குமரகுருபரர் அருளிய
மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
காப்பு
காப்பு பருவம்
செங்கீரை பருவம்
தாலப்பருவம்
சப்பாணி பருவம்
முத்த பருவம்
வருகை பருவம்
அம்புலி பருவம்
அம்மானை பருவம்
நீராடற் பருவம்
ஊசற் பருவம்


குமரகுருபரர் அருளிய
மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
காப்பு
விநாயக வணக்கம்
கார்கொண்ட கவுண்மத கடைவெள்ள முங்க
கடைக்கடை கனலு மெல்லை
கடவாது தடவு குழைச்செவி முகந்தெறி
கடைக்கா றிட்ட வெங்கோன்
போர்கொண்ட வெண்டோ ட்பொலன்குவடு பொதியும்வெண்
பொடிதுடி யடித்து வைத்து
புழுதியா டயராவொ ரயிராவ ணத்துலவு
பொற்களிற் றைத்து திப்பா
தார்கொண்ட மதிமுடி யொருத்தன் றிருக்கண்மலர்
சாத்த கிளர்ந்து பொங்கி
தவழுமிள வெயிலுமழ நிலவுமள வளவலாற்
றண்ணென்று வெச்சென்று பொன்
வார்கொண்ட டணிந்தமுலை மலைவல்லி கர்ப்பூர
வல்லியபி ராம வல்லி
மாணிக்க வல்லிமர கதவல்லி யபிடேக
வல்லி சொற் றமிழ் தழையவே

வது காப்பு பருவம்
திருமால்
மணிகொண்ட நெடுநேமி வலயஞ் சுமந்தாற்று
மாகண சூட்டு மோட்டு
மால்களிறு பிடர்வைத்த வளரொளி விமானத்து
வாலுளை மடங்க றாங்கும்
அணிகொண்ட பீடிகையி னம்பொன்முடி முடிவைத்தே
மையனொடு வீற்றி ருக்கு
மங்கயற் கண்ணமுதை மங்கையர கரசியையெ
மம்மனையை யினிது காக்க
கணிகொண்ட தண்டுழா காடலை தோடுதேங்
கழலுழிபா தளறு செ
கழனிபடு நடவையிற் கமல தணங்கரசொர்
கையணை முகந்து செல்ல
பணிகொண்ட துத்தி படப்பா சுருட்டு
பணைத்தோ ளெருத்த லை
பழமறைகண் முறையிட பைந்தமிழ பின்சென்ற
பச்சை பசுங் கொண்டலே
பரமசிவன்
வேறு
சிகர வடவரை குனிய நிமிர்தரு
செருவி லொருபொரு வில்லெனக்கோட்டினர்
செடிகொள் பறிதலை யமண ரெதிரெதிர்
செலவொர் மதலைசொல் வையையிற் கூட்டினர்
திருவு மிமையவர் தருவு மரவொலி
செயவ லவர்கொள நல்குகை தீட்டினர்
சிறிய வென துபுன் மொழியும் வடிதமிழ்
தெரியு மவர்முது சொல்லென சூட்டினர்
பகரு மிசைதிசை பரவ விருவர்கள்
பயிலு மியறெரி வெள்வளை தோட்டினர்
பசிய வறுகொடு வெளிய நிலவிரி
பவள வனமடர் பல்சடை காட்டினர்
பதும முதல்வனு மெழுத வரியதொர்
பனுவ லெழுதிய வைதிக பாட்டினர்
பரசு மிரசத சபையி னடமிடு
பரத பதயுக முள்ளம்வை தேத்து
தகரமொழுகிய குழலு நிலவுமிழ்
தரள நகையுமெ மையனை பார்த்தெதிர்
சருவி யமர்பொரு விழியு மறுகிடை
தளர வளர்வதொர் செவ்விமுற் றாக்கன
தனமு மனனுற வெழுதி யெழுதரு
தமது வடிவையு மெள்ளி டூற்றிய
தவள மலர்வரு மிளமி னொடுசத
தளமின் வழிபடு தையலை தூத்திரை
மகர மெறிகட லமுதை யமுதுகு
மழலை பழகிய கிள்ளையை பேட்டன
மடவ நடைபயில் பிடியை விரைசெறி
வரைசெய் புயமிசை வையம் வைத்தாற்றிய
வழுதியுடைய கண் மணியொ டுலவு பெண்
மணியை யணிதிகழ் செல்வியை தேக்கமழ்
மதுர மொழுகிய தமிழி னியல்பயின்
மதுரை மரகத வல்லியை காக்கவே
சித்தி வினாயகர்
வேறு
கைத்தல மோடிரு கரட கரைத்திரை
கைக்குக டாமுடை கடலிற் குளித்தெமர்
சித்தம தாமொரு தறியிற் றுவக்குறு
சித்திவி நாயக னிசையை பழிச்சுதும்
புத்தமு தோவரு டழை தழைத்ததொர்
பொற்கோடி யோவென மதுரி துவட்டெழு
முத்தமிழ் தேர்தரு மதுரை தலத்துறை
முத்தன மேவுபெ ணரசை புரக்கவே
முருகவேள்
வேறு
பகர மடுப்ப கடாமெடு தூற்றுமொர்
பகடு நடத்தி புலோமசை சூற்புயல்
பருகி யிடக்கற் பகாடவி பாற்பொலி
பரவை யிடை பற் பமாதென தோற்றிய
குமரி யிரு கலாமயிற் கூத்தயர்
குளிர்புன மொய்த்தி டசாரலிற் போய்ச்சிறு
குறவர் மகட்கு சலாமிடற் கேக்கறு
குமரனை முத்துக்குமாரனை போற்றுதும்
இமிழ்திரை முற்ற துமேரு தார்த்துமுள்
ளெயிறு நச்சு பணாடவி தாப்பிசை
திறுக விறுக்கி துழாய் முடி தீர்த்தனொ
டெவரு மதித்து பராபவ தீச்சுட
வமுதுசெய் வித்தி டபோனக தாற்சுட
ரடரு மிருட்டு கிரீவ டாக்கிய
வழகிய சொக்கற் குமால்செ தோட்டிக
லமர்செய் கயற்க குமாரியை காக்கவே
நான்முகன்
வேறு
மேக பசுங்குழவி வாய்மடு துண்ணவும்
விட்புலம் விரு தயரவும்
வெள்ளமுதம் வீசுங் கருந்திரை பைந்துகில்
விரித்துடு துத்தி விரியும்
நாகத்து மீச்சுடிகை நடுவ கிடந்தமட
நங்கையை பெற்று மற்ற
நாகணை துஞ்சுதன் றந்தைக்கு வந்துதவு
நளின குழந்தை காக்க
பாகத்து மரகத குன்றென்றொர் தமனி
குன்றொடு கிளைத்து நின்ற
பவள தடங்குன் றுளக்கண்ண தென்ற
பரஞ்சுடர் முடிக்கு முடிமூன்
றாக தமைத்துப்பி னொருமுடி தன்முடிவை
தணங்கரசு வீற்றி ருக்கும்
அபிடேக வல்லியை யளிக்குல முழக்குகுழ
லங்கயற் கண்ண முதையே
தேவேந்திரன்
வேறு
சுழியுங் கருங்க குண்டகழி
சுவற்றுஞ் சுடர்வேற் கிரிதிரித்த
தோன்றற் களித்து சுறவுயர்த்த
சொக்க பெருமான் செக்கர்முடி
பொழியு தரங கங்கைவிரை
புனல்கால் பாய்ச்ச தழைந்துவிரி
புவன தனிபூ தருள்பழுத்த
பொன்னங் கொடியை புரக்கவழி
திழியு துணர்க்கற் பகத்தினற
விதழ்த்தேன் குடித்து குமட்டியெதி
ரெடுக்கும் சிறைவண் டுவட்டுறவுண்
டிரை கரைக்கு மதக்கலுழி
குழியுஞ் சிறுக ணேற்றுருமு
குரல்வெண் புயலுங் கரும்புயலுங்
குன்றங் குலைய வுகைத்தேறுங்
குலிச தடக்கை புத்தளே
திருமகள்
வேறு
வெஞ்சூட்டு நெட்டுடல் விரிக்கும் படப்பாயன்
மீமிசை துஞ்சு நீல
மேகத்தி னாகத்து விடுசுடர படலைமணி
மென்பர லுறுத்த நொந்து
பஞ்சூட்டு சீறடி பதைத்துமதன் வெங்கதிர
படுமிள வெயிற்கு டைந்தும்
பைந்துழா காடுவிரி தண்ணிழ லொதுந்குமொர்
பசுங்கொடியை யஞ்ச லிப்பா
மஞ்சூ டகட்டுநெடு வான்முகடு துருவுமொரு
மறையோதி மஞ்ச லிக்க
மறிதிரை சிறைவிரியு மாயிர முகக்கடவுண்
மந்தாகி னிப்பெ யர்த்த
செஞ்சூட்டு வெள்ளோ திமங்குடி யிருக்கும்வளர்
செஞ்சடை கருமி டற்று
தேவுக்கு முன்னின்ற தெய்வத்தை மும்முலை
திருவை புரக்க வென்றே
கலைமகள்
வெள்ளி தகட்டுநெ டேடவிழ தின்னிசை
விரும்புஞ் சுரும்பர் பாட
விளைநறவு கக்கும் பொலன் பொகு டலர்கமல
வீட்டு கொழி தெடுத்து
தெள்ளி தெளிக்கும் தமிழ்கடலி னன்பினை
திணையென வெடுத்த விறைநூற்
றெள்ளமுது கூட்டுணுமொர் வெள்ளோதி மத்தினிரு
சீறடி முடிப்பம் வளர்பைங்
கிள்ளைக்கு மழலை பசுங்குதலை யொழுகுதீங்
கிளவியுங் களி மயிற்கு
கிளரிளஞ் சாயலு நவ்விக்கு நோக்கும்விரி
கிஞ்சுக சூட்ட ரசன
பிள்ளைக்கு மடநடையு முடனொடு மகளிர்க்கொர்
பேதமையு முதவி முதிரா
பிள்ளைமையின் வள்ளன்மை கொள்ளுமொரு பாண்டி
பிராட்டியை காக்க வென்றே
துர்க்கை
வடிபட்ட முக்குடுமி வடிவே றிரித்திட்டு
வளைகருங் கோட்டு மோட்டு
மகிடங் கவிழ்த்து கடாங்கவிழ குஞ்சிறுகண்
மால்யானை வீங்க வாங்கு
துடிபட்ட கொடிநுண் ணுசுப்பிற் குடைந்தென
சுடுகடை கனலி தூண்டுஞ்
சுழல்கண் முடங்குளை மடங்கலை யுகைத்தேறு
சூரரி பிணவு காக்க
பிடிபட்ட மடநடை கேக்கற்ற கூந்தற்
பிடிக்குழாஞ் சுற்ற வொற்றை
பிறைமரு புடையதொர் களிற்றினை பெற்றெந்தை
பிட்டுண்டு கட்டுண்டு நின்
றடிபட்ட திருமேனி குழை குழைத்திட்ட
வணிமணி கிம்பு ரிக்கோ
டாகத்த தா கடம்பா டவிக்குள் விளை
யாடுமொர் மடப்பிடி யையே
சத்த மாதர்கள்
வேறு
கடகளி றுதவுக பாய்மிசை போர்த்தவள்
கவிகுவி துறுகலின் வாரியை தூர்த்தவள்
கடல்வயி றெரியவொள் வேலினை பார்த்தவள்
கடிகமழ் தருமலர் தார்முடி சேர்த்தவள்
இடியுக வடலரி யேறுகை தார்த்தவள்
எழுதரு முழுமறை நூலினிற் கூர்த்தவள்
எயிறுகொ டுழுதெழு பாரினை பேர்த்தவள்
எனுமிவ ரெழுவர்க டாண்முடி சூட்டுதும்
குடமொடு குடவியர் பாணிகை கோத்திடு
குரவையு மலதொர்ப ணாமுடி சூட்டருள்
குதிகொள நடமிடு பாடலு கேற்பவொர்
குழலிசை பழகளி பாடிட கேட்டுடை
மடலவிழ் துளபந றாவெடு தூற்றிட
மழகளி றெனவெழு கார்முக சூற்புயல்
வரவரு மிளையகு மாரியை கோட்டெயின்
மதுரையில் வளர்கவு மாரியை காக்கவே
முப்பத்து மூவர்
வேறு
அமரில் வெந்நிடும வுதியர் பின்னிடுமொ
ரபயர் முன்னிடுவ னத்தொக்க வோடவும்
அளவு மெம்முடைய திறையி தென்னமுடி
யரச ரெண்ணிலரொர் முற்றத்து வாடவும்
அகில மன்னரவர் திசையின் மன்னரிவ
ரமர ரென்னுமுரை திக்கெட்டு மூடவும்
அமுத வெண்மதியின் மரபை யுன்னியுனி
யலரி யண்ணல்முழு வெப்பத்து மூழ்கவும்
குமரி பொன்னிவையை பொருணை நன்னதிகள்
குதிகொள் விண்ணதியின் மிக்கு குலாவவுங்
குவடு தென்மலையி னிகர தின்மைசுரர்
குடிகொள் பொன்மலைது தித்துப்ப ராவவுங்
குமரர் முன்னிருவ ரமர ரன்னையிவள்
குமரி யின்னமுமெ னச்சித்தர் பாடவுங்
குரவை விம்மவர மகளிர் மண்ணிலெழில்
குலவு கன்னியர்கள் கைக்கொக்க வாடவும்
கமலன் முன்னியிடு மரச வன்னமெழு
கடலி லன்னமுட னட்புக்கை கூடவுங்
கரிய செம்மலொடு மிளைய செம்மல்விடு
கருடன் மஞ்சையொடொர் கட்சிக்கு ளூடவுங்
கடவி விண்ணரசு நடவும் வெம்முனைய
களிறு கைம்மலைசெல் கொப்பத்து வீழவுங்
கனக மன்னுதட நளினி துன்னியிரு
கமல மின்னுமொரு பற்பத்துண் மேவவும்
இமய மென்னமனு முறைகொ டென்னருமெ
மிறையை நன்மருகெ னப்பெற்று வாழவும்
எவர்கொல் பண்ணவர்க ளெவர்கொன் மண்ணவர்க
ளெதுகொல் பொன்னுலகெ னத்தட்டு மாறவும்
எழில்செய் தென்மதுரை தழைய மும்முலையொ
டெழுமெ னம்மனை வனப்புக்கொர் காவலர்
இருவ ரெண்மர்பதி னொருவர் பன்னிருவ
ரெனும் விண்ணவர்கண் முப்பத்து மூவரே
காப்பு பருவம் முற்றிற்று

வது செங்கீரை பருவம்
நீராட்டி யாட்டுபொற் சுண்ண திமிர்ந்தள்ளி
நெற்றியிற் றொட்டிட்ட வெண்
ணீற்றினொடு புண்டர கீற்றுக்கு மேற்றிடவொர்
நித்தில சுட்டி சாத்தி
தாராட்டு சூழி கொண்டையு முடித்து
தலைப்பணி திருத்தி முத்தின்
றண்ணொளி ததும்புங் குதம்பையொடு காதுக்கொர்
தமனி கொப்பு மிட்டு
பாராட்டு பாண்டி பெருந்தேவி திருமுலை
பாலமுத மூட்டி யொருநின்
பானாறு குமுதங் கனிந்தூறு தேறல்தன்
பட்டாடை மடிந னைப்ப
சீராட்டி வைத்துமு தாடும் பசுங்கிள்ளை
செங்கீரை யாடி யருளே
தென்னற்கு மம்பொன்மலை மன்னற்கு மொருசெல்வி
செங்கீரை யாடி யருளே
உண்ணிலா வுவகை பெருங்களி துளும்பநின்
றுன்றிரு தாதை நின்னை
யொருமுறை கரம்பொத்தி வருகென வழைத்திடுமு
னோடி தவழ்ந்து சென்று
தண்ணுலா மழலை பசுங்குதலை யமுதினிய
தாய்வயிறு குளிர வூட்டி
தடமார்ப நிறைகுங் குமச்சே றளைந்துபொற்
றாடோ ய் தடக்கை பற்றி
பண்ணுலா வடிதமிழ பைந்தாமம் விரியும்
பணைத்தோ ளெருத்தமேறி
பாசொளிய மரக திருமேனி பச்சை
பசுங்கதிர் ததும்ப மணிவா
தெண்ணிலா விரிய நின்றாடும் பசுந்தோகை
செங்கீரை யாடி யருளே
தென்னற்கு மம்பொன்மலை மன்னற்கு மொருசெல்வி
செங்கீரை யாடி யருளே
சுற்றுநெடு நேமி சுவர்க்கிசைய வெட்டு
சுவர்க்கா னிறுத்தி மேரு
தூணொன்று நடுநட்டு வெளிமுகடு மூடியிரு
சுடர் விளக்கிட்டு முற்ற
எற்றுபுன லிற்கழுவு புவன பழங்கல
மெடுத்தடு கிப்பு துக்கூ
ழின்னமுத முஞ்சமை தன்னை நீபன்முறை
யிழைத்திட வழித்த ழித்தோர்
முற்றவெளி யிற்றிரியு மத்த பெரும்பித்தன்
முன்னின்று தொந்தமிடவு
முனியாது வைகலு மெடுத்தடு கிப்பெரிய
மூதண்ட கூடமூடுஞ்
சிற்றில்விளை யாடுமொரு பச்சிளம் பெண்பிள்ளை
செங்கீரை யாடி யருளே
தென்னற்கு மம்பொன்மலை மன்னற்கு மொருசெல்வி
செங்கீரை யாடி யருளே
மங்குல்படு கந்தர சுந்தர கடவுட்கு
மழகதிர கற்றை சுற்றும்
வாணயன மூன்றுங் குளிர்ந்தமுத கலைதலை
மடுப்ப கடைக்க ணோக்கும்
பொங்குமதர் நோக்கிற் பிறந்தவா னந்த
புதுப்புணரி நீத்த மையன்
புந்தி தடத்தினை நிரப்பவழி யடியர்பாற்
போகசா கரம டுப்ப
அங்கணொடு ஞாலத்து வித்தின்றி வித்திய
வனை துயிர்க ளுந்தளிர்ப்ப
வருண்மடை திறந்துகடை வெள்ளம் பெருக்கெடு
தலையெறி துகள வுகளுஞ்
செங்கயல் கிடக்குங் கருங்க பசுந்தோகை
செங்கீரை யாடி யருளே
தென்னற்கு மம்பொன்மலை மன்னற்கு மொருசெல்வி
செங்கீரை யாடி யருளே
பண்ணறா வரிமிடற் றறுகாண் மடு
பசுந்தேற லாற லைக்கும்
பதுமபீ டிகையுமுது பழமறை விரிந்தொளி
பழுத்தசெ நாவு மிமையா
கண்ணறா மரகத கற்றை கலாமஞ்ஞை
கண்முகி றதும்ப வேங்குங்
கார்வரையும் வெள்ளெனவொர் கன்னிமா டத்துவளர்
கற்பூர வல்லி கதிர்கால்
விண்ணறா மதிமுயற் கலைகிழி திழியமுத
வெள்ளருவி பாய வெடிபோய்
மீளு தகட்டக டிளவாளை மோதமுகை
விண்டொழுகு முண்ட கப்பூ
தெண்ணறா வருவிபாய் மதுரைமர கதவல்லி
செங்கீரை யாடி யருளே
தென்னற்கு மம்பொன்மலை மன்னற்கு மொருசெல்வி
செங்கீரை யாடி யருளே
வேறு
முகமதி யூடெழு நகைநில வாட
முடிச்சூ ழியமாட
முரிபுரு வக்கொடி நுதலிடு சுட்டி
முரிப்பொ டசை தாட
இகல்விழி மகரமு மம்மக ரம்பொரு
மிருமக ரமுமாட
விடுநூ புரவடி பெயர கிண்கி
ணெனுங்கிண் கிணியாட
துகிலொடு சோர்தரு கொடிநுண் மருங்கு
றுவண்டு துவண்டாட
தொந்தி சரிந்திட வுந்தி கரந்தொளிர்
சூலுடை யாலிடைமற்
றகில சராசர நிகிலமொ டாடிட
வாடுக செங்கீரை
யவனி தழைந்திட மவுலி புனைந்தவ
ளாடுக செங்கீரை
தசைந்திடு கொங்கை யிரண்டல தெனவுரை
தருதிரு மார்பாட
தாய்வரு கென்பவர் பேதைமை கண்டு
ததும்புபு னகையாட
பசைந்திடு ஞால மலர்ந்தமை வெளிறியொர்
பச்சுடல் சொல்லவுமோர்
பைங்கொடி யொல்கவு மொல்கி நுடங்கிய
பண்டி சரிந்தாட
இசைந்திடு தேவை நினைந்தன வென்ன
விரங்கிடு மேகலையோ
டிடுகிடை யாட வியற்கை மணம்பொதி
யிதழ்வழி தேறலினோ
டசைந்தொசி கின்ற பசுங்கொடி யெனவினி
தாடுக செங்கீரை
யவனி தழைந்திட மவுலி புனைந்தவ
ளாடுக செங்கீரை
பரிமள மூறிய வுச்சியின் முச்சி
பதிந்தா டச்சுடர்பொற்
பட்டமு டன்சிறு சுட்டியும் வெயிலொடு
பனிவெண் ணிலவாட
திருநுதன் மீதெழு குறுவெயர் வாட
தெய்வம ணங்கமழு
திருமேனியின் முழு மரகத வொளியெண்
டிக்கும் விரிந்தாட
கருவினை நாறு குதம்பை ததும்பிய
காது தழைந்தாட
கதிர்வெண் முறுவ லரும்ப மலர்ந்திடு
கமல திருமுகநின்
அருள்விழி யொடும்வளர் கருணை பொழிந்திட
வாடுக செங்கீரை
யவனி தழைந்திட மவுலி புனைந்தவ
ளாடுக செங்கீரை
வேறு
குருமணி வெயில்விட மரகத நிழல்விரி
குன்றே நின்றூதுங்
குழலிசை பழகிய மழைமுகி லெழவெழு
கொம்பே வெம்பாச
மருவிய பிணிகெட மலைதரு மருமைம
ருந்தே சந்தானம்
வளர்புவ னமுமுணர் வருமரு மறையின்வ
ரம்பே செம்போதிற்
கருணையின் முழுகிய கயறிரி பசியக
ரும்பே வெண்சோதி
கலைமதி மரபிலொ ரிளமதி யெனவளர்
கன்றே யென்றோதும்
திருமகள் கலைகமகடலைமகள் மலைமகள்
செங்கோ செங்கீரை
தெளிதமிழ் மதுரையில் வளருமொ ரிளமயில்
செங்கோ செங்கீரை
சங்குகி டந்தத டங்கைநெ டும்புய
றங்காய் பங்காயோர்
தமனிய மலைபடர் கொடியெனவடிவுத
ழைந்தா யெந்தாயென்
றங்கெண டும்புவ னங்கடொ ழுந்தொறு
மஞ்சே லென்றோதும்
அபயமும் வரதமு முபயமு முடையவ
ணங்கே வெங்கோப
கங்குன்ம தங்கய மங்குல டங்கவி
டுங்கா மன்சே
கயல்குடி புகுமொரு துகிலிகை யெனநின்
கண்போ லுஞ்சாயற்
செங்கய றங்குபொ லன்கொடி மின்கொடி
செங்கோ செங்கீரை
தெளிதமிழ் மதுரையில் வளருமொ ரிளமயில்
செங்கோ செங்கீரை
செங்கீரை பருவம் முற்றிற்று

வது தாலப்பருவம்
தென்னன் றமிழி னுடன்பிறந்த
சிறுகா லரும்ப தீயரும்பு
தேமா நிழற்கண் டுஞ்சுமிளஞ்
செங்க கயவா புனிற்றெருமை
இன்னம் பசும்புற் கறிக்கல்லா
விளங்கன் றுள்ளி மடித்தலநின்
றிழிபா லருவி யுவட்டெறிய
வெறியு திரைத்தீம் புனற்பொய்கை
பொன்னங் கமல பசுந்தோட்டு
பொற்றா தாடி கற்றைநிலா
பொழியு தரங்கம் பொறையுயிர்த்த
பொன்போற் றொடுதோ லடிப்பொலன்சூ
டன்னம் பொலியு தமிழ் மதுரை
கரசே தாலோ தாலேலோ
அருள்சூற் கொண்ட வங்கயற்கண்
ணமுதே தாலோ தாலேலோ
வீக்குஞ் சிறுபை துகிற்றோகை
விரியுங் கலாப மருங்கலைப்ப
விளையா டயரு மணற்சிற்றில்
வீட்டு குடிபு கோட்டியிருள்
சீக்குஞ் சுடர்தூங் கழன்மணியின்
செந்தீ மடுத்த சூட்டடுப்பிற்
செழுந்தா பவள துவரடுக்கி
தெளிக்கு நறுந்தண் டேறலுலை
வாக்குங் குடக்கூன் குழிசியிலம்
மதுவார தரித்த நித்திலத்தின்
வல்சி புகட்டி வடித்தெடுத்து
வயன்மா மகளிர் குழாஞ்சிறுசோ
றாக்கும் பெருந்தண் பணைமதுரை
கரசே தாலோ தாலேலோ
அருள்சூற் கொண்ட வங்கயற்கண்
ணமுதே தாலோ தாலேலோ
ஓடும் படலை முகிற்படல
முவர்நீ துவரி மேய்ந்துகரு
வூறுங் கமஞ்சூல் வயிறுடைய
வுகைத்து கடவு கற்பகப்பூங்
காடு தரங கங்கை நெடுங்
கழியு நீந்தி யமுதிறைக்குங்
கலைவெண் மதியின் முயறடவி
கதிர்மீன் கற்றை திரைத்துதறி
மூடுங் ககன வெளிக்கூட
முகடு திறந்து புறங்கோத்த
முந்நீ ருழக்கி சினவாளை
மூரி சுறவி னோடும்விளை
யாடும் பழன தமிழ்மதுரை
கரசே தாலோ தாலேலோ
அருள்சூற் கொண்ட வங்கயற்கண்
ணமுதே தாலோ தாலேலோ
ஊறுங் கரட கடத்துமுக
தூற்று மதமா மடவியர்நின்
றுதறுங் குழற்பூ துகளடங்க
வோட விடுத்த குங்கு செஞ்
சேறு வழுக்கி யோட்டறுக்கு
திருமா மறுகி லரசர் பெரு
திண்டே ரொதுங கொடுஞ்சி நெடுஞ்
சிறுதே ருருட்ட்டுஞ் செங்கண்மழ
வேறு பொருவே லிளைஞர்கடவு
இவுளி கடைவாய் குதட்டவழி
திழியும் விலாழி குமிழியெறி
திரைத்து திரைத்து நுரைத்தொருபே
ராறு மடுக்கு தமிழ்மதுரை
கரசே தாலோ தாலேலோ
அருள்சூற் கொண்ட வங்கயற்கண்
ணமுதே தாலோ தாலேலோ
வார்க்குன் றிரண்டு சுமந்தொசியு
மலர்கொம் பனையார் குழற்றுஞ்சு
மழலை சுரும்பர் புகுந்துழக்க
மலர்த்தா துகுத்து வானதியை
தூர்க்கும் பொதும்பின் முயற்கலைமேற்
றுள்ளி யுகளு முசுக்கலையின்
றுழனி கொதுங்கி கழனியினெற்
சூட்டு படப்பை மேய்ந்துகதிர
போர்க்குன் றேறுங் கருமுகிலை
வெள்வாய் மள்ளர் பிணையலிடும்
பொருகோ டெருமை போத்தினொடும்
பூட்டி யடிக்க விடிக்குரல் வி
டார்க்கும் பழன தமிழ்மதுரை
கரசே தாலோ தாலேலோ
அருள்சூற் கொண்ட வங்கயற்கண்
ணமுதே தாலோ தாலேலோ
வேறு
காரிற் பொழிமழை நீரிற் சுழியெறி
கழியிற் சிறுகுழியிற்
கரையிற் கரைபொரு திரையிற் றலைவிரி
கண்டலின் வண்டலினெற்
போரிற் களநிறை சேரிற் குளநிறை
புனலிற் பொருகயலிற்
பொழிலிற் சுருள்புரி குழலிற் கணிகையர்
குழையிற் பொருகயல்போ
தேரிற் குமரர்கண் மார்பிற் பொலிதரு
திருவிற் பொருவில்வரி
சிலையிற் றிரள்புய மலையிற் புலவிதி
ருத்திட வூழ்த்தமுடி
தாரிற் பொருதிடு மதுரை துரைமகள்
தாலோ தாலேலோ
சங்கம் வளர்ந்திட நின்ற பொலன்கொடி
தாலோ தாலேலோ
சேனை தலைவர்க டிசையிற் றலைவர்கள்
செருவிற் றலைவர்களாற்
சிலையிற் றடமுடி தேரிற் கொடியொடு
சிந்த சிந்தியிடுஞ்
சோனை கணைமழை சொரி பெருகிய
குருதி கடலிடையே
தொந்த மிடும்பல் கவந்த நிவந்தொரு
சுழியிற் பவுரிகொள
ஆனை திரளொடு குதிரை திரளையு
மப்பெயர் மீனைமுக
தம்மனை யாடுக டற்றிரை போல
வடற்றிரை மோதவெழு
தானை கடலொடு பொலியு திருமகள்
தாலோ தாலேலோ
சங்கம் வளர்ந்திட நின்ற பொலன்கொடி
தாலோ தாலேலோ
அமரர கதிபதி வெளிற களிறெதிர்
பிளிற குளிறியிடா
வண்ட மிசைப்பொலி கொண்ட லுகைத்திடு
மமரிற் றமரினொடுங்
கமரிற் கவிழ்தரு திசையிற் றலைவர்கண்
மலையில் சிறகரியுங்
கடவு படையொடு பிறகி டுடைவது
கண்டு முகங்குளிரா
பமர தருமலர் மிலை படுமுடி
தொலை கொடுமுடி தாழ்
பைம்பொற் றடவரை திரி கடல்வயி
றெரி படைதிரியா
சமரிற் பொருதிரு மகனை தருமயில்
தாலோ தாலேலோ
சங்கம் வளர்ந்திட நின்ற பொலன்கொடி
தாலோ தாலேலோ
முதுசொற் புலவர் தெளித்த பசுந்தமிழ்
நூல்பாழ் போகாமே
முளரி கடவுள் படைத்த வசுந்தரை
கீழ்மே லாகாமே
அதிர பொருது கலிப்பகை ஞன்றமிழ்
நீர்நா டாளாமே
அகில துயிர்க ளயர்த்து மறங்கடை
நீணீர் தோயாமே
சிதைவுற் றரசிய னற்றரு மங்குடி
போய்மாய் வாகாமே
செழியர கபயரு மொப்பென நின்றுண
ராதா ரோதாமே
மதுரை பதிதழை யத்தழை யுங்கொடி
தாலோ தாலேலோ
மலை துவசன் வளர்த்த பசுங்கிளி
தாலோ தாலேலோ
தகர கரிய குழற்சிறு பெண்பிள்ளை
நீயோ தூயோன்வாழ்
சயில தெயிலை வளைப்பவ ளென்றெதிர்
சீறா வீறோதா
நிகரி டமர்செய் கணத்தவர் நந்திபி
ரானோ டேயோடா
நிலைகெ டுலைய வுடற்றவு டைந்ததொ
ரானே றாகமே
சிகர பொதிய மிசைத்தவ ழுஞ்சிறு
தேர்மே லேபோயோர்
சிவனை பொருத சமர்த்த னுகந்தருள்
சேல்போன் மாயாமே
மகர துவச முயர்த்தபொ லன்கொடி
தாலோ தாலேலோ
மலை துவசன் வளர்த்த பசுங்கிளி
தாலோ தாலேலோ
தால பருவம் முற்றிற்று

வது சப்பாணி பருவம்
நாளவ டத்தளிம நளின தொடுந்துத்தி
நாகணையும் விட்டொ ரெட்டு
நாட்டத்த னும்பரம வீட்டத்த னுந்துஞ்சு
நள்ளிருளி னாப்ப ணண்ட
கோளவ டம்பழைய நேமிவ டத்தினொடு
குப்புற்று வெற்பட்டுமேழ்
குட்டத்தி னிற்கவிழ மூதண்ட வேதண்ட
கோதண்ட மோடு சக்ர
வாளவ டஞ்சுழல மட்டித்து நட்டமிடு
மதுமத்தர் சுத்த நித்த
வட்டத்தி னுக்கிசைய வொற்றிக்க னத்தன
வட்டத்தை யொத்திட்ட தோர்
தாளவ டங்கொட்டு கைப்பாணி யொப்பவொரு
சப்பாணி கொட்டியருளே
தமிழொடு பிறந்துபழ மதுரையில் வளர்ந்தகொடி
சப்பாணி கொட்டியருளே
பொய்வந்த நுண்ணிடை நுடங கொடிஞ்சி
பொலந்தேரொ டமர கத்து
பொன்மேரு வில்லியை யெதிர்ப்பட்ட ஞான்றம்மை
பொம்மன்முலை மூன்றிலொன்று
கைவந்த கொழுநரொடு முள்ள புணர்ச்சி
கருத்தா னாகத்தொடுங
கவிழ்தலை வணக்கொடு முலைக்கண்வை திடுமொரு
கடைக்கணோ கமுத மூற்ற
மெய்வந்த நாணினொடு நுதல்வ தெழுங்குறு
வெயர்ப்பினோ டுயிர்ப்பு வீங்கும்
விம்மிதமு மாய்நின்ற வுயிரோவ மெனவூன்று
விற்கடை விரற்கடை தழீஇ
தைவந்த நாணினொடு தவழ்தந்த செங்கைகொடு
சப்பாணி கொட்டி யருளே
தமிழொடு பிறந்துபழ மதுரையில் வளர்ந்தகொடி
சப்பாணி கொட்டியருளே
பூமரு வெடிப்பமுகை விண்டதண் டலையீன்ற
புனைனறு தளிர்கள் கொய்தும்
பொய்தற் பிணாக்களொடு வண்டற் கலம்பெய்து
புழுதிவிளை யாட்ட யர்ந்தும்
காமரு மயிற்குஞ்சு மடவன பார்ப்பினொடு
புறவுபிற வும்வ ளர்த்துங்
காந்தள்செங் கமலத்த கழுநீர் மணந்தென
கண்பொத்தி விளையா டியு
தேமரு பசுங்கிள்ளை வைத்துமு தாடியு
திரள்பொற் கழங் காடியுஞ்
செயற்கையா னன்றியு மியற்கை சிவப்பூறு
சேயிதழ் விரிந்த தெய்வ
தாமரை பழுத்தகை தளிரொளி துளும்பவொரு
சப்பாணி கொட்டி யருளே
தமிழொடு பிறந்துபழ மதுரையில் வளர்ந்தகொடி
சப்பாணி கொட்டியருளே
விண்ணளி குஞ்சுடர் விமானமும் பரநாத
வெளியிற் றுவாத சாந்த
வீடுங் கடம்புபொதி காடு தடம்பணை
விரிந்த தமிழ் நாடும் நெற்றி
கண்ணளி குஞ்சு தரக்கடவுள் பொலியுமாறு
காற்பீட முமெம் பிரான்
காமர்பரி யங கவின்றங்கு பள்ளியங்
கட்டிலு தொட்டிலாக
பண்ணளி குங்குதலை யமுதொழுகு குமுத
பசுந்தேற லூற லாடும்
பைங்குழவி பெருவிரல் சுவைத்து நீ பருகிட
பைந்தேறலூறு வண்கை
தண்ணளி கமலஞ் சிவப்பூற வம்மையொரு
சப்பாணி கொட்டி யருளே
தமிழொடு பிறந்துபழ மதுரையில் வளர்ந்தகொடி
சப்பாணி கொட்டி யருளே
சேலாட்டு வாட்க கருங்கடற் கடைமடை
திறந்தமுத மூற்று கருணை
தெண்டிரை கொழித்தெறிய வெண்டிரை நெருப்பூட்டு
தெய்வ குழந்தை யைச்செங்
கோலாட்டு நின்சிறு கணைக்காற் கிடத்தி
குளிப்பாட்டி யுச்சி முச்சி
குஞ்சிக்கு நெய்போற்றி வெண்காப்பு மிட்டுவளர்
கொங்கையிற் சங்கு வார்க்கும்
பாலாட்டி வாயிதழ் நெரித்தூட்டி யுடலிற்
பசுஞ்சுண்ண முந்தி மிர்ந்து
பைம்பொற் குறங்கினிற் கண்வளர திச்சிறு
பரூஉமணி தொட்டிலேற்றி
தாலாட்டி யாட்டுகை தாமரை முகிழ்த்தம்மை
சப்பாணி கொட்டி யருளே
தமிழொடு பிறந்துபழ மதுரையில் வளர்ந்தகொடி
சப்பாணி கொட்டியருளே
வேறு
வான துருமொ டுடுத்திரள் சிந்த
மலைந்த பறந்தலையின்
மண்ணவர் பண்ணவர் வாளின் மறிந்தவர்
மற்றவர் பொற்றொடியார்
பானற் கணையு முலைக்குவ டும்பொரு
படையிற் படவிமையோர்
பைங்குடர் மூளையொ டும்புதி துண்டு
பசுந்தடி சுவைகாணா
சேன பந்தரி னலைகை திரள்பல
குரவை பிணைத்தாட
திசையிற் றலைவர்கள் பெருநா ணெய்த
சிறுநா ணொலிசெய்யா
கூனற் சிலையி னெடுங்கணை தொட்டவள்
கொட்டுக சப்பாணி
குடைநிழ லிற்புவி மகளை வளர்த்தவள்
கொட்டுக சப்பாணி
சமரிற் பிறகிடு முதியரு மபயரு
மெதிரி டமராட
தண்டதரன்செல் கரும்ப டிந்திரன்
வெண்பக டோ டுடையா
திமிர கடல்புக வருணன் விடுஞ்சுற
வருணன் விடுங்கடவு
டேரினுகண்டெழ வார்வில் வழங்கு
கொடுங்கோல் செங்கோலா

தொடும்வளர் குலவெற் பெட்டையு
மெல்லை கல்லினிறீஇ
எண்டிசை யுந்தனி கொண்டு புரந்து
வடாது கடற்றுறை தென்
குமரி துறையென வாடு மடப்படி
கொட்டுக சப்பாணி
குடைநிழ விற்புவி மகளை வளர்த்தவள்
கொட்டுக சப்பாணி
சென்றிடு வாளிகள் கூளிகள் காளிகள்
ஞாளியி லாளியென
செருமலை செம்மலை முதலியர் சிந்த
சிந்திட நந்திபிரான்
நின்றில னோடலு முன்னழ கும்மவன்
பின்னழ குங்காணா
நிலவுவி ரிந்திடு குறுநகை கொண்டு
நெடுங்கயி லைக்கிரியின்
முன்றிலி னாடன் மறந்தம ராடியொர்
மூரி சிலைகுனியா
முரிபுரு வச்சிலை கடைகுனி
யச்சில
முளரி கணைதொட்டு
குன்றவி லாளியை வென்ற தடாதகை
கொட்டுக சப்பாணி
குடைநிழ லிற்புவி மகளை வளர்த்தவள்
கொட்டுக சப்பாணி
வேறு
ஒழுகிய கருணையு வட்டெழ
வைத்தவ ருட்பார்வை
குளநெகி ழடியர்ப வக்கடல்
வற்றவ லைத்தோடி
குழையொடு பொருதுகொ லைக்கணை
யைப்பிணை யைச்சீறி
குமிழொடு பழகிம தர்த்தக
யற்கண்ம டப்பாவாய்
தழைகெழு பொழிலின்மு சுக்கலை
மைப்புய விற்பா
தவழிள மதிகலை நெக்குகு
புத்தமு தத்தோடே
மழைபொழி யிமயம யிற்பெடை
கொட்டுக சப்பாணி
மதுரையில் வளரு மடப்பிடி
கொட்டுக சப்பாணி
செழுமறை தெளியவ டித்தத
மிழ்ப்பதி கத்தோடே
திருவரு ளமுதுகு ழைத்துவி
டுத்தமு லைப்பாலாற்
கழுமல மதலைவ யிற்றைநி
ரப்பிம யிற்சேயை
களிறொடும் வளரவ ளர்த்தவ
ருட்செவி லித்தாயே
குழலிசை பழகிமு ழுப்பிர
சத்திர சத்தோடே
குதிகொளு நறியக னிச்சுவை
நெக்கபெ ருக்கேபோன்
மழலையின முதுகு சொற்கிளி
கொட்டுக சப்பாணி
மதுரையில் வளரும டப்பிடி
கொட்டுக சப்பாணி
சப்பாணி பருவம் முற்றிற்று

வது முத்த பருவம்
கால தொடுகற் பனைகடந்த
கருவூ லத்து பழம்பாடற்
கலைமா செல்வர் தேடிவைத்த
கடவுண் மணியே யுயிரால
வால துணர்வி னீர்பாய்ச்சி
வளர்ப்பார கொளிபூ தருள்பழுத்த
மலர்க்கற் பகமே யெழுதாச்சொன்
மழலை ததும்பு பசுங்குதலை
சோலை கிளியே யுயிர்த்துணையா
தோன்றா துணைக்கோர் துணையாகி
துவாத சாந்த பெருவெளியிற்
றுரியங் கடந்த பரநாத
மூல தலத்து முளைத்தமுழு
முதலே முத்த தருகவே
முக்க சுடர்க்கு விருந்திடுமும்
முலையாய் முத்த தருகவே
உருகி யுருகி நெக்குநெக்கு
ளுடைந்து கசிந்தி டசும்பூறும்
உழுவ லன்பிற் பழவடியா
ருள்ள தடத்தி லூற்றெடுத்து
பெருகு பரமா னந்த வெள்ள
பெருக்கே சிறியேம் பெற்றபெரும்
பேறே யூறு நறைக்கூந்தற்
பிடியே கொடிநுண் ணுசுப்பொசிய
வருகுங் குமக்குன் றிரண்டேந்து
மலர்ப்பூங் கொம்பே தீங்குழலின்
மதுரங் கனிந்த பசுங்குதலை
மழலை யரும்ப சேதாம்பன்
முருகு விரியுஞ் செங்கனிவாய்
முத்த தருக முத்தமே
முக்க சுடர்க்கு விருந்திடுமும்
முலையாய் முத்த தருகவே
கொழுதி மதர்வண் டுழக்குகுழற்
கோதை குடைந்த கொண்டலுநின்
குதலை கிளிமென் மொழிக்குடைந்த
குறுங்க கரும்புங் கூன்பிறைக்கோ
டுழத பொலன்சீ றடிக்குடைந்த
செந்தா மரையும் பசுங்கழுத்து
குடைந்த கமஞ்சூற் சங்குமொழு
கொளிய கமுகு மழகுதொய்யில்
எழுது தடந்தோ குடைந்ததடம்
பணையும் பணைமென் முலைக்குடைந்த
இணைமா மருப்பு தருமுத்துன்
டிருமு தொவ்வா விகபரங்கள்
முழுது தருவாய் நின்கனிவாய்
முத்த தருக முத்தமே
முக்க சுடர்க்கு விருந்திடுமும்
முலையாய் முத்த தருகவே
மத்த மதமா கவுட்டொருநான்
மருப்பு பொருப்பு மிசைப்பொலிந்த
வான தரசு கோயில்வளர்
சிந்தா மணியும் வடபுலத்தார்
நத்தம் வளர வளகையர்கோ
னகரில் வளரும் வான்மணியும்
நளின பொகுட்டில் வீற்றிருக்கு
நங்கை மனைக்கோர் விளக்கமென
பைத்த சுடிகை படப்பாயற்
பதுமநாபன் மார்பில்வளர்
பரிதி மணியு மெமக்கம்மை
பணியல் வாழி வேயீன்ற
முத்த முகுந்த நின்கனிவாய்
முத்த தருக முத்தமே
முக்க சுடர்க்கு விருந்திடுமும்
முலையாய்
முத்த தருகவே
கோடுங் குவடும் பொருதரங
குமரி துறையிற் படுமுத்தும்
கொற்கை துறையிற் றுறைவாணர்
குளிக்குஞ் சலாப குவான்முத்தும்
ஆடும் பெருந்தண் டுறைப்பொருநை
யாற்றிற் படுதெண் ணிலாமுத்தும்
அந்தண் பொதி தடஞ்சார
லருவி சொரியுங் குளிர்முத்தும்
வாடுங் கொடிநுண் ணுசுப்பொசிய
மடவ மகளி ருடனாடும்
வண்டற் றுறைக்கு வைத்துநெய்த்து
மணந்தாழ் நறுமென் புகைப்படலம்
மூடுங் குழலாய் நின்கனிவாய்
முத்த தருக முத்தமே
முக்க சுடர்க்கு விருந்திடுமும்
முலையாய் முத்த தருகவே
வேறு
பைவைத்த துத்தி பரூஉச்சுடிகை முன்றிற்
பசுங்கொடி யுடுக்கை கிழி
பாயிரு படலங் கிழித்தெழு சுடர்ப்பரிதி
பரிதி கொடிஞ்சி மான்றேர்
மொய்வைத்த கொய்யுளை வயப்புரவி வாய்ச்செல்ல
முட்கோல் பிடித்து நெடுவான்
முற்றத்தை யிருள்பட விழுங்கு துகிற்கொடி
முனைக்கணை வடிம்பு நக்கா
மைவைத்த செஞ்சிலையு மம்புலியு மோடநெடு
வான்மீன் மணந்து கந்த
வடவரை முகந்தநின் வயக்கொடி யெனப்பொலியு
மஞ்சிவர் வளாக நொச்சி
தெய்வ தமிழ்க்கூட றழை தழைத்தவ
டிருப்பவள முத்த மருளே
சேல்வைத்த வொண்கொடியை வலம்வைத்த பெண்கொடி
திருப்பவள முத்த மருளே
பின்னற் றிறைக்கடன் மதுக்குட மறத்தேக்கு
பெய்முகிற் காருடலம் வெண்
பிறைமதி கூன்கு கைக்கடைஞ ரொடுபுடை
பெயர்ந்திடை நுடங்க வொல்கு
மின்னற் றடித்து கரும்பொற்றொடிக்கடைசி
மெல்லியர் வெரீஇ பெயரவான்
மீன்கணம் வெருக்கொள்ள வெடிவரால் குதிகொள்ளும்
விட்புலம் விளை புலமென
கன்னற் பெருங்காடு கற்ப காட்டுவளர்
கடவுண்மா கவளங் கொள
காமதே னுவுநின்று கடைவாய் குதட்ட
கதிர்க்குலை முதிர்ந்து விளையுஞ்
செந்நெற் படப்பைமது ரைப்பதி புரப்பவ
டிருப்பவள முத்த மருளே
சேல்வைத்த வொண்கொடியை வலம்வைத்த பெண்கொடி
திருப்பவள முத்த மருளே
சங்கோ லிடுங்கடற் றானைக்கு வெந்நிடு
தராபதிகண் முன்றிறூர்த்த
தமனி குப்பையு திசைமுதல்வர் தடமுடி
தாமமு தலைம யங
கொங்கோ லிடுங்கை கொடுங்கோ லொடுந்திரி
குறும்பன் கொடிச்சுறவு நின்
கொற்ற பதாகை குழாத்தினொடு மிரசத
குன்றினுஞ் சென்று லாவ
பொன்கோல வேலை புறத்தினொ டகத்தினிமிர்
போராழி பரிதி யிரத
பொங்காழி மற்ற பொருப்பாழி யிற்றிரி
புல புலம்பு செ
செங்கோ றிருத்திய முடிச்செழியர் கோமக
டிருப்பவள முத்த மருளே
சேல்வைத்த வொண்கொடியை வலம்வைத்த பெண்கொடி
திருப்பவள முத்த மருளே
வேறு
பருவரை முதுபல வடியினி னெடுநில
நெக்ககு டக்கனியிற்
படுநறை படுநிறை கடமுடை படுவக
டுப்பவு வட்டெழவும்
விரிதலை முதலொடு விளைபுல முலையவு
ழக்கிய முட்சுறவின்
விசையினின் வழிநறை மிடறொடி கமுகின்வி
ழுக்குலை நெக்குகவும்
கரையெறி புணரியி னிருமடி பெருகுத
டத்தும டுத்தமட
களிறொடு பிளிறிய விகலிய முகிலினி
ரட்டியி ரட்டியமும்
முரசதிர் கடிநகர் மதுரையில் வளர்கிளி
முத்தம ளித்தருளே
முழுதுல குடையதொர் கவுரியர் குலமணி
முத்தம ளித்தருளே
புதையிருள் கிழிதர வெழுதரு பரிதிவ
ளைத்தக டற்புவியிற்
பொதுவற வடிமைசெய் திடும்வழி யடியர்பொ
ருட்டலர் வட்டணையிற்
றதைமலர் பொதுளிய களியளி குமிறுகு
ழற்றிரு வைத்தவள
சததள முளரியின் வனிதையை யுதவுக
டைக்கண்ம டப்பிடியே
பதுமமொ டொழுகொளி வளையுநி னளினமு
கத்துகி டற்றுமுற
பனிமிதி யொடுசுவை யமுதமு நுதலொடு
சொற்குத லைக்கணிறீஇ
முதுதமி ழுததியில் வருமொரு திருமகன்
முத்தம ளித்தருளே
முழுதுல குடையதொர் கவுரியர் குலமணி
முத்தம ளித்தருளே
முத்த பருவம் முற்றிற்று

வது வருகை பருவம்
அஞ்சிலம் போலிட வரிக்குரற் கிண்கிணி
யரற்றுசெஞ் சீறடி பெயர
தடியிடு தொறுநின் னலத்தக சுவடுப
டம்புவி யரம்பையர்கடம்
மஞ்சுதுஞ் சளக திளம்பிறையு மெந்தைமுடி
வளரிளம் பிறையுநாற
மணிநூ புரத்தவிழு மென்குரற் கோவசையு
மடநடை கோதொடர்ந்துன்
செஞ்சிலம் படிபற்று தெய்வக்கு ழாத்தினொடு
சிறையோதி மம்பின் செல
சிற்றிடை கொல்கிமணி மேகலையிரங்க
திருக்கோயி லெனவெனஞ்ச
கஞ்சமுஞ் செஞ்சொற் றமிழ கூடலுங் கொண்ட
காமர்பூங் கொடிவருகவே
கற்பகா டவியிற் கடம்பா டவிப்பொலி
கயற்கணா யகிவருகவே
குண்டுபடு பேரகழி வயிறுளை தீன்றபைங்
கோதையும் மதுரமொழுகுங்
கொழிதமிழ பனுவற் றுறைப்படியு மடநடை
கூந்தலம் பிடியுமறுகால்
வண்டுபடு முண்டக மனைக்குடி புகச்சிவ
மணங்கமழ விண்டதொண்டர்
மான தடமலர பொற்கோயில் குடிகொண்ட
மாணிக்க வல்லிவில்வே
டுண்டுபடு மதிநுதற் றோகையொடு மளவில்பல
தொல்லுரு வெடுத்தமர்செயு
தொடுசிலை யெனக்ககன முகடுமு டிப்பூ
துணர்த்தலை வணங்கிநிற்குங்
கண்டுபடு கன்னல்பைங் காடுபடு கூடற்
கலாபமாமயில் வருகவே
கற்பகா டவியிற் கடம்பா டவிப்பொலி
கயற்கணா யகிவருகவே
முயல்பாய் மதிக்குழவி தவழ்சூ லடிப்பலவின்
முட்பொதி குடக்கனியொடு
முடவு தடந்தாழை முப்புடை கனிசிந்த
மோதிநீ ருண்டிருண்ட
புயல்பாய் படப்பை தடம்பொழில்க ளன்றியேழ்
பொழிலையு மொருங்கலைத்து
புறமூடு மண்ட சுவர்த்தலமிடித்த
புறக்கடன் மடுத்துழக்கி
செயல்பாய் கடற்றானை செங்களங் கொளவம்மை
திக்குவிச யங்கொண்டநாள்
தெய்வ கயற்கொடிக டிசைதிசை யெடுத்தென
திக்கெட்டு முட்டவெடிபோ
கயல்பாய் குரம்பணை பெரும்பணை தமிழ்மதுரை
காவலன் மகள்வருகவே
கற்பகா டவியிற் கடம்பா டவிப்பொலி
கயற்கணா யகிவருகவே
வடம்பட்ட நின்றுணை கொங்கை குடங்கொட்டு
மதுரவமு துண்டு கடைவாய்
வழியும்வெள் ளருவியென நிலவுபொழி கிம்புரி
மருப்பிற் பொருபிடித்து
தடம்பட்ட பொற்றாது சிந்துரங் கும்ப
தலத்தணிவ தொப்பவப்பி
சலராசி யேழு தடக்கையின் முகந்துபின்
றானநீ ரானிரப்பி
முடம்பட்ட மதியங் குசப்படை யெனக்ககன
முகடுகை தடவியுடுமீன்
முத்தம் பதித்திட்ட முகபடா மெனவெழு
முகிற்படா நெற்றிசுற்றுங்
கடம்பட்ட சிறுக பெருங்கொலைய மழவிளங்
களிறீன்ற பிடிவருகவே
கற்பகா டவியிற் கடம்பா டவிப்பொலி
கயற்கணா யகிவருகவே
தேனொழுகு கஞ்ச பொலன்சீ றடிக்கூட்டு
செம்பஞ்சி யின்குழம்பால்
தெள்ளமு திறைக்கும் பசுங்குழவி வெண்டிங்கள்
செக்கர்மதி யாக்கரைபொரும்
வானொழுகு துங்க தரங்க பெருங்கங்கை
வாணிநதி யாச்சிவபிரான்
மகுடகோ டீர தடிச்சுவ டழுத்தியிடு
மரகத கொம்புகதிர்கால்
மீனொழுகு மாயிரு விசும்பிற் செலுங்கடவுள்
வேழத்தின் மத்தகத்து
வீற்றிரு குஞ்சே யிழைக்கும் பசுங்கமுகு
வெண்கவரி வீசும் வாச
கானொழுகு தடமலர கடிபொழிற் கூடல்வளர்
கவுரியன் மகள்வருகவே
கற்பகா டவியிற் கடம்பா டவிப்பொலி
கயற்கணா யகிவருகவே
வேறு
வடக்குங் குமக்குன் றிரண்டேந்தும்
வண்டன் மகளிர் சிறுமுற்றில்
வாரி குவித்த மணிக்குப்பை
வானா றடைப்ப வழிபிழைத்து
நடக்குங் கதிர்பொற் பரிசிலா
நகுவெண் பிறைகை தோணியதா
நாண்மீன் பரப்பு சிறுமிதப்பா
நாப்பண் மிதப்ப நாற்கோட்டு
கடக்குஞ் சரத்தின் மதிநதியுங்
கங்கா நதியு மெதிர்கொள்ள
ககன வெளியுங் கற்பகப்பூங்
காடுங் கடந்து கடல்சுருங்க
மடுக்கு திரைத்தண் டுறைவையை
வளநா டரசே வருகவே
மலை துவசன் பெற்றபெரு
வாழ்வே வருக வருகவே
கண்ண திமிர்ந்து தேனருவி
துளைந்தா டறுகாற் றும்பிபசு
தோட்டு கதவந்திறப்ப மலர
தோகை குடிபு கோகைசெயு
தண்ணங் கமல கோயில்பல
சமைத்த மரு தச்சன்முழு
தாற்று கமுகு நாற்றியிடு
தடங்கா வணப்ப தரில்வீக்கும்
விண்ணம் பொதிந்த மேகபடா
மிசைத்தூ கியம்பன் மணிக்கொத்து
விரிந்தா லெனக்கா னிமிர்ந்துதலை
விரியுங் குலைநெற் கற்றைபல
வண்ணம் பொலியும் பண்ணைவயன்
மதுரை கரசே வருகவே
மலை துவசன் பெற்றபெரு
வாழ்வே வருக வருகவே
தகர குழலி னறையுநறை
தருதீம் புகையு திசைக்களிற்றின்
றடக்கை நாசி புழைமடுப்ப
தளருஞ் சிறுநுண் மருங்குல்பெருஞ்
சிகர கள பொம்மன்முலை
தெய்வ மகளிர் புடையிரட்டுஞ்
செங்கை கவரி முகந்தெறியுஞ்
சிறுகாற் கொசிந்து குடிவாங்க
முகர களிவண் டடைகிடக்கு
முளரி கொடிக்குங் கலைக்கொடிக்கு
முருந்து முறுவல் விருந்திடுபுன்
மூர னெடுவெண் ணிலவெறிப்ப
மகர கருங்க செங்கனிவாய்
மடமான் கன்று வருகவே
மலை துவசன் பெற்றபெரு
வாழ்வே வருக வருகவே
தொடுக்குங் கடவு பழம்பாடற்
றொடையின் பயனே நறைபழுத்த
துறைத்தீ தமிழி னொழுகுநறுஞ்
சுவையே யகந்தை கிழங்கையகழ
தெடுக்கும் தொழும்ப ருளக்கோயிற்
கேற்றும் விளக்கே வளர்சிமய
வி பொருப்பில் விளையாடு
மிளமென் பிடியே யெறிதரங்கம்
உடுக்கும் புவனங் கடந்துநின்ற
வொருவன் றிருவுள் ளத்திலழ
கொழுக வெழுதி பார்த்திருக்கு
முயிறோ வியமே மதுகரம்வாய்
மடுக்குங் குழற்கா டேந்துமிள
வஞ்சிக்கொடியே வருகவே
மலை துவசன் பெற்றபெரு
வாழ்வே வருக வருகவே
பெருந்தே னிறைக்கு நறைக்கூந்தற்
பிடியே வருக முழுஞான
பெருக்கே வருக பிறைமௌலி
பெம்மான் முக்க சுடர்க்கிடுநல்
விருந்தே வருக மும்முதற்கும்
வித்தே வருக வித்தின்றி
விளைக்கும் பரமா னந்தத்தின்
விளைவே வருக பழமறையின்
குருந்தே வருக வருள்பழுத்த
கொம்பே வருக திருக்கடைக்கண்
கொழித்த கருணை பெருவெள்ளங்
குடைவார் பிறவி பெரும்பிணிக்கோர்
மருந்தே வருக பசுங்குதலை
மழலை கிளியே வருகவே
மலை துவசன் பெற்றபெரு
வாழ்வே வருக வருகவே
வருகை பருவம் முற்றிற்று

வது அம்புலி பருவம்
கண்டுபடு குதலை பசுங்கிளி யிவட்கொரு
கலாபேத மென்னநின்னை
கலைமறைகண் முறையிடுவ கண்டோ வலாதொண்
கலாநிதி யெனத்தெரிந்தோ
வண்டுபடு தெரியற் றிருத்தாதை யார்மரபின்
வழிமுத லெனக்குறித்தோ
வளர்சடை முடிக்கெந்தை தண்ணறுங் கண்ணியா
வைத்தது கடைப்பிடித்தோ
குண்டுபடு பாற்கடல் வருந்திரு சேடியொடு
கூட பிறந்தோர்ந்தோ
கோமாட்டி யிவணின்னை வம்மென கொம்மென
கூவிட பெற்றாயுன
கண்டுபடு சீரிதன் றாதலா லிவளுட
னம்புலீ யாடவாவே
ஆணிப்பொன் வில்லிபுணர் மாணிக்க வல்லியுட
னம்புலீ யாடவாவே
குலத்தொடு தெய்வ குழாம்பிழி தூற்றி
குடித்து சுவைத்துமிழ்ந்த
கோதென்று மழல்விடங் கொப்புளி கின்றவிரு
கோளினு சிட்டமென்றும்
கலைத்தோடு மூடி களங்கம் பொதிந்திட்ட
கயரோகி யென்றுமொருநாள்
கண்கொண்டு பார்க்கவுங் கடவதன் றெனவும்
கடற்புவி யெடுத்த்திகழவி
புலத்தோரு முடுமீன் கணத்தோடு மோடுநின்
போல்வார்க்கு மாபாதகம்
போக்குமி தலமலது புகலில்லை காண்மிசை
பொங்குபுனல் கற்பகக்கா
டலைத்தோடு வையை துறைப்படி மடப்பிடியொ
டம்புலீ யாடவாவே
ஆணிப்பொன் வில்லிபுணர் மாணிக்க வல்லியுட
னம்புலீ யாடவாவே
கீற்றுமதி யெனநிலவு தோற்றுபரு வத்திலொளி
கிளர்நுதற் செவ்விவவ்வி
கெண்டை தடங்கணா ரெருவி டிறைஞ்ச
கிடந்தது முடைந்தமுதம்விண்
டூற்றுபுது வெண்கலை யுடுத்துமுழு மதியென
வுதித்தவமை யத்துமம்மை
யொண்முக தொழுகுதிரு வழகை கவர்ந்துகொண்
டோ டினது நிற்கமற்றை
மாற்றவ ளொடுங் கேள்வர் மௌலியி லுறைந்தது
மறைந்துனை யழைத்த பொழுதே
மற்றிவள் பெருங்கருணை சொற்றிட கடவதோ
மண்முழுதும் விம்முபுயம் வை
தாற்றுமுடி யரசுதவு மரசிளங் குமரியுட
னம்புலீ யாடவாவே
ஆணிப்பொன் வில்லிபுணர் மாணிக்க வல்லியுட
னம்புலீ யாடவாவே
விண்டலம் பொலி பொலிந்திடுதி யேலுனது
வெம்பணி பகை விழுங்கி
விக்கிட கக்கிட தொக்கிடர படுதிவெயில்
விரியுஞ் சுடர பரிதியின்
மண்டலம் புக்கனை யிருத்தியெனி னொன்ளொளி
மழுங்கிட வழுங்கிடுதிபொன்
வளர்சடை காட்டெந்தை வைத்திட பெறுதியேன்
மாகணஞ் சுற்றவச்சங்
கொண்டுகண் டுஞ்சா திருப்பது மருப்பொங்கு
கோதையிவள் சீறடிகணின்
குடர் குழம்பிடவே குமைப்பதும் பெறுதியெங்
கோமாட்டி பாலடைந்தால்
அண்டபுகி ரண்டமு மகண்டமும் பெறுதியா
லம்புலீ யாடவாவே
ஆணிப்பொன் வில்லிபுணர் மாணிக்க வல்லியுட
னம்புலீ யாடவாவே
எண்ணில்பல புவனப்பெரு தட்டை யூடுருவி
யிவள்பெரும் புகழ் நெடுநிலா
எங்கணு நிறைந்திடுவ தங்கதனின் மெள்ளநீ
யெள்ளளவு மொண்டுகொண்டு
வெண்ணிலவு பொழிவது கிடைத்தனை மடுத்திவள்
விழிக்கடை கொழித்த கருணை
வெள்ள திளைத்தாடு பெற்றியாற் றண்ணளி
விளைப்பதும் பெற்றனை கொலாம்
மண்ணிலொண் பைங்கூழ் வளர்ப்பது னிடத்தம்மை
வைத்திடுஞ் சத்தியேகாண்
மற்றொரு சுதந்திர நினைக்கென விலைகலை
மதிக்கடவு ணீயுமுணர்வாய்
அண்ணலங் களியானை யரசர்கோ மகளுட
னம்புலீ யாடவாவே
ஆணிப்பொன் வில்லிபுணர் மாணிக்க வல்லியுட
னம்புலீ யாடவாவே
முன்பும்ப ரரசுசெய் பெரும்பாவ முங்கோப
மூரிமா தொடர் சாபமும்
மும்மை தமிழ்செழியன் வெப்பொடு கொடுங்கூனு
மோசித்த வித்தலத்தின்
றன்பெரு தன்மையை யுணர்ந்திலை கொல் சிவாராச
தானியா சீவன்முத்தி
தலமுமா துவாதசா தத்தலமு மானதி
தலமி தலத்திடையேல்
மன்பெருங் குரவர் பிழைத்த பாவமுமற்றை
மாமடிகளிடு சாபமும்
வளரிளம் பருவத்து நரைதிரையு முதிர்கூனு
மாற்றிட பெறுதிகண்டாய்
அன்பரென் புரு கசிந்திடு பசுந்தேனொ
டம்புலீ யாடவாவே
ஆணிப்பொன் வில்லிபுணர் மாணிக்க வல்லியுட
னம்புலீ யாடவாவே
கும்பஞ் சுமந்தமத வெள்ளநீர் கொட்டுங்
கொடுங்களி றிடும்போர்வையான்
குடிலகோ டீர திருந்துகொண் டந்நலார்
கொய்தளிர கைவருடவுஞ்
செம்பஞ் சுறுத்தவும் பதைபதை தாரழற்
சிகையென கொப்புளிக்குஞ்
சீறடிகள் கன்றி சிவந்திட செய்வது
திருவுள தடையாது பொற்
றம்பஞ் சுமந்தீன்ற மானுட விலங்கின்
தனிப்புதல்வனுக்கு வட்ட
தண்குடை நிழற்றுநினை வம்மென வழைத்தன
டழைத்திடு கழை கரும்பொன்
றம்பஞ் சுடன்கொண்ட மகர கொடிக்கொடியொ
டம்புலீ யாடவாவே
ஆணிப்பொன் வில்லிபுணர் மாணிக்க வல்லியுட
னம்புலீ யாடவாவே
துளிதூங்கு தெள்ளமுத வெள்ளருவி பொழியுநின்
றொன்மரபு தழையவந்து
தோன்றிடுங் கௌரியர் குலக்கொழுந்தைக்கண்டு
துணைவிழியு மனமுநின்று
களிதூங்க வளவளாய் வாழாம லுண்ணமுது
கலையொடு மிழந்துவெறு
கலத்திடு புதுக்கூ ழினுக்கிரவு பூண்டொரு
களங்கம்வை தாயிதுவலால்
ஒளிதூங்கு தெளிவிசும் பினினின்னொ டொத்தவ
னொருத்தன் கரத்தின் வாரி
உண்டொது கியமிச்சி நள்ளிருளி லள்ளியுண்
டோ டுகின் றாயென் செய்தாய்
அளிதூங்கு ஞிமிறெழு தார்க்குங் குழற்றிருவொ
டம்புலீ யாடவாவே
ஆணிப்பொன் வில்லிபுணர் மாணிக்க வல்லியுட
னம்புலீ யாடவாவே
மழைகொ தளக்கோதை வம்மினென் றளவினீ
வந்திலை யென கடுகலும்
வாண்முக செவ்வி குடைந்தொதுங் கினவனெதிர்
வரவொல்கி யோபணிகள்கோ
ளிழைக்குங்கொல் பின்றொடர தெனவஞ்சி யோதாழ
திருந்தனன் போலுமெனயா
மித்துணையு மொருவாறு தப்புவி தோம்வெகுளி
லினியொரு பிழைப்பில்லைகாண்
டழைக்கு துகிற்கொடி முகிற்கொடி திரைத்துமேற்
றலம்வளர் நகிற்கொடிகளை
தாழ்குழலு நீவிநுதல் வெயர்வு துடைதம்மை
சமயமிது வென்றலுவலி
டழைக்கு தடம்புரிசை மதுரை துரைப்பெணுட
னம்புலீ யாடவாவே
ஆணிப்பொன் வில்லிபுணர் மாணிக்க வல்லியுட
னம்புலீ யாடவாவே
ஏடக தெழுதாத வேத சிரத்தர
சிருக்குமிவள் சீறடிகணின்
னி தடத்தும் பொலிந்தவர் திருவுள
தெண்ணியன் றேகபடமா
நாடக தைந்தொழி னடிக்கும் பிரான்றெய்வ
நதியொடு முடித்தல் பெற்றாய்
நங்கையிவ டிருவுள மகிழ்ச்சிபெறி லிதுபோலொர்
நற்றவ பேறில்லைகாண்
மாட கடைதிரி தின்னரம் பார்த்துகிர்
வடிம்புதை வருமந்நலார்
மகரயாழ் மழலைக்கு மரவங்க ணுண்டுகில்
வழங கொழுங்கோங்குதூங்
காடக பொற்கிழி யவிழ்க்குமது ரைதிருவொ
டம்புலீ யாடவாவே
ஆணிப்பொன் வில்லிபுணர் மாணிக்க வல்லியுட
னம்புலீ யாடவாவே
அம்புலி பருவம் முற்றிற்று

வது அம்மானை பருவம்
கரைக்குங் கடாமிரு கவுட்குட முடைந்தூற்று
களிறுபெரு வயிறுதூர்ப்ப
கவள திரட்டி கொடுப்பதென வுஞ்சூழ்ந்தொர்
கலைமதி கலசவமுது
கிரைக்கும் பெருந்தேவர் புன்கண் டுடைத்திட
வெடுத்தமுத கலசம் வெவ்வே
றீந்திடுவ தெனவுமுழு முத்தி டிழைத்திட்ட
வெறிபந்தின் நிரையென்னவும்
விரைக்கு தளிர்க்கை கொழுந்தா மரைத்துஞ்சி
மீதெழு தார்த்தபிள்ளை
வெள்ளோதி மத்திரளி தெனவு கரும்பாறை
மீமிசை செந்சாந்துவை
தரைக்குந்திரைக்கைவெள் ளருவிவை யைத்துறைவி
யம்மானை யாடியருளே
ஆகங் கலந்தொருவர் பாகம் பகிர்ந்தபெண்
ணம்மானை யாடியருளே
திங்க கொழுந்தை கொழுந்துபடு படர்சடை
செருகுதிரு மணவாளன்மேற்
செழுமண பந்தரி லெடுத்தெறியு மமுதவெண்
டிரளையிற் புரளுமறுகாற்
பைங்க சுரும்பென விசும்பிற் படர்ந்தெழும்
பனிமதி மிசைத்தாவிடும்
பருவமட மானெனவெ னம்மனைநி னம்மனை
படைவிழி கயல்பாய்ந்தெழு
வெங்க கடுங்கொலைய வேழக்கு ழாமிதென
மே குழாத்தைமுட்டி
விளையாடு மழகளிறு கடைவாய் குதட்டமுகை
விண்டவம் பைந்துகோத்த
அங்க கரும்பேந்து மபிடேக வல்லிதிரு
வம்மானை யாடியருளே
ஆகங் கலந்தொருவர் பாகம் பகிர்ந்தபெண்
ணம்மானை யாடியருளே
கள்ளூறு கஞ்ச கரத்தூறு சேயொளி
கலப்ப சிவப்பூறியும்
கருணை பெருக்கூற வமுதூறு பார்வை
கடைக்க கறுப்பூறியும்
நள்ளூறு மறுவூ றகற்றுமுக மதியில்வெண்
ணகையூறு நிலவூறியும்
நற்றாரள வம்மனையொர் சிற்குண தினைமூன்று
நற்குணங் கதுவல் காட்ட
உள்ளூறு களிதுளும் பக்குரவ ரிருவீரு
முற்றிடு துவாத சாந
தொருபெரு வெளிக்கே விழித்துறங் குந்தொண்ட
ருழுவலன் பென்புருகநெ
கள்ளூற வுள்ளே கசிந்தூறு பைந்தேற
லம்மானை யாடியருளே
ஆகங் கலந்தொருவர் பாகம் பகிர்ந்தபெண்
ணம்மானை யாடியருளே
குலைபட்ட காந்த டளிர்க்கையிற் செம்மணி
குயின்றவம் மனைநித்திலங்
கோத்தவம் மனைமுன் செலப்பின் செலுந்தன்மை
கோகனக மனையாட்டிபாற்
கலைபட்ட வெண்சுடர கடவுடோ தேகவது
கண்டுகொண் டேபுழுங்குங்
காய்கதிர கடவுளும் பின்றொடர்வ தேய்ப்ப
கறங்கருவி தூங்குவோங்கு
மலைப்பட்ட வாரமும் வயிரமும் பிறவுமா
மாமணி திரளைவாரி
மறிதிரை கையா லெடுத்தெறிய நாற்கோட்டு
மதகளிறு பிளிறியோடும்
அலைபட்ட வையை துறைச்சிறை யனப்பேடை
யம்மானை யாடியருளே
ஆகங் கலந்தொருவர் பாகம் பகிர்ந்தபெண்
ணம்மானை யாடியருளே
தமரான நின்றுணை சேடியரி லொருசிலர்
தடக்கையி நெடுத்தாடுநின்
றரளவம் மனைபிடி தெதிர்வீசி வீசியிட
சாரிவல சாரிதிரியா
நிமிராமு னம்மனையொ ராயிர மெடுத்தெறிய
நிரைநிரைய தாய்ககனமேல்
நிற்கின்ற தம்மைநீ பெற்றவகி லாண்டமு
நிரைத்துவை ததுகடுப்ப
இமிரா வரிச்சுரும் பார்த்தெழ பொழிலூ
டெழுந்தபை தாதுல கெலாம்
இருள்செ செய்துநின் சேனா பராகமெனு
மேக்கமள காபுரிக்கும்
அமரா மதிக்குஞ்செய் மதுரா புரித்தலைவி
யம்மானை யாடியருளே
ஆகங் கலந்தொருவர் பாகம் பகிர்ந்தபெண்
ணம்மானை யாடியருளே
உயிரா யிருக்கின்ற சேடியரின் மலர்மீ
துதித்தவ ளெதிர்த்துநின்னோ
டொட்டியெ டிப்பிடி திட்டவம் மனைதேடி
யோடியா டித்திரியநீ
பெயரா திருந்துவிளை யாடுவது கண்டெந்தை
பிறைமுடி துளக்க முடிமேற்
பெருகுசுர கங்கைநுரை பொங்கலம் மானை
பெண்கொடியு மாடன்மான
வெயரா மனம்புழுங் கிடுமமரர் தச்சனும்
வியப்ப செயுந்தவளமா
மேடையு தண்டரள மாடமு தெண்ணிலா
வீச திசைக்களிறெலாம்
அயிரா வதத்தினை நிகர்க்குமது ரைத்தலைவி
யம்மானை யாடியருளே
ஆகங் கலந்தொருவர் பாகம் பகிர்ந்தபெண்
ணம்மானை யாடியருளே
வேறு
முத்தம ழுத்திய வம்மனை கைம்மலர்
முளரிம ணங்கமழ
மொய்குழல் வண்டுநின் மைவிழி வண்டின்
முயங்கி மயங்கியிட
கொத்து மணித்திர ளிற்செயு மம்மனை
குயிலின்மி ழற்றியநின்
குழலினி சைக்குரு கிப்பனி தூங்கு
குறுந்துளி சிந்தியிட
வித்துரு மத்திலி ழைத்தவு நின்கை
விரற்பவ ளத்தளிரின்
விளைதரு மொள்ளொளி திருட போவது
மீள்வது மாய்த்திரிய
அத்தன் மனத்தெழு தியவுயி ரோவிய
மாடுக வம்மானையே
அழகு தழைந்தகல் யாணசவுந்தரி
யாடுக வம்மானையே
கிளநில வுமிழ்பரு முத்தின் கோவை
யெடுத்தவர் திருமார்பு
கிடுவ கடுப்பவு மப்பரி சேபல
மணியி னியற்றியிடும்
வளரொளி விம்மிய வம்மனை செல்வது
வானவி லொத்திடவும்
மனனெ குருக பரமா னந்த
மடுத்த திருத்தொண்டர
களிகனி யத்திரு வருள்கனி யுங்கனி
யாடுக வம்மானையே
அழகு தழைந்தகல் யாண சவுந்தரி
யாடுக வம்மானையே
கைம்மல ரிற்பொலி கதிர்மு தம்மனை
நகைமு தொளிதோ
கண்டவர் நிற்க பிறர்சிலர் செங்கை
கமல சுடர்கதுவ
செம்மணி யிற்செய் திழைத்தன வெனவுஞ்
சிற்சிலர் கட்கடையின்
செவ்வியை வவ்விய பின்கரு மணியிற்
செய்தன கொல்லெனவு
தம்மன மொப்ப வுரைப்பன மற்றை
தமைவுபெறார்
தத்தமி னின்று பிதற்றுவ பொருவ
தனிமுதல் யாமென்பார
கம்மனை யாயவர் தம்மனை யானவ
ளாடுக வம்மானையே
அழகு தழைந்தகல் யாண சவுந்தரி
யாடுக வம்மானையே
ஒள்ளொளி மரகத மும்முழு நீலமு
மொண்டர ளத்திரளும்
ஒழுகொளி பொங்க விளைந்திடு மம்மனை
யொருமூன் றடைவிலெடா
கள்ளவிழ் கோதை விசும்புற வீசுவ
கண்ணுதல் பாற்செலநின்
கையில் வளர்த்த பசுங்கிளி யும்வளர்
காமர் கருங்குயிலும்
பிள்ளைவெ ளோதிம மும்முறை முறையாற்
பெருகிய காதலைமேற்
பேச விடுப்ப கடுப்ப வணைத்தொரு
பெடையோ டாசவனம்
அள்ளல் வயிற்றுயின் மதுரை துரைமக
ளாடுக வம்மானையே
அழகு தழைந்தகல் யாணசவுந்தரி
யாடுக வம்மானையே
அம்மானை பருவம் முற்றிற்று

வது நீராடற் பருவம்
வளையாடு வண்கை பொலன்சங் கொடும்பொங்கு
மறிதிரை சங்கொலிட
மதரரி கட்கயல் வரிக்கய லொடும்புரள
மகரந்த முண்டுவண்டின்
கிளையொடு நின்றிரு கேசபா சத்தினொடு
கிளர்சைவ லக்கொத்தெழ
கிடையாத புதுவிரு தெதிர்கொண்டு தத்தமிற்
கேளிர்க டழீஇக்கொண்டென
தளையொடு கரையடி சிறுக பெருங்கை
தடக்களி றெடுத்து மற்ற
தவள களிற்றினொடு முட்டவி டெட்டுமத
தந்தியும் பந்தடித்து
விளையாடும் வையை தடந்துறை குடைந்துபுது
வெள்ளநீ ராடியருளே
விடைக்கொடி யவர்கொரு கயற்கொடி கொடுத்தகொடி
வெள்ளநீ ராடியருளே