பத்திரகிரியார் பாடல்கள் மெய்ஞ்ஞான புலம்பல்
காப்பு
முக்திதரும் ஞான மொழியாம் புலம்பல் சொல்ல
அத்தி முகவன்தன் அருள் பெருவது எக்காலம்
நூல்
ஆங்காரம் உள்ளடக்கிய ஐம்புலனை சுட்டறுத்து
தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம்
நீங்கா சிவயோக நித்திரை கொண்டே இருந்து
தேங்கா கருணை வெள்ளம் தேக்குவதும் எக்காலம்
தேங்கா கருணைவெள்ளம் தேக்கியிருந்து உண்பதற்கு
வாங்காமல் விட்டகுறை வந்தெடுப்பது எக்காலம்
ஓயா கவலையினால் உள்ளுடைந்து வாடாமல்
மாயா பிறவி மயக்கு அறுப்பது எக்காலம்
மாயா பிறவி மயக்கத்தை ஊடறுத்து
காயா புரிக்கோட்டை கை கொள்வது எக்காலம்
காயா புரிக்கோட்டை கைவசமா கொள்வதற்கு
மாயா அனுபூதி வந்துஅடுப்பது எக்காலம்
சேயா சமைந்து செவிடு ஊமை போல் திரிந்து
பேய்போல் இருந்து உன் பிரமை கொள்வது எக்காலம்
பேய் போல்திரிந்து பிணம்போல் கிடந்து பெண்ணை
தாய்போல் நினைத்து தவம் முடிப்பது எக்காலம்
கால்காட்டி கைகாட்டி கண்கள் முகம்காட்டி
மால்காட்டும் மங்கையரை மறந்து இருப்பது எக்காலம்
பெண்ணினல்லார் ஆசை பிரமையினை விட்டொழிந்து
கண்ணிரண்டும் மூடி கலந்திருப்பது எக்காலம்
வெட்டுண்ட புண்போல் விரிந்த அல்குல் பைதனிலே
தட்டுண்டு நிற்கை தவிர்வதுவும் எக்காலம்
ஆறாத புண்ணில் அழுந்தி கிடவாமல்
தேறாத சிந்தைதனை தேற்றுவதும் எக்காலம்
தந்தை தாய் மக்கள் சகோதரரும் பொய்யெனவே
சிந்தைதனில் கண்டு திருக்கறுப்பது எக்காலம்
மன்னுயிரை கொன்று வதைத்து உண்டு உழலாமல்
தன்னுயிர்போல் எண்ணி தவம் முடிப்பது எக்காலம்
பாவி என்ற பேர்படைத்து பாழ்நரகில் வீழாமல்
ஆவி என்ற சூத்திரத்தை அறிவது இனி எக்காலம்
உளியிட்ட கல்லும் உருப்பிடித்த செஞ்சாந்தும்
புளியிட்ட செம்பும் பொருளாவது எக்காலம்
வேடிக்கையும் சொகுசும் மெய்ப்பகட்டும் பொய்ப்பகட்டும்
வாடிக்கை எல்லாம் மறந்திருப்பது எக்காலம்
பட்டுடை பொற்பணியும் பாவனையும் தீவினையும்
விட்டுவிட்டு உன்பாதம் விரும்புவதும் எக்காலம்
ஆமைவரும் ஆள்கண்டு ஐந்தடக்கம் செய்தாற்போல்
ஊமை உருக்கொண்டு ஒடுங்குவதும் எக்காலம்
தண்டிகையும் சாவடியும் சாளிகையும் மாளிகையும்
கண்டு களிக்கும் கருத்தொழிவது எக்காலம்
அத்தன் இருப்பிடத்தை ஆராய்ந்து பார்த்து நிதம்
செத்த சவம்போல் திரிவதினி எக்காலம்
ஒழிந்த தருமத்தினை வைத்துள்ளெலும்பு வெள்ளெலும்பா
கழிந்த பிணம்போல்இ ழிந்து காண்பதினி எக்காலம்
அற்பசுகம் மறந்தே அறிவை அறிவால் அறிந்து
கெர்ப்பத்தில் வீழிந்து கொண்ட கோளறுப்பது எக்காலம்
கருப்படுத்தி என்னை யமன் கைப்பிடித்து கொள்ளாமுன்
உருப்படுத்தி ஆள உடன்படுவது எக்காலம்
தூண்டு விளக்கணைய தொடர்ந்து இருள் முன் சூழ்ந்தாற்போல்
மாண்டு பிழைத்துவந்த வகை தெரிவது எக்காலம்
தூரியினில் மீன்போல் சுழன்று மனம் வாடாமல்
ஆரியனை தேடி அடிபணிவது எக்காலம்
எண்ணூறு யுகமிருந்தும் எய்தாத விடுபெற
வெண்ணீறு பூசி விளங்குவதும் எக்காலம்
அவவேடம் பூண்டு இங்கு அலைந்து திரியாமல்
சிவவேடம் பூண்டு சிறந்திருப்பது எக்காலம்
அண்டருக்காய் நஞ்சருந்தி அம்பலத்தில் ஆடுசிவன்
தொண்டருக்கு தொண்டன் என தொண்டு செய்வது எக்காலம்
பன்றி வடிவெடுத்து பார் இடந்து மால்காணா
குன்றில் விளக்கொளியை கூறுவதும் எக்காலம்
தித்திக்கும் தெள்ளமிழ்தை சித்தாந்தத்து உட்பொருளை
முத்திக்கு வித்தை முதல் நினைப்பது எக்காலம்
வேதாந்தவேதம் எல்லாம் விட்டொழிந்தே நிட்டையிலே
ஏகாந்தமாக இருப்பதினி எக்காலம்
மற்றிடத்தை தேடி என்றன் வாழ்நாளை போக்காமல்
உற்றிடத்தை தேடி உறங்குவதும் எக்காலம்
இன்றுளோர் நாளை இருப்பதுவும் பொய்யெனவே
மன்றுளோர் சொல்லும் வகையறிவது எக்காலம்
கஞ்சா அபினியுடன் கள்ளுண்டு வாடாமல்
பஞ்சா மிர்தம் பருகுவதும் எக்காலம்
செஞ்சலத்தினால் திரண்ட சென்ன மோட்சம்பெறவே
சஞ்சலத்தை விட்டு உன் சரண் அடைவது எக்காலம்
கும்பிக்கு இரைதேடி கொடுப்பார் இடம்தோறும்
வெம்பி திரிகை விடுப்பது இனி எக்காலம்
ஆடுகின்ற சூத்திரம் தான் அறுமளவுமேதிரிந்து
போடுகின்ற நாள் வருமுன் போற்றுவதும் எக்காலம்
நவசூ திர வீட்டை நான்என்று அலையாமல்
சிவசூ திரத்தை தெரிந்தறிவது எக்காலம்
பரந்து மலசலங்கள் பாயும் புழுக்கூட்டை விட்டு
கரந்துன் அடிஇணைக்கீழ கலந்து நிற்பது எக்காலம்
இம்மைதனில் பாதகனாய் இருவினைக்கீடாய் எடுத்த
பொம்மைதனைப்போட்டு உன்னை போற்றி நிற்பது எக்காலம்
உப்பிட்ட பாண்டம் உடைந்து கருக்கொள்ளு முன்னே
அப்பிட்ட வேணியனுக்கு ஆட்படுவது எக்காலம்
சேவைபுரிந்து சிவரூப காட்சிகண்டு
பாவைதனை கழித்து பயன் அடைவது எக்காலம்
காண்டத்தை வாங்கி கருமேகம் மீண்டது போல்
பாண்டத்தை நீக்கி பரம் அடைவது எக்காலம்
சோற்று துருத்திதனை சுமந்து அலைந்து வாடாமல்
ஊத்தை சடம்போட்டு உனை அடைவது எக்காலம்
தொடக்கை சதம் எனவே சுமந்து அலைந்து வாடாமல்
உடக்கை கழற்றி உனைஅறிவது எக்காலம்
ஆசைவலை பாசத்து அகப்பட்டு மாயாமல்
ஓசைமணி தீபத்தில் ஒன்றி நிற்பது எக்காலம்
கூறரிய நால் வேதம் கூப்பிட்டும் காணாத
பார ரகசியத்தை பார்த்திருப்பது எக்காலம்
புல்லாய் விலங்காய் புழுவாய் நரவடிவாய்
எல்லா பிறப்பின் இருள் அகல்வது எக்காலம்
தக்கும்வகைக்கு ஓர்பொருளும் சாராம லேநினைவில்
பக்குவம்வந்துன் அருளை பார்த்திருப்பது எக்காலம்
பருவ தலைவரொடும் புல்கியின்பம் கொள்வதற்கு
தெரிவை பருவம் வந்து சிக்குவதும் எக்காலம்
தெரிவையுறும் பக்குவத்தின் சீராட்டெல்லாம் அறிந்து
குருவை அறிந்தேநினைத்து கும்பிடுவது எக்காலம்
வம்படிக்கும் மாதருடன் வாழ்ந்தாலும் மன்னுபுளி
யம்பழமும் ஓடும்போல் ஆவதினி எக்காலம்
பற்றற்று நீரில் படர்தா மரை இலைபோல்
சுற்றத்தை நீக்கிமனம் தூர நிற்பது எக்காலம்
சல்லாப லீலையிலே தன்மனைவி செய்தசுகம்
சொல்லார கண்டு எனக்கு சொல்வதினி எக்காலம்
மருவும் அயல்புருடன் வரும் நேரம் காணாமல்
உருகுமனம் போல் என் உளம் உருகுவதும் எக்காலம்
தன்கணவன் தன் சுகத்தில் தன்மனம்வே றானது போல்
என் கருத்தில் உன் பதத்தை ஏற்றுவதும் எக்காலம்
கூடி பிரிந்துவிட்ட கொம்பனையை காணாமல்
தேடி தவிப்பவன் போல் சிந்தை வைப்பது எக்காலம்
எவ்வனத்தின் மோகம் எப்படி யுண்டப்படிபோல்
கவ்வன தியானம் கருத்து வைப்பது எக்காலம்
கண்ணால் அருவி கசிந்து முத்து போல் உதிர
சொன்ன பரம்பொருளை எண்ணுவது எக்காலம்
ஆகம் மிகவுருக அன்புருக என்புருக
போகஅனுபூதி பொருந்துவதும் எக்காலம்
நீரில் குமிழிபோல் நிலையற்ற வாழ்வை விட்டுநின்
பேரின்ப கருணை வெள்ளம் பெருக்கெடுப்பது எக்காலம்
அன்பை உருக்கி அறிவை அதன் மேல்புகட்டி
துன்ப வலைப்பாச தொடக்கறுப்பது எக்காலம்
கருவின் வழி அறிந்து கருத்தை செலுத்தாமல்
அருவி விழிசொரிய அன்பு வைப்பது எக்காலம்
தெள்ள தெளிய தெளிந்த சிவானந்ததேன்
பொழி பொழிய மனம் பூண்டிருப்பது எக்காலம்
ஆதார மூலத்தடியில் கணபதியை
பாதார விந்தம் பணிந்து நிற்பது எக்காலம்
மண்வளைந்த நற்கீற்றில் வளைந்திருந்த வேதாவை
கண்வளர்த்து பார்த்துள்ளே கண்டிருப்பது எக்காலம்
அப்பு பிறை நடுவே அமர்ந்திருந்த விட்டுணுவை
உப்பு குடுக்கையுள்ளே உணர்ந்தறிவது எக்காலம்
மூன்று வளையம் இட்டு முளைத்தெழுந்த கோணத்தில்
தோன்றும் உருத்திரனை தொழுது நிற்பது எக்காலம்
வாயு அறுகோணத்தில் வாழும் மகேச்சுரனை
தோயும் வகை கேட்க தொடங்குவதும் எக்காலம்
வட்டவழிக்குள்ளே மருவும் சதாசிவத்தை
கிட்ட வழிதேட கிருபை செய்வது எக்காலம்
உச்சி கிடை நடுவே ஓங்கும் குருபதத்தை
நிச்சயித்து கொண்டிருந்து நேர்வதினி எக்காலம்
பாராகி பார்மீதில் பஞ்சவன்னம் தானாகி
வேராகி நீமுளைத்த வித்தறிவது எக்காலம்
கட்டறுக்க வொண்ணா கருவிகர ணாதி எல்லாம்
சுட்டறுத்து நிட்டையிலே தூங்குவதும் எக்காலம்
கள்ள கருத்தை எல்லாம் கட்டோடு வேரறுத்து இங்கு
உள்ள கருத்தை உணர்ந்திருப்பது எக்காலம்
அட்டகாசம் செலுத்தும் அவத்தை சடலத்துடனே
பட்டபாடு அத்தனையும் பகுத்தறிவது எக்காலம்
அறிவு கருவியுடன் அவத்தைபடும் பாட்டை எல்லாம்
பிறிவுபட இருத்தி பெலப்படுவது எக்காலம்
பூதம் பொறிகரணம் போந்தவிந்து நாதமா
பேதம் பலவிதமும் பிரித்தறிவது எக்காலம்
தோன்றாசை மூன்றும் பிரிந்தறிவது எக்காலம்
ஊன்றாசை வேரை அடிஊடறுப்பது எக்காலம்
புன்சனனம் போற்று முன்னே புரிவட்டம் போகில் இனி
என் சனனம் ஈடேறும் என்றறிவது எக்காலம்
நட்ட நடுவில்நின்று நல்திரோதாயி அருள்
கிட்டவழி காட்டி கிருபை செய்வது எக்காலம்
நானே நான் என்றிருந்தேன் நடுவினின்ற கட்டழகி
நானே வெளிப்படுத்தி தருவன் என்பதும் எக்காலம்
அடர்ந்த மனக்காட்டை அஞ்செழுத்தாம் வாளாலே
தொடர்ந்து வெட்டி சுடுவது இனிஎக்காலம்
ஐந்து பொறிவழிபோய் அலையும் இந்த பாழ்மனத்தை
வெந்து விழ பார்த்து விழிப்பது இனி எக்காலம்
இனமாண்டு சேர்திருந்தோர் எல்லோரும் தாமாண்டு
சினமாண்டு போக அருள் தேர்ந்திருப்பது எக்காலம்
அமையாமனம் அமையும் ஆனந்த வீடுகண்டு அங்கு
இமையாமல் நோக்கி இருப்பது எக்காலம்
கூண்டுவிழும் சீவன் மெள்ள கொட்டாவி கொண்டாற்போல்
மாண்டுவிழும் முன்னே நான் மாண்டிருப்பது எக்காலம்
ஊன் நிறைந்த காயம் உயிர் இழந்து போகுமுன்னம்
நான் இறந்து போக இனி நாள் வருவது எக்காலம்
கெட்டுவிடும் மாந்தர் கெர்விதங்கள் பேசி வந்து
சுட்டுவிடுமுன் என்னை சுட்டிருப்பது எக்காலம்
தோல் ஏணி வைத்தேறி தூரநட தெய்க்காமல்
நூல் ஏணி வைத்தேறி நோக்குவதும் எக்காலம்
வாயோடு கண்மூடி மயக்கமுற்று நில்லாமல்
தாயோடு கண்மூடி தழுவி நிற்பது எக்காலம்
காசினியெலாம் நடந்து கால் ஓய்ந்து போகாமல்
வாசிதனில் ஏறிவருவது இனி எக்காலம்
ஒலிபடரும் குண்டலியை உன்னி உணர்வால் எழுப்பி
சுழுமுனையின் தாள்திறந்து தூண்டுவதும் எக்காலம்
இடைபிங் கலைநடுவே இயங்கும் சுழுமுனையில்
தடை அறவே நின்று சலித்தருப்பது எக்காலம்
மூலநெருப்பைவிட்டு மூட்டு நிலா மண்டபத்தில்
பாலை இறக்கி உண்டு பசி ஒழிவது எக்காலம்
ஆக வெளிக்குள்ளே அடங்கா புரவி செல்ல
ஏக வெளியில் இருப்பது இனி எக்காலம்
பஞ்சரித்து பேசும்பல்கலைக்கு எட்டா பொருளில்
சஞ்சரித்து வாழ்ந்து தவம் பெறுவது எக்காலம்
மலமும் சலமும்அற்று மாயை அற்று மானம்
நலமும் குலமும் அற்று நான் இருப்பது எக்காலம்
ஓடாமல் ஓடி உலகை வலம் வந்து சுற்றி
தேடாமல் என்னிடமா தெரிசிப்பது எக்காலம்
அஞ்ஞானம் விட்டே அருள் ஞானத்து எல்லைதொட்டு
மெய்ஞ்ஞான வீடுபெற்று வெளிப்படுவது எக்காலம்
வெல்லும்மட்டும் பார்த்து வெகுளியெலாம் விட்டு அகன்று
சொல்லுமட்டும் சிந்தை செலுத்துவது எக்காலம்
மேலாம் பதம்தேடி மெய்ப்பொருளை உள்இருத்தி
நாலாம் பதம் தேடி நான் பெறுவது எக்காலம்
எண்ணாத தூரம் எல்லாம் எண்ணி எண்ணி பாராமல்
கண்ணாடிக்குள் ஒளிபோல கண்டறிவது எக்காலம்
என்னை அறிந்து கொண்டே எங்கோமானோடு இருக்கும்
தன்மை அறிந்து சமைந்திருப்பது எக்காலம்
ஆறு ஆதாரம் கடந்த ஆனந்த பேரொளியை
பேறா கண்டு நான் பெற்றிருப்பது எக்காலம்
ஆணவ மாயத்தால் அழிந்து உடலம் போகாமுன்
காணுதலால் இன்பமற்று கண்டறிவது எக்காலம்
மும்மலமும் சேர்ந்து முளைத்தெழுந்த காயம் இதை
நில்மலமா கண்டு வினை நீங்கி இருப்பது எக்காலம்
முன்னை வினை கெடவே மூன்று வகை காட்சியினால்
உன்னை வெளிப்படுத்தி உறுவது இனி எக்காலம்
கண்ணின் ஒளி பாய்ந்ததுவும் கருத்தறிந்து கொண்டதுவும்
விண்ணின் ஒளி கண்டதுவும் வெளிப்படுவதும் எக்காலம்
கனவு கண்டால் போல் எனக்கு காட்டி மறைத்தே இருக்க
நினைவை பரவெளியில் நிறுத்துவது எக்காலம்
ஆர் என்று கேட்டதுவும் அறிவு வந்து கண்டதுவும்
பார் என்று சொன்னதுவும் பகுத்தறிவது எக்காலம்
நினைக்கும் நினைவுதோறும் நிறைந்த பரிபூரணத்தை
முனைக்குமேல் கண்டு கண்ணில் முத்துதிர்ப்பது எக்காலம்
முப்பாழும் பாழாய் முதற்பாழும் சூனியமாய்
அப்பாழும் பாழாய் அன்பு செய்வது எக்காலம்
சீ யென்று எழுந்து தெளிந்து நின்ற வான் பொருளை
நீ யென்று கண்டு நிலை பெறுவது எக்காலம்
வவ்வெழுத்தும் மவ்வெழுத்தும் வாளாகும் சிவ்வெழுத்தும்
அவ்வெழுத்தின் உள்ளே அடங்கி நிற்பது எக்காலம்
எழுத்தெல்லாம் மாண்டிறந்தே ஏகமாய் நின்றதிலே
அழுத்தமா சிந்தையை வைத்தன்பு கொள்வது எக்காலம்
அருளாய் உருவாகி ஆதி அந்தம் ஆகின்ற
குருவாக வந்து எனை ஆட்கொண்டு அருள்வது எக்காலம்
நான் என்று அறிந்தவனை அறியா காலம் எல்லாம்
தான் என்று நீ இருந்ததனை அறிவது எக்காலம்
என் மயமா கண்டதெல்லாம் எண்ணி எண்ணி பார்த்த பின்பு
தன் மயமா கொண்டதிலே சார்ந்து நிற்பது எக்காலம்
ஒளியில் ஒளியாம் உருப்பிறந்த வாறதுபோல்
வெளியில் வெளியான விதம் அறிவது எக்காலம்
ஒளிஇட்ட மெய்ப்பொருளை உள் வழியிலே அடைத்து
வெளியிட்டு சாத்திவைத்து வீடு உறுவது எக்காலம்
காந்தம் வலித்து இரும்பை கரத்திழுத்து கொண்டதுபோல்
பாய்ந்து பிடித்திழுத்துன் பாதத்தில் வைப்பது எக்காலம்
பித்தாயம் கொண்டு பிரணவத்தை ஊடறுத்து
செந்தாரை போலே திரிவது இனி எக்காலம்
ஒழிந்த கருத்தினை வைத்து உள் எலும்பு வெள் எலும்பா
கழிந்த பிணம் போல் இருந்து காண்பது இனி எக்காலம்
ஆதிகபிலர் சொன்ன ஆகமத்தின் சொற்படியே
சாதிவகை இல்லாமல் சஞ்சரிப்பது எக்காலம்
சூதும் களவும் தொடர்வினையும் சுட்டி காற்று
ஊதும் துருத்தியை போட்டு உனை அடைவது எக்காலம்
ஆசைவலை பாசத்து அகப்பட்டு மாயாமல்
ஓசைமணி தீபத்தில் ஒன்றி நிற்பது எக்காலம்
கல்லாய் மரமா கயலா பறவைகளா
புல்லாய் பிறந்த சென்மம் போதும் என்பது எக்காலம்
தக்கும் வகைக்கோர் பொருளும் சாராமலே நினைவில்
பக்குவமாய் நின் அருளை பார்த்திருப்பது எக்காலம்
தூரோடு அசைந்து சுழன்று வரும் தத்துவத்தை
வேரோடு இசைந்து விளங்குவதும் எக்காலம்
பாகம் நடு மாறி பயந்தெழுந்த சித்திரத்தை
ஏகநடு மூலத்து இருத்துவதும் எக்காலம்
ஓரின்பம் காட்டும் உயர்ஞான வீதி சென்று
பேரின்ப வீடுகண்டு பெற்றிருப்பது எக்காலம்
காரணமாய் வந்து என் கருத்தில் உரைத்ததெல்லாம்
பூரணமா கண்டு புகழ்ந்திருப்பது எக்காலம்
ஆயும் கலைகள் எல்லாம் ஆராய்ந்து பார்த்ததன்பின்
நீ என்றும் இல்லா நிசம் காண்பது எக்காலம்
குறியா கொண்டு குலம் அளித்த நாயகனை
பிரியாமல் சேர்ந்து பிறப்பறுப்பது எக்காலம்
மத்தடுத்து நின்ற மருள் ஆடு வார் போல
பித்தடுத்து நின் அருளை பெற்றிருப்பது எக்காலம்
சாவாமல் செத்திருந்து சற்குருவின் பொன் அடிக்கீழ்
வேகாமல் வெந்திருக்க வேண்டுவதும் எக்காலம்
என்னை அறியாமல் இருந்து ஆட்டும் சூத்திரநின்
தன்னை அறிந்து தவம் பெறுவது எக்காலம்
உள்ளம் அறியாது ஒளித்திருந்த நாயகனை
கள்ள மனம் தெளிந்துகாண்பது இனி எக்காலம்
வாசித்தும் காணாமல் வாய்விட்டும் பேசாமல்
பூசித்தும் தோன்றா பொருள் காண்பது எக்காலம்
பன்னிரண்டு கால்புரவி பாய்ந்து சில்லம் தட்டாமல்
பின் இரண்டு சங்கிலிக்குள் பிணிப்பது இனி எக்காலம்
நாட்டுக்கால் இரண்டும்விட்டு நடுவுக்கால் ஊடேபோய்
ஆட்டுக்கால் இரண்டினுள்ளே அமர்ந்திருப்பது எக்காலம்
பாற்சுவை பூட்டி பதியில் வைத்து சீராட்டி
காற்பசுவை ஓட்டி அதில் கட்டி வப்பது எக்காலம்
பல இடத்தே மனதை பாயவிட்டு பாராமல்
நிலவரையின் ஊடேபோய் நேர்படுவது எக்காலம்
கா கடல்கடந்து கரைஏறி போவதற்கே
கனல்வளர்த்தி உள்ளிருப்பது எக்காலம்
உத சுடர் மூன்றும் உள்வீட்டி லே கொளுத்தி
திருநடனம் இனிக்காண்பது எக்காலம்
வேதாந்த வேதம் எல்லாம் வீட்டேறியே கடந்து
நாதாந்த மூல நடு இருப்பது எக்காலம்
பட்டம் அற்று காதற்றில் பறந்தாடும் சூத்திரம் போல்
வெட்டு வெளியாக விசும்பறிதல் எக்காலம்
அட்டாங்கயோகம் அதற்கப்பாலு கப்பாலாய்
கிட்டா பொருள் அதனை கிட்டுவதும் எக்காலம்
ஒட்டாமல் ஒட்டிநிற்கும் உடலும் உயிரும்பிரிந்தே
எட்டா பழம்பதிக்கு இங்கு ஏணிவைப்பது எக்காலம்
பாசத்தை நீக்கி பசுவை பதியில்விட்டு
நேசத்தின் உள்ளே நினைந்திருப்பது எக்காலம்
ஆசார நேச அனுட்டானமும் மறந்து
பேசாமெய்ஞ் ஞானநிலை பெற்றிருப்பது எக்காலம்
பல்லாயிரம் கோடி பகிரண்டம் உம்படைப்பே
அல்லாது வேறில்லை என்று அறிவது இனி எக்காலம்
ஆதிமுதல் ஆகிநின்ற அரிஎன்ற அட்சரத்தை
ஓதி அறிந்துள்ளே உணர்வது இனி எக்காலம்
சாத்திரத்தை சுட்டு சதுர்மறையை பொய்யாக்கி
சூத்திரத்தை கண்டு துயர் அறுப்பது எக்காலம்
அல்லும் பகலும் என்றன் அறிவை அறிவால் அறிந்து
சொல்லும் உரைமறந்து தூங்குவதும் எக்காலம்
இயங்கும் சராசரத்தில் எள்ளும் எண்ணெ யும்போல
முயங்கும் அந்த வேத முடிவு அறிவது எக்காலம்
ஊனாகி ஊனில் உயிராகி எவ்வுலகும்
தானாகி நின்றதனை அறிவது எக்காலம்
என்னை விட்டு நீங்காமல் என்னிடத்து நீ இருக்க
உன்னை விட்டு நீங்காது ஒருப்படுவது எக்காலம்
இன்னதென்று சொல்லஒண்ணா எல்லையற்ற வான் பொருளை
சொன்னதென்று நான் அறிந்து சொல்வது இனி எக்காலம்
மனதைஒரு வில்லாக்கி வான்பொறியை நாணாக்கி
என தறிவைஅம்பாக்கி எய்வது இனி எக்காலம்
என்னை இறக்கஎய்தே என்பழியை ஈடழித்த
உன்னை வெளியில் வைத்தேஒளித்து நிற்பது எக்காலம்
கடத்துகின்ற தோணிதனை கழைகள் குத்தி விட்டாற்போல்
நடத்துகின்ற சித்திரத்தை நான்அறிவது எக்காலம்
நின்றநிலை பேராமல் நினைவில்ஒன்றும் சாராமல்
சென்றநிலை முத்தி என்று சேர்ந்தறிவது எக்காலம்
பொன்னும் வெள்ளியும் பூண்ட பொற்பதத்தைஉள் அமைத்து
மின்னும் ஒளிவெளியே விட்டு அடைப்பது எக்காலம்
கூட்டில் அடைப்பட்ட புழு குளவி உருக்கொண்டதுபோல்
வீட்டில்அடை பட்டுஅருளை வேண்டுவதும் எக்காலம்
கடலில்ஒளித்திருந்த கனல்எழுந்து வந்தாற்போல்
உடலில்ஒளித்த சிவம்ஒளி செய்வது எக்காலம்
அருண பிரகாசம் அண்டஎங்கும் போர்த்தது போல்
கருணை திருவடியில் கலந்து நிற்பது எக்காலம்
பொன்னில் பலவிதமாம் பூடணம்உண்டானது போல்
உன்னில் பிறந்து உன்னில்ஒடுங்குவதும் எக்காலம்
நாயிற் கடைப்பிறப்பால் நான்பிறந்த துன்பம்அற
வேயில் கனல் ஒளிபோல் விளங்குவதும் எக்காலம்
சூரியகாந்தி ஒளி சூழ்ந்து பஞ்சை சுட்டதுபோல்
ஆரியந்தோற்றத்து அருள் பெறுவது எக்காலம்
இரும்பினில் கனல்மூட்டி இவ்வுருபோய் அவ்வுருவா
கரும்பில் சுவைரசத்தை கண்டறிவது எக்காலம்
கருக்கொண்ட முட்டைதனை கடல் ஆமைதான் நினைக்க
உருக்கொண்ட வாறதுபோல்உனை அடைவது எக்காலம்
வீடுவிட்டு பாய்ந்து வெளியில் வருவார்போல்
கூடுவிட்டு பாயும் குறிப்பறிவது எக்காலம்
கடைந்த வெண்ணய் மோரில் கலவாதவாறதுபோல்
உடைந்து தமியேன் உனைக்காண்பது எக்காலம்
இருளை ஒளி விழுங்கி ஏகஉரு கொண்டாற்போல்
அருளை விழுங்கும்இருள் அகன்று நிற்பது எக்காலம்
மின் எழுந்து மின்ஒடுங்கி விண்ணில் உறைந்தாற்போல்
என்னுள் நின்றதுஎன்னுள்ளே யான் அறிவது எக்காலம்
கண்ட புனல்குடத்தில் கதிர் ஒளிகள் பாய்ந்தாற்போல்
கொண்ட சொரூபமதை கூர்ந்தறிவது எக்காலம்
பூணுகின்ற பொன் அணிந்தால் பொன்சுமக்குமோ உடலை
காணுகின்றஎன் கருத்தில் கண்டறிவது எக்காலம்
செம்பில் களிம்புபோல் சிவத்தைவிழுங்கி மிக
வெம்பி நின்ற மும்மலத்தை வேறுசெய்வது எக்காலம்
ஆவியும் காயமும்போல் ஆத்துமத்தில் நின்றதனை
பாவிஅறிந்து மனம் பற்றி நிற்பது எக்காலம்
ஊமை கனாக்கண்டு உரைக்கஅறியா இன்பம்அதை
நாம்அறிந்து கொள்வதற்கு நாள் வருவதுஎக்காலம்
சாகா சிவனடியை தப்பாதார் எப்போதும்
போகா உடல்அகன்று போவதென்பது எக்காலம்
நிட்டைதனை விட்டு நினைவறிவு தப்பவிட்டு
வெட்ட வெளியில்விரவி நிற்பது எக்காலம்
வெட்டவெளி தன்னில்விளைந்த வெறும் பாழ்
திட்டமுடன் கண்டு தெளிவது இனி எக்காலம்
எங்கும் பரவடிவாய் என் வடிவு நின் வடிவா
கங்குல்பகல் இன்றிஉனை கண்டிருப்பது எக்காலம்
உண்டதுவும் மாதருடன் கூடிச்சேர்ந்து இன்பம்
கண்டதுவும் நீயெனவேகண்டு கொள்வது எக்காலம்
ஈம்என்று கேட்டதுவும் என்னுள்ளே நின்றதுவும்
ஓம்என்று சொன்னதுவும் உற்றறிவது எக்காலம்
சத்தம் பிறந்த இடம் தன் மயமாய் நின்ற
சித்தம் பிறந்தஇடம் தேர்ந்தறிவது எக்காலம்
போக்கு வரவும் புறம்புள்ளும் ஆகிநின்றும்
தாக்கும் ஒரு பொருளை சந்திப்பது எக்காலம்
நான் எனவும் நீ நாம் இரண்டு மற்றொன்றும்
நீ எனவே சிந்தைதனில் நேர்படுவது எக்காலம்
அறிவை அறிவால் அறிந்தே அறிவும் அறிவுதனில்
பிறிவுபட நில்லாமல் பிடிப்பதுஇனி எக்காலம்
நீடும் புவனம் எல்லாம் நிறைந்துசி தூரம் அதாய்
ஆடும் திருக்கூத்தை அறிவது இனி எக்காலம்
தித்தி என்ற கூத்தும் திருச்சிலம்பின் ஓசைகளும்
பத்தியுடனே கேட்டு பணிவது இனி எக்காலம்
நயனத்திடை வெளிபோல் நண்ணும் பரவெளியில்
சயனி திருந்து தலைப்படுவது எக்காலம்
அருவி மலைநடுவே ஆயிரக்கால் மண்டபத்தில்
திருவிளையாடல்கண்டு தெரிசிப்பது எக்காலம்
மீனை மிக உண்டு நக்கி விக்கி நின்ற கொக்கதுபோல்
தேனைமிக உண்டு தெவிட்டி நிற்பது எக்காலம்
பொல்லாத காயம் அதை போட்டு விடுக்குமுன்னே
கல் ஆவின் பால்கறப்ப கற்பது இனி எக்காலம்
வெட்ட வெளிக்குள்ளே விளங்கும் சதாசிவத்தை
கிட்டவர தேடி கிருபை செய்வது எக்காலம்
பேரறிவிலே மனதை பேராமலே இருத்தி
ஓரறிவில் என்னாளும் ஊன்றி நிற்பது எக்காலம்
அத்துவிதம் போலும் என்றன் ஆத்துமத்தின் உள்ளிருந்து
முத்தி தர நின்றமுறை அறிவது எக்காலம்
நான்நின்ற பாசம்அதில் நான்இருந்து மாளாமல்
நீநின்ற கோலம்அதில் நிரவிநிற்பது எக்காலம்
எள்ளும்கரும்பும் எழில்மலரும் காயமும்போல்
உள்ளும் புறம்புநின்று உற்றறிவது எக்காலம்
அன்னம் புனலை வகுத்து அமிர்தத்தை உண்பதுபோல்
என்னை வகுத்து உன்னை இனிக்காண்பது எக்காலம்
அந்தரத்தில் நீர்பூத்து அலர்ந்தெழுந்த தாமரைபோல்
சிந்தை வைத்து கொண்டு தெரிசிப்பது எக்காலம்
பிறப்பும் இறப்பும்அற்று பேச்சும்அற்று மூச்சும்அற்று
மறப்பும் நினைப்பும்அற்று மாண்டிருப்பது எக்காலம்
மன்னும் பரவெளியை மனவெளியில் அடைத்துஅறிவை
என்னுள் ஒருநினைவை எழுப்பிநிற்பது எக்காலம்
ஆசை கொண்ட மாதர் அடைகனவு நீக்கி உன்மேல்
ஓசை கொண்டு நானும் ஒடுங்குவதும் எக்காலம்
தன்உயிரை கொண்டு தான் திரிந்த வாறதுபோல்
உன்உயிரை கொண்டு இங்கு ஒடுங்குவதும் எக்காலம்
சேற்றில் கிளை நாட்டும் திடமாம் உடலைஇனி
காற்றில்உழல் சூத்திரமாய் காண்பது இனி எக்காலம்
என் வசமும்கெட்டு இங்கிருந்த வசமும் அழிந்து
தன்வசமும் கெட்டு அருளை சார்ந்து இருப்பது எக்காலம்
தன்னை மறந்து தலத்து நிலை
கன்மம் மறந்து கதி பெறுவது எக்காலம்
என்னை என்னிலே மறந்தே இருந்த பதியும் மறந்து
தன்னையும் தானே மறந்து தனித்து இருப்பது எக்காலம்
தன்னையும் தானே மறந்து தலைவாசல் தாழ்போட்டே
உன்னை நினைந்துள்ளே உறங்குவதும் எக்காலம்
இணை பிரிந்தபோதல் இன்பமுறும் அன்றிலைப்போல்
துணை பிரிந்தபோது அருள் தூல்தொடர்ந்து கொள்வது எக்காலம்
ஆட்டம்ஒன்றும் இல்லாமல் அசைவு சற்றும் காணாமல்
தேட்டம் அற்ற வான்பொருளைத்தேடுவதும் எக்காலம்
முன்னை வினையால் அறிவுமுற்றாமல் பின் மறைந்தால்
அன்னை தனைத்தேடி அமுதுண்பது எக்காலம்
கள்ளுண்டவர்போல் களிதரும் ஆனந்தம்அதால்
தள்ளுண்டு நின்றாடி தடைப்படுவது எக்காலம்
நான் அவனா காண்பதெல்லாம்ஞானவிழியா ல்அறிந்து
தான் அவனாய் நின்று சரண் அடைவது எக்காலம்
தான் அந்தம் இல்லாத தற்பரத்தின் ஊடுருவில்
ஆனந்தம் கண்டே அமர்ந்திருப்பது எக்காலம்
உற்ற வெளிதனிலே உற்று பார்த்து அந்தரத்தே
மற்றமற மாய்கை மாள்வது இனி எக்காலம்
ஏடலர்ந்து பங்கயமும் இருகருணை நேத்திரமும்
தோடணிந்த குண்டலமும் தோன்றுவதும் எக்காலம்
ஐயாறும் ஆறும் அகன்று வெறுவெளியில்
மை இருளில் நின்ற மனம் மாள்வது இனி எக்காலம்
காட்டும்அருள் ஞானக்கடலில் அன்பு கப்பல்விட்டு
மூட்டும் கருணை கடலில் மூழ்குவதும் எக்காலம்
நான் யாரோ நீ நன்றாம் பரமான
தான் யாரோ என்றுஉணர்ந்து தவம்முடிப்பது எக்காலம்
எவர் எவர்கள் எப்படி கண்டுஎந்தப்படி நினைத்தார்
அவர் அவர்க்குஅப்படி நின்றாய் என்பது எக்காலம்
உற்றுற்று பார்க்க ஒளிதரும் ஆனந்தம்அதை
நெற்றிக்கு நேர்கண்டு நிலைப்பது இனி எக்காலம்
விளங்குகின்ற தாரகையை வெய்யோன் மறைத்தாற்போல்
களங்கமற உன்காட்சி கண்டறிவது எக்காலம்
என்னையே நான் அறியேன் இந்த வண்ணம் சொன்ன தெல்லாம்
முன்னையோர் கைக்கொள்ள முன்பணிவது எக்காலம்
மாயத்தை நீக்கி வருவினையை பாழாக்கி
காயத்தை வேறாக்கி காண்பதுஉனை எக்காலம்
ஐஞ்சு கரத்தானை அடி இணையை போற்றிசெய்து
நெஞ்சில் பொருத்தி நிலைபெறுவது எக்காலம்

சித்தர் பாடல்கள் தொகுப்பு

அழுகணி சித்தர் பாடல்கள்
இராமதேவர் பூஜாவிதி
கடுவெளி சித்தர் ஆனந்த களிப்பு
குதம்பை சித்தர் பாடல்கள்
சட்டைமுனி ஞானம்
திருமூல நாயனார் ஞானம்
திருவள்ளுவர் ஞானம்
©அழுகணி சித்தர் பாடல்கள்
கலித்தாழிசை
மூல பதியடியோ மூவிரண்டு வீடதிலே
கோல பதியடியோ குதர்க்க தெருநடுவே
பால பதிதனிலே தணலாய் வளர்த்தகம்பம்
மேல பதிதனிலே என் கண்ணம்மா
விளையாட்டை பாரேனோ
எண்சாண் உடம்படியோ ஏழிரண்டு வாயிலடி
பஞ்சா காரர்ஐவர் பட்டணமு தானிரண்டு
அஞ்சாமற் பேசுகின்றாய் ஆக்கினைக்கு தான்பயந்து
நெஞ்சார நில்லாமல் என் கண்ணம்மா
நிலைகடந்து வாடுறண்டி
முத்து முகப்படியோ முச்சந்தி வீதியிலே
பத்தாம் இதழ்பரப்பி பஞ்சணையின் மேலிருத்தி
அத்தை யடக்கிநிலை ஆருமில்லா வேளையிலே
குத்து விளக்கேற்றி என் கண்ணம்மா
கோலமிட்டு பாரேனோ
சம்பா அரிசியடி சாதம் சமைத்திருக்க
உண்பாய் நீயென்று சொல்லி உழக்குழக்கு நெய்வார்த்து
முத்து போலன்னமிட்டு முப்பழமும் சர்க்கரையும்
தித்திக்கு தேனாமிர்தம் என் கண்ணம்மா
தின்றுகளை பாரேனோ
பைம்பொற் சிலம்பணிந்து பாடகக்கால் மேல்தூக்கி
செம்பொற் கலையுடுத்தி சேல்விழிக்கு மையெழுதி
அம்பொற் பணிபூண் டறுகோண வீதியிலே
கம்பத்தின் மேலிருந்தே என் கண்ணம்மா
கண்குளிர பாரேனோ
எட்டா புரவியடி யீராறு காலடியோ
விட்டாலும் பாரமடி வீதியிலே தான்மறித்து
கட்ட கயிறெடுத்து கால்நாலும் சேர்த்திறுக்கி
அட்டாள தேசமெல்லாம் என் கண்ணம்மா
ஆண்டிருந்தா லாகாதோ
கொல்லன் உலைபோல கொதிக்குதடி யென்வயிறு
நில்லென்று சொன்னால் நிலைநிறுத்த கூடுதில்லை
நில்லென்று சொல்லியல்லோ நிலைநிறுத்த வல்லார்க்கு
கொல்லென்று வந்தநமன் என் கண்ணம்மா
குடியோடி போகானோ
ஊற்றை சடலமடி உப்பிருந்த பாண்டமடி
மாற்றி பிறக்க மருந்தெனக்கு கிட்டுதில்லை
மாற்றி பிறக்க மருந்தெனக்கு கிட்டுமென்றால்
ஊற்றை சடலம் விட்டேஎன் கண்ணம்மா
உன்பாதஞ் சேரேனோ
வாழை பழந்தின்றால் வாய்நோகு மென்றுசொல்லி
தாழை பழத்தின்று சாவெனக்கு வந்ததடி
தாழை பழத்தைவிட்டு சாகாமற் சாகவல்லோ
வாழை பழந்தின்றால் என் கண்ணம்மா
வாழ்வெனக்கு வாராதோ
பையூரி லேயிருந்து பாழூரிலே பிறந்து
மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறியேன்
மெய்யூரிற் போவதற்கு வேதாந்த வீடறிந்தால்
பையூரும் மெய்யூரும் என் கண்ணம்மா
பாழாய் முடியாவோ
மாமன் மகளடியோ மச்சினியோ நானறியேன்
காமன் கணையெனக்கு கனலாக வேகுதடி
மாமன் மகளாகி மச்சினியும் நீயானால்
காமன் கணைகளெல்லாம் என் கண்ணம்மா
கண்விழிக்க வேகாவோ
அந்தரத்தை வில்லாக்கி ஐந்தெழுத்தை யம்பாக்கி
மந்திரத்தே ரேறியல்லோ மான்வேட்டை யாடுதற்கு
சந்திரரும் சூரியரும் தாம்போந்த காவனத்தே
வந்துவிளை யாடியல்லோ என் கண்ணம்மா
மனமகிழ்ந்து பார்ப்பதென்றோ
காட்டானை மேலேறி கடைத்தெருவே போகையிலே
நாட்டார் நமைமறித்து நகைபுரி பார்ப்பதென்றோ
நாட்டார் நமைமறித்து நகைபுரி பார்த்தாலும்
காட்டானை மேலேறி என் கண்ணம்மா
கண்குளிர காண்பேனோ
உச்சிக்கு கீழடியோ ஊசிமுனை வாசலுக்குள்
மச்சுக்கு மேலேறி வானுதிரம் தானேடுத்து
கச்சை வடம்புரி காயலூர பாதையிலே
வச்சு மறந்தல்லோ என் கண்ணம்மா
வகைமோச மானேண்டி
மூக்கால் அரும்பெடுத்து மூவிரண்டா தான்தூக்கி
நாக்கால் வளைபரப்பி நாற்சதுர வீடுகட்டி
நாக்கால் வலைபரப்பி நாற்சதுர வீட்டினுள்ளே
மூக்காலை காணாமல் என் கண்ணம்மா
முழுதும் தவிக்கிறண்டி
காமமலர் தூவ கருத்தெனக்கு வந்ததடி
பாமவலி தொலைக்க பாசவலி கிட்டுதில்லை
பாமவலி தொலைக்க பாசவலி நிற்குமென்றால்
காமமலர் மூன்றும் என் கண்ணம்மா
கண்ணெதிரே நில்லாவோ
தங்காயம் தோன்றாமல் சாண்கல கொல்லைகட்டி
வெங்காய நாற்றுவிட்டு வெகுநாளா காத்திருந்தேன்
வெங்கா தின்னாமல் மேற்றொல்லை தின்றலவோ
தங்கா தோணாமல் என் கண்ணம்மா
சாகிறண்டி சாகாமல்
பற்றற்ற நீரதிலே பாசி படர்ந்ததுபோல்
உற்றுற்று பார்த்தாலும் உன்மயக்கம் தீரவில்லை
உற்றுற்று பார்த்தாலும் உன்மயக்க தீர்ந்தக்கால்
பற்றற்ற நீராகும் என் கண்ணம்மா
பாசியது வேறாமோ
கற்றாரும் மற்றாரு தொண்ணூற்றோ டாறதிலே
உற்றாரும் பெற்றாரும் ஒன்றென்றே யானிருந்தேன்
உற்றாரும் பெற்றாரும் ஊரைவிட்டு போகையிலே
சுற்றாரு மில்லாமல் என் கண்ணம்மா
துணையிழந்து நின்றதென்ன
கண்ணுக்கு மூக்கடியோ காதோர மத்திமத்தில்
உண்ணாக்கு மேலேறி உன்புதுமை மெத்தவுண்டு
உண்ணாக்கு மேலேறி உன்புதுமை கண்டவர்க்கும்
கண்ணுக்கு மூக்கடியோ என் கண்ணம்மா
காரணங்கள் மெத்தவுண்டே
சா சரக்கெடுத்தே சாதிலிங்கம் தான்சேர்த்து
மா பொடிகலந்து வாலுழுவை நெய்யூற்றி
பொட்டென்று பொட்டுமிட்டாள் புருவத்திடை நடுவே
இட்ட மருந்தாலே என் கண்ணம்மா
இவ்வேட மானேண்டி
பாதாள மூலியடி பாடாணம் தான்சேர்த்து
வேதாளங் கூட்டியல்லோ வெண்டாரை நெய்யூற்றி
செந்தூர மையடியோ செகமெல்லாம் தான்மிரட்டி
தந்த மருந்தாலே என் கண்ணம்மா
தணலாக வேகுறண்டி
கள்ளர் பயமெனக்கு கால்தூக்க வொட்டாமல்
பிள்ளை யழுதுநின்றால பெற்றவட்கு பாரமடி
பிள்ளை யழுவாமல் பெற்றமனம் நோகாமல்
கள்ளர் பயமெனக்கே என் கண்ணம்மா
கடுகளவு காணாதோ
பட்டணத்தை யாளுகின்ற பஞ்சவர்கள் ராசாக்கள்
விட்டு பிரியாமல் வீரியங்கள் தாம்பேசி
விட்டு பிரிந்தவரே வேறு படுங்காலம்
பட்டணமும் தான்பறிபோய் என் கண்ணம்மா
படைமன்னர் மாண்டதென்ன
ஆகா புலையனடி அஞ்ஞான தான்பேசி
சாகா தலையறியேன் தன்னறிவு தானறியேன்
வேகாத காலறியேன் விதிமோச மானேனடி
நோகாமல் நொந்தல்லோ என் கண்ணம்மா
நொடியில்மெழு கானேனடி
தாயை சதமென்றே தந்தையரை ஒப்பென்றே
மா கலவிவந்து மதிமயக்க மானேனடி
மா கலவிவிட்டு மதிமயக்கம் தீர்ந்தக்கால்
தாயுஞ் சதமாமோ என் கண்னம்மா
தந்தையரு மொப்பாமோ
அஞ்சாத கள்ளனடி ஆருமற்ற பாவியடி
நெஞ்சார போய்சொல்லும் நேயமில்லா நிட்டூரன்
கஞ்சா வெறியனடி கைசேத மாகுமுன்னே
அஞ்சாதே யென்றுசொல்லி என் கண்ணம்மா
ஆண்டிருந்தா லாகாதோ
உன்னை மறந்தல்லோ உளுத்த மரமானேன்
தன்னை மறந்தார்க்கு தாய்தந்தை யில்லையடி
தன்னை மறக்காமற் றாயாரு முண்டானால்
உன்னை மறக்காமல் என் கண்னம்மா
ஒத்திருந்து வாழேனோ
கா பதிதனிலே கந்தமூலம் வாங்கி
மா பணிபூண்டு வாழுஞ் சரக்கெடுத்தே
துறைதனிலே ஆராய்ந்து பார்க்குமுன்னே
மா சுருளோலை என் கண்ணம்மா
மடிமேல் விழுந்ததென்ன
சித்திரத்தை குத்தியல்லோ சிலையை எழுதிவைத்து
உத்திரத்தை காட்டாமல் ஊரம்ப லமானேன்
உத்திரத்தை காட்டியல்லோ ஊரம்ப லமானால்
சித்திரமும் வேறாமோ என் கண்னம்மா
சிலையுங் குலையாதோ
புல்ல ரிடத்திற்போ பொருள்தனக்கு கையேந்தி
பல்லை மிகக்காட்டி பரக்க விழிக்கிறண்டி
பல்லை மிகக்காட்டமல் பரக்க விழிக்காமல்
புல்லரிடம் போகமல் என் கண்ணம்மா
பொருளெனக்கு தாராயோ
வெட்டுண்ட சக்கரத்தால் வேண தனமளித்து
குட்டுண்டு நின்றேண்டி கோடிமனு முன்னாலே
குட்டுண்டு நில்லாமற் கோடிமனு முன்னாக
வெட்டுண்டு பிணிநீங்கி என் கண்ணம்மா
விழித்துவெளி காட்டாயோ
ஐங்கரனை தொண்ட னிட்டேன் ஆத்தாடி
அருளடைய வேணுமென்று
தாங்காமல் வந்தொருவன் ஆத்தாடி
தற்சொரூபங் காட்டி யென்னை
கொள்ள பிறப்பறுக்க ஆத்தாடி
கொண்டான் குருவாகி
கள்கள புலனறுக்க ஆத்தாடி
காரணமாய் வந்தாண்டி
ஆதாரம் ஆறினையும் ஆத்தாடி
ஐம்பத்தோர் அக்கரமும்
சூதான கோட்டையெல்லாம் ஆத்தாடி
சுட்டான் துரிசறவே
வாகாதி ஐவரையும் ஆத்தாடி
மாண்டுவிழ கண்டேண்டி
தத்துவங்க ளெல்லாம் ஆத்தாடி
தலைகெட்டு வெந்ததடி
மஞ்சன நீராட்டி ஆத்தாடி
மலர்பறித்து தூவாமல்
நெஞ்சு வெறும்பாழாய் ஆத்தாடி
நின்றநிலை காணேண்டி
பாடி படித்து ஆத்தாடி
பன்மலர்கள் சாத்தாமல்
ஓடி திரியாமல் ஆத்தாடி
உருக்கெட்டு விட்டேண்டி
மாணிக்கத்து உள்ளளிபோல் ஆத்தாடி
மருவி யிருந்தாண்டி
பேணி தொழுமடியார் ஆத்தாடி
பேசா பெருமையன் காண்
புத்தி கலங்கியடி ஆத்தாடி
போந்தேன் பொரிவழியே
பதித்தறியாமல் ஆத்தாடி
பாழியில் கவிழ்ந்தேனே
தோற்றம் மொடுக்கம் இல்லா ஆத்தாடி
தொல் பொருளை அறியார்கள்
முடிந்ததுஇராமதேவர் பூஜாவிதி
ஆதியென்ற மணிவிளக்கை அறி வேணும்
அகண்டபரி பூரணத்தை காண வேணும்
சோதியென்ற துய்யவெளி மார்க்க மெல்லாஞ்
சுகம்பெறவெ மனோன்மணி யென்னாத்தாள் தன்னை
நீதியென்ற பரஞ்சோதி ஆயி பாதம்
நிற்குணத்தி னின்றநிலை யாருங் காணார்
வேதியென்ற வேதாந துள்ளே நின்று
விளங்கவும் பூசையிது வீண் போகாதே
போகாமல் நின்ற தோரையா நீதான்
பூரணத்தி னானகலை ஐந்தும் பெற்றே
ஆகாம லானந்த வல்லி யாலே
அடிமுடியி னடுவாசி யாறு குள்ளே
வாகாமல் வாலையுடை மூல தாலே
வழிதோன்றும் மூன்றெழுத்தை யுரைக்க வேணும்
சாகாமல் சாகுமடா இந்த மூலஞ்
சசிவட்டம் நடுக்கோண முக்கோண மாமே
முக்கோண மூசுழிதற் கோண மாகி
முதலான மூலமணி வாலை தன்னில்
நாற்கோண நாலுவரை நயந்து காக்க
நாயகியாள் பரஞ்சோதி நாட்ட முற்று
தீக்கோண திக்குதிசை யிருந்த மாயம்
தெரிந்திடவே யுரைத்திட்டேன் விவர மாக
தாக்கோண விட்டகுறை வந்த தென்றால்
தனியிருந்து பார்த்தவனே சித்த னாமே
சித்தான மூன்றெழுத்து செயலாஞ் சோதி
சீரியவை யுங்கிலியும் சவ்வு மாகி
முத்தான லட்சவுரு செபிக்க சித்தி
முற்றிடுமே யெதிரியென்ற பேய்க குந்தான்
வித்தான வித்தையடா முட்டும் பாரு
விரிவான முகக்கருவு மூன்று கேளு
சத்தான அதன்கருவும் சிலையில் வைத்து
சதுரான விதிவிவர மறி கேளே
கேளப்பா பலிகொடுத்து பூசை செய்து
கிருபையுள்ள வுருவேற்றி திட்ட மாக
வாளப்பா சுடுகாட்டின் சாம்பல் தன்னில்
வளமாக புதைத்துவிடு நடு சாமத்தில்
ஆளப்பா அடியற்று மரண மாகி
ஆண்டிருந்த தவசுநிலை தான்கு லைந்து
காணப்பா கண்மணியே வீழ்வான் பாவி
கதைதெரி சொல்லுகிறேனின்னம் பாரே
இன்னமின்னங் கண்முன்சோ தனையு மாகும்
ஈடேற வேணுமென்றா லிதனிற் சூட்சம்
அன்னமின்னா அகிற்கட்டை தேவ தாரம்
அறிவுடைய முளைச்சீவி சிங்கை யோதி
வன்னமின்னார் பேர்சொல்லி நசியென் றேதான்
வலுவான நூற்றெட்டு வுருவம் போடு
சன்னமின்னா மரத்தடியி லிருந்து கொண்டு
சதிராக ஆணிகொண் டடித்தி டாயே
அடித்தமுளை பிடுங்கிவை திறுக்கி போடு
ஆனந்த வுருக்குலைந்து பட்டு போகும்
தொடுத்தமுதல் நாலாநாள் கண்டு தானு
தொகைமுடிந்து வாச்சுதடா விந்த போக்கு
விடுத்தபின்பு விடமேறி கருவி போகும்
விரிந்துரைத்தேன் பூட்டிதுவே வீண் போகாது
தடுத்துவிடு நகரத்தி லடித்து பாரு
தட்டழிந்து உயிர்புதலா சேத மாமே
ஆமப்பா அடிதரிசிங் களத்தி லானால்
அதியங்காண் கண்டவர்க்கே யடைக்க லம்போம்
வீமப்பா வெளிதிறந்து சொன்னேன் பாரு
விளையாட்டே யில்லையடா இந்த போக்கு
சோமப்பா சுத்தியுடன் தலையும் மூழ்கி
சுருக்கெனவே தியானிப்பா யாத்தாள் மூலம்
தாமப்பா சத்தியமே சொன்னேன் பாரு
தவறாது ராமனுடை வாக தானே
தானென்ற மூலமுடன் சித்தி பண்ணு
தனதான நூற்றெட்டு குள்ளே சித்தி
ஆனென்ற அண்டர் பதியெட்டு மாடும்
அறுபத்து நால்மூலி யெல்லா மாடும்
கோனென்ற கோடு சித்து கணத்திலாடுங்
குணமாக ரேவதிநா செய்ய நன்று
வானென்ற அட்டமியிற் செய்ய நன்று
வளர்பிறையில் செய்தவனே யோகி யாமே
யோகியா யாவதற்கீ துனக்கு சொன்னேன்
ஓகோகோ முன்னுரைத்த மூல தாலே
யோகிகளா யேகாந்த வல்லி யாட்கிங்
ஏட்டிலே யெழுதினதால் எல்லா மாச்சு
தாகிகளா தாயுடைய கிருபை யாலே
தவமாகும் மவமாகும் சுபமுண்டாகும்
மோகிகளால் மூலபூசா விதிப தாலே
முத்திபெற சித்திவிளை பத்து முற்றே
முடிந்ததுகடுவெளி சித்தர் ஆனந்த களிப்பு
பல்லவி
பாபஞ்செய் யாதிரு மனமே நாளை
கோபஞ்செய் தேயமன் கொண்டோடி போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே
சரணங்கள்
சாபம் கொடுத்திட லாமோ விதி
தன்னை நம்மாலே தடுத்திடலாமோ
கோப தொடுத்திடலாமோ இச்சை
கொள்ள கருத்தை கொடுத்திடலாமோ
சொல்லருஞ் சூதுபொய் மோசம் செய்தால்
சுற்றத்தை முற்றா துடைத்திடும் நாசம்
நல்லபத்த திவிசு வாசம் எந்த
நாளும் மனிதர்க்கு நம்மையாய் நேசம்
நீர்மேற் குமிழியி காயம் இது
நில்லாது போய்விடும் நீயறிமாயம்
பார்மீதில் மெத்தவும் நேயம் சற்றும்
பற்றா திருந்திடப்பண்ணு முபாயம்
நந்த வனத்திலோ ராண்டி அவன்
நாலாறு மாதமா குயவனை வேண்டி
கொண்டுவ தானொரு தோண்டி மெத்த
கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி
தூடண மாகச்சொல் லாதே தேடுஞ்
சொத்துகளிலொரு தூசும் நில்லாதே
ஏடாணை மூன்றும் பொல்லாதே சிவ
திச்சைவை தாலெம லோகம் பொல்லாதே
நல்ல வழிதனை நாடு எந்த
நாளும் பரமனை நத்தியே தேடு
வல்லவர் கூட்டத்திற் கூடு அந்த
வள்ளலை நெஞ்சினில் வாழ்த்தி கொண்டாடு
நல்லவர் தம்மை தள்ளாதே அறம்
நாலெட்டில் ஒன்றேனும் நாடித்தள் ளாதே
பொல்லாக்கில் ஒன்றுங்கொள்ளாதே கெட்ட
பொய்மொழி கோள்கள் பொருந்த விள்ளாதே
வேத விதிப்படி நில்லு நல்லோர்
மேவும் வழியினை வேண்டியே செல்லு
சாத நிலைமையே சொல்லு பொல்லா
சண்டாள கோபத்தை சாதித்து கொல்லு
பிச்சையென் றொன்றுங்கே ளாதே எழில்
பெண்ணாசை கொண்டு பெருக்கமாளாதே
இச்சைய துன்னையாளாதே சிவன்
இச்சை கொண்டதவ்வழி யேறிமீளாதே
மெஞ்ஞான பாதையி லேறு சுத்த
வேதாந்த வெட்ட வெளியினை தேறு
அஞ்ஞான மார்க்கத்தை தூறு உன்னை
அண்டினோர கானந்த மாம்வழி கூறு
மெய்குரு சொற்கட வாதே நன்மை
மென்மேலுஞ் செய்கை மிகவடக்காதே
பொய்க்கலை யால்நடவாதே நல்ல
புத்தியை பொய்வழி தனில் நடத்தாதே
கூடவருவ தொன்றில்லை புழு
கூடெடு திங்ஙன் உலைவதே தொல்லை
தேடரு மோட்சம தெல்லை அதை
தேடும் வழியை தெளிவோரு மில்லை
ஐந்துபேர் சூழ்ந்திடுங் காடு இந்த
ஐவர்க்கும் ஐவர் அடைந்திடும் நாடு
முந்தி வருந்திநீ தேடு அந்த
மூலம் அறிந்திட வாமுத்தி வீடு
உள்ளாக நால்வகை கோட்டை பகை
ஓட பிடித்திட்டால் ஆளலாம் நாட்டை
கள்ள புலனென்னுங் காட்டை வெட்டி
கனலி டெரித்திட்டாற் காணலாம் வீட்டை
காசிக்கோ டில்வினை போமோ அந்த
கங்கையா டில்கதி தானுமுண் டாமோ
பேசுமுன் கன்மங்கள் சாமோ பல
பேதம் பிறப்பது போற்றினும் போமோ
பொய்யாக பாராட்டுங் கோலம் எல்லாம்
போகவே வாய்த்திடும் யார்க்கும் போங்காலம்
மெய்யாக வேசுத்த காலம் பாரில்
மேவ புரிந்திடில் என்னனு கூலம்
சந்தேக மில்லாத தங்கம் அதை
சார்ந்து கொண்டாலுமே தாழ்விலா பொங்கம்
அந்த மில்லாதவோர் துங்கம் எங்கும்
ஆனந்தமாக நிரம்பிய புங்கம்
பாரி லுயர்ந்தது பக்தி அதை
பற்றின பேர்க்குண்டு மேவரு முத்தி
சீரி லுயரட்ட சித்தி யார்க்குஞ்
சித்திக்கு மேசிவன் செயலினால் பத்தி
அன்பெனும் நன்மலர் தூவி பர
மானந தேவியின் அடியிணை மேவி
இன்பொடும் உன்னுட லாவி நாளும்
ஈடேற்ற தேடாய்நீ இங்கே குலாவி
ஆற்றும் வீடேற்றங் கண்டு அதற்
கான வழியை யறிந்து நீகொண்டு
சீற்றமில் லாமலே தொண்டு ஆதி
சிவனுக்கு செய்திடிற் சேர்ந்திடும் தொண்டு
ஆன்மாவால் ஆடிடு மாட்டம் தேக
தான்மா அற்றபோதே யாமுடல் வாட்டம்
வான்கதி மீதிலே நாட்டம் நாளும்
வையிலுனக்கு வருமே கொண்டாட்டம்
எட்டுமி ரண்டையும் ஓர்ந்து மறை
எல்லா முனக்குள்ளே ஏகமா தேர்ந்து
வெட்ட வெளியினை சார்ந்து ஆனந்த
வெள்ளத்தின் மூழ்கி மிகுகளி கூர்ந்து
இந்த வுலகமு முள்ளு சற்றும்
இச்சைவையாமலே யெந்நாளும் தள்ளு
செத்தேன் வெள்ளம் மதைமொள்ளு உன்றன்
சிந்தைதி திக்க தெவிட்டவு கொள்ளு
பொய்வேத தன்னை பாராதே அந்த
போதகர் சொற்புத்தி போத வாராதே
மையவிழி யாரை சாராதே துன்
மார்க்கர்கள் கூட்டத்தில் மகிழ்ந்து சேராதே
வைதோரை கூடவை யாதே இந்த
வையம் முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே
வெய்ய வினைகள் செய்யாதே கல்லை
வீணிற் பறவைகள் மீதி லெய்யாதே
சிவமன்றி வேறே வேண்டாதே யார்க்கு
தீங்கான சண்டையை சிறக்க தூண்டாதே
தவநிலை விட்டு தாண்டாதே நல்ல
சன்மார்க்க மில்லாத நூலை வேண்டாதே
பாம்பினை பற்றியா டாதே உன்றன்
பத்தினி மார்களை பழித்துக்கா டாதே
வேம்பினை யுலகிலூ டாதே உன்றன்
வீறாப்பு தன்னை விளங்கநா டாதே
போற்றுஞ் சடங்கை நண்ணாதே உன்னை
புகழ்ந்து பலரிற் புகல வொண்ணாதே
சாற்றுமுன் வாழ்வை யெண்ணாதே பிறர்
தாழும் படிக்கு நீதாழ்வை பண்ணாதே
கஞ்சா புகைபிடி யாதே வெறி
காட்டி மயங்கிய கட்குடி யாதே
அஞ்ச வுயிர் மடியாதே பத்தி
அற்றவஞ் ஞானத்தின் நூல்படி யாதே
பத்தி யெனுமேணி நாட்டி தொந்த
பந்தமற்ற விடம் பார்த்ததை நீட்டி
சத்திய மென்றதை யீட்டி நாளும்
தன்வச மாக்கிக்கொள் சமயங்க ளோட்டி
செப்பரும் பலவித மோகம் எல்லாம்
சீயென் றொறுத்து திடங்கொள் விவேகம்
ஒப்பரும் அட்டாங்க யோகம் நன்றாய்
ஓர்ந்தறி வாயவற் றுண்மைசம் போகம்
எவ்வகை யாகநன் னீதி அவை
எல்லா மறிந்தே யெடுத்து நீபோதி
ஒவ்வா வென்ற பலசாதி யாவும்
ஒன்றென் றறிந்தே யுணர்ந்துற வோதி
கள்ள வேடம் புனையாதே பல
கங்கையி லேயுன் கடன் நனையாதே
கொள்ளை கொள்ள நினையாதே நட்பு
கொண்டு புரிந்துநீ கோள் முனையாதே
எங்கும் சுயபிர காசன் அன்பர்
இன்ப இரு திருந்திடும் வாசன்
துங்க அடியவர் தாசன் தன்னை
துதுக்கிற் பதவி அருளுவான் ஈசன்
முடிந்ததுகுதம்பை சித்தர் பாடல்கள்
கண்ணிகள்
வெட்ட வெளிதன்னை மெய்யென்று இருப்போர்க்கு
பட்டயம் ஏதுக்கடி குதம்பாய்
பட்டயம் ஏதுக்கடி
மெய்ப்பொருள் கண்டு விளங்கும்மெய்ஞ் ஞானிக்கு
கற்பங்கள் ஏதுக்கடி குதம்பாய்
கற்பங்கள் ஏதுக்கடி
காணாமற் கண்டு கருத்தோடு இருப்போர்க்கு
வீணாசை ஏதுக்கடி குதம்பாய்
வீணாசை ஏதுக்கடி
வஞ்சகம் அற்று வழிதன்னை கண்டோர்க்கு
சஞ்சலம் ஏதுக்கடி குதம்பாய்
சஞ்சலம் ஏதுக்கடி
ஆதாரமான அடிமுடி கண்டோர்க்கு
வாதாட்டம் ஏதுக்கடி குதம்பாய்
வாதாட்டம் ஏதுக்கடி
நித்திரை கெட்டு நினைவோடு இருப்போர்க்கு
முத்திரை ஏதுக்கடி குதம்பாய்
முத்திரை ஏதுக்கடி
தந்திரமான தலந்தனில் நிற்போர்க்கு
மந்திரம் ஏதுக்கடி குதம்பாய்
மந்திரம் ஏதுக்கடி
சத்தியமான தவத்தில் இருப்போர்க்கு
உத்தியம் ஏதுக்கடி குதம்பாய்
உத்தியம் ஏதுக்கடி
நாட்டத்தை பற்றி நடுவணை சேர்வோர்க்கு
வாட்டங்கள் ஏதுக்கடி குதம்பாய்
வாட்டங்கள் ஏதுக்கடி
முத்தமிழ் கற்று முயங்குமெய்ஞ் ஞானிக்கு
சத்தங்கள் ஏதுக்கடி குதம்பாய்
சத்தங்கள் ஏதுக்கடி
உச்சிக்கு மேற்சென்று உயர்வெளி கண்டோர்க்கு
இச்சிப்பிங்கு ஏதுக்கடி குதம்பாய்
இச்சிப்பிங்கு ஏதுக்கடி
வேகாமல் வெந்து வெளியெளி கண்டோர்க்கு
மோகாந்தம் ஏதுக்கடி குதம்பாய்
மோகாந்தம் ஏதுக்கடி
சாகாமல் தாண்டி தனிவழி போவோர்க்கு
ஏகாந்தம் ஏதுக்கடி குதம்பாய்
ஏகாந்தம் ஏதுக்கடி
அந்தர தன்னில் அசைந்தாடு முத்தர்க்கு
தந்திரம் ஏதுக்கடி குதம்பாய்
தந்திரம் ஏதுக்கடி
ஆனந்தம் பொங்கி அறிவோடு இருப்பார்க்கு
ஞானந்தான் ஏதுக்கடி குதம்பாய்
ஞானந்தான் ஏதுக்கடி
சித்தர கூடத்தை தினந்தினம் காண்போர்க்கு
பத்திரம் ஏதுக்கடி குதம்பாய்
பத்திரம் ஏதுக்கடி
முக்கோணம் தன்னில் முளைத்தமெய்ஞ் ஞானிக்கு
சட்கோணம் ஏதுக்கடி குதம்பாய்
சட்கோணம் ஏதுக்கடி
அட்டதிக்கெல்லாம் அசைந்தாடும் நாதர்க்கு
நட்டணை ஏதுக்கடி குதம்பாய்
நட்டணை ஏதுக்கடி
முத்தி பெற்றுள்ளம் முயங்குமெய்ஞ் ஞானிக்கு
பத்தியம் ஏதுக்கடி குதம்பாய்
பத்தியம் ஏதுக்கடி
அல்லலை நீக்கி அறிவோடு இருப்போருக்கு
பல்லாக்கு ஏதுக்கடி குதம்பாய்
பல்லாக்கு ஏதுக்கடி
அட்டாங்க யோகம் அறிந்தமெய்ஞ் ஞானிக்கு
முட்டாங்கம் ஏதுக்கடி குதம்பாய்
முட்டாங்கம் ஏதுக்கடி
வேகம் அடக்கி விளங்குமெய்ஞ் ஞானிக்கு
யோகந்தான் ஏதுக்கடி குதம்பாய்
யோகந்தான் ஏதுக்கடி
மாத்தானை வென்று மலைமேல் இருப்போர்க்கு
பூத்தானம் ஏதுக்கடி குதம்பாய்
பூத்தானம் ஏதுக்கடி
செத்தாரை போல திரியுமெய்ஞ் ஞானிக்கு
கைத்தாளம் ஏதுக்கடி குதம்பாய்
கைத்தாளம் ஏதுக்கடி
கண்டாரை நோக்கி கருத்தோடு இருப்போர்க்கு
கொண்டாட்டம் ஏதுக்கடி குதம்பாய்
கொண்டாட்டம் ஏதுக்கடி
காலனை வென்ற கருத்தறி வாளர்க்கு
கோலங்கள் ஏதுக்கடி குதம்பாய்
கோலங்கள் ஏதுக்கடி
வெண்காயம் உண்டு மிளகுண்டு சுக்குண்டு
உண்காயம் ஏதுக்கடி குதம்பாய்
உண்காயம் ஏதுக்கடி
மாங்காய்ப்பால் உண்டு மலைமேல் இருப்போர்க்கு
தேங்காய்ப்பால் ஏதுக்கடி குதம்பாய்
தேங்காய்ப்பால் ஏதுக்கடி
பட்டணஞ் சுற்றி பகலே திரிவோர்க்கு
முட்டாக்கு ஏதுக்கடி குதம்பாய்
முட்டாக்கு ஏதுக்கடி
தாவரமில்லை தனக்கொரு வீடில்லை
தேவாரம் ஏதுக்கடி குதம்பாய்
தேவாரம் ஏதுக்கடி
தன்னை அறிந்து தலைவனை சேர்ந்தோர்க்கு
பின்னாசை ஏதுக்கடி குதம்பாய்
பின்னாசை ஏதுக்கடி
பத்தாவு தானும் பதியோடு இருப்பார்க்கு
உத்தாரம் ஏதுக்கடி குதம்பாய்
உத்தாரம் ஏதுக்கடி
முடிந்ததுசட்டைமுனி ஞானம்
எண்சீர் விருத்தம்
காணப்பா பூசைசெய்யும் முறையை கேளாய்
கைம்முறையா சுவடிவைத்து பூசை செய்வார்
பூணப்பா சிலபேர்தான் தீபம் வைத்து
புகழாக பூசை செய்வார் பெண்ணை வைத்தும்
நாளப்பா சக்கரத்தை பூசை செய்வார்
நம்முடைய பூசையென்ன மேரு போலே
ஓதப்பா நாற்பத்துமு கோணம் வைத்தே
உத்தமனே பூசை செய்வார் சித்தர்தாமே
தானென்ற மேருவைத்தான் பூசை செய்வார்
சாபமிட்டால் அண்டரண்டம் தீயா வேகும்
தேனென்ற மேருவுக்கு தீட்சை வேண்டும்
சிறுபிள்ளை யாமொருவன் தீண்டப்போகா
வானென்ற மேருவைத்தான் பூசை செய்தோர்
வாய்திறந்தே உபதேசம் சொன்ன ராகிற்
கோனென்ற வாதசித்தி கவன சித்தி
கொள்ளையிட்டான் அவன் சீடன் கூறினானே
கூறியதோர் வாலையின்மூன் றெழுத்தை கேளாய்
குறியறிந்து பூசை செய்து பின்பு கேளாய்
மாறியதோர் திரிபுரையெ டெழுத்தை கேளாய்
மைந்தனே இவளை நீபூசை பண்ண
தேறியதோர் புவனைதனின் எழுத்தை கேளாய்
திறமாக புவனையைநீ பூசை பண்ணு
ஆறியதோர் யாமளையா றெழுத்தை கேளாய்
அவளுடைய பதம் போற்றி பூசைபண்ணே
பண்ணியபின் யாமளைஐ தெழுத்தை கேளாய்
பண்பாக தீட்சையைந்தும் முடிந்த பின்பு
வண்ணியதோர் வாசியென்ற யோக துக்கு
மைந்தனே வைத்துப்ராணா யா தீரும்
கண்ணியதோர் இத்தனையும் அறிந்தி ருந்தாம்
காயசித்தி விக்கினங்கள் இல்லை யில்லை
உண்ணியதோர் உலகமென்ன சித்தர் சொன்ன
உத்தமனே விட்டகுறை எடுக்கும் காணே
தியங்கினால் கெர்சித்து துரத்து சண்ணுஞ்
சீறியர் மிலேச்சரையே சுகத்தி ன்ள்ளே
மயங்கினார் நாலுபா தத்தி னுள்ளும்
மனஞ்செவ்வை யாவதெப்போ தறிவதெப்போ
தயங்கினார் உலகத்திற் கோடி பேர்கள்
சாவதும் பிறப்பதுங்கா வடிபோ லாச்சு
துயங்கினார் துயரத்தால் ஞானம் போச்சு
சுடுகாட்டில் அறிவதுபோல் சுத்த பாழே
பாழான மாய்கைசென் றொழிவ தெப்போ
பர தமனஞ் செவ்வையாய் வருவ தெப்போ
வாளான விழியுடைய பெண்ணை சேரும்
மயக்கமற்று நிற்பதெப்போ மனமே ஐயோ
காழான உலகமத னாசை யெல்லாங்
கருவறுத்து நிற்பதெப்போ கருதி நின்ற
கோளான கருவிவிட்டு மேலே நோக்கி
கூடுவது மேதனென்றால் மூலம்பாரே
முடிந்ததுதிருமூல நாயனார் ஞானம்
அடியாகி அண்டரண்ட தப்பால் ஆகி
அகாரமெனுமெழு ததுவே பாதமாகி
முடியாகி நடுவாகி மூல தன்னில்
முப்பொருளு தானாகி முதலுமாகி
படியாய்மு பாழற்று படிக்கு மப்பாற்
படிகடந்த பரஞ்சோதி பதியுமாகி
அடியாகு மூலமதே அகார மாகி
அவனவளாய் நின்றநிலை யணுவ தாமே
அதுவாகி அவனளாய் எல்லா மாகி
அடிநடுவு முடிவாகி யகண்ட மாகி
பொதுவாகி பல்லுயிர்க ளனைத்து கெல்லாம்
புகலிடமாய் எப்பொருட்கு மூலமாகி
மதுவாகி வண்டாகி சுவையு மாகி
மலராகி மணமாகி மதிக்க வொண்ணா
அதுவாரும் அகாரமதே மூலமாகி
அண்டமெல்லா தாங்கிநின்ற அம்மூலமே
மூலமெனு மாதார வட்ட தானே
முச்சுடரு முக்கோண மூன்று நாடி
சீலமெனுஞ் சிவலிங்க பாத தீர்த்த
திருவடியு திருமேனி நடமுமாகும்
கோலமுடன் அன்ட மெல்லா தாங்கிக்கொண்டு
கொழுந்து விட்டகம்பமதாய் மேலேநோக்கி
ஆலமுண்ட கண்டமெலா தானாய் நின்ற
அகாரமுதல் அவ்வெழுத்தை அறிந்துபாரே
அரிந்ததுவு தற்பரமே அகார மாகும்
அறிவுடைய உகாரம்சிற் பரம தாகும்
பிறந்ததுவு முலகமெலாஞ் தானாம்
பேதமெனுங் கருவிவகை யெல்லா மாகும்
அறிந்ததுவும் அகாரமெனும் பாத தன்னை
அடிமுடியென்று அனுதினமும் அறிந்து நோக்கே
நோக்கமுடன் மூலமெனும் பாத தன்னை
நுண்பொருளாஞ் சிற்பரத்தினூடே நோக்கு
தீர்க்கமுட னாதார வகையு தாண்டி
திருநயனம் நாசிநெற்றி நடுவே பார்த்து
போக்கறிந்திங் கிந்தநிலை நோக்க வல்லார்
புரிசடையோன் தன்னுடைய புதல்வ ராவார்
ஆக்கமுடன் அருட்சுடர்போற் குருவை தானே
அனுதினமும் நோக்கி நிற்பார் ஆசானாமே
ஆசானு மீசானு மொன்றே யாகும்
அவனவளு மொன்றாகும் அது தானாகும்
பேசாத மந்திரமு மிதுவே யாகும்
பேரொளியின் வடிவாகும் பேரு மாகும்
நேசாருங் கலைகளெலா தானே யாகும்
நிலையான ஓங்கார பூட மாகும்
ஈசானை ஆசானா காணும் பேர்க்கிங்
கின்பமுடன் கயிலாச மெய்த லாமே
எய்தரியா பரசிவத்தின் மூல தன்னில்
இருசுடரும் உதித்தொடுங்கு மிடமே யென்று
மெய்த்தொழுயுஞ் சுழுமுனையே கம்ப மாகி
மெய்ப்பொருளாஞ் சோதி யென மேவி நிற்கும்
இவ்வகையே மூலமெனும் பாத தன்னை
இருநேர மர்றிடத்தே யிறைஞ்சி காணே
காண்பதுதான் பேரொளியின் காட்சி யாகும்
காணரிய பொருளாகுங் காட்டும் போதே
ஆண் பெண்ணாய் அலியாகி அடியுமாகி
அப்பாலை கப்பாலாய் அமர்ந்த சோதி
வீண்பயிலும் வேதமெல்லா தேடி கானா
வெறும்பாழ தாகியே மேவி நின்றார்
சேண்பயிலும் செகசோதி மூல தன்னை
தேடரிய பாதவென்றே தெளிந்து நோக்கே
தெளிவரிய பாதமது கார மாகி
சிற்பரமு தற்பரமு தானேயாகி
அழிவரிய சோதியது தானே யாகி
அடிநடுவு முடியாகி யமர்ந்து நின்று
மொழிவரிய முதலாகி மூலமாகி
முச்சுடர தானாகி முடிந சோதி
சுழியினிலே முனையாகி கோப மாகி
சொல்லரிய வெழுத்தொன்றே தொகுத்து பாரீர்
முடிந்ததுதிருவள்ளுவர் ஞானம்
காப்பு
அண்டம்பிண்டம் நிறைந்துநின்ற அயன்மால் போற்றி
அகண்டம்பரி பூரணத்தின் அருளே போற்றி
மண்டலஞ்சூழ் இரவிமதி சுடரே போற்றி
மதுரதமி ழோதும் அகத்தியனே போற்றி
எண்டிசையும் புகழுமென்றன் குருவே போற்றி
இடைகலையின் சுழுமுனையின் கமலம் போற்றி
குண்டலிக்குள் அமர்ந்து நின்ற குகனே போற்றி
குருமுனியின் தாளினையெ போதும் போற்றி
கட்டளை கலித்துறை
அன்னை யெனுங்கர்ப்ப மதனில்வ துமதிலேயிருந்தும்
நன்னயமா பத்துத்திங்களு நானக தேயிருந்தேன்
என்ன அதிசயங் காணிவ்வுலகி லேயமைந்த
உன்னதமெல்லா மமைந்தேன் உண்மையை காண்கிலரே
அம்புவி தன்னிலேயுதி தாய்ந்தறி பாடைதன்னை
வம்புலக தார்வசிய மாய்க்கை பிடித்தேபிரிந்து
கும்பி தனிலேயுழன்று மக்குண்டலி பொற்கமலம்
நம்பியிருந்தேன் சிலநாள் ரகசியங் காண்கிலனே
தரவு கொச்சகம்
அண்டரண்ட வான்புவியும் ஆகமத்தி னுட்பொருளும்
கண்டிதமா யான்விளங்கு காயமதி லேயறியும்
வண்டரெனை நீசனென்ற வாறுதனை யேயழித்தேன்
விண்டரக சியந்தன்னை விளக்கமது காண்கிலரே
வையமதி லேயுதிக்கு மாண்பர்கனே யுங்களுயிர்
மெய்யென் றிருந்தசைவு வெளிப்படுவ தென்னவிதம்
அய்யமில்லா வாழ்ந்துலகில் ஆண்மையா பூண்டமதி
பொய்யெனுமிவ் வாழ்க்கையது போகுஞ்சுடு காடுளதே
கட்டளை கலித்துறை
வீடானமூல சுழிநாத வீட்டில்விளங்கும்