சேக்கிழார் அருளிய
திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய
முதற் காண்டம் பன்னிரண்டாம் திருமுறை
சருக்கம் திருமலை
தில்லை வாழ் அந்தணர் சருக்கம்



































சேக்கிழார் அருளிய
திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய
முதற் காண்டம்
உள்ளுறை
திருமலை சருக்கம்
பாயிரம் மின்பதிப்பு
திருமலை சிறப்பு மின்பதிப்பு
திரு நாட்டு சிறப்பு மின்பதிப்பு
திருநகர சிறப்பு மின்பதிப்பு
திருக்கூட்ட சிறப்பு மின்பதிப்பு
தடுத்தாட்கொண்ட புராணம் மின்பதிப்பு
தில்லை வாழ் அந்தணர் சருக்கம்
தில்லை வாழ் அந்தணர் புராணம் மின்பதிப்பு
திருநீலகண்ட நாயனார் புராணம் மின்பதிப்பு
இயற்பகை நாயனார் புராணம் மின்பதிப்பு
இளையான் குடி மாற நாயனார் புராணம் மின்பதிப்பு
மெ பொருள் நாயனார் புராணம் மின்பதிப்பு
விறன்மிண்ட நாயனார் புராணம் மின்பதிப்பு
அமர் நீதி நாயனார் புராணம் மின்பதிப்பு

பாயிரம்
உலகெலாம் உணர தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்
ஊன் அடைந்த உடம்பின் பிறவியே
தான் அடைந்த உறுதியை சாருமால்
தேன் அடைந்த மலர பொழில் தில்லையுள்
மா நடஞ் செய் வரதர் பொற்றாள் தொழ
எடுக்கும் மாக்கதை இன்தமிழ செய்யுளாய்
நடக்கும் மேன்மை நமக்கருள் செய்திட
தடக்கை ஐந்துடை தாழ்செவி நீள்முடி
கட களிற்றை கருத்துள் இருத்து வாம்
மதிவளர் சடைமுடி மன்றுளாரை முன்
துதி செயும் நாயன்மார் தூய சொல்மலர
பொதி நலன் நுகர்தரு புனிதர் பேரவை
விதி முறை உலகினில் விளங்கி வெல்கவே
அளவிலாத பெருமையராகிய
அளவிலா அடியார் புகழ் கூறுகேன்
அளவு கூட உரைப்பது அரிது ஆயினும்
அளவிலாசை துரைப்ப அறைகுவேன்
தெரிவரும் பெருமை திரு தொண்டர் தம்
பொருவரும் சீர் புகலலுற்றேன் முற்ற
பெருகு தெண் கடல் ஊற்றுண் பெரு நசை
ஒரு சுணங்கனை ஒக்கும் தகைமையேன்
செப்பலுற்ற பொருளின் சிறப்பினால்
பொருட்கு உரை யாவரும் கொள்வர் ஆல்
பொருட்கு என் உரை சிறிது ஆயினும்
மெ பொருட்கு உரியார் கொள்வர் மேன்மையால்
மேய இவ் உரை கொண்டு விரும்புமாம்
சேயவன் திரு பேர் அம்பலம் செய்ய
தூய பொன்னணி சோழன் நீடூழிபார்
ஆய சீர் அநபாயன் அரசவை
அருளின் நீர்மை திரு தொண்டறிவரும்
தெருளில் நீரிது செப்புதற்காம் எனின்
வெருளில் மெய் மொழி வான் நிழல் கூறிய
பொருளின் ஆகும் என புகல்வாம் அன்றே
இங்கிதன் நாமம் கூறின் இவ் உலகத்து முன்னாள்
தங்கிருள் இரண்டில் மாக்கள் சிந்தையுள் சார்ந்து நின்ற
பொங்கிய இருளை ஏனை புற இருள் போக்கு கின்ற
செங் கதிரவன் போல் நீக்கும் திரு தொண்டர் புராணம் என்பாம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருமலை சருக்கம்
திருமலை சிறப்பு
திருச்சிற்றம்பலம்
பொன்னின் வெண்திரு நீறு புனைந்தென
பன்னும் நீள்பனி மால்வரை பாலது
தன்னை யார்க்கும் அறிவரியான் என்றும்
மன்னிவாழ் கயிலை திரு மாமலை
அண்ணல் வீற்றிருக்க பெற்றதாதலின்
நண்ணும் மூன்று உலகு நான்மறைகளும்
எண்ணில் மாதவம் செய்ய வந்தெய்திய
புண்ணி திரண்டு உள்ளது போல்வது
நிலவும் எண்ணில் தலங்களும் நீடொளி
இலகு தண்தளிர் ஆக எழுந்ததோர்
உலகம் என்னும் ஒளிமணி வல்லிமேல்
மலரும் வெண்மலர் போல்வதம் மால்வரை
மேன்மை நான்மறை நாதமும் விஞ்சையர்
கான வீணையின் ஓசையும் காரெதிர்
தான மாக்கள் முழக்கமும் தாவில் சீர்
வான துந்துபி ஆர்ப்பும் மருங்கெலாம்
பனி விசும்பில் அமரர் பணிந்துசூழ்
அனித கோடி அணிமுடி மாலையும்
புனித கற்பக பொன்னரி மாலையும்
முனிவர் அஞ்சலி மாலையும் முன்னெனலாம்
நீடு தேவர் நிலைகளும் வேண்டிடின்
நாடும் ஐம் பெரும் பூதமும் நாட்டுவ
கோடி குறட்சிறு
பாடி ஆடும் பரப்பது பாங்கெலாம்
நாயகன் கழல் சேவிக்க நான்முகன்
மேய காலம் அலாமையின் மீண்டவன்
தூயமால்வரை சோதியில் மூழ்கியொன்று
ஆய அன்னமும் காணா தயர்க்குமால்
காதில் வெண்குழையோன் கழல் தொழ
நெடியோன் காலம் பார்த்திருந்தும் அறியான்
சோதி வெண் கயிலை தாழ்வரை முழையில்
துதிக்கையோன் ஊர்தியை கண்டு
மீதெழு பண்டை செஞ் சுடர் இன்று
வெண்சுடர் ஆனது என்றதன் கீழ்
ஆதி ஏனமதாய் இடக்கலுற்றான்
என்றதனை வந்தணைதரும் கலுழன்
அரம்பையர் ஆடல் முழவுடன்
மருங்கில் அருவிகள் எதிர்
வரம் பெறு காதல் மனத்துடன் தெய்வ
மது மலர் இருகையும் ஏந்தி
நிரந்தரம் மிடைந்த விமான சோபான
நீடுயர் வழியினால் ஏறி
புரந்தரன் முதலாங் கடவுளர் போற்ற
பொலிவ திருமலை புறம்பு
வேத நான்முகன் மால் புரந்தரன் முதலாம் விண்ணவர் எண்ணிலார் மற்றும்
காதலால் மிடைந்த முதல் பெருந தடையாம் கதிர் மணி கோபுரத்துள்ளார்
பூத வேதாள பெரும் கண நாதர் போற்றிட பொதுவில் நின்று ஆடும்
நாதனார் ஆதி தேவனார் கோயில் நாயகன் நந்தி எம்பெருமான்
நெற்றியின் கண்ணர் நாற் பெருந்தோளர் நீறணி மேனியர் அநேகர்
பெற்றமேல் கொண்ட தம்பிரான் அடியார் பிஞ்ஞகன் தன் அருள் பெறுவார்
மற்றவர கெல்லாம் தலைமையாம் பணியும் மலக்கையில் சுரிகையும் பிரம்பும்
கற்றைவார் சடையான் அருளினால் பெற்றான் காப்பத கயிலைமால் வரைதான்
கையில்மான் மழுவர் கங்கைசூழ் சடையில் கதிரிளம் பிறைநறுங் கண்ணி
ஐயர் வீற்றிருக்கும் தன்மையினாலும் அளப்பரும் பெருமையினாலும்
மெய்யொளி தழைக்கும் தூய்மையினாலும் வென்றி வெண்குடை அநபாயன்
செய்யகோல் அபயன் திருமனத்தோங்கும் திருக்கயிலாய நீள்சிலம்பு
அன்ன தன்திரு தாழ்வரையின் இடத்து
இன்ன தன்மையன் என்றறியா சிவன்
தன்னையே உணர்ந்து ஆர்வம் தழைக்கின்றான்
உன்னாரும் சீர் உபமன் னிய முனி
யாதவன் துவரைக்கிறை யாகிய
மாதவன் முடிமேல் அடி வைத்தவன்
பூதநாதன் பொருவரு தொண்டினுக்கு
ஆதி அந்தம் இலாமை அடைந்தவன்
அத்தர் தந்த அரு பாற்கடல் உண்டு
சித்தம் ஆர்ந்து தெவிட்டி வளர்ந்தவன்
பத்தராய முனிவர் பல்லாயிரவர்
சுத்த யோகிகள் சூழ இருந்துழி
அங்கண் ஓரொளி ஆயிர ஞாயிறு
பொங்கு பேரொளி போன்று முன் தோன்றிட
துங்க மாதவர் சூழ்ந்திருந்தாரெலாம்
இங்கி தென்கொல் அதிசயம் என்றலும்
அந்தி வான்மதி சூடிய அண்ணல்தாள்
சிந்தியா உணர்ந்தம் முனி தென் திசை
வந்த நாவலர் கோன்புகழ் வன்தொண்டன்
எந்தையார் அருளால் அணைவான் என
கைகள் கூப்பி தொழுதெழுந்து திசை
மெய்யில் ஆனந்த வாரி விரவிட
செய்ய நீள்சடை மாமுனி செல்வுழி
ஐயம் நீங்க வினவுவோர் அந்தணர்
சம்புவின் அடி தாமரை போதலால்
எம்பிரான் இறைஞ்சாயிஃதென் என
தம்பிரானை தன் உள்ளம் தழீயவன்
நம்பி ஆரூரன் நாம்தொழும் தன்மையான்
என்றுகூற இறைஞ்சி இயம்புவார்
வென்ற பேரொளியார் செய் விழுத்தவம்
நன்று கேட்க விரும்பும் நசையினோம்
இன்றெமக்குரை செய்து அருள் என்றலும்
உள்ள வண்ணம் முனிவன் உரைசெய்வான்
வெள்ள நீர்ச்சடை மெய்ப்பொருளாகிய
வள்ளல் சாத்தும் மதுமலர் மாலையும்
அள்ளும் நீறும் எடுத்தணை வானுளன்
அன்னவன் பெயர் ஆலால சுந்தரன்
முன்னம் ஆங்கு ஒருநாள் முதல்வன் தனக்கு
இன்ன ஆமெனும் நாண்மலர் கொய்திட
துன்னினான் நந்தவன சூழலில்
அங்கு முன்னரே ஆளுடை நாயகி
கொங்கு சேர் குழற்காம் மலர் கொய்திட
திங்கள் வாள்முக சேடியர் எய்தினார்
பொங்கு கின்ற கவினுடை பூவைமார்
அந்தமில் சீர் அனிந்திதை ஆய்குழல்
கந்த மாலை கமலினி என்பவர்
கொந்து கொண்ட திருமலர் கொய்வுழி
வந்து வானவர் ஈசர் அருள் என
மாதவம் செய்த தென்திசை வாழ்ந்திட
தீது இலா திரு தொண்ட தொகை தர
போதுவார் அவர் மேல்மனம் போக்கிட
காதல் மாதரும் காட்சியில் கண்ணினார்
முன்னம் ஆங்கவன் மொய்ம்முகை நாண்மலர்
என்னை ஆட்கொண்ட ஈசனுக்கேய்வன
பன் மலர் கொய்து செல்ல பனிமலர்
அன்னம் அன்னவருங் கொண்டகன்ற பின்
ஆதி மூர்த்தி அவன்திறம் நோக்கியே
மாதர் மேல் மனம் வைத்தனை தென்புவி
மீது தோன்றி அம் மெல்லியலார் உடன்
காதல் இன்பம் கலந்து அணைவாய் என
கைகள் அஞ்சலி கூப்பி கலங்கினான்
செய்ய சேவடி நீங்குஞ் சிறுமையேன்
மையல் மானுடமாய் மயங்கும் வழி
ஐயனே தடுத்தாண்டருள் செய் என
அங்கணாளன் அதற்கருள் செய்த பின்
நங்கை மாருடன் நம்பிமற்ற திசை
தங்கு தோற்றத்தில் இன்புற்று சாறுமென்று
அங்கவன் செயல் எல்லாம் அறைந்தனன்
அந்தணாளரும் ஆங்கது கேட்டவர்
பந்த மானிட பாற்படு தென்திசை
இந்த வான்திசை எட்டினும் மேற்பட
வந்த புண்ணியம் யாதென மாதவன்
பொருவரு தவத்தான் புலி காலனாம்
அரு முனி எந்தை அர்ச்சித்தும் உள்ளது
பெருமை சேர்பெரும் பற்றப்புலியூர் என்று
ஒருமையாளர் வைப்பாம் பதி ஓங்குமால்
திருப்பதியில் நமை ஆளுடை
மெ தவக்கொடி காண விருப்புடன்
அத்தன் நீடிய அம்பலத்தாடும் மற்று
திறம் பெறலாம் திசை எத்திசை
பூதம் யாவையின் உள்ளலர் போதென
வேத மூலம் வெளிப்படு மேதினி
காதல் மங்கை இதய கமலமாம்
மாதொர் பாகனார் ஆரூர் மலர்ந்ததால்
எம்பிராட்டி இவ்வேழுலகு ஈன்றவள்
தம்பிரானை தனி தவத்தால் எய்தி
கம்பை ஆற்றில் வழிபடு காஞ்சி என்று
உம்பர் போற்றும் பதியும் உடையது
நங்கள் நாதனாம் நந்தி தவஞ்செய்து
பொங்கு நீடருள் எய்திய பொற்பது
கங்கை வேணி மலர கனல்மலர்
செங்கை யாளர் ஐயாறும் திகழ்வது
தேசம் எல்லாம் விளக்கிய தென் திசை
ஈசர் தோணி புரத்துடன் எங்கணும்
பூசனைக்கு பொருந்தும் இடம் பல
பேசில் அத்திசை ஒவ்வா பிறதிசை
என்று மாமுனி வன்தொண்டர் செய்கையை
அன்று சொன்ன படியால் அடியவர்
தொன்று சீர்த்திரு தொண்ட தொகைவிரி
இன்று என் ஆதரவால் இங்கியம்புகேன்
மற்றிதற்கு பதிகம் வன்தொண்டர் தாம்
புற்று இடத்து எம்புராணர் அருளினால்
சொற்ற மெ திருத்தொண்டத்தொகை என
பெற்ற நற்பதிகம் தொழ பெற்றதாம்
அந்த மெ பதிகத்து அடியார்களை
நம்தம் நாதனாம் நம்பியாண்டார் நம்பி
புந்தி ஆர புகன்ற வகையினால்
வந்த வாறு வழாமல் இயம்புவாம்
உலகம் உய்யவும் சைவம் நின்று ஓங்கவும்
அலகில் சீர்நம்பி ஆரூரர் பாடிய
நிலவு தொண்டர்தம் கூட்டம் நிறைந்துறை
குலவு தண்புனல் நாட்டணி கூறுவாம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருநாட்டு சிறப்பு
திருச்சிற்றம்பலம்
பாட்டியல் தமிழுரை பயின்ற எல்லையுள்
கோட்டுயர் பனிவரை குன்றின் உச்சியில்
சூட்டிய வளர் புலி சோழர் காவிரி
நாட்டியல்பதனை யான் நவிலல் உற்றனன்
ஆதி மாதவமுனி அகத்தியன் தரு
பூத நீர கமண்டலம் பொழிந்த காவிரி
மாதர் மண் மடந்தை பொன் மார்பில் தாழ்ந்ததோர்
ஓதநீர் நித்தில தாமம் ஒக்குமால்
சையமால் வரை பயில் தலைமை சான்றது
செய்ய பூ மகட்கு நற் செவிலி போன்றது
வையகம் பல்லுயிர் வளர்த்து நாடொறும்
உய்யவே சுரந்தளி தூட்டும் நீரது
மாலின் உந்திச்சுழி மலர் தன் மேல் வரும்
சால்பினால் பல்லுயிர் தரும் தன் மாண்பினால்
கோல நற்குண்டிகை தாங்குங் கொள்கையால்
போலும் நான்முகனையும் பொன்னி மாநதி
திங்கள் சூடிய முடி சிகரத்து உச்சியில்
பொங்கு வெண் தலை நுரை பொருது போதலால்
எங்கள் நாயகன் முடிமிசை நின்றேயிழி
கங்கையாம் பொன்னியாம் கன்னி நீத்தமே
வண்ண நீள் வரை தர வந்த மேன்மையால்
எண்ணில் பேர் அறங்களும் வளர்க்கும் ஈகையால்
அண்ணல் பாகத்தை ஆளுடைய நாயகி
உண்ணெகிழ் கருணையின் ஒழுக்கம் போன்றது
வம்புலா மலர் நீரால் வழிபட்டு
செம்பொன் வார்கரை எண்ணில் சிவாலயத்து
எம்பிரானை இறைஞ்சலின் ஈர்ம் பொன்னி
உம்பர் நாயகர்க்கன்பரும் ஒக்குமால்
வாசநீர் குடை மங்கையர் கொங்கையில்
பூசும் குங்குமமும் புனை சாந்தமும்
வீசு தெண்டிரை மீதிழந்தோடும் நீர்
தேசுடை தெனினும் தெளிவில்லதே
மாவிரை தெழுந்து ஆர்ப்ப வரை தரு
பூ விரித்த புதுமது பொங்கிட
வாவியிற் பொலி நாடு வளம்தர
காவிரி புனல் கால்பரந்து ஓங்குமால்
ஒண் துறை தலை மாமத கூடு போய்
மண்டு நீர்வயலுட்புக வந்தெதிர்
கொண்ட மள்ளர் குரை தகை ஓசைபோய்
அண்டர் வானத்தின் அப்புறஞ் சாருமால்
மாதர் நாறு பறிப்பவர் மாட்சியும்
சீத நீர்முடி சேர்ப்பவர் செய்கையும்
ஒதையார் செய் உழுநர் ஒழுக்கமும்
காதல் செய்வதோர் காட்சி மலிந்ததே
உழுத சால்மிக வூறி தெளிந்த சேறு
இழுது செய்யினுள் இந்திர தெய்வதம்
தொழுது நாறு நடுவார் தொகுதியே
பழுதில் காவிரி நாட்டின் பரப்பெலாம்
மண்டுபுனல் பரந்தவயல் வளர்முதலின் சுருள்விரி
கண்டுழவர் பதங்காட்ட களைகளையுங் கடைசியர்கள்
தண்டரளஞ் சொரிபணிலம் இடறியிடை தளர்ந்தசைவார்
வண்டலையும் குழல்அலைய மடநடையின் வரம்பணைவார்
செங்குவளை பறித்தணிவார் கருங்குழல்மேல் சிறை வண்டை
அங்கை மலர்களை கொடுகைத்தயல் வண்டும் வரவழைப்பார்
திங்கள்நுதல் வெயர்வரும்ப சிறுமுறுவல் தளவரு
பொங்குமலர கமலத்தின் புதுமதுவாய் மடுத்தயர்வார்
கரும்பல்ல நெல்லென்ன கமுகல்ல கரும்பென்ன
கரும்பல்லி குடைநீல துகளல்ல பகலெல்லாம்
அரும்பல்ல முலையென்ன அமுதல்ல மொழியென்ன
வரும்பல்லாயிரம் கடைசி மடந்தையர்கள் வயல்எல்லாம்
கயல்பாய் பைந்தட நந்தூன் கழிந்த கருங்குழிசி
வியல்வாய் வெள்வளை தரள மலர்வேரி உலைப்பெய்தங்
கயலாமை அடுப்பேற்றி அரக்காம்பல் நெருப்பூதும்
வயல்மாதர் சிறுமகளிர் விளையாட்டு வரம்பெல்லாம்
காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம் குழைக்கரும்பு
மாடெல்லாம் கருங்குவளை வயலெல்லாம் நெருங்குவளை
கோடெல்லாம் மடஅன்னம் குளமெல்லாம் கடல்அன்ன
நாடெல்லாம் நீர்நாடு தனை ஒவ்வா நலமெல்லாம்
ஆலை பாய்பவர் ஆர்ப்புறும் ஓலமும்
சோலை வாய்வண்டு இரைத்தெழு சும்மையும்
ஞாலம் ஓங்கிய நான்மறை ஓதையும்
வேலை ஓசையின் மிக்கு விரவுமால்
அன்னம் ஆடும் அகன்துறை பொய்கையில்
துன்னும் மேதிபடி துதைந்தெழும்
கன்னி வாளை கமுகின் மேற்பாய்வன
மன்னு வான்மிசை வானவில் போலுமால்
காவினிற் பயிலுங்களி வண்டினம்
வாவியிற் படிந்து உண்ணும் மலர் மது
மேவி அத்தடம் மீதெழ பாய்கயல்
தாவி அப்பொழிலிற் கனி சாடுமால்
சாலிநீள் வயலின் ஓங்கி தந்நிகர் இன்றி மிக்கு
வாலிதாம் வெண்மை உண்மை கருவினாம் வளத்தவாகி
சூல்முதிர் பசலை கொண்டு சுருல் விரித்தானு கன்பர்
ஆலின சிந்தை போல அலர்ந்தன கதிர்களெல்லாம்
பத்தியின் பாலர் ஆகி பரமனுக்கு ஆளாம் அன்பர்
தத்தமிற் கூடினார்கள் தலையினால் வணங்கு மாபோல்
மொய்த்தநீள் பத்தியின்பால் முதிர்தலை வணங்கி மற்றை
வித்தகர் தன்மை போல விளைந்தன சாலியெல்லாம்
அரிதரு செந்நெற் சூட்டின் அடுக்கிய அடுக்கல் சேர்ப்பார்
பரிவுற தடிந்த பன்மீன் படர்நெடுங் குன்று செய்வார்
சுரிவளை சொரிந்த முத்தின் சுடர பெரும் பொருப்பு யாப்பர்
விரிமலர் கற்றை வேரி பொழிந்திழி வெற்பு வைப்பார்
சாலியின் கற்றை துற்ற தடவரை முகடு சாய்த்து
காலிரும் பகடு போக்கும் கரும்பெரும் பாண்டில் ஈட்டம்
ஆலிய முகிலின் கூட்டம் அருவரை சி சாரல்
மேல் வலங் கொண்டு சூழுங் காட்சியின் மிக்கதன்றே
வைதெரி தகற்றி ஆற்றி மழை பெயல் மான தூற்றி
செய்ய பொற் குன்றும் வேறு நவமனி சிலம்பும் என்ன
கைவினை மள்ளர் வானம் கரக்கவாக்கிய நெல் குன்றால்
மொய்வரை உலகம் போலும் முளரிநீர் மருத வைப்பு
அரசுகொள் கடன்கள் ஆற்றி மிகுதிகொண்டறங்கள் பேணி
பரவருங் கடவு போற்றி குரவரும் விருந்தும் பண்பின்
விரவிய கிளையும் தாங்கி விளங்கிய குடிகள் ஓங்கி
வரைபுரை மாடம்நீடி மல்ர்ந்துள பதிகள் எங்கும்
கரும்படு களமர் ஆலை கமழ்நறும் புகையோ மாதர்
சுரும்பெழ அகிலால் இட்ட தூபமோ யூப வேள்வி
பெரும் பெயர சாலை தோறும் பிறங்கிய புகையோ வானின்
வருங்கரு முகிலோ சூழ்வ மாடமும் காவும் எங்கும்
நாளிகேரஞ் செருந்தி நறுமலர் நரந்தம் எங்கும்
கோளி சாலந்த மாலம் குளிர்மலர குரவம் எங்கும்
தாளிரும் போந்து சந்து தண்மலர் நாகம் எங்கும்
நீளிலை வஞ்சி காஞ்சி நிறைமலர கோங்கம் எங்கும்
சூத பாடலங்கள் எங்கும் சூழ் வழை ஞாழல்
சாதி மாலதிகள் எங்கும் தண்தளிர் நறவம்
மாதவி சரளம் எங்கும் வகுள சண்பகங்கள்
போதவிழ் கைதை எங்கும் பூக புன்னாகம்
மங்கல வினைகள் எங்கும் மணஞ் செய் கம்பலைகள்
பங்கய வதனம் எங்கும் பண்களின் மழலை
பொங்கொளி கலன்கள் எங்கும் புது மலர பந்தர்
செங்கயல் பழனம் எங்கும் திருமகள் உறையுள்
மேகமும் களிறும் எங்கும் வேதமும் கிடையும்
யாகமும் சடங்கும் எங்கும் இன்பமும் மகிழ்வும்
யோகமும் தவமும் எங்கும் ஊசலும் மறுகும்
போகமும் பொலிவும் எங்கும் புண்ணிய முனிவர்
பண்தரு விபஞ்சி எங்கும் பாத செம்பஞ்சி
வண்டறை குழல்கள் எங்கும் வளர் இசை
தொண்டர் தம் இருக்கை எங்கும் சொல்லுவ திருக்கை
தண்டலை பலவும் எங்கும் தாதகி
மாடு போதகங்கள் எங்கும் வண்டு
பாடும் அம்மனைகள் எங்கும் பயிலும்
நீடு கேதனங்கள் எங்கும் நிதி நிகேதனங்கள்
தோடு சூழ் மாலை எங்கும் துணைவர்
வீதிகள் விழவின் ஆர்ப்பும் விரும்பினர் விருந்தின்
சாதிகள் நெறியில் தப்பா தனயரும் மனையில்
நீதிய புள்ளும் மாவும் நிலத்திரு புள்ளு
ஓதிய எழுத்தாம் அஞ்சும் உறுபிணி வர தாம்
நற்றமிழ் வரைப்பின் ஓங்கு நாம்புகழ் திருநாடு என்றும்
பொற் தட தோளால் வையம் பொது கடிந்து இனிது காக்கும்
கொற்றவன் அநபாயன் பொற் குடை நிழல் குளிர்வதென்றால்
மற்றதன் பெருமை நம்மால் வரம்புற விளம்பலாமோ
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருநகர சிறப்பு
திருச்சிற்றம்பலம்
சொன்ன நாட்டிடை தொன்மையில் மிக்கது
மன்னு மாமலராள் வழி பட்டது
வன்னியாறு மதி பொதி செஞ் சடை
சென்னியார் திருவாரூர திருநகர்
வேத ஓசையும் வீணையின்
சோதி வானவர் தோத்திர ஓசையும்
மாதர் ஆடல் பாடல் மணி முழவோசையும்
கீத ஓசையும் மா கிளர்உற்றவே
பல்லியங்கள் பரந்த ஒலியுடன்
செல்வ வீதி செழுமணி தேரொலி
மல்லல் யானை ஒலியுடன் மாவொலி
எல்லை இன்றி எழுந்துள எங்கணும்
மாட மாளிகை சூளிகை மண்டபம்
கூட சாலைகள் கோபுரம் தெற்றிகள்
நீடு சாளர நீடரங்கு எங்கெணும்
ஆடல் மாதர் அணி சிலம் பார்ப்பன
அங்குரைக்கென்ன அளவ பதியிலார்
தங்கள் மாளிகையின் ஒன்று சம்புவின்
பங்கினாள் திரு சேடி பரவையாம்
மங்கையார் அவதாரஞ் செய் மாளிகை
படர்ந்த பேரொளி பன்மணி வீதிதான்
இடந்த ஏனமும் அன்னமும் தேடுவார்
தொடர்ந்து கொண்டவன் தொண்டர்க்கு தூது போய்
நடந்த செந்தாமரை அடி நாறுமால்
செங்கண் மாதர் தெருவில் தெளித்த செங்
குங்குமத்தின் குழம்பை அவர் குழல்
பொங்கு கோதையிற் பூந்துகள் வீழ்ந்துடன்
அங்கண் மேவி அளறு புலர்த்துமால்
உள்ளம் ஆர் உருகாதவர் ஊர் விடை
வள்ளலார் திருவாரூர் மருங்கெலாம்
தெள்ளும் ஓசை திருப்பதிகங்கள் பைங்
கிள்ளை பாடுவ கேட்பன பூவைகள்
விளக்கம் மிக்க கலன்கள் விரவலால்
துளக்கில் பேரொலியால் துன்னு பண்டங்கள்
வள தொடும் பலவாறு மடுத்தலால்
அளக்கர் போன்றன ஆவண வீதிகள்
ஆரணங்களே அல்ல மறுகிடை
வாரணங்களும் மாறி முழங்குமால்
சீரணங்கிய தேவர்களே அலால்
தோரணங்களில் தாமமும் சூழுமால்
தாழ்ந்த வேணியர் சைவர் தபோதனர்
வாழ்ந்த சிந்தை முனிவர் மறையவர்
வீழ்ந்த இன்ப துறையுள் விரவுவார்
சூழ்ந்த பல்வேறு இட தொல் நகர்
நில மகட்கு அழகார் திரு நீள் நுதல்
திலகம் ஒப்பது செம்பியர் வாழ்பதி
மலர் மகட்கு வண்தாமரை போல்மலர்ந்து
அலகில் சீர்த்திருவாரூர் விளங்குமால்
அன்ன தொல் நகருக்கு அரசு ஆயினான்
துன்னு செங் கதிரோன் வழி தோன்றினான்
மன்னு சீர் அநபாயன் வழி முதல்
மின்னும் மாமணி பூண்மனு வேந்தனே
மண்ணில் வாழ்தரு மன்னுயிர்கட்கு எல்லாம்
கண்ணும் ஆவியும் ஆம்பெருங் காவலான்
விண்ணுளார் மகிழ்வு எய்திட வேள்விகள்
எண்ணிலாதன் மாண இயற்றினான்
கொற்ற ஆழிகுவலயஞ் சூழ்ந்திட
சுற்று மன்னர் திறை கடை சூழ்ந்திட
செற்றம் நீக்கிய செம்மையின் மெய்ம் மனு
பெற்ற நீதியும் தன்பெயர் ஆக்கினான்
பொங்கு மா மறை புற்றிடங் கொண்டவர்
எங்கும் ஆகி இருந்தவர் பூசனைக்கு
அங்கண் வேண்டும் நிபந்தம் ஆராய்ந்துளான்
துங்க ஆகமம் சொன்ன முறைமையால்
அறம் பொருள் இன்பம் ஆன அறநெறி வழாமற் புல்லி
மறங் கடிந்து அரசர் போற்ற வையகம் காக்கும் நாளில்
சிறந்த நல் தவத்தால் தேவி திருமணி வயிற்றின் மைந்தன்
பிறந்தனன் உலகம் போற்ற பேர் அரி குருளை அன்னான்
தவமுயன்று அரிதில் பெற்ற தனி இளங் குமரன் நாளும்
சிவ முயன்றடையு தெய்வ கலை பல திருந்த ஓதி
கவனவாம் புரவி யானை தேர படை தொழில்கள் கற்று
பவமுயன்றதுவும் பேறே எனவரும் பண்பின் மிக்கான்
அளவில் தொல் கலைகள் முற்றி அரும் பெறல் தந்தை மிக்க
உளமகிழ் காதல் கூர ஓங்கிய குணத்தால் நீடி
இளவரசு என்னும் தன்மை எய்துதற்கணியன் ஆகி
வளரிளம் பரிதி போன்று வாழுநாள் ஒருநாள் மைந்தன்
திங்கள் வெண் கவிகை மன்னன் திரு வளர் கோயில் நின்று
மங்குல் தோய் மாட வீதி மன்னிளங் குமரர் சூழ
கொங்கலர் மாலை தாழ்ந்த குங்குமம் குலவு தோளான்
பொங்கிய தானை சூழ தேர்மிசை பொலிந்து போந்தான்
பரசு வந்தியர் முன் சூதர் மாகதர் ஒருபால் பாங்கர்
விரை நறுங் குழலார் சிந்தும் வெள் வளை ஒருபால் மிக்க
முரசொடு சங்கம் ஆர்ப்ப முழங்கொலி ஒருபால் வென்றி
அரசிளங் குமரன் போதும் அணி மணி மாட வீதி
தனிப்பெரு தருமம் தானோர் தயாஇன்றி தானை மன்னன்
பனிப்பில் சிந்தையினில் உண்மை பான்மை சோதித்தால் என்ன
மனித்தர் தன் வரவு காணா வண்ணம் ஓர் நல்
புனிற்றிளங் கன்று துள்ளி போந்ததம் மறுகினூடே
அம்புனிற்றாவின் கன்றோர் அபாயத்தின் ஊடு போகி
செம்பொனின் தேர்க்கால் மீது விசையினால் செல்ல பட்டே
உம்பரின் அடை கண்டங்கு உருகுதாய் அலமந்தோடி
வெம்பிடும் அலறும் சோரும் மெ நடுக்குற்று வீழும்
மற்றுது கண்டு மைந்தன் வந்ததிங்கு அபாயம் என்று
சொற்றடுமாறி நெஞ்சில் துயருழந்து அறிவு அழிந்து
பெற்றமும் கன்றும் இன்று என் உணர்வு எனும் பெருமை மாள
செற்ற என் செய்கேன் என்று தேரினின் இன்று இழிந்து வீழ்ந்தான்
அலறு பேர் ஆவை நோக்கி ஆருயிர் பதைத்து சோரும்
நிலமிசை கன்றை நோக்கி நெடிதுயிர்த்து இரங்கி நிற்கும்
மலர் தலை உலகங் காக்கும் மனுவெனும் என் கோமானுக்கு
உலகில் பழி வந்து எய்த பிறந்தவா ஒருவன் என்பான்
வந்த பழியை மாற்றும் வகையினை மறை நூல் வாய்மை
அந்தணர் விதித்த ஆற்றால் ஆற்றுவது அறமே ஆகில்
எந்தை ஈது அறியா முன்னம் இயற்றுவன் என்று மைந்தன்
சிந்தை வெ துயரம் தீர்ப்பான்திரு மறையவர் முன் சென்றான்
தன்னுயிர கன்று வீ தளர்ந்த தரியாதாகி
முன் நெருப்புயிர்த்து விம்மி முகத்தினில் கண்ணீர் வார
மன்னுயிர் காக்குஞ் செங்கோல் மனுவின் பொற் கோயில் வாயில்
பொன்னணி மணியை சென்று கோட்டினால் புடைத்தது அன்றே
பழிப்பறை முழக்கோ ஆர்க்கும் பாவத்தின் ஒலியோ வேந்தன்
வழித்திரு மைந்தன் ஆவி கொளவரும் மறலி ஊர்தி
கழுத்தணி மணியின் ஆர்ப்போ என்னத்தன் சடைமுன் கோளா
தெழித்தெழும் ஓசை மன்னன் செவிப்புலம் புக்க போது
ஆங்கது கேட்ட வேந்தன் அரியணை இழிந்து போந்து
பூங்கொடி வாயில் நண்ண காவலர் எதிரே போற்றி
ஈங்கிதோர் பசுவந்தெய்தி இறைவ நின் கொற்ற வாயில்
தூங்கிய மணியை கோட்டால் துளக்கியது என்று சொன்னார்
மன்னவன் அதனை கேளா வருந்திய பசுவை நோக்கி
என் இதற்குற்றது என்பான் அமைச்சரை இகழ்ந்து நோக்க
முன்னுற நிகழ்ந்த எல்லாம் அறிந்துளான் முதிர்ந்த கேள்வி
தொல் நெறி அமைச்சன் மன்னன் தாளிணை தொழுது சொல்வான்
வளவ நின் புதல்வன் ஆங்கோர் மணி நெடு தேர்மேல் ஏறி
அளவில் தேர்த்தானை சூழ அரசுலா தெருவில் போங்கால்
இளையஆன் கன்று தேர்க்கால் இடை புகுந்து இறந்ததாக
தளர்வுறும் இத்தாய் வந்து விளைத்ததி தன்மை என்றான்
அவ்வுரை கேட்ட வேந்தன் ஆவுறு துயரம் எய்தி
வெவ்விட தலை கொண்டாற் போல் வேதனை அகத்து மிக்கிங்கு
இவ் வினை விளைந்தவாறு என்று இடருறும் இரங்கும் ஏங்கும்
செவ்விது என் செங்கோல் என்னும் தெருமரும் தெளியும் தேறான்
மன்னுயிர் புரந்து வையம் பொது கடிந்து அறத்தில் நீடும்
என்னெறி நன்றால் என்னும் என்செய்தால் தீரும்
தன்னிளங் கன்று காணா தாய்முகங் கண்டு சோரும்
நிலை அரசன் உற்ற துயரம் ஓர் அளவிற்று அன்றால்
மந்திரிகள் அதுகண்டு மன்னவனை அடி வணங்கி
சிந்தை தளர்ந்து அருளுவது மற்று இதற்கு தீர்வு அன்றால்
கொந்தலர்த்தார் மைந்தனை முன் கோவதை செய்தார்க்கு மறை
அந்தணர்கள் விதித்தமுறை வழிநிறுத்தல் அறம் என்றார்
வழக்கு என்று நீர் மொழிந்தால் மற்றது தான் வலிப்பட்டு
குழக்கன்றை இழந்தலறும் கோவுறு நோய் மருந்தாமோ
இழக்கின்றேன் மைந்தனை என்று எல்லீருஞ் சொல்லிய
சழக்கு இன்று நான் இசைந்தால் தரு தான் சலியாதோ
மாநிலங் காவலன் ஆவான் மன்னுயிர் காக்குங் காலை
தான தனக்கு இடையூறு தன்னால் தன் பரிசனத்தால்
ஊன மிகு பகை திறத்தால் கள்வரால் உயிர் தம்மால்
ஆன பயம் ஐந்தும் தீர்த்து அறம் காப்பான் அல்லனோ
என் மகன் செய் பாதகத்துக்கு இருந்தவங்கள் செய இசைந்தே
அன்னியன் ஓர் உயிர் கொன்றால் அவனை கொல்வேன் ஆனால்
தொன் மனுநூல் தொடை மனுவால் துடைப்பு உண்டது எனும் வார்த்தை
மன்னுலகில் பெற மொழிந்தீர் மந்திரிகள் வழக்கு என்றான்
என்று அரசன் இகழ்து உரைப்ப எதிர் நின்ற மதி அமைச்சர்
நின்ற நெறி உலகின் கண் இது போல் முன் நிகழ்ந்ததால்
பொன்று வித்தல் மரபு அன்று மறை மொழிந்த அறம் புரிதல்
தொன்று தொடு நெறி யன்றோ தொல் நிலங் காவல என்றார்
அவ் வண்ணம் தொழுதுரைத்த அமைச்சர்களை முகம் நோக்கி
மெய் வண்ணம் தெரிந்து உணர்ந்த மனு வென்னும் விறல் வேந்தன்
இவ் வண்ணம் பழுது உரைத்தீர் என்று எரியின் இடை தோய்ந்த
செவ் வண்ண கமலம் போல் முகம் புலந்து செயிர்த்துரைப்பான்
அவ்வுரையில் வருநெறிகள் அவை நிற்க அறநெறியின்
செவ்விய உண்மை திறம் நீர் சிந்தை செயாது உரைக்கின்றீர்
எவ் உலகில் பெற்றம் இப்பெற்றி தாம் இடரால்
வெவ்வுயிர்த்து கதறி மணி எறிந்து விழுந்தது விளம்பீர்
போற்றிசைத்து புரந்தரன் மால் அயன் முதலோர் புகழ்ந்து இறைஞ்ச
வீற்றிருந்த பெருமானார் மேவியுறை திருவாரூர
தோற்றமுடை உயிர் கொன்றான் ஆதலினால் துணிபொருள் தான்
ஆற்றவுமற்று அவற் கொல்லும் அதுவேயாம் என நினைமின்
என மொழிந்து மற்று இதனுக்கு இனி இதுவே செயல் இவ் ஆன்
மனம் அழியு துயர் அகற்ற மாட்டாதேன் வருந்தும் இது
தனதுறு பேர் இடர் யானும் தாங்குவதே கருமம் என
அனகன் அரும் பொருள் துணிந்தான் அமைச்சரும் அஞ்சினர் அகன்றார்
மன்னவன் தன் மைந்தனை அங்கு அழைத்தொரு மந்திரி தன்னை
முன்னிவனை அவ்வீதி முரண் தேர்க்கால் ஊர்க என
அன்னவனும் அது செய்யாது அகன்று தன் ஆருயிர் துறப்ப
தன்னுடைய குலமகனை தான் கொண்டு மறுங்கணைந்தான்
ஒரு மைந்தன் தன் குலத்துக்கு உள்ளான் என்பதும் உணரான்
தருமம் தன் வழிச்செல்கை கடன் என்று
மருமம் தன் தேராழி உறஊர்ந்தான் மனு வேந்தன்
அருமந்த அரசாட்சி அரிதோ மற்று எளிதோ தான்
தண்ணளி வெண் குடை வேந்தன் செயல் கண்டு தரியாது
மண்ணவர் கண்மழை பொழிந்தார் வானவர் பூ மழை சொரிந்தார்
அண்ணல் அவன் கண் எதிரே அணி வீதி மழ விடை மேல்
விண்ணவர்கள் தொழ நின்றான் வீதி விடங்க பெருமான்
சடை மருங்கில் இளம் பிறையும் தனி விழிக்கு திருநுதலும்
இடம் மருங்கில் உமையாளும் எம் மருங்கும் பூதகணம்
புடை நெருங்கும் பெருமையும் முன் கண்டு அரசன் போற்றி இசைப்ப
விடை மருவும் பெருமானும் விறல் வேந்தற்கு அருள் கொடுத்தான்
நிலையே உயிர் பிரிந்த ஆன் கன்றும் அவ் அரசன்
மன்னுரிமை தனிக்கன்றும் மந்திரியும் உடன் எழலும்
இன்ன பரிசானான் என்று அறிந்திலன் வேந்தனும் யார்க்கும்
முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ
அடி பணிந்த திருமகனை ஆகமுற எடுத்து அணைத்து
நெடிது மகிழ்ந்து அரு துயரம் நீங்கினான் நிலவேந்தன்
மடி சுரந்து பொழிதீம் பால் வருங் கன்று மகிழ்ந்துண்டு
படி நனைய வரும் பசுவும் பருவரல் நீங்கியது அன்றே
பொன் தயங்கு மதிலாரூர பூங்கோயில் அமர்ந்தபிரான்
வென்றிமனு வேந்தனுக்கு வீதியிலே அருள்கொடுத்து
சென்று அருளும் பெரும் கருணை திறம் கண்டு தன் அடியார்க்கு
என்றும் எளிவரும் பெருமை ஏழ் உலகும் எடுத்தேத்தும்
இனைய வகை அற நெறியில் எண்ணிறந்தோர்க்கு அருள் புரிந்து
முனைவர் அவர் மகிழ்ந்தருள பெற்றுடைய மூதூர் மேல்
புனையும் உரை நம்மளவில் புகலலா தகைமையதோ
அனைய தனு ககமலராம் அறவனார் பூங்கோயில்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருக்கூட்ட சிறப்பு
திருச்சிற்றம்பலம்
பூத நாயகர் புற்று இடம் கொண்டவர்
ஆதி தேவர் அமர்ந்த பூங் கோயிலிற்
சோதி மாமணி நீள் சுடர் முன்றில் சூழ்
மூதெயில் திரு வாயில் முன்னாயது
பூவார் திசை முகன் இந்திரன் பூ மிசை
மா வாழ் அகலத்து மால் முதல் வானவர்
ஓவாது எவரும் நிறைந்து உள்ளது
தேவா சிரியன் எனு திரு காவணம்
அரந்தை தீர்க்கும் அடியவர் மேனிமேல்
நிரந்த நீற்று ஒளியால் நிறை தூய்மையால்
புரந்த அஞ்சு எழுத்து ஓசை பொலிதலால்
பரந்த ஆயிரம் பாற் கடல் போல்வது
அகில காரணர் தாள பணிவார்கள் தாம்
அகில லோகமும் ஆளற்கு உரியர் என்று
அகில லோகத்து உளார்கள் அடைதலின்
அகில லோகமும் போல்வத தனிடை
அத்தர் வேண்டி முன் ஆண்டவர் அன்பினால்
மெ தழைந்து விதிர்ப்புறு சிந்தையார்
கை திரு தொண்டு செய்கட பாட்டினார்
இத்திறத்தவர் அன்றியும் எண்ணிலார்
மாசிலாத மணி திகழ் மேனி மேல்
பூசு நீறு போல் உள்ளும் புனிதர்கள்
தேசினால் திசையும் விளங்கினார்
பேச ஒண்ணா பெருமை பிறங்கினார்
பூதம் ஐந்தும் நிலையிற் கலங்கினும்
மாதோர் பாகர் மலர்த்தாள் மறப்பிலார்
ஓது காதல் உறைப்பின் நெறி நின்றார்
கோதிலாத குண பெருங் குன்றனார்
கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்
ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்
கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினார்
ஆரம் கண்டிகை ஆடையும் கந்தையே
பாரம் ஈசன் பணி அலாது ஒன்று இலார்
ஈர அன்பினர் யாதுங் குறைவு இலார்
வீரம் என்னால் விளம்பும் தகையதோ
வேண்டு மாறு விருப்புறும் வேடத்தர்
தாண்டவ பெருமான் தனி தொண்டர்கள்
நீண்ட தொல் புகழார் தம் நிலைமையை
ஈண்டு வாழ்த்துகேன் என்னறிந்து ஏத்துகேன்
இந்த மாதவர் கூட்டத்தை எம்பிரான்
அந்தம் இல் புகழ் ஆலால சுந்தரன்
சுந்தர திரு தொண்ட தொகை தமிழ்
வந்து பாடிய வண்ணம் உரை செய்வாம்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

தடுத்தாட்கொண்ட புராணம்
திருச்சிற்றம்பலம்
கங்கையும் மதியும் பாம்பும் கடுக்கையும் முடி மேல் வைத்த
அங்கணர் ஓலை காட்டி ஆண்டவர் தமக்கு நாடு
மங்கையர் வதன சீத மதி இருமருங்கும் ஓடி
செங்கயல் குழைகள் நாடும் திருமுனைப்பாடி நாடு
பெருகிய நலத்தால் மிக்க பெரும் திரு நாடு தன்னில்
அரு மறை சைவம் ஓங்க அருளினால் அவதரித்த
மருவிய தவத்தால் மிக்க வளம்பதி வாய்மை குன்றா
திரு மறையவர்கள் நீடும் நாவலூராம்
மாதொ ஒரு பாகனார்க்கு வழி அடிமை
வேதியர் குலத்துள் தோன்றி மேம்படு சடையனார்க்கு
ஏதமில் கற்பின் வாழ்க்கை மனை இசை ஞானியார்பால்
தீதகன்று உலகம் திரு அவதாரம் செய்தார்
தம்பிரான் அருளினாலே தவத்தினால் மிக்கோர் போற்றும்
நம்பி ஆரூரர் என்றே நாமமும் சாற்றிமிக்க
ஐம் படை சதங்கை சாத்தி அணிமணி சுட்டி
செம் பொன் நாண் அரையில் மின்ன தெருவில் தேர் உருட்டு நாளில்
நர சிங்க முனையர் என்னும் நாடு வாழ் அரசர் கண்டு
பரவருங் காதல்கூர பயந்தவர் தம்பால் சென்று
விரவிய நண்பினாலே வேண்டினர் பெற்று தங்கள்
அரசிளங் குமரற்கு ஏற்ப அன்பினால் மகன்மை கொண்டார்
பெருமைசால் அரசர் காதற் பிள்ளையா பின்னும் தங்கள்
வரு முறை மரபில் வைகி வளர்ந்து மங்கலம் செய் கோலத்து
அரு மறை மு நூல் சாத்தி அளவில் தொல் கலைகள் ஆய்ந்து
திரு மலி சிறப்பின் ஓங்கி சீர் மண பருவஞ் சேர்ந்தார்
தந்தையார் சடையனார் தம் தனி திரு மகற்கு சைவ
அந்தணர் குலத்துள் தங்கள் அரும் பெரும் மரபுக்கு ஏற்ப
வந்த தொல் சிறப்பிற் புத்தூர சடங்கவி மறையோன் தன்பால்
செ திரு அனைய கன்னி மண திறஞ் செப்பி விட்டார்
குல முதல் அறிவின் மிக்கோர் கோத்திர முறையும் தேர்ந்தார்
நல மிகு முதியோர் சொல்ல சடங்கவி நன்மை ஏற்று
மலர் தரு முகத்தன் ஆகி மணம் புரி செயலின் வாய்மை
பலவுடன் பேசி ஒத்த பண்பினால் அன்பு நேர்ந்தான்
மற்றவன் இசைந்த வார்த்தை கேட்டவர் வள்ளல் தன்னை
பெற்றவர் தம்பால் சென்று சொன்ன பின் பெருகு சிந்தை
உற்றதோர் மகிழ்ச்சி எய்தி மண வினை உவந்து சாற்றி
கொற்றவர் திருவுக்கு ஏற்ப குறித்து நாள் ஓலை விட்டார்
மங்கலம் பொலி செய்த மண வினை ஓலை ஏந்தி
அங்கயற் கண்ணினாரும் ஆடவர் பலரும் ஈண்டி
கொங்கலர சோலை மூதூர் குறுகினார் எதிரே வந்து
பங்கய வதனி மாரும் மைந்தரும் பணிந்து கொண்டார்
மகிழ்ச்சி யால் மணம் மீ கூறி மங்கல வினைகள் எல்லாம்
புகழ்ச்சியால் பொலிந்து தோன்ற போற்றிய தொழிலராகி
இகழ்ச்சி ஒன்றானும் இன்றி ஏந்து பூ மாலை பந்தர்
நிகழ்ச்சியின் மைந்தர் ஈண்டி நீள் முளை சாத்தினார்கள்
மண வினைக்கு அமைந்த செய்கை மாதினை பயந்தார் செ
துணர் மலர கோதை தா சுரும்பணை தோளினானை
புணர் மண திருநாள் முன்னா பொருந்திய விதியினாலே
பணை முரசு இயம்ப வாழ்த்தி பைம் பொன் நாண் காப்பு சேர்த்தார்
மா மறை விதி வழாமல் மணத்துறை கடன்கள் ஆற்றி
தூ மறை மூதூர கங்குல் மங்கல துன்றி ஆர்ப்ப
தேமரு தொடையல் மார்பன் திரு மண கோலம் காண
காமுறு மனத்தான் போல கதிரவன் உதயம் செய்தான்
காலை செய் வினைகள் முற்றி கணித நூல் புலவர் சொன்ன
வேலை வந்து அணையும் முன்னர் விதி மணக்கோலம் கொள்வான்
நூல் அசைந்து இலங்கு மார்பின் நுணங்கிய கேள்வி மேலோன்
மாலையு தாரும் பொங்க மஞ்சன சாலை புக்கான்
வாச நெய் ஊட்டி மிக்க மலர் விரை அடுத்த தூ நீர
பாசனத்து அமைந்த பாங்கர பருமணி பைம்பொன் திண்கால்
ஆசனத்து அணி நீர் ஆட்டி அரிசனம் சாத்தி அன்பால்
ஈசனுக்கு இனியான் மேனி எழில் பெற விளக்கினார்கள்
அகில் விரை தூபம் ஏய்ந்த அணி கொள் பட்டாடை சாத்தி
முகில் நுழை மதியம் போல கைவலான் முன் கை சூழ்ந்த
துகில் கொடு குஞ்சி ஈரம் புலர்த்தி தன் தூய செங்கை
உகிர் நுதி முறையில் போக்கி ஒளிர் நறுஞ்சிகழி ஆர்த்தான்
தூநறும் பசும் கர்ப்பூர சுண்ணத்தால் வண்ண போதில்
ஆன தண் பனி நீர் கூட்டி அமைந்த சந்தன சேறாட்டி
மான்மத சாந்து தோய்ந்த மங்கல கலவை சாத்தி
பான் மறை முந்நூல் மின்ன பவித்திரஞ் சிறந்த கையான்
தூமலர பிணையல் மாலை துணர் இணர கண்ணி கோதை
தாமம் என்று இனைய வேறு தகுதியால் அமை சாத்தி
மா மணி அணிந்த தூய வளர் ஒளி இருள்கால் சீக்கும்
நாம நீள் கலன்கள் சாத்தி நன்மண கோலம் கொண்டான்
மன்னவர் திருவும் தங்கள் வைதிக
நன்நகர் விழவு கொள்ள நம்பி ஆரூரர் நாதன்
தன் அடி மனத்துள் கொண்டு தகும் திருநீறு சாத்தி
பொன் அணி மணியார் யோக புரவிமேற் கொண்டு போந்தார்
இயம் பல துவைப்ப எங்கும் ஏத்தொலி எடுப்ப மாதர்
நயந்து பல்லாண்டு போற்ற நான்மறை ஒலியின் ஓங்க
வியந்துபார் விரும்ப வந்து விரவினர்க்கு இன்பஞ் செய்தே
உயர்ந்த வாகன யானங்கள் மிசை கொண்டார் உழையரானார்
மங்கல கீத நாத மறையவர் குழாங்களோடு
தொங்கலும் விரையும் சூழ்ந்த மைந்தரும் துன்றி சூதும்
பங்கய முகையும் சாயத்து பணைத்து எழு தணியில் மிக்க
குங்கும முலையினாரும் பரந்தெழு கொள்கை தாகி
அருங்கடி எழுந்த போழ்தின் ஆர்த்த வெள்வளை களாலும்
இருங்குழை மகர தாலும் இலங்கொளி மணிகளாலும்
நெருங்கிய பீலி சோலை நீல நீர தரங்க தாலும்
கருங்கடல் கிளர்ந்தது என்ன காட்சியில் பொலிந்தது அன்றே
நெருங்கு தூரியங்கள் ஏங்க நிரைத்த சாமரைகள் ஓங்க
பெருங்குடை மிடைந்து செல்ல பிணங்கு பூங் கொடிகள் ஆட
அருங் கடி மணம் வந்து எய்த அன்று தொட்டு என்றும் அன்பில்
வருங்குல மறையோர் புத்தூர் மணம் வந்த புத்தூராமால்
நிறை குடம் தூபம் தீபம் நெருங்கு பாலிகைகள் ஏந்தி
நறை மலர் அறுகு சுண்ணம் நறும் பொரி பலவும் வீசி
உறைமலி கலவை சாந்தின் உறுபுனல் தெளித்து வீதி
மறையவர் மடவார் வள்ளல் மணம் எதிர் கொள்ள வந்தார்
கண்கள் எண்ணிலாத வேண்டுன்ங் காளையை காண என்பார்
பெண்களில் உயர நோன் தாள் சடங்கவி பேதை என்பார்
மண் களி கூர வந்த மணம் கண்டு வாழ்ந்தோம் என்பார்
பண்களில் நிறைந்த கீதம் பாடுவார் ஆடுவார்கள்
ஆண்டகை அருளின் நோக்கின் வெள்ளத்துள் அலைந்தோம் என்பார்
தாண்டிய பரியும் நம்பால் தகுதியின் நடந்தது என்பார்
பூண்டயங்கு இவனே காணும் புண்ணிய மூர்த்தி என்பார்
ஈண்டிய மடவார் கூட்டம் இன்னன இசைப்ப சென்றார்
வருமண கோலத்து எங்கள் வள்ளலார் தெள்ளும் வாச
திருமண பந்தர் முன்பு சென்று வெண் சங்கம் எங்கும்
பெருமழை குலத்தின் ஆர பரிமிசை இழிந்து பேணும்
ஒரு மண திறத்தின் அங்கு நிகழ்ந்தது மொழிவேன் உய்ந்தேன்
ஆலுமறை சூழ்கயிலையின் கண் அருள் செய்த
சாலுமொழியால் வழி தடுத்து அடிமை கொள்வான்
மேலுற எழுந்து மிகு கீழுற அகழ்ந்து
மாலும் அயனுக்கும் அரியார் ஒருவர் வந்தார்
கண்ணிடை கரந்த கதிர் வெண்படம் என சூழ்
புண்ணிய நுதல் புனித நீறு பொலிவு
தண்மதி முதிர்ந்து கதிர் சாய்வது என மீதே
வெண்ணரை முடித்தது விழுந்திடை சழங்க
காதில் அணி கண்டிகை வடிந்த குழை தாழ
சோதி மணி மார்பின் அசை நூலினொடு தோளின்
மீது புனை உத்தரிய வெண் துகில் நுடங்க
ஆதபம் மறை குடை அணிக்கரம் விளங்க
பண்டிசரி கோவண உடை பழமை கூர
கொண்டதோர் சழங்கலுடை ஆர்ந்து அழகு கொள்ள
வெண் துகிலுடன் குசை முடிந்து விடு வேணு
தண்டொருகை கொண்டு கழல் தள்ளு நடை கொள்ள
மொய்த்து வளர் பேரழகு மூத்தவடி வேயோ
அத்தகைய மூப்பெனும் அதன் படிவ மேயோ
மெய்த்த நெறி வைதிகம் விளைந்த முத஧ல்யோ
இத்தகைய வேடம் என ஐயமுற எய்தி
வந்துதிரு மாமறை மண தொழில் தொடங்கும்
பந்தரிடை நம்பி எதிர் பன்னு சபை முன் நின்று
இந்த மொழி கேண்மின் எதிர் யாவர்களும் என்றான்
முந்தை மறை ஆயிரம் மொழிந்த திரு வாயான்
என்றுரை செய் அந்தணனை எண்ணில் மறை யோரும்
மன்றல் வினை மங்கல மடங்கல் அனை யானும்
நன்று உமது நல்வரவு நங்கள் தவம் என்று
நின்றது இவண் நீர் மொழிமின் நீர்மொழிவது என்றார்
பிஞ்ஞகனும் நாவலர் பெருந்தகையை நோக்கி
என்னிடையும் நின்னிடையும் நின்ற இசை வால்யான்
முன்னுடையது ஓர்பெரு வழக்கினை முடித்தே
நின்னுடைய வேள்வியினை நீ முயல்தி என்றான்
நெற்றி விழியான் மொழிய நின்ற நிகர் இல்லான்
உற்றதோர் வழக்கு எனிடை நீ உடையது உண்டேல்
மற்றது முடித்தல் அலது யான் வதுவை செய்யேன்
முற்ற இது சொல்லுக என எல்லை முடிவு இல்லான்
ஆவதிது கேண்மின் மறையோர் என் அடியான்
நாவல் நகர் ஊரன் இது நான் மொழிவது என்றான்
தேவரையும் மாலயன் முதன் திருவின் மிக்கோர்
யாவரையும் வேறு அடிமை யாவுடைய எம்மான்
என்றான் இறையோன் அது கேட்டவர் எம் மருங்கும்
நின்றார் இருந்தார் இவன் என் நினைந்தான் கொல் என்று
சென்றார் வெகுண்டார் சிரித்தார் திரு நாவல் ஊரான்
நன்றால் மறையோன் மொழி என்று எதிர் நோக்கி நக்கான்
நக்கான் முகம் நோக்கி நடுங்கி நுடங்கி யார்க்கும்
மிக்கான் மிசையுத்தரி துகில் தாங்கி மேல் சென்று
காலம் உன் தந்தை தன் ஆள்ஓலை
காரியத்தை நீ இன்று சிரித்தது என் ஏட என்ன
மாசிலா மரபில் வந்த வள்ளல் வேதியனை நோக்கி
நேசமுன் கிடந்த சிந்தை நெகிழ்ச்சியால் சிரிப்பு நீங்கி
ஆசில் அந்தணர்கள் வேறோர் அந்தணர்க்கு அடிமை ஆதல்
பேச இன்று உன்னை கேட்டோ ம் பித்தனோ மறையோன் என்றார்
பித்தனும் ஆக பின்னும் பேயனும் ஆக நீ இன்று
எத்தனை தீங்கு சொன்னால் யாது மற்று அவற்றால் நாணேன்
அத்தனைக்கு என்னை ஒன்றும் அறிந்திலை ஆகில் நின்று
வித்தகம் பேச வேண்டாம் பணி செய வேண்டும் என்றார்
கண்டதோர் வடிவால் உள்ளம் காதல் செய்து உருகா நிற்கும்
கொண்டதோர் பித்த வார்த்தை கோபமும் உடனே ஆக்கும்
உண்டொராள் ஓலை என்னும் அதன் உண்மை அறிவேன் என்று
தொண்டனார் ஓலை காட்டுக என்றனர் துணைவனாரை
ஓலை காட்டு என்று நம்பி உரைக்க நீ
பாலையோ அவை முன் காட்ட பணிசெயற் பாலை என்ற
வேலையில் நாவலூரர் வெகுண்டு மேல் விரைந்து சென்று
மாலயன் தொடரா தானை வலிந்து பின்தொடரல் உற்றார்
ஆவணம் பறிக்க சென்ற அளவினில் அந்தணாளன்
காவணத்து இடையே ஓட கடிது பின்தொடர்ந்து நம்பி
பூவனத்து அவரை உற்றார் அவரலால் புரங்கள் செற்ற
ஏவண சிலையினாரை யார் தொடர்ந்து எட்ட வல்லார்
மறைகள் ஆயின முன் போற்றி மலர்ப்பதம் பற்றி நின்ற
இறைவனை தொடர்ந்து பற்றி எழுதும்ஆள் ஓலை வாங்கி
அறை கழல் அண்ணல் ஆளாய் அந்தணர் செய்தல் என்ன
முறை என கீறியிட்டார் முறையிட்டான் முடிவிலாதான்
அருமறை முறையிட்டின்னும் அறிவதற்கு அறியான் பற்றி
ஒரு முறை முறையோ என்ன உழை நின்றார் விலக்கி இந்த
பெரு முறை உலகில் இல்லா நெறி கொண்டு பிணங்கு கின்ற
திரு மறை முனிவரே எங்குளீர் செப்பும் என்றார்
என்றலும் நின்ற ஐயர் இங்குளேன் இருப்புஞ் சேயது
அன்றிந்த வெண்ணெய் நல்லூர் அதுநிற்க அறத்தாறு இன்றி
வன்றிறல் செய்து என் கையில் ஆவணம் வலிய வாங்கி
நின்றிவன் கிழித்து தானே நிரப்பினான் அடிமை என்றான்
குழை மறை காதினானை கோல் ஆரூரர் நோக்கி
பழைய மன்றாடி போலும் இவன் என்று பண்பின் மிக்க
விழைவுறு மனமும் பொங்க வெண்ணெய் நல்லூராயேல் உன்
பிழை நெறி வாழ்க்கை ஆங்கே பேச நீ போதாய் என்றார்
வேதியன் அதனை கேட்டு வெண்ணெய் நல்லூரிலே நீ
போதினும் நன்று மற்ற புனித நான்மறையோர் முன்னர்
ஆதியில் மூல ஓலை காட்டி நீ அடிமை ஆதல்
சாதிப்பன் என்று முன்னே தண்டுமுன் தாங்கி சென்றான்
செல்லு நான் மறையோன் தன்பின் திரிமு காந்தஞ் சேர்ந்த
வல்லிரும்பணையு மா போல் வள்ளலும் கடிது சென்றான்
எல்லையில் சுற்றத்தாரும் இது என்னாம் என்று செல்ல
நல்ல அந்தணர்கள் வாழும் வெண்ணெய் நல்லூரை நண்ணி
வேத பாரகரின் மிக்கார் விளங்கு பேர் அவை முன் சென்று
நாதனாம் மறையோன் சொல்லும் நாவலூர் ஆரூரன் தன்
காதல் என் அடியான் என்ன காட்டிய ஓலை கீறி
மூதறிவீர் முன் போந்தானிது மற்றென் முறைபாடு என்றான்
அந்தணர் அவையில் மிக்கார் மறையவர் அடிமை ஆதல்
இந்த மா நிலத்தில் இல்லை என் சொன்னாய் ஐயர் என்றார்
வந்தவாறிசைவே அன்றோ வழக்கு இவன் கிழித்த ஓலை
தந்தை தன் நேர்ந்தது என்றனன் தனியாய்
இசைவினால் எழுதும் ஓலை காட்டினான் ஆகில் இன்று
விசையினால் வலிய வாங்கி கிழிப்பது வெற்றி ஆமோ
தசையெலாம் ஒடுங்க மூத்தான் வழக்கினை சார சொன்னான்
அசைவில் ஆரூரர் எண்ணம் என் என்றார் அவையில்மிக்கார்
அனைத்து நூல் உணர்ந்தீர் ஆதி சைவன் என்று அறிவீர் என்னை
தனக்கு வேறு அடிமை என்று இவ் அந்தணன் சாதித்தானேல்
மனத்தினால் உணர்தற்கு எட்டா மாயை என் சொல்லுகேன் யான்
எனக்கு இது தெளிய ஒண்ணாது என்றனன் எண்ணம் மிக்கான்
அவ்வுரை அவையின் முன்பு நம்பி ஆரூரர் சொல்ல
செவ்விய மறையோர் நின்ற திரு மறை முனியை நோக்கி
இவ்வுலகின் கண் நீ இன்று இவரை உன் அடிமை என்ற
வெவ்வுரை எம்முன்பு ஏற்ற வேண்டும் என்று உரைத்து மீண்டும்
ஆட்சியில் ஆவணத்தில் அன்றி மற்று அயலார் தங்கள்
காட்சியில் மூன்றில் ஒன்று காட்டுவாய் என்ன முன்னே
மூட்சியிற் கிழித்த ஓலை படியோஓலை மூல
மாட்சியில் காட்ட வைத்தேன் என்றனன் மாயை வல்லான்
வல்லையேல் காட்டிங்கு என்ன மறையவன் வலி செய்யாமல்
சொல்ல நீர் வல்லீர் ஆகில் காட்டுவேன் என்று சொல்ல
செல்வ நான் மறையோய் நாங்கள் தீங்குற ஒட்டோ ம் என்றார்
அல்லல் தீர்த்து ஆள நின்றார் ஆவணம் கொண்டு சென்றார்
இருள் மறை மிடறு ஒன் கையில் ஓலை கண்டு அவையோர் ஏவ
அருள் பெறு காரணத்தானும் ஆவணம் தொழுது வாங்கி
சுருள் பெறு மடியை நீக்கி விரித்தனன் தொன்மை நோக்கி
தெருள் பெறு சபையோர் கேட்ப வாசகம் செப்பு கின்றான்
அரு மறை நாவல் ஆதி சைவன் ஆரூரன்செய்கை
பெரு முனி வெண்ணெய் நல்லூர பித்தனுக்கியானும் என்பால்
வரு முறை மரபுளோரும் வழி தொண்டு செய்தற்கு ஓலை
இருமையால் எழுதி நேர்ந்தேன் இதற்கு இவை என் எழுத்து
வாசகம் கேட்ட பின்னர் மற்று மேல் எழுத்து இட்டார்கள்
ஆசிலா எழுத்தை நோக்கி அவையொக்கும் என்ற பின்னர்
மாசிலா மறையோர் ஐயா மற்றுங்கள் பேரனார் தம்
தேசுடை எழுத்தே ஆகில் தெளி பார்த்து அறிமின் என்றார்
அந்தணர் கூற இன்னும் ஆள் ஓலை இவனே காண்பான்
தந்தை தன் தான் வேறு எழுதுகை
இந்த ஆவணத்தினோடும் எழுத்து நீர் ஒப்பு நோக்கி
வந்தது மொழிமின் என்றான் வலிய ஆட்கொள்ளும் வள்ளல்
திரண்ட மா மறையோர் தாமும் திரு நாவலூரர் கோ முன்
மருண்டது தெளிய மற்ற மறையவன் எழுத்தால் ஓலை
அரண் தரு காப்பில் வேறு ஒன்று அழைத்து உடன் ஒப்பு நோக்கி
இரண்டும் ஒத்திருந்தது என்னே இனி செயல் இல்லை என்றார்
நான் மறை முனிவ னார்க்கு நம்பி ஆரூரர் தோற்றீர்
பான்மையின் ஏவல் செய்தல் கடன் என்று பண்பில் மிக்க
மேன்மையோர் விளம்ப நம்பி விதி முறை இதுவே ஆகில்
யான் இதற்கு இசையேன் என்ன இசையுமோ என்று நின்றார்
திருமிகு மறையோர் நின்ற செழுமறை முனியை நோக்கி
அருமுனி நீமுன் காட்டும் ஆவணம் அதனில் எங்கள்
பெருமைசேர் பதியேயாக பேசியதுமக்கு இவ்வூரில்
வருமுறை மனையும் நீடு வாழ்க்கையும் காட்டுக என்றார்
பெருவரும் வழக்கால் வென்ற புண்ணிய முனிவர் என்னை
ஒருவரும் அறியீராகில் போதும் என்றுரைத்து சூழ்ந்த
பெருமறையவர் குழாமும் நம்பியும் பின்பு செல்ல
திருவரு துறையே புக்கார் கண்டிலர் திகைத்து நின்றார்
எம்பிரான் கோயில் நண்ண இலங்கு நூல் மார்பர் எங்கள்
நம்பர் தங்கோயில் புக்கது என்கொலோ என்று நம்பி
தம்பெரு விருப்பினோடு தனி தொடர்ந்து அழைப்ப மாதோடு
உம்பரின் விடை மேல் தோன்றி அவர் தமக்கு உணர்த்தல் உற்றார்
முன்பு நீ நமக்கு தொண்டன் முன்னிய வேட்கை கூர
பின்பு நம் ஏவலாலே பிறந்தனை மண்ணின் மீது
துன்புறு வாழ்க்கை நின்னை தொடர்வற தொடர்ந்து வந்து
நன்புல மறையோர் முன்னர் நாம் தடுத்தாண்டோ ம் என்றார்
என்று எழும் ஓசை கேளா ஈன்றஆன் கனைப்பு கேட்ட
கன்று போல் கதறி நம்பி கரசரண் ஆதி அங்கம்
துன்றிய புளகம் ஆக தொழுத கை தலை மேல் ஆக
மன்றுளீர் செயலோ வந்து வலிய கொண்டது என்றார்
எண்ணிய ஓசை ஐந்தும் விசும்பிடை நிறைய எங்கும்
விண்ணவர் பொழி பூ மாரி மேதினி நிறைந்து விம்ம
மண்ணவர் மகிழ்ச்சி பொங்க மறைகளும் முழங்கி ஆர்ப்ப
அண்ணலை ஓலை காட்டி ஆண்டவர் அருளி செய்வார்
மற்று நீ வன்மை பேசி வன்தொண்டன் என்னும் நாமம்
பெற்றனை நமக்கும் அன்பில் பெருகிய சிறப்பின் மிக்க
அற்சனை பாட்டே ஆகும் ஆதலால் மண் மேல் நம்மை
சொற் தமிழ் பாடுக என்றார் தூமறை பாடும் வாயார்
தேடிய அயனும் மாலும் தெளிவுறா ஐந்து எழுத்தும்
பாடிய பொருளாய் உள்ளான் பாடுவாய் நம்மை என்ன
நாடிய மனத்தராகி நம்பி ஆரூரர் மன்றுள்
ஆடிய செய்ய தாளை அஞ்சலி கூப்பி நின்று
வேதியன் ஆகி என்னை வழக்கினால் வெல்ல வந்த
ஊதியம் அறியாதேனுக்கு உணர்வு தந்து கொண்ட
கோதிலா அமுதே இன்று உன் குண பெருங் கடலை நாயேன்
யாதினை அறிந்து என் சொல்லி பாடுகேன் என மொழிந்தார்
அன்பனை அருளின் நோக்கி அங்கணர் அருளி செய்வார்
முன்பு எனை பித்தன் என்றே மொழிந்தனை ஆதலால்லே
என் பெயர் பித்தன் என்றே பாடுவாய் என்றார் நின்ற
வன்பெரு தொண்டர் ஆண்ட வள்ளலை பாடல் உற்றார்
கொத்தார் மலர குழலாள் ஒரு கூறாய் அடியவர் பால்
மெ தாயினும் இனியானை அவ்வியன் நாவலர் பெருமான்
பித்தா பிறை சூடி என பெரிதாம் திரு பதிகம்
இத்தாரணி முதலாம் உலகு எல்லாம் உய்ய எடுத்தார்
முறையால் வரு மதுர துடன் மொழி இந்தள முதலில்
குறையா நிலை மும்மைப்பாடி கூடுங் கிழமை யினால்
நிறை பாணியின் இசை கோள்புணர் நீடும் புகழ் வகையால்
இறையான் மகிழ் இசை பாடினன் எல்லாம் நிகர் இல்லான்
சொல்லார் தமிழ் இசை பாடிய தொண்டன் தனை இன்னும்
பல்லாறு உலகினில் நம் புகழ் பாடு என்றுறு பரிவில்
நல்லார் வெண்ணெய் நல்லூர் அருள்துறை மேவிய நம்பன்
எல்லா உலகும் புரம் எய்தான் அருள் செய்தான்
அயலோர் தவம் முயல்வார் பிறர் அன்றே மணம் அழியும்
செயலால் நிகழ் புத்தூர் வரு சிவ வேதியன் மகளும்
உயர் நாவலர் தனி நாதனை ஒழியாது உணர் வழியில்
பெயராது உயர் சிவலோகமும் எளிதாம் வகை பெற்றாள்
நாவலர் கோன் ஆரூரன் தனை வெண்ணெய் நல் ஊரில்
மேவும் அருள்துறை அமர்ந்த வேதியர் ஆட்கொண்டு அதற்பின்
பூ அலரும் தடம் பொய்கை திருநாவலூர் புகுந்து
தேவர் பிரான் தனை பணிந்து திரு பதிகம் பாடினார்
சிவன் உறையு திருத்துறையூர் சென்றணைந்து தீவினையால்
அவ நெறியில் செல்லாமே தடுத்து ஆண்டாய் அடியேற்கு
தவ நெறி தந்து அருள் என்று தம்பிரான் முன் நின்று
பவ நெறிக்கு விலக்கு ஆகு திருப்பதிகம் பாடினார்
புலன் ஒன்றும் படி தவத்திற் புரிந்த நெறி கொடுத்து அருள
அலர் கொண்ட நறுஞ் சோலை திரு துறையூர் அமர்ந்து அருளும்
நிலவும் தண் புனலும் ஒளிர் நீள்சடையோன் திருப்பாதம்
மலர் கொண்டு போற்றிசைத்து வந்தித்தார் வன தொண்டர்
திரு துறையூர் தனை பணிந்து சிவபெருமான் அமர்ந்து அருளும்
பொருத்தமாம் இடம் பலவும் புக்கிறைஞ்சி பொற்புலியூர்
நிருத்தனார் திரு கூத்து தொழுவதற்கு நினைவுற்று
வருத்தம் மிகு காதலினால் வழி கொள்வான் மனங் கொண்டார்
மலை வளர் சந்து அகில் பீலி மலர் பரப்பி மணி கொழிக்கும்
அலை தருதண் புனல் பெண்ணை யாறு கடந்து ஏறிய பின்
நிலவு பசும் புரவிநெடும் தேர் இரவி மேல் கடலில்
செலவணையும் பொழுது அணை திருவதிகை புறத்து அணைந்தார்
உடைய அரசு உலகேத்தும் உழவார படையாளி
விடையவர்க்கு கைத்தொண்டு விரும்பு பெரும் பதியை மிதித்து
அடையும் அதற்கு அஞ்சுவான் என்று நகரில் புகுதாதே
மடை வளர் தண் புறம் பணையிற் சித்தவட மடம் புகுந்தார்
வரி வளர் பூஞ்சோலை சூழ் மடத்தின் கண் வன்தொண்டர்
விரிதிரை நீர கெடில வட வீரட்டானத்து இறை தாள்
புரிவுடைய மனத்தினரா புடை எங்கும் மிடைகின்ற
பரிசனமும் துயில் கொள்ள பள்ளி அமர்ந்து அருளினார்
அது கண்டு வீரட்டத்து அமர்ந்து அருளும் அங்கணரும்
முது வடிவின் மறையவராய் முன் ஒருவர் அறியாமே
பொது மடத்தின் உள்புகுந்து பூ தாரான் திரு முடி மேல்
பதும மலர தாள் வைத்து பள்ளி கொள்வார் போல் பயின்றார்
அந்நிலை ஆரூரன் உணர்ந்து அருமறையோய் உன்னடி என்
சென்னியில் வைத்தனை என்ன திசை அறியா வகை செய்தது
என்னுடைய மூப்பு காண் என்று அருள அதற்கு இசைந்து
தன் முடி அப்பால் வைத்தே துயில் அமர்ந்தான் தமிழ் நாதன்
அங்குமவன் திரு முடிமேல் மீட்டும் அவர் தாள் நீட்ட
செங்கயல் பாய் தடம் புடை சூழ் திரு நாவலூராளி
இங்கு என்னை பலகாலும் மிதித்தனை நீ யார் என்ன
கங்கை சடை கரந்த பிரான் அறிந்திலையோ என கரந்தான்
செம்மாந்து இங்கு யான் அறியாது என் செய்தேன் என தெளிந்து
தம்மானை அறியாத சதியார் உளரே என்று
அம்மானை திருவதிகை வீரட்டா னத்து அமர்ந்த
கைம்மாவின் உரியானை கழல் பணிந்து பாடினார்
பொன் திரளும் மணி பொரு கரிவெண்
மின்றிரண்ட வெண்முத்தும் விரைமலரும் நறுங் குறடும்
வன்றிரைகளாற் கொணர்ந்து திருவதிகை வழிபடலால்
தென் திசையில் கங்கை எனும் திரு கெடிலம் திளைத்தாடி
அங்கணரை அடிபோற்றி அங்கு அகன்று மற்று அந்த
பொங்கு நதி தென்கரை போ போர் வலித்தோள் மாவலி தன்
மங்கல வேள்வியில் பண்டு வாமனனாய் மண் இரந்த
செங்கணவன் வழி பட்ட திரு மாணிக்குழி அணைந்தார்
பரம் பொருளை பணிந்து தாள் பரவிப்போ பணிந்தவர்க்கு
வரம் தருவான் தினை நகரை வணங்கினர் வண் தமிழ் பாடி
நரம்புடை யாழ் ஒலி முழவின் நாத
அரம்பையர் தம் கீத ஒலி அறா தில்லை மருங்கு அணைந்தார்
தேம் அலங்கல் அணி மா மணி மார்பின் செம்மல் அங்கயல்கள் செங்கமல தண்
பூ மலங்க எதிர் பாய்வன மாடே புள்ளலம்பு திரை வெள் வளை வாவி
தா மலங்குகள் தடம் பணை சூழும் தண் மருங்கு தொழுவார்கள் தம்மும்மை
மா மலங்களற வீடு அருள் தில்லை மல்லல் அம்பதியின் எல்லை வணங்கி
நாக சூத வகுளஞ் சரளஞ் சூழ் நாளிகேரம் இலவங்கம் நரந்தம்
பூக ஞாழல் குளிர் வாழை மதூகம் பொதுளும் வஞ்சி பல எங்கும் நெருங்கி
மேக சாலமலி சோலைகள் ஆகி மீது கோகிலம் மிடைந்து மிழற்ற
போக பூமியினும் மிக்கு விளங்கும் பூம்புறம்பணை கடந்து புகுந்தார்
வன்னி கொன்றை வழை சண்பகம் ஆரம் மலர பலாசொடு செருந்தி மந்தாரம்
கன்னி காரங் குரவங் கமழ் புன்னை கற்பு பாடலம் கூவிளம் ஓங்கி
துன்னு சாதி மரு மாலதி மௌவல் துதைந்த நந்திகரம் வீரம் மிடைந்த
பன் மலர புனித நந்தவனங்கள் பணிந்து சென்றனன் மணங்கமழ் தாரான்
இடம் மருங்கு தனி நாயகி காண ஏழ் பெரும் புவனம் உய்ய எடுத்து
நடநவின்று அருள் சிலம்பொலி போற்றும் நான் மறை பதியை நாளும் வணங்க
கடல் வலங் கொள்வது போல் புடை சூழுங் காட்சி மேவி மிகு
சே செல ஓங்கும் தடமருங்கு வளர் மஞ்சிவர்
இஞ்சி தண் கிடங்கை எதிர் கண்டு மகிழ்ந்தார்
மன்றுளாடு மதுவின் நசையாலே மறை சுரும்பறை புறத்தின் மருங்கே
குன்று போலுமணி மாமதில் சூழுங் குண்ட கழக்கமல வண்டலர் கைதை
துன்று நீறுபுனை மேனிய வாகி தூய நீறு புனை தொண்டர்கள் என்ன
சென்று முரல்கின்றன கண்டு சிந்தை அன்பொடு திளைத்து எதிர்

பார் விளங்க வளர் நான் மறை நாதம் பயின்ற பண்புமிக வெண்கொடி ஆடும்
சீர் விளங்கு மணி நாவொலியாலும் திசைகள் நான்கு எதிர் புறப்படலாலும்
தார் விளங்கு வரை மார்பின் அயன் பொன் சதுர்முகங்கள் என ஆயின தில்லை
ஊர்விளங்கு திருவாயில்கள் நான்கின் உத்தர திசை வாயில் முன் எய்தி
அன்பின் வந்து எதிர் கொண்ட சீர் அடியார் அவர்களோ நம்பி ஆரூரர் தாமோ
முன் பிறைஞ்சினரி யாவர் என்று அறியா முறைமையால் எதிர் வணங்கி மகிழ்ந்து
பின்பு கும்பிடும் விருப்பில் நிறைந்து பெருகு நாவல் நகரார் பெருமானும்
பொன் பிறங்கு மணி மாளிகை நீடும் பொருவிறந்த திருவீதி புகுந்தார்
அங்கண் மாமறை முழங்கும் மருங்கே ஆடரம்பையர் அரங்கு
மங்குல் வானின்மிசை ஐந்தும் முழங்கும் வாச மாலைகளில் வண்டு
பொங்கும் அன்பருவி கண்பொழி தொண்டர் போற்றிசைக்கும் ஒலி எங்கும் முழங்கும்
திங்கள் தங்கு சடை கங்கை முழங்கும் தேவ தேவர் புரியும் திருவீதி
போக நீடு நிதி மன்னவன் மன்னும் புரங்கள் ஒப்பன வரம்பில ஓங்கி
மாகம் முன் பருகுகின்றன போலும் மாளிகை குலம் மிடைந்த பதாகை
யோக சிந்தை மறையோர்கள் வளர்க்கும் ஓமதூமம் உயர்வானில் அடுப்ப
மேக பந்திகளின் மீதிடைஎங்கும் மின் நுடங்குவன என்ன விளங்கும்
ஆடு தோகை புடை நாசிகள் தோறும் அரணி தந்த சுடர் ஆகுதி
மாடுதாமமணி வாயில்கள் தோறும் மங்கல கலசம் வேதிகை
சேடு கொண்ட ஒளி தேர் நிரை தோறும் செந்நெல் அன்னமலை சாலைகள்
நீடு தண்புனல்கள் பந்தர்கள் தோறும் நிறைந்த தேவர் கணம் நீளிடை
எண்ணில் பேர் உலகு அனைத்தினும் உள்ள எல்லையில் அழகு சொல்லிய எல்லாம்
மண்ணில் இப்பதியில் வந்தன என்ன மங்கலம் பொலி வளத்தன ஆகி
புண்ணி புனித அன்பர்கள் முன்பு புகழ்ந்து பாடல் புரி பொற்பின் விளங்கும்
அண்ணல் ஆடு திருஅம்பலம் சூழ்ந்த அம்பொன் வீதியினை நம்பி வணங்கி
மால் அயன் சதமகன் பெரும் தேவர் மற்றும் உள்ளவர்கள் முற்றும் நெருங்கி
சீல மாமுனிவர் சென்று முன் துன்னி திரு பிரம்பின் அடி கொண்டு திளைத்து
காலம் நேர் படுதல் பார்த்தயல் நிற்ப காதல் அன்பர் கணநாதர் புகும்பொற்
கோல நீடு திருவாயில் இறைஞ்சி குவித்த செங்கை தலை மேற்கொடு புக்கார்

பெரு மதில் சிறந்த செம் பொன் மாளிகை மின் பிறங்கும் பேரம்பலம் மேரு
வருமுறை வலம் கொண்டிறைஞ்சிய பின்னர் வணங்கிய மகிழ்வொடும் புகுந்தார்
அருமறை முதலில் நடுவினில் கடையில் அன்பர் தம் சிந்தையில் அலர்ந்த
திரு வளர் ஒளி சூழ் திருச்சிற்றம்பலம் முன் அணுக்கன்

வையகம் பொலிய மறை சிலம்பு ஆர்ப்ப மன்றுளே மால் அயன் தேட
ஐயர் தாம் வெளியே ஆடுகின்றாரை அஞ்சலி மலர்த்தி முன் குவித்த
கைகளோ திளைத்த கண்களோ அந்த கரணமோ கலந்த அன்புந்த
செய் தவ பெரியோன் சென்று தாழ்ந்து எழுந்தான் திரு களிற்றுப்படி
மருங்கு
ஐந்து பேர் அறிவும் கண்களே கொள்ள அளப்பரும் கரணங்கள் நான்கும்
சிந்தையே குணம் ஒரு மூன்றும் திருந்து சாத்து விகமே ஆக
இந்து வாழ் சடையான் ஆடும் ஆனந்த எல்லையில் தனி பெருங் கூத்தின்
வந்த பேரின்ப வெள்ளத்துள் திளைத்து மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார்
தெண்ணிலா மலர்ந்த வேணியாய் உன்றன் திருநடம் கும்பிட பெற்று
மண்ணிலே வந்த பிறவியே எனக்கு வாலிதாம் இன்பம் ஆம் என்று
கண்ணில் ஆனந்த அருவி நீர் சொரி கைம்மலர் உச்சி மேற் குவித்து
பண்ணினால் நீடி அறிவரும் பதிகம் பாடினார் பரவினார் பணிந்தார்
தடுத்து முன் ஆண்ட தொண்டனார் முன்பு தனி பெரு தாண்டவம் புரிய
எடுத்த சேவடியார் அருளினால் தரளம் எறிபுனல் மறி திரை பொன்னி
மடுத்த நீள் வண்ண பண்ணை ஆரூரில் வருக நம்பால் என வானில்
அடுத்த போதினில் வந்து எழுந்தது ஓர் நாதம் கேட்டலும் அது உணர்ந்து
எழுந்தார்
ஆடு கின்றவர் பேர் அருளினால் நிகழ்ந்த பணி சென்னி மேற் கொண்டு
சூடு தங்கரங்கள் அஞ்சலி கொண்டு தொழு தொறும் புறவிடை
மாடு பேரொளியின் வளரும் அம்பலத்தை வலங் கொண்டு வணங்கினர் போந்து
நீடுவான் பணிய உயர்ந்த பொன் வரை போல் நிலை எழு கோபுரங் கடந்து
நின்று கோபுரத்தை நிலமுற பணிந்து நெடு திருவீதியை வணங்கி
மன்றலார் செல்வ மறுகினூடேகி மன்னிய திருப்பதி அதனில்
தென்திசை வாயில் கடந்து முன் போந்து சேட்படு திரு எல்லை இறைஞ்சி
கொன்றை வார் சடையான் அருளையே நினைவார் கொள்ளிட திருநதி கடந்தார்
புற தருவார் போற்றி இசைப்ப புரி முந்நூல் அணிமார்பர்
அறம் பயந்தாள் திருமுலை பால் அமுதுண்டு வளர்ந்தவர் தாம்
பிறந்து அருளும் பெரும்பேறு பெற்றது என முற்றுலகில்
சிறந்த புகழ கழுமலமாம் திருப்பதியை சென்று அணைந்தார்
பிள்ளையார் திரு அவதாரம் செய்த பெரும் புகலி
உள்ளு நான் மிதியேன் என்றூர் எல்லை புறம் வணங்கி
வள்ளலார் வலமாக வரும்பொழுதின் மங்கை இடங்
கொள்ளுமால் விடையானும் எதிர் காட்சி கொடுத்து அருள
மண்டிய பேரன்பினால் வன்தொண்டர் நின்று இறைஞ்சி
தெண் திரை வேலையில் மிதந்த திரு தேணி புர தாரை
கண்டு கொண்டேன் கயிலையினில் வீற்று இருந்த படி என்று
பண்டரும் இன்னிசை பயின்ற திரு பதிகம் பாடினார்
இருக்கோலம் இடும்பெருமான் எதிர் நின்றும் எழுந்து அருள
வெரு கோளுற்றது நீங்க ஆரூர் மேற் செல விரும்பி
பெருக்கோதம் சூழ்புறவ பெரும் பதியை வணங்கி போ
திருக்கோலக்கா வணங்கி செந்தமிழ் மாலைகள் பாடி
தேன் ஆர்க்கும் மலர சோலை திரு புன்கூர் நம்பர் பால்
ஆனா பேரன்பு மிக அடி பணிந்து தமிழ் பாடி
மானார்க்கும் கரதலத்தார் மகிழ்த இடம் பல வணங்கி
கானார்க்கும் மலர தடஞ் சூழ் காவிரியின் கரை அணைந்தார்
வம்புலா மலர் அலை மணிகொழித்து வந்திழியும்
பைம் பொன் வார் கரை பொன்னி பயில் தீர்த்தம் படிந்தாடி
தம்பிரான் மயிலாடுதுறை வணங்கி தாவில் சீர்
அம்பர் மாகாளத்தின் அமர்ந்த பிரான் அடி பணிந்தார்
மின்னார் செஞ்சடை அண்ணல் விரும்பு திருப்புகலூரை
முன்னாக பணிந்தேத்தி முதல்வன் தன் அருள் நினைந்து
பொன்னாரும் உத்தரியம் புரி முந்நூல் அணி மார்பர்
தென் நாவலூராளி திருவாரூர் சென்று அணைந்தார்
தேர் ஆரும் நெடு வீதி திருவாரூர் வாழ்வார்க்கு
ஆராத காதலின் நம் ஆரூரன் நாம் அழைக்க
வாரா நின்றான் அவனை மகிழ்ந்து எதிர் கொள்வீர் என்று
நீராரும் சடை முடிமேல் நிலவணிந்தார் அருள் செய்தார்
தம்பிரான் அருள் செய்த திரு தொண்டர் அது சாற்றி
எம் பிரானார் அருள் தான் இருந்த பரிசு இதுவானால்
நம் பிரானார் ஆவார் அவரன்றே எனும் நலத்தால்
உம்பர் நாடு இழிந்தது என எதிர் கொள்ள உடன் எழுந்தார்
மாளிகைகள் மண்டபங்கள் மருங்கு பெருங் கொடி நெருங்க
தாளின் நெடு தோரணமும் தழை கமுகும் குழை தொடையும்
நீள் இலைய கதலிகளும் நிறைந்த பசும் பொற்றசும்பும்
ஒளி நெடு மணிவிளக்கும் உயர் வாயில் தொறும் நிரைத்தார்
சோதி மணி வேதிகைகள் தூ நறுஞ் சாந்து அணி நீவி
கோதில் பொரி பொற் சுண்ணங் குளிர் தரள மணி பரப்பி
தாதிவர் பூ தொடை மாலை தண் பந்தர்களுஞ் சமைத்து
வீதிகள் நுண் துகள் அடங்க விரை பனிநீர் மிகத்தெளித்தார்
மங்கல கீதம் பாட மழை நிகர் தூரியம் முழங்க
செங் கயற் கண் முற்றிழையார் தெற்றி தொறும் நடம் பயில
நங்கள் பிரான் திருவாரூர் நகர் வாழ்வார் நம்பியை முன்
பொங்கெயில் நீள் திருவாயில் புறம் உறவந்து எதிர்கொண்டார்
வந்து எதிர் கொண்டு வணங்குவார் முன் வன்தொண்டர் அஞ்சலி கூப்பி
சிந்தை களிப்புற வீதியூடு செல்வார் திரு தொண்டர் தம்மை நோக்கி
எந்தை இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் என்னும்
சந்த இசை பதிகங்கள் பாடி தம் பெருமான் திருவாயில் சார்ந்தார்
வானுற நீள் திரு வாயில் நோக்கி மண்ணுற ஐந்து உறுப்பால் வணங்கி
தேனுறை கற்பக வாசமாலை தேவாசிரியன் தொழுது இறைஞ்சி
ஊனும் உயிரும் உருக்கும் அன்பால் உச்சி குவித்த செங்கைக஧ள்஡டும்
தூநறுங் கொன்றையான் மூலட்டானம் சூழ் திரு மாளிகை வாயில் புக்கார்
புற்றிடங் கொண்ட புராதனனை பூங்கோயில் மேய பிரானையார்க்கும்
பற்று இடம் ஆய பரம் பொருளை பார்ப்பதி பாகனை பங்கயத்தாள்
அர்ச்சனை செய்ய அருள் புரிந்த அண்ணலை மண்மிசை வீழ்ந்து இறைஞ்சி
நற்றமிழ் நாவலர் கோன் உடம்பால் நன்மையின் தன்மையை மெய்ம்மை பெற்றார்
அன்பு பெருக உருகி உள்ளம் அலைய அட்டாங்க பஞ்சாங்கம் ஆக
முன்பு முறைமை யினால் வணங்கி முடிவு இலா காதல் முதிர ஓங்கி
நன் புலன் ஆகிய ஐந்தும் ஒன்றி நாயகன் சேவடி எய்த பெற்ற
இன்ப வெள்ளத்திடை மூழ்கி நின்றே இன்னிசை வண்டமிழ் மாலை பாட
வாழிய மா மறை புற்றிடங்கொள் மன்னவனார் அருளாலோர் வாக்கு
தோழமை ஆக உனக்கு நம்மை தந்தனம் நாம் முன்பு தொண்டு கொண்ட
வேள்வியில் அன்று நீ கொண்ட கோலம் என்றும் புனைந்து நின் வேட்கை தீர
வாழி மண் மேல் விளையாடுவாய் என்று ஆரூரர் கேட்க எழுந்தது அன்றே
கேட்க விரும்பி வன்றொண்டர் என்றும் கேடு இலாதானை இறைஞ்சி நின்றே
ஆட்கொள வந்த மறையவனே ஆரூர் அமர்ந்த அருமணியே
வாட்கயல் கொண்ட கண்மங்கை பங்கா மற்று உன் பெரிய கருணை அன்றே
நாட்கமல பதம் தந்தது இன்று நாயினேனை பொருளாக என்றார்
என்று பல முறையால் வணங்கி எய்திய உள்ள களிப்பினொடும்
வென்றி அடல் விடைபோல் நடந்து வீதி விடங்க பெருமான் முன்பு
சென்று தொழுது துதித்து வாழ்ந்து திருமாளிகை வலம் செய்து போந்தார்
அன்று முதல் அடியார்கள் எல்லாம் தம்பிரான் தோழர் என்றே அழைத்தார்
மைவளர் கண்டர் அருளினாலே வண்டமிழ் நாவலர் தம் பெருமான்
சைவ விடங்கின் அணிபுனைந்து சாந்தமும் மாலையும் தாரும் ஆகி
மெய் வளர் கோலம் எல்லாம் பொலிய மிக்க விழுத்தவ வேந்தர் என்ன
தெய்வ மணி புற்றுளாரை பாடித்திளைத்து மகிழ்வொடுஞ் செல்லா நின்றார்
இதற்கு முன் எல்லை இல்லா திரு நகர் இதனுள் வந்து
முதல் பெருங் கயிலை ஆதி முதல்வர் தம் பங்கினாட்கு
பொது கடிந்து உரிமை செய்யும் பூங்குழற் சேடிமாரில்
கதிர்த்த பூண் ஏந்து கொங்கை கமலினி அவதரித்தாள்
கதிர் மணி பிறந்தது என்ன உருத்திர கணிகை மாராம்
பதியிலார் குலத்துள் தோன்றி பரவையார் என்னும் நாமம்
விதியுளி விளக்கத்தாலே மேதகு சான்றோர் ஆன்ற
மதியணி புனிதன் நன்னாள் மங்கல அணியால் சாற்றி
பரவினர் காப்பு போற்றி பயில் பெருஞ் சுற்றம் திங்கள்
விரவிய பருவம் தோறும் விழா அணி எடுப்ப மிக்கோர்
வர மலர் மங்கை இங்கு வந்தனள் என்று சிந்தை
தர வரு மகிழ்ச்சி பொங்க தளர் நடை பருவஞ் சேர்ந்தார்
மானிளம் பிணையோ தெய்வ வளரிள முகையோ வாச
தேனிளம் பதமோ வேலை திரை இளம் பவள வல்லி
கானிளம் கொடியோ திங்கள் கதிரிளங் கொழுந்தோ காமன்
தானிளம் பருவம் கற்கும் தனி இள தனுவோ என்ன
நாடும் இன் பொற்பு வாய்ப்பு நாளும் நாள் வளர்ந்து பொங்க
ஆடும் மென் கழங்கும் பந்தும் அம்மானை ஊசல் இன்ன
பாடும் இன்னிசையும் தங்கள் பனிமலை வல்லி பாதம்
கூடும் அன்பு உருக பாடும் கொள்கையோர் குறிப்பு தோன்ற
பிள்ளைமை பருவம் மீதாம் பேதைமை
அள்ளுதற்கு அமைந்த பொற் பால் அநங்கன் மெ தனங்கள் ஈட்டம்
கெள்ள மிக்குயர்வ போன்ற கொங்கைகோங் கரும்பை வீழ்ப்ப
உள்ள மெ தன்மை முன்னை உண்மையும் தோன்ற உய்ப்பார்
பாங்கியர் மருங்கு சூழ படரொளி மறுகு சூழ
தேங்கமழ் குழலின் வாசம் திசையெலாம் சென்று சூழ
ஓங்கு பூங் கோயில் உள்ளார் ஒருவரை அன்பி னோடும்
பூங்கழல் வணங்க என்றும் போதுவார் ஒருநா போந்தார்
அணி சிலம்பு அடிகள் பார் வென்றடி படுத்தனம் என்று ஆர்ப்ப
மணி கிளர் காஞ்சி அல்குல் வரி அர உலகை வென்ற
துணிவு கொண்டு ஆர்ப்ப மஞ்சு சுரி குழற் கழிய விண்ணும்
பணியும் என்றின வண்டு ஆர்ப்ப பரவையார் போதும் போதில்
புற்றிடம் விரும்பினாரை போற்றினர் தொழுது செல்வார்
சுற்றிய பரிசனங்கள் சூழ ஆளுடை நம்பி
நற் பெரும் பான்மை கூட்ட நகைபொதிந்து இலங்கு செவ்வாய்
விற் புரை நுதலின் வேற்கண் விளங்கு இழையவரை கண்டார்
கற்பகத்தின் பூங் கொம்போ காமன் தன் பெரு வாழ்வோ
பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ புயல் சுமந்து
விற் குவளை பவள மலர் மதிபூத்த விரை கொடியோ
அற்புதமோ சிவனருளோ அறியேன் என்று அதிசயித்தார்
ஓவிய நான்முகன் எழுத ஒண்ணாமை உள்ளத்தால்
மேவிய தன் வருத்தமுற விதித்ததொரு மணி விளக்கோ
மூவுலகின் பயனாகி முன் நின்றது என நினைந்து
நாவலர் காவலர் நின்றார் நடு படை
தண்டரள மணி தோடும் தகைத்தோடும் கடை பிறழும்
கெண்டை நெடுங் கண் வி கிளர் ஒளி பூண் உரவோனை
அண்டர் பிரான் திருவருளால் அயல் அறியா மனம் விரு
பண்டை விதி கடை கூட்ட பரவையாருங் கண்டார்
கண் கொள்ளா கவின் பொழிந்த திருமேனி கதிர் விரிப்ப
விண் கொள்ளா பேரொளியான் எதிர் நோக்கும் மெல்லியலுக்கு
எண் கொள்ளா காதலின் முன்பு எய்தாத ஒரு வேட்கை
மண் கொள்ளா நாண் மடம் அச்சம் பயிர்ப்பை வலிந்து எழலும்
முன்னே வந்து எதிர் தோன்றும் முருகனோ பெருகு ஒளியால்
தன்னேரில் மாரனோ தார் மார்பின் விஞ்சையனோ
மின் நேர் செஞ் சடை அண்ணல் மெய்யருள் பெற்று உடையவனோ
என்னே என் மனம் திரித்த இவன் யாரோ என நினைந்தார்
அண்ணல் அவன் தன் மருங்கே அளவு இறந்த காதலினால்
உண்ணிறையும் குணம் நான்கும் ஒரு புடை சாய்ந்தன எனினும்
வண்ண மலர கரும் கூந்தல் மட கொடியை வலிதாக்கி
கண் நுதலை தொழும் அன்பே கை கொண்டு செலவுய்ப்ப
பாங்கு ஓடி சிலை வளைத்து படை அநங்கன் விடு பாணம்
தாங்கோலி எம் மருங்கும் தடை செய்ய மடவரலும்
தேங்கோதை மலர குழல் மேல் சிறை வண்டு கலந்து ஆர
பூங்கோயில் அமர்ந்த பிரான் பொற் கோயில் போ புகுந்தான்
வன்தொண்டர் அது கண்டு என் மனம் கொண்ட மயில் இயலின்
இன் தொண்டை செங்கனி வாய் இளங் கொடி தான் யார் என்ன
அன்றங்கு முன் நின்றார் அவர் நங்கை பரவையார்
சென்றும்பர் தரத்தார்க்கும் சேர்வு அரியார் என செப்ப
பேர் பரவை பெண்மையினில் பெரும்
ஆர்பரவை அணி திகழும் மணி முறுவல் அரும் பரவை
சீர் பரவை ஆயினாள் திரு உருவின் மென் சாயல்
ஏர் பரவை இடை பட்ட என் ஆசை எழு
என்றினைய பலவும் நினைந்து எம்பெருமான் அருள் வகையான்
முன் தொடர்ந்து வருங் காதல் முறைமை யினால் தொடக்குண்டு
நன்று எனை கொண்டவர் பால் நண்ணுவன் என்றுள் மகிழ்ந்து
சென்றுடைய நம்பியும் போ தேவர் பிரான் கோயில் புக
பரவையார் வலங் கொண்டு பணிந்து ஏத்தி முன்னரே
புரவலனார் கோயிலின் நின்று ஒரு மருங்கு புறப்பட்டார்
விரவு பெருங் காதலினால் மெல்லியலார் தமை வேண்டி
அரவின் ஆரம் புனைந்தார் அடி பணிந்தார் ஆரூரர்
அவ்வாறு பணிந்து ஏத்தி அணி ஆரூர் மணி புற்றின்
மை வாழும் திரு மிடற்று வானவர் பால் நின்றும் போந்து
எவ்வாறு சென்றாள் என் இன்னுயிராம் அன்னம் என
செவ்வாய் வெண் நகை கொடியை தேடுவார் ஆயினார்
பாசமாம் வினை பற்று அறுப்பான் மிகும்
ஆசை மேலும் ஓர்
தேசின் மன்னி என் சிந்தை மயக்கிய
ஈசனார் அருள் என் நெறி சென்றதே
உம்பர் நாயகர் தங்கழல் அல்லது
நம்புமாறு அறியேனை நடுக்குற
வம்பு மால் செய்து வல்லியின் ஒல்கியின்று
எம் பிரான் அருள் எந்நெறி சென்றதே
பந்தம் வீடு தரும் பரமன் கழல்
சிந்தை ஆரவும் உன்னும் என் சிந்தையை
வந்து மால் செய்து மான் எனவே விழித்து
எந்தையார் அருள் நெறி சென்றதே
என்று சாலவும் ஆற்றலர் என்னுயிர்
நின்றது எங்கு என நித்தில பூண் முலை
மன்றல் வார்குழல் வஞ்சியை தேடுவான்
சென்று தேவ ஆசிரியனை சேர்ந்த பின்
காவி நேர் வரும் கண்ணியை நண்ணுவான்
யாவரோடும் உரையியம்பாது இருந்து
ஆவி நல்குவார் ஆரூரை ஆண்டவர்
பூவின் மங்கையை தந்து எனும் போழ்தினில்
நாட்டு நல்லிசை நாவலூரன் சிந்தை
வேட்ட மின்னிடை இன் அமுதத்தினை
காட்டுவன் கடலை கடைந்தது என்ப போல்
பூட்டும் ஏழ் பரி தேரோன் கடல் புக
எய்து மென் பெடையோடும் இரை தேர்ந்து உண்டு
பொய்கையிற் பகல் போக்கிய புள்ளினம்
வைகு சேக்கை கண் மேற்செல வந்தது
பையுள் மாலை தமியோர் புனிப்புற
பஞ்சின் மெல் அடி பாவையர் உள்ளமும்
வஞ்ச மாக்கள் தம் வல் வினையும் அரன்
அஞ்சு எழுத்தும் உணரா அறிவிலோர்
நெஞ்சும் என்ன இருண்டது நீண்ட வான்
மறுவில் சிந்தை வன்தொண்டர் வருந்தினால்
இறு மருங்குலார்க்கு யார் பிழைப்பார் என்று
நறு மலர கங்குல் நங்கை முன் கொண்ட புன்
முறுவல் என்ன முகிழ்த்தது வெண் நிலா
அரந்தை செய்வார்க்கு அழுங்கி தம் ஆருயிர்
வரன் கை தீண்ட மலர் குலமாதர் போல்
பரந்த வெம் பகற்கொல்கி பனி மதி
கரங்கள் தீண்ட அலர்ந்த கயிரவம்
தோற்றும் மன் உயிர்கட்கு எலாம் தூய்மையே
சாற்றும் இன்பமும் தண்மையும் தந்து போய்
ஆற்ற அண்டம் எலாம் பரந்து அண்ணல் வெண்
நீற்றின் பேரொளி போன்றது நீள் நிலா
வாவி புள்ளொலி மாறிய மாலையில்
நாவலூரரும் நங்கை பரவையாம்
பாவை தந்த படர் பெருங் காதலும்
ஆவி சூழ்ந்த தனிமையும் ஆயினார்
தந்திரு கண் எரிதழலிற் பட்டு
வெந்த காமன் வெளியே உரு செய்து
வந்து என் முன் நின்று வாளி தொடுப்பதே
எந்தையார் அருள் இவ் வண்ணமோ என்பார்
ஆர்த்தி கண்டும் என் மேல் நின்று அழல் கதிர்
தூர்ப்பதே எனை தொண்டு கொண்டு ஆண்டவர்
நீர தரங்க நெடுங் கங்கை நீள் முடி
சாத்தும் வெண் மதி போன்றிலை தண்
அடுத்து மேன் மேல் அலைத்து எழும் ஆழியே
தடுத்து முன் எனை ஆண்டவர் தாம் உண
கடுத்த நஞ்சுன் தரங கரங்களால்
எடுத்து நீட்டு நீ என்னை இன்று என் செயாய்
பிறந்தது எங்கள் பிரான் மலயத்து இடை
சிறந்து அணைந்தது தெய்வ நீர் நாட்டினில்
புறம் பணை தடம் பொங்கழல் வீசிட
மறம் பயின்றது எங்கோ தமிழ் மாருதம்
இன்ன தன்மைய பின்னும் இயம்புவான்
மன்னு காதலன் ஆகிய வள்ளல் பால்
தன் அரும் பெறல் நெஞ்சு தயங்க போம்
அன்னம் அன்னவள் செய்கை அறைகுவாம்
கனங்கொண்ட மணி கண்டர் கழல்
வணங்கி கணவனை முன் பெறுவாள் போல
இனங் கொண்ட சேடியர்கள் புடை சூழ எய்து பெருங் காதலோடும்
தனங் கொண்டு தளர் மருங்குற் பரவையும் வன்தொண்டர் பால்
தனித்து சென்ற மனங்கொண்டு வரும் பெரிய மயல்
கொண்டு தன்மணிமாளிகையை சார்ந்தாள்
சீறடி மேல் நூபுரங்கள் அறிந்தன போல் சிறிதளவே ஒலிப்ப முன்னர்
வேறொருவர் உடன் பேசாள் மெல்ல அடி ஒதுங்கி மாளிகையின் மேலால்
ஏறி மரக தூணத்து இலங்கு மணி வேதிகையில் நலங் கொள் பொற் கால்
மாறில் மலர சேக்கை மிசை மணி நிலா முன்றில் மருங்கிருந்தாள் வந்து
அவ்வளவில் அருகிருந்த சேடிதனை முகநோக்கி ஆரூர் ஆண்ட
மைவிரவு கண்டாரை நாம் வணங்க போம் மறுகெதிர் வந்தவரார் என்ன
இவ்வுலகில் அந்தணராய் இருவர் தேடொருவர் தாம் எதிர் நின்று ஆண்ட
சைவ முதல் திரு தொண்டர் தம்பிரான் தோழனார் நம்பி என்றாள்
என்றவுரை கேட்டலுமே எம் பிரான் தமரேயோ என்னா முன்னம்
வன் தொண்டர் பால் வைத்த மன காதல் அளவு இன்றி வளர்ந்து பொங்க
நின்ற நிறை நாண்முதலாங் குணங்களுடன் நீங்க உயிர் ஒன்றும் தாங்கி
மின் தயங்கு நுண் இடையாள் வெவ்வுயிர்த்து மெல் அணை மேல் வீழ்ந்த போது
ஆர நறுஞ் சேறு ஆட்டி அரும் பனி நீர் நறுந்திவலை அருகு வீசி
ஈர இள தளிர்க்குளிரி படுத்து மடவார் செய்த இவையும் எல்லாம்
பேரழலின் நெய் சொரிந்தால் ஒத்தன மற்று அதன் மீது சமிதை என்ன
மாரனும் தன் பெருஞ் சிலையின் வலிகாட்டி மலர் வாளி சொரிந்தான் வந்து
மலரமளி துயில் ஆற்றாள் வரும் தென்றல் மருங்கு மங்குல்
நிலவுமிழும் தழல் ஆற்றாள் நிறை ஆற்றும் பொறை ஆற்றா நீர்மை யோடும்
கலவ மயில் என எழுந்து கருங் குழலின் பரமாற்றா கையள் ஆகி
இலவ இதழ செந்துவர் வாய் நெகிழ்ந்து ஆற்றாமையின் வறிதே இன்ன சொன்னாள்
கந்தம் கமழ் மென் குழலீர் இது என் கலை வாண் மதியம் கனல்வான் எனை
சந்தின் தழலை பனி நீர் அளவி தடவுங் கொடியீர் தவிரீர்
வந்து இங்கு உலவும் நிலவும் விரையார் மலையானிலமும் எரியாய் வருமால்
அந்தண் புனலும் அரவும் விரவும் சடையான் அருள் பெற்றுடையார் அருளார்
புலரும் படி யன்றி இரவென்னளவும் பொறையும் நிறையும் இறையும் தரியா
உலரும் தனமும் மனமும் வினையேன் ஒருவேன் அளவோ பெரு வாழ்வுரையீர்
பலரும் புரியும் துயர்தான் இதுவோ படை மன் மதனார் புடை நின்று அகலார்
அலரும் நிலவும் மலரும் முடியார் அருள் பெற்று உடையார் அவரோ அறியார்
தேரும் கொடியும் மிடையும் மறுகில் திருவா ரூரிர் நீரே அல்லால்
ஆரென் துயரம் அறிவார் அடிகேள் அடியேன் அயரும் படியோ இதுதான்
நீரும் பிறையும் பொறிவாள் அரவின் நிரையும் நிரை வெண்டலையின் புடையே
ஊரும் சடையீர் விடைமேல் வருவீர் உமது அன்பிலர் போல் யானோ உறுவேன்
என்றின்னவெ பலவும் புகலும் இருளார் அளக சுருள் ஓதியையும்
வன் தொண்டரையும் படிமேல் வர முன்பு அருளுவான் அருளும் வகையார் நினைவார்
சென்று உம்பர்களும் பணியும் செல்வ திருவாரூர் வாழ் பெருமான் அடிகள்
அன்று அங்கு அவர் மன்றலை நீர் செயும் என்று அடியார் அறியும் படியால்
அருளி
மன்னும் புகழ் நாவலர் கோன் மகிழ மங்கை பரவை தன்னை தந்தோம்
இன்னவ்வகை நம் அடியார் அறியும் படியே உரை செய்தனம் என்று அருளி
பொன்னின் புரி புன் சடையன் விடையன் பொருமா கரியின் உரிவை புனைவான்
அன்ன நடையாள் பரவைக்கு அணியது ஆரூரன் பால் மணம் என்று அருள
கா துயரில் கவல்வார் நெஞ்சிற் கரையில் இருளும் கங்குல் கழி போம்
யாமத்து இருளும் புலர கதிரோன் எழுகாலையில் வந்து அடியார் கூடி
சே துணையாம் அவர் பேர் அருளை தொழுதே திரு நாவலர் கோன் மகிழ
தா குழலாள் பரவை வதுவை தகு நீர்மை யினால் நிகழ செய்தார்
தென் நாவலூர் மன்னன் தேவர் பிரான் திருவருளால்
மின்னாருங் கொடி மருங்குல் பரவை எனும் மெல்லியல் தன்
பொன் ஆரும் முலை ஓங்கல் புணர் குவடே சார்வாக
பன்னாளும் பயில் யோக பரம்பரையின் விரும்பினார்
தன்னையாளுடைய பிரான் சரணர விந்த மலர்
சென்னியிலும் சிந்தையிலும் மலர்வித்து திரு பதிகம்
பன்னு தமிழ தொடை மாலை பல சாத்தி பரவை எனும்
மின்னிடையாள் உடன் கூடி விளையாடி செல்கின்றார்
மாது உடன் கூட வைகி மாளிகை மருங்கு சோலை
போதலர் வாவி மாடு செய் குன்றின் புடையோர் தெற்றி
சீதள தரள பந்தர செழு தவிசி இழிந்து தங்கள்
நாதர் பூங் கோயில் நண்ணி கும்பிடும் விருப்பால் நம்பி
அந்தரத்து அமரர் போற்றும் அணி கிளர் ஆடை சாத்தி
சந்தனத்து அளறு தோய்ந்த குங்கு கலவை சாத்தி
சுந்தர சுழியஞ் சாத்தி சுடர் மணி கலன்கள் சாத்தி
இந்திர திருவின் மேலாம் எழில் மிக விளங்கி தோன்ற
கையினிற் புனை பொற்கோலும் காதினில் இலங்கு தோடும்
மெய்யினில் துவளு நூலும் நெற்றியில் விளங்கும் நீறும்
ஐயனுக்கு அழகு இதாம் என்று ஆயிழை மகளிர் போற்ற
சைவ மெ திருவின் கோலம் தழைப்ப வீதியினை சார்ந்தார்
நாவலூர் வந்த சைவ நற் தவ களிறே என்றும்
மேலவர் புரங்கள் செற்ற விடையவர்க்கு அன்பர் என்றும்
தாவில் சீர பெருமை ஆரூர் மறையவர் தலைவ என்றும்
மேவினர் இரண்டு பாலும் வேறு வேறாயம் போற்ற
கை கிடா குரங்கு கோழி சிவல் கவுதாரி பற்றி
பக்கம் முன் போதுவார்கள் பயில் மொழி பயிற்றி செல்ல
மிக்க பூம் பிடகை கொள்வோர் விரையடைப்பையோர் சூழ
மைக்கருங் கண்ணினார்கள் மறுக நீள் மறுகில் வந்தார்
பொலங் கல புரவி பண்ணி போதுவார் பின்பு போத
இலங்கொளி வல பொற்தோள் இடை இடைமிடைந்து தொங்கல்
நலங் கிளர் நீழல் சூழ நான்மறை முனிவரோடும்
அலங்கல தோளினான் வந்து அணைந்தான் அண்ணல் கோயில்
கண் நுதல் கோயில் தேவ ஆசிரியன் ஆம் காவணத்து
விண்ணவர் ஒழிய மண் மேல் மிக்க சீர் அடியார் கூடி
எண் இலார் இருந்த போதில் இவர்க்கு யான் அடியேன் ஆக
பண்ணு நாள் எந்நாள் என்று பரமர் தாள் பரவி சென்றார்
அடியவர்க்கு அடியன் ஆவேன் என்னும் ஆதரவு கூர
கொடி நெடும் கொற்ற வாயில் பணிந்து கை குவித்து புக்கார்
கடி கொள்பூங் கொன்றை வேய்ந்தார் அவர்க்கு எதிர் காண காட்டும்
படி எதிர் தோன்றி நிற்க பாதங்கள் பணிந்து பூண்டு
மன் பெரு திருமா மறை வண்டு சூழ்ந்து
அன்பர் சிந்தை அலர்ந்த செ தாமரை
நன் பெரும் பரம ஆனந்த
என் தரத்தும் அளித்து எதிர் நின்றன
ஞாலம் உய்ய நடம் மன்றுள் ஆடின
காலன் ஆருயிர் மாள கருத்தன
மாலை தாழ் குழல் மாமலையாள் செங் கை
சீலம் ஆக வருட சிவந்தன
நீதி மாதவர் நெஞ்சில் பொலிந்தன
வேதி யாதவர் தம்மை வேதிப்பன
சோதியாய் எழுஞ் சோதியு சோதிய
ஆதி மால் அயன் காணா அளவின
வேதம் ஆரணம் மேல் கொண்டு இருந்தன
பேதையேன் செய் பிழை பொறுத்து ஆண்டன
ஏதம் ஆனவை தீர்க்க இசைந்தன
பூத நாத நின் புண்டரீக பதம்
இன்னவாறு ஏத்து நம்பி கேறு சேவகனார் தாமும்
நிலை அவர்தாம் வேண்டும் அதனையே அருள வேண்டி
மன்னு சீர் அடியார் தங்கள் வழி தொண்டை உணர நல்கி
பின்னையும் அவர்கள் தங்கள் பெருமையை அருளி செய்வார்
பெருமையால் தம்மை ஒப்பார் பேணலால் எம்மை பெற்றார்
ஒருமையால் உலகை வெல்வார் ஊனம் மேல் ஒன்றும் இல்லார்
அருமையாம் நிலையில் நின்றார் அன்பினால் இன்பம் ஆர்வார்
இருமையும் கடந்து நின்றார் இவரை நீ அடைவாய் என்று
நாதனார் அருளி செய்ய நம்பி ஆரூரர் நான் இங்கு
ஏத தீர் நெறியை பெற்றேன் என்றெதிர் வணங்கி போற்ற
நீதியால் அவர்கள் தம்மை பணிந்து நீ நிறை சொன் மாலை
கோதிலா வாய்மையாலே பாடென அண்ணல் கூற
தன்னை ஆளுடைய நாதன் தான் அருள் செ கேட்டு
சென்னியால் வணங்கி நின்ற திருமுனைப்பாடி நாடர்
இன்னவாறு இன்ன பண்பு என்று ஏத்துகேன் அதற்கு யான் யார்
பன்னுபா மாலை பாடும் பரிசு எனக்கு அருள் செய் என்ன
தொல்லை மால் வரை பயந்த தூய் ஆள் தன் திரு பாகன்
அல்லல் தீர்ந்து உலகு உய்ய மறை அளித்த திரு வாக்கால்
தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் என்று
எல்லையில் வண் புகழாரை எடுத்து இசைப்பா மொழி என்றார்
மன்னு சீர் வயல் ஆரூர் மன்னவரை வன் தொண்டர்
சென்னியுற அடி வணங்கி திருவருள் மேல் கொள் பொழுதில்
முன்னம் மால் அயன் அறியா முதல்வர் தாம் எழுந்து அருள
நிலை கண்டு அடியவர் பால் சார்வதனுக்கு அணைகின்றார்
தூரத்தே திரு கூட்டம் பல முறையால் தொழுது அன்பு
சேர தாழ்ந்து எழுந்து அருகு சென்று எய்தி நின்று அழியா
வீரத்தார் எல்லார்க்கும் தனி தனி வேறு அடியேன் என்று
ஆர்வத்தால் திரு தொண்ட தொகை பதிகம் அருள் செய்வார்
தம் பெருமான் கொடுத்த மொழி முதல் ஆக தமிழ் மாலை
செம் பொருளால் திரு தொண்ட தொகை ஆன திரு பதிகம்
உம்பர் பிரான் தான் அருளும் உணர்வு பெற உலகேத்த
எம் பெருமான் வன் தொண்டர் பாடி அவர் எதிர் பணிந்தார்
உம்பர் நாயகர் அடியார் பேர் உவகை தாம் எய்த
நம்பி ஆரூரர் திரு கூட்டத்தின் நடுவணைந்தார்
தம்பிரான் தோழர் அவர் தாம் மொழிந்த தமிழ் முறையே
எம்பிரான் தமர்கள் திரு தொண்டு ஏத்தல் உறுகின்றேன்
திருமலை சருக்கம் முற்றிற்று
சருக்கம் ஒன்றுக்கு திருவிருத்தம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

தில்லை வாழ் அந்தணர் சருக்கம்
தில்லை வாழ் அந்தணர் புராணம்
திருச்சிற்றம்பலம்
ஆதியாய் நடுவுமாகி அளவு இலா அளவுமாகி
சோதியாய் உணர்வுமாகி தோன்றிய பொருளுமாகி
பேதியா ஏகம் ஆகி பெண்ணுமாய் ஆணும்
போதியா நிற்கும் தில்லை பொது நடம் போற்றி
கற்பனை கடந்த சோதி கருணையே உருவம் ஆகி
அற்புத கோலம் நீடி அரு மறை சிறத்தின் மேலாம்
சிற்பர வியோமம் ஆகும் திரு சிற்றம்பலத்துள் நின்று
பொற்புடன் நடம் செய்கின்ற பூங் கழல் போற்றி
போற்றி நீள் தில்லை வாழ் அந்தணர் திறம் புகலல் உற்றேன்
நீற்றினால் நிறைந்த கோல நிருத்தனுக்கு உரிய தொண்டாம்
போற்றினார் பெருமைக்கு எல்லை ஆயினார் பேணி வாழும்
ஆற்றினார் பெருகும் அன்பால் அடித்தவம் புரிந்து வாழ்வார்
பொங்கிய திருவில் நீடும் பொற்புடை பணிகள் ஏந்தி
மங்கல தொழில்கள் செய்து மறைகளால் துதித்து மற்றும்
தங்களுக்கு ஏற்ற பண்பில் தரும் பணி தலை நின்று உய்த்தே
அங்கணர் கோயில் உள்ளா அகம் படி தொண்டு செய்வார்
வரு முறை எரி மூன்று ஓம்பி மன்னுயிர் அருளால் மல்க
தருமமே பொருளா கொண்டு தத்துவ நெறியில் செல்லும்
அருமறை நான்கினோடு ஆறு அங்கமும் பயின்று வல்லார்
திரு நடம் புரிவார்க்கு ஆளாம் திருவினால் சிறந்த சீரார்
மறுவிலா மரபின் வந்து மாறிலா ஒழுக்கம் பூண்டார்
அறு தொழில் ஆட்சியாலே அருங்கலி நீக்கி உள்ளார்
உறுவது நீற்றின் செல்வம் என கொளும் உள்ளம் மிக்கார்
பெறுவது சிவன் பால் அன்பாம் பேறு என பெருகி வாழ்வார்
ஞானமே முதலாம் நான்கும் நவை அற தெரிந்து மிக்கார்
தானமும் தவமும் வல்லார் தகுதியின் பகுதி சார்ந்தார்
ஊனமேல் ஒன்றும் இல்லார் உலகெலாம் புகழ்ந்து போற்றும்
மானமும் பொறையும் தாங்கி மனை அறம் புரிந்து வாழ்வார்
செம்மையால் தணிந்த சிந்தை தெய்வ வேதியர்கள் ஆனார்
மும்மை ஆயிரவர் தாங்கள் போற்றிட முதல்வனாரை
இம்மையே பெற்று வாழ்வார் இனி பெறும் பேறு ஒன்று இல்லார்
தம்மையே தமக்கு ஒப்பான நிலைமையால் தலைமை சார்ந்தார்
இன்றிவர் பெருமை எம்மால் இயம்பலாம் எல்லைத்தாமோ
தென் தமிழ பயனாய் உள்ள திரு தொண்ட தொகை முன் பாட
அன்று வன் தொண்டர் தம்மை அருளிய ஆரூர் அண்ணல்
முன் திரு வாக்கால் கோத்த முதல் பொருள் ஆனார் என்றால்
அகல் இடத்து உயர்ந்த தில்லை அந்தணர் அகிலம் எல்லாம்
புகழ் திரு மறையோர் என்றும் பொது நடம் போற்றி வாழ
நிகழ் திரு நீல கண்ட குயவனார் நீடு வாய்மை
திகழும் அன்புடைய தொண்டர் செய் தவம் கூறல் உற்றாம்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

திருநீலகண்ட நாயனார் புராணம்
திருச்சிற்றம்பலம்
வேதியர் தில்லை மூதூர் வே கோவர் குலத்து வந்தார்
மாதொரு பாகம் நோக்கி மன்னு சிற்றம்பலத்தே
ஆதியும் முடிவும் இல்லா அற்பு தனி கூத்து ஆடும்
நாதனார் கழல்கள் வாழ்தி வழிபடும் நலத்தின் மிக்கார்
பொய் கடிந்து அறத்தின் வாழ்வார் புனற் சடை முடியார்க்கு அன்பர்
மெய் அடியார் கட்கு ஆன செயும் விருப்பில் நின்றார்
வையகம் போற்றும் செய்கை மனை அறம் புரிந்து வாழ்வார்
சைவ மெ திருவின் சார்வே பொருள் என சாரு நீரார்
அளவிலா மரபின் வாழ்க்கை மண் கலம் அமுதுக்கு ஆக்கி
வளரிளம் திங்கள் கண்ணி மன்றுளார் அடியார்க்கு என்றும்
உள மகிழ் சிறப்பின் மல்க ஓடு அளித்து ஒழுகும் நாளில்
இளமை மீது ஊர இன்ப துறையினில் எளியர் ஆனார்
அவர் தம் கண் மனைவியாரும் அருந்ததி கற்பின் மிக்கார்
புவனங்கள் உய்ய ஐயர் பொங்கு நஞ்சு உண்ண யாம் செய்
தவ நின்று அடுத்தது என்ன தகைந்து தான் தரித்தது என்று
சிவன் எந்தை கண்டம் தன்னை திரு நீல
ஆன தம் கேள்வர் அங்கோர் பரத்தை பால் அணைந்து நண்ண
மானமுன் பொறாது வந்த ஊடலால் மனையின் வாழ்க்கை
ஏனைய எல்லாஞ் செய்தே உடன் உறைவு இசையார் ஆனார்
தேனலர் கமல போதில் திருவினும் உருவம் மிக்கார்
மூண்ட புலவி தீர்க்க அன்பனார் முன்பு சென்று
பூண்டயங்கு இளமென் சாயல் பொன் கொடி அனையார் தம்மை
வேண்டுவ இரந்து கூறி மெய்யுற அணையும் போதில்
தீண்டுவீர் ஆயின் எம்மை திரு நீல கண்டம் என்றார்
ஆதியார் நீல கண்டத்து அளவு தாம் கொண்ட ஆர்வம்
பேதியா ஆணை கேட்ட பெரியவர் பெயர்ந்து நீங்கி
ஏதிலார் போல நோக்கி எம்மை என்றதனால் மற்றை
மாதரார் தமையும் என் தன் மனத்தினும் தீண்டேன் என்றார்
கற்புறு மனைவியாரும் கணவனார்க்கு ஆன எல்லாம்
பொற்புற மெய் உறாமல் பொருந்துவ போற்றி செய்ய
இல் புறம்பு ஒழியாது அங் கண் இருவரும் வேறு வைகி
அன்புறு புணர்ச்சி இன்மை அயலறியாமை வாழ்ந்தார்
இளமையின் மிக்குளார்கள் இருவரும் அறிய நின்ற
அளவில் சீர் ஆணை போற்றி ஆண்டுகள் பலவும் செல்ல
வள மலி இளமை நீங்கி வடிவுறு மூப்பு வந்து
தளர்வொடு சாய்ந்தும் அன்பு தம்பிரான் திறத்து சாயார்
நெறி ஒழுகும் நாளில் எரி தளர்ந்தது என்ன நீண்ட
மின்னொளிர் சடையோன் தானு தொண்டரை விளக்கங் காண
நன்னெறி இதுவாம் என்று ஞாலத்தார் விரும்பி உய்யும்
நெறி காட்டும் ஆற்றல் அருள் சிவ யோகி ஆகி
கீள் ஒடு கோவணம் சாத்தி கேடு இலா
வாள் விடு நீற்று ஒளி மலர்ந்த மேனி மெல்
தோளொடு மார்பிடை துவளும் நூலுடன்
நீளொளி வளர் திரு முண்ட நெற்றியும்
நெடுஞ் சடை கரந்திட நெறித்த பம்பையும்
விடுங் கதிர் முறுவல் வெண்ணிலவும் மேம்பட
இடும் பலி பாத்திரம் ஏந்து கையராய்
நடந்து வேட்கோவர் தம் மனையில் நண்ணினார்
நண்ணிய தவ சிவ யோக நாதரை
கண்ணுற நோக்கிய காதல் அன்பர் தாம்
புண்ணி தொண்டராம் என்று போற்றி செய்து
எண்ணிய வகையினால் எதிர் கொண்டு ஏத்தினார்
பிறை வளர் சடை முடி பிரானை தொண்டர் என்று
உறை உளில் அணைந்து பேர் உவகை கூர்ந்திட
முறைமையின் வழி பட மொழிந்த பூசைகள்
நிறை பெரு விருப்பொடு செய்து நின்ற பின்
எம்பிரான் யான் செயும் பணி எது என்றனர்
வம்புலா மலர சடை வள்ளல் தொண்டனார்
உம்பர் நாயகனும் இவ்வோடு நின்பால் வைத்து
நம்பி நீ தருக நாம் வேண்டும் போது என்று
தன்னை ஒப்பு அரியது தலத்து தன் உழை
துன்னிய யாவையும் தூய்மை செய்வது
பொன்னினும் மணியினும் போற்ற வேண்டுவது
இன்ன தன்மையது இது வாங்கு நீ என
தொல்லை வேட்கோவர் தம் குலத்துள் தோன்றிய
மல்கு சீர தொண்டனார் வணங்கி வாங்கி கொண்டு
ஒல்லையின் மனையில் ஓர் மருங்கு காப்புறும்
எல்லையில் வைத்து வந்து இறையை எய்தினார்
வைத்த பின் மறையவர் ஆகி வந்து அருள்
நித்தனார் நீங்கிட நின்ற தொண்டரும்
உய்த்து உடன் போய் விடை கொண்டு மீண்டனர்
அத்தர் தாம் அம்பலம் அணைய மேவினார்
சால நாள் கழிந்த பின்பு தலைவனார் தாம் முன் வைத்த
கோலமார் ஓடு தன்னை குறி இடத்து அகல போக்கி
சீலமார் கொள்கை என்றும் திருந்து வேட்கோவர் தம்பால்
வாலி தாம் நிலைமை காட்ட முன்பு போல் மனையில் வந்தார்
வந்த பின் தொண்டனாரும் எதிர் வழி பாடு செய்து
சிந்தை செய்து அருளில் எங்கள் செய்தவம் என்று நிற்ப
முந்தை நாள் உன்பால் வைத்த மெய்யொளி விளங்கும் ஓடு
தந்து நில் என்றான் எல்லாம் தான் வைத்து வாங்க வல்லான்
என்றவர் விரைந்து கூற இருந்தவர் ஈந்த ஓடு
சென்று முன் கொணர்வான் புக்கார் கண்டிலர் திகைத்து நோக்கி
நின்றவர் தம்மை கேட்டார் தேடியும் காணார் மாயை
ஒன்றும் அங்கு அறிந்திலார் தாம் உரைப்பது ஒன்று இன்றி நின்றார்
மறையவன் ஆகி நின்ற மலைமகள் கேள்வன் தானும்
உறை உளில் புக்கு நின்ற ஒரு பெரு தொண்டர் கேட்ட
இறையில் இங்கு எய்த புக்காய் தாழ்த்தது என் என்ன வந்து
கறை மறை மிடற்றினானை கை தொழுது உரைக்கல் உற்றார்
இழையணி முந்நூல் மார்பின் எந்தை நீர் தந்து போன
விழை தகும் ஓடு வைத்த வேறு இடம் தேடி காணேன்
பழைய மற்று அதனில் நல்ல பாத்திரம் தருவன் கொண்டு
பிழையினை பொறுக்க வேண்டும் பெரும என்று இறைஞ்சி நின்றார்
சென்னியால் வணங்கி நின்ற தொண்டரை செயிர்த்து நோக்கி
என்னிது மொழிந்தவா நீ யான் வைத்த மண் ஓடு அன்றி
பொன்னினால் அமைத்து தந்தாய் ஆயினுங் கொள்ளேன் போற்ற
முன்னை நான் வைத்த ஓடே கொண்டு வா என்றான் முன்னோன்
கேடு இலா பெரியோய் என்பால் வைத்தது கெடுதலாலே
நாடியும் காணேன் வேறு நல்லது ஓர் ஓடு சால
நீடு செல்வது தான் ஒன்று தருகிறேன் எனவும் கொள்ளாது
ஊடி நின்று உரைத்தது என் தன் உணர்வு எலாம் ஒழித்தது என்ன
ஆவதென் உன்பால் வைத்த அடைக்கல பொருளை வௌவி
பாவகம் பலவும் செய்து பழிக்கு நீ ஒன்றும் நாணாய்
யாவரும் காண உன்னை வளைத்து நான் கொண்டே அன்றி
போவதும் செய்யேன் என்றான் புண்ணி பொருளாய் நின்றான்
வளத்தினால் மிக்க ஓடு வௌவினேன் அல்லேன் ஒல்லை
உளத்தினும் களவிலாமைக்கு என் செய்கேன் உரையும் என்ன
களத்து நஞ்சு ஒளித்து நின்றான் காதல் உன் மகனை பற்றி
குளத்தினில் மூழ்கி போ என்று அருளினான் கொடுமை இல்லான்
ஐயர் நீர் அருளி செய்த வண்ணம் யான் செய்வதற்கு
பொய்யில் சீர புதல்வன் இல்லை என் செய்கேன் புகலும் என்ன
மையறு சிறப்பின் மிக்க மனையவள் தன்னை பற்றி
மொய் அலர் வாவி புக்கு மூழ்குவாய் என மொழிந்தார்
கங்கை நதி கரந்த சடை கரந்து அருளி எதிர் நின்ற
வெங் கண் விடையவர் அருள வேட்கோவர் உரைசெய்வார்
எங்களில் ஓர் சபதத்தால் உடன் மூழ்க இசைவு இல்லை
பொங்கு புனல் யான்மூழ்கி தருகின்றேன் போதும் என
தந்தது முன் தாராதே கொள்ளாமைக்கு உன் மனைவி
தளிர செங் கைப்பற்றி அலை புனலில் மூழ்காதே
சிந்தை வலித்து இருக்கின்றாய் தில்லை வாழ் அந்தணர்கள்
வந்து இருந்த பேர் அவையில் மன்னுவன் யான் என சென்றார்
நல் ஒழுக்கம் தலை நின்றார் நான் மறையின் துறை போனார்
தில்லை வாழ் அந்தணர்கள் வந்து இருந்த திருந்தவையில்
எல்லை இலான் முன் செல்ல இருந்தொண்டர் அவர் தாமும்
மல்கு பெரும் காதலினால் வழக்கு மேலிட்டு அணைந்தார்
அந்தணன் ஆம் எந்தை பிரான் அரு மறையோர் முன் பகர்வான்
இந்த வேட்கோவன்பால் யான் வைத்த பாத்திரத்தை
தந்து ஒழியான் கெடுத்தானேல் தன் மனைவி கைப்பற்றி
வந்து மூழ்கியும் தாரான் வலி செய்கின்றான் என்றார்
நறை கமழும் சடை முடியும் நாற்றோளும் மு கண்ணும்
கறை மருவும் திரு மிடரும் கரந்து அருளி எழுந்து அருளும்
மறையவன் இத்திறம் மொழிய மா மறையோர் உரை செய்வார்
நிறையுடைய வேட்கோவர் நீர் மொழியும் புகுந்தது என
நீணிதியாம் இது என்று நின்ற இவர் தரும் ஓடு
பேணி நான் வைத்த இடம் பெயர்ந்து கரந்தது காணேன்
பூண் அணி நூல் மணி மார்பீர் புகுந்த பரிசு இது என்று
சேணிடையும் தீங்கு அடையா திருத்தொண்டர் உரைசெய்தார்
திருவுடை அந்தணாளர் செப்புவார் திகழ்ந்த நீற்றின்
உருவுடை இவர் தாம் வைத்த ஓட்டினை கொடுத்தீர் ஆனால்
தருமிவர் குளத்தில் மூழ்கி தருக என்று உரைத்தார் ஆகில்
மருவிய மனைவியொடு மூழ்குதல் வழக்கே என்றார்
அரு தவ தொண்டர் தாமும் அந்தணர் மொழி கேட்டு
திருந்திய மனைவியாரை தீண்டாமை செப்ப மாட்டார்
பொருந்திய வகையால் மூழ்கி தருகின்றேன் போதும் என்று
பெரு தவ முனிவரோடும் பெயர்ந்து தம் மனையை சார்ந்தார்
மனைவியார் தம்மை கொண்டு மறை சிவ யோகியார் முன்
சினவிடை பாகர் மேவும் திருப்புலீ சுரத்து முன்னர்
நனை மலர சோலை வாவி நண்ணி தம் உண்மை காப்பார்
புனை மணி வேணு தண்டின் இரு தலை பிடித்து புக்கார்
தண்டிரு தலையும் பற்றி புகும் அவர் தம்மை நோக்கி
வெண் திரு நீற்று முண்ட வேதியர் மாதை தீண்டி
கொண்டு உடன் மூழ்கீர் என்ன கூடாமை பாரோர் கேட்க
பண்டு தம் செய்கை சொல்லி மூழ்கினார் பழுது இலாதார்
வாவியின் மூழ்கி ஏறும் கணவரும் மனைவி யாரும்
மேவிய மூப்பு நீங்கி விருப்புறும் இளமை பெற்று
தேவரும் முனிவர் தாமும் சிறப்பொடு பொழியு தெய்வ
பூவின் மா மழையின் மீள மூழ்குவார் போன்று தோன்ற
அந்நிலை அவரை காணும் அதிசயம் கண்டார் எல்லாம்
முன்நிலை நின்ற வேத முதல் வரை கண்டார் இல்லை
இந்நிலை இருந்த வண்ணம் என் என மருண்டு நின்றார்
துன்னிய விசும்பின் ஊடு துணையுடன் விடை மேல் கொண்டார்
கண்டனர் கைகளார தொழுதனர் கலந்த காதல்
அண்டரும் ஏத்தினார்கள் அன்பர்தம் பெருமை நோக்கி
விண்டரும் பொலிவு காட்டி விடையின் மேல் வருவார் தம்மை
தொண்டரும் மனைவியாரும் தொழுது உடன் போற்றி நின்றார்
மன்றுளே திரு கூத்து ஆடி அடியவர் மனைகள் தோறும்
சென்றவர் நிலைமை காட்டும் தேவர்கள் தேவர் தாமும்
வென்ற ஐம் புலனால் மிக்கீர் விருப்புடன் இருக்க நம்பால்
என்றும் இவ் இளமை நீங்காது என்று எழுந்து அருளினாரே
விறலுடை தொண்டனாரும் வெண்ணகை செவ்வாய் மென் தோள்
அறல் இயல் கூந்தல் ஆளாம் மனைவியும் அருளின் ஆர்ந்த
திறலுடை செய்கை செய்து சிவலோகம் அதனை எய்தி
பெறல் அரும் இளமை பெற்று பேர் இன்பம் உற்றார் அன்றே
அயல் அறியாத வண்ணம் அண்ணலார் ஆணை உய்த்த
மயலில் சீர தொண்டனாரை யான் அறிவகையால் வாழ்த்தி
புயல் வளர் மாடம் நீடும் பூம்புகார் வணிகர் பொய்யில்
செயல் இயற் பகையார் செய்த திரு தொண்டு செப்பல் உற்றேன்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

இயற்பகை நாயனார் புராணம்
திருச்சிற்றம்பலம்
சென்னி வெண்குடை நீடு அநபாயன் திரு குலம் புகழ் பெருக்கிய சிறப்பின்
மன்னு தொல் புகழ் மருத நீர் நாட்டு வயல் வளம் தர இயல்பினில் அளித்து
பொன்னி நல் நதி மிக்க நீர் பாய்ந்து புணரி தன்னையும் புனித மாக்குவதோர்
நன்னெடும் பெரும் தீர்த்த முன்னுடைய நலம் சிறந்தது வளம் புகார் நகரம்
குல பதி குடி முதல் வணிகர் அளவில் செல்வத்து வளமையின் அமைந்தார்
செக்கர் வெண் பிறை சடையவர் அடிமை திறத்தின் மிக்கவர் மறை சிலம்படியார்
மிக்க சீர் அடியார்கள் யார் எனினும் வேண்டும் யாவையும் இல்லை என்னாதே
கடல் படி நிகழ முன் கொடுக்கும் இயல்பின் நின்றவர் உலகு இயற் பகையார்
ஆறு சூடிய ஐயர் மெய் அடிமை அளவிலாத ஓர் உளம் நிறை அருளால்
நீறு சேர் திரு மேனியார் மனத்து நினைத்த யாவையும் வினைப்பட முடித்து
மாறு இலாத நன்னெறியினில் விளங்கும் மனை அறம் புரி மகிழ்ச்சியின் வந்த
பேறெலாம் அவர் ஏவின செய்யும் பெருமையே என பேணி வாழ் நாளில்
ஆயும் நுண் பொருள் ஆகியும் வெளியே அம்பலத்துள் நின்று ஆடுவார் உம்பர்
நாயகிக்கும் அஃது அறியவோ பிரியா நங்கைதான் அறியாமையோ அறியோம்
தூய நீறு பொன் மேனியில் விளங்க தூர்த்த வேடமும் தோன்ற வேதியராய்
மாய வண்ணமே கொண்டு தம் தொண்டர் மாறாத வண்ணமும் காட்டுவான் வந்தார்
வந்து தண்புகார் வணிகர் தம் மறுகின் மருங்கு இயற் பகையார் மனை புகுந்த
எந்தை எம்பிரான் அடியவர் அணைந்தார் என்று நின்றதோர் இன்ப ஆதரவால்
சிந்தை அன்பொடு சென்று எதிர் வணங்கி சிறப்பின் மிக்க அர்ச்சனைகள் முன் செய்து
முந்தை எம் பெரும் தவத்தினாலென்கோ முனிவர் இங்கு எழுந்து அருளியது
என்றார்
என்று கூறிய இயற்பகையார் முன் எய்தி நின்ற கைதவ மறையோர்
கொன்ற வார்சடையார் அடியார்கள் குறித்து வேண்டின குணம் என கொண்டே
ஒன்றும் நீர் எதிர் மறாது உவந்து அளிக்கும் உண்மை கேட்டு நும் பாலொன்று வேண்டி
இன்று நான் இங்கு வந்தனன் அதனுக்கு இசையலாம் எனில் இயம்பலாம் என்றார்
என்ன அவ்வுரை கேட்டு இயற்பகையார் யாதும் ஒன்றும் என் பக்கல் உண்டாகில்
அன்னது எம்பிரான் அடியவர் உடைமை ஐயம் இல்லை நீர் அருள் செயும் என்ன
மன்னு காதல் உன் மனைவியை வேண்டி வந்தது இங்கு என அங்கணர் எதிரே
சொன்ன போதிலும் முன்னையின் மகிழ்ந்து தூய தொண்டனார் தொழுது உரை செய்வார்
இது எனக்கு முன்பு உள்ளதே வேண்டி எம் பிரான் செய்த பேறு
கதுமென சென்று தம் மனைவாழ் வாழ்க்கை கற்பின் மேம்படு காதலி யாரை
விதி மண குல மடந்தை இன்றுனை இம் மெ தவர்க்கு நான் கொடுத்தனன் என்ன
மது மலர குழலாள் மனைவியார் கலங்கி மனம் தெளிந்த பின் மற்று இது
மொழிவார்
இன்று நீர் எனக்கு அருள் செய்தது இதுவேல் என உயிர்க்கு ஒரு நாத
உரைத்தது
ஒன்றை நான் செயும் அத்தனை அல்லால் உரிமை வேறு உளதோ எனக்கு என்று
தன் தனிப்பெருங் கணவரை வணங்க தாழ்ந்து தொண்டனார் தாம் எதிர் வணங்க
சென்று மாதவன் சேவடி பணிந்து திகைத்து நின்றனள் திருவினும் பெரியாள்
மாது தன்னை முன் கொடுத்த மாதவர் தாம் மனம் மகிழ்ந்து பேர் உவகையின் மலர்ந்தே
யாது நான் இனி செய் பணி என்றே இறைஞ்சி நின்றவர் தம் எதிர் நோக்கி
சாதி வேதியர் ஆகிய தலைவர் தையல் தன்னை யான் தனி கொடு போ
காதல் மேவிய சுற்றமும் பதியும் கடக்க நீ துணை போதுக என்றார்
என்று அவர் அருளி செய்ய யானே முன் செய் குற்றேவல்
ஒன்றியது தன்னை என்னை உடையவர் அருளி செய்ய
நின்றது பிழையாம் என்று நினைந்து வேறு இடத்து புக்கு
பொன் திகழ் அறுவை சாத்தி பூங்கச்சு பொலிய வீக்கி
வாளொடு பலகை ஏந்தி வந்து எதிர் வணங்கி மிக்க
ஆளரி ஏறு போல்வார் அவரை முன் போக்கி பின்னே
தோளிணை துணையே ஆக போயினார் துன்னினாரை
நீளிடை பட முன் கூடி நிலத்திடை வீழ்த்த நேர்வார்
மனைவியார் சுற்றத்தாரும் வள்ளலார்
இனையது ஒன்றி யாரே செய்தார் இயற்பகை பித்தன் ஆனால்
புனை இழை தன்னை கொண்டு போவதாம் ஒருவன் என்று
துனை பெரும் பழியை மீட்பான் தொடர்வதற்கு எழுந்து சூழ்வார்
வேலொடு வில்லும் வாளும் சுரிகையும் எடுத்து மிக்க
காலென விசையில் சென்று கடிநகர் புறத்து போகி
பாலிரு மருங்கும் ஈண்டி பரந்த ஆர்வம் பொங்க
மால் கடல் கிளர்ந்தது என்ன வந்து எதிர் வளைத்து கொண்டார்
வழி விடும் துணை பின் போத வழித்துணை ஆகி உள்ளார்
கழி பெரும் காதல் காட்டி காரிகை உடன் போம் போதில்
அழிதகன் போகேல் ஈண்டவ் வருங் குல கொடியை விட்டு
பழிவிட நீ போ என்று பகர்ந்து எதிர் நிரந்து வந்தார்
மறை முனி அஞ்சினான் போல் மாதினை பார்க்க மாதும்
இறைவனே அஞ்ச வேண்டாம் இயற்பகை வெல்லும் என்ன
அறை கழல் அண்ணல் கேளா அடியனேன் அவரை எல்லாம்
தறை இடை படுத்துகின்றேன் தளர்ந்து அருள் செய்யேல் என்று
பெரு விறல் ஆளி என்ன பிறங்கு எரி சிதற நோக்கி
பரிபவ பட்டு வந்த படர் பெருஞ் சுற்ற தாரை
ஒருவரும் எதிர் நில்லாமே ஓடி போ பிழையும் அன்றேல்
எரி சுடர் வாளில் கூறா துடிக்கின்றீர் என்று நேர்ந்தார்
ஏட நீ என் செய்தாயால் இத்திறம் இயம்பு கின்றாய்
நாடுறு பழியும் ஒன்னார் நகையையும் நாணாய் இன்று
பாடவம் உரைப்பது உன்றன் மனைவியை பனவற்கு ஈந்தோ
கூடவே மடிவது அன்றி கொடுக்க யாம் ஓட்டோ ம் என்றார்
மற்றவர் சொன்ன மாற்றம் கேட்டலும் மனத்தின் வந்த
செற்ற முன் பொங்க உங்கள் உடல் துணி எங்கும் சிந்தி
முற்று நும் உயிரை எல்லாம் முதல் விசும்பு ஏற்றி கொண்டு
நற்றவர் தம்மை போக விடுவேன் என்று எழுந்தார் நல்லோர்
நேர்ந்தவர் எதிர்ந்த போது நிறைந்த சுற்றத்தாரும்
சார்ந்தவர் தம் முன் செல்லார் தையலை கொண்டு பெற்றம்
ஊர்ந்தவர் படிமேற் செல்ல உற்று எதிர் உடன்று பொங்கி
ஆர்ந்த வெஞ் சினத்தால் மேல் சென்று அடர்ந்து எதிர் தடுத்தார் அன்றே
சென்று அவர் தடுத்த போதில் இயற்பகையார் முன் சீறி
வன்றுணை வாளே யாக சாரிகை மாறி வந்து
துன்றினர் தோளும் தாளும் தலைகளும் துணித்து வீழ்த்து
வென்றடு புலியேறு அன்ன அமர் விளையாட்டில் மிக்கார்
மூண்டு முன் பலராய் வந்தார் தனி வந்து முட்டினார்கள்
வேண்டிய திசைகள் தோறும் வேறு அமர் செய்
ஆண்டகை வீரர் தாமே அனைவர்க்கும் அனைவர் ஆகி
காண்டகு விசையில் பாய்ந்து கலந்து முன் துணித்து வீழ்த்தார்
சொரிந்தன குடல்கள் எங்கும் துணிந்தன உடல்கள்
விரிந்தன தலைகள் எங்கும் மிடைந்தன கழுகும்
எரிந்தன விழிகள் எங்கும் எதிர்ப்பவர் ஒருவர் இன்றி
திரிந்தனர் களனில் எங்கும் சிவன் கழல் புனைந்த வீரர்
மாடலை குருதி பொங்க மடிந்த செங் களத்தின் நின்றும்
ஆடுறு செயலின் வந்த கிளைஞரோடு அணைந்தார் தம்மில்
ஓடினார் உள்ளார் உய்ந்தார் ஒழிந்தவர் ஒழிந்தே மாண்டார்
நீடிய வாளும் தாமும் நின்றவர் தாமே நின்றார்
திருவுடை மனைவியாரை கொடுத்து இடை செறுத்து முன்பு
வரு பெரும் சுற்றம் எல்லாம் வாளினால் துணித்து மாட்டி
அருமறை முனியை நோக்கி அடிகள் நீர் அஞ்சா வண்ணம்
பொருவருங் கானம் நீங்க விடுவன் என்று உடனே போந்தார்
இருவரால் அறிய ஒண்ணா ஒருவர் பின் செல்லும் ஏழை
பொரு திறல் வீரர் பின்பு போக முன் போகும் போதில்
அருமறை முனிவன் சாய்க்காடு அதன் மருங்கு அணைய மேவி
திரு மலி தோளினானை மீள் என செப்பினானே
தவ முனி தன்னை மீள சொன்ன பின் தலையால் ஆர
அவன் மலர பதங்கள் சூடி அஞ்சலி கூப்பி நின்று
புவனம் மூன்று உய்ய வந்த பூசுரன் தன்னை ஏத்தி
இவன் அருள் பெற பெற்றேன் என்று இயற்பகையாரும் மீண்டார்
செய்வதற்கு அரிய செய்கை செய்த நல் தொண்டர் போக
மை திகழ் கண்டன் எண்தோள் மறையவன் மகிழ்ந்து நோக்கி
பொய் தரும் உள்ளம் இல்லான் பார்க்கிலன் போனான் என்று
மெய் தரு சிந்தையாரை மீளவும் அழைக்கல் உற்றான்
இயற்பகை முனிவா ஓலம் ஈண்டு நீ வருவாய்
அயர்ப்பு இலாதானே ஓலம் அன்பனே
செயற்கருஞ் செய்கை செய்த தீரனே ஓலம் என்றான்
மயக்கறு மறை ஓலிட்டு மால் அயன் தேட நின்றான்
அழைத்த பேர் ஓசை கேளா அடியனேன் வந்தேன்
பிழைத்தவர் உளரேல் இன்னும் பெருவலி தடக்கை வாளின்
இழைத்தவர் ஆகின்றார் என்று இயற்பகையார் வந்து எய்த
குழை பொலி காதினானும் மறைந்தனன் கோலம் கொள்வான்
சென்றவர் முனியை காணார் சேயிழை தன்னை கண்டார்
பொன்திகழ் குன்று வெள்ளி பொருப்பின் மேல் பொலிந்தது என்ன
தன்துணை உடனே வானில் தலைவனை விடை மேல் கண்டார்
நின்றிலர் தொழுது வீழ்ந்தார் நிலத்தினின்று எழுந்தார் நேர்ந்தார்
சொல்லுவது அறியேன் வாழி தோற்றிய தோற்றம் போற்றி
வல்லை வந்து அருளி என்னை வழித்தொண்டு கொண்டாய் போற்றி
எல்லையில் இன்ப வெள்ளம் எனக்கு அருள் செய்தாய் போற்றி
தில்லை அம்பலத்துள் ஆடும் சேவடி போற்றி என்ன
விண்ணிடை நின்ற வெள்ளை விடையவர் அடியார் தம்மை
எண்ணிய உலகு தன்னில் இப்படி நம்பால் அன்பு
பண்ணிய பரிவு கண்டு மகிழ்ந்தனம் பழுது இலாதாய்
நண்ணிய மனைவி யோடு நம்முடன் போதுக என்று
திருவளர் சிறப்பின் மிக்க திரு தொண்டர் தமக்கு தேற்றம்
மருவிய தெய்வ கற்பின் மனைவியார் தமக்கு தக்க
பெருகிய அருளின் நீடு பேறு அளித்து இமையோர் ஏத்த
பொரு விடை பாகர் மன்னும் பொற் பொது அதனுள் புக்கார்
வானவர் பூவின் மாரி பொழிய மா மறைகள் ஆர்ப்ப
ஞான மா முனிவர் போற்ற நல மிகு சிவலோகத்தில்
ஊனமில் தொண்டர் கும்பிட்டு உடன் உறை பெருமை பெற்றார்
ஏனைய சுற்றத்தாரும் வானிடை இன்பம் பெற்றார்
இன்புறு தாரம் தன்னை ஈசனுக்கு அன்பர் என்றே
துன்புறாது உதவும் தொண்டர் பெருமையை தொழுது வாழ்த்தி
அன்புறு மனத்தால் நாதன் அடியவர்க்கு அன்பு நீடு
மன்புகழ் இளைசை மாறன் வளத்தினை வழுத்தல் உற்றேன்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

இளையான் குடி மாற நாயனார் புராணம்
திருச்சிற்றம்பலம்
அம் பொன் நீடிய அம்பலத்தினில் ஆடுவார் அடி சூடுவார்
தம்பிரான் அடிமை திறத்து உயர் சால்பின் மேன்மை தரித்துளார்
நம்பு வாய்மையில் நீடு சூத்திர நற் குலம் செய் தவத்தினால்
இம்பர் ஞாலம் விளக்கினார் இளையான் குடி பதி மாறனார்
ஏரின் மல்கு வளத்தினால் வரும் எல்லை இல்லதொர் செல்வமும்
நீரின் மல்கிய வேணியார் அடியார் திறத்து நிறைந்ததோர்
சீரின் மல்கிய அன்பின் மேன்மை திருந்த மன்னிய சிந்தையும்
பாரின் மல்க விரும்பி மற்றவை பெற்ற நீடு பயன் கொள்வார்
ஆரம் என்பு புனைந்த ஐயர் தம் அன்பர் என்பதோர் தன்மையால்
நேர வந்தவர் யாவர் ஆயினும் நித்தம் ஆகிய பத்தி முன்
கூர வந்து எதிர் கொண்டு கைகள் குவித்து நின்று செவி புலத்து
ஈரம் மென் மதுர பதம் பரிவு எய்த முன்னுரை செய்தபின்
கொண்டு வந்து மனை புகுந்து குலாவு பாதம் விளக்கியே
மண்டு காதலின் ஆதனத்து இடைவைத்து அருச்சனை செய்த பின்
உண்டி நாலு விதத்தில் ஆறு சுவை திறத்தினில் ஒப்பு இலா
அண்டர் நாயகர் தொண்டர் இச்சையில் அமுது செய்ய அளித்துளார்
ஆளும் நாயகர் அன்பர் ஆனவர் அளவு இலார் உளம் மகிழவே
நாளும் நிறைந்து வந்து நுகர்ந்த தன்மையின்
நீளும் மா நிதியின் பரப்பு நெருங்கு செல்வம் நிலாவி எண்
தோளினார் அளகைக்கு இருத்திய தோழனார் என வாழும் நாள்
செல்வம் மேவிய நாளில் இச்செயல் செய்வது அன்றியும் மெய்யினால்
அல்லல் நல்குரவு ஆன போதினும் வல்லர் என்று அறிவிக்கவே
மல்லல் நீடிய செல்வம் மெல்ல மறைந்து நாள் தொறும் மாறி வந்து
ஒல்லையில் வறுமை பதம் புக உன்னினார் தில்லை மன்னினார்
இன்னவாறு வளம் சுருங்கவும் எம்பிரான் இளையான் குடி
மன்னன் மாறன் மனம் சுருங்குதல் இன்றி உள்ளன மாறியும்
தன்னை மாறி இறுக்க உள்ள கடன்கள் தக்கன கொண்டு பின்
முன்னை மாறில் திருப்பணி கண் முதிர்ந்த கொள்கையர் ஆயினார்
மற்று அவர் செயல் இன்ன தன்மையது ஆக மால் அயனான
கொற்ற ஏனமும் அன்னமும் தெரியாத கொள்கையர் ஆயினர்
பெற்றம் ஊர்வதும் இன்றி நீடிய பேதையாளுடன்
நற்றவத்தவர் வேடமே கொடு ஞாலம் உய்ந்திட நண்ணினார்
மாரி காலத்து இரவினில் வைகியோர்
தாரிப்பு இன்றி பசி தலை கொள்வது
பாரித்து இல்லம் அடைந்த பின் பண்புற
வேரித்து ஆரான் விருந்து எதிர் கொண்டனன்
ஈர மேனியை நீக்கி இடங் கொடுத்து
ஆர இன்னமுது ஊட்டுதற்கு ஆசையால்
தார மாதரை நோக்கி தபோதனர்
தீரவே பசித்தார் செய்வது என் என்று
நமக்கு முன்பு இங்கு உணவிலை ஆயினும்
குலக்கொடி பாகர்க்கு இனியவர்
தமக்கு நாம் இன் அடிசில் தகவுற
அமைக்கு மாறு எங்ஙனே அணங்கே என
மாது கூறுவாள் மற்று ஒன்றுங் காண்கிலேன்
ஏதிலாரும் இனி தருவார் இல்லை
போதும் வைகிற்று போம் இடம் வேறில்லை
தீது செய்வினை யேற்கு என் செயல்
செல்லல் நீங்க பகல் வித்திய செந்நெல்
மல்லல் நீர் முளை வாரி கொடு வந்தால்
வல்லவாறு அமுது ஆக்கலும் ஆகும் மற்று
அல்லது ஒன்று அறியேன் என்று அயர்வுற
மற்ற மாற்றம் மனைவியார் கூற முன்
பெற்ற செல்வம் என பெரிது உள் மகிழ்ந்து
உற்ற காதலினால் ஒரு பட்டனர்
சுற்று நீர் வயல் செல்ல தொடங்குவார்
பெருகு வானம் பிறங்க மழை பொழிந்து
அருகு நாப்பண் அறிவருங் கங்குல் தான்
கருகு மை இருளின் கணம் கட்டு விட்டு
உருகு கின்றது போன்றது உலகு எலாம்
எண்ணும் இவ் உலகத்தவர் யாவரும்
துண்ணெனும்படி தோன்ற முன் தோன்றிடில்
வண்ண நீடிய மைக்குழம்பாம் என்று
நண்ணல் செய்யா நடுவிருள் யாமத்து
உள்ளம் அன்பு கொண்டு ஊக்கவோர் பேரிடா
கொள்ள முன் கவித்து குறியின் வழி
புள்ளும் உறங்கும் வயல் புக போயினார்
வள்ளலார் இளையான் குடி மாறனார்
காலினால் தடவி சென்று கைகளால்
சாலி வெண் முளை நீர் வழி சார்ந்தன
கோலி வாரி இடா நிறை கொண்டு
மேல் எடுத்து சுமந்து ஒல்லை மீண்டார்
வந்த பின் மனைவியாரும் வாய்தலின் நின்று வாங்கி
சிந்தையில் விரும்பி நீரில் சேற்றினை அலம்பி ஊற்றி
வெம் தழல் அடுப்பின் மூட்ட விறகு இல்லை என்ன மேலோர்
அந்தமில் மனையில் நீடும் அலகினை அறுத்து வீழ்த்தார்
முறித்து அவை அடுப்பின் மாட்டி முளை வித்து பதம் முன் கொள்ள
வறுத்த பின் அரிசியாக்கி வாக்கிய உலையில் பெய்து
வெறுப்பில் இன் அடிசில் ஆக்கிமேம் படு கற்பின் மிக்கார்
கறிக்கு இனி என் செய்கோம் என்று இறைஞ்சினார் கணவனாரை
வழி வரும் இளைப்பின் ஓடும் வருத்திய பசியினாலே
அழிவுறும் ஐயன் என்னும் அன்பினில் பொலிந்து சென்று
குழி நிரம்பாத புன்செ குறும்பயிர் தடவி பாச
பழி முதல் பறிப்பார் போல பறித்து அவை கறிக்கு நல்க
மனைவியார் கொழுநர் தந்த மனம் மகிழ் கறிகள் ஆய்ந்து
புனல் இடை கழுவி தக்க புனித பாத்திரத்து கைம்மை
வினையினால் வேறு கறி அமுது ஆக்கி
நினைவினால் குறையை நேர்ந்து திருவமுது அமைத்து நின்று
கணவனார் தம்மை நோக்கி கறி அமுது ஆன காட்டி
இணை இலாதாரை ஈண்ட அமுது செய்விப்போம் என்ன
உணவினால் உணர ஒண்ணா ஒருவரை உணர்த்த வேண்டி
அணைய முன் சென்று நின்று அங்கு அவர் துயில் அகற்றல் உற்றார்
அழுந்திய இடருள் நீங்கி அடியனேன் உய்ய என்பால்
எழுந்தருள் பெரியோய் ஈண்டு அமுது செய்து அருள்க என்று
தொழும்பனார் உரைத்த போதில் சோதியாய் எழுந்து தோன்ற
செழு திரு மனைவியாரும் தொண்டரும் திகைத்து நின்றார்
மாலயற்கு அரிய நாதன் வடிவு ஒரு சோதி ஆக
சாலவே மயங்குவார்க்கு சங்கரன் தான் மகிழ்ந்தே
ஏலவார் குழலாள் தன்னோடு இடப வாகனனாய் தோன்றி
சீலமார் பூசை செய்த திரு தொண்டர் தம்மை நோக்கி
அன்பனே அன்பர் பூசை அளித்த நீ அணங்கினோடும்
என் பெரும் உலகம் எய்தி இருநிதி கிழவன் தானே
முன் பெரு நிதியம் ஏந்தி மொழி வழி ஏவல் கேட்ப
இன்பம் ஆர்ந்து இருக்க என்றே செய்தான் எவர்க்கும் மிக்கான்
இப்பரிசு இவர்க்கு தக்க வகையினால் இன்பம் நல்கி
முப்புரம் செற்றார் அன்பர் முன்பு எழுந்து அருளி போனார்
பெரியவர் தம் தூய அடி இணை தலை மேல் கொண்டு
மெ பொருள் சோதி வேந்தன் செயலினை விளம்பல் உற்றேன்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

மெ பொருள் நாயனார் புராணம்
திருச்சிற்றம்பலம்
சேதி நன்னாட்டு நீடு திரு கோவலூரின் மன்னி
மாதொரு பாகர் அன்பின் வழி வரு மலாடர் கோமான்
வேத நல் நெறியின் வாய்மை விளங்கிட மேன்மை பூண்டு
காதலால் ஈசர்க்கு அன்பர் கருத்து அறிந்து ஏவல் செய்வார்
அரசியல் நெறியின் வந்த அறநெறி வழாமல் காத்து
வரை நெடும்ந்தோளால் வென்று மாற்றலர் முனைகள் மாற்றி
உரை திறம்பாத நீதி ஓங்கு நீர்மையினின் மிக்கார்
திரை செய் நீர்ச்சடையான் அன்பர் வேடமே சிந்தை செய்வார்
மங்கையை பாகமாக உடையவர் மன்னும் கோயில்
எங்கணும் பூசை நீடி ஏழிசை பாடல் ஆடல்
பொங்கிய சிறப்பின் மல்க போற்றுதல் புரிந்து வாழ்வார்
தங்கள் நாயகருக்கு அன்பர் தாளலால் சார்பு ஒன்று இல்லார்
தேடிய மாடு நீடு செல்வமும் தில்லை மன்றுள்
ஆடிய பெருமான் அன்பர்க்கு ஆவன ஆகும் என்று
நாடிய மனத்தினோடு நாயன்மார் அணைந்த போது
கூடிய மகிழ்ச்சி பொங குறைவு அற கொடுத்து வந்தார்
இன்னவாறு ஒழுகும் நாளில் இகல் திறம் புரிந்து ஓர் மன்னன்
அன்னவர் தம்மை வெல்லும் ஆசையால் அமர் மேற்கொண்டு
பொன் அணி ஓடை யானை பொரு பரி காலாள் மற்றும்
பன் முறை இழந்து தோற்று பரிபவ பட்டு போனான்
இப்படி இழந்த மாற்றான் இகலினால் வெல்ல மாட்டான்
மெ பொருள் வேந்தன் சீலம் அறிந்து வெண் நீறு சாத்தும்
அப்பெரு வேடம் கொண்டே அற்றத்தில் வெல்வான் ஆக
செப்பரு நிலைமை எண்ணி திரு கோவலூரில் சேர்வான்
மெய் எல்லாம் நீறு பூசி வேணிகள் முடித்து கட்டி
கையினில் படை கரந்த புத்த கவளி ஏந்தி
மை பொதி விளக்கே என்ன மனத்தினுள் கறுப்பு வைத்து
பொய் தவ வேடம் கொண்டு புகுந்தனன் முத்த நாதன்
மா தவ வேடம் கொண்ட வன்கணான் மாடம் தோறும்
கோதை சூழ் அளக பார குழை கொடி ஆட மீது
சோதி வெண் கொடிகள் ஆடுஞ் சுடர் நெடு மறுகில் போகி
சேயதிர் பெருமான் கோயில் திருமணி வாயில் சேர்ந்தான்
கடை உடை காவலாளர் கை தொழுது ஏற நின்றே
உடையவர் தாமே வந்தார் உள் எழுந்து அருளும் என்ன
தடை பல புக்க பின்பு தனி நின்ற
இடை தெரிந்து அருள வேண்டும் துயில் கொள்ளும் இறைவன் என்றான்
என்று அவன் கூற கேட்டே யான் அவற்கு உறுதி கூற
நின்றிடு நீயும் என்றே அவனையும் நீக்கி புக்கு
பொன் திகழ் பள்ளி கட்டில் புரவலன் துயில மாடே
மன்றலங் குழல் மென் சாயல் மா தேவி இருப்ப கண்டான்
கண்டு சென்று அணையும் போது கதும் என இழிந்து தேவி
வண்டலர் மாலையானை எழுப்பிட உணர்ந்து மன்னன்
அண்டர் நாயகனார் தொண்டராம் என குவித்த செங்கை
கொண்டு எழுந்து எதிரே சென்று கொள்கையின் வணங்கி நின்று
மங்கலம் பெருக மற்று என் வாழ்வு வந்து அணைந்தது என்ன
இங்கு எழுந்து அருள பெற்றது என் கொலோ என்று கூற
உங்கள் நாயகனார் முன்னம் உரைத்த ஆகம நூல் மண்மேல்
எங்கும் இலாதது ஒன்று கொடு வந்தேன் இயம்ப என்றான்
பேறு எனக்கு இதன் மேல் உண்டோ பிரான் அருள் செய்த இந்த
மாறிலா ஆகமத்தை வாசித்து அருள வேண்டும் என்ன
நாறு பூங் கோதை மாது தவிரவே நானும் நீயும்
வேறு இடத்து இருக்க வேண்டும் என்று அவன் விளம்ப வேந்தன்
திருமகள் என்ன நின்ற தேவியார் தம்மை நோக்கி
பரிவுடன் விரைய அந்தப்புரத்திடை போக ஏவி
தரு தவ வேடத்தானை தவிசின் மேல் இருத்தி தாமும்
இரு நிலத்து இருந்து போற்றி இனி அருள் செய்யும் என்றான்
கை தலத்து இருந்த வஞ்ச கவளிகை மடி மேல் வைத்து
புத்தகம் அவிழ்ப்பான் போன்று புரிந்த அவர் வணங்கும் போதில்
பத்திரம் வாங்கி தான் முன் நினைத்த பரிசே செய்ய
மெ தவ வேடமே மெய்ப்பொருள் என தொழுது வென்றார்
மறைத்தவன் புகுந்த போதே மனம் அங்கு வைத்த தத்தன்
இறை பொழுதின் கண் கூடி வாளினால் எறியல் உற்றான்
நிறைத்த செங் குருதி சோர வீழ்கின்றார் நீண்ட கையால்
தறை படும் அளவில் தத்தா நமர் என தடுத்து வீழ்ந்தார்
வேதனை எய்தி வீழ்ந்த வேந்தரால் விலக்க பட்ட
தாதனா தத்தன் தானும் தலையினால் வணங்கி தாங்கி
யாது நான் செய்கேன் என்ன எம்பிரான் அடியார் போக
மீதிடை விலக்கா வண்ணம் கொண்டு போய் விடு நீ என்றார்
திறம் அறிந்தார் எல்லாம் அரசனை தீங்கு செய்த
பொ தவன் தன்னை கொல்வோம் என புடை சூழ்ந்த போது
தத்தனும் அவரை எல்லாம் தடுத்து உடன் கொண்டு போவான்
தவன் போக பெற்றது இறைவனது ஆணை என்றான்
அவ்வழி அவர்கள் எல்லாம் அஞ்சியே அகன்று நீங்க
செவ்விய நெறியில் தத்தன் திருநகர் கடந்து போந்து
கை வடி நெடுவாள் ஏந்தி ஆளுறா கானஞ் சேர
வெவ் வினை கொடியோன் தன்னை விட்ட பின் மீண்டு போந்தான்
மற்று அவன் கொண்டு போன வஞ்சனை வேடத்தான் மேல்
செற்றவர் தம்மை நீக்கி தீது இலா நெறியில் விட்ட
சொல் திறம் கேட்க வேண்டி சோர்கின்ற ஆவி தாங்கும்
கொற்றவன் முன்பு சென்றான் கோமகன் குறிப்பில் நின்றான்
சென்று அடி வணங்கி நின்று செய் தவ வேடம் கொண்டு
வென்றவற்கு இடையூறு இன்றி விட்டனன் என்று கூற
இன்று எனக்கு ஐயன் செய்தது யார் செய வல்லார் என்று
நின்றவன் தன்னை நோக்கி நிறை பெரும் கருணை கூர்ந்தார்
அரசியல் ஆயத்தார்க்கும் அழிவுறும் காதலார்க்கும்
விரவிய செய்கை தன்னை விளம்புவார் விதியினாலே
பரவிய திரு நீற்று அன்பு பாது காத்து உய்ப்பீர் என்று
புரவலர் மன்றுள் ஆடும் பூங் கழல் சிந்தை செய்தார்
தொண்டனார்க்கு பாவை துணைவனார் அவர் முன் தம்மை
கண்டவாறு எதிரே நின்று காட்சி தந்தருளி மிக்க
அண்ட வானவர் கட்கு எட்டா அருள் கழல் நீழல் சேர
கொண்டவாறு இடை அறாமல் கும்பிடும் கொள்கை ஈந்தார்
இன்னுயிர் செகு கண்டும் எம்பிரான் அன்பர் என்றே
நன் நெறி காத்த சேதி நாதனார் பெருமை தன்னில்
என் உரை செய்தேன் ஆக இகல் விறன் மிண்டர் பொற் தாள்
சென்னி வைத்து அவர் முன் செய்த திரு தொண்டு செப்பல் உற்றேன்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

விறன்மிண்ட நாயனார் புராணம்
திருச்சிற்றம்பலம்
விரை செய் நறும் பூ தொடை இதழி வேணியார் தம் கழல் பரவி
பரசுபெறு மா தவ முனிவன் பரசு ராமன் பெறு நாடு
திரை செய் கடலின் பெருவளவனும் திருந்து நிலனின் செழு வளனும்
வரையின் வளனும் உடன் பெருகி மல்கு நாடு மலை
வாரி சொரியும் கதிர் முத்தும் வயல்மென் கரும்பில் படு
வேரல் விளையும் குளிர் முத்தும் வேழ மருப்பின் ஒளிர்
மூரல் என சொல் வெண் முத்த நகையார் தெரிந்து முறை கோக்கும்
சேரர் திரு நாட்டு ஊர்களின் முன் சிறந்த மூதூர் செங்குன்றூர்
என்னும் பெயரின் விளங்கி உலகேறும் பெருமை உடையது தான்
அன்னம் பயிலும் வயல் உழவின் அமைந்த வளத்தால் ஆய்ந்த மறை
சொன்ன நெறியின் வழி ஒழுகும் தூய குடிமை தலை நின்றார்
மன்னும் குலத்தின் மா மறை நூல் மரபிற் பெரியோர் வாழ் பதியாம்
பொன் பதியின் இடை வேளாண் குலத்தை விளக்க அவதரித்தார்
செப்பற்கு அரிய பெரும் சீர்த்தி சிவனார் செய்ய கழல் பற்றி
பற்றினையும் அற எறிவார் எல்லை தெரிய ஒண்ணாதார்
மெ பத்தர்கள் பால் பரிவுடையார் எம்பிரானார் விறன் மிண்டர்
நதியும் மதியும் புனைந்த சடை நம்பர் விரும்பி நலம் சிறந்த
பதிகள் எங்கும் கும்பிட்டு படரும் காதல் வழி செல்வார்
முதிரும் அன்பில் பெரும் தொண்டர் முறைமை நீடு திரு கூட்டத்து
எதிர் முன் பரவும் அருள் பெற்றே இறைவர் பாதம் தொழ பெற்றார்
பொன் தாழ் அருவி மலைநாடு கடந்து கடல் சூழ் புவி எங்கும்
சென்று ஆள் உடையார் அடியவர் தம் திண்மை ஒழுக்க நடை செலுத்தி
வன் தாள் மேரு சிலை வளைத்து புரங்கள் செற்ற வைதிக தேர்
நின்றார் இருந்த திருவாரூர் பணிந்தார் நிகர் ஒன்று இல்லாதார்
திருவார் பெருமை திகழ்கின்ற தேவ ஆசிரியன் இடை பொலிந்து
மருவா நின்ற சிவனடியார் தம்மை தொழுது வந்து அணையாது
ஒருவாறு ஒதுங்கும் வன் தொண்டன் புறகென்று உரைப்ப சிவன் அருளால்
பெருகா நின்ற பெரும் பேறு பெற்றார் மற்றும் பெற நின்றார்
சேண் ஆர் மேரு சிலை வளைத்த சிவனார் அடியார் திருக்கூட்டம்
பேணாது ஏகும் ஊரனுக்கும் பிரானாம் தன்மை பிறை சூடி
பூணார் அரவம் புனைந்தார்க்கும் புறகு என்று உரைக்க மற்றவர் பால்
கோணா அருளை பெற்றார் மற்று இனியார் பெருமை கூறுவார்
ஞாலம் உய்ய நாம் நம்பி சைவ நன்
சீலம் திரு தொண்ட தொகை முன் பாட செழு மறைகள்
ஓலம் இடவும் உணர்வு அரியார் உடனாம் உளது என்றால்
ஆலம் அமுது செய்த பிரான் அடியார் பெருமை அறிந்தாரார்
ஒக்க நெடு நாள் இவ் உலகில் உயர்ந்த சைவ பெரு தன்மை
தொக்க நிலைமை நெறி போற்றி தொண்டு பெற்ற விறன் மிண்டர்
தக்க வகையால் தம் பெருமான் அருளினாலே தாள் நிழல்ற்கீழ்
மிக்க கண நாயகர் ஆகும் தன்மை பெற்று விளங்கினார்
வேறு பிரிதென் திரு தொண்ட தொகையால் உலகு விளங்க வரும்
பேறு தனக்கு காரணராம் பிரானார் விறன் மிண்டரின் பெருமை
கூறும் அளவு என் அளவிற்றே அவர் தாள் சென்னி மேற் கொண்டே
ஆறை வணிகர் அமர் நீதி அன்பர் திரு தொண்டு அறைகுவாம்
திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

அமர் நீதி நாயனார் புராணம்
திருச்சிற்றம்பலம்
சீரில் நீடிய செம்பியர் பொன்னி நன்னாட்டு
காரின் மேவிய களி அளி மலர பொழில் சூழ்ந்து
தேரின் மேவிய செழு மணிவீதிகள் சிறந்து
பாரில் நீடிய பெருமை சேர் பதி பழையாறை
மன்னும் பதி வணிகர் தம் குலத்தினில் வந்தார்
பொன்னும் முத்தும் நல் மணிகளும் பூந்துகில் முதலா
நிலத்தினும் உள்ளன வரு வளத்து இயல்பால்
நிலைக்கண் மிக்கவர் அமர் நீதியார் என்பார்
சிந்தை செய்வது சிவன் கழல் அல்லது ஒன்று இல்லார்
அந்தி வண்ணர் தம் அடியவர்க்கு அமுது செய்வித்து
கந்தை கீள் உடை கோவணம் கருத்து அறிந்து உதவி
வந்த செல்வத்தின் வளத்தினால் வரும் பயன் கொள்வார்
முக்கண் நக்கராம் முதல்வனார் அவர் திரு நலூர்
மிக்க சீர் வளர் திருவிழா விருப்புடன் வணங்கி
தக்க அன்பர்கள் அமுது செய் திருமடம் சமைத்தார்
தொக்க சுற்றமும் தாமும் வந்து அணைந்தனர் தூயோர்
மருவும் அன்பொடு வணங்கினர் மணி கண்டர் நல்லூர
திரு விழா அணி சேவித்து மடத்து
பெருகும் இன்பமோடு அமுது செய்திட அருள் பேணி
உருகு சிந்தையின் மகிழ்ந்து உறை நாள் இடை ஒருநாள்
பிறை தளிர் சடை பெருந்தகை பெரும் திரு நல்லூர
கறை களத்து இறை கோவண பெருமை முன் காட்டி
நிறைத்த அன்புடை தொண்டர்க்கு நீடருள் கொடுப்பான்
மறை குலத்தொரு பிரமசாரியின் வடிவு ஆகி
செய்ய புன் சடை கரந்தது ஓர் திருமுடி சிகையும்
சைவ வெண் திரு நீற்று முண்டகத்து ஒளி தழைப்பும்
மெய்யின் வெண் புரி நூலுடன் விளங்கும் மான் தோலும்
கையில் மன்னிய பவித்திர மரகத கதிரும்
முஞ்சி நாணுற முடிந்தது சாத்திய அரையில்
தஞ்ச மா மறை கோவண ஆடையின் அசைவும்
வஞ்ச வல் வினை கறுப்பறும் மனத்து அடியார்கள்
நெஞ்சில் நீங்கிடா அடி மலர் நீணிலம் பொலிய
கண்டவர்க்கு உறு காதலின் மனம் கரைந்து உருக
தொண்டர் அன்பு எனும் தூ நெறி வெளி படுப்பார்
தண்டின் மீது திரு கோவணம் நீற்றுப்பை தருப்பை
கொண்டு வந்து அமர் நீதியார் திரு மடம் குறுக
வடிவு காண்டலும் மனத்தினும் மிக முகம் மலர்ந்து
கடிது வந்து எதிர் வணங்கி இம் மடத்தினில் காணும்
படி இலாத நீர் அணைய முன் பயில் தவம் என்னோ
அடியனேன் செய்தது என்றனர் அமர்நீதி அன்பர்
பேணும் அன்பரை நோக்கி நீர் பெருகிய அடியார்க்கு
ஊணும் மேன்மையில் ஊட்டி நற் கந்தை கீள் உடைகள்
யாணர் வெண் கிழி கோவணம் ஈதல் கேட்டு உம்மை
காண வந்தனம் என்றனன் கண் நுதல் கரந்தோன்
என்று தம்பிரான் அருள் செய திரு மடத்தே
நன்று நான் மறை நற்றவர் அமுது செய்து அருள
துன்று வேதியர் தூய்மையின் அமைப்பதும் உளதால்
இன்று நீரும் இங்கு அமுது செய்து அருளும் என்று இறைஞ்ச
வணங்கும் அன்பரை நோக்கி அம் மறையவர் இசைந்தே
அணங்கு நீர பொன்னி ஆடி நான் வர மழை வரினும்
உணங்கு கோவணம் வைத்து நீர் தாரும் என்று ஒரு வெண்
குணங் கொள் கோவணம் தண்டினில் அவிழ்த்து கொடுப்பார்
ஓங்கு கோவண பெருமையை உள்ளவாறு உமக்கே
ஈங்கு நான் சொல்ல வேண்டுவது இல்லை நீர் இதனை
வாங்கி நான் வரும் அளவும் உம்மிடத்து இகழாதே
ஆங்கு வைத்து நீர் தாரும் என்று அவர் கையில் கொடுத்தார்
கொடுத்த கோவணம் கை கொண்டு கோது இலா அன்பர்
கடுப்பில் இங்கு எழுந்து அருளும் நீர் குளித்து என கங்கை
மடுத்த தும்பிய வளர் சடை மறைத்த அம் மறையோர்
அடுத்த தெண்டிரை பொன்னி நீர் ஆட என்று அகன்றார்
தந்த கோவணம் வாங்கிய தனி பெரு தொண்டர்
முந்தை அந்தணர் மொழி கொண்டு முன்பு தாம் கொடுக்கும்
கந்தை கீள் உடை கோவணம் அன்றி ஓர் காப்பு
சிந்தை செய்து வேறு இடத்து ஒரு சேமத்தின் வைத்தார்
போன வேதியர் வைத்த கோவணத்தினை போக்கி
பானலந்துறை பொன்னி நீர் படிந்து வந்தாரோ
தூநறுஞ் சடை கங்கை நீர் தோய்ந்து வந்தாரோ
வானம் நீர் மழை பொழிந்திட நனைந்து வந்து அணைந்தார்
கதிர் இளம் பிறை கண்ணியர் நண்ணிய பொழுதில்
முதிரும் அன்பு உடை தொண்டர் தாம் முறைமையின் முன்னே
அதிக நன்மையின் அறு சுவை திருவமுது ஆக்கி
எதிர் எழுந்து சென்று இறைஞ்சிட நிறைந்த நூல் மார்பர்
தொண்டர் அன்பு எனும் தூய நீர் ஆடுதல் வேண்டி
மண்டு தண் புனல் மூழ்கிய ஈரத்தை மாற்ற
தண்டின் மேலதும் ஈரம் நான் தந்த கோவணத்தை
கொண்டு வாரும் என்று உரைத்தனர் கோவண கள்வர்
ஐயர் கைதவம் அறிவுறாது அவர் கடிது அணுகி
எய்தி நோக்குற கோவணம் இருந்த வேறு இடத்தில்
மை இல் சிந்தையர் கண்டிலர் வைத்த கோவணம் முன்
செய்தது என் என்று திகைத்தனர் தேடுவார் ஆனார்
பொங்கு வெண் கிழி கோவணம் போயின நெறி மேல்
சங்கை இன்றியே தப்பினது என்று தம் சரக்கில்
எங்கு நாடியும் கண்டிலர் என் செய்வார் நின்றார்
அங்கண் வேதியர் பெரும் தொடக்கினில் அக பட்டார்
மனைவி யாரொடு மன்னிய கிளைஞரும் தாமும்
இனையது ஒன்று வந்து எய்தியது என இடர் கூர்ந்து
நினைவது ஒன்று இலர் வருந்தினர் நிற்கவும் மாட்டார்
புனைய வேறு ஒரு கோவணம் கொடு புறப்பட்டார்
அத்தர் முன்பு சென்று அடிகள் நீர் தந்த கோவணத்தை
வைத்த இடத்து நான் கண்டிலேன் மற்றும் ஓர் இடத்தில்
உய்த்து ஒளித்தனர் இல்லை அஃது ஒழிந்தவாறு அறியேன்
இத்தகைத்த வேறு அதிசயம் கண்டிலேன் என்று
வேறு நல்லது ஓர் கோவணம் விரும்பி முன் கொணர்ந்தேன்
கீறு கோவணம் அன்று நெய்தமைத்தது கிளர் கொள்
நீறு சாத்திய நெற்றியீர் மற்றுது களைந்து
மாறு சாத்தி என் பிழை பொறுப்பீர் என வணங்க
நின்ற வேதியர் வெகுண்டு அமர் நீதியார் நிலைமை
நன்று சாலவும் நாள் இடை கழிந்ததும் அன்றால்
இன்று நான் வைத்த கோவணம் கொண்டு அதற்கு எதிர் வேறு
ஒன்று கொள்க என உரைப்பதே நீர்
நல்ல கோவணம் கொடுப்பன் என்று உலகின் மேல் நாளும்
சொல்லும் விதத்தது என் கோவணம் கொள்வது துணிந்தோ
ஒல்லை ஈங்கு உறு வாணிபம் அழகிதே உமக்கு என்று
எல்லை இல்லவன் எரி துள்ளினால் என வெகுண்டான்
மறி கரந்து தண்டு ஏந்திய மறைவர் வெகுள
பொறி கலங்கிய உணர்வினர் ஆய் முகம் புலர்ந்து
சிறிய என் பெரும் பிழை பொறுத்து அருள் செய்வீர் அடியேன்
அறிய வந்தது ஒன்று என அடி பணிந்து அயர்வார்
செயத்தகும் பணி செய்வன் கோவணம் அன்றி
தகுந்தன நல்ல பட்டு ஆடைகள் மணிகள்
உயர்த்த கோடி கொண்டு அருளும் என்று உடம்பினில் அடங்கா
பயத்தொடுங்குலைந்து அடி மிசை பல முறை பணிந்தார்
பணியும் அன்பரை நோக்கி பரம் பொருளானார்
தணியும் உள்ளத்தார் ஆயினார் போன்று நீர் தந்த
மணியும் பொன்னும் நல் ஆடையும் மற்றும் என் செய்ய
அணியும் கோவணம் நேர் தர அமையும் என்றான்
மலர்ந்த சிந்தையர் ஆகிய வணிகர் ஏறு அனையார்
அலர்ந்த வெண்ணிற கோவணம் அதற்கு நேராக
இலங்கு பூ துகில் கொள்வதற்கு இசைந்து அருள் செய்யீர்
நலங் கொள் கோவணம் தரும் பரிசு யாதென நம்பர்
உடுத்த கோவணம் ஒழிய நாம் உம் கையில் தர நீர்
கொடுத்ததாக முன் சொல்லும் கிழிந்த கோவணநேர்
அடுத்த கோவணம் இது என்று தண்டினில் அவிழாது
எடுத்து மற்று இதன் எடையிடும் கோவணம் என்றார்
நன்று சால என்று அன்பரும் ஒரு துலை நாட்ட
குன்ற வில்லியார் கோவணம் ஒரு தட்டில் இட்டார்
நின்ற தொண்டரும் கையினில் நெய்த கோவண தட்டு
ஒன்றிலே இட நிறை நிலாது ஒழிந்தமை கண்டார்
நாடும் அன்பொடு நாயன்மார களிக்க முன் வைத்த
நீடு கோவணம் அடைய நேராக ஒன்று ஒன்றா
கோடு தட்டின் மீது இட கொண்டு எழுந்தது கண்டு
ஆடு சேவடிக்கு அயரும் அற்புதம் எய்தி
உலகில் இல்லதோர் மாயை கோவணம் ஒன்றுக்கு
அலகில் கோவணம் ஒத்தில என்று அதிசயத்து
பலவும் மென் துகில் பட்டுடன் இட
இலகு பூந்துகிற் பொதிகளை எடுத்து மேல் இட்டார்
முட்டில் அன்பர் தம் அன்பிடு தட்டுக்கு முதல்வர்
மட்டு நின்ற தட்டு அருளொடு தாழ்வு உறும் வழக்கால்
பட்டொடும் துகில் அநேக கோடிகளிடும் பத்தர்
தட்டு மேற் பட தாழ்ந்தது கோவண
ஆன தன்மை கண்டு அடியவர் அஞ்சி அந்தணர் முன்
தூ நறு துகில் வர்க்க நூல் வர்க்கமே முதலா
மானம் இல்லன குவிக்கவும் தட்டின் மட்டு இதுவால்
ஏனை என் தனம் இடப்பெற வேண்டும் என்று இறைஞ்ச
மங்கை பாகராம் மறையவர் மற்று அதற்கு இசைந்தே
இங்கு நாம் இனி வேறு ஒன்று சொல்வது என் கொல்
அங்கு மற்று உங்கள் தனங்களினாகிலும் இடுவீர்
எங்கள் கோவணம் நேர் நிற்க வேண்டுவது என்றார்
நல்ல பொன்னொடும் வெள்ளியும் நவ மணி திரளும்
பல் வகை திறத்து உலோகமும் புணர்ச்சிகள் பலவும்
எல்லை இல் பொருள் சுமந்து அவர் இட இட கொண்டே
மல்கு தட்டு மீது எழுந்தது வியந்தனர் மண்ணோர்
தவம் நிறைந்த நான் மறை பொருள் நூல்களால் சமைந்த
சிவன் விரும்பிய கோவணம் இடும் செழுந்தட்டுக்கு
அவனி மேலமர் நீதியார் தனமெலாம் அன்றி
புவனம் யாவையும் நேர் நிலா என்பது புகழோ
நிலைமை மற்றது நோக்கிய நிகர் இலார் நேர் நின்று
உலைவில் பஃறனம் ஒன்று ஒழியாமை உய்த்து ஒழிந்தேன்
தலைவ யானும் என் மனைவியும் சிறுவனும் தகுமேல்
துலையில் ஏறிட பெறுவது உன் அருள் என தொழுதார்
பொச்சமில்ல அடிமை திறம் புரிந்தவர் எதிர்நின்று
அச்ச முன்புற உரைத்தலும் அங்கணர் அருளால்
நிச்சயித்தவர் நிலையினை துலை எனுஞ் சலத்தால்
சழக்கினின்று ஏற்றுவார் ஏறுதற்கு இசைந்தார்
மனம் மகிழ்ந்து அவர் மலர்க்கழல் சென்னியால் வணங்கி
புனை மலர குழல் மனைவியார் தம்மொடு புதல்வன்
தனை உடன் கொடு தனி துலை வலம் கொண்டு தகவால்
இனைய செய்கையில் ஏறுவார் கூறுவார் எடுத்து
இழைத்த அன்பினில் இறை திருநீற்று மெய் அடிமை
பிழைத்திலோம் எனில் பெருந்துலை நேர் நிற்க என்று
மழை தடம் பொழில் திரு நல்லூர் இறைவரை வணங்கி
தழைத்த அஞ்செழுத்து ஓதினார் ஏறினார் தட்டில்
மண்டு காதலின் மற்றவர் மகிழ்ந்து உடன் ஏற
அண்டர் தம்பிரான் திரு அரை கோவணம் அதுவும்
கொண்ட அன்பினில் குறைபடா அடியவர் அடிமை
தொண்டும் ஒத்தலால் ஒத்து நேர் நின்றது துலைதான்
மதி விளங்கிய தொண்டர் தம் பெருமையை மண்ணோர்
துதி செய்து எங்கணும் அதிசயம் உற எதிர் தொழுதார்
கதிர் விசும்பு இடை கரந்திட நிரந்த கற்பகத்தின்
புதிய பூ மழை இமையவர் மகிழ்வுடன் பொழிந்தார்
அண்டர் பூ மழை பொழிய மற்று அதனிடை ஒளித்த
முண்ட வேதியர் ஒரு வழியான் முதல் நல்லூர
பண்டு தாம் பயில் கோலமே விசும்பினிற் பாகங்
கொண்ட பேதையும் தாமுமா காட்சி முன் கொடுத்தார்
தொழுது போற்றி துலை மிசை நின்று நேர் துதிக்கும்
வழுவில் அன்பரும் மைந்தரும் மனைவியார் தாமும்
முழுதும் இன்னருள் பெற்று தம் முன் தொழுது இருக்கும்
அழிவில் வான் பதங் கொடுத்து எழுந்து அருளினார் ஐயர்
நாதர் தம் திரு அருளினால் நல் பெரு துலையே
மீது கொண்டெழு விமானம் அதுவாகி மேல் செல்ல
கோதில் அன்பரும் குடும்பமும் குறைவு அற கொடுத்த
ஆதி மூர்த்தியார் உடன் சிவ புரியினை அணைந்தார்
மலர் மிசை அயனும் மாலும் காணுதற்கு அரிய வள்ளல்
பலர் புகழ் வெண்ணெய் நல்லூர் அவண பழமை காட்டி
உலகு உய்ய ஆண்டு கொள்ள பெற்றவர் பாதம் உன்னி
தலை மிசை வைத்து வாழும் தலைமை நம்
திருச்சிற்றம்பலம்
தில்லைவாழ் அந்தணர் சருக்கம் முற்றிற்று
சருக்கம் இரண்டுக்கு திருவிருத்தம்






சேக்கிழார் அருளிய
திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய
முதற் காண்டம் பன்னிரண்டாம் திருமுறை
சருக்கம் இலை மலிந்த



































சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணம்
என்ற பெரிய புராணம் முதற் காண்டம்
இலை மலிந்த சருக்கம்
உள்ளுறை
எறி பத்த நாயனார் புராணம் மின்பதிப்பு
ஏனாதிநாத நாயனார் புராணம் மின்பதிப்பு
கண்ணப்ப நாயனார் புராணம் மின்பதிப்பு
குங்குலி கலய நாயனார் புராணம் மின்பதிப்பு
மானக்கஞ்சாற நாயனார் புராணம் மின்பதிப்பு
அரிவாட்டாய நாயனார் புராணம் மின்பதிப்பு
ஆனாய நாயனார் புராணம் மின்பதிப்பு
எறி பத்த நாயனார் புராணம்
திருச்சிற்றம்பலம்
மல்லல் நீர் ஞால தன்னுள் மழவிடை உடையான் அன்பர்க்கு
ஒல்லை வந்து உற்ற செய்கை உற்று இடத்து உதவும் நீரார்
எல்லையில் புகழின் மிக்க எறிபத்தர் பெருமை எம்மால்
சொல்லலாம் படித்து அன்றேனும் ஆசையால் சொல்லல் உற்றாம்
பொன் மலை புலி வென்று ஓங்க புதுமலை இடித்து போற்றும்
நெறி வழியே ஆக அயல் வழி அடைத்த சோழன்
மன்னிய அநபாயன் சீர் மரபின் மா நகரமாகும்
தொன் நெடுங் கருவூர் என்னுஞ்சுடர் மணி வீதி மூதூர்
மா மதில் மஞ்சு சூழும் மாளிகை நிரை விண்
தூ மணி வாயில் சூழும் சோலையில் வாசம்
தேமலர் அளகஞ் சூழும் சில மதி தெருவிற்
தாம் மகிழ்ந்து அமரர் சூழும் சதமகன் நகரம் தாழ
கட கரி துறையில் ஆடும் களி மயில் புறவில்
அடர் மணி அரங்கில் ஆடும் அரிவையர் குழல் வண்டு
படரொளி மறுகில் ஆடும் பயில் கொடி கதிர் மீது
தடம் நெடும் புவி கொண்டாடும் தனி நகர் வளமை ஈதால்
மன்னிய சிறப்பின் மிக்க வள நகர் அதனில் மல்கும்
பொன்னியல் புரிசை சூழ்ந்து சுரர்களும் போற்றும் பொற்பால்
துன்னிய அன்பின் மிக்க தொண்டர் தம் சிந்தை நீங்கா
அந்நிலை அரனார் வாழ்வது ஆனிலை என்னும் கோயில்
பொருட்டிரு மறை கடந்த புனிதரை இனிது கோயில்
மருட்டுறை மாற்றும் ஆற்றால் வழி படும் தொழிலர் ஆகி
இருட்கடு ஒடுங்கு கண்டத்து இறையவர்க்கு உரிமை பூண்டார்க்கு
அரு பெரும் தொண்டு செய்வார் அவர் எறிபத்தர் ஆவார்
மழை வளர் உலகில் எங்கும் மன்னிய சைவம் ஓங்க
அழலவிர் சடையான் அன்பர்க்கு அடாதன அடுத்த போது
முழையரி என்ன தோன்றி முரண் கெட எறிந்து தீர்க்கும்
பழ மறை பரசும் தூய பரசு முன் எடுக்க பெற்றார்
அண்ணலார் நிகழும் நாளில் ஆனிலை அடிகளார்க்கு
திண்ணிய அன்பு கூர்ந்த சிவகாமி ஆண்டார் என்னும்
புண்ணிய முனிவனார் தாம் பூ பறித்து அலங்கல் சாத்தி
உண்ணிறை காதலோடும் ஒழுகுவார் ஒரு நாள் முன் போல்
வைகறை உணர்ந்து போந்து புனல் மூழ்கி வாயும் கட்டி
மெய்ம் மலர் நெருங்கு வாச நந்த வனத்து முன்னி
கையினில் தெரிந்து நல்ல கமழ் முகை அலரும் வேலை
தெய்வ நாயகருக்கு சாத்தும் திரு பள்ளி தாமம் கொய்து
கோல பூங் கூடை தன்னை நிறைத்தனர் கொண்டு நெஞ்சில்
வாலிய நேசம் கொண்டு மலர கையில் தண்டும்
ஆலயம் அதனை நோக்கி அங்கணர் அமைத்து சாத்தும்
காலை வந்து உதவ வேண்டி கடிதினில் வாரா நின்றார்
மற்றவர் அணைய இப்பால் வளநகர் அதனில் மன்னும்
கொற்றவர் வளவர் தங்கள் குல புகழ சோழனார் தம்
பற்றலர் முனைகள் சாய்க்கும் பட்ட வர்த்தனமாம் பண்பு
பெற்ற வெங் களிறு கோலம் பெருகு மா நவமி முன்னாள்
மங்கல விழைவு கொண்டு வரு நதி துறை நீராடி
பொங்கிய களிப்பினோடும் பொழி மதம் சொரிய நின்றார்
எங்கணும் இரியல் போக எதிர் பரி காரர் ஓட
துங்க மால் வரை போல் தோன்றி துண்ணென அணைந்தது அன்றே
வென்றிமால் யானை தன்னை மேல் கொண்ட பாகரோடும்
சென்று ஒரு தெருவின் முட்டி சிவகாமியார் முன் செல்ல
வன் தனி தண்டில் தூங்கும் மலர் கொள் பூ கூடை தன்னை
பின் தொடர்ந்து ஓடி சென்று பிடித்து முன் பறித்து சிந்த
மேல் கொண்ட பாகர் கண்டு விசை களிறு
கால் கொண்டு போவார் போல கடிது அகல
நூல் கொண்ட மார்பின் தொண்டர் நோக்கினர் பதைத்து பொங்கி
மால் கொண்ட களிற்றின் பின்பு தண்டு கொண்டு அடிக்க வந்தார்
அப்பொழுது அணைய ஒட்டாது அடற் களிறு அகன்று போக
மெ பொருள் தொண்டர் மூப்பால் விரைந்து பின் செல்ல மாட்டார்
தப்பினர் விழுந்து கையால் தரை அடித்து எழுந்து நின்று
செப்பு அரும் துயரம் நீடி செயிர்த்து முன் சிவதா என்பார்
களி யானையின் ஈர் உரியாய் சிவதா
எளியார் வலியாம் இறைவா சிவதா
அளியார் அடியார் அறிவே சிவதா
தெளிவார் அமுதே சிவதா
ஆறும் மதியும் அணியும் சடை மேல்
ஏறும் மலரை கரி சிந்துவதே
வேறுள் நினைவார் புரம் வெந்து அவி
சீறும் சிலையாய் சிவதா
தஞ்சே சரணம் புகுது தமியோர்
நெஞ்சேய் துயரம் கெட நேர் தொடரும்
மஞ்சே என வீழ் மறலிக்கு இறை நீள்
செஞ் சேவடியாய் சிவதா
நெடியோன் அறியா நெறியார் அறியும்
படியால் அடிமை பணி செய்து ஒழுகும்
அடியார்களில் யான் ஆரா அணைவாய்
முடியா முதலாய் எனவே மொழிய
என்று அவர் உரைத்த மாற்றம் எறி பத்தர் எதிரே வாரா
நின்றவர் கேளா மூளும் நெருப்பு உயிர்த்து அழன்று பொங்கி
மன்றவர் அடியார்க்கு என்றும் வழி பகை களிறே அன்றோ
கொன்று அது வீழ்ப்பன் என்று கொலை மழு எடுத்து வந்தார்
வந்தவர் அழைத்த தொண்டர் தமை கண்டு வணங்கி உம்மை
இந்த வல் இடும்பை செய்த யானை எங்கு உற்றது என்ன
எந்தையார் சாத்தும் பூவை என் கையில் பறித்து மண் மேல்
சிந்தி முன் பிழைத்து போகா நின்றது தெருவே என்றார்
இங்கு அது பிழைப்பது எங்கே இனி என எரிவாய் சிந்தும்
அங்கையின் மழுவும் தாமும் அனலும் வெங்காலும் என்ன
பொங்கிய விசையில் சென்று பொரு கரி தொடர்ந்து பற்றும்
செங்கண் வாள் அரியிற் கூடி கிடைத்தனர் சீற்ற மிக்கார்
கண்டவர் இது முன்பு அண்ணல் உரித்த களிறே போலும்
அண்டரும் மண் உளோரும் தடுக்கினும் அடர்த்து சிந
துண்டித்து கொல்வேன் என்று சுடர் மழு வலத்தில் வீசி
கொண்டு எழுந்து ஆர்த்து சென்று காலினால் குலுங்க பாய்ந்தார்
பாய்தலும் மிசை கொண்டு உய்க்கும் பாகரை
காய் தழல் உமிழ் கண் வேழம் திரிந்து மேற் கதுவ அச்சம்
தாய் தலை அன்பின் முன் நிற்குமே தகைந்து பாய்ந்து
தோய் தனி தடக்கை வீழ மழுவினால் துணித்தார் தொண்டர்
கையினை துணித்த போது கடல் என கதறி வீழ்ந்து
மை வரை அனைய வேழம் புரண்டிட மருங்கு வந்த
வெய்ய கோல் பாகர் மூவர் மிசை கொண்டார் இருவர்
ஐவரை கொன்று நின்றார் அருவரை அனைய தோளார்
வெட்டுண்டு பட்டு வீழ்ந்தார் ஒழிய மற்று உள்ளார் ஓடி
மட்டு அவிழ் தொங்கல் மன்னன் வாயில் காவலரை நோக்கி
பட்ட வர்த்தனமும் பட்டு பாகரும் பட்டார் என்று
முட்ட நீர் கடிது புக்கு முதல்வனுக்கு உரையும் என்றார்
மற்று அவர் மொழிந்த மாற்றம் மணி கடை காப்போர் கேளா
கொற்றவன் தன்பால் எய்தி குரை கழல் பணிந்து போற்றி
பற்றலர் இலாதாய் நின் பொற் பட்டமால் யானை வீழ
செற்றனர் சிலராம் என்று செப்பினார் பாகர் என்றார்
வளவனும் கேட்ட போதில் மாறின்றி மண் காக்கின்ற
கிளர் மணி தோள் அலங்கல் சுரும்பு இனம் கிளர்ந்து பொங்க
அளவில் சீற்றத்தினாலே யார் செய்தார் என்றும் கேளான்
இள அரி ஏறு போல எழில் மணி வாயில் நீங்க
தந்திர தலைவர் தாமும் தலைவன் தன் நிலைமை கண்டு
வந்துற சேனை தன்னை வல் விரைந்து எழ முன் சாற்ற
அந்தரத்து அகலம் எல்லாம் அணி துகில் பதாகை தூர்ப்ப
எந்திர தேரும் மாவும் இடை களிறும்
வில்லொடு வேல் வாள் தண்டு பிண்டி பாலங்கள் மிக்க
வல்லெழும் உசலம் நேமி மழு கழு கடை முன் ஆன
பல் படை கலன்கள் பற்றி பைங்கழல் வரிந்த வன் கண்
எல்லையில் படைஞர் கொட்புற்று எழுந்தனர் எங்கும்
சங்கொடு தாரை காளம் தழங்கொலி முழங்கு பேரி
வெங்குரல் பம்பை கண்டை வியன் துடி திமிலை தட்டி
பொங்கொலி சின்னம் எல்லாம் பொரு படை மிடைந்த பொற்பின்
மங்குல் வான் கிளர்ச்சி நாண மருங்கு எழுந்து இயம்பி மல்க
தூரி துவைப்பும் முட்டுஞ் சுடர படை ஒலியும் மாவின்
தார் மணி இசைப்பும் வேழ முழக்கமும் தடந்தேர சீரும்
வீரர் தஞ்செருக்கின் ஆர்ப்பும் மிக்கு எழுந்து ஒன்றாம் எல்லை
காருடன் கடைநாள் பொங்கும் கடல் என கலித்த அன்றே
பண்ணுறும் உறுப்பு நான்கில் பரந்து எழு சேனை எல்லாம்
மண்ணிடை இறு கால் மேல் வந்து எழுந்தது போல்
தண்ணளி கவிகை மன்னன் தானை பின் தொடர தானோர்
அண்ணலம் புரவி மேற்கொண்டு அரச மா வீதி சென்றான்
கடு விசை முடுகி போகி களிற் றொடும் பாகர் வீழ்ந்த
படு களம் குறுக சென்றான் பகை புலத்து அவரை காணான்
விடு சுடர் மழு ஒன்று ஏந்தி வேறு இரு தட கைத்தாய
அடு களிறு என்ன நின்ற அன்பரை முன்பு கண்டான்
பொன் தவழ் அருவி குன்றம் என புரள் களிற்றின் முன்பு
நின்றவர் மன்றுள் என்றும் நிருத்தமே பயிலும் வெள்ளி
குன்றவர் அடியார் ஆனார் கொற்றவர் இவர் என்று ஓரான்
வென்றவர் இவர் யாவர் என்றான் வெடிபட முழங்கும் சொல்லான்
அரசன் ஆங்கு அருளி செய்ய அருகு சென்று அணைந்து பாகர்
விரை செய்தார் மாலையோய் நின் விறற் களிற்று எதிரே நிற்கும்
திரை செய் நீர் உலகின் மன்னர் யாருளார் தீங்கு செய்தார்
பரசு முன் கொண்டு நின்ற இவர் என பணிந்து சொன்னார்
குழையணி காதினானுக்கு அன்பராம் குணத்தின் மிக்கார்
பிழை படின் அன்றி கொல்லார் பிழைத்தது உண்டு என்று உட்கொண்டு
மழை மத யானை சேனை வரவினை மாற்றி மற்ற
உழை புரவி மேல் நின்று இழிந்தனன் உலக மன்னன்
மை தடம் குன்று போலும் மத களிற்று எதிரே இந்த
மெய்த்தவர் சென்ற போது வேறு ஒன்றும் புகுதா விட்ட
தவம் உடையேன் ஆனேன் அம்பல வாணர் அன்பர்
இத்தனை முனி கெட்டேன் என் கொலோ பிழை என்று அஞ்சி
செறிந்தவர் தம்மை நீக்கி அன்பர் முன் தொழுது சென்று ஈது
அறிந்திலேன் அடியேன் அங்கு கேட்டது ஒன்று அதுதான் நிற்க
மறிந்த களிற்றின் குற்றம் பாகரோடு இதனை மாள
எறிந்ததே போதுமோதான் அருள் செய்யும் என்று நின்றார்
மன்னவன் தன்னை நோக்கி வானவர் ஈசர் நேசர்
சென்னி துங்க வேழம் சிவகாமி ஆண்டார் கொய்து
பன்னக ஆபரணர் சாத்த கொடுவரும் பள்ளி தாமம்
தன்னை முன் பறித்து சிந தரை பட துணித்து வீழ்த்தேன்
மாதங்கம் தீங்கு செய்ய வரு பரிக்காரர் தாமும்
மீதங்கு கடாவுவாரும் விலக்கிடாது ஒழிந்து பட்டார்
ஈதங்கு நிகழ்ந்தது என்றார் எறி பத்தர் என்ன அஞ்சி
பாதங்கள் முறையால் தாழ்ந்து பருவரை தடந்தோள் மன்னன்
அங்கணர் அடியார் தம்மை செய்த இவ் அபராதத்துக்கு
இங்கு இது தன்னால் போதாது என்னையும் கொல்ல வேண்டும்
மங்கல மழுவால் கொல்கை வழக்கும் அன்று இதுவாம் என்று
செங்கையால் உடைவாள் வாங்கி கொடுத்தனர் தீர்வு நேர்வார்
வெந்தழல் சுடர் வாள் நீட்டும் வேந்தனை நோக்கிக கெட்டேன்
அந்தமில் புகழான் அன்புக்கு அளவின்மை கண்டேன் என்று
தந்த வாள் வாங்க மாட்டார் தன்னை தான் துறக்கும் என்று
சிந்தையால் உணர்வுற்று அஞ்சி வாங்கினார் தீங்கு தீர்ப்பார்
வாங்கிய தொண்டர் முன்பு மன்னனார் தொழுது நின்றே
ஈங்கு எனை வாளினால் கொன்று என் பிழை தீர்க்க வேண்டி
ஓங்கிய உதவி செ பெற்றனன் இவர் பால் என்றே
ஆங்கு அவர் உவப்ப கண்ட எறிபத்தர் அதனுக்கு அஞ்சி
வன் பெருங் களிறு பாகர் மடியவும் உடை வாளை தந்து
என் பெரும் பிழையினாலே என்னையும் கொல்லும் என்னும்
அன்பனார் தமக்கு தீங்கு நினைந்தனன் என்று கொண்டு
முன்பு எனது உயிர் செகுத்து முடிப்பதே முடிவு என்று எண்ணி
புரிந்தவர் கொடுத்த வாளை அன்பர் தம் கழுத்தில் பூட்டி
அரிந்திடல் உற்ற போதில் அரசனும் பெரியோர் செய்கை
இருந்தவாறு என் கெட்டேன் என்று எதிர் கடிதிற் சென்று
பெருந்தட தோளால் கூடி பிடித்தனன் வாளும் கையும்
வளவனார் விடாது பற்ற மாதவர் வருந்து கின்ற
அளவு இலா பரிவில் வந்த இடுக்கணை அகற்ற வேண்டி
கள மணி களத்து செய்ய கண்ணுதல் அருளால் வாக்கு
கிளர் ஒளி விசும்பின் மேல் வந்து எழுந்தது பலரும் கேட்ப
தொழும் தகை அன்பின் மிக்கீர் தொண்டினை மண் மேற்காட்ட
செழு திருமலரை இன்று சினக்கரி சிந திங்கள்
கொழுந்து அணி வேணி கூத்தர் அருளினால் கூடிற்று என்று அங்கு
எழுந்தது பாகரோடும் யானையும்
ஈரவே பூட்டும் வாள் விட்டு எறிபத்தர் தாமும் அந்த
நேரியர் பெருமான் தாள் மேல் விழுந்தனர் நிருபர் கோனும்
போர் வடி வாளை போக எறிந்து அவர் கழல்கள் போற்றி
பார்மிசை பணிந்தான் விண்ணோர் பனிமலர் மாரி தூர்த்தார்
இருவரும் எழுந்து வானில் எழுந்த பேரொலியை போற்ற
அருமறை பொருளாய் உள்ளார் அணிகொள் பூங்கூடை தன்னில்
மருவிய பள்ளி தாமம் நிறைந்திட அருள மற்று
திருவருள் கண்டு வாழ்ந்து சிவகாமியாரும் நின்றார்
மட்டவிழ் அலங்கல் வென்றி மன்னவர் பெருமான் முன்னர்
உட்டரு களிப்பினோடும் உறங்கி மீது எழுந்தது ஒத்து
முட்ட வெங்கடங்கள் பாய்ந்து முகில் என முழங்கி பொங்கும்
பட்ட வர்த்தனத்தை கொண்டு பாகரும் அணைய வந்தார்
ஆன சீர தொண்டர் கும்பிட்டு அடியனேன் களிப்ப இந்த
மான வெங் களிற்றில் ஏறி மகிழ்ந்து எழுந்து அருளும் என்ன
மேன்மை பணி மேற் கொண்டு வணங்கி வெண் குடையின் நீழல்
யானை மேற் கொண்டு சென்றார் இவுளிமேற்
அந்நிலை எழுந்த சேனை ஆர்கலி ஏழும் ஒன்றாய்
மன்னிய ஒலியின் ஆர்ப்ப மண் எலாம் மகிழ்ந்து வாழ்த்த
பொன்னெடும் பொதுவில் ஆடல் நீடிய புனிதர் பொற்றாள்
சென்னியிற் கொண்டு சென்னி திருவளர் கோயில் புக்கான்
தம்பிரான் பணிமேற் கொண்டு சிவகாமியாரும் சார
எம்பிரான் அன்பரான எறிபத்தர் தாமும் என்னே
அம்பலம் நிறைந்தார் தொண்டர் அறிவதற்கு அரியார் என்று
செம்பியன் பெருமை உன்னி திருப்பணி நோக்கி சென்றார்
மற்றவர் இனையவான வன்பெரும் தொண்டு மண்மேல்
உற்றிடத்து அடியார் முன் சென்று உதவியே நாளும்
நல்தவ கொள்கை தாங்கி நலமிகு கயிலை வெற்பில்
கொற்றவர் கணத்தின் முன்னாம் கோ முதல் தலைமை பெற்றார்
ஆளுடை தொண்டர் செய்த ஆண்மையும் தம்மை கொல்ல
வாளினை கொடுத்து நின்ற வளவனார் பெருமை தானும்
நாளும் மற்றவர்க்கு நல்கும் நம்பர் தாம் அளக்கிலன்றி
நீளும் தொண்டின் நீர்மை நினைக்கில் ஆர் அளக்க வல்லார்
தேனாரும் தண் பூங் கொன்றை செஞ்சடையவர் பொற்றாளில்
ஆனாத காதல் அன்பர் எறிபத்தர் அடிகள் சூடி
வானாளும் தேவர் போற்றும் மன்றுளார் நீறு
ஏனாதி நாதர் செய்த திரு தொழில் இயம்பலுற்றேன்
திருச்சிற்றம்பலம்

ஏனாதிநாத நாயனார் புராணம்
திருச்சிற்றம்பலம்
புண்டரிகம் பொன் வரை மேல் ஏற்றி புவி அளிக்கும்
தண்டரள வெண்கவிகை தார் வளவர் சோணாட்டில்
வண்டறை பூஞ் சோலை வயல் மரு தண் பணை சூழ்ந்து
எண் திசையும் ஏறிய சீர் எயின் மூதூர் எயினனூர்
வேழ கரும்பினோடு மென் கரும்பு தண்வயலில்
தாழ கதிர்ச்சாலி தான் ஓங்கும் தன்மையதாய்
வாழ குடி தழைத்து மன்னிய பொற் பதியில்
ஈழ குல சான்றார் ஏனாதி நாதனார்
தொன்மை திரு நீற்று தொண்டின் வழிபாட்டின்
நன்மை கண் நின்ற நலம் என்றும் குன்றாதார்
மன்னர்க்கு வென்றி வடிவா படை பயிற்றும்
தன்மை தொழில் விஞ்சையில் தலைமை சார்ந்து உள்ளார்
வாளின் படை பயிற்றி வந்த வளம் எல்லாம்
நாளும் பெரு விருப்பால் நண்ணுங் கட பாட்டில்
தாளும் தட முடியும் காணாதார் தம்மையு தொண்டு
ஆளும் பெருமான் அடி தொண்டர்க்கு ஆக்குவார்
நள்ளர்களும் போற்றும் நன்மை துறையின் கண்
எள்ளாத செய்கை இயல்பின் ஒழுகு நாள்
தள்ளாத தங்கள் தொழில் உரிமை தாயத்தின்
உள்ளான் அதிசூரன் என்பான் உளன் ஆனான்
மற்ற அவனும் கொற்ற வடிவா படை தொழில்கள்
கற்றவர்கள் தன்னில் கடந்துள்ளார் இல்லை எனும்
பெற்றிமையான் மா நிலத்து மிக்க பெருமிதம் வந்து
உற்றுலகில் தன்னையே சால மதித்து உள்ளான்
தானாள் விருத்தி கெட தங்கள் குல தாயத்தின்
ஆனாத செய் தொழிலாம் ஆசிரி தன்மை வளம்
மேனாளும் குறைந்து மற்றவர்க்கே மேம்படலால்
ஏனாதி நாதர் திறத்து ஏலா இகல் புரிந்தான்
கதிரோன் எழ மழுங்கி கால்சாயுங்காலை
மதி போல் அழிந்து பொறா மற்றவனுஞ் சுற்ற
பதியோர் உடன் கூட பண்ணி அமர் மேல் சென்று
எதிர் போர் விளைப்பதற்கே எண்ணி துணிந்து எழுந்தான்
தோள் கொண்ட வல் ஆண்மை சுற்றத்தொடும் துணையாம்
கோள் கொண்ட போர் மள்ளர் கூட்டத்தொடுஞ் சென்று
வாள் கொண்ட தாயம் வலியாரே கொள்வது என
மூள்கின்ற செற்றத்தான் முன் கடையில் நின்று அழைத்தான்
வெங்க புலி கிடந்த வெம் முழையில் சென்று அழைக்கும்
பைங்கண் குறுநரியே போல்வான் படை கொண்டு
பொங்கி புறம் சூழ்ந்து போர் குறித்து நேர் நின்றே
அங்க கடை நின்று அழைத்தான் ஒலி கேளா
ஆர் கொல் பொர அழைத்தார் என்றரி ஏற்றின் கிளர்ந்து
சேர்வு பெற கச்சில் செறிந்த உடை மேல் வீக்கி
வார் கழலுங் கட்டி வடிவா பலகைகொடு
போர் முனையில் ஏனாதி நாதர் புறப்பட்டார்
புறப்பட்ட போதின் போர தொழில்கள் கற்கும்
விறல் பெருஞ் சீர காளையர்கள் வேறு இடத்து நின்றார்
மற படை வாள் சுற்றத்தார் கேட்டு ஓடி வந்து
செறற்கரும் போர் வீரர்க்கு இரு மருங்கும் சேர்ந்தார்கள்
வந்தழைத்த மாற்றான் புலி போத்து அன்னார் முன்
நம் தமது வாள் பயிற்று நற்றாயம் கொள்ளுங்கால்
இந்த வெளி மேற்கை வகுத்து இருவேம் பொரு படையும்
சந்தித்து அமர் விளைத்தால் சாயாதார் கொள்வதென்
என்று பகைத்தோன் உரைப்ப ஏனாதி நாதர் அது
நன்று உனக்கு வேண்டுமேல் நண்ணுவன் என்று உள் மகிழ்ந்து
சென்றவன் முன் சொன்ன செரு களத்து போர் குறிப்ப
கன்றி இரு படையும் கை வகுத்து நேர் மலைவார்
மேக ஒழுங்குகள் முன் கொடு மின்னிரை தம்மிடையே
மாக மருங்கினும் மண்ணினும் வல்லுரு மேல் எதிர் செல்வன
வாக நெடும் பல கைக்குல மாள் வினை வாளுடை ஆடவர்
காக மிடைந்த களத்திரு கைகளின் வந்து கலந்தனர்
கால் கழல் கட்டிய மள்ளர்கள் கைகளின் மெய்கள் அடக்கிய
வாளொளி வட்ட முளைத்திட வந்து இரு கைகளின் முந்தினர்
வேலொடு வேல் எதிர் நீள்வன மேவிய பாதலம் விட்டுயர்
ஞாலமுறும் பணி வீரர்கள் நா நிமிர்கின்றன ஒத்தன
வெங்கண் விறற் சிலை வீரர்கள் வேறு இரு கையிலும் நேர்பவர்
தங்கள் சிலைக்குலம் உந்தின தாவில் சரங்கள் நெருங்குவ
பொங்கு சினத்து எரியிற் புகை போகு கொடிக்கள் வளைத்து எதிர்
செங்கண் விழி கனல் சிந்திய சீறு பொறி செலவு ஒத்தன
வாளொடு நீள் கை துடித்தன மார்பொடு வேல்கள் குளித்தன
தோளொடு வாளி நிலத்தன தோலொடு தோல்கள் தகைத்தன
தாளொடு வார் கழல் இற்றன தாரொடு சூழ் சிரம் அற்றன
நாளொடு சீறி மலைப்பவர் நாடிய போர் செய் களத்தினில்
குருதியின் நதிகள் பரந்தன குறை உடல் ஓடி அலைந்தன
பொரு படை அறு துணி சிந்தின புடை சொரி குடர் உடல் பம்பின
வெருவர எருவை நெருங்கின வீசியறு துடிகள் புரண்டன
இரு படை தனினும் எதிர்ந்தவர் எதிர் அமர் செய்
நீள் இடை முடுகி நடந்து எதிர் நேர் இருவரில் ஒரு வன்றொடர்
தாளிரு தொடை அற முன் பெயர் சாரிகை முறைமை தடிந்தனன்
வாளொடு விழுடல் வென்றவன் மார்பிடை அறமுன் எறிந்திட
ஆளியின் அவனும் அறிந்தனன் ஆயினர் பலர் உளர் எங்கணும்
கூர் முனை அயில் கொடு முட்டினர் கூடி முன் உருவிய தட்டுடன்
நேருரம் உருவ உரப்புடன் நேர்பட எதிர்
ஆருயிர் கழியவும் நிற்பவர் ஆண்மையில் இருவரும் ஒத்தமை
போரடு படைகொடு அளப்பவர் போல்பவர் அளவிலர் பட்டனர்
பொற்சிலை வளைய எதிர்ந்தவர் புற்றரவு அனைய சரம்பட
விற்படை துணியவும் நின்றிலர் வெற்றி கொள் சுரிகை வழங்கினர்
முற்றிய பெருவளன் இன்றியும் முற்படு கொடை நிலை நின்றிட
உற்றன உதவிய பண்பினர் ஒத்தனர் உளர் சில கண்டகர்
அடல்முனை மறவர் மடிந்தவர் அலர் முகம் உயிருள வென்றுறு
படர் சிறை சுலவு கருங்கொடி படர்வன சுழல்வன துன்றலில்
விடு சுடர் விழிகள் இரும்பு செய் வினைஞர் தம் உலையின் முகம் பொதி
புடை மிடை கரியிடை தங்கிய புகை விடு தழலை நிகர்த்தன
திண் படை வயவர் பிணம்படு செங்களம் அதனிடை முன் சிலர்
புண்படு வழி சொரியும் குடர் பொங்கிய கழுகு பருந்தொடு
கொண்டெழு பொழுதினும் முன் செயல் குன்றுதல் இலர் தலை நின்றனர்
விண்படர் கொடி விடு பண் பயில் விஞ்சையர் குமரரை வென்றனர்
இம் முனைய வெம் போரில் இரு படையின் வாள் வீரர்
வெம் முனையில் வீடியபின் வீடாது மிக்கு ஒழிந்த
தம்முடைய பல் படைஞர் பின்னாக தாம் முன்பு
தெம்முனையில் ஏனாதி நாதர் செயிர்த்து எழுந்தார்
வெஞ்சினவாள் தீ உமிழ வீர கழல் கலிப்ப
நஞ்சணி கண்டர்க்கு அன்பர் தாம் எதிர்ந்த ஞாட்பின் கண்
எஞ்சி எதிர் நின்ற இகல் முனையில் வேலுழவர்
தஞ்சிரமும் தோளுரமும் தாளுரமும் தாந்துணித்தார்
தலைப்பட்டார் எல்லாரும் தனி வீரர் வாளில்
கொலை பட்டார் முட்டாதார் கொல் களத்தை விட்டு
நிலைப்பட்ட மெய் உணர்வு நேர் பட்ட போதில்
அலைப்பட்ட ஆர்வமுதல் குற்றம் போல் ஆயினார்
நிலைய வெங்களத்தில் ஏற்றழிந்த மானத்தால்
தன்னுடைய பல் படைஞர் மீண்டார் தமை கொண்டு
மின்னொளி வாள் வீசி விறல் வீரர் வெம் புலி யேறு
அன்னவர் தம் முன் சென்று அதி சூரன் நேர் அடர்ந்தான்
மற்றவர் தம் செய்கை வடி வாள் ஒளி காண
சுற்றி வரும் வட்ட அணையில் தோன்றா வகை கலந்து
பற்றி அடர்க்கும் பொழுதில் தானும் படை பிழைத்து
பொற்றட தோள் வீரர்க்கு உடைந்து புறகிட்டான்
போன அதிசூரன் போரில் அவர கழிந்த
மான மிக மீதூர மண் படுவான் கண் படான்
ஆன செயல் ஓர் இரவும் சிந்தித்து அலமந்தே
ஈன மிகு வஞ்சனையால் வெல்வன் என எண்ணினான்
கேட்டாரும் கங்குல் புலர்காலை தீயோனும்
நாட்டாரை கொல்லாதே நாம் இருவேம் வேறு இடத்து
வாட்டாயங் கொள் போர் மலைக்க வருக என
தோட்டார் பூந்தாரார்க்கு சொல்லி செலவிட்டான்
இவ்வாறு கேட்டலுமே ஏனாதி நாதனார்
அவ்வாறு செய்தல் அழகிதென அமைந்து
கை வாள் அமர் விளைக்க தான் கருதும் களத்தில்
வெவ்வாள் உரவோன் வருக என மேற் கொள்வார்
சுற்றத்தார் யாரும் அறியா வகை சுடர் வாள்
பொற் பலகையும் தாமே கொண்டு புறம் போந்து
மற்றவன் முன் சொல்லி வரக்குறித்தே களத்தே
பற்றலனை முன் வரவு பார்த்து தனி நின்றார்
தீங்கு குறித்து அழைத்த தீயோன் திரு நீறு
தாங்கிய நெற்றியினார் தங்களையே எவ்விடத்தும்
ஆங்கு அவரும் தீங்கு இழையார் என்பது அறிந்தானா
பாங்கில் திரு நீறு பண்டு பயிலாதான்
வெண்ணீறு நெற்றி விரவ புறம் பூசி
உள் நெஞ்சில் வஞ்ச கறுப்பும் உடன் கொண்டு
வண்ண சுடர் வாள் மணி பலகை கை கொண்டு
புண்ணி போர் வீரர்க்கு சொன்ன இடம் புகுந்தான்
வென்றி மடங்கல் விடக்கு வர முன் பார்த்து
நின்றாற் போல் நின்ற நிலை கண்டு தன் நெற்றி
சென்று கிடப்பளவு திண் பலகையான் மறைத்தே
முன் தன் வீரர்க்கு எதிரே மூண்டான் மறம் பூண்டான்
அடல் விடையேறு என்ன அடத்தவனை கொல்லும்
இடை தெரிந்து தாள் பெயர்க்கும் ஏனாதி நாதர்
புடை பெயர்ந்த மாற்றான் பலகை புறம் போ
கடையவன் தன் நெற்றியின் மேல் வெண்ணீறு தாம் கண்டார்
கண்ட பொழுதே கெட்டேன் முன்பு இவர் மேல் காணாத
வெண் திரு நீற்றின் பொலிவு மேற்கண்டேன் வேறு இனி என்
அண்டர் பிரான் சீர் அடியார் ஆயினார் என்று மனம்
கொண்டு இவர் தம் கொள்கை குறி வழி நிற்பேன் என்று
கை வாளுடன் பலகை நீ கருதியது
செய்யார் நிராயுதரை கொன்றார் எனும் தீமை
எய்தாமை வேண்டும் இவர்க்கு என்று இரும் பலகை
நெய் வாளுடன் அடர்த்து நேர்வார் போல் நின்றார்
அந்நின்ற தொண்டர் திரு உள்ளம் ஆர் அறிவார்
முன் நின்ற பாதகனும் தன் கருத்தே முற்று வித்தான்
நின்ற தன்மை அறிவார் அவர்க்கு அருள
மின்னின்ற செஞ்சடையார் தாமே வெளி நின்றார்
மற்றினி நாம் போற்றுவது என் வானோர் பிரான் அருளை
பற்றலர் தம் கை வாளால் பாசம் அறுத்து அருளி
உற்றவரை என்றும் உடன் பிரியா அன்பு அருளி
பொற்றொடியாள் பாகனார் பொன்னம்பலம் அணைந்தார்
தம் பெருமான் சாத்தும் திரு நீற்று சார்புடைய
எம் பெருமான் ஏனாதி நாதர் கழல் இறைஞ்சி
உம்பர் பிரான் காளத்தி உத்தமர்க்கு கண்ணப்பும்
நம் பெருமான் செய்த பணி நாம் தெரிந்தவாறு உரைப்பாம்
திருச்சிற்றம்பலம்

கண்ணப்ப நாயனார் புராணம்
திருச்சிற்றம்பலம்
மேலவர் புரங்கள் செற்ற விடையவர் வேத வாய்மை
காவலர் திரு காளத்தி கண்ணப்பர் திரு நாடு என்பர்
நாவலர் புகழ்ந்து போற்றும் நல் வளம் பெருகி நின்ற
பூவலர் வாவி சோலை சூழ்ந்த பொத்தப்பி நாடு
திரு நாடு தன்னில் இவர் திரு பதியாதென்னில்
நித்தில அருவி சாரல் நீள் வரை சூழ்ந்த பாங்கர்
மத்த வெம் களிற்று கோட்டு வன் தொடர் வேலி கோலி
ஒத்த பேர் அரணம் சூழ்ந்த முது பதி உடுப்பூர் ஆகும்
குன்றவர் அதனில் வாழ்வார் கொடுஞ் செவி ஞமலி யாத்த
வன்றிரள் விளவின் கோட்டு வார்வலை மருங்கு தூங்க
பன்றியும் புலியும் எண்கும் கடமையும் மானின் பார்வை
அன்றியும் பாறை முன்றில் ஐவனம் உணங்கும் எங்கும்
வன் புலி குருளையோடும் கரி கன்றினோடும்
புன்றலை சிறு மகார்கள் புரிந்து உடன் ஆடல் அன்றி
அன்புறு காதல் கூற அணையும் மான் பிணைகளோடும்
இன்புற மருவி ஆடும் எயிற்றியர் மகளிர் எங்கும்
வெல் படை தறுகண் வெஞ்சொல் வேட்டுவர் கூட்டம் தோறும்
கொல் எறி குத்து என்று ஆர்த்து குழுமிய ஓசை அன்றி
சில்லரி துடியும் கொம்பும் சிறு கண் ஆகுளியும் கூடி
கல் எனும் ஒலியின் மேலும் கறங்கிசை அருவி எங்கும்
ஆறலைத்து உண்ணும் வேடர் அயற் புலங் கவர்ந்து கொண்ட
வேறு பல் உருவின் மிக்கு விரவும் ஆன் நிரைகள் அன்றி
ஏறுடை வானம் தன்னில் இடி குரல் எழிலி யோடு
மாறுகொள் முழக்கங் காட்டும் மதக்கை மாநிரைகள் எங்கும்
மை செறிந்தனைய மேனி வன் தொழில் மறவர் தம்பால்
அச்சமும் அருளும் என்றும் அடைவிலார் உடை வன் தோலார்
பொச்சை யின் நறவும் ஊனின் புழுக்கலும் உணவு கொள்ளும்
நச்சழற்பகழி வேடர்க்கு அதிபதி நாகன் என்பான்
பெற்றியால் தவமுன் செய்தான் ஆயினும் பிறப்பின் சார்பால்
குற்றமே குணமா வாழ்வான் கொடுமையே தலை நின்றுள்ளான்
வில் தொழில் விறலின் மிக்கான் வெஞ்சின மடங்கல் போல்வான்
மற்றவன் குறிச்சி வாழ்க்கை மனைவியும் தத்தை என்பாள்
அரும் பெறல் மறவர் தாயத்தான்ற தொல் குடியில் வந்தாள்
இரும் புலி எயிற்று தாலி இடை மனவு
பெரும் புறம் அலை பூண்டான் பீலியும் குழையும் தட்ட
சுரும்புறு படலை முச்சி சூர் அரி பிணவு போல்வான்
பொருவரும் சிறப்பின் மிக்கார் இவர்க்கு இனி புதல்வர் பேறே
அரியது என்று எவரும் கூற அதற்படு காதலாலே
முருகலர் அலங்கல் செவ்வேள் முருகவேள் முன்றில் சென்று
பரவுதல் செய்து நாளும் பரா கடன் நெறியில் நிற்பார்
வாரண சேவலோடும் வரிமயிற் குலங்கள் விட்டு
தோரண மணிகள் தூக்கி சுரும்பணி கதம்பம் நாற்றி
போரணி நெடுவேலோற்கு புகழ்புரி குரவை தூங்க
பேரணங்கு ஆடல் செய்து பெருவிழா எடுத்த பின்றை
பயில் வடு பொலிந்த யாக்கை வேடர்தம் பதியாம் நாகற்கு
எயிலுடை புரங்கள் செற்ற எந்தையார் மைந்தர் ஆன
மயிலுடை கொற்ற ஊர்தி வரையுரங் கிழித்த திண்மை
அயிலுடை தடக்கை வென்றி அண்ணலார் அருளினாலே
கானவர் குலம் விளங்க தத்தைபால் கருப்பம் நீட
ஊனமில் பலிகள் போக்கி உறுகடன் வெறி ஆட்டோ டும்
ஆன திங்கள் செல்ல அளவில் செய் தவத்தினாலே
பான்மதி உவரி ஈன்றால் என மக பயந்த போது
கரிப்பரு மருப்பின் முத்தும் கழை விளை செழுநீர்
பொருப்பின் மணியும் வேடர் பொழி தரு மழையே அன்றி
வரி சுரும்பு அலைய வானின் மலர் மழை பொழிந்தது எங்கும்
அரிக்குறு துடியே அன்றி அமரர் துந்துபியும் ஆர்த்த
அருவரை குறவர் தங்கள் அகன் குடி சீறூர் ஆயம்
பெரு விழா எடுத்து மிக்க பெருங்களி கூறும் காலை
கருவரை காள மேகம் ஏந்தியது என்ன தாதை
பொருவரை தோள்களார புதல்வனை எடுத்து கொண்டான்
கருங் கதிர் விரிக்கும் மேனி காமரு குழவி தானும்
இரும்புலி பறழின் ஓங்கி இறவுளர் அளவே அன்றி
அரும் பெறல் உலகமெல்லாம் அளப்பரும் பெருமை காட்டி
தருங்குறி பலவும் சாற்றும் தன்மையிற் பொலிந்து தோன்ற
அண்ணலை கையில் ஏந்தற்கு அருமையால் உரிமை பேரும்
திண்ணன் என்றியம்பும் என்ன திண்சிலை வேடர் ஆர்த்தார்
புண்ணி பொருளாய் உள்ள பொருவில் சீர் உருவினானை
கண்ணினுக்கு அணியா தங்கள் கலன்பல அணிந்தார் அன்றே
வரையுறை கடவு காப்பு மறகுடி மரபில் தங்கள்
புரையில் தொல் முறைமைக்கு ஏற பொருந்துவ போற்றி செய்து
விரையிள தளிருஞ் சூட்டி வேம்பு இழைத்து இடையே கோத்த
அரை மணி கவடி கட்டி அழகுற வளர்க்கும் நாளில்
வருமுறை பருவம் தோறும் வளமிகு சிறப்பில் தெய்வ
பெருமடை கொடுத்து தொக்க பெருவிறல் வேடர்க்கெல்லாம்
திருமலி துழனி பொங்க செழுங்களி மகிழ்ச்சி செய்தே
அருமையில் புதல்வர் பெற்ற ஆர்வமும் தோன்ற உய்த்தார்
ஆண்டு எதிர் அணைந்து செல்ல விடும் அடி தளர்வு நீங்கி
பூண் திகழ் சிறு புன் குஞ்சி புலியுகிர சுட்டி சாத்தி
மூண்டெழு சினத்து செங்கண் முளவு முள் அரிந்து கோத்த
நாண்டரும் எயிற்று தாலி நலங்கிளர் மார்பில் தூங்க
பாசொளி மணியோடு ஆர்த்த பன் மணி சதங்கை ஏங்க
காசொடு தொடுத்த காப்பு கலன் புனை அரைஞாண் சேர்த்தி
தேசுடை மருப்பில் தண்டை செறிமணி குதம்பை மின்ன
மாசறு கோலம் காட்டி மறுகிடை ஆடும் நாளில்
தண் மலர் அலங்கல் தாதை தாய் மனம் களிப்ப வந்து
புண்ணிய கங்கை நீரில் புனிதமாம் திருவாய்
உண்ணனைந்து அமுதம் ஊறி ஒழுகிய மழலை தீஞ் சொல்
வண்ண மென் பவள செவ்வாய் குதட்டியே வளரா நின்றார்
பொரு புலி பார்வை பேழ்வாய் முழை என பொற்கை நீட்ட
பரிஉடை தந்தை கண்டு பைந்தழை கை கொண்டோ ச்ச
இரு சுடர குறு கண் தீர்க்கும் எழில் வளர் கண்ணீர் மல்கி
வருதுளி முத்தம் அத்தாய் வாய் கொள்ள
துடி குறடு உருட்டி ஓடி தொடக்கு நா பாசம் சுற்றி
பிடித்து அறுத்து எயின பிள்ளை பேதையர் இழைத்த வண்டல்
அடி சிறு தளிரால் சிந்தி அருகுறு சிறுவரோடும்
குடி செறு குரம்பை எங்கும் குறு நடை குறும்பு செய்து
அனையன பலவும் செய்தே ஐந்தின் மேல் ஆன ஆண்டின்
வனை தரு வடிவார் கண்ணி மற சிறு மைந்த ரோடும்
சினை மலர காவுகள் ஆடி செறிகுடி குறிச்சி சூழ்ந்த
புனை மரு புழலை வேலி புறச்சிறு கானிற் போகி
கடு முயல் பறழினோடுங் கான ஏனத்தின் குட்டி
கொடு வரி குருளை செந்நாய் கொடுஞ் செவி சாபம் ஆன
முடுகிய விசையில் ஓடி தொடர்ந்து உடன் பற்றி முற்றத்து
இடு மர திரளில் கட்டி வளப்பன எண்ணிலாத
அலர் பகல் கழிந்த அந்தி ஐயவி புகையும் ஆட்டி
குலமுது குறத்தி ஊட்டி கொண்டு கண் துயிற்றி கங்குல்
புலர ஊன் உணவு நல்கி புரி விளையாட்டின் விட்டு
சில முறை ஆண்டு செல்ல சிலை பயில் பருவம் சேர்ந்தார்
தந்தையும் மைந்தனாரை நோக்கி தன் தடித்த தோளால்
சிந்தை உள் மகிழ புல்லி சிலை தொழில் பயிற்ற வேண்டி
முந்தை துறையில் மிக்க முதியரை அழைத்து கூட்டி
வந்த நாள் குறித்தது எல்லாம் மறவர்க்கு சொல்லி விட்டான்
வேடர் தம் கோமான் நாதன் வென்றி வேள் அருளால் பெற்ற
சேடரின் மிக்க செய்கை திண்ணன் வில் பிடிக்கின்றான் என்று
ஆடியல் துடியும் சாற்றி அறைந்த பேர் ஓசை கேட்டு
மாடுயர் மலைகள் ஆளும் மற குல தலைவர் எல்லாம்
மலை படு மணியும் பொன்னும் தரளமும் வரியின் தோலும்
கொலை புரி களிற்று கோடும் பீலியின் குவையும் தேனும்
தொலைவில் பல் நறவும் ஊனும் பலங்களும் கிழங்கும் துன்ற
சிலை பயில் வேடர் கொண்டு திசை தொறும் நெருங்க வந்தார்
மல்கிய வளங்கள் எல்லாம் நிறைந்திட மாறில் சீறூர்
எல்லையில் அடங்கா வண்ணம் ஈண்டினர் கொணர்ந்தா எங்கும்
பல்பெருங் கிளைஞர் போற்ற பரா கடன் பலவும் செய்து
வில் விழா எடுக்க என்று விளம்பினான் வேடர் கோமன்
பான்மையில் சமைத்து கொண்டு படைக்கலம் வினைஞர் ஏந்த
தேனலர் கொன்றையார் தம் திருச்சிலை செம்பொன் மேரு
வானது கடலின் நஞ்சும் ஆக்கிட அவர்க்கே பின்னும்
கான ஊன் அமுதம் ஆக்கும் சிலையினை காப்பு செய்தார்
சிலையினை காப்பு கட்டும் திண் புலி நரம்பில் செய்த
நலமிகு காப்பு நன்னாண் நாகனார் பயந்த நாகர்
குலம் விளங்கு கரிய குன்றின் கோலம் முன்கையில் சேர்த்தி
மலை உறை மாக்கள் எல்லாம் வாழ்த்த எடுத்து இயம்பினார்கள்
ஐவன அடிசில் வெவ்வேறு அமைந்தன புற்பாற் சொன்றி
மெய் வரை தினை மென் சோறு மூங்கில் வன் பதங்கள் மற்றும்
கைவினை எயினர் ஆக்கி கலந்த ஊன் கிழங்கு துன்ற
செய் வரை உய்ப்ப எங்கும் கலந்தனர் சினவில் வேடர்
செம் தினை இடியும் தேனும் அருந்துவார் தேனில் தோய்த்து
வெந்த ஊன் அயில்வார் வேரி விளங்கனி கவளம் கொள்வார்
நந்திய ஈயல் உண்டி நசையொடு மிசைவார் வெவ்வேறு
அந்தமில் உணவின் மேலோர் ஆயினர் அளவிலார்கள்
அயல் வரை புலத்தின் வந்தார் அருங்குடி இருப்பின் உள்ளார்
இயல் வகை உணவில் ஆர்ந்த எயிற்றியர் எயினர் எல்லாம்
உயர் கதிர் உச்சி நீங்க ஒழிவில் பல் நறவு மாந்தி
மயலுறு களிப்பின் நீடி வரிசிலை விழவு கொள்வார்
பாசிலை படலை சுற்றி பன் மலர தொடையல் சூடி
காசுடை வட தோல் கட்டி கவடி மெ கலன்கள் பூண்டார்
மாசில் சீர் வெட்சி முன்னா வருதுறை கண்ணி சூடி
ஆசில் ஆசிரியன் ஏந்தும் அடற் சிலை மருங்கு சூழ்ந்தார்
தொண்டக முரசும் கொம்பும் துடிகளும் துளை கொள் வேயும்
எண்டிசை நிறைந்து விம்ம எழுந்த பேர் ஒலியினோடும்
திண்டிறல் மறவர் ஆர்ப்பு சேண் விசும்பு இடித்து செல்ல
கொண்ட சீர் விழவு பொங குறிச்சியை வலம் கொண்டார்கள்
குன்றவர் களி கொண்டாட கொடிச்சியர் துணங்கை ஆட
துன்றிய மகிழ்ச்சியோடும் சூர் அரமகளிர் ஆட
வென்றி வில் விழவினோடும் விருப்புடை ஏழாம் நாளாம்
அன்றிரு மடங்கு செய்கை அழகுற அமைத்த பின்னர்
வெங்கதிர் விசும்பின் உச்சி மேவிய பொழுதில் எங்கும்
மங்கல வாழ்த்து மல்க மருங்கு பல்லியங்கள் ஆர்ப்ப
தங்கள் தொல் மரபின் விஞ்சை தனு தொழில் வலவர் தம்பால்
பொங்கொளி கரும் போர் ஏற்றை பொருசிலை பிடிப்பித்தார்கள்
பொற்றட வரையின் பாங்கர புரிவுறு கடன் முன் செய்த
வில் தொழில் களத்தில் நண்ணி விதிமுறை வணங்கி மேவும்
அற்றை நாள் தொடங்கி நாளும் அடல் சிலை ஆண்மை முற்ற
கற்றனர் என்னை ஆளும் கானவர்க்கு அரிய சிங்கம்
வண்ணவெஞ் சிலையும் மற்ற படைகளும் மலர கற்று
கண்ணகல் சாயல் பொங கலை வளர் திங்களே போல்
எண்ணிரண்டு ஆண்டின் செவ்வி எய்தினார் எல்லை இல்லா
புண்ணியம் தோன்றி மேல் வளர் அதன் பொலிவு
இவ் வண்ணம் திண்ணனார் நிரம்பு நாளில்
இருங் குறவர் பெருங்குறிச்சிக்கு இறைவன் ஆய
மை வண்ண வரை நெடு தோள் நாகன் தானும் மலை எங்கும்
வனம் எங்கும் வரம்பில் காலம்
கை வண்ண சிலை வேட்டை ஆடி தெவ்வர் கண
நிரைகள் பல கவர்ந்து கானம் காத்து
மெய் வண்ணந்தளர் மூப்பின் பருவம் எய்தி வில்லுழவின்
பெரு முயற்சி மெலிவன் ஆனான்
அங்கண் மலை தடஞ்சாரல் புனங்கள் எங்கும்
அடலேனம் புலி கரடி கடமை ஆமா
வெங் கண் மரை கலையொடு மான் முதலாய் உள்ள மிருகங்கள்
மிக நெருங்கி மீதூர் காலை
திங்கள் முறை வேட்டை வினை தாழ்தது என்று சிலை
வேடர் தாம் எல்லாம் திரண்டு சென்று
தங்கள் குல முதல் தலைவன் ஆகி உள்ள தண் தெரியல்
நாகன் பால் சார்ந்து சொன்னார்
சொன்ன உரை கேட்டலுமே நாகன் தானும் சூழ்ந்து
வரும் தன் மூப்பின் தொடர்வு நோக்கி
முன் அவர்கட்கு உரை செய்வான் மூப்பினாலே முன்பு போல்
வேட்டையினில் முயல கில்லேன்
என் மகனை உங்களுக்கு நாதனாக எல்லீரும் கை
கொண்மின் என்ற போதின்
அன்னவரும் இரங்கி பின் மகிழ்ந்து தம் கோன் அடி வணங்கி
இம் மாற்றம் அரைகின்றார்கள்
இத்தனை காலமும் நினது சிலை கீழ் தங்கி இனிது
உண்டு தீங்கு இன்றி இருந்தோம் இன்னும்
அத்த நினது அருள் வழியே நிற்பது அல்லால் அடுத்த நெறி
வேறு உளதோ அதுவே அன்றி
மெய்த்த விறல் திண்ணனை உன் மரபில் சால மேம் படவே
பெற்று அளித்தாய் விளங்கு மேன்மை
வைத்த சிலை மைந்தனை ஈண்டு அழைத்து நுங்கள் வரை
ஆட்சி அருள் என்றார் மகிழ்ந்து வேடர்
சிலை மறவர் உரை செய்ய நாகன் தானும் திண்ணனை
முன் கொண்டுவர செப்பி விட்டு
மலை மருவு நெடும் கானில் கன்னி வேட்டை மகன் போ
காடு பலி மகிழ்வு ஊட்ட
தலை மரபின் வழி வந்த தேவராட்டிதனை அழைமின் என
அங்கு சார்ந்தோர் சென்று
நிலைமை அவள் தனக்கு உரைப்ப நரை மூதாட்டி நெடிது வந்து
விருப்பினோடும் கடிது வந்தாள்
கானில் வரித்தளிர் துதைந்த கண்ணி சூடி கலை
மருப்பின் அரிந்த குழை காதில் பெய்து
மானின் வயிற்று அரிதார திலகம் இட்டு மயில் கழுத்து
மனவு மணி வடமும் பூண்டு
தான் இழிந்து இரங்கி முலை சரிந்து தாழ தாழைப்பீலி
மரவுரி மேல் சார எய்தி
பூ நெருங்கு தோரை மலி சேடை நல்கி போர் வேடர்
கோமானை போற்றி நின்றாள்
நின்ற முதுகுறக்கோல படிமத்தாளை நேர் நோக்கி
அன்னை நீ நிரப்பு நீங்கி
நன்று இனிதின் இருந்தனையோ என்று கூறும் நாகன்
எதிர் நலம் பெருக வாழ்த்தி நல்ல
மென் தசையும் ஈயலொடு நறவும் வெற்பில் விளை
வளனும் வேண்டிற்று எல்லாம்
அன்று நீ வைத்தபடி பெற்று வாழ்வேன் அழைத்த பணி
என் என்றாள் அணங்கு சார்ந்தாள்
கோட்டமில் என்குல மைந்தன் திண்ணன் எங்கள்
குல தலைமை யான் கொடுப்பக்கொண்டு பூண்டு
பூட்டுறு வெஞ் சிலை வேடர் தம்மை காக்கும் பொருப்புரிமை
புகுகின்றான் அவனுக்கு என்றும்
வேட்டை வினை எனக்கு மேலாக வாய்த்து வேறு
புலங் கவர் வென்றி மேவு மாறு
காட்டிலுறை தெய்வங்கள் விரும்பி உண்ண காடு பலி
ஊட்டு என்றான் கவலை இல்லான்
மற்று அவன்தன் மொழி கேட்ட வரை சூராட்டி மனமகிழ்ந்து
இங்கு அன்போடு வருகின்றேனுக்கு
எற்றையினுங் குறிகள் மிக நல்ல ஆன இதனாலே உன்
மைந்தன் திண்ணனான வெற்றி வரி
சிலையோன் நின் அளவில் அன்றி மேம்படுகின்றான்
என்று விரும்பி வாழ்த்தி
கொற்றவன் தெய்வங்கள் மகிழ ஊட்ட வேண்டுவன
குறைவின்றி கொண்டு போனாள்
தெய்வ நிகழ் குற முதியாள் சென்ற பின்பு திண்ணனார்
சிலை தாதை அழைப்ப சீர்கொள்
மைவிரவு நறுங் குஞ்சி வாச கண்ணி மணி நீல
ஒன்று வந்தது என்ன
கைவிரவு சிலை வேடர் போற்ற வந்து காதல் புரி
தாதை கழல் வணங்கும் போதில்
செய்வரை போல் புயம் இரண்டும் செறி புல்லி
செழும் புலித்தோல் இருக்கையின் முன்சேர வைத்தான்
முன் இருந்த மைந்தன் முகம் நோக்கி நாகன்
மூப்பு எனை வந்து அடைந்தலினால் முன்புபோல
என்னுடைய முயற்சியினால் வேட்டை ஆட இனி
எனக்கு கருத்து இல்லை எனக்கு மேலாய்
மன்னு சிலை மலையர் குல காவல் பூண்டு மாறு
எறிந்து மா வேட்டை ஆடி என்றும்
உன்னுடைய மரபு உரிமை தாங்குவாய் என்றுடைய
தோலும் சுரிகையும் கை கொடுத்தான் அன்றே
தந்தை நிலை உள்கொண்டு தளர்வு கொண்டு தங்கள்
குல தலைமைக்கு சார்வு தோன்ற
வந்த குறைபாடு அதனை நிரப்புமாறு மனம் கொண்ட
குறிப்பினால் மறாமை கொண்டு
முந்தையவன் கழல் வணங்கி முறைமை தந்த முதல் சுரிகை
உடை தோலும் வாங்கி கொண்டு
சிந்தை பரங்கொள நின்ற திண்ணனார்க்கு திரு
தாதை முகம் மலர்ந்து செப்புகின்றான்
நம்முடைய குல மறவர் சுற்றத்தாரை நான் கொண்டு
பரித்து அதன் மேல் நலமே செய்து
தெம் முனையில் அயற் புலங்கள் கவர்ந்து கொண்ட திண்
சிலையின் வளமொழியா சிறப்பின் வாழ்வாய்
வெம் முனையின் வேட்டைகளும் உனக்கு வாய்க்கும்
விரைந்து நீ தாழாதே வேட்டை ஆட
இம் முரண் வெஞ் சிலை வேடர் தங்களோடும் எழுக என
விடை கொடுத்தான் இயல்பில் நின்றான்
செங்கண் கோளரியேறு அன்ன திண்மை
திண்ணனார் செய் தவத்தின் பெருமை பெற்ற
வெங்கண் விறல் தாதை கழல் வணங்கி நின்று விடை
கொண்டு புறம் போந்து வேடரோடும்
மங்கல நீர சுனை படிந்து மனையின் வைகி வைகிருளின்
புலர் காலை வரிவிற் சாலை
பொங்கு சிலை அடல் வேட்டை கோலம் கொள்ள புனை
தொழில் கை வினைஞரோடும் பொலிந்து புக்கார்
நெறி கொண்ட குஞ்சி சுருள் துஞ்சி நிமிர்ந்து பொங்க
முறி கொண்ட கண்ணிக்கு இடை மொய்யொளி பீலி சேர்த்தி
வெறி கொண்ட முல்லை பிணைமீது குறிஞ்சி வெட்சி
செறி கொண்ட வண்டின் குலம் சீர் கொள பின்பு செய்து
முன் நெற்றியின் மீது முருந்திடை வைத்த குன்றி
தன்னில் புரி கொண்ட மயிர் கயிறார சாத்தி
மின்னல் திகழ் சங்கு விளங்கு வெண் தோடு காதின்
மன்னி புடை நின்றன மா மதி போல வைக
கண்டத்திடை வெண் கவடி கதிர் மாலை சேர
கொண்ட கொடு பன் மணி கோத்திடை ஏன கோடு
துண்ட பிறை போல்வன தூங்கிட வேங்கை வன்தோல்
தண்டை செயல் பொங்கிய சன்ன வீரம் தயங்க
மார்பில் சிறு தந்த மணித்திரள் மாலை தாழ
தாரிற் பொலி தோள் வலயங்கள் தழைத்து மின்ன
சேர்விற் பொலி கங்கண மீது திகழ்த முன் கை
கார்விற் செறி நாண் எறி கை
அரையில் சரணத்து உரி ஆடையின் மீது பௌவத்து
திரையில் படு வெள்ளலகு ஆர்த்து விளிம்பு சேர்த்தி
நிரையில் பொலி நீளுடை தோல்கரி கைப்புறம் சூழ்
விரையில் துவர் வார் விசி போக்கி அமைத்து வீக்கி
வீர கழல் காலின் விளங்க அணிந்து பாதம்
சேர தொடு நீடு செருப்பு விருப்பு வா
பார பெரு வில் வலம் கொண்டு பணிந்து திண்ணன்
சார திருத்தாள் மடித்து ஏற்றி வியந்து தாங்கி
அங்கு அப்பொழுதில் புவனத்து இடர் வாங்க ஓங்கி
துங்க பெரு மா மழை போன்று துண் என்று ஒலிப்ப
வெங்கண் சின நீடு விலங்கு விலங்கி நீங்க
செங்கை தலத்தால் தடவி சிறு நாண் எறிந்தார்
பல்வேறு வாளி புதை பார்த்து உடன் போத ஏவி
வில் வேடர் துடி மேவி ஒலிக்கு முன்றில்
சொல் வேறு வாழ்த்து திசைதோறும் துதைந்து விம்ம
வல்லேறு போல்வார் அடல் வாளி தெரிந்து நின்றார்
மான சிலை வேடர் மருங்கு நெருங்கும் போதில்
பானற்குல மாமலரில் படர் சோதியார் முன்
தேனற்றசை தேறல் சரு பொரி மற்றும் உள்ள
கான பலி நேர் கடவுள் பொறையாட்டி வந்தாள்
நின்று எங்கும் மொய்க்கும் சிலை வேடர்கள் நீங்க புக்கு
சென்று அங்கு வள்ளல் திரு நெற்றியில் சேடை சாத்தி
உன் தந்தை தந்தைக்கும் நன்மைகள் உள்ள வல்ல
நன்றும் பெரிது விறல் நம்மளவு அன்று இது என்றாள்
பெற்றியில் வாழ்த்தும் அணங்குடை ஆட்டி தன்னை
செப்பற்கு அரிதாய சிறப்பு எதிர் செய்து போக்கி கை பற்றிய
திண் சிலை கார் மழை மேகம் என்ன
மெ பொற்புடை வேட்டையின் மேல் கொண்டு எழுந்து போந்தார்
தாளில் வாழ் செருப்பர் தோல் தழைத்த நீடு தானையர்
வாளியோடு சாபம் மேவு கையர் வெய்ய வன் கணார்
ஆளி ஏறு போல ஏகும் அண்ணலார் முன் எண்ணிலார்
மீளி வேடர் நீடு கூட்டம் மிக்கு மேல் எழுந்ததே
வன் தொடர் பிணித்த பாசம் கை மள்ளர்
வென்றி மங்கை வேடர் வில்லின் மீது மேவு பாதமுன்
சென்று நீளுமாறு போல்வ செய்ய நாவின் வாய வாய்
ஒன்றோடு ஒன்று நேர் படாமல் ஓடு நாய்கள் மாடெலாம்
போர் வலை சிலை தொழில் புறத்திலே விளைப்ப
சார் வலை தொடக்கு அறுக்க ஏகும் ஐயர் தம் முன்னே
கார் வலை படுத்த குன்று கானமா வளைக்க நீள்
வார் வலை திறம் சுமந்து வந்த வெற்பர் முந்தினார்
நண்ணி மா மறை குலங்கள் நாட என்று நீடும்
தண்ணிலா அடம்பு கொன்றை தங்கு வேணியார் தமை
கண்ணில் நீடு பார்வை ஒன்று கொண்டு காணும் அன்பர் முன்
எண்ணில் பார்வை கொண்டு வேடர் எம் மருங்கும் ஏகினார்
கோடுமுன் பொலிக்கவும் குறுங் கணா குளிக்குலம்
மாடு சென்று இசைப்பவும் மருங்கு பம்பை கொட்டவும்
சேடு கொண்டகை விளி சிறந்த ஓசை செல்லவும்
காடு கொண்டு எழுந்த வேடு கை வளைந்து சென்றதே
நெருங்கு பைந்தரு குலங்கள் நீடு காடு கூட நேர்
வருங்கருஞ் சிலை தடக்கை மான வேடர் சேனை தான்
பொரு தட திரைக்கடல் பரப்பு இடை புகும் பெருங்
கருந்தரங்க நீள் புனல் களிந்தி கன்னி ஒத்ததே
தென் திசை பொருப்புடன் செறிந்த கானின் மான் இனம்
பன்றி வெம் மரை கணங்கள் ஆதியான பல் குலம்
துன்றி நின்ற என்றடி சுவட்டின் ஒற்றர் சொல்லவே
வன் தடக்கை வார்கொடு எம் மருங்கும் வேடர் ஓடினார்
ஓடி எறிந்து வாரொழுக்கி யோசனை பரப்பு எலாம்
நெடிய திண் வலை தொடக்கு நீளிடை பிணித்து நேர்
கடி கொள பரந்த காடு காவல் செய்து அமைத்த பின்
செடி தலை சிலைக்கை வேடர் திண்ணனார் முன் நண்ணினார்
வெஞ்சிலைக்கை வீரனாரும் வேடரோடு கூடி முன்
மஞ்சலைக்கு மாமலை சரி புறத்து வந்த மா
அஞ்சுவித்து அடர்க்கும் நாய்கள் அட்டமாக விட்டு நீள்
செஞ்சரத்தினோடு குழல் செய்த கானுள் எய்தினர்
வெய்ய மா எழுப்ப ஏவி வெற்பராயம் ஓடி நேர்
எய்யும் வாளி முன் தெரிந்து கொண்டு செல்ல எங்கணும்
மொய் குரல் துடி குலங்கள் பம்பை முன் சிலைத்து எழ
கை விளித்து அதிர்த்து மா எழுப்பினார்கள் கானெலாம்
ஏனமோடு மான் இனங்கள் எண்கு திண் கலை குலம்
கான மேதி யானை வெம் புலி கணங்கள் கான் மரை
ஆன மா அநேக வெருண்டு எழுந்து பாய
சேனை வேடர் மேல் அடர்ந்து சீறி அம்பில் நூறினார்
தாளறுவன் இடை துணிவன தலை துமிவன கலைமா
வாளிகளொடு குடல் சொரிதர மறிவன சில மரை மா
நீளுடல் விடு சரம் உருவிட நிமிர்வன மிடை கட மா
மீளிகொள் கணை படும் உடல் எழ விழுவன பல உழையே
வெங்கணை படு பிடர் கிழிபட விசை உருவிய கயவாய்
செங் கனல் விட அதனொடு கணை செறிய முன் இரு கருமா
அங்கு எழும் சிரம் உருவிய பொழுது அடல் எயிறு உற அதனை
பொங்கிய சினமொடு கவர்வன புரைவன சில புலிகள்
பின் மறவர்கள் விடு பகழிகள் பிற குற வயிறிடை போய்
முன் நடுமுக மிசை உருவிட முடுகிய விசையுடன்
கொன் முனை அடு சரம் இனம் எதிர் குறுகிய முகம் உருவ
தன் எதிர் பொருவன நிகர் தலையன பல
கரு வரை ஒரு தனுவொடு விசை கடுகியது என முனை நேர்
குரிசில் முன் விடும் அடுசரம் எதிர் கொலை பயில் பொழுது அவையே
பொரு கரி யொடு சின அரியிடை புரையறவுடல் புகலால்
வரும் இரவொடு பகல் அணைவன என மிடையும் அவ்வனமே
நீளிடை விசை மிசை குதிகொள நெடு முகில் தொட எழு மான்
தாளுறு கழல் மறவர்கள் விடு சரம் நிரை தொடர்வன தாம்
வாள் விடுகதிர் மதி பிரிவுற வருமென விழும் உழையை
கோளொடு பயில் பணி தொடர் நிலை கொளவுள எதிர் பலவே
கடல் விரி புனல் கொள விழுவன கரு முகிலென நிரையே
படர்வொடு செறி தழை பொதுளிய பயில் புதல் வனம் அதன் மேல்
அடலுறு சரம் உடலுற வரை அடியிடம் அலமரலால்
மிடை கரு மரை கரடிகள் ஓடு விழுவன வன மேதி
பல துறைகளின் வெருவரலொடு பயில் வலையற நுழை மா
உலமொடு படர்வன தகையுற உறு சினமொடு கவர் நாய்
நிலவிய இரு வினை வலை இடை நிலை சுழல் பவர் நெறி சேர்
புலனுறு மனனிடை தடைசெய்த பொறிகளின் அலவுளவே
துடியடியன மடி செவியன துறுகய முனி தொடரார்
வெடி பட விரி சிறு குருளைகள் மிசை படு கொலை விரவார்
அடி தளர்வுறு கரு உடையன அணை உறு பிணை அலையார்
கொடியன எதிர் முடுகியும் உறு கொலை புரி சிலை மறவர்
இவ்வகை வரு கொலை மறவினை எதிர் நிகழ்வுழி அதிர
கைவரைகலும் வெருவுற இடை கான் எழுவதோர் ஏனம்
பெய் கருமுகில் என இடியொடு பிதிர் கனல் விழி சிதறி
மொய் வலைகளை அற நிமிர் முடுகிய கடு விசையில்
போமது தணை அடுதிறலொடு பொரு மறவர்கள் அரியேறு
ஆமவர் தொடர்வுறும் விசையுடன் அடி வழி செலும் அளவில்
தாம் ஒருவரும் அறிகிலரவர் தனி தொடர்வுழி அதன்மேல்
ஏமுனை அடு சிலை விடலைகள் இருவர்கள் அடி பிரியார்
நாடிய கழல் வயவர்கள் அவர் நாணனும் நெடு வரிவில்
காடனும் எனும் இருவரும் மலை காவலரொடு கடிதில்
கூடினர் விடு பகழிகளொடு கொலை ஞமலிகள் வழுவி
நீடிய சரி படர்வது தரு நீழலின் விரை கேழல்
குன்றியை நிகர் முன் செற எரி கொடு விழி இட குரல் நீள்
பன்றியும் அடல் வன் திறலொடு படர் நெறி நெடிதோடி
துன்றியது ஒரு குன்று அடி வரை சுலவிய நெறி குழல்
சென்று அதனிடை நின்றது வலிது தெருமர நிரையில்
தரு வளர் சுழல் இடை அடை அதன் நிலை அறிபவர் முன்
கை தெரி கணையினில் அடுவது கருதலர் விசை கடுகி
மொய்த்தெழு சுடர் விடு சுரிகையை முனை பெற எதிர் உருவி
குத்தினர் உடல் முறிபட வெறி குல மறவர்கள் தலைவர்
வேடர் தங்கரிய செங்கண் வில்லியார் விசையில் குத்த
மாடிரு துணியாய் வீழ்ந்த வராகத்தை கண்டு நாணன்
காடனே இதன் பின் இன்று காதங்கள் பல வந்து எய்த்தோம்
ஆடவன் கொன்றான் அச்சோ என்று அடியில் தாழ்ந்தார்
மற்றவர் திண்ணனார்க்கு மொழிகின்றார் வழி வந்து ஆற்ற
உற்றது பசி வந்து எம்மை உதவிய இதனை காய்ச்சி
சற்று நீ அருந்தி யாமும் தின்று தண்ணீர் குடித்து
வெற்றி கொள் வேட்டை காடு குருகுவோம் மெல்ல என்றார்
என்று அவர் கூற நோக்கி திண்ணனார் தண்ணீர் எங்கே
நன்றும் இவ் வனத்தில் உள்ளது என்று உரை செய்ய நாணன்
நின்ற பெரிய தேக்கின் அப்புறம் சென்றால் நீண்ட
குன்றினுக்கு அயலே ஓடும் குளிர்ந்த பொன் முகலி என்றான்
பொங்கிய சின வில் வேடன் சொன்னபின் போவோம் அங்கே
இங்கிது தன்னை கொண்டு போதுமின் என்று தாமும்
அங்கது நோக்கி சென்றார் காவதம் அரையில் கண்டார்
செங்கண் ஏறு உடையார் வைகும் திருமலை சாரல் சோலை
நாணனே தோன்றும் குன்றில் நாணுவோம் என்ன நாணன்
காண நீ போதின் நல்ல காட்சியே காணும் இந்த
சேணுயர் திரு காளத்தி மலை மிசை எழுந்து செவ்வே
கோணமில் குடுமி தேவர் இருப்பர் கும்பிடலாம் என்றான்
ஆவதென் இதனை கண்டு இங்கு அணை தொறும் என் மேல் பாரம்
போவது ஒன்று உளது போலும் ஆசையும் பொங்கி மேல்
மேவிய நெஞ்சும் வேறோர் விருப்புற விரையா நிற்கும்
தேவர் அங்கு இருப்பது எங்கே போகென்றார் திண்ணனார் தாம்
உரை செய்து விரைந்து செல்ல அவர்களும் உடனே போந்து
கரை வளர் கழையின் முத்தும் கார் அகில் குறடும் சந்தும்
வரை தரு மணியும் பொன்னும் வயிரமும் புளினம் தோறும்
திரைகள் முன் திரட்டி வைத்த திரு முகலியினை சார்ந்தார்
ஆங்கு அதன் கரையின் பாங்கோர் அணி நிழல் கேழல் இட்டு
வாங்கு வில் காடன் தன்னை மர கடை தீ கோல் பண்ணி
ஈங்கு நீ நெருப்பு காண்பாய் இம்மலை ஏறி கண்டு
நாங்கள் வந்து அணைவோம் என்று நாணனும் தாமும் போந்தார்
அளி மிடை கரை சூழ் சோலை அலர்கள் கொண்டு அணைந்த ஆற்றின்
தெளி புனல் இழிந்து சிந்தை தெளிவுறும் திண்ணனார் தாம்
களி வரும் மகிழ்ச்சி பொங காளத்தி கண்டு கொண்டு
குளிர் வரு நதி ஊடு ஏகி குலவரை சாரல் சேர்ந்தார்
கதிரவன் உச்சி நண்ண கடவுள் மால் வரையின்
அதிர் தரும் ஓசை ஐந்தும் ஆர் கலி முழக்கம் காட்ட
இது என் கொல் நாணா என்றார்க்கு இம் மலை பெருந்தேன் சூழ்ந்து
மது மலர் ஈக்கள் மொய்த்து மருங்கு எழும் ஒலி கொல் என்றான்
முன்பு செய் தவத்தின் ஈட்டம் முடிவிலா இன்பம் ஆன
அன்பினை எடுத்து காட்ட அளவிலா ஆர்வம் பொங்கி
மன் பெரும் காதல் கூர வள்ளலார் மலையை நோக்கி
என்பு நெக்கு உருகி உள்ளத்து எழு பெரு வேட்கை யோடும்
நாணனும் அன்பும் முன்பு நளிர் வரை ஏற தாமும்
பேணு தத்துவங்கள் என்னும் பெருகு சோபானம் ஏறி
ஆணையாம் சிவத்தை சாரா அணைபவர் போல ஐயர்
நீணிலை மலையை ஏறி நேர் பட செல்லும் போதில்
திங்கள் சேர் சடையார் தம்மை சென்றவர் காணா முன்னே
அம் கண்ணர் கருணை கூர்ந்த அருள் திரு நோக்கம்
தங்கிய பவத்தின் முன்னை சார்பு விட்டு அகல நீங்கி
பொங்கிய ஒளியின் நீழல் பொருவில் அன்பு உருவம் ஆனார்
மாகமார் திரு காளத்தி மலை எழு கொழுந்தாய் உள்ள
ஏக நாயகரை கண்டார் எழுந்த பேர் உவகை அன்பின்
வேகம் ஆனது மேல் செல்ல மிக்கது ஓர் விரைவின் ஓடும்
மோகமாய் ஓடி சென்றார் தழுவினார் மோந்து நின்றார்
நெடிது போது உயிர்த்து நின்று நிறைந்து எழு மயிர்க்கால் தோறும்
வடிவெலாம் புளகம் பொங்க மலர கண்ணீர் அருவி பாய
அடியனேற்கு இவர் தாம் இங்கே அகப்பட்டார் அச்சோ என்று
படி இலா பரிவு தான் ஓர் படிவமாம் பரிசு தோன்ற
வெம் மற குலத்து வந்த வேட்டுவ சாதியார் போல்
கைம் மலை கரடி வேங்கை அரி திரி கானம் தன்னில்
உம்முடன் துணையாய் உள்ளார் ஒருவரும் இன்றி கெட்டேன்
இம் மலை தனியே நீர் இங்கு இருப்பதே என்று நைந்தார்
கைச்சிலை விழுந்தது ஓரார் காளையார் மீள இந்த
பச்சிலையோடும் பூவும் பறித்திட்டு நீரும் வார்த்து
மச்சிது செய்தார் யாரோ என்றலும் மருங்கு நின்ற
அச்சிலை நாணன் தானும் நான் இது அறிந்தேன் என்பான்
வன்றிறல் உந்தை யோடு மா வேட்டை ஆடி பண்டி
குன்று இடை வந்தோம் குளிர்ந்த நீர் இவரை ஆட்டி
ஒன்றிய இலை பூச்சூட்டி ஊட்டி முன்பு அறைந்த தேர் பார்ப்பான்
அன்றிது செய்தான் இன்றும் அவன் செய்தது ஆகும் என்றான்
உண்ணிறைந்து எழுந்த தேனும் ஒழிவின்றி ஆரா அன்பில்
திண்ணனார் திரு காளத்தி நாயனார்க்கு இனிய செய்கை
எண்ணிய இவைகொலாம் என்று இது கடை பிடித்து கொண்டு அவ்
அண்ணலை பிரிய மாட்டா அளவில் ஆதரவு நீட
இவர் தமை கண்டேனுக்கு தனியராய் இருந்தார் என்னே
இவர் தமக்கு அமுது செய்ய இறைச்சியும் இடுவார் இல்லை
இவர் தமை பிரிய ஒண்ணாது என்செய்கேன் இனி யான் சால
இவர் தமக்கு இறைச்சி கொண்டிங்கு எய்தவும் வேண்டும் என்று
போதுவர் மீண்டும் செல்வர் புல்லுவர் மீள போவர்
காதலின் நோக்கி நிற்பர் கன்று அகல் புனிற்று போல்வர்
நாதனே அமுது செய்ய நல்ல மெல் இறைச்சி நானே
கோதற தெரிந்து வேறு கொண்டு இங்கு வருவேன் என்பார்
ஆர்தமராக நீர் இங்கு இருப்பது என்று அகலமாட்டேன்
நீர் பசித்து இருக்க இங்கு நிற்கவும் இல்லேன் என்று
சோர் தரு கண்ணீர் வார போய் வர துணிந்தார் ஆகி
வார் சிலை எடுத்து கொண்டு மலர கையால் தொழுது போந்தார்
முன்பு நின்று அரிதில் நீங்கி மொய் வரை இழிந்து நாணன்
பின்பு வந்து அணைய முன்னை பிற துறை வேட்கை நீங்கி
அன்பு கொண்டு உய்ப்ப செல்லும் அவர் திரு முகலி ஆற்றின்
பொன் புனை கரையில் ஏறி புது மலர காவில் புக்கார்
காடனும் எதிரே சென்று தொழுது தீ கடைந்து வைத்தேன்
கோடுடை ஏனம் உங்கள் குறிப்படி உறுப்பை எல்லாம்
மாடுற நோக்கி கொள்ளும் மறித்து நாம் போகைக்கு இன்று
நீட நீர் தாழ்த்தது என்னோ என்றலும் நின்ற நாணன்
அங்கிவர் மலையில் தேவர் தம்மை கண்டு அணைத்து கொண்டு
வங்கினை பற்றி போதாவல்லுடும்பு என்ன நீங்கான்
இங்கும் தேவர் தின்ன இறைச்சி கொண்டு ஏக போந்தான்
நம்குல தலைமை விட்டான் நலப்பட்டான் தேவர்க்கு என்றான்
என் செய்தாய் திண்ணா நீ தான் என்ன மால் கொண்டாய் எங்கள்
முன் பெரு முதலி அல்லையோ என முகத்தை நோக்கார்
வன் பெரும் பன்றி தன்னை எரியினில் வதக்கி மிக்க
இன்புறு தசைகள் வெவ்வேறு அம்பினால் ஈர்ந்து கொண்டு
கோலினில் கோத்து காய்ச்சி கொழும் தசை பதத்தில் வேவ
வாலிய சுவைமுன் காண்பான் வாயினில் அதுக்கி பார்த்து
சாலவும் இனிய எல்லாம் சருகு இலை இணைத்த கல்லை
ஏலவே கோலி கூட அதன் மிசை இடுவார் ஆனார்
மருங்கு நின்றவர்கள் பின்னும் மயல் மிக முதிர்ந்தான் என்னே
அரும் பெறல் இறைச்சி காய்ச்சி அதுக்கி வேறு உமிழா நின்றான்
பெரும் பசி உடையன் ஏனும் பேச்சிலன் எமக்கும் பேறு
தரும் பரிசு உணரான் மற்றை தசை புறத்து எறியா நின்றான்
தேவுமால் கொண்டான் இந திண்ணன் மற்று இதனை தீர்க்கல்
ஆவது ஒன்று அறியோம் தேவராட்டியை நாகனோடு
மேவி நாம் கொணர்ந்து தீர்க்க வேண்டும் அவ் வேட்டை கானில்
ஏவல் ஆட்களையும் கொண்டு போதும் என்று எண்ணி போனார்
கானவர் போனது ஓரார் கடிதினில் கல்லையின் கண்
ஊன் அமுது அமைத்து கொண்டு மஞ்சனம் ஆட்ட உன்னி
மா நதி நன்னீர் தூய வாயினில் கொண்டு கொய்த
தூ நறும் பள்ளி தாமங் குஞ்சி மேல் துதை கொண்டார்
தனு ஒரு கையில் வெய்ய சரத்துடன் தாங்கி கல்லை
புனித மெல் இறைச்சி நல்ல போனகம் ஒரு கை ஏந்தி
இனிய எம்பிரானார் சால பசிப்பர் என்று இரங்கி ஏங்கி
நனி விரைந்து இறைவர் வெற்பை நண்ணினார் திண்ணனார்தாம்
இளைத்தனர் நாயனார் என்று ஈண்ட சென்று எய்தி வெற்பின்
முளைத்து எழு முதலை கண்டு முடிமிசை மலரை காலில்
வளைத்த பொற் செருப்பால் மாற்றி வாயின் மஞ்சன நீர் தன்னை
விளைத்த அன்பு உமிழ்வார் போன்று விமலனார் முடிமேல் விட்டார்
தலை மிசை சுமந்த பள்ளி தாமத்தை தடங் காளத்தி
மலை மிசை தம்பிரானார் முடி மிசை வணங்கி சாத்தி
சிலைமிசை பொலிந்த செங்கை திண்ணனார் சேர்த்த கல்லை
இலை மிசை படைத்த ஊனின் திரு அமுது எதிரே வைத்து
கொழுவிய தசைகள் எல்லாம் கோலினில் தெரிந்து கோத்து அங்கு
அழலுறு பதத்தில் காய்ச்சி பல்லினால் அதுக்கி நாவில்
பழகிய இனிமை பார்த்து படைத்த இவ் இறைச்சி சால
அழகிது நாயனீரே அமுது செய்து அருளும் என்றார்
அன்ன இம் மொழிகள் சொல்லி அமுது செய்வித்த வேடர்
மன்னனார் திரு காளத்தி மலையினார்க்கு இனிய நல் ஊன்
இன்னமும் வேண்டும் என்னும் எழு பெரும் காதல் கண்டு
பன்னெடுங் கரங்கள் கூப்பி பகலவன் மலையில் தாழ்ந்தான்
அவ்வழி அந்தி மாலை அணைதலும் இரவு சேரும்
வெவ்விலங்கு உள என்று அஞ்சி மெய்மையின் வேறு கொள்ளா
செவ்விய அன்பு தாங்கி திரு கையில் சிலையும் தாங்கி
மைவரை என்ன ஐயர் மருங்கு நின்று அகலா நின்றார்
சார்வரும் தவங்கள் செய்து முனிவரும் அமரர் தாமும்
கார்வரை அடவி சேர்ந்தும் காணுதற்கு அரியார் தம்மை
ஆர்வம் முன் பெருக ஆரா அன்பினில் கண்டு கொண்டே
நேர் பெற நோக்கி நின்றார் நீள் இருள் நீங்க
கழை சொரி தரள குன்றில் கதிர் நிலவு ஒருபால் பொங்க
முழை அரவு உமிழ்ந்த செய்ய மணி வெயில் ஒருபால் மொய்ப்ப
தழை கதிர பரிதியோடும் சந்திரன் தலை உவாவில்
குழையணி காதர் வெற்பை கும்பிட சென்றால் ஒக்கும்
விரவு பன்மணிகள் கான்ற விரிகதிர படலை பொங்க
மரகதம் ஒளி கொள் நீல மணிகளும் இமைக்கும் சோதி
பொர இரு சுடருக்கு அஞ்சி போயின புடைகள் தோறும்
இரவு இருள் ஒதுங்கினாலே போன்று உளது எங்கும்
செந்தழல் ஒளியில் பொங்கும் தீப மா மரங்களாலும்
மந்திகள் முழையில் வைத்த மணி விளக்கு ஒளிகளாலும்
ஐந்தும் ஆறடக்கி உள்ளார் அரும் பெரும் சோதியாலும்
எந்தையார் திருக்காளத்தி மலையினில் இரவு ஒன்று இல்லை
வரும் கறை பொழுது நீங்கி மல்கிய யாமஞ் சென்று
சுருங்கிட அறிந்த புள்ளின் சூழ் சிலம்பு ஓசை கேட்டு
கருங்கடல் என்ன நின்ற கண் துயிலாத வீரர்
அரும் பெறல் தம்பிரனார்க்கு அமுது கொண்டு அணைய வேண்டி
ஏறுகாற்பன்றியோடும் இருங்கலை புனமான் மற்றும்
வேறு இனங்கள் வேட்டை வினை தொழில்
ஊறுசெய் காலம் சிந்தித்து உருமிக தெரியா போதின்
மாறடு சிலையும் கொண்டு வள்ளலை தொழுது போந்தார்
மொய் காட்டும் இருள் வாங்கி முகம் தேர்
மெய் காட்டும் அன்புடைய வில்லியர் தனி வேட்டை
எய்காட்டின் மாவளைக்க இட்ட கரும் திரை எடுத்து
கை காட்டும் வான் போல கதிர் காட்டி எழும் போதில்
எய்திய சீர் ஆகமத்தில் இயம்பிய பூசனைக்கு ஏற்ப
கொய்த மலரும் புனலும் முதலான கொண்டு அணைந்தார்
மை தழையும் கண்டத்து மலை மருந்தை வழி பாடு
செய்து வரும் தவம் உடைய முனிவர் சிவ கோசரியார்
வந்து திருமலையின் கண் வானவர் நாயகர் மருங்கு
சிந்தை நியமத்தோடும் செல் கின்றார் திரு முன்பு
வெந்த இறைச்சியும் எலும்பும் கண்டு அகல மிதித்து ஓடி
இந்த அனுசிதம் கெட்டேன் யார் செய்தார் என்று அழிவார்
மேவநேர் வர அஞ்சா வேடுவரே இது செய்தார்
தேவ ஈசனே திருமுன்பே இது
போவதே இவ் வண்ணம் புகுத நீர் திரு உள்ளம்
ஆவதோ என பதறி அழுது விழுந்து அலமந்தார்
பொருப்பில் எழுஞ் சுடர கொழுந்தின் பூசனையும் தாழ்க்க நான்
இருப்பது இனி ஏன் என்று அவ் இறைச்சி எலும்புடன் இலையும்
செருப்பு அடியும் நாய் திரு அலகால் மாற்றிய
விருப்பின் ஒடும் திருமுகலி புனல் மூழ்கி விரைந்து அணைந்தார்
பழுது புகுந்தது அது தீர பவித்திரமாம் செயல் புரிந்து
தொழுது பெறுவன கொண்டு தூய பூசனை தொடங்கி
வழுவில் திரு மஞ்சனமே வரும் முதலாக
முழுது முறைமையின் முடித்து முதல்வனார் கழல் பணிந்தார்
பணிந்து எழுந்து தனி முதலாம் பரன் என்று பன் முறையால்
துணிந்த மறை மொழியாலே துடி செய்து சுடர திங்கள்
அணிந்த சடை முடி கற்றை அங்கணரை விடை கொண்டு
தணிந்த மன திருமுனிவர் தபோ வனத்திடை சார்ந்தார்
இவ் வண்ணம் பெருமுனிவர் ஏகினார் இனி இப்பால்
மைவண்ண கருங் குஞ்சி வன வேடர் பெருமானார்
கைவண்ண சிலை வளைத்து கான் வேட்டை தனி ஆடி
செய்வண்ண திறம் மொழிவேன் தீவினையின்
திரு மலையின் புறம் போன திண்ணனார் செறி துறுகல்
பெருமலைகள் இடை சரிவில் பெரும் பன்றி புனம் மேய்ந்து
வருவனவும் துணி படுத்து மான் இனங்கள் கான் இடை நின்று
ஒரு வழி சென்று ஏறு துறை ஒளி நின்று கொன்று அருளி
பயில் விளியால் கலை அழைத்து பாடு பெற ஊடுருவும்
அயில் முகவெங் கணை போக்கி அடி ஒற்றி மரை இனங்கள்
துயில் இடையில் கிடை செய்து தொடர்ந்து கடமைகள் எய்து
வெயில் படு வெங்கதிர் முதிர தனி வேட்டை வினை முடித்தார்
பட்ட வன விலங்கு எல்லாம் படர் வனத்தில் ஒரு சூழல்
இட்டு அருகு தீ கடை கோல் இரும் சுரிகை தனை உருவி
வெட்டி நறுங் கோல் தேனும் மிக முறித்து தேக்கு இலையால்
வட்டமுறு பெருங் கல்லை மருங்கு புடை பட அமைத்தார்
இந்தனத்தை முறித்து அடுக்கி எரி கடையும் அரணியினில்
வெம் தழலை பிறப்பித்து மிக வளர்த்து மிருகங்கள்
கொந்தி அயில் அலகம்பால் குட்டம் இட்டு கொழுப்பரிந்து
வந்தன கொண்டு எழும் தழலில் வக்குன வக்குவித்து
வாய் அம்பால் அழிப்பதுவும் வகுப்பதுவும் செய்து அவற்றின்
ஆய உறுப்பு இறைச்சி யெலாம் அரிந்து ஒருகல் இலையில் இட்டு
காய நெடும் கோல் கோத்து கனலின் கண் உறக்காய்ச்சி
தூய திரு அமுது அமைக்க சுவை காணல் உறுகின்றார்
எண்ணிறைந்த கடவுளருக்கு இடும் உணவு கொண்டு ஊட்டும்
வண்ண எரி வாயின் கண் வைத்தது என காளத்தி
அண்ணலார்க்கு ஆம் பரிசு தாம் சோதித்து அமைப்பதற்கு
திண்ணனார் திருவாயில் அமைத்தார் ஊன் திரு அமுது
நல்ல பதமுற வெந்து நாவின் கண் இடும் இறைச்சி
கல்லையினிற் படைத்து தேன் பிழிந்து கலந்து கொண்டு
வல் விரைந்து திரு பள்ளி தாமமும் உந்தூய் மஞ்சனமும்
ஒல்லையினின் முன்பு போல் உடன் கொண்டு வந்து அணைந்தார்
வந்து திரு காளத்தி மலை ஏறி வனசரர்கள்
தந்தலைவனார் இமையோர் தலைவனார் தமை எய்தி
அந்தணனார் பூசையினை முன்பு போல் அகற்றிய பின்
முந்தை முறை தம்முடைய பூசனையின் செயல் முடிப்பார்
ஊனமுது கல்லை உடன் வைத்து இது முன்னையின் நன்றால்
ஏனமொடு மான் கலைகள் மரை கடமை இவையிற்றில்
ஆன உறுப்பு இறைச்சி அமுது அடியேனும் சுவை கண்டேன்
தேனும் உடன் கலந்து இதுதித்திக்கும் என மொழிந்தார்
பரிசு திரு அமுது செய்வித்து தம்முடைய
ஒப்பரிய பூசனை செய்து அந்நெறியில் ஒழுகுவார்
எப்பொழுதும் மேன்மேல்வந்து எழும் அன்பால் காளத்தி
அப்பர் எதிர் அல்லுறங்கார் பகல் வேட்டை ஆடுவார்
மாமுனிவர் நாள் தோறும் வந்து அணைந்து வன வேந்தர்
தாம் முயலும் பூசனைக்கு சால மிக தளர்வு எய்தி
தீமை என அது நீக்கி செப்பிய ஆகம விதியால்
ஆமுறையில் அர்ச்சனை செய்து நெறியில் ஒழுவாரால்
நாணனொடு காடனும் போய் நாகனுக்கு சொல்லியபின்
ஊணும் உறக்கமும் இன்றி அணங்கு உறைவாளையும் கொண்டு
பேணு மகனார் தம் பால் வந்து எல்லாம் பேதித்து
காணு நெறி தங்கள் குறி வாராமல் கை விட்டார்
முன்பு திரு காளத்தி முதல்வனார் அருள் நோக்கால்
இன்புறு வேதகத்து இரும்பு பொன் ஆனால் போல் யாக்கை
தன் பரிசும் வினை இரண்டும் சாரும் மலம் மூன்றும் அற
அன்பு பிழம் பா திரிவார் அவர் கருத்தின் அளவினரோ
அந்நிலையில் அன்பனார் அறிந்த நெறி பூசிப்ப
மன்னிய ஆக படியால் மாமுனிவர் அருச்சித்து இங்கு
என்னுடைய நாயகனே இது செய்தார் தமை காணேன்
உன்னுடைய திருவருளால் ஒழித்து அருள வேண்டும் என
அன்று இரவு கனவின் கண் அருள் முனிவர் தம்பாலே
மின் திகழும் சடை மவுலி வேதியர் தாம் எழுந்து அருளி
வன்திறல் வேடுவன் என்று மற்று அவனை நீ நினையேல்
நன்றவன் தன் செயல் தன்னை நாம் உரைப்ப கேள் என்று
அவனுடைய வடிவு எல்லாம் நம் பக்கல் அன்பு என்றும்
அவனுடைய அறிவெல்லாம் நமை அறியும் அறிவு என்றும்
அவனுடைய செயல் எல்லாம் நமக்கு இனியவாம் என்றும்
அவனுடைய நிலை இவ்வாறு அறிநீ என்று அருள் செய்வார்
பொருட்பினில் வந்தவன் செய்யும் பூசனைக்கு முன்பென்மேல்
அருப்புறுமென் மலர்முன்னை அவை நீக்கும் ஆதரவால்
விருப்புரும் அன்பெனும் வெள்ளக்கால் பெருகிற் றெனவீழ்ந்த
செருப்படி அவ்விளம்பருவ சேயடியிற் சிறப்புடைத்தால்
உருகிய அன்பொழிவின்றி நிறைந்த அவன் உருவென்னும்
பெருகியகொள் கலமுகத்தில் பிறங்கியினி தொழுகுதலால்
ஒருமுனிவன் செவிஉமிழும் உயர்கங்கை முதல்தீர்த்த
பொருபுனலின் எனக்கவன்தன் வாயுமிழும் புனல்புனிதம்
இம்மலைவ தெனையடைந்த கானவன்தன் இயல்பாலே
மெய்மலரும் அன்புமேல் விரிந்தனபோல் விழுதலால்
செம்மலர்மேல் அயனொடுமால் முதல்தேவர் வந்துபுனை
எம்மலரும் அவன் தலையால் இடுமலர்போல் எனக்கொல்வா
வெய்யகனற் பதங்கொள்ள வெந்துளதோ எனும் அன்பால்
நையுமன தினிமையினால் நையமிக மென்றிடலால்
செய்யுமறை வேள்வியோர் முன்புதரு திருந்தவியில்
எய்யும்வரி சிலையவந்தான் இட்டஊன் எனக்கினிய
மன்பெருமா மறைமொழிகள் மாமுனிவர் மகிழ்ந்துரைக்கும்
இன்பமொழி தோத்திரங்கள் மந்திரங்களியாவையினும்
முன்பிருந்து மற்றவன்தன்முகமலர அகநெகிழ
அன்பில்நினை தெனையல்லால் அறிவுறா மொழிநல்ல
உனக்கவன் தன் செயல் காட்ட நாளை நீ ஒளித்து இருந்தால்
எனக்கு அவன் தன் பரிவு இருக்கும் பரிசு எல்லாம் காண்கின்றாய்
மன கவலை ஒழிக என்று மறை முனிவர்க்கு அருள் செய்து
புனல் சடில திரு முடியார் எழுந்து அருளி போனார்
கனவு நிலை நீங்கிய பின் விழித்து உணர்ந்து கங்குல் இடை
புனை தவத்து மாமுனிவர் புலர் அளவும் கண் துயிலார்
மனம் உறும் அற்புதமாகி வரும் பயமும் உடன் ஆகி
துனை புரவி தனி தேர் மேல் தோன்றுவான் கதிர் தோன்ற
முன்னை நாள் போல் வந்து திருமுகலி புனல் மூழ்கி
பன் முறையும் தம்பிரான் அருள் செய்த படி நினைந்து
மன்னு திரு காளத்தி மலை ஏறி முன்பு போல்
பிஞ்ஞகனை பூசித்து பின்பாக ஒளித்திருந்தார்
கருமுகில் என்ன நின்ற கண் படா வில்லியார் தாம்
வருமுறை ஆறாம் நாளில் வரும் இரவு ஒழிந்த காலை
அருமறை முனிவனார் வந்தணை வதன் முன்னம் போகி
தருமுறை முன்பு போல தனிப்பெரு வேட்டை ஆடி
மாறில் ஊன் அமுதும் நல்ல மஞ்சன புனலும் சென்னி
ஏறு நாண் மலரும் வெவ்வேறு இயல்பினில் அமைத்து கொண்டு
தேறுவார்க்கு அமுதம் ஆன செல்வனார் திருக்காளத்தி
ஆறுசேர் சடையார் தம்மை அணுக வந்து அணையா நின்றார்
இத்தனை பொழுது தாழ்த்தேன் என விரைந்து ஏகுவார் முன்
மொய்த்த பல்சகுனம் எல்லாம் முறை தீங்கு
தகு தீய புட்கள் ஈண்ட முன் உதிரங் காட்டும்
அதனுக்கு என் கொல் கெட்டேன் அடுத்தது என்று அணையும் போதில்
அண்ணலார் திரு காளத்தி அடிகளார் முனிவனார்க்கு
திண்ணனார் பரிவு காட்ட திரு நயனத்தில் ஒன்று
துண்ணென உதிரம் பாய இருந்தனர் தூரத்தே அவ்
வண்ணவெஞ் சிலையார் கண்டு வல் விரைந்து ஓடி வந்தார்
வந்தவர் குருதி கண்டார் மயங்கினார் வாயில் நன்னீர்
சிந்திட கையில் ஊனும் சிலையுடன் சிதறி வீழ
கொந்தவர் பள்ளி தாமம் குஞ்சி நின்று அலைந்து சோர
பைந்தழை அலங்கல் மார்பர் நிலத்து இடை பதைத்து வீழ்ந்தார்
விழுந்தவர் எழுந்து சென்று துடைத்தனர் குருதி வீழ்வது
ஒழிந்திட காணார் செய்வது அறிந்திலர் உயிர்த்து மீள
அழிந்து போய் வீழ்ந்தார் தேறி யாரிது செய்தார் என்னா
எழுந்தனர் திசைகள் எங்கும் பார்த்தனர் எடுத்தார் வில்லும்
வாளியு தெரிந்து கொண்டு இம் மலையிடை எனக்கு மாறா
மீளி வெம் மறவர் செய்தார் உளர் கொலோ விலங்கின் சாதி
ஆளி முன்னாகி யுள்ள விளைத்தவோ அறியேன் என்று
நீளிருங் குன்றை சாரல் நெடிதிடை நேடி சென்றார்
வேடரை காணார் தீய விலங்குகள் மருங்கு எங்கும்
நாடியுங் காணார் மீண்டும் நாயனார் தம்பால் வந்து
நீடிய சோகத்தோடு நிறை மலர பாதம் பற்றி
மாடுற கட்டி கொண்டு கதறினார் கண்ணீர் வார
பாவியேன் கண்ட வண்ணம் பரமனார்க்கு அடுத்தது என்னோ
ஆவியின் இனிய எங்கள் அத்தனார்க்கு அடுத்தது என்னோ
மேவினார் பிரிய மாட்டா விமலனார்க்கு அடுத்தது என்னோ
ஆவது ஒன்று அறிகிலேன் யான் என் செய்கேன் என்று பின்னும்
என் செய்தால் தீருமோதான் எம்பிரான் திறத்து தீங்கு
முன்செய்தார் தம்மை காணேன் மொய் கழல் வேடர் என்றும்
மின்செய்வார் பகழி புண்கள் தீர்க்கும் மெய் மருந்து தேடி
பொன்செய் தாழ் வரையிற் கொண்டு வருவன் நான் என்று போனார்
நினைத்தனர் வேறு நெருங்கிய வனங்கள்
இனத்திடை பிரிந்த செங்கணேறு என வெரு கொண்டு எய்தி
புனத்திடை பறித்து கொண்டு பூத நாயகன்பால் வைத்த
மனத்தினும் கடிது வந்து தம் மருந்துகள் பிழிந்து வார்த்தார்
மற்றவர் பிழிந்து வார்த்த மருந்தினால் திரு காளத்தி
கொற்றவர் கண்ணில் புண்ணீர் குறை படாது இழி கண்டும்
இற்றையின் நிலைமைக்கு என்னோ இனி செயல் என்று பார்ப்பார்
உற்ற நோய் தீர்ப்பது ஊனுக்கு ஊன் எனும் உரைமுன் கண்டார்
இதற்கினி என்கண் அம்பால் இடந்து அப்பின் எந்தையார் கண்
அதற்கிது மருந்தா புண்ணீர் நிற்கவும் அடுக்கும் என்று
மதர்த்து எழும் உள்ளத்தோடு மகிழ்ந்து முன் இருந்து தங்கண்
முதற்சரம் அடுத்து வாங்கி முதல்வர் தம் கண்ணில் அப்ப
நின்ற செங்குருதி கண்டார் நிலத்தின் நின்றே பாய்ந்தார்
குன்றென வளர்ந்த தோள்கள் கொட்டினார் கூத்தும் ஆடி
நன்று நான் செய்த இந்த மதி என நகையும் தோன்ற
ஒன்றிய களிப்பினாலே உன் மத்தர் போல மிக்கார்
வலத்திரு கண்ணில் தம் கண் அப்பிய வள்ளலார்
நலத்தினை பின்னும் காட்ட நாயனார் மற்றை கண்ணில்
உலப்பில் செம் குருதி பா கண்டனர் உலகில் வேடர்
குலப்பெரு தவத்தால் வந்து கொள்கையின் உம்பர் மேலார்
கண்டபின் கெட்டேன் எங்கள் காளத்தியார் கண் ஒன்று
புண்டரு குருதி நிற்க மற்றை கண்
மண்டுமற்று இதனுக்கு அஞ்சேன் மருந்து கை கண்டேன் இன்னும்
உண்டொரு கண் அக்கண்ணை இடந்து அப்பி ஒழிப்பேன் என்று
கண்ணுதல் கண்ணில் தம் கண் இடந்து அப்பிற் காணும் நேர்பாடு
எண்ணுவர் தம்பிரான் தன் திரு கண்ணில் இடக்கால் ஊன்றி
உண்ணிறை விருப்பினோடும் ஒரு தனி பகழி கொண்டு
திண்ணனார் கண்ணில் ஊன்ற தரித்திலர் தேவ தேவர்
செங்கண் வெள்விடையின் பாகர் திண்ணனார் தம்மை ஆண்ட
அங்கணர் திரு காளத்தி அற்புதர் திருக்கை அன்பர்
தங்கண் முன் இடக்குங் கையை தடுக்க மூன்று அடுக்கு நாக
கங்கணர் அமுதவாக்கு கண்ணப்ப நிற்க என்ற
கானவர் பெருமானார் தங்கண் இடந்து அப்பும் போதும்
ஊனமும் உகந்த ஐயர் உற்று முன் பிடிக்கும் போதும்
ஞான மாமுனிவர் கண்டார் நான்முகன் முதலாய் உள்ள
வானவர் வளர் பூ மாரி பொழிந்தனர் மறைகள் ஆர்ப்ப
பேறினி இதன் மேல் உண்டோ பிரான் திரு கண்ணில் வந்த
ஊறு கண்டு அஞ்சி தம் கண் இடந்தப்ப உதவும் கையை
ஏறுயர்த்தவர் தம் கையால் பிடித்து கொண்டு என் வலத்தில்
மாறிலாய் நிற்க என்று மன்னு பேர் அருள் புரிந்தார்
மங்குல் வாழ் திரு காளத்தி மன்னனார் கண்ணில் புண்ணீர்
தங்கணால் மாற்ற பெற்ற தலைவர் தாள் தலைமேற் கொண்டே
கங்கை வாழ் சடையார் வாழும் கடவூரில் கலயனாராம்
பொங்கிய புகழின் மிக்கார் திரு தொண்டு புகலல் உற்றேன்
திருச்சிற்றம்பலம்

குங்குலி கலய நாயனார் புராணம்
திருச்சிற்றம்பலம்
வாய்ந்த நீர் வளத்தால் ஓங்கி மன்னிய பொன்னி நாட்டின்
ஏய்ந்த சீர் மறையோர் வாழும் எயிற் பதி எறி நீர கங்கை
தோய்ந்த நீள் சடையார் பண்டு தொண்டர் மேல் வந்த கூற்றை
காய்ந்த சேவடியார் நீடி இருப்பது கடவூர் ஆகும்
வயல் எலாம் விளை செஞ் சாலி வரம்பு வளையின்
அயல் எலாம் வேள்வி சாலை அணை கழுநீர
புயல் எலாம் கமுகின் காடு அப்புறமெலாம் அதன் சீர் போற்றல்
செயல் எலாம் தொழில்கள் ஆறே செழு திரு கடவூர் என்றும்
குடங் கையின் அகன்ற உண் கண் கடைசியர் குழுமி ஆடும்
இடம் படு பண்ணை தோறும் எழுவன மருதம் பாடல்
வடம் புரி முந்நூல் மார்பின் வைதிக மறையோர் செய்கை
சடங்குடை இடங்கள் தோறும் எழுவன சாமம் பாடல்
துங்க நீள் மருப்பின் மேதி படிந்து பால் சொரிந்த வாவி
செங்கயல் பாய்ந்து வாச கமலமும் தீம் பால் நாறும்
மங்குல் தோய் மாட சாலை மருங்கு இறை ஒதுங்கும் மஞ்சும்
அங்கவை பொழிந்த நீரும் ஆகுதி புகைப்பால் நாறும்
மருவிய திருவின் மிக்க வளம்பதி அதனில் வாழ்வார்
அருமறை முந்நூல் மார்பின் அந்தணர் கலயர் என்பார்
பெருநதி அணியும் வேணி பிரான் கழல் பேணி நாளும்
உருகிய அன்பு கூர்ந்த சிந்தையார் ஒழுக்கம் மிக்கார்
பாலனாம் மறையோன் பற்ற பயங்கொடுத்து அருளும் ஆற்றால்
மாலும் நான் முகனும் காணா வடிவு கொண்டு எதிரே வந்து
காலனார் உயிர் செற்றார்க்கு கமழ்ந்த குங்குலி தூபம்
சாலவே நிறைந்து விம்ம இடும் பணி தலை நின்றுள்ளார்
கங்கை நீர் கலிக்கும் சென்னி கண்ணுதல் எம்பிரார்க்கு
பொங்கு குங்குலி தூபம் பொலிவுற போற்றி செல்ல
அங்கவர் அருளினாலே வறுமை வந்து அடைந்த பின்னும்
தங்கள் நாயகர்க்கு தாம் முன்செய் பணி தவாமை உய்த்தார்
இந்நெறி ஒழுகு நாளில் இலம்பாடு நீடு செல்ல
நன்னிலம் முற்றும் விற்றும் நாடிய அடிமை
பன்னெடு தனங்கள் மாள பயில் மனை வாழ்க்கை தன்னில்
மன்னிய சுற்றத்தோடு மக்களும் வருந்தினார்கள்
யாதொன்றும் இல்லையாகி இரு பகல் உணவு மாறி
பேதுறு மைந்தரோடும் பெருகு சுற்றத்தை நோக்கி
காதல்செய் மனைவியார் தம் கணவனார் கலயனார் கை
கோதில் மங்கல நூல் தாலி கொடுத்து நெல் கொள்ளும் என்றார்
அப்பொழுது அதனை கொண்டு நெல் கொள்வான் அவரும் போக
ஒப்பில் குங்குலியம் கொண்டு ஓர் வணிகனும் எதிர் வந்து உற்றான்
இப்பொதி என் கொல் என்றார்க்கு உள்ளவாறு இயம்ப கேட்டு
முப்புரி வெண்நூல் மார்பர் முகம் மலர்ந்து இதனை சொன்னார்
ஆறு செஞ் சடைமேல் வைத்த அங்கணர் பூசைக்கான
நாறுகுங்குலியம் ஈதேல் நன்று இன்று பெற்றேன் நல்ல
பேறு மற்றிதன் மேல் உண்டோ பெறாப்பேறு பெற்று வைத்து
வேறினி கொள்வது என் என்று உரைத்தெழும் விருப்பின் மிக்கார்
பொன் தர தாரும் என்று புகன்றிட வணிகன் தானும்
என் தர இசைந்தது என்ன தாலியை கலயர் ஈந்தார்
அன்றவன் அதனை வாங்கி அப்பொதி கொடுப்ப கொண்டு
நின்றிலர் விரைந்து சென்றார் நிறைந்து எழுகளிப்பினோடும்
விடையவர் வீர டானம் விரைந்து சென்று எய்தி என்னை
உடையவர் எம்மை ஆளும் ஒருவர் தம் பண்டாரத்தில்
அடைவுற ஒடுக்கி எல்லாம் அயர்த்து எழும் அன்பு பொங்க
சடையவர் மலர்த்தாள் போற்றி இருந்தனர் தமக்கு ஒப்பு இல்லா஡ர்
அன்பர் அங்கு இருப்ப நம்பர் அருளினால் அளகை வேந்தன்
தன் பெரு நிதி தூர்த்து தரணி மேல் நெருங்க எங்கும்
பொன்பயில் குவையும் நெல்லும் பொருவில் பல் வளனும் பொங்க
மல்பெருஞ் செல்வம் ஆக்கி வைத்தனன் மனையில் நீட
மற்றவர் மனைவியாரும் மக்களும் பசியால் வாடி
அற்றை நாள் இரவு தன்னில் அயர்வுற துயிலும் போதில்
நல்தவ கொடியனார்க்கு கனவிடை நாதன் நல்க
தெற்றென உணர்ந்து செல்வம் கண்ட பின் சிந்தை செய்வார்
கொம்பனார் இல்லம் எங்கும் குறைவு இலா நிறைவில் காணும்
அம் பொனின் குவையும் நெல்லும் அரிசியும் முதலாய் உள்ள
எம்பிரான் அருளாம் என்றே இருகரங் குவித்து போற்றி
தம் பெரும் கணவனார்க்கு திரு அமுது அமைக்க சார்ந்தார்
காலனை காய்ந்த செய்ய காலனார் கலயனாராம்
ஆலும் அன்புடைய சிந்தை அடியவர் அறியும் ஆற்றால்
சாலநீ பசித்தாய் உன் தன் தட நெடு மனையில் நண்ணி
பாலின் அடிசில் உண்டு பருவரல் ஒழிக என்றார்
கலையனார் அதனை கேளா கை தொழுது இறைஞ்சி கங்கை
அலைபுனல் சென்னியார் தம் அருள் மறுத்து இருக்க அஞ்சி
தலை மிசை பணிமேற் கொண்டு சங்கரன் கோயில் நின்று
மலை நிகர் மாட வீதி மருங்கு தம் மனையை சார்ந்தார்
இல்லத்தில் சென்று புக்கார் இருநிதி குவைகள் ஆர்ந்த
செல்வத்தை கண்டு நின்று திரு மனையாரை நோக்கி
வில்லொத்த நுதலாய் இந்த விளைவு எல்லாம் என்கொல் என்ன
அல்லொத்த கண்டன் எம்மான் அருள் தர வந்தது என்றார்
மின்னிடை மடவார் கூற மிக்க சீர் கலயனார் தாம்
மன்னிய பெரும் செல்வத்து வளமலி சிறப்பை நோக்கி
என்னையும் ஆளும் தன்மைத்து எந்தை எம்பெருமான் ஈசன்
தன்னருள் இருந்த வண்ணம் என்று கைதலைமேல் கொண்டார்
பதும நற்திருவின் மிக்கார் பரிகல திருத்தி கொண்டு
கது மென கணவனாரை கண்ணுதற்கு அன்பரோடும்
விதிமுறை தீபம் ஏந்தி மேவும் இன் அடிசில் ஊட்ட
அது நுகர்ந்து இன்பம் ஆர்ந்தார் அருமறை கலயனார் தாம்
ஊர் தொறும் பலி கொண்டு உய்க்கும் ஒருவனது அருளினாலே
பாரினில் ஆர்ந்த செல்வம் உடையராம் பண்பில் நீடி
சீருடை அடிசில் நல்ல செழுங்கறி தயிர் நெய் பாலால்
ஆர்தரு காதல் கூர அடியவர்க்கு உதவும் நாளில்
செங்கண் வெள் ஏற்றின் பாகன் திரு பன தாளில் மேவும்
அங்கணன் செம்மை கண்டு கும்பிட அரசன் ஆர்வம்
பொங்கி தன் வேழம் எல்லாம் பூட்டவும் நேர் நில்லாமை
கங்குலும் பகலும் தீரா கவலை உற்று அழுங்கி செல்ல
மன்னவன் வருத்தங் கேட்டு மாசறு புகழின் மிக்க
நன்னேறி கலயனார் தாம் நாதனை நேரே காணும்
அந்நெறி தலை நின்றான் என்று அரசனை விரும்பி தாமும்
மின்னெறித்து அனைய வேணி விகிர்தனை வணங்க வந்தார்
மழுவுடை செய்ய கையர் கோயில்கள் மருங்கு சென்று
தொழுது போந்து அன்பினோடும் தொன்மறை நெறி வழாமை
முழுதுலகினையும் போற்ற மூன்று எரிபுர போர் வாழும்
செழு மலர சோலை வேலி திரு பன தாளில் சேர்ந்தார்
காதலால் அரசன் உற்ற வருத்தமும் களிற்றினோடும்
தீதிலா சேனை செய்யும் திருப்பணி நேர் படாமை
மேதினி மிசையே எய்த்து வீழ்ந்து இளைப்பதுவும் நோக்கி
மாதவ கலயர் தாமும் மனத்தினில் வருத்தம் எய்தி
சேனையும் ஆனை பூண்ட திரளும் எய்த்து எழாமை நோக்கி
யானும் இவ் இளை புற்று எய்க்கும் இது பெற வேண்டும் என்று
தேனலர் கொன்றையார் தம் திருமேனி பூங்க சேய்ந்த
மானவன் கயிறு பூண்டு கழுத்தினால் வருந்தல் உற்றார்
நண்ணிய ஒருமை அன்பின் நாருறு பாசத்தாலே
திண்ணிய தொண்டர் பூட்டி இளைத்த பின் திறம்பி நிற்க
ஒண்ணுமோ கலயனார் தம் ஒருப்பாடு கண்ட போதே
அண்ணலார் நேரே நின்றார் அமரரும் விசும்பில் ஆர்த்தார்
பார்மிசை நெருங்க எங்கும் பரப்பினர் பயில் பூ மாரி
தேர்மலி தானை மன்னன் சேனையும் களிறும் எல்லாம்
கார்பெறு கானம் போல களித்தன கைகள் கூப்பி
வார்கழல் வேந்தன் தொண்டர் மலர் அடி தலைமேல் வைத்து
விண் பயில் புரங்கள் வேவ வைதிக தேரில் மேரு
திண்சிலை குனிய நின்றார் செந்நிலை காண செய்தீர்
மண்பகிர்ந்தவனும் காணா மலரடி இரண்டும் யாரே
பண்புடை அடியார் அல்லால் பரிந்து நேர் காண வல்லார்
என்றுமெ தொண்டர் தம்மை ஏத்தி அங்கு எம்பிரானுக்கு
ஒன்றிய பணிகள் மற்றும் உள்ளன பலவும் செய்து
நின்ற வெண் கவிகை மன்னன் நீங்கவும் நிகரில் அன்பர்
மன்றிடை ஆடல் செய்யும் மலர கழல் வாழ்த்தி வைகி
சிலபகல் கழிந்த பின்பு திருக்கடவூரில் நண்ணி
நிலவுதம் பணியில் தங்கி நிகழும் நாள் நிகரில் காழி
தலைவராம் பிள்ளையாரும் தாண்டக சதுரராகும்
அலர்புகழ் அரசுங்கூட அங்கு எழுந்து அருள கண்டு
மாறிலா மகிழ்ச்சி பொங்க எதிர் கொண்டு மனையில் எய்தி
ஈறிலா அன்பின் மிக்கார்க்கு இன் அமுது ஏற்கும் ஆற்றால்
ஆறு நற்சுவைகள் ஓங்க அமைத்து அவர் அருளே அன்றி
நாறு பூங்கொன்றை வேணி நம்பர் தம் அருளும் பெற்றார்
கருப்பு வில்லோனை கூற்றை காய்ந்தவர் கடவூர் மன்னி
விருப்புறும் அன்பு மேன்மேல் மிக்கு எழும் வேட்கை கூர
ஒருப்படும் உள்ள தன்மை உண்மையால் தமக்கு நேர்ந்த
திருப்பணி பலவுஞ் செய்து சிவ பத நிழலில் சேர்ந்தார்
தேனக்க கோதை மாதர் திருநெடு தாலி மாறி
கூனல்தண் பிறையினார்க்கு குங்குலியம் கொண்டு உய்த்த
பான்மைத்திண் கலயனாரை பணிந்து அவர் அருளினாலே
மானக்கஞ் சாறர் மிக்க வண்புகழ் வழுத்தல் உற்றேன்
திருச்சிற்றம்பலம்

மானக்கஞ்சாற நாயனார் புராணம்
திருச்சிற்றம்பலம்
மேலாறு செஞ்சடை மேல் வைத்தவர் தாம் விரும்பியது
நூலாறு நன்கு உணர்வார் தாம் பாடும் நோன்மையது
கோலாறு தேன் பொழி கொழுங் கனியின் சாறு ஒழுகும்
காலாறு வயல் கரும்பின் கழழ் சாறூர் கஞ்சாறூர்
கண்ணீல கடைசியர்கள் கடுங்களையிற் பிழைத்து ஒதுங்கி
உண்ணீர்மை புணர்ச்சி கண் உறைத்து மலர்க்கண் சிவக்கும்
தண்ணீர் மென் கழுநீர்க்கு தடஞ்சாலி தலை வணங்கும்
மண்ணீர்மை நலஞ்சிறந்த வள வயல்கள் உள அயல்கள்
புயல் காட்டுங் கூந்தல் சிறு புறங்காட்ட புன மயிலின்
இயல் காட்டி இடை ஒதுங்க இனங்காட்டும் உழத்தியர்கண்
முயல் காட்டும் மதி தோற்கும் முகம் காட்ட கண் மூரி
கல் காட்டு தடங்கள் பல கதிர்காட்டு தடம் பணைகள்
சேர் அணி தண் பழன வயல் செழுநெல்லின் கொழுங் கதிர் போய்
வேறருகு மிடை வேலி பைங்கமுகின் மிடறுரிஞ்சி
மாறெழுதிண் குலை வளைப்ப வண்டலை தண்டலை உழவர்
தாறிரியும் நெடுங்கொடுவாள் அனையயுள தனி இடங்கள்
பாங்கு மணிப்பல வெயிலும் சுலவெயிலும் உள மாடம்
ஞாங்கரணி துகிற் கொடியும் நகிற் உள
ஓங்கு நிலை தோரணமும் பூரண கும்பமும் உளவால்
பூம் கணை வீதியில் அணைவோர் புலமறுகுஞ் சிலமறுகு
மனை சாலும் நிலை அறத்தின் வழிவந்த வளம் பெருகும்
வினை சாலும் உழவு தொழில் மிக்க பெரும் குடி துவன்றி
புனை சாயல் மயில் அனையார் நடம் புரி புகல் முழவம்
கனை சாறு மிடை வீதி கஞ்சாறு விளங்கியதால்
பதியில் குல பதியாய் அரசர் சேனா பதியாம்
செப்பவருங் குடி விளங்க திரு அவதாரம் செய்தார்
மெ பொருளை அறிந்து உணர்ந்தார் விழுமிய வேளாண் குடிமை
வைப்பனைய மேன்மையினார் மானக்கஞ் சாறனார்
பணிவுடைய வடிவுடையார் பணியினொடும் பனி மதியின்
அணிவுடைய சடை முடியார்க்கு ஆளாகும் பதம் பெற்ற
தணிவில் பெரும் பேறுடையார் தம் பெருமான் கழல் சார்ந்த
துணிவுடைய தொண்டர்க்கே ஏவல் செயும் தொழில் பூண்டார்
மாறில் பெருஞ்செல்வத்தின் வளம் பெருக மற்றதெலாம்
ஆறுலவுஞ் சடை கற்றை அந்தணர் தம் அடியாராம்
ஈறில் பெரு திருவுடையார் உடையார் என்றியாவையுநேர்
கூறுவதன்முன் அவர் தங்குறிப்பு அறிந்து கொடுத்துள்ளார்
விரிகடல் சூழ் மண்ணுலகை விளக்கிய தன்மையராம்
பெரியவர்க்கு முன் சில நாள் பிள்ளை பேறு இன்மையினால்
அரியறியா மலர கழல்கள் அறியாமை அரியாதார்
வரு மகவு பெறல் பொருட்டு மனத்தருளால் வழுத்தினார்
குழை கலையும் வடி காதில் கூத்தனார் அருளாலே
மழைக்கு உதவும் பெருங்கற்பின் மனை கிழத்தியார் தம்பால்
இழைக்கும் வினை பயன் சூழ்ந்த பிறவிக்கு கொடுஞ்சூழல்
பிழைக்கும் நெறி தமக்கு உதவ பெண் கொடியை பெற்று எடுத்தார்
பிறந்த பெரு மகிழ்ச்சியினால் மூதூர் களி
சிறந்த நிறை மங்கல தூரியம் முழங்க தேவர் பிரான்
அறந்தலை நின்று அவர்க்கெல்லாம் அளவில் வளத்து அருள் பெருக்கி
புறந்தருவார் போற்றி இசைப்ப பொன் கொடியை வளர்க்கின்றார்
காப்பணியும் இளங்குழவி பதநீக்கி கமழ் சுரும்பின்
பூப்பயிலுஞ் சுருள் குழலும் பொலங்குழையும் உடன் தாழ
யாப்புறு மென் சிறுமணிமேகலை அணி சிற்றாடையுடன்
கோப்புமை கிண்கிணி அசை குறுந்தளிர் மெல்லடி ஒதுங்கி
புனை மலர்மென் கரங்களினால் போற்றிய தாதியர் நடுவண்
மனையகத்து மணிமூன்றில் மணல் சிற்றில் இழைத்து மணி
கனை குரல் நூபுரம் அலை கழன்முதலாய் பயின்று முலை
நனை முகஞ்செய் முதல் பருவம் நண்ணினள் அப்பெண் அமுதம்
உறுகவின் மெ புறம் பொலிய ஒளி நுசுப்பை முலை வருத்த
முறுவல் புற மலராத முகிண்முத்த நகை என்னும்
நறுமுகை மென் கொடி மருங்குல் நளிர சுருள் அந்தளிர் செங்கை
மறுவில் கொழுந்தினுக்கு மண பருவம் வந்தணைய
திருமகட்கு மேல் விளங்கும் செம்மணியின் தீபம் எனும்
ஒரு மகளை மண் உலகில் ஓங்கு குல மரபினரா
கரு மிடற்று மறையவனார் தமர் ஆய கழல் ஏயர்
பெரு மகற்கு மகள் பேச வந்து அணைந்தார்
வந்த மூது அறிவோரை மானக்கஞ் சாறனார்
முந்தை முறைமையின் விரும்பி மொழிந்த மண திறம் கேட்டே
எந்தமது மரபினுக்கு தரும் பரிசால் ஏயும் என
சிந்தை மகிழ்வுற உரைத்து மணநேர்ந்து செலவிட்டார்
சென்றவரும் கஞ்சாறர் மணம் இசைந்தபடி செப்ப
குன்றனைய புயத்தேயர் கோனாரும் மிக விரும்பி
நின்ற நிலைமையின் இரண்டு திறத்தார்க்கும் நேர்வாய
மன்றல் வினை மங்கல நாள் மதிநூல் வல்லவர் வகுத்தார்
மங்கலமாஞ் செயல் விரும்பி மகள் பயந்த வள்ளலார்
தங்குல நீள் சுற்றம் எலாம் தயங்கு பெருங்களி சிற
பொங்கிய வெண் முளை பெய்து பொலங் கலங்களிடை நெருங
கொங்கலர் தண் பொழில் மூதூர் வதுவை முகங் கோடித்தார்
கஞ்சாறர் மகள் கொடுப்ப கை பிடிக்க வருகின்ற
எஞ்சாத புகழ பெருமை ஏயர் குல பெருமானும்
தஞ்சால்பு நிறை சுற்றம் தலை நிறைய முரசு இயம்ப
மஞ்சாலும் மலர சோலை கஞ்சாற்றின் மருங்கணைய
வள்ளலார் மணம் அவ்வூர் மருங்கு அணையா முன் மலர்க்கண்
ஒள்ளிழையை பயந்தார் திருமனையில் ஒரு வழியே
தெள்ளுதிரை நீர் உலகம் உய்வதற்கு மற்றவர்தம்
உள்ள நிலை பொருளாய உம்பர் பிரான் தாம் அணைவார்
முண்டநிறை நெற்றியின் மேல் முண்டித்த திருமுடியில்
கொண்டசிகை முச்சியின் கண் கோத்தணிந்த எற்பு மணி
பண்டொருவன் உடல் அங்கம் பரித்த நாள் அது கடைந்த
வெண்டரளம் என காதின் மிசை அசையும் குண்டலமும்
அவ்வென்பின் ஒளிமணி கோத்து அணிந்த திரு தாழ்வடமும்
பைவன்பேர் அரவு ஒழி தோளில் இடும் பட்டிகையும்
மைவந்த நிற கேச வட பூண் நூலும் மன
செவ்வன்பர் பவமாற்று திரு நீற்று பொக்கணமும்
ஒரு முன் கைத்தனி மணிகோத்து அணிந்த ஒளிர் சூத்திரமும்
அருமறை நூல் கோவணத்தின் மிசை அசையும் திருவுடையும்
இரு நிலத்தின் மிசை தோய்ந்த எழுதரிய திருவடியும்
திருவடியில் திரு பஞ்ச முத்திரையும் திகழ்ந்து இலங்க
பொடி மூடு தழல் என்ன திரு மேனி தனிற்பொலிந்த
படி நீடு திருநீற்றின் பரப்பணிந்த பான்மையரா
கொடு நீடு மறுகு அணைந்து தம்முடைய குளிர் கமலத்து
அடி நீடும் மனத்து அன்பர் தம் மனையின் அகம் புகுந்தார்
வந்து அணைந்த மா விரத முனிவரை கண்டு எதிர் எழுந்து
சிந்தை களி கூர்ந்து மகிழ் சிறந்த பெரு தொண்டனார்
எந்தை பிரான் புரி தவத்தோர் இவ் இடத்தே எழுந்து அருள
உய்ந்து ஒழிந்தேன் அடியேன் என்று உருகிய அன்பொடு பணிந்தார்
நற்றவராம் பெருமானார் நலமிகும் அன்பரை நோக்கி
உற்ற செயல் மங்கலம் இங்கு ஒழுகுவது என் என அடியேன்
பெற்றது ஒரு பெண்கொடி தன் வதுவை என பெருந்தவம்
மற்று உமக்கு சோபனம் ஆகுவது என்று வாய் மொழிந்தார்
ஞானம் செய்தவர் அடி மேல் பணிந்து மனை அகம் நண்ணி
மானக்கம் சாறனார் மண கோலம் புனைந்து இருந்த
தேனக்க மலர கூந்தல் திரு மகளை கொண்டு அணைந்து
பானற்க தர மறைத்து வரும் அவரை பணிவித்தார்
தம் சரணத்து இடை பணிந்து தாழ்ந்து எழுந்த மட கொடி தன்
மஞ்சு தழைத்து என வளர்ந்த மலர கூந்தல் புறம் நோக்கி
அஞ்சலி மெ தொண்டரை பார்த்து அணங்கு இவள் தன் மயிர் நமக்கு
பஞ்ச வடிக்காம் என்றார் பரவ அடி தலங்கொடுப்பார்
அருள் செய்த மொழி கேளா அடல் சுரிகைதனை உருவி
பொருள் செய்தாம் என பெற்றேன் என கொண்டு பூங்கொடி தன்
இருள் செய்த கருங்கூந்தல் அடியில் அரிந்து எதிர் நின்ற
மருள் செய்த பிறப்பு அறுப்பார் மலர கரத்தினிடை நீட்ட
வாங்குவார் போல் நின்ற மறை பொருளாம் அவர் மறைந்து
பாங்கின் மலை வல்லியுடன் பழைய மழவிடை யேறி
ஓங்கிய விண் மிசை வந்தார் ஒளி விசும்பின் நிலன் நெருங்க
தூங்கிய பொன்மலர் மாரி தொழும்பர் தொழுது எதிர் விழுந்தார்
விழுந்து எழுந்து மெய்ம் மறந்த மெய் அன்பர் தமக்கு மதி
கொழுந்து அலைய விழுங் கங்கை குதித்த சடை கூத்தனார்
எழும் பரிவு நம் பக்கல் உனக்கு இருந்த பரிசிந்த
செழும் புவனங்களில் ஏற செய்தோம் என்று அருள் செய்தார்
மருங்கு பெருங்கண நாதர் போற்றிசைப்ப வானவர்கள்
நெருங்க விடை மேல் கொண்டு நின்றவர் முன் நின்றவர்தாம்
ஒருங்கிய நெஞ்சொடு கரங்கள் உச்சியின் மேல் குவித்தையர்
பெருங் கருணை திறம் போற்றும் பெரும் பேறு நேர் பெற்றார்
தொண்டனார் தமக்கு அருளி சூழ்ந்து இமையோர் துதி செய்ய
இண்டை வார் சடை முடியார் எழுந்து அருளி போயினார்
வண்டுவார் குழற் கொடியை கை பிடிக்க மண கோலம்
கண்டவர்கள் கண் களிப்ப கலி காமனார் புகுந்தார்
வந்தணைந்த ஏயர் குல மன்னவனார் மற்றந்த
சிந்தை நினைவு அரிய செயல் செறிந்தவர் பால் கேட்டருளி
புந்தியினில் மிக உவந்து புனிதனார் அருள் போற்றி
சிந்தை தளர்ந்து அருள் செய்த திருவாக்கின் திறம் கேட்டு
மனந்தளரும் இடர் நீங்கி வானவர் நாயகர் அருளால்
புனைந்த மலர குழல் பெற்ற பூங்கொடியை மணம் புரிந்து
தனம் பொழிந்து பெருவதுவை உலகெலாம் தலை சிறப்ப
இனம்பெருக தம்முடைய எயின் மூதூர் சென்றணைந்தார்
ஒரு மகள் கூந்தல் தன்னை வதுவை நாள் ஒருவர்க்கு ஈந்த
பெருமையார் தன்மை போற்றும் பெருமை என் அளவிற்றாமே
மருவிய கமரிற் புக்க மா வடு விடேல் என் ஓசை
உரிமையால் கேட்க வல்லார் திறம் இனி உரைக்கல் உற்றேன்
திருச்சிற்றம்பலம்

அரிவாட்டாய நாயனார் புராணம்
திருச்சிற்றம்பலம்
வரும் புனற்பொன்னி நாட்டு ஒரு வாழ்பதி
கரும்பு வண்டொடு சூழ்ந்து முரன்றிட
விரும்பு மென்கண் உடையவாய் விட்டு நீள்
கரும்பு தேன் பொழியும் கணமங்கலம்
செந்நெல்லார் வயல் காட்ட செந்தாமரை
முன்னர் நந்துமிழ் முத்தம் சொரிந்திட
துன்னு மள்ளர் கைம் மேற் கொண்டு தோன்றுவார்
மன்னு பங்கய மாநிதி போன்றுள்ளார்
வளத்தில் நீடும் பதியதன் கண்வரி
உளர்த்தும் ஐம்பால் உடையோர் முகத்தினும்
களத்தின் மீதும் கயல்பாய் வயல் அயல்
குளத்தும் நீளும் குழையுடை நீலங்கள்
அக்குல பதி தன்னில் அறநெறி
தக்க மாமனை வாழ்க்கையில் தங்கினார்
தொக்க மாநிதி தொன்மையில் ஓங்கிய
மிக்க செல்வத்து வேளாண் தலைமையார்
தாயனார் எனும் நாமம் தரித்துள்ளார்
சேய கால தொடர்ந்து தெளிவிலா
மாயனார் மண் கிளைத்து அறியாத
தூய நாண் மலர பாதம் தொடர்ந்துளார்
மின்னும் செஞ்சடை வேதியர்க்காம் என்று
செ நெல் இன்னமுதோடு செங்கீரையும்
மன்னு பைந்துணர் மாவடுவும் கொணர்ந்து
அன்ன என்றும் அமுது செய்விப்பாரால்
இந்த நன்னிலை இன்னல் வந்து எய்தினும்
சிந்தை நீங்கா செயலின் உவந்திட
முந்தை வேத முதல்வர் அவர் வழி
வந்த செல்வம் அறியாமை மாற்றினார்
மேவு செல்வம் களிறு உண் விளங்கனி
ஆவதாகி அழியவும் அன்பினால்
பாவை பங்கர்க்கு முன்பு பயின்ற
தாவில் செய்கை தவிர்ந்திலர் தாயனார்
அல்லல் நல்குரவு ஆயிட கூலிக்கு
நெல் அறுத்து மெ நீடிய அன்பினால்
நல்ல செந்நெலிற் பெற்றன நாயனார்க்கு
ஒல்லை இன்னமுதா கொண்டு ஒழுகுவார்
சாலி தேடி அறுத்தவை தாம் பெறும்
கூலி எல்லாம் திரு அமுதா கொண்டு
நீல நெல்லரி கூலி கொண்டு உண்ணும் நாள்
மால் அயற்கு அரியார் அது மாற்றுவார்
நண்ணிய வயல்கள் எல்லாம் நாள் தொறும் முன்னம் காண
வண்ணவார் கதிர செஞ்சாலி ஆக்கிட மகிழ்ந்து சிந்தை
அண்ணலார் அறுத்த கூலி கொண்டு இஃது அடியேன் செய்த
புண்ணியம் என்று போத அமுது செய்விப்பார் ஆனார்
வைகலும் உணவு இலாமை மனை படப்பையினிற் புக்கு
நைகரம் இல்லா அன்பின் நங்கை கைஅடகு கொய்து
பெய்கலத்து அமைத்து வைக்க பெருந்தகை அருந்தி தங்கள்
செய்கடன் முட்டா வண்ண திருப்பணி செய்யும் நாளில்
மனை மருங்கு அடகு மாள வட நெடு வான மீனே
அனையவர் தண்ணீர் வார்க்க அமுது செய்து அன்பனாரும்
வினை செயல் முடித்து செல்ல மேவு நாள் ஒருநாள் மிக்க
முனைவனார் தொண்டர்க்கு அங்கு நிகழ்ந்தது மொழி பெற்றேன்
முன்பு போல் முதல்வனாரை அமுது செய்விக்க மூளும்
அன்பு போல் தூய செந்நெல் அரிசி மாவடு மென் கீரை
துன்புபோம் மனத்து தொண்டர் கூடையில் சுமந்து போக
பின்புபோம் மனைவியார் ஆன் பெற்ற அஞ்சு ஏந்தி சென்றார்
போதரா நின்ற போது புலர்ந்து கால் தளர்ந்து தப்பி
மாதரார் வருந்தி வீழ்வார் மட்கல மூடுகையால்
காதலால் அணைத்தும் எல்லாம் கமரிடை சிந்த கண்டு
பூதநாயகர் தம் தொண்டர் போவது அங்கு இனி ஏன் என்று
நல்ல செங்கீரை தூய மாவடு அரிசி சிந்த
அல்லல் தீர்த்தாள வல்லார் அமுது செய்து அருளும் அப்பேறு
எல்லையில் தீமையேன் இங்கு எய்திட பெற்றிலேன் என்று
ஒல்லையில் அரிவாள் பூட்டி ஊட்டியை அரியல் உற்றார்
கொள்ளும் ஐயர் தாம் இங்கு அமுது செய்திலர் கொல் என்னா
பூட்டிய அரிவாள் பற்றி புரையற விரவும் அன்பு
காட்டிய நெறியின் உள்ள தண்டு அற கழுத்தினோடே
ஊட்டியும் அரிய நின்றார் உறுபிற பரிவார் ஒத்தார்
மாசறு சிந்தை அன்பர் கழுத்து அரி அரிவாள் பற்றும்
ஆசில்வண் கையை மாற்ற அம்பலத்து ஆடும் ஐயர்
வீசிய செய்ய கையும் மாவடு விடேல்
ஓசையும் கமரில் நின்றும் ஒக்கவே எழுந்த அன்றே
திருக்கை சென்று அரிவாள் பற்றும் திண் கையை பிடித்த போது
வெருக்கொடு தம் கூறு நீங்க வெவ் வினை விட்டு நீங்கி
பெருக்கவே மகிழ்ச்சி நீட தம்பிரான் பேணி தந்த
அரு பெரும் கருணை நோக்கி அஞ்சலி கூப்பி நின்று
அடியனேன் அறிவு இலாமை கண்டும் என் அடிமை வேண்டி
படி மிசை கமரில் வந்து இங்கு அமுது செய் பரனே போற்றி
துடியிடை பாக மான தூயநற் சோதி போற்றி
பொடியணி பவள மேனி புரி சடை புராண போற்றி
என்றவர் போற்றி செய்ய இடப வாகனரா தோன்றி
நன்று நீ புரிந்த செய்கை நன்னுதல் உடனே கூட
என்றும் நம் உலகில் வாழ்வாய் என்று அவர் உடனே நண்ண
மன்றுளே ஆடும் ஐயர் மழ விடை உகைத்து சென்றார்
பரிவு உறு சிந்தை அன்பர் பரம் பொருளாகி உள்ள
பெரியவர் அமுது செ பெற்றிலேன் என்று மாவின்
வரிவடு விடேலெனா முன் வன் கழுத்து அரிவாள் பூட்டி
அரிதலால் அரிவாட்டாயர் ஆயினார் தூய நாமம்
முன்னிலை கமரே யாக முதல்வனார் அமுது செ
செந்நெலின் அரிசி சிந்த செவியுற வடுவின் ஓசை
நிலை கேட்ட தொண்டர் அடி இணை தொழுது வாழ்த்தி
மன்னும் ஆனாயர் செய்கை அறிந்தவாறு வழுத்தல் உற்றேன்
திருச்சிற்றம்பலம்

ஆனாய நாயனார் புராணம்
திருச்சிற்றம்பலம்
மாடு விரை பொலி சோலையின் வான் மதிவந்து ஏற
சூடு பரப்பிய பண்ணை வரம்பு சுரும்பேற
ஈடு பெருக்கிய போர்களின் மேகம் இளைத்தேற
நீடு வளத்தது மேன்மழ நாடெனும் நீர் நாடு
நீவி நிதம்ப உழத்தியர் நெ குழல் மை சூழல்
மேவி உறங்குவ மென் சிறை வண்டு விரை கஞ்ச
பூவில் உறங்குவ நீள் கயல் பூமலி தேமாவின்
காவின் நறுங் குளிர் நீழல் உறங்குவ கார் மேதி
வன்னிலை மள்ளர் உகைப்ப எழுந்த மரக்கோவை
பன் முறை வந்து எழும் ஓசை பயின்ற முழக்கத்தால்
அன்னம் மருங்குறை தண் துறை வாவி அதன் பாலை
கன்னல் அடும் புகையால் முகில் செய்வ கருப்பாலை
பொங்கிய மாநதி நீடலை உந்து புனற் சங்கம்
துங்க இலை கதலி புதல் மீது தொடங்கி போய்
தங்கிய பாசடை சூழ் கொடி யூடு தவழ்ந்தேறி
பைங்கமுகின் தலை முத்தம் உதிர்க்குவ பாளையென
அல்லி மலர பழனத்து அயல் நாகிள ஆன் ஈனும்
ஒல்லை முழுப்பை உகைப்பின் உழக்கு குழக்கன்று
கொல்லை மடக்குல மான் மறியோடு குதித்து ஓடும்
மல்கு வளத்தது முல்லை உடுத்த மருங்கோர்பால்
கண் மலர் காவிகள் பாய இருப்பன கார் முல்லை
தண் நகை வெண் முகை மேவும் சுரும்பு தடஞ் சாலி
பண்ணை எழுங்கயல் பாய இருப்பன காயாவின்
வண்ண நறுஞ்சினை மேவிய வன் சிறை வண்டானம்
பொங்கரில் வண்டு புறம்பலை சோலைகள் மேல் ஓடும்
வெங்கதிர் தங்க விளங்கிய மேன்மழ நன்னாடாம்
அங்கது மண்ணின் அருங்கலமாக அதற்கேயோர்
மங்கல மானது மங்கலம் ஆகிய வாழ் மூதூர்
ஒப்பில் பெருங்குடி நீடிய தன்மையில் ஓவாமே
தப்பில் வளங்கள் பெருக்கி அறம்புரி சால்போடும்
செப்ப உயர்ந்த சிறப்பின் மலிந்தது சீர் மேவும்
அப்பதி மன்னிய ஆயர் குலத்தவர் ஆனாயர்
ஆயர் குலத்தை விளக்கிட வந்து உதயம் செய்தார்
தூய சுடர்திரு நீறு விரும்பு தொழும்புள்ளார்
வாயினின் மெய்யின் வழுத்து மனத்தின் வினை பாலில்
பேயுடன் ஆடு பிரான் அடி அல்லது பேணாதார்
ஆனிரை கூட அகன் புற வில் கொடு சென்று ஏறி
கானுறை தீய விலங்குறு நோய்கள் கடிந்து எங்கும்
தூநறு மென்புல் அருந்தி விரும்பிய தூ நீறுண்டு
ஊனமில் ஆயம் உலப்பில பல்க அளித்து உள்ளார்
கன்றொடு பால் மறை நாகு கறப்பன பாலாவும்
புன்றலை மென்சிலை ஆனொடு நீடு புனிற்றாவும்
வென்றி விடை குலமோடும் இனந்தொறும் வெவ்வேறே
துன்றி நிறைந்துள சூழல் உடன் பல தோழங்கள்
ஆவின் நிரை குலம் அப்படி பல்க அளித்தென்றும்
கோவலர் ஏவல் புரிந்திட ஆயர் குலம் பேணும்
காவலர் தம் பெருமான் அடி அன்புறு கானத்தின்
மேவு துளை கருவி குழல் வாசனை மேற்கொண்டார்
முந்தை மறை நூன்மரபின் மொழிந்த முறை எழுந்தவேய்
அந்த முதல் நாலிரண்டில் அரிந்து நரம்புறு தானம்
வந்ததுளை நிரையாக்கி வாயு முதல் வழங்கு துளை
அந்தமில் சீர் இடை ஈட்டின் அங்குலி எண் களின் அமைத்து
எடுத்த குழற் கருவியினில் எம்பிரான் எழுத்து அஞ்சும்
தொடுத்த முறை ஏழ் இசையின் சுருதி பெற வாசித்து
அடுத்தசரா சரங்களெலாம் தங்கவரு தங்கருணை
அடுத்த இசை அமுது அளித்து செல்கின்றார் அங்கு ஒரு நாள்
வாச மலர பிணை பொங்க மயிர் நுழுதி மருங்கு உயர்ந்த
தேசுடைய சிகழிகையிற் செறி கண்ணி தொடை செருகி
பாசிலை மென் கொடியின் வடம் பயில நறு விலி புனைந்து
காசுடை நாண் அதற்கயலே கருஞ்சுருளின் புறங்காட்டி
வெண் கோடல் இலை சுருளிற் பைந்தோட்டு விரை தோன்றி
தண் கோல மலர் புனைந்த வடி காதின் ஒளி தயங்க
திண் கோல நெற்றியின் மேல் திரு நீற்றின் ஒளி கண்டோ ர்
கண் கோடல் நிறைந்தாரா கவின் விளங்க மிசை அணிந்து
நிறைந்த நீறு அணி மார்பின் நிரை முல்லை முகை சுருக்கி
செறிந்த புனை வடம் தாழ திரள் தோளின் புடை அலங்கல்
அறைந்த சுரும்பு இசை அரும்ப அரையுடுத்த மரவுரியின்
புறந்தழையின் மலி தானை பூம் பட்டு பொலிந்து அசைய
சேவடியில் தொடு தோலும் செங்கையினில் வெண் கோலும்
மேவும் இசை வேய்ங்குழலும் மிக விளங்க வினை செய்யும்
காவல்புரி வல்லாயர் கன்றுடை ஆன் நிரை சூழ
பூவலர் தார கோவலனார் நிரை காக்க புறம் போந்தார்
நீலமா மஞ்ஞை ஏங்க நிரை கொடி புறவம் பாட
கோல வெண் முகையேர் முல்லை கோபம் வாய் முறுவல் காட்ட
ஆலு மின்னிடை சூழ் மாலை பயோதரம் அசைய வந்தாள்
ஞால நீடு அரங்கில் ஆட கார் எனும் பருவ நல்லாள்
எம்மருங்கு நிரை பரப்ப எடுத்த கோலுடை பொதுவர்
தம்மருங்கு தொழுது அணை தண் புறவில் வருந்தலைவர்
அம்மருங்கு தாழ்ந்த சினை அலர் மருங்கு மதுவுண்டு
செம்மருந்தண் சுரும்பு சுழல் செழுங் கொன்றை மருங்கு அணைந்தார்
சென்றணைந்த ஆனாயர் செய்த விரை தாமம் என
மன்றல் மலர்த்துனர் தூக்கி மருங்குதாழ் சடையார் போல்
நின்ற நறுங் கொன்றையினை நேர் நோக்கி நின்று உருகி
ஒன்றிய சிந்தையில் அன்பை உடையவர் பால் மடை திறந்தார்
அன்பூறி மிசை பொங்கும் அமுத இசை குழல் ஒலியால்
வன்பூத படையாளி எழுத்து ஐந்தும் வழுத்தி தாம்
முன்பூதி வரும் அளவின் முறைமையே எவ்வுயிரும்
என்பூடு கரைந்து உருக்கும் இன்னிசை வேய்ங் கருவிகளில்
ஏழு விரல் இடை இட்ட இன்னிசை வங்கியம் எடுத்து
தாழுமலர் வரிவண்டு தாது பிடிப்பன போல
சூழுமுரன்று எழ நின்று தூய பெரும் தனி துளையில்
வாழிய நந்தோன்றலார் மணி அதரம் வைத்தூத
முத்திரையே முதல் அனைத்தும் முறை தானம் சோதித்து
வைத்த துளை ஆராய்ச்சி வக்கரனை வழி போக்கி
ஒத்த நிலை உணர்ந்து அதற்பின் ஒன்று முதல்படி முறையாம்
அத்தகைமை ஆரோசை அமரோசைகளின் அமைத்தார்
மாறுமுதற் பண்ணின் பின் வளர் முல்லை பண்ணாக்கி
ஏறிய தாரமும் உழையும் கிழமை கொள இடுந்தானம்
ஆறுலவுஞ் சடை முடியார் அஞ்செழுத்தின் இசை பெரு
கூறிய பட்டடை குரலாங் கொடி பாலையினில் நிறுத்தி
ஆய இசை புகல் நான்கின் அமைந்த வகை
மேய துளை பற்றுவன விடுபனவாம் விரல் நிரையிற்
சேய வொளியிடை அலை திருவாளன் எழுத்தஞ்சும்
தூய இசை கிளை கொள்ளு துறையஞ்சின் முறை விளைத்தார்
மந்தரத்தும் மத்திமத்தும் தாரத்தும் வரன் முறையால்
தந்திரிகள் மெலிவித்தும் சமங்கொண்டும் வலிவித்தும்
அந்தரத்து விரல் தொழில்கள் அளவு பெற அசைத்தியக்கி
சுந்தர செங்கனிவாயும் துளைவாயும் தொடக்குண்ண
எண்ணிய நூல் பெருவண்ணம் இடை வண்ணம் வனப்பென்னும்
வண்ண இசை வகை எல்லாம் மா துரிய நாதத்தில்
நண்ணிய பாணியும் இயலும் தூக்கு நடை முதற்கதியில்
பண்ணமைய எழும் ஓசை எம் மருங்கும் பரப்பினார்
வள்ளலார் வாசிக்கும் மணி துளைவாய் வேய்ங் குழலின்
உள்ளுறை அஞ்செழுத்தாக ஒழுகி மதுர ஒலி
வெள்ளநிறைந்து எவ்வுயிர்க்கும் மேல் அமரர் தருவிளை தேன்
தெள்ளமுதின் உடன் கலந்து செவி வார்ப்பது என தேக்க
ஆனிரைகள் அறுகருந்தி அசை விடாது அணைந்து அயர
பால் நுரை வா தாய் முலை பற்றும் இளங்கன்று
தான் உணவு மறந்து ஒழி தட மருப்பின் விடை குலமும்
மான் முதலாம் கான் விலங்கும் மயிர் முகிழ்த்து வந்து அணைய
ஆடு மயில் இனங்களும் அங்கு அசைவு அயர்ந்து மருங்கணுக
ஊடுசெவி இசை நிறைந்த உள்ளம் ஒடு புள்ளினமும்
மாடுபடிந்து உணர்வு ஒழிய மருங்கு தொழில் புரிந்து ஒழுகும்
கூடியவண் கோவலரும் குறை வினையின் துறை நின்றார்
பணி புவனங்களில் உள்ளார் பயில் பிலங்கள் வழி அணைந்தார்
மணிவரை வாழ் அரமகளிர் மருங்கு மயங்கினர் மலிந்தார்
தணிவில் ஒளி விஞ்சையர்கள் சாரணர் கின்னரர் அமரர்
அணிவிசும்பில் அயர்வு எய்தி விமானங்கள் மிசை அணைந்தார்
சுரமகளிர் கற்பக பூஞ்சோலைகளின் மருங்கிருந்து
கர மலரின் அமுது ஊட்டும் கனி வாய் மென் கிள்ளையுடன்
விரவு நறுங்குழல் அலைய விமானங்கள் விரைந்து ஏறி
பரவிய ஏழிசை அமுதம் செவி மடுத்து பருகினார்
நலிவாரும் மெலிவாரும் உணர்வு ஒன்றாய் நயத்திலினால்
மலிவாய்வெள் எயிற்று அரவம் மயில் மீது மருண்டு விழும்
சலியாத நிலை அரியும் தடம் கரியும் உடன் சாரும்
புலி வாயின் மருங்கு அணையும் புல்வாய புல்வாயும்
மருவிய கால் விசைத்து அசையா மரங்கள் மலர சினை சலியா
கருவரை வீழ் அருவிகளும் கான்யாறும் கலித்து ஓடா
பெரு முகிலின் குலங்கள் புடை பெயர்வு ஒழி புனல் சோரா
இரு விசும்பின் இடை முழங்கா எழுகடலும்
இவ்வாறு நிற்பனமும் சரிப்பனவும் இசை மயமாய்
மெய் வாழும் புலன் கரண மேவிய ஒன்று ஆயினவால்
மொய்வாச நறுங்கொன்றை முடி சடையார் அடி தொண்டர்
செவ்வாயின் மிசை வைத்த திருக்குழல் வாசனை உருக்க
மெய்யன்பர் மனத்து அன்பின் விளைந்த இசை குழல் ஓசை
வையம் தன்னையும் நிறைத்து வானம் தன் வயமாக்கி
பொய் அன்புக்கு எட்டாத பொற் பொதுவில் நடம் புரியும்
ஐயன் தன் திரு செவியின் அருகணைய பெருகியதால்
ஆனாயர் குழல் ஓசை கேட்டு அருளி அருள் கருணை
தானாய திரு உள்ளம் உடைய தவ வல்லியுடன்
கானாதி காரணராம் கண்ணுதலார் விடையுகைத்து
வானாறு வந்தணைந்தார் மதி நாறுஞ் சடை தாழ
திசை முழுதுங் கணநாதர் தேவர்கட்கு முன் நெருங்கி
மிசை மிடைந்து வரும் பொழுது வேற்று ஒலிகள் விரவாமே
அசைய எழுங்குழல் நாதத்து அஞ்செழுத்தால் தமை பரவும்
இசை விரும்பும் கூத்தனார் எழுந்தருளி எதிர் நின்றார்
முன் நின்ற மழவிடை மேல் முதல்வனார் எப்பொழுதும்
செந்நின்ற மன பெரியோர் திரு குழல் வாசனை கேட்க
இந்நின்ற நிலையே நம்பால் அணைவாய் என அவரும்
அந்நின்ற நிலை பெயர்ப்பார் ஐயர் திரு மருங்கு அணைந்தார்
விண்ணவர்கள் மலர் மாரி மிடைந்து உலகமிசை விளங்க
எண்ணில் அருமுனிவர் குழாம் இருக்கு மொழி எடுத்து ஏத்த
அண்ணலார் குழல் கருவி அருகு இசைத்து அங்கு உடன் செல்ல
புண்ணியனார் எழுந்து அருளி பொற் பொதுவின் இடை புக்கார்
சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி
தீது கொள் வினைக்கு வாரோம் செஞ்சடை கூத்தர் தம்மை
காது கொள் குழைகள் வீசும் கதிர் நிலவு இருள் கால் சீப்ப
மாது கொள் புலவி நீக்க மனையிடை இரு கால் செல்ல
தூது கொள்பவராம் நம்மை தொழும்பு கொண்டு உரிமை கொள்வார்
திருச்சிற்றம்பலம்
இலை மலிந்த சருக்கம் முற்றிற்று
சருக்கம் க்கு திருவிருத்தம்






கொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார்
அருளிச்செய்த
திருத்தொண்டர் புராண வரலாறு என்னும்
சேக்கிழார் சுவாமிகள் புராணம்































சிவசிவ
திருச்செந்திலாண்டவன் துணை
கொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார்
அருளிச்செய்த
திருத்தொண்டர் புராண வரலாறு என்னும்
சேக்கிழார் சுவாமிகள் புராணம்
பாயிரம்
விநாயகர்
வானுலகும் மண்ணுலகும் வாழமறை வாழ
பான்மைதரு செய்யதமிழ் பார்மிசை விளங்க
ஞானமத ஐந்துகர மூன்றுவிழி நால்வாய்
ஆனைமுக னைப்பரவி அஞ்சலிசெய் கிற்பாம்
சபாநாதர்
சீராருஞ் சதுர்மறையும் தில்லைவா ழந்தணரும்
பாராரும் புலிமுனியும் பதஞ்சலியும் தொழுதேத்த
வாராருங் கடல்புடைசூழ் வையமெலாற் ஈடேற
ஏராரு மணிமன்றுள் எடுத்ததிரு வடிபோற்றி
சிவகாமசுந்தரி
பரந்தெழுந்த சமண்முதலாம் பரசமய இருள்நீங்க
சிரந்தழுவு சமயநெறி திருநீற்றின் ஒளிவிளங்க
அரந்தைகெட புகலியர்கோன் அமுதுசெ திருமுலைப்பால்
சுரந்தளித்த சிவகாம சுந்தரிபூங் கழல்போற்றி
கற்பக விநாயகர்
மலரயனு திருமாலுங் காணாமை மதிமயங்க
புலிமுனியும் பதஞ்சலியுங் கண்டுதொழ புரிசடையார்
குலவுநட தருந்தில்லை குடதிசை கோபுரவாயில்
நிலவியகற் பகக்கன்றின் நிரைமலர்த்தா ளிணைபோற்றி
சுப்ரமணியர்
பாறுமுக மும்பொருந்த பருந்துவிரு துணக்கழுகு
நூறுமுக மாயணைந்து நூழில்படு களம்புகுத
மாறுமுக தருநிருதர் மடியவடி வேலெடுத்த
ஆறுமுகன் திருவடித்தா மறையிணைக ளவைபோற்றி
சைவ சமயாசாரியார்
பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல்போற்றி
ஆழிமிசை கல்மிதப்பில் அணைந்தபிரான் அடிபோற்றி
வாழிதிரு நாவலுர் வன்றொண்டர் பதம்போற்றி
ஊழிமலி திருவாத வூரர்திரு தாள்போற்றி
திருத்தொண்டர் சேக்கிழார்
தில்லைவாழ் அந்தணரே முதலாக சீர்படைத்த
தொல்லையதா திருத்தொண்ட தெகையடியார் பதம்போற்றி
ஒல்லையவர் புராணகதை உலகறிய விரித்துரைத்த
செல்வமலி குன்றத்தூர சேக்கிழார ரடிபோற்றி
நூற்பெயர்
தாய்மலர்ந்த முகத்தினளா தழுவிமுலை தரவந்த
நோய்மலர்ந்த பிறவிதொறு நுழையாமல் உலகு
தீமலர்ந்த சடைக்கூத்தர் திருவருளாற் சேக்கிழார்
வாய்மலர்ந்த புராணத்தின் வரலாறு விரித்துரைப்பாம்
அவையடக்கம்
ஊர்கடலை இவனெனவ துதித்தநான் ஓங்குதமிழ்
நூற்கடலை கரைகண்டு நுவலநினை குமதுதிரு
பாற்கடலை சிற்றெரும்பு பருகநினை பதுபோலும்
நீர்கடல்சூழ் மண்ணுலகை நிறுக்கநினை குமதொக்கும்
தேவுடனே கூடியசொல் செழுந்தமிழோர் தெரிந்துரைத்த
பாவுடனே கூடியஎ பருப்பொருளும் விழுப்பொருளாம்
கோவுடனே கூடிவருங் குருட்டாவும் ஊர்புகுதும்
பூவுடனே கூடியநார் புனிதர்முடி கணியாமால்

இஃது உமாபதிசிவம் என்னும் புலவர் இயற்றியது என்பர்
நூல்
பாலாறு வளஞ்சுரந்து நல்க மல்கும்
பாளைவிரி மணங்கமழ் பூஞ்சேநலை தோறும்
காலாறு கோலிஇசை பாடநீடும் களிமயில்நின்
றாடும்இயல் தொண்டை நாட்டுள்
நாலாறு கோட்டத்து புலியூர கோட்டம்
நன்றிபுனை குன்றைவள நாட்டு மிக்க
சேலாறு கின்றவயற் குன்ற துரில்
சேக்கிழார் திருமரபு சிறந்த தன்றே
நாடெங்கும் சோழன்முன தெரிந்தே
ஏற்றும் நற்குடி நாற்ப தெண்ணாயிரத்து வந்த
கூடல்கிழான் புரிசைகிழான் குழவு சீர்வெண்
குளப்பா கிழான் வரிசைக்குள துழான்முன்
தேடுபுக ழாரிவருஞ் சிறந்து வாழ
சேக்கிழார் குடியிலிந்த தேசம்
பாடல்புரி அருள்மொழித்தே வரும்பி னந்தம்
பாலறா வாயரும்வ துதித்து வாழ்ந்தார்
இமயமகள் யரையன்மகள் தழுவ கச்சி
ஏகம்பர் திருமேனி குழைந்த ஞான்று
சமயமவை ஆறினுக்கு தலைவிக்கீசர்
தந்தபடி எட்டுழக்கீராழி நெல்லும்
உமைதிரு சூடகக்கையால் கொடுக்கவாங்கி
உழவுதொழி லாற்பெருக்கி உலகமெல்லாம்
தமதுகொழு மிகுதிகொடு வளர்க்கும் வேளான்
தலைவர் பெரும் புகழ்உலகில் தழைத்தன்றே
விளைகழனி பூலோகம் முழுதும் ஏரி விரிதிரை
நீர்க்கடல் வருணன் கம்பு கட்டி
கிளர்கலப்பை தருசுமையாள் சுவேதராமன்
கிடாமறலி வசத்தீசன் வசத்தான் என்றிங்
களவறிந்தாண் டாண்டுதொறும் விதைத
பாமல் அளக்குமவள் கச்சியறம் வளர்த்த மாதா
ஒளிபொருகு கொழுமிகுதி எறும்பீ றானஉயி
ரனைத்தும் தேவரும்உண் டுவப்பதன்றே
மாறுகொடு பழையனூர் நீலி செய்த
ஞ்சனையால் வணிகன் உயிர் இழப்ப தாங்கள்
கூறஉயசொல் பிழையாது துணிந்து
செந்தி குழியிலெழு பதுபேரும் முழ்கி கங்கை
ஆறணிசெஞ் சடைதிருவா லாங்கா டப்பர்
அண்டமுற நிமிந்தாடுமட அடியின்மின்கீழ்மெ
பேறுபெறும் வேளாளர் பெருமை எம்மால்
பிரிந்தளவி டிவளவென பேசலாமோ
காராளர் அணிவயலில் உழுதுதங்கள்
கையார நட்டமுடி திருந்தில்இந்த
பாராளு திறல்அரசர் கவித்தவெற்றி
பசும்பொன்மணி முடிதிருத்துங் கலப்பைபூண்ட
ஏரால்எண் டிசைவளர்க்கும் புகழ்வேளாளர்
ஏறடிக்கஞ் சிறுகோலால் தரணியாள
சீராருமுடியரசர் இருந்துசெங்கோல்
செலுத்துவர்வே ளாளர்புகழ் செப்பலாமோ
வாயிலார் சத்தியார் விறல்சேர் மிண்டர்
வாக்கரையர் சாக்கியர்கோ புலிகஞ் சாறர்
ஏயர்கோன் கலிக்காமர் முளைவித்தாக்கும்
இளையான்தன் குடிமாறர் முர்க்கர் செங்கை
தாயனார் செருத்துணையார் செருவில்
வெம்போர் சாதித்த முனையடுவார் ஆகநம்பி
பாயிரஞ்சேர் அறுபதுபேர் தனிப்பேர்
தம்மில் பதின்மூவர் வேளாளர் பகருங்காலெ
அத்தகைய புகழ்வேளாண் மரபில்சே
கிழார்குடியில் வந்தஅருண் மொழித்தேவர்க்கு
தத்துபரி வலவனுந்தன் செங்கோலோச்சுங்
தலைமையளி தவர்தமக்கு தனதுபேரும்
ஊத்தமசோ ழப்பல்ல வன்தான்என்றும்
உயர்பட்டங் கொடுத்திடஆங் கவர்நீர்நாட்டு
நித்தனுறை திருநாகே சுரத்தில்அன்பு
நிறைதலினால் மறவாத நிலைமை மிக்கார்
தம்பதிகுன் றத்தூரில் மடவளாக
தானாக்கி திருக்கோயில் தாபித்தங்கண்
செம்பியர்கோன் திருநாகே சுரம்போலீதுங்
திருநாகே சுரமெனவே திருப்பேர் சாற்றி
அம்புவியில் அங்காங்க வைபவங்க
கானபரி கலந்திருநாள் பூசைகற்பித்து
இம்பர்புகழ் வளவன்அர சுரிமை
செங்கோல் இமசேது பரியந்தம் இயற்று நாளில்
கலகமிடும் அமண்முருட்டு கையர் பொய்யே
கட்டிநட தியசிந்தா மணியை மெய்யென்று
உலகிலுள்ளொர் சிலகற்று நெற்குத்துண்ணா
துமிக்குத்தி கைவருந்தி கறவைநிற்க
மலடுகற துளந்தளர்ந்து குளிர்பூஞ்சேலை
வழியிருக்க குழிவீழ தளறுபாய்ந்து
விலைதருமென் கரும்பிருக்க இரும்மைமென்று
விளக்கிருக்க மின்மினி தீக்காய்ந்து நொந்தார்
வளவனுங்குண் டமண்புரட்டு திருட்டுச்சி
தாமணி கதையை மெய்யென்று வரிசைகூர
உளமகிகழ்ந்து பலபடப்பா ராட்டிக்கேட்க
உபயகுல மணிவிளக்காஞ்சே கிழான்கண்டு
இளஅரசன் தனைநோக்கி சமணர்பொய்ந்நூல்
இதுமறுநக்காகாது இம்மைக்கு மற்றே
வளமருவு கின்றசிவ கதை இம்மைக்கும்
மறுமைக்கும் உறுதிஎன வளவன்கேட்டு
அவகதையா பயனற்ற கதையீதாகில்
அம்மையும் இம்மையும் உறுதி பயத்தக்க
சிவகதைஏ ததுகற்ற திறமைப்பேரார்
சீவகசிந்தா மணிபோல் இடையில்வந்த
நவகதையோ புராதனமோ முன்னிலுண்டோ
நானிலத்து சொன்னவரார் கேட்பாரார்
தவகதையொ தவம்பண்ணி பேறுபெற்ற
தனிக்கதையோ அடைவுபட சாற்றுமென்றான்
செம்பியர்பூ பதிமகிழ்ந்து வினவிக்கேட்க
சேக்கிழார் குரிசில்உரைசெய்வார் ஞாலத்து
அம்பலவர் திருத்தொண்டர் பெருமை
ஆரூர் அடிகள்முதல் அடிஎடுத்து கொடுக்க நாவல்
நம்பிபதி னொருதிருப்பா டாகச்செய்த
நலமலிதொண் டத்தொகைக்கு நாரையூரில்
தும்பிமுகன் பொருளுரைக்க நம்பியாண்டார்
சுருதிமொழி கலித்துறைஅ தாதிசெய்தார்
ஆயுமறை மொழிநம்பி யாண்டார் நம்பி
அருள்செய்த கலித்துறைஅ தாதிதன்னை
சேயதிரு முறைகண்ட ராசராச
தேவர்சிவா லயதேவர் முதலாயுள்ள
ஏயகருங் கடல்புடைசூழ் உலகமெலாம்
எடுத்தினிது பாராட்டிற்று என்ன
தூயகதை அடைவுபட சொல்வீர்
என்றுசோழன் உரைசெ கேட்டு
தில்லைவாழ் அந்தணரே முதற்பண்
பாடுதிருநீலகண்டத்து பாணார் ஈறா
சொல்லிய தொண்ட தொகை நூல்வகை
அந்தாதி தொடர்ச்சியினை விரித்துரைக்க வளவன்கேட்டு
மெல்லியலாள் பங்கர் திருவருளை நோக்கி
வியந்தடியார் தொண்டுசெய்து பேறுபெற்ற
செல்கதியை நினைந்துருகி வளவர் கோமான்
சேவையர்கா வலரைமுக நோக்கி சொல்வான்
பாபே வியந்தடிமை
அவரவர்கள் நாடவர்கள் இருந்தஊர்
வந்து அவதரித்த திருமரபு திருப்பேர் செய்த
சிவச திருத்தொண்டு முற்பிற்பாடு
சிவனடிக்கிழ் உயர்பரம முத்தி பெற்றோர்
எவரும்அறி சீவன் முத்தராய் இங்கிருப்பவர்கள்
இனிமேலும் பிறப்போர் மண்மேல்
அவர்களைச்சேர தருள்பெற்றொர் பகைத்துப்பெற்றோர்
அவர்கள்பகையால் நரகில் அடைந்த பேர்கள்
இல்லறத்தில் இருந்துநனி முத்திபெற்றோர்
சிற்றின்ப இயல்பைநீக்கி
நல்லறமா துறவறத்தில் நின்று பெற்றோர்
நற்பிரமசாரிகளாய் அருள்பெற்றுயந்தோர்
செல்கதிசற் குருவருளால் சென்று சேர்ந்தோர்
சிவபூசைசெய்துபர முத்தி பெற்றோர்
புல்லறிவு தவிர்ந்துதிரு வேடமேமெ
பொருளெனக்கொண் டரனடிக்கீழ பொருந்த புக்கோர்
இப்படியே அடைவுபெற பிரித்துக்கேட்டால்
யாவருக்கு மேதரிக்க செவிநா நீட்டா
ஓப்பரிய பொருள் தெரிந்து விளங்கித்தோன்ற
உவமையடைத்தாய கதை கற்கநிற்க
தப்பில்பொருங் காவியமாய் விரித்து
செய்து தருவீர்என் றவர்குவிடைகொடுத்து வேண்டும்
செப்பரிய திரவியமும் கொடுக்க வாங்கி
சேக்கிழார் குரிசில் திருத்தில்லை சேர்ந்தார்
தில்லை எல்லையில் வந்து வந்தெதிர் தெண்டனாக விழுந்தெழுந்து
அல்லிசேர் கமலத்தடத்தினில் மூழ்கி அம்பலவாணர்முன்
ஓல்லைசென்று பணிந்து கைத்தலம் உச்சிவைத்துளம் உருகி நைந்து
எல்லைகா ணரிதாய பெரொளி இன்பவாரியில் மூழ்கியே

அடையலார் புரம் நீறெழ திருநகை செய்தன்றொரு மூவரை
படியின் மேல் அடிமை கொளும் பதபங்கயங்கள் பணிந்து நின்று
அடிகளே உனதடியார் சீரடியேன் உரைத்திட அடிஎடுத்து
இடர்கெட தருவாய் எனத்திருவருளை எண்ணி இறைஞ்சினார்

அலைபுனற் பகிரதி நதிச்சடை யாட வாடர வாட நின்று
இலகு மன்றினில் ஆடுவார் திருவருளினால் அசரீரி வாக்கு
உலகெலாம் என அடிஎடுத்துரைசெய்த பேரொலி யோசைமி
கிலகு சீரடியார் செவிப்புலந்தெங்குமாகி நிறைந்தலால்

தில்லை மாநகர்வாழ வாழ்தவசிந்தை அந்தணர் ஆறைஞ்ஞூறு
அல்லதும் பலமடபதித்தவராச ரிக்கையிலுள்ள பேர்
எல்லை யில்லவர் யாவருங் களிகொளவிளங்கு அசரீரி வாக்கு
ஒல்லை வந்தெழ அனவருங் கரம் உச்சிவைத்து உளம் உருகினார்

உள்ளலார் புரம் நீரெழ கணை ஒன்று தொட்டு உயர் மன்றில்வாழ்
வள்ளலார் திருமாலையு திருநீறு மெ பரிவட்டமும்
எள்ளலா ரலரென்று சேவையர் காவலர்க்கிவை இனிதளித்து
அள்ளலார்வயல் நீடுதில்லையில் அனைவருங் களிகொண்டபின்

சேவை காவலர் தொண்டர் சீர்உரை செய்தவற்குயர் செய்யுள்முன்
மூவரோதிய திருநெறித்தமிழ் ஆதலால் வரன்முறையால்
யாவரும் புகழ் திருநெறி தலைவரை வணங்கி இணங்கி மெ
தாவருஞ் சிவசாதனங்கள் தரித்து நீறுபரித்தரோ

வந்துசூழ நிரைத்த ஐயிருநூறுகால் மணிமண்டபத்து
எந்தையார் திருவருளை உன்னிஇருந்து சேவையர் காவலர்
செந்தமிழ் தொடையால் விளங்கிய திருவிருத்த நிருத்தனார்
தந்த சொன்முதலா எடுத்தனர் தாணுவான புராணநூல்

திருமறையோர் புராணமவை பதின்மூன்று
சிவவேதியர் அரனை வழிபட்ட புராணமோ ரிரண்டு
குரைகழல் மாத்திரரொன்று அறுவர்
முடிமன்னர் முறுநிலமன்னர் ஐவர் வணிகர்குலத்தைவர்
இருமை நெறி வேளாளர் பதின்மூவர்
இடையர் இருவர் சாலியர் குயவர் தயிலவினையாளர்
பரதவர்கள் சான்றார் வண்ணார் சிலைமறவர்
நீசர் பாணர் இவர் ஓர்ஒருவராம் பகருங்காலே
அறுதிபெற திருமரபு குறித்துரையா
புராணம் அவைகள் ஒரு பதின்மூன்று திருக்கூட்டந்தன்னில்
மறுவிலவர் பதியறிந்த கதையிரண்டு வந்த
மரபறிந்த கதையிரண்டு பேரறிந்த கதைஒன்று
உறுமரபு தெரியா புராணமவை யோரேழ்
ஊர்அறியா கதை ஏழு பேரறியா கதைஎட்டு
இறுதி யிலக்கங்கண்ட திருக்கூட்ட
மொன்றெண்ணித்தனை என்றறியா திருக்கூட்டம் எட்டே
தில்லை மறையோர் கலயர் முருகர் பசுபதியார்
சிறப்புலியார் கணநாதர் பூசலை சண்டேசர்
கல்விநிறை சோமாசிமாறர் நமிநந்தி
கவுணியனார் அப்பூதி நீலநக்கராக
செல்வமறையோர் காதை பதின்முன்று
சிவவேதியர் காதை இரண்டு புகழ்த்துணையார் முப்போதும்
வல்லபடி சிவனை அருச்சிப்பார்கள்
மாமாத்திரர் மரபில் சிறுத்தொண்டர் ஒருவர் முடிமன்னர்
அறுவரெவரவர் கோச்செங்கோட்சோழர்
புகழ்ச்சோழர் அருள்மானி இடங்கழியார் நெடுமாறர் சேரர்
குறுநில மன்னவர் ஐவர் நரசிங்கமுனையர்
குற்றுவனார் கழற்சிங்கர் மெய்பொருள் ஐயடிகள்
முறைமையில் வணிகரில் ஐவர் காரைக்காலம்மை
மூர்த்தி கலிக்கம்பர் அமர்நீதி இயற்பகையார்
திறமைவிரி வேளாளர் பதின் முவர்
மூர்க்கர் செருத்துணையார் வாயிலார் கோடபூலியார் சத்தி
பாபேதிறமைபுரி
தாயனார் இளையான்தன் குடிமாறர் அரசு
சாக்கியர் கஞ்சாறர் விறல்மிண்டர் முனையடுவார்
ஏயர்கோன் கலிக்காமர் கோபாலர்
மரபிலிருவர் திருமுலர் ஆனாயர் குயவர்
சேயபுகழ திருநீலகண்டனார் பாணர்
திருமரபில் திருநீலகண்டத்துப்பாணர்
மேயதிறல் அதிபத்தர் பரதவர் கண்ணப்பர்
வேடர் மரபினில் சான்றார் ஏனாதிநாதர்
பாபேசான்றோர்
நேசனார் சாலியரில் திருநாளைப்போவார்
நீசர் மரபினில் எங்கள் திருக்குறிப்புத்தொண்டர்
துசொலிக்கும் ஏகாலிமரபு திலதைலத்தொழில்
மரபில் கலியனார் மரபு குறித்துரையா
காசில்கதை பதின்மூன்று குலச்சிறையார்
தண்டி கணம்புல்லர் எறிபத்தர் காரியார் குறும்பர்
தேசுடைய பத்தர் பரமனையே பாடுவார்கள்
சித்தத்தை சிவன்பால் வைத்தார் ஆரூர் பிறந்தார்
பாபேகுறித்தறி
செப்பரிய பொய்யடிமை இல்லாதார்
மெய்யில் திருநீறு பூசுமுனிவர்கள் யுலகுதன்னில்
அப்பாலும் அடிசார்ந்தார் இவரில் தமிற்
சிலபேர் ஆய்ந்த தமிழ் பேர்
தப்பாத தெலுங்கர் சிலர் மற்றுள தேசத்தோர்
தவஞ்செய்து பரகதியை அடைந்தவர்கள் சிலபேர்
இப்போதும் இருந்தரனை வழிபடுவோர்
சிலபேர் இனிமேலு திருமேனி கொடுவருவோர் சிலரே
திருஞானசம்பந்தர் திருநாவுக்கரையர்
திருமூலர் நெடுமாறர் மங்கையர்க்கரசி
கரைசேருங் குலச்சிறையார் யாழ்ப்பாணர்
குறும்பர் கணநாதர் அப்பூதி சோமாசிமாறர்
உரைசேரும் இவர்கள் பதினெருவர்
குருவருளால் உயர்முத்தி யடைந்தவர்கள் எறிபபத்தர் கலயர்
முருகனார் கண்ணப்பர் ஆனாயர் தாயர்
முர்த்தியார் சண்டேசர் திருநாளைப்போவார்
சேரனார் சாக்கியர் கூற்றுவனார் தண்டி
சிறப்புலியார் பசுபதியார் கலிக்காமர் கலியர்
காரியார் அதிபத்தர் நீலநக்கர் பூசல்
கணம்புல்லர் கோட்புலியர் நமிந்தியடிகள்
சீருடைய கழற்சிங்கர் வாயிலார் தூய
செருத்துணையார் புகழ்துணையார் காடவர் ஐயடிகள்
மூரிநெடு வேற் செங்கோட்சோழனாராக
முப்பதுபேர் சிவலிங்கத்தால் முத்தியடைந்தார்
திருநீலகண்டனார் இயற்பகையார் மூர்க்கர்
சிறுத்தொண்டர் திருக்குறிப்புத்தோண்டர் விறல்மிண்டர்
அருள்சேரும் இடங்கழியார் முனையடுவார்
சத்தி அமர்நீதி மெய்ப்பொருளார் ஏனாதி நாதர்
கரைசேரும் புகழ்ச்சோழர் கஞ்சாறர் மாறர்
காரைக்காலம்மை நரசிங்கர் கலிக்கம்பர்
வருநேசராக ஒருபத்தொன்பதடியார்
மணிவேடத்தாரை வழிபட்டரனை யடைந்தார்
கவுணியர் நாவுக்கரசர் பேயார் இம்மூவர்
கற்கும் இயல் இசைவல்லோர் இசைத்தமிழ் நூல்வல்லோர்
பவமணுகா திருநாளைப்போவார் ஆனாயர்
பாணர் பரமனையே பாடுவராக நால்வர்
புவனி புகழ் ஐயடிகள் திருமூலர் காரி
பொய்யடிமை இல்லாத தமிழ்ப்புலவர் சேரர்
நவமுடைய இவர்ஐவர் இயல் வல்லோர் நின்ற
நாயன்மார் தவம் புரிந்து நற்கதியை யடைந்தோர்
இல்லறத்தில் நின்றவர்கள் திருநீலகண்டர்
இயற்பகை உள்ளிட்டார் முர்த்தியார் அப்பர்
நல்ல துறவறம் பிரமசாரிகள் சண்டேசர்
நானிலத்தில் அரனடியார் தங்களுடன்சேர
செல்கதி பெற்றவர் ஞான சம்பந்தருடனே
திருமணத்தில் ஒருமணமா சேர்ந்தவர்கள் அனேகம்
பல்வளஞ்சேர் ஆரூரருடன் சேரர் கையில்
பரிஉகைக்க உடன்சென்ற பரிசனமெண்ணிறந்தோர்
சிவனடியாருடன் பகையாய் முத்தியடைந்தவர்கள்
சேய்ஞலூர் சண்டேசர் பிதா எச்சதத்தன்
கவர்புகழ்சேர் கோட்புலியார் உரைத்த திருவிரையா
கலிபிழைத்த கிளைபகைத்து நரகினைசென்றடைந்தோர்
தவரான முர்த்தியார் இறைவனுக்குச்சாத்துஞ்
சந்தணக்காப்பினை விலக்கி அமண சார்வா
புவிபரந்த கருநடமன்னவன் முதலனேகர்
புராணகதை யினை பிரித்து புகல எளிதலவே
பாபே பிழைத்து தவராசர்
ஆருரர் திருத்தொண்ட தொகையு஡ரத்த நாளில்
அடுத்தொண்டுசெய்தொண்டர் சிலர் அவர்க்கு முன்னே
பேருர் மெ தொண்டுசெய்த பேர்
சிலபேர் அவர்க்குப்பிறக திரத்தொண்டுசெய்யும்பேர் சிலபேராக
சீருரு திருத்தொண்டர் புராணத்திற் சேர்த்து
சேவையர் கோன் சேர்வைசெயு தொண்டர் அளவிரந்தோர்
காரூரும் மணிகண்டர கவரவர்கள் செய்த
கைத்தொண்டில்ன் நிலைகரைகண்டுரைக்க எளிதலவே
ஓருலகோ ஒருதிசையோ ஒருபதியோ
தம்மிலோரு மரபோ ஒருபெயரோ ஒரகாலந்தானோ
பேருலகில் ஒருமைநெறி தருங்கதையோ
பன்மை பெருங்கதையோ பேர் ஒன்றோ அல்லவே இதனை
ஏர் உலகெலாம் உணர தோதர்றகரியவன்
என்றிறைவன்முன் அடியெடுத்து கொடுத்தருள கொண்டு
பாருலகில் நாமகள் நின்றெடுத்து
கைநீட்ட பாடி முடித்தனர் தொண்டர்சீர் பரவவல்லார்
கரங்கடலை கைநீத்து கொள எளிது
முந்நீர கடற்கரையின் நொய்மணலை எண்ணி அளவிடலாம்
பெருங்கடல்மேல் வருந்திரையை ஒன்றிரண்டென்
றெண்ணி பிரித்தெழுதி கடையிலக்கம் பிரித்துவிடலாகும்
தருங்கலின் மீனை அளவிடலாகும்
வானத்தாரகையைஅளவிடலாம் சங்கரன்தாள் தமது
சிரங்கொள் திருத்தொண்டர் புராணத்தை
அளவிட நஞ்சேக்கிழார கெளிதலதுதேவர்க்கும் அரிதே
பாபே கடற்கரைநுண்
அறுவதுபேர் தனித்திருப்பேர் கூட்டம்
ஒன்பதாக அரனடியார் கதையை
மறுவில் திருநாவலூர சிவமறையோர் குலத்து
வருசடையனார் மனைவி இசைஞானி வயிற்றில்
உறுதிபெற அவதரித்த ஆரூரர் முன்னாள்
உரைசெய்த திருத்தொண்டத்தொகை பதிகத்தடைவே
நறைமலிபூம் பொழில்புடைசூழ் திருநாரையூரில்
நம்பியாண்டார் திருவந்தாதியை கடைபிடித்து
காண்டம் இரண்டா வகுத்து கதைபரப்பை
தொகுத்து கருதரிய சருக்கங்கள் பதின்மூன்றா நிலையிட்டு
ஈண்டுரைத்த புராணத்தில் திருவிருத்தம்
நாலாயிர திருநூற்ஐம்பத்து மூன்றாக அமைத்து
சேண்டகையை திருத்தொண்டர் புராணமென
புராண திருமுறைக்கு திருநாமஞ் சீர்மைபெற அமைத்தி
டாண்டகைமை பெறயெழுதி மைக்காப்புச்சாத்தி
அழகுபெற கவளிகையும் அமைத்ததில் வைத்ததனபின்
சேவைகாவலர் புராணகதைதொகை
செயநினைந்தெமை அகன்றபின்
யாவர் தாம் அருகிருந்த பேர்கள்கதைசென்ற
தெவ்வளவிருந்தாங்கு
ஆவதென்னி வைகள் அறியவேண்டுமதறிந்து
வாரும் எனவளவர்கோன்
ஏவினார் உரிய தூதர் தூதறியாமல்
ஒற்றரையு மேவினான்
வென்றி வேல்வளவன் அளவறிந்துவர
விட்ட காளையர் புராணநூல்
ஒன்று பாதிகதை சென்றது என்று
சிலர் ஓடினார் உவந்து
இன்று நாளைமுடியும் புராணம் இனி
என்றுரைத்திட்டு இறைஞ்சினான்
சென்று நற்கதைமுடிந்தது என்று
சிலர் செம்பியற்குறுதி செப்பினார்
வந்து சொன்னவர்கள் அனைவருக்கும் நவமணிகளுந்துகிலும் பொனும்
சிந்தி அள்ளியும் உவந்து விசி உயர் செம்பொன் அம்பல மருங்கில்வாழ்
அந்தி வண்ணர் நடமும் பணிந்து முதலடி எடுத்தவர் கொடுத்திட
புந்தி செய்து மகிழ்சேவை காவலர் புராணமு தொழுவன்நான் எனா

வீதிவீதிகள்தொறு தொறும் பயணம் என்று வென்றி மணிமுரசறை
தோதி வேதியர்கள் எண்ணி இட்ட உயர்நாளும் ஓரையும் முகூர்த்தமும்
போத நாடிவரை புரைகடக்களிறு பரவி தேர் கருவியாள்தர
சாதுரங்கமுடனே செல பிளிறுநந்தி மேல்கொடு நடந்தனன்

தேர்முழக்கொலி மழை கடக்கரட சிந்துர களிறு பிளிறுசீர்
ஆர்முழக்கொலி பரிசெருக்கொலி பதாதி வந்தெதிர் அடர்ந்தெழும்
போர் முழக்கொலி சழக்கிலாதுயர் படைக்கலன் புணரும் ஓசைஏழ்
கார்முழக்கொலியின் எட்டிரட்டிநிரை கடல்முழக்கென முழக்கெழ

வளவர்கோன் வரவறிந்த தில்லைமறையோரும் வண்஡ம மடபதிகளும்
பிளவுகொண்டமதி நுதல்மடந்தையாரும் மற்றுமுள பெரியோர்களும்
களவிலாத மொழிகொடு புராணகதை செய்த கங்கைகுல திலகரும்
தளவமாலை அபயனை எதிர தினியசாரஆசிபலசாற்றினார்

முண்டமான திருமுடியும் இட்ட திருமுண்டமங்கவசமுந்துணை
குண்டலங்களும் இரண்டுகாதினுங் வடிந்தலைந்த குழையுந்திரு
கண்டமாலை கரமாலையுஞ் சிரசுகவின் விளங்வே
தோண்டர்சீர் பரவுவான் அணைந்த சுபசரிதை சோழனெதிர் கண்டனன்

கண்டபோதுள மகிழ்ந்து தன்னையறியாது கைகள் தலைமீதுற
கொண்டவேடம் அரனடியார் வேடம் இது குறைவிலாத தவவேடம் என்
றண்டவாணர் திருவருளை யுன்னி அவர்அடிமை கொண்ட பெருமை நினைந்து
எணடயங்கரசர் ஏறு சேவையர் குலாதி பாதுகை இறைஞ்சினான்

இறைஞ்சி அம்பலவர் பாத தாமரை இறைஞ்ச எண்ணி வரன்முறையால்
அறஞ்சிறந்த முனிசேவை காவலரும் ஆறைஞ்ஞூறு மறையோர்களும்
துறஞ்சிறந்த மடபதிகளுந்தொடர வந்து மன்னன் அரிபிரமர்பால்
மறைஞ்சு நின்ற பொருள் வெளிப்பட கனகமன்றில் நின்றபடி கண்டனன்

கண்டகண்அருவி தாரை கொள்ள இருகைகள் அள்சலிகொள கசிந்து
எண்டரும் புளகரோமகூபம் எழ இன்பம் வாரி கரைபுரளவாய்
விண்ட தூமொழிகள் குழற அன்பினொடு விம்மிவிம்மி அருள்மேலிட
தெண்டனாகமுன் விழுந்தெழுந்து நனி செம்பியன் பரவ எம்பிரான்

சேக்கிழான் நமது தொண்டர்சீர்பரவ நாம் மகிழ்ந்து உலகம் என்று
வாக்கினால் அடியெடு துரைத்திட வரைந்து நூல்செய்து முடித்தனன்
காக்கும் வேல்வளவ நீஇதைகடிதுகேள் என கனக வெளியிலே
ஊக்கமான திருவாக்கெழுந்து திருச்சிலம்பொலியும் உடன்எழ
பாபே சபையிலே

மன்றுளாடி திருவாய் மலர்ந்த மொழியுஞ் சிலம்பொலியும் மன்றிலே
நின்ற மானிடர் செவிப்புலன்புக நிறைந்த தன்றியும் நிலத்தின்மேல்
ஒன்றிநின்றுயர் சராசரங்கள் அடை கசிந்துருகி ஓலிட
குன்றிலங்கு திரள்தோள் நரேந்திரபதி குதுகுலித்துளம் மகிழ்ற்தனன்
பாபே குதுகுது

தொண்டர் தொண்டுசெய் புராணகாதை மதிசூடுநாதர் திருவளினால்
விண்ட நீதிபுனை சேக்கிழார்முனி வரித்துரைத்த காதை கேட்பதற்கு
அண்டவாணர் அடியாரெலாங் கடுகவருக என்று திசைதிசை தொறும்
எண்டயங்கரசன் ஏடெடு தெழுதியாளும் ஓலைகளும் ஏவினான்

கவசமணிந்த சனங்களு மிங்கிதமுகம்பி
தவசமுறு சிவசிந்தையும் அன்பகலா மேன்மை
தவசரி தொழிலுஞ் சிவசாதனமுஞ் சார
சிவசமயத்தவர் யாவரும் வந்து திறண்டார்கள்

வேதியர் வேதமுழக்கொலி வேதத்தை தமிழால்
ஓதியமூவர் திருப்பதி கத்தொலி ஓவாமல்
பூதியணிந்து அரகரஎன அன்பர் புகழ்ந்தோதும்
காதியல் பேரொலி காரொலி போலொலி கைத்தேற

பூசிப்பவர் சிலர் பூசித்தன்பொடு புனிதன்தாள்
நேசிப்பவர் சிலர் பிறவாவரமருள் நிமலா என்
றியாசிப்பவர் சிலர் திருமறை எழுதி களிகூர
வாசிப்பவர் சிலராக இருந்து மகிழ்ந்தார்கள்

தெள்ளு திரைகடல்மீது மிதந்த திருத்தோணி
வள்ளலை அன்புசெய் அன்பர் மடங்கள் தொறும் பாலர்
மெள்ள இருந்து மிழற்று புராண விருத்தத்தை
கிள்ளைகள் பாடி உரைப்பன கேட்பன மெய்ப்பூவை

மற்றது கண்டு களித்த நலத்த மனதோடு
சுற்றிய மந்திரமாரொடு தந்திரிமார்சூழ
தெற்றென வந்து திரண்டு முரண்தரு சீர்நாடு
பெற்றது செல்வ மெனத்தனி யேகை பொருத்தார்கள்

பாடினர் தும்புரு நாரதர் நீடிசை பாடாநின்று
ஆடினர் வானில் அரம்பையர் அஞ்சலி எஞ்சாமல்
சூடினர் மண்ணின் மடந்தையர் எந்தை துணைப்பாதம்
தேடினர் காலயன் அன்பர் நட தரிசித்தார்கள்

சங்கொடு பேரி கறங்கிசை வீணை தனித்தாளம்
வங்கிய காளம் இடக்கை கடக்கை மணிக்காளம்
பொங்கிய பம்பை வலம்புரி கண்டை முதற் பொற்பார்
மங்கல துரியம் எங்கும் முழுங்கி வனப்பெய்த

வேதியர் வேள்வி நெடும்புகை ஆலயம் எங்கெங்கும்
காதிய குங்கலியப்புகை நீடு கருப்பாலை
சோதி நெடும்புகை தோரணவீதி தொறு தோறும்
மாதர் புகைக்கும் அகிற்புகை எங்கும் வனப்பெய்த

ஆடகநாடக சாலைகள் முத்தணி அத்தாணி
மேடை அரங்கு களங்கமிலாத வெளிக்கூடம்
மாடமதிட்கன மாளிகை சூளிகை எங்கெங்கும்
தோடவிழ் மாலைகள் பொன்னரி

பழுதகல திருவலகு விருப்பொடு பணிமாறி
குழைவுபெற திகழ் கோமயநீர் குளிரச்செய்து
தழைபொதி தோரணமுங் கொடியு துகிலுஞ் சார்வித்து
அழகுபெற திருவீதி புதுக்கியதன் பின்பு

திருநெறி தமிழ்வல்ல பேர்கள் சிவாகமங்கள் படித்தபேர்
கருநெறிப்பகை ஞானநூல் கற்றபேர் மறைகற்றபேர்
குருநெறிக்குரியோ ரிலக்கண இலக்கியங்கள் குறித்போர்
பெருநெறி பலகாவியக்கதை பேசவல்லவர் அனைவரும்

வள்ளலார் திருநடஞ்செய் மன்றின் முன்றில்
மறைவவர் கோமய சலத்தால் மெழுகித்தாபி
தெள்ளரும் வெண்சுதை யொழுக்கி
அறுகால் பீடமி டதன்மேல் பசும்பட்டு விரித்து மீதே
வெள்ளை மடித்திட்டு மதுமலருந்தூவி
விரைநறும் தூபங் கொடு தாதனங் கற்பித்து
தெள்ளுதமிழ் சேக்கிழார் புராணஞ்செய்த
திருமுறையை அதன்மேல் வைத்திறைஞ்சி போற்றி
வாழிதிருத்தொண்டர் புராணத்தை நீரே
வாசித்து பொருள் அருளிச்செய்வீர் என்று
சோழர் பெருமான் முதலாம் அடியரெல்லாஞ்
சொல்லக்கேட்டு குன்றைமுனி மன்றுளாடும்
தாழ்சடையான் அடிஎடுத்துத்தர தாஞ்செய்த
சைவக்கதையினை விளங்க விரித்துச்சொல்ல
சூழஇரு தம்பலவ ரடியா ரெல்லாம்
சுருதிமொழி இது எனக்கைதொழுது கேட்டார்
தாளுடைய திருச்சிலம்பு புலம்ப நடம்புரியு
தன்மை அரனுக்கிசைந்த பேர் வழியினாளும்
ஆளுடைய பிள்ளையார் அவதரித்த நாளும்
அவரழுது திருஞானம் அமுது செய்த நாளும்
சூளுடை ஆதிரைநாளாம் சித்திரை ஆதிரைநாள்
தொடங்கி எதிராம் ஆண்டு சித்திரை ஆதிரையின்
நாளுடைய கதை முடிப்பம் என குன்றைவேந்தர்
நடத்த அனைவருமிருந்து கேட்டனர் நாள்தோறும்
சிறப்புடைய மூவர்முதலிகள் திருவாய் மலர்ந்த
திருநெறிய தமிழ்மூலர் திருமந்திரமாலை
அறப்பயனாம் காரைக்கால் பேயிரட்டைமாலை
அந்தாதி மூத்தபதிகங் கழறிற்றறிவார்
மறப்பரிய பொன்வண்ண தந்தாதி
திருமும்மணிக்கோவை தெய்வஉலா ஐயடிகள் வெண்பா
உறுப்பாக திருவிருத்தம் உடலாக
பொருள்஧஡கள் உயிராக நடந்த துலகெலாம்
அன்று முதல் நாடோ றும்
அடியார் அளவிறந்த பெயர் வந்தவர்க்ளெல்லாம்
சென்றுறை திருமடங்கள்
தோறும் திருவிளக்கங் கவர் சாத்த உள்ளுடைமேற்போர்வை
துன்றிய செந்நெல்லின் அடிசில் கன்னல் நறுங் கனிகள்
தூய அருசுவை கறிநெய் தயிர்திரண்ட பால்தேன்
நன்று திருப்பண்ணியந்தண்ணீர் அமுதம்
அடைக்காய் நரபதி ஏவலின் அமைச்சர் நாடோ ரும் நடத்த
நலமலியு திருத்தில்லை மன்றினில்
நின்றாடும் நடராசர கன்று முதல் மகபூசை நடத்தி
அலகில்புகழ் தில்லைவாழ் அந்தணர்க்கும்
வெவ்வேறமுதுபடி கறியமுது முதலானதெல்லாம்
நலமலி செங்கோல் வளவன் தப்பாமே நாளும்
நடத்திவர அரனடியார் நிரைந்து பதஞ்சலியும்
புலிமுனியும் தவம்செய்த பெரும்பற்ற புலியூர்
பூலோக சிவலோகமென பொலிந்து தோன்ற
மருவு திருமுறை சேர்ப்பார் எழுதுவார் இருந்து
வாசிப்பார் பொருளுரைப்பார் கேடடிருப்பார் மகிழ்ந்து
சிரமசைத்து கொண்டாடி குதுகுலிப்பார்
சிரிப்பார் தேனிப்பார் குன்றைமுனி சேக்கிழார் செய்த
அரிய தவத்தினை நினைப்பார் அம்பலவர்
முன்னாள் அடியெடுத்து கொடுக்க இவர் பாடினர் என்பார்
பெரிய பராணங்கேட்ட வளவர்பிரான் செவிக்கும்
பிடிக்குமோ இனி சிந்தாமணி புரட்டு என்பார்
இத்தகைய சிறப்புடனே திருத்தொண்டர் புராணம்
இருந்தன்பர் பாராட்ட நடந்தெதிரா மாண்டு
சித்திரை ஆதிரைநாளில் முடிய அதுகண்டு
திருத்தொண்டர் அர என்னும் பேரொலியின் எழுந்துபொங
கத்துதிரை கடலொலியை விழுங்கி முழங்கோ
ரேழ்கடல லொலியை கீழ்படுத்தி பிரமாண்டவெளியை
பொத்தி இமையவர் செவியை நிறைத்துயர
பொங்கி பொன்னுலகு கப்பாலும் புகழ் பொலிந்ததன்றே
திருத்தொண்டர் புராணம் எழுதிய முறையை
மறையோர் சிவமூல மந்திரத்தால் அருச்சனை செய்திறைஞ்சி
இருக்கு முதல் மறைநான்கில் இன்று முதலாக
இதுவும் ஒரு தமிழ்வேதம் ஐந்தாவதென்று
கருத்திருத்தி அமுதடைக்காய் நறுந்தூபதீபம்
கவரி குடை கண்ணாடி ஆலத்திநீறு
பரித்தளவு செய்யக்கண்டு வளவர்பிரான்
முறையை பசும்பட்டினாற் சூழ்ந்து பொற்கலத்தினில் இருத்தி
செறிய மதயானை சிரத்தில் பொற்கல தோடெடுத்து
திருமுறையை இருத்தியபின் சேவையர் காவலரை
முறைமை பெற ஏற்றி அரசனுங்கூட ஏறி
முறைமையினால் இனைக்கவரி துணைக்கரத்தால் வீச
மறைமுழங்க விண்ணவர்கள் கற்பகப்புமாரி
பொழி திருவீதி வலமாக வரும்போது
இறைவர் திருவருளை நினைந்தட லரசர் கோமான்
இதுவன்றோ நான்செய்த தவப்பயன் என்றிசைந்தான்
வாரணத்தில் இவரவரை கண்ட திருவீதி
மறுகுதொறு துய்மைசெய்து வாழைகளும் நாட்டி
பூரண கும்பமும் அமைத்து பொரியும் மிகத்தூவி
பொன்னரிமாலையும் நறும்பூமாலைகளு தூக்கி
தோரணங்கள் நிரைத்து விரைநறு தூபம்ஏந்தி
சுடர்விளக்கும்ஏற்றி அணிமணிவிளக்கும் ஏந்தி
ஆரணங்கள் விரித்தோதி மாமறையொ ரெதிர்கொண்
டறுகொடுப்ப வாழ்தெடுத்தார் அரம்பையர் களெல்லாம்
காவலனாரிவர் தவரிவர் காவலர்
கவரி இடத்தகுமோ என்பார்
சேவையர் காவலனார் சிவமான
சிறப்பிது நல்ல சிறப்பென்பார்
தேவரு வெழுதவொணா மறையை
தமிழ்செய்து திருப்பதிகம் பாடும்
மூவரும் ஒருமுதலா யுலகத்து
முளைத்த முதற்பொருள் தான் எனபார்
மின்மழை பெய்தது மேக ஒழுங்குகள்
விண்ணவர் கற்பக விரைசேர்பூ
நன்மழை பெய்தனர் சேவையர்
காவலர் நாவலரின்புற நாவார
சொன்மழை பெய்தனர் இரவலர்
மிடிகெட அள்ளி முகந்தெதிர் சோழேசன்
பொன்மழை பெய்தனன் உருகிய
நெஞ்சொடு கண்மழை அன்பர் பொழிந்தார்கள்
மதுர இராமாயண கதை உரைசெய்த
வானமீகி பகவனும் ஒப்பல்ல
விதிவழி பாரதம் உரைசெய்து
கரைசெய்த வேத வியாதனும் ஒப்பல்ல
சிதைவற ஆயிரம் நாவுடன்
அறிவுள சேட விசேடனும் ஒப்பல்ல
பொதியமலை குறுமுனிவனும்
ஒப்பல புகழ்புனை குன்றை முனிக்கு என்பார்
மெய்யுள சிவசாதனமும் வெளிப்பட
வெண்ணீறெழுதிய கண்ணேறும்
கையு திகழ்மணிகண்டமும்
ஒளிதரு கவளிகையும் புத்தகஏடும்
நையு திருவுளமழியுந்தொறும்
அரகர வெனு நாமமும் நாமெல்லாம்
உய்யும்படியருள் கருணையும்
அழகிதென தொழு தனருலகவரெல்லாம்
பூவை மற்ந்தனள் வெண்டாமரை
மயில் புகல்தரு சங்கப்புலவோர் சொல்
பாவை மறந்தனள் தேச சுபாடித
பயனை மறந்தனள் பதுமத்தோன்
நாவை மறந்தனள் பொதியமலைத்தலை
நண்ணிய புண்ணிய முனிவனெனும்
கோவை மறந்தனள் சேவையர்
காவலனார் திருநாவிற் குடிகொண்டாள்
இப்படி தன்னில்
இம்பரும் உம்பரும் ஏனோரும்
அப்படி சூழ அரத்திரு
வீதிவலஞ்செய் தணை தம்பலமுன்றில்
தப்பற யானையினின்றும்
இழிந்தரசனும் உரைசெறி சேவையர் கோவும்
முப்புரிநூல் மறையோ டணை
தெழுதிய முறையை திருமுன் வைத்தார்
அண்டவாணர் எதிர் தெண்டனாக
அனைவரும் விழுந்து பின்எழுந்துசீர்
கொண்ட சேவைகுல திலகரு
கனைவருங் குறித்தெதிர் கொடுத்த பேர்
தொண்டர்சீர் பரவுவார் எனப்பெயர்
சுமத்தி ஞானமுடி சூட்டிமுன்
மண்டபத்தினி லிருத்தி மற்றவரை
வளவர் பூபதி வணங்கினான்
மூவரோது திருமறைகளேழு
திருவாதவூரர் முறைஒன்றிசை
பாவரைந்த முறைஒன்று மூலர்
மறைஒன்று பாசுரமாதியா
கோவைசெய்த முறைஒன்று
சேவையர் குலாதி நீதிமறை ஒன்றுடன்
பாவைபாகர் திருவருள் சிறந்தமுறை
பன்னிரண்டென வகுத்தபின்
தோடுசெய்த திருநெறிய செந்தமிழோ
டொக்கும் என்றுரை தொடர்ந்து செ
பேடுசெய்து நடராசர் சன்னிதியில்
ஏற்றினார்க ளிதுபாலிசூழ்
நாடுசெய்த தவநீடு குன்றைவள
நகரிசெய்தவ நிகரிலா
பீடுசெய்த பகிரதி குலத்திலகர்
சேக்கிழார் செய்த பெருந்தவம்
ஆயவேலை அனபாயன் இந்நிலைமை
யாதலால் அனுசர் பாலறா
வாயர் எங்குளர் எனப்பணி
திருமருங்கு நின்றவர் விளம்புவார்
தூய குன்றைநகர்மீது தம்பெயர்
துலங்க ஓர்குளம் அமைத்தபின்
யநாகை யரனார் திருப்பணி
இயற்றி அவ்விடை இருந்தனர்
என்று சொல்ல அவர்தமை
யழைத்தரசன் இவரமைச்சரிவர் பட்டமும்
மன்றல் மாலைபுனை தொண்டைமான்
என வகுத்த பின் தமது மண்டலம்
அன்று வற்பம்வர வந்தடைந்தவரை
ஆற்றல்செய்து தொண்டைமண்டல
நின்றுகாத்த பெருமான் என
தமது பெயரை எங்கும் நிறுத்தினார்
தொண்டர்சீர்பரவு சேக்கிழார்
குரிசில் தூய தில்லைநகர் தன்னிலே
பண்டு மூவர் பதிகத்துவந்த
அறுபத்து மூவர்கதை தனையுணர்ந்து
அண்டவாணர் அடியார்கள் தம்முடன்
அருந்தவந்தனில் இருந்துபின்
இண்டை வைத்தசடை
அம்பலத்தவர் எடுத்தபாதநிழல் எய்தினார்
வாழி தில்லை மணிமன்று
ளென்றும் நடமாடும் அங்கணர் மலர்ப்பதம்
வாழி காழிநகர் வாழவந்த
திருநெறிய ராதிபதி வளாளல்தாள்
வாழி அன்பர் திரு நீறுமிட்ட
திருமுண்ட முந்துவய கவசமும்
வாழி குன்றைமுனிசேவையாதிபதி
வாய்மலர்ந்தருள் புரானமே
தேசிலங்கு முகில் குன்றையாதிபதி
தொண்டர்சீர்பரவு சேக்கிழார்
வாசல் அன்றுமுதல் இன்று காறும்
இனிமேலும் வாழையடி வாழையாய்
வீசுதென்றல் மணிமண்டபத்தரசு
வீற்றிருக்கு முடிமன்னருக்கு
ஈசனன்பர்கள் புராணமுஞ்சொலி
அமைச்சுமாகி நலமெய்துமால்
அண்டவாணர் தொழு தில்லை
அம்பலவர் அடியெடுத்து உலகெலாம் என
தொண்டர்சீர்பரவு சேக்கிழான்
வரிசைதுன்று குன்றைநகராதிபன்
தண்டகாதிபதி திருநெறி
தலைமை தங்கு செங்கைமுகில் பைங்கழல்
புண்டரீகமலர் தெண்டனிட்டு
வினைபோக்குவார் பிறவி நீக்குவார்
பாபேபாடபேதம்

ஆக திருவிருத்தம்
சிறப்பு பாயிரம்
திருக்கிளருங் கயிலைமலை காவல்
பூண்ட செல்வமலி திருநந்தி மரபில்வந்து
கருக்குழியில் எமைவீழா தெடத்தா
கொளுங் கருணைமிகு மெய்கண்டதேவர் தூய
மருக்கிளர்தாள் பரவும் அருள்நந்திதேவர்
மகிழும் மறைஞான தேவருக்கன்பாகி
இருக்கும் உமாபதிதேவர் சேக்கிழார்தம்
இசைபுராணம் உரைத்தார் என்ப மாதோ
இச்சிறப்பு பாயிரம் சிலப்பிரதிகளிலில்லை





சேக்கிழார் அருளிய
திருத்தொண்டர் புராணம்
என்ற பெரிய புராணம் முதற் காண்டம்
சருக்கம் மும்மையால் உலகாண்ட
சருக்கம் திருநின்ற




































சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணம்
என்ற பெரிய புராணம் முதற் காண்டம்
மும்மையால் உலகாண்ட சருக்கம்
மூர்த்தி நாயனார் புராணம் மின்பதிப்பு
முருக நாயனார் புராணம் மின்பதிப்பு
உருத்திர பசுபதி நாயனார் புராணம் மின்பதிப்பு
திரு நாளை போவர் நாயனார் புராணம் மின்பதிப்பு
திரு குறிப்பு தொண்ட நாயனார் புராணம் மின்பதிப்பு

சண்டேசுர நாயனார் புராணம் மின்பதிப்பு
திருநின்ற சருக்கம்
திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் மின்பதிப்பு
குலச்சிறை நாயனார் புராணம் மின்பதிப்பு
பெரு மிழலை குறும்ப நாயனார் புராணம் மின்பதிப்பு
காரைக்கால் அம்மையார் புராணம் மின்பதிப்பு
அப்பூதி அடிகள் நாயனார் புராணம் மின்பதிப்பு
திரு நீல நக்க நாயனார் புராணம் மின்பதிப்பு
நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் மின்பதிப்பு

திருச்சிற்றம்பலம்
மூர்த்தி நாயனார் புராணம்
திருச்சிற்றம்பலம்
சீர் மன்னு செல்வக்குடி மல்கு சிறப்பின் ஓங்கும்
கார் மன்னு சென்னி கதிர் மாமணி மாட வைப்பு
நார் மன்னு சிந்தை பல நற்றுறை மாந்தர் போற்றும்
பார் மன்னு தொன்மை புகழ் பூண்டது பாண்டி நாடு
சாயுந்தளிர் வல்லி மருங்குல் நெடு தடங்கண்
வேயும் படு தோளியர் பண்படும் இன்சொல் செய்ய
வாயும் படும் நீள் கரை மண் பொருந்தண் பொருந்தம்
பாயுங் கடலும் படும் நீர்மை பணித்த முத்தம்
மொய்வைத்த வண்டின் செறிகுழல் முரன்ற சந்தின்
மை வைத்த சோலை மலயந்தர வந்த மந்த
மெய் வைத்த காலு தரும் ஞாலம் அளந்த மேன்மை
தெய்வ தமிழும் தரும் செவ்வி மணஞ்செயீரம்
சூழும்஢தழ பங்கயமாக தோட்டின் மேலாள்
தாழ்வு இன்றி என்றும் தனி வாழ்வது தையல் ஒப்பார்
யாழின் மொழியில் குழல் இன்னிசையும் சுரும்பும்
வாழும் நகரம் மதுராபுரி என்பது ஆகும்
சால்பாய மும்மை தமிழ் தங்கிய அங்கண் மூதூர்
நூல் பாய் இடத்தும் உள நோன்றலை மேதி பா
பால் பாய் முலை தோய் மது பங்கயம் பாய எங்கும்
சேல் பாய் தடத்தும் உள செய்யுள் மிக்கேறு சங்கம்
மந்தா நிலம் வந்து அசை பந்தரின் மாடம் முன்றில்
பந்தாடிய மங்கையர் பங்க செங்கை தாங்கும்
சந்தார் முலை மேலன தாழ் குழை வாள் முகப்பொற்
செந்தாமரை மேலன நித்திலஞ் சேர்ந்த கோவை
மும்மை புவனங்களின் மிக்கது அன்றே அம் மூதூர்
மெய்ய்ம்மை பொருளா தமிழ் நூலின் விளங்கு வாய்மை
செம்மை பொருளு தருவார் திருஆலவாயில்
எம்மை பவ தீர்ப்பவர் சங்கம் இருந்தது என்றால்
பொற் பதிவாழ் வணி குலத்து ஆன்ற தொன்மை
செப்ப தகு சீர குடி செய்தவஞ் செய்ய வந்தார்
எப்பற்றினையும் அறுத்து ஏறுகைத்து ஏறுவார் தாள்
மெ பற்று என பற்றி விடாத விருப்பின் மிக்கார்
நாளும் பெருங் காதல் நயப்புறும் வேட்கை யாலே
கேளும் துணையும் முதல் கேடில் பதங்கள் எல்லாம்
ஆளும் பெருமான் அடி தாமரை அல்லது இல்லார்
மூளும் பெருக்கு அன்பு எனும் மூர்த்தியார் மூர்த்தியார்தாம்
அந்தி பிறை செஞ்சடை மேல் அணி ஆலவாயில்
எந்தைக்கு அணி சந்தன காப்பிட என்றும் முட்டா
அந்த செயலின் நிலை நின்று அடியார் உவப்ப
சிந்தைக்கு இனிதாய திருப்பணி செய்யும் நாளில்
கான கடி சூழ் வடு கரு நாடர் காவல்
மான படை மன்னன் வலிந்து நிலம் கொள்வானாய்
யானை குதிரை கருவி படை வீரர் திண்டேர்
சேனை கடலுங் கொடு தென் திசை நோக்கி வந்தான்
வந்துற்ற பெரும் படை மண் புதை பரப்பி
சந்த பொதியில் தமிழ் நாடு உடை மன்னன் வீரம்
சிந்த செரு வென்று தன் ஆணை செலுத்தும் ஆற்றால்
கந்த பொழில் சூழ் மதுரா புரி காவல் கொண்டான்
வல்லாண்மையின் வண் தமிழ் நாடு வளம் படுத்தி
நில்லா நிலை ஒன்றிய இன்மையின் நீண்ட மேரு
வில்லான் அடிமை திறம் மேவிய நீற்றின் சார்பு
செல்லாதரு கந்தர் திறத்தினில் சிந்தை தாழ்ந்தான்
தாழும் சமண் கையர் தவத்தை மெய் என்று சார்ந்து
வீழும் கொடியோன் அது அன்றியும் வெய்ய முன்னை
சூழும் வினையால் அரவம் சுடர திங்களோடும்
வாழும் சடையான் அடியாரையும் வன்மை செய்வான்
செக்கர சடையார் விடையார் திரு ஆல வாயுள்
முக்க பரனார் திரு தொண்டரை மூர்த்தியாரை
மைக்கற்புரை நெஞ்சுடை வஞ்சகன் வெஞ்ச மண் போர்
எக்கர்க்குடனாக இகழ்தன செய்ய எண்ணி
அந்தம் இலவாம் இறை செய்யவும் அன்பனார் தாம்
முந்தை தம் முறைமை பணி முட்டலர் செய்து வந்தார்
தம் பெருமைக்கு அளவாகிய சார்பில்
எம் தம் பெரு மக்களை யாவர் தடுக்க வல்லார்
எள்ளும் செயல் வன்மைகள் எல்லை இல்லாத செ
தள்ளுஞ் செயல் இல்லார் சந்தன காப்பு தேடி
கொள்ளு துறையும் அடைத்தான் கொடும் கோன்மை செய்வான்
தெள்ளும் புனல் வேணியர்க்கு அன்பரும் சிந்தை நொந்து
புன்மை செயல்வல் அமண்குண்டரிற் போது போக்கும்
வன்மை கொடும் பாதகன் மாய்திட வாய்மை வேத
நன்மை திரு நீற்று உயர் நன்னெறி தாங்கு மேன்மை
தன்மை புவி மன்னரை சார்வதென்று என்று சார்வார்
காய்வுற்ற செற்றங் கொடு கண்டகன் காப்பவும் சென்று
ஆய்வுற்ற கொட்பில் பகல் எல்லை அடங்க நாடி
ஏய்வுற்ற நற்சந்தனம் எங்கும் பெறாது சிந்தை
சாய் உற்றிட வந்தனர் தம்பிரான் கோயில் தன்னில்
நட்டம் புரிவார் அணி நற்றிரு மெ பூச்சு இன்று
முட்டும் பரிசு ஆயினும் தேய்க்கும் கைமுட்டாது என்று
வட்டம் திகழ் பாறையின் வைத்து முழங்கை தேய்த்தார்
கட்டும் புறந்தோல் நரம்பு என்பு கரைந்து தேய
கல்லின் புற தேய்ந்த முழங்கை கலுழ்ந்து சோரி
செல்லும் பரப்பு எங்கணும் என்பு திறந்து முளை
புல்லும்படி கண்டு பொறுத்திலர் தம்பிரான் ஆனார்
அல்லின் கண் எழுந்தது உவந்து அருள் செய்த வாக்கு
அன்பின் துணிவால் இது செய்திடல் ஐய உன்பால்
வன் புன்கண் விளைத்தவன் கொண்ட மண் எல்லாம் கொண்டு
முன் பின்னல் புகுந்தன முற்றவும் நீத்து காத்து
பின்பு உன் பணி செய்து நம் பேர் உலகு எய்துக என்ன
இவ் வண்ணம் எழுந்தது கேட்டு எழுந்து அஞ்சி முன்பு
செய் வண்ணம் ஒழிந்திட தேய்ந்த புண் ஊறு தீர்ந்து
கை வண்ணம் நிரம்பின வாசம் எல்லாம் கலந்து
மொய் வண்ண விளங்கு ஒளி எய்தினர் மூர்த்தியார் தாம்
நாள் இரவின் கண் அமண் புகல் சார்ந்து வாழும்
மன் ஆகிய போர் வடு கருநாடர் மன்னன்
தன்னாளும் முடிந்தது சங்கரன் சார்பு இலோர்க்கு
மின்னாம் என நீடிய மெ நிலையாமை வெல்ல
இவ்வாறு உலகத்தின் இறப்ப உயர்ந்த நல்லோர்
மெய் வாழ் உலகத்து விரைந்து அணைவார்களே போல்
அவ்வாறு அரனார் அடியாரை அலைத்த தீயோன்
வெவ்வாய் நிரயத்து இடை விரைந்து வீந்தான்
முழுதும் பழுதே புரி மூர்க்கன் உலந்த போதின்
எழுதும் கொடி போல்பவர் உட்பட ஏங்கு சுற்றம்
முழுதும் புலர்வுற்றது மற்று அவன் அன்ன மாலை
பொழுதும் புலர்வுற்றது செங்கதிர் மீது மோத
அவ் வேலையில் அங்கண் அமைச்சர்கள் கூடி தங்கள்
கை வேறு கொள் ஈம அருங்கடன் காலை முற்றி
வை வேலவன் தன் குல மைந்தரும் இன்மை யாலே
செய் வேறு வினை திறம் சிந்தனை செய்து தேர்வார்
தாழும் செயலின்று ஒரு மன்னவன் தாங்க வேண்டும்
கூழும் குடியும் முதலாயின கொள்கைத்தேனும்
சூழும் படை மன்னவன் தோள் இணை காவல் இன்றி
வாழும் தகைத்து அன்றி இந்த வையகம் என்று சொன்னார்
பல் முறை உயிர்கள் எல்லாம் பாலித்து ஞாலம் காப்பான்
தன் நெடும் குடை கீழ தம் நெறிகளில் சரிந்து
மன்னரை இன்றி வைகும் மண்ணுலகு எண்ணுங் காலை
இன்னுயிர் இன்றி வாழும் யாக்கையை ஒக்கும் என்பார்
இவ் வகை பலவும் எண்ணி இங்கு இனி அரசர் இல்லை
செய்வகை இதுவே என்று தெளிபவர் சிறப்பின் மிக்க
மை வரை அனைய வேழம் கண் கட்டி விட்டால் மற்ற
கை வரை கை கொண்டார் மண் காவல் கொள்வார்
செம் மாண் வினை அர்ச்சனை நூல் முறை செய்து தோளால்
இம் மாநிலம் ஏந்த ஓர் ஏந்தலை ஏந்துக என்று
பெய்ம் மா முகில் போல் மதம் பாய் பெருகோடை நெற்றி
கைம்மாவை நறு துகில் கொண்டு கண் கட்டி விட்டார்
கண் கட்டி விடுங்களி யானை காவல் மூதூர்
மண் கொள் புற வீதி மருங்கு திரிந்து போகி
திண் பொன் தட மாமதில் சூழ் திரு ஆல வாயின்
விண் பிற்பட ஓங்கிய கோபுரம் முன்பு மேவி
நீங்கும் இரவின் கண் நிகழ்ந்தது கண்ட தொண்டர்
ஈங்கு எம் பெருமான் அருளாம் எனில் இந்த வையம்
தாங்கும் செயல் பூண்பன் என்று உள்ளம் தளர்வு நீங்கி
பூங்கொன்றை மிலைந்தவர் கோயில் புறத்து நிற்ப
வேழத்து அரசு அங்கண் விரைந்து நடந்து சென்று
வாழ்வுற்று உலகம் செய்தவத்தினின் வள்ளலாரை
சூழ் பொற் சுடர் மாமணி மாநிலம் தோய முன்பு
தாழ்வுற்று எடுத்து பிடர் மீது தரித்தது அன்றே
மாதங்கம் எருத்தினில் வைத்தவர் தம்மை காணா
ஏதங்கெட எண்ணிய திண்மை அமைச்சர் எல்லாம்
பாதங்களின் மீது பணிந்து எழுந்தார்கள் அப்போது
ஓதங்கிளர் வேலையை ஒத்து ஒலி மிக்கது அவ்வூர்
சங்கங்கள் முரன்றன தாரைகள் பேரி யோடும்
எங்கு எங்கும் இயம்பின பல்லியம் எல்லையில்ல
அங்கு மலிந்தன வாழ்த்தொலி அம்பொற்
பங்கன் அருளால் உலகு ஆள்பவர் பாங்கர் எங்கும்
வெங்க களிற்றின் மிசை நின்றும் இழிச்சி வேரித்து
தொங்கல் சுடர் மாலைகள் சூழ் முடி சூடு சாலை
அங்கண் கொடு புக்கரி ஆசனத்து ஏற்றி ஒற்றை
திங்கட்குடை கீழ் உரிமை செயல் சூழ்ந்து செய்வார்
மன்னு திசை வேதியில் மங்கல ஆகுதி கண்
துன்னுஞ் சுடர் வன்னி வளர்த்து துதைந்த நூல் சூழ்
பொன்னின் கலசங்கள் குடங்கள் பூரித்த தூ நீர்
உன்னுஞ் செயல் மந்திர யோகர் நிறுத்தினார்கள்
வந்துற்றெழு மங்கல மாந்தர்கள் தம்மை நோக்கி
சிந்தை சிவமே தெளியும் திரு மூர்த்தியார் தாம்
முந்தை செயலாம் அமண் போய் முதல் சைவம் ஓங்கில்
இந்த புவி தாங்கி இவ் வின்னரசு ஆள்வான் என்றார்
அவ்வாறு மொழிந்தது கேட்ட அமைச்சரோடு
மெய் வாழ் தரு நூல் அறிவின் மிகு மாந்தர் தாமும்
எவ்வாறு அருள் செய்தனை மற்று அவை அன்றி யாவர்
செய்வார் பெரியோய் என சேவடி தாழ்ந்து செப்ப
வையம் முறை செய்வென் ஆகில் வயங்கு நீறே
செய்யும் அபிடேகமும் ஆக செழுங்கலன்கள்
ஐயன் அடையாளமும் ஆக அணிந்து தாங்கும்
மொய் புன் சடைமாமுடியே முடி ஆவது என்றார்
என்று இவ்வுரை கேட்டலும் எல்லையில் கல்வி யோரும்
வன் திண் மதி நூல் வளர் வாய்மை அமைச்சர் தாமும்
நன்றிங்கு அருள் தான் என நற்தவ வேந்தர் சிந்தை
ஒன்றும் அரசாள் உரிமை செயலான உய்த்தார்
மாடு எங்கும் நெருங்கிய மங்கல ஓசை மல்க
சூடும் சடை மௌலி அணிந்தவர் தொல்லை ஏனம்
தேடுங் கழலார் திருஆல வாய் சென்று தாழ்ந்து
நீடுங்களிற்றின் மிசை நீள் மறுகூடு போந்தார்
மின்னும் மணி மாளிகை வாயிலின் வேழ மீது
தன்னின்றும் இழிந்து தயங்கு ஒளி மண்டபத்தில்
பொன்னின் அரி மெல்லணை சாமரை காமர் பூங்கால்
மன்னும் குடை நீழல் இருந்தனர் வையம் தாங்கி
குலவு துறை நீதி அமைச்சர் குறிப்பின் வை
கலகம் செய் அமண்செயல் ஆயின கட்டு நீங்கி
நிலவும் திரு நீற்று நெறி துறை நீடு வாழ
உலகெங்கும் நிரம்பிய சைவம் உயர்ந்து மன்ன
நுதலின் கண் விழித்தவர் வாய்மை நுணங்கு நூலின்
பதம் எங்கும் நிறைந்து விளங்க பவங்கள் மாற
உதவும் திருநீறு உயர் கண்டிகை கொண்ட வேணி
முதன் மும்மையினால் உலகு ஆண்டனர் மூர்த்தியார் தாம்
ஏலம் கமழ் கோதையர் தம் திறம் என்றும் நீங்கும்
சீலங்கொடு வெம் புலன் தெவ்வுடன் வென்று நீக்கி
ஞால தனி நேமி நடாத்தி நலம் கொள் ஊழி
காலம் உயிர்கட்கு இடர் ஆன கடிந்து காத்து
பாதம் பர மன்னவர் சூழ்ந்து பணிந்து போற்ற
ஏதம் பிணியா வகை இவ் உலகு ஆண்டு தொண்டின்
பேதம் புரியா அருள் பேர் அரசாள பெற்று
நாதன் கழல் சேவடி நண்ணினர் அண்ணலாரே
அகல் பாறையின் வைத்து முழங் கையை அன்று தேய்த்த
இகலார் களிற்று அன்பரை ஏத்தி முருகனாராம்
முகில் சூழ் நறுஞ் சோலையின் மொய் ஒளி மாட வீதி
புகலூர் வரும் அந்தணர் தம் திறம் போற்றல் உற்றாம்
திருச்சிற்றம்பலம்

முருக நாயனார் புராணம்
திருச்சிற்றம்பலம்
தாது சூழும் குழல் மலையாள் தளிக்கை
மீது சூழும் புனல் கற்றை வேணி நம்பர் விரும்பு பதி
சோதி சூழும் மணி மௌலி சோழர் பொன்னி திரு நாட்டு
போது சூழும் தடஞ்சோலை பொய்கை பூம்
நாம மூதூர் மற்றதனுள் நல்லோர் மனம் போல் அரவு அணிந்த
சேம நிலவு திரு நீற்றின் சிறந்த வெண்மை திருந்தொளியால்
யாம இருளும் வெளி ஆக்கும் இரவே அல்ல விரை மலர் மேல்
காமர் மதுவுண் சிறை வண்டும் களங்கம் இன்றி விளங்குமால்
நண்ணும் இசை தேர் மது கரங்கள் நனை மென் சினையின் மருங்கலைய
வண்ண மதுர தேன் பொழிவ வாச மலர் வாயே அல்ல
தண்ணென் சோலை எம் மருங்கும் சாரும் மடமென் சாரிகையின்
பண்ணின் கிளவி மணிவாயும் பதிக செழு தேன் பொழியுமால்
வண்டு பாட புனல் தடத்து மலர்ந்து கண்ணீர் அரும்புவன
கொண்ட வாச முகை அவிழ்ந்த குளிர் பங்கயங்களே அல்ல
அண்டர் பெருமான் திரு பாட்டின் அமுதம் பெருக செவி மடுக்கும்
தொண்டர் வதன பங்கயமும் துளித்த கண்ணீர் அரும்புமால்
ஆன பெருமை வளஞ்சிறந்த அந்தண் புகலூர் அது தன்னில்
மான மறையோர் குல மரபின் வந்தார் முந்தை முதல்வர்
ஞான வரம்பின் தலை நின்றார் நாகம் புளை வார் சேவடி கீழ்
ஊனம் இன்றி நிறை அன்பால் உருகு மனத்தார் முருகனார்
அடை மேல் அலவன் துயில் உணர அலர் செங் கமல வயல் கயல்கள்
மடை மேல் உகளும் திருப்புகலூர் மன்னி வாழு தன்மையராய்
விடை மேல் வருவார்க்கு ஆளான மெய்ம்மை தவத்தால் அவர் கற்றை
சடை மேல் அணி திரு பள்ளி தாமம் பறித்து சாத்துவார்
புலரும் பொழுதின் முன் எழுந்து புனித நீரில் மூழ்கி போய்
மலரும் செவ்வி தம் பெருமான் முடிமேல் வான் நீர் ஆறுமதி
உலவும் மருங்கு முருகு உயிர்க்க நகைக்கும் பதத்தின் உடன் பறித்த
அலகில் மலர்கள் வெவ் வேறு திருப்பூம் கூடைகளில் அமைப்பார்
கோட்டு மலரும் நில நீர்
தோட்டு மலரும் மா சுருதி மலரு
காட்டு முறுவல் நிலவு அலர கனக வரையிற் பன்னக நாண்
பூட்டும் ஒருவர் திரு முடி மேல் புனையலாகும் மலர் தெரிந்து
கொண்டு வந்து தனி இடத்தில் இருந்து கோக்கும் கோவைகளும்
இண்டை சுருக்கும் தாமம் உடன் இணைக்கும் வாச மாலைகளும்
தண்டில் கட்டும் கண்ணிகளும் தாளில் பிணைக்கும் பிணையல்களும்
நுண்டாது இறைக்கும் தொடையல்களும் சமைத்து நுடங்கு நூன்மார்பர்
ஆங்க பணிகள் ஆனவற்றுக்கு அமைத்த காலங்களின் அமைத்து
தாங்கி கொடு சென்று அன்பினொடும் சாத்தி வாய்ந்த அர்ச்சனைகள்
பாங்கில் புரிந்து பரிந்துள்ளார் பரமர் பதிக பற்றான
ஓங்கி சிறந்த அஞ்செழுத்தும் ஓவா நாவின் உணர்வினார்
தள்ளும் முறைமை ஒழிந்திட தகுதி ஒழுகும் மறையவர் தாம்
தெள்ளு மறைகள் முதலான ஞானம் செம் பொன் வள்ளத்தில்
அள்ளி அகிலம் ஈன்று அளித்த அம்மை முலைப்பால் உடன் உண்ட
பிள்ளையார்க்கு நண்பரும் ஆம் பெருமை உடையார் ஆயினார்
அன்ன வடிவும் ஏனமுமாய் அறிவார் இருவர் அறியாமல்
மன்னும் புகலூர் உறைவாரை வர்த்த மான வீச்சுரத்து
நன்னர் மகிழ்ச்சி மனம் கொள்ள நாளும் பூசை வழுவாமே
பன்னும் பெருமை அஞ்செழுத்தும் பயின்றே பணிந்து பரவினார்
அங்கண் அமரு திருமுருகர் அழகார் புகலி பிள்ளையார்
பொங்கு மணத்தின் முன் செய்த பூசை அதனால் புக்கருளி
செங்கண் அடலேறு உடையவர் தாஞ்சிறந்த அருளின் பொருள் அளிக்க
தங்கள் பெருமான் அடி நீழல் தலையாம் நிலைமை சார்வு உற்றார்
அரவம் அணிந்த அரையாரை அருச்சித்து அவர் தம் கழல் நிழல் கீழ்
விரவு புகலூர் முருகனார் மெய்மை தொண்டின் திறம் போற்றி
கரவில் அவர் பால் வருவாரை கருத்தில் உருத்திரம் கொண்டு
பரவும் அன்பர் பசுபதியார் பணிந்த பெருமை பகர் உற்றேன்
திருச்சிற்றம்பலம்

உருத்திர பசுபதி நாயனார் புராணம்
திருச்சிற்றம்பலம்
நிலத்தின் ஓங்கிய நிவந்தெழும் பெரும் புனல் நீத்தம்
மலர தடம் பணை வயல் புகு பொன்னி நன்னாட்டு
குலத்தின் ஓங்கிய குறைவு இலா நிறை குடி குழுமி
தலத்தின் மேம் படு நலத்தது பெரு திரு தலையூர்
வான் அளிப்பன மறையவர் வேள்வியின் வளர் தீ
தேன் அளிப்பன நறுமலர் செறி செழுஞ் சோலை
ஆன் அளிப்பன அம் சுகந்து ஆடுவார்க்கு அவ்வூர்
தான் அளிப்பன தருமமும் நீதியுஞ் சால்பும்
அங்கண் மா நகர் அதன் இடை அருமறை வாய்மை
துங்க வேதியர் குலத்தினில் தோன்றிய தூயோர்
செங்கண் மால் விடையார் செழும் பொன் மலை வல்லி
பங்கனார் அடிமை திறம் புரி பசுபதியார்
ஆய அந்தணர் அருமறை உருத்திரம் கொண்டு
மாயனார் அறியா மலர சேவடி வழுத்தும்
தூய அன்பொடு தொடர்பினில் இடையறா சுருதி
நேய நெஞ்சினர் ஆகி தொழில் தலை நின்றார்
கரையில் கம்பலை புள் ஒலி கறங்கிட மருங்கு
பிரச மென் சுரும்பு அறைந்திட கரு வரால் பிறழும்
நிரை நெடுங் கயல் நீரிடை நெருப்பு எழுந்தது அனைய
விரை நெகிழ்ந்த செங் கமலம் என் பொய்கையுள் மேவி
தெள்ளு தண் புனல் கழுத்தளவு ஆயிடை செறிய
உள்ளுற புக்கு நின்று கை உச்சி மேல் குவித்து
தள்ளு வெண்டிரை கங்கை நீர் ததும்பிய சடையார்
கொள்ளும் அன்பினில் உருத்திரம் குறிப்பொடு பயின்றார்
அரு மறை பயன் ஆகிய உருத்திரம் அதனை
வரு முறை பெரும் பகலும் எல்லியும் வழுவாமே
திருமலர பொருட்டு இருந்தவன் அனையவர் சில நாள்
ஒருமை உய்ந்திட உமை இடம் மகிழ்ந்தவர் உவந்தார்
காதல் அன்பர் தம் அரும் தவ பெருமையும் கலந்த
வேத மந்திர நியதியின் மிகுதியும் விரும்பி
ஆதி நாயகர் அமர்ந்து அருள் செய்ய மற்றவர் தாம்
தீது இலா நிலை சிவபுரி எல்லையில் சேர்ந்தார்
நீடும் அன்பினில் உருத்திரம் ஓதிய நிலையால்
ஆடு சேவடி அருகுற அணைந்தனர் அவர்க்கு
பாடு பெற்ற சீர் உருத்திர பசுபதியாராம்
கூடு நாமமும் நிகழ்ந்தது குவலயம் போற்ற
அயில் கொள் முக்குடுமி படையார் மருங்கு அருளால்
பயில் உருத்திர பசுபதியார் திறம் பரசி
எயில் உடை தில்லை எல்லையில் நாளை போவாராம்
செயலுடைப்புற திருத்தொண்டர் திறத்தினை மொழிவாம்
திருச்சிற்றம்பலம்

திரு நாளை போவர் நாயனார் புராணம்
திருச்சிற்றம்பலம்
பகர்ந்துலகு சீர் போற்றும் பழை வளம் பதியாகும்
திகழ்ந்த புனற் கொள்ளிடம் பொன் செழுமணிகள் திரை கரத்தால்
முகந்து தர இரு மருங்கும் முளரி மலர கையேற்கும்
அகல் பணை நீர் நன்னாட்டு மேற்காநாட்டு ஆதனூர்
நீற்றலர் பேர் ஒளி நெருங்கும் அப்பதியின் நிறை கரும்பின்
சாற்று அலைவன் குலை வயலில் தகட்டு வரால் எழ பகட்டேர்
ஆற்றலவன் கொழு கிழித்த சால் வழி போய் அசைந்து ஏறி
சேற்றலவன் கரு உயிர்க்க முருகுயிர்க்கும் செழுங் கமலம்
நனை மருவுஞ் சினை பொதுளி நறு விரை சூழ் செறி தளிரில்
தினகர மண்டலம் வருடுஞ் செழு தருவின் குலம் பெருகி
கனமருவி அசைந்து அலை களி வண்டு புடை சூழ
புனல் மழையோ மதுமழையோ பொழிவு ஒழியா பூஞ்சோலை
பாளை விரி மணங் கமழும் பைங்காய் வன் குலைத்தெங்கின்
தாளதிர மிசை முட்டி தடம் கிடங்கின் எழப்பாய்ந்த
வாளை புதை சொரிந்த பழமிதப்ப வண் பலவின்
நீளமுதிர் கனி கிழி தேன் நீத்தத்தில் எழுந்துகளும்
வயல் வளமும் செயல் படு பை துடவையிடை வருவளமும்
வியலிடம் எங்கணும் நிறைய மிக்க பெரும் திருவினாம்
புயலடையும் மாடங்கள் பொலிவு எய்த மலியுடைத்தாய்
அயலிடை வேறு அடி நெருங குடி நெருங்கி உளது அவ்வூர்
மற்றவ்வூர் புறம் பணையின் வயல் மருங்கு பெரும் குலையில்
சுற்றம் விரும்பிய கிழமை தொழில் உழவர் கிளை துவன்றி
பற்றிய பைங் கொடி சுரை மேல் படர்ந்த பழம் கூரையுடை
புற்குரம்பை சிற்றில் பல நிறைந்து உளதோர் புலைப்பாடி
கூருகிர் மெல்லடி அலகின் குறும் பார்ப்பு குழு சுழலும்
வார் பயில் முன்றிலில் நின்ற வள்ளுகிர் நாய் துள்ளு பறழ்
கார் இரும்பின் சரி செறிகை கரும் சிறார் கவர்ந்து ஓட
ஆர் சிறு மென் குரைப்படக்கும் அரைக்கு அசைத்த இருப்பு மணி
வன் சிறு தோல்மிசை உழத்தி மகவு உறக்கும் நிழல் மருதும்
தன் சினை மென் பெடையொடுங்கு தடங்குழிசி புதை நீழல்
மென் சினைய வஞ்சிகளும் விசி பறை தூங்கின மாவும்
புன்றலை நா புனிற்று முழை புடைத்து எங்கும் உடைத்து
செறிவலி திண் கடைஞர் வினை செயல்புரிவை கறை யா
குறி அளக்க உளைக்கும் செங் குடுமி வாரண சேக்கை
வெறி மலர தண் சினை காஞ்சி விரி நீழல் மருங்கு எல்லாம்
நெறி குழல் புன் புலை மகளிர் நெற் குறு பாட்டு ஒலி பரக்கும்
புள்ளும் தண் புனல் கலிக்கும் பொய்கையுடை புடை எங்கும்
தள்ளும் தாள் நடை அசை தளை அவிழ் பூங்குவளை மது
விள்ளும் பைங் குழல் கதிர் நெல் மிலைச்சிய புன் புலைச்சியர்கள்
கள்ளுண்டு களி தூங கறங்கு பறையும் கலிக்கும்
இப்படித்து ஆகிய கடைஞர் இருப்பின் வரைப்பினின் வாழ்வார்
மெய்ப்பரிவு சிவன் கழற்கே விளைத்த உணர்வொடும் வந்தார்
அப்பதியில் ஊர் புலைமை ஆன்ற தொழில் தாயத்தார்
ஒப்பிலவர் நந்தனார் என ஒருவர் உளர் ஆனார்
பிறந்து உணர்வு தொடங்கிய பின் பிறை கண்ணி பெருந்தகைபால்
சிறந்த பெரும் காதலினால் செம்மை புரி சிந்தையராய்
மறந்தும் அயல் நினைவு இன்றி வரு பிறப்பின் வழி வந்த
அறம் புரி கொள்கையராயே அடித்தொண்டின் நெறி நின்றார்
ஊரில் விடும் பறை துடைவை உணவுரிமையாக்கொண்டு
சார்பில் வரும் தொழில் செய்வார் தலை நின்றார் தொண்டினால்
கூரிலைய மு குடுமி படை அண்ணல் கோயில் தொறும்
பேரிகை முதலாய மு கருவி பிறவினுக்கும்
போர்வை தோல் விசி வார் என்று இனையனவும் புகலும் இசை
நேர் வைத்த வீணைக்கும் யாழுக்கும் நிலை வகையில்
சேர்வுற்ற தந்திரியும் தேவர் பிரான் அர்ச்சனை கட்கு
ஆர்வத்தின் உடன் கோரோசனையும் இவை அளித்து உள்ளார்
இவ் வகையில் தந்தொழிலின் இயன்ற வெலாம் எவ்விடத்தும்
செய்வனவும் கோயில்களில் திரு வாயில் புறம் நின்று
மெய் விரவு பேரன்பு மிகுதியினால் ஆடுதலும்
அவ்வியல்பில் பாடுதலுமாய் நிகழ்வார் அந்நாளில்
திரு புன்கூர சிவலோகன் சேவடிகள் மிக நினைந்து
விருப்பினோடும் தம் பணிகள் வேண்டுவன செய்வதற்கே
அருத்தியினால் ஒருப்பட்டு அங்கு ஆதனூர் தனில் நின்றும்
வருத்தமுறுங் காதலினால் வந்து அவ்வூர் மருங்கணைந்தார்
சீர் ஏறும் இசை பாடி திரு தொண்டர் திரு வாயில்
நேரே கும்பிட வேண்டும் என நினைந்தார்க்கு அது நேர்வார்
கார் ஏறும் எயில் புன் கூர கண்ணுதலார் திரு முன்பு
போரேற்றை விலங்க அருள் புரிந்து அருளி புலப்படுத்தார்
சிவலோகம் உடையவர் தம் திரு வாயில் முன்னின்று
பவ லோகம் கடப்பவர் தம் பணிவிட்டு பணிந்து எழுந்து
சுவலோடுவார் அலை போவார் பின் பொரு சூழல்
அவலோடும் அடுத்தது கண்டு ஆதரித்து குளம் தொட்டார்
வடம் கொண்ட பொன் இதழி மணி முடியார் திரு அருளால்
தடம் கொண்ட குளத்து அளவு சமைத்து அதற்பின் தம் பெருமான்
இடம் கொண்ட கோயில் புறம் வலம் கொண்டு பணிந்து எழுந்து
நடம் கொண்டு விடை தம் பதியில்
தன்மை ஈசர் மகிழ் பதி பலவும் சென்று இறைஞ்சி
மெ திரு தொண்டு செய்து விரவுவார் மிக்கு எழுந்த
சித்தமொடு திரு தில்லை திரு மன்று சென்று இறைஞ்ச
உய்த்த பெருங் காதல் உணர்வு ஒழியாது வந்து உதிப்ப
அன்று இரவு கண் துயிலார் புலர்ந்து அதற்பின் அங்கு எய்த
ஒன்றியணை தரு தன்மை உறு குலத்தோடு இசைவு இல்லை
என்று இதுவும் எம்பெருமான் ஏவல் என போக்கு ஒழிவார்
நன்றுமெழுங் காதல் மிக நாளை போவேன் என்பார்
நாளை போவேன் என்று நாள்கள் செல தரியாது
பூளை பூவாம் பிறவி பிணிப்பு ஒழி போவாராய்
பாளை பூங்கமுகுடுத்த பழம் பதியின் நின்றும் போய்
வாளை போத்து எழும் பழனஞ் சூழ் தில்லை மருங்கணைவார்
செல்கின்ற போழ்து அந திரு எல்லை பணிந்து எழுந்து
பல்கும் செந்தீ வளர்த்த பயில் வேள்வி எழும் புகையும்
மல்கு பெரும் இடையோதும் மடங்கள் நெருங்கினவும் கண்டு
அல்கும் தம் குலம் நினைந்தே அஞ்சி அணைந்திலர் நின்றார்
நின்றவர் அங்கு எய்தற்கு அரிய பெருமையினை நினைப்பார் முன்
சென்று இவையும் கடந்து ஊர் சூழ் எயில் திருவாயிலை புக்கார்
குன்று அனைய மாளிகைகள் தொறும் குலவும் வேதிகைகள்
ஒன்றிய மூவாயிரம் அங்கு உள என்பார் ஆகுகள்
இப்பரிசாய் இருக்க எனக்கு எய்தல் அரிது என்று அஞ்சி
அப்பதியின் மதில் புறத்தின் ஆராத பெருங் காதல்
ஒப்ப அரிதாய் வளர்ந்து ஓங்க உள் உருகி கை தொழுதே
செப்ப அரிய திரு எல்லை வலங் கொண்டு செல்கின்றார்
இவ் வண்ணம் இரவு பகல் வலம் செய்து அங்கு எய்து அரிய
அவ் வண்ணம் நினைந்து அழிந்த அடி தொண்டர் அயர்வு எய்தி
மை வண்ணத்து திரு மிடற்றார் மன்றில் நடம் கும்பிடுவது
எவ் வண்ணம் என நினைந்தே ஏசறவினெடு துயில்வார்
இன்னல் தரும் இழி பிறவி இது தடை என்றே துயில்வார்
நிலைமை அம்பலத்துள் ஆடுவார் அறிந்து அருளி
மன்னு திரு தொண்டர் அவர் வருத்தம் எல்லாம் தீர்ப்பதற்கு
முன் அணைந்து கனவின் கண் முறுவலோடும் அருள் செய்வார்
பிறவி போய் நீங்க எரியினிடை நீ மூழ்கி
முப்புரி நூல் மார்பர் உடன் முன் அணைவாய் என்ன மொழிந்து
பரிசே தில்லை வாய் அந்தணர்க்கும் எரி அமைக்க
மெ பொருள் ஆனார் அருளி அம்பலத்தே மேவினார்
தம் பெருமான் பணி கேட்ட தவ மறையோர் எல்லாரும்
அம்பலவர் திருவாயின் முன்பு அச்சமுடன் ஈண்டி
எம்பெருமான் அருள் செய்த பணி செய்வோம் என்று ஏத்தி
தம் பரிவு பெருக வரும் திரு தொண்டர் பால் சார்ந்தார்
ஐயரே அம்பலவர் அருளால் பொழுது அணைந்தோம்
வெய்ய அழல் அமைத்து உமக்கு தர வேண்டி என விளம்ப
நையும் மன திரு தொண்டர் நான் உய்ந்தேன் என தொழுதார்
தெய்வ மறை முனிவர்களும் தீ அமைத்த படி மொழிந்தார்
மறையவர்கள் மொழிந்து அதன் பின் தென் திசையின் மதில் புறத்து
பிறை உரிஞ்சும் திருவாயில் முன்பாக பிஞ்ஞகர் தம்
நிறை அருளால் மறையவர்கள் நெருப்பு அமைத்த குழி எய்தி
இறையவர் தாள் மனம் கொண்டே எரி சூழ வலம் கொண்டார்
கை தொழுது நடமாடுங் கழலுன்னி அழல் புக்கார்
எய்திய பொழுதின் கண் எரியின்
பொய் தகையும் உருவொழித்து புண்ணிய மா முனி வடிவாய்
மெய் திகழ் வெண்ணூல் விளங்க வேணி முடி கொண்டு எழுந்தார்
செந்தீ மேல் எழும் பொழுது செம்மலர் வந்து
அந்தணன் போல் தோன்றினார் அந்தரத்து துந்துபி நாதம்
வந்து எழுந்தது இரு விசும்பில் வானவர்கள் மகிழ்ந்து ஆர்த்து
பைந்துணர் மந்தாரத்தின் பனி மலர்மாரிகள் பொழிந்தார்
திருவுடைய தில்லைவாழ் அந்தணர்கள் கை தொழுதார்
பரவரிய தொண்டர்களும் பணிந்து மனம் களி பயின்றார்
அருமறை சூழ் திரு மன்றில் ஆடுகின்ற கழல் வணங்க
வருகின்றார் திரு நாளை போவாராம் மறை முனிவர்
தில்லை வாழ் அந்தணரும் உடன் செல்ல சென்று எய்தி
ஒல்லை மான் மறி கரத்தார் கோபுரத்தை தொழுது இறைஞ்சி
ஒல்லை போய் உட்புகுந்தார் உலகு உய்ய நடம் ஆடும்
எல்லையினை தலைப்பட்டார் யாவர் களும் கண்டிலரால்
அந்தணர்கள் அதிசயத்தார் அருமுனிவர் துதி செய்தார்
வந்தணைந்த திரு தொண்டர் தம்மை வினை மாசு அறுத்து
சுந்தர தாமரை புரையும் துணை அடிகள் தொழுது இருக்க
அந்தம் இலா ஆனந்த பெரும் கூத்தர் அருள் புரிந்தார்
மாசு உடம்பு விட தீயின் மஞ்சனம் செய்து அருளி எழுந்து
ஆசில் மறை முனியாகி அம்பலவர் தாள் அடைந்தார்
தேசுடைய கழல் வாழ்த்தி திரு குறிப்பு தொண்டவிளை
பாசம் உற முயன்றவர்தம் திரு தொண்டின் பரிசு உரைப்பாம்
திருச்சிற்றம்பலம்

திரு குறிப்பு தொண்ட நாயனார் புராணம்
திருச்சிற்றம்பலம்
ஏயுமாறு பல் உயிர்களுக்கு எல்லையில் கருணை
தாய் ஆனாள் தனி ஆயின தலைவரை தழுவ
ஆயு நான்மறை போற்ற நின்று அரும் தவம் புரி
தூய மாதவம் செய்தது தொண்டை நல் நாடு
நன்மை நீடிய நடுநிலை ஒழுக்கத்து நயந்த
தன்மை மேவிய தலைமை சால் பெருங்குடி தழைப்ப
வன்மை ஓங்கு எயில் வளம் பதி பயின்றது வரம்பின்
தொன்மை மேன்மையில் நிகழ் பெரும் தொண்டை நல் நாடு
நற்றிறம்புரி பழையனூர சிறுத்தொண்டர் நவை வந்து
உற்ற போது தம் உயிரையும் வணிகனுக்கு ஒரு கால்
சொற்ற மெய்ம்மையும் தூக்கி சொல்லையே காக்க
பெற்ற மேன்மையில் நிகழ்ந்தது பெரும் தொண்டை நாடு
ஆணையாம் என நீறு கண்டு அடிச்சேரன் என்னும்
சேண் உலாவு சீர சேரனார் திருமலை நாட்டு
வாண் நிலாவு பூண் வயவர்கள் மைத்துன கேண்மை
பேண நீடிய முறையது பெரும் தொண்டை நாடு
கறை விளங்கிய கண்டர் பாற் காதல் செய் முறைமை
நிறை புரிந்திட நேர் இழை அறம் புரிந்த அதனால்
பிறை உரிஞ்சு எயில் பதியில் பெரும் தொண்டை நாட்டு
முறைமையாம் என உலகினில் மிகு மொழி உடைத்தால்
தாவில் செம்மணி அருவியாறு இழிவன சாரல்
பூவில் வண்டு இனம் புது நறவு அருந்துவ புறவம்
வாவி நீள் கயல் வரம்பு இற உகைப்பன மருதம்
நீவி நித்திலம் பரத்தியர் உணக்குவ நெய்தல்
குறவர் பல் மணி அரித்து இதை விதைப்பன குறிஞ்சி
கறவை ஆன் நிரை மான் உடன் பயில்வன கானம்
பறவை தாமரை இருந்து இற வருந்துவ பழனம்
சுறவ முள் மருப்பு அணங்கு அயர்வன கழி சூழல்
கொண்டல் வானத்தின் மணி சொரிவன குல வரைப்பால்
தண்டு உணர கொன்றை பொன் சொரி தள வயற்பால்
வண்டல் முத்த நீர் மண்டு கால் சொரிவன வயற்பால்
கண்டல் முன் துறை கரி சொரி வனகலங் கடற்பால்
தேன் நிறைந்த செந்தினை இடி தரு மலை சீறூர்
பால் நிறைந்த புல் பதத்தன முல்லை நீள் பாடி
தூ நெல் அன்னம் நெய் கன்னலின் கனிய தண் துறையூர்
மீன் நிறைந்த பேர் உணவின வேலை வைப்பு இடங்கள்
குழல் செய் வண்டு இனம் குறிஞ்சி யாழ் முரல்வன
முழவு கார் கொள முல்லைகள் முகைப்பன முல்லை
மழலை மென் கிளி மருதமர் சேக்கைய மருதம்
நிழல் செய் கைதை சூழ் நெய்தலங் கழியன நெய்தல்
மல்கும் அப்பெரு நிலங்களில் வரை புணர் குறிஞ்சி
எல்லை எங்கணும் இறவுளர் ஏனல் முன் விளைக்கும்
பல் பெரும் புனம் பயில்வன படர் சிறை தோகை
சொல்லும் அப்புனங் காப்பவும் சுரி குழல் தோகை
அங்கண் வான்மிசை அரம்பையர் கரும் குழல் சுரும்பு
பொங்கு பூண்முலை கொடிச்சியர் குழல் மூழ்கி போகா
செம் கண் மால் விடையார் திருக்காளத்தி என்னும்
மங்குல் சூழ் வரை நிலவிய வாழ்வினால் மல்கும்
பேறு வேறுசூழ் இமையவர் அரம்பையர் பிறந்து
மாறில் வேடரும் மாதரும் ஆகவே வணங்கும்
ஆறுசூழ் சடை அண்ணலார் திரு விடை சுரமும்
கூறு மேன்மையின் மிக்க தம் நாட்டு வண் குறிஞ்சி
அம்பொன் வார் குழல் கொடிச்சியர் உடன் அர மகளிர்
வம்புலா மலர சுனை படிந்து ஆடு நீள் வரைப்பின்
உம்பர் நாயகர் திரு கழு குன்றமும் உடைத்தால்
கொம்பர் வண்டு சூழ் குறிஞ்சி செய் தவங்குறை உளதோ
கோல முல்லையும் குறிஞ்சியும் அடுத்த சில்லிடங்கள்
நீல வாள் படை கோட்டங்களும்
கால வேனிலில் கடும் பகல் பொழுதினை பற்றி
பாலையும் சொலல் ஆவன உள பரல் முரம்பு
சொல்லும் எல்லையின் புறத்தன துணர சுரும்பு அலைக்கும்
பல் பெரும் புனல் கானியாறிடை இடை பரந்து
கொல்லை மெல் இணர குருந்தின் மேற் படர்ந்த பூம்பந்தர்
முல்லை மென் புதல் முயல் உகைத்து தடங்கு நீள்
பிளவு கொண்ட தண் மதி நுதல் பேதையர் எயிற்றை
களவு கொண்டது அளவு என களவலர் தூற்றும்
அளவு கண்டவர் குழல் நிறம் கனியும் களவை
தளவு கண்டு எதிர் சிரிப்பன தமக்கும் உண்டு என்று
மங்கையர்க்கு வாள் விழியிணை தோற்ற மான் குலங்கள்
எங்கும் மற்றவர் இடைக்கு இடை மலர கொடி
அங்கண் முல்லையின் தெய்வம் என்று அரு தமிழ் உரைக்கும்
செங்கண் மால் தொழும் சிவன் மகிழ் திரு முல்லை வாயில்
நீறு சேர் திரு மேனியர் நிலா திகழ் முடிமேல்
மாறில் கங்கை தான் அவர்க்கு மஞ்சனந்தர அணைந்தே
ஊறு நீர் தரும் ஒளி மலர கலிகை மா நகரை
வேறு தன் பெரு வைப்பு என விளங்கு மாமுல்லை
வாச மென் மலர் மல்கிய முல்லை சூழ் மருதம்
வீசு தெண்டிரை நதி பல மிக்கு உயர்ந்து ஓடி
பாசடை தட தாமரை பழனங்கள் மருங்கும்
பூசல் வன் கரை குளங்களும் ஏரியும் புகுவ
துங்க மாதவன் சுரபியின் திருமுலை சொரி பால்
பொங்கும் தீர்த்தமாய் நந்தி மால் வரை மிசை போந்தே
அங்கண் நித்திலம் சந்தனம் அகிலொடு மணிகள்
பங்க தடம் நிறைப்ப வந்து இழிவது பாலி
பிள்ளை தைவர பெருகுபால் சொரிமுலை தாய் போல்
மள்ளர் வேனிலின் மணல் திடர் பிசைந்து கை வருட
வெள்ள நீர் இரு மருங்கு கால் வழி மிதந்து ஏறி
பள்ள நீள் வயல் பருமடை உடைப்பது பாலி
அனையவாகிய நதி பரந்து அகன் பணை மருங்கில்
கனை நெடும் புனல் நிறைந்து திண் கரை பெருங்குளங்கள்
புனை இருங்கடி மதகுவாய் திறந்திட புறம் போய்
வினைஞர் ஆர்ப்பொலி எடுப்ப நீர் வழங்குவ வியன்கால்
மாறில் வண் பகட்டேர் பல நெருங்கிட வயல்கள்
சேறு செய்பவர் செந்நெலின் வெண் முளை சிதறி
நாறு வார்ப்பவர் பறிப்பவர் நடுபவர் ஆன
வேறு பல் வினை உடை பெரும் கம்பலை மிகுமால்
வரும் புனல் பெரும் கால்களை மறித்திட வாளை
பெருங்குலைப்பட விலங்குவ பிறங்கு நீர பழனம்
நெருங்கு சேற்குலம் உயர்த்துவ நீள் கரை படுத்து
சுருங்கை நீர் வழக்கு அறுப்பன பரு வரால் தொகுதி
தளைத்த தடம் பணை எழுந்த செந்தாமரை தவிசின்
இளைத்த சூல் வளை கண் படுப்பன இடை எங்கும்
விளைத்த பாசொளி விளங்கு நீள் விசும்படை ஊர் கோள்
வளைந்த மா மதி போன்று உள மருத நீர் வைப்பு
ஓங்கு செந்நெலின் புடையன உயர் கழை கரும்பு
பூங்கரும்பு அயல் மிடைவன பூகம் அப்பூக
பாங்கு நீள் குலை தெங்கு பைங்கதலி வண் பலவு
தூங்கு தீங்கனி சூத நீள் வேலிய சோலை
நீடு தண் பணை உடுத்த நீள் மருங்கின நெல்லின்
கூடு துன்றிய இருக்கைய விருந்து எதிர் கொள்ளும்
பீடு தங்கிய பெருங் குடி மனை அறம் பிறங்கும்
மாடம் ஓங்கிய மறுகின மல்லல் மூதூர்கள்
தொல்லை நான்மறை முதல் பெரும் கலையொலி துவன்றி
இல்லறம் புரிந்து ஆகுதி வேள்வியில் எழுந்த
மல்கு தண் புகை மழை தரும் முகில் குலம் பரப்பும்
செல்வம் ஓங்கிய திருமறையவர் செழும் பதிகள்
தீது நீங்கிட தீ கலியாம் அவுணற்கு
நதார் தாம் அருள் புரிந்தது நல்வினை பயன் செய்
மாதர் தோன்றிய மரபுடை மறையவர் வல்லம்
பூதி சாதனம் போற்றிய பொற்பினால் விளங்கும்
அருவி தந்த செம் மணிகளும் புறவில் ஆய் மலரும்
பருவி ஓடைகள் நிறைந்திழி பாலியின் கரையின்
மருவு கங்கை வாழ் சடையவர் மகிழ்ந்த மாற் பேறாம்
பொருவில் கோயிலும் சூழ்ந்த பூம்பணை மருதம்
விரும்பு மேன்மையென் பகர்வது விரி திரை நதிகள்
அருங்கரை பயில் சிவாலயம் அனேகமும் அணைந்து
பருங்கை யானையை உரித்தவர் இருந்த பாசூர்
மருங்கு சூழ் தவம் புரிந்தது அன்றோ மற்ற மருதம்
பூ மரும் புனல் வயல் களம் பாடிய பொருநர்
தாமருங் கிளையுடன் தட மென் மலர் மிலைந்து
மா மருங்கு தண்ணீழலின் மருத யாழ் முரலும்
காமர் தண் பணை புறத்தது கருங்கழி நெய்தல்
தூய வெண் துறை பரதவர் தொடுப்பன வலைகள்
சேய நீள் விழி பரத்தியர் தொடுப்பன செருந்தி
ஆய பேர் அள தளவர்கள் அளப்பன உப்பு
சாயன் மெல்லிடை அளத்தியர் அளப்பன தரளம்
கொடு வினை தொழில் நுளையர்கள் கொடுப்பன கொழுமீன்
படு மணற் கரை நுளைச்சியர் கொடுப்பன பவளம்
தொடு கடல் சங்கு துறையவர் குளிப்பன அவர் தம்
வடு வகிர கண்மங்கையர் குளிப்பன மணற்கேணி
கழி புனல் கடல் ஓதமுன் சூழ்ந்து கொண்டு அணிய
வழி கரை பொதி பொன்னவிழ்ப்பன மலர புன்னை
விழிக்கு நெய்தலின் விரை மலர கட்சுரும்பு உண்ண
கழிக்கரை பொதி சோறு அவிழ்ப்பன மடற்கைதை
காயல் வண் கரை புரை நெறி அடைப்பன கனி மு
சேய தண்ணறுஞ் செழுமுகை செறியும் முண்டகங்கள்
ஆய நுண் மணல் வெண்மையை மறைப்பன அன்னம்
தாய முன்றுறை சூழல் சூழ் ஞாழலின் தாது
வாம் பெரு திரைவளாக முன் குடி பயில் வரைப்பில்
தாம் பரப்பிய கயல்களின் விழி கயல் தவிர
காம்பி நேர் வரு தோளியர் கழி கயல் விலை செய்
தேம் பொதிந்த சின் மழலை மென் மொழிய செவ்வழி யாழ்
மருட்கொடு தொழில் மன்னவன் இறக்கிய வரியை
நெருக்கி முன் திருவொற்றியூர் நீங்க என்று எழுதும்
ஒருத்தர் தம் பெரும் கோயிலின் ஒரு புறம் சூழ்ந்த
திரு பரப்பையும் உடைய திரை கடல் வரைப்பு
மெய் தரும் புகழ திரு மயிலா புரி விரை சூழ்
மொய் தயங்கு தண் பொழில் திருவான்மியூர் முதலா
பை தரும் பணி அணிந்தவர் பதி எனை பலவால்
நெய்தல் எய்த முன் செய்த அம் நிறை தவம் சிறிதோ
கோடு கொண்டு எழும் திரை கடல் பவள மென் கொழுந்து
மாடு மொய் வரை சந்தன சினை மிசை வளரும்
நீடு நெய்தலும் குறிஞ்சியும் புணர்நிலம் பலவால்
ஆடு நீள் கொடி மாட மா மல்லையே அனைய
மலை விழிப்பன என வயல் சேல் வரை பாறை
தலையுகைப்பவும் தளை செறு விடை நெடுங் கருமான்
குதிப்பன கரும் பகட்டேர் நிகர்ப்பவுமாய்
அலை புனல் பணை குறிஞ்சியோடு அனைவன அனேகம்
புணர்ந்த ஆனிரை புற விடை குறு முயல் பொருப்பின்
அணைந்த வான் மதி முயலினை இனம் என அணைந்து
மணங்கொள் கொல்லையில் வரகு போர் மஞ்சனம் வரைக்கார்
இணைந்து முல்லையும் குறிஞ்சியும் கலப்பன எங்கும்
கவரும் மீன் குவை கழியவர் கானவர்க்கு அளித்து
சிவலும் சேவலும் மாறியும் சிறு கழிச்சியர்கள்
அவரை ஏனலுக்கு எயிற்றியர் பவள முத்து அளந்தும்
உவரி நெய்தலும் கானமும் கலந்துள ஒழுக்கம்
அயல் நறும் புறவினில் இடைச்சியர் அணி நடையும்
வியன் நெடும் பணை உழத்தியர் சாயலும் விரும்பி
இயலும் அன்னமும் தோகையும் எதிர்
வயலும் முல்லையும் இயைவன பலவுள மருங்கு
மீளும் ஓதமுன் கொழித்த வெண் தரளமும் கமுகின்
பாளை உக்கவும் விரவலில் பரத்தியர் பணை மென்
தோளும் உழத்தியர் மகளிர் மாறாடி முன் தொகுக்கும்
நீளும் நெய்தலும் மருதமும் கலந்துள நிலங்கள்
ஆய நானிலத்து அமைதியில் தத்தமக்கு அடுத்த
மேய செய் தொழில் வேறு பல் குலங்களின் விளங்கி
தீய என்பன கனவிலும் நினைவு இலா சிந்தை
தூய மாந்தர் வாழ் தொண்டை நாட்டு இயல்பு சொல் வரைத்ததோ
இவ் வளம் தரு பெரும் திருநாட்டிடை என்றும்
மெய் வள தரு சிறப்பினால் உலகெலாம் வியப்ப
எவ்வுகங்களும் உள்ளது என்று யாவரும் ஏத்தும்
கை விளங்கிய நிலையது காஞ்சி மா நகரம்
ஆன தொல் நகர் அம்பிகை தம் பெருமானை
மான அர்ச்சனை யால் ஒரு காலத்து வழிபட்டு
ஊனமில் அறம் அனேகமும் உலகுய்ய வைத்த
மேன்மை பூண்ட பெருமையை அறிந்தவா விளம்பில்
வெள்ளி மால்வரை கயிலையில் வீற்று இருந்து அருளி
துள்ளு வார் புனல் வேணியர் அருள் செ தொழுது
தெள்ளு வாய்மையின் ஆக திறன் எலாம் தெரிய
உள்ளவாறு கேட்டு அருளினான் உலகை ஆளுடையாள்
எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர் தாம் விரும்பும்
உண்மை ஆவது பூசனை என உரைத்து அருள
அண்ணலார் தமை அர்ச்சனை புரிய ஆதரித்தாள்
பெண்ணின் நல்லவள் ஆயின பெரு தவ கொழுந்து
நங்கை உள் நிறை காதலை
நோக்கி நாயகன் திரு உள்ளத்து மகிழ்ந்தே
அங்கண் எய்திய முறுவலும் தோன்ற அடுத்தது
என் கொல் நின் பால் என வினவ
இங்கு நாத நீ மொழிந்த ஆகமத்தின்
இயல்பினால் உனை அர்ச்சனை புரி
பொங்குகின்றது என் ஆசை என்று இறைஞ்சி
போகமார்த்த பூண் முலையினாள் போற்ற
தேவ தேவனும் அது திருவுள்ளஞ்
செய்து தென் திசை மிக்க செய் தவத்தால்
யாவரும் தனை அடைவது மண் மேல்
என்றும் உள்ளது காஞ்சி மற்று அதனுள்
மா அமர்ந்த நம் இருக்கையில் அணைந்து
மன்னு பூசனை மகிழ்ந்து செய்வாய் என்று
ஏவ எம் பெருமாட்டியும் பிரியா இசைவு
கொண்டு எழுந்து அருளுதற்கு இசைந்தாள்
ஏதமில் பலயோனி எண் பத்து
நான்கு நூறு ஆயிரத்து அதனுள்
பேதமும் புரந்து அருளும் கருணை
பிரான் மொழிந்த ஆகம வழி பேணி
போது நீர்மையில் தொழுதனள் போத
பொருப்பில் வேந்தனும் விருப்பில் வந்து எய்தி
மா தவம் புரிந்து அருளுதற்கு அமைந்த
வளத்தொடும் பரிசனங்களை விடுத்தான்
துன்னு பல்லுயிர் வானவர் முதலா
சூழ்ந்து உடன் செல காஞ்சியில் அணை
தன்னை நேர் வரும் பதும மா நாகம் தம்பிராட்டி
தாள் தலைமிசை வைத்தே
அன்னையாய் உலகு அனைத்தையும்
ஈன்றாய் அடியனேன் உறை பிலம் அதன் இடையே
மன்னு கோயில் கொண்டு அருளுவாய்
என்ன மலை மடந்தை மற்று அதற்கு அருள் புரிந்து
அங்கு மண் உலகத்து உயிர் தழைப்ப
அளவில் இன்பத்தின் அரு கரு விருத்தி
திங்கள் தங்கிய புரி சடையார்க்கு
திருந்து பூசனை விரும்பினள் செய்ய
எங்கும் நாடவும் திரு விளையாட்டால்
ஏக மா முதல் எதிர்ப்படாது ஒழி
பொங்கு மா தவம் செய்து காண்பதற்கே
புரிவு செய்தனள் பொன் மலை வல்லி
நெஞ்சம் ஈசனை காண்பதே விரும்பி
நிரந்தரம் திரு வாக்கினில் நிகழ்வது
அஞ்செழுத்துமே ஆக ஆளுடைய
அம்மை செம்மலர கை குவித்து அருளி
தஞ்சம் ஆகிய அரும் தவம் புரி
தரிப்பரே அவள் தனி பெருங் கணவர்
வஞ்சம் நீக்கிய மாவின் மூலத்தில்
வந்து தோன்றினார் மலை மகள் காண
கண்ட போதில் அப்பெரும் தவ
பயனாம் கம்பம் மேவிய தம் பெருமானை
வண்டு உலாங் குழல் கற்றை முன் தாழ
வணங்கி வந்து எழும் ஆசை முன் பொங
கொண்ட காதலின் விருப்பளவு இன்றி
குறித்த பூசனை கொள்கை மேற் கொண்டு
தொண்டையங்கனி வாய் உமை நங்கை
தூய அர்ச்சனை தொடங்குதல் புரிவாள்
உம்பர் நாயகர் பூசனைக்கு அவர் தாம்
உரைத்த ஆகமத்து உண்மையே தலை நின்று
எம் பிராட்டி அர்ச்சனை புரிவதனுக்கு
இயல்பில் வாழ் திரு சேடியரான
கொம்பனார்கள் பூம் பிடகை கொண்டு
அணை குலவு மென் தளிர் அடி இணை ஒதுங்கி
அம்பிகாவன மாந்திருவனத்தில் ஆன
தூ நறும் புது மலர் கொய்தாள்
கொய்த பன்மலர் கம்பை மா நதியில்
குலவு மஞ்சனம் நிலவு மெ பூச
நெய் தரும் கொழும் தூப தீபங்கள்
நிறைந்த சிந்தையில் நீடிய அன்பின்
மெய் தரும்படி வேண்டின எல்லாம்
வேண்டும் போதினில் உதவ மெ பூச
எய்த ஆகம விதி எலாம் செய்தாள்
உயிர்கள் யாவையும் ஈன்ற எம் பிராட்டி
கரந்தரும் பயன் இது என உணர்ந்து
கம்பம் மேவிய உம்பர் நாயகர்பால்
நிரந்த காதல் செய் உள்ளத்தளாகி நீடு
நன்மைகள் யாவையும் பெருக
வரம் தரும் பொருளாம் மலை வல்லி
மாறிலா வகை மலர்ந்த பேர் அன்பால்
சிரம் பணிந்து எழு பூசை நாள் தோறும்
திரு உளம் கொள பெருகியது அன்றே
நாதரும் பெரு விருப்பொடு நயந்து
நங்கை அர்ச்சனை செய்யும் அப்பொழுதில்
காதல் மிக்கவோர் திரு விளையாட்டில்
கனங்குழைக்கு அருள் புரிந்திட வேண்டி
ஓத மார் கடல் ஏழும் ஒன்று ஆகி ஓங்கி
வானமும் உட்பட பரந்து
மீது செல்வது போல் வர கம்பை
வெள்ளம் ஆம் திரு உள்ளமும் செய்தார்
அண்ணலார் அருள் வெள்ளத்தை
நோக்கி அம் கயல் கண்ணி தம் பெருமான் மேல்
விண் எலாம் கொள வரும் பெரு வெள்ளம்
மீது வந்துறும் என வெரு கொண்டே
உண்ணிலாவிய பதைப்புறு காதலுடன்
திரு கையால் தடுத்தும் நில்லாமை
தண்ணிலா மலர் வேணியினாரை
தழுவி கொண்டனள் தன்னையே ஒப்பாள்
மலை குல கொடி பரிவுறு பயத்தால்
மாவின் மேவிய தேவ நாயகரை
முலைக்குவட்டொடு வளை கையால்
நெருக்கி முறுகு காதலால் இறுகிட தழுவ
சிலை தனி திருநுதல் திரு முலைக்கும்
செ தளிர கரங்களுக்கும் மெத்தெனவே
கொலை களிற்றுரி புனைந்த தம் மேனி
குழைந்து காட்டினார் விழைந்த கொள்கையினார்
கம்பர் காதலி தழுவ மெய் குழைய
கண்டு நிற்பவும் சரிப்பவும் ஆன
உம்பரே முதல் யோனிகள் எல்லாம்
உயிரும் யாக்கையும் உருகி ஒன்றாகி
எம் பிராட்டிக்கு மெல்லியர் ஆனார்
என்றும் ஏகம்பர் என்று எடுத்து ஏத்த
வம்புலா மலர் நிறைய விண் பொழி
கம்பையாறு முன் வணங்கியது அன்றே
பூதியாகிய புனித நீர் ஆடி பொங்கு
கங்கை தோய் முடி சடை புனைந்து
காதில் வெண் குழை கண்டிகை தாழ
கலந்த யோகத்தின் மருவிய கருத்தால்
ஆதி தேவனாராயுமாதவஞ் செய் அவ்
வரங்கொலோ அகிலம் ஈன்று அளித்த
மாது மெ பயன் கொடுப்பவே கொண்டு
வளை தழும்புடன் முலை சுவடு அணிந்தார்
கோதிலா அமுது அனையவள் முலை
குழைந்த தம் மணவாள நல் கோலம்
மாது வாழவே காட்டி முன் நின்று வரங்கள்
வேண்டுவ கொள்க என்று அருள
வேத காரணராய ஏகம்பர் விரை மலர
செய்ய தாமரை கழல் கீழ்
ஏதம் நீங்கிய பூசனை முடிந்த தின்மை
தான் அறிவிப்பதற்கு இறைஞ்சி
அண்டர் நாயகர் எதிர் நின்று கூறும்
அளவினால் அஞ்சி அஞ்சலி கூப்பி
கொண்ட இற்றை என் பூசனை இன்னும்
குறை நிரம்பிட கொள்க என்று அருள
வண்டு வார் குழல் மலை மகள் கமல வதனம்
நோக்கி அம்மலர கண் நெற்றியின் மேல்
முண்ட நீற்றர் நின் பூசனை என்றும்
முடிவதில்லை நம் பால் என மொழிய
மாறிலாத பூசனை என்றும் மன்ன
எம்பிரான் மகிழ்ந்து கொண்டு அருளி
ஈறிலாத இப்பதியினுள் எல்லா அறமும்
யான் செய அருள்
வேறு செய் வினை திருவடி பிழைத்தல்
ஒழிய இங்கு உளார் வேண்டின செயினும்
பேறு மாதவ பயன் கொடுத்து அருள
பெறவும் வேண்டும் என்றனள் பிறப்பு ஒழிப்பாள்
விடையின் மேலவர் மலைமகள் வேண்ட
விரும்பு பூசனை மேவி வீற்று இருந்தே
இடையறா அறம் வளர்க்கும் வித்தாக
இக பர திரு நாழி நெல் அளித்து
கடையர் ஆகியும் உயர்ந்தவர்
காஞ்சி வாழ்பவர் தாம் செய் தீவினையும்
தடைபடாது மெ நெறி அடைவதற்காம்
தவங்களாகவும் உவந்து அருள் செய்தார்
எண்ண அரும் பெரும் வரங்கள் முன்
பெற்ற அங்கு எம் பிராட்டி தம்பிரான் மகிழ்ந்து அருள
மண்ணின் மேல் வழிபாடு செய்து அருளி
மனை அறம் பெருக்கும் கருணையினால்
நண்ணும் மன்னுயிர் யாவையும் பல்க
நாடு காதலின் நீடிய வாழ்க்கை
புண்ணிய திரு காம கோட்டத்து
பொலிய முப்பதோடு இரண்டு அறம் புரக்கும்
அலகில் நீள் தவத்து அற பெரும்
செல்வி அண்டமாம் திரு மனைக்கு இடும் தீபம்
உலகில் வந்து உறு பயன் அறிவிக்க
ஓங்கும் நாள் மலர் மூன்றுடன் ஒன்று
நிலவ ஆண்டினுக்கு ஒரு முறை செய்யும்
நீடு தொன்மையால் நிறந்த பேர் உலகம்
மலர் பெரும் திரு காம கோட்டத்து
வைத்த நல்லறம் மன்னவே மன்னும்
தீங்கு தீர்க்கும் நல் தீர்த்தங்கள் போற்றும்
சிறப்பினால் திரு கா கோட்டத்தின்
பாங்கு மூன்றுலகத்தில் உள்ளோரும்
பரவு தீர்த்தமாம் பைம் புனற்கேணி
வாங்கு தெண் திரை வேல்கை மேகலை
சூழ் வையகம் தனக்கு எய்திய படியாய்
ஓங்கு தன் வடிவாய் நிகழ்ந்து என்றும்
உள்ளது ஒன்று உலகாணி என்று உளதால்
அந்தம் இன்றி நல் அறம் புரிந்து
அளிக்கும் அன்னை தன் திரு கா கோட்டத்தில்
வந்து சந்திர சூரியர் மீது வழி கொள்ளாத
தன் மருங்கு போலினால்
சந்த மாதிர மயங்கி எம் மருங்கும்
சாயை மாறிய தன் திசை மயக்கும்
இந்த மாநிலத்தவர் எலாம் காண என்றும்
உள்ளது ஒன்று இன்றும் அங்கு உளதால்
கன்னி நன்னெடுங் காப்புடை வரைப்பில்
காஞ்சியாம் திரு நதி கரை மருங்கு
சென்னியிற் பிறை அணிந்தவர் விரும்பும்
திரு பெரும் பெயர் இருக்கையில் திகழ்ந்து
மன்னு வெங் கதிர் மீது எழும் போதும்
மறித்து மேற் கடல் தலை விழும் போதும்
தன்னிழல் பிரியாத வண் காஞ்சி தானம்
மேவிய மேன்மையும் உடைத்தால்
மறைகளால் துதித்து அரும் தவம் புரிந்து
மாறுறிலா நியமம் தலை நின்று
முறைமையால் வரும் பூசனை செய்ய
முனிவர் வானவர் முதல் உயிர் எல்லாம்
நிறையும் அன்பினால் அர்ச்சனை செய்ய நீடு
ஆகமங்கள் அவர் அவர்க்கு அருளி
இறைவர் தாம் மகிழ்ந்து அருளிய பதிகள்
எண்ணிறந்த திரு நகர் எல்லை
மன்னு கின்ற திருநகர் வரை பின்
மண்ணில் மிக்கதோர் நன்மை யினாலே
துன்னும் யானையை தூற்றில் வாழ் முயல்
முன் துரக்க எய்திய தொலைவு இல் ஊக்கத்தால்
தன்னிலத்து நின்று அகற்றுதல் செய்யும்
தானம் அன்றியும் தனு எழும் தரணி
நிலைத்தினும் காண்பரும் இறவா
தானம் என்று இவை இயல்பினில் உடைத்தால்
ஈண்டு தீவினை யாவையும் நீக்கி
இன்பமே தரும் புண்ணிய தீர்த்தம்
வேண்டினார் தமக்கு இட்ட சித்தியதாய்
விளங்கு தீர்த்தம் நன் மங்கல
நீண்ட காப்புடை தீர்த்தம் மூன்று உலகில்
நிகழ்ந்த சாருவ தீர்த்தமு முதலா
ஆண்டு நீடிய தீர்த்தம் எண்ணிலவும் அமரர்
நாட்டவர் ஆடுதல் ஒழியார்
தாளது ஒன்றினில் மூன்று பூ மலரும்
தமனி செழும் தாமரை தடமும்
நீள வார் புனல் குடதிசை ஓடி நீர்
கரக்கு மா நதியுடன் நீடு
நாள் அலர்ந்து செங்குவளை பைங் கமலம்
நண்பகல் பகல் தரும் பாடலம் அன்றி
காள மேகம் ஒப்பாள் உறை வரைப்பில்
கண் படாத காயா புளி உளதால்
சாயை முன் பிணிக்கும் கிணறு
ஒன்று தஞ்சம் உண்ணின் நஞ்சாந்தடம்
மாயை இன்றி வந்துள்ளடைந்தார்கள்
வானரத்து உருவாம் பிலம் ஒன்று
மேய அவ்வுரு நீங்கிட குளிக்கும்
விளங்க பொய்கையும் ஒன்று விண்ணவரோடு
ஆய இன்பம் உய்க்கும் பிலம் ஒன்றோடு
அனைய ஆகிய அதிசயம் பலவால்
அஞ்சு வான் கரத்தாறு இழி மதத்தோர்
ஆனை நிற்கவும் அரை இருள் திரியும்
மஞ்சு நீள்வது போலும் மா மேனி மலர
பதங்களில் வண் சிலம்பு ஒலிப்ப
நஞ்சு பில்க எயிற்று அரவ வெற்று தரையின்
நாம மூன்றிலை படை உடை பிள்ளை
எஞ்சல் இன்றி முன் திரியவும் குன்றம்
எறிந்த வேலவன் காக்கவும் இசையும்
சத்தி தற் பரசித்தி யோகிகளும்
சாதக தனி தலைவரும் முதலா
நித்தம் எய்திய ஆயுள் மெ தவர்கள்
நீடுவாழ் திரு பாடியும் அனேகம்
சித்தர் விஞ்சையர் இயக்கர் கந்தருவர்
திகழ்ந்து மன்னுவார் செண்டுகை ஏந்தி
வித்த கரி மேற் கொளும் காரி மேவும்
செண்டு அணை வெளியும் ஒன்று உளதால்
வந்து அடைந்தவர் தம் உரு மாய மற்று
உளாரை தாம் காண்பிடம் உளது
சிந்தை யோகத்து முனிவர் யோகினிகள்
சேரும் யோக பீடமும் உளது என்றும்
அந்தமில் அறம் புரப்பவள் கோயில்
ஆன போக பீடமும் உளதாகும்
எந்தையார் மகிழ் காஞ்சி நீடு எல்லை
எல்லை இல்லன உள்ள ஆர் அறிவார்
தூண்டு சோதி ஒன்று எழுந்து இருள்
துரக்கும் சுரர்கள் வந்து சூழ் உருத்திர சோலை
வேண்டினார்கள் தம் பிறப்பினை ஒழிக்கும்
மெ நெறி கணின்றார்கள் தாம் விரும்பி
தீண்டில் யாவையும் செம் பொன்
ஆக்குவது ஓர் சிலையும் உண்டு உரை செய்வதற்கு அரிதால்
ஆண்ட நாயகி சமயங்கள் ஆறும்
அகில யோனியும் அளிக்கும் நகரம்
என்றும் உள்ள நகர் கலியுகத்தில்
இலங்கு வேற்கரிகால் பெருவளத்தோன்
வன் திறற்புலி இமயமால் வரை மேல்
வைக்க ஏகுவேன் தனக்கு இதன் வளமை
சென்று வேடன் முன் கண்டு உரை செய்யது
இருந்து காத நான்கு உட்பட வகுத்து
குன்று போலும் மா மதில் புடை போக்கி
குடி இருத்தின கொள்கையின் விளங்கும்
தண் காஞ்சி மென் சினை பூம் கொம்பர்
ஆடல் சார்ந்து அசைய அதன் மருங்கு சுரும்பு தாழ்ந்து
பண் காஞ்சி இசை பாடும் பழன வேலி
பணை மருதம் புடை உடைத்தா பாரில் நீடும்
திண் காஞ்சி நகர் நொச்சி இஞ்சி சூழ்ந்த
செழும் கிடங்கு திரு மறைகள் ஒலிக்கும் தெய்வ
வண் காஞ்சி அல்குல் மலை வல்லி காக்க வளர்
கருணை கடல் உலகம் சூழ்ந்தால் மானும்
கொந்தலர் பூங் குழல் கொம்பு
கம்பர் கொள்ளும் பூசனை குறித்த தானம் காக்க
மந்திர மா மதில் அகழி அவர் தாம் தந்த
வாய்மை ஆகம விதியின் வகுப்பு போலும்
அந்தமில் சீர காஞ்சியை வந்து அடைந்தார்க்கு
அன்றி அடைகளங்கம் அறுப்பர் என்றுஅறிந்து சூழ
வந்து அணைந்து தன் கறுப்பும் உவர்ப்பும் நீக்கும்
மா கடலும் போலும் மலர கிடங்கு மாதோ
ஆங்கு வளர் எயிலினுடன் விளங்கும்
வாயில் அப்பதியில் வாழ் பெரியோர் உள்ளம் போல
ஓங்கு நிலை தன்மையவாய் அகிலம் உய்ய
உமைபாகர் அருள் செய்த ஒழுக்கம் அல்லால்
தீங்கு நெறி அடையாத தடையும் ஆகிச்செ
நெறிக்கண் நிகழ் வாய்மை திருந்து மார்க்கம்
தாங்குலவ நிலவி வளர் ஒளியால் என்றும் தட
நெடுவான் அளப்பன வாம் தகைய வாகும்
மாறு பெறல் அரும் கனக மாடம் நீடு மணி
மறுகும் நெடும் தெருவும் வளத்தில் வந்த
ஆறு பயில் ஆவண வீதிகளும் மற்றும் அமைந்த
நகர் அணி வரைகள் நடுவு போக்கி
கூறுபடு நவ கண்டம் அன்றி மல கொண்ட
அனேகம் கண்டம் ஆகி அன்ன
வேறு ஒரு மண் உலகு தனில் உளதாம் என்ன
விளங்கிய மா லோக நிலை மேவிற்று அன்றே
பாகம் மருங்கு இரு புடையும் உயர்ந்து
நீண்ட படர் ஒளி மாளிகை நிரைகள் பயில் மென் கூந்தல்
தோகையர் தம் குழாம் அலை தூக்கு முத்தின்
சுடர கோவை குளிர் நீர்மை துதைந்த வீதி
மாகமிடை ஒளி தழைப்ப மன்னி நீடு மருங்கு
தாரகை அலைய வரம்பில் வண்ண
மேகமிடை கிழித்து ஒழுகும் தெய்வ கங்கை
மேல் நதிகள் பல மண் விளங்கி
கிளர் ஒளி செங்கனக மயந்தானாய்
மாடு கீழ் நிலையோர் நீல சோபனம் பூண
கொள அமைத்து மீது ஒருபால் அன்ன சாலை
குல வயிரத்தால் அமைத்த கொள்கையாலே
அளவில் சுடர பிழம்பு ஆனார் தம்மை தேடி
அகழ்ந்து ஏனம் ஆனானும் அன்னம் ஆகி
வளர் விசும்பில் எழுந்தானும் போல நீடு
மாளிகையும் உள மற்று மறுகு தோறும்
மின் பொலி பன் மணி மிடைந்த தவள
மாடம் மிசை பயில் சந்திர காந்தம் விசும்பின் மீது
பொன் புரையும் செக்கர் நிற பொழுது தோன்றும்
புனிற்றி மதி கண்டு உருகி பொழிந்த நீரால்
வன் புலியின் உரியாடை திரு ஏகம்பர் வளர்சடையும்
இளம் பிறையும் கண்டு கும்பிட்டு
அன்பு உருகி மெய் பொழி கண்ணீர் வாரும்
அடியவரும் அனையவுள அலகிலாத
முகில் உரிஞ்சும் கொடி தொடுத்த முடிய
ஆகும் முழு பளிங்கின் மாளிகைகள் முற்றும் சுற்றும்
நிகரில் சரா சரங்கள் எல்லாம் நிழலினாலே
நிறைதலின் ஆல் நிறை தவஞ்செய் பாவை
நகில் உழுத சுவடும் வளை தழும்பும் பூண்ட
நாயகனார் நான்கு முகற்கு படைக்க நல்கும்
அகிலயோனிகள் எல்லாம் அமைத்து வைத்த
அரும் பெரும் பண்டார நிலை அனைய ஆகும்
பொன் களப மாளிகை மேல் முன்றில்
நின்று பூம் கழங்கு மணி பந்தும் போற்றி ஆடும்
வில் புருவ கொடி மடவார் கலன்கள் சிந்தி
விழுவனவும் கெழுவு துணை மேவு மாதர்
அற்பு முதிர் கலவியினில் பரிந்து சிந்தும்
அணிமணி சேடியர் தொகுக்கும் அவையும் ஆகி
நற்கனக மழை அன்றி காஞ்சி எல்லை
நவமணி மாரியும் பொழியும் நாளும்
பூ மகளுக்கு உறையுள் எனும்
தகைய ஆன பொன் மாட தரமியங்கள் பொலிய நின்று
மா மகர குழை மகளிர் மைந்தர் அங்கண்
வந்து ஏறுமுன் நறு நீர் வண்டல் ஆட
தூமணி பொன் புனை நாளத்துருத்தி வீசும்
சுடர்விடு செங்குங்கும நீர துவலை தோய்ந்த
காமர் மணி நாசிகையின் மருங்கு தங்கும்
கருமுகில்கள் செம்முகில் களாகி காட்டும்
இமம் மலிய எடுத்த நெடு வரைகள்
போல இலங்கு சுதை தவள மாளிகை நீள் கோட்டு
சிமை அடையும் சோபான நிரையும் விண்ணும்
தெரிவு அரிய தூய்மையினால் அவற்றுள் சேர்ந்து
தமர் களுடன் இழிந்து ஏறும் மைந்தர் மாதர்
தங்களையும் விசும்பிடை நின்று இழியா நிற்கும்
அமரரையும் அரமகளிர் தமையும் வெவ்வேறு
அறிவரிதாம் தகைமையன அனேகம் அங்கண்
அரவ நெடு தேர் வீதி அருகு மாடத்து
அணிமணி கோபுரத்து அயலே வியல் வாய் நீண்ட
விரவு மரகத சோதி வேதி திண்ணை
விளிம்பின் ஒளி துளும்பு முறை படி மீது ஏறும்
குரவலரும் குழல் மடவார் அடியில் ஊட்டும்
குழம்பு அடுத்த செம்பஞ்சின் சுவட்டு கோலம்
பரவை நெடும் தரங்கம் மிசை விளங்கி தோன்றும்
பவள நறும் தளிர் அனைய பலவும் பரங்கர்
வேம்பு சின களிற்று அதிர்வும் மாவின்
ஆர்ப்பும் வியன் நெடு தேர கால் இசைப்பும் விழவுஅறாத
அம் பொன் மணி வீதிகளில் அரங்கில் ஆடும்
அரிவையர் நூபுர ஒலியோடு அமையும் இம்பர்
உம்பரின் இந்திரன் களிற்றின் முழக்கு
தெய்வ உயர் இரவி மா கலிப்பும் அயன் ஊர்தி தேர்
பம்பிசையும் விமானத்துள் ஆடு தெய்வ
பாவையர் நூபுர அரவத்துடனே பல்கும்
அருமறை அந்தணர் மன்னும்
இருக்கையான ஆகுதியின் புகை அடுத்த அம் பொன் மாட
பெரு மறுகு தொறும் வேள்வி சாலை
எங்கும் பெறும் அவி பாகம் கொடுக்கும் பெற்றி மேலோர்
வருமுறைமை அழைக்க விடு மந்திரம் எம்
மருங்கும் வானவர் நாயகர் திரு ஏகம்பர் முன்றில்
திருமலி பொன் கோபுரத்து நெருங்கும்
எல்லா தேவரையும் அணித்தா கொண்டு செல்லும்
அரசர் குல பெரும் தெருவும்
தெற்றி முற்றத்து ஆயுதங்கள் பயிலும் வியல் இடமும் அங்கண்
புரசை மத கரிகளொடு புரவி ஏறும்
பொற்புடைய வீதிகளும் பொலிய எங்கும்
விரை செய் நறுந்தொடை அலங்கல் குமரர்
செய்யும் வியப்புறு செய் தொழில் கண்டு விஞ்சை விண்ணோர்
நிரை செறியும் விமான ஊர்திகளின் மேலும்
நிலமிசையும் பல முறையும் நிரந்து நீங்கார்
வெயில் உமிழும் பன்மணி
பூண் வணிக மாக்கள் விரவு நிதி வளம் பெருக்கும் வெறுக்கை மிக்க
வயின் நிலவு மணி கடை மா நகர்கள்
எல்லாம் வனப்பு உடைய பொருட்குலங்கள் மலிதலாலே
கயிலை மலையார் கச்சி ஆலயங்கள்
பலவும் கம்பமுமேவிய தன்மை கண்டு போற்ற
பயிலும் உருப்பல கொண்டு நிதி கோன்
தங்க பயில் அளகாபுரி வகுத்த பரிசு காட்டும்
விழவு மலி திரு காஞ்சி வரைப்பின்
வேளாண் விழு குடிமை பெரும் செல்வர் விளங்கும் வேணி
மழ இள வெண் திங்கள் புனை கம்பர் செம்
பொன் மலைவல்லி களி தவளர் உணவின் மூலம்
தொழ உலகு பெறும் அவள் தான் அருள
பெற்று தொன்னிலத்து மன்னு பயிர் வேத வாய்மை
உழவு தொழிலால் பெருக்கி உயிர்கள் எல்லாம்
ஓங்க வரும் தரும வினைக்கு உளரால் என்றும்
ஓங்கிய நால் குலத்து ஒவ்வா
புணர்வில் தம்மில் உயர்ந்தனவும் இழிந்தனவும் ஆன சாதி
தாம் குழுமி பிறந்த குல பேதம் எல்லாம் தம்
தகைமைக்கு ஏற்ற தனி இடங்கள் மேவி
ஆங்கு நிறை கிளை பயின்று மரபின் ஆற்ற அடுத்த
வினை தொழிலின் முறைமை வழாமை நீடு
பாங்கு வளர் இருக்கை நிலை பலவும் எல்லாம்
பண்பு நீடிய உரிமை பால அன்றே
ஆதி மூதெயில் நகர் மன்னிய
சோதி நீள் மணி தூபமும் தீபமும்
கோதில் பல்லியமும் கொடியும் பயில்
வீதி நாளும் ஒழியா விழா வணி
வாயில் எங்கணும் தோரணம் மாமதில்
ஞாயில் எங்கணுஞ் சூழ் முகில் நாள்மதி
தோயில் எங்கணும் மங்கலம் தொண்டர் சூழ்
கோயில் எங்கணும் உம்பர் குல குழாம்
வேத வேதியர் வேள்வியே தீயன
மாதர் ஓதி மலரே பிணியன
காதல் வீதி விலக்கே கவலைய
சூத மாதவியே புறம் சூழ்வன
சாயலார்கள் நுசுப்பே தளர்வன
ஆய மாட கொடியே அசைவன
சேய ஓடை களிறே திகைப்பன
பாய சோலை தருவே பயத்தன
அண்ணலார் அன்பர் அன்பே முன் ஆர்த்தன
தண்ணறுஞ் செழுந்தாதே துகள்வன
வண்ண நீள் மணி மாலையே தாழ்வன
எண்ணில் குங்கு சேறே இழுக்கின
வென்றி வானவர் தாம் விளையாடலும்
என்றும் உள்ளவர் வாழும் இயற்கையும்
நன்றும் உள்ளத்து நண்ணினர் வேட்கைகள்
ஒன்றும் அங்கு ஒழியா வகை உய்ப்பது
புரம் கடந்தவர் காஞ்சி
பரம்பு நீள் புவனம் பதி நான்கினும்
வரம்பில் போக வனப்பின் வளமெல்லாம்
நிரம்பு கொள்கலம் என்ன நிறைந்தலால்
அவ்வகைய திருநகரம் அதன் கண் ஒரு மருங்குறைவார்
இவ்வுலகில் பிறப்பினால் ஏகாலி குலத்துள்ளார்
செவ்விய அன்புடை மனத்தார் சீலத்தின் நெறி நின்றார்
மை விரவு கண்டரடி வழி தொண்டர் உளர் ஆனார்
மண்ணின் மிசை வந்த அதற்பின் மனம் முதல் ஆயின மூன்றும்
அண்ணலார் சேவடியின் சார்வாக அணைவிப்பார்
புண்ணிய மெ தொண்டர் திரு குறிப்பு அறிந்து போற்று நிலை
திண்மையினால் திரு குறிப்பு தொண்டர் எனும் சிறப்பினார்
தேர் ஒலிக்க மா ஒலிக்க திசை ஒலிக்கும் புகழ காஞ்சி
ஊரொலிக்கும் பெரு வண்ணார் எனவொண்ணா உண்மையினார்
நீரொலிக்க அரா இரைக்க நிலா முகிழ்க்கும் திருமுடியார்
பேரொலிக்க உருகும் அவர்க்கு ஒலிப்பர் பெரு விருப்பி னொடும்
தேசுடைய மலர கமல சேவடியார் அடியார்தம்
தூசுடைய துகள் மாசு கழிப்பார் போல் தொல்லை வினை
ஆசுடைய மல மூன்றும் அணைய வரும் பெரும் பிறவி
மாசு தனை விட கழித்து வரும் நாளில் அங்கு ஒரு நாள்
பொன் பொரு பரையன் பயந்து அருளும் பூங்கொடிதன்
நன்னிலைமை அன்று அளக்க எழுந்து அருளும் நம் பெருமான்
தன்னுடைய அடியவர் தம் தனி தொண்டர் தம்முடைய
அந்நிலைமை கண்டு அன்பர்க்கு அருள் புரிவான் வந்து அணைவார்
சீதமலி காலத்து திரு குறிப்பு தொண்டர்பால்
ஆதுலராய் மெலிந்து மிக அழுக்கு அடைந்த கந்தையுடன்
மாதவ வேடம் தாங்கி மால் அறியா மலர் அடிகள்
கோதடையா மனத்தவர் முன் குறு நடைகள் கொள குறுகி
திருமேனி வெண்ணீறு திகழ்ந்து ஒளிரும் கோலத்து
கரு மேகம் என அழுக்கு கந்தையுடன் எழுந்து அருளி
வருமேனி அரு தவரை கண்டு மனம் மகிழ்ந்து எதிர் கொண்டு
உருமேவும் மயிர புளகம் உளவாக பணிந்து எழுந்தார்
எய்தும் அவர் குறிப்பு அறிந்தே இன் மொழிகள் பல மொழிந்து
செய் தவத்தீர் திருமேனி இளைத்து இருந்தது என் என்று
கை தொழுது கந்தையினை தந்து அருளும் கழுவ என
மை திகழ் கண்டம் கரந்த மாதவத்தோர் அருள் செய்வார்
கந்தை அழுக்கு ஏறி எடுக்க ஒணாது எனினும் யான்
மெ கொண்ட குளிர குடைந்து விட மாட்டேன் மேல் கடல் பால்
குன்றம் வெங்கதிரோன் அணைவதன் முன் தருவீரேல்
கை கொண்டு போய் ஒலித்து கொடுவாரும் கடிது என்றார்
தந்து அருளும் கந்தை தாழாதே ஒலித்து உமக்கு இன்று
அந்தி படுவதன் முன்னம் தருகின்றேன் என அவரும்
கந்தை இது ஒலித்து உணக்கி கடிது இன்றே தாரீரேல்
இந்த உடற்கு இடர் செய்தீர் என்று கொடுத்து ஏகினார்
குறித்த பொழுதே ஒலித்து கொடுப்பதற்கு கொடு போந்து
வெறி தடநீர துறையின் கண் மா செறிந்து மிக புழுக்கி
பிறித்து ஒலிக்க புகும் அளவில் பெரும் பகல் போ பின்பகலாய்
மறிக்கரத்தார் திரு அருளால் மழை எழுந்து பொழிந்திமால்
திசை மயங்க வெளியடைத்த செறி முகிலின் குழாம் மிடைந்து
மிசை சொரியும் புனல் தாரை விழி நுழையா வகை மிடைய
அசையுடைய மனத்து அன்பர் அறிவு மறந்து அருந்தவர் பால்
இசைவு நினைந்து அழிந்து இனி யான் என் செய்கேன் என நின்றார்
ஓவாதே பொழியு மழை ஒரு கால் விட்டு ஒழியும் என
காவாலி திரு தொண்டர் தனி நின்றார் விட காணார்
மேவார் போல் கங்குல் வர மெய் குளிரும் விழுந்தவர் பால்
என் குற்றேவல் அழிந்த வா என
விழுந்த மழை ஒழியாது மெய்த்தவர் சொல்லிய எல்லை
கழிந்தது முன்பு ஒலித்து மனைக்கு ஆற்று ஏற்க அறிந்திலேன்
செழும் தவர் தம் திருமேனி குளிர் கணும் தீங்கு இழைத்த
தொழும்பனேற்கு இனி இதுவே செயல் என்று துணிந்து எழுவார்
கந்தை புடைத்திட எற்றும் கல்பாறை மிசை தலையை
சிந்த எடுத்து எற்றுவான் என்று அணைந்து செழும் பாறை மிசை
தந்தலையை புடைத்து எற்ற அப்பாறை தன் மருங்கு
வந்து எழுந்து பிடித்தது அணி வளை தழும்பர் மலர செங்கை
வான் நிறைந்த புனல் மழை போய் மலர் மழையாய் இட மருங்கு
தேன் நிறைந்த மலர் இதழி திருமுடியார் பொருவிடையின்
மேல் நிறைந்த துணைவி யொடும் வெளி நின்றார் மெ தொண்டர்
தான் நிறைந்த அன்பு உரு கை தொழுது தனி நின்றார்
முன் அவரை நேர் நோக்கி மு கண்ணர் மூவுலகும்
நின் நிலைமை அறிவித்தோம் நீயும் இனி நீடிய நம்
மன்னுலகு பிரியாது வைகுவாய் என அருளி
நிலையே எழுந்து அருளி அணி ஏகாம்பரம் அணைந்தார்
சீர் நிலவு திரு குறிப்பு தொண்டர் திருத்தொழில் போற்றி
பார் குலவ தந்தை தாள் அற எறிந்தார் பரிசு உரைக்கேன்
பேர் அருளின் மெ தொண்டர் பித்தன் என பிதற்றுதலால்
ஆருலகில் இதன் உண்மை அறிந்து உரைக்க இசைந்து எழுவார்
திருச்சிற்றம்பலம்

சண்டேசுர நாயனார் புராணம்
திருச்சிற்றம்பலம்
பூந்தண் பொன்னி நாளும் பொய்யாது அளிக்கும் புனல் நாட்டு
வாய்ந்த மண்ணி தென் கரையில் மன்ன முன் நாள் வரை கிழிய
ஏந்தும் அயில் வேல் நிலை காட்டி இமையோர் இகல் வெம் பகை கடக்கும்
சேந்தன் அளித்த திருமறையோர் மூதூர் செல்வ சேய்ஞ்லூர்
செம்மை வெண்ணீற்று ஒருமையினார் இரண்டு பிறப்பின் சிறப்பினார்
மும்மை தழலோம்பிய நெறியார் நான்கு வேதம் முறை பயின்றார்
தம்மை ஐந்து புலனும் பின் செல்லும் தகையார் அறுதொழிலின்
மெய்ம்மை ஒழுக்கம் ஏழு உலகும் போற்றும் மறையோர் விளங்குவது
கோதில் மான் தோல் புரி முந்நூல் குலவு மார்பில் குழை குடுமி
ஓதுகிடை சூழ் சிறுவர்களும் உதவும் பெருமை ஆசானும்
போதின் விளங்கும் தாரகையும் மதியும் போல புணர் மாடங்கள்
மீது முழங்கு முகில் ஒதுங்க வேத ஒலிகள் முழங்குவன
யாகம் நிலவும் சாலை தொறும் மறையோர் ஈந்த அவியுணவின்
பாகம் நுகர வரும் மாலும் அயனும் ஊரும் படர் சிறைப்புள்
மாகம் இகந்து வந்து இருக்கும் சேக்கை எனவும் வானவர் கோன்
நாகம் அணையும் கந்து எனவும் நாட்டும் யூப ஈட்டமுள
தீம் பால் ஒழுக பொழுது தொறும் ஓம தேனு செல்வனவும்
தாம் பாடிய சாமம் கணிப்போர் சமிதை இடம் கொண்டு அனைவனவும்
பூம் பாசடைநீர தடம் மூழ்கி மறையோர் மகளிர் புகுவனவும்
ஆம் பான்மையினில் விளங்குவன அணி நீள் மறுகு பலவுமுள
வாழ் பொன் பதி மற்று அதன் மருங்கு மண்ணி திரைகள் வயல் வரம்பின்
தாழ்வில் தரளம் சொரி குலைப்பால் சமைத்த யாக தடம் சாலை
சூழ் வைப்பு இடங்கள் நெருங்கியுள தொடங்கு சடங்கு முடித்து ஏறும்
வேள்வி தலைவர் பெருந்தேர்கள் விண்ணோர் ஏறும் விமானங்கள்
மடையில் கழுநீர் செழுநீர் சூழ்வயலில் சாலி கதிர்க்கற்றை
புடையில் சுரும்பு மிடை கமுகு புனலில் பரம்பு பூம்பாளை
அடையில் பயிலு தாமரை நீள் அலரில் துயிலும் கயல்கள் வழி
நடையில் படர்மென் கொடி மௌவல் நனையில் திகழும் சினை காஞ்சி
சென்னி அபயன் குலோத்துங்க சோழன் தில்லை திரு எல்லை
பொன்னின் மயம் ஆக்கிய வளவர் போர் ஏறு என்றும் புவி காக்கும்
மன்னர் பெருமான் அநபாயன் வரு தொல் மரபின் முடி சூட்டும்
தன்மை நிலவு பதி ஐந்தின் ஒன்றாய் நீடும் தகைத்தது அவ்வூர்
பண்ணின் பயனாம் நல் இசையும் பாலி இண்
கண்ணின் பயனாம் பெருகு ஒளியும் கருத்தின் பயனும் எழுத்து ஐந்தும்
விண்ணின் பயனாம் பொழி மழையும் வேத சைவமும்
மண்ணின் பயனாம் அப்பதியின் வளத்தின் பெருமை வரம்பு உடைத்தோ
பெருமை பிறங்கும் அப்பதியின் மறையோர் தம்முள் பெருமனை வாழ்
தருமம் நிலவு காசிய கோத்திரத்து தலைமை சால் மரபில்
அருமை மணியும் அளித்ததுவே நஞ்சும் அளிக்கும் அரவு போல்
இருமை வினைக்கும் ஒரு வடிவு ஆம் எச்ச தத்தன் உளனானான்
மற்றை மறையோன் திரு மனைவி வாய்ந்த மரபின் வந்து உதித்தாள்
சுற்றம் விரும்பும் இல்வாழ்க்கை தொழிலாள் உலகில் துணை புதல்வர்
பெற்று விளங்கும் தவம் செய்தாள் பெறும் பேறு எல்லை பயன் பெறுவாள்
பற்றை எறியும் பற்றுவார் சார்பாய் உள்ள பவித்திரையாம்
நன்றி புரியும் அவர் தம் பால் நன்மை மறையின் துறை விளங்க
என்றும் மறையோர் குலம் பெருக ஏழு புவனங்களும் உய்ய
மன்றில் நடம் செய்பவர் சைவ வாய்மை வளர மா தவத்தோர்
வென்றிவிளங்க வந்து உதயம் செய்தார் விசார சருமனார்
ஐந்து வருடம் அவர்க்கு அணைய அங்கம் ஆறும் உடன் நிறைந்த
சந்த மறைகள் உட்பட முன் தலைவர் மொழிந்த ஆகமங்கள்
முந்தை அறிவின் தொடர்ச்சியினால் முகைக்கு மலரின் வாசம் போல்
சிந்தை மலர உடன் மலரும் செவ்வி உணர்வு சிறந்ததால்
நிகழும் முறைமை ஆண்டு ஏழும் நிரம்பும் பருவம் வந்து எய்த
புகழும் பெருமை உப நயன பொருவில் சடங்கு முடித்து அறிவின்
இகழு நெறிய அல்லாத எல்லாம் இயந்த எனினும் தம்
திகழு மரபின் ஓது விக்கும் செய்கை பயந்தார் செய்வித்தார்
குலவு மறையும் பல கலையும் கொளுத்துவதன் முன் கொண்டு அமைந்த
நிலவும் உணர்வின் திறம் கண்டு நிறுவும் மறையோர் அதிசயித்தார்
அலகில் கலையின் பொருட்கு எல்லை ஆடும் கழலே என கொண்ட
செலவு மிகுந்த சிந்தையினில் தெளிந்தார் சிறிய பெரு தகையார்
நடமே புரியும் சேவடியார் நம்மை உடையார் என்றும் மெய்ம்மை
உடனே தோன்றும் உணர்வின் கண் ஒழியாது ஊறும் வழி அன்பின்
கடனே இயல்பாய் முயற்றி வரும் காதல் மேல்மேல் எழும் கருத்தின்
திடம் நேர் நிற்கும் செம்மலார் திகழும் நாளில் ஆங்கு ஒரு நாள்
ஓது கிடையின் உடன் போவார் ஊர் ஆன் நிரையின்
போது மற்று அங்கு ஒரு புனிற்றா போற்றும் அவன் மேல் மருப்பு ஓச்ச
யாதும் ஒன்றும் கூசாதே எடுத்த கோல் கொண்டு அவன் புடைப்ப
மீது சென்று மிகும் பரிவால் வெகுண்டு விலக்கி மெய் உணர்ந்து
பாவும் கலைகள் ஆகமநூல் பரப்பின் தொகுதி பான்மையினால்
மேவும் பெருமை அரு மறைகள் மூலமாக விளங்கு உலகில்
யாவும் தெளிந்த பொருள் நிலையே எய்த உணர்ந்த உள்ளத்தால்
ஆவின் பெருமை உள்ளபடி அறிந்தார் ஆயற்கு அருள் செய்வார்
தங்கும் அகில யோனிகட்கும் மேலாம் பெருமை தகைமையன
பொங்கு புனித தீர்த்தங்கள் எல்லாம் என்றும் பொருந்துவன
துங்க அமரர் திருமுனிவர் கணங்கள் சூழ்ந்து பிரியாத
அங்கம் அனைத்தும் தாமுடைய அல்லவோ நல் ஆனினங்கள்
ஆய சிறப்பினால் பெற்ற அன்றே மன்றுள் நடம் புரியும்
நாயனார்க்கு வளர் மதியும் நதியும் நகு வெண்டலை தொடையும்
மேய வேணி திரு முடிமேல் விரும்பி ஆடி அருளுதற்கு
தூய திருமஞ்சனம் ஐந்தும் அளிக்கும் உரிமை சுரபிகள் தாம்
சீலமுடைய கோக்குலங்கள் சிறக்கும் தகைமை தேவருடன்
காலம் முழுதும் உலகனைத்தும் காக்கும் முதல் காரணர் ஆகும்
நீலகண்டர் செய்ய சடை நிருத்தர் சாத்து நீறுதரும்
மூலம் அவதாரம் செய்யும் மூர்த்தம் என்றால் முடிவு என்னோ
உள்ளும் தகைமை இனி பிறவேறுளவே உழை மான் மறிக்கன்று
துள்ளும் கரத்தார் அணி பணியின் சுடர் சூழ் மணிகள் சுரநதி நீர்
தெள்ளும் சடையார் தேவர்கள் தம்பிராட்டி உடனே சேரமிசை
கொள்ளும் சின மால் விடை தேவர் குலம் அன்றோ சுரபி
என்றின்னனவே பலவும் நினைந்து இதத்தின் வழியே மேய்த்து இந்த
கன்று பயில் ஆன் நிரை காக்கும் இதன் மேல் இல்லை கடன் இதுவே
மன்றுள் ஆடும் சேவடிகள் வழுத்து நெறியாவதும் என்று
நின்ற ஆயன் தனை நோக்கி நிரை மேய்ப்பு ஒழிக நீ என்பார்
யானே இனி இந்நிரை மேய்ப்பன் என்றார் அஞ்சி இடை மகனும்
தானேர் இறைஞ்சி விட்டு அகன்றான் தாமும் மறையோர் இசைவினால்
ஆனே நெருங்கும் பேராயம் அளிப்பார் ஆகி பைங்கூழ்க்கு
வானே என்ன நிரை காக்க வந்தார் தெய்வ மறை சிறுவர்
கோலும் கயிறும் கொண்டு குழை குடுமி அலை குலவு மான்
தோலும் நூலும் சிறு மார்பில் துவள அரை கோவணம் சுடர
பாலும் பயனும் பெருக வரும் பசுக்கள் மேய்க்கும் பான்மையினால்
சாலும் புல்லின் அவை வேண்டு தனையும் மிசையும் தலை சென்று
பதவு காலங்களில் மேய்த்தும் பறித்தும் அளித்தும் பரிவு அகற்றி
இதம் உண் துறையுள் நற்றண்ணீர் ஊட்டி அச்சம் எதிர் நீக்கி
அதர் நல்லன முன் செல நீழல் அமர் வித்து அமுத மதுரப்பால்
உதவும் பொழுது பிழையாமல் உடையோர் இல்லம் தொறும் உய்த்தார்
மண்ணி கரையின் வளர் புறவின் மாடும் படுகர் மருங்கினிலும்
தண்ணித்தில நீர் மரு தண்தலை சூழ் குலையின் சார்பினிலும்
எண்ணிற் பெருகு நிரை மேய்த்து சமிதை உடன் மேல் ஏரிகொண்டு
நண்ணில் கங்குல் முன் புகுந்தும் நன்னாள் பலவாம் நாளில்
ஆய நிரையின் குலம் எல்லாம் அழகின் விளங்கி மிக பல்கி
மேய இனிய புல் உணவும் விரும்பு புனலும் ஆர்தலினால்
ஏய மனங்கொள் பெரு மகிழ்ச்சி எய்தி இரவும் நண்பகலும்
தூய தீம்பால் மடி பெருகி சொரிய முலைகள் சொரிந்தனவால்
பூணும் தொழில் வேள்வி சடங்கு புரிய ஓம தேனுக்கள்
காணும் பொலிவின் முன்னையினும் அனேக மடங்கு கறப்பனவாய்
பேணு தகுதி அன்பால் பிரம சாரி மேய்த்த அதற்பின்
மாணு திறத்தவான என மறையோர் எல்லாம் மனம் மகிழ்ந்தார்
அனைத்து திறத்தும் ஆனினங்கள் அணைந்த மகிழ்ச்சி அளவு இன்றி
மனை கண் கன்று பிரிந்தாலும் மருவுஞ் சிறிய மறை
தனை கண்டு அருகு சார்ந்து உருகி தாயா தன்மை நிலைமையவா
கணைத்து சுரந்து முலை கண்கள் கறவாமே பால் பொழிந்தனவால்
தம்மை அணைந்த ஆன் முலைப்பால் தாமே பொழி கண்டு வந்து
செம்மை நெறியே உறுமனத்தில் திரு மஞ்சனமாம் குறிப்பு உணர்ந்தே
எம்மையுடைய வள்ளலார் எய்த நினைந்து தெளிந்து அதனில்
மெய்மை சிவனார் பூசனையை விரும்பும் வேட்கை விரைந்து எழலும்
அங்கண் முன்னை அர்ச்சனையின் அளவின் தொடர்ச்சி விளையாட்டா
பொங்கும் அன்பால் மண்ணி மணற் புளின குறையில் ஆத்தியின் கீழ
செங்கண் விடையார் திருமேனி மணலால் ஆக்கி சிவ ஆலயமும்
துங்க நீடு கோபுரமும் சுற்றாலயமும் வகுத்து அமைத்தார்
ஆத்தி மலரும் செழுந்தளிரும் முதலா அருகு வளர் புறவில்
பூத்த மலர்கள் தாந்தெரிந்து புனிதர் சடில திரு முடிமேல்
சாத்தல் ஆகும் திரு பள்ளி தாமம் பலவும் தாம் கொய்து
கோத்த இலை பூங்கூடையினில் கொணர்ந்து மணம் தங்கிட வைத்தார்
நல்ல நவ கும்பங்கள் பெற நாடி கொண்டு நாணல் பூங்
கொல்லை இடத்தும் குறை மறைவும் மேவுங் கோக்கள் உடன் கூட
ஒல்லை அணைந்து பாலாக்கள் ஒன்றுக்கு ஒரு காலாக எதிர்
செல்ல அவையும் கனைத்து முலை தீண்ட செழும்பால் பொழிந்தனவால்
கொண்ட மடுத்த குட நிறை கொணர்ந்து விரும்பும் கொள்கையினால்
அண்டர் பெருமான் வெண்மணல் ஆலயத்துள் அவை முன் தாபித்து
வண்டு மருவு திரு பள்ளி தாமம் கொண்டு வரன் முறையே
பண்டை பரிவால் அருச்சித்து பாலின் திரு மஞ்சனம் ஆட்டி
மீள இவ்வண்ணம் வெண் பால் சொரி மஞ்சனம் ஆட்ட ஆள்
தம்முடைய அன்பர் அன்பின்பால் உளதாய் மூள அமர்ந்த
பாடு முதிர்ந்த பற்று முற்ற சூழ்
கோளம் அதனில் உள் நிறைந்து குறித்த பூசை கொள்கின்றார்
பெருமை பிறங்கும் சேய்ஞலூர் பிள்ளையார் தம் உள்ளத்தில்
ஒருமை நினைவால் உம்பர்பிரான் உவக்கும் பூசை உறுப்பான
திரு மஞ்சனமே முதல் அவற்றில் தேடாதன அன்பினில் நிரம்பி
வரும் நெறியே அர்ச்சனை செய்து அருளி வணங்கி மகிழ்கின்றார்
இறையோன் அடி கீழ் மறையவனார் எடுத்து திருமஞ்சனம் ஆட்டும்
நிறை பூசனைக்கு குடங்கள் பால் நிரம்ப சொரிந்து நிரை குலங்கள்
குறைபாடு இன்றி மடி பெரு குவிந்த முலைப்பால் குறைவு
மறையோர் மனையின் முன்பு தரும் வளங்கள் பொலிய வைகுமால்
செயல் இப்படியே பல நாளும் சிறந்த பூசை செய்வதற்கு
முயல்வுற்று அதுவே திருவிளையாட்டாக முந்நூல் அணிமார்பர்
இயல்பில் புரியும் மற்று இதனை கண்டி திறத்தை அறியாத
அயல் மற்று ஒருவன் பதியில் அந்தணாளர்க்கு அறிவித்தான்
சொல் கேட்ட அருமறையோர் ஆயன் அறியான் என்று அவற்றின்
இச்சை வழியே யான் மேய்ப்பேன் என்று எம் பசுக்கள் தமை கறந்து
பொச்சம் ஒழுகு மாணவகன் பொல்லாங்கு உரைக்க அவன் தாதை
எச்ச தத்தன் தனை அழைமின் என்றார் அவையில் இருந்தார்கள்
ஆங்கு மருங்கு நின்றார்கள் அவ் அந்தணன் தன் திருமனையின்
பாங்கு சென்று மற்றவனை அழைத்து கொண்டு வர பரந்த
ஓங்கு சபையோர் அவனை பார்த்து ஊர் ஆனிரை மேய்த்து உன் மகன் செய்
தீங்கு தன்னை கேள் என்று புகுந்த பரிசு செப்புவார்
அந்தண் மறையோர் ஆகுதிக்கு கறக்கும் பசுக்களான எலாம்
சிந்தை மகிழ்ந்து பரிவினால் திரள கொடுபோய் மேய்பான் போல்
கந்தம் மலிபூம் புனல் மண்ணி மணலில் கறந்து பால் உகுத்து
வந்த பரிசே செய்கின்றான் என்றான் என்று வாய் மொழிந்தார்
மறையோர் மொழி கேட்டு அஞ்சி சிறு மாணவகன் செய்த இது
இறையும் நான் முன் பறிந்திலேன் இதற்கு முன்பு புகுந்து அதனை
நிறையும் பெருமை அந்தணர்காள் பொறுக்க வேண்டும் நீங்கள்
என குறை கொண்டு இறைஞ்சி இனி புகுதில் குற்றம் எனதேயாம் என்றான்
அந்தணாளர் தமை விடை கொண்டு அந்தி தொழுது மனை புகுந்து
வந்த பழி ஒன்று என நினைந்தே மகனார் தமக்கு வாய் நேரான்
இந்த நிலைமை அறிவேன் என்று இரவு கழிந்து நிரை மேய்க்க
மைந்தனார் தாம் போயின பின் மறைந்து சென்றான் மறை முதியோன்
சென்ற மறையோன் திருமகனார் சிறந்த ஊர் ஆன் நிரை கொடு போய்
மன்றல் மருவும் புறவின் கண் மேய்ப்பார் மண்ணி மணற் குறையில்
அன்று திரள கொடு சென்ற அதனை அறிந்து மறைந்த பால்
நின்ற குரவின் மிசை ஏறி நிகழ்வது அறிய ஒளித்து இருந்தான்
அன்பு புரியும் பிரம சாரிகளும் மூழ்கி அரனார்க்கு
முன்பு போல மணல் கோயில் ஆக்கி முகை மென் மலர் கொய்து
பின்பு வரும் ஆன் முலை பொழிபால் பெருகும் குடங்கள் பேணும் இடம்
தன்பால் கொணர்ந்து தாபித்து பிறவும் வேண்டுவன சமைத்தார்
நின்ற விதியின் விளையாட்டால் நிறைந்த அரும் பூசனை தொடங்கி
ஒன்றும் உள்ளத்து உண்மையினால் உடைய நாதன் திரு முடிமேல்
மன்றல் விரவும் திரு பள்ளி தாமம் சாத்தி மஞ்சனமா
நன்று நிறை தீம் பால் குடங்கள் எடுத்து நயப்பு உற்று ஆட்டுதலும்
பரவ மேல் எழும் பரிவும் பழைய பான்மை மிகும்
விரவ மேதக்கவர் பால் மேவும் பெருமை வெளி படுப்பான்
அரவம் மேவும் சடைமுடியார் அருளாம் என்ன அறிவு அழிந்து
குரவ மேவு முது மறையோன் கோப மேவும் படி கண்டான்
கண்ட போதே விரைந்து இழிந்து கடிது சென்று கை தண்டு
கொண்டு மகனார் திரு முதுகில் புடைத்து கொடிதாம் மொழி கூற
தொண்டு புரியும் சிறிய பெரும் தொன்றலார் தம் பெருமான் மேல்
மண்டு காதல் அருச்சனையின் வைத்தார் மற்று ஒன்று அறிந்திலரால்
மேலாம் பெரியோர் பலகாலும் வெகுண்டோ ன் அடிக்க வேறு உணரார்
பாலார் திருமஞ்சனம் ஆட்டும் பணியில் சலியாதது கண்டு
மாலா மறையோன் மிக செயிர்த்து வைத்த திருமஞ்சன குடப்பால்
காலால் இடறி சிந்தினான் கையால் கடமை தலை நின்றான்
சிந்தும் பொழுதில் அது நோக்கும் சிறுவர் இறையில் தீயோனை
தந்தை எனவே அறிந்தவன் தன் தாள்கள் சிந்தும் தகுதியினால்
முந்தை மருங்கு கிடந்த கோல் எடுத்தார்க்கு அதுவே முறைமை யினால்
வந்து மழுவாயிட எறிந்தார் மண் மேல் வீழ்ந்தான் மறையோனும்
எறிந்த அதுவே அர்ச்சனையில் இடையூறு அகற்றும் படையாக
மறிந்த தாதை இருதாளும் துணித்த மைந்தர் பூசனையில்
அறிந்த இடையூறு அகற்றினர் ஆய் முன் போல் அருச்சித்திடப்புகலும்
செறிந்த சடை நீள் முடியாரும் தேவியோடும் விடை ஏறி
பூத கணங்கள் புடை சூழ புராண முனிவர் புத்தேளிர்
வேத மொழிகள் எடுத்து ஏத்த விமல மூர்த்தி திரு உள்ளம்
காதல் கூர வெளி படலும் கண்டு தொழுது மனம் களித்து
பாத மலர்கள் மேல் விழுந்தார் பத்தி முதிர்ந்த பாலகனார்
தொடுத்த இதழி சூழ் சடையார் துணை தாள் நிழல் கீழ் விழுந்தவரை
எடுத்து நோக்கி நம் பொருட்டால் ஈன்ற தாதை விழ எறிந்தாய்
அடுத்த தாதை இனி உனக்கு நாம் என்று அருள் செய்து அணைத்து அருளி
மடுத்த கருணையால் தடவி உச்சி மோந்து மகிழ்ந்து அருள
செங்கண் விடையார் திரு மலர்க்கை தீண்ட பெற்ற சிறுவனார்
அங்கண் மாயை யாக்கையின் மேல் அளவின்று உயர்ந்த சிவமயமாய்
பொங்கி எழுந்த திரு அருளின் மூழ்கி பூ மேல் அயன் முதலாம்
துங்க அமரர் துதி செ சூழ்ந்த ஒளியில் தோன்றினார்
அண்டர் பிரானும் தொண்டர் தமக்கு அதிபன் ஆக்கி அனைத்து நாம்
உண்ட கலமும் உடுப்பனவும் சூடுவனவும் உனக்காக
சண்டீசனும் ஆம் பதம் தந்தோம் என்று அங்கு அவர் பொன் தட முடிக்கு
துண்ட மதிசேர் சடை கொன்றை மாலை வாங்கி சூட்டினார்
எல்லா உலகும் ஆர்ப்பு எடுப்ப எங்கும் மலர் மாரிகள் பொழி
பல்லாயிரவர் கண நாதர் படி ஆடி களி பயில
சொல்லார் மறைகள் துதி செ சூழ் பல்லியங்கள் எழ சைவ
நல்லாறு ஓங்க நாயகமாம் நங்கள் பெருமான் தொழுது அணைந்தார்
ஞாலம் அறி பிழை புரிந்து நம்பர் அருளால் நால் மறையின்
சீலம் திகழும் சேய்ஞலூர பிள்ளையார் தம் திருக்கையில்
கோல மழுவால் ஏறுண்டு குற்றம் நீங்கி சுற்றம் உடன்
மூல முதல்வர் சிவ லோகம் எய்த பெற்றான் முது மறையோன்
வந்து மிகை செய் தாதை தாள் மழுவால் துணித்த மறை சிறுவர்
அந்த உடம்பு தன் உடனே அரனார் மகனார் ஆயினார்
இந்த நிலைமை அறிந்தாரார் ஈறிலாதார் தமக்கு அன்பு
தந்த அடியார் செய்தனவே தவமாம் அன்றோ சாற்றும் கால்
சுந்தர மூர்த்தி சுவாமிகள் துதி
நேசம் நிறைந்த உள்ளத்தால் நீலம் மணி
ஈசன் அடியார் பெருமையினை எல்லா உயிரும் தொழ எடுத்து
தேசம் திரு தொண்ட தொகை முன் பணித்த திருவாளன்
வாச மலர் மென் கழல் வணங்க வந்த பிறப்பை வணங்குவாம்
சருக்கம் க்கு திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
மும்மையால் உலகாண்ட சருக்கம் முற்றிற்று

திருச்சிற்றம்பலம்
திருநின்ற சருக்கம்
திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் மின்பதிப்பு
குலச்சிறை நாயனார் புராணம் மின்பதிப்பு
பெரு மிழலை குறும்ப நாயனார் புராணம் மின்பதிப்பு
காரைக்கால் அம்மையார் புராணம் மின்பதிப்பு
அப்பூதி அடிகள் நாயனார் புராணம் மின்பதிப்பு
திரு நீல நக்க நாயனார் புராணம் மின்பதிப்பு
நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் மின்பதிப்பு
திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்
திருச்சிற்றம்பலம்
திரு நாவுக்கு அரசர் வளர் திரு தொண்டின் நெறி வாழ
வரு ஞான தவமுனிவர் வாகீசர் வாய்மை திகழ்
பெரு நா சீர் பரவல் உறுகின்றேன் பேர் உலகில்
ஒரு நாவுக்கு உரை செய்ய ஒண்ணாமை உணராதேன்
தொன்மை முறை வரு மண்ணின் துகள் அன்றி
நன்மை நிலை ஒழுக்கத்து நலம் சிறந்த குடி மல்கி
சென்னி மதி புனையவளர் மணி மாட செழும் பதிகள்
மன்னி நிறைந்து உளது திரு முனைப்பாடி வளநாடு
புன பண்ணை மணியினோடும் புறவின் நறும் புதுமலரின்
கனப்பெண்ணில் திரை சுமந்து கரை மருங்கு பெரும் பகட்டேர்
இன பண்ணை உழும் எறிந்து உலவி
வனப்பெண்ண வரும் பெண்ணை மா நதி பாய் வளம் பெருகும்
காலெல்லாம் தகட்டு வரால் கரும்பு எல்லாம் கண் பொழி தேன்
பாலெல்லாம் கதிர சாலி பரப்பு எல்லாம் குலை கமுகு
சாலெல்லாம் தரள நிரை தடம் எல்லாம் செங்கழுநீர்
மேலெல்லா ம் அகில் தூபம் விருந்து எல்லாம் திருந்து மனை
கடைஞர் மிடை வயல் குறைத்த கரும்பு குறை பொழி கொழும் சாறு
இடை தொடுத்த தேன் கிழிய இழிந்து ஒழுகு நீத்தம் உடன்
புடை பரந்து ஞிமிறொலி புது புனல் போல் மடை உடைப்ப
உடை மடை கரும்படு கட்டியின் அடைப்ப ஊர்கள் தொறும்
கரும் கதலி பெருங்குலைகள் களிற்று கைம் முகம் காட்ட
மருங்கு வளர் கதிர செந்நெல் புரவி முகம் காட்ட
பெருஞ்சகடு தேர் காட்ட வினைஞர் ஆர்ப்பொலி பிறங்க
நெருங்கிய சாதுரங்க பல நிகர்பனவாம் நிறை மருதம்
நறையாற்றுங் கமுகு நவ மணி கழுத்தின் உடன் கூந்தல்
பொறை ஆற்றா மகளிர் என புறம்பு அலை தண்டலை வேலி
துறை ஆற்ற மணி வண்ண சுரும்பு இரைக்கும் பெரும் பண்ணை
நிறை ஆற்று நீர கொழுந்து படர்ந்தேறும் நிலைமையதால்
மரு மேவு மலர் மேய மா கடலினு படியும்
உரு மேகம் என மண்டி உகைத்த கரும் கன்று போல்
வரு மேனி செங்கண் வரால் மட முட்ட பால் சொரியும்
கரு மேதி தனை கொண்டு கரை புரள்வ திரை வாவி
மொய்யளி சூழ் நிரைநீல முழு வலயங்களின் அலை
செய்ய தளிர் நறு விரலில் செழு முகையின் நகம் சிறப்ப
மெய்யொளியின் நிழல் காணும் ஆடி என வெண் மதியை
வைய மகள் கை அணைத்தால் போல் உயர்வ மலர சோலை
எயில் குலவும் வளம் பதிகள் எங்கும் மணம் தங்கும் வயல்
பயிர கண்வியல் இடங்கள் பல பரந்து உயர் நெற் கூடுகளும்
வெயில் கதிர்மென் குழை மகளிர் விரவிய மாடமும் மேவி
மயில் குலமும் முகல் மாறாட மருங்கு
மறம் தரு தீ நெறி மாற மணிகண்டர் வாய்மை
அறம் தரு நாவுக்கரசும் ஆலால சுந்தரரும்
பிறந்து அருள உளதானால் நம் அளவோ பேர் உலகில்
சிறந்த திருமுனை பாடி திறம் பாடும் சீர பாடு
இவ் வகைய திரு நாட்டில் எனை பல ஊர்களும் என்றும்
மெய் வளங்கள் ஓங்க வரும் மேன்மையன ஆங்கு அவற்றுள்
சைவ நெறி ஏழ் உலகும் பாலிக்கும் தன்மையினால்
தெய்வ நெறி சிவம் பெருக்கும் திருவாமூர்
ஆங்கு வன முலைகள் சுமந்து அணங்குவன மகளிர் இடை
ஏங்குவன நூபுரங்கள் இரங்குவன மணி காஞ்சி
ஓங்குவன மாட நிரை ஒழுகுவன வழுவில் அறம்
நீங்குவன தீங்கு நெறி நெருங்குவன பெரும் குடிகள்
மலர் நீலம் வயல் காட்டும் மைஞ் ஞீலம் மதி
அலர் நீடு மறு காட்டும் அணி ஊசல் பல
புலர் நீலம் இருள் காட்டும் பொழுது உழவர் ஒலி
கல நீடு மனை காட்டும் கரை காட்டா பெருவளங்கள்
தலத்தின் கண் விளங்கிய தனி பதியில் அனைத்து வித
நலத்தின் கண் வழுவாத நடை மரபில் குடி நாப்பண்
விலங்கின் மனை ஒழுக்கத்தின் மேதக்க ந்஢லைவேளாண்
குலத்தின் கண் வரும் பெருமை குறுக்கையர் தம் குடி விளங்கும்
குடியின் மேல் தோன்றலாய பெரும் தன்மையினார்
மிக்க மனை அறம் புரிந்து விருந்து அளிக்கும் மேன்மையினார்
ஒக்கல் வளர் பெரும் சிறப்பின் உளர் ஆனார்
திக்கு நிலவும் பெருமை திகழ வரும் புகழனார்
புகழனார் தமக்கு உரிமை பொருவில் குலக்குடியின் கண்
மகிழவரு மணம் புணர்ந்த மாதினியார் மணி வயிற்றில்
நிகழும் மலர செங்கமல நிரை இதழின் அகவயினில்
திகழ வரு திரு அனைய திலகவதியார் பிறந்தார்
திலகவதியார் பிறந்து சில முறை ஆண்டு அகன்றதன் பின்
அலகில் கலை துறை தழைப்ப அரும் தவத்தோர் நெறிவாழ
உலகில் வரும் இருள் நீக்கி ஒளி விளங்கு கதிர் போல் பின்
மலரும் மருள் நீக்கியார் வந்து அவதாரம் செய்தார்
மாதினியார் திரு வயிற்றின் மன்னிய சீர புகனார்
காதலனார் உதித்த தற்பின் கடன் முறைமை மங்கலங்கள்
மேதகு நல் வினை சிறப்ப விரும்பிய பாராட்டினுடன்
ஏதமில் பல் கிளை போற்ற இளங் குழவி பதம் கடந்தார்
மருள் நீக்கியார் சென்னி மயிர் நீக்கும் மணவினையும்
தெருண் நீர்ப்பன் மாந்தர் எலாம் மகிழ் சிறப்ப செய்து அதற்பின்
பொருள் நீத்தம் கொள வீசி புலன் கொளுவ மன முகிழ்த்த
சுருள் நீக்கி மலர் விக்கும் கலை பயில தொடங்கு வித்தார்
தந்தையார் களி மகிழ்ச்சி தலை சிறக்க முறைமையினால்
சிந்தை மலர்ந்து எழும் உணர்வில் செழும் கலையின் திறங்கள் எல்லாம்
முந்தை முறைமையில் பயின்று முதிர அறிவு எதிரும் வகை
மைந்தனார் மறு ஒழித்த இளம் பிறை போல் வளர் கின்றார்
அந்நாளில் திலகவதியாருக்கு ஆண்டு ஆறு இரண்டின்
முன்னாக ஒத்த குல முதல் வேளாண் குடி தலைவர்
மின்னார் செஞ்சடை அண்ணல் மெய் அடிமை விருப்புடையார்
பொன்னாரும் மணி மௌலி புரவலன் பால் அருள் உடையார்
ஆண் தகைமை தொழிலின் கண் அடல் அரியேறு என உள்ளார்
காண் தகைய பெருவனப்பில் கலிப்பகையார் எனும் பெயரார்
பூண்ட கொடை புகழனார் பால் பொருவின் மகள் கொள்ள
வேண்டி எழுங் காதலினால் மேலோரை செலவிட்டார்
அணங்கு அனைய திலகவதியார் தம்மை ஆங்கு அவர்க்கு
மணம் பேசி வந்தவரும் வந்தபடி அறிவிப்ப
குணம் பேசி குலம் கோதில் சீர
பணம் கொள் அரவு அகல் அல்குல் பை தொடியை மணம் நேர்ந்தார்
கன்னி திரு தாதையார் மணம் இசைவு கலிப்பகையார்
முன் அணைந்தார் அறிவிப்ப வதுவை வினை முடிப்பதன்
மன்னவற்கு வடபுலத்து ஓர் மாறு ஏற்க மற்றவர்மேல்
அன்னவர்க்கு விடை கொடுத்தான் அவ்வினை மேல் அவர் அகன்றார்
வேந்தற்கு உற்று உழி வினை மேல் வெஞ்சமத்தில் விடை கொண்டு
போந்த வரும் பொரு படையும் உடன் கொண்டு சில நாளில்
காய்ந்த சின பகை புலத்தை கலந்து கடும் சமர கடலை
நீந்துவார் நெடு நாள்கள் நிறை வெம் போர துறை விளைத்தார்
ஆய நாள் இடை இப்பால் அணங்கு அனையாள் தனை பயந்த
தூயகுல புகழனார் தொன்று தொடு நிலையாமை
மேய வினை பயத்தாலே இவ் உலகை விட்டு அகல
தீய அரும் பிணி உழந்து விண் உலகில் சென்று அடைந்தார்
மற்றவர் தாம் உயிர் நீப்ப மனைவியார் மாதினியார்
சுற்றம் உடன் மக்களையும் துகளாவே நீத்து
பெற்றிமையால் உடன் என்றும் பிரியாத உலகு எய்தும்
கற்பு நெறி வழுவாமல் கணவனார் உடன் சென்றார்
தாதையாரும் பயந்த தாயாரும் இறந்த அதன் பின்
மாதரார் திலகவதியாரும் அவர் பின் வந்த
காதலனார் மருண் நீக்கியாரும் மன கவலையினால்
பேது உறு நல் சுற்றமொடும் பெரும் துயரில் அழுந்தினார்
ஒருவாறு பெரும் கிளைஞர் மனம் தேற்ற துயர் ஒழிந்து
பெரு வானம் அடைந்தவர்க்கு செய் கடன்கள் பெருக்கினார்
மருவார்மேல் மன்னவற்காய் மலை போம் கலிப்பகையார்
பொருவாரும் போர களத்தில் உயிர் கொடுத்து புகழ் கொண்டார்
வெம் முனை மேல் கலிப்பகையார் வேல் வேந்தன் ஏவ போய்
அம் முனையில் பகை முருக்கி அமர் உலகம் ஆள்வதற்கு
தம் உடைய கடன் கழித்த பெரு வார்த்தை தலம் சாற்ற
செம்மலர் மேல் திரு அனைய திலகவதியார் கேட்டார்
எந்தையும் எம் அனையும் அவர்க்கு என கொடுக்க இசைந்தார்கள்
அந்த முறையால் அவர்க்கே உரியது நான் ஆதலினால்
இந்த உயிர் அவர் உயிரோடு இசைவிப்பன் என துணிய
வந்தவர் தம் அடி இணை மேல் மருண் நீக்கியார் விழுந்தார்
நிலையில் மிக புலம்பி அன்னையும் அத்தனும் அகன்ற
பின்னையும் நான் உமை வணங்க பெறுதலின் உயிர் தரித்தேன்
என்னை இனி தனி கைவிட்டு ஏகுவீர் எனில் யானும்
முன்னம் உயிர் நீப்பன் என மொழிந்து இடரின் அழுந்தினார்
தம்பியார் உளர் ஆக வேண்டும் என வைத்த தயா
உம்பர் உலகு அணைய உறு நிலை விலக்க உயிர் தாங்கி
அம் பொன் மணி நூல் தாங்காது அனைத்து உயிர்க்கும் அருள் தாங்கி
இம்பர் மனை தவம் புரிந்து திலகவதியார் இருந்தார்
மாசின் மன துயர் ஒழிய மருண் நீக்கியார் நிரம்பி
தேச நெறி நிலையாமை கண்டு அறங்கள் செய்வார்
காசினி மேல் புகழ் விளங்க நிதி அளித்து கருணையினால்
ஆசில் அற சாலைகளும் தண்ணீர பந்தரும் அமைப்பார்
கா வளர்த்தும் குளம் தொட்டும் கடப்பாடு வழுவாமல்
மேவினர்க்கு வேண்டுவன மகிழ்ந்து அளித்தும் விருந்து
நாவலர்க்கு வளம் பெருக நல்கியும் நால் நிலத்து உள்ளோர்
யாவர்க்கும் தவிராத ஈகை வினை துறை நின்றார்
நில்லாத உலகு இயல்பு கண்டு நிலையா வாழ்க்கை
அல்லேன் என்று அற துறந்து சமயங்களான வற்றின்
நல்ல்லாறு தெரிந்துணர நம்பர் அருளாமை யினால்
கொல்லாமை மறைந்து உறையும் அமண் சமயம் குறுகுவார்
பாடலி புத்திரம் என்னும் பதி அணைந்து சமண் பள்ளி
மாடணைந்தார் வல்லமணர் மருங்கு அணைந்து மற்றவர்க்கு
வீடு அறியும் நெறி இதுவே என மெய் போல் தங்களுடன்
கூடவரும் உணர்வு கொள குறி பலவும் கொளுவினார்
அங்கு அவரும் அமண் சமயத்து அரும் கலை நூல் ஆன எலாம்
பொங்கும் உணர்வுற பயின்றே நெறியில் புலன் சிறப்ப
துங்க முழு உடல் சமணர் சூழ்ந்து மகிழ்வார் அவர்க்கு
தங்களில்ன் மேலாம் தரும சேனர் எனும் பெயர் கொடுத்தார்
அத்துறையின் மீ கூரும் அமைதியினால் அகல் இடத்தில்
சித்த நிலை அறியாதாரையும் வாதின் கண்
உய்த்த உணர்வினில் வென்றே உலகின் கண் ஒளி உடைய
வித்தகராய் அமண் தலைமையினில் மேம் பட்டார்
நெறியின் மிக்கார் அவர் ஒழுக ஆன்ற தவ
செந்நெறியின் வைகும் திலகவதியார் தாமும்
தொன்னெறியின் சுற்ற தொடர்பு ஒழி தூய சிவ
நன்னெறியே சேர்வதற்கு நாதன் தாள் நண்ணுவார்
பேராத பாச பிணிப்பு ஒழி பிஞ்ஞகன் பால்
ஆராத அன்பு பெற ஆதரித்த அம் மடவார்
நீரார் கெடில வட நீள் கரையில் நீடு பெரும்
சீரார் திருவதிகை வீரட்டானம் சேர்ந்தார்
சென்று திரு வீரட்டானத்து இருந்த செம் பவள
குன்றை அடி பணிந்து கோதில் சிவ சின்னம்
அன்று முதல் தாங்கி ஆர்வம் உற தம் கையால்
துன்று திரு பணிகள் செ தொடங்கினார்
புலர்வதன் முன் திருவலகு பணி மாறி புனி அகன்ற
நலம் மலி ஆன் சாணத்தால் நன்கு திரு மெழுக்கிட்டு
மலர் கொய்து கொடு வந்து மாலைகளும் தொடுத்து அமைத்து
பலர் புகழும் பண்பினால் திருப்பணிகள் பல செய்தார்
நாளும் மிகும் பணி செய்து குறைந்து அடையும் நன்னாளில்
கேளுறும் அன்புற ஒழுகும் கேண்மையினார் பின் பிறந்தார்
கோளுறு தீவினை முந்த பர சமயம் குறித்து அதற்கு
மூளும் மன கவலையினால் முற்ற வரும் துயர் உழந்து
தூண்டு தவ விளக்கு அனையார் சுடர் ஒளியை தொழுது என்னை
ஆண்டு அருளும் நீராகில் அடியேன் பின் வந்தவனை
ஈண்டு வினை பர குழி நின்றும் எடுத்து ஆள
வேண்டும் என பல முறையும் விண்ணப்பம் செய்தனரால்
தவம் என்று பாய் இடுக்கி தலை பறித்து நின்று உண்ணும்
அவம் ஒன்று நெறி வீழ்வான் வீழாமே அருளும் என
சிவம் ஒன்று நெறி நின்ற திலகவதியார் பரவ
பவம் ஒன்றும் வினை தீர்ப்பார் திரு உள்ளம் பற்றுவார்
மன்னு தபோ தனியார்க்கு கனவின் கண் மழ விடையார்
உன்னுடைய மன கவலை ஒழி நீ உன் உடன் பிறந்தான்
முன்னமே முனியாகி எனை அடை தவம் முயன்றான்
அன்னவனை இனி சூலை மடுத்து ஆள்வான் என அருளி
பண்டு புரி நல் தவத்து பழுதின் அளவில் இறை வழுவும்
தொண்டரை ஆள தொடங்கும் சூலை வேதனை தன்னை
கண் தரு நெற்றியர் அருள கடும் கனல் போல் அடும் கொடிய
மண்டு பெரும் சூலை அவர் வயிற்றின் இடை புக்கதால்
அடைவில் அமண் புரி தரும சேனர் வயிற்று அடையும் அது
வட அனலும் கொடு விடமும் வச்சிரவும் பிறவுமாம்
கொடிய எலாம் ஒன்றாகும் என குடரின் அகம் குடை
படர் உழந்து நடுங்கி அமண் பாழியறை இடை விழுந்தார்
சமயத்து இடை தாம் முன் அதிகரித்து வாய்த்து வரும்
விச்சைகளால் தடுத்திடவும் மேல் மேலும் மிக முடுகி
உச்சம் உற வேதனை நோய் ஓங்கி எழ ஆங்கு அவர் தாம்
நச்சரவின் விடம் தலை கொண்டு என மயங்கி நவையுற்றார்
அவர் நிலைமை கண்ட அதற்பின் அமண் கையர் பலர் ஈண்டி
கவர் கின்ற விடம் போல் முன் கண்டு அறியா கொடும் சூலை
இவர் தமக்கு வந்தது இனி யாது செயல் என்று அழிந்தார்
தவம் என்று வினை பெருக்கி சார்பு அல்லா நெறிசார்வார்
புண் தலைவன் முருட்டு அமணர் புலர்ந்து செயல் அறியாது
குண்டிகை நீர் மந்திரித்து குடிப்பித்தும் தணியாமை
கண்டு மிக பீலி கொடு கால் அளவும் தடவி இடவும்
பண்டையினும் நோவு மிக பரிபவத்தால் இடர் உழந்தார்
தாவாத புகழ தரும சேனருக்கு வந்த பிணி
ஓவாது நின்று இடலும் ஒழியாமை உணர்ந்தாராய்
நாம் என் செய்கோம் என்று அழிந்த
போவார்கள் இது நம்மால் போக்க அரிதாம் என புகன்று
குண்டர்களும் கை விட்டார் கொடும் சூலை மிசை கொண்டு
மண்டி மிக மேல் மேலும் பெருகுதலால் மதி மயங்கி
பண்டை உறவு உணர்ந்தார்க்கு திலகவதியார் உளரா
கொண்டு அவர்பால் ஊட்டுவான் தனைவிட்டார் குறிப்பு உணர்த்த
ஆங்கு அவன் போ திருவதிகை தணை அடைய அரும் தவத்தார்
பூங்கமழ் நந்தனவனத்தின் புறம்பு அணை கண்டு இறைஞ்சி
ஈங்கு யான் உமக்கு இளையார் ஏவலினால் வந்தது என
தீங்கு உளவோ என வினவ மற்றவனும் செப்புவான்
கொல்லாது சூலை நோய் குடர் முடக்கி தீராமை
எல்லாரும் கை விட்டார் இது செயல் என் முன் பிறந்த
நல்லாள் பால் சென்று இயம்பி நான் உய்யும்படி கேட்டு இங்கு
அல்லாகும் பொழுது அணைவாய் என்றார் என்று அறிவித்தான்
என்று அவன் முன் கூறுதலும் யான் அங்கு உன் உடன் போந்து
நன்று அறியா அமண் பாழி நண்ணுகிலேன் எனும் மாற்றம்
சென்று அவனுக்கு உரை என்று திலகவதியார் மொழிய
அன்று அவனும் மீண்டு போ புகுந்தபடி அவர்க்கு உரைத்தான்
அவ் வார்த்தை கேட்டலுமே அயர்வு எய்தி இதற்கு இனி யான்
எவ்வாறு செய்வன் என ஈசர் அருள் கூடுதலால்
ஒவ்வா புன் சமயத்து ஒழியா இத்துயர் ஒழி
செவ்வாறு சேர் திலக வதியார் தாள் சேர்வன் என
எடுத்த மன கருத்து உய்ய எழுதலால் எழு முயற்சி
அடுத்தலுமே அயர்வு ஒதுங்க திருவதிகை அணைவதனுக்கு
உடுத்து உழலும் பாய் ஒழிய உறி உறு குண்டிகை ஒழி
தொடுத்த பீலியும் ஒழி போவதற்கு துணிந்து எழுந்தார்
பொய் தரும் மால் உள்ளத்து புன் சமணர் இடம் கழிந்து
மெய் தருவான் நெறி அடைவார் வெண் புடைவை
கை தருவார் தமை ஊன்றி காணாமே இரவின் கண்
செய் தவ மாதவர் வாழும் திருவதிகை சென்று அடைவார்
சுலவி வயிற்று அகம் கனலும் சூலை நோயுடன் தொடர
குலவி எழும் பெருவிருப்பு கொண்டு அணை குலவரை போன்று
இலகு மணி மதில் சோதி எதிர் கொள் திருவதிகையினில்
திலக வதியார் இருந்த திரு மடத்தை சென்று அணைந்தார்
வந்து அணைந்து திலகவதியார் அடிமேல் உற வணங்கி
நம் தமது குலம் செய்த நல் தவத்தின் பயன் அனையீர்
இந்த உடல் கொடும் சூலை கிடைந்து அடைந்தேன் இனி மயங்காது
உய்ந்து கரை ஏறுநெறி உரைத்து அருளும் என
தாள் இணை மேல் விழுந்து அயரும் தம்பியார் தமை நோக்கி
ஆள் உடைய தம் பெருமான் அருள் நினைந்து கை தொழுது
கோளில் பரசமய நெறி குழியில் விழுந்து அறியாது
மூளும் அரும் துயர் உழந்தீர் எழுந்தீர் என மொழிந்தார்
மற்ற வுரை கேட்டலும் மருண் நீக்கியார் தாமும்
உற்ற பிணி உடல் நடுங்கி எழுந்து தொழ உயர் தவத்தோர்
கற்றை வேணியர் அருளே காணும் இது கழல் அடைந்தோர்
பற்று அறுப்பார் தமை பணிந்து பணி செய்வீர் என பணித்தார்
என்ற பொழுது அவர் அருளை எதிர் ஏற்று கொண்டு இறைஞ்ச
நின்ற தபோதனியாரும் நின்மலன் பேர் அருள் நினைந்து
சென்று திரு வீரட்டம் புகுவதற்கு திரு கயிலை
குன்று உடையார் திரு நீற்றை அஞ்சு எழுத்து ஓதி கொடுத்தார்
திரு வாளன் நீறு திலகவதியார்
பெரு வாழ்வு வந்தது என பெருந்தகையார் பணிந்து ஏற்ற அங்கு
உருவார அணிந்து தமக்குற்ற இடத்து உய்யும் நெறி
தருவாரா தம் முன்பு வந்தார் பின் தாம்
நீறு அணிந்தார் அகத்து இருளும் நிறை கங்குல் புறத்து
மாற வரும் திரு பள்ளி எழுச்சியினில் மாதவம் செய்
சீர் அடியார் திரு அலகும் மெழுக்கும் தோண்டியும்
ஆறு அணிந்தார் கோயிலின் உள் அடைந்தவரை கொடு புக்கார்
திரை கெடில வீரட்டானத்து இருந்த செங்கனக
வரை சிலையார் பெரும் கோயில் தொழுது வலம் கொண்டு இறைஞ்சி
தரை தலத்தின் மிசை வீழ்ந்து தம்பிரான் திரு அருளால்
உரை தமிழ் மாலைகள் சாத்தும் உணர்வு பெற உணர்ந்து உரைப்பார்
நீற்றால் நிறைவு ஆகிய மேனியுடன்
நிறை அன்பு உறு சிந்தையில் நேசம் மிக
மாற்றார் புரம் மாற்றிய வேதியரை மருளும்
பிணி மாயை அறுத்திடுவான்
கூற்று ஆயினவாறு விலக்ககிலீர் என
நீடிய கோதில் திருப்பதிகம்
போற்றால் உலகு ஏழின் வரும் துயரம்
போமாறு எதிர் நின்று புகன்றனரால்
மன்னும் பதிகம் அது பாடியபின்
வயிறு உற்று அடு சூலை மறப்பிணிதான்
நின்ற நிலை கண் அகன்றிடலும்
அடியேன் உயிரோடு அருள் தந்தது எனா
செ நின்ற பரம் பொருள் ஆனவர் தம்
திருவாரருள் பெற்ற சிறப்பு உடையோர்
முன் நின்ற தெருட்சி மருட்சியினால்
முதல்வன் கருணை கடல் மூழ்கினாரே
அங்கங்கள் அடங்க உரோமம்
எலாம் அடை புளகம் கண் முகிழ்த்து அலர
பொங்கும் புனல் கண்கள் பொழிந்து
இழி புவி மீது விழுந்து புரண்டு அயர்வார்
இங்கு என் செயல் உற்ற பிழைப்பு
அதனால் ஏறாத பெருந்திடர் ஏறிட நின்
தங்கும் கருணை பெரு வெள்ளம்
இட தகுமோ என இன்னன தாம் மொழிவார்
பொய் வாய்மை பெருக்கிய
புன் பொறியில் சமண் நீசர் புற துறையாம்
அவ்வாழ் குழியின் கண் விழுந்து
எழுமாறு அறியாது மயங்கி அவம் புரிவேன்
மை வாச நறும் குழல் மா மலையாள்
மணவாளன் மலர்க்கழல் வந்து அடையும்
இவ் வாழ்வு பெற தரு சூலையினுக்கு
எதிர்செய் குறை என் கொல் என தொழுவார்
மேவுற்ற இவ் வேலையில்
நீடிய சீர் வீரட்டம் அமர்ந்த பிரான் அருளால்
பாவுற்று அலர் செந்தமிழின் சொல் வள
பதிக தொடைபாடிய பான்மையினால்
நாவுக்கு அரசு என்று உலகு ஏழினும்
நின் நன்நாமம் நயப்புற மன்னுக என்று
யாவர்க்கும் வியப்புற மஞ்சு உறைவான்
இடையே ஒருவாய்மை எழுந்ததுவே
தன்மை நிகழ்ந்துழி
நாவின் மொழிக்கு இறை ஆகிய அன்பரும் நெடுநாள்
சித்தம் திகழ் தீவினையேன் அடையும்
திருவோ இது என்று தெருண்டு அறியா
அத்தன்மையன் ஆகிய இராவணனுக்கு
அருளும் கருணை திறமான அதன்
மெ தன்மை அறிந்து துதிப்பதுவே
மேல் கொண்டு வணங்கினர் மெய்யுறவே
பரசும் கருணை பெரியோன்
அருள பறி புன் தலையோர் நெறி பாழ்பட வந்து
அரசு இங்கு அருள் பெற்று உலகு
உய்ந்தது எனா அடியார் புடை சூழ் அதிகை பதி தான்
முரசம் பட கந்துடி தண்ணுமை யாழ்
முழவம் கிளை துந்துபி கண்டை உடன்
நிரை சங்கு ஒலி எங்கும் முழங்குதலால்
நெடு மா கடல் என்ன நிறைந்துளதே
மையல் துறை ஏறி மகிழ்ந்து
அலர் சீர் வாகீசர் மனத்தொடு வாய்மையுடன்
மெய் உற்ற திருப்பணி செய்பவராய்
விரவும் சிவ சின்னம் விளங்கிடவே
எய்துற்ற தியானம் அறா உணர்வும்
ஈறு இன்றி எழும் திருவாசகமும்
கையில் திகழும் உழவாரமுடன் கை
கொண்டு கலந்து கசிந்தனரே
மெய்ம்மை பணி செய்த
விருப்பு அதனால் விண்ணோர் தனி நாயகனார் கழலில்
தம் இச்சை நிரம்ப வரம் பெறும்
தன்மை பதி மேவியதா பதியார்
பொய்மை பிணி விட்டவர்
முன் போதும் பிணி விட்டருளி பொருளா
எம்மை பணிகொள் கருணை திறம்
இங்கு யார் பெற்றனர் என்ன இறைஞ்சினரே
இன்ன தன்மையில் இவர் சிவ நெறியினை எய்தி
மன்னு பேர் அருள் பெற்று இடர் நீங்கைய வண்ணம்
பன்னு தொன்மையில் பாடலி புத்திர நகரில்
புன்மை யே புரி அமணர் தாம் கேட்டு அது பொறாராய்
தரும சேனர்க்கு வந்த தடுப்ப அரும் சூலை
ஒருவராலும் இங்கு ஒழிந்திடாமையின் அவர் போ
பெருகு சைவரா பெயர்ந்து தம் பிணி ஒழித்து உய்ந்தார்
மருவு நம் பெரும் சமயம் வீழ்ந்தது என மருள்வார்
மலையும் பல் சமயங்களும் வென்று மற்றவரால்
நிலையும் பெற்ற இந்நெறி இனி அழிந்தது என்று அழுங்கி
கொலையும் பொய்மையும் இலம் என்று கொடுமையே புரிவோர்
தலையும் பீலியும் தாழ வந்து ஒரு சிறை சார்ந்தார்
இவ்வகை பல அமணர்கள் துயருன் ஈண்டி
மெய் வகை திறம் அறிந்திடில் வேந்தனும் வெகுண்டு
சைவனாகி நம் விருத்தியும் தவிர்க்கும் மற்று இனி நாம்
செய்வது என் என வஞ்சனை தெரிந்து சித்திரிப்பார்
தவ்வை கைவத்து நிற்றலின் தரும சேனரும் தாம்
பொய் வகுத்தது ஓர் சூலை தீர்ந்திலது என போய் இங்கு
எவ்வ மாக அங்கு எய்தி நம் சமய அங்கனமும்
தெய்வ நிந்தையும் செய்தனர் என சொல தெளிந்தார்
சொன்ன வண்ணமே செய்வது துணிந்த துன் மதியோர்
முன்னம் நாம் சென்று முறைப்படுவோம் என முயன்றே
இன்ன தன்மையில் இருள் குழாம் செல்வது போல
மன்னன் ஆகிய பல்லவன் நகரில் வந்து அணைந்தார்
உடை ஒழிந்து ஒரு பேச்சு இடை இன்றி நின்று உண்போர்
கடை அணைந்தவன் வாயில் காவலருக்கு நாங்கள்
அடைய வந்தமை அரசனுக்கு அறிவியும் என்ன
இடை அறிந்து புக்க வரும் தம் இறைவனுக்கு இசைப்பார்
அடிகண்மார் எல்லாரும் ஆகுலமாய் மிக அழிந்து
கொடி நுடங்கு திருவாயில் புறத்து அணைந்தார் என கூற
வடி நெடுவேல் மன்னவனும் மற்றவர் சார்பு ஆதலினால்
கடிது அணைவான் அவர்க்கு உற்றது என் கொல் என கவன்று உரைத்தான்
கடை காவல் உடையார்கள் புகுத விட காவலன் பால்
நடை ஆடும் தொழில் உடையார் நண்ணி தாம் எண்ணியவாறு
உடையார் ஆகிய தரும சேனர் பிணி உற்றாரா
சடையானுக்கு ஆளாய் நின் சமயம் ஒழித்தார் என்றார்
விரை அலங்கல் பல்லவனும் அது கேட்டு வெகுண்டு எழுந்து
புரை உடைய மனத்தினராய் போவதற்கு பொ பிணி கொண்டு
உரை சிறந்த சமயத்தை அழித்து ஒழி பெறுவதே
கரையில் தவத்தீர் இதனுக்கு என் செய்வது என கனன்றான்
தலை நெறி ஆகிய சமயம் தன்னை அழித்து உன்னுடைய
நிலை நின்ற தொல் வரம்பின் நெறி அழித்த பொறி இலியை
அலை புரிவாய் என பரவி வாயால் அஞ்சாது உரைத்தார்
கொலை புரியா நிலை கொண்டு பொய் ஒழுகும் அமண் குண்டர்
அருள் கொண்ட உணர்வு இன்றி நெறிகோடி அறிவென்று
மருள் கொண்ட மன்னவனும் மந்திரிகள் தமை நோக்கி
தெருள் கொண்டோ ர் இவர் சொன்ன தீயோனை செறுவதற்கு
பொருள் கொண்டு விடாது என் பால் கொடுவாரும் என புகன்றான்
அரசனது பணிதலை நின்ற அமைச்சர்களும் அந்நிலையே
முரசு அதிரும் தானையொடு முன் சென்று முகில் சூழ்ந்து
விரை செறியும் சோலை சூழ் திருவதிகை தனை மேவி
பரச பற்று அறுத்த பான்மையினார் பால் சென்றார்
சென்று அணைந்த அமைச்சர் உடன் சேனை வீரரும் சூழ்ந்து
மின் தயங்கு புரிவேணி வேதியனார் அடியவரை
இன்று நுமை அரசன் அழைக்க எமை விடுத்தான் போதும் என
நின்றவரை நேர் நோக்கி நிறை தவத்தோர் உரை செய்வார்
நாம் ஆர்க்கும் குடி அல்லோம் என்று எடுத்து நான்மறையின்
கோமானை நதியின் உடன் குளிர் மதி வாழ் சடை யானை
தேமாலை செந்தமிழின் செழும் திரு தாண்டகம் பாடி
ஆமாறு நீர் அழைக்கும் அடைவிலம் என்று அருள் செய்தார்
ஆண்ட அரசருள் செ கேட்ட வரும் அடி வணங்கி
வேண்டியவர கொண்டு ஏக விடை உகைத்தார் திருத்தொண்டர்
ஈண்டு வரும் வினைகளுக்கு எம்பிரான் உளன் என்று இசைந்து இருந்தார்
மூண்ட சின போர் மன்னன் முன் அணைந்து அங்கு அறிவித்தார்
பல்லவனும் அது கேட்டு பாங்கு இருந்த பாய் உடுக்கை
வல் அமணர் தமை நோக்கி மற்று அவனை செய்வது இனி
சொல்லும் என அறம் துறந்து தமக்கு உறுதி அறியாத
புல் அறிவோர் அஞ்சாது நீற்று அறையில் இட புகன்றார்
அருகு அணைந்தார் தமை நோக்கி அவ் வண்ணம் செய்க என
பெருகு சின கொடுங் கோலான் மொழிந்திடலும் பெரு தகையை
உருகு பெரும் தழல் வெம்மை நீற்று அறையின் உள் இருத்தி
திருகு கரும் தாள் கொளுவி சேமங்கள் செய்து அமைத்தார்
ஆண்ட அரசு அதன் அகத்துள் அணைந்த பொழுது அம்பலத்து
தாண்டவம் முன் புரிந்து அருளும் தாள் நிழலை தலை கொண்டே
ஈண்டு வரும் துயர் உளவோ ஈசன் அடியார்க்கு என்று
மூண்டமனம் நேர் நோக்கி முதல்வனையே தொழுது இருந்தார்
வெய்ய நீற்று அறையது தான் வீங்கு இளவேனில் பருவம்
தை வரும் தண் தென்றல் அணை கழுநீர தடம்
மொய் ஒளி வெண் நிலவு அலர்ந்து முரன்ற யாழ் ஒலியினதாய்
ஐயர் திருவடி நீழல் அருள் ஆகி குளிர்ந்ததே
மாசு இல் மதி நீடுபுனல் மன்னி வளர் சென்னியனை
பேச இனியானை உலக ஆளுடைய பிஞ்ஞகனை
ஈசனை எம்பெருமானை எவ் உயிரும் தருவானை
ஆசை இல் ஆரா அமுதை அடி வணங்கி இனிது இருந்தார்
ஓர் எழுநாள் கழிந்து அதன்பின் உணர்வில் அமணரை அழைத்து
பாரும் இனி நீற்று அறையை என உரைத்தான் பல்லவனும்
கார் இருண்ட குழாம் போலும் உரு உடைய
தேரும் நிலை இல்லாதார் நீற்று அறையை திறந்தார்கள்
ஆனந்த வெள்ளத்தின் இடை மூழ்கி அம்பலவர்
தேன் உந்து மலர் பாதத்து அமுது உண்டு தெளிவு எய்தி
ஊனம் தான் இலர் ஆகி உவந்து இருந்தார் தமை கண்டே
ஈனம் தங்கியது இலதாம் என்ன அதிசயம் என்றார்
அதிசயம் அன்றிது முன்னை அமண் சாதகத்தால்
இது செய்து பிழைத்து இருந்தான் என வேந்தற்கு உரை
மதி செய்வது இனி கொடிய வல் விடம் ஊட்டுவது என்று
முதிர வரும் பாதகத்தோர் முடை வாயால் மொழிந்தார்கள்
ஆங்கு அது கேட்டலும் கொடிய அமண் சார்பால் கெடு மன்னன்
ஓங்கு பெருமையினால் நஞ்சு ஊட்டும் என உரைப்ப
தேங்காதார் திருநாவுக்கரையரை தீய விட
பாங்கு உடைய பால் அடிசில் அமுது செ பண்ணினார்
நஞ்சும் அமுது ஆம் எங்கள் நாதன் அடியார்க்கு என்று
வஞ்சம் மிகு நெஞ்சு உடையார் வஞ்சனையாம் படி அறிந்தே
செஞ்சடையார் சீர் விளக்கும் திறல் உடையார் தீ விடத்தால்
வெஞ்சமணர் இடுவித்த பால் அடிசில் மிசைந்து இருந்தார்
பொடி ஆர்க்கும் திருமேனி புனிதர்க்கு புவனம்கள்
முடிவாக்கும் துயர் நீங்க முன்னை விடம் அமுதானால்
படியார்க்கும் அறி அரிய பசுபதியார் தம் உடைய
அடியார்க்கு நஞ்சு அமுதம் ஆவது தான் அற்புதமோ
அவ் விடத்தை ஆண்ட அரசு அமுது செய்து முன் இருப்ப
வெவ் விடமும் அமுது ஆயிற்று என அமணர் வெரு கொண்டே
இவ் விடத்தில் இவன் பிழைக்கில் எமக்கு எல்லாம் இறுதி என
தெவ் விடத்து செயல் புரியும் காவலற்கு செப்புவார்
நஞ்சு கலந்து ஊட்டிடவும் நம் சமயத்தினில் விடம் தீர்
தஞ்சமுடை மந்திரத்தால் சாதியா வகை தடுத்தான்
எஞ்சும் வகை அவற்கு இலதேல் எம் உயிரும் நின் முறையும்
துஞ்சுவது திடம் என்றார் சூழ் வினையின் துறை நின்றார்
மற்றவர் தம் மொழி கேட்டு மதி கெட்ட மன்னவனும்
செற்ற அவனை இனி கடியும் திறம் எவ்வாறு என செப்ப
உற்றவரும் மந்திர சாதகம் நாங்கள் ஒழித்திட நின்
கொற்ற களிற்று எதிரே விடுவது என கூறினார்
மா பாவி கடை அமணர் வாகீச திருவடியாம்
கா பாலி அடியவர் பால் கட களிற்றை விடுக என்ன
பூ பாலர் செயல் மேற்கொள் புலை தொழிலோன் அவர் தம் மேல்
கோ பாதி சயமான கொலை களிற்றை விட சொன்னான்
கூடத்தை குத்தி ஒரு குன்றம் என புறப்பட்டு
மாடத்தை மறத்திட்டு மண்டபங்கள் எடுத்து எற்றி
தாடத்தில் பரிக்காரர் தலை இடறி கட களிற்றின்
வேடத்தால் வரும் கூற்றின் மிக்கது ஒரு விறல் வேழம்
பாச தொடை நிகள தொடர்பறி தறி முறியா
மீ சுற்றிய பறவை குலம் வெருவ துணிவிலகா
ஊசல் கரம் எதிர் சுற்றிட உரறி பரி உழறா
வாச கட மழை முற்பட மதவெற்பு எதிர் வருமால்
இடி உற்று எழும் ஒலியில் திசை இப உட்கிட அடியில்
படி புக்கு உற நெளி படர் பவன கதி விசையில்
கடிது உற்று அடு செயலில் கிளர் கடலில் படு கடையின்
முடிவில் கனல் என முன் சினம் முடுகி கடுகியதே
மாடு உற்று அணை இவுளி குலம் மறி செறி வயிர
கோடுற்று இரு பிளவிட்டு அறு குறை கைக்கொடு முறி
சாடுற்றிடு மதில் தெற்றிகள் சரி புடை அணி செற்று
ஆடுற்று அகல் வெளியுற்று அது அவ்வடர் கைக்குல வரையே
பாவ கொடு வினை முற்றிய படிறுற்று அடு கொடியோர்
நாவுக்கரசர் எதிர் முற்கொடு நணுகி கருவரை போல்
ஏவி செறு பொருகை கரியினை உய்த்திட வெருளார்
சேவிற்று திகழ்பவர் பொன் கழல் தெளிவு உற்றனர் பெரியோர்
அண்ணல் அரு தவ வேந்தர் ஆணை தம் மேல் வர கண்டு
விண்ணவர் தம் பெருமானை விடை உகந்து ஏறும் பிரானை
சுண்ண வெண் சந்தன சாந்து தொடுத்த திரு பதிகத்தை
மண் உலகு உய்ய எடுத்து மகிழ் உடனே பாடுகின்றார்
வஞ்சகர் விட்ட சின போர் மதவெங் களிற்றினை நோக்கி
செஞ்சடை நீள் முடி கூத்தர் தேவர்க்கும் தேவர் பிரானார்
வெம்ஞ்சுடர் மூவிலை சுல வீரட்டர் தம் அடியோம் நாம்
அஞ்சுவது இல்லை என்று என்றே அருந்தமிழ் பாடி உறைந்தார்
தண் தமிழ் மாலைகள் பாடி தம் பெருமான் சரணா
கொண்ட கருத்தில் இருந்து குலாவிய அன்புறு கொள்கை
தொண்டரை முன் வலமாக சூழ்ந்து எதிர் தாழ்ந்து நிலத்தில்
எண் திசையோர்களும் காண இறைஞ்சி எழுந்தது வேழம்
ஆண்ட அரசை வணங்கி அஞ்சி அவ் வேழம் பெயர
தூண்டிய மேல் மற பாகர் தொடக்கி அடத்து திரிந்து
மீண்டும் அதனை அவர் மேல் மிறை செய்து காட்டிட வீசி
ஈண்டு அவர் தங்களையே கொன்று அமணர் மேல் ஓடிற்று எதிர்ந்தே
ஓடி அருகர்கள் தம்மை உழறி மிதித்து பிளந்து
நாடி பலரையும் கொன்று நகரம் கலங்கி மறுக
நீடிய வேலை கலக்கும் நெடும் மந்தரகிரி போல
ஆடி அவ் யானையும் மன்னற்கு ஆகுலம் ஆக்கியது அன்றே
யானையின் கையில் பிழைத்த வினை அமண் கையர்கள் எல்லாம்
மானம் அழிந்து மயங்கு வருந்திய சிந்தையர் ஆகி
தானை நில மன்னன் தாளில் தனி தனி வீழ்ந்து புலம்ப
மேன்மை நெறி விட்ட வேந்தன் வெகுண்டு இனி செய்வது என் என்றான்
நங்கள் சமயத்தின் நின்றே நாடிய முட்டி நிலையால்
எங்கள் எதிர் ஏறு அழிய யானையால் இவ் வண்ணம் நின் சீர்
பங்க படுத்தவன் போக பரிபவம் தீரும் உனக்கு
பொங்கழல் போக அதன் பின் புகை அகன்றால் என என்றார்
அல்லிருள் அன்னவர் கூற அரும் பெரும் பாவத்தவன் தான்
தொல்லை சமயம் அழித்து துயரம் விளைவித்தவன் தன்னை
சொல்லும் இனி செய்வது என்ன சூழ்ச்சி முடிக்கும் தொழிலோர்
கல்லுடன் பாசம் பிணித்து கடல் இடை பாய்ச்சுவது என்றார்
ஆங்கு அது கேட்ட அரசன் அவ்வினை மாக்களை நோக்கி
தீங்கு புரிந்தவன் தன்னை சேமம் உற கொடு போகி
பாங்கு ஒரு கல்லில் அணைத்து பாசம் பிணித்து ஓர் படகில்
வீங்கு ஒலி வேலையில் எற்றி வீழ்த்துமின் என்று விடுத்தான்
அவ் வினை செய்திட போகும் அவருடன் போயர் உகந்த
வெவ்வினை யாளரும் சென்று மேவிட நாவுக்கரசர்
செவ்விய தம் திரு உள்ளம் சிறப்ப அவருடன் சென்றார்
பவ்வத்தில் மன்னவன் சொன்னபடி முடித்தார் அப்பாதகர்
அப்பரிசு அவ்வினை முற்றி அவர் அகன்று ஏகிய பின்னர்
ஒப்பரும் ஆழ் கடல் புக்க உறைப்பு உடை மெய்த்தொண்டர் தாமும்
எப்பரிசு ஆயினும் ஆக ஏத்துவன் எந்தையை என்று
செப்பிய வண் தமிழ் தன்னால் சிவன் அஞ்செழுத்தும் துதிப்பார்
சொல் துணை வேதியன் என்னும் தூய் மொழி
நல் தமிழ் மாலை ஆம் நமச்சிவாய என்று
அற்ற முன் காக்கும் அஞ்சு எழுத்தை அன்பொடு
பற்றி உணர்வினால் பதிகம் பாடினார்
பெருகிய அன்பினர் பிடித்த பெற்றியால்
அருமலரோன் முதல் அமரர் வாழ்த்துதற்கு
அரிய அஞ்சு எழுத்தையும் அரசு போற்றிட
கரு நெடுங்கடலின் கல் மிதந்ததே
பெருங்கல்லும் அங்கு அரசு மேல் கொள
தெப்ப மாய் மிதத்தலில் செறிந்த பாசமும்
தப்பியது அதன் மிசை இருந்த தாவில் சீர்
மெ பெரும் தொண்டனார் விளங்கி தோன்றினார்
இருவினை பாசமும் மலக்கல் ஆர்த்தலின்
வருபவ கடலில் வீழ் மாக்கள் ஏறிட
அருளும் மெய் அஞ்செழுத்து அரசை இக்கடல்
ஒரு கல் மேல் ஏற்று இடல் உரைக்க வேண்டுமோ
அருள் நயந்து அஞ்செழுத்து ஏத்த பெற்ற
கருணை நாவரசினை திரை கரங்களால்
தெருள் நெறி நீர்மையின் சிரத்தில் தாங்கிட
வருணனும் செய்தனன் முன்பு மா தவம்
வாய்ந்த சீர் வருணனே வாக்கின் மன்னரை
சேர்ந்தடை கருங்கலே சிவிகை ஆயிட
ஏந்தியே கொண்டு எழுந்து அருள் வித்தனன்
பூந்திரு பாதிரி புலியூர பாங்கரில்
திரு பதியினில் அணைந்த அன்பரை
மெ தவ குழாம் எலாம் மேவி ஆர்த்தெழ
திசையைனும் அர என்னும் ஓசைபோல்
தத்து நீர பெருங்கடல் தானும் ஆர்த்ததே
தொழும் தகை நாவினுக்கு அரசும் தொண்டர் முன்
செழும் திரு பாதிரி புலியூர திங்கள் வெண்
கொழுந்து அணி சடையாரை கும்பிட்டு அன்புற
விழுந்து எழுந்து அருள் நெறி விளங்க பாடுவார்
ஈன்றாளும் ஆய் எனக்கு எந்தையும் ஆகி என எடுத்து
தோன்றா துணையாய் இருந்தனன் தன் அடியோங் கட்கு என்று
வான் தாழ் புனல் கங்கை வாழ் சடையானை மற்று எவ் உயிர்க்கும்
சான்றாம் ஒருவனை தண் தமிழ் மாலைகள் சாத்தினாரே
மற்றும் இணையன வண் தமிழ் மாலைகள் பாடி வைகி
வெற்றி மழவிடை வீரட்டர் பாதம் மிக நினைவால்
உற்றதொர் காதலின் அங்கு நின்று ஏகி ஒன்னார் புரங்கள்
செற்றவர் வாழும் திருவதிகை பதி சென்று அடைவார்
தேவர் பிரான் திரு மாணி குழியும் தினை நகரும்
மேவினர் சென்று விரும்பிய சொல் மலர் கொண்டு இறைஞ்சி
பூவலர் சோலை மணமடி புல்ல பொருள் மொழியின்
காவலர் செல்வ திரு கெடிலத்தை கடந்து அணைந்தார்
வெஞ்சமண் குண்டர்கள் செய்வித்த தீயம் இறைகள் எல்லாம்
எஞ்ச வென்று ஏறிய இன் தமிழ் ஈசர் எழுந்து அருள
மஞ்சிவர் மாட திருவதிகை பதி வாணர் எல்லாம்
தம் செயல் பொங்க தழங்கு ஒலி மங்கலம் சாற்றல் உற்றார்
மணி நெடு தோரணம் வண் குலை பூகம் மடற் கதலி
இணையுற நாட்டி எழு நிலை கோபுரம் தெற்றி எங்கும்
தணிவில் பெருகொளி தாமங்கள் நாற்றி செஞ் சாந்து நீவி
அணி நகர் முன்னை மேல்
மன்னிய அன்பின் வள நகர் மாந்தர் வயங்கு இழையார்
இன்னிய நாதமும் ஏழ் இசை ஓசையும் எங்கும் வி
பொன் இயல் சுண்ணமும் பூவும் பொரிகளும் தூவி எங்கும்
தொல் நகரின் புறம் சூழ்ந்து எதிர் கொண்டனர் தொண்டரையே
தூய வெண் நீறு துதைந்த பொன் மேனியும் தாழ் வடமும்
நாயகன் சேவடி தைவரும் சிந்தையும் நைந்து உருகி
பாய்வது போல் அன்பு நீர் பொழி கண்ணும் பதிக செஞ் சொல்
மேய செவ்வாயும் உடையார் புகுந்தனர் வீதி உள்ளே
கண்டார்கள் கை தலைமேல் குவித்து இந்த கருணை கண்டால்
மிண்டாய செங்கை அமண்கையர் தீங்கு விளைக்க செற்றம்
உண்டாய்஢ன வண்ணம் எவ் என்று உரைப்பார்கள்
தொண்டு ஆண்டு கொண்ட பிரானை தொழுது துதித்தனரே
இவ் வண்ணம் போல எனை பல மாக்கள் இயம்பி ஏத்த
மெய் வண்ண நீற்று ஒளி மேவும் குழாங்கள் விரவி செல்ல
அவ் வண்ணம் நண்ணிய அன்பரும் வந்து எய்தி அம்பவள
செவ் வண்ணர் கோயில் திரு வீரட்டானத்தை சேர்ந்தனரே
உம்பர் தம் கோனை உடைய பிரானை உள் புக்கு இறைஞ்சி
நம்புறும் அன்பின் நயப்புறு காதலினால் திளைத்தே
எம் பெருமான் தனை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தது என்று
தம் பரிவால் திரு தாண்டக செந்தமிழ் சாற்றி வாழ்ந்தார்
அரி அயனுக்கு அரியானை அடியவருக்கு எளியானை
விரி புனல் சூழ் திருவதிகை வீரட்டானத்து அமுதை
தெரிவரிய பெரும் தன்மை திருநாவு கரசு மனம்
பரிவுறு செந்தமிழ பாட்டு பலபாடி பணி செயும் நாள்
புல் அறிவில் சமணர்க்கா பொல்லாங்கு புரிந்து ஒழுகும்
பல்லவனும் தன்னுடைய பழவினை பாசம் பறிய
அல்லல் ஒழிந்து அங்கு எய்தி ஆண்ட அரசினை பணிந்து
வல்லமணர் தமை நீத்து மழவிடையோன் தாள் அடைந்தான்
வீடு அறியா சமணர் மொழி பொய் என்று மெய் உணர்ந்த
காடவனும் திருவதிகை நகரின் கண்
பாடலி புத்திரத்தில் அமண் பள்ளியொடு பாழிகளும்
கூட இடித்து கொணர்ந்து குண பரவீச்சரம் எடுத்தான்
நாளில் திருப்பணிகள் செய்கின்ற இன் தமிழுக்கு
மன்னான வாகீச திருமுனியும் மதி சடைமேல்
பன்னாகம் அணிந்தவர் தம் பதி பலவும் சென்று இறைஞ்சி
சொன்னா தமிழ் புனைந்து தொண்டு செய்வான் தொடர்ந்து எழுவார்
திருவதிகை பதி மருங்கு திரு வெண்ணெய் நல்லூரும்
அருளும் திரு ஆமாத்தூர் திருக்கோவலூர் முதலா
மருவு திருப்பதி பிறவும் வணங்கி வள தமிழ் பாடி
பெருகு விருப்புடன் விடையார் மகிழ் பெண்ணாகிடம் அணைந்தார்
கார் வளரும் மாடங்கள் கலந்த மறை ஒலி வளர்க்கும்
சீர் உடை அந்தணர் வாழும் செழும் பதியின் அகத்து எய்தி
வார் சடையார் மன்னு திரு தூங்கானை மாடத்தை
பார் பரவும் திருமுனிவர் பணிந்து ஏத்தி பரவினார்
புன் நெறியாம் அமண் தொடக்குண்டு போந்தவுடன்
தன்னுடனே உயிர்வாழ தரியேன் நான் தரிப்பதனுக்கு
என்னுடைய நாயக நின் இலச்சினை இட்டு அருள் என்று
பன்னு செழுந்தமிழ் மாலை முன் நின்று பாடுவார்
பொன் ஆர்ந்த திருவடிக்கு என் விண்ணப்பம் என்று எடுத்து
முன் ஆகி பொருட்கும் முடிவாகி நின்றானை
தன் ஆகத்து உமை பாகம் கொண்டானை சங்கரனை
நல் நா திருவிருத்தம் நலம் சிறக்க பாடுதலும்
நீடு திரு தூங்கானை மாடத்து நிலவு கின்ற
ஆடக மேரு சிலையான் அருளால் ஓர் சிவபூதம்
மாடொருவர் அறியாமே வாகீசர் திரு தோலில்
சேடுயர் மூவிலை சூலம் சின விடையின் உடன் சாத்த
ஆங்கவர் தம் திரு தோளில் ஆர்ந்த திரு இலச்சினையை
தாம் கண்டு மனம் களித்து தம் பெருமான் அருள் நினைந்து
தூங்கருவி கண் பொழி தொழுது விழுந்து ஆர்வத்தால்
ஓங்கிய சிந்தையர் ஆகி உய்ந்து ஒழிந்தேன் என எழுந்தார்
தூங்கானை மாடத்து சுடர கொழுந்தின் அடிபரவி
பாங்காக திரு தொண்டு செய்து பயின்று அமரும் நாள்
பூங்கானம் மணம் கமழும் பொருவில் திரு அர துறையும்
தேங்காவின் முகில் உறங்கும் திருமுது குன்றமும் பணிந்து
வண்தமிழ் மென் மலர் மாலை புனைந்தருளி மருங்குள்ள
தண் துறை நீர பதிகளிலும் தனி விடையார் மேவிடம்
கொண்டருளும் தானங்கள் கும்பிட்டு குண திசை மேல்
புண்டரிக தடம் சூழ்ந்த நிவா கரையே போதுவார்
ஆனாத சீர தில்லை அம்பலத்தே ஆடுகின்ற
வானாறு புடை பரக்கும் மலர சடையார் அடி வணங்கி
ஊனாலும் உயிராலும் உள்ள பயன் கொள நினைந்து
தேனாரும் மலர சோலை திருப்புலியூர் மருங்கு அணைந்தார்
நாவு கரசரும் இருவர்க்கு
அரியவர் நடம் ஆடிய திரு எல்லை பால்
மேவி தலம் உற மெய்யில் தொழுத
பின் மேல் எழுதரும்
காவில் களி மயில் மகிழ் உற்று எதிர்
எதிர் ஆட கடி கமழ் கமலம் சூழ்
வாவி தடமலர் வதனம் பொலிவுறு
மரு தண்பணை வழி வந்தார்
முருகில் செறி இதழ் முளரி
படுகரில் முது மேதிகள் புதுமலர் மேயும்
அருகில் செறிவனம் என மிக்குயர்
கழை அளவில் பெருகிட வளர் இக்கு
பெருகி புடை முதிர் தரளம் சொரிவன
பெரியோர் அவர் திருவடி கண்டு
உருகி பரிவுறு புனல் கண் பொழிவன
என முன்புள வயல் எங்கும்
அறிவில் பெரியவர் அயல்
நெல் பணை வயல் அவை பிற்படும் வகை அணைகின்றார்
பிறவி பகை நெறி விடுவீர் இருவினை
பெருகி தொடர்பிணி உறுபாசம்
பறிவுற்றிட அணையுமின் என்று இருபுடை
பயில் சூழ் சினை மிசை குயில் கூவும்
செறிவில் பலதரு நிலையில் பொலிவுறு
திரு நந்தன வனம் எதிர் கண்டார்
அவர் முன் பணிவொடு தொழுது
அங்கு அணைவுற அணி கொம்பரின் மிசை அருகு எங்கும்
தவம் முன் புரிதலில் வரு தொண்டு
எனும் நிலைதலை நின்று உயர் தமிழ் இறையோராம்
இவர் தம் திருவடிவது கண்டு அதிசயம்
என வந்து எதிர் அரகர என்றே
சிவ முன் பயில் மொழி பகர் கின்றன
வளர் சிறை மென் கிளியொடு சிறு பூவை
அஞ்சொல் திருமறை அவர்
முன் பகர்தலும் அவரும் தொழுது
நெஞ்சில் பெருகிய மகிழ்வும் காதலும்
நிறை அன்பொடும் உரை தடுமாற
செஞ்சொல் திருமறை மொழி அந்தணர்
பயில் தில்லை திரு நகர் எல்லைப்பால் மஞ்சில்
பொலி நெடு மதில் சூழ் குடதிசை
மணி வாயில் புறம் வந்துற்றார்
அல்லல் பவம் அற அருளும்
தவ முதல் அடியார் எதிர் கொள அவரோடும்
மல்லல் புனல் கமழ் மாடே வாயிலின்
வழிபுக்கு எதிர் தொழுது அணை உற்றார்
கல்வி துறை பல வரு மா மறை முதல்
கரை கண்டு உடையவர் கழல் பேணும்
செல்வ குடி நிறை நல் வைப்பு இடை
வளர் சிவமே நிலவிய திருவீதி
நவ மின் சுடர் மணி நெடு
மாலையும் நறு மலர் நிறை
புவனங்களின் முதல் இமையோர்
தடமுடி பொருந்திய மணி போகட்டி
பவனன் பணி செய வருணன் புனல்
கொடு பணி மாறவும் அவை பழுதாம் என்று
எவரும் தொழுது எழும் அடியார் திரு
அலகு இடுவார் குளிர்புனல் விடுவார்கள்
மேலம் பரதலம் நிறையும்
கொடிகளில் விரி வெங்கதிர் நுழைவது அரிதாகும்
கோலம் பெருகிய திருவீதியை முறை
குலவும் பெருமையர் பணிவுற்றே
ஞாலம் திகழ் திரு மறையின் பெருகு
ஒலி நலமார் முனிவர்கள் துதியோடும்
ஓலம் பெருகிய நிலை ஏழ் கோபுரம்
உறமெய் கொடு தொழுதுள்புக்கார்
வளர் பொன் கனக மணி
திரு மாளிகையினை வலம் வந்து அலமரு வரை நில்லா
அளவில் பெருகிய ஆர்வத்து இடை
எழும் அன்பின் கடல் நிறை உடல் எங்கும்
புளக செறி நிரை விரவ திருமலி
பொன் கோபுரம் அது புகுவார் முன்
களனில் பொலிவிடம் உடையார் நடநவில்
கனக பொது எதிர் கண்ணுற்றார்
நீடும் திருவுடன் நிகழும்
பெருகு ஒளி நிறை அம்பலம் நினைவுற நேரே
கூடும் படி வரும் அன்பால் இன்புறு
குணம் முன் பெறவரு நிலை கூட
தேடும் பிரமனும் மாலும் தேவரும்
முதலாம் யோனிகள் தெளிவு ஒன்றா
ஆடுங்கழல் புரி அமு திரு நடம்
ஆரா வகை தொழுது ஆர்கின்றார்
கையும் தலை மிசை புனை
அஞ்சலியன கண்ணும் பொழி மழை ஒழியாதே
பெய்யும் தகையன கரணங்களும்
உடன் உருகும் பரிவின
பேறு எய்தும் மெய்யும் தரைமிசை
விழுமுன் பெழுதரும் மின்தாழ் சடையொடு
ஐயன் திருநடம் எதிர் கும்பிடும் அவர்
ஆர்வம் பெருகுதல் அளவு இன்றால்
தன்மையர் பல முறையும்
தொழுது எழ என்று எய்தினை என மன்றாடும்
அத்தன் திரு அருள் பொழியும்
கருணையின் அருள் பெற்றிட வரும் ஆனந்தம்
மெ தன்மை யினில் விரு
திருமொழி பாடி பின்னையும் மேல் மேலும்
சித்தம் பெருகிய பரிவால் இன்புறு
திரு நேரிசை மொழி பகர்கின்றார்
பத்தனா பாட
மாட்டேன் என்று முன் எடுத்து பண்ணால்
அத்தா உன் ஆடல் காண்பான்
அடியனேன் வந்தவாறு என்று
இத்திறம் போற்றி நின்றே
இன் தமிழ் மாலை பாடி
கை திரு தொண்டு செய்யும்
காதலில் பணிந்து போந்தார்
நீடிய மணியின்
சோதி நிறை திரு முன்றின் மாடும்
ஆடு உயர் கொடி சூழ் பொன்
தேர் அணி திரு வீதி உள்ளும்
கூடிய பணிகள் செய்து
கும்பிடும் தொழிலர் ஆகி
பாடிய புனித வாக்கின்
பணிகளும் பயில செய்வார்
அருள் பெரு மகிழ்ச்சி
பொங்க அன்னம் பாலிக்கும் என்னும்
திரு குறு தொகைகள் பாடி
திரு உழவாரங் கொண்டு
பெருத்து எழு காதலோடும் பெரும்
திரு தொண்டு செய்து
விருப்புறு மேனி கண்ணீர்
வெண்ணீற்று வண்டலாட
மேவிய பணிகள் செய்து
விளங்குநாள் வேட்களத்து
சேவுயர் கொடியார் தம்மை
சென்று முன் வணங்கி பாடி
காவியம் கண்டார் மன்னும்
திருக்கழி பாலை தன்னில்
நாவினுக்கு அரசர் சென்று
நண்ணினார் மண்ணோர் வாழ
சின விடை யேறுகை
தோறும் மணவாள நம்பிகழல் சென்று தாழ்ந்து
வன பவள வாய்திறந்து வானவர்க்கும்
தான் அவனே என்கின்றாள் என்று
அனைய திருப்பதிகம் உடன்
அன்புறு வண் தமிழ் பாடி அங்கு வைகி
நினைவரியார் தமை போற்றி நீடு
திருப்புலியூரை நினைந்து மீள்வார்
மனை படப்பில் கடல்
கொழுந்து வளை சொரியும் கழி பாலை மழுங்கு நீங்கி
நனைச்சினை மென் குளிஞாழல்
பொழில் ஊடு வழி கொண்டு நண்ணும் போதில்
நினைப்பவர் தம் மனம் கோயில்
கொண்டு அருளும் அம்பலத்து நிருத்தனாரை
தினைத்தனையாம் பொழுது மறந்து
உய்வேனோ என பாடி தில்லை சார்ந்தார்
அரியானை என்று எடுத்தே
அடியவருக்கு எளியானை அவர்தம் சிந்தை
பிரியாத பெரிய திரு தாண்டக
செந்தமிழ் பாடி பிறங்கு சோதி
விரியா நின்று எவ் உலகும் விளங்கிய
பொன் அம்பலத்து மேலி ஆடல்
புரியா நின்றவர் தம்மை பணிந்து
தமிழால் பின்னும் போற்றல் செய்வார்
செஞ்சடை கற்றை
முற்றத்து இளநிலா எறிக்கும் எனும் சிறந்த வாய்மை
அருஞ்சொல் வள தமிழ் மாலை
அதிசயமாம் படி பாடி அன்பு சூழ்ந்த
நெஞ்சு உருக பொழி புனல்வார்
கண் இணையும் பரவிய சொல் நிறைந்த வாயும்
தம் செயலின் ஒழியாத திருப்பணியும்
மாறாது சாரும் நாளில்
கடையுகத்தில் ஆழியின்
மேல் மிதந்த கழு மலத்தின் இருந்த செம்கண்
விடை உகைத்தார் திரு அருளால்
வெற்பரையன் பாவை திருமுலை பாலோடும்
அடைய நிறை சிவம் பெருக வளர்
ஞானம் குழைத்து ஊட்ட அமுது செய்த
உடை மறை பிள்ளையார் திருவார்த்தை
அடியார்கள் உரைப்ப கேட்டார்
ஆழிவிடம் உண்ட வரை
அம்மை திருப்பால் அமுதம் உண்ட போதே
ஏழ் இசை வண் தமிழ் மாலை இவன்
எம்மான் என காட்டி இயம்பவல்ல
காழி வரும் பெரும் தகை சீர்
கேட்டலுமே அதிசயமாம் காதல் கூர
வாழி அவர் மலர கழல்கள் வணங்குவதற்கு
மனத்து எழுந்த விருப்பு வாய்ந்த
அப்பொழுதே அம்பலத்துள்
ஆடுகின்ற கழல் வணங்கி அருள் முன் பெற்று
பொ பிறவி பிணி ஓட்டும் திருவீதி
புரண்டு வலம் கொண்டு போந்தே
புவனங்களும் நிறைந்த திருப்பதியின்
எல்லையினை இறைஞ்சி ஏத்தி
செப்பரிய பெருமையினார் திரு நாரையூர்
பணிந்து பாடி செல்வார்
தொண்டர் குழாம் புடை சூழ
தொழுத கரத்தொடு நீறு துதைந்த கோலம்
கண்டவர் தம் மனம் கசிந்து கரைந்து
உருகும் கருணை புறம் பொழிந்து காட்ட
தெண் திரைவா கல் மிதப்பில்
உகைத்து ஏறும் திருநாவுக்கரசர் தாமும்
வண் தமிழால் எழுது மறை மொழிந்த
பிரான் திருப்புகலி மருங்கு சார்ந்தார்
நீண்ட வரை வில்லியார்
வெஞ்சூலை மடுத்து அருளி நேரே முன்னாள்
ஆண்ட அரசு எழுந்து அருள
கேட்டருளி ஆளுடைய பிள்ளையாரும்
காண்டகைய பெரு விருப்பு கைம்
மிக்க திரு உள்ள கருத்தினோடு
மூண்ட அருள் மனத்து அன்பர் புடை சூழ
எழுந்து அருளி முன்னே வந்தார்
தொழுது அணை உற்று ஆண்ட
அரசு அன்பு உருக தொண்டர் குழாத்திடையே சென்று
பழுதில் பெரும் காதலுடன் அடிபணி
பணிந்தவர்தம் கரங்கள் பற்றி
எழுதரிய மலக்கையால் எடுத்து
இறைஞ்சி விடையின் மேல் வருவார்தம்மை
அழுது அழைத்து கொண்டவர்தாம்
அப்பரே என அவரும் அடியேன் என்றார்
அம்பிகை செம் பொன்
கிண்ணத்து அமுத ஞானம் கொடுப்ப அழுகை தீர்ந்த
செம்பவள வாய்ப்பிள்ளை திருநாவுக்கு
அரசர் என சிறந்த சீர்த்தி
எம் பெரு மக்களும் இயைந்த
கூட்டத்தில் அரன் அடியார் இன்பம் எய்தி
உம்பர்களும் போற்றி இசைப்ப சிவம்
பெருகும் ஒலிநிறைத்தார் உலகம் எல்லாம்
பிள்ளையார் கழல் வணங்க
பெற்றேன் என்று அரசு உவ பெருகு ஞான
வள்ளலார் வாகீசர் தமை வணங்க
பெற்றதற்கு மகிழ்ச்சி பொங்க
உள்ளம் நிறை காதலினால் ஒருவர்
ஒருவரில் கலந்த உண்மை யோடும்
வெள்ள நீர் திருத்தோணி வீற்று இருந்தார்
கழல் வணங்கும் விருப்பின் மிக்கார்
அருள் பெருகு தனி கடலும்
உலகுக்கு எல்லாம் அன்பு செறி கடலுமாம் எனவும் ஓங்கும்
பொருள் சமய முதல் சைவ நெறி தான்
பெற்ற புண்ணி கண் இரண்டு எனவும் புவனம் உய்ய
இருள் கடு உண்டவர் அருளும் உலகம்
எல்லாம் ஈன்றாள் தன் திரு அருளும் எனவும் கூடி
தெருள் கலை ஞான கன்றும் அரசும்
சென்று செம் சடை வானவர் கோயில் சேர்ந்தார் அன்றே
பண் பயில் வண்டு அறை
சோலை சூழும் காழி பரமர் திரு கோபுரத்தை பணிந்துள்புக்கு
விண் பணிய ஓங்கு பெரு விமானம்
தன்னை வலம் கொண்டு தொழுது விழுந்த எல்லை
சண்பை வரு பிள்ளையார் அப்பர்
உங்கள் தம்பிரானாரை நீர் பாடீர் என்ன
கண் பயிலும் புனல் பொழிய அரசும் வாய்மை
கலை பயிலும் மொழி பொழி கசிந்து பாடி
பெரிய பெருமாட்டியுடன் தோணி
மீது பேணி வீற்று இருந்து அருளும் பிரான் முன் நின்று
பரிவுறு செந்தமிழ் மாலை பத்தி யோடும்
பார் கொண்டு மூடி எனும் பதிகம் போற்றி
அரிய வகை புறம் போந்து பிள்ளையார்
திருமடத்தில் எழுந்து அருளி அமுது செய்து
மருவிய நண்புறு கேண்மை அற்றை நாள்
போல் வளர்ந்து ஓங்க உடன் பல நாள் வைகும் நாளில்
அத்தன்மையினில் அரசும்
பிள்ளையாரும் அளவளாவிய மகிழ்ச்சி அளவு இலாத
சித்த நெகிழ்ச்சியினோடு செல்லும் நாளில்
திருநாவுக்கரசு திரு உள்ளம் தன்னில்
மை தழையும் மணி மிடற்றர் பொன்னி
மன்னிய தானங்கள் எல்லாம் வணங்கி போற்ற
மெய்த்து எழுந்த பெரும் காதல் பிள்ளையார்க்கு
விளம்புதலும் அவரும் அது மேவி நேர்வார்
ஆண்ட அரசு எழுந்து அருள
கோல காவை அவரோடும் சென்று இறைஞ்சி அன்புகொண்டு
மீண்ட அருளினார் அவரும் விடை கொண்டு
இப்பால் வேத நாயகர் விரும்பும் பதிகளான
நீண்ட கரு பறியலூர் புன்கூர் நீடு
திரு குறுக்கை திரு நின்றி யூரும்
காண் தகைய நனிபள்ளி முதலா நண்ணி
கண்ணுதலார் கழல் தொழுது கலந்து செல்வார்
மேவு புனல் பொன்னி இரு
கரையும் சார்ந்து விடை உயர்த்தார் திரு செம் பொன் பள்ளிபாடி
காவுயரும் மயிலாடுதுறை நீள் பொன்னி
கரை துருத்தி வேள்விக்குடி எதிர் கொள் பாடி
பாவுறு செந்தமிழ் மாலை பாடி போற்றி
பரமர் திருப்பதி பலவும் பணிந்து போந்தே
ஆவுறும் அஞ்சு ஆடுவார் கோடிகாவில் அணைந்து
பணைந்து ஆவடு தண் துறையை சார்ந்தார்
ஆவடு தண் துறையாரை அடைந்து
உய்ந்தேன் என்ற அளவில் திரு தாண்டகம் முன்அருளி செய்து
மேவு திரு குறுந்தொகை நேர் இசையும்
சந்த விருத்தங்கள் ஆனவையும் வேறு
பாவலர் செந்தமிழ தொடையால் பள்ளி
தாமம் பல சாத்தி மிக்கு எழுந்த பரிவின் ஓடும்
பூ வயலத்தவர் பரவ பல நாள் தங்கி புரிஉறு
கை தொண்டு போற்றி செய்வார்
எறி புனல் பொன் மணி சிதறும்
திரை நீர பொன்னி இடை மருதை சென்று எய்திஅன்பினோடு
மறி விரவு கரத்தாரை வணங்கி வைகி வண்
தமிழ பாமாலை பல மகிழ சாத்தி
பொறி அரவம் புனைந்தாரை திரு நாகேச்சுரத்து
போற்றி அரும் தமிழ் மாலை புனைந்துபோந்து
செறி விரை நன்மலர சோலை பழையாறு
எய்தி திருச்சத்தி முற்றத்திற் சென்று சேர்ந்தார்
சென்று சேர்ந்து திரு
சத்தி முற்றத்து இருந்த சிவ கொழுந்தை
குன்ற மகள் தன் மன காதல் குலவும்
பூசை கொண்டு அருளும்
என்றும் இனிய பெருமானை இறைஞ்சி
இயல்பில் திருப்பணிகள்
முன்றில் அணைந்து செய்து தமிழ்
மொழி மாலைகளும் சாத்துவார்
கோவாய் முடுகி என்று
எடுத்து கூற்றம் வந்து குமைப்பதன் முன்
பூவார் அடிகள் என்று அலைமேல்
பொறித்து வைப்பாய் என புகன்று
நாவார் பதிகம் பாடுதலும் நாதன் தானும் நல்லூரில்
வா என்றே அருள் செய்ய வணங்கி மகிழ்ந்து
நன்மை பெருகஅருள்
நெறியே வந்து அணைந்து நல்லூரின்
மன்னு திரு தொண்டனார் வணங்கி
மகிழ்ந்து எழும் பொழுதில்
உன்னுடைய நினைப்பதனை
முடிகின்றோம் என்று அவர்தம்
சென்னி மிசை பாத மலர்
சூட்டினான் சிவபெருமான்
நனைந்தனைய
திருவடி என்தலைமேல் வைத்தார் என்று
புனையும் திருத்தாண்டகத்தால்
போற்றி இசைத்து புனிதர் அருள்
நினைந்து உருகி விழுந்து எழுந்து
நிறைந்து மலர்ந்து ஒழியாத
தனம் பெரிதும் பெற்று வந்த
வறியோன் போல் மனம் தழைத்தார்
நாவுக்கு மன்னர் திரு நல்லூரில் நம்பர் பால்
மேவுற்ற திரு பணிகள் மேவுற நாளும் செய்து
பாவுற்ற தமிழ் மாலை பாடி பணிந்து ஏத்தி
தேவுற்ற திருத்தொண்டு செய்து ஒழுகி செல்லு நாள்
கருகாவூர் முதலா
கண்ணுதலோன் அமர்ந்து அருளும்
திருவாவூர் திரு பாலைத்துறை
பிறவும் சென்று இறைஞ்சி
பெருகு ஆர்வ திரு தொண்டு
செய்து பெருந்திரு நல்லூர்
ஒரு காலும் பிரியாதே உள்
உருகி பணிகின்றார்
ஆளுடைய நாயகன்
தன் அருள் பெற்று அங்கு அகன்று போய்
வாளை பாய் புனல் பழன
திரு பழனம் மருங்கு அணைந்து
காளவிடம் உண்டு இருண்ட
கண்டர் பணி கலன் பூண்டு
நீள் இரவில் ஆடுவார் கழல்
வணங்க நேர் பெற்றார்
அப்பதியை சூழ்ந்த திருப்பதியில் அரனார் மகிழும்
ஒப்பரிய தானங்கள் உள் உருகி பணிந்தணைவார்
மெய்ப்பொருள்தேர் நாவினுக்கு வேந்தர் தாம் மேவினார்
செப்பருஞ்சீர் அப்பூதி அடிகள் ஊர் திங்களூர்
அந்தணரின் மேம்பட்ட அப்பூதி அடிகளார்
தம் தனயருடன் சாலை கூவல் குளம் தரு தண்ணீர
பந்தர் பல ஆண்ட அரசு எனும் பெயரால் பண்ணினமை
வந்து அணைந்த வாகீசர் கேட்டு அவர் தம் மனை நண்ண
மற்றவரும் மனம் மகிழ்ந்து மனைவியார் மைந்தர் பெரும்
சுற்றமுடன் களி கூர தொழுது எழுந்து சூழ்ந்து மொழி
கொற்றவரை அமுது செ குறை கொள்வார் இறைகொள்ள
பெற்ற பெரும் தவ தொண்டர் திரு உள்ளம் பெற பெற்றார்
காண்டகைமை இன்றியுமுன் கலந்த பெருங் கேண்மையினார்
பூண்ட பெரும் காதலுடன் போனகமும் கறி அமுதும்
வேண்டுவன வெவ்வேறு விதங்கள் பெற விருப்பினால்
ஆண்ட அரசு அமுது செ திரு அமுதாம் படி அமைத்து
திருநாவுக்கரசு அமுது செய்து அருள மற்றவர் தம்
பெருநாமம் சாத்திய அப்பிள்ளைதனை அழைத்து அன்பு
தருஞான திருமறையோர் தண்டலையின் வண்கதலி
குரு நாள குருத்து அரிந்து கொண்டு வர தனிவிட்டார்
ஆங்கு அவனும் விரைந்து எய்தி அம்மருங்கு தாழாதே
பூங் கதலி குருத்து அரி புகும் அளவில் ஒரு நாகம்
தீங்கு இழைக்க அது பேணான் திரு அமுது செய்து அருள
ஓங்கு கதலி குருத்து கொண்டு ஒல்லை வந்து அணைந்தான்
தீய விடம் தலை கொள்ள தெருமந்து செழும் குருத்தை
தாயகரத்தினில் நீட்டி தளர்ந்து தனை தழல் நாகம்
மேயபடி உரை செய்யான் விழ கண்டு கெட்டு ஒழிந்தோம்
தூயவர் இங்கு அமுது செ தொடங்கார் என்று அது ஒளித்தார்
தம் புதல்வன் சவம் மறைத்து தடுமாற்றம் இலராகி
எம் பெருமான் அமுது செய வேண்டும் என வந்து இறைஞ்ச
உம்பர் பிரான் திருத்தொண்டர் உள்ளத்தில் தடுமாற்றம்
நம்பர் திருவருளாலே அறிந்து அருளி நவை தீர்ப்பார்
அன்று அவர்கள் மறைத்த அதனுக்கு அளவு இறந்த கருணையரா
கொன்றை நறும் சடையார் தம் கோயிலின் முன் கொணர்வித்தே
ஒன்று கொலாம் என பதிகம் எடுத்து உடையான் சீர் பாட
பின்றைவிடம் போய் நீங்கி பிள்ளை உணர்ந்து எழுந்து இருந்தான்
அரும் தனயன் உயிர் பெற்ற அது கண்டும் அமுது செயாது
இருந்ததற்கு தளர்வு எய்தி இடர் உழந்தார் துயர் நீங்க
வருந்தும் அவர் மனை புகுந்து வாகீச திருமுனிவர்
விருந்து அமுது செய்து அருளி விருப்பினுடன் மேவும் நாள்
திங்களூர் தனில் நின்றும் திருமறையோர் பின் செல்ல
பைங்கண் விடை தனிப்பாகர் திருப்பழன பதி புகுந்து
தங்கு பெரும் காதலொடும் தம் பெருமான் கழல் சார்ந்து
பொங்கிய அன்புற வணங்கி முன் நின்று போற்றி இசைப்பார்
புடை மாலை மதிக்கண்ணி புரிசடையார் பொன் கழல் கீழ்
அடை மாலை சீலம் உடை அப்பூதி அடிகள் தமை
நடைமாண சிறப்பித்து நன்மை புரி தீந்தமிழின்
தொடைமாலை திருப்பதிக சொன்மாலை பாடினார்
எழும் பணியும் இளம்பிறையும் அணிந்தவரை எம் மருங்கும்
தொழும்பணி மேற் கொண்டு அருளி திருச்சோற்று துறை முதலா
தழும்புறு கேண்மையில் நண்ணி தானங்கள் பல பாடி
செம்பழனத்து இறை கோயில் திரு தொண்டு செய்து இருந்தார்
சால நாள் அங்கு அமர்ந்து தம் தலைமேல் தாள் வைத்த
ஆலமார் மணி மிடற்றார் அணி மலர சேவடி நினைந்து
சேலுலாம் புனல் பொன்னி தென்கரை ஏறி சென்று
கோல நீள் மணி மாட திரு நல்லூர் குறுகினார்
அங்கு அணைந்து தம் பெருமான் அடி வணங்கி ஆராது
பொங்கிய அன்பொடு திளைத்து போற்றி இசைத்து பணி செயும் நாள்
தங்கு பெரும் காதலினால் தாமரை மேல் விரிஞ்சனொடு
செங்கண் மால் அறிவரியார் திருவாரூர் தொழ நினைந்தார்
நல்லூரில் நம்பர் அருள் பெற்று போ பழையாறை
பல்லூர் வெண்டலை கரத்தார் பயிலும் இடம் பல பணிந்து
சொல்லூர் வண்தமிழ் பாடி வலஞ் சுழியை தொழுது ஏத்தி
அல்லூர் வெண் பிறை அணிந்தார் திரு குடமூக்கு அணைந்து இறைஞ்சி
நாலூர் தென் திருச்சேறை குடவாயில் நறையூர் சேர்
பாலூரும் இன் மொழியாள் பாகனார் கழல் பரவி
மேலூர்தி விடை கொடியார் மேவும் இடம் பல பாடி
சேலூர் தண் பணை சூழ்ந்த தென் திரு வாஞ்சியம் அணைந்தார்
பெருவாச மலர சோலை பெரு வேளூர் பணிந்து ஏத்தி
முருகாரும் மலர கொன்றை முதல்வனார் பதி பிறவும்
திருவாரும் விளமருடன் சென்று இறைஞ்சி வாகீசர்
மருவாரூர் எரித்தவர் தம் திருவாரூர் வந்து அடைந்தார்
ஆண்ட அரசு எழுந்தருள ஆரூரில் அன்பர்கள் தாம்
நீண்ட சடை முடியார் பால் நிறைந்த அருள் பெற்றுடையார்
காண் தகு மாளிகை மாடம் கவின் சிறந்து ஓங்கிட எங்கும்
சேண் திகழ் வீதிகள் பொலி திரு மலி மங்கலம் செய்தார்
வல் அமண் குண்டர் தம் மாயை கடந்து மறி கடலில்
கல்லே மிதப்பாக போந்தவர் வந்தார் எனும் களிப்பால்
எல்லையில் தொண்டர் எயில்புறம் சென்று எதிர் கொண்டபோது
சொல்லின் அரசர் வணங்கி தொழுது உரைசெய்து அணைவார்
பற்று ஒன்று இலாவரும் பாதகர் ஆகும் அமணர் தம் பால்
உற்ற பிணி ஒழிந்து போந்தேன் பெறல் ஆவது ஒன்றே
புற்றிடம் கொண்டான் தன் தொண்டர்க்கு தொண்டராம் புண்ணியம் என்று
அற்ற உணர்வொடும் ஆரூர திருவீதி உள் அணைந்தார்
சூழும் திருத்தொண்டர் தம்முடன் தோரண வாயில் நண்ணி
வாழி திரு நெடும் தேவாசிரியன் முன் வந்து இறைஞ்சி
ஆழி வரை திரு மாளிகை வாயில் அவை புகுந்து
நீள் சுடர் மா மணி புற்று உகந்தாரை நேர் கண்டு கொண்டார்
கண்டு தொழுது விழுந்து கர சரண் ஆதி அங்கம்
கொண்ட புளகங்களாக எழுந்து அன்பு கூர கண்கள்
தண்துளி மாரி பொழி திரு மூலட்டானர் தம்மை
புண்டரி கழல் போற்றி திருத்தாண்டகம் புனைந்து
காண்டலே கருத்தாய் நினைந்து என்னும் கலை பதிகம்
தூண்டா விளக்கு அன்ன சோதி முன் நின்று துதித்து உருகி
ஈண்டு மணி கோயில் சூழ வலம் செய்து இறைஞ்சி அன்பு
பூண்ட மனத்தொடு நீள் திருவாயில் புறத்து அணைந்தார்
செய்ய மா மணி ஒளி சூழ் திரு முன்றின் முன் தேவ ஆசிரியன் சார்ந்து
கொய்யுமா மலர சோலை குயில் கூவ மயில் ஆலும் ஆரூராரை
கையினால் தொழாது ஒழிந்து கனி இரு காய் கவர்ந்த கள்வனேன் என்று
எய்து அரிய கை யறவால் திருப்பதிகம் அருள் செய்து அங்கு இருந்தார் அன்றே
மார் பார பொழி கண்ணீர் மழை வாரும் திருவடிவும் மதுரவாக்கில்
சேர் வாகும் திருவாயில் தீம் தமிழின் மாலைகளும் செம் பொன் தாளே
சார்வான திருமனமும் உழவார தனிப்படையும் தாமும் ஆகி
பார் வாழ திரு வீதி பணி செய்து பணிந்து ஏத்தி பரவி செல்வார்
நீடு புகழ திருவாரூர் நிலவு மணி புற்றிடம் கொள் நிருத்தர் தம்மை
கூடிய அன்பொடு காலங்களில் அணைந்து கும்பிட்டு கோதில் வாய்மை
பாடு இளம் பூதத்தினான் எனும் பதிகம் முதலான பலவும் பாடி
நாடிய ஆர்வம் பெருக நைந்து மனம் கரைந்து உருகி நயந்து செல்வார்
நான் மறைநூல் பெருமை நமி நந்தி அடிகள் திருத்தொண்டின் நன்மை
பான்மை நிலையால் அவரை பரமர் திருவிருத்ததுள் வைத்து பாடி
தேன் மருவும் கொன்றையார் திருவாரூர் அரன் நெறியில் நிகழும் தன்மை
ஆன திறமும் போற்றி அணி வீதி பணி செய்து அங்கு அமரும் நாளில்
நீர் ஆரும் சடை முடியார் நிலவு திரு வலி வலமும் நினைந்து சென்று
வார் ஆரும் முலை மங்கை உமை பங்கர் கழல் பணிந்து மகிழ்ந்து பாடி
கார் ஆரும் கறை கண்டர் கீழ் வேளுர் கன்றா பூர் கலந்து பாடி
ஆராத காதலினால் திருவாரூர் தனில் மீண்டும் அணைந்தார் அன்றே
மேவு திருவாதிரை நாள் வீதிவிடங்க பெருமாள் பவனி தன்னில்
தேவருடன் முனிவர்கள் முன் சேவிக்கும் அடியார்களுடன் சேவித்து
மூவுலகும் களி கூர வரும் பெருமை முறைமை யெலாம் கண்டு போற்றி
நாவினுக்கு தனி அரசர் நயக்கு நாள் நம்பர் திரு அருளினாலே
திருப்புகலூர் அமர்ந்து அருளும் சிவ பெருமான் சேவடிகள் கும்பிட்டு ஏத்தும்
விருப்புடைய உள்ளத்து மேவி எழும் காதல் புரி வேட்கை கூர
ஒருப்படுவார் திருவாரூர் ஒருவாறு தொழுது அகன்று அங்கு உள்ளம் வைத்து
பொருப்பரையன் மட பாவை இட பாகர் பதி பிறவும் பணிந்து போந்தார்
அந்நாளில் ஆளுடைய பிள்ளையார் திருப்புகலி அதன் கண் நின்றும்
பன்னாக பூண் அணிவார் பயின்ற திருப்பதி பலவும் பணிந்து செல்வார்
புன்னாக மணம் கமழும் பூம் புகலூர் வந்து இறைஞ்சி பொருவு இல் சீர்த்தி
மின் ஆரும் புரி முந்நூல் முருகனார் திருமடத்தில் மேவும் காளை
ஆண்ட அரசு எழுந்து அருளி அணி ஆரூர் மணி புற்றில் அமர்ந்து வாழும்
நீண்ட சுடர் மா மணியை கும்பிட்டு நீடு திருப்புகலூர் நோக்கி
மீண்டு அருளினார் என்று கேட்டு அருளி எதிர்கொள்ளும் விருப்பி னோடும்
ஈண்டு பெரும் தொண்டர் குழாம் புடை சூழ எழுந்து அருளி எதிரே சென்றார்
கரண்டமலி தடம் பொய்கை காழியர் கோன் எதிர் அணையும் காதல் கேட்டு
வரன்று மணி புனற்புகலூர் நோக்கி வரும் வாகீசர் மகிழ்ந்து வந்தார்
திரண்டு வரும் திரு நீற்று தொண்டர் குழாம் இரு திறமும் சேர்ந்த போதில்
இரண்டு நிலவின் கடல்கள் ஒன்றாகி அணைந்த போல் இசைந்த அன்றே
திருநாவுக்கரசர் எதிர் சென்று இறைஞ சிரபுரத்து தெய்வ வாய்மை
பெரு ஞான சம்பந்த பிள்ளையார் எதிர் வணங்கி அப்பரே நீர்
வரு நாளில் திருவாரூர் நிகழ் பெருமை வகுத்து உரைப்பீர் என்று கூற
அரு நாமத்து அஞ்செழுத்தும் பயில் வாய்மை அவரும் எதிர் அருளி செய்தார்
சித்தம் நிலாவும் தென் திரு ஆரூர் நகராளும்
மை தழை கண்டர் ஆதிரை நாளின் மகிழ் செல்வம்
தகைமைத்து என்று என் மொழிகேன் அருள்
முத்து விதான மணி பொன் கவரி மொழி மாலை
அம்மொழி மாலை செந்தமிழ் கேளா அணி சண்பை
மைம் மலர் கண்டத்து அண்டர் பிரானார் மகனாரும்
கொய்ம் மலர் வாவி தென் திரு ஆரூர் கும்பிட்டே
உம்முடன் வந்து இங்கு உடன் அமர்வேன் என்று உரை செய்தார்
மா மதில் ஆரூர் மன்னரை அங்கு வணங்க செ
தாமரை ஓடை சண்பையர் நாதன் தான் ஏக
நாமரு சொல்லின் நாதரும் ஆர்வத்தொடு புக்கார்
பூ மலர் வாசம் தண் பணை சூழும் புகலூரில்
திரு மூதூர் மேவிய நாவு கரசுந்தம்
சித்தம் நிறைந்தே அன்பு தெவிட்டும் தெளிவெள்ளம்
மொய்த்து இழி தாரை கண் பொழி நீர் மெய்ம் முழுதார
பை தலை நாக பூண் அணிவாரை பணி உற்றார்
தேவர் பிரானை தென் புகலூர் மன்னிய தேனை
பா இயல் மாலை செந்தமிழ் பாடி பரிவோடு
மேவிய காலம் தோறும் விருப்பில் கும்பிட்டே
ஓவுதல் ஓவு திருப்பணி செய்து அங்கு உறைகின்றார்
சீர் தரு செங்காட்டங் குடி நீடும் திருநள்ளாறு
ஆர் தரு சோலை சூழ்தரு சாந்தை அயவந்தி
வார் திகழ் மென் முலையான் ஒரு பாகன் திருமருகல்
ஏர் தரும் அன்பால் சென்று வணங்கி இன்புற்றார்
அப்படி சின்னாள் சென்ற பின் ஆரூர் நகர் ஆளும்
துப்பு உறழ் வேணி கண் நுதலாரை தொழுது இப்பால்
மெ பொருள் ஞானம் பெற்றவர் வேணு புரத்து எங்கள்
பொன் புரி முந்நூல் மார்பரும் வந்தார் புகலூரில்
பிள்ளையார் எழுந்து அருள பெரு விருப்பால் வாகீசர்
உள்ளம் மகிழ்ந்து எதிர் கொண்டு அங்கு உடன் உறையும் நாளின்கண்
வள்ளலார் சிறு தொண்டர் மற்று அவர் பால் எழுந்து அருள
எள் அரும் சீர் நீல நக்கர் தாமும் எழுந்து அருளினார்
ஆங்கு அணையும் அவர்களுடன் அப்பதியில் அந்தணராம்
ஓங்கு புகழ் முருகனார் திரு மடத்தில் உடனாக
பாங்கில் வரும் சீர் அடியார் பலரும் உடன் பயில் கேண்மை
நீங்கரிய திரு தொண்டின் நிலை உணர்ந்து நிகழ்கின்றார்
திரு பதிக செழுந்தமிழின் திறம் போற்றி மகிழ்வுற்று
பொருப்பு அரையன் மடப்பாவை இட பாகர் பொன் தாளில்
விருப்பு உடைய திரு தொண்டர் பெருமையினை விரித்து உரைத்து அங்கு
ஒருப்படும் சிந்தையினார்கள் உடன் உறைவின் பயன் பெற்றார்
நாளில் தமக்கு ஏற்ற திரு தொண்டின் நெறி ஆற்ற
மின்னார் செஞ்சடை அண்ணல் மேவும் பதி எனை பலவும்
முன்னாக சென்று ஏத்தி முதல்வன் தாள் தொழுவதற்கு
பொன்னாரும் மணி மாட பூம் புகலூர் தொழுது அகன்றார்
திரு நீல நக்க அடிகள் சிறுத்தொண்டர் முருகனார்
பெருநீர்மை அடியார்கள் பிறரும் விடை கொண்டு ஏக
ஒரு நீர்மை மனத்து உடைய பிள்ளையாருடன் அரசும்
வரும் சீர் செஞ்சடை கரந்தார் திரு அம்பர் வணங்கினார்
செங்குமுத மலர் வாவி திருக்கடவூர் அணைந்து அருளி
பொங்கிய வெங்கூற்று அடர்த்த பொன் அடிகள் தொழுது ஏத்தி
குங்குலி கலயனார் திருமத்தில் குறை அறுப்ப
அங்கு அவர்பால் சிவன் அடியாருடன் அமுது செய்தார்கள்
சீர் மன்னும் திரு கடவூர திருமயானமும் வணங்கி
ஏர் மன்னும் இன்னிசைப்பா பல பாடி இனிது அமர்ந்து
கார் மன்னும் கறை கண்டர் கழல் இணைகள் தொழுது அகன்று
தேர் மன்னும் மணி வீதி திரு ஆக்கூர் சென்று அணைந்தார்
சார்ந்தார் தம் புகல் இடத்தை தான் தோன்றி மாடத்து
கூர்ந்து ஆர்வம் உற பணிந்து கோதில் தமிழ்த்தொடை புனைந்து
வார்த்து ஆடும் சடையார் தம் பதி பலவும் வணங்கி உடன்
சேர்ந்தார்கள் தம் பெருமான் திரு வீழி மிழலையினை
வீழி மிழலை வந்து அணைய மேவும் நாவுக்கு அரசினையும்
காழி ஞான பிள்ளையையும் கலந்த உள்ள காதலினால்
ஆழி வலவன் அறியாத அடியார்
வாழி மறையோர் எதிர் கொண்டு வணங்க வணங்கி உள்புக்கார்
மாட வீதி அலங்கரித்து மறையோர் வாயின் மணி விளக்கு
நீடு கதலி தழை பூதம் நிரைத்து நிறை பொன் குடம் எடுத்து
பீடு பெருகும் வாகீசர் பிள்ளையாரும் தொண்டர்களும்
கூட மகிழ்ந்து விண் இழிந்த கோயில் வாயில் சென்று அணைந்தார்
சென்று உள் புகுந்து திருவீழி மிழலை அமர்ந்த செங்கன
குன்ற வில்லியார் மகிழ்ந்த கோயில் வலமா வந்து திரு
முன்றில் வணங்கி முன் எய்தி முக்கண் செக்கர் சடை மவுலி
வென்றி விடையார் சேவடி கீழ் விழுந்தார் எழுந்தார் விம்மினார்
கைகள் குவித்து கழல் போற்றி கலந்த அன்பு கரைந்து உருக
மெய்யில் வழியும் கண் அருவி விரவ பரவும் சொல் மாலை
செய்ய சடையார் தமை சேரார் தீங்கு நெறி சேர்கின்றார் என்று
உய்யும் நெறி தாண்ட தம் மொழிந்து அங்கு ஒழியா காதல் சிறந்து ஓங்க
முன்னாள் அயனும் திருமாலும் முடிவும் முதலும் காணாத
பொன்னார் மேனி மணி வெற்பை பூ நீர் மிழலையினில் போற்றி
பல் நாள் பிரியா நிலைமையினால் பயில கும்பிட்டு இருப்பாராய்
அந்நாள் மறையோர் திருப்பதியில் இருந்தார் மெய்ம்மை அருந்தவர்கள்
சீரின் விளங்கும் திருத்தொண்டர் இருந்து சில நாள் சென்று அதன் பின்
மாரி சுருங்கி வளம் பொன்னி நதியும் பருவம் மாறுதலும்
நீரின் இயன்ற உணவு அருகி நிலவும் பல மன் உயிர்கள் எல்லாம்
பாரின் மலிந்த இலம் பாட்டில் படர் கூர் வறுமை பரந்ததால்
வையம் எங்கும் வற்கடம் செல்ல உலகோர் வருத்தமுற
நையும் நாளில் பிள்ளையார் தமக்கும் நாவுக்கு அரசருக்கும்
கையில் மானும் மழுவும் உடன் காண கனவில் எழுந்து அருளி
செய்ய சடையார் திருவீழி மிழலை உடையார் அருள் செய்வார்
கால நிலைமையால் உங்கள் கருத்தில் வாட்டம் உறீர் எனினும்
ஏல உம்மை வழி படுவார்க்கு அளிக்க அளிக்கின்றோம் என்று
கோலம் காண எழுந்து அருளி குலவும் பெருமை இருவர்க்கும்
ஞாலம் அறி படிக்காசு வைத்தார் மிழலை நாயகனார்
விண்ணின் நின்று இழிந்த விமானத்தின் கிழக்கும் மேற்கும் பீடத்தில்
அண்ணல் புகலி ஆண் தகையார் தமக்கும் ஆண்ட அரசினுக்கும்
நண்ணும் நாள்கள் தொறும் காசு படிவைத்து அருள நானிலத்தில்
எண்ணில் அடியார் உடன் அமுது செய்து அங்கு இருந்தார் இருவர்களும்
அல்லார் கண்டத்து அண்டர் பிரான் அருளால் பெற்ற படிக்காசு
பல்லாறு இயன்ற வளம் பெருக பரமன் அடியார் ஆனார்கள்
எல்லாம் எய்தி உண்கஎன இரண்டு பொழுதும் பறை நிகழ்த்தி
சொல்லால் சாற்றி சோறு இட்டார் துயர் கூர் வறுமை தொலைத்திட்டார்
ஈசர் மிழலை இறையவர் பால் இமை பாவை திருமுலை
தேசம் உய்ய உண்டவர் தாம் திருமா மகனார் ஆதலினால்
காசு வாசியுடன் பெற்றார் கை தொண்டு ஆகும் படிமையினால்
வாசி இல்லா காசு படி பெற்று வந்தார் வாகீசர்
ஆறு சடை மேல் அணிந்து அருளும் அண்ணல் வைத்த படி காசால்
ஈறு இலாத பொருள் உடைய இருவர்
சோறு நாளும் தொண்டர் மகிழ்ந்து உண்ண உண்ண தொலையாதே
ஏறு பெருமை புவி போற்ற இன்புற்று இருக்கும் நாளில்
காலம் தவறு தீர்ந்து எங்கும் கலி வான் பொழிந்த புனல் கலந்து
ஞாலம் எல்லாம் குளிர் தூங்கி உணவு பெருகி நலம் சிறப்ப
மூல அன்பர் இருவர்களும் மொழி மாலைகளும் பல சாத்தி
நீல கண்டர் உறை பதிகள் பிறவும் வணங்க நினைவுற்றார்
வாய்ந்த மிழலை மா மணியை வணங்கி பிரியா விடை கொண்டு
பூந்தண் புனல் சூழ் வாஞ்சியத்தை போற்றி புனிதர் வாழ்பதிகள்
ஏய்ந்த அன்பினால் இறைஞ்சி இசை வண் தமிழ்கள் புனைந்து போ
சேர்ந்தார் செல்வ திருமறைக்காடு எல்லை இல்லா சீர்த்தியினார்
மன்றல் விரவு மலர புன்னை மணம் சூழ் சோலை உப்பளத்தின்
முன்றில் தோறும் சிறு மடவார் முத்தம் கொழிக்கும் மறை காட்டு
குன்ற வில்லியார் மகிழ்ந்த கோயில் புகுந்து வலம் கொண்டு
சென்று சேர்ந்தார் தென் புகலி கோவும் அரசும் திரு முன்பு
பரவை ஓத கழிக்கானல் பாங்கு நெருங்கும் பதியில்
அரவ சடை அந்தணனாரை அகில மறைகள் அர்ச்சனை செய்து
உரவ கதவம் திரு காப்பு செய்த அந்நாள் முதல் இந்நாள்
வரையும் அடைத்தே நிற்கின்ற மணி நீள வாயில் வணங்குவார்
தொல்லை வேதம் திரு காப்பு செய்த வாயில் தொடர் அகற்ற
வல்ல அன்பர் அணையாமை மருங்கு ஓர் வாயில் வழி எய்தி
அல்லல் தீர்ப்பார் தமை அருச்சிப்பார்கள் தொழுவார் ஆம்படி கண்டு
எல்லை இல்லா பெரும் புகழார் இதனை அங்கு கேட்டு அறிந்தார்
ஆங்கு பரிசை அறிந்து அருளி ஆழி தோணி புரத்து அரசர்
ஓங்கு வேதம் அருச்சனை செய் உம்பர் பிரானை உள் புக்கு
தேம்கா திருவோம் நேர் இறைஞ்ச திருமுன் கதவம் திருக்காப்பு
நீங்க பாடும் அப்பர் என நீடும் திருநாவுக்கு அரசர்
உண்ணீர்மையினால் பிள்ளையார் உரை செய்து அருள அதனாலே
பண்ணினேரு மொழியாள் என்று எடுத்து பாட பயன் துய்ப்பான்
தெண்ணீர் அணிந்தார் திருக்காப்பு நீக்க தாழ்க்க திரு கடைக்காப்பு
எண்ணீர் இரக்கம் ஒன்று இல்லீர் என்று பாடி இறைஞ்சுதலும்
வேத வளத்தின் மெ பொருளின் அருளால் விளங்கும் மணி கதவம்
காதல் அன்பர் முன்பு திரு காப்பு நீங கலை மொழிக்கு
நாதர் ஞான முனிவருடன் தொழுது விழுந்தார் ஞாலத்துள்
ஓத ஒலியின் மிக்கு எழுந்த தும்பர் ஆர்ப்பும் மறை ஒலியும்
அன்பர் ஈட்டம் களி சிறப்ப ஆண்ட அரசும் சிவ கன்றும்
இன்ப வெள்ளத்து இடை மூழ்கி எழுந்து உள் புகுந்து தம் பெருமான்
முன்பு பணிந்து போற்றி இசைத்து பரவி மொழி மாலைகள் பாடி
என்பு கரைய உள் உருகி இறைஞ்சி அரிதில் புறத்து அணைந்தார்
புறம்பு நின்று வாகீசர் புனிதர் அருளால் கதவம்
திறந்தும் அடைத்தும் செல்லும் நெறி திருந்த மலையாள் திருமுலையில்
கறந்த ஞானம் குழைத்த அமுது செய்த புகலி கவுணியரை
நிறைந்த கதவம் அடைக்கும் வகை நீரும் பாடி அருளும் என
சண்பை ஆளும் தமிழ் விரகர் தாமும் திரு நாவுக்கரசர்
பண்பின் மொழிந்த உரை கொண்டு பதிகம் பாடும் அவ்வளவில்
கண் பொற்பமைந்த நுதல் காளகண்டர் அருளால் கடிதுடனே
திண் பொன் கதவம் திரு காப்பு செய்து எடுத்த திரு பாட்டில்
அது கண்டு உடைய பிள்ளையார் தாமும் ஆண்ட அரசும் மகிழ்ந்து
இது நம் பெருமான் அருள் செ பெற்றோம் என்று அங்கு இறைஞ்சிய பின்
பதிகம் நிர பிள்ளையார் பாடி தொழுது பணிவு உற்றார்
எதிர் பொன் திருவாயிலின் வழக்கம் என்றும் நிகழ்ச்சி எய்தியது ஆல்
அங்கு நிகழ்ந்த செயல் கண்டு அடியார் எல்லாம் அதிசயித்து
பொங்கு புளகம் எய்திட மெய் பொழியும் கண்ணீர் பரந்து இழிய
எங்கும் நிகர் ஒன்று இல்லாத இருவர் பாதம் இறைஞ்சினார்
நங்கள் புகலி பெரும் தகையும் அரசும் மடத்தில் நண்ணிய பின்
அரிதில் திறக்க தாம் பாட அடைக்க அவர் பாடிய எளிமை
கருதி நம்பர் திருவுள்ளம் அறியாது அயர்ந்தேன் என கவன்று
பெரிதும் அஞ்சி திருமடத்தில் ஒருபால் அணைந்து பேழ் கணித்து
மருவும் உணர்வில் துயில் கொண்டார் வாய்மை திறம்பா வாகீசர்
மன்னும் செல்வ மறைக்காட்டு மணியின் பாதம் மனத்தின் கண்
உன்னி துயிலும் பொழுதின் கண் உமை ஓர் பாகம் உடையவர் தாம்
பொன்னின் மேனி வெண் நீறு புனைந்த கோல பொலிவினொடும்
துன்னி அவர்க்கு வாய் மூரில் இருப்போம் தொடர வா என்றார்
போதம் நிகழ வா என்று போனார் என் கொல் என பாடி
ஈது எம்பெருமான் அருளாகில் யானும் போவேன் என்று எழுந்து
வேத வனத்தை புறகிட்டு விரைந்து போக அவர் முன்னே
ஆதி மூர்த்தி முன் காட்டும் அவ் வேடத்தால் எழுந்து அருள
சீரார் பதியின் நின்று எழுந்து செல்லும் திருநாவுக்கு அரசர்
ஆரா அன்பில் ஆரமுதம் உண்ண எய்தா வாறே போல்
நீரார் சடையார் எழுந்து அருள நெடிது பின்பு செல்லும் அவர்
பேராளரை முன் தொடர்ந்து அணை பெறுவார் எய்த பெற்று இலரால்
அன்ன வண்ணம் எழுந்து அருளி அணித்தே காட்சி கொடுப்பார் போல்
பொன்னின் கோயில் ஒன்று எதிரே காட்டி அதனுள் புக்கு அருள
துன்னும் தொண்டர் அம் மருங்கு விரைந்து தொடர போந்த படி
மன்னும் புகலி வள்ளலார் தாமும் கேட்டு வந்து அணைந்தார்
அழைத்து கொடு போந்து அணியார் போல் காட்டி மறைந்தார் என அயர்ந்து
பிழைத்து செவ்வி அறியாதே திறப்பி தேனுக்கே அல்லால்
உழைத்தாம் ஒளித்தால் கதவம் தொண்டு உறைக்க பாடி அடைப்பித்த
தழைத்த மொழியார் உப்பாலார் தாம் இங்கு எப்பால் மறைவது என
மாட நீடு திருப்புகலி மன்னர் அவர்க்கு மால் அயனும்
நேடி இன்னங் காணாதார் நேரே காட்சி கொடுத்து அருள
ஆடல் கண்டு பணிந்து ஏத்தி அரசும் காண காட்டுதலும்
பாட அடியார் என்று எடுத்து பரமர் தம்மை பாடினார்
பாடும் தமிழ் மாலைகள் கொண்டு பரமர் தாமும் எழுந்து அருள
நீடும் திருவாய்மூர் அடைந்து நிலவும் கோயில் வலம் செய்து
சூடும் பிறையார் பெரும் தொண்டர் தொழுது போற்றி துதி செய்து
நாடும் காதல் வளர்ந்து ஓங்க நயந்து நகரில் உடன் உறைந்தார்
ஆண்ட அரசும் பிள்ளையார் உடனே அங்கண் இனிது அமர்ந்து
பூண்ட காதல் பொங்கி எழ வாய் மூர் அடிகள் போற்றி
மூண்ட அன்பின் மொழிமாலை சாத்தி ஞான முனிவர் ஒடு
மீண்டு வந்து திருமறை காடு எய்தி விமலர் தாள் பணிந்தார்
ஆதி முதல்வர் தமை பணிந்து அங்கு ஆன பணி செய்து அமரும் நாள்
சீத மதி வெண் குடை வளவர் மகளார் தென்னன் தேவியாம்
கோதில் குணத்து பாண்டி மா தேவியார் முன் குலச்சிறையார்
போத விட்டார் சிலர் வந்தார் புகலி வேந்தர் தமை காண
வந்து சிவனார் திருமறை காடு எய்தி மன்னு வேணுபுரி
அந்தணாளர் தமக்கு அறிவித்து அவர் பால் எய்தி அடி வணங்க
சிந்தை மகிழ்ந்து தீது இன்மை வனவ தீங்கும் உளவாமோ
இந்த உலகம் உய வந்தீர் இரு தாள் நினைவார்க்கு என்று உரைப்பார்
சைவ நெறி வைதிகம் நிற்க சழக்கு நெறியை தவம் என்னும்
பொய் வல் அமணர் செயல் தன்னை பொறுக்க கில்லோம் என கேட்டே
அவ் வன் தொழிலோர் செயல் மாற்றி ஆதிசைவ நெறி விளங்க
தெய்வ நீறு நினைந்து எழுந்தார் சீர் கொள் சண்பை திரு மறையோர்
ஆய பொழுது திரு நாவுக்கரசு புகலி ஆண் தகைக்கு
காய மாசு பெருக்கி உழல் கலதி அமணர் கடுவினை செய்
மாயை சாலம் மிக வல்லார் அவர் மற்று என்னை முன் செய்த
தீய தொழிலும் பல கெட்டேன் சொல்ல இசையேன் யான் என்றார்
என்று கூற எல்லை இலா நீறு போற்றும் இருவரையும்
சென்று காணும் கருத்து உடையேன் அங்கு தீங்கு புரி அமணர்
நின்ற நிலைமை அழிவித்து சைவ நெறி பாரித்து அன்றி
ஒன்றும் செய்யேன் ஆணை உமது என்றார் உடைய பிள்ளையார்
போமா துணிந்து நீர் அங்கு போக போதா அவ் அமணர்
தீ மாயையினை யானே போ சிதைத்து வருகின்றேன் என்ன
ஆமாறு எல்லாம் உரைத்து அவரை மறுக்க மாட்டது அரசு இருப்ப
தாம் ஆதரவால் தமிழ் நாட்டில் போனார் ஞான தலைவனார்
வேணு புரக்கோன் எழுந்து அருள விடைகொண்டு இருந்த வாகீசர்
பூணும் அன்பால் மறைக்காட்டில் புனிதர் தம்மை போற்றி இசைத்து
பேணி இருந்து அங்கு உறையும் நாள் பெயர்வார் வீழிமிழலை அமர்
தாணுவின் தன் செய்ய கழல் மீண்டும் சார நினைக்கின்றார்
சோலை மறை காட்டு அமர்ந்து அருளும் சோதி அருள் பெற்று அகன்று போய்
வேலை விடம் உண்டவர் வீழி மிழலை மீண்டும் செல்வன் என
ஞாலம் நிகழ்ந்த நாகை காரோணம் பிறவும் தாம் பணிந்து
சாலு மொழி வண் தமிழ பாடி தலைவர் மிழலை வந்து அடைந்தார்
வீழி மிழலை தனி பணிந்து வேத முதல்வர் தாம் இருப்ப
ஆழி வலம் ஏந்திய அரியால் ஆகாசத்தின் நின்று இழிந்த
வாழி மலர்ந்த கோயில்தனில் மன்னும் பொருளை போற்றிசைத்து
தாழும் நாளில் பிறபதியும் பணியும் காதல் தலை நிற்பார்
பூவில் பொலியும் புனல் பொன்னி கரை போ பணிவார் பொற்பு அமைந்த
ஆவுக்கு அருளும் ஆவடு தண் துறையார் பாதம் அணைந்து இறைஞ்சி
நாவு கரசர் ஞான போன கர்க்கு செம் பொன் ஆயிரமும்
பாவுக்கு அளித்த திறம் போற்றி போந்து பிறவும் பணிகின்றார்
செய்ய சடையார் பழையாறை எய்த அதனில் செல் பொழுதில்
மையல் அமணர் மறைத்த வடதளியின் மன்னும் சிவனாரை
கைகள் கூப்பி தொழுது அருள கண்டவாற்றால் அமணர்கள் தம்
பொய் கொள் விமானம் என கேட்டு பொறாத உள்ளம் மிக புழுங்கி
அந்த விமானம் தனக்கு அருகா ஆங்கு ஓர் இடத்தின் பாங்கு எய்தி
கந்தம் மலரும் கடி கொன்றை முடியார் செய்ய கழல் உன்னி
மந்த அமணர் வஞ்சனையால் மறைத்த வஞ்சம் ஒழித்தருளி
பந்தம் கொண்ட குண்டர் திறம் பாற்றும் என்று பணிந்து இருந்தார்
வண்ணம் கண்டு நான் உம்மை வணங்கி அன்றி போகேன் என்று
எண்ண முடிக்கும் வாகீசர் இருந்தார் அமுது செய்யாதே
அண்ணலாரும் அது உணர்ந்து அங்கு அரசு தம்மை பணிவதற்கு
திண்ணமாக மன்னனுக்கு கனவில் அருளி செய்கின்றார்
அறிவில் அமணர் நமை மறைப்ப இருந்தோம் என்று அங்கு அடையாள
குறிகள் அறி செய்து அருளி நம்மை அரசு கும்பிடுவான்
நெறியில் அமணர் தமை அழித்து நீக்கி போக்கு என்று அருள் புரிய
செறிவில் அறிவுற்று எழுந்து அவனும் செங்கை தலைமேல் குவித்து இறைஞ்சி
கண்ட வியப்பு மந்திரிகட்கு இயம்பி கூட கடிது எய்தி
அண்டர் பெருமான் அருள் செய்த அடையாளத்தின் வழி கண்டு
குண்டர் செய்த வஞ்சணையை குறித்து வேந்தன் குலவு பெரும்
தொண்டர் தம்மை அடி வணங்கி தொக்க அமணர் தூர் அறுத்தான்
ஆனை இனத்தில் துகைப்புண்ட அமண் ஆயிரமும் மாய்ந்தற் பின்
மேன்மை அரசன் ஈசர்க்கு விமானம் ஆக்கி விளக்கியபின்
ஆன வழி பாட்டு அர்ச்சனைக்கு நிபந்தம் எல்லாம் அமைத்து இறைஞ்ச
ஞான அரசும் புக்கு இறைஞ்சி நாதர் முன்பு போற்றுவார்
தலையின் மயிரை பறித்து உண்ணூம் சாதி அமணர் மறைத்தாலும்
நிலை இலாதார் நிலைமையினால் மறைக்க ஒண்ணுமோ என்னும்
விலை இல் வாய்மைக்குறும் தொகைகள் விளம்பி புறம் போந்து அங்கு அமர்ந்தே
இலை கொள் சூல படையார் சேர் இடங்கள் பிறவும் தொழ அணைவார்
பொங்கு புனலார் பொன்னியில் இரண்டு கரையும் பொருவிடையார்
தங்கும் இடங்கள் புக்கு இறைஞ்சி தமிழ் மாலைகளும் சாத்தி போய்
எங்கும் நிறைந்த புகழ் ஆளர் ஈறில் தொண்டர் எதிர் கொள்ள
செங்கண் விடையார் திருவானை காவின் மருங்கு சென்று அணைந்தார்
சிலந்திக்கு அருளும் கழல் வணங்கி செஞ்சொல் மாலை பல பாடி
இலங்கு சடையார் எறும்பியூர் மலையும் இறைஞ்சி பாடியபின்
சோதி திருச்சிராப்பள்ளி மலையும் கற்குடியும்
நலம் கொள் செல்வ திருப்பரா துறையும் தொழுவான் நண்ணினார்
மற்ற பதிகள் முதலான மருங்கு உள்ளனவும் கை தொழுது
பொன் புற்று அமைந்த திருப்பணிகள் செய்து பதிகம் கொடு போற்றி
உற்ற அருளால் காவிரியை ஏறி ஒன்னார் புரம் எரி
செற்ற சிலையார் திருப்பைஞ்ஞீலியினை சென்று சேர்கின்றார்
வழி போம் பொழுது மிக இளைத்து வருத்தம் உற நீர் வேட்கையொடும்
அழிவாம் பசி வந்து அணைந்திடவும் அதற்கு சித்தம் அலையாதே
மொழி வேந்தரும் முன் எழுந்து அருள முருகு ஆர் சோலை பைஞ்ஞீலி
விழி ஏந்திய நெற்றியினார் தம் தொண்டர் வருத்தம் மீட்பாராய்
காவும் குளமும் முன் சமைத்து காட்டி வழி போம் கருத்தினால்
மேவும் திருநீற்று அந்தணராய் விரும்பும் பொதி சோறும் கொண்டு
நாவின் தனி மன்னவர்க்கு எதிரே நண்ணி இருந்தார் விண்ணின் மேல்
தாவும் புள்ளும் மண் கிழிக்கும் தனி ஏனமும் காண்பு அரியவர் தாம்
அங்கண் இருந்த மறையவர் பால் ஆண்ட அரசும் எழுந்து அருள
வெங்கண் விடை வேதியர் நோக்கி மிகவும் வழி வந்து இளைத்து இருந்தீர்
இங்கு என் பாலே பொதி சோறு உண்டு இதனை தண்ணீர்
பொங்கு குளத்தில் குடித்து இளைப்பு போக்கி போவீர் என புகன்றார்
நண்ணும் திருநாவுக்கு அரசர் நம்பர் அருள் என்று அறிந்தார் போல்
உண்ணும் என்று திருமறையோர் உரைத்து பொதி சோறு அளித்தலுமே
எண்ண நினையாது எதிர் வாங்கி இனிதாம் அமுது செய்து இனிய
தண்ணீர் அமுது செய்து அருளி தூய்மை தளர்வு
எய்ப்பு நீங்கி நின்றவரை நோக்கி இருந்த மறையவனார்
அப்பால் எங்கு நீர் போவது என்றார் அரசும் அவர்க்கு எதிரே
செப்புவார் யான் திருப்பைஞ் ஞீலிக்கு போவ என்று உரைப்ப
ஒப்பு இலாரும் யான் அங்கு போகின்றேன் என்று உடன் போந்தார்
கூட வந்து மறையவனார் திருப்பைஞ்ஞீலி குறுகியிட
வேடம் அவர் முன் மறைத்தலுமே மெய்ம்மை தவத்து மேலவர் தாம்
ஆடல் புரிந்தார் அடியேனை பொருளாய் அளித்த கருணை என
பாடல் புரிந்து விழுந்து எழுந்து கண்ணீர் மாரிபயில் வித்தார்
பைஞ் ஞீலியினில் அமர்ந்து அருளும் பரமர் கோயில் சென்று எய்தி
மைஞ் ஞீலத்து மணி கண்டர் தம்மை வணங்கி மகிழ் சிறந்து
மெய்ஞ் ஞீலிர் மையினில் அன்புருக விரும்பும் தமிழ் மாலைகள் பாடி
கைஞ்ஞீடிய தம் திருத்தொண்டு செய்து காதலுடன் இருந்தார்
நாதர் மருவும் திருமலைகள் நாடும் பதிகள் பல மிகவும்
காதல் கூர சென்று இறைஞ்சி கலந்த இசை வண் தமிழ் பாடி
மாதோர் பாகர் அருளாலே வடபால் நோக்கி வாகீசர்
ஆதி தேவர் அமர்ந்த திரு அண்ணாமலையை நண்ணினார்
செங்கண் விடையார் திரு அண்ணா மலையை தொழுது வலம் கொண்டு
துங்க வரையின் மிசை ஏறி தொண்டர் தொழும்புக்கு எதிர் நிற்கும்
அங்கண் அரசை தொழுது எழுந்து திளைத்து திருநாவுக்கரசர்
தங்கு பிறப்பே வீட்டினுக்கு மேலாம் பெருமை சாதித்தார்
அண்ணாமலை மலை மேல் அணிமலையை ஆரா அன்பின் அடியவர் தம்
கண்ணார் அமுதை விண்ணோரை கா கடலில் வந்து எழுந்த
உண்ணா நஞ்சம் உண்டானை கும்பிட்டு உருகும் சிந்தை உடன்
பண்ணார் பதிக தமிழ் பாடி பணிந்து பரவி பணி செய்தார்
பணியார் வேணி சிவ பெருமான் பாதம் போற்றி பணி செயும் நாள்
மணியார் கண்டத்து எம் பெருமான் மண் மேல் மகிழும் இடம் எங்கும்
தணியா காதலுடன் சென்று வணங்கி தக்க பணி செய்வார்
அணியார் தொண்டை திருநாட்டில் அருளால் அணைவார் ஆயினார்
காதல் செய்யும் கருத்தின் உடன் காடும் மலையும் கான் ஆறும்
சூதமலி தண் பணை பதிகன் பலவும் கடந்து சொல்லிக்கு
நாதர் போந்து பெரும் தொண்டை நன்னாடு எய்தி முன் ஆக
சீத மலர் மென் சோலை சூழ் திரு ஒத்தூரில் சென்று அடைந்தார்
செக்கர் சடையார் திரு ஒத்துத்தூர் தேவர் பிரானார் தம் கோயில்
புக்கு வலம் கொண்டு எதிர் இறைஞ்சி போற்றி கண்கள் புனல் பொழிய
மு கண் பிரானை விரும்பும் மொழி திரு தாண்டகங்கள் முதலாக
தக்க மொழி மாலைகள் சாத்தி சார்ந்து பணி செய்து ஒழுகுவார்
செய்ய ஐயர் திரு ஒத்தூர் ஏத்தி போந்து செழும் புவனம்
உய்ய நஞ்சு உண்டு அருளும் அவர் உறையும் பதிகள் பல வணங்கி
தையல் தழுவ குழைந்த பிரான் தங்கும் தெய்வ பதி என்று
வையம் முழுதும் தொழுது ஏத்தும் மதில் சூழ் காஞ்சி மருங்கு அணைந்தார்
ஞாலம் திருவதிகை நம்பர் தம் பேர் அருளினால்
சூலை மடுத்து முன் ஆண்ட தொண்டர் வரப்பெற்றோம் என்று
காலை மலரும் கமலம் போல் காஞ்சி வாணர் முகம் எல்லாம்
சால மலர்ந்து களி சிறப்ப தழைத்த மனங்கள் தாங்குவார்
மாட வீதி மருங்கு எல்லாம் மணி வாயில்களில் தோரணங்கள்
நீடு கதலியுடன் கமுகு நிறைத்து நிறை பொற்குடம் தீபம்
தோடு குலவு மலர் மாலை சூழ்ந்த வாச பந்தர்களும்
ஆடு கொடியும் உடன் எடுத்து அங்கு அணிந்ணள் காஞ்சி அலங்கரித்தார்
தொண்டர் ஈண்டி எதிர்கொள்ள எழுந்து சொல்லுக்கு அரசர் பால்
கொண்ட வேட பொலிவினொடும் குலவும் வீதி பணி செய்யும்
அண்டர் அறிதற்கு அரிய திரு அலகு முதல் ஆம் அவை ஏந்தி
இண்டை புனைந்த சடை முடியார்க்கு அன்பர் தம்மை எதிர் கொண்டார்
எதிர் கொண்டு இறைஞ்சும் சீர் அடியார் தம்மை இறைஞ்சி எழுந்து அருளி
மதில் கொண்டு அணிந்த காஞ்சி நகர் மறுகு உள் போந்து வானநதி
குதி கொண்டு இழிந்த சடை கம்பர் செம் பொன் கோயில் குறுகினார்
அதிர் கொண்டு அலை நேர் மணி மிடற்றார் ஆண்ட திருநாவுக்கரசர்
திரு வாயிலினை பணிந்து எழுந்து செல்வ முன்றிலை
கருவார் கச்சி ஏகம்பர் கனக மணி மாளிகை சூழ்ந்து
வருவார் செம் பொன் மலை வல்லி தழுவ குழைந்த மணி மேனி
பெரு வாழ்வினை முன் கண்டு இறைஞ்சி பேரா அன்பு பெருக்கினார்
வார்ந்து சொரியும் கண் அருவி மயிர கால் தோறும் வரும் புளகம்
ஆர்ந்த மேனி புறம்பு அலைப்ப அன்பு கரைந்து புள் அலைப்ப
சேர்ந்த நயன பயன் பெற்று திளைப்ப திருவேகம்பர் தமை
நேர்ந்த மனத்தில் உற வைத்து நீடும் பதிகம் பாடுவார்
கரவாடும் வன் நெஞ்சர்க்கு அரியானை என்று எடுத்து
பரவாய சொல் மாலை திரு பதிகம் பாடிய பின்
விரிவார் தம் புரம் எரித்த விடையவனார் வெள் எயிற்றின்
அரவு ஆரம் புனைந்தவர் தம் திருமுன்றில் புறத்து அணைந்தார்
கையார்ந்த திருத்தொண்டு கழிய மிகும் காதலோடும்
செய்யா நின்றே எல்லா செந்தமிழ் மாலையும் பாடி
மையார்ந்த மிடற்றர் திரு மயானத்தை வலம் கொண்டு
மெய்யார்வம் உற தொழுது விருப்பினோடு மேவு நாள்
சீர் வளரும் மதில் கச்சி நகர திரு மேல் தளி முதலாம்
நீர் வளரும் சடையவர் தாம் நிலவி உறை ஆலயங்கள்
ஆர்வம் உற பணிந்து ஏத்தி ஆய்ந்த தமிழ சொல் மலரால்
சார்வுறு மாலைகள் சாத்தி தகும் தொண்டு செய்திருந்தார்
அந்நகரில் அவ் வண்ணம் அமர்ந்து உறையும் நாளின் கண்
மன்னு திரு மாற் பேறு வந்து அணைந்து தமிழ் பாடி
சென்னி மிசை மதி புனைவார் பதி பலவும் சென்று இறைஞ்சி
துன்னினார் காஞ்சியினை தொடர்ந்த பெரும் காதலினால்
ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தான் என போற்றி
பாகம் பெண் உருவானை பைங் கண் விடை உயர்த்தானை
நாகம் பூண் உகந்தானை நலம் பெருகும் திரு நீற்றின்
ஆகந்தோய் அணியானை அணைந்து பணிந்து இன்புற்றார்
திருக்கச்சி ஏகம்பம் பணிந்து ஏத்தி திங்களார்
நெருக்க செஞ்சடைக்கு அணிந்தார் நீடு பதி தொழ நினைவார்
வருக்கை செஞ்சுளை பொழி தேன் வயல் விளைக்கும் நாட்டு இடை போ
பருக்கை திண் களிற்று உரியார் கழு குன்றின் பாங்கு அணைந்தார்
நீடு திரு கழு குன்றில் நிருத்தனார் கழல் வணங்கி
பாடு தமிழ தொடை புனைந்து பாங்கு பல பதிகளிலும்
சூடும் இனம் பிறை முடியார் தமை தொழுது போற்றி போய்
மாடு பெரும் கடல் உடுத்த வான்மியூர் மருங்கு அணைந்தார்
திருவான்மியூர் மருந்தை சேர்ந்து பணிந்த அன்பினொடும்
பெரு வாய்மை தமிழ்பாடி அம் மருங்கு பிறப்பு அறுத்து
தருவார் தம் கோயில் பல சார்ந்து இறைஞ்சி தமிழ் வேந்தர்
மருவாரும் மலர சோலை மயிலாப்பூர் வந்து அடைந்தார்
வரை வளர் மா மயில் என்ன மாடமிசை மஞ்சாடும்
தரை வளர் சீர திருமயிலை சங்கரனார் தாள் வணங்கி
உரை வளர் மாலைகள் அணிவித்து உழவார படை ஆளி
திரை வளர் வேலை கரை போய் திரு ஒற்றியூர் சேர்ந்தார்
ஒற்றியூர் வள நகரத்து ஒளி மணி வீதிகள் விளக்கி
நற்கொடி மாலைகள் பூகம் நறும் கதலி நிரை நாட்டி
பொற்குடங்கள் தூபங்கள் தீபங்கள் பொலிவித்து
மற்றவரை எதிர் கொண்டு கொடு புக்கார் வழி தொண்டர்
திரு நாவு கரசரும் ஒற்றியூர்
பெரு நாகத்தின் சிலையார் கோபுரத்தை இறைஞ்சி புக்கு
ஒரு ஞான தொண்டர் உடன் உருகி வலம் கொண்டு அடியார்
கரு நாமம் தவிர்ப்பாரை கை தொழுது முன் வீழ்ந்தார்
எழுதாத மறை அளித்த எழுத்து அறியும் பெருமானை
தொழுத ஆர்வம் உற நிலத்தில் தோய்ந்து எழுந்தே அங்கம் எல்லாம்
முழுது ஆய பரவசத்தின் முகிழ்த்த மயிர்க்கால் மூழ்க
விழுதாரை கண் பொழிய விதிர்ப்பு உற்று விம்மினார்
வண்டு ஓங்கும் செங் கமலம் என எடுத்து மனம் உருக
பண் தோய்ந்த சொல் திரு தாண்டகம் பாடி பரவுவார்
விண் தோய்ந்த புனல் கங்கை வேணியார் திரு உருவம்
கண்டு ஓங்கு களி சிறப்ப கை தொழுது புறத்து அணைந்தார்
விளங்கு பெரு திருமுன்றில் மேவும் திருப்பணி செய்தே
உளங்கொள் திரு விருத்தங்கள் ஓங்கு திரு குறு தொகைகள்
களங்கொள் திரு நேரிசைகள் பல பாடி கை தொழுது
வளங்கொள் திரு பதியம் தனில் பல நாள்கள் வைகினார்
அங்குறையும் நாளின்கண் அருகுளவாம் சிவாலயங்கள்
எங்கும் சென்று இனிது இறைஞ்சி ஏத்தும் அவர் இறை அருளால்
பொங்கு புனல் திரு ஒற்றியூர் தொழுது போந்து உமையாள்
பங்குடையார் அமர்ந்திரு பாசூராம் பதி அணைந்தார்
திருப்பாசூர் நகர் எய்தி சிந்தையினில் வந்து ஊறும்
விருப்பு ஆர்வம் மேற் கொள்ள வேய் இடம் கொண்டு உலகு உய்ய
இருப்பாரை புரம் மூன்றும் எரித்து அருள எடுத்த தனி
பொருப்பார் வெஞ்சிலையாரை தொழுது எழுந்து போற்றுவார்
முந்தி மூவெயில் எய்த முதல்வனார் என எடுத்து
சிந்தை கரைந்து உருகு திரு குறு தொகையும் தாண்டகமும்
சந்தம் நிறை நேர் இசையும் முதலான தமிழ் பாடி
எந்தையார் திரு அருள் பெற்று ஏகுவார் வாகீசர்
அம் மலர சீர பதியை அகன்று அயல் உளவாம் பதி அனைத்தின்
மைம் மலரும் களத்தாரை வணங்கி மகிழ்வொடும் போற்றி
மெய்ம்மை நிலை வழுவாத வேளாள விழு குடிமை
செம்மையினால் பழையனூர திரு ஆல வனம் பணிந்தார்
திரு ஆலங்காடு உறையும் செல்வர்தாம் என சிறப்பின்
ஒருவாத பெரும் திரு தாண்டகம் முதலாம் ஓங்கு தமிழ
பெரு வாய்மை தொடை மாலை பல பாடி பிற பதியும்
மருஆர்வம் பெற வணங்கி வடதிசை மேல் வழி கொள்வார்
பல் பதியும் நெடும் கிரியும் படர் வனமும் சென்று அடைவார்
செல் கதி முன் அளிப்பார் தம் திருக்காரி கரை பணிந்து
தொல் கலையின் பெருவேந்தர் தொண்டர்கள் பின் உம்பர் குழாம்
மல்கு திரு காளத்தி மா மலை வந்து எய்தினார்
பொன் முகலி திருநதியின் புனித நெடும் தீர்த்தத்தில்
முன் முழுகி காளத்தி மொய் வரையின் தாழ்வரையில்
சென்னி உற பணிந்து எழுந்து செம் கண் விடை தனிப்பாகர்
மன்னும் மலை மிசை ஏறி வலம் கொண்டு வணங்குவார்
காதணி வெண் குழையானை காளத்தி மலை கொழுந்தை
வேத மொழி மூலத்தை விழுந்து இறைஞ்சி எழுந்து பெரும்
காதல் புரி மனம் களிப்ப கண் களி பரவசமாய்
நாதனை என்கண்ணுளான் என்னும் திருத்தாண்டகம் நவின்றார்
மலை சிகர சிகா மணியின் மருங்கு உற முன்னே நிற்கும்
சிலை தடக்கை கண்ணப்பர் திருப்பாதம் சேர்ந்து இறைஞ்சி
அலைத்து விழும் கண் அருவி ஆகத்து பாய்ந்து இழி
தலை குவித்த கையினரா தாழ்ந்து புறம் போந்து அணைந்தார்
சேண் நிலவு திருமலையில் திருப்பணி ஆயின செய்து
தாணுவினை அம்மலை மேல் தாள் பணிந்த குறிப்பினால்
பேணிதிரு கயிலை மலை வீற்று இருந்த பெருங் கோலம்
காணுமது காதலித்தார் கலை வாய்மை காவலனார்
அங்கண் மா மலைமேல் மருந்தை வணங்கியார் அருளால் மிக
பொங்கு காதலின் உத்தர திசை மேல் விருப்போடு போதுவார்
துங்க மால் வரை கானியாறு தொடர்ந்த நாடு கடந்தபின்
செங்கண் மால் விடை அண்ணல் மேவும் திரு பருப்பதம் எய்தினார்
மான விஞ்சையர் வான நாடர்கள் வான் இயக்கர்கள் சித்தர்கள்
கான கின்னரர் பன்னகாதிபர் காம சாரிகளே முதல்
ஞான மோனிகள் நாளும் நம்பரை வந்து இறைஞ்சி நலம் பெறும்
தானம் ஆன திருச்சிலம்பை வணங்கி வண் தமிழ் சாற்றினார்
அம் மருங்கு கடந்து போம் அவர் ஆர் கொள் சூல அயில் படை
செம்மல் வெண் கயிலை பொருப்பை நினைந்து எழுந்த ஓர் சிந்தையால்
எம் மருங்கும் ஓர் காதல் இன்றி இரண்டு பாலும் வியந்து உளோர்
கைம் மருங்கு அணையும் தெலுங்கு கடந்து கன்னடம் எய்தினார்
கரு நடம் கழிவாக ஏகிய பின் கலந்த வனங்களும்
திரு நதி துறை யாவையும் பயில் சேண் நெடும் கிரி வட்டையும்
பெரு நலம் கிளர் நாடும் எண்ணில பின்பட பொற்பினால்
வரு நெடும் கதிர் கோலு சோலைய மாளவத்தினை நண்ணினார்
அங்கு முற்றி அகன்று போகி அரும் சுரங்கள் கடந்து சென்று
எங்கும் மிக்க அறங்கள் நீடும் இலாட பூமி இகந்து போய்
மங்குல் சுற்றிய வெற்பினோடு வனங்கள் ஆறு கடந்து அயல்
பங்க பழனத்து மத்திய பை திரத்தினை எய்தினார்
அன்ன நாடு கடந்து கங்கை அணைந்து சென்று வலம் கொளும்
மின்னு வேணியர் வாரணாசி விருப்பினோடு பணிந்து உடன்
பின் அணைந்தவர் தம்மை அங்கண் ஒழிந்து கங்கை கடந்து போய்
மன்னு காதல் செய் நாவின் மன்னவர் வந்து கற்சுரம் முந்தினார்
மாகம் மீது வளர்ந்த கானகம் ஆகி எங்கும் மனித்தரால்
போகலா நெறி அன்றியும் புரிகின்ற காதல் பொலிந்து எழ
சாக மூல பலங்கள் துய்ப்பனவும் தவிர்த்து தனித்து நேர்
ஏகினார் இரவும் பெரும் கயிலை குலக்கிரி எய்துவார்
ஆயவார் இருளின் கண் ஏகும் அவ் அன்பர் தம்மை அணைந்து முன்
தீயவாய விலங்கு வன் தொழில் செய்ய அஞ்சின நஞ்சுகால்
வாய நாக மணி பணங் கொள் விளக்கு எடுத்தன வந்து
தோய வானவராயினும் தனி துன் அருஞ்சுரம் முன்னினார்
வெங்கதிர பகல் அக்கடத்து இடை வெய்யவன் கதிர் கை பரந்து
எங்கும் மிக்க பிளப்பில் நாகர் தம் எல்லை புக்கு எரிகின்றன
பொங்கழற்று எறு பாலை வெந்நிழல் புக்க சூழல் புகும் பகல்
செங்கதிர கனல் போலும் அத்திசை திண்மை மெய்த்தவர் நண்ணினார்
இங்ஙனம் இரவும் பகற் பொழுதும் அரும் சுரம் எய்துவார்
பங்கயம் புரை தாள் பரட்டளவும் பசை தசை தேயவும்
மங்கை பங்கர் தம் வெள்ளிமால் வரை வைத்த சிந்தை மறப்பரோ
தம் கரங்கள் இரண்டுமே கொடு தாவி ஏகுதல் மேவினார்
கைகளும் மணி பந்து அசைந்துறவே கரைந்து சிதைந்தபின்
மெய் கலந்து எழு சிந்தை அன்பின் விருப்பு மீமிசை பொங்கிட
மொய் கடுங் கனல் வெம்பரல் புகை மூளும் அத்த முயங்கியே
மை கொள் கண்டர் தம் அன்பர் செல்ல வருந்தி உந்தினர் மார்பினால்
மார்பமும் தசை நைந்து சிந்தி வரிந்த என்பு முரிந்திட
நேர் வரும் குறி நின்ற சிந்தையின் நேசம் ஈசனை நேடு நீடு
ஆர்வம் அங்கு உயிர் கொண்டு ஊகைக்கும் உடம்பு அடங்கம் ஊன் கெட
சேர் வரும் பழுவம் புரண்டு சென்றனர்
அப்புறம் புரள்கின்ற நீள் இடை அங்கம் எங்கும் அரைந்திட
செப்ப அரும் கயிலை சிலம்பு அடி சிந்தை சென்று உறும் ஆதலால்
மெ புறத்தில் உறுப்பு அழிந்த பின் மெல்ல உந்து முயற்சியும்
தப்புற செயல் இன்றி அந்நெறி தங்கினார் தமிழ் ஆளியார்
அன்ன தன்மையர் கயிலையை அணைவதற்கு அருளார்
மன்னும் தீந்தமிழ் புவியின் மேல் பின்னையும் வழுத்த
நன்னெடும் புனல் தடமும் ஒன்று உடன் கொடு நடந்தார்
பன்னகம் புனை பரமர் ஓர் முனிவராம் படியால்
வந்து மற்றவர் மருங்குற அணைந்து நேர் நின்று
நொந்து நோக்கி மற்றவர் எதிர் நோக்கிட நுவல்வார்
சிந்தி இவ் உறுப்பு அழிந்திட வருந்திய திறத்தால்
இந்த வெங்கடத்து எய்தியது என் என இசைத்தார்
மாசில் வற்கலை ஆடையும் மார்பின் முந்நூலும்
தேசுடை சடை மவுலியும் நீறும் மெய் திகழ
ஆசில் மெய்த்தவர் ஆகி நின்றவர் தமை நோக்கி
பேச உற்றதோர் உணர்வு உற விளம்புவார் பெரியோர்
வண்டுலாங் குழல் மலை மகளுடன் வட கயிலை
அண்டர் நாயகர் இருக்கும் பரிசு அவர் அடியேன்
கண்டு கும்பிட விருப்பொடும் காதலின் அடைந்தேன்
கொண்ட என் குறிப்பு இது முனியே என கூற
கயிலை மால் வரை யாவது காசினி மருங்கு
பயிலும் மானுட பான்மையோர் அடைவதற்கு எளிதோ
அயில் கொள் வேல் படை அமரரும் அணுகுதற்கு அரிதால்
வெயில் கொள் வெஞ்சுரத்து என் செய்தீர் வந்து என விளம்பி
மீளும் அத்தனை உமக்கு இனி கடன் என விளங்கும்
தோளும் ஆகமும் துவளும் முந்நூல் முனி சொல்ல
ஆளும் நாயகன் கயிலையில் இருக்கை கண்டு அல்லால்
மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன் என மறுத்தார்
ஆங்கு மற்றவர் துணிவு அறிந்தவர் தமை அறிய
நீங்கு மாதவர் விசும்பு இடை கரந்து நீள் மொழியால்
ஓங்கு நாவினுக்கு அரசனே எழுந்திர் என்று உரைப்ப
தீங்கு நீங்கிய யாக்கை கொண்டு எழுந்து ஒளி திகழ்வார்
அண்ணலே எனை ஆண்டு கொண்டு அருளிய அமுதே
விண்ணிலே மறைந்து அருள் புரி வேத நாயகனே
கண்ணினால் திரு கயிலையில் இருந்த நின் கோலம்
நண்ணி நான் தொழ நயந்து அருள் புரி என பணிந்தார்
தொழுது எழுந்த நல் தொண்டரை நோக்கி விண் தலத்தில்
எழு பெரும் திருவாக்கினால் இறைவர் பொய்கை
முழுகி நம்மை நீ கயிலையில் இருந்த அம் முறைமை
பழுதில் சீர திருவையாற்றில் காண் என பணித்தார்
ஏற்றினார் அருள் தலை மிசை கொண்டு எழுந்து இறைஞ்சி
வேற்றும் ஆகி விண் நின்றார் மொழி
ஆற்றல் பெற்ற அவ் அண்ணலார் அஞ்சு எழுத்து ஓதி
பால் தடம் புனல் பொய்கையில் மூழ்கினார் பணியால்
ஆதி தேவர் தம் திரு அருள் பெருமை யார் அறிந்தார்
போத மாதவர் பனிமலர பொய்கையில் மூழ்கி
மாதோர் பாகனார் மகிழும் ஆற்றில் ஓர் வாவி
மீது தோன்றி வந்து எழுந்தனர் உலகெலாம் வியப்ப
வம்புலாம் மலர் வாவியின் கரையில் வந்து ஏறி
உம்பர் நாயகர் திரு அருள் பெருமையை உணர்வார்
எம் பிரான் தரும் கருணை கொல் இது என இரு கண்
பம்பு தாரை நீர் வாவியில் படிந்து எழும் படியார்
மிடையும் நீள் கொடி வீதிகள் விளங்கிய ஐயாறு
உடைய நாயகர் சேவடி பணிய வந்து உறுவார்
அடைய அப்பதி நிற்பவும் சரிப்பவும் ஆன
புடை அமர்ந்த தம் துணையொடும் பொலிவன கண்டார்
பொன் மலை கொடியுடன் அமர்வெள்ளியம் பொருப்பில்
தன்மை ஆம் படி சத்தியும் சிவமுமாம் சரிதை
பன்மை யோனிகள் யாவையும் பயில்வன பணிந்தே
மன்னும் மாதவர் தம்பிரான் கோயில் முன் வந்தார்
காணும் அப்பெருங் கோயிலும் கயிலை மால் வரையா
பேணும் மால் அயன் இந்திரன் முதல் பெருந்தேவர்
பூணும் அன்போடு போற்றி இசைத்து எழும் ஒலி பொங்க
தாணு மா மறை யாவையும் தனி தனி முழங்க
தேவர் தானவர் சித்தர் வி சாதரர் இயக்கர்
மேவு மாதவர் முனிவர்கள் புடையெலாம் மிடை
காவி வாள் விழி அரம்பையர் கானமும் முழவும்
தாவில் ஏழ் கடல் முழக்கினும் பெருகொலி தழைப்ப
கங்கையே முதல் தீர்த்தமாம் கடவுள் மா நதிகள்
மங்கலம் பொலி புனல் பெரும் தடம் கொடு வணங்க
எங்கும் நீடிய பெரும் கண நாதர்கள் இறைஞ்ச
பொங்கியங்களால் பூத வேதாளங்கள் போற்ற
அந்தண் வெள்ளி மால் வரை இரண்டாம் என அணைந்து ஓர்
சிந்தை செய்திட செங்கண் மால் விடை எதிர் நிற்ப
முந்தை மாதவ பயன் பெறு முதன்மையால் மகிழ்ந்தே
நந்தி எம்பிரான் நடு விடை ஆடி முன் நணுக
வெள்ளி வெற்பின் மேல் மரகத கொடி உடன் விளங்கும்
தெள்ளு பேர் ஒளி பவள வெற்பு என இடப்பாகம்
கொள்ளும் மா மலையாள் உடன் கூட வீற்று இருந்த
வள்ளலாரை முன் கண்டனர் வாக்கின் மன்னவனார்
கண்ட ஆனந்த கடவினை கண்களால் முகந்து
கொண்டு கை குவித்து எதிர் விழுந்து எழுந்து மெய் குலைய
அண்டர் முன்பு நின்று ஆடினார் பாடினார் அழுதார்
தொண்டனார்க்கு அங்கு நிகழ்ந்தன யார் சொல வல்லார்
முன்பு கண்டு கொண்டு அருளினார் அமுது உண்ண மூவா
அன்பு பெற்றவர் அளவு இலா ஆர்வம் முன் பொங்க
பொன் பிறங்கிய சடையாரை போற்று தாண்டகங்கள்
இன்பம் ஓங்கிட ஏத்தினார் எல்லையில் தவத்தோர்
ஆயவாறு மற்று அவர் மனம் களிப்புற கயிலை
மேய நாதர் தம் துணையொடும் வீற்று இருந்து அருளி
தூய தொண்டரும் தொழுது எதிர் நிற்க கோலம்
சேயது ஆக்கினார் திருவையாறு அமர்ந்தமை திகழ
ஐயர் கோலம் அங்கு அளித்து அகன்றிட அடி தொண்டர்
மையல் கொண்டு உளம் மகிழ்ந்திட வருந்தி மற்று இங்கு
செய்ய வேணியர் அருள் இதுவோ என தெளிந்து
வையம் உய்ந்திட கண்டமை பாடுவார் மகிழ்ந்து
மாதர் பிறை கண்ணியானை மலையான் மகளொடும் என்னும்
கோதறு தண் தமிழ சொல்லால் குலவு திருப்பதிகங்கள்
வேத முதல்வர் ஐயாற்றில் விரவும் சராசரம் எல்லாம்
காதல் துணை ஒடும் கூட கண்டேன் என பாடி நின்றார்
கண்டு தொழுது வணங்கி கண் நுதலார் தமை போற்றி
கொண்ட திரு தாண்டகங்கள் குறுந்தொகை நேரிசை அன்பின்
மண்டு விருத்தங்கள் பாடி வணங்கி திருத்தொண்டு செய்தே
அண்டர் பிரான் திருவையாறு அமர்ந்தனர் நாவுக்கு அரசர்
நீடிய அப்பதி நின்று நெய்த்தானமே முதலாக
மாடுயர் தானம் பணிந்து மழபாடியாரை வணங்கி
பாடிய செந்தமிழ் மாலை பகர்ந்து பணி செய்து போற்றி
தேடிய மாலுக்கு அரியார் திரு பூ துருத்தியை சேர்ந்தார்
சேர்ந்து விருப்பொடும் புக்கு திரு நட மாளிகை முன்னர
சார்ந்து வலம் கொண்டு இறைஞ்சி தம் பெருமான் திரு முன்பு
நேர்ந்த பரிவொடும் தாழ்ந்து நிறைந்து ஒழியா அன்பு பொங்க
ஆர்ந்த கண்ணீர் மழை தூங்க அயர் உறும் தன்மையர் ஆனார்
திருப்பூ துருத்தி அமர்ந்த செஞ்சடையானை ஆன் ஏற்று
பொருப்பு ஊர்ந்து அருளும் பிரானை பொய்யிலியை கண்டேன் என்று
விருப்புறு தாண்டகத்தோடு மேவிய காதல் விளைப்ப
இருப்போம் திருவடிக்கீழ் நாம் என்னும் குறு தொகை பாடி
அங்கு உறையும் தன்மை வேண்டி நாம் அடி போற்றுவது என்று
பொங்கு தமிழ சொல் விருத்தம் போற்றிய பாடல் புரிந்து
தங்கி திரு தொண்டு செய்வார் தம்பிரானார் அருள் பெற்று
திங்களும் ஞாயிறும் தோயும் திரு மடம் ஆங்கு ஒன்று செய்தார்
பல் வகை தாண்டக தோடும் பரவும் தனி தாண்டகமும்
அல்லல் அறுப்பவர் தானத்து அடைவும் திரு தாண்டகமும்
செல் கதி காட்டிட போற்றும் திரு அங்க மாலையும் உள்ளிட்டு
எல்லையில் பன்மை தொகையும் இயம்பினர் ஏத்தி இருந்தார்
பொன்னி வலம் கொண்ட திரு பூந்துருத்தி அவர் இருப்ப
கல் மனத்து வல் அமணர் தமை வாதில் கட்டு அழித்து
தென்னவன் கூன் நிமிர்த்தி அருளி திரு நீற்றின் ஒளி கண்டு
மன்னிய சீர் சண்பை நகர் மறையவனார் வருகின்றார்
தீம் தமிழ் நாட்டு இடை நின்றும் எழுந்து அருளி செழும் பொன்னி
வாய்ந்த வளம் தரு நாட்டு வந்து அணைந்தார் வாக்கினுக்கு
வேந்தர் இருந்தமை கேட்டு விரைந்தவர் பால் செல்வன் என
பூந்துருத்தி வளம் பதியின் புறம்பு அணையில் வந்து அணைந்தார்
சண்பை வரு தமிழ் விரகர் எழுந்தருள தாங்கேட்டு
மண் பரவும் பெருங் கீர்த்தி வாகீசர் மனம் மகிழ்ந்து
கண் பெருகுங் களிகொள்ள கண்டு இறைஞ்சும் காதலினால்
எண் பெருகும் விருப்பு எய்த எழுந்து அருளி எதிர் சென்றார்
காழியர் கோன் வரும் எல்லை கலந்து எய்தி காதலித்தார்
சூழும் இடைந்திடு நெருக்கில் காணாமே தொழுது அருளி
வாழி அவர் தமை தாங்கும் மணிமுத்தின் சிவிகையினை
தாழும் உடல் இது கொண்டு தாங்குவன் யான் என தரித்தார்
வந்து ஒருவர் அறியாமே மறைந்த வடிவொடும் புகலி
அந்தணனார் ஏறி எழுந்து அருளி வரும் மணி முத்தின்
சந்த மணி சிவிகையினை தாங்குவார் உடன் தாங்கி
சிந்தை களிப்புற வருவார் தமையாரும் தெளிந்து இலரால்
திரு ஞான மாமுனிவர் அரசு இருந்த பூ துருத்திக்கு
அருகுகாக எழுந்து அருளி எங்கு உற்றார் அப்பர் என
உருகா நின்று உம் அடியேன் அடிகள் தாங்கி
பெரு வாழ்வு வந்து எய்த பெற்று இங்கு உற்றேன் என்றார்
பிள்ளையார் அதுகேளா பெருகு விரைவு உடன் இழிந்தே
உள்ளமிகு பதைப்பு எய்தி உடைய அரசினை வணங்க
வள்ளலார் வாகீசர் அவர் வணங்கா முன் வணங்க
துள்ளு மான் மறி கரத்தார் தொண்டர் எலாம் தொழுது ஆர்த்தார்
கழு மல கோன் திருநாவுக்கு அரசருடன் கலந்து அருளி
செழு மதியம் தவழ் சோலை பூந்துருத்தி திருப்பதியின்
மழுவினொடு மான் ஏந்தும் திருக்கரத்தார் மலர தாள்கள்
தொழுது உருகி இன்புற்று துதி செய்து அங்கு உடன் இருந்தார்
வல் அமணர் தமை வாதில் வென்றதுவும் வழுதி பால்
புல்லிய கூன் நிமிர்த்ததுவும் தண் பொருந்த புனல் நாட்டில்
எல்லை இலா திரு நீறு வளர்த்து அதுவும் இரு தவத்தோர்
சொல்ல அது கேட்டு உவந்தார் தூய புகழ் வாகீசர்
பண்புடைய பாண்டி மா தேவியார் தம் பரிவும்
நண்புடைய குல சிறையார் பெருமையும் ஞான தலைவர்
எண் பெருக உரைத்து அருள எல்லையில் சீர் வாகீசர்
மண் குலவு தமிழ் நாடு காண்பதற்கு மனம் கொண்டார்
பிரம புர திரு முனிவர் பெரும் தொண்டை நல் நாட்டில்
அரன் உறையும் தானங்கள் அணைந்து இறைஞ்சி பாடுதற்கு அங்கு
உரன் உடைய திரு நாவுக்கு அரசர் உரை செய்து அருள
புரம் எரித்தார் திருமகனார் பூந்துருத்தி தொழுது அகன்றார்
ஆண்ட அரசு அங்கணர் சீர் அருள் பெற்ற பதி நின்றும்
பாண்டி நாட்டு எழுந்து அருளும் பான்மையரா தென் திசை போ
காண் தகைய திரு புத்தூர் பணிந்து ஏத்தி கதிர் மதியம்
தீண்டு கொடி மதில் மதுரை திரு ஆலவாய் சேர்ந்தார்
சென்று அணைந்து மதுரையினில் திருந்திய நூல் சங்கத்துள்
அன்று இருந்து தமிழ் ஆராய்ந்து அருளிய அங்கணர் கோயில்
முன்றிலினை வலம் கொண்டு முன் இறைஞ்சி உள் புக்கு
வன் தனி மால் விடையாரை வணங்கி மகிழ்வொடும் திளைத்தார்
எய்திய பேர் ஆனந்த இன்பத்தின் இடை அழுந்தி
மொய் திகழும் சடையானை முளைத்தானை என்று எடுத்து
செய் தவத்தோர் தாண்டக செந்தமிழ் பாடி புறத்து அணைவார்
கை தொழுது பணிந்து ஏத்தி திரு உள்ளம் களி சிறந்தார்
சீர் திகழும் பாண்டிமா தேவியார் திரு நீற்றின்
சார்வு அடைய கூன் நிமிர்ந்த தென்னவனார் தம் உடனே
பார் பரவும் குல சிறையார் வாகீசர் தமை பணி உற்று
ஆரகிலா காதல் மிக அடி போற்ற அங்கு இருந்தார்
திரு ஆலவாய் அமர்ந்த செஞ்சுடரை செழும் பொருள் நூல்
தருவானை நேர் இசையும் தாண்டகமும் முதலான
பெரு வாய்மை தமிழ் பாடி பேணு திருப்பணி செய்து
மருவார் தம் புரம் எரித்தார் பூவணத்தை வந்து அடைந்தார்
கொடி மாடம் நிலவு திரு பூவணத்து கோயிலின் உள்
நெடியானுக்கு அறிய அரியார் நேர் தோன்ற கண்டு இறைஞ்சி
வடிவேலு திரிசூல தாண்டகத்தால் வழுத்தி போ
பொடி நீடு திருமேனி புனிதர் பதி பிற பணிவார்
தென் இலங்கை இராவணன் தன் சிரம் ஈரைந்தும் துணித்த
மன்னவன் ஆம் இராமனுக்கு வரும் பெரும் பாதகம் தீர்த்த
பிஞ்ஞகரை தொழுவதற்கு நினைந்து போ பெரு மகிழ்ச்சி
துன்னி மனம் கரைந்து உருக தொழுது எழுந்தார் சொல் அரசர்
தேவர் தொழும் தனி முதலை திரு இராமேச்சுரத்து
மேவிய சங்கரனை எதிர் நின்று விருப்புறு மொழியால்
பாவு திரு நேர் இசைகள் முதலான தமிழ் பாடி
நாவரசர் திரு தொண்டு நலம் பெருக செய்து அமர்ந்தார்
அங்குறைந்து கண் நுதலார் அடி சூடி அகன்று போ
பொங்கு தமிழ திரு நாட்டு புறம் பணை சூழ் நெல் வேலி
செங்கண் விடையார் மன்னும் திரு கான பேர் முதலாம்
எங்கும் நிகழ் தானங்கள் எல்லாம் புக்கு இறைஞ்சுவார்
தொழுது பல வகையாலும் சொல் தொடை வண் தமிழ் பாடி
வழுவில் திருப்பணி செய்து மனம் கசிவு உற்று பொழுதும்
ஒழுகிய கண் பொழி புனலும் ஓவாது சிவன் தாள்கள்
தழுவிய சிந்தையில் உணர்வும் தங்கிய நீர்மையில் சரித்தார்
தேன் பொழியும் செந்தமிழ் நாட்டினில் எங்கும் சென்று இறைஞ்சி
பாம்பு அணிவார் தமை பணிவார் பொன்னி நாடது அணைந்து
வாம் புனல் சூழ் வள நகர்கள் பின்னும் போய் வணங்கியே
பூம் புகலூர் வந்து அடைந்தார் பொ பாசம் போக்குவார்
பொய்கை சூழ் பூம் புகலூர புனிதர் மலர தாள் வணங்கி
நையும் மன பரிவினோடும் நாள் தோறும் திரு முன்றில்
கை கலந்த திரு தொண்டு செய்து பெரும் காதல் உடன்
வைகு நாள் எண் இறந்த வண் தமிழ் மாலைகள் மொழிவார்
நின்ற திரு தாண்டகமும் நீடு தனி
மன்று உறைவார் வாழ் பதிகள் வழுத்து திரு தாண்டகமும்
கொன்றை மலர சடையார் பால் குறைந்த திரு நேர் இசையும்
துன்று தனி நேர் இசையும் முதலான தொடுத்து அமைத்தார்
ஆருயிரின் திரு விருத்தம் தச புராணத்து அடைவும்
பார் பரவும் பாவ நாச பதிகம் பன்முறையும்
நேர் பட நின்று அறை கூவும் திருப்பதிகம் முதல் பிறவும்
பேர் அருளின் கடல் அளிக்கும் பெருமானை பாடினார்
நிலைமையினில் ஆண்ட அரசு பணி செய்ய அவர்
நல் நிலைமை காட்டுவார் நம்பர் திரு மணி முன்றில்
தன்னில் வரும் உழவாரம் நுழைந்த இடம் தான் எங்கும்
பொன்னினொடு நவமணிகள் பொலிந்து இலங்க அருள் செய்தார்
செம்பொன்னும் நவமணியும் சேண் விளங்க ஆங்கொவையும்
உம்பர் பிரான் திருமுன்றில் உருள் பருக்கை உடன் ஒக்க
எம் பெருமான் வாகீசர் உழ வாரத்தினில் ஏந்தி
வம்பலர் மென் பூங்கமல வாவியினில் புக எறிந்தார்
புல்லோடும் கல்லோடும் பொன்னோடும் மணியோடும்
சொல்லோடும் வேறு பாடு இலா நிலைமை துணிந்து இருந்த
நல்லோர் முன் திரு புகலூர் நாயகனார் திரு அருளால்
வில்லோடு நுதல் மடவார் விசும்பூடு வந்து இழிந்தார்
வானகம் மின்னு கொடிகள் வந்து இழிந்தால் என
தான நிறை சுருதிகளில் தகும் அலங்கார தன்மை
கான அமுதம் பரக்கும் கனிவாயில் ஒளி பர
பானல் நெடுங் கண்கள் வெளி பரப்பி இசை பாடுவார்
கற்பக பூந்தளிர் அடி போம் காமரு சாரிகை செய்ய
உற்பலம் மென் முகிழ் விரல் வட்டு அணையோடும் கை பெயர
பொற்புறும் கையின் வழி பொரு கயல் கண் புடை பெயர
அற்புத பொன் கொடி நுடங்கி ஆடுவபோல் ஆடுவார்
ஆடுவார் பாடுவார் அலர் மாரி மேல் பொழிவார்
கூடுவார் போன்று அணைவார் குழல் அவிழ இடை நுடங்க
ஓடுவார் மார வேளுடன் மீள்வார் ஒளி பெருக
நீடுவார் துகில் அசைய நிற்பாரும் ஆயினார்
தன்மை அரம்பையர்கள் எவ்விதமும் செயல் புரிய
அத்தனார் திருவடி கீழ் நினைவு அகலா அன்பு உருகும்
மெ தன்மை உணர்வு உடைய விழு தவத்து மேலோர் தம்
சித்த நிலை திரியாது செய் பணியின் தலை நின்றார்
இம் மா பவ தொடக்காம் இருவினைகள் தமை நோக்கி
உம்மால் இங்கு என்ன குறை உடையேன் யான் திருவாரூர்
அம்மானுக்கு ஆள் ஆனேன் அலையேன் மின் நீர் என்று
பொய்ம் மா பெருங் கடலுள் எனும் திரு தாண்டகம் புகன்றார்
மாதர் அவர் மருங்கு அணைய வந்து எய்தி மதன வச
காதலர் புரிந்து ஒழுகும் கை தவங்கள் செய்திடவும்
பேதம் இலா ஓர் உணர்வில் பெரிய வரை பெயர்விக்க
யாதும் ஒரு செயல் இல்லாமையில் இறைஞ்சி எதிர் அகன்றார்
நிலைமை உலகு ஏழும் எய்த அறிந்து இயல்பு ஏத்த
மன்னிய அன்பு உறு பத்தி வடிவு ஆன வாகீசர்
மின் நிலவும் சடையார் தம் மெய் அருள் தான் எய்த வரும்
அந்நிலைமை அணித்து ஆக சில நாள் அங்கு அமர்ந்து இருந்தார்
மன்னிய அந்த கரணம் மருவுதலை பாட்டினால்
தன்னுடைய சரண் ஆன தமியேனை புகலூரன்
என்னை இனி சேவடிக்கீழ் இருத்திடும் என்று எழுகின்ற
முன் உணர்வின் முயற்சியினால் திருவிருத்தம் பல மொழிந்தார்
மண் முதலாம் உலகு ஏத்த மன்னு திரு தாண்டகத்தை
புண்ணியா உன் அடிக்கே போதுகின்றேன் என புகன்று
நண்ணரிய சிவ ஆனந்த ஞான வடிவே ஆகி
அண்ணலார் சேவடி கீழ் ஆண்ட அரசு அமர்ந்து இருந்தார்
வானவர்கள் மலர் மாரி மண் நிறைய விண் உலகின்
மேல் நிறைந்த ஐந்து பேரிய ஒலியும் விரிஞ்சன் முதல்
யோனிகள் ஆயின எல்லாம் உள் நிறைந்த பெரு மகிழ்ச்சி
தான் நிறைந்த சித்திரையில் சதயம் ஆம் திரு நாளில்
அடியன் ஏன் ஆதரவால் ஆண்ட அரசின் சரித
படியை யான் அறிந்தபடி பகர்ந்தேன் பர முனிவன்
கடி மலர் மென் சேவடிகள் கை தொழுது குல சிறையார்
முடிவில் புகழ திரு தொண்டின் முயற்சியினை மொழிகின்றேன்
திருச்சிற்றம்பலம்
குலச்சிறை நாயனார் புராணம்
திருச்சிற்றம்பலம்
பன்னு தொல் புகழ பாண்டி நன் நாட்டு இடை
செந்நெலார் வயல் தீம் கரும்பின் அயல்
துன்னு பூக புறம் பணை சூழ்ந்தது
மன்னு வண்மையினார் மண மேற்குடி
அப்பதிக்கு முதல்வர் வன் தொண்டர் தாம்
ஒப்பரும் பெரு நம்பி என்று ஓதிய
செப்பரும் சீர குல சிறையார் திண்மை
வைப்பினால் திருத்தொண்டில் வழாதவர்
காரணங்கள் கண் நுதற்கு அன்பர் என்னவே
வாரம் ஆகி மகிழ்ந்தவர் தாள் மிசை
யாரும் அன்பொடு வீழ்ந்து அஞ்சலி முகிழ்த்து
ஈர நல் மொழி எய்த இசைத்து உள்ளார்
குறியில் நான்கு குலத்தினர் ஆயினும்
நெறியின் அக்குலம் நீங்கினர் ஆயினும்
அறிவு சங்கரற்கு அன்பர் என பெறில்
செறிவுற பணிந்து ஏத்திய செய்கையார்
உலகர் கொள்ளும் நலத்தினர் ஆயினும்
அலகில் தீமையர் ஆயினும் அம்புலி
இலகு செஞ்சடையார்க்கு அடியார் எனில்
தலம் உற பணிந்து ஏத்தும் தகைமையார்
பண்பு மிக்கார் பலராய் அணையினும்
உண்ப வேண்டி ஒருவர் அணையினும்
எண் பெருக்கிய அன்பால் எதிர் கொண்டு
நண்பு கூர்ந்து அமுது ஊட்டும் நலத்தினார்
பூதி கோவணம் சாதனத்தால் பொலிந்து
ஆதி தேவர் தம் அஞ்செழுத்தாம் அவை
ஓது நா வணக்கத்தால் உரைப்பவர்
பாதம் நாளும் பரவிய பண்பினார்
இன்ன நல் ஒழுக்கத்தினார் ஈறில் சீர
தென்னவன் நெடு மாறற்கு சீர் திகழ்
மன்னு மந்திரிகட்கு மேல் ஆகியார்
ஒன்னலர செற்று உறுதி கண் நின்று உளார்
ஆய செய்கையர் ஆயவர் ஆறணி
நாயனார் திரு பாதம் நவின்று உளார்
பாய சீர் புனை பாண்டி மா தேவியார்
மேய தொண்டுக்கு மெ தொண்டர் ஆயினார்
புன்னை தருகந்தர் பொய் நீக்கவும்
தென்னர் நாடு திருநீறு போற்றவும்
மன்னு காழியர் வள்ளலார் பொன் அடி
சென்னி சேர்த்தி மகிழ்ந்த சிறப்பினார்
வாதில் தோற்ற அமணரை வன் கழு
தீது நீங்கிட ஏற்றுவித்தார் திறம்
யாது போற்றினேன் மேல் இனி ஏத்துகேன்
வேத நீதி மிழலை குறும்பர் தாள்
திருச்சிற்றம்பலம்
பெரு மிழலை குறும்ப நாயனார் புராணம்
திருச்சிற்றம்பலம்
சூதம் நெருங்கு குலை தெங்கு பலவும் பூகஞ்சூழ்புடைத்தாய்
வீதிதோறும் நீற்றின் ஒளி விரிய மேவி விளங்கு பதி
நீதி வழுவா நெறியினராய் நிலவும் குடியால் நெடு நிலத்து
மீது விளங்கும் தொன்மையது மிழலை நாட்டு பெருமிழலை
அன்ன தொன்மை திருப்பதி கண் அதிபர் மிழலை குறும்பனார்
சென்னி மதியம் வைத்தவர் தம் அடியார்க்கு ஆன செய் பணிகள்
இன்ன வண்ணம் என்றவர் தாம் உரையா முன்னம் எதிர் ஏற்று
முன்னம் உணர்ந்து செய்வாராய் முதிரும் அறிவின் பயன் கொள்வார்
தொண்டர் பலரும் வந்து ஈண்டி உண்ண தொலையா அமுது ஊட்டி
கொண்டு செல்ல இரு நிதியம் முகந்து கொடுத்து குறைந்த அடைவார்
வண்டு மருவும் குழல் உமையாள் கேள்வன் செய்ய தாள் என்னும்
புண்ட ரீகம் அக மலரில் வைத்து போற்றும் பொற்பினார்
தன்மையராய் நிகழும் நாள் எல்லை இல்லா திரு தொண்டின்
மெ தன்மையினை உலகு அறிய விதியால் வணங்கி மெய் அடியார்
சித்தம் நிலவும் திரு தொண்ட தொகை பாடிய நம்பியை பணிந்து
நித்தன் அருள் பெற்றவர் பாதம் நினைக்கும் நி தலை நின்றார்
மையார் தடங் கண் பரவையார் மணவாளன் தன் மலர கழல்கள்
கையால் தொழுது வாய் வாழ்த்தி மனத்தால் நினைக்கும் கட பாட்டில்
செய்யாள் கோனும் நான்முகனும் அறியா செம்பொன் தாள் இணை கீழ்
உய்வான் சேர உற்ற நெறி இதுவே என்று அன்பினில் உய்த்தார்
நாளும் நம்பி ஆரூரர் நாமம் நவின்ற நலத்தாலே
ஆளும் படியால் அணி மாதி சித்தியான அணைந்த அதற்பின்
மூளும் காதலுடன் பெருக முதல்வர் நாமத்து அஞ்செழுத்தும்
கேளும் பொருளும் உணர்வுமாம் பரிசு வாய்ப்ப கெழுமினார்
இன்ன வாறே இவர் ஒழுக ஏறு கொடி மேல் உயர்த்தவர் தம்
பொன்னங் கழல்கள் மண்ணின் மேல் பொருந்த வந்து வழக்கு உரைத்து
மன்னும் ஓலை அவை முன்பு காட்டி ஆண்டவன் தொண்டர்
சென்னி மதி தோய் மாட மலி கொடுங் கோளூரை சேர்வுற்றார்
அஞ்சை களத்து நஞ்சு உண்ட அமுதை பரவி அணைவுறுவார்
செஞ்சொல் தமிழ் மாலைகள் மொழி தேவர் பெருமான் அருளாலே
மஞ்சில் திகழும் வட கயிலை பொருப்பில் எய்த வரும் வாழ்வு
நெஞ்சில் தெளிய இங்கு உணர்ந்தார் நீடு மிழலை குறும்பனார்
மண்ணில் திகழும் திரு நாவலூரில் வந்த வன் தொண்டர்
நண்ணற்கு அரிய திரு கயிலை நாளை எய்த நான் பிரிந்து
கண்ணில் கரிய மணி கழிய வாழ்வார் போல வாழேன் என்று
எண்ணி சிவன் தாள் இன்றே சென்று அடைவன் யோகத்தால் என்பார்
நாலு கரணங்களும் ஒன்றாய் நல்ல அறிவு மேல் கொண்டு
காலும் பிரம நாடி வழி கருத்து செலுத்த கபால நடு
ஏலவே முன் பயின்ற நெறி எடுத்த மறை மூலம் திறப்ப
மூல முதல்வர் திரு பாதம் அணைவார் கயிலை முன் அடைந்தார்
பயிலை செறிந்த யோகத்தால் பாவை கேள்வன் பாதமுற
கயிலை பொருப்பர் அடி அடைந்த மிழலை குறும்பர் கழல் வணங்கி
மயிலை புறம் கொள் மென் சாயல் மகளிர் கிளவி யாழினொடும்
குயிலை பொருவும் காரைக்கால் அம்மை பெருமை கூறுவாம்
திருச்சிற்றம்பலம்
காரைக்கால் அம்மையார் புராணம்
திருச்சிற்றம்பலம்
மானம் மிகு தருமத்தின் வழி நின்று வாய்மையினில்
ஊனமில் சீர பெரு வணிகர் குடி துவன்றி ஓங்கு பதி
கூனல் வளை திரை சுமந்து கொண்டு ஏறி மண்டு கழி
கானல் மிசை உலவு வளம் பெருகு திரு காரைக்கால்
வங்க மலி கடல் காரைக்காலின் கண் வாழ் வணிகர்
தங்கள் குல தலைவனார் தனதத்தனார் தவத்தால்
அங்கு அவர் பால் திரு மடந்தை அவதரித்தாள் என வந்து
பொங்கிய பேர் அழகு மிக புனிதவதியார் பிறந்தார்
வணிகர் பெரும் குலம் விளங்க வந்து பிறந்து அருளியபின்
அணி கிளர் மெல் அடி தளர்வுற்று அசையும் நடை பருவத்தே
பணி அணிவார் கழற்கு அடிமை பழகி பாங்கு பெற
தணிவில் பெரு மன காதல் ததும்ப வரும் மொழி பயின்றார்
பல் பெரு நற்கிளை உவ பயில் பருவ சிறப்பு எல்லாம்
செல்வ மிகு தந்தையார் திரு பெருகும் செயல் புரிய
மல்கு பெரும் பாராட்டின் வளர்கின்றார் விடையவர் பால்
அல்கிய அன்புடன் அழகின் கொழுந்து எழுவது என வளர்வார்
வண்டல் பயில்வன எல்லாம் வளர் மதியம் புனைந்த சடை
அண்டர் பிரான் திரு வார்த்தை அணைய வருவன பயின்று
தொண்டர் வரில் தொழுது தாதியர் போற்ற துணை முலைகள்
கொண்ட நுசுப்பு ஒதுங்கு பத கொள்கையினில் குறுகினார்
நல்லவென உறுப்பு நூலவர் உரைக்கும் நலம் நிரம்பி
மல்கு பெரு வனப்பு மீ கூர வரு மாட்சியினால்
இல்லிகவா பருவத்தில் இவர்கள் மரபினுக்கு ஏற்கும்
தொல் குலத்து வணிகர் மகன் பேசுதற்கு தொடங்குவார்
நீடிய சீர கடல் நாகை நிதிபதி என்று உலகின் கண்
பாடு பெறு புகழ் வணிகன் பயந்த குல மைந்தனுக்கு
தேடவரும் திருமரபில் சேயிழையை மகன் பேச
மாட மலி காரைக்கால் வள நகரில் வரவிட்டார்
வந்த மூது அறிவோர்கள் மணம் குறித்த மனை புகுந்து
தந்தையாம் தனதத்தன் தனை நேர்ந்து நீ பயந்த
பை தொடியை நிதிபதி மைந்தன் பரம தத்தனுக்கு
முந்தை மரபினுக்கு ஏற்கும் முறைமை மணம் புரிக என்றார்
மற்று அவனும் முறைமையினால் மணம் இசைந்து செலவு இட சென்று
உற்றவர்கள் உரை கேட்ட நிதிபதியும் உயர் சிறப்பு
பெற்றனன் போல் உவந்து தனி பெரு மகட்கு திருமலியும்
சுற்றம் உடன் களி கூர்ந்து வதுவை வினை தொழில் பூண்டான்
மணம் இசைந்த நாள் ஓலை செலவிட்டு மங்கல
அணைய வதுவை தொழில்கள் ஆன எலாம் அமைவித்தே
இணர் அலங்கல் மைந்தனையும் மண அணியின் எழில் விளக்கி
பணை முரசம் எழுந்து ஆர்ப்ப காரைக்கால் பதி புகுந்தார்
அளி மிடை ஆர்த்த தன தத்தன் அணி மாடத்துள் புகுந்து
தெளிதரு நூல் விதி வழியே செயல் முறைமை செய்து அமைத்து
தளிர் அடி மென் நகை மயிலை தாது அவிழ் தார காளைக்கு
களி மகிழ் சுற்றம் போற்ற கலியாணம் செய்தார்கள்
மங்கல மா மண வினைகள் முடித்து இயல்பின் வைகு நாள்
தங்கள் குடிக்கு அரும் புதல்வி ஆதலினால் தன தத்தன்
பொங்கொலி நீர் நாகையினில் போகாமே கணவன் உடன்
அங்கண் அமர்ந்து இனிது இருக்க அணி மாடம் மருங்கு அமைத்தான்
மகள் கொடையின் மகிழ் சிறக்கும் வரம்பில் தனம் கொடுத்து அதன்பின்
நிகர்ப்பு அரிய பெரும் சிறப்பில் நிதிபதி தன் குல மகனும்
தகைப்பில் பெரும் காதலினால் தங்கு மனை வளம் பெருக்கி
மிக புரியும் கொள்கையினில் மேம் படுதல் மேவினான்
ஆங்கு அவன் தன் இல்வாழ்க்கை அரும் துணையாய் அமர்கின்ற
பூங்குழலார் அவர் தாமும் பொரு விடையார் திருவடி கீழ்
ஓங்கிய அன்புறு காதல் ஒழிவு இன்றி மிக பெருக
பாங்கில் வரும் மனை அறத்தின் பண்பு வழாமையில் பயில்வார்
நம்பர் அடியார் அணைந்தால் நல்ல திரு அமுது அளித்தும்
செம்பொன்னும் நவ மணியும் செழு துகிலும் முதலான
தம் பரிவினால் அவர்க்கு தகுதியின் வேண்டுவ கொடுத்தும்
உம்பர் பிரான் திருவடி கீழ் உணர்வு மிக ஒழுகு நாள்
பாங்குடைய நெறியின் கண் பயில் பரம தத்தனுக்கு
மாங்கனிகள் ஓரிரண்டு வந்து அணைந்தார் சிலர் கொடுப்ப
ஆங்கு அவை தான் முன் வாங்கி அவர் வேண்டும் குறை அளித்தே
ஈங்கு இவற்றை இல்லத்துக்கு கொடுக்க என இயம்பினான்
கணவன் தான் வர விடுத்த கனி இரண்டும் கை கொண்டு
மணம் மலியும் மலர கூந்தல் மாதரார் வைத்து அதற்பின்
பண அரவம் புனைந்து அருளும் பரமனார் திரு தொண்டர்
உணவின் மிகு வேட்கை யினால் ஒருவர் மனையுள் புகுந்தார்
வேதங்கள் மொழிந்த பிரான் மெ தொண்டர் நிலை கண்டு
நாதன் தன் அடியாரை பசி தீர்ப்பேன் என நண்ணி
பாதங்கள் விளக்க நீர் முன் அளித்து பரிகலம் வைத்து
ஏதம் தீர் நல் விருந்தாம் இன் அடிசில் ஊட்டுவார்
கறி அமுதம் அங்கு உதவாதே திரு அமுது கை கூட
வெறி மலர் மேல் திரு அனையார் விடையவன் தன் அடியாரே
பெறல் அரிய விருந்தானால் பேறு இதன் மேல் இல்லை எனும்
அறிவினராய் அவர் அமுது செய்வதனுக்கு ஆதரிப்பார்
இல்லாளன் வைக்க எனத்தம் பக்கல் முன் இருந்த
நல்ல நறு மாங்கனிகள் இரண்டினில் ஒன்றை கொண்டு
வல் விரைந்து வந்து அணைந்து படைத்து மனம் மகிழ்ச்சியினால்
அல்லல் தீர்ப்பவர் அடியார் தமை அமுது செய்வித்தார்
மூப்புறும் தளர்வாலும் முதிர்ந்து முடுகிய வேட்கை
தீ பசியின் நிலையாலும் அயர்ந்து அணைந்த திரு தொண்டர்
வாய்ப்புறு மென் சுவை அடிசில் மாங்கனியோடு இனிது அருந்தி
பூப்பயில் மென் குழல் மடவார் செயல் உவந்து போயினார்
மற்றவர் தாம் போயின பின் மனை பதி ஆகிய வணிகன்
உற்ற பெரும் பகலின் கண் ஓங்கிய பேர் இல் எய்தி
பொற்புற முன் நீர் ஆடி புகுந்து அடிசில் புரிந்து அயில
கற்புடைய மடவாரும் கட பாட்டில் ஊட்டுவார்
இன் அடிசில் கறிகள் உடன் எய்தும் முறை இட்டு அதன்பின்
மன்னிய சீர கணவன் தான் மனை இடை முன் வைப்பித்த
நல் மதுர மாங்கனியில் இருந்த அதனை நறும் கூந்தல்
அன்ன மனையார் தாமும் கொடு வந்து கலத்து அளித்தார்
மனைவியார் தாம் படைத்த மதுரம் மிக வாய்த்த கனி
தனை நுகர்ந்த இனிய சுவை ஆராமை தார் வணிகன்
இனையது ஒரு பழம் இன்னும் உளது அதனை இடுக என
அனையது தாம் கொண்டு வர அணைவார் போல் அங்கு அகன்றார்
அம் மருங்கு நின்று அயர்வார் அரும் கனிக்கு அங்கு என்செய்வார்
மெய்ம் மறந்து நினைந்து உற்ற இடத்து உதவும் விடையவர் தான்
தம் மனம் கொண்டு உணர்தலுமே அவர் அருளால் தாழ் குழலார்
கைம் மருங்கு வந்து இருந்தது அதிமதுர கனி ஒன்று
மற்றதனை கொடு வந்து மகிழ்ந்து இடலும் அயின்று அதனில்
உற்ற சுவை அமுதினும் மேல் பட உளதாயிட இது தான்
முன் தரு மாங் கனி அன்று மூவுலகில் பெறர்க்கு அரிதால்
பெற்றது வேறு எங்கு என்று பெய் வளையார் தமை கேட்டான்
அவ்வுரை கேட்டலும் மடவார் அருள் உடையார் அளித்து அருளும்
செவ்விய பேர் அருள் விளம்பும் திறம் அன்று என்று உரை செய்யார்
கை வரு கற்புடை நெறியால் கணவன் உரை காவாமை
மெய் வழி அன்று என விளம்பல் விட மாட்டார் விதிர்ப்பு உறுவார்
செய்த படி சொல்லுவதே கடன் என்னும் சீலத்தார்
மை தழையும் கண்டர் சேவடிகள் மனத்து உற வணங்கி
எய்தவரும் கனி அளித்தார் யார் என்னும் கணவனுக்கு
மொய் தரு பூங்குழல் மடவார் புகுந்தபடி தனை மொழிந்தார்
ஈசன் அருள் என கேட்ட இல் இறைவன் அது தெளியான்
வாச மலர திரு அனையார் தமை நோக்கி மற்று இது தான்
தேசுடைய சடை பெருமான் திருவருளேல் இன்னமும் ஓர்
ஆசில் கனி அவன் அருளால் அழைத்து அளிப்பாய் என மொழிந்தான்
பாங்கு அன்று மனைவியார் பணி அணிவார் தமை பரவி
ஈங்கு இது அளித்து அருளீரேல் என் உரை பொய்யாம் என்ன
மாங்கனி ஒன்று அருளால் வந்து எய்துதலும் மற்று அதனை
ஆங்கு அவன் கை கொடுதலுமே அதிசயித்து வாங்கினான்
வணிகனும் தன் கை புக்க மாங்கனி பின்னை காணான்
தணிவரும் பயம் மேற்கொள்ள உள்ளமும் தடுமாறு எய்தி
அணி சூழல் அவரை வேறு ஓர் அணங்கு என கருதி நீங்கும்
துணிவு கொண்டு எவர்க்கும் சொல்லான் தொடர்வின்றி ஒழுகு நாளில்
விடுவதே எண்ணம் ஆக மேவிய முயற்சி செய்வான்
படுதிரை பரவை மீது படர் கலம் கொண்டு போகி
நெடு நிதி கொண்வேன் என்ன நிரந்தபல் கிளைஞர் ஆகும்
வடுவில் சீர் வணிக மாக்கள் மரக்கலம் சமைப்பித்தார்கள்
கலஞ் சமைத்து அதற்கு வேண்டும் கம்மியர் உடனே செல்லும்
புலங்களில் விரும்பு பண்டம் பொருந்துவ நிரம்ப ஏற்றி
சலம் தரு கடவுள் போற்றி தலைமையாம் நாய்கன் தானும்
நலம் தரு நாளில் ஏறி நளிர் திரை கடல் மேல் போனான்
கடல் மிசை வங்கம் ஓட்டி கருதிய தேயம் தன்னில்
அடை உற சென்று சேர்ந்து அங்கு அளவில் பல் வளங்கள் முற்றி
இடை சில நாட்கள் நீங்க மீண்டும் கலத்தில் ஏறி
படர் புனல் கன்னி நாட்டோ ர் பட்டினம் மருங்கு சேர்ந்தான்
பதி தன்னில் ஏறி அலகில் பல் பொருள்கள் ஆக்கும்
ஒப்பில் மா நிதியம் எல்லாம் ஒருவழி பெருக உய்த்து
மெ புகழ் விளங்கும் அவ்வூர் விரும்பவோர் வணிகன் பெற்ற
செப்பருங் கன்னி தன்னை திருமலி வதுவை செய்தான்
பெறல் அரும் திருவினாளை பெரு மணம் புணர்ந்து முன்னை
அறல் இயல் நறும் மென் கூந்தல் அணங்கனார் திறத்தில் அற்றம்
புறம் ஒரு வெளி உறாமல் பொதிந்த சிந்தனையின் ஓடு
முறைமையின் வழாமை வைகி முகம் மலர்ந்து ஒழுகும் நாளில்
முருகலர் சோலை மூதூர் அதன் முதல் வணிகரோடும்
இரு நிதி கிழவன் எய்திய திருவின் மிக்கு
பொரு கடல் கலங்கள் போக்கும் புகழினான் மனைவி தன்பால்
பெருகொளி விளக்கு போல் ஓர் பெண்கொடி அரிதில் பெற்றான்
மட மகள் தன்னை பெற்று மங்கலம் பேணி தான் முன்பு
உடன் உறைவு அஞ்சி நீத்த ஒரு பெரு மனைவி யாரை
தொடர் அற நினைந்து தெய்வ தொழு குலம் என்றே கொண்டு
கடன் அமைத்தவர் தம் நாமம் காதல் செய் மகவை இட்டான்
இந்நிலை இவன் இங்கு எய்தி இருந்தனன் இப்பால் நீடும்
கன்னி மா மதில் சூழ் மாட காரைக்கால் வணிகன் ஆன
தன் நிகர் கடந்த செல்வ தனதத்தன் மகளார் தாமும்
மன்னிய கற்பினோடு மனை அறம் புரிந்து வைக
விளை வளம் பெருக்க வங்கம் மீது போம் பரம தத்தன்
வளர் புகழ பாண்டி நாட்டு ஓர் மா நகர் தன்னில் மன்னி
அளவில் மா நிதியம் ஆக்கி அமர்ந்து இனிது இருந்தான் என்று
கிளர் ஒளி மணி கொம்பு அன்னார் கிளைஞர் தாம் கேட்டார் அன்றே
அம் மொழி கேட்ட போதே அணங்கனார் சுற்றத்தாரும்
தம் உறு கிளைஞர போக்கி அவன் நிலை தாமும் கேட்டு
மம்மர் கொள் மனத்தர் ஆகி மற்றவன் இருந்த பாங்கர்
கொம்மை வெம் முலையின் ஆளை கொண்டு போய் விடுவது என்றார்
மா மணி சிவிகை தன்னில் மட நடை மயில் அன்னாரை
தாமரை தவிசில் வைகும் தனி திரு என்ன ஏற்றி
காமரு கழனி வீழ்த்து காதல் செய் சுற்றத்தாரும்
தே மொழியவரும் சூழ சேண் இடை கழிந்து சென்றார்
சில பகல் கடந்து சென்று செம் தமிழ திருநாடு எய்தி
மலர் புகழ பரம தத்தன் மா நகர் மருங்கு வந்து
குல முதல் மனைவியாரை கொண்டு வந்து அணைந்த தன்மை
தொலைவில் சீர கணவனார்க்கு சொல்லி முன் செல்ல விட்டார்
வந்தவர் அணைந்த மாற்றம் கேட்டலும் வணிகன் தானும்
சிந்தையில் அச்சம் எய்தி செழு மணம் பின்பு செய்த
பை தொடி தனையும் கொண்டு பயந்த பெண் மகவின் ஒடு
முந்துற செல்வேன் என்று மொய் குழல் அவர் பால் வந்தான்
தானும் அம் மனைவி யோடும் தளிர் நடை மகவி னோடும்
மான் இனம் பிணை போல் நின்ற மனைவியார் அடியில் தாழ்ந்தே
யான் உமது அருளால் வாழ்வேன் இவ் இளம் குழவி தானும்
பான்மையால் உமது நாமம் என்று முன் பணிந்து வீழ்ந்தான்
கணவன் தான் வணங கண்ட காமர் பூங்கொடியனாரும்
அணைவுறும் சுற்றத்தார் பால் அச்ச மோடு ஒதுங்கி நிற்ப
உணர்வுறு கிளைஞர் வெள்கி உன் திரு மனைவி தன்னை
மணம் மலி தாரினாய் நீ வணங்குவது என் கொல் என்றார்
மற்றவர் தம்மை நோக்கி மானுடம் இவர் தாம் அல்லர்
நற் பெரும் தெய்வம் ஆதல் நான் அறிந்து அகன்ற பின்பு
பெற்ற இம் மகவு தன்னை பேர் இட்டேன் ஆதலாலே
பொற்பதம் பணிந்தேன் நீரும் போற்றுதல் செய்மின் என்றான்
என்றலும் சுற்றத்தாரும் இது என் கொல் என்று நின்றார்
மன்றலங் குழலினாரும் வணிகன் வாய் மாற்றம் கேளா
கொன்றை வார் சடையினார் தம் குரை கழல் போற்றி சிந்தை
ஒன்றிய நோக்கில் மிக்க உணர்வு கொண்டு உரை செய்கின்றார்
ஈங்கு இவன் குறித்த கொள்கை இது இனி இவனுக்கு ஆக
தாங்கிய வனப்பு நின்ற தசை பொதி கழித்து இங்கு உன் பால்
ஆங்கு நின் தாள்கள் போற்றும் பேய் வடிவு அடியேனுக்கு
பாங்குற வேண்டும் என்று பரமர் தாள் பரவி நின்றார்
ஆன அப்பொழுது மன்றுள் ஆடுவார் அருளினாலே
மேனெறி உணர்வு கூர வேண்டிற்றே பெறுவார் மெய்யில்
ஊன் அடை வனப்பை எல்லாம் உதறி எற்பு உடம்பே ஆக
வானமும் மண்ணும் எல்லாம் வணங்கும் பேய் வடிவம் ஆனார்
மலர் மழை பொழிந்தது எங்கும் வான துந்துபியின் நாதம்
உலகெலாம் நிறைந்து விம்ம உம்பரும் முனிவர் தாமும்
குலவினர் கணங்கள் எல்லாம் குணலை இட்டன முன் நின்ற
தொலைவில் பல் சுற்றத்தாரும் தொழுது அஞ்சி அகன்று போனார்
உற் பவித்து எழுந்த ஞானத்து ஒருமையின் உமை கோன் தன்னை
அற் பு திரு அந்தாதி அப்பொழுது அருளி செய்வார்
பொற்புடை செய்ய பாத புண்ட ரீகங்கள் போற்றும்
நற் கணத்தினில் ஒன்று ஆனேன் நான் என்று நயந்து பாடி
ஆய்ந்த சீர் இரட்டை மாலை அந்தாதி எடுத்து பாடி
ஏய்ந்த பேர் உணர்வு பொங்க எயில் ஒரு மூன்றும் முன்னாள்
காய்ந்தவர் இருந்த வெள்ளி கைலை மால் வரையை நண்ண
வாய்ந்த பேர் அருள் முன் கூற வழி படும் வழியால் வந்தார்
கண்டவர் வியப்புற்று அஞ்சி கை அகன்று ஓடுவார்கள்
கொண்டது ஓர் வேட தன்மை உள்ளவாறு கூற கேட்டே
அண்ட நாயகனாரென்னை அறிவரேல் அறியா வாய்மை
எண் திசை மக்களுக்கு யான் எவ்வுருவாய் என் என்பார்
வட திசை தேசம் எல்லாம் மனத்தினும் கடிது சென்று
தொடை அவிழ் இதழி மாலை சூல பாணியனார் மேவும்
படர் ஒளி கைலை வெற்பின் பாங்கு அணைந்து ஆங்கு காலின்
நடையினை தவிர்த்து பார் மேல் தலையினால் நடந்து சென்றார்
தலையினால் நடந்து சென்று சங்கரன் இருந்த வெள்ளி
மலையின் மேல் ஏறும் போது மகிழ்ச்சியால் அன்பு பொங
கலை இளம் திங்கள் கண்ணி கண் நுதல் ஒரு பாகத்து
சிலை நுதல் இமய வல்லி திரு கண் நோக்குற்றது அன்றே
அம்பிகையின் திருவுள்ளத்தின் அதிசயித்து அருளி தாழ்ந்து
தம் பெருமானை நோக்கி தலையினால் நடந்து இங்கு ஏறும்
எம் பெருமான் ஓர் எற்பின் யாக்கை அன்பு என்னே என்ன
நம் பெரு மாட்டிக்கு அங்கு நாயகன் அருளி செய்வான்
வரும் இவன் நம்மை பேணும் அம்மை காண் உமையே மற்று
பெருமை சேர் வடிவம் வேண்டி பெற்றனள் என்று பின்றை
பெருகு வந்து அணைய நோக்கி அம்மையே என்னும் செம்மை
ஒரு மொழி உலகம் எல்லாம் உய்யவே அருளி செய்தார்
அங்கணன் அம்மையே என்று அருள் செய அப்பா
பங்க செம் பொன் பாதம் பணீந்து வீழ்ந்து எழுந்தார் தம்மை
சங்க வெண் குழையினாரும் தாம் எதிர் நோக்கி நம்பால்
இங்கு வேண்டுவது என் என்ன இறைஞ்சி நின்று இயம்பு கின்றார்
இறவாத இன்ப அன்பு வேண்டி பின் வேண்டு கின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும் நான் மகிழ்ந்து
அறவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க என்றார்
கூடு மாறு அருள் கொடுத்து குலவு தென் திசையில் என்றும்
நீடு வாழ் பழன மூதூர் நிலவிய ஆலம் காட்டில்
ஆடும் மா நடமும் நீ கண்டு ஆனந்தம் சேர்ந்து எப்போதும்
பாடுவாய் நம்மை பரவுவார் பற்றாய் நின்றான்
பரிசு அருள பெற்ற அம்மையும் செம்மை வேத
மெ பொருள் ஆனார் தம்மை விடை கொண்டு வணங்கி போந்து
செப்பரும் பெருமை அன்பால் திகழ் திரு ஆலம் காடாம்
நற் பதி தலையினாலே நடந்து புக்கு அடைந்தார் அன்றே
ஆலங்காடு அதனில் அண்டமுற நிமிர்ந்து ஆடுகின்ற
கோலம் காண் பொழுது கொங்கை திரங்கி என்று எடுத்து அங்கு
மூலம் காண்பரியார் தம்மை மூத்த நல் பதிகம் பாடி
ஞாலம் காதலித்து போற்றும் நடம் போற்றி நண்ணும் நாளில்
மட்டவிழ் கொன்றையினார் தம் திருக்கூத்து முன் வணங்கும்
இட்ட மிகு பெருங் காதல் எழுந்து ஓங்க வியப்பு எய்தி
எட்டி இலவம் மீகை என எடுத்து திரு பதிகம்
கொட்ட முழவம் குழகன் ஆடும் என பாடினார்
மடுத்த புனல் வேணியினார் அம்மை என மதுர மொழி
கொடுத்து அருள பெற்றாரை குலவிய தாண்டவத்தில் அவர்
எடுத்து அருளும் சேவடி கீழ் என்றும் இருக்கின்றாரை
அடுத்த பெரும் சீர் பரவல் ஆர் அளவாயினது அம்மா
ஆதியோடு அந்தம் இல்லான் அருள் நடம் ஆடும் போது
கீதம் முன் பாடும் அம்மை கிளர் ஒளி மலர்த்தாள் போற்றி
சீத நீர் வயல் சூழ் திங்களூரில் அப்பூதியாராம்
போத மா முனிவர் செய்த திரு தொண்டு புகலல் உற்றேன்
திருச்சிற்றம்பலம்
அப்பூதி அடிகள் நாயனார் புராணம்
திருச்சிற்றம்பலம்
தாண்டவம் புரிய வல்ல தம்பிரானாருக்கு அன்பர்
ஈண்டிய புகழின் பாலார் எல்லையில் தவத்தின் மிக்கார்
ஆண்ட சீர் அரசின் பாதம் அடைந்தவர் அறியா முன்னே
காண் தகு காதல் கூர கலந்த அன்பினராய் உள்ளார்
களவு பொய் காமம் கோபம் முதலிய குற்றம் காய்ந்தார்
வளம் மிகு மனையின் வாழ்க்கை நிலையினார் மனை பால் உள்ள
அளவைகள் நிறைகோல் மக்கள் வொடு மேதி மற்றும்
உள எலாம் அரசின் நாமம் சாற்றும் அவ்வொழுகல் ஆற்றார்
வடிவு தாம் காணார் ஆயும் மன்னுசீர் வாக்கின் வேந்தர்
அடிமையும் தம்பிரானார் அருளும் கேட்டவர் நாமத்தால்
படி நிகழ் மடங்கள் தண்ணீர பந்தர்கள் முதலாய் உள்ள
முடிவு இலா அறங்கள் செய்து முறைமையால் வாழும் நாளில்
பொருப்பரையன் மட பிடியின் உடன் புணரும் சிவக்களிற்றின்
திரு பழனம் பணிந்து பணி செய் திருநாவுக்கு அரசர்
ஒரு படு காதலில் பிறவும் உடையவர் தம்பதி வணங்கும்
விருப்பினொடும் திங்களூர் மருங்கு வழி மேவுவார்
அளவில் சனம் செலவு ஒழியா வழிக்கரையில் அருள் உடையார்
உளம் அனைய தண் அளித்தாய் உறுவேனில் பரிவு அகற்றி
குளம் நிறைந்த நீர தடம் போல் குளிர் தூங்கும் பரப்பினதாய்
வளம் மருவும் நிழல் தரு தண்ணீர பந்தர் வந்து அணைந்தார்
வந்து அனைந்த வாகீசர் மந்த மாருத சீத
பந்தர் உடன் அமுதமாம் தண்ணீரும் பார்த்து அருளி
சிந்தை வியப்புற வருவார் திருநாவுக்கரசெனும் பேர்
சந்தம் உற வரைந்து அதனை எம் மருங்கும் தாம் கண்டார்
பந்தர் பெயர் இட்டு இங்கு அமைத்தார் யார்
பந்தர் அறிந்தார்கள் ஆண்ட அரசு எனும் பெயரால்
செப்பருஞ் சீர் அப்பூதி அடிகளார் செய்து அமைத்தார்
தப்பு இன்றி எங்கும் உள சாலை குளம் கா என்றார்
என்று உரைக்க அரசு கேட்டு இதற்கு என்னோ கருத்து
நின்ற வரை நோக்கி அவர் எவ்விடத்தார் என வினவ
துன்றிய நூல் மார்பரும் தொல் பதியார் மனையின் கண்
சென்றனர் இப்பொழுது அதுவும் சேய்த்து அன்று நணித்து என்றார்
அங்கு அகன்று முனிவரும் போய் அப்பூதி அடிகளார்
தங்கும் மனை கடை தலை முன் சார்வாக உள் இருந்த
திங்களூர் மறை தலைவர் செழும் கடையில் வந்து அடைந்தார்
நங்கள் பிரான் தமர் ஒருவர் என கேட்டு நண்ணினார்
கடிது அணைந்து வாகீசர் கழல் பணிய மற்று அவர் தம்
அடி பணியா முன் பணியும் அரசின் எதிர் அந்தணனார்
முடிவில் தவம் செய்தேன் கொல் முன்பு ஒழியும் கருணை புரி
வடிவுடையீர் என் மனையில் வந்து அருளிற்று
ஒரு குன்ற வில்லாரை திரு பழனத்துள் இறைஞ்சி
வருகின்றோம் வழி கரையில் நீர் வைத்த வாய்ந்த வளம்
தருகின்ற நிழல் தண்ணீர பந்தரும் கண்ட தகைமை
புரிகின்ற அறம் பிறவும் கேட்டு அணைந்தோம் என புகல்வார்
ஆறணியும் சடை முடியார் அடியார்க்கு நீர் வைத்த
ஈறில் தண்ணீர பந்தரில் நும் பேர் எழுதாதே
வேறு ஒரு பேர் முன் எழுத வேண்டிய காரணம் என் கொல்
கூறும் என எதிர் மொழிந்தார் கோதில் மொழி கொற்றவனார்
நின்ற மறையோர் கேளா நிலை அழிந்த சிந்தையராய்
நன்று அருளி செய்து இலீர் நாணில் அமண் பதகர் உடன்
ஒன்றிய மன்னவன் சூட்சி திரு தொண்டின் உறை பாலே
வென்றவர் தம் திருப்பேரோ வேறு ஒரு பேர் என வெகுள்வார்
நம்மை உடையவர் கழல் கீழ் நயந்த திரு தொண்டாலே
இம்மையிலும் பிழைப்பது என என் போல் வாரும் தெளி
செம்மை புரி திருநாவுக்கரசர் திரு பெயர் எழுத
வெம்மை மொழி யான் கேட்க விளம்பினீர் என விளம்பி
பொங்கு கடல் கல் மிதப்பில் போந்து ஏறும் அவர் பெருமை
அங்கணர் தம் புவனத்தில் அறியாதார் யார் உளரே
மங்கலம் ஆம் திரு வேடத்துடன் இன்று இவ்வகை மொழிந்தீர்
எங்கு உறைவீர் நீர் தாம் யார் இயம்பும் என இயம்பினார்
திரு மறையோர் அது மொழி நாவுக்கரசர்
பெருமை அறிந்து உரை செய்வார் பிற துறையின் நின்றேற
அருளும் பெரும் சூலையினால் கொள்ள அடைந்து உய்ந்த
தெருளும் உணர்வு இல்லாத சிறுமை யேன் யான் என்றார்
அரசு அறிய உரை செய்ய அப்பூதி அடிகள் தாம்
கர கமலம் மிசை குவி கண் அருவி பொழிந்து இழிய
உரை குழறி உடம்பு எல்லாம் உரோம புளகம் பொலி
தரையின் மிசை வீழ்ந்தவர் தம் சரண கமலம் பூண்டார்
மற்றவரை எதிர் வணங்கி வாகீசர் எடுத்து அருள
அற்றவர்கள் அரு நிதியம் பெற்றார் போல்
முற்றவும் களி கூற முன் நின்று கூத்தாடி
உற்ற விருப்பு உடன் சூழ ஓடினார் பாடினார்
மூண்ட பெரு மகிழ்ச்சியினால் முன் செய்வது அறியாதே
ஈண்ட மனை அகத்து எய்தி இல்லவர்க்கும் மக்களுக்கும்
ஆண்ட அரசு எழுந்து அருளும் ஓகை உரைத்து ஆர்வம் உற
பூண்ட பெரும் சுற்றம் எலாம் கொடு மீள புறப்பட்டார்
மனைவியார் உடன் மக்கள் மற்றும் உள்ள சுற்றத்தோர்
அனைவரையும் கொண்டு இறைஞ்சி ஆராத காதல் உடன்
முனைவரை உள் எழுந்து அருளுவித்து அவர் தாள் முன் விளக்கும்
புனை மலர் நீர் தங்கள் மேல் தெளித்து உள்ளும் பூரித்தார்
ஆசனத்தில் பூசனைகள் அமர் வித்து விருப்பின் உடன்
வாசம் நிறை திரு நீற்று காப்பு ஏந்தி மனம் தழைப்ப
தேசம் உய்ய வந்த வரை திரு அமுது செய்விக்கும்
நேசம் உற விண்ணப்பம் செய அவரும் அது நேர்ந்தார்
செய்தவர் இசைந்த போது திரு மனையாரை நோக்கி
எய்திய பேறு நம்பால் இருந்தவாறு என்னே என்று
மை திகழ் மிடற்றினான் தன் அருளினால் வந்தது என்றே
உய்தும் என்று உவந்து கொண்டு திரு அமுது ஆக்கல் உற்றார்
தூய நல் கறிகள் ஆன அறுவகை சுவையால் ஆக்கி
ஆய இன் அமுதும் ஆக்கி அமுது செய்து அருள தங்கள்
சேயவர் தம்மில் மூத்த திருநாவுக்கு அரசை வாழை
மேய பொன் குருத்து கொண்டுவா என விரைந்து விட்டார்
நல்ல தாய் தந்தை ஏவ நான் இது செ பெற்றேன் என்று
ஒல்லையில் விரைந்து தோட்டத்துள் புக்கு பெரிய வாழை
மல்லல் அம் குருத்தை ஈரும் பொழுதினில் வாள் அரா ஒன்று
அல்லல் உற்று அழுங்கி சோர அங்கையில் தீண்டிற்று அன்றே
கையினில் கவர்ந்து சுற்றி கண் எரி காந்துகின்ற
பை அரா உதறி வீழ்த்து பதைப்பு உடன் பாந்தாள் பற்றும்
வெய்ய வேகத்தால் வீழா முன்னம்
கொய்த குருத்தை சென்று கொடுப்பன் என்று ஓடி வந்தான்
பொருந்திய விட வேகத்தில் போதுவான் வேகம் உந்த
வருந்தியே அணையும் போழ்து மாசுணம் கவர்ந்தது யார்க்கும்
அரும் தவர் அமுது செ தாழ்க்க யான் அறையேன் என்று
திருந்திய கருத்தினோடும் செழுமனை சென்று புக்கான்
எரிவிடம் முறையே ஏறி தலை கொண்ட ஏழாம் வேகம்
தெரிவுற எயிறும் கண்ணும் மேனியும் கருகி தீந்து
விரியுரை குழறி ஆவி விட கொண்டு மயங்கி வீழ்வான்
பரி கல குருத்தை தாயார் பால் வைத்து படி மேல் வீழ்ந்தான்
தளர்ந்து வீழ் மகனை கண்டு தாயரும் தந்தை யாரும்
உளம் பதைத்து உற்று நோக்கி உதிரம் சோர் வடிவும் மேனி
விளங்கிய குறியும் கண்டு விடத்தினால் வீழ்ந்தான் என்று
துளங்குதல் இன்றி தொண்டர் அமுது செய்வதற்கு சூழ்வார்
பெறல் அரும் புதல்வன் தன்னை பாயினுள் பெய்து மூடி
புற மனை முன்றில் பாங்கு ஓர் புடையினில் மறைத்து வைத்தே
அற இது தெரியா வண்ணம் அமுது செய்விப்போம் என்று
விறல் உடை தொண்டனார் பால் விருப்பொடு விரைந்து வந்தார்
கடிது வந்து அமுது செ காலம் தாழ்கின்றது என்றே
அடிசிலும் கறியும் எல்லாம் அழகு உற அணைய வைத்து
படியில் சீர தொண்டனார் முன் பணிந்து எழுந்து அமுது செய்து எம்
குடி முழுதும் கொள்வீர் என்று அவர் கூற கேட்டு
அரும் தவர் எழுந்து செய்ய அடி இணை விளக்கி வேறு ஓர்
திருந்தும் ஆசனத்தில் ஏறி பரிகலம் திருத்தும் முன்னர்
இருந்து வெண் நீறு சாத்தி இயல்புடை இருவருக்கும்
பொருந்திய நீறு நல்கி புதல்வர்க்கும் அளிக்கும் போழ்தில்
ஆதி நான்மறை நூல் வாய்மை அப்பூதியாரை நோக்கி
காதலர் இவர்க்கு மூத்த சேயையும் காட்டும் முன்னே
மேதகு பூதி சாத்த என்றலும் விளைந்த தன்மை
யாதும் ஒன்று உரையார் இப்போது இங்கு அவன் உதவான் என்றார்
அவ்வுரை கேட்ட போதே அங்கணர் அருளால் அன்பர்
செவ்விய திரு உள்ளத்து ஓர் தடு மாற்றம் சேர நோக்கி
இவ் உரை பொறாது என் உள்ளம் என்று செய்தான் இதற்கு ஒன்று
மெய் விரித்து உரையும் என்ன விளம்புவார் விதிர்ப்பு உற்று அஞ்சி
பெரியவர் அமுது செய்யும் பேறு இது பிழைக்க என்னோ
வருவது என்று உரையார் ஏனும் மாதவர் வினவ வாய்மை
தெரிவுற உரைக்க வேண்டும் சீலத்தால் சிந்தை நொந்து
பரிவொடு வணங்கி மைந்தர்க்கு உற்றது பகர்ந்தார் அன்றே
நாவினுக்கு அரசர் கேளா நன்று நீர் புரிந்த வண்ணம்
யாவர் தன்மை செய்தார் என்று முன் எழுந்து சென்றே
ஆவி தீர் சவத்தை நோக்கி அண்ணலார் அருளும் வண்ணம்
பா இசை பதிகம் பாடி பணி விடம் பாற்று வித்தார்
தீ விடம் நீங்க உய்ந்த திரு மறையவர் தம் சேயும்
மேவிய உறக்கம் நீங்கி விரைந்து எழுவானை போன்று
சேவுகைத்தவர் கொண்ட திருநாவுக்கரசர் செய்ய
பூவடி வணங கண்டு புனித நீறு அளித்தார் அன்றே
பிரிவுறும் ஆவி பெற்ற பிள்ளையை காண்பார் தொண்டின்
நெறியினை போற்றி வாழ்ந்தார் நின்ற பயந்தார் தாங்கள்
அறிவரும் பெருமை அன்பர் அமுது செய்து அருளுதற்கு
சிறிது இடையூறு செய்தான் இவன் என்று சிந்தை நொந்தார்
ஆங்கவர் வாட்டம் தன்னை அறிந்து சொல் அரசர் கூட
ஓங்கிய மனையில் எய்தி அமுது செய்து அருள உற்ற
பாங்கினில் இருப்ப முந்நூல் பயில் மணி மார்பர் தாமும்
தாங்கிய மகிழ்ச்சி யோடும் தகுவன சமைத்து சார்வார்
புகழ்ந்த கோமயத்து நீரால் பூமியை பொலிய நீவி
திகழ்ந்த வான் சுதையும் போக்கி சிறப்புடை தீபம் ஏற்றி
நிகழ்ந்த கதலி நீண்ட குருத்தினை விரித்து நீரால்
மகிழ்ந்துடன் விளக்கி ஈர்வாய் வலம் பெற மரபின் வைத்தார்
திருந்திய வாச நல் நீர் அளித்திட திருக்கை நீவும்
பெருந்தவர் மறையோர் தம்மை பிள்ளைகள் உடனே நோக்கி
அரும் புதல்வர்களும் நீரும் அமுது செய்வீர் இங்கு என்ன
விரும்பிய உள்ளத்தோடு மேலவர் ஏவல் செய்வார்
மைந்தரும் மறையோர் தாமும் மருங்கு இருந்து அமுது செ
சிந்தை மிக்கு இல்ல மாதர் திரு அமுது எடுத்து நல
கொந்து அவிழ் கொன்றை வேணி கூத்தனார் அடியாரோடும்
அம் தமிழ் ஆளியார் அங்கு அமுது செய்து அருளினாரே
மா தவ மறையோர் செல்வ மனை இடை அமுது செய்து
காதல் நண்பு அளித்து பல் நாள் கலந்து உடன் இருந்த பின்றை
மே தகு நாவின் மன்னர் விளங்கிய பழன மூதூர்
நாதர் தம் பாதம் சேர்ந்து நல் தமிழ பதிகம் செய்வார்
அப்பூதி அடிகளார் தம் அடிமையை சிறப்பித்து ஆன்ற
மெ பூதி அணிந்தார் தம்மை விரும்பு சொல் மாலை வேய்ந்த
பூதி பெற்ற நல்லோர் எல்லை இல் அன்பால் என்றும்
செப்பு ஊதியம் கை கொண்டார் திருநாவுக்கரசர் பாதம்
இவ் வகை அரசின் நாமம் ஏத்தி பொருளும் நாளும்
அவ்வரும் தவர் பொன் தாளை என உணர்ந்து அடைவார் செல்லும்
செவ்விய நெறியது ஆக திரு தில்லை மன்றுள் ஆடும்
நவ்வியம் கண்ணாள் பங்கர் நல் கழல் நண்ணினாரே
மான் மறி கையர் பொன் தாள் வாகீசர் அடைவால் பெற்ற
மேன்மை அப்பூதியாராம் வேதியர் பாதம் போற்றி
கான் மலர கமல வாவி கழனி சூழ் சாத்த மங்கை
நான் மறை நீல நக்கர் திரு தொழில் நவிலல் உற்றேன்
திருச்சிற்றம்பலம்
திரு நீல நக்க நாயனார் புராணம்
திருச்சிற்றம்பலம்
பூத்த பங்க பொகுட்டின் மேல் பொருகயல் உகளும்
காய்த்த செ நெலின் காடு சூழ் காவிரி நாட்டு
சாத்த மங்கை என்று உலகு எலாம் புகழ் உறும் தகைத்தால்
வாய்த்த மங்கல மறையவர் முதற்பதி வனப்பு
நன்மை சாலும் அப்பதி இடை நறு நுதல் மடவார்
மென் மலர தடம் படிய மற்றவருடன் விரவி
அன்னம் முன் துறை ஆடுவ பாடுவ சாமம்
பன் மறை கிடையுடன் பயிற்றுவ பல பூவை
ஆய்ந்த மெ பொருள் நீறு என வளர்க்கும் காப்பில்
ஏய்ந்த மூன்று தீ வளர்த்துளார் இரு பிறப்பாளர்
நீந்து நல் அறம் நீர்மையின் வளர்க்கும் அத்தீயை
வாய்ந்த கற்புடன் நான்கு என வளர்ப்பர் கண் மடவார்
சீலம் உய்த்த திருமறையோர் செழு மூதூர்
ஞாலம் மிக்க நான் மறை பொருள் விளக்கிய நலத்தார்
ஆலம் வைத்த கண்டத்தவர் தொண்டராம் அன்பர்
நீல நக்கனார் என்பவர் நிகழ்ந்துளார் ஆனார்
வேத உள்ளுறை ஆவன விரிபுனல் வேணி
நாதர் தம்மையும் அவர் அடியாரையும் நயந்து
பாதம் அர்ச்சனை புரிவதும் பணிவதும் என்றே
காதலால் அவை இரண்டுமே செய் கருத்து உடையார்
மெய்த்த ஆகம விதி வழி வேத காரணரை
நித்தல் பூசனை புரிந்து எழு நியமும் செய்தே
அத்தர் அன்பருக்கு அமுது செய்விப்பது முதலா
திறத்தன பணிகளும் ஏற்று எதிர் செய்வார்
ஆய செய் கையில் அமரும் நாள் ஆதிரை நாளில்
மேய பூசனை நியதியை விதியினால் முடித்து
தூய தொண்டனார் தொல்லை நீடு அயவந்தி அமர்ந்த
நாயனாரையும் அருச்சனை புரிந்திட நயந்தார்
உறையுள் ஆகிய மனை நின்றும் ஒருமை அன்புற்ற
முறைமையால் வரு பூசைக்கும் முற்ற வேண்டுவன
குறைவற கொண்டு மனைவியார் தம்மொடும் கூட
இறைவர் கோயில் வந்து எய்தினர் எல்லையில் தவத்தோர்
அணைய வந்து புக்கு அயவந்தி மேவிய அமுதின்
துணை மலர கழல் தொழுது பூசனை செ தொடங்கி
இணைய நின்று அங்கு வேண்டு மனைவியார் ஏந்த
உணர்வின் மிக்கவர் உயர்ந்த அர்ச்சனை முறை உய்த்தார்
நீடு பூசனை நிரம்பியும் அன்பினால் நிரம்பார்
மாடு சூழ் புடை வலம் கொண்டு வணங்கி முன் வழுத்தி
தேடு மா மறை பொருளினை தெளிவுற நோக்கி
நாடும் அஞ்செழுத்து உணர்வுற இருந்து முன் நவின்றார்
தொலைவில் செய் தவ தொண்டனார் சுருதியே முதலாம்
கலையின் உண்மையாம் எழுத்து அஞ்சும் கணிக்கின்ற காலை
நிலையின் நின்று முன் வழுவிட நீண்ட பொன் மேரு
சிலையினார் திருமேனி மேல் விழுந்தது ஓர் சிலம்பி
விழுந்த போதில் அங்கு அயல் நின்ற மனைவியார் விரைவுற்று
எழுந்த அச்சமோடு இளம் குழவியில் விழும் சிலம்பி
ஒழிந்து நீங்கிட ஊதி முன் துமிப்பவர் போல
பொழிந்த அன்பினால் ஊதி மேல் துமிந்தனர் போக
பதைத்த செய்கையால் மனைவியார் முன் செ பந்தம்
சிதைக்கு மா தவ திரு மறையவர் கண்டு தம் கண்
புதைத்து மற்றிது செய்தது என் பொறி இலாய் என்ன
சுதை சிலம்பி மேல் விழ ஊதி துமிந்தனன் என்றார்
மனைவியார் செய்த அன்பினை மனத்தினில் கொள்ளார்
புனையும் நூல் மணி மார்பர் தம் பூசனை திறத்தில்
இனைய செய்கை இங்கு அநுசிதமாம் என எண்ணும்
நினைவினால் அவர் தம்மை விட்டு அகன்றிட நீப்பார்
மின் நெடுஞ்சடை விமலர் மேல் விழுந்த நூல் சிலம்பி
தன்னை வேறு ஒரு பரிசினால் தவிர்ப்பது தவிர
முன் அனைந்து வந்து ஊதி வாய் நீர பட முயன்றாய்
உன்னை யான் இனி துறந்தனன் ஈங்கு என உரைத்தார்
மற்ற வேலையில் கதிரவன் மலைமிசை மறைந்தான்
உற்ற ஏவலின் மனைவியார் ஒருவழி நீங்க
முற்ற வேண்டுவ பழுது தீர் பூசனை முடித்து
கற்றை வேணியார் தொண்டரும் கடிமனை புகுந்தார்
அஞ்சும் உள்ளமோடு அவர் மருங்கு அணைவுற மாட்டார்
நஞ்சம் உண்டவர் கோயிலில் நங்கையார் இருந்தார்
செஞ்சொல் நான் மறை திரு நீல நக்கர்தாம் இரவு
பஞ்சின் மெல் அணை பள்ளியில் பள்ளி கொள்கின்றார்
பள்ளி கொள் பொழுது தயவந்தி பரமர் தாம் கனவில்
வெள்ள நீர சடையொடு நின்று மேனியை காட்டி
உள்ளம் வைத்து எமை ஊதி முன் துமிந்த பால் ஒழி
கொள்ளும் புறம் சிலம்பியின் கொப்புள் என்று அருள
கண்ட அப்பெரும் கனவினை நனவு என கருதி
கொண்ட அச்சமோடு அஞ்சலி குவித்து உடன் விழித்து
தொண்டனார் தொழுது ஆடினார் பாடினார் துதித்தார்
அண்டர் நாயகர் கருணையை போற்றி நின்று அழுதார்
போது போய் இருள் புலர்ந்திட கோயில் உள் புகுந்தே
ஆதி நாயகர் அயவந்தி அமர்ந்த அங்கணர்தம்
பாத மூலங்கள் பணிந்து வீழ்ந்து எழுந்து முன் பரவி
மாதராரையும் கொண்டு தம் மனையில் மீண்டு அணைந்தார்
பின்பு முன்னையில் பெருகிய மகிழ்ச்சி வந்துஎய்த
இன்புறும் திறத்து எல்லையில் பூசனை இயற்றி
அன்பு மேம் படும் அடியவர் மிக அணை வார்க்கு
முன்பு போல் அவர் வேண்டுவ விருப்ப முடன் முடிப்பார்
அன்ன தன்மையில் அமர்ந்து இனிது ஒழுகும் அந்நாள்஢ல்
மன்னு பூம் தராய் வரு மறை பிள்ளையார் பெருமை
பன்னி வையகம் போற்றிட மற்று அவர் பாதம்
சென்னி வைத்து உடன் சேர்வுறும் விருப்பினால் சிறந்தார்
பண்பு மேம்படு நிலைமையார் பயிலும் அப்பருவ
மண் பெரும் தவ பயன் பெற மருவு நல் பதிகள்
விண் பிறங்கு நீர் வேணியார் தமை தொழ அணைவார்
சண்பை மன்னரும் சாத்த மங்கையில் வந்து சார்ந்தார்
நீடு சீர திரு நீலகண்ட பெரும் பாணர்
தோடுலாங் குழல் விறலியார் உடன் வர தொண்டர்
கூடும் பெரும் குழாத்தோடும் புகலியர் பெருமான்
மாடு வந்தமை கேட்டு உளம் மகிழ் நீல நக்கர்
கேட்ட பொழுதே பெரு மகிழ்ச்சியில் கிளர்ந்து
தோட்டலங்கலும் கொடிகளும் புனைந்து தோரணங்கள்
நாட்டி நீள் நடை காவணம் இட்டு நல் சுற்றத்து
ஈடமும் கொடு தாமும் முன் எதிர் கொள எழுந்தார்
சென்று பிள்ளையார் எழுந்து அருளும் திரு கூட்டம்
ஒன்றி அங்கு எதிர் கொண்டு தம் களிப்பினால் ஒருவாறு
அன்றி ஆடியும் பாடியும் தொழுது எழுந்து அணைவார்
பொன் தயங்கு நீள் மனை இடை உடன் கொண்டு புகுந்தார்
பிள்ளையார் எழுந்து அருளிய பெருமைக்கு தக்க
வெள்ளம் ஆகிய அடியவர் கூட்டமும் விரும்ப
உள்ளம் ஆதரவு ஓங்கிட ஓங்கு சீகாழி
வள்ளலாரை தம் மனை இடை அமுது செய்வித்தார்
அமுது செய்த பின் பகலவன் மேல் கடல் அணை
குமுத வாவியில் குளிர் மதி கதிர் அணை போதில்
இமய மங்கை தன் திருமுலை அமுது உண்டார் இரவும்
தமது சீர் மனை தங்கிட வேண்டுவ சமைத்தார்
சீல மெ திரு தொண்டரோடு அமுது செய்து அருளி
ஞாலம் மிக்கிட நாயகி உடன் நம்பர் நண்ணும்
காலம் முற்பெற அழுதவர் அழைத்திட கடிது
நீல நக்கனார் வந்து அடி பணிந்து முன் நின்றார்
நின்ற அன்பரை நீல கண்ட பெரும் பாணர்க்கு
இன்று தங்க ஓர் இடம் கொடுத்து அருளுவீர் என்ன
நன்றும் இன்புற்று நடு மனை வேதியின் பாங்கர
சென்று மற்று அவர்க்கு இடம் கொடுத்தனர் திருமறையோர்
ஆங்கு வேதியில் அறாத செம் தீ வலம் சுழிவுற்று
ஓங்கி முன்னையில் ஒரு படித்து அன்றியே ஒளிர
தாங்கு நூலவர் மகிழ் உற சகோட யாழ தலைவர்
பாங்கு பாணியார் உடன் அருளால் பள்ளி கொண்டார்
கங்குலில் பள்ளி கொண்ட பின் கவுணியர்க்கு இறைவர்
அங்கு நின்று எழுந்து அருளுவார் அயவந்தி அமர்ந்த
திங்கள் சூடியை நீல நக்கரை சிறப்பித்தே
பொங்கு செந்தமிழ் திருப்பதிக தொடை புனைந்தார்
பதிக நான் மலர் கொண்டு தம்பிரான் கழல் பரவி
அதிக நண்பினை நீல நக்கருக்கு அளித்து அருளி
எதிர் கொளும் பதிகளில் எழுந்து அருளினார் என்றும்
புதிய செந்தமிழ பழ மறை மொழிந்த பூசுரனார்
பிள்ளையார் எழுந்து அருள அத்தொண்டர் தாம் பின்பு
தள்ளும் அன்புடன் கேண்மையும் தவிர்ப்பில எனினும்
வள்ளலார் திரு அருளினை வலிய மாட்டாமை
உள்ளம் அங்கு உடன் போக்கி மீண்டு ஒரு வகை இருந்தார்
மேவு நாளில் அவ் வேதியர் முன்பு போல் விரும்பும்
தாவில் பூசனை முதல் செய்கை தலைத்தலை சிறப்ப
சேவின் மேலவர் மைந்தராம் திரு மறை சிறுவர்
பூவடி தலம் பொருந்திய உணர்வொடும் பயின்றார்
சண்பை ஆளியார் தாம் எழுந்து அருளும் பதியும்
நண்பு மேம்பட நாள் இடை செலவிட்டு நண்ணி
வண் பெரும் புகழவர் உடன் பயின்று வந்து உறைந்தார்
திண் பெரும் தொண்டர் ஆகிய திரு நீலக்கர்
பெருகு காதலில் பின் நெடு நாள் முறை பிறங்க
வருபெரும் தவ மறையவர் வாழி சீகாழி
ஒருவர் தம் திரு கல்லியாணத்தினில் உடனே
திருமண திறம் சேவித்து நம்பர் தாள் சேர்ந்தார்
தரு தொழில் திரு மறையவர் சாத்த மங்கையினில்
வருமுதல் பெரும் திருநீல நக்கர் தாள் வணங்கி
இரு பிறப்புடை அந்தணர் ஏறுயர்த்தவர் பால்
ஒருமை உய்த்துணர் நமி நந்தியார் தொழில் உரைப்பாம்
திருச்சிற்றம்பலம்
நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
திருச்சிற்றம்பலம்
வையம் புரக்கும் தனி செங்கோல் வளவர் பொன்னி திருநாட்டு
செய்ய கமல தடம் பணையும் செழும் நீர தடமும் புடை உடைத்தாய்
பொய்தீர் வாய்மை அருமறை நூல் புரிந்த சீல புகழ் அதனால்
எய்தும் பெருமை எண் திசையும் ஏறூர் பேர் ஊரால்
மாலை பயிலும் தோரணங்கள் மருங்கு மணி
வேலை பயிலும் புனல் பருகு மேகம்
சோலை பயிலும் குளிர்ந்த இருள் சுரும்பு
காலை பயிலும் வேத ஒலி கழுநீர் செழுநீர
பணையில் விளைந்த வெண் நெல்லின் பரப்பின் மீது பட செய்ய
துணர் மென் கமலம் இடை இடையே சுடர் விட்டு எழுந்து தோன்றுவன
புணர் வெண் புரி நூலவர் வேள்வி களத்தில் புனைந்த வேதிகை மேல்
மணல் வெண் பரப்பின் இடை இடையே வளர்த்த செந்தீமானுமால்
பெருமை விளங்கும் அப்பதியில் பேணும் நீற்று சைவ நெறி
ஒருமை நெறி வாழ் அந்தணர் தம் ஓங்கு குலத்தினுள் வந்தார்
இருமை உலகும் ஈசர் கழல் இறைஞ்சி ஏத்த பெற்ற தவத்து
அருமை புரிவார் நமி நந்தி அடிகள் என்பார் ஆயினார்
வாய்மை மறை நூல் சீலத்தால் வளர்க்கும் செந்தீ என தகுவார்
தூய்மை திரு நீற்று அடைவே மெ பொருள் என்று அறியும் துணிவினார்
சாம கண்டர் செய்ய கழல் வழிபட்டு ஒழுகும் தலைமை நிலை
யாம இரவும் பகலும் உணர் ஒழியா இன்பம் எய்தினார்
அவ்வூர் நின்றும் திருவாரூர் அதனை அடைவார் அடியார்மேல்
வெவ்வூறு அகற்றும் பெருமான் தன் விரை சூழ் மலர்த்தாள் பணி உறுதல்
எவ்வூதியமும் என கொள்ளும் எண்ணம் உடையார் பல நாளும்
தெவ்வூர் எரித்த வரைச்சிலையார் திரு பாதங்கள் வணங்கினார்
செம் பொன் புற்றின் மாணிக்க செழும் சோதியை நேர் தொழுஞ் சீலம்
தம் பற்றாக நினைந்து அணைந்து தாழ்ந்து பணிந்து வாழ்ந்து போந்து
அம் பொன் புரிசை திருமுன்றில் அணைவார் பாங்கோர் அரன் நெறியின்
நம்பர்க்கு இடமாம் கோயிலின் உட்புக்கு வணங்க நண்ணினார்
நண்ணி இறைஞ்சி அன்பினால் நயப்பு உற்று எழுந்த காதல் உடன்
அண்ணலாரை பணிந்து எழுவார் அடுத்த நிலைமை குறிப்பினால்
பண்ணு தொண்டின் பாங்கு பல பயின்று பரவி விரவுவார்
எண்ணில் தீபம் ஏற்றுவதற்கு எடுத்த கருத்தின் இசைந்து எழுவார்
எழுந்த பொழுது பகல் பொழுதின் அங்கு இறங்கு மாலை எய்துதலும்
செழுந்தண் பதியின் இடை அப்பால் செல்லில் செல்லும் பொழுது என்ன
ஒழிந்து அங்கு அணைந்தோர் மனையில் விளக்குறு நெய் வேண்டி உள் புகலும்
அழிந்த நிலைமை அமணர் மனை ஆயிற்று அங்கண் அவர் உரைப்பார்
கையில் விளங்கும் கனல் உடையார் தமக்கு விளக்கு மிகை காணும்
நெய் இங்கு இல்லை விளக்கு எரிப்பீர் ஆகில் நீரை முகந்து எரித்தல்
செய்யும் என்று திரு தொண்டர்க்கு உரைத்தார் தெளியாது ஒரு பொருளே
பொய்யும் மெய்யும் ஆம் என்னும் பொருள்மேற் கொள்ளும் புரை நெறியார்
அருகர் மதியாது உரைத்த உரை ஆற்றார் ஆகி அப்பொழுதே
பெருக மனத்தில் வருத்தமுடன் பெயர்ந்து போந்து பிறை அணிந்த
முருகு விரியும் மலர கொன்றை முடியார் கோயில் முன் எய்தி
உருகும் அன்பர் பணிந்து விழ ஒருவாக்கு எழுந்தது உயர் விசும்பில்
வந்த கவலை மாற்றும் இனி மாறா விளக்கு பணி மாற
இந்த மருங்கில் குளத்து நீர் முகந்து கொடு வந்து ஏற்றும் என
அந்தி மதியம் அணிந்த பிரான் அருளால் எழுந்த மொழி கேளா
சிந்தை மகிழ்ந்து நமிநந்தி அடிகள் செய்வது அறிந்திலரால்
சென்னி மிசை நீர் தரித்த பிரான் அருளே சிந்தை செய்து எழுவார்
நன்னீர் பொய்கை நடுப்புக்கு நாதர் நாமம் நவின்று ஏத்தி
அந்நீர் முகந்து கொண்டு ஏறி அப்பர் கோயில் அடைந்து அகலுள்
முந்நீர் உலகம் அதிசயிப்ப முறுக்கும் திரி மேல் நீர் வார்த்தார்
சோதி விளக்கு ஒன்று ஏற்றுதலும் சுடர் விட்டு எழுந்தது அது நோக்கி
ஆதி முதல்வர் அரன் நெறியார் கோயில் அடைய விளக்கு ஏற்றி
ஏதம் நினைந்த அருகந்தர் எதிரே முதிரும் களிப்பினுடன்
நாதர் அருளால் திரு விளக்கு நீரால் எரித்தார் நாடு அறிய
நிறையும் பரிசு திருவிளக்கு விடியும் அளவும் நின்று எரி
குறையும் தகளிகலுக்கு எல்லாம் கொள்ள வேண்டும் நீர் வார்த்து
மறையின் பொருளை அருச்சிக்கும் மனையின் நியதி வழுவாமல்
உறையும் பதியின் அவ்விரவே அணைவார் பணி உற்று ஒருப்பட்டார்
இரவு சென்று தம் பதியில் எய்தி மனைப்புக்கு என்றும் போல்
விரவி நி தொழில் முறையே விமலர் தம்மை அருச்சித்து
பரவி அமுது செய்து அருளி பள்ளி கொண்டு புலர் காலை
அரவம் அணிவார் பூசை அமைத்து ஆரூர் நகரின் மீண்டு அணைந்தார்
வந்து வணங்கி அரன் நெறியார் மகிழும் கோயில் வலம் கொண்டு
சிந்தை மகிழ பணிந்து எழுந்து புறம்பும் உள்ளும் திருப்பணிகள்
முந்த முயன்று பகல் எல்லாம் முறையே செய்து மறையவனார்
அந்தி அமையத்து அரிய விளக்கு எங்கும் ஏற்றி அடி பணிவார்
பண்டு போல பல நாளும் பயிலும் பணி செய்து அவர் ஒழுக
தண்டி அடிகளால் அமணர் கலக்கம் விளைந்து சார்வில் அமண்
குண்டர் அழிய ஏழ் உலகும் குலவும் பெருமை நிலவியதால்
அண்டர் பெருமான் தொண்டர் கழல் அமரர் பணியும் மணி ஆரூர்
நாத மறை தேர் நமிநந்தி அடிகளார் நல் தொண்டு ஆக
பூத நாதர் புற்றிடங் கொள் புனிதர்க்கு அமுதுபடி முதலாம்
நீதி வளவன் தான் வேண்டும் நிபந்தம் பலவும் அரி அணையின்
மீது திகழ இருந்து அமைத்தான் வேத ஆகம விதி விளங்க
வென்றி விடையார் மதி சடையார் வீதி விடங்க பெருமாள் தாம்
என்றும் திருவாரூர் ஆளும் இயல்பின் முறைமை திருவிளையாட்டு
ஒன்றும் செயலும் பங்குனி உத்திரமாம் திருநாள் உயர் சிறப்பும்
நின்று விண்ணப்பம் செய்தபடி செய்து அருளும் நிலைபெற்றார்
இன்ன பரிசு திரு பணிகள் பலவும் செய்தே ஏழ் உலகும்
மன்னும் பெருமை திருவாரூர் மன்னர் அடியார் வழி நிற்பார்
அன்ன வண்ணம் திருவிளையாட்டு ஆடி அருள எந்நாளும்
நன்மை பெருக நமி நந்தி அடிகள் தொழுதார் நாம் உய்ய
தேவர் பெருமான் எழுச்சி திரு மணலிக்கு ஒரு நாள் எழுந்து அருள
யாவர் என்னாது உடன் சேவித்து எல்லா குலத்தில் உள்ளோரும்
மேவ அன்பர் தாமும் உடன் சேவித்து அணைந்து விண்ணவர்தம்
காவலாளர் ஓலக்கம் அங்கே கண்டு களிப்புற்றார்
பொழுது வைக சேவித்து புனிதர் மீண்டும் கோயில் புக
தொழுது தம் ஊர் மருங்கு அணைந்து தூய மனை உள் புகுதாதே
இழுதும் இருள் சேர் இரவு புறம் கடையில் துயில இல்லத்து
முழுதும் தருமம் புரி மனையார் வந்து உள் புகுத மொழ்கின்றார்
திங்கள் முடியார் பூசனைகள் முடித்து செய்யும் கடன் முறையால்
அங்கி தனை வேட்டு அமுது செய்து பள்ளி கொள்வீர் என அவர்க்கு
தங்கள் பெருமான் திருமணலிக்கு எழுச்சி சேவித்து உடன் நண்ண
எங்கும் எல்லாரும் போத இழிவு தொடக்கிற்று எனை என்று
ஆதலாலே குளித்து அடுத்த தூய்மை செய்தே அகம்புகுந்து
வேத நாதர் பூசனையை தொடங்க வேண்டும் அதற்கு நீ
சீத நன்னீர் முதலான கொண்டு இங்கு அணைவாய் என செப்ப
காதலால் மனையார் தாமும் அவை கொணரும் அதற்கு கடிது அணைந்தார்
ஆய பொழுது தம் பெருமான் அருளாலேயோ மேனியினில்
ஏயும் அசைவின் அயர்வாலோ அறியோம் இறையும் தாழாதே
மேய உறக்கம் வந்து அணைய விண்ணோர் பெருமான் கழல் நினைந்து
தூய அன்பர் துயில் கொண்டார் துயிலும் பொழுது கனவின் கண்
மேன்மை விளங்கும் திருவாரூர் வீதி விடங்க பெருமாள் தாம்
மான அன்பர் பூசனைக்கு வருவார் போல வந்து அருளி
ஞான மறையோய் ஆரூரில் பிறந்தார் எல்லாம் நம் கணங்கள்
ஆன பரிசு காண்பாய் என்று அருளி செய்து அங்கு எதிர் அகன்றார்
ஆதி தேவர் எழுந்து அருள உணர்ந்தார் இரவு அர்ச்சனை செய்யாது
ஏதம் நினைந்தேன் என அஞ்சி எழுந்த படியே வழிபட்டு
மாதரார்க்கும் புகுந்தபடி மொழிந்து விடியல் விரைவோடு
நாதனார் தம் திருவாரூர் புகுத எதிர் நகர் காண்பார்
தெய்வ பெருமாள் திருவாரூர பிறந்து வாழ்வார் எல்லாரும்
மை வைத்த அனைய மணிகண்டர் வடிவே ஆகி பெருகு ஒளியால்
மொய் வைத்து அமர்ந்த மேனியராம் பரிசு கண்டு முடிகுவித்த
கைவைத்து அஞ்சி அவனிமிசை விழுந்து பணிந்து கள்஢சிறந்தார்
படிவம் மாற்றி பழம் படியே நிகழ்வும் கண்டு பரமர் பால்
அடியேன் பிழையை பொறுத்து அருள வேண்டும் என்று பணிந்த அருளால்
குடியும் திருவாரூர் அகத்து புகுந்து வாழ்வார் குவலயத்து
நெடிது பெருகும் திருத்தொண்டு நிகழ செய்து நிலவுவார்
நீறு புனைவார் அடியார்க்கு நெடுநாள் நியதி ஆகவே
வேறு வேண்டுவன எல்லாம் செய்து
ஏறு சிறப்பின் மணி புற்றில் இருந்தார் தொண்டர்க்கு ஆணி எனும்
பேறு திருநாவுக்கரசர் விள பெற்ற பெருமையினார்
இன்ன வகையால் திருப்பணிகள் எல்லா உலகும் தொழ செய்து
நன்மை பெருகும் நமிநந்தி அடிகள் நயமார் திருவீதி
சென்னி மதியும் திருநதியும் அலைய வருவார் திருவாரூர்
மன்னர் பாத நீழல் மிகும் வளர் பொன் சோதி மன்னினார்
சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி
நாட்டார் அறிய முன்னாளில் நன்னாள் உலந்த ஐம் படையின்
பூட்டார் மார்பில் சிறிய மறை புதல்வன் தன்னை புக்கு ஒளியூர
தட்டா மரையின் மடுவின் கண் தனி மா முதலை வாய் நின்றும்
மீட்டார் கழல்கள் நினைவாரை மீளா வழியின் மீட்பனவே
திருச்சிற்றம்பலம்
திருநின்ற சருக்கம் முற்றிற்று
சருக்கம் க்கு திருவிருத்தம்