கால நதிக்கரையில்
வேசபாநாயகம்
அத்தியாயம்
விளையாட்டு திடலை தாண்டியதும் ஏதோ இதுவரை போயிராத புதிய வழியில் போகிற மாதிரியான உணர்வு ஏற்பட்டது மாற்றம் தெரிந்தது அது என்ன
சற்றே நிதானித்து யோசித்தபின்தான் அந்த புதிர் விடுபட்டது திடல் முடிகிற இடத்திலிருந்து கூப்பிடுதொலைவுக்கு ஒரு நீண்ட வாய்க்கால் போன்ற நீர்ப்பரப்பு இருக்குமே அது இல்லை
பாதைக்கு வலப்பக்கத்தில் இருந்த பெரிய பாசன ஏரியிலிருந்து நீர் பாதையை கடந்து கீழ்ப்பக்கத்து நிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது வெளியேறும் மதகு அமைத்து குழாய் வழியாக கடக்க ஏற்பாடு செய்யாததால் சாலை முழுதுமே வாய்க்காலாகி ஊர்முனை வரை ஒரே நீர்ப்பரப்பாகி கடப்பவர்கள் காலம்காலமாய் அவஸ்தைப்படுகிற இடம் அது எப்போதும் முழங்காலளவு தண்ணீர் இருந்து கொண்டே இருக்கும் வேட்டியை அல்லது புடவையை முழங்கால் உயர்த்தி பிடித்தபடி அவ்வளவு தொலைவும் நீந்தாத குறையாய் மக்கள் சிரமப்பட்டே வந்தார்கள் குழந்தைக¨ளை தூக்கி கொண்டோ வண்டியில் வைத்தோதான் அழைத்து செல்லவேண்டும் சைக்கிள்காரர்கள் பளுதூக்குகிறவர்கள் போல இரண்டு கைகளாலும் சைக்கிளை தலைக்கு மேலே உயர்த்தி தூக்கி பிடித்தபடியேதான் சிதம்பரமே
ஆனால் ஊரில் பணக்காரர்களும் அறிவார்ந்தவர்களும் இருந்தும் அத்தனை ஆண்டுகளாய் யாருக்கும் மாற்று யோசனை ஏன் தோன்றாது போயிற்று அதிகம் படித்து மக்களுக்கு வழிகாட்டியாய் விளங்கிய அப்பாவுக்கும் சமூக சேவையில் ஈடுபட்ட அண்ணனுக்கும்கூட அதில் கவனம் செல்லவில்லை சாலைகளை பராமரிக்கும் அரசுத்துறை ஆண்டுகளய் இந்த பக்கமே வந்ததில்லையா இப்போதுதான் சிதம்பரம் அதை
இப்போது ஊருக்கு பஞ்சாயத்து வந்திருக்கிறது அதன் காரணமாய் சாலையை உயர்த்தி மதகு கட்டி குழாய் அமைத்து நீர் அடக்கமாய் வெளியேற செய்திருக்கிறார்கள் அதனால்தான் முன்னேறி செல்ல பழைய ஆயாசம் ஏற்படவில்லை
வாய்க்காலின் அந்த முனையில் தெருக்கள் தொடங்குமிடத்தில் ஏரி கரையின்மீது ஒரு பெரிய அடர்ந்த அத்திமரம் இருந்ததே அதை நோக்கி நடந்தார்
அத்திமரத்தடியில் எப்போதும் சிறுவர் கூட்டம் இருக்கும் மங்கிய பவழத்தின் நிறத்தில் பெரிது பெரிதாக உதிர்ந்து கிடக்கும் அத்தி பழங்களை ஆவலுடன் பொறுக்கி பிட்டு பார்த்தால் உள்ளே சின்ன சின்ன கொசுக்கள் மொய்த்து
கொண்டிருக்கும் அரிதாக ஒன்றிரண்டு தேறினால் அதிர்ஷ்டம் கொசு மொய்த்தாலும் ஊதி விட்டு தின்கிறவர்களும் இருந்தார்கள்
இப்போது அதற்கும் வாய்ப்பில்லை போலிக்கிறது அந்த அத்தி மரம் இருந்த இடத்தில் நாலைந்து கட்சி கொடிகள் உயரத்தில் போட்டிபோட்டு கொண்டு நின்றன அத்திமரம் முன்பு பார்த்த ஆல இலுப்பை மரங்களை போல கால வெள்ளத்தில் தானாக சாய்ந்ததோ அல்லது விளையாட்டு திடல் கொடிகளுக்கா காலி செய்யப்பட்டதோ ஒவ்வொரு இடமும் ஊரின் பழைய அழகுகளை ஒவ்வொன்றாய் இழந்து போயிருப்பதை
கொடிக்கம்பங்களை நிமிர்ந்து பார்த்தார் அட நம்மூரில் இத்தனை கட்சிகளா பஞ்சாயத்து வரும்வரை எங்கும் சாதி மத இன குழுக்களின் ஆதிக்கம் இருந்ததில்லை திராவிட கட்சிகள் பெற்ற பிறகு அவை கிராமங்களிலும் நுழைந்து இளம் தலைமுறையினரை கட்சி கட்ட செய்திருக்கிறது அதற்கு நம்மூர் மட்டும் எப்படி இலக்காகாமல் இருக்கமுடியும் என்று சிந்தனை ஒடியது
அத்திமரத்துக்கு எதிரில்தான் ஊர தொடக்கத்தின் முதல் தெருவான வடக்கு தெரு இருக்கிறது அத்தெருவின் வீட்டின் முன்னால் கயிற்று கட்டில் போட்டு ஆதிமூல முதலி உட்கார்ந்திருப்பார் இந்த ஊரின் மாட்டு வைத்தியர் அவர் வட்டாரத்துக்கே மாடு வாங்கவும் விற்கவும் நோய்ப்பட்டால் வைத்தியம் பார கவும் பிரசித்திபெற்றவர் ஊருக்குள் நுழைகிற எவரும் பார்வையிலிருந்தும் விசாரிப்பிலிருந்தும் தப்பி விடமுடியாது சிதம்பரம் வெளியூருக்கு படிக்கப்போய் விடுமுறைகளில் வீடு திரும்பும்போது நிறுத்தி
இப்போதும் அவர் தன்னை விசாரிக்க மாட்டாரா என்று இருந்தது சிதம்பரத்துக்கு ஆனால் அது அசட்டு எதிர்பார்ப்பு அவருக்கு தெரிந்தே அந்த காலத்திலேயே இவர் சிறுவனாய் இருந்தபோதே அவருக்கு வயது அறுபதுக்கு மேல் இருக்கும் இப்போது கால விருட்சங்களே காணாது போய்விட்ட நிலையில் மட்டும் சிரஞ்சீவியாய் இருப்பார் எதிர்பார்க்க முடியுமா போல ஊருக்குள் இன்னும் எத்தனைபேர் மறைந்து விட்டார்களோ இவரை அடையாளம் காண மூத்த தலை எதுவும் இருக்க போவதில்லை என்பது நிச்சயம்
கொடி கம்பங்களின் பக்கத்தில் இருந்த படிகள் வழியே ஏறி ஏரிக்கரையின் மீது நின்றார் ஏரியிலும் பெரும் மாறுதல் தெரிந்தது கண்ணுக்கு எட்டியவரை கடல் நீல நீர்ப்பரப்பால் விரவி உள்கரையில் அலைவாரி கட்டப்பட்டு சின்ன போன்ற பரப்பில் அலைகள் கரை நோக்கி வந்து சளார் என அதில் மோதி சிலிர்ப்பை உண்டாக்குமே அது எங்கே நீர் அனேகமாக வற்றி ஆங்காங்கே சின்ன குட்டைகளா தேங்கி அந்த பெரிய ஏரி அழகிழந்து நிற்கிறது அக்கரையில் அடர்ந்து செழித்து இந்த ஊரின் வருமானத்திற்கு ஒரு ஆதாரமாய் விழல்காட்டை காணோம் அவை
ஏரியின் கரைதான் எவ்வளவு அகலமாய் இருந்தது ஒரு வண்டி போகிற அளவுக்கு இருந்த கரை இப்போது குடிசைகளால் நிரம்பி நடக்கவே இடமில்லாதபடி ஆக்கிரமிக்க பட்டிருந்தது பாசன வசதியை பாழ்படுத்துவதில் அனைவருமே மும்மரமாய் ஈடுபட்டிருக்கிற மாதிரி தெரிந்தது மனிதனின் ஆசைக்கு அளவே இல்லையோ இது எதனால் மக்கள் பெருக்கமா அல்லது மனிதர்களின் சுயக்கட்டுப்பாடு இழப்பின் பிரதிபலிப்பா
பெருமூச்சுவிட்டபடி திரும்பி படி இறங்கி கடைசி படியில் நின்றபடி வடக்கு தெருவை ஒரு கண்ணோட்டம் விட்டார் குடிசைகளே அதிகமும் நிரம்பி ஒவ்வொரு வீட்டு வாசலிலும் ஆடோ பன்றியோ கோழியோ மேய்ந்தபடி ஈரக்கசிவும் குப்பைகளும் நடக்கவே கூசும் தெரு இப்போது பளி சென்று நெடுக சிமிண்ட்சாலை போடப்பட்டு குடிசைகள் குறைந்து ஓட்டு வீடுகளும் மச்சு வீடுகளுமாய் கண்ணுக்கு நிறைவாய் இருந்தது பஞ்சாயத்து வந்ததின் பலன்
சிறுபிள்ளையாய் இருந்தபோது இந தெருவுக்கு போகவே அம்மா விடமாட்டார்கள் அதிகமும் இசைவேளாள சாதியினர் வசித்த இத்தெருவில் மேல் சாதி காரர்கள் நடமாடுவதில்லை அத்திமரத்தடியில் நின்றபடியே அத்தெருவில் யாரிடமாவது வேலை இருந்தால் அழைத்து பேசுவது தானே வழக்கம்
கௌரவமானவர்கள் அத்தெருவுக்கு செல்லாதற்கு வேறு ஒரு காரணமும் இருந்தது அந தெரு தாசிகள் தெருவாக வெகுநாட்கள் இருந்திருக்கிறது தேவடியாத்தெரு என்று கொச்சையாய் அழைத்திருக்கிறார்கள் இசைவேளாளர்கள்
வீடுகளில் பெண்களை சிவன் கோயிலுக்கு பொட்டுக்கட்டி விடுகிற பழக்கம் இருந்தது எல்லா வீடுகளிலும் என்றில்லாவிட்டாலும் பரம்பரையாய் சில தொடர்ந்து இப்படி ஆண்டவனுக்கு அடியார்களாக்கி இருக்கிறார்கள் அதனால் தேவரடியார் என்று அழைக்கப்பட்டார்கள் நாளடைவில் அது தேவடியாள்
சிதம்பரம் சிறு பிள்ளையாய் இருக்கையில் அந்த ஊரில் பரம்பரையாய் மூன்று வீடுகளே இந தேவதாசிகள் கொண்டதாக இருந்தது அவர் படித்த போது அவருக்கு மேல் வகுப்பில் ரெங்கம்மா என்ற ஒருத்தி பரம்பரை தேவதாசி
வீட்டிலிருந்து ஐந்து வயதிலேயே பொட்டுக்கட்ட பட்டவள் அப்போது அவளுக்கு ஒன்பது வயது இருக்கும் சிதம்பரம் வகுப்பில் படித்த ஒருத்தி பொன்னம்மா என்பவள் புதிய குடும்பம் ஒன்றிலிருந்து பட்டது அவருக்கு நினைவிருக்கிறது அப்பா அம்மா இருந்தார்கள் ரெங்கம்மாவுக்கு அம்மாதான் உண்டு யாரென்று தெரியாது மிக ஏழ்மையானது அவள் சிவன் கோவிலில் மெய்காவல் வேலை பார்த்தார் வீடுகளில் செய்து கொண்டிருந்தாள் பரம்பரையாக தாசித்தொழிலில் அவர்கள் இல்லாதிருந்த போதும் வறுமை காரணமாக பெண்ணாவது
பிறகு வேறு யாரும் அவருக்கு வினா தெரிந்த பொட்டுக்கட்டி கொள்ளவில்லை இப்பொது அந்த வழக்கம் முற்றிலும் அற்று போயிருக்கலாம் இப்போது அந தெருவை தாசித்தெரு என்று சொல்லவோ அத்தெருவுக்கு செல்ல கூச்ச படவோ அவசியம் இருக்காது
அவருக்கு மேல் வகுப்பில் படித்த ரெங்கம்மாவை பற்றி சிந்தனை ஓடியது அதை சிந்தித்தபடியே அங்கிருந்து நகர்ந்து மெல்ல நடை போட்டார்
சுளுக்கெடுப்பவர்
அமுத்துலிங்கம்
கல்கி எழுதிய ஐந்து பாகம் பொன்னியின் செல்வனில் குந்தவையும் வந்தியத்தேவனும் சந்திக்கும் இடம் மிகவும் சுவாரஸ்யமாக சித்தரிக்க பட்டிருக்கும் குந்தவை வந்தியத்தேவனிடம் பேசும்போதெல்லாம் நீர் பழுவூர் ராணியின் ஒற்றன் எங்கே சென்றீர் என்று என்றே பேசுவாள் வந்தியதேவனோ தேவி தங்களுடைய இதய சிம்மாசனம் தங்கள்
யாழ்ப்பாணத்தில் கணவன் மனைவி பேசும்போது நீர் உமக்கு என்று பேசுவான் மனைவியோ நீங்கள் உங்களுக்கு பேசுவாள் சிறுவர்கள் வாடா போடா என்பார்கள் சிறுமிகள் வாடி போடி பேசுவார்கள் ஆனால் பதின்பருவத்து பெண்ணுடன்
இந்த பருவம் எனக்கும் ஒருமுறை வந்தது
என்னுடைய கொலர் சைசும் வயதும் ஒன்றாயிருந்த வருடம் எனக்கு ஞாபகமிருக்கிறது பள்ளி பருவம் அதற்கு பிறகு என் வயது கூடியும் சைஸ் குறைந்தும் போனது இரண்டும் இணையவே இல்லை அந்த வருடம்தான் கழுத்து சுளுக்கு வந்தது இதற்கு வைத்தியம் எங்கள் கிராமத்தில் எல்லா வீடுகளிலும் இருந்தது எளிய வைத்தியம்தான் நெல் அளக்கும் கொத்தை தலைக்கு கீழ் வைத்து படுப்பது இந்த சிகிச்சை எல்லோருக்கும் வழிவழியாக பலனளித்தது என்று சொன்னார்கள் சின்ன கழுத்தை பெரிய கொத்தில் நாலு நாள் தொடர்ந்து உருட்டினேன் கொத்து தேய்ந்ததுதான் மிச்சம் ஒரு வித பிரயோசனமும் அம்மாவின் கைவைத்தியம் கைகொடுக்கவில்லை இறுதியில் சுளுக்கெடுப்பவரிடம்
அவர் இருந்தது இரண்டு மைல் தூரத்தில் நான் எழும்ப முன்னர் சன்னல் வழியாக காலை வந்துவிட்டது ஐயா என்னை உருட்டி எழுப்பி வெளிக்கிடுத்தி கூட்டிக்கொண்டு போனார் ஒவ்வொரு அடி வைத்தபோதும் கழுத்து விண்விண்ணென்று தெறித்தது எப்படியோ அவ்வளவு தூரத்தையும் கடந்து முடித்தேன்
சுளுக்கெடுப்பவரின் வீட்டுக்கு வந்தபோது அங்கே எனக்கு பெரிய ஆச்சரியம் ஒன்று காத்துக்கொண்டிருந்தது காலிலே கட்டு போட்டபடி முறுக்கிய உடம்புடன் நடுத்தர வயது ஆண் ஒருவர் நின்றுகொண்டிருந்தார் இரண்டு கொலை ஆயுதங்கள்போல கைகள் அவருக்கு தொங்கின எதிர பக்கத்திலே பள்ளி மாணவிபோல தோற்றமளித்த பெண் தென்னை மட்டையில் சீவி எடுத்த கம்புகளை தன் இரு கக்கங்களிலும் வைத்திருந்தாள் அந்த கம்புகளின் மற்ற நுனி மனிதரின்
ஒரு சட்டியிலே இருந்து சிவந்த மண்ணை எடுத்து சுளுக்கெடுப்பவர் அந்த கம்புகளின் மீது தூவி மந்திரம் சொல்லி கொண்டிருந்தார் அது புற்று மண் என்று ஐயா பிறகு சொன்னார் நான் பார்க்கும்போது என் கண்ணுக்கு முன்னாலேயே அந்த கம்புகள் நடுங்கத்தொடங்கின அசைவு மேலும் கீழுமாக இல்லாமல் பக்கவாட்டில் இருந்தன மனிதரும் பெண்ணும் அடித்து வைத்தது மாதிரி நின்றார்கள் மாத்திராம் மந்திர உச்சாடனம் உச்சத்துக்கு போக பேய்த்தனமாக ஆடின கட்டத்தில் நடுக்கம் அதிகமாகி இரண்டு கம்புகளும் நெருங்கி வந்தன ஒன்றையொன்று தொட்டு மீண்டன
சுளுக்கெடுப்பவர் புன்னகை செய்தார் நான் ஐயாவிடம் என்னவென்று விசாரித்தேன் அந்த ஆளின் கால் எலும்பு பொருந்திவிட்டதா என்று அவர் மந்திரித்து பார்த்ததாகவும் கம்புகள் நேர்த்தியாக ஒட்டி கொண்டதால் எலும்புகளும் ஒட்டிக்கொண்டு விட்டதாகவும் இனி கட்டை அவிழ்க்கலாம் என்றும் சொன்னார்
ஐயா வந்த காரியத்தை சுருக்கமா கூறினார் தம்பி உள்ளுக்கு போம் என்றார் சுளுக்கெடுப்பவர் அவர் அன்றும் அதற்கு பிறகு நாட்களிலும் என்னுடன் பேசிய ஒரே வசனம் அதுதான் நான் உள்ளே போய் இருட்டுக்கு கண்களை பழக்கிக்கொண்டு சுற்று முற்றும் பார்த்தேன்
கக்கத்தில் கம்போடு நின்ற பெண் சுழன்றுகொண்டு எங்கிருந்தோ ஓடி வந்தாள் மகளாயிருக்கலாம் கைப்பிடி இல்லாத ஒரு மரக்கதிரையை காட்டி இதிலே நீர் உட்காரும் என்றாள் பிறகு மறைந்துவிட்டாள் நான் கதிரையை தடவிப்பிடித்து ஏறி உட்கார்ந்தேன் கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சம் வந்தது சுவரிலே இரண்டு நாள்காட்டி மாட்டியிருந்தது இரண்டிலுமே தேதி கிடையாது ஒன்று சுவாமி படம் மற்றதில் சுபாஷ் சந்திரபோஸ் இருந்தார் கூரையிலே நீளமான கத்தி செருகியிருந்தது தூக்குபோடுவதற்கு யாரோ ரெடி பண்ணி கடைசியில் மனதை மாற்றியதுபோல விட்டத்தில் இருந்து கயிறு
ஓர் எண்ணெய் நெடி அந்த இடத்தில் பரவியிருந்தது அன்றிலிருந்து அடுத்து வரும் பல வாரங்களுக்கு மணம் என்னை சூழ்ந்தபடி இருக்கும் என்னை படிப்பிக்கும் வாத்தியார்கள்கூட ஒரு தொற்று நோய்க்காரனை நடத்துவதுபோல என்னை கண்டதும் விலகுவார்கள் என் இடது காதுக்குள் சத்தம் கேட்டு நான் திடுக்கிட்டு துள்ளினேன் கழுத்து வலது பக்கம் திரும்பியிருந்ததால் அவள் வந்ததை கவனிக்கவில்லை உமக்கு என்ன சுளுக்கோ என்றாள் இருந்த
நீர் எப்பிடி கண்டுபிடித்தீர்
என்ன அண்டங்காக்காய் போல ஒரு பக்கம் பார்த்து கொண்டிருக்கிறீர் அதுதான்
அப்ப அண்டங்காக்காய் எல்லாத்துக்கும் கழுத்து பிடிப்போ
அவை பிறக்கும்போதே அப்படித்தான் சரி நீர் என்ன படிக்கிறீர்
எட்டாம் வகுப்பு சயன்ஸ் என்றேன் அவள் அதைக்கேட்டு ஒன்றும் பெரிதாக ஆச்சரியப்படவில்லை கண்களைக்கூட விரிக்கவில்லை
நீர் என்ன படிக்கிறீர் என்றேன் என்னுடைய ஊகத்தில் அவளும் என் வகுப்புத்தான் படிக்கவேண்டும் அல்லது ஒரு வகுப்பு கூடவாக இருக்கலாம் அவள் அந்த கேள்விக்கு பதில் அளிக்கவில்லை சரியாய் நோகுதா என்றாள் தலையை அசைக்க ஏலாது உயிர் போகுது உமக்கு சின்ன கழுத்துதானே ஒரே உருவலில் போய்விடும் அவளுடைய தர்க்கம்
பிறகு என்ன நினைத்தாளோ தானாகவே நான் படிப்பை முடிச்சிட்டன் என்றாள்
எத்தனாம் வகுப்பு மட்டும் படிச்சனீர்
எங்கட பள்ளிக்கூடத்தில் இருக்கிற எல்லா வகுப்பும் முடிச்சிட்டன் புத்தகமும் படிச்சிட்டன்
அந்த நேரம் பார்த்து சுளுக்கெடுப்பவர் ஒரு பாம்பு நுழைவதுபோல சத்தமில்லாமல் உள்ளே வந்தார் மந்திரிக்காத நிலையில் அவரை பார்த்தால் படு சாதாரணமாக தெரிந்தார் கம்பீரமும் கிடையாது நெற்றியிலே பட்டை பட்டையாக திருநீறு ஊரிலே எங்கே எலும்பு முறிந்தாலும் அதை நேராக்கும் வைத்தியரின் நெஞ்சு உள்ளுக்கு போய் வளைந்து கிடந்தது கதிரையில் ஒருத்தன் உட்கார்ந்திருக்கிறானே என்று என்னை திரும்பிக்கூட பார்க்கவில்லை சரி கணக்காக நான் பார்க்கமுடியாத இடத்தில் பின்னால் நின்றுகொண்டார் அதுவே திகிலை கொடுத்தது என்ன சதி திட்டம் போடுகிறார் என்பதும் தெரியவில்லை என் உடம்பு சுருங்கி அவர் செய்யப்போவதை ஏற்பதற்கு தயாரானது
கனகி என்று குரல் கொடுத்தார் சரி அவளுடைய பெயர் என்பது தெரிந்தது அவர் என்னிடம் கேட்கப்போகும் கேள்விகளுக்கு மனதுக்குள் பதில்களை தயாரித்தேன் ஒன்றுமே கேட்கவில்லை ஒரு குளவியை அறைக்குள் விட்டு கதவை சாத்தியதுபோல அறையின் இந்த மூலைக்கும் அந்த மூலைக்குமாக சர பறந்துகொண்டிருந்தாள் இடை கைப்பிடி அளவுக்குத்தான் இருந்தது அது
ஒரு சின்ன கிண்ணத்தில் பச்சை நிறத்தில் எண்ணெய் வந்தது விரல்களை வெளியே பிடிக்காமல் விரலை உள்ளுக்கு விட்டு தூக்கிக்கொண்டு வந்தாள் சுளுக்கெடுப்பவர் விரல்களினால் எண்ணெயை தொட்டு என் கழுத்திலே வைத்தார் பின்பு மெல்ல அந்த விரல்கள் ஊர தொடங்கின உடம்பு இன்னும் சிறுத்து
மூன்று நாட்கள் தொடர்ந்து ஐயா என்னை கூட்டிவந்தார் நான்காவது நாள் நான் தனியாகவே வந்தேன் வெளி முற்றத்திலே ஓர் அடுப்பில் தைலம் போன்ற ஏதோ ஒன்று கொதித்துக்கொண்டிருந்தது இரண்டு குதிக்கால்களை ஊன்றிக்கொண்டு ஏணி சாய்த்து வைத்ததுபோல சுவரிலே சாய்ந்துகொண்டு கனகி அடுப்பை அரைக்கண்ணால் பார்த்தபடி நின்றாள் அடர்த்தியான இமைகளின் பாரத்தால் அவள் கண்கள் எப்பவும் பாதி மூடியபடியே இருக்கும் கண்டதும் வாயிலே விரலை வைத்து எனக்கு சைகை காட்டி இருக்க சொன்னாள் ரகஸ குரலில் என்ன காய்ச்சுறீர் நோவுக்கு மருந்தா
இது உமக்கு அல்ல எலும்பு முறிவு நோவுக்கு
உமக்கு இது எல்லாம் தெரியுமா
அவள் மறுமொழி சொல்லவில்லை குண்டானை குனிந்து தீவிரமாக துளாவினாள் நாலு நாளாக அதே உடுப்பைத்தான் அணிந்திருந்தாள் சிங்களவர்கள் அணிவதுபோல கீழுக்கு ஒரு துண்டு மேலுக்கு சட்டை உரித்தெடுத்தால்தான் கழற்றமுடியும் என்பதுபோல உடம்போடு ஒட்டியது அதுவும் பயிற்சி முடிவு பெறாத தையல்காரி தைத்ததுபோல பக்க அளவு கூடியும் மறுபக்கம் குறைந்தும் இருந்தது ஆனால் அவளுடைய தலை மயிர் மாத்திரம் நாளுக்கு விதமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது பின்னுவாள் சொருகுவாள் அள்ளி கட்டுவாள் இன்று சடை சடையாக அவிழ்த்துவிட்டு அது பிருட்டத்தை தாண்டி தொங்கியது இடுப்பு
அப்பா பூசையிலே இருக்கிறார் உதில பேசாமல் இரும்
உமக்கு திலகவதியை தெரியுமா உம்மடை பள்ளிக்கூடத்தில் படிக்கிறவள் எனக்கு தெரியாது தி எழுத்தில் தொடங்கும் வேறு எந்த பெண்ணையும் யோசித்து பார்த்தால் தீனா தீயன்னா வானா வாவன்ன கானா காவன்னா என்று எந்த அட்சரத்தில் ஆனாலும் விட்டு கொடுக்காமல் தெரியும் ஒரு வகுப்புக்கூட
நான் வட்டமான வாய் என்று சொன்னது கனகியின் வாயைத்தான் அவளுக்கு ஒரு அபூர்வமான அவள் வாயை மூடியிருக்கும்போதும் மீன் திறந்ததுபோல உதடுகள்
அவளுக்கு அது பிடிக்கவில்லை முகம் சினந்துகொண்டு வந்தது ஒரு நிமிடம் முன் இருந்த பெண் அங்கே இல்லை என் முகத்தை பார்க்க அருவருத்ததுபோல தீவிரமாக துளாவ தொடங்கினாள் அவள் ஆட்டிய ஆட்டில் குண்டான் இரண்டு பக்கமும் ஆடியது
உமக்கு இவ்வளவு சடையாய் இருக்குதே பேன் கடிக்காதா என்றேன்
ஒரு நாளைக்கு நீர் வந்து பாத்துவிடுமென்
நான் நல்லாய் பாப்பன் எப்ப வர
இன்றைக்கே வாருமென்
சரி என்ன ரைம் வர
நான் பேனை கேட்டு சொல்லுறன்
பள்ளிக்கூடத்தில் நான் நரகவேதனையை அனுபவித்தேன் என்னுடைய வெள்ளை கலர் பிரவுண் சாம்பல் சேர்ட்டெல்லாம் பச்சையாக மாறிக்கொண்டு வந்தது வகுப்பில் என்னுடன் படிக்கும் பையன்கள் எல்லாம் தூரமாகப்போய் உட்கார்ந்தார்கள் பொன்னுசாமி வாத்தியார் உள்ளங் கையாலும் அடிப்பார் பிறங்கையாலும் அவருடைய கேலிக்கும் குறைவில்லை பெருந்தலை சாத்தனாரும் பெரும் உதவி செய்தார் சேய் தாய் முகம் பார்க்க என் உன் பார்த்து வந்தேன் என்று விளக்கிவிட்டு கொஞ்ச இடைவெளி கொடுத்து சர¢ நீ ஆர்
அம்மா தன்னுடைய கை வைத்தியத்தை நிறுத்தவில்லை தலையணையை காயப்போட்டு படுக்கவைத்தார் கம்பளியை சூடாக்கி கழுத்திலே சுற்றி கட்டினார் வைத்தியம் எல்லாம் முடிந்த பிற்பாடு கால் வைத்தியமும் ஆரம்பமானது பக்கத்து வீட்டு சிறுவன் ஒருவன் சுற்றி பிறந்தவன் அவன் வந்து என் கழுத்தில் காலால் தடவி விட்டான் எனக்கு வந்த சுளுக்கு ராச குடும்பத்து இது ஒன்றும் வேலை செய்யவில்லை முதல் நாள் எப்படி இருந்ததோ அந்த தீவிரம் குறையாமல் கழுத்து வலி
அம்மா பேச்சுவாக்கில் ஐயாவுக்கு சொன்னார் எந்த வைத்தியமும் அதுக்கு தக்க ஊதியம் கொடுக்காவிட்டால் பலிக்காது அந்த மனுசன் காசு வாங்க மாட்டார் மரத்திலை பலாப்பழம் ஒன்று பழுத்து கிடங்கு அதை பிடுங்கி குடுங்கோ
நான் அப்பொழுதுதான் சைக்கிள் பழகியிருந்தேன் சுளுக்கு பார்ப்பதற்கு போவதற்கு வெளிக்கிட்டபோது அப்பா சைக்கிளை எடுத்து நிறுத்தி அதிலே பலாப்பழத்தையும் கட்டி என்னை கவனமாக ஓட்டிப்போய் கொடுக்க சொன்னார்
நான் சைக்கிளில் வந்ததை கனகி கவனிக்கவேண்டும் என்ற பெரிய ஆசை எனக்கு வீட்டிலே ஒரு சத்தத்தையும் காணவில்லை சைக்கிள் பெல்லை அடித்ததும் துள்ளலோடு உள்ளேயிருந்து வந்தாள் வழி தவறி குதிரையிலே வந்த ராசகுமாரனை பார்ப்பதுபோல என்னை பார்த்தாள் அந்த பார்வையில் வியப்பும் கனிவும் கலந்து கிடந்தது பலாப்பழத்தை இறக்கினேன் கழுத்து பிடிப்பு ராசகுமாரன் எப்படி தூக்கிக்கொண்டு நடந்திருப்பானோ அப்படி நடந்தேன் அவள் காட்டிய இடத்தில் பழத்தை வைத்தேன் பலாப்பழம் குத்தி என் கைகளில் முள் அடையாளம் விழுந்து தன் முகத்தை வேண்டிய விதத்தில் உயர்த்தியும் சரித்தும் நிறுத்தியும் என்னை புதுக்க பின்னர் கை ரேகைகளை தொட்டு பார்த்து நோகுதா என்றாள் அந்த சின்ன ஸ்பரிசம் அவளுடைய உடம்பின் மிச்ச பகுதிகளில் சேகரமாயிருக்கும் ஆச்சரியங்களை
ஏதோ ஞாபகம் வந்து அவள் ஓடிப்போய் பூசைக்கு வைத்திருந்த மோதகத்தில் இரண்டை எடுத்து வந்தாள் அதில் ஒன்றை சாப்பிட்டபடி மற்றதை நீட்டினாள் நான் ஐயோ வேண்டாம் சாமிக்கு படைக்க முன்னர் சாப்பிடக்கூடாது எனக்கு பாவம் வரும் என்றேன் சாமி ஒன்றும் செய்யாது சாப்பிடும் என்றாள் இல்லை இரவு கழுத்தை திருகும் உமக்குத்தான் கழுத்து மற்ற பக்கம் திரும்பி கிடக்கு திருகினால் சரியா போகும் இன்னொரு முறை கேட்டிருந்தால் வாங்கியிருப்பேன் அதற்கிடையில் அவளுடைய அப்பா சத்தம் கேட்கவே முழு மோதகத்தையும்
ஐயா ஒரேயொரு நாள்தான் சைக்கிள் தந்தார் அதுவும் பலாப்பழம் கட்டி போவதற்கான சலுகை அதற்கு பிறகு வீட்டில் என்னை யாரும் கவனிப்பதில்லை என் கழுத்தை பற்றி அம்மாகூட கவலை படுவதை நிறுத்திவிட்டார் இது நிரந்திரமான ஒரு வியாதி என்று வீட்டிலே சகலரும் முடிவு கட்டிவிட்டார்கள்
நான் காலையில் எழுந்ததும் சுளுக்கு பார்க்க போவதும் பிறகு வந்து உடுப்பு மாற்றி பள்ளிக்கு செல்வதும் வழக்கமாகிவிட்டது வைத்தியரும் முன்பு போல என்னை அவசரமாக பார்த்து அனுப்புவதில்லை நாய்க்கடி பாம்பு கடி எலும்பு முறிவு கரப்பான் பூச்சி துப்பல் அனைத்தையும் பார்த்துவிட்டுத்தான் என்னை பார்ப்பார் பல சமயங்களில் லேட்டாய் போய்ச்சேர
கனகி என்னை கண்டாலும் காணாத மாதிரி சில வேளைகளில் நடந்துகொள்வாள் சமயங்களில் சர என்று குளவிபோல சுற்றி கொண்டு திரிவாள் நாட்களில் கண்களால் மட்டும் சிரிப்பாள் வேறு யதேச்சையாக திரண்டு வந்து பாம்பு செட்டை உரிப்பதற்கு உரசுவதுபோல என்னை உரசிக்கொண்டு போவாள் என் இருதயம் ஒரு துடிப்பை தவறவிட்டு மீண்டும் பிடித்துக்கொள்ளும் அந்த தற்செயலான கணத்துக்காக நான் கழுத்து முழங்கை முதுகு கணுக்கால் பல அங்கங்கள் நிறைய சுளுக்கு
ஒரு நாள் வழக்கம்போல என் முறைக்காக காத்திருந்தேன் கனகி அன்றைக்கு பளிச்சென்று முகம் கழுவி அஞ்சனம் பூசி பொட்டு வைத்து கிட்டதட்ட அழகாகவே இருந்தாள் கீழ் உதடும் மேல் சந்திக்கும் இடம் நேர்க்கோடு போலவும் அவள் வாய் வட்டமாகவும் இருந்தது உடையில் வித மாற்றமும் இல்லை வேளை அதை தோய்த்து காயவைத்து அணிந்திருக்கலாம் தோள்மூட்டு பின் எலும்புகள் தள்ளிக்கொண்டு நின்றன அது முதுகிலும் இரண்டு சின்ன மார்புகள் முளைத்துவிட்டதுபோல என்றுமில்லாத விதமாக அன்று தன் அடர்த்தியான தலைமயிரை
என்னுடைய முறை வந்தபோது நான் கதிரையில் போய் ஏறி உட்கார்ந்தேன் சுளுக்கெடுப்பவரில் எனக்கு நம்பிக்கை எப்போவோ போய்விட்டது அவருக்கும் என்னில் மதிப்பு இல்லை என்பது அப்பட்டமாக தெரிந்தது ஏனோதானோவென்று கழுத்தை பிடித்து உருவ ஆரம்பித்தார் வலியும் பழகிவிட்டது சிலநேரம் இதமாகக்கூட இருந்தது ஒரு முக்கால்வாசி வேலை முடிந்திருக்கும் வெளியே தடதடவென்று பெரிய சத்தம் கேட்டது அதை தொடர்ந்து இரண்டு பெண்களின் அழுகை ஓலம் எழும்பியது கட்டிலில் ஒருவரை கிடத்தி நாலு பேர் தூக்கிக்கொண்டு வந்தார்கள் அவருக்கு பாம்பு கடித்திருந்தது மனிதர் வாயிலே நுரை தள்ள பேச்சு மூச்சின்றி
இது எல்லாவற்றையும் என்னால் கதிரையில் உட்கார்ந்தபடியே காணக்கூடியதாக இருந்தது சுளுக்கெடுப்பவர் கனகியை கூப்பிட்டு கழுத்தை பார்க்க சொல்லிவிட்டு சட்டென்று வெளியே போனார் சனங்கள் அவரை சூழ்ந்து கொண்டார்கள் ஆளாளுக்கு பாம்பு எப்படி வந்தது எங்கே கடித்தது எப்போது என்ற விசயத்தை ஒரே சமயத்தில் கூறினார்கள்
கனகி இது ஒன்றையும் கவனித்ததாக தெரியவில்லை அவளுடைய பத்து விரல்களும் ஒரு மென்மையான ஒழுங்குடன் என் கழுத்தில் ஊர தொடங்கின அவை விரல்கள்போலவே இல்லை இப்பொழுதுதான் முற்றிய திராட்சை பழங்கள்போல இருந்தன என்னுடைய கழுத்து போய் புது கழுத்து வந்ததுபோல இருந்தது இருந்த அத்தனை நரம்புகளும் வேலை செ நான் கதிரையில் இருந்தாலும் அதில் இருக்கவில்லை அந்த வெளியை நிறைத்திருந்தாலும் நிறைக்கவில்லை நெஞ்சுக்கூட்டுக்குள் இன்னொரு இருதயம் புகுந்துவிட்டதுபோல படபடப்பு இரண்டு மடங்கானது கழுத்தும் வலியும்
திடீரென்று வெளியே பெரும் கூக்குரல் கேட்டது இரண்டு பெண்களும் நெஞ்சிலே மடார் என்று அறைந்தார்கள் ஐயோ என்னை விட்டு போயிட்டியே நான் என்ன செய்வன் ஒரு பெண்
கதிரைக்கு பின்னால் நின்ற நிலையில் விரல்களை கழுத்தில் அழுத்தியபடி கனகி தலையை கவிழ்த்தாள் அவள் முகம் அணுகுமுன் கத்தையான குழல் கட்டுகள் என் மேல் விழுந்து முகத்தை மறைத்தன என்னை முத்தமிட்டு கொண்டிருப்பதை கண்டேன் கணக்கு வைக்கவில்லை எந்த காரணம் கொண்டும் கழுத்து பிடியை
நாள் போக போக கழுத்து சுளுக்கின் தீவிரம் குறைந்தது நான் அங்கு போவதையும் நிறுத்திவிட்டேன் ஒரு நாளாவது அவளை கனகி என்று பெயர் சொல்லி அழைத்ததில்லை இறுதிவரை நீர் உம்முடைய உமக்கு என்றே பேசினேன் யோசித்து பார்த்ததில் அவளுக்கும் என் தெரியாது அவளும் பேசினாள் ஒருவேளை தெரிந்தும் கூப்பிடவில்லையோ
அவளுடைய பெயர் என்னவாயிருக்கும் என்று யோசித்திருக்கிறேன் கனகேஸ்வரி கனகாம்பிகை கனகராணி கனகவல்லி கனகாங்கி கனகபாக்கியம் இதில் ஒன்றாக இருக்கும் ஒரு காலத்தில் கனகி பேரும் புகழும் பெற்ற தாசி எங்களூரில் வாழ்ந்திருக்கிறாள் வழி வந்தவளாக இருக்கலாம் அத்தனை நாட்கள் பழகியும் அதை அறியவில்லையே என்ற துக்கம் கொஞ்சம்
சுளுக்கு வந்ததுபோலவே திடீரென்று ஒருநாள் போனதற்கு என்ன காரணம் என்று யோசித்து பார்த்தேன் அம்மா நாள் முழுக்க இதே வேலையாக தலையணையை வெய்யிலிலே மாற்றி இரண்டு பக்கமும் காயப்போட்டு அதில் என்னை படுக்க வைத்ததால் இருக்கலாம் வேப்பமரத்தூள் ஒத்தடம் கைகண்ட மருந்து சொல்கிறார்கள் அதுவாக எடுப்பவரின் விரல்கள் ஊர்ந்து போய் உற்பத்தியாகும் மூல நரம்பு முடிச்சை கண்டுபிடித்து நேராக்கியதால் ஒருவேளை வைத்தியருக்கு ஊதியம் கொடுக்காவிட்டால் பலிக்காது சொன்னதால் சைக்கிள் காரியரில் கட்டி வலது பக்க வேலிகளை பார்த்தபடி
நிச்சயமாக அந்த காரணம் கனகியை அவள் கணவன் வந்து கூட்டிப்போனதால் இருக்கமுடியாது
முற்றும்
ஊதா நிற சட்டையில்
குரல்செல்வன்
காரை நிறுத்த பல இடங்கள் காலியாக இருந்தன ஒன்றே ஒன்றில் மட்டும் நிழல் விழுந்தது அந்த இடத்தில் சூரன் நிறுத்தினான் மார மாதத்திற்கு வெயில் சற்று அதிகம்தான் தேவை பட்டது மூன்றரைக்கு தான் வார்ம்அ பிறகு நான்கு மணிக்கு மாட சாலையில் எந்த வி தடங்கலும் இல்லாததால் பதினைந்து நிமிடங்களுக்கு முன்பே வந்து விட்டான் அவன் பள்ளியை சேர்ந்த மற்ற பையன்களை காணோம் அவர்கள் வரும் வரையில் காரிலேயே உட்கார முடிவு
க்ரீன் ஹில்ஸ் அகடெமி பணக்கார பள்ளி என்று அதன் டென்னிஸ் சென்டரை பார்த்தே சொல்லி விடலாம் இரண்டு வரிசைகளில் சீராக பராமரிக்க பட்ட பத்து கோர்ட்டுகள் எந்த வலையிலும் தொய்வு இல்லை தரையில் எங்கும் விரிசல் கிடையாது நடுவில் ஒரு பெரிய தெற்கத்திய லைவ் மரம் அதை ஒட்டிய கட்டிடம் மரத்தடியில் உட்கார்ந்து மாட பார்ப்பதற்காக உயர்ந்த படி பெஞ அந்த பள்ளியின் அடையாளமாக சிவப்பு சட்டை அணிந்த பையன்கள் பந்தடித்து கொண்டிருந்தார்கள் அவர்களில் மார ஆன்டர்சன் நிச்சயம் இருப்பான் மற்றவர்களை பற்றி அவனுக்கு அக்கறை எல்லாம் பணக்கார கும்பல்கள் அரசாங்க பள்ளியோடு விளையாடுவது கௌரவ குறைவு நினைக்கிற அலட்சியம் கணக்கு விஞ்ஞானம் பேச்சு பல போட்டிகளுக்கு அழைத்த போதெல்லாம் ஏதோ காரணம் காட்டி வர மறுத்து விட்டார்கள் போட்டிக்கு மட்டும் ஒப்பு கொள்கிறார்கள் ஜெயித்து விடுவோம் என்கிற நம்பிக்கை
ஒன்பது மாதங்களுக்கு பிறகு இப்போதுதான் அந்த டென்னிஸ் சென்டருக்கு வருகிறான் மாதங்கள்தானா ஏதோ பல காலம் கடந்துவிட்டது போல் தோன்றுகிறது சென்ற முறை இங்கு வந்த தேதி கூட நினைவிருக்கிறது ஜூன் மாதம் பத்தாம் எப்படி நாளை மறக்க முடியும் இந்த கோர்ட்டுகளில் நடந்த இரண்டாவது முக்கியமான நிகழ்ச்சி ஆயிற்றே அது முதலாவது ஏழு ஆண்டுகளுக்கு முன் பத்து வயதில் ஊருக்கு புதிதில் நடந்தது வரையில் சில சில்லரை டோர்னமென்ட்டுகளை ஜெயித்து தான் ஒரு காலத்தில் சாம்ப்ராஸ் போலவோ அகாஸி பெரிய ஆட்டக்காரனாக விளங்க போவதா கனவு அவர்களுடன் ஒப்பிட தக்க ப்ரையன் பேக்கருடன் விளையாடிய போதுதான் அந்த கலைந்தது பதினைந்து நிமிட மாட இரண்டு
கடைசியாக இங்கு விளையாட வந்த போது சூரன் டென்னஸியில் பத்தில் ஒரு ஆட்ட காரன் ஒன்பது மாதங்கள் டோர்னமென்ட்டில் ஆடாததால் இப்போதைய ராங்க்கிங் நூற்றுக்குள் இருந்தால் அதிசயம் அந்த வீழ்ச்சிக்கு டேய்டன் ஊரிலிருந்து பையன் தூண்டு கோல் ஆனான் அவனுடைய முந்தைய மாட்ச்சை பார்த்த சூரனின் தந்தை சாமி ‘உன் விளையாட்டை நீ ஆடும் வரை அவனால் உனக்கு இடையூறு வராது’ என்று தைரியம் கொடுத்திருந்தார் மாட தொடங்கும் முன் அந்த பிரார்த்தனை செய்தான் அரை நிமிட மௌனம் பிறகு மெல்லிய குரலில் சொன்னாலும் காதில் தெளிவாக விழுந்தது ‘இறவா இந்த வாய்ப்பு தந்ததற்கு நன்றி என்னுடன் இருந்து எனக்கு வழி காட்ட வேண்டும்’ எந்த வித எதிர்ப்பும் இல்லாமல் ஆறு ஒன்று முதல் செ முடிந்தது ‘இரண்டாவது செட்’ அறிவித்த சர்வ் ‘லாங்க்’ தடுத்த பந்து திரும்பி வந்து வேலியின் பக்கம் சென்றது பையிலிருந்து இன்னொரு பந்தை எடுத்து தரையில் மூன்று முறை தட்டி எடுத்து மேலே எறிந்து அதை அடிக்க தயாரானான் வேலியில் பட்ட மெதுவாக அவனுக்கு பின்னால் நின்றது அதை கவனிக்கவில்லை கண்ணில் பட்டிருக்க வேண்டும் அவன் சூரனை நிறுத்த சொல்லி இருக்கும் அகற்றிய பிறகுதான் விளையாட்டை தொடர்ந்திருக்க ஆனால் அப்படி செய்யவில்லை அது மட்டுமல்ல
து காலுக்கு அதிகமாக பட்டது காலை உதறி விட்டு நடக்க பார்த்தான் அது இயலாதது என்று தோன்றியது அங்கேயே உட்கார்ந்து விட்டான்
சற்று தள்ளி நின்று மாட்ச்சை கவனித்து கொண்டிருந்த அவன் தந்தை வேகமாக வேலிக்கு அருகில் வந்து “ஆர் யூ ஆல் ரை என்று கேட்டார் சூரன் தலையை அசைத்து மறுத்தான் அதற்குள் டோர்னமென அதிகாரி ஒருவர் கோர்ட்டின் கதவை திறந்து கொண்டு அவனருகில் வந்தார் “வேண்டுமானால் இன்ஜூரி டைம் அவு எடுத்து கொள்கிறாயா அழுகையை அடக்கி அவரிடம் “வேண்டாம் என்னால் தொடர்ந்து விளையாட முடியும் நான் நினைக்க வில்லை இத்துடன் மாட்ச்சை முடித்து கொள்கிறேன்” என்றான் எதிராக விளையாடிய பையன் ஒதுங்கி அவர்களை பார்த்து கொண்டிருந்தான் அவனிடம் “கு
“ஐயாம் சாரி”
‘யூ ஆர் நாட்’ என்று கத்த வேண்டும் போலிருந்தது ஆனால் பதில் சொல்லவில்லை ஒருவேளை செய்த தவறுக்கு உண்மையிலேயே அவன் மனம் வருந்தினால் கோர்ட்டுக்குள் வந்த தந்தையின் தோளை பிடித்து கொண்டு காருக்கும் பிறகு மருந்தகத்திற்கும் சென்றது எக்ஸ்ரே எடுத்தது எல்லாம் கெட்ட கனவாக தோன்றியது ஸ்ட்ரெஸ் ஃப்ராக்சர் இரண்டு மாதம் டென்னிஸ் ஆடாமல் இருந்தால் சரியாகி விடும்
‘கோ ரெ கோ ரெட்’ என்ற கூவலுடன் பயிற்சி முடிந்தது சிவப்பு சட்டைகள் சிறு கும்பலா கோர்ட்டுகளிலிருந்து வெளியே வர தொடங்கின சூரனின் காரை கண்டு கொண்ட மார அதை நோக்கி வந்தான் சூரனும் காரிலிருந்து இறங்கி பின் சீட்டில் இருந்த டென்னிஸ் பையை எடுத்து கொண்டு
“ஹாய் சூரன்”
“ஹாய் மார முன்பு பார்த்ததற்கு சற்று உயர்ந்திருக்கிறாய்”
“உன்னளவு இல்லாவிட்டாலும் ஆறடிக்கு இந்த பக்கம் இருந்தால் போதும் மற்றவர்கள் எங்கே
“நான் வீட்டிலிருந்து வருகிறேன் மற்றவர்களை கோ பள்ளி வண்டியில் அழைத்து வருவார்”
இருவரும் மரத்தடிக்கு வந்தார்கள்
“ஏன் வீட்டிலிருந்து வருகிறாய் ஏதாவது மறந்துவிட்டாயா
“இல்லை ஒரு முக்கியமான கடிதத்தை எதிர் பார்த்து கொண்டிருக்கிறேன்”
“நான்தான் ஹைஸ்கூல் சீனியர் கனமான கடித உறை என் பெயருக்கு இருக்கிறதா என்று மார மாதத்தில் ஒவ்வொரு நாளும் தபால் பெட்டிக்குள் பார்க்கிறேன் நீ ஜூனியர் தானே உனக்கு என்ன அவசரம்”
“டென்னஸி க்வாலிஃபயரில் நான் அடி பட்டது உனக்கு நினைவிருக்கிறதா
“இருக்கிறது நாம் அதில் டபில்ஸ் விளையாடுவதாக இருந்தோம் அப்புறம் விளையாடவில்லை”
“இரண்டு மாதங்களுக்கு டென்னிஸ் ஆட முடியாது என்று அறிந்த போது ஏமாற்றமாக இருந்தது அதுவும் விடுமுறையின் எப்படி பொழுது போக்குவது தெரியவில்லை என் அப்பா அவர் லாபில் வந்து வேலை செய்கிறாயா கேட்டார் அந்த கோடையில் அவரிடம் செய்வதற்காக ஒரு காலேஜ் மாணவன் வர இருந்தான் அவனுக்காக ப்ராஜக தயார் செய்து வைத்திருந்தார் அவன் தலை காட்டவில்லை அதனால் ப்ராஜக்ட்டை எனக்கு தந்தார் பைபெ செய்வதிலிருந்து எல்லாம் எனக்கு சொல்லி கொடுத்தார் பிகின்னர்ஸ் எனக்கு நிறைய நல்ல ரிசல கொண்டே செய்வது மிகவும் சுவாரசியமாக கூட கொஞ்ச நாளைக்கு மறந்துவிட்டது நான் கீழே விழுந்ததற்கு அர்த்தம் இருக்குமோ
“டென்னிஸ்
“ஒரு மாதமாகத்தான் சீரியசாக ஆட ஆரம்பித்திருக்கிறேன் என் ராங்கிங் கீழே இறங்கி விட்டதால் கோ ஐந்தாவது இடத்தில்தான் என்னை போட்டிருக்கிறார்”
“நீ அதை விட சிறந்த ஆட்ட காரன் என்னை கேட்டால் நீ மூன்றாவது இடத்தில் இருப்பவனை சாலஞ செய்ய வேண்டும் என்று சொல்வேன்”
“இன்று விளையாடிய பிறகு அதை பற்றி யோசிக்கிறேன் உன் அணியில் நீ முதலாவது இடத்தில் இருக்க வேண்டும் சென்ற ஆண்டு உனக்கு மேல் இருந்தவர்கள் எல்லோரும் படித்து முடித்து விட்டு போய் விட்டார்களே”
“கரெக உன் வீட்டிற்கு பக்கத்தில் இருக்கிறானே டேனியல் கார்சியா அவன் கூட போட்டிக்கு வரவில்லை”
“முன்பெல்லாம் அந்த கார்சியாவின் அம்மா கெஞ்சி கேட்டதற்காக அவனுடன் பல தடவை பந்தடித்திருக்கிறேன் போன மாதத்தில் இரண்டு முறை அவனை டெலிஃபோனில் கூப்பிட்ட போது அவன் அம்மாதான் பதில் சொன்னாள் அவனோடு விளையாட எனக்கு தகுதி இல்லையாம்”
“அவன் ஒரு மாதிரிதான் என்னோடு கூட அவன் சரியாக பழகுவதில்லை இன்று நான் யாருடன் விளையாட வேண்டும்
“எரி ஜான்சன்”
“இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவனுடன் ஆடியிருக்கிறேன் இப்போது அவன் எப்படி
“போன சம்மரின் போது அவன் சௌ கரோலைனாவில் ஒரு டென்னிஸ் அகடெமிக்கு போனான் ஆட்டத்தில் முன்னேற்றம் இல்லா விட்டாலும் ஆள் மத என்று ஆகிவிட்டான்”
“அங்கே ஸ்டிராய்ட்ஸ் சாப்பிட்டிருப்பானோ
“இருக்கலாம்”
“நீ எங்கள் அணியில் மாத்யூவுடன் விளையாட வேண்டும் நீ நன்றாக விளையாடுவாய் உன் இடது கை சர்வ் உனக்கு உதவி செய்யும் கவலை படாதே”
“கு உனக்கு மட்டும் மற்றவர்களுக்கு கிடையாது”
மார சிரித்து கொண்டே அகன்றான்
அப்போது சிடி ஹைஸ்கூல் என்று போட்ட வண்டி ஒன்று வந்து நின்றது அதிலிருந்து இறங்கிய மற்ற ஆட்டக்காரர்களுடன் சூரன் சேர்ந்து கொண்டான் ஐரிஷ் தொப்பி அணிந்த கோ வண்டியின் பின்னால் கொண்டு வந்திருந்த பெரிய அட்டை பெட்டியை வெளியே எடுத்து வந்தார் அதில் பள்ளியின் அடையாளமான ஊதா நிறத்தில் சட்டைகள் அவர் அவர்களின் பெயரை பார்த்து சட்டைகளை அணிந்து கொண்டார்கள் பிறகு அவர்களை காலியாக இருந்த கோர்ட்டுகளுக்கு அழைத்து சென்றார்

சாமி காரில் ஏறி கிளம்பும் போது மணி நான்கு பதினைந்து எப்போதும் போல் வியாழன் மீட்டிங் மணிக்கு முன்பே முடிந்திருந்தால் இந்நேரம் சூரனின் மாட்ச்சை பார்த்து கொண்டிருக்கலாம் பல மாத இடைவெளிக்கு பிறகு அவன் எப்படி விளையாடுகிறான் என்று அறிய ஆவல் ஆனால் தலைக்கு தலை ஒவ்வொருவரும் எதையோ பேசி இழுக்கடித்து விட்டார்கள் க்ரீன் ஹில்ஸ் அகடெமிக்கு ஒரு மைல்தான் என்றாலும் நடுவில் ஏகப்பட்ட போக்கு வரத்து விளக்குகள் மாலை நெரிசல் வேறு அங்கே போவதற்குள் மாட முடிந்திருக்கலாம் இந்த சீசனுக்கு இதுதான் முதல் போட்டி அதனால் சூரனையும் அணியை சேர்ந்தவர்களையும் ஊக்குவிக்க
பள்ளிக்காக சூரன் விளையாட வேண்டும் அப்போது மற்ற மாணவர்கள் அவனை உயர்வாக மதிக்க என்பதற்காக சிறு வயதிலிருந்தே அவனை தேர்ந்த டென்னிஸ் ஆட்ட காரனாக சாமி பழக்கி இருந்தான் அதன் பலன் எட்டாவது படிக்கும் போது கிடைத்தது மத்திய பள்ளிகளுக்கான ரீஜனல் ஃபனல் வரை தன் அணியை எடுத்து சென்றான் இறுதி போட்டி நடந்த அன்று சூரனுக்கு எதிராக ஆட வேண்டிய பையன் அரை மணி கழித்துத்தான் வந்தான் அதற்குள் மற்றவர்கள் விளையாட தொடங்கி விட்டார்கள் சூரனின் மாட கடைசியில் தான் ஆரம்பித்தது ஆளுக்கு மூன்று கேம் என்றிருக்கும் கோ சூரனை தனியே அழைத்து “மற்ற நான்கு மாட்ச்சுகளும் முடி போகின்றன நாம் இரண்டு ஜெயித்திருக்கிறோம் அவர்களுக்கு உன் மாட்ச்தான் சாம்பியன்ஷிப்பை தீர்மானிக்கும்” என்றார் அதற்கு பிறகு மி கவனமாக தொடங்கினான் பக்க அணியை சேர்ந்த பையன்களும் ஆட்டத்தை பார்க்க வந்து “கோ கோ மாத்யூ” என்று கூச்சல் ஒவ்வொரு பாய்ன முடிவிலும் கை தட்டல் அடுத்த ஐந்து கேம்களிலும் மிக அபாரமாக விளையாடி மாட்ச்சை ஜெயித்து பள்ளிக்கு சாம்பியன்ஷிப்பை பெற்று தந்தான்
ஒரு மேஜையின் சிவப்பு விரிப்பின் மேல் க்ரனோலா துண்டுகள் பவரேடு புட்டிகள் அவற்றுக்கு நடுவில் சில வாழை பழங்கள் மேஜைக்கு பின்னால் சட்டையில் சின்டி ஆன்டர்சன்
“ஹாய் சின்டி இன்று உணவு கடை உன் பொறுப்பு போலிருக்கிறது”
“ஹாய் சாம் நாம் பார்த்து சில காலம் ஆகிவிட்டது எப்படி இருக்கிறீர்கள்
“சாராவும் நானும் ஃபன் மார்க்கும் எமிலியும் எப்படி இருக்கிறார்கள்
“மார வீட்டை விட்டு போக துடித்து கொண்டிருக்கிறான் எமிலி இரண்டாவது க்ரேடில் இருக்கிறாள்”
“மார வெளியே சென்ற பிறகும் உனக்கு எமிலி இருக்கிறாள் சூரன் காலேஜிற்கு போய்விட்டால் எங்கள் வீடு காலி நான் இரண்டு பவரே பாட்டில் வாங்குகிறேன்”
அவற்றை எடுத்து கொண்டு படி பெஞ்சின் பக்கம் வந்தான் ஆட்ட காரர்களின் பெற்றோர் கும்பலில் தெரிந்த முகமாக எதுவும் இல்லை மேல் படிகளில் சூரனின் சக ஆட்டக்காரர்கள் ஒவ்வொரு பையனும் போட்டிருந்த ஊதா நிற சட்டையில் மஞ்சள் வட்டங்கள் வளைவாக வந்து ஒரு கோட்டில் பட்டு சிதறின அந்த சட்டைக்காக பதினைந்து டாலருக்கு செ எழுதியது நினைவிருக்கிறது சூரன் அணிந்து பார்த்ததாக நினைவில்லை இன்றுதான் புதிதாக வந்திருக்க வேண்டும் யார் டிசைன் செய்தார்கள் என்று தெரியவில்லை கண்ணை பறித்தது கோச்சிடம் மிச்சம் இருந்தால் எனக்கு கூட ஒன்று வாங்கி கொள்ள இரண்டாவது தட்டில் உட்கார்ந்த சாமியின் பார்வை கோடியிலிருந்து மறு கோடி வரை அளந்தது உயரமான கருப்பு உருவம் எந்த கோர்ட்டிலும் மாட முடிந்திருக்க முதல் கோர்ட்டின் இந்த பக்கத்தில் மார சர்வ் செ தயாராக நின்றிருந்தான் எதிர புறத்தில் சட்டை அணிந்த பையன் வேலிக்கு அருகில் வெளியில் இருந்த இருவருடன் பேசி கொண்டிருந்தான் இருவரில் ஐரிஷ் தொப்பி கோ
“மார்க்கின் பலவீனம் என்ன எரி ஜான்சன் கேட்டான்
“பெரிய பலவீனம் ஒன்று இருப்பதாக எனக்கு தெரியாது”
“நீ பல தடவை அவனுடன் விளையாடி அவனை ஜெயித்திருக்கிறாய்”
“அதெல்லாம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் சமீபத்தில் இல்லை”
“அப்போது அவன் விளையாட்டில் நீ ஏதாவது குறை கண்டிருக்க வேண்டும்”
“கவனித்ததில்லை”
“மார்க்குடன் சேர்ந்து பல வருடங்கள் இரட்டையர் ஆட்டம் ஆடியிருக்கிறாய் அப்படி விளையாடும் போது எதிராளிகள் அவனுடைய பலவீனத்தை பயன் படுத்தி கொள்ளாதபடி மறைத்திருப்பாய் அது என்ன
“…”
“நேரம் ஆகிறது”
“என்னுடைய சர்வ் ஒன்றுதான் அவனுக்கு எதிராக இருந்திருக்கிறது”
“என் வலது கையால் எப்படி இடது கை சர்வ் செய்ய முடியும் என்று சற்று எரிச்சலுடன் கேட்டான் எரி
“நீ எங்களுக்கு உதவி செய்யவில்லை” கோ குறை சொன்னார்
அவர் அங்கேயே நின்றார் சூரன் மட்டும் கோர்ட்டை சுற்றி கொண்டு மரத்தடிக்கு வந்தான் அவன் முகத்தில் வருத்தம் கலந்த ஏமாற்றத்தை சாமி கவனித்தான் ஒரு வேளை நன்றாக விளையாட வில்லையோ மாட்ச்சை பற்றி அவனிடம் எதுவும் கேட கூடாது “ஹாய் சூரன்”
“ஹாய் டாட்” என்று சொன்ன சூரன் படி ஏறி அவனுடைய பள்ளி தோழர்கள் பக்கத்தில் போய் உட்கார்வான் சாமி எதிர் பார்த்தான் அவன் அப்படி செய்வதுதான் வழக்கம் அதுதான் சாமியின் விருப்பமும் ஆனால் இன்று டென்னிஸ் பையை முதல் படியில் வைத்து விட்டு வந்து அமர்ந்தான் அவனிடம் ஒரு
சாமி கேட்காமலேயே “நான் என் மாட்ச்சை ஒரு வழியாக ஜெயித்தேன் ஆனால் மாட பரம தண்டம்” என்று தனக்கு தெரிந்த இரண்டு தமிழ் வார்த்தைகளால் சூரன் முடித்தான்
“அதனால் என்ன வெற்றி வெற்றிதான் உன் அணிக்கு ஒரு டபிள்யூ”
“எங்கள் பள்ளிக்கு அது ஒன்றுதான் போலிருக்கிறது மற்ற யாருக்கும் இது வரை வெற்றி கிடைக்கவில்லை அந்த பையனை நான் சென்ற ஆண்டில் என்று தோற்கடித்திருக்கிறேன் இன்று என்னால் பாய்ன்ட்டுகளை முன் போல் சுலபமாக முடிக்க முடியவில்லை என் சர்வ் உதவி செய்யாதிருந்தால் ஜெயித்திரு கூட முடியாது”
“கொஞ்ச கால இடைவெளிக்கு பிறகு விளையாடுகிறாய் பயிற்சி செய்தால் பழைய நிலைக்கு வரலாம்”
சூரனின் மௌனத்தில் அவநம்பிக்கை
மார்க்கின் மாட தொடர்ந்தது இரண்டு பக்கத்திலும் ஆரவாரம் சூரன் அந்த மாட்ச்சில் ஆர்வம் காட்டியதாக தெரியவில்லை அதில் அவனை ஈடு படுத்த விரும்பிய சாமி “மார்க்கின் எதிர பக்கம் விளையாடுவது யார் இங்கிருந்து எனக்கு தெரியவில்லை” என்றான்
“எரி ஜான்சன்”
“எரிக்கா கடந்த ஆண்டில் நிறைய வளர்ந்து விட்டான் போலிருக்கிறது கோச்சும் நீயும் அவனுடன் என்ன பேசி கொண்டிருந்தீர்கள்
“எரி முதல் செட்டை தோற்று விட்டான் இரண்டாவது செ ஆரம்பிக்கும் முன் கோச்சும் அவனும் என்னை அழைத்து மார்க்கின் பலவீனம் என்ன என்று கேட்டார்கள்” அது அவர்கள் இருவருக்கும் தெரியும் பதினொரு வயதில் சூரன் மார்க்குடன் முதன் முதலாக விளையாடிய போது அதை கண்டு பிடித்து அதை பயன் படுத்தி கொண்டது சாமியின் நினைவுக்கு
“நான் அதை சொல்ல வில்லை”
“க்ரீன் ஹில்ஸ் அகடெமியை தோற்கடிக்க மிகவும் ஆசைப்படுவாய் என்று எதிர் பார்த்தேனே”
“எரி எப்படி ஆட வேண்டும் என்று கோ கேட்டிருந்தால் யுக்தி எதாவது சொல்லியிருப்பேன் இருவரும் மார்க்கின் பலவீனம் என்ன கேட்டது அவனுக்கும் எனக்கும் ஆறு ஆண்டுகளாக இருக்கும் நட்பை அவமதிப்பது போல் எனக்கு பட்டது”
அதை ஒப்பு கொள்வது போல் சாமி மௌனமாக இருந்தான்
இரண்டாவது செட்டையும் மார வென்ற போது க்ரீன் ஹில்ஸ் அகடெமி மாணவர்களின் வெற்றி கோஷம் காதை துளைத்தது
இரண்டு கோச்சுகளும் தனி தனியே தங்கள் அணியின் ஆட்டக்காரர்களை கோர்ட்டின் நடுவில் ஒன்று சேர்த்து பேசினார்கள் வெற்றி பெற்ற கூட்டம் விரைவில் முடிந்து விட்டது மாட வென்றவர்களுக்கு பாராட்டுகள் தோற்றவர்களுக்கு அடுத்த தடவை இருக்கவே இருக்கிறது தனியாகவோ பெற்றோருடனோ கார்களை நோக்கி அவர்கள் நடந்தார்கள் மார மரத்தடிக்கு வந்த போது சின்டி விற்காத சாமான்களை பைகளில் வைத்து கொண்டிருந்தாள்
“மாம் என் உதவி வேண்டுமா
“என் வேலை கிட்டத்தட்ட முடிந்து விட்டது நீ போய் மிஸ்டர் சாமிடம் ஹலோ சொல்”
பெஞ்சில் உட்கார்ந்திருந்த சாமியின் பக்கம் வந்தான் “ஹாய் மிஸ்டர் சாம்”
“ஹாய் மார எப்படி இருக்கிறாய் பார்த்து வெகு நாளாகி விட்டது”
“ஐயாம் ஃபன்”
“எந்த காலேஜ் போகிறாய் என்று தெரியுமா
“இன்னும் தெரியவில்லை நார கரோலைனா செல்ல ஆசை”
“நான் டியூ ரசிகன் ஆனாலும் படிப்பு டென்னிஸ் இரண்டிற்கும் அது நல்ல இடம் என்று சொல்வேன் உனக்கு அங்கே நிச்சயம் கிடைக்கும் உன் மாட்ச்சின் இரண்டாவது செட்டை பார்த்தேன் நீ திறமையாக ஆடுகிறாய் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆட்டம் வெகுவாக முன்னேறி இருக்கிறது”
“தாங்க்யூ மிஸ்டர் சாம்”
“உன் மாட நடக்கும் போது உன் பலவீனம் என்ன என்று சூரனை எரிக்கும் கோச்சும் கேட்டிருக்கிறார்கள்”
“அந்த மூவரும் கூடி பேசியதிலிருந்து நானும் அதை எதிர் பார்த்தேன்”
“சூரன் உன் பலவீனத்தை சொல்லவில்லை”
“சூரன் ஒரு மிக சிறந்த நண்பன் சந்தேகமே இல்லை”
“அவன் சொல்லி இருந்தாலும் நீ ஜெயித்திருப்பாய்”
“அது வேறு விஷயம் அவன் சொல்லாதது கேரக்டரை காட்டுகிறது நீங்கள் சூரனின் தந்தை என்பதற்காக மிகவும் பெருமை படவேண்டும் மிஸ்டர் சாம்”
“நிச்சயமாக”
தோல்வி அடைந்த குழு கலைந்து கொண்டிருந்தது அதில் மற்றவர்கள் சென்ற பிறகும் சூரனை நிறுத்தி வைத்து கோ ஏதோ சொன்னார் அதை மார்க்கும் சாமியும் கவனிக்க தவறவில்லை
“மார கோ சூரனிடம் என்ன சொல்கிறார் என்று ஊகிக்க முடிகிறதா
“ஏன் ஊகிக்க வேண்டும் என்ன என்று நிச்சயமாகவே எனக்கு தெரியும்”
“என்ன
“சூரன் போட்டிருக்கிறானே ஊதா நிற சட்டை மஞ்சள் வட்டங்களுடன் அதை இனி மேல் அவன் அணிய மாட்டான்”
நாற்காலிக்கு பின்னால்
இப்னு ஹம்துன்
நாகாவை எனக்கு நாலரை வருடங்களாக தெரியும் என் கழுத்தில் கத்தி வைக்க துணிகிற அதற்கு நான் அனுமதிக்கிற ஒரே ஆள் அவர் இதென்ன பெரிய கம்பசூத்திரமா என்று எண்ணி யாரும் வந்து அப்படி செய்ய மாட்டீர்கள் என்கிற நம்பிக்கையில் தான் சொல்கிறேன் நாகா பத்தாவிலுள்ள சென்னை முடி திருத்தகத்தில் ஒரு பணியாளர் ஐவரில் ஒருவர்
ரியா வந்த புதிதில் எங்கு போய் முடி இழக்கலாம் என்று யோசித்து பத்தாவை சுற்றி என்னை ஈர்த்தது சற்று தொலைவில் கண்ணில் பட்ட சென்னை உள்ளே நுழைய அதன் பின்னும் யோசிப்பேனா என்ன
சென்னை முடி திருத்தகம் சந்துகள் நிறைந்த பத்தாவில் ஒரு பெரிய சந்தில் இருக்கிறது கவர்ச்சிப்படங்களின் வாய்ப்பும் வழியுமற்ற சவூதியில் எல்லா நவீன திருத்தும் நிலையங்களை போலவே சுற்றிலும் கண்ணாடியால் தன்னை நிரப்பிக்கொண்டிருக்கிறது சற்றே நீளமான கடைஉள்ளே நுழைந்த நான் காத்திருப்போர் பட்டியலில் தான் இடம் பெற முடிந்தது பின்னே உள்ளே வந்தவுடன் எந்திரி என்று அடுத்தவனை சொல்லிவிட்டு மந்திரியாக அமர்ந்துக்கொள்வதற்கு
ஒரு சில நிமிடங்கள் கரைய நான் அழைக்கப்பட்டேன் அழைத்தவர் தான் நாகா என்பது பிறகு தெரிந்தது முதலில் என் விருப்பம் கேட்டறிந்தார் பின்னர் இலாவகமாகவும் பொறுமையாகவும் தன் பணியில் ஈடுபட்டார் அவருடைய பொறுமை தொடக்கத்தில் சற்றே எரிச்சலாகவும் எனக்கு இருந்தது பக்கத்து இருக்கை அதற்குள் மூன்று மந்திரிகளை பார்த்திருந்தது என்ன இவர் இத்தனை மெதுவாக இருக்கிறாரே என்ற எண்ணம் முடி திருத்திக்கொண்ட பின் கண்ணாடியில் என்னை கண்ட போது
அருமை என்றேன் என்னையறியாமலேயே
இப்படியே நீங்க பொண்ணு பார்க்க போகலாம்ணே என்றார் நடுத்தரவயது நாகா இளையவர் பெரியவர் பாராமல் அண்ணே போட்டு விளிக்கும் தஞ்சை தமிழில்
பொண்டாட்டி வுட்டான்னா போவலாம் தான் என்றேன் நானும்
இப்படியாக தொடங்கிய எங்கள் நட்பு வளர ஏதுவாக ஒரு நடை தூரத்தில் அமைந்திருந்த அந்த முடி திருத்தகத்தில் தமிழகத்தின் பிரபலமான இரு தினசரிகளும் வளர்க்கும் வாடிக்கையாளர்களும் கூடவே நாகாவின் நல்ல எதையும் எளிதாக எடுத்துக்கொண்டு விடுகிற குணம் ஆனால் தான் சொல்வது சரி என்று சாதிப்பார் மெல்லுவதற்கு எதுவும் கிடைக்காத போது மற்ற பணியாளர்களுக்கும் நட்பான வாடிக்கையாளர்களுக்கும் நாகா
கூட்டமில்லாத சமயத்தில் கலாய்க்க நினைத்து இன்னிக்கு என்னாச்சு தெரியுமா ஒரு சவூதிக்காரன் நாகா அண்ணங்கிட்ட முடி வெட்டிக்க வந்தான் கத்தரி போடணுமா மெசினான்னு அவங்கிட்ட தமிழ்ல கேக்குறாரு
என்று ஒரு சக பணியாளர் தொடங்கி வைக்க
அவெம் மொழில பேசும்போது நாமளும் நம்ம தான் பேசணும்னு அண்ணன் சொல்லுவாரு இல்லயா நாகாண்ணே என்பார் மற்றவர் இப்படியாக நாகாவை வைத்தே ஒரு நகைச்சுவை படம் ஓட்டுவார்கள் என்ன தன்னைப்பற்றி மோசமாக கிண்டல் செய்தாலும் நாகா கொஞ்சம் கூட கோபப்படமாட்டார் அவரும் சேர்ந்து சிரித்து அந்த கணத்தை இனிமையாக மாற்றிக்கொள்வார் புன்னகை ஒருபோதும் அவர் உதட்டிலிருந்து உதிர்ந்து விழுந்து
போன முறை போயிருந்த போது விமான சேவை பற்றி பேச்சு வந்தது
ஸ்ரீ லங்கா விமானம் வுல போறது ரொம்ப மலிவுண்ணே என்றார் ஒருவர்
ஆனா கொளும்பு போயித்தான் போவும் கொளும்புலேந்து சமயத்துல கன்ஃபாம் கெடைக்காம போயிறும் என்றார் மற்றொருவர்
யார் சொன்னது கொளும்புலேந்து மணிக்கொருக்கா ஃபிளை இருக்குப்பா என்றார் நாகா தஞ்சைதிருச்சி பேருந்து என்று எண்ணிக்கொண்டு
முடி திருத்திக்கொள்ள அமர்ந்திருந்த எனக்கு பணி சார்ந்த உண்மையை சொல்ல நாவு எழுந்தாலும் உள்ளிருந்த ஒரு குரல் கேட்டுட்டுருக்கம்ல கம்முன்னு கிட என்றது
கிரிக்கெ சினிமா தொடங்கி சகலமும் அங்கு அலசப்படும் எதுவுமில்லாத சமயங்களில் இருக்கவே இருக்கிறார் நாகா என்று ஆகிப்போயிருந்தது எதற்காகவும் கோபப்படாத அவரை எனக்கும் பிடித்திருந்தது அவரிடம் மட்டும் தலை கொடுப்பதாக தீர்மானித்திருந்தேன்
சென்ற தடவை அங்கு தேர்தல் பேச்சுக்கள் களை கட்டியிருந்தன இங்கு அரசியல் பேசக்கூடாது என்றோ அரசியலையும் செருப்பையும் வெளியே விட்டு வரவும் அறிவிப்புகள் இல்லாமலே பேச வாய்ப்பின்றி வறண்டு போயிருக்கும் நிலையில் தமிழக சட்டமன்ற சொந்த நாட்டின் அரசியலை பேசுவதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது
யாருண்ணே ஜெயிப்பான்றீங்க என்றார் நாகாவின் சக தோழர்
யார் நம்ம தலைல நல்லா மொளகா அரைக்கிறாங்கன்றத பொறுத்தது என்று வழக்கமான குதர்க்கத்துடன் பதில் சொன்னேன்
அப்போது நாகா வாயைத்திறந்தார் நம்மாளு தாண்ணே ஜெயிப்பாரு
நம்மாளுன்னா
நம்ம தலைவர்ணே இன்னா தெறம அவருக்கு அவரை மாதிரி இன்னி தேதிக்கி யார்ணே இருக்கா ஒரு சிறு விளக்கம் தலைவர் என்று சொல்வதை இங்கு பொதுவா கொள்வோம் ஆண்பாலாகவோ பெண்பாலாகவோ அது இருக்கலாம்
அன்று தான் நாகாவின் அரசியல் அபிமானம் எனக்கு தெரிய வந்தது ஓய்வாக பக்கத்தில் வந்தமர்ந்தவர் ஊரில் கட்சியில் அவர் வகித்த சிறிய பதவி பற்றி கட்சிக்காக ஜெயிலுக்கு போய் பற்றியெல்லாம் சொன்னார் அட இது இன்னொரு முகம் ஆச்சரியமாக
அரசியல் கலகலப்புகளில் கலாய்ப்புகளில் நேரம் போனதே தெரியவில்லை
சென்னை முடிதிருத்தகத்தின் அந்த ஐந்து பணியாளர்களில் ஒருவரே முதலாளி மற்றவர்கள் சம்பளப்பணியாளர் தாம் தமிழர் மாதந்தோறும் ஒரு தொகையை கடையை தன் பெயரில் உரிமம் வைத்திருக்கும் மண்ணின் மைந்தருக்கு தந்துவிடுவார் மற்ற இலாப நட்டமெல்லாம்
அன்றைக்கு முடி வெட்டிக்கொள்வதற்காக சென்னைக்கு போயிருந்தப்போது கடையில் நாகாவை காணவில்லை
நாகாண்ணே இன்னும் வரல்லியா என்றேன்
அவரு இனிம வரமாட்டாருங்க வேலைய விட்டு நின்னுட்டார் என்றார் கத்தரியும் கையுமாக இருந்த ஒரு பணியாளர்
எனக்கு ஆச்சரியமாக அதைவிட அதிர்ச்சியாக இருந்தது
என்னாச்சு கேட்க நினைத்தேன் ஏனோ கேட்கவில்லை அவரும் வேலையில் மும்முரமாகிவிட்டிருக்க கையிலிருந்த கத்தரியும் அரசியல் தலைகளை போல காற்றில் எதையோ எதிரும்புதிருமாக வெட்டிக்கொண்டிருந்தது
சரி வரேங்க எனக்கே கேட்காத குரலில் சொல்லிவிட்டு திரும்பி நடந்தேன்
ஏன் வேலையை விட்டு நின்று விட்டார் நாகாவை பற்றி சிந்தித்தப்படி நடந்துக்கொண்டிருந்தவனை வாங்கண்ணே என்ற நாகாவின் குரலே கலைத்தது திருப்பத்தில் நின்றபடி வழக்கம் போல் பீடி புகைத்துக்கொண்டிருந்தார் பீடியை கீழிட்டு காலால் மிதித்த படி முடி வெட்டிக்க வந்தீங்களா என்றார்
ஆமங்க நீங்க தான் வேலய விட்டு நின்னுட்டீங்களாமே
எல்லாத்துக்கும் ஒரு லிமி இருக்குண்ணே என்ற நாகா வாங்கண்ணே டீ குடிச்சிட்டே பேசலாம் என்று சொல்லி என் பதிலை எதிர்பாராதவராய் அருகிலுள்ள அதிர்ஷ்டம் கஃபே க்கு நடந்தார்
தேனீர் குடிப்பதன் பொருட்டு கடையில் எதிரெதிர் இருக்கையில் அமர்ந்தபின்னர் சொல்லுங்க என்றேன்
என்ன பத்தி எதுவேணாலும் பேசட்டும்ணேஏதாச்சும் கோவப்பட்டுருக்கேனா என் தலைவன எப்படிங்க மோசமா பேசலாம் என்றார் நாகா
அப்படி என்ன மோசமா பேசிட்டாங்க
உங்களுக்கு தெரியாதுண்ணே அன்னிக்கு ரொம்ப ஓவரா பேச ஆரம்பிச்சுட்டாங்க நானும் எவ்வளவோ சொல்லிப்பார்த்தேன் வேணாம்னு கடசீல ராப்போச்சுன்னு வெளில வந்துட்டேன்
இதுதானா பிரச்னை என்றிருந்தது எனக்கு
தலைவனுக்காக ஜெயிலுக்கே போனவன்ங்க நான் என்று தொடங்கி அதன்பின் நாகா சொன்ன எதுவும் என் காதில் விழவில்லை
மின்விசிறியின் சுழலில் படபடத்த நாளேடு காலத்தின் ஏடாக தோன்ற அதில் தலைவர்கள் கையுயர்த்தி சிரித்துக்கொண்டிருந்தார்கள் ஆளப்போவது யார் என்று தலைப்பிட்டிருந்த அந்த செய்திவிளம்பரத்தில் ஒரு நாற்காலியும் இருந்தது பின்னால் நிறைய நாகாக்கள் தெரிந்தார்கள்