பெரும்பாணாற்றுப்படை
ஆசிரியர் கடியலூர் உருத்திரங் கண்ணனார்©

சங்க கால நூல்களான பத்து பாட்டுக்களில் நான்காவதான
பெரும்பாணாற்றுப்படை

பாடியவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார்
பாடப்பட்டவன் தொண்டைமான் இளந்திரையன்
திணை பாடாண்திணை
துறை ஆற்றுப்படை
பாவகை ஆசிரியப்பா
மொத்த அடிகள்

அகலிரு விசும்பிற் பாயிருள் பருகி
பகல்கான் றெழுதரு பல்கதிர பருதி
காய்சின திருகிய கடுந்திறல் வேனிற்
பாசிலை யழித்த பராஅரை பாதிரி
வள்ளிதழ் மாமலர் வயிற்றிடை வகுத்தத
னுள்ளகம் புரையு மூட்டுறு பச்சை
பரியரை கமுகின் பாளையம் பசும்பூ
கருவிரு தன்ன கண்கூடு செறிதுளை
யுருக்கி யன்ன பொருத்துறு போர்வை
சுனைவற தன்ன விருடூங்கு வறுவா
பிறைபிற தன்ன பின்னேந்து கவைக்கடை
நெடும்பணை திரடோண் மடந்தை முன்கை
குறுந்தொடி யேய்க்கும் மெலிந்துவீங்கு திவவின்
மணிவார தன்ன மாயிரு மருப்பிற்
பொன்வார தன்ன புரியடங்கு நரம்பின்
றொடையமை கேள்வி யிடவயிற் றழீஇ
வெந்தெறற் கனலியடு மதிவல திரிதரு
தண்கடல் வரைப்பிற் றாங்குநர பெறாது
பொழிமழை துறந்த புகைவேய் குன்றத்து
பழுமர தேரும் பறவை போல
கல்லென் சுற்றமொடு கால்கிளர்ந்து திரிதரும்
புல்லென் யாக்கை புலவுவா பாண
பெருவறங் கூர்ந்த கானங் கல்லென
கருவி வான துளிசொரி தாங்கு
பழம்பசி கூர்ந்தவெம் மிரும்பே ரொக்கலொடு
வழங்க தவாஅ பெருவள னேய்தி
வாலுளை புரவியடு வயக்களிறு முகந்துகொண்
டியாமவ ணின்றும் வருதும் நீயிரு
மிருநிலங் கடந்த திருமறு மார்பின்
முந்நீர் வண்ணன் பிறங்கடை யந்நீர
திரைதரு மரபி னுரவோ னும்பல்
மலர்தலை யுலகத்து மன்னுயிர் காக்கும்
முரசுமுழங்கு தானை மூவ ருள்ளு
மிலங்குநீர பரப்பின் வளைமீ கூறும்
வலம்புரி யன்ன வசைநீங்கு சிறப்பி
னல்லது கடிந்த வறம்புரி செங்கோற்
பல்வேற் றிரையற் படர்குவி ராயிற்
கேளவ னிலையே கெடுகநின் னவல
மத்தஞ் செல்வோ ரலற தாக்கி
கைப்பொருள் வௌவுங் களவேர் வாழ்க்கை
கொடியோ ரின்றவன் கடியுடை வியன்புல
முருமும் உரறா தரவு தப்பா
காட்டுமாவு முறுகண் செய்யா வேட்டாங்
கசைவுழி யசைஇ நசைவுழி தங்கி
சென்மோ விரவல சிறக்கநின் னுள்ளங்
கொழுஞ்சூ டருந்திய திருந்துநிலை யாரத்து
முழவி னன்ன முழுமர வுருளி
யெழூஉப்புணர தன்ன பரூஉக்கை நோன்பார்
மாரி குன்றம் மழைசு தன்ன
வாரை வேய்ந்த வறைவா சகடம்
வேழங் காவலர் குரம்பை யேய்ப்ப
கோழி சேக்குங் கூடுடை புதவின்
முளையெயிற் றிரும்பிடி முழந்தா ளேய்க்கு
துளையரை சீறுர றூங்க தூக்கி
நாடக மகளி ராடுகள தெடுத்த
விசிவீங் கின்னியங் கடுப்பல் கயிறுபிணித்து
காடி வைத்த கலனுடை மூக்கின்
மகவுடை மகடூஉ பகடுபுற துரப்ப
கோட்டிணர் வேம்பி னேட்டிலை மிடைந்த
படலை கண்ணி பரேரெறுழ திணிதோண்
முடலை யாக்கை முழுவலி மாக்கள்
சிறுதுளை கொடுநுக நெறிபட நிரைத்த
பெருங்கயிற் றொழுகை மருங்கிற் காப்ப
சில்பத வுணவின் கொள்ளை சாற்றி
பல்லெரு துமணர் பதிபோகு நெடுநெறி
யெல்லிடை கழியுநர கேம மாக
மலையவுங் கடலவு மாண்ப தரூஉ
மரும்பொரு ளருத்து திருந்துதொடை நோன்றா
ளடிபுதை யரண மெய்தி படம்புக்கு
பொருகணை தொலைச்சிய புண்டீர் மார்பின்
விரவுவரி கச்சின் வெண்கை யள்வாள்
வரையூர் பாம்பிற் பூண்டுபுடை தூங்க
சுரிகை நுழைந்த சுற்றுவீங்கு செறிவுடை
கருவி லோச்சிய கண்ணக னெறுழ்த்தோ
கடம்பமர் நெடுவே ளன்ன மீளி
யுடம்பிடி தடக்கை யோடா வம்பலர்
தடவுநிலை பலவின் முழுமுதற் கொண்ட
சிறுசுளை பெரும்பழங் கடுப்ப மிரியற்
புணர்ப்பொறை தாங்கிய வடுவாழ் நோன்புற
தணர்ச்செவி கழுதை சாத்தொடு வழங்கு
முல்குடை பெருவழி கவலை காக்கும்
வில்லுடை வைப்பின் வியன்கா டியவி
னீளரை யிலவ தலங்குசினை பயந்த
பூளையம் பசுங்காய் புடைவிரி தன்ன
வரிப்புற வணிலொடு கருப்பை யாடா
தியாற்றறல் புரையும் வெரிநுடை கொழுமடல்
வேற்றலை யன்ன வைந்நுதி நெடுந்தக
ரீத்திலை வேய்ந்த வெய்ப்புற குரம்பை
மான்றோற் பள்ளி மகவொடு முடங்கி
யீன்பிண வொழி போகி நோன்கா
ழிரும்புதலை யாத்த திருந்துகணை விழுக்கோ
லுளிவா சுரையின் மிளிர மிண்டி
யிருநில கரம்பை படுநீ றாடி
நுண்பு லடக்கிய வெண்ப லெயிற்றியர்
பார்வை யாத்த பறைதாள் விளவி
னீழன் முன்றி னிலவுரற் பெய்து
குறுங்கா ழுலக்கை யோச்சி நெடுங்கிணற்று
வல்லூற் றுவரி தோண்டி தொல்லை
முரவுவா குழிசி முரியடு பேற்றி
வாரா தட்ட வாடூன் புழுக்கல்
வாடா தும்பை வயவர் பெருமக
னோடா தானை யண்டொழிற் கழற்காற்
செவ்வரை நாடன் சென்னிய மெனினே
தெய்வ மடையிற் றேக்கிலை குவைஇநும்
பைதீர் கடும்பொடு பதமிக பெறுகுவிர்
மானடி பொறித்த மயங்கதர் மருங்கின்
வான்மடி பொழுதி னீர்நசைஇ குழித்த
வகழ்சூழ் பயம்பி னகத்தொளி தொடுங்கி
புகழா வாகை பூவி னன்ன
வளைமரு பேனம் வரவுபார திருக்கு
மரைநாள் வேட்ட மழுங்கிற் பகனா
பகுவாய் ஞமலியடு பைம்புத லெருக்கி
தொகுவாய் வேலி தொடர்வலை மாட்டி
முள்ளரை தாமரை புல்லிதழ் புரையு
நெடுஞ்செவி குறுமுயல் போக்கற வளைஇ
கடுங்க கானவர் கடறுகூ டுண்ணு
மருஞ்சுர மிறந்த வம்பர பருந்துபட
வொன்னா தெவ்வர் நடுங்க வோச்சி
வைந்நுதி மழுங்கிய புலவுவா யெ·கம்
வடிமணி பலகையடு நிரைஇ முடிநா
சாபஞ் சார்த்திய கணைதுஞ்சு வியனக
ரூகம் வேய்ந்த வுயர்நிலை வரைப்பின்
வரைத்தேன் புரையுங் கவைக்கடை புதையடு
கடுந்துடி தூங்குங் கணைக்காற் பந்தர
தொடர்நா யாத்த துன்னருங் கடிநகர்
வாழ்முள் வேலி சூழ்மிளை படப்பை
கொடுநுக தழீஇய புதவிற் செந்நிலை
நெடுநுதி வயக்கழு நிரைத்த வாயிற்
கொடுவி லெயின குறும்பிற் சேப்பிற்
களர்வள ரீந்தின் காழ்கண் டன்ன
சுவல்விளை நெல்லின் செவ்வவிழ சொன்றி
ஞமலி தந்த மனவுச்சூ லுடும்பின்
வறைகால் யாத்தது வயின்றொறும் பெருகுவிர்
யானை தாக்கினு மரவுமேற் செலினு
நீனிற விசும்பின் வல்லேறு சிலைப்பினுஞ்
சூன்மகள் மாறா மறம்பூண் வாழ்க்கை
வலிக்கூ டுணவின் வாட்குடி பிறந்த
புலிப்போ தன்ன புல்லணற் காளை
சென்னா யன்ன கருவிற் சுற்றமொடு
கேளா மன்னர் கடிபுலம் புக்கு
நாள்ஆ தந்து நறவுநொடை தொலைச்சி
யில்லடு கள்ளின் றோப்பி பருகி
மல்லல் மன்றத்து மதவிடை கெண்டி
மடிவா தண்ணுமை நடுவ சிலைப்ப
சிலைநவி லெறுழ்த்தோ ளோச்சி வலன்வளையூஉ
பகல்மகிழ் தூங்கு தூங்கா விருக்கை
முரண்டலை கழிந்த பின்றை மறிய
குளகுஅரை யாத்த குறுங்காற் குரம்பை
செற்றை வாயிற் செறிகழி கதவிற்
கற்றை வேய்ந்த கழித்தலை சாம்பி
னதளோன் றுஞ்சுங் காப்பி னுதள
நெடுந்தாம்பு தொடுத்த குறுந்தறி முன்றிற்
கொடுமுக துருவையடு வெள்ளை சேக்கு
மிடுமுள் வேலி யெருப்படு வரைப்பி
னள்ளிருள் விடியற் புள்ளெழ போகி
புலிக்குரன் மத்த மொலிப்ப வாங்கி
யாம்பி வான்முகை யன்ன கூம்புமுகி
ழுறையமை தீந்தயிர் கலக்கி நுரைதெரிந்து
புகர்வா குழிசி பூஞ்சு டிரீஇ
நாண்மோர் மாறு நன்மா மேனி
சிறுகுழை துயல்வருங் காதிற் பணைத்தோ
குறுநெறி கொண்ட கூந்த லாய்மக
ளளைவிலை யுணவிற் கிளையுட னருத்தி
நெய்விலை கட்டி பசும்பொன் கொள்ளா
ளெருமை நல்லான் கருநாகு பெறூஉ
மடிவா கோவலர் குடிவயிற் சேப்பி
னிருங்கிளை ஞெண்டின் சிறுபார பன்ன
பசுந்தினை மூரல் பாலொடும் பெறுகுவிர்
தொடுதோன் மரீஇய வடுவாழ் நோனடி
விழுத்தண் டூன்றிய மழுத்தின் வன்கை
யுறிக்கா வூர்ந்த மறுப்படு மயிர்ச்சுவன்
மேம்பா லுரைத்த வோரி யோங்குமிசை
கோட்டவுங் கொடியவும் விரைஇ காட்ட
பல்பூ மிடைந்த படலை கண்ணி
யன்றம ருடுக்கை கூழா ரிடையன்
கன்றமர் நிரையடு கான தல்கி
யந்நு ணவிர்புகை கமழ கைம்முயன்று
ஞெலிகோற் கொண்ட பெருவிறல் ஞெகிழி
செந்தீ தோட்ட கருந்துளை குழலி
னின்றீம் பாலை முனையிற் குமிழின்
புழற்கோட்டு தொடுத்த மரற்புரி நரம்பின்
வில்யா ழிசைக்கும் விரலெறி குறிஞ்சி
பல்காற் பறவை கிளைசெ தோர்க்கும்
புல்லார் வியன்புலம் போகி முள்ளுடு
தெழுகா டோங்கிய தொழுவுடை வரைப்பிற்
பிடிக்கண தன்ன குதிருடை முன்றிற்
களிற்றுத்தாள் புரையு திரிமர பந்தர
குறுஞ்சா டுருளையடு கலப்பை சார்த்தி
நெடுஞ்சுவர் பறைந்த புகைசூழ் கொட்டிற்
பருவ வானத்து பாமழை கடுப்ப
கருவை வேய்ந்த கவின்குடி சீறூர்
நெடுங்குரற் பூளை பூவி னன்ன
குறுந்தாள் வரகின் குறளவிழ சொன்றி
புகரிணர் வேங்கை வீகண் டன்ன
வவரை வான்புழு கட்டி பயில்வுற்
றின்சுவை மூரற் பெறுவிர் ஞாங்கர
குடிநிறை வல்சி செஞ்சா லுழவர்
நடைநவில் பெரும்பகடு புதவிற் பூட்டி
பிடிவா யன்ன மடிவாய் நாஞ்சி
லுடுப்புமுக முழுக்கொழு மூழ்க வூன்றி
தொடுப்பெறி துழுத துளர்படு துடவை
யரிபுகு பொழுதி னிரியல் போகி
வண்ண கடம்பி னறுமல ரன்ன
வளரிளம் பிள்ளை தழீஇ குறுங்காற்
கறையணற் குறும்பூழ் கட்சி சேக்கும்
வன்புல மிறந்த பின்றை மென்றோன்
மிதியுலை கொல்லன் முறிகொடிற் றன்ன
கவைத்தா ளலவ னளற்றளை சிதை
பைஞ்சாய் கொன்ற மண்படு மருப்பிற்
காரேறு பொருத கண்ணகன் செறுவி
னுழாஅ நுண்டொளி நிரவிய வினைஞர்
முடிநா றழுத்திய நெடுநீர செறுவிற்
களைஞர் தந்த கணைக்கா னெய்தற்
கட்கனழ் புதுப்பூ முனையின் முட்சினை
முகைசூழ் தகட்ட பிறழ்வாய் முள்ளி
கொடுங்கான் மாமலர் கொய்துகொண் டவண
பஞ்சா கோரை பல்லிற் சவட்டி
புணர்நார பெய்த புனைவின் கண்ணி
யீருடை யிருந்தலை யார சூடி
பொன்காண் கட்டளை கடுப்ப கண்பின்
புன்கா சுண்ணம் புடைத்த மார்பி
னிரும்புவடி தன்ன மடியா மென்றோற்
கருங்கை வினைஞர் காதலஞ் சிறாஅற்
பழஞ்சோற் றமலை முனைஇ வரம்பிற்
புதுவை வேய்ந்த கவிகுடின் முன்றி
லவலெறி யுலக்கை பாடுவிற தயல
கொடுவா கிள்ளை படுபகை வெரூஉம்
நீங்கா யாணர் வாங்குகதிர கழனி
கடுப்புடை பறவை சாதியன்ன
பைதற விளைந்த பெருஞ்செ நெல்லின்
தூம்புடை திரடா டுமித்த வினைஞர்
பாம்புறை மருதி னோங்குசினை நீழற்
பலிபெறு வியன்கள மலிய வேற்றி
கணங்கொள் சுற்றமொடு கைபுணர தாடு
துணங்கையம் பூத துகிலுடு தவைபோற்
சிலம்பி வானூல் வலந்த மருங்கிற்
குழுமுநிலை போரின் முழுமுத றொலைச்சி
பகடூர் பிழிந்த பின்றை துகடப
வையு துரும்பு நீக்கி பைதற
குடகாற் றெறிந்த குப்பை வடபாற்
செம்பொன் மலையிற் சிறப்ப தோன்று
தண்பணை தழீஇய தளரா விருக்கை
பகட்டுஆ ஈன்ற கொடுநடை குழவி
கவைத்தாம்பு தொடுத்த காழூன் றல்கு
லேணி யெய்தா நீணெடு மார்பின்
முகடுதுமி தடுக்கிய பழம்பல் லுணவிற்
குமரி மூத்த கூடோங்கு நல்லிற்
சிறாஅர் நச்ச புனைந்த
வூரா நற்றே ருருட்டிய புதல்வர்
தளர்நடை வருத்தம் வீட வலர்முலை
செவிவிஅம் பெண்டிர தழீஇ பாலார
தமளி துஞ்சு மழகுடை நல்லிற்
றொல்பசி யறியா துளங்கா விருக்கை
மல்லற் பேரூர் மடியின் மடியா
வினைஞர் தந்த வெண்ணெல் வல்சி
மனைவா ழளகின் வாட்டொடும் பெறுகுவிர்
மழைவிளை யாடுங் கழைவள ரடுக்க
தணங்குடை யாளி தாக்கலிற் பலவுடன்
கணஞ்சால் வேழங் கதழ்வுற் றாஅங்
கெந்திரஞ் சிலைக்கு துங்சா கம்பலை
விசய மடூஉம் புகைசூ ழாலைதொறுங்
கரும்பின் றீஞ்சாறு விரும்பினிர் மிசைமின்
வேழ நிரைத்து வெண்கோடு விரைஇ
தாழை முடித்து தருப்பை வேய்ந்த
குறியிறை குரம்பை பறியுடை முன்றிற்
கொடுங்காற் புன்னை கோடுதுமி தியற்றிய
பைங்காய் தூங்கும் பாய்மணற் பந்த
ரிளையரு முதியருங் கிளையுடன் துவன்றி
புலவுநுனை பகழியுஞ் சிலையு மான
செவ்வரி கயலொடு பச்சிறா பிறழும்
மையிருங் குட்டத்து மகவொடு வழங்கி
கோடை நீடினுங் குறைபட லறியா
தோடாழ் குளத்த கோடுகா திருக்குங்
கொடுமுடி வலைஞர் குடிவயிற் சேப்பி
னவையா வரிசி யங்களி துழவை
மலர்வா பிழாவிற் புலர வாற்றி
பாம்புறை புற்றிற் குரும்பி யேய்க்கும்
பூம்புற நல்லடை யளைஇ தேம்பட
வெல்லையு மிரவு மிருமறை கழிப்பி
வல்வா சாடியின் வழைச்சற விளைந்த
வெந்நீர ரரியல் விரலலை நறும்பிழி
தண்மீன் சூட்டொடு தளர்தலும் பெறுகுவிர்
பச்சூன் பெய்த கவல்பிணி பைந்தோற்
கோள்வல் பாண்மகன் றலைவலி தியாத்த
நெடுங்கழை தூண்டி னடுங்கநாண் கொளீஇ
கொடுவா யிரும்பின் மடிதலை புல
பொதியிரை கதுவிய போழ்வாய் வாளை
நீர்நணி பிரம்பி னடுங்குநிழல் வெரூஉம்
நீத்துடை நெருங்க தீப்பட மலர்ந்த
கடவு ளண்பூ வடைத லோம்பி
யுறைகான் மாறிய வோங்குயர் நனந்தலை
யகலிரு வானத்து குறைவி லேய்ப்ப
வரக்கிதழ குவளையடு நீல நீடி
முரட்பூ மலிந்த முதுநீர பொய்கை
குறுந ரிட்ட கூம்புவிடு பன்மலர்
பெருநாள ளமையத்து பிணையினிர் கழிமின்
செழுங்கன் றியாத்த சிறுதா பந்தர
பைஞ்சேறு மெழுகிய படிவ நன்னகர்
மனையுறை கோழியடு ஞமலி துன்னாது
வளைவா கிள்ளை மறைவிளி பயிற்றும்
மறைகா பாள ருறைபதி சேப்பிற்
பெருநல் வானத்து வடவயின் விளங்குஞ்
சிறுமீன் புரையுங் கற்பி னறுநுதல்
வளைக்கை மகடூஉ வயினறி தட்ட
சுடர்க்கடை பறவை பெயர்ப்படு வத்தஞ்
சேதா நறுமோர் வெண்ணெயின் மாதுள
துருப்புறு பசுங்கா போழொடு கறிகலந்து
கஞ்சக நறுமுறி யளை பைந்துணர்
நெடுமர கொக்கின் னறுவடி விதிர்த்த
தகைமாண் காடியின் வகைபட பெறுகுவிர்
வண்ட லாயமொ டுண்டுறை தலைஇ
புனலாடு மகளி ரிட்ட பொலங்குழை
யிரைதேர் மணிச்சிர லிரைசெ தெறிந்தென
புள்ளார் பெண்ணை புலம்புமடற் செல்லாது
கேள்வி யந்தண ரருங்கட னிறுத்த
வேள்வி தூண தசைஇ யவன
ரோதிம விளக்கி னுயர்மிசை கொண்ட
வைகுறு மீனிற் பைப தோன்றும்
நீர்ப்பெயற் றெல்லை போகி பாற்கேழ்
வாலுளை புரவியடு வடவள தரூஉம்
நாவாய் சூழ்ந்த நளிநீர படப்பை
மாட மோங்கிய மணன்மலி மறுகிற்
பரதர் மலிந்த பல்வேறு தெருவிற்
சிலதர் காக்குஞ் சேணுயர் வரைப்பி
னெல்லுழு பகட்டொடு கறவை துன்னா
ஏழக தகரோ டெகினங் கொட்குங்
கூழுடை நல்லிற் கொடும்பூண் மகளிர்
கொன்றை மென்சினை பனிதவழ்பவை போற்
பைங்கா ழல்கு னுண்டுகி னுடங்க
மால்வரை சிலம்பின் மகிழ்சிற தாலும்
பீலி மஞ்ஞையி னியலி கால
தமனி பொற்சிலம் பொலிப்ப வுயர்நிலை
வான்றோய் மாடத்து வரிப்ப தசைஇ
கைபுனை குறுந்தொடி தத்த பைபய
முத்த வார்மணற் பொற்கழங் காடும்
பட்டின மருங்கி னசையின் முட்டில்
பைங்கொடி நுடங்கும் பலர்புகு வாயிற்
செம்பூ தூய செதுக்குடை முன்றில்
கள்ளடு மகளிர் வள்ள நுடக்கிய
வார்ந்துகு சின்னீர் வழிந்த குழம்பி
னீர்ஞ்சே றாடிய விரும்பல் குட்டி
பன்மயிர பிணவொடு பாயம் போகாது
நென்மா வல்சி தீற்றி பன்னா
குழிநிறு தோம்பிய குறுந்தா ளேற்றை
கொழுநிண தடியடு கூர்நறா பெறுகுவிர்
வான மூன்றிய மதலை போல
வேணி சாத்திய வேற்றருஞ் சென்னி
விண்பொர நிவந்த வேயா மாட
திரவின் மாட்டிய இலங்குசுடர் ஞெகிழி
யுரவுநீ ரழுவ தோடுகலங் கரையு
துறைபிற கொழி போகி கறையடி
குன்றுறழ் யானை மருங்கு லேய்க்கும்
வண்டோட்டு தெங்கின் வாடுமடல் வேய்ந்த
மஞ்சண் முன்றின் மணநாறு படப்பை
தண்டலை யுழவர் தனிமனை சேப்பிற்
றாழ்கோ பலவின் சூழ்சுளை பெரும்பழம்
வீழி றாழை குழவி தீம்நீர
கவைமுலை யிரும்பிடி கவுண்மரு பேய்க்குங்
குலைமுதிர் வாழை கூனி வெண்பழ
திரளரை பெண்ணை நுங்கொடு பிறவு
தீம்ப· றார முனையிற் சேம்பின்
முளைப்புற முதிர்கிழங் கார்குவிர் பகற்பெயன்
மழைவீழ தன்ன மாத்தா கமுகின்
புடைசூழ் தெங்கின் முப்புடை திரள்கா
யாறுசெல் வம்பலர் காய்பசி தீர
சோறடு குழிசி யிளக விழூஉம்
வீயா யாணர் வளங்கெழு பாக்கத்து
பன்மர நீளிடை போகி நன்னகர்
விண்டோய் மாடத்து விளங்குசுவ ருடுத்த
வாடா வள்ளியின் வளம்பல தரூஉம்
நாடுபல கழிந்த பின்றை நீடுகுலை
காந்தளஞ் சிலம்பிற் களிறுபடி தாங்கு
பாம்பணை பள்ளி யமர்ந்தோ னாங்கண்
வெயினுழை பறியா குயினுழை பொதும்பர
குறுங்காற் காஞ்சி சுற்றிய நெடுங்கொடி
பாசிலை குருகின் புன்புற வரிப்பூ
காரகற் கூவியர் பாகொடு பிடித்த
விழைசூழ் வட்டம் பால்கல தவைபோ
னிழறாழ் வார்மண னீர்முக துறை
புனல்கால் கழீஇய பொழிறொறு திரள்காற்
சோலை கமுகின் சூல்வயிற் றன்ன
நீல பைங்குட தொலைச்சி நாளும்
பெருமகி ழிருக்கை மரீஇ சிறுகோட்டு
குழவி திங்க கோணேர தாங்கு
சுறவுவா யமைத்த சுரும்புசூழ் சுடர்நுத
னறவுபெயர தமர்த்த நல்லெழின் மழைக்கண்
மடவரன் மகளிரொடு பகல்விளை யாடி
பெறற்கரு தொல்சீர துறக்க மேய்க்கும்
பொய்யா மரபிற் பூமலி பெருந்துறை
செவ்விகொள் பவரோ டசைஇ யவ்வயி
னருந்திறற் கடவுள் வாழ்த்தி சிறிதுநுங்
கருங்கோ டின்னிய மியக்கினிர் கழிமின்
காழோ ரிகழ்பதம் நோக்கி கீழ
நெடுங்கை யானை நெய்ம்மிதி கவளங்
கடுஞ்சூன் மந்தி கவருங் காவிற்
களிறுகத னடக்கிய வெளிறில் கந்திற்
றிண்டேர் குழித்த குண்டுநெடு தெருவிற்
படைதொலை பறியா மைந்துமலி பெரும்புகழ
கடைகால் யாத்த பல்குடி கெழீஇ
கொடையுங் கோளும் வழங்குநர தடுத்த
வடையா வாயின் மிளைசூழ் படப்பை
நீனிற வுருவி னெடியோன் கொப்பூழ்
நான்முக வொருவற் பயந்த பல்லிதழ
தாமரை பொகுட்டிற் காண்வர தோன்றி
சுடும ணோங்கிய நெடுநகர் வரைப்பி
னிழுமென் புள்ளி னீண்டுகிளை தொழுதி
கொழுமென் சினைய கோளி யுள்ளும்
பழமீ கூறும் பலாஅ போல
புலவு கடலுடுத்த வானஞ் சூடிய
மலர்தலை யுலக துள்ளும் பலர்தொழ
விழவுமேம் பட்ட பழவிறன் மூதூ
ரவ்வாய் வளர்பிறை சூடி செவ்வா
யந்தி வான தாடுமழை கடுப்ப
வெண்கோ டிரும்பிணங் குருதி யீர்ப்ப
ஈரைம் பதின்மரும் பொருதுகள தவி
பேரமர கடந்த கொடுஞ்சி நெடுந்தே
ராரா செருவி னைவர் போல
வடங்கா தானையோ டுடன்றுமேல் வந்த
வொன்னா தெவ்வ ருலைவிட தார்த்து
கச்சி யோனே கைவண் டோன்ற
னச்சி சென்றோர கேம மாகிய
வளியு தெறலு மெளிய வாகலின்
மலைந்தோர் தேஎம் மன்றம் பாழ்பட
நயந்தோர் தேஎம் நன்பொன் பூப்ப
நட்புக்கொளல் வேண்டி நயந்திசி னோரு
துப்புக்கொளல் வேண்டிய துணையி லோருங்
கல்வீ ழருவி கடற்படர தாங்கு
பல்வேறு வகையிற் பணிந்த மன்ன
ரிமையவ ருறையுஞ் சிமை செவ்வரை
வெண்டிரை கிழித்த விளங்குசுடர் நெடுங்கோட்டு
பொன்கொழி திழிதரும் போக்கருங் கங்கை
பெருநீர் போகு மிரியன் மாக்க
ளருமர பாணியிற் தூங்கி யாங்கு
தொய்யா வெறுக்கையடு துவன்றுபு குழீஇ
செவ்வி பார்க்குஞ் செழுநகர் முற்றத்து
பெருங்கை யானை கொடுந்தொடி படுக்குங்
கருங்கை கொல்ல னிரும்புவிசை தெறிந்த
கூட திண்ணிசை வெரீஇ மாட
திறையுறை புறவின் செங்காற் சேவ
லின்றுயி லிரியும் பொன்றுஞ்சு வியனகர
குணகடல் வரைப்பின் முந்நீர் நாப்ப
பகல்செய் மண்டிலம் பாரி தாங்கு
முறைவேண்டு நர்க்குங் குறைவேண்டு நர்க்கும்
வேண்டுப வேண்டினர
யிடைத்தெரி துணரு மிருடீர் காட்சி
கொடைக்கட னிறுத்த கூம்பா வுள்ள
துரும்பில் சுற்றமோ டிருந்தோற் குறுகி
பொறிவரி புகர்முக தாக்கிய வயமான்
கொடுவரி குருளை கொளவே டாங்கு
புலவர் பூண்கட னாற்றி பகைவர்
கடிமதி லெறிந்து குடுமி கொள்ளும்
வென்றி யல்லது வினையுடம் படினு
மொன்றல் செல்லா வுரவுவா டடக்கை
கொண்டி யுண்டி தொண்டையோர் மருக
மள்ளர் மள்ள மறவர் மறவ
செல்வர் செல்வ செருமேம் படுந
வெண்டிரை பரப்பிற் கடுஞ்சூர கொன்ற
பைம்பூ சேஎய் பயந்தமா மோட்டு
துணங்கையஞ் செல்வி கணங்குநொடி தாங்கு
தண்டா வீகைநின் பெரும்பெய ரேத்தி
வந்தேன் பெரும வாழிய நெடிதென
விடனுடை பேரியாழ் முறையுளி கழிப்பி
கடனறி மரபிற் கைதொழூஉ பழிச்சி
நின்னிலை தெரியா வளவை யந்நிலை
நாவல தண்பொழில் வீவின்று விளங்க
நில்லா வுலகத்து நிலைமை தூக்கி
யந்நிலை யணுகல் வேண்டி நின்னரை
பாசி யன்ன சிதர்வை நீக்கி
யாவி யன்ன அவிர்நூற் கலிங்க
மிரும்பே ரொக்கலொ டொருங்குட னுடீஇ
கொடுவாள் கதுவிய வடுவாழ் நோன்கை
வல்லோ னட்ட பல்லூன் கொழுங்குறை
யரிசெ துணங்கிய பெருஞ்செ நெல்லின்
தெரிகொ ளரிசி திரணெடும் புழுக்க
லருங்கடி தீஞ்சுவை யமுதொடு பிறவும்
விருப்புடை மரபிற் கரப்புடை யடிசின்
மீன்பூ தன்ன வான்கலம் பரப்பி
மகமுறை நோக்கி
தானா விருப்பிற் றானின் றூட்டி
மங்குல் வானத்து திங்க ளேய்க்கு
மாடுவண் டிமிரா வழல்தவிர் தாமரை
நீடிரும் பித்தை பொலி சூட்டி
யுரவுக்கடல் முகந்த பருவ வானத்து
பகற்பெயற் றுளியின் மின்னுநிமிர தாங்கு
புனையிருங் கதுப்பகம் பொலி பொன்னின்
றொடையமை மாலை விறலியர் மலைய
நூலோர் புகழ்ந்த மாட்சிய மால்கடல்
வளைகண் டன்ன வாலுளை புரவி
துணைபுணர் தொழில நால்குடன் பூட்டி
யரித்தேர் நல்கியு மமையான் செருத்தொலை
தொன்னா தெவ்வ ருலைவிட தொழித்த
விசும்புசெ லிவுளியடு பசும்படை தரீஇ
யன்றே விடுக்குமவன் பரிசி லின்சீர
கின்னர முரலு மணங்குடை சாரல்
மஞ்ஞை யாலு மரம்பயி லுறும்பிற்
கலைபா துதிர்த்த மலர்வீழ் புறவின்
மந்தி சீக்கு மாதுஞ்சு முன்றிற்
செந்தீ பேணிய முனிவர் வெண்கோட்டு
களிறுதரு விறகின் வேட்கு
மொளிறிலங் கருவிய மலைகிழ வோனே

பெரும்பாணாற்றுப்படை முற்றிற்று