பட்டினப்பாலை
ஆசிரியர் கடியலூர் உருத்திரங் கண்ணனார்


























©









சங்க கால நூல்களான பத்து பாட்டுக்களில் ஒன்பதாவதான
பட்டினப்பாலை

பாடியவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார்
பாடப்பட்டவன் திருமாவளவன் கரிகாற் பெருவளத்தான்
திணை பாலை
துறை செலவழுங்குதல்
மொத்த அடிகள்

வசையில்புகழ் வயங்குவெண்மீன்
திசைதிரிந்து தெற்கேகினும்
தற்பாடிய தளியுணவிற்
புட்டே புயன்மாறி
வான்பொய்ப்பினும் தான்பொய்யா
மலைத்தலைய கடற்காவிரி
புனல்பரந்து பொன்கொழிக்கும்
விளைவறா வியன்கழனி
கார்க்கரும்பின் கமழாலை
தீத்தெறுவிற் கவின்வாடி
நீர்ச்செறுவி னீணெய்தற்
பூச்சாம்பும் புலத்தாங்க
காய்ச்செந்நெற் கதிரருந்து
மோட்டெருமை முழுக்குழவி
கூட்டுநிழல் துயில்வதியும்
கோட்டெங்கிற் குலைவாழை
காய்க்கமுகிற் கமழ்மஞ்சள்
இனமாவின் இணர்ப்பெண்ணை
முதற்சேம்பின் முளையிஞ்சி
அனகர் வியன்முற்றத்து
சுடர்நுதல் மடநோக்கின்
நேரிழை மகளிர் உணங்குணா கவரும்
கோழி யெறிந்த கொடுங்காற் கனங்குழை
பொற்காற் புதல்வர் புரவியின் றுருட்டும்
முக்காற் சிறுதேர் முன்வழி விலக்கும்
விலங்குபகை யல்லது கலங்குபகை யறியா
கொழும்பல்குடி செழும்பாக்கத்து
குறும்பல்லூர் நெடுஞ்சோணாட்டு
வெள்ளை யுப்பின் கொள்ளை சாற்றி
நெல்லொடு வந்த வல்லா ப·றி
பணைநிலை புரவியின் அணைமுதற் பிணிக்கும்
கழிசூழ் படப்பை கலியாணர
பொழிற் புறவிற் பூந்தண்டலை
மழைநீங்கிய மாவிசும்பின்
மதிசேர்ந்த மகவெண்மீன்
உருகெழுதிறல் உயர்கோட்டத்து
முருகமர்பூ முரண்கிடக்கை
வரியணிசுடர் வான்பொய்கை
இருகா திணையேரி
புலிப்பொறி போர்க்கதவின்
திருத்துஞ்சு திண்காப்பிற்
புகழ்நிலைஇய மொழிவளர
அறநிலைஇய அகனட்டிற்
சோறுவாக்கிய கொழுங்கஞ்சி
யாறுபோல பரந்தொழுகி
ஏறுபொர சேறாகி
தேரொட துகள் கெழுமி
நீறாடிய களிறுபோல
வேறுபட்ட வினையோவத்து
வெண்கோயில் மாசூட்டு
தண்கேணி தகைமுற்றத்து
பகட்டெருத்தின் பலசாலை
தவப்பள்ளி தாழ்காவின்
அவிர்சடை முனிவர் அங்கி வேட்கும்
ஆவுதி நறும்புகை முனைஇ குயில்தம்
மாயிரும் பெடையோ டிரியல் போகி
பூதங் காக்கும் புகலருங் கடிநகர
தூதுணம் புறவொடு துச்சிற் சேக்கும்
முதுமரத்த முரண்களரி
வரிமணல் அகந்திட்டை
இருங்கிளை யினனொக்கற்
கருந்தொழிற் கலிமாக்கள்
கடலிறவின் சூடுதின்றும்
வயலாமை புழுக்குண்டும்
வறளடும்பின் மலர்மலைந்தும்
புனலாம்பற் பூச்சூடியும்
நீனிற விசும்பின் வலனேர்பு திரிதரும்
நாண்மீன் விராய கோண்மீன் போல
மலர்தலை மன்றத்து பலருடன் குழீஇ
கையினுங் கலத்தினு மெய்யுற தீண்டி
பெருங்சினத்தாற் புறக்கொடாஅது
இருஞ்செருவின் இகல்மொய்ம்பினோர்
கல்லெறியும் கவண்வெரீஇ
புள்ளிரியும் புகர்ப்போந்தை
பறழ்ப்பன்றி பல்கோழி
உறைக்கிணற்று புறச்சேரி
மேழக தகரொடு சிவல்விளை யாட
கிடுகுநிரை தெ·கூன்றி
நடுகல்லின் அரண்போல
நெடுந்தூண்டிலிற் காழ்சேர்த்திய
குறுங்கூரை குடிநாப்பண்
நிலவடைந்த இருள்போல
வலையுணங்கு மணல்முன்றில்
வீழ்த்தாழை தாட்டழ்ந்த
வெண்கூ தாளத்து தண்பூங் கோதையர்
சினைச்சுறவின் கோடுநட்டு
மனைச்சேர்த்திய வல்லணங்கினால்
மடற்றாழை மலர்மலைந்தும்
பிணர்ப்பெண்ணை பிழிமாந்தியும்
புன்றலை இரும்பரதவர்
பைந்தழைமா மகளிரொடு
பாயிரும் பனிக்கடல் வேட்டஞ் செல்லாது
உவவுமடி துண்டாடியும்
புலவுமணற் பூங்கானல்
மாமலை யணைந்த கொண்மூ போலவும்
தாய்முலை தழுவிய குழவி போலவும்
தேறுநீர புணரியோ டியாறுதலை மணக்கும்
மலியோ தொலிகூடல்
தீதுநீங கடலாடியும்
மாசுபோக புனல்படிந்தும்
அலவ னாட்டியும் உரவுத்திரை உழக்கியும்
பாவை சூழ்ந்தும் பல்பொறி மருண்டும்
அகலா காதலொடு பகல்விளை யாடி
பெறற்கரு தொல்சீர துறக்க மேய்க்கும்
பொய்யா மரபிற் பூமலி பெருந்துறை
துணைப்புணர்ந்த மடமங்கையர்
பட்டுநீக்கி துகிலுடுத்தும்
மட்டுநீக்கி மதுமகிழ்ந்தும்
மைந்தர்கண்ணி மகளிர் சூடவும்
மகளிர்கோதை மைந்தர் மலையவும்
நெடுங்கால் மாட தொள்ளெரி நோக்கி
கொடுந்திமிற் பரதவர் குரூஉச்சுடர் எண்ணவும்
பாட லோர்த்தும் நாடக நயந்தும்
வெண்ணிலவின் பயன்றுய்த்தும்
கண்ணடைஇய கடைக்கங்குலான்
மாஅகாவிரி மணங்கூட்டும்
தூஉவெக்கர துயில் மடிந்து
வாலிணர் மடற்றாழை
வேலாழி வியந்தெருவின்
நல்லிறைவன் பொருள்காக்கும்
தொல்லிசை தொழில்மாக்கள்
காய்சினத்த கதிர்ச்செல்வன்
தேர்பூண்ட மாஅபோல
வைகல்தொறும் அசைவின்றி
உல்குசெ குறைபடாது
வான்முகந்தநீர் மலைப்பொழியவும்
மலைப்பொழிந்தநீர் கடற்பரப்பவும்
மாரிபெய்யும் பருவம்போல
நீரினின்று நிலத்தேற்றவும்
நிலத்தின்று நீர்ப்பரப்பவும்
அளந்தறியா பலபண்டம்
வரம்பறியாமை வந்தீண்டி
அருங்கடி பெருங்காப்பின்
வலியுடை வல்லணங்கினோன்
புலிபொறித்து புறம்போக்கி
மதிநிறைந்த மலிபண்டம்
பொதிமூடை போரேறி
மழையாடு சிமைய மால்வரை கவாஅன்
வரையாடு வருடை தோற்றம் போல
கூருகிர் ஞமலி கொடுந்தா ளேற்றை
ஏழக தகரோ டுகளு முன்றிற்
குறுந்தொடை நெடும்படிக்காற்
கொடுந்திண்ணை ப·றகைப்பிற்
புழைவாயிற் போகிடைகழி
மழைதோயும் உயர்மாடத்து
சேவடி செறிகுறங்கிற்
பாசிழை பகட்டல்குல்
தூசிடை துகிர்மேனி
மயிலியல் மானோக்கிற்
கிளிமழலை மென்சாயலோர்
வளிநுழையும் வாய்பொருந்தி
ஓங்குவரை மருங்கின் நுண்தா துறைக்கும்
காந்தள துடுப்பிற் கவிகுலை யன்ன
செறிதொடி முன்கை கூப்பி செவ்வேள்
வெறியாடு மகளிரொடு செறி தாஅ
குழலகவ யாழ்முரல
முழவதிர முரசியம்ப
விழவறா வியலாவணத்து
மையறு சிறப்பின் தெய்வஞ் சேர்த்திய
மலரணி வாயிற் பலர்தொழ கொடியும்
வருபுனல் தந்த வெண்மணற் கான்யாற்று
உருறுகெழு கரும்பின் ஓண்பூ போல
கூழுடை கொழுமஞ்சிகை
தாழுடை தண்பணியத்து
வாலரிசி பலிசிதறி
பாகுகுத்த பசுமெழுக்கிற்
காழூன்றிய கவிகிடுகின்
மேலூன்றிய துகிற்கொடியும்
பல்கேள்வி துறைபோகிய
தொல்லாணை நல்லாசிரியர்
உறழ்குறி தெடுத்த உருகெழு கொடியும்
வெளிலிளக்குங் களிறுபோல
தீம்புகார திரைமுன்றுறை
தூங்குநாவாய் துவன்றிருக்கை
மிசைச்கூம்பி னசைச்கொடியும்
மீந்தடிந்து விடக்கறுத்து
ஊன்பொரிக்கும் ஒலிமுன்றில்
மணற்குவைஇ மலர்சிதறி
பலர்புகுமனை பலிப்புதவின்
நறவுநொடை கொடியோடு
பிறபிறவு நனிவிரைஇ
பல்வே றுருவிற் பதாகை நீழல்
செல்கதிர் நுழையா செழுநகர் வரைப்பிற்
செல்லா நல்லிசை யுமரர் காப்பின்
நீரின் வந்த நிமிர்பரி புரவியும்
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலை பிறந்த மணியும் பொன்னும்
குடமலை பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடல் முத்துங் குணகடல் துகிரும்
கங்கை வாரியும் காவிரி பயுனும்
ஈழ துணவும் காழக தாக்கமும்
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி
வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகின்
நீர்நா பண்ணு நிலத்தின் மேலும்
ஏமாப்ப இனிதுதுஞ்சி
கிளை கலித்து பகைபேணாது
வலைஞர்முன்றில் மீன்பிறழவும்
விலைஞர்குரம்பை மாவீண்டவும்
கொலைகடிந்தும் களவுநீக்கியும்
அமரர பேணியும் ஆவுதி அருத்தியும்
நல்லனெடு பகடோம்பியும்
நான்மறையோர் புகழ்பரப்பியும்
பண்ணியம் அட்டியும் பசும்பதங் கொடுத்தும்
புண்ணிய முட்டா தண்ணிழல் வாழ்க்கை
கொடுமேழி நசையுழவர்
நெடுநுகத்து பகல்போல
நடுவுநின்ற நன்னெஞ்சினோர்
வடுவஞ்சி வாய்மொழிந்து
தமவும் பிறவு மொப்ப நாடி
கொள்வதூஉ மிகைகொளாது கொடுப்பதூஉங் குறைகொடாது
பல்பண்டம் பகர்ந்துவீசும்
தொல்கொண்டி துவன்றிருக்கை
பல்லாயமொடு பதிபழகி
வேறுவே றுயர்ந்த முதுவா யக்கற்
சாறயர் மூதூர் சென்றுதொ காங்கு
மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்து
புலம்பெயர் மாக்கள் கலந்தினி துறையும்
முட்டா சிறப்பிற் பட்டினம் பெறினும்
வாரிருங் கூந்தல் வயங்கிழை யழிய
வாரேன் வாழிய நெஞ்சே கூருகிர
கொடுவரி குருளை கூட்டுள் வளர்ந்தாந்கும்
பிறர் பிணியக திருந்து பீடுகாழ் முற்றி
அருங்கரை கவி குத்தி குழிகொன்று
பெருங்கை யானை பிடிபு காங்கு
நுண்ணிதின் உணர நாடி நண்ணார்
செறிவுடை திண்கா பேறிவாள் கழித்து
உருகெழு தாயம் ஊழினெய்தி
பெற்றவை மகிழ்தல் செய்யான் செற்றோர்
கடியரண் தொலைத்த கதவுகொல் மருப்பின்
முடியுடை கருந்தலை புரட்டு முன்றாள்
உகிருடை யடிய ஓங்கெழில் யானை
வடிமணி புரவியடு வயவர் வீழ
பெருநல் வானத்து பருந்துலாய் நடப்ப
தூறிவர் துறுகற் போல போர்வேட்டு
வேறுபல் பூளைய டுழிஞை சூடி
பேய்க்கண் அன்ன பிளிறுகடி முரசம்
மாக்கண் அகலறை அதிர்வன முழங்க
முனைகெட சென்று முன்சம முருக்கி
தலைதவ சென்று தண்பணை எடுப்பி
வெண்பூ கரும்பொடு செந்நெல் நீடி
மாவிதழ குவளையடு நெய்தலும் மயங்கி
கராஅங் கலித்த கண்ணகன் பொய்கை
கொழுங்காற் புதவமொடு செருந்தி நீடி
செறுவும் வாவிய மயங்கி நீரற்று
அறுகோ டிரலையடு மான்பிணை உகளவும்
கொண்டி மகளிர் உண்டுறை மூழ்கி
அந்தி மாட்டிய நந்தா விளக்கின்
மலரணி மெழுக்க மேறி பலர்தொழ
வம்பலர் சேக்கும் கந்துடை பொதியிற்
பருநிலை நெடுந்தூண் ஒல்க தீண்டி
பெருநல் யானையடு பிடிபுணர துறையவும்
அருவிலை நறும்பூ தூஉ தெருவின்
முதுவா கோடியர் முழவொடு புணர்ந்த
திரிபுரி நரம்பின் தீந்தொடை யோர்க்கும்
பெருவிழா கழிந்த பேஎமுதிர் மன்றத்து
சிறுபூ நெருஞ்சியோ டறுகை பம்பி
அழல்வா யோரி அஞ்சுவர கதிர்ப்பவும்
அழுகுரற் கூகையோ டாண்டலை விளிப்பவும்
கணங்கொள் கூளியடு கதுப்பிகு தசைஇ
பிணந்தின் யாக்கை பேய்மகள் துவன்றவும்
கொடுங்கால் மாடத்து நெடுங்கடை துவன்றி
விருந்துண் டானா பெருஞ்சோற் றட்டில்
ஒண்சுவர் நல்லில் உயர்திணை யிருந்து
பைங்கிளி மிழற்றும் பாலார் செழுநகர
தொடுதோ லடியரி துடிபட குழீஇ
கொடுவி லெயினர் கொள்ளை யுண்ட
உணவில் வறுங்கூ டுள்ளக திருந்து
வளைவா கூகை நன்பகற் குழறவும்
அருங்கடி வரைப்பின் ஊர்கவி னழி
பெரும்பாழ் செய்தும் அமையான் மருங்கற
மலையகழ குவனே கடல்தூர
வான்வீழ குவனே வளிமாற் றுவனென
தன்முன்னிய துறைபோகலிற்
பல்லொளியர் பணிபொடுங்க
தொல்லரு வாளர் தொழில் கேட்ப
வடவர் வாட குடவர் கூம்ப
தென்னவன் திறல்கெட சீறி மன்னர்
மன்னெயில் கதுவும் மதனுடை நோன்றாள்
மாத்தனை மறமொய்ம்பிற்
செங்கண்ணாற் செயிர்த்துநோக்கி
புன்பொதுவர் வழிபொன்ற
இருங்கோவேள் மருங்குசா
காடுகொன்று நாடாக்கி
குளந்தொட்டு வளம்பெருக்கி
பிறங்குநிலை மாட துறந்தை போக்கி
கோயிலொடு குடிநிறீஇ
வாயிலொடு புழையமைத்து
ஞாயிறொறும் புதைநிறீஇ
பொருவேமென பெயர்கொடுத்து
ஒருவேனெ புறக்கொடாது
திருநிலைஇய பெருமன் னெயில்
மின்னொளியெறிப்ப தம்மொளி மழுங்கி
விசிபிணி முழவின் வேந்தர் சூடிய
பசுமணி பொருத பரேரெறுழ கழற்காற்
பொற்றொடி புதல்வர் ஒடி யாடவும்
முற்றிழை மகளிர் முகிழ்முலை திளைப்பவும்
செஞ்சாந்து சிதைந்த மார்பின் ஒண்பூண்
அரிமா அன்ன அணங்குடை துப்பின்
திருமா வளவன் தெவ்வர கோக்கிய
வேலினும் வெய்ய கானமவன்
கோலினு தண்ணிய தடமென் தோளே

பட்டினப்பாலை முற்றிற்று