கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்
இயற்றிய மூவருலா
விக்கிரம சோழனுலா குலோத்துங்க
இராசராச சோழனுலா இராசேந்திர


















©









கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் இயற்றிய மூவருலா
மகாமகோபாத்தியாய டாக்டர் உவே சாமிநாதையர் நூல்நிலைய வௌியீடு எண் மூன்றாம்
பதிப்பு
மகாமகோபாத்தியாய டாக்டர் உவே சாமிநாதையர் நூல்நிலையம் பெசன நகர் சென்னை

விக்கிரம சோழனுலா
சீர்தந்த தாமரையாள் கேள்வன் றிருவுரு
கார்தந்த வுந்தி கமலத்து பார்தந்த
ஆதி கடவு டிசைமுகனு மாங்கவன்றன்
காதற் குலமைந்தன் காசிபனும் மேதக்க
மையறு காட்சி மரீசியு மண்டிலஞ்
செய்ய தனியாழி தேரோனும் மையல்கூர்
சிந்தனை யாவிற்கு முற்ற திருத்தேரில்
மைந்தனை யூர்ந்த மறவோனும் பைந்தட
தாடு துறையி லடுபுலியும்புல்வாயும்
கூடநீ ரூட்டிய கொற்றவனும் நீடிய
மாக விமான தனியூர்ந்த மன்னவனும்
போக புரிபுரிந்த பூபதியும் மாகத்து
கூற வரிய மனுக்கொணர்ந்து கூற்றுக்கு
தேற வழக்குரைத்த செம்பியனும் மாறழி
தோடி மறலி யொளிப்ப முதுமக்க
சாடி வகுத்த தராபதியும் கூடார்தம்
தூங்கு மெயிலெறிந்த சோழனு மேல்கடலில்
வீங்குநீர் கீழ்கடற்கு விட்டோனும் ஆங்கு
பிலமதனிற் புக்குத்தன் பேரொளியா னாகர்
குலமகளை கைப்பிடித்த கோவும் உலகறி
காக்குஞ் சிறபுறவு கா களிகூர்ந்து
தூக்கு துலைபுக்க தூயோனும் மேக்குயர
கொள்ளுங் குட குவடூ டறுத்திழி
தள்ளு திரைப்பொன்னி தந்தோனும் தெள்ளருவி
சென்னி புலியே றிருத்தி கிரிதிரித்து
பொன்னி கரைகண்ட பூபதியும் இன்னருளின்
மேதக்க பொய்கை கவிகொண்டு வில்லவனை
பா தளைவிட்ட பார்த்திவனும் மீதெலாம்
எண்கொண்ட தொண்ணூற்றின் மேலு மிருமூன்று
புண்கொண்ட வென்றி புரவலனும் கண்கொண்ட
கோதிலா தேறல் குனிக்கு திருமன்றம்
காதலாற் பொன்வேய்ந்த காவலனும் தூதற்கா
பண்டு பகலொன்றி லீரொன் பதுசுரமும்
கொண்டு மலைநாடு கொண்டோனும் தண்டேவி
கங்கா நதியுங் கடாரமுங் கைக்கொண்டு
சிங்கா தனத்திருந்த செம்பியனும் வங்கத்தை
முற்று முரணடக்கி மும்மடிபோ கல்யாணி
செற்ற தனியாண்மை சேவகனும் பற்றலரை
வெப்ப தடுகளத்து வேழங்க ளாயிரமும்
கொப்ப தொருகளிற்றாற் கொண்டோனும் அப்பழநூல
பாடவர தென்னரங்க மேயாற்கு பன்மணியால்
ஆடவர பாய லமைத்தோனும் கூடல
சங்கமத்து கொள்ளு தனிப்பரணி கெண்ணிறந்த
துங்கமத யானை துணித்தோனும் அங்கவன்பின்
காவல் புரிந்தவனி காந்தோனு மென்றிவர்கள்
பூவலய முற்றும் புரந்ததற்பின் மேவலர்தம்
சேலை துரந்துசிலையை தடிந்திருகால்
சாலை களமறுத்த தண்டினான் மேலை
கடல்கொண்டு கொங்கணமுங் கன்னடமுன் கைக்கொண்
டடல்கொண்ட மாரா ரானை உடலை
இறக்கி வடவரையே யெல்லையா தொல்லை
மறக்கலியுஞ் சுங்கமு மாற்றி அறத்திகிரி
வாரி புவனம் வலமாக வந்தளிக்கும்
ஆரிற் பொலிதோ ளபயற்கு பார்விளங்க
தோன்றியகோன் விக்கிரம சோழன் றொடைத்தும்பை
மூன்று முரசு முகின்முழங்க நோன்றலைய
மும்மை புவனம் புரக்க முடிகவித்து
செம்மை தனிக்கோ றிசையளப்ப தம்மை
விடவு படுத்து விழுக்கவிகை யெட்டு
கடவு களிறு கவிப்ப சுடர்சேர்
இணைத்தார் மகுட மிறக்கி யரசர்
துணைத்தா ளபிடேகஞ் சூட பணைத்தேறு
நீராழி யேழு நிலவாழி யேழுந்தன்
போராழி யொன்றாற் பொதுநீக்கி சீராரும்
மேய் திகிரி விரிமே கலையல்குற்
றூய நிலமடந்தை தோள்களினும் சாயலின்
ஓது முலகங்க ளேழுங் தனித்துடைய
கோதில் குலமங்கை கொங்கையினும் போதில்
நிறைகின்ற செல்வி நெடுங்கண் களினும்
உறைகின்ற நாளி லொருநாள் அறைகழற்காற்
றென்னர் திறையளந்த முத்திற் சிலபூண்டு
தென்னர் மலையார சேறணிந்து
வரவிட்ட தென்ற லடிவருட வாட்கண்
பொரவிட்ட பேராயம் போற்ற விரவிட்ட
நித்தில பந்தர்க்கீழ் நீணிலா பாயலின்மேல்
தொத்தலர் மாலை துணைத்தோளும் மைந்தடங்
கண்ணு முலையும் பெரிய களியன்னம்
எண்ணு முலகங்க ளேழுடைய பெண்ணணங்கு
பெய்த மலரோதி பெண்சக்ர வர்த்தியுடன்
எய்திய பள்ளி யினிதெழுந்து பொய்யாத
பொன்னி திருமஞ் சனமாடி பூசுரர்கை
கன்னி தளிரறுகின் காப்பணிந்து முன்னை
மறைக்கொழுந்தை வெள்ளி மலைக்கொழுந்தை மோலி
பிறைக்கொழுந்தை வைத்த பிரானை கறைக்களத்து
செக்கர பனிவிசும்பை தெய்வ தனிச்சுடரை
முக்க கனியை முடிவணங்கி மிக்குயர்ந்த
அலங்காரங்கள் செய்துகொள்ளுதல்
தான துறைமுடித்து சாத்து தகைமையன
மான கலன்கள் வரவருளி தேன்மொய்த்து
சூழு மலர்முகத்து சொன்மா மகளுடனே
தாழு மகர குழைதயங்க வாழும்
தடமுலை பார்மடந்தை தன்னுடனே தோளிற்
சுடர்மணி கேயூரஞ் சூழ படரும்
தணிப்பில் பெருங்கீர்த்தி தைய லுடனே
மணிக்கடகங் கையில் வயங்க பிணிப்பின்
முயங்கு திருவுடனே முந்நீர் கொடுத்த
வயங்கு மணிமார்பின் மல்க உயங்கா
அருங்கொற்ற மாக்கு மணங்கி னுடனே
மருங்கிற் றிருவுடைவாள் வா பொருந்திய
அண்ணற் படிவ தரும்பே ரணியணிந்து
வண்ண தளவில் வனப்பமைந்து கண்ணுதலோன்
காமன் சிலைவணங்க வாங்கிய கட்டழகு
தாம முடிவணங்க தந்தனைய காமருபூங்
பட்டத்து யானை
கோல தொடும்பெயர்ந்து கோயிற் புறநின்று
கால ததிருங் கடாக்களிறு ஞாலத்து
தானே முழங்குவ தன்றி தனக்கெதிர்
வானே முழங்கினுமவ் வான்றடவி வானு
கணியு மருப்பு மடற்கையு மின்மை
தணியும் யமராச தண்டம் தணியா
பரிய பொருங்கோ டிணைத்து பணைத்தற்
கரிய தொருதானே யாகி
மலைக்கோ டனைத்து மடித்திடி குத்தும்
கொலைக்கோட்டு வெங்கால கோபம் அலைத்தோட
ஊறு மதந்தனதே யாக வுலகத்து
வேறு மதம்பொறா வேகத்தால் கூறொன்ற
தாங்கி பொறையாற்றா தத்தம் பிடர்நின்றும்
வாங்கி பொதுநீக்கி மண்முழுதும் ஓங்கிய
கொற்ற புயமிரண்டாற் கோமா னகளங்கன்
முற்ற பரித்ததற்பின் முன்புதாம் உற்ற
வருத்த மறமறந்து மாதிரத்து வேழம்
பருத்த கடாந்திறந்து பா பெருக்க
துவற்று மதுர சுவடிபிடி தோடி
அவற்றி னபரங்கண் டாறி இவற்றை
அளித்தன னெங்கோமா னாதலா லின்று
களித்தன வென்றுவக்குங் காற்று நௌித்திழிய
வேற்று புலத்தை மிதித்து கொதித்தமரில்
ஏற்று பொருமன்ன ரின்னுயிரை கூற்று
கருத்து மயிரா பதநின் றதனை
இருத்தும் பிடிபடியா வேறி திருத்தக்க
கொற்ற கவிகை நிழற்ற குளிர்ந்திரட்டை
கற்றை கவரியிளங் காலசைப்ப ஒற்றை
வலம்புரி யூத வளைக்குல மார்ப்ப
சிலம்பு முரசஞ் சிலம்ப புலம்பெயர்ந்து
வாட்படை கொட்ப மறவன் னவர்நடுங
கோட்புலி கொற்ற கொடியோங்க சேட்புலத்து
உடன் வருவோர்
தென்னரு மாளுவருஞ் சிங்களரு தேற்றுதகை
மன்னரு தோற்க மலைநாடு முன்னம்
குலை பொருதொருநா கொண்ட பரணி
மலை தருந்தொண்டை மானும் பலர்முடிமேல்
ஆர்க்குங் கழற்கா லனகன் றனதவையுள்
பார்க்கு மதிமந்த்ர பாலகரிற் போர்க்கு
தொடுக்குங் கமழ்தும்பை தூசினொடுஞ் சூட
கொடுக்கும் புகழ்முனையர் கோனும் முடுக்கரையும்
கங்கரையு மாரா டரையுங் கலிங்கரையும்
கொங்கரையு மேனை குடகரையும் தங்கோன்
முனியும் பொழுது முரிபுருவ தோடு
குனியுஞ் சிலைச்சோழ கோனும் சனபதிதன்
தோளுங் கவசமுஞ் சுற்றமுங் கொற்றப்போர்
வாளும் வலியு மதியமைச்சும் நாளுமா
மஞ்சை கிழித்து வளரும் பொழிற்புரிசை
கஞ்சை திருமறையோன் கண்ணனும் வெஞ்சமத்து
புல்லாத மன்னர் புலாலுடம்பை பேய்வாங்க
ஒல்லாத கூற்ற முயிர்வாங்க புல்லார்வம்
தாங்கு மடமகளிர் தத்தங் குழைவாங்க
வாங்கு வரிசிலைக்கை வாணனும் வேங்கையினும்
கூடார் விழிஞத்துங் கொல்லத்துங் கொங்கத்தும்
ஓடா விரட்டத்து மொட்டத்தும் நாடா
தடியெடுத்து வெவ்வே றரசிரிய வீர
கொடியெடுத்த காலிங்கர் கோனும் கடியரண
செம்பொற் பதணஞ் செறியிஞ்சி செஞ்சியர்கோன்
கம்ப களியானை காடவனும் வெம்பி
கலக்கிய வஞ்ச கலியதனை பாரில்
விலக்கிய வேணாடர் வேந்தும் தலைத்தருமம்
வாரி குமரிமுதன் மந்தா கினியளவும்
பாரி தவனனந்த பாலனும் பேரமரில்
முட்டி பொருதார் வடமண்ணை மும்மதிலும்
மட்டித்த மால்யானை வத்தவனும் அட்டையெழ
காதி கருநாடர் கட்டரணங் கட்டழித்த
சேதி திருநாடர் சேவகனும் பூதலத்து
முட்டிய தெவ்வர் சடைகட்ட மொய்கழல்
கட்டிய காரானை காவலனும் ஒட்டிய
மான வரச ரிரிய வடகலிங்க
தானை துணித்த வதிகனும் மீனவர்தம்
கோட்டாறுங் கொல்லமுங் கொண்ட குடைநுளம்பன்
வாட்டார் மதயானை வல்லவனும் மோட்டரண
கொங்கை குலைத்து குட குவடிடித்த
செங்கை களிற்று திகத்தனும் அங்கத்து
வல்லவனுங் கோசலுன மாளுவனு மாகதனும்
வில்லவனுங் கேரளனு மீனவனும் பல்லவனும்
என்னும் பெரும்போ ரிகல்வேந்தர் மண்டலிகர்
முன்னு மிருமருங்கு மொய்த்தீண்ட பன்மணிசேர்
குழாங்கள்
சோதி வயிர மடக்குஞ் சுடர்த்தொடியார்
வீதி குறுகுதலு மேலொருநாள் மாதவத்தோன்
சார்ந்த பொழுதனகன் றன்னை யறிவித்த
பூந்துவரை யந்த புரம்போன்றும் ஏந்தி
பரக்குங் கலையல்குற் பாவையரே யாணை
புரக்கு திருநாடு போன்றும் வரக்கருதா
ஏனை முனிக்குறும்பு கொல்ல விகன்மாரன்
சேனை திரண்ட திரள்போன்றும் கானலங்
கண்டன் மணற்குன்ற தன்ன கணம்போன்றும்
கொண்டலின் மின்னு குழாம்போன்றும் மண்டும்
திரைதொறு தோன்று திருக்குழாம் போன்றும்
வரைதொறுஞ் சேர்மயில்கள் போன்றும் விரைவினராய்
இந்து நுதல்வெயர்ப்ப வெங்கணுங் கண்பரப்பி
சிந்தை பரப்பி தெருவெங்கும் வந்தீண்டி
உத்தி சுடர வொளிமணி சூட்டெறி
பத்தி வயிரம் பரந்தெறிப்ப முத்தின்
இணங்கு மமுத கலசங்க ளேந்தி
வணங்கு தலையினராய் வந்து கணங்கொண்டு
பார்க்குங் கொடுநோக்கு நஞ்சுறைப்ப கிஞ்சுகவாய்
கூர்க்கு மெயிறுவெறுங் கோளிழைப்ப வேர்க்க
வரைகொ ணெடுமாட கீணிலையின் மல்கி
உரக வரமகளி ரொப்பார் விரல்கவரும்
வீணையும் யாழுங் குழலும் விசிமுழவும்
பாணி பெயர பதம்பெயர்த்து சேணுயர்
மஞ்சிவரும் வெண்பளிக்கு மாட திடைநிலையில்
விஞ்சையர் மாத ரெனமிடைவார் அஞ்சன
கண்ணிற் சிறிது மிமையாத காட்சியும்
மண்ணிற் பொருந்தா மலரடியும் தண்ணென்ற
வாடா நறுஞ்செவ்வி மாலையுங் கொண்டழகு
வீடா நிலாமுற்ற மேனிலையிற் கூடி
உருவி னொளியி னுணர்வி னுரையிற்
பொருவி லரமகளிர் போல்வார் அருகணைந்து
குழாங்களின் கூற்று
சீரள வில்லா திருத்தோ ளயன்படைத்த
பாரள வல்ல பணைப்பென்பார் பாருமின்
செய்ய வொருதிருவே யாளுஞ் சிறுமைத்தோ
வைய முடையபிரான் மார்பென்பார் கையிரண்டே
ஆனபோ தந்த முருகவே ளல்லனிவன்
வேனில்வேள் கண்டீ ரெனமெலிவார் யானெண்ணும்
எண்ணு கிசைய வருமே யிவனென்பார்
கண்ணிற் கருணை கடலென்பார் மண்ணளிக்கும்
ஆதி மனுகுலமிவ் வண்ணலான் மேம்படுகை
பாதியே யன்றா லெனப்பகர்வார் தாதடுத்த
கொங்கை பசப்பார் கோல்வளை காப்பார்போல்
செங்கை குவிப்பார் சிலர்செறிய அங்கொருத்தி
பேதை
வந்து பிறந்து வளரு மிளந்திங்கள்
கொந்து முகிழா கொழுங்கொழுந்து பைந்தழை
தோகை தொடாமஞ்ஞை சூடுண்டு தோற்றவன்மேல்
வாகை புனைய வளர்கரும்பு கோகுலத்தின்
பிள்ளை யிளவன்ன பேடை பிறந்தணிய
கிள்ளை பவளங் கிளைத்தகிளை கள்ளம்
தெரியா பெருங்க சிறுதேற றாயர
பிரியா பருவத்து பேதை பரிவோடு
பாவையு மானு மயிலும் பசுங்கிளியும்
பூவையு மன்னமும் பின்போத காவலன்
பொன்னி புகார்முத்தி னம்மனையு தென்னாகை
நன்னி திலத்தி னகைக்கழங்கும் சென்னிதன்
கொற்றை குளிர்முத்த வல்சியுஞ் சோறடுகை
கற்கைக்கு வேண்டுவன கைப்பற்றி பொற்கொடியார்
வீதி புகுந்து விளையாடு மெல்லைக்கண்
ஆதி யுகம்வ தடிக்கொள்ள மேதினிமேல்
ஊன்று கலிகடிந்த வுத்துங்க துங்கன்றன்
மூன்று முரச முகின்முழங்க வான்றுணை
தாயர் வரவந்து
தாயர் மொழிந்தனவே தான்மொழிந்தாள் சேயோன்
படியின் மதியும் பகலவனு தோற்கும்
முடியி லொருகாலு மூளா வடிவில்
மகிழ்ந்து மலராண் மலர்க்கண்ணு நெஞ்சும்
நெகிழ்ந்த திருநோக்கி னேரா முகிழ்ந்து
சிரிக்கு திருப்பவள சேயொளியூ டாடா
விரிக்கு திருநிலவின் வீழா பரிக்கும்
உலகம் பரவு திருப்புருவ தோரா
திலக முகாம்புயத்து சேரா பலவும்
திசையை நெருக்கு திருத்தோளிற் செல்லா
இசையு திருமார்ப தெய்தா வசையிலா
கைம்மலரிற் போகா வடிமலரின் கண்ணுறா
மெய்ம்மலர பேரொளியின் மீதுறா அம்மகள்
கண்ணு மனமுங் கழுநீர குலமுழுதும்
நண்ணு தொடையன்மே னாட்செய்ய உண்ணெகிழா
வம்மின்க ளன்னைமீர் மாலை யிதுவாங்கி
தம்மின்க ளென்றுரைப்ப தாயரும் அம்மே
பெருமானை யஞ்சாதே பெண்ணமுதே யாமே
திருமாலை தாவென்று செல்வேம்
யாங்கொள்ளும் வண்ண மௌிதோ வரிதென்ன
தேங்கொள்ளு மின்சொற் சிறியாளும் ஆங்குத்தன்
மார்வத்து கண்ணினீர் வார பிறர்கொள்ளும்
ஆர்வத்து கன்றே யடியிட்டாள் சேர
இருத்தி மணற்சோ றிளையோரை யூட்டும்
அருத்தி யறவே யயர்த்தாள் ஒருத்தி
பெதும்பை
மழலை தனது கிளிக்களித்து வாய்த்த
குழலி னிசைக்கவர்ந்து கொண்டாள் நிழல்விரவு
முன்னர் நகைதனது முல்லை கொளமுத்தின்
பின்னர் நகைகொண்ட பெற்றியாள் கன்னி
மடநோக்க தான்வளர்த்த மானு களித்து
விடநோக்கம் வேலிரண்டிற் கொண்டாள் சுடர்நோக்கும்
தானுடைய மெய்ந்நுடக்க தன்மா தவிக்களித்து
வானுடைய மின்னுடக்கம் வாங்கினாள் பூநறும்
பாவைகள் பைங்குர வேந்த பசுங்கிளியும்
பூவையு மேந்தும் பொலிவினாள் மேவும்
மடநடை யன்ன பெடைபெற கன்னி
பிடிநடை பெற்று பெயர்வாள் சுடர்கன
கொத்து குயின்ற கொடிப்பவள பந்தத்தின்
முத்து பொதியுச்சி முச்சியாள் எத்திறத்தும்
வீரவேள் போல்வாரை வீட்டி விழுத்தவர்மேல்
மாரவேள் கண்சிவப்ப வாய்சிவப்பாள் நேரொத்த
கோங்க முகையனைய கொங்கையா டன்கழுத்தாற்
பூங்கமுகை யிப்போது பொற்பழிப்பாள் பாங்கியரும்
கனா கூறுதல்
தாயரும் போற்றாமே தானே துயிலெழுந்து
பாயல் புடைபெயர்ந்து பையச்சென் றியாயே
தளரு மிடையொதுங்க தாழுங் குழைத்தாய்
வளரு மொருகுமரி வல்லி கிளரும்
கொழுந்து மளவிறந்த கொந்துங் கவினி
எழுந்து கிளைகலிப்ப வேறி தொழுந்தகைய
கொங்குடைய பொன்னடருஞ் சென்னி கொழுங்கோங்கின்
பங்குடைய மூரி பணையணைந்து தங்குடைய
வண்டு முரல மணநாற வைகுவது
கண்டு மகிழ்ந்தேன் கனவிலென கொண்டு
வருக மடக்கிள்ளை
தருக தருகவென தாயர் பெருக
விரும்பினர் புல்லி விரைய முலைவ
தரும்பின வாக தணங்கே பெரும்புயங்கள்
புல்லி விடாத புதுவதுவை சென்னியுடன்
வல்லி பெறுதி யெனவழுத்தும் எல்லை
அரச னபய னகளங்க னெங்கோன்
புரசை மதவரைமேற் போத முரசம்
தழங்கு மறுகிற் றமரோடு மோடி
முழங்கு முகின்மாட முன்றிற் கொழுங்கயற்க
பொன்னென வெல்லா வழகும் புனைவதொரு
மின்னென வந்து வௌிப்பட்டு மன்னருயிர்
உண்டாற் றியவேங்கை வைக்க வொருதிருக்கை
செண்டாற் கிரிதிரத்த சேவகனை தண்டாத
வேகங் கெடக்கலிவாய் வீழ்ந்தரற்றும் பார்மகளை
சோகங் கெடுத்தணைத்த தோளானை ஆகத்து
கொங்கை பிரியாத வீறோடுங் கேகானக
மங்கை பிரியாத மார்பானை அங்கமல
கையு மலரடியுங் கண்ணுங் கனிவாயும்
செய்ய கரிய திருமாலை தையலும்
கண்டகண் வாங்காள் தொழமுகிழ்ந்த கைவிடான்
மண்டு மனமீட்கு மாறறியாள் பண்டறியா
காமங் கல கலங்கி குழல்சரி
தாமஞ் சரி தனிநின்றாள் நாமவேற்
சேரனு மீனவனுஞ் சேவிப்ப செம்பியரில்
வீரனு மல்வெல்லை விட்டகன்றான் மாரனும்
தக்கு தகாதாளை யெய்து தரைப்படுத்த
புக்கு தொடைமடக்கி போயினான் மைக்குழல்
மங்கை பருவ தொருத்தி மலர்பொதுளுங்
கங்கை புளின களியன்னம் எங்கோனை
மன்னனை மன்னர் பிரானை வரோதயனை
தென்னனை வானவனை செம்பியனை முன்னொருநாள்
கண்ட பெதும்பை பருவத்தே தன்கருத்தாற்
கொண்ட பரிவு கடைக்கூட்ட புண்டரிக
செய்ய வடிமுதலா செம்பொன் முடியளவும்
மைய லகல மனத்திழைத்து கையினால்
தீட்டுங் கிழியிற் பகற்கண் டிரவெல்லாம்
காட்டுங் கனவு தரக்கண்டு நாட்டங்கொண்
டியாதொன்றுங் காணா திருப்பாள் பொருகளிற்று
தாதொன்று தொங்கற் சயதுங்கன் வீதி
வருகின்றா னென்று மணியணிகள் யாவும்
தருகென்றாள் வாங்கி தரித்தாள் விரிகோதை
சூடினாள் பைம்பொற் றுகிலுடுத்தாள் சந்தனச்சே
றாடினா டன்பே ரணியணிந்தாள் சேடியர்
மங்கை தன்னையே ஐயுறுதல்
காட்டும் படி கமலத்து கமலத்தை
ஓட்டும் வதன தொளிமலர்ந்து கேட்டு
விடைபோ மனங்கன்போல் வேல்விழிக டாமும்
படைபோய் வருவனபோற் பக்கம் கடைபோய்
மறித்து மதர்மதர்த்து வார்கடிப்பு வீக்கி
எறிக்குங் குழைக்காதிற் கேற்றும் நெறிக்கும்
அளக முதலாக வைம்பாற் படுத்த
வளர்கருங் கூந்தன் மலிந்துங் கிளர
அரியன நித்திலத்தி னம்பொற் றோடித்தோள்
பரியன காம்பிற் பணைத்தும் தெரியற்
சுவடு படுகளப தொய்யில்சூழ் கொங்கை
குவடு படவெழுச்சி கொண்டும் திவடர
முந்துங் கலையல்குன் மூரி தடமகன்றும்
நொந்து மருங்கு னுடங்கியும் வந்து
மிடையும் புதுவனப்பு விண்ணோரும் வீழ
அடையு தனதுருக்கண் டஞ்சி கொடையனகன்
பண்டறியு முன்னை பருவ துருவத்து
கண்டறியு மவ்வடிவு காண்கிலேன் பண்டறியும்
முன்னை வடிவு மிழந்தேன் முகநோக்கி
என்னை யறிகலன்யா னென்செய்கேன் தன்னை
வணங்கி வருவ தறிவ னெனவ
திணங்கு மகளி ரிடைநின் றணங்கும்
இறைவ னகளங்க னெங்கோன் குமரி
துறைவ னிருபகுல துங்கன் முறைமையால்
காக்குங் கடல்கடைந்த கைம்மலரு முந்திமலர்
பூக்கு முலகளந்த பொற்கழலும் நோக்கும்
திருக்கொள்ளு மார்பமு தெவ்வேந்த ரெல்லாம்
வெருக்கொள்ளு மூரித்தோள் வெற்பும் உருக்கும்
மகர குழைக்காது மாதரார் மாமை
நுகர புடைபெயரு நோக்கும் துகிரொளியை
வௌவிய கோல மணிவாயு மெப்பொழுதும்
செவ்வி யழியா திருமுகமும் எவ்வுருவும்
மாறுபடா வண்ணமுந்தன் வண்ண படிவத்து
வேறு படுவனப்பு மெய்விரும்பி தேறி
பிறையாம் பருவத்து பேருவகை யாம்பல்
நிறையா மதிக்கு நெகிழ்ந்தாங் கிறைவனை
கண்டு மனமு முயிருங் களிப்பளவிற்
கொண்டு பெயர்ந்து கொல்யானை பண்டு
நனவு கிழியிற் பகற்கண்டு நல்ல
கனவு தரவிரவிற் கண்டு மனமகிழ்வாள்
தீட்ட முடியாத செவ்வி குறிக்கொள்ளும்
நாட்ட முறங்கா மையுநல்க மீட்டு
பெயர்ந்தா டமர்தம் பெருந்தோள் களில்வீழ
தயர்ந்தா ளவணிலையீ தப்பாற் சயந்தொலைய
மடந்தை
வெந்து வடிவிழந்த காமன் விழிச்சிவப்பு
வந்து திரண்டனைய வாயினாள் அந்தமில்
ஓல கடலேழு மொன்றா யுலகொடுக்கும்
கால கடையனைய கட்கடையாள் ஞாலத்தை
வீட்டி வினைமுடிக்க வெங்கால தூதுவர்கள்
கோட்டி யிருக்குங் குவிமுலையாள் நாட்ட
வடிவின் மருங்குலான் மாரனைப்போன் மேலோர்
முடிவு லுணர்வை முடிப்பாள் கடிதோடி
போகா தொழியா திடையென்று போய்முடியல்
ஆகாமை கைவளரு மல்குலாள் பாகாய
பந்தாடுதல்
சொல்லி யொருமடந்தை தோழியை தோள்வருந்த
புல்லி நிலாமுற்றம் போயேறி வல்லிநாம்
சேடிய ரொப்ப வகுத்து திரள்பந்து
கோடியர் கண்டுவப்ப கொண்டாடி ஓடினால்
என்மாலை நீகொள்வ தியாங்கொள்வ தெங்கோமான்
தன்மாலை வாங்கி தருகென்று மின்னனையான்
வட்டி தளகமுங் கொங்கையும் வார்தயங
கட்டி கனபந்து கைப்பற்றி ஒட்டி
பொருதிறத்து சேடியர்தம் போர்தொலை தானே
இருதிறத்து கந்துகமு மேந்தி பெரிதும்
அழுந்து தரள தவைதன்னை சூழ
விழுந்து மெழுந்து மிடைய எழுந்துவரி
சிந்த விசிறு திரையி னுரையூடு
வந்த வனச மகளேய்ப்ப முந்திய
செங்காந்த ளங்கை சிவக்குஞ் சிவக்குமென்
றங்காந்து தோள்வளைக ளார்ப்பெடுப்ப தங்கள்
நுடங்குங் கொடிமருங்கு னொந்தசைந்த தென்றென்
றடங்குங் கலாப மரற்ற தொடங்கி
அரிந்த குரலினவா யஞ்சீ றடிக்கு
பரிந்து சிலம்பு பதைப்ப விரிந்தெழும்
கைக்கோ விடைக்கோ கமல மலரடிக்கோ
மைக்கோல வோதியின்மேல் வண்டிரங்க அக்கோதை
பந்தாடி வென்று பருதி யகளங்கன்
சந்தாடு தோண்மாலை தாவென்று பைந்துகிற்
றானை பிடித்தலைக்கும் போதிற் றனிக்குடைக்கீழ்
யானைமேல் வெண்சா மரையிரட்ட சேனை
மிடை பவளமு நித்திலமு மின்ன
அடை பணிலங்க ளார்ப்ப புடைபெயர
வார்ந்து மகர வயமீன் குலமுழுதும்
போந்து மறுகு புடைபிறழ சேர்ந்து
பதலை முழங்க பகட்டேற்றி விட்ட
மதலைகண் முன்னர் மலிய விதலையரா
தாழு தொழிலிற் கிளைபுரக்க தன்னடைந்து
வாழும் பரதர் மருங்கீண்ட வீழுந்தி
கன்னியு நன்மதையுங் கங்கையுஞ் சிந்துவும்
பொன்னியு தோயும் புகார்விளங்க மன்னிய
செங்கோற் றியாக சமுத்திர நண்ணுதலும்
தங்கோ மறுகிற் றலைப்பட்டு தங்களில்
ஒட்டிய வொட்ட முணராதே தோள்வளையும்
கட்டிய மேகலையுங் காவாதே கிட்டி
தொழுதா ளயர்ந்தா டுளங்கினாள் சோர்ந்தாள்
அழுதா ளொருதமிய ளானாள் பழுதிலா
காக்கு துகிலு மிலங்கு பொலன்கலையும்
போக்கு நிதம்பம் புனைகென்று வீக்கும்
மணிக்கச்சு தம்முடைய வான்றூசுங் கொங்கை
பணி கடைக்கண் பாரா அணிக்கமைந்த
குன்றாத நித்தில கோவையும் பொன்னிறத்த
பொன்றாத பட்டும் புனைகென்று நின்று
கொடுத்தன கொங்கைகளுங் கொண்டன தானும்
அடுத்தனர் தோண்மே லயர்ந்தாள் கடுத்து
கவரு மனங்கனுடன் கைகலந்த தன்றி
தவரு முதுகிளவி தாய ரவரெங்கும்
கூசினார் சந்தம் பனிநீர் குழைத்திழைத்து
பூசினா ராலி பொழிந்தொழிந்தார் வீசினார்
இட்டார் நிலவி லிளந்தென் றலுங்கொணர்ந்து
சுட்டார் குளரி தொகுத்தெடுத்தார் விட்டாரோ
பள்ள மதனிற் படரும் பெரும்புனல்போல்
உள்ள முயிரை யுடன்கொண்டு வள்ளல்பின்
ஓதை மறுகி லுடன்போன போக்காலி
பேதை நடுவே பிழைத்தொழிந்தாள் மாதரில்
அரிவை
வாரி படுமமுத மொப்பாண் மதுகரஞ்சூழ்
வேரி கமழ்கோதை வேறொருத்தி மூரித்தேர
தட்டுஞ் சிறுக பெருகி மரகதத்தாற்
கட்டுங் கனபொற் கலாபாரம் பட்டும்
துகிலுங் கரப்ப சுடர்பரப்ப கைபோய்
அகில்கின்ற வல்கு லரிவை இகலி
ஒருக்கி மருங்குகடி தொன்றினைவ தொன்று
நெருக்கிய மாமை நிரம்பி தருக்கி
இடங்கொண்டு மின்னு கொடியொன் றிரண்டு
குடங்கொண்டு நின்றதென கூற தடங்கொண்
டிணைத்து ததும்பி யிளையோர்க ணெஞ்சம்
பிணைத்து தடமுகட்டிற் பெய்து பணைத்து
பெருமை யுவமை பிறங்கொலிநீர் ஞால
தருமை படைத்ததன தன்னம் கருமை
எறித்து கடைபோ யிருபுடையு மெல்லை
குறித்து குழையளவுங் கொண்டு மறித்து
மதர்த்து வரிபரந்து மைந்தர் மனங்கள்
பதைத்து விழநிறத்திற் பட்டு ததைத்த
கழுநீர் மலரின் கவினழித்து மானின்
விழிநீர்மை வாய்த்த விழியாள் முழுதும்
நெறிந்து கடைகுழன்று நெய்த்திருண்டு நீண்டு
செறிந்து பெருமுருகு தேக்கி நறுந்துணர்
வார்ந்து கொழுந்தெழுந்த வல்லியாய் மாந்தளிர்
சோர்ந்து மிசையசைந்த சோலையா சேர்ந்து
திருவிருந்து தாமரையா சென்றடைந்த வண்டின்
பெருவிருந்து பேணுங் குழலாள் பொருகளிற்றின்
வந்து மறுகி லொருநாண் மனுகுலத்தோன்
தந்த பெரிய தனிமைக்கண் செந்தமிழ
கோனே கவர்ந்தெம்மை கொண்டனன் வந்தெமக்கு
தானே தரிற்றருக வென்பனபோல் பூநேர்
இணைக்கையு தோளு மிடுதொடிக ளேந்தா
துணைக்கண் டுயிற்ற துயிலா மணிக்கூந்தல்
போது மறந்தும் புனையா பொலங்கச்சு
மீது படத்தரியா வெம்முலைகள் சோதி
அடுக்குங் கனபொற் றுகில்பேணா தல்குல்
கொடுக்குங் தெருணெஞ்சு கொள்ளா தெடுக்கும்
கருப்பு சிலையனங்கன் கையம்பால் வீழும்
நெருப்பு குருகி நிறைபோய் இருப்புழி
பாடிய பூவைக்கும் யாதும் பரிவின்றி
ஆடிய தோகைக்கு மன்பின்றி கூடிய
கிள்ளைக்கு தம்மிற் கிளரு மிளவன்ன
பிள்ளைக்குகு மாற்றான் பெயர்ந்துபோ கொள்ளை
பயக்கு மலர்க்குரவ பந்தர படப்பை
நயக்கு மிளமரக்கா நண்ணி வயக்களிற்று
மன்னன் குலப்பொன்னி வைகலு மாடுதிரால்
அன்னங்கா ணீரென் றழிவுற்றும் சென்னி
பெருகும் புகாரடை பெற்றீரான் மற்றை
குருகுகா ளென்று குழைந்தும் கருகிய
நீல குயிலினங்கா ணீர்போலுஞ் சோணாட்டு
சோலை பயில்வீ ரெனத்துவண்டும் பீலிய
பேரியன் மஞ்ஞை பெறுதிராற் கொல்லியும்
நேரியுஞ் சேர வெனநெகிழ்ந்தும் நேரியன்
தண்டுணர்ப்பே ராரம் பலகாலு தைவந்து
வண்டுகாள் வாழ்வீ ரெனமருண்டும் தொண்டிக்கோன்
மன்றன் மலயத்து வாளருவி தோய்ந்தன்றே
தென்றல் வருவ தெனத்திகைத்தும் நின்றயர்கால்
மன்னர்க்கு மன்னன் வளவ னகளங்கள்
முன்னர பணில முழங்குதலும் மின்னிற்போய்
பேணு திருமடனு மென்றும் பிரியாத
நாணும் பெருவிருப்பா னல்கூர காணுங்கால்
ஏய்ப்ப வெதிர்வந்து விரவி யுருவவொளி
வாய்ப்ப முகபங் கயமலர்ந்தாள் போய்ப்பெருகும்
மீதா ரகலல்குல் வீழ்கின்ற மேகலையும்
போதாத வண்ணம் புடைபெயர்ந்தாள் சோதி
குழைய நடுவொடுக்குங் கொங்கையு தோளும்
பழைய படியே பணைத்தான் பிழையாத
பொன்னி துறைவன் பொலந்தார் பெறத்தகுவார்
தன்னிற் பிறரின்மை சாதித்தாள் சென்னிக்கு
பாராண் முலையாலும் பங்கயத்தா டோளாலும்
வாரா விருப்பு வருவித்தான் ஓராங்கு
தெரிவை
கோது விரவா கொழும்பாகு கொய்தளிரீன்
போது புலரா பொலங்கொம்பு மீது
முயலா லழுங்கா முழுத்திங்கள் வானிற்
புயலா லழுங்கா புதுமின் இயல்கொண்
டெழுதாத வோவிய மேழிசைய வண்டு
கொழுதாத கற்பகத்தின் கொம்பு முழுதும்
இருளா கலாப திளந்தோகை யென்றும்
தெருளா களியளிக்கு தேறல் பொருளால்
வருந்த கிடையாத மாணிக்கம் யார்க்கும்
அருந தெவிட்டா வமுதம் திருந்திய
சோலை பசுந்தென்ற றூதுவர வந்தி
மாலை பொழுதுமணி மண்டபத்து வேலை
விரிந்த நிலாமுன்றில் வீழ்மகர பேழ்வாய்
சொரிந்த பனிக்கற்றை தூங்க பரிந்துழையோர்
பூசிய சாந்தங் கமழ பொறிவண்டு
மூசிய மௌவன் முருகுயிர்ப்ப தேசிக
பேரிசை யாழ்ப்பாணன் பேதை விறலியொடும்
சேர வினிதிருந்த செவ்விக்கண் நேரியும்
தசாங்கம்
கோழியும் வேங்கையு முப்பணையுங் கோரமும்
பாழி யயிரா பதப்பகடும் ஆழியான்
சூடிய வாரமு மாணையுஞ் சோணாடும்
காடு திரைத்தெறியுங் காவிரியும் பாடுகென
கூன லியாழெடுத்தான் பாணன் கொதித்தெழுந்து
வேன லரசனுந்தன் வில்லெடுத்தான் தேனியிர்
தந்திரி யாழ்ப்பாணன் றைவந்தான்
வெந்திறன் மாரனுந்தன் வில்லினாண் முந்த
நிறைநரம்பு பண்ணி நிலைதெரிந்தான் பாணன்
திறன்மதனு மம்பு தெரிந்தான் விறலியொடும்
பாண னெருபாணி கோத்தான் பலகோத்தான்
தூணி தொலை சுளிந்துவேள் மாண
இசைத்தன பாண னியாழ்ப்பாணி யெய்து
விசைத்தன வேனிலான் பாணி விசைத்தெழுந்த
வீணை யிசையாலோ வேனிலா னம்பாலோ
வாணுதல் வீழா மதிமயங்கா சேணுலாம்
வாடை யனைய மலயா நிலந்தனையும்
கோடை யிதுவென்றே கூறினான் நீடிய
வாரை முனிந்த வனமுலைமேல் விட்டபனி
நீரை யிதுவோ நெருப்பென்றான் ஊரெலாம்
காக்கு துடியை யழிக்குங் கணைமாரன்
தாக்கும் பறையென்றே சாற்றினாள் சேக்கைதொறும்
வாழு முலக தெவரு மனங்களிப்ப
வீழு நிலவை வெயிலென்றாள் கோழிக்கோன்
எங்கோ னகளங்க னேழுலகுங் காக்கின்ற
செங்கோல் கொடுங்கோல் சிலர்க்கென்றான் கங்குல்
புலரு தனையும் புலம்பினா ளாங்கு
பலரும் பணிந்து பரவ குலகிரிசூழ்
ஆழி புவன மடைய வுடையபிரான்
சூழி கடாயானை தோன்றுதலும் யாழின்
யானையை நோக்கி கூறுதல்
இழைக்கு மிசைமுதலா மெப்பகைக்கு மாற்றா
துழைக்கு முயிர்தழைப்ப வோடி பிழைத்னளாய்
முட்டு திகிரி கிரியின் முதுமுதுகிற்
கட்டுங் கடவு கடாயானை யெட்டும்
தரிக்கு முலக தனிதரித்த கோனை
பரிக்கு மயிரா பதமே செருக்கி
பொருந்த நினையாத போர்க்கலிங்க ரோடி
இருந்த வடவரைக ளெல்லாம் திருந்தா
விதையம் பொருதழிந்த விந்தமே போல
புதைய நடந்த பொருப்பே சிதையாாத
திங்க குலத்திற்கு தெய்வ பொதியிற்கும்
அங்க பழங்குமரி யாற்றிற்கும் தங்கள்
படிக்கும் பொருநிருப பன்னகங்கள் வீழ
இடிக்கு தனியசனி யேறே கடிப்பமைந்த
யாம முரசா லிழந்த நிறைநினது
தாம முரசு தரப்பெற்றேன் நாம
விடைமணி யோசை விளைத்தசெவி புண்ணின்
புடைமணி யோசை புலர்ந்தேன் தடைமுலைமேல்
ஆறா மலயக்கா லட்டசூ டுன்செவியில்
மாறா பெருங்காற்றான் மாற்றினேன் வேறா
கூசும் பனித்திவலை கொண்டுபோ மென்னுயிர்நீ
வீசு மதத்திவலை யான்மீட்டேன் மூசிய
காருலா மோத கடல்முழங்க வந்ததுயர்
நேரிலா நீமுழங்க நீங்கினேன் பேரிரவில்
என்மே லனங்கன் பொரவந்த வின்னலெல்லாம்
நின்மே லன்கன்வர நீங்கினேன் இன்னும்
கடைபோல வென்னுயிரை காத்தியேல் வண்டு
புடைபோக போதும் பொருப்பே விடைபோய்நீ
ராட்டு தடங்கலக்கின் மாரற் கயில்வாளி
காட்டு தடமே கலக்குவாய் கேட்டருளாய்
கார்நாணு நின்கடத்து வண்டொழி காமனார்
போர்நாணின் வண்டே புடைத்துதிர்ப்பாய் பார்நாதன்
செங்கை கரும்பொழி தின்கை கனங்கனார்
வெங்கை கரும்பே விரும்புவாய் எங்க
குயிரா யுடலா யுணர்வாகி யுள்ளாய்
அயிரா பதமேநீ யன்றே பெயராது
நிற்கண்டா யென்றிரந்து நின்றா ணுதலாக
விற்கொண்ட பேரிளம்பெண் வேறொருத்தி கொற்கையர்கோன்
பேரிளம் பெண்
மல்லற் புயத்தினகன் மால்யானை கைபோல
கொல்ல திரண்ட குறங்கினாள் எல்லையில்
கோடுங் கொலைகுயின்ற சேடன் குருமணிவே
தாடும் படமனைய வல்குலான் சேடியா
தம்மை யெடுக்கு மிடைகடிந்த தம்பழிக்கு
கொம்மை முகஞ்சாய்த்த கொங்கையாள் செம்மை
நிறையு மழகா னிகரழித்து செய்யாள்
உறையு மலர்பறிப்பா ளொப்பாள்ன் நறைகமழும்
மாலை பலபுனைந்து மான்மத சாந்தெழுதி
வேலை தருமுத்த மீதணிந்து சோலையில்
மானு மயிலு மனைய மடந்தையரும்
தானு மழகு தரவிருப்ப தேனிமிர்
ஊற விளம்பாளை யுச்சி படுகடு
தேறல் வழிந்திழிந்த செவ்விக்கண் வேறாக
வாக்கி மடனிறைத்து வண்டு மதுநுரையும்
போக்கி யொருத்தி புகழ்ந்துகா நோக்கி
வருந்தி சிறுதுள்ளி வள்ளுகிரா வெற்றி
அருந்தி தமர்மே லயர்ந்தாள் பொருந்தும்
மயக்கத்து வந்து மனுதுங்க துங்கன்
நயக்க தகுங்கனவு நல்கும் முயக்கத்து
மிக்க விழைவு மிகுகளிப்பு மத்துயிலும்
ஒக்க விகல வுடனெழுந்து பக்கத்து
வந்து சுடரு மொருபளிக்கு வார்சுவரில்
தந்த தனதுநிழ றானோக்கி பைந்துகிர
காசுசூ ழல்குற் கலையே கலையாக
தூசு புடைபெயர்ந்து தோணெகிழ்ந்து வாசஞ்சேர்
சூடிய மாலை பரிந்து துணைமுலைமேல்
ஆடிய சாந்தி னணிசிதைந்து கூடிய
செவ்வாய் விளர்ப்ப கருங்கண் சிவப்பூர
வெவ்வா ணுதலும் வெயரரும்ப இவ்வாறு
கண்டு மகிழ்ந்த கனவை நனவா
கொண்டு பலர்க்குங் குலாவுதலும் வண்டுசூழ்
வேரி கமழ்கோதை வேறாக தன்மனத்திற்
பூரித்த மெய்யுவகை பொய்யாக பாரித்த
தா கவிகை நிழற்ற சயதுங்கன்
நா கடாக்களிற்று நண்ணுதலும் தேமொழியும்
கண்டதுங் கெட்டேன் கனவை நனவா
கொண்டது மம்மதுச்செய் கோலமே பண்டுலகிற்
செய்த தவஞ்சிறிது மில்லாத தீவினையேற்
கெய்த வருமோ விவையென்று கைதொழுது
தேறி யொருகாலு தேறா பெருமையல்
ஏறி யிரண்டா வதுமயங்கி மாறிலா
தோழியர் தோண்மே லயர்ந்தாள தோழியரும்
ஏழுயர் யானை யெதிரோடி ஆழியாய்
மாட புகாருக்கும் வஞ்சிக்குங் காஞ்சிக்கும்
கூடற்குங் கோழிக்குங் கோமானே பாடலர்
சாரு திகிரி தனையுருட்டி யோரேழு
பாரும் புரக்கும் பகலவனே சோர்வின்றி
காத்து குடையொன்றா லெட்டு திசைகவித்த
வேத்து குலகிரியின் மேருவே போர்த்தொழிலால்
ஏனை கலிங்கங்க ளேழனையும் போய்க்கொண்ட
தானை தியாக சமுத்திரமே மானப்போர்
இம்ப ரெழுபொழில் வட்ட திகல்வேந்தர்
செம்பொன் மவுலி சிகாமணியே நம்பநின்
பாரிற் படுவன பன்மணியு நின்கடல்
நீரிற் படுவன நித்திலமும் நேரியநின்
வெற்பில் வயிரமும் வேந்தநின் சோணாட்டு
பொற்பின் மலிவன பூந்துகிலும் நிற்பணி
கொண்டா யிவடனது கொங்கை கொழுஞ்சுணங்கும்
தண்டா நிறையு தளிர்நிறமும் பண்டை
துயிலுங் கவர்ந்ததுநின் தொல்குலத்து வேந்தர்
பயிலு திருநூற் படியோ புயல்வளவ
மன்னிய தொண்டை வளநாடு வாளியும்
பொன்னி வளநாடு பூஞ்சிலையும் கன்னி
திருநாடு தேருங் குறையறுப்ப செய்தால்
திருநாண் மடமகளிர் தம்மை ஒருநாளவ்
வேனற் கரசன் விடுமே யவன்சினமி
பானற்கண் ணல்லா ளுயிர்ப்பரமே ஆனக்கால்
குன்றே யெனத்தகுநின் கோபுரத்திற் றூங்குமணி
ஒன்றே யுலகு கொழியுமே என்றினைய
கூறி வணங்கிடு மிவ்வளவுங் கோதையர்மேற்
சீறி யனங்கன் சிலைவளைப்ப மாறழி
குத்துங் கடாக்களிற்று போந்தான் கொடைச்சென்னி
உத்துங்க துங்க னுலா
வெண்பா
கையு மலரடியுங் கண்ணுங் கனிவாயும்
செய்ய கரிய திருமாலே வையம்
அளந்தா யகளங்கா வாலிலைமேற் பள்ளி
வளர்ந்தாய் தளர்ந்தாளிம் மான்
விக்கிரம சோழனுலா முற்றிற்று

குலோத்துங்க சோழனுலா
தேர்மேவு பாய்புரவி பாசடை செங்கமலம்
போர்மேவு பாற்கடற் பூத்தனையோன் பார்மேல்
மருள பசுவொன் றின் மம்மர்நோய் தீர
உருளு திருத்தே ருரவோன் அருளினாற்
பேரா பெரும்பகை தீர பிறவேந்தர்
ஊரா குலிர விடையூர்ந்தோன் சோரா
துயில்கா தரமகளிர் சோர்குழைகா தும்பர்
எயில்காத்த நேமி யிறையோன் வெயில்காட்டும்
அவ்வா னவர்கோ னொருமணி யாசனத்தில்
ஒவ்வாம லேத்த வுடனிருந்தோன் கல்வை
எழக்குரைக்கும் பேழ்வா யிருங்கூற்று கேற்ப
வழக்குரைக்குஞ் செங்கோல் வளவன் பழக்கத்தாற்
போந்த புலியுடனே புல்வா யொருதுறைநீர்
மாந்த வுலகாண்ட மன்னர்பிரான் காந்தெரியில்
வெந்தா ருயிர்பெற் றுடல்பெற்று விண்ணாள
மந்தா கினிகொணர்ந்த மன்னர்கோன் முந்தி
பொருதேர்க ளீரைந்தி னீரைவர் போர்பண்
டொருதேரால் வென்ற வுரவோன் கருதி
மலைபத்தும் வெட்டு முருமின் உறவோன்
தலைபத்தும் வெட்டுஞ் சரத்தோன் நிலைதப்பா
மீளி தலைகொண்ட தண்டத்தான் மீளிக்கு
கூளி தலைபண்டு கொண்டகோன் நாளும்
பது கடவுள் படைப்படை காத்த
முதுமக்க சாடி முதலோன் பொதுமட்க
வாங்கொயி னேமி வரையாக மண்ணாண்டு
தூங்கெயில் கொண்ட சுடர்வாளோன் ஓங்கிய
மால்கடற் பள்ளி வறிதாக மண்காத்து
மேல்கடல் கீழ்கடற்கு விட்டகோன் கோல்கொன்
றலையெறியுங் காவேரி யாற்று படைக்கு
மலையெறியு மன்னர்க்கு மன்னன் நிலையறியா
தொல்லார் கலைவலை தோள்வலைய முன்றிருந்த
வில்லா னடுவுள்ள வெற்பெடுத்தோன் ஒல்லை
கொலையே நுடம்படை கொய்தாலு மெய்தா
துலையேறி வீற்றிருந்த தோன்றல் தலையேறு
மண்கொண்ட பொன்னி கரைகாட்ட வாராாதாள்
கண்கொண்ட சென்னி கரிகாலன் எண்கொள்
பணம்புணர்ந்த மோலியான் கோமகளை பண்டு
மணம்புணர்ந்த கிள்ளி வளவன் அணங்கு
படுத்து பொறையனை பொய்கைக்கு பண்டு
கொடுத்து களவழிப்பா கொண்டோன் அடுத்தடுத்து
சீறுஞ் செருவிற் றிருமார்பிற் றொண்ணூறும்
ஆறும் படுதழும்பி னாகத்தோன் ஏற
பிரம வரக்க னகலம் பிளந்து
பரமர் திருத்தில்லை பார்த்தோன் நரபதியர்
தாழமுன் சென்று மதுரை தமிழ்ப்பதியும்
ஈழமுங் கொண்ட விகலாளி சூழ்வும்
ஏறி பகலொன்றி லெச்சுரமும் போயுதகை
நூறித்தன் றூதனை நோக்கினான் வேறா
கங்கா நதியுங் கடாரமுங் கைவர
சிங்கா தனத்திருந்த செம்பியர்கோன் எங்கோன்
புவிராச ராசர் மனுமுதலோர் நாளில்
தவிராத சுங்க தவிர்த்தோன் கவிராசர்
போற்றும் பெரியோ னிவன்பின்பு பூதலங்கள்
ஆற்று திருந்தோ ளகளங்கன் வேற்றார்
விரும்பரணில் வெங்களத்தி வேட்டு கலிங்க
பெரும்பரணி கொண்ட பெருமான் தரும்புதல்வன்
கொற்ற குலோத்துங்க சோழன் குவலயங்கள்
முற்ற புரக்கு முகில்வண்ணன் பொற்றுவரை
இந்து மரபி லிருக்கு திருக்குலத்தில்
வந்து மனுகுலத்தை வாழ்வித்த பைந்தளிர்க்கை
மாதர பிடிபெற்ற வாரணமவ் வாரணத்தின்
காதற் பெயரன் கனகளபன் யாதினும்
தீட்ட கரிய திருவே திருமாலை
சூட்ட திருமகுடஞ் சூடியபின் நாட்டு
முறைவிட்ட வேற்று முடிமன்னர் தத்தம்
சிறைவி டரசருளி செய்து கறைவிட்டு
மைஞ்ஞாசு மெட்டு மதநாக மோரொட்டும்
பைஞ்ஞாசு மெட்டும் பரந்தீர இஞ்ஞாலம்
தாதைக்கு பின்பு தபனற்கு தோலாத
போ திமிர பொறைநீக்கி மாதரில்
ஒக்க வபிடேகஞ் சூடு முரிமைக்கண்
தக்க தலைமை தனித்தேவி மிக்க
புவனி முழுதுடைய பொற்றொடியு தானும்
அவனி சுரர்கருதி யார்ப்ப நவநிதிதூய்
தில்லையிற் செய்த திருப்பணிகள்
ஏத்து தருங்கடவு ளெல்லையி லானந்த
கூத்து களிகூர கும்பிட்டு போத்தின்மேற்
றில்லை திருமன்ற முன்றிற் சிறுதெய்வ
தொல்லை குறும்பு தொலைத்தெடுத்து மல்லற்
றசும்பு வளர்கனி தண்பெரு நாவல்
அசும்பு பசும்பொ னடுக்கி பசும்பொன்
அலகை யிகந்த அசலகுல வச்ர
பலகை தது பதித்து மலர்கவிகை
காக்குங் கடலேழின் முத்தும் வரகங்கை
தூக்கு மருவியிற் சூழ்போக்கி நோக்கம்
தொடுக்குஞ் சிரச்சேடன் சூடா மணிகொண்
டெடுக்கு திருத்தீப மேற்றி அடுக்கிய
தூய வயிரத்தால் வாவியா சூழ்கடந்த
பாய மரகத்தாற் பாசடையா தூய
பருமுத்தா வாலியா பற்பரா கத்தால்
திருமிக்க செந்தா மரையா பெருவர்க்க
நீலத்தால் வண்டி னிரையா யுரையிருந்த
கோலத்தாற் கோயிற் பணி குயிற்றி சூலத்தான்
ஆடு திருப்பெரும்பே ரம்பலமுங் கோபுர
மாடம் பரந்தோங்கு மாளிகையும் கூடி
பொலங்கோட்டு மாமேரு பூதரமும் போய
வலங்கோ டிகிரியு மான தலங்கொள்
நிலையேழு கோபுரங்க ணேரே நெருங்க
மலையேழு மென்ன வகுத்து தலையில்
மகரங்கொள் கோபுரங்கண் மாக விமான
சிகரங்க ளாகி திகழ நிகரில்
எரிபொற் படர்பாறை யென்னலா யெங்கும்
விரிபொற் றிருமுற்ற மின்ன சொரிபொற்
கடார பனிநீர் கவினி கனபொற்
றடாகங்க ளாகி ததும்ப விடாதுநின்
றற்பக லாக வனந்த சதகோடி
கற்பக சாதி கதிர்கதுவ பொற்பூண்
வரமகளிர் தத்தம் பணிமுறைக்கு வந்த
சுரமகளி ராகி துறும ஒருதான்
பிறக்கு மி பெருங்கடவு குன்றம்
மறக்கும் படிசெல்வ மல்க சிறக்கும்
இருக்காதி யெம்மறையு மெவ்வுலகு மீன்றாள்
திருக்கா கோட்ட திகழ்வி தருக்கர்
புனையா மணியாலும் பொன்னாலு மின்ன
மனையாலோ ரோர்தேர் வகுத்து முனைவன்
திருவீதி யீரண்டு தேவர்கோன் மூதூர
பெருவீதி நாண பிறக்கி வருநாளிற்
பொங்கார் கவிசூழ் புவனம் பதினாலும்
கங்கா புரிபுகுந்து கண்டுவப்ப தங்கள்
புவனி பெறவந்த பூபாலர கெல்லாம்
பவனி யெழுச்சி பணித்து கவினும்
மடமயி லொக்க மகுடங் கவித்தாள்
உடனுறை பள்ளி யுணர்ந்து தடமுகில்
அஞ்சன சைல தபிடேகஞ் செய்வதென
மஞ்சன மாடி வழிமுதற் செஞ்சடை
வானவன் பொற்றாள் வணங்கி மறையவர்க்கு
தான மனைத்துங் தகைபெறுத்தி வானிற்
கிளைக்குஞ் சுடரிந்தர நீல கிரியை
வளைக்கு மிளநிலா மான திளைக்கும்
உருவுடை யாடை தவிர்த்தொரு வெள்ளை
திருவுடை யாடை திகழ்த்தி ஒருபுடை
பச்சை யுடைவாள் விசித்த தொருபசும்பொற்
கச்சை நவரத்ன கட்டெறிப்ப வச்ர
வெருவுதர வெல்லா விரவிகளும் வீழ
திருவுதர பந்தனஞ் சேர்த்தி திருமார்பிற்
கார்க்கடன் மீதே கதிர்மு தாமங்கள்
பாற்கடல் போர்த்த தெனப்பரப்பி
வந்த வனச மகளேபோன் மற்றது
தந்த கடவுண் மணிதயங்க பந்த
சுரகனக தோள்வலை சூட்டு கவித்த
உரக பணாமணி யொப்ப விரவி
மகர குழைதோண்மேல் வந்தசைவ மேரு
சிகர சுடர்போற் றிகழ நிகரில்
முடியின் மணிவெயிலும் முத்த குடையில்
வடியு நிலவு மலை படியில்
வயங்கு கடக மகுடாதி மின்ன
தயங்கு பெரும் போதி சாத்தி முயங்கிய
செவ்வி நுதலிற் றிருநீற்று புண்டரம்
வவ்வி மகளிர் மனங்கவற்ற நொவ்விய
நாவியு மான்மத சாந்து நறையகில்
ஆவியு மாகண் டமுமளப்ப தீவிய
தோண்மாலை வாச கழுநீர் சுழல்சோதி
கோண்மாலை கூச குளிர்கொடுப்ப நாண்மாலை
வேந்தர் தொழுதிறைஞ்ச வேதிய ரேத்தெடு
போந்து புறநின்ற போர்க்களிற்றை வேந்தரில்
மாக்காதல் யாதவனும் மாறழிந்த மீனவனும்
வீக்காம லெங்குள்ள மெய்ம்முகிற்கும் கோக்கடவு
கெட்டாத வச்சிரமு மெலலா வுருமேறும்
வெட்டாம லெங்குள்ள வெற்பினுக்கும் முட்டா
முதுவாய் வடவையு முந்நான்கு கோளும்
கதுவாம லெல்லா கடற்கும் பொதுவாய்
அபயங் கொடுக்கு மயிரா பதத்தை
உபய வயக்கோ டுருமை விபவ
நிரு தருமோர் நிதிப்பொருப்பை கண்ணுற்
றெருத்த திருக்கவின வேறி திருத்தக்க
பள்ளி திருத்தொங்கற் சோலை பகல்விலக்க
வெள்ளி கவிகை மிசையோங்க ஒள்ளிய
ஒற்றை வலம்புரி யூத வதன்பின்பு
மற்றை யலகில் வளைகலிப்ப கற்றை
கவரி யிரட்ட கடவுண் முரசார
துவரி யுவாவாடி யொப்ப அவிர்வாளும்
சங்கு திகிரியுஞ் சார்ங்கமு தண்டமும்
எங்குஞ் சுடர்வி டிருள்களை கொங்கத்து
விற்கொடியு மீன கொடியுங் கொடுவரி
பொற்கொடி யொன்றின் புடைபோ தெற்கின்
மலையா னிலம்வரவே வார்பூங் கருப்பு
சிலையான் வரவு தெரி தொலையாது
வீசு திவலை விசும்புகூர் மங்குவால்
வாசவன் வந்த வரவறி கூசாதே
யாவ ரொழிவா ரிவன்வரவே மற்றுள்ள
தேவர் வருவ ரெனத்தௌிய யாவர்க்கும்
பின்னர் வழங்கு முழங்கு பெருங்களிற்று
தென்னர் முதலானோர் சேவிப்ப முன்னர
பரவி யுலகிற் பலமண்ட லீகர்
புரவி மிசைகொண்டு போத அருவிபோல்
விட்டு மதம்பொழியும் வேழ திசைவேழம்
எட்டு மொழி புகுந்தீண்ட கட்டி
இரவிக்கு நிற்பன வேழு மொழி
புரவி குலமுழுதும் போத விரவி
உடைய நிதி கடவு ளூர்தி யொழிய
அடைய நரவெள்ள மார்ப்ப விடையே
எழுந்த துகளுருவ வேறியுஞ் சுண்ணம்
விழுந்த துகளுருவ வீழ்ந்தும் தொழுந்தகைய
விண்ணுலகு மண்ணுல காகி விளங்கவிம்
மண்ணுலகு பொன்னுலகாய் மாறாட எண்ணரிய
மாகதரும் மங்கல பாடகரும் விஞ்சையர்
பூகத ராயினார் போற்பரவ நாகர்
கொழுந்தெழு கற்பக சாதி குவித்து
தொழுந்தொறும் மன்னர் சொரிய எழுந்துள
கைம்மழை யென்ன கனக பெயறூர்த்து
மைம்மழை மாட மறுகணைந்தான் தம்முடைய
சாலை தொறுந்திரள்வார் சாளரங்கள் கைக்கொள்வார்
மேலை நிலாமுற்ற மேற்றொகுவார் மாலைதாழ்
தெற்றி யடைய மிடைவார் சிலர்பலர்
நெற்றி சுருங்க நெருங்குவார் பொற்றொடியார்
மாளிகையி லேறுவார் மண்டபத்தின் மண்டுவார்
சூளிகை மாட தொறுந்துறுவார் நீளும்
இரண்டு மருங்கினு மிப்படி மொய்ப்ப
திரண்டு பலரெதிரே சென்று புரண்ட
கரும்புருவ வல்வில்லுங் கண்மல ரம்பும்
பெரும்புவன வெல்லை பிடிப்ப சுரும்பு
நிரைக்கு நிரைமுரல நீல குழாங்கன்
இரைப்பின் மொகுமொகு வென்ன விரைச்சுருள்
மேகா ளகங்கள் மிஞிறுவாய் வைத்தூத
காகாள மென்னும் படிகலி போக
தகரங் கமழ்கதுப்பிற் றாழ்குழை தோடாழ்
மகரம் பிறழ்கொடியின் வாய்ப்பு இகலனங்கன்
சேனா சமுக தெரிப்ப வதனெதிர்
சேனா பராக மெனத்திகழ பூநாறும்
கண்ண மெதிர்தூ யுடனே தொடியுந்தூஉய்
வண்ண மிழப்பார் மனமிழப்பார் மண்ணுலகில்
இன்னற் பகைவ னிவன்கா ணகளங்கன்
மன்னர்க்கு மன்னன் மகனென்பார் முன்னர்
முதுகுல மன்னர் முடிவணங்க வந்த
விதுகுல நாயகிசே யென்பார் குதுகலத்தாற்
கண்மருஞ் செவ்வி கடவு டிசாதேவர்
எண்மருங் காணு மிவனென்பார் மண்ணவர்க்கும்
தேவர்க்கு நாகர்க்கு தெய்வ முனிவர்க்கும்
யாவர்க்குங் காவ லிவனென்பார் தீவிய
மாதவியுஞ் செங்கழு நீரும் வலம்புரியும்
தாதகியு கொள்ள தரினென்பார் மாதை
ஒறுக்கும் மிதிலை யொருவில்லை தொல்லை
இறுக்கு மவனிவ னென்பார் மறுக்காமற்
சென்று கனைகட றூர்த்து திருக்குலத்து
நின்ற பழிதுடைப்பாய் நீயென்பார் இன்றளவும்
துஞ்சு துயிலிழந்த தண்டர் சூழற்றுளையில்
நஞ்சுங் குமிழியெழு நாளென்பார் பஞ்சவனே
வாடையினு தண்ணென்னும் மந்தா நிலமெமக்கு
கோடையினு தீது கொடிதென்பார் கூடி
முருகுவார் கூந்தலார் மொய்த்தலர்ந்த கண்ணாற்
பருகுவார் போல்வீழ்ந்து பார்ப்பார் பொருமதனன்
பார்த்தானோ புங்கானு புங்கம் படப்பகழி
தூர்த்தானோ யாதென்று சொல்லுகேம் ஆர்த்தான்
உளைத்தான் சிலையி கொருகோடி கோடி
வளைத்தா னரும்புலகின் மாய்த்தான் இளைத்தார்
பேதை
இனையர் பலர்நிகழ வீங்கொருத்தி முத்திற்
புனையுஞ் சிறுதொடிக்கை பூவை கனைமுகினோர்
ஆடாத தோகை யலராத புண்டரிகம்
பாடாத பிள்ளை பசுங்கிள்ளை சூட
தளிராத சூத தழையாத வஞ்சி
குளிராத திங்க குழவி அளிகள்
இயங்காத தண்கா விறக்காத தேறல்
வயங்காத கற்பக வல்லி தயங்கிணர
கூழை சுருண்முடி கூடுவதுங் கூடாதாம்
ஏழை பருவ திளம்பேதை சூழும்
நிலைத்தாய வெள்ள நெருங்க மருங்கே
முலைத்தாயர் கைத்தாயர் மொய்ப்ப தலைத்தாமம்
தொக்க கவிகை குலோத்துங்க சோழனை
மிக்க பராந்தகனை மீனவனை புக்கார்
வணங்க வணங்கி வழுத்த வழுத்தி
அணங்க வணங்கா ளகலாள் குணங்காவல்
மன்னன் புனையு திருமுத்த மாலையை
அன்னம் படிந்தாட வாறென்னும் பின்னவன்
கோவை திருப்பள்ளி தொங்கற் குழாங்கிளிக்கும்
பூவைக்கு நல்ல பொழிலென்னும் பாவை
அயிர்க்கு மிருகோ டயிரா பதத்தை
மயிற்கு மலையென்று மன்னும் குயிற்கிளவி
தேன்வாழு தாமஞ்சூழ் தெய்வ கவிகையை
மான்வாழ மாசின் மதியென்னும் கோனுடை
பாங்குவளை யாழி பார்மடந்தை தன்னுடைய
பூங்குவளை மாலை புனைகென்னும் தேங்கமல
தற்புத வல்லி யவளே பிறந்துடைய
கற்பக மாலையை காதலிக்கும் பொற்போர்
பொலம்புரி காஞ்சி புகழ்மகட்கே தக்க
வலம்புரி மாலைக்கு மாழ்கும் பொலன்றொடி
போரார வார பொலன்கொடி பெற்றுடைய
பேரார மாலைக்கு பேதுறும் நேரியன்
ஏந்திழை மாத ரெவர்க்கும் பொதுவாய
பூந்துழாய் மாலை புனைகென்னும் வேந்தன்முன்
இவ்வகை யல்ல திலங்கிழையார் மால்கூரும்
அவ்வகை கூரா ளயலொருத்தி எவ்வுலகும்
முற்ற முடிக்க முடிக்காம வேள்சூட்டும்
கொற்ற முடியனைய கொண்டையாள் அற்றைநான்
சாத்து மபிடேக தாரைபோற் றாழ்கின்ற
கோத்த பருமுத்த கோவையாள் தேத்து
விடம்போற் பணிகட்டு வேழங்க கெல்லாம்
கடம்போற் கொலையூறுங் கண்ணாள் அடங்கா
வயிர்ப்பான் மறலி மகளுருக்கொ லீதென்
றயிர்ப்பா ரயிர்க்கு மழகாள் உயிர்ப்பாவை
கொல்லிக்கு முண்டுயி ருண்மைத்ரி கூடத்து
சொல்லி கிடங்கு துணைமணிக்கும் வல்லி
இதற்கு நடைவா துயிர்வாய்த்த தென்ன
மதர்க்கு மொருதிரு மாது முதற்றன்
பணிவாயி லாயம் பரந்தகல கிள்ளை
கணிவாயின் முத்த மருளி மணிவாயாற்
சொல்ல யெனக்கன்னை சொல்லாயோ நீயன்றே
வல்லாய் பிறவறிய வல்லவோ கல்லரண
கோழி திருநகர கொற்றவற்கு வெற்றிப்போர்
ஆழி தடக்கை யபயற்கு வாழியாய்
காக்குங் கடலேழு மாடுங் கடாரமோ
ஆக்கு நதியேழு மாரமோ தேக்கிய
பண்ணேழுங் கன்னாவ தங்கிசமோ பண்டளந்த
மண்ணேழும் வாகு வலயமோ தண்ணறு
தூவ னறவ பொழிலேழுங் தொங்கலோ
காவன் மலையேழுங் கந்துகமோ ஏவலால்
செய்யு நலனுடைய கோளேழு தீபமோ
பெய்யு முகிேலூம் பேரியமோ வையகம்
கூறு மவையிவை யென்று குறுந்தொடி
வேறு தனிவினவும் வேலைக்கண் சீறும்
ஒருத னடியின் மடிய வுபய
மருது பொருது வயவன் விருதன்
விலையி லமுத மதன விமலை
முலையின் முழுகு முருகன் வலைய
கனக சயில வெயிலி கணவன்
அனக னதுல னமலன் தினகரன்
வாசவன் றென்னன் வருண னளநேசன்
கேசவன் பூசக்ர கேயூரன் வாசிகை
ஆழி பெருமா னபய னனபாயன்
சூழி கடாயானை தோன்றுதலும் தாழாது
சென்றா டிருமுன்பு செந்தளிர கைகுவித்து
நின்றா ளினிவறிதே நிற்குமே என்றாலும்
கோடு கழல்கண்டல் கொண்டற்கு மாலதி
ஓடு நகாதே யுடையாதே பீடுற
வந்து தொடுங்குன்ற வாடை கிளங்கொன்றை
நொந்து தொடாதே குழையாதே செந்தமிழ
தென்ற லெதிர்கொண்ட தேமாங் கொழுங்கன்று
மன்றல் கமழாதே வாழாதே என்றுபோய்
சூதள வல்ல துணைமுலை தூயகண்
காதள வல்ல கடந்தனபோய் மாதர்
உருவ தளவன் றொளியோக்க மாக்கம்
பருவ தளவன்று பாவம் தெருவ
துடைவ துடையாதா முள்ள முறவோர
தடைவ தடையாதா மச்சம் கடைகடந்து
சேயினு நல்ல பெருமா டிருந்தடந்தோன்
தோயினு தோய மனந்துணியும் ஆயினும்
ஏந்து தடந்தோ ளிணைப்பணைப்பு கண்டிலன்
காந்து தனதடங் கண்டிலன் பூந்தட
தேரி னகலு திருந்தல்குல் கண்டிலன்
காரி னெகிழளகங் கண்டிலன் மாரவேள்
எய்யு மொருகருப்பு வல்வில் லெடுத்தானோ
கொய்யு மலரம்பு கோத்தானோ தையன்மால்
மந்தா கினிக்கோன் றிருப்புருவ வார்சிலையும்
செந்தா மரைக்கண்ணுஞ் செய்ததென நொந்தார்
வளைத்தளிர செங்கை மடுத்தெடுத்து வாச
கிளைத்தளிர பாயற் கிடத்தி துளைத்தொகை
ஆய்க்குழ லென்றா லதுவு மவனூதும்
வேய்க்குழ லென்று விளம்பியும் தீக்கோள்
நிகழ்நிலா வன்று நிருபகுல துங்கன்
புகழ்நிலா வென்று புகழ்ந்தும் இகலிய
பல்லிய மன்று பரராச கேசரி
வல்லிய மென்று மருட்டியும் மெல்லிய
கல்லார மன்று கதிரோன் றிருமருமான்
மெல்லார மென்று விளம்பியும் நல்லார்
அருத்தி யறிவா ரவையிவை யென்று
திருத்தி விடவிடாய் தீர்ந்தாள் ஒருத்தி
மங்கை
உருவ வரிக்க ணொழுக வொழுக
புருவ முடன்போத போத வெருவி
வனமுலை விம்மி வளர வளர
புனைதோள் புடைபோத போத வினைவர்
அருங்கலை யல்கு லகல வகல
மருங்குபோ யுள்வாங்க வாங்க நெருங்கு
பரவர ராச பயங்கரன்மேல் வேட்கை
வரவர வாற்றாத மங்கை பொரவரு
தேமிரைக்குங் காலையின் ஞாயிற் றிளஞ்செல்வி
தாமரைக்கே சாலு தரத்ததோ காமர்
அமுத மதி தலர்நிலா முற்றும்
குமுத நறுமுகைக்கே கூறோ நமதுகார்
கானின் மடமயிற்கே காணியோ தண்ணிள
வேனில் குயிற்கே விதித்ததோர் தேனிமிர்
தண்டா மரையா டலைவனை யாமும்போய்
கண்டாலென் னென்னுங் கடைப்பிடியாள் பண்டை
ஒளியா ரணங்காத றம்மைத்தா மொன்றும்
தௌியாத வாறே தௌிந்தும் களியன்னம்
வாவி கரையில் வரநீ ரரமகளிர்
சேவிக்க நின்றாடுஞ் செவ்வியாள் காவிற்
புகுதில் வனதெய்வ பூங்குழை யா
தொகுதி புடைபரந்து சூழ்வாள் மிகுதே
னிரையர வந்தரு செய்குன்ற நீங்கா
வரையர மாதரின் வாய்ப்பாள் பெருவிலைய
முத்தில் விளங்கின் முளரி தவளப்பூங்
கொத்தி னணங்கனைய கோலத்தாள் பத்திய
பச்சை மரகதம் பூணிற் பணைமுலைசூழ்
கச்சை நிலமகள்போற் காட்சியாள் நிச்சம்
உரக பணமணிகொண் டொப்பிக்கி லொப்பில்
வரகமலை யன்ன வனப்பாள் நரபதி
மைம்முகில் வண்ணத்து வானவன் மீனவன்
கைம்முகில் மேல்வர கண்டதற்பின் மொய்ம்மலர்
நீலமே வேய்ந்தெடுக்க
நீலமே யன்றி நினையாதாள்
முன்னுடைய செங்கே ழெறிக்கு முறிக்கோலம்
தன்னுடைய மாமை தழீஇக்கொள்ள பின்னர்
நெருங்கு கழுநீரும் நீலோற் பலமும்
ஒருங்கு மலர்தட மொத்தும் மருங்கே
இறங்கிய கற்பக வல்லியு மேறி
உறங்கிய தும்பியு மொத்தும் பிறங்க
வயங்கு தளிரீனு மாங்கொம்பர் பூக்கொண்
டுயங்கு கருவிளை யொத்தும் தயங்குவாள்
கோலத்தார் மௌலி குலோத்துங்க சோழற்கு
ஞாலாத்தார் ரெல்லார்க்கு நாயகற்கு நீலத்தின்
காசுங் கலாபமும் மேகலையுங் காஞ்சியும்
தூசுங் துகிலுங் தொடியுநான் கூசேன்
வௌியே தருவேன் விரையார தொங்கல்
கிளியே தருமேனீ கேளாய் அளியேநீ
தாது கடிகமழ் தாதகி தாமத்தின்
போது கொழுத புறப்படாய் ஓதிமமே
எங்கள் பெருமாளை யிங்கே தரவாநீ
உங்கள் பெருமா னுழைச்செல்வாய் பைங்கழற்காற்
சேயை நினைந்தேகி னம்முடைய சேக்கையான்
சாயன் மயிலே தலைப்படாய் பாயும்
கடமானே போல்வார்க்கு நீநின்னை காட்டின்
மடமானே தானே வருங்காண் கடிதென்று
கொள்ளைகொள் காமன் கொடும்பகைக்கு கூசித்தன்
பிள்ளைக ளோடிருந்து பேசுவாள் உள்ள
அலகில் குலநீல ரத்னா பரணம்
விலகி வெயிலை விலக்க உலகிற்
பெரிய பெருமாள் பெரும்பவனி வீதி
இரிய வெதிரேற் றிழந்தாள் வரிவளை
ஆயத்தா ரென்னி லளியத்தா செல்லாரும்
நேயத்தா ரல்லரே நிற்பாரே தேயத்தார்
மன்னனை யஞ்சாதே வாரணத்தை
மின்னனை யாளையு மீதூரா முன்னர்
கடமாக்கு தெய்வ களிறு விரும்பும்
இடமாதும் யாமென்பார் போல படமாய்
இரைப்ப சுரும்போ டிருளளக பாரம்
நிரைத்து வனமாகி நிற்பார் விரைப்பூண்
முலையாய் வளரு முரட்குவடு கொண்டு
மலையாய் நெருங்க வருவார் தொலையாத
பாய பருமுத்தின் மாலை பலதூக்கி
தூய வருவியா தோன்றுவார் சாயற்
கொடியா யடிசுற்றி கொள்வார் புரக்கும்
பிடியாய் நறுந்துகள் பெய்வார் விடுதுமோ
யாழாய் மிடற்றால் வணக்குதும் யாமென்பார்
தோழாய் வளைத்தெங்குஞ் சூழ்போவார் ஆழிக்கை
தியாகனை மானதனை திக்கானை யெட்டுக்கும்
பாகனையே பின்சென்று பற்றுவார் தோகையார்
நற்றுகில் கொண்ட நறுந்துழாய் மார்பாநின்
பொற்றுகி றந்தருளி போதென்பார் மற்றிவள்
தன்சங்கங் கொண்ட தடந்தா மரைக்கண்ணா
நின்சங்க தந்தருள னேரென்பார் மின்கொள்ளும்
இன்றுயிற் கெல்லா மெறிபாற் கடற்கொள்ளும்
நின்றுயி றந்தரு ணீயென்பார் என்றென்று
மானு மயிலு மனையார் வளைத்துளைப்ப
தானூங் களிறு தடையுண்ட கோனும்
தடுத்த கொடிக்கு சதமடங்கு வேட்கை
அடுத்த திருநோ கருளா கொடுத்த
திருநகை மூர றிகழ்ந்தா னணங்கும்
ஒருநகை கூர்ந்தொருவா றுய்ந்தாள் பெருநகை
எய்தி யனங்க னெழப்போனான் மாதரும்
உய்து சிறந்தா ளுழை சென்றார் நொய்திற்
றொடுக்கும் புறஞ்சொற் றொடாமே முலைமீ
தடுக்கும் பசலை யடாமே உடுக்கும்
துகிலுஞ் சரியாமே சுற்றத்தா ரெல்லாம்
புகிலும் புகாமே பொராமே அகினாறும்
பள்ளியிற் செல்லாள் பருவ முருகற்றோய்
வள்ளியிற் சால வயங்கினாள் ஒள்ளிழை
மடந்தை
பின்ன ரொருத்தி பெருமை கரமகளிர்
முன்ன ருரைக்கும் முதன்மையாள் சென்னியில்
வண்ட லிடுநாவி வார்குழற்கு மாறுடைந்து
கொண்டல் சொரிமுத்தின் கொண்டையும் பண்டுவ
தேற்று பணைபணைக்கு மென்றோ ளிரண்டுக்கும்
தோற்று சொரிமுத்தின் சூழ்தொடியும் ஆற்றற்
கலம்புரி செல்வ கழுத்திற்கு தோற்ற
வலம்புரி முத்தின் வடமும் பொலம்பூண்
எதிர்க்கு முலைக்கிரிந்த திக்கயக்கோ டிட்ட
கதிர்க்கு நகைமுத்தின் கச்சும் அதிர்க்கும்
அடல்விடு மல்குற் பரவை குடைந்து
கடல்விடு முத்தின் கலையும் உடலிமேல்
ஏந்து மினைய விளநிலா விட்டெறி
போந்து மறுகு புகுந்தொழிந்தாள் வேந்தனும்
சட்கோடி மாணிக்க மொன்றுஞ் சமந்தகமும்
உட்கோடு கேயூர தூடெறிப்ப கொட்கும்
கடல்சேப்ப வந்த கவுத்துவ மொன்றும்
அடல்சேக்கு மார்பிற் கமைய உடலி
அனந்த பணாமவுலி யாயிரமு மொற்றை
மறுகு திருமலர வந்தான் குறுகும்
முறுகு கதிரின் முகந்திரிய வேற்று
மறுகு திருமலர வந்தான் குறுகும்
நடையாய வெள்ளமும் நாணிரம்பு திங்க
குடையாய வெள்ளமுங் கூடி அடைய
மதியுதய மென்று வணங்க வனச
பதியுதய மென்று பணிய துதியில்
ஒருவரு மொல்வா வுருவமி கூறும்
இருவரு மெய்திய வெல்லை தெருவில்
நெருங்க மகளிர் நிறந்திறக்க வெய்து
மருங்கு வருகின்ற மாரன் திருந்திய
பாய பகட்டல்குல் பாரா வதன்பரப்பிற்
போய மருங்குற் புறநோக்கார் சாயா
முலையின் கதிர்ப்பு முருகு கெழுதோள்
நிலையின் பணைப்பு நினையா கொலையால்
உடைக்கு முலகடைய வூடாடு கண்ணின்
கடைக்கு முடிவின்மை காணா கிடைக்கும்
பருவ கொடிவதன பங்கே ருகத்தின்
புருவ கொடி முடி போகா உருவ
களிக்கும் புடவி சதகோடி கற்பம்
அளிக்கும் பெருமானை யஞ்சா குளிர்க்கும்
கடுங்காற் கொடுந்தேரை முட்ட கடாவி
கொடுங்காற் சிலையை குனித்து நடுங்கா
முகுந்த னிவனென்று முன்பெய்த வேவிற்
புகுந்த திதுவென்று போனான் திகந்த
முழுதா ளபயனை முகிணகையு தோளும்
தொழுதா ெள்ாருதானே தோற்றாள் அழுதாள்
திரிந்தாள் கலைநிலையுஞ் செம்பொற் றுகிலும்
சரிந்தா டுணைவியர்மேற் சாய்ந்தாள் பரிந்தார்
முடைக்கை யெதிர்க்குரவை கோத்தாய் முரல்யாழ்
கடைக்கை தொடுக்கை நகையோ விடைப்பே
ரினந்தழுவி பின்னையை கொள்வா யிவளை
தனந்தழுவி கொள்கை தவறோ அனந்தம்
கருந்துகில கோவியரை கொள்வாய் கமலை
தருந்துகி னோக்க தகாதோ விருந்து
துளவ முகிற்கிது வந்தது தூய
வளவர் திருக்குலத்து வந்தோ அளவிறந்த
வன்கண் ணிவளளவுங் கண்டே மடவரல்
புன்க ணடியேம் பொறேமென்று மின்கண்
இவையிவை சொல்லிப்போ யின்னமளி யேற்றி
கவிரிதழ் பின்னுங் கலங்க துவரின்
வியக்கு துகிரியைய மேம்ப டுலகை
மயங்கு திருவாய் மலர்க்கும் நயக்கும்
பொருப்புருவ தோளின் புதுமைக்கு நேரே
திருப்புருவஞ் செய்த செயற்கும் பரப்படை
செங்கே ழெறித்து மறிக்கு திருநயன
பங்கே ருகஞ்சூழ் படுகொலைக்கும் அங்கே
தரிக்குமே தென்றலுஞ் சந்த்ரோ தயமும்
பரிக்குமே கண்கள் படுமே புரிக்குழலார்
பாலிருத்தி மம்மர் படப்பட பையப்போய்
மாலிருத்தி யுள்ள மயங்கினாள் மேலொருத்தி
அரிவை
தாளை யரவிந்த சாதி தலைவணங்க
தோளை யுரகர் தொழவிருப்பாள் நாளை
வளவர் பெருமான் வரும்பவனி யென்று
கிளவி விறலியர்வா கேட்டாள் அளவுடை
தோரிரா வன்றம்ம விவ்விரா வோதிமத்தோன்
பேரிரா வென்று பிணங்கினான்
என்று விடியுங்கொ லென்றாள் விடிவளவும்
நின்று சுடுங்கோ னிலவென்றான் நின்றார்
அடுத்தடு தேந்திய திவ்யா பரணம்
எடுத்தெடு தொப்பி தெழுந்து சுடர்க்கதிரோன்
மாலை பகைவியை போக்கி வருவித்த
காலை துணைவியை கண்டெழுந்தாள் காலையோன்
சேமித்த பூங்கோயி லெல்லா திருவென்று
காமி திகழின் கடைதிறப்ப நேமி
மணக்க துணையன்றில் வாயலகு வாங்கி
தண கடிகாவிற் சார்ந்தாள் கணக்கதிர்
வந்து பொருவதொரு மாணிக்க செய்குன்றில்
இந்து சிலாதலத்தி லேறினான் குந்தி
கடப்பன கன்னிமா னேக்கியு மன்னம்
நடப்பன பார்த்து நயந்தும் தொடக்கி
களிக்கு மயிற்குலங் கூத்தாட கண்டும்
கிளக்குலம் பாட்டெடுப்ப கேட்டும் பளிக்குருவ
பாவை மணக்கோலம் பார்த்தும் பலநகை
பூவை பகர புறஞ்சாய்ந்தும் கோவை
அளிக்களி யாட்ட மயர்ந்துங் கபோத
விளிக்களி கூர்ந்து வியந்தும் களிக்க
பழிச்சி வணங்கி பெருமாள் பவனி
எழுச்சி முரசோர திருந்தாள் கழற்செழியர்
தென்சங்கங் கொண்டான் றிருச்சங்கஞ் செய்குன்றில்
தன்சங்க மாகி யெதிர்தழங்க மின்சங்கம்
போல விழுந்து மெழுந்தும் புடையாயம்
கோல மறுகு குறுகுவாள் ஞாலம்
எடுக்கும் பணிமன்னன் மின்னென் றிறைஞ்சி
கொடுக்குஞ் சுடிகை குதம்பை கடுக்கும்
மயில்வேண்டுஞ் சாயல் வதனாம் புயத்து
வெயில்வேண்ட வேண்டி விளைப்ப பயில்கதிர்
வெல்லாது தோட்சுடிகை மேகா ளகவிருண்மேல்
எல்லா பருதியும் போலெறிப்ப கொல்குயத்து
வீழ்சோதி சூழ்கச்சு மேரு கிரிச்சிகரம்
சூழ்சோதி சக்ர தொலைவிப்ப கேழொளிய
பைம்பொற் கடிதடஞ்சூழ் மேகலை பார்சூழ்ந்த
செம்பொற் றிகிரி யெனத்திகழ அம்பொற்
புறவுஞ் சகோரமும் பூவையு மானும்
பிறவு மினமென்று பெட்ப உறவாய்
அடர்ந்த பொலன்கே ழடிச்சிலம்பு கன்னம்
தொடர்ந்து மறுமாற்றஞ் சொல்ல நடந்துபோய்
மானவற்கு புக்கதுறை வல்லவற்கு வில்லவற்கு
மீனவற்கு சென்று வௌிப்பட்டாள் தானே
அலகு முகமுங் குவிகையு மாகி
மலரு முகளமுமான பலர்காண
தேனு மமுதுங் கலந்தனைய தீங்கிளவி
மானு மடைய மனங்கொடுத்தாள் கோனும்
தடாதே தடுத்தாளை தன்கடைக்கண் சாத்தி
விடாதே களிறகல விட்டான் படாமுலைமேல்
ஒத்திலங்கு வேர்வ துறைப்ப நறைக்கழுத்து
நித்திலங்கால் சங்க நிதிநிகர்ந்தாள் எத்திசையும்
சோர்கின்ற சூழ்தொடிக்கை செம்பொற் றொடிவலயம்
நேர்கின்ற பற்ப நிதிநிகர்த்தாள் தேரின்
அரிவை துகினெகிழ வல்கு லரவின்
உரிவை விடும்படமு மொத்தாள் சொரிதளிர்
மாங்கொம்ப ரென்ன வருவாள் சுரமர
பூங்கொம்ப ரென்ன புறங்கொடுத்தாள் பாங்கியரும்
ஒற்றை யுடைவா ளொருபுடையாள் கொற்றவையேல்
மற்றை யருகிவளை வைத்திலனே பெற்றுடைய
வார தரணியாள் வாழ்தோ ளெதிர்மற்றை
ஆர திருத்தோ ளளித்திலனே நேரொத்த
பூந்தா மரையா ளெதிரேயி பொற்றொடிக்கும்
ஏந்தார மார்ப மிசைந்திலனே வேந்தர்கோன்
அன்னங்கா ணீர்சென் றரற்றீர் கபோதங்காள்
இன்ன மபயம்பு கெய்திடீர் நன்னுதற்
பாவைகாள் கொல்யானை பாவடி கீழ்ப்பணியீர்
பூவைகாள் செங்கோன்மை போற்றிசெய்யீர் தாவிப்போ
பேதை மடமான் பிணைகாள் வளைத்துளையீர்
கோதை மதுசுரங்காள் கூப்பிடீர் யாதெல்லை
என்னா விதற்கென் றிரங்கி யிலங்கிழை
தன்னார்வ மாற்றெதிர் சாற்றினார் பின்னர
தெரிவை
பொருவி லொருத்தி புறங்காக்கு மாதர்
இருவி லிடைநின் றிறைஞ்சி திருவுலா
போதும் பெருமாள் புகுது மளவுமிங்
கியாதும் பயிலா திருத்துமோ சூதாடேம்
பந்தா டுதுநாம் பசும்பொற் குழைசென்று
வந்தாடு கண்ணாய் வருகென்று சந்தாடும்
கொம்மை வருமுலையு தோளுங் குறியாதே
அம்மென் மருங்குல்பார தஞ்சாதே தம்முடனே
கொண்டா ரருகிருந்த பாணருங் கோடியரும்
கண்டா ரெவருங் கடுகினார் மண்டி
எடுத்தா ரெடுத்தன யாவு மெலரும்
கொடுத்தா ரொருதானே கொண்டாள் அடுத்தடுத்து
முன்ன மெறிபந்தின் மும்மடங்கு நான்மடங்
கின்ன மெறிய வருகென்றாள் அன்னம்
அடியு மிருகையு மம்புய மென்று
படியு மொழுங்கிற் பயில முடியும்
தொடையிடை போய சுழல்கூந்தற் பந்தர
கிடையிடை நின்றகா லேய்ப்ப அடைய
விழுந்தன பார்கடவா வாறுபோன் மேற்போய்
எழுந்தன கைகடவா வென்ன கொழுந்தளிரால்
ஏற்றுதி விண்கொளா வம்மனை யெம்மனை
ஆற்றுதி யீதிங் கரிதென்ன போற்றரும்
கையோ பதயுகமோ கண்ணோ கடுகினவை
ஐயோ வறித லரிதென்ன பொய்யோ
திலக நுதலிற் றிருவேயென் றோதி
உலகு வியப்பவென் றோத அலகிறந்த
பந்தா டயர்ந்து பணைமுலையார் பாராட்ட
வந்தாட்டு நீராட்டு மண்டத்து விந்தை
பெருமா னனபாயன் பேரிய மூன்றும்
தருமா வார தழந்த ஒருமாதர்
ஏந்து துகிலொன் றுடுத்தாளோ வில்லையோ
போந்து மறுகு புகுந்தொழிந்தாள் மாந்தளிரும்
தாது தமினிய மாலையு தண்கழுநீர
போதும் பிறவும் புறம்புதையா ஓதிக்கு
சென்னி யமுனை தரங்கமு தீம்புனற்
பொன்னி யறலும் புறங்கொடு பின்னர்
ஒழுங்காய் சேயரிக்கண் ணூடொட்டும் மையால்
மழுங்காது கைபோய் மதர்ப்ப செழுங்கழு
தொன்று புனைந்த தொருசங்க மாணிக்கம்
இன்று பயந்த தெனவிளங்க நின்றிலங்கும்
உச்ச கலனணியா தோளினை கோரிரண்டு
பச்சை பசுங்காம்பு பாடழிய நிச்சம்
அசும்பு பொலன்கச்சி னற்றத்தே கொங்கை
விசும்பு குடிவாங்க வீங்க பசுஞ்சுடர
கோல வயிறுதர பந்தன கோணீங்கி
ஆவின் வளர்தளிரி னைதாகி மேலோர்
இழியு மொருசாம ரேகையு முந்தி
சுழியும் வௌிவந்து தோன்ற கெழிய
இசையின் கலாபாரம் யாப்புறா வல்குல்
திசையின் புடையடை செல்ல மிசையே
பொறைபுரி கிம்புரி பூட்டா துடைதூ
சுறையு மரகத மொப்ப அறையும்
சிலம்பு சுமவாத செந்தா மரைபோய்
உலம்பு குரலஞ்சா தோட கலம்பல
தாங்கி யுலக தரிப்ப தரியென்று
பாங்கிய ரெம்மருங்கும் பாராட்ட பூங்கே
ழுருவி லொளிபோ யுலகடை கோப்ப
தெருவி லெதிர்கொண்டு சென்றாள் பெருமாளும்
கொற்ற குடைக்கீழ் வடமேரு குன்றனைய
வெற்றி களியானை மேல்வந்தான்பற்றி
இருவரு தம்மி லெதிரெதிர் நோக்க
ஒருவ ரெனவேட்கை யொத்தார் குருசில்
மறந்த கடல்கடைய வந்தாண்மே லன்பு
சிறந்த திருவுள்ளஞ் செல்ல சிறந்தவள்
ஆக னசுத்திருந்தா ளாக திருவுள்ள
கோசு னகத்திற் கொடுசென்றாள் நாகிள
நல்வி மடநோக்கான் ஞாலத்தை யோரடியால்
வவ்வி யிருதோளில் வைத்தமால் செவ்வி
முருகு கமழ முகந்து
பருகு மடமகளை பாரா அருகு
மடுத்து முயங்கி மயங்கிய தாயர்
எடுத்து மலரணைமே விட்டார் அடுத்தொருவர்
நொய்யாத கற்பக பூமாலை கொண்டைக்கும்
நெய்யாத பொற்றுகி னீவிக்கும் செய்யாத
தொங்கற் றுளைக்கோவை யல்குற்குஞ் சூழ்கனக
துங்க பணிவலை தோளுக்கும் கொங்கைக்கு
பொன்னி புகாரிற் பொலன்குழம்பும் வல்லத்திற்
கன்னி பனந்தோடு காதிற்கும் சென்னி
அளிப்ப கொணர்ந்தனம்யா மன்னமே யென்று
தௌிப்ப சிறிதே தௌிந்தாள் கிளிக்கிளவி
பேரிளம்பெண்
மற்றொருத்தி செந்தா மரைமலர்மே லென்னுடனே
செற்றொருத்தி வாழு மெனச்செறுவாள் சுற்றவும்
தெட்டு தசும்பசும்பு தெங்கி னிளம்பாளை
மட்டு தமனிய வள்ளத்து விட்டு
மறித்து வயிர மடலொன்றின் வாக்கி
தெறித்து ஞமிறோப்பி செவ்வி குறித்துக்கொண்
டேந்தி முகம னியம்பி யிருந்தொரு
காந்தி மதிவதனி கைக்கொடுப்ப மாந்தி
குதலை சூழறி குயிற்குங் கிளிக்கும்
விதலை யுலகில் விளைத்து நுதலை
வியரா லலங்கரியா வேந்தன் கொடுமை
அயரா வௌிவிடா வஞ்சா பெயரா
அருகிருந்த பாணனை நோக்க அவனும்
குருசில் வருதமரங் கூற பரிபுர
காலு நிதம்புமுங் கையு திருக்கழுத்தும்
கோலு மதாணி குலமெல்லாம் மேலோன்
குரகத மேழு முழுகி குளிப்ப
மரகத சோதி வயங்க புருவ
இடைபோ குமிழின் மலர்வ திறங்க
புடைபோ கருவிளை பூப்ப விடையாக
ஏக முருக்கு மலர விளம்பாளை
பூக மிடறு வரப்பொதிய போக
பொரும்பெருங் தெங்கிளநீர் தாழ்ந்து பிறங்க
பரும்பொருங் காம்பு பணைப்ப விரும்பிய
நறுந்துணர் மாந்தளிர் வார்ந்து நளி
குறுந்தொடி காந்தள் குலைப்ப செறிந்து
சலித்து தனியிள வஞ்சி தளர
கலித்து கதலி கவின ஒலித்தே
அளிக்குஞ் சகோரமு மன்னமு மானும்
களிக்கு மயூர கணமும் விளிக்கும்
புறவு தொடர்ந்துடனே போத வவையே
பிறவு மினமென்று பெட்பர் சுறவுயர்த்தோன்
காலை புகுந்து காப்ப தொருபசும்பொற்
சோலை யெனவந்து தோன்றினாள் ஞாலத்தோர்
தெய்வ பெருமாளுஞ் சேவடி முன்குவித்து
கைவைத்து நின்றவளை கண்ணுற்றான் தையல்
வெருவமுன் சூர்தடித்த வேளே நயக்கும்
பருவமு மார்பிற் பணைப்பும் புருவமும்
செந்தா மரைக்கண்ணும் மாமேரு வைச்சிறிய
பந்தா கொள்ளும் பணைத்தோளும் உந்தியும்
உய்ய விருகாது மூக்கு முடுபதியை
நைய வெறிக்கு நகைநிலவும் செய்ய
பவள துவர்வாயும் பாதாம் புயமும்
கவள களிற்றௌிதிற் கண்டு குவளை
சுருநெடுங் கண்களிப்ப வுள்ளங் களி
பருநெடு தோளும் பணைப்ப ஒருநின்
சிலம்புகளோ ரேழுஞ் சென்றடைந்து நோலேன்
அலம்பு சுடலேழு மாடேன் வலம்புவனம்
ஏழுஞ் செலவயரே னெங்கோவே நின்குடைக்கீழ்
வாழு திருவெனக்கு வாய்க்குமே தாழி
முடைதழுவு தோளும் முலையு தழுவ
விடைதழுவு தாமரைக்கை வீரா கடகரியை
கைதழுவி கோரத்தை காறழுவி நின்புலியை
மெய்தழுவி கொள்ள விடுவாயோ மொய்திரைசூழ்
ஞால மறிக்கவும் நாயக நின்புகல்விற்
கால வுததி கலக்கவும் சால
வருந்தா வகைவருந்த வாழி பெயரும்
பெருந்தேவி யார்க்கு பெறலாம் திருந்திய
குந்த மொசித்ததுவுங் கொற்ற திருத்தோளால்
வந்த விடையேழு மாய்த்ததுவும் முந்துற
கோவிய மாதர்க்கே யுள்ளங் குறைகிடந்த
ஆவியே மாதாக வஞ்சுமே ஓவிய
சேரன் சிலையினுஞ் சீரிதே சென்றொசிய
மாரன் சிலையை வணக்காயால் சேரன்றன்
முன்றிற் பனைதடிந்தாய் முட்டா திரவொறுக்கும்
அன்றிற் பனைதடித லாகாதோ கன்றி
மலைக்குஞ் செழியர் படைக்கடலை மாய்த்தாய்
அலைக்குங் கடன்மா தருளாய் மலைத்தவர்
தங்கள் புகழ்நிலவை மாய்த்தா யரிமரபிற்
றிங்களின் றண்ணிலவு தீராயால் பொங்கொலிநீர
தெம்முனை யாழ்தடிந்தா யெங்கள் செவிகவரும்
எம்முனை யாழ்தடிந்தா லென்செய்யும் செம்மணியின்
செஞ்சோதி சிங்களத்து மாற்றுவாய் செக்கரின்
வெஞ்சோதி கண்டால் விலக்காயால் வெஞ்சுமத்து
காதி விடைபண்டு காடவன் முன்றடிந்தாய்
வீதி விடைதடிய வேண்டாவோ யாதுகொல்
வன்பல் வலந்துகைத்த வாட்டானை யின்றிந்த
மென்பல் லவந்துகையா மேம்பாடு தன்பூங்
சுருப்பு சிலைகொண்டு மோதுங் கழுத்திற்
சுருப்புசாண் புக்கழுந தூக்கும் நெருப்புமிழ்
அப்பு கழுவேற்று மாறா பெருங்கோப
வெப்பு படுத்தெங்கண் மெய்யுருக்கும் தப்பா
உடல்பிள வோட வொருதேரி டூரும்
அடன்மகர போசன மாக்கும் விடுதூதால்
அக்கால தண்ட மகற்றி யுலகளித்தாய்
இக்காம தண்ட மௌிதன்றே மைக்கோல
வண்ணா வளர்ந்த மகரா லயமறந்த
கண்ணா வநங்கன்போர் காவாயேல் மண்ணுலகில்
எப்புடி யாவா ரிளம்பிடியா ரென்றென்று
மைப்படியுங் கண்ணாள் வருந்தினாள் இப்படியே
தையலார் பெற்றோகை சாயலார் கையகலா
மையலார் போலராய் மன்றேற வையம்
பெருகுடையா நீரேழும் பாரேழும் பேணும்
ஒருகுடையான் போந்த னுலா
குலோத்துங் சோழனுலா முற்றிற்று
வெண்பா
என்றினி மீள்வ தரிதி னிரணியனை
அன்றிரு கூறா யடர்த்தருளி கன்றுடனே
ஆவின்பின் போன வனக னனபாயன்
மாவின்பின் போன மனம்
கட்டளை கலித்துறை
ஆடுங் கடைமணி நாவசை யாம லகிலமெல்லாம்
நீடுங் குடையிற் றரித்த பிரானென்பர் நித்தநித்தம்
பாடுங் கவிப்பெரு மாளொட்ட கூத்தன் பதாம்புயத்தை
சூடுங் குலோத்துங்க சோழனென் றேயெமை சொல்லுவரே

இராச ராச சோழனுலா இராசேந்திர
புயல்வண்ணன் பொற்பது போதிற் புவன
செயல்வண்ணங் காட்டிய சேயோன் உயிரனைத்தும்
காட்டும் பதின்மரினுங் காசிப னேழ்புரவி
பூட்டு தனியாழி பொற்றேரோன் ஓட்டி
அறவாழி மைந்தன்மே லூர்ந்தோ னவனி
புறவாழி முட்ட புரந்தோன் மறையோற்கு
பூவிற் கிழத்தியையும் பூமி
நாவிற் பழுதஞ்சி நல்கினோன் வாவியிற்
புக்க துறையிற் பகைப்புலியும் புல்வாயும்
ஒக்க வொருகால தூட்டினோன் புக்கால்
மறானிறை யென்று சரணடைந்த வஞ்ச
புறாநினை புக்க புகழோன் அறாநீர
தரங கடலோழு தன்பெயரே யாக
துரங்க பசுநாடி தொட்டோன் வரங்கொள்
சுரநதி தன்பெய ராக சுருதி
வரனதி சாபத்தை மாய்த்தோன் தரணிபர்
மல்லன் மரபை ரகுவின் மரபென்று
சொல்ல வுலகளித்த தொல்லையோன் செல்லலால்
வந்திரந்த வானவர்க்கு தானவர்தம் போர்மாய
இந்திரனை யேறாக்கி யேறினான் முந்தும்
ஒருதேரா லையிரண்டு தேரோட்டி யும்பர்
வருதேரால் வான்பகையை மாய்த்தோன் பொருது
சிலையால் வழிபடு தெண்டிரையை பண்டு
மலையால் வழிபட வைத்தோன் நிலையாமே
வாங்கு திருக்கொற்ற வாளொன்றின் வாய்வாய்ப்ப
தூங்கும் புரிசை துணிந்தகோன் வீங்கு
குடகடற்கு சார்பு குணகடலே யாக்கும்
வடகடற்கு தென்கடற்கு மன்னன் தரையின்
கரையெறிந்த பொன்னி கடலேழுங் கோப்ப
வரையெறிந்த மன்னர்க்கு மன்னன் தரையின்
பெருமகளை தீவேட்ட பின்னருஞ் சேடன்
திருமகளை கல்யாணஞ் செய்தோன் பரநிருபர்
கன்மலை மார்புங் கடவுள் வடமேரு
பொன்மலை மார்பும் புலிபொறித்தோன் சொன்மலைய
நல்லவன் பொய்கை களவழி நாற்பதுக்கு
வில்லவன் காற்றளையை விட்டகோன் புல்லார்
தொழும்புடைய வாகத்து தொண்ணூறு மாறும்
தழும்புடைய சண்டப்ர சண்டன் எழும்பகல்
ஈழ மெழுநூற்று காதமுஞ் சென்றெறிந்து
வேழ திறைகொண்டு மீண்டகோன் சூழி
மதகயத்தா லீரொன் பதுசுரமு மட்டி
துதகையை தீத்த வுரவோன் முதுவான
கங்கையு நன்மதையுங் கௌதமியுங் காவிரியும்
மங்கையுட னாடு மரபினோன் பொங்கி
அலைவீசி வேலை யனைத்தினும்போ தெம்மீன்
வலைவீசி வாரிய மன்னன் கொலையானை
பப்ப தொருபசிப்பேய் பற்ற வொருபரணி
கொப்ப தொருகளிற்றாற் கொண்டகோன் ஒப்பொருவர்
பாட வரிய பரணி பசுடொன்றின்
கூடல சங்கமத்து கொண்டகோன் நாடும்
கலகமுஞ் சுங்கமுங் காய்கலியு மாற்றி
உலகை முன்காத்த வுரவோன் பலவும்
தரணி யொருகவிகை தங கலிங்க
பரணி புனைந்த பருதி முரணில்
புரந்தர னேமி பொருவு மகில
துரந்தரன் விக்கிரம சோழன் பரந்தபனென்
றாய பெயர்கொண் டகிலாண் டமும்புரந்து
சேய பெரிய திருக்குலத்து நாயகன்
சிற்றம் பலமு திருப்பெரும்பே ரம்பலமும்
மற்றும் பலபல மண்டபமும் சுற்றிய
மாளிகையும் பீடிகையு மாடமுங் கோபுரமும்
சூளிகையு மெத்தெருவு தோரணமும் ஆளுடையான்
கோயிற் றிருக்கா கோட்டமு மக்கோயில்
வாயிற் றிருச்சுற்று மாளிகையும் தூயசெம்
பொன்னிற் குயிற்றி புறம்பிற் குறும்பனைத்தும்
முன்னிற் கடலகழின் மூழ்குவித்த சென்னி
திருமகன் சீராச ராசன் கதிரோன்
மருமக னாகி மறித்தும் திருநெடுமால்
ஆதி பிறவி யனைத்தினு மும்பர்க்கு
பாதி பகைதடிந்து பாதிக்கு மேதினியிற்
செந்தா மரையா டிருமார்பில் வீற்றிருக்க
வந்தான் மனுவங்க்ச மாமேரு முந்தி
உடுத்த திகிரி பதினா லுலகும்
அடுத்த வரராச ராசன் அடற்றிகிரி
கண்ணன் கனகளபன் கண்டன் கதிரோனும்
தண்ணென் கவிகை சனநாதன் எண்ணும்
தவன குலதிலகன் றன்பெரு தேவி
புவன முழுதுடைய பூவை அவனியில்
எண்பெரு மாதிரத்து மேறு முடனாணை
பெண்பெருமா ளந்த புரப்பெருமாள் மண்பரவ
ஓகை விளைக்கு முபய குலரத்ன
தோகை யுடனே துயிலெழு தாகிய
மூர தனந்த முரசார்ப்ப காவிரி
தீர தபிடேகஞ் செய்தருளி போர்த்திகிரி
மேலை குரவர்க்கும் விண்ணவர்க்கும் வேதியர்க்கும்
காலை கடவ கடன்கழித்து மூல
பெரும்பே ரணிதம் பிதாமகன் காலை
வரும்பே ரணியென்ன வாய்ப்ப நிர
பவள சடையோன் பணித்த படியே
தவளத்ரி புண்டரஞ் சாத்தி குவளைப்பூங்
கார்க்கோல மாடியிற் காண்பான் மகன்காமன்
போர்க்கோலங் காண்பானே போற்கொண்டு பார்த்திபர்தம்
தொல்லை திருமரபு கெல்லா தொழுகுலமாம்
தில்லைதா திருநடனஞ் சிந்தித்து வல்லவர்
சூழ சுருதி யனைத்து தொகுத்தெடுப்ப
வேழ பெருமானை மேல்கொண்டு வாழி
அரச வலம்புரி யார்ப்ப வதன்பின்
முரசொரு மூன்று முழங்க திரையின்
சுடற்பொற் கவரி யெழப்பொங்க தொங்கற்
கடவு கவிகை கவிப்ப புடவியின்
மீட்டுங் குறையவுணர் போர்கருதி விண்ணவர்கோன்
தீட்டுங் கொடிப்புலியா சேவிப்ப வாட்டானை
தென்னருஞ் சேரலருஞ் சிங்களருங் கொங்கணத்து
மன்னரு மாளவரு மாகதரும் பின்னரும்
காந்தாரர் காலிங்கர் கௌசல ருள்ளிட்ட
பூந்தார் நரபாலர் முன்போத வேந்தர்
பொருவாத பூபால கோபால னென்னும்
திருநாம நின்று சிறந்த வருநாளில்
தென்மாட கூடற் சிறைவிட்ட கார்புகார
பொன்மாட வீதி பொடியடக்க தன்மீது
கன்மாரி பெய்யும் பிழையாற் கடவுளர்கோன்
பொன்மாரி பெய்யும் புயலேவ பின்னரும்
காமாரி சேயென்ற காக்கு மெழுவரினும்
பூமாரி கௌமாரி முன்பொழிய யாமந்தீர்
காலை வெயிலொதுங கார்களாற் கார்களும்போய்
மாலை வெயிலால் மறித்தொதுங கோல
பெருங்குற் றுடைவாள பேரொளி மேரு
மருங்கிற் பெரும்புலி மான நெருங்கிய
கோளி னொழுங்கு மழுங குலரத்ன
ஒளி மகர வொளியெறிப்ப தோளில்
இருபொறை தீரு மிருபா பரசும்
இருதொடி யாயகொல் லென்ன வரரத்னம்
தாமே குயின்று தடங்கோளு நாளுஞ்சூழ்
மாமேரு வென்ன முடிவயங்க பூமேற்
புடைநிலவு தங்கள் புகழ்நிலவின் மேலே
குடைநிலவுஞ் சக்ரகிரி கோல உடையதன்
கைவை தருளாமே தாமே கடன்கழிக்கும்
தெய்வ படையைந்துஞ் சேவி பெய்கணை
தூணி புறத்தோடு தோளிற் சிலையோடும்
பூணி தனங்கவேண் முன்போத மாணி
கோவையான் முக்குவட்டு குன்றா யொருதிரு
பாவையாற் கொல்லி பனிவரையாய் ஓவாது
செய்ய தமிழ்முழங்க தெய்வ பொதியிலாய்
வெய்ய புலிமுழங்க மேருவாய் வையகஞ்சூழ்
கோர முடன்பொத நேமி பொலன்குன்றாய்
வார்சுவரி யாலிமய மால்வரையாய் வேரி
விடுங்குழையார் சென்னி மிலைச்சிய
கொடுங்குழையார் வீதி குறுக நடுங்காமல்
குழாங்கள்
விண்ணாடு காத்த முககுந்தன் மீண்டநாள்
மண்ணாடு கண்ட மடந்தையரும் நண்ணார்மேல்
சோளன் பரிசார்ந்தே சூழ வருஞ்சக்ர
வாள கிரியர மங்கையரும் தோளிணையால்
கோழியிற் சோழ குலத்தொருவன் முன்கடைந்த
ஆழியிற் கொண்ட வரம்பையரும் ஊழியின்
சீத்த வரையிற் றிருக்கொற்ற வில்லொன்றால்
வாய்த்த வரையர மாதரும் போய்த்தனியே
கோதண்டங் கொண்டிரு சேடி யுடன்கொண்ட
வேதண்டலோக விமலையரும் காதலால்
தந்த பணிபதி தன்மகளை சேவித்து
வந்த கடவுண் மடந்தையரும் பந்தாடும்
மேரு வரையிற் புலிபொறித்து மீண்டநாள்
வாரும் வரையர மாதரும் வீரவேள்
வாங்கயிலிற் கூரிய கண்ணா ரொருவளவன்
தூங்கெயிலிற் கைக்கொண்ட தோகையரும் பாங்கின்
நிதியோடுங் கூட நிதியோ னளகை
பதியோடுங் கொண்டார் பலரும் முதலாய
சாய லரமகளிர் தந்த திருமரபில்
கோயி லுரிமை சூழாநெருங்கி வாயிலும்
மாளிகையுஞ் சாலையு மாலயமு மண்டபமும்
சூளிகையு மெம்மருங்கு தோரணமும் சாளரமும்
தெற்றியு மாடமு மாடரங்குஞ் செய்குன்றும்
சுற்றிய பாங்கரு தோன்றாமே பற்றி
மயங்கி மறுகிற் பிணங்கி வணங்கி
உயங்கி யொருவர கொருவர் தயங்கிழையீர்
குழாங்களின் கூற்று
தற்கோடி யோரிரண்டு கொண்டு சதகோடி
கற்கோடி செற்ற சிலைகாணீர் முற்கோலி
வட்ட மகோததி வேவ வொருவாளி
விட்ட திருக்கொற்ற விற்காணீர் வெட்டி
சுழியிட்ட காவிரிக்கு சோணாடு வாழ
வழிவிட்ட வாள்காண வாரீர் ஒழிய
மதியெறிந்து வல்லேற்று வானெறிந்து தூங்கும்
பதியெறிந்த கொற்றவாள் பாரீர் உதியர்
இடப்புண்ட பேரிஞ்சி வஞ்சியி லிட்ட
கடப்ப முதுமுரசங் காணீர் கொடுப்ப
தரைகொண்ட வேற்றரசர் தஞ்சென்னி பொன்னி
கரைகொண்ட போர்முரசங் காணீர் சரத
பவித்ர விச படைப்பரசு ராமன்
கவித்த வபிடேகங் காணீர் தவித்துலகில்
மூவெழுகா லெக்கோ களையு முடித்தவனி
மூவெழுகாற் கொண்ட முடிபாரீர் தாவி
வரப்பு மலைசூழ் வரவா யிரங்கண்
பரப்பு மொருவேங்கை பாரீர் புரக்கநின்
றூடம் பரமடங்க வோங்கி யுயரண்ட
கூடம் பொருவுங் குடைபாரீர் கூடற்
பெரும்பெருமா ளெவ்வேந்து முன்போத பின்பு
வரும்பொருமாள் வந்தனன் வாரீர் இருங்கடற்
றோன்றருக்க மண்டலமு தோற்க வுலகங்கள்
மூன்றுக்குஞ் சூடி முடிபாரீர் தோன்ற
அணைத்தரு காயிர மாயிர மாக
பணைத்த பணிவலயம் பாரீர் அணைக்க
சிரித்த சுரேசனை வென்றொரு தென்னன்
பரித்த மணியாரம் பாரீர் தரிந்தருள
வேண்டிய நாளின் முனிவுண்டு வெட்டுண்ட
பாண்டியன் கட்டு வடம்பாரீர் மீண்டும்
திருந்து மதனன் றிருத்தாதை செவ்வி
இருந்த படிபாரீ ரென்பார் பெருந்தேவர்
முக்கொடி முப்பத்து மூவர்க்கு முன்னுயர்ந்த
எக்கொடியு முன்ன ரெடுத்துளவால் அக்கொடியால்
தொல்லா ரணமனைத்துஞ் சொல்லுஞ் சுரவரசர்
எல்லாருங் காணு மினவென்பார் புல்லிய
நீர்ப்பூ புதற்பூ முடியன்றி நேராதார்
போர்ப்பூ முடிதடிந்து போக்கியபின் போர்ப்பூவில்
மேதகு கொற்றவைக்கு வேந்தர் பிரானுவந்த
தாதகி யொன்றூமே சார்பென்பார் மீது
பரந்த வவுணர் சிறைப்படும தெண்ணி
இரந்தன கொண்டன வென்று புரந்து
தனிச்சே வகம்பூமி தன்னதே யாக
இனிச்சே வடிவிடா ளெனபார் பனிச்சாரல்
மண்டு மலையால் வருந்தா வகைவருந்தி
பண்டு கலக்கிய பாற்கடலு கொண்டதோர்
செங்கோ கனகை திருமார்பி லன்றியே
எங்கோ விருப்பா ளினியென்பார் நங்காய்
திருப்பதி மாபதி யித்திரு மார்பில்
இருப்பது காட்டுமி னென்பார் சிரித்தெதிரே
அங்க கமலை யமலன் பெருந்தேவி
கங்க புலனாயி னன்றென்பார் நங்கைமீர்
கண்ணாகு தாமரையுங் கைதொழுதே மெம்மறையும்
பண்ணாகுஞ் செந்தா மரைபணிந்தேம் வண்ண
தொடித்தா மரையு தொழுதன நாபி
கடித்தா மரைதொழுவேங் காட்டீர் பிடித்தென்ன
அத்தா மரைதன் னடித்தா மரைக்கன்றி
மைத்தா மரைக்கொளிதோ மற்றென்பார் உய்த்தால்
ஒருபொரு தாதகி தோய்சுரும்பை யோட்டற்
கிருபெருஞ் சாமரையு மென்பார் அருவி
அருகெய்த வொட்டா வயிரா பதத்தின்
இருகன்ன சாமரையு மென்பார் தெருவத்து
தங்களின் மாறாடி யுள்ள தடுமாறி
திங்க ணுதலார் தெருமரலும் அங்கவரில்
பேதை
பேதை குழாத்தொரு பேதை சிலபழங்
காதற் குழாத்தோர்தங் கையடைளாள் மீது
பிறந்தணிய கிள்ளை பெறாத்தாயர் கொங்கை
மறந்தணிய செவ்வி மடமான் புறந்தணி
தோகை தொடாமஞ்ஞை தோற்றத்தாற் சுற்றத்தார
கோகை விளைக்கு மொருகரும்பு பாகை
தொடைபோய முல்லை தொடையலே போல
இடைபோய தூய வெயிற்றாள் உடையோன்
செறிந்து விடாத திருத்தோற்ற முற்றும்
அறிந்து பிறந்த வறிவோ நெறிந்தகுழல்
எம்பாவை யெங்கொல்லி பாவை யெனப்பாடும்
அம்பாவை பாடும் படியறிவாள் உம்பர்
வெருவ கரையை மிகும்பொன்னி யன்றி
பருவத்து வேறு படியாள் உருவ
குறைவனை யென்றெழுதுங் கோலத்து ஞால
திறைவனை யல்லா லெழுதாள் இறைவன்
முழங்கேழ் கடல்கொடுத்த முத்தேழு மல்லால்
கழங்கேழு மாட கருதாள் வழங்கிய
முற்றி லெடுத்து கொழித்து முழுமுத்தால்
சிற்றி லிழைக்கின்ற செவ்விக்கண் சுற்றும்
பனிநீங்க தோன்றும் பகலவன் போல் வையம்
துனிநீங்க தோன்றிய தோன்றல் முனியும்
பொறைவி டெயில்விட்டு பொய்கை கவிக்கு
சிறைவிட்ட சோளேந்த்ர சிங்கம் நறைவிட்ட
அந்தா செங்கழுநீர் மார்ப னழகிய
செந்தா மரைக்க டிருநெடுமால் வந்தானை
ஓகைய ராகி யுலப்பில் பலகோடி
தோகைய ரோட தொடர்ந்தோடி தாகம்
தணி தமரும்
பணி பணிந்தாள்
ஆரந்தான் கண்டா ளயிரா பதந்தொழுதாள்
கோர தெரியவுங் கும்பிட்டாள் வீரன்
படாகை பெரும்புலியும் பார்த்தொழிந்தா ளண்ட
கடாக ததிர்முரசுங் கண்டாள் அடாதனவும்
சொல்லி யறியா தொழிந்தாள் சுருப்புநாண்
வில்லி யறியாது விட்டதே நல்லார்சூழ்
பெதும்பை
மற்று மொருத்தி வலம்புரி யாயிரம்
சுற்றுஞ் சலஞ்சலம்போற் றோன்றுவாள் சுற்றுடன்
அன்ன நடக்க நடந்தா ளருங்கிள்ளை
பின்ன ருடன்பேச பேசினாள் இன்னிசையாழ்
பாட வதனுடனே பாடினாள் பைந்தோகை
ஆட வதனுடனே யாடினாள் கூடிய
நல்லிள மானோக்க நோக்கினா ணாணிரம்பி
முல்லை முகிழ்க்க நகைமுகிழ்த்தாள் கொல்லும்
மழகளிற்றின் கோடேழுச்சி யென்று மரவின்
குழவி யெயிறெழுச்சி யென்றும் பழகி
எறியு மழையெழுச்சி யென்று முலகம்
அறியு முலையெழுச்சி யன்னம் செறியும்
வரையேழி லுள்ள வயிரமும் வாங்கும்
திரையேழின் முத்தின் றிரளும் தரையேழிற்
பொன்னும் பிலனேழிற் போகா விருள்போக
மின்னுஞ் சுடிகை வெயின்மணியும் பின்னும்
பொழிலேழிற் போதும் புனை புனைவா
கெழிலேறும் நாளையே யென்ன கழிய
உழப்போ மினியென் றுடலுள்ள போழ்தே
எழப்போக வெண்ணு மிடையாள் மழைத்து
புடைபோ யுளகம் பொதுக்குவதன் முன்னே
கடைபோ யுலகளக்குங் கண்ணாள் உடையதன்
சேரி சிறுசோறுஞ் சிற்றிலும்போ சில்லணிபோ
பேரிற் பெருஞ்சோற்று பேரணியாள் ஒரையில்
தன்னாய நிற்ப தனிநா யகன்கொடுத்த
மின்னாயஞ் சேவிப்ப வீற்றிருப்பாள் மென்மலர்
மேய சிறுமுல்லை பந்தர் விடவெடுக்கும்
பாய பருமுத்தின் பந்தராள் நாயக
உச்சியிற் கொண்டை முடிப்பி னுலகுடையோன்
முச்சியிற் சூட்டு முடிக்குரியாள் நிச்சமும்
நல்லுயிர பாவை துணைபெற நாயகன்
கொல்லியிற் பாவை கொளவிருப்பாள் மெல்லியற்
பாங்கிக்கு நங்கோமன் விந்தை பசுங்கிளியை
வாங்கி தரப்போய் வணங்கென்பான் ஆங்கொருத்தி
மாயமான் வேண்ட மறாதானை வான்மதியின்
மேயமான் வேண்டி விடப்பெறுவாள் சேயவொளி
தென்பா லிலங்கைவாழ் தெய்வ மணிபணிப்பீர்
என்பாவை பூண வினிதென்பாள் அன்பால்
உயிர்த்துணை பாங்கி யொருநோன் புணர்த்த
எயிர்புற தெல்லாருஞ் சூழ அயிற்படை
வீரனை யெய்த வியன்காவிற் சென்றெய்தி
மாரனை நோக்கி வழிபட மாரன்
படியில் கடவு பணைமுழங்க வென்றி
கொடியின் மகரங் குமுற நெடிய
அலகி லசோக நிழற்ற வடைய
உலகில் மதுகரமூத கலகி
தலங்க லடவி குயிற்குல மார்ப்ப
விலங்கன் மலயக்கால் வீச கலந்தெழும்
ஆவி யகிலொடு நீரோ டரமகளிர்
தூவிய தண்ணறுஞ் சுண்ணமும் காவில்
விடவிட வந்துயிர் மீதடுத்து போன
வடிவும் பழம்படியே வாய்ப்ப கொடியிடை
எண்ணிய வெண்ண முடிப்ப வவளெய்தும்
புண்ணியம் போல பொழில்புகுந்தான் அண்ணல்
சரம்போலுங் கண்ணி தனக்கனங்கன் றந்த
வரம்போல் வளமறுகில் வந்தான் வரும்போதில்
ஏன்று மதன னியமியம்ப வேயனகன்
மூன்று முரசு முழங்கின தோன்றாத
வாரி களிறு முழங்கவே மானதன்
மூரி களிறு முழங்கியது வேரித்தார்
கற்கு மசோக நிழற்றவே பார்கவித்து
நிற்குங் கவிகை நிழற்றியது முற்கொண்டு
மற்றை யலகின் மதுகர மூதவே
ஒற்றை வலம்புரி யூதியது முற்றாத
சொற்குதலை கோகுலங்க ளார்க்கவே சோளேசன்
அற்கமணி காகளங்க ளார்த்தன தெற்கெழுந்த
மல்லன் மலயக்கால் வீசவே மானதன்
மெல்லென் கவரிக்கால் வீசியது மெல்லியலும்
காமன் பெருநோன்பு கைவந்த தென்றெதிரே
கோமைந்தன் வேழங் குறிகினாள் கோமனும்
மல்கு மூவகை கலுமி வரவர
பில்கு மதர்வை பெரும்பர பல்குலும்
கொங்கை புதுவரவு தோளுங் குறைநிரம்ப
மங்கை பருவத்தை வாங்கினாள் மங்கை
திருக்கொள்ளு மார்பற்கு காமவேள் செவ்வேள்
வெருக்கொள்ளுஞ் செவ்வி விளைத்தாள் பெருக்க
ஒருவ ரொருவர குருகி யுருகி
இருவரு மீடழிய நோக்கி வருகாமன்
செஞ்சாயல் வல்லியையுஞ் செந்தா மரைத்தடங்கண்
மஞ்சாய கோல மணாளனையும் அஞ்சாதே
கொய்யும் பகழி கரும்பிற் சுரும்பிற்கோ
தெய்யு தரமே யெழப்போனான் தையல்
மங்கை
ஒருத்தி தரள மிருநிரைகொண் டொப்பி
திருத்தி யனைய வெயிற்றாள் கருத்தின்
நிலையிற் சிறந்த நிகரிலா மேரு
மலையிற் பிறந்த வயிரம் அலையிற
பழக்க சலஞ்சலம் பாற்கடலே போல
முழ கருவுயிர்த்த முத்தம் தொழத்தகும்
முன்னை யுலக முழுது தருமுரசு
மன்ன னபிடேக மாணிக்கம் முன்னவன்
பாற்கட னீங்குநா ணீங்க பழம்படியே
நாற்கட னாயகனை நண்ணுவாள் மேற்கவின
பண்டு கடல்கடைந்தும் பாரெடுத்தும் வில்லிறுத்தும்
கொண்ட துணைவியருங் கூசுவாள் புண்டரிக
தாடும் பொழுதினு மன்ன பெடையயிர
பாடு மழலை பரிபுரத்தாள் நீடிய
தூசுகள் வெள்ளென்று தூயன சேயன
கோசிக மாக்குங் குறங்கினாள் கூசி
பணியு மரசு பணிச்சுடிகை யேகோ
தணியு மரைப்ப டிகையாள் துணியுங்கால்
அற்றுண் டிலதென்று மம்மருங்கு லின்றெமக்கு
பற்றுண் டெனுமுதர பந்தனந்தாள் கொற்றவன்
சங்க நிதிமு தாமத்தாள் பத்மநிதி
துங்க நவரத்ன தோள்வளையாள் புங்கம்
தொடுக்கு மலரோன் சுறவு குறவு
கொடுக்கு மகர குழையாள் அடுத்து
பணித தலகில் பராவெடுத்து சிந்தா
மணிதந்த சூளா மணியாள் அணியே
பரவி விறலியரும் பாணரு தற்சூழ
திரவி புகார்பாடு மெல்லை வரவர
கொங்கைக்கு தோளிணைக்கு மாற்றா கொடிமருங்குல்
நங்கைக்கு வந்தொருத்தி நாயகியே கங்கை
துறைவன் பொறையன் றமிழ்நாடன் சோணா
டிறைவன் றிருப்பவனி யென்றாள் பிறைநுதலும்
வேனிற் கணிய குயில்போன்றும் வீழ்தாரை
வானிற் கணிய மயில்போன்றும் தானே
வரவே நினையு மனக்களியா லிற்றை
இரவே நமக்கிடையூ றென்றாள் இரவில்
செயிர்க்கரங்கள் வேண்டா டிருக்குலத்து வெய்யோன்
வெயிற்கரங்க ளூடாட வேண்டும் உயிர்க்கொலைசூழ்
தென்மல தென்றலை யோட்டி புலியிருந்த
பொன்மலைய வாடாய் புகுதென்னும் முன்மலைந்த
கார்க்கடல் வாயடங்க நாயகன் கண்வளர்ந்த
பாற்கடல் வாராய் பரந்தென்னும் மேற்பரந்து
கார்பாடும் புள்வா கடுப்பெய் தமுதிறைவன்
பேர்பாடும் புள்வாயிற் பெய்கென்னும் ஈர்குரல்
அன்றிற் கொழிய மகன்றிற்கே யாக்குமிம்
முன்றிற் பனையு மெனமொழியும் இன்றிரவை
ஊழி குயில்கா தொருபுலரி கூவிய
கோழிக்கே சோலை கொடீரென்னும் வாழிய
பள்ளி யெழுச்சி பவனி யெழுச்சிதரும்
வெள்ளி யெழுச்சி யெனவிளம்பும் நள்ளிரு
கங்குற் கடற்கெல்லை யிவ்வாறு கண்டுவந்த
மங்கை பருவத்து வாணுதலும் பொங்கொலிநீர்
வையகங் காவலற்கு பெய்யு மலர்மழைக்கு
கொய்பொழில் சென்று குறுகினாள் செய்ய
கொடுங்குழை மின்ன குயில்கொழுத கோத
விடுங்குழை தேமாவின் மின்ன நெடுங்குழை
வல்லி கொடிய முறுவலிப்ப வந்தெதிர்
முல்லை கொடியு முறுவலிப்ப மெல்லியற்
பாந்தளு தோற்கும் பகட்டல்குல் கைம்மலர
காந்தளு நின்றெதிர் கைம்மலர போந்தார்
பரவு மரப்பாவை கொள்ள பயந்த
குரவு மரப்பாவை கொள்ள புரிகுழற்
சோலையின் மான்மதஞ் சூழ்வர வேழிலை
பாலையின் மான்மதம் பாரிப்ப சோலையின்
வாங்கும் புதுமது வாணுதல் கொப்புளிப்ப
கோங்கு மதுவெதிர் கொப்புளிப்ப ஆங்கு
திருவஞ்சு கோலத்தாள் செவ்வியா லெல்லாம்
பருவஞ்செய் சோலை பெருவஞ்சி
கொய்தன யாவும்
செய்தனர் பின்செல்ல
பொன்மல ராயம் பொழி பொழிற்கொண்ட
மென்மலர் கொண்டு வௌிப்பட்டாள் மன்னனும்
எப்போதிற் போது மொருபோதி லேந்திழை
கைப்போதிற் பெய்தன கண்டருளா அப்போதே
செங்கை தடவந்துஞ் சீறடி தீண்டியும்
கொங்கை கணங்கெறிந்துங் கொப்பளித்தும் மங்கை
பரிசி லுருவம் பயந்தன வென்று
குரிசி லெதிர்கவர்ந்து கொண்டான் தெரிவரிய
தூசு துகிலு தொடியுங் கடிதடஞ்சூழ்
காசும் பலகாற் கவர்ந்ததற்கு கூசி
இலகுஞ் சுடர்முடியு மியானையு மீரேழ்
உலகுங் கொடுப்பானே யொ பலகாற்
கொடாத திருநோக்க முற்றுங் கொடுத்து
விடாது களிறகல விட்டான் அடாதான்பால்
மடந்தை
ஈரடியான் மூவுலகுங் கொண்டானை யெப்பிறப்பும்
ஓரடியு நீங்காதா ளோராணங்கு சீருடைய
மானுங் கலையும் வளர வுடன்வளர்ந்து
தானு மதிய மெனத்தகுவாள் பானின்று
அனலுங் குழைமகர மஞ்ச புடைபோ
கனலுங் கயலனைய கண்ணாள் மினலால்
இருளுடைய மேனின் றெறிசுடிகை பாப்பு
சுருளுடைய வீங்கிய தோளாள் அருளொடும்
தம்புறஞ் சூழ்போ தாயரே வீக்கிய
வம்பற வீங்கும் வனமுலையாள் பைம்பொனின்
பண்ணிற காஞ்சியுங் கட்டிய பட்டிகையும்
கண்ணிற போய கடி தடத்தாள் தண்ணுறந்தார்
மின்மணி மோலியான் வீதி வரவேற்று
தன்மணி மாளிகை தாழ்வரையிற் பொன்னுருவில்
தைத்து துகிரு மரகதமு தாறாக
வைத்து கமுக வளஞ்செய்து முத்தின்
பொலன்றோ ரணநிரைத்து பொன்னடுத்த மேக
தலந்தோய் விசால தலத்து மலர்ந்தபூங்
கற்ப தருநிரை
பொற்ப மிசையடுத்த பூம்பந்தர் நிற
புகரற்ற ரத்ன விதானமேற் போக்கி
நகைவச்ர மாலையே நாற்றி பகல்விளங்கா
மைவிளக்கு வையாதே மாணிக்க வர்க்கமே
எல்விளக்கு மாசு வெதிரெடுத்து நொல்விய
பூநறுஞ் கண்ண பொடியடங்க வீசிய
நான நறுநீர தளிநளிய மேனிலையிற்
கங்கையி னீர்முகந்தோ காவிரியி னீர்கொணர்ந்தோ
கொங்கை யினைநீர குடநிரைத்து எங்கும்
அசும்பு பொலன்கொடியா லவ்வெல்லை யுள்ள
விசும்பு தவிர வலிக்கி பசும்பொன்யாழ்
முட்ட முயன்ற விறலியர் முன்னிருப்ப
இட்ட தவிசின் மிசையிருந்து பட்டினஞ்சூழ்
பொன்னிக்குங் கோதா விரிக்கும் பொருநைக்கும்
கன்னிக்குங் கங்கைக்குங் காவலனை சென்னியை
தானை பெருமானை நல்ல சகோடங்கொண்
டியானை பெருமானை யேந்தெடுப்பாள் மேனாள்
யானையின் பெருமை
உகந்த பிடியுடனே யோரெண் பிடியும்
திகந்த களிறெட்டுஞ் சென்று முகந்து
துறக்குங் கடன்முத லேழுஞ் சொரி
சிறக்கு மபிடேகஞ் செய்து விறக்கும்
உயிர்காவன் மேற்கொண்டு டுலகைவலஞ் செய்யும்
அயிரா பதமத யானை உயரும்
கடநாக மெட்டுங்
படநாக மெட்டும் பரந்தீர துடனாக
தென்னர் வலம்புரியுஞ் சேரலர் சாமரையும்
கன்னாவ தங்கிசமா கைக்கொண்டு பின்னவர்
வன்னகை மௌலி யிரண்டு மிருகோட்டு
கோளகையா கக்கொண்ட கோக்களிறு மாளிகை
தாங்குண்ட வாயில்க டோறு தனிதூங்கி
தூக்குண்ட கண்டை தொடருடனே வீக்குண்டங்
காராத நாளைக்கு போத கிடந்தார்ப்ப
தாரா கொண்ட மதாசலநீர் வாரா
நதிக்கு மலைக்கு மடவிக்கு நாளும்
குதிக்கு மதர்சுவடு கோத்து மதிக்கும்
பிடிவிடா காதற் பெருங்களிறுங் கன்றும்
அடிவிடா தவ்வா றடை படிவிடா
தீட்டும் பெருவாரி யேழென்பா ரெட்டென்ன
கூட்டும் பெருங்கடவு கொல்யானை நாட்டில்
பணிகொண்ட பூதம் படைநான்கும் பற்ற
பணிகொண்ட பொவம் பரக்க
கார்முற்றும் பேரிடி வீழ்ப்ப கௌரியர்
ஊர்முற்றுஞ் செற்ற தொருகூற்றம் சேரர்
கனக்கு மனீ களந்தொறுங் கைக்கொண்
டினக்கு மரசுவா வெல்லாம் தனக்கு
துணிக்குங் கழைக்கரும்பு நெல்லுஞ் சுமக்க
பணிக்குங் கடவு பசுடு தணிப்பரிய
பூகங்கை தாடோ செங்கை புயல்வானின்
மாசுங்கை தோயப்போய் மாமேரு நாகங்கை
கொண்டு தனித்தங்கள் கோள்வேங்கை வீற்றிருப்ப
கண்டு களிக்குங் களியானை வண்டலம்ப
நின்று குதிக்கு மதத்தி னிலநெகிழ்ந்தெ
குன்று மொளித்து குளிப்பமுன் சென்றழுத்தி
பண்டு வௌியின் மகதத்தை பாவடியால்
செண்டு வௌிகண்ட செங்கைமா கண்ட
மதிலே யகழாக வாங்கி யகழே
மதிலா வெழாநிற்க வைத்து புதுமலர்செய்
வாவியை செய்குன்ற மாக்கி செய்குன்றை
வாவிய தாக வெனவகுத்து தாவுமான்
வெள்ளிடை கோநக ராக்கி கோநகர்
வெள்ளிடை யாக வுடன்விதித்து தெள்ளி
புரப்பா ரிரப்பாரா போத விரப்பார
புரப்பாரே யாக்கும் புகர்மா திருக்குலத்து
கண்ட னயிரா பதமதங்கால் காலத்து
கொண்ட தொருசுவடு மேல்கொண்டு வண்டு
கடியுங் களிறுங் களிறாமே காதற்
பிடியும் பிடியாமே பின்னர கடிமதில்
மாற்று மருமணம் வங்காள பாகத்து
வேற்று மதமா ம்ருகமத்தை போற்றார்
வயிரா கரமெறிந்த மானதன் கண்டன்
அயிரா பதமதமே யாக்கி செயிர்தீர்ந்த
காதற் பிடிதேற்றற் தேறா கடாக்களிறென்
றேத பெயரு மொருபொருப்பு பாதையிற்
கச்சியிற் கற்றளியிற் கல்லிற் கலிங்கத்திற்
கொச்சியிற் கோதா விரிக்குளத்தில் விச்சியில்
வல்லூரிற் கொல்லா புரத்தின் மணலூரில்
நெல்லூரிற் புத்தூரி னெட்டூரிற் செல்லூரிற்
கோட்டாற்றிற் கொங்கிற் குடக்கூரிற் கொப்பத்தில்
வாட்டாற்றிற் காம்பிலியின் மண்ணையில் வேட்டு
தரணி கவர்ந்து தமிழ்வேந்தர் பாடும்
பரணி புனைந்த பகடு சரணென்று
வாடா மதுரயாழ் வாங்கி மடவரல்
பாடா விருந்த பருவத்து நீடா
பரிசி லுடனே பணிப்பதுபோல் யானை
குரிசி லுடன்வந்து கூட தெருவில்
வரவந்தான் மன்னர் பிரானென்று மாரன்
பொரவந்தான் கைவாங்கி போனான் விரல்கவரும்
வீணை சுகப்பட வேழ மிடற்றுக்கும்
ஆணை பெருமா ளகப்பட வாணுதல்
ஐந்து சுரர்தருவு மைந்து திருமாலை
தந்து தொழவெழுந்து சாத்தினாள் மைந்தனும்
பண்ணுக்கே தோற்பான் பணைமுலைக்கு மல்குலுக்கும்
கண்ணுக்கு தோலானே கைக்கொண்டான் வண்ணமும்
வெண்டுகிலுங் காஞ்சியு மேகலையு தோள்வளையும்
கொண்டவற்றின் மாறு கொடுப்பான்போற் பண்டை
முடியுஞ்சிங் காதனமு முத்த குடையும்
படியு மரசும் பணித்தான் பிடியும்
சிவிகையு நிற்பவ சேயிழை வீதி
கவிகையு தானுங் கடந்தான் குவிமுலை
அரிவை
ஏனை யரிவை யொருத்தி யிகன்மாரன்
சேனை திரண்டனைய செவ்வியாள் வானில்
விடுசுடர செக்கர் வியாழமு தோற்கும்
படுசுடர செம்பொற் படியான் வடிவு
நெடிதோர்க்கு லொக்கு நிறைமதிய நேரே
படிதோற்கும் முத்தின் படியாள் முடிவில்
குலபதும ராக பதிகுதி கொள்ளும்
பலபதும ராக படியாள் அலைகடலில்
முற்றா மரையாண் முகத்தா மரையாள
பொற்றா மரையாள போதுவாள் அற்றைநாள்
நீர் விளையாட்டு
தண்ணென் கழுநீர தடம்பொய்கை நாமெலாம்
அண்ணல் வருமளவும் மாடுதுமென் றெண்ணி
புணைக்கும் மொருதன் புறங்காவ லா
துணைக்கு தடஞ்சுருங்க தோ பணைத்து
புடைக்கும் விசும்பிடம் போதா முலைக்கும்
நடைக்கு முதற்பகை நாமென் றுடைப்புண்டு
பின்னர பெருஞ்சக்ர வாக பெருங்குலமும்
அன்ன குழை மலம்வர பின்னரும்
காற்குங் கருங்கட்கு முட்காதே கைவகு
தேற்கு தரமேநா மென்றுபோ தோற்கின்ற
வாவியி லுள்ள வரால்களுஞ் சேல்களும்
தாவி விழுந்து தடுமாற தீவிய
பொம்மென் சிலம்பு புலம்பு புறவடிக்கும்
அம்மென் கழுத்துக்கு மாற்றாது மம்மர்ப்ப
டெங்கு தரியா திரியல் போ யாமையும்
சங்கு தடத்தை விடத்தவழ நங்கைதன்
செவ்வாயுங் காதுஞ் செயிர்த்தன வென்றாதுங்கி
எவ்வாயுங் காணா தெதிரேநின் றவ்வாய
கொள்ளை குமுத மலருங் குழையிள
வள்ளை கொடியு முடன்மயங்க வெள்ளம்போல்
பெய்யு மதயானை கோடும் பெருநெருங்
கையும் புடைப்ப கலுழ்ந்தனபோல் தொய்யில்சூழ்
தாம முலையாலு தோளாலு தாக்குண்டு
காமர் தடமுங் கரைகடப்ப கோமகன்
உள்ளம் பெருக பெருக வுலாக்கொண்டு
கள்ளம் பெருகுங் கருநெடுங்கண் வெள்ளம்
படிய வருஞ்சிவப்பு வள்ள பசுந்தேன்
வடிய வருஞ்சிவப்பின் வாய்ப்ப நெடிது
திளைக்கு திருமகளை வாவியிற் சேவி
திளைக்குங் கொடியிடையா ரேத்தி திளைத்துமிழ
தம்மை கமல மலர்க்களித்து தாமவற்றின்
செம்மை கவர்ந்த திருக்கண்ணும் மெய்ம்மையே
மெய்போய வைய மருங்குலு மேகலைபோ
கைபோ யகன்ற கடிதடமும் பைபோய்
நெறிக்கும் பணிவலைய நீங்கிய வேய்த்தோள்
எறிக்கும் பெரும்பே ரெழிலும் நெறிப்பட
கொண்டுபோ தேறிய கோமகள் பேரழகு
பண்டுபோ னோக்க பயப்படுவார் கண்டு
கலன்கலன் கண்ணெச்சிற் கென்று கடிதிற்
பொலன்கலன் கொண்டு பொதிந்தார் இலங்கிழை
யானை பெருமா ளயிரா பதத்திருந்த
தானை பெருமாளை சந்தித்தாள் மேனி
பொருவிற்கே யெல்லா வரம்பையரும் போதா
திருவிற்கே குற்றேவல் செய்வான் பொருவிற்கை
வானிற்கோ னஞ்ச வருவானை யஞ்சாதே
வேனிற்கோ னேபரவ மேற்செல்வான் வான
தெடுக்குங் கொடிமகர ராசி தொடையிற்
றொடுக்கு மகரம்போற் றோற்ற வடுத்தெய்யும்
மன்றன் மலரம்பு விற்கரும்பு வண்டுநாண்
தென்றறேர் தானனங்கன் செற்றதென மென்றோளி
பாங்கி யெடுத்த படாகை பசும்பொற்பூ
வாங்கி யெதிர்தூய் உணங்கினாள் தாங்கி
ஏடுப்ப வெழுவா ளிருதிருத்தோண் மாலை
கொடுப்ப விறையவனுங் கொண்டான் கொடுத்தவற்று
பொன்மாலை போதகத்தை சூட்டி பொலன்குவளை
நன்மாலை சாத்தினா னாயகனும் தன்மார்பில்
ஆர்மாலை கோமா னருளினா னம்மாலை
கார்மாலை யுட்கொண்டு கைக்கொண்டாள் பார்மாலே
அரிவையின் முறையீடு
மூதண்டங் காக்கு முதுதண்ட மாரவேள்
கோதண்ட தீஞ்சாறு கொள்ளாதோ மாதண்ட
முற்ற கடல்கிடந்து வேவ முனிந்தின்னம்
கொற்ற தனிவிற் குனியாதோ நற்றடத்துள்
ஏறு முதலை யெறிதிகிரி வேண்மகர
வேறு முறிய வெறியாதோ மாறாது
காந்து முழுமதியை யோரோர் கலையாக
ஏந்து சுடர்வடியா ளீராதோ பாந்தண்மேல்
வைய முடையான் வலம்புரியில் வைகறைவாய்
உய்ய வொருகுரல்வ தூதாதோ வையம்
தணியு தகைத்தோ தமியன்மா லென்று
பணியு மடக்கொடியை பாரா வணிய
உருத்தந்த தோற்றங்க ளொன்றினு தப்பா
வருத்த திருமனத்து வைத்தே திருந்தட
தோளு திருமார்பு நீங்கா துணைவியரில்
நாளும் பிரியாமை நல்கினான் மீள
ஒருமகள் கண்ட னொருபெரும்பே ராகம்
திருமகன் போல திளைப்பான் இருநிலம்
தாளா வளந்து தரும்பெரியோன் றாதகி
தோளா லளந்த துணைமுலையா ணாளும்
திரையர மாதருஞ் சேவிப்பாண் மேரு
வரையர மாதரின் வாய்ப்பாள் கரையில்
விருப்பவனி கூர வருகின்ற மீளி
திருப்பவனி முன்விரைந்து செல்வா ளுருப்ப
அணந்த பணிவலைய வண்ணன் முதனாண்
மணந்த மணச்செவ்வி வாய்ப்ப கொணர்ந்தணிந்த
சூடா மணியும் பணிவளையுஞ் சூடகமும்
கோட மணிமகர குண்டலமும் ஆடிய
சச்சையு மாலையு மாரமு தாமமுங்
கச்சையு மேகலையுங் காஞ்சியும் பச்சென்ற
பட்டுங் குறங்கணியும் பட்டிகையு நூபுரமும்
கட்டுங் கனவயிர காறையும் இட்ட
திலகமும் மான்மதமுஞ் செஞ்சாந்து மெல்லா
உலகமு தோற்கு முருவும் கலகமும்
மாரனு தானும் வருவாளை மன்னரில்
வீரனுங் காணா வெருவரா பாரனைத்தும்
தேறு திருவை திருவவ தாரங்கள்
தோறும் பிரியா தொடர்பாலும் ஏறுங்கண்
வாளாலும் வார்புருவ வில்லாலும் வாங்கமை
தோளாலு மீள துவக்குண்டு நீளிய
மைவிடா நோக்கி திருக்கைம் மலரணை
கைவிடா வார்வங் கடைப்பிடித்து தெய்வ
புவனி விலையாய பொற்றுகிற் கெல்லாம்
அவனி முழுது மளித்தான்போற் கவினிய
அற்புத மாலை யணி பணிசெய்யுங்
கற்பக மொன்று கடைக்கணித்தான் பொற்படிக்கு
பாதங்க ளாதி முடியளவும் பாரிப்ப
மாதங்க ராசிதிரு வாய்மலர்ந்தான் ஓதி
முடிக்கு தலைக்கோலம் போல்வன முத்தின்
படிக்குச சலாபம் பணித்தான் வடிப்பலகை
அச்சிரா பரண மனைத்திற்கு தன்வட
வச்சிரா கரமே வழங்கினான் பச்சை
மணிக்கு தலையாய மாணிக்க ரத்ன
பணிக்கு த்ரிகூடம் பணித்தான் தணிப்பில்
பெரும்பே ருவகைய ளாகி பெருமாள்
விரும்பேர் மலர்க்கண்ணி மீண்டாள் பெரும்போர்
வெருவரும் பார்வேந்தர் வேந்தனை போற்றும்
பொருநரும் பாணரும் புக்கார் தெரிவைக்கு
பாடி குழலூதி பாம்பின் படக்கூத்தும்
ஆடி குடக்கூத்து மாடினார் பாடியில்
ஆனிரையும் மாமா னிரையும்போ லானுலகிற்
கோநிரையு மீள குழாங்கொண்டு மீளிரையின்
மீதும் புடையு மிடைய விழவெழவேய்
ஊது திருப்பவள முட்கொண்டு சீத
கடந்தூர வந்தக ககன தளமும்
இடந்தூர வந்து மிணை குடங்கள்
எழவெழ மேன்மே லெழுந்துங் குடங்கள்
விழவிழ மேன்மேல் விழுந்தும் பழகிய
தோளிரண்டு தாளிரண்டுஞ் சோளேசன்றாளிரண்டும்
தோளிரண்டு மென்றென்று சொல்லியும் கோளொளிய
நின்வேய் தவிர்கென்று நேரியன் மேருவிற்
பொன்வேய்ங் குழலொன்று போக்கினான் முன்னே
தசும்பிற்கு மாறாக தங்கோமா னாவற்
பசும்பொற் றசும்பு பணித்தாள் ஒசிந்துபோய்
நாடக பாம்பிற்கு நற்கற் பசுங்கொடுத்த
ஆடக பாம்பொன் றருளினாள் பாடுநர்மேல்
வற்றாத மானத வாவியல் வாடாத
பொற்றா மரையே புனைகென்றாள் கொற்றவன்
கொந்தார மாலை கொளவிளைத்த மாலைக்கு
மந்தார மாலை வருகென்றாள் நந்தாத
பேறு திருவருளு மெய்தி யவர்பெயர
ஏறு தவிசுதர வேறினாள் வேறொருத்தி
பேரிளம் பெண்
கச்சை முனியுங் கனதனமுங் குங்கு
சச்சை கமழு தடந்தோளு நிச்சமுரு
ஏந்த வுளதென் றிருந்த மலர்நின்றும்
போந்த திருமகள் போலிருப்பாள் வேந்தர்
பணியு தடமகுடம் பன்னூறு கோடி
அணியு திருத்தா ளபயன் பணிவலய
வீக்கிலே வீங்கியதோண் மேரு கிரச்சிகர
தாக்கிலே சாய்ந்த தடமுலையாள்பூக்கமழும்
ஆரேற்ற பொற்றோ ளபயனை யாயிரம்
பேரேற்ற தெய்வ பெருமானை காரேற்
றடல்போ லடுதிகிரி யண்ணலை தன்பாற்
கடல்போல லகப்படுத்துங் கண்ணாள் மடல்விரி
தெங்கினு மேற்கு தசும்பினு தேர்ந்தளி
பொங்கு நுரையினும் போய்ப்புகா தங்கு
நறவு குவளை நறுமலர்தோ துண்ணும்
இறவு கடைக்கணி தெய்த சுறவு
கொடியோனை நோக்குவான் கண்டாள்பொற் கொற்கை
நெடியோனை நேமி பிரானைப்படியோனை
கண்டனை மேதினியாள் காந்தனை வந்து
கொண்டனை யென்று குறுகுவாள் கண்டு
மலர்கண் வெளுப்பு சிவப்பூர மற்ற
திலகங் குறுவியராற் றே பலகுதலை
மாற்ற தடுமாற்ற மெய்த மனத்துள்ள
தேற்றம்பி தேற்றஞ் சிதைவிப்ப ஏற்று
துகிலசைந்து நாணு தொலைய வளக
முகிலசைந்து நோவிடைக்கு முற்ற அகிலமும்
சேனையு மன்னரு தெய்வ பெருமாளும்
யானையு நிற்க வெதிர்நின்று கோனே
சதயுக மேனு தரணிபர் மக்கள்
பதயுக மல்லது பாரார் உதயாதி
காந்தநின் கைத்தலத்தை பார்மடந்தை கற்பாந
தேந்து மரவர சென்றிகவாள் பூந்தொடி
நற்போர் மடந்தை திருத்தோளை நாமுடைய
வெற்போ ரிரண்டென்று வீற்றிருக்கும் பொற்பிற்
கலந்தாளுஞ் சொற்கிழத்தி கன்ன துவயமென்
பொலந்தா மரையென்று போகாள் நிலந்தாரா
அந்தா மரையா ளருட்கண்ணை தண்ணிரண்டு
செந்தா மரையென்று செம்மாக்கும் முந்துற்ற
மல்லா புரேச சிலகால மற்றிவை
எல்லா தனித்துடையோம் யாமன்றே அல்லாது
மேகோ தகமிரந்த சாதகம் வெற்பைநிறை
ஏகோ தகம்பொழிந்தா லென்செய்யும் மாகத்து
காலை வெயில்கொண்டு தாமரைக்கு கற்பாந்த
வேலை வெயிலெறிக்க வேண்டுமோ மாலை
சிலாவட்டஞ் சிற்சில நின்றுருகு மென்றால்
நிலாவட்ட நின்றெறிக்க நேரோ குலாவலைஞர்
சேற்றாக்கான் மீளு திருநாடா நீதருமால்
ஆற்றாக்கான் மேன்மே லளிப்பரே கோற்றொடியார்
நீங்கரிய மேகமே யெம்பொல்வார் நீயளித்தால்
தாங்கரிய வேட்கை தவிப்பாரே யாங்களே
தண்மை யறியா நிலவினேஞ் சந்ததமும்
உண்மை யறியா வுணர்வினேம் வெண்மையினிற்
செல்லாத கங்குலே தீராத வாதரவேம்
பொல்லாத வெம்பசலை போர்வையேம் நில்லாத
வாமே கலையே முலைவீக்கா வம்பினேம்
யாமேயோ விப்போ தௌிவந்தேம் யாமுடைய
நன்மை யொருகால துள்ள தொருகாலா
தின்மை யுணராயோ வெங்கோவே மன்னவநீ
முன்பு கருடன் முழுக்கழுத்தி லேறுவது
பின்பு களிற்றின் பிணர்க்கழுத்தே மின்போல்
இமைக்குங் கடவு ளுடையினைபண் டிப்போ
தமைக்கு துகிலினை யன்றே அமைத்ததோர்
பாற்கடற் சீபாஞ்ச சன்னியம்பண் டிப்போது
கார்க்கடற் சென்று கவர்சங்கேசீர்க்கின்ற
தண்ண துழாய்பண்டு சாத்து திருத்தாமம்
கண்ணியின் றாரின் கவட்டிலையே தண்ணென்ற
பள்ளியறை பாற்கடலே பண்டு திருத்துயில்கூர்
பள்ளி யறையின்று பாசறையே வெள்ளிய
முத்த குடைகவித்து முன்கவித்த மாணி
கொத்து குடையொ கூடுமே இததிறத்தால்
எண்ணற் கரிய பெரியோனீ யெங்களையும்
அண்ணற் கிகழ வடுக்குமே விண்ணப்பம்
கொண்டருளு கென்ன முகிழ்த்த குறுமுறுவற்
றண்டரள கொற்ற தனிக்குடையோன் பண்டறியா
ஆரமு மாலையும் நாணு மருங்கலா
பாரமு மேகலையும் பல்வளையு மூவரும்
பிடியுஞ் சிவிகையு தேரும் பிறவும்
படியுங் கடாரம் பலவும் நெடியோன்
கொடுத்தன கொள்ளாள் கொடாதன கொண்டாள்
அடுத்தனர் தோண்மே லயர்ந்தாள் எடுத்துரைத்த
பேதை முதலாக பேரிளம்பெண் ணீறாக
மாதர் மனங்கொள்ளா மால்கொள்ள சோதி
இலகுடையான் கொற்ற குடைநிழற்று மீரேழ்
உலகுடையான் போந்த னுலா
வெண்பா
அன்று தொழுத வரியை துளவணிவ
தென்று துயில்பெறுவ தெக்காலம் தென்றிசையில்
நீரதிரா வண்ண நெடுஞ்சிலையை நாணெறிந்த
வீரதரா வீரோ தயா
இராசராச சோழனுலா முற்றிற்று