எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாகிய
ப தி ற் று
பதம் பிரிப்பு பிழை திருத்தம்
எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாகிய ப தி ற் று
மு த ற் ப து
கிடைத்திலது
~~~~~~~~
இ ர ண் டா ம் ப து
பாடப்பட்டோ ன் இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனை
பாடியவர் குமட்டூர கண்ணனார்
பாட்டு
~~~~~~~~
வரைமருள் புணா வான்பிசிர் உடைய
வளிபாய்ந்து அட்ட துளங்குஇருங் கமஞ்சூல்
நளிஇரும் பரப்பின் மாக்கடல் முன்னி
அணங்குஉடை அவுணர் ஏமம் புணர்க்கும்
சூருடை முழுமுதல் தடிந்த போசை
கடுஞ்சின விறல்வேள் களிறுஊர தாங்கு
செவ்வாய் எஃகம் விலங்குநர் அறுப்ப
அருநிறம் திறந்த புண்உமிழ் குருதியின்
மணிநிற இருங்கழி நீர்நிறம் பெயர்ந்து
மனால கலவை போல அரண்கொன்று
முரண்மிகு சிறப்பின் உயர்ந்த ஊக்கலை
பலர்மொசிந்து ஓம்பிய திரள்பூங் கடம்பின்
கடியுடை முழுமுதல் துமிய வேஎய்
வென்றுஎறி முழங்குபணை செய்த வெல்போர்
நாரா நறவின் ஆர மார்பின்
போர்அடு தானை சேர லாத
மார்புமலி பைந்தார் ஓடையொடு விளங்கும்
வலன்உயர் மருப்பின் பழிதீர் யானை
பொலன்அணி எருத்தம் மேல்கொண்டு பொலிந்தநின்
பலர்புகழ் செல்வம் இனிதுகண் டிகுமே
கவிர்ததை சிலம்பின் துஞ்சும் கவா
பரந்துஇலங்கு அருவியொடு நரந்தம் கனவும்
ஆயர் துவன்றிய போசை இமயம்
தென்னம் குமாயொடு ஆயிடை
மன்மீ கூறுநர் மறம்தப கடந்தே
பெயர் புண்ணுமிழ் குருதி அடி
துறை செந்துறை பாடாண்பாட்டு
தூக்கு செந்தூக்கு
வண்ணம் ஒழுகு
பாட்டு
~~~~~~~~
வயவர் வீழ வாளான் மயக்கி
இடங்கவர் கடும்பின் அரசுதலை பனிப்ப
கடம்புமுதல் தடிந்த கடுஞ்சின வேந்தே
தார்அணி எருத்தின் வாரல் வள்உகிர்
அமான் வழங்கும் சாரல் பிறமான்
தோடுகொள் இனநிரை நெஞ்சுஅதிர தாங்கு
முரசுமுழங்கு நெடுநகர் அரசுதுயில் ஈயாது
மாதிரம் பனிக்கும் மறம்வீங்கு பல்புகழ்
கேட்டற்கு இனிதுநின் செல்வம் கேள்தொறும்
காண்டல் விருப்பொடு கமழும் குளவி
வாடா பைம்மயிர் இளைய வாடுநடை
அண்ணல் மழகளிறு அஞிமிறு ஓப்பும்
கன்றுபுணர் பிடிய குன்றுபல நீந்தி
வந்துஅவண் நிறுத்த இரும்பேர் ஒக்கல்
தொல்பசி உழந்த பழங்கண் வீழ
எஃகுபோழ்ந்து அறுத்த வாள்நிண கொழுங்குறை
மைஊன் பெய்த வெண்நெல் வெண்சோறு
நனைஅமை கள்ளின் தேறலொடு மாந்தி
நீர்ப்படு பருந்தின் இருஞ்சிறகு அன்ன
நிலத்தின் சிதாஅர் களைந்த பின்றை
நூலா கலிங்கம் வால்அரை கொளீஇ
வணர்இரும் கதுப்பின் வாங்குஅமை மென்தோள்
வசைஇல் மகளிர் வயங்குஇழை அணிய
அமர்புமெய் ஆர்த்த சுற்றமொடு
நுகர்தற்கு இனிதுநின் பெரும்கலி மகிழ்வே
பெயர் மறம்வீங்கு பல்புகழ்
துறை செந்துறை பாடாண்பாட்டு
தூக்கு செந்தூக்கு
வண்ணம் ஒழுகு
பாட்டு
~~~~~~~~
தொறுத்தவயல் ஆரல்பிறழ்நவும்
ஏறுபொருதசெறு உழாதுவித்துநவும்
கரும்பின் பாத்தி பூத்த நெய்தல்
இருங்கண் எருமையின் நிரைதடு குநவும்
கலிகெழு துணங்கை ஆடிய மருங்கின்
வளைதலை மூதா ஆம்பல் ஆர்நவும்
ஒலிதெங்கின் இமிழ்மருதின்
புனல்வாயில் பூம்பொய்கை
பாடல் சான்ற பயம்கெழு வைப்பின்
நாடுகவின் அழிய நாமம் தோற்றி
கூற்றுஅடூஉ நின்ற யாக்கை போல
நீசிவந்து இறுத்த நீர்அழி பாக்கம்
விபூங் கரும்பின் கழனி புல்என
திகாய் விடத்தரொடு காருடை போகி
கவைத்தலை பேய்மகள் கழுதுஊர்ந்து இயங்க
ஊய நெருஞ்சி நீறுஆடு பறந்தலை
தாதுஎரு மறுத்த கலிஅழி மன்றத்து
உள்ளம் அழிய ஊக்குநர் மிடல்தபு
துள்ளுநர் பனிக்கும் பாழா யினவே
காடே கடவுள் மேன புறவே
ஒள்ளிழை மகளிரொடு மள்ளர் மேன
ஆறே அவ்வனைத்து அன்றியும் ஞாலத்து
கூலம் பகர்நர் குடிபுற தராஅ
குடிபுறம் தருநர் பாரம் ஓம்பி
அழல்சென்ற மருங்கின் வெள்ளி ஓடாது
மழைவேண்டு புலத்து மா நிற்ப
நோயொடு பசிஇகந்து ஒணஇ
பூத்தன்று பெருமநீ காத்த நாடே
பெயர் பூத்த நெய்தல்
துறை செந்துறை பாடாண்பாட்டு
தூக்கு செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
வண்ணம் ஒழுகு
பாட்டு
~~~~~~~~
நிலம்நீர் வளிவிசும்பு என்ற நான்கின்
அளப்பா யையே
நாள்கோள் திங்கள் ஞாயிறு கனைஅழல்
ஐந்துஒருங்கு புணர்ந்த விளக்கத்து அனையை
போர்தலை மிகுத்த ஈர்ஐம் பதின்மரொடு
துப்புத்துறை போகிய துணிவுஉடை யாண்மை
அக்குரன் அனைய கைவண் மையையே
அமர்கடந்து மலைந்த தும்பை பகைவர்
போர்பீடு அழித்த செருப்புகல் முன்ப
கூற்றுவெகுண்டு வானும் ஆற்றுமாற் றலையே
எழுமுடி கெழீஇய திருஞெமர் அகலத்து
நோன்பு தடக்கை சான்றோர் மெய்ம்மறை
வான்உறை மகளிர் நலன்இகல் கொள்ளும்
வயங்குஇழை கரந்த வண்டுபடு கதுப்பின்
ஒடுங்குஈர் ஓதி கொடுங்குழை கணவ
பலகளிற்று தொழுதியொடு வெல்கொடி நுடங்கும்
படைஏர் உழவ பாடினி வேந்தே
இலங்குமணி மிடைந்த பொலங்கல திகி
கடல்அக வரைப்பின்இ பொழில்முழுது ஆண்டநின்
முன்திணை முதல்வர் போல நின்றுநீ
கெடாஅ நல்லிசை நிலைஇ
தவாஅ லியரோஇவ் வுலகமோடு உடனே
பெயர் சான்றோர் மெய்ம்மறை
துறை செந்துறை பாடாண்பாட்டு
தூக்கு செந்தூக்கு
வண்ணம் ஒழுகு வண்ணமும் சொற்சீர்
பாட்டு
~~~~~~~~
யாண்டுதலை பெயர வேண்டுபுலத்து இறுத்து
முனைஎ பரப்பிய துன்னரும் சீற்றமொடு
மழைதவழ்பு தலைஇய மதில்மரம் முருக்கி
நிரை களிறுஒழுகிய நிரைய வெள்ளம்
பரந்துஆடு கழங்குஅழி மன்மருங்கு அறுப்ப
கொடிவிடு குரூஉப்புகை பிசிர கால்பொர
அழல்கவர் மருங்கின் உருஅற கெடுத்து
தொல்கவின் அழிந்த கண்அகன் வைப்பின்
வெண்பூ வேளையொடு பைஞ்சுரை கலித்து
பீர்இவர்பு பரந்த நீர்அறு நிறைமுதல்
சிவந்த காந்தள் முதல்சிதை மூதின்
புலவுவில் உழவின் புல்லாள் வழங்கும்
புல்லிலை வைப்பின் புலம்சிதை அரம்பின்
அறியா மையான் மறந்துதுப்பு எதிர்ந்தநின்
பகைவர் நாடும் கண்டுவ திசினே
கடலவும் கல்லவும் யாற்றவும் பிறவும்
வளம்பல நிகழ்தரு நனந்தலை நன்நாட்டு
விழவுஅறுபு அறியா முழவுஇமிழ் மூதூர
கொடுநிழல் பட்ட பொன்உடை நியமத்து
சீர்பெறு கலிமகிழ் இயம்பு முரசின்
வயவர் வேந்தே பாசிலர் வெறுக்கை
தார்அணிந்து எழிலிய தொடிசிதை மருப்பின்
போர்வல் யானை சேர லாத
நீவா ழியர்இவ் வுலக தோர்க்குஎன
உண்டுஉரை மாறிய மழலை நாவின்
மென்சொல் கலப்பையர் திருந்துதொடை வாழ்த்த
வெய்துறவு அறியாது நந்திய வாழ்க்கை
செய்த மேவல் அமர்ந்த சுற்றமோடு
ஒன்றுமொழிந்து அடங்கிய கொள்கை என்றும்
பதிபிழைப்பு அறியாது துய்த்தல் எய்தி
நிரையம் ஒணஇய வேட்கை புரையோர்
மேயினர் உறையும் பலர்புகழ் பண்பின்
நீபுற தருதலின் நோய்இகந்து ஒணஇய
யாணர்நன் நாடுங் கண்டுமதி மருண்டனென்
மண்உடை ஞாலத்து மன்னுயிர்க்கு எஞ்சாது
ஈத்துக்கை தண்டா கைகடும் துப்பின்
புரைவயின் பொய நல்கி
ஏமம் ஆகிய சீர்கெழு விழவின்
நெடியோன் அன்ன நல்இசை
ஒடியா மைந்தநின் பண்புபல நயந்தே
பெயர் நிரைய வெள்ளம்
துறை செந்துறை பாடாண்பாட்டு
தூக்கு செந்தூக்கு
வண்ணம் ஒழுகு
பாட்டு
~~~~~~~~
கோடுஉறழ்ந்து எடுத்த கொடுங்கண் இஞ்சி
நாடுகண் டன்ன கணைதுஞ்சு விலங்கல்
துஞ்சுமர குழாஅம் துவன்றி புனிற்றுமகள்
பூணா ஐயவி தூக்கிய மதில
நல்எழில் நெடும்புதவு முருக்கி கொல்லுபு
ஏனம் ஆகிய நுனைமு மருப்பின்
கடாஅம் வார்ந்து கடுஞ்சினம் பொத்தி
மரங்கொல் மழகளிறு முழங்கும் பாசறை
நீடினை ஆகலின் காண்குவ திசினே
ஆறிய கற்பின் அடங்கிய சாயல்
ஊடினும் இனிய கூறும் இன்நகை
அமிர்துபொதி துவர்வாய் அமர்த்த நோக்கின்
சுடர்நுதல் அசைநடை உள்ளலும் உயள்
பாயல் உய்யுமோ தோன்றல் தாவின்று
திருமணி பொருத திகழ்விடு பசும்பொன்
வயங்குகதிர் வயிரமோடு உறழ்ந்துபூண் சுடர்வர
எழுமுடி கெழீஇய திருஞெமர் அகலத்து
புரையோர் உண்கண் துயிலின் பாயல்
பாலும் கொளாலும் வல்லோய்நின்
சாயன் மார்பு நனிஅலை தன்றே
பெயர் துயிலின் பாயல்
துறை செந்துறை பாடாண்பாட்டு
தூக்கு செந்தூக்கு
வண்ணம் ஒழுகு
பாட்டு
~~~~~~~~
புரைவது நினைப்பின் புரைவதோ இன்றே
பொய தப்புநர் ஆயினும் பகைவர்
பணிந்துதிறை பகர கொள்ளுநை ஆதலின்
துளங்குபிசிர் உடைய மாக்கடல் நீக்கி
கடம்புஅறுத்து இயற்றிய வலம்படு வியன்பணை
ஆடுநர் பெயர்ந்துவந்து அரும்பலி தூஉ
கடிப்பு கண்உறூஉம் தொடித்தோள் இயவர்
அரணம் காணாது மாதிரம் துழைஇய
நனம்தலை பைஞ்ஞிலம் வருகஇ நிழல்என
ஞாயிறு புகன்ற தீதுதீர் சிறப்பின்
அமிழ்துதிகழ் கருவிய கணமழை தலைஇ
கடும்கால் கொட்கும் நன்பெரும் பரப்பின்
விசும்புதோய் வெண்குடை நுவலும்
பசும்பூண் மார்ப பாடினி வேந்தே
பெயர் வலம்படு வியன்பணை
துறை செந்துறை பாடாண்பாட்டு
தூக்கு செந்தூக்கு
வண்ணம் ஒழுகு
பாட்டு
~~~~~~~~
உண்மின் கள்ளே அடுமின் சோறே
எறிக திற்றி ஏற்றுமின் புழுக்கே
வருநர்க்கு வரையாது பொலம்கலம் தெளிர்ப்ப
இருள்வணர் ஒலிவரும் புஅவிழ் ஐம்பால்
ஏந்துகோட்டு அல்குல் முகிழ்நகை மடவரல்
கூந்தல் விறலியர் வழங்குக அடுப்பே
பெற்றது உதவுமின் தப்புஇன்று பின்னும்
மன்உயிர் அழிய யாண்டுபல துளக்கி
மண்உடை ஞாலம் புரவுஎதிர் கொண்ட
தண்இயல் எழிலி தலையாது மாறி
மா பொய்க்குவது ஆயினும்
சேர லாதன் பொய்யலன் நசையே
பெயர் கூந்தல் விறலியர்
துறை இயன்மொழி வாழ்த்து
தூக்கு செந்தூக்கு
வண்ணம் ஒழுகு
பாட்டு
~~~~~~~~
கொள்ளை வல்சி கவர்கால் கூளியர்
கல்உடை நெடுநெறி போழ்ந்துசுரன் அறுப்ப
ஒண்பொறி கழல்கால் மாறா வயவர்
தின்பிணி எஃகம் புலிஉறை கழிப்ப
செங்கள விருப்பொடு கூலம் முற்றிய
உருவ செந்தினை குருதியொடு தூஉய்
மண்ணுறு முரசம் கண்பெயர்த்து இயவர்
கடிப்புஉடை வலத்தர் தொடித்தோள் ஓச்ச
வம்புகளைவு அறியா சுற்றமோடு உடம்புதொந்து
அவ்வினை மேவலை ஆகலின்
எல்லும் நனிஇருந்து எல்லி பெற்ற
அதுபெறு பாயல்சிறுமகி ழானும்
கனவினுள் உறையும் பெருஞ்சால்பு ஒடுங்கிய
நாணுமலி யாக்கை வாள்நுதல் அவைக்கு
யார்கொல் அளியை
இனம்தோடு அகல ஊருடன் எழுந்து
நிலம்கண் வாட நாஞ்சில் கடிந்துநீ
வாழ்தல் ஈயா வளன்அறு பைதிரம்
அன்ன ஆயின பழனம் தோறும்
அழல்மலி தாமரை ஆம்பலொடு மலர்ந்து
நெல்லின் செறுவில் நெய்தல் பூப்ப
அநர் கொய்வாள் மடங்க அறைநர்
தீம்பிழி எந்திரம் பத்தல் வருந்த
இன்றோ அன்றோ தொன்றோர் காலை
நல்லமன் அளிய தாம்என சொல்லி
காணுநர் கைபுடைத்து இரங்க
மாணா மாட்சிய மாண்டன பலவே
பெயர் வளனறு பைதிரம்
துறை பரிசிற்றுறை பாடாண்பாட்டு
தூக்கு செந்தூக்கு
வண்ணம் ஒழுகு வண்ணமும் சொற்சீர்
பாட்டு
~~~~~~~~
நும்கோ யார்என வினவின் எம்கோ
இருமுந்நீர துருத்தியுள்
முரணியோர தலைச்சென்று
கடம்புமுதல் தடிந்த கடுஞ்சின முன்பின்
நெடுஞ்சேர லாதன் வாழ்கஅவன் கண்ணி
வாய்ப்புஅறி யலனே வெயில்துகள் அனைத்தும்
மாற்றோர் தேஎத்து மாறிய வினையே
கண்ணின் உவந்து நெஞ்சுஅவிழ்பு அறியா
நண்ணார் தேஎத்தும் பொய்ப்புஅறி யலனே
கனவினும் ஒன்னார் தேய ஓங்கி நடந்து
படியோர தேய்த்து வடிமணி இரட்டும்
கடாஅ யானை கணநிரை அலற
வியல்இரும் பரப்பின் மாநிலம் கடந்து
புலவர் ஏத்த ஓங்குபுகழ் நிறீஇ
விஉளை மாவும் களிறும் தேரும்
வயியர் கண்ணுளர்க்கு ஓம்பாது வீசி
கடிமிளை குண்டுகிடங்கின்
நெடுமதில் நிலைஞாயில்
அம்புஉடை யார்எயில் உள்அழித்து உண்ட
அடாஅ அடுபகை அட்டுமலர் மார்பன்
எமர்க்கும் பிறர்க்கும் யாவர் ஆயினும்
பாசில் மாக்கள் வல்லார் ஆயினும்
கொடைக்கடன் அமர்ந்த கோடா நெஞ்சினன்
மன்உயிர் அழிய யாண்டுபல மாறி
தண்இயல் எழிலி தலையாது ஆயினும்
வயிறுபசி கூர ஈயலன்
வயிறும்ஆசு இலீயர்அவன் ஈன்ற தாயே
பெயர் அட்டுமலர் மார்பன்
துறை இயன்மொழி வாழ்த்து
தூக்கு செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
வண்ணம் ஒழுகு வண்ணமும் சொற்சீர்
பதிகம்
மன்னிய பெரும்புகழ் மறுஇல் வாய்மொழி
இன்இசை முரசின் உதியஞ் சேரற்கு
வெளியன் வேண்மாள் நல்லினி ஈன்றமகன்
அமைவரல் அருவி இமையம் வில்பொறித்து
இமிழ்கடல் வேலி தமிழகம் விளங்க
தன்கோல் நிறீஇ தகைசால் சிறப்பொடு
பேர்இசை மரபின் ஆயர் வணக்கி
நயன்இல் வன்சொல் யவனர பிணித்து
நெய்தலை பெய்து கைபின் கொளீஇ
அருவிலை நன்கலம் வயிரமொடு கொண்டு
பெருவிறல் மூதூர தந்துபிறர்க்கு உதவி
அமையார தேய்த்த அணங்குஉடை நோன்தாள்
இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனை
குமட்டூர கண்ணனார் பாடினார் பத்துப்பாட்டு
அவைதாம் புண்ணுமிழ் குருதி மறம்வீங்கு பல்புகழ் பூத்த நெய்தல்
சான்றோர் மெய்ம்மறை நிரைய வெள்ளம் துயிலின் பாயல்
வலம்படுவியன்பணை கூந்தல் விறலியர் வளனறு பைதிரம் அட்டுமலர்மார்பன்
இவை பாட்டின் பதிகம்
பாடிப்பெற்ற பரிசில் உம்பற்காட்டு ஐந்நூறூர் பிரமதாயம் கொடுத்து
முப்பத்தெட்டுயாண்டு தென்னாட்டுள் வருவதனிற் பாகம் கொடுத்தான்
இமைய வரம்பன் நெடுஞ்சேரலாதன் ஐம்பத்தெட்டுயாண்டு வீற்றிருந்தான்
பிரமதாயம் அந்தணர்களுக்கு விடப்படும் இறையிலி நிலம்
இரண்டாம் பத்து முற்றிற்று
மூ ன் றா ம் ப து
~~~~~~~~~~~~~~~~~
பாடப்பட்டோ ன் பல்யானை செல்கெழு குட்டுவனை
பாடியவர் பாலை கெளதமனார்
பாட்டு
~~~~~~~~
சொல்பெயர் நாட்டம் கேள்வி நெஞ்சம்என்று
ஐந்துஉடன் போற்றி அவைதுணை ஆக
எவ்வம் சூழாது விளங்கிய கொள்கை
காலை அன்ன சீர்சால் வாய்மொழி
உருகெழு மரபின் கடவுள் பேணியர்
கொண்ட தீயின் சுடர்எழு தோறும்
விரும்புமெய் பரந்த பெரும்பெயர் ஆவுதி
வருநர் வரையார் வார வேண்டி
விருந்துகண் மாறாது உணீஇய பாசவர்
ஊனத்து அழித்த வால்நிண கொழும்குறை
குய்யிடு தோறும் ஆனாது ஆர்ப்ப
கடல்ஒலி கொண்டு செழுநகர் நடுவண்
அடுமை எழுந்த அடுநெய் ஆவுதி
இரண்டுஉடன் கமழும் நாற்றமொடு வானத்து
நிலைபெறு கடவுளும் விழைதக பேணி
ஆர்வளம் பழுனிய ஐயம்தீர் சிறப்பின்
மாஅம் கள்ளின் போர்வல் யானை
போர்ப்புஉறு முரசம் கறங்க ஆர்ப்புச்சிறந்து
நன்கலம் தரூஉம் மண்படு மார்ப
முல்லை கண்ணி பல்ஆன் கோவலர்
புல்உடை வியன்புலம் பல்ஆ பரப்பி
கல்உயர் கடத்துஇடை கதிர்மணி பெறூஉம்
மிதிஅல் செருப்பின் பூழியர் கோவே
குவியல் கண்ணி மழவர் மெய்ம்மறை
பல்பயம் தழீஇய பயம்கெழு நெடுங்கோட்டு
நீர்அறல் மருங்கு வழிப்படா பாகுடி
பார்வல் கொக்கின் பாவேட்பு அஞ்சா
சீர்உடை தேஎத்த முனைகெட விலங்கிய
நேர்உயர் நெடுவரை அயிரை பொருந
யாண்டுபிழை பறியாது பயமழை சுரந்து
நோயின் மாந்தர்க்கு ஊழி ஆக
மண்ணா வாயின் மணம்கமழ் கொண்டு
கார்மலர் கமழும் தாழ்இரும் கூந்தல்
ஒணஇயின போல விரவுமலர் நின்று
திருமுகத்து அலமரும் பெருமதர் மழைக்கண்
அலங்கிய காந்தள் இலங்குநீர் அழுவத்து
வேய்உறழ் பணைத்தோள் இவளோடு
ஆயிர வெள்ளம் வாழிய பலவே
பெயர் அடுநெய்யாவுதி
துறை செந்துறை பாடாண்பாட்டு
தூக்கு செந்தூக்கு
வண்ணம் ஒழுகு
பாட்டு
~~~~~~~~
சினனே காமம் கழிகண் ணோட்டம்
அச்சம் பொய்ச்சொல் அன்புமிகு வுடைமை
தெறல்கடு மையொடு பிறவும்இவ் வுலகத்து
அறம்தொ திகிக்கு வழியடை யாகும்
தீதுசேண் இகந்து நன்றுமிக புந்து
கடலும் கானமும் பலபயம் உதவ
பிறர்பிறர் நலியாது வேற்றுப்பொருள் வெஃகாது
மைஇல் அறிவினர் செவ்விதின் நடந்துதம்
அமர்துணை பியாது பாத்துஉண்டு மாக்கள்
மூத்த யாக்கையொடு பிணிஇன்று கழிய
ஊழி உய்த்த உரவோர் உம்பல்
பொன்செய் கணிச்சி திண்பிணி உடைத்து
சிரறுசில ஊறிய நீர்வா பத்தல்
கயிறுகுறு முகவை மூயின மொய்க்கும்
ஆகெழு கொங்கர் நாடுஅக படுத்த
வேல்கெழு தானை வெருவரு தோன்றல்
உளைப்பொலிந்த மா
இழைப்பொலிந்த களிறு
வம்புபரந்த தேர்
அமர்க்குஎதிர்ந்த புகல்மறவ ரொடு
துஞ்சுமரம் துவன்றிய மலர்அகன் பறந்தலை
ஓங்குநிலை வாயிதூங்குபு தகைத்த
வில்லிசை மாட்டிய விழுச்சீர் ஐயவி
கடிமிளை குண்டுகிடங்கின்
நெடுமதில் நிரைப்பதண
தண்ணலம் பெருங்கோட்டு அகப்பா எறிந்த
பொன்புனை உழிஞை வெல்போர குட்டுவ
போர்த்துஎறிந்த பறையாற் புனல்செறு குநரும்
நீர்த்தரு பூசலின் அம்புஅழிக்கு நரும்
ஒலித்தலை விழவின் மலியும் யாணர்
நாடுகெழு தண்பனை சீறினை ஆதலின்
குடதிசை மாய்ந்து குணம்முதல் தோன்றி
பாய்இருள் அகற்றும் பயம்கெழு பண்பின்
ஞாயிறு கோடா நன்பகல் அமயத்து
கவலை வெள்நா கூஉம்முறை பயிற்றி
கழல்கண் கூகை குழறுகுரல் பாணி
கருங்கண் பேய்மகள் வழங்கும்
பெரும்பாழ் ஆகுமன் அளிய தாமே
பெயர் கயிறுகுறு முகவை
துறை வஞ்சித்துறை பாடாண்பாட்டு
தூக்கு செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
வண்ணம் ஒழுகு வண்ணமும் சொற்சீர்
பாட்டு
~~~~~~~~
அலந்தலை உன்னத்து அங்கவடு பொருந்தி
சிதடி கரை பெருவறம் கூர்ந்து
நிலம்பைது அற்ற புலம்கெடு காலையும்
வாங்குபு தகைத்த கலப்பையர் ஆங்கண்
மன்றம் போந்து மறுகுசிறை பாடும்
வயிய மாக்கள் கடும்பசி நீங்க
பொன்செய் புனைஇழை ஒலி பொதுஉவந்து
நெஞ்சுமலி உவகையர் உண்டுமலிந்து ஆட
சிறுமகி ழானும் பெருங்கலம் வீசும்
போர்அடு தானை பொலந்தார குட்டுவ
நின்நயந்து வருவேம் கண்டனம் புல்மிக்கு
வழங்குநர் அற்றுஎன மருங்குகெட தூர்ந்து
பெருங்கவின் அழிந்த ஆற்ற ஏறுபுணர்ந்து
அண்ணல் மரைஆ அமர்ந்துஇனிது உறையும்
விண்உயர் வைப்பின காடுஆ யினநின்
மைந்துமலி பெரும்புகழ் அறியார் மலைந்த
போர்எதிர் வேந்தர் தார்அழிந்து ஒராலின்
மருதுஇமிழ்ந்து ஓங்கிய நளிஇரும் பரப்பின்
மணல்மலி பெருந்துறை ததைந்த காஞ்சியொடு
முருக்குத்தாழ்பு எழிலிய நெருப்புறழ் அடைகரை
நந்து நாரையொடு செவ்வா உகளும்
கழனி வாயிற் பழன படப்பை
அழல்மருள் பூவின் தாமரை வளைமகள்
குறாஅது மலர்ந்த ஆம்பல்
அறாஅ யாணர்அவர் அகன்தலை நாடே
பெயர் ததைந்த காஞ்சி
துறை வஞ்சித்துறை பாடாண்பாட்டு
தூக்கு செந்தூக்கு
வண்ணம் ஒழுகு
பாட்டு
~~~~~~~~
நெடுவயின் ஒளிறு மின்னுப்பரந்து ஆங்கு
புலிஉறை கழித்த புலவுவாய் எஃகம்
ஏவல் ஆடவர் வலன்உயர்த்து ஏந்தி
ஆர்அரண் கடந்த தார்அரும் தகைப்பின்
பீடுகொள் மாலை பெரும்படை தலைவ
ஓதல் வேட்டல் அவைபிறர செய்தல்
ஈதல் ஏற்றல்என்று ஆறுபுந்து ஒழுகும்
அறம்பு அந்தணர் வழிமொழிந்து ஒழுகி
ஞாலம் நின்வழி ஒழுக பாடல்சான்று
நாடுஉடன் விளங்கும் நாடா நல்லிசை
திருந்திய இயல்மொழி திருந்துஇழை கணவ
குலைஇழிபு அறியா சாபத்து வயவர்
அம்புகளைவு அறியா தூங்குதுளங்கு இருக்கை
இடாஅ ஏணி இயல்அறை குருசில்
நீர்நிலம் தீவளி விசும்போடு ஐந்தும்
அளந்துகடை அறியினும் அளப்பரும் குரையைநின்
வளம்வீங்கு பெருக்கம் இனிதுகண் டிகுமே
உண்மருந்து இன்மரும் வரைகோள் அறியாது
குரைத்தொடி மழுகிய உலக்கை வயின்தோறு
அடைச்சேம்பு எழுந்த ஆடுறு மடாவின்
எஃகுஉற சிவந்த ஊனத்து யாவரும்
கண்டுமதி மருளும் வாடா சொன்றி
வயங்குகதிர் விந்து வான்அகம் சுடர்வர
வறிதுவடக்கு இறைஞ்சிய சீர்கால் வெள்ளி
பயங்கெழு பொழுதோடு ஆநியம் நிற்ப
கலிழும் கருவியொடு கையுற வணங்கி
மன்னுயிர் புரைஇய வலன்ஏர்பு இரங்கும்
கொண்டல் தண்தளி கமம்சூல் மாமழை
கார்எதிர் பருவம் மறப்பினும்
பேரா யாணர்த்தால் வாழ்கநின் வளனே
பெயர் சீர்கால் வெள்ளி
துறை இயன்மொழி வாழ்த்து
தூக்கு செந்தூக்கு
வண்ணம் ஒழுகு
பாட்டு
~~~~~~~~
மாஆ டியபுலன் நாஞ்சி ல்ஆடா
கடாஅம் சென்னிய கடுங்கண் யானை
இனம்பரந்த புலம் வளம்பரப்பு அறியா
நின்படைஞர் சேர்ந்த மன்றம் கழுதை போகி
நீ உடன்றோர் மன்எயில் தோட்டி வையா
கடுங்கால் ஒற்றலின் சுடர்சிறந்து உருத்து
பசும்பிசிர் ஒள்அழல் ஆடிய மருங்கின்
ஆண்தலை வழங்கும் கான்உணங்கு கடுநெறி
முனைஅகன் பெரும்பாழ் ஆக மன்னிய
உரும்உறழ்பு இரங்கும் முரசிற் பெருமலை
வரைஇழி அருவியின் ஒளிறுகொடி நுடங
கடும்பா கதழ்சிறகு அகைப்பநீ
நெடுந்தேர் ஓட்டியபிறர் அகன்தலை நாடே
பெயர் கானுணங்கு கடுநெறி
துறை வஞ்சித்துறை பாடாண்பாட்டு
தூக்கு செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
வண்ணம் ஒழுகு வண்ணமும் சொற்சீர்வண்ணமும்
பாட்டு
~~~~~~~~
தேஎர் பரந்தபுலம் ஏஎர் பரவா
களிறுஆ டியபுலம் நாஞ்சில் ஆடா
மத்துஉர றியமனை இன்னியம் இமிழா
ஆங்கு பண்டுநற்கு அறியுநர் செழுவளம் நினைப்பின்
நோகோ யானே நோதக வருமே
பெயல்மழை புரவின்று ஆகிவெய்து உற்று
வலம்இன்று அம்ம காலையது பண்புஎன
கண்பனி மலிர்நிறை தாங்கி கைபுடையூ
மெலிவுடை நெஞ்சினர் சிறுமை கூர
பீர்இவர் வேலி பாழ்மனை நெருஞ்சி
காடுஉறு கடுநெறி யாக மன்னிய
முருகுஉடன்று கறுத்த கலிஅழி மூதூர்
உரும்பில் கூற்றத்து அன்னநின்
திருந்துதொழில் வயவர் சீறிய நாடே
பெயர் காடுறு கடுநெறி
துறை வஞ்சித்துறை பாடாண்பாட்டு
தூக்கு செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
வண்ணம் ஒழுகு வண்ணமும் சொற்சீர்வண்ணமும்
பாட்டு
~~~~~~~~
சிதைந்தது மன்றநீ சிவந்தனை நோக்கலின்
தொடர்ந்த குவளை தூநெறி அடைச்சி
அலர்ந்த ஆம்பல் அகமடி வையர்
சுயல்அம் சென்னி பூஞ்செய் கண்ணி
அயல் ஆர்கையர் இனிதுகூ டியவர்
துறைநணி மருதம் ஏறி தெறுமார்
எல்வளை மகளிர் தெள்விளி இசைப்பின்
பழன காவில் பசுமயில் ஆலும்
பொய்கை வாயில் புனல்பொரு புதவின்
நெய்தல் மரபின் நிரைகள் செறுவின்
வல்வாய் உருளி கதும்என மண்ட
அள்ளல் பட்டு துள்ளூபு துரப்ப
நல்எருதும் முயலும் அளறுபோகு விழுமத்து
சாகா டாளர் கம்பலை அல்லது
பூசல் அறியா நன்னாட்டு
யாணர் அறாஅ காமரு கவினே
பெயர் தொடர்ந்த குவளை
துறை செந்துறை பாடாண்பாட்டு
தூக்கு செந்தூக்கு
வண்ணம் ஒழுகு
பாட்டு
~~~~~~~~
திருவுடைத்து அம்ம பெருவிறல் பகைவர்
பைங்கண் யானை புணர்நிரை துமிய
உரம்துரந்து எறிந்த கறைஅடி கழல்கால்
கடுமா மறவர் கதழ்தொடை மறப்ப
இளைஇனிது தந்து விளைவுமுட்டு உறாது
புலம்பா உறையுள் நீணதொழில் ஆற்றலின்
விடுநில கரம்பை விடர்அளை நிறை
கோடை நீட குன்றம் புல்லென
அருவி அற்ற பெருவறல் காலையும்
நிவந்துகரை இழிதரு நனம்தலை போயாற்று
சீர்உடை வியன்புலம் வாய்பரந்து மிகீஇயர்
உவலை சூடி உருத்துவரு மலிர்நிறை
செந்நீர பூசல் அல்லது
வெம்மை அதுநின் அகன்தலை நாடே
பெயர் உருத்துவரு மலிர்நிறை
துறை நாடுவாழ்த்து
தூக்கு செந்தூக்கு
வண்ணம் ஒழுகு
பாட்டு
~~~~~~~~
அவல்எறிந்த உலக்கை வாழை சேர்த்தி
வளைக்கை மகளிர் வள்ளை கொய்யும்
முடந்தை நெல்லின் விளைவயல் பரந்த
தடந்தாள் நாரை இய அயிரை
கொழுமீன் ஆர்கைய மரந்தொறும் குழாஅலின்
வெண்கை மகளிர் வெண்குருகு ஓப்பும்
அழியா விழவின் இழியா திவவின்
வயிய மாக்கள் பண்அமைத்து எழீஇ
மன்ற நண்ணி மறுகுசிறை பாடும்
அகன்கண் வைப்பின் ஆடுமன் அளிய
விரவுவேறு கூலமொடு குருதி வேட்ட
மயிர்புதை மாக்கண் கடிய கழற
அமர்கோள் நேர்இகந்து ஆர்எயில் கடக்கும்
பெரும்பல் யானை குட்டுவன்
வரம்பில் தானை பரவா ஊங்கே
பெயர் வெண்கை மகளிர்
துறை வஞ்சித்துறைப்பாடாண்பாட்டு
தூக்கு செந்தூக்கு
வண்ணம் ஒழுகு
பாட்டு
~~~~~~~~
இணர்ததை ஞாழல் கரைகெழு பெருந்துறை
மணிக்கல தன்ன மாஇதழ் நெய்தல்
பாசடை பனிக்கழி துழைஇ புன்னை
வால்இணர படுசின குருகுஇறை கொள்ளும்
அல்குறு கானல் ஓங்குமணல் அடைகரை
தாழ்அடும்பு மலைந்த புணாவளை ஞரல
இலங்குநீர் முத்தமொடு வார்துகிர் எடுக்கும்
தண்கடல் படப்பை மென்பா லனவும்
காந்தள்அங் கண்ணி கொலைவில் வேட்டுவர்
செங்கோட்டு ஆமான் ஊனொடு காட்ட
மதன்உடை வேழத்து வெண்கோடு கொண்டு
பொன்உடை நியமத்து பிழிநொடை கொடுக்கும்
குன்றுதலை மணந்த புன்புல வைப்பும்
காலம் அன்றியும் கரும்புஅறுத்து ஒழியாது
அகால் அவித்து பலபூ விழவின்
தேம்பாய் மருதம் முதல்பட கொன்று
வெண்தலை செம்புனல் பரந்துவாய் மிகுக்கும்
பலசூழ் பதப்பர் பாய வெள்ளத்து
சிறைகொள் பூசலின் புகன்ற ஆயம்
முழவிமிழ் மூதூர் விழவுக்காணூஉ பெயரும்
செழும்பல் வைப்பி பழன பாலும்
ஏனல் உழவர் வரகுமீது இட்ட
கான்மிகு குளவிய வன்புசேர் இருக்கை
மென்தினை நுவணை முறைமுறை பகுக்கும்
புன்புலம் தழீஇய புறஅணி வைப்பும்
பல்பூஞ் செம்மல் காடுபயம் மாறி
அரக்க தன்ன நுண்மணல் கோடுகொண்டு
ஒண்நுதல் மகளிர் கழலொடு மறுகும்
விண்உயர்ந்து ஓங்கிய கடற்றவும் பிறவும்
பணைகெழு வேந்தரும் வேளிரும்ஒன்று மொழிந்து
கடலவுங் காட்டவும் அரண்வலியார் நடுங்க
முரண்மிகு கடுங்குரல் விசும்புஅடைபு அதிர
கடுஞ்சினங் கடாஅய் முழங்கு மந்திரத்து
அருந்திறல் மரபின் கடவுள் பேணியர்
உயர்ந்தோன் ஏந்திய அரும்பெறல் பிண்டம்
கருங்கண் பேய்மகள் கைபுடையூஉ நடுங்க
நெய்த்தோர் தூஉய நிறைமகிழ் இரும்பலி
எறும்பும் மூசா இறும்பூது மரபின்
கருங்கண் காக்கையொடு பருந்துஇரு தார
ஓடா பூட்கை ஒண்பொறி கழல்கால்
பெரும்சமம் ததைந்த செருப்புகல் மறவர்
உருமுநிலன் அதிர்க்குங் குரலொடு கொளைபுணர்ந்து
பெருஞ்சோறு உகுத்தற் கெறியும்
கடுஞ்சின வேந்தேநின் தழங்குகுரல் முரசே
பெயர் புகன்றவாயம்
துறை பெருஞ்சோற்றுநிலை
வண்ணம் ஒழுகு
தூக்கு செந்தூக்கு
பதிகம்
இமைய வரம்பன் தம்பி அமைவர
உம்பற் காட்டை தன்கோல் நிறீஇ
அகப்பா எறிந்து பகல்தீ வேட்டு
மதிஉறழ் மரபின் முதியரை தழீஇ
கண்ணகன் வைப்பின் மண்வகுத்து ஈத்து
கருங்களிற்று யானை புணர்நிரை நீட்டி
இருகடல் நீணரும் ஒருபகல் ஆடி
அயிரை பரைஇ ஆற்றல்சால் முன்போடு
ஒடுங்கா நல்இசை உயர்ந்த கேள்வி
நெடும்பார தாயனார் முந்துஉற காடுபோந்த
பல்யானை செல்கெழு குட்டுவனை
பாலை கெளதமனார் பாடினார் பத்துப்பாட்டு
அவைதாம் அடுநெய்யாவுதி கயிறு குறுமுகவை ததைந்தகாஞ்சி
சீர்சால்வெள்ளி கானுணங்குகடுநெறி காடுறுகடுநெறி
தொடந்தகுவளை உருத்துவரு மலிர்நிறை வெண்கைமகளிர் புகன்றாவாயம்
இவை பாட்டின் பதிகம்
பாடிப்பெற்ற பரிசில் நீர் வெண்டியது கொண்மின் என யானும் என் பார்ப்பனியும்
சுவர்க்கம் புகல் வெண்டும் என பார்ப்பாரிற் பெரியோரை கேட்டு ஒன்பது
பெருவேள்வி வேட்பிக்க பத்தாம் பெருவேள்வியிற் பார்ப்பானையும் பார்ப்பனியையும்
காணாராயினார்
இமயவரம்பன்றம்பி பல்யானைச்செல்கெழு குட்டுவன் இருபத்தையாண்டு வீற்றிருந்தான்
மூன்றாம் பத்து முற்றிற்று
~~~~~~~~~~~~~~~~~~
நா ன் கா ம் ப து
~~~~~~~~~~~~~~~~~~
பாடப்பட்டோ ன் களங்காய்க்கண்ணி நார்முடி சேரல்
பாடியவர் காப்பியாற்று காப்பியனார்
பாட்டு
~~~~~~~~~
குன்றுதலை மணந்து குழூஉக்கடல் உடுத்த
மண்கெழு ஞாலத்து மாந்தர் ஓர்ஆங்கு
கைசுமந்து அலறும் பூசல் மாதிரத்து
நால்வேறு நனம்தலை யொருங்கெழுந்து ஒலிப்ப
தெள்உயர் வடிமணி எறியுநர் கல்லென
உண்ணா பைஞ்ஞிலம் பனித்துறை மண்ணி
வண்டுஊது பொலிதார திருஞெமர் அகலத்து
கண்பொரு திகி கமழ்குரல் துழாஅய்
அலங்கற் செல்வன் சேவடி பரவி
நெஞ்சுமலி உவகையர் துஞ்சுபதி பெயர
மணிநிற மையிருள் அகல நிலாவிபு
கோடுகூடு மதியம் இயல்உற் றாங்கு
துளங்குகுடி விழுத்திணை திருத்தி முரசுகொண்டு
ஆண்கடன் நிறுத்தநின் பூண்கிளர் வியன்மார்பு
கருவி வானம் தண்தளி தலைஇய
வடதெற்கு விலங்கி விலகுதலைத்து எழிலிய
பனிவார் விண்டு விறல்வரை அற்றே
கடவுள் அஞ்சி வானத்து இழைத்த
தூங்குஎயில் கதவம் காவல் கொண்ட
எழூஉநிவந்து அன்ன பரேர்எறுழ் முழவுத்தோள்
வெண்திரை முந்நீர் வளைஇய உலகத்து
வண்புகழ் நிறுத்த வகைசால் செல்வத்து
வண்டன் அனையைமன் நீயே வண்டுபட
ஒலிந்த கூந்தல் அறம்சால் கற்பின்
குழைக்குவிளக்கு ஆகிய அவ்வாங்கு உந்தி
விசும்புவழங்கு மகளிர் உள்ளும் சிறந்த
செம்மீன் அனையள்நின் தொல்நகர செல்வி
நிலன்அதிர்பு இரங்கல ஆகி வலன்ஏர்பு
வியன்பணை முழங்கும் வேல்மூசு அழுவத்து
அடங்கிய புடையல் பொலம்கழல் நோன்தாள்
ஒடுங்கா தெவ்வர் ஊக்குஅற கடைஇ
புறக்கொடை எறியார்நின் மறப்படை கொள்ளுநர்
நகைவர்க்கு அரணம் ஆகி பகைவர்க்கு
சூர்நிகழ தற்றுநின் தானை
போர்மிகு குருசில்நீ மாண்டனை பலவே
துறை செந்துறை பாடாண்பாட்டு
வண்ணம் ஒழுகு
தூக்கு செந்தூக்கு
பெயர் கமழ்குரல் துழாய்
பாட்டு
~~~~~~~~~
மாண்டனை பலவே போர்மிகு குருசில்நீ
மாதிரம் விளக்கும் சால்பும் செம்மையும்
முத்துஉடை மருப்பின் மழகளிறு பிளிற
மிக்குஎழு கடும்தார் துய்த்தலை சென்று
துப்புத்துவர் போக பெருங்கிளை உவப்ப
ஈத்துஆன்று ஆனா விடன்உடை வளனும்
துளங்குகுடி திருத்திய வலம்படு வென்றியும்
எல்லாம் எண்ணின் இடுகழங்கு தபுந
கொன்ஒன்று மருண்டனென் அடுபோர கொற்றவ
நெடுமிடல் சா கொடுமிடல் துமி
பெருமலை யானையொடு புலம்கெட இறுத்து
தடந்தாள் நாரை படிந்துஇரை கவரும்
முடந்தை நெல்லின் கழைஅமல் கழனி
பிழையா விளையுள் நாடுஅக படுத்து
வையா மாலையர் வசையுநர்க்கு அறுத்த
பகைவர் தேஎத்து ஆயினும்
சினவாய் ஆகுதல் இறும்பூதால் பொதே
துறை செந்துறை பாடாண்பாட்டு
வண்ணம் ஒழுகு
தூக்கு செந்தூக்கு
பெயர் கழையமல் கழனி
பாட்டு
~~~~~~~~~
இறும்பூதால் பொதே கொடித்தேர் அண்ணல்
வடிமணி அனைத்த பனைமருள் நோன்தாள்
கடிமரத்தான் களிறுஅணைத்து
நெடுநீர துறைகலங்க
மூழ்த்துஇறுத்த வியன்தானையொடு
புலம்கெட நொதரும் வரம்பில் வெள்ளம்
வாள்மதில் ஆக வேல்மிளை உயர்த்து
வில்இசை உமிழ்ந்த வைம்முள் அம்பின்
செவ்வாய் எஃகம் வளைஇய அகழின்
கார்இடி உருமின் உரறும் முரசின்
கால்வழங்கு ஆர்எயில் கருதின்
போர்எதிர் வேந்தர் ஒரூஉப நின்னே
துறை வஞ்சித்துறை பாடாண்பாட்டு
வண்ணம் ஒழுகு
தூக்கு செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
பெயர் வரம்பில் வெள்ளம்
பாட்டு
~~~~~~~~~
ஒரூஉப நின்னை ஒருபெரு வேந்தே
ஓடா பூட்கை ஒண்பொறி கழல்கால்
இருநிலம் தோயும் விநூல் அறுவையர்
செவ்உளைய மாஊர்ந்து
நெடும்கொடிய தேர்மிசையும்
ஓடை விளங்கும் உருகெழு புகர்நுதல்
பொன்அணி யானை முரண்சேர் எருத்தினும்
மன்நிலத்து அமைந்த
மாறா மைந்தர் மாறுநிலை தேய
முரைசுஉடை பெரும்சமம் ததைய ஆர்ப்புஎழ
அரைசுபட கடக்கும் ஆற்றல்
புரைசால் மைந்தநீ ஓம்பல் மாறே
துறை தும்பையரவம்
வண்ணம் ஒழுகு
தூக்கு செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
பெயர் ஒண்பொறி கழற்கால்
பாட்டு
~~~~~~~~~
புரைசால் மைந்தநீ ஓம்பல் மாறே
உரைசான் றனவால் பெருமைநின் வென்றி
இரும்களிற்று யானை இலங்குவால் மருப்பொடு
நெடும்தேர திகி தாய வியன்களத்து
அளகுஉடை சேவல் கிளைபுகா வார
தலைதுமிந்து எஞ்சிய மெய்ஆடு பறந்தலை
அந்தி மாலை விசும்புகண் டன்ன
செஞ்சுடர் கொண்ட குருதி மன்றத்து
பேஎய் ஆடும் வெல்போர்
வீயா யாணர் நின்வயி னானே
துறை வாகைத்துறை பாடாண்பாட்டு
வண்ணம் ஒழுகு
தூக்கு செந்தூக்கு
பெயர் மெய்யாடு பறந்தலை
பாட்டு
~~~~~~~~~
வீயா யாணர் நின்வயி னானே
தாவாது ஆகு மலிபெறு வயவே
மல்லல் உள்ளமொடு வம்புஅமர கடந்து
செருமிகு முன்பின் மறவரொடு தலைச்சென்று
பனைதடி புனத்தின் கைதடிபு பலவுடன்
யானை பட்ட வாள்மயங்கு கடும்தார்
மாவும் மாக்களும் படுபிணம் உணீஇயர்
பொறித்த போலும் புள்ளி எருத்தின்
புன்புற எருவை பெடைபுணர் சேவல்
குடுமி எழாலொடு கொண்டுகிழக்கு இழிய
நிலம்இழி நிவப்பின் நீள்நிரை பலசுமந்து
உருஎழு கூளியர் உண்டுமகிழ்ந்து ஆட
குருதி செம்புனல் ஒழுக
செருப்பல செய்குவை வாழ்கநின் வளனே
துறை களவழி
வண்ணம் ஒழுகு
தூக்கு செந்தூக்கு
பெயர் வாண்மயங்கு கடுந்தார்
பாட்டு
~~~~~~~~~
வாழ்கநின் வளனே நின்னுடை வாழ்க்கை
வாய்மொழி வாயர் நின்புகழ் ஏத்த
பகைவர் ஆர பழங்கண் அருளி
நகைவர் ஆர நன்கலம் சிதறி
ஆன்றுஅவிந்து அடங்கிய செயிர்தீர் செம்மல்
வான்தோய் நல்இசை உலகமொடு உயிர்ப்ப
துளங்குடி திருத்திய வலம்படு வென்றியும்
மாஇரும் புடையல் மாக்கழல் புனைந்து
மன்எயில் எறிந்து மறவர தாணஇ
தொல்நிலை சிறப்பின் நின்நிழல் வாழ்நர்க்கு
கோடுஅற வைத்த கோடா கொள்கையும்
நன்றுபொது உடையையால் நீயே
வெந்திறல் வேந்தேஇவ் வுலக தோர்க்கே
துறை செந்துறை பாடாண்பாட்டு
வண்ணம் ஒழுகு
தூக்கு செந்தூக்கு
பெயர் வலம்படு வென்றி
பாட்டு
~~~~~~~~~
உலக தோரே பலர்மன் செல்வர்
எல்லா ருள்ளும்நின் நல்இசை மிகுமே
வளம்தலை மயங்கிய பைதிரம் திருத்திய
களங்கா கண்ணி நார்முடி சேரல்
எயில்முகம் சிதை தோட்டி ஏவலின்
தோட்டி தந்த தொடிமருப்பு யானை
செவ்உளை கலிமா ஈணகை வான்கழல்
செயல்அமை கண்ணி சேரலர் வேந்தே
பாசிலர் வெறுக்கை பாணர் நாளவை
வாள்நுதல் கணவ மள்ளர் ஏறே
மைஅற விளங்கிய வடுவாழ் மார்பின்
வசையில் செல்வ வான வரம்ப
இனியவை பெறினே தனிதனி நுகர்கேம்
தருகென விழையா தாஇல் நெஞ்சத்து
பகுத்துஊண் தொகுத்த ஆண்மை
பிறர்க்குஎன வாழ்திநீ ஆகல் மாறே
துறை செந்துறை பாடாண்பாட்டு
வண்ணம் ஒழுகு
தூக்கு செந்தூக்கு
பெயர் பரிசிலர் வெறுக்கை
பாட்டு
~~~~~~~~~
பிறர்க்குஎன வாழ்திநீ ஆகல் மாறே
எமக்கில்என் னார்நின் மறம்கூறு குழாத்தர்
துப்புத்துறை போகிய வெப்புஉடை தும்பை
கறுத்த தெவ்வர் கடிமுனை அலற
எடுத்துஎறிந்து இரங்கும் ஏவல் வியன்பனை
உரும்என அதிர்பட்டு முழங்கி செருமிக்கு
அடங்கார் ஆர்அரண் வாட செல்லும்
காலன் அனைய கடும்சின முன்ப
வாலிதின் நூலின்இழையா நுண்மயிர் இழைய
பொறித்த போலும் புள்ளி எருத்தின்
புன்புற புறவின் கணநிரை அலற
அலந்தலை வேலத்து உலவை அம்சினை
சிலம்பி கோலிய அலங்கல் போர்வையின்
இலங்குமணி மிடைந்த பசும்பொன் படலத்து
அவிர்இழை தைஇ மின்உமிழ்பு இலங்க
சீர்மிகு முத்தம் தைஇய
நார்முடி சேரல்நின் போர்நிழல் புகன்றே
துறை வாகை
வண்ணம் ஒழுகு
தூக்கு செந்தூக்கு
பெயர் ஏவல் வியன்பணை
பாட்டு
~~~~~~~~~
போர்நிழல் புகன்ற சுற்றமொடு ஊர்முகத்து
இறாஅ லியரோ பெருமநின் தானை
இன்இசை இமிழ்முரசு இயம்ப கடிப்பிகூஉ
புண்டோ ள் ஆடவர் போர்முகத்து இறுப்ப
காய்த்த கரந்தை மாக்கொடி விளைவயல்
வந்துஇறை கொண்டன்று தானை அந்தில்
களைநர் யார்இனி பிறர்என பேணி
மன்எயில் மறவர் ஒலிஅவிந்து அடங்க
ஒன்னார் தே பூமலைந்து உரைஇ
வெண்தோடு நிரைஇய வேந்துஉடை அரும்சமம்
கொன்றுபுறம் பெற்று மன்பதை நிரப்பி
வென்றி ஆடிய தொடித்தோள் மீகை
எழுமுடி கெழீஇய திருஞெமர் அகலத்து
பொன்அம் கண்ணி பொலம்தேர் நன்னன்
சுடர்வீ வாகை கடிமுதல் தடிந்த
தார்மிகு மைந்தின் நார்முடி சேரல்
புன்கால் உன்னம் சா தெள்கண்
வறிதுகூட்டு அயல் இரவலர தடுப்ப
தான்தர உண்ட நனைநறவு மகிழ்ந்து
நீர்இமிழ் சிலம்பின் நோ யோனே
செல்லா யோதில் சில்வளை விறலி
மலர்ந்த வேங்கையின் வயங்கிழை அணிந்து
மெல்இயல் மகளிர் எழில்நலம் சிற
பாணர் பைம்பூ மலைய இளையர்
இன்களி வழாஅ மென்சொல் அமர்ந்து
நெஞ்சுமலி உவகையர் வியன்களம் வாழ
தோட்டி நீவாது தொடிசேர்பு நின்று
பாகர் ஏவலின் ஒண்பொறி பிசிர
காடுதலை கொண்ட நாடுகாண் அவிர்சுடர்
அழல்விடுபு மாணஇய மைந்தின்
தொழில்புகல் யானை நல்குவன் பலவே
துறை விறலியாற்றுப்படை
வண்ணம் ஒழுகு
தூக்கு செந்தூக்கு
பெயர் நாடுகாண் அவிர்சுடர்
பதிகம்
ஆரா திருவிற் சேர லாதற்கு
வேளாவி கோமான்
பதுமன் தேவி ஈன்ற மகன்முனை
பனி பிறந்து பல்புகழ் வளர்த்து
ஊழின் ஆகிய உயர்பெரும் சிறப்பின்
பூழி நாட்டை படைஎடுத்து தழீஇ
உருள் பூங் கடம்பின் பெருவாயில் நன்னனை
நிலைச்செருவி னால்தலை யறுத்துஅவன்
பொன்படு வாகை முழுமுதல் தடிந்து
குருதி செம்புனல் குஞ்சரம் ஈர்ப்ப
செருப்பல செய்து செங்களம் வேட்டு
துளங்குகுடி திருத்திய வலம்படு வென்றி
களங்காய்க்கண்ணி நார்முடி சேரலை
காப்பியாற்று காப்பியனார் பாடினார் பத்துப்பாட்டு
அவைதாம் கம்ழகுரற் றுழாய் கழையமல் கழனி வரம்பில் வெள்ளம் ஒண்பொறி கழற்கால்
மெய்யாடுபறந்தலை வான்மயங்கு கடுந்தார் வலம்படு வென்றி பரிசிலர்வெறுக்கை ஏவல்
வியன்பனை நாடுகானவிர்சுடர் இவை பாட்டின் பதிகம்
பாடிப்பெற்ற பரிசில் நாற்பதுநூறாயிரம் பொன் ஒருங்கு கொடுத்து தான் ஆளவ்திற்
பாகங்கொடுத்தான் அக்கோ
களங்கா கண்ணி நார்முடி சேரல் இருபத்தையாண்டு வீற்றிருந்தான்
நான்காம் பத்து முற்றிற்று
~~~~~~~~~~~~~~~~~~
ஐ தா ம் ப து
~~~~~~~~~~~~~~~~~~
பாடப்பட்டோ ன் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்
பாடியவர் காசறு செய்யு பரணர்
பாட்டு
~~~~~~~~~
புணர்பு நரம்பின் தீம்தொடை பழுனிய
வணர்அமை நல்யாழ் இளையர் பொறு
பண்அமை முழவும் பதலையும் பிறவும்
கண்அறுத்து இயற்றிய தூம்பொடு சுருக்கி
காவில் தகைத்த துறைகூடு கலப்பையர்
கைவல் இளையர் கடவுள் பழிச்ச
மறப்புலி குழூஉக்குரல் செத்து வயக்களிறு
வரைசேர்பு எழுந்த சுடர்வீ வேங்கை
பூவுடை பெருஞ்சினை வாங்கி பிளந்துதன்
மாஇருஞ் சென்னி அணிபெற மிலைச்சி
சேஎர் உற்ற செல்படை மறவர்
தண்டுஉடை வலத்தர் போர்எதிர தாங்கு
வழைஅமல் வியன்காடு சில பிளிறும்
மழைபெயல் மாறிய கழைதிரங்கு அத்தம்
ஒன்றுஇரண்டு அலபல கழிந்து திண்தேர்
வசைஇல் நெடுந்தகை காண்குவ திசினே
தாவல் உய்யுமோ மற்றே தாவாது
வஞ்சினம் முடித்த ஒன்றுமொழி மறவர்
முரசுஉடை பெருஞ்சமத்து அரசுபட கடந்து
வெவ்வர் ஓச்சம் பெருக தெவ்வர்
மிளகுஎறி உலக்கையின் இருந்தலை இடித்து
வைகுஆர்ப்பு எழுந்த மைபடு பரப்பின்
எடுத்தேறு ஏய கடிப்புஉடை வியன்கண்
வலம்படு சீர்த்தி ஒருங்குஉடன் இயைந்து
கால்உளை கடும்பிசிர் உடைய வால்உளை
கடும்பா புரவி ஊர்ந்தநின்
படுந்திரை பனிக்கடல் உழந்த தாளே
துறை காட்சி வாழ்த்து
வண்ணம் ஒழுகு
தூக்கு செந்தூக்கு
பெயர் சுடர்வீவேங்கை
செந்துறை பாடாண்பாட்டு
பாட்டு
~~~~~~~~~
இரும்பனம் புடையல் ஈகை வான்கழல்
மீன்தேர் கொட்பின் பனிக்கயம் மூழ்கி
சிரல்பெயர தன்ன நெடுவெள் ஊசி
நெடுவசி பரந்த வடுஆழ் மார்பின்
அம்புசேர் உடம்பினர சேர்ந்தோர் அல்லது
தும்பை சூடாது மலைந்த மாட்சி
அன்னோர் பெரும நல்நுதல் கணவ
அண்ணல் யானை அடுபோர குட்டுவ
மைந்துஉடை நல்அமர கடந்து வலம்தாணஇ
இஞ்சிவீ விராய பைந்தார் சூட்டி
சாந்துபுறத்து எறித்த தசும்புதுளங்கு இருக்கை
தீம்சேறு விளைந்த மணிநிற மட்டம்
ஓம்பா ஈகையின் வண்மகிழ் சுரந்து
கோடியர் பெரும்கிளை வாழ ஆடுஇயல்
உளைஅவிர் கலிமா பொழிந்தவை எண்ணின்
மன்பதை மருள அரசுபட கடந்து
முந்துவினை எதிர்வர பெறுதல் காணியர்
ஒளிறுநிலை உயர்மருப்பு ஏந்திய களிறுஊர்ந்து
மான மைந்தரொடு மன்னர் ஏத்தநின்
தேரொடு சுற்றம் உலகுஉடன் மூய
மாஇரு தெள்கடல் மலிதிரை பெளவத்து
வெண்தலை குரூஉப்பிசிர் உடை
தண்பல வரூஉம் புணாயின் பலவே
துறை செந்துறை பாடாண்பாட்டு
வண்ணம் ஒழுகு
தூக்கு செந்தூக்கு
பெயர் தசும்புதுளங்கு இருக்கை
பாட்டு
~~~~~~~~~
கவா முச்சி கார்வி கூந்தல்
ஊசல் மேவல் சேய்இழை மகளிர்
உரல்போல் பெருங்கால் இலங்குவாள் மருப்பின்
பெரும்கை மதமா புகுதான் அவற்றுள்
விருந்தின் வீழ்பிடி எண்ணுமுறை பெறாஅ
கடவுள் நிலைய கல்ஓங்கு நெடுவரை
வடதிசை எல்லை இமய மாக
தென்னங் குமாயொடு ஆயிடை அரசர்
முரசுஉடை பெரும்சமம் ததைய ஆர்ப்புஎழ
சொல்பல நாட்டை தொல்கவின் அழித்த
போர்அடு தானை பொலந்தார குட்டுவ
இரும்பணை திரங்க பெரும்பயல் ஒளிப்ப
குன்றுவறம் கூர சுடர்சினம் திகழ
அருவிஅற்ற பெருவறல் காலையும்
அருஞ்செலல் பேராற்று இருங்கரை உடைத்து
கடிஏர் பூட்டுநர் கடுக்கை மலைய
வரைவில் அதிர்சிலை முழங்கி பெயல்சிறந்து
ஆர்கலி வானம் தளிசொ தாஅங்கு
உறுவர் ஆர ஓம்பாது உண்டு
நகைவர் ஆர நன்கலம் சிதறி
ஆடுசிறை அறுத்த நரம்புசேர் இன்குரல்
பாடு விறலியர் பல்பிடி பெறுக
துய்வீ வாகை நுண்கொடி உழிஞை
வென்றி மேவல் உருகெழு சிறப்பின்
கொண்டி மள்ளர் கொல்களிறு பெறுக
மன்றம் படர்ந்து மறுகுசிறை புக்கு
கண்டி நுண்கோல் கொண்டுகளம் வாழ்த்தும்
அகவலன் பெறுக மாவே என்றும்
இகல்வினை மேவலை ஆகலின் பகைவரும்
தாங்காது புகழ்ந்த தூங்குகொளை முழவின்
தொலையா கற்பநின் நிலைகண் டிகுமே
நிணம்சுடு புகையொடு கனல்சினந்து அவிராது
நிரம்புஅகல்பு அறியா ஏறா ஏணி
நிறைந்து நெடிதுஇரா தசும்பின் வயியர்
உண்டுஎன தவாஅ கள்ளின்
வண்கை வேந்தேநின் கலிமகி ழானே
துறை இயன்மொழிவாழ்த்து
வண்ணம் ஒழுகு
தூக்கு செந்தூக்கு
பெயர் ஏறாவேணி
பாட்டு
~~~~~~~~~
நிலம்புடைப்பு அன்னஆர பொடுவிசும்பு துடையூ
வான்தோய் வெல்கொடி தேர்மிசை நுடங்க
பொய ஆயினும் அமர்கடந்து பெற்ற
அய என்னாது ஓம்பாது வீசி
கலம்செல சுரத்தல் அல்லது கனவினும்
களைகஎன அறியா கசடுஇல் நெஞ்சத்து
ஆடுநடை அண்ணல்நின் பாடுமகள் காணியர்
காணி லியரோநின் புகழ்ந்த யாக்கை
முழுவலி துஞ்சு நோய்தபு நோன்தொடை
நுண்கொடி உழிஞை வெல்போர் அறுகை
சேணன் ஆயினும் கேள்என மொழிந்து
புலம்பெயர்ந்து ஒளித்த களையா பூசற்கு
அரண்கடா உறீஇ அணங்குநிகழ தன்ன
மோகூர் மன்னன் முரசம் கொண்டு
நெடுமொழி பணித்துஅவன் வேம்புமுதல் தடிந்து
முரசுசெய முரச்சி களிறுபல பூட்டி
ஒழுகை உய்த்த கொழுஇல் பைந்துணி
வைத்தலை மறந்த துய்த்தலை கூகை
கவலை கவற்றும் குராலம் பறந்தலை
முரசுடை தாயத்து அரசுபல ஓட்டி
துளங்குநீர் வியல்அகம் ஆண்டுஇனிது கழிந்த
மன்னர் மறைத்த தாழி
வன்னி மன்றத்து விளங்கிய நாடே
துறை செந்துறை பாடாண்பாட்டு
வண்ணம் ஒழுகு
தூக்கு செந்தூக்கு
பெயர் நோய்தபு நோன்தொடை
பாட்டு
~~~~~~~~~
பொலம்பூ தும்பை பொறிகிளர் தூணி
புற்றுஅடங்கு அரவின் ஒடுங்கிய அம்பின்
நொசிவுஉடை வில்லின் ஒசியா நெஞ்சின்
களிறுஎறிந்து முந்த கதுவாய் எஃகின்
விழுமியோர் துவன்றிய அகன்கண் ணாட்பின்
எழுமுடி மார்பின் எய்திய சேரல்
குண்டுகண் அகழிய மதில்பல கடந்து
பண்டும் பண்டும்தாம் உள்அழித்து உண்ட
நாடுகெழு தாயத்து நனம்தலை அருப்பத்து
கதவம் காக்கும் கணைஎழு அன்ன
நிலம்பெறு திணிதோள் உயர ஓச்சி
பிணம்பிறங்கு அழுவத்து துணங்கை ஆடி
சோறுவேறு என்னா ஊன்துவை அடிசில்
ஓடா பீடர் உள்வழி இறுத்து
முள்இடுபு அறியா ஏணி தெவ்வர்
சிலைவிசை அடக்கிய மூ வெண்தோல்
அனைய பண்பின் தானை மன்னர்
இனியார் உளரோநின் முன்னும் இல்லை
மழைகொள குறையாது புனல்புக நிறையாது
விலங்குவளி கடவும் துளங்குஇரும் கமம்சூல்
வயங்குமணி இமைப்பின் வேல்இடுபு
முழங்குதிரை பனிக்கடல் மறுத்திசி னோரே
துறை செந்துறை பாடாண்பாட்டு
வண்ணம் ஒழுகு
தூக்கு செந்தூக்கு
பெயர் ஊன்துவை அடிசில்
பாட்டு
~~~~~~~~~
இழையர் குழையர் நறுந்தண் மாலையர்
சுடர்நிமிர் அவிர்தொடி செறித்த முன்கை
திறல்விடு திருமணி இலங்கு மார்பின்
வண்டுபடு கூந்தல் முடிபுனை மகளிர்
தொடைபடு பேர்யாழ் பாலை பண்ணி
பணியா மரபின் உழிஞை பாட
இனிதுபுற தந்துஅவர்க்கு இன்மகிழ் சுரத்தலின்
சுரம்பல கடவும் கரைவா பருதி
ஊர்பாட்டு எண்ணில் பைந்தலை துமி
பல்செரு கடந்த கொல்களிற்று யானை
கோடுநரல் பெளவம் கலங்க வேல்இட்டு
உடைதிரை பரப்பில் படுகடல் ஓட்டிய
வெல்புகழ குட்டுவன் கண்டோ ர்
செல்குவம் என்னார் பாடுபு பெயர்ந்தே
துறை செந்துறை பாடாண்பாட்டு
வண்ணம் ஒழுகு
தூக்கு செந்தூக்கு
பெயர் கரைவா பருதி
பாட்டு
~~~~~~~~~
அட்டுஆ னானே குட்டுவன் அடுதொறும்
பெற்றுஆ னாரே பாசிலர் களிறே
வரைமிசை இழிதரும் அருவியின் மாடத்து
வளிமுனை அவிர்வரும் கொடிநுடங்கு தெருவில்
சொசுரை கவரும் நெய்வழிபு உராலின்
பாண்டில் விளக்கு பரூஅச்சுடர் அழல
நன்நுதல் விறலியர் ஆடும்
தொல்நகர் வரைப்பின்அவன் உரைஆ னாவே
துறை செந்துறை பாடாண்பாட்டு
வண்ணம் ஒழுகு
தூக்கு செந்தூக்கு
பெயர் நன்நுதல் விறலியர்
பாட்டு
~~~~~~~~~
பைம்பொன் தாமரை பாணர சூட்டி
ஒண்நுதல் விறலியர்க்கு ஆரம் பூட்டி
கெடல்அரும் பல்புகழ் நிலைஇ நீர்புக்கு
கடலொடு உழந்த பனித்துறை பரதவ
ஆண்டுநீர பெற்ற தாரம் ஈண்டுஇவர்
கொள்ளா பாடற்கு எளிதின் ஈயும்
கல்லா வாய்மையன் இவன்என தத்தம்
கைவல் இளையர் நேர்கை நிரைப்ப
வணங்கிய சாயல் வணங்கா ஆண்மை
முனைசுடு கனைஎ எத்தலின் பொதும்
இகழ்கவின் அழிந்த மாலையொடு சாந்துபுலர்
பல்பொறி மார்பநின் பெயர்வா ழியரோ
நின்மலை பிறந்து நின்கடல் மண்டும்
மலிபுனல் நிகழ்தரும் தீநீர் விழவின்
பொழில்வதி வேனில் பேர்எழில் வாழ்க்கை
மேவரு சுற்றமோடு உண்டுஇனிது நுகரும்
தீம்புனல் ஆயம் ஆடும்
காஞ்சிஅம் பெருந்துறை மணலினும் பலவே
துறை இயன்மொழிவாழ்த்து
வண்ணம் ஒழுகு
தூக்கு செந்தூக்கு
பெயர் பேர்எழில் வாழ்க்கை
பாட்டு
~~~~~~~~~
யாமும் சேறுக நீயிரும் வம்மின்
துயிலுங் கோதை துளங்குஇயல் விறலியர்
கொளைவல் வாழ்க்கைநும் கிளைஇனிது உணீஇயர்
களிறுபரந்து இயல கடுமா தாங்க
ஒளிறுகொடி நுடங்க தேர்திந்து கொட்ப
எஃகுதுரந்து எழுதரும் கைகவர் கடும்தார்
வெல்போர் வேந்தரும் வேளிரும் ஒன்றுமொழிந்து
மொய்வளம் செருக்கி மொசிந்துவரு மோகூர்
வலம்படு குழூஉநிலை அதிர மண்டி
நெய்த்தோர் தொட்ட செங்கை மறவர்
நிறம்படு குருதி நிலம்படர்ந்து ஓடி
மழைநாள் புனலின் அவல்பரந்து ஒழுக
படுபிணம் பிறங்க பாழ்பல செய்து
படுகண் முரசம் நடுவண் சிலைப்ப
வளன்அற நிகழ்ந்து வாழுநர் பலர்பட
கருஞ்சினை விறல்வேம்பு அறுத்த
பெருஞ்சினை குட்டுவன் கண்டனம் வரற்கே
துறை விறலியாற்றுப்படை
வண்ணம் ஒழுகு
தூக்கு செந்தூக்கு
பெயர் செங்கை மறவர்
பாட்டு
~~~~~~~~~
மாமலை முழக்கின் மான்கணம் பனிப்ப
கால்மயங்கு கதழ்உறை ஆலியொடு சிதறி
கரும்புஅமல் கழனிய நாடுவளம் பொழிய
வளம்கெழு சிறப்பின் உலகம் புரைஇ
செங்குணக்கு ஒழுகும் கலுழி மலிர்நிறை
காவி அன்றியும் பூவி புனலொரு
மூன்றுடன் கூடிய கூடல் அனையை
கொல்களிற்று உரவுத்திரை பிறழ அவ்வில் பிசிர
புரைதோல் வரைப்பின் எஃகுமன்ண அவிர்தர
விரவுப்பணை முழங்குஒலி வொணஇய வேந்தர்க்கு
அரணம் ஆகிய வெருவரு புனல்தார்
கல்மிசை யவ்வும் கடலவும் பிறவும்
அருப்பம் அமைஇய அமர்கடந்து உருத்த
ஆள்மலி மருங்கின் நாடுஅக படுத்து
நல்இசை நனந்தலை இய ஒன்னார்
உருப்புஅற நிரப்பினை ஆதலின் சாந்துபுலர்பு
வண்ணம் நீவி வகைவனப்பு உற்ற
வாஞிமிறு இமிரும் மார்புபிணி மகளிர்
விமென் கூந்தல் மெல்அணை வதிந்து
கொல்பிணி திருகிய மார்புகவர் முயக்கத்து
பொழுதுகொள் மரபின் மென்பிணி அவிழ
எவன்பல கழியுமோ பெரும பல்நாள்
பகைவெம் மையின் பாசறை மாணஇ
பாடுஅரிது இயைந்த சிறுதுயில் இயலாது
கோடு முழங்கு இமிழ்இசை எடுப்பும்
பீடுகெழு செல்வம் மாணஇய கண்ணே
துறை வஞ்சித்துறை பாடாண்பாட்டு
வண்ணம் ஒழுகு வண்ணமும் சொற்சீர்
தூக்கு செந்தூக்கு
பெயர் வெருவரு புனற்றார்
பதிகம்
வடவர் உட்கும் வான்தோய் வெல்கொடி
குடவர் கோமான் நெடுஞ்சேர லாதற்கு
சோழன் மணக்கிள்ளி ஈன்ற மகன்
கடவுள் பத்தினி கற்கோள் வேண்டி
கான்நவில் கானம் கணையின் போகி
ஆய அண்ணலை வீட்டி போசை
இன்பல் அருவி கங்கை மண்ணி
இனம்தொ பல்ஆன் கன்றொடு கொண்டு
மாறா வல்வில் இடும்பின் புறத்துஇறுத்து
உறுபுலி அன்ன வயவர் வீழ
சிறுகுரல் நெய்தல் வியலூர் நூறி
அக்கரை நண்ணி கொடுகூர் எறிந்து
பழையன் காக்கும் கரும்சினை வேம்பின்
முழாரை முழுமுதல் துமி பண்ணி
வால்இழை கழித்த நறும்பல் பெண்டிர்
பல்இருங் கூந்தல் முரற்சியால்
குஞ்சர ஒழுகை பூட்டி வெந்திறல்
ஆரா செருவின் சோழர்குடிக்கு உயோர்
ஒன்பதின்மர் வீழ வாயில்புறத்து இறுத்து
நிலைச்செருவின் ஆற்றலை அறுத்து
கெடல் அரும் தானையொடு
கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனை கரணமமைந்த
காசறு செய்யு பரணர் பாடினார் பத்துப்பாட்டு
அவைதாம் சுடர்வீவேங்கை தசும்புதுளங்கிருக்கை ஏறாவேணி நோய்தபுநோன்றொடை
ஊன்றுவையடிசில் கரை வாய்ப்பருதி நன்னுதல் விறலியர் பேரெழில்வாழ்க்கை செங்கை மறவர்
வெருவருபுனற்றார்
இவை பாட்டின் பதிகம்
பாடி பெற்ற பரிசில் உம்பற்காட்டு வாரியையும் தன்மகன் குட்டுவன் சேரலையுங் கொடுத்தான் அக்கோ
கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் ஐம்பத்தையாண்டு வீற்றிருந்தான்
ஐந்தாம் பத்து முற்றிற்று
ஆ றா ம் ப து
~~~~~~~~~~~~~~~
பாடப்பட்டோ ன் ஆடுகோ பாட்டு சேரலாதனை
பாடியவர் காக்கைபாடினியார் நச்செள்ளையார்
பாட்டு
~~~~~~~~~
துளங்குநீர் வியலகம் கலங கால்பொர
விளங்குஇரும் புணா உருமென முழங்கும்
கடல்சேர் கானல் குடபுலம் முன்னி
கூவல் துழந்த தடந்தாள் நாரை
குவிஇணர் ஞாழல் மாச்சினை சேக்கும்
வண்டுஇறை கொண்ட தண்கடல் பரப்பின்
அடும்புஅமல் அடைகரை அலவன் ஆடிய
வடுஅடு நுண்அயிர் ஊதை உஞற்றும்
தூஇரும் போந்தை பொழில்அணி பொலிதந்து
இயலினள் ஒல்கினள் ஆடும் மடமகள்
வெறிஉறு நுடக்கம் போல தோன்றி
பெருமலை வயின்வயின் விலங்கும் அருமணி
அரவழங்கும் பெரும்தெய்வத்து
வளைஞரலும் பனிப்பெளவத்து
குணகுட கடலோடு ஆயிடை மணந்த
பந்தர் அந்தரம் வேய்ந்து
வண்பிணி அவிழ்ந்த கண்போல் நெய்தல்
நனைஉறு நறவின் நாடுஉடன் கமழ
சுடர் நுதல் மடநோக்கின்
வாள்நகை இலங்குஎயிற்று
அமிழ்துபொதி துவர்வாய் அசைநடை விறலியர்
பாடல் சான்று நீடினை உறைதலின்
வெள்வேல் அண்ணல் மெல்லியன் போன்மென
உள்ளுவர் கொல்லோநின் உணரா தோரே
மழைதவழும் பெருங்குன்றத்து
செயிர்உடைய அரவுஎறிந்து
கடும்சினத்த மிடல்தபுக்கும்
பெரும்சினப்புயல் ஏறுஅனையை
தாங்குநர் தடக்கை யானை தொடிக்கோடு துமிக்கும்
எஃகுஉடை வலத்தர்நின் படைவழி வாழ்நர்
மறம்கெழு போந்தை வெண்தோடு புனைந்து
நிறம்பெயர் கண்ணி பருந்து ஊறுஅளப்ப
தூக்கணை