புறநானூறு

©இப்பதிவினை செய்தவர்கள்
தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி தில்லைநகர்
கிஆபெவிசுவநாதம் மேல்நிலைப்பள்ளியை சார்ந்தவர்கள்
இப்பணிக்கு ஏற்பாடு செய்தோர்
டாக்டர் சி கேசவராஜ் தாளாளர் கிஆபெவிசுவநாதம் மேல்நிலைப்பள்ளி
நெறியாளர்
டாக்டர் இரா வாசுதேவன் முன்னாள் இயக்குநர்
எரிபொருள் பள்ளி
பாரதிதாசன் பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்ளி
ஒருங்கிணைப்பு
டாக்டர் இராஇராஜேந்திரன் கிஆபெவிசுவநாதம் மேல்நிலைப்பள்ளி முதுகலையாசிரியர்
பதிவாளர்கள்
செல்விஜெஜெயந்தி நூலகர் திரு சசின்னக்கண்ணன்எழுத்தர்
மற்றும் மாணவர்கள் சிவதயாள்கிறிஸ்டோ·பர்
இம்மின்னுரை தகுதர தமிழெழுத்துக்களிலாக்க பெற்றது எனவே இதனை படிக்க தங்களுக்கு
தகுதர தமிழ் எழுத்துரு தேவை பல்வேறு கணனி இயக்குதளங்களுக்கு எழுத்துக்கள்
இலவசமா கிடைக்கின்றன இவற்றை பின்வரும் வலையகங்களில் ஏதாவதொன்றிலிருந்து தங்களால்
தருவிக்கவியலும்


மேலதிக உதவிக்கு தொடர்புகொள்ள வேண்டிய முகவரி

© மதுரை திட்டம்
மதுரை திட்டம் தமிழ செவ்விலக்கியங்களை மின்னுரைவடிவில் தளையின்றி ஊடுவலையின் மூலம்
பரப்பும் ஒரு திறந்த தன்னார்வ உலகளாவிய முனைப்பாகும் இத்திட்டம் குறித்த மேலதிக
விபரங்களை பின்வரும் வலையகத்திற் காணலாம்

இம்மின்னுரையை இம்முகப்பு பக்கத்திற்கு மாற்றமின்றி தாங்கள் எவ்வழியிலும்
பிரதியாக்கமோ மறுவெளியீடோ செய்யலாம்

புறநானூறு
இறைவனின் திருவுள்ளம்
பாடியவர்பெருந்தேவனார்
பாடப்பட்டோன் இறைவன்
கண்ணி கார்நறுங் கொன்றை காமர்
வண்ண மார்பின் தாருங் கொன்றை
ஊர்தி வால்வெள் ளேறே சிறந்த
சீர்கெழு கொடியும் அவ்வேறு என்ப
கறைமிடறு அணியலும் அணிந்தன்று அக்கறை
மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே
பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று அவ்வுரு
தன்னுள் அடக்கி கரக்கினும் கரக்கும்
பிறை நுதல் வண்ணம் ஆகின்று அப்பிறை
பதினெண் கணனும் ஏத்தவும் படுமே
எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய
நீரறவு அறியா கரகத்து
தாழ்சடை பொலிந்த அருந்தவ தோற்கே
போரும் சோறும்
பாடியவர் முரஞ்சியூர் முடிநாகராயர்
பாடப்பட்டோன் சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்
திணை பாடாண்
துறை செவியறிவுறூஉ வாழ்த்தியலும் ஆம்
மண் திணிந்த நிலனும்
நிலம் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளி தலைஇய தீயும்
தீ முரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போல
போற்றார பொறுத்தலும் சூழ்ச்சியது அகலமும்
வலியும் தெறலும் அணியும் உடையோய்
நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின்
வெண்தலை புணரி குடகடல் குளிக்கும்
யாணர் வைப்பின் நன்னாட்டு பொருந
வான வரம்பனை நீயோ பெரும
அலங்குளை புரவி ஐவரோடு சினைஇ
நிலந்தலை கொண்ட பொலம்பூ தும்பை
ஈரைம் பதின்மரும் பொருது களத்து ஒழி
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்
பாஅல் புளிப்பினும் பகல் இருளினும்
நாஅல் வேத நெறி திரியினும்
திரியா சுற்றமொடு முழுதுசேண் விளங்கி
நடுக்கின்றி நிலியரோ அத்தை அடுக்கத்து
சிறுதலை நவ்வி பெருங்கண் மாப்பிணை
அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும்
முத்தீ விளக்கிற் றுஞ்சும்
பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்றே
வன்மையும் வண்மையும்
பாடியவர் இரும்பிடர தலையார்
பாடப்பட்டோன் பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி
திணை பாடாண்
துறை செவியறிவுறூஉ வாழ்த்தியலும் ஆம்
சிறப்பு இரும்பிட தலையாரை பற்றிய செய்தி
உவவுமதி உருவின் ஓங்கல் வெண்குடை
நிலவுக்கடல் வரைப்பின் மண்ணகம் நிழற்ற
ஏம முரசம் இழுமென முழங்க
நேமி யுய்த்த நேஎ நெஞ்சின்
தவிரா ஈகை கவுரியர் மருக
செயிர்தீர் கற்பின் சேயிழை கணவ
பொன் னோடை புகர் அணிநுதல்
துன்னரு திறல் கமழ்கடா அத்து
எயிரு படையாக எயிற்கதவு இடாஅ
கயிறுபிணி கொண்ட கவிழ்மணி மருங்கில்
பெருங்கை யானை இரும்பிடர தலையிருந்து
மருந்தில் கூற்றத்து அருந்தொழில் சாயா
கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி
நிலம் பெயரினும் நின்சொற் பெயரல்
பொலங் கழற்காற்புலர் சாந்தின்
விலங் ககன்ற வியன் மார்ப
ஊர் இல்ல உயவு அரிய
நீர் இல்ல நீள் இடைய
பார்வல் இருக்கை கவிகண் நோக்கிற்
செந்தொடை பிழையா வன்கண் ஆடவர்
அம்புவிட வீழ்ந்தோர் பதுக்கை
திருந்துசிறை வளைவா பருந்திருந்து உயவும்
உன்ன மரத்த துன்னருங் கவலை
நின்நசை வேட்கையின் இரவலர் வருவர் அது
முன்னம் முகத்தின் உணர்ந்து அவர்
இன்மை தீர்த்தல் வன்மை யானே
தாயற்ற குழந்தை
பாடியவர் பரணர்
பாடப்பட்டோன் சோழன் உருவ ப·றேர் இளஞ்சே சென்னி
திணை வஞ்சி துறை கொற்ற வள்ளை
சிறப்பு சோழரது படை பெருக்கமும் சோழனது வெற்றி மேம்பாடும்
வாள்வலந்தர மறு பட்டன
செவ் வானத்து வனப்பு போன்றன
தாள் களங்கொள கழல் பறைந்தன
கொல் ஏற்றின் மருப்பு போன்றன
தோல் துவைத்து அம்பின் துனைதோன்றுவ
நிலைக்கு ஒராஅ இலக்கம் போன்றன
மாவே எறிபதத்தான் இடங் காட்ட
கறுழ் பொருத செவ் வாயான்
எருத்து வவ்விய புலி போன்றன
களிறே கதவு எறியா சிவந்து உராஅய்
நுதி மழுங்கிய வெண் கோட்டான்
உயிர் உண்ணும் கூற்று போன்றன
நீயே அலங்கு உளை பரீஇ இவுளி
பொல தேர்மிசை பொலிவு தோன்றி
மா கடல் நிவ தெழுதரும்
செஞ் ஞாயிற்று கவினை மாதோ
அனையை ஆகன் மாறே
தாயில் தூவா குழவி போல
ஓவாது கூஉம் நின் உடற்றியோர் நாடே
அருளும் அருமையும்
பாடியவர் நரிவெரூஉ தலையார்
பாடப்பட்டோன் சேரமான் கருவூரேறிய ஒள்வா கோப்பெருஞ் சேரல்
திணை பாடாண்
துறை வெவியறிவுறூஉ பொருண் மொழி காஞ்சியும் ஆம்
சிறப்பு பார்வையானே நோய் போக்கும் கண்ணின் சக்தி பற்றிய செய்தி
எருமை அன்ன கருங்கல் இடை தோறு
ஆனிற் பரக்கும் யானைய முன்பின்
கானக நாடனைநீயோ பெரும
நீயோர் ஆகலின் நின் ஒன்று மொழிவல்
அருளும் அன்பும் நீக்கி நீங்கா
நிரயங் கொள்பவரொடு ஒன்றாது காவல்
குழவி கொள் பவரின் ஓம்புமதி
அளிதோ தானே அது பெறல்அருங் குரைத்தே
தண்ணிலவும் வெங்கதிரும்
பாடியவர்காரிகிழார்
பாடப்பட்டோன் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமி பெருவழுதி
திணை பாடாண் துறை
செவியறிவுறூஉ வாழ்த்தியலும் ஆம்
சிறப்பு பாண்டியனின் மறமாண்பு
வாடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்
குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்
குடாஅது தொன்றுமுதிர் பொளவத்தின் குடக்கும்
கீழது முப்புணர் அடுக்கிய முறைமுதற் கட்டின்
நீர்நிலை நிவப்பின் கீழும் மேலது
ஆனிலை உலக தானும் ஆனாது
உருவும் புகழும் ஆகி விரிசீர
தெரிகோல் ஞமன்ன் போல ஒரு திறம்
பற்றல் இலியரோ நின் திறம் சிறக்க
செய்வினைக்கு எதிர்ந்த தெவ்வர் தேஎத்து
கடற்படை குளிப்ப மண்டி அடர புகர
சிறுகண் யானை செவ்விதின் ஏவி
பாசவற் படப்பை ஆர்எயில் பலதந்து
அவ்வெயில் கொண்ட செய்வுறு நன்கலம்
பரிசின் மாக்கட்கு வரிசையின் நல்கி
பணியியர் அத்தை நின் குடையே முனிவர்
முக்கண் செல்வர் நகர்வலஞ் செயற்கே
இறைஞ்சுக பெரும நின் சென்னி சிறந்த
நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே
வாடுக இறைவ நின் கண்ணி ஒன்னார்
நாடுசுடு கமழ்புகை எறித்த லானே
செலிஇயர் அத்தை நின் வெகுளி வால்இழை
மங்கையர் துனித்த வாள்முகத்து எதிரே
ஆங்க வென்றி எல்லாம் வென்றுஅகத்துஅடக்கிய
தண்டா ஈகை தகைமாண் குடுமி
தண்கதிர் மதியம் போலவும் தெறுசுடர்
ஒண்கதிர் ஞாயிறு போலவும்
மன்னிய பெரும நீ நிலமிசை யானே
வளநாடும் வற்றிவிடும்
பாடியவர் கருங்குழல் ஆதனார்
பாடப்பட்டோன் சோழன் கரிகாற் பெருவளத்தான்
திணை வஞ்சி துறை கொற்ற
வள்ளை மழபுல வஞ்சியும் ஆம்
களிறு கடைஇய தாள்
கழல் உரீஇய திருந்துஅடி
கணை பொருது கவிவண் கையால்
கண் ஒளிர்வரூஉம் கவின் சாபத்து
மா மறுத்த மலர் மார்பின்
தோல் பெயரிய எறுழ் முன்பின்
எல்லையும் இரவும் எண்ணாய் பகைவர்
ஊர்சுடு விளக்கத்து அழுவிளி கம்பலை
கொள்ளை மேவலை ஆகலின் நல்ல
இல்ல ஆகுபவால் இயல்தேர் வளவ
தண்புனல் பரந்த பூசல் மண் மறுத்து
மீனின் செறுக்கும் யாணர
பயன்திகழ் வைப்பின் பிறர் அகன்றலை நாடே
கதிர்நிகர் ஆகா காவலன்
பாடியவர் கபிலர்
பாடப்பட்டோன் சேரமான் கடுங்கோ வாழியாதன் செல்வ
என்பவனும் இவனே
திணை பாடாண் துறை இயன்மொழி பூவை நிலையும் ஆம்
வையம் காவலர் வழிமொழிந்து ஒழுக
போகம் வேண்டி பொதுச்சொல் பொறாஅது
இடம் சிறிது என்னும் ஊக்கம் துரப்ப
ஒடுங்கா உள்ளத்து ஓம்பா ஈகை
கடந்து அடு தானை சேரலாதனை
யாங்கனம் ஒத்தியோ வீங்குசெலல் மண்டிலம்
பொழுதுஎன வரைதி புறக்கொடுத்து இறத்தி
மாறி வருதி மலைமறைந்து ஒளித்தி
அகல்இரு விசும்பி னானும்
பகல்விளங் குதியால் பல்கதிர் விரித்தே
ஆற்றுமணலும் வாழ்நாளும்
பாடியவர் நெட்டிமையார்
பாடப்பட்டோன் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமி பெருவழுதி
திணை பாடாண் துறை
இயன்மொழி குறிப்பு இதனுடன் காரிகிழாரின் ஆறாவது புறப்பாட்டையும் சேர்த்து ஆய்ந்து
பாண்டியனின் சிறப்பை காண்க
‘ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணி
தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர பெறாஅ தீரும்
எம்அம்பு கடிவிடுதும் நுன்அரண் சேர்மின்’ என
அறத்துஆறு நுவலும் பூட்கை மறத்தின்
கொல்களிற்று மீமிசை கொடிவிசும்பு நிழற்றும்
எங்கோ வாழிய குடுமி தங் கோ
செந்நீர பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த
முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர ப·றுளி மணலினும் பலவே
குற்றமும் தண்டனையும்
பாடியோர் ஊன் பொதி பசுங் குடையார்
பாடப்பட்டோன் சோழன் நெய்தலங் கானல் இளஞ்சே சென்னி
திணை பாடாண்
துறை இயன்மொழி
வழிபடு வோரை வல்லறி தீயே
பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே
நீமெய் கண்ட தீமை காணின்
ஒப்ப நாடி அத்தக ஒறுத்தி
வந்து அடி பொருந்தி முந்தை நிற்பின்
தண்டமும் தணிதி நீ பண்டையிற் பெரிதே
அமிழ்துஅட்டு ஆனா கமழ்குய் அடிசில்
வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கை
மகளிர் மலைத்தல் அல்லது மள்ளர்
மலைத்தல் போகிய சிலைத்தார் மார்ப
செய்து இரங்காவினை சேண்விளங் கும்புகழ்
நெய்தருங் கானல் நெடியோய்
எய்த வந்தனம்யாம் ஏத்துகம் பலவே
பெற்றனர் பெற்றிலேன்
பாடியவர் பேய்மகள் இளவெயினியார்
பாடப்பட்டோன் சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ
திணை பாடாண் துறை பரிசில் கடாநிலை
அரி மயிர திரள் முன்கை
வால் இழை மட மங்கையர்
வரி மணற் புனை பாவைக்கு
குலவு சினை பூ கொய்து
தண் பொருநை புனல் பாயும்
விண் பொருபுகழ் விறல்வஞ்சி
பாடல் சான்ற விறல்வே தனும்மே
வெ புடைய அரண் கடந்து
துப்புறுவர் புறம்பெற் றிசினே
புறம் பொற்ற வய வேந்தன்
மறம் பாடிய பாடினி யும்மே
ஏர் உடைய விழு கழஞ்சின்
சீர் உடைய இழை பெற்றிசினே
இழை பெற்ற பாடி னிக்கு
குரல் புணர்சீர கொளைவல்பாண் மகனும்மே
என ஆங்கு
ஒள்அழல் புரிந்த தாமரை
வெள்ளி நாரால் பூப்பெற் றிசினே
அறம் இதுதானோ
பாடியவர் நெட்டிமையார்
பாடப்பட்டோன் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமி பெருவழுதி
திணை பாடாண் துறை இயன்மொழி
பாணர் தாமரை மலையவும் புலவர்
பூநுதல் யானையோடு புனைதேர் பண்ணவும்
அறனோ மற்றஇது விறல்மாண் குடுமி
இன்னா ஆக பிறர் மண் கொண்டு
இனிய செய்தி நின் ஆர்வலர் முகத்தே
நோயின்றி செல்க
பாடியவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
பாடப்பட்டோன் சோழன் முடித்தலை கோப்பெருநற்கிள்ளி
திணை பாடாண் துறை வாழ்த்தியல்
‘இவன் யார்’ என்குவை ஆயின் இவனே
புலிநிற கவசம் பூம்பொறி சிதைய
எய்கணை கிழித்த பகட்டுஎழில் மார்பின்
மறலி அன்ன களிற்றுமிசை யோனே
களிறே முந்நீர் வழங்கு நாவாய் போலவும்
பன்மீன் நாப்பண் திங்கள் போலவும்
சுறவு இனத்து அன்ன வாளோர் மொய்ப்ப
மரீஇயோர் அறியாது மைந்துப டன்றே
நோயிலன் ஆகி பெயர்கதில் அம்ம
பழன மஞ்ஞை உகுத்த பீலி
கழனி உழவர் சூட்டொடு தொகுக்கும்
கொழுமீன் விளைந்த கள்ளின்
விழுநீர் வேலி நாடுகிழ வோனே
மென்மையும் வன்மையும்
பாடியவர் கபிலர்
பாடப்பட்டோன் சேரமான் செல்வ கடுங்கோ வாழியாதன்
திணை பாடாண் துறை இயன்மொழி
கடுங்கண்ண கொல் களிற்றால்
கா புடைய எழு முருக்கி
பொன் இயல் புனை தோட்டியான்
முன்பு துரந்து தாங்கவும்
பார்உடைத்த குண்டு அகழி
நீர் அழுவம் நிவப்பு குறித்து
நிமிர் பரிய மா தாங்கவும்
ஆவம் சேர்ந்த புறத்தை தேர்மிசை
சாப நோன்ஞாண் வடுக்கொள வழங்கவும்
பரிசிலர்க்கு அருங்கலம் நல்கவும் குரிசில்
வலிய ஆகும் நின் தாள்தோய் தடக்கை
புலவு நாற்றத்த பைந்தடி
பூ நாற்றத்த புகை கொளீஇ ஊன்துவை
கறிசோறு உண்டு வருந்துதொழில் அல்லது
பிறிதுதொழில் அறியா ஆகலின் நன்றும்
மெல்லிய பெரும தாமே நல்லவர்க்கு
ஆரணங்கு ஆகிய மார்பின் பொருநர்க்கு
இருநிலத்து அன்ன நோன்மை
செருமிகு சேஎய் நின் பாடுநர் கையே
எதனிற் சிறந்தாய்
பாடியவர் கபிலர்
பாடப்பட்டோன் சேரமான் செல்வ கடுங்கோ வாழியாதன்
திணை பாடாண் துறை இயன்மொழி
கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்
வெள்வா கழுதை புல்லின பூட்டி
பாழ்செய் தனை அவர் நனந்தலை நல்லெயில்
புள்ளினம் இமிழும் புகழ்சால் விளைவயல்
வெள்ளுளை கலிமான் கவிகுளம்பு உகள
தேர்வழங் கினைநின் தெவ்வர் தேஎத்து
துளங்கு இயலாற் பணை எருத்தின்
பா வடியாற்செறல் நோக்கின்
ஒளிறு மருப்பின் களிறு அவர
கா புடைய கயம் படியினை
அன்ன சீற்றத்து அனையை ஆகலின்
விளங்கு பொன் எறிந்த நலங்கிளர் பலகையடு
நிழல்படு நெடுவேல் ஏந்தி ஒன்னார்
ஒண்படை கடுந்தார் முன்புதலை கொண்மார்
நசைதர வந்தோர் நசைபிறக்கு ஒழிய
வசைபட வாழ்ந்தோர் பலர்கொல் புரையில்
நற் பனுவல் நால் வேதத்து
அருஞ் சீர்த்தி பெருங் கண்ணுறை
நெய்ம் மலி ஆவுதி பொங்க பன்மாண்
வீயா சிறப்பின் வேள்வி முற்றி
யூபம் நட்ட வியன்களம் பலகொல்
யாபல கொல்லோ பெரும வார் உற்று
விசிபிணி கொண்ட மண்கனை முழவின்
பாடினி பாடும் வஞ்சிக்கு
நாடல் சான்ற மைந்தினோய் நினக்கே
செவ்வானும் சுடுநெருப்பும்
பாடியவர் பாண்டரங் கண்ணனார்
பாடப்பட்டோன் சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி
திணை வஞ்சி துறை மழபுல
வினை மாட்சிய விரை புரவியடு
மழை யுருவின தோல் பரப்பி
முனை முருங்க தலைச்சென்று அவர்
விளை வயல் கவர்பு ஊட்டி
மனை மரம் விறகு
கடி துறைநீர களிறு படீஇ
எல்லுப்பட இட்ட சுடுதீ விளக்கம்
செல்சுடர் ஞாயிற்று செக்கரின் தோன்ற
புலம்கெட இறுக்கும் வரம்பில் தானை
துணை வேண்டா செரு வென்றி
புலவு வாள் புலர் சாந்தின்
முருகன் சீற்றத்து உருகெழு குருசில்
மயங்கு வள்ளை மலர் ஆம்பல்
பனி பகன்றை சுனி பாகல்
கரும்பு அல்லது காடு அறியா
பெரு தண்பணை பாழ் ஆக
ஏமநன் னாடு ஒள்எரி ஊட்டினை
நாம நல்லமர் செய்ய
ஒராங்கு மலைந்தன பெரும நின் களிறே
யானையும் வேந்தனும்
பாடியவர் குறுங்கோழியூர் கிழார்
பாடப்பட்டோன் சேரமான் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
திணை வாகை துறை அரசவாகை இயன்மொழியும் ஆம்
தென் குமரி வட பெருங்கல்
குண குட கடலா வெல்லை
குன்று மலை காடு நாடு
ஒன்று பட்டு வழி மொழி
கொடிது கடிந்து கோல் திருத்தி
படுவது உண்டு பகல் ஆற்றி
இனிது உருண்ட சுடர் நேமி
முழுது ஆண்டோர் வழி காவல
குலை இறைஞ்சிய கோள் தாழை
அகல் வயல் மலை வேலி
நிலவு மணல் வியன் கானல்
தெண் கழிமிசை சுடர பூவின்
தண் தொண்டியோர் அடு பொருந
மா பயம்பின் பொறை போற்றாது
நீடு குழி அக பட்ட
பீடு உடைய எறுழ் முன்பின்
கோடு முற்றிய கொல் களிறு
நிலை கலங குழி கொன்று
கிளை புகல தலைக்கூடி யாங்கு
நீ பட்ட அரு முன்பின்
பெரு தளர்ச்சி பலர் உவ
பிறிது சென்று மலர் தாயத்து
பலர் நாப்பண் மீ கூறலின்
‘உண் டாகிய உயர் மண்ணும்
சென்று பட்ட விழு கலனும்
பெறல் கூடும் இவன்நெஞ்சு உறப்பெறின்’எனவும்
‘ஏந்து கொடி இறை புரிசை
வீங்கு சிறை வியல் அருப்பம்
இழந்து வைகுதும்இனிநாம் இவன்
உடன்று நோக்கினன் பெரிது’ எனவும்
வேற்று அரசு பணி தொடங்குநின்
ஆற்ற லொடு புகழ் ஏத்தி
காண்கு வந்திசின் பெரும ஈண்டிய
மழையென மருளும் பல் தோல் மலையென
தேன்இறை கொள்ளும் இரும்பல் யானை
உடலுநர் உட்க வீங்கி கடலென
வான்நீர்க்கு ஊக்கும் தானை ஆனாது
கடுஒடுங்கு எயிற்ற அரவுத்தலை பனிப்ப
இடியென முழங்கு முரசின்
வரையா ஈகை குடவர் கோவே
நீரும் நிலனும்
பாடியவர் குடபுலவியனார்
பாடப்பட்டோன் பாண்டியன் நெடுஞ்செழியன் திணை பொதுவியல்
துறை முதுமொழி காஞ்சி பொருண்மொழி எனவும் பாடம்
முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇ
பரந்து பட்ட வியன் ஞாலம்
தாளின் தந்து தம்புகழ் நிறீஇ
ஒருதாம் ஆகிய உரவோர் உம்பல்
ஒன்றுபத்து அடுக்கிய கோடிகடை இரீஇய
பெருமைத்து ஆக நின் ஆயுள் தானே
நீர தாழ்ந்த குறுங் காஞ்சி
பூ கதூஉம் இன வாளை
நுண் ஆரல் பரு வரால்
குரூஉ கெடிற்ற குண்டு அகழி
வான் உட்கும் வடிநீண் மதில்
மல்லல் மூதூர் வய வேந்தே
செல்லும் உலகத்து செல்வம் வேண்டினும்
ஞாலம் காவலர் தோள்வலி முருக்கி
ஒருநீ ஆகல் வேண்டினும் சிறந்த
நல்இசை நிறுத்தல் வேண்டினும் மற்றதன்
தகுதி கேள் இனி மிகுதியாள
நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடு தோரே
உண்டி முதற்றே உணவின் பிண்டம்
உணவென படுவது நிலத்தோடு நீரே
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரே
வித்திவான் நோக்கும் புன்புலம் கண்ணகன்
வைப்புற்று ஆயினும் நண்ணி ஆளும்
இறைவன் தாட்குஉத வாதே அதனால்
அடுபோர செழிய இகழாது வல்லே
நிலன்நெளி மருங்கின் நீர்நிலை பெருக
தட்டோர் அம்ம இவண்த டோரே
தள்ளா தோர்இவண் தோரே
எழுவரை வென்ற ஒருவன்
பாடியவர் குடபுலவியனார்
பாடப்பட்டோன் பாண்டியன் தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன்
திணை வாகை துறை அரசவாகை
இமிழ்கடல் வளைஇய ஈண்டுஅகல் கிடக்கை
தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து
மன்உயிர பன்மையும் கூற்றத்து ஒருமையும்
நின்னொடு தூக்கிய வென்வேற் செழிய
‘இரும்புலி வேட்டுவன் பொறிஅறிந்து மாட்டிய
பெருங்கல் அடாரும் போன்ம் என விரும்பி
முயங்கினேன் அல்லனோ யானே மயங்கி
குன்றத்து இறுத்த குரீஇஇனம் போல
அம்புசென்று இறுத்த அறும்புண் யானை
தூம்புஉடை தடக்கை வாயடு துமிந்து
நாஞ்சில் ஒப்ப நிலமிசை புரள
எறிந்துகளம் படுத்த ஏந்துவாள் வலத்தர்
எந்தையோடு கிடந்தோர் எம்புன் தலைப்புதல்வர்
‘இன்ன விறலும் உளகொல் நமக்கு’என
மூதில் பெண்டிர் கசிந்து அழ நாணி
கூற்றுக்கண் ஓடிய வெருவரு பறந்தலை
எழுவர் நல்வலங் கடந்தோய் நின்
கழூஉ விளங்கு ஆரம் கவைஇய மார்பே
மண்ணும் உண்பர்
பாடியவர் குறுங்கோழியூர்கிழார்
பாடப்பட்டோன் சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை
எனவும் குறிப்பர்
திணை வாகை துறை அரச
இரு முந்நீர குட்டமும்
வியன் ஞாலத்து அகலமும்
வளி வழங்கு திசையும்
வறிது நிலைஇய காயமும் என்றாங்கு
அவை அளந்து அறியினும் அளத்தற்கு அரியை
அறிவும் ஈரமும் பெருங்க ணோட்டமும்
சோறு படுக்கும் தீயோடு
செஞ் ஞாயிற்று தெறல் அல்லது
பிறிது தெறல் அறியார் நின் நிழல்வாழ் வோரே
திருவில் அல்லது கொலைவில் அறியார்
நாஞ்சில் அல்லது படையும் அறியார்
திறனறி வயவரொடு தெவ்வர் தேய
பிறர்மண் உண்ணும் செம்மல் நின் நாட்டு
வயவுறு மகளிர் வேட்டு உணின் அல்லது
பகைவர் உண்ணா அருமண் ணினையே
அம்பு துஞ்சும்கடி அரணால்
அறம் துஞ்சும் செங்கோலையே
புதுப்புள் வரினும் பழம்புள் போகினும்
விதுப்புற அறியா காப்பினை
அனையை ஆகல் மாறே
மன்னுயிர் எல்லாம் நின்அஞ் சும்மே
புகழ்சால் தோன்றல்
பாடியவர் ஐயூர் மூலங்கிழார்
பாடப்பட்டோன் கானப்பேரெயில் கடந்த உக்கிர பெருவழுதி
திணை வாகை துறைஅரசவாகை
புலவரை இறந்த புகழ்சால் தோன்றல்
நிலவரை இறந்த குண்டுகண் அகழி
வான்தோய் வன்ன புரிசை விசும்பின்
மீன்பூ தன்ன உருவ ஞாயில்
கதிர்நுழை கல்லா மரம்பயில் கடிமிளை
அருங் குறும்பு உடுத்த கானப்பேர் எயில்
கருங்கை கொல்லன் செந்தீ மாட்டிய
இரும்புஉண் நீரினும் மீட்டற்கு அரிதுஎன
வேங்கை மார்பின் இரங்க வைகலும்
ஆடுகொள குழைந்த தும்பை புலவர்
பாடுதுறை முற்றிய கொற்ற வேந்தே
இகழுநர் இசையடு மா
புகழொடு விளங்கி பூக்க நின் வேலே
ஈகையும் நாவும்
பாடியவர் குறுங்கோழியூர் கிழார்
பாடப்பட்டோன் சேரமான் யானைக்க சேஎய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை
திணைவாகைதுறை அரசவாகை
தூங்கு கையான் ஓங்கு நடைய
உறழ் மணியான் உயர் மருப்பின
பிறை நுதலான் செறல் நோக்கின
பா வடியால் பணை எருத்தின
தேன் சிதைந்த வரை போல
மிஞிறு ஆர்க்கும் கமழ்கடா அத்து
அயறு சோரூம் இருஞ் சென்னிய
மைந்து மலிந்த மழ களிறு
கந்து சேர்பு நிலைஇ வழங்க
பாஅல் நின்று கதிர் சோரும்
வான உறையும் மதி போலும்
மாலை வெண் குடை நீழலான்
வாள் மருங்கு இலோர் காப்பு உறங்க
அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த
‘ஆய் கரும்பின் கொடி கூரை
சாறு கொண்ட களம் போல
வேறு பொலிவு தோன்ற
குற் றானா உல கையால்
கலி சும்மை வியல் ஆங்கண்
பொலம் தோட்டு பை தும்பை
மிசை அலங்கு உளைய பனைப்போழ் செரிஇ
சின மாந்தர் வெறி குரவை
ஓத நீரில் பெயர்பு பொங்க
வாய் காவாது பரந்து பட்ட
வியன் பாசறை கா பாள
வேந்து தந்த பணி திறையாற்
சேர தவர் கடும்பு ஆர்த்தும்
ஓங்கு கொல்லியோர் அடு பொருந
வேழ நோக்கின் விறல்வெம் சேஎய்
வாழிய பெரும நின் வரம்பில் படைப்பே
நிற் பாடிய அலங்கு செந்நா
பிற்பிறர் இசை நுவ லாமை
ஒம்பாது ஈயும் ஆற்றல் எங்கோ
‘மாந்தரஞ் சேரல் இரும்பொறை ஓம்பிய நாடே
புத்தேள் உலகத்து அற்று’ என கேட்டு வந்து
இனிது காண்டிசின் பெரும முனிவிலை
வேறுபுலத்து இறுக்கும் தானையோடு
சோறுயட நடத்தி நீ துஞ்சாய் மாறே
நண்ணார் நாணுவர்
பாடியவர் கல்லாடனார்
பாடப்பட்டோன் பாண்டியன் தலையாலங் கானத்து நெடுஞ்செழியன்
திணை வாகை துறை அரச நல்லிசை வஞ்சியும் ஆம்
வெளிறில் நோன்காழ பணைநிலை முனைஇ
களிறுபடிந்து உண்டென கலங்கிய துறையும்
கார்நறுங் கடம்பின் பாசிலை தெரியல்
சூர்நவை முருகன் சுற்றத்து அன்ன நின்
கூர்நல் அம்பின் கொடுவில் கூளியர்
கொள்வது கொண்டு கொள்ளா மிச்சில்
கொள்பதம் ஒழிய வீசிய புலனும்
வடிநவில் நவியம் பாய்தலின் ஊர்தொறும்
கடிமரம் துளங்கிய காவும் நெடுநகர்
வினைபுனை நல்லில் வெவ்வெரி நைப்ப
கனைஎரி உரறிய மருங்கும் நோக்கி
நண்ணார் நாண நாள்தொறும் தலைச்சென்று
இன்னும் இன்னபல செய்குவன் யாவரும்
துன்னல் போகிய துணிவினோன் என
ஞாலம் நெளிய ஈண்டிய வியன்படை
ஆலங் கானத்து அமர்கடந்து அட்ட
கால முன்ப நின் கண்டனென் வருவல்
அறுமருப்பு எழிற்கலை புலிப்பால் பட்டென
சிறுமறி தழீஇய தெறிநடை மடப்பிணை
பூளை நீடிய வெருவரு பறந்தலை
வேளை வெண்பூ கறிக்கும்
ஆளில் அத்தம் ஆகிய காடே
வல்லுனர் வாழ்ந்தோர்
பாடியவர் மாங்குடி கிழவர்மாங்குடி மருதனார் எனவும் பாடம்
பாடப்பட்டோன் பாண்டியன் தலையாலங் கானத்து செருவென்ற நெடுஞ்செழியன்
திணை பொதுவியல்துறை பொருண்மொழி காஞ்சி
நெல் அரியும் இரு தொழுவர்
செஞ் ஞாயிற்று வெயில் முனையின்
தென் கடல்திரை மிசைப்பா யுந்து
திண் திமில் வன் பரதவர்
வெ புடைய டுண்டு
தண் குரவை சீர்தூங் குந்து
தூவற் கலித்த தேம்பாய் புன்னை
மெல்லிணர கன்ணி மிலைந்த மைந்தர்
எல்வளை மகளிர தலைக்கை தரூஉந்து
வண்டுபட மலர்ந்த தண்ணறுங் கானல்
முண்ட கோதை ஒண்டொடி மகளிர்
இரும் பனையின் குரும்பை நீரும்
பூங் கரும்பின் தீஞ் சாறும்
ஓங்கு மணற் குலவு தாழை
தீ நீரோடு உடன் விராஅய்
முந்நீர் உண்டு முந்நீர பாயும்
தாங்கா உறையுள் நல்லூர் கெழீஇய
ஒம்பா ஈகை மாவேள் எவ்வி
புனலம் புதவின் மிழலையடு கழனி
கயலார் நாரை போர்வில் சேக்கும்
பொன்னணி யானை தொன்முதிர் வேளிர்
குப்பை நெல்லின் முத்தூறு தந்த
கொற்ற நீள்குடை கொடித்தேர செழிய
நின்று நிலைஇயர் நின் நாண்மீன் நில்லாது
படாஅ செலீஇயர் நின்பகைவர் மீனே
நின்னொடு தொன்றுமூத்த உயிரினும் உயிரொடு
நின்று மூத்த யாக்கை யன்ன நின்
ஆடுகுடி மூத்த விழுத்திணை சிறந்த
வாளின் வாழ்நர் தாள்வலம் வாழ்த்த
இரவன் மாக்கள் ஈகை நுவல
ஒண்டொடி மகளிர் பொலங்கலத்து ஏந்திய
தண்கமழ் தேறல் மடுப்ப மகிழ்சிறந்து
ஆங்குஇனிது ஒழுகுமதி பெரும ‘ஆங்கது
வல்லுநர் வாழ்ந்தோர் என்ப தொல்லிசை
மலர்தலை உலகத்து தோன்றி
பலர்செல செல்லாது நின்று விளி தோரே
கூந்தலும் வேலும்
பாடியவர் கல்லாடனார்
பாடப்பட்டோன் தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன்
திணை வாகை துறை அரசவாகை
மீன்திகழ் விசும்பின் பாய்இருள் அகல
ஈண்டு செலல் மரபின் தன் இயல் வழாஅது
உரவுச்சினம் திருகிய உருகெழு ஞாயிறு
நிலவுத்திகழ் மதியமொடு நிலஞ்சேர தாஅங்கு
உடலரு துப்பின் ஒன்றுமொழி வேந்தரை
அணங்கரும் பறந்தலை உணங்க பண்ணி
பிணியுறு முரசம் கொண்ட காலை
நிலைதிரிபு எறி திண்மடை கலங்கி
சிதைதல் உய்ந்தன்றோ நின்வேல் செழிய
முலைபொலி அகம் உருப்ப நூறி
மெய்ம்மறந்து பட்ட வரையா பூசல்
ஒள் நுதல் மகளிர் கைம்மை கூர
அவிர் அறல் கடுக்கும் அம் மென்
குவை யிரும் கூந்தல் கொய்தல் கண்டே
நோற்றார் நின் பகைவர்
பாடியவர் மாங்குடி கிழவர் மருதனார் எனவும் பாடம்
பாடப்பட்டோன் பாண்டியன் தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன்
திணை வாகை துறை அரச
நளி கடல் இருங் குட்டத்து
வளி புடைத்த கலம் போல
களிறு சென்று களன் அகற்றவும்
களன் அகற்றிய வியல் ஆங்கண்
ஒளிறு இலைய எ·கு ஏந்தி
அரைசு பட அமர் உழக்கி
உரை செல முரசு வெளவி
முடி தலை அடு பாக
புனல் குருதி உலை கொளீஇ
தொடித்தோள் துடுப்பின் துழந்த வல்சியின்
அடுகளம் வேட்ட அடுபோர செழிய
ஆன்ற கேள்வி அடங்கிய கொள்கை
நான்மறை முதல்வர் சுற்ற மாக
மன்னர் ஏவல் செய்ய மன்னிய
வேள்வி முற்றிய வாய்வாள் வேந்தே
நோற்றோர் மன்ற நின் பகைவர் நின்னொடு
மாற்றார் என்னும் பெயர் பெற்று
ஆற்றார் ஆயினும் ஆண்டுவாழ் வோரே
புலவர் பாடும் புகழ்
பாடியவர் உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
பாடப்பட்டோன் சோழன் நலங்கிள்ளி திணை பொதுவியல்
துறை முதுமொழி காஞ்சி
சேற்று வளர் தாமரை பயந்த ஒண் கேழ்
நூற் றிதழ் அலரின் நிறை கண் டன்ன
வேற்றுமை ‘இல்லா விழுத்திணை பிறந்து
வீற்றிரு தோரை எண்ணுங் காலை
உரையும் பாட்டும் உடையோர் சிலரே
மரைஇலை போல மாய்ந்திசினோர் பலரே
‘புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
வலவன் ஏவா வான ஊர்தி
எய்துப என்ப தம் செய்வினை முடித்து’ என
கேட்பல் எந்தை சேட்சென்னி நலங்கிள்ளி
தேய்தல் உண்மையும் பெருகல்
மாய்தல் உண்மையும் பிறத்தல்
அறியா தோரையும் அறி காட்டி
திங்க புத்தேள் திரிதரும் உலகத்து
வல்லார் ஆயினும் வல்லுநர்
வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி
அருள வல்லை ஆகுமதி அருளிலர்
கொடா அமை வல்லர் ஆகுக
கெடாஅ துப்பின்நின் பகைஎதிர தோரே
போற்றாமையும் ஆற்றாமையும்
பாடியவர் உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
பாடப்பட்டோன் சோழன் நலங்கிள்ளி திணை பொதுவியல்
துறை முதுமொழி காஞ்சி
சிறப்பு எண்பேர் எச்சங்கள் பற்றிய விளக்கம் அறம் பொருள் இன்பம்
எனும் உறுதி பொருள்கள் பற்றிய குறிப்பு
‘சிறப்பில் சிதடும் உறுப்பில் பிண்டமும்
கூனும் குறளும் ஊமும் செவிடும்
மாவும் மருளும் உளப்பட வாழ்நர்க்கு
எண்பேர் எச்சம் என்றிவை எல்லாம்
பேதைமை அல்லது ஊதியம் இல்’ என
முன்னும் அறிந்தோர் கூறினர் இன்னும்
அதன் திறம் அத்தை யான் உரைக்க வந்தது
வட்ட வரிய செம்பொறி சேவல்
ஏனல் காப்போர் உணர்த்திய கூஉம்
கான தோர் நின் தெவ்வர் நீயே’
புறஞ்சிறை மாக்கட்கு அறங்குறித்து அகத்தோர்
புய்த்தெறி கரும்பின் விடுகழை தாமரை
பூம்போது சிதைய வீழ்ந்தென கூத்தர்
ஆடுகளம் கடுக்கும் அகநா டையே
அதனால் அறனும் பொருளும் இன்பமும் மூன்றும்
ஆற்றும் பெரும நின்செல்வம்
ஆற்றாமை நின் போற்றா மையே
நண்பின் பண்பினன் ஆகுக
பாடியவர் உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
பாடப்பட்டோன் சோழன் நலங்கிள்ளி திணை பொதுவியல்
துறை முதுமொழி காஞ்சி சிறப்பு சிறந்த அறநெறிகள்
அழல் புரிந்த அடர் தாமரை
ஐது அடர்ந்ற நூற் பெய்து
புனை விளை பொலிந்த பொலன் நறு தெரியல்
பாறு மயிர் இருந்தலை பொலி சூடி
பாண் முற்றுக நின் நாள்மகிழ் இருக்கை
பாண் முற்று ஒழிந்த பின்றை மகளிர்
தோள் முற்றுக நின் சாந்துபுலர் அகலம் ஆங்க
முனிவில் முற்றத்து இனிது முரசு இயம்ப
கொடியோர தெறுதலும் செவ்வியோர்க்குஅளித்தலும்
ஒடியா முறையின் மடிவிலை யாகி
‘நல்லதன் நலனும் தீயதன் தீமையும்
இல்லை’ என்போர்க்கு இனன் ஆகி லியர்
நெல்விளை கழனி படுபுள் ஓப்புநர்
ஒழி மடல் விறகின் கழுமீன் சுட்டு
வெங்கள் தொலைச்சியும் அமையார் தெங்கின்
இளநீர் உதிர்க்கும் வளமிகு நன்னாடு
பெற்றனர் உவக்கும் நின் படைகொள் மாக்கள்
பற்றா மாக்களின் பரிவு முந்து உறுத்து
கூவை துற்ற நாற்கால் பந்தர
சிறுமனை வாழ்க்கையின் ஒரீஇ வருநர்க்கு
உதவி ஆற்றும் நண்பின் பண்புடை
ஊழிற்று ஆக நின் செய்கை விழவின்
கோடியர் நீர்மை போல முறை
ஆடுநர் கழியும்இவ் உலகத்து கூடிய
நகை புறனாக நின் சுற்றம்
இசைப்புற னாக நீ ஓம்பிய பொருளே
எங்ஙனம் பாடுவர்
பாடியவர் உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
பாடப்பட்டோன் சோழன் நலங்கிள்ளி
திணை பாடாண் துறை இயன்மொழி
சிறப்பு தலைவனின் இயல்பு கூறுதல்
செஞ்ஞா யிற்று செலவும்
அஞ் ஞாயிற்று பரிப்பும்
பரிப்பு சூழ்ந்த மண் டிலமும்
வளி திரிதரு திசையும்
வறிது நிலைஇய காயமும் என்றிவை
சென்றளந்து அறிந்தார் போல என்றும்
இனைத்து என்போரும் உளரே அனைத்தும்
அறிவுஅறி வாக செறிவினை யாகி
களிறுகவுள் அடுத்த எறிகல் போல
ஒளித்த துப்பினை ஆதலின் வெளிப்பட
யாங்ஙனம் பாடுவர் புலவர் கூம்பொடு
மீப்பாய் களையாது மிசை பர தோண்டாது
புகாஅர புகுந்த பெருங்கல தகாஅர்
இடைப்புல பெருவழி சொரியும்
கடல்பல் தாரத்த நாடுகிழ வோயே
வடநாட்டார் தூங்கார்
பாடியவர் கோவூர்கிழார்
பாடப்பட்டோன் சோழன் நலங்கிள்ளி
திணை வாகை துறை அரசவாகை மழபுல வஞ்சியும் ஆம்
சிறப்பு வடபுலத்து அரசர்கள் இச்சோழனது மறமாண்பை கேட்டு அஞ்சிய அச்சத்தால் துஞ்சா
கண்ணர் ஆயினமை
சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்
அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல
இரு குடை பின்பட ஓங்கி ஒரு
உருகெழு மதியின் நிவந்துசேண் விளங்க
நல்லிசை வேட்டம் வேண்டி வெல்போர
பாசறை யல்லது நீயல் லாயே
நிதிமுகம் மழுங்க மண்டி ஒன்னார்
கடிமதில் பாயும் நின் களிறு அடங் கலவே
‘போர்’ எனில் புகலும் புனைகழல் மறவர்
‘காடிடை கிடந்த நாடுநனி சேஎய
செல்வேம் அல்லேம்’ என்னார் ‘கல்லென்
விழவுடை ஆங்கண் வேற்றுப்புலத்து இறுத்து
குண கடல் பின்ன தா குட
வெண் தலை புணரி நின் மான்குளம்பு அலைப்ப
வலமுறை வருதலும் உண்டு’ என்று அலமந்து
நெஞ்சு நடுங்கு அவலம் பா
துஞ்சா கண்ண வட புலத்து அரசே
பூவிலையும் மாடமதுரையும்
பாடியவர் கோவூர்கிழார்
பாடப்பட்டோன் சோழன் நலங்கிள்ளி
திணை பாடாண் துறை இயன்மொழி
சிறப்பு சோழனது நினைத்தது முடிக்கும் உறுதிப்பாடு
கடும்பின் அடுகலம் நிறையாக நெடுங் கொடி
பூவா வஞ்சியும் தருகுவன் ஒன்றோ
‘வண்ணம் நீவிய வணங்குஇறை பணைத்தோள்
ஒண்ணுதல் விறலியர் பூவிலை பெறுக’ என
மாட மதுரையும் தருகுவன் எல்லாம்
பாடுகம் வம்மினோ பரிசில் மாக்கள்
தொன்னில கிழமை சுட்டின் நன்மதி
வேட்கோ சிறாஅர் தேர்க்கால் வைத்த
பசுமண் குரூஉத்திரள் போல அவன்
கொண்ட குடுமித்தும் தண்பணை நாடே
புதுப்பூம் பள்ளி
பாடியவர் கோவூர்கிழார்
பாடப்பட்டோன் சோழன் நலங்கிள்ளி
திணைவாகை துறை அரசவாகை
சிறப்பு பகைவரது கோட்டைகளை கைப்பற்றியவுடன் அவற்றின் கதவுகளில்
வெற்றிபெற்றோன் தனது அரச முத்திரையை பதிக்கும் மரபுபற்றிய செய்தி
கான் உறை வாழ்க்கை கதநாய் வேட்டுவன்
மான்தசை சொரிந்த வட்டியும் ஆய்மகள்
தயிர்கொடு வந்த தசும்பும் நிறைய
ஏரின் வாழ்நர் பேரில் அரிவையர்
குளக்கீழ் விளைந்த களக்கொள் வெண்ணெல்
முகந்தனர் கொடுப்ப உகந்தனர் பெயரும்
தென்னம் பொருப்பன் புன்னாட்டுள்ளும்
ஏழெயில் கதவம் எறிந்து கைக்கொண்டு நின்
பேழ்வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலை
பாடுநர் வஞ்சி பாட படையோர்
தாதுஎரு மறுகின் பாசறை பொலி
புலரா பச்சிலை இடையிடுபு தொடுத்த
மலரா மாலை பந்துகண் டன்ன
ஊன்சோற் றமலை பான்கடும்பு அருத்தும்
செம்மற்று அம்மநின் வெம்முனை இருக்கை
வல்லோன் தைஇய வரிவனப்பு உற்ற
அல்லி பாவை ஆடுவனப்பு ஏய்ப்ப
காம இருவர் அல்லது யாமத்து
தனிமகன் வழங்கா பனிமலர காவின்
ஒதுக்குஇன் திணிமணல் புதுப்பூம் பள்ளி
வாயின் மாடந்தொறும் மைவிடை வீழ்ப்ப
நீஆங்கு கொண்ட விழவினும் பலவே
செய்தி கொன்றவர்க்கு உய்தி இல்லை
பாடியவர் ஆலத்தூர் கிழார்
பாடப்பட்டோன் சோழன் குளமுற்றத்து துஞ்சிய கிள்ளி வளவன்
திணைபாடாண் துறை இயன்மொழி
சிறப்பு செய்தி கொன்றோர்க்கு உய்தி இல் என்னும் அறநெறி பற்றிய
‘ஆன்மலை அறுத்த அறனி லோர்க்கும்
மாண்இழை மகளிர் கருச்சிதை தோர்க்கும்
குரவர தப்பிய கொடுமை யோர்க்கும்
வழுவாய் மருங்கின் கழுவாயும் உள’ என
‘நிலம்புடை பெயர்வ தாயினும் ஒருவன்
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்’ என’
அறம் பாடின்றே ஆயிழை கணவ
‘காலை அந்தியும் மாலை
புறவு கருவன்ன புன்புல வரகின்
பாற்பெய் புன்கம் தேனொடு மயக்கி
குறுமுயற் கொழுஞ்சூடு கிழித்த ஒக்கலொடு
இரத்தி நீடிய அகன்தலை மன்றத்து
கரப்பில் உள்ளமொடு வேண்டுமொழி பயிற்றி
அமலை கொழுஞ்சோறு ஆர்ந்த பாணர்க்கு
அகலா செல்வம் முழுவதும் செய்தோன்
எங்கோன்வளவன் வாழ்க’என்று நின்
பீடுகெழு நோன்தாள் பாடேன் ஆயின்
படுபறி யலனே பல்கதிர செல்வன்
யானோ தஞ்சம் பெரும இவ் வுலகத்து
சான்றோர் செய்த நன்றுண் டாயின்
இமையத்து ஈண்டி இன்குரல் பயிற்றி
கொண்டல் மாமழை பொழிந்த
நுண்பல் துளியினும் வாழிய பலவே
உழுபடையும் பொருபடையும்
பாடியவர் வெள்ளைக்குடி நாகனார்
பாடப்பட்டோன் சோழன் குளமுற்றத்து துஞ்சிய கிள்ளிவளவன்
திணை பாடாண் துறை செவியறிவுறூஉ
சிறப்பு அரச நெறியின் செவ்வி பற்றிய செய்திகள்
சிறப்பு பாடி பழஞ் செய்க்கடன் வீடு கொண்டது என்று இதனை குறிப்பர்
நளிஇரு முந்நீர் ஏணி யாக
வளிஇடை வழங்கா வானம் சூடிய
மண்திணி கிடக்கை தண்தமிழ கிழவர்
முரசு முழங்கு தானை மூவர் உள்ளும்
அரசுஎன படுவது நினதே பெரும
அலங்குகதிர கனலி நால்வயின் தோன்றினும்
இலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும்
அந்தண் காவிரி வந்து கவர்பு ஊட்ட
தோடு கொள் வேலின் தோற்றம் போல
ஆடுகண் கரும்பின் வெண்பூ நுடங்கும்
நாடுஎன படுவது நினதே அத்தை ஆங்க
நாடுகெழு செல்வத்து பீடுகெழு வேந்தே
நினவ கூறுவல் எனவ கேண்மதி
அறம்புரி தன்ன செங்கோல் நாட்டத்து
முறைவெண்டு பொழுதின் பதன் எளியோர் ஈண்டு
உறைவேண்டு பொழுதில் பெயல்பெற் றோறே
ஞாயிறு சுமந்த கோடுதிரள் கொண்டுமூ
மாக விசும்பின் நடுவுநின் றாங்கு
கண்பொர விளங்கும்நின் விண்பொரு வியன்குடை
வெயில்மறை கொண்டன்றோ அன்றே வருந்திய
குடிமறை பதுவே கூர்வேல் வளவ
வெளிற்றுப்பன துணியின் வீற்றுவீற்று கிடப்ப
களிற்று கணம் பொருத கண்ணகன் பறந்தலை
வருபடை தாங்கி பெயர்புற தார்த்து
பொருபடை தரூஉங் கொற்றமும் உழுபடை
ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே
மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும்
இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும்
காவலர பழிக்கும் கண்ணகன் ஞாலம்
அதுநற்கு அறிந்தனை யாயின் நீயும்
நொதும லாளர் பொதுமொழி கொள்ளாது
பகடுபுற தருநர் பாரம் ஓம்பி
குடிபுறம் தருகுவை யாயின் நின்
அடிபுறம் தருகுவர் அடங்கா தேரே
நீயே அறிந்து செய்க
பாடியவர் ஆலத்தூர் கிழார்
பாடப்பட்டோன் சோழன் குளமுற்றத்து துஞ்சிய கிள்ளி வளவன்
திணைவஞ்சி துறை துணை வஞ்சி
குறிப்பு சோழன் கருவூரை முற்றியிருந்தபோது பாடியது
அடுநை யாயினும் விடுநை
நீ அள தறிதி நின் புரைமை வார்தோல்
செயறியரி சிலம்பின் குறுந்தொடி மகளிர்
பொலஞ்செய் கழங்கின் தெற்றி யாடும்
தண்ணான் பொருநை வெண்மணல் சிதை
கருங்கை கொல்லன் அரஞ்செய் அவ்வாய்
நெடுங்கை நவியம் பாய்தலின் நிலையழிந்து
வீகமழ் நெடுஞ்சினை புலம்ப காவுதொறும்
கடிமரம் தடியும் ஓசை தன்ஊர்
நெடுமதில் வரைப்பின் கடிமனை இயம்ப
ஆங்குஇனி திருந்த வேந்தனொடு ஈங்குநின்
சிலைத்தார் முரசும் கறங்க
மலைத்தனை எண்பது நாணுத்தகவு உடைத்தே
புறவும் போரும்
பாடியவர் மாறோக்கத்து நப்பசலையார்
பாடப்பட்டோன் சோழன் குளமுற்றத்து துஞ்சிய கிள்ளி வளவன்
திணை வாகை உழிஞை எனவும் பாடம்
துறை அரச வாகை குற்றுழிஞை எனவும் முதல் வஞ்சி பாடம்
நஞ்சுடை வால் எயிற்று ஐந்தலை சுமந்த
வேக வெந்திறல் நாகம் புக்கென
விசும்புதீ பிறப்ப திருகி பசுங்கொடி
பெருமலை விடரகத்து உரும்எறி தாங்கு
புள்ளுறு புன்கண் தீர்த்த வெள் வேல்
சினங்கெழு தானை செம்பியன் மருக
கராஅம் கலித்த குண்டுகண் அகழி
இடம்கருங் குட்டத்து உடந்தொக்கு ஓடி
யாமம் கொள்பவர் சுடர்நிழல் கதூஉம்
கடுமுரண் முதலைய நெடுநீர் இலஞ்சி
செம்புஉறழ் புரிசை செம்மல் மூதூர்
வம்புஅணி யானை வேந்துஅக துண்மையின்
‘நல்ல’ என்னாது சிதைத்தல்
வல்லையால் நெடுந்தகை செருவ தானே
வேண்டியது விளைக்கும் வேந்தன்
பாடியவர் ஆவூர் மூலங் கிழார்
பாடப்பட்டோன் சோழன் குளமுற்றத்து துஞ்சிய கிள்ளிவளவன்
திணை பாடாண் துறை இயன்மொழி
குறிப்பு எம்முள்ளீர் எந்நாட்டீர் என்று அவன் கேட்ப அவர் பாடியது
வரை புரையும் மழகளிற்றின் மிசை
வான் துடைக்கும் வகைய போல
விரவு உருவின கொடி நுடங்கும்
வியன் தானை விறல் வேந்தே
நீ உடன்று நோக்கும்வாய் எரிதவழ
நீ நயந்து நோக்கும்வாய் பொன்பூப்ப
செஞ் ஞாயிற்று நிலவு வேண்டினும்
வெண் திங்களுள் வெயில் வேண்டினும்
வேண்டியது விளைக்கும் ஆற்றலை ஆகலின்
நின்நிழல் பிறந்து வளர்ந்த
எம் அளவு எவனோ மற்றே ‘இன்நிலை
பொலம்பூங் காவின் நன்னா டோரும்
செய்வினை மருங்கின் எய்தல் அல்லதை
உடையோர் ஈதலும் இல்லோர் இரத்தலும்
கடவ தன்மையின் கையறவு உடைத்து’என
ஆண்டு செய் நுகர்ச்சி ஈண்டும் கூடலின்
நின்நாடு உள்ளுவர் பரிசிலர்
ஒன்னார் தேஎத்தும் நின்னுடை தெனவே
புகழினும் சிறந்த சிறப்பு
பாடியவர் மாறோக்கத்து நப்பசலையார்
பாடப்பட்டோன் சோழன் குளமுற்றத்து துஞ்சிய கிள்ளிவளவன்
திணை பாடாண் துறை இயன்மொழி
சிறப்பு வளவன் வஞ்சியை வெற்றி கொண்டது
புறவின் அல்லல் சொல்லிய கறையடி
யானை வான்மரு பெறிந்த வெண்கடை
கோல்நிறை துலாஅம் புக்கோன் மருக
ஈதல்நின் புகழும் அன்றே சார்தல்
ஒன்னார் உட்கும் துன்னரும் கடுந்திறல்
தூங்கெயில் எறிந்தநின் ஊங்கணோர் நினைப்பின்
அடுதல்நின் புகழும் அன்றே கெடுவின்று
மறங்கெழு சோழர் உறந்தை அவையத்து
அறம்நின்று நிலையிற் றாகலின் அதனால்
முறைமைநின் புகழும் அன்றே மறம்மிக்கு
எழுசமம் கடந்த எழுஉறழ் திணிதோள்
கண்ணார் கண்ணி கலிமான் வளவ
யாங்கனம் மொழிகோ யானே ஓங்கிய
வரையள தறியா பொன்படு நெடுங்கோட்டு
இமையம் சூட்டியஏம விற்பொறி
மாண்வினை நெடுந்தேர் வானவன் தொலைய
வாடா வஞ்சி வாட்டும்நின்
பீடுகெழு நோன்தாள் பாடுங் காலே
ஒரு பிடியும் எழு களிரும்
பாடியவர் ஆவூர் மூலங்கிழார்
பாடப்பட்டோன் சோழன் குளமுற்றத்து துஞ்சிய கிள்ளிவளவன்
திணை பாடாண் துறை செவியறிவுறூஉ
நீயே பிறர் ஓம்புறு மறமன் னெயில்
ஓம்பாது கடந்தட்டு அவர்
முடி புனைந்த பசும் பொன்னின்
அடி பொலி கழல் தைஇய
வல் லாளனை வய வேந்தே
யாமே நின் இகழ் பாடுவோர் எருத்தடங்க
புகழ் பாடுவோர் பொலிவு தோன்ற
இன்றுகண் டாங்கு காண்குவம் என்றும்
இன்சொல் எண்பதத்தை ஆகுமதி பெரும
ஒருபிடி படியுஞ் சீறிடம்
எழுகளிறு புரக்கும் நாடுகிழ வோயே
காலனுக்கு மேலோன்
பாடியவர் கோவூர் கிழார்
பாடப்பட்டோன் சோழன் குளமுற்றத்து துஞ்சிய கிள்ளிவளவன்
திணை வஞ்சி துறை கொற்ற வள்ளை
காலனும் காலம் பார்க்கும் பாராது
வேல்ஈண்டு தானை விழுமியோர் தொலைய
வேண்டிடத்து அடூஉம் வெல்போர் வேந்தே
திசைஇரு நான்கும் உற்கம் உற்கவும்
பெருமரத்து இலையில் நெடுங்கோடு வற்றல் பற்றவும்
வெங்கதிர கனலி துற்றவும் பிறவும்
அஞ்சுவர தகுந புள்ளுக்குரல் இயம்பவும்
எயிறுநிலத்து வீழவும் எண்ணெய் ஆடவும்
களிறுமேல் கொள்ளவும் காழகம் நீப்பவும்
வெள்ளி நோன்படை கட்டிலொடு கவிழவும்
கனவின் அரியன காணா நனவின்
செருச்செய் முன்ப நின் வருதிறன் நோக்கி
மையல் கொண்ட ஏமம்இல் இருக்கையர்
புதல்வர் பூங்கண் முத்தி மனையோட்கு
எவ்வம் சுரக்கும் பைதல் மாக்களடு
பெருங்கல குற்றன்றால் தானே காற்றோடு
எரிநிகழ தன்ன செலவின்
செருமிகு வளவ நிற் சினைஇயோர் நாடே
ஈகையும் வாகையும்
பாடியவர் இடைக்காடனார்
பாடப்பட்டோன் சோழன் குளமுற்றத்து துஞ்சிய கிள்ளி வளவன்
திணை வாகை துறை அரச
சிறப்பு சோழனின் மறமேம் பாடும் கொடை மேம்பாடும் வலிமை சிறப்பும்
ஆனா ஈகை அடு போர் அண்ணல் நின்
யானையும் மலையின் தோன்றும் பெரும நின்
தானையும் கடலென முழங்கும் கூர்நுனை
வேலும் மின்னின் விளங்கும் உலகத்து
அரைசுதலை பனிக்கும் ஆற்றலை யாதலின்
புரைதீர தன்று அது புதுவதோ அன்றே
தண்புனற் பூசல் அல்லது நொந்து
‘களைக வாழி வளவ என்று நின்
முனைதரு பூசல் கனவினும் அறியாது
புலிபுறங் காக்கும் குருளை போல
மெலிவில் செங்கோல் நீபுறங் கா
பெருவிறல் யாணர தாகி அரிநர்
கீழ்மடை கொண்ட வாளையும் உழவர்
படைமிளிர திட்ட யாமையும் அறைநர்
கரும்பிற் கொண்ட தேனும் பெருந்துறை
நீர்தரு மகளிர் குற்ற குவளையும்
வன்புல கேளிர்க்கு வருவிரு தயரும்
மென்புல வைப்பின் நன்னாட்டு பொருந
மலையின் இழிந்து மாக்கடல் நோக்கி
நிலவரை இழிதரும் பல்யாறு போல
புலவ ரெல்லாம் நின்நோ கினரே
நீயே மருந்தில் கணிச்சி வருந்த வட்டித்து
கூற்றுவெகுண் டன்ன முன்பொடு
மாற்றுஇரு வேந்தர் மண்நோ கினையே
பிறப்பும் சிறப்பும்
பாடியவர் தாமப்பல் கண்ணனார்
பாடப்பட்டோன் சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான்
திணை வாகை துறை அரசவாகை
குறிப்பு புலவரும் அரச குமரனும் வட்டு பொருவுழி கைகரப்ப வெகுண்டு வட்டு
கொண்டு எறிந்தானை சோழன் மகன்
அல்லை என நாணியுருந்தானை அவர் பாடியது
நிலமிசை வாழ்நர் அலமரல் தீர
தெறுகதிர கனலி வெம்மை தாங்கி
கால்உண வாக சுடரொடு கொட்கும்
அவிர்சடை முனிவரும் மருள கொடுஞ்சிறை
கூருகிர பருந்தின் ஏறுகுறி தொரீஇ
தன்னகம் புக்க குறுநடை புறவின்
தபுதி யஞ்சி சீரை புக்க
வரையா ஈகை உரவோன் மருக
நேரார கடந்த முரண்மிகு திருவின்
தேர்வண் கிள்ளி தம்பி வார் கோல்
கொடுமர மறவர் பெரும கடுமான்
கைவண் தோன்றல் ஐயம் உடையேன்
‘ஆர்புனை தெரியல்நின் முன்னோர் எல்லாம்
பார்ப்பார் நோவன செய்யலர் மற்றுஇது
நீர்த்தோ நினக்கு’ என வெறுப்ப கூறி
நின்யான் பிழைத்தது நோவாய் என்னினும்
நீபிழை தாய்போல் நனிநா ணினையே
‘தம்மை பிழைத்தோர பொறுக்குஞ் செம்மல்
இக்குடி பிறந்தோர கெண்மை காணும்’ என
காண்டகு மொய்ம்ப காட்டினை ஆகலின்
யானே பிழைத்தனென் சிறக்கநின் ஆயுள்
மிக்குவரும் இன்னீர காவிரி
எக்கர் இட்ட மணலினும் பலவே
அறமும் மறமும்
பாடியவர் கோவூர் கிழார்
பாடப்பட்டோன் சோழன் நெடுங்கிள்ளி
திணை வாகை துறை அரச குறிப்பு
நலங்கிள்ளி ஆவுரை முற்றியிருந்தான் அதுகாலை அடைத்திருந்த நெடுங்கிள்ளியை கண்டு
பாடியது செய்யுள்
இரும்பிடி தொழுதியடு பெருங்கயம் படியா
நெல்லுடை கவளமொடு நெய்ம்மிதி பெறாஅ
திருந்தரை நோன்வெளில் வருந்த ஒற்றி
நிலமிசை புரளும் கைய வெய்துயிர்த்து
அலமரல் யானை உருமென முழங்கவும்
பாலில் குழவி அலறவும் மகளிர்
பூவில் வறுந்தலை முடிப்பவும் நீரில்
வினைபுனை நல்லில் இனைகூஉ கேட்பவும்
இன்னாது அம்ம ஈங்கு இனிது இருத்தல்
துன்னரும் துப்பின் வயமான் தோன்றல்
அறவை யாயின்’நினது’ என திறத்தல்
மறவை யாயின் போரொடு திறத்தல்
அறவையும் மறவையும் அல்லை யாக
திறவாது அடைத்த திண்ணிலை கதவின்
நீள்மதில் ஒருசிறை ஒடுங்குதல்
நாணுத்தக வுடைத்திது காணுங் காலே
தோற்பது நும் குடியே
பாடியவர் கோவூர் கிழார்
பாடப்பட்டோர் சோழன் நலங்கிள்ளியும் நெடுங்கிள்ளியும்
திணை வஞ்சி துறை துணை
குறிப்பு முற்றியிருந்த நலங்கிள்ளியையும் அடைத்திருந்த நெடுங்கிள்ளியையும் பாடிய
செய்யுள் இது
இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்
கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்
நின்ன கண்ணியும் ஆர்மிடை தன்றே நின்னொடு
பொருவோன் கண்ணியும் ஆர்மிடை தன்றே
ஒருவீர் தோற்பினும் தோற்ப நும் குடியே
இருவீர் வேறல் இயற்கையும் அன்றே அதனால்
குடிப்பொருள் அன்று நும் செய்தி கொடித்தேர்
நும்மோர் அன்ன வேந்தர்க்கு
மெய்ம்மலி உவகை செய்யும் இவ் இகலே
அருளும் பகையும்
பாடியவர் கோவூர் கிழார்
பாடப்பட்டோன் சோழன் குளமுற்றத்து துஞ்சிய கிள்ளி வளவன்
திணை வஞ்சி துறை துணை
குறிப்பு மலையமான் மக்களை யானை காலில் இட்ட காலத்து பாடி கொண்டது
நீயே புறவின் அல்லல் அன்றியும் பிறவும்
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை
இவரே புலனுழுது உண்மார் புன்கண் அஞ்சி
தமதுபகுத்து உண்ணும் தண்ணிழல் வாழ்நர்
களிறுகண்டு அழூஉம் அழாஅல் மறந்த
புன்றலை சிறாஅர் மன்று மருண்டு நோக்கி
விருந்திற் புன்கண்நோ வுடையர்
கெட்டனை யாயின் நீ வேட்டது செய்ம்மே
புலவரை காத்த புலவர்
பாடியவர் கோவூர் கிழார்
பாடப்பட்டோன் காரியாற்று துஞ்சிய நெடுங்கிள்ளி
திணை வஞ்சி துறை துணை
குறிப்பு சோழன் நலங்கிள்ளியிடமிருந்து உறையூர் புகுந்த இளந்தத்தன் என்னும் புலவனை
ஒற்று வந்தான் என்று கொல்ல புகுந்தவிடத்து பாடி
கொண்ட செய்யுள் இது
வள்ளியோர படர்ந்து புள்ளின் போகி
‘நெடிய’ என்னாது சுரம்பல கடந்து
வடியா நாவின் வல்லாங்கு பாடி
பெற்றது மகழ்ந்தும் சுற்றம் அருத்தி
ஓம்பாது உண்டு கூம்பாது வீசி
வரிசைக்கு வருந்தும்இ பரிசில் வாழ்க்கை
பிறர்க்கு தீதறி தன்றோ இன்றே திறம்பட
நண்ணார் நாண அண்ணாந்து ஏகி
ஆங்குஇனிது ஒழுகின் அல்லது ஓங்கு புகழ்
மண்ணாள் செல்வம் எய்திய
நும்மோர் அன்ன செம்மலும் உடைத்தே
கண்டனம் என நினை
பாடியவர் பொய்கையார்
பாடப்பட்டோன் சேரமான் கோக்கோதை மார்பன்
திணை பாடாண் துறை புலவராற்று படை
கோதை மார்பிற் யானும்
கோதையை புணர்ந்தோர் கோதை யானும்
மாக்கழி மலர்ந்த நெய்த லானும்
கள்நா றும்மே கானல்அம் தொண்டி
அ·துஎம் ஊரே அவன்எம் இறைவன்
எம்மும் உள்ளுமோ முதுவாய் இரவல
‘அமர்மேம் படூஉங் காலை நின்
புகழ்மேம் படுநனை கண்டனம்’ எனவே
எங்ஙனம் மொழிவேன்
பாடியவர் பொய்கையார்
பாடப்பட்டோன் சேரமான் கோக்கோதை மார்பன்
திணை பாடாண் துறை புலவராற்று படை
நாடன் என்கோ ஊரன்
பாடிமிழ் பனிக்கடற் சேர்ப்பன் என்கோ
யாங்கனம் மொழிகோ ஓங்குவாள் கோதையை
புனவர் தட்டை புடைப்பின் அயலது
இறங்குகதிர் அலமரு கழனியும்
பிறங்குநீர சேர்ப்பினும் புள் ஒருங்கு எழுமே
கவரி வீசிய காவலன்
பாடியவர் மோசிகீரனார்
பாடப்பட்டோன் சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
திணைபாடாண் துறை இயன் மொழி
குறிப்பு அறியாது முரசுகட்டிலில் ஏறியவரை தண்டம் செய்யாது துயில் எழு துணையும்
கவரிகொண்டு வீசினன்
சேரமான் அது குறித்து புலவர் பாடிய செய்யுள் இது
மாசற விசித்த வார்புஉறு வள்பின்
மைபடு மருங்குல் பொலிய மஞ்ஞை
ஒலிநெடும் பீலி ஒண்பொறி