நாலாயிர திவ்வி பிரபந்தம் பாடல்கள்
திருப்பல்லாண்டு பெரியாழ்வார் திருமொழிகளின் தனியன்கள்
நாதமுனிகள் அருளி செய்தது

குருமுக மனதீத்ய ப்ராக வேதானசேஷான்
நரபதிபரிக்லுப்தம் சூல்கமாதாதுகாமக
ச்வசுரமமரவந்த்யம் ரங்கனாதச்ய சாக்ஷா
த்விஜகுலதிலகம் தம் விஷ்ணுசித்தம் நமாமி
பாண்டிய பட்டர் அருளி செய்தவை
இருவிகற்ப நேரிசை வெண்பா
மின்னார்தடமதிள்சூழ் வில்லிபுத்தூரென்று ஒருகால்
சொன்னார்கழற்கமலம்சூடினோம் முன்னாள்
கிழியறுத்தானென்றுரைத்தோம் கீழ்மையினிற்சேரும்
வழியறுத்தோம் நெஞ்சமே வந்து
பாண்டியன்கொண்டாட பட்டர்பிரான்வந்தானென்று
ஈண்டியசங்கமெடுத்தூத வேண்டிய
வேதங்களோதி விரைந்துகிழியறுத்தான்
பாதங்கள்யாமுடையபற்று
பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ
ஸ்ரீமதே ராமாநுஜாய நம
பெரியாழ்வார் அருளிச்செய்த
திருப்பல்லாண்டு
காப்பு
குறள்வெண்செந்துறை

பல்லாண்டுபல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடிநூறாயிரம்
மல்லாண்டதிண்தோள்மணிவண்ணா உன்
செவ்வடிசெவ்விதிருக்காப்பு
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

அடியோமோடும்நின்னோடும் பிரிவின்றிஆயிரம்பல்லாண்டு
வடிவாய்நின்வலமார்பினில் வாழ்கின்றமங்கையும்பல்லாண்டு
வடிவார்சோதிவலத்துறையும் சுடராழியும்பல்லாண்டு
படைபோர்புக்குமுழங்கும் அப்பாஞ்சசன்னியமும்பல்லாண்டே

வாழாட்பட்டுநின்றீருள்ளீரேல் வந்துமண்ணும்மணமும்கொண்மின்
கூழாட்பட்டுநின்றீர்களை எங்கள்குழுவினில்புகுதலொட்டோ ம்
ஏழாட்காலும்பழிப்பிலோம்நாங்கள் இராக்கதர்வாழ்இலங்கை
பாழாளாகப்படைபொருதானுக்கு பல்லாண்டுகூறுதமே

ஏடுநிலத்தில்இடுவதன்முன்னம்வந்து எங்கள்குழாம்புகுந்து
கூடுமனமுடையீர்கள் வரம்பொழிவந்துஒல்லைக்கூடுமினோ
நாடும்நகரமும்நன்கறிய நமோநாராயணாயவென்று
பாடுமனமுடைப்பத்தருள்ளீர் வந்துபல்லாண்டுகூறுமினே

அண்டக்குலத்துக்கதிபதியாகி அசுரரிராக்கதரை
இண்டைக்குலத்தைஎடுத்துக்களைந்த இருடீகேசன்தனக்கு
தொண்டக்குலத்திலுள்ளீர் வந்தடிதொழுது ஆயிரநாமம்சொல்லி
பண்டைக்குலத்தைத்தவிர்ந்து பல்லாண்டுபல்லாயிரத்தாண்டென்மினே

எந்தைதந்தைதந்தைதந்தைதம்மூத்தப்பன் ஏழ்படிகால்தொடங்கி
வந்துவழிவழிஆட்செய்கின்றோம் திருவோணத்திருவிழவில்
அந்தியம்போதிலரியுருவாகி அரியையழித்தவனை
பந்தனைதீரப்பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்றுபாடுதமே

தீயிற்பொலிகின்றசெஞ்சுடராழி திகழ்திருச்சக்கரத்தின்
கோயிற்பொறியாலேஒற்றுண்டுநின்று குடிகுடிஆட்செய்கின்றோம்
மாயப்பொருபடைவாணனை ஆயிரந்தோளும்பொழிகுருதி
பாய சுழற்றியஆழிவல்லானுக்கு பல்லாண்டுகூறுதுமே

நெய்யிடைநல்லதோர்சோறும் நியதமும்அத்தாணிச்சேவகமும்
கையடைக்காயும்கழுத்துக்குப்பூணொடு காதுக்குக்குண்டலமும்
மெய்யிடநல்லதோர்சாந்தமும்தந்து என்னைவெள்ளுயிராக்கவல்ல
பையுடைநாகப்பகைக்கொடியானுக்கு பல்லாண்டுகூறுவனே

உடுத்துக்களைந்த நின்பீதகவாடையுடுத்து கலத்ததுண்டு
தொடுத்ததுழாய்மலர்சூடிக்களைந்தன சூடும்இத்தொண்டர்களோம்
விடுத்ததிசைக்கருமம்திருத்தி திருவோணத்திருவிழவில்
படுத்தபைந்நாகணைப்பள்ளிகொண்டானுக்கு பல்லாண்டுகூறுதுமே

எந்நாள்எம்பெருமான் உன்தனக்கடியோமென்றெழுத்துப்பட்ட
அந்நாளே அடியோங்களடிக்குடில் வீடுபெற்றுஉய்ந்ததுகாண்
செந்நாள்தோற்றி திருமதுரையுள்சிலைகுனித்து ஐந்தலைய
பைந்நாகத்தலைபாய்ந்தவனே உன்னைப்பல்லாண்டுகூறுதுமே

அல்வழக்கொன்றுமில்லா அணிகோட்டியர்கோன் அபிமானதுங்கன்
செல்வனைப்போல திருமாலே நானும்உனக்குப்பழவடியேன்
நல்வகையால்நமோநாராயணாவென்று நாமம்பலபரவி
பல்வகையாலும்பவித்திரனே உன்னைப்பல்லாண்டுகூறுவனே

பல்லாண்டென்றுபவித்திரனைப்பரமேட்டியை சார்ங்கமென்னும்
வில்லாண்டான்தன்னை வில்லிபுத்தூர்விட்டுசித்தன்விரும்பியசொல்
நல்லாண்டென்றுநவின்றுரைப்பார் நமோநாராயணாயவென்று
பல்லாண்டும்பரமாத்மனை சூழ்ந்திருந்தேத்துவர்பல்லாண்டே

பெரியாழ்வார் திருமொழி
முதற்பத்து
முதல் திருமொழி வண்ண மாடங்கள்
கண்ணன் திருவவதார சிறப்பு
கலிவிருத்தம்

வண்ணமாடங்கள்சூழ் திருக்கோட்டியூர்
கண்ணன்கேசவன் நம்பிபிறந்தினில்
எண்ணெய்சுண்ணம் எதிரெதிர்தூவிட
கண்ணன்முற்றம் கலந்துஅளராயிற்றே

ஓடுவார்விழுவார் உகந்தாலிப்பார்
நாடுவார்நம்பிரான் எங்குத்தானென்பார்
பாடுவார்களும் பல்பறைகொட்டநின்று
ஆடுவார்களும் ஆயிற்றுஆய்ப்பாடியே

பேணிச்சீருடை பிள்ளைபிறந்தினில்
காணத்தாம்புகுவார் புக்குப்போதுவார்
ஆணொப்பார் இவன்நேரில்லைகாண் திரு
வோணத்தா நுலகாளுமென்பார்களே

உறியைமுற்றத்து உருட்டிநின்றாடுவார்
நறுநெய்பால்தயிர் நன்றாகத்தூவுவார்
செறிமென்கூந்தல் அவிழத்திளைத்து எங்கும்
அறிவழிந்தனர் ஆய்ப்பாடியரே

கொண்டதாளுறி கோலக்கொடுமழு
தண்டினர் பறியோலைச்சயனத்தர்
விண்டமுல்லை யரும்பன்னபல்லினர்
அண்டர்மிண்டிப்புகுந்து நெய்யாடினார்

கையும்காலும்நிமிர்த்து கடாரநீர்
பையவாட்டி பசுஞ்சிறுமஞ்சளால்
ஐயநாவழித்தாளுக்கு அங்காந்திட
வையமேழும்கண்டாள் பிள்ளைவாயுளே

வாயுள்வையகம்கண்ட மடநல்லார்
ஆயர்புத்திரனல்லன் அருந்தெய்வம்
பாயசீருடை பண்புடைப்பாலகன்
மாயனென்று மகிழ்ந்தனர்மாதரே

பத்துநாளும்கடந்த இரண்டாநாள்
எத்திசையும் சயமரம்கோடித்து
மத்தமாமலை தாங்கியமைந்தனை
உத்தானம்செய்து உகந்தனர்ஆயரே

கிடக்கில் தொட்டில்கிழியஉதைத்திடும்
எடுத்துக்கொள்ளில் மருங்கையிறுத்திடும்
ஒடுக்கிப்புல்கில் உதரத்தேபாய்ந்திடும்
மிடுக்கிலாமையால் நான்மெலிந்தேன்நங்காய்

செந்நெலார்வயல்சூழ் திருக்கோட்டியூர்
மன்னுநாரணன் நம்பிபிறந்தமை
மின்னுநூல் விட்டுசித்தன்விரித்த
பன்னுபாடல்வல்லார்க்கு இல்லைபாவமே
இரண்டாம் திருமொழி சீதக்கடல்
கண்ணனது திருமேனியழகை பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்
வெண்டளையால் வந்த கலித்தாழிசை

சீதக்கடல் உள்ளமுதன்னதேவகி
கோதைக்குழலாள் அசோதைக்குப்போத்தந்த
பேதைக்குழவி பிடித்துச்சுவைத்துண்ணும்
பாதக்கமலங்கள் காணீரே
பவளவாயீர் வந்துகாணீரே

முத்தும்மணியும் வயிரமும்நன்பொன்னும்
தத்திப்பதித்து தலைப்பெய்தாற்போல் எங்கும்
பத்துவிரலும் மணிவண்ணன்பாதங்கள்
ஒத்திட்டிருந்தவா காணீரே
ஒண்ணுதலீர் வந்துகாணீரே

பணைத்தோளிளவாய்ச்சி பால்பாய்ந்தகொங்கை
அணைத்தாரஉண்டு கிடந்தஇப்பிள்ளை
இணைக்காலில் வெள்ளித்தளைநின்றிலங்கும்
கணைக்கால்இருந்தவாகாணீரே
காரிகையீர் வந்துகாணீரே

உழந்தாள்நறுநெய் ஓரோர்தடாவுண்ண
இழந்தாளெரிவினாலீர்த்து எழில்மத்தின்
பழந்தாம்பாலோச்ச பயத்தால்தவழ்ந்தான்
முழந்தாள்இருந்தவாகாணீரே
முகிழ்முலையீர் வந்துகாணீரே

பிறங்கியபேய்ச்சி முலைசுவைத்துண்டிட்டு
உறங்குவான்போலேகிடந்த இப்பிள்ளை
மறங்கொளிரணியன் மார்பைமுன்கீண்டான்
குறங்குவளைவந்துகாணீரே
குவிமுலையீர் வந்துகாணீரே

மத்தக்களிற்று வசுதேவர்தம்முடை
சித்தம்பிரியாத தேவகிதன்வயிற்றில்
அத்தத்தின்பத்தாநாள் தோன்றியஅச்சுதன்
முத்தமிருந்தவாகாணீரே
முகிழ்நகையீர் வந்துகாணீரே

இருங்கைமதகளிறு ஈர்க்கின்றவனை
பருங்கிப்பறித்துக்கொண்டு ஓடுபரமன்தன்
நெருங்குபவளமும் நேர்நாணும்முத்தும்
மருங்கும்இருந்தவாகாணீரே
வாணுதலீர் வந்துகாணீரே

வந்தமதலைக்குழாத்தை வலிசெய்து
தந்தக்களிறுபோல் தானேவிளையாடும்
நந்தன்மதலைக்கு நன்றுமழகிய
உந்திஇருந்தவாகாணீரே
ஒளியிழையீர் வந்துகாணீரே

அதிரும்கடல்நிறவண்ணனை ஆய்ச்சி
மதுரமுலையூட்டி வஞ்சித்துவைத்த
பதரப்படாமே பழந்தாம்பாலார்த்த
உதரம்இருந்தவா காணீரே
ஒளிவளையீர் வந்துகாணீரே

பெருமாவுரலில் பிணிப்புண்டிருந்து அங்கு
இருமாமருதம் இறுத்தஇப்பிள்ளை
குருமாமணிப்பூண் குலாவித்திகழும்
திருமார்புஇருந்தவாகாணீரே
சேயிழையீர் வந்துகாணீரே

நாள்களோர்நாலைந்து திங்களளவிலே
தாளைநிமிர்த்து சகடத்தைச்சாடிப்போய்
வாள்கொள்வளையெயிற்று ஆருயிர்வவ்வினான்
தோள்கள்இருந்தவாகாணீரே
சுரிகுழலீர் வந்துகாணீரே

மைத்தடங்கண்ணி யசோதைவளர்க்கின்ற
செய்த்தலைநீலநிறத்து சிறுப்பிள்ளை
நெய்த்தலைநேமியும் சங்கும்நிலாவிய
கைத்தலங்கள்வந்துகாணீரே
கனங்குழையீர் வந்துகாணீரே

வண்டமர்பூங்குழல் ஆய்ச்சிமகனா
கொண்டு வளர்க்கின்ற கோவலக்குட்டற்கு
அண்டமும்நாடும் அடங்கவிழுங்கிய
கண்டம்இருந்தவாகாணீரே
காரிகையீர் வந்துகாணீரே

எந்தொண்டைவாய்ச்சிங்கம் வாவென்றெடுத்துக்கொண்டு
அந்தொண்டைவாயமு தாதரித்து ஆய்ச்சியர்
தம்தொண்டைவாயால் தருக்கிப்பருகும்
செந்தொண்டைவாய்வந்துகாணீரே
சேயிழையீர் வந்துகாணீரே

நோக்கியசோதை நுணுக்கியமஞ்சளால்
நாக்குவழித்து நீராட்டும்இந்நம்பிக்கு
வாக்கும்நயனமும் வாயும்முறுவலும்
மூக்கும்இருந்தவாகாணீரே
மொய்குழலீர் வந்துகாணீரே

விண்கொளமரர்கள் வேதனைதீர முன்
மண்கொள்வசுதேவர்தம் மகனாய்வந்து
திண்கொளசுரரை தேயவளர்கின்றான்
கண்கள்இருந்தவாகாணீரே
கனவளையீர் வந்துகாணீரே

பருவம்நிரம்பாமே பாரெல்லாம்உய்ய
திருவின்வடிவொக்கும் தேவகிபெற்ற
உருவுகரிய ஒளிமணிவண்ணன்
புருவம்இருந்தவாகாணீரே
பூண்முலையீர் வந்துகாணீரே

மண்ணும்மலையும் கடலும்உலகேழும்
உண்ணுந்திறத்து மகிழ்ந்துண்ணும்பிள்ளைக்கு
வண்ணமெழில்கொள் மகரக்குழையிவை
திண்ணம்இருந்தவாகாணீரே
சேயிழையீர் வந்துகாணீரே

முற்றிலும்தூதையும் முன்கைம்மேல்பூவையும்
சிற்றிலிழைத்து திரிதருவோர்களை
பற்றிப்பறித்துக்கொண்டு ஓடும்பரமன்தன்
நெற்றிஇருந்தவாகாணீரே
நேரிழையீர் வந்துகாணீரே

அழகியபைம்பொன்னின்கோல் அங்கைக்கொண்டு
கழல்கள்சதங்கை கலந்துஎங்குமார்ப்ப
மழகன்றினங்கள் மறித்துத்திரிவான்
குழல்கள்இருந்தவாகாணீரே
குவிமுலையீர் வந்துகாணீரே
தரவு கொச்சகக்கலிப்பா

சுருப்பார்குழலி யசோதைமுன்சொன்ன
திருப்பாதகேசத்தை தென்புதுவைப்பட்டன்
விருப்பாலுரைத்த இருபதோடொன்றும்
உரைப்பார்போய் வைகுந தொன்றுவர்தாமே
மூன்றாம் திருமொழி மாணிக்கம் கட்டி
கண்ணனை தொட்டிலிலிட்டு தாலாட்டுதல் தாலப்பருவம்
கலித்தாழிசை

மாணிக்கம்கட்டி வயிரம்இடைகட்டி
ஆணிப்பொன்னால்செய்த வண்ணச்சிறுத்தொட்டில்
பேணிஉனக்கு பிரமன்விடுதந்தான்
மாணிக்குறளனே தாலேலோ
வையமளந்தானே தாலேலோ

உடையார்கனமணியோடு ஒண் மாதுளம்பூ
இடைவிரவிக்கோத்த எழில் தெழ்கினோடு
விடையேறுகாபாலி ஈசன்விடுதந்தான்
உடையாய் அழேல்அழேல்தாலேலோ
உலகமளந்தானே தாலேலோ

என்தம்பிரானார் எழில்திருமார்வர்க்கு
சந்தமழகிய தாமரைத்தாளர்க்கு
இந்திரன்தானும் எழிலுடைக்கிண்கிணி
தந்துஉவனாய்நின்றான்தாலேலோ
தாமரைக்கண்ணனே தாலேலோ

சங்கின்வலம்புரியும் சேவடிக்கிண்கிணியும்
அங்கைச்சரிவளையும் நாணும்அரைத்தொடரும்
அங்கண்விசும்பில் அமரர்கள்போத்தந்தார்
செங்கண்கருமுகிலே தாலேலோ
தேவகிசிங்கமே தாலேலோ

எழிலார்திருமார்வுக்கு ஏற்குமிவையென்று
அழகியஐம்படையும் ஆரமும்கொண்டு
வழுவில்கொடையான் வயிச்சிரவணன்
தொழுதுஉவனாய்நின்றான்தாலேலோ
தூமணிவண்ணனே தாலேலோ

ஓதக்கடலின் ஒளிமுத்தினாரமும்
சாதிப்பவளமும் சந்தச்சரிவளையும்
மாதக்கவென்று வருணன்விடுதந்தான்
சோதிச்சுடர்முடியாய் தாலேலோ
சுந்தரத்தோளனே தாலேலோ

கானார்நறுந்துழாய் கைசெய்தகண்ணியும்
வானார்செழுஞ்சோலை கற்பகத்தின்வாசிகையும்
தேனார்மலர்மேல் திருமங்கைபோத்தந்தாள்
கோனே அழேல்அழேல்தாலேலோ
குடந்தைக்கிடந்தானே தாலேலோ

கச்சொடுபொற்சுரிகை காம்பு கனவளை
உச்சிமணிச்சுட்டி ஒண்தாள்நிரைப்பொற்பூ
அச்சுதனுக்கென்று அவனியாள்போத்தந்தாள்
நச்சுமுலையுண்டாய் தாலேலோ
நாராயணா அழேல்தாலேலோ

மெய்திமிரும்நானப்பொடியோடு மஞ்சளும்
செய்யதடங்கண்ணுக்கு அஞ்சனமும்சிந்துரமும்
வெய்யகலைப்பாகி கொண்டுஉவளாய்நின்றாள்
அய்யா அழேல்அழேல்தாலேலோ
அரங்கத்தணையானே தாலேலோ
தரவு கொச்ச கலிப்பா

வஞ்சனையால்வந்த பேய்ச்சிமுலையுண்ட
அஞ்சனவண்ணனை ஆய்ச்சிதாலாட்டிய
செஞ்சொல்மறையவர்சேர் புதுவைப்பட்டன்சொல்
எஞ்சாமைவல்லவர்க்கு இல்லைஇடர்தானே
நான்காம் திருமொழி தன் முகத்து
சந்திரனை அழைத்தல் அம்புலிப்பருவம்
கலிநிலைத்துறை

தன்முகத்துச்சுட்டி தூங்கத்தூங்கத்தவழ்ந்துபோய்
பொன்முகக்கிண்கிணியார புழுதியளைகின்றான்
என்மகன்கோவிந்தன்கூத்தினை இளமாமதீ
நின்முகம்கண்ணுளவாகில் நீஇங்கேநோக்கிப்போ

என்சிறுக்குட்டன் எனக்கோரின்னமுதுஎம்பிரான்
தன்சிறுக்கைகளால் காட்டிக்காட்டியழைக்கின்றான்
அஞ்சனவண்ணனோடு ஆடலாடஉறுதியேல்
மஞ்சில்மறையாதே மாமதீ மகிழ்ந்தோடிவா

சுற்றும்ஒளிவட்டம் சூழ்ந்துசோதிபரந்தெங்கும்
எத்தனைசெய்யினும் என்மகன்முகம்நேரொவ்வாய்
வித்தகன்வேங்கடவாணன் உன்னைவிளிக்கின்ற
கைத்தலம்நோவாமே அம்புலீ கடிதோடிவா

சக்கரக்கையன் தடங்கண்ணால்மலரவிழித்து
ஒக்கலைமேலிருந்து உன்னையேசுட்டிக்காட்டும்காண்
தக்கதறிதியேல் சந்திரா சலம்செய்யாதே
மக்கட்பெறாத மலடனல்லையேல்வாகண்டாய்

அழகியவாயில் அமுதவூறல்தெளிவுறா
மழலைமுற்றாதஇளஞ்சொல்லால் உன்னைக்கூவுகின்றான்
குழகன்சிரீதரன் கூவக்கூவநீபோதியேல்
புழையிலவாகாதே நின்செவிபுகர்மாமதீ

தண்டொடுசக்கரம் சார்ங்கமேந்தும்தடக்கையன்
கண்துயில்கொள்ளக்கருதி கொட்டாவிகொள்கின்றான்
உண்டமுலைப்பாலறாகண்டாய் உறங்காவிடில்
விண்தனில்மன்னிய மாமதீ விரைந்தோடிவா

பாலகனென்று பரிபவம்செய்யேல் பண்டொருநாள்
ஆலினிலைவளர்ந்த சிறுக்கனவன்இவன்
மேலெழப்பாய்ந்து பிடித்துக்கொள்ளும்வெகுளுமேல்
மாலைமதியாதே மாமதீ மகிழ்ந்தோடிவா

சிறியனென்றுஎன்னிளஞ்சிங்கத்தை இகழேல்கண்டாய்
சிறுமையின்வார்த்தையை மாவலியிடைச்சென்றுகேள்
சிறுமைப்பிழைகொள்ளில் நீயும்உன்தேவைக்குரியைகாண்
நிறைமதீ நெடுமால் விரைந்துஉன்னைக்கூவுகின்றான்

தாழியில்வெண்ணெய் தடங்கையாரவிழுங்கிய
பேழைவயிற்றெம்பிரான்கண்டாய் உன்னைக்கூவுகின்றான்
ஆழிகொண்டுஉன்னையெறியும் ஐயுறவில்லைகாண்
வாழவுறுதியேல் மாமதீ மகிழ்ந்தோடிவா

மைத்தடங்கண்ணி யசோதைதன்மகனுக்கு இவை
ஒத்தனசொல்லி உரைத்தமாற்றம் ஒளிபுத்தூர்
வித்தகன்விட்டுசித்தன் விரித்ததமிழிவை
எத்தனையும்சொல்லவல்லவர்க்கு இடரில்லையே
ஐந்தாம் திருமொழி உய்யவுலகு
தலையைநிமிர்த்து முகத்தை அசைத்து ஆடுதல் செங்கீரைப்பருவம்
எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

உய்யஉலகுபடைத்துண்டமணிவயிறா
ஊழிதோறூழிபலஆலினிலையதன்மேல்
பையஉயோகுதுயில்கொண்டபரம்பரனே
பங்கயநீள்நயனத்துஅஞ்சனமேனியனே
செய்யவள்நின்னகலம்சேமமெனக்கருதி
செல்வுபொலிமகரக்காதுதிகழ்ந்திலக
ஐய எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே ஆடுகஆடுகவே

கோளரியின்னுருவங்கொண்டுஅவுணனுடலம்
குருதிகுழம்பியெழக்கூருகிரால்குடைவாய்
மீளஅவன்மகனை மெய்ம்மைகொளக்கருதி
மேலையமரர்பதிமிக்குவெகுண்டுவர
காளநன்மேகமவைகல்லொடு கால்பொழி
கருதிவரைக்குடையாக்காலிகள்காப்பவனே
ஆள எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே ஆடுகஆடுகவே

நம்முடைநாயகனே நான்மறையின்பொருளே
நாவியுள்நற்கமலநான்முகனுக்கு ஒருகால்
தம்மனையானவனே தரணிதலமுழுதும்
தாரகையின்னுலகும்தடவிஅதன்புறமும்
விம்மவளர்ந்தவனே வேழமும்ஏழ்விடையும்
விரவியவேலைதனுள்வென்றுவருமவனே
அம்ம எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே ஆடுகஆடுகவே

வானவர்தாம்மகிழவன்சகடமுருள
வஞ்சமுலைப்பேயின் நஞ்சமதுஉண்டவனே
கானகவல்விளவின்காயுதிரக்கருதி
கன்றதுகொண்டெறியும்கருநிறஎன்கன்றே
தேனுகனும்முரனும்திண்திறல்வெந்நரகன்
என்பவர்தாம்மடியச்செருவதிரச்செல்லும்
ஆனை எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே ஆடுகஆடுகவே

மத்தளவும்தயிரும்வார்குழல்நன்மடவார்
வைத்தனநெய்களவால்வாரிவிழுங்கி ஒருங்கு
ஒத்தஇணைமருதம்உன்னியவந்தவரை
ஊருகரத்தினொடும்உந்தியவெந்திறலோய்
முத்தினிளமுறுவல்முற்றவருவதன்முன்
முன்னமுகத்தணியார்மொய்குழல்களலைய
அத்த எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே ஆடுகஆடுகவே

காயமலர்நிறவா கருமுகில்போலுருவா
கானகமாமடுவில்காளியனுச்சியிலே
தூயநடம்பயிலும்சுந்தரஎன்சிறுவா
துங்கமதக்கரியின்கொம்புபறித்தவனே
ஆயமறிந்துபொருவான்எதிர்வந்தமல்லை
அந்தரமின்றியழித்தாடியதாளிணையாய்
ஆய எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே ஆடுகஆடுகவே

துப்புடையயார்கள்தம்சொல்வழுவாதுஒருகால்
தூயகருங்குழல்நல்தோகைமயிலனைய
நப்பினைதன்திறமாநல்விடையேழவிய
நல்லதிறலுடையநாதனும்ஆனவனே
தப்பினபிள்ளைகளைத்தனமிகுசோதிபுக
தனியொருதேர்கடவித்தாயொடுகூட்டிய என்
அப்ப எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே ஆடுகஆடுகவே

உன்னையும்ஒக்கலையில்கொண்டுதமில்மருவி
உன்னொடுதங்கள்கருத்தாயினசெய்துவரும்
கன்னியரும்மகிழக்கண்டவர்கண்குளிர
கற்றவர்தெற்றிவரப்பெற்றஎனக்குஅருளி
மன்னுகுறுங்குடியாய் வெள்ளறையாய் மதிள்சூழ்
சோலைமலைக்கரசே கண்ணபுரத்தமுதே
என்னவலம்களைவாய் ஆடுகசெங்கீரை
ஏழுலகும்முடையாய் ஆடுகஆடுகவே

பாலொடுநெய்தயிர்ஒண்சாந்தொடுசண்பகமும்
பங்கயம்நல்லகருப்பூரமும்நாறிவர
கோலநறும்பவளச்செந்துவர்வாயினிடை
கோமளவெள்ளிமுளைப்போல்சிலபல்லிலக
நீலநிறத்தழகாரைம்படையின்நடுவே
நின்கனிவாயமுதம்இற்றுமுறிந்துவிழ
ஏலுமறைப்பொருளே ஆடுகசெங்கீரை
ஏழுலகும்முடையாய் ஆடுகஆடுகவே

செங்கமலக்கழலில்சிற்றிதழ்போல்விரலில்
சேர்திகழாழிகளும்கிண்கிணியும் அரையில்
தங்கியபொன்வடமும்தாளநன்மாதுளையின்
பூவொடுபொன்மணியும்மோதிரமும்கிறியும்
மங்கலஐம்படையும்தோல்வளையும்குழையும்
மகரமும்வாளிகளும்சுட்டியும்ஒத்திலக
எங்கள்குடிக்கரசே ஆடுகசெங்கீரை
ஏழுலகும்முடையாய் ஆடுகஆடுகவே

அன்னமும்மீனுருவும்ஆளரியும்குறளும்
ஆமையுமானவனே ஆயர்கள்நாயகனே
என்அவலம்களைவாய் ஆடுகசெங்கீரை
ஏழுலகும்முடையாய் ஆடுகவாடுகவென்று
அன்னநடைமடவாள்அசோதையுகந்தபரிசு
ஆனபுகழ்ப்புதுவைப்பட்டனுரைத்ததமிழ்
இன்னிசைமாலைகள்இப்பத்தும்வல்லார் உலகில்
எண்திசையும்புகழ்மிக்குஇன்பமதெய்துவரே
ஆறாம் திருமொழி மாணிக்கக்கிண்கிணி
கைகொட்டி விளையாடுதல் சப்பாணிப்பருவம்
வெண்டளையால் வந்த கலித்தாழிசை

மாணிக்கக்கிண்கிணியார்ப்ப மருங்கின்மேல்
ஆணிப்பொன்னால்செய்த ஆய்பொன்னுடைமணி
பேணிப்பவளவாய் முத்திலங்க பண்டு
காணிகொண்டகைகளால்சப்பாணி
கருங்குழல்குட்டனே சப்பாணி

பொன்னரைநாணொடு மாணிக்கக்கிண்கிணி
தன்னரையாட தனிச்சுட்டிதாழ்ந்தாட
என்னரைமேல்நின்றிழிந்து உங்களாயர்தம்
மன்னரைமேல்கொட்டாய்சப்பாணி
மாயவனே கொட்டாய்சப்பாணி

பன்மணிமுத்து இன்பவளம்பதித்தன்ன
என்மணிவண்ணன் இலங்குபொற்றேட்டின்மேல்
நின்மணிவாய்முத்திலங்க நின்னம்மைதன்
அம்மணிமேல்கொட்டாய்சப்பாணி
ஆழியங்கையனே சப்பாணி

தூநிலாமுற்றத்தே போந்துவிளையாட
வானிலாஅம்புலீ சந்திரா வாவென்று
நீநிலாநின்புகழாநின்ற ஆயர்தம்
கோநிலாவக்கொட்டாய்சப்பாணி
குடந்தைக்கிடந்தானே சப்பாணி

புட்டியில்சேறும் புழுதியும்கொண்டுவந்து
அட்டியமுக்கி அகம்புக்கறியாமே
சட்டித்தயிரும் தடாவினில்வெண்ணெயும்உண்
பட்டிக்கன்றே கொட்டாய்சப்பாணி
பற்பநாபா கொட்டாய்சப்பாணி

தாரித்துநூற்றுவர் தந்தைசொல்கொள்ளாது
போருத்துவந்து புகுந்தவர்மண்ணாள
பாரித்தமன்னர்பட பஞ்சவர்க்கு அன்று
தேருய்த்தகைகளால்சப்பாணி
தேவகிசிங்கமே சப்பானி

பரந்திட்டுநின்ற படுகடல் தன்னை
இரந்திட்டகைம்மேல் எறிதிரைமோத
கரந்திட்டுநின்ற கடலைக்கலங்க
சரந்தொட்டகைகளால்சப்பாணி
சார்ங்கவிற்கையனே சப்பாணி

குரக்கினத்தாலே குரைகடல்தன்னை
நெருக்கிஅணைகட்டி நீள்நீரிலங்கை
அரக்கர்அவிய அடுகணையாலே
நெருக்கியகைகளால்சப்பாணி
நேமியங்கையனே சப்பாணி

அளந்திட்டதூணை அவந்தட்ட ஆங்கே
வளர்ந்திட்டு வாளுகிர்ச்சிங்கவுருவாய்
உளந்தொட்டிரணியன் ஒண்மார்வகலம்
பிளந்திட்டகைகளால்சப்பாணி
பேய்முலையுண்டானே சப்பாணி

அடைந்திட்டுஅமரர்கள் ஆழ்கடல்தன்னை
மிடைந்திட்டு மந்தரம்மத்தாகநாட்டி
வடம்சுற்றிவாசுகி வன்கயிறாக
கடைந்திட்டகைகளால்சப்பாணி
கார்முகில்வண்ணனே சப்பாணி
தரவு கொச்சகக்கலிப்பா

ஆட்கொள்ளத்தோன்றிய ஆயர்தங்கோவினை
நாட்கமழ்பூம்பொழில் வில்லிபுத்தூர்ப்பட்டன்
வேட்கையால்சொன்ன சப்பாணிஈரைந்தும்
வேட்கையினால்சொல்லுவார் வினைபோமே
ஏழாம் திருமொழி தொடர்சங்கிலிகை
தளர் நடை நடத்தல் நடை
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

தொடர் சங்கிலிகைசலார்பிலாரென்ன தூங்குபொன்மணியொலிப்ப
படுமும்மதப்புனல்சோர வாரணம்பையநின்றுஊர்வதுபோல்
உடங்கூடிக்கிண்கிணியாரவாரிப்ப உடைமணிபறைகறங்க
தடந்தாளிணைகொண்டுசாரங்கபாணி தளர்நடைநடவானோ

செக்கரிடைநுனிக்கொம்பில்தோன்றும் சிறுபிறைமுளைபோல
நக்கசெந்துவர்வாய்த்திண்ணைமீதே நளிர்வெண்பல்முளையிலக
அக்குவடமுடுத்துஆமைத்தாலிபூண்ட அனந்தசயனன்
தக்கமாமணிவண்ணன்வாசுதேவன் தளர்நடைநடவானோ

மின்னுக்கொடியும்ஓர்வெண்திங்களும் சூழ்பரிவேடமுமாய்
பின்னல்துலங்கும்அரசிலையும் பீதகச்சிற்றாடையொடும்
மின்னில்பொலிந்ததோர்கார்முகில்போல கழுத்திணில்காறையொடும்
தன்னில்பொலிந்தஇருடீகேசன் தளர்நடைநடவானோ

கன்னற்குடம்திறந்தலொத்தூறி கணகணசிரித்துவந்து
முன்வந்துநின்றுமுத்தம்தரும் என்முகில்வண்ணன்திருமார்வன்
தன்னைப்பெற்றேற்குத்தன்வாயமுதம்தந்து என்னைத்தளிர்ப்பிக்கின்றான்
தன்னெற்றுமாற்றலர்தலைகள்மீதே தளர்நடைநடவானோ

முன்னலோர்வெள்ளிப்பெருமலைக்குட்டன் மொடுமொடுவிரைந்தோட
பின்னைத்தொடர்ந்ததோர்கருமலைக்குட்டன் பெயர்ந்தடியிடுவதுபோல்
பன்னியுலகம்பரவியோவா புகழ்ப்பலதேவனென்னும்
தன்நம்பியோடப்பின்கூடச்செல்வான் தளர்நடைநடவானோ

ஒருகாலில்சங்குஒருகாலில்சக்கரம் உள்ளடிபொறித்தமைந்த
இருகாலும்கொண்டுஅங்கங்குஎழுதினாற்போல் இலச்சினைபடநடந்து
பெருகாநின்றஇன்பவெள்ளத்தின்மேல் பின்னையும்பெய்துபெய்து
கருகார்க்கடல்வண்ணன்காமர்தாதை தளர்நடைநடவானோ

படர்பங்கயமலர்வாய்நெகிழ பனிபடுசிறுதுளிபோல்
இடங்கொண்டசெவ்வாயூறியூறி இற்றிற்றுவீழநின்று
கடுஞ்சேக்கழுத்தின்மணிக்குரல்போல் உடைமணிகணகணென
தடந்தாளினைகொண்டுசார்ங்கபாணி தளர்நடைநடவானோ

பக்கம்கருஞ்சிறுப்பாறைமீதே அருவிகள்பகர்ந்தனைய
அக்குவடமிழிந்தேறித்தாழ அணியல்குல்புடைபெயர
மக்களுலகினில்பெய்தறியா மணிக்குழவியுருவின்
தக்கமாமணிவண்ணன்வாசுதேவன் தளர்நடைநடவானோ

வெண்புழுதிமேல்பெய்துகொண்டளைந்ததோர் வேழத்தின்கருங்கன்றுபோல்
தெண்புழுதியாடித்திரிவிக்கிரமன் சிறுபுகர்படவியர்த்து
ஒண்போதலர்கமலச்சிறுக்காலுரைத்து ஒன்றும்நோவாமே
தண்போதுகொண்டதவிசின்மீதே தளர்நடைநடவானோ

திரைநீர்ச்சந்திரமண்டலம்போல் செங்கண்மால்கேசவன் தன்
திருநீர்முகத்துத்துலங்குசுட்டி திகழ்ந்தெங்கும்புடைபெயர
பெருநீர்த்திரையெழுகங்கையிலும் பெரியதோர்தீர்த்தபலம்
தருநீர் சிறுச்சண்ணம்துள்ளம்சோர தளர்நடைநடவானோ

ஆயர்குலத்தினில்வந்துதோன்றிய அஞ்சனவண்ணன்தன்னை
தாயர்மகிழஒன்னார்தளர தளர்நடைநடந்ததனை
வேயர்புகழ்விட்டுசித்தன் சீரால்விரித்தனஉரைக்கவல்லார்
மாயன்மணிவண்ணன்தாள்பணியும் மக்களைப்பெறுவார்களே
எட்டாம் திருமொழி பொன்னியல்
அணைத்துக்கொள்ள அழைத்தல் அச்சோப்பருவம்
கலித்தாழிசை

பொன்னியல்கிண்கிணி சுட்டிபுறம்கட்டி
தன்னியலோசை சலஞ்சலனென்றிட
மின்னியல்மேகம் விரைந்தெதிர்வந்தாற்போல்
என்னிடைக்கோட்டராஅச்சோவச்சோ
எம்பெருமான் வாராஅச்சோவச்சோ

செங்கமலப்பூவில் தேனுண்ணும்வண்டேபோல்
பங்கிகள்வந்து உன்பவளவாய்மொய்ப்ப
சங்குவில்வாள்தண்டு சக்கரமேந்திய
அங்கைகளாலேவந்துஅச்சோவச்சோ
ஆரத்தழுவா வந்துஅச்சோவச்சோ

பஞ்சவர்தூதனா பாரதம்கைசெய்து
நஞ்சுமிழ்நாகம்கிடந்த நற்பொய்கைபுக்கு
அஞ்சப்பணத்தின்மேல் பாய்ந்திட்டுஅருள்செய்த
அஞ்சனவண்ணனே அச்சோவச்சோ
ஆயர்பெருமானே அச்சோவச்சோ

நாறியசாந்தம் நமக்கிறைநல்கென்ன
தேறிஅவளும் திருவுடம்பில்பூச
ஊறியகூனினை உள்ளேயொடுங்க அன்று
ஏறவுருவினாய் அச்சோவச்சோ
எம்பெருமான் வாராஅச்சோவச்சோ

கழல்மன்னர்சூழ கதிர்போல்விளங்கி
எழலுற்றுமீண்டே இருந்துஉன்னைநோக்கும்
சுழலைப்பெரிதுடை துச்சோதனனை
அழலவிழித்தானே அச்சோவச்சோ
ஆழியங்கையனே அச்சோவச்சோ

போரொக்கப்பண்ணி இப்பூமிப்பொறைதீர்ப்பான்
தேரொக்கவூர்ந்தாய் செழுந்தார்விசயற்காய்
காரொக்கும்மேனி கரும்பெருங்கண்ணனே
ஆரத்தழுவாவந்துஅச்சோவச்சோ
ஆயர்கள்போரேறே அச்சோவச்சோ

மிக்கபெரும்புகழ் மாவலிவேள்வியில்
தக்கதிதன்றென்று தானம்விலக்கிய
சுக்கிரன்கண்ணை துரும்பால்கிளறிய
சக்கரக்கையனே அச்சோவச்சோ
சங்கமிடத்தானே அச்சோவச்சோ

என்னிதுமாயம் என்னப்பன்அறிந்திலன்
முன்னைவண்ணமேகொண்டு அளவாயென்ன
மன்னுநமுசியை வானில்சுழற்றிய
மின்னுமுடியனே அச்சோவச்சோ
வேங்கடவாணனே அச்சோவச்சோ

கண்டகடலும் மலையும்உலகேழும்
முண்டத்துக்காற்றா முகில்வண்ணாவோ அன்று
இண்டைச்சடைமுடி ஈசன்இரக்கொள்ள
மண்டைநிறைத்தானே அச்சோவச்சோ
மார்வில்மறுவனே அச்சோவச்சோ

துன்னியபேரிருள் சூழ்ந்துஉலகைமூட
மன்னியநான்மறை முற்றும்மறைந்திட
பின்னிவ்வுலகினில் பேரிருள்நீங்க அன்று
அன்னமதானானே அச்சோவச்சோ
அருமறைதந்தானே அச்சோவச்சோ
தரவு கொச்சகக்கலிப்பா

நச்சுவார்முன்னிற்கும் நாராயணன்தன்னை
அச்சோவருகவென்று ஆய்ச்சியுரைத்தன
மச்சணிமாட புதுவைகோன்பட்டன்சொல்
நிச்சலும்பாடுவார் நீள்விசும்பாள்வரே
ஒன்பதாம் திருமொழி வட்டநடுவே
தன் முதுகை கட்டிக்கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்
வெண்டளையால்வந்த கலித்தாழிசை

வட்டுநடுவே வளர்கின்ற மாணிக்க
மொட்டுநுனையில் முளைக்கின்றமுத்தேபோல்
சொட்டுச்சொட்டென்ன துளிக்கத்துளிக்க என்
குட்டன்வந்துஎன்னைப்புறம்புல்குவான்
கோவிந்தன்என்னைப்புறம்புல்குவான்

கிங்கிணிகட்டி கிறிகட்டி கையினில்
கங்கணமிட்டு கழுத்தில்தொடர்கட்டி
தன்கணத்தாலே சதிராநடந்துவந்து
என்கண்ணன்என்னைப்புறம்புல்குவான்
எம்பிரான்என்னைப்புறம்புல்குவான்

கத்தக்கதித்து கிடந்தபெருஞ்செல்வம்
ஒத்துப்பொருந்திக்கொண்டு உண்ணாதுமண்ணாள்வான்
கொத்துத்தலைவன் குடிகெடத்தோன்றிய
அத்தன்வந்துஎன்னைப்புறம்புல்குவான்
ஆயர்களேறுஎன்புறம்புல்குவான்

நாந்தகமேந்திய நம்பிசரணென்று
தாழ்ந்த தனஞ்சயற்காகி தரணியில்
வேந்தர்களுட்க விசயன்மணித்திண்தேர்
ஊர்ந்தவன்என்னைப்புறம்புல்குவான்
உம்பர்கோன்என்னைப்புறம்புல்குவான்

வெண்கலப்பத்திரம் கட்டிவிளையாடி
கண்பல செய்த கருந்தழைக்காவின்கீழ்
பண்பலபாடி பல்லாண்டிசைப்ப பண்டு
மண்பலகொண்டான்புறம்புல்குவான்
வாமனன்என்னைப்புறம்புல்குவான்

சத்திரமேந்தி தனியொருமாணியாய்
உத்தரவேதியில் நின்றஒருவனை
கத்திரியர்காண காணிமுற்றும்கொண்ட
பத்திராகாரன்புறம்புல்குவான்
பாரளந்தான்என்புறம்புல்குவான்

பொத்தவுரலைக்கவிழ்த்து அதன்மேலேறி
தித்தித்தபாலும் தடாவினில்வெண்ணெயும்
மெத்தத்திருவயிறார விழுங்கிய
அத்தன்வந்துஎன்னைப்புறம்புல்குவான்
ஆழியான்என்னைப்புறம்புல்குவான்

மூத்தவைகாண முதுமணற்குன்றேறி
கூத்துஉவந்தாடி குழலால்இசைபாடி
வாய்த்தமறையோர் வணங்க இமையவர்
ஏத்தவந்துஎன்னைப்புறம்புல்குவான்
எம்பிரான்என்னைப்புறம்புல்குவான்

கற்பகக்காவு கருதியகாதலிக்கு
இப்பொழுதுஈவதென்று இந்திரன்காவினில்
நிற்பனசெய்து நிலாத்திகழ்முற்றத்துள்
உய்த்தவன்என்னைப்புறம்புல்குவான்
உம்பர்கோன்என்னைப்புறம்புல்குவான்
தரவு கொச்சகக்கலிப்பா

ஆய்ச்சியன்றாழிப்பிரான் புறம்புல்கிய
வேய்த்தடந்தோளிசொல் விட்டுசித்தன்மகிழ்ந்து
ஈத்ததமிழிவை ஈரைந்தும்வல்லவர்
வாய்த்தநன்மக்களைப்பெற்று மகிழ்வரே

இரண்டாம்பத்து
முதல்திருமொழி மெச்சூது
பூச்சிகாட்டி விளையாடுதல்
கலித்தாழிசை

மெச்சூதுசங்கம்இடத்தான் நல்வேயூதி
பொய்ச்சூதில்தோற்ற பொறையுடைமன்னர்க்காய்
பத்தூர்பெறாதுஅன்று பாரதம்கைசெய்த
அத்தூதன்அப்பூச்சிகாட்டுகின்றான்
அம்மனே அப்பூச்சிகாட்டுகின்றான்

மலைபுரைதோள்மன்னவரும் மாரதரும்மற்றும்
பலர்குலைய நூற்றுவரும்பட்டழிய பார்த்தன்
சிலைவளை திண்தேர்மேல்முன்னின்ற செங்கண்
அலவலைவந்துஅப்பூச்சிகாட்டுகின்றான்
அம்மனே அப்பூச்சிகாட்டுகின்றான்

காயும்நீர்புக்கு கடம்பேறி காளியன்
தீயபணத்தில் சிலம்பார்க்கப்பாய்ந்தாடி
வேயிங்குழலூதி வித்தகனாய்நின்ற
ஆயன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான்
அம்மனே அப்பூச்சிகாட்டுகின்றான்

இருட்டில்பிறந்துபோய் ஏழைவல்லாயர்
மருட்டைத்தவிர்ப்பித்து வன்கஞ்சன்மாள
புரட்டி அந்நாள்எங்கள் பூம்பட்டுக்கொண்ட
அரட்டன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான்
அம்மனே அப்பூச்சிகாட்டுகின்றான்

சேப்பூண்ட சாடுசிதறி திருடிநெய்க்கு
ஆப்பூண்டு நந்தன்மனைவிகடைதாம்பால்
சோப்பூண்டு துள்ளித்துடிக்க அன்று
ஆப்பூண்டான்அப்பூச்சிகாட்டுகின்றான்
அம்மனே அப்பூச்சிகாட்டுகின்றான்

செப்பிளமென்முலை தேவகிநங்கைக்கு
சொப்படத்தோன்றி தொறுப்பாடியோம்வைத்த
துப்பமும்பாலும் தயிரும்விழுங்கிய
அப்பன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான்
அம்மனே அப்பூச்சிகாட்டுகின்றான்

தத்துக்கொண்டாள்கொலோ தானேபெற்றாள்கொலோ
சித்தமனையாள் அசோதையிளஞ்சிங்கம்
கொத்தார்கருங்குழல் கோபாலகோளரி
அத்தன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான்
அம்மனே அப்பூச்சிகாட்டுகின்றான்

கொங்கை வன்கூனிசொற்கொண்டு குவல
துங்கக்கரியும் பரியும்இராச்சியமும்
எங்கும்பரதற்கருளி வன்கானடை
அங்கண்ணன்அப்பூச்சிகாட்டுகின்றான்
அம்மனே அப்பூச்சிகாட்டுகின்றான்

பதகமுதலைவா பட்டகளிறு
கதறிக்கைகூப்பி என்கண்ணா கண்ணா என்ன
உதவப்புள்ளூர்ந்து அங்குஉறுதுயர்தீர்த்த
அதகன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான்
அம்மனே அப்பூச்சிகாட்டுகின்றான்
தரவு கொச்சகக்கலிப்பா

வல்லாளிலங்கைமலங்க சரந்துரந்த
வில்லாளனை விட்டுசித்தன் விரித்த
சொல்லார்ந்த அப்பூச்சிப்பாடல்இவைபத்தும்
வல்லார்போய் வைகுந்தம் மன்னியிருப்பரே
இரண்டாம் திருமொழி அரவணையாய்
கண்ணனை முலையுண்ண அழைத்தல்
கலிவிருத்தம்

அரவணையாய் ஆயரேறே அம்மமுண்ணத்துயிலெழாயே
இரவுமுண்ணாதுஉறங்கிநீபோய் இன்றுமுச்சிகொண்டதாலோ
வரவும்காணேன்வயிறசைந்தாய் வனமுலைகள்சோர்ந்துபாய
திருவுடையவாய்மடுத்து திளைத்துதைத்துப்பருகிடாயே

வைத்தநெய்யும்காய்ந்தபாலும் வடிதயிரும்நறுவெண்ணெயும்
இத்தனையும்பெற்றறியேன் எம்பிரான் நீ பிறந்தபின்னை
எத்தனையும்செய்யப்பெற்றாய் ஏதும்செய்யேன்கதம்படாதே
முத்தனையமுறுவல்செய்து மூக்குறுஞ்சிமுலையுணாயே

தந்தம்மக்கள்அழுதுசென்றால் தாய்மாராவார்தரிக்ககில்லார்
வந்துநின்மேல்பூசல்செய்ய வாழவல்லவாசுதேவா
உந்தையர்உந்திறத்தரல்லர் உன்னைநானொன்றுரப்பமாட்டேன்
நந்தகோபனணிசிறுவா நான்சுரந்தமுலையுணாயே

கஞ்சன்தன்னால்புணர்க்கப்பட்ட கள்ளச்சகடுகலக்கழிய
பஞ்சியன்னமெல்லடியால் பாய்ந்தபோதுநொந்திடுமென்று
அஞ்சினேன்காண்அமரர்கோவே ஆயர்கூட்டத்தளவன்றாலோ
கஞ்சனைஉன்வஞ்சனையால் வலைப்படுத்தாய் முலையுணாயே

தீயபுந்திக்கஞ்சன்உன்மேல் சினமுடையன் சோர்வுபார்த்து
மாயந்தன்னால்வலைப்படுக்கில் வாழகில்லேன்வாசுதேவா
தாயர்வாய்ச்சொல்கருமம்கண்டாய் சாற்றிச்சொன்னேன்போகவேண்டா
ஆயர்பாடிக்கணிவிளக்கே அமர்ந்துவந்துஎன்முலையுணாயே

மின்னனையநுண்ணிடையார் விரிகுழல்மேல்நுழைந்தவண்டு
இன்னிசைக்கும்வில்லிபுத்தூர் இனிதமர்ந்தாய் உன்னைக்கண்டார்
என்னநோன்புநோற்றாள்கொலோ இவனைப்பெற்றவயிறுடையாள்
என்னும்வார்த்தையெய்துவித்த இருடீகேசா முலையுணாயே

பெண்டிர்வாழ்வார்நின்னொப்பாரை பெறுதுமென்னுமாசையாலே
கண்டவர்கள்போக்கொழிந்தார் கண்ணிணையால்கலக்கநோக்கி
வண்டுலாம்பூங்குழலினார் உன்வாயமுதம்உண்ணவேண்டி
கொண்டுபோவான்வந்துநின்றார் கோவிந்தா நீமுலையுணாயே

இருமலைபோலெதிர்ந்தமல்லர் இருவரங்கம்எரிசெய்தாய் உன்
திருமலிந்துதிகழ்மார்வு தேக்கவந்துஎன்னல்குலேறி
ஒருமுலையைவாய்மடுத்து ஒருமுலையைநெருடிக்கொண்டு
இருமுலையும்முறைமுறையா ஏங்கிஏங்கிஇருந்துணாயே

அங்கமலப்போதகத்தில் அணிகொள்முத்தம்சிந்தினாற்போல்
செங்கமலமுகம்வியர்ப்ப தீமைசெய்துஇம்முற்றத்தூடே
அங்கமெல்லாம்புழுதியாக அளையவேண்டாஅம்ம விம்ம
அங்கமரர்க்கமுதளித்த அமரர்கோவே முலையுணாயே

ஓடவோடக்கிங்கிணிகள் ஒலிக்குமோசைப்பாணியாலே
பாடிப்பாடிவருகின்றாயை பற்பநாபனென்றிருந்தேன்
ஆடியாடியசைந்தசைந்திட்டு அதனுக்கேற்றகூத்தையாடி
ஓடியோடிப்போய்விடாதே உத்தமா நீமுலையுணாயே

வாரணிந்தகொங்கையாய்ச்சி மாதவா உண்ணென்றமாற்றம்
நீரணிந்தகுவளைவாசம் நிகழநாறும்வில்லிபுத்தூர்
பாரணிந்ததொல்புகழான் பட்டர்பிரான்பாடல்வல்லார்
சீரணிந்தசெங்கண்மால்மேல் சென்றசிந்தைபெறுவார்தாமே
மூன்றாம் திருமொழி போய்ப்பாடு
பன்னிருநாமம் காதுகுத்துதல்
எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

போய்ப்படுடையநின்தந்தையும்தாழ்த்தான்
பொருதிறல்கஞ்சன்கடியன்
காப்பாருமில்லைகடல்வண்ணா உன்னை
தனியேபோய்எங்கும்திரிதி
பேய்ப்பால்முலையுண்டபித்தனே
கேசவநம்பீ உன்னைக்காதுகுத்த
ஆய்ப்பாலர்பெண்டுகளெல்லாரும்வந்தார்
அடைக்காய்திருத்திநான்வைத்தேன்

வண்ணப்பவளம்மருங்கினில்சாத்தி
மலர்ப்பாதக்கிங்கிணியார்ப்ப
நண்ணித்தொழுமவர்சிந்தைபிரியாத
நாராயணா இங்கேவாராய்
எண்ணற்கரியபிரானே திரியை
எரியாமேகாதுக்கிடுவன்
கண்ணுக்குநன்றுமழகுடைய
கனகக்கடிப்பும்இவையா

வையமெல்லாம்பெறுவம்வார்கடல்வாழும்
மகரக்குழைகொண்டுவைத்தேன்
வெய்யவேகாதில்திரியையிடுவன்
நீவேண்டியதெல்லாம்தருவன்
உய்யஇவ்வாயர்குலத்தினில்தோன்றிய
ஒண்சுடராயர்கொழுந்தே
மையன்மைசெய்துஇளவாய்ச்சியருள்ளத்து
மாதவனே இங்கேவாராய்

வணநன்றுடையவயிரக்கடிப்பிட்டு
வார்காதுதாழப்பெருக்கி
குணநன்றுடையர்இக்கோபாலபிள்ளைகள்
கோவிந்தா நீசொல்லுக்கொள்ளாய்
இணைநன்றழகியஇக்கடிப்புஇட்டால்
இனியபலாப்பழம்தந்து
சுணநன்றணிமுலையுண்ணத்தருவன்நான்
சோத்தம்பிரான் இங்கேவாராய்

சோத்தம்பிரான் என்றுஇரந்தாலும்கொள்ளாய்
சுரிகுழலாரொடுநீபோய்
கோத்துக்குரவைபிணைந்துஇங்குவந்தால்
குணங்கொண்டிடுவனோ நம்பீ
பேர்த்தும்பெரியனஅப்பம்தருவன்
பிரானே திரியிடவொட்டில்
வேய்த்தடந்தோளார்விரும்புகருங்குழல்
விட்டுவே நீஇங்கேவாராய்

விண்ணெல்லாம்கேட்கஅழுதிட்டாய்
உன்வாயில்விரும்பியதனைநான்நோக்கி
மண்ணெல்லாம்கண்டுஎன்மனத்துள்ளேயஞ்சி
மதுசூதனேயென்றிருந்தேன்
புண்ணேதுமில்லைஉன்காதுமறியும்
பொறுத்துஇறைப்போதுஇருநம்பீ
கண்ணா என்கார்முகிலே
கடல்வண்ணா காவலனே முலையுணாயே

முலையேதும்வேண்டேனென்றோடி
நின்காதில்கடிப்பைப்பறித்தெறிந்திட்டு
மலையையெடுத்துமகிழ்ந்துகல்மாரிகாத்து
பசுநிரைமேய்த்தாய்
சிலையொன்றுஇறுத்தாய் திரிவிக்கிரமா
திருவாயர்பாடிப்பிரானே
தலைநிலாப்போதேஉன்காதைப்பெருக்காதே
விட்டிட்டேன்குற்றமேயன்றே

என்குற்றமேயென்றுசொல்லவும்வேண்டாகாண்
என்னைநான்மண்ணுண்டேனாக
அன்புற்றுநோக்கிஅடித்தும்பிடித்தும்
அனைவர்க்கும்காட்டிற்றிலையே
வன்புற்றரவின்பகைக்கொடிவாமனநம்பீ
உன்காதுகள்தூரும்
துன்புற்றனவெல்லாம்தீர்ப்பாய்பிரானே
திரியிட்டுச்சொல்லுகேன்மெய்யே

மெய்யென்றுசொல்லுவார்சொல்லைக்கருதி
தொடுப்புண்டாய்வெண்ணெயையென்று
கையைப்பிடித்துக்கரையுரலோடுஎன்னை
காணவேகட்டிற்றிலையே
செய்தனசொல்லிச்சிரித்துஅங்குஇருக்கில்
சிரீதரா உன்காதுதூரும்
கையில்திரியையிடுகிடாய் இந்நின்ற
காரிகையார்சிரியாமே

காரிகையார்க்கும்உனக்கும்இழுக்குற்றென்
காதுகள்வீங்கியெறியில்
தாரியாதாகில்தலைநொந்திடுமென்று
விட்டிட்டேன்குற்றமேயன்றே
சேரியிற்பிள்ளைகளெல்லாரும் காது
பெருக்கித்திரியவும்காண்டி
ஏர்விடைசெற்றுஇளங்கன்றுஎறிந்திட்ட
இருடீகேசா என்தன்கண்ணே

கண்ணைக்குளிரக்கலந்துஎங்கும்நோக்கி
கடிகமழ்பூங்குழலார்கள்
எண்ணத்துள்என்றும்இருந்துதித்திக்கும்
பெருமானே எங்களமுதே
உண்ணக்கனிகள்தருவன் கடிப்பொன்றும்
நோவாமேகாதுக்கிடுவன்
பண்ணைக்கிழியச்சகடமுதைத்திட்ட
பற்பநாபா இங்கேவாராய்

வாவென்றுசொல்லிஎன்கையைப்பிடித்து
வலியவேகாதில்கடிப்பை
நோவத்திரிக்கில்உனக்கிங்கிழுக்குற்றென்
காதுகள்நொந்திடும்கில்லேன்
நாவற்பழம்கொண்டுவைத்தேன்
இவைகாணாய்நம்பீ முன்வஞ்சமகளை
சாவப்பாலுண்டுசகடிறப்பாய்ந்திட்ட
தாமோதரா இங்கேவாராய்

வார்காதுதாழப்பெருக்கியமைத்து
மகரக்குழையிடவேண்டி
சீரால்அசோதைதிருமாலைச்சொன்னசொல்
சிந்தையுள்நின்றுதிகழ
பாரார்தொல்புகழான்புதுவைமன்னன்
பன்னிருநாமத்தாற்சொன்ன
ஆராதஅந்தாதிபன்னிரண்டும்வல்லார்
அச்சுதனுக்குஅடியாரே
நாலாம் திருமொழி வெண்ணெயளைந்த
கண்ணனை நீராட அழைத்தல்
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

வெண்ணெயளைந்தகுணுங்கும் விளையாடுபுழுதியும்கொண்டு
திண்ணெனெஇவ்விராஉன்னை தேய்த்துக்கிடக்கநான்ஒட்டேன்
எண்ணெய்ப்புளிப்பழம்கொண்டு இங்குஎத்தனைபோதும்இருந்தேன்
நண்ணலரியபிரானே நாரணா நீராடவாராய்

கன்றுகளோடச்செவியில் கட்டெறும்புபிடித்திட்டால்
தென்றிக்கெடுமாகில் வெண்ணெய்திரட்டிவிழுங்குமாகாண்பன்
நின்றமராமரம்சாய்த்தாய் நீபிறந்ததிருவோணம்
இன்று நீநீராடவேண்டும் எம்பிரான் ஓடாதேவாராய்

பேய்ச்சிமுலையுண்ணக்கண்டு பின்னையும்நில்லாதுஎன்னெஞ்சம்
ஆய்ச்சியரெல்லாம்கூடி அழைக்கவும்நான்முலைதந்தேன்
காய்ச்சினநீரொடுநெல்லி கடாரத்தில்பூரித்துவைத்தேன்
வாய்த்தபுகழ்மணிவண்ணா மஞ்சனமாடநீவாராய்

கஞ்சன்புணர்ப்பினில்வந்த கடியசகடம்உதைத்து
வஞ்சகப்பேய்மகள்துஞ்ச வாய்முலைவைத்தபிரானே
மஞ்சளும்செங்கழுநீரின் வாசிகையும்நாறுசாந்தும்
அஞ்சனமும்கொண்டுவைத்தேன் அழகனே நீராடவாராய்

அப்பம்கலந்த சிற்றுண்டி அக்காரம்பாலில்கலந்து
சொப்படநான்சுட்டுவைத்தேன் தின்னலுறிதியேல்நம்பீ
செப்பிளமென்முலையார்கள் சிறுபுறம்பேசிச்சிரிப்பர்
சொப்படநீராடவேண்டும் சோத்தம்பிரான் இங்கேவாராய்

எண்ணெய்க்குடத்தையுருட்டி இளம்பிள்ளைகிள்ளியெழுப்பி
கண்ணைப்புரட்டிவிழித்து கழகண்டுசெய்யும்பிரானே
உண்ணக்கனிகள்தருவன் ஒலிகடலோதநீர்போலே
வண்ணம்அழகியநம்பீ மஞ்சனமாடநீவாராய்

கறந்தநற்பாலும்தயிரும் கடைந்துஉறிமேல்வைத்தவெண்ணெய்
பிறந்ததுவேமுதலாக பெற்றறியேன்எம்பிரானே
சிறந்தநற்றாய்அலர்தூற்றும் என்பதனால்பிறர்முன்னே
மறந்தும்உரையாடமாட்டேன் மஞ்சனமாடநீவாராய்

கன்றினைவாலோலைகட்டி கனிகளுதிரஎறிந்து
பின்தொடர்ந்தோடிஓர்பாம்பை பிடித்துக்கொண்டாட்டினாய்போலும்
நின்திறத்தேனல்லன்நம்பீ நீபிறந்ததிருநல்நாள்
நன்றுநீநீராடவேண்டும் நாரணா ஓடாதேவாராய்

பூணித்தொழுவினில்புக்கு புழுதியளைந்தபொன்மேனி
காணப்பெரிதும்உகப்பன் ஆகிலும்கண்டார்பழிப்பர்
நாணெத்தனையுமிலாதாய் நப்பின்னைகாணில்சிரிக்கும்
மாணிக்கமே என்மணியே மஞ்சனமாடநீவாராய்

கார்மலிமேனி நிறத்து கண்ணபிரானையுகந்து
வார்மலிகொங்கையசோதை மஞ்சனமாட்டியவாற்றை
பார்மலிதொல்புதுவைக்கோன் பட்டர்பிரான்சொன்னபாடல்
சீர்மலிசெந்தமிழ்வல்லார் தீவினையாதுமிலரே
ஐந்தாம் திருமொழி பின்னைமணாளனை
கண்ணன்குழல் வார காக்கையை வாவெனல்
கலித்தாழிசை

பின்னைமணாளனை பேரில்கிடந்தானை
முன்னையமரர் முதல்தனிவித்தினை
என்னையும் எங்கள்குடிமுழுதுஆட்கொண்ட
மன்னனைவந்துகுழல்வாராய்அக்காக்காய்
மாதவன்தன்குழல்வாராய்அக்காக்காய்

பேயின்முலையுண்ட பிள்ளைஇவன்முன்னம்
மாயச்சகடும் மருதும்இறுத்தவன்
காயாமலர்வண்ணன் கண்ணன்கருங்குழல்
தூய்தாகவந்துகுழல்வாராய்அக்காக்காய்
தூமணிவண்ணன்குழல்வாராய்அக்காக்காய்

திண்ணக்கலத்தில் திரையுறிமேல்வைத்த
வெண்ணெய்விழுங்கி விரையஉறங்கிடும்
அண்ணல் அமரர்பெருமானை ஆயர்தம்
கண்ணனைவந்துகுழல்வாராய்அக்காக்காய்
கார்முகில்வண்ணன்குழல்வாராய்அக்காக்காய்

பள்ளத்தில்மேயும் பறவையுருக்கொண்டு
கள்ளவசுரன்வருவானை தான்கண்டு
புள்ளிதுவென்று பொதுக்கோவாய்கீண்டிட்ட
பிள்ளையைவந்துகுழல்வாராய்அக்காக்காய்
பேய்முலையுண்டான்குழல்வாராய்அக்காக்காய்

கற்றினம்மேய்த்து கனிக்குஒருகன்றினை
பற்றியெறிந்த பரமன்திருமுடி
உற்றனபேசி நீஓடித்திரியாதே
அற்றைக்கும்வந்துகுழல்வாராய்அக்காக்காய்
ஆழியான்தன்குழல்வாராய்அக்காக்காய்

கிழக்கில்குடிமன்னர் கேடிலாதாரை
அழிப்பான்நினைந்திட்டு அவ்வாழியதனால்
விழிக்குமளவிலே வேரறுத்தானை
குழற்குஅணியாகக்குழல்வாராய்அக்காக்காய்
கோவிந்தன்தன்குழல்வாராய்அக்காக்காய்

பிண்டத்திரளையும் பேய்க்குஇட்டநீர்ச்சோறும்
உண்டற்குவேண்டி நீஓடித்திரியாதே
அண்டத்துஅமரர்பெருமான் அழகமர்
வண்டொத்திருண்டகுழல்வாராய்அக்காக்காய்
மாயவன்தன்குழல்வாராய்அக்காக்காய்

உந்தியெழுந்த உருவமலர்தன்னில்
சந்தச்சதுமுகன்தன்னை படைத்தவன்
கொந்தக்குழலை குறந்துபுளியட்டி
தந்தத்தின்சீப்பால்குழல்வாராய்அக்காக்காய்
தாமோதரன்தன்குழல்வாராய்அக்காக்காய்

மன்னன்தன்தேவிமார் கண்டுமகிழ்வெய்த
முன்இவ்வுலகினை முற்றும்அளந்தவன்
பொன்னின்முடியினை பூவணைமேல்வைத்து
பின்னேயிருந்துகுழல்வாராய்அக்காக்காய்
பேராயிரத்தான்குழல்வாராய்அக்காக்காய்
தரவு கொச்சகக்கலிப்பா

கண்டார்பழியாமே அக்காக்காய் கார்வண்ணன்
வண்டார்குழல்வார வாவென்றஆய்ச்சிசொல்
விண்தோய்மதிள் வில்லிபுத்தூர்க்கோன்பட்டன்சொல்
கொண்டாடிப்பாட குறுகாவினைதாமே
ஆறாம் திருமொழி வேலிக்கோல்
காக்கையை கண்ணனுக்கு கோல்கொண்டுவர விளம்புதல்
கலித்தாழிசை

வேலிக்கோல்வெட்டி விளையாடுவில்லேற்றி
தாலிக்கொழுந்தை தடங்கழுத்திற்பூண்டு
பீலித்தழையை பிணைத்துப்பிறகிட்டு
காலிப்பின்போவாற்குஓர்கோல்கொண்டுவா
கடல்நிறவண்ணற்குஓர்கோல்கொண்டுவா

கொங்குங்குடந்தையும் கோட்டியூரும்பேரும்
எங்கும்திரிந்து விளையாடும்என்மகன்
சங்கம்பிடிக்கும் தடக்கைக்குத்தக்க நல்
அங்கமுடையதோர்கோல்கொண்டுவா
அரக்குவழித்ததோர்கோல்கொண்டுவா

கறுத்திட்டுஎதிர்நின்ற கஞ்சனைக்கொன்றான்
பொறுத்திட்டுஎதிர்வந்த புள்ளின்வாய்கீண்டான்
நெறித்தகுழல்களை நீங்கமுன்னோடி
சிறுக்கன்றுமேய்ப்பாற்குஓர்கோல்கொண்டுவா
தேவபிரானுக்குஓர்கோல்கொண்டுவா

ஒன்றேயுரைப்பான் ஒருசொல்லேசொல்லுவன்
துன்றுமுடியான் துரியோதனன்பக்கல்
சென்றுஅங்குப்பாரதம் கையெறிந்தானுக்கு
கன்றுகள்மேய்ப்பதோர்கோல்கொண்டுவா
கடல்நிறவண்ணர்க்குஓர்கோல்கொண்டுவா

சீரொன்றுதூதா துரியோதனன்பக்கல்
ஊரொன்றுவேண்டி பெறாதஉரோடத்தால்
பாரொன்றி பாரதம்கைசெய்து பார்த்தற்கு
தேரொன்றையூர்ந்தாற்குஓர்கோல்கொண்டுவா
தேவபிரானுக்குஓர்கோல்கொண்டுவா

ஆலத்திலையான் அரவினணைமேலான்
நீலக்கடலுள் நெடுங்காலம்கண்வளர்ந்தான்
பாலப்பிராயத்தே பார்த்தர்க்குஅருள்செய்த
கோலப்பிரானுக்குஓர்கோல்கொண்டுவா
குடந்தைக்கிடந்தார்க்குஓர்கோல்கொண்டுவா

பொன்திகழ் சித்திரகூடப்பொருப்பினில்
உற்றவடிவில் ஒருகண்ணும்கொண்ட
கற்றைக்குழலன் கடியன்விரைந்து உன்னை
மற்றைக்கண்கொள்ளாமேகோல்கொண்டுவா
மணிவண்ணநம்பிக்குஓர்கோல்கொண்டுவா

மின்னிடை சீதைபொருட்டா இலங்கையர்
மன்னன்மணிமுடி பத்தும்உடன்வீழ
தன்னிகரொன்றில்லா சிலைகால்வளைத்திட்ட
மின்னுமுடியற்குஓர்கோல்கொண்டுவா
வேலையடைத்தாற்குஓர்கோல்கொண்டுவா

தென்னிலங்கைமன்னன் சிரம்தோள்துணிசெய்து
மின்னிலங்குபூண் விபீடணநம்பிக்கு
என்னிலங்குநாமத்தளவும் அரசென்ற
மின்னிலங்காரற்குஓர்கோல்கொண்டுவா
வேங்கடவாணர்க்குஓர்கோல்கொண்டுவா
தரவு கொச்சகக்கலிப்பா

அக்காக்காய் நம்பிக்கு கோல்கொண்டுவாவென்று
மிக்காளுரைத்தசொல் வில்லிபுத்தூர்ப்பட்டன்
ஒக்கவுரைத்த தமிழ்பத்தும்வல்லவர்
மக்களைப்பெற்று மகிழ்வர்இவ்வையத்தே
ஏழாம் திருமொழி ஆனிரை
கண்ணனை பூச்சூட அழைத்தல்
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

ஆனிரைமேய்க்கநீபோதி அருமருந்தாவதறியாய்
கானகமெல்லாம்திரிந்து உன்கரியதிருமேனிவாட
பானையில்பாலைப்பருகி பற்றாதாரெல்லாம்சிரிப்ப
தேனிலினியபிரானே செண்பகப்பூச்சூட்டவாராய்

கருவுடைமேகங்கள்கண்டால் உன்னைக்கண்டாலொக்கும்கண்கள்
உருவுடையாய் உலகேழும்உண்டாகவந்துபிறந்தாய்
திருவுடையாள்மணவாளா திருவரங்கத்தேகிடந்தாய்
மருவிமணம்கமழ்கின்ற மல்லிகைப்பூச்சூட்டவாராய்

மச்சொடுமாளிகையேறி மாதர்கள்தம்மிடம்புக்கு
கச்சொடுபட்டைக்கிழித்து காம்புதுகிலவைகீறி
நிச்சலும்தீமைகள்செய்வாய் நீள்திருவேங்கடத்துஎந்தாய்
பச்சைத்தமனகத்தோடு பாதிரிப்பூச்சூட்டவாராய்

தெருவின்கன்இன்று இளவாய்ச்சிமார்களைத்தீமைசெய்யாதே
மருவும்தமனகமும்சீர் மாலைமணம்கமழ்கின்ற
புருவம்கருங்குழல்நெற்றி பொலிந்தமுகிற்கன்றுபோலே
உருவமழகியநம்பீ உகந்திவைசூட்டநீவாராய்

புள்ளினைவாய்பிளந்திட்டாய் பொருகரியின்கொம்பொசித்தாய்
கள்ளவரக்கியைமூக்கொடு காவலனைத்தலைகொண்டாய்
அள்ளிநீவெண்ணெய்விழுங்க அஞ்சாதுஅடியேன்அடித்தேன்
தெள்ளியநீரிலெழுந்த செங்கழுநீர்சூட்டவாராய்

எருதுகளோடுபொருதி ஏதும்உலோபாய்கான்அம்பி
கருதியதீமைகள்செய்து கஞ்சனைக்கால்கொடுபாய்ந்தாய்
தெருவின்கண்தீமைகள்செய்து சிக்கெனமல்லர்களோடு
பொருதுவருகின்றபொன்னே புன்னைப்பூச்சூட்டவாராய்

குடங்களெடுத்தேறவிட்டு கூத்தாடவல்லஎம்கோவே
மடங்கொள்மதிமுகத்தாரை மால்செய்யவல்லஎன்மைந்தா
இடந்திட்டுஇரணியன்நெஞ்சை இருபிளவாகமுன்கீண்டாய்
குடந்தைக்கிடந்தஎம்கோவே குருக்கத்திப்பூச்சூட்டவாராய்

சீமாலிகனவனோடு தோழமைகொள்ளவும்வல்லாய்
சாமாறுஅவனைநீயெண்ணி சக்கரத்தால்தலைகொண்டாய்
ஆமாறறியும்பிரானே அணியரங்கத்தேகிடந்தாய்
ஏமாற்றம்என்னைத்தவிர்த்தாய் இருவாட்சிப்பூச்சூட்டவாராய்

அண்டத்தமரர்கள்சூழ அத்தாணியுள்ளங்கிருந்தாய்
தொண்டர்கள்நெஞ்சிலுறைவாய் தூமலராள்மணவாளா
உண்டிட்டுஉலகினையேழும் ஓராலிலையில்துயில்கொண்டாய்
கண்டுநான்உன்னையு கருமுகைப்பூச்சூட்டவாராய்

செண்பகமல்லிகையோடு செங்கழுநீர்இருவாட்சி
எண்பகர்பூவும்கொணர்ந்தேன் இன்றுஇவைசூட்டவாவென்று
மண்பகர்கொண்டானை ஆய்ச்சிமகிழ்ந்துரைசெய்தஇம்மாலை
பண்பகர்வில்லிபுத்தூர்க்கோன் பட்டர்பிரான்சொன்னபத்தே
எட்டாம் திருமொழி இந்திரனோடு
கண்ணனை த்ருஷ்டிதோஷம் வாராதபடி திருவந்திக்காப்பிட அழைத்தல்
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

இந்திரனோடுபிரமன் ஈசன்இமையவரெல்லாம்
மந்திரமாமலர்கொண்டு மறைந்துஉவராய்வந்துநின்றார்
சந்திரன்மாளிகைசேரும் சதிரர்கள்வெள்ளறைநின்றாய்
அந்தியம்போதுஇதுவாகும் அழகனே காப்பிடவாராய்

கன்றுகள்இல்லம்புகுந்து கதறுகின்றபசுவெல்லாம்
நின்றொழிந்தேன்உன்னைக்கூவி நேசமேலொன்றுமிலாதாய்
மன்றில்நில்லேல் அந்திப்போது மதிள்திருவெள்ளறைநின்றாய்
நன்றுகண்டாய்என்தன்சொல்லு நான்உன்னைக்காப்பிடவாராய்

செப்போதுமென்முலையார்கள் சிறுசோறும்இல்லும்சிதைத்திட்டு
அப்போதுநானுரப்பப்போய் அடிசிலுமுண்டிலைஆள்வாய்
முப்போதும்வானவரேத்தும் முனிவர்கள்வெள்ளறைநின்றாய்
இப்போதுநான்ஒன்றும்செய்யேன் எம்பிரான் காப்பிடவாராய்

கண்ணில்மணல்கொடுதூவி காலினால்பாய்ந்தனையென்றென்று
எண்ணரும்பிள்ளைகள்வந்திட்டு இவரால்முறைப்படுகின்றார்
கண்ணனே வெள்ளறைநின்றாய் கண்டாரோடேதீமைசெய்வாய்
வண்ணமேவேலையதொப்பாய் வள்ளலே காப்பிடவாராய்

பல்லாயிரவர்இவ்வூரில்பிள்ளைகள் தீமைகள்செய்வார்
எல்லாம்உன்மேலன்றிப்போகாது எம்பிரான் நீஇங்கேவாராய்
நல்லார்கள்வெள்ளறைநின்றாய் ஞானச்சுடரே உன்மேனி
சொல்லாரவாழ்த்திநின்றேத்தி சொப்படக்காப்பிடவாராய்

கஞ்சங்கறுக்கொண்டுநின்மேல் கருநிறச்செம்மயிர்ப்பேயை
வஞ்சிப்பதற்குவிடுத்தானென்பது ஓர்வார்த்தையும்உண்டு
மஞ்சுதவழ்மணிமாட மதிள்திருவெள்ளறைநின்றாய்
அஞ்சுவன்நீஅங்குநிற்க அழகனே காப்பிடவாராய்

கள்ளச்சகடும்மருதும் கலக்கழியஉதைசெய்த
பிள்ளையரசே நீபேயைப்பிடித்துமுலையுண்டபின்னை
உள்ளவாறுஒன்றும்அறியேன் ஒளியுடைவெள்ளறைநின்றாய்
பள்ளிகொள்போதுஇதுவாகும் பரமனே காப்பிடவாராய்

இன்பமதனைஉயர்த்தாய் இமையவர்க்குஎன்றும்அரியாய்
கும்பக்களிறட்டகோவே கொடுங்கஞ்சன்நெஞ்சினிற்கூற்றே
செம்பொன்மதிள்வெள்ளறையாய் செல்வத்தினால்வளர்பிள்ளாய்
கம்பக்கபாலிகாண்அங்கு கடிதோடிக்காப்பிடவாராய்

இருக்கொடுநீர்சங்கில்கொண்டிட்டு எழில்மறையோர்வந்துநின்றார்
தருக்கேல்நம்பி சந்திநின்று தாய்சொல்லுக்கொள்ளாய்சிலநாள்
திருக்காப்புநான்உன்னைச்சா தேசுடைவெள்ளறைநின்றாய்
உருக்காட்டும்அந்திவிளக்கு இன்றொளிகொள்ளஏற்றுகேன்வாராய்

போதமர்செல்வக்கொழுந்து புணர்திருவெள்ளறையானை
மாதர்க்குயர்ந்தஅசோதை மகன்தன்னைக்காப்பிட்டமாற்றம்
வேதப்பயன்கொள்ளவல்ல விட்டுசித்தன்சொன்னமாலை
பாதப்பயன்கொள்ளவல்ல பத்தருள்ளார்வினைபோமே
ஒன்பதாம் திருமொழி வெண்ணெய்விழுங்கி
வெண்ணெய் களவாடல் முதலிய பாலக்ரீடை வர்ணனம்
எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

வெண்ணெய்விழுங்கிவெறுங்கலத்தை
வெற்பிடையிட்டு அதனோசைகேட்கும்
கண்ணபிரான்கற்றகல்விதன்னை
காக்ககில்லோம்உன்மகனைக்காவாய்
புண்ணில்புளிப்பெய்தாலொக்கும்தீமை
புரைபுரையால்இவைசெய்யவல்ல
அண்ணற்கண்ணானோர்மகனைப்பெற்ற
அசோதைநங்காய் உன்மகனைக்கூவாய்

வருகவருகவருகஇங்கே
வாமனநம்பீ வருகஇங்கே
கரியகுழல்செய்யவாய்முகத்து
காகுத்தநம்பீ வருகஇங்கே
அரியனிவன்எனக்குஇன்றுநங்காய்
அஞ்சனவண்ணா அசலகத்தார்
பரிபவம்பேசத்தரிக்ககில்லேன்
பாவியேனுக்குஇங்கேபோதராயே

திருவுடைப்பிள்ளைதான்தீயவாறு
தேக்கமொன்றுமிலன்தேசுடையன்
உருகவைத்தகுடத்தொடுவெண்ணெய்
உறிஞ்சியுடைத்திட்டுப்போந்துநின்றான்
அருகிருந்தார்தம்மைஅநியாயம்செய்வது
தான் வழக்கோ அசோதாய்
வருகவென்றுஉன்மகன்தன்னைக்கூவாய்
வாழவொட்டான்மதுசூதனனே

கொண்டல்வண்ணா இங்கேபோதராயே
கோயிற்பிள்ளாய் இங்கேபோதராயே
தெண்திரைசூழ்திருப்பேர்க்கிடந்த
திருநாரணா இங்கேபோதராயே
உண்டுவந்தேன்அம்மனென்றுசொல்லி
ஓடிஅகம்புகஆய்ச்சிதானும்
கண்டெதிரேசென்றெடுத்துக்கொள்ள
கண்ணபிரான்கற்றகல்விதானே

பாலைக்கறந்துஅடுப்பேறவைத்து
பல்வளையாள்என்மகளிருப்ப
மேலையகத்தேநெருப்புவேண்டிச்சென்று
இறைப்பொழுதுஅங்கேபேசிநின்றேன்
சாளக்கிராமமுடையநம்பி
சாய்த்துப்பருகிட்டுப்போந்துநின்றான்
ஆலைக்கரும்பின்மொழியனைய
அசோதைநங்காய் உன்மகனைக்கூவாய்

போதர்கண்டாய்இங்கேபோதர்கண்டாய்
போதரேனென்னாதேபோதர்கண்டாய்
ஏதேனும்சொல்லிஅசலகத்தார்
ஏதேனும்பேசநான்கேட்கமட்டேன்
கோதுகலமுடைக்குட்டனேயா
குன்றெடுத்தாய் குடமாடுகூத்தா
வேதப்பொருளே என்வேங்கடவா
வித்தகனே இங்கேபோதராயே

செந்நெலரிசிசிறுபருப்பு
செய்த அக்காரம்நறுநெய்பாலால்
பன்னிரண்டுதிருவோணம்அட்டேன்
பண்டும்இப்பிள்ளைபரிசறிவன்
இன்னமுகப்பன்நானென்றுசொல்லி
எல்லாம்விழுங்கிட்டுப்போந்துநின்றான்
உன்மகன்தன்னையசோதைநங்காய்
கூவிக்கொள்ளாய்இவையும்சிலவே

கேசவனே இங்கேபோதராயே
கில்லேனென்னாதுஇங்கேபோதராயே
நேசமிலாதாரகத்திருந்து
நீவிளையாடாதேபோதராயே
தூசனம்சொல்லும்தொழுத்தைமாரும்
தொண்டரும்நின்றவிடத்தில்நின்று
தாய்சொல்லுக்கொள்வதுதன்மம்கண்டாய்
தாமோதரா இங்கேபோதராயே

கன்னலிலட்டுவத்தோடுசீடை
காரெள்ளினுண்டைகலத்திலிட்டு
என்னகமென்றுநான்வைத்துப்போந்தேன்
இவன்புக்குஅவற்றைப்பெறுத்திப்போந்தான்
பின்னும்அகம்புக்குஉறியைநோக்கி
பிறங்கொளிவெண்ணெயும்சோதிக்கின்றான்
உன்மகன்தன்னையசோதைநங்காய்
கூவிக்கொள்ளாய் இவையும்சிலவே

சொல்லிலரசிப்படுதிநங்காய்
சுழலுடையன்உன்பிள்ளைதானே
இல்லம்புகுந்துஎன்மகளைக்கூவி
கையில்வளையைக்கழற்றிக்கொண்டு
கொல்லையில்நின்றும்கொணர்ந்துவிற்ற
அங்கொருத்திக்குஅவ்வளைகொடுத்து
நல்லனநாவற்பழங்கள்கொண்டு
நானல்லேனென்றுசிரிக்கின்றானே

வண்டுகளித்திரைக்கும்பொழில்சூழ்
வருபுனல்காவிரித்தென்னரங்கன்
பண்டவன்செய்தகிரீடையெல்லாம்
பட்டர்பிரான்விட்டுசித்தன்பாடல்
கொண்டிவைபாடிக்குனிக்கவல்லார்
கோவிந்தன்தன்அடியார்களாகி
எண்திசைக்கும்விளக்காகிநிற்பார்
இணையடிஎன்தலைமேலனவே
பத்தாம் திருமொழி ஆற்றிலிருந்து
ஆயர்மங்கையர் யசோதைபக்கல் கண்ணன்தீம்புகளை கூறி முறையிடுதல்
கலித்தாழிசை

ஆற்றிலிருந்து விளையாடுவோங்களை
சேற்றாலெறிந்து வளைதுகில்கைக்கொண்டு
காற்றின்கடியனாய் ஓடிஅகம்புக்கு
மாற்றமும்தாரானால்இன்றுமுற்றும்
வளைத்திறம்பேசானால்இன்றுமுற்றும்

குண்டலம்தாழ குழல்தாழநாண்தாழ
எண்திசையோரும் இறைஞ்சித்தொழுதேத்த
வண்டமர்பூங்குழலார் துகில்கைக்கொண்டு
விண்தோய்மரத்தானால்இன்றுமுற்றும்
வேண்டவும்தாரானால்இன்றுமுற்றும்

தடம்படுதாமரை பொய்கைகலக்கி
விடம்படுநாகத்தை வால்பற்றிஈர்த்து
படம்படுபைந்தலை மேலெழப்பாய்ந்திட்டு
உடம்பையசைத்தானால்இன்றுமுற்றும்
உச்சியில்நின்றானால்இன்றுமுற்றும்

தேனுகனாவி செகுத்து பனங்கனி
தானெறிந்திட்ட தடம்பெருந்தோளினால்
வானவர்கோன்விட வந்தமழைதடுத்து
ஆனிரைகாத்தானால்இன்றுமுற்றும்
அவையுய்யக்கொண்டானால்இன்றுமுற்றும்

ஆய்ச்சியர்சேரி அளைதயிர்பாலுண்டு
பேர்த்தவர்கண்டுபிடிக்க பிடியுண்டு
வேய்த்தடந்தோளினார் வெண்ணெய்கொள்மாட்டாது அங்கு
ஆப்புண்டிருந்தானால்இன்றுமுற்றும்
அடியுண்டழுதானால்இன்றுமுற்றும்

தள்ளித்தளிர்நடையிட்டு இளம்பிள்ளையாய்
உள்ளத்தினுள்ளே அவளையுறநோக்கி
கள்ளத்தினால்வந்த பேய்ச்சிமுலையுயிர்
துள்ளச்சுவைத்தானால்இன்றுமுற்றும்
துவக்கறவுண்டானால்இன்றுமுற்றும்

மாவலிவேள்வியில் மாணுருவாய்ச்சென்று
மூவடிதாவென்று இரந்தஇம்மண்ணினை
ஓரடியிட்டு இரண்டாமடிதன்னிலே
தாவடியிட்டானால்இன்றுமுற்றும்
தரணியளந்தானால்இன்றுமுற்றும்

தாழைதண்ணாம்பல் தடம்பெரும்பொய்கைவாய்
வாழுமுதலை வலைப்பட்டுவாதிப்புண்
வேழம்துயர்கெட விண்ணோர்பெருமானாய்
ஆழிபணிகொண்டானால்இன்றுமுற்றும்
அதற்குஅருள்செய்தானால்இன்றுமுற்றும்

வானத்தெழுந்த மழைமுகில்போல் எங்கும்
கானத்துமேய்ந்து களித்துவிளையாடி
ஏனத்துருவாய் இடந்தஇம்மண்ணினை
தானத்தேவைத்தானால்இன்றுமுற்றும்
தரணியிடந்தானால்இன்றுமுற்றும்
தரவு கொச்சகக்கலிப்பா

அங்கமலக்கண்ணன்தன்னை யசோதைக்கு
மங்கைநல்லார்கள்தாம் வந்துமுறைப்பட்ட
அங்கவர்சொல்லை புதுவைப்கோன்பட்டன்சொல்
இங்கிவைவல்லவர்க்கு ஏதமொன்றில்லையே

மூன்றாம்பத்து
முதல்திருமொழி தன்னேராயிரம்
யசோதைப்பிராட்டி கண்ணனது அதிமாநுஷ சேஷ்டிதங்களை
கண்டு முலைகொடுக்க அஞ்சுதல்

எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

தன்னேராயிரம்பிள்ளைகளோடு தளர்நடையிட்டுவருவான்
பொன்னேய்நெய்யொடுபாலமுதுண்டு ஒருபுள்ளுவன்பொய்யேதவழும்
மின்னேர் நுண்ணிடைவஞ்சமகள்கொங்கைதுஞ்ச வாய்வைத்தபிரானே
அன்னே உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே

பொன்போல்மஞ்சனமாட்டிஅமுதூட்டிப்போனேன் வருமளவுஇப்பால்
வன்பாரச்சகடம்இறச்சாடி வடக்கிலகம்புக்கிருந்து
மின்போல் நுண்ணிடையால்ஒருகன்னியை வேற்றுருவம்செய்துவைத்த
அன்பா உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே

கும்மாயத்தொடுவெண்ணெய்விழுங்கி குடத்தயிர்சாய்த்துப்பருகி
பொய்ம்மாயமருதானஅசுரரை பொன்றுவித்துஇன்றுநீவந்தாய்
இம்மாயம்வல்லபிள்ளைநம்பீ உன்னைஎன்மகனேயென்பர்நின்றார்
அம்மா உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே

மையார்கண்டமடவாய்ச்சியர்மக்களை மையன்மைசெய்துஅவர்பின்போய்
கொய்யார்பூந்துகில்பற்றித்தனிநின்று குற்றம்பலபலசெய்தாய்
பொய்யா உன்னைப்புறம்பலபேசுவ புத்தகத்துக்குளகேட்டேன்
ஐயா உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே

முப்போதும்கடைந்தீண்டியவெண்ணெயினோடு தயிரும்விழுங்கி
கப்பாலாயர்கள்காவிற்கொணர்ந்த கலத்தொடுசாய்த்துப்பருகி
மெய்ப்பாலுண்டழுபிள்ளைகள்போல நீவிம்மிவிம்மியழுகின்ற
அப்பா உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே

கரும்பார்நீள்வயல்காய்கதிர்ச்செந்நெலை கற்றாநிறைமண்டித்தின்ன
விரும்பாக்கன்றொன்றுகொண்டு விளங்கனிவீழஎறிந்தபிரானே
சுரும்பார்மென்குழல்கன்னியொருத்திக்கு சூழ்வலைவைத்துத்திரியும்
அரம்பா உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே

மருட்டார்மென்குழல்கொண்டுபொழில்புக்கு வாய்வைத்துஅவ்வாயர்தம்பாடி
சுருட்டார்மென்குழல்கன்னியர்வந்துஉன்னை சுற்றும்தொழநின்றசோதி
பொருட்டாயமிலேன்எம்பெருமான் உன்னைப்பெற்றகுற்றமல்லால் மற்றிங்கு
அரட்டா உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே

வாளாவாகிலும்காணகில்லார் பிறர்மக்களைமையன்மைசெய்து
தோளாலிட்டுஅவரோடுதிளைத்து நீசொல்லப்படாதனசெய்தாய்
கேளார்ஆயர்குலத்தவர்இப்பழி கெட்டேன் வாழ்வில்லை நந்தன்
காளாய் உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே

தாய்மோர்விற்கப்போவர் தமப்பன்மார்கற்றாநிறைப்பின்புபோவர்
நீ ஆய்ப்பாடிஇளங்கன்னிமார்களைநேர்படவேகொண்டுபோதி
காய்வார்க்குஎன்றும்உகப்பனவேசெய்து கண்டார்கழறத்திரியும்
ஆயா உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே

தொத்தார்பூங்குழல்கன்னியொருத்தியை சோலைத்தடம்கொண்டுபுக்கு
முத்தார்கொங்கைபுணர்ந்துஇராநாழிகை மூவேழுசென்றபின்வந்தாய்
ஒத்தார்க்குஒத்தனபேசுவர்உன்னை உரப்பவேநான்ஒன்றும்மாட்டேன்
அத்தா உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே

கரார்மேனிநிறத்தெம்பிரானை கடிகமழ்பூங்குழலாய்ச்சி
ஆராஇன்னமுதுண்ணத்தருவன்நான் அம்மம்தாரேனென்றமாற்றம்
பாரார்தொல்புகழான்புதுவைமன்னன் பட்டர்பிரான்சொன்னபாடல்
ஏராரின்னிசைமாலைவல்லார் இருடீகேசனடியாரே
இரண்டாம் திருமொழி அஞ்சனவண்ணனை
யசோதப்பிராட்டி கண்ணனை கன்றின்பின் போக்கினதை எண்ணி அநுதபித்தல்
கலிநிலைத்துறை

அஞ்சனவண்ணனை ஆயர்குலக்கொழுந்தினை
மஞ்சனமாட்டி மனைகள்தோறும்திரியாமே
கஞ்சனைக்காய்ந்த கழலடிநோவக்கன்றின்பின்
என்செயப்பிள்ளையைப்போக்கினேன் எல்லேபாவமே

பற்றுமஞ்சள்பூசி பாவைமாரொடுபாடியில்
சிற்றில்சிதைத்து எங்கும்தீமைசெய்துதிரியாமே
கற்றுத்தூளியுடை வேடர்கானிடைக்கன்றின்பின்
எற்றுக்குஎன்பிள்ளையைப்போக்கினேன் எல்லேபாவமே

நன்மணிமேகலை நங்கைமாரொடுநாள்தொறும்
பொன்மணிமேனி புழுதியாடித்திரியாமே
கன்மணிநின்றதிர் கானதரிடைக்கன்றின்பின்
என்மணிவண்ணனைப்போக்கினேன் எல்லேபாவமே

வண்ணக்கருங்குழல் மாதர்வந்துஅலர்தூற்றிட
பண்ணிப்பலசெய்து இப்பாடியெங்கும்திரியாமே
கண்ணுக்கினியானை கானதரிடைக்கன்றின்பின்
எண்ணற்கரியானைப்போக்கினேன் எல்லேபாவமே

அவ்வவ்விடம்புக்கு அவ்வாயர்பெண்டிர்க்குஅணுக்கனாய்
கொவ்வைக்கனிவாய்கொடுத்து கூழைமைசெய்யாமே
எவ்வம்சிலையுடை வேடர்கானிடைக்கன்றின்பின்
தெய்வத்தலைவனைப்போக்கினேன் எல்லேபாவமே

மிடறுமெழுமெழுத்தோட வெண்ணெய்விழுங்கிப்போய்
படிறுபலசெய்து இப்பாடியெங்கும்திரியாமே
கடிறுபலதிரி கானதரிடைக்கன்றின்பின்
இடறஎன்பிள்ளையைப்போக்கினேன் எல்லேபாவமே

வள்ளிநுடங்கிடை மாதர்வந்துஅலர்தூற்றிட
துள்ளிவிளையாடி தோழரோடுதிரியாமே
கள்ளியுணங்கு வெங்கானதரிடைக்கன்றின்பின்
புள்ளின்தலைவனைப்போக்கினேன் எல்லேபாவமே

பன்னிருதிங்கள் வயிற்றில்கொண்டஅப்பாங்கினால்
என்இளங்கொங்கை அமுதமூட்டியெடுத்துயான்
பொன்னடிநோவ புலரியேகானில்கன்றின்பின்
என்னிளஞ்சிங்கத்தைப்போக்கினேன் எல்லேபாவமே

குடையும்செருப்பும்கொடாதே தாமோதரனைநான்
உடையும்கடியன ஊன்றுவெம்பரற்களுடை
கடியவெங்கானிடை காலடிநோவக்கன்றின்பின்
கொடியேன்என்பிள்ளையைப்போக்கினேன் எல்லேபாவமே

என்றும்எனக்குஇனியானை என்மணிவண்ணனை
கன்றின்பின்போக்கினேனென்று அசோதைகழறிய
பொன்திகழ்மாட புதுவையர்கோன்பட்டன்சொல்
இன்தமிழ்மாலைகள்வல்லவர்க்கு இடரில்லையே
மூன்றாம் திருமொழி சீலைக்குதம்பை
கண்ணன் கன்றுகள்மேய்த்துவர கண்டு யசோதை மகிழ்தல்
எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

சீலைக்குதம்பைஒருகாது ஒருகாதுசெந்நிறமேல்தோன்றிப்பூ
கோலப்பணைக்கச்சும்கூறையுடையும் குளிர்முத்தின்கோடாலமும்
காலிப்பின்னேவருகின்ற கடல்வண்ணன்வேடத்தைவந்துகாணீர்
ஞாலத்துப்புத்திரனைப்பெற்றார் நங்கைமீர் நானோமற்றாருமில்லை

கன்னிநன்மாமதிள்சூழ்தரு பூம்பொழில்காவிரித்தென்னரங்கம்
மன்னியசீர்மதுசூதனா கேசவா பாவியேன்வாழ்வுகந்து
உன்னைஇளங்கன்றுமேய்க்க சிறுகாலேயூட்டிஒருப்படுத்தேன்
என்னின்மனம்வலியாள்ஒருபெண்இல்லை என்குட்டனேமுத்தம்தா

காடுகளூடுபோய்க்கன்றுகள்மேய்த்துமறியோடி கார்க்கோடல்பூ
சூடிவரிகின்றதாமோதரா கற்றுத்தூளிகாண்உன்னுடம்பு
பேடைமயிற்சாயல்பின்னைமணாளா நீராட்டமைத்துவைத்தேன்
ஆடிஅமுதுசெய்அப்பனுமுண்டிலன் உன்னோடுஉடனேயுண்பான்

கடியார்பொழிலணிவேங்கடவா கரும்போரேறே நீயுகக்கும்
குடையும்செருப்பும்குழலும்தருவி கொள்ளாதேபோனாய்மாலே
கடியவெங்கானிடைக்கன்றின்பின்போன சிறுக்குட்டச்செங்கமல
அடியும்வெதும்பி உன்கண்கள்சிவந்தாய்அசைந்திட்டாய்நீஎம்பிரான்

பற்றார்நடுங்கமுன்பாஞ்சசன்னியத்தை வாய்வைத்தபோரேறே
எஞ்சிற்றாயர்சிங்கமே சீதைமணாளா சிறுக்குட்டச்செங்கண்மாலே
சிற்றாடையும்சிறுப்பத்திரமும்இவை கட்டிலின்மேல்வைத்துப்போய்
கற்றாயரோடுநீகன்றுகள்மேய்த்து கலந்துடன்வந்தாய்போலும்

அஞ்சுடராழிஉன்கையகத்தேந்தும் அழகா நீபொய்கைபுக்கு
நஞ்சுமிழ்நாகத்தினோடுபிணங்கவும் நான்உயிர்வாழ்ந்திருந்தேன்
என்செய்யஎன்னைவயிறுமறுக்கினாய் ஏதுமோரச்சமில்லை
கஞ்சன்மனத்துக்குஉகப்பனவேசெய்தாய் காயாம்பூவண்ணம்கொண்டாய்

பன்றியும்ஆமையும்மீனமுமாகிய பாற்கடல்வண்ணா உன்மேல்
கன்றினுருவாகிமேய்புலத்தேவந்த கள்ளஅசுரன்தன்னை
சென்றுபிடித்துச்சிறுக்கைகளாலே விளங்காயெறிந்தாய்போலும்
என்றும்என்பிள்ளைக்குத்தீமைகள்செய்வார்கள் அங்கனமாவார்களே

கேட்டறியாதனகேட்கின்றேன் கேசவா கோவலர்இந்திரற்கு
கட்டியசோறும்கறியும்தயிரும் கலந்துடன்உண்டாய்போலும்
ஊட்டமுதலிலேன்உன்தன்னைக்கொண்டு ஒருபோதும்எனக்கரிது
வாட்டமிலாப்புகழ்வாசுதேவா உன்னைஅஞ்சுவன்இன்றுதொட்டும்

திண்ணார்வெண்சங்குடையாய் திருநாள்திருவோணமின்றேழுநாள் முன்
பண்ணோர்மொழியாரைக்கூவிமுளையட்டி பல்லாண்டுகூறுவித்தேன்
கண்ணாலம்செ கறியும்கலத்தரிசியும்ஆக்கிவைத்தேன்
கண்ணா நீநாளைத்தொட்டுக்கன்றின்பின்போகேல் கோலம்செய்திங்கேயிரு

புற்றரவல்குல்அசோதைநல்லாய்ச்சி தன்புத்திரன்கோவிந்தனை
கற்றினம்மேய்த்துவரக்கண்டுகந்து அவள்கற்பித்தமாற்றமெல்லாம்
செற்றமிலாதவர்வாழ்தரு தென்புதுவைவிட்டுசித்தன்சொல்
கற்றிவைபாடவல்லார் கடல்வண்ணன்கழலிணைகாண்பார்களே
நான்காம் திருமொழி தழைகளும்
காலிப்பின்னேவரும் கண்ணனைக்கண்டு இடைக்கன்னியர் காமுறுதல்
எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

தழைகளும்தொங்கலும்ததும்பிஎங்கும்
தண்ணுமைஎக்கம்மத்தளிதாழ்பீலி
குழல்களும்கீதமுமாகிஎங்கும்
கோவிந்தன்வருகின்றகூட்டம்கண்டு
மழைகொலோவருகின்றதென்றுசொல்லி
மங்கைமார்சாலகவாசல்பற்றி
நுழைவனர்நிற்பனராகி எங்கும்
உள்ளம்விட்டுஊண்மறந்தொழிந்தனரே

வல்லிநுண்இதழன்னஆடைகொண்டு
வசையறத்திருவரைவிரித்துடுத்து
பல்லிநுண்பற்றாகஉடைவாள்சாத்தி
பணைக்கச்சுந்திப்பலதழைநடுவே
முல்லைநல்நறுமலர்வேங்கைமலர்
அணிந்து பல்லாயர்குழாம்நடுவே
எல்லியம்போதாகப்பிள்ளைவரும்
எதிர்நின்றுஅங்கினவளைஇழவேன்மினே

சுரிகையும்தெறிவில்லும்செண்டுகோலும்
மேலாடையும்தோழன்மார்கொண்டோ
ஒருகையால்ஒருவன்தன்தோளையூன்றி
ஆநிரையினம்மீளக்குறித்தசங்கம்
வருகையில்வாடியபிள்ளைகண்ணன்
மஞ்சளும்மேனியும்வடிவும்கண்டாள்
அருகேநின்றாள்என்பென்ஓக்கிக்கண்டாள்
அதுகண்டுஇவ்வூர்ஒன்றுபுணர்க்கின்றதே

குன்றெடுத்துஆநிரைகாத்தபிரான்
கோவலனாய்க்குழலூதியூதி
கன்றுகள்மேய்த்துத்தன்தோழரோடு
கலந்துடன்வருவானைத்தெருவில்கண்டு
என்றும்இவனையொப்பாரைநங்காய்
கண்டறியேன்ஏடி வந்துகாணாய்
ஒன்றும்நில்லாவளைகழன்று
துகிலேந்திளமுலையும்என்வசமல்லவே

சுற்றிநின்றுஆயர்தழைகளிட
சுருள்பங்கிநேத்திரத்தால்அணிந்து
பற்றிநின்றுஆயர்கடைத்தலையே
பாடவும்ஆடக்கண்டேன் அன்றிப்பின்
மற்றொருவர்க்குஎன்னைப்பேசலொட்டேன்
மாலிருஞ்சோலைஎம்மாயற்கல்லால்
கொற்றவனுக்குஇவளாமென்றெண்ணி
கொடுமின்கள்கொடீராகில்கோழம்பமே

சிந்துரமிலங்கத்தன்திருநெற்றிமேல்
திருத்தியகோறம்பும்திருக்குழலும்
அந்தரமுழவத்தண்தழைக்காவின்கீழ்
வருமாயரோடுஉடன்வளைகோல்வீச
அந்தமொன்றில்லாதஆயப்பிள்ளை
அறிந்தறிந்துஇவ்வீதிபோதுமாகில்
பந்துகொண்டானென்றுவளைத்துவைத்து
பவளவாய்முறுவலும்காண்போம்தோழீ

சாலப்பல்நிரைப்பின்னேதழைக்காவின்கீழ்
தன்திருமேனிநின்றொளிதிகழ
நீலநல்நறுங்குஞ்சிநேத்திரத்தாலணிந்து
பல்லாயர்குழாம்நடுவே
கோலச்செந்தாமரைக்கண்மிளிர
குழலூதியிசைபாடிக்குனித்து ஆயரோடு
ஆலித்துவருகின்றஆயப்பிள்ளை
அழகுகண்டுஎன்மகளயர்க்கின்றதே

சிந்துரப்பொடிக்கொண்டுசென்னியப்பி
திருநாமமிட்டங்கோரிலையந்தன்னால்
அந்தரமின்றித்தன்னெறிபங்கியை
அழகியநேத்திரத்தாலணிந்து
இந்திரன்போல்வருமாயப்பிள்ளை
எதிர்நின்றங்கினவளைஇழவேலென்ன
சந்தியில்நின்றுகண்டீர் நங்கைதன்
துகிலொடுசரிவளைகழல்கின்றதே

வலங்காதின்மேல்தோன்றிப்பூவணிந்து
மல்லிகைவனமாலைமௌவல்மாலை
சிலிங்காரத்தால்குழல்தாழவிட்டு
தீங்குழல்வாய்மடுத்தூதியூதி
அலங்காரத்தால்வருமாய்ப்பிள்ளை
அழகுகண்டுஎன்மகள்ஆசைப்பட்டு
விலங்கிநில்லாதுஎதிர்நின்றுகண்டீர்
வெள்வளைகழன்றுமெய்ம்மெலிகின்றதே

விண்ணின்மீதுஅமரர்கள்விரும்பித்தொழ
மிறைத்துஆயர்பாடியில்வீதியூடே
கண்ணங்காலிப்பின்னேஎழுந்தருளக்கண்டு
இளவாய்க்கன்னிமார்காமுற்ற
வண்ணம் வண்டமர்பொழில்புதுவையர்கோன்
விட்டுசித்தன்சொன்னமாலைபத்தும்
பண்ணின்பம்வரப்பாடும்பத்தருள்ளார்
பரமானவைகுந்தம்நண்ணுவரே
ஐந்தாம் திருமொழி அட்டுக்குவி
கண்ணன் கோவர்த்தனகிரியை குடையாகக்கொண்டு கல்மழை
தடுத்து ஆயரையும் ஆநிரையையும் பாதுகாத்தல்
எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

அட்டுக்குவிசோற்றுப்பருப்பதமும்
தயிர்வாவியும்நெய்யளறும்அடங்க
பொட்டத்துற்றி மாரிப்பகைபுணர்த்த
பொருமாகடல்வண்ணன்பொறுத்தமலை
வட்டத்தடங்கண்மடமான்கன்றினை
வலைவாய்ப்பற்றிக்கொண்டு குறமகளிர்
கொட்டைத்தலைப்பால்கொடுத்துவளர்க்கும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே

வழுவொன்றுமிலாச்செய்கை வானவர்கோன்
வலிப்பட்டுமுனிந்துவிடுக்கப்பட்டு
மழைவந்துஎழுநாள்பெய்துமாத்தடுப்ப
மதுசூதன்எடுத்துமறித்தமலை
இழவுதரியாததோரீற்றுப்பிடி
இளஞ்சீயம்தொடர்ந்துமுடுகுதலும்
குழவியிடைக்காலிட்டெதிர்ந்துபொரும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே

அம்மைத்தடங்கண்மடவாய்ச்சியரும்
ஆனாயரும்ஆநிரையும்அலறி
எம்மைச்சரணேன்றுகொள்ளென்றிரப்ப
இலங்காழிக்கையெந்தைஎடுத்தமலை
தம்மைச்சரணென்றதம்பாவையரை
புனமேய்கின்றமானினம்காண்மினென்று
கொம்மைப்புயக்குன்றர்சிலைகுனிக்கும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே

கடுவாய்ச்சினவெங்கண்களிற்றினுக்கு
கவளமெடுத்துக்கொடுப்பானவன்போல்
அடிவாயுறக்கையிட்டுஎழப்பறித்திட்டு
அமரர்பெருமான்கொண்டுநின்றமலை
கடல்வாய்ச்சென்றுமேகம்கவிழ்ந்திறங்கி
கதுவாய்ப்படநீர்முகந்தேறி எங்கும்
குடவாய்ப்படநின்றுமழைபொழியும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே

வானத்திலுல்லீர் வலியீர்உள்ளீரேல்
அறையோ வந்துவாங்குமினென்பவன்போல்
ஏனத்துருவாகியஈசன்எந்தை
இடவனெழவாங்கியெடுத்தமலை
கானக்களியானைதன்கொம்பிழந்து
கதுவாய்மதம்சோரத்தன்கையெடுத்து
கூனல்பிறைவேண்டிஅண்ணாந்துநிற்கும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே

செப்பாடுடையதிருமாலவன் தன்
செந்தாமரைக்கைவிரலைந்தினையும்
கப்பாகமடுத்துமணிநெடுந்தோள்
காம்பாகக்கொடுத்துக்கவித்தமலை
எப்பாடும்பரந்திழிதெள்ளருவி
இலங்குமணிமுத்துவடம்பிறழ
குப்பாயமெனநின்றுகாட்சிதரும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே

படங்கள்பலவுமுடைப்பாம்பரையன்
படர்பூமியைத்தாங்கிக்கிடப்பவன்போல்
தடங்கைவிரலைந்தும்மலரவைத்து
தாமோதரன்தாங்குதடவரைதான்
அடங்கச்சென்றுஇலங்கையையீடழித்த
அனுமன்புகழ்பாடித்தம்குட்டன்களை
குடங்கைக்கொண்டுமந்திகள்கண்வளர்த்தும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே

சலமாமுகில்பல்கணப்போர்க்களத்து
சரமாரிபொழிந்துஎங்கும்பூசலிட்டு
நலிவானுறக்கேடகம்கோப்பவன்போல்
நாராயணன்முன்முகம்காத்தமலை
இலைவேய்குரம்பைத்தவமாமுனிவர்
இருந்தார்நடுவேசென்றுஅணார்சொறிய
கொலைவாய்ச்சினவேங்கைகள்நின்றுறங்கும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே

வன்பேய்முலையுண்டதோர்வாயுடையன்
வன்தூணெனநின்றதோர்வன்பரத்தை
தன்பேரிட்டுக்கொண்டுதரணிதன்னில்
தாமோதரன்தாங்குதடவரைதான்
முன்பேவழிகாட்டமுசுக்கணங்கள்
முதுகில்பெய்துதம்முடைக்குட்டன்களை
கொம்பேற்றியிருந்துகுதிபயிற்றும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே

கொடியேறுசெந்தாமரைக்கைவிரல்கள்
கோலமும்அழிந்திலவாடிற்றில
வடிவேறுதிருவுகிர்நொந்துமில
மணிவண்ணன்மலையுமோர்சம்பிரதம்
முடியேறியமாமுகிற்பல்கணங்கள்
முன்னெற்றிநரைத்தனபோல எங்கும்
குடியேறியிருந்துமழைபொழியும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே

அரவில்பள்ளிகொண்டுஅரவம்துரந்திட்டு
அரவப்பகையூர்தியவனுடைய
குரவிற்கொடிமுல்லைகள்நின்றுறங்கும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடைமேல்
திருவிற்பொலிமறைவாணர்புத்தூர
திகழ்பட்டர்பிரான்சொன்னமாலைபத்தும்
பரவுமனநன்குடைப்பத்தருள்ளார்
பரமானவைகுந்தம்நண்ணுவரே
ஆறாம் திருமொழி நாவலம்
கண்ணன் புல்லங்குழலூதற்சிறப்பு

நாவலம்பெரியதீவினில்வாழும்
நங்கைமீர்காள் இதுஓரற்புதம்கேளீர்
தூவலம்புரியுடையதிருமால்
தூயவாயில்குழலோசைவழியே
கோவலர்சிறுமியர்இளங்கொங்கை
குதுகலிப்பஉடலுளவிழ்ந்து எங்கும்
காவலும்கடந்துகயிறுமாலையாகி
வந்துகவிழ்ந்துநின்றனரே

இடவணரைஇடத்தோளொடுசாய்த்து
இருகைகூடப்புருவம்நெரிந்தேற
குடவயிறுபடவாய்கடைகூட
கோவிந்தன்குழல்கொடுஊதினபோது
மடமயில்களொடுமான்பிணைபோலே
மங்கைமார்கள்மலர்க்கூந்தல்அவிழ
உடைநெகிழஓர்கையால்துகில்பற்றி
ஒல்கியோடரிக்கணோடநின்றனரே

வானிலவரசுவைகுந்தக்குட்டன்
வாசுதேவன்மதுரைமன்னன் நந்த
கோனிளவரசுகோவலர்குட்டன்
கோவிந்தன்குழல்கொடுஊதினபோது
வானிளம்படியர்வந்துவந்தீண்டி
மனமுருகிமலர்க்கண்கள்பனிப்ப
தேனளவுசெறிகூந்தலவிழ
சென்னிவேர்ப்பச்செவிசேர்த்துநின்றனரே

தேனுகன்பிலம்பன்காளியனென்னும்
தீப்பப்பூடுகள்அடங்கஉழக்கி
கானகம்படிஉலாவியுலாவி
கருஞ்சிறுக்கன்குழலூதினபோது
மேனகையொடுதிலோத்தமைஅரம்பை
உருப்பசியரவர்வெள்கிமயங்கி
வானகம்படியில்வாய்திறப்பின்றி
ஆடல்பாடலவைமாறினர்தாமே

முன்நரசிங்கமதாகி அவுணன்
முக்கியத்தைமுடிப்பான் மூவுலகில்
மன்னரஞ்சும் மதுசூதனன்வாயில்
குழலினோசை செவியைப்பற்றிவாங்க
நன்னரம்புடையதும்புருவோடு
நாரதனும்தம்தம்வீணைமறந்து
கின்னரமிதுனங்களும் தம்தம்
கின்னரம்தொடுகிலோமென்றனரே

செம்பெருந்தடங்கண்ணன்திரள்தோளன்
தேவகிசிறுவன்தேவர்கள்சிங்கம்
நம்பரமன்இந்நாள்குழலூத
கேட்டவர்கள் இடருற்றனகேளீர்
அம்பரம்திரியும்காந்தப்பரெல்லாம்
அமுதகீதவலையால்சுருக்குண்டு
நம்பரமன்றென்றுநாணிமயங்கி
நைந்துசோர்ந்துகைம்மறித்துநின்றனரே

புவியுள்நான்கண்டதோரற்புதம்கேளீர்
பூணிமேய்க்கும்இளங்கோவலர்கூட்டத்து
அவையுள் நாகத்தணையான்குழலூத
அமரலோகத்தளவும்சென்றிசைப்ப
அவியுணாமறந்துவானவரெல்லாம்
ஆயர்பாடிநிறையப்புகுந்துஈண்டி
செவியுணாவின்சுவைகொண்டுமகிழ்ந்து
கோவிந்தனைத்தொடர்ந்துஎன்றும்விடாரே

சிறுவிரல்கள்தடவிப்பரிமாற
செங்கண்கோடச்செய்யவாய்கொப்பளிக்க
குறுவெயர்ப்புருவம்கூடலிப்ப
கோவிந்தன்குழல்கொடுஊதினபோது
பறவையின்கணங்கள்கூடுதுறந்து
வந்துசூழ்ந்துபடுகாடுகிடப்ப
கறவையின்கணங்கள்கால்பரப்பீட்டு
கவிழ்ந்திறங்கிச்செவியாட்டகில்லாவே

திரண்டெழுதழைமழைமுகில்வண்ணன்
செங்கமலமலர்சூழ்வண்டினம்போலே
சுருண்டிருண்டகுழல்தாழ்ந்தமுகத்தான்
ஊதுகின்றகுழலோசைவழியே
மருண்டுமான்கணங்கள்மேய்கைமறந்து
மேய்ந்தபுல்லும்கடைவாய்வழிசோர
இரண்டுபாடும்துலங்காப்புடைபெயரா
எழுதுசித்திரங்கள்போலநின்றனவே

கருங்கண்தோகைமயிற்பீலியணிந்து
கட்டிநன்குடுத்தபீதகவாடை
அருங்கலவுருவினாயர்பெருமான்
அவனொருவன்குழலூதினபோது
மரங்கள்நின்றுமதுதாரைகள்பாயும்
மலர்கள்வீழும்வளர்கொம்புகள்தாழும்
இரங்கும்கூம்பும்திருமால்நின்றநின்ற
பக்கம்நோக்கி அவைசெய்யும்குணமே

குழலிருண்டுசுருண்டேறியகுஞ்சி
கோவிந்தனுடையகோமளவாயில்
குழல்முழைஞ்சுகளினூடுகுமிழ்த்து
கொழித்திழிந்தஅமுதப்புனல்தன்னை
குழல்முழவம்விளம்பும்புதுவைக்கோன்
விட்டுசித்தன்விரித்ததமிழ்வல்லார்
குழலைவென்றகுளிர்வாயினராகி
சாதுகோட்டியுள்கொள்ளப்படுவாரே
ஏழாம் திருமொழி ஐயபுழுதி
திருமாலினிடத்து ஈடுபட்ட தலைமகள் இளமை கண்டு
நற்றாய் இரங்கும் பாசுரம்

அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

ஐயபுழுதிஉடம்பளைந்து இவள்பேச்சுமலந்தலையாய்
செய்யநூலின்சிற்றாடை செப்பனடுக்கவும்வல்லளல்லள்
கையினில்சிறுதூதையோடு இவள்முற்றில்பிரிந்துமிலள்
பையரவணைப்பள்ளியானோடு கைவைத்துஇவள்வருமே

வாயில்பல்லும்எழுந்தில மயிரும்முடிகூடிற்றில
சாய்விலாதகுறுந்தலை சிலபிள்ளைகளோடிணங்கி
தீயிணக்கிணங்காடிவந்து இவள்தன்னன்னசெம்மைசொல்லி
மாயன்மாமணிவண்ணன்மேல் இவள்மாலுறுகின்றாளே

பொங்குவெண்மணல்கொண்டு சிற்றிலும்முற்றத்திழைக்கலுறில்
சங்குசக்கரம்தண்டுவாள் வில்லுமல்லதுஇழைக்கலுறால்
கொங்கைஇன்னம்குவிந்தெழுந்தில கோவிந்தனோடுஇவளை
சங்கையாகிஎன்னுள்ளம் நாள்தொறும்தட்டுளுப்பாகின்றதே

ஏழைபேதைஓர்பாலகன்வந்து என்பெண்மகளையெள்கி
தோழிமார்பலர்கொண்டுபோய்ச்செய்த சூழ்ச்சியையார்க்குரைக்கேன்
ஆழியானென்னுமாழமோழையில் பாய்ச்சிஅகப்படுத்தி
மூழையுப்பறியாததென்னும் மூதுரையுமிலளே

நாடும்ஊரும்அறியவேபோய் நல்லதுழாயலங்கள்
சூடி நாரணன்போமிடமெல்லாம் சோதித்துழிதருகின்றாள்
கேடுவேண்டுகின்றார்பலருளர் கேசவனோடுஇவளை
பாடுகாவலிடுமினென்றென்று பார்தடுமாறினதே

பட்டம்கட்டிப்பொற்றோடுபெய்து இவள்பாடகமும்சிலம்பும்
இட்டமாகவளர்த்தெடுத்தேனுக்கு என்னோடுஇருக்கலுறாள்
பொட்டப்போய்ப்புறப்பட்டுநின்று இவள்பூவைப்பூவண்ணாவென்னும்
வட்டவார்குழல்மங்கைமீர் இவள்மாலுறுகின்றாளே

பேசவும் தரியாதபெண்மையின் பேதையேன்பேதைஇவள்
கூசமின்றிநின்றார்கள்தம்மெதிர் கோல்கழிந்தான்மூழையாய்
கேசவாவென்றும்கேடிலீயென்றும் கிஞ்சுகவாய்மொழியாள்
வாசவார்குழல்மங்கைமீர் இவள்மாலுறுகின்றாளே

காறைபூணும்கண்ணாடிகாணும் தன்கையில்வளைகுலுக்கும்
கூறையுடுக்கும்அயர்க்கும் தங்கொவ்வைச்செவ்வாய்திருத்தும்
தேறித்தேறிநின்று ஆயிரம்பேர்த்தேவன்திறம்பிதற்றும்
மாறில்மாமணிவண்ணன்மேல் இவள்மாலுறுகின்றாளே

கைத்தலத்துள்ளமாடழி கண்ணாலங்கள்செய்து இவளை
வைத்துவைத்துக்கொண்டுஎன்னவாணியம் நம்மைவடுப்படுத்தும்
செய்த்தலையெழுநாற்றுப்போல் அவன்செய்வனசெய்துகொள்ள
மைத்தடமுகில்வண்ணன்பக்கல் வளரவிடுமின்களே

பெருப்பெருத்தகண்ணாலங்கள்செய்து பேணிநம்மில்லத்துள்ளே
இருத்துவானெண்ணிநாமிருக்க இவளும்ஒன்றெண்ணுகின்றாள்
மருத்துவப்பதம்நீங்கினாளென்னும்வார்த்தை படுவதன்முன்
ஒருப்படுத்திடுமின்இவளை உலகளந்தானிடைக்கே

ஞாலமுற்றும்உண்டுஆலிலைத்துயில் நாராயணனுக்கு இவள்
மாலதாகிமகிழ்ந்தனளென்று தாயுரைசெய்ததனை
கோலமார்பொழில்சூழ்புதுவையர்கோன் விட்டுசித்தன்சொன்ன
மாலைபத்தும்வல்லவர்கட்கு இல்லைவருதுயரே
எட்டாம் திருமொழி நல்லதோர் தாமரை
தலைமகனுடன் சென்ற தலைமகளை குறித்து தாய்
பலபடி வருந்திக்கூறும் பாசுரம்

அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

நல்லதோர்தாமரைப்பொய்கை நாண்மலர்மேல்பனிசோர
அல்லியும்தாதும்உதிர்ந்திட்டு அழகழிந்தாலொத்ததாலோ
இல்லம்வெறியோடிற்றாலோ என்மகளைஎங்கும்காணேன்
மல்லரையட்டவன்பின்போய் மதுரைப்புறம்புக்காள்கொலோ

ஒன்றுமறிவொன்றில்லாத உருவறைக்கோபாலர்தங்கள்
கன்றுகால்மாறுமாபோலே கன்னியிருந்தாளைக்கொண்டு
நன்றும்கிறிசெய்துபோனான் நாராயணன்செய்ததீமை
என்றும்எமர்கள்குடிக்கு ஓரேச்சுக்கொலாயிடுங்கொலோ

குமரிமணம்செய்துகொண்டு கோலம்செய்துஇல்லத்திருத்தி
தமரும்பிறரும்அறி தாமோதரற்கென்றுசாற்றி
அமரர்பதியுடைத்தேவி அரசாணியை வழிபட்டு
துமிலமெழப்பறைகொட்டி தோரணம்நாட்டிடுங்கொலோ

ஒருமகள்தன்னையுடையேன் உலகம்நிறைந்தபுகழால்
திருமகள்போலவளர்த்தேன் செங்கண்மால்தான்கொண்டுபோனான்
பெருமகளாய்க்குடிவாழ்ந்து பெரும்பிள்ளைபெற்றஅசோதை
மருமகளைக்கண்டுகந்து மணாட்டுப்புறம்செய்யுங்கொலோ

தம்மாமன்நந்தகோபாலன் தழீஇக்கொண்டுஎன்மகள்தன்னை
செம்மாந்திரேயென்றுசொல்லி செழுங்கயற்கண்ணும்செவ்வாயும்
கொம்மைமுலையும்இடையும் கொழும்பணைத்தோள்களும்கண்டிட்டு
இம்மகளைப்பெற்றதாயர் இனித்தரியாரென்னுங்கொலோ

வேடர்மறக்குலம்போலே வேண்டிற்றுச்செய்துஎன்மகளை
கூடியகூட்டமேயா கொண்டுகுடிவாழுங்கொலோ
நாடும்நகரும்அறிய நல்லதோர்கண்ணாலம்செய்து
சாடிறப்பாய்ந்தபெருமான் தக்கவாகைப்பற்றுங்கொலோ

அண்டத்தமரர்பெருமான் ஆழியான்இன்றுஎன்மகளை
பண்டப்பழிப்புக்கள்சொல்லி பரிசறஆண்டிடுங்கொலோ
கொண்டுகுடிவாழ்க்கைவாழ்ந்து கோவலப்பட்டம்கவித்து
பண்டைமணாட்டிமார்முன்னே பாதுகாவல்வைக்குங்கொலோ

குடியில்பிறந்தவர்செய்யும் குணமொன்றும்செய்திலன்அந்தோ
நடையொன்றும்செய்திலன்நங்காய் நந்தகோபன்மகன்கண்ணன்
இடையிருபாலும்வணங்க இளைத்திளைத்துஎன்மகள்ஏங்கி
கடைகயிறேபற்றிவாங்கி கைதழும்பேறிடுங்கொலோ

வெண்ணிறத்தோய்தயிர்தன்னை வெள்வரைப்பின்முன்எழுந்து
கண்ணுறங்காதேயிருந்து கடையவும்தான்வல்லள்கொலோ
ஒண்ணிறத்தாமரைச்செங்கண் உலகளந்தான்என்மகளை
பண்ணறையாப்பணிகொண்டு பரிசறஆண்டிடுங்கொலோ

மாயவன்பின்வழிசென்று வழியிடைமாற்றங்கள்கேட்டு
ஆயர்கள்சேரியிலும்புக்கு அங்குத்தைமாற்றமுமெல்லாம்
தாயவள்சொல்லியசொல்லை தண்புதுவைப்பட்டன்சொன்ன
தூயதமிழ்ப்பத்தும்வல்லார் தூமணிவண்ணனுக்காளரே
ஒன்பதாம் திருமொழி என்னாதன்
க்ருஷ்ணாவதார ராமாவதாரங்களின் குணசேஷ்டிதங்களை
இறண்டு தோழியர் எதிரெதிராகக்கூறி உந்திபறித்தல்
கலித்தாழிசை

என்னாதன்தேவிக்கு அன்றுஇன்பப்பூஈயாதாள்
தன் நாதன்காணவே தண்பூமரத்தினை
வன்னாதப்புள்ளால் வலியப்பறித்திட்ட
என்னாதன்வன்மையைப்பாடிப்பற
எம்பிரான்வன்மையைப்பாடிப்பற

என்வில்வலிகண்டு போவென்றுஎதிர்வந்தான்
தன் வில்லினோடும் தவத்தைஎதிர்வாங்கி
முன்வில்வலித்து முதுபெண்ணுயிருண்டான்
தன் வில்லின்வன்மையைப்பாடிப்பற
தாசரதிதன்மையைப்படிப்பற

உருப்பிணிநங்கையை தேரேற்றிக்கொண்டு
விருப்புற்றங்கேக விரைந்துஎதிர்வந்து
செருக்குற்றான் வீரம்சிதைய தலையை
சிரைத்திட்டான்வன்மையைப்பாடிப்பற
தேவகிசிங்கத்தைப்பாடிப்பற

மாற்றுத்தாய்சென்று வனம்போகேஎன்றிட
ஈற்றுத்தாய்பின்தொடர்ந்து எம்பிரான் என்றுஅழ
கூற்றுத்தாய்சொல்ல கொடியவனம்போன
சீற்றமிலாதானைப்பாடிப்பற
சீதைமணாளனைப்பாடிப்பற

பஞ்சவர்தூதனா பாரதம்கைசெய்து
நஞ்சுமிழ்நாகம்கிடந்த நல்பொய்கைபுக்கு
அஞ்சப்பணத்தின்மேல் பாய்ந்திட்டுஅருள்செய்த
அஞ்சனவண்ணனைப்பாடிப்பற
அசோதைதன்சிங்கத்தைப்பாடிப்பற

முடியொன்றிமூவுலகங்களும் ஆண்டு உன்
அடியேற்கருளென்று அவன்பின்தொடர்ந்த
படியில்குணத்து பரதநம்பிக்கு அன்று
அடிநிலையீந்தானைப்பாடிப்பற
அயோத்தியர்கோமானைப்பாடிப்பற

காளியன்பொய்கைகலங்கப்பாய்ந்திட்டு அவன்
நீள்முடியைந்திலும்நின்று நடம்செய்து
மீளஅவனுக்கு அருள்செய்தவித்தகன்
தோள்வலிவீரமேபாடிப்பற
தூமணிவண்ணனைப்பாடிப்பற

தார்க்குஇளந்தம்பிக்கு அரசீந்து தண்டகம்
நூற்றவள் சொல்கொண்டுபோகி நுடங்கிடை
சூர்ப்பணகாவைச்செவியொடுமூக்கு அவள்
ஆர்க்கஅரிந்தானைப்பாடிப்பற
அயோத்திக்கரசனைப்பாடிப்பற

மாயச்சகடமுதைத்து மருதிறுத்து
ஆயர்களோடுபோய் ஆநிரைகாத்து அணி
வேயின்குழலூதி வித்தகனாய்நின்ற
ஆயர்களேற்றினைப்பாடிப்பற
ஆநிரைமேய்த்தானைப்பாடிப்பற

காரார்கடலையடைத்திட்டு இலங்கைபுக்கு
ஓராதான்பொன்முடி ஒன்பதோடொன்றையும்
நேராஅவன்தம்பிக்கே நீளரசீந்த
ஆராவமுதனைப்பாடிப்பற
அயோத்தியர்வேந்தனைப்பாடிப்பற
தரவு கொச்சகக்கலிப்பா

நந்தன்மதலையை காகுத்தனைநவின்று
உந்திபறந்த ஒளியிழையார்கள்சொல்
செந்தமிழ்த்தென்புதுவை விட்டுசித்தன்சொல்
ஐந்தினோடைந்தும்வல்லார்க்கு அல்லலில்லையே
பத்தாம் திருமொழி நெறிந்தகருங்குழல்
இலங்கைக்கு தூதுசென்ற திருவடி பிராட்டியை கண்டு
சக்கரவர்த்தித்திருமகன் கூறிய சில அடையாளங்களை
கூறி கணையாழிகொடுத்து களிப்பித்தல்

கலிவிருத்தம்

நெறிந்தகருங்குழல்மடவாய் நின்னடியேன்விண்ணப்பம்
செறிந்தமணிமுடிச்சனகன் சிலையிறுத்துநினைக்கொணர்ந்தது
அறிந்து அரசுகளைகட்ட அருந்தவத்தோன்இடைவிலங்க
செறிந்தசிலைகொடுதவத்தை சிதைத்ததும்ஓரடையாளம்

அல்லியம்பூமலர்க்கோதாய் அடிபணிந்தேன்விண்ணப்பம்
சொல்லுகேன்கேட்டருளாய் துணைமலர்க்கண்மடமானே
எல்லியம்போதினிதிருத்தல் இருந்ததோரிடவகையில்
மல்லிகைமாமாலைகொண்டு அங்குஆர்த்ததும்ஓரடையாளம்

கலக்கியமாமனத்தனளா கைகேசிவரம்வேண்ட
மலக்கியமாமனத்தனனாய் மன்னவனுமறாதொழிய
குலக்குமரா காடுறையப்போ என்றுவிடைகொடுப்ப
இலக்குமணன்தன்னொடும் அங்குஏகியதுஓரடையாளம்

வாரணிந்தமுலைமடவாய் வைதேவீ விண்ணப்பம்
தேரணிந்தஅயோத்தியர்கோன் பெருந்தேவீ கேட்டருளாய்
கூரணிந்தவேல்வலவன் குகனோடும்கங்கைதன்னில்
சீரணிந்ததோழமை கொண்டதும்ஓரடையாளம்

மானமருமெல்நோக்கி வைதேவீ விண்ணப்பம்
கானமரும்கல்லதர்போ காடுறைந்தகாலத்து
தேனமரும்பொழிற்சாரல் சித்திரகூடத்துஇருப்ப
பால்மொழியாய் பரதநம்பி பணிந்ததும்ஓரடையாளம்

சித்திரகூடத்துஇருப்ப சிறுகாக்கைமுலைதீண்ட
அத்திரமேகொண்டெறிய அனைத்துலகும்திரிந்தோடி
வித்தகனே இராமாவோ நின்னபயம்என்றுஅழைப்ப
அத்திரமேஅதன்கண்ணை அறுத்ததும்ஓரடையாளம்

மின்னொத்தண்ணிடையாய் மெய்யடியேன்விண்ணப்பம்
பொன்னொத்தமானொன்று புகுந்துஇனிதுவிளையாட
நின்னன்பின்வழிநின்று சிலைபிடித்துஎம்பிரான்ஏக
பின்னேஅங்குஇலக்குமணன் பிரிந்ததும்ஓரடையாளம்

மைத்தகுமாமலர்க்குழலாய் வைதேவீ விண்ணப்பம்
ஒத்தபுகழ்வானரக்கோன் உடனிருந்துநினைத்தேட
அத்தகுசீரயோத்தியர்கோன் அடையாளமிவைமொழிந்தான்
இத்தகையால்அடையாளம் ஈதுஅவன்கைமோதிரமே

திக்குநிறைபுகழாளன் தீவேள்விச்சென்றநாள்
மிக்கபெருஞ்சபைநடுவே வில்லிறுத்தான்மோதிரம்கண்டு
ஒக்குமால்அடையாளம் அனுமான் என்றுஉச்சிமேல்
வைத்துக்கொண்டு உகந்தனளால் மலர்க்குழலாள்சீதையுமே

வாராரும்முலைமடவாள் வைதேவிதனைக்கண்டு
சீராரும்திறலனுமன் தெரிந்துரைத்தஅடையாளம்
பாராரும்புகழ்ப்புதுவை பட்டர்பிரான்பாடல்வல்லார்
ஏராரும்வைகுந்தத்து இமையவரோடுஇருப்பாரே

நான்காம்பத்து
முதல் திருமொழி கதிராயிரம்
ஸர்வேஸ்வரனை காணவேணுமென்று தேடுவார் சிலரும் கண்டார் சிலருமா கூறுதல்
அறுசீர்க்கழிநெடிலடியசிரியவிருத்தம்


கதிராயிரமிரவி கலந்தெரித்தாலொத்தநீள்முடியன்
எதிரில்பெருமைஇராமனை இருக்குமிடம்நாடுதிரேல்
அதிரும்கழற்பொருதோள் இரணியனாகம்பிளந்துஅரியாய்
உதிரமளைந்தகையோடிருந்தானை உள்ளவாகண்டாருளர்

நாந்தகம்சங்குதண்டு நாணொலிச்சார்ங்கம்திருச்சக்கரம்
ஏந்துபெருமைஇராமனை இருக்குமிடம்நாடுதிரேல்
காந்தள்முகிழ்விரல்சீதைக்காகி கடுஞ்சிலைசென்றிறுக்க
வேந்தர்தலைவஞ்சனகராசன்தன் வேள்வியில்கண்டாருளர்

கொலையானைக்கொம்புபறித்து கூடலர்சேனைபொருதழிய
சிலையால்மராமரமெய்ததேவனை சிக்கெனநாடுதிரேல்
தலையால்குரக்கினம்தாங்கிச்சென்று தடவரைகொண்டடைப்ப
அலையார்கடற்கரைவீற்றிருந்தானை அங்குத்தைக்கண்டாருளர்

தோயம்பரந்தநடுவுசூழலில் தொல்லைவடிவுகொண்ட
மாயக்குழவியதனைநாடுறில் வம்மின்சுவடுரைக்கேன்
ஆயர்மடமகள்பின்னைக்காகி அடல்விடையேழினையும்
வீயப்பொருதுவியர்த்துநின்றானை மெய்ம்மையேகண்டாருளர்

நீரேறுசெஞ்சடைநீலகண்டனும் நான்முகனும் முறையால்
சீரேறுவாசகஞ்செய்யநின்ற திருமாலைநாடுதிரேல்
வாரேறுகொங்கைஉருப்பிணியை வலியப்பிடித்துக்கொண்டு
தேரேற்றி சேனைநடுவுபோர்செ சிக்கெனக்கண்டாருளர்

பொல்லாவடிவுடைப்பேய்ச்சிதுஞ்ச புணர்முலைவாய்மடுக்க
வல்லானை மாமணிவண்ணனை மருவுமிடம்நாடுதிரேல்
பல்லாயிரம்பெருந்தேவிமாரொடு பௌவம்ஏறிதுவரை
எல்லாரும்சூழச்சிங்காசனத்தே இருந்தானைக்கண்டாருளர்

வெள்ளைவிளிசங்குவெஞ்சுடர்த்திருச்சக்கரம் ஏந்துகையன்
உள்ளவிடம்வினவில் உமக்குஇறைவம்மின்சுவடுரைக்கேன்
வெள்ளைப்புரவிக்குரக்குவெல்கொடி தேர்மிசைமுன்புநின்று
கள்ளப்படைத்துணையாகி பாரதம்கைசெய்யக்கண்டாருளர்

நாழிகைகூறிட்டுக்காத்துநின்ற அரசர்கள்தம்முகப்பே
நாழிகைபோகப்படைபொருதவன் தேவகிதன்சிறுவன்
ஆழிகொண்டுஅன்றுஇரவிமறைப்ப சயத்திரதன்தலையை
பாழிலுருளப்படைபொருதவன் பக்கமேகண்டாருளர்

மண்ணும்மலையும்மறிகடல்களும் மற்றும்யாவுமெல்லாம்
திண்ணம்விழுங்கியுமிழ்ந்ததேவனை சிக்கெனநாடுதிரேல்
எண்ணற்கரியதோரேனமாகி இருநிலம்புக்கிடந்து
வண்ணக்கருங்குழல்மாதரோடு மணந்தானைக்கண்டாருளர்

கரியமுகில்புரைமேனிமாயனை கண்டசுவடுரைத்து
புரவிமுகம்செய்துசெந்நெலோங்கி விளைகழனிப்புதுவை
திருவிற்பொலிமறைவாணன்பட்டர்பிரான் சொன்னமாலைபத்தும்
பரவுமனமுடைப்பத்தருள்ளார் பரமனடிசேர்வர்களே
இரண்டாம் திருமொழி அலம்பாவெருட்டா
திருமாலிருஞ்சோலைமலைச்சிறப்பு

கலிநிலைத்துறை

அலம்பாவெருட்டாக்கொன்று திரியும்அரக்கரை
குலம்பாழ்படுத்து குலவிளக்காய்நின்றகோன்மலை
சிலம்பார்க்கவந்து தெய்வமகளிர்களாடும்சீர்
சிலம்பாறுபாயும் தென்திருமாலிருஞ்சோலையே

வல்லாளன்தோளும் வாளரக்கன்முடியும் தங்கை
பொல்லாதமூக்கும் போக்குவித்தான்பொருந்தும்மலை
எல்லாவிடத்திலும் எங்கும்பரந்துபல்லாண்டொலி
செல்லாநிற்கும்சீர தென்திருமாலிருஞ்சோலையே

தக்கார்மிக்கார்களை சஞ்சலம்செய்யும்சலவரை
தெக்காநெறியேபோக்குவிக்கும் செல்வன்பொன்மலை
எக்காலமும்சென்று சேவித்திருக்கும்அடியரை
அக்கானெறியைமாற்றும் தண்திருமாலிருஞ்சோலையே

ஆனாயர்கூடி அமைத்தவிழவை அமரர்தம்
கோனார்க்கொழி கோவர்த்தனத்துச்செய்தான்மலை
வானாட்டில்நின்று மாமலர்க்கற்பகத்தொத்திழி
தேனாறுபாயும் தென்திருமாலிருஞ்சோலையே

ஒருவாரணம் பணிகொண்டவன்பொய்கையில் கஞ்சன்தன்
ஒருவாரணம் உயிருண்டவன்சென்றுறையும்மலை
கருவாரணம் தன்பிடிதுறந்தோட கடல்வண்ணன்
திருவாணைகூறத்திரியும் தண்திருமாலிருஞ்சோலையே

ஏவிற்றுச்செய்வான் ஏன்றெதிர்ந்துவந்தமல்லரை
சாவத்தகர்த்த சாந்தணிதோள்சதுரன்மலை
ஆவத்தனமென்று அமரர்களும்நன்முனிவரும்
சேவித்திருக்கும் தென்திருமாலிருஞ்சோலையே

மன்னர்மறுக மைத்துனன்மார்க்குஒருதேரின்மேல்
முன்னங்குநின்று மோழையெழுவித்தவன்மலை
கொன்னவில்கூர்வேற்கோன் நெடுமாறன்தென்கூடற்கோன்
தென்னன்கொண்டாடும் தென்திருமாலிருஞ்சோலையே

குறுகாதமன்னரை கூடுகலக்கி வெங்கானிடை
சிறுகால்நெறியேபோக்குவிக்கும் செல்வன்பொன்மலை
அறுகால்வரிவண்டுகள் ஆயிரநாமம்சொல்லி
சிறுகாலைப்பாடும் தென்திருமாலிருஞ்சோலையே

சிந்தப்புடைத்து செங்குருதிகொண்டு பூதங்கள்
அந்திப்பலிகொடுத்து ஆவத்தனம்செய்அப்பன்மலை
இந்திரகோபங்கள் எம்பெருமான்கனிவாயொப்பான்
சிந்தும்புறவில் தென்திருமாலிருஞ்சோலையே

எட்டுத்திசையும் எண்ணிறந்தபெருந்தேவிமார்
விட்டுவிளங்க வீற்றிருந்தவிமலன்மலை
பட்டிப்பிடிகள் பகடுறிஞ்சிச்சென்று மாலைவா
தெட்டித்திளைக்கும் தென்திருமாலிருஞ்சோலையே

மருதப்பொழிலணி மாலிருஞ்சோலைமலைதன்னை
கருதியுறைகின்ற கார்க்கடல்வண்ணனம்மான்தன்னை
விரதம்கொண்டேத்தும் வில்லிபுத்தூர்விட்டுசித்தன்சொல்
கருதியுரைப்பவர் கண்ணன்கழலிணைகாண்பார்களே
மூன்றாம் திருமொழி உருப்பிணிநங்கை
திருமாலிருஞ்சோலைமலையின் சிறப்பு
கலிநிலைத்துறை

உருப்பிணிநங்கைதன்னைமீட்பான் தொடர்ந்தோடிச்சென்ற
உருப்பனையோட்டிக்கொண்டிட்டு உறைத்திட்டஉறைப்பன்மலை
பொருப்பிடைக்கொன்றைநின்று முறியாழியும்காசும்கொண்டு
விருப்பொடுபொன்வழங்கும் வியன்மாலிருஞ்சோலையதே

கஞ்சனும்காளியனும் களிறும்மருதும்எருதும்
வஞ்சனையில்மடிய வளர்ந்தமணிவண்ணன்மலை
நஞ்சுமிழ்நாகமெழுந்தணவி நளிர்மாமதியை
செஞ்சுடர்நாவளைக்கும் திருமாலிருஞ்சோலையதே

மன்னுநரகன்தன்னை சூழ்போகிவளைத்தெறிந்து
கன்னிமகளிர்தம்மை கவர்ந்தகடல்வண்ணன்மலை
புன்னைசெருந்தியொடு புனவேங்கையும்கோங்கும்நின்று
பொன்னரிமாலைகள்சூழ் பொழில்மாலிருஞ்சோலையதே

மாவலிதன்னுடைய மகன்வாணன்மகளிருந்த
காவலைக்கட்டழித்த தனிக்காளைகருதும்மலை
கோவலர்கோவிந்தனை குறமாதர்கள் பண்குறிஞ்சி
பாவொலிபாடிநடம்பயில் மாலிருஞ்சோலையதே

பலபலநாழம்சொல்லிப்பழித்த சிசுபாலன்தன்னை
அலவலைமைதவிர்த்த அழகன்அலங்காரன்மலை
குலமலைகோலமலை குளிர்மாமலைகொற்றமலை
நிலமலைநீண்டமலை திருமாலிருஞ்சோலையதே

பாண்டவர்தம்முடைய பாஞ்சாலிமறுக்கமெல்லாம்
ஆண்டுஅங்குநூற்றுவர்தம் பெண்டிர்மேல்வைத்தஅப்பன்மலை
பாண்தகுவண்டினங்கள் பண்கள்பாடிமதுப்பருக
தோண்டலுடையமலை தொல்லைமாலிருஞ்சோலையதே

கனங்குழையாள்பொருட்டா கணைபாரித்து அரக்கர்தங்கள்
இனம்கழுவேற்றுவித்த எழில்தோள்எம்மிராமன்மலை
கனம்கொழிதெள்ளருவி வந்துசூழ்ந்துஅகல்ஞாலமெல்லாம்
இனம்குழுவாடும்மலை எழில்மாலிருஞ்சோலையதே

எரிசிதறும்சரத்தால் இலங்கையினை தன்னுடைய
வரிசிலைவாயில்பெய்து வாய்க்கோட்டம்தவிர்த்துகந்த
அரையனமரும்மலை அமரரொடுகோனும்சென்று
திரிசுடர்சூழும்மலை திருமாலிருஞ்சோலையதே

கோட்டுமண்கொண்டிடந்து குடங்கையில்மண்கொண்டளந்து
மீட்டுமதுண்டுமிழ்ந்து விளையாடுவிமலன்மலை
ஈட்டியபல்பொருள்கள் எம்பிரானுக்குஅடியுறையென்று
ஓட்டரும்தண்சிலம்பாறுடை மாலிருஞ்சோலையதே

ஆயிரம்தோள்பரப்பி முடியாயிரம்மின்னிலக
ஆயிரம்பைந்தலைய அனந்தசயனன்ஆளும்மலை
ஆயிரமாறுகளும் சுனைகள்பலவாயிரமும்
ஆயிரம்பூம்பொழிலுமுடை மாலிருஞ்சோலையதே

மாலிருஞ்சோலையென்னும் மலையையுடையமலையை
நாலிருமூர்த்திதன்னை நால்வேதக்கடலமுதை
மேலிருங்கற்பகத்தை வேதாந்தவிழுப்பொருளில்
மேலிருந்தவிளக்கை விட்டுசித்தன்விரித்தனவே
நான்காம் திருமொழி நாவகாரியம்
முக்கரணங்களாலும் திருக்கோட்டியூரை அனுபவிப்பவரை கொண்டாடியும்
அவ்வாறு அனுபவியாத அவைஷ்ணவரை இழித்தும் கூறுதல்
எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

நாவகாரியம்சொல்லிலாதவர் நாள்தொறும்விருந்தோம்புவார்
தேவகாரியம்செய்து வேதம்பயின்றுவாழ்திருக்கோட்டியூர்
மூவர்காரியமும்திருத்தும் முதல்வனைச்சிந்தியாத
பாவகாரிகளைப்படைத்தவன் எங்ஙனம்படைத்தான்கொலோ

குற்றமின்றிக்குணம்பெருக்கி குருக்களுக்குஅனுகூலராய்
செற்றமொன்றுமிலாத வண்கையினார்கள்வாழ்திருக்கோட்டியூர்
துற்றியேழுலகுண்ட தூமணிவண்ணன்தன்னைத்தொழாதவர்
பெற்றதாயர்வயிற்றினை பெருநோய்செய்வான்பிறந்தார்களே

வண்ணநல்மணியும் மரகதமும்அழுத்தி நிழலெழும்
திண்ணைசூழ் திருக்கோட்டியூர திருமாலவன்திருநாமங்கள்
எண்ணக்கண்டவிரல்களால் இறைப்பொழுதும்எண்ணகிலாதுபோய்
உண்ணக்கண்டதம்ஊத்தைவாய்க்கு கவளமுந்துகின்றார்களே

உரகமெல்லணையான்கையில் உறைசங்கம்போல்மடவன்னங்கள்
நிரைகணம்பரந்தேறும் செங்கமலவயல்திருக்கோட்டியூர்
நரகநாசனைநாவிற்கொண்டழையாத மானிடசாதியர்
பருகுநீரும்உடுக்குங்கூறையும் பாவம்செய்தனதாங்கொலோ

ஆமையின்முதுகத்திடைக்குதிகொண்டு தூமலர்சாடிப்போய்
தீமைசெய்துஇளவாளைகள் விளையாடுநீர்த்திருக்கோட்டியூர்
நேமிசேர்தடங்கையினானை நினைப்பிலாவலிநெஞ்சுடை
பூமிபாரங்களுண்ணும்சோற்றினைவாங்கி புல்லைத்திணிமினே

பூதமைந்தொடுவேள்வியைந்து புலன்களைந்துபொறிகளால்
ஏதமொன்றுமிலாத வண்கையினார்கள்வாழ்திருக்கோட்டியூர்
நாதனைநரசிங்கனை நவின்றேத்துவார்களுழக்கிய
பாததூளிபடுதலால் இவ்வுலகம்பாக்கியம்செய்ததே

குருந்தமொன்றொசித்தானொடும்சென்று கூடியாடிவிழாச்செய்து
திருந்துநான்மறையோர் இராப்பகல்ஏத்திவாழ்திருக்கோட்டியூர்
கருந்தடமுகில்வண்ணனை கடைக்கொண்டுகைதொழும்பத்தர்கள்
இருந்தவூரிலிருக்கும்மானிடர் எத்தவங்கள்செய்தார்கொலோ

நளிர்ந்தசீலன்நயாசலன் அபிமனதுங்கனை நாள்தொறும்
தெளிந்தசெல்வனைச்சேவகங்கொண்ட செங்கண்மால்திருக்கோட்டியூர்
குளிர்ந்துறைகின்றகோவிந்தன் குணம்பாடுவாருள்ளநாட்டினுள்
விளைந்ததானியமும் இராக்கதர்மீதுகொள்ளகிலார்களே

கொம்பினார்பொழில்வாய் குயிலினம்கோவிந்தன்குணம்பாடுசீர்
செம்பொனார்மதிள்சூழ் செழுங்கழனியுடைத்திருக்கோட்டியூர்
நம்பனைநரசிங்கனை நவின்றேத்துவார்களைக்கண்டக்கால்
எம்பிரான்தனசின்னங்கள் இவரிவரென்றுஆசைகள்தீர்வனே

காசின்வாய்க்கரம்விற்கிலும் கரவாதுமாற்றிலிசோறிட்டு
தேசவார்த்தைபடைக்கும் வண்கையினார்கள்வாழ்திருக்கோட்டியூர்
கேசவா புருடோ த்தமா கிளர்சோதியாய் குறளா என்று
பேசுவார்அடியார்கள் எந்தம்மைவிற்கவும்பெறுவார்களே

சீதநீர்புடைசூழ் செழுங்கழனியுடைத்திருக்கோட்டியூர்
ஆதியானடியாரையும் அடிமையின்றித்திரிவாரையும்
கோதில்பட்டர்பிரான் குளிர்புதுவைமன்விட்டுசித்தன்சொல்
ஏதமின்றிஉரைப்பவர்கள் இருடீகேசனுக்காளரே
ஐந்தாம் திருமொழி ஆசைவாய்
பகவானிடத்தில் ஈடுபடாமலிருக்கும் ஸம்ஸாரிகளுக்கு
கிதோபதேசம் செய்தல்

எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

ஆசைவாய்ச்சென்றசிந்தையராகி
அன்னைஅத்தன்என்புத்திரர்பூமி
வாசவார்குழலாளென்றுமயங்கி
மாளுமெல்லைக்கண்வாய்திறவாதே
கேசவா புருடோ த்தமா என்றும்
கேழலாகியகேடிலீ என்றும்
பேசுவாரவர்எய்தும்பெருமை
பேசுவான்புகில்நம்பரமன்றே

சீயினால்செறிந்தேறியபுண்மேல்
செற்றலேறிக்குழம்பிருந்து எங்கும்
ஈயினால்அரிப்புண்டுமயங்கி
எல்லைவாய்ச்சென்றுசேர்வதன்முன்னம்
வாயினால்நமோநாரணாவென்று
மத்தகத்திடைக்கைகளைக்கூப்பி
போயினால்பின்னைஇத்திசைக்குஎன்றும்
பிணைக்கொடுக்கிலும்போகவொட்டாரே

சோர்வினால்பொருள்வைத்ததுண்டாகில்
சொல்லுசொல்லென்றுசுற்றுமிருந்து
ஆர்வினவிலும்வாய்திறவாதே
அந்தகாலம்அடைவதன்முன்னம்
மார்வமென்பதோர்கோயிலமைத்து
மாதவனென்னும்தெய்வத்தைநட்டி
ஆர்வமென்பதோர்பூவிடவல்லார்க்கு
அரவதண்டத்தில்உய்யலுமாமே

மேலெழுந்ததோர்வாயுக்கிளர்ந்து
மேல்மிடற்றினைஉள்ளெழவாங்கி
காலுங்கையும்விதிர்விதிர்த்தேறி
கண்ணுறக்கமதாவதன்முன்னம்
மூலமாகியஒற்றையெழுத்தை
மூன்றுமாத்திரைஉள்ளெழவாங்கி
வேலைவண்ணனைமேவுதிராகில்
விண்ணகத்தினில்மேவலுமாமே

மடிவழிவந்துநீர்புலன்சோர
வாயிலட்டியகஞ்சியும்மீண்டே
கடைவழிவாரக்கண்டமடைப்ப
கண்ணுறக்கமதாவதன்முன்னம்
தொடைவழிஉம்மைநாய்கள்கவரா
சூலத்தால்உம்மைப்பாய்வதும்செய்யார்
இடைவழியில்நீர்கூறையும்இழவீர்
இருடீகேசனென்றேத்தவல்லீரே

அங்கம்விட்டவையைந்துமகற்றி
ஆவிமூக்கினில்சோதித்தபின்னை
சங்கம்விட்டவர்கையைமறித்து
பையவேதலைசாய்ப்பதன்முன்னம்
வங்கம்விட்டுலவும்கடற்பள்ளிமாயனை
மதுசூதனனைமார்பில்
தங்கவிட்டுவைத்து ஆவதோர்கருமம்
சாதிப்பார்க்குஎன்றும்சாதிக்கலாமே

தென்னவன்தமர்செப்பமிலாதார்
சேவதக்குவார்போலப்புகுந்து
பின்னும்வன்கயிற்றால்பிணித்தெற்றி
பின்முன்னாகஇழுப்பதன்முன்னம்
இன்னவன்இனையானென்றுசொல்லி
எண்ணிஉள்ளத்திருளறநோக்கி
மன்னவன்மதுசூதனென்பார்
வானகத்துமன்றாடிகள்தாமே

கூடிக்கூடிஉற்றார்கள்இருந்து
குற்றம்நிற்கநற்றங்கள்பறைந்து
பாடிப்பாடிஓர்பாடையிலிட்டு
நரிப்படைக்குஒருபாகுடம்போலே
கோடிமூடியெடுப்பதன்முன்னம்
கௌத்துவமுடைக்கோவிந்தனோடு
கூடியாடியஉள்ளத்தரானால்
குறிப்பிடம்கடந்துஉய்யலுமாமே

வாயொருபக்கம்வாங்கிவலிப்ப
வார்ந்தநீர்க்குழிக்கண்கள்மிழற்ற
தாய்ஒருபக்கம்தந்தைஒருபக்கம்
தாரமும்ஒருபக்கம்அலற்ற
தீஓருபக்கம்சேர்வதன்முன்னம்
செங்கண்மாலொடும்சிக்கெனச்சுற்ற
மாய் ஒருபக்கம்நிற்கவல்லார்க்கு
அரவதண்டத்தில்உய்யலுமாமே

செத்துப்போவதோர்போதுநினைந்து
செய்யும்செய்கைகள்தேவபிரான்மேல்
பத்தராயிறந்தார்பெறும்பேற்றை
பாழித்தோள்விட்டுசித்தன்புத்தூர்க்கோன்
சித்தம்நன்கொருங்கித்திருமாலை
செய்தமாலைஇவைபத்தும்வல்லார்
சித்தம்நன்கொருங்கித்திருமால்மேல்
சென்றசிந்தைபெறுவர்தாமே
ஆறாம் திருமொழி காசுங்கறையுடை
பெற்றபிள்ளைகளுக்கு பரமபுருஷனுடைய திருநாமங்களை
இட்டழைக்கும்படி மனம்திருந்தாதார்க்கு உபதேசித்தல்
கலித்துறை

காசும்கறையுடைக்கூறைக்கும் அங்கோர்கற்றைக்கும்
ஆசையினால் அங்கவத்தப்பேரிடும் ஆதர்காள்
கேசவன்பேரிட்டு நீங்கள்தேனித்திருமினோ
நாயகன்நாரணன் தம்அன்னைநரகம்புகாள்

அங்கொருகூறை அரைக்குடுப்பதனாசையால்
மங்கியமானிடசாதியின் பேரிடும்ஆதர்காள்
செங்கணெடுமால் சிரீதரா என்றுஅழைத்தக்கால்
நங்கைகாள் நாரணன் தம்அன்னைநரகம்புகாள்

உச்சியில்எண்ணெயும் சுட்டியும்வளையும்உகந்து
எச்சம்பொலிந்தீர்காள் எஞ்செய்வான்பிறர்பேரிட்டீர்
பிச்சைபுக்காகிலும் எம்பிரான்திருநாமமே
நச்சுமின் நாரணன் தம்அன்னைநரகம்புகாள்

மானிடசாதியில்தோன்றிற்று ஓர்மானிடசாதியை
மானிடசாதியின்பேரிட்டால் மறுமைக்கில்லை
வானுடைமாதவா கோவிந்தா என்றுஅழைத்தக்கால்
நானுடைநாரணன் தம்அன்னைநரகம்புகாள்

மலமுடையூத்தையில்தோன்றிற்று ஓர்மலவூத்தையை
மலமுடையூத்தையின்பேரிட்டால் மறுமைக்கில்லை
குலமுடைக்கோவிந்தா கோவிந்தா என்றுவழைத்தக்கால்
நலமுடைநாரணன் தம்அன்னைநரகம்புகாள்

நாடும்நகரும்அறிய மானிடப்பேரிட்டு
கூடியழுங்கி குழியில்வீழ்ந்துவழுக்கதே
சாடிறப்பாய்ந்ததலைவா தாமோதரா என்று
நாடுமின் நாரணன்தம்அன்னைநரகம்புகாள்

மண்ணில்பிறந்துமண்ணாகும் மானிடப்பேரிட்டு அங்கு
எண்ணமொன்றின்றியிருக்கும் ஏழைமனிசர்காள்
கண்ணுக்கினிய கருமுகில்வண்ணன்நாமமே
நண்ணுமின் நாரணன்தம்அன்னைநரகம்புகாள்

நம்பிநம்பியென்று நாட்டுமானிடப்பேரிட்டால்
நம்பும்பிம்புமெல்லாம் நாலுநாளில்அழுங்கிப்போம்
செம்பெருந்தாமரைக்கண்ணன் பேரிட்டழைத்தக்கால்
நம்பிகாள் நாரணன் தம்அன்னைநரகம்புகாள்

ஊத்தைக்குழியில் அமுதம்பாய்வதுபோல் உங்கள்
மூத்திரப்பிள்ளையை என்முகில்வண்ணன்பேரிட்டு
கோத்துக்குழைத்து குணாலமாடித்திரிமினோ
நாத்தகுநாரணன் தம்அன்னைநரகம்புகாள்

சீரணிமால் திருநாமமேயிடத்தேற்றிய
வீரணிதொல்புகழ் விட்டுசித்தன்விரித்த
ஓரணியொண்தமிழ் ஒன்பதோடொன்றும்வல்லவர்
பேரணிவைகுந்தத்து என்றும்பேணியிருப்பரே
ஏழாம் திருமொழி தங்கையைமூக்கும்
தேவப்ரயாகை என்று வழங்கும் கண்டமென்னுந்திருப்பதியின் பெருமை
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

தங்கையைமூக்கும்தமையனைத்தலையும்தடிந்த எம்தாசரதிபோய்
எங்கும்தன்புகழாவிருந்துஅரசாண்ட எம்புருடோ த்தமனிருக்கை
கங்கைகங்கையென்றவாசகத்தாலே கடுவினைகளைந்திடுகிற்கும்
கங்கையின்கரைமேல்கைதொழநின்ற கண்டமென்னும்கடிநகரே

சலம்பொதியுடம்பின்தழலுமிழ்பேழ்வா சந்திரன்வெங்கதிர்அஞ்ச
மலர்ந்தெழுந்தணவுமணிவண்ணவுருவின் மால்புருடோ த்தமன்வாழ்வு
நலம்திகழ்சடையான்முடிக்கொன்றைமலரும் நாரணன்பாதத்துழாயும்
கலந்திழிபுனலால்புகர்படுகங்கை கண்டமென்னும்கடிநகரே

அதிர்முகமுடையவலம்புரிகுமிழ்த்தி அழலுமிழ்ஆழிகொண்டெறிந்து அங்கு
எதிர்முகவசுரர்தலைகளையிடறும் எம்புருடோ த்தமனிருக்கை
சதுமுகன்கையில்சதுப்புயன்தாளில் சங்கரன்சடையினில்தங்கி
கதிர்முகமணிகொண்டிழிபுனல்கங்கை கண்டமென்னும்கடிநகரே

இமையவர்இறுமாந்திருந்தரசாள ஏற்றுவந்தெதிர்பொருசேனை
நமபுரம்நணுகநாந்தகம்விசிறும் நம்புருடோ த்தமன்நகர்தான்
இமவந்தம்தொடங்கிஇருங்கடலளவும் இருகரைஉலகிரைத்தாட
கமையுடைப்பெருமைக்கங்கையின்கரைமேல் கண்டமென்னும்கடிநகரே

உழுவதோர்படையும்உலக்கையும்வில்லும் ஒண்சுடராழியும்சங்கும்
மழுவொடுவாளும்படைக்கலமுடைய மால்புருடோ த்தமன்வாழ்வு
எழுமையும்கூடிஈண்டியபாவம் இறைப்பொழுதளவினில்எல்லாம்
கழுவிடும்பெருமைக்கங்கையின்கரைமேல் கண்டமென்னும்கடிநகரே

தலைப்பெய்துகுமுறிச்சலம்பொதிமேகம் சலசலபொழிந்திடக்கண்டு
மலைப்பெருங்குடையால்மறைத்தவன்மதுரை மால்புருடோ த்தமன்வாழ்வு
அலைப்புடைத்திரைவாய்அருந்தவமுனிவர் அவபிரதம்குடைந்தாட
கலப்பைகள்கொழிக்கும்கங்கையின்கரைமேல் கண்டமென்னும்கடிநகரே

விற்பிடித்திறுத்துவேழத்தைமுருக்கி மேலிருந்தவன்தலைசாடி
மற்பொருதெழப்பாய்ந்துஅரையனயுதைத்த மால்புருடோ த்தமன்வாழ்வு
அற்புதமுடையஅயிராவதமதமும் அவரிளம்படியரொண்சாந்தும்
கற்பகமலரும்கலந்திழிகங்கை கண்டமென்னும்கடிநகரே

திரைபொருகடல்சூழ்திண்மதிள்துவரைவேந்து தன்மைத்துனன்மார்க்காய்
அரசினையவியஅரசினையருளும் அரிபுருடோ த்தமனமர்வு
நிரைநிரையாகநெடியனயூபம் நிரந்தரம்ஒழுக்குவிட்டு இரண்டு
கரைபுரைவேள்விப்புகைகமழ்கங்கை கண்டமென்னும்கடிநகரே

வடதிசைமதுரைசாளக்கிராமம் வைகுந்தம்துவரைஅயோத்தி
இடமுடைவதரியிடவகையுடைய எம்புருடோ த்தமனிருக்கை
தடவரையதிரத்தரணிவிண்டிடி தலைப்பற்றிக்கரைமரம்சாடி
கடலினைக்கலங்கக்கடுத்திழிகங்கை கண்டமென்னும்கடிநகரே

மூன்றெழுத்ததனைமூன்றெழுத்ததனால் மூன்றெழுத்தாக்கி மூன்றெழுத்தை
ஏன்றுகொண்டிருப்பார்க்குஇரக்கம்நன்குடைய எம்புருடோ த்தமனிருக்கை
மூன்றடிநிமிர்த்துமூன்றினில்தோன்றி மூன்றினில்மூன்றுருவானான்
கான்தடம்பொழில்சூழ்கங்கையின்கரைமேல் கண்டமென்னும்கடிநகரே

பொங்கொலிகங்கைக்கரைமலிகண்டத்து உறைபுருடோ த்தமனடிமேல்
வெங்கலிநலியாவில்லிபுத்தூர்க்கோன் விட்டுசித்தன்விருப்புற்று
தங்கியஅன்பால்செய்ததமிழ்மாலை தங்கியநாவுடையார்க்கு
கங்கையில்திருமால்கழலிணைக்கீழே குளித்திருந்தகணக்காமே
எட்டாம் திருமொழி மாதவத்தோன்
திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை
தரவு கொச்சகக்கலிப்பா

மாதவத்தோன்புத்திரன்போய் மறிகடல்வாய்மாண்டானை
ஓதுவித்ததக்கணையா உருவுருவேகொடுத்தானூர்
தோதவத்தித்தூய்மறையோர் துறைபடியத்துளும்பிஎங்கும்
போதில்வைத்ததேன்சொரியும் புனலரங்கமென்பதுவே

பிறப்பகத்தேமாண்டொழிந்த பிள்ளைகளைநால்வரையும்
இறைப்பொழுதில்கொணர்ந்து கொடுத்து ஒருப்படித்தவுறைப்பனூர்
மறைப்பெருந்தீவளர்த்திருப்பார் வருவிருந்தையளித்திருப்பார்
சிறப்புடையமறையவர்வாழ் திருவரங்கமென்பதுவே

மருமகன்தன்சந்ததியை உயிர்மீட்டு மைத்துனன்மார்
உருமகத்தேவீழாமே குருமுகமாய்க்காத்தானூர்
திருமுகமாய்ச்செங்கமலம் திருநிறமாய்க்கருங்குவளை
பொருமுகமாய்நின்றலரும் புனலரங்கமென்பதுவே

கூந்தொழுத்தைசிதகுரைப்ப கொடியவள்வாய்க்கடியசொல்கேட்டு
ஈன்றெடுத்ததாயரையும் இராச்சியமும்ஆங்கொழிய
கான்தொடுத்தநெறிபோகி கண்டகரைக்களைந்தானூர்
தேந்தொடுத்தமலர்ச்சோலை திருவரங்கமென்பதுவே

பெருவரங்களவைபற்றி பிழகுடையஇராவணனை
உருவரங்கப்பொருதழித்து இவ்வுலகினைக்கண்பெறுத்தானூர்
குருவரும்பக்கோங்கலர குயில்கூவும்குளிர்பொழில்சூழ்
திருவரங்கமென்பதுவே என்திருமால்சேர்விடமே

கீழுலகில்அசுரர்களை கிழங்கிருந்துகிளராமே
ஆழிவிடுத்துஅவருடைய கருவழித்தவழிப்பனூர்
தாழைமடலூடுரிஞ்சி தவளவண்ணப்பொடியணிந்து
யாழினிசைவண்டினங்கள் ஆளம்வைக்கும்அரங்கமே

கொழுப்புடையசெழுங்குருதி கொழித்திழிந்துகுமிழ்த்தெறிய
பிழக்குடையஅசுரர்களை பிணம்படுத்தபெருமானூர்
தழுப்பரியசந்தனங்கள் தடவரைவாய்ஈர்த்துக்கொண்டு
தெழிப்புடையகாவிரிவந்து அடிதொழும்சீரரங்கமே

வல்லெயிற்றுக்கேழலுமாய் வாளெயிற்றுச்சீயமுமாய்
எல்லையில்லாத்தரணியையும் அவுணனையும்இடந்தானூர்
எல்லியம்போதுஇருஞ்சிறைவண்டு எம்பெருமான்குணம்பாடி
மல்லிகைவெண்சங்கூதும் மதிளரங்கமென்பதுவே

குன்றாடுகொழுமுகில்போல் குவளைகள்போல்குரைகடல்போல்
நின்றாடுகணமயில்போல் நிறமுடையநெடுமாலூர்
குன்றாடுபொழில்நுழைந்து கொடியிடையார்முலையணவி
மன்றூடுதென்றலுமாம் மதிளரங்கமென்பதுவே

பருவரங்களவைபற்றி படையாலித்தெழுந்தானை
செருவரங்கப்பொருதழித்த திருவாளன்திருப்பதிமேல்
திருவரங்கத்தமிழ்மாலை விட்டுசித்தன்விரித்தனகொண்டு
இருவரங்கமெரித்தானை ஏத்தவல்லாரடியோமே
ஒன்பதாம் திருமொழி மரவடியை
திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

மரவடியைத்தம்பிக்குவான்பணையம்
வைத்துப்போய்வானோர்வாழ
செருவுடையதிசைக்கருமம்திருத்திவந்து
உலகாண்டதிருமால்கோயில்
திருவடிதன்திருவுருவும்
திருமங்கைமலர்கண்ணும்காட்டிநின்று
உருவுடையமலர்நீலம்
காற்றாட்டஓசலிக்கும்ஒளியரங்கமே

தன்னடியார்திறத்தகத்து
தாமரையாளாகிலும்சிதகுரைக்குமேல்
என்னடியார்அதுசெய்யார்
செய்தாரேல்நன்றுசெய்தாரென்பர்போலும்
மன்னுடையவிபீடணற்கா
மதிளிலங்கைத்திசைநோக்கிமலர்கண்வைத்த
என்னுடையதிருவரங்கற்கன்றியும்
மற்றொருவர்க்குஆளாவரே

கருளுடையபொழில்மருதும்
கதக்களிறும்பிலம்பனையும்கடியமாவும்
உருளுடையசகடரையும்மல்லரையும்
உடையவிட்டுஓசைகேட்டான்
இருளகற்றும்எறிகதிரோன்மண்டலத்தூடு
ஏற்றிவைத்துஏணிவாங்கி
அருள்கொடுத்திட்டுஅடியவரை
ஆட்கொள்வானமருமூர்அணியரங்கமே

பதினாறாமாயிரவர் தேவிமார்பணிசெய்ய
துவரையென்னும்
அதில்நாயகராகிவீற்றிருந்த
மணவாளர்மன்னுகோயில்
புதுநாண்மலர்க்கமலம்
எம்பெருமான்பொன்வயிற்றில்பூவேபோல்வான்
பொதுநாயகம்பாவித்து
இருமாந்துபொன்சாய்க்கும்புனலரங்கமே

ஆமையாய்க்கங்கையாய்
ஆழ்கடலாய்அவனியாய்அருவரைகளாய்
நான்முகனாய்நான்மறையாய்
வேள்வியாய்த்தக்கணையாய்த்தானுமானான்
சேமமுடைநாரதனார்
சென்றுசென்றுதுதித்திறைஞ்சக்கிடந்தான்கோயில்
பூமருவிப்புள்ளினங்கள்
புள்ளரையன்புகழ்குழறும்புனலரங்கமே

மைத்துனன்மார்காதலியைமயிர்முடிப்பித்து
அவர்களையேமன்னராக்கி
உத்தரைதன்சிறுவனையும்உய்யக்கொண்ட
உயிராளன்உறையும்கோயில்
பத்தர்களும்பகவர்களும்
பழமொழிவாய்முனிவர்களும்பரந்தநாடும்
சித்தர்களும்தொழுதிறைஞ்ச
திசைவிளக்காய்நிற்கின்றதிருவரங்கமே

குறட்பிரமசாரியாய்
மாவலியைக்குறும்பதக்கிஅரசுவாங்கி
இறைப்பொழிதில்பாதாளம்கலவிருக்கை
கொடுத்துகந்தஎம்மான்கோயில்
எறிப்புடையமணிவரைமேல்
இளஞாயிறுஎழுந்தாற்போல்அரவணையின்வாய்
சிறப்புடையபணங்கள்மிசை
செழுமணிகள்விட்டெறிக்கும்திருவரங்கமே

உரம்பற்றிஇரணியனை
உகிர்நுதியால்ஒள்ளியமார்புறைக்கவூன்றி
சிரம்பற்றிமுடியிடியக்கண்பிதுங்க
வாயலரத்தெழித்தான்கோயில்
உரம்பெற்றமலர்க்கமலம்
உலகளந்தசேவடிபோல்உயர்ந்துகாட்ட
வரம்புற்றகதிர்ச்செந்நெல்
தாள்சாய்த்துத்தலைவணக்கும்தண்ணரங்கமே

தேவுடையமீனமாய்ஆமையாய்ஏனமாய்
அரியாய்க்குறளாய்
மூவுருவினிராமனா
கண்ணனாய்க்கற்கியாய்முடிப்பாங்கோயில்
சேவலொடுபெடையன்னம்
செங்கமலமலரேறிஊசலாடி
பூவணைமேல்துதைந்தெழு
செம்பொடியாடிவிளையாடும்புனலரங்கமே

செருவாளும்புள்ளாளன்மண்ணாளன்
செருச்செய்யும்நாந்தகமென்னும்
ஒருவாளன் மறையாளன்ஓடாதபடையாளன்
விழுக்கையாளன்
இரவாளன்பகலாளன்என்னையாளன்
ஏழுலகப்பெரும்புரவாளன்
திருவாளன்இனிதாக
திருக்கண்கள்வளர்கின்றதிருவரங்கமே

கைந்நாகத்திடர்கடிந்த
கனலாழிப்படையுடையான்கருதும்கோயில்
தென்னாடும்வடநாடும்தொழநின்ற
திருவரங்கம்திருப்பதியின்மேல்
மெய்ந்நாவன்மெய்யடியான்
விட்டுசித்தன்விரித்ததமிழுரைக்கவல்லார்
எஞ்ஞான்றும்எம்பெருமானிணையடிக்கீழ்
இணைபிரியாதிருப்பர்தாமே
பத்தாம் திருமொழி துப்புடையாரை
அந்திமகாலத்தில் கடாக்ஷிக்கும்படி அப்போதைக்கு இப்போதே
பெரியபெருமாள் திருவடிகளில் சரணம் புகுதல்
எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

துப்புடையாரைஅடைவதெல்லாம்
சோர்விடத்துத்துணையாவரென்றே
ஒப்பிலேனாகிலும்நின்னடைந்தேன்
ஆனைக்குநீஅருள்செய்தமையால்
எய்ப்புஎன்னைவந்துநலியும்போது
அங்குஏதும்நானுன்னைநினைக்கமாட்டேன்
அப்போதைக்குஇப்போதேசொல்லிவைத்தேன்
அரங்கத்தரவணைப்பள்ளியானே

சாமிடத்துஎன்னைக்குறிக்கொள்கண்டாய்
சங்கொடுசக்கரமேந்தினானே
நாமடித்துஎன்னைஅனேகதண்டம்
செய்வதாநிற்பர்நமன்தமர்கள்
போமிடத்துஉன்திறத்துஎத்தனையும்
புகாவண்ணம்நிற்பதோர்மாயைவல்லை
ஆமிடத்தேஉன்னைச்சொல்லிவைத்தேன்
அரங்கத்தரவணைப்பள்ளியானே

எல்லையில்வாசல்குறுகச்சென்றால்
எற்றிநமன்தமர்பற்றும்போது
நில்லுமினென்னும்உபாயமில்லை
நேமியும்சங்கமும்ஏந்தினானே
சொல்லலாம்போதேஉன்நாமமெல்லாம்
சொல்லினேன் என்னைக்குறிக்கொண்டுஎன்றும்
அல்லல்படாவண்ணம்காக்கவேண்டும்
அரங்கத்தரவணைப்பள்ளியானே

ஒற்றைவிடையனும்நான்முகனும்
உன்னையறியாப்பெருமையோனே
முற்றஉலகெல்லாம்நீயேயாகி
மூன்றெழுத்தாயமுதல்வனேயா
அற்றதுவாணாள்இவற்கென்றெண்ணி
அஞ்சநமன்தமர்பற்றலுற்ற
அற்றைக்கு நீஎன்னைக்காக்கவேண்டும்
அரங்கத்தரவணைப்பள்ளியானே

பையரவினணை பாற்கடலுள்
பள்ளிகொள்கின்றபரமமூர்த்தி
உய்யஉலகுபடைக்கவேண்டி
உந்தியில்தோற்றினாய்நான்முகனை
வையமனிசரைப்பொய்யென்றெண்ணி
காலனையும்உடனேபடைத்தாய்
ஐய இனிஎன்னைக்காக்கவேண்டும்
அரங்கத்தரவணைப்பள்ளியானே

தண்ணெனவில்லைநமன்தமர்கள்
சாலக்கொடுமைகள்செய்யாநிற்பர்
மண்ணொடுநீரும்எரியும்காலும்
மற்றும்ஆகாசமுமாகிநின்றாய்
எண்ணலாம்போதேஉன்நாமமெல்லாம்
எண்ணினேன் என்னைக்குறிக்கொண்டுஎன்றும்
அண்ணலே நீஎன்னைக்காக்கவேண்டும்
அரங்கத்தரவணைப்பள்ளியானே

செஞ்சொல்மறைப்பொருளாகிநின்ற
தேவர்கள்நாயகனே எம்மானே
எஞ்சலிலென்னுடையின்னமுதே
ஏழுலகுமுடையாய் என்னப்பா
வஞ்சவுருவின்நமன்தமர்கள்
வலிந்துநலிந்துஎன்னைப்பற்றும்போது
அஞ்சலமென்றுஎன்னைக்காக்கவேண்டும்
அரங்கத்தரவணைப்பள்ளியானே

நான்ஏதும்உன்மாயமொன்றறியேன்
நமன்தமர்பற்றிநலிந்திட்டு இந்த
ஊனேபுகேயென்றுமோதும்போது
அங்கேதும் நான்உன்னைநினைக்கமாட்டேன்
வானேய்வானவர்தங்களீசா
மதுரைப்பிறந்தமாமாயனே என்
ஆனாய் நீஎன்னைக்காக்கவேண்டும்
அரங்கத்தரவணைப்பள்ளியானே

குன்றெடுத்துஆநிரைகாத்தஆயா
கோநிரைமேய்த்தவனே எம்மானே
அன்றுமுதல் இன்றறுதியா
ஆதியஞ்சோதிமறந்தறியேன்
நன்றும்கொடியநமன்தமர்கள்
நலிந்துவலிந்துஎன்னைப்பற்றும்போது
அன்றங்குநீஎன்னைக்காக்கவேண்டும்
அரங்கத்தரவணைப்பள்ளியானே

மாயவனைமதுசூதனனை
மாதவனைமறையோர்களேத்தும்
ஆயர்களேற்றினைஅச்சுதனை
அரங்கத்தரவணைப்பள்ளியானை
வேயர்புகழ்வில்லிபுத்தூர்மன்
விட்டுசித்தன்சொன்னமாலைபத்தும்
தூயமனத்தனராகிவல்லார்
தூமணிவண்ணனுக்காளர்தாமே

ஐந்தாம் பத்து
முதல் திருமொழி வாக்குத்தூய்மை
எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

வாக்குத்தூய்மையிலாமையினாலே
மாதவா உன்னைவாய்க்கொள்ளமாட்டேன்
நாக்குநின்னையல்லால்அறியாது
நானதஞ்சுவன்என்வசமன்று
மூர்க்குப்பேசுகின்றானிவனென்று
முனிவாயேலும்என்நாவினுக்குஆற்றேன்
காக்கைவாயிலும்கட்டுரைகொள்வர்
காரணா கருளக்கொடியானே

சழக்குநாக்கொடுபுன்கவிசொன்னேன்
சங்குசக்கரமேந்துகையனே
பிழைப்பராகிலும்தம்மடியார்சொல்
பொறுப்பது பெரியோர்கடனன்றே
விழிக்கும்கண்ணிலேன்நின்கண்மற்றல்லால்
வேறொருவரோடுஎன்மனம்பற்றாது
உழைக்குஓர்புள்ளிமிகையன்றுகண்டாய்
ஊழியேழுலகுண்டுமிழ்ந்தானே

நன்மைதீமைகளொன்றும்அறியேன்
நாரணா என்னும்இத்த்னையல்லால்
புன்மையால்உன்னைப்புள்ளுவம்பேசி
புகழ்வானன்றுகண்டாய்திருமாலே
உன்னுமாறுஉன்னைஒன்றும்அறியேன்
ஓவாதேநமோநாரணா என்பன்
வன்மையாவதுஉன்கோயிலில்வாழும்
வைட்டணவனென்னும்வன்மைகண்டாயே

நெடுமையால்உலகேழுமளந்தாய்
நின்மலா நெடியாய் அடியேனை
குடிமைகொள்வதற்குஐயுறவேண்டா
கூறைசோறுஇவைவேண்டுவதில்லை
அடிமையென்னுமக்கோயின்மையாலே
அங்கங்கேஅவைபோதரும்கண்டாய்
கொடுமைக்கஞ்சனைக்கொன்று நின்தாதை
கோத்தவன்தளைகோள்விடுத்தானே

தோட்டம்இல்லவள்ஆத்தொழுஓடை
துடவையும்கிணறும்இவையெல்லாம்
வாட்டமின்றிஉன்பொன்னடிக்கீழே
வளைப்பகம்வகுத்துக்கொண்டிருந்தேன்
நாட்டுமானிடத்தோடுஎனக்குஅரிது
நச்சுவார்பலர்கேழலொன்றாகி
கோட்டுமண்கொண்டகொள்கையினானே
குஞ்சரம்வீழக்கொம்பொசித்தானே

கண்ணா நான்முகனைப்படைத்தானே
காரணா கரியாய் அடியேன்நான்
உண்ணாநாள்பசியாவதொன்றில்லை
ஓவாதேநமோநாரணாவென்று
எண்ணாநாளும்இருக்கெசுச்சாம
வேதநாண்மலர்கொண்டுஉன்பாதம்
நண்ணாநாள் அவைதத்துறுமாகில்
அன்றுஎனக்குஅவைபட்டினிநாளே

வெள்ளைவெள்ளத்தின்மேல்ஒருபாம்பை
மெத்தையாகவிரித்து அதன்மேலே
கள்ளநித்திரைகொள்கின்றமார்க்கம்
காணலாங்கொல் என்றாசையினாலே
உள்ளம்சோரஉகந்தெதிர்விம்மி
உரோமகூபங்களாய் கண்ணநீர்கள்
துள்ளம்சோரத்துயிலணைகொள்ளேன்
சொல்லாய்யான்உன்னைத்தத்துறுமாறே

வண்ணமால்வரையேகுடையாக
மாரிகாத்தவனே மதுசூதா
கண்ணனே கரிகோள்விடுத்தானே
காரணா களிறட்டபிரானே
எண்ணுவாரிடரைக்களைவானே
ஏத்தரும்பெருங்கீர்த்தியினானே
நண்ணிநான்உன்னைநாள்தொறும்ஏத்தும்
நன்மையேஅருள்செய்எம்பிரானே

நம்பனே நவின்றேத்தவல்லார்கள்
நாதனே நரசிங்கமதானாய்
உம்பர்கோனுலகேழும்அளந்தாய்
ஊழியாயினாய் ஆழிமுன்னேந்தி
கம்பமாகரிகோள்விடுத்தானே
காரணா கடலைக்கடைந்தானே
எம்பிரான் என்னையாளுடைத்தேனே
ஏழையேனிடரைக்களையாயே

காமர்தாதைகருதலர்சிங்கம்
காணவினியகருங்குழல்குட்டன்
வாமனன்என்மரகதவண்ணன்
மாதவன்மதுசூதனன்தன்னை
சேமநன்கமரும்புதுவையர்கோன்
விட்டுசித்தன்வியந்தமிழ்பத்தும்
நாமமென்றுநவின்றுரைப்பார்கள்
நண்ணுவார்ஒல்லைநாரணனுலகே
இரண்டாம் திருமொழி நெய்க்குடத்தை
தம்மிடத்து எம்பெருமான் திருப்பதிகளிற்போலே
விரும்பிப்புகுந்ததனால் நோய்களை அகலும்படி ஆழ்வார் கூறுதல்
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்

நெய்க்குடத்தைப்பற்றி ஏறும்எறும்புகள்போல்நிரந்து எங்கும்
கைக்கொண்டுநிற்கின்றநோய்காள் காலம்பெறஉய்யப்போமின்
மெய்க்கொண்டுவந்துபுகுந்து வேதப்பிரானார்கிடந்தார்
பைக்கொண்டபாம்பணையோடும் பண்டன்றுபட்டினம்காப்பே

சித்திரகுத்தனெழுத்தால் தென்புலக்கோன்பொறியொற்றி
வைத்தஇலச்சினைமாற்றி தூதுவர்ஓடியொளித்தார்
முத்துத்திரைக்கடற்சேர்ப்பன் மூதறிவாளர்முதல்வன்
பத்தர்க்கமுதன்அடியேன் பண்டன்றுபட்டினம்காப்பே

வயிற்றில்தொழுவைப்பிரித்து வன்புலச்சேவையதக்கி
கயிற்றும்அக்காணிகழித்து காலிடைப்பாசம்கழற்றி
எயிற்றிடைமண்கொண்டஎந்தை இராப்பகல்ஓதுவித்து என்னை
பயிற்றிப்பணிசெய்யக்கொண்டான் பண்டன்றுபட்டினம்காப்பே

மங்கியவல்வினைநோய்காள் உமக்கும்ஓர்வல்வினைகண்டீர்
இங்குப்புகேன்மின்புகேன்மின் எளிதன்றுகண்டீர்புகேன்மின்
சிங்கப்பிரானவன்எம்மான் சேரும்திருக்கோயில்கண்டீர்
பங்கப்படாதுஉய்யப்போமின் பண்டன்றுபட்டினம்காப்பே

மாணிக்குறளுருவாயமாயனை என்மனத்துள்ளே
பேணிக்கொணர்ந்து புகுதவைத்துக்கொண்டேன்பிறிதின்றி
மாணிக்கப்பண்டாரம்கண்டீர் வலிவன்குறும்பர்களுள்ளீர்
பாணிக்கவேண்டாநடமின் பண்டன்றுபட்டினம்காப்பே

உற்றவுறுபிணிநோய்காள் உமக்குஒன்றுசொல்லுகேன்கேண்மின்
பெற்றங்கள்மேய்க்கும்பிரானார் பேணும்திருக்கோயில்கண்டீர்
அற்றமுரைக்கின்றேன் இன்னம்ஆழ்வினைகாள் உமக்குஇங்குஓர்
பற்றில்லைகண்டீர்நடமின் பண்டன்றுபட்டினம்காப்பே

கொங்கைச்சிறுவரையென்னும் பொதும்பினில்வீழ்ந்துவழுக்கி
அங்கோர்முழையினில்புக்கிட்டு அழுந்திக்கிடந்துழல்வேனை
வங்கக்கடல்வண்ணன்அம்மான் வல்வினையாயினமாற்றி
பங்கப்படாவண்ணம்செய்தான் பண்டன்றுபட்டினம்காப்பே

ஏதங்களாயினவெல்லாம் இறங்கலிடுவித்து என்னுள்ளே
பீதகவாடைப்பிரானார் பிரமகுருவாகிவந்து
போதில்கமலவன்னெஞ்சம் புகுந்தும்என்சென்னித்திடரில்
பாதவிலச்சினைவைத்தார் பண்டன்றுபட்டினம்காப்பே

உறகலுறகலுறகல் ஒண்சுடராழியே சங்கே
அறவெறிநாந்தகவாளே அழகியசார்ங்கமே தண்டே
இறவுபடாமலிருந்த எண்மர்உலோகபாலீர்காள்
பறவையரையா உறகல் பள்ளியறைக்குறிக்கோண்மின்

அரவத்தமளியினோடும் அழகியபாற்கடலோடும்
அரவிந்தப்பாவையும்தானும் அகம்படிவந்துபுகுந்து
பரவைத்திரைபலமோத பள்ளிகொள்கின்றபிரானை
பரவுகின்றான்விட்டுசித்தன் பட்டினம்காவற்பொருட்டே
மூன்றாம் திருமொழி துக்கச்சுழலையை
திருமாலிருஞ்சோலை எம்பெருமானை போகவொட்டேனென்று தடுத்தல்
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்

துக்கச்சுழலையைச்சூழ்ந்துகிடந்த வலையைஅறப்பறித்து
புக்கினில்புக்குன்னைக்கண்டுகொண்டேன் இனிப்போகவிடுவதுண்டோ
மக்களறுவரைக்கல்லிடைமோத இழந்தவள்தன்வயிற்றில்
சிக்கெனவந்துபிறந்துநின்றாய் திருமாலிருஞ்சோலையெந்தாய்

வளைத்துவைத்தேன்இனிப்போகலொட்டேன் உந்தனிந்திரஞாலங்களால்
ஒளித்திடில்நின்திருவாணைகண்டாய் நீஒருவர்க்கும்மெய்யனல்லை
அளித்தெங்கும்நாடும்நகரமும் தம்முடைத்தீவினைதீர்க்கலுற்று
தெளித்துவலஞ்செய்யும்தீர்த்தமுடை திருமாலிருஞ்சோலையெந்தாய்

உனக்குப்பணிசெய்திருக்கும்தவமுடையேன் இனிப்போய்ஒருவன்
தனக்குப்பணிந்து கடைத்தலைநிற்கை நின்சாயையழிவுகண்டாய்
புனத்தினைகிள்ளிப்புதுவவிகாட்டி உன்பொன்னடிவாழ்கவென்று
இனக்குறவர்புதியதுண்ணும் எழில்திருமாலிருஞ்சோலையெந்தாய்

காதம்பலவும்திரிந்துழன்றேற்கு அங்கோர்நிழலில்லைநீரில்லை உன்
பாதநிழலல்லால்மற்றோருயிர்ப்பிடம் நான்எங்கும்காண்கின்றிலேன்
தூதுசென்றாய் குருபாண்டவர்க்காய் அங்கோர்பொய்சுற்றம்பேசிச்சென்று
பேதஞ்செய்துஎங்கும்பிணம்படைத்தாய் திருமாலிருஞ்சோலையெந்தாய்

காலுமெழாகண்ணநீரும்நில்லா உடல்சோர்ந்துநடுங்கி குரல்
மேலுமெழாமயிர்க்கூச்சுமறா எனதோள்களும்வீழ்வொழியா
மாலுகளாநிற்கும்என்மனனே உன்னைவாழத்தலைப்பெய்திட்டேன்
சேலுகளாநிற்கும்நீள்சுனைசூழ் திருமாலிருஞ்சோலையெந்தாய்

எருத்துக்கொடியுடையானும் பிரமனும்இந்திரனும் மற்றும்
ஒருத்தரும்இப்பிறவியென்னும்நோய்க்கு மருந்தறிவாருமில்லை
மருத்துவனாய்நின்றமாமணிவண்ணா மறுபிறவிதவிர
திருத்தி உங்கோயிற்கடைப்புகப்பெய் திருமாலிருஞ்சோலையெந்தாய்

அக்கரையென்னுமனத்தக்கடலுளழுந்தி உன்பேரருளால்
இக்கரையேறியிளைத்திருந்தேனை அஞ்சலென்றுகைகவியாய்
சக்கரமும்தடக்கைகளும் கண்களும்பீதகவாடையொடும்
செக்கர்நிறத்துச்சிவப்புடையாய் திருமாலிருஞ்சோலையெந்தாய்

எத்தனைகாலமும்எத்தனையூழியும் இன்றொடுநாளையென்றே
இத்தனைகாலமும்போய்க்கிறிப்பட்டேன் இனிஉன்னைப்போகலொட்டேன்
மைத்துனன்மார்களைவாழ்வித்து மாற்றலர்நூற்றுவரைக்கெடுத்தாய்
சித்தம்நின்பாலதறிதியன்றே திருமாலிருஞ்சோலையெந்தாய்

அன்றுவயிற்றில்கிடந்திருந்தே அடிமைசெய்யலுற்றிருப்பன்
இன்றுவந்துஇங்குஉன்னைக்கண்டுகொண்டேன் இனிப்போகவிடுவதுண்டே
சென்றங்குவாணனைஆயிரந்தோளும் திருச்சக்கரமதனால்
தென்றித்திசைதிசைவீழச்செற்றாய் திருமாலிருஞ்சோலையெந்தாய்

சென்றுலகம்குடைந்தாடும்சுனை திருமாலிருஞ்சோலைதன்னுள்
நின்றபிரான் அடிமேல்அடிமைத்திறம் நேர்படவிண்ணப்பஞ்செய்
பொன்திகழ்மாடம்பொலிந்துதோன்றும் புதுவைக்கோன்விட்டுசித்தன்
ஒன்றினோடொன்பதும்பாடவல்லார் உலகமளந்தான்தமரே
நாலாம் திருமொழி சென்னியோங்கு
எம்பெருமான் தமது திருவுள்ளத்திற் புகுந்தமையால் ஆழ்வார்
தாம் பெற்ற நன்மைகளை கூறி உகத்தல்

அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்

சென்னியோங்கு தண்திருவேங்கடமுடையாய் உலகு
தன்னைவாழநின்றநம்பீ தாமோதரா சதிரா
என்னையும்என்னுடைமையையும் உஞ்சக்கரப்பொறியொற்றிக்கொண்டு
நின்னருளேபுரிந்திருந்தேன் இனிஎன்திருக்குறிப்பே

பறவையேறுபரம்புருடா நீஎன்னைக்கைக்கொண்டபின்
பிறவியென்னும்கடலும்வற்றி பெரும்பதமாகின்றதால்
இறவுசெய்யும்பாவக்காடு தீக்கொளீஇவேகின்றதால்
அறிவையென்னும்அமுதவாறு தலைப்பற்றிவாய்க்கொண்டதே

எம்மனா என்குலதெய்வமே என்னுடையநாயகனே
நின்னுளேனாய்ப்பெற்றநன்மை இவ்வுலகினில்ஆர்பெறுவார்
நம்மன்போலேவீழ்த்தமுக்கும் நாட்டிலுள்ளபாவமெல்லாம்
சும்மெனாதேகைவிட்டோ டி தூறுகள்பாய்ந்தனவே

கடல்கடைந்துஅமுதம்கொண்டு கலசத்தைநிறைத்தாற்போல்
உடலுருகிவாய்திறந்து மடுத்துஉன்னைநிறைத்துக்கொண்டேன்
கொடுமைசெய்யும்கூற்றமும் என்கோலாடிகுறுகப்பெறா
தடவரைத்தோள்சக்கரபாணீ சார்ங்கவிற்சேவகனே

பொன்னைக்கொண்டுஉரைகல்மீதே நிறமெழவுரைத்தாற்போல்
உன்னைக்கொண்டுஎன்நாவகம்பால் மாற்றின்றிஉரைத்துக்கொண்டேன்
உன்னைக்கொண்டுஎன்னுள்வைத்தேன் என்னையும்உன்னிலிட்டேன்
என்னப்பா என்னிருடீகேசா என்னுயிர்க்காவலனே

உன்னுடையவிக்கிரமம் ஒன்றொழியாமல்எல்லாம்
என்னுடையநெஞ்சகம்பால் சுவர்வழிஎழுதிக்கொண்டேன்
மன்னடங்கமழுவலங்கைக்கொண்ட இராமநம்பீ
என்னிடைவந்துஎம்பெருமான் இனியெங்குப்போகின்றதே

பருப்பதத்துக்கயல்பொறித்த பாண்டியர்குலபதிபோல்
திருப்பொலிந்தசேவடி எஞ்சென்னியின்மேல்பொறித்தாய்
மருப்பொசித்தாய் மல்லடர்த்தாய் என்றென்றுஉன்வாசகமே
உருப்பொலிந்தநாவினேனை உனக்குஉரித்தாகினையே

அனந்தன்பாலும்கருடன்பாலும் ஐதுநொய்தாகவைத்து என்
மனந்தனுள்ளேவந்துவைகி வாழச்செய்தாய்எம்பிரான்
நினைந்துஎன்னுள்ளேநின்றுநெக்கு கண்கள்அசும்பொழுக
நினைந்திருந்தேசிரமம்தீர்ந்தேன் நேமிநெடியவனே

பனிக்கடலில்பள்ளிகோளை பழகவிட்டு ஓடிவந்துஎன்
மனக்கடலில்வாழவல்ல மாயமணாளநம்பீ
தனிக்கடலேதனிச்சுடரே தனியுலகேஎன்றென்று
உனக்கிடமாயிருக்க என்னைஉனக்குஉரித்தாக்கினையே

தடவரைவாய்மிளிர்ந்துமின்னும் தவளநெடுங்கொடிபோல்
சுடரொளியாய்நெஞ்சினுள்ளே தோன்றும்என்சோதிநம்பி
வடதடமும்வைகுந்தமும் மதிள்துவராபதியும்
இடவகைகள்இகழ்ந்திட்டு என்பால்இடவகைகொண்டனையே

வேயர்தங்கள்குலத்துதித்த விட்டுசித்தன்மனத்தே
கோயில்கொண்டகோவலனை கொழுங்குளிர்முகில்வண்ணனை
ஆயரேற்றைஅமரர்கோவை அந்தணர்தமமுதத்தினை
சாயைபோலப்பாடவல்லார்தாமும் அணுக்கர்களே
பெரியாழ்வார் திருவடிகளே சரணம்







நாலாயிர திவ்வி பிரபந்தம் பாடல்கள்





















நாலாயிர திவ்வி பிரபந்தம் பாடல்கள்
ஸ்ரீ ஆண்டாள் அருளி செய்த திருப்பாவை
அன்ன வயற்புதுவை ஆண்டாள் அரங்கற்கு
பன்னு திருப்பாவை பல்பதியம்
இன்னிசையால் பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை
பூமாலை சூடி கொடுத்தாளை சொல்லு
சூடி கொடுத்தாள் சுடர கொடியே தொல்பாவை
பாடி அருளவல்ல பல்வளையாய்
நாடி நீ வேங்கடவற்கு என்னை விதி ஒன்ற இம்மாற்றம்
நாங்கடவா வண்ணமே நல்கு

மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராட போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர் மல்கும் ஆய்ப்பாடி செல்வ சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்
கார் மேனி செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழ படிந்தேலோர் எம்பாவாய்

வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்கு
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பை துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமாற் எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்கு சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரி பெய்து
ஓங்கு பெறும் செ நெல் ஊடு கயலுகள
பூங்குவளை போதில் பொறி வண்டு கண் படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்

ஆழி மழை கண்ணா ஒன்று நீ கை கரவேல்
ஆழி உள் புக்கு முகந்து கொடு ஆர்த்து ஏறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து
பாழிய் அம் தோளுடை பற்பனாபன் கையில்
ஆழி போல் மின்னி வலம்புரி நின்று
தாழாதே சார்ங்க முதைத்த சர மழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்

மாயனை மன்னு வட மதுரை மைந்தனை
தூய பெரு நீர் யமுனை துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை
தாயை குடல் விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவி தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு
கள்ள சகடம் கலக்கழி காலோச்சி
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்து கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

கீசு என்று எங்கும் ஆனை சாத்தான்
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பே பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்ப கை பேர்த்து
வாச நறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ
நாயக பெண் பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனை பாடவும் நீ கேட்டே கிடத்தியோ
தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய்

கீழ் வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு
மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரை போகாமல் காத்து உன்னை
கூவுவான் வந்து நின்றோம் கோதுகலம் உடைய
பாவாய் எழுந்திராய் பாடி பறை கொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனை சென்று நாம் சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாயாய்

தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரி
தூபம் கமழ துயிலணைமேல் கண் வளரும்
மாமான் மகளே மணி கதவம் தாழ் திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ உன் மகள் தான்
ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ
பெரு துயில் மந்திர பட்டாளோ
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமன் பலவும் நவின்றேலோர் என்பாவாய்

நோற்று சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்ற துழாய் முடி நாராயணன் நம்மால்
போற்ற பறை தரும் புண்ணியனால் பண்டு ஒரு நாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்ப கரணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ
ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்

கற்று கறவை கணங்கள் பல கறந்து
செற்றார் திறலழி சென்று செரு செய்யும்
குற்றம் ஒன்றில்லாத கோவலர்த்தம் பொற்கொடியே
புற்று அரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின்
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட
சிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி நீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்

கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்து இல்லம் சேறாக்கும் நற் செல்வன் தங்காய்
பனி தலை வீழ நின் வாசற் கடை பற்றி
சினத்தினால் தென் இலங்கை கோமானை செற்ற
மனத்துக்கு இனியானை பாடவும் நீ வாய் திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர் உறக்கம்
அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்

புள்ளின் வாய் கீண்டானை பொல்லா அரக்கனை
கிள்ளி களைந்தானை கீர்த்தி மை பாடி போ
பிள்ளைகள் எல்லாரும் பாவை களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரி கண்ணினாய்
குள்ள குளிர குடைந்து நீராடாதே
பள்ளி கிடத்தியோ பாவாய் நீ நன் நாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்

உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்
செங்கழுனீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் கூம்பின
செங்கற் பொடி கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங கண்ணானை பாடேலோர் எம்பாவாய்

எல்லே இளம் கிளியே இன்னம் உறங்குதியோ
சில் என்று அழையேன் மின் நங்கையீர் போதருகின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டே வாய்
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனை பாடேலோர் எம்பாவாய்

நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய
கோயில் காப்பானே கொடி தோன்றும் தோரண
வாயில் காப்பானே மணி கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயில் எழ பாடுவான்
வாயால் முன்னம் மாற்றாதே அம்மா
நேய நிலை கதவம் நீக்கேலோர் எம்பாவாய்

அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே
எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பரம் ஊட அறுத்து ஓங்கி உளகு அளந்த
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
செம் பொற் கழலடி செல்வா பலதேவா
உம்பியும் நீயுன் உறங்கேலோர் எம்பாவாய்

உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்
நந்தகோபன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவி
பந்தல் மேல் பல் கால் குயிலினங்கள் கூவின காண்
பந்து ஆர் விரலி உன் மைத்துனன் பேர் பாட
செந்தாமரை கையால் சீரார் வளை ஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்

குத்து விளக்கெரிய கோட்டு கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறி
கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கை மேல்
வைத்து கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்
மை தடம் கண்ணினாய் நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவு ஆற்றகில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்

முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்
செப்பம் உடையாய் திறல்
வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய்
செப்பென்ன மென் முலை செவ்வா சிறு மருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்

ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்ற படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்
மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற் கண்
ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்

அம் கண் மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளி கட்டிற் கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வா செய்த தாமரை பூ போலே
செங்கண் சிறு சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்தனும் எழுந்தாற் போல்
அம் கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்

மாரி மலை முழைஞ்சில் மன்னி கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்று தீ விழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி
மூரி நிமிர்ந்து முழங்கி புறப்பட்டு
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்

அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி
சென்றங்கு தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்ற சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணில் ஆவெறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்றென்றும் உன் சேவகமே ஏத்தி பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்

ஒருத்தி மகனா பிறந்து ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
தரிக்கிலான் ஆகி தான் தீங்கு நினைந்த
கருத்தை பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்

மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போ பாடுடையனவே
சால பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உந்தன்னை
பாடி பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள் வளையே தோடே செவி பூவே
பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம்
ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வார
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்
அறிவு ஒன்றும் இல்லாத குலத்து உந்தன்னை
பிறவி பெறுந்தனை புண்ணியம் யாம் உடையோம்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை
சிறு பேர் அழைத்தனமும் சீறி அருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்

சிற்றம் சிறு காலே வந்து உன்னை சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்று ஏவல் எங்களை கொள்ளாமல் போகாது
இற்றை பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழ் பிறவிக்கும் உன்
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்

வங கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேய் இழையார் சென்று இறைஞ்சி
அங்க பறை கொண்ட ஆற்றை அணி புதுவை
பைங்கமல தண் தெரியல் பட்டர் பிரான் கோதை
சங்க தமிழ் மாலை முப்பதும் தப்பாமே சொன்ன
இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால் வரை தோள்
செங்கண் திருமுகத்து செல்வ திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்
கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழுமூர்
சோதி மணி மாடம் தோன்றும் ஊர்
நீதியால் நல்ல பத்தர் வாழும் ஊர் நான்மறைகள் ஓதுமூர்
வில்லிபுத்தூர் வேத கோனூர்
பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடி காட்டும்
வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதை தமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பது வம்பு
திருவாடி பூரத்து செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே
பெரும்புதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே
உயரரங்கற்கே கண்ணியுகந்தருளிதாள் வாழியே
மருவாரும் திருமல்லி வள நாடி வாழியே
வண்புதுவை நகர கோதை மலர பதங்கள் வாழியே
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் மங்களம்

ஸ்ரீ
ஸ்ரீமதே ராமானுஜாய நம
நாச்சியார் திருமொழி தனியன்கள்

திருக்கண்ணமங்கையாண்டான் அருளியது
நேரிசை வெண்பா
அல்லிநா டாமரைமே லாரணங்கி னின்துணைவி
மல்லிநா டாண்ட மடமயில் மெல்லியலாள்
ஆயர் குலவேந்த னாகத்தாள் தென்புதுவை
வேயர் பயந்த விளக்கு
கட்டளை கலித்துறை
கோல சுரிசங்கை மாயஞ்செவ் வாயின் குணம்வினவும்
சீல தனள்தென் திருமல்லி நாடி செழுங்குழல்மேல்
மால தொடைதென் னரங்கரு கீயும் மதிப்புடைய
சோலை கிளிஅவள் தூயநற் பாதம் துணைநமக்கே
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த நாச்சியார் திருமொழி
தையொரு திங்கள்
அறுசீர கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

தையொரு திங்களும் தரைவிளக்கி
தண்மண் டலமிட்டு மாசிமுன்னாள்
ஐயநுண் மணற்கொண்டு தெருவணிந்து
அழகினு கலங்கரி தனங்கதேவா
உய்யவு மாங்கொலோ வென்றுசொல்லி
உன்னையு மும்பியை யும்தொழுதேன்
வெய்யதோர் தழலுமிழ் சக்கரக்கை
வேங்கட வற்கென்னை விதிக்கிற்றியே

வெள்ளைநுண் மணற்கொண்டு தெருவணிந்து
வெள்வரை பதன்முன்னம் துறைபடிந்து
முள்ளுமில் லாச்சுள்ளி யெரிமடுத்து
முயன்றுன்னை நோற்கின்றேன் காமதேவா
கள்ளவிழ் பூங்கணை தொடுத்துக்கொண்டு
கடல்வண்ண னென்பதோர் பேரெழுதி
புள்ளினை வாய்பிள தானென்பதோர்
இலக்கினில் புகவென்னை யெய்கிற்றியே

மத்தநன் னறுமலர் முருக்கமலர்
கொண்டுமு போதுமுன் னடிவணங்கி
தத்துவ மிலியென்று நெஞ்செரிந்து
வாசக தழித்துன்னை வைதிடாமே
கொத்தலர் பூங்கணை தொடுத்துக்கொண்டு
கோவிந்த னென்பதோர் பேரேழுதி
வித்தகன் வேங்கட வாணனென்னும்
விளக்கினில் புகவென்னை விதிக்கிற்றியே

சுவரில் புராணநின் பேரேழுதி
சுறவநற் கொடிகளும் துரங்கங்களும்
கவரி பிணாக்களும் கருப்புவில்லும்
காட்டித்த தேன்கண்டாய் காமதேவா
அவரை பிரா தொடங்கிஎன்றும்
ஆதரி தெழுந்தவென் தடமுலைகள்
துவரை பிரானுக்கே சங்கற்பித்து
தொழுதுவை தேனொல்லை விதிக்கிற்றியே

வானிடை வாழுமவ் வானவர்க்கு
மறையவர் வேள்வியில் வகுத்தஅவி
கானிடை திரிவதோர் நரிபுகுந்து
கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப
ஊனிடை யாழிசங் குத்தமர்க்கென்று
உன்னி தெழுந்தவென் தடமுலைகள்
மானிட வர்க்கென்று பேச்சுப்படில்
வாழகில் லேன்கண்டாய் மன்மதனே

உருவுடை யாரிளை யார்கள்நல்லார்
ஓத்துவல் லார்களை கொண்டுவைகல்
தெருவிடை யெதிர்கொண்டு பங்குனிநாள்
திருந்தவே நோற்கின்றேன் காமதேவா
கருவுடை முகில்வண்ணன் காயாவண்ணன்
கருவிளை போல்வண்ணன் கமலவண்ண
திருவுடை முகத்தினில் திருக்கண்களால்
திருந்தவே நோக்கென கருளுகண்டய்

காயுடை நெல்லொடு கரும்பமைத்து
கட்டி யரிசி யவலமைத்து
வாயுடை மறையவர் மந்திரத்தால்
மன்மத னேஉன்னை வணங்குகின்றேன்
தேயமுன் னளந்தவன் திரிவிக்கிரமன்
திருக்கைக ளாலென்னை தீண்டும்வண்ணம்
சாயுடை வயிறுமென் தடமுலையும்
தரணியில் தலைப்புகழ் தரக்கிற்றியே

மாசுடை யுடம்பொடு தலையுலறி
வாய்ப்புரம் வெளுத்தொரு போதுமுண்டு
தேசுடை திறலுடை காமதேவா
நோற்கின்ற நோன்பினை குறிக்கொள்கண்டாய்
பேசுவ தொன்றுண்டிங் கெம்பெருமான்
பெண்மையை தலையுடை தாக்கும்வண்ணம்
கேசவ நம்பியை கால்பிடிப்பாள்
என்னுமி பேறென கருளுகண்டாய்

தொழுதுமு போதுமுன் னடிவணங்கி
தூமலர் தூய்த்தொழு தேத்துகின்றேன்
பழுதின்றி பாற்கடல் வண்ணனுக்கே
பணிசெய்து வாழ பெறாவிடில்நான்
அழுதழு தலமந்தம் மாவழங்க
ஆற்றவு மதுவுன குறைக்குங்கண்டாய்
உழுவதோ ரெருத்தினை நுகங்கொடுபாய்ந்து
ஊட்டமின் றித்துர தாலொக்குமே

கருப்புவில் மலர்க்கணை காமவேளை
கழலிணை பணிந்தங்கோர் கரியலற
மருப்பினை யொசித்துப்புள் வாய்பிளந்த
மணிவண்ணற் கென்னை வகுத்திடென்று
பொருப்பன்ன மாடம்பொ லிந்துதோன்றும்
புதுவையர் கோன்விட்டு சித்தன்கோதை
விருப்புடை யின்தமிழ் மாலைவல்லார்
விண்ணவர் கோனடி நண்ணுவரே
நாமமாயிரம்
கலி விருத்தம்

நாமமாயிர மேத்தநின்ற
நாராயணாநர னேஉன்னை
மாமிதன்மக னாகப்பெற்றா
லெமக்குவாதை தவிருமே
காமன்போதரு காலமென்றுபங்
குனிநாள்கடை பாரித்தோம்
தீமைசெய்யும் சிரீதராஎங்கள்
சிற்றில்வந்து சிதையேலே

இன்றுமுற்றும் முதுகுநோவ
இருந்திழைத்தஇ சிற்றிலை
நன்றும்கண்ணுற நோக்கிநாங்கொளும்
ஆர்வந்தன்னை தணிகிடாய்
அன்றுபாலக னாகியாலிலை
மேல்துயின்றவெம் மாதியாய்
என்றுமுன்றன கெங்கள்மேலிர
கம்மெழாததெம் பாவமே

குண்டுநீருறை கோளரீமத
யானைகோள்விடு தாய்உன்னை
கண்டுமாலுறு வோங்களைக்கடை
கண்களாலிட்டு வாதியேல்
வண்டல்நுண்மணல் தெள்ளியாம்வளை
கைகளால்சிர மப்பட்டோ ம்
தெண்டிரைக்கடற் பள்ளியாய்எங்கள்
சிற்றில்வந்து சிதையேலே

பெய்யுமாமுகில் போல்வண்ணாஉன்றன்
பேச்சும்செய்கையும் எங்களை
மையலேற்றி மயக்கவுன்முகம்
மாயமந்திர தான்கொலோ
நொய்யர்பிள்ளைக ளென்பதற்குன்னை
நோவநாங்களு ரைக்கிலோம்
செய்யதாமரை கண்ணினாயெங்கள்
சிற்றில்வந்து சிதையேலே

வெள்ளைநுண்மணல் கொண்டுசிற்றில்
விசித்திரப்பட வீதிவா
தெள்ளிநாங்களி ழைத்தகோல
மழித்தியாகிலும் உன்றன்மேல்
உள்ளமோடி யுருகலல்லால்
உரோடமொன்று மிலோங்கண்டாய்
கள்ளமாதவா கேசவாஉன்
முகத்தனகண்க ளல்லவே

முற்றிலாதபிள் ளைகளோம்முலை
போந்திலாதோமை நாடொறும்
சிற்றில்மேலிட்டு கொண்டுநீசிறி
துண்டுதிண்ணென நாமது
கற்றிலோம்கட லையடைத்தர
கர்குலங்களை முற்றவும்
செற்றுஇலங்கையை பூசலாக்கிய
சேவகாஎம்மை வாதியேல்

பேதநன்கறி வார்களோடிவை
பேசினால்பெரி திஞ்சுவை
யாதுமொன்றறி யாதபிள்ளைக
ளோமைநீநலி தென்பயன்
ஓதமாகடல் வண்ணாஉன்மண
வாட்டிமாரொடு சூழறும்
சேதுபந்தம் திருத்தினாயெங்கள்
சிற்றில்வந்து சிதையேலே

வட்டவாய்ச்சிறு தூதையோடு
சிறுசுளகும்மண லுங்கொண்டு
இட்டமாவிளை யாடுவோங்களை
சிற்றிலீடழி தென்பயன்
தொட்டுதைத்துநலி யேல்கண்டாய்சுடர
சக்கரம்கையி லேந்தினாய்
கட்டியும்கை தாலின்னாமை
அறிதியேகடல் வண்ணனே

முற்றத்தூடு புகுந்துநின்முகங்
காட்டிப்புன்முறு வல்செய்து
சிற்றிலோடெங்கள் சிந்தையும்சிதை
கக்கடவையோ கோவிந்தா
முற்றமண்ணிடம் தாவிவிண்ணுற
நீண்டளந்துகொண் டாய்எம்மை
பற்றிமெய்ப்பிண கிட்டக்காலிந்த
பக்கம்நின்றவ ரெஞ்சொல்லார்

சீதைவாயமு தமுண்டாய்எங்கள்
சிற்றில்நீசிதை யேல் என்று
வீதிவாய்விளை யாடுமாயர்
சிறுமியர்மழ லைச்சொல்லை
வேதவாய்த்தொழி லார்கள்வாழ்வில்லி
புத்தூர்மன்விட்டு சித்தன்றன்
கோதைவாய்த்தமிழ் வல்லவர்குறை
வின்றிவைகுந்தம் சேர்வரே
கோழியழைப்பதன்

கோழி யழைப்பதன் முன்னம்
குடைந்துநீ ராடுவான் போந்தோம்
ஆழியஞ் செல்வ னெழுந்தான்
அரவணை மேல்பள்ளி கொண்டாய்
ஏழைமை யாற்றவும் பட்டோ ம்
இனியென்றும் பொய்கைக்கு வாரோம்
தோழியும் நானும் தொழுதோம்
துகிலை பணித்தரு ளாயே

இதுவென் புகுந்ததிங் கந்தோ
இப்பொய்கை கெவ்வாறு வந்தாய்
மதுவின் துழாய்முடி மாலே
மாயனேஎங்க ளமுதே
விதியின்மை யாலது மாட்டோ ம்
வித்தக பிள்ளாய் விரையேல்
குதிகொண் டரவில் நடித்தாய்
குருந்திடை கூறை பணியாய்

எல்லே யீதென்ன இளமை
எம்மனை மார்காணி லொட்டார்
பொல்லாங்கீ தென்று கருதாய்
பூங்குரு தேறி யிருத்தி
வில்லாலி லங்கை யழித்தாய்நீ
வேண்டிய தெல்லாம் தருவோம்
பல்லாரும் காணாமே போவோம்
பட்டை பணித்தரு ளாயே

பரக்க விழித்தெங்கும் நோக்கி
பலர்குடை தாடும் சுனையில்
அரக்கநில் லாகண்ண நீர்கள்
அலமரு கின்றவா பாராய்
இரக்கமே லொன்று மிலாதாய்
இலங்கை யழித்த பிரானே
குரக்கர சாவ தறிந்தோம்
குருந்திடை கூறை பணியாய்

காலை கதுவிடு கின்ற
கயலோடு வாளை விரவி
வேலை பிடித்தெந்னை மார்கள்
ஓட்டிலென் னவிளை யாட்டோ
கோலச்சிற் றாடை பலவுங்
கொண்டுநீ யேறி யிராதே
கோலங் கரிய பிரானே
குருந்திடை கூறை பணியாய்

தடத்தவிழ் தாமரை பொய்கை
தாள்களெங் காலை கதுவ
விடத்தே ளெறிந்தாலே போல
வேதனை யற்றவும் பட்டோ ம்
குடத்தை யெடுத்தேற விட்டு
கூத்தாட வல்லஎங் கோவே
படிற்றையெல் லாம்தவிர தெங்கள்
பட்டை பணித்தரு ளாயே

நீரிலே நின்றயர கின்றோம்
நீதியல் லாதன செய்தாய்
ஊரகம் சாலவும் சேய்த்தால்
ஊழியெல் லாமுணர் வானே
ஆர்வ முனக்கே யுடையோம்
அம்மனை மார்காணி லொட்டார்
போர விடாயெங்கள் பட்டை
பூங்குரு தேறியி ராதே

மாமிமார் மக்களே யல்லோம்
மற்றுமிங் கெல்லாரும் போந்தார்
தூமலர கண்கள் வளர
தொல்லையி ராத்துயில் வானே
சேமமே லன்றிது சால
சிக்கென நாமிது சொன்னோம்
கோமள ஆயர்கொ ழுந்தே
குருந்திடை கூறை பணியாய்

கஞ்சன் வலைவைத்த வன்று
காரிரு ளெல்லில் பிழைத்து
நெஞ்சுது கம்செ போந்தாய்
நின்றஇ கன்னிய ரோமை
அஞ்ச உரப்பாள் அசோதை
ஆணாட விட்டி டிருக்கும்
வஞ்சக பேய்ச்சிபா லுண்ட
மசிமையி லீகூறை தாராய்

கன்னிய ரோடெங்கள் நம்பி
கரிய பிரான்விளை யாட்டை
பொன்னியல் மாடங்கள் சூழ்ந்த
புதுவையர் கோன்பட்டன் கோதை
இன்னிசை யால்சொன்ன மாலை
ஈரைந்தும் வல்லவர் தாம்போய்
மன்னிய மாதவ னோடு
வைகுந்தம் புக்கிரு பாரே
தெள்ளியார் பலர்
கலி விருத்தம்

தெள்ளி யார்பலர் கைதொழும் தேவனார்
வள்ளல் மாலிருஞ் சோலை மணாளனார்
பள்ளி கொள்ளு மிடத்தடி கொட்டிட
கொள்ளு மாகில்நீ கூடிடு கூடலே

காட்டில் வேங்கடம் கண்ண புரநகர்
வாட்ட மின்றி மகிழ்ந்துறை வாமனன்
ஓட்ட ராவந்தென் கைப்பற்றி தன்னோடும்
கூட்டு மாகில்நீ கூடிடு கூடலே

பூம கன்புகழ் வானவர் போற்றுதற்
காம கன்அணி வாணுதல் தேவகி
மாம கன்மிகு சீர்வசு தேவர்தம்
கோம கன்வரில் கூடிடு கூடலே

ஆய்ச்சி மார்களு மாயரு மஞ்சிட
பூத்த நீள்கடம் பேறி புகப்பாய்ந்து
வாய்த்த காளியன் மேல்நட மாடிய
கூத்த னார்வரில் கூடிடு கூடலே

மாட மாளிகை சூழ்மது ரைப்பதி
நாடி நந்தெரு வின்நடு வேவந்திட்டு
ஓடை மாமத யானை யுதைத்தவன்
கூடு மாகில்நீ கூடிடு கூடலே

அற்ற வன்மரு தம்முறி யநடை
கற்ற வன்கஞ் சனைவஞ் சனையினால்
செற்ற வன்திக ழும்மது ரைப்பதி
கொற்ற வன்வரில் கூடிடு கூடலே

அன்றின் னாதன செய்சிசு பாலனும்
நின்ற நீள்மரு தும்மெரு தும்புள்ளும்
வென்றி வேல்விறற் கஞ்சனும் வீழமுன்
கொன்ற வன்வரில் கூடிடு கூடலே

ஆவ லன்புட யார்தம் மனத்தன்றி
மேவ லன்விரை சூழ்துவ ராபதி
காவ லன்கன்று மேய்த்து விளையாடும்
கோவ லன்வரில் கூடிடு கூடலே

கொண்ட கோல குறளுரு வாய்ச்சென்று
பண்டு மாவலி தன்பெரு வேள்வியில்
அண்ட மும்நில னும்அடி யொன்றினால்
கொண்ட வன்வரில் கூடிடு கூடலே

பழகு நான்மறை யின்பொரு ளாய்மதம்
ஒழுகு வாரண முய்ய வளித்தஎம்
அழக னாரணி யாய்ச்சியர் சிந்தையுள்
குழக னார்வரில் கூடிடு கூடலே

ஊடல் கூட லுணர்தல் புணர்தலை
நீடு நின்ற நிறைபுக ழாய்ச்சியர்
கூட லைக்குழற் கோதைமுன் கூறிய
பாடல் பத்தும்வல் லார்க்கில்லை பாவமே
மன்னு பெரும்புகழ்
எழுசீர கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

மன்னு பெரும்புகழ் மாதவன் மாமணி
வண்ணன் மணிமுடி மைந்தன்
தன்னை உகந்தது காரண மாகஎன்
சங்கிழ கும்வழ குண்டே
புன்னை குருக்கத்தி ஞாழல் செருந்தி
பொதும்பினில் வாழும் குயிலே
பன்னியெ போது மிருந்து விரைந்தென்
பவளவா யன்வர கூவாய்

வெள்ளை விளிசங் கிடங்கையிற் கொண்ட
விமல னெனக்குரு காட்டான்
உள்ளம் புகுந்தென்னை நைவித்து நாளும்
உயிர்பெய்து கூத்தாட்டு காணும்
கள்ளவிழ் செண்பக பூமலர் கோதி
களித்திசை பாடுங் குயிலே
மெள்ள விருந்து மிழற்றி மிழற்றாதென்
வேங்கட வன்வர கூவாய்

மாதலி தேர்முன்பு கோல்கொள்ள மாயன்
இராவணன் மேல்சர மாரி
தாய்தலை யற்றற்று வீழ தொடுத்த
தலைவன் வரவெங்குங் காணேன்
போதலர் காவில் புதுமணம் நாற
பொறிவண்டின் காமரங் கேட்டுஉன்
காதலி யோடுடன் வாழ்குயி லேஎன்
கருமாணி கம்வர கூவாய்

என்புரு கியின வேல்நெடுங் கண்கள்
இமைபொரு தாபல நாளும்
துன்ப கடல்புக்கு வைகுந்த னென்பதோர்
தோணி பெறாதுழல் கின்றேன்
அன்புடை யாரை பிரிவுறு நோயது
நீயு மறிதி குயிலே
பொன்புரை மேனி கருள கொடியுடை
புண்ணிய னைவர கூவாய்

மென்னடை யன்னம் பரந்துவிளையாடும்
வில்லிபு தூருறை வான்றன்
பொன்னடி காண்பதோ ராசயி னாலென்
பொருகயற் கண்ணிணை துஞ்சா
இன்னடி சிலோடு பாலமு தூட்டி
எடுத்தவென் கோல கிளியை
உன்னொடு தோழமை கொள்வன் குயிலே
உலகள தான்வர கூவாய்

எத்திசை யுமம ரர்பணி தேத்தும்
இருடீகே சன்வலி செய்ய
முத்தன்ன வெண்முறு வற்செய்ய வாயும்
முலயு மழகழி தேன்நான்
கொத்தலர் காவில் மணித்தடம் கண்படை
கொள்ளு மிளங்குயி லேஎன்
தத்துவ னைவர கூகிற்றி யாகில்
தலையல்லால் கைம்மாறி லேனே

பொங்கிய பாற்கடல் பள்ளிகொள் வானை
புணர்வதோ ராசயி னால்என்
கொங்கை கிளர்ந்து குமைத்து குதுகலி
தாவியை யாகுலஞ் செய்யும்
அங்குயி லேஉன கென்ன மறைந்துறைவு
ஆழியும் சங்குமொண் தண்டும்
தங்கிய கையவ னைவர கூவில்நீ
சால தருமம் பெறுதி

சார்ங்கம் வளைய வலிக்கும் தடக்கை
சதுரன் பொருத்த முடையன்
நாங்களெம் மில்லிரு தொட்டிய கச்சங்கம்
நானு மவனு மறிதும்
தேங்கனி மாம்பொழில் செந்தளிர் கோதும்
சிறுகுயி லேதிரு மாலை
ஆங்கு விரைந்தொல்லை கூகிற்றி யாகில்
அவனைநான் செய்வன காணே

பைங்கிளி வண்ணன் சிரீதர னென்பதோர்
பாச தகப்பட்டி ருந்தேன்
பொங்கொளி வண்டிரை கும்பொழில் வாழ்குயி
லேகுறி கொண்டிது நீகேள்
சங்கொடு சக்கர தான்வர கூவுதல்
பொன்வளை கொண்டு தருதல்
இங்குள்ள காவினில் வாழ கருதில்
இரண்டத்தொன் றேல்திண்ணம் வேண்டும்

அன்றுல கம்மள தானை யுகந்தடி
மைக்கண வன்வலி செய்ய
தென்றலு திங்களு மூடறு தென்னை
நலியும் முறைமை யறியேன்
என்றுமி காவி லிருந்திரு தென்னை
தகர்த்தாதே நீயும் குயிலே
இன்றுநா ராயண னைவர கூவாயேல்
இங்குத்தை நின்றும் துரப்பன்

விண்ணுற நீண்டடி தாவிய மைந்தனை
வேற்கண் மடந்தை விரும்பி
கண்ணுற வென்கடல் வண்ணனை கூவு
கருங்குயி லே என்ற மாற்றம்
பண்ணுற நான்மறை யோர்புது வைமன்னன்
பட்டர்பி ரான்கோதை சொன்ன
நண்ணுறு வாசக மாலைவல் லார்நமோ
நாராய ணாயவென் பாரே
வாரணமாயிரம்
கலி விருத்தம்

வாரண மாயிரம் சூழவ லம்செய்து
நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்
பூரண பொற்குடம் வைத்து புறமெங்கும்
தோரணம் நாட்ட கனாக்கண்டேன் தோழீநான்

நாளைவ துவைம ணமென்று நாளிட்டு
பாளை கமுகு பரிசுடை பந்தற்கீழ்
கோளரி மாதவன் கோவிந்த னென்பான்ஓர்
காளைபு குதக்க னாக்கண்டேன் தோழீநான்

இந்திர னுள்ளிட்ட தேவர்கு ழாமெல்லாம்
வந்திரு தென்னைம கட்பேசி மந்திரித்து
மந்திர கோடியு டுத்திம ணமாலை
அந்தரி சூட்டக்க னாக்கண்டேன் தோழீநான்

நாற்றிசை தீர்த்தங்கொ ணர்ந்துந னிநல்கி
பார்ப்பன சிட்டர்கள் பல்லாரெ டுத்தேத்தி
பூப்புனை கண்ணிப்பு னிதனோ டென்றன்னை
காப்புநாண் கட்டக்க னாக்கண்டேன் தோழீநான்

கதிரொளி தீபம் கலசமு டனேந்தி
சதிரிள மங்கையர் தாம்வந்தெ திர்கொள்ள
மதுரையார் மன்ன னடிநிலை தொட்டுஎங்கும்
அதிர புகுத கனாக்கண்டேன் தோழீநான்

மத்தளம் கொட்டவ ரிசங்கம் நின்றூத
முத்துடை தாம நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்துஎன்னை
கைத்தலம் பற்ற கனாக்கண்டேன் தோழீநான்

வாய்நல் லார்நல்ல மறையோதி மந்திரத்தால்
பாசிலை நாணல் படுத்து பரிதிவைத்து
காய்சின மாகளி றன்னானென் கைப்பற்றி
தீவலம் செய்யக்க னாக்கண்டேன் தோழீநான்

இம்மைக்கு மேழேழ் பிறவிக்கும் பற்றாவான்
நம்மையு டையவன் நாராய ணன்நம்பி
செம்மை யுடைய திருக்கையால் தாள்பற்றி
அம்மி மிதி கனாக்கண்டேன் தோழீநான்

வரிசிலை வாள்முக தென்னைமார் தாம்வந்திட்டு
எரிமுகம் பாரித்தென் னைமுன்னே நிறுத்தி
அரிமுக னச்சுதன் கைம்மேலென் கைவைத்து
பொரிமுக தட்ட கனாக்கண்டேன் தோழீநான்

குங்கும மப்பி குளிர்சாந்தம் மட்டித்து
மங்கல வீதி வலம்செய்து மணநீர்
அங்கவ னோடு முடஞ்சென்றங் கானைமேல்
மஞ்சன மாட்டக்க னாக்கண்டேன் தோழீநான்

ஆயனு காகத்தான் கண்ட கனாவினை
வேயர் புகழ்வில்லி புத்தூர்க்கோன் கோதைசொல்
தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்
வாயுநன் மக்களை பெற்று மகிழ்வரே
கருப்பூரம் நாறுமோ
கலிவிருத்தம்

கருப்பூரம் நாறுமோ கமலப்பூ
திருப்பவள செவ்வாய்தான் தித்தித்தி ருக்கும்மோ
மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்று கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே

கடலில் பிறந்து கருதாது பஞ்சசனன்
உடலில் வளர்ந்துபோ யூழியான் கைத்தல
திடரில் குடியேறி தீய வசுரர்
நடலை படமுழங்கும் தோற்றத்தாய் நற்சங்கே

தடவரை யின்மீதே சரற்கால சந்திரன்
இடையுவா வில்வந்தெ ழுந்தாலே போல்நீயும்
வடமதுரை யார்மன்னன் வாசுதே வன்கையில்
குடியேறி வீற்றிருந்தாய் கோலப்பெ ருஞ்சங்கெ

சந்திர மண்டலம்போல் தாமோத ரன்கையில்
அந்தர மொன்றின்றி யேறி யவஞ்செவியில்
மந்திரம் கொள்வாயே போலும் வலம்புரியே
இந்திரனு முன்னோடு செல்வத்து கேலானே

உன்னோ டுடனே யொருகடலில் வாழ்வாரை
இன்னா ரினையாரென் றெண்ணுவா ரில்லைகாண்
மன்னாகி நின்ற மதுசூதன் வாயமுதம்
பன்னாளு முண்கின்றாய் பாஞ்சசன் னியமே

போய்த்தீர்த்த மாடாதே நின்ற புணர்மருதம்
சாய்த்தீர்த்தான் கைத்தலத்தே யேறி குடிகொண்டு
சேய்த்தீர்த மாய்நின்ற செங்கண்மால் தன்னுடய
வாய்த்தீர்த்தம் பாய்ந்தாட வல்லாய் வலம்புரியே

செங்கமல நாண்மலர்மேல் தேனுகரு மன்னம்போல்
செங்க கருமேனி வாசுதே வனுடய
அங்கை தலமேறி அன்ன வசஞ்செய்யும்
சங்கரையா உஞ்செல்வம் சாலவ ழகியதே

உண்பது சொல்லி லுலகளந்தான் வாயமுதம்
கண்படை கொள்ளில் கடல்வண்ணன் கைத்தலத்தே
பெண்படை யாருன்மேல் பெரும்பூசல் சாற்றுகின்றார்
பண்பல செய்கின்றாய் பாஞ்சசன் னியமே

பதினாறா மாயிரவர் தேவிமார் பார்த்திருப்ப
மதுவாயில் கொண்டாற்போல் மாதவன்றன் வாயமுதம்
பொதுவாக வுண்பதனை புக்குநீ யுண்டக்கால்
சிதையாரோ வுன்னோடு செல்வப்பெ ருஞ்சங்கே

பாஞ்சசன் னியத்தை பற்பநா பனோடும்
வாய்ந்தபெ ருஞ்சுற்ற மாக்கிய வண்புதுவை
ஏய்ந்தபுகழ பட்டர்பிரான் கோதைதமி ழீரைந்தும்
ஆய்ந்தேத்த வல்லா ரவரு மணுக்கரே
விண்ணீல மேலாப்பு
தரவு கொச்ச கலிப்பா

விண்ணீல மேலாப்பு
விரித்தாற்போல் மேகங்காள்
தெண்ணீர்பாய் வேங்கடத்தென்
திருமாலும் போந்தானே
கண்ணீர்கள் முலைக்குவட்டில்
துளிசோர சோர்வேனை
பெண்ணீர்மை யீடழிக்கும்
இதுதமக்கோர் பெருமையே

மாமுத்த நிதிசொரியும்
மாமுகில்காள் வேங்கடத்து
சாமத்தின் நிறங்கொண்ட
தாடாளன் வார்த்தையென்னே
காமத்தீ யுள்புகுந்து
கதுவப்பட்டு இடைக்கங்குல்
ஏமத்தோர் தென்றலுக்கிங்
கிலக்காய்நா னிருப்பேனே

ஒளிவண்ணம் வளைசிந்தை
உறக்கத்தோ டிவையெல்லாம்
எளிமையா லிட்டென்னை
ஈடழி போயினவால்
குளிரருவி வேங்கடத்தென்
கோவிந்தன் குணம்பாடி
அளியத்த மேகங்காள்
ஆவிகா திருப்பேனே

மின்னாக தெழுகின்ற
மேகங்காள் வேங்கடத்து
தன்னாக திருமங்கை
தங்கியசீர் மார்வற்கு
என்னாக திளங்கொங்கை
விரும்பித்தாம் நாடோ றும்
பொன்னாகம் புல்குதற்கென்
புரிவுடைமை செப்புமினே

வான்கொண்டு கிளர்ந்தெழுந்த
மாமுகில்காள் வேங்கடத்து
தேன்கொண்ட மலர்ச்சிதற
திரண்டேறி பொழிவீர்காள்
ஊன்கொண்ட வள்ளுகிரால்
இரணியனை யுடலிடந்தான்
தான்கொண்ட சரிவளைகள்
தருமாகில் சாற்றுமினே

சலங்கொண்டு கிளர்ந்தெழுந்த
தண்முகில்காள் மாவலியை
நிலங்கொண்டான் வேங்கடத்தே
நிரந்தேறி பொழிவீர்காள்
உலங்குண்ட விளங்கனிபோல்
உள்மெலி புகுந்துஎன்னை
நலங்கொண்ட நாரணற்கென்
நடலைநோய் செப்புமினே

சங்கமா கடல்கடைந்தான்
தண்முகில்காள் வேங்கடத்து
செங்கண்மால் சேவடிக்கீழ்
அடிவீழ்ச்சி விண்ணப்பம்
கொங்கைமேல் குங்குமத்தின்
குழம்பழி புகுந்துஒருநாள்
தங்குமே லென்னாவி
தங்குமென் றுரயீரே

கார்கால தெழுகின்ற
கார்முகில்காள் வேங்கடத்து
போர்கால தெழுந்தருளி
பொருதவனார் பேர்சொல்லி
நீர்கால தெருக்கிலம்
பழவிலைபோல் வீழ்வேனை
வார்கால தொருநாள்தம்
வாசகம்த தருளாரே

மதயானை போலெழுந்த
மாமுகில்காள் வேங்கடத்தை
பதியாக வாழ்வீர்காள்
பாம்பணையான் வார்த்தையென்னே
கதியென்றும் தானாவான்
கருதாதுஓர் பெண்கொடியை
வதைசெய்தான் என்னும்சொல்
வையகத்தார் மதியாரே

நாகத்தி னணையானை
நன்னுதலாள் நயந்துரைசெய்
மேகத்தை வேங்கடக்கோன்
விடுதூதில் விண்ணப்பம்
போகத்தில் வழுவாத
புதுவையர்கோன் கோதைதமிழ்
ஆகத்து வைத்துரைப்பார்
அவரடியா ராகுவரே
சிந்தூர செம்பொடி
கலிநிலைத்துறை

சிந்துர செம்பொடிப்போல்
திருமாலிருஞ் சோலையெங்கும்
இந்திர கோபங்களே
எழுந்தும்பர திட்டனவால்
மந்தரம் நாட்டியன்று
மதுரக்கொழுஞ் சாறுகொண்ட
சுந்தர தோளுடையான்
சுழலையினின் றுய்துங்கொலோ

போர்களி றுபொரும்மா
லிருஞ்சோலையம் பூம்புறவில்
தார்க்கொடி முல்லைகளும்
தவளநகை காட்டுகின்ற
கார்க்கொள் படாக்கள்நின்று
கழறிச்சிரி கத்தரியேன்
ஆர்க்கிடு கோதோழி
அவன்தார்ச்செய்த பூசலையே

கருவிளை யொண்மலர்காள்
காயாமலர் காள்திருமால்
உருவொளி காட்டுகின்றீர்
எனக்குய்வழ கொன்றுரையீர்
திருவிளை யாடுதிண்டோ ள்
திருமாலிருஞ் சோலைநம்பி
வரிவளை யில்புகுந்து
வந்திபற்றும் வழ்க்குளதே

பைம்பொழில் வாழ்குயில்காள்
மயில்காள்ஒண் கருவிளைகாள்
வம்ப களங்கனிகாள்
வண்ணப்பூவை நறுமலர்காள்
ஐம்பெரும் பாதகர்காள்
அணிமாலிருஞ் சோலைநின்ற
எம்பெரு மானுடைய
நிறமுங்களு கெஞ்செய்வதே

துங்க மலர்ப்பொழில்சூழ்
திருமாலிருஞ் சோலைநின்ற
செங்க கருமுகிலின்
திருவுரு போல்மலர்மேல்
தொங்கிய வண்டினங்காள்
தொகுபூஞ்சுனை காள்சுனையில்
தங்குசெ தாமரைகாள்
எனக்கோர்சரண் சாற்றுமினே

நாறு நறும்பொழில்மா
லிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில்வெண்ணெய்
வாய்நேர்ந்து பராவிவைத்தேன்
நூறு தடாநிறைந்த
அக்கார வடிசில்சொன்னேன்
ஏறு திருவுடையான்
இன்றுவந்திவை கொள்ளுங்கொலோ

இன்றுவ தித்தனையும்
அமுதுசெய் திடப்பெறில்நான்
ஒன்று நூறாயிரமா
கொடுத்துப்பின்னும் ஆளும்செய்வன்
தென்றல் மணங்கமழும்
திருமாலிருஞ் சோலைதன்னுள்
நின்ற பிரான்அடியேன்
மனத்தேவந்து நேர்படிலே

காலை யெழுந்திருந்து
கரியகுரு விக்கணங்கள்
மாலின் வரவுசொல்லி
மருள்பாடுதல் மெய்ம்மைகொலோ
சோலை மலைப்பெருமான்
துவராபதி யெம்பெருமான்
ஆலி னிலைப்பெருமான்
அவன் வார்த்தை யுரைக்கின்றதே

கோங்கல ரும்பொழில்மா
லிருஞ்சோலயில் கொன்றைகள்மேல்
தூங்குபொன் மாலைகளோ
டுடனாய்நின்று தூங்குகின்றேன்
பூங்கொள் திருமுகத்து
மடுத்தூதிய சங்கொலியும்
சார்ங்கவில் நாணொலியும்
தலைப்பெய்வதெஞ் ஞான்றுகொலோ

சந்தொடு காரகிலும்
சுமந்துதடங் கள்பொருது
வந்திழி யும்சிலம்பா
றுடைமாலிருஞ் சோலைநின்ற
சுந்தரனை சுரும்பார்
குழல்கோதை தொகுத்துரைத்த
செந்தமிழ் பத்தும்வல்லார்
திருமாலடி சேர்வர்களே
கார்க்கோடல் பூக்காள்
கலிநிலைத்துறை

கார்க்கோடல் பூக்காள் கார்க்கடல்
வண்ணனென் மேல்உம்மை
போர்க்கோலம் செய்து போர
விடுத்தவ னெங்குற்றான்
ஆர்க்கோ இனிநாம் பூச
லிடுவது அணிதுழா
தார்க்கோடும் நெஞ்ச தன்னை
படைக்கவல் லேனந்தோ

மேற்றோன்றி பூக்காள் மேலுல
கங்களின் மீதுபோய்
மேற்றோன்றும் சோதி வேத
முதல்வர் வலங்கையில்
மேற்றோன்று மாழியின் வெஞ்சுடர்
போல சுடாதுஎம்மை
மாற்றோலை பட்டவர் கூட்டத்து
வைத்துகொள் கிற்றிரே

கோவை மணாட்டி நீயுன்
கொழுங்கனி கொண்டுஎம்மை
ஆவி தொலைவியேல் வாயழ
கர்தம்மை யஞ்சுதும்
பாவி யேன்தோன்றி பாம்பணை
யார்க்கும்தம் பாம்புபோல்
நாவு மிரண்டுள வாய்த்து
நாணிலி யேனுக்கே

முல்லை பிராட்டிநீயுன்
முறுவல்கள் கொண்டுஎம்மை
அல்லல் விளைவியே லாழிநங்
காய்உன்ன டைக்கலம்
கொல்லை யரக்கியை மூக்கரி
திட்ட குமரனார்
சொல்லும் பொய்யானால் நானும்
பிறந்தமை பொய்யன்றே

பாடும் குயில்காள் ஈதென்ன
பாடல்நல் வேங்கட
நாடர் நமக்கொரு வாழ்வுத
தால்வந்து பாடுமின்
ஆடும் கருள கொடியுடை
யார்வ தருள்செய்து
கூடுவ ராயிடில் கூவிநும்
பாட்டுகள் கேட்டுமே

கணமா மயில்காள் கண்ணபி
ரான்திரு கோலம்போன்று
அணிமா நடம்பயின் றாடுகின்
றீர்க்கடி வீழ்கின்றேன்
பணமா டரவணை பற்பல
காலமும் பள்ளிகொள்
மணவாளர் நம்மை வைத்த
பரிசிது காண்மினே

நடமாடி தோகை விரிக்கின்ற
மாமயில் காள்உம்மை
நடமாட்டங் காண பாவியேன்
நானோர் முதலிலேன்
குடமாடு கூத்தன் கோவிந்தன்
கோமிறை செய்துஎம்மை
உடைமாடு கொண்டா னுங்களு
கினியொன்று போதுமே

மழையே
பூசியுள் ளாய்நின்ற
மெழுகூற்றி னாற்போல் ஊற்றுநல்
வேங்கட துள்நின்ற
அழக பிரானார் தம்மையென்
நெஞ்ச தகப்பட
தழுவநின்று என்னை ததர்த்திக்கொண்
டூற்றவும் வல்லையே

கடலே
கடைந்து கலக்குறுத்து
உடலுள் புகுந்துநின் றூறல்
அறுத்தவற்கு என்னையும்
உடலுள் புகுந்துநின் றூறல்
அறுக்கின்ற மாயற்குஎன்
நடலைக ளெல்லாம் நாகணை
கேசென்று ரைத்தியே

நல்லஎன் தோழி நாக
ணைமிசை நம்பரர்
செல்வர் பெரியர் சிறுமா
னிடவர்நாம் செய்வதென்
வில்லி புதுவை விட்டுசி
தர்தங்கள் தேவரை
வல்ல பரிசு வருவிப்ப
ரேலது காண்டுமே
தாமுகக்கும்
தரவு சொச்ச கலிப்பா

தாமுகக்கும் தம்கையில் சங்கமே போலாவோ
யாமுகக்கு மெங்கையில் சங்கமு மேந்திழையீர்
தீமுகத்து நாகணைமேல் சேரும் திருவரங்கர்
ஆமுகத்தை நோக்காரால் அம்மனே

எழிலுடைய வம்மனைமீர் என்னரங்க தின்னமுதர்
குழலழகர் வாயழகர் கண்ணழகர் கொப்பூழில்
எழுகமல பூவழக ரெம்மானார் என்னுடைய
கழல்வளையை தாமும் கழல்வளையே யாக்கினரே

பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும்
அங்காதுஞ் சோராமே யாள்கின்ற வெம்பெருமான்
செங்கோ லுடைய திருவரங்க செல்வனார்
எங்கோல் வளையா லிடர்தீர்வ ராகாதே

மச்சணி மாட மதிளரங்கர் வாமனனார்
பச்சை பசுந்தேவர் தாம்பண்டு நீரேற்ற
பிச்சை குறையாகி யென்னுடைய பெய்வளைமேல்
இச்சை யுடையரே லித்தெருவே போதாரே

பொல்லா குறளுருவா பொற்கையில் நீரேற்று
எல்லா வுலகு மளந்துகொண்ட வெம்பெருமான்
நல்லார்கள் வாழும் நளிரரங்க நாகணையான்
இல்லாதோம் கைப்பொருளு மெய்துவா னொத்துளனே

கைப்பொருள்கள் முன்னமே
கைக்கொண்டார் காவிரிநீர்
செய்ப்புரள வோடும்
திருவரங்க செல்வனார்
எப்பொருட்கும் நின்றார்க்கு
மெய்தாது நான்மறையின்
சொற்பொருளாய் நின்றாரென்
மெய்ப்பொருளும் கொண்டாரே

உண்ணா துறங்கா தொலிகடலை யூடறுத்து
பெண்ணாக்கை யாப்புண்டு தாமுற்ற பேதெல்லாம்
திண்ணார் மதிள்சூழ் திருவரங்க செல்வனார்
எண்ணாதே தம்முடைய நன்மைகளே யெண்ணுவரே

பாசிதூர துக்கிடந்த பார்மகட்கு பண்டொருநாள்
மாசுடம்பில் நீர்வார மானமிலா பன்றியாம்
தேசுடைய தேவர் திருவரங்க செல்வனார்
பேசி யிருப்பனகள் பேர்க்கவும் பேராவே

கண்ணாலங் கோடித்து கன்னிதன்னை கைப்பிடிப்பான்
திண்ணார திருந்த சிசுபாலன் தேசழிந்து
அண்ணா திருக்கவே யாங்கவளை கைப்பிடித்த
பெண்ணாளன் பேணுமூர் பேரு மரங்கமே

செம்மை யுடைய
திருவரங்கர் தாம்பணித்த
மெய்ம்மை பெருவார்த்தை
விட்டுசித்தர் கேட்டிருப்பர்
தம்மை யுகப்பாரை
தாமுகப்ப ரென்னும்சொல்
தம்மிடையே பொய்யானால்
சாதிப்பா ராரினியே
மற்றிருந்தீர்
அறுசீர கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

மற்றிரு தீர்க கறியலாகா
மாதவ னென்பதோ ரன்புதன்னை
உற்றிரு தேனு குரைப்பதெல்லாம்
ஊமைய ரோடு செவிடர்வார்த்தை
பெற்றிரு தாளை யொழியவேபோ
பேர்த்தொரு தாயில் வளர்ந்தநம்பி
மற்பொரு தாமற் களமடைந்த
மதுரை புறத்தென்னை யுய்த்திடுமின்

நாணி யினியோர் கருமமில்லை
நாலய லாரும் அறிந்தொழிந்தார்
பாணியா தென்னை மருந்து செய்து
பண்டுபண் டாக்க வுறுதிராகில்
மாணி யுருவா யுலகளந்த
மாயனை காணில் தலைமறியும்
ஆணையால் நீரென்னை காக்கவேண்டில்
ஆய்ப்பாடி கேயென்னை யுய்த்திடுமின்

தந்தையும் தாயுமுற் றாரும்நிற்க
தனிவழி போயினாள் என்னும்சொல்லு
வந்தபின் னைப்பழி காப்பரிது
மாயவன் வந்துரு காட்டுகின்றான்
கொந்தள மாக்கி பரக்கழித்து
குறும்புசெய் வானோர் மகனைப்பெற்ற
நந்தகோ பாலன் கடைத்தலைக்கே
நள்ளிரு கணென்னை யுய்த்திடுமின்

அங்கை தலத்திடை யாழிகொண்டான்
அவன்முக தன்றி விழியேனென்று
செங்கச்சு கொண்டுகண் ணாடையார்த்து
சிறுமா னிடவரை காணில்நாணும்
கொங்கை தலமிவை நோக்கிக்காணீர்
கோவிந்த னுக்கல்லால் வாயில்போகா
இங்குத்தை வாழ்வை யொழியவேபோய்
யமுனை கரைக்கென்னை யுய்த்திடுமின்

ஆர்க்குமென் நோயி தறியலாகா
தம்மனை மீர்துழ திப்படாதே
கார்க்கடல் வண்ணனென் பானொருவன்
கைகண்ட யோகம் தடவத்தீரும்
நீர்க்கரை நின்ற கடம்பையேறி
காளிய னுச்சியில் நட்டம்பாய்ந்து
போர்க்கள மாக நிருத்தஞ்செய்த
பொய்கை கரைக்கென்னை யுய்த்திடுமின்

கார்த்தண் முகிலும் கருவிளையும்
காயா மலரும் கமலப்பூவும்
ஈர்த்திடு கின்றன வென்னைவந்தி
டிருடீகே சன்பக்கல் போகேயென்று
வேர்த்து பசித்து வயிறசைந்து
வேண்டடி சிலுண்ணும் போதுஈதென்று
பார்த்திரு துநெடு நோக்குக்கொள்ளும்
பத்தவி லோசந துய்த்திடுமின்

வண்ணம் திரிவும் மனங்குழைவும்
மானமி லாமையும் வாய்வெளுப்பும்
உண்ண லுறாமையு முள்மெலிவும்
ஓதநீர் வண்ணனென் பானொருவன்
தண்ண துழாயென்னும் மாலைகொண்டு
சூட்ட தணியும் பிலம்பன்றன்னை
பண்ணழி யப்பல தேவன்வென்ற
பாண்டி வடத்தென்னை யுய்த்திடுமின்

கற்றினம் மேய்க்கிலும் மேய்க்கப்பெற்றான்
காடுவாழ் சாதியு மாகப்பெற்றான்
பற்றி யுரலிடை யாப்புமுண்டான்
பாவிகாள் உங்களு கேச்சுக்கொலோ
கற்றன பேசி வசையுணாதே
காலிக ளுய்ய மழைதடுத்து
கொற்ற குடையாக வேந்திநின்ற
கோவர தனத்தென்னை யுய்த்திடுமின்

கூட்டி லிருந்து கிளியெப்போதும்
கோவிந்தா
ஊட்டு கொடாது செறுப்பனாகில்
உலகள தான் என் றுயரக்கூவும்
நாட்டில் தலைப்பழி யெய்தியுங்கள்
நன்மை யிழந்து தலையிடாதே
சூட்டுயர் மாடங்கள் சூழ்ந்துதோன்றும்
துவரா பதிக்கென்னை யுய்த்திடுமின்

மன்னு மதுரை தொடக்கமாக
வண்துவ ராபதி தன்னளவும்
தன்னை தமருய்த்து பெய்யவேண்டி
தாழ்குழ லாள்துணி ததுணிவை
பொன்னியல் மாடம்பொ லிந்துதோன்றும்
புதுவையர் கோன்விட்டு சித்தன்கோதை
இன்னிசை யால்சொன்ன செஞ்சொல்மாலை
ஏத்தவல் லார்க்கிடம் வைகுந்தமே
கண்ணனென்னும்
அறுசீர கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

கண்ண னென்னும் கருந்தெய்வம்
காட்சி பழகி கிடப்பேனை
புண்ணில் புளிப்பெய் தாற்போல
புறநின் றழகு பேசாதே
பெண்ணின் வருத்த மறியாத
பெருமா னரையில் பீதக
வண்ண ஆடை கொண்டுஎன்னை
வாட்டம் தணிய வீசீரே

பாலா லிலையில் துயில்கொண்ட
பரமன் வலைப்ப டிருந்தேனை
வேலால் துன்னம் பெய்தாற்போல்
வேண்டிற் றெல்லாம் பேசாதே
கோலால் நிரைமே தாயனா
குடந்தை கிடந்த குடமாடி
நீலார் தண்ண துழாய்கொண்டென்
நெறிமேன் குழல்மேல் சூட்டீரே

கஞ்சை காய்ந்த கருவல்லி
கடைக்க ணென்னும் சிறைக்கோலால்
நெஞ்சூ டுருவ வேவுண்டு
நிலையும் தளர்ந்து நைவேனை
அஞ்சே லென்னா னவனொருவன்
அவன்மார் வணிந்த வனமாலை
வஞ்சி யாதே தருமாகில்
மார்வில் கொணர்ந்து புரட்டீரே

ஆரே யுலக தாற்றுவார்
ஆயர் பாடி கவர்ந்துண்ணும்
காரே றுழக்க வுழக்குண்டு
தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை
ஆரா வமுத மனையான்றன்
அமுத வாயி லூறிய
நீர்தான் கொணர்ந்து புலராமே
பருக்கி யிளைப்பை நீக்கிரே

அழிலும் தொழிலு முருக்காட்டான்
அஞ்சே லென்னா னவனொருவன்
தழுவி முழுகி புகுந்தென்னை
சுற்றி சுழன்று போகானால்
தழையின் பொழில்வாய் நிரைப்பின்னே
நெடுமா லூதி வருகின்ற
குழலின் தொளைவாய் நீர்கொண்டு
குளிர முகத்து தடவீரே

நடையொன் றில்லா வுலகத்து
நந்த கோபன் மகனென்னும்
கொடிய கடிய திருமாலால்
குளப்பு கூறு கொளப்பட்டு
புடையும் பெயர கில்லேன்நான்
போட்கன் மிதித்த அடிப்பாட்டில்
பொடித்தான் கொணர்ந்து பூசீர்கள்
போகா வுயிரென் னுடம்பையே

வெற்றி கருள கொடியான்றன்
மீமீ தாடா வுலகத்து
வெற்ற வெறிதே பெற்றதாய்
வேம்பே யாக வளர்த்தாளே
குற்ற மற்ற முலைதன்னை
குமரன் கோல பணைத்தோளோடு
அற்ற குற்ற மவைதீர
அணைய வமுக்கி கட்டீரே

உள்ளே யுருகி நைவேனை
உளளோ இலளோ வென்னாத
கொள்ளை கொள்ளி குறும்பனை
கோவர தனனை கண்டக்கால்
கொள்ளும் பயனொன் றில்லாத
கொங்கை தன்னை கிழங்கோடும்
அள்ளி பறித்தி டவன்மார்வில்
எறிந்தென் அழலை தீர்வேனே

கொம்மை முலைக ளிடர்தீர
கோவி தற்கோர் குற்றேவல்
இம்மை பிறவி செய்யாதே
இனிப்போ செய்யும் தவந்தானென்
செம்மை யுடைய திருமார்வில்
சேர்த்தா னேலும் ஒருஞான்று
மெய்ம்மை சொல்லி முகம்நோக்கி
விடைதான் தருமேல் மிகநன்றே

அல்லல் விளைத்த பெருமானை
ஆயர் பாடி கணிவிளக்கை
வில்லி புதுவை நகர்நம்பி
விட்டு சித்தன் வியன்கோதை
வில்லை தொலைத்த புருவத்தாள்
வேட்கை யுற்று மிகவிரும்பும்
சொல்லை துதிக்க வல்லார்கள்
துன்ப கடளுள் துவளாரே
பட்டி மேய்ந்து
அறுசீர கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பட்டி மேய்ந்தோர் காரேறு
பலதே வற்கோர் கீழ்க்கன்றாய்
இட்டீ றிட்டு விளையாடி
இங்கே போத கண்டீரே
இட்ட மான பசுக்களை
இனிது மறித்து நீரூட்டி
விட்டு கொண்டு விளையாட
விருந்தா வனத்தே கண்டோ மே

அனுங்க வென்னை பிரிவுசெய்
தாயர் பாடி கவர்ந்துண்ணும்
குணுங்கு நாறி குட்டேற்றை
கோவர தனனை கண்டீரே
கணங்க ளோடு மின்மேகம்
கலந்தாற் போல வனமாலை
மினுங்க நின்று விளையாட
விருந்தா வனத்தே கண்டோ மே

மாலா பிரந்த நம்பியை
மாலே செய்யும் மணாளனை
ஏலா பொய்க ளுரைப்பானை
இங்கே போத கண்டீரே
மேலால் பரந்த வெயில்காப்பான்
வினதை சிறுவன் சிறகென்னும்
மேலா பின்கீழ் வருவானை
விருந்தா வனத்தே கண்டோ மே

கார்த்தண் கமல கண்ணென்னும்
நெடுங்கயி றுபடு திஎன்னை
ஈர்த்து கொண்டு விளையாடும்
ஈசன் றன்னை கண்டீரே
போர்த்த முத்தின் குப்பா
புகர்மால் யானை கன்றேபோல்
வேர்த்து நின்று விளையாட
விருந்தா வனத்தே கண்டோ மே

மாத வன்என் மணியினை
வலையில் பிழைத்த பன்றிபோல்
ஏது மொன்றும் கொளத்தாரா
ஈசன் றன்னை கண்டீரே
பீதக வாடை யுடைதாழ
பெருங்கார் மே கன்றேபோல்
வீதி யார வருவானை
விருந்தா வனத்தே கண்டோ மே

தரும மறியா குறும்பனை
தங்கை சார்ங்க மதுவேபோல்
புருவ வட்ட மழகிய
பொருத்த மிலியை கண்டீரே
உருவு கரிதாய் முகம்செய்தாய்
உத பருப்ப தத்தின்மேல்
விரியும் கதிரே போல்வானை
விருந்தா வனத்தே கண்டோ மே

பொருத்த முடைய நம்பியை
புறம்போ லுள்ளும் கரியானை
கருத்தை பிழைத்து நின்றஅ
கருமா முகிலை கண்டீரே
அருத்தி தாரா கணங்களால்
ஆர பெருகு வானம்போல்
விருத்தம் பெரிதாய் வருவானை
விருந்தா வனத்தே கண்டோ மே

வெளிய சங்கொன் றுடையானை
பீதக வாடை யுடையானை
அளிநன் குடைய திருமாலை
ஆழி யானை கண்டீரே
களிவண் டெங்கும் கலந்தாற்போல்
கழம்பூங் குழல்கள் தடந்தோள்மேல்
மிளிர நின்று விளையாட
விருந்தா வனத்தே கண்டோ மே

நாட்டை படையென்று அயன்முதலா
தந்த நளிர்மா மலருந்தி
வீட்டை பண்ணி விளையாடும்
விமலன் றன்னை கண்டீரே
காட்டை நாடி தேனுகனும்
களிறும் புள்ளு முடன்மடிய
வேட்டை யாடி வருவானை
விருந்தா வனத்தே கண்டோ மே

பருந்தா களிற்று கருள்செய்த
பரமன் றன்னை பாரின்மேல்
விருந்தா வனத்தே கண்டமை
விட்டு சித்தன் கோதைசொல்
மருந்தா மென்று தம்மனத்தே
வைத்து கொண்டு வாழ்வார்கள்
பெருந்தா ளுடைய பிரானடிக்கீழ
பிரியா தென்று மிருப்பாரே
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ
ஸ்ரீமதே ராமாநுஜாய நம
பெருமாள் திருமொழி தனியன்கள்
உடயவர் அருளி செய்தது
நேரிசை வெண்பா
இன்னமுதம் ஊட்டுகேன் இங்கேவா பைங்கிளியே
தென்னரங்கம் பாடவல்ல சீர்ப்பெருமாள் பொன்னஞ்
சிலைசேர் நுதலியர்வேள் சேரலர்கோன் எங்கள்
குலசே கரனென்றே கூறு
மணக்கால் நம்பி அருளியது
கட்டளை கலித்துறை
ஆரம் கெடப்பர னன்பர்கொள் ளாரென்று அவர்களுக்கே
வாரங் கொடுகுட பாம்பில்கை யிட்டவன் மாற்றலரை
வீரங் கெடுத்தசெங் கோல்கொல்லி காவலன் வில்லவர்கோன்
சேரன் குலசே கரன்முடி வேந்தர் சிகாமணியே
குலசேகரப்பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ குலசேகரப்பெருமாள் அருளிச்செய்த பெருமாள் திருமொழி
எண்சீர கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

இருளிரி சுடர்மணிக ளிமைக்கும் நெற்றி
இனத்துத்தி யணிபணமா யிரங்க ளார்ந்த
அரவரச பெருஞ்சோதி யனந்த னென்னும்
அணிவிளங்கு முயர்வெள்ளை யணையை மேவி
திருவரங்க பெருநகருள் தெண்ணீர பொன்னி
திரைக்கையா லடிவருட பள்ளி கொள்ளும்
கருமணியை கோமளத்தை கண்டு கொண்டு என்
கண்ணிணைக ளென்றுகொலோ களிக்கும் நாளே

வாயோரீ ரைஞ்நுறு துதங்க ளார்ந்த
வளையுடம்பி னழல்நாகம் உமிழ்ந்த செந்தீ
வீயாத மலர்ச்சென்னி விதான மேபோல்
மேன்மேலும் மிகவெங்கும் பரந்த தன்கீழ்
காயாம்பூ மலர்ப்பிறங்க லன்ன மாலை
கடியரங்க தரவணையில் பள்ளி கொள்ளும்
மாயோனை மணத்தூணே பற்றி நின்றென்
வாயார என்றுகொலோ வாழ்த்தும் நாளே

எம்மாண்பின் அயன்நான்கு நாவி னாலும்
எடுத்தேத்தி ஈரிரண்டு முகமுங் கொண்டு
எம்மாடு மெழிற்கண்க ளெட்டி னோடும்
தொழுதேத்தி யினிதிறைஞ்ச நின்ற செம்பொன்
அம்மான்றன் மலர்க்கமல கொப்பூழ் தோன்ற
அணியரங்க தரவணையில் பள்ளி கொள்ளும்
அம்மான்ற னடியிணைக்கீ ழலர்க ளிட்டங்
கடியவரோ டென்றுகொலோ அணுகும் நாளே

மாவினைவாய் பிளந்துகந்த மாலை வேலை
வண்ணணைஎன் கண்ணணைவன் குன்ற மேந்தி
ஆவினையன் றுயக்கொண்ட ஆய ரேற்றை
அமரர்கள்த தலைவனைஅ தமிழி னின
பாவினைஅவ் வடமொழியை பற்றற் றார்கள்
பயிலரங்க தரவணையில் பள்ளி கொள்ளும்
கோவினைநா வுறவழுத்தி என்றன் கைகள்
கொய்ம்மலர்தூய் என்றுகொலோ கூப்பும் நாளே

இணையில்லா வின்னிசையாழ் கெழுமி யின்ப
தும்புருவும் நாரதனு மிறைஞ்சி யேத்த
துணியில்லா தொன்மறைநூல் தோத்தி ரத்தால்
தொன்மலர்க்க ணயன்வணங்கி யோவா தேத்த
மணிமாட மாளிகைகள் மல்கு செல்வ
மதிளரங்க தரவணையில் பள்ளி கொள்ளும்
மணிவண்ண னம்மானை கண்டு கொண்டென்
மலர்சென்னி யென்றுகொலோ வணங்கும் நாளே

அளிமலர்மே லயனரனி திரனோடு ஏனை
அமரர்கள்தம் குழுவுமரம் பையரும் மற்றும்
தெளிமதிசேர் முனிவர்கள்தம் குழுவு முந்தி
திசைதிசையில் மலர்தூவி சென்று சேரும்
களிமலர்சேர் பொழிலரங்க துரக மேறி
கண்வளரும் கடல்வண்ணர் கமல கண்ணும்
ஒளிமதிசேர் திருமுகமும் கண்டு கொண்டென்
உள்ளமிக என்றுகொலோ வுருகும் நாளே

மறந்திகழு மனமொழித்து வஞ்ச மாற்றி
ஐம்புலன்க ளடக்கியிடர பார துன்பம்
துறந்துஇருமு பொழுதேத்தி யெல்லை யில்லா
தொன்னெறிக்கண் நிலைநின்ற தொண்டரான
அறம்திகழும் மனத்தவர்தம் கதியை பொன்னி
அணியரங்க தரவணையில் பள்ளி கொள்ளும்
நிறம்திகழும் மாயோனை கண்டென் கண்கள்
நீர்மல்க என்றுகொலோ நிற்கும் நாளே

கோலார்ந்த நெடுஞ்சார்ங்கம் கூனற் சங்கம்
கொலையாழி கொடுந்தண்டு கொற்ற வொள்வாள்
காலார்ந்த கதிக்கருட னென்னும் வென்றி
கடும்பறவை யிவையனைத்தும் புறஞ்சூழ் காப்ப
சேலார்ந்த நெடுங்கழனி சோலை சூழ்ந்த
திருவரங்க தரவணையில் பள்ளி கொள்ளும்
மாலோனை கண்டின்ப கலவி யெய்தி
வல்வினையே னென்றுகொலோ வாழும் நாளே

தூராத மனக்காதல் தொண்டர் தங்கள்
குழாம்குழுமி திருப்புகழ்கள் பலவும் பாடி
ஆராத மனக்களிப்போ டழுத கண்ணீர்
மழைசோர நினைந்துருகி யேத்தி நாளும்
சீரார்ந்த முழுவோசை பரவை காட்டும்
திருவரங்க தரவணையில் பள்ளி கொள்ளும்
போராழி யம்மானை கண்டு துள்ளி
பூதலத்தி லென்றுகொலோ புரளும் நாளே

வன்பெருவா னகமுய்ய அமர ருய்ய
மண்ணுய்ய மண்ணுலகில் மனிச ருய்ய
துன்பமிகு துயரகல அயர்வொன் றில்லா
சுகம்வளர அகமகிழு தொண்டர் வாழ
அன்பொடுதென் திசைநோக்கி பள்ளி கொள்ளும்
அணியரங்கன் திருமுற்றத்து அடியார் தங்கள்
இன்பமிகு பெருங்குழுவு கண்டு யானும்
இசைந்துடனே யென்றுகொலோ விருக்கு நாளே

திடர்விளங்கு கரைப்பொன்னி நடுவு பாட்டு
திருவரங்க தரவணையில் பள்ளி கொள்ளும்
கடல்விளங்கு கருமேனி யம்மான் றன்னை
கண்ணார கண்டுகக்கும் காதல் தன்னால்
குடைவிளங்கு விறல்தானை கொற்ற வொள்வாள்
கூடலர்கோன் கொடைகுலசே கரன்சொற் செய்த
நடைவிளங்கு தமிழ்மாலை பத்தும் வல்லார்
நலந்திகழ்நா ரணனடிக்கீழ் நண்ணு வாரே
சந்த கலி விருத்தம்

தேட்டரும்திறல் தேனினைத்தென்
னரங்கனைத்திரு மாதுவாழ்
வாட்டமில்வன மாலைமார்வனை
வாழ்த்திமால்கொள்சி தையராய்
ஆட்டமேவி யலந்தழைத்தயர்
வெய்தும்மெய்யடி யார்கள்தம்
ஈட்டம்கண்டிட கூடுமேலது
காணும்கண்பய னாவதே

தோடுலாமலர் மங்கைதோளிணை
தேய்ந்ததும்சுடர் வாளியால்
நீடுமாமரம் செற்றதும்நிரை
மேய்த்துமிவை யேநினைந்து
ஆடிப்பாடி அரங்கவோஎன்ற
ழைக்கும்தொண்ட ரடிப்பொடி
ஆடனாம்பெறில் கங்கைநீர்குடை
தாடும்வேட்கையென் னாவதே

ஏறடர்த்ததும் ஏனமாய்நிலம்
கீண்டதும்முன்னி ராமனாய்
மாறடர்த்ததும் மண்ணளந்ததும்
சொல்லிப்பாடிவண் பொன்னிப்பே
ராறுபோல்வரும் கண்ணநீர்கொண்ட
ரங்கன்கோயில் திருமுற்றம்
சேறுசெய்தொண்டர் சேவடிச்செழுஞ்
சேறெஞ்சென்னி கணிவனே

தோய்த்ததண்தயிர் வெண்ணெய்பாலுடன்
உண்டலும்உடன் றாய்ச்சிகண்டு
ஆர்த்ததோளுடை யெம்பிரானென்ன
ரங்கனுக்கடி யார்களாய்
நாத்தழும்பெழ நாரணாவென்ற
ழைத்துமெய்தழும் பத்தொழு
தேத்திஇன்புறும் தொண்டர்சேவடி
ஏத்திவாழ்த்துமென் நெஞ்சமே

பொய்சிலைக்குர லேற்றெருத்தமி
றுத்துபோரர வீர்த்தகோன்
செய்சிலைச்சுடர் சூழொளித்திண்ண
மாமதிள்தென்ன ரங்கனாம்
மெய்சிலைக்கரு மேகமொன்றுதம்
நெஞ்சில்நின்று திகழப்போய்
மெய்சிலிர்ப்பவர் தம்மையேநினை
தென்மனம்மெய்சி லிர்க்குமே

ஆதியந்தம னந்தமற்புதம்
ஆனவானவர் தம்பிரான்
பாதமாமலர் சூடும்பத்தியி
லாதபாவிக ளுய்ந்திட
தீதில்நன்னெரி காட்டியெங்கும்
திரிந்தரங்கனெம் மானுக்கே
காதல்செய்தொண்டர கெப்பிறப்பிலும்
காதல்செய்யுமென் னெஞ்சமே

காரினம்புரை மேனிநல்கதிர்
முத்தவெண்ணகை செய்யவாய்
ஆரமார்வ னரங்கனென்னும்
அரும்பெருஞ்சுட ரொன்றினை
சேரும்நெஞ்சின ராகிச்சேர்ந்துக
சிந்திழிந்தகண் ணீர்களால்
வாரநிற்பவர் தாளிணைக்கொரு
வாரமாகுமென் னெஞ்சமே

மாலையுற்றக டல்கிடந்தவன்
வண்டுகிண்டுந றுந்துழாய்
மாலையுற்றவ ரைப்பெருந்திரு
மார்வனைமலர கண்ணனை
மாலையுற்றெழு தடிப்பாடித்தி
ரிந்தரங்கனெம் மானுக்கே
மாலையுற்றிடும் தொண்டர்வாழ்வுக்கு
மாலையுற்றதென் நெஞ்சமே

மொய்த்துக்கண்பனி சோரமெய்கள்சி
லிர்ப்பஏங்கி யிளைத்துநின்று
எய்த்துக்கும்பிடு நட்டமிட்டெழு
தாடிப்பாடியி றைஞ்சிஎன்
அத்தனச்ச னரங்கனுக்கடி
யார்களாகி அவனுக்கே
பித்தராமவர் பித்தரல்லர்கள்
மற்றையார்முற்றும் பித்தரே

அல்லிமாமலர் மங்கைநாதன்
அரங்கன்மெய்யடி யார்கள்தம்
எல்லையிலடி மைத்திறத்தினில்
என்றுமேவு மனத்தனாம்
கொல்லிகாவலன் கூடல்நாயகன்
கோழிக்கோன்குல சேகரன்
சொல்லினின்தமிழ் மாலைவல்லவர்
தொண்டர்தொண்டர்க ளாவரே
கலி விருத்தம்

மெய்யில் வாழ்க்கையை மெய்யென கொள்ளும்இவ்
வை தன்னொடும் கூடுவ தில்லையான்
ஐய னேஅரங் காஎன்ற ழைக்கின்றேன்
மையல் கொண்டாழி தேனென்றன் மாலுக்கே

நூலி னேரிடை யார்திற தேநிற்கும்
ஞால தன்னொடும் கூடுவ தில்லையான்
ஆலியா அழையா அரங்கா வென்று
மாலெ ழுந்தொழி தேனென்றன் மாலுக்கே

மார னார்வரி வெஞ்சிலை காட்செய்யும்
பாரி னாரொடும் கூடுவ தில்லையான்
ஆர மார்வ னரங்க னனந்தன்நல்
நார ணன்நர காந்தகன் பித்தனே

உண்டி யேயுடை யேயுக தோடும்இம்
மண்ட லத்தொடும் கூடுவ தில்லையான்
அண்ட வாண னரங்கன்வன் பேய்முலை
உண்ட வாயன்ற னுன்மத்தன் காண்மினே

தீதில் நன்னெறி நிற்கஅல் லாதுசெய்
நீதி யாரொடும் கூடுவ தில்லையான்
ஆதி ஆய னரங்கன்அ தாமரை
பேதை மாமண வாளன்றன் பித்தனே

எம்ப ரத்தரல் லாரொடும் கூடலன்
உம்பர் வாழ்வையொன் றாக கருதிலன்
தம்பி ரானம ரர்க்குஅரங் கநகர்
எம்பி ரானுக்கெ ழுமையும் பித்தனே

எத்தி றத்திலும் யாரொடும் கூடும்அ
சித்த தன்னை தவிர்த்தனன் செங்கண்மால்
அத்த னேஅரங் காஎன்ற ழைக்கின்றேன்
பித்த னாயொழி தேனெம்பி ரானுக்கே

பேய ரேயென கியாவரும் யானுமோர்
பேய னேயெவர கும்இது பேசியென்
ஆய னேஅரங் காஎன்ற ழைக்கின்றேன்
பேய னாயொழி தேனெம்பி ரானுக்கே

அங்கை யாழி யரங்க னடியிணை
தங்கு சிந்தை தனிப்பெரும் பித்தனாய்
கொங்கர் கோன்குல சேகரன் சொன்னசொல்
இங்கு வல்லவர கேதமொன் றில்லையே
தாவு கொச்ச கலிப்பா

ஊனேறு செல்வ துடற்பிறவி யான்வேண்டேன்
ஆனேறேழ் வென்றா னடிமை திறமல்லால்
கூனேறு சங்க மிடத்தான்தன் வேங்கடத்து
கோனேரி வாழும் குருகா பிறப்பேனே

ஆனாத செல்வ தரம்பையர்கள் தற்குழ
வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்
தேனார்பூஞ் சோலை திருவேங்க டச்சுனையில்
மீனா பிறக்கும் விதியுடையே னாவேனே

பின்னிட்ட சடையானும் பிரமனு மந்திரனும்
துன்னிட்டு புகலரிய வைகுந்த நீள்வாசல்
மின்வட்ட சுடராழி வேங்கடக்கோன் தானுமிழும்
பொன்வட்டில் பிடித்துடனே புகப்பெறுவே னாவேனே

ஒண்பவள வேலை யுலவுதண் பாற்கடலுள்
கண்துயிலும் மாயோன் கழலிணைகள் காண்பதற்கு
பண்பகரும் வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்து
செண்பகமாய் நிற்கும் திருவுடையே னாவேனே

கம்பமத யானை கழுத்தகத்தின் மேலிருந்து
இன்பமரும் செல்வமு மிவ்வரசும் யான்வேண்டேன்
எம்பெருமா னீச னெழில்வேங் கடமலைமேல்
தம்பகமாய் நிற்கும் தவமுடையே னாவேனே

மின்னனைய நுண்ணிடையா ருருப்பசியும் மேனகையும்
அன்னவர்தம் பாடலொடு மாடலவை யாதரியேன்
தென்னவென வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்துள்
அன்னனைய பொற்குடவா மருந்தவத்த னானவனே

வானாளும் மாமதிபோல் வெண்குடைக்கீழ் மன்னவர்தம்
கோனாகி வீற்றிருந்து கொண்டாடும் செல்வறியேன்
தேனார்பூஞ் சோலை திருவேங் கடமலைமேல்
கானாறா பாயும் கருத்துடையே னாவேனே

பிறையேறு சடையானும் பிரமனு மிந்திரனும்
முறையாய பெருவேள்வி குறைமுடிப்பான் மறையானான்
வெறியார்தண் சோலை திருவேங் கடமலைமேல்
நெறியா கிடக்கும் நிலையுடையே னாவேனே

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின்கோயி லின்வாசல்
அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்
படியா கிடந்துன் பவளவாய் காண்பேனே

உம்ப ருலகாண் டொருகுடைக்கீழ் உருப்பசிதன்
அம்பொற் கலையல்குல் பெற்றாலு மாதரியேன்
செம்பவள வாயான் திருவேங் கடமென்னும்
எம்பெருமான் பொன்மலைமே லேதேனு மாவேனே

மன்னியதண் சாரல் வடவேங் கடத்தான்றன்
பொன்னியலும் சேவடிகள் காண்பான் புரிந்திறைஞ்சி
கொன்னவிலும் கூர்வேல் குலசே கரஞ்சொன்ன
பன்னியநூல் தமிழ்வல்லார் பாங்காய பத்தர்களே
தரவு கொச்ச கலிப்பா

தருதுயரம் தடாயேலுன் சரணல்லால் சரணில்லை
விரைகுழுவு மலர்ப்பொழில்சூழ் விற்றுவக்கோ டம்மானே
அரிசினத்தா லீன்றதாய் அகற்றிடினும் மற்றவள்தன்
அருள்நினைந்தே யழும்குழவி அதுவேபோன் றிருந்தேனே

கண்டா ரிகழ்வனவே காதலன்றான் செய்திடினும்
கொண்டானை யல்லா லறியா குலமகள்போல்
விண்டோ ய் மதிள்புடைசூழ் விற்றுவக்கோ டம்மாநீ
கொண்டாளா யாகிலுமுன் குரைகழலே கூறுவனே

மீன்நோக்கும் நீள்வயல்சூழ் விற்றுவக்கோ டம்மாஎன்
பால்நோக்கா யாகிலுமுன் பற்றல்லால் பற்றில்லேன்
தான்நோக்கா தெத்துயரம் செய்திடினும் தார்வேந்தன்
கோல்நோக்கி வாழும் குடிபோன்றி ருந்தேனே

வாளா லறுத்து சுடினும் மருத்துவன்பால்
மாளாத காதல்நோ யாளன்போல் மாயத்தால்
மீளா துயர்தரினும் விற்றுவக்கோ டம்மாநீ
ஆளா வுனதருளே பார்ப்ப னடியேனே

வெங்கண்திண் களிறடர்த்தாய் விற்றுவக்கோ டம்மானே
எங்குப்போ யுய்கேனுன் னிணையடியே யடையலல்லால்
எங்கும்போ கரைகாணா தெறிகடல்வாய் மீண்டேயும்
வங்கத்தின் கூம்பேறும் மாப்பறவை போன்றேனே

செந்தழலே வந்தழலை செய்திடினும் செங்கமலம்
அந்தரஞ்சேர் வெங்கதிரோற் கல்லா லலராவால்
வெந்துயர்வீ டாவிடினும் விற்றுவக்கோ டம்மாஉன்
அந்தமில்சீர கல்லா லகங்குழைய மாட்டேனே

எத்தனையும் வான்மறந்த காலத்தும் பைங்கூழ்கள்
மைத்தெழுந்த மாமுகிலே பார்த்திருக்கும் மற்றவைப்போல்
மெய்த்துயர்வீ டாவிடினும் விற்றுவக்கோ டம்மாஎன்
சித்தம்மிக வுன்போலே வைப்ப னடியேனே

தொக்கிலங்கி யாறெல்லாம் பரந்தோடி தொடுகடலே
புக்கன்றி புறம்நிற்க மாட்டாத மற்றவைபோல்
மிக்கிலங்கு முகில்நிறத்தாய் விற்றுவக்கோ டம்மாஉன்
புக்கிலங்கு சீரல்லால் புக்கிலன்காண் புண்ணியனே

நின்னையே தான்வேண்டி நீள்செல்வம் வேண்டாதான்
தன்னையே தான்வேண்டும் செல்வம்போல் மாயத்தால்
மின்னையே சேர்திகிரி விற்றுவக்கோ டம்மானே
நின்னையே தான்வேண்டி நிற்ப னடியேனே

விற்றுவக்கோ டம்மாநீ வேண்டாயே யாயிடினும்
மற்றாரும் பற்றில்லே னென்றுஅவனை தாள்நயந்த
கொற்றவேல் தானை குலசே கரஞ்சொன்ன
நற்றமிழ்ப தும்வல்லார் நண்ணார் நரகமே
அறுசீர கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

ஏர்மலர பூங்குழ லாயர்மாதர்
எனைப்பல் ருள்ளவிவ் வூரில்உன்றன்
மார்வு தழுவுதற் காசையின்மை
அறிந்தறி தேயுன்றன் பொய்யைக்கேட்டு
கூர்மழை போல்பனி கூதலெய்தி
கூசி நடுங்கி யமுனையாற்றில்
வார்மணற் குன்றில் புலரநின்றேன்
வாசுதே வாஉன் வரவுபார்த்தே

கொண்டையொண் கண்மட வாளொருத்தி
கீழை யகத்து தயிர்கடை
கண்டுஒல்லை நானும் கடைவனென்று
கள்ள விழிவிழி துப்புக்கு
வண்டமர் பூங்குழல் தாழ்ந்துலாவ
வாண்முகம் வேர்ப்பச்செவ் வாய்த்துடிப்ப
தண்டயிர் நீகடை திட்டவண்ணம்
தாமோத ராமெய் யறிவன்நானே

கருமலர கூந்த லொருத்திதன்னை
கடைக்கணித்து ஆங்கே யொருத்திதன்பால்
மருவி மனம்வைத்து மற்றொருத்தி
குரைத்தொரு பேதைக்கு பொய்குறித்து
புரிகுழல் மங்கை யொருத்திதன்னை
புணர்தி யவளுக்கும் மெய்யனல்லை
மருதிறு தாய்உன் வளர்த்தியூடே
வளர்கின்ற தாலுன்றன் மாயைதானே

தாய்முலை பாலி லமுதிருக்க
தவழ்ந்து தளர்நடை யிட்டுச்சென்று
பேய்முலை வாய்வைத்து நஞ்சையுண்டு
பித்தனென் றேபிற ரேசநின்றாய்
ஆய்மிகு காதலோடு யானிருப்ப
யான்விட வந்தவென் தூதியோடே
நீமிகு போகத்தை நன்குகந்தாய்
அதுவுமுன் கோரம்பு கேற்குமன்றே

மின்னொத்த நுண்ணிடை யாளைக்கொண்டு
வீங்கிருள் வாயென்றன் வீதியூடே
பொன்னொத்த வாடைகு கூடலிட்டு
போகின்ற போதுநான் கண்டுநின்றேன்
கண்ணுற் றவளைநீ கண்ணாலிட்டு
கைவிளி கின்றதும் கண்டேநின்றேன்
என்னு கவளைவி டிங்குவந்தாய்
இன்னமங் கேநட நம்பிநீயே

மற்பொரு தோளுடை வாசுதேவா
வல்வினை யேன்துயில் கொண்டவாறே
இற்றை யிரவிடை யேமத்தென்னை
இன்னணை மேலிட்ட கன்றுநீபோய்
அற்றை யிரவுமோர் பிற்றைநாளும்
அரிவைய ரோடும் அணைந்துவந்தாய்
எற்றுக்கு நீயென் மருங்கில்வந்தாய்
எம்பெரு மான்நீ யெழுந்தருளே

பையர வின்னணை பள்ளியினாய்
பண்டையோ மல்லோம்நாம் நீயுகக்கும்
மையரி யொண்கண்ணி னாருமல்லோம்
வைகியெம் சேரி வரவோழிநீ
செய்ய வுடையும் திருமுகமும்
செங்கனி வாயும் குழலும்கண்டு
பொய்யொரு நாள்பட்ட தேயமையும்
புள்ளுவம் பேசாதே போகுநம்பீ

என்னை வருக வெனக்குறித்தி
டினமலர் முல்லையின் பந்தர்நீழல்
மன்னி யவளை புணரப்புக்கு
மற்றென்னை கண்டுழ றாநெகிழ்ந்தாய்
பொன்னிற வாடையை கையில்தாங்கி
பொய்யச்சங் காட்டிநீ போதியேலும்
இன்னமென் கையக தீங்கொருநாள்
வருதியே லெஞ்சினம் தீர்வன்நானே

மங்கல நல்வன மாலைமார்வில்
இலங்க மயில்தழை பீலிசூடி
பொங்கிள வாடை யரையில்சாத்தி
பூங்கொத்து காதிற் புணரப்பெய்து
கொங்கு நறுங்குழ லார்களோடு
குழைந்து குழலினி தூதிவந்தாய்
எங்களு கேயொரு நாள்வந்தூத
உன்குழ லின்னிசை போதராதே

அல்லி மலர்த்திரு மங்கைகேள்வன்
றன்னை நயந்திள வாய்ச்சிமார்கள்
எல்லி பொழுதினி லேமத்தூடி
எள்கி யுரைத்த வுரையதனை
கொல்லி நகர்க்கிறை கூடற்கோமான்
குலசே கரனின் னிசையில்மேவி
சொல்லிய இன்தமிழ் மாலைபத்தும்
சொல்லவல் லார்க்கில்லை துன்பந்தானே
எண்சீர கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

ஆலை நீள்கரும் பன்னவன் தாலோ
அம்பு யுத்தடங் கண்ணினன் தாலோ
வேலை நீர்நிற தன்னவன் தாலோ
வேழ போதக மன்னவன் தாலோ
ஏல வார்குழ லென்மகன் தாலோ
என்றென் றுன்னைஎன் வாயிடை நிறைய
தாலொ லித்திடும் திருவினை யில்லா
தாய ரில்கடை யாயின தாயே

வடிக்கொ ளஞ்சன மெழுதுசெம் மலர்க்கண்
மருவி மேலினி தொன்றினை நோக்கி
முடக்கி சேவடி மலர்ச்சிறு கருந்தாள்
பொலியு நீர்முகில் குழவியே போல
அடக்கி யாரச்செஞ் சிறுவிர லனைத்தும்
அங்கை யோடணை தானையிற் கிடந்த
கிடக்கை கண்டிட பெற்றில னந்தோ
கேச வாகெடு வேன்கெடு வேனே

முந்தை நன்முறை யுன்புடை மகளிர்
முறைமு றைந்தம் குறங்கிடை யிருத்தி
எந்தை யேஎன்றன் குலப்பெருஞ் சுடரே
எழுமு கில்கண தெழில்கவ ரேறே
உந்தை யாவன்என் றுரைப்பநின் செங்கேழ்
விரலி னும்கடை கண்ணினும் காட்ட
நந்தன் பெற்றனன் நல்வினை யில்லா
நங்கள் கோன்வசு தேவன்பெற் றிலனே

களிநி லாவெழில் மதிபுரை முகமும்
கண்ண னேதிண்கை மார்வும்திண் டோ ளும்
தளிம லர்க்கருங் குழல்பிறை யதுவும்
தடங்கொள் தாமரை கண்களும் பொலிந்த
இளமை யின்பத்தை யின்றென்றன் கண்ணால்
பருகு வேற்கிவள் தாயென நினைந்த
அளவில் பிள்ளைமை யின்பத்தை யிழந்த
பாவி யேனென தாவிநில் லாதே

மருவு நின்திரு நெற்றியில் சுட்டி
அசைத ரமணி வாயிடை முத்தம்
தருத லும்உன்றன் தாதையை போலும்
வடிவு கண்டுகொண் டுள்ளமுள் குளிர
விரலை செஞ்சிறு வாயிடை சேர்த்து
வெகுளி யாய்நின்று ரைக்கும்மவ் வுரையும்
திருவி லேனொன்றும் பெற்றிலேன் எல்லாம்
தெய்வ நங்கை யசோதைபெற் றாளே

தண்ண தாமரை கண்ணனே கண்ணா
தவழ்ந்தெ ழுந்து தளர்ந்ததோர் நடையால்
மண்ணில் செம்பொடி யாடிவ தென்றன்
மார்வில் மன்னிட பெற்றிலே னந்தோ
வண்ண செஞ்சிறு கைவிர லனைத்தும்
வாரி வாய்க்கொண்ட அடிசிலின் மிச்சல்
உண்ண பெற்றிலேன் ஓகொடு வினையேன்
என்னை எஞ்செ பெற்றதெம் மோயே

குழக னேஎன்றன் கோமள பிள்ளாய்
கோவி தாஎன் குடங்கையில் மன்னி
ஒழுகு பேரெழி லிளஞ்சிறு தளிர்போல்
ஒருகை யாலொரு முலைமுகம் நெருடா
மழலை மென்னகை யிடையிடை யருளா
வாயி லேமுலை யிருக்கவென் முகத்தே
எழில்கொள் நின்திரு கண்ணிணை நோக்க
தன்னை யுமிழ தேனிழ தேனே

முழுதும் வெண்ணெ யளைந்துதொ டுண்ணும்
முகிழி ளஞ்சிறு தாமரை கையும்
எழில்கொள் தாம்புகொண் டடிப்பதற் கெள்கும்
நிலையும் வெண்தயிர் தோய்ந்தசெவ் வாயும்
அழுகை யுமஞ்சி நோக்கு நோக்கும்
அணிகொள் செஞ்சிறு வாய்நெளி பதுவும்
தொழுகை யுமிவை கண்ட அசோதை
தொல்லை யின்ப திறுதிகண் டாளே

குன்றி னால்குடை கவித்ததும் கோல
குரவை கோத்த தும்குட மாட்டும்
கன்றி னால்விள வெறிந்ததும் காலால்
காளி யன்தலை மிதித்தது முதலா
வென்றி சேர்பிள்ளை நல்விளை யாட்டம்
அனைத்தி லுமங்கென் னுள்ளமுள் குளிர
ஒன்றும் கண்டிட பெற்றிலே னடியேன்
காணு மாறினி யுண்டெனி லருளே

வஞ்ச மேவிய நெஞ்சுடை பேய்ச்சி
வரண்டு நார்நரம் பெழக்கரி துக்க
நஞ்ச மார்தரு சுழிமுலை யந்தோ
சுவைத்து நீயருள் செய்து வளர்ந்தாய்
கஞ்சன் நாள்கவர் கருமுகி லெந்தாய்
கடைப்ப டேன்வெறி தேமுலை சுமந்து
தஞ்ச மேலொன்றி லேனுய்ந்தி ருந்தேன்
தக்க தேநல்ல தாயைப்பெற் றாயே

மல்லை மாநகர கிறையவன் றன்னை
வாஞ்செ லுத்திவ தீங்கணை மாயத்து
எல்லை யில்பிள்ளை செய்வன காணா
தெய்வ தேவகி புலம்பிய புலம்பல்
கொல்லி காவலன் மாலடி முடிமேல்
கோல மாம்குல சேகரன் சொன்ன
நல்லி சைத்தமிழ் மாலைவல் லார்கள்
நண்ணு வாரொல்லை நாரண னுலகே
தரவு கொச்ச கலிப்பா

மன்னுபுகழ் கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவனே
தென்னிலங்கை கோன்முடிகள் சிந்துவித்தாய் செம்பொஞ்சேர்
கன்னிநன்மா மதிள்புடைசூழ் கணபுரத்தென் கருமணியே
என்னுடைய இன்னமுதே இராகவனே தாலேலோ

புண்டரிக மலரதன்மேல் புவனியெல்லாம் படைத்தவனே
திண்டிறலாள் தாடகைதன் உரமுருவ சிலைவளைத்தய்
கண்டவர்தம் மனம்வழங்கும் கணபுரத்தென் கருமணியே
எண்டிசையு மாளுடையாய் இராகவனே தாலேலோ

கொங்குமலி கருங்குழலாள் கோசலைதன் குலமதலாய்
தங்குபெரும் புகழ்ச்சனகன் திருமருகா தாசரதீ
கங்கையிலும் தீர்த்தமலி கணபுரத்தென் கருமணியே
எங்கள்குல தின்னமுதே இராகவனே தாலேலோ

தாமரைமே லயனவனை படைத்தவனே தசரதன்றன்
மாமதலாய் மைதிலிதன் மணவாளா வண்டினங்கள்
காமரங்க ளிசைபாடும் கணபுரத்தென் கருமணியே
ஏமருவும் சிலைவலவா இராகவனே தாலேலோ

பாராளும் படர்செல்வம் பரதநம்பி கேயருளி
ஆராவன் பிளையவனோ டருங்கான மடைந்தவனே
சீராளும் வரைமார்பா திருக்கண்ண புரத்தரசே
தாராளும் நீண்முடியென் தாசரதீ தாலேலோ

சுற்றமெல்லாம் பின்தொடர தொல்கான மடைந்தவனே
அற்றவர்க கருமருந்தே அயோத்திநகர கதிபதியே
கற்றவர்கள் தாம்வாழும் கணபுரத்தென் கருமணியே
சிற்றவைதன் சொல்கொண்ட சீராமா தாலேலோ

ஆலினிலை பாலகனா யன்றுலக முண்டவனே
வாலியைகொன் றரசிளைய வானரத்து களித்தவனே
காலின்மணி கரையலைக்கும் கணபுரத்தென் கருமணியே
ஆலிநகர கதிபதியே அயோத்திமனே தாலேலோ

மலையதனா லணைகட்டி மதிளிலங்கை யழித்தவனே
அலைகடலை கடைந்தமரர கமுதருளி செய்தவனே
கலைவலவர் தாம்வாழும் கணபுரத்தென் கருமணியே
சிலைவலவா சேவகனே சீராம தாலேலோ

தளையவிழும் நறுங்குஞ்சி தயரதன்றன் குலமதலாய்
வளையவொரு சிலையதனால் மதிளிலங்கை யழித்தவனே
களைகழுநீர் மருங்கலரும் கணபுரத்தென் கருமணியே
இளையவர்க கருளுடையாய் இராகவனே தாலேலோ

தேவரையு மசுரரையும் திசைகளையும் படைத்தவனே
யாவரும்வ தடிவணங்க அரங்கநகர துயின்றவனே
காவிரிநல் நதிபாயும் கணபுரத்தென் கருமணியே
ஏவரிவெஞ் சிலைவலவா இராகவனே தாலேலோ

கன்னிநன்மா மதிள்புடைசூழ் கணபுரத்தென் காகுத்தன்
தன்னடிமேல் தாலேலோ என்றுரைத்த தமிழ்மாலை
கொல்நவிலும் வேல்வலவன் குடைக்குலசே கரஞ்சொன்ன
பன்னியநூல் பத்தும்வல்லார் பாங்காய பத்தர்களே
அறுசீர கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

வன்தாளி னிணைவணங்கி வளநகரம்
தொழுதேத்த மன்ன னாவான்
நின்றாயை அரியணைமே லிருந்தாயை
நெடுங்கானம் படர போகு
என்றாள்எம் இராமாவோ உனைப்பயந்த
கைகேசி தஞ்சொற் கேட்டு
நன்றாக நானிலத்தை யாள்வித்தேன்
நன்மகனே உன்னை நானே

வெவ்வாயேன் வெவ்வுரைகே டிருநிலத்தை
வேண்டாதே விரைந்து வென்றி
மைவாய களிறொழிந்து தேரொழிந்து
மாவொழிந்து வனமே மேவி
நெய்வாய வேல்நெடுங்கண் நேரிழையும்
இளங்கோவும் பின்பு போக
எவ்வாறு நடந்தனையெம் இரமாவோ
எம்பெருமான் எஞ்செய் கேனே

கொல்லணைவேல் வரிநெடுங்கண் கோசலைதன்
குலமதலாய் குனிவில் லேந்தும்
மல்லணைந்த வரைத்தோளா வல்வினையேன்
மனமுருக்கும் வகையே கற்றாய்
மெல்லணைமேல் முன்துயின்றாய் இன்றினிப்போய்
வியன்கான மரத்தின் நீழல்
கல்லணைமேல் கண்டுயில கற்றனையோ
காகுத்தா கரிய கோவே

வாபோகு வாஇன்னம் வந்தொருகால்
கண்டுபோ மலராள் கூந்தல்
வேய்போலு மெழில்தோளி தன்பொருட்டா
விடையோன்றன் வில்லை செற்றாய்
மாபோகு நெடுங்கானம் வல்வினையேன்
மனமுருக்கும் மகனே இன்று
நீபோக என்னெஞ்ச மிருபிளவா
போகாதே நிற்கு மாறே

பொருந்தார்கை வேல்நுதிபோல் பரல்பாய
மெல்லடிகள் குருதி சோர
விரும்பாத கான்விரும்பி வெயிலுறைப்ப
வெம்பசிநோய் கூர இன்று
பெரும்பாவி யேன்மகனே போகின்றாய்
கேகயர்கோன் மகளா பெற்ற
அரும்பாவி சொற்கேட்ட அருவினையேன்
எஞ்செய்கேன் அந்தோ யானே

அம்மாவென் றுகந்தழைக்கு மார்வச்சொல்
கேளாதே அணிசேர் மார்வம்
என்மார்வ திடையழுந தழுவாதே
முழுசாதே மோவா துச்சி
கைம்மாவின் நடையன்ன மென்னடையும்
கமலம்போல் முகமும் காணாது
எம்மானை யென்மகனை யிழந்திட்ட
இழிதகையே னிருக்கின் றேனே

பூமருவு நறுங்குஞ்சி புஞ்சடையா
புனைந்துபூ துகில்சே ரல்குல்
காமரெழில் விழலுடுத்து கலனணியா
தங்கங்க ளழகு மாறி
ஏமருதோ ளென்புதல்வன் யானின்று
செலத்தக்க வனந்தான் சேர்தல்
தூமறையீர் இதுதகவோ சுமந்திரனே
விசிட்டனே சொல்லீர் நீரே

பொன்பெற்றா ரெழில்வேத புதல்வனையும்
தம்பியையும் பூவை போலும்
மின்பற்றா நுண்மருங்குல் மெல்லியலென்
மருகிகையும் வனத்தில் போக்கி
நின்பற்றா நின்மகன்மேல் பழிவிளைத்தி
டென்னையும்நீள் வானில் போக்க
என்பெற்றாய் கைகேசீ இருநிலத்தில்
இனிதாக விருக்கின் றாயே

முன்னொருநாள் மழுவாளி சிலைவாங்கி
அவன்தவத்தை முற்றும் செற்றாய்
உன்னையுமுன் னருமையையு முன்மோயின்
வருத்தமுமொன் றா கொள்ளாது
என்னையும்என் மெய்யுரையும் மெய்யா
கொண்டுவனம் புக்க எந்தாய்
நின்னையே மகனாக பெறப்பெறுவேன்
ஏழ்பிறப்பும் நெடுந்தோள் வேந்தே

தேன்நகுமா மலர்க்கூந்தல் கௌசலையும்
சுமித்திரையும் சிந்தை நோவ
கூனுருவில் கொடுந்தொழுத்தை சொற்கேட்ட
கொடியவள்தன் சொற்கொண்டு இன்று
கானகமே மிகவிரும்பி நீதுறந்த
வளநகரை துறந்து நானும்
வானகமே மிகவிரும்பி போகின்றேன்
மனுகுலத்தார் தங்கள் கோவே

ஏரார்ந்த கருநெடுமால் இராமனாய்
வனம்புக்க அதனு காற்றா
தாரர்ந்த தடவரைத்தோள் தயரதன்றான்
புலம்பியஅ புலம்பல் தன்னை
கூரார்ந்த வேல்வலவன் கோழியர்கோன்
குடைக்குலசே கரஞ்சொற் செய்த
சீரார்ந்த தமிழ்மாலை யிவைவல்லார்
தீநெறிக்கண் செல்லார் தாமே
எண்சீர கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

அங்கணெடு மதிள்புடைசூ ழயோத்தி யென்னும்
அணிநகர துலகனைத்தும் விளக்கும் சோதி
வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்கா தோன்றி
விண்முழுது முயக்கொண்ட வீரன் றன்னை
செங்கணெடுங் கருமுகிலை யிராமன் றன்னை
தில்லைநகர திருச்சித்ர கூட தன்னுள்
எங்கள்தனி முதல்வனையெம் பெருமான் றன்னை
என்றுகொலோ கண்குளிர காணு நாளே

வந்தெதிர்ந்த தாடகைதன் உரத்தை கீறி
வருகுருதி பொழிதரவன் கணையொன் றேவி
மந்திரங்கொள் மறைமுனிவன் வேள்வி காத்து
வல்லரக்க ருயிருண்ட மைந்தன் காண்மின்
செந்தளிர்வாய் மலர்நகைசேர் செழுந்தண் சோலை
தில்லைநகர திருச்சித்ர கூட தன்னுள்
அந்தணர்க ளொருமூவா யிரவ ரேத்த
அணிமணியா சனத்திருந்த வம்மான் றானே

செல்வரிநற் கருநெடுங்கண் சீதை காகி
சினவிடையோன் சிலையிறுத்து மழுவா ளேந்தி
வெவ்வரிநற் சிலைவாங்கி வென்றி கொண்டு
வேல்வேந்தர் பகைதடிந்த வீரன் றன்னை
தெவ்வரஞ்ச நெடும்புரிசை யுயர்ந்த பாங்கர
தில்லைநகர திருச்சித்ர கூட தன்னுள்
எவ்வரிவெஞ் சிலைத்தடக்கை யிராமன் றன்னை
இறைஞ்சுவா ரிணையடியே யிறைஞ்சி னேனே

தொத்தலர்பூஞ் சுரிகுழல்கை கேசி சொல்லால்
தென்னகர துரந்துதுறை கங்கை தன்னை
பத்தியுடை குகன்கடத்த வனம்போ புக்கு
பரதனுக்கு பாதுகமு மரசு மீந்து
சித்திரகூ டத்திருந்தான் றன்னை யின்று
தில்லைநகர திருச்சித்ர கூட தன்னுள்
எத்தனையும் கண்குளிர காண பெற்ற
இருநிலத்தார கிமையவர்நே ரொவ்வார் தாமே

வலிவணக்கு வரைநெடுந்தோள் விராதை கொன்று
வண்டமிழ்மா முனிகொடுத்த வரிவில் வாங்கி
கலைவணக்கு நோக்கரக்கி மூக்கை நீக்கி
கரனோடு தூடணன்ற னுயிரை வாங்கி
சிலைவணக்கி மான்மரிய வெய்தான் றன்னை
தில்லைநகர திருச்சித்ர கூட தன்னுள்
தலைவணக்கி கைகூப்பி யேத்த வல்லார்
திரிதலால் தவமுடைத்தி தரணி தானே

தனமருவு வைதேகி பிரிய லுற்று
தளர்வெய்தி சடாயுவைவை குந தேற்றி
வனமருவு கவியரசன் காதல் கொண்டு
வாலியைகொன் றிலங்கைநக ரரக்கர் கோமான்
சினமடங்க மாருதியால் சுடுவி தானை
தில்லைநகர திருச்சித்ர கூட தன்னுள்
இனிதமர்ந்த அம்மானை இராமன் றன்னை
ஏத்துவா ரிணையடியே யேத்தி னெனெ

குரைகடலை யடலம்பால் மறுக வெய்து
குலைகட்டி மறுகரையை யதனா லேரி
எரிநெடுவே லரக்கரொடு மிலங்கை வேந்தன்
இன்னுயிர்கொண் டவன்தம்பி கரசு மீந்து
திருமகளோ டினிதமர்ந்த செல்வன் றன்னை
தில்லைநகர திருச்சித்ர கூட தன்னுள்
அரசமர்ந்தா னடிசூடு மரசை யல்லால்
அரசாக வெண்ணேன்மற் றரசு தானே

அம்பொனெடு மணிமாட அயோத்தி யெய்தி
அரசெய்தி அகத்தியன்வா தான்முன் கொன்றான்
றன்பெருந்தொல் கதைக்கேட்டு மிதிலை செல்வி
உலகு திருவயிறு வாய்த்த மக்கள்
செம்பவள திரள்வாய்த்தன் சரிதை கேட்டான்
தில்லைநகர திருச்சித்ர கூட தன்னுள்
எம்பெருமான் றஞ்சரிதை செவியால் கண்ணால்
பருகுவோ மின்னமுதை மதியோ மின்றே

செறிதவச்சம் புகன்றன்னை சென்று கொன்று
செழுமறையோ னுயிர்மீட்டு தவத்தோ னீந்த
நிறைமணிப்பூ ணணியுங்கொண் டிலவணன் றன்னை
தம்பியால் வானேற்றி முனிவன் வேண்ட
திறல்விளங்கு மிலக்குமனை பிரிந்தான் றன்னை
தில்லைநகர திருச்சித்ர கூட தன்னுள்
உறைவானை மறவாத வுள்ள தன்னை
உடையோம்மற் றுறுதுயர மடையோ மின்றே

அன்றுசரா சரங்களைவை குந தேற்றி
அடலரவ பகையேறி யசுரர் தம்மை
வென்றுஇலங்கு மணிநெடுந்தோள் நான்கும் தோன்ற
விண்முழுது மெதிர்வரத்தன் தாமம் மேவி
சென்றினிது வீற்றிருந்த வம்மான் றன்னை
தில்லைநகர திருச்சித்ர கூட தன்னுள்
என்றும்நின்றா னவனிவனென் றேத்தி நாளும்
இன்றைஞ்சுமினோ வெப்பொழுதும் தொண்டீர் நீரே

தில்லைநகர திருச்சித்ர கூட தன்னுள்
திறல்விளங்கு மாருதியோ டமர்ந்தான் றன்னை
எல்லையில்சீர தயரதன்றன் மகனா தோன்றிற்
றதுமுதலா தன்னுலகம் புக்க தீறா
கொல்லியலும் படைத்தானை கொற்ற வொள்வாள்
கோழியர்கோன் குடைக்குலசே கரஞ்சொற் செய்த
நல்லியலின் தமிழ்மாலை பத்தும் வல்லார்
நலந்திகழ்நா ரணனடிக்கீழ் நண்ணு வாரே
குலசேகர பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ
ஸ்ரீமதே ராமானுஜாய நம
திருச்சந்த விரு தனியந்கள்
திருக்கச்சி நம்பிகள் அருளிச்செய்தவை
தரவு கொச்ச கலிப்பா
தருச்சந்த பொழில்தழுவு தாரணியின் துயர்தீர
திருச்சந்த விருத்தம்செய் திருமழிசை பரன்வருமூர்
கருச்சந்தும் காரகிலும் கமழ்கோங்கும் மணநாறும்
திருச்சந துடன்மருவு திருமழிசை வளம்பதியே
இருவிகற்ப நேரிசை வெண்பா
உலகும் மழிசையு முள்ளுணர்ந்து தம்மில்
புலவர் புகழ்க்கோலால் தூக்க உலகுதன்னை
வைத்தெடுத்த பக்கத்தும் மாநீர் மழிசையே
வைத்தெடுத்த பக்கம் வலிது
திருமழிசைப்பிரான் அருளிச்செய்த திருச்சந்த விருத்தம்
சந்த கலி விருத்தம்

பூநிலாய வைந்துமா
புனற்கண்நின்ற நான்குமாய்
தீநிலாய மூன்றுமா
சிறந்தகா லிரண்டுமாய்
மீநிலாய தொன்றுமாகி
வேறுவேறு தன்மையாய்
நீநிலாய வண்ணநின்னை
யார்நினைக்க வல்லரே

ஆறுமாறு மாறுமாயொ
ரைந்துமைந்து மைந்துமாய்
ஏறுசீரி ரண்டுமூன்று
மேழுமாறு மெட்டுமாய்
வேறுவேறு ஞானமாகி
மெய்யினொடு பொய்யுமாய்
ஊறொடோ சை யாயவைந்து
மாய ஆய மாயனே

ஐந்துமைந்து மைந்துமாகி
யல்லவற்று ளாயுமாய்
ஐந்துமூன்று மொன்றுமாகி
நின்றவாதி தேவனே
ஐந்துமைந்து மைந்துமாகி
யந்தரத்த ணைந்துநின்று
ஐந்துமைந்து மாயநின்னை
யாவர்காண வல்லரே

மூன்றுமுப்ப தாறினோடொ
ரைந்துமைந்து மைந்துமாய்
மூன்றுமூர்த்தி யாகிமூன்று
மூன்றுமூன்று மூன்றுமாய
தோன்றுசோதி மூன்றுமா
துளக்கமில் விளக்கமாய்
ஏன்றெனாவி யுள்புகுந்த
தென்கொலோவெம் மீசனே

நின்றியங்கு மொன்றலாவு
ருக்கடோ றும் ஆவியாய்
ஒன்றியுள்க லந்துநின்ற
நின்னதன்மை யின்னதென்று
என்றும்யார்க்கு மெண்ணிறந்த
ஆதியாய்நின் னுந்திவாய்
அன்றுநான்மு கற்பயந்த
வாதிதேவ னல்லையே

நாகமேந்து மேருவெற்பை
நாகமேந்து மண்ணினை
நாகமேந்து மாகமாக
மாகமேந்து வார்புனல்
மாகமேந்து மங்குல்தீயொர்
வாயுவை தமைந்துகாத்து
ஏகமேந்தி நின்றநீர்மை
நின்கணேயி யன்றதெ

ஒன்றிரண்டு மூர்த்தியா
யுறக்கமோடு ணர்ச்சியாய்
ஒன்றிரண்டு காலமாகி
வேலைஞால மாயினாய்
ஒன்றிரண்டு தீயுமாகி
யாயனாய மாயனே
ஒன்றிரண்டு கண்ணினுனு
முன்னையேத்த வல்லனே

ஆதியான வானவர்க்கு
மண்டமாய வப்புறத்து
ஆதியான வானவர்க்கு
மாதியான வாதிநீ
ஆதியான வானவாண
ரந்தகாலம் நீயுரைத்தி
ஆதியான காலநின்னை
யாவர்காண வல்லரே

தாதுலாவு கொன்றைமாலை
துன்னுசெஞ்ச டைச்சிவன்
நீதியால்வ ணங்குபாத
நின்மலாநி லாயசீர்
வேதவாணர் கீதவேள்வி
நீதியான வேள்வியார்
நீதியால் வணங்குகின்ற
நீர்மைநின்கண் நின்றதே

தன்னுளேதி ரைத்தெழும்
தரங்கவெண்த டங்கடல்
தன்னுளேதி ரைத்தெழு
தடங்குகின்ற தன்மைபோல்
நின்னுளேபி றந்திறந்து
நிற்பவும் திரிபவும்
நின்னுளேய டங்குகின்ற
நீர்மைநின்கண் நின்றதே

தன்னுளேதி ரைத்தெழும்
தரங்கவெண்த டங்கடல்
தன்னுளேதி ரைத்தெழு
தடங்குகின்ற தன்மைபோல்
நின்னுளேபி றந்திறந்து
நிற்பவும் திரிபவும்
நின்னுளேய டங்குகின்ற
நீர்மைநின்கண் நின்றதே

சொல்லினால்தொ டர்ச்சிநீ
சொலப்படும்பொ ருளும்நீ
சொல்லினால்சொ லப்படாது
தோன்றுகின்ற சோதிநீ
சொல்லினால்ப டைக்கநீப
டைக்கவந்து தோன்றினார்
சொல்லினால்சு ருங்கநின்கு
ணங்கள் சொல்ல வல்லரே

உலகுதன்னை நீபடைத்தி
யுள்ளொடுக்கி வைத்தி மீண்
டுலகுதன்னு ளேபிறத்தி
யோரிடத்தை யல்லையால்
உலகுநின்னொ டொன்றிநிற்க
வேறுநிற்றி யாதலால்
உலகில்நின்னை யுள்ளசூழல்
யாவருள்ளா வல்லரே

இன்னையென்று சொல்லலாவ
தில்லையாதும் இட்டிடை
பின்னைகேள்வ னென்பருன்பி
ணக்குணர்ந்த பெற்றியோர்
பின்னையாய கோலமோடு
பேருமூரு மாதியும்
நின்னையார் நினைக்கவல்லர்
நீர்மையால்நி னைக்கிலே

தூய்மையோக மாயினாய்து
ழாயலங்கல் மாலையாய்
ஆமையாகி யாழ்கடல்து
யின்றவாதி தேவநின்
நாமதேய மின்னதென்ன
வல்லமல்ல மாகிலும்
சாமவேத கீதனாய
சக்ரபாணி யல்லையே

அங்கமாறும் வேதநான்கு
மாகிநின்ற வற்றுளே
தங்குகின்ற தன்மையாய்த
டங்கடல்ப ணத்தலை
செங்கண்நாக ணைக்கிடந்த
செல்வமல்கு சீரினாய்
சங்கவண்ண மன்னமேனி
சார்ங்கபாணி யல்லையே

தலைக்கணத்து கள்குழம்பு
சாதிசோதி தோற்றாமாய்
நிலைக்கணங்கள் காணவந்து
நிற்றியேலும் நீடிருங்
கலைக்கணங்கள் சொற்பொருள்க
ருத்தினால்நி னைக்கொணா
மலைக்கணங்கள் போலுணர்த்தும்
மாட்சிநின்றன் மாட்சியே

ஏகமூர்த்தி மூன்றுமூர்த்தி
நாலுமூர்த்தி நன்மைசேர்
போகமூர்த்தி புண்ணியத்தின்
மூர்த்தியெண்ணில் மூர்த்தியாய்
நாகமூர்த்தி சயனமாய்ந
லங்கடல்கி டந்துமேல்
ஆகமூர்த்தி யாயவண்ண
மெங்கொலாதி தேவனே

விடத்தவாயொ ராயிரமி
ராயிரம்கண் வெந்தழல்
விடத்துவீழ்வி லாதபோகம்
மிக்கசோதி தொக்கசீர்
தொடுத்துமேல்வி தானமாய
பௌவநீர ராவணை
படுத்தபாயல் பள்ளிகொள்வ
தென்கொல்வேலை வண்ணாணே

புள்ளாதாகி வேதநான்கு
மோதினாய்அ தன்றியும்
புள்ளின்வாய்பி ளந்துபுட்கொ
டிப்பிடித்த பின்னரும்
புள்ளையூர்தி யாதலால
தென்கொல்மின்கொள் நேமியாய்
புள்ளின்மெய்ப்ப கைக்கடல்கி
டத்தல்காத லித்ததே

கூசமொன்று மின்றிமாசு
ணம்படுத்து வேலைநீர்
பேசநின்ற தேவர்வந்து
பாடமுன்கி டந்ததும்
பாசம்நின்ற நீரில்வாழு
மாமையான கேசவா
ஏசவன்று நீகிடந்த
வாறுகூறு தேறவே

அரங்கனேத ரங்கநீர்க
லங்கவன்று குன்றுசூழ்
மரங்கடேய மாநிலம்கு
லுங்கமாசு ணம்சுலாய்
நெருங்கநீ கடைந்தபோது
நின்றசூர ரெஞ்செய்தார்
குரங்கையா ளுகந்தவெந்தை
கூறுதேற வேறிதே

பண்டுமின்று மேலுமாயொர்
பாலனாகி ஞாலமேழ்
உண்டுமண்டி யாலிலைத்து
யின்றவாதி தேவனே
வண்டுகிண்டு தண்டுழாய
லங்கலாய்க லந்தசீர
புண்டரீக பாவைசேரு
மார்பபூமி நாதனே

வானிறத்தொர் சீயமாய்வ
ளைந்தவாளெ யிற்றவன்
ஊன்நிறத்து கிர்த்தலம
ழுத்தினாய்உ லாயசீர்
நால்நிறத்த வேதநாவர்
நல்லயோகி னால்வணங்கு
பால்நிறக்க டல்கிடந்த
பற்பநாப னல்லையே

கங்கைநீர்ப யந்தபாத
பங்கயத்தெம் மண்ணலே
அங்கையாழி சங்குதண்டு
வில்லும்வாளு மேந்தினாய்
சிங்கமாய தேவதேவ
தேனுலாவு மென்மலர்
மங்கைமன்னி வாழுமார்ப
ஆழிமேனி மாயனே

வரத்தினில்சி ரத்தைமிக்க
வாளெயிற்று மற்றவன்
உரத்தினில்க ரத்தைவைத்து
கிர்த்தலத்தை யூன்றினாய்
இரத்தநீயி தென்னபொய்யி
ரந்தமண்வ யிற்றுளே
கரத்திஉன்க ருத்தையாவர்
காணவல்லர் கண்ணனே

ஆணினோடு பெண்ணுமாகி
யல்லவோடு நல்லவாய்
ஊணொடோ சை யூறுமாகி
யொன்றலாத மாயையாய்
பூணிபேணு மாயனாகி
பொய்யினோடு மெய்யுமாய்
காணிபேணும் மாணியாய்க்க
ரந்துசென்ற கள்வனே

விண்கடந்த சோதியாய்வி
ளங்குஞான மூர்த்தியாய்
பண்கடந்த தேசமேவு
பாவநாச நாதனே
எண்கடந்த யோகினோடி
ரந்துசென்று மாணியாய்
மண்கடந்த வண்ணம்நின்னை
யார்மதிக்க வல்லரே

படைத்தபாரி டந்தளந்த
துண்டுமிழ்ந்து பௌவநீர்
படைத்தடைத்த திற்கிடந்து
முன்கடைந்த பெற்றியோய்
மிடைத்தமாலி மாலிமான்வி
லங்குகால னூர்புக
படைக்கலம் விடுத்தபல்ப
டைத்தடக்கை மாயனே

பரத்திலும்ப ரத்தையாதி
பௌவநீர ணைக்கிடந்து
உரத்திலும்மொ ருத்திதன்னை
வைத்துகந்த தன்றியும்
நரத்திலும்பி றத்திநாத
ஞானமூர்த்தி யாயினாய்
ஒருத்தரும்நி னாதுதன்மை
யின்னதென்ன வல்லரே

வானகம்மும் மண்ணாகம்மும்
வெற்புமேழ்க டல்களும்
போனகம்செய் தாலிலைத்து
யின்றபுண்ட ரீகனே
தேனகஞ்செய் தண்ணறும்ம
லர்த்துழாய்நன் மாலையாய்
கூனகம்பு கத்தெறித்த
கொற்றவில்லி யல்லையே

காலநேமி காலனே
கணக்கிலாத கீர்த்தியாய்
ஞாலமேழு முண்டுபண்டோ ர்
பாலனாய பண்பனே
வேலைவேவ வில்வளைத்த
வெல்சினத்த வீரநின்
பாலராய பத்தர்சித்தம்
முத்திசெய்யும் மூர்த்தியே

குரக்கினப்ப டைகொடுகு
ரைகடலின் மீதுபோய்
அரக்கரங்க ரங்கவெஞ்ச
ரந்துரந்த வாதிநீ
இரக்கமண்கொ டுத்தவற்கி
ரக்கமொன்று மின்றியே
பரக்கவைத்த ளந்துகொண்ட
பற்பபாத னல்லையே

மின்னிறத்தெ யிற்றரக்கன்
வீழவெஞ்ச ரம்துரந்து
பின்னவற்க ருள்புரிந்த
ரசளித்த பெற்றியோய்
நன்னிறத்தொ ரிஞ்சொலேழை
பின்னைகேள்வ மன்னுசீர்
பொன்னிறத்த வண்ணானாய
புண்டரீக னல்லையே

ஆதியாதி யாதிநீயொ
ரண்டமாதி யாதலால்
சோதியாத சோதிநீஅ
துண்மையில்வி ளங்கினாய்
வேதமாகி வேள்வியாகி
விண்ணினோடு மண்ணுமாய்
ஆதியாகி யாயனாய
மாயமென்ன மாயமே

அம்புலாவு மீனுமாகி
யாமையாகி ஆழியார்
தம்பிரானு மாகிமிக்க
தன்புமிக்க தன்றியும்
கொம்பராவு நுண்மருங்கு
லாயர்மாதர் பிள்ளையாய்
எம்பிரானு மாயவண்ண
மென்கொலோவெம் மீசனே

ஆடகத்த பூண்முலைய
சோதையாய்ச்சி பிள்ளையாய்
சாடுதைத்தோர் புள்ளதாவி
கள்ளதாய பேய்மகள்
வீடுவைத்த வெய்யகொங்கை
ஐயபால முதுசெய்து
ஆடகக்கை மாதர்வா
யமுதமுண்ட தென்கொலோ

காய்த்தநீள்வி ளங்கனியு
திர்த்தெதிர்ந்த பூங்குருந்தம்
சாய்த்துமாபி ளந்தகைத்த
லத்தகண்ண னென்பரால்
ஆய்ச்சிபாலை யுண்டுமண்ணை
யுண்டுவெண்ணெ யுண்டுபின்
பேய்ச்சிபாலை யுண்டுபண்டொ
ரேனமாய வாமனா

கடங்கலந்த வன்கரிம
ருப்பொசித்துஓர் பொய்கைவாய்
விடங்கலந்த பாம்பின்மேல்ந
டம்பயின்ற நாதனே
குடங்கலந்த கூத்தனாய
கொண்டல்வண்ண தண்டுழாய்
வடங்கலந்த மாலைமார்ப
காலநேமி காலனே

வெற்பெடுத்து வேலைநீர்க
லக்கினாய்அ தன்றியும்
வெற்பெடுத்து வேலைநீர்வ
ரம்புகட்டி வேலைசூழ்
வெற்பெடுத்த இஞ்சிசூழி
லங்கைகட்ட ழித்தநீ
வெற்பெடுத்து மாரிகாத்த
மேகவண்ண னல்லையே

ஆனைகாத்தொ ரானைகொன்ற
தன்றியாயர் பிள்ளையாய்
ஆனைமேய்த்தி யானெயுண்டி
அன்றுகுன்ற மொன்றினால்
ஆனைகாத்து மையரிக்கண்
மாதரார்தி றத்துமுன்
ஆனையன்று சென்றடர்த்த
மாயமென்ன மாயமே

ஆயனாகி யாயர்மங்கை
வேயதோள்வி ரும்பினாய்
ஆயநின்னை யாவர்வல்ல
ரம்பரத்தொ டிம்பராய்
மாயமாய மாயைகொல்அ
தன்றிநீவ குத்தலும்
மாயமாய மாக்கினாயுன்
மாயமுற்று மாயமே

வேறிசைந்த செக்கர்மேனி
நீரணிந்த புஞ்சடை
கீறுதிங்கள் வைத்தவன்கை
வைத்தவன்க பால்மிசை
ஊறுசெங்கு ருதியால்நி
றைத்தகார ணந்தனை
ஏறுசென்ற டர்த்தவீச
பேசுகூச மின்றியே

வெஞ்சினத்த வேழவெண்ம
ருப்பொசித்து உருத்தமா
கஞ்சனைக்க டிந்துமண்ண
ளந்துகொண்ட காலனே
வஞ்சனத்து வந்தபேய்ச்சி
யாவிபாலுள் வாங்கினாய்
அஞ்சனத்த வண்ணானாய
ஆதிதேவ னல்லையே

பாலினீர்மை செம்பொனீர்மை
பாசியின்ப சும்புறம்
போலுநீர்மை பொற்புடைத்த
டத்துவண்டு விண்டுலாம்
நீலநீர்மை யென்றிவைநி
றைந்தகாலம் நான்குமாய்
மாலினீர்மை வையகம்ம
றைத்ததென்ன நீர்மையே

மண்ணுளாய்கொல் விண்ணுளாய்கொல்
மண்ணுளேம யங்கிநின்று
எண்ணுமெண்ண கப்படாய்கொல்
என்னமாயை நின்தமர்
கண்ணுளாய்கொல் சேயைகொல்அ
னந்தன்மேல்கி டந்தவெம்
புண்ணியாபு னந்துழாய
லங்கலம்பு னிதனே

தோடுபெற்ற தண்டுழாய
லங்கலாடு சென்னியாய்
கோடுபற்றி ஆழியேந்தி
அஞ்சிறைப்புள் ளூர்தியால்
நாடுபெற்ற நன்மைநண்ண
மில்லையேனும் நாயினேன்
வீடுபெற்றி றப்பொடும்பி
றப்பறுக்கு மாசொலே

காரொடொத்த மேனிநங்கள்
கண்ண விண்ணிண் நாதனே
நீரிடத்த ராவணைக்கி
டத்தியென்பர் அன்றியும்
ஓரிடத்தை யல்லையெல்லை
யில்லையென்ப ராதலால்
சேர்விடத்தை நாயினேன்
தெரிந்திறைஞ்சு மாசொலே

குன்றில்நின்று வானிருந்து
நீள்கடல்கி டந்துமண்
ஒன்றுசென்ற தொன்றையுண்ட
தொன்றிடந்து பன்றியாய்
நன்றுசென்ற நாளவற்றுள்
நல்லுயிர்ப டைத்தவர்க்கு
அன்றுதேவ மைத்தளித்த
ஆதிதேவ னல்லயே

கொண்டைகொண்ட கோதைமீது
தேனுலாவு கூனிகூன்
உண்டைகொண்ட ரங்கவோட்டி
யுள்மகிழ்ந்த நாதனூர்
நண்டையுண்டு நாரைபேர
வாளைபாய நீலமே
அண்டைகொண்டு கெண்டைமேயு
மந்தணீர ரங்கமே

வெண்டிரைக்க ருங்கடல்சி
வந்துவேவ முன்னோர்நாள்
திண்டிறல்சி லைக்கைவாளி
விட்டவீரர் சேருமூர்
எண்டிசைக்க ணங்களுமி
றைஞ்சியாடு தீர்த்தநீர்
வண்டிரைத்த சோலைவேலி
மன்னுசீர ரங்கமே

சரங்களைத்து ரந்துவில்வ
ளைத்துஇலங்கை மன்னவன்
சிரங்கள்பத்த றுத்துதிர்த்த
செல்வர்மன்னு பொன்னிடம்
பரந்துபொன்நி ரந்துநுந்தி
வந்தலைக்கும் வார்புனல்
அரங்கமென்பர் நான்முக
தயன்பணிந்த கோயிலே

பொற்றையுற்ற முற்றல்யானை
போரெதிர்ந்து வந்ததை
பற்றியுற்று மற்றதன்
மருப்பொசித்த பாகனூர்
சிற்றெயிற்று முற்றல்மூங்கில்
மூன்றுதண்ட ரொன்றினர்
அற்றபற்றர் சுற்றிவாழு
மந்தணீர ரங்கமே

மோடியோடி லச்சையாய
சாபமெய்தி முக்கணான்
கூடுசேனை மக்களோடு
கொண்டுமண்டி வெஞ்ச
தோடவாண னாயிரம்
கரங்கழித்த வாதிமால்
பீடுகோயில் கூடுநீர
ரங்கமென்ற பேரதே

இலைத்தலைச்ச ரந்துரந்தி
லங்கைகட்ட ழித்தவன்
மலைத்தலைப்பி றந்திழிந்து
வந்துநுந்து சந்தனம்
குலைத்தலைத்தி றத்தெறிந்த
குங்குமக்கு ழம்பினோடு
அலைத்தொழுகு காவிரிய
ரங்கமேய வண்ணலே

மன்னுமாம லர்க்கிழத்தி
வையமங்கை மைந்தனாய்
பின்னுமாயர் பின்னைதோள்ம
ணம்புணர்ந்த தன்றியும்
உன்னபாத மென்னசிந்தை
மன்னவைத்து நல்கினாய்
பொன்னிசூ ழரங்கமேய
புண்டரீக னல்லையே

இலங்கைமன்ன னைந்தொடைந்து
பைந்தலைநி லத்துக
கலங்கவன்று சென்றுகொன்று
வென்றிகொண்ட வீரனே
விலங்குநூலர் வேதநாவர்
நீதியான கேள்வியார்
வலங்கொளக்கு டந்தையுள்கி
டந்தமாலு மல்லையே

சங்குதங்கு முன்கைநங்கை
கொங்கைதங்க லுற்றவன்
அங்கமங்க வன்றுசென்ற
டர்த்தெறிந்த வாழியான்
கொங்குதங்கு வார்குழல்ம
டந்தைமார்கு டைந்தநீர்
பொங்குதண்கு டந்தையுள்கி
டந்தபுண்ட ரீகனே

மரங்கெடந டந்தடர்த்து
மத்தயானை மத்தகத்து
உரங்கெடப்பு டைத்தொர்கொம்பொ
சித்துகந்த வுத்தமா
துரங்கம்வாய்பி ளந்துமண்ண
ளந்தபாத வேதியர்
வரங்கொளக்கு டந்தையுள்கி
டந்தமாலு மல்லையே

சாலிவேலி தண்வயல்த
டங்கிடங்கு பூம்பொழில்
கோலமாட நீடுதண்கு
டந்தைமேய கோவலா
காலநேமி வக்கரன்க
ரன்முரஞ்சி ரம்மவை
காலனோடு கூடவில்கு
னித்தவிற்கை வீரனே

செழுங்கொழும்பெ ரும்பனிபொ
ழிந்திடஉ யர்ந்தவேய்
விழுந்துலர்ந்தெ ழுந்துவிண்பு
டைக்கும்வேங்க டத்துள்நின்று
எழுந்திருந்து தேன்பொருந்து
பூம்பொழில்த ழைக்கொழுஞ்
செழுந்தடங்கு டந்தையுள்கி
டந்தமாலு மல்லையே

நடந்தகால்கள் நொந்தவோ
நடுங்குஞால மேனமாய்
இடந்தமெய்கு லுங்கவோவி
லங்குமால்வ ரைச்சுரம்
கடந்தகால்ப ரந்தகாவி
ரிக்கரைக்கு டந்தையுள்
கிடந்தவாறெ ழுந்திருந்து
பேசுவாழி கேசனே

கரண்டமாடு பொய்கையுள்க
ரும்பனைப்பெ ரும்பழம்
புரண்டுவீழ வாளைபாய்கு
றுங்குடிநெ டுந்தகாய்
திரண்டதோளி ரணியஞ்சி
னங்கொளாக மொன்றையும்
இரண்டுகூறு செய்துகந்த
சிங்கமென்ப துன்னையே

நன்றிருந்து யோகநீதி
நண்ணுவார்கள் சிந்தையுள்
சென்றிருந்து தீவினைகள்
தீர்த்ததேவ தேவனே
குன்றிருந்த மாடநீடு
பாடகத்து மூரகத்தும்
நின்றிருந்து வெஃகணைக்கி
டந்ததென்ன நீர்மையே

நின்றதெந்தை யூரகத்தி
ருந்ததெந்தை பாடகத்து
அன்றுவெஃக ணைக்கிடந்த
தென்னிலாத முன்னெலாம்
அன்றுநான்பி றந்திலேன்பி
றந்தபின்ம றந்திலேன்
நின்றதும் மிருந்ததும்கி
டந்ததும்மென் நெஞ்சுளே

நிற்பதும்மொர் வெற்பகத்தி
ருப்பும்விண்கி டப்பதும்
நற்பெருந்தி ரைக்கடலுள்
நானிலாத முன்னெலாம்
அற்புதன னந்தசயன
னாதிபூதன் மாதவன்
நிற்பதும்மி ருப்பதும்கி
டப்பதும்என் நெஞ்சுளே

இன்றுசாதல் நின்றுசாத
லன்றியாரும் வையகத்து
ஒன்றிநின்று வாழ்தலின்மை
கண்டுநீச ரென்கொலோ
அன்றுபார ளந்தபாத
போதையுன்னி வானின்மேல்
சென்றுசென்று தேவராயி
ருக்கிலாத வண்ணமே

சண்டமண்ட லத்தினூடு
சென்றுவீடு பெற்றுமேல்
கண்டுவீடி லாதகாத
லின்பம்நாளு மெய்துவீர்
புண்டரீக பாதபுண்ய
கீர்த்திநுஞ்செ விமடுத்து
உண்டும்மு றுவினைத்து
யருள்நீங்கி யுய்ம்மினோ

முத்திறத்து வாணியத்தி
ரண்டிலொன்று நீசர்கள்
மத்தராய்ம யங்குகின்ற
திட்டதிலி றந்தபோந்து
எத்திறத்து முய்வதோரு
பாயமில்லை யுய்குறில்
தொத்துறத்த தண்டுழாய்நன்
மாலைவாழ்த்தி வாழ்மினோ

காணிலும்மு ருப்பொலார்செ
விக்கினாத கீர்த்தியார்
பேணிலும்வ ரந்தரமி
டுக்கிலாத தேவரை
ஆணமென்ற டைந்துவாழும்
ஆதர்காள்எம் மாதிபால்
பேணிநும்பி றப்பெனும்பி
ணக்கறுக்க கிற்றிரே

குந்தமோடு சூலம்வேல்கள்
தோமரங்கள் தண்டுவாள்
பந்தமான தேவர்கள்ப
ரந்துவான கம்முற
வந்தவாண னீரைஞ்நூறு
தோள்களைத்து ணித்தநாள்
அந்தவந்த வாகுலம
மரரேய றிவரே

வண்டுலாவு கோதைமாதர்
காரணத்தி னால்வெகுண்டு
இண்டவாண னீரைஞ்று
தோள்களைத்து ணித்தநாள்
முண்டனீறன் மக்கள்வெப்பு
மோடியங்கி யோடிட
கண்டுநாணி வாணனுக்கி
ரங்கினானெம் மாயனே

போதில்மங்கை பூதலக்கி
ழத்திதேவி யன்றியும்
போதுதங்கு நான்முகன்ம
கனவன்ம கஞ்சொலில்
மாதுதங்கு கூறன்ஏற
தூர்தியென்று வேதநூல்
ஓதுகின்ற துண்மையல்ல
தில்லைமற்று ரைக்கிலே

மரம்பொத ரந்துரந்து
வாலிவீழ முன்னொர்நாள்
உரம்பொதச்ச ரந்துரந்த
வும்பராளி யெம்பிரான்
வரம்குறிப்பில் வைத்தவர்க்க
லாதுவான மாளிலும்
நிரம்புநீடு போகமெத்தி
றத்ததும்யார்க்கு மில்லையே

அறிந்தறிந்து வாமனன
டியணைவ ணங்கினால்
செறிந்தெழுந்த ஞானமோடு
செல்வமும்சி றந்திடும்
மறிந்தெழுந்த தெண்டிரையுள்
மன்னுமாலை வாழ்த்தினால்
பறிந்தெழுந்து தீவினைகள்
பற்றறுதல் பான்மையே

ஒன்றிநின்று நல்தவம்செய்
தூழியூழி தோறெலாம்
நின்றுநின்ற வன்குணங்க
ளுள்ளியுள்ளம் தூயராய்
சென்றுசென்று தேவதேவ
ரும்பரும்ப ரும்பராய்
அன்றியெங்கள் செங்கண்மாலை
யாவர்காண வல்லரே

புன்புலவ ழியடைத்த
ரக்கிலச்சி னைசெய்து
நன்புலவ ழிதிறந்து
ஞானநற்சு டர்கொளீஇ
என்பிலெள்கி நெஞ்சுருகி
யுள்கனிந்தெ ழுந்ததோர்
அன்பிலன்றி யாழியானை
யாவர்காண வல்லரே

எட்டுமெட்டு மெட்டுமாயொ
ரேழுமேழு மேழுமாய்
எட்டுமூன்று மொன்றுமாகி
நின்றவாதி தேவனை
எட்டினாய பேதமோடி
றைஞ்சிநின்ற வன்பெயர்
எட்டெழுத்து மோதுவார்கள்
வல்லர்வான மாளவே

சோர்விலாத காதலால்தொ
டக்கறாம னத்தராய்
நீரராவ ணைக்கிடந்த
நின்மலன்ந லங்கழல்
ஆர்வமோடி றைஞ்சிநின்ற
வன்பெயரெ டெழுத்தும்
வாரமாக வோதுவார்கள்
வல்லர்வான மாளவே

பத்தினோடு பத்துமாயொ
ரேழினோடொ ரொன்பதாய்
பத்தினால்தி சைக்கணின்ற
நாடுபெற்ற நன்மையாய்
பத்தினாய தோற்றமோடொ
ராற்றல்மிக்க வாதிபால்
பத்தராம வர்க்கலாது
முத்திமுற்ற லாகுமே

வாசியாகி நேசமின்றி
வந்தெதிர்ந்த தேனுகன்
நாசமாகி நாளுலப்ப
நன்மைசேர்ப னங்கனிக்கு
வீசமேல்நி மிர்ந்ததோளி
லில்லையாக்கி னாய்கழற்கு
ஆசையாம வர்க்கலால
மரராக லாகுமே

கடைந்தபாற்க டல்கிடந்து
காலநேமி யைக்கடிந்து
உடைந்தவாலி தன்பினுக்கு
தவவந்தி ராமனாய்
மிடைந்தவேழ்ம ரங்களும
டங்கவெய்துவேங்கடம்
அடைந்தமால பாதமே
யடைந்துநாளு முய்ம்மினோ

எத்திறத்து மொத்துநின்று
யர்ந்துயர்ந்த பெற்றியோய்
முத்திறத்து மூரிநீர
ராவணைத்து யின்றநின்
பத்துறுத்த சிந்தையோடு
நின்றுபாசம் விட்டவர்க்கு
எத்திறத்து மின்பமிங்கு
மங்குமெங்கு மாகுமே

மட்டுலாவு தண்டுழாய
லங்கலாய்பொ லன்கழல்
விட்டுவீள்வி லாதபோகம்
விண்ணில்நண்ணி யேறினும்
எட்டினோடி ரண்டெனும்க
யிற்றினால்ம னந்தனை
கட்டிவீடி லாதுவைத்த
காதலின்ப மாகுமே

பின்பிறக்க வைத்தனன்கொ
லன்றிநின்று தன்கழற்கு
அன்புறைக்க வைத்தநாள
றிந்தனன்கொ லாழியான்
தந்திறத்தொ ரன்பிலாவ
றிவிலாத நாயினேன்
எந்திறத்தி லென்கொலெம்பி
ரான்குறிப்பில் வைத்ததே

நச்சராவ ணைக்கிடந்த
நாதபாத போதினில்
வைத்தசிந்தை வாங்குவித்து
நீங்குவிக்க நீயினம்
மெய்த்தன்வல்லை யாதலால
றிந்தனன்நின் மாயமே
உய்த்துநின்ம யக்கினில்ம
யக்கலென்னை மாயனே

சாடுசாடு பாதனேச
லங்கலந்த பொய்கைவாய்
ஆடராவின் வன்பிடர்ந
டம்பயின்ற நாதனே
கோடுநீடு கையசெய்ய
பாதநாளு முன்னினால்
வீடனாக மெய்செயாத
வண்ணமென்கொல் கண்ணனே

நெற்றிபெற்ற கண்ணன்விண்ணி
னாதனோடு போதின்மேல்
நற்றவத்து நாதனோடு
மற்றுமுள்ள வானவர்
கற்றபெற்றி யால்வணங்கு
பாதநாத வேதநின்
பற்றலாலொர் பற்றுமற்ற
துற்றிலேனு ரைக்கிலே

வெள்ளைவேலை வெற்புநாட்டி
வெள்ளெயிற்ற ராவளாய்
அள்ளலாக்க டைந்தவன்ற
ருவரைக்கொ ராமையாய்
உள்ளநோய்கள் தீர்மருந்து
வானவர்க்க ளித்தஎம்
வள்ளலாரை யன்றிமற்றொர்
தெய்வம்நான்ம திப்பனே

பார்மிகுத்த பாரமுன்னொ
ழிச்சுவான ருச்சனன்
தேர்மிகுத்து மாயமாக்கி
நின்றுகொன்று வென்றிசேர்
மாரதர்க்கு வான்கொடுத்து
வையமைவர் பாலதாம்
சீர்மிகுத்த நின்னலாலொர்
தெய்வம்நான்ம திப்பனே

குலங்களாய வீரிரண்டி
லொன்றிலும்பி றந்திலேன்
நலங்களாய நற்கலைகள்
நாவிலும்ந வின்றிலேன்
புலன்களைந்தும் வென்றிலேன்பொ
றியிலேன்பு னிதநின்
இலங்குபாத மன்றிமற்றொர்
பற்றிலேனெம் மீசனே

பண்ணுலாவு மென்மொழிப்ப
டைத்தடங்க ணாள்பொருட்டு
எண்ணிலாவ ரக்கரைநெ
ருப்பினால்நெ ருக்கினாய்
கண்ணலாலொர் கண்ணிலேன்க
லந்தசுற்றம் மற்றிலேன்
எண்ணிலாத மாயநின்னை
யென்னுள்நீக்க லென்றுமே

விடைக்குலங்க ளேழடர்த்து
வென்றிவேற்கண் மாதரார்
கடிக்கலந்த தோள்புணர்ந்த
காலியாய வேலைநீர்
படைத்தடைத்த திற்கிடந்து
முன்கடைந்து நின்றனக்கு
அடைக்கலம்பு குந்தவென்னை
யஞ்சலென்ன வேண்டுமே

சுரும்பரங்கு தண்டுழாய்து
தைந்தலர்ந்த பாதமே
விரும்பிநின்றி றைஞ்சுவேற்கி
ரங்கரங்க வாணனே
கரும்பிருந்த கட்டியேக
டல்கிடந்த கண்ணனே
இரும்பரங்க வெஞ்சரம்து
ரந்தவில்லி ராமனே

ஊனின்மேய ஆவிநீஉ
றக்கமோடு ணர்ச்சிநீ
ஆனில்மேய ஐந்தும்நீஅ
வற்றுள்நின்ற தூய்மைநீ
வானினோடு மண்ணும்நீவ
ளங்கடற்ப யனும்நீ
யானும்நீய தன்றியெம்பி
ரானும்நீயி ராமனே

அடக்கரும்பு லன்கள்ஐந்த
டக்கியாசை யாமவை
தொடக்கறுத்து வந்துநின்தொ
ழிற்கணின்ற வென்னைநீ
விடக்கருதி மெய்செயாது
மிக்கொராசை யாக்கிலும்
கடற்கிடந்த நின்னலாலொர்
கண்ணிலேனெம் மண்ணலே

வரம்பிலாத மாயைமாய
வையமேழும் மெய்ம்மையே
வரம்பிலூழி யேத்திலும்வ
ரம்பிலாத கீர்த்தியாய்
வரம்பிலாத பல்பிறப்ப
றுத்துவந்து நின்கழல்
பொருந்துமாதி ருந்தநீவ
ரஞ்செய்புண்ட ரீகனே

வெய்யவாழி சங்குதண்டு
வில்லும்வாளு மேந்துசீர
கையசெய்ய போதில்மாது
சேருமார்ப நாதனே
ஐயிலாய வாக்கைநோய
றுத்துவந்து நின்னடைந்து
உய்வதோரு பாயம்நீயெ
னக்குநல்க வேண்டுமே

மறம்துறந்து வஞ்சமாற்றி
யைம்புலன்க ளாசையும்
துறந்துநின்க ணாசையேதொ
டர்ந்துநின்ற நாயினேன்
பிறந்திறந்து பேரிடர்ச்சு
ழிக்கணின்று நீங்குமா
மறந்திடாது மற்றெனெக்கு
மாயநல்க வெண்டுமே

காட்டினான்செய் வல்வினைப்ப
யன்றனால்ம னந்தனை
நாட்டிவைத்து நல்லவல்ல
செய்யவெண்ணி னாரென
கேட்டதன்றி யென்னதாவி
பின்னைகேள்வ நின்னொடும்
பூட்டிவைத்த வென்னைநின்னுள்
நீக்கல்பூவை வண்ணனே

பிறப்பினோடு பேரிடர
சுழிக்கண்நின்றும் நீங்குமஃது
இறப்பவைத்த ஞானநீச
ரைக்கரைக்கொ டேற்றுமா
பெறற்கரிய நின்னபாத
பத்தியான பாசனம்
பெறற்கரிய மாயனே
எனக்குநல்க வேண்டுமே

இரந்துரைப்ப துண்டுவாழி
ஏமநீர்தி றத்தமா
வரர்தரும்தி ருக்குறிப்பில்
வைத்ததாகில் மன்னுசீர்
பரந்தசிந்தை யொன்றிநின்று
நின்னபாத பங்கயம்
நிரந்தரம்நி னைப்பதாக
நீநினைக்க வேண்டுமே

விள்விலாத காதலால்
விளங்குபாத போதில்வைத்து
உள்ளுவேன தூனநோயொ
ழிக்குமாதெ ழிக்குநீர்
பள்ளிமாய பன்றியாய
வென்றிவீர குன்றினால்
துள்ளுநீர்வ ரம்புசெய்த
தோன்றலொன்று சொல்லிடே

திருக்கலந்து சேருமார்ப
தேவதேவ தேவனே
இருக்கலந்த வேதநீதி
யாகிநின்ற நின்மலா
கருக்கலந்த காளமேக
மேனியாய நின்பெயர்
உருக்கலந்தொ ழிவிலாது
ரைக்குமாறு ரைசெயே

கடுங்கவந்தன் வக்கரன்க
ரன்முரன்சி ரம்மவை
இடந்துகூறு செய்தபல்ப
டைத்தடக்கை மாயனே
கிடந்திருந்து நின்றியங்கு
போதும்நின்ன பொற்கழல்
தொடர்ந்துவிள்வி லாததோர்தொ
டர்ச்சிநல்க வேண்டுமே

மண்ணையுண்டு மிழ்ந்துபின்னி
ரந்துகொண்ட ளந்துமண்
கண்ணுளல்ல தில்லையென்று
வென்றகால மாயினாய்
பண்ணைவென்ற விஞ்சொல்மங்கை
கொங்கைதங்கு பங
கண்ணநின்ன வண்ணமல்ல
தில்லையெண்ணும் வண்ணமே

கறுத்தெதிர்ந்த காலநேமி
காலனோடு கூடஅன்
றறுத்தவாழி சங்குதண்டு
வில்லும்வாளு மேந்தினாய்
தொறுக்கலந்த வூனமஃதொ
ழிக்கவன்று குன்றம்முன்
பொறுத்தநின்பு கழ்க்கலாலொர்
நேசமில்லை நெஞ்சமே

காய்சினத்த காசிமன்னன்
வக்கரன்ப வுண்டிரன்
மாசினத்த மாலிமாஞ்சு
மாலிகேசி தேனுகன்
நாசமுற்று வீழநாள்க
வர்ந்தநின்க ழற்கலால்
நேசபாச மெத்திறத்தும்
வைத்திடேனெம் மீசனே

கேடில்சீர்வ ரத்தனாய்க்கெ
டும்வரத்த யனரன்
நாடினோடு நாட்டமாயி
ரத்தன்நாடு நண்ணிலும்
வீடதான போகமெய்தி
வீற்றிருந்த போதிலும்
கூடுமாசை யல்லதொன்று
கொள்வனோகு றிப்பிலே

சுருக்குவாரை யின்றியேசு
ருங்கினாய்சு ருங்கியும்
பெருக்குவாரை யின்றியேபெ
ருக்கமெய்து பெற்றியோய்
செருக்குவார்கள் தீக்குணங்கள்
தீர்த்ததேவ தேவனென்று
இருக்குவாய்மு னிக்கணங்க
ளேத்தயானு மேத்தினேன்

தூயனாயு மன்றியும்சு
ரும்புலாவு தண்டுழாய்
மாயநின்னை நாயினேன்வ
ணங்கிவாழ்த்து மீதெலாம்
நீயுநின்கு றிப்பினிற்பொ
றுத்துநல்கு வேலைநீர
பாயலோடு பத்தர்சித்தம்
மேயவேலை வண்ணனே

வைதுநின்னை வல்லவாப
ழித்தவர்க்கும் மாறில்போர்
செய்துநின்னை செற்றதீயில்
வெந்தவர்க்கும் வந்துன்னை
எய்தலாகு மென்பராத
லாலெம்மாய நாயினேன்
செய்தகுற்றம் நற்றமாக
வேகொள்ஞால நாதனே

வாள்களாகி நாள்கள்செல்ல
நோய்மைகுன்றி மூப்பெய்தி
மாளுநாள தாதலால்வ
ணங்கிவாழ்த்தென் நெஞ்சமே
ஆளதாகு நன்மையென்று
நன்குணர்ந்த தன்றியும்
மீள்விலாத போகம்நல்க
வேண்டும்மால பாதமே

சலங்கலந்த செஞ்சடைக்க
றுத்தகண்டன் வெண்டலை
புலன்கலங்க வுண்டபாத
கத்தன்வன்து யர்கெட
அலங்கல்மார்வில் வாசநீர்கொ
டுத்தவன்ன டுத்தசீர்
நலங்கொள்மாலை நண்ணும்வண்ண
மெண்ணுவாழி நெஞ்சமே

ஈனமாய வெட்டுநீக்கி
யேதமின்றி மீதுபோய்
வானமாள வல்லையேல்வ
ணங்கிவாழ்த்தென் நெஞ்சமே
ஞானமாகி ஞாயிறாகி
ஞாலமுற்று மோரெயிற்று
ஏனமாயி டந்தமூர்த்தி
யெந்தைபாத மெண்ணியே

அத்தனாகி யன்னையாகி
யாளுமெம்பி ரானுமாய்
ஒத்தொவ்வாத பல்பிறப்பொ
ழித்துநம்மை யாட்கொள்வான்
முத்தனார்மு குந்தனார்பு
குந்துநம்முள் மேவினார்
எத்தினாலி டர்க்கடல்கி
டத்தியேழை நெஞ்சமே

மாறுசெய்த வாளரக்கன்
நாளுலப்ப அன்றிலங்கை
நீறுசெய்து சென்றுகொன்று
வென்றிகொண்ட வீரனார்
வேறுசெய்து தம்முளென்னை
வைத்திடாமை யால்நமன்
கூறுசெய்து கொண்டிறந்த
குற்றமெண்ண வல்லனே

அச்சம்நோயொ டல்லல்பல்பி
றப்புவாய மூப்பிவை
வைத்தசிந்தை வைத்தவாக்கை
மாற்றிவானி லேற்றுவான்
அச்சுதன நந்தகீர்த்தி
யாதியந்த மில்லவன்
நச்சுநாக ணைக்கிடந்த
நாதன்வேத கீதனே

சொல்லினும்தொ ழிற்கணும்தொ
டக்கறாத வன்பினும்
அல்லுநன்ப கலினோடு
மானமாலை காலையும்
அல்லிநாண்ம லர்க்கிழத்தி
நாதபாத போதினை
புல்லியுள்ளம் விள்விலாது
பூண்டுமீண்ட தில்லையே

பொன்னிசூழ ரங்கமேய
பூவைவண்ண மாயகேள்
என்னதாவி யென்னும்வல்வி
னையினுள்கொ ழுந்தெழுந்து
உன்னபாத மென்னிநின்ற
வொண்சுடர்க்கொ ழுமலர்
மன்னவந்து பூண்டுவாட்ட
மின்றுயெங்கும் நின்றதே

இயக்கறாத பல்பிறப்பி
லென்னைமாற்றி யின்றுவந்து
உயக்கொள்மேக வண்ணன்நண்ணி
யென்னிலாய தன்னுளே
மயக்கினான்றன் மன்னுசோதி
யாதலாலென் னாவிதான்
இயக்கெலாம றுத்தறாத
வின்பவீடு பெற்றதே
திருமழிசையாழ்வார் திருவடிகளே சரணம்
திருமாலை தனியன்
திருவங்கப்பெருமாளரையர் அருளிச்செய்தது
மற்றொன்றும் வேண்டா மனமே மதிளரங்கர்
கற்றினம் மேய்த்த கழலிணைக்கீழ் உற்ற
திருமாலை பாடும்சீர தொண்டரடிப்பொடியெம்
பெருமானை எப்பொழுதும் பேசு
ஸ்ரீ தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிச்செய்த திருமாலை

காவலிற் புலனை வைத்து
கலிதனை கடக்க பாய்ந்து
நாவலி டுழிதரு கின்றோம்
நமன்தமர் தலைகள் மீதே
மூவுல குண்டு மிழ்ந்த
முதல்வநின் நாமம் கற்ற
ஆவலி புடைமை கண்டாய்
அரங்கமா நகரு ளானே

பச்சைமா மலைபோல் மேனி
பவளவாய் கமல செங்கண்
அச்சுதா அமர ரேறே
ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய்
இந்திர லோக மாளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகரு ளானே

வேதநூல் பிராயம் நூறு
மனிசர்தாம் புகுவ ரேலும்
பாதியு முறங்கி போகும்
நின்றதில் பதினை யாண்டு
பேதைபா லகன தாகும்
பிணிபசி மூப்பு துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன்
அரங்கமா நகரு ளானே

மொய்த்தவல் வினையுள் நின்று
மூன்றெழு துடைய பேரால்
கத்திர பந்து மன்றே
பராங்கதி கண்டு கொண்டான்
இத்தனை யடிய ரானார
கிரங்கும்நம் மரங்க னாய
பித்தனை பெற்று மந்தோ
பிறவியுள் பிணங்கு மாறே

பெண்டிரால் சுகங்க ளுய்ப்பான்
பெரியதோ ரிடும்பை பூண்டு
உண்டிரா கிடக்கும் போது
உடலுக்கே கரைந்து நைந்து
தண்டுழாய் மாலை மார்பன்
தமர்களா பாடி யாடி
தொண்டுபூண் டமுத முண்ணா
தொழும்பர்சோ றுகக்கு மாறே

மறம்சுவர் மதிளெ டுத்து
மறுமைக்கே வெறுமை பூண்டு
புறம்சுவ ரோட்டை மாடம்
புரளும்போ தறிய மாட்டீர்
அறம்சுவ ராகி நின்ற
அரங்கனார காட்செய் யாதே
புறம்சுவர் கோலஞ் செய்து
புள்கவ்வ கிடக்கின் றீரே

புலையற மாகி நின்ற
புத்தொடு சமண மெல்லாம்
கலையற கற்ற மாந்தர்
காண்பரோ கேட்ப ரோதாம்
தலையறு புண்டும் சாவேன்
சத்தியங் காண்மின் ஐயா
சிலையினா லிலங்கை செற்ற
தேவனே தேவ னாவான்

வெறுப்பொடு சமணர் முண்டர்
விதியில்சா கியர்கள் நின்பால்
பொறுப்பரி யனகள் பேசில்
போவதே நோய தாகி
குறிப்பென கடையு மாகில்
கூடுமேல் தலையை ஆங்கே
அறுப்பதே கருமங் கண்டாய்
அரங்கமா நகரு ளானே

மற்றுமோர் தெய்வ முண்டே
மதியிலா மானி டங்காள்
உற்றபோ தன்றி நீங்கள்
ஒருவனென் றுணர மாட்டீர்
அற்றமே லொன்ற றீயீர்
அவனல்லால் தெய்வ மில்லை
கற்றினம் மேய்த்த வெந்தை
கழலிணை பணிமி னீரே

நாட்டினான் தெய்வ மெங்கும்
நல்லதோ ரருள்தன் னாலே
காட்டினான் திருவ ரங்கம்
உய்பவர குய்யும் வண்ணம்
கேட்டிரே நம்பி மீர்காள்
கெருடவா கனனும் நிற்க
சேட்டைதன் மடிய கத்து
செல்வம்பார திருக்கின் றீரே

ஒருவில்லா லோங்கு முந்நீர்
அனைத்துல கங்க ளுய்ய
செருவிலே யரக்கர் கோனை
செற்றநம் சேவ கனார்
மருவிய பெரிய கோயில்
மதிள்திரு வரங்க மென்னா
கருவிலே திருவி லாதீர்
காலத்தை கழிக்கின் றீரே

நமனும்முற் கலனும் பேச
நரகில்நின் றார்கள் கேட்க
நரகமே சுவர்க்க மாகும்
நாமங்க ளுடைய நம்பி
அவனதூ ரரங்க மென்னாது
அயர்த்துவீழ தளிய மாந்தர்
கவலையுள் படுகின் றாரென்
றதனுக்கே கவல்கின் றேனே

எறியுநீர் வெறிகொள் வேலை
மாநில துயிர்க ளெல்லாம்
வெறிகொள்பூ துளவ மாலை
விண்ணவர் கோனை யேத்த
அறிவிலா மனித ரெல்லாம்
அரங்கமென் றழைப்ப ராகில்
பொறியில்வாழ் நரக மெல்லாம்
புல்லெழு தொழியு மன்றே

வண்டின முரலும் சோலை
மயிலினம் ஆலும் சோலை
கொண்டல்மீ தணவும் சோலை
குயிலினம் கூவும் சோலை
அண்டர்கோ னமரும் சோலை
அணிதிரு வரங்க மென்னா
மிண்டர்பா துண்ணும் சோற்றை
விலக்கிநா கிடுமி னீரே

மெய்யர்க்கே மெய்ய னாகும்
விதியிலா வென்னை போல
பொய்யர்க்கே பொய்ய னாகும்
புட்கொடி யுடைய கோமான்
உய்யப்போ முணர்வி னார்க
கொருவனென் றுணர்ந்த பின்னை
ஐயப்பா டறுத்து தோன்றும்
அழகனூ ரரங்க மன்றே

சூதனா கள்வ னாகி
தூர்த்தரோ டிசைந்த காலம்
மாதரார் கயற்க ணென்னும்
வலையுள்ப டழுந்து வேனை
போதரே யென்று சொல்லி
புந்தியில் புகுந்து தன்பால்
ஆதரம் பெருக வைத்த
அழகனூ ரரங்க மன்றே

விரும்பிநின் றேத்த மாட்டேன்
விதியிலேன் மதியொன் றில்லை
இரும்புபோல் வலிய நெஞ்சம்
இறையிறை யுருகும் வண்ணம்
சுரும்பமர் சோலை சூழ்ந்த
அரங்கமா கோயில் கொண்ட
கரும்பினை கண்டு கொண்டேன்
கண்ணிணை களிக்கு மாறே

இனிதிரை திவலை மோத
எறியும்தண் பரவை மீதே
தனிகிட தரசு செய்யும்
தாமரை கண்ண னெம்மான்
கனியிரு தனைய செவ்வா
கண்ணணை கண்ட கண்கள்
பனியரும் புதிரு மாலோ
எஞ்செய்கேன் பாவி யேனே

குடதிசை முடியை வைத்து
குணதிசை பாதம் நீட்டி
வடதிசை பின்பு காட்டி
தென்திசை யிலங்கை நோக்கி
கடல்நிற கடவு ளெந்தை
அரவணை துயிலு மாகண்டு
உடலென குருகு மாலோ
எஞ்செய்கே னுலக தீரே

பாயுநீ ரரங்க தன்னுள்
பாம்பணை பள்ளி கொண்ட
மாயனார் திருநன் மார்பும்
மரகத வுருவும் தோளும்
தூய தாமரை கண்களும்
துவரிதழ் பவள வாயும்
ஆயசீர் முடியும் தேசும்
அடியரோர ககல லாமே

பணிவினால் மனம தொன்றி
பவளவா யரங்க னார்க்கு
துணிவினால் வாழ மாட்டா
தொல்லைநெஞ் சேநீ சொல்லாய்
அணியனார் செம்பொ னாய
அருவரை யனைய கோயில்
மணியனார் கிடந்த வாற்றை
மனத்தினால் நினைக்க லாமே

பேசிற்றே பேச லல்லால்
பெருமையொன் றுணர லாகாது
ஆசற்றார் தங்க கல்லால்
அறியலா வானு மல்லன்
மாசற்றார் மனத்து ளானை
வணங்கிநா மிருப்ப தல்லால்
பேசத்தா னாவ துண்டோ
பேதைநெஞ் சேநீ சொல்லாய்

கங்கயிற் புனித மாய
காவிரி நடுவு பாட்டு
பொங்குநீர் பரந்து பாயும்
பூம்பொழி லரங்க தன்னுள்
எங்கள்மா லிறைவ னீசன்
கிடந்ததோர் கிடக்கை கண்டும்
எங்ஙனம் மறந்து வாழ்கேன்
ஏழையே னேழை யேனே

வெள்ளநீர் பரந்து பாயும்
விரிபொழி லரங்க தன்னுள்
கள்ளனார் கிடந்த வாறும்
கமலநன் முகமும் கண்டு
உள்ளமே வலியை போலும்
ஒருவனென் றுணர மாட்டாய்
கள்ளமே காதல் செய்துன்
கள்ளத்தே கழிக்கின் றாயே

குளித்துமூன் றனலை யோம்பும்
குறிகொள தணமை தன்னை
ஒளித்திட்டே னென்க ணில்லை
நின்கணும் பத்த னல்லேன்
களிப்பதென் கொண்டு நம்பீ
கடல்வண்ணா கதறு கின்றேன்
அளித்தென கருள்செய் கண்டாய்
அரங்கமா நகரு ளானே

போதெல்லாம் போது கொண்டுன்
பொன்னடி புனைய மாட்டேன்
தீதிலா மொழிகள் கொண்டுன்
திருக்குணம் செப்ப மாட்டேன்
காதலால் நெஞ்ச மன்பு
கலந்திலே னதுதன் னாலே
ஏதிலே னரங்கர்க்கு எல்லே
எஞ்செய்வான் தோன்றி னேனே

குரங்குகள் மலையை தூ
குளித்துத்தாம் புரண்டி டோ டி
தரங்கநீ ரடைக்க லுற்ற
சலமிலா அணிலம் போலேன்
மரங்கள்போல் வலிய நெஞ்சம்
வஞ்சனேன் நெஞ்சு தன்னால்
அரங்கனார காட்செய் யாதே
அளியத்தே னயர்க்கின் றேனே

உம்பரா லறிய லாகா
ஒளியுளார் ஆனை காகி
செம்புலா லுண்டு வாழும்
முதலைமேல் சீறி வந்தார்
நம்பர மாய துண்டே
நாய்களோம் சிறுமை யோரா
எம்பிராற் காட்செய் யாதே
எஞ்செய்வான் தோன்றி னேனே

ஊரிலேன் காணி யில்லை
உறவுமற் றொருவ ரில்லை
பாரில்நின் பாத மூலம்
பற்றிலேன் பரம மூர்த்தி
காரொளி வண்ண னேஎன்
கண்ணனே கதறு கின்றேன்
ஆருளர களை ணம்மா
அரங்கமா நகரு ளானே

மனத்திலோர் தூய்மை யில்லை
வாயிலோ ரிஞ்சொ லில்லை
சினத்தினால் செற்றம் நோக்கி
தீவிளி விளிவன் வாளா
புனத்துழாய் மாலை யானே
பொன்னிசூழ் திருவ ரங்கா
எனக்கினி கதியென் சொல்லாய்
என்னையா ளுடைய கோவே

தவத்துளார் தம்மி லல்லேன்
தனம்பட தாரி லல்லேன்
உவர்த்தநீர் போல வென்றன்
உற்றவர கொன்று மல்லேன்
துவர்த்தசெவ் வாயி னார்க்கே
துவக்கற துரிச னானேன்
அவத்தமே பிறவி தந்தாய்
அரங்கமா நகரு ளானே

ஆர்த்துவண் டலம்பும் சோலை
அணிதிரு வரங்க தன்னுள்
கார்த்திர ளனைய மேனி
கண்ணனே உன்னை காணும்
மார்க்கமொ றறிய மாட்டா
மனிசரில் துரிச னாய
மூர்க்கனேன் வந்து நின்றேன்
மூர்க்கனேன் மூர்க்க னேனே

மெய்யெல்லாம் போக விட்டு
விரிகுழ லாரில் பட்டு
பொய்யெலாம் பொதிந்து கொண்ட
போட்கனேன் வந்து நின்றேன்
ஐயனே அரங்க னேஉன்
அருளென்னு மாசை தன்னால்
பொய்யனேன் வந்து நின்றேன்
பொய்யனேன் பொய்ய னேனே

உள்ளத்தே யுறையும் மாலை
உள்ளுவா னுணர்வொன் றில்லா
கள்ளத்தேன் நானும் தொண்டா
தொண்டுக்கே கோலம் பூண்டேன்
உள்ளுவா ருள்ளிற் றெல்லாம்
உடனிரு தறிதி யென்று
வெள்கிப்போ யென்னுள் ளேநான்
விலவற சிரித்தி டேனே

தாவியன் றுலக மெல்லாம்
தலைவிளா கொண்ட எந்தாய்
சேவியே னுன்னை யல்லால்
சிக்கென செங்கண் மாலே
ஆவியேஅமுதே என்றன்
ஆருயி ரனைய எந்தாய்
பாவியே னுன்னை யல்லால்
பாவியேன் பாவி யேனே

மழைக்கன்று வரைமு னேந்தும்
மைந்தனேமதுர வாறே
உழைக்கன்றே போல நோக்கம்
உடையவர் வலையுள் பட்டு
உழைக்கின்றேற் கென்னை நோக்கா
தொழிவதேஉன்னை யன்றே
அழைக்கின்றேன் ஆதி மூர்த்தி
அரங்கமா நகரு ளானே

தெளிவிலா கலங்கல் நீர்சூழ்
திருவரங்கங் கத்துள் ளோங்கும்
ஒளியுளார் தாமே யன்றே
தந்தையும் தாயு மாவார்
எளியதோ ரருளு மன்றே
எந்திற தெம்பி ரானார்
அளியன்நம் பையல் என்னார்
அம்மவோ கொடிய வாறே

மேம்பொருள் போக விட்டு
மெய்ம்மையை மிகவு ணர்ந்து
ஆம்பரி சறிந்து கொண்டு
ஐம்புல னகத்த டக்கி
காம்புற தலைசி ரைத்துன்
கடைத்தலை யிருந்துவாழும்
சோம்பரை உகத்தி போலும்
சூழ்புனல் அரங்க தானே

அடிமையில் குடிமை யில்லா
அயல்சது பேதி மாரில்
குடிமையில் கடைமை பட்ட
குக்கரில் பிறப்ப ரேலும்
முடியினில் துளபம் வைத்தாய்
மொய்கழற் கன்பு செய்யும்
அடியரை யுகத்தி போலும்
அரங்கமா நகரு ளானே

திருமறு மார்வநின்னை
சிந்தையுள் திகழ வைத்து
மருவிய மனத்த ராகில்
மாநில துயிர்க ளெல்லாம்
வெருவர கொன்று சுட்டி
டீட்டிய வினைய ரேலும்
அருவினை பயன துய்யார்
அரங்கமா நகரு ளானே

வானுளா ரறிய லாகா
வானவா என்ப ராகில்
தேனுலா துளப மாலை
சென்னியாய் என்ப ராகில்
ஊனமா யினகள் செய்யும்
ஊனகா ரகர்க ளேலும்
போனகம் செய்த சேடம்
தருவரேல் புனித மன்றே

பழுதிலா வொழுக லாற்று
பலசது பேதி மார்கள்
இழிகுல தவர்க ளேலும்
எம்மடி யார்க ளாகில்
தொழுமினீர் கொடுமின் கொள்மின்
என்றுநின் னோடு மொக்க
வழிபட வருளி னாய்போன்ம்
மதிள்திரு வரங்க தானே

அமரவோ ரங்க மாறும்
வேதமோர் நான்கு மோதி
தமர்களில் தலைவ ராய
சாதி தணர்க ளேலும்
நுமர்களை பழிப்ப ராகில்
நொடிப்பதோ ரளவில் ஆங்கே
அவர்கள்தாம் புலையர் போலும்
அரங்கமா நகரு ளானே

பெண்ணுலாம் சடையி னானும்
பிரமனு முன்னை காண்பான்
எண்ணிலா வூழி யூழி
தவஞ்செய்தார் வெள்கி நிற்ப
விண்ணுளார் வியப்ப வந்து
ஆனைக்கன் றருளை யீந்த
கண்ணறா உன்னை யென்னோ
களைகணா கருது மாறே

வளவெழும் தவள மாட
மதுரைமா நகர தன்னுள்
கவளமால் யானை கொன்ற
கண்ணனை அரங்க மாலை
துவளத்தொண் டாய தொல்சீர
தொண்டர டிப்பொ டிசொல்
இளையபுன் கவிதை யேலும்
எம்பிறார் கினிய வாறே
தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்
திருப்பள்ளியெழுச்சி
திருமலையாண்டான் அருளியது
தமேவமத்வா பரவாஸுதேவம்
ரங்கேசயம் ராஜவதர்கணீயம்
ப்ராபோதகீம் யோக்ருத ஸூக்திமாலாம்
பக்தாங்க்ரி ரேணும் பகவந்த மீடே
திருவரங்கப்பெருமாளரையர் அருளியது
மண்டங் குடியென்பர் மாமரையோர் மன்னியசீர
தொண்ட ரடிப்பொடி தொன்னகரம் வண்டு
திணர்த்தவயல் தென்னரங்க தம்மானை பள்ளி
உணர்த்தும் பிரானுதித்த வூர்
ஸ்ரீ தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளிச்செய்த திருப்பள்ளியெழுச்சி

கதிரவன் குணதிசை சிகரம்வ தணைந்தான்
கனவிரு ளகன்றது காலையம் பொழுதாய்
மதுவிரி தொழுகின மாமல ரெல்லாம்
வானவ ரரசர்கள் வந்துவ தீண்டி
எதிர்திசை நிறைந்தன ரிவரொடும் புகுந்த
இருங்களிற் றீட்டமும் பிடியொடு முரசும்
அதிர்தலி லலைகடல் போன்றுள தெங்கும்
அரங்கத்தம் மாபள்ளி யெழுந்தரு ளாயே

கொழுங்கொடி முல்லையின் கொழுமல ரணவி
கூர்ந்தது குணதிசை மாருத மிதுவோ
எழுந்தன மலரணை பள்ளிகொள் ளன்னம்
ஈன்பனி நனைந்தத மிருஞ்சிற குதறி
விழுங்கிய முதலையின் பிலம்புரை பேழ்வாய்
வெள்ளெயி றுறவதன் விடத்தனு கனுங்கி
அழுங்கிய ஆனையி னருந்துயர் கெடுத்த
அரங்கத்தம் மாபள்ளி யெழுந்தரு ளாயே

சுடரொளி பரந்தன சூழ்திசை யெல்லாம்
துன்னிய தாரகை மின்னொளி சுருங்கி
படரொளி பசுத்தனன் பனிமதி யிவனோ
பாயிறு ளகன்றது பைம்பொழில் கமுகின்
மடலிடை கீறிவண் பாளைகள் நாற
வைகறை கூர்ந்தது மாருத மிதுவோ
அடலொளி திகழ்தரு திகிரி தடக்கை
அரங்கத்தம் மாபள்ளி யெழுந்தரு ளாயே

மேட்டிள மேதிகள் தளைவிடு மாயர்கள்
வேய்ங்குழ லோசையும் விடைமணி குரலும்
ஈட்டிய இசைதிசை பரந்தன வயலுள்
இருந்தின சுரும்பினம் இலங்கையர் குலத்தை
வாட்டிய வரிசிலை வானவ ரேறே
மாமுனி வேள்வியை காத்துஅவ பிரதம்
ஆட்டிய அடுதிறல் அயோத்தியெம் மரசே
அரங்கத்தம் மாபள்ளி யெழுந்தரு ளாயே

புலம்பின புட்களும் பூம்பொழில் களின்வாய்
போயிற்று கங்குல் புகுந்தது புலரி
கலந்தது குணதிசை கனைகட லரவம்
களிவண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த
அலங்கல தொடையல்கொண் டடியிணை பணிவான்
அமரர்கள் புகுந்தன ராதலி லம்மா
இலங்கையர் கோன்வழி பாடுசெய் கோயில்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தரு ளாயே

இரவியர் மணிநெடு தேரொடு மிவரோ
இறையவர் பதினொரு விடையரு மிவரோ
மருவிய மயிலின னறுமுக னிவனோ
மருதரும் வசுக்களும் வந்துவ தீண்டி
புரவியோ டாடலும் பாடலும் தேரும்
குமரதண் டம்புகு தீண்டிய வெள்ளம்
அருவரை யனையநின் கோயில்முன் னிவரோ
அரங்கத்தம் மாபள்ளி யெழுந்தரு ளாயே

அந்தர தமரர்கள் கூட்டங்க ளிவையோ
அருந்தவ முனிவரும் மருதரு மிவரோ
இந்திர னானையும் தானும்வ திவனோ
எம்பெரு மானுன் கோயிலின் வாசல்
சுந்தரர் நெருக்கவி சாதரர் நூக்க
இயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவான்
அந்தரம் பாரிட மில்லைமற் றிதுவோ
அரங்கத்தம் மாபள்ளி யெழுந்தரு ளாயே

வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க
மாநிதி கபிலையொண் கண்ணாடி முதலா
எம்பெரு மான்படி மக்கலம் காண்டற்கு
ஏற்பன வாயின கொண்டுநன் முனிவர்
தும்புரு நாரதர் புகுந்தன ரிவரோ
தோன்றின னிரவியும் துலங்கொளி பரப்பி
அம்பர தலத்தில்நின் றகல்கின்ற திருள்போய்
அரங்கத்தம் மாபள்ளி யெழுந்தரு ளாயே

ஏதமில் தண்ணுமை யெக்க தளியே
யாழ்குழல் முழவமோ டிசைதிசை கெழுமி
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
கந்தரு வரவர் கங்குலு ளெல்லாம்
மாதவர் வானவர் சாரண ரியக்கர்
சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான்
ஆதலி லவர்க்குநா ளோலக்க மருள
அரங்கத்தம் மாபள்ளி யெழுந்தரு ளாயே

கடிமலர கமலங்கள் மலர்ந்தன இவையோ
கதிரவன் கனைகடல் முளைத்தனன் இவனோ
துடியிடை யார்சுரி குழல்பிழி துதறி
துகிலுடு தேறினர் சூழ்புன லரங்கா
தொடையொத்த துளவமும் கூடையும் பொலிந்து
தோன்றிய தோள்தொண்ட ரடிப்பொடியென்னும்
அடியனை அளியனென் றருளியுன் னடியார
காட்படு தாய்பள்ளி எழுந்தரு ளாயே
தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்
அமலனாதிபிரான் தனியன்கள்
பெரிய நம்பிகள் அருளியது
ஆபாத சூடமநுபூய ஹரிம்ஸயாநம்
மத்த்யேகவேர துஹிதுர்முதிதாந்தராத்மா
அத்ரஷ்ட்ருதாம் நயநயோர் விஷயாந்தராணாம்
யோநிச்சிகாயமநவைமுநிவாஹநந்தம்
திருமலை நம்பிகள் அருளியது
காட்டவே கண்ட பாத
கமலம்நல் லாடை யுந்தி
தேட்டரு முதர பந்தம்
திருமார்பு கண்டம் செவ்வாய்
வாட்டமில் கண்கள் மேனி
முனியேறி தனிபு குந்து
பாட்டினால் கண்டு வாழும்
பாணர்தாள் பரவி னோமே
திருப்பாணாழ்வார் அருளி செய்த அமலனாதிபிரான்

அமல னாதிபிரா னடியார
கென்னை யாட்படுத்த
விமலன் விண்ணவர் கோன்விரை
யார்பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதி வானவன்
நீள்மதி ளரங்க தம்மான் திரு
கமல பாதம்வ தென்கண்ணி
னுள்ளன வொக்கின்றதே

உவந்த வுள்ளத்தனா யுலகமள தண்டமுற
நிவந்த நீள்முடியன் அன்று நேர்ந்த நிசாசரரை
கவர்ந்த வெங்கணை காகுத்தன் கடியார்பொழில்
அரங்க தம்மான் அரை
சிவந்த ஆடையின் மேல்சென்ற
தாமென் சிந்தனையே

மந்தி பாய்வட வேங்கட மாமலை வானவர்கள்
சந்தி செய்ய நின்றா னரங்க தரவி னணையான்
அந்தி போல்நிற தாடையு மதன்மேல்
அயனை படைத்த தோரெழில்
உந்தி மேலதன் றோஅடி
யேனுள்ள தின்னுயிரே

சதுரமா மதிள்சூழ் ழிலங்கை
கிறைவன் தலைபத்து
உதிர வோட்டிஓர் வெங்கணை
யுய்த்தவ னோத வண்ணன்
மதுரமா வண்டு பாட மாமயி லாடரங்க
தம்மான்திருவயிற்
றுதரப தனமென்
னுள்ளத்துள்நின் றுலாகின்றதே

பாரமாய பழவினை பற்றறுத்து என்னைத்தன்
வாரமாக்கி வைத்தான் வைத்ததன்றி
யென்னுள் புகுந்தான்
கோர மாதவம் செய்தனன்கொ லறியே
னரங்க தம்மான்திரு
வார மார்பதன் றோஅடி
யேனை யாட்கோண்டதே

துண்ட வெண்பிறை யான்துயர்
தீர்த்தவன் அஞ்சிறைய
வண்டுவாழ் பொழில்சூ ழரங்கநகர் மேய வப்பன்
அண்ட ரண்டபகி ரண்டத்தொரு மாநிலம்
எழுமால்வரை முற்றும்
உண்ட கண்டங்கண் டீரடி
யேனை யுய்யக்கொண்டதே

கையி னார்சுரி சங்கன லாழியர் நீள்வரைபோல்
மெய்யனார் துளப விரையார் கமழ்நீள் முடியெம்
ஐயனார் அணியரங்கனா ரரவி
னணைமிசை மேய மாயனார்
செய்யவா யையோ என்னை
சிந்தை கவர்ந்ததுவே

பரிய னாகி வந்த அவுண னுடல்கீண்ட அமரர்க்கு
அரிய ஆதிபிரா னரங்க தமலன் முகத்து
கரிய வாகி புடைபரந்து மிளிர்ந்து
செவ்வரி யோடி நீண்டவ
பெரிய வாய கண்க
ளென்னை பேதைமை செய்தனவே

ஆலமா மரத்தி னிலைமே லொருபாலகனாய்
ஞால மேழு முண்டா னரங்க தரவி னணையான்
கோல மாமணி யாரமும் முத்து தாமமும்
முடிவில்ல தோரெழில்
நீல மேனி யையோ
நிறை கொண்டதென் நெஞ்சினையே

கொண்டல் வண்ணனை
கோவல னாய்வெண்ணெய்
உண்ட வாயன்என்னுள்ளம் கவர்ந்தானை
அண்டர் கோனணி யரங்கன்என் னமுதினை
கண்ட கண்கள்மற் றொன்றினை காணாவே
திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம்
கண்ணி நிண்சிறுத்தாம்பு தனியன்கள்
ஸ்ரீ நாதமுனிகள் அருளிச்செய்தவை
அவிதிதவிஷயாந்தரச்சடாரே
ருபநிஷதாமுபகாநமாத்ரபோக
அபிசகுணவஸா ததேகஸேஷீ
மதுரகவிர் ஹ்ருதயே மமாவிரஸ்து
இருகவிற்ப நேரிசை வெண்பா
வேறொன்றும் நானறியேன் வேதம் தமிழ்செய்த
மாறன் சடகோபன் வண்குருகூர் ஏறுஎங்கள்
வாழ்வாமென் றேத்தும் மதுரகவி யார்எம்மை
ஆள்வார் அவரே யரண்
ஸ்ரீ மதுரகவியாழ்வார் அருளிச்செய்த
கண்ணி நுண்சிறுத்தாம்பு

கண்ணி நுண்சிறு தாம்பினால் கட்டுண்ண
பண்ணி யபெரு மாயன்என் னப்பனில்
நண்ணி தென்குரு கூர்நம்பி யென்றக்கால்
அண்ணி கும்அமு தூறுமென் நாவுக்கே

நாவி னால்நவிற் றின்ப மெய்தினேன்
மேவி னேனவன் பொன்னடி மெய்ம்மையே
தேவு மற்றறி யேன்குரு கூர்நம்பி
பாவி னின்னிசை பாடி திரிவனே

திரித தாகிலும் தேவ பிரானுடை
கரிய கோல திருவுரு காண்பன்நான்
பெரிய வண்குரு கூர்நகர் நம்பிக்காள்
உரிய னாய்அடி யேன்பெற்ற நன்மையே

நன்மை யால்மிக்க நான்மறை யாளர்கள்
புன்மை யா கருதுவ ராதலின்
அன்னை யாயத்த னாயென்னை யாண்டிடும்
தன்மை யான்சட கோபனென் நம்பியே

நம்பி னேன்பிறர் நன்பொருள் தன்னையும்
நம்பி னேன்மட வாரையும் முன்னெல்லாம்
செம்பொன் மாட திருக்குரு கூர்நம்பி
கன்ப னாய்அடி யேஞ்சதிர தேனின்றே

இன்று தொட்டு மெழுமையு மெம்பிரான்
நின்று தன்புக ழேத்த வருளினான்
குன்ற மாட திருக்கு கூர்நம்பி
என்று மென்னை யிகழ்விலன் காண்மினே

கண்டு கொண்டென்னை காரிமா றப்பிரான்
பண்டை வல்வினை பாற்றி யருளினான்
எண்டி சையு மறிய இயம்புகேன்
ஒண்ட மிழ்ச்சட கோப னருளையே

அருள்கொண் டாடு மடியவ ரின்புற
அருளி னானவ் வருமறை யின்பொருள்
அருள்கொண் டாயிர மின்தமிழ் பாடினான்
அருள்கண் டீரிவ் வுலகினில் மிக்கதே

மிக்க வேதியர் வேதத்தி னுட்பொருள்
நிற்க பாடியென் நெஞ்சுள் நிறுத்தினான்
தக்க சீர்ச்சட கோபனென் நம்பிக்குஆ
புக்க காத லடிமை பயனன்றே

பயனன் றாகிலும் பாங்கல ராகிலும்
செயல்நன் றாக திருத்தி பணிகொள்வான்
குயில்நின் றார்ப்பொழில் சூழ்குரு கூர்நம்பி
முயல்கின் றேனுன்றன் மொய்கழற் கன்பையே

அன்பன் தன்னை யடைந்தவர் கட்கெல்லாம்
அன்பன் தென்குரு கூர்நகர் நம்பிக்கு
அன்ப னாய்மது ரகவி சொன்னசொல்
நம்பு வார்ப்பதி வைகுந்தம் காண்மினே
ஸ்ரீ மதுகவியாழ்வார் திருவடிகளே சரணம்



















நாலாயிர திவ்வி பிரபந்தம் பாடல்கள்
திருமங்கையாழ்வார் அருளிச்செய்த
பெரிய திருமொழி
முதற் பத்து

வாடினேன் வாடிவருந்தினேன் மனத்தால்
பெருந்துயரிடும்பையில் பிறந்து
கூடினேன் கூடியிளையவர்த்தம்மோடு
அவர்த்தரும் கலவியேகருதி
ஓடினேன் ஓடியுய்வதோர பொருளால்
உணர்வெனும் பெரும் பதம் திரிந்து
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன்
நாராயணா வென்னும் நாமம்

ஆவியே அமுதே எனநினைந்துருகி
அவரவர்ப்பணைமுலைதுணையா
பாவியேனுணரா தெத்தனைபகலும்
பழுதுபோயொழிந்தனநாள்கள்
தூவிசேரன்னம் துணையொடும்புணரும்
சூழ்புனற்குடந்தையேதொழுது என்
நாவினாலுய்யநான் கண்டுகொண்டேன்
நாராயணாவென்னும் நாமம்

சேமமேவேண்டி தீவினைபெருக்கி
தெரிவைமாருருவமேமருவி
ஊமனார் கண்டகனவிலும்பழுதாய்
ஒழிந்தனகழிந்தவந்நாள்கள்
காமனார் தாதைநம்முடையடிகள்
தம்மடைந்தார்மனத்திருப்பார்
நாமம்நானுய்ய நான்கண்டு கொண்டேன்
நாராயணாவென்னும்நாமம்

வென்றியே வேண்டி வீழ்பொரு கிரங்கி
வேற்கணார் கலவியே கருதி
நின்றவா நில்லா நெஞ்சினையுடையேன்
என்செய்கேன் நெடுவிசும்பணவும்
பன்றியா யன்றுபாரகங்கீண்ட
பாழியா னாழியானருளே
நன்று நானுய்ய நான்கண்டு கொண்டேன்
நாராயணாவென்னும்நாமம்

கள்வனேனானேன்படிறுசெய்திருப்பேன்
கண்டவாதிரிதந்தேனேலும்
தெள்ளியேனானேன்செல்கதிக்கமைந்தேன்
சிக்கெனத்திருவருள்பெற்றேன்
உள்ளெலாமுருகிக்குரல் தழுத்தொழிந்தேன்
உடம்பெலாம்கண்ணநீர்சோர
நள்ளிருளளவும் பகலும் நானழைப்பன்
நாராயணாவென்னும்நாமம்

எம்பிரான் எந்தை என்னுடைச்சுற்றம்
எனக்கரசு என்னுடைவாணாள்
அம்பினால் அரக்கர்வெருக்கொளநெருக்கி
அவருயிர்செகுத்தவெம்மண்ணல்
வம்புலாஞ்சோலைமாமதிள் தஞ்சை
மாமணிக்கோயிலேவணங்கி
நம்பிகாள் உய்யநான் கண்டு கொண்டேன்
நாராயணாவென்னும்நாமம்

இற்பிறப்பறியீர் இவரவரென்னீர்
இன்னதோர்த்தன்மையென்றுணரீர்
கற்பகம்புலவர்களைகணென்றூலகில்
கண்டவாதொண்டரைப்பாடும்
சொற்புருளாளீர்சொல்லுகேன்வம்மின்
சூழ்புனற்குடந்தையேதொழுமின்
நற்பொருள்காண்மின் பாடி நீருய்ம்மின்
நாராயணாவென்னும்நாமம்

கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும்
கருத்துளே திருத்தினேன் மனத்தை
பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை
பெருநிலத்தாருயிர்க்கெல்லாம்
செற்றமேவேண்டித்திரிதருவேன் தவிர்ந்தேன்
செல்கதிக்குய்யுமாறெண்ணி
நற்றுணையாகப்பற்றினேன் அடியேன்
நாராயணாவென்னும்நாமம்

குலம்தரும் செல்வம் தந்திடும் அடியார்
படுதுயராயினவெல்லம்
நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும்
அருளொடுபெருநிலமளிக்கும்
வலந்தரும்மற்றுந்தந்திடும் பெற்ற
தாயினு மாயினசெய்யும்
நலந்தருஞ்சொல்லை நான் கண்டுகொண்டேன்
நாராயணாவென்னும்நாமம்

மஞ்சுலாஞ் சோலை வண்டறை மாநீர்
மங்கையார்வாள் கலிகன்றி
செஞ்சொலாலெடுத்த தெய்வ நன்மாலை
இவைகொண்டு சிக்கெனத்தொண்டீர்
துஞ்சும்போது அழைமின் துயர்வரில் நினைமின்
துயரிலீர் சொல்லிலும் நன்றாம்
நஞ்சுதான் கண்டீர் நம்முடைவினைக்கு
நாராயணாவென்னும் நாமம்

வாலிமாவலத்தொருவனதுடல்கெட
வரிசிலைவளைவித்துஅன்று
ஏலநாறுதண்தடம்பொழிலிடம்பெற
இருந்தநலிமய்யத்துள்
ஆலிமாமுகிலதிர்தர அருவரை
அகடுறமுகடேறி
பீலிமாமயில்நடஞ்செயும்தடஞ்சுனை
பிரிதிசென்றடைநெஞ்சே

கலங்கமாக்கடலரிகுலம்பணிசெய்ய
அருவரையணைகட்டி
இலங்கைமாநகர்ப்பொடிசெய்தவடிகள்தாம்
இருந்தநல்லிமயத்து
விலங்கல்போல்வனவிறலிருஞ்சினத்தன
வேழங்கள்துயர்க்கூர
பிலங்கொள்வாளெயிற்றரியவைதிரிதரு
பிரிதிசென்றடைநெஞ்சே

துடிகொள்ண்ணிடைச்சுரிகுழல் துளங்கெயிற்
றிளங்கொடிதிறத்து ஆயர்
இடிகொள்வெங்குரலினவிடையடர்த்தவன்
இருந்தநல்லிமயத்து
கடிகொள்வேங்கையின்நறுமலரமளியின்
மணியறைமிசைவேழம்
பிடியினோடுவண்டிசைசொலத்துயில்கொளும்
பிரிதிசென்றடைநெஞ்சே

மறங்கொளாளரியுருவெனவெருவர
ஒருவனதகல்மார்வம்
திறந்துவானவர்மணிமுடிபணிதர
இருந்தநல்லிமயத்துள்
இறங்கியேனங்கள்வளைமருப்பிடந்திட
கிடந்தருகெரிவீசும்
பிறங்குமாமணியருவியொடிழிதரு
பிரிதிசென்றடைனெஞ்சே

கரைசெய்மாக்கடல்கிடந்தவன் கனைகழல்
அமரர்கள்தொழுதேத்த
அரைசெய்மேகலையலர்மகளவளொடும்
அமர்ந்தநல்லிமயத்து
வரைசெய்மாக்களிறீளவெதிர்வளர்முளை
அளைமிகுதேன்தோய்த்து
பிரசவாரிதன்னிளம்பிடிக்கருள்செயும்
பிரிதிசென்றடைநெஞ்சே

பணங்களாயிரமுடையநல்லவரவணை
பள்ளிகொள் பரமாவென்று
இணங்கிவானவர்மணிமுடிபணிதர
இருந்தநல்லிமயத்து
மணங்கொள்மாதவிநெடுங்கொடிவிசும்புற
நிமிர்ந்தவைமுகில்பற்றி
பிணங்குபூம்பொழில்நுழைந்துவண்டிசைசொலும்
பிரிதிசென்றடைநெஞ்சே

கார்கொள்வேங்கைகள்கனவரைதழுவிய
கறிவளர்க்கொடிதுன்னி
போர்கொள்வேங்கைகள்புனவரைதழுவிய
பூம்பொழிலிமயத்துள்
ஏர்கொள்பூஞ்சுனைத்தடம்படி தினமலர்
எட்டுமிட்டிமையோர்கள்
பேர்களாயிரம்பரவிநின்றடிதொழும்
பிரிதிசென்றடைநெஞ்சே

இரவுகூர்ந்திருள்பெருகியவரைமுழை
இரும்பசியதுகூர
அரவமாவிக்குமகன்பொழில்தழுவிய
அருவரையிமயத்து
பரமனாதியெம்பனிமுகில்வண்ணனென்று
எண்ணிநின்றிமையோர்கள்
பிரமனோடுசென்றடிதொழும்பெருந்தகை
பிரிதிசென்றடைநெஞ்சே

ஓதியாயிரநாமங்களுணர்ந்தவர்க்கு
உறுதுயரடையாமல்
ஏதமின்றிநின்றருளும்நம்பெருந்தகை
இருந்தநல்லிமயத்து
தாதுமல்கியபிண்டிவிண்டலர்கின்ற
தழல்புரையெழில்நோக்கி
பேதைவண்டுகளெரியெனவெருவரு
பிரிதிசென்றடைநெஞ்சே

கரியமாமுகிற்படலங்கள்கிடந்து
அவைமுழங்கிடகளிறென்று
பெரியமாசுணம்வரையெனப்பெயர்தரு
பிரிதியெம்பெருமானை
வரிகொள்வண்டறைபைம்பொழில்மங்கையர்
கலியனதொலிமாலை
அரியவின்னிசைபாடுநல்லடியவர்க்கு
அருவினையடயாவே

முற்றமூத்துக்கோல்துணையா
முன்னடிநோக்கிவளைந்து
இற்றகால்போல்தள்ளி
மெள்ள இருந்தங்கிளையாமுன்
பெற்றதாய்போல்வந்த
பேய்ச்சி பெருமுலையூடு உயிரை
வற்றவாங்கியுண்ட
வாயான் வதரிவணங்குதுமே

முதுகுபற்றிக்கைத்த
லத்தால் முன்னொருகோலூன்றி
விதிர்விதிர்த்துக்கண்
சுழன்று மேற்கிளைகொண்டிருமி
இதுவென்னப்பர் மூத்தவா
றென்று இளையவரேசாமுன்
மதுவுண்வண்டுபண்கள்
பாடும் வதரிவணங்குதுமே

உறிகள்போல்மெய்ந்நரம்
பெழுந்து ஊன்தளர்ந்துள்ளமெள்கி
நெறியைநோக்கிக்கண்
சுழன்று நின்றுநடுங்காமுன்
அறிதியாகில்நெஞ்சம்
அன்பா யாயிரநாமஞ்சொல்லி
வெறிகொள்வண்டுபண்கள்
பாடும் வதரிவணங்குதுமே

பீளைசோரக்கண்ணி
டுங்கி பித்தெழமூத்திருமி
தாள்கள் நோவத்தம்மில்
முட்டி தள்ளிநடவாமுன்
காளையாகிக்கன்று
மேய்த்து குன்றெடுத்தன்றுநின்றான்
வாளைபாயும்தண்ட
டஞ்சூழ் வதரிவணங்குதுமே

பண்டுகாமரான
வாறும் பாவையர்வாயமுதம்
உண்டவாறும் வாழ்ந்த
வாறும் ஒக்கவுரைத்திருமி
தண்டுகாலாவூன்றி
யூன்றி தள்ளிநடவாமுன்
வண்டுபாடும்தண்டு
ழாயான் வதரிவணங்குதுமே

எய்த்தசொல்லோடீளை
யேங்கி இயிருமியிளைத்துடலம்
பித்தர்ப்போலச்சித்தம்
வேறா பேசியயராமுன்
அத்தனெந்தையாதி
மூர்த்தி ஆழ்கடலைக்கடைந்த
மைத்தசோதியெம்பெ
ருமான் வதரிவணங்குதுமே

பப்பவப்பர்மூத்த
வாறு பாழ்ப்பதுசீத்திரளை
யொப்ப ஐக்கள்போத
வுந்த உன்தமர்க்காண்மினென்று
செப்புநேர்மென்கொங்கை
நல்லார் தாம்சிரியாதமுன்னம்
வைப்பும்நங்கள்வாழ்வு
மானான் வதரிவணங்குதுமே

ஈசிபோமினீங்கி
ரேன்மின் இருமியிளைத்தீர் உள்ளம்
கூசியிட்டீரென்று
பேசும் குவளையங்கண்ணியர்ப்பால்
நாசமானபாசம்
விட்டு நன்னெறிநோக்கலுறில்
வாசம்மல்குதண்டு
ழாயான் வதரிவணங்குதுமே

புலன்கள்நையமெய்யில்
மூத்து போந்திருந்துள்ளமெள்கி
கலங்கவைக்கள்போத
வுந்தி கண்டபிதற்றாமுன்
அலங்கலாயதண்டு
ழாய்கொண்டு ஆயிரநாமம்சொல்லி
வலங்கொள்தொண்டர்ப்பாடி
யாடும் வதரிவணங்குதுமே

வண்டுதண்டேனுண்டுவாழும்
வதரிநெடுமாலை
கண்டல்வேலிமங்கை
வேந்தன் கலியனொலிமாலை
கொண்டுதொண்டர்ப்பாடி
யாட கூடிடில்நீள்விசும்பில்
அண்டமல்லால்மற்ற
வர்க்கு ஓராட்சியறியோமே

ஏனமுனாகியிருநிலமிடந்து
அன்றிணையடியிமையவர்வணங்க
தானவனாகம்தரணியில்புரள
தடஞ்சிலைகுனித்தவெந்தலைவன்
தேனமர்சோலைக்கற்பகம்பயந்த
தெய்வநன்னறுமலர்க்கொணர்ந்து
வானவர்வணங்கும்கங்கையின்கரைமேல்
வதரியாச்சிராமத்துள்ளானே

கானிடையுருவைச்சுடுசரம்துரந்து
கண்டுமுங்கொடுந்தொழிலுரவோன்
ஊனுடையகலத்தடுகணைகுளிப்ப
உயிர்க்கவர்ந்துகந்தவெம்மொருவன்
தேனுடைக்கமலத்தயனொடுதேவர்
சென்றுசென்றிறைஞ்சிட பெருகு
வானிடைமுதுநீர்க்கங்கையிங்கரைமேல்
வதரியாச்சிராமத்துள்ளானே

இலங்கையும்கடலுமடலருந்துப்பின்
இருநிதிக்கிறைவனும் அரக்கர்
குலங்களும்கெடமுன் கொடுந்தொழில்புரிந்த
கொற்றவன் கொழுஞ்சுடர்சுழன்ற
விலங்கலிலுரிஞ்சிமேல்நின்றவிசும்பில்
வெண்துகிற்கொடியெனவிரிந்து
வலந்தருமணிநீர்க்கங்கையின் கரைமேல்
வதரியாச்சிராமத்துள்ளானே

துணிவினியுனக்குச்சொல்லுவன்மனமே
தொழுதெழுதொண்டர்கள்தமக்கு
பிணியொழித்தமரர்ப்பெருவிசும்பருளும்
பேரருளாளனெம்பெருமான்
அணிமலர்க்குழலாரரம்பையர்துகிலும்
ஆரமும்வாரிவந்து அணிநீர்
மணிகொழித்திழிந்த கங்கையின்கரைமேல்
வதரியாச்சிராமத்துள்ளானே

பேயிடைக்கிருந்துவந்தமற்றவள்தன்
பெருமுலைசுவைத்திட பெற்ற
தாயிடைக்கிருத்தலஞ்சுவனென்று
தளர்ந்திட வளர்ந்தவெந்தலைவன்
சேய்முகட்டுச்சியண்டமுஞ்சுமந்த
செம்பொன்செய்விலங்கலிலிலங்கு
வாய்முகட்டிழிந்தகங்கையின்கரைமேல்
வதரியாச்சிராமத்துள்ளானே

தேரணங்கல்குல்செழுங்கையற்கண்ணி
திறத்து ஒருமறத்தொழில்புரிந்து
பாரணங்கிமிலேறேழுமுன்னடர்த்த
பனிமுகில்வண்ணனெம்பெருமான்
காரணந்தன்னால்கடும்புனல்கயத்த
கருவரைபிளவெழக்குத்தி
வாரணங்கொணர்ந்தகங்கையின்கரைமேல்
வதரியாச்சிராமத்துள்ளானே

வெந்திறல்களிறும்வேலைவாயமுதும்
விண்ணொடுவிண்ணவர்க்கரசும்
இந்திரற்கருளியெமக்குமீந்தருளும்
எந்தையெம்மடிகளெம்பெருமான்
அந்தரத்தமரரடியிணைவணங்க
ஆயிரமுகத்தினாலருளி
மந்தரத்திழிந்தகங்கையின்கரைமேல்
வதரியாச்சிராமத்துள்ளானே

மான்முனிந்தொருகால்வரிசிலைவளைத்த
மன்னவன்பொன்னிறத்துரவோன்
ஊன்முனிந்தவனதுடலிருபிளவா
உகிர்நுதிமடுத்து அயனரனை
தான்முனிந்திட்ட வெந்திறல்சாபம்
தவிர்த்தவன் தவம்புரிந்துயர்ந்த
மாமுனிகொணர்ந்தகங்கையின்கரைமேல்
வதரியாச்சிராமத்துள்ளானே

கொண்டல்மாருதங்கள்குலவரைதொகுநீர
குரைகடலுலகுடனனைத்தும்
உண்டமாவயிற்றோனொண் சுடரேய்ந்த
உம்பருமூழியுமானான்
அண்டமூடறுத்தன்றந்தரத்திழிந்து
அங்கவனியாளலமர பெருகு
மண்டுமாமணிநீர்க்கங்கையின் கரைமேல்
வதரியாச்சிராமத்துள்ளானே

வருந்திரைமணிநீர்க்கங்கையின் கரைமேல்
வதரியாச்சிராமத்துள்ளானை
கருங்கடல்முந்நீர்வண்ணனையெண்ணி
கலியன்வாயொலிசெய்தபனுவல்
வரஞ்செய்தவைந்துமைந்தும்வல்லார்கள்
வானவருலகுடன் மருவி
இருங்கடலுலகமாண்டுவெண்குடைக்கீழ்
இமையவராகுவர்தாமே

கலையும்கரியும்பரிமாவும்
திரியும்கானம்கடந்துபோய்
சிலையும்கணையும்துணையாக
சென்றான்வென்றிச்செறுக்களத்து
மலைகொண்டலைநீரணைகட்டி
மதிள்நீரிலங்கைவாளரக்கர்
தலைவன் தலைபத்தறுத்துகந்தான்
சாளக்கிராமமடைநெஞ்சே

கடம்சூழ்க்கரியும்பரிமாவும் ஒலிமாந்தேரும்காலாளும்
உடன்சூழ்ந்தெழுந்தகடியிலங்கை பொடியவடிவாய்ச்சரம்துரந்தான்
இடம்சூழ்ந்தெங்குமிருவிசும்பில் இமையோர்வணங்கமணம்கமழும்
தடம்சூழ்ந்தெங்குமழகாய சாளக்கிராமமடைநெஞ்சே

உலவுதிரையும்குலவரையும் ஊழிமுதலாவெண்திக்கும்
நிலவும்சுடருமிருளுமாய் நின்றான்வென்றிவிறலாழி
வலவன் வானோர்த்தம்பெருமான் மருவாவரக்கர்க்கெஞ்ஞான்றும்
சலவன் சலம்சூழ்ந்தழகாய சாளக்கிராமமடைநெஞ்சே

ஊராங்குடந்தையுத்தமன் ஒருகாலிருகால்சிலைவளைய
தேராவரக்கர்த்தேர்வெள்ளம்செற்றான் வற்றாவருபுனல்சூழ்
பேரான் பேராயிரமுடையான் பிறங்குசிறைவண்டறைகின்ற
தாரான் தாராவயல்சூழ்ந்த சாளக்கிராமமடைநெஞ்சே

அடுத்தார்த்தெழுந்தாள்பிலவாய்விட்டலற அவள்மூக்கயில்வாளால்
விடுத்தான் விளங்குசுடராழி விண்ணோர்ப்பெருமான் நண்ணார்முன்
கடுத்தார்த்தெழுந்தபெருமழையை கல்லொன்றேந்தியினநிரைக்கா
தடுத்தான் தடம்சூழ்ந்தழகாய சாளக்கிராமமடைநெஞ்சே

தாயாய்வந்தபேயுயிரும் தயிரும்விழுதுமுடனுண்ட
வாயான் தூயவரியுருவிற்குறளாய்ச்சென்று மாவலையை
ஏயானிரப்ப மூவடிமண்ணின்றெதாவென்று உலகேழும்
தாயான் காயாமலர்வண்ணன் சாளக்கிராமமடைநெஞ்சே

ஏனோரஞ்சவெஞ்சமத்துள் அரியாய்ப்பரியவிரணியனை
ஊனாரகலம்பிளவெடுத்த ஒருவன்தானேயிருசுடராய்
வானாய்த்தீயாய்மாருதமாய் மலையாயலைநீருலகனைத்தும்
தானாய் தானுமானாந்தன் சாளக்கிராமமடைநெஞ்சே

வெந்தாரென்பும்சுடுநீறும் மெய்யில்பூசிக்கையகத்து ஓர்
சந்தார் தலைகொண்டுலகேழும் திரியும்பெரியோந்தான்சென்று என்
எந்தாய் சாபம்தீரென்ன இலங்கமுதநீர்த்திருமார்பில்
தந்தான் சந்தார்ப்பொழில்சூழ்ந்த சாளக்கிராமமடைநெஞ்சே

தொண்டாமினமுமிமையோரும் துணைநுல்மார்பினந்தணரும்
அண்டாவெமக்கேயருளாயென்று அணயும்கோயிலருகெல்லாம்
வண்டார்ப்பொழிலின்பழனத்து வயலினயலேகயல்பாய
தண்டாமரைகள்முகமலர்த்தும் சாளக்கிராமமடைநெஞ்சே

தாராவாரும்வயல்சூழ்ந்த சாளக்கிராமத்தடிகளை
காரார்ப்புறவின்மங்கைவேந்தன் கலியனொலிசெய் தமிழ்மாலை
ஆராருலகத்தறிவுடையார் அமரர்நன்னாட்டரசாள
பேராயிரமுமோதுமிங்கள் அன்றியிவையேபிதற்றுமினே

வாணிலாமுறுவல்சிறுனுதல்பெருந்தோள் மாதரார்வனமுலைப்பயனே
பேணினேன் அதனைப்பிழையெனக்கருதி பேதையேன்பிறவிநோயறுப்பான்
ஏணிலேனிருந்தேனெண்ணினேனெண்ணி இளையவர்க்கலவியிந்திறத்தை
நாணினேன் வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்

சிலம்படியுருவிற்கருநெடுங்கண்ணார் திறத்தனாயறத்தயேமறந்து
புலம்படிந்துண்ணும் போகமேபெருக்கி போக்கினேன் பொழுதினைவாளா
அலம்புரிதடக்கையாயனேமாயா வானவர்க்கரசனே வானோர்
நலம்புரிந்திறைஞ்சுன்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்

சூதினைப்பெருக்கிக்களவினைத்துணிந்து சுரிகுழல்மடந்தையர்த்திறத்து
காதலேமிகுத்துக்கண்டவாதிரிந்ததொண்டனேன் நமன்தமர்செய்யும்
வேதனைக்கொடுங்கிநடுங்கினேன் வேலைவெண்டிரையலமரக்கடைந்த
நாதனேவந்துன் திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்

வம்புலாங்கூந்தல்மனைவியைத்துறந்து பிறர்ப்பொருள்தாரமென்றிவற்றை
நம்பினாரிறந்தால்நமன் தமர்ப்பற்றி எற்றிவைத்து எரியெழுகின்ற
செம்பினாலியன்றபாவையை பாவீ தழுவெனமொழிவதர்க்கஞ்சி
நம்பனே வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்

இடும்பையாலடர்ப்புண்டிடுமினோதுற்றென்னு இரந்தவர்க்கில்லையேயென்று
நெடுஞ்சொலால்மனுத்தநீசனேனந்தோ நினைக்கிலேன் வினைப்பயன் தன்னை
கடுஞ்சொலார்க்கடியார்க்காலனார் தமரால் படுவதோர் கொடுமிறைக்கஞ்சி
நடுங்கிநான்வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்

கோடியமனத்தால்சினத்தொழில்புரிந்து திரிந்துநாயினத்தொடுந்திளைத்திட்டு
ஓடியுமுழன்றுமுயிர்களேகொன்றேன் உணர்விலேனாதலால் நமனார்
பாடியைப்பெரிதும் பரிசழித்திட்டேன் பரமனே பாற்கடல்கிடந்தாய்
நாடிநான்வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்

நெஞ்சினால்நினைந்தும்வாயினால்மொழிந்தும் நீதியல்லாதனசெய்தும்
துஞ்சினார்செல்லுந்தொன்னெறிகேட்டே துளங்கினேன்விளங்கனிமுனிந்தாய்
வஞ்சனேடியேன்நெஞ்சினிற்பிரியா வானவா தானவர்க்கென்றும்
நஞ்சனே வந்துன்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்

ஏவினார்க்கலியார்னலிகவென்றென்மேல் எங்ஙணேவாழுமாறு ஐவர்
கோவினார்செய்யுக்கொடுமையைமடித்தேன் குறுங்குடிநெடுங்கடல்வண்ணா
பாவினாரின்சொல்பன்மலர்க்கொண்டு உன்பாதமேபரவிநான் பணிந்து என்
நாவினால்வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்

ஊனிடைச்சுவர்வைத்தென்புதூண்நாட்டி உரோமம் வேய்ந்தொன்பதுவாசல்
தானுடைக்குரம்பைப்பிரியும்போது உன்றன்சரணமேசரணமென்றிருந்தேன்
தேனுடைக்கமலத்திருவினுக்கரசே திரைகொள்மாந்டுங்கடற்கிடந்தாய்
நானுடைத்தவத்தால்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்

ஏதம்வந்தணுகாவண்ணநாமெண்ணி யெழுமினோதொழுதுமென்று இமையோர்
நாதன்வந்திரைஞ்சும் நைமிசாரணியத்தெந்தையைச்சிந்தையுள்வைத்து
காதலேமிகுத்தகலியன்வாயொலிசெய் மாலைதாம்கற்றுவல்லார்கள்
ஓதநீர்வையகமாண்டுவெண்குடைக்கீழ் உம்பருமாகுவர்த்தாமே

அங்கண்ஞாலமஞ்ச அங்கோராளரியாய் அவுணன்
பொங்கவாகம்வள்ளுகிரால் போழ்ந்தபுனிதனிடம்
பைங்கணானைக்கொம்புகொண்டு பத்திமையால் அடிக்கீழ
செங்கணாளியிட்டிறைஞ்சும் சிங்கவேள்குன்றமே

அலைத்தபேழ்வாய் வாளெயிற்றோர்க்கோளரியாய் அவுணன்
கொலைக்கையாளன்நெஞ்சிடந்த கூருகிராளனிடம்
மலைத்தசெல்சாத்தெறிந்தபூசல் வன்துடிவாய்கடுப்ப
சிலைக்கைவேடர்த்தெழிப்பறாத சிங்கவேள்குன்றமே

ஏய்ந்தபேழ்வாய் வாளெயிற்றோர்க்கோளரியாய் அவுணன்
வாய்ந்தவாகம்வள்ளுகிரால் வகிர்ந்தவம்மானதனிடம்
ஓய்ந்தமாவுமுடைந்தகுன்றும் அன்றியும் நின்றழலால்
தேய்ந்தவேயுமல்லதில்லா சிங்கவேள்குன்றமே

எவ்வம்வெவ்வேல்பொன்பெயரோன் ஏதலினின்னுயிரை
வவ்வி ஆகம்வள்ளுகிரால் வகிர்ந்தவம்மானதிடம்
கவ்வுநாயும்கழுகும் உச்சிபோதொடுகால்சுழன்று
தெய்வமல்லால்செல்லவொண்ணா சிங்கவேள்குன்றமே

மென்றபேழ்வாய் வாளெயிற்றோர்க்கோளரியாய் அவுணன்
பொன்றவாகம்வள்ளுகிரால் போழ்ந்தபுனிதனிடம்
நின்றசெந்தீமொண்டுசூறை நீள்விசும்பூடிரிய
சென்றுகாண்டற்கரியகோயில் சிங்கவேள்குன்றமே

எரிந்தபைங்கணிலங்குபேழ்வாய் எயிற்றொடிதெவ்வுருவென்று
இரிந்துவானோர் கலங்கியோட இருந்தவம்மானதிடம்
நெரிந்தவேயின் முழையுள்நின்று நீணெறிவாயுழுவை
திரிந்தவானைச்சுவடுபார்க்கும் சிங்கவேள்குன்றமே

முனைத்தசீற்றம்விண்சுடப்போய் மூவுலகும்பிறவும்
அனைத்துமஞ்சவாளரியாய் இருந்தவம்மானதிடம்
கனைத்ததீயும்கல்லுமல்லா வில்லுடைவேடருமாய்
தினைத்தனையும்செல்லவொண்ணா சிங்கவேள்குன்றமே

நாத்தழும்பநான்முகனும் ஈசனுமாய்முறையால்
ஏத்த அங்கோராளரியாய் இருந்தவம்மானதிடம்
காய்த்தவாகைநெற்றொலிப்ப கல்லதர்வேய்ங்கழைபோய்
தேய்த்ததீயால்விண்சிவக்கும் சிங்கவேள்குன்றமே

நல்லைநெஞ்சே நாந்தொழுதும் நம்முடைநம்பெருமான்
அல்லிமாதர் புல்கநின்ற ஆயிரந்தோளனிடம்
நெல்லிமல்கிக்கல்லுடை புல்லிலையார்த்து அதர்வா
சில்லிசில்லென்றொல்லறாத சிங்கவேள்குன்றமே

செங்கணாளிட்டிறைஞ்சும் சிங்கவேள்குன்றுடைய
எங்களீசனெம்பிரானை இருந்தமிழ்ற்புலவன்
மங்கையாளன்மன்னுதொல்சீர் வண்டறை தார்க்கலியன்
செங்கையாளன் செஞ்சொல்மாலை வல்லவர்த்தீதிலரே

கொங்கலர்ந்தமலர்க்குருந்தமொசித்த கோவலனெம்பிரான்
சங்குதங்குதடங்கடல்துயில்கொண்ட தாமரைக்கண்ணினன்
பொங்குபுள்ளினைவாய்பிளந்த புராணர்த்தம்மிடம் பொங்குநீர
செங்கயல்திளைக்கும்சுனை திருவேங்கடமடை நெஞ்சமே

பல்லியாவதுபாற்கடலரங்கம் இரங்கவன்பேய்முலை
பிள்ளையாயுயிருண்டவெந்தை பிரானவன்பெருகுமிடம்
வெள்ளியான் கரியான் மணிநிறவண்ணனென்றெண்ணி நாடொறும்
தெள்ளியார்வணங்கும்மலை திருவேங்கடமடைநெஞ்சமே

நின்றமா மருதிற்றுவீழ நடந்தநின்மலன்நேமியான்
என்றும்வானவர்க்கைதொழும் இணைத்தாமரையடியெம்பிரான்
கன்றிமாரிபொழிந்திட கடிதானிரைக்கிடர் நீக்குவான்
சென்றுகுன்றமெடுத்தவன் திருவேங்கடமடைநெஞ்சமே

பார்த்தற்காயன்றுபாரதம்கைசெய்திட்டு வென்றபரஞ்சுடர்
கோத்தங்காயர் தம்பாடியில் குரவைபிணைந்தவெங்கோவலன்
ஏத்துவார்த்தம்மனத்துள்ளான் இடவெந்தைமேவியவெம்பிரான்
தீர்த்தநீர்த்தடஞ்சோலைசூழ் திருவேங்கடமடைநெஞ்சமே

வண்கையானவுணர்க்குநாயகன் வேள்வியில்சென்றுமாணியாய்
மண்கையாலிரந்தான் மராமரமேழுமெய்தவலத்தினான்
எண்கையானிமயத்துள்ளான் இருஞ்சோலைமேவியவெம்பிரான்
திண்கைம்மாதுயரதீர்த்தவன் திருவேங்கடமடைநெஞ்சமே

எண்டிசைகளுமேழுலகமும்வாங்கி பொன்வயிற்றில்பெய்து
பண்டோ ராலிலைப்பள்ளிகொண்டவன் பான்மதிக்கிடர்த்தீர்த்தவன்
ஒண்டிறலவுணனுரத்துகிர்வைத்தவன்ஒள்ளெயிற்றொடு
திண்டிறலரியாயவன் திருவேங்கடமடைநெஞ்சமே

பாருநீரெரிகாற்றினொடு ஆகாசமுமிவையாயினான்
பேருமாயிரம் பேசநின்ற பிறப்பிலிபெருகுமிடம்
காரும்வார்ப்பனிநீள்விசும்பிடை சோருமாமுகில்தோய்தர
சேரும்வார்ப்பொழில்சூழ் எழில்திருவேங்கடமடைநெஞ்சமே

அம்பரமனல்கால்நிலம் சலமாகிநின்றவமரர்க்கோன்
வம்புலாமலர்மேல் மலிமட மங்கை தன்கொழுநனவன்
கொம்பினன்னவிடை மடக்குறமாதர் நீளிதணந்தொறும்
செம்புனமவைகாவல்கொள் திருவேங்கடமடைநெஞ்சமே

பேசுமிந்திருநாமமெட்டெழுத்தும் சொல்லிநின்று பின்னரும்
பேசுவார்த்தம்மையுய்யவாங்கி பிறப்பறுக்கும் பிரானிடம்
வாசமாமலர்நாறுவார் பொழில்சூழ்தருமுலகுக்கெல்லாம்
தேசமாய்த்திகழும்மலை திருவேங்கடமடைநெஞ்சமே

செங்கயல்திளைக்கும் சுனை திருவேங்கடத்துறைசெல்வனை
மங்கையர்த்தலைவங்கலிகன்றி வண்டமிழ்ச்செஞ்சொல்மாலைகள்
சங்கையின்றித்தரித்துரைக்கவல்லார்கள் தஞ்சமதாகவே
வங்கமாகடல்வையம்காவலராகி வானுலகாள்வரே

தாயேதந்தையென்றும் தாரமேகிளைமக்களென்றும்
நோயேபட்டொழிந்தேன் உன்னைக்காண்பதோராசையினால்
வேயேய்பூம்பொழில்சூழ் விரையார் திருவேங்கடவா
நாயேன்வந்தடைந்தேன் நல்கியாளென்னைக்கொண்டருளே

மானேய்கண்மடவார் மயக்கில்பட்டு மாநிலத்து
நானேநானாவித நரகம்புகும்பாவம்செய்தேன்
தேனேய்பூம்பொழில்சூழ் திருவேங்கடமாமலை என்
ஆனாய் வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே

கொன்றேன்பல்லுயிரை குறிக்கோளொன்றிலாமையினால்
என்றேனுமிரந்தார்க்கு இனிதாகவுரைத்தறியேன்
குன்றேய்மேகமதிர் குளிர்மாமலைவேங்கடவா
அன்றேவந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே

குலந்தானெத்தனையும் பிறந்தேயிறந்தெய்த்தொழிந்தேன்
நலந்தானொன்றுமிலேன் நல்லதோரறம்செய்துமிலேன்
நிலம்தோய்நீள்முகில்சேர் நெறியார்த்திருவேங்கடவா
அலந்தேன்வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே

எப்பாவம்பலவும் இவையேசெய்திளைத்தொழிந்தேன்
துப்பா நின்னடியே தொடர்ந்தேத்தவும்கிற்கின்றிலேன்
செப்பார்த்திண்வரைசூழ் திருவேங்கடமாமலை என்
அப்பா வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே

மன்னாய்நீரெரிகால் மஞ்சுலாவுமாகாசமுமாம்
புண்ணாராக்கைதன்னுள் புலம்பித்தளர்ந்தெய்த்தொழிந்தேன்
விண்ணார்நீள்சிகர விரையார்த்திருவேங்கடவா
அண்ணா வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே

தெரியென்பாலகனா பலதீமைகள்செய்துமிட்டேன்
பெரியேனாயின பின் பிறர்க்கேயுழைத்தேழையானேன்
கரிசேர்ப்பூம்பொழில்சூழ் கனமாமலைவேங்கடவா
அரியே வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே

நோற்றேன்பல்பிறவி உன்னைக்காண்பதோராசையினால்
ஏற்றேனிப்பிறப்பே யிடருற்றனனெம்பெருமான்
கோல்தேன் பாய்ந்தொழுகும் குளிர்சோலைசூழ்வேங்கடவா
ஆற்றேன்வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே

பற்றேலொன்றுமிலேன் பாவமேசெய்துபாவியானேன்
மற்றேலொன்றறியேன் மாயனே எங்கள்மாதவனே
கல்தேன்பாய்ந்தொழுகும் கமலச்சுனைவேங்கடவா
அற்றேன்வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே

கண்ணாயேழுலகுக்கு உயிராயவெங்கார்வண்ணனை
விண்ணோர்த்தாம்பரவும் பொழில்வேங்கடவேதியனை
திண்ணார்மாடங்கள் சூழ் திருமங்கையர்க்கோன்கலியன்
பண்ணார்ப்பாடல்பத்தும் பயில்வார்க்கில்லைபாவங்களே

கண்ணார்க்கடல்சூழ் இலங்கைக்கிறைவந்தன்
திண்ணாகம்பிளக்க சரம்செலவுய்த்தாய்
விண்ணோர்த்தொழும் வேங்கடமாமலைமேய
அண்ணா அடியேன் இடரைக்களையாயே

இலங்கைப்பதிக்கு அன்றீறையாய அரக்கர்
குலம்கெட்டவர்மாள கொடிப்புள்திரித்தாய்
விலங்கல்குடுமி திருவேங்கடம்மேய
அலங்கல்துளபமுடியாய் அருளாயே

நீரார்க்கடலும் நிலனும்முழுதுண்டு
ஏராலமிளந்தளிர்மேல் துயிலெந்தாய்
சீரார் திருவேங்கடமாமலைமேய
ஆராவமுதே அடியேற்கருளாயே

உண்டாயுறிமேல் நறுனெய்யமுதாக
கொண்டாய்குறளாய் நிலமீரடியாலே
விண்தோய்சிகர திருவேங்கடம்மேய
அண்டா அடியேனுக்கு அருள்புரியாயே

தூணாயதனூடு அரியாய்வந்துதோன்றி
பேணாவவுணனுடலம் பிளந்திட்டாய்
சேணார் திருவேங்கடமாமலைமேய
கோணாகணையாய் குறிக்கொள்ளெனைநீயே

மன்னா இம்மனிசப்பிறவியைநீக்கி
தன்னாகி தன்னினருள்செய்யும்தலைவன்
மின்னார்முகில்சேர் திருவேங்கடம்மேய
என்னானையென்னப்பன் என்னெஞ்சிலுளானே

மானேய்மடநோக்கிதிறத்து எதிர்வந்த
ஆனேழ்விடைசெற்ற அணிவரைத்தோளா
தேனே திருவேங்கடமாமலைமேய
கோனே என்மனம் குடிகொண்டிருந்தாயே

சேயனணியன் எனசிந்தையுள்நின்ற
மாயன் மணிவாளொளி வெண்டரளங்கள்
வேய்விண்டுதிர் வேங்கடமாமலைமேய
ஆயனடியல்லது மற்றறையேனே

வந்தாயென்மனம்புகுந்தாய் மன்னிநின்றாய்
நந்தாதகொழுஞ்சுடரே யெங்கள் நம்பீ
சிந்தாமணியே திருவேங்கடம்மேய
எந்தாய் இனியானுன்னை யென்றும் விடேனே

வில்லார்மலி வேங்கடமாமலைமேய
மல்லார்த்திரடோ ள் மணிவண்ணனம்மானை
கல்லார்த்திரடோ ள் கலியன்சொன்னமாலை
வல்லாரவர் வானவராகுவர்த்தாமே

வானவர் தங்கள் சிந்தை போலேன்
நெஞ்சமே இனிதுவந்து மாதவ
மானவர் தங்கள் சிந்தை யமர்ந்துறை கின்றவெந்தை
கானவரிடு காரகிற்புகை யோங்கு வேங்கடம் மேவி மாண்குறள்
ஆன அந்தணற் கின்றடி மைத்தொழில் பூண்டாயே

உறவு சுற்றமென் றொன்றிலா வொருவன்
உகந்தவர் தம்மை மண்மிசை
பிறவி யேகெடு பானது கண்டென் நெஞ்சமென்பாய்
குறவர் மாதர்க ளோடு வண்டு
குறிஞ்சி மருளிசை பாடும் வேங்கடத்து
அறவ நாயகற் கின்றடி மைத்தொழில் பூண்டாயே

இண்டை யாயின கொண்டு தொண்டர்கள்
ஏத்து வாருற வோடும் வானிடை
கொண்டு போயிடவு மதுகண்டென் நெஞ்சமென்பாய்
வண்டு வாழ்வட வேங்கடமலை
கோயில் கொண்டத னோடும் மீமிசை
அண்ட மாண்டிரு பாற்கடி மைத்தொழில் பூண்டாயே

பாவி யாதுசெய் தாயென் னெஞ்சமே
பண்டு தொண்டுசெய் தாரை மண்மிசை
மேவி யாட்கொண்டு போய்வி சும்பேற வைக்குமெந்தை
கோவி நாயகன் கொண்ட லுந்துயர்
வேங்க டமலை யாண்டு வானவர்
ஆவி யாயிரு பாற்கடி மைத்தொழில் பூண்டாயே

பொங்கு போதியும் பிண்டி யுமுடை
புத்தர் நோன்பியர் பள்ளி யுள்ளுறை
தங்கள் தேவரும் தாங்களு மேயாக என்நெஞ்சமென்பாய்
எங்கும் வானவர் தான வர்நிறை
தேத்தும் வேங்கடம் மேவி நின்றருள்
அங்க ணாயகற் கின்றடி மைத்தொழில் பூண்டாயே

துவரி யாடையர் மட்டை யர்சமண்
தொண்டர் கள்மண்டி யுண்டு பின்னரும்
தமரும் தாங்களுமே தடிக்கஎன் நெஞ்சமென்பாய்
கவரி மாக்கணம் சேரும் வேங்கடம்
கோயில் கொண்டகண் ணார்வி சும்பிடை
அமர நாயகறகு இன்றடிமைத்தொழில் பூண்டாயே

தருக்கி னால்சமண் செய்து சோறுதண்
தயிரினால்திரளைமி டற்றிடை
நெருக்கு வார்அல கணது கண்டென் நெஞ்சமென்பாய்
மருட்கள் வண்டுகள் பாடும் வேங்கடம்
கோயில் கொண்டத னோடும் வானிடை
அருக்கன் மேவிநிற் பாற்கடி மைத்தொழில் பூண்டாயே

சேயனணியன் சிறியன் பெரிய னென்பது
சிலர்ப்பேச கேட்டிரு
தேஎன் னெஞ்சமென் பாய்என கொன்று சொல்லாதே
வேய்கள் நின்றுவெண் முத்த மேசொரி
வேங்க டமலை கோயில் மேவிய
ஆயர் நாயகற் கின்றடி மைத்தொழில் பூண்டாயே

கூடி யாடி யுரைத்ததே யுரைத்தாய்என்
நெஞ்சமென் பாய் துணிந்துகேள்
பாடி யாடி பலரும் பணிந்தேத்தி காண்கிலா
ஆடு தாமரை யோனு மீசனும்
அமர் கோனும்நின் றேத்தும்வேங்கடத்து
ஆடு கூத்தனு கின்றடி மைத்தொழில் பூண்டாயே

மின்னு மாமுகில் மேவு தண்திரு வேங்க
டமலை கோயில் மேவிய
அன்னமாய் நிகழ்ந்த அமரர் பெருமானை
கன்னி மாமதிள் மங்கை யர்க்கலி
கன்றி யிந்தமி ழாலு ரைத்த இம்
மன்னு பாடல்வல் லார்க்கிட மாகும் வானுலகே

காசை யாடை மூடியோடி காதல்செய் தானவனூர்
நாச மாக நம்பவல்ல நம்பி நம்பெருமான்
வேயி னன்ன தோள்மடவார் வெண்ணெயுண் டானிவனென்று
ஏச நின்ற வெம்பெருமா னெவ்வுள் கிடந்தானே

தைய லாள்மேல் காதல்செய்த தானவன் வாளரக்கன்
பொய்யி லாத பொன்முடிக ளொன்பதோ டொன்றும்அன்று
செய்த வெம்போர் தன்னி லங்கோர் செஞ்சர தாலுருள
எய்த வெந்தை யெம்பெருமா னெவ்வுள் கிடந்தானே

முன்னோர் தூது வானரத்தின் வாயில் மொழிந்துஅரக்கன்
மன்னூர் தன்னை வாளியினால் மாள முனிந்து அவனே
பின்னோர் தூத னாதிமன்னர காகி பெருநிலத்தார்
இன்னார் தூத னெனநின்றா னெவ்வுள் கிடந்தானே

பந்த ணைந்த மெல்விரலாள் பாவைதன் காரணத்தால்
வெந்தி றலே றேழும்வென்ற வேந்தன் விரிபுகழ்சேர்
நந்தன் மைந்த னாகவாகும் நம்பி நம்பெருமான்
எந்தை தந்தை தம்பெருமானெவ்வுள் கிடந்தானே

பால நாகி ஞாலமேழு
முண்டுபண் டாலிலைமேல்
சால நாளும் பள்ளிகொள்ளும்
தாமரை கண்ணன்எண்ணில்
நீல மார்வண் டுண்டுவாழும்
நெய்தல தண்கழனி
ஏல நாறும் பைம்புறவி
லெவ்வுள் கிடந்தானே

சோத்த நம்பி யென்றுதொண்டர் மிண்டி தொடர்ந்தழைக்கும்
ஆத்தனம்பி செங்கணம்பி யாகிலும் தேவர்க்கெல்லாம்
மூத்த நம்பி முக்கணம்பி யென்று முனிவர்த்தொழு
தேத்தும் நம்பி யெம்பெருமா னெவ்வுள் கிடந்தானே

திங்க ளப்பு வானெரிகாலாகி திசைமுகனார்
தங்க ளப்பன் சாமியப்பன் பாக திருந்தவண்டுண்
தொங்க லப்பு நீண்முடியான் சூழ்கழல் சூடநின்ற
எங்க ளப்ப னெம்பெருமான் எவ்வுள் கிடந்தானே

முனிவன் மூர்த்தி மூவராகி
வேதம் விரித்துரைத்த
புனிதன் பூவை வண்ணனண்ணல்
புண்ணியன் விண்ணவர்கோன்
தனியன் சேயன் தானொருவன்
ஆகிலும் தன்னடியார்க்கு
இனியன் எந்தை யெம்பெருமான்
எவ்வுள் கிடந்தானே

பந்தி ருக்கும் மெல்விரலாள்
பாவை பனிமலராள்
வந்தி ருக்கும் மார்வன்நீல
மேனி மணிவண்ணன்
அந்த ரத்தில் வாழும் வானோர்
நாயக னாயமைந்த
இந்தி ரற்கும் தம்பெருமா
னெவ்வுள் கிடந்தானே

இண்டை கொண்டு தொண்டரேத்த
எவ்வுள் கிடந்தானை
வண்டு பாடும் பைபுறவில்
மங்கையர் கோன்கலியன்
கொண்ட சீரால் தண்டமிழ்செய்
மாலையீ ரைந்தும்வல்லார்
அண்ட மாள்வ தாணையன்றே
லாள்வ ரருலகே

விற்பெரு விழவும் கஞ்சனும் மல்லும்
வேழமும் பாகனும் வீழ
செற்றவன் றன்னை புரமெரி செய்த
சிவனுறு துயர்களை தேவை
பற்றலர் வீ கோல்கையில் கொண்டு
பார்த்தன்றன் தேர்முன்நின் றானை
சிற்றவை பணியால் முடிதுற தானை
திருவல்லி கேணிக்கண் டேனே

வேதத்தை வே தின்சுவை பயனை
விழுமிய முனிவர்கள் விழுங்கும்
கோதிலின் கனியை நந்தனார் களிற்றை
குவல தோர்தொழு தேத்தும்
ஆதியை யமுதை யென்னை யாளுடை
அப்பனை ஒப்பவ ரில்லா
மாதர்கள் வாழும் மாடமா மயிலை
திருவல்லி கேணிக்கண் டேனே

வஞ்சனை செ தாயுரு வாகி
வந்தபே யலறிமண் சேர
நஞ்சமர் முலையூ டுயிர்செக வுண்ட
நாதனை தானவர் கூற்றை
விஞ்சைவா னவர்சா ரணர்சித்தர் வியந்து
துதிசெ பெண்ணுரு வாகி
அஞ்சுவை யமுத மன்றளி தானை
திருவல்லி கேணிக்கண் டேனே

இந்திர னுக்கென் றாயர்க ளெடுத்த
எழில்விழ வில்பழ நடைசெய்
மந்திர விதியில் பூசனை பெறாது
மழைபொழி திடத்தளர்ந்து ஆயர்
அந்தமோ டினவா நிரைதள ராமல்
எம்பெரு மானரு ளென்ன
அந்தமில் வரையால் மழைதடு தானை
திருவல்லி கேணிக்கண் டேனே

இந்துணை பது தலர்மகள் தனக்கும்
இன்பன்நற் புவிதன கிறைவன்
தந்துணை யாயர் பாவைந பின்னை
தனக்கிறை மற்றையோர கெல்லாம்
வன்துணை பஞ்ச பாண்டவர காகி
வாயுரை தூதுசென் றியங்கும்
என்துணை எந்தை தந்தைதம் மானை
திருவல்லி கேணிக்கண் டேனே

அந்தகன் சிறுவ னரசர்த்த மரசற்
கிளையவ னணியிழை யைச்சென்று
எந்த குரிமை செய் என தரியாது
எம்பெரு மானருள் என்ன
சந்தமல் குழலாள் அலக்கண்நூற் றுவர்த்தம்
பெண்டிரு மெய்திநூ லிழப்ப
இந்திரன் சிறுவன் தேர்முன்நின் றானை
திருவல்லி கேணிக்கண் டேனே

பரதனும் தம்பி சத்துரு கனன்னும்
இலக்கும னோடுமை திலியும்
இரவுநன் பகலும் துதிசெய்ய நின்ற
இராவணா தகனையெம் மானை
குரவமே கமழும் குளிர்ப்பொழி லூடு
குயிலொடு மயில்கள்நின் றால
இரவியின் கதிர்கள் நுழைதல்செய் தறியா
திருவல்லி கேணிக்கண் டேனே

பள்ளியி லோதி வந்ததன் சிறுவன்
வாயிலோ ராயிர நாமம்
ஒள்ளிய வாகி போதவாங் கதனு
கொன்றுமோர் பொறுப்பில னாகி
பிள்ளையை சீறி வெகுண்டுதூண் புடை
பிறையெயிற் றனல்விழி பேழ்வாய்
தெள்ளிய சிங்க மாகிய தேவை
திருவல்லி கேணிக்கண் டேனே

மீனமர் பொய்கை நாண்மலர் கொய்வான்
வேட்கையி னோடுசென் றிழிந்த
கானமர் வேழம் கையெடு தலற
கராவதன் காலினை கதுவ
ஆனையின் துயரம் தீரப்புள் ளூர்ந்து
சென்றுநின் றாழிதொ டானை
தேனமர் சோலை மாடமா மயிலை
திருவல்லி கேணிக்கண் டேனே

மன்னுதண் பொழிலும் வாவியும் மதிளும்
மாடமா ளிகையும்மண் டபமும்
தென்னன்தொண் டையர்க்கோன் செய்தநன்மயிலை
திருவல்லி கேணிநின் றானை
கன்னிநன் மாட மங்கையர் தலைவன்
காமரு சீர்க்கலி கன்றி
சொன்னசொன் மாலை பத்துடன் வல்லார்
சுகமினி தாள்வர்வா னுலகே

அன்றாயர்கு லக்கொடி யோடணிமா
மலர்மங்கையொ டன்பளவிஅவுணர
கென்றானு மிரக்கமி லாதவனுக்கு
குறையுமிட மாவதுஇரும்பொழில்சூழ்
நன்றாயபு னல்நறை யூர்த்திருவா
லிகுடந்தை தடந்திகழ் கோவல்நகர்
நின்றானிரு தான்கிட தான்நடந்தாற்
கிடம்மாமலை யாவது நீர்மலையே

காண்டாவன மென்பதொர் காடமரர
கரையனது கண்டவன் நிற்கமுனே
மூண்டாரழ லுண்ணமு னிந்ததுவும்
அதுவன்றியும் முன்னுல கம்பொறைதீர
தாண்டான்அவுணனவன் மார்வகலம்
உகிரால்வகி ராகமு னிந்து அரியாய்
நீண்டான்குற ளாகிநி மிர்ந்தவனு
கிடம்மாமலை யாவது நீர்மலையே

அலமன்னு மடல்சுரி சங்கமெடு
தடலாழியி னாலணி யாருருவில்
புலமன்னு வடம்புனை கொங்கையினாள்
பொறைதீரமு னாளடு வாளமரில்
பலமன்னர் படச்சுட ராழியினை
பகலோன்மறை யப்பணி கொண்டுஅணிசேர்
நிலமன்னனு மாயுல காண்டவனு
கிடம்மாமலை யாவது நீர்மலையே

தாங்காததோ ராளரி யாயவுணன்
றனைவீட முனிந்தவ னாலமரும்
பூங்கோதையர் பொங்கெரி மூழ்கவிளை
ததுவன்றியும் வென்றிகொள் வாளமரில்
பாங்காகமுன் ஐவரொ டன்பளவி
பதிற்றைந்திர டிப்படை வேந்தர்பட
நீங்காச்செரு வில்நிறை காத்தவனு
கிடம்மாமலை யாவது நீர்மலையே

மாலுங்கட லாரம லைக்குவடி
டணைகட்டி வரம்புருவமதிசேர்
கோலமதி ளாயவி லங்கைகெட
படைதொட்டொரு காலம ரிலதிர
காலமிது வென்றயன் வாளியினால்
கதிர்நீண்முடிபத்து மறுத்தமரும்
நீலமுகில் வண்ணனெ மக்கிறைவற்
கிடம்மாமலை யாவது நீர்மலையே

பாராருல கும்பனி மால்வரையும்
கடலும்சுட ருமிவை யுண்டும் என
காரா தென நின்றவ னெம்பெருமான்
அலைநீருல குக்கரசாகியஅ
பேரானைமுனிந்தமுனிக்கரையன்
பிறரில்லை நுனக்கெனு மெல்லையினான்
நீரார்ப்பே ரான்நெடு மாலவனு
கிடம்மாமலை யாவது நீர்மலையே

புகராருரு வாகிமுனிந்தவனை
புகழ்வீட முனிந்துயி ருண்டுஅசுரன்
நகராயின பாழ்பட நாமமெறி
ததுவன்றியும் வென்றிகொள் வாளவுணன்
பகராதவ னாயிர நாமமடி
பணியாதவ னைப்பணி யாமலரில்
நிகராயவன் நெஞ்சிட தானவனு
கிடம்மாமலை யாவது நீர்மலையே

பிச்சச்சிறு பீலிபி டித்துலகில்
பிணந்தின்மடவாரவர் போல்அங்ஙனே
அச்சமிலர் நாணில ராதன்மையால்
அவர்செய்கை வெறுத்தணி மாமலர்த்தூய்
நச்சிநம னாரடை யாமைந
கருள்செய் எனவுள்குழை தார்வமொடு
நிச்சம்நினைவார்க்கருள் செய்யுமவற்
கிடம்மாமலை யாவது நீர்மலையே

பேசுமள வன்றிது வம்மின்நமர்
பிறர்க்கேட்பதன் முன்பணி வார்வினைகள்
நாசமது செய்திடும் ஆதன்மையால்
அதுவேநம துய்விடம் நாண்மலர்மேல்
வாசமணி வண்டறை பைம்புறவில்
மனமைந்தொடு நைந்துழல் வார்மதியில்
நீசரவர் சென்றடை யாதவனு
கிடம்மாமலை யாவது நீர்மலையே

நெடுமாலவன் மேவிய நீர்மலைமேல்
நிலவும்புகழ் மங்கையர் கோன்அமரில்
கடமாகளி யானைவல்லான் கலியன்
ஒலிசெய்தமிழ் மாலைவல் லார்க்குஉடனே
விடுமால்வினை வேண்டிடில் மேலுலகும்
எளிதாயிடு மன்றியி லங்கொலிசேர்
கொடுமாகடல் வையக மாண்டுமதி
குடைமன்னவ ராயடி கூடுவரே

பாராய துண்டுமிழ்ந்த பவளத்தூணை
பாடுகடலி லமுதத்தை பரிவாய்கீண்ட
சீரானை எம்மானை தொண்டர்தங்கள்
சிந்தையுள்ளே முளைத்தெழுந்த தீங்கரும்பினை
போரானை கொம்பொசித்த போரேற்றினை
புணர்மருத மிறநடந்த பொற்குன்றினை
காரானை யிடர்க்கடிந்த கற்பகத்தை
கண்டதுநான் கடல்மல்லை தலசயனத்தே

பூண்டவத்தம் பிறர்க்கடைந்து தொண்டுபட்டு
பொய்ந்லை மெய்ந்லென் றென்றுமோதி
மாண்டுஅவத்தம் போகாதே வம்மினெந்தை
என்வணங்க படுவானை கணங்களேத்தும்
நீண்டவத்தை கருமுகிலை எம்மான்தன்னை
நின்றவூர் நித்திலத்தை தொத்தார்சோலை
காண்டவத்தை கனலெரிவா பெய்வித்தானை
கண்டதுநான் கடல்மல்லை தலசயனத்தே

உடம்புருவில் மூன்றொறாய் மூர்த்திவேறாய்
உலகுய்ய நின்றானைஅன்றுபேய்ச்சி
விடம்பருகு வித்தகனை கன்றுமேய்த்து
விளையாட வல்லானை வரைமீகானில்
தடம்பருகு கருமுகிலை தஞ்சைக்கோயில்
தவநெறிக்கோர் பெருநெறியை வையங்காக்கும்
கடும்பரிமேல் கற்கியைநான்கண்டுகொண்டேன்
கடிபொழில்சூழ் கடன்மல்லை தலசயனத்தே

பேய்த்தாயை முலையுண்ட பிள்ளைதன்னை
பிணைமருப்பில் கருங்களிற்றை பிணைமான்னோக்கின்
ஆய்த்தாயர் தயிர்வெண்ணெ யமர்ந்தகோவை
அந்தணர்தம் அமுதத்தை குரவைமுன்னே
கோத்தானை குடமாடு கூத்தன்றன்னை
கோகுலங்கள் தளராமல் குன்றமேந்தி
காத்தானை எம்மானை கண்டுகொண்டேன்
கடிபொழில்சூழ் கடல்மல்லை தலசயனத்தே

பாய்ந்தானை திரிசகடம் பாறிவீழ
பாலகனா யாலிலையில் பள்ளியின்பம்
ஏய்ந்தானை இலங்கொளிசேர் மணிக்குன்றன்ன
ஈரிரண்டு மால்வரைத்தோ ளெம்மான்றன்னை
தோய்ந்தானை நிலமகள்தோள் தூதிற்சென்ற
பொய்யறைவா புகப்பெய்த மல்லர்மங
காய்த்தானை எம்மானை கண்டுகொண்டேன்
கடிபொழில்சூழ் கடல்மல்லை தலசயனத்தே

கிடந்தானை தடங்கடலுள் பணங்கள்மேவி
கிளர்ப்பொறிய மறிதிரிய வதனின்பின்னே
படர்ந்தானை படுமதத்த களிற்றின்கொம்பு
பறித்தானை பாரிடத்தை எயிறுகீற
இடந்தானை வளைமருப்பி னேனமாகி
இருநிலனும் பெருவிசும்பு மெய்தாவண்ணம்
கடந்தானை எம்மானை கண்டுகொண்டேன்
கடிபொழில்சூழ் கடல்மல்லை தலசயனத்தே

பேணாத வலியரக்கர் மெலியவன்று
பெருவரைத்தோ ளிறநெரித்தன் றவுணர்க்கோனை
பூணாகம் பிளவெடுத்த போர்வல்லோனை
பொருகடலுள் துயிலமர்ந்த புள்ளூர்தியை
ஊணாக பேய்முலைநஞ் சுண்டான் தன்னை
உள்ளுவா ருள்ளத்தே யுறைகின்றானை
காணாது திரிதருவேன் கண்டுகொண்டேன்
கடிபொழில்சூழ் கடன்மல்லை தலசயனத்தே

பெண்ணாகி யின்னமுதம் வஞ்சித்தானை
பிறையெயிற்றன் றடலரியா பெருகினானை
தண்ணார்ந்த வார்ப்புனல்சூழ் மெய்யமென்னும்
தடவரைமேல் கிடந்தானை பணங்கள்மேவி
என்ணானை யெண்ணிறந்த புகழினானை
இலங்கொளிசே ரரவிந்தம் போன்றுநீண்ட
கண்ணானை கண்ணார கண்டுகொண்டேன்
கடிபொழில்சூழ் கடல்மல்லை தலசயனத்தே

தொண்டாயர் தாம்பரவு மடியினானை
படிகடந்த தாளாளற் காளாயுய்தல்
விண்டானை தென்னிலங்கை யரக்கர்வேந்தை
விலங்குண்ண வலங்கைவா சரங்களாண்டு
பண்டாய வேதங்கள் நான்கும்ஐந்து
வேள்விகளும் கேள்வியோ டங்கமாறும்
கண்டானை தொண்டனேன் கண்டுகொண்டேன்
கடிபொழில்சூழ் கடல்மல்லை தலசயனத்தே

படநாக தணைக்கிடந்தன் றவுணர்கோனை
படவெகுண்டு மருதிடைப்போ பழனவேலி
தடமார்ந்த கடல்மல்லை தலசயனத்து
தாமரைக்கண் துயிலமர்ந்த தலைவன்தன்னை
கடமாரும் கருங்களிறு வல்லான்வெல்போர
கலிகன்றி யொலிசெய்த இன்பப்பாடல்
திடமாக விவையைந்து மைந்தும்வல்லார்
தீவினையை முதலரிய வல்லார்தாமெ

நண்ணாத வாளவுண
ரிடைப்புக்கு வானவரை
பெண்ணாகி யமுதூட்டும்
பெருமானார் மருவினிய
தண்ணார்ந்த கடன்மல்லை
தலசயன துறைவாரை
எண்ணாதே யிருப்பாரை
யிறைப்பொழுது மெண்ணோமே

பார்வண்ண மடமங்கை
பனிநன்மா மலர்க்கிழத்தி
நீர்வண்ணன் மார்வகத்தி
லிருக்கையைமுன் நினைந்தவனூர்
கார்வண்ண முதுமுந்நீர
கடல்மல்லை தலசயனம்
ஆரெண்ணும் நெஞ்சுடையா
ரவரெம்மை யாள்வாரே

ஏனத்தி னுருவாகி
நிலமங்கை யெழில்கொண்டான்
வானத்தி லவர்முறையால்
மகிழ்ந்தேத்தி வலங்கொள்ள
கானத்தின் கடல்மல்லை
தலசயன துறைகின்ற
ஞானத்தி னொளியுருவை
நினைவாரென் நாயகரே

விண்டாரை வென்றாவி
விலங்குண்ண மெல்லியலார்
கொண்டாடும் மல்லகலம்
அழலேற வெஞ்சமத்து
கண்டாரை கடல்மல்லை
தலசயன துறைவாரை
கொண்டாடும் நெஞ்சுடையா
ரவரெங்கள் குலதெய்வமே

பி சிறுபீலி
சமண்குண்டர் முதலாயோர்
விச்சை கிறையென்னு
மவ்விறையை பணியாதே
கச்சி கிடந்தவனூர்
கடன்மல்லை தலசயனம்
நச்சி தொழுவாரை
நச்சென்றன் நன்னெஞ்சே

புலன்கொள்நிதி குவையோடு
புழைக்கைமா களிற்றினமும்
நலங்கொள்நவ மணிக்குவையும்
சுமந்தெக்கும் நான்றொசிந்து
கலங்களியங் கும்மல்லை
கடல்மல்லை தலசயனம்
வலங்கொள்மன தாரவரை
வலங்கொள்ளென் மடநெஞ்சே

பஞ்சி சிறுகூழை
யுருவாகி மருவாத
வஞ்சப்பெண் நஞ்சுண்ட
அண்ணல்முன் நண்ணாத
கஞ்சை கடந்தவனூர்
கடன்மல்லை தலசயனம்
நெஞ்சில் தொழுவாரை
தொழுவாயென் தூய்நெஞ்சே

செழுநீர் மலர்க்கமலம்
திரையுந்த வன்பகட்டால்
உழுநீர் வயலுழவ
ருழப்பின்முன் பிழைத்தெழுந்த
கழுநீர் கடிகமழும்
கடன்மல்லை தலசயனம்
தொழுநீர் மனத்தவரை
தொழுவாயென் தூய்நெஞ்சே

பிணங்களிடு காடதனுள்
நடமாடு பிஞ்ஞகனோடு
இணங்குதிரு சக்கரத்தெம்
பெருமானார கிடம்விசும்பில்
கணங்களியங் கும்மல்லை
கடன்மல்லை தலசயனம்
வணங்குமன தாரவரை
வணங்கென்றன் மடநெஞ்சே

கடிகமழு நெடுமறுகில்
கடல்மல்லை தலசயனத்து
அடிகளடி யேநினையு
மடியவர்கள் தம்மடியான்
வடிகொள்நெடு வேல்வலவன்
கலிகன்றி யொலிவல்லார்
முடிகொள்நெடு மன்னவர்தம்
முதல்வர்முத லாவாரே

திவளும்வெண் மதிபோல் திருமுக தரிவை
செழுங்கட லமுதினிற் பிறந்த
அவளும்நின் னாக திருப்பது மறிந்தும்
ஆகிலு மாசைவி டாளால்
குவளையங் கண்ணி கொல்லியம் பாவை
சொல்லுநின் தாள திருந்த
இவளைஉன் மனத்தா லென்னினை திருந்தாய்
இடவெந்தை யெந்தை பிரானே

துளம்படு முறுவல் தோழியர கருளாள்
துணைமுலை சாந்துகொண் டணியாள்
குளம்படு குவளை கண்ணிணை யெழுதாள்
கோலநன் மலர்க்குழற் கணியாள்
வளம்படு முந்நீர் வையமுன் னளந்த
மாலென்னும் மாலின மொழியாள்
இளம்படி யிவளு கென்னினை திருந்தாய்
இடவெந்தை யெந்தை பிரானே

சாந்தமும் பூணும் சந்தன குழம்பும்
தடமுலை கணியிலும் தழலாம்
போந்தவெண் திங்கள் கதிர்சுட மெலியும்
பொருகடல் புலம்பிலும் புலம்பும்
மாந்தளிர் மேனி வண்ணமும் பொன்னாம்
வளைகளும் இறைநில்லா என்தன்
ஏந்திழை யிவளு கென்னினை திருந்தாய்
இடவெந்தை யெந்தை பிரானே

ஊழியில் பெரிதால் நாழிகை என்னும்
ஒண்சுடர் துயின்றதால் என்னும்
ஆழியும் புலம்பும் அன்றிலு முறங்கா
தென்றலும் தீயினிற் கொடிதாம்
தோழியோ என்னும் துணைமுலை யரக்கும்
சொல்லுமி னென்செய்கேன் என்னும்
ஏழையென் பொன்னு கென்னினை திருந்தாய்
இடவெந்தை யெந்தை பிரானே

ஓதிலும் உன்பே ரன்றிமற் றோதாள்
உருகும்நின் திருவுரு நினைந்து
காதன்மை பெரிது கையற வுடையள்
கயல்நெடுங் கண்துயில் மறந்தாள்
பேதையேன் பேதை பிள்ளைமை பெரிது
தெள்ளியள் வள்ளிநுண் மருங்குல்
ஏதலர் முன்னா என்னினை திருந்தாய்
இடவெந்தை யெந்தை பிரானே

தன்குடி கேதும் தக்கவா நினையாள்
தடங்கடல் நுடங்கெயி லிலங்கை
வன்குடி மடங்க வாளமர் தொலைத்த
வார்த்தைகே டின்புறும் மயங்கும்
மின்கொடி மருங்குல் சுருங்கமேல் நெருங்கி
மென்முலை பொன்ப திருந்த
என்கொடி யிவளு கென்னினை திருந்தாய்
இடவெந்தை யெந்தை பிரானே

உளங்கனி திருக்கும் உன்னையே பிதற்றும்
உனக்கன்றி யெனக்கன்பொன் றிலளால்
வளங்கனி பொழில்சூழ் மாலிருஞ் சோலை
மாயனே என்றுவாய் வெருவும்
களங்கனி முறுவல் காரிகை பெரிது
கவலையோ டவலம்சேர திருந்த
இளங்கனி யிவளு கென்னினை திருந்தாய்
இடவெந்தை யெந்தை பிரானே

அலங்கெழு தடக்கை யாயன்வா யாம்பற்
கழியுமா லென்னுள்ளம் என்னும்
புலங்கெழு பொருநீர புட்குழி பாடும்
போதுமோ நீர்மலை கெ ன்னும்
குலங்கெழு கொல்லி கோமள வல்லி
கொடியிடை நெடுமழை கண்ணி
இலங்கெழில் தோளி கென்னினை திருந்தாய்
இடவெந்தை யெந்தை பிரானே

பொன்குலாம் பயலை பூத்தன மெந்தோள்
பொருகயல் கண்துயில் மறந்தாள்
அன்பினா லுன்மே லாதரம் பெரிது இவ்வ
ணங்கினு குற்றநோ யறியேன்
மின்குலா மருங்குல் சுருங்கமேல் நெருங்கி
வீங்கிய வனமுலை யாளுக்கு
என்கொலாம் குறிப்பி லென்னினை திருந்தாய்
இடவெந்தை யெந்தை பிரானே

அன்னமும் மீனும் ஆமையும் அரியும்
ஆயஎம் மாயனே அருளாய்
என்னுமின் தொண்டர கின்னருள் புரியும்
இடவெந்தை யெந்தை பிரானை
மன்னுமா மாட மங்கையர் தலைவன்
மானவேல் கலியன்வா யொலிகள்
பன்னிய பனுவல் பாடுவார் நாளும்
பழவினை பற்றறு பாரே

திரிபுர மூன்றெரி தானும்மற்றை
மலர்மிசை மேலய னும்வியப்ப
முரிதிரை மாகடல் போல்முழங்கி
மூவுல கும்முறை யால்வணங்க
எரியன கேசர வாளெயிற்றோ
டிரணிய னாக மிரண்டுகூறா
அரியுரு வாமிவ ரார்க்கொலென்ன
அட்ட புயகர தேனென்றாரே

வெந்திறல் வீரரில் வீரரொப்பார்
வேத முரைத்திமை யோர்வணங்கும்
செந்தமிழ் பாடுவார் தாம்வணங்கும்
தேவ ரிவர்கொல் தெரிக்கமாட்டேன்
வந்து குறளரு வாய்நிமிர்ந்து
மாவலி வேள்வியில் மண்ணளந்த
அந்தணர் போன்றிவ ரார்க்கொலென்ன
அட்ட புயகர தேனென்றாரே

செம்பொ னிலங்கு வலங்கைவாளி
திண்சிலை தண்டொடு சங்கமொள்வாள்
உம்ப ரிருசுட ராழியோடு
கேடக மொண்மலர் பற்றியெற்றே
வெம்பு சினத்தடல் வேழம்வீழ
வெண்மரு பொன்று பறித்துஇருண்ட
அம்புதம் போன்றிவ ரார்க்கொலென்ன
அட்ட புயகர தேனென்றாரே

மஞ்சுயர் மாமணி குன்றமேந்தி
மாமழை காத்தொரு மாயவானை
யஞ்சஅதன்மரு பொன்றுவாங்கும்
ஆயர்கொல் மாய மறியமாட்டேன்
வெஞ்சுட ராழியும் சங்குமேந்தி
வேதமு னோதுவர் நீதிவானத்து
அஞ்சுடர் போன்றிவ ரார்க்கொலென்ன
அட்ட புயகர தேனென்றாரே

கலைகளும் வேதமும் நீதிநூலும்
கற்பமும் சொற்பொருள் தானும்மற்றை
நிலைகளும் வானவர கும்பிறர்க்கும்
நீர்மையி நாலருள் செய்துநீண்ட
மலைகளும் மாமணி யும்மலர்மேல்
மங்கையும் சங்கமும் தங்குகின்ற
அலைகடல் போன்றிவ ரார்க்கொலென்ன
அட்ட புயகர தேனென்றாரே

எங்ஙனும் நாமிவர் வண்ணமெண்ணில்
ஏது மறிகிலம் ஏந்திழையார்
சங்கும் மனமும் நிறைவுமெல்லாம்
தம்மன வாக புகுந்துதாமும்
பொங்கு கருங்கடல் பூவைகாயா
போதவிழ் நீலம் புனைந்தமேகம்
அங்ஙனம் போன்றிவ ரார்க்கொலென்ன
அட்ட புயகர தேனென்றாரே

முழுசிவண் டாடிய தண்டுழாயின்
மொய்ம்மலர கண்ணியும்மேனியஞ்சா
திழிசிய கோல மிருந்தவாறும்
எங்ஙனஞ் சொல்லுகேன் ஓவிநல்லார்
எழுதிய தாமரை யன்னகண்ணும்
ஏந்தெழி லாகமும் தோளும்வாயும்
அழகிய தாமிவ ரார்க்கொலென்ன
அட்ட புயகர தேனென்றாரே

மேவியெ பாலும்விண் ணோர்வணங்க
வேத முரைப்பர்மு நீர்மடந்தை
தேவிஅ பாலதிர் சங்கமிப்பால்
சக்கரம் மற்றிவர் வண்ணமெண்ணில்
காவியொ பார்க்கட லேயுமொப்பார்
கண்ணும் வடிவும் நெடியராய்என்
ஆவியொ பாரிவ ரார்க்கொலென்ன
அட்ட புயகர தேனென்றாரே

தஞ்ச மிவர்க்கென் வளையும்நில்லா
நெஞ்சமும் தம்மதே சிந்தித்தேற்கு
வஞ்சி மருங்குல் நெருங்கநோக்கி
வாய்திற தொன்று பணித்ததுண்டு
நஞ்ச முடைத்திவர் நோக்கும்நோக்கம்
நானிவர் தம்மை யறியமாட்டேன்
அஞ்சுவன் மற்றிவ ரார்க்கொலென்ன
அட்ட புயகர தேனென்றாரே

மன்னவன் தொண்டையர் கோன்வணங்கும்
நீள்முடி மாலை வயிரமேகன்
தன்வலி தன்புகழ் சூழ்ந்தகச்சி
அட்ட புயகர தாதிதன்னை
கன்னிநன் மாமதிள் மங்கைவேந்தன்
காமரு சீர்க்கலி கன்றிகுன்றா
இன்னிசை யால்சொன்ன செஞ்சொல்மாலை
யேத்தவல் லார்க்கிடம் வைகுந்தமே

சொல்லுவன் சொற்பொருள் தானவை யாய்ச்சுவை
யூறொலி நாற்றமும் தோற்றமுமாய்
நல்லரன் நான்முகன் நாரண னுக்கிட
தான்தடஞ் சூழ்ந்தழ காயகச்சி
பல்லவன் வில்லவ னென்றுல கில்பல
ராய்ப்பல வேந்தர் வணங்குகழற்
பல்லவன் மல்லையர் கோன்பணிநத பர
மேச்சுர விண்ணக ரமதுவே

கார்மன்னு நீள்விசும் பும்கட லும்சுட
ரும்நில னும்மலை யும்தன்னுந்தி
தார்மன்னு தாமரை கண்ணனி டம்தட
மாமதிள் சூழ்ந்தழ காயகச்சி
தேர்மன்னு தென்னவ னைமுனை யில்செரு
வில்திறல் வாட்டிய திண்சிலையோன்
பார்மன்னு பல்லவர் கோன்பணிந்த பர
மேச்சுர விண்ணக ரமதுவே

உரந்தரு மெல்லணை பள்ளிகொண் டானொரு
கால்முன்னம் மாவுரு வாய்க்கடலுள்
வரந்தரும் மாமணி வண்ணனி டம்மணி
மாடங்கள் சூழ்ந்தழ காயகச்சி
நிரந்தவர் மண்ணையில் புண்ணுகர் வேல்நெடு
வாயி லுகச்செரு வில்முனநாள்
பரந்தவன் பல்லவர் கோன்பணி தபர
மேச்சுர விண்ணக ரமதுவே

அண்டமு மெண்டிசை யும்நில னுமலை
நீரொடு வானெரி கால்முதலா
உண்டவன் எந்தைபி ரானதி டமொளி
மாடங்கள் சூந்தழ காயகச்சி
விண்டவ ரிண்டைக்கு ழாமுட னேவிரை
தாரிரி யச்செரு வில்முனைந்து
பண்டொரு கால்வளை தான்பணி தபர
மேச்சுர விண்ணக ரமதுவே

தூம்புடை திண்கைவன் தாள்களிற் றின்துயர்
தீர்த்தர வம்வெருவமுனநாள்
பூம்புனல் பொய்கைபு கானவ னுக்கிட
தான்தடஞ் சூழ்ந்தழ காயகச்சி
தேம்பொழில் குன்றெயில் தென்னவ னைத்திசை
பச்செரு மேல்வி தன்றுசென்ற
பாம்புடை பல்லவர் கோன்பணி தபர
மேச்சுர விண்ணக ரமதுவே

திண்படை கோளரி யினுரு வாய்த்திற
லோனக லம்செரு வில்முனநாள்
புண்பட போழ்ந்த பிரானதி டம்பொரு
மாடங்கள் சூழ்ந்தழ காயகச்சி
வெண்குடை நீழல்செங் கோல்நட பவிடை
வெல்கொடி வேற்படை முன்னுயர்த்த
பண்புடை பல்லவர் கோன்பணி தபர
மேச்சுர விண்ணக ரமதுவே

இலகிய நீண்முடி மாவலி தன்பெரு
வேள்வியில் மாணுரு வாய்முனநாள்
சலமொடு மாநிலங் கொண்டவ னுக்கிட
தான்தடஞ் சூழ்ந்தழ காயகச்சி
உலகுடை மன்னவன் தென்னவ னைக்கன்னி
மாமதிள் சூழ்கரு வூர்வெருவ
பலபடை சாயவென் றான்பணி தபர
மேச்சுர விண்ணக ரமதுவே

குடைத்திறல் மன்னவ னாயொரு கால்குரங்
கைப்படை யாமலை யால்கடலை
அடைத்தவ னெந்தைபி ரானதி டம்மணி
மாடங்கள் சூழ்ந்தழ காயகச்சி
விடைத்திறல் வில்லவன் நென்மெலி யில்வெரு
வச்செரு வேல்வலங் கைப்பிடித்த
படைத்திறல் பல்லவர் கோன்பணி தபர
மேச்சுர விண்ணக ரமதுவே

பிறையுடை வாணுதல் பின்னை திறத்து
முன்னொரு கால்செரு வில்லுருமின்
மறையுடை மால்விடை யேழடர தாற்கிட
தான்தடஞ் சூழ்ந்தழ காயகச்சி
கறையுடை வாள்மற மன்னர்க்கெ டக்கடல்
போல முழங்கும் குரல்கடுவாய்
பறையுடை பல்லவர் கோன்பணி தபர
மேச்சுர விண்ணக ரமதுவே

பார்மன்னு தொல்புகழ பல்லவர் கோன்பணி
தபர மேச்சுர விண்ணகர்மேல்
கார்மன்னு நீள்வயல் மங்கையர் தந்தலை
வன்கலி கன்றிகுன் றாதுரைத்த
சீர்மன்னு செந்தமிழ் மாலைவல் லார்த்திரு
மாமகள் தன்னரு ளால்உலகில்
தேர்மன்ன ராயொலி மாகடல் சூழ்செழு
நீருல காண்டு திகழ்வர்களே

மஞ்சாடு வரையேழும் கடல்க ளேழும்
வானகமும் மண்ணகமும் மற்று மெல்லாம்
எஞ்சாமல் வயிற்றடக்கி யாலின் மேலோர்
இளந்தளிரில் கண்வளர்ந்த ஈசன் றன்னை
துஞ்சாநீர் வளஞ்சுரக்கும் பெண்ணை தென்பால்
தூயநான் மறையாளர் சோமு செய்ய
செஞ்சாலி விளைவயலுள் திகழ்ந்து தோன்றும்
திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே

கொந்தலர்ந்த நறுந்துழாய் சாந்தம் தூபம்
தீபம்கொண் டமரர்த்தொழ பணங்கொள்பாம்பில்
சந்தணிமென் முலைமலராள் தரணி மங்கை
தாமிருவ ரடிவருடும் தன்மை யானை
வந்தனைசெய்து இசையேழா றங்கம் ஐந்து
வளர்வேள்வி நான்மறைகள் மூன்று தீயும்
சிந்தனைசெய் திருபொழுது மொன்றும் செல்வ
திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே

கொழுந்தலரு மலர்ச்சோலை குழாங்கொள் பொய்கை
கோள்முதலை வாளெயிற்று கொண்டற்கெள்கி
அழுந்தியமா களிற்றினுக்கன் றாழி யேந்தி
அந்தரமே வரத்தோன்றி யருள்செய் தானை
எழுந்தமலர கருநீல மிருந்தில் காட்ட
இரும்புன்னை முத்தரும்பி செம்பொன்காட்ட
செழுந்தடநீர கமலம்தீ விகைபோல் காட்டும்
திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே

தாங்கரும்போர் மாலிபட பறவை யூர்ந்து
தராதலத்தோர் குறைமுடித்த தன்மையானை
ஆங்கரும்பி கண்ணீர்சோர தன்பு கூரும்
அடியவர்க காரமுத மானான் றன்னை
கோங்கரும்பு சுரபுன்னை குரவார் சோலை
குழாவரிவண் டிசைபாடும் பாடல் கேட்டு
தீங்கரும்பு கண்வளரும் கழனி சூழ்ந்த
திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே

கறைவளர்வேல் கரன்முதலா கவந்தன் வாலி
கணையொன்றி நால்மடிய இலங்கைதன்னுள்
பிறையெயிற்று வாளரக்கர் சேனை யெல்லாம்
பெருந்தகையோ டுடந்துணித்த பெம்மான்றன்னை
மறைவளர புகழ்வளர மாட தோறும்
மண்டபமொண் தொளியனைத்தும் வாரமோத
சிறையணைந்த பொழிலணைந்த தென்றல் வீசும்
திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே

உறியார்ந்த நறுவெண்ணெ யொளியால் சென்றங்
குண்டானை கண்டாய்ச்சி யுரலோ டார்க்க
தறியார்ந்த கருங்களிறே போல நின்று
தடங்கண்கள் பனிமல்கும் தன்மை யானை
வெறியார்ந்த மலர்மகள்நா மங்கை யோடு
வியன்கலையெண் தோளினாள் விளங்கு செல்வ
செறியார்ந்த மணிமாடம் திகழ்ந்து தோன்றும்
திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே

இருங்கைம்மா கரிமுனிந்து பரியை கீறி
இனவிடைக ளேழடர்த்து மருதம் சாய்த்து
வரும்சகட மிறவுதைத்து மல்லை யட்டு
வஞ்சகஞ்செய் கஞ்சனுக்கு நஞ்சா னானை
கருங்கமுகு பசும்பாளை வெண்மு தீன்று
காயெல்லாம் மரகதமா பவளங் காட்ட
செருந்திமிக மொட்டலர்த்தும் தேன்கொள்சோலை
திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே

பாரேறு பெரும்பார தீர பண்டு
பாரதத்து தூதியங்கி பார்த்தன் செல்வ
தேரேறு சாரதியா யெதிர்ந்தார் சேனை
செருக்களத்து திறலழி செற்றான்றன்னை
போரேறொன் றுடையானு மளகை கோனும்
புரந்தரனும் நான்முகனும் பொருந்து மூர்ப்போல்
சீரேறு மறையாளர் நிறைந்த செல்வ
திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே

தூவடிவின் பார்மகள்பூ மங்கை யோடு
சுடராழி சங்கிருபால் பொலிந்து தோன்ற
காவடிவின் கற்பகமே போல நின்று
கலந்தவர்க கருள்புரியுங் கருத்தி னானை
சேவடிகை திருவாய்கண் சிவந்த வாடை
செம்பொன்செய் திருவுருவ மானான் றன்னை
தீவடிவின் சிவனயனே போல்வார் மன்னு
திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே

வாரணங்கொ ளிடர்க்கடிந்த மாலை நீல
மரதகத்தை மழைமுகிலே போல்வான்றன்னை
சீரணங்கு மறையாளர் நிறைந்த செல்வ
திருக்கோவ லூரதனுள் கண்டேன் என்று
வாரணங்கு முலைமடவார் மங்கை வேந்தன்
வாட்கலிய னொலியைந்து மைந்தும் வல்லார்
காரணங்க லாலுகங் கலந்தங கேத்த
கரந்தெங்கும் பரந்தானை காண்பர் தாமே
பெரிய திருமொழி மூன்றாம் பத்து

இருந்தண் மாநில மேனம தாய்வளை
மருப்பினி லகத்தொடுக்கி
கருந்தண் மாகடல் கண்டுயின் றவனிடம்
கமலநன் மலர்த்தேறல்
அருந்தி இன்னிசை முரன்றெழும் அளிகுலம்
பொதுளியம் பொழிலூடே
செருந்தி நாண்மலர் சென்றணை துழிதரு
திருவயி திரபுரமே

மின்னு மாழியங் கையவன் செய்யவள்
உறைதரு திருமார்பன்
பன்னு நான்மறை பலபொரு ளாகிய
பரனிடம் வரைச்சாரல்
பின்னு மாதவி பந்தலில் பெடைவர
பிணியவிழ் கமலத்து
தென்ன வென்றுவண் டின்னிசை முரல்தரு
திருவயி திரபுரமே

வைய மேழுமுண் டாலிலை வைகிய
மாயவன் அடியவர்க்கு
மெய்ய னாகிய தெய்வநா யகனிடம்
மெய்தகு வரைச்சாரல்
மொய்கொள் மாதவி சண்பகம் முயங்கிய
முல்லையங் கொடியாட
செய்ய தாமரை செழும்பணை திகழ்தரு
திருவயி திரபுரமே

மாறு கொண்டுடன் றெதிர்ந்தவல் லவுணன்றன்
மார்பக மிருபிளவா
கூறு கொண்டவன் குலமகற் கின்னருள்
கொடுத்தவ னிடம்மிடைந்து
சாறு கொண்டமென் கரும்பிளங் கழைதகை
விசும்புற மணிநீழல்
சேறு கொண்டதண் பழனம தெழில்திகழ்
திருவயி திரபுரமே

ஆங்கு மாவலி வேள்வியி லிரந்துசென்
றகலிட மளந்து ஆயர்
பூங்கொ டிக்கின விடைபொரு தவனிடம்
பொன்மலர் திகழ்வேங்கை
கோங்கு செண்ப கொம்பினில் குதிகொடு
குரக்கினம் இரைத்தோடி
தேன்க லந்தண் பலங்கனி நுகர்த்தரு
திருவயி திரபுரமே

கூனு லாவிய மடந்தைதன் கொடுஞ்சொலின்
திறத்திளங் கொடியோடும்
கானு லாவிய கருமுகில் திருநிற
தவனிடம் கவினாரும்
வானு லாவிய மதிதவழ் மால்வரை
மாமதிள் புடைசூழ
தேனு லாவிய செழும்பொழில் தழுவிய
திருவயி திரபுரமே

மின்னின் நுண்ணிடை மடக்கொடி காரணம்
விலங்கலின் மிசையிலங்கை
மன்னன் நீண்முடி பொடிசெய்த மைந்தன
திடம்மணி வரைநீழல்
அன்ன மாமல ரரவிந தமளியில்
பெடையொடு மினிதமர
செந்நெ லார்க்கவ ரிக்குலை வீசுதண்
திருவயி திரபுரமே

விரைக மழ்ந்தமென் கருங்குழல் காரணம்
வில்லிறுத்து அடல்மழைக்கு
நிரைக லங்கிட வரைகுடை யெடுத்தவன்
நிலவிய இடம்தடமார்
வரைவ ளந்திகழ் மதகரி மருப்பொடு
மலைவள ரகிலுந்தி
திரைகொ ணர்ந்தணை செழுநதி வயல்புகு
திருவயி திரபுரமே

வேல்கொள் கைத்தல தரசர்வெம் போரினில்
விசயனு காய்மணித்தேர
கோல்கொள் கைத்தல தெந்தைபெம் மானிடம்
குலவுதண் வரைச்சாரல்
கால்கொள் கண்கொடி கையெழ கமுகிளம்
பாளைகள் கமழ்சாரல்
சேல்கள் பாய்தரு செழுநதி வயல்புகு
திருவயி திரபுரமே

மூவ ராகிய வொருவனை மூவுல
குண்டுமிழ தளந்தானை
தேவர் தானவர் சென்றுசென் றிறைஞ்சத்தண்
திருவயி திரபுரத்து
மேவு சோதியை வேல்வல வன்கலி
கன்றி விரித்துரைத்த
பாவு தண்டமிழ் பத்திவை பாடிட
பாவங்கள் பயிலாவே

ஊன்வாட வுண்ணா துயிர்க்காவ லிட்டு
உடலிற் பிரியா புலனைந்தும் நொந்து
தாம்வாட வாட தவம்செய்ய வேண்டா
தமதா இமையோ ருலகாள கிற்பீர்
கானாட மஞ்ஞை கணமாட மாடே
கயலாடு கானீர பழனம் புடைபோய்
தேனாட மாட கொடியாடு தில்லை
திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே

காயோடு நீடு கனியுண்டு வீசு
கடுங்கால் கர்ந்து நெடுங்காலம் ஐந்து
தீயொடு நின்று தவஞ்செய்ய வேண்டா
திருமார்பனைச்சிந்தை யுள்வைத்து மென்பீர்
வாயோது வேதம் மல்கின்ற தொல்சீர்
மறையாளர் நாளும் முறையால் வளர்த்த
தீயோங்க வோங்க புகழோங்கு தில்லை
திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே

வெம்பும் சினத்து புனக்கேழ லொன்றாய்
விரிநீர் முதுவெள்ள முள்பு கழுந்த
வம்புண் பொழில்சூ ழுலகன் றெடுத்தான்
அடிப்போ தணைவான் விருப்போ டிருப்பீர்
பைம்பொன்னு முத்தும் மணியும் கொணர்ந்து
படைமன்னவன்பல் லவர்க்கோன் பணிந்த
செம்பொன் மணிமாடங் கள்சூழ்ந்த தில்லை
திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே

அருமா நிலமன் றளப்பான் குறளாய்
அவுணன் பெருவேள் வியில்சென் றிரந்த
பெருமான் திருநா மம்பிதற் றிநுந்தம்
பிறவி துயர்நீங்கு துமென்ன கிற்பீர்
கருமா கடலுள் கிடந்தா னுவந்து
கவைநா வரவி னணைப்பள்ளி யின்மேல்
திருமால் திருமங் கையொடாடு தில்லை
திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே

கோமங்க வங கடல்வைய மு
குலமன்ன ரங்கம் மழுவில் துணிய
தாமங் கமருள் படைதொட்ட வென்றி
தவமா முனியை தமக்காக்க கிற்பீர்
பூமங்கை தங்கி புலமங்கை மன்னி
புகழ்மங்கை யெங்கும் திகழப்புகழ்சேர்
சேமங்கொள் பைம்பூம் பொழில்சூழ்ந்த தில்லை
திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே

நெய்வா யழலம் புதுரந்து முந்நீர்
துணி பணிகொண் டணியார்ந்துஇலங்கு
மையார் வணிவண் ணனையெண்ணி நுந்தம்
மனத்தே யிருத்தும் படிவாழ வல்லீர்
அவ்வாயிளமங் கையர்ப்பேச வுந்தான்
அருமா மறை தணர்சி தைபுக
செவ்வா கிளிநான் மறைபாடு தில்லை
திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே

மௌவல் குழலாய்ச்சி மெந்தோள் நயந்து
மகரம் சுழல சுழல்நீர் பயந்த
தெய்வ திருமா மலர்மங்கை தங்கு
திருமார் பனைச்சிந்தை யுள்வைத்து மென்பீர்
கௌவை களிற்றின் மருப்பும் பொருப்பில்
கமழ்சந்து முந்தி நிவாவ லங்கொள்
தெய்வ புனல்சூழ தழகாய தில்லை
திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே

மாவாயி னங்கம் மதியாது கீறி
மழைமா முதுகுன் றெடுத்துஆயர் தங்கள்
கோவாய் நிரைமே துலகுண்ட மாயன்
குரைமா கழல்கூ டும்குறி புடையீர்
மூவா யிரநான் மறையாளர் நாளும்
முறையால் வணங்க அணங்காய சோதி
தேவாதி தேவன் திகழ்கின்ற தில்லை
திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே

செருநீல வேற்கண் மடவார் திறத்து
சினத்தோடு நின்று மனத்தால் வளர்க்கும்
அருநீல பாவ மகல புகழ்சேர்
அமரர்க்கு மெய்தாத அண்டத்தி ருப்பீர்
பெருநீர் நிவாவுந்தி முத்தங்கொ ணர்ந்தெங்கும்
வித்தும் வயலுள் கயல்பா துகள
திருநீல நின்று திகழ்கின்ற தில்லை
திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே

சீரார் பொழில்சூழ தழகாய தில்லை
திருசித்ர கூட துறைசெங்கண் மாலுக்கு
ஆராத வுள்ள தவர்க்கே டுவப்ப
அலைநீ ருலகு கருளே புரியும்
காரார் புயற்கை கலிகன்றி குன்றா
ஒலிமாலை யொறொன்ப தோடொன்றும் வல்லார்
பாரா ருலக மளந்தா னடிக்கீழ
பலகாலம் நிற்கும் படிவாழ்வர் தாமே

வாட மருதிடை போகி
மல்லரை கொன்றொக்க லிட்டிட்டு
ஆடல்நல் மாவுடை தாயர்
ஆநிரை கன்றிடர் தீர்ப்பான்
கூடிய மாமழை காத்த
கூத்த னெனெவரு கின்றான்
சேடுயர் பூம்பொழில் தில்லை
சித்திர கூடத்துள் ளானே

பேய்மகள் கொங்கைநஞ் சுண்ட
பிள்ளை பரிசிது வென்றால்
மாநில மாமகள் மாதர்
கேள்வ னிவனென்றும் வண்டுண்
பூமகள் நாயக னென்றும்
புலங்கெழு கோவியர் பாடி
தேமலர் தூவ வருவான்
சித்திர கூடத்துள் ளானே

பண்டிவன் வெண்ணெயுண் டானென்
றாய்ச்சியர் கூடி யிழிப்ப
எண்டிசை யோரும்வ ணங்க
இணைமரு தூடு நடந்திட்டு
அண்டரும் வான தவரு
மாயிர நாமங்க ளோடு
திண்டிறல் பாட வருவான்
சித்திர கூடத்துள் ளானே

வளைக்கை நெடுங்கண் மடவா
ராய்ச்சிய ரஞ்சி யழைப்ப
தளைத்தவிழ் தாமரை பொய்கை
தண்தடம் புக்கண்டர் காண
முளைத்த எயிற்றழல் நாக
துச்சியில் நின்றது வாட
திலைத்தமர் செய்து வருவான்
சித்திர கூடத்துள் ளானே

பருவ கருமுகி லொத்து
முட்டுடை மாகட லொத்து
அருவி திரள்திகழ் கின்ற
வாயிரம் பொன்மலை யொத்து
உருவ கருங்குழ லாய்ச்சி
திறத்தின மால்விடை செற்று
தெருவில் திளைத்து வருவான்
சித்திர கூடத்துள் ளானே

சிதைந்த திலங்கை
மலங்க வருமழை காப்பான்
பருவரை தாங்கி
ஆநிரை காத்தானென் றேத்தி
வை தெவரும் வணங்க
அணங்கெழு மாமலை போலே
தெய்வப்புள் ளேறி வருவான்
சித்திர கூடத்துள் ளானே

ஆவ ரிவைசெய் தறிவார்
அஞ்சன மாமலை போலே
மேவு சினத்தடல் வேழம்
வீழ முனிந்துஅழ காய
காவி மலர்நெடுங் கண்ணார்
கைதிழ வீதி வருவான்
தேவர் வணங்குதண் தில்லை
சித்திர கூடத்துள் ளானே

பொங்கி யமரி லொருகால்
பொன்பெய ரோனை வெருவ
அங்கவனாக மளைந்தி
டாயிர தோளெழு தாட
பைங்க ணிரண்டெரி கான்ற
நீண்ட எயிற்றொடு பேழ்வாய்
சிங்க வுருவில் வருவான்
சித்திர கூடத்துள் ளானே

கருமுகில் போல்வதோர் மேனி
கையன வாழியும் சங்கும்
பெருவிறல் வானவர் சூழ
ஏழுல கும்தொழு தேத்த
ஒருமக ளாயர் மடந்தை
யொருத்தி நிலமகள் மற்றை
திருமக ளோடும் வருவான்
சித்திர கூடத்துள் ளானே

தேனமர் பூம்பொழில் தில்லை
சித்திர கூட மமர்ந்த
வானவர் தங்கள் பிரானை
மங்கையர் கோன்மரு வார்
ஊனமர் வேல்கலி கன்றி
யொண்டமி ழொன்பதோ டொன்றும்
தானிவை கற்றுவல் லார்மேல்
சாராதீவினைதானே

ஒருகுறளா யிருநிலம்மூ வடிமண் வேண்டி
உலகனைத்து மீரடியா லொடுக்கி ஒன்றும்
தருகவெனா மாவலியை சிறையில் வைத்த
தாடாளன் தாளணைவீர் தக்க கீர்த்தி
அருமறையின் திரள்நான்கும் வேள்வி யைந்தும்
அங்கங்கள் அவையாறு மிசைக ளேழும்
தெருவில்மலி விழாவளமும் சிறக்கும் காழி
சீராம விண்ணகரே சேர்மி னீரே

நான்முகனாள் மிகைத்தருக்கை யிருக்கு வாய்மை
நலமிகுசீ ருரோமசனால் நவிற்றி நக்கன்
ஊன்முகமார் தலையோட்டூ ணொழித்த வெந்தை
ஒளிமலர்ச்கே வடியணைவீர் உழுசே யோட
சூன்முகமார் வளையளைவா யுகுத்த முத்தை
தொல்குருகு சினையென்ன சூழ்ந்தி யங்க
தேன்முகமார் கமலவயல் சேல்பாய் காழி
சீராம விண்ணகரே சேர்மி னீரே

வையணைந்த திக்கோட்டு வராக மொன்றாய்
மண்ணெல்லா மிடந்தெடுத்து மதங்கள் செய்து
நெய்யணைந்த திகிரியினால் வாணன் திண்டோ ள்
நேர்ந்தவந்தா ளணைகிற்பீர் நெய்த லோடு
மையணைந்த குவளைகள்தங் கண்க ளென்றும்
மலர்க்குமுதம் வாயென்றும் கடைசி மார்கள்
செய்யணைந்து களைகளையா தேறும் காழி
சீராம விண்ணகரே சேர்மி னீரே

பஞ்சியல்மெல் லடிப்பின்னை திறத்து முன்னாள்
பாய்விடைக ளேழடர்த்தும் பொன்னன்பைம்பூண்
நெஞ்சிடந்து குருதியுக வுகிர்வே லாண்ட
நின்மலந்தா ளணைகிற்பீர் நீல மாலை
தஞ்சுடைய விருள்தழைப்ப தரள மாங்கே
தண்மதியின் நிலாக்காட்ட பவள தன்னால்
செஞ்சுடர வெயில்விரிக்கு மழகார் காழி
சீராம விண்ணகரே சேர்மி னீரே

தெவ்வாய மறமன்னர் குருதி கொண்டு
திருக்குலத்தி லிறந்தோர்க்கு திருத்தி செய்து
வெவ்வாய மாகீண்டு வேழ மட்ட
விண்ணவர்க்கோன் தாளணைவீர் விகிர்த மாதர்
அவ்வாய வாள்நெடுங்கண் குவளை காட்ட
அரவிந்தம் முகங்காட்ட அருகே யாம்பல்
செவ்வாயின் திரள்காட்டும் வயல்சூழ் காழி
சீராம விண்ணகரே சேர்மி னீரே

பைங்கண்விறல் செம்முகத்து வாலி மாள
படர்வனத்து கவந்தனொடும் படையார்த்திண்கை
வெங்கண்விறல் விராதனுக விற்கு னித்த
விண்ணவர்க்கோன் தாளணைவீர் வெற்புப்போலும்
துங்கமுக மாளிகைமே லாயங் கூறும்
துடியிடையார் முகக்கமல சோதி தன்னால்
திங்கள்முகம் பனிபடைக்கு மழகார் காழி
சீராம விண்ணகரே சேர்மி னீரே

பொருவில்வலம் புரியரக்கன் முடிகள் பத்தும்
புற்றுமறி தனபோல புவிமேல் சிந்த
செருவில்வலம் புரிசிலைக்கை மலைத்தோள் வேந்தன்
திருவடிசேர துய்கிற்பீர் திரைநீர தெள்கி
மருவிவலம் புரிகைதை கழியூ டாடி
வயல்நண்ணி மழைதருநீர் தவழ்கால் மன்னி
தெருவில்வலம் புரிதரள மீனும் காழி
சீராம விண்ணகரே சேர்மி னீரே

பட்டரவே ரகலல்குல் பவள செவ்வாய்
பணைநெடுந்தோள் பிணைநெடுங்கண் பாலாமின்சொல்
மட்டவிழுங் குழலிக்கா வானோர் காவில்
மரங்கொணர்ந்தா னடியணைவீர் அணில்கள்தாவ
நெட்டிலைய கருங்கமுகின் செங்காய் வீழ
நீள்பலவின் தாழ்சினையில் நெருங்கு பீன
தெட்டபழம் சிதைந்துமது சொரியும் காழி
சீராம விண்ணகரே சேர்மி னீரே

பிறைதங்கு சடையானை வலத்தே வைத்து
பிரமனைத்தன் னுந்தியிலே தோற்று வித்து
கறைதங்கு வேல்தடங்கண் திருவை மார்பில்
கலந்தவந்தா ளணைகிற்பீர் கழுநீர் கூடி
துறைதங்கு கமலத்து துயின்று கைதை
தோடாரும் பொதிசோற்று சுண்ணம்நண்ணி
சிறைவண்டு களிபாடும் வயல்சூழ் காழி
சீராம விண்ணகரே சேர்மி னீரே

செங்கமல தயனனைய மறையோர் காழி
சீராம விண்ணகரென் செங்கண் மாலை
அங்கமல தடவயல்சூ ழாலி நாடன்
அருள்மாரி யரட்டமுக்கி அடையார் சீயம்
கொங்குமலர குழலியர்வேள் மங்கை வேந்தன்
கொற்றவேல் பரகாலன் கலியன் சொன்ன
சங்கமுக தமிழ்மாலை பத்தும் வல்லார்
தடங்கடல்சூ ழுலகுக்கு தலைவர் தாமே

வந்துன தடியேன் மனம்புகுந்தாய்
புகுந்ததற்பின் வணங்கும்என்
சிந்தனை கினியாய் திருவே என் னாருயிரே
அந்தளி ரணியா ரசோகி ளிளந்தளிர்கள்
கலந்து அவை யெங்கும்
செந்தழல் புரையும் திருவாலி யம்மானே

நீல தடவரை மாமணி நிகழ
கிடந்ததுபோல் அரவணை
வேலை தலைக்கிடந்தா யடியேன் மனத்திருந்தாய்
சோலை தலைக்கண மாமயில் நடமாட
மழைமுகில் போன்றெழுந்து எங்கும்
ஆலை புகைகமழும் அணியாலி யம்மானே

நென்னல்போய் வருமென்றென் றெண்ணி
யிராமையென் மனத்தே புகுந்தது
இம்மை கென்றிருந்தே நெறிநீர் வளஞ்செறுவில்
செந்நெற் கூழை வரம்பொரீஇ அரிவார்
முகத்தெழு வாளைபோய் கரும்பு
அந்நற் காடணையும் அணியாலி யம்மானே

மின்னில் மன்னு டங்கிடை மடவார்தம்
சிந்தை மறந்து வந்துநின்
மன்னு சேவடிக்கே மறவாமை வைத்தாயால்
புன்னை மன்னு செருந்தி வண்பொழில்
வாயகன் பணைகள் கலந்தெங்கும்
அன்னம் மன்னும் வயலணி ஆலி யம்மானே

நீடு பன்மலர் மாலையிட்டு நின்னிணையடி
தொழுதேத்தும் என்மனம்
வாட நீநினையேல் மரமெய்த மாமுனிவா
பாட லின்னொலி சங்கி நோசை பரந்து
பல்பணை யால்மலிந்து எங்கும்
ஆட லோசையறா அணியாலி யம்மானே

கந்த மாமல ரெட்டுமிட்டு நின்காமர்
சேவடி கைதொழுதெழும்
புந்தியேன் மனத்தே புகுந்தாயை போகலொட்டேன்
சந்தி வேள்வி சடங்கு நான்மறை
ஓதி யோதுவி தாதி யாய்வரும்
அந்த ணாள ரறாவணியாலி யம்மானே

உலவுதிரை கடற்பள்ளி கொண்டு வந்துன்
அடியேன் மனம்புகுந்தஅ
புலவ புண்ணிய னேபுகு தாயை போகலொட்டேன்
நிலவு மலர்ப்புன்னை நாழல் நீழல்
தண்டாமரை மலரின் மிசைமலி
அலவன் கண்படுக்கும் அணியாலி யம்மானே

சங்கு தங்கு தடங்கடல் கடன்மல்லை
யுள்கிடந்தாய் அருள்புரிந்து
இங்கென்னுள் புகுந்தா யினிப்போயி நாலறையோ
கொங்கு செண்பக மல்லிகை மலர்ப்புல்கி
இன்னிள வண்டு போய்இளம்
தெங்கின் தாதளையும் திருவாலி யம்மானே

ஓதி யாயிர நாமமும் பணிந்தேத்தி
நின்னடை தேற்குஒரு பொருள்
வேதியா அரையாஉரையாய் ஒருமாற்றமெந்தாய்
நீதி யாகிய வேதமா முனியாளர்
தோற்ற முரைத்து மற்றவர
காதியாய் இருந்தாய் அணியாலி யம்மானே

புல்லி வண்டறையும் பொழில் புடைசூழ்
தென்னாலி யொருந்த மாயனை
கல்லின் மன்னு திண்டோ ள் கலிய னொலிசெய்த
நல்ல இன்னிசை மாலை நாலுமோ
ரைந்துமொன் றும்நவின்று தாமுடன்
வல்ல ராயுரை பார்க்கிட மாகும் வானுலகே

தூவிரிய மலருழக்கி
துணையோடும் பிரியாதே
பூவிரிய மதுநுகரும்
பொறிவரிய சிறுவண்டே
தீவிரிய மறைவளர்க்கும்
புகழாளர் திருவாலி
ஏவரிவெஞ் சிலையானு
கென்னிலைமை யுரையாயே

பிணியவிழு நறுநீல
மலர்க்கிழி பெடையோடும்
அணிமலர்மேல் மதுநுகரும்
அறுகால சிறுவண்டே
மணிகெழுநீர் மருங்கலரும்
வயலாலி மணவாளன்
பணியறியேன் நீசென்றென்
பயலைநோ யுரையாயே

நீர்வானம் மண்ணெரிகா
லாய்நின்ற நெடுமால்தன்
தாராய நறுந்துளவம்
பெருந்தகையெற் கருளானே
சீராரும் வளர்ப்பொழில்சூழ்
திருவாலி வயல்வாழும்
கூர்வாய சிறுகுருகே
குறிப்பறிந்து கூறாயே

தானாக நினையானேல்
தன்னினைந்து நைவேற்குஓர்
மீனாய கொடிநெடுவேள்
வலிசெய்ய மெலிவேனோ
தேன்வாய வரிவண்டே
திருவாலி நகராளும்
ஆனாயற் கென்னுறுநோ
யறியச்சென் றுரையாயே

வாளாய கண்பனிப்ப
மென்முலைகள் பொன்னரும்ப
நாணாளும் நின்னினைந்து
நைவேற்குஓமண்ணளந்த
தாளாளா தண்குடந்தை
நகராளா வரையெடுத்த
தோளாளா என்றனக்கோர்
துணையாள னாகாயே

தாராய தண்டுளவ
வண்டுழுத வரைமார்பன்
போரானை கொம்பொசித்த
புட்பாக னென்னம்மான்
தேராரும் நெடுவீதி
திருவாலி நகராளும்
காராயன் என்னுடைய
கனவளையும் கவர்வானோ

கொண்டரவ திரையுலவு
குரைகடல்மேல் குலவரைபோல்
பண்டரவி னணைக்கிடந்து
பாரளந்த பண்பாளா
வண்டமரும் வளர்ப்பொழில்சூழ்
வயலாலி மைந்தாஎன்
கண்டுயில்நீ கொண்டாய்க்கென்
கனவளையும் கடவேனோ

குயிலாலும் வளர்ப்பொழில்சூழ்
தண்குடந்தை குடமாடி
துயிலாத கண்ணிணையேன்
நின்னினைந்து துயர்வேனோ
முயலாலு மிளமதிக்கே
வளையிழந்தேற்கு இதுநடுவே
வயலாலி மணவாளா
கொள்வாயோ மணிநிறமே

நிலையாளா நின்வணங்க
வேண்டாயே யாகினும்என்
முலையாள வொருநாளுன்
னகலத்தால் ஆளாயே
சிலையாளா மரமெய்த
திறலாளா திருமெய்ய
மலையாளா நீயாள
வளையாள மாட்டோ மே

மையிலங்கு கருங்குவளை
மருங்கலரும் வயலாலி
நெய்யிலங்கு சுடராழி
படையானை நெடுமாலை
கையிலங்கு வேல்கலியன்
கண்டுரைத்த தமிழ்மாலை
ஐயிரண்டு மிவைவல்லார
கருவினைக ளடையாவே

கள்வன்கொல் யானறியேன்
கரியானொரு காளைவந்து
வள்ளிமருங் குலென்றன்
மடமானினை போதவென்று
வெள்ளிவளை கைப்பற்ற
பெற்றதாயரை விட்டகன்று
அள்ளலம் பூங்கழனி
யணியாலி புகுவர்க்கொலோ

பண்டிவ னாயன்நங்காய்
படிறன்புகுந்து என்மகள்தன்
தொண்டையஞ் செங்கனிவாய்
நுகர்ந்தானை யுகந்துஅவன்பின்
கெண்டையொண் கண்மிளிர
கிளிபோல்மிழற் றிநடந்து
வண்டமர் கானல்மல்கும்
வயலாலி புகுவர்க்கொலோ

அஞ்சுவன் வெஞ்சொல்நங்காய்
அரக்கர்க்குல பாவைதன்னை
வெஞ்சின மூக்கரிந்த
விறலோந்திறங் கேட்கில்மெய்யே
பஞ்சியல் மெல்லடியெம்
பணைத்தோளி பரக்கழிந்து
வஞ்சி தண்பணைசூழ்
வயலாலி புகுவர்க்கொலோ

ஏதுஅவன் தொல்பிறப்பு
இளைய வன்வளை யூதிமன்னர்
தூதுவ னாயவனூர்
சொலுவீர்கள் சொலீரறியேன்
மாதவன் தந்துணையா
நடந்தாள்தடஞ் சூழ்புறவில்
போதுவண் டாடுசெம்மல்
புனலாலி புகுவர்க்கொலோ

தாயெனை யென்றிரங்காள்
தடந்தோளி தனக்கமைந்த
மாயனை மாதவனை
மதித்தென்னை யகன்றைவள்
வேயன தோள்விசிறி
பெடையன்ன மெனநடந்து
போயின பூங்கொடியாள்
புனலாலி புகுவர்க்கொலோ

எந்துணை யென்றெடுத்தேற்
கிறையேனு மிரங்கிற்றிலள்
தன்துணை யாயவென்றன்
தனிமைக்கு மிரங்கிற்றிலள்
வன்துணை வானவர்க்காய்
வரஞ்செற்றரங் கத்துறையும்
இந்துணை வன்னொடும்போ
யெழிலாலி புகுவர்க்கொலோ

அன்னையு மத்தனுமென்
றடியோமு கிரங்கிற்றிலள்
பின்னைதன் காதலன்றன்
பெருந்தோள்நலம் பேணினளால்
மின்னையும் வஞ்சியையும்
வென்றிலங்கு மிடையாள்நடந்து
புன்னையும் அன்னமும்சூழ்
புனலாலி புகுவர்க்கொலோ

முற்றிலும் பைங்கிளியும்
பந்துமூசலும் பேசுகின்ற
சிற்றில்மென் பூவையும்வி
டகன்றசெழுங் கோதைதன்னை
பெற்றிலேன் முற்றிழையை
பிறப்பிலிபின் னேநடந்து
மற்றெல்லாம் கைதொழப்போய்
வயலாலி புகுவர்க்கொலோ

காவியங் கண்ணியெண்ணில்
கடிமாமலர பாவையொப்பாள்
பாவியேன் பெற்றமையால்
பணைத்தோளி பரக்கழிந்து
தூவிசே ரன்னமன்ன
நடையாள்நெடு மாலொடும்போய்
வாவி தண்பணைசூழ்
வயலாலி புகுவர்க்கொலோ

தாய்மனம் நின்றிரங்க
தனியேநெடு மால்துணையா
போயின பூங்கொடியாள்
புனலாலி புகுவரென்று
காய்சின வேல்கலிய
னொலிசெய்தமிழ் மாலைபத்தும்
மேவிய நெஞ்சுடையார்
தஞ்சமாவது விண்ணுலகே

நந்தா விளக்கே அளத்தற் கரியாய்
நரநா ரணனே கருமா முகில்போல்
எந்தாய் எமக்கே யருளாய் எனநின்று
இமையோர் பரவு மிடம்எ திசையும்
கந்தா ரமந்தே னிசைபாடமாடே
களிவண் டுமிழற் றநிழல் துதைந்து
மந்தா ரநின்று மணமல் குநாங்கூர்
மணிமாட கோயில் வணங்கென் மனனே

முதலை தனிமா முரண்தீர வன்று
முதுநீர தடத்து செங்கண்வேழ முய்ய
விதலை தலைச்சென் றதற்கே யுதவி
வினைதீர்த்த வம்மானிடம்விண்ணணவும்
பதலை கபோ தொளிமாட நெற்றி
பவள கொழுங்கால் பைங்கால் புறவம்
மதலை தலைமென் பெடைகூடு நாங்கூர்
மணிமாட கோயில் வணங்கென் மனனே

கொலைப்புண் தலைக்குன்ற மொன்றுய்ய வன்று
கொடுமா முதலை கிடர்செய்து கொங்கார்
இலைப்புண்ட ரீக தவளின்ப மன்போ
டணைந்திட்ட வம்மானிடம்ஆளரியால்
அலைப்புண்ட யானை மருப்பு மகிலும்
அணிமுத்தும் வெண்சா மரையோடுபொன்னி
மலைப்பண்ட மண்ட திரையுந்து நாங்கூர்
மணிமாட கோயில் வணங்கென் மனனே

சிறையார் உவணப்புள் ளொன்றேறி யன்று
திசைநான்கும் நான்கு மிரிய செருவில்
கறையார் நெடுவே லரக்கர் மடி
கடல்சூ ழிலங்கை கடந்தா னிடந்தான்
முறையால் வளர்க்கின்ற முத்தீயர் நால்வேதர்
ஐவேள்வி யாறங்கர் ஏழி னிசையோர்
மறையோர் வணங்க புகழெய்து நாங்கூர்
மணிமாட கோயில் வணங்கென் மனனே

இழையாடு கொங்கை தலைநஞ்ச முண்டிட்டு
இளங்கன்று கொண்டு விளங்கா யெறிந்து
தழைவாட வந்தாள் குருந்த மொசித்து
தடந்தாம ரைப்பொய்கை புக்கானி டந்தான்
குழையாட வல்லி குலமாடமாடே
குயில்கூவ நீடு கொடிமாட மல்கு
மழையாடு சோலை மயிலாலு நாங்கூர்
மணிமாட கோயில் வணங்கென் மனனே

பண்ணேர் மொழியா சியரஞ்ச வஞ்ச
பகுவா கழுது கிரங்காது அவள்தன்
உண்ணா முலைமற் றவளாவி யோடும்
உடனே சுவைத்தா நிடம்ஓங்கு பைந்தாள்
கண்ணார் கரும்பின் கழைதின்று வைகி
கழுநீரில் மூழ்கி செழுநீர தடத்து
மண்ணே திளமேதி கள்வைகு நாங்கூர்
மணிமாட கோயில் வணங்கென் மனனே

தளைக்க டவிழ்தா மரைவைகு பொய்கை
தடம்புக்கு அடங்கா விடங்கா லரவம்
இளைக்க திளைத்தி டதனுச்சி தன்மேல்
அடிவைத்த அம்மா னிடம்மாமதியம்
திளைக்கும் கொடிமாளிகைசூழ் தெருவில்
செழுமுத்து வெண்ணெற் கெனச்சென்றுமூன்றில்
வளைக்கை நுளைப்பாவை யர்மாறு நாங்கூர்
மணிமாட கோயில் வணங்கென் மனனே

துளையார் கருமென் குழலாய்ச்சி யர்தம்
துகில்வாரி யும்சிற்றில் சிதைத்தும் முற்றா
விளையார் விளையா டொடுகாதல் வெள்ளம்
விளைவித்த வம்மானிடம்வேல் நெடுங்கண்
முளைவாளெயிற்று மடவார் பயிற்று
மொழிகே டிருந்து முதிராதவின்சொல்
வளைவாய கிள்ளை மறைபாடு நாங்கூர்
மணிமாட கோயில் வணங்கென் மனனே

விடையோட வென்றாய்ச்சி மெந்தோள்நயந்த
விகிர்தா விளங்கு சுடராழி யென்னும்
படையோடு சங்கொன் றுடையாய் எனநின்று
இமையோர் பரவு மிடம்பை தடத்து
பெடையோடு செங்கால வன்னம் துகைப்ப
தொகைப்புண்ட ரீகத்தி டைச்செங் கழுநீர்
மடையோட நின்று மதுவிம்மு நாங்கூர்
மணிமாட கோயில் வணங்கென் மனனே

வண்டார் பொழில்சூழ தழகாய நாங்கூர்
மணிமாட கோயில் நெடுமாலுக்குஎன்றும்
தொண்டாய தொல்சீர் வயல்மங் கையர்க்கோன்
கலிய நொலிசெய் தமிழ்மாலை வல்லார்
கண்டார் வணங களியானை மீதே
கடல்சூ ழுலகு கொருகா வலராய்
விண்டோ ய் நெடுவெண் குடைநீழ லின்கீழ்
விரிநீ ருலகாண் டுவிரும் புவரே

சலங்கொண்ட இரணியன
தகல்மார்வம் கீண்டு
தடங்கடலை கடைந்தமுதங்
கொண்டுகந்த காளை
நலங்கொண்ட கருமுகில்போல்
திருமேனி யம்மான்
நாடோ றும் மகிழ்ந்தினிது
மருவியுறை கோயில்
சலங்கொண்டு மலர்சொரியும்
மல்லிகையொண் செருந்தி
சண்பகங்கள் மணநாறும்
வண்பொழிலி னூடே
வலங்கொண்டு கயலோடி
விளையாடு நாங்கூர்
வைகுந்த விண்ணகரம்
வணங்குமட நெஞ்சே

திண்ணியதோ ரரியுருவா
திசையனைத்தும் நடுங்க
தேவரொடு தானவர்கள்
திசைப்பஇரணியனை
நண்ணியவன் மார்வகல
துகிர்மடுத்த நாதன்
நாடோ றும் மகிழ்ந்தினிது
மருவியுறை கோயில்
எண்ணில்மிகு பெருஞ்செல்வ
தெழில்விளங்கு மறையும்
ஏழிசையும் கேள்விகளு
மியன்றபெருங் குணத்தோர்
மண்ணில்மிகு மறையவர்கள்
மலிவெய்து நாங்கூர்
வைகுந்த விண்ணகரம்
வணங்குமட நெஞ்சே

அண்டமுமிவ் வலைகடலு
மவனிகளு மெல்லாம்
அமுதுசெய்த திருவயிற்றன்
அரன்கொண்டு திரியும்
முண்டமது நிறைத்தவன்கண்
சாபமது நீக்கும்
முதல்வனவன் மகிழ்ந்தினிது
மருவியுறை கோயில்
எண்டிசையும் பெருஞ்செந்ந
லிளந்தெங்கு கதலி
இலைக்கொடியொண் குலைக்கமுகொ
டிகலிவளம் சொரிய
வண்டுபல விசைபாட
மயிலாலு நாங்கூர்
வைகுந்த விண்ணகரம்
வணங்குமட நெஞ்சே

கலையிலங்கு மகலல்குல்
அரக்கர்க்குல கொடியை
காதொடுமூ குடனரி
கதறியவ ளோடி
தலையிலங்கை வைத்துமலை
யிலங்கைபுக செய்த
தடந்தோளன் மகிழ்ந்தினிது
மருவியுறை கோயில்
சிலையிலங்கு மணிமாட
துச்சிமிசை சூலம்
செழுங்கொண்ட லகடிரி
சொரிந்தசெழு முத்தம்
மலையிலங்கு மாளிகைமேல்
மலிவெய்து நாங்கூர்
வைகுந்த விண்ணகரம்
வணங்குமட நெஞ்சே

மின்னனைய ண்மருங்குல்
மெல்லியற்கா யிலங்கை
வேந்தன்முடி யொருபதும்தோ
ளிருபதும்போ யுதிர
தன்நிகரில் சிலைவளைத்தன்
றிலங்கைபொடி செய்த
தடந்தோளன் மகிழ்ந்தினிது
மருவியுறை கோயில்
செந்நெலொடு செங்கமலம்
சேல்கயல்கள் வாளை
செங்கழுநீ ரொடுமிடைந்து
கழனிதிகழ தெங்கும்
மன்னுபுகழ் வேதியர்கள்
மலிவெய்து நாங்கூர்
வைகுந்த விண்ணகரம்
வணங்குமட நெஞ்சே

பெண்மைமிகு வடிவுகொடு
வந்தவளை பெரிய
பேயினது உருவுகொடு
மாளவுயி ருண்டு
திண்மைமிகு மருதொடுநற்
சகடமிறு தருளும்
தேவனவன் மகிழ்ந்தினிது
மருவியுறை கோயில்
உண்மைமிகு மறையொடுநற்
கலைகள்நிறை பொறைகள்
உதவுகொடை யென்றிவற்றி
னொழிவில்லா பெரிய
வண்மைமிகு மறையவர்கள்
மலிவெய்து நாங்கூர்
வைகுந்த விண்ணகரம்
வணங்குமட நெஞ்சே

விளங்கனியை யிளங்கன்று
கொண்டுதிர வெறிந்து
வேல்நெடுங்க ணாய்ச்சியர்கள்
வைத்ததயிர் வெண்ணெய்
உளங்குளிர அமுதுசெய்திவ்
வுலகுண்ட காளை
உகந்தினிது நாடோ றும்
மருவியுறை கோயில்
இளம்படிநற் கமுகுகுலை
தெங்குகொடி செந்நெல்
ஈன்கரும்பு கண்வளர
கால்தடவும் புனலால்
வளங்கொண்ட பெருஞ்செல்வம்
வளருமணி நாங்கூர்
வைகுந்த விண்ணகரம்
வணங்குமட நெஞ்சே

ஆறாத சினத்தின்மிகு
நரகனுர மழித்த
அடலாழி தடக்கையன்
அலர்மகட்கும் அரற்கும்
கூறா கொடுத்தருளும்
திருவுடம்பன் இமையோர்
குலமுதல்வன் மகிழ்ந்தினிது
மருவியுறை கோயில்
மாறாத மலர்க்கமலம்
செங்கழுநீர் ததும்பி
மதுவெள்ள மொழுகவய
லுழவர்மடை யடைப்ப
மாறாத பெருஞ்செல்வம்
வளருமணி நாங்கூர்
வைகுந்த விண்ணகரம்
வணங்குமட நெஞ்சே

வங்கமலி தடங்கடலுள்
வானவர்க ளோடு
மாமுனிவர் பலர்கூடி
மாமலர்கள் தூவி
எங்கள்தனி நாயகனே
எமக்கருளாய் என்னும்
ஈசனவன் மகிழ்ந்தினிது
மருவியுறை கோயில்
செங்கயலும் வாளைகளும்
செந்நெலிடை குதிப்ப
சேலுகளும் செழும்பணைசூழ்
வீதிதொறும் மிடைந்து
மங்குல்மதி யகடுரிஞ்சு
மணிமாட நாங்கூர்
வைகுந்த விண்ணகரம்
வணங்குமட நெஞ்சே

சங்குமலி தண்டுமுதல்
சக்கரமுனேந்தும்
தாமரைக்கண் நெடியபிரான்
தானமரும் கோயில்
வங்கமலி கடலுலகில்
மலிவெய்து நாங்கூர்
வைகுந்த விண்ணகர்மேல்
வண்டறையும் பொழில்சூழ்
மங்கையர்தம் தலைவன்மரு
வலர்தமுடல் துணிய
வாள்வீசும் பரகாலன்
கலிகன்றி சொன்ன
சங்கமலி தமிழ்மாலை
பத்திவைவல்லார்கள்
தரணியொடு விசும்பாளும்
தன்மைபெறு வாரே

திருமடந்தை மண்மடந்தை
யிருபாலும் திகழ
தீவினைகள் போயகல
அடியவர்க கென்றும்
அருள்நடந்துஇவ் வேழுலக
தவர்ப்பணிய வானோர்
அமர்ந்தேத்த இருந்தவிடம்
பெரும்புகழ்வே தியர்வாழ்
தருமிடங்கள் மலர்கள்மிகு
கைதைகள்செங கழுநீர்
தாமரைகள் தடங்கடொறு
மிடங்கடொறும் திகழ
அருவிடங்கள் பொழில்தழுவி
யெழில்திகழு நாங்கூர்
அரிமேய விண்ணகரம்
வணங்குமட நெஞ்சே

வென்றிமிகு நரகனுர
மதுவழிய விசிறும்
விறலாழி தடக்கையன்
விண்ணவர்கட்கு அன்று
குன்றுகொடு குரைகடலை
கடைந்தமுத மளிக்கும்
குருமணியென் னாரமுதம்
குலவியுறை கோயில்
என்றுமிகு பெருஞ்செல்வ
தெழில்விளங்கு மறையோர்
ஏழிசையும் கேள்விகளு
மியன்றபெருங் குணத்தோர்
அன்றுலகம் படைத்தவனே
யனையவர்கள் நாங்கூர்
அரிமேய விண்ணகரம்
வணங்குமட நெஞ்சே

உம்பருமிவ் வேழுலகு
மேழ்கடலு மெல்லாம்
உண்டபிரான்ண்டர்கள்முன்
கண்டுமகிழ வெய்த
கும்பமிகு மதயானை
மருப்பொசித்து கஞ்சன்
குஞ்சிபிடி தடித்தபிரான்
கோயில்மருங் கெங்கும்
பைம்பொனொடு வெண்முத்தம்
பலபுன்னை காட்ட
பலங்கனிகள் தேன்காட்ட
படவரவே ரல்குல்
அம்பனைய கண்மடவார்
மகிழ்வெய்து நாங்கூர்
அரிமேய விண்ணகரம்
வணங்குமட நெஞ்சே

ஓடாத வாளரியி
னுருவமது கொண்டு அன்
றுலப்பில்மிகு பெருவரத்த
விரணியனை பற்றி
வாடாத வள்ளுகிரால்
பிளந்தவன்றன் மகனு
கருள்செய்தான் வாழுமிடம்
மல்லிகைசெங் கழுநீர்
சேடேறு மலர்ச்செருந்தி
செழுங்கமுகம் பாளை
செண்பகங்கள் மணநாறும்
வண்பொழிலி னூடே
ஆடேறு வயலாலை
புகைகமழு நாங்கூர்
அரிமேய விண்ணகரம்
வணங்குமட நெஞ்சே

கண்டவர்தம் மனம்மகிழ
மாவலிதன் வேள்வி
களவில்மிகு சிறுகுறளாய்
மூவடியென் றிரந்திட்டு
அண்டமுமிவ் வலைகடலு
மவனிகளு மெல்லாம்
அளந்தபிரா னமருமிடம்
வளங்கொள்பொழி லயலே
அண்டமுறு முழவொலியும்
வண்டினங்க ளொலியும்
அருமறையி னொலியும்மட
வார்சிலம்பி னொலியும்
அண்டமுறு மலைகடலி
னொலிதிகழு நாங்கூர்
அரிமேய விண்ணகரம்
வணங்குமட நெஞ்சே

வாணெடுங்கண் மலர்க்கூந்தல்
மைதிலிக்கா இலங்கை
மன்னன்முடி யொருபதும்தோ
ளிருபதும்போ யுதிர
தாணெடுந்தின் சிலைவளைத்த
தயரதன்சேய் என்தன்
தனிச்சரண்வா னவர்க்கரசு
கருதுமிடம் தடமார்
சேணிடங்கொள் மலர்க்கமலம்
சேல்கயல்கள் வாளை
செந்நெலொடு மடுத்தரிய
வுதிர்ந்தசெழு முத்தம்
வாணெடுங்கண் கடைசியர்கள்
வாருமணி நாங்கூர்
அரிமேய விண்ணகரம்
வணங்குமட நெஞ்சே

தீமனத்தான் கஞ்சனது
வஞ்சனையில் திரியும்
தேனுகனும் பூதனைத
னாருயிரும் செகுத்தான்
காமனைத்தான் பயந்தகரு
மேனியுடை யம்மான்
கருதுமிடம் பொருதுபுனல்
துறைதுறைமு துந்தி
நாமனத்தால் மந்திரங்கள்
நால்வேதம் ஐந்து
வேள்வியோ டாறங்கம்
நவின்றுகலை பயின்றுஅங்
காமனத்து மறையவர்கள்
பயிலுமணி நாங்கூர்
அரிமேய விண்ணகரம்
வணங்குமட நெஞ்சே

கன்றதனால் விளவெறிந்து
கனியுதிர்த்த காளை
காமருசீர் முகில்வண்ணன்
காலிகள்முன் காப்பான்
குன்றதனால் மழைதடுத்து
குடமாடு கூத்தன்
குலவுமிடம் கொடிமதிள்கள்
மாளிகைகோ புரங்கள்
துன்றுமணி மண்டபங்கள்
சாலைகள்தூ மறையோர்
தொக்கீண்டி தொழுதியொடு
மிகப்பயிலும் சோலை
அன்றலர்வாய் மதுவுண்டங்
களிமுரலு நாங்கூர்
அரிமேய விண்ணகரம்
வணங்குமட நெஞ்சே

வஞ்சனையால் வந்தவள்த
னுயிருண்டு வாய்த்த
தயிருண்டு வெண்ணெயமு
துண்டுவலி மிக்க
கஞ்சனுயி ரதுவுண்டிவ்
வுலகுண்ட காளை
கருதுமிடம் காவிரிச
தகில்கனக முந்தி
மஞ்சுலவு பொழிலூடும்
வயலூடும் வந்து
வளங்கொடுப்ப மாமறையோர்
மாமலர்கள் தூவி
அஞ்சலித்தங் கரிசரணென்
றிரைஞ்சுமணி நாங்கூர்
அரிமேய விண்ணகரம்
வணங்குமட நெஞ்சே

சென்றுசின விடையேழும்
படவடர்த்து பின்னை
செவ்வித்தோள் புணர்ந்துகந்த
திருமால்தன் கோயில்
அன்றயனு மரன்சேயு
மனையவர்கள் நாங்கூர்
அரிமேய விண்ணகர
மமர்ந்தசெழுங் குன்றை
கன்றிநெடு வேல்வலவன்
மங்கையர்தம் கோமான்
கலிகன்றி யொலிமாலை
யைந்தினொடு மூன்றும்
ஒன்றினொடு மொன்றுமிவை
கற்றுவல்லார் உலக
துத்தமர்க குத்தமரா
யும்பருமா வர்களே
பெரிய திருமொழி நான்காம் பத்து

போதலர்ந்த பொழில்சோலை
புறமெங்கும் பொருதிரைகள்
தாதுதிர வந்தலைக்கும்
தடமண்ணி தென்கரைமேல்
மாதவன்றா னுறையுமிடம்
வயல்நாங்கை வரிவண்டு
தேதெனவென் றிசைபாடும்
திருத்தேவ னார்தொகையே

யாவருமா யாவையுமா
யெழில்வேத பொருள்களுமாய்
மூவருமாய் முதலாய
மூர்த்தியமர துறையுமிடம்
மாவரும்திண் படைமன்னை
வென்றிகொள்வார் மன்னுநாங்கை
தேவரும்சென் றிறைஞ்சுபொழில்
திருத்தேவ னார்தொகையே

வானாடும் மண்ணாடும்
மற்றுள்ள பல்லுயிரும்
தானாய வெம்பெருமான்
தலைவனமர துறையுமிடம்
ஆனாத பெருஞ்செல்வ
தருமறையோர் நாங்கைதன்னுள்
தேனாரு மலர்பொழில்சூழ்
திருத்தேவ னார்தொகையே

இந்திரனு மிமையவரும்
முனிவர்களும் எழிலமைந்த
சந்தமலர சதுமுகனும்
கதிரவனும் சந்திரனும்
எந்தையெ கருள் எனநின்
றருளுமிடம் எழில்நாங்கை
சுந்தரநல் பொழில்புடைசூழ்
திருத்தேவ னார்தொகையே

அண்டமுமிவ் வலைகடலு
மவனிகளும் குலவரையும்
உண்டபிரா னுறையுமிடம்
ஓளிமணிச தகில்கனகம்
தெண்டிரைகள் வரத்திரட்டும்
திகழ்மண்ணி தென்கரைமேல்
திண்திறலார் பயில்நாங்கை
திருத்தேவ னார்தொகையே

ஞாலமெல்லா மமுதுசெய்து
நான்மறையும் தொடராத
பாலகனா யாலிலையில்
பள்ளிகொள்ளும் பரமனிடம்
சாலிவளம் பெருகிவரும்
தடமண்ணி தென்கரைமேல்
சேலுகளும் வயல்நாங்கை
திருத்தேவ னார்தொகையே

ஓடாத வாளரியி
னுருவாகி யிரணியனை
வாடாத வள்ளுகிரால்
பிளந்தளைந்த மாலதிடம்
ஏடேறு பெருஞ்செல்வ
தெழில்மறையோர் நாங்கைதன்னுள்
சேடேறு பொழில்தழுவு
திருத்தேவ னார்தொகையே

வாராரு மிளங்கொங்கை
மைதிலியை மணம்புணர்வான்
காரார்திண் சிலையிறுத்த
தனிக்காளை கருதுமிடம்
ஏராரும் பெருஞ்செல்வ
தெழில்மறையோர் நாங்கைதன்னுள்
சீராரும் மலர்பொழில்சூழ்
திருத்தேவ னார்தொகையே

கும்பமிகு மதயானை
பாகனொடும் குலைந்துவிழ
கொம்பதனை பறித்தெறிந்த
கூத்தனமர துறையுமிடம்
வம்பவிழும் செண்பகத்தின்
மணங்கமழும் நாங்கைதன்னுள்
செம்பொன்மதிள் பொழில்புடைசூழ்
திருத்தேவ னார்தொகையே

காரார்ந்த திருமேனி
கண்ணனமர துறையுமிடம்
சீரார்ந்த பொழில்நாங்கை
திருத்தேவ னார்தொகைமேல்
கூரார்ந்த வேற்கலியன்
கூறுதமிழ் பத்தும்வல்லார்
எரார்ந்த வைகுந
திமையவரோ டிருப்பாரே

கம்ப மாகட லடைத்திலங் கைக்குமன்
கதிர்முடி யவைபத்தும்
அம்பி னாலறுத்து அரசவன் தம்பிக்கு
அளித்தவ னுறைகோயில்
செம்ப லாநிரை செண்பகம் மாதவி
சூதகம் வாழைகள்சூழ்
வம்பு லாம்கமு கோங்கிய நாங்கூர்
வண்புரு டோ த்தமமே

பல்ல வந்திகழ் பூங்கடம் பேறி
காளியன் பணவரங்கில்
ஒல்லை வந்துற பாய்ந்தரு நடஞ்செய்த
உம்பர்க்கோ னுறைகோயில்
நல்ல வெந்தழல் மூன்றுநால் வேதமை
வேள்வியோ டாறங்கம்
வல்ல வந்தணர் மல்கிய நாங்கூர்
வண்புரு டோ த்தமமே

அண்ட ரானவர் வானவர் கோனுக்கென்
றமைத்தசோ றதுவெல்லாம்
உண்டு கோநிரை மேய்த்தவை காத்தவன்
உகந்தினி துறைகோயில்
கொண்ட லார்முழ வில்குளிர் வார்பொழில்
குலமயில் நடமாட
வண்டு தானிசை பாடிடு நாங்கூர்
வண்புரு டோ த்தமமே

பருங்கை யானையின் கொம்பினை பறித்ததன்
பாகனை சாடிப்புக்கு
ஒறுங்க மல்லரை கொன்றுபின் கஞ்சனை
உதைத்தவ னுறைகோயில்
கரும்பினூடுயர் சாலிகள் விளைதரு
கழனியில் மலிவாவி
மருங்கெ லாம்பொழி லோங்கிய நாங்கூர்
வண்புரு டோ த்தமமே

சாடு போய்விழ தாள்நிமிர தீசன்தன்
படையொடுங் கிளையோடும்
ஓட வாணனை யாயிர தோள்களும்
துணித்தவ னுறைகோயில்
ஆடு வான்கொடி யகல்விசும் பணவிப்போ
பகலவ னொளிமறைக்கும்
மாட மாளிகை சூழ்தரு நாங்கூர்
வண்புரு டோ த்தமமே

அங்கை யாலடி மூன்றுநீ ரேற்றயன்
அலர்கொடு தொழுதேத்த
கங்கை போதர கால்நிமிர தருளிய
கண்ணன்வ துறைகோயில்
கொங்கை கோங்கவை காட்டவாய் குமுதங்கள்
காட்டமா பதுமங்கள்
மங்கை மார்முகம் காட்டிடு நாங்கூர்
வண்புரு டோ த்தமமே

உளைய வொண்டிறல் பொன்பெய ரோன்தன
துரம்பிள துதிரத்தை
அளையும் வெஞ்சின தரிபரி கீறிய
அப்பன்வ துறைகோயில்
இளைய மங்கைய ரிணையடி சிலம்பினோ
டெழில்கொள்ப தடிப்போர்கை
வளையில் நின்றொலி மல்கிய நாங்கூர்
வண்புரு டோ த்தமமே

வாளை யார்தட கண்ணுமை பங்கன்வன்
சாபமற் றதுநீங்க
மூளை யார்சிர தையமுன் அளித்தவெம்
முகில்வண்ண னுறைகோயில்
பாளை வான்கமு கூடுயர் தெங்கின்வன்
பழம்விழ வெருவிப்போய்
வாளை பாய்தடம் சூழ்தரு நாங்கூர்
வண்புரு டோ த்தமமே

இந்து வார்சடை யீசனை பயந்தநான்
முகனைத்தன் னெழிலாரும்
உந்தி மாமலர் மீமிசை படைத்தவன்
உகந்தினி துறைகோயில்
குந்தி வாழையின் கொழுங்கனி கர்ந்துதன்
குருளையை தழுவிப்போய்
மந்தி மாம்பணை மேல்வைகு நாங்கூர்
வண்புரு டோ த்தமமே

மண்ணு ளார்புகழ் வேதியர் நாங்கூர்
வண்புரு டோ த்தமத்துள்
அண்ணல் சேவடி கீழடை துய்ந்தவன்
ஆலிமன் அருள்மாரி
பண்ணு ளார்தர பாடிய பாடலி
பத்தும்வல் லார்உலகில்
எண்ணி லாதபே ரின்பமுற் றிமையவ
ரோடும் கூடுவரே

பேரணி துலக தவர்தொழு தேத்தும்
பேரரு ளாளனெம் பிரானை
வாரணி முலையாள் மலர்மக ளோடு
மண்மக ளுமுடன் நிற்ப
சீரணி மாட நாங்கைநன் னடுவுள்
செம்பொன்செய் கோயிலி னுள்ளே
காரணி மேகம் நின்றதொ பானை
கண்டுகொண் டுய்ந்தொழி தேனே

பிறப்பொடு மூப்பொன் றில்லவன் றன்னை
பேதியா வின்பவெள் ளத்தை
இறப்பெதிர் கால கழிவுமா னானை
ஏழிசை யின்சுவை தன்னை
சிறப்புடை மறையோர் நாங்கைநன் னடுவுள்
செம்பொன்செய் கோயிலி னுள்ளே
மறைப்பெரும் பொருளை வானவர் கோனை
கண்டுநான் வாழ்ந்தொழி தேனே

திடவிசும் பெரிநீர் திங்களும் சுடரும்
செழுநில துயிர்களும் மற்றும்
படர்பொருள் களுமாய் நின்றவன் றன்னை
பங்க தயனவ னனைய
திடமொழி மறையோர் நாங்கைநன் னடுவுள்
செம்பொன்செய் கோயிலி னுள்ளே
கடல்நிற வண்ணன் றன்னைநா னடியேன்
கண்டுகொண் டுய்ந்தொழி தேனே

வசையறு குறளாய் மாவலி வேள்வி
மண்ணள விட்டவன் றன்னை
அசைவறு மமர ரடியிணை வணங்க
அலைகடல் துயின்றவம் மானை
திசைமுக னனையோர் நாங்கைநன் னடுவுள்
செம்பொன்செய் கோயிலி னுள்ளே
உயர்மணி மகுடம் சூடிநின் றானை
கண்டுகொண் டுய்ந்தொழி தேனே

தீமன தரக்கர் திறலழி தவனே
என்றுசென் றடைந்தவர் தமக்கு
தாய்மன திரங்கி யருளினை கொடுக்கும்
தயரதன் மதலையை சயமே
தேமலர பொழில்சூழ் நாங்கைநன் னடுவுள்
செம்பொன்செய் கோயிலி னுள்ளே
காமனை பயந்தான் றன்னைநா னடியேன்
கண்டுகொண் டுய்ந்தொழி தேனே

மல்லைமா முந்நீ ரதர்பட மலையால்
அணைசெய்து மகிழ்ந்தவன் றன்னை
கல்லின்மீ தியன்ற கடிமதி ளிலங்கை
கலங்கவோர் வாளிதொ டானை
செல்வநான் மறையோர் நாங்கைநன் னடுவுள்
செம்பொன்செய் கோயிலி னுள்ளே
அல்லிமா மலராள் தன்னொடு மடியேன்
கண்டுகொண் டல்லல்தீர தேனே

வெஞ்சின களிறும் வில்லொடு மல்லும்
வெகுண்டிறு தடர்த்தவன் றன்னை
கஞ்சனை காய்ந்த காளையம் மானை
கருமுகில் திருநிற தவனை
செஞ்சொல்நான் மறையோர் நாங்கைநன் னடுவுள்
செம்பொன்செய் கோயிலி னுள்ளே
அஞ்சன குன்றம் நின்றதொ பானை
கண்டுகொண் டல்லல்தீர தேனே

அன்றிய வாண னாயிரம் தோளும்
துணியவன் றாழிதொ டானை
மின்திகழ் குடுமி வேங்கட மலைமேல்
மேவிய வேதநல் விளக்கை
தென்திசை திலதம் அனையவர் நாங்கை
செம்பொன்செய் கோயிலி னுள்ளே
மன்றது பொலிய மகிழ்ந்துநின் றானை
வணங்கிநான் வாழ்ந்தொழி தேனே

களங்கனி வண்ணா கண்ணணே என்றன்
கார்முகி லே என நினைந்திட்டு
உளங்கனி திருக்கு மடியவர் தங்கள்
உள்ளத்து ளூறிய தேனை
தெளிந்தநான் மறையோர் நாங்கைநன்னடுவுள்
செம்பொன்செய் கோயிலி னுள்ளே
வளங்கொள்பே ரின்பம் மன்னிநின் றானை
வணங்கிநான் வாழ்ந்தொழி தேனே

தேனமர் சோலை நாங்கைநன் னடுவுள்
செம்பொன்செய் கோயிலி னுள்ளே
வானவர் கோனை கண்டமை சொல்லும்
மங்கையார் வாட்கலி கன்றி
ஊனமில் பாட லொன்பதோ டொன்றும்
ஒழிவின்றி கற்றுவல் லார்கள்
மானவெண் குடைக்கீழ் வையக மாண்டு
வானவ ராகுவர் மகிழ்ந்தே

மாற்றரசர் மணிமுடியும்
திறலும் தேசும்
மற்றவர்தம் காதலிமார்
குழையும் தந்தை
கால்தளையு முடன்கழல
வந்து தோன்றி
கதநாகம் காத்தளித்த
கண்ணர் கண்டீர்
நூற்றிதழ்கொ ளரவிந்தம்
நுழைந்த பள்ள
திளங்கமுகின் முதுபாளை
பகுவாய் நண்டின்
சேற்றளையில் வெண்முத்தம்
சிந்து நாங்கூர
திருத்தெற்றி யம்பலத்தென்
செங்கண் மாலே

பொற்றொடித்தோள் மடமகள்தன்
வடிவு கொண்ட
பொல்லாத வன்பேய்ச்சி
கொங்கை வாங்கி
பெற்றெடுத்த தாய்போல
மடுப்ப ஆரும்
பேணாநஞ் சுண்டுகந்த
பிள்ளை கண்டீர்
நெல்தொடுத்த மலர்நீலம்
நிறைந்த சூழல்
இருஞ்சிறைய வண்டொலியும்
நெடுங்க ணார்தம்
சிற்றடிமேல் சிலம்பொலியும்
மிழற்று நாங்கூர
திருத்தெற்றி யம்பலத்தென்
செங்கண் மாலே

படலடைந்த சிறுகுரம்பை
நுழைந்து புக்கு
பசுவெண்ணெய் பதமார
பண்ணை முற்றும்
அடலடர்த்த வேற்கண்ணார்
தோக்கை பற்றி
அலந்தலைமை செய்துழலு
மையன் கண்டீர்
மடலெடுத்த நெடுன்தெங்கின்
பழங்கல் வீழ
மாங்கனிகள் திரட்டுருட்டா
வருநீர பொன்னி
திடலெடுத்து மலர்சுமந்தங்
கிழியு நாங்கூர
திருத்தெற்றி யம்பலத்தென்
செங்கண் மாலே

வாராரும் முலைமடவாள்
பின்னை காகி
வளைமருப்பிற் கடுஞ்சினத்து
வன்தா ளார்ந்த
காரார்திண் விடையடர்த்து
வதுவை யாண்ட
கருமுகில்போல் திருநிறத்தென்
கண்ணர் கண்டீர்
ஏராரும் மலர்ப்பொழில்கள்
தழுவி யெங்கும்
எழில்மதியை கால்தொடா
விளங்கு சோதி
சீராரு மணிமாடம்
திகழும் நாங்கூர
திருத்தெற்றி யம்பலத்தென்
செங்கண் மாலே

கலையிலங்கு மகலல்குல்
கமல பாவை
கதி ர்முத்த வெண்ணகையாள்
கருங்க ணாய்ச்சி
முலையிலங்கு மொளிமணிப்பூண்
வடமும் தேய்ப்ப
மூவாத வரைநெடுந்தோள்
மூர்த்தி கண்டீர்
மலையிலங்கு நிரைச்சந்தி
மாட வீதி
ஆடவரை மடமொழியார்
முகத்து இரண்டு
சிலைவிலங்கி மனஞ்சிறைகொண்
டிருக்கும் நாங்கூர
திருத்தெற்றி யம்பலத்தென்
செங்கண் மாலே

தான்போலு மென்றெழுந்தான்
தரணி யாளன்
அதுகண்டு தரித்திருப்பா
னரக்கர் தங்கள்
கோன்போலு மென்றெழுந்தான்
குன்ற மன்ன
இருபதுதோ ளுடன்துணித்த
வொருவன் கண்டீர்
மான்போலு மென்னோக்கின்
செய்ய வாயார்
மரகதம் போல் மடக்கிளியை
கைமேல் கொண்டு
தேன்போலு மென்மழலை
பயிற்றும் நாங்கூர
திருத்தெற்றி யம்பலத்தென்
செங்கண் மாலே

பொங்கிலங்கு புரிநூலும்
தோலும் தாழ
பொல்லாத குறளுருவா
பொருந்தா வாணன்
மங்கலம்சேர் மறைவேள்வி
யதனுள் புக்கு
மண்ணகலம் குறையிரந்த
மைந்தன் கண்டீர்
கொங்கலர்ந்த மலர்க்குழலார்
கொங்கை தோய்ந்த
குங்குமத்தின் குழம்பளைந்த
கோல தன்னால்
செங்கலங்கல் வெண்மணல்மேல்
தவழும் நாங்கூர
திருதெற்றி யம்பலத்தென்
செங்கண் மாலே

சிலம்பினிடை சிறுபரல்போல்
பெரிய மேரு
திருக்குளம்பில் கணகணப்ப
திருவா காரம்
குலுங்க நில மடந்தைதனை
யிடந்து புல்கி
கோட்டிடைவை தருளியவெங்
கோமான் கண்டீர்
இலங்கியநான் மறையனைத்து
மங்க மாறும்
ஏழிசையும் கேள்விகளு
மெண்டி கெங்கும்
சிலம்பியநற் பெருஞ்செல்வம்
திகழும் நாங்கூர
திருதெற்றி யம்பலத்தென்
செங்கண் மாலே

ஏழுலகும் தாழ்வரையு
மெங்கு மூடி
எண்டிசையு மண்டலமும்
மண்டி அண்டம்
மோழையெழு தாழிமிகும்
ஊழி வெள்ளம்
முன்னகட்டி லொடுக்கியவெம்
மூர்த்தி கண்டீர்
ஊழிதொறு மூழிதொறு
முயர்ந்த செல்வ
தோங்கியநான் மறையனைத்தும்
தாங்கு நாவர்
சேழுயர்ந்த மணிமாடம்
திகழும் நாங்கூர
திருதெற்றி யம்பலத்தென்
செங்கண் மாலே

சீரணிந்த மணிமாடம்
திகழும் நாங்கூர
திருதெற்றி யம்பலத்தென்
செங்கண் மாலை
கூரணிந்த வேல்வலவன்
ஆலி நாடன்
கொடிமாட மங்கையர்கோன்
குறைய லாளி
பாரணிந்த தொல்புகழான்
கலியன் சொன்ன
பாமாலை யிவையைந்து
மைந்தும் வல்லார்
சீரணிந்த வுலகத்து
மன்ன ராகி
சேண்விசும்பில் வானவரா
திகழ்வர் தாமே

தூம்புடை பனைக்கை வேழம்
துயர்கெடு தருளி மன்னு
காம்புடை குன்ற மேந்தி
கடுமழை காத்த எந்தை
பூம்புனல் பொன்னி முற்றும்
புகுந்துபொன் வரண்ட எங்கும்
தேம்பொழில் கமழும் நாங்கூர
திருமணி கூட தானே

கவ்வைவா ளெயிற்று வன்பே
கதிர்முலை சுவைத்துஇ லங்கை
வவ்விய இடும்பை தீர
கடுங்கணை துரந்த எந்தை
கொவ்வைவாய் மகளிர் கொங்கை
குங்குமம் கழுவி போந்த
தெய்வநீர் கமழும் நாங்கூர
திருமணி கூட தானே

மாத்தொழில் மடங செற்று
மறுதிற நடந்து வன்தாள்
சேத்தொழில் சிதைத்து பின்னை
செவ்வித்தோள் புணர்ந்த எந்தை
நாத்தொழில் மறைவல் லார்கள்
நயந்தறம் பயந்த வண்கை
தீத்தொழில் பயிலும் நாங்கூர
திருமணி கூட தானே

தாங்கருஞ் சினத்து வன்தாள்
தடக்கைமா மருப்பு வாங்கி
பூங்குரு தொசித்து புள்வாய்
பிளந்தெரு தடர்த்த எந்தை
மாங்கனி நுகர்ந்த மந்தி
வந்துவண் டிரிய வாழை
தீங்கனி நுகரும் நாங்கூர
திருமணி கூட தானே

கருமக ளிலங்கை யாட்டி
பிலங்கொள்வாய் திறந்து தன்மேல்
வருமவள் செவியும் மூக்கும்
வாளினால் தடிந்த எந்தை
பெருமகள் பேதை மங்கை
தன்னொடும் பிரிவி லாத
திருமகள் மருவும் நாங்கூர
திருமணி கூட தனே

கெண்டையும் குறளும் புள்ளும்
கேழலு மரியும் மாவும்
அண்டமும் சுடரும் அல்ல
ஆற்றலு மாய எந்தை
ஓண்டிறல் தென்ன னோட
வடவர சோட்டங் கண்ட
திண்டிற லாளர் நாங்கூர
திருமணி கூட தனே

குன்றமும் வானும் மண்ணும் குளிர்புனல் திங்க ளோடு
நின்றவெஞ் சுடரும் அல்லா நிலைகளு மாய எந்தை
மன்றமும் வயலும் காவும் மாடமும் மணங்கொண்டு எங்கும்
தென்றல்வ துலவும் நாங்கூர திருமணி கூட தானே

சங்கையும் துணிவும் பொய்யும் மெய்யும் தரணி யோம்பும்
பொங்கிய முகிலும் அல்லா பொருள்களு மாய வெந்தை
பங்கய முகுத்த தேறல் பருகிய வாளை பாய
செங்கய லுகளும் நாங்கூர திருமணி கூட தானே

பாவமும் அறமும் வீடும் இன்பமு துன்ப தானும்
கோவமும் அருளும் அல்லா குணங்களு மாய எந்தை
மூவரி லெங்கள் மூர்த்தி இவன் என முனிவரோடு
தேவர்வ திறைஞ்சும் நாங்கூர திருமணி கூட தனே

திங்கள்தோய் மாட நாங்கூர திருமணி கூட தானை
மங்கையர் தலைவன் வண்தார கலியன்வா யொலிகள் வல்லார்
பொங்குநீ ருலக மாண்டு பொன்னுல காண்டு பின்னும்
வெங்கதிர பரிதி வட்ட தூடுபோய் விளங்கு வாரே

தாவள துலக முற்றும் தடமலர பொய்கை புக்கு
நாவளம் நவின்றிங் கேத்த நாகத்தின் நடுக்கந்தீர்த்தாய்
மாவளம் பெருகி மன்னும் மறையவர் வாழும் நாங்கை
காவளம் பாடி மேய கண்ணனே களைகணீயே

மண்ணிட தேன மாகி மாவலி வலிதொ லைப்பான்
விண்ணவர் வேண்ட சென்று வேள்வியில் குறையி ரந்தாய்
துண்ணென மாற்றார் தம்மை தொலைத்தவர் நாங்கை மேய
கண்ணனே காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே

உருத்தெழு வாலி மார்வில் ஓருகணை யுருவ வோட்டி
கருத்துடை தம்பி கின்ப கதிமுடி யரசளித்தாய்
பருத்தெழு பலவும் மாவும் பழம்விழு தொழுகும் நாங்கை
கருத்தனே காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே

முனைமக தரக்கன் மாள முடிகள்ப தறுத்து வீழ்த்து ஆங்
கனையவற் கிளைய வற்கே அரசளி தருளி னானே
சுனைகளில் கயல்கள் பா சுரும்புதேன் நுகரும் நாங்கை
கனைகழல் காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே

படவர வுச்சி தன்மேல் பாய்ந்துபன்னடங்கள் செய்து
மடவரல் மங்கை தன்னை மார்வக திருத்தி னானே
தடவரை தங்கு மாட தகுபுகழ் நாங்கை மேய
கடவுளே காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே

மல்லரை யட்டு மாள கஞ்சனை மலைந்து கொன்று
பல்லர சவிந்து வீழ பாரத போர்மு டித்தாய்
நல்லரண் காவின் நீழல் நறைகமழ் நாங்கை மேய
கல்லரண் காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே

மூத்தவற் கரசு வேண்டி முன்பு தூதெழு தருளி
மாத்தமர் பாகன் வீழ மதகரி மருப்பொ சித்தாய்
பூத்தமர் சோலை யோங்கி புனல்பர தொழுகும் நாங்கை
காத்தவனே காவ ளந்தண் பாடியாய் களை கணீயே

ஏவிளங் கன்னி காகி இமையவர் கோனை செற்று
காவளம் கடிதி றுத்து கற்பகம் கொண்டு போந்தாய்
பூவளம் பொழில்கள் சூழ்ந்த புரந்தரன் செய்த நாங்கை
காவளம் பாடி மேய கண்ணனே களைக ணீயே

சந்தமாய் சமய மாகி சமயவைம் பூத மாகி
அந்தமா யாதி யாகி அருமறை யவையு மானாய்
மந்தமார் பொழில்க டோ றும் மடமயி லாலும் நாங்கை
கந்தமார் காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே

மாவளம் பெருகி மன்னும் மறையவர் வாழும் நாங்கை
காவளம் பாடி மேய கண்ணணை கலியன் சொன்ன
பாவளம் பத்தும் வல்லார் பார்மிசை யரச ராகி
கோவிள மன்னர் தாழ குடைநிழல் பொலிவர் தாமே

கண்ணார் கடல்போல் திருமேனி கரியாய்
நண்ணார்முனை வென்றிகொள் வார்மன்னு நாங்கூர்
திண்ணார் மதிள்சூழ் திருவெள்ள குளத்துள்
அண்ணா அடியே னிடரை களையாயே

கொந்தார் துளவ மலர்கொன் டணிவானே
நந்தா தபெரும் புகழ்வே தியர்நாங்கூர்
செந்தா மரைநீர திருவெள்ள குளத்துள்
எந்தாய் அடியே னிடரை களையாயே

குன்றால் குளிர்மா ரிதடு துகந்தானே
நன்றா யபெரும் புகழ்வே தியர்நாங்கூர்
சென்றார் வணங்கும் திருவெள்ள குளத்துள்
நின்றாய் நெடியாய் அடியே னிடர்நீக்கே

கானார் கரிகொம் பதொசித்த களிறே
நானா வகைநல் லவர்மன் னியநாங்கூர்
தேனார் பொழில்சூழ் திருவெள்ள குளத்துள்
ஆனாய் அடியேனு கருள்புரி யாயே

வேடார் திருவேங் கடம்மேய விளக்கே
நாடார் புகழ்வே தியர்மன் னியநாங்கூர்
சேடார் பொழில்சூழ் திருவெள்ளக்குளத்தாய்
பாடா வருவேன் விணையா யினபாற்றே

கல்லால் கடலை யணைகட்டி யுகந்தாய்
நல்லார் பலர்வே தியர்மன் னியநாங்கூர
செல்வா திருவெள்ள குளத்துறை வானே
எல்லா இடரும் கெடுமா றருளாயே

கோலால் நிரைமேய்த்த எங்கோ வலர்கோவே
நாலா கியவே தியர்மன் னியநாங்கூர்
சேலார் வயல்சூழ் திருவெள்ள குளத்துள்
மாலே எனவல் வினைதீர தருளாயே

வாரா கமதாகி யிம்மண்ணை யிடந்தாய்
நாரா யணனே நல்லவே தியர்நாங்கூர்
சீரார் பொழில்சூழ் திருவெள்ள குளத்துள்
ஆரா வமுதே அடியேற் கருளாயே

பூவார் திருமா மகள்புல் லியமார்பா
நாவார் புகழ்வே தியர்மன் னியநாங்கூர
தேவா திருவெள்ள குளத்துறை வானே
ஆவா அடியா னிவன் என் றருளாயே

நல்லன் புடைவே தியர்மன் னியநாங்கூர
செல்வன் திருவெள் ளக்குள துறைவானை
கல்லின் மலிதோள் கலியன் சொன்னமாலை
வல்ல ரெனவல் லவர்வா னவர்தாமே

கவளயானை கொம்பொசித்த கண்ணனென்றும் காமருசீர
குவளைமேக மன்னமேனி கொண்டகோனென் னானையென்றும்
தவளமாட நீடுநாங்கை தாமரையாள் கேள்வனென்றும்
பவளவாயா ளென்மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே

கஞ்சன்விட்ட வெஞ்சினத்த களிறடர்த்த காளையென்றும்
வஞ்சமேவி வந்தபேயின் உயிரையுண்ட மாயனென்றும்
செஞ்சொலாளர் நீடுநாங்கை தேவதேவ னென்றென்றோதி
பஞ்சியன்ன மெல்லடியாள் பார்த்தன்பள்ளி பாடுவாளே

அண்டர்கோனென் னானையென்றும் ஆயர்மாதர் கொங்கைபுல்கு
செண்டனென்றும் நான்மறைகள் தேடியோடும் செல்வனென்றும்
வண்டுலவு பொழில்கொள்நாங்கை மன்னுமாய னென்றென்றோதி
பண்டுபோலன் றென்மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே

கொல்லையானாள் பரிசழிந்தாள் கோல்வளையார் தம்முகப்பே
மல்லைமுன்னீர் தட்டிலங்கை கட்டழித்த மாயனென்றும்
செல்வம்மல்கு மறையோர்நாங்கை தேவதேவ னென்றென்றோதி
பல்வளையா ளென்மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே

அரக்கராவி மாளவன்று ஆழ்கடல்சூ ழிலங்கைசெற்ற
குரக்கரச னென்றும்கோல வில்லியென்றும் மாமதியை
நெருக்குமாட நீடுநாங்கை நின்மலன்தா னென்றென்றோதி
பரக்கழிந்தா ளென்மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே

ஞாலமுற்று முண்டுமிழிந்த நாதனென்றும் நானிலஞ்சூழ்
வேலையன்ன கோலமேனி வண்ணனென்றும் மேலெழுந்து
சேலுகளும் வயல்கொள்நாங்கை தேவதேவ னென்றென்றோதி
பாலின்நல்ல மென்மொழியாள் பார்த்தன்பள்ளி பாடுவாளே

நாடியென்ற னுள்ளொங்கொண்ட நாதனென்றும் நான்மறைகள்
தேடியென்றும் காணமாட்டா செல்வனென்றும் சிறைகொள்வண்டு
சேடுலவு பொழில்கொள்நாங்கை தேவதேவ னென்றென்றோதி
பாடகம்சேர் மெல்லடியாள் பார்த்தன்பள்ளி பாடுவாளே

உலகமேத்து மொருவனென்றும் ஒண்சுடரோ டும்பரெய்தா
நிலவுமாழி படையனென்றும் நேசனென்றும் தென்திசைக்கு
திலதமன்ன மறையோர்நாங்கை தேவதேவ னென்றென்றோதி
பலருமேச வென்மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே

கண்ணனென்றும் வானவர்கள் காதலித்து மலர்கள்தூவும்
எண்ணனென்று மின்பனென்றும் ஏழுலுகு காதியென்றும்
திண்ணமாட நீடுநாங்கை தேவதேவ னென்றென்றோதி
பண்ணினன்ன மென்மொழியாள் பார்த்தன்பள்ளி பாடுவாளே

பாருள்நல்ல மறையோர்நாங்கை பார்த்தன்பள்ளி செங்கண்மாலை
வார்கொள்நல்ல முலைமடவாள் பாடலைந்தாய் மொழிந்தமாற்றம்
கூர்கொள்நல்ல வேல்கலியன் கூறுதமிழ் பத்தும்வல்லார்
ஏர்கொள்நல்ல வைகுந்தத்துள் இன்பம்நாளு மெய்துவாரே

நும்மை தொழுதோம் நுந்தம் பணிசெய் திருக்கும் நும்மடியோம்
இம்மை கின்பம் பெற்றோ மெந்தாய் இந்த ளூரீரே
எம்மை கடிதா கரும மருளி ஆவா வென்றிரங்கி
நம்மை யொருகால் காட்டி நடந்தால் நாங்க ளுய்யோமே

சிந்தை தன்னுள் நீங்கா திருந்த திருவே மருவினிய
மைந்தா அந்த ணாலி மாலே சோலை மழகளிறே
நந்தா விளக்கின் சுடரே நறையூர் நின்ற நம்பீ என்
எந்தாய் இந்த ளூராய் அடியேற் கிறையு மிரங்காயே

பேசு கின்ற திதுவே வைய மீரடி யாலளந்த
மூசி வண்டு முரலும கண்ணி முடியீர் உம்மைக்காணும்
ஆசை யென்னும் கடலில் வீழ்ந்திங் கயர்ந்தோம் அயலாரும்
ஏசு கின்ற திதுவே காணும் இந்த ளூரீரே

ஆசை வழுவா தேத்து எமக்கிங் கிழுக்காய்த்து அடியோர்க்கு
தேச மறிய வுமக்கே யாளா திரிகின் றோமுக்கு
காசி னொளியில் திகழும் வண்ணம் காட்டீர் எம்பெருமான்
வாசி வல்லீர் இந்த ளூரீர் வாழ்ந்தே போம்நீரே

தீயெம் பெருமான் நீரெம் திசையு மிருநிலனு
மாய் எம் பெருமா னாகி நின்றா லடியோம் காணோமால்
தாயெம் பெருமான் தந்தை யாவீர் அடியேமு
கேயெம் பெருமா னல்லீ ரோநீர் இந்த ளூரீரே

சொல்லா தொழிய கில்லேன் அறிந்த சொல்லில் நும்மடியார்
எல்லா ரோடு மொக்க வெண்ணி யிருந்தீ ரடியேனை
நல்ல ரறிவீர் தீயா நமக்கிவ் வுலகத்தில்
எல்லா மறிவீ ரீதே யறியீர் இந்த ளூரீரே

மாட்டீ ரானீர் பணிநீர் கொள்ள எம்மை பணியறியா
விட்டீர் இதனை வேறே சொன்னோம் இந்த ளூரீரே
காட்டீ ரானீர் நுந்த மடிக்கள் காட்டில் உமக்கிந்த
நாட்டே வந்து தொண்டரான நாங்க ளுய்யோமே

முன்னை வண்ணம் பாலின் முழுதும் நிலைநின்ற
பின்னை வண்ணம் கொண்டல் வண்ண மெண்ணுங்கால்
பொன்னின் வண்ணம் மணியின் புரையு திருமேனி
இன்ன வண்ண மென்று காட்டீர் இந்த ளூரீரே

எந்தை தந்தை தம்மா னென்றென் றெமெரே றெமரெ ழேளவும்
வந்து நின்ற தொண்டரோர்க்கே வாசி வல்லீரால்
சிந்தை தன்னுள் முந்தி நிற்றிர் சிறிதும் திருமேனி
இந்த வண்ண மென்று காட்டீர் ளூரீரே

ஏரார் பொழில்சூழ் இந்த ளூரி லெந்தை பெருமானை
காரார் புறவில் மங்கை வேந்தன் கலிய னொலிசெய்த
சீரா ரின்சொல் மாலை கற்று திரிவா ருலகத்து
ஆரா ரவரே யமரர கென்று மமர ராவாரே

ஆய்ச்சியரழைப்ப வெண்ணெயுண்டொருகால் ஆலிலை வளர்ந்தவெம்
பெருமான்
பேய்ச்சியை முலயுண் டிணைமரு திறுத்து பெருநில மளந்தவன் கோயில்
காய்த்தநீள் கமுகும் கதலியும் தெங்கும் எங்குமாம் பொழில்களி னடுவே
வாய்த்தநீர் பாயும் மண்ணியின் தென்பால் திருவெள்ளி யங்குடி யதுவே

ஆநிரை மேய்த்தன் றலைகட லடைத்திட்டரக்கர் தம் சிரங்களை யுருட்டி
கார்நிறை மேகம் கலந்தோ ருருவ கண்ணனார் கருதிய கோயில்
பூநீரை செருந்தி புன்னைமு தரும்பி பொதும்பிடை வரிவண்டு மிண்டி
தேனிரை துண்டங் கின்னிசை முரலும் திருவெள்ளி யங்குடி யதுவே

கடுவிடமுடைய காளியன் தடத்தை கலக்கிமுன் னலக்கழித்து அவன்றன்
படமிற பாய்ந்து பன்மணி சிந்த பல்நடம் பயின்றவன் கோயில்
படவர வல்குல் பாவைநல் லார்கள் பயிற்றிய நாடக தொலிபோய்
அடைபுடை தழுவி யண்டநின் றதிரும் திருவெள்ளி யங்குடி யதுவே

கறவைமுன் காத்து கஞ்சனை காய்த்த காளமே கத்திரு வுருவன்
பறவைமுன் னுயர்த்து பாற்கடல் துயின்ற பரமனார் பள்ளிகொள் கோயில்
துறைதுறை தோறும் பொன்மணி சிதறும் தொகுதிரை மண்ணியின் தென்பால்
செறிமணி மாட கொடிகதி ரணவும் திருவெள்ளி யங்குடி யதுவே

பாரினை யுண்டு யுமிழ்ந்து பாரதம் கையெறிந்து ஒருகால்
தேரினை யூர்ந்து தேரினை துரந்த செங்கண்மால் சென்றுறை கோயில்
ஏர்நிரை வயளுள் வாளைகள் மறுகி எமக்கிட மன்றிதென்றெண்ணி
சீர்மலி பொய்கை சென்றணை கின்ற திருவெள்ளி யங்குடி யதுவே

காற்றிடை பூளை கரந்தன அரந்தை உறக்கட லரக்கர்தம் சேனை
கூற்றிடை செல்ல கொடுங்கணை துரந்த கோலவில் இராமன் தன்
கோயில்
ஊற்றிடை நின்ற வாழையின் கனிகள் ஊழ்த்துவீழ தனவுண்டு மண்டி
சேற்றிடை கயல்க ளுள்திகழ் வயல்சூழ் திருவெள்ளி யங்குடி யதுவே

ஓள்ளிய கருமம் செய்வனென் றுணர்ந்த மாவலி வேள்வியில் புக்கு
தெள்ளிய குறளாய் மூவடி கொண்டு திக்குற வளர்ந்தவன் கோயில்
அள்ளியம் பொழில்வா யிருந்துவாழ் குயில்கள் அரியரி யென்றவை யழைப்ப
வெள்ளியார் வணங்க விரைந்தருள் செய்வான் திருவெள்ளி யங்குடி யதுவே


முடியுடை யமரர கிடர்செயு மசுரர் தம்பெரு மானைஅன் றரியாய்
மடியிடை வைத்து மார்வைமுன் கீண்ட மாயனார் மன்னிய கோயில்
படியிடை மாட தடியிடை தூணில் பதித்தபன் மணிகளி னொளியால்
விடிபக லிரவென் றறிவரி தாய திருவெள்ளி யங்குடி யதுவே

குடிகுடி யா கூடிநின் றமரர் குணங்களே பிதற்றிநின் றேத்த
அடியவர கருளி யரவணை துயின்ற ஆழியா நமர்ந்துறை கோயில்
கடியுடை கமலம் அடியிடை மலர கரும்பொடு பெருஞ்செந்நெ லசைய
வடிவுடை யன்னம் பெடையொடும் சேரும் வயல்வெள்ளி யங்குடி யதுவே


பண்டுமுன் ஏன மாகியன் றொருகால் பாரிட தெயிற்றினில் கொண்டு
தெண்டிரை வருட பாற்கடல் துயின்ற திருவெள்ளி யங்குடி யானை
வண்டறை சோலை மங்கையர் தலைவன் மானவேல் கலியன்வா யொலிகள்
கொண்டிவை பாடும் தவமுடையார்கள் ஆள்வரி குரைகட லுலகே
பெரிய திருமொழி ஐந்தாம் பத்து

அறிவ தரியா னனைத்துலகும்
உடையா னென்னை யாளுடையான்
குறிய மாணி யுருவாய
கூத்தன் மன்னி யமருமிடம்
நறிய மலர்மேல் சுரும்பார்க்க
எழிலார் மஞ்ஞை நடமாட
பொறிகொள் சிறைவண் டிசைபாடும்
புள்ளம் பூதங் குடிதானே

கள்ள குறளாய் மாவலியை
வஞ்சித்து உலகம் கைப்படுத்து
பொள்ளை கரத்த போதகத்தின்
துன்பம் தவிர்த்த புனிதனிடம்
பள்ள செறுவில் கயலுகள
பழன கழனி யதனுள்போய்
புள்ளு பிள்ளை கிரைதேடும்
புள்ளம் பூதங் குடிதானே

மேவா வரக்கர் தென்னிலங்கை
வேந்தன் வீ சரம்துரந்து
மாவாய் பிளந்து மல்லடர்த்து
மருதம் சாய்த்த மாலதிடம்
காவார் தெங்கின் பழம்வீழ
கயல்கள் பா குருகிரியும்
பூவார் கழனி யெழிலாரும்
புள்ளம் பூதங் குடிதானே

வெற்பால் மாரி பழுதாக்கி
விறல்வா ளரக்கர் தலைவன்றன்
வற்பார் திரள்தோ ளைந்நான்கும்
துணித்த வல்வில் இராமனிடம்
கற்பார் புரிசை செய்குன்றம்
கவினார் கூடம் மாளிகைகள்
பொற்பார் மாட மெழிலாரும்
புள்ளம் பூதங் குடிதானே

மையார் தடங்கண் கருங்கூந்தல்
ஆய்ச்சி மறைய வைத்ததயிர்
நெய்யார் பாலோ டமுதுசெய்த
நேமி யங்கை மாயனிடம்
செய்யார் ஆரல் இரைகருதி
செங்கால் நாரை சென்றணையும்
பொய்யா நாவில் மறையாளர்
புள்ளம் பூதங் குடிதானே

மின்னி னன்ன நுண்மருங்குல்
வேயேய் தடந்தோள் மெல்லியற்கா
மன்னு சினத்த மழவிடைகள்
ஏழன் றடர்த்த மாலதிடம்
மன்னு முதுநீ ரரவிந்த
மலர்மேல் வரிவண் டிசைபாட
புன்னை பொன்னேய் தாதுதிர்க்கும்
புள்ளம் பூதங் குடிதானே

குடையா விலங்கல் கொண்டேந்தி
மாரி பழுதா நிரைகாத்து
சடையா னோட அடல்வாணன்
தடந்தோள் துணித்த தலைவனிடம்
குடியா வண்டு கள்ளுண்ண
கோல நீலம் மட்டுகுக்கும்
புடையார் கழனி யெழிலாரும்
புள்ளம் பூதங் குடிதானே

கறையார் நெடுவேல் மறமன்னர்
வீய விசயன் தேர்கடவி
இறையான் கையில் நிறையாத
முண்டம் நிறைத்த வெந்தையிடம்
மறையால் மூத்தீ யவைவளர்க்கும்
மன்னு புகழால் வண்மையால்
பொறையால் மிக்க அந்தணர்வாழ்
புள்ளம் பூதங் குடிதானே

துன்னி மண்ணும் விண்ணாடும்
தோன்றா திருளாய் மூடியநாள்
அன்ன மாகி யருமறைகள்
அருளி செய்த அமலனிடம்
மின்னு சோதி நவமணியும்
வேயின் முத்தும் சாமரையும்
பொன்னும் பொன்னி கொணர்ந்தலைக்கும்
புள்ளம் பூதங் குடிதானே

கற்றா மறித்து காளியன்றன்
சென்னி நடுங்க நடம்பயின்ற
பொற்றாமரையாள் தன்கேள்வன்
புள்ளம் பூதங்குடிதன்மேல்
கற்றார் பரவும் மங்கையர்க்கோன்
காரார் புயற்கை கலிகன்றி
சொல்தானீரை திவைபாட
சோர நில்லா துயர்தாமே

தாம்தம் பெருமை யறியார் தூது
வேந்தர காய வேந்த ரூர்போல்
காந்தள் விரல்மென் கலைநன் மடவார்
கூந்தல் கமழும் கூட லூரே

செறும்திண் திமிலே றுடைய பின்னை
பெறும்தண் கோலம் பெற்றா ரூர்ப்போல்
நறுந்தண் தீம் தே னுண்ட வண்டு
குறிஞ்சி பாடும் கூட லூரே

பிள்ளை யுருவா தயிருண்டு அடியேன்
உள்ளம் புகுந்த வொருவ ரூர்போல்
கள்ள நாரை வயலுள் கயல்மீன்
கொள்ளை கொள்ளும் கூட லூரே

கூற்றே ருருவின் குறளாய் நிலநீர்
ஏற்றா னெந்தை பெருமா னூர்போல்
சேற்றே ருழுவர் கோதை போதூண்
கோல்தேன் முரலும் கூட லூரே

தொண்டர் பரவ சுடர்சென் றணவ
அண்ட தமரும் அடிக ளூர்போல்
வண்ட லலையுள் கெண்டை மிளிர
கொண்ட லதிரும் கூட லூரே

தக்கன் வேள்வி தகர்த்த தலைவன்
துக்கம் துடைத்த துணைவ ரூர்போல்
எக்க லிடுநுண் மணல்மேல் எங்கும்
கொக்கின் பழம்வீழ் கூட லூரே

கருந்தண் கடலும் மலையு முலகும்
அருந்தும் அடிகள் அமரு மூர்போல்
பெருந்தண் முல்லை பிள்ளை யோடி
குருந்தம் தழுவும் கூட லூரே

கலைவாழ் பிணையோ டணையும் திருநீர்
மலைவா ழெந்தை மருவு மூர்போல்
இலைதாழ் தெங்கின் மேல்நின்று இளநீர
குலைதாழ் கிடங்கின் கூட லூரே

பெருகு காத லடியேன் உள்ளம்
உருக புகுந்த வொருவ ரூர்போல்
அருகு கைதை மலர கெண்டை
குருகென் றஞ்சும் கூட லூரே

காவி பெருநீர் வண்ணன் கண்ணன்
மேவி திகழும் கூட லூர்மேல்
கோவை தமிழால் கலியன் சொன்ன
பாவை பாட பாவம் போமே

வென்றி மாமழு வேந்திமுன் மண்மிசை
மன்னரை மூவெழுகால்
கொன்ற தேவநின் குரைகழல் தொழுவதோர்
வகையென கருள்புரியே
மன்றில் மாம்பொழில் நுழைதந்து மல்லிகை
மௌவலின் போதலர்த்தி
தென்றல் மாமணம் கமழ்தர வருதிரு
வெள்ளறை நின்றானே

வசையில் நான்மறை கெடுத்தவம் மலரயற்
கருளிமுன் பரிமுகமாய்
இசைகொள் வேதநூ லென்றிவை பயந்தவ
னே என கருள்புரியே
உயர்கொள் மாதவி போதொடு லாவிய
மாருதம் வீதியின்வாய்
திசையெல் லாம்கம ழும்பொழில் சூழ்திரு
வெள்ளறை நின்றானே

வெய்ய னாயுல கேழுடன் நலிந்தவன்
உடலக மிருபிளவா
கையில் நீளுகிர படையது வாய்த்தவ னே
என கருள்புரியே
மையி னார்தரு வராலினம் பாயவண்
தடத்திடை கமலங்கள்
தெய்வ நாறுமொண் பொய்கைகள் சூழ்திரு
வெள்ளறை நின்றானே

வாம்ப ரியுக மன்னர்த முயிர்செக
ஐவர்க்க கரசளித்த
காம்பி னார்த்திரு வேங்கட பொருப்பநின்
காதலை யருளெனக்கு
மாம்பொ ழில்தளிர் கோதிய மடக்குயில்
வாயது துவர்ப்பெய்த
தீம்ப லங்கனி தேனது கர்திரு
வெள்ளறை நின்றானே

மான வேலொண்கண் மடவரல் மண்மகள்
அழுங்கமு நீர்ப்பரப்பில்
ஏன மாகியன் றிருநில மிடந்தவ னே
என கருள்புரியே
கான மாமுல்லை கழைக்கரும் பேறிவெண்
முறுவல்செய் தலர்கின்ற
தேனின் வாய்மலர் முருகுகு கும்திரு
வெள்ளறை நின்றானே

பொங்கு நீண்முடி யமரர்கள் தொழுதெழ
அமுதினை கொடுத்தளிப்பான்
அங்கொ ராமைய தாகிய வாதிநின்
னடிமையை யருளெனக்கு
தங்கு பேடையொ டூடிய மதுகரம்
தையலார் குழலணைவான்
திங்கள் தோய்சென்னி மாடம்சென் றணை
திரு வெள்ளறை நின்றானே

ஆறி னோடொரு நான்குடை நெடுமுடி
அரக்கன்றன் சிரமெல்லாம்
வேறு வேறுக வில்லது வளைத்தவ னே
என கருள்புரியே
மாறில் சோதிய மரதக பாசடை
தாமரை மலர்வார்ந்த
தேறல் மாந்திவண் டின்னிசை முரல
திரு வெள்ளறை நின்றானே

முன்னிவ் வேழுல குணர்வின்றி யிருள்மிக
உம்பர்கள் தொழுதேத்த
அன்ன மாகியன் றருமறை பயந்தவ
னேஎன கருள்புரியே
மன்னு கேதகை சூதக மென்றிவை
வனத்திடை சுரும்பினங்கள்
தென்ன வென்னவண் டின்னிசை முரல்திரு
வெள்ளறை நின்றானே

ஆங்கு மாவலி வேள்வியி லிரந்துசென்
றகலிட முழுதினையும்
பாங்கி னாற்கொண்ட பரமநிற் பணிந்தெழு
வேனென கருள்புரியே
ஓங்கு பிண்டியின் செம்மல ரேறிவண்
டுழிதர மாவேறி
தீங்கு யில்மிழற் றும்பட பைத்திரு
வெள்ளறை நின்றானே

மஞ்சு லாமணி மாடங்கள் சூழ்திரு
வெள்ளறை யதன்மேய
அஞ்ச னம்புரை யும்திரு வுருவனை
ஆதியை யமுதத்தை
நஞ்சு லாவிய வேல்வல வன்கலி
கன்றிசொல் ஐயிரண்டும்
எஞ்ச லின்றிநின் றேத்தவல் லாரிமை
யோர்க்ர சாவார்க்களே

உந்தி மேல்நான் முகனை
படைத்தான் உல குண்டவன்
எந்தை பெம்மான் இமையோர்கள்
தாதைக்கிட மென்பரால்
சந்தி னோடு மணியும்
கொழிக்கும்புனல் காவிரி
அந்தி போலும் நிறத்தார்
வயல்சூழ்தென் னரங்கமே

வையமுண் டாலிலை மேவு
மாயன்மணி நீண்முடி
பைகொள் நாக தணையான்
பயிலுமிட மென்பரால்
தையல் நல்லார் குழல்மா
லையும்மற்றவர் தடமுலை
செய்ய சாந்தும் கலந்திழி
புனல்சூழ்தென் னரங்கமே

பண்டிவ் வைய மளப்பான்
சென்றுமாவலி கையில்நீர்
கொண்ட ஆழி தடக்கை
குறளனிட மென்பரால்
வண்டு பாடும் மதுவார்
புனல்வந்திழி காவிரி
அண்ட நாறும் பொழில்சூழ்ந்து
அழகார்தென் னரங்கமே

விளைத்த வெம்போர் விறல்வா
ளரக்கன்நகர் பாழ்பட
வளைத்த வல்வில் தடக்கை
யவனுக்கிட மென்பரால்
துளைக்கை யானை மருப்பு
மகிலும்கொணர துந்திமுன்
திளைக்கும் செல்வ புனல்கா
விரிசூழ்தென் னரங்கமே

வம்புலாம் கூந்தல் மண்டோ தரி
காதலன் வான்புக
அம்பு தன்னால் முனிந்த
அழகனிட மென்பரால்
உம்பர் கோனு முலகேழும்
வந்தீண்டி வணங்கும் நல்
செம்பொ னாரும் மதிள்சூழ்ந்து
அழகார்தென் னரங்கமே

கலையு டுத்த அகலல்குல்
வன்பேய்மகள் தாயென
முலைகொ டுத்தா ளுயிருண்
டவன்வாழுமிட மென்பரால்
குலையெ டுத்த கதலி
பொழிலூடும் வந்துந்தி முன்
அலையெ டுக்கும் புனற்கா
விரிசூழ்தென் னரங்கமே

கஞ்சன் நெஞ்சும் கடுமல்
லரும்சகடமுங்காலினால்
துஞ்ச வென்ற சுடராழி
யான்வாழுமிட மென்பரால்
மஞ்சு சேர்மா ளிகைநீ
டகில்புகையும் மறையோர்
செஞ்சொல் வேள்வி புகையும்
கமழும்தென் னரங்கமே

ஏன மீனா மையோடு
அரியும்சிறு குறளுமாய்
தானு மா தரணி
தலைவனிட மென்பரால்
வானும் மண்ணும் நிறை
புகுந்தீண்டி வணங்கும்நல்
தேனும் பாலும் கலந்தன்
னவர்சேர்த்தென் னரங்கமே

சேய னென்றும் மிகப்பெரியன்
நுண்ணேர்மையி னாயஇம்
மாயையை ஆரு மறியா
வகையானிட மென்பரால்
வேயின் முத்தும் மணியும்
கொணர்ந்தார்ப்புனற் காவிரி
ஆய பொன்மா மதிள்சூழ
தழகார்தென் னரங்கமே

அல்லி மாத ரமரும்
திருமார்வ னரங்கத்தை
கல்லின் மன்னு மதிள்மங்
கையர்கோன்கலி கன்றிசொல்
நல்லிசை மாலைகள் நாலி
ரண்டுமிரண் டுமுடன்
வல்லவர் தாமுல காண்டு
பின்வானுல காள்வரே

வெருவாதாள் வாய்வெருவி வேங்கடமே
வேங்கடமே எங்கின் றாளால்
மருவாளா லென்குடங்கால் வாணெடுங்கண்
துயில்மறந்தாள் வண்டார் கொண்டல்
உருவாளன் வானவர்த முயிராளன்
ஒலிதிரைநீர பௌவங் கொண்ட
திருவாளன் என்மகளை செய்தனகள்
எங்ஙனம்நான் சிந்தி கேனே

கலையாளா வகலல்குல் கனவளையும்
கையாளா என்செய் கேன்நான்
விலையாளா வடியேனை வேண்டுதியோ
வேண்டாயோ என்னும் மெய்ய
மலையாளன் வானவர்த்தம் தலையாளன்
மராமரமே ழெய்த வென்றி
சிலையாளன் என் மகளை செய்தனகள்
எங்ஙனம்நான் சிந்தி கேனே

மானாய மென்னோக்கி வாநெடுங்கண்
ணீர்மல்கும் வளையும் சோரும்
தேனாய நறுந்துழா யலங்கலின்
திறம்பேசி யுறங்காள் காண்மின்
கானாயன் கடிமனையில் தயிருண்டு
நெய்பருக நந்தன் பெற்ற
ஆனாயன் என் மகளை செய்தனகள்
அம்மனைமீரறிகி லேனே

தாய்வாயில் சொற்கேளாள் தன்னா
தோடணையாள் தடமென் கொங்கை
யேஆர சாந்தணியாள் எம்பெருமான்
திருவரங்க மெங்கே என்னும்
பேய்மாய முலையுண்டிவ் வுலகுண்ட
பெருவயிற்றன் பேசில் நங்காய்
மாமாய னென்மகளை செய்தனகள்
மங்கைமீர் மதிக்கி லேனே

பூண்முலைமேல் சாந்தணியாள் பொருகயல்கண்
மையெழுதாள் பூவை பேணாள்
ஏணறியா ளெத்தனையும் எம்பெருமான்
திருவரங்க மெங்கே என்னும்
நாண்மலராள் நாயகனாய் நாமறிய
வாய்ப்பாடி வளர்ந்த நம்பி
ஆண்மகனா யென்மகளை செய்தனகள்
அம்மனைமீரறிகி லேனே

தாதாடு வனமாலை தாரானோ
வென்றென்றே தளர்ந்தாள் காண்மின்
யாதானு மொன்றுரைக்கில் எம்பெருமான்
திருவரங்கம் என்னும் பூமேல்
மாதாளன் குடமாடி மதுசூதன்
மன்னர்க்காய் முன்னம் சென்ற
தூதாளன் என்மகளை செய்தனகள்
எங்ஙனம்நான் சொல்லு கேனே

வாராளு மிளங்கொங்கை வண்ணம்வே
றாயினவா றெண்ணாள் எண்ணில்
பேராளன் பேரல்லால் பேசாள்
பெண்பெற்றே னென்செய் கேன்நான்
தாராளன் தண்குடந்தை நகராளன்
ஐவர்க்கா யமரி லுய்த்த
தேராளன் என்மகளை செய்தனகள்
எங்ஙனம்நான் செப்பு கேனே

உறவாது மிலளென்றென் றொழியாது
பலரேசும் அலரா யிற்றால்
மறவாதே யெப்பொழுதும் மாயவனே
மாதவனே என்கின் றளால்
பிறவாத பேராளன் பெண்ணாளன்
மண்ணாளன் விண்ணோர் தங்கள்
அறவாளன் என்மகளை செய்தனகள்
அம்மனைமீரறிகி லேனே

பந்தோடு கழல்மருவாள் பைங்கிளியும்
பாலூட்டாள் பாவை பேணாள்
வந்தானோ திருவரங்கன் வாரானோ
என்றென்றே வளையும் சோரும்
சந்தோகன் பௌழியன் தழலோம்பு
தைத்திரியன் சாம வேதி
அந்தோவ தென்மகளை செய்தனகள்
அம்மனைமீரறிகி லேனே

சேலுகளும் வயல்புடைசூழ் திருவரங்க
தம்மானை சிந்தை செய்த
நீலமலர கண்மடவாள் நிறையழிவை
தாய்மொழிந்த வதனை நேரார்
காலவேல் பரகாலன் கலிகன்றி
ஒலிமாலை கற்று வல்லார்
மாலைசேர் வெண்குடைக்கீழ் மன்னவரா
பொன்னுலகில் வாழ்வர் தாமே

கைம்மான மழகளிற்றை
கடல்கிடந்த கருமணியை
மைம்மான மரகதத்தை
மறையுரைத்த திருமாலை
எம்மானை எனக்கென்று
மினியானை பனிகாத்த
வம்மானை யான்கண்ட
தணிநீர தென் னரங்கத்தே

பேரானை குறுங்குடியெம்
பெருமானை திருதண்கால்
ஊரானை கரம்பனூர்
உத்தமனை முத்திலங்கு
காரார்த்திண் கடலேழும்
மலையேழிவ் வுலகேழுண்டும்
அராதென் றிருந்தானை
கண்டதுதென் னரங்கத்தே

ஏனாகி யுலகிடந்தன்
றிருநிலனும் பெருவிசும்பும்
தானாய பெருமானை
தன்னடியார் மனத்தென்றும்
தேனாகி யமுதாகி
திகழ்ந்தானை மகிழ்ந்தொருகால்
ஆனாயன் ஆனானை
கண்டதுதென் னரங்கத்தே

வளர்ந்தவனை தடங்கடலுள்
வலியுருவில் திரிசகடம்
தளர்ந்துதிர வுதைத்தவனை
தரியாதன் றிரணியனை
பிளந்தவனை பெருநிலமீ
ரடிநீட்டி பண்டொருநாள்
அளந்தவனை யான்கண்ட
தணிநீர்த்தென் னரங்கத்தே

நீரழலாய் நெடுநிலனாய்
நின்றானை அன்றரக்கன்
ஊரழலா லுண்டானை
கண்டார்பின் காணாமே
பேரழலா பெருவிசும்பா
பின்மறையோர் மந்திரத்தின்
ஆரழலா லுண்டானை
கண்டதுதென் னரங்கத்தே

தஞ்சினத்தை தவிர்த்தடைந்தார்
தவநெறியை தரியாது
கஞ்சனைக்கொன் றன்றுலக
முண்டுமிழ்ந்த கற்பகத்தை
வெஞ்சினத்த கொடுந்தொழிலோன்
விசையுருவை யசைவித்த
அஞ்சிறைப்பு பாகனையான்
கண்டதுதென் னரங்கத்தே

சிந்தனையை தவநெறியை
திருமாலை பிரியாது
வந்தெனது மனத்திருந்த
வடமலையை வரிவண்டார்
கொந்தணைந்த பொழில்கோவ
லுலகளப்பா னடிநிமிர்த்த
அந்தணனை யான்கண்ட
தணிநீர்த்தென் னரங்கத்தே

துவரித்த வுடையார்க்கும்
தூய்மையில்ல சமணர்க்கும்
அவர்கட்கங் கருளில்லா
அருளானை தன்னடைந்த
எமர்கட்கு மடியேற்கு
மெம்மாற்கு மெம்மனைக்கும்
அமரர்க்கும் பிரானாரை
கண்டதுதென் னரங்கத்தே

பொய்வண்ணம் மனத்தகற்றி
புலனைந்தும் செலவைத்து
மெய்வண்ணம் நினைந்தவர்க்கு
மெய்ந்நின்ற வித்தகனை
மைவண்ணம் கருமுகில்போல்
திகழ்வண்ண மரதகத்தின்
அவ்வண்ண வண்ணனையான்
கண்டதுதென் னரங்கத்தே

ஆமருவி நிரைமேய்த்த
அணியரங்க தம்மானை
காமருசீர கலிகன்றி
யொலிசெய்த மலிபுகழ்சேர்
நாமருவு தமிழ்மாலை
நாலிரண்டோ டிரண்டினையும்
நாமருவி வல்லார்மேல்
சாராதீ வினைதாமே

பண்டைநான் மறையும் வேள்வியும் கேள்வி
பதங்களும் பதங்களின் பொருளும்
பிண்டமாய் விரித்த பிறங்கொளி யனலும்
பெருகிய புனலொடு நிலனும்
கொடல்மா ருதமும் குரைகட லேழும்
ஏழுமா மலைகளும் விசும்பும்
அண்டமும் தானாய் நின்றவெம் பெருமான்
அரங்கமா நகரமர தானே

இந்திரன் பிரம னீசனென் றிவர்கள்
எண்ணில்பல் குணங்களே யியற்ற
தந்தையும் தாயும் மக்களும் மிக்க
சுற்றமும் சுற்றிநின் றகலா
பந்தமும் பந்த மறுப்பதோர் மருந்தும்
பான்மையும் பல்லுயிர கெல்லாம்
அந்தமும் வாழ்வு மாயவெம் பெருமான்
அரங்கமா நகரமர தானே

மன்னுமா நிலனும் மலைகளும் கடலும்
வானமும் தானவ ருலகும்
துன்னுமா யிருளா துலங்கொளி சுருங்கி
தொல்லைநான் மறைகளும் மறைய
பின்னும்வா னவர்க்கும் முனிவர்க்கும் நல்கி
பிறங்கிருள் நிறங்கெட ஒருநாள்
அன்னமாய் அன்றங் கருமறை பயந்தான்
அரங்கமா நகரமர தானே

மாயிருங் குன்ற மொன்று தாக
மாசுண மதனொடும் அளவி
பாயிரும் பௌவம் பகடுவிண் டலற
படுதிரை விசும்பிடை படர
சேயிரு விசும்பும் திங்களும் சுடரும்
தேவரும் தாமுடன் திசைப்ப
ஆயிர தோளா லலைகடல் கடைந்தான்
அரங்கமா நகரமர தானே

எங்ஙானே யுய்வர் தானவர் நினைந்தால்
இரணியன் இலங்குபூ ணகலம்
பொங்குவெங் குருதி பொன்மலை பிளந்து
பொழிதரு மருவியொ திழிய
வெங்கண்வா ளெயிற்றோர் வெள்ளிமா விலங்கல்
விண்ணுற கனல்விழி தெழுந்தது
அங்ஙனே யொக்க அரியுரு வானான்
அரங்கமா நகரமர தானே

ஆயிரும் குன்றம் சென்றுதொ கனைய
அடல்புரை யெழில்திகழ் திரடோ ள்
ஆயிர துணிய அடல்மழு பற்றி
மற்றவன் அகல்விசும் பணைய
ஆயிரம் பெயரா லமர்சென் றிறைஞ்ச
அறிதுயி லலைகடல் நடுவே
ஆயிரம் சுடர்வா யரவணை துயின்றான்
அரங்கமா நகரமர தானே

சுரிகுழல் கனிவா திருவினை பிரித்த
கொடுமையிற் கடுவிசை யரக்கன்
எரிவிழி திலங்கு மணிமுடி பொடிசெய்
திலங்கைபாழ் படுப்பதற் கெண்ணி
வரிசிலை வளைய அடிசரம் துரந்து
மறிகடல் நெறிபட மலையால்
அரிகுலம் பணிகொண் டலைகட லடைத்தான்
அரங்கமா நகரமர தானே

ஊழியாய் துச்சியாய் ஒருகால்
உடையதே ரொருவனாய் உலகில்
சூழிமால் யானை துயர்கெடு திலங்கை
மலங்கவன் றடுசர துரந்து
பாழியால் மிக்க பார்த்தனு கருளி
பகலவ னொளிகெட பகலே
ஆழியா லன்றங் காழியை மறைத்தான்
அரங்கமா நகரமர தானே

பேயினார் முலையூண் பிள்ளையாய் ஒருகால்
பெருநிலம் விழுங்கியதுமிழ்ந்த
வாயனாய் மாலாய் ஆலிலை வளர்ந்து
மணிமுடி வானவர் தமக்கு
சேயனாய் அடியேற் கணியனாய் வந்தென்
சிந்தையுள் வெந்துய ரறுக்கும்
ஆயனாய் அன்று குன்றமொன் றெடுத்தான்
அரங்கமா நகரமர தானே

பொன்னுமா மணியும் முத்தமும் சுமந்து
பொருதிரை மாநதி புடைசூழ்ந்து
அன்னமா டுலவும் அலைபுனல் சூழ்ந்த
அரங்கமா நகரமர தானை
மன்னுமா மாட மங்கையர் தலைவன்
மானவேற் கலியன்வா யொலிகள்
பன்னிய பனுவல் பாடுவார் நாளும்
பழவினை பற்றறு பாரே

ஏழை ஏதலன் கீழ்மகன் என்னா
திரங்கி மற்றவற் கின்னருள் சுரந்து
மாழை மான்மட நோக்கியுன் தோழி
உம்பி யெம்பி யென் றொழிந்திலை உகந்து
தோழ னீயென கிங்கொழி என்ற
சொற்கள் வந்தடி யேன்மன திருந்திட
ஆழி வண்ணநின்னடியிணை யடைந்தேன்
அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே

வாத மாமகன் மர்க்கடம் விலங்கு
மற்றோர் சாதியென் றொழிந்திலை உகந்து
காதல் ஆதரம் கடலினும் பெருக
செய்த தகவினு கில்லைகைம் மாறென்று
கோதில் வாய்மையி னாயொடு முடனே
உண்பன் நான் என்ற ஓண்பொருள் எனக்கும்
ஆதல் வேண்டுமென் றடியிணை யடைந்தேன்
அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே

கடிகொள் பூம்பொழில் காமரு பொய்கை
வைகு தாமரை வாங்கிய வேழம்
முடியும் வண்ணமோர் முழுவலி முதலை
பற்ற மற்றது நின்சரண் நினைப்ப
கொடிய வாய்விலங் கின்னுயிர்மலங
கொண்டசீற்றமொன் றுண்டுள தறிந்துஉன்
அடிய னேனும்வ தடியிணை யடைந்தேன்
அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே

நஞ்சு சோர்வதோர் வெஞ்சின அரவம்
வெருவி வந்துநின் சரணென சரணா
நெஞ்சிற் கொண்டுநின் னஞ்சிறை பறவை
கடைக்க லம்கொடு தருள்செய்த தறிந்து
வெஞ்சொ லாளர்கள் நமன்றமர் கடியர்
கொடிய செய்வன வுளஅதற் கடியேன்
அஞ்சி வந்துநின் னடியிணை யடைந்தேன்
அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே

மாக மாநிலம் முழுவதும்வ திரைஞ்சும்
மலர டிகண்ட மாமறை யாளன்
தோகை மாமயி லன்னவ ரின்பம்
துற்றி லாமையிலத்தவிங் கொழிந்து
போகம் நீயெய்தி பின்னும்நம் மிடைக்கே
போது வாய் என்ற பொன்னருள் எனக்கும்
ஆக வேண்டுமென் றடியிணை யடைந்தேன்
அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே

மன்னு நான்மறை மாமுனி பெற்ற
மைந்த னைமதி யாதவெங் கூற்ற
தன்னை யஞ்சிநின் சரணென சரணா
தகவில் காலனை யுகமுனி தொழியா
பின்னை யென்றும்நின் திருவடி பிரியா
வண்ண மெண்ணிய பேரருள் எனக்கும்
அன்ன தாகுமென் றடியிணை யடைந்தேன்
அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே

ஓது வாய்மையும் உவனி பிறப்பும்
உனக்கு முன்தந்த அந்தண னொருவன்
காத லென்மகன் புகலிடங் காணேன்
கண்டு நீதரு வாயென கென்று
கோதில் வாய்மையி னானுனை வேண்டிய
குறைமு டித்தவன் சிறுவனை கொடுத்தாய்
ஆத லால்வந்துன் அடியிணை யடைந்தேன்
அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே

வேத வாய்மொழி யந்தண னொருவன்
எந்தை நின்சர ணென்னுடை மனைவி
காதல் மக்களை பயத்தலும் காணாள்
கடிய தோர் தெய்வங்கொண் டொளிக்கும் என்றழைப்ப
ஏத லார்முன்னே யின்னரு ளவர்க்கு
செய்துன் மக்கள்மற் றிவரென்று கொடுத்தாய்
ஆத லால்வந்துன் அடியிணை யடைந்தேன்
அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே

துளங்கு நீண்முடி அரசர்தங்குரிசில்
தொண்டை மன்னவன் திண்டிற லொருவற்கு
உளங்கொ ளன்பினோ டின்னருள் சுரந்தங்
கோடு நாழிகை யேழுடனிருப்ப
வளங்கொள் மந்திரம் மற்றவற் கருளி
செய்த வாறடி யேனறிந்து உலகம்
அளந்த பொன்னடி யேயடை துய்ந்தேன்
அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே

மாடமாளிகை சூழ்திரு மங்கை
மன்னன் ஒன்னலர் தங்களை வெல்லும்
ஆடல் மாவல் வன்கலி கன்றி
அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானை
நீடு தொல்புக ழாழிவல் லானை
எந்தை யைநெடு மாலைநி னைந்த
பாடல் பத்திவை பாடுமின் தொண்டீர்
பாட நும்மிடை பாவம்நில் லாவே

கையிலங் காழி சங்கன்
கருமுகில் திருநி றத்தன்
பொய்யிலன் மெய்யன் தந்தாள்
அடைவரே லடிமை யாக்கும்
செய்யலர் கமல மோங்கு
செறிபொழில் தென்தி ருப்பேர்
பையர வணையான் நாமம்
பரவிநா னுய்ந்த வாறே

வங்கமார் கடல்க ளேழும்
மலையும்வா னகமும் மற்றும்
அங்கண்மா ஞால மெல்லாம்
அமுதுசெய் துமிழ்ந்த எந்தை
திங்கள்மா முகில்அ ணவு
செறிபொழில் தெந்தி ருப்பேர்
எங்கள்மா லிறைவன் நாமம்
ஏத்திநா னுய்ந்த வாறே

ஒருவனை யுந்தி பூமேல்
ஓங்குவி தாக தன்னால்
ஒருவனை சாபம் நீக்கி
உம்பராள் என்று விட்டான்
பெருவரை மதிள்கள் சூழ்ந்த
பெருநகர் அரவ ணைமேல்
கருவரை வண்ணன் தென்பேர்
கருதிநா னுய்ந்த வாறே

ஊனமர் தலையொன் றேந்தி
உலகெலாம் திரியு மீசன்
ஈனமர் சாபம் நீக்காய்
என்னவொண் புனலை யீந்தான்
தேனமர் பொழில்கள் சூழ்ந்த
செறிவயல் தென்தி ருப்பேர்
வானவர் தலைவன் நாமம்
வாழ்த்திநா னுய்ந்த வாறே

வக்கரன் வாய்முன் கீண்ட
மாயவனே என்று வானேர்
புக்கு அரண் தந்த ருள்வாய்
என்னப்பொன் னாக தானை
நக்கரி யுருவ மாகி
நகங்கிளர திடந்து கந்த
சக்கர செல்வன் தென்பேர
தலைவன்தா ளடைந்து தேனே

விலங்கலால் கடல டைத்து
விளங்கிழை பொருட்டு வில்லால்
இலங்கைமா நகர்க்கி றைவன்
இருபது புயம்து ணித்தான்
நலங்கொள்நான் மறைவல் லார்கள்
ஒத்தொலி யேத்த கேட்டு
மலங்குபாய் வயல்தி ருப்பேர்
மருவிநான் வாழ்ந்த வாறே

வெண்ணெய்தா னமுது செய்ய
வெகுண்டு தாய்ச்சி யோச்சி
கண்ணியர் குறுங்க யிற்றால்
கட்டவெ டென்றி ருந்தான்
திண்ணமா மதிள்கள் சூழ்ந்த
தென்திரு பேருள் வேலை
வண்ணனார் நாமம் நாளும்
வாய்மொழி துய்ந்த வாறே

அம்பொனா ருலக மேழும்
அறியஆ பாடி தன்னுள்
கொம்பனார் பின்னை கோலம்
கூடுதற் கேறு கொன்றான்
செம்பொனார் மதிள்கள் சூழ்ந்த
தென்திரு பேருள் மேவும்
எம்பிரான் நாமம் நாளும்
ஏத்திநா னுய்ந்த வாறே

நால்வகை வேத மைந்து
வேள்வியா றங்கம் வல்லார்
மேலைவா னவரின் மிக்க
வேதிய ராதி காலம்
சேலுகள் வயல்தி ருப்பேர
செங்கண்மா லோடும் வாழ்வார்
சீலமா தவத்தர் சிந்தை
யாளியென் சிந்தை யானே

வண்டறை பொழில்தி ருப்பேர்
வரியர வணையில் பள்ளி
கொண்டுறை கின்ற மாலை
கொடிமதிள் மாட மங்கை
திண்டிறல் தோள்க லியன்
செஞ்சொலால் மொழிந்த மாலை
கொண்டிவை பாடி யாட
கூடுவார் நீள்வி சும்பே

தீதறுநி லத்தொடெரி காலினொடு நீர்க்கெழுவி
சும்பு மவையாய்
மாசறும னத்தினொடு றக்கமொடி றக்கையவை
யாய பெருமான்
தாய்செறவு ளைந்துதயி ருண்டுகுட மாடுதட
மார்வர் தகைசேர்
நாதனுறை கின்றநகர் நந்திபுர விண்ணகரம்
நண்ணு மனமே

உய்யும்வகை யுண்டுசொன செய்யிலுலக கேழுமொழி
யாமை முனநாள்
மெய்யினள வேயமுது செய்யவல ஐயனவன்
மேவு நகர்தான்
மையவரி வண்டுமது வுண்டுகிளை யோடுமலர்
கிண்டி யதன்மேல்
நைவளம்ந விற்றுபொழில் நந்திபுர விண்ணகரம்
நண்ணு மனமே

உம்பருல கேழுகட லேழுமலை யேழுமொழி
யாமை முனநாள்
தம்பொன்வயி றாரளவு முண்டவையு மிழ்ந்ததட
மார்வர் தகைசேர்
வம்புமலர் கின்றபொழில் பைம்பொன்வரு தும்பிமணி
கங்குல் வயல்சூழ்
நம்பனுறை கின்றநகர் நந்திபுர விண்ணகரம்
நண்ணு மனமே

பிறையினொளி யெயிறிலக முறுகியெதிர் பொருதுமென
வந்த அசுரர்
இறைகளவை நெறுநெறென வெறியவவர் வயிறழல
நின்ற பெருமான்
சிறைகொள்மயில் குயில்பயில மலர்களுக அளிமுரல
அடிகொள் நெடுமா
நறைசெய்பொழில் மழைதவழும் நந்திபுர விண்ணகரம்
நண்ணு மனமே

மூளவெரி சிந்திமுனி வெய்தியமர் செய்துமென
வந்த அசுரர்
தோளுமவர் தாளுமுடி யோடுபொடி யாகநொடி
யாம ளவெய்தான்
வாளும்வரி வில்லும்வளை யாழிகதை சங்கமிவை
யங்கை யுடையான்
நாளுமுறை கின்றநகர் நந்திபுர விண்ணகரம்
நண்ணு மனமே

தம்பியொடு தாமொருவர் தந்துணைவி காதல்துணை
யாக முனநாள்
வெம்பியெரி கானகமு லாவுமவர் தாமினிது
மேவு நகர்தான்
கொம்புகுதி கொண்டுகுயில் கூவமயி லாலும் எழி
லார்பு றவுசேர்
நம்பியுறை கின்றநகர் நந்திபுர விண்ணகரம்
நண்ணு மனமே

தந்தைமன முந்துதுயர் நந்நஇருள் வந்தவிறல்
நந்தன் மதலை
எந்தையிவ னென்றமரர் கந்தமலர் கொண்டுதொழ
நின்ற நகர்தான்
மந்தமுழ வோசைமழை யாகவெழு கார்மயில்கள்
ஆடுபொழில்சூழ்
நந்திபணி செய்தநகர் நந்திபுர விண்ணகரம்
நண்ணு மனமே

எண்ணில்நினை வெய்தியினி யில்லையிறை யென்றுமுனி
யாளர் திருவார்
பண்ணில்மலி கீதமொடு பாடியவ ராடலொடு
கூட எழிலார்
மண்ணிலிது போலநக ரில்லையென வானவர்கள்
தாம லர்கள்தூய்
நண்ணியுறை கின்றநகர் நந்திபுர விண்ணகரம்
நண்ணு மனமே

வங்கமலி பௌவமது மாமுகடி னுச்சிபுக
மிக்க பெருநீர்
அங்கமழி யாரவன தாணைதலை சூடுமடி
யார றிதியேல்
பொங்குபுன லுந்துமணி கங்குலிருள் சீறுமொளி
யெங்கு முளதால்
நங்கள்பெரு மானுறையும் நந்திபுர விண்ணகரம்
நண்ணு மனமே

நறைசெய் பொழில் மழைதவழும் நந்திபுர விண்ணகரம்
நண்ணி யுறையும்
உறைகொள்புக ராழிசுரி சங்கமவை யங்கையுடை
யானை ஒளிசேர்
கறைவளரும் வேல்வல்ல கலியனொலி மாலையிவை
யைந்து மைந்தும்
முறையிலவை பயிலவல அடியவர்கள் கொடுவினைகள்
முழுத கலுமே


















நாலாயிர திவ்வி பிரபந்தம் பாடல்கள்
திருமங்கையாழ்வார் அருளிச்செய்த
பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ
ஸ்ரீமதே ராமானுஜாய நம
திருமங்கையாழ்வார் அருளிச்செய்த
திருக்குறுந்தாண்டகம்

நிதியினை பவள தூணை
நெறிமையால் நினைய வல்லார்
கதியினை கஞ்சன் மாள
கண்டுமுன் ஆண்ட மாளும்
மதியினை மாலை வாழ்த்தி
வணங்கியென் மனத்து வந்த
விதியினை கண்டு கொண்ட
தொண்டனேன் விடுகி லேனே

காற்றினை புனலை தீயை
கடிமதி ளிலங்கை செற்ற
ஏற்றினை இமயம் மேய
எழில்மணி திரளை இன்ப
ஆற்றினை அமுத தன்னை
அவுணனா ருயிரை யுண்ட
கூற்றினை குணங்கொண் டுள்ளம்
கூறுநீ கூறு மாறே

பாயிரும் பரவை தன்னுள்
பருவரை திரித்து வானோர
காயிரு தமுதங கொண்ட
அப்பனை எம்பி ரானை
வேயிருஞ்சோலை சூழ்ந்து
விரிகதி ரிரிய நின்ற
மாயிருஞ்சோலை மேய
மைந்தனை வணங்கி னேனே

கேட்கயா னுற்ற துண்டு
கேழலா யுலகங கொண்ட
பூக்கெழு வண்ண நாரை
போதர கனவில் கண்டு
வாக்கினால் கரு தன்னால்
மனத்தினால் சிரத்தை தன்னால்
விழுங்கினேற் கினிய வாறே

இரும்பனன் றுண்ட நீர்போல்
எம்பெரு மானுக்கு என்றன்
அரும்பெற லன்பு புக்கி
டடிமைபூண் டுய்ந்து போனேன்
வரும்புயல் வண்ண னாரை
மருவியென் மனத்து வைத்து
கரும்பினின் சாறு போல
பருகினேற் கினிய லாறே

மூவரில் முதல்வ நாய
ஒருவனை யுலகங் கொண்ட
கோவினை குடந்தை மேய
குருமணி திரளை இன
பாவினை பச்சை தேனை
பைம்பொன்னை யமரர் சென்னி
பூவினை புகழும் தொண்டர்
எஞ்சொல்லி புகழ்வர் தாமே

இம்மையை மறுமை தன்னை
எமக்குவீ டாகி நின்ற
மெய்ம்மையை விரிந்த சோலை
வியந்திரு வரங்கம் மேய
செம்மையை கருமை தன்னை
திருமலை ஒருமை யானை
தன்மையை நினைவா ரென்றன்
தலைமிசை மன்னு வாரே

வானிடை புயலை மாலை
வரையிடை பிரசம் ஈன்ற
தேனிடை கரும்பின் சாற்றை
திருவினை மருவி வாழார்
மானிட பிறவி யந்தோ
மதிக்கிலர் கொள்க தந்தம்
ஊனிடை குரம்பை வாழ்க்கை
குறுதியே வேண்டி னாரே

உள்ளமோ ஒன்றில் நில்லாது
ஓசையி னெரிநின் றுண்ணும்
கொள்ளிமே லெறும்பு போல
குழையுமா லென்ற னுள்ளம்
தெள்ளியீர் தேவர கெல்லாம்
தேவரா யுலகம் கொண்ட
ஒள்ளியீர் உம்மை யல்லால்
எழுமையும் துணையி லோமே

சித்தமும் செவ்வை நில்லா
தெஞ்செய்கேன் தீவி னையேன்
பத்திமை கன்பு டையேன்
ஆவதே பணியா யந்தாய்
முத்தொளி மரத கம்மே
முழங்கொளி முகில்வண் ணாஎன்
அத்தநின் னடிமை யல்லால்
யாதுமொன் றறிகி லேனே

தொண்டெல்லாம் பரவி நின்னை
தொழுதடி பணியு மாறு
கண்டு தான் கவலை தீர்ப்பான்
ஆவதே பணியா யெந்தாய்
அண்டமா யெண்டி சைக்கும்
ஆதியாய் நீதி யான
பண்டமாம் பரம சோதி
நின்னையே பரவு வேனே

ஆவியயை யரங்க மாலை
அழுக்குரம் பெச்சில் வாயால்
தூய்மையில் தொண்ட னேன்நான்
சொல்லினேன் தொல்லை நாமம்
பாவியேன் பிழத்த வாறென்
றஞ்சினேற் கஞ்ச லென்று
காவிபோல் வண்ணர் வந்தென்
கண்ணுளே தோன்றினாரே

இரும்பனன் றுண்ட நீரும்
போதரும் கொள்க என்றன்
அரும்பிணி பாவ மெல்லாம்
அகன்றன என்னை விட்டு
சுரும்பமர் சோலை சூழ்ந்த
அரங்கமா கோயில் கொண்ட
கரும்பினை கண்டு கொண்டென்
கண்ணிணை களிக்கு மாறே

காவியை வென்ற கண்ணார்
கலவியே கருதி நாளும்
பாவியே னாக வெண்ணி
அதனுள்ளே பழுத்தொ ழிந்தேன்
தூவிசேர் அன்னம் மன்னும்
சூழ்புனல் குடந்தை யானை
பாவியென் பாவி யாது
பாவியே னாயி னேனே

முன்பொலா இராவ ணன்றன்
முதுமதி ளிலங்கை வேவித்து
அன்பினா லனுமன் வந்தாங்
கடியிணை பணிய நின்றார்க்கு
என்பெலா முருகி யுக்கி
டென்னுடை நெஞ்ச மென்னும்
அன்பினால் ஞான நீர்கொண்
டாட்டுவ னடிய னேனே

மாயமான் மா செற்று
மருதிற நடந்து வையம்
தாயமா பரவை பொங்க
தடவரை திரித்து வானோர
கீயுமால் எம்பி ரானார
கென்னுடை சொற்க ளென்னும்
தூயமா மாலை கொண்டு
சூட்டுவன் தொண்ட னேனே

பேசினார் பிறவி நீத்தார்
பேருளான் பெருமை பேசி
ஏச்னார் உய்ந்து போனார்
என்பதிவ் வுலகின் வண்ணம்
பேசினேன் ஏச மாட்டேன்
பேதையேன் பிறவி நீத்தற்கு
ஆசையோ பெரிது கொள்க
அலைகடல் வண்ணர் பாலே

இளைப்பினை யியக்கம் நீக்கி
யிருந்துமுன் னிமையை கூட்டி
அளப்பிலைம் புலன டக்கி
அன்பவர் கண்ணே வைத்து
துளக்கமில் சிந்தை செய்து
தோன்றலும் சுடர்விட்டு ஆங்கே
விளக்கினை விதியில் காண்பார்
மெய்ம்மையே காண்கிற் பாரே

பிண்டியார் மண்டை ஏந்தி
பிறர்மனை திரித துண்ணும்
உண்டியான் சாபம் தீர்த்த
ஒருவனூர் உலக மேத்தும்
கண்டியூர் அரங்கம் மெய்யம்
கச்சிபேர் மல்லை என்று
மண்டினார் உய்யல் அல்லால்
மற்றையார குய்ய லாமே

வானவர் தங்கள் கோனும்
மலர்மிசை அயனும் நாளும்
தேமலர் தூவி ஏத்தும்
சேவடி செங்கண் மாலை
மானவேல் கலியன் சொன்ன
வண்டமிழ் மாலை நாலைந்தும்
ஊனம தின்றி வல்லார்
ஒளிவிசும் பாள்வர் தாமே
திருமங்கைஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ
ஸ்ரீமதே ராமாஜாயா நம
திருமங்கைஆழ்வார் அருளிச்செய்த
திருநெடுந்தாண்டகம்

மின்னுருவாய் முன்னுருவில் வேதம் நான்காய்
விளக்கொளியாய் முளைத்தெழுந்த திங்கள் தானாய்
பின்னுருவாய் முன்னுருவில் பிணிமூ பில்லா
பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது எண்ணும்
பொன்னுருவாய் மணியுருவில் பூதம் ஐந்தா
புனலுருவாய் அனலுருவில் திகழுஞ் சோதி
தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தை
தளிர்ப்புரையும் திருவடியென் தலைமே லவ்வே

பாருருவில் நீரெரிகால் விசும்பு மாகி
பல்வேறு சமயமுமா பரந்து நின்ற
ஏருருவில் மூவருமே யென்ன நின்ற
இமையவர்த திருவுருவே றெண்ணும் போது
ஓருருவம் பொன்னுருவம் ஒன்று செந்தீ
ஒன்றுமா கடலுருவம் ஒத்து நின்ற
மூவுருவும் கண்டபோ தொன்றாம் சோதி
முகிலுருவம் எம்மடிகள் உருவ தானே

திருவடிவில் கருநெடுமால் சேயன் என்றும்
திரேதைக்கண் வளையுருவா திகழ்ந்தா னென்றும்
பொருவடிவில் கடலமுதம் கொண்ட காலம்
பெருமானை கருநீல வண்ணன் றன்னை
ஒருவடிவ தோருருவென் றுணர லாகா
ஊழிதோ றூழிநின் றேத்தல் அல்லால்
கருவடிவில் செங்கண்ண வண்ணன் றன்னை
கட்டுரையே யாரொருவர் காண்கிற் பாரே

இந்திரற்கும் பிரமற்கும் முதல்வன் றன்னை
இருநிலம்கால் தீநீர்விண் பூதம் ஐந்தாய்
செந்திறத்த தமிழோசை வடசொல் லாகி
திசைநான்கு மாய்த்திங்கள் ஞாயி றாகி
அந்தரத்தில் தேவர்க்கும் அறிய லாகா
அந்தணனை அந்தணர்மா டந்தி வைத்த
மந்திரத்தை மந்திரத்தால் மறவா தென்றும்
வாழுதியேல் வாழலாம் மடநெஞ் சம்மே

ஒண்மிதியில் புனலுருவி ஒருகால் நிற்ப
ஒருகாலுங் காமருசீர் அவுணன் உள்ளத்து
எண்மதியுங் கடந்தண்ட மீது போகி
இருவிசும்பி னூடுபோ யெழுந்து மேலை
தண்மதியும் கதிரவனும் தவிர ஓடி
தாரகையின் புறந்தடவி அப்பால் மிக்கு
மண்முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை
மலர்புரையும் திருவடியே வணங்கி னேனே

அலம்புரிந்த நெடுந்தடக்கை அமரர் வேந்தன்
அஞ்சிறைப்புள் தனிப்பாகன் அவுணர கென்றும்
சலம்புரிந்தங் கருளில்லா தன்மை யாளன்
தானுகந்த வூரெல்லாம் தந்தாள் பாடி
நிலம்பரந்து வரும்கலுழி பெண்ணை யீர்த்த
நெடுவேய்கள் படுமுத்த முந்த வுந்தி
புலம்பரந்த பொன்விளைக்கும் பொய்கை வேலி
பூங்கோவ லூர்த்தொழுதும் போது நெஞ்சே

வற்புடைய வரைநெடுந்தோள் மன்னர் மாள
வடிவாய மழுவேந்தி யுலக மாண்டு
வெற்புடைய நெடுங்கடலுள் தனிவே லுய்த்த
வேள்முதலா வென்றானூர் விந்தம் மேய
கற்புடைய மடக்கன்னி காவல் பூண்ட
கடிபொழில்சூழ் நெடுமறுகில் கமல வேலி
பொற்புடைய மலையரையன் பணிய நின்ற
பூங்கோவ லூர்த்தொழுதும் போது நெஞ்சே

நீரகத்தாய் நெடுவரையி னுச்சி மேலாய்
நிலாத்திங்கள் துண்டகத்தாய் நிறைந்த கச்சி
ஊரகத்தாய் ஒண்துரைநீர் வெஃகா வுள்ளாய்
உள்ளுவா ருள்ளத்தாய் உலக மேத்தும்
காரகத்தாய் கார்வான துள்ளாய் கள்வா
காமருபூங் காவிரியின் தென்பால் மன்னு
பேரகத்தாய் பேராதென் நெஞ்சி னுள்ளாய்
பெருமான்உன் திருவடியே பேணி னேனே

வங்கத்தால் மாமணிவ துந்து முந்நீர்
மல்லையாய் மதிள்கச்சி யூராய் பேராய்
கொங்கத்தார் வளங்கொன்றை யலங்கல் மார்வன்
குலவரையன் மடப்பாவை யிடப்பால் கொண்டான்
பங்கத்தாய் பாற்கடலாய் பாரின் மேலாய்
பனிவரையி னுச்சியாய் பவள வண்ணா
எங்குற்றாய் எம்பெருமான் உன்னை நாடி
ஏழையேன் இங்கனமே ஊழிதரு கேனே

பொன்னானாய் பொழிலேழும் காவல் பூண்ட
புகழானாய் இகழ்வாய தொண்ட னேன்நான்
என்னானாய் என்னல் அல்லால்
என்னறிவ னேழையேன் உலக மேத்தும்
தென்னானாய் வடவானாய் குடபா லானாய்
குணபால தாயினாய் இமையோர கென்றும்
முன்னானாய் பின்னானார் வணங்கும் சோதி
திருமூழி களத்தானாய் முதலா னாயே

பட்டுடுக்கும் அயர்ந்திரங்கும் பாவை பேணாள்
பனிநெடுங்கண் ணீர்தது பள்ளி கொள்ளாள்
எட்டனைப்போ தெங்குடங்கால் இருக்க கில்லாள்
எம்பெருமான் திருவரங்க மெங்கே என்னும்
மட்டுவிக்கி மணிவண்டு முரலும் கூந்தல்
மடமானை இதுசெய்தார் தம்மை மெய்யே
கட்டுவிச்சி சொல் என்ன சொன்னாள் நங்காய்
கடல்வண்ண ரிதுசெய்தார் காப்பா ராரே

நெஞ்சுருகி கண்பனிப்ப நிற்கும் சோரும்
நெடிதுயிர்க்கும் உண்டறியாள் உறக்கம் பேணாள்
நஞ்சரவில் துயிலமர்ந்த நம்பீ என்னும்
வம்பார்பூம் வயலாலி மைந்தா என்னும்
அஞ்சிறைய புட்கொடியே யாடும் பாடும்
அணியரங்க மாடுதுமோ தோழீ என்னும்
எஞ்சிறகின் கீழடங்கா பெண்ணை பெற்றேன்
இருநிலத்துஓர் பழிபடைத்தேன் ஏபா வம்மே

கல்லெடுத்து கல்மாரி காத்தாய் என்றும்
காமருபூங் கச்சியூ ரகத்தாய் என்றும்
வில்லிறுத்து மெல்லியல்தோள் தோய்ந்தாய் என்றும்
வெஃகாவில் துயிலமர்ந்த வேந்தே என்றும்
அல்லடர்த்து மல்லரையன் றட்டாய் என்றும்
மாகீண்ட கத்தலத்தென் மைந்தா என்றும்
சொல்லெடுத்து தங்கிளியை சொல்லே என்று
துணைமுலைமேல் துளிசோர சோர்க்கின் றாளே

முளைக்கதிரை குறுங்குடியுள் முகிலை மூவா
மூவுலகும் கடந்தப்பால் முதலாய் நின்ற
அளப்பரிய ஆரமுதை அரங்கம் மேய
அந்தணனை அந்தணர்தம் சிந்தை யானை
விளக்கொளியை மரகதத்தை திருத்தண் காவில்
வெஃகாவில் திருமாலை பாட கேட்டு
வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக என்று
மடக்கிளியை கைகூப்பி வங்கி னாளே

கல்லுயர்ந்த நெடுமதிள்சூழ் கச்சி மேய
களிறென்றும் கடல்கிடந்த கனியே என்றும்
அல்லியம்பூ மலர்ப்பொய்கை பழன வேலி
அணியழுந்தூர் நின்றுகந்த அம்மான் என்றும்
சொல்லுயர்ந்த நெடுவீணை முலைமேல் தாங்கி
தூமுறுவல் நகையிறையே தோன்ற நக்கு
மெல்விரல்கள் சிவப்பெ தடவி யாங்கே
மென்கிளிபோல் மிகமிழற்றும் என்பே தையே

கன்றுமே தினிதுகந்த காளாய் என்றும்
கடிபொழில்சூழ் கணபுரத்தென் கனியே என்றும்
மன்றமர கூத்தாடி மகிழ்ந்தாய் என்றும்
வடதிருவேங் கடம்மேய மைந்தா என்றும்
வென்றசுரர் குலங்களைந்த வேந்தே என்றும்
விரிபொழில்சூழ் திருநறையூர் நின்றாய் என்றும்
துன்றுகுழல் கருநிறத்தென் துணையே என்றும்
துணைமுலைமேல் துளிசோர சோர்க்கின் றாளே

பொங்கார்மெல் லிளங்கொங்கை பொன்னே பூ
பொருகயல்கண் ணீரரு போந்து நின்று
செங்கால மடப்புறவம் பெடைக்கு பேசும்
சிறுகுரலு குடலுருகி சிந்தித்து ஆங்கே
தண்காலும் தண்குடந்தை நகரும் பாடி
தண்கோவ லூர்ப்பாடி யாட கேட்டு
நங்காய்நங் குடிக்கிதுவோ நன்மை என்ன
நறையூரும் பாடுவாள் நவில்கின் றாளே

கார்வண்ணம் திருமேனி கண்ணும் வாயும்
கைத்தலமும் அடியிணையும் கமல வண்ணம்
பார்வண்ண மடமங்கை பித்தர்
பனிமலர்மேல் பாவைக்கு பாவம் செய்தேன்
ஏர்வண்ண என்பேதை எஞ்சொல் கேளாள்
எம்பெருமான் திருவரங்க மெங்கே என்னும்
நீர்வண்ணன் நீர்மலைக்கே போவேன் என்னும்
இதுவன்றோ நிறையழிந்தார் நிற்கு மாறே

முற்றாரா வனமுலையாள் பாவை மாயன்
மொய்யகல துள்ளிருப்பாள் அஃதும் கண்டும்
அற்றாள்தன் நிறையழிந்தாள் ஆவி கின்றாள்
அணியரங்க மாடுதுமோ தோழீ என்னும்
பெற்றேன்வா சொல்லிறையும் பேச கேளாள்
பேர்ப்பாடி தண்குடந்தை நகரும் பாடி
பொற்றாம ரைக்கயம்நீ ராட போனாள்
பொருவற்றா ளென்மகள்உம் பொன்னும் அஃதே

தோராளும் வாளரக்கன் செல்வம் மாள
தென்னிலங்கை முன்மலங்க செந்தீ ஒல்கி
பேராள னாயிரம் வாணன் மாள
பொருகடலை யரண்கடந்து புக்கு மிக்க
பாராளன் பாரிடந்து பாரை யுண்டு
பாருமிழ்ந்து பாரளந்து பாரை யாண்ட
பேராளன் பேரோதும் பெண்ணை மண்மேல்
பெருந்தவத்தள் என்றல்லால் பேச லாமே

மைவண்ண நறுங்குஞ்சி குழல்பின் தாழ
மகரம்சேர் குழையிருபா டிலங்கி யாட
எய்வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே
இருவராய் வந்தாரென் முன்னே நின்றார்
கைவண்ணம் தாமரைவாய் கமலம் போலும்
கண்ணிணையும் அரவிந்தம் அடியும் அஃதே
அவ்வண்ண தவர்நிலைமை கண்டும் தோழீ
அவரைநாம் தேவரென் றஞ்சி னோமே

நைவளமொன் றாராயா நம்மை நோக்கா
நாணினார் போலிறையே நயங்கள் பின்னும்
செய்வளவி லென்மனமும் கண்ணு மோடி
எம்பெருமான் திருவடிக்கீழ் அணைய இப்பால்
கைவளையும் மேகலையும் காணேன் கண்டேன்
கனமகர குழையிரண்டும் நான்கு தோளும்
எவ்வளவுண் டெம்பெருமான் கோயில் என்றேற்கு
இதுவன்றோ எழிலாலி என்றார் தாமே

உள்ளூரும் சிந்தைநோய் எனக்கே தந்தென்
ஒளிவளையும் மாநிறமும் கொண்டா ரிங்கே
தெள்ளூரு மிளந்தெங்கின் தேறல் மாந்தி
சேலுகளும் திருவரங்கம் நம்மூ ரென்ன
கள்ளூரும் பைந்துழாய் மாலை யானை
கனவிடத்தில் யான்காண்பன் கண்ட போது
புள்ளூரும் கள்வாநீ போகேல் என்பன்
என்றாலு மிதுநமக்கோர் புலவி தானே

இருகையில்சங் கிவைநில்லா எல்லே பாவம்
இலங்கொலிநீர் பெரும்பௌவம் மண்டி யுண்ட
பெருவயிற்ற கருமுகிலே யொப்பர் வண்ணம்
பெருந்தவத்தர் அருந்தவத்து முனிவர் சூழ
ஒருகையில்சங் கொருகைமற் றாழி யேந்தி
உலகுண்ட பெருவாய ரிங்கே வந்துஎன்
பொருகயல்கண் ணீரரு புலவி தந்து
புனலரங்க மூரென்று போயி நாரே

மின்னிலங்கு திருவுருவும் பெரிய தோளும்
கரிமுனிந்த கைத்தலமும் கண்ணும் வாயும்
தன்னலர்ந்த நறுந்துழாய் மலரின் கீழே
தாழ்ந்திலங்கும் மகரம்சேர் குழையும் காட்டி
என்னலனும் என்னிறையும் எஞ்சி தையும்
என்வளையும் கொண்டென்னை யாளுங் கொண்டு
பொன்னலர்ந்த நறுஞ்செருந்தி பொழிலி னூடே
புனலரங்க மூரென்று போயி னாரே

தேமருவு பொழிலிடத்து மலாந்த போதை
தேனதனை வாய்மடுத்துன் பெடையும் நீயும்
பூமருவி யினிதமர்ந்து பொறியி லார்ந்த
அறுகால சிறுவண்டே தொழுதேன் உன்னை
ஆமருவி நிரைமேய்த்த அமரர் கோமான்
அணியழுந்தூர் நின்றானு கின்றே சென்று
நீமருவி யஞ்சாதே நின்றோர் மாது
நின்நயந்தாள் என்றிறையே இயம்பி காணே

செங்கால மடநாராய் இன்றே சென்று
திருக்கண்ண புரம்புக்கென் செங்கண் மாலுக்கு
எங்காத லென்துணைவர குரைத்தி யாகில்
இதுவொப்ப தெமக்கின்ப மில்லை நாளும்
பைங்கானம் ஈதெல்லாம் உனதே யாக
பழனமீன் கவர்ந்துண்ண தருவன் தந்தால்
இங்கேவ தினிதிருந்துன் பெடையும் நீயும்
இருநிலத்தி லினிதின்ப மெய்த லாமே

தென்னிலங்கை யரண்சிதறி அவுணன் மாள
சென்றுலக மூன்றினையும் திரிந்தோர் தேரால்
மன்னிலங்கு பாரதத்தை மாள வூர்ந்த
வரையுருவின் மாகளிற்றை தோழீ என்றன்
பொன்னிலங்கு முலைக்குவட்டில் பூட்டி கொண்டு
போகாமை வல்லேனா புலவி யெய்தி
என்னிலங்க மெல்லாம்வ தின்ப மெய்த
எப்பொழுதும் நினைந்துருகி யிருப்பன் நானே

அன்றாயர் குலமகளு கரையன் றன்னை
அலைகடலை கடைந்தடைத்த அம்மான் றன்னை
குன்றாத வலியரக்கர் கோனை மாள
கொடுஞ்சிலைவா சரந்துரந்து குலங்க ளைந்து
வென்றானை குன்றெடுத்த தோளி னானை
விரிதிரைநீர் விண்ணகரம் மருவி நாளும்
நின்றானை தண்குடந்தை கிடந்த மாலை
நெடியானை அடிநாயேன் நினைந்தி டேனே

மின்னுமா மழைதவழும் மேக வண்ணா
விண்ணவர்தம் பெருமானே அருளாய் என்று
அன்னமாய் முனிவரோ டமர ரேத்த
அருமறையை வெளிப்படுத்த அம்மான் றன்னை
மன்னுமா மணிமாட வேந்தன்
மானவேல் பரகாலன் கலியன் சொன்ன
பன்னியல் தமிழ்மாலை வல்லார் தொல்லை
பழவினையை முதலரிய வல்லார் தாமே
திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீமதே ராமானுஜாய நம
பொய்கையாழ்வார் அருளிச்செய்த முதற்றிருவந்தாதி
தனியன்
முதலியாண்டான் அருளிச்செய்தது
கைதைசேர் பூம்பொழில்சூழ் கச்சிநகர் வந்துதித்த
பொய்கை பிரான்கவிஞர் போரேறு வையத்து
அடியவர் வாழ அருந்தமிழ தாதி
படிவிளங்க செய்தான் பரிந்து

வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக செய்ய
சுடராழி யானடிக்கே சூட்டினேஞ்சொன் மாலை
இடராழி நீங்குகவே என்று

என்று கடல்கடைந்த தெவ்வுலகம் நீரேற்றது
ஒன்று மதனை யுணரேன் நான் அன்று
தடைத்துடைத்து கண்படுத்த ஆழி இதுநீ
படைத்திட துண்டுமிழ்ந்த பார்

பாரளவு மோரடிவை தோரடியும் பாருடுத்த
நீரளவும் செல்ல நிமிர்ந்ததே சூருருவில்
பேயளவு கண்ட பெருமான் அறிகிலேன்
நீயளவு கண்ட நெறி

நெறிவாசல் தானேயாய் நின்றானை ஐந்து
பொறிவாசல் போர்க்கதவம் சார்த்தி அறிவானாம்
ஆலமர நீழல் அறம்நால்வர கன்றுரைத்த
ஆலமமர் கண்ட தரன்

அரன்நா ரணன்நாமம் ஆன்விடைபுள்ளூர்த்தி
உரைல் மறையுறையும் கோயில் வரைநீர்
கருமம் அழிப்பளிப்பு கையதுவேல் நேமி
உருவமெரி கார்மேனி ஒன்று

ஒன்றும் மறந்தறியேன் ஓதநீர் வண்ணனைநான்
இன்று மறப்பனோ ஏழைகாள் அன்று
கருவரங்க துட்கிடந்து கைதொழுதேன் கண்டேன்
திருவரங்க மேயான் திசை

திசையும் திசையுறு தெய்வமும் தெய்வ
திசையுங கருமங்க ளெல்லாம் அசைவில்சீர
கண்ணன் நெடுமால் கடல்கடைந்த காரோத
வண்ணன் படைத்த மயக்கு

மயங்க வலம்புரி வாய்வைத்து வான
தியங்கும் எறிகதிரோன் றன்னை முயங்கமருள்
தோராழி யால் மறைத்த தென்நீ திருமாலே
போராழி கையால் பொருது

பொருகோட்டோ ர் ஏனமா புக்கிடந்தாய்க்கு அன்றுன்
ஒருகோட்டின் மேல்கிடந்த தன்றெ விரிதோட்ட
சேவடியை நீட்டி திசைநடுங்க விண்துளங்க
மாவடிவின் நீயளந்த மண்

மண்ணும் மலையும் மறிகடலும் மாருதமும்
விண்ணும் விழுங்கியது மெய்யென்பர் எண்ணில்
அலகளவு கண்டசீ ராழியாய்க்கு அன்றிவ்
வுலகளவு முண்டோ வுன் வாய்

வாயவனை யல்லது வாழ்த்தாது கையுலகம்
தாயவனை யல்லது தாம்தொழா பேய்முலைநஞ்
சூணாக வுண்டான் உருவொடு பேரல்லால்
காணாகண் கேளா செவி

செவிவாய்கண் மூக்குடலென் றைம்புலனும் செந்தீ
புவிகால்நீர் விண்பூதம் ஐந்தும் அவியாத
ஞானமும் வேள்வியும் நல்லறமும் என்பரே
ஏனமாய் நின்றாற் கியல்வு

இயல்வாக ஈன்துழா யானடிக்கே செல்ல
முயல்வார் இயலமரர் முன்னம் இயல்வாக
நீதியா லோதி நியமங்க ளால்பரவ
ஆதியாய் நின்றார் அவர்

அவரவர் தாந்தம் அறிந்தவா றேத்தி
இவரிவ ரெம்பெருமா னென்று சுவர்மிசை
சார்த்தியும் வைத்தும் தொழுவர் உலகளந்த
மூர்த்தி யுருவே முதல்

முதலாவார் மூவரே அம்மூவ ருள்ளும்
முதலாவான் மூரிநீர் வண்ணன் முதலாய
நல்லான் அருளல்லால் நாமநீர் வையகத்து
பல்லார் அருளும் பழுது

பழுதே பலபகலும் போயினவென்று அஞ்சி
அழுதேன் அரவணைமேல் கண்டு தொழுதேன்
கடலோதம் காலலைப்ப கண்வளரும் செங்கண்
அடலோத வண்ணர் அடி

அடியும் படிகடப்ப தோள்திசைமேல் செல்ல
முடியும் விசும்பளந்த தென்பர் வடியுகிரால்
ஈர்ந்தான் இரணியன தாகம் எருஞ்சிறைப்புள்
ஊர்ந்தா னுலகளந்த நான்று

நான்ற முலைத்தலை நஞ்சுண்டு உறிவெண்ணெய்
தோன்றவுண் டான்வென்றி சூழ்களிற்றை ஊன்றி
பொருதுடைவு கண்டானும் புள்ளின்வாய் கீண்டானும்
மருதிடைபோய் மண்ணளந்த மால்

மாலுங் கருங்கடலே என்நோற்றாய் வையகமுண்
டாலின் இலைத்துயின்ற ஆழியான் கோல
கருமேனி செங்கண்மால் கண்படையுள் என்றும்
திருமேனி நீதீண்ட பெற்று

பெற்றார் தளைகழல போர்ந்தோர் குறளுருவாய்
செற்றார் படிகடந்த செங்கண்மால் நற்றா
மரைமலர சேவடியை வானவர்கை கூப்பி
நிரைமலர்கொண்டு ஏத்துவரால் நின்று

நின்று நிலமங்கை நீரேற்று மூவடியால்
சென்று திசையளந்த செங்கண்மாற்கு என்றும்
படையாழி புள்ளூர்த்தி பாம்பணையான் பாதம்
அடையாழி நெஞ்சே அறி

அறியு முலகெல்லாம் யானேயு மல்லேன்
பொறிகொள் சிறையுவண மூர்ந்தாய் வெறிகமழும்
காம்பேய்மென் தோளி கடைவெண்ணெ யுண்டாயை
தாம்பேகொண் டார்த்த தழும்பு

தழும்பிருந்த சார்ங்கநாண் தோய்ந்த மங்கை
தழும்பிருந்த தாள்சகடம் சாடி
பூங்கோதை யாள்வெருவ பொன்பெயரோன் மார்ப்பிடந்த
வீங்கோத வண்ணர் விரல்

விரலோடு வாய்தோய்ந்த வெண்ணெய்கண்டு ஆய்ச்சி
உரலோ டுறப்பிணித்த ஞான்று குரலோவா
தோங்கி நினைந்தயலார் காண இருந்திலையே
ஓங்கோத வண்ணா உரை

உரைமேற்கொண் டென்னுள்ளம் ஓவாது போதும்
வரைமேல் மரகதமே போல திரைமேல்
கிடந்தானை கீண்டானை கேழலா பூமி
இடந்தானை யேத்தி யெழும்

எழுவார் விடைகொள்வார் ஈன்துழா யானை
வழுவா வகைநினைந்து வைகல் தொழுவார்
வினைச்சுடரை நந்துவிக்கும் வேங்கடமே வானோர்
மனச்சுடரை தூண்டும் மலை

மலையால் குடைகவித்து மாவாய் பிளந்து
சிலையால் மராமரமேழ் செற்று கொலையானை
போர்க்கோ டொசித்தனவும் பூங்குருந்தம் சாய்த்தனவும்
காக்கோடு பற்றியான் கை

கைய வலம்புரியும் நேமியும் கார்வண்ண
தைய மலர்மகள்நின் னாகத்தாள் செய்ய
மறையான்நின் உந்தியான் மாமதிள்மூன் றெய்த
இறையான்நின் ஆக திறை

இறையும் நிலனும் இருவிசும்பும் காற்றும்
அறைபுனலும் செந்தீயு மாவான் பிறைமருப்பின்
பைங்கண்மால் யானை படுதுயரம் காத்தளித்த
செங்கண்மால் கண்டாய் தெளி

தெளிதாக வுள்ளத்தை செந்நிறீஇ ஞான
தெளிதாக நன்குணர்வார் சிந்தை எளிதாக
தாய்நாடு கன்றேபோல் தண்டுழா யானடிக்கே
போய்நாடி கொள்ளும் புரிந்து

புரியொருகை பற்றியோர் பொன்னாழி யேந்தி
அரியுருவும் ஆளுருவுமாகி எரியுருவ
வண்ண்த்தான் மார்ப்பிடந்த மாலடியை அல்லால் மற்
றெண்ண்த்தா னாமோ இமை

இமையாத கண்ணால் இருளகல நோக்கி
அமையா பொறிபுலன்க ளைந்தும் நமையாமல்
ஆக தணைப்பா ரணைவரே ஆயிரவாய்
நாக தணையான் நகர்

நகர மருள்புரிந்து நான்முகற்கு பூமேல்
பகர மறைபயந்த பண்பன் பெயரினையே
புந்தியால் சிந்தியா தோதி உருவெண்ணும்
அந்தியா லாம்பனங் கென்

என்னொருவர் மெய்யென்பர் ஏழுலகுண்டு ஆலிலையில்
முன்னொருவ னாய முகில்வண்ணா நின்னுருகி
பேய்த்தாய் முலைதந்தாள் பேர்ந்திலளால் பேரமர்க்கண்
ஆய்த்தாய் முலைதந்த ஆறு

ஆறிய அன்பில் அடியார்தம் ஆர்வத்தால்
கூறிய குற்றமா கொள்ளல்நீ தேறி
நெடியோய் அடியடைதற் கன்றேஈ ரைந்து
முடியான் படைத்த முரண்

முரணை வலிதொலைதற் காமன்றே முன்னம்
தரணி தனதாக தானே இரணியனை
புண்நிரந்த வள்ளுகிரால் பொன்னாழி கையால்நீ
மண்ணிரந்து கொண்ட வகை

வகையறு ண்கேள்வி வாய்வார்கள் நாளும்
புகைவிளக்கும் பூம்புனலும் ஏந்தி திசைதிசையின்
வேதியர்கள் சென்றிறைஞ்சும் வேங்கடமே வெண்சங்கம்
ஊதியவாய் மாலுகந்த வூர்

ஊரும் வரியரவம் ஒண்குறவர் மால்யானை
பேர எறிந்த பெருமணியை காருடைய
மின்னென்று புற்றடையும் வேங்கடமே மேலசுரர்
என்னென்ற மால திடம்

இடந்தது பூமி எடுத்தது குன்றம்
கடந்தது கஞ்சனைமுன் அஞ்ச கிடந்ததுவும்
நீரோத மாகடலே நின்றதுவும் வேங்கடமே
பேரோத வண்ணர் பெரிது

பெருவில் பகழி குறவர்கை செந்தீ
வெருவி புனம்துறந்த வேழம் இருவிசும்பில்
மீன்வீழ கண்டஞ்சும் வேங்கடமே மேலசுரர்
கோன்வீழ கண்டுகந்தான் குன்று

குன்றனைய குற்றஞ் செயினும் குணங்கொள்ளும்
இன்று முதலாக என்னெஞ்சே என்றும்
புறனுரையே யாயினும் பொன்னாழி கையான்
திறனுரையே சிந்தி திரு

திருமகளும் மண்மகளும் ஆய்மகளும் சேர்ந்தால்
திருமகட்கே தீர்ந்தவா றென்கொல் திருமகள்மேல்
பாலோதம் சிந்த படநா கணைக்கிடந்த
மாலோத வண்ணர் மனம்

மனமாசு தீரு மறுவினையும் சார
தனமாய தானேகை கூடும் புனமேய
பூந்துழா யானடிக்கே போதொடு நீரேந்தி
தாம்தொழா நிற்பார் தமர்

தமருகந்த தெவ்வுருவம் அவ்வுருவம் தானே
தமருகந்த தெப்பேர்மற் றப்பேர் தமருகந்து
எவ்வண்ணம் சிந்தி திமையா திருப்பரே
அவ்வண்ணம் அழியா னாம்

ஆமே யமரர கறிய அதுநிற்க
நாமே யறிகிற்போம் நன்னெஞ்சே பூமேய
மாதவத்தோன் தாள்பணிந்த வாளரக்கன் நீண்முடியை
பாதமத்தா லேண்ணினான் பண்பு

பண்புரிந்த நான்மறையோன் சென்னி பலியேற்ற
வெண்புரில் மார்பன் வினைதீர புண்புரிந்த
ஆகத்தான் தாள்பணிவார் கண்டீர் அமரர்தம்
போகத்தால் பூமியாள் வார்

வாரி சுருக்கி மதக்களி றைந்தினையும்
சேரி திரியாமல் செந்நிறீஇ கூரிய
மெய்ஞ்ஞான தாலுணர்வார் காண்பரே மேலொருநாள்
கைந்நாகம் காத்தான் கழல்

கழலொன் றெடுத்தொருகை சுற்றியோர் கைமேல்
சுழலும் சுராசுரர்க ளஞ்ச அழலும்
செருவாழி யேந்தினான் சேவடிக்கே செல்ல
மருவாழி நெஞ்சே மகிழ்

மகிழல கொன்றேபோல் மாறும்பல் யாக்கை
நெகிழ முயல்கிற்பார கல்லால் முகில்விரிந்த
சோதிபோல் தோன்றும் சுடர்ப்பொன் நெடுமுடிஎம்
ஆதிகாண் பார்க்கு மரிது

அரியபுல னைந்தடக்கி யாய்மலர்கொண்டு ஆர்வம்
பரி பரிசினால் புல்கில் பெரியனாய்
மாற்றாது வீற்றிருந்த மாவலிபால் வண்கைநீர்
ஏற்றானை காண்ப தெளிது

எளிதி லிரண்டையும் காண்பதற்கு என்னுள்ளம்
தெளி தெளிந்தொழியும் செவ்வே களியில்
பொருந்தா தவனை பொரலுற்று அரியாய்
இருந்தான் திருநாமம் எண்

எண்மர் பதினொருவர் ஈரறுவர் ஓரிருவர்
வண்ண மலரேந்தி வைகலும் நண்ணி
ஒரு மாலை யால்பரவி ஓவாதுஎ போதும்
திருமாலை கைதொழுவர் சென்று

சென்றால் குடையாம் இருந்தால்சிங் காசனமாம்
நின்றால் மரவடியாம் நீள்கடலுள் என்றும்
புணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும்
அணையாம் திருமாற் கரவு

அரவம் அடல்வேழம் ஆன்குருந்தம் புள்வாய்
குரவை குடம்முலைமல் குன்றம் கரவின்றி
விட்டிறுத்து மேய்த்தொசித்து கீண்டுகோ தாடிஉண்
டட்டெடுத்த செங்கண் அவன்

அவன் தமர் எவ்வினைய ராகிலும் எங்கோன்
அவன்தமரே யென்றொழிவ தல்லால் நமன்தமரால்
ஆரா பட்டறியார் கண்டீர் அரவணைமேல்
பேராயற் காட்பட்டார் பேர்

பேரே வரப்பிதற்றல் அல்லாலெம் பெம்மானை
ஆரே அறிவார் அதுநிற்க நேரே
கடிக்கமல துள்ளிருந்தும் காண்கிலான் கண்ணன்
அடிக்கமல தன்னை அயன்

அயல்நின்ற வல்வினையை அஞ்சினே னஞ்சி
உயநின் திருவடியே சேர்வான் நயநின்ற
நன்மாலை கொண்டு நமோநாரணா என்னும்
சொன்மாலை கற்றேன் தொழுது

தொழுது மலர்க்கொண்டு தூபம்கை யேந்தி
எழுதும் எழுவாழி நெஞ்சே பழுதின்றி
மந்திரங்கள் கற்பனவும் மாலடியே கைதொழுவான்
அந்தரமொன் றில்லை அடை

அடைந்த அருவினையோ டல்லல்நோய் பாவம்
மிடைந்தவை மீண்டொழிய வேண்டில் டங்கிடையை
முன்னிலங்கை வைத்தான் முரணழிய முன்னொருநாள்
தன்வில் அங்கை வைத்தான் சரண்

சரணா மறைபயந்த தாமரையா னோடு
மரணாய மன்னுயிர்க கெல்லாம் அரணாய
பேராழி கொண்ட பிரானன்றி மற்றறியாது
ஓராழி சூழ்ந்த வுலகு

உலகும் உலகிறந்த வூழியும் ஒண்கேழ்
விலகு கருங்கடலும் வெற்பும் உலகினில்
செந்தீயும் மாருதமும் வானும் திருமால்தன்
புந்தியி லாய புணர்ப்பு

புணர்மருதி னூடுபோ பூங்குருந்தம் சாய்த்து
மணமருவ மால் விடையேழ் செற்று கணம்வெருவ
ஏழுலகும் தாயினவும் எண்டிசையும் போயினவும்
சூழரவ பொங்கணையான் தோள்

தோளவனை யல்லால் தொழா என் செவியிரண்டும்
கேளவன தின்மொழியே கேட்டிருக்கும் நாநாளும்
கோணா கணையான் கூரைகழலே கூறுவதே
நாணாமை நள்ளேன் நயம்

நயவேன் பிறர்ப்பொருளை நள்ளேன்கீ ழாரோடு
உயவேன் உயர்ந்தவரோ டல்லால் வியவேன்
திருமாலை யல்லது தெய்வமென் றேத்தேன்
வருமாறென் நம்மேல் வினை

வினையா லடர்ப்படார் வெந்நரகில் சேரார்
தினையேனும் தீக்கதிக்க செல்லார் நினைதற்
கரியானை சேயானை ஆயிரம்பேர செங்க
கரியானை கைதொழுத கால்

காலை யெழுந்துலகம் கற்பனவும் கற்றுணர்ந்த
மேலை தலைமறையோர் வேட்பனவும் வேலைக்கண்
ஓராழி யானடியே ஓதுவதும் ஓர்ப்பனவும்
பேராழி கொண்டான் பெயர்

பெயரும் கருங்கடலே நோக்குமாறு ஒண்பூ
உயரும் கதிரவனே நோக்கும் உயிரும்
தருமனையே நோக்குமொண் டாமரையாள் கேள்வன்
ஒருவனையே நோக்கும் உணர்வு

உணர்வாரா ருன்பெருமை யூழிதோ றூழி
உணர்வாரா ருன்னுருவ தன்னை உணர்வாரார்
விண்ணகத்தாய் மண்ணகத்தாய் வேங்கடத்தாய் நால்வேத
பண்ணகத்தாய் நீகிடந்த பால்

பாலன் றனதுருவாய் ஏழுலகுண்டு ஆலிலையின்
மேலன்று நீவளர்ந்த மெய்யென்பர் ஆலன்று
வேலைநீ ருள்ளதோ விண்ணதோ மண்ணதோ
சோலைசூழ் குன்றெடுத்தாய் சொல்லு

சொல்லு தனையும் தொழுமின் விழுமுடம்பு
சொல்லு தனையும் திருமாலை நல்லிதழ
தாமத்தால் வேள்வியால் தந்திரத்தால் மந்திரத்தால்
நாமத்தால் ஏத்திதிரேல் நன்று

நன்று பிணிமூப்பு கையகற்றி நான்கூழி
நின்று நிலமுழுதும் ஆண்டாலும் என்றும்
விடலாழி நெஞ்சமே வேண்டினேன் கண்டாய்
அடலாழி கொண்டான்மா டன்பு

அன்பாழி யானை யணுகென்னும் நாஅவன்றன்
பண்பாழி தோள்பரவி யேத்தென்னும் முன்பூழி
காணானை காணென்னும் கண்செவி கேளென்னும்
பூணாரம் பூண்டான் புகழ்

புகழ்வாய் பழிப்பாய்நீ பூந்துழா யானை
இகழ்வாய் கருதுவாய் நெஞ்சே திகழ்நீர
கடலும் மலையும் இருவிசும்பும் காற்றும்
உடலும் உயிருமேற்றான்

ஏற்றான் புள்ளூர்த்தான் எயிலெரித்தான் மார்விடந்தான்
நீற்றான் நிழல்மணி வண்ணத்தான் கூற்றொருபால்
மங்கையான் பூமகளான் வார்சடையான் நீண்முடியான்
கங்கையான் நீள்கழலான் காப்பு

காப்புன்னை யுன்ன கழியும் அருவினைகள்
ஆப்புன்னை யுன்ன அவிழ்ந்தொழியும் மூப்புன்னை
சிந்திப்பார கில்லை திருமாலே நின்னடியை
வந்திப்பார் காண்பர் வழி

வழிநின்று நின்னை தொழுவார் வழுவா
மொழிநின்ற மூர்த்தியரே யாவர் பழுதொன்றும்
வாராத வண்ணமே விண்கொடுக்கும் மண்ணளந்த
சீரான் திருவேங்கடம்

வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும் அஃகாத
பூங்கிடங்கில் நீள்கோவல் பொன்னகரும் நான்கிடத்தும்
நின்றா னிருந்தான் கிடந்தான் நடந்தானே
என்றால் கெடுமாம் இடர்

இடரார் படுவார் எழுநெஞ்சே வேழம்
தொடர்வான் கொடுமுதலை சூழ்ந்த படமுடை
பைந்நாக பள்ளியான் பாதமே கைதொழுதும்
கொய்ந்நாக பூம்போது கொண்டு

கொண்டானை யல்லால் கொடுத்தாரை யார்பழிப்பார்
மண்தா எனவிரந்து மாவலியை ஒண்தாரை
நீரங்கை தோய நிமிர்ந்திலையே நீள்விசும்பில்
ஆரங்கை தோய அடுத்து

அடுத்த கடும்பகைஞர காற்றேனென் றோடி
படுத்த பொரும்பாழி சூழ்ந்த விடத்தரவை
வல்லாளன் கைக்கொடுத்த மாமேனி மாயவனுக்கு
அல்லாதும் ஆவரோ ஆள்

ஆளமர் வென்றி யடுகளத்துள் அஞ்ஞான்று
வாளமர் வேண்டி வரைநட்டு நீளரவை
சுற்றி கடைந்தான் பெயரன்றே தொன்னரகை
பற்றி கடத்தும் படை

படையாரும் வாட்கண்ணார் பாரசிநாள் பைம்பூ
தொடையலோ டேந்திய தூபம் இடையிடையின்
மீன்மாய மாசூணும் வேங்கடமே மேலொருநாள்
மான்மாய எய்தான் வரை

வரைகுடைதோல் காம்பாக ஆநிரைகாத்து ஆயர்
நிரைவிடையேழ் செற்றவா றென்னே உரவுடைய
நீராழி யுள்கிடந்து நேரா நிசாசரர்மேல்
பேராழி கொண்ட பிரான்

பிரான் உன் பெருமை பிறரா ரறிவார்
உராஅ யுலகளந்த ஞான்று வராக
தெயிற்றளவு போதாவா றென்கொலோ எந்தை
அடிக்களவு போந்த படி

படிகண் டறிதியே பாம்பணையி னான்பு
கொடிகண் டறிதியேகூறாய் வடிவில்
பொறியைந்து முள்ளடக்கி போதொடுநீ ரேந்தி
நெறிநின்ற நெஞ்சமே நீ

நீயும் திருமகளும் நின்றாயால் குன்றெடுத்து
பாயும் பனிமறைத்த பண்பாளா வாயில்
கடைகழியா வுள்புகா காமர்பூங் கோவல்
இடைகழியே பற்றி யினி

இனியார் புகுவா ரெழுநரக வாசல்
முனியாது மூரித்தாள் கோமின் கனிசா
கன்றெறிந்த தோளான் கனைகழலே காண்பதற்கு
நன்கறிந்த நாவலம்சூழ் நாடு

நாடிலும் நின்னடியே நாடுவன நாடோ றும்
பாடிலும் நின்புகழே பாடுவன் சூடிலும்
பொன்னாழி யேந்தினான் பொன்னடியே சூடுவேற்கு
என்னாகி லென்னே எனக்கு

எனக்காவா ராரொருவரே எம்பெருமான்
தனக்காவான் தானேமற் றல்லால் புனக்காயாம்
பூமேனி காண பொதியவிழும் பூவைப்பூ
மாமேனி காட்டும் வரம்

வரத்தால் வலிநினைந்து மாதவநின் பாதம்
சிரத்தால் வணங்கானா மென்றே உரத்தினால்
ஈரரியாய் நேர்வலியோ னாய இரணியனை
ஓரரியாய் நீயிடந்த தூன்

ஊன குரம்பையி னுள்பு கிருள்நீக்கி
ஞான சுடர்கொளீஇ நாடோ றும் ஏன
துருவா யுலகிடந்த வூழியான் பாதம்
மருவாதார குண்டாமோ வான்

வானாகி தீயாய் மறிகடலாய் மாருதமாய்
தேனாகி பாலாம் திருமாலே ஆனாய்ச்சி
வெண்ணெய் விழுங்க நிறையுமே முன்னொருநாள்
மண்ணை உமிழ்ந்த வயிறு

வயிறழல வாளுருவி வந்தானை யஞ்ச
எயிறிலக வாய்மடுத்த தென்நீ பொறியுகிரால்
பூவடியை யீடழித்த பொன்னாழி கையாநின்
சேவடிமே லீடழி செற்று

செற்றெழுந்து தீவிழித்து சென்றவிந்த ஏழுலகும்
மற்றிவையா வென்றுவா யங்காந்து முற்றும்
மறையவற்கு காட்டிய மாயவனை யல்லால்
இறையேனும் ஏத்தாதென் நா

நாவாயி லுண்டே நமோநார ணா என்று
ஓவா துரைக்கு முரையுண்டே மூவாத
மாக்கதிக்கண் செல்லும் வகையுண்டே என்னொருவர்
தீக்கதிக்க செல்லும் திறம்

திறம்பாதென் னெஞ்சமே செங்கண்மால் கண்டாய்
அறம்பாவ மென்றிரண்டு மாவான் புறந்தானிம்
மண்தான் மறிகடல்தான் மாருதந்தான் வான்தானே
கண்டாய் கடைக்க பிடி

பிடிசேர் களிறளித்த பேராளா உன்றன்
அடிசேர தருள்பெற்றாள் அன்றே பொடிசேர்
அனல்கங்கை யேற்றான் அவிர்சடைமேல் பாய்ந்த
புனல்கங்கை யென்னும்பேர பொன்

பொன்திகழ மேனி புரிசடையம் புண்ணியனும்
நின்றுலகம் தாய நெடுமாலும் என்றும்
இருவரங்க தால்திரிவ ரேலும் ஒருவன்
ஒருவனங்க தென்று முளன்

உளன்கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன்கண்டாய் உள்ளூவா ருள்ள துளன்கண்டாய்
வெள்ளத்தி னுள்ளானும் வேங்கடத்து மேயானும்
உள்ளத்தி னுள்ளனென் றோர்

ஓரடியும் சாடுதைத்த ஒண்மலர சேவடியும்
ஈரடியும் காணலா மென்னெஞ்சே ஓரடியில்
தாயவனை கேசவனை தண்டுழாய் மாலைசேர்
மாயவனை யேமனத்து வை
பொய்கையாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ
ஸ்ரீமதே ராமானுஜாய நம
பூதத்தாழ்வார் அருளிச்செய்த
இரண்டாம் திருவந்தாதி
தனியன்
திருகுருகைப்பிரான் பிள்ளான் அருளி செய்தது
நேரிசை வெண்பா
என்பிறவி தீர இறைஞ்சினேன் இன்னமுதா
அன்பே தகளி யளித்தானை நன்புகழ்சேர்
சீதத்தார் முத்துகள் சேரும் கடல்மல்லை
பூதத்தார் பொன்னங்கழல்

அன்பே தளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை யிடுதிரியா நன்புருகி
ஞான சுடர்விள கேற்றினேன் நாரணற்கு
ஞான தமிழ்புரிந்த நான்

ஞானத்தால் நன்குணர்ந்து நாரணன்றன் நாமங்கள்
தானத்தால் மற்றவன் பேர் சாற்றினால் வான
தணியமர ராக்குவிக்கு மஃதன்றே நாங்கள்
பணியமரர் கோமான் பரிசு

பரிசு நறுமலரால் பாற்கடலான் பாதம்
புரிவார் புகழ்பெறுவர் போலாம் புரிவார்கள்
தொல்லமரர் கேள்வி துலங்கொளிசேர் தோற்றத்து
நல்லமரர் கோமான் நகர்

நகரிழைத்து நித்திலத்து நாண்மலர் கொண்டு ஆங்கே
திகழும் அணிவயிரம் சேர்த்து நிகரில்லா
பைங்கமல மேந்தி பணிந்தேன் பனிமலராள்
அங்கம்வலம் கொண்டான் அடி

அடிமூன்றி லிவ்வுலகம் அன்றளந்தாய் போலும்
அடிமூன் றிரந்தவனி கொண்டாய் படிநின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
ஆரோத வல்லார் அறிந்து

அறிந்தைந்து முள்ளடக்கி ஆய்மலர்கொண்டு ஆர்வம்
செறிந்த மனத்தரா செவ்வே அறிந்தவன்றன்
பேரோதி யேத்தும் பெருந்தவத்தோர் காண்பரே
காரோத வண்ணன் கழல்

கழலெடுத்து வாய்மடித்து கண்சுழன்று மாற்றார்
அழலெடுத்த சிந்தையராய் அஞ்ச தழலெடுத்த
போராழி ஏத்தினான் பொன்மலர சேவடியை
ஓராழி நெஞ்சே உகந்து

உகந்துன்னை வாங்கி ஒளிநிறங்கொள் கொங்கை
அகம்குளிர வுண்ணென்றாள் ஆவி உகந்து
முலையுண்பாய் போலே முனிந்துண்டாய் நீயும்
அலைபண்பா லானமையால் அன்று

அன்றதுகண் டஞ்சாத ஆய்ச்சி யுனக்கிரங்கி
நின்று முலைதந்த இன்நீர்மைக்கு அன்று
வரன்முறையால் நீயளந்த மாகடல்சூழ் ஞாலம்
பெருமுறையா லெய்துமோ பேர்த்து

பேர்த்தனை மாசகடம் பிள்ளையாய் மண்ணிரந்து
காத்தனை புல்லுயிரும் காவலனே ஏத்திய
நாவுடையேன் பூவுடையேன் நின்னுள்ளி நின்றமையால்
காவடியேன் பட்ட கடை

கடைநின் றமரர் கழல்தொழுது நாளும்
இடைநின்ற இன்பத்த ராவர் புடைநின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
ஆரோத வல்லார் அவர்

அவரிவரென் றில்லை அரவணையான் பாதம்
எவர்வணங்கி யேத்தாதா ரெண்ணில் பலரும்
செழுங்கதிரோ னெண்மலரோன் கண்ணுதலோன் அன்றே
தொழுந்தகையார் நாளும் தொடர்ந்து

தொடரெடுத்த மால்யானை சூழ்கயம்பு கஞ்சி
படரெடுத்த பைங்கமலம் கொண்டுஅன் றிடரடுக்க
ஆழியான் பாதம் பணிந்தன்றே வானவர்கோன்
பாழிதா னெய்திற்று பண்டு

பண்டி பெரும்பதியை யாக்கி பழிபாவம்
கொண்டுஇங்கு வாழ்வாரை கூறாதே எண்டிசையும்
பேர்த்தகரம் நான்குடையான் பேரோதி பேதைகாள்
தீர்த்தகரர் ஆமின் திரிந்து

திரிந்தது வெஞ்சமத்து தேர்கடவி அன்று
பிரிந்தது சீதையைமான் பின்போய் புரிந்ததுவும்
கண்பள்ளி கொள்ள அழகியதே நாகத்தின்
தண்பள்ளி கொள்வான் றனக்கு

தனக்கடிமை பட்டது தானறியா னேலும்
மனத்தடைய வைப்பதாம் மாலை வனத்திடரை
ஏரியாம் வண்ணம் இயற்று மிதுவல்லால்
மாரியார் பெய்கிற்பார் மற்று

மற்றா ரியலாவர் வானவர்கோன் மாமலரோன்
சுற்றும் வணங்கும் தொழிலானை ஒற்றை
பிறையிருந்த செஞ்சடையான் பிஞ்சென்று மாலை
குறையிரந்து தான்முடித்தான் கொண்டு

கொண்ட துலகம் குறளுருவா கோளரியாய்
ஒண்டிறலோன் மார்வ துகிர்வைத்தது உண்டதுவும்
தான்கடந்த ஏழுலகே தாமரைக்கண் மாலொருநாள்
வான்கடந்தான் செய்த வழக்கு

வழக்கன்று கண்டாய் வலிசகடம் செற்றாய்
வழக்கொன்று நீமதிக்க வேண்டா குழக்கன்று
தீவிளவின் காய்க்கெறிந்த தீமை திருமாலே
பார்விளங்க செய்தாய் பழி

பழிபாவம் கையகற்றி பல்காலும் நின்னை
வழிவாழ்வார் வாழ்வராம் மாதோ வழுவின்றி
நாரணன்றன் நாமங்கள் நன்குணர்ந்து நன்கேத்தும்
காரணங்கள் தாமுடையார் தாம்

தாமுளரே தம்முள்ளம் உள்ளுளதே தாமரையின்
பூவுளதே யேத்தும் பொழுதுண்டே வாமன்
திருமருவு தாள்மரூவு சென்னியரே செவ்வே
அருநரகம் சேர்வ தரிது

அரிய தெளிதாகும் ஆற்றலால் மாற்றி
பெருக முயல்வாரை பெற்றால் கரியதோர்
வெண்கோட்டு மால்யானை வென்றுமுடி தன்றே
தண்கோட்டு மாமலரால் தாழ்ந்து

தாழ்ந்துவரங் கொண்டு தக்க வகைகளால்
வாழ்ந்து கழிவாரை வாழ்விக்கும் தாழ்ந்த
விளங்கனிக்கு கன்றெறிந்து வேற்றுருவாய் ஞாலம்
அளந்தடிக்கீழ கொண்ட அவன்

அவன்கண்டாய் நன்னெஞ்சே ஆரருளும் கேடும்
அவன்கண்டா யைம்புலனாய் நின்றான் அவன்கண்டாய்
காற்றுத்தீ நீர்வான் கருவரைமண் காரோத
சீற்றத்தீ யாவானும் சென்று

சென்ற திலங்கைமேல் செவ்வேதன் சீற்றத்தால்
கொன்ற திராவணனை கூறுங்கால் நின்றதுவும்
வேயோங்கு தண்சாரல் வேங்கடமே விண்ணவர்தம்
வாயோங்கு தொல்புகழான் வந்து

வந்தி தவனை வழிநின்ற ஐம்பூதம்
ஐந்தும் அகத்தடக்கி யார்வமாய் உந்தி
படியமரர் வேலையான் பண்டமரர கீந்த
படியமரர் வாழும் பதி

பதியமைந்து நாடி பருத்தெழுந்த சிந்தை
மதியுரிஞ்சி வான்முகடு நோக்கி கதிமிகுத்தங்
கோல்தேடி யாடும் கொழுந்ததே போன்றதே
மால்தேடி யோடும் மனம்

மனத்துள்ளான் வேங்கடத்தான் மாகடலான் மற்றும்
நினைப்பரிய நீளரங்க துள்ளான் எனைப்பலரும்
தேவாதி தேவ னெனப்படுவான் முன்னொருனாள்
மாவாய் பிளந்த மகன்

மகனா கொண்டெடுத்தாள் மாண்பாய கொங்கை
அகனார வுண்பனென் றுண்டு மகனைத்தாய்
தேறாத வண்ணம் திருத்தினாய் தென்னிலங்கை
நீறாக எய்தழித்தாய் நீ

நீயன் றுலகளந்தாய் நீண்ட திருமாலே
நீயன் றுலகிடந்தா யென்பரால் நீயன்று
காரோதம் முன்கடைந்து பின்னடைத்தாய் மாகடலை
பேரோத மேனி பிரான்

பிரானென்று நாளும் பெரும்புலரி யென்றும்
குராநல் செழும்போது கொண்டு வராக
தணியுருவன் பாதம் பணியுமவர் கண்டீர்
மணியுருவம் காண்பார் மகிழ்ந்து

மகிழ்ந்தது சிந்தை திருமாலே மற்றும்
மகிழ்ந்ததுன் பாதமே போற்றி மகிழ்ந்த
தழலாழி சங்க மவைபாடி யாடும்
தொழிலாகம் சூழ்ந்து துணிந்து

துணிந்தது சிந்தை துழாயலங்கல் அங்கம்
அணிந்தவன்பே ருள்ளத்து பல்கால் பணிந்ததுவும்
வேய்பிறங்கு சாரல் விறல்வேங் கடவனையே
வாய்திறங்கள் சொல்லும் வகை

வகையா லவனி யிரந்தளந்தாய் பாதம்
புகையால் நறுமலாரால் முன்னே மிகவாய்ந்த
அன்பாக்கி யேத்தி யடிமைப்பட்டேனுனக்கு
என்பாக்கி யத்தால் இனி

இனிதென்பர் காமம் அதனிலும் ஆற்ற
இனிதென்பர் தண்ணீரும் எந்தாய் இனிதென்று
காமநீர் வேளாது நின்பெருமை வேட்பரேல்
சேமநீ ராகும் சிறிது

சிறியார் பெருமை சிறிதின்க ணெய்தும்
அறியாரும் தாமறியா ராவர் அறியாமை
மண்கொண்டு மண்ணுண்டு மண்ணுமிழ்ந்த மாயனென்று
எண்கொண்டேன் னெஞ்சே இரு

இருந்தண் கமல திருமலரி னுள்ளே
திருந்து திசைமுகனை தந்தாய் பொருந்தியநின்
பாதங்க ளேத்தி பணியாவேல் பல்பிறப்பும்
ஏதங்க ளெல்லா மெமக்கு

எமக்கென் றிருநிதியம் ஏமாந்தி ராதே
தமக்கென்றும் சார்வ மறிந்து நமக்கென்றும்
மாதவனே யென்னும் மனம்படைத்து மற்றவன்பேர்
ஓதுவதே நாவினா லோத்து

ஓத்தின் பொருள்முடிவும் இத்தனையே உத்தமன்பேர்
ஏத்தும் திறமறிமி னேழைகாள் ஓத்தனை
வல்லீரேல் நன்றதனை மாட்டீரேல் மாதவன்பேர்
சொல்லுவதே ஓத்தின் சுருக்கு

சுருக்காக வாங்கி சுலாவினின்று ஐயார்
நெருக்காமுன் நீர்நினைமின் கண்டீர் திருப்பொலிந்த
ஆகத்தான் பாதம் அறிந்தும் அறியாத
போகத்தா லில்லை பொருள்

பொருளால் அமருலகம் புக்கியல லாகாது
அருளா லறமருளு மன்றே அருளாலே
மாமறையோர கீந்த மணிவண்ணன் பாதமே
நீமறவேல் நெஞ்சே நினை

நினைப்பன் திருமாலை நீண்டதோள் காண
நினைப்பார் பிறப்பொன்றும் நேரார் மனைப்பால்
பிறந்தார் பிறந்தெய்தும் பேரின்ப மெல்லாம்
துறந்தார் தொழுதார தோள்

தோளிரண் டெட்டேழும் மூன்று முடியனைத்தும்
தாளிரண்டும் வீழ சரந்துரந்தான்
ஆர்தொழுவார் பாதம் அவைதொழுவ தன்றேஎன்
சீர்கெழுதோள் செய்யும் சிறப்பு

சிறந்தார கெழுதுணையாம் செங்கண்மால் நாமம்
மறந்தாரை மானிடமா வையேன் அறம்தாங்கும்
மாதவனே யென்னும் மனம்படைத்து மற்றவன்பேர்
ஓதுவதே நாவினா லுள்ளு

உளதென் றிறுமாவா ருண்டில்லை யென்று
தளர்தல் அதனருகும் சாரார் அளவரிய
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடிதோயும்
பாதத்தான் பாதம் பயின்று

பயின்ற தரங்கம் திருக்கோட்டி பன்னாள்
பயின்றதுவும் வேங்கடமே பன்னாள் பயின்ற
தணிதிகழும் சோலை யணிநீர் மலையே
மணிதிகழும் வண்தடக்கை மால்

மாலை யரியுருவன் பாத மலரணிந்து
காலை தொழுதெழுமின் கைகோலி ஞாலம்
அளந்திட துண்டுமிழ்ந்த அண்ணலைமற் றல்லால்
உளங்கிடந்த வாற்றா லுணர்ந்து

உணர்ந்தாய் மறைநான்கும் ஓதினாய் நீதி
மணந்தாய் மலர்மகள்தோள் மாலே மணந்தாய்போய்
வேயிருஞ் சாரல் வியலிரு ஞாலம்சூழ்
மாயிருஞ் சோலை மலை

மலையேழும் மாநிலங்க ளேழும் அதிர
குலைசூழ் குரைகடல்க ளேழும் முலைசூழ்ந்த
நஞ்சுரத்து பெண்ணை நவின்றுண்ட நாவனென்று
அஞ்சாதென் னெஞ்சே அழை

அழைப்பன் திருமாலை ஆங்கவர்கள் சொன்ன
பிழைப்பில் பெரும்பெயரே பேசி இழைப்பரிய
ஆயவனே யாதவனே என்றவனை யார்முகப்பும்
மாயவனே என்று மதித்து

மதிக்கண்டாய் நெஞ்சே மணிவண்ணன் பாதம்
மதிக்கண்டாய் மற்றவன்பேர் தன்னை
பேராழி நின்று பெயர்ந்து கடல்கடைந்த
நீராழி வண்ணன் நிறம்

நிறங்கரியன் செய்ய நெடுமலராள் மார்வன்
அறம்பெரிய னார தறிவார் மறம்புரிந்த
வாளரக்கன் போல்வானை வானவர்கோன் தானத்து
நீளிருக்கை குய்த்தான் நெறி

நெறியார் குழற்கற்றை முன்னின்று பின்தாழ்ந்து
அறியா திளங்கிரியென் றெண்ணி பிறியாது
பூங்கொடிகள் வைகும் பொருபுனல் குன்றென்றும்
வேங்கடமே யாம் விரும்பும் வெற்பு

வெற்பென் றிருஞ்சோலை வேங்கடமென் றிவ்விரண்டும்
நிற்பென்று நீமதிக்கும் நீர்மைபோல் நிற்பென்
றுளங்கோயி லுள்ளம்வை துள்ளினேன் வெள்ள
திளங்கோயில் கைவிடேல் என்று

என்றும் மறந்தறியேன் ஏழ்பிறப்பும் எப்பொழுதும்
நின்று நினைப்பொழியா நீர்மையால் வென்றி
அடலாழி கொண்ட அறிவனே இன்ப
கடலாழி நீயருளி காண்

காண கழிகாதல் கைமிக்கு காட்டினால்
நாண படுமென்றால் நாணுமே பேணி
கருமாலை பொன்மேனி காட்டாமுன் காட்டும்
திருமாலை நாங்கள் திரு

திருமங்கை நின்றருளும் தெய்வம்நா வாழ்த்தும்
கருமம் கடைப்பிடிமின் கண்டீர் உரிமையால்
ஏத்தினோம் பாதம் இருந்தடக்கை எந்தைபேர்
நாற்றிசையும் கேட்டீரே நாம்

நாம்பெற்ற நன்மையும் நாமங்கை நன்னெஞ்சத்து
ஓம்பி யிருந்தெம்மை ஓதுவித்து வேம்பின்
பொருள்நீர்மை யாயினும் பொன்னாழி பாடென்று
அருள்நீர்மை தந்த அருள்

அருள் புரிந்த சிந்தை அடியார்மேல் வைத்து
பொருள்தெரிந்து காண்குற்ற அப்போது இருள்திரிந்து
நோக்கினேன் நோக்கி நினைந்தேன தொண்கமலம்
ஓக்கினே னென்னையுமங் கோர்ந்து

ஓருருவன் அல்லை ஒளியுருவம் நின்னுருவம்
ஈருருவன் என்பர் இருநிலத்தோர் ஓருருவம்
ஆதியாம் வண்ணம் அறிந்தார் அவர்கண்டீர்
நீதியால் மண்காப்பார் நின்று

நின்றதோர் பாதம் நிலம்புடைப்ப நீண்டதோள்
சென்றளந்த தென்பர் திசையெல்லாம் அன்று
கருமாணி யாயிரந்த கள்வனே உன்னை
பிரமாணி தார்பெற்ற பேறு

பேறொன்று முன்னறியேன் பெற்றறியேன் பேதையால்
மாறென்று சொல்லிவணங்கினேன் ஏறின்
பெருத்தெருத்தம் கோடொசி பெண்நசையின் பின் போய்
எருத்திருந்த நல்லாயர் ஏறு

ஏறேழும் வென்றடர்த்த எந்தை எரியுருவத்து
ஏறேறி பட்ட இடுசாபம் பாறேறி
உண்டதலை வாய்நிறை கோட்டங்கை ஒண்குருதி
கண்டபொருள் சொல்லின் கதை

கதையும் பெரும்பொருளும் கண்ணாநின் பேரே
இதய மிருந்தவையே ஏத்தில் கதையும்
திருமொழியாய் நின்ற திருமாலே உன்னை
பருமொழியால் காண பணி

பணிந்தேன் திருமேனி பைங்கமலம் கையால்
அணிந்தேனுன் சேவடிமே லன்பாய் துணிந்தேன்
புரிந்தேத்தி யுன்னை புகலிடம்பார்த்து ஆங்கே
இருந்தேத்தி வாழும் இது

இது கண்டாய் நன்னெஞ்சே இப்பிறவி யாவது
இதுகண்டா யெல்லாம்நா முற்றது இதுகண்டாய்
நாரணன்பே ரோதி நகர தருகணையா
காரணமும் வல்லையேல் காண்

கண்டேன் திருமேனி யான்கனவில் ஆங்கவன்கை
கண்டேன் கனலுஞ் சுடராழி
உறுநோய் வினையிரண்டும் ஓட்டுவித்து பின்னும்
மறுநோய் செறுவான் வலி

வலிமிக்க வாளெயிற்று வாளவுணர் மாள
வலிமிக்க வாள்வரை தாக
வாணாகம் சுற்றி மறு கடல்கடைந்தான்
கோணாகம் கொம்பொசித்த கோ

கோவாகி மாநிலம் காத்துநங் கண்முகப்பே
மாவேகி செல்கின்ற மன்னவரும் பூவேகும்
செங்கமல நாபியான் சேவடிக்கே யேழ்பிறப்பும்
தண்கமல மேய்ந்தார் தமர்

தமருள்ளம் தஞ்சை தலையரங்கம் தண்கால்
தமருள்ளும் தண்பொருப்பு வேலை
மாமல்லை கோவல் மதிட்குடந்தை யென்பரே
ஏவல்ல எந்தை கிடம்

இடங்கை வலம்புரிநின் றார்ப்ப எரிகான்
றடங்கா ரொடுங்குவித்த தாழி விடங்காலும்
தீவாய் அரவணைமேல் தோன்றல் திசையளப்பான்
பூவா ரடிநிமிர்ந்த போது

போதறிந்து வானரங்கள் பூஞ்சுனைபுக்கு ஆங்கலர்ந்த
போதரிந்து கொண்டேத்தும் போதுஉள்ளம் போது
மணிவேங் கடவன் மலரடிக்கே செல்ல
அணிவேங் கடவன்பே ராய்ந்து

ஆய்ந்துரைப்ப னாயிரம்பேர் ஆய்நடு வந்திவாய்
வாய்ந்த மலர்தூவி வைகலும் ஏய்ந்த
பிறைக்கோட்டு செங்கண் கரிவிடுத்த பெம்மான்
இறைக்கா படத்துணிந்த யான்

யானே தவம் செய்தேன் ஏழ்பிறப்பும் எப்பொழுதும்
யானே தவமுடையேன் எம்பெருமான்
இருந்ததமிழ்நன் மாலை இணையடிக்கே சொன்னேன்
பெருந்தமிழன் நல்லேன் பெரிது

பெருகு மதவேழம் மாப்பிடிக்கி முன்னின்று
இருக ணிளமூங்கில் வாங்கி அருகிருந்த
தேன்கலந்து நீட்டும் திருவேங் கடம்கண்டீர்
வான்கலந்த வண்ணன் வரை

வரைச்சந்த னக்குழ்ம்பும் வான்கலனும் பட்டும்
விரைப்பொலிந்த வெண்மல் லிகையும் நிரைத்துக்கொண்டு
ஆதிக்கண் நின்ற அறிவன் அடியிணையே
ஓதி பணிவ தூறும்

உறுங்கண்டாய் நன்னெஞ்சே உத்தமன்நற் பாதம்
உறுங்கண்டாய் ஒண்கமல தன்னால்
ஏத்தி பணிந்தவன் பேர் ஈரைஞ் றெப்பொழுதும்
சாற்றி யுரைத்தல் தவம்

தவம்செய்து நான்முகனே பெற்றான் தரணி
நிவந்தளப்ப நீட்டியபொற் பாதம் சிவந்ததன்
கையனைத்து மார கழுவினான் கங்கைநீர்
பெய்தனைத்து பேர்மொழிந்து பின்

பின்னின்று தாயிரப்ப கேளான் பெரும்பணைத்தோள்
முன்னின்று தானிரப்பாள் மொய்ம்மலராள் சொல் நின்ற
தோள்நலந்தான் நேரில்லா தோன்றல் அவனளந்த
நீணிலந்தான் அத்தனைக்கும் நேர்

நேர்ந்தேன் அடிமை நினைந்தேன் தொண்கமலம்
ஆர்ந்தேனுன் சேவடிமேல் அன்பாய் ஆர்ந்த
அடிக்கோலம் கண்டவர கென்கொலோ முன்னை
படிக்கோலம் கண்ட பகல்

பகற்கண்டேன் நாரணனை கண்டேன் கனவில்
மிகக்கண்டேன் மீண்டவனை மெய்யே
ஊன்திகழும் நேமி ஒளிதிகழும் சேவடியான்
வான்திகழும் சோதி வடிவு

வடிக்கோல வாள்நெடுங்கண் மாமலராள் செவ்வி
படிக்கோலம் கண்டகலாள் பன்னாள் அடிக்கோலி
ஞாலத்தாள் பின்னும் நலம்புரிந்த தென்கொலோ
கோலத்தா லில்லை குறை

குறையாக வெஞ்சொற்கள் கூறினேன் கூறி
மறையாங் கெனவுரைத்த மாலை இறையேனும்
ஈயுங்கொல் என்றே இருந்தேன் எனைப்பகலும்
மாயன்கண் சென்ற வரம்

வரம்கருதி தன்னை வணங்காத வன்மை
உரம்கருதி மூர்க்க தவனை நரம்கலந்த
சிங்கமா கீண்ட திருவன் அடியிணையே
அங்கண்மா ஞால தமுது

அமுதென்றும் தேனென்றும் ஆழியான் என்றும்
அமுதன்று கொண்டுகந்தான் என்றும் அமுதன்ன
சொன்மாலை யேத்தி தொழுதேன் சொலப்பட்ட
நன்மாலை யேத்தி நவின்று

நவின்றுரைத்த நாவலர்கள் நாண்மலர்கொண்டு ஆங்கே
பயின்றதனால் பெற்றபயன் என்கொல் பயின்றார்தம்
மெய்த்தவத்தால் காண்பரிய மேகமணி வண்ணனையான்
எத்தவத்தால் காண்பன்கொல் இன்று

இன்றா வறிகின்றே னல்லேன் இருநிலத்தை
சென்றாங் களந்த திருவடியை அன்று
கருக்கோட்டி யுள்கிடந்து கைதொழுதேன் கண்டேன்
திருக்கோட்டி எந்தை திறம்

திறம்பிற் றினியறிந்தேன் தென்னரங்க தெந்தை
திறம்பா வருசென்றார கல்லால் திறம்பா
செடிநரகை நீக்கித்தான் செல்வதன்முன் வானோர்
கடிநகர வாசற் கதவு

கதவி கதஞ்சிறந்த கஞ்சனை முன்காய்ந்து
அதவிப்போர் யானை ஒசித்து பதவியா
பாணியால் நீரேற்று பண்டொருகால் மாவலியை
மாணியா கொண்டிலையே மண்

மண்ணுலக மாளேனே வானவர்க்கும் வானவனாய்
விண்ணுலகம் தன்னகத்து மேவேனே நண்ணி
திருமாலை செங்க ணெடியானை எங்கள்
பெருமானை கைதொழுத பின்

பின்னால் அருநரகம் சேராமல் பேதுறுவீர்
முன்னால் வணங்க முயல்மினோ பன்னூல்
அளந்தானை கார்க்கடல்சூழ் ஞாலத்தை எல்லாம்
அளந்தா னவஞ்சே வடி

அடியால்முன் கஞ்சனை செற்றுஅமர ரேத்தும்
படியான் கொடிமேல்புள் கொண்டான் நெடியான்றன்
நாமமே ஏத்துமின்க ளேத்தினால்தாம்வேண்டும்
காமமே காட்டும் கடிது

கடிது கொடுநரகம் பிற்காலும் செய்கை
கொடிதென் றதுகூடா முன்னம் வடிசங்கம்
கொண்டானை கூந்தல்வாய் கீண்டானை கொங்கைநஞ்
சுண்டானை ஏத்துமினோ உற்று

உற்று வணங்கி தொழுமின் உலகேழும்
முற்றும் விழுங்கும் முகில்வண்ணம் பற்றி
பொருந்தாதான் மார்பிடந்து பூம்பா டகத்துள்
இருந்தானை ஏத்துமென் நெஞ்சு

என்னெஞ்ச மேயான்என் சென்னியான் தானவனை
வன்னெஞ்சங் கீண்ட மணிவண்ணன் முன்னம்சேய்
ஊழியா னூழி பெயர்த்தான் உலகேத்தும்
ஆழியான் அத்தியூ ரான்

அத்தியூ ரான்புள்ளை யூர்வான் அணிமணியின்
துத்திசேர் நாகத்தின் மேல்துயில்வான் மூத்தீ
மறையாவான் மாகடல்நஞ் சுண்டான் றனக்கும்
இறையாவான் எங்கள் பிரான்

எங்கள் பெருமான் இமையோர் தலைமகன்நீ
செங்க ணெடுமால் திருமார்பா பொங்கு
படமூக்கி னாயிரவா பாம்பணைமேல் சேர்ந்தாய்
குடமூக்கில் கோயிலா கொண்டு

கொண்டு வளர குழவியா தான்வளர்ந்தது
உண்ட துலகேழு முள்ளொடுங்க கொண்டு
குடமாடி கோவலனாய் மேவிஎன் னெஞ்சம்
இடமா கொண்ட இறை

இறையெம் பெருமான் அருளென்று இமையோர்
முறைநின்று மொய்ம்மலர்கள் தூவ அறைகழல
சேவடியான் செங்க ணெடியான் குறளுருவாய்
மாவடிவில் மண்கொண்டான் மால்

மாலே நெடியானே கண்ணனே விண்ணவர்க்கு
மேலா வியந்துழா கண்ணியனே மேலால்
விளவின்காய் கன்றினால் வீழ்த்தவனே என்றன்
அளவன்றால் யானுடைய அன்பு
பூதத்தாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ
ஸ்ரீமதே ராமானுஜாய நம
பேயாழ்வார் அருளிச்செய்த மூன்றாம் திருவந்தாதி
தனியன்
குருகை காவலப்பன் அருளி செய்தது
நேரிசை வெண்பா
சீராரும் மாட திருக்கோவ லூரதனுள்
காரார் கருமுகிலை காணப்புக்கு ஓரா
திருக்கண்டேன் என்றுரைத்த சீரான் கழலே
உரைக்கண்டாய் நெஞ்சே உகந்து

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன் செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரி சங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று

இன்றே கழல்கண்டேன் ஏழ்பிறப்பும் யானறுத்தேன்
பொன்தோய் வரைமார்வில் பூந்துழாய் அன்று
திருக்கண்டு கொண்ட திருமாலேஉன்னை
மருக்கண்டு கொண்டேன் மனம்

மனத்துள்ளான் மாகடல்நீ ருள்ளான் மலராள்
தனத்துள்ளான் தண்டுழாய் மார்பன் சினத்து
செருநர்உக செற்றுகந்த தேங்கோத வண்ணன்
வருநரகம் தீர்க்கும் மருந்து

மருந்தும் பொருளும் அமுதமும் தானே
திருந்திய செங்கண்மா லாங்கே பொருந்தியும்
நின்றுலக முண்டுமிழ்ந்தும் நீரேற்றும் மூவடியால்
அன்றுலகம் தாயோன் அடி

அடிவண்ணம் தாமரை யன்றுலகம் தாயோன்
படிவண்ணம் பார்க்கடல்நீர் வண்ணம் முடிவண்ணம்
ஓராழி வெய்யோ னொளியு மஃதன்றே
ஆராழி கொண்டாற் கழகு

அழகன்றே யாழியாற் காழிநீர் வண்ணம்
அழகன்றே யண்டம் கடத்தல்
அங்கைநீ ரேற்றாற் கலர்மேலோன் கால்கழுவ
கங்கைநீர் கான்ற கழல்

கழல்தொழுதும் வாநெஞ்சே கார்கடல்நீர் வேலை
பொழிலளந்த புள்ளூர்தி செல்வன் எழிலளந்தங்
கெண்ணற் கரியானை எப்பொருட்கும் சேயானை
நண்ணற் கரியானை நாம்

நாமம் பலசொல்லி நாராய ணாவென்று
நாமங்கை யால்தொழுதும் நன்னெஞ்சே வாமருவி
மண்ணுலக முண்டுமிழ்ந்த வண்டறையும் தண்டுழாய்
கண்ணனையே காண்கநங் கண்

கண்ணுங் கமலம் கமலமே கைத்தலமும்
மண்ணளந்த பாதமும் மற்றவையே எண்ணில்
கருமா முகில்வண்ணன் கார்கடல்நீர் வண்ணன்
திருமா மணிவண்ணன் தேசு

தேசும் திறலும் திருவும் உருவமும்
மாசில் குடிப்பிறப்பும் மற்றவையும் பேசில்
வலம் புரிந்த வாஞ்சங்கம் கொண்டான்பே ரோத
நலம்புரிந்து சென்றடையும் நன்கு

நன்கோது நால்வே துள்ளான் நறவிரியும்
பொங்கோ தருவி புனல்வண்ணன் சங்கோத
பாற்கடலான் பாம்பணையின் மேலான் பயின்றுரை பார்
ற்கடலான் ண்ணறிவி னான்

அறிவென்னும் தாள்கொளுவி ஐம்புலனும் தம்மில்
செறிவென்னும் திண்கதவம் செம்மி மறையென்றும்
நன்கோதி நன்குணர்வார் காண்பரே நாடோ றும்
பைங்கோத வண்ணன் படி

படிவட்ட தாமரை பண்டுலகம் நீரேற்று
அடிவட்ட தாலளப்ப நீண்ட முடிவட்டம்
ஆகாய மூடறு தண்டம்போய் நீண்டதே
மாகாய மாய்நின்ற மாற்கு

மாற்பால் மனம்சுழிப்ப மங்கையர்தோள் கைவிட்டு
ற்பால் மனம்வைக்க நொய்விதாம் நாற்பால
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடிதோயும்
பாதத்தான் பாதம் பணிந்து

பணிந்துயர்ந்த பௌவ படுதிரைகள் மோத
பணிந்த பணிமணிக ளாலே அணிந்துஅங்
கனந்தன் அணைக்கிடக்கும் அம்மான் அடியேன்
மனந்த னணைக்கிடக்கும் வந்து

வந்துதைத்த வெண்டிரைகள் செம்பவள வெண்முத்தம்
அந்தி விளக்கும் அணிவிளக்காம் எந்தை
ஒருவல்லி தாமரையாள் ஒன்றியசீர் மார்வன்
திருவல்லி கேணியான் சென்று

சென்றநாள் செல்லாத செங்கண்மா லெங்கள்மால்
என்றநா ளெந்நாளும் நாளாகும் என்றும்
இறவாத எந்தை இணையடிக்கே யாளாய்
மறவாது வாழ்த்துகவென் வாய்

வாய்மொழிந்து வாமனனாய் மாவலிபால் மூவடிமண்
நீயளந்து கொண்ட நெடுமாலே தாவியநின்
எஞ்சா இணையடிக்கே ஏழ்பிறப்பும் ஆளாகி
அஞ்சா திருக்க அருள்

அருளா தொழியுமே ஆலிலைமேல் அன்று
தெருளாத பிள்ளையா சேர்ந்தான் இருளாத
சிந்தையரா சேவடிக்கே செம்மலர்தூ கைதொழுது
முந்தையராய் நிற்பார்க்கு முன்

முன்னுலக முண்டுமிழ்ந்தாய்க்கு அவ்வுலக மீரடியால்
பின்னளந்து கோடல் பெரிதொன்றே என்னே
திருமாலே செங்க ணெடியானே எங்கள்
பெருமானே நீயிதனை பேசு

பேசுவா ரெவ்வளவு பேசுவர் அவ்வளவே
வாச மலர்த்துழாய் மாலையான் தேசுடைய
சக்கரத்தான் சங்கினான் சார்ங்கத்தான்பொங்கரவ
வக்கரனை கொன்றான் வடிவு

வடிவார் முடிகோட்டி வானவர்கள் நாளும்
கடியார் மலர்தூவி காணும் படியானை
செம்மையா லுள்ளுருகி செவ்வனே நெஞ்சமே
மெய்ம்மையே காண விரும்பு

விரும்பிவிண் மண்ணளந்த அஞ்சிறைய வண்டார்
சுரும்பு தொளையில்சென் றூத அரும்பும்
புனந்துழாய் மாலையான் பொன்னங் கழற்கே
மனம்துழாய் மாலாய் வரும்

வருங்கால் இருநிலனும் மால்விசும்பும் காற்றும்
நெருங்குதீ நீருருவு மானான் பொருந்தும்
சுடராழி யொன்றுடையான் சூழ்கழலே நாளும்
தொடராழி நெஞ்சே தொழுது

தொழுதால் பழுதுண்டே தூநீ ருலகம்
முழுதுண்டு மொய்குழலாள் ஆய்ச்சி விழுதுண்ட
வாயானை மால்விடையேழ் செற்றானை வானவர்க்கும்
சேயானை நெஞ்சே சிறந்து

சிறந்தவென் சிந்தையும் செங்கண் அரவும்
நிறைந்தசீர் நீள்கச்சி யுள்ளும் உறைந்ததுவும்
வேங்கடமும் வெஃகாவும் வேளுக்கை பாடியுமே
தாம்கடவார் தண்டுழா யார்

ஆரே துயருழந்தார் துன்புற்றார் ஆண்டையார்
காரே மலிந்த கருங்கடலை நேரே
கடைந்தானை காரணனை நீரணைமேல் பள்ளி
அடைந்தானை நாளும் அடைந்து

அடைந்த தரவணைமேல் ஐவர்க்காய் அன்று
மிடைந்தது பாரத வெம்போர் உடைந்ததுவும்
ஆய்ச்சிபால் மத்துக்கே அம்மனே வாளெயிற்று
பேய்ச்சிபா லுண்ட பிரான்

பேய்ச்சிபா லுண்ட பெருமானை பேர்ந்தெடுத்து
ஆய்ச்சி முலைகொடுத்தாள் அஞ்சாதே வாய்த்த
இருளார் திருமேனி இன்பவள செவ்வாய்
தெருளா மொழியானை சேர்ந்து

சேர்ந்த திருமால் கடல்குடந்தை வேங்கடம்
நேர்ந்தவென் சிந்தை நிறைவிசும்பு வாய்ந்த
மறையா டகம்அனந்தன் வண்டுழா கண்ணி
இறைபாடி யாய இவை

இவையவன் கோயில் இரணியன தாகம்
அவைசெய் தரியுருவ மானான் செவிதெரியா
நாகத்தான் நால்வே துள்ளான் நறவேற்றான்
பாகத்தான் பாற்கடலு ளான்

பாற்கடலும் வேங்கடமும் பாம்பும் பனிவிசும்பும்
ற்கடலும் ண்ணுல தாமரைமேல் பாற்ப
டிருந்தார் மனமும் இடமா கொண்டான்
குருந்தொசித்த கோபா லகன்

பாலனாய் ஆலிலைமேல் பைய உலகெல்லாம்
மேலொருநா ளுண்டவனே மெய்ம்மையே மாலவ
மந்திரத்தால் மாநீர கடல்கடைந்து வானமுதம்
அந்தரத்தார கீந்தாய்நீ அன்று

அன்றிவ் வுலகம் அளந்த அசைவேகொல்
நின்றிருந்து வேளுக்கை நீணகர்வாய் அன்று
கிடந்தானை கேடில்சீ ரானைமுன் கஞ்சை
கடந்தானை நெஞ்சமே காண்

காண்காண் எனவிரும்பும் கண்கள் கதிரிலகு
பூண்டார் அகலத்தான் பொன்மேனி பாண்கண்
தொழில்பாடி வண்டறையும் தொங்கலான் செம்பொற்
கழல்பாடி யாம்தொழுதும் கை

கைய கனலாழி கார்க்கடல்வாய் வெண்சங்கம்
வெய்ய கதைசார்ங்கம் வெஞ்சுடர்வாள் செய்ய
படைபரவ பாழி பனிநீ ருலகம்
அடியளந்த மாயன் அவற்கு

அவற்கடிமை பட்டேன் அகத்தான் புறத்தான்
உவக்கும் கருங்கடல்நீ ருள்ளான் துவர்க்கும்
பவளவா பூமகளும் பன்மணிப்பூ ணாரம்
திகழும் திருமார்வன் தான்

தானே தனக்குவமன் தன்னுருவே எவ்வுருவும்
தானே தவவுருவும் தாரகையும்
எரிசுடரும் மால்வரையும் எண்டிசையும் அண்ட
திருசுடரு மாய இறை

இறையாய் நிலனாகி எண்டிசையும் தானாய்
மறையாய் மறைப்பொருளாய் வானாய் பிறைவாய்ந்த
வெள்ள தருவி விளங்கொலிநீர் வேங்கடத்தான்
உள்ளத்தி னுள்ளே உளன்

உளன்கண்டாய் நன்னெஞ்சே உத்தம னென்றும்
உளன்கண்டாய் உள்ளுவா ருள்ள துளன்கண்டாய்
விண்ணெடுங கோடுயரும் வீங்கருவி வேங்கடத்தான்
மண்ணெடுங்க தானளந்த மன்

மன்னு மணிமுடிநீண் டண்டம்போய் எண்டிசையும்
துன்னு பொழிலனைத்தும் சூழ்கழலே மின்னை
உடையா கொண்டன் றுலகளந்தான்குன்றும்
குடையாக ஆகாத்த கோ

கோவலனாய் ஆநிரைகள் மேய்த்து குழலூதி
மாவலனா கீண்ட மணிவண்ணன் மேவி
அரியுருவ மாகி இரணியன தாகம்
தெரியுகிரால் கீண்டான் சினம்

சினமா மதகளிற்றின் திண்மருப்பை சாய்த்து
புனமேய பூமி யதனை தனமாக
பேரகல துள்ளொடுக்கும் பேரார மார்வனார்
ஓரகல துள்ள துலகு

உலகமும் ஊழியும் ஆழியும் ஒண்கேழ்
அலர்கதிரும் செந்தீயு மாவான் பலகதிர்கள்
பாரித்த பைம்பொன் முடியான் அடியிணைக்கே
பூரித்தென் நெஞ்சே புரி

புரிந்து மதவேழம் மாப்பிடியோ டூடி
திரிந்து சினத்தால் பொருது விரிந்தசீர்
வெண்கோட்டு முத்துதிர்க்கும் வேங்கடமே மேலொருநாள்
மண்கோட்டு கொண்டான் மலை

மலைமுகடு மேல்வைத்து வாசுகியை சுற்றி
தலைமுகடு தானொருகை பற்றி அலைமுக
டண்டம்போய் நீர்தெறிப்ப அன்று கடல்கடைந்தான்
பிண்டமாய் நின்ற பிரான்

நின்ற பெருமானே நீரேற்று உலகெல்லாம்
சென்ற பெருமானே செங்கண்ணா அன்று
துரகவாய் கீண்ட துழாய்முடியாய் நாங்கள்
நரகவாய் கீண்டாயும் நீ

நீயன்றே நீரேற் றுலகம் அடியளந்தாய்
நீயன்றே நின்று நிரைமேய்த்தாய்
மாவா யுரம்பிளந்து மாமருதி னூடுபோய்
தேவா சுரம்பொருதாய் செற்று

செற்றதுவும் சேரா இரணியனை சென்றேற்று
பெற்றதுவும் மாநிலம் பின்னைக்காய் முற்றல்
முரியேற்றின் முன்நின்று மொய்ம்பொழித்தாய்மூரி
சுரியேறு சங்கினாய் சூழ்ந்து

சூழ்ந்த துழாயலங்கல் சோதி மணிமுடிமால்
தாழ்ந்த அருவி தடவரைவாய் ஆழ்ந்த
மணிநீர சுனைவளர்ந்த மாமுதலை கொன்றான்
அணிநீல வண்ண தவன்

அவனே அருவரையால் ஆநிரைகள் காத்தான்
அவனே யணிமருதம் சாய்த்தான்
கலங்கா பொருநகரம் காட்டுவான் கண்டீர்
இலங்கா புரமெரித்தான் எய்து

எய்தான் மராமரம் ஏழும் இராமனாய்
எய்தானம் மான்மறியை ஏந்திழைக்காய் எய்ததுவும்
தென்னிலங்கை கோன்வீழ சென்று குறளுருவாய்
முன்னிலம்கை கொண்டான் முயன்று

முயன்று தொழுநெஞ்சே மூரிநீர் வேலை
இயன்றமர தாலிலையின் மேலால் பயின்றங்கோர்
மண்ணலங்கொள் வெள்ளத்து மா குழவியாய்
தண்ணலங்கல் மாலையான் தாள்

தாளால் சகடம் உதைத்து பகடுந்தி
கீளா மருதிடைபோ கேழலாய் மீளாது
மண்ணகலம் கீண்டங்கோர் மாதுகந்த மார்வற்கு
பெண்ணகலம் காதல் பெரிது

பெரிய வரைமார்வில் பேராரம் பூண்டு
கரிய முகிலிடைமின் போல தெரியுங்கால்
பாணொடுங்க வண்டறையும் பங்கயமே மற்றவன்றன்
நீணெடுங்கண் காட்டும் நிறம்

நிறம்வெளிது செய்து பசிது கரிதென்று
இறையுருவம் யாமறியோ மெண்ணில் நிறைவுடைய
நாமங்கை தானும் நலம்புகழ வல்லளே
பூமங்கை கேள்வன் பொலிவு

பொலிந்திருகண்ட கார்வானில் மின்னேபோல் தோன்றி
மலிந்து திருவிருந்த மார்வன் பொலிந்து
கருடன்மேல் கொண்ட கரியான் கழலே
தெருடன்மேல் கண்டாய் தெளி

தெளிந்த சிலாதலத்தின் மேலிருந்த மந்தி
அளிந்த கடுவனையே நோக்கி விளங்கிய
வெண்மதியம் தாவென்னும் வேங்கடமே மேலொருநாள்
மண்மதியில் கொண்டுகந்தான் வாழ்வு

வாழும் வகையறிந்தேன் மைபோல் நெடுவரைவாய்
தாழும் அருவிபோல் தார்கிடப்ப சூழும்
திருமா மணிவண்ணன் செங்கண்மால் எங்கள்
பெருமான் அடிசேர பெற்று

பெற்றம் பிணைமருதம் பேய்முலை மாச்சகடம்
முற்றக்கா தூடுபோ யுண்டுதைத்து கற்று
குணிலை விளங்கனிக்கு கொண்டெறிந்தான் வெற்றி
பணிலம்வாய் வைத்துகந்தான் பண்டு

பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்
கொண்டங் குறைவார்க்கு கோயில்போல் வண்டு
வளங்கிளரும் நீள்சோலை வண்பூங் கடிகை
இளங்குமரன் றன்விண் ணகர்

விண்ணகரம் வெஃகா விரிதிரைநீர் வேங்கடம்
மண்ணகரம் மாமாட வேளுக்கை மண்ணகத்த
தென்குடந்தை தேனார் திருவரங்கம் தென்கோட்டி
தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு

தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன்னாணும் தோன்றுமால் சூழும்
திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டுருவு மொன்றாய் இசைந்து

இசைந்த அரவமும் வெற்பும் கடலும்
பசைந்தங் கமுது படுப்ப அசைந்து
கடைந்த வருத்தமோ கச்சிவெஃ காவில்
கிடந்திருந்து நின்றதுவும் அங்கு

அங்கற் கிடரின்றி அந்தி பொழுதத்து
மங்க இரணியன தாகத்தை பொங்கி
அரியுருவ மாய்ப்பிளந்த அம்மா னவனே
கரியுருவம் கொம்பொசித்தான் காய்ந்து

காய்ந்திருளை மற்றி கதிரிலகு மாமணிகள்
ஏய்ந்த பணக்கதிர்மேல் வெவ்வுயிர்ப்ப வாய்ந்த
மதுகை டவரும் வயிறுருகி மாண்டார்
அதுகே டவர்க்கிறுதி ஆங்கே

ஆங்கு மலரும் குவியுமா லுந்திவாய்
ஓங்கு கமலத்தி னொண்போது ஆங்கை
திகிரி சுடரென்றும் வெண்சங்கம் வானில்
பகரு மதியென்றும் பார்த்து

பார்த்த கடுவன் சுனைநீர் நிழற்கண்டு
பேர்த்தோர் கடுவனென பேர்ந்து கார்த்த
களங்கனிக்கு கைநீட்டும் வேங்கடமே மேனாள்
விளங்கனிக்கு கன்றெறிந்தான் வெற்பு

வெற்பென்று வேங்கடம் பாடும் வியன்துழா
கற்பென்று சூடும் கருங்குழல் மேல் மற்பொன்ற
நீண்டதோள் மால்கிடந்த நீள்கடல்நீ ராடுவான்
பூண்டநா ளெல்லாம் புகும்

புகுமதத்தால் வாய்பூசி கீழ்தாழ்ந்து அருவி
உகுமதத்தால் கால்கழுவி கையால் மிகுமதத்தேன்
விண்டமலர் கொண்டு விறல்வேங் கடவனையே
கண்டு வணங்கும் களிறு

களிறு முகில்குத்த கையெடு தோடி
ஒளிறு மருப்பொசிகை யாளி பிளிறி
விழகொன்று நின்றதிரும் வேங்கடமே மேனாள்
குழக்கன்று கொண்டெறிந்தான் குன்று

குன்றொன்றி னாய குறமகளிர் கோல்வளைக்கை
சென்று விளையாடும் தீங்கழைபோய் வென்று
விளங்குமதி கோள்விடுக்கும் வேங்கடமே மேலை
இளங்குமரர் கோமான் இடம்

இடம்வலம் ஏழ் பூண்ட இரவித்தே ரோட்டி
வடமுக வேங்கடத்து மன்னும் குடம்நயந்த
கூத்தனாய் நின்றான் குரைகழலே கூறுவதே
நாத்தன்னா லுள்ள நலம்

நலமே வலிதுகொல் நஞ்சூட்டு வன்பேய்
நிலமே புரண்டுபோய் வீழ சலமேதான்
வெங்கொங்கை யுண்டானை மீட்டாய்ச்சி யூட்டுவான்
தன்கொங்கை வாய்வைத்தாள் சார்ந்து

சார்ந்தகடு தேய்ப்ப தடாவியகோ டுச்சிவாய்
ஊர்ந்தியங்கும் வெண்மதியி னொண்முயலை சேர்ந்து
சினவேங்கை பார்க்கும் திருமலையே ஆயன்
புனவேங்கை நாறும் பொருப்பு

பொருப்பிடையே நின்றும் புனல்குளித்தும் ஐந்து
நெருப்பிடையே நிற்கவும்நீர் வேண்டா விருப்புடைய
வெஃகாவே சேர்ந்தானை மெய்ம்மலர்தூ கைதொழுதால்
அஃகாவே தீவினைகள் ஆய்ந்து

ஆய்ந்த அருமறையோன் நான்முகத்தோன் நன்குறங்கில்
வாய்ந்த குழவியாய் வாளரக்கன் ஏய்ந்த
முடிப்போது மூன்றேழன் றெண்ணினான் ஆர்ந்த
அடிப்போது நங்க கரண்

அரணாம் நமக்கென்றும் ஆழி வலவன்
முரனாள் வலம்சுழிந்த மொய்ம்பன் சரணாமேல்
ஏதுகதி ஏதுநிலை ஏதுபிற பென்னாதே
ஓதுகதி மாயனையே ஓர்த்து

ஓர்த்த மனத்தராய் ஐந்தடக்கி யாராய்ந்து
பேர்த்தால் பிறப்பேழும் பேர்க்கலாம் கார்த்த
விரையார் நறுந்துழாய் வீங்கோத மேனி
நிரையார மார்வனையே நின்று

நின்றெதி ராய நிரைமணித்தேர் வாணன்தோள்
ஒன்றியவீ ரைஞ் றுடன்துணிய வென்றிலங்கும்
ஆர்படுவான் நேமி அரவணையான் சேவடிக்கே
நேர்படுவான் தான்முயலும் நெஞ்சு

நெஞ்சால் நினைப்பரிய னேலும் நிலைபெற்றேன்
நெஞ்சமே பேசாய் நினைக்குங்கால் நெஞ்சத்து
பேராது நிற்கும் பெருமானை என்கொலோ
ஓராது நிற்ப துணர்வு

உணரில் உணர்வரியன் உள்ளம் புகுந்து
புணரிலும் காண்பரிய னுண்மை இணரணை
கொங்கணைந்து வண்டறையும் தண்டுழா கோமானை
எங்கணைந்து காண்டும் இனி

இனியவன் மாயன் எனவுரைப்ப ரேலும்
இனியவன் காண்பரிய னேலும்
கள்ளத்தால் மண்கொண்டு விண்கடந்த பைங்கழலான்
உள்ளத்தி னுள்ளே யுளன்

உளனாய நான்மறையின் உட்பொருளை உள்ள
துளனாக தேர்ந்துணர்வ ரேலும் உளனாய
வண்டா மரைநெடுங்கண் மாயவனை யாவரே
கண்டா ருகப்பர் கவி

கவியினார் கைபுனைந்து கண்ணார் கழல்போய்
செவியினார் கேள்வியரா சேர்ந்தார் புவியினார்
போற்றி யுரைக்க பொலியுமே பின்னைக்காய்
ஏற்றுயிரை அட்டான் எழில்

எழில்கொண்டு மின்னு கொடியெடுத்து வேக
தொழில்கொண்டு தான்முழங்கி தோன்றும் எழில் கொண்ட
நீர்மேக மன்ன நெடுமால் நிறம்போல
கார்வானம் காட்டும் கலந்து

கலந்து மணியிமைக்கும் கண்ணாநின் மேனி
மலர்ந்து மரகதமே காட்டும் நலந்திகழும்
கொந்தின்வாய் வண்டறையும் தண்டுழா கோமானை
அந்திவான் காட்டும் அது

அதுநன் றிதுதீதென் றை படாதே
மதுநின்ற தண்டுழாய் மார்வன் பொதுநின்ற
பொன்னங் கழலே தொழுமின் முழுவினைகள்
முன்னங் கழலும் முடிந்து

முடிந்த பொழுதில் குறவாணர் ஏனம்
படிந்துழுசால் பைந்தினைகள் வித்த தடிந்தெழுந்த
வேய்ங்கழைபோய் விண்திறக்கும் வேங்கடமே மேலொருநாள்
தீங்குழல்வாய் வைத்தான் சிலம்பு

சிலம்பும் செறிகழலும் சென்றிசைப்ப விண்ணா
றலம்பிய சேவடிபோய் அண்டம் புலம்பியதோள்
எண்டிசையும் சூழ இடம்போதா தென்கொலோ
வண்டுழாய் மாலளந்த மண்

மண்ணுண்டும் பேய்ச்சி முலையுண்டு மாற்றாதாய்
வெண்ணெய் விழுங்க வெகுண்டுஆய்ச்சி கண்ணி
கயிற்றினால் கட்டத்தான் கட்டுண் டிருந்தான்
வயிற்றினோ டாற்றா மகன்

மகனொருவர கல்லாத மாமேனி மாயன்
மகனா மவன்மகன்றன் காதல் மகனை
சிறைசெய்த வாணன்தோள் செற்றான் கழலே
நிறைசெய்தென் நெஞ்சே நினை

நினைத்துலகில் ஆர்தெளிவார் நீண்ட திருமால்
அனைத்துலகும் உள்ளொடுக்கி ஆல்மேல் கனைத்துலவு
வெள்ளத்தோர் பிள்ளையாய் மெள்ள துயின்றானை
உள்ளத்தே வைநெஞ்சே உய்த்து

உய்த்துணர் வென்னும் ஒளிகொள் விளக்கேற்றி
வைத்தவனை நாடி வலைப்படுத்தேன் மெத்தெனவே
நின்றா னிருந்தான் கிடந்தானென் னெஞ்சத்து
பொன்றாமை மாயன் புகுந்து

புகுந்திலங்கும் அந்தி பொழுதகத்து அரியாய்
இகழ்ந்த இரணியன தாகம் சுகிர்ந்தெங்கும்
சிந்த பிளந்த திருமால் திருவடியே
வந்தித்தென் னெஞ்சமே வாழ்த்து

வாழ்த்திய வாயராய் வானோர் மணிமகுடம்
தாழ்த்தி வணங்க தழும்பாமே கேழ்த்த
அடித்தா மரைமலர்மேல் மங்கை மணாளன்
அடித்தா மரையாம் அலர்

அலரெடுத்த வுந்தியான் ஆங்கெழி லாய
மலரெடுத்த மாமேனி மாயன் அலரெடுத்த
வண்ணத்தான் மாமலரான் வார்சடையா னென்றிவர்க
கெண்ணத்தா னாமோ இமை

இமஞ்சூழ் மலையும் இருவிசும்பும் காற்றும்
அமஞ்சூழ தறவிளங்கி தோன்றும் நமஞ்சூழ்
நரகத்து தம்மை நணுகாமல் காப்பான்
துரகத்தை வாய்பிளந்தான் தொட்டு

தொட்ட படையெட்டும் தோலாத வென்றியான்
அட்ட புயகரத்தான் அஞ்ஞான்று குட்டத்து
கோள்முதலை துஞ்ச குறித்தெறிந்த சக்கரத்தான்
தாள் முதலே நங்கட்கு சார்வு

சார்வு நமக்கென்றும் சக்கரத்தான் தண்டுழா
தார்வாழ் வரைமார்பன் தான்முயங்கும் காரார்ந்த
வானமரு மின்னிமைக்கும் வண்டா மரைநெடுங்கண்
தேனமரும் பூமேல் திரு
பேயாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ
ஸ்ரீமதே ராமானுஜாய நம
திருமழிசைபிரான் அருளிச்செய்த
நான்முகன் திருவந்தாதி
சீராமப்பிள்ளை அருளிச்செய்தது
நேரிசை வெண்பா
திருமழிசைப்பிரானடி வாழ்த்து
நாரா யணன்படைத்தான் நான்முகனை நான்முகனு
கேரார் சிவன்பிறந்தான் என்னும்சொல் சீரார்
மொழிசெப்பி வாழலாம் நெஞ்சமே மொய்பூ
மழிசை பரனடியே வாழ்த்து

நான்முகனை நாரா யணன்படைத்தான் நான்முகனும்
தான்முகமா சங்கரனை தான்படைத்தான் யான் முகமாய்
அந்தாதி மேலி டறிவித்தேன் ஆழ்பொருளை
சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து

தேருங்கால் தேவன் ஒருவனே என்றுரைப்பர்
ஆருமறியார் அவன்பெருமை ஓரும்
பொருள்முடிவு மித்தனையே எத்தவம்செய் தார்க்கும்
அருள்முடிவ தாழியான் பால்

பாலிற் கிடந்ததுவும் பண்டரகம் மேயதுவும்
ஆலிற் றுயின்றதுவும் ஆரறிவார் ஞால
தொருபொருளை வானவர்தம் மெய்ப்பொருளை அப்பில்
அருபொருளை யானறிந்த வாறு

ஆறு சடைக்கரந்தான் அண்டர்கோன் றன்னோடும்
கூறுடையன் என்பதுவும் கொள்கைத்தே வேறொருவர்
இல்லாமை நின்றானை எம்மானை எப்பொருட்கும்
சொல்லானை சொன்னேன் தொகுத்து

தொகுத்த வரத்தனா தோலாதான் மார்வம்
வகிர்த்த வளையுகிர்த்தோள் மாலே உகத்தில்
ஒருநான்று நீயுயர்த்தி யுள்வாங்கி நீயே
அருநான்கு மானாய் அறி

அறியார் சமணர் அயர்த்தார் பவுத்தர்
சிறியார் சிவப்பட்டார் செப்பில் வெறியாய
மாயவனை மாலவனை மாதவனை ஏத்தார்
ஈனவரே யாதலால் இன்று

இன்றாக நாளையே யாக இனிச்சிறிதும்
நின்றாக நின்னருளென் பாலதே நன்றாக
நானுன்னை யன்றி யிலேன்கண்டாய் நாரணனே
நீயென்னை யன்றி யிலை

இலைதுணைமற் றென்னெஞ்சே ஈசனை வென்ற
சிலைகொண்ட செங்கண்மால் சேரா குலைகொண்ட
ஈரை தலையான் இலங்கையை யீடழித்த
கூரம்பன் அல்லால் குறை

குறைகொண்டு நான்முகன் குண்டிகைநீர் பெய்து
மறைகொண்ட மந்திரத்தால் வாழ்த்தி கறைகொண்ட
கண்டத்தான் சென்னிமேல் ஏற கழுவினான்
அண்டத்தான் சேவடியை ஆங்கு

ஆங்கார வாரம் அதுகேட்டு அழலுமிழும்
பூங்கார் அரவணையான் பொன்மேனி யாங்காண
வல்லமே யல்லமே மாமலரான் வார்சடையான்
வல்லரே யல்லரே வாழ்த்து

வாழ்த்துகவாய் காண்ககண் கேட்க செவிமகுடம்
தாழ்த்து வணங்குமின்கள் தண்மலரால் சூழ்த்த
துழாய்மன்னும் நீண்முடியென் தொல்லைமால் த்ன்னை
வழாவண்கை கூப்பி மதித்து

மதித்தாய்போய் நான்கின் மதியார்போய் வீழ
மதித்தாய் மதிகோள் விடுத்தாய்
மடுகிடந்த மாமுதலை கோள்விடுப்பான் ஆழி
விடற்கிரண்டும் போயிரண்டின் வீடு

வீடாக்கும் பெற்றி யறியாது மெய்வருத்தி
கூடாக்கு நின்றூண்டு கொண்டுழல்வீர் வீடாக்கும்
மெய்ப்பொருள்தான் வேத முதற்ப்பொருள்தான் விண்ணவர்க்கு
நற்பொருள்தான் நாரா யணன்

நாரா யணனென்னை யாளி நரகத்து
சேராமல் காக்கும் திருமால்தன் பேரான
பேச பெறாத பிணச்சமயர் பேசக்கேட்டு
ஆசைப்ப டாழ்வார் பலர்

பலர்த்தேவ ரேத்த படிகடந்தான் பாதம்
மலரேற விட்டிறைஞ்சி வாழ்த்த வலராகில்
மார்க்கண்டன் கண்ட வகையே வருங்கண்டீர்
நீர்க்கண்டன் கண்ட நிலை

நிலைமன்னும் என்னெஞ்சம் அந்நான்று தேவர்
தலைமன்னர் தாமேமாற் றாக பலர்மன்னர்
போர்மாள வெங்கதிரோன் மா பொழில்மறைய
தேராழி யால்மறைத்தா ரால்

ஆல நிழற்கீழ் அறநெறியை நால்வர்க்கு
மேலை யுகத்துரைத்தான் மெய்த்தவத்தோன் ஞாலம்
அளந்தானை யாழி கிடந்தானை ஆல்மேல்
வளர்ந்தானை தான்வணங்கு மாறு

மாறாய தானவனை வள்ளுகிரால் மார்விரண்டு
கூற கீறிய கோளரியை வேறாக
ஏத்தி யிருப்பாரை வெல்லுமே மற்றவரை
சார்த்தி யிருப்பார் தவம்

தவம்செய்து நான்முகனால் பெற்ற வரத்தை
அவம்செய்த ஆழியா யன்றே உவந்தெம்மை
காப்பாய்நீ காப்பதனை யாவாய்நீ வைகுந்தம்
ஈப்பாயு மெவ்வுயிர்க்கும் நீ

நீயே யுலகெலாம் நின்னருளே நிற்பனவும்
நீயே தவத்தேவ தேவனும்
எரிசுடரும் மால்வரையும் எண்டிசையும் அண்ட
திருசுடரு மாய இவை

இவையா பிலவாய் திறந்தெரி கான்ற
இவையா எரிவட்ட கண்கள்
எரிபொங்கி காட்டு மிமையோர் பெருமான்
அரிபொங்கி காட்டும் அழகு

அழகியான் தானே அரியுருவன்
பழகியான் தாளே பணிமின் குழவியா
தானே ழுலகுக்கும் தன்கைக்கும் தன்மையனே
மீனா யுயிரளிக்கும் வித்து

வித்து மிடல்வேண்டுங் கொல்லோ விடையடர்த்த
பத்தி யுழவன் பழம்புனத்து மொய்த்தெழுந்த
கார்மேக மன்ன கருமால் திருமேனி
நீர்வானம் காட்டும் நிகழ்ந்து

நிகழ்ந்தாய்பால் பொன்பசுவப்பு கார்வண்ணம் நான்கும்
இகழ்ந்தா யிருவரையும் வீ புகழ்ந்தாய்
சினப்போர சுவேதனை சேனா பதியாய்
மனப்போர் முடிக்கும் வகை

வகையால் மதியாது மண்கொண்டாய் மற்றும்
வகையால் வருவதொன் றுண்டே
வயிரம் குழைத்துண்ணும் மாவலிதா னென்னும்
வயிர வழக்கொழித்தாய் மற்று

மற்று தொழுவா ரொருவரையும் யானின்மை
கற்றை சடையான் கரிகண்டாய் எற்றைக்கும்
கண்டுகொள் கண்டாய் கடல்வண்ணா யானுன்னை
கண்டுகொள் கிற்குமா று

மால்தான் புகுந்த மடநெஞ்சன் மற்றதுவும்
பேறா கொள்வனோ பேதைகாள் நீறாடி
தான்காண மாட்டாத தாரகல சேவடியை
யான்காண வல்லேற் கிது

இதுவிலங்கை யீடழி கட்டிய சேது
இதுவிலங்கு வாலியை வீழ்த்தது இதுவிலங்கை
தானொடுங்க வில்டங்க தண்தா ரிராவணனை
ஊனொடுங்க எய்தான் உகப்பு

உகப்புருவன் தானே ஒளியுருவன்
மகப்புருவன் தானே மதிக்கில் மிகப்புருவம்
ஒன்றுக்கொன் றோசனையான் வீழ ஒருகணையால்
அன்றிக்கொண் டெய்தான் அவன்

அவனென்னை யாளி அரங்கத்து அரங்கில்
அவனென்னை எய்தாமல் காப்பான் அவனென்ன
துள்ளத்து நின்றா னிருந்தான் கிடக்குமே
வெள்ள தரவணையின் மேல்

மேல்நான் முகனரனை யிட்டவிடு சாபம்
தான்நா ரணனொழித்தான் தாரகையுள் வானோர்
பெருமானை யேத்தாத பேய்காள் பிறக்கும்
கருமாயம் பேசில் கதை

கதைப்பொருள்தான் கண்ணன் திருவயிற்றி னுள்ள
உதைப்பளவு போதுபோ கின்றி வதை பொருள்தான்
வாய்ந்த குணத்து படாத தடைமினோ
ஆய்ந்த குணத்தான் அடி

அடிச்சகடம் சாடி யரவாட்டி ஆனை
பிடித்தொசித்து பேய்முலைநஞ் சுண்டு வடிப்பவள
வாய்ப்பின்னை தோளுக்கா வல்லேற் றெருத்திறுத்து
கோப்பின்னு மானான் குறிப்பு

குறிப்பெனக்கு கோட்டியூர் மேயானை யேத்த
குறிப்பெனக்கு நன்மை பயக்க வெறுப்பனோ
வேங்கடத்து மேயானை மெய்வினைநோ யெய்தாமல்
தான்கடத்தும் தன்மையான் தாள்

தாளால் உலகம் அளந்த அசைவேகொல்
வாளா கிடந்தருளும் வாய்திறவான் நீளோதம்
வந்தலைக்கும் மாமயிலை மாவல்லி கேணியான்
ஐந்தலைவாய் நாக தணை

நாக தணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள்
நாக தணையரங்கம் பேரன்பில்
தணைப்பாற் கடல்கிடக்கு மாதி நெடுமால்
அணைப்பார் கருத்தனா வான்

வானுலவு தீவளி மாகடல் மாபொருப்பு
தானுலவு வெங்கதிரும் தண்மதியும் மேனிலவு
கொண்டல் பெயரும் திசையெட்டும் சூழ்ச்சியும்
அண்ட திருமால் அகைப்பு

அகைப்பில் மனிசரை யாறு சமயம்
புகைத்தான் பொருகடல்நீர் வண்ணன் உகைக்குமேல்
எத்தேவர் வாலாட்டு மெவ்வாறு செய்கையும்
அப்போ தொழியும் அழைப்பு

அழைப்பன் திருவேங் கடத்தானை காண
இழைப்பன் திருக்கூடல் கூட மழைப்பே
ரருவி மணிவரன்றி வந்திழிய யானை
வெருவி யரவொடுங்கும் வெற்பு

வெற்பென்று வேங்கடம் பாடினேன் வீடாக்கி
நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன் கற்கின்ற
ல்வலையில் பட்டிருந்த லாட்டி கேள்வனார்
கால்வலையில் பட்டிருந்தேன் காண்

காண லுறுகின்றேன் கல்லருவி முத்துதிர
ஓண விழவில் ஒலியதிர பேணி
வருவேங் கடவாஎன் னுள்ளம் புகுந்தாய்
திருவேங் கடமதனை சென்று

சென்று வணங்குமினோ சேணுயர் வேங்கடத்தை
நின்று வினைகெடுக்கும் நீர்மையால் என்றும்
கடிக்கமல நான்முகனும் கண்மூன்ற தானும்
அடிக்கமலம் இட்டேத்து மங்கு

மங்குல்தோய் சென்னி வடவேங் கடத்தானை
கங்குல் புகுந்தார்கள் காப்பணிவான் திங்கள்
சடையேற வைத்தானும் தாமரைமே லானும்
குடையேற தாம்குவித்து கொண்டு

கொண்டு குடங்கால்மேல் வைத்த குழவியாய்
தண்ட அரக்கன் தலைதளால் பண்டெண்ணி
போம்குமரன் நிற்கும் பொழில்வேங் கடமலைக்கே
போம்குமர ருள்ளீர் புரிந்து

புரிந்து மலரிட்டு புண்டரிக பாதம்
பரிந்து படுகாடு நிற்ப தெரிந்தெங்கும்
தானோங்கி நிற்கின்றான் தண்ணருவி வேங்கடமே
வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு

வைப்பன் மணிவிளக்கா மாமதியை மாலுக்கென்
றெப்பொழுதும் கைநீட்டும் யானையை எப்பாடும்
வேடுவளை கக்குறவர் வில்லெடுக்கும் வேங்கடமே
நாடுவளை தாடுமேல் நன்று

நன்மணி வண்ணனூர் ஆளியும் கோளரியும்
பொன்மணியும் முத்தமும் பூமரமும் பன்மணிநீ
ரோடு பொருதுருளும் கானமும் வானரமும்
வேடு முடைவேங் கடம்

வேங்கடமே விண்ணோர் தொழுவதுவும் மெய்ம்மையால்
வேங்கடமே மெய்வினைநோய் தீர்ப்பதுவும்
தானவரை வீழத்தன் னாழி படைதொட்டு
வானவரை காப்பான் மலை

மலையாமை மேல்வைத்து வாசுகியை சுற்றி
தலையாமை தானொருகை பற்றி அலையாமல்
பீற கடைந்த பெருமான் திருநாமம்
கூறுவதே யாவர்க்கும் கூற்று

கூறமும் சாரா கொடுவினையும் சாராதீ
மாற்றமும் சாரா வகையறிந்தேன் ஆற்றங்
கரைக்கிடக்கும் கண்ணன் கடல்கிடக்கும் மாயன்
உரைக்கிடக்கு முள்ள தெனக்கு

எனக்காவா ராரொருவ ரேஎம் பெருமான்
தனக்காவான் தானேமற் றல்லால் புனக்காயா
வண்ணனே உன்னை பிறரறியார் என்மதிக்கு
விண்ணெல்லா முண்டோ விலை

விலைக்கா படுவர் விசாதியேற் றுண்பர்
தலைக்கா பலிதிரிவர் தக்கோர் முலைக்கால்
விடமுண்ட வேந்தனையே வேறாஏ தாதார்
கடமுண்டார் கல்லா தவர்

கல்லா தவரிலங்கை கட்டழித்த காகுத்தன்
அல்லா லொருதெய்வம் யானிலேன் பொல்லாத
தேவரை தேவரல் லாரை திருவில்லா
தேவரை தேறல்மின் தேவு

தேவராய் நிற்கு தேவும்அ தேவரில்
மூவராய் நிற்கும் முதுபுணர்ப்பும் யாவராய்
நிற்கின்ற தெல்லாம் நெடுமாலென் றோராதார்
கற்கின்ற தெல்லாம் கடை

கடைநின் றமரர் கழல்தொழுது நாளும்
இடைநின்ற இன்பத்த ராவர் புடைநின்ற
நிரோத மேனி நெடுமாலே நின்னடியை
யாரோத வல்லா ரவர்

அவரிவரென் றில்லை அனங்கவேள் தாதைக்கு
எவரு மெதிரில்லை கண்டீர் உவரி
கடல்நஞ்ச முண்டான் கடனென்று வாணற்
குடனின்று தோற்றா னொருங்கு

ஒருங்கிருந்த நல்வினையும் தீவினையு மாவான்
பெருங்குருந்தம் சாய்த்தவனே பேசில் மருங்கிருந்த
வானவர்தாம் தானவர்தாம் தாரகைதான் என்னெஞ்சம்
ஆனவர்தா மல்லாக தென்

என்னெஞ்ச மேயான் இருள்நீக்கி யெம்பிரான்
மன்னஞ்ச முன்னொருநாள் மண்ணளந்தான் என்னெஞ்ச
மேயானை யில்லா விடையேற்றான் வெவ்வினைதீர
தாயனு காக்கினேன் அன்பு

அன்பாவாய் ஆரமுதம் ஆவாய் அடியேனு
கின்பாவாய் எல்லாமும் நீயாவாய் பொன்பாவை
கேள்வா கிளரொளியென கேசவனே கேடின்றி
ஆள்வா கடியேன்நான் ஆள்

ஆட்பார துழிதருவாய் கண்டுகொள் என்றுநின்
தாட்பார துழிதருவேன் தன்மையை கேட்பார
கரும்பொருளாய் நின்ற அரங்கனே உன்னை
விரும்புவதே விள்ளேன் மனம்

மனக்கேதம் சாரா மதுசூதன் றன்னை
தனக்கேதான் தஞ்சமா கொள்ளில் எனக்கேதான்
இன்றொன்றி நின்றுலகை யேழாணை யோட்டினான்
சென்றொன்றி நின்ற திரு

திருநின்ற பக்கம் திறவிதென் றோரார்
கருநின்ற கல்லார குரைப்பர் திருவிருந்த
மார்பன் சிரீதரன்றன் வண்டுலவு தண்டுழாய்
தார்தன்னை சூடி தரித்து

தரித்திருந்தே னாகவே தாரா கணப்போர்
விரித்துரைத்த வெந்நாக துன்னை தெரித்தெழுதி
வாசித்தும் கேட்டும் வணங்க்கி வழிபட்டும்
பூசித்தும் போக்கினேன் போது

போதான இட்டிறைஞ்சி ஏத்துமினோ பொன்மகர
காதானை யாதி பெருமானை நாதானை
நல்லானை நாரணனை நம்மேழ் பிறப்பறுக்கும்
சொல்லானை சொல்லுவதே சூது

சூதாவ தென்னெஞ்ச தெண்ணினேன் சொன்மாலை
மாதாய மாலவனை மாதவனை யாதானும்
வல்லவா சிந்தி திருப்பேற்க்கு வைகுந
தில்லையோ சொல்லீ ரிடம்

இடமாவ தென்னெஞ்சம் இன்றெல்லாம் பண்டு
படநா கணைநெடிய மாற்க்கு திடமாக
வைய்யேன் மதிசூடி தன்னோடு அயனைநான்
வையேனா செய்யேன் வலம்

வலமாக மாட்டாமை தானாக வைகல்
குலமாக குற்றம்தா னாக நலமாக
நாரணனை நம்பதியை ஞான பெருமானை
சீரணனை யேத்தும் திறம்

திறம்பேன்மின் கண்டீர் திருவடிதன் நாமம்
மறந்தும் புறந்தொழா மாந்தர் இறைஞ்சியும்
சாதுவரா போதுமின்கள் என்றான் நமனும்தன்
தூதுவரை கூவி செவிக்கு

செவிக்கின்பம் ஆவதுவும் செங்கண்மால் நாமம்
புவிக்கும் புவியதுவே கண்டீர் கவிக்கு
நிறைபொருளாய் நின்றானை நேர்பட்டேன் பார்க்கில்
மறைப்பொருளும் அத்தனையே தான்

தானொருவ நாகி தரணி யிடந்தெடுத்து
ஏனொருவ னாயெயிற்றில் தாங்கியதும் யானொருவன்
இன்றா வறிகின்றே னல்லேன் இருநிலத்தை
சென்றாங் கடிப்படுத்த சேய்

சேயன் அணியன் சிறியன் மிகப்பெரியன்
ஆயன் துவரைக்கோ னாய்நின்ற மாயன்அன்
றோதிய வாக்கதனை கல்லார் உலகத்தில்
ஏதிலராய் மெய்ஞ்ஞான மில்

இல்லறம் இல்லேல் துறவறமில் என்னும்
சொல்லற மல்லனவும் சொல்லல்ல நல்லறம்
ஆவனவும் நால்வேத மாத்தவமும் நாரணனே
யாவதீ தன்றென்பா ரார்

ஆரே யறிவார் அனைத்துலகு முண்டுமிழ்ந்த
பேராழி யான்றன் பெருமையை கார்செறிந்த
கண்டத்தான் எண்கண்ணான் காணான் அவன் வைத்த
பண்டைத்தா னத்தின் பதி

பதிப்பகைஞர காற்றாது பய்திரைநீர பாழி
மதித்தடைந்த வாளரவ தன்னை மத்திவன்றன்
வல்லாக தேற்றிய மாமேனி மாயவனை
அல்லதொன் றேத்தாதென் நா

நாக்கொண்டு மானிடம் பாடேன் நலமாக
தீக்கொண்ட செஞ்சடையான் சென்றுஎன்றும் பூக்கொண்டு
வல்லவா றேத்த மகிழாத வைகுந்த
செல்வனார் சேவடிமேல் பாட்டு

பாட்டும் முறையும் படுகதையும் பல்பொருளும்
ஈட்டிய தீயும் இருவிசும்பும் கேட்ட
மனுவும் சுருதி மறைநான்கும் மாயன்
றனமாயை யிற்பட்ட தற்பு

தற்பென்னை தானறியா னேலும் தடங்கடலை
கற்கொண்டு தூர்த்த கடல்வண்ணன் எற்கொண்ட
வெவ்வினையும் நீங்க விலங்கா மனம்வைத்தான்
எவ்வினையும் மாயுமால் கண்டு

கண்டு வணங்கினார கென்னாங்கொல் காமனுடல்
கொண்ட தவத்தாற்க்கு உமையுணர்த்த வண்டலம்பும்
தாரலங்கல் நீண்முடியான் றன்பெயரே கேட்டிருந்து அங்
காரலங்க லானமையா லாய்ந்து

ஆய்ந்துகொண்ட டாதி பெருமானை அன்பினால்
வாய்ந்த மனதிருத்த வல்லார்கள் ஏய்ந்ததம்
மெய்குந்த மாக விரும்புவரே தாமும்தம்
வைகுந்தம் காண்பார் விரைந்து

விரைந்தடைமின் மேலொருநாள் வெள்ளம் பரக்க
கரந்துலகம் காத்தளித்த கண்ணன் பரந்துலகம்
பாடின ஆடின கேட்டு படுநரகம்
வீடின வாசற் கதவு

கதவு மனமென்றும் காணலா மென்றும்
குதையும் வினையாவி தீர்ந்தேன் விதையாக
நற்றமிழை வித்தியென் உள்ளத்தை நீவிளைத்தாய்
கற்றமொழி யாகி கலந்து

கலந்தானென் னுள்ளத்து காமவேள் தாதை
நலந்தானு மீதொப்ப துண்டே அலர்ந்தலர்கள்
இட்டேத்து மீசனும் நான்முகனும் என்றிவர்கள்
விட்டேத்த மாட்டாத வேந்து

வேந்தராய் விண்ணவராய் விண்ணாகி தண்ணளியாய்
மாந்தராய் மாதாய்மற் றெல்லாமாய் சார்ந்தவர்க்கு
தன்னாற்றான் நேமியான் மால்வண்ணன் தான்கொடுக்கும்
பின்னால்தான் செய்யும் பிதிர்

பிதிரும் மனமிலேன் பிஞ்ஞகன் றன்னோடு
எதிர்வன் அவனெனக்கு நேரான் அதிரும்
கழற்கால மன்னனையே கண்ணனையே நாளும்
தொழக்காதல் பூண்டேன் தொழில்

தொழிலெனக்கு தொல்லைமால் தன்னாம மேத்த
பொழுதெனக்கு மற்றதுவே போதும் கழிசினத்த
வல்லாளன் வானரக்கோன் வாலி மதனழித்த
வில்லாளன் நெஞ்ச துளன்

உளன்கண்டாய் நன்நெஞ்சே உத்தம னென்றும்
உளன்கண்டாய் உள்ளுவா ருள்ள துளன்கண்டாய்
தன்னொப்பான் தானா யுளன்காண் தமியேற்கும்
என்னொப்பார கீச னிமை

இமை பெருமலைபோ லிந்திரனார கிட்ட
சமய விருந்துண்டார் காப்பார் சமயங்கள்
கண்டான் அவைகாப்பான் கார்க்கண்டன் நான்முகனோடு
உண்டா னுலகோ டுயிர்

உயிர்கொண் டுடலொழிய ஓடும்போ தோடி
அயர்வென்ற தீர்ப்பான்பேர் பாடி செயல்தீர
சிந்தித்து வாழ்வாரே வாழ்வார் சிறுச
பந்தனையார் வாழ்வேல் பழுது

பழுதாகா தொன்றறிந்தேன் பாற்கடலான் பாதம்
வழுவா வகைநினைந்து வைகல் தொழுவாரை
கண்டிறைஞ்சி வாழ்வார் கலந்த வினைகெடுத்து
விண்திறந்து வீற்றிருப்பார் மிக்கு

வீற்றிருந்து விண்ணாள வேண்டுவார் வேங்கடத்தான்
பால்திருந்த வைத்தாரே பன்மலர்கள் மேல்திருந்த
வாழ்வார் வருமதிபார தன்பினராய் மற்றவர்க்கே
தாழா யிருப்பார் தமர்

தமராவர் யாவருக்கும் தாமரைமே லாற்கும்
அமரர்க்கும் ஆடரவார தாற்கும் அமரர்கள்
தாள்தா மரைமலர்க ளிட்டிறைஞ்சி மால்வண்ணன்
தாள்தா மரையடைவோ மென்று

என்றும் மறந்தறியேன் என்னெஞ்ச தேவைத்து
நின்று மிருந்தும் நெடுமாலை என்றும்
திருவிருந்த மார்பன் சிரீதரனு காளாய்
கருவிருந்த நாள்முதலா காப்பு

காப்பு மறந்தறியேன் கண்ணனே யென்றிருப்பன்
ஆப்பங் கொழியவும் பல்லுயிர்க்கும் ஆக்கை
கொடுத்தளித்த கோனே குணப்பரனே உன்னை
விடத்துணியார் மெய்தெளிந்தார் தாம்

மெய்தெளிந்தா ரெஞ்செய்யார் வேறானார் நீறாக
கைதெளிந்து காட்டி களப்படுத்து பைதெளிந்த
பாம்பின் ஆனையாய் அருளாய் அடியேற்கு
வேம்பும் கறியாகும் ஏன்று

ஏன்றேன் அடிமை இழிந்தேன் பிறப்பிடும்பை
ஆன்றேன் அமரர கமராமை
கடன்நாடும் மண்ணாடும் கைவிட்டு மேலை
இடநாடு காண இனி

இனியறிந்தே னீசற்கும் நான்முகற்கும் தெய்வம்
இனியறிந்தேன் எம்பெருமான் உன்னை
காரணன்நீ கற்றவைநீ கற்பவைநீ நற்கிரிசை
நாரணன்நீ நன்கறிந்தேன் நான்
திருமழிசையாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ
ஸ்ரீமதே ராமானுஜாய நம
நம்மாழ்வார் அருளிச்செய்த
திருவிருத்தம்
தனியன்
கிடாம்பியாச்சான் அருளிச்செய்தது
கருவிரு தக்குழி நீத்தபின் கா கடுங்குழிவீழ்ந்து
ஒருவிரு தம்பு குழலுறு வீர்உயி ரின்பொருள்கட்கு
ஒருவிரு தம்புகு தாமல் குருகையர் கோனுரைத்த
திருவிரு தத்தோ ரடிகற் றிரீர்திரு நாட்டகத்தே

பொய்ண்ணின்ற ஞானமும் பொல்லா
வொழுக்கும் அழுக்குடம்பும்
இந்நின்ற நீர்மை இனியா
முறாமை உயிரளிப்பான்
எந்நின்ற யோனியு மாய்ப்பிற
தாயிமை யோர்தலைவா
மெய்நின்று கேட்டரு ளாய்அடி
யேன்செய்யும் விண்ணப்பமே

செழுநீர தடத்து கயல்மிளிர
தாலொப்ப சேயரிக்கண்
அழுநீர் துளும்ப அலமரு
கின்றன வாழியரோ
முழுநீர் முகில்வண்ணன் கண்ணன்விண்
ணாட்டவர் மூதுவராம்
தொழுநீ ரிணையடி கேஅன்பு
சூட்டிய சூழ்குழற்கே

குழல்கோ வலர்மட பாவையும்
மண்மக ளும்திருவும்
நிழல்போல் வனர்கண்டு நிற்குங்கொல்
மீளுங்கொல் தண்ணந்துழாய்
அழல்போ லடும்சக்க ரத்தண்ணல்
விண்ணோர் தொழக்கடவும்
தழல்போல் சினத்தஅ புள்ளின்பின்
போன தனிநெஞ கமே

தனிநெஞ்சம் முன்னவர் புள்ளே
கவர்ந்தது தண்ணந்துழா
கினிநெஞ மிங்கு கவர்வது
யாமிலம் நீநடுவே
முனிவஞ்ச பேய்ச்சி முலைசுவை
தான்முடி சூடுதுழா
பனிநஞ்ச மாருத மேஎம்ம
தாவி பனிப்பியல்வே

பனிபியல் வாக வுடையதண்
வாடைஇ காலமிவ்வூர்
பனிபியல் வெல்லாம் தவிர்ந்தெரி
வீசும் தண்ணந்துழாய்
பனிப்புயல் சோரும் தடங்கண்ணி
மாமைத்தி றத்துக்கொலாம்
பனிப்புயல் வண்ணண்செங் கோலொரு
நான்று தடாவியதே

தடாவிய அம்பும் முரிந்த
சிலைகளும் போகவிட்டு
கடாயின கொண்டொல்கும் வல்லியீ
தேனும் அசுரர்மங
கடாவிய வேக பறவையின்
பாகன் மதனசெங்கோல்
நடாவிய கூற்றங்கண் டீர்உயிர்
காமின்கள் ஞாலத்துள்ளே

ஞாலம் பனிப்ப செரித்துநன்
நீரிட்டு கால்சிதைந்து
நீலவல் லேறு பொராநின்ற
வான மிதுதிருமால்
கோலம் சுமந்து பிரிந்தார்
கொடுமை குழறுதண்பூங்
காலங்கொ லோவறி யேன்வினை
யாட்டியேன் காண்கின்றவே

காண்கின் றனகளும் கேட்கின்
றனகளும் காணில்இந்நாள்
பாண்குன்ற நாடர் பயில்கின்
றனஇதெல் லாமறிந்தோம்
மாண்குன்ற மேந்திதண் மாமலை
வேங்கட தும்பர்நம்பும்
சேண்குன்றம் சென்றுபொருள்படை
பான்கற்ற திண்ணனவே

திண்பூஞ் சுடர்தி நேமியஞ்
செல்வர்விண் ணாடனைய
வண்பூ மணிவல்லி யாரே
பிரிபவர் தாம்இவையோ
கண்பூங் கமலம் கருஞ்சுட
ராடிவெண் முத்தரும்பி
வண்பூங் குவளை மடமான்
விழிக்கின்ற மாயிதழே

மாயோன் வடதிரு வேங்கட
நாடவல் லிக்கொடிகாள்
நோயோ வுரைக்கிலும் கேட்கின்றி
லீருரை யீர் மது
வாயோ அதுவன்றி வல்வினை
யேனும் கிளியுமெள்கும்
ஆயோ அடும்தொண்டை யோஅறை
யோவி தறிவரிதே

அரியன யாமின்று காண்கின்
றனகண்ணன் விண்ணனையாய்
பெரியன காதம் பொருட்கோ
பிரிவெனெ ஞாலமெய்தற்
குரியென வெண்முத்தும் பைம்பொன்னு
மேந்தியொ ரோகுடங்கை
பெரியென கெண்டை குலம்இவை
யோவந்து பேர்கின்றவே

பேர்கின் றதுமணி மாமை
பிறங்கியள் ளல்பயலை
ஊர்கின் றதுகங்குல் ஊழிக
ளேஇதெல் லாமினவே
ஈர்கின்ற சக்கர தெம்பெரு
மான்கண்ணன் தண்ணந்துழாய்
சார்கின்ற நன்னெஞ்சி னார்தந்து
போன் தனிவளமே

தனிவளர் செங்கோல் நடாவு
தழல்வாய் அரசவி
பனிவளர் செங்கோ லிருள்வீற்
றிருந்தது பார்முழுதும்
துனிவளர் காதல் துழாயை
துழாவுதண் வாடைதடி
தினிவளை காப்பவ ரார்எனை
யூழிக ளீர்வனவே

ஈர்வன வேலுமஞ் சேலும்
உயிர்மேல் மிளிர்ந்திவையோ
பேர்வன வோவல்ல தெய்வநல்
வேள்கணை பேரொளியே
சோர்வன நீல சுடர்விடும்
மேனியம் மான்விசும்பூர்
தேர்வன தெய்வமன் னீரகண்
ணோவி செழுங்கயலே

கயலோ மகண்கள் என்று
களிறு வினவிநிற்றீர்
அயலோர் அறியிலு மீதென்ன
வார்த்தை கடல்கவர்ந்த
புயலோ டுலாம்கொண்டல் வண்ணன்
புனவேங் கடத்தெம்மொடும்
பயலோ விலீர்கொல்லை காக்கின்ற
நாளும் பலபலவே

பலபல வூழிக ளாயிடும்
அன்றியோர் நாழிகையை
பலபல கூறிட்ட கூறாயி
டும்கண்ணன் விண்ணனையாய்
பலபல நாளன்பர் கூடிலும்
நீங்கிலும் யாம்மெலிதும்
பலபல சூழ லுடைத்துஅம்ம
வாழியி பாயிருளே

இருள்விரி தாலன்ன மாநீர
திரைகொண்டு வாழியரோ
இருள்பிரி தாரன்பர் தேர்வழி
தூரல் அரவணைமேல்
இருள்விரி நீல கருநா
யிறுசுடர் கால்வதுபோல்
இருள்விரி சோதி பெருமா
னுறையு மெறிகடலே

கடல்கொண் டெழுந்தது வானம்அவ்
வானத்தை யன்றிச்சென்று
கடல்கொண் டெழுந்த வதனா
லிதுகண்ணன் மண்ணும்விண்ணும்
கடல்கொண் டெழுந்தவ காலங்கொ
லோபுயற் காலங்கொலோ
கடல்கொண்ட கண்ணீர் அருவிசெய்
யாநிற்கும் காரிகையே

காரிகை யார்நிறை காப்பவர்
யாரென்று கார்கொண்டின்னே
மாரிகை யேறி அறையிடும்
காலத்தும் வாழியரோ
சாரிகை புள்ளர்அ தண்ண
துழாயிறை கூயருளார்
சேரிகை யேரும் பழியா
விளைந்தென் சின்மொழிக்கே

சின்மொழி நோயோ கழிபெரு
தெய்வம்இ நோயினதென்
றின்மொழி கேட்க்கு மிளந்தெய்வ
மன்றிது வேலநில்நீ
என்மொழி கேண்மினென் அம்மனை
மீர்உல கேழுமுண்டான்
சொல்மொழி மால தண்ணந்து
ழாய்கொண்டு சூட்டுமினே

சூட்டுநன் மாலைகள் தூயன
வேந்திவிண் ணோர்கள்நன்னீர்
ஆட்டி தூபம் தராநிற்க
வேயங்குஓர் மாயையினால்
ஈட்டிய வெண்ணை தொடுவுண்ண
போந்திமி லேற்றுவன்கூன்
கோட்டிடை யாடினை கூத்துஅட
லாயர்தம் கொம்பினுக்கே

கொம்பார் தழைகை சிறுநா
ணெறிவிலம் வேட்டைகொண்டா
டம்பார் களிறு வினவுவ
தையர்புள் ளூரும்கள்வர்
தம்பா ரகத்தென்று மாடா
தனதம்மில் கூடாதன
வம்பார் வினாச்சொல்ல வோஎம்மை
வைத்ததிவ் வான்புனத்தே

புனமோ புனத்தய லேவழி
போகும் அருவினையேன்
மனமோ மகளிர்ங் காவல்சொல்
லீர்புண்ட ரீகத்தங்கேழ்
வனமோ ரனையகண் ணான்கண்ணன்
வானா டமரும்தெய்வ
தினமோ ரனையீர்க ளாய்இவை
யோம் இயல்புகளே

இயல்வா யினவஞ்ச நோய்கொண்
டுலாவும் ஓரோகுடங்கை
கயல்பாய் வனபெரு நீர்க்கண்கள்
தம்மொடும் குன்றமொன்றால்
புயல்வா யினநிரை காத்தபுள்
ளூர்திகள் ளூரும்துழா
கொயல்வாய் மலர்மேல் மனத்தொடென்
னாங்கொலெம் கோல்வளைக்கே

எங்கோல் வளைமுத லாகண்ணன்
மண்ணும்விண் ணும்அளிக்கும்
செங்கோல் வளைவு விளைவிக்கும்
மால்திறல் சேரமர்
தங்கோ னுடையதங் கோனும்ப
ரெல்லா யவர்க்கும்தங்கோன்
நங்கோ னுகக்கும் துழாய்எஞ்செய்
யாதினி நானிலத்தே

நானிலம் வாய்க்கொண்டு நன்னீ
ரறமென்று கோதுகொண்ட
வேனிலஞ் செல்வன் சுவைத்துமிழ்
பாலை கடந்தபொன்னே
கால்நில தோய்ந்துவிண் ணோர்தொழும்
கண்ணன்வெஃ காவுதுஅம்பூ
தேனிளஞ் சோலை பாலதுஎ
பாலைக்கும் சேமத்ததே

சேமம்செங் கோனரு ளேசெரு
வாரும்ந பாகுவரென்
றேமம் பெறவையம் சொல்லும்மெய்
யேபண்டெல் லாம்மறைகூய்
யமங்க டோ றெரி வீசும்நங்
கண்ணன தண்ணந்துழா
தாமம் புனையஅவ் வாடையீ
தோவந்து தண்ணென்றதே

தண்ண துழாய்வளை கொள்வது
யாமிழ போம் நடுவே
வண்ணம் துழாவியோர் வாடை
யுலாவும்வள் வாயலகால்
புள துழாமே பொருநீர
திருவரங் காஅருளாய்
எண்ண துழாவு மிடத்துஉள
வோபண்டும் இன்னன்னவே

இன்னன்ன தூதெம்மை ஆளற்ற
பட்டிர தாளிவளென்று
அன்னன்ன சொல்லா பெடையொடும்
போய்வரும் நீலமுண்ட
மின்னன்ன மேனி பெருமா
னுலகில்பெண் தூதுசெல்லா
அன்னன்ன நீர்மைகொ லோகுடி
சீர்மையி லன்னங்களே

அன்னம்செல் வீரும்வண் டானம்செல்
வீரும் தொழுதிரந்தேன்
முன்னம்செல் வீர்கள் மறவேல்மி
னோகண்ணன் வைகுந்தனோ
டென்னெஞ்சி னாரைக்கண் டாலென்னை
சொல்லி அவரிடைநீர்
இன்னஞ்செல் லீரோ இதுவோ
தகவென் றிசைமின்களே

இசைமின்கள் தூதென் றிசைத்தா
லிசையிலம் என்தலைமேல்
அசைமின்க ளென்றா லசையிங்கொ
லாம்அம்பொன் மாமணிகள்
திசைமின் மிளிரும் திருவேங்
கட்த்துவன் தாள்சிமயம்
மிசைமின் மிளிரிய போவான்
வழி கொண்ட மேகங்களே

மேகங்க ளோஉரை யீர்திரு
மால்திரு மேனியொக்கும்
யோகங்க ளுங்களு கெவ்வாறு
பெற்றீர் உயிரளிப்பான்
மாகங்க ளெல்லாம் திரிந்துநன்
னீர்கள் சுமந்துந்தம்
ஆகங்கள் நோவ வருந்தும்
தவமாம் அருள்பெற்றதே

அருளார் திருச்ச கரத்தால்
அகல்விசும் பும்நிலனும்
இருளார் வினைகெட செங்கோல்
நடாவுதிர் ஈங்கோர்பெண்பால்
பொருளோ எனுமிகழ் வோஇவற்
றின்புற தாளென்றெண்ணோ
தெருளோம் அரவணை யீர்இவள்
மாமை சிதைக்கின்றதே

சிதைக்கின்ற தாழியென் றாழியை
சீறிதன் சீறடியால்
உதைக்கின்ற நாயக தன்னொடும்
மாலே உனதுதண்தார்
ததைக்கின்ற தண்ண துழாயணி
வானது வேமனமா
பதைக்கின்ற மாதின் திறத்துஅறி
யேஞ்செயற் பாலதுவே

பால்வா பிறைப்பிள்ளை ஒக்கலை
கொண்டு பகலிழந்த
மேல்பால் திசைப்பெண் புலம்புறு
மாலை உலகளந்த
மால்பால் துழாய்க்கு மனமுடை
யார்க்குநல் கிற்றையெல்லாம்
சோல்வான் புகுந்துஇது வோர்பனி
வாடை துழாகின்றதே

துழாநெடுஞ் சூழிரு ளென்றுதன்
தண்தா ரதுபெயரா
எழாநெடு வூழி யெழுந்தவி
காலத்தும் ஈங்கிவளோ
வழாநெடு துன்பத்த ளென்றிரங்
காரம்ம னோஇலங்கை
குழாநெடு மாடம் இடித்த
பிரானார் கொடுமைகளே

கொடுங்கால் சிலையர் நிரைகோ
ளுழவர் கொலையில்வெய்ய
கடுங்கால் இளைஞர் துடிபடும்
கவ்வைத்து அருவினையேன்
நெடுங்கால மும்கண்ணன் நீண்மலர
பாதம் பரவி பெற்ற
தொடுங்கா லொசியு மிடைஇள
மாஞ்சென்ற சூழ்கடமே

கடமா யினகள் கழித்துதம்
கால்வன்மை யால்பலநாள்
தடமா யினபுக்கு நீர்நிலை
நின்ற தவமிதுகொல்
குடமாடி யிம்மண்ணும் விண்ணும்
குலுங்க வுலகளந்து
நடமா டியபெரு மான்உரு
வொத்தன நீலங்களே

நீல தடவரை மேல்புண்ட
ரீக நெடுந்தடங்கள்
போல பொலிந்தெ கெல்லா
விடத்தவும் பொங்குமுந்நீர்
ஞால பிரான்விசும் புக்கும்
பிரான்மற்றும் நல்லோர்பிரான்
கோலம் கரிய பிரான்எம்
பிரான்கண்ணின் கோலங்களே

கோல பகற்களி றொன்றுகற்
புய்ய குழாம்விரிந்த
நீலக்கங் குற்களி றெல்லாம்
நிறைந்தன நேரிழையீர்
ஞாலப்பொன் மாதின் மணாளன்
துழாய்நங்கள் சூழ்குழற்கே
ஏல புனைந்தென்னை மார்எம்மை
நோக்குவ தென்றுகொலோ

என்றும்புன் வாடை யிதுகண்
டறிதும்இவ் வாறுவெம்மை
ஒன்றுமுருவும் சுவடும்
தெரியிலம் ஓங்கசுரர்
பொன்றும் வகைபுள்ளை யூர்வான்
அருளரு ளாதவிந்நாள்
மன்றில் நிறைபழி தூற்றிநின்
றென்னைவன் காற்றடுமே

வன்காற் றறைய ஒருங்கே
மறிந்து கிடந்தலர்ந்த
மென்காற் கமல தடம்போற்
பொலிந்தன மண்ணும்விண்ணும்
என்காற் களவின்மை காண்மினென்
பானொத்து வான்நிமிர்ந்த
தன்கால்பணிந்தவென் பால்எம்பி
ரான தடங்கண்களே

கண்ணும்செ தாமரை கையு
மவைஅடி யோஅவையே
வண்ணம் கரியதோர் மால்வரை
போன்று மதிவிகற்பால்
விண்ணும் கடந்தும்பர் அப்பால்மி
குமற்றெ பால்எவர்க்கும்
எண்ணு மிடத்தது வோஎம்பி
ரான தெழில்நிறமே

நியமுயர் கோலமும் பேரும்
உருவும் இவையிவையென்று
அறமுயல் ஞான சமயிகள்
பேசிலும் அங்கங்கெல்லாம்
உறவுயர் ஞான சுடர்விள
காய்நின்ற தன்றியொன்றும்
பெறமுயன் றாரில்லை யால்எம்பி
ரான்றன் பெருமையையே

பெருங்கேழ லார்தம் பெருங்கண்
மலர்ப்புண்ட ரீகம்நம்மேல்
ஒருங்கே பிறழவை தாரிவ்வ
காலம் ஒருவர்நம்போல்
வரும்கேழ் பவருள ரேதொல்லை
வாழியம் சூழ்பிறப்பும்
மருங்கே வரப்பெறு மேசொல்லு
வாழி மடநெஞ்சமே

மடநெஞ்ச மென்றும் தமதென்றும்
ஓர்கரு மம்கருதி
விடநெஞ்சை யுற்றார் விடவோ
அமையும்அ பொன்பெயரோன்
தடநெஞ்சம் கீண்ட பிரானார்
தமதடி கீழ்விடப்போ
திடநெஞ்ச மாய்எம்மை நீத்தின்று
தாறும் திரிகின்றதே

திரிகின் றதுவட மாருதம்
திங்கள்வெ தீமுகந்து
சொரிகின் றதுஅது வும்அது
கண்ணன்விண் ணூர்தொழவே
சரிகின் றதுசங்கம் தண்ணந்து
ழாய்க்குவண் ணம்பயலை
விரிகின் றதுமுழு மெய்யும்என்
னாங்கொலென் மெல்லியற்கே

மெல்லிய லாக்கை கிருமி
குருவில் மிளிர்தந்தாங்கே
செல்லிய செல்கை துலகையென்
காணும்என் னாலும்தன்னை
சொல்லிய சூழல் திருமா
லவன்கவி யாதுகற்றேன்
பல்லியின் சொல்லும்சொல் லாக்கொள்வ
தோவுண்டு பண்டுபண்டே

பண்டும் பலபல வீங்கிருள்
காண்டும்இ பாயிருள்போல்
கண்டு மறிவதும் கேட்பதும்
யாமிலம் காளவண்ண
வண்டுண் துழாய்ப்பெரு மான்மது
சூதனன் தாமோதரன்
உண்டும் உமிழ்ந்தும் கடாயமண்
ணேரன்ன ஒண்ணுதலே

ஒண்ணுதல் மாமை ஒளிபய
வாமை விரைந்துநந்தேர்
நண்ணுதல் வேண்டும் வலவ
கடாகின்று தேன்நவின்ற
வண்முதல் நாயகன் நீள்முடி
வெண்முத்த வாசிகைத்தாய்
மண்முதல் சேர்வுற்று அருவிசெய்
யாநிற்கும் மாமலைக்கே

மலைகொண்டு மத்தா அரவால்
சுழற்றிய மாயப்பிரான்
அலைகண்டு கொண்ட அமுதம்கொள்
ளாது கடல்பரதர்
விலைகொண்டு தந்தசங் கம்இவை
வேரி துழாய்துணையா
துலைகொண்டு தாயம் கிளர்ந்துகொள்
வானொ தழைக்கின்றதே

அழைக்கும் கருங்கடல் வெண்திரை
கைகொண்டு போய்அலர்வாய்
மழைக்கண் மடந்தை அரவணை
யேறமண் மாதர்விண்வாய்
அழைத்து புலம்பி முலைமலை
மேல்நின்றும் ஆறுகளாய்
மழைக்கண்ண நீர்திரு மால்கொடி
யானென்று வார்கின்றதே

வாரா யினமுலை யாளிவள்
வானோர் தலைமகனாம்
சேரா யினதெய்வ நன்னோ
யிதுதெய்வ தண்ணந்துழா
தாரா யினும்தழை யாயினும்
தண்கொம்ப தாயினும்கீழ்
வேரா யினும்நின்ற மண்ணாயி
னும்கொண்டு வீசுமினே

வீசும் சிறகால் பறத்திர்விண்
ணாடுங் கட்கெளிது
பேசும் படியன்ன பேசியும்
போவது நெய்தொடுவுண்
டேசும் படியன்ன செய்யுமெம்
மீசர்விண் ணோர்பிரானார்
மாசின் மலரடி கீழ்எம்மை
சேர்விக்கும் வண்டுகளே

வண்டுக ளோவம்மின் நீர்ப்பூ
நிலப்பூ மரத்திலொண்பூ
உண்டுகளித்துழல் வீர்க்கொன்
றுரைக்கியம் ஏனமொன்றாய்
மண்துக ளாடிவை குந்தமன்
னாள்குழல் வாய்விரைபோல்
விண்டுகள் வாரும் மலருள
வோம் வியலிடத்தே

வியலிட முண்ட பிரானா
விடுத்த திருவருளால்
உயலிடம் பெற்றுய்ந்தம் அஞ்சலம்
தோழிஓர் தண்தென்றல்வ
தயலிடை யாரும் அறிந்திலர்
அம்பூ துழாயினின்தேன்
புயலுடை நீர்மையி னால்தட
விற்றென் புலன்கலனே

புலக்குண் டலப்புண்ட ரீகத்த
போர்க்கொண்டை வல்லியொன்றால்
விலக்குண் டுலாகின்று வேல்விழி
கின்றன கண்ணன் கையால்
மலக்குண் டமுதம் சுரந்த
மறிகடல் போன்றவற்றால்
கலக்குண்ட நான்றுகண் டார்எம்மை
யாரும் கழறலரே

கழல்தலம் ஒன்றே நிலமுழு
தாயிற்று ஒருகழல்போய்
நிழல்தர எல்லா விசும்பும்
நிறைந்தது நீண்ட அண்டத்து
உழறலர் ஞான சுடர்விள
காயுயர தோரையில்லா
அழறலர் தாமரை கண்ணன் என்
னோவிங் களக்கின்றதே

அளப்பரு தன்மைய ஊழியங்
கங்குல்அ தண்ணந்துழாய்க்கு
உளப்பெருங் காதலில் நீளிய
வாயுள ஓங்குமுந்நீர்
வளப்பெரு நாடன் மதுசூ
தனனென்னும் வல்வினையேன்
தளப்பெரு நீண்முறு வல்செய்ய
வாய தடமுலையே

முலையோ முழுமுற்றும் போந்தில
மொய்பூங் குழல்குறிய
கலையோ அரையில்லை நாவோ
குழறும் கடல்மண்ணெல்லாம்
விலையோ எனமிளி ருங்கண்
ணிவள்பர மேபெருமான்
மலையோ திருவேங் கடமென்று
கற்கின்றா வாசகமே

வாசகம் செய்வது நம்பர
மே தொல்லை வானவர்தம்
நாயகன் நாயக ரெல்லாம்
தொழுமவன் ஞாலமுற்றும்
வேயக மாயினும் சோரா
வகையிரண் டேயடியால்
தாயவன் ஆய்க்குல மாய்வந்து
தோன்றிற்று நம்மிறையே

இறையோ இரக்கினும் ஈங்கோர்பெண்
டால்என வும்மிரங்காது
அறையோ எனநின் றதிரும்
கருங்கடல் ஈங்க்கிவள்தன்
நிறையோ இனியுன் திருவரு
ளாலன்றி காப்பரிதால்
முறையோ அரவணை மேல்பள்ளி
கொண்ட முகில்வண்ணனே

வண்ணம் சிவந்துள வானா
டமரும் குளிர்விழிய
தண்மென் கமல தடம்போல்
பொலிந்தன தாமிவையோ
கண்ணன் திருமால் திருமுக
தன்னொடும் காதல்செய்தேற்
கெண்ணம் புகுந்துஅடி யேனொடி
கால மிருகின்றதே

இருக்கார் மொழியால் நெறியிழு
காமை உலகளந்த
திருத்தா ளிணைநில தேவர்
வணங்குவர் யாமும் அவா
ஒருக்கா வினையொடும் எம்மொடும்
நொந்து கனியின்மையின்
கருக்காய் கடிப்பவர் போல்திரு
நாமச்சொல் கற்றனமே

கற்று பிணைமலர கண்ணின்
குலம்வென்றுஓ ரோகருமம்
உற்று பயின்று செவியொடு
சாவி உலகமெல்லாம்
முற்றும் விழுங்க்கி யுமிழ்ந்த
பிரானார் திருவடிக்கீழ்
உற்றும் உறாதும் மிளீர்ந்தகண்
ணாயெம்மை உண்கின்றவே

உண்ணா துறங்கா துணர்வுறும்
எத்தனை யோகியர்க்கும்
எண்ணாய் மிளிரும் இயல்பின
வாம்எரி நீர்வளிவான்
மண்ணா கியவெம் பெருமான்
றனதுவை குந்தமன்னாள்
கண்ணாய் அருவினை யேன்உயி
ராயின காவிகளே

காவியும் நீலமும் வேலும்
கயலும் பலபலவென்று
ஆவியின் தன்மை அளவல்ல
பாரிப்பு அசுரர்செற்ற
மாவியம் புள்வல்ல மாதவன்
கோவிந்தன் வேங்கடம்சேர்
தூவியம் பேடையன் னாள்கண்க
ளாய துணைமலரே

மலர்ந்தே யொழிலிந்தில மாலையும்
மாலைபொன் வாசிகையும்
புலந்தோய் தழைப்பந்தர் தண்டுற
நாற்றி பொருகடல்சூழ்
நிலந்தா வியவெம் பெருமான்
தனதுவை குந்தமன்னாய்
கலந்தார் வரவெதிர் கொண்டுவன்
கொன்றைகள் கார்த்தனவே

காரேற் றிருள்செகி லேற்றின்
சுடரு குளைந்து வெல்வான்
போரேற் றெதிர்ந்தது புன்தலை
மாலை புவனியெல்லாம்
நீரேற் றளந்த நெடிய
பிரானரு ளாவிடுமே
வாரேற் றிளமுலை யாய்வரு
தேலுன் வளைத்திறமே

வளைவா திருச்ச கரத்தெங்கள்
வானவ னார்முடிமேல்
தளைவாய் நறுங்கண்ணி தண்ண
துழாய்க்குவண் ணம்பயலை
விளைவான் மிகவந்து நாள்திங்க
ளாண்டூழி நிற்கவெம்மை
உளைவான் புகுந்துஇது வோர்கங்குல்
ஆயிரம் ஊழிகளே

ஊழிக ளாயுல கேழுமுண்
டானென் றிலம்பழங்கண்டு
ஆழிக ளாம்பழ வண்ணமென்
றேற்க்குஅஃ தேகொண்டன்னை
நாழிவ ளோவெனும் ஞாலமுண்
டான்வண்ணம் சொல்லிற்றென்னும்
தோழிக ளோஉரை யீர்எம்மை
அம்மனை சூழ்கின்றவே

சூழ்க்கின்ற கங்குல் சுருங்கா
இருளின் கருந்திணிம்பை
போழ்கின்ற திங்களம் பிள்ளையும்
போழ்க துழாய்மலர்க்கே
தாழ்கின்ற நெஞ்ச தொருதமி
யாட்டியேன் மாமைக்கின்று
வாழ்கின்ற வாறிது வோவந்து
தோன்றிறு வாலியதே

வால்வெண் ணிலவுல கார
சுரக்கும்வெண் திங்களென்னும்
பால்விண் சுரவி சுரமுதிர்
மாலை பரிதிவட்டம்
போலும் சுடரட லாழிப்பி
ரான்பொழில் ஏழளிக்கும்
சால்பின் தகைமைகொ லாம்தமி
யாடி தளர்ந்ததுவே

தளர்ந்தும் முறிந்தும் வருதிரை
பாயல் திருநெடுங்கண்
வளர்ந்தும் அறிவுற்றும் வையம்
விழுங்கியும் மால்வரையை
கிளர்ந்தும் அறிதர கீண்டெடு
தான்முடி சூடுதுழாய்
அளைந்துண் சிறுபசு தென்றல்அ
தோவ துலாகின்றதே

உலாகின்ற கெண்டை ஒளியம்புஎம்
ஆவியை ஊடுருவ
குலாகின்ற வெஞ்சிலை வாண்முக
தீர்குனி சங்கிடறி
புலாகின்ற வேலை புணரியம்
பள்ளியம் மானடியார்
நிலாகின்ற வைகுந்த மோவைய
மோம் நிலையிடமே

இடம்போய் விரிந்திவ் வுலகள
தானெழி லார்தண்டுழாய்
வடம்போ தினையும் மடநெஞ்ச
மேநங்கள் வெள்வளைக்கே
விடம்போல் விரித லிதுவி
பேவியன் தாமரையின்
தடம்போ தொடுங்கமெல் லாம்பல்
அலர்விக்கும் வெண்திங்களே

திங்களம் பிள்ளை புலம்பத்தன்
செங்கோ லரசுபட்ட
செங்களம் பற்றிநின் றெள்குபுன்
மாலைதென் பாலிலங்கை
வெங்களம் செய்தனம் விண்ணோர்
பிரானார் துழாய்துணையா
நங்களை மாமைகொள் வான்வந்து
தோன்றி நலிகின்றதே

நலியும் நரகனை வீட்டிற்றும்
வாணன்திண் டோ ள்துணித்த
வலியும் பெருமையும் யாஞ்சொல்லும்
நீர்த்தல்ல மைவரைபோல்
பொலியும் உருவில் பிரானார்
புனைபூ துழாய்மலர்க்கே
மெலியும் மடநெஞ்சி நார்தந்து
போயின வேதனையே

வேதனை வெண்புரி லனை
விண்ணோர் பரவநின்ற
நாதனை ஞாலம் விழுங்கும்
அநாதனை ஞாலம்தத்தும்
பாதனை பாற்கடல் பாம்பணை
மேல்பள்ளி கொண்டருளும்
சீதனை யேதொழு வார்விண்ணு
ளாரிலும் சேரியரே

சீரர சாண்டுதன் செங்கோல்
சிலநள் செலீஇக்கழிந்த
பாரர சொத்து மறைந்தது
நாயிறு பாரளந்த
பேரர சேஎம் விசும்பர
சேஎம்மை நீத்துவஞ்சித்த
ஓரர சேஅரு ளாய்இரு
ளாய்வ துறுகின்றதே

உருகின்ற கன்மங்கள் மேலான
ஓர்ப்பில ராய்இவளை
பெருகின்ற தாயர்மெ நொந்து
பெறார்கொல் துழாய்குழல்வா
துறுகின் றிலர்தொல்லை வேங்கட
மாட்டவும் சூழ்கின்றிலர்
இருகின்ற தாலிவ ளாகம்மெல்
லாவி எரிகொள்ளவே

எரிகொள்செ நாயி றிரண்டுட
னேயுத யம்மலைவாய்
விரிகின்ற வண்ணத்த எம்பெரு
மான்கண்கள் மீண்டவற்றுள்
எரிகொள்செ தீவீழ் அசுரரை
போலஎம் போலியர்க்கும்
விரிவசொல் லீரிது வோவைய
முற்றும் விளரியதே

விளரி குரலன்றில் மென்படை
மேகின்ற முன்றில்பெண்ணை
முளரி குரம்பை யிதுவிது
வாக முகில்வண்ணன்பேர்
கிளரி கிளரி பிதற்றும்மெல்
லாவியும் நைவுமெல்லாம்
தளரில் கொலோவறி யேன்உய்ய
லாவதி தையலுக்கே

தையல்நல் லார்கள் குழாங்கள்
குழிய குழுவினுள்ளும்
ஐயநல் லார்கள் குழிய
விழவினும் அங்கங்கெல்லாம்
கையபொன் னாழிவெண் சங்கொடும்
காண்பான் அவாவுவன்நான்
மையவண் ணாமணியேமுத்த
மேஎன்றன் மாணிக்கமே

மாணிக்கங் கொண்டு குரங்கெறி
வொத்திரு ளோடுமுட்டி
ஆணிப்பொன் னன்ன சுடர்படு
மாலை உலகளந்த
மாணிக்க மேஎன் மரகத
மேமற்றொ பாரையில்லா
ஆணிப்பொன் னேஅடி யேனுடை
யாவி யடைக்கலமே

அடைக்கல தோங்கு கமல
தலரயன் சென்னியென்னும்
முடைக்கல தூண்முன் அரனுக்கு
நீக்கியை ஆழிசங்கம்
படைக்கலம் ஏந்தியை வெண்ணெய்க்கன்
றாய்ச்சிவன் தாம்புகளால்
புடைக்கல தானைஎம் மானையென்
சொல்லி புலம்புவனே

புலம்பும் கனகுரல் போழ்வாய
அன்றிலும் பூங்கழிபா
தலம்பும் கனகுரல் சூழ்திரை
யாழியும் ஆங்கவைநின்
வலம்புள் ளதுநலம் பாடு
மிதுகுற்ற மாகவையம்
சிலம்பும் படிசெய்வ தேதிரு
மால்இ திருவினையே

திருமால் உருவொக்கும் மேருஅம்
மேருவில் செஞ்சுடரோன்
திருமால் திருக்கை திருச்ச
கரமொக்கும் அன்னகண்டும்
திருமால் உருவோ டவஞ்சின்ன
மேபிதற் றாநிற்பதோர்
திருமால் தலைக்கொண்ட நங்கட்குஎங்
கேவரும் தீவினையே

தீவினை கட்கரு நஞ்சினை
நல்வினை கின்னமுதை
பூவினை மேவிய தேவி
மணாளனை புன்மையெள்காது
ஆவினை மேய்க்கும்வல் லாயனை
அன்றுல கீரடியால்
தாவின ஏற்றையெம் மானைஎஞ்
ஞான்று தலைப்பெய்வனே

தலைப்பெய்து யானுன் திருவடி
சூடு தகைமையினால்
நீலைபெய்த ஆக்கைக்கு நோற்றவிம்
மாயமும் மாயம்செவ்வே
நிலைப்பெய் திலாத நிலைமையுங்
காண்டோ றசுரர்குழாம்
தொலைப்பெய்த நேமியெ தாய்தொல்லை
யூழி சுருங்கலதே

சுருங்குறி வெண்ணை தொடுவுண்ட
கள்வனை வையமுற்றும்
ஒருங்குர வுண்ட பெருவயிற்
றாளனை மாவலிமாட்டு
இருங்குறள் ஆகி இசையவோர்
மூவடி வேண்டிச்சென்ற
பெருங்கிறி யானையல் லால்அடி
யேன்நெஞ்சம் பேணலதே

பேணல மில்லா அரக்கர்மு
நீர பெரும்பதிவாய்
நீணகர் நீளெரி வைத்தரு
ளாயென்று நீன்னைவிண்ணோர்
தாணில தோய்ந்து தொழுவர்நின்
மூர்த்திபல் கூற்றிலொன்று
காணலு மாங்கொலன் றேவைகல்
மாலையுங் காலையுமே

காலைவெய் யோற்குமுன் னோட்டு
கொடுத்தகங் குற்குறும்பர்
மாலைவெய் யோன்பட வையகம்
பாவுவர் அன்னகண்டும்
காலைநன் ஞான துறைபடி
தாடிக்கண் போதுசெய்து
மாலைநன் னாவில்கொள் ளார்நினை
யாரவன் மைப்படியே

மைப்படி மேனியும் செந்தா
மரைக்கண்ணும் வைதிகரே
மெய்ப்படி யலுன் திருவடி
சூடும் தகைமையினார்
எப்படி யூர மிலை
குருட்டா மிலைக்குமென்னும்
அப்படி யானும்சொன் னேன்அடி
யேன்மற்று யாதென்பனே

யாதானு மோரா கையில்புக்குஅங்
காப்புண்டும் ஆப்பவிழ்ந்தும்
மூதாவி யில்தடு மாறும்
உயிர்முன்ன மேஅதனால்
யாதானும் பற்றிநீங் கும்விர
தத்தைநல் வீடுசெய்யும்
மாதா வினைப்பிது வைதிரு
மாலை வணங்குவனே

வணங்கும் துறைகள் பலபல
ஆக்கி மதிவிகற்பால்
பிணங்கும் சமயம் பலபல
ஆக்கி அவையவைதோ
றணங்கும் பலபல ஆக்கிநின்
மூர்த்தி பரப்பிவைத்தாய்
இணங்குநின் னோரையில் லாய்நின்கண்
வேட்கை எழுவிப்பனே

எழுவதும் மீண்டே படுவதும்
பட்டுஎனை யூழிகள்போ
கழிவதும் கண்டுகண் டெள்கலல்
லால்இமை யோர்கள்குழாம்
தொழுவதும் சூழ்வதும் செய்தொல்லை
மாலைக்கண் ணாரக்கண்டு
கழிவதோர் காதலுற் றார்க்கும்உண்
டோ கண்கள் துஞ்சுதலே

துஞ்சா முனிவரும் அல்லா
தவரு தொடரநின்ற
எஞ்சா பிறவி இடர்கடி
வான்இமை யோர்தமக்கும்
தஞ்சார்வி லாத தனிப்பெரு
மூர்த்திதன் மாயம்செவ்வே
நெஞ்சால் நினைப்பரி தால்வெண்ணெ
யூணென்னும் ஈனச்சொல்லே

ஈனச்சொல் லாயினு மாக
எறிதிரை வையம்முற்றும்
ஏன துருவாய் இடந்தபி
ரான்இருங் கற்பகம்சேர்
வான தவர்க்குமல் லாதவர
கும்மற்றெல் லாயவர்க்கும்
ஞான பிரானையல் லாலில்லை
நான் கண்ட நல்லதுவே

நல்லார் நவில்குரு கூர்நக
ரான்திரு மால்திருப்பேர்
வல்லார் அடிக்கண்ணி சூடிய
மாறன்விண் ணப்பஞ்செய்த
சொல்லார் தொடையலி றும்வல்
லார்அழு தார்பிறப்பாம்
பொல்லா அருவினை மாயவன்
சேற்றள்ளல் பொய்ந்நிலத்தே
நம்மாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ
ஸ்ரீமதே ராமானுஜாய நம
நம்மாழ்வார் அருளிச்செய்த
திருவாசிரியம்
தனியன்
அருளாள பெருமான் எம்பெருமானாரருளி செய்தது
கலிவிருத்தம்
கானியோர் தாம்வாழ கலியுகத்தே வந்துதித்து
ஆசிரி பாவதனால் அருமறைல் விரித்தானை
தேசிகனை பராங்குசனை திகழ்வகுள தாரானை
மாசடையா மனத்துவைத்து மறவாமல் வாழ்த்துதுமே
ஆசிரியப்பா

செக்கர்மா முகிலுடுத்து மிக்க செஞ்சுடர
பரிதிசூடி அஞ்சுடர் மதியம் பூண்டு
பலசுடர் புனைந்த பவள செவ்வாய்
திகழ்பசுஞ் சோதி மரகத குன்றம்
கடலோன் கைமிசை கண்வளர் வதுபோல்
பீதக ஆடை முடிபூண் முதலா
மேதகு பல்கலன் அணிந்து சோதி
வாயவும் கண்ணவும் சிவப்ப மீதிட்டு
பச்சை மேனி மிகப்ப கைப்ப
நச்சுவினை கவர்தலை அரவினமளி யேறி
எறிகடல்நடுவுள் அறிதுயில் அமர்ந்து
சிவனிய னிந்திரன் இவர்முத லனைத்தோர்
தெய்வ குழாங்கள் கைதொழ கிடந்த
தாமரை யுந்தி தனிப்பெரு நாயக
மூவுல களந்த சேவடி யோயே

உலகுபடை துண்ட எந்தை அறைகழல்
சுடர்ப்பூ தாமரை சூடுதற்கு அவாவா
ருயிருகி யுக்கநேரிய காதல்
அன்பி லின்பீன் தேறல் அமுத
வெள்ள தானாம் சிறப்புவிட்டு ஒருபொருட்கு
அசைவோர் அசைக திருவொடு மருவிய
இயற்கை மாயா பெருவிற லுலகம்
மூன்றி னொடுநல்வீடு பெறினும்
கொள்வதெண்ணுமோ தெள்ளியோர் குறிப்பே

குறிப்பில் கொண்டு நெறிப்பட உலகம்
மூன்றுடன் வணங்கு தோன்றுபுகழ் ஆணை
மெய்பெற நடாய தெய்வம் மூவரில்
முதல்வ னாகி சுடர்விளங் ககலத்து
வரைபுரை திரைபொர பெருவரை வெருவர
உருமுரல் ஒலிமலி நளிர்கடற் படவர
வரசுடல் தடவரை சுழற்றிய தனிமா
தெய்வ தடியவர கினிநாம் ஆளாகவே
இசையுங்கொல் ஊழிதோ றூழியோ வாதே

ஊழிதோ றூழி ஓவாது வாழியே
என்று யாம்தொழ இசையுங் கொல்லோ
யாவகை யுலகமும் யாவரு மில்லா
மேல்வரும் பெரும்பாழ காலத்து இரும்பொரு
கெல்லா மரும்பெறல் தனிவித்து ஒருதான்
ஆகி தெய்வ நான்மு கொழுமுளை
ஈன்று முக்கண் ஈசனொடு தேவுபல
தலிமூ வுலகம் விளைத்த உந்தி
மா கடவுள் மாமுத லடியே

மாமுதல் அடிப்போ தொன்றுகவிழ தலர்த்தி
மண்முழுதும் அகப்படுத்து ஒண்சுடர் அடிப்போது
ஒன்றுவிண் செலீஇ நான்முக புத்தேள்
நாடுவி துவப்ப வானவர் முறைமுறை
வழிபட நெறீஇ தாமரை காடு
மலர்க்கண் ணோடு கனிவா யுடையது
மாய்இரு நாயிறா யிரம்மலர தன்ன
கற்ப காவு பற்பல வன்ன
முடிதோ ளாயிரம் தழைத்த
நெடியோ கல்லதும் அடியதோ வுலகே

ஓஓ உலகின தியல்வே ஈன்றோ ளிருக்க
மணைநீ ராட்டி படைத்திட துண்டுமிழ
தளந்து தேர்ந்துல களிக்கும் முதற்பெருங்
கடவுள் நிற்ப புடைப்பல தானறி
தெய்வம் பேணுதல் தனாது
புல்லறி வாண்மை பொருந்த காட்டி
கொல்வன முதலா அல்லன முயலும்
இனைய செய்கை யின்பு துன்பளி
தொன்மா மா பிறவியுள் நீங்கா
பன்மா மா தழுந்துமா நளிர்ந்தே

நளிர்மதி சடையனும் நான்மு கடவுளும்
தளிரொளி யிமையவர் தலைவனும் முதலா
யாவகை யுலகமும் யாவரும் அகப்பட
நிலநீர் தீகால் சுடரிரு விசும்பும்
மலர்சுடர் பிறவும் சிறிதுடன் மயங்க
ஒருபொருள் புறப்பா டின்றி முழுவதும்
அகப்ப்பட கரந்துஓர் ஆலிலை சேர்ந்தவெம்
பெருமா மாயனை யல்லது
ஒருமா தெய்வம்மற் றுடையமோ யாமே
நம்மாழ்வார் திருவடிகளே சரணம்
நம்மாழ்வார் அருளிச்செய்த
பெரிய திருவந்தாதி
தனியன்
எம்புருமானார் அருளிச்செய்தது
முந்துற்ற நெஞ்சே முயற்றி தரித்துரைத்து
வந்தித்து வாயார வாழ்த்தியேசந்த
முருகூரும் சோலசூழ் மொய்பூம் பொருநல்
குருகூரன் மாறன் பேர் கூறு

முயற்றி சுமந்தெழுந்து முந்துற்ற நெஞ்சே
இயற்றுவாய் எம்மொடுநீ கூடிநயப்புடைய
நாவீன் தொடைக்கிளவி யுள்பொதிவோம் நற்பூவை
பூவீன்ற வண்ணன் புகழ்

புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம்
இகழ்வோம் மதிப்போம் மதியோம்இகழோம் மற்
றெங்கள் மால் செங்கண் சீறல்நீ தீவினையோம்
எங்கள் மால் கண்டாய் இவை

இவையன்றே நல்ல தீய
இவையென் றிவையறிவ னேலும்இவையெல்லாம்
என்னால் அடைப்புநீ கொண்ணா திறையவனே
என்னால் செயற்பால தென்

என்னின் மிகுபுகழார் யாவரே பின்னையும்மற்
றெண்ணில் மிகுபுகழேன் யானல்லால்என்ன
கருஞ்சோதி கண்ணன் கடல்புரையும் சீல
பெருஞ்சோதி கென்னெஞ்சா பெற்று

பெற்றதாய் நீயே பிறப்பித்த தந்தைநீ
மற்றையா ராவாரும் நீபேசில் எற்றேயோ
மாயமா மாயவளை மாயமுலை வாய்வைத்த
நீயம்மா காட்டும் நெறி

நெறிகாட்டி நீக்குதியோ நின்பால் கருமா
முறிமேனி காட்டுதியோ மேனாள்அறியோமை
எஞ்செய்வா னெண்ணினாய் கண்ணனே ஈதுரையாய்
எஞ்செய்தா லென்படோ ம் யாம்

யாமே அருவினையோம் சேயோம் என் நெஞ்சினார்
தாமே யணுக்கரா சார்ந்தொழிந்தார்பூமேய
செம்மாதை நின் மார்வில் சேர்வித்து பாரிடந்த
அம்மா நின் பா தருகு

அருகும் சுவடும் தெரிவுணரோம் அன்பே
பெருகும் மிகவிதுவென் பேசீர்பருகலாம்
பண்புடையீர் பாரளந்தீர் பாவியேம்கண் காண்பரிய
ண்புடையீர் ம்மை மக்கு

மக்கடியோம் என்றென்று நொந்துதுரைத்தென் மாலார்
தமக்கவர்த்தாம் சார்வரிய ரானால்எமக்கினி
யாதானு மாகிடுகாண் நெஞ்சே அவர்த்திறத்தே
யாதானும் சிந்தி திரு

இருநால்வர் ஈரைந்தின் மேலொருவர் எட்டோ
டொருநால்வர் ஓரிருவர் அல்லால் திருமாற்கு
யாமார் வணக்கமார் ஏபாவம் நன்னெஞ்சே
நாமா மிகவுடையோம் நாழ்

நாழால் அமர்முயன்ற வல்லரக்கன் இன்னுயிரை
வாழா வகைவலிதல் நின்வலியேஆழாத
பாரும்நீ வானும்நீ காலும்நீ தீயும்நீ
நீரும்நீ யாய்நின்ற நீ

நீயன்றே ஆழ்துயரில் வீழ்விப்பான் நின்றுழன்றாய்
போயொன்று சொல்லியென் போநெஞ்சேநீயென்றும்
காழ்த்துபதே சம்தரினும் கைகொள்ளாய் கண்ணன் தாள்
வாழ்த்துவதே கண்டாய் வழக்கு

வழக்கொடு மாறுகொள் அன்றடியார் வேண்ட
இழக்கவும் காண்டும் இறைவஇழபுண்டே
எம்மாட்கொண் டாகிலும் யான்வேண்ட என்கண்கள்
தம்மால்கா டுன்மேனி சாய்

சாயால் கரியானை யுள்ளறியா ராய்நெஞ்சே
பேயார் முலைகொடுத்தார் பேயராய்நீயார்போ
தேம்பூண் சுவைத்தூ னறிந்தறிந்தும் தீவினையாம்
பாம்பார்வா கைநீட்டல் பார்த்து

பார்த்தோர் எதிரிதா நெண்ய்சே படுதுயரம்
பேர்த்தோத பீடழிவாம் பேச்சில்லைஆர்த்தோதம்
தம்மேனி தாள்தடவ தாங்கிடந்து தம்முடைய
செம்மேனி கண்வளர்வார் சீர்

சீரால் பிறந்து சிறப்பால் வளராது
பேர்வாம னாகாக்கால் பேராளாமார்பார
புல்கிநீ யுண்டுமிழ்ந்த பூமிநீ ரேற்பரிதே
சொல்லுநீ யாமறி சூழ்ந்து

சூழ்ந்தடியார் வேண்டினக்கால் தோன்றாது விட்டாலும்
வாழ்ந்திடுவர் பின்னும்தம் வாய்திறவார்சூழ்ந்தெங்கும்
வாள்வரைகள் போலரக்கன் வந்தலைகள் தாமிடிய
தாள்வரைவில் லேந்தினார் தாம்

தாம்பாலா புண்டாலும் அத்தழும்பு தானிளக
பாம்பாலா புண்டுபா டுற்றாலும்சோம்பாதி
பல்லுருவை யெல்லாம் படர்வித்த வித்தா உன்
தொல்லுருவை யாரறிவார் சொல்லு

சொல்லில் குறையில்லை சூதறியா நெஞ்சமே
எல்லி பகலென்னா தெப்போதும்தொல்லை கண்
மாத்தானை கெல்லாமோர் ஐவரையே மாறாக
காத்தானை காண்டும்நீ காண்

காண புகிலறிவு கைக்கொண்ட நன்னெஞ்சம்
நாண படுமன்றே நாம்பேசில்மாணி
உருவாகி கொண்டுலகம் நீரேற்ற சீரான்
திருவாகம் தீண்டிற்று சென்று

சென்றங்கு வெந்நரகில் சேராமல் காப்பதற்கு
இன்றிங்கென் னெஞ்சால் இடுக்குண்டஅன்றங்கு
பாருருவும் பார்வளைத்த நீருருவும் கண்புதைய
காருருவன் தன் நிமிர்த்த கால்

காலே பொதத்திரிந்து கத்துவ ராமினநாள்
மாலார் குடிபுகுந்தா ரென்மனத்தேமேலால்
தருக்குமிடம் பாட்டினோடும் வல்வினையார் தாம் வீற்
றிருக்குமிடம் காணா திளைத்து

இளைப்பா யிளையாப்பாய் நெஞ்சமே சொன்னேன்
இளைக்க நமன்தமர்கள் பற்றிஇளைப்பெய்த
நாய்தந்து மோதாமல் நல்குவான் நல்காப்பான்
தாய்தந்தை எவ்வுயிர்க்கும் தான்

தானே தனித்தோன்றல் தன்னளப்பொன் றில்லாதான்
தானே பிறர்கட்ட்கும் தற்றோன்றல்தானே
இளைக்கிற்பார் கீழ்மேலாம் மீண்ட மைப்பானானால்
அளக்கிற்பார் பாரின் மேல் ஆர்

ஆரானும் ஆதானும் செய்ய அகலிடத்தை
ஆரா ததுதிருத்த லாவதேசீரார்
மனத்தலைவன் துன்பத்தை மாற்றினேன் வானோர்
இனத்தலைவன் கண்ணனால் யான்

யானுமென் னெஞ்சும் இசைந்தொழிந்தோம் வல்வினையை
கானும் மலையும் புகக்கடிவான்தானோர்
இருளன்ன மாமேனி எம்மிறையார் தந்த
அருளென்னும் தண்டால் அடித்து

அடியால் படிகடந்த முத்தோஅ தன்றேல்
முடியால் விசும்பளந்த முத்தோநெடியாய்
செறிகழல்கள் தாள்நிமிர்த்து சென்றுலக மெல்லாம்
அறிகிலாமால் நீயளந்த அன்று

அன்றேநங் கண்காணும் ஆழியான் காருருவம்
இன்றேநாம் காணா திருப்பதுவும்என்றேனும்
கட்கண்ணால் காணாத அவ்வுருவை நெஞ்சென்னும்
உட்கண்ணால் காணு முணர்ந்து

உணர ஒருவர கெளியனே செவ்வே
இணரும் துழாயலங்கல் எந்தைஉணர
தனக்கெளிய ரெவ்வளவர் அவ்வளவ னானால்
எனக்கெளியன் எம்ம்பெருமான் இங்கு

இங்கில்லை பண்டுபோல் வீற்றிருத்தல் என்னுடைய
செங்கண்மால் சீர்க்கும் சிறிதுள்ளம்அங்கே
மடியடக்கி நிற்பதனில் வல்வினையார் தாம்மீண்
டடியெடுப்ப தன்றோ அழகு

அழகு மறிவோமாய் வல்வினையும் தீர்ப்பான்
நிழலும் அடிதோறும் ஆனோம்சுழல
குடங்கள்தலை மீதெடுத்து கொண்டாடி அன்ற
தடங்கடலை மேயார் தமக்கு

தமக்கடிமை வேண்டுவோர் தாமோ தரனார்
தமக்கடிமை செய்யென்றால் செய்யாதுஎமக்கென்று
தாம்செய்யும் தீவினைக்கே தாழ்வுறுவர் நெஞ்சினார்
யாஞ்செய்வ திவ்விடத்திங் கியாது

யாதானும் ஒன்றறியில் தன்னுகக்கில் என்கொலோ
யாதானும் நேர்ந்தணுகா வாறுதான்யாதானும்
தேறுமா செய்யா அசுரர்களை நேமியால்
பாறுபா றாக்கினான் பால்

பாலாழி நீகிடக்கும் பண்பை யாம் கேட்டேயும்
காலாழும் நெஞ்சழியும் கண்சுழலும்நீலாழி
சோதியாய் ஆதியாய் தொல்வினையெம் பால்கடியும்
நீதியாய் நிற்சார்ந்து நின்று

நின்றும் இருந்தும் கிடந்தும் திரிதந்தும்
ஒன்றுமோ ஆற்றானென் னெஞ்சகலான்அன்றங்கை
வன்புடையால் பொன்பெயரோன் வாய்தகர்த்து மார் விடந்தான்
அன்புடைய னன்றே யவன்

அவனாம் இவனாம் உவனாம் மற் றும்பர்
வனாம் அவனென் றிராதேஅவனாம்
அவனே எனத்தெளிந்து கண்ணனுக்கே தீர்ந்தால்
அவனே எவனேலும் ஆம்

ஆமா றறிவுடையார் ஆவ தரிதன்றே
நாமே அதுவுடையோம் நன்னெஞ்சேபூமேய்
மதுகரமே தண்டுழாய் மாலாரை வாழ்த்தாம்
அதுகரமே அன்பால் அமை

அமைக்கும் பொழுதுண்டே யாராயில் நெஞ்சே
இமைக்கும் பொழுதும் இடைச்சிகுமைத்திறங்கள்
ஏசியே யாயினும் ஈன்துழாய் மாயனையே
பேசியே போக்காய் பிழை

பிழைக்க முயன்றோமோ நெஞ்சமே பேசாய்
தழைக்கும் துழாய்மார்வன் றன்னைஅழைத்தொருகால்
போயுபகா ரம்பொலி கொள்ளாது அவன் புகழே
வாயுபகா ரம்கொண்ட வாய்ப்பு

வாய்ப்போ இதுவொப்ப மற்றில்லை வாநெஞ்சே
போய்ப்போஒய் வெந்நரகில் பூவியேல்தீப்பால
பேய்த்தாய் உயிர்க்களா பாலுண்டு அவளுயிரை
மாய்த்தானை வாழ்தே வலி

வலியம் எனநினைந்து வந்தெதிர்ந்த மல்லர்
வலிய முடியிடிய வாங்கிவலியநின்
பொன்னாழி கையால் புடைத்திடுதி கீளாதே
பன்னாளும் நிற்குமி பார்

பாருண்டான் பாருமிழ்ந்தான் பாரிடந்தான் பாரளந்தான்
பாரிடம் முன்படைத்தா னென்பரால்பாரிடம்
ஆவானும் தானானா லாரிடமே மற்றொருவர்க்கு
ஆவான் பூகாவால் அவை

அவய மெனநினைந்து வந்தசுரர் பாலே
நவையை நளிர்விப்பான் றன்னைகவையில்
மனத்துயர வைத்திருந்து வாழ்த்தாதார குண்டோ
மனத்துயரை மாய்க்கும் வகை

வகைசேர்ந்த நன்னெஞ்சும் நாவுடைய வாயும்
மிகவாய்ந்து வீழா எனிலும்மிகவாய்ந்து
மாலைத்தாம் வாழ்த்தா திருப்பர் இதுவன்றே
மேலைத்தாம் செய்யும் வினை

வினையார் தரமுயலும் வெம்மையே யஞ்சி
தினையாம் சிறிதளவும் செல்லநினையாது
வாசகதால் லேத்தினேன் வானோர் தொழுதிறைஞ்சும்
நாயகத்தான் பொன்னடிகள் நான்

நான்கூறும் கூற்றவ தித்தனையே நாணாளும்
தேங்கோத நீருருவன் செங்கண்மால்நீங்காத
மாகதியாம் வெந்நரகில் சேராமல் காப்பதற்கு
நீகதியா நெஞ்சே நினை

நினித்திறைஞ்சி மானிடவர் ஒன்றிரப்ப ரென்றே
நினைத்திடவும் வேண்டாநீ நேரேநினைத்திறஞ்ச
எவ்வளவ ரெவ்விடத்தோர் மாலே அதுதானும்
எவ்வளவு முண்டோ எமக்கு

எமக்கியாம் விண்ணாட்டு குச்சமதாம் வீட்டை
அமைத்திருந்தோம் அஃதன்றே யாமாறுஅமை பொலிந்த
மென்தோளி காரணமா வெங்கோட்டே றேழுடனே
கொன்றானை யேமனத்து கொண்டு

கொண்டல்தான் மால்வரைதான் மாகடல்தான் கூரிருள்தான்
வண்டறா பூவதான் மற்றுத்தான்கண்டநாள்
காருருவம் காண்தோறும் நெஞ்சோடும் கண்ணனார்
பேருருவென் றெம்மை பிரிந்து

பிரிந்தொன்று நோக்காது தம்முடைய பின்னே
திரிந்துழுலும் சிந்தனையார் தம்மைபுரிந்தொருகால்
ஆவா எனவிரங்கார் அந்தோ வலிதேகொல்
மாவை பிளந்தார் மனம்

மனவாளும் ஓரைவர் வன்குறும்பர் தம்மை
சினமாள்வி தோரிடத்தே சேர்த்துபுனமேய
தண்டுழா யானடியே தான்காணும் அஃதன்றே
வண்டுழாம் சீராக்கு மாண்பு

மாண்பாவி தந்நான்று மண்ணிரந்தான் மாயவள்நஞ்
சூண்பாவி துண்டான தோருருவம்காண்பான்நங்
கண்ணவா மற்றொன்று காணுறா சீர்பரவா
துண்ணவாய் தானுறுமோ ஒன்று

ஒன்றுண்டு செங்கண்மால் யானுரைப்பது உன்னடியார
கெஞ்செய்வ னென்றே யிரித்திநீநின்புகழில்
வைகும்தம் சிந்தையிலும் மற்றினிதோ நீயவர்க்கு
வைகுந்த மென்றருளும் வான்

வானோ மறிகடலோ மாருதமோ தீயகமோ
கானோ ஒருங்கிற்றும் கண்டிலமால் ஆனீன்ற
கன்றுயர தாமெறிந்து காயுதிர்த்தார் தாள்பணிந்தோம்
வன்துயரை யாவா மருங்கு

மருங்கோத மோதும் மணிநா கணையார்
மருங்கே வரவரிய ரேலும்ஒருங்கே
எமக்கவரை காணலா மெப்போது முள்ளால்
மனக்கவலை தீர்ப்பார் வரவு

வரவாறொன் றில்லையால் வாழ்வினிதால் எல்லே
ஒருவா றொருவன் புகவாறுஉருமாறும்
ஆயவர்தாம் சேயவர்தாம் அன்றுலகம் தாயவர்தாம்
மாயவர்தாம் காட்டும் வழி

வழித்தங்கு வல்வினையை மாற்றானோ நெஞ்சே
தழீஇக்கொண்டு போரவுணன் றன்னைசுழித்தெங்கும்
தாழ்விடங்கள் பற்றி புலால்வெள்ளம் தானுகள
வாழ்வடங்க மார்விடந்த மால்

மாலே படிச்சோதி மாற்றேல் இனியுனது
பாலேபோல் சீரில் புழுத்தொழிந்தேன்மேலால்
பிறப்பின்மை பெற்றடிக்கீழ குற்றேவ லன்று
மறப்பின்மை யான்வேண்டும் மாடு

மாடே வரப்பெறுவ ராமென்றே வல்வினையார்
காடானும் ஆதானும் கைகொள்ளார்ஊடேபோ
போரோதம் சிந்துதிரை கண்வளரும் பேராளன்
பேரோத சிந்திக்க பேர்ந்து

பேர்ந்தொன்று நோக்காது பின்னிற்பாய் நில்லாப்பாய்
ஈன்துழாய் மாயனையே என்னெஞ்சே பேர்ந்தெங்கும்
தொல்லைமா வெந்நரகில் சேராமல் காப்பதற்கு
இல்லைகாண் மற்றோர் இறை

இறைமுறையான் சேவடிமேல் மண்ணளந்த அந்நாள்
மறைமுறையால் வானாடர் கூடிமுறைமுறையின்
தாதிலகு பூத்தெளித்தால் ஒவ்வாதே தாழ்விசும்பின்
மீதிலகி தாங்கிடக்கும் மீன்

மீனென்னும் கம்பில் வெறியென்னும் வெள்ளிவேய்
வானென்னும் கேடிலா வான்குடைக்குதானோர்
மணிக்காம்பு போல்நிமிர்ந்து மண்ணளந்தான் நங்கள்
பிணிக்காம் பெருமருந்து பின்

பின்துரக்கும் காற்றிழந்த சூல்கொண்டல் பேர்ந்தும் போய்
வன்திரைக்கண் வந்தணைந்த வாய்மைத்தே அன்று
திருச்செய்ய நேமியான் தீயரக்கி மூக்கும்
பருச்செவியு மீர்ந்த பரன்

பரனாம் அவனாதல் பாவிப்ப ராகில்
உரனா லொருமூன்று போதும்மரமேழன்
றெய்தானை புள்ளின்வாய் கீண்டானையேஅமரர்
கைதான் தொழாவே கலந்து

கலந்து நலியும் கடுந்துயரை நெஞ்சே
மலங்க அடித்து மடிப்பான்விலங்கல்போல்
தொன்மாலை கேசவனை நாரணனை மாதவனை
சொன்மாலை யெப்பொழுதும் சூட்டு

சூட்டாய நேமியான் தொல்லரக்கன் இன்னுயிரை
மாட்டே துயரிழைத்த மாயவனைஈட்ட
வெறிகொண்ட தண்டுழாய் வேதியனை நெஞ்சே
அறிகண்டாய் சொன்னேன் அது

அதுவோநன் ரென்றங் கமருலகோ வேண்டில்
அதுவோ பொருளில்லை யன்றே அதுவொழிந்து
மண்ணிறாள் வேனெனிலும் கூடும் மடநெஞ்சே
கண்ணன் தாள் வாழ்த்துவதே கல்

கல்லும் கனைகடலும் வைகுந்த வானாடும்
புல்லென் றழிந்தனகொல் ஏபாவம்வெல்ல
நெடியான் நிறங்கரியான் உள்புகுந்து நீங்கான்
அடியேன துள்ள தகம்

அகம்சிவந்த கண்ணினராய் வல்வினைய ராவார்
முகம்சிதைவ ராமன்றே முக்கிமிகுந்திருமால்
சீர்க்கடலை யுள்பொதிந்த சிந்தனையேன் றன்னை
ஆர்க்கடலாம் செவ்வே யடர்த்து

அடர்ப்பொன் முடியானை யாயிரம்பே ரானை
சுடர்கொள் சுடராழி யானைஇடர்கடியும்
மாதா பிதுவாக வைத்தேன் எனதுளலே
யாதாகில் யாதே இனி

இனிநின்று நின்பெருமை யானுரைப்ப தென்னே
தனிநின்ற சார்விலா மூர்த்திபனிநீர்
அகத்துலவு செஞ்சடையான் ஆகத்தான் நான்கு
முகத்தான்நின் உந்தி முதல்

முதலாம் திருவுருவம் மூன்றென்பர் ஒன்றே
முதலாகும் மூன்றுக்கும் மென்பர்முதல்வா
நிகரிலகு காருருவா நின்னகத்த தன்றே
புகரிலகு தாமரையின் பூ

பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற
காவி மலரென்றும் காண்தோறும் பாவியேன்
மெல்லாவி மெய்மிகவே பூரிக்கும் அவ்வவை
எல்லாம் பிரானுருவே என்று

என்றும் ஒருநாள் ஒழியாமை யானிரந்தால்
ஒன்றும் இரங்கார் உருக்காட்டார்குன்று
குடையாக ஆகாத்த கோவலனார் நெஞ்சே
புடைதான் பெரிதே புவி

புவியும் இருவிசும்பும் நினகத்த நீயென்
செவியின் வழிபுகுந்தென் னுள்ளாய்அவிவின்றி
யான்பெரியன் நீபெரியை என்பதனை யாரறிவார்
ஊன்பருகு நேமியாய் உள்ளு

உள்ளிலும் உள்ள தடிக்கும் வினைப்படலம்
விள்ள விழித்துன்னை மெய்யுற்றால்உள்ள
உலகளவு யானும் உளனாவன் என்கொல்
உலகளந்த மூர்த்தி உரை

உரைக்கிலோர் சுற்றத்தார் உற்றாரென் றாரே
இரைக்குங் கடற்கிடந்த எந்தாய்உரைப்பெல்லாம்
நின்னன்றி மற்றிலேன் கண்டாய் எனதுயிர்க்கோர்
சொல்நன்றி யாகும் துணை

துணைநாள் பெருங்கிளையும் தொல்குலமும் சுற்ற
திணைநாளு மின்புடைத்தா மேலும் கணைநாணில்
ஓவா தொழில்சார்ங்கன் தொல்சீரை நன்னெஞ்சே
ஓவாத வூணாக உண்

உண்ணாட்டு தேசன்றே ஊழ்வினையை யஞ்சுமே
விண்ணாட்டை யொன்றாக மெச்சுமேமண்ணாட்டில்
ஆராகி எவ்விழிவிற் றானாலும் ஆழியங்கை
பேராயற் காளாம் பிறப்பு

பிறப்பிறப்பு மூப்பு பிணிதுறந்து பின்னும்
இறக்கவும் இன்புடைத்தா மேலும்மறப்பெல்லாம்
ஏதமே யென்றல்லால் எண்ணுவனே மண்ணளந்தான்
பாதமே யேத்தா பகல்

பகலிரா என்பதுவும் பாவியாது எம்மை
இகல்செய் திருபொழுதும் ஆள்வர்தகவா
தொழும்பர் இவர் சீர்க்கும் துணையிலர் என் றோரார்
செழும்பரவை மேயார் தெரிந்து

தெரிந்துணர்வொன் றின்மையால் தீவினையேன் வாளா
இருந்தொழிந்தேன் கீழ்நாள்கள் எல்லாம்கரந்துருவில்
அம்மனை அந்நான்று பிந்தொடர்ந்த ஆழியங்கை
அம்மானை யேத்தா தயர்ந்து

அயர்ப்பாய் அயராப்பாய நெஞ்சமே சொன்னேன்
உயப்போம் நெறியிதுவே கண்டாய் செயற்பால
அல்லவே செய்கிறுதி நெஞ்சமே அஞ்சினேன்
மல்லர்நாள் வவ்வினனை வாழ்த்து

வாழ்த்தி அவனடியை பூப்புனைந்து நிந்தலையை
தாழ்த்திருகை கூப்பென்றால் கூப்பாதுபாழ்த்தவிதி
எங்குற்றாய் என்றவனை ஏத்தாதென் னெஞ்சமே
தங்கத்தா னாமேலும் தங்கு

தங்கா முயற்றியவா தாழ்விசும்பின் மீதுபாய்ந்து
எங்கேபு கெத்தவம்செய் திட்டனகொல்பொங்கோ
தண்ணம்பால் வேலைவா கண்வளரும் என்னுடைய
கண்ணன்பால் நன்னிறங்கொள் கார்

கார்க்கலந்த மேனியான் கைகலந்த ஆழியான்
பார்க்கலந்த வல்வயிற்றான் பாம்பணையான்சீர்கலந்த
சொல்நினைந்து போக்காரேல் சூழ்வினையின் ஆழ்துயரை
என்நினைந்து போக்குவரி போது

இப்போதும் இன்னும் இனிச்சிறிது நின்றாலும்
எப்போது மீதேசொல் என்னெஞ்சேஎப்போதும்
கைகழலா நேமியான் நம்மேல் வினைகடிவான்
மெய்கழலே ஏத்த முயல்
நம்மாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ
ஸ்ரீமதே ராமானுஜாய நம
திருமங்கையாழ்வார் அருளிச்செய்த
திருவெழுகூற்றிருக்கை
தனியன்கள்
எம்பெருமானார் அருளிச்செய்தவை
வாழிபரகாலன் வாழிகலிகன்றி
வாழி குறையலூர் வாழ்வேந்தன் வாழியரோ
மாயோனை வாள்வலியால் மந்திரங்கொள் மங்கையர்கோன்
தூயோன் சுடர்மான வேல்
சீரார் திருவெழு கூற்றிரு கையென்னும் செந்தமிழால்
ஆரா வமுதன் குடந்தை பிரான்றன் அடியிணைக்கீழ்
ஏரார் மறைப்பொரு ளெல்லா மெடுத்திவ் வுலகுய்யவே
சேராமற் சொன்ன அருள்மாரி பாதம் துணைநமக்கே

ஒருபே ருந்தி யிருமலர தவிசில்
ஒருமுறை அயனை யீன்றனை
இருசுடர் மீதினி லியங்கா மும்மதிள்
இலங்கை யிருகால் வளைய ஒருசிலை
ஒன்றிய ஈரெயிற் றழல்வாய் வாளியில்
அட்டனை மூவடி நானிலம் வேண்டி
முப்புரி லொடு மானுரி யிலங்கும்
மார்வினில் இருபிற பொருமா ணாகி
ஒருமுறை யீரடிமூவுல களந்தானை
நாற்றிசை நடுங்க அஞ்சிறை பறவை
ஏறி நால்வாய் மு திருசெவி
ஒருதனி வேழ தரந்தையை ஒருநாள்
இருநீர் மடுவுள் தீர்த்தனை முத்தீ
நான்மறை ஐவகை வேள்வி அறுதொழில்
அந்தணர் வணங்கும் தன்மையைஐம்புலன்
அகத்தினுள் செறுத்து நான்குடன் அடக்கி
முக்குண திரண்டவை யகற்றி ஒன்றினில்
ஒன்றி நின்றுஆங் கிருபிற பறுப்போர்
அறியும் தன்மையை முக்கண் நாற்றோள்
ஐவாய் அரவோடு ஆறுபொதி சடையோன்
அறிவரு தன்மை பெருமையுள் நின்றனை
ஏழுல கெயிற்றினில் கொண்டனை கூறிய
அறுசுவை பயனும் ஆயினை சுடர்விடும்
ஐம்படை அங்கையுள் அமர்ந்தனை சுந்தர
நாற்றோள் முந்நீர் வண்ணநின் ஈரடி
ஒன்றிய மனத்தால் ஒருமதி முகத்து
மங்கையர் இருவரும் மலரன அங்கையில்
முப்பொழுதும் வருட அறிதுயில் அமர்ந்தனை
நெறிமுறை நால்வகை வருணமும் ஆயினை
மேதகும் ஐம்பெரும் பூதமும் நீயே
அறுபதம் முரலும் கூந்தல் காரணம்
ஏழ்விடை யடங்க செற்றனை அறுவகை
சமயமும் அறிவரு நிலையினை ஐம்பால்
ஓதியை ஆக திருத்தினை அறமுதல்
நான்க வையாய் மூர்த்தி மூன்றாய்
இருவகை பயனாய் ஒன்றாய் விரிந்து
நின்றனை குன்றா மதுமலர சோலை
வண்கொடி படப்பை வருபுனல் பொன்னி
மாமணி யலைக்கும் செந்நெலொண் கழனி
திகழ்வன முடுத்த கற்போர் புரிசை
கனக மாளிகை நிமிர்கொடி விசும்பில்
இளம்பிறை துவக்கும் செல்வம் மல்குதென்
திருக்குடந்தை அந்தணர் மந்திர மொழியுடன்
வணங்க ஆடர வமளியில் அறிதுயில்
அமர்ந்த பரமநின் அடியிணை பணிவன்
வருமிடர் அகல மாற்றோ வினையே
திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்
எம்பெருமானார் திருவடிகளே சரணம்
திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த
சிறிய திருமடல்
ஸ்ரீமதே ராமனுஜாய நம
ஸ்ரீமதே நிகமாண்ட மக தேசிகாய நம
ராமானுஜ தய பாற்றம் ஜ்ன்யன வ்ய்ராக்ய ப்கூஷணம்
ஸ்ரீ வெங்கட நாதர்யம் வந்தெ வெதண்ட டெசிகம்
லக்ஷ்மி நாத சமாரம்ப்காம் யாமுன மத்யமாம்
அச்மதாசார்ய பர்யந்தாம் வந்தெ குரு பரம்பராம்
யொனொட்யமச்யட படாம்புஜ யுக்ம ருக்ம
வ்யாமொகடச்ததிதராணி த்ரிணாய மெனெ
அச்மத்குரொப்கக்கவடொச்ய டயைக சிந்தொ
ராமானுஜச்ய சரணொஉ சரணம் ப்ரபத்யெ
மாதா பிதா யுவதயச்தனயா விப்குதி
சர்வம் யதெவ நியமென மதன்வயானாம்
ஆத்யச்தனக்குலபதெர் வகுளாப்கிராமம்
ஸ்ரீ ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூஒர்த்னம்
பூதம் சகஷ்ய மகதாக்வய ப்கட்டனாத
ஸ்ரீப்கக்திசார குலசெக்கர யொகிவாகான்
ப்கக்தண்க்ரிகெணு பரகால யடீன்றமிச்ரான்
ஸ்ரீமட்பராங்குசமுனிம் பரணதொச்மி நிட்யம்
தனியன்
முள்ளி செழுமலரொ தாரன் முளைமதியம்
கொல்லிக்கென்னுள்ளம் கொதியாமெ வள்ளல்
திருவாளன் சீர்க்கலியன் கார்க்கலியை வெட்டி
மருவாளன் தந்தான் மடல்


காரார்வரை கொங்கை கண்ணர் கடலுடுக்கை
சீரர்சுடர் சுட்டி செண்களுழிப்பெராற்று
பெராரமார்பின் பெருமாமழைக்குந்தல்
நீராரவெலி நிலமண்கையென்னும்
பாரூர் சொலப்பட்டமூன்னன்றெ அம்மூன்றும்
ஆரயில்தானெ அரம்பொருளின்பமென்று
ஆராரிவற்றினிடையதனை எய்துவார்
சீரார் இருகலயும் எய்துவர் சிக்கெனமது
ஆரானுமுண்டெம்பால் என்பதுதானதுவும்
ஒராமையன்றெ உலகதார் சொல்லும்சொல்
ஒராமையாமாரதுவுரைக்கெங்கௌ஑மெ
காரார்ப்புரவியெழ் பூந்ததனியாழி
தெரார் நிரைகதிரொன் மண்டலதைக்கெண்டு புக்கு
ஆராவமுதமண்கய்தி அதுனின்றும்
வாரதொழிவதன்னுண்டு அகுனிர்க்க
யெரார்முயல்விட்டு காக்கைப்பின் பொவதெ
எராயிளமுலயீர் எந்தனக்குத்ததுதான்
காரார்க்குழலெடுதுக்கட்டி கதிர்முலயை
வாராரவீக்கி மணிமெகலைதிருத்தி
ஆராரயில்வெர்க்கணஞ்ஜனத்தின் நீரணிந்து
சீரார் செழும்பந்து கொண்டடியான் என்னேன் நான்
நீரார் கமலம்பொல் செங்கன்மால் என்றுருவன்
பாரொர்களெல்லாம் மகிழ பரைகரண்க
சீரார் குடமரியண்டெந்தி செழுந்தெருவெ
ஆரானெனைச்சொல்லி ஆடுமதுகண்டு
ஏராரிள்முலயார் என்னயிரும் அல்லரும்
வாராயொவென்னர்க்கு சென்றென் என்வல்வினையால்
காரார்மணினிரமும் கைவ்ளயும் காணேன் நான்
ஆரானும் சொல்லிந்த்தும் கொள்ளேன் அரிவழிந்து
தீரார்வுடம்பொடு பெதுருருவெ கண்டிரண்கி
ஏராகிளிக்கிளவி எம்ம்னைத்தான்வந்து என்னை
சீரார் செழும்புழுதிக்காப்பிட்டு செங்குரிஞ்ஜி
தாரார் நௌமாலை சாதர்க்கு
தான்பின்னும் நெராதன ஒன்னுனேர்ந்தான் அதனாலம்
தெராதெஞ்சிந்தனொஇ தீராதென்பெதுரவு
வாராதுமாமை அதுகண்டுமதாண்கெ
ஆரானும் மூதரியும் அம்மனை மார்ச்சொல்லுவார்
பாரொர்ச்சொலப்படும் கட்டுப்படித்திரேல்
ஆரானும் மெய்படுவன் நென்றர் அதுகேட்டு
காரார் குழர்க்கொண்டை கட்டுவிசி கட்டெரி
சீரார் சுளகில் சிலனெல் பிடிதெரியா
வெராவிதிர்விதிரா மெய்சிலிரக்கைமொவ
பெராயிரமுடயான் நென்றாள் பெர்த்தெயும்
காரார் திருமெனி காடினாள் கைய்யதுவும்
சீரார் வலம்புரியெ யென்றள் திருதுழா
தாரார்னருமாலை கட்டுரைதாள் கட்டுரையா
நீரெதுமண்ஜேல்மின் ம்மகளை நொஇசெய்தான்
ஆரானுமல்லன் அரிந்தெனவனை நான்
கூரார்வெல்கண்ணீர் உமக்கரி கூருகெனொ
ஆராலிவய்யம் அடியளப்புண்டதுதான்
ஆரால் இலங்கை பொடிபொடியா வீழ்ந்தது மத்து
ஆராலெ கன்மாரி கார்த்ததுதான் ஆழினீர்
ஆரால் கடைந்திட ப்பட்டது அவன் காண்மின்
ஊரானிரயை மெய்துலகெல்லாம் உண்டுமிழ்ண்தும்
ஆராத தன்மயனாஇ ஆண்கொருனாள் ஆய்ப்பாடி
சீரார்க்கலயல்குல் சீரடிச்செந்துவர்வை
வாரார் வனமுலயாள் மத்தார பற்றிகொண்டு
ஏராரிடை நோவ எத்தனையோர் போதுமாஇ
சீரார் தயிர் கடைந்து வெண்ணை திரண்டதணை
வேரார் தல் மடவாள் வேரோர் கலத்திட்டு
நாராருரியேற்றி நங்கமயயைத்ததனை
போரார் வேர்க்கண்மடவாள் போந்தனையும்பொய்யுரக்கம்
ஓராதவன்பொல் உரண்கியரிவுற்று
தாரார் தடந்தொள்கள் உள்ளளவும் கைனீட்டீ
ஆராத வெண்ணைவிழுண்கி அருகிருந்த
மோரார் குடமுருட்டி முங்கிடந்த தானத்தே
ஓராதவன்பொல் கிடந்தானை கண்டவளும்
வாராத்தான் வைதது காணாள் வயிரடுத்திண்கு
ஆஅரார் புகுதுவார் ஆஇய்யரிவரல்லால்
நீராமிதுசேஇதீர் என்றோர் நெடுண்கைற்றல்
ஊரார்களெல்லாரும் காணௌரலோடெ
தீராவெகுளியளாஇ சிக்கெனவார்த்தடிப்ப
ஆராவயிதினோடர்த்தாதான் அன்னியும்
நீரார் டும்கயத்தை சென்னலைக்க நின்னுரப்பி
ஒராயிரம்பணவெண் கொவியல்னாகதை
வாராயெனக்கெண்ரு மததன் மதகது
சீரார் திருவடியால்பயிந்தான் தஞ்சீதய்க்கு
நேராவனென்றோர் நிசசரிதான் வந்தளை
கூரர்ந்த வாளால் கொடிமூக்கும் காதிரண்டும்
ஈராவிடுத்தவட்கும் மூர்த்தூனை வென்னரகம்
செராவகையெ சிலைகுனித்தன் செந்துவர்வல்
வாரார் வனமுலயால் வைதெவி காரணமா
எரார்த்தடந்தொளிராவணனை ஈரயிந்து
சீரார்சிரமருது செத்துகந்த ச்ங்கண்மால்
போரார்னெடுவேலோன் பொன்பெயரோன் நாகதை
கூரர்ந்தவள்ளுகிரால் கீண்டு குடல் மாலை
சீரர் திருமார்ப்பிம் மெல்கட்டி செங்குருதி
சொர்ரா கிண்டந்தனை குண்குமத்தொள் கொட்டி
ஆரவெழுந்தன் அரியுருவாஇ
அன்னியும்பெர் வாமனனாகிய காலது
மூவடிமண் தாராயெனகென்று வேண்டிச்சலதினால்
நீரெதுலகெல்லாம் நின்னளந்தான் மாவலியை
ஆராதபொரில் அசுரர்களும் தானுமாஇ
காரார்வரைனட்டு நாகம் கய்ராக
பேராமல் தாண்கி கடைண்தான் திருதுழய்
தாரர்ந்த மார்வன் தடமால்வரய் போலும்
போரானை பொய்கைவாஇ கொட்பட்டு நின்னலரி
நீராமலர்க்கமலம் கொண்டொர்னெடும்கய்யால்
நாராயணா வோ மணிவண்ண நாகனையாய்
வாரய் யென்னாரிடரய் நீக்காய் எனவுகண்டு
தீரத சீர்த்ததால் சென்றிரண்டு கூரக
ஈராவதனை இடர்க்கடிண்தான் எம்புருமான்
பேராயிரமுடயான் பேய்பெண்டீர்னும்மகளை
தீரானொஇ செய்தானெனவுரைதாள் சிக்கனுமத்து
ஆரானும் அல்லாமை கேட்டெண்கள் அம்மனையும்
போரார்வெர்க்கண்ணீர் அவனாகில் பூந்துழாஇ
தாராதொழியுமே தன்னடிச்சியல்லலே மத்து
ஆரானுமல்லனே யென்னொழிண்தாள் நானவனை
காரார்த்திருமேனி கண்டதுவே காரணமா
பேராபிதற்ற திரிதருவன் பின்னையும்
ஈராப்புகுதலும் இவ்வுடலை தன்வாடை
சோராமருக்கும் வகையரியேன் சூழ் குழலாஅர்
ஆரானுமேசுவர் என்னுமதன் பழியெ
வாராமல் காப்பதர்க்கு வளாயிருந்தொழிந்தேன்
வாராஇ மடனெஞ்சே வந்து மணிவண்ணன்
சீரார் திடுத்துழாஇ மாலை நமக்க்ருளி
தாராந்தருமென்று இரண்டத்திலொன்றதனை
ஆரானுமொன்னதார் கேளாமே சொன்னக்கால்
ஆராயுமேலும் மணிகேட்டதன்றெனிலும்
போராதொழியாதெ போந்திடுனீயென்றேற்கு
காரார் கடல் வண்ணன் பின்பொல நெஞ்சமும்
வாராதே யென்னை மரந்ததுதான் வல்வினையீன்
ஊரார் உகப்பதே ஆயினேன் மற்றெனக்கிங்கு
ஆராஇவாரில்லை அழல்வாஇ மெழுகு போல்
நீரை உருகும் என்னாவி நெடுண்கண்கல்
ஊரார் உரண்கிலும் தானுரண்க உட்டமந்தன்
பேராயினவே பிதத்துவன் பின்னையும்
காரார் கடல் பொலும் காமத்தராயினார்
ஆரேபொல்லாமை அணிவார் அதுனிற்க
ஆரானுமாதானும் அல்லலவள்காணீர்
வாரார் வனமுலை வாசமததை வென்று
ஆரானும் சொல்லப்படுவாள் அவளும்தன்
பேராயமெல்லாம் ஒழியப்பெருந்தெருவெ
தாரார் தடந்தொள் தளைக்கலன்பின்போனாள்
ஊராரிகழ்ண்திட பட்டாளே மற்றெனக்கிங்கு
ஆரானும் கர்ப்பிப்பார் நாயகரே நானவனை
காரார் திருமேனி காணுமலவும்போஇ
சீரார் திருவேண்கடமே திருக்கொவல்
ஊரே மதிழ் கச்சி ஊரகமே பேரகமே
பேராமனுதிருத்தான் வெள்ளரையே வெஃஆவே
பேராலிதண்கால் நரையூர் திருப்புலியூர்
ஆராமம் சூழ்ந்தவரண்கம் கணமண்கை
காரார் மணினிர கண்ணனூர் விண்ணகரம்
சீரார் கணபுரம் சேரை திருவழுந்தூர்
காரார்க்குதந்தை கடிகை கடல்மல்லை
ஏரார் பொழில் சூழ் இடவந்தை நீர்மலை
சீராரும் மாலிரும் சொலை திரு மூகூர்
பாரோர் புகழும் வதரி வடமதுரை
ஊராயவெல்லாம் ஒழியமெ நானவனை
ஓரானை கொம்பொசித்தொரானை கோள் விடுத்த
சீரானை செண்கணெடியானை தேந்துழாஇ
தாரானை தாமரைபொல் கண்ணனை
யெண்ணருஞ்சீர் ப்பேராயிரமும் பிதற்றி பெருந்தெருவெ
ஊராரிகழிலும் ஊராதொழியேன் நான்
வாரார் பூம் பெண்ணை மடல்
ஸ்ரீ
ஸ்ரீமதே ராமானுஜாய நம
திருமங்கையாழ்வார் அருளிச்செய்த
பெரிய திருமடல்
தனியன்
பிள்ளை திருநறையூர் அரையர் அருளிச்செய்தது
பொன்னுலகில் வானவரும் பூமகளும் போற்றிசெய்யும்
நன்னுதலீர் நம்பி நறையூரர் மன்னுலகில்
என்னிலைமை கண்டு மிரங்காரே யாமாகில்
மன்னு மடலூர்வன் வந்து
மூளும் பழவினையெல்லாம அகல முனிந்தருளி
ஆளும் குறையல் அருள் மாரி அம்பொன் மதில் அரங்கர்
தாள் என்றி மற்று ஓர் சரண் இல்லை என்று தரும் தடக்கை
வாளும் பலகையுமே அடியென் என் நெஞ்சம் மன்னியதே
திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த
பெரிய திருமடல்
கலி வெண்பா

மன்னிய பல்பொறிசேர் ஆயிரவாய் வாளரவின்
சென்னி மணிக்குடுமி தெய்வ சுடர்நடுவுள்
மன்னிய நாக தணைமேலோர் மாமலைபோல்
மின்னும் மணிமகர குண்டலங்கள் வில்வீச

துன்னிய தாரகையின் பேரொளிசேர் ஆகாசம்
என்னும் விதானத்தைன் கீழால் இருசுடரை
மின்னும் விளக்காக ஏற்றி மறிகடலும்
பன்னு திரைக்கவரி வீச நிலமங்கை

தன்னை முனநாள் அளவிட்ட தாமரைபோல்
மன்னிய சேவடியை வானியங்கு தாரகைமீன்
என்னும் மலர்ப்பிறையால் ஏய்ந்த மழைக்கூந்தல்
தென்னன் உயர்பொருப்பும் தெய்வ வடமலையும்

என்னும் இவையே முலையா வடிவமைந்த
அன்ன நடைய அணங்கே அடியிணையை
தன்னுடைய அங்கைகளால் தான்தடவ தான்கிடந்துஓர்
உன்னிய யோக துறக்கம் தலைக்கொண்ட

பின்னைதன் னாபி வலயத்து பேரொளிசேர்
மன்னிய தாமரை மாமலர்ப்பூத்து அம்மலர்மேல்
முன்னம் திசைமுகனை தான்படைக்க மற்றவனும்
முன்னம் படைத்தனன் நான்மறைகள் அம்மறைதான்

மன்னும் அறம்பொருள் இன்பம்வீ டென்றுலகில்
நன்னெறிமேம் பட்டன நான்கன்றே நான்கினிலும்
பின்னையது பின்னை பெயர்த்தரு மென்பதுஓர்
தொன்னெறியை வேண்டுவார் வீழ்கனியும் ஊழிலையும்

என்னும் இவையே கர்ந்துடலம் தாம்வருந்தி
துன்னும் இலைக்குரம்பை துஞ்சியும் வெஞ்சுடரோன்
மன்னும் அழல்கர்ந்தும் வண்தடத்தின் உட்கிடந்தும்
இன்னதோர் தன்மையராய் ஈங்குடலம் விட்டெழுந்து

தொன்னெறிக்க சென்றார் எனப்படும் சொல்லல்லால்
இன்னதோர் கால தினையா ரிதுபெற்றார்
என்னவும் கேட்டறிவ தில்லை உளதென்னில்
மன்னுங் கடுங்கதிரோன் மண்டலத்தின் நன்னடுவுள்

அன்னதோர் இல்லியி னூடுபோய் வீடென்னும்
தொன்னெறிக்க சென்றாரை சொல்லுமின்கள் சொல்லாதே
அன்னதே பேசும் அறிவில் சிறுமனத்துஆங்
கன்னவரை கற்பிப்போம் யாமே அதுநிற்க

முன்னம்நான் சொன்ன அறத்தின் வழிமுயன்ற
அன்னவர்த்தாம் காண்டீர்க்க ளாயிரக்கண் வானவர்கோன்
பொன்னகரம் புக்கமரர் போற்றிசைப்ப பொங்கொளிசேர்
கொன்னவிலும் கோளரிமா தாஞ்சுமந்த கோலம்சேர்

மன்னிய சிங்கா சனத்தின்மேல் வாணொடுங்கண்
கன்னியரா லிட்ட கவரி பொதியவிழ்ந்துஆங்
கின்னளம்பூ தென்றல் இயங்க மருங்கிருந்த
மின்னனைய ண்மருங்குல் மெல்லியலார் வெண்முறுவல்

முன்னம் முகிழ்த்த முகிழ்நிலா வந்தரும்ப
அன்னவர்த்தம் மானோக்க முண்டாங் கணிமலர்சேர்
பொன்னியல் கற்பகத்தின் காடுடுத்த மாடெல்லாம்
மன்னிய மந்தாரம் பூத்த மதுத்திவலை

இன்னைசை வண்டமரும் சோலைவாய் மாலைசேர்
மன்னிய மாமயில்போல் கூந்தல் மழைத்தடங்கண்
மின்னிடையா ரோடும் விளையாடிவேண்டிடத்து
மன்னும் மணித்தலத்து மாணிக்க மஞ்சரியின்

மின்னின் ஒளிசேர் பளிங்கு விளிம்படுத்த
மன்னும் பவளக்கால் செம்பொஞ்செய் மண்டபத்துள்
அன்ன நடைய அரம்பயர்த்தம் வகைவளர்த்த
இன்னிசையாழ் பாடல்கே டின்புற்று இருவிசும்பில்

மன்னும் மழைதழும் வாணிலா நீண்மதிதோய்
மின்னி னொளிசேர் விசும்பூரும் மாளிகைமேல்
மன்னும் மளிவிளக்கை மாட்டி மழைக்கண்ணார்
பன்னு விசித்திரமா பாப்படுத்த பள்ளிமேல்

துன்னிய சாலேகம் சூழ்கதவம் தாள்திறப்ப
அன்னம் உழக்க நெறிந்துக்க வாள்நீல
சின்ன நறுந்தாது சூடி ஓர் மந்தாரம்
துன்னும் நறுமலரால் தோள்கொட்டி கற்பகத்தின்

மன்னும் மலர்வாய் மணிவண்டு பின்தொடர
இன்னிளம்பூ தென்றல் புகுந்துஈங கிளைமுலைமேல்
நன்னருஞ் சந்தன சேறுலர்த்த தாங்கருஞ்சீர்
மின்னிடைமேல் கைவை திருந்தே திளைமுலைமேல்

பொன்னரும் பாரம் புலம்ப அகங்குழைந்தாங்
கின்ன வுருவின் இமையா தடங்கண்ணார்
அன்னவர்த்தம் மானோக்கம் உண்டாங் கணிமுறுவல்
இன்னமுதம் மாந்தி யிருப்பர் இதுவன்றே

அன்ன அறத்தின் பயனாவது ஒண்பொருளும்
அன்ன திறத்ததே ஆதலால் காமத்தின்
மன்னும் வழிமுறையே நிற்றும்நாம் மானோக்கின்
அன்ன நடையார் அலரேச ஆடவர்மேல்

மன்னும் மடலூரார் என்பதோர் வாசகமும்
தென்னுறையில் கேட்டறிவ துண்டு அதனை யாம்தெளியோம்
மன்னும் வடநெறியே வேண்டினோம்வேண்டாதார்
தென்னன் பொதியில் செழுஞ்ச தனக்குழம்பின்

அன்னதோர் தன்மை அறியாதார் ஆயன்வேய்
இன்னிசை ஓசை கிரங்காதார் மால்விடையின்
மன்னும் மணிபுலம்ப வாடாதார் பெண்ணைமேல்
பின்னுமவ் வன்றில் பெடைவா சிறுகுரலுக்கு

உன்னி யுடலுருகி நையாதார் உம்பவர்வா
துன்னி மதியுகுத்த தூநிலா நீணெருப்பில்
தம்முடலம் வேவ தளராதார் காமவேள்
மன்னும் சிலைவாய் மலர்வாளி கோத்தெய்ய

பொன்னொடு வீதி புகாதார் தம் பூவணைமேல்
சின்ன மலர்க்குழலும் அல்குலும் மென்முலையும்
இன்னிள வாடை தடவத்தாம் கண்டுயிலும்
பொன்னனையார் பின்னும் திருவுறுகபோர்வேந்தன்

தன்னுடைய தாதை பணியால் அரசொழிந்து
பொன்னகரம் பின்னே புலம்ப வலங்கொண்டு
மன்னும் வளநாடு கைவிட்டு மாதிரங்கள்
மின்னுருவில் விண்டோ ர் திரிந்து வெளிப்பட்டு

கன்நிறைந்து தீய்ந்து கழையுடைத்து கால்சுழன்று
பின்னும் திரைவயிற்று பேயே திரிந்துலவா
கொன்னவிலும் வெங்கான தூடுகொடுங்கதிரோன்
துன்னு வெயில்வறுத்த வெம்பரமேல் பஞ்சடியால்

மன்னன் இராமன்பின் வைதேவி என்றுரைக்கும்
அன்ன நடைய அணங்கு நடந்திலளே
பின்னும் கருநெடுங்கண் செவ்வ பிணைநோக்கின்
மின்னனைய ண்மருங்குல் வேகவதி என்றுரைக்கும்

கன்னிதன் இன்னுயிராம் காதலனை காணது
தன்னுடைய முந்தோன்றல் கொண்டேக தாஞ்சென்றுஅங்
கன்னவனை நோக்கா தழித்துரப்பி வாளமருள்
கன்ன்வில்தோள் காளையை கைப்பிடித்து மீண்டும்போய்

பொன்னவிலும் ஆகம் புணர்ந்திலளே பூங்கங்கை
முன்னம் புனல்பரக்கும் நன்னாடன் மின்னாடும்
கொன்னவிலும் நீள்வேல் குருக்கள் குலமதலை
தன்னிகரொன் றில்லாத வென்றி தனஞ்சயனை

பன்னாக ராயன் மடப்பாவை பாவைதன்
மன்னிய நாணச்சம் மடமென் றிவையகல
தன்னுடைய கொங்கை முகநெரிய தான் அவன்றன்
பொன்வரை ஆகம் தழீஇக்கொண்டு போய்தனது

நன்னகரம் புக்கு நயந்தினிது வாழ்ந்ததுவும்
முன்னுரையில் கேட்டறிவ தில்லையே சூழ்கடலுள்
பொன்னகரம் செற்ற புரந்தரனோ டேரொக்கும்
மன்னவன் வாணன் அவுணர்க்கு வாள்வேந்தன்

தன்னுடைய பாவை உலகத்து தன்னொக்கும்
கன்னியரை யில்லாத காட்சியாள் தன்னுடைய
இன்னுயிர தோழியால் எம்பெருமான் ஈன்துழாய்
மன்னும் மணிவரைத்தோள் மாயவன் பாவியேன்

என்னை இதுவிளைத்த ஈரிரண்டு மால்வரைத்தோள்
மன்னவன்றன் காதலனை மாயத்தால் கொண்டுபோய்
கன்னிதன்பால் வைக்க மற்றவனோ டெத்தனையோ
மன்னிய பேரின்பம் எய்தினாள் மற்றிவைதான்

என்னாலே கேட்டீரே ஏழைகாள் என்னுரைக்கேன்
மன்னும் மலையரயன் பொற்பாவை வாணிலா
மின்னும் மணிமுறுவல் செவ்வாய் உமையென்னும்
அன்ன நடைய அணங்கு டங்கிடைசேர்

பொன்னுடம்பு வாட புலனைந்தும் நொந்தகல
தன்னுடைய கூழை சடாபாரம் தாந்தரித்துஆங்
கன்ன அருந்தவத்தி னூடுபோய் ஆயிரந்தோள்
மன்னு கரதலங்கள் மட்டித்து மாதிரங்கள

மன்னு குலவரையும் மாருதமும் தாரகையும்
தன்னி னுடனே சுழல சுழன்றாடும்
கொன்னவிலும் மூவிலைவேல் கூத்தன் பொடியாடி
அன்னவன்றன் பொன்னகலம் சென்றாங் கணைந்திலளே

பன்னி யுரைக்குங்கால் பாரதமாம்பாவியேற்கு
என்னுறுநோய் யானுரைப்ப கேண்மின் இரும்பொழில்சூழ்
மன்னு மறையோர் திருநறையூர் மாமலைபோல்
பொன்னியலும் மாட கவாடம் கடந்துபுக்கு

என்னுடைய கண்களிப்ப நோக்கினேன் நோக்குதலும்
மன்னன் திருமர்பும் வாயும் அடியிணையும்
பன்னு கரதலமும் கண்களும் பங்கயத்தின்
பொன்னியல் காடோ ர் மணிவரைமேல் பூத்ததுபோல்

மின்னி ஒளிபடைப்ப வீழ்நாணும் தோள்வளையும்
மன்னிய குண்டலமும் ஆரமும் நீண்முடியும்
துன்னு வெயில்விரித்த சூளா மணியிமைப்ப
மன்னும் மரகத குன்றின் மருங்கே ஓர்

இன்னிள வஞ்சி கொடியொன்று நின்றதுதான்
அன்னமாய் மானாய் அணிமயிலாய் ஆங்கிடையே
மின்னாய் இளவேய் இரண்டாய் இணைச்செப்பாய்
முன்னாய தொண்டையா கொண்டை குலமிரண்டாய்

அன்ன திருவுருவம் நின்ற தறியாதே
என்னுடைய நெஞ்சும் அறிவும் இனவளையும்
பொன்னியலும் மேகலையும் ஆங்கொழி போந்தேற்கு
மன்னும் மறிகடலும் ஆர்க்கும் மதியுகுத்த

இன்னிலா விங்கதிரும் என்றனக்கே வெய்தாகும்
தன்னுடைய தன்மை தவிரத்தான் எங்கொலோ
தென்னன் பொதியில் செழுஞ்சந்தின் தாதளைந்து
மன்னிவ் வுலகை மனங்களிப்ப வந்தியங்கும்

இன்னிளம்பூ தென்றலும் வீசும் எரியெனக்கே
முன்னிய பெண்ணைமேல் முள்முளரி கூட்டகத்து
பின்னுமவ் வன்றில் பெடைவா சிறுகுரலும்
என்னுடைய நெஞ்சுக்கோ ரீர்வாளாம் எஞ்செய்கேன்

கன்னவில்தோள் காமன் கருப்பு சிலைவளைய
கொன்னவிலும் பூங்கணைகள் கோத்தௌ பொதவணைந்து
தன்னுடைய தோள்கழிய வாங்கி தமியேன்மேல்
என்னுடைய நெசே இலக்காக எய்கின்றான்

பின்னிதனை காப்பீர்தாம் இல்லையே பேதையேன்
கன்னவிலும் காட்டகத்தோர் வல்லி கடிமலரின்
நன்னறு வசமற் றாரானும் எய்தாமே
மன்னும் வறுநிலத்து வாளாங் குகுத்ததுபோல்

என்னுடைய பெண்மையும் என்நலனும் என்முலையும்
மன்னு மலர்மங்கை மைந்தன் கணபுரத்து
பொன்மலைபோல் நின்றவன்றன் பொன்னகலம் தோயாவேல்
என்னிவைதான் வாளா எனக்கே பொறையாகி

முன்னிருந்து மூக்கின்றுமூவாமை காப்பதோர்
மன்னும் மருந்தறிவி ரில்லையே மல்விடையின்
துன்னு பிடரெருத்து தூக்குண்டு வன்தொடரால்
கன்னியர் கண்மிளிர கட்டுண்டு மாலைவாய்

தன்னுடைய நாவொழியா தாடும் தனிமணியின்
இன்னிசை ஓசையும் வந்தென் செவிதனக்கே
கொன்னவிலு மெஃகில் கொடிதாய் நொடிதாகும்
என்னிதனை காக்குமா சொல்லீர் இதுவிளைத்த

மன்னன் நறுந்துழாய் வாழ்மார்வன் மாமதிகோள்
முன்னம் விடுத்த முகில்வண்ணன் காயாவின்
சின்ன நறும்பூ திகழ்வண்ணன் வண்ணம்போல்
அன்ன கடலை மலையி டணைகட்டி

மன்னன் இராவணனை மாமண்டு வெஞ்சமத்து
பொன்முடிகள் பத்தும் புரள சரந்துரந்து
தென்னுலகம் ஏற்றுவித்த சேவகனை ஆயிரங்கண்
மன்னவன் வானமும் வானவர்த்தம் பொன்னும்லகும்

தன்னுடைய தோள்வலியால் கைக்கொண்ட தானவை
பின்னோர் அரியுருவ மகி எரிவிழித்து
கொன்னவிலும் வெஞ்சமது கொல்லாதே வல்லாளன்
மன்னும் மணிக்குஞ்சி பற்றி வரவீர்த்து

தன்னுடைய தாள்மேல் கிடாத்தி அவனுடைய
பொன்னகலம் வள்ளுகிரால் போழ்ந்து புகழ்படைத்த
மின்னலங்கும் ஆழி படைத்தடக்கை வீரனை
மின்னிவ் வகலிடத்தை மாமுதுநீர் தான்விழுங்க

பின்னுமோர் ஏனமாய் புக்கு வளைமருப்பில்
கொன்னவிலும் கூர்திமேல் வைத்தெடுத்த கூத்தனை
மன்னும் வடமலையை மத்தாக மாசுணத்தால்
மின்னும் இருசுடரும் விண்ணும் பிறங்கொளியும்

தன்னின் உடனே சுழ்ல மலைதிரித்துஆங்கு
இன்னமுதம் வானவரை யூட்டி அவருடைய
மன்னும் துயர்க்கடிந்த வள்ளலை மற் றன்றியும்
தன்னுருவ மாரும் அறியாமல் தானங்கோர்

மன்னும் குறளுருவில் மாணியாய் மாவலிதன்
பொன்னியலும் வேள்விக்கண் புக்கிருந்து போர்வேந்தர்
மன்னை மனங்கொள்ள வஞ்சித்து நெஞ்சுருக்கி
என்னுடைய பாதத்தால் யானளப்ப மூவடிமண்

மன்னா தரு கென்று வாய்திறப்ப மற்றவனும்
என்னால் தரப்பட்ட தென்றலுமே அத்துணைக்கண்
மின்னார் மணிமுடிபோய் விண்தடவ மேலெடுத்த
பொன்னார் கனைகழற்கால் ஏழுலகும் போய்க்கடந்துஅங்

கொன்னா அசுரர் துளங்க செலநீட்டி
மன்னிவ் வகலிடத்தை மாவலியை வஞ்சித்து
தன்னுலகம் ஆக்குவித்த தாளானை தாமரைமேல்
மின்னிடையாள் நாயகனை விண்ணகருள் பொன்மலையை

பொன்னி மணிகொழிக்கும் பூங்குடந்தை போர்விடையை
தென்னன் குறுங்குடியுள் செம்பவள குன்றினை
மன்னிய தண்சேறை வள்ளலை மாமலர்மேல்
அன்னம் துயிலும் அணிநீர் வயலாலி

என்னுடைய இன்னமுடகி எவ்வுள் பெருமலையை
கன்னி மதிள்சூழ் கணமங்கை கற்பகத்தை
மின்னை இருசுடரை வெள்ளறையுள் கல்லறைமேல்
பொன்னை மரகத்தை புட்குழியெம் போரேற்றை

மன்னும் அரங்கத்தெம் மாமணியை வல்லவாழ்
பின்னை மணாளனை பேரில் பிறப்பிலியை
தொன்னீர கடல்கிடந்த தோளா மணிச்சுடரை
என்மனத்து மாலை இடவெந்தை ஈசனை

மன்னும் கடன்மல்லை மாயவனை வானவர்தம்
சென்னி மணிச்சுடரை தண்கால் திறல்வலியை
தன்னை பிறரறியா தத்துவத்தை முத்தினை
அன்னத்தை மீனை அரியை அருமறையை

முன்னிவ் வுலகுண்ட மூர்த்தியுயை கோவலூர்
மன்னும் இடைகழியெம் மாயவனை பேயலற
பின்னும் முலையுண்ட பிள்ளையை அள்ளல்வாய்
அன்னம் இரைதேர் அழுந்தூர் எழும்சுடரை

தெந்தில்லை சித்திர கூடத்தென் செல்வனை
மின்னி மழைதவழும் வேங்கடத்தெம் வித்தகனை
மன்னனை மாலிருஞ் சோலை மணாளனை
கொன்னவிலும் ஆழி படையானை கோட்டியூர்

அன்ன வுருவில் அரியை திருமெய்யத்து
இன்னமுத வெள்ளத்தை இந்தளூர் அந்தணனை
மன்னும் மதிட்கச்சி வேளுக்கை யாளரியை
மன்னிய பாடகத்தெம் மைந்தனை வெஃகாவில்

உன்னிய யோக துறக்கத்தை ஊரகத்துள்
அன்னவனை அட்ட புயகரத்தெம் ஆனேற்றை
என்னை மனங்கவர்ந்த ஈசனை வானவர்த்தம்
முன்னவனை மூழி களத்து விளக்கினை

அன்னவனை ஆதனூர் ஆண்டாளக்கும் ஐயனை
நென்னலை யின்றினை நாளையை நீர்மலைமேல்
மன்னும் மறைநான்கும் ஆனானை புல்லாணி
தென்னன் தமிழி வடமொழியை நாங்கூரில்

மன்னும் மணிமாட கோயில் மணாளனை
நன்னீர தலைச்சங்க நான்மதியை நான்வணங்கும்
கண்ணனை கண்ண புரத்தானை தென்னறையூர்
மன்னும் மணிமாட கோயில் மணாளனை

கன்னவில்தோள் காளையை கண்டாங்கு கைதொழுது
என்னிலைமை யெல்லாம் அறிவித்தால் எம்பெருமான்
தன்னருளும் ஆகமும் தாரானேல் தன்னைநான்
மின்னிடையார் சேரியிலும் வேதியர்க்கள் வாழ்விடத்தும்

தன்னடியார் முன்பும் தரணி முழுதாளும்
கொன்னவிலும் வேல்வேந்தர் கூட்டத்தும் நாட்டகத்தும்
தன்னிலைமை யெல்லாம் அறிவிப்பன் தான்முனநாள்
மின்னிடை யாய்ச்சியர்த்தம் சேரி களவிங்கண்

துன்னு படல்திறந்து புக்கு தயிர்வேண்ணெய்
தன்வயி றார விழுங்க கொழுங்கயல்கண்
மன்னும் மடவோர்கள் பற்றியோர் வான்கயிற்றால்
பின்னும் உரலோடு கட்டுண்ட பெற்றிமையும்

அன்னதோர் பூதமாய் ஆயர் விழவின்கண்
துன்னு சகடத்தால் புக்க பெருஞ்சோற்றை

முன்னிருந்து முற்றத்தான் துற்றிய தெற்றெனவும்
மன்னர் பெருஞ்சவையுள் வாழ்வேந்தர் தூதனாய்

தன்னை யிகழ்ந்துரைப்ப தான்முனநாள் சென்றதுவும்
மன்னு பறைகறங்க மங்கையர்த்தம் கண்களிப்ப

கொன்னவிலும் கூத்தனா பேர்த்தும் குடமாடி
என்னிவ னென்ன படுகின்ற ஈடறவும்

தென்னிலங்கை யாட்டி அரக்கர் குலப்பாவை
மன்னன் இராவணன்றன் நல்தங்கை வாளெயிற்று

துன்னு சுடுசினத்து சூர்ப்பணகா சோர்வெய்தி
பொன்னிறங் கொண்டு புலர்ந்தெழுந்த காமத்தால்

தன்னை நயந்தாளை தான்முனிந்து மூக்கரிந்து
மன்னிய திண்ணெனவும்வாய்த்த மலைபோலும்

தன்னிகரொன் றில்லாத தாடகையை மாமுனிக்காக
தென்னுலகம் ஏற்றுவித்த திண்டிறலும்மற்றிவைதான்

உன்னி யுலவா வுலகறிய வூர்வன்நான்
முன்னி முளைத்தெழு தோங்கி யொளிபரந்த
மன்னியம்பூம் பெண்ணை மடல்
திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்



நாலாயிர திவ்வி பிரபந்தம் பாடல்கள்






















நாலாயிர திவ்வி பிரபந்தம் பாடல்கள்
ஸ்ரீ நம்மாழ்வார் திருவாய் மலர்ந்தருளிய
திருவாய்மொழி
ஸ்ரீ
ஸ்ரீமதே ராமாநுஜாய நம
திருவாய்மொழி தனியன்கள்
நாதமுனிகள் அருளிச்செய்தது
பக்தாம்ருதம் வி வஜநா நுமோதநம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம்
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்
வெண்பாக்கள்
ஈச்வரமுனிகள் அருளிச்செய்தது
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும்
மருவினிய வண்பொருநல் என்றும் அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்
சிந்தியாய் நெஞ்சே தெளிந்து
சொட்டை நம்பிகள் அருளிச்செய்தது
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்
இனத்தாரை யல்லா திறைஞ்சேன் தனத்தாலும்
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன்
பாதங்கள் யாமுடைய பற்று
அனந்தாழ்வான் அருளிச்செய்த்து
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன்
வாய்ந்தமலர பாதம் வணங்குகின்றேன் ஆய்ந்தபெருஞ
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும்
பேராத வுள்ளம் பெற
பட்டர் அருளிச்செய்தவை
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும் ஈன்ற
முதல்தாய் சடகோபன் மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமுனுசன்
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்
தக்க நெறியும் தடையாகி தொக்கியலும்
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்
யாழினிசை வே தியல்
ஸ்ரீமதே ராமாநுஜாய நம
நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி
திருவாய் மொழி முதற் பத்து

உயர்வற வுயர்நலம் முடையவன் யவனவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்
துயரறு சுடரடி தொழுதெழென் மனனே

மனனக மலமற மலர்மிசை யெழுதரும்
மனனுணர் வளவிலன் பொறியுணர் வவையிலன்
இனனுணர் முழுநலம் எதிர்நிகழ் கழிவினும்
இனனிலன் னெனனுயிர் மிகுநரை யிலனே

இலனது வுடையனி தெனநினை வரியவன்
நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்
புலனொடு புலனலன் ஒழிவிலன் பரந்த
நலனுடை யொருவனை நணுகினம் நாமே

நாமவ னிவனுவன் அவளிவளுவளெவள்
தாமவரிவருவர் அதுவிது வுதுவெது
வீமவை யிவையுவை யவைநல தீங்கவை
ஆமவை யாயவை யாய்நின்ற அவரே

அவரவர் தமதம தறிவறி வகைவகை
அவரவர் ரிறையவ ரெனவடி யடைவர்கள்
அவரவர் ரிறையவர் குறைவில
அவரவர் விதிவழி யடையநின் றனரே

நின்றனர் ரிருந்தனர் கிடந்தனர் திரிந்தனர்
நின்றிலர் ரிருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்
என்றுமொ ரியல்வினர் எனநினை வரியவர்
என்றுமொ ரியல்வொடு நின்றவெ திடரே

திடவிசும் பெரிவளி நீர்நில மிவைமிசை
படர்பொருள் முழுவது மாயவை யவைதொறும்
உடல்மிசை யுயிரென கரந்தெங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியு ளிவையண்ட சுரனே

சுரரறி வருநிலை விண்முதல் முழுவதும்
வரன்முத லாயவை முழுதுண்ட பரபரன்
புரமொரு மூன்றெரி தமரர்க்கு மறிவியந்து
அரனயன் எனவுல கழித்தமை துளனே

உளனெனி லுளனவ னுருவமிவ் வுருவுகள்
உளனல னெனிலவன் அருவமிவ் வருவுகள்
உளனென விலனென விவைகுண முடைமையில்
உளனிரு தகைமையொ டொழிவிலன் பரந்தே

பரந்ததண் பரவையுள்நீர்தொறும் பரந்துளன்
பரந்தஅ ண் டமிதென நிலவிசும் பொழிவற
கரந்தசி லிடந்தொறும் இடந்திகழ் பொருடொறும்
கரந்தெங்கும் பரந்துள னிவையுண்ட கரனே

கரவிசும் பெரிவளி நீர்நில மிவைமிசை
வரனவில் திறல்வலி யளிபொறை யாய்நின்ற
பரனடி மேல்குரு கூர்ச்சட கோபன்சொல்
நிரனிறை யாயிர திவைபத்தும் வீடே

வீடுமின் முற்றவும்வீடுசெய்து உம்முயிர்
வீடுடை யானிடைவீடுசெய்ம்மினே

மின்னின் நிலையிலமன்னுயி ராக்கைகள்
என்னு மிடத்து இறைஉன்னுமின் நீரே

நீர்நும தென்றிவைவேர்முதல் மாய்த்து இறை
சேர்மின் உயிர்க்கு அதனேர்நிறை யில்லே

இல்லது முள்ளதும்அல்ல தவனுரு
எல்லையி லந்நலம்புல்குபற் றற்றே

அற்றது பற்றெனில்உற்றது வீடுஉயிர்
செற்றது மன்னுறில்அற்றிறை பற்றே

பற்றில னீசனும்முற்றவும் நின்றனன்
பற்றிலை யாய் அவன்முற்றி லடங்கே

அடங்கெழில் சம்பத்துஅடங்கக்கண்டு ஈசன்
அடங்கெழி லஃதென்றுஅடங்குக வுள்ளே

உள்ள முரைசெயல்உள்ளவிம் மூன்றையும்
உள்ளி கெடுத்து இறையுள்ளிலொ டுங்கே

ஒடுங்க அவன்கண்ஒடுங்கலு மெல்லாம்
விடும்பின்னு மாக்கைவிடும்பொழு தெண்ணே

எண்பெரு கந்நலத்துஒண்பொரு ளீறில
வண்புகழ் நாரணன்திண்கழல் சேரே

சேர்த்தட தென்குருகூர்ச்ட கோபன்சொல்
சீர்த்தொடை யாயிரத்துஓர்த்தவி பத்தே

பத்துடை யடியவர கெளியவன் பிறர்களு கரிய
வித்தகன் மலர்மகள் விரும்பும்நம் அரும்பெற லடிகள்
மத்துறு கடைவெண்ணெய் களவினில் ரவிடை யாப்புண்டு
எத்திறம் உரலினோ டிணைந்திரு தேங்கிய எளிவே

எளிவரு மியல்வினன் நிலைவரம் பிலபல பிறப்பாய்
ஒளிவரு முழுநலம் முதலில கேடில வீடாம்
தெளிதரும் நிலைமைய தொழிவிலன் முழுவதும் மிறையோன்
அளிவரு மருளினோ டகத்தனன் புறத்தன னமைந்தே

அமைவுடை யறநெறி முழுவது முயர்வற வுயர்ந்த
அமைவுடை முதல்கெடல் ஒடிவிடை யறநில மதுவாம்
அமைவுடை யமரரும் யாவையும் யாவரும் தானாம
அமைவுடை நாரணன் மாயையை யறிபவர் யாரே

யாருமோர் நிலைமைய னெனவறி வரிய வெம்பெருமான்
யாருமோர் நிலைமைய னெனவறி வெளியவெம் பெருமான்
பேருமோ ராயிரம் பிறபல வுடையவெம் பெருமான்
பேருமோ ருருவமு முளதில்லை யிலதில்லை பிணக்கே

பிணக்கற அறுவகை சமயமும் நெறியுள்ளி யுரைத்த
கணக்கறு நலத்தனன் அந்தமி லாதியம் பகவன்
வணக்குடை தவநெறி வழிநின்று புறநெறி களைகட்டு
உணக்குமின் பசையற அவனுடை யுணர்வுகொண் டுணர்ந்தே

உணர்ந்துணர திழிந்தகன் றுயர்ந்துரு வியந்தவிந்நிலைமை
உணர்ந்துணர துணரிலும் இறைநிலையுணர்வரி துயிர்காள்
உணர்ந்துணர துரைத்துரை தரியய னரனென்னுமிவரை
உணர்ந்துணர துரைத்துரை திறைஞ்சுமின் மனப்பட்டதொன்றே

ஒன்றென பலவென அறிவரும் வடிவினுள் நின்ற
நன்றெழில் நாரணன் நான்முகன் அரனென்னு மிவரை
ஒன்றநும் மனத்துவை துள்ளிநும் இருபசை யறுத்து
நன்றென நலஞ்செய்வ தவனிடை நம்முடை நாளே

நாளு நின் றடு நமபழ மையங் கொடுவினையுடனே
மாளும் ஓர் குறைவில்லை மனனக மலமற கழுவி
நாளூ திருவுடை யடிகள்தம் நலங்கழல் வணங்கி
மாளுமோ ரிடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே

வலத்தனன் திரிபுர மெரித்தவ னிடம்பெற துந்தி
தலத்து எழு திசைமுகன் படைத்தநல் லுலகமும் தானும்
புலப்பட பின்னும்தன் உலகத்தி லகத்தனன் தானே
சொலப்புகில் இவைபின்னும் வயிற்றுள இவையவன் துயக்கே

துயக்கறு மதியில்நல் ஞானத்துள் அமரரை துயக்கும்
மயக்குடை மாயைகள் வானிலும் பெரியன வல்லன்
பு
அயர்ப்பில னலற்றுவன் தழுவுவன் வணங்குவ னமர்ந்தே

அமரர்கள் தொழுதெழ அலைகடல் கடைந்தவன் றன்னை
அமர்பொழில் வளங்குரு கூர்ச்சடகோபன் குற் றேவல்கள்
அமர்சுவை யாயிர தவற்றினு ளிவைபத்தும் வல்லார்
அமரரோ டுயர்விற்சென் றறுவர்தம் பிறவியஞ் சிறையே

அஞ்சிறைய மடநாராய் அளியத்தாய் நீயும்நின்
அஞ்சிறைய சேவலுமாய் ஆவாவென் றெனக்கருளி
வெஞ்சிறைப்புள் ளுயர்த்தாற்கென் விடுதூதா சென்றக்கால்
வன்சிறையில் அவன்வைக்கில் வைப்புண்டா லென்செய்யுமோ

என்செய்ய தாமரைக்கண் பெருமானார கென்தூதாய்
என்செய்யும் உரைத்தக்கால் இனக்குயில்காள் நீரலிரே
முன்செய்த முழுவினையால் திருவடிக்கீழ குற்றேவல்
முன்செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே

விதியினால் பெடைமணக்கும் மென்னடைய அன்னங்காள்
மதியினால் குறள்மாணாய் உலகிரந்த கள்வற்கு
மதியிலேன் வல்வினையே மாளாதோ வென்று ஒருத்தி
மதியெல்லாம் முள்கலங்கி மயங்குமால் என்னீரே

என்நீர்மை கண்டிரங்கி யிதுதகா தென்னாத
என்நீல முகில்வண்ணற் கென்சொலியான் சொல்லுகேனோ
நன்னீர்மை யினியவர் கண் தங்காதென் றொருவாய்ச்சொல்
நன்னீல மகன்றில்காள் நல்குதிரோ நல்கீரோ

நல்கித்தான் காத்தளிக்கும் பொழிலேழும் வினையேற்கே
நல்கத்தா னாகாதொ நாரணனை கண்டக்கால்
மல்குநீர புனற்படப்பை இரைதேர்வண் சிறுகுருகே
மல்குநீர கண்ணேற்கோர் வாசகங்கொண் டருளாயே

அருளாத நீரருளி யவராவி துவராமுன்
அருளாழி புட்கடவீர் அவர்வீதி யொருநாள் என்று
அருளாழி யம்மானை கண்டக்கா லிதுசொல்லி
யருள் ஆழி வரிவண்டே யாமுமென் பிழைத்தோமே

என்பிழைகோ பதுபோல பனிவாடை யீர்கின்றது
என்பிழையே நினைந்தருளி யருளாத திருமாலார்க்கு
என்பிழைத்தாள் திருவடியின் தகவினு கென் றொருவாய்ச்சொல்
என்பிழைக்கும் இளங்கிளியே யான்வளர்த்த நீயலையே

நீயலையே சிறுபூவாய் நெடுமாலார கென்தூதாய்
நோயெனது நுவலென்ன நுவலாதே யிருந்தொழிந்தாய்
சாயலொடு மணிமாமை தளர்ந்தேன் நான் இனியுனது
வாயலகில் இன்னடிசில் வைப்பாரை நாடாயே

நாடாத மலர்நாடி நாள்தோறும் நாரணந்தன்
வாடாத மலரடிக்கீழ் வைக்கவே வகுக்கின்று
வீடாடி வீற்றிருத்தல் வினையற்ற தென்செய்வதோ
ஊடாடு பனிவாடாய் உரைத்தீராய் எனதுடலே

உடலாடி பிறப்புவீ டுயிர்முதலா முற்றுமாய்
கடலாழி நீர்தோற்றி யதனுள்ளே கண்வளரும்
அடலாழி யம்மானை கண்டக்கா லிதுசொல்லி
விடலாழி மடநெஞ்சே வினையோமொன் றாமளவே

அளவியன்ற ஏழுலக தவர்பெருமான் கண்ணனை
வளவயல்சூழ் வண்குருகூர்ச்சடகோபன் வாய்ந்துரைத்த
அளவியன்ற அந்தாதி யாயிரத்துள் இப்பத்தின்
வளவுரையால் பெறலாகும் வானோங்கு பெருவளமே

வளவே ழுலகின் முதலாய்
வானோ ரிறையை அருவினையேன்
களவேழ் வெண்ணெய் தொடுவுண்ட
கள்வா என்பன் பின்னையும்
தளவேழ் முறுவல் பின்னைக்காய்
வல்லா னாயர் தலைவனாய்
இளவே றேழும் தழுவிய
எந்தாய் என்பன் நினைந்துநைந்தே

நினைந்து நைந்துள் கரைந்துருகி
இமையோர் பலரும் முனிவரும்
புனைந்த கண்ணி நீர்சாந்தம்
புகையோ டேந்தி வணங்கினால்
நினைந்த எல்லா பொருள்கட்கும்
வித்தாய் முதலில் சிதையாமே
மனஞ்செய் ஞான துன்பெருமை
மாசூ ணாதோ மாயோனே

மாயோ னிகளாய் நடைகற்ற
வானோர் பலரும் முனிவரும்
நீயோ னிகளை படை என்று
நிறைநான் முகனை படைத்தவன்
சேயோ னெல்லா அறிவுக்கும்
திசைக ளெல்லாம் திருவடியால்
தாயோன் எல்லா வெவ்வுயிர்க்கும்
தாயோன் தானோ ருருவனே

தானோ ருருவே தனிவித்தா
தன்னில் மூவர் முதலாய
வானோர் பலரும் முனிவரும்
மற்றும்
தானோர் பெருநீர் தன்னுள்ளே
தோற்றி அதனுள் கண்வளரும்
வானோர் பெருமான் மாமாயன்
வைகு தன்எம் பெருமானே

மானேய் நோக்கி மடவாளை
மார்வில் கொண்டாய் மாதவா
கூனே சிதைய வுண்டைவில்
நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா
வானார் சோதி மணிவண்ணா
மதுசூ தாநீ யருளாய் ன்
தேனே மலரும் திருப்பாதம்
சேரு மாறு வினையேனே

வினையேன் வினைதீர் மருந்தானாய்
விண்ணோர் தலைவா கேசவா
மனைசே ராயர் குலமுதலே
மாமா யன்னே மாதவா
சினையேய் தழைய மராமரங்கள்
ஏழும் எய்தாய் சிரீதரா
இனையா யினைய பெயரினாய்
என்று நைவன் அடியேனே

அடியேன் சிறிய ஞானத்தன்
அறித லார்க்கு மரியானை
கடிசேர் தண்ண துழாய்க்கண்ணி
புனைந்தான் தன்னை கண்ணனை
செடியார் ஆக்கை யடியாரை
சேர்தல் தீர்க்கும் திருமாலை
அடியேன் காண்பான் அலற்றுவன்
இதனில் மிக்கோர் அயர்வுண்டே

உண்டா யுலகேழ் முன்னமே
உமிழ்ந்து மாயை யால்புக்கு
உண்டாய் வெண்ணெய் சிறுமனிசர்
உவலை யாக்கை நிலையெய்தி
மண்டான் சோர்ந்த துண்டேலும்
மனிசர காகும் பீர் சிறிதும்
அண்டா வண்ணம் மண்கரைய
நெய்யூண் மருந்தோ மாயோனே

மாயோம் தீய அலவலை
பெருமா வஞ்ச பேய்வீய
தூய குழவி யாய்விடப்பால்
அமுதா அமுது செய்திட்ட
மாயன் வானோர் தனித்தலைவன்
மலராள் மைந்த னெவ்வுயிர்க்கும்
தாயோன் தம்மா னென்னம்மான்
அம்மா மூர்த்தி யைச்சார்ந்தே

சார்ந்த இருவல் வினைகளும்
சரித்து மா பற்றறுத்து
தீர்ந்து தன்பால் மனம்வைக்க
திருத்தி வீடு திருத்துவான்
ஆர்ந்த ஞான சுடராகி
அகலம் கீழ்மேல் அளவிறந்து
நேர்ந்த வுருவாய் அருவாகும்
இவற்றி னுயிராம் நெடுமாலே

மாலே மா பெருமானே
மாமா யனே என்றென்று
மாலே யேறி மாலருளால்
மன்னு குருகூர சடகோபன்
பாலேய் தமிழ ரிசைகாரர்
பத்தர் பரவும் ஆயிரத்தின்
பாலே பட்ட இவைபத்தும்
வல்லார கில்லை பரிவதே

பரிவதி லீசனை பாடி
விரிவது மேவ லுறுவீர்
பிரிவகை யின்றிநன் னீர்தூய்
புரிவது வும்புகை பூவே

மதுவார் தண்ண துழாயான்
முதுவே தமுதல் வனுக்கு
எதுவே தென்பணி என்னா
ததுவே யாட்செய்யு மீடே

ஈடு மெடுப்புமி லீசன்
மாடு விடாதென் மனனே
பாடுமென் நாவலன் பாடல்
ஆடுமெ னங்கம ணங்கே

அணங்கென ஆடுமெ னங்கம்
வணங்கி வழிபடு மீசன்
பிணங்கி யமரர் பிதற்றும்
குணங்கெழு கொள்கையி னானே

கொள்கைகொ ளாமையி லாதான்
எள்கலி ராகமி லாதான்
விள்கைவிள் ளாமைவி ரும்பி
உள்கல தார்க்கோ ரமுதே

அமுதம் அமரக கீந்த
நிமிர்சுட ராழி நெடுமால்
அமுதிலு மாற்ற இனியன்
நிமிர்திரை நீள்கட லானே

நீள்கடல் சூழிலங் கைக்கோன்
தோள்கள் தலைதுணி செய்தான்
தாள்கள் தலையில் வணங்கி
நாள்கள் தலைக்க ழிமினே

கழிமின்தொண் டீர்கள் கழித்து
தொழுமின் அவனை தொழுதால்
வழிநின்ற வல்வினை மாள்வித்து
அழிவின்றி யாக்கம் தருமே

தரும அரும்பய னாய
திருமக ளார்தனி கேள்வர்
பெருமை யுடைய பிரானார்
இருமை வினைகடி வாரே

கடிவார் தீய வினைகள்
நொடியா ருமள வைக்கண்
கொடியா அடுபுள் ளுயர்த்த
வடிவார் மாதவ னாரே

மாதவன் பால்சட கோபன்
தீதவ மின்றி யுரைத்த
ஏதமி லாயிர திப்பத்து
ஓதவல் லார்பிற வாரே

பிறவித்துயரற ஞானத்துள்நின்று
துறவிச்சுடர்விளக்கம் தலைப்பெய்வார்
அறவனை யாழி படையந தணனை
மறவியை யின்றி மனத்துவை பாரே

வைப்பாம்மருந்தா மடியரை வல்வினை
துப்பாம் புலனைந்தும் துஞ்சக கொடானவன்
எப்பால் யவர்க்கும் நலத்தா லுயர்ந்துயர்ந்து
அப்பால வனெங்க ளாயர் கொழுந்தே

ஆயர் கொழுந்தா யவரால் புடையுண்ணும்
மா பிரானையென் மாணிக்க சோதியை
தூய அமுதை பருகிப்பருகி என்
மா பிறவி மயர்வறு தேனே

மயர்வறவென்மனத்தே மன்னினான் றன்னை
உயர்வினை யேதரும் ஒண்சுடர கற்றையை
அயர்வில் அமரர்கள் ஆதிக்கொழுந்தை என்
இசைவினையென்சொல்லி யான்விடுவேனே

விடுவேனோவென் விளக்கைஎன்னாவியை
நடுவேவந்து கொள்கின்றநாதனை
தொடுவேசெய்திள ஆய்ச்சியர்க்கண்ணினுள்
விடவேசெய்து விழிக்கும்பிரானையே

பிரான்பெருநிலங் கீண்டவன் பின்னும்
விராய்மலர்த்துழாய் வேய்ந்தமுடியன்
மராமரமெய்த மாயவன் என்னுள்
இரானெனில்பின்னை யானொட்டுவேனோ

யானொட்டியென்னுள் இருத்துவ மென்றிலன்
தானொட்டி வந்தென் தனிநெஞ்சை வஞ்சித்து
ஊனொட்டி நின்றென் உயிரில் கலந்து இயல்
வானொட்டு மோஇனி யென்னை நெகிழ்க்கவே

என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நன்னெஞ்ச
தன்னை அகல்விக்க தானும்கில்லானினி
பின்னை நெடும்பணை தோள்மகிழ பீடுடை
முன்னை யமரர் முழுமுத லானே

அமரர முழுமுத லாகிய ஆதியை
அமரர கமுதீந்த ஆயர் கொழுந்தை
அமர அழும்ப துழாவியென் னாவி
அமரர தழுவிற் றினிய கலுமோ

அகலில் அகலும் அணுகில் அணுகும்
புகலு மரியன் பொருவல்ல னெம்மான்
நிகரில் அவன்புகழ் பாடி யிளைப்பிலம்
பகலு மிரவும் படிந்து குடைந்தே

குடைந்துவண் டுண்ணும் துழாய்முடி யானை
அடைந்த தென் குருகூர்ச்சட கோபன்
மிடைந்த சொல் தொடை யாயிரத்திப்பத்து
உடைந்து நோய்களை யோடு விக்குமே

ஓடும்புள்ளேரி சூடும தண்டுழாய்
நீடு நின்றவை ஆடும் அம்மானே

அம்மானா பின்னும் எம்மாண புமானான
வெம்மா வாய்கீண்ட செம்மா கண்ணனே

கண்ணா வானென்றும் மண்ணோர்விண்ணோர்க்கு
தண்ணார் வேங்கட விண்ணோர வெற்பனே

வெற்பை யொன்றெடுத்து ஒற்க மின்றியே
நிற்கும் அம்மான்சீர் கற்பன் வைகலே

வைக லும்வெண்ணெய் கைக லந்துண்டான்
பொய்க லவாது என் மெய்க லந்தானே

கலந்தென்னாவி நலங்கொள் நாதன்
புலங்கொள் மாணாய் நிலம்கொண் டானே

கொண்டா னேழ்விடை உண்டா னேழ்வையம்
தண்டா மஞ்செய்து என் எண்டா னானானே

ஆனா னானாயன் மீனோ டேனமும்
தானா னானென்னில்

சங்கு சக்கரம் அங்கையில் கொண்டான்
எங்கும் தானாய நங்கள் நாதனே

நாதன்ஞாலங்கொள் பாதன் என்னம்மான்
ஓதம் போல்கிளர் வேதநீரனே

நீர்புரை வண்ணன் சீர்ச்சடகோபன்
நெர்த லாயிரத்து ஓர்தலிவையே

இவையும் அவையும் உவையம் இவரும் அவரும் உவரும்
அவையும யவரும்தன் னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனிமுத லெம்மான் கண்ணபிரானென்னமுதம்
சுவையன் திருவின் மணாளன் என்னுடைச்சுழலு ளானே

சூழல பலபல வல்லான் தொல்லையங் கால துலகை
கேழலொன் றாகியி டந்த கேசவ னென்னுடை யம்மான்
வேழ மருப்பையொ சித்தான் விண்ணவர கெண்ணல் அரியான்
ஆழ நெடுங்கடல சேர்ந்தான் அவனென னருகலி லானே

அருகலி லாய பெருஞ்சர் அமரர்கள் ஆதி முதல்வன்
கருகிய நீலநன் மேனி வண்ணன்செந தாமரை கண்ணன்
பொருசிறைப்புள்ளுவந்தேறும் பூமகளார்தனிக்கேள்வன்
ஒருகதியின்சுவைதந்தி டொழிவிலனென்னோடுடனே

உடனமர்க்காதல்மகளிர் திருமகள்மண்மகள் ஆயர்
மடமகள் என்றிவர்மூவர் ஆளும் உலகமும்மூன்றே
உடனவையொக்கவிழுங்கி ஆலிலைச்சேர்ந்தவனெம்மான்
கடல்மலிமாயப்பெருமான் கண்ணனென் ஒக்கலை யானே

ஒக்கலைவைத்துமுலைப்பால் உண்ணென்றுதந்திடவாங்கி
செக்கஞ்செகவன்றவள்பால் உயிர்செகவுண்டபெருமான்
நக்கபிரானோடயனும் இந்திரனும்முதலாக
ஒக்கவும்தோற்றிய ஈசன் மாயனென்னெஞ்சினுளானே

மாயனென்னெஞ்சினுள்ளன் மற்றும்யவர்க்கும் அதுவே
காயமும்சீவனும்தானே காலுமெரியும் அவனே
சேயன் அணியன்யவர்க்கும் சிந்தைக்கும் கோசர மல்லன்
தூயன் துயக்கன்மயக்கன் என்னுடைத்தோளிணையானே

தோளிணைமேலும் நன்மார்பின்மேலும் சுடர்முடிமேலும்
தாளிணைமேலும்புனைந்த தண்ணந்துழாயுடையம்மான்
கேளிணையொன்றுமிலாதான் கிளரும்சுடரொளிமூர்த்தி
நாளணைந்தொன்றுமகலான் என்னுடைநாவினுளானே

நாவினுள்நின்றுமலரும் ஞானக்கலைகளுக்கெல்லாம்
ஆவியுமாக்கையும்தானே அழிப்போடளிப்பவன்தானே
பூவியல்நால்தடந்தோளன் பொருபடையாழிசங்கேந்தும்
காவிநன்மேனிக்கமல கண்ணனென்கண்ணினுளானே

கமலக்கண்ணனென்கண்ணினுள்ளான்காண்பன் அவன்கண்களாலே
அமலங்க ளாக விழிக்கும் ஐம்புல னுமவன்மூர்த்தி
கமலத்தயன்நம்பிதன்னை கண்ணுதலானொடும்தோற்றி
அமலத்தெய்வத்தோடுலகம் ஆக்கியென்நெற்றியுளானே

நெற்றியுள்நின்றென்னையாளும் நிரைமலர்ப்பாதங்கள்சூடி
கற்றைத்துழாய்முடிக்கோல கண்ணபிரானைத்தொழுவார்
ஒற்றைப்பிறையணிந்தானும் நான்முகனும் இந்திரனும்
மற்றையமரருமெல்லாம் வந்தெனதுச்சியுளானே

உச்சியுள்ளேநிற்கும்தேவ தேவற்குக்கண்ணபிராற்கு
இச்சையுள்செல்லவுணர்த்தி வண்குருகூர்ச்சடகோபன்
இச்சொன்ன ஆயிரத்துள் இவையுமோர்பத்தெம்பிராற்கு
நிச்சலும்விண்ணப்பம்செய்ய நீள்கழல்சென்னிபொருமே

பொருமாநீள்படை யாழிசங்கத்தொடு
திருமாநீள்கழல் ஏழுலகும்தொழ
ஒருமாணிக்குற ளாகிநிமிர்ந்த
கருமாணிக்கமென் கண்ணுளதாகுமே

கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால்தொழில்
எண்ணிலும்வரு மென்னினிவேண்டுவம்
மண்ணும்நீரு மெரியும்நல்வாயுவும்
விண்ணுமாய்விரியு மெம்பிரானையே

எம்பிரானையெந்தை தந்தைதந்தைக்கும்
தம்பிரானை தண்தாமரைக்கண்ணனை
கொம்பராவு நுண்ணேரிடைமார்வனை
எம்பிரானை தொழாய்மடநெஞ்சமே

நெஞ்சமேநல்லை நல்லைஉன்னைப்பெற்றால்
என்செய்யோம் இனியென்னகுறைவினம்
மைந்தனை மலராள்மணவாளனை
துஞ்சும்போதும் விடாதுதொடர்க்கண்டாய்

கண்டாயேநெஞ்சே கருமங்கள்வாய்க்கின்று ஓர்
எண்டானுமின்றியே வந்தியலுமாறு
உண்டானையுலகேழு மோர்மூவடி
கொண்டானை கண்டு கொண்டனைநீயுமே

நீயும்நானுமி நேர்நிற்கில் மேல்மற்றோர்
நோயும்சார்க்கொடான் நெஞ்சமே சொன்னேன்
தாயும்தந்தையுமா யிவ்வுலகினில்
வாயுமீசன் மணிவண்ணனெந்தையே

எந்தையேயென்று மெம்பெருமானென்றும்
சிந்தையுள்வைப்பன் சொல்லுவன்பாவியேன்
எந்தையெம்பெருமானென்று வானவர்
சிந்தையுள் வைத்து சொல்லும்செல்வனையே

செல்வநாரண னென்றசொல்கேட்டலும்
மல்கும்கண்பனி நாடுவன்மாயமே
அல்லும்நன்பகலு மிடைவீடின்றி
நல்கியென்னை விடான்நம்பி நம்பியே

நம்பியைத்தென் குறுங்குடிநின்ற
செம்பொனேதிக ழும்திருமூர்த்தியை
உம்பர்வானவ ராதியஞ்சோதியை
எம்பிரானையென் சொல்லிமறப்பனோ

மறப்பும்ஞானமும் நானொன் றுணர்ந்திலன்
மறக்குமென்றுசெ தாமரைக்கண்ணொடு
மறப்பற என்னுள்ளே மன்னினான் றன்னை
மறப்பனோவினி யானென்மணியையே

மணியைவானவர் கண்ணனைத்தன்னதோர்
அணியை தென்குரு கூர்ச்சடகோபன் சொல்
பணிசெயாயிர துள்ளிவைபத்துடன்
தணிவிலர் கற்ப ரேல்கல்விவாயுமே
நறஸபஇ
திருவாய் மொழி இரண்டாம் பத்து

வாயுந்திரையுகளும் கானல்மடநாராய்
ஆயும் அமருலகும்துஞ்சிலும் நீதுஞ்சாயால்
நோயும் பயலைமையும் மீதூரவெம்மேபோல்
நீயும்திருமாலால் நெஞ்சம்கோ பட்டாயே

கோட்பட்டசிந்தையா கூர்வாய அன்றிலே
சேட்பட்ட யாமங்கள் சேரா திரங்குதியால்
ஆட்பட்ட எம்மேபோல் நீயும் அரவணையான்
தாட்பட்ட தண்டுழா தாமம்கா முற்றாயே

காமுற்ற கையறவோ டெல்லே இராப்பகல்
நீமுற்ற கண்டுயிலாய் நெஞ்சுருகி யேங்குதியால்
தீமுற்ற தென்னிலங்கை யூட்டினான் தாள்நயந்த
யாமுற்ற துற்றாயோ வாழி கனைகடலே

கடலும்மலையும்விசும்பும் துழாயெம்போல்
சுடர்க்கொளிராப்பகல் துஞ்சாயால்தண்வாடாய்
அடல்கொள்படையாழி அம்மானைக்காண்பான்நீ
உடலம்நோயுற்றாயோ வூழிதோறூழியே

ஊழிதோறூழி யுலகுக்குநீர்க்கொண்டு
தோழியரும்யாமும்போல் நீராய்நெகிழ்கின்ற
வாழியவானமே நீயும மதுசூதன்
பாழிமையிற் பட்டவன்கட்பாசத்தால்நைவாயே

நைவாய எம்மேபோல் நாண்மதியே நீயிந்நாள்
மைவான் இருளகற்றாய் மாழாந்துதேம்புதியால்
ஐவாய் அரவணைமே லாழிப்பெருமானார்
மெய்வாசகம்கேட்டுன் மெய்ந்நீர்மைதோற்றாயே

தோற்றோம்மடநெஞ்ச மெம்பெருமான்நாரணற்குஎம்
ஆற்றாமைசொல்லி யழுவோமை நீநடுவே
வேற்றோர்வகையில் கொடிதாயெனையூழி
மாற்றாண்மைநிற்றியோ வாழிகனையிருளே

இருளின்திணிவண்ணம் மாநீர்க்கழியேபோய்
மருளுற்றிராப்பகல் துஞ்சிலும்நீதுஞ்சாயால்
உருளும்சகடம் உதைத்தபெருமானார்
அருளின்பெருநசையா லாழாந்துநொந்தாயே

நொந்தாராக்காதல்நோய் மெல்லாவியுள்ளுலர்த்த
நந்தாவிளக்கமே நீயுமளியத்தாய்
செந்தாமரைத்தடங்கண் செங்கனிவாயெம்பெருமான்
அந்தாமத்தண்டுழா யாசையால்வேவாயே

வேவாராவேட்கைநோய் மெல்லாவியுள்ளுலர்த்த
ஓவாதிராப்பக லுன்பாலேவீழ்த்தொழிந்தாய்
மாவாய்பிளந்து மருதிடைபோய்மண்ணளந்த
மூவா முதல்வா இனியெம்மைச்சோரேலே

சோராதவெப்பொருட்கு ஆதியாம் சோதிக்கே
ஆராதகாதல் குருகூர்ச்சடகோபன்
ஓராயிரம்சொன்ன அவற்றுளிவைப்பத்தும்
சோரார்விடார்க்கண்டீர் வைகுந்தம்திண்ணெனவே

திண்ணன்வீடு முதல்முழுதுமாய்
எண்ணின்மீதிய னெம்பெருமான்
மண்ணும்விண்ணுமெல்லா முடனுண்ட நங்
கண்ணன் கண்ணல்ல தில்லையோர்க்கண்ணே

ஏபாவம்பரமே யேழுலகும்
ஈபாவஞ்செய் தருளாலளிப்பாரார்
மாபாவம்விட அரற்குப்பிச்சைபெய்
கோபாலகோளரி யேறன்றியே

ஏறனைப்பூவனை பூமகள்தன்னை
வேறின்றிவிண்தொழ தன்னுள்வைத்து
மேல்தன்னைமீதிட நிமிர்ந்துமண்கொண்ட
மால்தனில்மிக்குமோர் தேவுமுளதே

தேவுமெ பொருளும்படைக்க
பூவில்நான் முகனைப்படைத்த
தேவனெம் பெருமானுக்கல்லால்
பூவும்பூசனையும் தகுமே

தகும்சீர தன்தனிமுதலினுள்ளே
மிகும்தேவு மெப்பொருளும்படைக்க
தகும்கோல தாமரைக்கண்ணனெம்மான்
மிகும்சோதி மேலறிவார்யவரே

யவரும்யாவையு மெல்லாப்பொருளும்
கவர்வின்றி தன்னுளொடுங்கநின்ற
பவர்க்கொள்ஞான வெள்ளச்சுடர்மூர்த்தி
அவரெம் ஆழியம் பள்ளியாரே

பள்ளியாலிலை யேழுலகும்கொள்ளும்
வள்ளல் வல்வயிற்றுப்பெருமான்
உள்ளுளா ரறிவார் அவன்றன்
கள்ளமாய மனக்கருத்தே

கருத்தில்தேவு மெல்லாப்பொருளும்
வருத்தித்தமா பிரானையன்றி ஆரே
திருத்தித்திண்ணிலை மூவுலகும் தம்முள்
இருத்திக்காக்கு மியல்வினரே

காக்குமியல்வினன் கண்ணபெருமான்
சேர்க்கைசெய்து தன்னுந்தியுள்ளே
வாய்த்ததிசைமுக னிந்திரன்வானவர்
ஆக்கினான் தெய்வவுலகுகளே

கள்வா எம்மையு மேழுலகும் நின்
னுள்ளேதோற்றிய இறைவா என்று
வெள்ளேறன்நான்முக னிந்திரன்வானவர்
புள்ளூர்திகழல் பணிந்தேத்துவரே

ஏத்தவேழுலகுங் கொண்டகோல
கூத்தனை குருகூர்ச்சடகோபன்சொல்
வாய்த்தவாயிரத்துள் ளிவைபத்துடன்
ஏத்தவல்லவர கில்லையோர்ஊனமே

ஊனில்வாழுயிரே நல்லைபோஉன்னைப்பெற்று
வானுளார்பெருமான் மதுசூதனென்னம்மான்
தானும்யானுமெல்லாம் தன்னுள்ளேகலந்தொழிந்தோம்
தேனும்பாலும்நெய்யும் கன்னலுமமுதுமொத்தே

ஒத்தார்மிக்காரை இலையாயமாமாய
ஒத்தாயெப்பொருட்கு முயிராய் என்னைப்பெற்ற
அத்தாயாய்த்தந்தையா யறியாதனவறிவித்த
அத்தா நீசெய்தன அடியேனறியேனே

அறியாக்காலத்துள்ளே யடிமைக்கணன்புசெய்வித்து
அறியாமாமா தடியேனைவைத்தாயால்
அறியாமைக்குறளாய் நிலம்மாவலிமூவடியென்று
அறியாமைவஞ்சித்தா யெனதாவியுள்கலந்தே

எனதாவியுள்கலந்தபெரு நல்லுதவிக்கைம்மாறு
எனதாவிதந்தொழிந்தே னினிமீள்வதென்பதுண்டே
எனதாவியாவியும்நீ பொழிலேழுமுண்டவெந்தாய்
எனதாவியாரயானார தந்தநீகொண்டாக்கினையே

இனியார்ஞானங்களா லெடுக்கலெழாதவெந்தாய்
கனிவார்வீட்டின்பமே யென்கடற்படாவமுதே
தனியேன்வாழ்முதலே பொழிலேழுமேனமொன்றாய்
நுனியார்க்கோட்டில்வைத்தா யுன்பாதம்சேர்ந்தேனே

சேர்ந்தார்தீவினைக கருநஞ்சைத்திண்மதியை
தீர்ந்தார்தம்மனத்து பிரியாதவருயிரை
சோர்ந்தேபோகல்கொடா சுடரை அரக்கியைமூ
கீர்ந்தாயை அடியேனடைந்தேன் முதல்முன்னமே

முன்நல்யாழ்பயில் நூல் நரம்பின்முதிர்சுவையே
பன்னலார்பயிலும் பரனேபவித்திரனே
கன்னலேஅமுதே கார்முகிலேஎன்கண்ணா
நின்னலாலிலேன்கா ணென்னைநீகுறிக்கொள்ளே

குறிக்கொள்ஞானங்களா லெனையூழிசெய்தவமும்
கிறிக்கொண்டிப்பிறப்பே சிலநாளிலெய்தினன்யான்
உறிக்கொண்டவெண்ணெய்பா லொளித்துண்ணுமம்மான்பின்
நெறிக்கொண்டநெஞ்சனா பிறவித்துயர்க்கடிந்தே

கடிவார்தண்ணந்துழா கண்ணன்விண்ணவர்பெருமான்
படிவான்மிறந்த பரமன்பவித்திரன்சீர்
செடியார்நோய்கள்கெட படிந்துகுடைந்தாடி
அடியேன்வாய்மடுத்து பருகிக்களித்தேனே

களிப்பும்கவர்வுமற்று பிறப்புப்பிணிமூப்பிறப்பற்று
ஒளிக்கொண்டசோதியுமா யுடன்கூடுவதென்றுகொலோ
துளிக்கின்றவானிந்நிலம் சுடராழிசங்கேந்தி
அளிக்கின்றமாயப்பிரானடியார்கள்குழாங்களையே

குழாங்கொள்பேரரக்கன் குலம்வீயமுனிந்தவனை
குழாங்கொள்தென்குருகூர சடகோபன்தெரிந்துரைத்த
குழாங்கொளாயிரத்து ளிவைபத்துமுடன்பாடி
குழாங்களாயடியீருடன் கூடிநின்றாடுமினே

ஆடியாடி யகம்கரைந்து இசை
பாடிப்பாடி கண்ணீர்மல்கி எங்கும்
நாடிநாடி நரசிங்காவென்று
வாடிவாடு மிவ்வாணுதலெ

வாணுதலிம்மடவரல் உம்மை
காணுமாசையுள் நைகின்றாள் விறல்
வாணனாயிரந்தோள்துணித்தீர் உம்மை
காண நீரிரக்கமிலீரே

இரக்கமனத்தோ டெரியணை
அரக்குமெழுகு மொக்குமிவள்
இரக்கமெழி ரிதற்கென்செய்கேன்
அரக்கனிலங்கை செற்றீருக்கே

இலங்கைசெற்றவனே என்னும் பின்னும்
வலங்கொள்புள்ளுயர்த்தாய் என்னும் உள்ளம்
மலங்கவெவ்வுயிர்க்கும் கண்ணீர்மி
கலங்கிக்கைதொழும் நின்றிவளே

இவளிராப்பகல் வாய்வெரீஇ தன
குவளையொண்கண்ணநீர் கொண்டாள் வண்டு
திவளும்தண்ண துழாய்கொடீர் என
தவளவண்ணர் தகவுகளே

தகவுடையவனே யென்னும் பின்னும்
மிகவிரும்பும்பிரான் என்னும் என
தகவுயிர்க்கமுதே என்னும் உள்ளம்
உகவுருகி நின்றுள்ளுளே

உள்ளுளாவி யுலர்ந்துலர்ந்து என
வள்ளலேகண்ணனேயென்னும் பின்னும்
வெள்ளநீர்க்கிடந்தாய்என்னும் என்
கள்விதான்பட்ட வஞ்சனையே

வஞ்சனே என்னும் கைதொழும் தன்
நெஞ்சம்வே வநெடிதுயிர்க்கும் விறல்
கஞ்சனைவஞ்சனை செய்தீர் உம்மை
தஞ்சமென்றிவள் பட்டனவே

பட்டபோதெழு போதறியாள் விரை
மட்டலர்தண்துழாய் என்னும் சுடர்
வட்டவாய்நுதி நேமியீர் நும
திட்டமென்கொ லிவ்வேழைக்கே

ஏழைபேதை யிராப்பகல் தன
கேழிலொண்கண்ணநீர் கொண்டாள் கிளர்
வாழ்வைவேவ விலங்கை செற்றீர் இவள்
மாழைநோக்கொன்றும் வாட்டேன்மினே

வாட்டமில்புகழ் வாமனனை இசை
கூட்டிவண்சடகோபன் சொல் அமை
பாட்டோ ராயிரத்தி பத்தால் அடி
குட்டலாகு மந்தாமமே

அந்தாமத்தன்புசெய் தென்னாவிசேரம்மானுக்கு
அந்தாமவாழ்முடிசங் காழிநூலாரமுள
செந்தாமரைத்தடங்கண் செங்கனிவாய்செங்கமலம்
செந்தாமரையடிக்கள் செம்பொன்திருவுடம்பே

திருவுடம்புவான்சுடர் செந்தாமரைகண்கைகமலம்
திருவிடமேமார்வ மயனிடமேகொப்பூழ்
ஒருவிடமுமெந்தை பெருமாற்கரனேயோ
ஒருவிடமொன்றின்றி யென்னுள்கலந்தானுக்கே

என்னுள்கலந்தவன் செங்கனிவாய்செங்கமலம்
மின்னும்சுடர்மலைக்கு கண்பாதம்கைகமலம்
மன்னுமுழுவேழுலகும் வயிற்றினுள
தன்னுள்கலவாத தெப்பொருளும்தானிலையே

எப்பொருளும்தானாய் மரகதக்குன்றமொக்கும்
அப்பொழுதைத்தாமரைப்பூ கண்பாதம்கைகமலம்
எப்பொழுதும்நாள்திங்க ளாண்டூழியூழிதொறும்
அப்பொழுதைக்கப்பொழு தென்னாராவமுதமே

ஆராவமுதமா யல்லாவியுள்கலந்த
காரார்க்கருமுகில்போ லென்னம்மான்கண்ணனுக்கு
நேராவாய்செம்பவளம் கண்பாதம்கைகமலம்
பேராரநீண்முடிநாண் பின்னுமிழைபலவே

பலபலவேயாபரணம் பேரும்பலபலவே
பலபலவேசோதிவடிவு பண்பெண்ணில்
பலபலகண்டுண்டு கேட்டுற்றுமோந்தின்பம்
பலபலவேஞானமும் பாம்பணைமேலாற்கேயோ

பாம்பணைமேல்பாற்கடலுள் பள்ளியமர்ந்ததுவும்
காம்பணைதோள்பின்னைக்கா எறுடனேழ்செற்றதுவும்
தேம்பணையசோலை மராமரமேழெய்ததுவும்
பூம்பிணையதண்துழா பொன்முடியம்போரேறே

பொன்முடியம்போரேற்றை யெம்மானைநால்தடந்தோள்
தன்முடிவொன்றில்லாத தண்டுழாய்மாலையனை
என்முடிவுகாணாதே யென்னுள்கலந்தானை
சொல்முடிவுகாணேன்நான் சொல்லுவதென்சொல்லீரே

சொல்லீரென்னம்மானை யென்னாவியாவிதனை
எல்லையில்சீரென் கருமாணிக்கச்சுடரை
நல்லவமுதம்பெற்றற்கரிய வீடுமாய்
அல்லிமலர்விரையொ தாணல்லன்பெண்ணல்லனே

ஆணல்லன்பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன்
காணலுமாகான் உளனல்லன் இல்லையல்லன்
பேணுங்கால்பேணுமுருவாகும் அல்லனுமாம்
கோணை பெரிதுடைத்தெம்மானைக்கூறுதலே

கூறுதலொன்றாரா குடக்கூத்தவம்மானை
கூறுதலேமேவி குருகூர்ச்சடகோபன்
கூறினவந்தாதி யோராயிரத்துளிப்பத்தும்
கூறுதல்வல்லாருளரேல் கூடுவர்வைகுந்தமே

வைகுந்தாமணிவண்ணனே என்பொல்லாத்திருக்குறளா என்னுள்மன்னி
வைகும்வைகல்தோறும் அமுதாயவானேறே
செய்குந்தாவருந்தீமையுன்னடியார்க்குத்தீர்த்தசுரர்க்குத்தீமைகள்
செய்குந்தா உன்னைநான் பிடித்தேன் கொள்சிக்கெனவே

சிக்கெனச்சிறுதோரிடமும்புறப்படாத்தன்னுள்ளே உலகுகள்
ஒக்கவேவிழுங்கி புகுந்தான்புகுந்ததற்பின்
மிக்கஞானவெள்ளச்சுடர்விளக்கா துளக்கற்றமுதமாய் எங்கும்
பக்கநோக்கறியானென் பைந்தாமரைக்கண்ணனே

தாமரைக்கண்ணனைவிண்ணோர் பரவும்தலைமகனை துழாய்விரை
பூமருவுகண்ணி யெம்பிரானைப்பொன்மலையை
நாமருவிநன்கேத்தியுள்ளிவணங்கிநாம்மகிழ்ந்தாட நாவலர்
பாமருவிநிற்கத்தந்த பான்மையேவள்ளலே

வள்ளலேமதுசூதனா என்மரகதமலையே உனைநினைந்து
தெள்கல்தந்த எந்தாய்
வெள்ளமேபுரைநின்புகழ்குடைந்தாடிப்பாடிக்களித்துகந்துகந்து
உள்ளநோய்களேல்லாம் துரந்துய்ந்து போந்திருந்தே

உய்ந்துபோந்தென்னுலப்பிலாதவெந்தீவினைகளைநாசஞ்செய்துஉன்
தந்தமிலடிமையடைந்தேன் விடுவேனோ
ஐந்துபைந்தலையாடரவணைமேவிப்பாற்கடல்யோகநித்திரை
சிந்தைசெய்தவெந்தாய்

உன்னைச்சிந்தைசெய்துசெய்துன்நெடுமாமொழியிசைபாடியாடிஎன்
முன்னைத்தீவினைகள்முழுவேரரிந்தனன்யான்
உன்னைச்சிந்தையினாலிகழ்ந்த இரணியன் அகல்மார்வங்கீண்டஎன்
முன்னைகோளரியே முடியாததென்னெனக்கே

முடியாததென்னெனக்கேலினி முழுவேழுலகுமுண்டான்உகந்துவ
தடியேனுள்புகுந்தான் அகல்வானும் அல்லனினி
செடியார்நோய்களெல்லாம்துரந்தெமர்க்கீழ்மேலெழுபிறப்பும்
விடியாவெந்நரகத்தென்றும் சேர்தல்மாறினரே

மாறிமாறிப்பலபிறப்பும்பிற தடியையடைந்துள்ளந்தேறி
ஈறிலின்பத்திருவெள்ளம் யான்மூழ்கினன்
பாறிப்பாறியசுரர்தம்பல்குழாங்கள்நீறெழ பாய்பறவையொன்
றேறிவீற்றிருந்தாய்

எந்தாய்தண்திருவேங்கடத்துள் நின்றாய்இலங்கைசெற்றாய் மராமரம்
பைந்தாளேழுருவவொரு வாளிகோத்தவில்லா
கொந்தார்தண்ணந்துழாயினாய் அமுதேஉன்னையென்னுள்ளேகுழைத்தவெ
மைந்தா வானேறே இனியெங்குப்போகின்றதே

போகின்றகாலங்கள்போயகாலங்கள்போகுகாலங்கள் தாய்தந்தையுயி
ராகின்றாய்
பாகின்றதொல்புகழ்மூவுலகுக்கும் நாதனே பரமா தண்வேங்கட
மேகின்றாய்தண்டுழாய் விரைநாறுகண்ணியனே

கண்ணித்தண்ணந்துழாய்முடி கமலத்தடம்பெருங்
கண்ணனை புகழ் நண்ணித்தென்குருகூர்ச்சடகோபன்மாறன்சொன்ன
எண்ணில்சோர்விலந்தாதியாயிர துள்ளிவையுமோர்பத்திசையொடும்
பண்ணில்பாடவல்லாரவர் கேசவன்தமரே
நறஸபஇ

கேசவன்தமர்க்கீழ்மே லெமரேழெழுபிறப்பும்
மாசதிரிதுபெற்று நம்முடைவாழ்வுவாய்க்கின்றவா
ஈசனென்கருமாணிக்கமென் செங்கோலக்கண்ணன்விண்ணோர்
நாயகன் எம்பிரானெம்மான்நாராயணனாலே

நாரணன்முழுவேழுலகுக்கும் நாதன்வேதமயன்
காரணம்கிரிசை கருமமிவைமுதல்வனெந்தை
சீரணங்கமரர்பிறர் பலரும்தொழுதேத்தநின்று
வாரணத்தைமருப்பொசித்த பிரானென்மாதவனே

மாதவனென்றதேகொண் டென்னையினியிப்பால்பட்டது
யாதவங்களும்சேர்க்கொடேனென் றென்னுள்புகுந்திருந்து
தீதவம்கெடுக்குமமுதம் செந்தாமரைக்கட்குன்றம்
கோதவமிலென்கன்னற்கட்டி யெம்மானென்கோவிந்தனே

கோவிந்தன்குடக்கூத்தன்கோவலனென்றென்றேகுனித்து
தேவும்தன்னையும்பாடியாடத்திருத்தி என்னைக்கொண் டென்
பாவந்தன்னையும்பாறக்கை தெமரேழெழுபிறப்பும்
மேவும்தன்மையமாக்கினான் வல்லனெம்பிரான்விட்டுவே

விட்டிலங்குசெஞ்சோதி தாமரைபாதம்கைகள்கண்கள்
விட்டிலங்குகருஞ்சுடர் மலையேதிருவுடம்பு
விட்டிலங்குமதியம்சீர் சங்குசக்கரம்பரிதி
விட்டிலங்குமுடியம்மான் மதுசூதனன்தனக்கே

மதுசூதனையன்றிமற்றிலேனென் றெத்தாலும்கருமமின்றி
துதிசூழ்ந்தபாடல்கள் பாடியாட நின்றூழியூழிதொறும்
எதிர்சூழல்புக்கெனைத்தோர்பிறப்புமெனக்கேயருள்கள்செய்ய
விதிசூழ்ந்ததாலெனக்கேலம்மான் திரிவிக்கிரமனையே

திரிவிக்கிரமன்செந்தாமரைக்கணெம்மானேன்செங்கனிவாய்
உருவில்பொலிந்தவெள்ளைப்பளிங்குநிறத்தனனென்றென்று உள்ளி
பரவிப்பணிந்து பல்லூழியூழிநின்பாதபங்கயமே
மருவித்தொழும்மனமேதந்தாய் வல்லைகாணென்வாமனனே

வாமனனென்மரகதவண்ணன் தாமரைக்கண்ணினன்
காமனைப்பயந்தாய் என்றென்றுன்கழல்பாடியேபணிந்து
தூமனத்தனனா பிறவித்துழதிநீங்க என்னை
தீமனங்கெடுத்தா யுனக்கென்செய்கேனென்சிரீ தரனே

சிரீஇதரன்செய்யதாமரைக்கண்ணனென்றென்றிராப்பகல்வாய்
வெரீஇ அலமந்துகண்கள்நீர்மல்கி வெவ்வுயிர்த்துயிர்த்து
மரீஇயதீவினைமாளவின்பம்வளர வைகல்வைகல்
இரீஇ உன்னையென்னுள்வைத்தனை யென்னிருடீகேசனே

இருடீகேசனெம்பிரா னிலங்கையரக்கர்க்குலம்
முருடுதீர்த்தபிரானெம்மா னமரர்பெம்மானென்றென்று
தெருடியாகில்நெஞ்சேவணங்கு திண்ணமறியறிந்து
மருடியேலும்விடேல்கண்டாய் நம்பிபற்பநாபனையே

பற்பநாபனுயர்வறவுயரும் பெருந்திறலோன்
எற்பரனென்னையாக்கி கொண்டெனக்கேதன்னைத்தந்த
கற்பகம் என்னமுதம் கார்முகில்போலும்வேங்கடநல்
வெற்பன் விசும்போர்பிரா னெந்தைதாமோதரனே

தாமோதரனைத்தனிமுதல்வனை ஞாலமுண்டவனை
ஆமோதரமறிய வொருவர்க்கென்றெதொழுமவர்கள்
தாமோதரனுருவாகிய சிவற்கும்திசைமுகற்கும்
ஆமோதரமறிய எம்மானையென்னாழிவண்ணனையே

வண்ணமாமணிச்சோதியை யமரர்தலைமகனை
கண்ணனைநெடுமாலை தென்குருகூர்ச்சடகோபன்
பண்ணியதமிழ்மாலை யாயிரத்துள்ளிவைபன்னிரண்டும்
பண்ணில்பன்னிருநா பாட்டண்ணல்தாளணைவிக்குமே

அணைவதரவணைமேல் பூம்பாவையாகம்
புணர்வது இருவரவர்முதலும்தானே
இணைவனாமெப்பொருட்கும் வீடுமுதலாம்
புணைவன் பிறவிக்கடல்நீந்துவார்க்கே

நீந்தும்துயர்ப்பிறவி யுட்படமற்றெவ்வெவையும்
நீந்தும்துயரில்லா வீடுமுதலாம்
பூந்தண்புனல்பொய்கை யானை இடர்க்கடிந்த
பூந்தண்துழா யென்தனிநாயகன்புணர்ப்பே

புணர்க்குமயனா மழிக்குமரனாம்
புணர்த்ததன்னுந்தியோ டாகத்துமன்னி
புணர்ததிருவாகி தன்மார்வில்தான்சேர்
புணர்ப்பன்பெரும்புணர பெங்கும்புலனே

புலனைந்துமேயும் பொறியைந்துநீக்கி
நலமந்தமில்லதோர் நாடுபுகுவீர்
அலமந்துவீய வசுரரைச்செற்றான்
பலமுந்துசீரில் படிமினோவாதே

ஒவாத்துயர்ப்பிறவி யுட்படமற்றெவ்வெவையும்
மூவாத்தனிமுதலாய் மூவுலகும்காவலோன்
மாவாகியாமையாய் மீனாகிமானிடமாம்
தேவாதிதேவபெருமா னென்தீர்த்தனே

தீர்த்தனுலகளந்த சேவடிமேல்பூந்தாமம்
சேர்த்தியவையே சிவன்முடிமேல்தான்கண்டு
பார்த்தன்தெளிந்தொழிந்த பைந்துழாயான்பெருமை
பேர்த்துமொருவரால் பேசக்கிடந்ததே

கிடந்திருந்துநின்றளந்து கேழலாய்க்கீழ்பு
கிடந்திடும் தன்னுள்கரக்குமுமிழும்
தடம்பெருந்தோளாரத்தழுவும் பாரென்னும்
மடந்தையை மால்செய்கின்றமாலார்க்காண்பாரே

காண்பாராரெம்மீசன் கண்ணனையென்காணுமாறு
ஊண்பேசிலெல்லாவுலகுமோர்துற்றாற்றா
சேண்பாலவீடோ வுயிரோமற்றெப்பொருட்கும்
ஏண்பாலும்சோரான் பரந்துளனாமெங்குமே

எங்கும்முளன்கண்ண னென்றமகனைக்காய்ந்து
இங்கில்லையால் என் றிரணியன் தூண்புடைப்ப
அங்கப்பொழுதே அவன்வீயத்தோன்றிய என்
சிங்கப்பிரான்பெருமை யாராயும்சீர்மைத்தே

சீர்மைகொள்வீடு சுவர்க்கநரகீறா
ஈர்மைகொள்தேவர்நடுவா மற்றெப்பொருட்கும்
வேர்முதலாய்வித்தா பரந்துதனிநின்ற
கார்முகில்போல்வண்ணனென் கண்ணனைநான்கண்டேனே

கண்டலங்கள்செய்ய கருமேனியம்மானை
வண்டலம்பும்சோலை வழுதிவளநாடன்
பண்டலையில்சொன்னதமி ழாயிரத்திப்பத்தும்வல்லார்
விண்டலையில்வீற்றிரு தாள்வரெம்மாவீடே

எம்மாவீட்டு திறமும்செப்பம் நின்
செம்மாபாதபற்பு தலைசேர்த்தொல்லை
கைம்மாதுன்பம் கடிந்தபிரானே
அம்மாவடியென் வேண்டுவதீதே

இதேயானுன்னை கொள்வதெஞ்ஞான்றும் என்
மைதோய்சோதி மணிவண்ணவெந்தாய்
எய்தாநின்கழல் யானெய்த ஞான
கைதா காலக்கழிவுசெய்யேலே

செய்யேல்தீவினையென் றருள்செய்யும் என்
கையார்ச்சக்கர கண்ணபிரானே
ஐயார்க்கண்டமடைக்கிலும் நின்கழல்
எய்யாதேத்த அருள்செய்யெனக்கே

எனக்கேயாட்செய் யெக்காலத்துமென்று என்
மனக்கேவ திடைவீடின்றிமன்னி
தனக்கேயாக வெனைக்கொள்ளுமீதே
எனக்கேகண்ணனை யான்கொள்சிறப்பே

சிறப்பில்வீடு சுவர்க்கம்நரகம்
இறப்பிலெய்துகவெய்தற்க யானும்
பிறப்பில் பல்பிறவிப்பெருமானை
மறப்பொன்றின்றி யென்றும்மகிழ்வேனே

மகிழ்கொள்தெய்வ முலோகம் அலோகம்
மகிழ்கொள்சோதி மலர்ந்தவம்மானே
மகிழ்கொள்சிந்தை சொல்செய்கைகொண்டு என்றும்
மகிழ்வுற்றுன்னை வணங்கவாராயே

வாராயுன் திருப்பாதமலர்க்கீழ்
பேராதேயான் வந்தடையும்படி
தாராதாய் உன்னையென்னுள்வைப்பிலென்றும்
ஆராதாய் எனக்கென்றுமெக்காலே

எக்காலத்தெந்தையா யென்னுள்மன்னில் மற்
றெக்காலத்திலும் யாதொன்றும்வேண்டேன்
மிக்கார்வேத விமலர்விழுங்கும் என்
அக்காரக்கனியே உன்னையானே

யானேயென்னை அறியகிலாதே
யானேயென்தனதே யென்றிருந்தேன்
யானேநீயென் னுடைமையும்நீயே
வானேயேத்து மெம்வானவரேறே

ஏறேலேழும்வென் றேர்க்கொளிலங்கையை
நீறேசெய்த நெடுஞ்சுடர்ச்சோதி
தேறேலென்னையுன் பொன்னடிச்சேர்த்தொல்லை
வேறேபோக எஞ்ஞான்றும்விடலே

விடலில்சக்கர தண்ணலை மேவல்
விடலில்வண்குருகூர சடகோபன்சொல்
கெடலிலாயிரத்துள் ளிவைபத்தும்
கெடலில்வீடுசெய்யும் கிளர்வார்க்கே

கிளரொளியிளமை கெடுவதன்முன்னம்
வளரொளிமாயோன் மருவியகோயில்
வளரிளம்பொழில்சூழ் மாலிருஞ்சோலை
தளர்விலராகில் சார்வதுசதிரே

சதிரிளமடவார் தாழ்ச்சியை மதியாது
அதிர்க்குரல்சங்க தழகர்தம்கோயில்
மதிதவழ்குடுமி மாலிருஞ்சோலை
பதியதுவேத்தி யெழுவதுபயனே

பயனல்லசெய்து பயனில்லைநெஞ்சே
புயல்மழைவண்ணர் புரிந்துறைகோயில்
மயல்மிகுபொழில்சூழ் மாலிருஞ்சோலை
அயன்மலையடைவததுகருமமே

கருமவன்பாசம் கழித்துழன்றுய்யவே
பெருமலையெடுத்தான் பீடுறைகோயில்
வருமழைதவழும் மாலிருஞ்சோலை
திருமலையதுவே யடைவதுதிறமே

திறமுடைவலத்தால் தீவினைபெருக்காது
அறமுயல் ஆழி படையவன்கோயில்
மறுவில்வண்சுனைசூழ் மாலிருஞ்சோலை
புறமலைசார போவதுகிறியே

கிறியெனநினைமின் கீழ்மைசெய்யாதே
உறியமர்வெண்ணெ யுண்டவன் கோயில்
மறியொடுபிணைசேர் மாலிருஞ்சோலை
நெறிபட அதுவே நினைவதுநலமே

நலமெனநினைமின் நரகழுந்தாதே
நிலமுனமிடந்தான் நீடுறைகோயில்
மலமறுமதிசேர் மாலிருஞ்சோலை
வலமுறையெய்தி மருவுதல்வலமே

வலம்செய்துவைகல் வலங்கழியாதே
வலம்செய்யும்ஆய மாயவன் கோயில்
வலம்செய்யும்வானோர் மாலிருஞ்சோலை
வலம்செய்துநாளும் மருவுதல்வழக்கே

வழக்கெனநினைமின் வல்வினைமூழ்காது
அழக்கொடியட்டா னமர்பெருங்கோயில்
மழக்களிற்றினஞ்சேர் மாலிருஞ்சோலை
தொழுக்கருதுவதே துணிவதுசூதே

சூதென்றுகளவும் சூதும்செய்யாதே
வேதமுன்விரித்தான் விரும்பியகோயில்
மாதுறுமயில்சேர் மாலிருஞ்சோலை
போதவிழ்மலையே புகுவதுபொருளே

பொருளேன்றிவ்வுலகம் படைத்தவன்புகழ்மேல்
மருளில்வண்குருகூர் வண்சடகோபன்
தெருள்கொள்ளச்சொன்ன வோராயிரத்துளிப்பத்து
அருளுடையவன்தா ளணைவிக்கும்முடித்தே
திருவாய் மொழி மூன்றாம் பத்து

முடிச்சோதி யாயுனது முகச்சோதி மலந்ததுவோ
அடிச்சோதி நீநின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ
படிச்சோதி யாடையொடும் பல்கலனாய் நின்பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ திருமாலே கட்டுரையே

கட்டுரைக்கில் தாமரைநின் கண்பாதம் கையொவ்வா
கட்டுரைத்த நன் பொன்னுள் திருமேனி ஒளி ஒவ்வாது
ஒட்டுரைத்திவ் வுலகுன்னை புகழ்வெல்லாம் பெரும்பாலும்
பட்டுரையா புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதீ

பரஞ்சோதி நீபரமாய் நின்னிகழ்ந்து பின் மற்றோர்
பரஞ்சோதி யின்மையில் படியோவி நிகழ்கின்ற
பரஞ்சோதி நின்னுள்ளே படருலகம் படைத்தஎம்
பரஞ்சோதி கோவிந்தா பண்புரைக்க மாட்டேனே

மாட்டாதே யாகிலுமிம் மலர்தலைமா ஞாலம்நின்
மாட்டாய மலர்ப்புரையும் திருவுருவும் மனம்வைக்க
மாட்டாத பலசமய மதிகொடுத்தாய் மலர்த்துழாய்
மாட்டேநீ மனம்வைத்தாய் மாஞாலம் வருந்தாதே

வருந்தாத அருந்தவத்த மலர்க்கதிரின் சுடருடம்பாய்
வருந்தாத ஞானமாய் வரம்பின்றி முழுதியன்றாய்
வருங்காலம் நிகழ்காலம் கழிகால மாய்உலகை
ஒருங்காக அளிப்பாய்சீர் எங்குலக்க ஓதுவனே

ஓதுவார் ஓத்தெல்லாம் எவ்வுலக தெவ்வெவையும்
சாதுவாய் நின்புகழின் தகையல்லால் பிறிதில்லை
போதுவாழ் புனந்துழாய் முடியினாய் பூவின்மேல்
மாதுவாழ் மார்ப்பினாய் என்சொல்லியான் வாழ்த்துவனே

வாழ்த்துவார் பலராக நின்னுள்ளே நான்முகனை
மூழ்த்தநீ ருலகெல்லாம் படையென்று முதல்படைத்தாய்
கேழ்த்தசீ ரரன்முதலா கிளர்தெய்வ மாய்க்கிளர்ந்து
சூழ்த்தமரர் துதித்தாலுன் தொல்புகழ்மா சூணாதே

மாசூணா சுடருடம்பாய் மலராது குவியாது
மாசூணா ஞானமாய் முழுதுமாய் முழுதியன்றாய்
மாசூணா வான்கோல தமரர்க்கோன் வழிபட்டால்
மாசூணா உன்பாத மலர்சோதி மழுங்காதே

மழுங்காத வைந்நுதிய சக்கரநல் வலத்தையாய்
தொழுங்காதல் களிறளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே
மழுங்காத ஞானமே படையாக மலருலகில்
தொழும்பாயார களித்தாலுன் சுடர்ச்சோதி மறையாதே

மறையாய நால்வே துள்நின்ற மலர்சுடரே
முறையாலிவ் வுலகெல்லாம் படைத்திடந்துண் டுமிழ்ந்தளந்தாய்
பிறையேறு சடையானும் நான்முகனும் இந்திரனும்
இறையாதல் அறிந்தேத்த வீற்றிருத்தல் இதுவியப்பே

வியப்பாய வியப்பில்லா மெய்ஞ்ஞான வேதியனை
சயப்புகழார் பலர்வாழும் தடங்குருகூர் சடகோபன்
துயக்கின்றி தொழுதுரைத்த ஆயிரத்து ளிப்பத்தும்
உயக்கொண்டு பிறப்பறுக்கும் ஒலிமுந்நீர் ஞாலத்தே

முந்நீர் ஞாலம் படைத்தவெம் முகில்வண்ணனே
அந்நாள்நீ தந்த ஆக்கையின் வழியுழல்வேன்
வெந்நாள்நோய் வீய வினைகளைவேர் அறப்பாய்ந்து
எந்நாள்யான் உன்னை இனிவந்து கூடுவனே

வன்மா வையம் அளந்த எம் வாமனாநின்
பன்மா மா பல்பிறவியில் படிகின்றயான்
தொன்மா வல்வினை தொடர்களை முதலரிந்து
நின்மாதாள் சேர்ந்து நிற்பதெஞ் ஞான்றுகொலோ

கொல்லா மாக்கோல் கொலைசெய்து பாரதப்போர்
எல்லா சேனையும் இருநில தவித்தவெந்தாய்
பொல்லா ஆக்கையின் புணர்வினை அறுக்கலறா
சொல்லாய்யா னுன்னை சார்வதோர் சூழ்ச்சியே

சூழ்ச்சி ஞான சுடரொளி யாகிஎன்றும்
ஏழ்ச்சிக்கே டின்றி எங்கணும் நிறைந்தவெந்தாய்
தாழ்ச்சிமற் றெங்கும் தவிர்ந்துநின் தாளிணக்கீழ்
வாழ்ச்சியான் சேரும் வகையருளாய் வந்தே

வந்தாய்போ லேவந்தும் என்மன தினைநீ
சிந்தாமல் செய்யாய் இதுவே யிதுவாகில்
கொந்தார்க்கா யாவின் கொழுமலர திருநிறத்த
எந்தாய்யா னுன்னை எங்குவ தணுகிற்பனே

கிற்பன் கில்லேன் என்றிலன் முனநாளால்
அற்பசா ரங்கள் அவைசுவை தகன்றொழிந்தேன்
பற்பல் லாயிரம் உயிர்செய்த பரமாநின்
நற்பொற்சோ தித்தாள் நணுகுவ தெஞ்ஞான்றே

எஞ்ஞான்று நாமிரு திருந்திரங்கி நெஞ்சே
மெய்ஞ்ஞான மின்றி வினையியல் பிறப்பழுந்தி
எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவற நிறைந்துநின்ற
மெய்ஞ்ஞான சோதி கண்ணனை மேவுதுமே

மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன்
ஓவுத லின்றி உன்கழல் வணங்கிற்றிலேன்
பாவுதொல் சீர்க்கண்ணா என் பரஞ்சுடரே
கூவுகின்றேன் காண்பாலன் எங்கொய்த கூவுவனே

கூவிக்கூவி கொடுவினை தூற்றுள் நின்று
பாவியேன் பலகாலம் வழிதிகை தலமர்க்கின்றேன்
மேவியன் றாநிரை காத்தவ னுலகமெல்லாம்
தாவிய அம்மானை எங்கினி தலைப்பெய்வனே

தலைப்பெய் காலம் நமன்தமர் பாசம்விட்டால்
அலைப்பூ ணுண்ணுமவ் வல்லலெல் லாமகல
கலைப்பல் ஞானத்தென் கண்ணனை கண்டுகொண்டு
நிலைப்பெற்றென் னெஞ்சம் பெற்றது நீடுயிரே

உயிர்க ளெல்லா உலகமு முடையவனை
குயில்கொள் சோலை தென்குருகூர சடகோபன்
செயிரில்சொல் இசைமாலை ஆயிரத்து ளிப்பத்தும்
உயிரின்மே லாக்கை ஊனிடை ஒழிவிக்குமே

ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி
வழுவிலா அடிமை செய்ய வேண்டும்நாம்
தெழிகு ரல்அரு வித்திரு வேங்கடத்து
எழில்கொள் சோதி எந்தைதந்தை தந்தைக்கே

எந்தை தந்தை
முந்தை வானவர்
சிந்துபூ மகிழும் திருவேங் கடத்து
அந்த மில்புகழ காரெழில் அண்ணலே

அண்ணல் மாயன் அணிகொள்செ தாமரை
கண்ணன் செங்கனி வாய்க்கரு மாணிக்கம்
தெண்ணி றைச்சுனை நீர்த்திரு வேங்கடத்து
எண்ணில் தொல்புகழ் வானவ ரீசனே

ஈசன் வானவர கென்பனென் றால்அது
தேச மோதிரு வேங்கட தானுக்கு
நீச னென்நிறை வொன்றுமி லேன்என்கண்
பாசம் வைத்த பரஞ்சுடர சோதிக்கே

சோதி யாகியெல் லாவுல கும்தொழும்
ஆதி மூர்த்தியென் றாலள வாகுமோ
வேதி யர்முழு வே தமுதத்தை
தீதில் சீர்த்திரு வேங்கட தானையே

வேங்க டங்கள்மெய்ம் மேல்வினை முற்றவும்
தாங்கள் தங்கட்கு நல்லன வேசெய்வார்
வேங்க டத்துறை வார்க்கு நமவென்ன
லாங்க டமைஅ துசு தார்க்கட்கே

சுமந்து மாமலர் நீர்சுடர் தீபம்கொண்டு
அமர்ந்து வானவர்
நமன்றெ ழும்திரு வேங்கடம் நங்கட்கு
சமன்கொள் வீடு தரும்தடங் குன்றமே

குன்றம் ஏந்தி குளிர்மழை காத்தவன்
அன்று ஞாலம் அளந்த பிரான்பரன்
சென்று சேர்திரு வேங்கட மாமலை
ஒன்று மேதொழ நம்வினை ஓயுமே

ஓயு மூப்பு பிறப்பிற புப்பிணி
வீயு மாறுசெய் வான்திரு வேங்கட
தாயன் நாண்மல ராமடி தாமரை
வாயுள் ளும்மன துள்ளும்வை பார்கட்கே

வைத்த நாள்வரை எல்லை குறுகிச்சென்று
எய்த்தி ளைப்பதன் முன்னம் அடைமினோ
பைத்த பாம்பணை யான்திரு வேங்கடம்
மொய்த்த சோலைமொய் பூந்தடம் தாழ்வரே

தாள்ப ரப்பிமண் வதாவிய ஈசனை
நீள்பொ ழில்குரு கூர்ச்சட கோபன்சொல்
கேழில் ஆயிர திப்பத்தும் வல்லவர்
வாழ்வர் வாழ்வெய்தி ஞாலம் புகழவே

புகழுநல் ஒருவன் என்கோ
பொருவில்சீர பூமி யென்கோ
திகழும்தண் பரவை என்கோ
தீயென்கோ வாயு என்கோ
நிகழும்ஆ காச மென்கோ
நீள்சுடர் இரண்டும் என்கோ
இகழ்விலிவ் வனைத்தும் என்கோ
கண்ணனை கூவுமாறே

கூவுமா றறிய மாட்டேன்
குன்றங்கள் அனைத்தும் என்கோ
மேவுசீர் மாரி என்கோ
விளங்குதா ரகைகள் என்கோ
நாவியல் கலைகள் என்கோ
ஞானநல் லாவி என்கோ
பாவுசீர கண்ணன் எம்மான்
பங கண்ண னையே

பங்கை கண்ணன் என்கோ
பவளச்செவ் வாயன் என்கோ
அங்கதிர் அடியன் என்கோ
அஞ்சன வண்ணன் என்கோ
செங்கதிர் முடியன் என்கோ
திருமறு மார்வன் என்கோ
சங்குச கரத்தன் என்கோ
சாதிமா ணிக்க தையே

சாதிமா ணிக்கம் என்கோ
சவிகோள்பொன் முத்தம் என்கோ
சாதிநல் வயிரம் என்கோ
தவிவில்சீர் விளக்கம் என்கோ
ஆதியஞ் சோதி என்கோ
ஆதியம் புருடன் என்கோ
ஆதுமில் கால தெந்தை
அச்சுதன் அமல னையே

அச்சுதன் அமலன் என்கோ
அடியவர் வினைகெடுக்கும்
நச்சுமா மருந்தம் என்கோ
நலங்கடல் அமுதம் என்கோ
அச்சுவை கட்டி என்கோ
அறுசுவை அடிசில் என்கோ
நெய்ச்சுவை தேறல் என்கோ
கனியென்கோ பாலென் கேனோ

பாலென்கோ நான்கு வேத
பயனென்கோ சமய நீதி
நூலென்கோ நுடங்கு கேள்வி
இசையென்கோ இவற்றுள் நல்ல
மேலென்கோ வினையின் மிக்க
பயனென்கோ கண்ணன் என்கோ
மாலென்கோ மாயன் என்கோ
வானவர் ஆதி யையே

வானவர் ஆதி என்கோ
வானவர் தெய்வம் என்கோ
வானவர் போகம் என்கோ
வானவர் முற்றும் என்கோ
ஊனமில் செல்வம் என்கோ
ஊனமில் சுவர்க்கம் என்கோ
ஊனமில் மோக்கம் என்கோ
ஒளிமணி வண்ண னையே

ஒளிமணி வண்ணன் என்கோ
ஒருவனென் றேத்த நின்ற
நளிர்மதி சடையன் என்கோ
நான்மு கடவுள் என்கோ
அளிமகிழ துலகமெல்லாம்
படைத்தவை ஏத்த நின்ற
களிமலர துளவ னெம்மான்
கண்ணனை மாய னையே

கண்ணனை மாயன் றன்னை
கடல்கடை தமுதங் கொண்ட
அண்ணலை அச்சு தன்னை
அனந்தனை அனந்தன் தன்மேல்
நண்ணிநன் குறைகின் றானை
ஞாலமுண் டுமிழ்ந்த மாலை
எண்ணுமா றறிய மாட்டேன்
யாவையும் யவரும் தானே

யாவையும் யவரும் தானாய்
அவரவர் தோறும்
தோய்விலன் புலனை துக்கும்
சொலப்படான் உணர்வின் மூர்த்தி
ஆவிசேர் உயிரின் உள்ளால்
அதுமோர் பற்றி லாத
பாவனை அதனை கூடில்
அவனையும் கூட லாமே

கூடிவண் டறையும் தண்தார்க்கொண்டல்போல் வண்ணன் றன்னை
மாடலர் பொழில்கு ருகூர் வண்சட கோபன் சொன்ன
பாடலோர் ஆயி ரத்துள் இவையுமோர் பத்தும் வல்லார்
வீடில போக மெய்தி விரும்புவர் அமரர் மொய்த்தே

மொய்ம்மாம் பூம்பொழில் பொய்கை
முதலை சிறைப்பட்டு நின்ற
கைம்மா வுக்கருள் செய்த
கார்முகில் போல்வண்ணன் கண்ணன்
எம்மா னைச்சொல்லி பாடி
எழுந்தும் பறந்தும்துள் ளாதார்
தம்மால் கருமமென் சொல்லீர்
தண்கடல் வட்டத்துள் ளீரே

தண்கடல் வட்டத்துள் ளாரை
தமக்கிரை யாத்தடி துண்ணும்
திண்கழற் காலசு ரர்க்கு
தீங்கிழை கும்திரு மாலை
பண்கள் தலைக்கொள்ள பாடி
பறந்தும் குனித்துழ லாதார்
மண்கொள் உலகில் பிறப்பார்
வல்வினை மோத மலைந்தே

மலையை யெடுத்துக்கல் மாரி
காத்து பசுநிரை தன்னை
தொலைவு தவிர்த்த பிரானை
சொல்லிச்சொல் லிநிறெ போதும்
தலையினோ டாதனம் தட்ட
தடுகுட்ட மாய்ப்பற வாதார்
அலைகொள் நரக தழுந்தி
கிடந்துழை கின்ற வம்பரே

வம்பவிழ் கோதை பொருட்டா
மால்விடை யேழும் அடர்த்த
செம்பவ ளத்திரள் வாயன்
சிரீதரன் தொல்புகழ் பாடி
கும்பிடு நட்டமி டாடி
கோகுக டுண்டுழ லாதார்
தம்பிற பால்பய னென்னே
சாது சனங்க ளிடையே

சாது சனத்தை நலியும்
கஞ்சனை சாதிப்ப தற்கு
ஆதியஞ் சோதி யுருவை
அங்குவை திங்கு பிறந்த
வேத முதல்வனை பாடி
வீதிகள் தோறும்துள் ளாதார்
ஓதி யுணர்ந்தவர் முன்னா
என்சவி பார்ம னிசரே

மனிசரும் மற்றும் முற்றுமாய்
மா பிறவி பிறந்த
தனியன் பிறப்பிலி தன்னை
தடங்கடல் சேர்ந்த பிரானை
கனியை கரும்பினின் சாற்றை
கட்டியை தேனை அமுதை
முனிவின்றி ஏத்தி குனிப்பார்
முழுதுணர் நீர்மையி னாரே

நீர்மை நூற்றுவர் வீய
ஐவர கருள்செய்து நின்று
பார்மல்கு சேனை அவித்த
பரஞ்சுட ரைநினை தாடி
நீர்மல்கு கண்ணின ராகி
நெஞ்சம் குழைந்துநை யாதே
ஊர்மல்கி மோடு பருப்பார்
உத்தமர்க்க கென்செய் வாரே

வார்ப்புனல் அந்தண் ணருவி
வடதிரு வேங்கட தெந்தை
பேர்ப்பல சொல்லி பிதற்றி
பித்தரென் றேபிறர் கூற
ஊர்ப்பல புக்கும் புகாதும்
உலோகர் சிரிக்கநின் றாடி
ஆர்வம் பெருகி குனிப்பார்
அமரர் தொழப்படு வாரே

அமரர் தொழப்படு வானை
அனைத்துல குக்கும் பிரானை
அமரர் மனத்தினுள் யோகு
புணர்ந்தவன் தன்னோடொன் றாக
அமர துணியவல் லார்கள்
ஒழியஅல் லாதவ ரெல்லாம்
அமர நினைந்தெழு தாடி
அலற்றுவ தேகரு மமே

கருமமும் கரும பலனும்
ஆகிய காரணன் தன்னை
திருமணி வண்ணனை செங்கண்
மாலினை தேவ பிரானை
ஒருமை மனத்தினுள் வைத்து
உள்ளங் குழைந்தெழு தாடி
பெருமையும் நாணும் தவிர்ந்து
பிதற்றுமின் பேதமை தீர்ந்தே

தீர்ந்த அடியவர் தம்மைத்திருத்தி பணிகொள்ள வல்ல
ஆர்ந்த புகழ சுதனை அமரர் பிரானையெம் மானை
வாய்ந்த வளவயல் சூழ்தண் வளங்குரு கூர்ச்சடகோபன்
நேர்ந்தவோ ராயிர திப்ப தருவினை நீறு செய்யுமே

செய்ய தாமரை கண்ண னாயுல
கேழு முண்ட அவன்கண்டீர்
வையம் வானம் மனிசர் தெய்வம்
மற்றும்
செய்ய சூழ்சுடர் ஞான மாய்வெளி
பட்டி வைபடை தான்பின்னும்
மொய்கொள் சோதியொ டாயி னானொரு
மூவ ராகிய மூர்த்தியே

மூவ ராகிய மூர்த்தி யைமுதல்
மூவர குமுதல் வன்றன்னை
சாவ முள்ளன நீக்கு வானை
தடங்க டல்கிட தான்தன்னை
தேவ தேவனை தென்னி லங்கை
எரியெ ழச்செற்ற வில்லியை
பாவ நாசனை பங்க யத்தடங்
கண்ண னைப்பர வுமினோ

பரவி வானவ ரேத்த நின்ற
பரம னைப்பரஞ் சோதியை
குரவை கோத்த குழக னைமணி
வண்ண னைக்குட கூத்தனை
அரவ மேறி யலைக டலம
ரும்து யில்கொண்ட அண்ணலை
இரவும் நன்பக லும்வி டாதென்றும்
ஏத்து தல்மனம் வைம்மினோ

வைம்மின் நும்மன தென்று யானுரை
கின்ற மாயவன் சீர்மையை
எம்ம னோர்க ளுரைப்ப தென் அது
நிற்க நாடொறும் வானவர்
தம்மை யாளும் அவனும் நான்முக
னும்ச டைமுடி அண்ணலும்
செம்மை யாலவன் பாத பங்கயம்
சிந்தி தேத்தி திரிவரே

திரியும் கற்றொ டகல்வி சும்பு
திணிந்த மண்கிட தகடல்
எரியும் தீயொ டிருசு டர்தெய்வம்
மற்றும்
கரிய மேனியன் செய்ய தாமரை
கண்ணன் கண்ணன்விண் ணோரிறை
சுரியும் பல்கருங் குஞ்சி யெங்கள்
சுடர்மு டியண்ணல் தோற்றமே

தோற்ற கேடவை யில்ல வனுடை
யான வனொரு மூர்த்தியாய்
சீற்ற தோடருள் பெற்ற வனடி
கீழ்ப்பு கநின்ற செங்கண்மால்
நாற்ற தோற்ற சுவையொ லிஊ றல்
ஆகி நின்றஎம் வானவர்
ஏற்றை யேயன்றி மற்றொ ருவரை
யானி லேனெழு மைக்குமே

எழுமை குமென தாவி கின்னமு
தத்தி னைஎன தாருயிர்
கெழுமி யகதிர சோதி யைமணி
வண்ண னைக்குட கூத்தனை
விழுமி யவம ரர்மு நிவர்வி
ழுங்கும் கன்னல் கனியினை
தொழுமின் தூயம னத்த ராயிறை
யும்நில் லாதுய ரங்களே

துயர மேதரு துன்ப இன்ப
வினைக ளாய்அ வை அல்லனாய்
உயர நின்றதோர் சோதி யாயுல
கேழு முண்டுமிழ தான்தன்னை
அயர வாங்கு நமன்த மர்க்கரு
நஞ்சி னையச்சு தன்தன்னை
தயர தற்கும கனறன் னையன்றி
மற்றி லேன்தஞ்ச மாகவே

தஞ்ச மாகிய தந்தை தாயொடு
தானு மாயவை அல்லனாய்
எஞ்ச லிலம ரர்க்கு லமுதல்
மூவர் தம்முள்ளு மாதியை
அஞ்சி நீருல கத்துள் ளீர்கள்
அவனி வனென்று கூழேன்மின்
நெஞ்சி னால்நினை பான்ய வனவன்
ஆகும் நீள்கடல் வண்ணனே

கடல்வண் ணன்கண்ணன் விண்ண வர்க்கரு
மாணி கமென தாருயிர்
படவ ரவின ணைக்கி டந்த
பரஞ்சு டர்ப்பண்டு நூற்றுவர்
அடவ ரும்படை மங்க ஐவர்க்க
காகி வெஞ்சமத்து அன்றுதேர்
கடவி யபெரு மான்க னைகழல்
காண்ப தென்றுகொல் கண்களே

கண்கள் காண்டற் கரிய னாய்க்கரு
துக்கு நன்றுமெ ளியனாய்
மண்கொள் ஞாலத்து யிர்க்கெல் லாமருள்
செய்யும் வானவ ரீசனை
பண்கொள் சோலை வழுதி நாடன்
குருகை கோன்சட கோபன்சொல்
பண்கொள் ஆயிர திப்ப தால்பத்த
ரா கூடும் பயலுமினே

பயிலும் சுடரொளி மூர்த்தியை பங கண்ணனை
பயில இனியநம் பாற்கடல் சேர்ந்த பரமனை
பயிலும் திருவுடை யார்யவ ரேலும் அவர்க்கண்டீர்
பயிலும் பிறப்பிடை தோற்றெம்மை யாளும் பரமரே

ஆளும் பரமனை கண்ணனை ஆழி பிரான்றன்னை
தோளுமோர் நான்குடை தூமணி வண்ணனெம் மான்தன்னை
தாளும் தடக்கையும் கூப்பி பணியும் அவர்க்கண்டீர்
நாளும் பிறப்பிடை தோறு எம்மை யாளுடை நாதரே

நாதனை ஞாலமும் வானமும்
ஏத்தும் நறுந்துழா
போதனை பொன்னெடுஞ் சக்கர
தெந்தை பிரான்தன்னை
பாதம் பணியவல் லாரை
பணியும் அவர்க்கண்டீர்
ஓதும் பிறப்பிடை தோறெம்மை
யாளுடை யார்களே

உடையார்ந்த வாடையன் கண்டிகை
யன்உ டை நாணினன்
புடையார்ப்பொன் னூலினன் பொன்முடி
யன்மற்றும் பல்கலன்
நடையா வுடைத்திரு நாரணன்
தொண்டர்தொண் டர்க்கண்டீர்
இடையார் பிறப்பிடை தோறெ
கெம்பெரு மக்களே

பெருமக்க ளுள்ளவர் தம்பெரு
மானை அமரர்க
கருமை யொழியஅ ன் றாரமு
தூட்டிய அப்பனை
பெருமை பிதற்றவல் லாரை
பிதற்றும் அவர்க்கண்டீர்
வருமையு மிம்மையும் நம்மை
யளிக்கும் பிராக்களே

அளிக்கும் பரமனை கண்ணனை
ஆழி பிரான்தன்னை
துளிக்கும் நறுங்கண்ணி தூமணி
வண்ணனெம் மான்தன்னை
ஒளிக்கொண்ட சோதியை உள்ளத்து
கொள்ளும் அவர்க்கண்டீர்
சலிப்பின்றி யாண்டெம்மை சன்மசன்
மாந்தரங் காப்பரே

சன்மசன் மாந்தரங் காத்தடி
யார்களை கொண்டுபோய்
தன்மை பொறுத்தித்தன் தாளிணை
கீழ்க்கொள்ளும் அப்பனை
தொன்மை பிதற்றவல் லாறை
பிதற்றும் அவர்கண்டீர்
நம்மை பெறுத்தெம்மை நாளு
கொள்கின்ற நம்பரே

நம்பனை ஞாலம் படைத்தவ
னைதிரு மார்பனை
உம்பர் உலகினில் யார்க்கும்
உணர்வரி யான்தன்னை
கும்பி நரகர்கள் ஏத்துவ
ரேலும் அவர்கண்டீர்
எம்பல் பிறப்பிடை தோறெம்
தொழுகுலம் தாங்களே

குவலந்தாங்கு சாதிகள் நாலிலும்
கீழிழிந்து எத்தனை
நலந்தா னிலாதசண் டாளசண்
டாளர்க ளாகிலும்
வலந்தாங்கு சக்கர தண்ணல்
மணிவண்ணற் காளென்றுள்
கலந்தார் அடியார் தம்மடி
யாரெம் மடிகளே

அடியார்ந்த வையமுண் டாலிலை
யன்ன சஞ்செய்யும்
படியாது மில்குழ விப்படி
யெந்தைபி ரான்றனக்கு
அடியார்
யார்அ டி யார்த
கடியார் அடியார் தம்அடி
யாரடி யோங்களே

அடியோங்கு நூற்றவர் வீயஅ ன்
றைவரு கருள்செய்த
நெடியோனை தென்குரு கூர்ச்சட
கோபன்குற் றேவல்கள்
அடியார்ந்த ஆயிர துள்ளிவை
பத்தவன் தொண்டர்மேல்
முடிவுஆர கற்கில் சன்மம்செய்
யாமை முடியுமே

முடியானே மூவுலகும் தொழுதே தும்சீர்
அடியானே ஆழ்கடலை கடைந்தாய் புள்ளூர்
கொடியானே கொண்டல்வண் ணாஅண்ட துமபரில்
நெடியானே என்று கிடக்குமென் நெஞ்சமே

நெஞ்சமே நீள்நக ராக இருந்தவென்
தஞ்சனே தண்ணிலங் கைக்கிறை யைச்செற்ற
நஞ்சனே ஞாலங்கொள் வான்குற ளாகிய
வஞ்சனே என்னுமெ போதுமென் வாசகமே

வாசகமே ஏத்த அருள்செய்யும் வானவர்தம்
நாயகனே நாளிள திங்களை கோள்விடுத்து
வேயகம் பால்வெண்ணெய் தொடுவுண்ட ஆனாயர்
தாயவனே என்று தடவுமென் கைகளே

கைகளால் ஆர தொழுது தொழுதுன்னை
வைகலும் மாத்திரை போதுமோர் வீடின்றி
பைகொள் பாம்பேறி உறைபர னேஉன்னை
மெய்கொள்ள காண விரும்புமென் கண்களே

கண்களால் காண வருங்கொலைன் றாசையால்
மண்கொண்ட வாமனன் ஏற மகிழ்ந்துசெல்
பண்கொண்ட புள்ளின் சிறகொலி பாவித்து
திண்கொள்ள ஓர்க்கும் கிடந்தென் செவிகளே

செவிகளால் ஆரநின் கீர்த்தி கனியென்னும்
கவிகளே காலப்பண் தேனுறை பத்துற்று
புவியின்மேல் பொன்னெடுஞ் சக்கர துன்னையே
அவிவின்றி யாதரி கும்என தாவியே

ஆவியே ஆரமு தேஎன்னை ஆளுடை
தூவியம் புள்ளுடை யாய்சுடர் நேமியாய்
பாவியேன் நெஞ்சம் புல பலகாலும்
கூவியும் காண பெறேனுன கோலமே

கோலமே தாமரை கண்ணதோர் அஞ்சன
நீலமே நின்றென தாவியை யீர்கின்ற
சீலமே சென்றுசொல் லாதன முன்நிலாம்
காலமே உன்னையெ நாள்கண்டு கொள்வனே

கொள்வன்நான் மாவலி மூவடி தா என்ற
கள்வனே கஞ்சனை வஞ்சித்து வாணனை
உள்வன்மை தீரஓ ராயிரம் தோள்துணித்த
புள்வல்லாய் உன்னையெஞ் ஞான்று பொருந்துவனே

பொருந்திய மாமரு தின்னிடை போயவெம்
பெருந்தகாய் உன்கழல் காணிய பேதுற்று
வருந்திநான் வாசக மாலைகொண்டு உன்னையே
இருந்திரு தெத்தனை காலம் புலம்புவனே

புலம்புசீர பூமி அளந்த பெருமானை
நலங்கொள்சீர் நன்குரு கூர்ச்சட கோபன்சொல்
வலங்கொண்ட ஆயிர துள்ளிவை யுமோர்ப்பத்து
இலங்குவான் யாவரும் ஏறுவர் சொன்னாலே

சொன்னால் விரோதமிது ஆகிலும் சொல்லுவேன் கேண்மினோ
என்னாவில் இன்கவி யானொருவர்க்கும் கொடுக்கிலேன்
தென்னா தெனாவென்று வண்டு முரல்திரு வேங்கடத்து
என்னானை என்னப்பன் எம்பெருமானுள னாகவே

உளனாக வேயெண்ணி தன்னையொன்றாகத்தன் செல்வத்தை
வளனா மதிக்குமிம் மானிடத்தைக்கவி பாடியென்
குளனார் கழனிசூழ் கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே
உளனாய எந்தையை எந்தைபெம்மானை ஒழியவே

ஒழிவொன்றில் லாதபல் ஊழிதோறூழி நிலாவபோம்
வழியை தரும்நங்கள் வானவர் ஈசனை நிற்கப்போய்
கழிய மிகநல்ல வான்கவி கொண்டு புலவீர்காள்
இழி கருதியோர் மானிடம் பாடலென் னாவதே

என்னாவ தெத்தெனை நாளைக்கு போதும் புலவீர்காள்
மன்னா மனிசரை பாடி படைக்கும் பெரும்பொருள்
மின்னார் மணிமுடி விண்ணவர் தாதையை பாடினால்
தன்னாக வேகொண்டு சன்மம்செய்யாமையும் கொள்ளுமே

கொள்ளும் பயனில்லை குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை
வள்ளல் புகழ்ந்துநும் வாய்மை இழக்கும் புலவீர்காள்
கொள்ள குறைவிலன் வேண்டிற்றெல் லாம்தரும் கோதில்என்
வள்ளல் மணிவண்ணன் தன்னை கவி சொல்ல வம்மினோ

வம்மின் புலவீர்நும் மெய்வருத்திக்கை செய் துய்ம்மினோ
இம்மன் னுலகில் செல்வரிப்போதில்லை நோக்கினோம்
நும்மின் கவிகொண்டு நும்நுமிட்டாதெய்வம் ஏத்தினால்
செம்மின் சுடர்முடி என்திருமாலுக்கு சேருமே

சேரும் கொடைபுகழ் எல்லையிலானைஓ ராயிரம்
பேரும் உடைய பிரானையல்லால்மற்று யான்கிலேன்
மாரி யனையகை மால்வரையொக்கும்திண் தோளென்று
பாரிலோர் பற்றையை பச்சைப்பசும்பொய்கள் வேயவே

வேயின் மலிபுரை தோளிபின்னைக்கு மணாளனை
ஆய பெரும்புகழ் எல்லையிலாதன பாடிப்போய்
காயம் கழித்துஅ வன் தாளிணைக்கீழ்ப்புகுங் காதலன்
மாய மனிசரை என்சொல்லவல்லேனென் வாய்கொண்டே

வாய்கொண்டு மானிடம் பாடவந்தகவி யேனல்லேன்
ஆய்கொண்ட சீர்வள்ளல் ஆழிப்பிரானென கேயுளன்
சாய்கொண்ட இம்மையும் சாதித்து வானவர் நாட்டையும்
நீகண்டு கொள் என்று வீடும் தரும்நின்று நின்றே

நின்றுநின் றுபல நாளுய்க்கும் இவ்வுடல் நீங்கிப்போய்
சென்றுசென் றாகிலும் கண்டுசன் மங்கழி பானெண்ணி
ஒன்றியொன் றியுல கம்படை தாங்கவி யாயினேற்கு
என்றுமென் றுமினி மற்றொரு வர்க்கவி யேற்குமே

ஏற்கும் பெரும்புகழ் வானவர் ஈசன்கண் ணன்தனக்கு
ஏற்கும் பெரும்புகழ் வண்குரு கூர்ச்சட கோபன் சொல்
ஏற்கும் பெரும்புகழ் ஆயிர துள்ளிவையும் ஓர்ப்பத்து
ஏற்கும் பெரும்புகழ் சொல்லவல்லார்க்கில்லை சன்மமே

சன்மம் பலபல செய்து வெளிப்பட்டு
சங்கொடு சக்கரம்வில்
ஒண்மை யுடைய வுலக்கையொள் வாள்தண்டு
கொண்டுபுள் ளூர்ந்துஉலகில்
வன்மை யுடைய அரக்கர் அசுரரை
மாள படைபொருத
நன்மை யுடையவன் சீர்ப்பர வப்பெற்ற
நானோர் குறைவிலனே

குறைவில் தடங்கடல் கோளர வேறித்தன்
கோலச்செ தாமரைக்கண்
உறைபவன் போலவோர் யோகு புணர்ந்த
ஒளிமணி வண்ணன் கண்ணன்
கறையணி மூக்குடை புள்ளி கடாவி
அசுரரை காய்ந்தவம்மான்
நிறைபுகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும்
யானொரு முட்டிலனே

முட்டில்பல் போக தொருதனி நாயகன்
மூவுல குக்குரிய
கட்டியை தேனை அமுதைநன் பாலை
கனியை கரும்புதன்னை
மட்டவிழ் தண்ணந்து ழாய்முடி யானை
வணங்கி அவன்திறத்து
பட்டபின் னைஇறை யாகிலும் யானென்
மனத்து பரிவிலனே

பரிவின்றி வாணனை காத்தும் என் றன்று
படையொடும் வந்தெதிர்ந்த
திரிபுரம் செற்றவ னும்மக னும்பின்னும்
அங்கியும் போர்தொலைய
பொருசிறை புள்ளை கடாவிய மாயனை
ஆயனை பொற்சக்கர
தரியினை அச்சுத னைப்பற்றி யானிறை
யேனும் இடரிலனே

இடரின்றி யேயொரு நாளொரு போழ்திலெல்
லாவுல கும்கழிய
படர்ப்புகழ பார்த்தனும் வைதிக னுமுடன்
ஏறத்திண் தேர்க்கடவி
சுடரொளி யாய்நின்ற தன்னுடை சோதியில்
வைதிகன் பிள்ளைகளை
உடலொடும் கொண்டு கொடுத்தவ னைப்பற்றி
ஒன்றும் துயரிலனே

துயரில் சுடரொளி தன்னுடை சோதி
நின்ற வண்ணம் நிற்கவே
துயரில் மலியும் மனிசர் பிறவியில்
தோன்றிக்கண் காணவந்து
துயரங்கள் செய்து நன் தெய்வ நிலையுலகில்
புக வுய்க்குமம்மான்
துயரமில் சீர்க்கண்ணன் மாயன் புகழ்துற்ற
யானோர்து ன்பமிலனே

துன்பமும் இன்பமு மாகிய செய்வினை
யாயுல கங்களுமாய்
இன்பமில் வெந்நர காகி இனியநல்
வான் சுவர கங்களுமாய்
மன்பல் லுயிர்களு மாகி பலபல
மாய மயக்குகளால்
இன்புரும் இவ்விளை யாட்டுடை யானைப்பெற்
றேதுமல் லலிலனே

அல்லலில் இன்பம் அளவிற தெங்கும்
அழகமர் சூழொளியன்
அல்லி மலர்மகள் போக மயக்குகள்
ஆகியும் நிற்குமம்மான்
எல்லையில் ஞானத்தன் ஞானமஃதேகொண்டெல்
லாக்கரு மங்களும்செய்
எல்லையில் மாயனை கண்ணனை தாள்பற்றி
யானோர்து கமிலனே

துக்கமில் ஞான சுடரொளி மூர்த்தி
துழாயலங் கல்பெருமான்
மிக்கபன் மாயங்க ளால்விகிர் தம்செய்து
வேண்டும் உருவுகொண்டு
நக்கபி ரானோ டயன்முத லாகஎல்
லாரும் எவையும்தன்னுள்
ஒக்கவொ டுங்கவி ழுங்கவல் லானைப்பெற்
றொன்றும் தளர்விலனே

தளர்வின்றி யேயென்றும் எங்கும் பரந்த
தனிமுதல் ஞானமொன்றாய்
அளவுடை யைம்புலன் களறி யாவகை
யாலரு வாகிநிற்கும்
வளரொளி ஈசனை மூர்த்தியை பூதங்கள்
ஐந்தை யிருசுடரை
கிளரொளி மாயனை கண்ணனை தாள்பற்றி
யானென்றும் கேடிலனே

கேடில்வி ழுப்புகழ கேசவ னைக்குரு
கூர்ச்சட கோபன் சொன்ன
பாடலோ ராயிர துளிவை பத்தும்
பயிற்றவல் லார்கட்குஅவன்
நாடும் நகரமும் நன்குடன் காண
நலனிடை யூர்தி பண்ணி
வீடும்பெ றுத்தித்தன் மூவுல குக்கும்
தருமொரு நாயகமே
திருவாய் மொழி நான்காம் பத்து

ஒருநா யகமாய் ஓடவுலகுட னாண்டவர்
கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்
பெருநாடு காண இம்மையிலேபிச்சை தாம்கொள்வர்
திருநாரணன்தாள் காலம் பெறச்சிந்தி துய்ம்மினோ

உய்ம்மின் திறைகொணர தென்றுலகாண்டவர் இம்மையே
தம்மின் சுவைமட வாரைப்பிறர் கொள்ள தாம்விட்டு
வெம்மி னொளிவெயில் கானகம்போய்க்குமை தின்பர்கள்
செம்மின் முடித்திரு மாலைவிரைந்தடி சேர்மினோ

அடிசேர் முடியின ராகியரசர்கள் தாம்தொழ
இடிசேர் முரசங்கள் முற்றத்தியம்ப இருந்தவர்
பொடிசேர் துகளா போவர்களாதலின் நொக்கென
கடிசேர் துழாய்முடி கண்ணன் கழல்கள் நினைமினோ

நினைப்பான் புகில்கடல் எக்கலின் நுண்மண லிற்பலர்
எனைத்தோ ருகங்களும் இவ்வுல காண்டு கழிந்தவர்
மனைப்பால் மருங்கற மாய்தலல்லால்மற்று கண்டிலம்
பனைத்தாள் மதகளி றட்டவன் பாதம் பணிமினோ

பணிமின் திருவருள் என்னும்அஞ்சீத பைம்பூம்பள்ளி
அணிமென் குழலார் இன்பக்கலவி அமுதுண்டார்
துணிமுன்பு நாலப்பல் லேழையர் தாமிழி பச்செல்வர்
மணிமின்னு மேனிநம் மாயவன் பேர்சொல்லி வாழ்மினோ

வாழ்ந்தார்கள் வாழ்ந்தது மாமழை மொக்குளின் மாய்ந்துமாய்ந்து
ஆழ்ந்தாரென் றல்லால் அன்று முதலின் றறுதியா
வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பரென் பதில்லை நிற்குறில்
ஆழ்ந்தார் கடல்பள்ளி அண்ணல் அடியவர் ஆமினோ

ஆமின் சுவையவை ஆறொடடிசிலுண் டார்ந்தபின்
தூமென் மொழிமட வாரிரக்கப்பின்னும் துற்றுவார்
ஈமின் எமக்கொரு துற் றென்றிடறுவ ராதலின்
கோமின் துழாய்முடி ஆதியஞ்சோதி குணங்களே

குணங்கொள் நிறைபுகழ் மன்னர்க்கொடைக்கடன் பூண்டிருந்து
இணங்கி யுலகுட னாக்கிலும் ஆங்கவ னையில்லார்
மணங்கொண்ட கோபத்து மன்னியு மீள்வர்கள் மீள்வில்லை
பணங்கொள் அரவணை யான்திரு நாமம் படிமினோ

படிமன்னு பல்கலன் பற்றோடறுத்துஐம் புலன்வென்று
செடிமன்னு காயம்செற்றார்களு மாங்கவ னையில்லார்
குடிமன்னு மின்சுவர்க்க மெய்தியுமீள்வர்கள் மீள்வில்லை
கொடிமன்னு புள்ளுடை அண்ணல் கழல்கள் குறுகுமினோ

குறுக மிகவுணர் வத்தொடு நோக்கியெல் லாம்விட்ட
இறுக லிறப்பென்னும் ஞானிக்கும் அப்பய னில்லையேல்
சிறுக நினைவதோர் பாசமுண்டாம்பின்னும் வீடில்லை
மறுபகலில் ஈசனை பற்றி விடாவிடில் வீடஃதே

அஃதே புகுமாறென்று கண்ணன் கழல்கள்மேல்
கொய்பூம் பொழில்சூழ் குருகூர்ச்சடகோபன் குற்றேவல்
செய்கோல தாயிரம் சீர்த்தொடைப்பாடல் இவைபத்தும்
அஃகாமற் கற்பவர் ஆழ்துயர் போயுய்யற் பாலரே

பாலனா யேழுல குண்டு பரிவின்றி
ஆலிலை யன்னவ சஞ்செய்யும் அண்ணலார்
தாளிணை மேலணி தண்ண துழாயென்றே
மாலுமால் வல்வினை யேன்மட வல்லியே

வல்லிசேர் நுண்ணிடை யாய்ச்சியர் தம்மொடும்
கொல்லைமை செய்து குரவை பிணைந்தவர்
நல்லடி மேலணி நாறு துழாயென்றே
சொல்லுமால் சூழ்வினை யாட்டியேன் பாவையே

பாவியல் வேதநன் மாலை பலகொண்டு
தேவர்கள் மாமுனி வரிறைஞ் சநின்ற
சேவடி மேலணி செம்பொற் றுழாயென்றே
கூவுமால் கோள்வினை யாட்டியேன் கோதையே

கோதில வண்புகழ் கொண்டு சமயிகள்
பேதங்கள் சொல்லி பிதற்றும் பிரான்பரன்
பாதங்கள் மேலணி பைம்பொற் றுழாயென்றே
ஓதுமால் ஊழ்வினை யேன்தட தோளியே

தோளிசேர் பின்னை பொருட்டெரு தேழ்தழீஇ
கோளியார் கோவல னார்க்குட கூத்தனார்
தாளிணை மேலணி தண்ணந்து ழாயென்றே
நாளுநாள் நைகின்ற தால்எ ன்தன் மாதரே

மாதர்மா மண்மட தைபொரு டேனமாய்
ஆதியங் கால தகலிடம் கீண்டவர்
பாதங்கள் மேலணி பைம்பொற் றுழாயென்றே
ஓதும்மால் எய்தினள் என்தன் மடந்தையே

மடந்தையை வண்கம லத்திரு மாதினை
தடங்கொள்தார் மார்பினில் வைத்தவர் தாளின்மேல்
வடங்கொள்பூ தண்ண துழாய்மலர கேயிவள்
மடங்குமால் வாணுத லீர்என் மடக்கொம்பே

கொம்புபோல் சீதை பொருட்டிலங் கைநகர்
அம்பெரி யுய்த்தவர் தாளிணை மேலணி
வம்பவிழ் தண்ணந்து ழாய்மலர கேயிவள்
நம்புமால் நானிதற் கென்செய்கேன் நங்கைமீர்

நங்கைமீர் நீரும்ஒ ர் பெண்பெற்று நல்கினீர்
எங்ஙனே சொல்லுகேன் யான்பெற்ற ஏழையை
சங்கென்னும் சக்கர மென்னும் துழாயென்னும்
இங்ஙனே சொல்லும் இராப்பகல் என்செய்கேன்

என்செய்கேன் என்னுடை பேதையென் கோமளம்
என்சொல்லும் என்வச முமல்லள் நங்கைமீர்
மின்செய்பூண் மார்பினன் கண்ணன் கழல்துழாய்
பொன்செய்பூண் மென்முலை கென்று மெலியுமே

மெலியுநோய் தீர்க்கும்நங் கண்ணன் கழல்கள்மேல்
மலிபுகழ் வண்குரு கூர்ச்சட கோபன்சொல்
ஒலிபுகழ் ஆயிர திப்பத்தும் வல்லவர்
மலிபுகழ் வானவர காவர்நற் கோவையே

கோவை வாயாள் பொருட்டேற்றின்
எருத்தம் இறுத்தாய் மதிளிலங்கை
கோவை வீ சிலைகுனித்தாய்
குலநல் யானை மருப்பொசித்தாய்
பூவை வீயா நீர்தூவி
போதால் வணங்கே னேலும்நின்
பூவை வீயாம் மேனிக்கு
பூசும் சாந்தென் னெஞ்சமே

பூசும் சாந்தென் னெஞ்சமே
புனையும் கண்ணி எனதுடைய
வாச கம்செய் மாலையே
வான்ப டாடை யுமஃதே
தேச மான அணிகலனும்
என்கை கூப்பு செய்கையே
ஈசன் ஞால முண்டுமிழ்ந்த
எந்தை யேக மூர்த்திக்கே

ஏக மூர்த்தி இருமூர்த்தி
மூன்று மூர்த்தி பலமூர்த்தி
ஆகி ஐந்து பூதமாய்
இரண்டு சுடராய் அருவாகி
நாகம் ஏறி நடுக்கடலுள்
துயின்ற நாரா யணனேஉன்
ஆகம் முற்றும் அகத்தடக்கி
ஆவி யல்லல் மாய்த்ததே

மாய்த்தல் எண்ணி வாய்முலை
தந்த மா பேயுயிர்
மாய்த்த ஆய மாயனே
வாம னனே மாதவா
பூத்தண் மாலை கொண்டுன்னை
போதால் வணங்கே னேலும்நின்
பூத்தண் மாலை நெடுமுடிக்கு
புனையும் கண்ணி எனதுயிரே

கண்ணி யெனதுயிர் காதல் கனக சோதி முடிமுதலா
எண்ணில் பல்க லன்களும் ஏலு மாடை யுமஃதே
நண்ணி மூவு லகும்நவிற்றும் கீர்த்தி யுமஃதே
கண்ண னெம்பி ரானெம்மான் கால சக்கர தானுக்கே

கால சக்க ரத்தோடு வெண்சங் கம்கை யேந்தினாய்
ஞால முற்று முண்டுமிழ்ந்த நாரா யணனே என்றென்று
ஓல மிட்டு நானழைத்தால் ஒன்றும் வாரா யாகிலும்
கோல மாமென் சென்னிக்குன் கமலம் அன்ன குரைகழலே

குரைக ழல்கள் நீட்டிமண் கொண்ட கோல வாமனா
குரைக ழல்கை கூப்புவார்கள் கூட நின்ற மாயனே
விரைகொள் பூவும் நீரும்கொண்டேத்த மாட்டே னேலும்உன்
உரைகொள் சோதி திருவுருவம் என்ன தாவி மேலதே

என்ன தாவி மேலையாய் ஏர்கொள் ஏழு லகமும்
துன்னி முற்று மாகிநின்ற சோதி ஞான மூர்த்தியாய்
உன்ன தென்ன தாவியும் என்ன துன்ன
இன்ன வண்ண மேநின்றாய் என்று ரைக்க வல்லேனே

உரைக்க வல்லேன் அல்லேனுன்
உலப்பில் கீர்த்தி வெள்ளத்தின்
கரைக்கண் என்று செல்வன்நான்
காதல் மையல் ஏறினேன்
புரைப்பி லாத பரம்பரனே
பொய்யி லாத பரஞ்சுடரே
இரைத்து நல்ல மேன்மக்கள்
ஏத்த யானும் ஏத்தினேன்

யானும் ஏத்தி ஏழுலகும்
முற்றும் ஏத்தி பின்னையும்
தானும் ஏத்தி லும்தன்னை
ஏத்த
தேனும் பாலும் கன்னலும்
அமுதுமாகி தித்திப்ப
யானு மெம்பி ரானையே
ஏத்தி னேன்யா னுய்வானே

உய்வு பாயம் மற்றின்மை
தேறி கண்ணன் ஒண்கழல்கள்மேல்
செய்ய தாம ரைப்பழன
தென்னன் குருகூர சடகோபன்
பொய்யில் பாடல் ஆயிரத்துள்
இவையும் பத்தும் வல்லார்கள்
வையம் மன்னி வீற்றிருந்து
விண்ணும் ஆள்வர் மண்ணூடே

மண்ணை யிருந்து துழாவி
வாமனன் மண்ணிது என்னும்
விண்ணை தொழுதவன் மேவு
வைகுந்த மென்றுகை காட்டும்
கண்ணையுள் நீர்மல்க நின்று
கடல்வண்ணன் என்னும் அன்னேஎன்
பெண்ணை பெருமயல் செய்தாற்
கென்செய்கேன் பெய்வளை யீரே

பெய்வளை கைகளை கூப்பி
பிரான்கிட கும்கடல் என்னும்
செய்யதோர் ஞாயிற்றை காட்டி
சிரீதரன் மூர்த்தியீ தென்னும்
நையும்கண் ணீர்மல்க நின்று
நாரணன் என்னும்அ ன் னேஎன்
தெய்வ வுருவில் சிறுமான்
செய்கின்ற தொன்றறி யேனே

அறியும்செ தீயை தழுவி
அச்சுதன் என்னும்மெய் வேவாள்
எறியும்தண் காற்றை தழுவி
என்னுடை கோவிந்தன் என்னும்
வெறிகொள் துழாய்மலர் நாறும்
வினையுடை யாட்டியேன் பெற்ற
செறிவளை முன்கை சிறுமான்
செய்கின்ற தென்கண்ணு கொன்றே

ஒன்றிய திங்களை காட்டி
ஒளிமணி வண்ணனே என்னும்
நின்ற குன்றத்தினை நோக்கி
நெடுமாலே வா என்று கூவும்
நன்றுபெய் யும்மழை காணில்
நாரணன் வந்தான் என் றாலும்
என்றின மையல்கள் செய்தார்
என்னுடை கோமள தையே

கோமள வான்கன்றை புல்கி
கோவிந்தன் மேய்த்தன என்னும்
போமிள நாகத்தின் பின்போய்
அவன்கிட கையீ தென்னும்
ஆமள வொன்றும் அறியேன்
அருவினை யாட்டியேன் பெற்ற
கோமள வல்லியை மாயோன்
மால்செய்து செய்கின்ற கூத்தே

கூத்தர் குடமெடு தாடில்
கோவிந்த னாம் எனா ஓடும்
வாய்த்த குழலோசை கேட்கில்
மாயவன் என்றுமை யாக்கும்
ஆய்ச்சியர் வெண்ணெய்கள் காணில்
அவனுண்ட வெண்ணெயீ தென்னும்
பேய்ச்சி முலைசுவை தாற்கென்
பெண்கொடி யேறிய பித்தே

ஏறிய பித்தினோ டெல்லா
வுலகும்கண் ணன்படை பென்னும்
நீறுசெவ் வேயிட காணில்
நெடுமால் அடியார் என் றோடும்
நாறு துழாய்மலர் காணில்
நாரணன் கண்ணியீ தென்னும்
தேறியும் தேறாது மாயோன்
திறத்தன ளேயி திருவே

திருவுடை மன்னரை காணில்
திருமாலை கண்டேனே என்னும்
உருவுடை வண்ணங்கள் காணில்
உலகள தான் என்று துள்ளும்
கருவுடை தேவில்க ளெல்லாம்
கடல்வண்ணன் கோயிலே என்னும்
வெருவிலும் வீழ்விலும் ஓவா
கண்ணன் கழல்கள் விரும்புமே

விரும்பி பகைவரை காணில்
வியலிடம் உண்டானே என்னும்
கரும்பெரு மேகங்கள் காணில்
கண்ணன் என் றேற பறக்கும்
பெரும்புல ஆநிரை காணில்
பிரானுளன் என்றுபின் செல்லும்
அரும்பெறல் பெண்ணினை மாயோன்
அலற்றி அயர்ப்பிக்கின் றானே

அயர்க்கும்சுற் றும்பற்றி நோக்கும்
அகலவே நீள் நோக்கு கொள்ளும்
வியர்க்கும் மழைக்கண் துளும்ப
வெவ்வுயிர கொள்ளும்மெய் சோரும்
பெயர்த்தும் கண் ணா என்று பேசும்
பெருமானே வா என்று கூவும்
மயல்பெருங் காதலென் பேதை
கென்செய்கேன் வல்வினை யேனே

வல்வினை தீர்க்கும் கண்ணனை
வண்குரு கூர்ச்சட கோபன்
சொல்வினை யால்சொன்ன பாடல்
ஆயிர துள்ளிவை பத்தும்
நல்வினை யென்றுகற் பார்கள்
நலனிடை வைகுந்தம் நண்ணி
தொல்வினை தீரவெல் லாரும்
தொழுதெழ வீற்றிரு பாரே

வீற்றிரு தேழுலகும் தனிக்கோல் செல்ல வீவில்சீர்
ஆற்றல்மி காளும் அம்மானைவெம்மா பிளந்தான்தன்னை
போற்றி யென்றே கைகளார தொழுது சொல்மாலைகள்
ஏற்ற நோற்றேற் கினியென்னகுறை யெழுமையுமே

மைய கண்ணாள் மலர்மேலுறைவா ளுறைமார்பினன்
செய்ய கொல தடங்கண்ணன் விண்ணோர் பெருமான்தன்னை
மொய்ய சொல்லா லிசைமாலைகளேத்தி யுள்ள பெற்றேன்
வெய்ய நோய்கள் முழுதும் வியன்ஞாலத்து வீயவே

வீவி லின்ப மிகஎல்லை நிகழ்ந்தநம் அச்சுதன்
வீவில் சீரன் மலர்க்கண்ணன் விண்ணோர் பெருமான்தன்னை
வீவில் காலம் இசைமாலைகள் ஏத்தி மேவப்பெற்றேன்
வீவி லின்பமிக எல்லை நிகழ்ந்தனன் மேவியே

மேவி நின்று தொழுவார் வினைபோக மேவும்பிரான்
தூவியம் புள்ளு டையான் அடலாழியம் மான்றன்னை
நாவிய லாலிசை மாலைக ளேத்திநண் ணப்பெற்றேன்
ஆவியென் னாவியை யானறியேன்செய்த வாற்றையே

ஆற்ற நல்ல வகைகாட்டும் அம்மானை அமரர்தம்
ஏற்றை யெல்லா பொருளும் விரித்தானை எம்மான்தன்னை
மாற்ற மாலை புனைந்தேத்தி நாளும் மகிழ்வெய்தினேன்
காற்றின் முன்னம் கடுகி வினைநோய்கள் கரியவே

கரிய மேனிமிசை வெளிய நீறுசிறி தேயிடும்
பெரிய கோல தடங்கண்ணன் விண்ணோர் பெருமான்தன்னை
உரிய சொல்லா லிசைமாலைகள் ஏத்தியுள்ள பெற்றேற்கு
அரிய துண்டோ எனக்கின்று தொட்டுமினி யென்றுமே

என்றும் ஒன்றாகி யொத்தாரும்மிக்கார்களும் தன்றன
கின்றி நின்றானை யெல்லாவுலகும் உடையான் தன்னை
குன்ற மொன்றால் மழைகாத்தபிரானைச்சொன் மாலைகள்
நன்று சூட்டும் விதியெய்தினம் என்ன குறைநமக்கே

நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனை ஞாலத்தார்
தமக்கும் வான தவர்க்கும் பெருமானை தண்டாமரை
சுமக்கும் பாத பெருமானை சொன்மாலைகள் சொல்லுமா
றமைக்க வல்லேற் கினியாவர் நிகரகல் வானத்தே

வானத்தும் வானத்துள் ளும்பரும்
மண்ணுள்ளும் மண்ணின்கீழ
தானத்தும் எண்டிசை யும்தவி
ராதுநின் றான்தன்னை
கூனற்சங் கத்தட கையவனை
குடமாடியை வான
கோனை கவிசொல்ல வல்லேற்
கினிமா றுண்டோ

உண்டும் உமிழ்ந்தும் கடந்தும்
இடந்தும் கிடந்தும்நின்றும்
கொண்ட கோல தொடுவீற்
றிருந்தும் மணங்கூடியும்
கண்ட வாற்றால் தனக்கே
யுலகென நின்றான்தன்னை
வண்தமிழ் நூற்க நோற்றேன்
அடியார கின்பமாரியே

மாரி மாறாத தண்ணம்மலை
வேங்கட தண்ணலை
வாரி வாறாத பைம்பூம்
பொழில்சூழ் குருகூர்நகர்
காரி மாறன் சடகோபன்
சொல்லாயிர திப்பத்தால்
வேரி மாறாத பூமே
லிருப்பாள் வினைதீர்க்குமே

தீர்ப்பாரை யாமினி யெங்ஙனம்
நாடுதும் அன்னைமீர்
ஓர்ப்பாலிவ் வொண்ணுதல் உற்றநன்
னோயிது தேறினோம்
போர்ப்பாகு தான்செய்தன் றைவரை
வெல்வித்த மாயப்போர
தேர்ப்பாக னார்க்கிவள் சிந்தை
துழாய்த்திசை கின்றதே

திசைக்கின்ற தேயிவள் நோயிது
மிக்க பெருந்தெய்வம்
இசைப்பின்றி நீரணங் காடும்
இளந்தெய்வம் அன்றிது
திசைப்பின்றி யேசங்கு சக்கர
மென்றிவள் கேட்கநீர்
இசைக்கிற்றி ராகில்நன் றேயில்
பெறுமிது காண்மினே

இதுகாண்மின் அன்னைமீர் இக்கட்டு
விச்சிசொற் கொண்டுநீர்
எதுவானும் செய்தங்கோர் கள்ளும்
இறைச்சியும் தூவேல்மின்
மதுவார் துழாய்முடி மா
பிரான்கழல் வாழ்த்தினால்
அதுவே யிவளுற்ற நோய்க்கும்
அருமரு தாகுமே

மருந்தாகும் என்றங்கோர் மாய
வலவைசொற் கொண்டுநீர்
கருஞ்சோறும் மற்றை செஞ்சோறும்
களனிழை தென்பயன்
ஒருங்காக வேயுல கேழும்
விழுங்கி உமிழ்ந்திட்ட
பெருந்தெவன் பேர்சொல்ல கிற்கில்
இவளை பெறுதிரே

இவளை பெறும்பரி சிவ்வணங் காடுதல் அன்றந்தோ
குவளை தடங்கண்ணும் கோவைச்செவ்வாயும் பயந்தனள்
கவள கடாக்களி றட்டபிரான்திரு நாமத்தால்
தவள பொடிக்கொண்டு நீரிட்டிடுமின் தணியுமே

தணியும் பொழுதில்லை நீரணங்காடுதிர் அன்னைமீர்
பிணியும் ஒழிகின்ற தில்லை பெருகு மிதுவல்லால்
மணியின் அணிநிற மாயன் தமரடி நீறுகொண்டு
அணிய முயலின்மற் றில்லைகண்டீரிவ் வணங்குக்கே

அணங்கு கருமரு தென்றங்கோர் ஆடும்கள் ளும்பராய்
துணங்கை யெறிந்துநு தோள்குலைக்கப்படும் அன்னைமீர்
உணங்கல் கெடக்கழு தையுதடாட்டம்கண் டென்பயன்
வணங்கீர்கள் மா பிரான்தமர் வேதம்வல் லாரையே

வேதம்வல் லார்களை கொண்டுவிண்ணோர்பெரு மான்திரு
பாதம் பணிந்துஇவள் நோயிது தீர்த்துக்கொள் ளாதுபோய்
ஏதம் பறைந்தல்ல செய்துகள்ளூடு கலாய்த்தூய்
கீத முழவிட்டு நீர் அணங் காடுதல் கீழ்மையே

கீழ்மையினா லங்கோர் கீழ்மகனிட்ட முழவின்கீழ்
நாழ்மை பலசொல்லி நீரணங்காடும்பொய் காண்கிலேன்
ஏழ்மை பிறப்புக்கும் சேமமி நோய்க்குமீ தேமருந்து
ஊழ்மையில் கண்ணபி ரான்கழல் வாழ்த்துமின் உன்னித்தே

உன்னித்து மற்றொரு தெய்வம்தொழாளவ னையல்லால்
நும்மிச்சை சொல்லிநும் தோள்குலைக்கப்படும் அன்னைமீர்
மன்ன படும்மறை வாணனை வண்துவ ராபதி
மன்னனை ஏத்துமின் ஏத்துதலும்தொழு தாடுமே

தொழுதாடி தூமணி வண்ணனுக்காட்செய்து நோய்தீர்ந்த
வழுவாத தொல்புகழ் வண்குருகூர்ச்சட கோபன் சொல்
வழுவாத ஆயிர துள்ளிவை பத்து வெறிகளும்
தொழுதாடி பாடவல் லார்துக்க சீலம் இலர்களே

சீலம் இல்லா சிறிய னேலும் செய்வினை யோபெரிதால்
ஞாலம் உண்டாய் ஞானமூர்த்தி நாராய ணா என்றென்று
கால தோறும் யானிருந்து கைதலை பூசலிட்டால்
கோல மேனி காண வாராய் கூவியும் கொள்ளாயே

கொள்ள மாளா இன்ப
வெள்ளம் கொதில தந்திடும்என்
வள்ள லேயோ வையங் கொண்ட
வாமனா வோ என்றென்று
நள்ளி ராவும் நண்பகலும்
நானிரு தோலமிட்டால்
கள்ள மாயா உன்னை
யென்கண் காணவ தீயாயே

ஈவி லாத தீவினைகள் எத்தனை செய்த னன்கொல்
தாவி வையம் கொண்ட எந்தாய் தாமோதரா என்றென்று
கூவி கூவி நெஞ்சுருகி கண்பனி சோர நின்றால்
பாவி நீயென் றொன்று சொல்லாய் பாவியேன் காணவந்தே

காண வந்தென கண்முகப்பே தாமரை கண்பிறழ
ஆணி செம்பொன் மேனியெந்தாய் நின்றருளாய் என்றென்று
நாண மில்லா சிறுதகையேன் நானிங் கலற்றுவதென்
பேணி வானோர் காணமாட்டா பீடுடை யப்பனையே

அப்ப னேஅட லாழியானே
ஆழ்கட லைக்கடைந்த
துப்ப னேஉன் தோள்கள்
நான்கும் கண்டிடக்கூடுங் கொலென்று
எப்பொ ழுதும் கண்ண
நீர்கொண் டாவி துவர்ந்துவர்ந்து
இப்போ ழுதே வந்தி
டாயென் றேழையேன் நோக்குவனே

நோக்கி
காண்பான் யானென தாவியுள்ளே
நாக்கு நீள்வன் ஞான
மில்லை நாடோ று மென்னுடைய
ஆக்கை யுள்ளூ மாவி
யுள்ளும் அல்லபு றத்தினுள்ளும்
நீக்க மின்றி யெங்கும்
நின்றாய் நின்னை யறிந்தறிந்தே

அறிந்த றிந்து தேறி
தேறி யானென தாவியுள்ளே
நிறைந்த ஞான மூர்த்தி
யாயை நின்மல மாகவைத்து
பிறந்தும் செத்தும் நின்றிடறும்
பேதைமை தீர்ந்தொ ழிந்தேன்
நறுந்து ழாயின் கண்ணி
யம்மா நானுன்னை கண்டுகொண்டே

கண்டு கொண்டென் கைக ளார
நின்திரு பாதங்கள்மேல்
எண்டி சையு முள்ள
பூக்கொண் டேத்தி யுகந்துகந்து
தொண்ட ரோங்கள் பாடி
யாட சூழ்கடல் ஞாலத்துள்ளே
வண்டு ழாயின் கண்ணி
வேந்தே வந்திட கில்லாயே

இடகி லேனோன் றட்ட
கில்லேன் ஐம்புலன் வெல்லகில்லேன்
கடவ னாகி கால
தோறும் பூப்பறி தேத்தகில்லேன்
மடவன் நெஞ்சம் காதல்
கூர வல்வினை யேன்அயர்ப்பாய்
தடவு கின்றே னெங்கு
காண்பன் சக்கர தண்ணலையே

சக்க ரத்தண் ணலேயென்று
தாழ்ந்து கண்ணீர் ததும்ப
பக்கம் நோக்கி நின்ற
லந்தேன் பாவியேன் காண்கின்றிலேன்
மிக்க ஞான மூர்த்தி
யாய வேத விளக்கினைஎன்
தக்க ஞான கண்க
ளாலே கண்டு தழுவுவனே

தழுவி நின்ற காதல்தன்னால் தாமரை கண்ணன்தன்னை
குழுவு மாட தென்குரு கூர்மா றன்சட கோபன்சொல்
வழுவி லாத வொண்தமிழ்கள் ஆயிரத்து ளிப்பத்தும்
தழுவ பாடி யாட வல்லார் வைகுந்த மேறுவரே

ஏறாளும் இறையோனும் திசைமுகனும் திருமகளும்
கூறாளும் தனியுடம்பன் குலங்குலமா அசுரர்களை
நீறாகும் படியாக நிருமித்து படைதொட்ட
மாறாளன் கவராத மணிமாமை குறைவிலமே

மணிமாமை குறைவில்லா மலர்மாதர் உறைமார்வன்
அணிமான தடவரைத்தோள் அடலாழி தடக்கையன்
பணிமானம் பிழையாமே யடியேனை பணிகொண்ட
மணிமாயன் கவராத மடநெஞ்சால் குறைவிலமே

மடநெஞ்சால் குறைவில்லா மகள்தாய்செய் தொருபேய்ச்சி
விடநஞ்ச முலைசுவைத்த மிகுஞான சிறுகுழவி
படநாக தணைக்கிடந்த பருவரைத்தோள் பரம்புருடன்
நெடுமாயன் கவராத நிறையினால் குறைவிலமே

நிறையினாற் குறைவில்லா
நெடும்பணைத்தோள் மடப்பின்னை
பொறையினால் முலையணைவான்
பொருவிடைஏழ் அடர்த்துகந்த
கறையினார் துவருடுக்கை
கடையாவின் கழிகோல்கை
சறையினார் கவராத
தளிர்நிறத்தால் குறைவிலமே

தளிர்நிறத்தால் குறைவில்லா
தனிச்சிறையில் விளப்புற்ற
கிளிமொழியாள் காரணமா
கிளரரக்கன் நகரெரித்த
களிமலர துழாயலங்கல்
கமழ்முடியன் கடல்ஞாலத்து
அளிமிக்கான் கவராத
அறிவினால் குறைவிலமே

அறிவினால் குறைவில்லா அகல்ஞால தவரறிய
நெறியெல்ல மெடுத்துரைத்த நிறைஞான தொருமூர்த்தி
குறியமாண் உருவாகி கொடுங்கோளால் நிலங்கொண்ட
கிறியம்மான் கவராத கிளரொளியால் குறைவிலமே

கிளரொளியால் குறைவில்லா
அரியுருவா கிளர்ந்தெழுந்து
கிளரொளிய இரணியன
தகல்மார்பம் கிழிந்துகந்த
வளரொளிய கனலாழி
வலம்புரியன் மணிநீல
வளரொளியான் கவராத
வரிவளையால் குறைவிலமே

வரிவளையால் குறைவில்லா
பெருமுழக்கால் அடங்காரை
எரியழலம் புகவூதி
யிருநிலமுன் துயர்தவிர்த்த
தெரிவரிய சிவன்பிரமன்
அமரர் கோன் பணிந்தேத்தும்
விரிபுகழான் கவராத
மேகலையால் குறைவிலமே

மேகலையால் குறைவில்லா
மெலிவுற்ற அகலல்குல்
போகமகள் புகழ்த்தந்தை
விறல்வாணன் புயம்துணித்து
நாகமிசை துயில்வான்போல்
உலகெல்லாம் நன்கொடுங்க
யோகணைவான் கவராத
வுடம்பினால் குறைவிலமே

உடம்பினால் குறைவில்லா
உயிர்பிரிந்த மலைத்துண்டம்
கிடந்தனபோல் துணிபலவா
அசுரர் குழாம் துணித்துகந்த
தடம்புனல சடைமுடியன்
தனியொருகூ றமர்ந்துறையும்
உடம்புடையான் கவராத
உயிரினால் குறைவிலமே

உயிரினால் குறைவில்லா
உலகேழ்தன் உள்ளொடுக்கி
தயிர்வெண்ணெ யுண்டானை
தடங்குருகூர சடகோபன்
செயிரில்சொல் லிசைமாலை
யாயிரத்து ளிப்பத்தால்
வயிரம்சேர் பிறப்பறுத்து
வைகுந்தம் நண்ணுவரே

நண்ணாதார் முறுவலிப்ப
நல்லுற்றார் கரைந்தேங்க
எண்ணாரா துயர்விளைக்கும்
இவையென்ன உலகியற்கை
கண்ணாளா கடல்கடைந்தாய்
உனகழற்கே வரும்பரிசு
தண்ணாவா தடியேனை
பணிகண்டாய் சாமாறே

சாமாறும் கெடுமாறும்
தமருற்றார் தலைத்தலைப்பெய்து
ஏமாறி கிடந்தலற்றும்
இவையென்ன உலகியற்கை
ஆமாறொன் றறியேன்நான்
அரவணையாய் அம்மானே
கூமாறே விரைகண்டாய்
அடியேனை குறிக்கொண்டே

கொண்டாட்டும் குலம்புனைவும்
தமருற்றார் விழுநிதியும்
வண்டார்பூங் குழலாளும்
மனையொழிய வுயிர்மாய்தல்
கண்டாற்றேன் உலகியற்கை
கடல்வண்ணா அடியேனை
பண்டேபோல் கருதாதுன்
அடிக்கேகூ பணிகொள்ளே

கொள்ளென்று கிளர்ந்தெழுந்த
பெருஞ்செல்வம் நெருப்பாக
கொள்ளென்று தமம்மூடும்
இவையென்ன உலகியற்கை
வள்ளலே மணிவண்ணா
உனகழற்கே வரும்பரிசு
வள்ளல்செய் தடியேனை
உனதருளால் வாங்காயே

வாங்குநீர் மலருலகில்
நிற்பனவுமீ திரிவனவும்
ஆங்குயிர்கள் பிறப்பிறப்பு
பிணிமூப்பால் தகர்ப்புண்ணும்
ஈங்கிதன்மேல் வெந்நரகம்
இவையென்ன உலகியற்கை
வாங்கெனைநீ மணிவண்ணா
அடியேனை மறுக்கேலே

மறுக்கிவல் வலைப்படுத்தி
குமைத்திட்டு கொன்றுண்பர்
அறப்பொருளை யறிந்தோரார்
இவையென்ன உலகியற்கை
வெறித்துளவ முடியானே
வினையேனை யுனக்கடிமை
அறக்கொண்டாய் இனியென்னா
ரமுதேகூய் அருளாயே

ஆயேஇவ் வுலகத்து நிற்பனவும் திரிவனவும்
நீயேமற் றொருபொருளும் இன்றிநீ நின்றமையால்
நோயேமூ பிறப்பிறப்பு பிணியேயென் றிவையொழி
கூயேகொள் அடியேனை கொடுவுலகம் காட்டேலே

காட்டிநீ கரந்துமிழும் நிலநீர்தீ விசும்புகால்
ஈட்டீநீ வைத்தமைத்த இமையோர்வாழ் தனிமுட்டை
கோட்டையினில் கழித்தெனையுன் கொழுஞ்சோதி யுயரத்து
கூட்டரிய திருவடிக்க ளெஞ்ஞான்று கூட்டுதியே

கூட்டுதிநின் குரைகழல்கள் இமையோரும்
தொழாவகை செய்து
ஆட்டுதிநீ யரவணையாய்
அடியேனும் அஃதறிவன்
வேட்கையெல்லாம் விடுத்தெனையுன்
திருவடியே சுமந்துழல
கூட்டரிய திருவடிக்கள்
கூட்டினைநான் கண்டேனே

கண்டுகே டுற்றுமோந்துண்டுழலும் ஐங்கருவி
கண்டவின்பம் தெரிவரிய அளவில்லா சிற்றின்பம்
ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்ப
கண்டசதிர் கண்டொழிந்தேன் அடைந்தேனுன் திருவடியே

திருவடியை நாரணனைக்கேசவனை பரஞ்சுடரை
திருவடிசேர் வதுகருதி செழுங்குருகூர சடகோபன்
திருவடிமே லுரைத்ததமிழ் ஆயிரத்து ளிப்பத்தும்
திருவடியே அடைவிக்கும் திருவடிசேர தொன்றுமினே

ஒன்று தேவு முலகும்
உயிரும் மற்றும் யாதுமில்லா
அன்று நான்முகன் தன்னொடு
தேவ ருலகோ டுயிர்படைத்தான்
குன்றம் போல்மணி மாடம்
நீடு திருக்குரு கூரதனுள்
நின்ற ஆதிப்பி ரான்நிற்க
மற்றை தெய்வம் நாடுதிரே

நாடி நீர்வ ணங்கும்
தெய்வமும் உம்மையு முன்படைத்தான்
வீடில் சீர்ப்புக ழாதிப்பி
ரானவன் மேவி யுறைகோயில்
மாட மாளிகை சூழ்ந்தழ
காய திருக்குரு கூரதனை
பாடி யாடி பரவி
செல்மின்கள் பல்லுல கீர்பரந்தே

பரந்த தெய்வமும் பல்லுல
கும்படை தன்றுட னேவிழுங்கி
கரந்து மிழ்ந்து கடந்தி
டந்தது கண்டும் தெளியகில்லீர்
சிரங்க ளால்அ மரர்வ
ணங்கும் திருக்குரு கூரதனுள்
பரன்திற மன்றி பல்லுலகீர்
தெய்வம் மற்றில்லை பேசுமினே

பேச நின்ற சிவனு
கும்பிர மன்தன கும்பிறர்க்கும்
நாய கனவ னேக
பாலநன் மோக்கத்து கண்டுகொள்மின்
தேச மாமதிள் சூழ்ந்தழ
காய திருக்குரு கூரதனுள்
ஈசன் பாலோர் அவம்ப
றைதலென் னாவதி லிங்கியர்க்கே

இலிங்க திட்ட புராண
தீரும் சமணரும் சாக்கியரும்
வலிந்து வாதுசெய் வீர்களும்
மற்றுநு தெய்வமு மாகிநின்றான்
மலிந்து செந்நெல் கவரி
வீசும் திருக்குரு கூரதனுள்
பொலிந்து நின்றபி ரான்கண்டீ
ரொன்றும் பொய்யில்லை போற்றுமினே

போற்றி மற்றோர் தெய்வம்
பேண புறத்திட்டு உம்மையின்னே
தேற்றி வைத்ததெல் லீரும்
வீடு பெற்றாலுல கில்லையென்றே
சேற்றில் செந்நெல் கமலம்
ஓங்கு திருக்குரு கூரதனுள்
ஆற்ற வல்லவன் மாயம்
கண்டீரது அறிந்தறி தோடுமினே

ஓடி யோடி பல்பிறப்பும் பிறந்துமற் றோர்தெய்வம்
பாடி யாடி பணிந்துபல்படிகால் வழியே றிக்கண்டீர்
கூடி வானவ ரேத்தனின்ற திருக்குரு கூரதனுள்
ஆடு புட்கொடி யாதி மூர்த்தி கடிமை புகுவதுவே

புக்கு அடிமையினால் தன்னை கண்ட
மார்க்கண்டேயன் அவனை
நக்கபிரானுமன் றுய்யக்கொண்டது
நாராயணனருளே
கொக்கலர் தட தாழை வேலி
திருக்குருகூரதனுள்
மிக்க ஆதிப்பிரான் நிற்க மற்றை
தெய்வம் விளம்புதிரே

விளம்பும் ஆறு சமய
மும்அ வை யாகியும் மற்றும்தன்பால்
அளந்து காண்டற் கரிய
னாகிய ஆதிப்பி ரானமரும்
வளங்கொள் தண்பணை சூழ்ந்தழ
காய திருக்குரு கூரதனை
உளங்கொள் ஞானத்து வைம்மின்
உம்மை உய்யக்கொண்டு போகுறிலே

உறுவ தாவ தெத்தேவும்
எவ்வுலக கங்களும் மற்றும்தன்பால்
மறுவில் மூர்த்தியோ டொத்தி
தனையும் நின்றவண் ணம்நிற்கவே
செறுவில் செந்நெல் கரும்பொ
டோ ங்கு திருக்குரு கூரதனுள்
குறிய மாணுரு வாகிய
நீள்குட கூத்தனு காட்செய்வதே

ஆட்செய்த தாழிப்பி ரானை
சேர்ந்தவன் வண்குரு கூர்நகரான்
நாட்க மழ்மகிழ் மாலை
மார்பினன் மாறன் சடகோபன்
வேட்கை யால்சொன்ன பாடல்
ஆயிர துளிப்ப தும்வல்லார்
மீட்சி யின்றி வைகுந்த
மாநகர் மற்றது கையதுவே
திருவாய் மொழி ஐந்தாம் பத்து

கையார் சக்கரத்தெங்கருமாணிக்க மே என்றென்று
பொய்யே கைம்மைசொல்லிப்புறமேபுற மேயாடி
மெய்யே பெற்றொழிந்தேன் விதிவாய்க்கின்று காப்பாரார்
ஐயோ கண்ணபிரான் அறையோ இனிப்போனாலே

போனாய் மாமருதின் நடுவேயென்பொல் லாமணியே
தேனே இன்னமுதே என்றென்றேசில கூற்றுச்சொல்ல
தானே லெம்பெருமானவனென்னா கியொழிந்தான்
வானே மாநிலமேமற்றுமுற்றுமென் னுள்ளனவே

உள்ளன மற்றுளவாப்புறமேசில மாயஞ்சொல்லி
வள்ளல் மணிவண்ணனே என்றென்றேயுனை யும்வஞ்சிக்கும்
கள்ளம னம்தவிர்ந்தேயுனைக்கண்டுகொண் டுய்ந்தொழிந்தேன்
வெள்ள தணைக்கிடந்தாயினியுன்னைவி டெங்கொள்வனே

என்கொள்வ னுன்னைவிட்டென்
னும்வாசகங் கள்சொல்லியும்
வன்கள்வ னேன்மனத்தை
வலித்துக்கண்ண நீர் கரந்து
நின்கண் நெருங்கவைத்தே
என்தாவியை நீக்ககில்லேன்
என்கண் மலினமறு
தென்னைக்கூவி யருளாய்கண்ணனே

கண்ணபி ரானைவிண்ணோர்
கருமாணிக்க தையமுதை
நண்ணியும் நண்ணகில்லேன்
நடுவேயோ ருடம்பிலிட்டு
திண்ண மழுந்தக்கட்டி
பலசெய்வினை வன்கயிற்றால்
புண்ணை மறையவரி
தெனைப்போரவை தாய்புறமே

புறமற கட்டிக்கொண்டிரு
வல்வினை யார்குமைக்கும்
முறைமுறை யாக்கைபுகலொழி
கண்டு கொண்டொழிந்தேன்
நிறமுடை நால்தடந்தோள்
செய்யவாய்செய்ய தாமரைக்கண்
அறமுய லாழியங்கை
கருமேனியம் மான்தன்னையே

அம்மா னாழிப்பிரான் அவனெவ்விட தான்யானார்
எம்மா பாவியர்க்கும்விதிவாய்க்கின்று வாய்க்கும்கண்டீர்
கைம்மா துன்பொழித்தாய் என்றுகைதலை பூசலிட்டே
மெய்ம்மா லாயொழிந்தேனெம்பிரானுமென் மேலானே

மேலா தேவர்களும் நிலத்தேவரும் மேவித்தொழும்
மாலார் வந்தினநாள் அடியேன்மனத்தே மன்னினார்
சேலேய் கண்ணியரும் பெருஞ்செல்வமும் நன்மக்களும்
மேலா தாய்தந்தையும் அவரேயினி யாவாரே

ஆவா ரார்துணையென்றலைநீர்க்கட லுளழுந்தும்
நாவாய் போல்பிறவி கடலுள்நின்று நான்துளங்க
தேவார் கோலத்தொடும் திருச்சக்கரம் சங்கினொடும்
ஆவா வென்றருள் செய்தடியேனொடு மானானே

ஆனான் ஆளுடையானென்றஃதேகொண் டுகந்துவந்து
தானே யின்னருள்செய்தென்னைமுற்றவும் தானானான்
மீனா யாமையுமாய் நரசிங்கமு மாய்க்குறளாய்
கானா ரெனாமுமா கற்கியாமின்னம் கார்வண்ணனே

கார்வண்ணன் கண்ணபிரான் கமலத்தடங் கண்ணன்தன்னை
ஏர்வள வொண்கழனிக்குருகூர்ச்சட கோபன்சொன்ன
சீர்வண்ண வொண் தமிழ்களிவையாயிர துளிப்பத்தும்
ஆர்வண்ண தாலுரைப்பார் அடிக்கீழ்புகு வார்பொலிந்தே

பொலிக
போயிற்று வல்லுயிர சாபம்
நலியும் நரகமும் நைந்த
நமனுக்கிங் கியாதொன்று மில்லை
கலியும் கெடும்கண்டு கொள்மின்
கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்
மலி புகுந்திசை பாடி
யாடி யுழிதர கண்டோ ம்

கண்டோ ம்
கண்ணு கினியன கண்டோ ம்
தொண்டீர் எல்லீரும் வாரீர்
தொழுது தொழுதுநின் றார்த்தும்
வண்டார் தண்ணந்து ழாயான்
மாதவன் பூதங்கள் மண்மேல்
பண்டான் பாடிநின் றாடி
பரந்து திரிகின் றனவே

திரியும் கலியுகம் நீங்கி
தேவர்கள் தாமும் புகுந்து
பெரிய கிதயுகம் பற்றி
பேரின்ப வெள்ளம் பெருக
கரிய முகில்வண்ண னெம்மான்
கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்
இரி புகுந்திசை பாடி
எங்கும் இடங்கொண் டனவே

இடங்கொள் சமயத்தை யெல்லாம்
எடுத்து களைவன போல
தடங்கடல் பள்ளி பெருமான்
தன்னுடை பூதங்க ளேயாய்
கிடந்தும் இருந்தும் எழுந்தும்
கீதம் பலபல பாடி
நடந்தும் பறந்தும் குனித்தும்
நாடகம் செய்கின் றனவே

செய்கின்ற தென்கண்ணு கொன்றே
ஒக்கின்ற திவ்வுல கத்து
வைகுந்தன் பூதங்க ளேயாய்
மாயத்தி னாலெங்கும் மன்னி
ஐயமொன் றில்லை யரக்கர்
அசுரர் பிறந்தீருள் ளீரேல்
உய்யும் வகையில்லை தொண்டீர்
ஊழி பெயர்த்திடும் கொன்றே

கொன்றுயி ருண்ணும் விசாதி
பகைபசி தீயன வெல்லாம்
நின்றிவ் வுலகில் கடிவான்
நேமிப்பி ரான்தமர் போந்தார்
நன்றிசை பாடியும் துள்ளி
யாடியும் ஞாலம் பரந்தார்
சென்று தொழுதுய்ம்மின் தொண்டீர்
சிந்தையை செந்நி றுத்தியே

நிறுத்திநும் உள்ளத்து கொள்ளும்
தெய்வங்க ளும்மையுய் யக்கொள்
மறுத்து மவனோடே கண்டீர்
மார்க்கண் டேயனும் கரியே
கறுத்த மனமொன்றும் வேண்டா
கண்ணனல் லால்தெய்வ மில்லை
இறுப்பதெல் லாமவன் மூர்த்தி
யாயவர கேயி றுமினே

இறுக்கு மிறையிறுத்துண்ண
எவ்வுல குக்கும்தன் மூர்த்தி
நிறுத்தினான் தெய்வங்க ளாக
அத்தெய்வ நாயகன் றானே
மறுத்திரு மார்வன் அவன்றன்
பூதங்கள் கீதங்கள் பாடி
வெறுப்பின்றி ஞாலத்து மிக்கார்
மேவி தொழுதுய்ம்மி னீரே

மேவி தொழுதுய்ம்மி னீர்கள்
வேத புனித இருக்கை
நாவிற்கொண் டச்சுதன் றன்னை
ஞான விதிபிழை யாமே
பூவில் புகையும் விளக்கும்
சாந்தமும் நீரும் மலிந்து
மேவி தொழுமடி யாரும்
பகவரும் மிக்க துலகே

மிக்க வுலகுகள் தோறும்
மேவிக்கண் ணன்திரு மூர்த்தி
நக்கபி ரானோ டயனும்
இந்திர னும்முதலாக
தொக்க அமரர் குழாங்கள்
எங்கும் பரந்தன தொண்டீர்
ஒக்க தொழுகிற்றி ராகில்
கலியுக மொன்றுமில் லையே

கலியுக மொன்றுமின் றிக்கே
தன்னடி யார்க்கருள் செய்யும்
மலியும் சுடரொளி மூர்த்தி
மாயப்பி ரான்கண்ணன் றன்னை
கலிவயல் தென்னன் குருகூர
காரிமா றன்சட கோபன்
ஒலிபுக ழாயிர திப்பத்து
உள்ளத்தை மாசறு கும்மே

மாசறு சோதியென் செய்ய வாய்மணி குன்றத்தை
ஆசறு சீலனை யாதி மூர்த்தியை நாடியே
பாசற வெய்தி யறிவிழ தெனைநா ளையம்
ஏசறு மூரவர் கவ்வை தோழீ என்செய்யுமே

என்செய்யு மூரவர் கவ்வை தோழீ இனிநம்மை
என்செய்ய தாமரை கண்ண னென்னை நிறைகொண்டான்
முன்செய்ய மாமை யிழந்து மேனி மெலிவெய்தி
என்செய்ய வாயும் கருங்கண் ணு பூர்ந்தவே

ஊர்ந்த சகடம் உதைத்தபாதத்தன் பேய்முலை
சார்ந்து சுவைத்த செவ்வாயன் என்னை நிறைகொண்டான்
பேர்ந்தும் பெயர்ந்தும் அவனோடன்றியோர் சொல்லிலேன்
தீர்ந்தவென் தோழீ என்செய்யு மூரவர் கவ்வையே

ஊரவர் கவ்வை யெருவிட்டன்னைசொல் நீர்மடுத்து
ஈரநெல் வித்தி முளைத்த நெஞ்ச பெருஞ்செய்யுள்
பேரமர் காதல் கடல்புரைய விளைவித்த
காரமர் மேனிநங் கண்ணன் தோழீ கடியனே

கடியன் கொடியன் நெடியமாலுல கங்கொண்ட
அடியன் அறிவரு மேனிமாயத்தன் ஆகிலும்
கொடியவென் னெஞ்சம் அவனென்றே கிடக்கு மெல்லே
துடிகொ ளிடைமட தோழீ அன்னையென் செய்யுமே

அன்னையென் செய்யிலென் ஊரென்
சொல்லிலென் தோழிமீர்
என்னை யினியு காசை
யில்லை யகப்பட்டேன்
முன்னை யமரர் முதல்வன்
வண்துவ ராபதி
மன்னன் மணிவண் ணன்வாசு
தேவன் வலையுளே

வலையுள் அகப்பட்டு தென்னைநன்
நெஞ்சம் கூவிக்கொண்டு
அலைகடல் பள்ளி யம்மானை
ஆழி பிரான்தன்னை
கலைகொள் அகலல்குல் தோழீ
நம்கண்க ளால்கண்டு
தலையில் வணங்க மாங்கொலோ
தையலார் முன்பே

பேய்முலை யுண்டு சகடம் பாய்ந்து மருதிடை
போய்முதல் சாய்த்து புள்வாய் பிளந்து களிறட்ட
தூமுறு வல்தொண்டை வாய்ப்பிரானையெ நாள்கொலோ
யாமுறு கின்றது தோழீ அன்னையர் நாணவே

நாணும் நிறையும் கவர்ந்தென்னை
நன்னெஞ்சம் கூவிக்கொண்டு
சேணுயர் வான திருக்கும்
தேவ பிரான்தன்னை
ஆணையென் தோழீ உலகு
தோறலர் தூற்றிஆம்
கோணைகள் செய்து
குதிரியாய் மடலூர்துமே

யாமட லூர்ந்தும் எம்மாழியங்கை பிரானுடை
தூமடல் தண்ணம் துழாய்மலர் கொண்டு சூடுவோம்
யாமட மின்றி தெருவு தோறயல் தையலார்
நாமடங் கப்பழி தூற்றி நாடும் இரைக்கவே

இரைக்கும் கருங்கடல் வண்ணன் கண்ணபிரான்தன்னை
விரைக்கொள் பொழில்குரு கூர்ச்சட கோபன் சொன்ன
நிரைக்கொள தாதி யோரா யிரத்து ளிப்பத்தும்
உரைக்கவல் லார்க்கு வைகுந்த மாகும்தம் மூரெல்லாம்

ஊரெல்லாம் துஞ்சி யுலகெல்லாம் நள்ளிருளாய்
நீரெல்லாம் தேறியோர் நீளிரவாய் நீண்டதால்
பாரெல்லா முண்டநம் பாம்பணையான் வாரானால்
ஆரெல்லே வல்வினையேன் ஆவிகா பாரினையே

ஆவிகா பாரினியார் ஆழ்கடல்மண் விண்மூடி
மாவிகார மாயோர் வல்லிரவாய் நீண்டதால்
காவிசேர் வண்ணனென் கண்ணனும் வாரானால்
பாவியேன் நெஞ்சமே நீயும்பாங் கல்லையே

நீயும்பாங் கல்லைகாண் நெஞ்சமே நீளிரவும்
ஓயும் பொழுதின்றி யூழியாய் நீண்டதால்
காயும் கடுஞ்சிலையென் காகுத்தன் வாரானால்
மாயும் வகையறியேன் வல்வினையேன் பெண்பிறந்தே

பெண்பிறந்தார் எய்தும் பெருந்துயர்காண் கிலேனென்று
ஒண்சுடரோன் வாரா தொளித்தான்இம் மண்ணளந்த
கண்பெரிய செவ்வாயெங் காரேறு வாரானால்
எண்பெரிய சிந்தைநோய் தீர்ப்பாரார் என்னையே

ஆரென்னை யாராய்வார் அன்னையரும் தோழியரும்
நீரென்னே என்னாதே நீளிரவும் துஞ்சுவரால்
காரன்ன மேனிநங் கண்ணனும் வாரானால்
பேரென்னை மாயாதால் வல்வினையேன் பின்நின்றே

பின்நின்ற காதல்நோய் நெஞ்சம் பெரிதடுமால்
முன்நின் றிராவூழி கண்புதைய மூடிற்றால்
மன்னின்ற சக்கரத்தெம் மாயவனும் வாரானால்
இந்நின்ற நீளாவி காப்பாரார் இவ்விடத்தே

காப்பாரார் இவ்விடத்து கங்கிருளின் நுண்துளியாய்
சேட்பால தூழியா செல்கின்ற கங்குல்வாய்
தூப்பால வெண்சங்கு சக்கரத்தன் தோன்றானால்
தீப்பால வல்வினையேன் தெய்வங்காள் என்செய்கேன்

தெய்வங்காள் என்செய்கேன்ஓரிரவேழ் ஊழியாய்
மெய்வந்து நின்றென தாவி மெலிவிக்கும்
கைவந்த சக்கரதென் கண்ணனும் வாரானால்
தைவந்த தண்தென்றல் வெஞ்சுடரில் தானடுமே

வெஞ்சுடரில் தானடுமால் வீங்கிருளின் நுண்துளியாய்
அஞ்சுடர வெய்யோன் அணிநெடுந்தேர் தோன்றாதால்
செஞ்சுடர தாமரைக்கண் செல்வனும் வாரானால்
நெஞ்சிடர்தீர பாரினியார் நின்றுருகு கின்றேனே

நின்றுருகு கின்றேனே போல நெடுவானம்
சென்றுருகி நுண்துளியாய்ச்செல்கின்ற கங்குல்வாய்
அன்றொருகால் வையம் அளந்தபிரான் வாரானென்று
ஒன்றொருகால் சொல்லாதுலகோ உறங்குமே

உறங்குவான் போல்யோகு செய்த பெருமானை
சிறந்தபொழில் சூழ்குரு கூர்ச்சட கோபன்சொல்
நிறங்கிளர்ந்த அந்தாதி யாயிரத்து ளிப்பத்தால்
இறந்துபோய் வைகுந்தம் சேராவா றெங்ஙனேயோ

எங்ஙனேயோ அன்னை மீர்காள்
என்னை முனிவதுநீர்
நங்கள்கோல திரு குறுங்குடி
நம்பியை நான்கண்டபின்
சங்கினோடும் நேமி யோடும்
தாமரை கண்களொடும்
செங்கனிவா யொன்றி னொடும்
செல்கின்ற தென்நெஞ்சமே

என்நெஞ்சி னால்நோக்கி காணீர்
என்னை முனியாதே
தென்னன் சோலை திருக்குறுங்குடி
நம்பியை நான்கண்டபின்
மின்னும் நூலும் குண்டலமும்
மார்வில் திருமறுவும்
மன்னும் பூணும் நான்குதோளும்
வந்தெங்கும் நின்றிடுமே

நின்றிடும் திசைக்கும் நையுமென்று
அன்னைய ரும்முனிதிர்
குன்ற மாட திருக்குறுங்குடி
நம்பியை நான்கண்டபின்
வென்றி வில்லும் தண்டும்
வாளும் சக்கரமும்சங்கமும்
நின்று தோன்றி கண்ணுள்நீங்கா
நெஞ்சுள்ளும் நீங்காவே

நீங்கநில்லா கண்ண நீர்களென்று
அன்னையரும் முனிதிர்
தேன்கொள் சோலை திருக்குறுங்குடி
நம்பியை நான்கண்டபின்
பூந்தண் மாலை தண்டுழாயும்
பொன்முடி யும்வடிவும்
பாங்கு தோன்றும் பட்டும்நாணும்
பாவியேன் பக்கத்தவே

பக்கம்நோக்கி நிற்கும் நையுமென்று
அன்னைய ரும்முனிதிர்
தக்ககீர்த்தி திருக்கு றுங்குடி
நம்பியை நான்கண்டபின்
தொக்கசோதி தொண்டை வாயும்
நீண்ட புருவங்களும்
தக்கதாமரை கண்ணும் பாவியே
னாவியின் மேலனவே

மேலும் வன்பழி நங்குடிக்கிவள்
என்றன்னை காணக்கொடாள்
சோலைசூழ் தண்திரு குறுங்குடி
நம்பியை நான்கண்டபின்
கோலநீள் கொடிமூக்கும் தாமரை
கண்ணும் கனிவாயும்
நீலமேனியும் நான்கு தோளுமென்
நெஞ்சம் நிறைந்தனவே

நிறைந்த வன்பழி நங்குடிக்கிவள்
என்றன்னை காணக்கொடாள்
சிறந்தகீர்த்தி திருக்கு றுங்குடி
நம்பியை நான்கண்டபின்
நிறைந்தசோதி வெள்ளஞ் சூழ்ந்த
நீண்டபொன் மேனியொடும்
நிறைந்தென் னுள்ளே நின்றொழிந்தான்
நேமியங் கையுளதே

கையுள்நன் முகம்வைக்கும் நையுமென்று
அன்னைய ரும்முனிதிர்
மைகொள் மாட திருக்குறுங்குடி
நம்பியை நான்கண்டபின்
செய்யதாமரை கண்ணு மல்குலும்
சிற்றிடை யும்வடிவும்
மொய்யநீள்குழல் தாழ்ந்த தோள்களும்
பாவியேன் முன்னிற்குமே

முன்னின் றாயென்று தோழிமார்களும்
அன்னைய ரும்முனிதிர்
மன்னு மாட திருக்குறுங்குடி
நம்பியை நான்கண்டபின்
சென்னி நீண்முடி யாதியாய
உலப்பி லணிகலத்தன்
கன்னல் பாலமு தாகிவந்தென்
நெஞ்சம் கழியானே

கழியமிக்கதோர் காதல ளிவளென்
றன்னை காணக்கொடாள்
வழுவில் கீர்த்தி திருக்குறுங்குடி
நம்பியை நான்கண்டபின்
குழுமி தேவர் குழாங்கள்தொழ
சோதிவெள் ளத்தினுள்ளே
எழுவதோ ருருவென் னெஞ்சுள்ளெழும்
ஆர்க்கு மறிவரிதே

அறிவரிய பிரானை யாழியங்கையனை யேயலற்றி
நறியநன் மலர்நாடி நன்குருகூர்ச்சடகோபன் சொன்ன
குறிகொளா யிரத்துள் ளிவைபத்தும் திருக்குறுங் குடியதன்மேல்
அறி கற்றுவல்லார் வைட்டணவராழ்கடல் ஞாலத்துள்ளே

கடல்ஞாலம் செய்தேனும் யானே என்னும்
கடல்ஞாலம் ஆவேனும் யானே என்னும்
கடல்ஞாலம் கொண்டேனும் யானே என்னும்
கடல்ஞாலம் கீண்டேனும் யானே என்னும்
கடல்ஞாலம் முண்டேனும் யானே என்னும்
கடல்ஞால தீசன்வ தேற கொலோ
கடல்ஞா லத்தீர கிவையென் சொல்லுகேன்
கடல்ஞா லத்தென் மகள்கற் கின்றனவே

கற்கும்கல் விக்கெல்லை யிலனே என்னும்
கற்கும்கல்வி யாவேனும் யானே என்னும்
கற்கும்கல்வி செய்வேனும் யானே என்னும்
கற்கும்கல்வி தீர்ப்பேனும் யானே என்னும்
கற்கும்கல்வி சாரமும் யானே என்னும்
கற்கும்கல்வி நாதன்வன் தேற கொலோ
கற்கும் கல்வியீர கிவையென் சொல்லுகேன்
கற்கும் கல்வியென் மகள்காண் கின்றனவே

காண்கின்ற நிலமெல்லாம் யானே என்னும்
காண்கின்ற விசும்பெல்லாம் யானே என்னும்
காண்கின்ற வெந்தீயெல்லாம் யானே என்னும்
காண்கின்ற இக்காற்றெல்லாம் யானே என்னும்
காண்கின்ற கடலெல்லாம் யானே என்னும்
காண்கின்ற கடல்வண்ண னேற கொலோ
காண்கின்ற வுலக தீர்க்கென் சொல்லுகேன்
காண்கின்ற வென்கா ரிகைசெய் கின்றனவே

செய்கின்ற கிதியெல்லாம் யானே என்னும்
செய்வானின் றனகளும் யானே என்னும்
செய்துமுன் னிறந்தனவும் யானே என்னும்
செய்கைப்பய னுண்பேனும் யானே என்னும்
செய்வார்களை செய்வேனும் யானே என்னும்
செய்யகம லக்கண்ண னேற கொலோ
செய்யவுல கத்தீர கிவையென் சொல்லுகேன்
செய்ய கனிவா யிளமான் திறத்தே

திறம்பாமல் மண்காக்கின்றேன் யானே என்னும்
திறம்பாமல் மலையெடு தேனே என்னும்
திறம்பாமல் அசுரரைக்கொன் றேனே என்னும்
திறங்காட்டி யன்றைவரை காத்தேனே என்னும்
திறம்பாமல் கடல்கடை தேனே என்னும்
திறம்பாத கடல்வண்ண னேற கொலோ
திறம்பாத வுலக தீர்க்கென் சொல்லுகேன்
திறம்பா தென்திரு மகளெய் தினவே

இனவேய்மலை யேந்தினேன் யானே என்னும்
இனவேறுகள் செற்றேனும் யானே என்னும்
இனவான்கன்று மேய்த்தேனும் யானே என்னும்
இனவாநிரை காத்தேனும் யானே என்னும்
இனவாயர் தலைவனும் யானே என்னும்
இனத்தேவர் தலைவன்வ தேற கொலோ
இனவேற்கண் நல்லீர கிவையென் சொல்லுகேன்
இனவேற் கண்ணி யென்மக ளுற்றனவே

உற்றார்க ளெனக்கில்லை யாரும் என்னும்
உற்றார்க ளெனக்கிங்கெல் லாரும் என்னும்
உற்றார்களை செய்வேனும் யானே என்னும்
உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும்
உற்றார்களு குற்றேனும் யானே என்னும்
உற்றாரிலி மாயன் வந்தேற கொலோ
உற்றீர்க கென்சொல்லி சொல்லு கேன்யான்
உற்றென் னுடைப்பே தையுரை கின்றனவே

உரைக்கின்ற முக்கட்பிரான் யானே என்னும்
உரைக்கின்ற திசைமுகன் யானே என்னும்
உரைக்கின்ற அமரரும் யானே என்னும்
உரைக்கின்ற அமரர் கோன் யானே என்னும்
உரைக்கின்ற முனிவரும் யானே என்னும்
உரைக்கின்ற முகில்வண்ண னேற கொலோ
உரைக்கின்ற உலக தீர்க்கென் சொல்லுகேன்
உரைக்கின்ற வென்கோ மளவொண் கொடிக்கே

கொடிய வினையாது மிலனே என்னும்
கொடியவினை யாவேனும் யானே என்னும்
கொடியவினை செய்வேனும் யானே என்னும்
கொடியவினை தீர்ப்பேனும் யானே என்னும்
கொடியா னிலங்கைசெற் றேனே என்னும்
கொடியபுள் ளுடையவ னேற கொலோ
கொடிய வுலகத்தீர கிவையென் சொல்லுகேன்
கொடியேன் கொடியென் மகள்கோ லங்களே

கோலங்கொள் சுவர்க்கமும் யானே என்னும்
கோலமில் நரகமும் யானே என்னும்
கோலம்திகழ் மோக்கமும் யானே என்னும்
கோலங்கொ ளுயிர்களும் யானே என்னும்
கோலங்கொள் தனிமுதல் யானே என்னும்
கோலங்கொள் முகில்வண்ண னேற கொலோ
கோலங்கொ ளுலக தீர்க்கென் சொல்லுகேன்
கோல திகழ்கோ தையென்கூ தலுக்கே

கூந்தல்மலர் மங்கைக்கும் மண்மட தைக்கும்
குலவாயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை
வாய்ந்த வழுதி நாடன் மன்னு
குருகூர சடகோபன் குற்றே வல்செய்து
ஆய்ந்த தமிழ்மாலை ஆயி ரத்துள்
இவையுமோர் பத்தும்வல் லார்உலகில்
ஏந்து பெருஞ்செல்வ தாரா திருமால்
அடியார் களைப்பூ சிக்கநோற் றார்களே

நோற்ற நோன்பிலேன் நுண்ணறி விலேனாகிலும்
இனி யுன்னைவிட்டுஒன்றும்
ஆற்ற கின்றிலேன் அரவினணை யம்மானே
சேற்று தாமரை செந்நெ லூடுமலர் சிரீவர மங்கலநகர்
வீற்றிருந்த எந்தாய் உனக்கு மிகையல்லே னங்கே

அங்குற்றே னல்லே னிங்குற்றே னல்லேன்
உன்னை காணும் அவாவில் வீழ்ந்துநான்
எங்குற் றேனுமல் லேனிலங்கைசெற்ற அம்மானே
திங்கள் சேர்மணி மாடம் நீடு சிரீவர மங்கல நகருறை
சங்கு சக்கர தாய்தமி யேனு கருளாயே

கருள புட்கொடி சக்க ரப்படை
வான நாடஎங் கார்முகில் வண்ணா
பொருளல் லாத என்னை பொருளாக்கி
அடிமை கொண்டாய்
தெருள்கொள் நான்மறை வல்லவர் பலர்வாழ்
சிரீவர மங்கலநகர்க்கு
அருள்செய்தங்கிரு தாயறி யேனொரு கைம்மாறே

மாறு சேர்படை நூற்றுவர் மங்க வோரைவர்க்கு
ஆயன்று மாயப்போர் பண்ணி
நீறு செய்த எந்தாய் நிலங்கீண்ட அம்மானே
தேறு ஞானத்தர் வேத வேள்வியறா
சிரீவர மங்கலநகர்
ஏறிவீற் றிருந்தாய் உன்னை எங்கெய்த கூவுவனே

எய்த கூவுதல் ஆவதே எனக்கு
எவ்வதெய் வத்து ளாயுமாய் நின்று
கைத வங்கள்செய் யும்கரு மேனியம் மானே
செய்த வேள்வியர் வை தேவரறா
சிரீவர மங்கலநகர்
கைத்தொழ இருந்தாய் அதுநானும் கண்டேனே

ஏன மாய்நிலங் கீண்டவென் அப்பனே
கண்ணா என்று மென்னை யாளுடை
வானநா யகனே மணிமா ணிக்க சுடரே
தேன மாம்பொழில் தண்சிரீ வரமங்கல
தவர்க்கை தொழவுறை
வான மாமலை யேஅடி யேன்தொழ வந்தருளே

வந்தருளி யென்னெஞ் சிடங்கொண்ட வானவர்
கொழுந்தே உலகுக்கோர்
முந்தை தாய்தந்தை யேமுழு ஏழுலகு முண்டாய்
செந்தொ ழிலவர் வேத வேள்வியறா
சிரீவர மங்கலநகர்
அந்தமில் புகழாய் அடியேனை அகற்றேலே

அகற்ற நீவைத்த மாயவல் லைம்புலங்களாம்
அவை நன்கறிந்தனன்
அகற்றி என்னையும் நீஅருஞ் சேற்றில் வீழ்த்தி கண்டாய்
பகற்கதிர் மணிமாடம் நீடு சிரீவர மங்கை
வாணனே என்றும்
புகற்கரிய எந்தாய்புள்ளின்வாய் பிளந்தானே

புள்ளின்வாய் பிளந்தாய் மருதிடை போயினாய்
எருதேழ் அடர்த்தஎன்
கள்ள மாயவனேகருமாணிக்க சுடரே
தெள்ளியார் திருநான் மறைகள் வல்லார்
மலிதண் சிரீவர மங்கை
உள்ளிருந்த எந்தாய் அருளாய் உய்யுமா றெனக்கே

ஆறெ னக்குநின் பாதமே சரணாக
தந்தொழிந்தாய் உன கோர் கைம்
மாறு நானொன் றிலேனென தாவியு முனதே
சேரு கொள்கரும் பும்பெருஞ் செந்நெல்லும்
மலிதண் சிரீவர மங்கை
நாறு பூந்தண் துழாய்முடி யாய்தெய்வ நாயகனே

தெய்வ நாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடியிணைமிசை
கொய்கொள் பூம்பொழில் சூழ்குரு கூர்ச்சட கோபன்
செய்த ஆயிர துள்ளிவை தண்சிரீ வரமங்கை
மேய பத்துடன்
வைகல் பாட வல்லார் வானோர காரா அமுதே

ஆரா அமுதே அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய வுருக்குகின்ற நெடுமாலே
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர திருகுடந்தை
ஏரார் கோலம் திகழ கிடந்தாய் கண்டேன் எம்மானே

எம்மா னேஎன் வெள்ளை மூர்த்தி என்னை ஆள்வானே
எம்மா வுருவும் வேண்டு மாற்றால் ஆவாய் எழிலேறே
செம்மா கமலம் செழுநீர் மிசைக்கண்மலரும் திருக்குடந்தை
அம்மா மலர்க்கண் வளர்கின் றானேஎன்நான் செய்கேனே

என்நான் செய்கேன் யாரே களைகண்
என்னையென் செய்கின்றாய்
உன்னால் அல்லால் யாவ ராலும்
ஒன்றும் குறைவேண்டேன்
கன்னார் மதிள்சூழ் குடந்தை கிடந்தாய்
அடியேன் அருவாழ்ணாள்
சென்னா ளெந்நாள் அந்நா ளுன்தாள்
பிடித்தே செலக்காணே

செலக்காண் கிற்பார் காணும் அளவும்
செல்லும் கீர்த்தியாய்
உலப்பி லானே எல்லா வுலகும்
உடைய ஒருமூர்த்தி
நலத்தால் மிக்கார் குடந்தை கிடந்தாய்
உன்னை காண்பான்நான்
அலப்பாய்ஆகா சத்தை நோக்கி
அழுவன் தொழுவனே

அழுவன் தொழுவன் ஆடி காண்பன்
பாடி அலற்றுவன்
தழுவல் வினையால் பக்கம் நோக்கி
நாணி கவிழ்ந்திருப்பன்
செழுவொண் பழன குடந்தை கிடந்தாய்
செந்தா மரைக்கண்ணா
தொழுவன் னேனை யுன்தாள் சேரும்
வகையே சூழ்கண்டாய்

சூழ்கண் டாயென் தொல்லை வினையை
அறுத்துன் அடிசேரும்
ஊழ்கண் டிருந்தே தூரா குழிதூர்த்து
எனைநாள் அகன்றிருப்பன்
வாழ்தொல் புகழார் குடந்தை கிடந்தாய்
வானோர் கோமானே
யாழி னிசையே அமுதே அறிவின்
பயனே அரியேறே

அரியே றேஎன் அம்பொற் சுடரே
செங்க கருமுகிலே
எரியே பவள குன்றே நாற்றோள்
எந்தாய் உனதருளே
பிரியா அடிமை யென்னை கொண்டாய்
குடந்தை திருமாலே
தரியே னினியுன் சரண தந்தென்
சன்மம் களையாயே

களைவாய் துன்பம் களையா தொழிவாய்
களைகண் மற்றிலேன்
வளைவாய் நேமி படையாய் குடந்தை
கிடந்த மாமாயா
தளரா வுடலம் என்ன தாவி
சரிந்து போம்போது
இளையா துனதாள் ஒருங்க பிடித்து
போத இசைநீயே

இசைவி தென்னை யுன்தாள் இணைகீழ்
இருத்தும் அம்மானே
அசைவில் அமரர் தலைவர் தலைவா
ஆதி பெருமூர்த்தி
திசைவில் வீசும் செழுமா மணிகள்
சேரும் திருக்குடந்தை
அசைவில் உலகம் பரவ கிடந்தாய்
காண வாராயே

வாரா வருவாய் வருமென் மாயா
ஆரா அமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்
தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய் திருக்குடந்தை
ஊராய்உனக்காட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ

உழலை யென்பின் பேய்ச்சி முலையூடு
அவளை யுயிருண்டான்
கழல்கள் அவையே சரணா கொண்ட
குருகூர சடகோபன்
குழலில் மலி சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்
மழலை தீர வல்லார் காமர் மானேய் நோக்கியர்க்கே

மானேய் நோக்குநல்லீர் வைகலும்வினை யேன்மெலிய
வானார் வண்கமுகும் மதுமல்லிகை யுங்கமழும்
தேனார் சோலைகள்சூழ் திருவல்ல வாழுறையும்
கோனா ரைஅடியேண் அடிகூடுவ தென்றுகொலோ

என்றுகொல் தோழிமீர்காளெம்மைநீர்நலி தென்செய்தீரோ
பொன்திகழ் புன்னைமகிழ் புதுமாதவி மீதணவி
தென்றல் மணங்கமழும் திருவல்ல வாழ்நகருள்
நின்றபி ரான்அடிநீ றடியோங்கொண்டு சூடுவதே

சூடும் மலர்க்குழலீர் துயராட்டியே னைமெலிய
பாடுநல் வேதவொலி பரவைத்திரை போல்முழங்க
மாடுயர தோமப்புகை கமழும்தண் திருவல்லவாழ்
நீடுறை கின்றபிரான் கழல்கண்டுங்கொல் நிச்சலுமே

நிச்சலும் தோழிமீர்காள் எம்மைநீர்நலி தென்செய்தீரோ
பச்சிலை நீள்கமுகும் பலவும்தெங்கும் வாழைகளும்
மச்சணி மாடங்கள்மீ தணவும்தண் திருவல்லவாழ்
நச்சர வினணைமேல் நம்பிரானது நன்னலமே

நன்னல தோழிமீர்காள் நல்லவந்தணர் வேள்விப்புகை
மைந்நலங் கொண்டுயர்விண் மறைக்கும்தண் திருவல்லவாழ்
கன்னலங் கட்டிதன்னை கனியையின் னமுதந்தன்னை
என்னலங் கொள்சுடரை என்றுகொல்கண்கள் காண்பதுவே

காண்பதெஞ் ஞான்றுகொலொ வினையேன்கனி வாய்மடவீர்
பாண்குரல் வண்டினோடு பசுந்தென்றலு மாகியெங்கும்
சேண்சினை யோங்குமர செழுங்கானல் திருவல்லவாழ்
மாண்குறள் கோலப்பிரான் மலர்த்தாமரை பாதங்களே

பாதங்கள் மேலணிபூ தொழக்கூடுங்கொல் பாவைநல்லீர்
ஓதநெ டுந்தடத்துள் உயர்தாமரை செங்கழுநீர்
மாதர்கள் வாண்முகமும் கண்ணுமேந்தும் திருவல்லவாழ்
நாதனிஞ் ஞாலமுண்ட நம்பிரான்தன்னை நாடோ றுமே

நாடொறும் வீடின்றியே தொழக்கூடுங்கொல் நன்னுதலீர்
ஆடுறு தீங்கரும்பும் விளைசெந்நெலு மாகியெங்கும்
மாடுறு பூந்தடஞ்சேர் வயல்சூழ்தண் திருவல்லவாழ்
நீடுறை கின்றபிரான் நிலந்தாவிய நீள்கழலே

கழல்வளை பூரிப்பயாம் கண்டுகைதொழ கூடுங்கொலோ
குழலென்ன யாழுமென்ன குளிர்சோலையுள் தேனருந்தி
மழலை வரிவண்டுகள் இசைபாடும் திருவல்லவாழ்
சுழலின் மலிசக்கர பெருமானது தொல்லருளே

தொல்லருள் நல்வினையால் சொல்லக்கூடுங்கொல்
தோழிமீர்காள்
தொல்லருள் மண்ணும்விண்ணும் தொழநின்ற திருநகரம்
நல்லரு ளாயிரவர் நலனேந்தும் திருவல்லவாழ்
நல்லருள் நம்பெருமான் நாராயணன் நாமங்களே

நாமங்க ளாயிர முடையநம்பெரு மானடிமேல்
சேமங்கொள் தென்குருகூர்ச்சடகோபன் தெரிந்துரைத்த
நாமங்க ளாயிரத்துள் இவைபத்தும் திருவல்லவாழ்
சேமங்கொள் தென்னகர்மேல் செப்புவார்சிற தார்பிறந்தே

பிறந்த வாறும் வளர்ந்த
பெரிய பாரதம் கைசெய்து ஐவர்க்கு
திறங்கள் சாட்டி யிட்டு செய்து போன மாயங்களும்
நிறந்த னூடுபு கெனதாவியை நின்றுநின்று
உருக்கி யுண்கின்றஇ
சிறந்த வான்சுட ரேஉன்னை யென்றுகொல் சேர்வதுவே

வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும்
மாய மாவினை வாய்பி ளந்ததும்
மதுவைவார் குழலார் குரவை பிணைந்த குழகும்
அதுவிது உதுவென்ன லாவன வல்ல
என்னையுன் செய்கை நைவிக்கும்
முதுவைய முதல்வாஉன்னை யென்று தலை பெய்வனே

பெய்யும் பூங்குழல் பேய்முலை யுண்ட
பிள்ளை தேற்றமும் பேர்ந்தோர் சாடிற
செய்ய பாதமொன் றால்செய்த நின்சிறு சேவகமும்
நெய்யுண் வார்த்தையுள் அன்னை கோல்கொள்ள
நீயுன் தாமரை கண்கள் நீர்மல்க
பையவே நிலையும் வந்தென் னெஞ்சை யுருக்குங்களே

கள்ள வேடத்தை கொண்டுபோ புறம்புக்க
வாறும் கலந்தசுரரை
உள்ளம் பேதம்செய் திட்டுயி ருண்ட உபாயங்களும்
வெள்ள நீர்ச்சடை யானும் நின்னிடை வேறலாமை
விளங்க நின்றதும்
உள்ளமுள் குடைந்தென் உயிரை யுருக்கி யுண்ணுமே

உண்ண வானவர் கோனு காயர்
ஒருப்ப டுத்த அடிசி லுண்டதும்
வண்ணமால் வரையை யெடுத்து மழைகாத்ததும்
மண்ணை முன்படை துண்டு மிழ்ந்துக டந்தி டந்து
மணந்த மாயங்கள்
எண்ணு தோறுமென் னெஞ்செரி வாய்
மெழு கொக்குநின்றே

நின்ற வாறு மிருந்த வாறும்
கிடந்த வாறும் நினைப்பரியன
ஒன்றலா வுருவாய் அருவாயநின் மாயங்கள்
நின்று நினைக்கின்
எங்ங னம்நினை கிற்பன் பாவியேற்கு
ஒன்றுநன் குரையாய் உலக முண்ட ஒண்சுடரே

ஒண்சுடரோ டிருளுமாய் நின்ற வாறும்
உண்மையோ டின்மையாய் வந்துஎன்
கண்கொ ளாவகை நீகர தென்னை செய்கின்றன
எண்கொள் சிந்தையுள் நைகின்றேனென் கரிய
மாணிக்க மேஎன் கண்கட்கு
திண்கொள்ள வொருநாள் அருளாயுன் திருவுருவே

திருவுருவு கிடந்த வாறும் கொப்பூழ
செந்தா மரைமேல் திசைமுகன்
கருவுள்வீற் றிருந்து படைத்திட்ட கருமங்களும்
பொருவி லுந்தனி நாயகமவை கேட்கு
தோறுமென் னெஞ்சம் நின்று நெக்கு
அருவி சோரும் கண்ணீ ரென்செய்கேன் அடியேனே

அடியை மூன்றை யிரந்த வாறும் அங்கேநின்றாம்
கடலும் மண்ணும் விண்ணும்
முடிய ஈரடியால் முடித்து கொண்ட முக்கியமும்
நொடியு மாறவை கேட்கு தோறுமென்
நெஞ்சம் நின்தன கேக ரைந்துகும்
கொடியவல் வினையேன் உன்னை யென்றுகொல் கூடுவதே

கூடி நீரை கடைந்த வாறும்
அமுதம் தேவர் உண்ண அசுரரை
வீடும் வண்ணங்க ளேசெய்து போன வித்தகமும்
ஊடு புக்கென தாவியை யுருக்கி
யுண்டிடு கின்ற நின்தன்னை
நாடும் வண்ணம் சொல்லாய் நச்சுநா கணையானே

நாகணைமிசை நம்பிரான் சரணே
சரண் கென்று நாடொறும்
ஏக சிந்தைய னாய்க்குரு கூர்ச்சட கோபன் மாறன்
ஆக நூற்ற தாதி யாயிரத்துள்
இவையுமோர் பத்தும் வல்லார்
மாக வைகுந்தத்து மகிழ்வெய்துவர் வைகலுமே