையிடை பிறவா அமிழ்தே என்கோ
யாழிடை பிறவா இசையே என்கோ
தாழ்இருங் கூந்தல் தையால் நின்னைஎன்று
உலவா கட்டுரை பலபா ராட்டி
தயங்குஇணர கோதை தன்னொடு தருக்கி
மயங்குஇணர தாரோன் மகிழ்ந்துசெல் வுழிநாள்
வாரொலி கூந்தலை பேர்இயல் கிழத்தி
மறுப்புஅருங் கேண்மையொடு அறப்பரி சாரமும்
விருந்து புறந்தருஉம் பெருந்தண் வாழ்க்கையும்
வேறுபடு திருவின் வீறுபெற காண
உரிமை சுற்றமொடு ஒருதனி புணர்க்க
யாண்டுசில கழிந்தன இற்பெருங் கிழமையின்
காண்தகு சிறப்பின் கண்ணகி தனக்குஎன்
வெண்பா
தூ பணிகள்ஒன்றி தோய்ந்தால் எனஒருவார்
காமர் மனைவியென கைகலந்து நாமம்
தொலையாத இன்பம்எலாம் துன்னினார் மண்மேல்
நிலையாமை கண்டவர்ப்போல் நின்று
அரங்கேற்று காதை
நிலைமண்டில ஆசிரியப்பா
தெய்வ மால்வரை திருமுனி அருள
எய்திய சாபத்து இந்திர சிறுவனொடு
தலைக்கோல் தானத்து சாபம் நீங்கிய
மலைப்புஅருஞ் சிறப்பின் வானவர் மகளிர்
சிறப்பிற் குன்றா செய்கையொடு பொருந்திய
பிறப்பிற் குன்றா பெருந்தோள் மடந்தை
தாதுஅவிழ் புரிகுழல் மாதவி தன்னை
ஆடலும் பாடலும் அழகும் என்றுஇ
கூறிய மூன்றின் ஒன்றுகுறை படாமல்
ஏழாண்டு இயற்றிஓர் ஈராறு ஆண்டில்
சூழ்கடல் மன்னற்கு காட்டல் வேண்டி
இருவகை கூத்தின் இலக்கணம் அறிந்து
பலவகை கூத்தும் விலக்கினிற் புணர்த்து
பதினோர் ஆடலும் பாட்டும் கொட்டும்
விதிமாண் கொள்கையின் விளங்க அறிந்துஆங்கு
ஆடலும் பாடலும் பாணியும் தூக்கும்
கூடிய நெறியின கொளுத்துங் காலை
பிண்டியும் பிணையலும் எழிற்கையும் தொழிற்கையும்
கொண்ட வகைஅறிந்து கூத்துவரு காலை
கூடை செய்தகை வாரத்து களைதலும்
வாரம் செய்தகை கூடையிற் களைதலும்
பிண்டி செய்தகை ஆடலிற் களைதலும்
ஆடல் செய்தகை பிண்டியிற் களைதலும்
குரவையும் வரியும் விரவல செலுத்தி
ஆடற்கு அமைந்த ஆசான் தன்னொடும்
யாழும் குழலும் சீரும் மிடறும்
தாழ்குரல் தண்ணுமை ஆடலொடு இவற்றின்
இசைந்த பாடல் இசையுடன் படுத்து
வரிக்கும் ஆடற்கும் உரிப்பொருள் இயக்கி
தேசிக திருவின் ஓசை கடைப்பிடித்து
தேசிக திருவின் ஓசை எல்லாம்
ஆசுஇன்று உணர்ந்த அறிவினன் ஆகி
கவியது குறிப்பும் ஆடல் தொகுதியும்
பகுதி பாடலும் கொளுத்துங் காலை
வசைஅறு கேள்வி வகுத்தனன் விரிக்கும்
அசையா மரபின் இசையோன் தானும்
இமிழ்கடல் வரைப்பில் தமிழகம் அறி
தமிழ்முழுது அறிந்த தன்மையன் ஆகி
வேத்தியல் பொதுவியல் என்றுஇரு திறத்தின்
நாட்டிய நன்னுல் நன்கு கடைப்பிடித்து
இசையோன் வக்கிரி திட்டத்தை உணர்ந்துஆங்கு
அசையா மரபின் அதுபட வைத்து
மாற்றார் செய்த வசைமொழி அறிந்து
நாத்தொலைவு இல்லா நன்னுல் புலவனும்
ஆடல் பாடல் இசையே தமிழே
பண்ணே பாணி தூக்கே முடமே
தேசிகம் என்றுஇவை ஆசின் உணர்ந்து
கூடை நிலத்தை குறைவுஇன்று மிகுத்துஆங்கு
வார நிலத்தை வாங்குபு வாங்கி
வாங்கிய வாரத்து யாழும் குழலும்
ஏங்கிய மிடறும் இசைவன கேட்ப
கூர்உகிர கரணம் குறிஅறிந்து சேர்த்தி
ஆக்கலும் அடக்கலும் மீத்திறம் படாமை
சித்திர கரணம் சிதைவுஇன்றி செலுத்தும்
அத்தகு தண்ணுமை அருந்தொழில் முதல்வனும்
சொல்லிய இயல்பினிற் சித்திர வஞ்சனை
புல்லிய அறிந்து புணர்ப்போன் பண்பின்
வர்த்தனை நான்கும் மயல்அற பெய்துஆங்கு
ஏற்றிய குரல்இளி என்றுஇரு நரம்பின்
ஒப்ப கேட்கும் உணர்வினன் ஆகி
பண்அமை முழவின் கண்ணெறி அறிந்து
தண்ணுமை முதல்வன் தன்னொடு பொருந்தி
வண்ண பட்டடை யாழ்மேல் வைத்துஆங்கு
இசையோன் பாடிய இசையின் இயற்கை
வந்தது வளர்த்து வருவது ஒற்றி
இன்புற இயக்கி இசைபட வைத்து
வார நிலத்தை கேடுஇன்று வளர்த்துஆங்கு
ஈர நிலத்தின் எழுத்துஎழுத்து ஆக
வழுவின்று இசைக்கும் குழலோன் தானும்
ஈர்ஏழ் தொடுத்த செம்முறை கேள்வியின்
ஓர்ஏழ் பாலை நிறுத்தல் வேண்டி
வன்மையிற் கிடந்த தார பாகமும்
மென்மையிற் கிடந்த குரலின் பாகமும்
மெய்க்கிளை நரம்பிற் கைக்கிளை கொள்ள
கைக்கிளை ஒழித்த பாகமும் பொற்புடை
தளரா தாரம் விளரிக்கு ஈத்து
கிளைவழி பட்டனள் ஆங்கே கிளையும்
தன்கிளை அழிவுகண்டு அவள்வயிற் சேர
ஏனை மகளிரும் கிளைவழி சேர
மேலது உழையிளி கீழது கைக்கிளை
வம்புஉறு மரபின் செம்பாலை ஆயது
இறுதி ஆதி ஆக ஆங்குஅவை
பெறுமுறை வந்த பெற்றியின் நீங்காது
படுமலை செவ்வழி பகர்அரும் பாலைஎன
குரல்குரல் ஆக தற்கிழமை திரிந்தபின்
முன்னதன் வகையே முறைமையின் திரிந்துஆங்கு
இளிமுத லாகிய ஏர்படு கிழமையும்
கோடி விளரி மேற்செம் பாலைஎன
நீடி கிடந்த கேள்வி கிடக்கையின்
இணைநரம்பு உடையன அணைவுற கொண்டுஆங்கு
யாழ்மேற் பாலை இடமுறை மெலி
குழல்மேற் கோடி வலமுறை மெலிய
வலிவும் மெலிவும் சமனும் எல்லாம்
பொலி கோத்த புலமை யோனுடன்
எண்ணிய நூலோர் இயல்பினின் வழாஅது
மண்ணகம் ஒருவழி வகுத்தனர் கொண்டு
புண்ணிய நெடுவரை போகிய நெடுங்கழை
கண்ணிடை ஒருசாண் வளர்ந்தது கொண்டு
நூல்நெறி மரபின் அரங்கம் அளக்கும்
கோல்அளவு இருபத்து நால்விரல் ஆக
எழுகோல் அகலத்து எண்கோல் நீளத்து
ஒருகோல் உயரத்து உறுப்பினது ஆகி
உத்தர பலகையொடு அரங்கின் பலகை
வைத்த இடைநிலம் நாற்கோல் ஆக
ஏற்ற வாயில் இரண்டுடன் பொலி
தோற்றிய அரங்கில் தொழுதனர் ஏத்த
பூதரை எழுதி மேல்நிலை வைத்து
தூண்நிழல் புறப்பட மாண்விளக்கு எடுத்துஆங்கு
ஒருமுக எழினியும் பொருமுக
கரந்துவரல் எழினியும் புரிந்துடன் வகுத்துஆங்கு
ஓவிய விதானத்து உரைபெறு நித்திலத்து
மாலை தாமம் வளையுடன் நாற்றி
விருந்துபட கிடந்த அருந்தொழில் அரங்கத்து
பேர்இசை மன்னர் பெயர்ப்புறத்து எடுத்த
சீர்இயல் வெண்குடை காம்புநனி கொண்டு
கண்இடை நவமணி ஒழுக்கி மண்ணிய
நாவல்அம் பொலம்தகட்டு இடைநிலம் போக்கி
காவல் வெண்குடை மன்னவன் கோயில்
இந்திர சிறுவன் சயந்தன் ஆகென
வந்தனை செய்து வழிபடு தலைக்கோல்
புண்ணிய நன்னீர் பொற்குடத்து ஏந்தி
மண்ணிய பின்னர் மாலை அணிந்து
நலம்தரு நாளால் பொலம்பூண் ஓடை
அரசுஉவா தடக்கையில் பரசினர் கொண்டு
முரசுஎழுந்து இ பல்இயம் ஆர்ப்ப
அரைசொடு பட்ட ஐம்பெருங் குழுவும்
தேர்வலம் செய்து கவிகை கொடுப்ப
ஊர்வலம் செய்து புகுந்துமுன் வைத்துஆங்கு
இயல்பினின் வழாஅ இருக்கை முறைமையின்
குயிலுவ மாக்கள் நெறிப்பட நிற்ப
வலக்கால் முன்மிதித்து ஏறி அரங்கத்து
வலத்தூண் சேர்தல் வழக்குஎன பொருந்தி
இந்நெறி வகையால் இடத்தூண் சேர்ந்த
தொல்நெறி இயற்கை தோரிய மகளிரும்
சீர்இயல் பொலிய நீர்அல நீங்க
வாரம் இரண்டும் வரிசையில் பாட
பாடிய வாரத்து ஈற்றில்நின்று இசைக்கும்
கூடிய குயிலுவ கருவிகள் எல்லாம்
குழல்வழி நின்றது யாழே யாழ்வழி
தண்ணுமை நின்றது தகவே தண்ணுமை
பின்வழி நின்றது முழவே முழவொடு
கூடிநின்று இசைத்தது ஆ திரிகை
ஆ திரிகையொடு அந்தரம் இன்றி
கொட்டுஇரண்டு உடையதுஓர் மண்டிலம் ஆ
கட்டிய மண்டிலம் பதினொன்று போக்கி
வந்த முறையின் வழிமுறை வழாமல்
அந்தர கொட்டுடன் அடங்கிய பின்னர்
மீத்திறம் படாமை வக்காணம் வகுத்து
பாற்பட நின்ற பாலை பண்மேல்
நான்கின் ஒரீஇய நன்கனம் அறிந்து
மூன்றுஅளந்து ஒன்று கொட்டி அதனை
ஐந்துமண் டிலத்தால் கூடை போக்கி
வந்தவா ரம்வழி மயங்கிய பின்றை
ஆறும் நாலும் அம்முறை போக்கி
கூறிய ஐந்தின் கொள்கை போல
பின்னையும் அம்முறை பேரிய பின்றை
பொன்இயல் பூங்கொடி புரிந்துடன் வகுத்தென
நாட்டிய நன்னுல் நன்குகடை பிடித்து
காட்டினள் ஆதலின் காவல் வேந்தன்
இலைப்பூங் கோதை இயல்பினில் வழாமை
தலைக்கோல் எய்தி தலைஅரங்கு ஏறி
விதிமுறை கொள்கையின் ஆயிரத்து எண்கழஞ்சு
ஒருமுறை யாக பெற்றனள் அதுவே
நூறுபத்து அடுக்கி எட்டுக்கடை நிறுத்த
வீறுஉயர் பசும்பொன் பெறுவதுஇம் மாலை
மாலை வாங்குநர் சாலும்நம் கொடிக்குஎன
மான்அமர் நோக்கிஓர் கூனிகை கொடுத்து
நகர நம்பியர் திரிதரு மறுகில்
பகர்வனர் போல்வதோர் பான்மையின் நிறுத்த
மாமலர் நெடுங்கண் மாதவி மாலை
கோவலன் வாங்கி கூனி தன்னொடு
மணமனை புக்கு மாதவி தன்னொடு
அணைவுறு வைகலின் அயர்ந்தனன் மயங்கி
விடுதல் அறியா விருப்பினன் ஆயினன்
வடுநீங்கு சிறப்பின்தன் மனையகம் மறந்துஎன்
வெண்பா
எண்ணும் எழுத்தும் இயல்ஐந்தும் பண்நான்கும்
பண்ணின்ற கூத்து பதினொன்றும் மண்ணின்மேல்
போக்கினாள் பூம்புகார பொற்றொடி மாதவிதன்
வாக்கினால் ஆடரங்கில் வந்து
அந்திமாலை சிறப்புசெய் காதை
நிலைமண்டில ஆசிரியப்பா
விரிகதிர் பரப்பி உலகம்முழுது ஆண்ட
ஒருதனி திகிரி உரவோன் காணேன்
அங்கண் வானத்து அணிநிலா விரிக்கும்
திங்கள்அம் செல்வன் யாண்டுஉளன் கொல்என
திசைமுகம் பசந்து செம்மலர கண்கள்
முழுநீர் வார முழுமெயும் பனித்து
திரைநீர் ஆடை இருநில மடந்தை
அரைசுகெடுத்து அலம்வரும் அல்லற் காலை
கறைகெழு குடிகள் கைதலை வைப்ப
அறைபோகு குடிகளொடு ஒருதிறம் பற்றி
வலம்படு தானை மன்னர் இல்வழி
புலம்பட இறுத்த விருந்தின் மன்னரின்
தாழ்துணை துறந்தோர் தனித்துயர் எய்த
காதலர புணர்ந்தோர் களிமகிழ்வு எய்த
குழல்வளர் முல்லையில் கோவலர் தம்மொடு
மழலை தும்பி வாய்வைத்து ஊத
அறுகால் குறும்புஎறிந்து அரும்புபொதி வாசம்
சிறுகால் செல்வன் மறுகில் தூற்ற
எல்வளை மகளிர் மணிவிளக்கு எடுப்ப
மல்லல் மூதூர் மாலைவந்து இருத்தென
இளையர் ஆயினும் பகைஅரசு கடியும்
செருமாண் தென்னர் குலமுதல் ஆகலின்
அந்திவா னத்து வெண்பிறை தோன்றி
புன்கண் மாலை குறும்புஎறிந்து ஓட்டி
பான்மையில் திரியாது பால்கதிர் பரப்பி
மீன்அரசு ஆண்ட வெள்ளி விளக்கத்து
இல்வளர் முல்லையொடு மல்லிகை அவிழ்ந்த
பல்பூஞ் சேக்கை பள்ளியுள் பொலிந்து
செந்துகிர கோவை சென்றுஏந்து அல்குல்
அம்துகில் மேகலை அசைந்தன வருந்த
நிலவுப்பயன் கொள்ளும் நெடுநிலா முற்றத்து
கலவியும் புலவியும் காதலற்கு அளித்துஆங்கு
ஆர்வ நெஞ்சமொடு கோவலற்கு எதிரி
கோலம் கொண்ட மாதவி அன்றியும்
குடதிசை மருங்கின் வெள்அயிர் தன்னொடு
குணதிசை மருங்கின் கார்அகில் துறந்து
வடமலை பிறந்த வான்கேழ் வட்டத்து
தென்மலை பிறந்த சந்தனம் மறுக
தாமரை கொழுமுறி தாதுபடு செழுமலர
காமரு குவளை கழுநீர் மாமலர
பைந்தளிர படலை பருஉக்காழ் ஆரம்
சுந்தர சுண்ண துகளொடு அளைஇ
சிந்துபு பரிந்த செழும்பூஞ் சேக்கை
மந்தமா ருதத்து மயங்கினர் மலிந்துஆங்கு
ஆவியங் கொழுநர் அகலத்து ஒடுங்கி
காவிஅம் கண்ணார் களித்துயில் எய்த
அம்செஞ் சீறடி அணிசிலம்பு ஒழிய
மென்துகில் அல்குல் மேகலை நீங
கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள்
மங்கல அணியின் பிறிதுஅணி மகிழாள்
கொடுங்குழை துறந்து வடிந்துவீழ் காதினள்
திங்கள் வாள்முகம் சிறுவியர்ப்பு இரி
செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மற
பவள வாள்நுதல் திலகம் இழப்ப
தவள வாள்நகை கோவலன் இழப்ப
மைஇருங் கூந்தல் நெய்அணி மறப்ப
கையறு நெஞ்சத்து கண்ணகி அன்றியும்
காதலர பிரிந்த மாதர் நோதக
ஊதுஉலை குருகின் உயிர்த்தனர் ஒடுங்கி
வேனில் பள்ளி மேவாது கழிந்து
கூதிர பள்ளி குறுங்கண் அடைத்து
மலயத்து ஆரமும் மணிமுத்து
அலர்முலை ஆகத்து அடையாது வருந
தாழி குவளையொடு தண்செங் கழுநீர்
வீழ்பூஞ் சேக்கை மேவாது கழி
துணைபுணர் அன்ன துவியிற் செறித்த
இணைஅணை மேம்பட திருந்துதுயில் பெறாஅது
உடைப்பெருங் கொழுநரோடு ஊடல் காலத்து
இடைக்குமிழ் எறிந்து கடைக்குழை ஓட்டி
கலங்கா உள்ளம் கலங கடைசிவந்து
விலங்கிநிமிர் நெடுங்கண் புலம்புமுத்து உறைப்ப
அன்னம் மெல்நடை நன்னீர பொய்கை
ஆம்பல் நாறும் தேம்பொதி நறுவிரை
தாமரை செவ்வா தண்அறல் கூந்தல்
பாண்வாய் வண்டு நோதிறம் பாட
காண்வரு குவளை கண்மலர் விழி
புள்வாய் முரசமொடு பொறிமயிர் வாரணத்து
முள்வா சங்கம் முறைமுறை ஆர்ப்ப
உரவுநீர பரப்பின் ஊர்த்துயில் எடுப்பி
இரவு தலைப்பெயரும் வைகறை காறும்
அரைஇருள் யாமத்தும் பகலும் துஞ்சான்
விரைமலர் வாளியொடு கருப்புவில் ஏந்தி
மகர வெல்கொடி மைந்தன் திரிதர
நகரம் காவல் நனிசிற ததுஎன்
வெண்பா
கூடினார் பால்நிழலா கூடார்ப்பால் வெய்தா
காவலன் வெண்குடைபோல் காட்டிற்றே கூடிய
மாதவிக்கும் கண்ணகிக்கும் வான்ஊர் மதிவிரிந்து
போதுஅவிழ்க்கும் கங்குல் பொழுது
இந்திர விழவு ஊர் எடுத்த காதை
நிலைமண்டில ஆசிரியப்பா
அலைநீர் ஆடை மலைமுலை ஆகத்து
ஆர பேரியாற்று மாரி கூந்தல்
கண்அகன் பரப்பின் மண்ணக மடந்தை
புதைஇருள் படாஅம் போக நீக்கி
உடைய மால்வரை உச்சி தோன்றி
உலகுவிளங்கு அவிர்ஒளி மலர்கதிர் பரப்பி
வேயா மாடமும் வியன்கல இருக்கையும்
மான்கண் காதலர் மாளிகை இடங்களும்
கயவாய் மருங்கில் காண்போர தடுக்கும்
பயன்அறிவு அறியா யவனர் இருக்கையும்
கலம்தரு திருவின் புலம்பெயர் மாக்கள்
கலந்துஇருந்து உறையும் இலங்குநீர் வரைப்பும்
வண்ணமும் சுண்ணமும் தண்நறுஞ் சாந்தமும்
பூவும் புகையும் மேவிய விரையும்
பகர்வனர் திரிதரு நகர வீதியும்
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டும் நுண்வினை காருகர் இருக்கையும்
தூசும் துகிரும் ஆரமும் அகிலும்
மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும்
அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா
வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும்
பால்வகை தெரிந்த பகுதி பண்டமொடு
கூலம் குவித்த கூல வீதியும்
காழியர் கூவியர் கள்நொடை யாட்டியர்
மீன்விலை பரதவர் வெள்உப்பு பகருநர்
பாசவர் வாசவர் பல்நிண விலைஞரொடு
ஓசுநர் செறிந்த ஊன்மலி இருக்கையும்
கஞ்ச காரரும் செம்புசெய் குநரும்
மரங்கொல் தச்சரும் கருங்கை கொல்லரும்
கண்ணுள் வினைஞரும் மண்ஈ டாளரும்
பொன்செய் கொல்லரும் நன்கலம் தருநரும்
துன்ன காரரும் தோலின் துன்னரும்
கிழியினும் கிடையினும் தொழில்பல பெருக்கி
பழுதுஇல் செய்வினை பால்கெழு மாக்களும்
குழலினும் யாழினும் குரல்முதல் ஏழும்
வழுஇன்றி இசைத்து வழித்திறம் காட்டும்
அரும்பெறல் மரபின் பெரும்பாண் இருக்கையும்
சிறுகுறுங் கைவினை பிறர்வினை யாளரொடு
மறுஇன்றி விளங்கும் மருவூர பாக்கமும்
கோவியன் வீதியும் கொடித்தேர்
பீடிகை தெருவும் பெருங்குடி வாணிகர்
மாட மறுகும் மறையோர் இருக்கையும்
வீழ்குடி உழவரொடு விளங்கிய கொள்கை
ஆயுள் வேதரும் கால கணிதரும்
பால்வகை தெரிந்த பன்முறை இருக்கையும்
திருமணி குயிற்றுநர் சிறந்த கொள்கையோடு
அணிவளை போழுநர் அகன்பெரு வீதியும்
சூதர் மாகதர் வேதா ளிகரொடு
நாழிகை கணக்கர் நலம்பெறு கண்ணுளர்
காவல் கணிகையர் ஆடல் கூத்தியர்
பூவிலை மடந்தையர் ஏவல் சிலதியர்
பயில்தொழில் குயிலுவர் பன்முறை கருவியர்
நகைவே ழம்பரொடு வகைதெரி இருக்கையும்
கடும்பரி கடவுநர் களிற்றின் பாகர்
நெடுந்தேர் ஊருநர் கடுங்கண் மறவர்
இருந்துபுறம் சுற்றிய பெரும்பாய் இருக்கையும்
பீடுகெழு சிறப்பின் பெரியோர் மல்கிய
பாடல்சால் சிறப்பின் பட்டின பாக்கமும்
இருபெரு வேந்தர் முனையிடம் போல
இருபால் பகுதியின் இடைநிலம் ஆகிய
கடைகால் யாத்த மிடைமர சோலை
கொடுப்போர் ஓதையும் கொள்வோர்
நடுக்குஇன்றி நிலைஇய நாள்அங் காடியில்
சித்திரை சித்திர திங்கள் சேர்ந்தென
வெற்றிவேல் மன்னற்கு உற்றதை ஒழிக்க என
தேவர் கோமான் ஏவலின் போந்த
காவல் பூதத்து கடைகெழு பீடிகை
புழுக்கலும் நோலையும் விழுக்குஉடை மடையும்
பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து
துணங்கையர் குரவையர் அணங்குஎழுந்து ஆடி
பெருநில மன்னன் இருநிலம் அடங்கலும்
பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரக்க என வாழ்த்தி
மாதர கோலத்து வலவையின் உரைக்கும்
மூதிற் பெண்டிர் ஓதையின் பெயர
மருவூர் மருங்கின் மறம்கொள் வீரரும்
பட்டின மருங்கின் படைகெழு மாக்களும்
முந்த சென்று முழுப்பலி பீடிகை
வெந்திறல் மன்னற்கு உற்றதை ஒழிக்கவென
பலிக்கொடை புரிந்தோர் வலிக்குவரம்பு ஆகவென
கல்உமிழ் கவணினர் கழிப்பிணி கறைத்தோல்
பல்வேல் பரப்பினர் மெய்உற தீண்டி
ஆர்த்து களம்கொண்டோ ர் ஆர்அமர் அழுவத்து
சூர்த்து கடைசிவந்த சுடுனோக்கு கருந்தலை
வெற்றி வேந்தன் கொற்றம் கொள்கவென
நற்பலி பீடிகை நலம்கொள வைத்துஆங்கு
உயிர்ப்பலி உண்ணும் உருமுக்குரல் முழக்கத்து
மயிர்க்கண் முரசொடு வான்பலி ஊட்டி
இருநில மருங்கின் பொருநரை பெறாஅ
செருவெங் காதலின் திருமா வளவன்
வாளும் குடையும் மயிர்க்கண் முரசும்
நாளொடு பெயர்த்து நண்ணார பெறுகஇம்
மண்ணக மருங்கின்என் வலிகெழு தோள்என
புண்ணி திசைமுகம் போகிய அந்நாள்
அசைவுஇல் ஊக்கத்து நசைபிறக்கு ஒழி
பகைவில கியதுஇ பயம்கெழு மலைஎன
இமையவர் உறையும் சிமை பிடர்த்தலை
கொடுவரி ஒற்றி கொள்கையின் பெயர்வோற்கு
மாநீர் வேலி வச்சிர நன்னாட்டு
கோன்இறை கொடுத்த கொற்ற பந்தரும்
மகதநன் நாட்டு வாள்வாய் வேந்தன்
பகைபுறத்து கொடுத்த பட்டிமண் டபமும்
அவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த
நிவந்துஓங்கு மரபின் தோரண வாயிலும்
பொன்னினும் மணியினும் புனைந்தன ஆயினும்
நுண்வினை கம்மியர் காணா மரபின
துயர்நீங்கு சிறப்பின்அவர் தொல்லோர் உதவிக்கு
மயன்விதித்து கொடுத்த மரபின இவைதாம்
ஒருங்குடன் புணர்ந்துஆங்கு உயர்ந்தோர் ஏத்தும்
அரும்பெறல் மரபின் மண்டபம் அன்றியும்
வம்ப மாக்கள் தம்பெயர் பொறித்த
கண்ணெழுத்து படுத்த எண்ணு பல்பொதி
கடைமுக வாயிலும் கருந்தாழ காவலும்
உடையோர் காவலும் ஒரீஇய ஆகி
கட்போர் உளர்எனின் கடுப்ப தலைஏற்றி
கொட்பின் அல்லது கொடுத்தல் ஈயாது
உள்ளுநர பனிக்கும் வெள்ளிடை மன்றமும்
கூனும் குறளும் ஊமும் செவிடும்
அழுகுமெய் யாளரும் முழுகினர் ஆடி
பழுதுஇல் காட்சி நன்னிறம் பெற்று
வலம்செயா கழியும் இலஞ்சி மன்றமும்
வஞ்சம் உண்டு மயல்பகை உற்றோர்
நஞ்சம் உண்டு நடுங்குதுயர் உற்றோர்
அழல்வாய் நாகத்து ஆர்எயிறு அழுந்தினர்
கழல்கண் கூளி கடுநவை பட்டோ ர்
சுழல வந்து தொழத்துயர் நீங்கும்
நிழல்கால் நெடுங்கல் நின்ற மன்றமும்
தவம்மறைந்து ஒழுகும் தன்மை இலாளர்
அவம்மறைந்து ஒழுகும் அலவல் பெண்டிர்
அறைபோகு அமைச்சர் பிறர்மனை நயப்போர்
பொய்க்கரி யாளர் புறங்கூற் றாளர்என்
கைக்கொள் பாசத்து கைப்படு வோர்என
காதம் நான்கும் கடுங்குரல் எடுப்பி
பூதம் புடைத்துஉணும் பூத சதுக்கமும்
அரைசுகோல் கோடினும் அறம்கூறு அவையத்து
உரைநூல் கோடி ஒருதிறம் பற்றினும்
நாவொடு நவிலாது நவைநீர் உகுத்து
பாவைநின்று அழுஉம் பாவை மன்றமும்
மெய்வகை உணர்ந்த விழுமியோர் ஏத்தும்
ஐவகை மன்றத்தும் அரும்பலி உறீஇ
வச்சிர கோட்டத்து மணம்கெழு முரசம்
கச்சை யானை பிடர்த்தலை ஏற்றி
வால்வெண் களிற்றுஅரசு வயங்கிய கோட்டத்து
கால்கோள் விழவின் கடைநிலை சாற்றி
தங்கிய கொள்கை தருநிலை கோட்டத்து
மங்கல நெடுங்கொடி வான்உற எடுத்து
மரகத மணியொடு வயிரம் குயிற்றி
பவள திரள்கால் பைம்பொன் வேதிகை
நெடுநிலை மாளிகை கடைமுகத்து யாங்கணும்
கிம்புரி பகுவா கிளர்முத்து ஒழுக்கத்து
மங்கலம் பொறித்த மகர வாசிகை
தோரணம் நிலைஇய தோம்அறு பசும்பொன்
பூரண கும்பத்து பொலிந்த பாலிகை
பாவை விளக்கு பசும்பொன் படாகை
தூமயிர கவரி சுந்தர சுண்ணத்து
மேவிய கொள்கை வீதியில் செறிந்துஆங்கு
ஐம்பெருங் குழுவும் எண்பேர் ஆயமும்
அரச குமரரும் பரத
கவர்ப்பரி புரவியர் களிற்றின் தொகுதியர்
இவர்ப்பரி தேரினர் இயைந்துஒருங்கு ஈண்டி
அரைசுமேம் படீஇய அகனிலை மருங்கில்
உரைசால் மன்னன் கொற்றம் கொள்கென
மாஇரு ஞாலத்து மன்உயிர் காக்கும்
ஆயிரத்து ஓர்எட்டு அரசுதலை கொண்ட
தண்நறுங் காவிரி தாதுமலி பெருந்துறை
புண்ணிய நல்நீர் பொன்குடத்து ஏந்தி
மண்ணகம் மருள வானகம் வியப்ப
விண்ணவர் தலைவனை விழுநீர் ஆட்டி
பிறவா யாக்கை பெரியோன் கோயிலும்
அறுமுக செவ்வேள் அணிதிகழ் கோயிலும்
வால்வளை மேனி வாலியோன் கோயிலும்
நீல மேனி நெடியோன் கோயிலும்
மாலை வெண்குடை மன்னவன் கோயிலும்
மாமுது முதல்வன் வாய்மையின் வழாஅ
நான்மறை மரபின் தீமுறை ஒருபால்
நால்வகை தேவரும் மூவறு கணங்களும்
பால்வகை தெரிந்த பகுதி தோற்றத்து
வேறுவேறு கடவுளர் சாறுசிறந்து ஒருபால்
அறவோர் பள்ளியும் அறன்ஓம் படையும்
புறநிலை கோட்டத்து புண்ணி தானமும்
திறவோர் உரைக்கும் செயல்சிறந்து ஒருபால்
கொடித்தேர் வேந்தனொடு கூடா மன்னர்
அடித்தளை நீக்க அருள்சிறந்து ஒருபால்
கண்ணு ளாளர் கருவி குயிலுவர்
பண்யாழ புலவர் பாடல் பாணரொடு
எண்அருஞ் சிறப்பின் இசைசிறந்து ஒருபால்
முழவுக்கண் துயிலாது முடுக்கரும் வீதியும்
விழவுக்களி சிறந்த வியலுள் ஆங்கண்
காதல் கொழுநனை பிரிந்துஅலர் எய்தா
மாதர கொடுங்குழை மாதவி தன்னொடு
இல்வளர் முல்லை மல்லிகை மயிலை
தாழி குவளை சூழ்செங் கழுநீர்
பயில்பூங் கோதை பிணையலிற் பொலிந்து
கா களிமகிழ்வு எய்தி காமர்
பூம்பொதி நறுவிரை பொழில்ஆட்டு அமர்ந்து
நாள்மகிழ் இருக்கை நாள்அங் காடியில்
பூமலி கானத்து புதுமணம் புக்கு
புகையும் சாந்தும் புலராது சிறந்து
நகையாடு ஆயத்து நன்மொழி திளைத்து
குரல்வா பாணரொடு நகர பரத்தரொடு
திரிதரு மரபின் கோவலன் போல
இளிவாய் வண்டினொடு இன்இள வேனிலொடு
மலய மாருதம் திரிதரு மறுகில்
கருமுகில் சுமந்து குறுமுயல் ஒழித்துஆங்கு
இருகருங் கயலொடு இடைக்குமிழ் எழுதி
அங்கண் வானத்து அரவுப்பகை அஞ்சி
திங்களும் ஈண்டு திரிதலும் உண்டுகொல்
நீர்வாய் திங்கள் நீள்நிலத்து அமுதின்
சீர்வாய் துவலை திருநீர் மாந்தி
மீன்ஏற்று கொடியோன் மெய்பெற வளர்த்த
வான வல்லி வருதலும் உண்டுகொல்
இருநில மன்னற்கு பெருவளம் காட்ட
திருமகள் புகுந்ததுஇ செழும்பதி ஆம்என
எரிநிறத்து இலவமும் முல்லையும் அன்றியும்
கருநெடுங் குவளையும் குமிழும் பூத்துஆங்கு
உள்வரி கோலத்து உறுதுணை தேடி
கள்ள கமலம் திரிதலும் உண்டுகொல்
மன்னவன் செங்கோல் மறுத்தல் அஞ்சி
பல்உயிர் பருகும் பகுவா கூற்றம்
ஆண்மையில் திரிந்துதன் அருந்தொழில் திரியாது
நாண்உடை கோலத்து நகைமுகம் கோட்டி
பண்மொழி நரம்பின் திவவுயாழ் மிழற்றி
பெண்மையில் திரியும் பெற்றியும் உண்டுஎன
உருவி லாளன் ஒருபெருஞ் சேனை
இகல்அமர் ஆட்டி எதிர்நின்று விலக்கிஅவர்
எழுதுவரி கோலம் முழுமெயும் உறீஇ
விருந்தொடு புக்க பெருந்தோள் கணவரொடு
உடன்உறைவு மரீஇ ஒழுக்கொடு புணர்ந்த
வடமீன் கற்பின் மனையுறை மகளிர்
மாதர்வாள் முகத்து மணித்தோட்டு குவளை
போது புறங்கொடுத்து போகிய செங்கடை
விருந்தின் தீர்ந்திலது ஆயின் யாவதும்
மருந்தும் தரும்கொல்இம் மாநில வரைப்புஎன
கையற்று நடுங்கும் நல்வினை நடுநாள்
உள்அகம் நறுந்தாது உறைப்பமீது அழிந்து
கள்உக நடுங்கும் கழுநீர் போல
கண்ணகி கருங்கணும் மாதவி செங்கணும்
உள்நிறை கரந்துஅகத்து ஒளித்துநீர் உகுத்தன
எண்ணுமுறை இடத்தினும் வலத்தினும் துடித்தன
விண்ணவர் கோமான் விழவுநாள் அகத்துஎன்
கடலாடு காதை
நிலைமண்டில ஆசிரியப்பா
வெள்ளி மால்வரை வியன்பெருஞ் சேடி
கள்அவிழ் பூம்பொழில் கா கடவுட்கு
கருங்கயல் நெடுங்கண் காதலி தன்னொடு
விருந்தாட்டு அயரும்ஓர் விஞ்சை வீரன்
தென்திசை மருங்கின்ஓர் செழும்பதி தன்னுள்
இந்திர விழவுகொண்டு எடுக்கும்நாள் இதுஎன
கடுவிசை அவுணர் கணம்கொண்டு ஈண்டி
கொடுவரி ஊக்கத்து கோநகர் காத்த
தொடுகழல் மன்னற்கு தொலைந்தனர் ஆகி
நெஞ்சுஇருள் கூர நிகர்த்துமேல் விட்ட
வஞ்சம் பெயர்த்த மாபெரும் பூதம்
திருந்துவேல் அண்ணற்கு தேவர்கோன் ஏவ
இருந்துபலி உண்ணும் இடனும் காண்குதும்
அமரா பதிகாத்து அமரனிற் பெற்று
தமரில் தந்து தகைசால் சிறப்பின்
பொய்வகை இன்றி பூமியில் புணர்த்த
ஐவகை மன்றத்து அமைதியும் காண்குதும்
நாரதன் வீணை நயம்தெரி பாடலும்
தோரிய மடந்தை வாரம் பாடலும்
ஆயிரம் கண்ணோன் செவியகம் நிறைய
நாடகம் உருப்பசி நல்காள் ஆகி
மங்கலம் இழப்ப வீணை மண்மிசை
தங்குக இவள்என சாபம் பெற்ற
மங்கை மாதவி வழிமுதல் தோன்றிய
அங்குஅரவு அல்குல் ஆடலும் காண்குதும்
துவர்இதழ செவ்வா துடிஇடை யோயே
அமரர் தலைவனை வணங்குதும் யாம்என
சிமையத்து இமையமும் செழுநீர கங்கையும்
உஞ்சையம் பதியும் விஞ்சத்து அடவியும்
வேங்கட மலையும் தாங்கா விளையுள்
காவிரி நாடும் காட்டி பின்னர
பூவிரி படப்பை புகார்மருங்கு எய்தி
சொல்லிய முறைமையில் தொழுதனன் காட்டி
மல்லல் மூதூர் மகிழ்விழா காண்போன்
மாயோன் பாணியும் வருண பூதர்
நால்வகை பாணியும் நலம்பெறு கொள்கை
வான்ஊர் மதியமும் பாடி பின்னர
சீர்இயல் பொலிய நீர்அல நீங்க
பாரதி ஆடிய அரங்கத்து
திரிபுரம் எரி தேவர் வேண்ட
எரிமுக பேர்அம்பு ஏவல் கேட்ப
உமையவள் ஒருதிறன் ஆக ஓங்கிய
இமையவன் ஆடிய கொடுகொட்டி ஆடலும்
தேர்முன் நின்ற திசைமுகன் காண
பாரதி ஆடிய வியன்பாண்ட ரங்கமும்
கஞ்சன் வஞ்சம் கடத்தற் காக
அஞ்சன வண்ணன் ஆடிய ஆடலுள்
அல்லி தொகுதியும் அவுணன் கடந்த
மல்லின் ஆடலும் மாக்கடல் நடுவண்
நீர்த்திரை அரங்கத்து நிகர்த்துமுன் நின்ற
சூர்த்திறம் கடந்தோன் ஆடிய துடியும்
படைவீழ்த்து அவுணர் பையுள் எய்த
குடைவீழ்த்து அவர்முன் ஆடிய குடையும்
வாணன் பேரூர் மறுகிடை நடந்து
நீள்நிலம் அளந்தோன் ஆடிய குடமும்
ஆண்மை திரிந்த பெண்மை கோலத்து
காமன் ஆடிய பேடி ஆடலும்
காய்சின அவுணர் கடுந்தொழில் பொறாஅள்
மாயவள் ஆடிய மரக்கால் ஆடலும்
செருவெம் கோலம் அவுணர் நீங்க
திருவின் செய்யோள் ஆடிய பாவையும்
வயல்உழை நின்று வடக்கு வாயிலுள்
அயிராணி மடந்தை ஆடிய கடையமும்
அவரவர் அணியுடன் கொள்கையின்
நிலையும் படிதமும் நீங்கா மரபின்
பதினோர் ஆடலும் பாட்டின் பகுதியும்
விதிமாண் கொள்கையின் விளங காணாய்
தாதுஅவிழ் பூம்பொழில் இருந்துயான் கூறிய
மாதவி மரபின் இவள்என
காதலிக்கு உரைத்து கண்டுமகிழ்வு எய்திய
மேதகு சிறப்பின் விஞ்சையன் அன்றியும்
அந்தரத்து உள்ளோர் அறியா மரபின்
வந்துகாண் குறுஉம் வானவன் விழவும்
ஆடலும் கோலமும் அணியும் கடைக்கொள
ஊடல் கோலமோடு இருந்தோன் உவ
பத்து துவரினும் ஐந்து விரையினும்
முப்பத்து இருவகை ஓமா லிகையினும்
ஊறின நல்நீர் உரைத்தநெய் வாசம்
நாறுஇருங் கூந்தல் நலம்பெற ஆட்டி
புகையில் புலர்த்திய பூமென் கூந்தலை
வகைதொறும் மான்மத கொழுஞ்சேறு ஊட்டி
அலத்தகம் ஊட்டிய அம்செஞ் சீறடி
நலத்தகு மெல்விரல் நல்அணி செறீஇ
பரியகம் நூபுரம் பாடகம் சதங்கை
அரியகம் காலுக்கு அமைவுற அணிந்து
குறங்கு செறிதிரள் குறங்கினில் செறித்து
பிறங்கிய முத்தரை முப்பத்து இருகாழ்
நிறம்கிளர் பூந்துகில் நீர்மையின் உடீஇ
காமர் கண்டிகை தன்னொடு பின்னிய
தூமணி தோள்வளை தோளுக்கு அணிந்து
மத்தக மணியொடு வயிரம் கட்டிய
சித்திர சூடகம் செம்பொன் கைவளை
பரியகம் வால்வளை பவழ பல்வளை
அரிமயிர் முன்கைக்கு அமைவுற அணிந்து
வாளை பகுவாய் வணக்குஉறு மோதிரம்
கேழ்கிளர் செங்கேழ் கிளர்மணி மோதிரம்
வாங்குவில் வயிரத்து மரக தாள்செறி
காந்தள் மெல்விரல் கரப்ப அணிந்து
சங்கிலி நுண்தொடர் பூண்ஞான் புனைவினை
அம்கழுத்து அகவயின் ஆரமோடு அணிந்து
கயிற்கடை ஒழுகிய காமர் தூமணி
செயத்தகு கோவையின் சிறுபுறம் மறைத்துஆங்கு
இந்திர நீலத்து இடைஇடை திரண்ட
சந்திர பாணி தகைபெறு கடிப்பிணை
அங்காது அகவயின் அழகுற அணிந்து
தெய்வ உத்தியொடு செழுநீர் வலம்புரி
தொய்யகம் புல்லகம் தொடர்ந்த தலைக்குஅணி
மைஈர் ஓதிக்கு மாண்புற அணிந்து
கூடலும் ஊடலும் கோவலற்கு அளித்து
பாடுஅமை சேக்கை பள்ளியுள் இருந்தோள்
உருகெழு மூதுர் உவவுத்தலை வந்தென
பெருநீர் போகும் இரியல் மாக்களொடு
மடல்அவிழ் கானல் கடல்விளை யாட்டு
காண்டல் விருப்பொடு வேண்டினள் ஆகி
பொய்கை தாமரை புள்வாய் புலம்ப
வைகறை யாமம் வாரணம் காட்ட
வெள்ளி விளக்கம் நள்இருள் கடி
தார்அணி மார்பனொடு பேர்அணி அணிந்து
வான வண்கையன் அத்திரி ஏற
மான்அமர் நோக்கியும் வையம் ஏறி
கோடிபல அடுக்கிய கொழுநிதி குப்பை
மாடமலி மறுகின் பீடிகை தெருவின்
மலர்அணி விளக்கத்து மணிவிளக்கு எடுத்துஆங்கு
அலர்க்கொடி அறுகும் நெல்லும் வீசி
மங்கல தாசியர் தம்கலன் ஒலிப்ப
இருபுடை மருங்கினும் திரிவனர் பெயரும்
திருமகள் இருக்கை செவ்வனம் கழிந்து
மகர வாரி வளம்தந்து ஓங்கிய
நகர வீதி நடுவண் போகி
கலம்தரு திருவின் புலம்பெயர் மாக்கள்
வேலை வாலுகத்து விரிதிரை பரப்பில்
கூல மறுகில் கொடிஎடுத்து நுவலும்
மாலை சேரி மருங்குசென்று எய்தி
வண்ணமும் சாந்தும் மலரும் சுண்ணமும்
பண்ணி பகுதியும் பகர்வோர் விளக்கமும்
செய்வினை கம்மியர் கைவினை விளக்கமும்
காழியர் மோதகத்து ஊழ்உறு விளக்கமும்
கூவியர் கார்அகல் குடக்கால் விளக்கமும்
நொடைநவில் மகடூஉ கடைகெழு விளக்கமும்
இடைஇடை மீன்விலை பகர்வோர் விளக்கமும்
இலங்குநீர் வரைப்பின் கலங்கரை விளக்கமும்
விலங்குவலை பரதவர் மீன்திமில் விளக்கமும்
பொழிபெயர் தேஎத்தர் ஒழியா விளக்கமும்
கழிபெரும் பண்டம் காவலர் விளக்கமும்
எண்ணுவரம்பு அறியா இயைந்துஒருங்கு ஈண்டி
இடிக்கலப்பு அன்ன ஈர்அயில் மருங்கில்
கடிப்பகை காணும் காட்சியது ஆகிய
விரைமலர தாமரை வீங்குநீர பரப்பின்
மருத வேலியின் மாண்புற தோன்றும்
கைதை வேலி நெய்தல்அம் கானல்
பொய்தல் ஆயமொடு பூங்கொடி பொருந்தி
நிரைநிரை எடுத்த புரைதீர் காட்சிய
மலைப்பல் தாரமும் கடல்பல்
வளம்தலை மயங்கிய துளங்குகல இருக்கை
அரசுஇளங் குமரரும் உரிமை சுற்றமும்
பரத குமரரும் பல்வேறு ஆயமும்
ஆடுகள மகளிரும் பாடுகள
தோடுகொள் மருங்கின் சூழ்தரல் எழினியும்
விண்பொரு பெரும்புகழ கரிகால் வளவன்
தண்பதம் கொள்ளும் தலைநாள் போல
வேறுவேறு கோலத்து கம்பலை
சாறுஅயர் களத்து வீறுபெற தோன்றி
கடற்கரை மெலிக்கும் காவிரி பேரியாற்று
இடம்கெட ஈண்டிய நால்வகை வருணத்து
அடங்கா கம்பலை உடங்குஇயைந்து ஒலிப்ப
கடல்புலவு கடிந்த மடல்பூ தாழை
சிறைசெய் வேலி அகவயின் ஆங்குஓர்
புன்னை நீழல் புதுமணல் பரப்பில்
ஓவிய எழினி சூழஉடன் போக்கி
விதானித்து படுத்த வெண்கால் அமளிமிசை
வருந்துபு நின்ற வசந்த மாலைகை
திருந்துகோல் நல்லியாழ் செவ்வனம் வாங்கி
கோவலன் தன்னொடும் கொள்கையின் இருந்தனள்
மாமலர் நெடுங்கண் மாதவி தான்என
வெண்பா
வேலை மடல்தாழை உட்பொதிந்த வெண்தோட்டு
மாலை துயின்ற மணிவண்டு காலை
களிநறவம் தாதுஊ தோன்றிற்றே காமர்
தெளிநிற வெங்கதிரோன் தேர்
கானல் வரி
கட்டுரை
சித்திர படத்துள்புக்கு செழுங்கோட்டின் மலர்புனைந்து
மைத்தடங்கண் மணமகளிர் கோலம்போல் வனப்புஎய்தி
பத்தரும் கோடும் ஆணியும் நரம்பும்என்று
இத்திறத்து குற்றம்நீங்கிய யாழ்கையில் தொழுதுவாங்கி
பண்ணல் பரிவட்டணை ஆராய்தல் தைவரல்
கண்ணிய செலவு விளையாட்டு கையூழ்
நண்ணிய குறும்போக்கு என்று நாட்டிய
எண்வகையால் இசைஎழீஇ
பண்வகையால் பரிவுதீர்ந்து
மரகதமணி தாள்செறிந்த மணிக்காந்தள் மெல்விரல்கள்
பயிர்வண்டின் கிளைபோல பல்நரம்பின் மிசைப்படர
வார்தல் வடித்தல் உந்தல் உறழ்தல்
சீருடன் உருட்டல் தெருட்டல் அள்ளல்
ஏர்உடை பட்டடைஎன இசையோர் வகுத்த
எட்டு வகையின் இசைக்கர ணத்து
பட்டவகைதன் செவியின்ஓர்த்து
ஏவலன் பின் பாணி யாதுஎன
கோவலன் கையாழ் நீட்ட அவனும்
காவிரியை நோக்கினவும் கடல்கானல் வரிப்பாணியும்
மாதவிதன் மனம்மகிழ வாசித்தல் தொடங்குமன்
வேறு ஆற்று வரி
திங்கள் மாலை வெண்குடையான்
சென்னி செங்கோல் அதுஒச்சி
கங்கை தன்னை புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி
கங்கை தன்னை புணர்ந்தாலும்
புலவாது ஒழிதல் கயல்கண்ணாய்
மங்கை மாதர் பெருங்கற்புஎன்று
அறிந்தேன் வாழி காவேரி
மன்னும் மாலை வெண்குடையான்
வளையா செங்கோல் அதுஓச்சி
கன்னி தன்னை புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி
கன்னி தன்னை புணர்ந்தாலும்
புலவாது ஒழிதல் கயல்கண்ணாய்
மன்னும் மாதர் பெருங்கற்புஎன்று
அறிந்தேன் வாழி காவேரி
உழவர் ஓதை மதகுஓதை
உடைநீர் ஓதை தண்பதங்கொள்
விழவர் ஓதை சிறந்துஆர்ப்ப
நடந்தாய் வாழி காவேரி
விழவர் ஓதை சிறந்துஆர்ப்ப
நடந்த எல்லாம் வாய்காவா
மழவர் ஓதை வளவன்தன்
வளனே வாழி காவேரி
வேறு சார்த்து வரி முகச்சார்த்து
கரியமலர் நெடுங்கண் காரிகைமுன்
கடல்தெய்வம் காட்டி காட்டி
அரியசூள் பொய்த்தார் அறன்இலர்என்று
ஏழையம்யாங்கு அறிகோம் ஐய
விரிகதிர் வெண்மதியும் மீன்கணமும்
ஆம்என்றே விளங்கும் வெள்ளை
புரிவளையும் முத்தும்கண்டு ஆம்பல்
பொதிஅவிழ்க்கும் புகாரே எம்மூர்
காதலர் ஆகி கழிக்கானல்
கையுறைகொண்டு எம்பின் வந்தார்
ஏதிலர் தாமாகி யாம்இரப்ப
நிற்பதையாங்கு அறிகோம் ஐய
மாதரார் கண்ணும் மதிநிழல்நீர்
இணைகொண்டு மலர்ந்த நீல
போதும் அறியாது வண்டுஊச
லாடும் புகாரே எம்மூர்
மோது முதுதிரையால் மொத்துண்டு
போந்துஅசைந்த முரல்வா சங்கம்
மாதர் வரிமணல்மேல் வண்டல்
உழுதுஅழிப்ப மாழ்கி ஐய
கோதை பரிந்துஅசைய மெல்விரலால்
கொண்டுஓச்சும் குவளை மாலை
போது சிறங்கணி போவார்கண்
போகா புகாரே எம்மூர்
வேறு முகம் இல் வரி
துறைமேய் வலம்புரி தோய்ந்து மணல்உழுத
தோற்றம் மாய்வான்
பொறைமலி பூம்புன்னை பூஉதிர்ந்து நுண்தாது
போர்க்கும் கானல்
நிறைமதி வாள்முகத்து நேர்க்கயல்கண் செய்த
உறைமலி உய்யாநோய் ஊர்சுணங்கு மென்முலையே
தீர்க்கும் போலும்
கானல் வரி
நிணம்கொள் புலால்உணங்கல் நின்றுபுள் ஓப்புதல்
தலைக்கீடு ஆ
கணம்கொள் வண்டுஆர்த்து உலாம்கன்னி நறுஞாழல்
கையில் ஏந்தி
மணம்கமழ் பூங்கானல் மன்னிமற்று ஆண்டுஓர்
அணங்குஉறையும் என்பது அறியேன் அறிவேனேல்
அடையேன் மன்னோ
வலைவாழ்நர் சேரி வலைஉணங்கும் முன்றில்
மலர்கை ஏந்தி
விலைமீன் உணங்கல் பொருட்டாக வேண்டுஉருவம்
கொண்டு வேறுஓர்
கொலைவேல் நெடுங்கண் கொடுங்கூற்றம் வாழ்வது
அலைநீர்த்தண் கானல் அறியேன் அறிவேனேல்
அடையேன் மன்னோ
வேறு நிலைவரி
கயல்எழுதி வில்எழுதி கார்எழுதி காமன்
செயல்எழுதி தீர்ந்தமுகம் திங்களோ காணீர்
திங்களோ காணீர் திமில்வாழ்நர் சீறூர்க்கே
அம்கண்ஏர் வானத்து அரவுஅஞ்சி வாழ்வதுவே
எறிவளைகள் ஆர்ப்ப இருமருங்கும் ஓடும்
கறைகெழுவேல் கண்ணோ கடுங்கூற்றம் காணீர்
கடுங்கூற்றம் காணீர் கடல்வாழ்நர் சீறூர்க்கே
மடம்கெழுமென் சாயல் மகளா யதுவே
புலவுமீன் வெள்உணங்கல் புள்ஓப்பி கண்டார்க்கு
அலவநோய் செய்யும் அணங்குஇதுவோ காணீர்
அணங்குஇதுவோ காணீர் அடும்புஅமர்த்தண் கானல்
பிணங்குநேர் ஐம்பால்ஓர் பெண்கொண் டதுவே
வேறு முரிவரி
பொழில்தரு நறுமலரே புதுமணம் விரிமணலே
பழுதுஅறு திருமொழியே பணைஇள வனமுலையே
முழுமதி புரைமுகமே முரிபுரு வில்இணையே
எழுதுஅரு மின்இடையே எனைஇடர் செய்தவையே
திரைவிரி தருதுறையே திருமணல் விரிஇடமே
விரைவிரி நறுமலரே மிடைதரு பொழில்இடமே
மருவிரி புரிகுழலே மதிபுரை திருமுகமே
இருகயல் இணைவிழியே எனைஇடர் செய்தவையே
வளைவளர் தருதுறையே மணம்விரி தருபொழிலே
தளைஅவிழ் நறுமலரே தனிஅவள் திரிஇடமே
முளைவளர் இளநகையே முழுமதி புரைமுகமே
இளையவள் இணைமுலையே எனைஇடர் செய்தவையே
வேறு திணை நிலைவரி
கடல்புக்கு உயிர்க்கொன்று வாழ்வர்நின் ஐயர்
உடல்புக்கு உயிர்க்கொன்று வாழ்வைமன் நீயும்
மிடல்புக்கு அடங்காத வெம்முலையோ பாரம்
இடர்புக்கு இடுகும் இடைஇழவல் கண்டாய்
கொடுங்கண் வலையால் உயிர்க்கொல்வான் நுந்தை
நெடுங்கண் வலையால் உயிர்க்கொல்வை மன்நீயும்
வடம்கொள் முலையால் மழைமின்னு போல
நுடங்கி உகுமென் நுசுப்புஇழவல் காண்டாய்
ஓடும் திமில்கொண்டு உயிர்க்கொள்வர் நின்ஐயர்
கோடும் புருவத்து உயிர்க்கொல்வை மன்நீயும்
பீடும் பிறர்எவ்வம் பாராய் முலைசுமந்து
வாடும் சிறுமென் மருங்குஇழவல் கண்டாய்
வேறு
பவள உலக்கை கையால் பற்றி
தவள முத்தம் குறுவாள் செங்கண்
தவள முத்தம் குறுவாள் செங்கண்
குவளை அல்ல கொடிய
புன்னை நீழல் புலவு திரைவாய்
அன்னம் நடப்ப நடப்பாள் செங்கண்
அன்னம் நடப்ப நடப்பாள் செங்கண்
கொன்னே வெய்ய கூற்றம்
கள்வாய் நீலம் கையின் ஏந்தி
புள்வாய் உணங்கல் கடிவாள் செங்கண்
புள்வாய் உணங்கல் கடிவாள் செங்கண்
வெள்வேல் அல்ல வெய்ய
வேறு
சேரல் மடஅன்னம் நடைஒவ்வாய்
சேரல் மடஅன்னம் நடைஒவ்வாய்
ஊர்திரை நீர்வேலி உழக்கி திரிவாள்பின்
சேரல் மடஅன்னம் நடைஒவ்வாய்
கட்டுரை
ஆங்கு கானல்வரி பாடல்கேட்ட
மான்நெடுங்கண் மாதவியும்
மன்னும்ஓர் குறிப்புஉண்டுஇவன்
தன்நிலை மயங்கினான்என
கலவியால் மகிழ்ந்தாள்போல்
புலவியால் யாழ்வாங்கி
தானும்ஓர் குறிப்பினள்போல்
கானல்வரி பாடல்பாணி
நிலத்தெய்வம் வியப்புஎய்த
நீள்நிலத்தோர் மனம்மகிழ
கலத்தொடு புணர்ந்துஅமைந்த
கண்டத்தால் பாடத்தொடங்கும்மன்
வேறு ஆற்று வரி
மருங்கு வண்டு சிறந்துஆர்ப்ப
மணிப்பூ ஆடை அதுபோர்த்து
கருங்க யல்கண் விழித்துஒல்கி
நடந்தாய் வாழி காவேரி
கருங்க யல்கண் விழித்துஒல்கி
நடந்த எல்லாம் நின்கணவன்
திருந்து செங்கோல் வளையாமை
அறிந்தேன் வாழி காவேரி
பூவர் சோலை மயில்ஆல
புரிந்து குயில்கள் இசைபாட
காமர் மாலை அருகுஅசைய
நடந்தாய் வாழி காவேரி
காமர் மாலை அருகுஅசைய
நடந்த எல்லாம் நின்கணவன்
நாம வேலின் திறம்கண்டே
அறிந்தேன் வாழி காவேரி
வாழி அவன்தன் வளநாடு
மகவாய் வளர்க்கும் தாய்ஆகி
ஊழி உய்க்கும் பேர்உதவி
ஒழியாய் வாழி காவேரி
ஊழி உய்க்கும் பேர்உதவி
ஒழியாது ஒழுகல் உயிர்ஓம்பும்
ஆழி ஆள்வான் பகல்வெய்யோன்
அருளே வாழி காவேரி
வேறு சார்த்து வரி
தீங்கதிர் வாள்முகத்தாள் செவ்வாய் மணிமுறுவல் ஒவ்வா வேனும்
வாங்கும்நீர் முத்துஎன்று வைகலும் மால்மகன்போல் வருதிர் ஐய
வீங்குஓதம் தந்து விளங்குஒளிய வெண்முத்தம் விரைசூழ் கானல்
பூங்கோதை கொண்டு விலைஞர்போல் மீளும் புகாரே எம்மூர்
மறையின் மணந்தாரை வன்பரதர் பாக்கத்து மடவார் செங்கை
இறைவளைகள் துற்றுவதை ஏழையம் எங்ஙனம்யாங்கு அறிகோம் ஐய
நிறைமதியும் மீனும் எனஅன்னம் நீள்புன்னை அரும்பி பூத்த
பொறைமலிபூங் கொம்புஏற வண்டுஆம்பல் ஊதும் புகாரே எம்மூர்
உண்டாரை வெல்நறா ஊண்ஓழியா பாக்கத்துள் உறைஒன்று இன்றி
தண்டாநோய் மாதர் தலைத்தருதி என்பதுயாங்கு அறிகோம் ஐய
வண்டல் திரைஅழிப்ப கையால் மணல்முகந்து மதிமேல் நீண்ட
புண்தோய்வேல் நீர்மல்க பரதர் கடல்துர்க்கும் புகாரே எம்மூர்
வேறு திணை நிலைவரி
புணர்த்துணையோடு ஆடும் பொறிஅலவன் நோக்கி
இணர்த்ததையும் பூங்கானல் என்னையும் நோக்கி
உணர்வுஒழி போன ஒலிதிரைநீர சேர்ப்பன்
வணர்சுரி ஐம்பாலோய் வண்ணம் உணரேனால்
தம்முடைய தண்ணளியும் தாமும்தம் மான்தேரும்
எம்மை நினையாது விட்டாரோ விட்டுஅகல்க
அம்மென் இணர அடும்புகாள் அன்னங்காள்
நம்மை மறந்தாரை நாம்மறக்க