மோகவாசல் ரஞ்சகுமாரின் சிறுகதைகள்


©மோகவாசல் ரஞ்சகுமார்
சுருக்கும் ஊஞ்சலும்
கபர கொய்யாக்கள்
காலம் உனக்கொரு பாட்டெழுதும்
கோசலை
அரசி
கோளறு பதிகம்
மோகவாசல்
மோகவாசல்ரஞ்சகுமாரின் சிறுகதைகள் வயது
விலாசம் கயலகம் மத்தொனி கரவெட்டி மேற்கு
முதல் பதிப்பு ஆடி பிரசுரிப்பாளர்கள் யதார்த்தா பருத்தித்துறை
அச்சுப்பதிப்பு விஜயா அழுத்தகம் யாழ்ப்பாணம் எதிர்ப்படிவுமுறை
தகட்டுவடிவமைப்பு கலைமகள் பிரின்ரோ கிரா· யாழ்ப்பாணம் விளக்கப்படங்கள் தயா
வாசுகி ஜெகநாதன் அருந்ததி சபாநாதன் முன்புற அட்டை வீரசந்தானம் நன்றிபாலம்
பின்புற அட்டை ரமணி நன்றிஆனந்தி

சுருக்கும் ஊஞ்சலும்
வெயில் கொளுத்துகிறது ஆனிமாதத்து மூச்சு விடவே சிரமமாக
இங்கே கல்லா பெட்டியில் இருந்துகொண்டு பார்த்தால் கிட்டத்தட்ட கால்மைல் தூரத்துக்கு
முன்னால் கண்டிவீதி வி¡¢கிறது வீதியின் இடது ஓடத்தில் கடை வாசலிலிருந்து
சுமார் நூறுஅடி தூரம் தள்ளி இந்த ஊ¡¢ன் பெயரைத்தாங்கிய சிமெந்து பலகை ஒன்று
வெள்ளையாக தொ¢கிறது அதன்மேல் இந்த வெளியிலிலும் இரண்டு காக்கைகள் உட்கார்ந்து
கொண்டு கரைகின்றன அந்த காக்கைகளின் சத்தம் சன்னமாக காதுக்கு சிரமந்தருவதாக
இருக்கிறது சுறுசுறுப்பாக அங்குமிங்கும் பறந்து தி¡¢ந்து இரைதேடும் இந்த
காக்கைகள் கூட ஓ¡¢டத்தில் சோம்பியிருக்கின்றனவே அவ்வளவு வெயிலா
கடைவாசலுக்கு நேரே றோட்டுக்கு அப்பால் ஒரு கம்பிவேலி அக்கம்வேலிக்கும் றோட்டுக்கும்
இடையில் ஒரு பசுமாடு படுத்து கொண்டு அசைபோடுகிறது பக்கத்தில்
கன்றுக்குட்டி தலையை தொங்க போட்டுக்கொண்டு கண்கள் அரைத்தூக்கம் போல
செருகிக்கொள்ள கால்களை பரப்பி கொண்டு நிற்கிறது இந்தமாடு எப்போதும் ஆவ்
என்று வாய்கொள்ளாமல் புல் மேயுமே இன்று இதற்கு என்னவந்தது ஆறுதலாக
படுத்திருக்கிறதே கன்னத்தோலினுக்கூடாக தாடை எலும்புகள் பீறித்தொ¢ய மெதுவாக இது
அசைபோடுவதை பார்க்க ஒரே சினமாக இருக்கிறது
கம்பிவேலிக்கு அப்பால் சிறிய வயல்வெளி அவ்வயல்வெளியின் மத்தியில் மஞ்சளாகவும்
சற்று பொ¢தாகவும் காட்சியளிக்கிறது அப்போதிக்கா¢ ஆசுப்பத்தி¡¢ வயல் வெளியில்
நான் வந்திறங்கிய போது சிறிய பூண்டாக இன்னசெடி என்று அடையாளம் காண முடியாத
நிலையிலிருந்தசணல் இப்போ வேலியளவுக்கு வளர்ந்து மஞ்சட்பூக்களுடன் குலங்கி
சாய்கிறது ஆசுபத்தி¡¢ விறாந்தையில் ஓடலி பரமசிவம் இருந்து சுருட்டு பிடித்து
கொண்டிருக்கிறார் கால்கள் இரண்டையும் அகட்டிப்போட்டுக்கொண்டு வாங்கில் முதுகு
சாயுமிடத்தில் கைகளை வீசிப்போட்டுக்கொண்டு தலையை கவிழ்த்துக்கொண்டுதான் இருக்கிறார்
சுருட்டு பிடிக்கிறாரா இல்லையா என்பதே சந்தேகமாக இருக்கிறது குரங்கு
தூக்கத்திலிருந்து விழிப்பதுபோல இடைக்கிடை புகை மெல்ல வருவதுதான் அதை
ஊர்ஜிதப்படுத்துகிறது அவரும் கூட இந்த வெயிலில் சோர்ந்து சுருண்டுபோய் இருப்பதாக
எனக்குப்படுகிறது
ஆசுப்பத்தி¡¢க்கு இடதுபுறம் கொஞ்ச தூரம் தள்ளி சிவப்பாக அரசாங்க குவாட்டஸ்
தொ¢கிறது குவாட்டஸின் முன்விறாந்தையில் இருதூண்களுக்கு நடுவே ஒரு கயிற்றுக்கொடி
கட்டப்பட்டு அதில் சிலதுணிகள் காய வி¡¢க்கப்பட்டிருக்கின்றன சுவரோடு சாய்ந்து
சாயும் இடம் இல்லாத கதிரை ஒன்று வைக்கப்பட்டிருக்கின்றது காற்றில் ஆடும் துணிகள்
மெதுவாக ஆடிக்களிக்கவே பி¡¢யமற்றவைபோல பலவந்தமாக ஆட்டப்படுவதாக
எனக்குப்படுகிறது அனேகமான வேளைகளில் அந்த கதிரையில் கனகசிங்கம் கால்மேல்
கால்போட்டுக்கொண்டு தொடையில் ஊன்றிய கையை நாடிக்கு முண்டு கொடுத்துக்கொண்டு
இருப்பதை காணலாம் இப்போ அதுவெறுமே வெறிச்சோடி கிடக்கிறது
கல்லாவிலிருந்து பின்புறம் திரும்பிப்பார்த்தால் யன்னலினூடாக றெயில்வேலைன்
தொ¢கிறது அதை ஒட்டினாற்போல பற்றையும் மரமுமாக ஒரே காடு அந்த பச்சைக்குமேல்
நிர்மலமான நீல ஆகாயம் பச்சையும் நீலமும் பார்க்கவே சகிக்கவில்லையே வானத்தை
கண்கொண்டு பார்க்கவே முடியவில்லை வெயில் கண்ணை குத்துகிறது அப்பாடா
இந்த வெயில் நாசமாய்ப்போக
முன்புறம் இப்படி கிட்டவா காடு இல்லை ஆசுபத்தி¡¢ குவாட்டஸ் எல்லாம் தாண்டி
பொ¢ய வயல்வெளி லக்ஷபானவிலிருந்து யாழ்ப்பாணக்குடாவுக்கு கரண்ட்டை
சுமந்துசெல்லும் நீள நீளமான கம்பிகளும் அவற்றை தாங்கி நிற்கும் பிரமாண்டமான
போஸ களும் அவ்வயல்வெளியை ஊடறுக்கின்றன அதற்குமப்பால் கருநீலநிறமாகத்தான் காடு
தோன்றுகிறது எங்களூ¡¢ல் தொலைதூர பனைகள் காட்சியளிப்பதும் ஏறத்தாழ இதே காட்சிதான்
மேலே கூரைக்கு தகரம்தான் போட்டியிருக்கிறார்கள் அதனால் ஒரே வெக்கையாக
அடிக்கிறது அடிக்கிற வெக்கையில் முகம் கருகிவிடுமாற்போல் எ¡¢ந்து தள்ளுகிறது
போதாத குறைக்கு பின்னாலிருந்து பொய்லர் சூடு முதுகை எ¡¢க்கிறது தண்ணீர்
கொதிக்கும் தள சத்தம் வேறு காதுக்கு நாராசமாக
கண்டி வீதியில் செருப்புச்சத்தம் சரசர என கையில் பிரப்பங் கூடையுடன் கருணே நடந்து
போகிறான் அதற்குள் போத்தில்கள் இருக்கும் போகிற அவன் மெல்லிதாக என்னைப்பார்த்து
சி¡¢த்துக்கொண்டு போகிறான் வெயில் வெக்கையில் கண்ணையும் முகத்தையும்
இடுக்கிக்கொண்டு அவன் வேண்டா வெறுப்பாக சி¡¢ப்பதை பார்க்க பாவமாக இருக்கிறது
இப்படியே அவன் போகிற பாதையில் சிறிதுதூரம் போனால் முதுபண்டாவின் தச்சுவேலை
கொட்டிலுக்கு முன்னால் சிறுபற்றைகளுக்கு இடையில் உள்ள பழுதடைந்த கிணற்றின்
மிதியில் அவன் இந்த பிரப்பங்கூடையுடன் உட்கார்வதை காணலாம் இரண்டு ரூபா
ஐந்து ரூபா பேர்வழிகள் அடிக்கடி அவனிடம் வருவார்கள் ஒருதடவை போலிசிடம்கூட
அகப்பட்டிருக்கிறான்
அப்பா இப்போதைக்கு வரமாட்டார் வந்தால் நான்கொஞ்சம் தூங்கலாம் வர இரண்டுமணியாவது
ஆகும் இப்போது நேரம் பன்னிரண்டிற்குள்தான் இருக்கும் பார்ப்பதற்கு
மணிக்கூட்டை நம்ப முடியாது
உள்ளே குசினியிலிருந்து தேங்காய் துருவுகிற சத்தம் கேட்கிறது யாரோ இரண்டு பேர்
துருவுகிறார்கள் போல இருக்கிறது யாராக இருக்கும் சமையல்காரனும்
சி¡¢பாலாவும்தான் சிவலிங்கம்தான் இங்கே குழங்கையை முண்டு கொடுத்துக்கொண்டு
மேசையில் தூங்கிவழிந்து கொண்டிருக்கிறானே சின்னவன் அப்பாவுடன் சந்தைக்கு போய்விட்டான்
இது ஒரு சனியன்பிடித்த ஊர் சந்தைக்கு போவதானாலும் எட்டுமைல் தூரம் பஸ்ஸில்
போகவேண்டும் எனக்கு இப்போதுள்ள நிலையில் பஸ்ஸைப்பற்றி நினைக்கவே எ¡¢ச்சலாக
இருக்கிறது அதிகம் ஏன் கக்கூசுக்கு போவதாக இருந்தாலும் பின்னால் ரெயில்வேலைனை
கடந்து காட்டுக்குள்தான் போக வேண்டும் எனக்கு ரெயில்வேலைனை பார்க்கவே பயமாக
இருக்கிறது ஆயினும் என்ன செய்வது இயற்கை கடனை நிறைவேற்ற நானும் ரெயில்வேலனை
கடந்துதான் தீரவேண்டும்
நெடுக இப்படி காட்டையும் றோட்டையும் பார்த்து கொண்டிருக்க சலிப்பாகத்தான்
இருக்கிறது இந்த ஒருமணி நேரமாக றோட்டிலும் வாகன நடமாட்டங் குறைவு
அப்படியிருந்தால் வியாபாரமாவது சுறுசுறுப்பாக இருக்கும்
யாராவது பேச்சுத்துணைக்கிருந்தால் பரவாயில்லை சிவலிங்கத்தை கூப்பிடலாமா
வேண்டாம் பாவம் அவன் இரவு படுக்க போனபோது நேரம் இரண்டு மணியிருக்கும் அதுதான்
இப்போது தூங்கி வழிகிறான்
ஐஸ் மாதி¡¢ குளிராக ஏதாவது குடித்தால் நல்லது
சோடாவேண்டாம்செலவுகூட இளநீர்குடிக்கலாம் என்ன செய்வது
கத்திஎடுக்க சிவலிங்கத்தைத்தான் அருட்ட வேண்டியிருக்கிறது
சிவலிங்கம்சிவலிங்கம்டேய்
அவன் மெல்ல அருண்டு விழிக்கிறான் சிவந்த கண்களை கைகளால் தேய்த்து கொட்டாவி
சோம்பல் முறித்து கொள்கிறான்
எண்ண சிண்ண மொதலாளி
குசினிக்கைபோய் சின்னக்கத்தி ஒண்டு எடுத்துக்கொண்டந்து ஒரு இளனி வெட்டித்தாபோ
இவன் அரை சிங்களவன் தாய் சிங்களத்தி தகப்பன் இந்தியத்தமிழன் அதுதான் தமிழ
பெயரும் சிங்கள கதையுமாக இருக்கிறான்
அதோ அந்தப்பெயர்ப்பலகையருகில் கனகசிங்கம் வருகிறார் எங்கோ இந்த வெயிலில்
போய்விட்டு களைத்துவிழுந்து வியர்த்தொழுக டியூட்டி யூனிபோம் உடன் வருகிறார்
இந்த போறஸ்ற் கா வேலைகூட சிரமந்தான் காட்டுக்குள்ளே தனியாக அலையவேண்டும்
ஆனால் கனகசிங்கம் அப்படியல்ல குவாட்டஸிலேயே அந்த கதிரையில் இருந்துகொள்ளுவார்
எப்போதாவது ஒருநாள் தான் அத்திப்பூத்தாற்போல் டியூட்டி யூனிபோம் உடம்பில் ஏறும்
சிவலிங்கம் குசினிக்குள்ளிருந்து நன்குசீவிவெட்டிய இளநீருடன் வருகிறான்
சிங்களவனாகியபடியால் குறும்ப வெட்டி பழகிய கையால் நல்ல அழுத்தமாக
வாய்பொருத்தி குடிக்க ஏதுவாக இளநீர் வெட்டி தருகிறான் ஆனால் இதை தூக்கி
குடிக்கவே பொ¢ய சோம்பலாக இருக்கிறது எனக்கு
கனகசிங்கம் நேரே இங்கேதான் வருகிறார் சிகர வாங்கவாக இருக்கும் வாசலில்
ஏறும்போதே சூசா¢யான வெயில் என்று அலுத்தபடியேதான் வருகிறார்
போறேசஸ் ஒண்டு தாதம்பி
இலாச்சியை இழுக்கவே அலுப்பாக இருக்கிறது வேண்டா வெறுப்பாக சிகர விற்பனை
நடத்துகிறேன் அவர் சிகரட்டை பற்றவைக்க சதா எ¡¢ந்து கொண்டிருக்கும் விளக்கண்டை
போகிறார் அது அணைந்துபோயிருக்கின்றது
விளக்கு நூந்துபோச்சுத்தம்பி
சிவலிங்கத்திடம் சொல்லி கொளுத்துவிக்கலாம்தான் அவன் பாவம் மீண்டும் மேசையில் தூங்கி
வழிகிறான் எனக்கும் எழச்சோம்பலாக இருக்கிறது
இப்படி உள்ளைவந்து பொயிலர் நெருப்பிலை பத்துங்கோ அல்லது உப்பிடி உந்தக்கூரை
தகரத்திலை பிடியுங்கோ எ¡¢யும்
என்னுடைய நகைச்சுவைக்காக ஏதோ கடமைக்காக சி¡¢ப்பதுபோல் சி¡¢த்துவிட்டு
சிகரட்டை கொழுத்திக்கொண்டு மெதுவாக குவாட்டஸை நோக்கி நடக்கிறார் அவர்
மீண்டும் வெறுமை ஒரே எ¡¢ச்சலாக இருக்கிறது ரேடியோவை திருகுகின்றேன் ஏதோ
கி¡¢க்கட்நேர்முக வர்ணனை நடக்கிறது இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் டெஸ்ட
நடப்பதாக கனகசிங்கம்தான் நேற்று சொன்னார் வெங்கட்ராகவனின் பந்துவீச்சுக்கு யாரோ
ஒரு நியூசிலாந்துக்காரன் பெளண்டா¢ அடித்ததாக அறிவிப்பாளன் அறிவிக்கிறான் வெங்க
தமிழன் ஒரு தமிழனின் பந்துவீச்சுக்கு அந்நியன் ஒருவன் அடித்தானாம் பெளண்டா¢
தமிழனுக்கு சோம்பலா சே இந்த அறிவிப்பாளனின் கரகரத்த சோம்பலான குரலை
கேட்கவே பற்றி கொண்டு வருகிறது ரேடியோவை வெறுப்புடன் மூடுகிறேன்

தூரத்தே யாரோ மஞ்சள்நிற ஜப்பான் குடையுடன் வருகிறார்கள்
ஜப்பான் குடைதான் இப்போது பாசன்
பெண்கள்தான் அதிகமாக ஜப்பான்குடை பாவிக்கின்றார்கள் எதிரே வருவதுகூட ஒரு பெண்ணாக
இருக்கலாம் என்ன
மஞ்சளுக்கு கீழே சிறிது இடைவெளிவிட்டு மெல்லியமிக மெல்லிய சிவப்பாக
தொ¢கிறது றோட்டின் கறுத்த பின்னணியில் மஞ்சளும் மென்சிவப்பும் நல்ல எடுப்பாக
இருக்கிறது அந்த மென்சிவப்பு அப்பெண்ணின் ஆடையாக இருக்கும்
மினிகவுண்தான் இப்போது பாசன்
இவளுக்கு தூரத்தேநின்று பார்க்க இது அழகாகத்தான் இருக்கிறது கிட்டவர நன்கு
பார்க்கலாம் முகத்தையும்
அழகாக இருப்பாளோ அழகாகத்தான் இருப்பாள் அதையே நான்நான்மட்டுமென்ன எல்லோரும்
விரும்புகிறார்கள்
இந்த வெயிலில் நடந்து வருகிறாளே பாவம் சுடாதா
குதிச்சப்பாத்து போட்டிருப்பாள்
குசிச்சப்பாத்துத்தான் இப்போது பாசன்
குதிச்சப்பாத்து போட்டால் வேகமாக நடக்கமுடியாது அதுவும் நல்லது சில
பெண்களுக்கு அதுவே ஆறஅமர நிதானமாக நடக்க பழக்குகிறது
இந்த பெண்ணின் நடை நன்றாயிருக்கிறது மிக அன்னநடை
அதுமாதி¡¢
இப்போது அவள் அந்த பெயர்ப்பலகைக்குக்கிட்ட வந்துவிட்டாள் நல்ல நிறம் நான் பெண்கள்
எந்தநிறத்தில் இருக்க வேண்டுமென எண்ணுவேனோ அந்த நிறம்
இன்னும் கிட்டவந்தால் ஏன் கடைக்கே வந்தால் நான்றாக பார்க்கலாம்
இந்த நேரத்தில் எங்கே வருகிறாள் ஆகப்பத்தி¡¢க்காக இருக்கும் அழகான
ஆசுப்பத்தி¡¢க்கு போகுமளவுக்கு நோயா சீகூடாது அப்படியிருப்பதை நான்
விரும்பவில்லை
இப்பொழுதுதான் நன்றா கவனிக்கக்கூடியதாக இருக்கிறது குழுகுழு கண்ணாடி
மாட்டியிருக்கிறாள் சிவந்த முகத்திற்கு கறுத்த கண்ணாடி எடுப்பாக இருக்கிறது
ஆமாம் இந்த சனியன் பிடித்த ஊ¡¢ல்கூட இப்படி பெண்கள் இருக்கிறார்களா ஏன் இரு
கூடாது ஒருவேளை இவர்கள் இப்பெண்ணின் குடும்பத்தினர்என்னைப்போல வெளியூர்க்காரர்களாக
இருக்கலாமல்லவா இங்கே பாம் எதாவது
என்ன இவள் கடைக்கல்லவா வருகிறாள் நான் சற்று உஷாராக இருக்கவேண்டும் இப்படி
இருந்தால் எப்படி அதுவும் ஒரு அழகான பெண்ணுக்கு முன்னால்
கடைவாசல்படி கொஞ்சம் உயரம் அதில் ஏறும்போது அவளுடைய குதிச்சப்பாத்து வழுக்க
பார்க்கிறது வாசல் தூணை பிடித்துக்கொண்டு சமாளித்து கொள்கிறாள்
கவனம்பாத்துவரக்கூடாதா

ஆகா மதுரமான குரல்இவள் இங்கிலீசு தொ¢ந்தவள் நானும் எனக்கு தொ¢ந்ததா
காட்டிக்கொள்ளவேண்டும்

சோடா ஒண்டு தாங்க
சோடா என்று சொல்லும்போது சாயம்பூசிய சிறிய அளவான உதடுகளின் பின்னணியில் முத்து
வெள்ளை பற்கள் வடிவமே முத்துப்போல சிறிதான நன்றாக இருக்கின்றன
கொடுக்க சிவலிங்கத்தை எழுப்பலாமா வேண்டாம் நானே கொடுக்கலாமே எழுந்த வேகத்தில்
பாதி திறந்திருந்த இலாச்சி தொடையை பதம்பார்க்கிறது கனகசிங்கம்அவரால்தானே
இலாச்சி திறக்கவேண்டி வந்ததுஅவர் பாழாய்ப்போக
அம்மாடி என்றவாறு திரும்ப உட்கார்ந்து கொள்கிறேன் அவள் முன்னாலிருந்த சோடா
ரா கிலிருந்து சோடா ஒன்றை எடுக்கிறாள்
பரவாயில்லை தாங்கநானே உடைக்கிறன்
எடுத்து கொடுக்கிறேன் நல்லகாலம் அது கையெட்டும் தூரத்திலேயே இருக்கிறது
இல்லாவிடில் அவள் முன்னாலேயே நொண்டிநொண்டிசீவெட்கக்கேடு
சோடா குடிப்பதற்காக போலும் கண்ணாடியை கழற்றி கொள்கிறாள் நல்ல பொ¢ய
விசாலமான கண்கள் உதட்டுக்கு சாயமிட்டவள் கண்ணுக்கு மையும் இட்டிருக்கலாமே
இட்டிருந்தால் இன்னும் அழகாக இருந்திருக்கும்
எவ்வளவு காசு
ஒண்டிருபது தாங்க
காசு தரும்போது தான் கவனிக்கிறேன் கையில் மெல்லிய பூனை மயிர்கள் அது கறுப்பாக
இல்லாமல் உடலின் நிறத்திலேயே இருக்கிறது அதுவும் ஒரு அழகுதான் காலிலும்
இருக்கும் எட்டிப்பார்க்கலாமா சீ அவள் என்ன நினைத்து கொள்வாள்
நான்தான் அவளையே பார்க்கிறேனே அவள் என்னை கவனிப்பதாகவே காணோம்
முகத்தை கைக்குட்டையால் ஒற்றித்துடைக்கிறாள் திரும்ப அதை மடிக்கும்போதுநான்
நினைத்து நடக்கிறது கணநேரம் தான் கண்களை திரும்பிக்கொள்கிறாளே ஆமாம்
இப்படியான சந்தோச சமாச்சாரங்கள் எல்லாம் கணநேரம் தானோ
இன்னும் நிற்கிறாள் ஏதாவது வேறு தேவைகளும் இருக்கும்
வேறை என்ன வேணும்
வெறும் கொடுத்தாநல்லது
ஓஅது நாங்கள் விக்கிறதில்லையே

எண்டாலும் பரவாயில்லைஉதிலை கிடக்கிற போத்தலை எடுங்க இன்னும் ஒரு ரூபா தாங்க
அலுவல் முடிந்து போகும்போது மீண்டும் ஒரு தடவை மின்வெட்டு இப்போது அவள் மெதுவாக
சி¡¢க்கிறதா எனக்குப்படுகிறது

திடீரென பெயர்தாங்கி பலகையில் இருக்கம் காக்கைகள் உச்சஸ் தாயியில் கத்துகின்றன அவை
ஆரவாரமாகமகிழ்ச்சிப்பெருக்குடன் கரைவதாக எனக்கு படுகின்றது அவை இப்போ
நெருக்கமாக அமர்ந்து ஒன்றைஒன்று கொத்தியும் சீண்டியும் விளையாடுகின்றன
அந்த மாடு இப்போது எழுந்து நிற்கிறது அசைபோடுவதை நிறுத்திவிட்டது புல்மேய
ஆயத்தமாகின்றதா முதுகில் தொந்தரவு தரும் ஈக்களை வாலால் விளாசி
விரட்டுகின்றது அப்படி தான் இருக்கவேண்டும் எதி¡¢யை அடித்து ஓடஓட விரட்ட
வேண்டும்
கன்றுக்குட்டி துள்ளி துள்ளி தாய்க்குக்கிட்ட வருகிறது தாயைமுட்டி மோதி பால்
குடிக்கிறது அப்படித்தான் இருக்கவேண்டும் சேரவேண்டியதை எடுத்துக்கொண்டு
ஆனந்தமாககோலாகலமாக வாழவேண்டும் வாழ்க்கைதான் எவ்வளவு இன்பகரமானது
அந்தப்பெண் ஆசுப்பத்தி¡¢க்கேதான் போகிறாள் பரமசிவம் யோகத்திலிருந்து
விழித்தெழுகின்றார் போகத்திற்கா சி என்ன அசிங்கமான எண்ணம் சுருட்டு
புக்பு என்று புகை கக்குகிறது அந்தப்புகை அப்படியே
மேலெழுந்துமேலேஇன்னும் மேலே போய்க்கரைந்து காற்றோடு ஐக்கியமாகின்றது
அப்படி கரைவதைப்பார்க்க எனக்கும் நான் அவ்வாறு மேலே போக வேண்டும்
இருக்கிறது
குவாட்டஸ் முன்விறாந்தையில் கதிரையின் மேல் வழமையான பாணியில் கனகசிங்கம்
உட்கார்ந்திருக்கிறார் கொடியிலுள்ள துணிகள் காற்றுடன் கலந்துறவாடி இன பெருக்கால்
கனகசிங்கத்தின் முகத்தில் மெல்ல விசிறுகின்றன ஓரொரு சமயம் அவா¢ன் முகத்திலேயே
செல்லக்குழந்தையின் விளையாட்டு அடிகள் போலப்பட்டு விலகுகின்றன அவர் முகத்தில்
புன்னகை அப்படித்தான் இருக்கவேண்டும் சதாநேரமும் சி¡¢த்த முகத்துடன் அதைவிட்டு
விட்டு கடுவன் பூனைமாதி¡¢ கடுகடுத்த முகத்துடனா
வெயில் இப்போதும்கூட சுள்ளென்று அடிக்கிறது இந்த இல்லாவிட்டால்
எதிரே தொ¢யும் காடு இல்லை தூங்கிவழியும் இந்த சிவலிங்கம்
கடையில்லை அந்த கன்னியில்லைஒன்றுமே இருக்காது வெயில் வேண்டும் நன்கு
எறித்து எ¡¢ந்து தள்ளவேண்டும்
கருணே செருப்பு சத்தம் சரசர கடைக்கு வருகிறான் ¡£ குடிக்கவா
வரட்டுமே ஒரே வீச்சில் ஒன்பது ¡£ அடிக்கமாட்டேனா நான் அவனும் வெகு உற்சாகமாக
இருக்கிறான் சீட்டி கூட அடித்துக்கொள்கிறானே கைச்சரக்கு தீர்ந்துவிட்டதா காசு
சேர்ந்து விட்டதா சந்தோசம் கொண்டாட வருகிறானா
அப்பா இப்போதைக்கு வரமாட்டார் வராவிட்டால் போகட்டும் நானிருக்கிறேன் கடையை
நடத்த வேலை செய்வது ஒன்றும் பொ¢ய கஷ்டமான கா¡¢யமில்லையே
ரெயில்வேலைனின் கூட்ஸ்ஒன்று போகிறது கடையே அதிருகிறதுகடை அதிரகடையில்
நிலம் அதிரநான்அதிரஎன்னோடு பொய்லர் அதிர எதிரே வீதி
ஆசுபத்தி¡¢ அந்த பெண் அதிர ஷோக்கேஸ்கள் அதிரசிவலிங்கம்
இந்த அதிர்வுகள்கூட இவ்வளவு லயத்தை தேக்கிவைத்திருக்கின்றனவே
இந்த சத்தத்தில் சிவலிங்கம் விழித்துக்கொள்கிறான் அவனது சோம்பல் முறியவில்லையோ
சனியன் பிடித்தவன் மத்தியான வியாபாரநேரம் தூங்கிவழிகிறானே
சிவலிங்கம்டே சிவலிங்கம் என்ன நெடுக தூங்கிவிழுகிறாய் போபோய்
முசுத்தை கழுவிக்கொண்டுவாஇப்பிடிநெடுக தூங்கிவழிஞ்ச வாறவனும் சாப்பிடாமல்
திரும்பி போடுவான்
ரெயில்வே லைனைக்கடந்து ஒருவன் போகிறான் காலை கடனை மத்தியானத்தில் கழிக்க
கூட்ஸ்போன கையோடே போகிறான் இவ்வளவு நேரமும் கூட்ஸ் போகட்டும் என்று காத்து
நின்றானா பயந்தாங்கொள்ளி பயம்என்னபயம் சாவதற்குஆறிலுஞ் சாவு நூறிலுஞ்
இருந்தாற்போல றோட்டில் ஒருபஸ் போகிறது வேகம் அவ்வளவாக இல்லை ஆமைவேகத்தில்
உருட்டுகிறானே பஸ்ஸை அடே சோம்பேறி பயலே வேகமாக உன்னால்
வேகமாக ஓட்டு பஸ்ஸை பார்க்க எனக்கு பரமானந்தமாக இருக்கிறது றோட்டில்
சுறுசுறுப்பு விஷம்போல் ஏறுவதாக எனக்கு தோன்றுகிறது
ரேடியோவை திருகுகிறேன் சத்தம்ஏகச்சத்தம் யாரோ ஸிக்சர் அடித்துவிட்டானாம்
யார் பந்து வீசுவது மடயன் ஸிக்சர் அடிக்கும்படியாகவா
வெங்கட்ராகவனின் பந்துவீச்சு என்ன அறிவிப்பாளன் சொல்கிறான் அவனுடைய குரலில்
மிகுந்த உற்சாகம் தொளிக்கிறதா அவனுடைய குரலில்
அவனுடைய குரலையும் மீறி சனங்கள் கத்துகிறார்களே உயரேபோன பந்தை பார்த்து குதூகல
வெறியுடன் அவர்கள் குரவையிடுகிறார்களா கத்துங்கள் மகாசனங்களே
உலகமெங்கும் உற்சாகத்தை விதை கத்துங்கள்
வெங்க தமிழன் என்றால் என்ன எந்த கொம்பனாக இருந்தால்
பாராட்டியே ஆகவேண்டும் ஸிக்சர் அடித்தவனுக்கு ஜே

கபரக்கொய்யாக்கள்
சாதாரணமான எல்லா ஊர்களையும் போலவே இங்கும் ஓர் அரசமரம் நடந்து போகிறவர்களின்
தலைகளை வருடிக்கொடுப்பதைப்போல கிளைகளை தாழ்ந்து தொங்கவிட்டபடி
கீழே அழகிய தூய பீடமொன்றில் கண்மூடி ஏதோ அதிசய உலகத்தை நிஷ்டையில் தா¢சிக்கும்
புத்தனின் சிலை
ஒரு பள்ளிக்கூடம் ஏதோவொரு பாலிக மஹா வித்தியாலய என்று பெயர் பையன்களும்கூட
போனார்கள்
சிறு பஸ் நிலையத்திலிருந்து கடைத்தெரு தொடங்குகிறது அங்கிருந்து சறுக்கீஸ்
விட்டால் அந்தத்திலிருக்கிற கருவாட்டு கடையில் முடிவடைகிறமாதி¡¢ லாவகம் கொண்டு
வளைந்து போகிற தெரு பளபள வென்றிருந்தது இருபுறமும் புகையிலையும்
வெற்றிலையும் அ¡¢சி பருப்பு கருவாடு விற்கிற கடைகள் சங்கக்கடை சாளியின்
சாப்பாட்டு கடை ரெக்கோடிங் பார் ஒன்றுமிருந்தது எனக்கு சுருட்டுக்கடையில் மூச்சு
வாங்குகிறபடிக்கு வேலை நிமிர்ந்து பார்க்க நேரமில்லாத
ஓட்டு வீடுகள் வலு குறைவு களிமண்ணும் நெறியற்று போன காட்டு கம்புகளும் கொண்டு
சுவரெழுப்பி தென்னங்கீற்றுகளால் வேய்ந்த வீடுகள் விசாலமாகவே இருந்தன
பொலிஸ் கிடையாது உப தபாற்கந்தோருண்டு வெள்ளியும் புதனும் முறை வைத்து
கூடுகிற சந்தை அரசமரத்துக்கு பின்னால் கூடாரங்களிட்டு கூறி விப்பார்கள் வாயகன்ற
மண்பானைகளில் காய்ச்சிய தேங்காயெண்ணெய்யும் எருமைத்தயிரும் காற்றில் சுகந
தாதுகளை பரப்பும்
அடிக்கடி நினைத்து கொண்டு மழை ஒரு பிடி பிடிக்கும் போகிற போக்கில் குசாலாக
கண்ணடித்துவிட்டு போகிற விளையாட்டுக்கார பெண்ணைப்போல சில நிமிட நேரங்களில்
ஓய்ந்து மறுபடி வானம் வெளிக்கும் துடைத்து ஏற்றிவைத்த சிம்னிவிளக்கு மாதி¡¢
எல்லோரும் ஆற்றுக்குத்தான் குளிக்கப்போவார்கள் நானும் அருளும் பாதி விடியுமுன்னே
போவோம் அருள் சுருட்டுப்புகைத்தபடி சாளி கடைக்கு பக்கத்திலிருக்கிற முடுக்கில்
நுழைந்து விடவிடென்று நடந்து போவான் தென்ன தோப்புகள் தொ¢யும் அழகியருத்தி
ஒருக்களித்து சயனித்து கிடப்பதென நிலத்தை செதுக்கியிருந்தது
தோப்புகளுக்கிடையே பெயர் தொ¢யாத பற்றைகள் நம்மூ¡¢ன் பாவட்டை புதர்களை ஞாபகம்
காட்டின அந்த நெடி கிடையாது தொட்டால் ஒடிந்துபோகிற தன்மையும் இல்லை கம்புகள்
வலு மிகுந்திருந்தன இலைகளும் தோற்றமும் பாவட்டை மாதி¡¢ எறும்பூர்ந்த தடங்களென
ஒற்றை சுவட்டு பாதைகள் வகிடெடுத்து தொ¢யும்
ஒரு பெண்ணின் மார்புகளை போன்று இலயிப்புடன் வளைந்தபடி ஏறி இறங்கும் ரோட்டு
பளபளவென்று திடுமென முன்னேவி¡¢யும் இது கடைத்தெருவிலிருந்து குறுக்கே
பி¡¢ந்துவருகிற பாதை மார்பின் நுனிக்காம்பில் வலதுகை பக்கமாக சுநீதா
முதலாளியின் பேக்கா¢ இன்னும் போக ரோட்டுக்கு கீழால் கள்ளத்தனமாக வருகிற மாதி¡¢
சளசள சத்தத்துடன் ஆறு எதிர்ப்படும் பெயர் தொ¢யாத தண்ணீ¡¢ல் களிமண்
நிமிர்ந்து பார்த்தால் எதிரே தொடத்தொட விலகி போகிறதென மலை சிகரமென்று
ஆசைகாட்டும்
மாங்கொட்டை போட்டு தத்தி ஓடலாம் என பாறைகள் ஒழுங்கற்று தெற்று
போன்று தண்ணீருக்குள் துருத்திக்கொண்டு நின்றன கொஞ்சதூரம் இறங்கினால் ஆளுயரத்துக்கு
ஜல் என்று நீர் சா¢ந்து விழுகின்றது ஒரு யுகம் கழியட்டும்
தலையை இதமாக திருப்பி திருப்பி கொடுத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கலாம்
உச்சியில் முத்தமிட்டு களைத்து பி¡¢ந்து போவதென ஓவென்று அழுதவாறு தண்ணீர் பாயும்
மற்றபடி எங்கும் போலவே இவ்வூ¡¢லும் சனங்கள் ஒருசாண் வயிற்றுக்கும்
துணிக்கும் ஆலா பறக்கிற சனங்கள்
திண்ணிய மார்புகளை இறுக்கி காட்டும் ரவிக்கைகளை பூட்டி ஒற்றை சீத்தை
துணிகளில் கம்பாயம் கட்டிய பெண்கள்
காய்ச்சிய தேங்காயெண்ணெய்யை பூசி தலைமயிரை வழித்தெடுத்து பின்னுச்சியில் சிறு
பாக்களவு குடுமி வைத்திருக்கிற ஆண்கள் கடைசியில் களுசுருட்டு கேட்பார்கள்
ஏழு மணிக்கெல்லாம் கீழேயிருந்து மெதுவாக மேலேறிவரும் ரோட்டில் வெள்ளை புறாக்கள்
மாதி¡¢ பள்ளிக்கூடம் போகின்ற குழந்தைகள் கொப்பிபொ உம் பன்சில்
வேண்டுமென்றே சற்றுநேரம் வீணடித்துவிட்டு வாங்கி போகின்ற குமா¢கள்
இந்த கபரக்கொய்யாக்கள் மட்டும்
எந்நேரம் எங்கே தலைகாட்டும் என்று சொல்லமுடியாது பெயர் தொ¢யாத அந்த பற்றைக்குள்
சரசர வென்று அரக்கிக்கொண்டு போகும்
தலைக்கு மேலே சளசளவென்று தண்ணீர் விழ சுகம் என
குளிக்கிறபோது வாயை பிளந்து கொண்டு துருத்தி தொ¢கின்ற மூஞ்சியில் மூக்குகள்
வி¡¢ந்து துவாரங்கள் பெரும் பொந்துகள் என்று தொ¢ கள்ளத்தனமா கிட்டவே வந்துவிடும்
நேரம் காலமற்று சோடி சேர்ந்தபடியே தண்ணீருக்குள் ஊறி வெடித்துவிடும் என்று
அச்சங்கொள்ள வைக்கும்படி இறுகி பிணைந்து புணர்ந்தபடியே புரண்டு
நெறிவன
அரைத்தூக்கத்தில் உழன்று புரள்கின்ற போது எ¡¢ச்சல்மி கொள்ளும்படி முன் கதவில்
படீர் என்று ஓசைஎழ வாலை தூக்கி சுழற்றி ஒரு சாத்து சாத்தும் வால் பட்டால்
சதையை பிய்த்து எடுத்து காகங்களுக்கு விருந்து போடுகிறமாதி¡¢ என்ன ஒரு
வலிமையான சொடுக்கல் கத்தி முனைகள் மாதி¡¢ செதில்கள் குத்திக்கொண்டு நிற்கும்
இன்னுமொன்று இருந்தது அசாதாரணமாக நெஞ்சில் துருத்திக்கொண்டு
கடைக்கு பின்னே தோட்டத்து லயன்கள்மாதி¡¢ வா¢சையா காம்பராக்கள் இருந்தன நேரே
அடுத்தது காமினிமீன் வியாபா¡¢க்கு சோமரத்னவுக்கு
காய்கறி வியாபாரம்பிறகு லியனமாத்தய அப்புஹாமிக்குஅதற்கும் அடுத்தது
ஆ¡¢யவதி ஆமினேக்குமணக்க மணக்க அப்பம் சுட்டுத்தருவாள்இப்படிஏழோ எட்டு
கழிய கடைசி கோடியில் எங்களுக்கு ஸ்ரோர் புகையிலை சிப்பங்களும் சுருட்டு
பெட்டிகளும் வழியவழிய அடுக்கிக்கிடக்க ஒரு சோடிக்கு படுக்க இடம் வசதிப்பட்டது
போல் பொ¢ய மேசைசுறுட்டுக்கு கோடா தடவுவதற்கு மூன்றுபேருக்கு படுக்க பாய்
வி¡¢க்க இடம் மீந்திருந்தது தரையில் பின்னால் ஒரு சாய்ப்பு இறக்கி காட்டு
கம்புகளாலும் பச்சை மண்ணாலும் அறுக்கை பண்ணி தந்திருந்தார்கள் ஏறக்குறைய
இதேமாதி¡¢ பக்கத்து அறைக்கு பின்னாலும் ஒரு சாய்ப்பு இறங்கியிருந்தது தூய்மையான
ஆற்றுமணல் சொரசொரவென்று பரப்பியிருந்தது அதில் கோலமிழைத்தது போல ஒரு அழகிய
பாதங்கள் நெடுகிலும் படர்ந்து இருந்தன தொட்டு கண்களில் ஒற்றி ஒருகணம் மூடி
அனுபவிக்க சொல்லும்படியாக
சுற்றிலும் அரைவட்டமாக புல்லு செதுக்கியிருந்தது தென்னைக்கும் சாய்ப்பு
உச்சிக்குமாக ஒரு வயர் ஓடியது இளைய பெண்ணொருத்தியின் ஆடைகள் பெரும்பாலும்
அதில் வெயில் குளித்தன
இரவுகள் முற்ற தொடங்கும்போது சுருட்டுக்கு கோடாதடவ வேண்டும் முணு
என்று மண்ணெண்ணெ புகையினை கக்கிக்கொண்டு விளக்கு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க
அருள் சுருட்டு புகையுடன் சேர்த்து பொய்புழுகுகளையும் அநாயாசமாக ஊதி
தள்ளிக்கொண்டிருக்ககைகள் பரபரவென்று சுருட்டு கட்டுகளை பி¡¢த்து
பி¡¢த்துகோடா சட்டிக்குள் தோய்த்துத்தோய்த்து
இருந்தாற் போல இரவின் நிசப்தத்தை தொலைத்து விட்டு ஒரு பாடல் வரும் ஹ¤ம் என்று
கூடவே சுருதி சேர்க்கிற ஆர்மோனியம் இழையும் மண்ணெண்ய்ப்புகை மயங்கி மயங்கி
சுழலும் சுவர்களும் செவிகளுக்கு பின்னே கைகளை குவிப்பதென தோன்றும்
புகையிலை சிப்பங்களும் சுருட்டு பெட்டிகளும் மரத்துப்போய் பெரும் கரு நிழல்களை
சுவா¢லே படியவிடும்
நெலா கண்ன பா
மகே அத்த திகெ நா
அனே தவ மல் பிப்பிங்
சீறும் நாக படத்தின் கவர்ச்சியென ஒரு குரல் அழகா கொலைசெய்யும் சொள
தலையை முத்தமிட்டு கழிந்து போகும் நீரென சுவர்களை தழுவி இதமாகத்துளைத்து
கொண்டு நாதம் பிரம்மமென பெருகும்
அழகிய மலர்கள் மலர்ந்து கொண்டேயுள்ளன
எனது கைகள் பறிக்கவென நீளும்போது
அவை கூழங் கைகளா போவதென்ன
அழகிய மலர்கள்
இன்னும் மலர்ந்துகொண்டே இருக்கின்றன
கல்லா மேசைமீது அரை தொடைகளில் சாய்ந்து உட்கார்ந்துகொண்டு நீலக்கல்லு மோதிரம்
சிமிட்ட சுநீதாமுதலாளி தொடைகளில் தாளம் போடும்போது கேட்டேன்
ஆர் அந்த பெட்டை பக்கத்து காம்பராவிலை பாட்டு பாடிக்கொண்டு
அவளரு மாதி¡¢யானபெட்டை
தனியவோ இருக்கிறவள்
சாய்கனபேர் வந்து போவினமே
கனபேர் வந்துபோனார்கள்
கண்ணாடி போட்ட கொக்கென தொங்கலுடன் விசுக்கென நடந்துபோகும் ஒரு பெண்
டீச்சரம்மா என எனக்குள் கணக்கு போட்டேன்
கட்டை காற்சட்டை போட்ட ஒரு பையன் அம்மா மடியில் உட்கார்ந்து நிலாப்பார்த்து சோறு
தின்னுராசா என்று சொல்லவேண்டும் போல இருக்கும்
பிறகு
தடித்த கண்ணாடிக்கு பின்னால் ஆழப்புதைந்திருந்த விழிகளுக்குள் இருந்து பார்வை
குத்தும்படி தாடிவைத்த ஒருவன் காமா சோமாவென்று உடுத்துவான்
சாறனை தூக்கி கட்டியபடிதொடைகளில் பிலு என்று உரோமம்
தொ¢யும் ஒருவன் தலைமயிர் நீக்ரோமாதி¡¢ சுருண்டிருக்கும்
மைம்மலாக இருள் மெதுவாக சூழும்போது வருவார்கள் இராப்பொழுதுகள் அவளுக்கு
குறுகி போயின சமையல் அன்றை போதுகளில் மணக்கும் தீய்ந்துபோகிற மீனின் வாசனை
வரும்
மெதுவான உறுதியான குரலில் ஒரு பிரசங்கமென ஒருவன் பேசிக்கொண்டே போவான்
சனங்கள் பெரும் மர்மத்தை காண்பதை போல பார்த்தார்கள்
பெருங்கோட்டையன்றை பிடிக்கும் திட்டமொன்றுக்காக அவர்கள் உத்வேகத்துடன் இருக்கிற
மாதி¡¢ தென்பட்டனர்
கோட்டைகள் பிடிபட்டன
றேடியோக்கள் கறுப்புக்குரலில் தொடங்கின ஊர்களை அடங்கிப்போகுமாறு
உத்தரவுகளை பிறப்பித்தன சந்தைகளை வைத்து போயிற்று ஆறு தனியே ஏக்கத்துடன்
போனது கடைகள் கதவிடுக்குகளால் பீதியுடன் ரகசியம் பார்த்தனபோல தோற்றம்காட்டின
றோட்டில் குறுக்கும் நெடுக்குமாக பச்சை நிறத்தில் ட்ரக்குகளும் ஜீப்புகளும் தென்பட்டன
பின் கதவை திறந்து போட்டபடி ஸ்ரோருக்குள்ளேயே கிடந்தோம் கால் வைத்தால் தொடைகளில்
கூச்சம் காட்டும் படி உயரே வளர்ந்த புல் கதவுக்கு வெளியே தொ¢ந்தது வளைந்தபடி
சூ¡¢யனை நோக்கி கையசைத்தபடி ஆற்றாமையுடன் தலைவி¡¢த்து காற்றை சாடும்
தென்னைகள் அரற்றின
புல்லுக்குள் கால்வைக்க அடிவயிற்றுக்குள் பிசைகிற பீதி தொடையளவு அகன்ற கா¢ய
பெரும் நாகங்கள் படர்ந்திருப்பன போல கபரக்கொய்யாக்கள் எந்நேரம் எங்கே தலைகாட்டும்
என்று உணராது தவிப்பதை போல
இராப்பொழுதுகள் நிசப்தமாய் நீண்டுகொண்டே போயின பக்கத்து அறை பெரும்பாலும் மூடியே
கிடந்தது பின் சாய்ப்புக்குள் மட்டும் கால்கள் கோலமிழைத்து தொ¢ந்தன
ஒரு முழுநிலவு நெருங்கி வந்தது கடைக்குள் போய் சில சாடின் ¡¢ன்களை
தூக்கிக்கொண்டு வந்திடும் அவசரம் எனக்கு தொற்றியது
பக்கத்து அறையின் முன்கதவு ஒருபாதி திறந்துகிடந்தது சுவா¢லே இறுக்கிய சிறு
மர பீடத்தில் புத்தன் உலகை மறந்த மோனத்தில் மூழ்கி போ கிடந்தான் ஒற்றை தீபம்
ஒன்று அரையிருளில் சோபை இழந்து துடித்து கொண்டிருந்தது
மண்டியிட்டு ஒருக்களித்தவாறு ஒரு கையை தரையில் ஊன்றிய படி அவள் முகத்தில்
ஒருகோடி சூ¡¢யர்கள் உதயமாகி கொண்டிருந்தார்கள்
ஒரு கட்டில் வெள்ளை வி¡¢ப்பு மேசை குவிந்து கிடந்த புத்தகங்கள்
ஒன்றை மூடி கவிழ்ந்தபடி ஒரு தடித்த கிளாஸ் சுவரோடு ஒட்டி பதிக்க அலுமா¡¢
ஒன்று
மற்றபடி எங்கும் தூய்மை
மெதுவாக தயங்கி தயங்கி உதயமாகும் நிலவை எதிர்பார்த்து காத்திருந்தாள் போல
நண்பர்களை எண்ணி துக்கித்திருந்தாள் போல
இரவு பிசாசுபோல துரத்திக்கொண்டு வந்தது நிலவு தனித்துப்போய் இராப்பாராக்காரனாக
ஒளியிழந்து ஊர்ந்து போய்க்கொண்டிருந்தது
குழம்பி குழம்பி உழன்றபடி சொப்பனாவஸ்தை கொடுக்கின்ற நித்திரை கபரக்கொய்யாக்கள்
வாலை சுழற்றி காற்றில் விசுக்குகிற சத்தங்கள் கேட்டன
சிறு தொலைவில் ஏதோ உறுமியது பதில் சொல்வதுபோல இன்னுமொன்று உறுமி
நெருங்கி வருவனபோல்
வெளியே சப்பாத்து கால்களில் சந்தடிகள் திமுதிமு என்று கேட்டன கதவை உதைத்து
திறந்தார்கள்
அரைத்தூக்கத்தில் உழன்று புரள்கின்ற போது எ¡¢ச்சல் மி கொள்ளும்படி கதவில் படீர்
என வாலை தூக்கி சுழற்றி ஒரு சாத்து சாத்தும் கபரக்கொய்யாக்கள் போல
மொடமொட வென்று எல்லாவற்றையும் கொட்டி கவிழ்த்தனரென கட்டிலை கொரகொரென
இழுத்து தள்ளுவதெனஏதோ ஒரு இனிய வஸ்து நிலத்தில் படீரென வீசப்பட்டு சிதறுண்டு
போனது போல
காட்டு கூச்சல்களாக கேள்விகள் உறுக்கின
தலைக்குமேலே சளசளவென்று தண்ணீர்விழ திளைத்து களிக்கினபோது கள்ளத்தனமாக
அசிங்கத்தை வீசிக்கொண்டு கிட்டவே கபரக்கொய்யாக்கள் வருவதென
ஏதோ ஒன்று
எந்நேரமும் சதா துள்ளலுடன் கூ¡¢ய கொம்புகளால் பூமியை உழுது கொண்டு பீ¡¢டும்
வீ¡¢யத்தை ஒடுக்க இயலாது தவித்தபடி பிணையல்களை அறுத்துவிட உன்னிடும் ஒரு
காளைபிணையல்களை அறுத்துவிட
பூமியில் விழுத்தி புரட்டினார்களெனமூஞ்சியில் ஒருவன் பாரமா குந்தியிருக்க
கால்களை அகலவே பி¡¢த்து அமுக்க தொடைகளின் நடுவேதொடைகளின் நடுவே
வலிய கம்புகளால் விதைப்பைகளை நசித்து காயடிப்பதேயென பொறுக்க முடியாத
வலியுடன் பீதியும் சேர்ந்து இயலாமையுடன் அவலமும் சேர அடிவயிற்றிலிருந்து நாதியற்ற
அப குரல் எழுந்தது சுவர்கள் அதிர்ந்தன
கால்களை படபடவென்று தரையில் போட்டு அடித்தான் போலும் குரல் தேய்ந்து
போகஇறுதிக்கணங்களில் சில முனகல்களே மிஞ்ச அதுவும் போய்
பிறகு
வேகமாக மூச்சு வாங்கும் சப்தம் மட்டும்
நிலவு மிகவும் பயந்து போய் முகம் வெளிறி மேற்கே ஓடி சென்றது சூ¡¢யன் சீறி
சினந்தபடி சிவப்பு பந்தென எழுந்துவந்தான்
முரட்டு பூட்ஸ¤கள் தாம் தூமென பூமியில் தடமுழுது சென்றன கூந்தலை பற்றி வலிந்து
இழுத்தபடி சென்றனர்
புயலில் உருக்குலைந்த ஒரு கொடி போனது தொடைகளில் நடுவிலிருந்து குருதி
பெய்தபடி
சனங்கள் கந்தையை மறந்துபோய் இதை பார்த்தபடி நின்றனர் கையினால் ஒரு சொடக்கு
போடும் நேரத்தில் ஒன்றுபத்துநூறுகோடியென கபரக்கொய்யாக்கள் பெருகின
காலம் நேரமற்று முழுநாளும் புணர்ந்தவாறு தண்ணீருக்குள் நெடுநேரம் புரள்கின்ற
தனைமறந்து அருவிப்பெயலில் தலைமுழுகி சிலாகிக்கும்போது நீட்டிய மூஞ்சியில்
மூக்கு துவாரங்கள் பெரும் பொந்துகளென தொ¢ய
பற்றைகளுக்குள் சரசரவென அரக்கிக்கோண்டு ஏதோஒரு இரையை குறிவைத்து கவ்வவென வாயை
ஆவென பிளந்தபடி கள்ளத்தனமாக
எங்கணும் கபரக்கொய்யாக்கள் பெருகின குட்டியும் முற்றலுமாக
சனங்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள்
வாலை சுழற்றி ஒரு வலிந்த சொடுக்கலில் சதையை பிய்த்தெடுத்து காகங்களை
கபரக்கொய்யாக்கள் விருந்துக்கழைத்தன
சனங்கள்
காமினி அப்புஹாமி ஆ¡¢யவதி ஆமினே
சுநீதா முதலாளிஅருள் சாளி
சனங்கள்
ஒருசாண் வயிற்றுக்கு ஆலா பறக்கிற சனங்கள்
சனங்கள் சும்மா பார்த்துக்கொண்டே இருந்தார்கள்
கபரக்கொய்யா
இது முதலைக்கு தம்பி உடும்புக்கு அண்ணன் முதலையை போல அவ்வளவாக தீங்கற்றது
ஆனால் உடும்பை போல சாதுவும் அல்ல நீ¡¢லும் நிலத்திலும் உயிர் வாழும்
மலைப்பாங்கான ஆற்றோர காடுகளில் மிகவும் பெருவா¡¢யா காணப்படும் அசிங்கங்களை
உண்டு உயிர்வாழும் சிங்கள பகுதிகளில் இதை அதிகமா காணலாம்

காலம் உனக்கொரு பாட்டெழுதும்
வெகுநாட்களுக்கு பிறகு இன்று குளியல் இன்றை போத்தின் உதயகாலமே புதிய
தோற்றத்துடன் எழுந்தது மிகவும் வித்தியாசமாக ஒரு சித்திரை மாதத்தின் கதகதப்பான
விடியலாக இன்றி சற்றே குளிரூட்டியபடி ஒவ்வொரு மயிர்க்காலிலும் நுழைந்து கிச்சு
கிச்சு மூட்டுகிற குளிர்
இளவெயிலில் பசைபரவிய பெருமிலைகளை வி¡¢த்து காட்டியபடி எங்கு பார்த்தாலும்
புகையிலை தோட்டங்கள் தொ¢ந்தன கனவேகமாக நீரை உமிழ்ந்து கொண்டிருந்தன வாட்டர்
பம்ப்புகள் புகையிலையின் இனிய மயக்கந்தரும் நெடியுடன் சேர்ந்து மண்ணென்ணெய்
எ¡¢ந்துபோகிற புகை கதம்பமாய் மணத்தது
அருளுக்குத்தான் முதலில் ஐடியா வந்தது சட்டென எழுந்துபோய் சேட்டை கூட கழற்றாமல்
தலைவழி நீர் சொ¡¢யுமாறு குத்துக்காலிட்டு உட்கார்ந்து விட்டான் எல்லாரும்
கோணாமலையை திரும்பி கேள்வியோடு பார்த்தார்கள் கோணாமலைக்கு ஏன் எந்தநேரமும்
சிவந்தே போயிருக்கின்றன கண்கள் இறுக மூடிய மெல்லிய உதடுகளுக்குள் எப்போதும்
கோபமும் ரோஷமும் ஒளிந்திருப்பதாக தோன்றும் முகம் கருங்கல்லு மாதிரி
விசித்திரமானதொரு பளபளப்புடன் கடினமாகவிருக்கும்
கோணாமலை இன்று காலை சிவந்த கண்களால் சி¡¢த்தான் பொளபொள வென பாய்கின்ற
நீர்த்தாரையில் ஒருசிறு குழந்தை மாதி¡¢ தலையை உதைத்து கொண்டிருந்த அருளை ஒரு
தந்தையின் கனிவுடன் பார்த்தான்
ஓராள் கடைசியிலை குளிக்கலாம்
அப்பா இது என்ன குரல் பேசாதவாய் பேசுகின்ற போது ஒவ்வொரு சொல்லிலும் மிகுந்த
அழுத்தம் தொ¢கின்றது
மைக்கேல் உட்கார்ந்தான்
கோணாமலை கேதா¡¢ பொ¢யண்ணன் பெருமாள் யோசே அன்பரசன் பிறகு இவன்
எல்லோரும் உறுமிக்கொண்டிருந்த வாட்டர்பம்பை நோக்கி போனார்கள்
மைக்கேல் செய்திகளை சேகா¢க்க உட்கார்ந்திருந்தான்
சனங்கள் இவர்களை ஒருதரம் நிமிர்ந்து பார்த்தார்கள் பிறகு தலையை குலுக்கி கொண்டு
தம்பாட்டில் வேலையில் ஆழ்ந்தார்கள் பத்தோ பன்னிரண்டோ வயதிருக்கும் ஒரு சிறுபையன்
கையில் சோப்புப்பெட்டி குலுங்க இவர்களை நெருங்கி ஓடிவந்தான் நீட்டியபடியே நின்றான்
இவர்கள் சட்டை செய்யாதவர்களென உடம்பை தேய்த்துக்கொண்டிருந்தார்கள்
கோணாமலை நிமிர்ந்து பார்த்தான் பையனின் விழிகள் வாங்கிக்கொள்வாங்கிக்கொள் என
கெஞ்சும் பாவனை காட்டின
அருள் சோப்பை வாங்கு
அருள் தலை தோள் தொப்புள் தொடை பாதம் எங்கும் சோப்புநுரை பொங்கி வழிய இளிக்க
வாரம்பித்தான் அருள் கொஞ்சம் குஷாலான பேர்வழி இவனுக்கு அந்தரங்கம் எல்லாம்
சொல்லுவான் ஒருமுறை இவனும் அருளும் சைக்கிளில் டபிள் அடித்து கொண்டு அவசர
அலுவலாக போனார்கள் சீமைக்கிழுவை மரங்கள் பூத்திருந்த ஒரு உயரவேலிக்கு பின்னே
கம்பீரமாக உயர்ந்து தொ¢ந்த ஒரு வீட்டுக்கு முன்னால் போகையில் அருள் இவன் விலாவில்
இடித்தான்
என்ரை ஆளின்ரை வீடு எனக்காதினுள் கிசுகிசுத்தான்

எப்பிடி வீடு
வீடுநல்லாத்தான் இருக்கு
ஆளை நீ பார்க்கயில்லைபாத்தாலெல்லோ தெரியும்

ஹ¤ம்எல்லாம் நல்லபடியா முடிஞ்சுநானும் உயிரோட இருந்தா
இருந்தா
ஹ¤ம்
இவன் திரும்பி அருளின் முகத்தை ஏறிட்டு பார்த்தான் லோக செளந்தர்யங்கள் யாவும்
அருளின் இறுகிய முகத்தில் ஒரு வினாடி பூத்திரு கண்டான் இவனும் அருளுக்காக
ஒரு பெருமூச்சை உதிர்த்தான்
ஒரு கணம் தான்
பிறகு அருள் மாறிவிட்டான் கண்களில் பழைய இறுக்கம் பரவியது கால்கள் கனவேகமா
சைக்கிளை உழக்க வாரம்பித்தன ஒரு உண்மையான ஊழியன்
வெகு காலத்திற்குப்பிறகு இன்று அருமையான சாப்பாடு எந்த மகராசி கைகளோ
மணக்கிற சமையல் அருள் கைகளை வழித்து வழித்து சூப்பியபடி இவனை பார்த்து
கண்களை சிமிட்டி இளித்தான்
ஒவ்வொரு பெண் கைச்சமையலுக்கும் ருசி இருக்கிறது என்றாலும்
எளிமையான சமையலின் ருசி வேறெவருக்கும் வாய்க்காது அம்மா கையால் வெந்நீர் தந்தாலே
அதற்கு தனி ருசி இருக்கும் மெல்ல இருள் சூழும் போதுகளில் அம்மா கோவிலால்
அவளுக்கு வலுக்கட்டாயமாக வெள்ளைச்சேலை உடுத்தி வன்மத்துடன் வேடிக்கை பார்த்தன அம்மா
தலை முழுகி ஈரக்கூந்தலை நுனியில் முடிந்து போட்டபடி ஒவ்வொரு நாள் மாலையிலும்
கூந்தலிலிருந்து நீர் சொட்டி சொட்டி வெள்ளைச்சேலையின் பின்புறம் நனைந்தபடி
தோற்றம்காட்ட அம்மன் கோயில்களை தேடிப்போக ஆரம்பித்தாள் திரும்பவரும்போது அம்மா
மேனியில் கற்பூர வாசனை வீசும் அம்மா போ¢ல் அம்மன் குடியேறி வருவாள் போல பார்க்க
பயமாகவும் அழகாகவும் இருக்கும்
அம்மா மச்சம் மாமிசம் சேர்ப்பது கிடையாது இருட்டிய பிறகு தனியாக செங்கல்
அடுப்பைமூட்டி தனி சமையல் ஒரு நேரம் மட்டுமே கொஞ்சம் போல சாப்பிடுகிற
அம்மாவால் எவ்வாறு இப்படி பம்பரமாக சுழன்று கா¡¢யம் பார்க்கமுடிகிறது மிகவும்
குழைந்து போ கஞ்சி பசையுடன் சோறும் ஏதோ ஒரு காயை வதக்கி வறட்டலாக
குழம்பும் கடித்துக்கொள்ள அப்பளம் உண்டு கட்டாயமாக
நொடிக்குள் சமைப்பாள் அம்மா இவன் நாவில் நீர் சொட்டச்சொட்ட காத்திருப்பான்
தோளளவு உயரமிருப்பாள் வெள்ளா¢ப்பழத்தை பிளந்து வைத்திருக்கிற மாதி¡¢ ஒரு
நிறமும் குளுமையும் அம்மாவுக்கு அம்மா அந்தக்காலத்தில் பேரழகியாக இருந்திருக்க
வேண்டும் அதுதான் நிறை குழந்தைகள் பெற்றாளோ தோல்வற்றி நடை மெல்ல தளர்கிற இந்த
வயதிலும் அம்மா கண்கள் ஜோதியென ஜொலிக்கின்றன
இவன் நிமிர்ந்து வீம்பாக நிற்பான் கண்களால் அம்மாவ பார்த்து கனி சி¡¢த்தபடி
அம்மா அண்ணாந்து இவன் நெற்றியில் திருநீறு பூசிவிடுவாள்
அம்மாளே ஆத்மார்த்தமாக வேண்டுகிற அம்மா குரலில் இவன் கரைந்து போய் விடுவான்
கற்பூரம் எ¡¢ந்த மீதியின் வாசனையும் சூடுமாக ஈரலிப்பாக அம்மா நெற்றியை தீண்டுகிற
போது வாசனை நாசியை நிரப்ப இவன் சிலிர்ப்பான் அம்மா மூச்சு ஒருகணம்
பட்டுவிலகும் இவனுக்கு உடனே பசியெடுத்துவிடும்
சுலோசனா அக்கா அவசர சமையல் இவளுக்கு எதிலும் அவசரம் என்னத்தை கண்டாளோ இந்த
அத்தானிடம் மகுடி கேட்ட நாகம்போல மயங்கி கிடக்கிறாள் அக்கா நிறையக்கறிகள்
வைத்திருப்பாள் நிறை குழந்தைகளை பெற்றது போலவே ஒன்றுக்கு உப்புக்கூடினால்
இன்னொன்றில் உப்பே இருக்காது மீன்குழம்பு மட்டும் அசலாக வைத்திருப்பாள்
எல்லாவற்றையும் சேர்த்து கலந்துவிட ஒரு அபூர்வ ருசி பிறக்கத்தான் செய்கிறது
சுலோ அக்கா வீட்டுக்கு இவன் கடைசியாக போனநாளே மறந்துவிட்டது அத்தான்
முணுமுணுத்தபடி சட்டென்று முகத்தை திருப்பிக்கொண்டு போனான் இந்த அத்தான் ஒரு
சா¢யான சேற்று எருமை காட்ஸ் அடிக்கிறதையும் கடமைக்காக ஏதோ வேலைக்கு
போவதையும் மீதி நேரமெல்லாம் ஒரே குடியையும் தவிர இவன் எதை சாதித்தான் சுலோ
அக்காவை வருஷம் தவறாமல் அம்மாவாக்குகிறதில் மட்டும் படுசமர்த்தன் சுலோ அக்கா இதழ்கள்
வெடித்து மார்பு வற்ற வதங்கிய கத்தா¢க்காய் போல ஆகிவிட்டாள் அத்தான் மீண்டும் ஏதோ
வாய்க்குள் கசமுச என்றான் போனால் போகட்டுமே இவன் அக்காவை பார்க்க தானே வந்தான்
இருக்கிறதுகளுக்கும் வீண் கரைச்சல்
அத்தான் வெளிப்படையாகவே கொக்கா¢க்க ஆரம்பித்தான் அக்கா நாக்கை கடித்தபடி இவனை
குசினிக்குள் இழுத்து போனாள் இவன் கைகளை விடாமல் இறுக பிடித்து கொண்டேயிருந்தாள்
சாப்பிடுகிறியடா தளதளக்க கேட்டாள் இவன் நிமிர்ந்து பார்க்க சக்தியற்று
போனதால் மெளனமாக உட்கார்ந்தான் அக்கா மளமளவென்று சாப்பாடு போட்டாள் பிசைந்து
பிசைந்து இவன் கைகளில் கொடுக்க ஆரம்பித்தாள்
அக்கா மூக்கை உறிஞ்சுவது கேட்டது
அம்மா கோயிலுக்கு போவதை விட்டுட்டா

அம்மா கோயிலுக்கு போறதையும் விட்டுட்டா

அம்மா கோயிலுக்கு அக்கா குரல் உணர்ச்சிவேகத்தில் உடைந்து கீச்சிட ஆரம்பித்தது
இவன் கையை உதறிவிட்டு வேகமாக வெளியே போக ஆரம்பித்தான்
கையை கழுவவிட்டு போடா அக்கா கடைசியில் அழுகை வெடிக்கிற குரலில்
அழைத்தாள் இவன் திரும்பிப்பார்க்க விருப்பமில்லாமல் உள்ளங்கைகளை இறுக பொத்தியபடி
காற்றை குத்தியபடியே போனான்
அக்கா குமுறி குமுறி அழைத்தபடி இவன்பின்னே வரும் அரவம் கேட்டது காதை பொத்தி
கொள்ள வேண்டும் போலிருந்தது
இனிமேல் ஒரு வீட்டுக்கும் போக மாட்டேன் இவன் காற்றுக்கு சபதம் செய்து கொடுத்தான்
ஒருதரம் நான்கு மெயின் ரோட்டுகளுக்கும் உள்ள பொ¢ய பாலங்களை உடைத்துவிட்டு
போய்விட்டார்கள்
கோணாமலை ஆட்களை பி¡¢த்து பி¡¢த்து விட்டான் இவனுக்கு வடக்கு ரோட்டு
டிராக்டர்களில் மண்ணையும் கல்லையும் கொண்டுவந்து குழிகளை சனங்கள் பீதியால்
பரபரத்தபடி நிரப்பினார்கள்
இவன் காவல் ரெடியாக நின்றான் சுறுசுறுப்பும் பொறுப்பும் மிக்கவனாக
சுற்றுமுற்றும் பார்த்தபடி வான்களும் பஸ்களும் பாரத்தை குறைத்து பள்ளத்தில்
மெதுவாக இறங்கி இறங்கி போயின
யாரோ இவன் முழங்கையில் இதமாக பற்றினார்கள்
திரும்பிப்பார்த்தான்
சுந்தா¢யக்கா
விந்தி நடக்கிற சுந்தா¢யக்கா உதயகாலத்தில் பஸ்பிடித்து வேலைக்கு
மாலை மயங்கி இருள்சூளும் நேரங்களில் வீட்டுக்கு போய்ச்சேர்கிற சுந்தா¢யக்கா அம்மா
பதைபதைப்புடன் வாசலை பார்த்தபடியே நிற்பாளோ இந்த விந்தல் கால் மட்டும்
இல்லாவிட்டால் இந்திரன் சந்திரன் எல்லாரும் கந்தா¢யக்கா பின்னால் வா¢சையாக காத்து
நிற்க மாட்டார்களோ உதயகாலத்தில் பஸ்பிடித்து வேலைக்குப்போய் இருட்டியபிறகு
வீட்டுக்கு போய்ச்சேர உறுதியுடன் பழக்கப்படுத்தி கொண்டாள் சுந்தா¢யக்கா
சுந்தா¢யக்கா இவனையே பார்த்தபடி நிற்க இவன் பராக்கு பார்ப்பவன் போல வேறெங்கோ
பார்த்தான் பஸ் மெல்ல பள்ளத்தில் இறங்கி கொண்டிருந்தது சுந்தா¢யக்கா மேலும் இவனை
நெருங்கி நின்றாள் கைப்பையை திறந்து சில நோட்டுகளை இவன் பொக்கெற்றுக்குள்
திணித்தாள் இவன் திரும்ப அவள் கைகளுக்குள் திணிக்க ஆற்றாமையுடன் இவனையே பார்த்தாள்
வச்சிரன்ரா
வேண்டாம்எனக்கொண்டும் வேண்டாம்
சுந்தா¢யக்கா இவனை மேலும் கீழுமாக பார்த்தான் பறட்டை பற்றிப்போன
தலைமுடியிலிருந்து வெயிலும் மழையிலும் அலைந்து தி¡¢ந்த கால்வரை செம்புழுதி
படிந்திருந்தது சாறனை உயரத்தூக்கி தொடை தொ¢யுமளவுக்கு முடிச்சுப்போட்டு
இருந்தான் சே தோள்மூட்டில் பி¡¢ந்திருந்தது
ஒரு சேட்டாவது வாங்கலாமெல்லே

வச்சிரன்ரா
அக்காபார்பஸ் வெளிக்கிட போகுது
பொ¢ய கண்கள் சுந்தா¢யக்காவுக்கு இவனை உறுத்துப்பார்த்தாள் கண்களுக்குள் இவனை
சிறைப்பிடித்து கொண்டு போய்விடும் உத்வேகத்துடன் பார்த்தாள் கன்னங்களை நனைத்து
கொண்டு பாயுமாறு இரு வைரச்சொட்டுகள் உருக வழிவதென சிந்தினாள்
திரும்பி திரும்பி பார்த்தபடி சுந்தா¢யக்கா போனாள் கடைசி ஆளாக விந்தி விந்தி
போய் பஸ்ஸில் ஏறினாள் பின்புற கண்ணாடியூடாக இவனையே பார்த்து கொண்டு நின்றாள்
இவன் தற்செயலாக திரும்புபவனென அந்தப்பக்கம் பார்த்தான்
பின்புறக்கண்ணாடி முழுவதும் விசாலித்தபடி சுந்தா¢யக்காவின் பொ¢ய கண்களை கண்டான்
இவன் சட்டென்று மறுபுறம் திரும்பிக்கொண்டான்
சொந்த உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்க மாட்டேன்
காற்றிடம் சபதம் செய்தான்

இன்று எல்லாம் அசாதாரணமான புதியதோற்றம் காட்டின திளைத்து குளித்த மேனியை
குளிர்காற்று தழுவிக்கொண்டு போயிற்று இவன் வானத்தை நிமிர்ந்து நோக்கினான் பளி
செனும் நீலவானில் பஞ்சு பொதிகள் மிதப்பதன்ற அழகிய சித்திரைவானம் இன்றில்லை
மழைக்கோலம் காட்டிற்று காற்று இறுக்கமாக இருந்தது மெல்லமெல்ல கிழக்கு
மூலையிலிருந்து இருண்டமேகங்கள் பரவி கொண்டிருந்தன
மைக்கேல் சேதி சொன்னான்
தெற்கு றோட்டாலை சாமான் வருகுதாம்நாங்கள் இடையிலே மாத்தி கொண்டு
வரவேணுமாம்
கோணாமலை விருட்டென எழுந்தான் படபடவென சில உத்தரவுகளை போள்ளான்
தெற்கு றோட்டுத்தானேபயமில்லைகனசாமான் வேண்டாம்ஆளுக்கொண்டு போதும்
பெருமாள் வெகிக்கிளை எடுமழைவரும்போல கிடக்குசாமான் நனையாமல் கவனமாக
மாத்தவேணும்
யோசே இஞ்சேயே இருக்கட்டும்
பெருமாள் ஒரு அருமையான ட்ரைவர் ரோட்டுகளை ஒவ்வொரு அங்குல அங்குலமாக படித்து
வைத்திருந்தான் குண்டும் குழியுமாக இருக்கும் ரோட்டுகளிலே கியரை மாற்றாமலே
ஒடித்து வெட்டியபடி பறந்து செல்ல முடியும் பெருமாளால்
பெருமாளுக்கு பக்கத்தில் கோணாமலை தாவி ஏறினான் அவனுக்கு
இவன் கேதா¡¢அருள்அன்பரசன்மைக்கேல் பின்புறம் புகுந்து
கொண்டார்கள் இவன் கதவுக்கு பக்கத்தில் உட்கார்ந்திருந்தான் பெருமாளை தவிர
எல்லோருடைய உள்ளங்களிலும் பொத்தியபடி சாமான் இருந்தது ரெடியாக இருந்தார்கள்
செம்புழுதியை கிளப்பியவாறு பாய்ந்து செல்ல வாரம்பித்தான் பெருமாள் வானம்
ஒருமுறை பொ¢தாக உறுமிற்று
இன்னும் கொஞ்ச தூரத்தில் மெயின்ரோட்டில் ஏறிவிடலாம் சட்டென்று செங்கோணத்தில்
திரும்பவேண்டும் பெருமாள் கியரை மாற்றுவதற்க ஆயத்தமானான் சந்திக்கும் இடத்தில்
கிழட்டு ஆலமரத்தின் நிழலில் சனங்கள் கூடிநின்றார்கள் பெருமாள் வேகத்தை குறைத்து
கொண்டான்
கண்கள் பெரும் ஒளிவெள்ளத்தில் கூசின உச்சியிலிருந்து கீழ்வானம் நோக்கி படர்கிற ஒரு
கொடியாக மின்னல் பளபளத்த படி இறங்கிற்று வானம் மீண்டும் ஒருதரம் வஞ்சனையுடன்
கனைத்தது பெருமாள் தடுமாறினான் ஒரு கணம் நிதானித்தான்
படபடவென ஏதோ முறிந்து விழுகின்ற பொ¢யகிளையன்று ஓவென அலறியபடி பூமியை
அறைந்தது
சனங்கள் முகத்தில் பெருங்குழப்பம் பரவிற்று கோணாமலை முன்னேபோ என்றான் பெருமாள்
கிளச்சை ஊன்றி மிதித்தான்
கோழை வழிகின்ற ஒரு திரைத்த கிழவன் கைகளை ஆட்டிக்கொண்டே முன்னே வந்தான்
மக்காள்
கோணாமலை என்ன என்பவனென பார்த்தான்
ஆல் முறிஞ்சு விழக்கூடாது மக்காள்போறபயணம் ஆபத்து மக்காள்
அருள் கெக்கெலி கொட்டி சி¡¢க்கவாரம்பித்தான்
எங்களுக்கு ஒவ்வொரு நிமிசமும் ஆபத்து தானேணே அப்பு
கிழவன் பா¢தாபமும் பச்சாத்தாபமும் வழிய இவர்களை பார்த்தான்
பெருமாள் லாவமாக திரும்பியபடி மெயின் ரோட்டில் ஏறினான் மீண்டும் ஒரு மின்னல்
அடிவானம் நோக்கி இறங்கிற்று காற்று மிகவும் கனமாக இறுக்கிக்கொண்டே போனது என்ன
இது இன்று எல்லாம் அசாதாரணமாக மாறிவிட்டன தென்கிழக்கு மூலையிலிருந்து
சித்திரைமாதம் என்பதை மறந்துபோய் படுவேகத்தில் ஊதல்காற்று வீசிக்கொண்டிருந்தது
பெருமழை வரப்போகுது பெருமாள்கெதியாபெருமாள் பலங்கொண்டமட்டும் மிதித்தான்
சனங்கள் பரபரத்தவாறு வீடுகளுக்குள் புகுந்து கொண்டிருந்தார்கள் பருவ தப்பி
பெய்யும் மழையை ஆச்சா¢யமும் ஆவலுமாக வரவேற்கும் பாவம் அவர்கள் முகங்களில் தொ¢ந்தது
இவர்களின் வான் உறுமிக்கொண்டே செல்வதை வாசல்களில் நின்று கவனமாக பார்த்தார்கள்
கனத்த பெருந்துளிகளாக மழை இறங்க ஆரம்பித்தது கண்ணாடி மங்க தொடங்கிற்று கனவில்
தொ¢யும் தோற்றமென ரோட்டும் மரங்களும் விசித்திர தோற்றம் காட்டின பெருமாள்
வைப்பரை போட்டான்
வேலை செய்யவில்லை
பெருமாள் இலகுவில் சளைத்து விடுபவனல்ல கும்மிருட்டை ஊடுருவி பூனையை போல
பார்க்க இவர்கள் பழக்கப்படுத்தப்பட்டவர்கள் கூர்ந்து பார்த்து கொண்டே போனான்
என்ன மாதி¡¢ ஒரு மழை இவன் தனது வாழ்நாளில் காணாத புழுதி அடங்கி
வாசனை மிகுந்தது இவன் நாசி நிறைய வாசனையை வாங்கி அனுபவித்தான் காலைத்தூக்கி
முன்சீட்டில் இலகுவாக வைத்துக்கொண்டான்
சட்டென்று ரோட்டு வெறிச்சோடி போகிறது ஏனோ சனங்கள் எவரும் இல்லை மழைதான்
காரணமோ என்னவோ எதிரே ஒரு வாகனம் கூட வரவில்லை கொட்டும் மழையில் சளைக்காமல்
நனைந்தபடி ஆடி ஆடிப்போன ஒரு கிழட்டு எருதைத்தவிர வெறிச்சோடும் ரோட்டு
மூர்க்கத்தனமாக பூமியை மூழ்கடிக்கும் ஆவேசத்துடன் அம்புகளாக மழை
வீழ்ந்துகொண்டிருந்தது வானம் எச்சா¢க்கிறமாதி¡¢ அடிக்கடி பெருமிடிகளை
கொடுத்தது கூடவே உச்சியிலிருந்து கீழ்வான நோக்கி வானத்தை கூறுகளாக பி¡¢க்கும்
கூர்வாளென பாயும் மின்னல்
இவர்கள் எல்லோருக்கும் ஏனோ மயிர்க்கால்கள் குத்திட ஆரம்பித்தன இதைவிட குருதியை
உறையவைக்கும் குளிரை தாங்க இவர்கள் பழகிக்கொண்டவர்கள் ஆனால் இன்று என்னவாயிற்று
எலும்பு குருத்துக்குள் ஊடுருவி புகுந்து கொள்கிற குளிர்
அருள் கைகளை தேய்த்து சூடாக்கினான் நெஞ்சுக்கு குறுக்கே கைகளை கட்டி
கொண்டான் இவனை பார்த்து இயல்பான தோழமையுடன் சி¡¢த்தான் அருள் இன்று ஏனோ வழமையை
விட அதிகமாக இளிக்கிறான் முகத்தில் ஒரு விசித்திரமான ஒளி பிறந்தது அருளுக்கு
இவனுக்கு ஏனோ திடீரென அம்மா சுலோ அக்கா சுந்தா¢ எல்லோரும்
மழையுடன்சேர்ந்து அம்மா மேனியில் மணக்கிற கற்பூரவாசனை வீசிற்று மழையில் கற்பூரத்தை
கரைத்தவன் எவன்
சுந்தா¢யக்காவின் பொ¢யகண்கள் முன்னே தோன்றின இரு கனத்த வைரத்துளிகளை சிந்தின
சுந்தா¢யக்கா இதமாக இவன் கைகளை தொடுவது போலிருந்தது
மழையிலும் வேலைக்கு போயிருப்பாள்
சுலோ அக்காவின் கீச்சுக்குரல் பே காற்றில் கலந்து வந்தது இவனை ஆதங்கமும் பொறுக்க
முடியாமல் பீறிடுகிற அன்புமாக சுலோ அக்கா அழைத்துக்கொண்டு தொண்டைக்குழியை
பிளந்துகொண்டு ஒரு நாகமென வெளிவந்தது
இவன் கண்களை திறந்தான் பெருமாள் ஒரு வளைவில் வேகத்தை மாற்றாமலே லாவகமாக
திரும்பி கொண்டிருந்தான் சூரன்தான் ஒரு நூறுயார் தூரத்துக்கப்பால் பார்வை
புலப்படாதபடிக்கு கனத்த திரைகளாக மழை விழுந்துகொண்டிருக்க வைப்பர்
வேலைசெய்யாமலே படுவேகமாக வானை செலுத்தி போகிறான் வேறு எவனால் இப்படி
முடியும் அசகாயசூரன்தான்
ரோட்டு நேரே கோடுபோட்டதென செல்கின்றது பெருமாள் கிழித்துக்கொண்டு போனான்
ஏன்ஏன் என்ன
பெருமாள் சடக்கென்று பிறே போட்டான் எதிரே ஏதோ பிசாசுத்தனமாக நெருங்கி
கொண்டிருந்ததாக எல்லோரும் உணர வாரம்பித்தார்கள்
பெருமாள் கோணாமலையை திரும்பி பார்த்தான் கோணாமலை இறுகிய முகத்தவனாய்
முன்னேபோ என தலையை குலுக்கினான் எல்லோருக்கும் வேகமாக மூச்சு வாங்கவேண்டும்
போலிருந்தது உள்ளங்கையை இறுக பொத்தி கொண்டார்கள்
பெருமாள் நிதானமாக முன்னே போனான் தலையை வெளியே நீட்டி நீட்டி பார்த்துக்கொண்டே
போனான் எல்லா வீடுகளும் தெருவாசலை பூட்டியபடி மெளனமாய் மழையில் கொட்ட கொட்ட
நனைந்து கொண்டிருந்தன
எதிரே ஒரு சிறிய ரோ மெயின் ரோட்டில் கலக்கும் அந்த சந்தியில் ஏதோ கள்ளத்தனத்துடன்
வஞ்சகம் பு¡¢ய ஒளிந்திருப்பதாக பட்டது பெருமாள் கொட்டும் மழையில் வெளியே
தலையை போட்டான்
பொ¢ய வாகனம் ஒன்று தனது பூதாகரமான உடலை மறைக்க பெரும் பிரயத்தனம் செய்தவாறு
நின்றுகொண்டிருந்தது
பெருமாள் கொடுப்புகளை இறுக நெறுமினான்முகம் சட்டென கறுத்து வீங்கி போனது
கோணாமலைபு¡¢ந்து கொண்டான் கண்கள் இரத்தம் கொட்டுபவையென சிவந்தன இவர்கள்
எல்லோருக்கம் பு¡¢ந்துவிட்டது மண்டைக்குள் ஒரே விறு மிக
மூச்சுவந்தது உடல் தகிப்பதென சுட்டது
ரெடிரெடிரெடி என இதயம் துடித்தது உத்தரவுகளை பெற ஆயத்தமாக
இருந்தார்கள் ஒவ்வொரு அங்கமும் துடிக்கவாரம்பித்தது
கோணாமலை பரபரத்தான்
அம்பிட்ட கையழுங்கையுக்குள்ளை விடு உடைச்சுக்கொண்டு தப்பவேண்டியதுதான்
எங்கெங்கையெல்லாம் நிக்கிறாங்களோ வளைச்சுப்போட்டான்களோவும் தொ¢யாது சனியன்
பிடிச்ச மழை
பெருமாள் வேகமாக பின்னே போக ஆரம்பித்தான் இவன் பின்னால் பார்த்தான்
பின்புறமிருந்தும் வாகனம் ஒன்று பிசாசு மாதி¡¢ நெருங்கிக்கொண்டிருந்தது
பக்கத்திலே ஒழுங்கைமாதி¡¢ ஒரு ஓடை தொ¢ந்தது பெருமாள் பெரும் பிரயத்தனத்துடன்
உள்ளே நுழைய முற்பட்டான் ஆனால் அதற்குள் அவர்கள் முந்திக்கொண்டார்கள் நெருப்பை
உமிழ்ந்த படி இருபுறமிருந்தும் அச்சமும் அவதானமுமாக நெருங்க ஆரம்பித்தார்கள் மழை
அவர்களுக்க வாழ்த்து கூறிக்கொண்டிருந்தது வானம் இவர்களை பார்த்து இடிஇடியென
சி¡¢த்தது மின்னல் பழிப்பு காட்டுவதென அடிக்கடி பளபளத்து கண்சிமிட்டியது
ஒவ்வொரு நொடியும் மிக பெறுமதியானதென இவர்கள் உணர்ந்தார்கள் தோல்வி படுவேகமாக
இவர்களை நோக்கி வாயை பிளந்தபடி வந்தது தோற்று விடுவார்களோ இலகுவில்
என்னஅருள் மிக பரபரத்தான் தலையை அப்படியும் இப்படியும் குலுக்கினான்
உணர்ச்சி வேகத்தில் கிடுகிடுவென நடுங்கினான்ஏதாவது
செய்அவசரமாககெதியாக
வாயில் கிளிப்பை கடித்து இழுத்தான் ஐயோ இடது கைஇடதுகைவழமில்லை
இழுபட மாட்டேன் என்கிறது
இவனுக்கு துரதிர்ஷ்டவசமான தப்பு ஒன்று நிகழ்வது நன்றாகவே தொ¢ந்தது
தொடைகளிலும் கணுக்காலிலும் குதிரைபலம் சேர்ந்தது கால்விரல்களில் முழுபலத்தையும்
சேர்த்துக்கொண்டே உந்தி எழுந்தான் பேய்த்தனமாக ஊதிக்கொண்டிருந்த காற்றிலும் பெரு
அம்புகளாக துளைக்கும் மழையிலும் ஒருகணம் ஜிவ்வென பறந்து மழையில் நனைந்து
சொசொதவென அனங்கிக்கொண்டிருந்த சகதியில் விழுந்தான் அவசர அவசரமாக நாலைந்து
சுற்றுக்கள் புரண்டு தூரவிலகினான்
இவனுக்கு பு¡¢ந்துவிட்டதுஅவ்வளவுதான்இன்னும் ஒரு நொடிதான்அருள்
அடமுட்டாளேஅவசரப்பட்டுவிட்டாயே
தொடைகளில் இலேசாக அடிபட்டிருக்க வேண்டும் நொண்டிக்கொண்டே எழுந்தான் கால்போன
திக்கில் ஓட ஆரம்பித்தான் செம்மண் நிறத்திலே கணுக்கால்வரை உயர்ந்து கனவேகத்துடன்
வெள்ளம் ஒழுங்கைகள் வழியே பாய்ந்துகொண்டிருந்தது சளசள என்று இவன் கனத்த
காலடிகளை தாங்கமாட்டாமல் வழிவிட்டு கொடுத்தது
பெரும் இடிபோல முதல் தரம் வெடித்தது வான்ஒருதரம் பெரு குலுக்கிற்று தொடர்ந்து
ஒன்றுஇரண்டுமூன்றுநாலுஐந்துஆறு
அவர்கள் அஞ்சி நின்று விட்டார்கள் நிலையாக
இவன் ஒடிக்கொண்டே ஒருதரம் திரும்பிப்பார்த்தான் பெரும் புகைமண்டலமொன்று மழையை
விலக்கி செல்லும் கரும் பூதமென மேலெழுந்து கொண்டிருந்தது மூச்சு திணறும்
கந்தகநெடி எங்கும் சட்டென பரவிற்று
இவன் மூளை செயலற்று போய்விட்டது கண்கள் நேரே வெறித்தன கால்கள் மட்டும் தம்பாட்டில்
இவளை கனவேகமாக எங்கோ இழுத்துச்சென்றன
கோணாமலைபெருமாள்கேதா¡¢பொ¢யண்ணன்கைக்கேல்அன்பரசன்
அவ்வளவுதான்இனியென்னஅவ்வளவுதான்துண்டு துண்டாக போயிருப்பார்கள்
இனி
இவன் செய்யவேண்டியது என்ன எப்படியாவது தெற்கு ரோட்டுக்கு பத்திரமாக போய்ச்சேர
வேண்டும் சாமான் வரும் அவர்களை திசை திருப்பி விடவேண்டும்
வருகிறவர்களுக்கு செய்தி தொ¢ந்து திரும்பி போயிருப்பார்களோசெய்தி
சொல்லுவது யார் இந்த காற்றும் மழையுமா
இவன் தெற்கு ரோட்டுக்கு போய்ச்சேரவேண்டும் சனியனே மழையே நீ நிற்க மாட்டாயா
வானம் கடைசித்தடவையாக பெருமிடியன்றை கொடுத்து ஓய்ந்தது மழைவேகம் குறைய
ஆரம்பித்தது இவனுக்கு பன்னீர் தெளிப்பதென மெதுவாக தூற்றல்களை போட்டது
இவன் வெகுதூரம் ஓடிவந்து விட்டான் இனி பயமில்லை போல் இருந்தது
பெருநடையாக நடக்க ஆரம்பித்தான் இன்னும் மூன்று மைல்களாவது கடக்க வேண்டியிருந்தது
இவன் கடந்துவிடுவான்எப்படியாவது
மழை முற்றாக ஓய்ந்தது மயான அமைதி நிலவிற்று மரங்கள் மழையில் நடுங்கி அஞ்சிப்போய்
ஆடாமல் அசையாமல் கண்ணீர் சிந்தின வெள்ளம் மட்டும் இவனுடன் கூட வந்தது
ஒழுங்கைகள் வலை பின்னி கிடப்பதென