சிவபுராணம்
திருப்பெருந்துறையில் அருளியது
தற்சிறப்பு பாயிரம்
நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க
வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்கு சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க
ஈசன் அடிபோற்றி எந்தை
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மா பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே தாள்
சிந்தை மகிழ சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான்
கண் நுதலான் தன்கருணை கண்காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் மிக்காய் விளங்கு
எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன்
புல்லாகி பூடா புழுவாய் மரமாகி
பல் விருகமாகி பறவையா பாம்பாகி
கல்லாய் மனிதரா பேயா கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவரா தேவரா
செல்லாஅ நின்ற தாவர சங்கமத்துள்
எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே
வெய்யாய் தணியாய் இயமானனாம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெ சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே
ஆக்கம் அளவு இறுதி இல்லாய் அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னை புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே
கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போல
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய் விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை
மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்க புலன் ஐந்தும் வஞ்சனையை செய்ய
விலங்கு மனத்தால் விமலா உனக்கு
கலந்த அன்பாகி கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி
நாயிற் கடையா கிடந்த அடியேற்கு
தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே
பாசமாம் பற்று அறுத்து பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெட
பேராது நின்ற பெருங்கருணை போராறே
ஆரா அமுதே அளவிலா பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே
அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றா பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில்
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலா புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்ற சுடர் ஒளியா சொல்லாத நுண் உணர்வாய்
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்ற தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே என்று
போற்றி புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ள புலக்குரம்பை கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
அல்லல் பிறவி அறுப்பானே என்று
சொல்லற்கு அரியானை சொல்லி திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ
பல்லோரும் ஏத்த பணிந்து
திருச்சிற்றம்பலம்


கீர்த்தி திரு அகவல்
தில்லையில் அருளியது நிலைமண்டில ஆசிரியப்பா
தில்லை மூதூர் ஆடிய திருவடி
பல் உயிர் எல்லாம் பயின்றனன் ஆகி
எண்இல் பல்குணம் எழில்பெற விளங்கி
மண்ணும் விண்ணும் வானோர் உலகும்
துன்னிய கல்வி தோற்றியும் அழித்தும்
என்னுடை இருளை ஏறத்துரந்தும்
அடியார் உள்ளத்து அன்பு மீதூர
குடியா கொண்ட கொள்கையும் சிறப்பும்
மன்னும் மாமலை மகேந்திரம் அதனில்
சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும்
கல்லா டத்து கலந்து இனிது அருளி
நல்லா ளோடு நயப்புறவு எய்தியும்
பஞ்ச பள்ளியில் பால்மொழி தன்னொடும்
எஞ்சாது ஈண்டும் இன்அருள் விளைத்தும்
கிராத வேடமொடு கிஞ்சுக வாயவள்
விராவு கொங்கை நல்தடம் படிந்தும்
கேவேடர் ஆகி கெளிறது படுத்தும்
மாவேட்டு ஆகிய ஆகமம் வாங்கியும்
மற்றவை தம்மை மகேந்திரத்து இருந்து
உற்ற ஐம் முகங்களாள் பணித்து அருளியும்
நந்தம் பாடியில் நான் மறையோனாய்
அந்தமில் ஆரியனாய் அமர்ந்து அருளியும்
வேறு உருவும் வேறுவேறு
நூறு ஆயிரம் இயல்பினது
ஏறு உடை ஈசன் இப்புவனியை
கூறு உடை மங்கையும் தானும் வந்தருளி
குதிரையை கொண்டு குடநாடு அதன்மிகை
சதுர்பட சாத்தா தான் எழுந்தருளியும்
வேலம் புத்தூர் விட்டேறு அருளி
கோலம் பொலிவு காட்டிய கொள்கையும்
தர்ப்பணம் அதனில் சாந்தம் புத்தூர்
வில்பொரு வேடற்கு ஈந்த விளைவும்
மொக்கணி அருளிய முழுத்தழல் மேனி
சொக்கது காட்டிய தொன்மையும்
அரியொடு பிரமற்கு அளவு அறி ஒண்ணான்
நரியை குதிரை ஆக்கிய நன்மையும்
ஆண்டுகொண்டருள அழகுறு திருவடி
பாண்டியன் தனக்கு பரிமாவிற்று
ஈண்டு கனகம் இசை பெறா அது
ஆண்டான் எம்கோன் அருள்வழி இருப்ப
தூண்டு சோதி தோற்றிய தொன்மையும்
அந்தணன் ஆகி ஆண்டுகொண்டருளி
இந்திர ஞாலம் காட்டிய இயல்பும்
மதுரை பெருநல் மாநகர் இருந்து
குதிரை சேவகன் ஆகிய கொள்கையும்
ஆங்கது தன்னில் அடியவர்க்கு ஆக
பாங்காய் மண் சுமந்தருளிய பரிசும்
உத்தர கோச மங்கையுள் இருந்து
வித்தக வேடங் காட்டிய இயல்பும்
பூவணம் அதனில் பொலிந்து இருந்து அருளி
தூவண மேனி காட்டிய தொன்மையும்
வாத வூரினில் வந்து இனிது அருளி
பாத சிலம்பொலி காட்டிய பண்பும்
திரு ஆர் பொருந்துறை செல்வன் ஆகி
கரு ஆர் சோதியில் கரந்த கள்ளமும்
பூவலம் அதனில் பொலிந்து இனிது அருளி
பாவம் நாசம் ஆக்கிய பரிசும்
தண்ணீர பந்தல் சயம்பெற வைத்து
நல்நீர சேவகன் ஆகிய நன்மையும்
விருந்தினன் ஆகி வெண்காடு அதனில்
குருந்தின் கீழ் அன்றிருந்த கொள்கையும்
பட்ட மங்கையில் பாங்காய் இருந்து அங்கு
அட்ட மாசித்தி அருளிய அதுவும்
வேடுவன் ஆகி வேண்டு உரு கொண்டு
காடு அது தன்னில் கரந்த உள்ளமும்
மெ காட்டிட்டு வேண்டு உரு கொண்டு
தக்கான் ஒருவன் ஆகிய தன்மையும்
ஓரி ஊரில் உகந்து இனிது அருளி
பாரிரும் பாலகன் ஆகிய பரிசும்
பாண்டூர் தன்னில் ஈண்ட இருந்தும்
தேவூர தென்பால் திகழ்தரு தீவில்
கோவார் கோலம் கொண்ட கொள்கையும்
தேன் அமர் சோலை திரு ஆரூரில்
ஞானம் தன்னை நல்கிய நன்மையும்
இடைமருது அதனில் ஈண்ட இருந்து
படி பாதம் வைத்த அப்பரிசும்
ஏகம் பத்தில் இயல்பாய் இருந்து
பாகம் பெண்ணோடு ஆயின பரிசும்
திருவாஞ்சியத்தில் சீர்பெற இருந்து
மருவார் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும்
சேவகன் ஆகி திண்சிலை ஏந்தி
பாவகம் பலபல காட்டிய பரிசும்
கடம்பூர் தன்னில் இடம்பெற இருந்தும்
ஈங்கோய் மலையில் எழிலது காட்டியும்
ஐயாறு அதனில் சைவன் ஆகியும்
துருத்தி தன்னில் அருத்தியோடு இருந்தும்
திருப்பனை ஊரில் விருப்பன் ஆகியும்
கழுமலம் அதனில் காட்சி கொடுத்தும்
கழுக்குன்று அதனில் வழுக்காது இருந்தும்
புறம்பயம் அதனில் அறம்பல அருளியும்
குற்றாலத்து குறியாய் இருந்தும்
அந்தமில் பெருமை அழல் உரு கரந்து
சுந்தர வேடத்து ஒருமுதல் உருவுகொண்டு
இந்திர ஞாலம் போலவந்து அருளி
எவ்வெவர் தன்மையும் தன்வயிள் படுத்து
தானே ஆகிய தயாபரன் எம் இறை
சந்திர தீபத்து சாத்திரன் ஆகி
அந்திரத்து இழிந்து வந்து அழகு அமர் பாலையுள்
சுந்தர தன்மையொடு துதைந்து இருந்தருளியும்
மந்திர மாமலை மகேந்திர வெற்பன்
அந்தம் இல் பெருமை அருள் உடை அண்ணல்
எம் தமை ஆண்ட பரிசு அது பகரின்
ஆற்றல் அதுவுடை அழகமர் திரு உரு
நீற்று கோடி நிமிர்ந்து காட்டியும்
ஊனம் தன்னை ஒருங்குடன் அறுக்கும்
ஆன தம்மே ஆறா அருளியும்
மாதில் கூறுஉடை மாப்பெரும் கருணையன்
நாத பெரும்பறை நவின்று கறங்கவும்
அழுக்கு அடையாமல் ஆண்டுகொண்டு அருள்பவன்
கழு கடை தன்னை கைக்கொண்டு அருளியும்
மூலம் ஆகிய மும்மலம் அறுக்கும்
தூய மேனி சுடர்விடு சோதி
காதலன் ஆகி கழுநீர் மாலை
ஏறு உடைத்தாக எழில்பெற அணித்தும்
அரியொடு பிரமற்கு அளவு அறியாதவன்
பரிமாவின் மிசை பயின்ற வண்ணமும்
மீண்டு வாராவழி அருள் புரிபவன்
பாண்டி நாடே பழம்பதி ஆகவும்
பக்தி செய் அடியாரை பரம்பரத்து உய்ப்பவன்
உத்தர கோச மங்கை ஊர் ஆகவும்
ஆதி மூர்த்திகளுக்கு அருள்புரிந்து அருளிய
தேவ தேவன் திரு பெயர் ஆகவும்
இருள கடிந்து அருளிய இன்ப ஊர்தி
அருளிய பெருமை அருள்மலை யாகவும்
எப்பெரு தமையும் எவ்வெவர் திறமும்
அப்பரிசு அதனால் ஆண்டுகொண்டருளி
நாயினேனை நலம்மலி தில்லையுள்
கோலம் ஆர்தரு பொதுவினில் வருகஎன
ஏல என்னை ஈங்கு ஒழி தருளி
அன்று உடன் சென்ற அருள்பெறும் அடியவர்
ஒன்ற உடன் கலந்து
எய்த வந்திலாதார் எரியில் பாயவும்
மாலது வாகி மயக்கம் எய்தியும்
பூதலம் அதனில் புரண்டுவீழ்ந்து அலறியும்
கால்விசைத்து ஓடி கடல்புக மண்டி
நாத என்று அழுது
பாதம் எய்தினர்
பதஞ்சலி கருளிய பரமநாடக என்ற
இதம் சலிப்பெய்த நின்று ஏங்கினர் ஏங்கவும்
எழில்பெறும் இமயத்து இயல்புஉடை அம்பொன்
பொலிதரு புலியூர பொதுவினில் நடம் நவில்
கனிதரு செவ்வாய் உமையொடு காளிக்கு
அருளிய திருமுகத்து அழகு உறு சிறுநகை
இறைவன் ஈண்டிய அடியவ ரோடும்
பொலிதரு புலியூர் புக்கு இனிது அருளினன்
ஒலிதரு கைலை உயர்கிழ வோனே
திருச்சிற்றம்பலம்


திருவண்ட பகுதி
தில்லையில் அருளயது இணை குறள் ஆசிரியப்பா
அண்ட பகுதியின் உண்டை பிறக்கம்
அளப்பு அரும் தன்மை வள பெருங் காட்சி
ஒன்றனுக்கு ஒன்று நின்றெழில் பகரின்
நூற்று ஒரு கோடியின் மேல்பட விரிந்தன
இல்நுழை கதிரின் துன் அணு புரை
சிறிய ஆக பெரியோன் தெரியின்
வேதியன் தொகையொடு மாலவன் மிகுதியும்
தோற்றமும் சிறப்பும் ஈற்றொடு புணரிய
மாப்பேர் ஊழியும் நீக்கமும் நிலையும்
சூக்கமொடு தூலத்து சூறை மாருதத்து
எறியது வளியின்
கொட்க பெயர்க்கும் குழகன் முழுவதும்
படைப்போன் படைக்கும் பழையோன் படைத்தவை
காப்போன் காக்கும் கடவுள் காப்பவை
காப்போன் கரப்பவை கருதா
கருத்துடை கடவுள் திருத்தகும்
அறுவகை சமயத்து அறுவகை யோர்க்கும்
வீடுபேறாய் நின்ற விண்ணோர் பகுதி
கீடம் புரையும் கிழவோன் நாள் தொறும்
அருக்கனின் சோதி அமைத்தோன் திருத்தகு
மதியில் தண்மை வை தோன் திண்திறல்
தீயில் வெம்மை செய்தோன் பொய்தீர்
வானில் கலப்பு வைத்தோன் மேதகு
காலின் ஊக்கம் கண்டோ ன் நிழல் திகழ்
நீரில் இன்சுவை நிகழ்ந்தோன் வெளிப்பட
மண்ணில் திண்மை வைத்தோன் என்று
எனை பல கோடி
அனைத்து அவ்வயின் அடைத்தோன்
முன்னோன் காண்க முழுதோன்
தன்நேர் இல்லோன் தானே காண்க
ஏனம் தொல் எயிறு அணிந்தோன் காண்க
கானம் புலியுரி அரையோன் காண்க
நீற்றோன் காண்க நினைதொறும்
ஆற்றேன் காண்க அந்தோ கெடுவேன்
இன்னிசை வீணையில் இசைத்தோன் காண்க
அன்னது ஒன்று அவ் வயின் அறிந்தோன் காண்க
பரமன் காண்க பழையோன்
பிரமன்மால் காணா பெரியோன் காண்க
அற்புதன் காண்க அநேகன்
சொற்பதங் கடந்த தொல்லோன் காண்க
சித்தமும் செல்லா சேட்சியன் காண்க
பத்தி வலையில் படுவோன் காண்க
ஒருவன் என்றும்
விரிபொழில் முழுதாய் விரிந்தோன் காண்க
அணுத்தரும் தன்மையில் ஐயோன் காண்க
இணைப்பு அரும் பெருமையில் ஈசன் காண்க
அரிய அதில் அரியோன்
மருவி எப்பொருளும் வளர்ப்போன் காண்க
நூல் உணர்வு உணரா நுண்ணியன் காண்க
மேலோடு கீழாய் விரிந்தோன் காண்க
அந்தமும் ஆதியும் அகன்றோன் காண்க
பந்தமும் வீடும் படைப்போன் காண்க
நிற்பதுஞ் செல்வதும் ஆனோன் காண்க
கற்பதும் இறுதியும் கண்டோ ன் காண்க
யாவரும் பெற உறும் ஈசன் காண்க
தேவரும் அறியா சிவனே காண்க
பெண்ஆண் அலிஎனும் பெற்றியன் காண்க
கண்ணால் யானும் கண்டேன் காண்க
அருள்நனி சுரக்கும் அமுதே காண்க
கருணையின் பெருமை கண்டேன் காண்க
புவனியல் சேவடி தீண்டினன் காண்க
சிவன் என யானும் தேறினன் காண்க
அவன் எனை ஆட்கொண்டு அருளினன் காண்க
குவளை கண்ணி கூறன் காண்க
அவளு தானும் உடனே காண்க
பரமா னந்தம் பழம் கட லதுவே
கருமா முகிலில் தோன்றி
திருவார் பெருந்துறை வரையில் ஏறி
திருத்தகு மின்ஒளி திசைதிசை விரிய
ஐம்புலம் பந்தனை வாள்அரவு இரிய
வெம் துயர் கோடை மாத்தலை கரப்ப
நீடு எழில் தோன்றி வாள் ஒளி மிளிர
எம்தம் பிறவியில் கோபம் மிகுந்து
முரசு ஏறிந்து மாப்பெருங் கருணையில் முழங்கி
பூப்புரை அஞ்சலி காந்தள் காட்ட
எஞ்சா இன்னருள் நுண்துளி கொள்ள
செஞ்சுடர் வெள்ளம் திசைதிசை தெவிட்ட வரையுற
கேத குட்டம் கையற வோங்கி
இருமு சமயத்து ஒரு பே தேரினை
நீர்நசை தரவரும் நெடுங்கண் மான்கணம்
தவப்பெரு வாயிடை பருகி தளர்வொடும்
அவப்பெரு தாபம் நீங்காது அசைந்தன
ஆயிடை வான பேரியாற்று அகவயின்
பாய்ந்து எழுந்து இன்பம் பெருஞ்சுழி கொழித்து
சுழித்து எம்பந்தம் மா கரைபொருது அலைத்திடித்து
ஊழ் ஓங்கிய
இருவினை மாமரம் வேர் பறித்து எழுந்து
உருவ அருள்நீர் ஓட்டா அருவரை
சந்தின் வான்சிறை கட்டி மட்டவிழ்
வெறிமலர குளவாய் கோலி நிறையகில்
மாப்புகை கரைசேர் வண்டுடை குளத்தின்
மீக்கொள மேல்மேல் மகிழ்தலின் நோக்கி
அருச்சனை வயல் உள் அன்புவித்து இட்டு
தொண்ட உழவர் ஆர தந்த
அண்டத்து அரும்பெறல் மேகன் வாழ்க
கரும்பண கச்சை கடவுள் வாழ்க
அரும்தவர்ககு அருளும் ஆதி வாழ்க
அச்சம் தவிர்த்த சேவகன் வாழ்க
நிச்சலும் ஈர்த்தா கொள்வோன் வாழ்க
சூழ்இருள் துன்பம் துடைப்போன் வாழ்க
எய்தினர்க்கு ஆர்அமுது அளிப்போன் வாழ்க
கூர்இருள் கூத்தொடு குனிப்போன் வாழ்க
பேர்அமை தோளி காதலன் வாழ்க
ஏதிலார்ககு ஏதில்எம் இறைவன் வாழ்க
காதலர்க்கு எய்ப்பினில் வைப்பு வாழ்க
நச்சு அரவு ஆட்டிய நம்பன் போற்றி
பிச்சு எமை ஏற்றிய பெரியோன் போற்றி
நீற்றொடு தோற்ற வல்லோன் போற்றி நாற்றிசை
நடப்பன நடாஅ கிடப்பன கிடாஅய்
நிற்பன நிறீஇ
சொல்பதம் கடந்த தொல்லோன்
உள்ள துணர்ச்சியிற் கொள்ளவும் படாஅன்
கண்முதல் புலனாற் காட்சியும் இல்லோன்
விண்முதல் பூதம் வெளிப்பட வகுத்தோன்
பூவில் நாற்றம் போன்றுயர தெங்கும்
ஒழிவற நிறைந்து மேவிய பெருமை
இன்று எனக்கு எளிவந்து அருளி
அழிதரும் ஆக்கை ஒழியச்செய்த ஒண்பொருள்
இன்றென கெளிவந்து இருந்தனன் போற்றி
அளிதரும் ஆக்கை செய்தோன் போற்றி
ஊற்றிருந்த துள்ளங் களிப்போன் போற்றி
ஆற்றா இன்பம் அலர்ந்தலை போற்றி
போற்றா ஆக்கையை பொறுத்தல் புகலேன்
மரகத குவாஅல் மாமணி பிறக்கம்
மின்ஒளி கொண்ட பொன்னொளி திகழ
திசைமுகன் சென்று தேடினர்க்கு ஒளித்தும்
முறையுளி ஒற்றி முயன்றவர்க்கு ஒளித்தும்
ஒற்றுமை கொண்டு நோக்கும் உள்ளத்து
உற்றவர் வருந்த உறைப்பவர்க்கு ஒளித்தும்
மறைத்திறம் நோக்கி வருந்தினர்க்கு ஒளித்தும்
இத்த திரத்தில் காண்டும் என்று இருந்தோர்க்கு
அத்த திரத்தில் அவ்வயின் ஒளித்தும்
முனிவு அற நோக்கி நனிவர கௌவி
ஆணென தோன்றி அலியென பெயர்ந்து
வாள்நுதல் பெண்என ஒளித்தும் சேண்வயின்
ஐம்புலன் செலவிடுத்து அருவரை தொறும்போ
துற்றவை துறந்த வெற்று உயிர் ஆக்கை
அருந்தவர் காட்சியுள் திருந்த ஒளித்தும்
ஒன்று உண்டில்லை யென்றறி வொளித்தும்
பண்டே பயில்தொறும் இன்றே
ஒளிக்கும் சோரனை கண்டனம்
ஆர்மின் நாண்மலர
தாள்தனை இடுமின் சுற்றுமின் சூழ்மின்
தொடர்மின் விடேன்மின்
பற்றுமின் என்றவர் பற்றுமுற்று ஒளித்தும்
தன்நேர் இல்லோன் தானே ஆன தன்மை
என் நேர் அனையோர் கேட்கவந்து இயம்பி
அறைகூவி ஆட்கொண்டருளி
மறையோர் கோலம் காட்டி அருளலும்
உலையா அன்பு என்பு உருக ஓலமிட்டு
அலைகடல் திரையில் ஆர்த்து
தலை தடுமாறா வீழ்ந்துபுரண் டலறி
பித்தரின் மயங்கி மத்தரின் மதித்து
நாட்டவர் மருளவும் கேட்டவர் வியப்பவும்
கடைக்களிறு ஏற்றா தடம்பெரு மதத்தின்
ஆற்றேன் ஆக அவயவம் சுவைதரு
கோற்றேன் கொண்டு செய்தனன்
ஏற்றார் மூதூர் எழில்நகை எரியின்
வீழ்வித்து ஆங்கு அன்று அருட்பெரு தீயின்
அடியோம் அடிக்குடில்
ஒருத்தரும் வழாமை யொடுக்கினன்
தடக்கையின் நெல்லி கனியென காயினன்
சொல்லுவது அறியேன் வாழி முறையோ
தரியேன் நாயேன் தான் எனை செய்தது
தெரியேன் ஆஆ செத்தேன் அடியேற்கு
அருளியது அறியேன் பருகியும் ஆரேன்
விழுங்கியும் ஒல்ல கில்லேன்
செழுந்தண் பாற்கடல் திரைபுரை வித்து
உவர்க்கடல் நள்ளும்நீர் உள்அகம் ததும்ப
வாக்கு இறந்து அமுதம் மயிர்க்கால் தோறும்
தேக்கிட செய்தனன் கொடியேன் ஊன்தழை
குரம்பை தோறும் நாய் உடல் அகத்தே
குரம்பைகொண்டு இன்தேன் பாய்த்தி நிரம்பிய
அற்புதம் ஆன அமுத தாரைகள்
எற்பு துளைதொறும் ஏற்றினன் உருகுவது
உள்ளம் கொண்டோ ர் உருச்செய் தாங்கு எனக்கு
அள் ஊறு ஆக்கை அமைத்தனன் ஒள்ளிய
கன்னற் கனிதேர் களிறு என கடைமுறை
என்னையும் இருப்பது ஆக்கினன் என்னில்
கருணை வான்தேன் கலக்க
அருளொடு பரா அமுது ஆக்கினன்
பிரமன் மால் அறியா பெற்றி யோனே
திருச்சிற்றம்பலம்


போற்றி திருஅகவல்
தில்லையில் அருளியது நிலைமண்டில ஆசிரியப்பா
நான்முகன் முதலா வானவர் தொழுது எழ
ஈர் அடியாலே மூவுலகு அளந்து
நால் திசை முனிவரும் ஐம்புலன் மலர
போற்றி செய் கதிர்முடி திருநெடுமால் அன்று
அடிமுடி அறியும் ஆதரவு அதனில்
கடும் முரண் ஏனம் ஆகிமுன் கலந்து
ஏழ்தலம் உருவ இடந்து பின் எய்த்து
ஊழி முதல்வ சயசய என்று
வழுத்தியும் காணா மலர்அடி இணைகள்
வழுத்துதற்கு எளிதாய் வார் கடல் உலகினில்
யானை முதலா எறும்பு ஈறாய
ஊனம் இல் யோனியின் உள்வினை பிழைத்தும்
மானுட பிறப்பினுள் மாதா உதரத்து
ஈனம் இல் கிருமி செருவினில் பிழைத்தும்
ஒரு மதி தான்றியின் இருமையில் பிழைத்தும்
இருமதி விளைவின் ஒருமையில் பிழைத்தும்
மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்
ஈர் இரு திங்களில் பேர் இருள் பிழைத்தும்
அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்
ஆறு திங்களில் ஊறு அலர் பிழைத்தும
ஏழு திங்களில் தாழ் புவி பிழைத்தும்
எட்டு திங்களில் கட்டமும் பிழைத்தும்
ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்
தக்க தசமதி தாயொடு தான்படும்
துக்க சாகரம் துயர் இடைப்பிழைத்தும்
ஆண்டுகள் தோறும் அடைந்த அக்காலை
ஈண்டியும் இருத்தியும் எனைப்பல பிழைத்தும்
காலை மலமொடு கடும்பகல் பசி நிசி
வேலை நித்திரை யாத்திரை பிழைத்தும்
கரும்குழல் செவ்வாய் வெள்நகை கார்மயில்
ஒருங்கிய சாயல் நெருங்கி உள் மதர்த்து
கச்சு அற நிமிர்ந்து கதிர்ந்து முன் பணைத்து
எய்த்து இடைவருந்த எழுந்து புடைபரந்து
ஈர்க்கு இடைபோகா இளமுலை மாதர்தம்
கூர்த்த நயன கொள்ளையில் பிழைத்தும்
பித்த உலகர் பெரும் துறை பரப்பினுள்
மத்தம் களிறு எனும் அவாவிடை பிழைத்தும்
கல்வி என்னும் பல்கடல் பிழைத்தும்
செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும்
நல்குரவு என்னும் தொல்விடம் பிழைத்தும்
புல்வரம்பு ஆய பலதுறை பிழைத்தும்
தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகி
முனிவு இலாதது ஓர் பொருள் அது கருதலும்
ஆறு கோடி மாயா சக்திகள்
வேறு தம் மாயைகள்
ஆத்தம் ஆனார் அயலவர் கூடி
நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறினர்
சுற்றம் என்னும் தொல்பசு குழாங்கள்
பற்றி அழைத்து பதறினர் பெருகவும்
விரதமே பரம் ஆக வேதியரும்
சரதம் ஆகவே சாத்திரம் காட்டினர்
சமய வாதிகள் தம்தம் தங்களே
அமைவது ஆக அரற்றி மலைந்தனர்
மிண்டிய மாயா வாதம் என்னும்
சண்ட மாருதம் சுழிந்து அடித்து தாஅர்த்து
உலோகாய தமெனும் ஒள் திறப்பாம்பின்
கலா பேதத்த கடுவிடம் எய்தி
அதில் பெருமாயை எனைப்பல சூழவும்
தப்பாமே தாம் பிடித்தது சலியா
தழலது கண்ட மெழுகு அது போல
தொழுது உளம் உருகி அழுது உடல்கம்பித்து
ஆடியும் அலறியும் பாடியும் பரவியும்
கொடிறும் பேதையும் கொண்டது விடாதென
படியே ஆகி நல் இடைஅறா அன்பின்
பசுமரத்து ஆணி அறைந்தால் போல
கசிவது பெருகி கடல் என மறுகி
அகம் குழைந்து அனுகுலமாய் மெய் விதிர்த்து
சகம் பேய் என்று தம்மை சிரிப்ப
நாண் அது ஒழிந்து நாடவர் பழித்துரை
பூண் அது கோணுதல் இன்றி
சதுர் இழந்து அறிமால் கொண்டு சாரும்
கதியது பரமா அதிசயம்
கற்றா மனம் என கதறியும் பதறியும்
மற்று ஓர் தெய்வம் கனவிலும் நினையாது
அருபரத்து ஒருவன் அவனியில் வந்து
குருபரன் ஆகி அருளிய பெருமையை
சிறுமை என்று இகழாதே திருவடி இணையை
பிறிவினை அறியா நிழல் அது போல
முன் பின்னாகி முனியாது அத்திசை
என்பு நைந்து உருகி நெக்கு
அன்பு எனும் ஆறு கரை அது புரள
நன்புலன் ஒன்றி நாத என்று அரற்றி
உரை தடுமாறி உரோமம் சிலிர்ப்ப
கரமலர் மொட்டித்து இருதயம் மலர
கண்களி கூர நுண் துளி அரும்ப
சாயா அன்பினை நாள்தொரும் தழைப்பவர்
தாயே ஆகி வளர்த்தனை போற்றி
மெய் தரு வேதியன் ஆகி வினைகெட
கைதரவல்ல கடவுள் போற்றி
ஆடக மதுரை அரசே போற்றி
கூடல் இலங்கு குருமணி போற்றி
தென் தில்லை மன்றினுள் ஆடி போற்றி
இன்று எனக்கு ஆர் அமுது ஆனாய் போற்றி
மூவா நான்மறை முதல்வா போற்றி
சேவார் வெல்கொடி சிவனே போற்றி
மின் ஆர் உருவ விகிர்தா போற்றி
கல் நார் உரித்த கனியே போற்றி
காவாய் கன குன்றே போற்றி
என்தனக்கு அருளாய்
படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்றி
இடரை களையும் எந்தாய் போற்றி
ஈச போற்றி இறைவா
தேச பளிங்கின் திரளே போற்றி
அரைசே போற்றி அமுதே
விரை சேர் சரண விகிர்தா போற்றி
வேதி போற்றி விமலா
ஆதி போற்றி அறிவே
கதியே போற்றி கனியே
நதி நேர் நெஞ்சடை நம்பா போற்றி
உடையாய் போற்றி உணர்வே
கடையேன் அடிமை கண்டாய் போற்றி
ஐயா போற்றி அணுவே
சைவா போற்றி தலைவா
குறியே போற்றி குணமே
நெறியே போற்றி நினைவே
வானோர்க்கு அரிய மருந்தே போற்றி
ஏனோர்க்கு எளிய இறைவா போற்றி
மூவேழ் சுற்றமும் முரண் உறு நரகு இடை
ஆழாமே அருள் அரசே போற்றி
தோழா போற்றி துணைவா
வாழ்வே போற்றி என் வைப்பே
முத்தா போற்றி முதல்வா
அத்தா போற்றி அரனே
உரைஉணர்வு இறந்த ஒருவ போற்றி
விரிகடல் உலகின் விளைவே போற்றி
அருமையில் எளிய அழகே போற்றி
கருமுகி லாகிய கண்ணே போற்றி
மன்னிய திருவருள் மலையே போற்றி
என்னையும் ஒருவ னாக்கி இருங்கழல்
சென்னியில் வைத்த சேவக போற்றி
தொழுதகை துன்ப துடைப்பாய் போற்றி
அழிவிலா ஆனந்த வாரி போற்றி
அழிவதும் ஆவதும் கடந்தாய் போற்றி
முழுவதும் இறந்த முதல்வா போற்றி
மான்நேர் நோக்கி மணாளா போற்றி
வான்அகத்து அமரர் தாயே போற்றி
பார்இடை ஐந்தா பரந்தாய் போற்றி
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
தீயிடை மூன்றா திகழ்ந்தாய் போற்றி
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி
வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி
அளிபவர் உள்ளதது அமுதே போற்றி
கனவிலும் தேவர்க்கு அரியாய் போற்றி
நனவிலும் நாயேற்கு அருளினை போற்றி
இடைமருது உறையும் எந்தாய் போற்றி
சடைஇடை கங்கை தரித்தாய் போற்றி
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
சீர் ஆர் திருவையாறா போற்றி
அண்ணாமலை எம் அண்ணா போற்றி
கண் ஆர் அமுத கடலே போற்றி
ஏகம்பத்து உறை எந்தாய் போற்றி
பாகம் பெண் உரு ஆனாய் போற்றி
பரா துறை மேவிய பரனே போற்றி
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
மற்று ஓர் பற்று இங்கு அறியோன் போற்றி
குற்றாலத்து எம் கூத்தா போற்றி
கோகழி மேவிய கோவே போற்றி
ஈங்கோய் மலை எந்தாய் போற்றி
பாங்கு ஆர் பழனத்து அழகா போற்றி
கடம்பூர் மேவிய விடங்கா போற்றி
அடைந்தவர்க்கு அருளும் அப்பா போற்றி
இத்தி தன்னின் கீழ் இருமூவர்க்கு
அத்திக்கு அருளிய அரசே போற்றி
தென்னாடுடைய சிவனே போற்றி
என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி
ஏன குருளைக்கு அருளினை போற்றி
மான கயிலை மலையாய் போற்றி
அருளிட வேண்டும் அம்மான் போற்றி
இருள் கெட அருளும் இறைவா போற்றி
தளர்ந்தேன் அடியேன் தமியேன் போற்றி
களம் கொள கருத அருளாய் போற்றி
அஞ்சேல் என்று இங்கு அருளாய் போற்றி
நஞ்சே அமுதா நயந்தாய் போற்றி
அத்தா போற்றி ஐயா
நித்தா போற்றி நிமலா
பத்தா போற்றி பவனே
பெரியாய் போற்றி பிரானே
அரியாய் போற்றி அமலா
மறையோர் கோல நெறியே போற்றி
முறையோ தரியேன் முதல்வா போற்றி
உறவே போற்றி உயிரே
சிறவே போற்றி சிவமே
மஞ்சா போற்றி மணாளா
பஞ்சு ஏர் அடியான் பங்கா போற்றி
அலந்தேன் நாயேன் அடியேன் போற்றி
இலங்கு சுடர் எம் ஈசா போற்றி
சுவைத்தலை மேவிய கண்ணே போற்றி
குவைப்பதி மலிந்த கோவே போற்றி
மலை நாடு உடைய மன்னே போற்றி
கலை ஆர் அரிகேசரியாய் போற்றி
திருக்கழு குன்றில் செல்வா போற்றி
பொருப்பு அமர் பூவணத்து அரனே போற்றி
அருவமும் உருவமும் ஆனாய் போற்றி
மருவிய கருணை மலையே போற்றி
துரியமும் இறந்த சுடரே போற்றி
தெரிவு அரிது ஆகிய தெளிவே போற்றி
தேளா முத்த சுடரே போற்றி
ஆள் ஆனவர்களுக்கு அன்பா போற்றி
ஆரா அமுதே அருளா போற்றி
பேர் ஆயிரம் உடை பெம்மான் போற்றி
தாளி அறுகின் தாராய் போற்றி
நீள் ஒளி ஆகிய நிருத்தா போற்றி
சந்தன சாந்தின் சுந்தர போற்றி
சிந்தனைக்கு அரிய சிவமே போற்றி
மந்திர மாமலை மேயாய் போற்றி
எந்தமை கொள்வாய் போற்றி
புலிமுலை புல் வாய்க்கு அருளினை போற்றி
அலைகடல் மீ மிசை நடந்தாய் போற்றி
கரும் குருவிக்கு அன்று அருளினை போற்றி
இரும் புலன் புலர இசைந்தனை போற்றி
படி உற பயின்ற பாவக போற்றி
அடியொடு நடு ஈறு ஆனாய் போற்றி
நரகொடு சுவர்க்க நானிலம் புகாமல்
பரகதி பாண்டியற்கு அருளினை போற்றி
ஒழவற நிறைந்த ஒருவ போற்றி
செழு மலர சிவபுரத்து அரசே போற்றி
கழு நீர் மாலை கடவுள் போற்றி
தொழுவார் மையல் துணிப்பாய் போற்றி
பிழைப்பு வாய்ப்பு ஒன்று அறியா நாயேன்
குழைத்த சொல்மாலை கொண்டருள் போற்றி
புரம்பல் எரித்த புராண போற்றி
பரம் சோதி பரனே
போற்றி புயங்க
போற்றி புராண
போற்றி
திருச்சிற்றம்பலம்


திருச்சதகம்
திருப்பெருந்துறையில் அருளியது
மெய் உணர்தல் கட்டளை கலித்துறை
மெய்தான் அரும்பி விதிர் விதிர்த்து உன் விரை ஆர் சுழற்கு என்
கைதான் தலை வைத்து கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம்
பொய்தான் தவிர்ந்து உன்னை போற்றி சய
கைதான் நெகிழ விடேன் உடையாய் என்னை கண்டு கொள்ளே
கொள்ளேன் புரந்தரன் மால் அயன் வாழ்வு குடிகெடினும்
நள்ளேன் நினது அடியாரொடு அல்லால் நரகம் புகினும்
எள்ளேன் திருஅருளாலே இருக்க பெறின் இறைவா
உள்ளேன் பிற தெய்வம் உன்னை அல்லாது எங்கள் உத்தமனே
உத்தமன் அத்தன் உடையான் அடியே நினைந்து உருகி
மத்த மனத்தொடு மால் இவன் என்ன மனம் நினைவில்
ஒத்தன சொல்லிட ஊரூர் திரிந்து
தம் மனத்தன பேச எஞ்ஞான்று கொல்
சாவ முன் நாள் தக்கன் வேள்வி தகர் தின்று நஞ்சம் அஞ்சி
ஆவ எந்தாய் என்று அவிதா இடும் நம்மவர் அவரே
மூவர் என்றே எம்பிரானொடும் எண்ணி விண் ஆண்டு மண்மேல்
தேவர் என்றே இறுமாந்து என்ன பாவம் திரதவரே
தவமே புரிந்திலன் தண்மலர் இட்டுமுட்டாது இறைஞ்சேன்
அவமே பிறந்த அருவினையேன் உனக்கு அன்பர் உள்ளாம்
சிவமே பெறும் திரு எய்திற்றிலேன் நின் திருவடிக்கு ஆம்
பவமே அருளு கண்டாய் அடியேற்கு எம்பரம்பரனே
பரந்து பல் ஆய்மலர் இட்டு முட்டாது அடியே இறைஞ்சி
இரந்த எல்லாம் எமக்கே பெறலாம் என்னும் அன்பர் உள்ளம்
கரந்து நில்லா கள்வனே நின்தன் வார்சுழற்கு அன்பு எனக்கும்
நிரந்தரமாய் அருளாய் நின்னை ஏத்த முழுவதுமே
முழுவதும் கண்டவனை படைத்தான் முடிசாய்ந்து முன்னாள்
செழு மலர் கொண்டு எங்கும் தேட அப்பாலன் இப்பால் எம்பிரான்
கழுதொடு காட்டிடை நாடகம் ஆடி கதி இலியாய்
உழுவையின் தோல் உடுத்து உன் மத்தம் மேல் கொண்டு உழிதருமே
உழிதரு காலுங் கனலும் புனலொடு மண்ணுவிண்ணும்
இழிதரு காலமெ காலம் வருவது வந்ததற்பின்
உழிதரு காலத்த உன்னடி யேன்செய்த வல்வினை
கழிதரு காலமு மாயவை காத்தெம்மை காப்பேவனே
பவனெம் பிரான்பனி மாமதி கண்ணிவிண் ணோர்பெருமான்
சிவனெம் பிரான்என்னை ஆண்டுகொண்டான் என் சிறுமைகண்டும்
அவனெம் பிரானென்ன நானடி யேனென்ன இப்பரிசே
புவனெம் பிரான்தெரி யும்பரிசாவ தியம்புகவே
புகவே தகேன்உன கன்பருள் யானென்பொல் லாமணியே
தகவே யெனையுன காட்கொண்ட தன்மையெ புன்மையரை
மிகவே உயர்த்திவிண் ணோரை பணித்திஅண் ணாவமுதே
நகவே தகும்எம் பிரானென்னை நீசெய்த நாடகமே
அறிவுறுத்தல் தரவு கொச்ச கலிப்பா

நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து நான் நடுவே
வீடு அகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன்
ஆடகம் சீர் மணிக்குன்றே இடை அறா அன்பு உனக்கு என்
ஊடு அக தேநின்று உருக தந்தருள் எம் உடையானே
யான் ஏதும் பிறப்பு அஞ்சேன் இறப்பு அதனுக்கு என கடவேன்
வான் ஏயும் பெறல் வேண்டேன் மண் ஆள்வான் மதித்தும் இரேன்
தேன்ஏயும் மலர்க்கொன்றை சிவனே எம்பெருமான்எம்
மானே உன் அருள் பெறும் நாள் என்று என்றே வருந்துவனே
வருந்துவன்நின் மலர்ப்பாதம் அவைகாண்பான் நாய்அடியேன்
இருந்து நலம் மலர் புனையேன் ஏத்தேன் நாத்தழும்பு ஏற
பொருந்திய பொன் சிலை குனித்தாய் அருள் அமுதம் புரியாயேல்
வருந்துவன் அத்தமியேன் மற்று என்னேநான் ஆமாறே
ஆம்ஆறுஉன் திருவடிக்கே அகம்குழையேன் அன்பு உருகேன்
பூமாலை புனைந்து ஏத்தேன் புகழ்ந்து உரையேன் புத்தேளிர
கோமான் நின் திருக்கோயில் தூகேன் மெழுகேன் கூத்து ஆடேன்
சாம் ஆறே விரைக்கின்றேன் சதுராலே சார்வோனே
வானாகி மண்ணாகி வளிஆகி ஒளிஆகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யான் எனது என்று அவரவரை கூத்தாட்டு
வானாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே
வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான் மனம் நின்பால்
தாழ்த்துவதும் தாம் உயர்ந்து தம்மை எல்லாம் தொழ வேண்டி
சூழ்த்த மதுகரம் முரலும் தாரோயை நாய் அடியேன்
பாழ்த்த பிறப்பு அறுத்திடுவான் யானும் உன்னை பரவுவனே
பரவுவார் இமையோர்கள் பாடுவன நால்வேதம்
குரவுவார் குழல் மடவாள் கூறு உடையாள் ஒரு பாகம்
விரவுவார் மெய் அன்பின் அடியார்கள் மேன்மேல் உன்
அரவுவார் கழல் இணைகள் காண்பாரோ அரியானே
அரியானே யாவரக்கும் அம்பரவா அம்பலத்து எம்
பெரியானே சிறியேனை ஆட்கொண்ட பெய்கழல் கீழ்
விரைஆர்ந்த மலர்தூவேன் வியந்து அலறேன் நயந்துஉருகேன்
தரியேன் நான் ஆம்ஆறுஎன் சாவேன்
வேனில் வேள் மலர்க்கணைக்கும் வெள் நகை செவ்வாய்க்கரிய
பானல் ஆர் கண்ணியர்க்கும் பதைத்து உருகும் பாழ் நெஞ்சே
ஊன் எலாம் நின்று உருக புகுந்து ஆண்டான் இன்றுபோய்
வான் உளான் காணாய் நீ மாளா வாழ்கின்றாயே
வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே வல்வினைப்பட்டு
ஆழ்கின்றாய் ஆழாமல் காப்பானை ஏத்தாதே
சூழ்கின்றாய் கேடு உனக்கு சொல்கின்றேன் பல்காலும்
வீழ்கின்றாய் நீ அவல கடல் ஆய வெள்ளத்தே
சுட்டறுத்தல் எண் சீர் ஆசிரிய விருத்தம்

வெள்ளம் தாழ் விரிசடையாய் விடையாய் விண்ணோர்
பெருமானே எனக்கேட்டு வெட்ட நெஞ்சாய்
பள்ளம் தாழ் உறு புனலில் கீழ் மேல் ஆக
பதைத்து உருகும் அவ நிற்க என்னை ஆண்டாய்க்கு
உள்ளம்தான் நின்று உச்சி அளவும் நெஞ்சாய்
உருகாதால் உடம்பு எல்லாம் கண்ணாய் அண்ணா
வெள்ளம்தான் பாயாதால் நெஞ்சம் கல் ஆம்
கண் இணையும் மரம் ஆம் தீ வினையினேற்கே
வினையிலே கிடந்தேனை புகுந்து நின்று
போதுநான் வினை கேடன் என்பாய் போல
இனையன் நான் என்று உன்னை அறிவித்து என்னை
ஆட்கொண்டு எம்பிரான் ஆனாய்க்கு இரும்பின் பாவை
அனைய நான் பாடேன் நின்று ஆடேன் அந்தோ
அலறிடேன் உலறிடேன் ஆவி சோரேன்
முனைவனே முறையோ நான் ஆனவாறு
முடிவு அறியேன் முதல் அந்தம் ஆயினானே
ஆயநான் மறையனும் நீயே ஆதல்
அறிந்து யான் யாவரினும் கடையேன் ஆய
நாயினேன் ஆதலையும் நோக்கி கண்டும்
நாதனே நான் உனக்கு ஓர் அன்பன் என்பேன்
ஆயினேன் ஆதலால் ஆண்டு கொண்டாய்
அடியார் தாம் இல்லையே அன்றி மற்று ஓர்
பேயனேன் இதுதான் நின்பெருமை அன்றே
எம்பெருமான் என் சொல்லி பேசுகேனே
பேசின் தாம் ஈசனே எந்தாய் எந்தை
பெருமானே என்று என்றே பேசி
பூசின்தான் திருமேனி நிறை பூசி
போற்றி எம்பெருமானே என்று பின்றா
நேசத்தால் பிறப்பு இறப்பை கடந்தார் தம்மை
ஆண்டானே அவா வெள்ளம் கள்வனேனை
மாசு அற்ற மணிக்குன்றே எந்தாய் அந்தோ
என்னை நீ ஆட்கொண்ட வண்ணம் தானே
வண்ணம்தான் சேயது அன்று வெளிதே
அநேகன் ஏகன் அணு அணுவில் இறந்தாய் என்று அங்கு
எண்ணம்தான் தடுமாறி இமையோர் கூட்டம்
எய்துமாறு அறியாத எந்தாய் உன் தன்
வண்ணம்தான் அது காட்டி வடிவு
மலர்க்கிழல்கள் அவைகாட்டி வழி அற்றேனை
திண்ணம்தான் பிறவாமல் காத்து ஆட்கொண்டாய்
எம்பெருமான் என் சொல்லி சிந்துக்கேனே
சிந்தனை நின்தனக்கு ஆக்கி நாயினேன் தன்
கண் இனை நின் திருப்பாத போதுக்கு ஆக்கி
வந்தனையும் அம்மலர்க்கே ஆக்கி வாக்கு உன்
மணிவார்த்தைக்கு ஆக்கி ஐம்புலன்கள் ஆர
வந்தனை ஆட்கொண்டு உள்ளே புகுந்து விச்சை
மால் அமுத பெரும் கடலே மலையே உன்னை
தந்தனை செ தாமரைக்காடு அனைய மேனி
தனிச்சுடரே இரண்டுமிலி இத்தனிய னேற்கே
தனியேனன் பெரும் பிறவி பௌவத்து எவ்வம்
தடம் திரையால் எற்றுண்டு பற்று ஒன்று இன்றி
கனியைநேர் துவர்வாயார் என்னும் காலால்
கலக்குண்டு காம வான் சுறவின் வாய்ப்பட்டு
இனி என்னே உய்யும் ஆற என்று
அஞ்சு எழுத்தின் பணை பிடித்து கிடக்கின்றேனை
முனைவனே முதல் அந்தம் இல்லா மல்லற்
கரைகாட்டி ஆட்கொண்டாய் மூர்க்கனேற்கே
கேட்டு ஆரும் அறியாதான் கேடு ஒன்று இல்லான்
கிளை இலான் கேளாதே எல்லாம் கேட்டான்
நாட்டார்கன் விழித்திருப்ப ஞாலத்து உள்ளே
நாயினுக்கு தவிசு இட்டு நாயினேற்கே
காட்டாதன எல்லாம் காட்டி பின்னும்
கேளாதான எல்லாம் கேட்பித்து என்னை
மீட்டேயும் பிறவாமல் காத்து ஆட்கொண்டான்
எம்பெருமான் செய்திட்ட விச்சைதானே
விச்சைதான் இது ஒப்பது உண்டோ கேட்கின்
மிகுகாதல் அடியார்தம் அடியன் ஆக்கி
அச்சம் தீர்த்து ஆட்கொண்டான் அமுதம் ஊறி
அகம் நெகவே புகுந்து ஆண்டான் அன்பு கூர
அச்சன் ஆண் பெண் அலி ஆகாசம் ஆகி
ஆர் அழல் ஆய் அந்தம் அப்பால்
செச்சை மலர் புரையும் மேனி எங்கள்
சிவபெருமான் எம்பெருமான் தேவா கோவே
தேவர்க்கோ அறியாத தேவ தேவன்
செழும் பொழில்கள் பயந்து காத்து அழிக்கும் மற்றை
மூவர் கோனாய் நின்ற முதல்வன் மூர்த்தி
மூதாதை மாது ஆளும் பாகத்து எந்தை
யாவர் கோன் என்னையும் வந்து ஆண்டு கொண்டான்
யாம் ஆர்க்கும் குடி அல்லோம் யாதும் அஞ்சோம்
மேவினோம் அவன் அடியார் அடியரோடும்
மேன்மேலும் குடைந்து ஆடி ஆடுவோமே
ஆத்ம சுத்தி அறுசீர் ஆசிரிய விருத்தம்

ஆடுகின்றிலை கூத்து உடையான் கழற்கு அன்பு இலை என்புஉருகி
பாடுகின்றிலை பதைப்பதும் செய்கிலை பணிகிலை பாதமலர்
சூடுகின்றிலை சூட்டுகின்றதும் இலை துணை இலி பிண நெஞ்சே
தேடிகின்றிலை தெருவுதோறு அலறிலை செய்வதொன்று அறியேனே
அறிவு இலாத எனைப்புகுந்து ஆண்டு கொண்டு அறிவதை அருளிமேல்
நெறிஎலாம் புலம் ஆக்கிய எந்தையை பந்தனை அறு பானை
பிறிவு இலாத இன் அருள் கண் பெற்றிருந்தும் மாறி ஆடுதி பிண நெஞ்சே
கிறி எலாம் மி கீழ்ப்படுத்தாய் கெடுத்தாய் என்னை கெடுமாறே
மாறிநின்று எனை கெட கிடந்தனையை எம் மிதி இலிமட நெஞ்சே
தேறுகின்றிலம் இனி உனை சிக்கனெ சிவன் அவன் திரங் கோள் மேல்
நீறு நின்றது கண்டனை ஆயினும் நெக்கிலை இக்காயம்
கீறு நின்றிலை கெடுவது உன் பரிசு இது கேட்கவும் கில்லேனே
கிற்றவா மனமே கெடுவாய் உடையான் அடி நாயேனை
விற்று எலாம் மிக ஆள்வதற்கு உரியவன் விரைமலர் திரு பாதம்
முற்று இலா இளந்தளிர் பிரிந்திருந்து நீ உண்டன எல்லாம்
அற்றவாறும் நின் அறிவும் நின்பெருமையும் அளவு அறு கில்லேனே
அளவு அறுப்பதற்கு அரியவன் இமையவர்க்கு
அடியவர்க்கு எளியான் நம்
களவு அறுத்து நின்று ஆண்டமை கருத்தினுள்
கசிந்து உணர்ந்து இருந்தேயும்
உள கறுத்து உனை நினைந்து உளம் பெரும் களன்
செய்ததும் இலை நெஞ்சே
பளகு அறுத்து அடையான் கழல் பணிந்திலை
பரகதி புகுவானே
புகுவ தாவதும் போதர வில்லதும் பொன்னகர் புகப்போதற்
குகுவ தாவதும் எந்தையெம் பிரானென்னை யாண்டவன் சுழற்கன்பு
நெகுவ தாவதும் நித்தலும் அமுதொடு தேனொடு பால்கட்டி
மிகுவ தாவதும் இன்றெனின் மற்றிதற் கென்செய்கேன் வினையேனே
வினையென் போலுடை யார்பிற ராருடை யானடி நாயேனை
திசையின் பாகமும் பிரிவது திருக்குறி பன்றுமற் றதணாலே
முனைவன் பாதநன் மலர்பிரி திருந்தும்நான்முட்டிலேன் தலைகீறேன்
இனையன் பாவனை யிரும்புகல் மனஞ்செவி யின்னதென் றறியேனே
ஏனை யாவரும் எய்திட லுற்றமற் றின்ன தென் றறியாத
தேனை ஆன்நெயை கரும்பின் இன் தேறலை சிவனையென் சிவலோ
கோனை மான்அன நோக்கிதன் கூறனை குறுகிலேன் நெடுங்காலம்
ஊனை யானிரு தோம்புகின் றேன்கெடு வேனுயி ரோயாதே
ஓய்வி லாதன உவமனில் இறந்தன ஒண்மலர தாள்தந்து
நாயி லாகிய குலத்தினுங் கடைப்படும் என்னைநன் னெறிகாட்டி
தாயி லாகிய இன்னருள் புரிந்தஎன் தலைவனை நனிகாணேன்
தீயில் வீழ்கிலேன் திண்வரை உருள்கிலேன் செழுங்கடல் புகுவேனே
வேனில் வேள்கணை கிழித்திட மதிகெடும் அதுதனை நினையாதே
மான்நி லாவிய நோக்கியர் படிறிடை மத்திடு தயிராகி
தேன்நி லாவிய திருவருள் புரிந்தவென் சிவனகர் புகப்போகேன்
ஊனில் ஆவியை ஓம்புதற் பொருட்டினும் உண்டுடு திருந்தேனே
கைம்மாறு கொடுத்தல் கலிவிருத்தம்
இருகை யானையை ஒத்திரு தென்னுள
கருவை யான்கண்டி லேன் கண்ட தெவ்வமே
வருக வென்று பணித்தனை வானுளோர்க்கு
ஒருவ னேகிற்றி லேன்கிற்பன் உண்ணவே
உண்டோ ர் ஒண்பொரு ளென்றுணர் வார்க்கெலாம்
பெண்டிர் ஆண்அலி யென்றறி யொண்கிலை
தொண்ட னேற்குள்ள வாவந்து தோன்றினாய்
கண்டுங் கண்டிலேன் என்னகண் மாயமே
மேலை வானவ ரும்மறி யாததோர்
கோல மேயெனை ஆட்கொண்ட கூத்தனே
ஞால மேவிசும் பேயிவை வந்துபோம்
கால மேயுளை யென்றுகொல் காண்பதே
காண லாம்பர மேக கிறந்ததோர்
வாணி லா பொரு ளேயிங்கொர் பார்ப்பென
பாண ளேன்படிற் றாக்கையை விட்டுனை
பூணு மாற்றி யேன் புலன் போற்றியே
போற்றி யென்றும் புரண்டும் புகழ்ந்தும்நின்று
ஆற்றன் மிக்கஅன் பாலழை கின்றிலேன்
ஏற்று வந்தெதிர் தாமரை தாளுறுங்
கூற்ற மன்னதொர் கொள்கையென் கொள்கையே
கொள்ளுங் கில்லெனை யன்பரிற் கூய்ப்பணி
கள்ளும் வண்டும் அறாமலர கொன்றையான்
நள்ளுங் கீழளும் மேலுளும் யாவுளும்
எள்ளும் எண்ணெயும் போல்நின்ற எந்தையே
எந்தை யாயெம் பிரான்மற்றும் யாவர்க்கு
தந்தை தாய்தம் பிரான்தன கஃதிலான்
முந்தி யென்னுள் புகுந்தனன் யாவருஞ்
சிந்தை யாலும் அறிவருஞ் செல்வனே
செல்வம் நல்குர வின்றிவிண் ணோர்புழு
புல்வரம் பின்றி யார்க்கும் அரும்பொருள்
எல்லை யில்கழல் கண்டும் பிரிந்தனன்
கல்வ கைமன தேன்பட்ட கட்டமே
கட்டறுத்தெனை யாண்டுகண் ணாரநீறு
இட்ட அன்பரொ டியாவருங் காணவே
பட்டி மண்டபம் ஏற்றினை
எட்டி னோடிரண் டும் அறி யேனையே
அறிவ னேயமு தேஅடி நாயினேன்
அறிவ னா கொண்டோ எனை ஆண்டது
அறிவி லாமையன் றேகண்ட தாண்டநாள்
அறிவ னோவல்ல னோஅரு ளீசனே
அநுபோகசுத்தி அறுசீர் ஆசிரிய விருத்தம்
ஈசனேயென் எம்மானே யெந்தை பெருமான் என்பிறவி
நாசனே நான் யாதுமென் றல்லா பொல்லா நாயான
நீசனேனை ஆண்டாய்க்கு நினைக்க மாட்டேன் கண்டாயே
தேசனேஅம் பலவனே செய்வ தொன்றும் அறியேனே
செய்வ தறியா சிறுநாயேன் செம்பொற் பாத மலர்காணா
பொய்யார் பெறும்பே றத்தனையும் பெறுதற் குரியேன் பொய்யிலா
மெய்யர் வெறியார் மலர்ப்பாதம் மேவ கண்டுங் கேட்டிருந்தும்
பொய்ய னேன்நான் உண்டுடுத்திங் கிருப்ப தானேன் போரேறே
போரேறேநின் பொன்னகர்வாய் நீபோந்தருளி இருள்நீக்கி
வாரே றிளமென் முலையாளே டுடன்வ தருள அருள்பெற்ற
சீரே றடியார் நின்பாதஞ் சேர கண்டுங் கண்கெட்ட
ஊரே றாயிங் குழல்வேணே கொடியான் உயிர்தான் உளவாதே
உலவா கால தவமெய்தி உறுப்பும் வெறுத்திங் குனைக்காண்பான்
பலமா முனிவர் நனிவாட பாவி யேனை பணிக்கொண்டாய்
மலமா குரம்பை யிதுமாய்க்க மாட்டேன் மணியே உனைக்காண்பான்
அலவா நிற்கும் அன்பிலேன் என்கொண்டெழுகேன் எம்மானே
மானேர் நோக்கி உமையாள் பங்கா வந்திங் காட்கொண்ட
தேனே அமுதே கரும்பின் தெளிவே சிவனே தென்தில்லை
கோனே உன்தன் திருக்குறிப்பு கூடு வார்நின் கழல்கூட
ஊனார் புழுக்கூ டிதுகாத்திங் கிருப்ப தானேன் உடையானே
உடையா னேநின்றனையுள்கி உள்ளம் உருகும் பெருங்காதல்
உடையா ருடையாய் நின்பாதஞ் சேர கண்டிங் கூர்நாயிற்
கடையா னேன்நெஞ் சுருகாதேன் கல்லா மனந்தேன் கசியாதேன்
முடையா புழுக்கூ டிதுகாத்திங் கிருப்ப தா முடித்தாயே
முடித்த வாறும் என்றைக்கே தக்க தேமுன் னடியாரை
பிடித்த வாறுஞ் சோராமற் சோர னேனிங் கொருத்திவாய்
துடித்த வாறுங் துகிலிறையே சோர்ந்த வாறும் முகங்குறுவேர்
பொடித்த வாறு மிவையுணர்ந்து கேடென்றனக்கே சூழ்ந்தேனே
தேனை பாலை கன்னலின் தெளியை ஒளியை தெளிந்தார்தம்
ஊனை உருக்கும் உடையானை உம்ப ரானை வம்பனேன்
தானின் னடியேன் நீயென்னை ஆண்டா யென்றால் அடியேற்கு
தானுஞ் சிரித்தே யருளலா தன்மை யாமென் தன்மையே
தன்மை பிறரா லறியாத தலைவா பொல்லா நாயன
புன்மை யேனை ஆண்டையா புறமே போக விடுவாயோ
என்மை நோக்கு வார்யாரே என்நான் செய்கேன் எம்பெருமான்
பொன்னே திகழு திருமேனி எந்தா யெங்கு புகுவேனே
புகுவே னெனதே நின்பாதம் போற்றும் அடியா ருள்நின்று
நகுவேன் பண்டு தோணோக்கி நாண மில்லா நாயினேன்
நெடுமன் பில்லை நினைக்காண நீயாண்டருள் அடியேனு
தகுவ னேயென் தன்மையே எந்தாய் அந்தோ தரியேனே
காருணியத்து இரங்கல் அறுசீர் ஆசிரிய விருத்தம்
தரிக்கிலேன் காய வாழ்க்கை சங்கரா போற்றி வான
விருத்தனே போற்றி எங்கள் விடலையே
ஒருத்தனே போற்றி உம்பர் தம்பிரான்
நிருத்தனே போற்றி எங்கள் நின்மலா
போற்றியோ நமச்சி வாய புயங்களே மயங்கு கின்றேன்
போற்றியோ நமச்சி சாய புகலிடம் பிறிதொன் றில்லை
போற்றியோ நமச்சி வாய புறமென போக்கில் கண்டாய்
போற்றியோ நமச்சி வாய சயசய போற்றி
போற்றியென் போலும் பொய்யர் தம்மைஆ கொள்ளும் வள்ளல்
போற்றிநின் பாதம் போற்றி நாதனே
போற்றி நின் கருணை வெள்ளம் புதுமது புவனம் நீர்தீ
காற்றிய மானன் வானம் இருசுடர கடவுளானே
கடவுளே போற்றி யென்னை கண்டுகொண் டருளு
விடவுளே உருக்கி யென்னை ஆண்டிட வேண்டும் போற்றி
உடலிது களைந்தி டொல்லை உம்பர்த தருளு போற்றி
சடையுளே கங்கை வைத்த சங்கரா போற்றி
சங்கரா போற்றி மற்றோர் சரணிலேன்
பொங்கரா அல்குற் செவ்வாய் வெண்ணை கரிய வாட்கண்
மங்கையோர் பங்க போற்றி மால்விடை யூர்தி
இங்கிவ்வாழ் வாற்ற கில்லேன் எம்பிரான் இழித்திட்டேனே
இழித்தனன் என்னை யானே எம்பிரான் போற்றி
பழித்தனன் உன்னை என்னை ஆளுடை பாதம் போற்றி
பிழைத்தவை பொறுக்கை எல்லாம் பெரியவர் கடமை போற்றி
ஒழித்திடில் வாழ்வு போற்றி உம்பர்நாட டெம்பி ரானே
எம்பிரான் போற்றி வான தவரவர் ஏறு
கொம்பரார் மருங்குல் மங்கை கூறவெண் ணீற போற்றி
செம்பிரான் போற்றி தில்லை திருச்சிற்றம் பலவ
உம்பரா போற்றி என்னை ஆளுடை ஒருவ
ஒருவனே போற்றி ஒப்பில் அப்பனே
குருவனே போற்றி எங்கள் கோமள கொழுந்து
வருவவென் றென்னை நின்பால் வாங்கிட வேண்டும் போற்றி
தருகநின் பாதம் போற்றி தமியனேன் தீர்த்தே
தீர்ந்தஅன் பாய அன்பர கவரினும் அன்ப போற்றி
பேர்ந்துமென் பொய்மை யாட்கொண்டருளும் பெருமை போற்றி
வார்ந்தநஞ் சயின்று வானோர கமுதமா வள்ளல் போற்றி
ஆர்ந்தநின் பாதம் நாயேற் கருளிட வேண்டும் போற்றி
போற்றி புவனம் நீர்தீர் காலொடு வான மானாய்
போற்றியெவ் வுயிர்க்கு தோற்றம் ஆகிநீ தோற்ற மில்லாய்
போற்றியெல் லாவுயிரக்கும் ஈறாயீ றின்மை யானாய்
போற்றியைம் புலன்கள் நின்னை புணர்கிலா புணர்க்கை யானே
ஆனந்தத்து அழுத்தல் எழுசீர் ஆசிரிய விருத்தம்
புணர்ப்பது ஒக்க எந்தை என்னை ஆண்டு பூண நோக்கினாய்
புணர்ப்பது அன்று இது என்றபோது நின்னொடு என்னொடு என்இது ஆம்
புணர்ப்பது ஆக அன்று இது அன்பு நின்கழல்
புணர்ப்பது அது ஆக அம் கனாள் புங்கம் ஆன போகமே
போகம் வேண்டி வேண்டிலேன் புரந்தரஆதி இன்பமும்
ஏகநின் கழல் இணை அலாது இலேன் எம்பிரான்
ஆகம் விண்டு கம்பம் வந்து குஞ்சி அஞ்சலி கணே
ஆக என் கை கண்கள் தாரை ஆறு அது
ஐய நின்னது அல்லது இல்லை மற்று ஓர் பற்று வஞ்சனேன்
பொய் கலந்தது அல்லது இல்லை பொய்மையேன் என்பிரான்
மை கலந்த கண்ணி பங்க வந்து நின் கழல் கணே
மெய் கலந்த அன்பர் அன்பு எனக்கும் ஆகவேண்டுமே
வேண்டும் நின் கழல் கண் அன்பு பொய்மை தீர்த்து மெய்மையே
ஆண்டு கொண்டு நாயினேனை ஆவ என்று அருளு நீ
பூண்டு கொண்டு அடியனேனும் போற்றி
மாண்டு வந்து மன்ன
வணங்கும் நின்னை மண்ணும் விண்ணும் வேதம் நான்கும் ஓலம் இட்டு
உணங்கும் நின்னை எய்தல் உற்று மற்று ஓர் உண்மை இன்மையின்
வணங்கியாம் விடேங்கள் என்ன வந்து நின்று அருளுதற்கு
இணங்கு கொங்கை மங்கை பங்க என் கொலோ நினைப்பதே
நினைப்பது ஆக சிந்தை செல்லும் எல்லை ஆய வாக்கினால்
தினை தனையும் ஆவது இல்லை சொல்லல் ஆவ கேட்பவே
அனைத்து உலகும் ஆய நின்னை ஐம்புலன்கள் காண்கிலா
எனைத்து அது எப்புறத்து எந்தை
எய்தல் ஆவது என்று நின்னை எம்பிரான் இவ்வஞ்சனேற்கு
உய்தல் ஆவது உன் கண் அன்றி மற்று ஓர் உண்மை இன்மையில்
பைதல் ஆவது என்று பாதுகாத்து இரங்கு பாவியேற்கு
ஈது அல்லாது நின்கண் ஒன்றும் வண்ணம் இல்லை ஈசனே
ஈசனே நீ அல்லது இல்லை இங்கும் அங்கும் என்பதும்
பேசினேன் ஓர் பேதம் இன்மை பேதையேன் என் எம்பிரான்
நீசனேனை ஆண்டுகொண்ட நின்மலா ஓர் நின் அலால்
தேசனே ஓர் தேவர் உண்மை சிந்தியாது சிந்தையே
சிந்தை செய்கை கேள்வி வாக்கு சீர் இல் ஐம்புலன்களால்
முந்தை ஆன காலம் நின்னை எய்திடாத மூர்க்கனேன்
வெந்து ஐயா விழுந்திலேன் என் உள்ளம் வெள்கி விண்டிலேன்
எந்தை ஆய நின்னை இன்னம் எய்தல் உற்று இருப்பனே
இருப்பு நெஞ்சம் வஞ்சனேனை ஆண்டு கொண்ட நின்னதாள்
கருப்புமட்டு வாய் மடுத்து எனை கலந்து போகவும்
நெருப்பும் உண்டு யானும் இருந்தது உண்டது
விருப்பும் உண்டு நின்கண் என்கண் என்பது என்ன விச்சையே
ஆனந்த பரவரசம் கலிநிலைத்துறை
விச்சு கேடு பொய்க்கு ஆகாது என்று இங்கு இனை வைத்தாய்
இச்சைக்கு ஆனார் எல்லாரும் வந்து உன்தாள் சேர்ந்தார்
அச்சத்தாலே ஆழ்ந்திடுகின்றேன் ஆரூர் எம்
மிச்சை தேவா என் நான் செய்தேன் பேசாயே
பேசப்பட்டேன் நின் அடியாரில்