ஜெயகாந்தனின் சிறுகதைகள் தொகுப்பு
குருபீடம் டீக்கடை சாமியாரும் டிராக்டர்
நிக்கி ஒரு வீடு பூட்டி கிடக்கிறது நான் ஜன்னலருகே உட்கார்ந்திருக்கிறேன்
குருக்கள் ஆத்து பையன் முன் நிலவும் பின் பனியும் முற்றுகை
சுமைதாங்கி நடைபாதையில் ஞானோபதேசம் ஒரு பக்தர்



























ஜெயகாந்தனின் சிறுகதைகள் தொகுப்பு
ஜெயகாந்தன் சிறுகதைகள் பல தொகுப்புகளாக வெளியிட பட்டுள்ளன
ஆணும் பெண்ணும் உதயம் ஒரு பிடி சோறு இனிப்பும் கரிப்பும்

தேவன் வருவானா சுமை தாங்கி மாலை மயக்கம் யுகசந்தி
உண்மை சுடும் புதிய வார்ப்புகள் சுய தரிசனம் இறந்த
காலங்கள்
குருபீடம் அவர்கள் உள்ளே இருக்கிறார்கள் சர்க்கரம் நிற்பதில்லை

பபுகை நடுவினிலே இவற்றிலிருந்து ஒரு சில சிறுகதைகளை மதுரை
திட்டத்தின்
கீழ் வெளியிடுகிறோம்
குருபீடம் மின்பதிப்பு
டீக்கடை சாமியாரும் டிராக்டர்
மின்பதிப்பு
நிக்கிமின்பதிப்பு
ஒரு வீடு பூட்டி கிடக்கிறதுமின்பதிப்பு
நான் ஜன்னலருகே உட்கார்ந்திருக்கிறேன்மின்பதிப்பு
குருக்கள் ஆத்து பையன்மின்பதிப்பு
முன் நிலவும் பின் பனியும்மின்பதிப்பு
முற்றுகைமின்பதிப்பு
சுமைதாங்கி மின்பதிப்பு
நடைபாதையில் ஞானோபதேசம் மின்பதிப்பு
ஒரு பக்தர் மின்பதிப்பு
குருபீடம்
அவன் தெருவில் நடந்தபோது வீதியே நாற்றமடித்தது பிச்சைக்காகவோ அல்லது வேடிக்கை
பார்ப்பதற்காகவோ சந்தைத்திடலில் திரிந்து கொண்டிருந்தபோது அவனை பார்த்த
மாத்திரத்தில் எல்லோருமே அருவருத்து விரட்டினார்கள் அவனை விரட்டுவதற்காகவே சிலபேர்
ஏதோ பாவ காரியத்தை செய்கிற மாதிரி அவனுக்கு பிச்சையிட்டார்கள்
அவன் ஜெயிலிருந்து வந்திருப்பதாக சில பேர் பேசிக்கொண்டார்கள் பைத்தியக்கார
ஆஸ்பத்திரியிலிருந்து வெளியேற்றப்பட்டவனென்றும் சிலர் சொன்னார்கள்
ஆனால் இப்போது அவன் நோயாளியோ பைத்தியக்காரனோ அல்ல என்று அவனை பார்த்த எல்லாரும்
புரிந்து கொண்டார்கள் உண்மையும் அதுதான் சோம்பலும் சுயமரியாதை இல்லாமையும்
இந்த கோலம் அசிங்கமென்று உணர முடியாத அளவுக்கு அவனிடம் ஊறி உறைந்துபோன தாமசத்தின்
மதமதப்பினாலும் அவன் இவ்வாறு திரிகிறான் பசிக்கிறதோ இல்லையோ தன் கையில்
கிடைத்ததையும் பிறர் கையில் இருப்பதையும் தின்ன வேண்டுமென்ற வேட்கை அவன் கண்ணில்
அலைந்தது ஒரு குழந்தை சாப்பிடுவதைக்கூட நாய் மாதிரி அவன் நின்று பார்த்தான்
அவர்களும் அவனை நாயை விரட்டுவது மாதிரி விரட்டினார்கள் அவ்விதம் அவர்கள் விரட்டி
அவன் விலகிவரும்போது தனது பார்வையால் பிறர் சாப்பிடும் பொருளை எச்சில்
படுத்திவிட்டு வந்தான் அவன் எப்போதும் எதையாவது தின்றுகொண்டே இருந்தான்
கடைவாயிலும் பல்லிலும் அவன் தின்றவை சிக்கி காய்ந்திருந்தது யாராவது பீடியோ
சுருட்டோ புகைத்து கொண்டிருந்தால் அதற்கும் அவன் கையேந்தினான் அவர்கள் புகைத்து
எறிகிற வரைக்கும் காத்திருந்து அதன் பிறகு அவற்றை பொறுக்கி அவர்களை அவமரியாதை
செய்கிற மாதிரியான சந்தோஷத்துடன் அவன் புகைத்தான்
சந்தைக்கு வந்திருக்கிற நாட்டுப்புற பெண்கள் குழந்தைகளுக்கு பால்
கொடுக்கும்போதும் குனிந்து நிமிர்கையில் ஆடை விலகும்போதும் இவன் காமாதூரம் கொண்டு
வெட்கமில்லாமல் அவர்களை வெறித்து பார்த்து ரசித்தான்
அவனுக்கு உடம்பில் நல்ல வலுவும் ஆரோக்கியமும் இருந்தது எனினும் எப்போதும் ஒரு
நோயாளியைப்போல் பாசாங்கு செய்வது அவனுக்கு பழக்கமாகி போய்விட்டது அவனுக்கு
வயது நாற்பதுக்குள்தான் இருக்கும் கடுமையாக உழைக்காததாலும் கவலைகள் ஏதும்
இல்லாததாலும் அவன் உடம்புவாகே ஒரு பொலிகாளை மாதிரி இருந்தது இளமையும் உடல் வலுவும்
ஆரோக்கியமும் இயற்கையால் அவனுக்கு அனுக்கிரகிக்கப்பட்டிருந்தும் அவன் தன்னைத்தானே
சபித்து கொண்டது மாதிரி சேற்றில் மேய்கிற பன்றியா திரிந்தான்
சந்தை திடலுக்கும் ரயிலடிக்கும் நடுவேயுள்ள குளக்கரையை அடுத்த சத்திரத்தில்
உட்கார்ந்துகொண்டு அங்கே குளிக்கிற பெண்களை வேடிக்கை பார்ப்பது அவனுக்கு ஒரு
பொழுதுபோக்கு ஆனால் ஒரு நாளாவது தானும் குளிக்க வேண்டுமென்று அவனுக்கு
தோன்றியதே இல்லை மற்ற நேரங்களில் அவன் அந திண்ணையில் அசிங்கமாக படுத்து
உறங்கி கொண்டிருப்பான் சில சமயங்களில் பகல் நேரத்தில் கூட உறங்குவது மாதிரி
பாவனையில் வேண்டுமென்றே ஆடைகளை விலக்கி போட்டுக்கொண்டு தெருவில் போவோர் வருவோரை
அதிர்ச்சிக்கு உள்ளாக்கி ரகசியமாக மனத்திற்குள் மகிழ்ச்சி அடைவான்
இரண்டு தினங்களுக்கு முன்பு லேசாக மழை பெய்து கொண்டிருந்த இரவில் ஒரு பிச்சைக்காரி
இந்த சத்திரத்து திண்ணையில் வந்து படுக்க அவளுக்கு ஏதேதோ ஆசை காட்டி
கடைசியில் அவளை வலியச்சென்று சல்லாபித்தான் அதன் பிறகு இவனை பழிவாங்கிவிட்ட
மகிழ்ச்சியில் தனது குறைபட்டுப்போன விரல்களை காட்டி தான் ஒரு நோயாளி என்று அவள்
சிரித்தாள் அதற்காக அருவருப்பு கொள்கிற உணர்ச்சிகூட இல்லாமல் அவன் மழுங்கி
போயிருந்தான் எனவே இவள் இவனுக்கு பயந்துகொண்டு இரண்டு நாட்களாக இந்த பக்கமே
திரும்பவில்லை இவன் அவளை தேடிக்கொண்டு நேற்று இரவெல்லாம் சினிமா கொட்டகை
அருகேயும் சந்தைப்பேட்டையிலும் ஊரின் தெருக்களிலும் கார்த்திகை மாதத்து நாய்
மாதிரி அலைந்தான்
மனித உருக்கொண்டு அவனிடம் உறைந்துபோன தாமச தன்மையினால் சோம்பலை சுகமென்று
சுமந்து கொள்கிற புத்தியின் மந்தத்தினால் அருவருக்கத்தக்க ஒரு புலை நாய் மாதிரி
அவன் அங்கு அலைந்து கொண்டிருந்தான் வயிற்றுப்பசி உடற்பசி என்கிற விகாரங்களிலும்
உபாதைகளிலும் சிக்குண்டு அலைகின்ற நேரம் தவிர பிற பொழுதுகளில் அந்த சத்திரத்து
திண்ணையில் அவன் தூங்கிக்கொண்டே இருப்பான்
ஃஃஃ
காலை நேரம் விடியற்காலை அல்ல சந்தைக்கு போகிற ஜனங்களும் ரயிலேறி
பக்கத்து ஊரில் படிப்பதற்காக போகும் பள்ளிக்கூட சிறுவர்களும் நிறைந்து அந
தெருவே சுறுசுறுப்பாக இயங்குகின்ற சுரீர் என்று வெயில் அடிக்கிற நேரத்தில்
அழுக்கும் கந்தலுமான இடுப்பு வேட்டியை அவிழ்த்து தலையில் இருந்து கால்வரை
போர்த்தி கொண்டு அந்த போர்வைக்குள் க்ருப்பிண்டம் மாதிரி முழங்கால்களை
மடக்கி கொண்டு கைகளிரண்டையும் காலிடையே இடுக்கியவாறு வாயிலிருந்து எச்சில் ஒழுக
மொய்ப்பது கூட தெரியாமல் அவன் தூங்கி கொண்டிருந்தான் தெருவிலே ஏற்படுகிற
சந்தடியும் இரைச்சலும் ஏதோ ஒரு சமயத்தில் அவன் தூக்கத்தை கலைத்தது எனினும்
விழித்து கொள்ள விரும்பாததனால் தூங்கி கொண்டிருந்தான்
இதுதான் சோம்பல் உறக்கம் உடலுக்கு தேவை அனால் இந தேவையற்ற நிர்ப்பந
தூக்கம்தான் சோம்பலாகும் இந்த மதமதப்பை சுகமென்று சகிக்கிற அறிவுதான்
தாமசமாகும்
விரைவாக ஏறி வந்த வெயில் அவன்மீது மெதுவாக ஊர்ந்தது அவன் தெருவுக்கு முதுகை
காட்டி கொண்டு சுவர் ஓரமாக படுத்திருந்தான் சத்திரத்து சுவரின் நிழல்
கொஞ்சங் கொஞ்சமாக சுருங்க ஆரம்பித்தது முதலில் வெயிலின் விளிம்பு அவனது
விலாவுக்கும் தரைக்கும் இடையே மெள்ள மெள்ள புகுவதை அவனது மதர்த்த தேகம் ரொம்ப
தாமதமாக உணர்ந்தது வெயிலின் உறைப்பை உணரக்கூடிய உணர்ச்சி குறுகுறுப்பு மழுங்கி
போனதால் ஒரு மலைப்பாம்பு மாதிரி அவன் அசிங்கமாக நெளிந்தான் அந்த வெப்பத்திலிருந்து
அந்த வெயிலின் விளிம்பிலிருந்து ஒரு நூல் இழை விலகுவதற்கு எவ்வளவு குறைவான
மெதுவான முயற்சி எடுத்து கொள்ளலாமோ அவ்வளவே அவன் நகர்ந்து படுத்தான் சற்று
நேரத்தில் மறுபடியும் வெயில் அவனை கடித்தது அவனது அசமந்தம் எரிச்சலாகி அவன்
தூக்கம் கலைந்தான் ஆனாலும் அவன் எழுந்திருக்கவில்லை இன்னும் கொஞ்சம் நகர்ந்து
சுவரோடு ஒட்டி கொண்டான்
எதிரே இருந்த டீக்கடையிலிருந்து டீ அடிக்கிற சத்தம் கேட்டது அந்த சத்தத்தில்
அவன் டீ குடிப்பது மாதிரி கற்பனை செய்து கொண்டான்
மறுபடியும் வெயில் அவனை விடாமல் போ கடித்தது அதற்குமேல் நகர முடியாமல் சுவர்
தடுத்தது ஒரு பக்கம் சுவரும் வெயிலும் நெருக்க அவன் எரிச்சலோடு
உட்கார்ந்தான் அவனுக்கு கண்கள் கூசின ஒரு கண்ணை திறக்கவே முடியவில்லை பீளை
காய்ந்து இமைகள் ஒட்டி கொண்டிருந்தன
அவன் ஒரு கையால் கண்ணை கசக்கி கொண்டே இன்னொரு தலைமாட்டில் சேகரித்து
வைத்திருந்த துண்டு பீடிகளில் ஒன்றை எடுத்தான் பீடியை பற்ற வைத்து அவன் புகையை
ஊதிய போது அவனது அரை கண் பார்வையில் மிக அருகாமையில் யாரோ நின்றிருக்கிற மாதிரி
முகம் மட்டும் தெரிந்தது புகையை விலக்கி கண்களை திறந்து பார்த்தான்
எதிரே ஒருவன் கைகளை கூப்பி உடல் முழுவதும் குறுகி இவனை வணங்கி வழிபடுகிற மாதிரி
நின்றிருந்தான் இவனுக்கு சந்தேகமாகி தனக்கு பின்னால் ஏதேனும் சாமி சிலையோ
சித்திரமோ இந்த சுவரில் இருக்கிறதா என்று திரும்பி பார்த்து நகர்ந்து
உட்கார்ந்தான் இவனது இந்த செய்கையில் ஏதோ ஒரு அரிய பொருளை சங்கேதமாக
புரிந்துகொண்டு வந்தவன் மெய்சிலிர்த்து நெக்குருகி நின்றான்
இவன் எதற்கு தன்னை வந்து கும்பிட்டு கொண்டு நிற்கிறான் பைத்தியமோ என்று
நினைத்து உள்சிரிப்புடன்
என்னாய்யா இங்கே வந்து கும்பிடறே இது கோயிலு இல்லே சத்திரம் என்னை
சாமியார் கீமியார்னு நெனச்சுக்கிட்டியா நான் பிச்சைக்காரன் என்றான்
திண்ணையிலிருந்தவன்
கோயிலென்று எதுவுமே இல்லை எல்லாம் சத்திரங்களே சாமியார்கள் என்று
யாருமில்லை எல்லாரும் பிச்சைக்காரர்களே என்று அவன் சொன்னதை உபதேச மொழிகள்
மாதிரி இலக்கண அலங்காரத்தோடு திரும்ப திரும்ப சொல்லி புதிய அர்த்தங்கள்
கண்டான் தெருவில் நின்றவன்
சரி இவன் சரியான பைத்தியம்தான் என்று நினைத்து
திண்ணையிலிருந்தவன்
தெருவில் நின்றவன் இவனிடம் விண்ணப்பித்து கொள்கிற பவ்யத்துடன் சுவாமி
என்றழைத்தான்
இவனுக்கு சிரிப்பு தாங்கவில்லை வந்த சிரிப்பில் பெரும் பகுதியை அடக்கி
கொண்டு புன்முறுவல் காட்டினான்
என்னை தங்களுடைய சிஷ்யனாக ஏற்று கொள்ள வேண்டும் தங்களுக்கு பணிவிடை
புரியவும் தாங்கள் அழைத்த குரலுக்கு ஓடி வரவும் எனக்கு அனுக்கிரகிக்க வேண்டும்
திண்ணையிலிருந்தவனுக்கு ஒன்றும் புரியவில்லை சரி இப்போ எனக்கு ஒரு டீ
வாங்கியாந்து குடு என்றான்
அந்த கட்டளையில் அவன் தன்னை சீடனாக ஏற்று கொண்டுவிட்டான் என்று புரிந்துகொண்ட
மகிழ்ச்சியுடன் இடுப்பு துண்டிலிருந்த சில்லரையை அவிழ்த்து கொண்டு ஓடினான்
வந்தவன் அவன் கையிலிருந்த காசை பார்வையால் அளந்த குரு ஓடுகின்ற அவனை
கைதட்டி கூப்பிட்டு அப்படியே பீடியும் வாங்கியா என்று குரல் கொடுத்தான்
அவன் டீக்கடைக்கு சென்று பார்வைக்கு மறைந்ததும் இவன் வந்து சீடனாக வாய்த்த
அதிர்ஷ்டத்தை எண்ணி பெருங்குரலில் சிரித்தான் குரு சரியான பயல்
கிடைத்திருக்கிறான் இவன் மயக்கம் தெளியாதபடி பார்த்துக்கணும் திண்ணெயெ விட்டு
எறங்காமல் சொகமா இங்கேயே இருக்கலாம் பிச்சைக்கு இனிமே நாம்ப அலைய வேணாம் அதான்
சிஷ்யன் இருக்கானே கொண்டான்னா கொண்டுவரான் முடிஞ்சா சம்பாரிச்சு
குடுப்பான் இல்லாட்டி பிச்சை எடுத்துக்கினு வரான் என்னா அதிர்ஷ்டம் வந்து
நமக்கு அடிச்சிருக்கு என்று மகிழ்ந்திருந்தான் குரு
சற்று நேரத்தில் சீடன் டீயும் பீடியும் வாங்கி வந்து நிவேதனம் மாதிரி இரண்டு
கைகளிலும் ஏந்தி கொண்டு குருவின் எதிரே நின்றான்
குரு அவனை பார்த்து பொய்யாக சிரித்தான் அவன் கையிலிருந்த டீயையும் பீடியையும்
தனக்கு சொந்தமான ஒன்று இதனை யாசிக்க தேவையில்லை என்ற உரிமை உணர்ச்சியோடு
முதன் முறையா பார்த்தான் அதனை வாங்கி கொள்வதில் அவன் அவசரம் காட்டாமல்
இருந்தான் தான் சீடனை ஏமாற்றுவதாக எண்ணிக்கொண்டு சாமர்த்தியமாக நடந்து கொள்வதற்காக
அவன் பீடிகையாக சொன்னான்
என்னை நீ கண்டுபிடிச்சுட்டே உண்மையான சிஷ்யன்தான்
கண்டுபிடிச்சே ஆனால் நான் உன்னை ரொம்ப நாளா பார்த்துக்கினே இருக்கேன்
உன்னை கொஞ்சம் கேள்விங்கள்ளாம் கேப்பேன் அதுக்கெல்லாம் நீ பதில் சொல்லணும்
அதுக்கோசரம் எனக்கு ஒண்ணும் தெரியாதுன்னு நினைச்சுக்காதே எல்லாம் தெரியும்
தெரிஞ்சாலும் சிலதெல்லாம் கேட்டுத்தான் தெரிஞ்சுக்கணும்
இந்த வார்த்தைகளை கேட்டு இரண்டு கையிலும் டீயையும் பீடியையும் ஏந்தி இருந்த சீடன்
அவனை கரங்கூப்பி வணங்க முடியாமல் பார்வையாலும் முகபாவத்தாலும் தன் பணிவை
காட்டினான்
நீ யாரு எந்த ஊரு பேரு என்ன எங்கே வந்தே நான்தான் குருன்னு
எப்படி தெரிஞ்சது டீ ஆறி போச்சில்லே குடு என்று டீயை வாங்கி
குடித்து கொண்டே சீடன் சொல்கிற பதிலை மெத்தனமாக தலையை ஆட்டியவாறே கேட்டான்
குருவே நான் ஒரு அனாதை அதோ இருக்கிறதே முருகன் கோயில் அங்கே
இருக்குது அங்கே தண்ணி எறைச்சு கொண்டு வர்ற வேலை மடப்பள்ளியிலே இருக்கிற ஐயிரு
மூணு வேளையும் சாப்பாடு போட்டு செலவுக்கு நாலணா தினம் குடுக்கிறாரு எனக்கு
வாழ்க்கை வெறுத்து போச்சு இந்த வாழ்க்கைக்கு அர்த்தமில்லேன்னு தெரிஞ்சும்
உடம்பை சுமந்துகிட்டு திரியற சுமையை தாங்க முடியலே துன்பத்துக்கெல்லாம்
பற்று தான் காரணம்னு எல்லாரும் சொல்றாங்க எனக்கு ஒரு வித பற்றும் இல்லே
ஆனாலும் நான் துன்பப்படறேன் என்ன வழியிலே மீட்சின்னு எனக்கு தெரியலே நேத்து
என் கனவிலே நீங்க பிரசன்னமாகி இந்த சத்திரந்தான் குருபீடம் அங்கே வா ன்னு
எனக்கு கட்டளை இட்டீங்க குருவே நீங்க இதெல்லாம் கேட்கிறதனாலே சொல்றேன் தாங்கள்
அறியாததா விடியற்காலையிலேருந்து சந்நிதானத்திலே காத்துக்கிட்டிருந்தேன் என்
பாக்கியம் தங்கள் கடாட்சம் கிட்டியது
ம்ம் என்று மீசையை நெருடிக்கொண்டே அவன் கூறுவதை கேட்ட குரு காலியான
தம்ளரை அவனிடம் நீட்டினான்
சீடன் டீக்கடையில் காலி தம்ளரை கொடுக்க போனான் கடவுள் இந்த பயலை நன்றாக
சோதிக்கிறார் என்று நினைத்து அவனுக்காக அனுதாபப்பட்டு சிரித்தான் குரு ம்
அதனால் நமக்கென்ன நமக்கு ஒரு சிஷ்யன் கிடைத்திருக்கிறான் என்று
திருப்திப்பட்டு கொண்டான்
சீடன் வந்தபிறகு அவன் பெயரை கேட்டான் குரு பதில் சொல்வதற்குள் தனக்கு
தெரிந்த பல பெயர்களை கற்பனை செய்த குரு திடீரென சிரித்தான் இவன் கூறுமுன்
இவனது பெயரைத்தான் சொல்ல முடிந்தால் இந்த நாடகத்தில் அது எவ்வளவு அற்புதமான லீலையாக
அமையும் என்று நினைத்தே அவன் சிரித்தான் அந்த சிரிப்பினால் சீடன் பதில் சொல்ல
சற்று தயங்கி நின்றான்
அப்போது குருசொன்னான் பேரு என்னான்னு ஒரு கேள்வி கேட்டா ஒவ்வொருத்தனும்
ஒவ்வொரு பதில் சொல்றான் பாத்தியா ஒரு கேள்விக்கு எம்மாம் என்று ஏதோ
தத்துவ விசாரம் செய்கிற மாதிரி பிதற்றினான் சீடன் அதை கேட்டு மகா ஞானவாசகம்
மாதிரி வியந்தான்
சரி உன் பேரு என்னான்னு நீ சொல்ல வேண்டாம் நான் குரு சிஷ்யன்
பேரு குரு உனக்கு ஠ஷ்யன் நீதான் என்னை குருவே ன்னு
ஆரம்பிச்சுட்டே நானும் உன்னை சிஷ்யா ன்னு கூப்பிடறேன் என்னா
சரிதானா என்று பேசிக்கொண்டே இருந்தான் குரு
எல்லாமே ஒரு பெயர்தானா என்று அந்த பேச்சிலும் எதையோ புரிந்துகொண்ட சீடனின்
விழிகள் பளபளத்தன
நான் என்ன இப்படியெல்லாம் பேசுகிறேன் என்று குரு தன்னையே எண்ணி திடீரென
வியந்தான் இப்படியே அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர்
மத்தியானமும் இரவும் அந்த சீடன் மடப்பள்ளியிலிருந்து தனக்கு கிடைக்கிற
புளியோதிரை சர்க்கரை பொங்கல் ஆகியவற்றை பயபக்தியுடனும் அன்போடும் கொண்டுவந்து
இந்த குருவுக்கு படைத்தான் அவ்வளவு ருசியும் மணமும் புனிதமும் அன்பும்
உபசரணையும் உடைய அமிர்தத்தை இவன் ஜென்மத்தில் ருசி பார்த்ததில்லை ஆவல் மிகுதியால்
தனது நடிப்பைக்கூட மறந்து அவற்றை அள்ளி இவன் உண்பதை அன்பு கனி பார்த்து
கொண்டிருந்தான் சீடன்
குருவுக்கு எதனாலோ கண்கள் கலங்கின சீடன் தண்ணீரை எடுத்து கொடுத்தான்
மறுநாள் காலை அதே மாதிரி திண்ணைக்கு கீழே வந்து காத்து நின்றிருந்தான் சீடன்
அவனுக்கு டீயும் பீடியும் வாங்கி வந்தான் குருவை அழைத்துக்கொண்டு ஆற்றங்கரைக்கு
போய் அவனது ஆடைகளை துவைத்து கொடுத்தான் அவனை குளிக்க வைத்து அழைத்து
வந்தான்
உச்சியில் வெயில் வருகிற வரை குருவுக்கு பசி எடுக்கும்வரை அவர்கள் ஆற்றில்
நீந்தி குளித்தார்கள்
குளிக்கிறது சொகமாகத்தான் இருக்கு ஆனா குளிச்சி என்னா பிரயோசனம் குளிக்க
குளிக்க அளுக்கு சேந்துக்கிட்டுத்தானே இருக்கு அது அப்படித்தான் பசிக்குது
திங்கறோம் அப்புறமும் பசிக்கத்தானே செய்யிது குளிக்க அளுக்காகும்
அளுக்கு ஆக குளிக்கணும் பசிக்க பசிக்க திங்கணும் திங்க திங்க
பசிக்கும் என்ன வேடிக்கை என்று சொல்லிவிட்டு குரு சிரித்தான் சிரித்து
கொண்டே இருக்கும் போது என்ன இது நான் இப்படியெல்லாம் பேசுகறேன் என்று எண்ணி
பயந்துபோ சட்டென நிறுத்தி கொண்டான்
சீடன் கை கட்டிக்கொண்டு இவன் சொல்வதை கேட்டான்
ஃஃஃ
அன்றும் அதற்கு மறுதினமும் அதன் பிறகு ஒவ்வொரு நாளும் இதே மாதிரி காலையில் டீயும்
பீடியும் வாங்கி தந்து குளிப்பாட்டி மத்தியானம் உணவு படைத்து அவனை தனிமையில்
விடாமலும் அவன் தெருவில் அலையாமலும் இந்த சீடன் எப்போதும் கூடவே இருந்தான்
அவன் பேசுகிற எல்லா வார்த்தைகளிலும் அவனே புதிதாக புரிந்து கொள்ளுகிற மாதிரி
பலவிதமான அர்த்தங்கள் கண்டு இந்த சீடன் புளகாங்கிதம் அடைவதை சந்தைக்கு வருகிற
சிலர் சத்திரத்து திண்ணையில் ஓய்வுக்காக தங்கி இளைப்பாறும்போது வேடிக்கை
பார்த்தார்கள்
சிலர் குருவை அடையாளம் கண்டு கொண்டு இவன் யாரோ ஒரு சித்தன் என்று அப்போதே
நினைத்ததாகவும் அப்படிப்பட்டவர்கள் இப்படியெல்லாம் கந்தலுடுத்தி அழுக்கு சுமந்து
எச்சில் பொறுக்கி திரிவார்கள் என்றும் தன்னை பற்றி இவனுக்கு தெரியாத ஒன்றை
தெரிவித்தார்கள் அதை தெரிந்து கொள்வதற்கே ஒருவருக்கு பக்குவம் வேண்டுமென்றும்
அந்த பக்குவம் இந்த சீடனுக்கு இருப்பதாகவும் கூறி சீடனை புகழ்ந்தார்கள்
அதில் சிலர் இப்படியெல்லாம் தெரியாமல் இந்த சித்த புருஷனை ஏசி
விரட்டியடித்ததற்காக இப்போது பயமடைந்து இவனிடம் மானசீகமாவும் கீழே விழுந்து
பணிந்தும் மன்னிப்பு வேண்டினார்கள்
இந்த ஒரு சீடனை தவிர குருவுக்கு பக்தர்கள் நாள்தோறும் பெருக ஆரம்பித்தார்கள்
சந்தைக்கு வருகிற வியாபாரிகளும் மற்றவர்களும் இவனை வேடிக்கை பார்த்து நின்றுவிட்டு
இவனுக்கு டீயும் பீடியும் பழங்களும் வாங்கி தந்தார்கள்
இவன் அவற்றை சாப்பிடுகிற அழகையும் தோலை வீசி எறிகிற லாவகத்தையும் பீடி
குடிக்கிற ஒய்யாரத்தையும் விழி திறந்து பார்க்கிற கொலத்தையும் மூடி
பாராமலிருக்கிற பாவத்தையும் அவர்கள் புகழ்ந்தும் வியந்தும் பேசினார்கள்
குருவுக்கு முதலில் இது வசதியாகவும் சந்தோஷமாகவும் பின்னர் ஒன்றும் புரியாமலும்
புதிராகவும் இருந்து கொஞ்ச நாட்களில் எல்லாம் புரியவும் புதிர்கள் விடுபடவும்
தொடங்கின
ஒரு நாள் இரவு குருவுக்கு தூக்கம் வரவில்லை அவன் எது பற்றியோ யோசித்து
கொண்டிருந்தான் அதாவது அந்த சிஷ்யனோடு பேசுகிற மாதிரி தனக்குள்ளே
பேசிக்கொண்டிருந்தான்
அவன் நட்சத்திரங்களை பற்றியும் தான் இந்த உலகத்தில் வருவதற்கு முன்னால் இருந்த
காலத்தை பற்றியும் மரணத்தை தனக்கு பின்னால் உள்ள காலங்களை
பற்றியும் எந்த முடிவிலும் மனம் நிற்க முடியாத விஷயங்களை பற்றியெல்லாம்
யோசித்தான்
அவன் தூங்காமலே கனவு மாதிரி ஏதோ ஒன்று கண்டான் அதில் தன் குரலோ சீடனின்
அல்லது சந்தையில் திரிகிற இவனை வணங்கி செல்கிற யாருடைய குரலோ மிகவும் தெளிவாக
பேசியதை கேட்டான்
உனக்கு சிஷ்யனாக வந்திருக்கிறானே அவன்தான் உண்மையிலே குரு வந்து
உனக்கு கற்று தந்திருக்கிறான் அப்போதுதான் நீ வசப்படுவாய் என்று தெரிந்து
சிஷ்யனாய் வந்திருக்கிறான் எந்த பீடத்திலே இருந்தால் என்ன எவன் கற்று
தருகிறானோ அவன் குரு கற்று கொள்கிறவன் சீடன் பரமசிவனின் மடி மீது
உட்கார்ந்துகொண்டு முருகன் அவனுக்கு கற்று தரவில்லையா அங்கே சீடனின் மடியே
குருபீடம் அவனை வணங்கு
பறவைகள் பாடி சிறகடித்து பறந்து சந்தை திடலின் மர செறிவில் குதூகலிக்கிற
காலைப்பொழுது புலர்கிற நேரத்தில் அதே மாதிரியான குதூகலத்துடன் கண் விழித்தெழுந்த
குரு சீடனை வணங்குவதற்கா காத்திருந்தான் மானசீகமாய் வணங்கினான் அவன்
வந்தவுடன் சாஷ்டாங்கமாய் அவன் பாதங்களில் தான் விழப்போவதை எண்ணி மெய்சிலிர்த்தான்
ஆனால் அந்த சிஷ்யன் வரவே இல்லை இந்த குரு அந்த மடப்பள்ளிக்கு தன்னை ரசவாதம்
செய்து மாற்றிவிட்ட சீடனை தேடி ஓடினான்
மடப்பள்ளியில் உள்ளவர்கள் இவனை வணங்கி வரவேற்று உட்காரவைத்து உபசரித்தார்கள்
குருவுக்கு அப்போது சீடனின் பெயர் தெரியாத குழப்பத்தால் என்னவென்று கேட்பது என்று
புரியாமல் என் சிஷ்யன் எங்கே என்று விசாரித்தான்
அவர்கள் விழித்தார்கள் குரு அடையாளம் சொன்னான் கடைசியில் ரொம்ப
அலட்சியமாக அவன் நேற்றே எங்கோ போய்விட்டானே என்றார்கள்
அவன்தான் நமக்கெல்லாம் குரு என்றான்
அப்படியா என்று அவர்கள் ஆச்சரியம் கொண்டனர்
அதுபற்றி அவனது வேதாந்தமான விளக்கத்தை அவர்கள் எதிர்பார்த்து நின்றனர் ஆனால்
இவன் ஒன்றும் பேசவில்லை அதன் பிறகு ஒன்றுமே எழுந்து நடந்தான்
சந்தை திடலிலும் ஊரின் தெருக்களிலும் சீடனாகி வந்த அந்த குருவை தேடி
திரிந்தான் இவன் சீடனை காணோம் சிரித்தான் தேடுவதை விட்டு விட்டான்
இப்போதெல்லாம் சந்தை திடலில் அழுக்கும் கந்தையும் உடுத்தி ஒவ்வொருவரிலும் எதையோ
தேடுவது மாதிரியான கூர்த்த பார்வையுடன் இவன் திரிந்து கொண்டிருக்கிறான் இவனை
யாரும் விரட்டுவதில்லை குழந்தைகள் இவனை பார்த்து சிரித்து விளையாடுகின்றன
பெண்களூம் ஆண்களும் இவனை வணங்கி இவனுக்கு எதையாவது வாங்கி தந்து அன்புடன்
உபசரிக்கிறார்கள்
அந்த சீடனிடம் என்ன கற்றானோ அதனை இவன் எல்லாரிடத்தும் எல்லாவற்றிலும் காண்கிற
மாதிரி நிறைவோடு சிரித்து சிரித்து திரிந்து கொண்டிருக்கிறான்
எழுதப்பட்ட காலம்
நன்றி குருபீடம் சிறுகதை தொகுப்பு ஜெயகாந்தன் ஏழாம் பதிப்பு
மீனாட்சி புத்தக நிலையம் மதுரை

உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
டீக்கடை சாமியாரும் டிராக்டர்
வேதகிரி முதலியார் தபால் பார்த்து வருவதற்காக பஸ்ஸை எதிர்நோக்கி போகிறார் காலை
வெயில் சுரீர் என்று அடிக்கிறது வீதியில் ஒரு நிழல் இல்லை இன்னும் கொஞ்ச நாழியில்
தெரு மண் பழுக்கிற மாதிரி காய ஆரம்பித்துவிடும் இது ஒன்றும் கோடை இல்லை என்றாலும்
அப்படி ஒரு வெயில் தெருவில் பக்கம் மட்டும் ஓர் ஆள் ஒண்டி நடக்கிற அகலத்துக்கு
நிழல் சில உயரமான வீடுகளின் ஓரத்தில் கொஞ்சம் நின்று இன்னொருவரோடு பேசுவதற்கு ஏற்ற
அகலமான நிழல் சில வீட்டின் முன்னால் எச்சில் இலை கிடக்கிறது தெருவில் நடமாட்டமே
இல்லை பகலிலேயே இந்த அமைதி தூரத்தில் செக்கு ஆடுகிற சத்தம் ஙொய் யென்று
ரீங்காரம் செய்தாலும் கிராமத்து அமைதிக்கு அது சுருதியே தவிர பங்கம் இல்லை அதே
மாதிரி குடியான தெருவில் மாக்கு மா கென்று நெல்லோ மாவோ இடிக்கிற சத்தம் பூமி
அதிர்கிற மாதிரி கேட்கிறது
அதிலும் அமைதி கெடவில்லை எதிரே ஆள் வராவிட்டாலும் இந்த நிழலில் போட்டிக்கு ஒரு
நாய் வருகிறது சாதாரண கிராமத்து நாட்டு நாய்தான் ஊர் வழக்கப்படி அதை சொன்னால்
இப்போதெல்லாம் சண்டைக்கு வந்துவிடுகிறார்கள் பறை பள்ளூ என்கிற வார்த்தைகள்
மனசால் கூட தீண்டப்படாததாக மாறிவிட்ட பிறகு நாயைக்கூட அப்படி பட்டம் கட்டி
அழைக்க முடிவதில்லை ஆனால் இது சரியான ஹரிஜன பகுதி நாய்தான் நிழலை
மறித்துக்கொண்டு அது நிற்கிறது நிச்சயம் வழிவிட்டு விலகாது விலக போவதில்லை
என்கிற தீர்மானம் அதன் திடீரென உயர்ந்த காதுகளிலும் உம்மென்று வயிற்றுக்குள்
அடங்கி ஒலிக்கும் பொருமலிலும் தெரிகிறது காரணம் நடுவில் இலை கிடப்பதுதான்
அப்போதுதான் நினைத்தார் வேதகிரி முதலியார் பொறப்படும் போதே அந்த கெழம்
அம்மாதான் சொல்லிச்சு குடையை எடுத்துக்கிட்டு போடா வெயில்
கொளுத்துதுன்னு
பட்டணத்திலிருந்து கிராமத்துக்கு வந்திருக்கும் இந்த மூன்று மாத காலமாக வேதகிரி
முதலியார் வெளியே போவதற்கு புறப்படுகிற போதெல்லாம் அவரது தாயார் செல்லத்தம்மாள்
குடை எடுத்து செல்லுமாறும் வெயிலின் கொடுமை குறித்தும் ஒரு பாட்டு
பாடாமலிருப்பதே இல்லை சில சமயங்களில் அவளே கொண்டு வந்து அவரிடம் கொடுப்பாள்
இருப்பத்தஞ்சு வருஷத்துக்கு முன்பு திருக்கோவிலூருக்கு திருவிழாவுக்கு போனபோது
ஆறு ரூபாய்க்கு தான் அந்த குடையை வாங்கினதையும் அதற்கு பிறகு ஐந்து
வருஷத்துக்கு முன்னால் ஒரு கம்பியும் புதிசாக மேலே வெள்ளை துணியும் போட்டு
தைப்பதற்கு தான் மூணு ரூபாய் செலவழித்ததையும் குறைந்தது ஒரு பத்து தடவையாவது
இதுவரை சொல்லி இருப்பாள்
சரி நாய்க்கு பயந்து எத்தனை நாழி இப்படியே நிற்பது ஒன்று இவர் வெயிலை
பொருட்படுத்தாமல் ஒதுங்கி போக வேண்டும் அல்லது அதை விரட்டி விட்டு இவர் தன்
வழியே தொடர்ந்து நடக்க வேண்டும் இரண்டையும் செய்யாமல் இவர் நின்றிருந்தால் அதுவும்
நின்றிருக்குமா என்ன அதுவோ நாய் அதுவும் காய்ந்து வரண்ட சேரி எதிரே இலை
இவர் விரட்டமாட்டார் தயங்குகிறார் பயப்படுகிறார் என்று தெரிந்ததும் அது இவரை
விரட்டுகிற தோரணையில் கொஞ்சம் குரலெடுத்து லேசாக பற்களை வெளிக்காட்டி
உர்ரென்கிறது
வேதகிரி முதலியாருக்கு நிஜமாகவே உதறல் மிகுந்த மரியாதையோடு பத்து அடி நிழலிருந்து
விலகி வீதியின் நடுவே வெயிலில் வந்து அரைவட்டமாக ஒதுங்கி நாயை கடந்து மீண்டும்
நிழலில் ஏறி நடந்தார் தான் நாய்க்கு பயந்து இப்படி வந்ததை யாரும்
பார்த்திருப்பார்களோ என்று திரும்பி பார்த்தார் ம்ஹீம் யாருமில்லை அந்த
நாய்கூட பார்க்கவில்லை பார்த்தால் என்ன பட்டணத்துக்காரன் நாயை கண்டு
பயப்படறான் என்று பரிகாசம் பண்ணுவார்களே என்கிற பயம் வேதகிரி முதலியாருக்கு
அதிலும் அந்த சுப்பராம ஐயர் இருக்கிறாரே சமயத்தில் அவர் பண்ணுகிற பரிகாசத்தில்
முதலியாருக்கு கோபம் கூட வந்துவிடுகிறது கோபத்தை காட்டி கொண்டால் இன்னும்
மானக்கேடாக போகும் அவரோடு சேர்ந்து கொண்டு முதலியாரின் தாயாரும் சிரிக்கிறாள்
யோசித்து பார்த்தால் கிராமத்து மனிதர்கள் பார்த்து சிரிக்கிற மாதிரிதான்
இருக்கிறது பட்டணத்து பழக்கங்கள் என்று முதலியாரின் மனசுக்கு புரிகிறது
இருந்தாலும் பழக்கம் எளிதில் போகிறதா
கிராமத்துக்கு வந்து இந்த மூன்று மாதமாக முதலியார் சட்டையே போடவில்லை அவருடைய
புஷ் ஷர்ட்டுகளூம் ஸ்லாக்குகளூம் கிராமத்து பெரிய மனிதர்கள் கொஞ்சம்
மரியாதையை எதிர்பார்க்கிற வயதுடையவர்கள் போடுகிற பாஷனாக இல்லை அதுமட்டுமில்லாமல்
ஷர போட வேண்டிய அவசியமும் அவருக்கு இங்கே நேரவில்லை
காலையில் எழுந்து குளத்திலோ கிணற்றடியிலோ குளிக்கிற போது இவர் பிரஷால் பல்
விளக்குவதையே பக்கத்து வீட்டு வேலியோரமாய் நின்று குழந்தைகள் வேடிக்கை
பார்க்கிறார்கள் அந்த ஒரு பழக்கத்தை மட்டும் இவரால் விட முடியவில்லை ஒருநாள்
பல்பொடி போட்டு விரலால் தேய்த்து ஏற்பட்ட கொப்புளம் ஆறி தோல் உறிந்த வடு
இப்போதும் தெரிகிறது வெட்கக்கேட்டை எங்கே போ சொல்வது
வந்த நாளிலிருந்து ஒவ்வொரு நாளும் பட்டணத்திலிருந்து அவர் வருகையை கோரி வரும்
தனது மகனின் கடிதத்துக்காகத்தான் தினசரி வீட்டிலிருந்து ஒரு மைல் தூரத்தில்
கிராமத்துக்கு வடக்கே உள்ள டிரங்க்ரோடு வரை நடந்து வந்து காத்திருக்கிறார்
முதலியார் அங்கே தான் பஸ் வரும் ஒரு டீக்கடை இருக்கிறது பெரிய திண்ணை பஸ்ஸில்
தபாலும் பத்திரிகையும் வரும் நாள்தோறும் முதலியாருக்கு ஆங்கில தினசரியும்
மகனிடமிருந்து ஒரு கடிதமும் வரும்
அவருக்கு தினசரி கடிதம் வருவதை டீக்கடை சாமியாரும் தபால் ரங்கசாமியும் கேலியாக
புகழ்வார்கள் நல்லவேளை கடிதம் ஆங்கிலத்தில் எழுதப்படுவதால் இவர் இங்கே வந்து
சிக்கி கொண்டிருப்பதற்கான ரகசியம் இன்றுவரை அவர்கள் அறியாமல்
பாதுகாக்கப்பட்டிருக்கிறது இல்லாவிட்டால் இன்னொருவருக்கு வருகிற கடிதமாயிற்றே அதை
நாம் படிக்கலாகாது என்ன எழுதியிருக்கிறது கடிதத்தில் என்று அநாவசியமாக
துளை கூடாது என்கிற பட்டணத்து மிதப்பு எல்லாம் இவர்களுக்கு தெரியாது
ஒவ்வொரு நாளும் ஏதாவது கற்பனையான சமாசாரங்களை கடிதத்திலிருந்து மொழி பெயர்த்து
அவர்களை ஏமாற்றுவதற்குள் முதலியாருக்கு போதும் என்றாகிவிடும்
அவரும் எவ்வளவோ சொல்லி பார்த்தார் ஒண்ணும் முக்கியமான சமாசாரம் இல்லீங்க நான்
வரும்போது பையன்கிட்டே சொல்லிட்டு வந்தேன் தினம் எனக்கு ஒரு கடுதாசி எழுதி
போட்டுக்கிட்டு இருன்னு அதான் வேற ஒண்ணும் இல்லீங்க
ஆனால் அவர்கள் இவரை அவ்வளவு சுளுவில் விடுவதில்லை இருக்கட்டும் முதலியாரே
முக்கியமான விஷயமா இருந்துதான் தெரிஞ்சி நாங்க என்ன செ போகிறோம் தான்
எழுதி இருக்குதுன்னு சொல்லுங்க
அதிலும் டீக்கடை சாமியார் இருக்கிறாரே அவர் தான் மட்டுமில்லாமல் போகிற வருகிற
ஆட்களையெல்லாம் கூப்பிட்டு கூட்டமும் சேர்த்து கொள்ளுவார் சாமியார்
தஞ்சாவூர பக்கம் அவர் பேசுவதே பரிகாசம் போல் இருக்கும் ஏலே நின்னு
கேட்டுட்டு போலே பட்டணத்து சமாசாரம் நீங்க படிங்க மொதலியாரே அவுங்க
அப்படித்தான் பேசிக்கிறதே இங்கிலீசுதான் ஏங்க தம்பி பிஏ வா எம்ஏ
அப்போது மட்டும் வேதகிரி முதலியாருக்கு ஏக பெருமையா இருக்கும்
பிஏ என்பார்
சாமியார் குரலை அடக்கி கேட்பார்
மொதலியாரே எது பெரிசு எம்ஏ வா பிஏ
பெரிசு என்ன எல்லாம் ஒரு கழுதைதான் வேலை கெடச்சா மதிப்பு இந்த
படிப்புக்கு நான் அந்த காலத்து இன்டர்தான் இப்ப பிஏ படிச்சுட்டு எத்தினி
பேர் நம்மகிட்ட கிளார்க்காயிருக்கான் அதுகூட கிடைக்காமல் பாவம் எத்தினி
புள்ளைங்க கண்டக்டர் வேலை செய்யுதுங்க என்பார் முதலியார்
மொதலியாருக்கு பட்டணத்திலே என்னாங்க உத்தியோகம்
ஒரு வெள்ளைக்கார கம்பெனியிலே மானேஜர் உத்தியோகம்
இப்பவும் வெள்ளைக்காரங்க இருக்கிறாங்களா
கம்பெனிங்க இருக்குது
என்னா சம்பளங்க
இதெல்லாம் கேட்பது நாகரி குறைச்சல் என்று அவர்களுக்கு தெரியாது டீக்கடை
சாமியாருக்கு கொஞ்சம்கூட தெரியாது
எல்லாம் சேத்து ஆயிரத்து இருநூறு ரூபா
அடி சக்கைன்னானாம் என்று சாமியார் நாக்கை கடித்து துள்ளி குதிப்பார்
அதன் பிறகு முதலியார் இல்லாத சமயத்திலும் மற்றவர்களிடமும் பெருமையாக சொல்லுவார்
இங்க வந்து நம்ம கடை திண்ணையிலே உக்காந்து டீ குடிச்சிட்டு பேப்பர்
படிச்சிக்கிட்டு இருந்தாரே மொதலியாரு சாதாரண ஆளுன்னு நெனச்சிக்காதே
பட்டணத்திலே பெரிய ஆபிசரு பங்களா என்னா காரு பையன்களும் அதே மாதிரி
பெரிய படிப்பு படிச்சவங்க வீடே வெள்ளைக்காரங்க பாஷன்லேதான் சும்மா
சொந்த கிராமங்கிற பாசம் இப்படி வந்து சொக்காக்கூட போட்டுக்காம நம்ம டீக்கடையிலே
உக்காந்து இருக்கறதிலே ஒரு சந்தோஷம் மொதலியாருக்கு அவருக்கு எம்மாம் சம்பளம்
தெரியுமா சொல்லேன் பாப்பம் என்று தாடியை நிமிண்டி கொள்வார்
ஐந்நூறு ரூபா இருக்குங்குளா சாமி என்று பெருந்தொகையா கேட்பான் ஒருவன்
சாமியார் ஓவென்று சிரித்து அவனை முட்டாளாக்குவார் அடபோடா அறிவு கெட்ட இவனே
ஆயிரம் ரூபாடா ரூபா மாசம் கால் காணி நெலம் வாங்கலாம்
வாயை பொளக்கறே ஆயிர ரூபா பார்த்திருக்கியா நீ கலப்பெதான் பாத்திருப்பே
கலப்பே என்று சம்பந்தமில்லாமல் யாரையாவது சாக்கு வைத்து தன்னைத்தானே திட்டி
கொள்வார் சாமியார்
உத்தியோகத்துக்கும் சம்பாதனைக்கும்தான் சாமியார் கிட்டேகூட மதிப்புபோல இருக்கு
என்பார் முதலியார்
பின்ன என்னங்க இந்த சாமியார் பொழப்பு ஒரு பொழப்பா உத்தியோகம் சம்பாதனை
எதுவுமில்லாததனாலேதான் ஊருக்கு கெவுருவமா இந தாடி நம்ம மூஞ்சியெ
காப்பாத்துது தாடி வெச்சவனுக்கு உங்க பட்டண கரையிலே பிச்சைக்காரன்னு பேரு இங்கே
சாமியாருன்னு பேரு வவுறுன்னு ஒண்ணு இருக்குதுங்குளே சாமியார்னு வெச்சிக்கினு
காட்டுக்கா பூட்டோ ம் நமக்கும் அஸ்கா போட்ட டீ வேணும்னுதே சாப்பிடுங்க என்று
பேசிக்கொண்டே கண்ணாடி கிளாஸ்களில் டீயை ஊற்றி எல்லோருக்கும் தந்து முதலியாருக்கு
மட்டும் தகதகவென்று விளக்கிய வட்டா செட்டில் டீ கொண்டு வந்து வைப்பார்
ஆமா மொதலியாரே ஆயிரமும் இரண்டாயிரமுமா சம்பாதிச்சுக்கிட்டு மகன் நீங்க
இருக்கிறீங்க வயசான காலத்திலே உங்கள் தாயார் மட்டும் ஏன் இங்கே கெடந்து
அவதிப்படணும் இப்ப பாத்துக்கற சுப்பராம ஐயரு அப்ப மட்டும் வெவசாயத்தை
பாத்துக்க மாட்டாரா இதுமாதிரி சில நாட்களுக்கு முன் சாமியார் ஏதோ சொல்லும் போது
பக்கத்தில் நின்றிருந்த சுப்பராம ஐயர் திடீர் என்று ஒரு குண்டை தூக்கி
போட்டார்
ஓய் சாமியாரே நான் மட்டும் எவ்வளவு நாளைக்கு ஐயா காட்டையும் மேட்டையும் கட்டிண்டு
நிப்பேன் என் பையன் அவளையும் அழைச்சுண்டு டில்லிக்கே வந்துட சொல்லி ஒவ்வொரு
தடவையும் எழுதறான் நம்ப கோரை வாய்க்கால் கரை நஞ்சைக்கும் நல்லாந்தோப்புக்கும்
யாராவது நல்ல விலை குடுத்தா நாளை ரயிலுக்கே ஏறிடுவேன் நீர்தான் பாருமே
இருபதினாயிர ரூபா ஜாடா எல்லா அய்ட்டத்தையும் இப்பவே குடுத்துடறேன்
இந்தாங்க ஐயரே யாரும் ஆளு இல்லேன்னு நீங்க பாட்டுக்கு பேசிக்கிட்டே
போறீங்களே நானே இருபதினாயிரத்துக்கு உங்க சொத்துக்களையும் வாங்கிட்டு பேசாம
கிராமத்திலேயே டிக்கானா போட்டாலும் போட்டுடுவேன் என்று சொல்லி வைத்தார்
முதலியார்
நான் இப்பவே ரெடி சாமியாரே நீர் சாட்சி என்று கையடித்து சொன்னார் சுப்புராம
ஐயர்
என்னாங்க மொதலியாரே எதாவது நடக்கிற காரியமா பேசுங்க ஐயரு வேற யாருக்காவது தன்
நிலத்தை குடுத்துட்டு போனாவே உங்க நிலத்தெ பாத்துக்க ஆள் வேணும் இந்த
லெச்சணத்திலே அவுரோட நிலத்தெயும் நீங்களே வாங்கிக்கினு ஆயிரரூபா உத்தியோகத்தையும்
உட்டுட்டு இந்த கிராமத்திலே நெரந்தரமா நீங்க இருக்க போறீங்களாக்கும் என்று
சிரித்தார் சாமியார்
தான் கிராமத்துக்கு வந்து இந்த மூன்று மாதமாய் அடைந்து கிடக்கிற ரகசியம் தெரியாத
சாமியாரை நினைத்து முதலியார் சிரித்து கொண்டார்
விஷயத்தை சொன்னால் சாமியார் மூச்சடைத்து செத்து போகமாட்டாரோ
வேதகிரி முதலியாருக்கு வேலை போய்விட்டது இப்போது உத்தியோகம் இல்லை ஆறு
மாசமாயிற்று மேலிடத்தில் என்னமோ காரணம் கூறி திடீரென இவருக்கு சேரவேண்டிய தொகை
இருபதினாயிரம் ரூபாயை கையிலே கொடுத்து வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள்
முதலில் இந்த செய்தியை முதலியார் தன் மனைவியின் காதில் மட்டும் தான் போட்டு
வைத்தார் அவள் அப்படியே இடிந்து போனாள் பிறகுதான் முதலியாருக்கு சமாதானம்
கூறினாள்
இப்ப என்ன கெட்டு போச்சு விடுங்க இதுவே பத்து வருஷத்துக்கு முன்னேன்னா ரொம்ப
கஷ்டப்பட்டு போயிருப்போம் இப்பதான் பெரியவனும் சம்பாதிக்கிறான் பொண்ணுக்கு
கல்யாணம் பண்ணியாச்சு சின்னவங்க ரெண்டு பேருக்கும் இந்த வருஷம் காலேஜ் படிப்பை
பல்லை கடிச்சிக்கிட்டு முடிச்சுட்டோ ம்னா நம்ப கவலை விட்டது என்று எவ்வளவோ
கூறினாள் அவர் மனைவி மங்களம்
எத்தனை பிள்ளைகள் சம்பாதிச்சாலும் அவனவன் சம்பாதிக்கிற வரைக்கும் தான் அவனுக்கும்
அவன் பெண்டாட்டிக்கும் மதிப்பு இருக்கும் என்று அவர் மனமொடிந்து போனார்
தனக்கு வேலை போய்விட்ட செய்தியையும் அதனால் ஏற்பட்ட வருத்தத்தையும் அவர் மனைவியிடம்
மட்டும் ஒரு ரகசியம் போல் சொல்லி வைத்திருந்தார்
ஆனாலும் மறுநாளிலிருந்து முதலியாரை போனிலும் நேரிலும் துக்கம் விசாரிக்கும்
நண்பர்களின் தொல்லையால் அவரது பிள்ளைகளூக்கும் விஷயம் தெரிந்துவிட்டது சில பேர்
வீட்டுக்கு வந்து ஏதோ வேதகிரி முதலியாரை வேலை நீக்கம் செய்த அந்த முதலாளிமார்களே
இந்த வீட்டில் இருப்பதாக பாவித்து கொண்டு வென்று கூக்குரலிட்டனர்
இது என்னங்க நியாயம் கேள்வி முறை கிடையாதா இதை நீங்க சும்மா விடக்கூடாது
சட்டவிரோதமானது நோட்டீஸ் விடுங்க என்றெல்லாம் யோசனை கூறினார்கள்
ஆமாம்பா அதெ செய்யலாம் சும்மா விட கூடாது என்று முதலியாரின் பெரிய மகனும்
அப்பாவுக்கு அனுசரணையாக பேசினான்
வீட்டில் எல்லோருமே அவரவர்கள் சந்தோஷங்களை கூட அப்பாவுக்கு வேலை இல்லை என்ற
காரணத்தை நினைத்து விலக்கி வைத்தனர்
வீட்டில் நல்ல சாப்பாடுகூட சமைப்பதற்கு மங்களத்துக்கு நாட்டமில்லை என்ன வேண்டி
கிடக்கு அவருக்கோ வேலை இல்லை
ரேடியோவை சின்னவன் திருப்பினால் பெரியவன் வந்து நிறுத்திவிட்டு ரகசியமா
சொல்லுவான் ஸ் போடா அப்பா பாவம் வேலை போச்சேன்னு
வருத்தப்பட்டுக்கிட்டிருக்கிறார் மியூசி என்ன
உள்ளூரிலேயே இருக்கிற பெண்ணை வீட்டுக்கு அழைப்பதற்குக்கூட அப்பாவுக்கு வேலை இல்லை
என்கிற காரணம் தடுத்துவிட்டது
நூறு ரூபாய் சம்பளத்துக்கு பத்து வருஷமாய் இவர்கள் வீட்டில் எல்லா வேலையும் செய்த
டிரைவர் லோகநாதனையும் நிறுத்தியாகி விட்டது
நோயில் படுத்து விட்டவனை வந்து பார்த்து செல்வது மாதிரி தினசரி மாலை நேரங்களில்
ஆபீஸ் ஊழியர்கள் கோஷ்டி கோஷ்டியாக வந்து பார்க்கலாயினர்
வீட்டில் சும்மா இருக்க முடியாமலும் தேக ஆரோக்கியம் கருதியும் அவர் தோட்ட வேலை
செய்ய ஆரம்பித்தார் இரண்டு நாட்களில் தோட்டக்காரனும் நின்று விட்டான்
காம்பவுண்டுக்குள் காய்கறிகளும் பூச்செடிகளும் காய்த்து பூக்கிற சீஸன் ஆனபடியால்
அக்கம்பக்கத்திலுள்ள பெண்கள் வழக்கமாக எட்டணா பத்தணாவுக்கு தோட்டக்காரனிடம் பேரம்
பேசி பூ வாங்கி செல்கிற மாதிரி இப்போதும் வந்தனர் அவர்களிடம் தமாஷாகவும் பொழுது
போக்காகவும் பேரம் பேசி பூ விற்க ஆரம்பித்த முதலியாரை தாங்கொணா வறுமையின் கொடுமையாக
பார்ப்பவர்கள் சிந்திக்க ஆரம்பித்தனர் அவர் மனைவி தலை குனிவாக போகிறது
உங்களுக்கு என்ன இப்படி புத்தி என்று ஒரு நாள் அழுதாள் அப்பாவுக்கு வேலை
போனதிலிருந்து தாழ்வு மனப்பான்மை வந்துவிட்டது புத்தியே கெட்டு போய்விட்டது
என்று பிள்ளைகள் தலையிலடித்து கொண்டு பின்னால் வருத்தமாகவும் கேலியாகவும் பேச
ஆரம்பித்தனர்
வேதகிரி முதலியாருக்கு இந்த சூழ்நிலையில்தான் பயித்தியம் பிடித்துவிடும்போல்
வேதனைகள் பிடுங்கின
கடைசியில்தான் முடிவு செய்தார் பேசாமல் கிராமத்துக்கு போய் அம்மாவோடு கொஞ்சநாள்
இருந்து விட்டு வருவது என்று அதற்குள் ஏதாவது செய்து அப்பாவுக்கு அந்த வேலையையே
மீண்டும் வாங்கி தருவதோ அல்லது வேறு வேலை பார்ப்பதோ தன் பொறுப்பு என்று பெரிய
மகன் வாக்குறுதி தந்தான் அவர் கிராமத்துக்கு வந்து சேர்ந்தார் வருஷத்துக்கு
ஒருமுறை எப்போதாவது காரில் குடும்ப சகிதமா காலையில் வந்து தாயாரை பார்த்து
மாலையில் போனதை தவிர சென்னைக்கு போன இந்த முப்பது ஆண்டுகளில் ஒரு தடவை கூட
இங்கு வந்து இரா தங்கியதில்லை அவர் அதற்குள்ளாக மனைவி மங்களம் கிராமம்
போரடிக்கிறது என்று முணுமுணுக்க ஆரம்பித்து விடுவாள்
செல்லத்தம்மாள் கிராமத்தின் எல்லையை தாண்டி காலடி வைப்பதே அபூர்வம்
பட்டணத்துக்கு வந்து ஒரு பத்து நாளைக்கி இருக்க அழைத்தால் கூட அவள் சம்மதிக்க
மாட்டாள் இந்த எண்பது வயதில் ஒற்றை தனி மனுஷியாக அந்த வீட்டில் வாழ்ந்து எல்லா
காரியங்களையும் நிர்வகித்து வருகிற அம்மாவை உடன் இருந்து பார்க்க பார்க்க
வேதகிரிக்கு ஆச்சரியமாக இருக்கிறது
அவள் பொழுது விடியுமுன் எழுந்திருக்கிறாள் பச்சை தண்ணீரில் குளிக்கிறாள்
பழையதும் தயிரும் சாப்பிடுகிறாள் கண்ணாடியில்லாமல் அரிசியில் கல் பொறுக்குகிறாள்
நாள் முழுவதும் வேலை செய்கிறாள் அவளை பார்த்து தன் மனைவியையும் நினைப்பார்
அவளுக்கு ஆஸ்த்துமா பச்சை தண்ணீரை நினைத்தாலே உதறல் உட்கார்ந்த இடத்தில்
காய்கறி நறுக்கி சமையல்காரிக்கு கொடுப்பதற்குள் இடுப்பு போய்விடுகிறதாம்
மாதத்துக்கு இரண்டு தடவை டாக்டர் வர வேண்டும் மூன்று வேளையும் மருந்து டானி
கண்ணாடி இல்லாமல் பூசணிக்காய் கூட தெரியாது மன நிம்மதிக்காக சினிமா சங்கீதம்
எல்லாம் வேண்டும் தாயோடு மனைவியை ஒத்திட்டு பார்த்தால் தன் மனைவிக்கு
பிறகுகூட இவள் இருப்பாள் போல் தோன்றுகிறது அவருக்கு
தனக்கு வேலை போய்விட்ட சமாசாரத்தை அவர் தாயிடம் கூட சொல்லவில்லை சும்மா ரெண்டு
மாசம் லீவு போட்டு விட்டு கிராமத்தில் தங்க வேண்டும் என்கிற விருப்பத்தில்
வந்திருப்பதாகத்தான் கூறினார் அதை கேட்டு கிழவிக்கு சந்தோஷம் தாங்க
முடியவில்லை தன் மகன் வந்து தன்னோடு தங்கியிருக்கிற செய்தியை ஊர் முழுதும்
தமுக்கடித்து விட்டாள் டவுனுக்கு போய் காப்பி கொட்டை வாங்கி வர சொல்லி
தினசரி மகனுக்கா காப்பி வேறு போடுகிறாள் மத்தியானத்தில் வகை வகையான டிபன்
செய்கிறாள்
வேதகிரி முதலியாருக்குத்தான் பொழுதே போகவில்லை காலையில் காப்பி சாப்பிட்டபின்
தபால் பார்க்கிற சாக்கில் புறப்பட்டு சாமியார் டீக்கடைக்கு வந்து மத்தியானம்
வரைக்கும் பேப்பர் படித்து கொண்டு இருப்பார் மத்தியானம் சாப்பாட்டுக்கு பின்
தூங்கி எழுந்து கடிதம் எழுதுவார் சாயங்காலம் சுப்பராம ஐயருடன் தோப்பு துரவு
சுற்றுவார் மாலையில் தாயாருடன் உட்கார்ந்து கொண்டு பழைய கதைகளை பேசுவார்
தப்பி தவறி கூட வேலை போய்விட்ட சமாச்சாரம் வாயில் வந்துவிடாதபடி ஜாக்கிரதையாக
இருப்பார்
அவர் வந்திருக்கும் இந்த சீஸனில் கிராமத்திலேயே வேலை இல்லை அடுத்த மாதம் தான் உழவு
தொடங்கும் அதற்கு பிறகு சில மாதங்கள் நல்ல வேலை இருக்குமாம் இப்போதும் கூட
சில நாட்களில் தென்னந்தோப்பில் காய் பறிப்பும் வாழைத்தார் விலை பேசலும் வேலைகள்
நடக்கிறது முதலியாருக்கு அதுபற்றிய விவரங்கள் தெரியாததால் சுப்பராம ஐயருடன்
அப்பரண்டிஸ் மாதிரி வந்து நின்று கவனிப்பார்
முதலியாருக்கு சில சமயங்களில் வாழ்க்கை ரொம்ப நிறைவாக இருக்கிறது தன் வீட்டில்
நிலத்தில் விளைந்த அரிசியும் தோட்டத்து காயை சாப்பிடுவதும் சுத்தமான காற்றை
சுவாசிப்பதும் சுதந்திரமாக இருக்கிறது இந்த நிறைவில் தான் தன் தாய் கவலையற்று
எண்பது வருஷ சுமையோடு இவ்வளவு நிறைவுடன் இங்கே இருக்கிறாள் என்றும் தோன்றுகிறது
முப்பது வருஷத்தில் ஊர் கொஞ்சம் மாறி இருப்பது உண்மைதான் எலெக்ட்ரிஸிடி
வந்திருக்கிறது சில வீடுகளில் ரேடியோ பாடுகிறது பம்ப்செ தண்ணீர் இறைக்கிறது
பண்ணை வேலை செய்கிற சில பேர் சட்டை போட்டுக்கொண்டு கண்ணில் தென்படுகிறார்கள் ஊரில்
ஒரு ஹைஸ்கூல் ஏற்பட்டு இருக்கிறது பெண் குழந்தைகள் அதிகம் படிக்கின்றன பட்டணத்து
நாகரிகம் சில வாத்திமார் உருவில் பஸ்ஸில் வந்து இறங்கி ஏறி செல்கிறது
ஆனாலும் உலகம் ஓடுகிற வேகத்தில் அதன் கையை பிடித்து கொள்ள தவறி அநாதையாய்
நின்றுவிட்ட மாதிரிதான் இந்த கிராமம் இன்னமும் இருக்கிறது
அதோ தபால் வருகிற பஸ் வந்துவிட்டது வேதகிரி முதலியார் கொஞ்சம் நடையை எட்டி
போட்டு தார் ரோட்டில் ஏறினார் செருப்பில் மண்டியிருந்த புழுதியை போக்குவதற்காக
பாதங்களை தட்டென்று இரண்டு முறை தார் ரோட்டில் மிதித்தார் புழுதி பறந்தது
முதலியார் ஐயா நமஸ்காரம் என்று டீக்கடை சாமியாரின் குரல் ஒலித்தது
ரங்கசாமி தபால்களை சரிபார்த்து அடுக்கி கொண்டே திரும்பி ஐயா வாங்க என்று
வரவேற்றான்
பஸ் பிரயாணிகளை ஏற்றி கொண்டு போயிற்று
பஸ்ஸில் இருந்து இறங்கியவர்கள் அஞ்சாறு பேர் அதில் மூணு இரண்டு ஆண்களும்
ஒரு பெண்ணுமான ஹைஸ்கூல் டீச்சர்கள் ஊருக்குள் போகிற மண்சாலையில் இறங்கி நடந்தனர்
ரங்கசாமி தந்த கடிதத்தையும் பத்திரிகையையும் வாங்கி முதலில் கடிதத்தை பிரித்தார்
முதலியார்
பிள்ளை இன்னிக்கு என்ன எழுதியிருக்கார் படியுங்க என்று பாய்லரிலிருந்து
டிக்காஷனுக்காக கொதிக்கிற தண்ணீரை திறந்து பிடித்த சாமியார்
இருங்க அதோ ஐயர் வராரு வாங்க ஐயிரே நமஸ்காரம் என்று மீண்டும் கூவினார்
முதலியார் கடிதத்தை ஒருமுறை மனசுக்குள் தாம் மட்டும் படித்து கொண்டார்
அப்போதுதானே கற்பனை மொழி பெயர்ப்புக்கு வசதி
கடிதத்தை படிக்கும்போது முதலியாரின் முகத்தில் ஏற்படுகிற மாற்றத்தை மூவரும்
கவனித்தனர்
என்னமோ முக்கிய சமாசாரம்போல எனக்கு தோணுது என்றார் சாமியார்
ஒண்ணும் முக்கியம் இல்லே நாளைக்கி எல்லோருமாய் பொறப்பட்டு காரிலேயே
வராங்களாம் உடனே நானும் அவங்களோட பொறப்படணுமாம் வேலை கெடச்சுட்டுதாம் என்று
உளறிய பின் அதற்காக நாக்கை கடிந்து கொண்டார் முதலியார்
வேலை கெடச்சிருக்கா யாருக்கு என்று பிடித்து கொண்டார் சாமியார் முதலியார்
பாவம் ஒரு விநாடி திக்குமுக்காடி போனார் கடைசியில் ஒருவாறாக சமாளித்தார்
நம்ப கடைசி பயல் ஒரு இடத்தில் ஏதோ மனு எழுதி போட்டான் அது கெடச்சிருக்கும்
போல இருக்கு
அப்படியா சந்தோஷம் அந தம்பியும் வருதுங்களா என்றார் சாமியார்
அவன் எப்படிங்காணும் வருவான் அவனுக்குத்தான் வேலை கெடைச்சிருக்கு இல்லே என்று
அகாரணமாய் அவர்மீது எரிந்து விழுந்தார் சுப்பராம ஐயர்
மொதலியாரே வாரும் போகலாம் போயி பெரியம்மா கிட்டே விஷயத்தை சொன்னாத்தான்
நாளைக்கே பொறப்படறதுக்கு ஏற்பாடு பண்ணுவாங்க என்று முதலியாரை இழுத்தார் ஐயர்
அவங்க என்ன ஏற்பாடு பண்ண இருக்கு என்று தயங்கினார் முதலியார்
உமக்கு ஒண்ணும் தெரியாது சரியான பட்டணம் நீர் மூணு மாசம் வந்து தங்கி
இருக்கீர் நாளைக்கு வீட்லே எல்லாரும் வரா உங்களை எல்லாரையும் பெரியம்மா வெறுங்
கையோட அனுப்பிச்சுடுவாளா ரெண்டு முறுக்கு பிழிஞ்சு குடுத்தனுப்புவா இப்பவே
போ சொன்னாதான் நனைச்சு வைப்பா வாரும்
மொதலியார் ஐயா இப்பவே சொல்லிட்டேன் பட்டணத்துக்கு போயி எனக்கு ஏதாவது ஒரு
பியூன் வேலை பார்த்து குடுங்கோ தாடியெ எடுத்திட்டு ஓடி வந்துடறேன் என்று
சிரிப்பிடையே கூவி சொன்னார் சாமியார்
டிடிடிடிடிடிடிடிடிடிடிடி
காலையிலே இருந்து வேதகிரி முதலியார் வீட்டின் முன் அந்த கறுப்பு கார்
நின்றிருந்தது கால் சராயும் ஷர்ட்டும் அணிந்து கண்ணாடியுடன் நின்றிருக்கும்
முதலியாரின் மூத்த மகனை தெரு சிறுவர்கள் வேடிக்கையாக பார்த்து
சிரிக்கிறார்கள்
உள்ளே கூடத்தில் மாமியாருக்காக வாங்கி வந்திருக்கும் புடவையையும் ஒரு கம்பளி
போர்வையையும் எடுத்து பிரித்து காண்பித்து கொண்டிருக்கிறாள் முதலியாரின்
மனைவி மங்களம்
இரு இதோ வந்துட்டேன் உலை கொதிச்சிருக்கும் என்று கிழவி எழுந்தபோது மங்களம்
இடைமறிக்கிறாள்
இன்னிக்கு ஒரு நாள் நீங்க இருங்க நான் பாத்துக்கறேன்
கிழவி சிரிக்கிறாள் ஐய என் அருமை மருமகளே போதும் இன்னிக்கு ஒரு
நாளுன்னு ஜாக்கிரதையா சொல்லிக்கறியே ஒரு நாளைக்கு நீ செய்தால் போதுமா மீதி
நாளைக்கு யார் செய்யறதாம் நீயே இருந்து எப்பவும் பார்த்துக்கறதானா உன் அதிகாரத்தை
நான் பறிக்கல்லே ஒரு நாளுன்னா வேண்டாண்டி அம்மா பாத்துக்கறேன் என்று
விளையாட்டாகவும் காரியமாகவும் சொல்லி கொண்டே எழுந்து போகிறாள் செல்லத்தம்மாள்
என்ன அம்மா சொல்றமாதிரி இங்கேயே இருந்துடலாமா என்று கண்களை சிமிட்டியவாறு
மங்களத்தை கேட்கிறார் வேதகிரி
ஐயோடி என்னாலே ஆகாதம்மா என்கிறாள் மங்களம்
வேதகிரி விஷமமா சிரித்து கொள்கிறார்
அப்போது உள்ளே வந்த அவரது மகன் சொன்னான்
ரெண்டு மணி நேரத்துக்கு மேலே தொரைகிட்டே நான் விவாதம் பண்ணினேன் கொஞ்சத்திலே அவன்
மசியல்லே அப்பா என்னென்னமோ சொன்னான் ஒரு மாசத்துக்கு மேலே இழுத்தடிச்சான் ஆனா
எனக்கு தெரியும் ஹி வில் ரீகன்ஸிடர்னு
வேதகிரி மெளனமாக பெருமூச்செறிந்தார்
அப்போது சுப்பராம ஐயர் வந்தார் நமஸ்காரம் அம்மா செளக்கியமா என்று
மங்களத்தம்மாளை விசாரித்தவாறே அங்கிருந்த பெஞ்சில் உட்கார்ந்தார் மங்களத்தம்மாள்
எழுந்து நின்று கொண்டாள்
உடனே பொறப்படணும்னு எழுதி இருந்தேள் எப்பவோ வர்றவா ரெண்டு நாளு இருந்துட்டு
போக படாதோ
இல்லே அப்பாவுக்கு வேலை இருக்கு என்றான் பையன்
ஆமா பட்டணத்திலே இருக்கிறவங்க எல்லாரும் வேலை இருக்கறவங்க இங்கே கிராமத்திலே
இருக்கறவங்க எல்லாம் சும்மா வேலையத்து இருக்கிறவங்க என்ன ஐயரே அப்படித்தானே
அதனாலே தான் நீங்களும் போக போறீங்க இல்லே
எல்லாரும் முதலியாரை பார்த்தனர் முதலியார் சொன்னார்
நான் இனிமே இங்கேதான் இருக்க போறேன் கண்டவன் காலிலேயும் விழற மாதிரி
பல்லிளிச்சி நிக்கிற உத்யோக பெருமை போதும் எனக்கு அது வேணாம் அந்த ஆயிரம்
ரூபாய்க்கு இங்கே சம்பாதிக்கிற நூறு ரூபாய் சமம் ஐயரே இன்னிக்கே
இருபதினாயிரம் தர்றேன் உம்ம கோரை வாய்க்கால்கரை நஞ்சையையும் நல்லாந்தோப்பையும்
என் பேருக்கு கிரயம் பண்ணி வச்சிடும் இனிமே எனக்கு இங்கே நிறைய வேலை இருக்கு
அது முதலியாரே என்று இழுத்தார் ஐயர்
அதெல்லாம் சொல்லப்படாது சாமியார் சாட்சி என்று முதலியார் சொல்லி
கொண்டிருக்கும்போது அம்மா நமஸ்காரம் செளக்கியமா என்று கேட்டவாறே படியேறி
கொண்டிருந்தார் டீக்கடை சாமியார் அவர் கையில் ஒரு சீப்பு பேயன் பழம் இருந்தது
சாமியாரே நீர் சாட்சி என்று முதலியார் சொன்னதும் சாமியார் சிரித்தார் பிறகு
முதலியாரே சொன்னார்
நிச்சயம் சுப்பராம ஐயர் வாக்கு தவற மாட்டார் அவர் இன்னும் பட்டணவாசி ஆகலியே
இப்போதெல்லாம் டீக்கடை சாமியார் ஆயிரம் ரூபாய் தருகிற உத்தியோகத்தையும்
பெண்டாட்டி பிள்ளைகளையும் பட்டணவாசத்தையும் உதறிவிட்டு தாய்க்கு உதவியாக கிராம
வாசத்தை தேர்ந்தெடுத்து சட்டை கூட அணியாமல் டிராக்டர் வைத்து உழுது விவசாயம்
பார்க்கிற வேதகிரி முதலியாரை டிராக்டர் சாமியார் என்று அழைத்து சிரித்து
கொண்டிருக்கிறார்
எழுதப்பட்ட காலம்
நன்றி குருபீடம் சிறுகதை தொகுப்பு ஜெயகாந்தன் ஏழாம் பதிப்பு
மீனாட்சி புத்தக நிலையம் மதுரை

உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
நிக்கி
செம்படவ குப்பம் இரண்டு நாளாக மழை வேறு ஒரே சகதி ஈரம்
ஒரு தாழ்ந்த குடிசையின் பின்புறம் இரண்டு குடிசைகளின் நடுவேயுள்ள இடைவெளியில்
அவ்விரு கூரைகளின் ஓலைகளும் அந்த இடத்தில் சேர்ந்து ஒரு கூரையாகி சிறு
திட்டில் ஈரம் படாமல் காய்ந்த மிருதுவான புழுதி மண்ணை குவித்து நடுவில் குழி
பரத்தியது போன்ற இடத்தில் இரண்டு நாட்கள்வரை ஐந்து நாய்க்குட்டிகளை பிரசவித்த ஒரு
குப்பத்து நாய் மடியை தரையில் தேய்த்து கொண்டு தாய்மை பெருமிதத்துடன் பாரா
கொடுத்து தன் குட்டிகளை பாதுகாவல் செய்தவாறு கிடந்தும் திரிந்தும் அலைந்து
கொண்டிருந்தது காலையிலிருந்து காணோம்
இனிமேல் அந்த நாய் வராது என்று செய்தியை குப்பத்துச்சிறுவன் ஒருவன் எல்லோருக்கும்
அறிவித்தான்
ஐஸவுஸாண்டே பஸ்லே அடிபட்டு அந்த நாய் கூய் கூயா பூட்ச்சி
இந்த அறிவிப்புக்கு பிறகு குப்பத்து சிறுவர்கள் தைரியமாக குட்டிகளை தேடி
வந்தனர் ஆளுக்கு ஒரு குட்டியை எடுத்து கொண்டபின் கடைசியாக ஒன்றைமட்டும்
எல்லோரும் நிராதரவாக விட்டு போய்விட்டார்கள் அதன் நிறம் கறுப்பு இரண்டு
காதுகளிலும் வாலிலும் மட்டும் வெள்ளை திட்டுக்கள் சீ அது பொட்டடா என்று அதனை
அவர்கள் ஜாதிப்பிரஷ்டம் செய்வதுபோல் விட்டு சென்றனர்
அந்த பெட்டை நாய்க்குட்டி ஒரு புழுமாதிரி நாளெல்லாம் சிணுங்கியவாறு புழுதியிலும்
சகதியிலும் நெளிந்து ஊர்ந்து கொண்டிருந்தது கண்ணை திறந்து முதல் முறையாக உலகை
பார்த்தது பசியால் சிணுங்கி சிணுங்கி அழுதது தான் கவனிக்க யாருமில்லாத அநாதை
நாய் என்று புரிந்து கொண்டுவிட்டது மாதிரி நடக்கக்கூட பயிலாத அந்த நாய்க்குட்டி
கால்களை தரையில் இழுத்து நடை பழகியபோதே தனது ஜீவித யாத்திரையை
மேற்கொண்டது அந தாழ்ந்த இரண்டு குடிசைகளின் நடுவே இருந்து வெளியே வந்து ஈரமும்
சகதியுமான குப்பத்து தெருவில் அது புரண்டு நடந்த காட்சியை சிறுவர்கள்
கூடி ரசித்தனர்
அது தனக்கு ஓர் எஜமானனை அவர்கள் மத்தியில் யாசிப்பது மாதிரி அவலமாக அழுதது
அவர்களூம் அதற்கு பரிதாபப்பட்டனர் ஒரு குடிசையின் திண்ணையில் புகலிடம்
தந்து கஞ்சி தண்ணீர் சோறு டீ என்று படிப்படியாக தங்களின் தரித்திரத்தை
அதற்கும் அறிமுகம் காட்டினர்
இரண்டு நாட்களுக்கு பிறகு சிறுவர்களுக்கு இந்த நாய் விளையாட்டு சலித்து
போயிற்று அந்த குடிசைக்கு சொந்தக்காரி இந்த நாயை கண்டு அதன் மீது பூசி
கிடக்கும் சேறும் சகதியும் அதற்கே சொந்தம் போன்றும் அது அந திண்ணையின் மூலையை
அசுத்தப்படுத்துகிறது என்றும் கோபித்து விளக்குமாற்றால் குப்பையை கூட்ட வந்தவள்
நாயையும் சேர்த்து கூட்டி திண்ணையிலிருந்து தெருவுக்கு தள்ளினாள் அது கத்தி
அலறியவாறு தலைகீழாக புரண்டு திண்ணையிலிருந்து தெருவில் வீசி விழுந்தது
விழுந்த வேகத்தில் வசமாக அடிபட்டது நாய்க்குட்டி பெருங்குரலில் அழுதவாறு புரண்டு
எழுந்து ஒரு காலை மட்டும் நொண்டி இழுத்தவாறு தனது பயணத்தை தொடர்ந்தது
கொஞ்ச தூரம் நடந்ததும் கத்துவதை நிறுத்தி கொண்டு விதியை நொந்துகொண்டு போவது
மாதிரி மெளனமாய் காலை இழுத்து கொள்ளாமல் கொஞ்சம் சரியாகவே நடக்க ஆரம்பித்தது
பயந்து குடிசை மண் சுவரை ஆதாரமா கொண்டு நடந்து குப்பத்தின் எல்லைக்கும்
மெயின் ரோட்டுக்கும் குறுக்கே உள்ள நாற்ற சாக்கடை பாலத்தருகே வந்து விட்டது
அதற்கு மேல் திசை புரியாமல் அரை நாள் யோசனையில் அங்கேயே கிடந்து உறங்கி விழித்து
கத்தி குரல் தேய்ந்த பிறகு தைரியமாக பாலத்தை கடந்து மெயின்
ரோட்டுக்கு வந்தது
பெரிய கட்டிடங்கள் நிறைந்த வீதி ராட்சஸத்தனமா பஸ்களும் லாரிகளூம்
ஓடிக்கொண்டிருக்கின்றன ஜன சந்தடி மிகுந்திருக்கிறது அந்த சின்ன பெட்டை நாய்
தைரியமாக வீதியின் குறுக்கே நடந்தது இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தில் மனிதன் என்ன
சாகசங்களை எவ்வளவு ஆர்வத்தோடு நடத்தி காட்டுகிறான் இந்த நாய் இந தெருவில்
நடக்கக்கூட கூடாதா என்ன நடந்தது
ஒரு மாடி பஸ் வந்தது அந்த டிரைவர் நல்ல மனுஷன் இந்த சிறிய நாய்க்காக பெரிய
பஸ்ஸையே சில விநாடி நிறுத்தினான் அது குறுக்கே நடந்து போனபிறகு எவ்வளவு சின்ன
நாய் அடிகிடிபட்டு சாகப்போகுது நமக்கு ஏன் அந்த பாவம் என்று அதற்காக விசனம்
கொண்டவன் மாதிரி அதைப்பார்த்து கொண்டே அந்த பெரிய பஸ்ஸை திருப்பினான
நாய் ரோட்டை கடந்துவிட்டது பிறகு எங்கே போவது எங்காவது போகவேண்டியதுதானே
போயிற்று
மெயின் ரோட்டை கடந்து குப்பம் மாதிரி இல்லாத ஆனால் குப்பத்து தெரு போன்றதேயான
ஒரு குறுகிய தெருவில் நடக்கையில் அதன் எதிரே இலை வந்து விழுந்தது
விழுந்ததும் அதற்காக பாய்ந்தோடுவதற்கான அநுபவமோ அறிவோ அதற்கு இன்னும் வராததனால்
பொ தென்ற சத்தத்துக்கு பயந்து பின்னால் பதுங்கியது அது பதுங்கியதோ
பிழைத்ததோ
ஒரு பெரிய நாய் அந்த இலையை நோக்கி நாலு கால்