எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாகிய நற்றிணை
©இத்தொகை தொகுப்பித்தோன் பன்னாடு தந்த மாறன் வழுதி
தொகுத்தோன் அறியப்படவில்லை
பாடல்கள் சிறுமை அடி உயர்வு
ம் பாடல் பிற்பகுதி மறைந்தது
ம் பாடல் என ஐயுறுவதும் கொடுக்கப்பட்டுள்ளது
பாடல்களின் ஆசிரியர் அறியப்படவில்லை
ஏனையவற்றின் ஆசிரியர்கள்
திணைக்குறிப்புகள் நூல் பதிப்பித்தோரால் அகம் கலி
ஐங்குறுநூறு உள்ளதற்கு இணையாக காட்டப்பட்டுள்ளன
எனினும் பாடல் விளக்க அடிக்குறிப்புகள் பழமையானதே
கடவுள் வாழ்த்து
மா நிலம் சேவடி ஆக தூநீர்
வளை நரல் பௌவம் உடுக்கை ஆக
விசும்பு மெய் ஆக திசை கை
பசுங் கதிர் மதியமொடு சுடர் கண் ஆக
இயன்ற எல்லாம் பயின்று அகத்து அடக்கிய
வேத முதல்வன் என்ப
தீது அற விளங்கிய திகிரியோனே
பாரதம் பாடிய பெருந்தேவனார்
நூல்
குறிஞ்சி கபிலர்
நின்ற சொல்லர் நீடுதோறு இனியர்
என்றும் என் தோள் பிரிபு அறியலரே
தாமரை தண் தாது ஊதி மீமிசை
சாந்தில் தொடுத்த தீம் தேன் போல
புரைய மன்ற புரையோர் கேண்மை
நீர் இன்று அமையா உலகம் போல
தம் இன்று அமையா நம் நயந்தருளி
நறு நுதல் பசத்தல் அஞ்சி
சிறுமை உறுபவோ செய்பு அறியலரே
பிரிவு உணர்த்திய தோழிக்கு தலைவி சொல்லியது
பாலை பெரும்பதுமனார்
அழுந்துபட வீழ்ந்த பெரு தண் குன்றத்து
ஒலி வல் ஈந்தின் உலவைஅம் காட்டு
ஆறு செல் மாக்கள் சென்னி எறிந்த
செம் மறு தலைய நெய்த்தோர் வாய
வல்லி பெரு தலை குருளை மாலை
மான் நோக்கு இண்டு இவர் ஈங்கைய சுரனே
வை எயிற்று ஐயள் மடந்தைமுன் உற்று
எல்லிடை நீங்கும் இளையோன் உள்ளம்
காலொடு பட்ட மாரி
மால் வரை மிளிர்க்கும் உருமினும் கொடிதே
உடன் போகாநின்றாரை இடை
சுரத்து கண்டார் சொல்லியது
பாலை இளங்கீரனார்
ஈன் பருந்து உயவும் வான் பொரு நெடுஞ் சினை
பொரி அரை வேம்பின் புள்ளி நீழல்
கட்டளை அன்ன இட்டு அரங்கு இழைத்து
கல்லா சிறாஅர் நெல்லி வட்டு ஆடும்
வில் ஏர் உழவர் வெம் முனை சீறூர
சுரன்முதல் வந்த உரன் மாய் மாலை
உள்ளினென் அல்லெனோ யானே உள்ளிய
வினை முடித்தன்ன இனியோள்
மனை மாண் சுடரொடு படர் பொழுது எனவே
முன் ஒரு காலத்து பொருள்வயிற் பிரிந்த தலைமகன்
பின்னும் பொருள் கடை கூட்டிய நெஞ்சிற்கு சொல்லியது
நெய்தல் அம்மூவனார்
கானல் அம் சிறுகுடி கடல் மேம் பரதவர்
நீல் நிற புன்னை கொழு நிழல் அசைஇ
தண் பெரும் பரப்பின் ஒண் பதம் நோக்கி
அம் கண் அரில் வலை உணக்கும் துறைவனொடு
அலரே அன்னை அறியின் இவண் உறை வாழ்க்கை
அரிய ஆகும் நமக்கு என கூறின்
கொண்டும் செல்வர்கொல் தோழி உமணர்
வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி
கண நிரை கிளர்க்கும் நெடு நெறி சகடம்
மணல் மடுத்து உரறும் ஓசை கழனி
கருங் கால் வெண் குருகு வெரூஉம்
இருங் கழி சேர்ப்பின் தம் உறைவின் ஊர்க்கே
தலைவன் சிறைப்புறத்தானாக தோழி அலர்
அச்சம் தோன்ற சொல்லி வரைவு கடாயது
குறிஞ்சி பெருங்குன்றூர்கிழார்
நிலம் நீர் ஆர குன்றம் குழைப்ப
அகல் வா பைஞ் சுனை பயிர் கால்யாப்ப
குறவர் கொன்ற குறை கொடி நறை பவர்
நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகைப்ப
பெரும் பெயல் பொழிந்த தொழில எழிலி
தெற்கு ஏர்பு இரங்கும் அற்சிர காலையும்
அரிதே காதலர பிரிதல் இன்று செல்
இளையர தரூஉம் வாடையடு
மயங்கு இதழ் மழை கண் பயந்த தூதே
தலைவன் செலவு குறிப்பு அறிந்து
வேறுபட்ட தலைவிக்கு தோழி சொல்லியது
குறிஞ்சி பரணர்
நீர் வளர் ஆம்பற் தூம்புடைத்திரள் கால்
நார் உரித்தன்ன மதன் இல் மாமை
குவளை அன்ன ஏந்து எழில் மழை கண்
திதலை அல்குல் பெரு தோள் குறுமகட்கு
எய்த சென்று செப்புநர பெறினே
இவர் யார் என்குவள் அல்லள் முனாஅது
அத்த குமிழின் கொடு மூக்கு விளை கனி
எறி மட மாற்கு வல்சி ஆகும்
வல் வில் ஓரி கானம் நாறி
இரும் பல் ஒலிவரும் கூந்தல்
பெரும் பேதுறுவள் யாம் வந்தனம் எனவே
இரவுக்குறிப்பாற்பட்டு ஆற்றானாய தலைவன்
தோழி கேட்ப தன் நெஞ்சிற்கு சொல்லியது
பாலை நல்வெள்ளியார்
சூருடை நன தலை சுனை நீர் மல்க
பெரு வரை அடுக்கத்து அருவி ஆர்ப்ப
கல் அலைத்து இழிதரும் கடு வரற் கான் யாற்று
கழை மாய் நீத்தம் காடு அலை ஆர்ப்ப
தழங்கு குரல் ஏறொடு முழங்கி வானம்
இன்னே பெய்ய மின்னுமால் தோழி
வெண்ணெல் அருந்திய வரி நுதல் யானை
தண் நறுஞ் சிலம்பில் துஞ்சும்
சிறியிலை சந்தின வாடு பெருங் காட்டே
பட்ட பின்றை வரையாது கிழவோன் நெட்டி
இடை கழிந்து பொருள்வயிற் பிரிய ஆற்றாளாய
தலைவிக்கு தோழி சொல்லியது
குறிஞ்சி
அல்கு படர் உழந்த அரி மதர் மழைக்கண்
பல் பூம் பகை தழை நுடங்கும் அல்குல்
திரு மணி புரையும் மேனி மடவோள்
யார் மகள்கொல் இவள் தந்தை வாழியர்
துயரம் உறீஇயினள் எம்மே அகல்வயல்
அரிவனர் அரிந்தும் தருவனர பெற்றும்
தண் சேறு தாஅய் மதனுடை நோன் தாள்
கண் போல் நெய்தல் போர்வில் பூக்கும்
திண் தேர பொறையன் தொண்டி
தன் திறம் பெறுக இவள் ஈன்ற தாயே
இயற்கை புணர்ச்சி இறுதிக்கண் தலைமகளை
ஆயத்தொடும் கண்ட தலைமகன் சொல்லியது
பாலை பாடிய
அழிவிலர் முயலும் ஆர்வ மாக்கள்
வழிபடு தெய்வம் கண் கண்டாஅங்கு
அலமரல் வருத்தம் தீர யாழ நின்
நல மென் பணை தோள் எய்தினம் ஆகலின்
பொரி பூம் புன்கின் அழற் தகை ஒண் முறி
சுணங்கு அணி வன முலை அணங்கு கொள திமிரி
நிழல் காண்தோறும் நெடிய வைகி
மணல் காண்தோறும் வண்டல் தைஇ
வருந்தாது ஏகுமதி வால் எயிற்றோயே
மா நனை கொழுதி மகிழ் குயில் ஆலும்
நறு தண் பொழில கானம்
குறும் பல் ஊர யாம் செல்லும் ஆறே
உடன்போகா நின்ற தலைமகன் தலைமகட்கு உரைத்தது
பாலை
அண்ணாந்து ஏந்திய வன முலை தளரினும்
பொன் நேர் மேனி மணியின் தாழ்ந்த
நல் நெடுங் கூந்தல் நரையடு முடிப்பினும்
நீத்தல் ஓம்புமதி பூ கேழ் ஊர
இன் கடுங் கள்ளின் இழை அணி நெடு தேர
கொற்ற சோழர் கொங்கர பணீஇயர்
வெண் கோட்டு யானை போஒர் கிழவோன்
பழையன் வேல் வாய்த்தன்ன நின்
பிழையா நல் மொழி தேறிய இவட்கே
உடன்போக்கும் தோழி கையடுத்தது
நெய்தல் உலோச்சனார்
பெய்யாது வைகிய கோதை போல
மெய் சாயினை அவர் செய் குறி பிழைப்ப
உள்ளி நொதுமலர் நேர்பு உரை தௌளிதின்
வாரார் என்னும் புலவி உட்கொளல்
ஒழிக மாள நின் நெஞ்சத்தானே
புணரி பொருத பூ மணல் அடைகரை
ஆழி மருங்கின் அலவன் ஓம்பி
வலவன் வள்பு ஆய்ந்து ஊர
நிலவு விரிந்தன்றால் கானலானே
காப்பு மிகுதிக்கண் இடையீடுபட்டு
ஆற்றாளாய தலைமகட்கு தலைமகன்
சிறைப்புறத்தானாக தோழி சொல்லியது
பாலை கயமனார்
விளம்பழம் கமழும் கமஞ்சூற் குழிசி
பாசம் தின்ற தேய் கால் மத்தம்
நெய் தெரி இயக்கம் வெளில்முதல் முழங்கும்
வைகு புலர் விடியல் மெய் கரந்து தன் கால்
அரி அமை சிலம்பு கழீஇ பல் மாண்
வரி புனை பந்தொடு வைஇய செல்வோள்
இவை காண்தோறும் நோவர் மாதோ
அளியரோ அளியர் என் ஆயத்தோர் என
நும்மொடு வரவு தான் அயரவும்
தன் வரைத்து அன்றியும் கலுழ்ந்தன கண்ணே
தோழி உடன்போக்கு அஞ்சுவித்தது
குறிஞ்சி கபிலர்
எழாஅ ஆகலின் எழில் நலம் தொலைய
அழாஅ தீமோ நொதுமலர் தலையே
ஏனல் காவலர் மா வீழ்த்து பறித்த
பகழி அன்ன சேயரி மழை கண்
நல்ல பெரு தோளோயே கொல்லன்
எறி பொன் பிதிரின் சிறு பல தாஅய்
வேங்கை வீ உகும் ஓங்கு மலை கட்சி
மயில் அறிபு அறியா மன்னோ
பயில் குரல் கவரும் பைம் புற கிளியே
இயற்கை புணர்ச்சியின் பிற்றை
ஞான்று தலைவியின் வேறுபாடு கண்ட தோழி
தலைவி மறைத்தற்கு சொல்லியது
பாலை மாமூலனார்
தொல் கவின் தொலைய தோள் நலம் சாஅய
நல்கார் நீத்தனர்ஆயினும் நல்குவர்
நட்டனர் வாழி தோழி குட்டுவன்
அகப்பா அழிய நூறி செம்பியன்
பகல் தீ வேட்ட ஞாட்பினும் மிக பெரிது
அலர் எழ சென்றனர் ஆயினும் மலர் கவிழ்ந்து
மா மடல் அவிழ்ந்த காந்தள்அம் சாரல்
இனம் சால் களிறு பாந்த பட்டென
துஞ்சா துயரத்து அஞ்சு பிடி பூசல்
நெடு வரை விடரகத்து இயம்பும்
கடு மான் புல்லிய காடு இறந்தோரே
இயற்பழித்த தோழிக்கு தலைவி இயற்பட மொழிந்தது
நெய்தல் அறிவுடைநம்பி
முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர்
நுணங்கு துகில் நுடக்கம் போல கணம் கொள
ஊதை தூற்றும் உரவுநீர சேர்ப்ப
பூவின் அன்ன நலம் புதிது உண்டு
நீ புணர்ந்தனையேம் அன்மையின் யாமே
நேர்புடை நெஞ்சம் தாங்க தாங்கி
மாசு இல் கற்பின் மடவோள் குழவி
பேஎய் வாங கைவிட்டாங்கு
சேணும் எம்மொடு வந்த
நாணும் விட்டேம் அலர்க இவ் ஊரே
வரைவு நீட்டித்தவழி தோழி தலைமகற்கு
சொல்லி வரைவு கடாயது
பாலை சிறைக்குடி ஆந்தையார்
புணரின் புணராது பொருளே பொருள்வயிற்
பிரியின் புணராது புணர்வே ஆயிடை
செல்லினும் செல்லாய் ஆயினும் நல்லதற்கு
உரியை வாழி என் நெஞ்சே பொருளே
வாடா பூவின் பொய்கை நாப்பண்
ஓடு மீன் வழியின் கெடுவ யானே
விழுநீர் வியலகம் தூணி ஆக
எழு மாண் அளக்கும் விழு நெதி பெறினும்
கனங்குழைக்கு அமர்த்த சேயரி மழை கண்
அமர்ந்து இனிது நோக்கமொடு செகுத்தனென்
எனைய ஆகுக வாழிய பொருளே
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சினை
நெருங்கி தலைவன் செலவு அழுங்கியது
குறிஞ்சி நொச்சிநியமங்கிழார்
நாள் மழை தலைஇய நல் நெடுங்குன்றத்து
மால் கடல் திரையின் இழிதரும் அருவி
அகல் இருங் கானத்து அல்கு அணி நோக்கி
தாங்கவும் தகைவரை நில்லா நீர் சுழல்பு
ஏந்து எழில் மழை கண் கலுழ்தலின் அன்னை
எவன் செய்தனையோ நின் இலங்கு எயிறு உண்கு என
மெல்லிய இனிய கூறலின் வல் விரைந்து
உயிரினும் சிறந்த நாணும் நனி மறந்து
உரைத்தல் உய்ந்தனனே தோழி சாரல்
காந்தள் ஊதிய மணி நிற தும்பி
தீம் தொடை நரம்பின் இமிரும்
வான் தோய் வெற்பன் மார்பு அணங்கு எனவே
முன்னிலைப்புறமொழியாக தலைமகள்
தோழிக்குச்சொல்லியது
பாலை பொய்கையார்
பருவரல் நெஞ்சமொடு பல் படர் அகல
வருவர் வாழி தோழி மூவன்
முழு வலி முள் எயிறு அழுத்திய கதவின்
கானல்அம் தொண்டி பொருநன் வென் வேல்
தெறல் அரு தானை பொறையன் பாசறை
நெஞ்சம் நடுக்குறூஉம் துஞ்சா மறவர்
திரை தபு கடலின் இனிது கண் படுப்ப
கடாஅம் கழீஇய கதன் அடங்கு யானை
தடாஅ நிலை ஒரு கோட்டன்ன
ஒன்று இலங்கு அருவிய குன்று இறந்தோரே
பிரிவிடை ஆற்றாளாகிய தலைவியை தோழி வற்புறுத்தியது
நெ நக்கண்ணையார்
இறவு புறத்து அன்ன பிணர் படு தடவு முதல்
சுறவு கோட்டன்ன முள் இலை தாழை
பெருங் களிற்று மருப்பின் அன்ன அரும்பு முதிர்பு
நல் மான் உழையின் வேறுபட தோன்றி
விழவு களம் கமழும் உரவு நீர சேர்ப்ப
இன மணி நெடு தேர் பாகன் இயக்க
செலீஇய சேறி ஆயின் இவளே
வருவை ஆகிய சில் நாள்
வாழாளாதல் நற்கு அறிந்தனை சென்மே
புணர்ந்து நீங்கிய தலைவனை தோழி வரைவு கடாயது
மருதம் ஓரம்போகியார்
ஐய குறுமக கண்டிகும் வைகி
மகிழ்நன் மார்பில் துஞ்சி அவிழ் இணர
தேம் பாய் மராஅம் கமழும் கூந்தல்
துளங்குஇயல் அசைவர கலிங்கம் துயல்வர
செறிதொடி தௌ ர்ப்ப வீசி மறுகில்
பூ போல் உண்கண் பெயர்ப்ப நோக்கி
சென்றனள் வாழிய மடந்தை நுண் பல்
சுணங்கு அணிவுற்ற விளங்கு பூணள்
மார்புறு முயக்கிடை ஞெமிர்ந்த சோர் குழை
பழம் பிணி வைகிய தோள் இணை
குழைந்த கோதை கொடி முயங்கலளே
பரத்தையிற்பிரிந்து வந்த தலைமகன் யாரையும்
அறியேன் என்றாற்கு தலைவி சொல்லியது
வாயிலாக புக்க தோழிதலைவிக்கு சொல்லியதூஉம் ஆம்
முல்லை மருதன் இளநாகனார்
விரை பரி வருந்திய வீங்கு செலல் இளையர்
அரை செறி கச்சை யாப்பு அழித்து அசைஇ
வேண்டு அமர் நடையர் மென்மெல வருக
தீண்டா வை முள் தீண்டி நாம் செலற்கு
ஏமதி வலவ தேரே உது காண்
உருக்குறு நறு நெய் பால் விதிர்த்தன்ன
அரி குரல் மிடற்ற அம் நுண் பல் பொறி
காமரு தகைய கான வாரணம்
பெயல் நீர் போகிய வியல் நெடும் புறவில்
புலரா ஈர் மணல் மலிர கெண்டி
நாள் இரை கவர மாட்டி தன்
பேடை நோக்கிய பெருந்தகு நிலையே
வினை முற்றி மீள்வான் தேர்ப்பாகற்கு சொல்லியது
குறிஞ்சி
கொடிச்சி காக்கும் அடுக்கற் பைந்தினை
முந்து விளை பெருங் குரல் கொண்ட மந்தி
கல்லா கடுவனொடு நல் வரை ஏறி
அங்கை நிறைய ஞெமிடி கொண்டு தன்
திரை அணற் கொடுங் கவுள் நிறைய முக்கி
வான் பெயல் நனைந்த புறத்த நோன்பியர்
கை ஊண் இருக்கையின் தோன்றும் நாடன்
வந்தனன் வாழி தோழி உலகம்
கயம் கண் அற்ற பைது அறு காலை
பீளடு திரங்கிய நெல்லிற்கு
நள்ளென் யாமத்து மழை பொழிந்தாங்கே
வரைவு மலிந்த தோழி தலைமகட்கு சொல்லியது
குறிஞ்சி கணக்காயனார்
தொடி பழி மறைத்தலின் தோள் உய்ந்தனவே
வடி கொள் கூழை ஆயமோடு ஆடலின்
இடிப்பு மெய்யது ஒன்று உடைத்தே கடி கொள
அன்னை காக்கும் தொல் நலம் சிதைய
காண்தொறும் கலுழ்தல் அன்றியும் ஈண்டு நீர்
முத்து படு பரப்பின் கொற்கை முன்துறை
சிறு பாசடைய செப்பு ஊர் நெய்தல்
தெண் நீர் மலரின் தொலைந்த
கண்ணே காமம் கரப்பு அரியவ்வே
தலைவி துயர் ஆற்றாமை உணர்ந்த தோழி வரைவு கடாயது
பாலை கணக்காயனார்
பார் பக வீழ்ந்த வேருடை விழு கோட்டு
உடும்பு அடைந்தன்ன நெடும் பொரி விளவின்
ஆட்டு ஒழி பந்தின் கோட்டு மூக்கு இறுபு
கம்பலத்தன்ன பைம் பயிர தாஅம்
வெள்ளில் வல்சி வேற்று நாட்டு ஆர் இடை
சேறும் நாம் என சொல்ல சேயிழை
நன்று என புரிந்தோய் செய்தனையே
செயல்படு மனத்தர் செய்பொருட்கு
அகல்வர் ஆடவர் அது அதன் பண்பே
பொருட்பிரிவுக்கு உடன்பட்ட தோழியை தலைவி உவந்து கூறியது
குறிஞ்சி பேரி சாத்தனார்
அவ் வளை வெரிநின் அரக்கு ஈர்த்தன்ன
செவ் வரி இதழ சேண் நாறு பிடவின்
நறு தாது ஆடிய தும்பி பசுங் கேழ
பொன் உரை கல்லின் நல் நிறம் பெறூஉம்
வள மலை நாடன் நெருநல் நம்மொடு
கிளை மலி சிறு தினை கிளி கடிந்து அசைஇ
சொல்லிடம் பெறாஅன் பெயர்ந்தனன் பெயர்ந்தது
அல்லல் அன்று அது காதல் அம் தோழி
தாது உண் வேட்கையின் போது தெரிந்து ஊதா
வண்டு ஓரன்ன அவன் தண்டா காட்சி
கண்டும் கழல் தொடி வலித்த என்
பண்பு இல் செய்தி நினைப்பு ஆகின்றே
தலைமகளை தோழி குறை நயப்பு கூறியது
பாலை சாத்தந்தையார்
நோகோ யானே நெகிழ்ந்தன வளையே
செவ்வி சேர்ந்த புள்ளி வெள் அரை
விண்டு புரையும் புணர் நிலை நெடுங் கூட்டு
பிண்ட நெல்லின் தாய் மனை ஒழிய
சுடர் முழுது எறிப்ப திரங்கி செழுங் காய்
முட முதிர் பலவின் அத்தம் நும்மொடு
கெடு துணை ஆகிய தவறோ வை எயிற்று
பொன் பொதிந்தன்ன சுணங்கின்
இருஞ் சூழ் ஓதி பெரு தோளாட்கே
தலைவி பிரிவு உணர்ந்து வேறுபட்டமை
சொல்லி தோழி செலவு அழுங்குவித்தது
நெய்தல் குடவாயிற் கீரத்தனார்
நீயும் யானும் நெருநல் பூவின்
நுண் தாது உறைக்கும் வண்டினம் ஓப்பி
ஒழி திரை வரித்த வெண் மணல் அடைகரை
கழி சூழ் கானல் ஆடியது அன்றி
கரந்து நாம் செய்தது ஒன்று இல்லை உண்டு எனின்
பரந்து பிறர் அறிந்தன்றும் இலரே நன்றும்
எவன் குறித்தனள் கொல் அன்னை கயந்தோறு
இற ஆர் இன குருகு ஒலிப்ப சுறவம்
கழி சேர் மருங்கின் கணை கால் நீடி
கண் போல் பூத்தமை கண்டு நுண் பல
சிறு பாசடைய நெய்தல்
குறுமோ சென்று என கூறா தோளே
சிறைப்புறமாக தோழி செறிப்பு அறிவுறீஇயது
பாலை முதுகூற்றனார்
என் கை கொண்டு தன் கண்ஒற்றியும்
தன் கை கொண்டு என் நல் நுதல் நீவியும்
அன்னை போல இனிய கூறியும்
கள்வர் போல கொடியன் மாதோ
மணி என இழிதரும் அருவி பொன்
வேங்கை தாய ஓங்கு மலை அடுக்கத்து
ஆடு கழை நிவந்த பைங் கண் மூங்கில்
ஓடு மழை கிழிக்கும் சென்னி
கோடு உயர் பிறங்கல் மலைகிழவோனே
பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைவிக்கு
தோழி சொல்லியது குறை நயப்பும் ஆம்
பாலை பூதனார்
நின்ற வேனில் உலந்த காந்தள்
அழல் அவிர் நீள் இடை நிழலிடம் பெறாஅது
ஈன்று கான் மடிந்த பிணவு பசி கூர்ந்தென
மான்ற மாலை வழங்குநர செகீஇய
புலி பார்த்து உறையும் புல் அதர சிறு நெறி
யாங்கு வல்லுநள்கொல்தானே யான் தன்
வனைந்து ஏந்து இள முலை நோவகொல் என
நினைந்து கைந்நெகிழ்ந்த அனைத்தற்கு தான் தன்
பேர் அமர் மழை கண் ஈரிய கலுழ
வெய்ய உயிர்க்கும் சாயல்
மை ஈர் ஓதி பெரு மடத்தகையே
மகள் போக்கிய தாய் சொல்லியது
மருதம் கொற்றனார்
கண்டனென் மகிழ்ந கண்டு எவன்செய்கோ
பாணன் கையது பண்புடை சீறியாழ்
யாணர் வண்டின் இம்மென இமிரும்
ஏர்தரு தெருவின் எதிர்ச்சி நோக்கி நின்
மார்பு தலைக்கொண்ட மாணிழை மகளிர்
கவல் ஏமுற்ற வெய்து வீழ் அரி பனி
கால் ஏமுற்ற பைதரு காலை
கடல்மரம் கவிழ்ந்தென கலங்கி உடன் வீழ்பு
பலர் கொள் பலகை போல
வாங்கவாங்க நின்று ஊங்கு அஞர் நிலையே
பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன் யாரையும்
அறியேன் என்றாரக்கு தோழி சொல்லியது
நெய்தல் நக்கிரனார்
மா இரும் பரப்பு அகம் துணிய நோக்கி
சேயிறா எறிந்த சிறு வெண் காக்கை
பாய் இரும் பனி கழி துழைஇ பைங் கால்
தான் வீழ் பெடைக்கு பயிரிடூஉ சுரக்கும்
சிறு வீ ஞாழல் துறையுமார் இனிதே
பெரும் புலம்பு உற்ற நெஞ்சமொடு பல நினைந்து
யானும் இனையேன் ஆயின் ஆனாது
வேறு பல் நாட்டில் கால் தர வந்த
பல உறு பண்ணியம் இழிதரு நிலவு மணல்
நெடுஞ் சினை புன்னை கடுஞ் சூல் வெண் குருகு
உலவு திரை ஓதம் வெரூஉம்
உரவு நீர சேர்ப்பனொடு மணவா ஊங்கே
தலைவன் சிறைப்புறத்தானாக தலைவி வன்புறை எதிர் அழிந்தது
குறிஞ்சி கபிலர்
மாயோன் அன்ன மால் வரை கவாஅன்
வாலியோன் அன்ன வயங்கு வெள் அருவி
அம் மலை கிழவோன் நம் நயந்து என்றும்
வருந்தினன் எனபது ஓர் வா சொல் தேறாய்
நீயும் கண்டு நுமரொடும் எண்ணி
அறிவு அறிந்து அளவல் வேண்டும் மறுத்தரற்கு
அரிய வாழி தோழி பெரியோர்
நாடி நட்பின் அல்லது
நட்டு நாடார் தம் ஒட்டியோர் திறத்தே
தலைவிக்கு குறை நயப்பு கூறியது
பாலை இளவேட்டனார்
படு சுடர் அடைந்த பகு வாய் நெடு வரை
முரம்பு சேர் சிறுகுடி பரந்த மாலை
புலம்பு கூட்டுண்ணும் புல்லென் மன்றத்து
கல்லுடை படுவில் கலுழி தந்து
நிறை பெயல் அறியா குன்றத்து ஊண் அல்லில்
துவர் செய் ஆடை செ தொடை மறவர்
அதர் பார்த்து அல்கும் அஞ்சுவரு நெறியிடை
இறப்ப எண்ணுவர் அவர் எனின் மறுத்தல்
வல்லுவம்கொல்லோ மெல்லியல் நாம் என
விம்முறு கிளவியள் என் முகம் நோக்கி
நல் அக வன முலை கரை சேர்பு
மல்கு புனல் பரந்த மலர் ஏர் கண்ணே
பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகளது குறிப்பு
அறிந்த தோழி தலைமகற்கு சொல்லியது
குறிஞ்சி பிரமசாரி
கடவு கற்சுனை அடை இறந்து அவிழ்ந்த
பறியா குவளை மலரொடு காந்தள்
குருதி ஒண் பூ உரு கெழ கட்டி
பெரு வரை அடுக்கம் பொற்ப சூர்மகள்
அருவி இன் இயத்து ஆடும் நாடன்
மார்பு தர வந்த படர் மலி அரு நோய்
நின் அணங்கு அன்மை அறிந்தும் அண்ணாந்து
கார் நறுங் கடம்பின் கண்ணி சூடி
வேலன் வேண்ட வெறி மனை வந்தோய்
கடவுள் ஆயினும் ஆக
மடவை மன்ற வாழிய முருகே
தோழி தெய்வத்திற்கு உரைப்பாளாய் வெறி விலக்கியது
நெய்தல் அம்மூவனார்
பொங்கு திரை பொருத வார் மணல் அடை கரை
புன் கால் நாவல் பொதி புற இருங் கனி
கிளை செத்து மொய்த்த தும்பி பழம் செத்து
பல் கால் அலவன் கொண்ட கோட்கு அசாந்து
கொள்ளா நரம்பின் இமிரும் பூசல்
இரை தேர் நாரை எய்தி விடுக்கும்
துறை கெழு மரந்தை அன்ன இவள் நலம்
பண்டும் இற்றே கண்டிசின்தெய்ய
உழையின் போகாது அளிப்பினும் சிறிய
ஞெகிழ்ந்த கவின் நலம்கொல்லோ மகிழ்ந்தோர்
கட்களி செருக்கத்து அன்ன
காமம்கொல் இவள் கண் பசந்ததுவே
மணமகனை பிற்றை ஞான்று புக்க தோழி நன்கு
ஆற்றுவித்தாய் என்ற தலைமகற்கு சொல்லியது
குறிஞ்சி சீத்தலை சாத்தனார்
குறுங் கை இரும் புலி கோள் வல் ஏற்றை
பூ நுதல் இரும் பிடி புலம்ப தாக்கி
தாழ் நீர் நன தலை பெருங் களிறு அடூஉம்
கல்லக வெற்பன் சொல்லின் தேறி
யாம் எம் நலன் இழந்தனமே யாமத்து
அலர் வா பெண்டிர் அம்பலொடு ஒன்றி
புரை இல் தீ மொழி பயிற்றிய உரை எடுத்து
ஆனா கௌவைத்து ஆக
தான் என் இழந்தது இல் அழுங்கல் ஊரே
இரவுக்குறி சிறை புறமாக தோழி சொல்லியது
பாலை பேரி சாத்தனார்
பிணங்கு அரில் வாடிய பழ விறல் நன தலை
உணங்கு ஊண் ஆயத்து ஓர் ஆன் தெள் மணி
பைபய இசைக்கும் அத்தம் வை எயிற்று
இவளடும் செலினோ நன்றே குவளை
நீர் சூழ் மா மலர் அன்ன கண் அழ
கலை ஒழி பிணையின் கலங்கி மாறி
அன்பிலிர் அகறிர் ஆயின் என் பரம்
ஆகுவது அன்று இவள் அவலம் நாகத்து
அணங்குடை அரு தலை உடலி வலன் ஏர்பு
ஆர் கலி நல் ஏறு திரிதரும்
கார் செய் மாலை வரூஉம் போழ்தே
வரைவிடை வைத்து பிரிவின்கண் தோழி சொல்லியது
நெய்தல் உலோச்சனார்
வேட்டம் பொய்யாது வலை வளம் சிறப்ப
பாட்டம் பொய்யாது பரதவர் பகர
இரும் பன தீம் பிழி உண்போர் மகிழும்
ஆர் கலி யாணர்த்து ஆயினும் தேர் கெழு
மெல்லம் புலம்பன் பிரியின் புல்லென
புலம்பு ஆகின்றே தோழி கலங்கு நீர்
கழி சூழ் படப்பை காண்டவாயில்
ஒலி கா ஓலை முள் மிடை வேலி
பெண்ணை இவரும் ஆங்கண்
வெள் மணல் படப்பை எம் அழுங்கல் ஊரே
தலைவி வன்புறை எதிர் அழிந்து சொல்லியது
குறிஞ்சி மருதன் இளநாகனார்
சொல்லின் சொல் எதிர் கொள்ளாய் யாழ நின்
திரு முகம் இறைஞ்சி நாணுதி கதுமென
காமம் கைம்மிகின் தாங்குதல் எளிதோ
கொடுங் கேழ் இரும் புறம் நடுங குத்தி
புலி விளையாடிய புலவு நாறு வேழத்தின்
தலை மருப்பு ஏய்ப்ப கடை மணி சிவந்த நின்
கண்ணே கதவ அல்ல நண்ணார்
அரண் தலை மதிலர் ஆகவும் முரசு கொண்டு
ஓம்பு அரண் கடந்த அடு போர் செழியன்
பெரு பெயர் கூடல் அன்ன நின்
கரும்புடை தோளும் உடைய வால் அணங்கே
இரண்டாம் கூட்டத்து எதிர்ச்சியில் தலைவன் சொல்லியது
மருதம்
நெடு நா ஒள் மணி கடி மனை இரட்ட
குரை இலை போகிய விரவு மணற் பந்தர்
பெரும் பாண் காவல் பூண்டென ஒரு சார்
திருந்து இழை மகளிர் விரிச்சி நிற்ப
வெறி உற விரிந்த அறுவை மெல் அணை
புனிறு நாறு செவிலியடு புதல்வன் துஞ்ச
ஐயவி அணிந்த நெய்யாட்டு ஈரணி
பசு நெய் கூர்ந்த மென்மை யாக்கை
சீர் கெழு மடந்தை ஈர் இமை பொருந்த
நள்ளென் கங்குல் கள்வன் போல
அகல் துறை ஊரனும் வந்தனன்
சிறந்தோன் பெயரன் பிறந்த மாறே
தலைமகட்கு பாங்காயினார் கேட பரத்தை சொல்லியது
பாலை இளந்தேவனார்
பைங் கண் யானை பரூஉ தாள் உதைத்த
வெண் புற களரி விடு நீறு ஆடி
சுரன் முதல் வருந்திய வருத்தம் பைபய
பாஅர் மலி சிறு கூவலின் தணியும்
நெடுஞ் சேண் சென்று வருந்துவர் மாதோ
எல்லி வந்த நல் இசை விருந்திற்கு
கிளர் இழை அரிவை நெய் துழந்து அட்ட
விளர் ஊன் அம் புகை எறிந்த நெற்றி
சிறு நுண் பல் வியர் பொறித்த
குறு நடை கூட்டம் வேண்டுவோரே
பிரிவு உணர்த்தப்பட்டு ஆற்றாளாய தலைமகளை
தோழி உலகியல் கூறி வற்புறுத்தியது
முல்லை கீரத்தனார்
மறத்தற்கு அரிது ஆல் பாக பல் நாள்
அறத்தொடு வருந்திய அல்கு தொழில் கொளீஇய
பழ மழை பொழிந்த புது நீர் அவல
நா நவில் பல் கிளை கறங்க மாண் வினை
மணி ஒலி கேளாள் வாணுதல் அதனால்
ஏகுமின் என்ற இளையர் வல்லே
இல் புக்கு அறியுநர் ஆக மெல்லென
மண்ணா கூந்ல் மாசு அற கழீஇ
சில் போது கொண்டு பல் குரல் அழுத்திய
அந்நிலை புகுதலின் மெய் வருத்துறாஅ
அவிழ் பூ முடியினள் கவைஇய
மட மா அரிவை மகிழ்ந்து அயர் நிலையே
வினை முற்றி மீள்வான் தேர்பாகற்கு சொல்லியது
பாலை எயினந்தையார்
துகில் விரித்தன்ன வெயில் அவிர் உருப்பின்
என்றூழ் நீடிய குன்றத்து கவாஅன்
ஓய்ப்பசி செந்நாய் உயங்கு மரை தொலைச்சி
ஆர்ந்தன ஒழிந்த மிச்சில் சேய் நாட்டு
அருஞ் சுரம் செல்வோர்க்கு வல்சி ஆகும்
வெம்மை ஆர் இடை இறத்தல் நுமக்கே
மெய் மலி உவகை ஆகின்று இவட்கே
அஞ்சல் என்ற இறை கைவிட்டென
பைங் கண் யானை வேந்து புறத்து இறுத்தலின்
களையுநர காணாது கலங்கிய உடை மதில்
ஓர் எயில் மன்னன் போல
அழிவு வந்தன்றால் ஒழிதல் கேட்டே
பிரிவு உணர்த்தப்பட்ட தோழி
தலைவனை செலவு அழுங்குவித்தது
குறிஞ்சி பெருங் கௌசிகனார்
பொரு இல் ஆயமோடு அருவி ஆடி
நீர் அலை சிவந்த பேர் அமர் மழை கண்
குறியா நோக்கமொடு முறுவல் நல்கி
மனை வயின் பெயர்ந்த காலை நினைஇய
நினக்கோ அறியுநள் நெஞ்சே புனத்த
நீடு இலை விளை தினை கொடுங் கால் நிமிர
கொழுங் குரல் கோடல் கண்ணி செழும் பல
பல் கிளை குறவர் அல்கு அயர் முன்றில்
குடம் காய் ஆசினி படப்பை நீடிய
பல் மர உயர் சினை மின்மினி விளக்கத்து
செல் மழை இயக்கம் காணும்
நல் மலை நாடன் காதல் மகளே
இச்செறிப்பின் பிற்றை ஞான்று தலைமகன்
குறியிடத்து வந்து சொல்லியது
நெய்தல்
இவளே கானல் நண்ணிய காமர் சிறுகுடி
நீல் நிற பெருங் கடல் கலங்க உள்புக்கு
மீன் எறி பரதவர் மகளே நீயே
நெடுங் கொடி நுடங்கும் நியம மூதூர
கடு தேர செல்வன் காதல் மகனே
நிண சுறா அறுத்த உணக்கல் வேண்டி
இன புள் ஒப்பும் எமக்கு நலன் எவனோ
புலவு நாறுதும் செல நின்றீமோ
பெரு நீர் விளையுள் எம் சிறு நல் வாழ்க்கை
நும்மொடு புரைவதோ அன்றே
எம்மனோரில் செம்மலும் உடைத்தே
குறை வேண்டிய தலைவனை தோழி சேட்படுத்தது
பாலை
வைகல் தோறும் இன்பமும் இளமையும்
எய் கணை நிழலின் கழியும் இவ் உலகத்து
காணீர் என்றலோ அரிதே அது நனி
பேணீர் ஆகுவிர் ஐய என் தோழி
பூண் அணி ஆகம் புலம்ப பாணர்
அயிர்ப்பு கொண்டன்ன கொன்றை அம் தீம் கனி
பறை அறை கடிப்பின் அறையா துயல்வர
வெவ் வளி வழங்கும் வேய் பயில் அழுவத்து
எவ்வம் மிகூஉம் அருஞ் சுரம் இறந்து
நல் வாய் அல்லா வாழ்க்கை
மன்னா பொரு பிணி பிரிதும் யாம் எனவே
பிரிவு உணர்த்திய தலைமகற்கு தோழி சொல்லியது
குறிஞ்சி நல்வெள்ளியார்
பெருங் களிறு உழுவை அட்டென இரும் பிடி
உயங்கு பிணி வருத்தமொடு இயங்கல் செல்லாது
நெய்தல் பாசடை புரையும் அம் செவி
பைதல் அம் குழவி தழீஇ ஒய்யென
அரும் புண் உறுநரின் வருந்தி வைகும்
கானக நாடற்கு இது என யான் அது
கூறின் எவனோ தோழி வேறு உணர்ந்து
அணங்கு அறி கழங்கின் கோட்டம் காட்டி
வெறி என உணர்ந்த உள்ளமொடு மறி அறுத்து
அன்னை அயரும் முருகு நின்
பொன் நேர் பசலைக்கு உதவா மாறே
சிறைப்புறமாக தோழி தலைமகட்கு உரைப்பாளா சொல்லியது
பாலை பாடிய
அன்றை அனைய ஆகி இன்று உம் எம்
கண் உள போல சுழலும் மாதோ
புல் இதழ கோங்கின் மெல் குடை பூ
வைகுறு மீனின் நினை தோன்றி
புறவு அணி கொண்ட பூ நாறு கடத்திடை
கிடின் என இடிக்கும் கோல் தொடி மறவர்
வடி நவில் அம்பின் வினையர் அஞ்சாது
அமர் இடை உறுதர நீக்கி நீர்
எமர் இடை உறுதர ஒளித்த காடே
பிரிவு உணர்த்திய தலைவற்கு தோழி சொல்லியது
நெய்தல்
படு திரை கொழீஇய பால் நிற எக்கர
தொடியோர் மடிந்தென துறை புலம்பின்றே
முடி வலை முகந்த முடங்கு இறா பரவை
படு புள் ஓப்பலின் பகல் மாய்ந்தன்றே
கோட்டுமீன் எறிந்த உவகையர் வேட்டம் மடிந்து
எமரும் அல்கினர் ஏமார்ந்தனம் என
சென்று நாம் அறியின் எவனோ தோழி
மன்ற புன்னை மா சினை நறு வீ
முன்றில் தாழையடு கமழும்
தெண் கடற் சேர்ப்பன் வாழ் சிறு நல் ஊர்க்கே
தோழி தலைமகளை இரவுக்குறி நயப்பித்தது
சிறைப்புறமாக தோழி ஆற்றாமை வியந்தூஉம் ஆம்
மருதம் பாடிய
அறியாமையின் அன்னை அஞ்சி
குழையன் கோதையன் குறும் பை தொடியன்
விழவு அயர் துணங்கை தழூஉகம் செல்ல
நெடு நிமிர் தெருவில் கை புகு கொடு மிடை
நொதுமலாளன் கதுமென தாக்கலின்
கேட்போர் உளர்கொல் இல்லைகொல் போற்று என
யாணது பசலை என்றனன் அதன் எதிர்
நாண் இலை எலுவ என்று வந்திசினே
செறுநரும் விழையும் செம்மலோன் என
நறு நுதல் அரிவை போற்றேன்
சிறுமை பெருமையின் காணாது துணிந்தே
தோழி பாணர்க்கு வாயில் மறுத்தது
குறிஞ்சி பேராலவாயர்
யாங்கு செய்வாம்கொல் தோழி ஓங்கு கழை
காம்புடை விடர் அகம் சிலம்ப பாம்பு உடன்று
ஓங்கு வரை மிளிர ஆட்டி வீங்கு செலல்
கடுங் குரல் ஏறொடு கனை துளி தலைஇ
பெயல் ஆனாதே வானம் பெயலொடு
மின்னு நிமிர்ந்தன்ன வேலன் வந்தென
பின்னு விடு முச்சி அளிப்பு ஆனாதே
பெரு தண் குளவி குழைத்த பா அடி
இருஞ் சேறு ஆடிய நுதல கொல்களிறு
பேதை ஆசினி ஒசித்த
வீ ததர் வேங்கைய மலை கிழவோற்கே
ஆற்றது ஏதம் அஞ்சி வேறுபட்டாள் வெறியாடலுற்ற
இடத்து சிறைப்புறமாக சொல்லியது
பாலை பாலத்தனார்
மா கொடி அதிரற் பூவொடு பாதிரி
தூ தகட்டு எதிர் மலர் வேய்ந்த கூந்தல்
மணம் கமழ் நாற்றம் மரீஇ யாம் இவள்
சுணங்கு அணி ஆகம் அடைய முயங்கி
வீங்கு உவர கவவின் நீங்கல் செல்லேம்
நீயே ஆள்வினை சிறப்ப எண்ணி நாளும்
பிரிந்து உறை வாழ்க்கை புரிந்து அமையலையே
அன்பு இலை வாழி என் நெஞ்சே வெம் போர்
மழவர் பெரு மகன் மா வள் ஓரி
கை வளம் இயைவது ஆயினும்
ஐது ஏகு அம்ம இயைந்து செய் பொருளே
தலைமகன் செலவு அழுங்கியது
குறிஞ்சி நல்வேட்டனார்
யான் அ•து அஞ்சினென் கரப்பவும் தான்
அறிந்தனள்கொல்லோ அருளினள்கொல்லோ
எவன்கொல் தோழி அன்னை கண்ணியது
வான் உற நிவந்த பெரு மலை கவாஅன்
ஆர் கலி வானம் தலைஇ நடு நாள்
கனை பெயல் பொழிந்தென கான கல் யாற்று
முளி இலை கழித்தன முகிழ் இணரொடு வரும்
விருந்தின் தீம் நீர் மருந்தும் ஆகும்
தண்ணென உண்டு கண்ணின் நோக்கி
முனியாது ஆட பெறின் இவள்
பனியும் தீர்குவள் செல்க என்றோளே
வரைவு நீட்டிப்ப தோழி சிறைப்புறமாக சொல்லியது
நெய்தல் சேந்தங் கண்ணனார்
வளை நீர் மேய்ந்து கிளை முதல்செலீஇ
வா பறை விரும்பினைஆயினும் தூ சிறை
இரும் புலா அருந்தும் நின் கிளையடு சிறிது இருந்து
கருங் கால் வெண் குருகு எனவ கேண்மதி
பெரும் புலம்பின்றே சிறு புன் மாலை
அது நீ அறியின் அன்புமார் உடையை
நொதுமல் நெஞ்சம் கொள்ளாது என் குறை
இற்றாங்கு உணர உரைமதி தழையோர்
கொய்குழை அரும்பிய குமரி ஞாழல்
தெண் திரை மணி புறம் தைவரும்
கண்டல் வேலி நும் துறை கிழவோற்கே
காமம் மிக்க கழிபடர்கிளவி
குறிஞ்சி பெருவழுதி
ஓங்கு மலை நாட ஒழிக நின் வாய்மை
காம்பு தலைமணந்த கல் அதர சிறு நெறி
உறு பகை பேணாது இரவின் வந்து இவள்
பொறி கிளர் ஆகம் புல்ல தோள் சேர்பு
அறுகாற் பறவை அளவு இல மொய்த்தலின்
கண் கோள் ஆக நோக்கி பண்டும்
இனையையோ என வினவினள் யாயே
அதன் எதிர் சொல்லாளாகி அல்லாந்து
என் முகம் நோக்கியோளே அன்னாய்
யாங்கு உணர்ந்து உய்குவள்கொல் என மடுத்த
சாந்த ஞெகிழி காட்டி
ஈங்கு ஆயினவால் என்றிசின் யானே
வரைவிடை மெலிவு ஆற்றுவிக்கும்
தோழி தலைவற்கு சொல்லியது
பாலை பெருவழுதி
குறு நிலை குரவின் சிறு நனை நறு வீ
வண்டு தரு நாற்றம் வளி கலந்து ஈய
கண் களி பெறூஉம் கவின் பெறு காலை
எல் வளை ஞெகிழ்த்தோர்க்கு அல்லல் உறீஇ
சென்ற நெஞ்சம் செய்வினைக்கு அசாவா
ஒருங்கு வரல் நசையடு வருந்தும்கொல்லோ
அருளான் ஆதலின் அழிந்து இவண் வந்து
தொல் நலன் இழந்த என் பொன் நிறம் நோக்கி
ஏதிலாட்டி இவள் என
போயின்று கொல்லோ நோய் தலைமணந்த
வரைவிடை மெலிவு ஆற்றுவிக்கும்
தோழிக்கு தலைவி சொல்லியது
குறிஞ்சி பொதும்பில் கிழார்
தடங்கோட்டு ஆமான் மடங்கல் மா நிரை
குன்ற வேங்கை கன்றொடு வதிந்தென
துஞ்சு பதம் பெற்ற து தலை மந்தி
கல்லென் சுற்றம் கை கவியா குறுகி
வீங்கு சுரை ஞெமுங்க வாங்கி தீம் பால்
கல்லா வன் பறழ கை நிறை பிழியும்
மா மலை நாட மருட்கை உடைத்தே
செங் கோல் கொடுங் குரல் சிறு தினை வியன் புனம்
கொய் பதம் குறுகும்காலை எம்
மை ஈர் ஓதி மாண் நலம் தொலைவே
செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது
நெய்தல் முதுகூற்றனார்
பெரு முது செல்வர் பொன்னுடைப்புதல்வர்
சிறு தோ கோத்த செவ் அரிப்பறையின்
கண்ணகத்து எழுதிய குரீஇ போல
கோல் கொண்டு அலை படீஇயர்மாதோ
வீரை வேண்மான் வெளியன் தித்தன்
முரசு முதல் கொளீஇய மாலை விளக்கின்
வெண் கோடு இயம்ப நுண் பனி அரும்ப
கையற வந்த பொழுதொடு மெய் சோர்ந்து
அவல நெஞ்சினம் பெயர உயர் திரை
நீடு நீர பனி துறை சேர்ப்பன்
ஓடு தேர் நுண் நுகம் நுழைந்த மாவே
பகற்குறி வந்து நீங்கும் தலைமகன் போக்கு
நோக்கி தோழி மாவின்மேல்வைத்து சொல்லியது
முல்லை கபிலர்
உடும்பு கொலீஇ வரி நுணல் அகழ்ந்து
நெடுங் கோட்டு புற்றத்து ஈயல் கெண்டி
எல்லு முயல் எறிந்த வேட்டுவன் சுவல
பல் வேறு பண்ட தொடை மறந்து இல்லத்து
இரு மடை கள்ளின் இன் களி செருக்கும்
வன் புல காட்டு நாட்டதுவேஅன்பு கலந்து
நம்வயின் புரிந்த கொள்கையடு நெஞ்சத்து
உள்ளினள் உறைவோள் ஊரே முல்லை
நுண் முகை அவிழ்ந்த புறவின்
பொறை தலை மணந்தன்று உயவுமார் இனியே
வினைமுற்றி மீள்வான்தேர்ப்பாகற்கு சொல்லியது
மருதம் தூங்கலோரியார்
மலை கண்டன்ன நிலை புணர்நிவப்பின்
பெரு நெற் பல் கூட்டு எருமை உழவ
கண்படை பெறாஅது தண் புலர் விடியல்
கருங் கண் வராஅல் பெரு தடி மிளிர்வையடு
புகர்வை அரிசி பொம்மற் பெருஞ் சோறு
கவர் படு கையை கழும மாந்தி
நீர் உறு செறுவின் நாறு முடி அழுத்த நின்
நடுநரொடு சேறிஆயின் அவண்
சாயும் நெய்தலும் ஓம்புமதி எம்மில்
மா இருங் கூந்தல் மடந்தை
ஆய் வளை கூட்டும் அணியுமார் அவையே
சிறைப்புறமாக உழவர்க்கு சொல்லுவாளா
தோழி செறிப்பு அறிவுறீஇயது
குறிஞ்சி சிறுமோலிகனார்
கேளாய் எல்ல தோழி அல்கல்
வேணவா நலிய வெய்ய உயிரா
மான் பிணையின் வருந்தினெனாக
துயர் மருங்கு அறிந்தனள் போல அன்னை
துஞ்சாயோ என் குறுமகள் என்றலின்
சொல் வெளிப்படாமை மெல்ல என் நெஞ்சில்
படு மழை பொழிந்த பாறை மருங்கில்
சிரல் வாய் உற்ற தளவின் பரல் அவல்
கான் கெழு நாடற் படர்ந்தோர்க்கு
கண்ணும் படுமோ என்றிசின் யானே
தலைவன் வரவு உணர்ந்து தலைவிக்கு
சொல்லுவாளா தோழி சொல்லியது
பாலை இளங்கீரனார்
வேர் பிணி வெதிரத்து கால் பொரு நரல் இசை
கந்து பிணி யானை அயர் உயிர்த்தன்ன
என்றூழ் நீடிய வேய் பயில் அழுவத்து
குன்று ஊர் மதியம் நோக்கி நின்று நினைந்து
உள்ளினென் அல்லெனோ யானே முள் எயிற்று
திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல்
எமதும் உண்டு ஓர் மதிநா திங்கள்
உரறு குரல் வெவ் வளி எடுப்ப நிழல் தப
உலவை ஆகிய மரத்த
கல் பிறங்கு உயர் மலை உம்பர•து எனவே
முன் ஒரு காலத்துப்பொருள்வயிற் பிரிந்து
வந்த தலைவன் பின்னும் பொருள்வலிக்கப்பட்ட
நெஞ்சிற்கு செலவு அழுங்குவித்தது
நெய்தல் உலோச்சனார்
உரவு கடல் உழந்த பெரு வலைப்பரதவர்
மிகு மீன் உணக்கிய புது மணல் ஆங்கண்
கல்லென் சேரி புலவற் புன்னை
விழவு நாறு விளங்கு இணர் அவிழ்ந்து உடன் கமழும்
அழுங்கல் ஊரோ அறன் இன்று அதனால்
அறன் இல் அன்னை அருங் கடி படுப்ப
பசலை ஆகி விளிவதுகொல்லோ
புள் உற ஒசிந்த பூ மயங்கு அள்ளல்
கழி சுரம் நிவக்கும் இருஞ் சிறை இவுளி
திரை தரு புணரியின் கழூஉம்
மலி திரை சேர்ப்பனொடு அமைந்த நம் தொடர்பே
அலர் அச்சத்தால்தோழி சிறைப்புறமாக
செறிப்பு அறிவுறீஇயது
குறிஞ்சி உலோச்சனார்
என்னர்ஆயினும் இனி நினைவு ஒழிக
அன்னவாக இனையல் தோழி யாம்
இன்னமாக துறந்தோர் நட்பு எவன்
மரல் நார் உடுக்கை மலை உறை குறவர்
அறியாது அறுத்த சிறியிலை சாந்தம்
வறனுற்று ஆர முருக்கி பையென
மரம் வறிதாக சோர்ந்து உக்காங்கு என்
அறிவும் உள்ளமும் அவர் வயின் சென்றென
வறிதால் இகுளை என் யாக்கை இனி அவர்
வரினும் நோய் மருந்து அல்லர் வாராது
அவணர் ஆகுக காதலர் இவண் நம்
காமம் படர் அட வருந்திய
நோய் மலி வருத்தம் காணன்மார் எமரே
பிரிவிடை தலைவியது அருமை கண்டு தூதுவிட
கருதிய தோழிக்கு தலைவி சொல்லியது
குறிஞ்சி கபிலர்
அமுதம் உண்க நம் அயல் இலாட்டி
கிடங்கில் அன்ன இட்டு கரை கான் யாற்று
கலங்கும் பாசி நீர் அலை கலாவ
ஒளிறு வெள் அருவி ஒண் துறை மடுத்து
புலியடு பொருத புண் கூர் யானை
நற் கோடு நயந்த அன்பு இல் கானவர்
வி் சுழிப்பட்ட நா பூசல்
உருமிடை கடி இடி கரையும்
பெரு மலை நாடனை வரூஉம் என்றோளே
விரிச்சி பெற்றுப்புகன்ற தோழி தலைமகட்கு சொல்லியது
பாலை
மிளகு பெய்தனைய சுவைய புன் காய்
உலறு தலை உகாஅ சிதர் சிதர்ந்து உண்ட
புலம்பு கொள் நெடுஞ் சினை ஏறி நினைந்து தன்
பொறி கிளர் எருத்தம் வெறி பட மறுகி
புன் புறா உயவும் வெ துகள் இயவின்
நயந்த காதலற் புணர்ந்தனள் ஆயினும்
சிவந்து ஒளி மழுங்கி அமர்த்தனகொல்லோ
கோதை மயங்கினும் குறு தொடி நெகிழினும்
காழ் பெயல் அல்குல் காசு முறை திரியினும்
மாண் நலம் கையற கலுழும் என்
மா குறுமகள் மலர் ஏர் கண்ணே
மனை மருட்சி இனிசந்த நாகனார்
நெய்தல் பேரி சாத்தனார்
சேய் விசும்பு இவர்ந்த செழுங் கதிர் மண்டிலம்
மால் வரை மறைய துறை புலம்பின்றே
இறவு அருந்தி எழுந்த கருங் கால் வெண் குருகு
வெண் கோட்டு அருஞ் சிறை தாஅய் கரைய
கருங் கோட்டு புன்னை இறைகொண்டனவே
கணை கால் மா மலர் கரப்ப மல்கு கழி
துணை சுறா வழங்கலும் வழங்கும் ஆயிடை
எல் இமிழ் பனி கடல் மல்கு சுடர கொளீஇ
எமரும் வேட்டம் புக்கனர் அதனால்
தங்கின் எவனோதெய்ய பொங்கு பிசிர்
முழவு இசை புணரி எழுதரும்
உடை கடற் படப்பை எம் உறைவின் ஊர்க்கே
பகற்குறி வந்து நீங்கும் தலைமகனை தோழி வரைவு கடாயது
குறிஞ்சி பிரான் சாத்தனார்
விளையாடு ஆயமொடு ஓரை ஆடாது
இளையோர் இல்லிடத்து இற்செறிந்திருத்தல்
அறனும் அன்றே ஆக்கமும் தேய்ம் என
குறு நுரை சுமந்து நறு மலர் உந்தி
பொங்கி வரு புது நீர் நெஞ்சு உண ஆடுகம்
வல்லிதின் வணங்கி சொல்லுநர பெறினே
செல்க என விடுநள்மன்கொல்லோ எல் உமிழ்ந்து
உரவு உரும் உரறும் அரை இருள் நடு நாள்
கொடி நுடங்கு இலங்கின மின்னி
ஆடு மழை இறுத்தன்று அவர் கோடு உயர் குன்றே
சிறைப்புறமாகத்தோழி தலைவிக்கு
உரைப்பாளா செறிப்பு அறிவுறீஇயது
முல்லை சேகம்பூதனார்
பல் கதிர் மண்டிலம் பகல் செய்து ஆற்றி
சேய் உயர் பெரு வரை சென்று அவண் மறைய
பறவை பார்ப்புவயின் அடைய புறவில்
மா எருத்து இரலை மட பிணை தழுவ
முல்லை முகை வாய் திறப்ப பல் வயின்
தோன்றி தோன்றுபு புதல் விளக்கு உறாஅ
மதர்வை நல் ஆன் மாசு இல் தெண் மணி
கொடுங் கோல் கோவலர் குழலோடு ஒன்றி
ஐது வந்து இசைக்கும் அருள் இல் மாலை
ஆள்வினைக்கு அகன்றோர் சென்ற நாட்டும்
இனையவாகி தோன்றின்
வினை வலித்து அமைதல் ஆற்றலர்மன்னே
வினைவயிற் பிரிதல்ஆற்றாளாய தலைவி சொல்லியது
மருதம்
சிறு வெள்ளாங்குருகே
துறை போகு அறுவை தூ மடி அன்ன
நிறம் கிளர் தூவி சிறு வெள்ளாங்குருகே
எம் ஊர் வந்து உண்துறை துழைஇ
சினை கௌ ற்று ஆர்கையை அவர் ஊர பெயர்தி
அனைய அன்பினையோ பெரு மறவியையோ
ஆங்கண் தீம் புனல் ஈங்கண் பரக்கும்
கழனி நல் ஊர் மகிழ்நர்க்கு என்
இழை நெகிழ் பருவரல் செப்பாதோயே
காமம் மிக்க கழிபடர்கிளவி வெள்ளி வீதியார்
பாலை வண்ணப்புற கந்தரத்தனார்
மன்னா பொரு பிணி முன்னி இன்னதை
வளை அணி முன்கை நின் இகுளைக்கு உணர்த்து என
பல் மாண் இரத்திர்ஆயின் சென்ம் என
விடுநள் ஆதலும் உரியள் விடினே
கண்ணும் நுதலும் நீவி முன் நின்று
பிரிதல் வல்லிரோ ஐய செல்வர்
வகை அமர் நல் இல் அக இறை உறையும்
வண்ண புறவின் செங் காற் சேவல்
வீழ் துணை பயிரும் கையறு முரல் குரல்
நும் இலள் புலம்ப கேட்டொறும்
பொம்மல் ஓதி பெரு விதுப்புறவே
தலைவனை தோழி செலவு அழுங்குவித்தது
நெய்தல் இளம்போதியார்
பேணுப பேணார் பெரியோர் என்பது
நாணு தக்கன்று அது காணுங்காலை
உயிர் ஓரன்ன செயிர் தீர் நட்பின்
நினக்கு யான் மறைத்தல் யாவது மிக பெரிது
அழிதக்கன்றால் தானே கொண்கன்
யான் யாய் அஞ்சுவல் எனினும் தான் எற்
பிரிதல் சூழான்மன்னே இனியே
கானல் ஆயம் அறியினும் ஆனாது
அலர் வந்தன்றுகொல் என்னும் அதனால்
புலர்வதுகொல் அவன் நட்பு எனா
அஞ்சுவல் தோழி என் நெஞ்சத்தானே
தோழி சிறைப்புறமாக தலைவிக்கு உரைப்பாளா சொல்லியது
பாலை மூலங்கீரனார்
வேனில் முருக்கின் விளை துணர் அன்ன
மாணா விரல வல் வா பேஎய்
மல்லல் மூதூர் மலர பலி உணீஇய
மன்றம் போழும் புன்கண் மாலை
தம்மொடும் அஞ்சும் நம் இவண் ஒழி
செல்ப என்ப தாமே செவ் அரி
மயிர் நிரைத்தன்ன வார் கோல் வாங்கு கதிர
செந்நெல்அம் செறுவின் அன்னம் துஞ்சும்
பூ கெழு படப்பை சாய்க்காட்டு அன்ன என்
நுதற் கவின் அழிக்கும் பசலையும்
அயலோர் தூற்றும் அம்பலும் அளித்தே
செலவு குறிப்பு அறிந்து வேறுபட்ட தலைவி சொல்லியது
நெய்தல் உலோச்சனார்
வடி கதிர் திரித்த வல் ஞாண்பெரு வலை
இடி குரற் புணரி பௌவத்து இடுமார்
நிறை பெய்த அம்பி காழோர்
சிறை அருங் களிற்றின் பரதவர் ஒய்யும்
சிறு வீ ஞாழற் பெருங் கடற் சேர்ப்பனை
ஏதிலாளனும் என்ப போது அவிழ்
புது மணற் கானல் புன்னை நுண் தாது
கொண்டல் அசை வளி தூக்குதொறும் குருகின்
வெண் புறம் மொசிய வார்க்கும் தெண் கடல்
கண்டல் வேலிய ஊர் அவன்
பெண்டு என அறிந்தன்று பெயர்த்தலோ அரிதே
தலைவி பாணற்கு வாயில்மறுத்தது
குறிஞ்சி மாமூலனார்
நயன் இன்மையின் பயன் இது என்னாது
பூம் பொறி பொலிந்த அழல் உமிழ் அகன் பை
பாம்பு உயிர் அணங்கியாங்கும் ஈங்கு இது
தகாஅது வாழியோ குறுமகள் நகாஅது
உரைமதி உடையும் என் உள்ளம் சாரல்
கொடு விற் கானவன் கோட்டுமா தொலைச்சி
பச்சூன் பெய்த பகழி போல
சேயரி பரந்த மா இதழ் மழை கண்
உறாஅ நோக்கம் உற்ற என்
பைதல் நெஞ்சம் உய்யுமாறே
சேட்படுக்கப்பட்டு ஆற்றானாகிய தலைமகன்
தோழி கேட்பச்சொல்லியது
பாலை
வருமழை கரந்த வால் நிற விசும்பின்
நுண் துளி மாறிய உலவை அம் காட்டு
ஆல நீழல் அசைவு நீக்கி
அஞ்சுவழி அஞ்சாது அசைவழி அசைஇ
வருந்தாது ஏகுமதி வால் இழை குறுமகள்
இம்மென் பேர் அலர் நும் ஊர புன்னை
வீ மலர் உதிர்ந்த தேன் நாறு புலவின்
கானல் வார் மணல் மரீஇ
கல் உற சிவந்த நின் மெல் அடி உயற்கே
புணர்ந்து உடன்போகாநின்ற தலைவன் இடை சுரத்து
தலைவிக்கு உரைத்தது அம்மூவனார்
குறிஞ்சி
மலையன் மா ஊர்ந்து போகி புலையன்
பெரு துடி கறங்க பிற புலம் புக்கு அவர்
அருங் குறும்பு எருக்கி அயா உயிர்த்தாஅங்கு
உய்த்தன்றுமன்னே நெஞ்சே செவ் வேர
சினைதொறும் தூங்கு் பயம் கெழு பலவின்
சுளையுடை முன்றில் மனையோள் கங்குல்
ஒலி வெள் அருவி ஒலியின் துஞ்சும்
ஊறலஞ் சேரி சீறூர் வல்லோன்
வாள் அரம் பொருத கோள் நேர் எல் வளை
அகன் தொடி செறித்த முன்கை ஒள் நுதல்
திதலை அல்குல் குறுமகள்
குவளை உண்கண் மகிழ் மட நோக்கே
பின்னின்ற தலைவன் நெஞ்சிற்கு உரைத்தது கபிலர்
நெய்தல்
கோ சுறா வழங்கும் வாள் கேழ்இருங் கழி
மணி ஏர் நெய்தல் மா மலர் நிறைய
பொன் நேர் நுண் தாது புன்னை தூஉம்
வீழ் தாழ் தாழை பூ கமழ் கானல்
படர் வந்து நலியும் சுடர் செல் மாலை
நோய் மலி பருவரல் நாம் இவண் உய்கம்
கேட்டிசின் வாழி தோழி தெண் கழி
வள் வாய் ஆழி உள் தோயினும்
புள்ளு நிமிர்ந்தன்ன பொலம் படை கலி மா
வலவன் கோல் உற அறியா
உரவு நீர சேர்ப்பன் தேர்மணி குரலே
வரைவு மலிந்தது கீரங்கீரனார்
பாலை கண்ணகனார்
சிறை நாள் ஈங்கை உறை நனி திரள்வீ
கூரை நல் மனை குறு தொடி மகளிர்
மணல் ஆடு கழங்கின் அறை மிசை தாஅம்
ஏர் தரலுற்ற இயக்கு அருங் கவலை
பிரிந்தோர் வந்து நப்புணர புணர்ந்தோர்
பிரிதல் சூழ்தலின் அரியதும் உண்டோ
என்று நாம் கூறி காமம் செப்புதும்
செப்பாது விடினே உயிரொடும் வந்தன்று
அம்ம வாழி தோழி
யாதனின் தவிர்க்குவம் காதலர் செலவே
பிரிவு உணர்ந்து வேறுபட்ட தலைமகள் தோழிக்கு சொல்லியது
மருதம் பூதன்தேவனார்
மன்ற எருமை மலர் தலை காரான்
இன் தீம் பாற்பயம் கொண்மார் கன்று விட்டு
ஊர குறுமாக்கள் மேற்கொண்டு கழியும்
பெரும் புலர் விடியலின் விரும்பி போத்தந்து
தழையும் தாரும் தந்தனன் இவன் என
இழை அணி ஆயமொடு தகு நாண் தடைஇ
தைஇ திங்கள் தண் கயம் படியும்
பெரு தோ குறுமகள் அல்லது
மருந்து பிறிது இல்லை யான் உற்ற நோய்க்கே
சேட்படுக்கப்பட்டு ஆற்றானாய தலைவன்
தோழி கேட்ப தன் நெஞ்சிற்கு உரைத்தது
முல்லை அகம்பன்மாலாதனார்
இரு நிலம்