சிலப்பதிகாரம் புகார காண்டம்
இளங்கோ அடிகள் இயற்றிய சிலப்பதிகாரம்
புகார காண்டம்
பதிகம்
இணைக்குறள் ஆசிரியப்பா
குணவாயில் கோட்டத்து அரசுதுறந்து இருந்த
குடக்கோ சேரல் இளங்கோ வடிகட்கு
குன்ற குறவர் ஒருங்குடன் கூடி
பொலம்பூ வேங்கை நலங்கிளர் கொழுநிழல்
ஒருமுலை இழந்தாள்ஓர் திருமா பத்தினிக்கு

அமரர்க்கு அரசன் தமர்வந்து ஈண்டிஅவள்
காதல் கொழுநனை காட்டி அவளொடுஎம்
கட்புலம் காண விண்புலம் போயது
இறும்பூது போலும்அஃது அறிந்தருள் நீயென
அவனுழை இருந்த தண்தமிழ சாத்தன்

யான்அறி குவன்அது பட்டதுஎன் றுரைப்போன்
ஆரங் கண்ணி சோழன் மூதூர
பேரா சிறப்பின் புகார்நக ரத்து
கோவலன் என்பான்ஓர் வாணிகன் அவ்வூர்
நாடகம் ஏத்தும் நாட கணிகையொடு

ஆடிய கொள்கையின் அரும்பொருள் கேடுற
கண்ணகி என்பாள் மனைவி அவள்கால்
பண்ணமை சிலம்பு பகர்தல் வேண்டி
பாடல்சால் சிறப்பிற் பாண்டியன் பெருஞ்சீர்
மாட மதுரை புகுந்தனன் அதுகொண்டு

மன்பெரும் பீடிகை மறுகிற் செல்வோன்
பொன்செய் கொல்லன் தன்கை காட்ட
கோப்பெரு தேவிக்கு அல்லதை இச்சிலம்பு
யாப்புறவு இல்லைஈங்கு இருக்கயென்று ஏகி
பண்டுதான் கொண்ட சில்லரி சிலம்பினை

கண்டனன் பிறன்ஓர் கள்வன் கையென
வினைவிளை காலம் ஆதலின் யாவதும்
சினையலர் வேம்பன் தேரா னாகி
கன்றிய காவலர கூஉய்அ கள்வனை
கொன்றுஅ சிலம்பு கொணர்க ஈங்கென

கொலைக்கள பட்ட கோவலன் மனைவி
நிலைக்களம் காணாள் நெடுங்கண் நீர்உகுத்து
பத்தினி யாகலின் பாண்டியன் கேடுற
முத்தார மார்பின் முலைமுக திருகி
நிலைகெழு கூடல் நீள்எரி ஊட்டிய

பலர்புகழ் பத்தினி யாகும் இவள்என
வினைவிளை காலம் என்றீர் யாதுஅவர்
வினைவிளைவு என்ன விறலோய் கேட்டி
அதிரா சிறப்பின் மதுரை மூதூர
கொன்றையஞ் சடைமுடி மன்ற பொதியிலில்

வெள்ளியம் பலத்து நள்ளிரு கிடந்தேன்
ஆர்அஞர் உற்ற வீரப தினிமுன்
மதுரைமா தெய்வம் வந்து தோன்றி
கொதியழல் சீற்றம் கொங்கையின் விளைத்தோய்
முதிர்வினை நுங்கட்கு முடிந்தது ஆகலின்

முந்தை பிறப்பில் பைந்தொடி கணவனொடு
சிங்கா வண்புகழ சிங்க புரத்து
சங்கமன் என்னும் வாணிகன் மனைவி
இட்ட சாபம் கட்டியது ஆகலின்
வார்ஒலி கூந்தல்நின் மணமகன் தன்னை

ஈர்ஏழ் நாளகத்து எல்லை நீங்கி
வானோர் தங்கள் வடிவின் அல்லதை
ஈனோர் வடிவில் காண்டல் இல்என
கோட்டம்இல் கட்டுரை கேட்டனன் யான்என
அரைசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற்று ஆவதூஉம்

உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம்
சூழ்வினை சிலம்பு காரண மாக
சிலப்பதி காரம் என்னும் பெயரால்
நாட்டுதும் யாம்ஓர் பாட்டுடை செய்யுள்என

முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது
அடிகள் நீரே அருளுகஎன் றார்க்குஅவர்
மங்கல வாழ்த்து பாடலும் குரவர்
மனையறம் படுத்த காதையும் நடம்நவில்
மங்கை மாதவி அரங்கேற்று காதையும்

அந்தி மாலை சிறப்புசெய் காதையும்
இந்திர விழவூர் எடுத்த காதையும்
கடலாடு காதையும்
மடல்அவிழ் கானல்வரியும் வேனில்வ திறுத்தென
மாதவி இரங்கிய காதையும் தீதுடை

கனாத்திறம் உரைத்த காதையும் வினாத்திறத்து
நாடுகாண் காதையும் காடுகாண்
வேட்டுவர் வரியும் தோட்டலர் கோதையொடு
புறஞ்சேரி இறுத்த காதையும் கறங்குஇசை
ஊர்க்காண் காதையும் சீர்சால் நங்கை

அடைக்கல காதையும் கொலைக்கள
ஆய்ச்சியர் குரவையும் தீத்திறம் கேட்ட
துன்ப மாலையும் நண்பகல் நடுங்கிய
ஊர்சூழ் வரியும் சீர்சால் வேந்தனொடு
வழக்குரை காதையும் வஞ்சின மாலையும்

அழல்படு காதையும் அருந்தெய்வம் தோன்றி
கட்டுரை காதையும் மட்டலர் கோதையர்
குன்ற குரவையும் என்றுஇவை அனைத்துடன்
காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்
வாழ்த்து வரந்தரு காதையொடு

இவ்வா றைந்தும்
உரையிடை இட்ட பாட்டுடை செய்யுள்
உரைசால் அடிகள் அருள மதுரை
கூல வாணிகன் சாத்தன் கேட்டனன்
இது பால்வகை தெரிந்த பதிகத்தின் மரபென்

புகார காண்டம்
மங்கல வாழ்த்து பாடல்
சிந்தியல் வெண்பாக்கள்
திங்களை போற்றுதும்
கொங்கலர்த்தார சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ்
வங்கண் உலகுஅளித்த லான்
ஞாயிறு போற்றுதும்
காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு

மேரு வலம்திரி தலான்
மாமழை போற்றுதும்
நாமநீர் வேலி உலகிற்கு அவனளிபோல்
மேநின்று தாஞ்சுரத்த லான்
பூம்புகார் போற்றுதும்

வீங்குநீர் வேலி உலகிற்கு அவன்குலத்தொடு
ஓங்கி பரந்துஒழுக லான்
மயங்கிசை கொச்ச கலிப்பா
ஆங்கு
பொதியில் ஆயினும் இமயம்
பதிஎழு அறியா பழங்குடி கெழீஇய

பொதுஅறு சிறப்பின் புகாரே ஆயினும்
நடுக்கின்றி நிலைஇய என்பது அல்லதை
ஒடுக்கம் கூறார் உயர்ந்தோர் உண்மையின்
முடித்த கேள்வி முழுதுணர தோரே
அதனால்
நாகநீள் நகரொடு நாகநாடு அதனொடு
போகம்நீள் புகழ்மன்னும் புகார்நகர் அதுதன்னில்
மாகவான் நிகர்வண்கை மாநாய்கன் குலக்கொம்பர்
ஈகைவான் கொடியன்னாள் ஈராறுஆண்டு அகவையாள்
அவளுந்தான்
போதில்ஆர் திருவினாள் புகழுடை வடிவென்றும்
தீதிலா வடமீனின் திறம்இவள் திறம்என்றும்
மாதரார் தொழுதுஏத்த வயங்கிய பெருங்குணத்து
காதலாள் பெயர்மன்னும் கண்ணகிஎன் பாள்மன்னோ
ஆங்கு
பெருநிலம் முழுதாளும் பெருமகன் தலைவைத்த
ஒருதனி குடிகளொடு உயர்ந்தோங்கு செல்வத்தான்
வருநிதி பிறர்க்குஆர்த்தும் மாசாத்து வான்என்பான்
இருநிதி கிழவன்மகன் ஈரெட்டுஆண்டு அகவையான்
அவனுந்தான்

மண்தேய்த்த புகழினான் மதிமுக மடவார்தம்
பண்தேய்த்த மொழியினார் ஆயத்து பாராட்டி
கண்டுஏத்தும் செவ்வேள்என்று இசைபோக்கி காதலால்
கொண்டுஏத்தும் கிழமையான் கோவலன்என் பான்மன்னோ
அவரை

இருபெருங் குரவரும் ஒருபெரு நாளால்
மணஅணி காண மகிழ்ந்தனர் மகிழ்ந்துழி
யானை எருத்தத்து அணிஇழையார் மேல்இரீஇ
மாநகர்க்கு ஈந்தார் மணம்
அவ்வழி
முரசுஇயம்பின முருகுஅதிர்ந்தன
முறைஎழுந்தன பணிலம்வெண்குடை
அரசுஎழுந்ததொர் படிஎழுந்தன
அகலுள்மங்கல அணிஎழுந்தது
மாலைதாழ் சென்னி வயிரமணி து஡ணகத்து
நீல விதானத்து நித்திலப்பூம் பந்தர்க்கீழ்
வான்ஊர் மதியம் சகடுஅணைய வானத்து
சாலி ஒருமீன் தகையாளை கோவலன்
மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட
தீவலம் செய்வது காண்பார்க்கண் நோன்புஎன்னை
விரையினர் மலரினர் விளங்கு மேனியர்
உரையினர் பாட்டினர் ஒசிந்த நோக்கினர்
சாந்தினர் புகையினர் தயங்கு கோதையர்
ஏந்துஇள முலையினர் இடித்த சுண்ணத்தர்
விளக்கினர் கலத்தினர் விரித்த பாலிகை
முளைக்குட நிரையினர் முகிழ்த்த மூரலர்
போதொடு விரிகூந்தல் பொலன்நறுங் கொடிஅன்னார்
காதலற் பிரியாமல் கவவுக்கை ஞெகிழாமல்
தீதுஅறுக எனஏத்தி சின்மலர் கொடுது஡வி
அங்கண் உலகின் அருந்ததி அன்னாளை
மங்கல நல்அமளி ஏற்றினார் தங்கிய
இப்பால் இமயத்து இருத்திய வாள்வேங்கை
உப்பாலை பொன்கோட்டு உழையதா எப்பாலும்
செருமிகு சினவேல் செம்பியன்
ஒருதனி ஆழி உருட்டுவோன் எனவே
மனையறம்படுத்த காதை
நிலைமண்டில ஆசிரியப்பா
உரைசால் சிறப்பின் அரைசுவிழை திருவின்
பரதர் மலிந்த பயம்கெழு மாநகர்
முழங்குகடல் ஞாலம் முழுவதும் வரினும்
வழங்க தவாஅ வளத்தது ஆகி
அரும்பொருள் தருஉம் விருந்தின் தேஎம்

ஒருங்குதொ கன்ன உடைப்பெரும் பண்டம்
கலத்தினும் காலினும் தருவனர் ஈட்ட
குலத்திற் குன்றா கொழுங்குடி செல்வர்
அத்தகு திருவின் அருந்தவம் முடித்தோர்
உத்தர குருவின் ஒப்ப தோன்றிய
கயமலர கண்ணியும் காதல் கொழுநனும்
மயன்விதி தன்ன மணிக்கால் அமளிமிசை
நெடுநிலை மாடத்து இடைநிலத்து இருந்துழி
கழுநீர் ஆம்பல் முழுநெறி குவளை
அரும்புபொதி அவிழ்ந்த சுரும்புஇமிர் தாமரை
வயற்பூ வாசம் அளைஇ அயற்பூ
மேதகு தாழை விரியல்வெண் தோட்டு
கோதை மாதவி சண்பக பொதும்பர
தாதுதேர்ந்து உண்டு மாதர்வாள் முகத்து
புரிகுழல் அளகத்து புகல்ஏ கற்று
திரிதரு சுரும்பொடு செவ்வி பார்த்து
மாலை தாமத்து மணிநிரைத்து வகுத்த
கோல சாளர குறுங்கண் நுழைந்து
வண்டொடு புக்க மணவா தென்றல்
கண்டு மகிழ்வுஎய்தி காதலில் சிறந்து
விரைமலர் வாளியொடு வேனில்வீற் றிருக்கும்
நிரைநிலை மாடத்து அரமியம் ஏறி
சுரும்புஉண கிடந்த நறும்பூஞ் சேக்கை
கரும்பும் வல்லியும் பெருந்தோள் எழுதி
முதிர்க்கடல் ஞாலம் முழுவதும் விளக்கும்
கதிர்ஒருங் கிருந்த காட்சி போல
வண்டுவாய் திறப்ப நெடுநிலா விரிந்த
வெண்தோட்டு மல்லிகை விரியல் மாலையொடு
கழுநீர பிணையல் முழுநெறி பிறழ
தாரும் மாலையும் மயங்கி கையற்று
தீரா காதலின் திருமுகம் நோக்கி
கோவலன் கூறும்ஓர் குறியா கட்டுரை
குழவி திங்கள் இமையவர் ஏத்த
அழகொடு முடித்த அருமைத்து ஆயினும்
உரிதின் நின்னோடு உடன்பிறப்பு உண்மையின்
பெரியோன் தருக திருநுதல் ஆகஎன
அடையார் முனையகத்து அமர்மேம் படுநர்க்கு
படைவழங் குவதுஓர் பண்புண்டு ஆகலின்
உருவி லாளன் ஒருபெருங் கருப்புவில்
இருகரும் புருவ மாக ஈக்க
மூவா மருந்தின் முன்னர தோன்றலின்
தேவர் கோமான் தெய்வ காவல்
படைநினக்கு அளிக்கஅதன் இடைநினக்கு இடையென
அறுமுக ஒருவன்ஓர் பெறுமுறை இன்றியும்
இறுமுறை காணும் இயல்பினின் அன்றே
அம்சுடர் நெடுவேல் ஒன்றுநின் முகத்து
செங்கடை மழைக்கண் இரண்டா ஈத்தது
மாஇரும் பீலி மணிநிற மஞ்ஞைநின்
சாயற்கு இடைந்து தண்கான் அடையவும்
அன்னம் நல்நுதல் மெல்நடைக்கு அழிந்து
நல்நீர பண்ணை நனிமலர செறியவும்
அளிய தாமே சிறுபசுங் கிளியே
குழலும் யாழும் அமிழ்தும் குழைத்தநின்
மழலை கிளவிக்கு வருந்தின வாகியும்
மடநடை மாதுநின் மலர்க்கையின் நீங்காது
உடன்உறைவு மரீஇ ஒருவா ஆயின
நறுமலர கோதைநின் நலம்பா ராட்டுநர்
மறுஇல் மங்கல அணியே அன்றியும்
பிறிதுஅணி அணி பெற்றதை எவன்கொல்
பல்இருங் கூந்தல் சின்மலர் அன்றியும்
எல்அவிழ் மாலையொடு என்உற் றனர்கொல்
நானம் நல்அகில் நறும்புகை அன்றியும்
மான்மத சாந்தொடு வந்ததை எவன்கொல்
திருமுலை தடத்திடை தொய்யில் அன்றியும்
ஒருகாழ் முத்தமொடு உற்றதை எவன்கொல்
திங்கள்முத்து அரும்பவும் சிறுகுஇடை வருந்தவும்
இங்குஇவை அணிந்தனர் என்உற் றனர்க்கொல்
மாசறு பொன்னே வலம்புரி முத்தே
காசறு விரையே கரும்பே தேனே
அரும்பெறல் பாவாய் ஆர்உயிர் மருந்தே
பெருங்குடி வாணிகன் பெருமட மகளே
மலையிடை பிறவா மணியே என்கோ
அலையிடை பிறவா அமிழ்தே என்கோ
யாழிடை பிறவா இசையே என்கோ
தாழ்இருங் கூந்தல் தையால் நின்னைஎன்று

உலவா கட்டுரை பலபா ராட்டி
தயங்குஇணர கோதை தன்னொடு தருக்கி
மயங்குஇணர தாரோன் மகிழ்ந்துசெல் வுழிநாள்
வாரொலி கூந்தலை பேர்இயல் கிழத்தி
மறுப்புஅருங் கேண்மையொடு அறப்பரி சாரமும்
விருந்து புறந்தருஉம் பெருந்தண் வாழ்க்கையும்
வேறுபடு திருவின் வீறுபெற காண
உரிமை சுற்றமொடு ஒருதனி புணர்க்க
யாண்டுசில கழிந்தன இற்பெருங் கிழமையின்
காண்தகு சிறப்பின் கண்ணகி தனக்குஎன்
வெண்பா
தூ பணிகள்ஒன்றி தோய்ந்தால் எனஒருவார்
காமர் மனைவியென கைகலந்து நாமம்
தொலையாத இன்பம்எலாம் துன்னினார் மண்மேல்
நிலையாமை கண்டவர்ப்போல் நின்று
அரங்கேற்று காதை
நிலைமண்டில ஆசிரியப்பா
தெய்வ மால்வரை திருமுனி அருள
எய்திய சாபத்து இந்திர சிறுவனொடு
தலைக்கோல் தானத்து சாபம் நீங்கிய
மலைப்புஅருஞ் சிறப்பின் வானவர் மகளிர்
சிறப்பிற் குன்றா செய்கையொடு பொருந்திய

பிறப்பிற் குன்றா பெருந்தோள் மடந்தை
தாதுஅவிழ் புரிகுழல் மாதவி தன்னை
ஆடலும் பாடலும் அழகும் என்றுஇ
கூறிய மூன்றின் ஒன்றுகுறை படாமல்
ஏழாண்டு இயற்றிஓர் ஈராறு ஆண்டில்
சூழ்கடல் மன்னற்கு காட்டல் வேண்டி
இருவகை கூத்தின் இலக்கணம் அறிந்து
பலவகை கூத்தும் விலக்கினிற் புணர்த்து
பதினோர் ஆடலும் பாட்டும் கொட்டும்
விதிமாண் கொள்கையின் விளங்க அறிந்துஆங்கு
ஆடலும் பாடலும் பாணியும் தூக்கும்
கூடிய நெறியின கொளுத்துங் காலை
பிண்டியும் பிணையலும் எழிற்கையும் தொழிற்கையும்
கொண்ட வகைஅறிந்து கூத்துவரு காலை
கூடை செய்தகை வாரத்து களைதலும்
வாரம் செய்தகை கூடையிற் களைதலும்
பிண்டி செய்தகை ஆடலிற் களைதலும்
ஆடல் செய்தகை பிண்டியிற் களைதலும்
குரவையும் வரியும் விரவல செலுத்தி
ஆடற்கு அமைந்த ஆசான் தன்னொடும்
யாழும் குழலும் சீரும் மிடறும்
தாழ்குரல் தண்ணுமை ஆடலொடு இவற்றின்
இசைந்த பாடல் இசையுடன் படுத்து
வரிக்கும் ஆடற்கும் உரிப்பொருள் இயக்கி
தேசிக திருவின் ஓசை கடைப்பிடித்து
தேசிக திருவின் ஓசை எல்லாம்
ஆசுஇன்று உணர்ந்த அறிவினன் ஆகி
கவியது குறிப்பும் ஆடல் தொகுதியும்
பகுதி பாடலும் கொளுத்துங் காலை
வசைஅறு கேள்வி வகுத்தனன் விரிக்கும்
அசையா மரபின் இசையோன் தானும்
இமிழ்கடல் வரைப்பில் தமிழகம் அறி
தமிழ்முழுது அறிந்த தன்மையன் ஆகி
வேத்தியல் பொதுவியல் என்றுஇரு திறத்தின்
நாட்டிய நன்னு஡ல் நன்கு கடைப்பிடித்து
இசையோன் வக்கிரி திட்டத்தை உணர்ந்துஆங்கு
அசையா மரபின் அதுபட வைத்து
மாற்றார் செய்த வசைமொழி அறிந்து
நாத்தொலைவு இல்லா நன்னு஡ல் புலவனும்
ஆடல் பாடல் இசையே தமிழே
பண்ணே பாணி தூக்கே முடமே
தேசிகம் என்றுஇவை ஆசின் உணர்ந்து
கூடை நிலத்தை குறைவுஇன்று மிகுத்துஆங்கு
வார நிலத்தை வாங்குபு வாங்கி
வாங்கிய வாரத்து யாழும் குழலும்
ஏங்கிய மிடறும் இசைவன கேட்ப
கூர்உகிர கரணம் குறிஅறிந்து சேர்த்தி
ஆக்கலும் அடக்கலும் மீத்திறம் படாமை
சித்திர கரணம் சிதைவுஇன்றி செலுத்தும்
அத்தகு தண்ணுமை அருந்தொழில் முதல்வனும்
சொல்லிய இயல்பினிற் சித்திர வஞ்சனை
புல்லிய அறிந்து புணர்ப்போன் பண்பின்
வர்த்தனை நான்கும் மயல்அற பெய்துஆங்கு
ஏற்றிய குரல்இளி என்றுஇரு நரம்பின்
ஒப்ப கேட்கும் உணர்வினன் ஆகி
பண்அமை முழவின் கண்ணெறி அறிந்து
தண்ணுமை முதல்வன் தன்னொடு பொருந்தி
வண்ண பட்டடை யாழ்மேல் வைத்துஆங்கு
இசையோன் பாடிய இசையின் இயற்கை
வந்தது வளர்த்து வருவது ஒற்றி
இன்புற இயக்கி இசைபட வைத்து
வார நிலத்தை கேடுஇன்று வளர்த்துஆங்கு
ஈர நிலத்தின் எழுத்துஎழுத்து ஆக
வழுவின்று இசைக்கும் குழலோன் தானும்
ஈர்ஏழ் தொடுத்த செம்முறை கேள்வியின்
ஓர்ஏழ் பாலை நிறுத்தல் வேண்டி
வன்மையிற் கிடந்த தார பாகமும்
மென்மையிற் கிடந்த குரலின் பாகமும்
மெய்க்கிளை நரம்பிற் கைக்கிளை கொள்ள
கைக்கிளை ஒழித்த பாகமும் பொற்புடை
தளரா தாரம் விளரிக்கு ஈத்து
கிளைவழி பட்டனள் ஆங்கே கிளையும்
தன்கிளை அழிவுகண்டு அவள்வயிற் சேர
ஏனை மகளிரும் கிளைவழி சேர
மேலது உழையிளி கீழது கைக்கிளை
வம்புஉறு மரபின் செம்பாலை ஆயது
இறுதி ஆதி ஆக ஆங்குஅவை
பெறுமுறை வந்த பெற்றியின் நீங்காது
படுமலை செவ்வழி பகர்அரும் பாலைஎன
குரல்குரல் ஆக தற்கிழமை திரிந்தபின்
முன்னதன் வகையே முறைமையின் திரிந்துஆங்கு
இளிமுத லாகிய ஏர்படு கிழமையும்
கோடி விளரி மேற்செம் பாலைஎன
நீடி கிடந்த கேள்வி கிடக்கையின்
இணைநரம்பு உடையன அணைவுற கொண்டுஆங்கு
யாழ்மேற் பாலை இடமுறை மெலி
குழல்மேற் கோடி வலமுறை மெலிய
வலிவும் மெலிவும் சமனும் எல்லாம்
பொலி கோத்த புலமை யோனுடன்
எண்ணிய நூலோர் இயல்பினின் வழாஅது
மண்ணகம் ஒருவழி வகுத்தனர் கொண்டு
புண்ணிய நெடுவரை போகிய நெடுங்கழை
கண்ணிடை ஒருசாண் வளர்ந்தது கொண்டு
நூல்நெறி மரபின் அரங்கம் அளக்கும்
கோல்அளவு இருபத்து நால்விரல் ஆக
எழுகோல் அகலத்து எண்கோல் நீளத்து
ஒருகோல் உயரத்து உறுப்பினது ஆகி
உத்தர பலகையொடு அரங்கின் பலகை
வைத்த இடைநிலம் நாற்கோல் ஆக
ஏற்ற வாயில் இரண்டுடன் பொலி
தோற்றிய அரங்கில் தொழுதனர் ஏத்த
பூதரை எழுதி மேல்நிலை வைத்து
தூண்நிழல் புறப்பட மாண்விளக்கு எடுத்துஆங்கு
ஒருமுக எழினியும் பொருமுக
கரந்துவரல் எழினியும் புரிந்துடன் வகுத்துஆங்கு
ஓவிய விதானத்து உரைபெறு நித்திலத்து
மாலை தாமம் வளையுடன் நாற்றி
விருந்துபட கிடந்த அருந்தொழில் அரங்கத்து
பேர்இசை மன்னர் பெயர்ப்புறத்து எடுத்த
சீர்இயல் வெண்குடை காம்புநனி கொண்டு
கண்இடை நவமணி ஒழுக்கி மண்ணிய
நாவல்அம் பொலம்தகட்டு இடைநிலம் போக்கி
காவல் வெண்குடை மன்னவன் கோயில்
இந்திர சிறுவன் சயந்தன் ஆகென
வந்தனை செய்து வழிபடு தலைக்கோல்
புண்ணிய நன்னீர் பொற்குடத்து ஏந்தி
மண்ணிய பின்னர் மாலை அணிந்து
நலம்தரு நாளால் பொலம்பூண் ஓடை
அரசுஉவா தடக்கையில் பரசினர் கொண்டு
முரசுஎழுந்து பல்இயம் ஆர்ப்ப
அரைசொடு பட்ட ஐம்பெருங் குழுவும்
தேர்வலம் செய்து கவிகை கொடுப்ப
ஊர்வலம் செய்து புகுந்துமுன் வைத்துஆங்கு
இயல்பினின் வழாஅ இருக்கை முறைமையின்
குயிலுவ மாக்கள் நெறிப்பட நிற்ப
வலக்கால் முன்மிதித்து ஏறி அரங்கத்து
வலத்தூண் சேர்தல் வழக்குஎன பொருந்தி
இந்நெறி வகையால் இடத்தூண் சேர்ந்த
தொல்நெறி இயற்கை தோரிய மகளிரும்
சீர்இயல் பொலிய நீர்அல நீங்க
வாரம் இரண்டும் வரிசையில் பாட
பாடிய வாரத்து ஈற்றில்நின்று இசைக்கும்
கூடிய குயிலுவ கருவிகள் எல்லாம்
குழல்வழி நின்றது யாழே யாழ்வழி
தண்ணுமை நின்றது தகவே தண்ணுமை
பின்வழி நின்றது முழவே முழவொடு
கூடிநின்று இசைத்தது திரிகை
திரிகையொடு அந்தரம் இன்றி
கொட்டுஇரண்டு உடையதுஓர் மண்டிலம்
கட்டிய மண்டிலம் பதினொன்று போக்கி
வந்த முறையின் வழிமுறை வழாமல்
அந்தர கொட்டுடன் அடங்கிய பின்னர்
மீத்திறம் படாமை வக்காணம் வகுத்து
பாற்பட நின்ற பாலை பண்மேல்
நான்கின் ஒரீஇய நன்கனம் அறிந்து
மூன்றுஅளந்து ஒன்று கொட்டி அதனை
ஐந்துமண் டிலத்தால் கூடை போக்கி
வந்தவா ரம்வழி மயங்கிய பின்றை
ஆறும் நாலும் அம்முறை போக்கி
கூறிய ஐந்தின் கொள்கை போல
பின்னையும் அம்முறை பேரிய பின்றை
பொன்இயல் பூங்கொடி புரிந்துடன் வகுத்தென
நாட்டிய நன்னு஡ல் நன்குகடை பிடித்து
காட்டினள் ஆதலின் காவல் வேந்தன்
இலைப்பூங் கோதை இயல்பினில் வழாமை
தலைக்கோல் எய்தி தலைஅரங்கு ஏறி
விதிமுறை கொள்கையின் ஆயிரத்து எண்கழஞ்சு
ஒருமுறை யாக பெற்றனள் அதுவே
நூறுபத்து அடுக்கி எட்டுக்கடை நிறுத்த
வீறுஉயர் பசும்பொன் பெறுவதுஇம் மாலை
மாலை வாங்குநர் சாலும்நம் கொடிக்குஎன
மான்அமர் நோக்கிஓர் கூனிகை கொடுத்து
நகர நம்பியர் திரிதரு மறுகில்
பகர்வனர் போல்வதோர் பான்மையின் நிறுத்த
மாமலர் நெடுங்கண் மாதவி மாலை
கோவலன் வாங்கி கூனி தன்னொடு
மணமனை புக்கு மாதவி தன்னொடு
அணைவுறு வைகலின் அயர்ந்தனன் மயங்கி
விடுதல் அறியா விருப்பினன் ஆயினன்
வடுநீங்கு சிறப்பின்தன் மனையகம் மறந்துஎன்
வெண்பா
எண்ணும் எழுத்தும் இயல்ஐந்தும் பண்நான்கும்
பண்ணின்ற கூத்து பதினொன்றும் மண்ணின்மேல்
போக்கினாள் பூம்புகார பொற்றொடி மாதவிதன்
வாக்கினால் ஆடரங்கில் வந்து
அந்திமாலை சிறப்புசெய் காதை
நிலைமண்டில ஆசிரியப்பா
விரிகதிர் பரப்பி உலகம்முழுது ஆண்ட
ஒருதனி திகிரி உரவோன் காணேன்
அங்கண் வானத்து அணிநிலா விரிக்கும்
திங்கள்அம் செல்வன் யாண்டுஉளன் கொல்என
திசைமுகம் பசந்து செம்மலர கண்கள்

முழுநீர் வார முழுமெயும் பனித்து
திரைநீர் ஆடை இருநில மடந்தை
அரைசுகெடுத்து அலம்வரும் அல்லற் காலை
கறைகெழு குடிகள் கைதலை வைப்ப
அறைபோகு குடிகளொடு ஒருதிறம் பற்றி
வலம்படு தானை மன்னர் இல்வழி
புலம்பட இறுத்த விருந்தின் மன்னரின்
தாழ்துணை துறந்தோர் தனித்துயர் எய்த
காதலர புணர்ந்தோர் களிமகிழ்வு எய்த
குழல்வளர் முல்லையில் கோவலர் தம்மொடு
மழலை தும்பி வாய்வைத்து ஊத
அறுகால் குறும்புஎறிந்து அரும்புபொதி வாசம்
சிறுகால் செல்வன் மறுகில் தூற்ற
எல்வளை மகளிர் மணிவிளக்கு எடுப்ப
மல்லல் மூதூர் மாலைவந்து இருத்தென
இளையர் ஆயினும் பகைஅரசு கடியும்
செருமாண் தென்னர் குலமுதல் ஆகலின்
அந்திவா னத்து வெண்பிறை தோன்றி
புன்கண் மாலை குறும்புஎறிந்து ஓட்டி
பான்மையில் திரியாது பால்கதிர் பரப்பி
மீன்அரசு ஆண்ட வெள்ளி விளக்கத்து
இல்வளர் முல்லையொடு மல்லிகை அவிழ்ந்த
பல்பூஞ் சேக்கை பள்ளியுள் பொலிந்து
செந்துகிர கோவை சென்றுஏந்து அல்குல்
அம்துகில் மேகலை அசைந்தன வருந்த
நிலவுப்பயன் கொள்ளும் நெடுநிலா முற்றத்து
கலவியும் புலவியும் காதலற்கு அளித்துஆங்கு
ஆர்வ நெஞ்சமொடு கோவலற்கு எதிரி
கோலம் கொண்ட மாதவி அன்றியும்
குடதிசை மருங்கின் வெள்அயிர் தன்னொடு
குணதிசை மருங்கின் கார்அகில் துறந்து
வடமலை பிறந்த வான்கேழ் வட்டத்து
தென்மலை பிறந்த சந்தனம் மறுக
தாமரை கொழுமுறி தாதுபடு செழுமலர
காமரு குவளை கழுநீர் மாமலர
பைந்தளிர படலை பருஉக்காழ் ஆரம்
சுந்தர சுண்ண துகளொடு அளைஇ
சிந்துபு பரிந்த செழும்பூஞ் சேக்கை
மந்தமா ருதத்து மயங்கினர் மலிந்துஆங்கு
ஆவியங் கொழுநர் அகலத்து ஒடுங்கி
காவிஅம் கண்ணார் களித்துயில் எய்த
அம்செஞ் சீறடி அணிசிலம்பு ஒழிய
மென்துகில் அல்குல் மேகலை நீங
கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள்
மங்கல அணியின் பிறிதுஅணி மகிழாள்
கொடுங்குழை துறந்து வடிந்துவீழ் காதினள்
திங்கள் வாள்முகம் சிறுவியர்ப்பு இரி
செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மற
பவள வாள்நுதல் திலகம் இழப்ப
தவள வாள்நகை கோவலன் இழப்ப
மைஇருங் கூந்தல் நெய்அணி மறப்ப
கையறு நெஞ்சத்து கண்ணகி அன்றியும்
காதலர பிரிந்த மாதர் நோதக
ஊதுஉலை குருகின் உயிர்த்தனர் ஒடுங்கி
வேனில் பள்ளி மேவாது கழிந்து
கூதிர பள்ளி குறுங்கண் அடைத்து
மலயத்து ஆரமும் மணிமுத்து
அலர்முலை ஆகத்து அடையாது வருந
தாழி குவளையொடு தண்செங் கழுநீர்
வீழ்பூஞ் சேக்கை மேவாது கழி
துணைபுணர் அன்ன து஡வியிற் செறித்த
இணைஅணை மேம்பட திருந்துதுயில் பெறாஅது
உடைப்பெருங் கொழுநரோடு ஊடல் காலத்து
இடைக்குமிழ் எறிந்து கடைக்குழை ஓட்டி
கலங்கா உள்ளம் கலங கடைசிவந்து
விலங்கிநிமிர் நெடுங்கண் புலம்புமுத்து உறைப்ப
அன்னம் மெல்நடை நன்னீர பொய்கை
ஆம்பல் நாறும் தேம்பொதி நறுவிரை
தாமரை செவ்வா தண்அறல் கூந்தல்
பாண்வாய் வண்டு நோதிறம் பாட
காண்வரு குவளை கண்மலர் விழி
புள்வாய் முரசமொடு பொறிமயிர் வாரணத்து
முள்வா சங்கம் முறைமுறை ஆர்ப்ப
உரவுநீர பரப்பின் ஊர்த்துயில் எடுப்பி
இரவு தலைப்பெயரும் வைகறை காறும்
அரைஇருள் யாமத்தும் பகலும் துஞ்சான்
விரைமலர் வாளியொடு கருப்புவில் ஏந்தி
மகர வெல்கொடி மைந்தன் திரிதர
நகரம் காவல் நனிசிற ததுஎன்
வெண்பா
கூடினார் பால்நிழலா கூடார்ப்பால் வெய்தா
காவலன் வெண்குடைபோல் காட்டிற்றே கூடிய
மாதவிக்கும் கண்ணகிக்கும் வான்ஊர் மதிவிரிந்து
போதுஅவிழ்க்கும் கங்குல் பொழுது
இந்திர விழவு ஊர் எடுத்த காதை
நிலைமண்டில ஆசிரியப்பா
அலைநீர் ஆடை மலைமுலை ஆகத்து
ஆர பேரியாற்று மாரி கூந்தல்
கண்அகன் பரப்பின் மண்ணக மடந்தை
புதைஇருள் படாஅம் போக நீக்கி
உடைய மால்வரை உச்சி தோன்றி

உலகுவிளங்கு அவிர்ஒளி மலர்கதிர் பரப்பி
வேயா மாடமும் வியன்கல இருக்கையும்
மான்கண் காதலர் மாளிகை இடங்களும்
கயவாய் மருங்கில் காண்போர தடுக்கும்
பயன்அறிவு அறியா யவனர் இருக்கையும்
கலம்தரு திருவின் புலம்பெயர் மாக்கள்
கலந்துஇருந்து உறையும் இலங்குநீர் வரைப்பும்
வண்ணமும் சுண்ணமும் தண்நறுஞ் சாந்தமும்
பூவும் புகையும் மேவிய விரையும்
பகர்வனர் திரிதரு நகர வீதியும்
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டும் நுண்வினை காருகர் இருக்கையும்
தூசும் துகிரும் ஆரமும் அகிலும்
மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும்
அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா
வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும்
பால்வகை தெரிந்த பகுதி பண்டமொடு
கூலம் குவித்த கூல வீதியும்
காழியர் கூவியர் கள்நொடை யாட்டியர்
மீன்விலை பரதவர் வெள்உப்பு பகருநர்
பாசவர் வாசவர் பல்நிண விலைஞரொடு
ஓசுநர் செறிந்த ஊன்மலி இருக்கையும்
கஞ்ச காரரும் செம்புசெய் குநரும்
மரங்கொல் தச்சரும் கருங்கை கொல்லரும்
கண்ணுள் வினைஞரும் மண்ஈ டாளரும்
பொன்செய் கொல்லரும் நன்கலம் தருநரும்
துன்ன காரரும் தோலின் துன்னரும்
கிழியினும் கிடையினும் தொழில்பல பெருக்கி
பழுதுஇல் செய்வினை பால்கெழு மாக்களும்
குழலினும் யாழினும் குரல்முதல் ஏழும்
வழுஇன்றி இசைத்து வழித்திறம் காட்டும்
அரும்பெறல் மரபின் பெரும்பாண் இருக்கையும்
சிறுகுறுங் கைவினை பிறர்வினை யாளரொடு
மறுஇன்றி விளங்கும் மருவூர பாக்கமும்
கோவியன் வீதியும் கொடித்தேர்
பீடிகை தெருவும் பெருங்குடி வாணிகர்
மாட மறுகும் மறையோர் இருக்கையும்
வீழ்குடி உழவரொடு விளங்கிய கொள்கை
ஆயுள் வேதரும் கால கணிதரும்
பால்வகை தெரிந்த பன்முறை இருக்கையும்
திருமணி குயிற்றுநர் சிறந்த கொள்கையோடு
அணிவளை போழுநர் அகன்பெரு வீதியும்
சூதர் மாகதர் வேதா ளிகரொடு
நாழிகை கணக்கர் நலம்பெறு கண்ணுளர்
காவல் கணிகையர் ஆடல் கூத்தியர்
பூவிலை மடந்தையர் ஏவல் சிலதியர்
பயில்தொழில் குயிலுவர் பன்முறை கருவியர்
நகைவே ழம்பரொடு வகைதெரி இருக்கையும்
கடும்பரி கடவுநர் களிற்றின் பாகர்
நெடுந்தேர் ஊருநர் கடுங்கண் மறவர்
இருந்துபுறம் சுற்றிய பெரும்பாய் இருக்கையும்
பீடுகெழு சிறப்பின் பெரியோர் மல்கிய
பாடல்சால் சிறப்பின் பட்டின பாக்கமும்
இருபெரு வேந்தர் முனையிடம் போல
இருபால் பகுதியின் இடைநிலம் ஆகிய
கடைகால் யாத்த மிடைமர சோலை
கொடுப்போர் ஓதையும் கொள்வோர்
நடுக்குஇன்றி நிலைஇய நாள்அங் காடியில்
சித்திரை சித்திர திங்கள் சேர்ந்தென
வெற்றிவேல் மன்னற்கு உற்றதை ஒழிக்க என
தேவர் கோமான் ஏவலின் போந்த
காவல் பூதத்து கடைகெழு பீடிகை
புழுக்கலும் நோலையும் விழுக்குஉடை மடையும்
பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து
துணங்கையர் குரவையர் அணங்குஎழுந்து ஆடி
பெருநில மன்னன் இருநிலம் அடங்கலும்
பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரக்க என வாழ்த்தி
மாதர கோலத்து வலவையின் உரைக்கும்
மூதிற் பெண்டிர் ஓதையின் பெயர
மருவூர் மருங்கின் மறம்கொள் வீரரும்
பட்டின மருங்கின் படைகெழு மாக்களும்
முந்த சென்று முழுப்பலி பீடிகை
வெந்திறல் மன்னற்கு உற்றதை ஒழிக்கவென
பலிக்கொடை புரிந்தோர் வலிக்குவரம்பு ஆகவென
கல்உமிழ் கவணினர் கழிப்பிணி கறைத்தோல்
பல்வேல் பரப்பினர் மெய்உற தீண்டி
ஆர்த்து களம்கொண்டோ ர் ஆர்அமர் அழுவத்து
சூர்த்து கடைசிவந்த சுடுனோக்கு கருந்தலை
வெற்றி வேந்தன் கொற்றம் கொள்கவென
நற்பலி பீடிகை நலம்கொள வைத்துஆங்கு
உயிர்ப்பலி உண்ணும் உருமுக்குரல் முழக்கத்து
மயிர்க்கண் முரசொடு வான்பலி ஊட்டி
இருநில மருங்கின் பொருநரை பெறாஅ
செருவெங் காதலின் திருமா வளவன்
வாளும் குடையும் மயிர்க்கண் முரசும்
நாளொடு பெயர்த்து நண்ணார பெறுகஇம்
மண்ணக மருங்கின்என் வலிகெழு தோள்என
புண்ணி திசைமுகம் போகிய அந்நாள்
அசைவுஇல் ஊக்கத்து நசைபிறக்கு ஒழி
பகைவில கியதுஇ பயம்கெழு மலைஎன
இமையவர் உறையும் சிமை பிடர்த்தலை
கொடுவரி ஒற்றி கொள்கையின் பெயர்வோற்கு
மாநீர் வேலி வச்சிர நன்னாட்டு
கோன்இறை கொடுத்த கொற்ற பந்தரும்
மகதநன் நாட்டு வாள்வாய் வேந்தன்
பகைபுறத்து கொடுத்த பட்டிமண் டபமும்
அவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த
நிவந்துஓங்கு மரபின் தோரண வாயிலும்
பொன்னினும் மணியினும் புனைந்தன ஆயினும்
நுண்வினை கம்மியர் காணா மரபின
துயர்நீங்கு சிறப்பின்அவர் தொல்லோர் உதவிக்கு
மயன்விதித்து கொடுத்த மரபின இவைதாம்
ஒருங்குடன் புணர்ந்துஆங்கு உயர்ந்தோர் ஏத்தும்
அரும்பெறல் மரபின் மண்டபம் அன்றியும்
வம்ப மாக்கள் தம்பெயர் பொறித்த
கண்ணெழுத்து படுத்த எண்ணு பல்பொதி
கடைமுக வாயிலும் கருந்தாழ காவலும்
உடையோர் காவலும் ஒரீஇய ஆகி
கட்போர் உளர்எனின் கடுப்ப தலைஏற்றி
கொட்பின் அல்லது கொடுத்தல் ஈயாது
உள்ளுநர பனிக்கும் வெள்ளிடை மன்றமும்
கூனும் குறளும் ஊமும் செவிடும்
அழுகுமெய் யாளரும் முழுகினர் ஆடி
பழுதுஇல் காட்சி நன்னிறம் பெற்று
வலம்செயா கழியும் இலஞ்சி மன்றமும்
வஞ்சம் உண்டு மயல்பகை உற்றோர்
நஞ்சம் உண்டு நடுங்குதுயர் உற்றோர்
அழல்வாய் நாகத்து ஆர்எயிறு அழுந்தினர்
கழல்கண் கூளி கடுநவை பட்டோ ர்
சுழல வந்து தொழத்துயர் நீங்கும்
நிழல்கால் நெடுங்கல் நின்ற மன்றமும்
தவம்மறைந்து ஒழுகும் தன்மை இலாளர்
அவம்மறைந்து ஒழுகும் அலவல் பெண்டிர்
அறைபோகு அமைச்சர் பிறர்மனை நயப்போர்
பொய்க்கரி யாளர் புறங்கூற் றாளர்என்
கைக்கொள் பாசத்து கைப்படு வோர்என
காதம் நான்கும் கடுங்குரல் எடுப்பி
பூதம் புடைத்துஉணும் பூத சதுக்கமும்
அரைசுகோல் கோடினும் அறம்கூறு அவையத்து
உரைநூல் கோடி ஒருதிறம் பற்றினும்
நாவொடு நவிலாது நவைநீர் உகுத்து
பாவைநின்று அழுஉம் பாவை மன்றமும்
மெய்வகை உணர்ந்த விழுமியோர் ஏத்தும்
ஐவகை மன்றத்தும் அரும்பலி உறீஇ
வச்சிர கோட்டத்து மணம்கெழு முரசம்
கச்சை யானை பிடர்த்தலை ஏற்றி
வால்வெண் களிற்றுஅரசு வயங்கிய கோட்டத்து
கால்கோள் விழவின் கடைநிலை சாற்றி
தங்கிய கொள்கை தருநிலை கோட்டத்து
மங்கல நெடுங்கொடி வான்உற எடுத்து
மரகத மணியொடு வயிரம் குயிற்றி
பவள திரள்கால் பைம்பொன் வேதிகை
நெடுநிலை மாளிகை கடைமுகத்து யாங்கணும்
கிம்புரி பகுவா கிளர்முத்து ஒழுக்கத்து
மங்கலம் பொறித்த மகர வாசிகை
தோரணம் நிலைஇய தோம்அறு பசும்பொன்
பூரண கும்பத்து பொலிந்த பாலிகை
பாவை விளக்கு பசும்பொன் படாகை
தூமயிர கவரி சுந்தர சுண்ணத்து
மேவிய கொள்கை வீதியில் செறிந்துஆங்கு
ஐம்பெருங் குழுவும் எண்பேர் ஆயமும்
அரச குமரரும் பரத
கவர்ப்பரி புரவியர் களிற்றின் தொகுதியர்
இவர்ப்பரி தேரினர் இயைந்துஒருங்கு ஈண்டி
அரைசுமேம் படீஇய அகனிலை மருங்கில்
உரைசால் மன்னன் கொற்றம் கொள்கென
மாஇரு ஞாலத்து மன்உயிர் காக்கும்
ஆயிரத்து ஓர்எட்டு அரசுதலை கொண்ட
தண்நறுங் காவிரி தாதுமலி பெருந்துறை
புண்ணிய நல்நீர் பொன்குடத்து ஏந்தி
மண்ணகம் மருள வானகம் வியப்ப
விண்ணவர் தலைவனை விழுநீர் ஆட்டி
பிறவா யாக்கை பெரியோன் கோயிலும்
அறுமுக செவ்வேள் அணிதிகழ் கோயிலும்
வால்வளை மேனி வாலியோன் கோயிலும்
நீல மேனி நெடியோன் கோயிலும்
மாலை வெண்குடை மன்னவன் கோயிலும்
மாமுது முதல்வன் வாய்மையின் வழாஅ
நான்மறை மரபின் தீமுறை ஒருபால்
நால்வகை தேவரும் மூவறு கணங்களும்
பால்வகை தெரிந்த பகுதி தோற்றத்து
வேறுவேறு கடவுளர் சாறுசிறந்து ஒருபால்
அறவோர் பள்ளியும் அறன்ஓம் படையும்
புறநிலை கோட்டத்து புண்ணி தானமும்
திறவோர் உரைக்கும் செயல்சிறந்து ஒருபால்
கொடித்தேர் வேந்தனொடு கூடா மன்னர்
அடித்தளை நீக்க அருள்சிறந்து ஒருபால்
கண்ணு ளாளர் கருவி குயிலுவர்
பண்யாழ புலவர் பாடல் பாணரொடு
எண்அருஞ் சிறப்பின் இசைசிறந்து ஒருபால்
முழவுக்கண் துயிலாது முடுக்கரும் வீதியும்
விழவுக்களி சிறந்த வியலுள் ஆங்கண்
காதல் கொழுநனை பிரிந்துஅலர் எய்தா
மாதர கொடுங்குழை மாதவி தன்னொடு
இல்வளர் முல்லை மல்லிகை மயிலை
தாழி குவளை சூழ்செங் கழுநீர்
பயில்பூங் கோதை பிணையலிற் பொலிந்து
கா களிமகிழ்வு எய்தி காமர்
பூம்பொதி நறுவிரை பொழில்ஆட்டு அமர்ந்து
நாள்மகிழ் இருக்கை நாள்அங் காடியில்
பூமலி கானத்து புதுமணம் புக்கு
புகையும் சாந்தும் புலராது சிறந்து
நகையாடு ஆயத்து நன்மொழி திளைத்து
குரல்வா பாணரொடு நகர பரத்தரொடு
திரிதரு மரபின் கோவலன் போல
இளிவாய் வண்டினொடு இன்இள வேனிலொடு
மலய மாருதம் திரிதரு மறுகில்
கருமுகில் சுமந்து குறுமுயல் ஒழித்துஆங்கு
இருகருங் கயலொடு இடைக்குமிழ் எழுதி
அங்கண் வானத்து அரவுப்பகை அஞ்சி
திங்களும் ஈண்டு திரிதலும் உண்டுகொல்
நீர்வாய் திங்கள் நீள்நிலத்து அமுதின்
சீர்வாய் துவலை திருநீர் மாந்தி
மீன்ஏற்று கொடியோன் மெய்பெற வளர்த்த
வான வல்லி வருதலும் உண்டுகொல்
இருநில மன்னற்கு பெருவளம் காட்ட
திருமகள் புகுந்ததுஇ செழும்பதி ஆம்என
எரிநிறத்து இலவமும் முல்லையும் அன்றியும்
கருநெடுங் குவளையும் குமிழும் பூத்துஆங்கு
உள்வரி கோலத்து உறுதுணை தேடி
கள்ள கமலம் திரிதலும் உண்டுகொல்
மன்னவன் செங்கோல் மறுத்தல் அஞ்சி
பல்உயிர் பருகும் பகுவா கூற்றம்
ஆண்மையில் திரிந்துதன் அருந்தொழில் திரியாது
நாண்உடை கோலத்து நகைமுகம் கோட்டி
பண்மொழி நரம்பின் திவவுயாழ் மிழற்றி
பெண்மையில் திரியும் பெற்றியும் உண்டுஎன
உருவி லாளன் ஒருபெருஞ் சேனை
இகல்அமர் ஆட்டி எதிர்நின்று விலக்கிஅவர்
எழுதுவரி கோலம் முழுமெயும் உறீஇ
விருந்தொடு புக்க பெருந்தோள் கணவரொடு
உடன்உறைவு மரீஇ ஒழுக்கொடு புணர்ந்த
வடமீன் கற்பின் மனையுறை மகளிர்
மாதர்வாள் முகத்து மணித்தோட்டு குவளை
போது புறங்கொடுத்து போகிய செங்கடை
விருந்தின் தீர்ந்திலது ஆயின் யாவதும்
மருந்தும் தரும்கொல்இம் மாநில வரைப்புஎன
கையற்று நடுங்கும் நல்வினை நடுநாள்
உள்அகம் நறுந்தாது உறைப்பமீது அழிந்து
கள்உக நடுங்கும் கழுநீர் போல
கண்ணகி கருங்கணும் மாதவி செங்கணும்
உள்நிறை கரந்துஅகத்து ஒளித்துநீர் உகுத்தன
எண்ணுமுறை இடத்தினும் வலத்தினும் துடித்தன
விண்ணவர் கோமான் விழவுநாள் அகத்துஎன்
கடலாடு காதை
நிலைமண்டில ஆசிரியப்பா
வெள்ளி மால்வரை வியன்பெருஞ் சேடி
கள்அவிழ் பூம்பொழில் கா கடவுட்கு
கருங்கயல் நெடுங்கண் காதலி தன்னொடு
விருந்தாட்டு அயரும்ஓர் விஞ்சை வீரன்
தென்திசை மருங்கின்ஓர் செழும்பதி தன்னுள்

இந்திர விழவுகொண்டு எடுக்கும்நாள் இதுஎன
கடுவிசை அவுணர் கணம்கொண்டு ஈண்டி
கொடுவரி ஊக்கத்து கோநகர் காத்த
தொடுகழல் மன்னற்கு தொலைந்தனர் ஆகி
நெஞ்சுஇருள் கூர நிகர்த்துமேல் விட்ட
வஞ்சம் பெயர்த்த மாபெரும் பூதம்
திருந்துவேல் அண்ணற்கு தேவர்கோன் ஏவ
இருந்துபலி உண்ணும் இடனும் காண்குதும்
அமரா பதிகாத்து அமரனிற் பெற்று
தமரில் தந்து தகைசால் சிறப்பின்
பொய்வகை இன்றி பூமியில் புணர்த்த
ஐவகை மன்றத்து அமைதியும் காண்குதும்
நாரதன் வீணை நயம்தெரி பாடலும்
தோரிய மடந்தை வாரம் பாடலும்
ஆயிரம் கண்ணோன் செவியகம் நிறைய
நாடகம் உருப்பசி நல்காள் ஆகி
மங்கலம் இழப்ப வீணை மண்மிசை
தங்குக இவள்என சாபம் பெற்ற
மங்கை மாதவி வழிமுதல் தோன்றிய
அங்குஅரவு அல்குல் ஆடலும் காண்குதும்
துவர்இதழ செவ்வா துடிஇடை யோயே
அமரர் தலைவனை வணங்குதும் யாம்என
சிமையத்து இமையமும் செழுநீர கங்கையும்
உஞ்சையம் பதியும் விஞ்சத்து அடவியும்
வேங்கட மலையும் தாங்கா விளையுள்
காவிரி நாடும் காட்டி பின்னர
பூவிரி படப்பை புகார்மருங்கு எய்தி
சொல்லிய முறைமையில் தொழுதனன் காட்டி
மல்லல் மூதூர் மகிழ்விழா காண்போன்
மாயோன் பாணியும் வருண பூதர்
நால்வகை பாணியும் நலம்பெறு கொள்கை
வான்ஊர் மதியமும் பாடி பின்னர
சீர்இயல் பொலிய நீர்அல நீங்க
பாரதி ஆடிய அரங்கத்து
திரிபுரம் எரி தேவர் வேண்ட
எரிமுக பேர்அம்பு ஏவல் கேட்ப
உமையவள் ஒருதிறன் ஆக ஓங்கிய
இமையவன் ஆடிய கொடுகொட்டி ஆடலும்
தேர்முன் நின்ற திசைமுகன் காண
பாரதி ஆடிய வியன்பாண்ட ரங்கமும்
கஞ்சன் வஞ்சம் கடத்தற் காக
அஞ்சன வண்ணன் ஆடிய ஆடலுள்
அல்லி தொகுதியும் அவுணன் கடந்த
மல்லின் ஆடலும் மாக்கடல் நடுவண்
நீர்த்திரை அரங்கத்து நிகர்த்துமுன் நின்ற
சூர்த்திறம் கடந்தோன் ஆடிய துடியும்
படைவீழ்த்து அவுணர் பையுள் எய்த
குடைவீழ்த்து அவர்முன் ஆடிய குடையும்
வாணன் பேரூர் மறுகிடை நடந்து
நீள்நிலம் அளந்தோன் ஆடிய குடமும்
ஆண்மை திரிந்த பெண்மை கோலத்து
காமன் ஆடிய பேடி ஆடலும்
காய்சின அவுணர் கடுந்தொழில் பொறாஅள்
மாயவள் ஆடிய மரக்கால் ஆடலும்
செருவெம் கோலம் அவுணர் நீங்க
திருவின் செய்யோள் ஆடிய பாவையும்
வயல்உழை நின்று வடக்கு வாயிலுள்
அயிராணி மடந்தை ஆடிய கடையமும்
அவரவர் அணியுடன் கொள்கையின்
நிலையும் படிதமும் நீங்கா மரபின்
பதினோர் ஆடலும் பாட்டின் பகுதியும்
விதிமாண் கொள்கையின் விளங காணாய்
தாதுஅவிழ் பூம்பொழில் இருந்துயான் கூறிய
மாதவி மரபின் இவள்என
காதலிக்கு உரைத்து கண்டுமகிழ்வு எய்திய
மேதகு சிறப்பின் விஞ்சையன் அன்றியும்
அந்தரத்து உள்ளோர் அறியா மரபின்
வந்துகாண் குறு஡உம் வானவன் விழவும்
ஆடலும் கோலமும் அணியும் கடைக்கொள
ஊடல் கோலமோடு இருந்தோன் உவ
பத்து துவரினும் ஐந்து விரையினும்
முப்பத்து இருவகை ஓமா லிகையினும்
ஊறின நல்நீர் உரைத்தநெய் வாசம்
நாறுஇருங் கூந்தல் நலம்பெற ஆட்டி
புகையில் புலர்த்திய பூமென் கூந்தலை
வகைதொறும் மான்மத கொழுஞ்சேறு ஊட்டி
அலத்தகம் ஊட்டிய அம்செஞ் சீறடி
நலத்தகு மெல்விரல் நல்அணி செறீஇ
பரியகம் நூபுரம் பாடகம் சதங்கை
அரியகம் காலுக்கு அமைவுற அணிந்து
குறங்கு செறிதிரள் குறங்கினில் செறித்து
பிறங்கிய முத்தரை முப்பத்து இருகாழ்
நிறம்கிளர் பூந்துகில் நீர்மையின் உடீஇ
காமர் கண்டிகை தன்னொடு பின்னிய
தூமணி தோள்வளை தோளுக்கு அணிந்து
மத்தக மணியொடு வயிரம் கட்டிய
சித்திர சூடகம் செம்பொன் கைவளை
பரியகம் வால்வளை பவழ பல்வளை
அரிமயிர் முன்கைக்கு அமைவுற அணிந்து
வாளை பகுவாய் வணக்குஉறு மோதிரம்
கேழ்கிளர் செங்கேழ் கிளர்மணி மோதிரம்
வாங்குவில் வயிரத்து மரக தாள்செறி
காந்தள் மெல்விரல் கரப்ப அணிந்து
சங்கிலி நுண்தொடர் பூண்ஞான் புனைவினை
அம்கழுத்து அகவயின் ஆரமோடு அணிந்து
கயிற்கடை ஒழுகிய காமர் தூமணி
செயத்தகு கோவையின் சிறுபுறம் மறைத்துஆங்கு
இந்திர நீலத்து இடைஇடை திரண்ட
சந்திர பாணி தகைபெறு கடிப்பிணை
அங்காது அகவயின் அழகுற அணிந்து
தெய்வ உத்தியொடு செழுநீர் வலம்புரி
தொய்யகம் புல்லகம் தொடர்ந்த தலைக்குஅணி
மைஈர் ஓதிக்கு மாண்புற அணிந்து
கூடலும் ஊடலும் கோவலற்கு அளித்து
பாடுஅமை சேக்கை பள்ளியுள் இருந்தோள்
உருகெழு மூது஡ர் உவவுத்தலை வந்தென
பெருநீர் போகும் இரியல் மாக்களொடு
மடல்அவிழ் கானல் கடல்விளை யாட்டு
காண்டல் விருப்பொடு வேண்டினள் ஆகி
பொய்கை தாமரை புள்வாய் புலம்ப
வைகறை யாமம் வாரணம் காட்ட
வெள்ளி விளக்கம் நள்இருள் கடி
தார்அணி மார்பனொடு பேர்அணி அணிந்து
வான வண்கையன் அத்திரி ஏற
மான்அமர் நோக்கியும் வையம் ஏறி
கோடிபல அடுக்கிய கொழுநிதி குப்பை
மாடமலி மறுகின் பீடிகை தெருவின்
மலர்அணி விளக்கத்து மணிவிளக்கு எடுத்துஆங்கு
அலர்க்கொடி அறுகும் நெல்லும் வீசி
மங்கல தாசியர் தம்கலன் ஒலிப்ப
இருபுடை மருங்கினும் திரிவனர் பெயரும்
திருமகள் இருக்கை செவ்வனம் கழிந்து
மகர வாரி வளம்தந்து ஓங்கிய
நகர வீதி நடுவண் போகி
கலம்தரு திருவின் புலம்பெயர் மாக்கள்
வேலை வாலுகத்து விரிதிரை பரப்பில்
கூல மறுகில் கொடிஎடுத்து நுவலும்
மாலை சேரி மருங்குசென்று எய்தி
வண்ணமும் சாந்தும் மலரும் சுண்ணமும்
பண்ணி பகுதியும் பகர்வோர் விளக்கமும்
செய்வினை கம்மியர் கைவினை விளக்கமும்
காழியர் மோதகத்து ஊழ்உறு விளக்கமும்
கூவியர் கார்அகல் குடக்கால் விளக்கமும்
நொடைநவில் மகடூஉ கடைகெழு விளக்கமும்
இடைஇடை மீன்விலை பகர்வோர் விளக்கமும்
இலங்குநீர் வரைப்பின் கலங்கரை விளக்கமும்
விலங்குவலை பரதவர் மீன்திமில் விளக்கமும்
பொழிபெயர் தேஎத்தர் ஒழியா விளக்கமும்
கழிபெரும் பண்டம் காவலர் விளக்கமும்
எண்ணுவரம்பு அறியா இயைந்துஒருங்கு ஈண்டி
இடிக்கலப்பு அன்ன ஈர்அயில் மருங்கில்
கடிப்பகை காணும் காட்சியது ஆகிய
விரைமலர தாமரை வீங்குநீர பரப்பின்
மருத வேலியின் மாண்புற தோன்றும்
கைதை வேலி நெய்தல்அம் கானல்
பொய்தல் ஆயமொடு பூங்கொடி பொருந்தி
நிரைநிரை எடுத்த புரைதீர் காட்சிய
மலைப்பல் தாரமும் கடல்பல்
வளம்தலை மயங்கிய துளங்குகல இருக்கை
அரசுஇளங் குமரரும் உரிமை சுற்றமும்
பரத குமரரும் பல்வேறு ஆயமும்
ஆடுகள மகளிரும் பாடுகள
தோடுகொள் மருங்கின் சூழ்தரல் எழினியும்
விண்பொரு பெரும்புகழ கரிகால் வளவன்
தண்பதம் கொள்ளும் தலைநாள் போல
வேறுவேறு கோலத்து கம்பலை
சாறுஅயர் களத்து வீறுபெற தோன்றி
கடற்கரை மெலிக்கும் காவிரி பேரியாற்று
இடம்கெட ஈண்டிய நால்வகை வருணத்து
அடங்கா கம்பலை உடங்குஇயைந்து ஒலிப்ப
கடல்புலவு கடிந்த மடல்பூ தாழை
சிறைசெய் வேலி அகவயின் ஆங்குஓர்
புன்னை நீழல் புதுமணல் பரப்பில்
ஓவிய எழினி சூழஉடன் போக்கி
விதானித்து படுத்த வெண்கால் அமளிமிசை
வருந்துபு நின்ற வசந்த மாலைகை
திருந்துகோல் நல்லியாழ் செவ்வனம் வாங்கி
கோவலன் தன்னொடும் கொள்கையின் இருந்தனள்
மாமலர் நெடுங்கண் மாதவி தான்என
வெண்பா
வேலை மடல்தாழை உட்பொதிந்த வெண்தோட்டு
மாலை துயின்ற மணிவண்டு காலை
களிநறவம் தாதுஊ தோன்றிற்றே காமர்
தெளிநிற வெங்கதிரோன் தேர்
கானல் வரி
கட்டுரை
சித்திர படத்துள்புக்கு செழுங்கோட்டின் மலர்புனைந்து
மைத்தடங்கண் மணமகளிர் கோலம்போல் வனப்புஎய்தி
பத்தரும் கோடும் ஆணியும் நரம்பும்என்று
இத்திறத்து குற்றம்நீங்கிய யாழ்கையில் தொழுதுவாங்கி
பண்ணல் பரிவட்டணை ஆராய்தல் தைவரல்
கண்ணிய செலவு விளையாட்டு கையூழ்
நண்ணிய குறும்போக்கு என்று நாட்டிய
எண்வகையால் இசைஎழீஇ
பண்வகையால் பரிவுதீர்ந்து
மரகதமணி தாள்செறிந்த மணிக்காந்தள் மெல்விரல்கள்
பயிர்வண்டின் கிளைபோல பல்நரம்பின் மிசைப்படர
வார்தல் வடித்தல் உந்தல் உறழ்தல்
சீருடன் உருட்டல் தெருட்டல் அள்ளல்
ஏர்உடை பட்டடைஎன இசையோர் வகுத்த
எட்டு வகையின் இசைக்கர ணத்து
பட்டவகைதன் செவியின்ஓர்த்து
ஏவலன் பின் பாணி யாதுஎன
கோவலன் கையாழ் நீட்ட அவனும்
காவிரியை நோக்கினவும் கடல்கானல் வரிப்பாணியும்
மாதவிதன் மனம்மகிழ வாசித்தல் தொடங்குமன்
வேறு ஆற்று வரி
திங்கள் மாலை வெண்குடையான்
சென்னி செங்கோல் அதுஒச்சி
கங்கை தன்னை புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி
கங்கை தன்னை புணர்ந்தாலும்
புலவாது ஒழிதல் கயல்கண்ணாய்
மங்கை மாதர் பெருங்கற்புஎன்று
அறிந்தேன் வாழி காவேரி

மன்னும் மாலை வெண்குடையான்
வளையா செங்கோல் அதுஓச்சி
கன்னி தன்னை புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி
கன்னி தன்னை புணர்ந்தாலும்
புலவாது ஒழிதல் கயல்கண்ணாய்
மன்னும் மாதர் பெருங்கற்புஎன்று
அறிந்தேன் வாழி காவேரி

உழவர் ஓதை மதகுஓதை
உடைநீர் ஓதை தண்பதங்கொள்
விழவர் ஓதை சிறந்துஆர்ப்ப
நடந்தாய் வாழி காவேரி
விழவர் ஓதை சிறந்துஆர்ப்ப
நடந்த எல்லாம் வாய்காவா
மழவர் ஓதை வளவன்தன்
வளனே வாழி காவேரி

வேறு சார்த்து வரி முகச்சார்த்து
கரியமலர் நெடுங்கண் காரிகைமுன்
கடல்தெய்வம் காட்டி காட்டி
அரியசூள் பொய்த்தார் அறன்இலர்என்று
ஏழையம்யாங்கு அறிகோம் ஐய
விரிகதிர் வெண்மதியும் மீன்கணமும்
ஆம்என்றே விளங்கும் வெள்ளை
புரிவளையும் முத்தும்கண்டு ஆம்பல்
பொதிஅவிழ்க்கும் புகாரே எம்மூர்

காதலர் ஆகி கழிக்கானல்
கையுறைகொண்டு எம்பின் வந்தார்
ஏதிலர் தாமாகி யாம்இரப்ப
நிற்பதையாங்கு அறிகோம் ஐய
மாதரார் கண்ணும் மதிநிழல்நீர்
இணைகொண்டு மலர்ந்த நீல
போதும் அறியாது வண்டுஊச
லாடும் புகாரே எம்மூர்

மோது முதுதிரையால் மொத்துண்டு
போந்துஅசைந்த முரல்வா சங்கம்
மாதர் வரிமணல்மேல் வண்டல்
உழுதுஅழிப்ப மாழ்கி ஐய
கோதை பரிந்துஅசைய மெல்விரலால்
கொண்டுஓச்சும் குவளை மாலை
போது சிறங்கணி போவார்கண்
போகா புகாரே எம்மூர்

வேறு முகம் இல் வரி
துறைமேய் வலம்புரி தோய்ந்து மணல்உழுத
தோற்றம் மாய்வான்
பொறைமலி பூம்புன்னை பூஉதிர்ந்து நுண்தாது
போர்க்கும் கானல்
நிறைமதி வாள்முகத்து நேர்க்கயல்கண் செய்த
உறைமலி உய்யாநோய் ஊர்சுணங்கு மென்முலையே
தீர்க்கும் போலும்

கானல் வரி
நிணம்கொள் புலால்உணங்கல் நின்றுபுள் ஓப்புதல்
தலைக்கீடு
கணம்கொள் வண்டுஆர்த்து உலாம்கன்னி நறுஞாழல்
கையில் ஏந்தி
மணம்கமழ் பூங்கானல் மன்னிமற்று ஆண்டுஓர்
அணங்குஉறையும் என்பது அறியேன் அறிவேனேல்
அடையேன் மன்னோ

வலைவாழ்நர் சேரி வலைஉணங்கும் முன்றில்
மலர்கை ஏந்தி
விலைமீன் உணங்கல் பொருட்டாக வேண்டுஉருவம்
கொண்டு வேறுஓர்
கொலைவேல் நெடுங்கண் கொடுங்கூற்றம் வாழ்வது
அலைநீர்த்தண் கானல் அறியேன் அறிவேனேல்
அடையேன் மன்னோ

வேறு நிலைவரி
கயல்எழுதி வில்எழுதி கார்எழுதி காமன்
செயல்எழுதி தீர்ந்தமுகம் திங்களோ காணீர்
திங்களோ காணீர் திமில்வாழ்நர் சீறூர்க்கே
அம்கண்ஏர் வானத்து அரவுஅஞ்சி வாழ்வதுவே

எறிவளைகள் ஆர்ப்ப இருமருங்கும் ஓடும்
கறைகெழுவேல் கண்ணோ கடுங்கூற்றம் காணீர்
கடுங்கூற்றம் காணீர் கடல்வாழ்நர் சீறூர்க்கே
மடம்கெழுமென் சாயல் மகளா யதுவே

புலவுமீன் வெள்உணங்கல் புள்ஓப்பி கண்டார்க்கு
அலவநோய் செய்யும் அணங்குஇதுவோ காணீர்
அணங்குஇதுவோ காணீர் அடும்புஅமர்த்தண் கானல்
பிணங்குநேர் ஐம்பால்ஓர் பெண்கொண் டதுவே

வேறு முரிவரி
பொழில்தரு நறுமலரே புதுமணம் விரிமணலே
பழுதுஅறு திருமொழியே பணைஇள வனமுலையே
முழுமதி புரைமுகமே முரிபுரு வில்இணையே
எழுதுஅரு மின்இடையே எனைஇடர் செய்தவையே

திரைவிரி தருதுறையே திருமணல் விரிஇடமே
விரைவிரி நறுமலரே மிடைதரு பொழில்இடமே
மருவிரி புரிகுழலே மதிபுரை திருமுகமே
இருகயல் இணைவிழியே எனைஇடர் செய்தவையே

வளைவளர் தருதுறையே மணம்விரி தருபொழிலே
தளைஅவிழ் நறுமலரே தனிஅவள் திரிஇடமே
முளைவளர் இளநகையே முழுமதி புரைமுகமே
இளையவள் இணைமுலையே எனைஇடர் செய்தவையே

வேறு திணை நிலைவரி
கடல்புக்கு உயிர்க்கொன்று வாழ்வர்நின் ஐயர்
உடல்புக்கு உயிர்க்கொன்று வாழ்வைமன் நீயும்
மிடல்புக்கு அடங்காத வெம்முலையோ பாரம்
இடர்புக்கு இடுகும் இடைஇழவல் கண்டாய்

கொடுங்கண் வலையால் உயிர்க்கொல்வான் நுந்தை
நெடுங்கண் வலையால் உயிர்க்கொல்வை மன்நீயும்
வடம்கொள் முலையால் மழைமின்னு போல
நுடங்கி உகுமென் நுசுப்புஇழவல் காண்டாய்

ஓடும் திமில்கொண்டு உயிர்க்கொள்வர் நின்ஐயர்
கோடும் புருவத்து உயிர்க்கொல்வை மன்நீயும்
பீடும் பிறர்எவ்வம் பாராய் முலைசுமந்து
வாடும் சிறுமென் மருங்குஇழவல் கண்டாய்

வேறு
பவள உலக்கை கையால் பற்றி
தவள முத்தம் குறுவாள் செங்கண்
தவள முத்தம் குறுவாள் செங்கண்
குவளை அல்ல கொடிய

புன்னை நீழல் புலவு திரைவாய்
அன்னம் நடப்ப நடப்பாள் செங்கண்
அன்னம் நடப்ப நடப்பாள் செங்கண்
கொன்னே வெய்ய கூற்றம்

கள்வாய் நீலம் கையின் ஏந்தி
புள்வாய் உணங்கல் கடிவாள் செங்கண்
புள்வாய் உணங்கல் கடிவாள் செங்கண்
வெள்வேல் அல்ல வெய்ய

வேறு
சேரல் மடஅன்னம் நடைஒவ்வாய்
சேரல் மடஅன்னம் நடைஒவ்வாய்
ஊர்திரை நீர்வேலி உழக்கி திரிவாள்பின்
சேரல் மடஅன்னம் நடைஒவ்வாய்

கட்டுரை
ஆங்கு கானல்வரி பாடல்கேட்ட
மான்நெடுங்கண் மாதவியும்
மன்னும்ஓர் குறிப்புஉண்டுஇவன்
தன்நிலை மயங்கினான்என
கலவியால் மகிழ்ந்தாள்போல்
புலவியால் யாழ்வாங்கி
தானும்ஓர் குறிப்பினள்போல்
கானல்வரி பாடல்பாணி
நிலத்தெய்வம் வியப்புஎய்த
நீள்நிலத்தோர் மனம்மகிழ
கலத்தொடு புணர்ந்துஅமைந்த
கண்டத்தால் பாடத்தொடங்கும்மன்

வேறு ஆற்று வரி
மருங்கு வண்டு சிறந்துஆர்ப்ப
மணிப்பூ ஆடை அதுபோர்த்து
கருங்க யல்கண் விழித்துஒல்கி
நடந்தாய் வாழி காவேரி
கருங்க யல்கண் விழித்துஒல்கி
நடந்த எல்லாம் நின்கணவன்
திருந்து செங்கோல் வளையாமை
அறிந்தேன் வாழி காவேரி

பூவர் சோலை மயில்ஆல
புரிந்து குயில்கள் இசைபாட
காமர் மாலை அருகுஅசைய
நடந்தாய் வாழி காவேரி
காமர் மாலை அருகுஅசைய
நடந்த எல்லாம் நின்கணவன்
நாம வேலின் திறம்கண்டே
அறிந்தேன் வாழி காவேரி

வாழி அவன்தன் வளநாடு
மகவாய் வளர்க்கும் தாய்ஆகி
ஊழி உய்க்கும் பேர்உதவி
ஒழியாய் வாழி காவேரி
ஊழி உய்க்கும் பேர்உதவி
ஒழியாது ஒழுகல் உயிர்ஓம்பும்
ஆழி ஆள்வான் பகல்வெய்யோன்
அருளே வாழி காவேரி

வேறு சார்த்து வரி
தீங்கதிர் வாள்முகத்தாள் செவ்வாய் மணிமுறுவல் ஒவ்வா வேனும்
வாங்கும்நீர் முத்துஎன்று வைகலும் மால்மகன்போல் வருதிர் ஐய
வீங்குஓதம் தந்து விளங்குஒளிய வெண்முத்தம் விரைசூழ் கானல்
பூங்கோதை கொண்டு விலைஞர்போல் மீளும் புகாரே எம்மூர்

மறையின் மணந்தாரை வன்பரதர் பாக்கத்து மடவார் செங்கை
இறைவளைகள் து஡ற்றுவதை ஏழையம் எங்ஙனம்யாங்கு அறிகோம் ஐய
நிறைமதியும் மீனும் எனஅன்னம் நீள்புன்னை அரும்பி பூத்த
பொறைமலிபூங் கொம்புஏற வண்டுஆம்பல் ஊதும் புகாரே எம்மூர்

உண்டாரை வெல்நறா ஊண்ஓழியா பாக்கத்துள் உறைஒன்று இன்றி
தண்டாநோய் மாதர் தலைத்தருதி என்பதுயாங்கு அறிகோம் ஐய
வண்டல் திரைஅழிப்ப கையால் மணல்முகந்து மதிமேல் நீண்ட
புண்தோய்வேல் நீர்மல்க பரதர் கடல்து஡ர்க்கும் புகாரே எம்மூர்

வேறு திணை நிலைவரி
புணர்த்துணையோடு ஆடும் பொறிஅலவன் நோக்கி
இணர்த்ததையும் பூங்கானல் என்னையும் நோக்கி
உணர்வுஒழி போன ஒலிதிரைநீர சேர்ப்பன்
வணர்சுரி ஐம்பாலோய் வண்ணம் உணரேனால்

தம்முடைய தண்ணளியும் தாமும்தம் மான்தேரும்
எம்மை நினையாது விட்டாரோ விட்டுஅகல்க
அம்மென் இணர அடும்புகாள் அன்னங்காள்
நம்மை மறந்தாரை நாம்மறக்க மாட்டேமால்

புன்கண்கூர் மாலை புலம்பும்என் கண்ணேபோல்
துன்பம் உழவாய் துயில பெறுதியால்
இன்கள்வாய் நெய்தால்நீ எய்தும் கனவினுள்
வன்கணார் கானல் வரக்கண்டு அறிதியோ

புள்இயல்மான் தேர்ஆழி போன வழிஎல்லாம்
தெள்ளுநீர் ஓதம் சிதைத்தாய்மற்று எஞ்செய்கோ
தெள்ளுநீர் ஓதம் சிதைத்தாய்மற்று எம்மோடுஈங்கு
உள்ளாரோடு உள்ளாய் உணராய்மற்று எஞ்செய்கோ

நேர்ந்தநம் காதலர் நேமிநெடு திண்தேர்
ஊர்ந்த வழிசிதைய ஊர்க்கின்ற ஓதமே
பூந்தண் பொழிலே புணர்ந்துஆடும் அன்னமே
ஈர்ந்தண் துறையே இதுதகாது என்னீரே

நேர்ந்தநம் காதலர் நேமிநெடு திண்தேர்
ஊர்ந்த வழிசிதைய ஊர்ந்தாய்வாழி கடல்ஓதம்
ஊர்ந்த வழிசிதைய ஊர்ந்தாய்மற்று எம்மொடு
தீர்ந்தாய்போல் தீர்ந்திலையால் வாழி கடல்ஓதம்

வேறு மயங்கு திணை நிலைவரி
நன்நி திலத்தின் பூண்அணிந்து
நலம்சார் பவள கலைஉடுத்து
செந்நெல் பழன கழனிதொறும்
திரைஉ லாவு கடல்சேர்ப்ப
புன்னை பொதும்பர் மகரத்திண்
கொடியோன் எய்த புதுப்புண்கள்
என்னை காணா வகைமறத்தால்
அன்னை காணின் என்செய்கோ

வாரி தரள நகைசெய்து
வண்செம் பவள வாய்மலர்ந்து
சேரி பரதர் வலைமுன்றில்
திரைஉ லாவு கடல்சேர்ப்ப
மாரி பீரத்து அலர்வண்ணம்
மடவாள் கொள்ள கடவுள்வரைந்து
ஆர்இ கொடுமை செய்தார்என்று
அன்னை அறியின் என்செய்கோ

புலவுற்று இரங்கி அதுநீங்க
பொழில்தண் டலையில் புகுந்துஉதிர்ந்த
கலவை செம்மல் மணம்கமழ
திரைஉ லாவு கடல்சேர்ப்ப
பலஉற்று ஒருநோய் திணியாத
படர்நோய் மடவாள் தனிஉழப்ப
அலவுற்று இரங்கி அறியாநோய்
அன்னை அறியின் என்செய்கோ

வேறு
இளைஇருள் பரந்ததுவே எல்செய்வான் மறைந்தனனே
களைவுஅரும் புலம்புநீர் கண்பொழீஇ உகுத்தனவே
தளைஅவிழ் மலர்க்குழலாய் தணந்தார்நாட்டு உளதாம்கொல்
வளைநெகிழ எரிசிந்தி வந்தஇம் மருள்மாலை

கதிரவன் மறைந்தனனே கார்இருள் பரந்ததுவே
எதிர்மலர் புரைஉண்கண் எவ்வநீர் உகுத்தனவே
புதுமதி புரைமுகத்தாய் போனார்நாட்டு உளதாம்கொல்
மதிஉமிழ்ந்து கதிர்விழுங்கி வந்தஇம் மருள்மாலை

பறவைபாட்டு அடங்கினவே பகல்செய்வான் மறைந்தனனே
நிறைநிலா நோய்கூர நெடுங்கண்நீர் உகுத்தனவே
துறுமலர் அவிழ்குழலாய் துறந்தார்நாட்டு உளதாம்கொல்
மறவையாய் என்உயிர்மேல் வந்தஇம் மருள்மாலை

வேறு சாயல் வரி
கைதை வேலி கழிவாய் வந்துஎம்
பொய்தல் அழித்து போனார் ஒருவர்
பொய்தல் அழித்து போனார் அவர்நம்
மையல் மனம்விட்டு அகல்வார் அல்லர்

கானல் வேலி கழிவாய் வந்து
நீநல்கு என்றே நின்றார் ஒருவர்
நீநல்கு என்றே நின்றார் அவர்நம்
மான்நேர் நோக்கம் மறப்பார் அல்லர்

அன்னம் துணையோடு ஆட கண்டு
நென்னல் நோக்கி நின்றார் ஒருவர்
நென்னல் நோக்கி நின்றார் அவர்நம்
பொன்நேர் சுணங்கிற் போவார் அல்லர்

வேறு முகம் இல் வரி
அடையல் குருகே அடையல்எம் கானல்
அடையல் குருகே அடையல்எம் கானல்
உடைதிரைநீர சேர்ப்பற்கு உறுநோய் உரையாய்
அடையல் குருகே அடையல்எம் கானல்

வேறு காடுரை
ஆங்கனம் பாடிய ஆயிழை பின்னரும்
காந்தள் மெல்விரல் கைக்கிளை சேர்குரல்
தீந்தொடை செவ்வழி பாலை இசைஎழீஇ
பாங்கினில் பாடிஓர் பண்ணும் பெயர்த்தாள்

வேறு முகம் இல் வரி
நுளையர் விளரி நொடிதரும்தீம் பாலை
இளிகிளையில் கொள்ள இறுத்தாயால் மாலை
இளிகிளையில் கொள்ள இறுத்தாய்மன் நீயேல்
கொளைவல்லாய் என்ஆவி கொள்வாழி மாலை

பிரிந்தார் பரிந்துஉரைத்த பேர்அருளின் நீழல்
இருந்துஏங்கி வாழ்வார் உயிர்ப்புறத்தாய் மாலை
உயிர்ப்புறத்தாய் நீஆகில் உள்ஆற்றா வேந்தன்
எயில்புறத்து வேந்தனோடு என்ஆதி மாலை

பையுள்நோய் கூர பகல்செய்வான் போய்வீழ
வையமோ கண்புதைப்ப வந்தாய் மருள்மாலை
மாலைநீ ஆயின் மணந்தார் அவர்ஆயின்
ஞாலமோ நல்கூர ததுவாழி மாலை

வேறு
தீத்துழை வந்தஇ செல்லல் மருள்மாலை
தூக்காது துணிந்தஇ துயர்எஞ்சு கிளவியால்
பூக்கமழ் கனலில் பொய்ச்சூள் பொறுக்க என்று
மாக்கடல் தெய்வம்நின் மலர்அடி வணங்குதும்

வேறு கட்டுரை
எனக்கேட்டு
கானல்வரி யான்பாட தான்ஒன்றின்மேல் மனம்வைத்து
மாயப்பொய் பலகூட்டும் மாயத்தாள் பாடினாள்என
யாழ்இசைமேல் வைத்துத்தன் ஊழ்வினைவந்து உருத்ததுஆகலின்
உவவுஉற்ற திங்கள்முகத்தாளை கவவுக்கை ஞெகிழ்ந்தனனா
பொழுதுஈங்கு கழிந்ததுஆகலின் எழுதும்என்று உடன்எழாது
ஏவலாளர் உடஞ்சூழ கோவலன்தான் போனபின்னர்
தாதுஅவிழ் மலர்ச்சோலை ஓதைஆயத்து ஒலிஅவித்து
கையற்ற நெஞ்சினளாய் வையத்தி னுள்புக்கு
காதலனுடன் அன்றியே மாதவிதன் மனைபுக்காள்
ஆங்கு
மாயிரு ஞாலத்து அரசு தலைவணக்கும்
சூழி யானை சுடர்வாள் செம்பியன்
மாலை வெண்குடை கவிப்ப
ஆழி மால்வரை அகவையா எனவே

வேனில் காதை
நிலைமண்டில ஆசிரியப்பா
நெடியோன் குன்றமும் தொடியோள் பெளவமும்
தமிழ்வரம்பு அறுத்த தண்புனல் நல்நாட்டு
மாட மதுரையும் பீடுஆர் உறந்தையும்
கலிகெழு வஞ்சியும் ஒலிபுனல் புகாரும்
அரைசுவீற் றிருந்த உரைசால் சிறப்பின்

மன்னன் மாரன் மகிழ்துணை ஆகிய
இன்இள வேனில் வந்தனன் இவண்என
வளம்கெழு பொதியில் மாமுனி பயந்த
இளங்கால் து஡தன் இசைத்தனன் ஆதலின்
மகர வெல்கொடி மைந்தன் சேனை
புகர்அறு கோலம் கொள்ளும்என் பதுபோல்
கொடிமிடை சோலை குயிலோன் என்னும்
படையுள் படுவோன் பணிமொழி கூற
மடல்அவிழ் கானல் கடல்விளை யாட்டினுள்
கோவலன் ஊட கூடாது ஏகிய
மாமலர் நெடுங்கண் மாதவி விரும்பி
வான்உற நிவந்த மேல்நிலை மருங்கின்
வேனில் பள்ளி ஏறி மாண்இழை
தென்கடல் முத்தும் தென்மலை சாந்தும்
தன்கடன் இறுக்கும் தன்மைய ஆதலின்
கொங்கை முன்றில் குங்கும வளாகத்து
மைஅறு சிறப்பின் கையுறை ஏந்தி
அதிரா மரபின் யாழ்கை வாங்கி
மதுர கீதம் பாடினள் மயங்கி
ஒன்பான் விருத்தியுள் தலைக்கண் விருத்தி
நன்பால் அமைந்த இருக்கையள் ஆகி
வலக்கை பதாகை கோட்டொடு சேர்த்தி
இடக்கை நால்விரல் மாடகம் தழீஇ
செம்பகை ஆர்ப்பே கூடம் அதிர்வே
வெம்பகை நீக்கும் விரகுளி அறிந்து
பிழையா மரபின் ஈர்ஏழ் கோவையை
உழைமுதல் கைக்கிளை இறுவாய் கட்டி
இணைகிளை பகைநட்பு என்றுஇ நான்கின்
இசைபுணர் குறிநிலை எய்த நோக்கி
குரல்வாய் இளிவா கேட்டனள் அன்றியும்
வரன்முறை மருங்கின் ஐந்தினும் ஏழினும்
உழைமுதல் ஆகவும் உழைஈறு
குரல்முதல் ஆகவும் குரல்ஈறு
அகநிலை மருதமும் புறநிலை
அருகியல் மருதமும் பெருகியல்
நால்வகை சாதியும் நலம்பெற நோக்கி
மூவகை இயக்கமும் முறையுளி கழிப்பி
திறத்து வழிப்படூஉம் தெள்ளிசை கரணத்து
புறத்துஒரு பாணியில் பூங்கொடி மயங்கி
சண்பகம் மாதவி தமாலம் கருமுகை
வெண்பூ மல்லிகை வேரொடு மிடைந்த
அம்செங் கழுநீர் ஆய்இதழ கத்திகை
எதிர்ப்பூஞ் செவ்வி இடைநிலத்து யாத்த
முதிர்பூ தாழை முடங்கல்வெண் தோட்டு
விரைமலர் வாளியின் வியன்நிலம் ஆண்ட
ஒருதனி செங்கோல் ஒருமகன் ஆணையின்
ஒருமுகம் அன்றி உலகுதொழுது இறைஞ்சும்
திருமுகம் போக்கும் செவ்வியள் ஆகி
அலத்த கொழுஞ்சேறு அளைஇ அயலது
பித்திகை கொழுமுகை ஆணி கைக்கொண்டு
மன்உயிர் எல்லாம் மகிழ்துணை புணர்க்கும்
இன்இள வேனில் இளவர சாளன்
அந்தி போதகத்து அரும்பிடர தோன்றிய
திங்கள் செல்வனும் செவ்வியன் அல்லன்
புணர்ந்த மாக்கள் பொழுதுஇடை படுப்பினும்
தணந்த மாக்கள் தம்துணை மறப்பினும்
நறும்பூ வாளியின் நல்உயிர் கோடல்
இறும்பூது அன்றுஅஃது அறிந்தீ மின்என
எண்எண் கலையும் இசைந்துஉடன் போக
பண்ணும் திறனும் புறங்கூறு நாவின்
தளைவாய் அவிழ்ந்த தனிப்படு காமத்து
விளையா மழலையின் விரித்துஉரை எழுதி
பசந்த மேனியள் படர்உறு மாலையின்
வசந்த மாலையை வருகென கூஉ
தூமலர் மாலையின் துணிபொருள் எல்லாம்
கோவலற்கு அளித்து கொணர்க ஈங்குஎன
மாலை வாங்கிய வேல்அரி நெடுங்கண்
கூல மறுகிற் கோவலற்கு அளிப்ப
திலகமும் அளகமும் சிறுகருஞ் சிலையும்
குவளையும் குமிழும் கொவ்வையும் கொண்ட
மாதர் வாள்முகத்து மதைஇய நோக்கமொடு
காதலின் தோன்றிய கண்கூடு வரியும்
புயல்சுமந்து வருந்தி பொழிகதிர் மதியத்து
கயல்உலா திரிதரும் காமர் செவ்வியின்
பாகுபொதி பவளம் திறந்துநிலா உதவிய
நாகுஇள முத்தின் நகைநிலம் காட்டி
வருகென வந்து போகென போகிய
கருநெடுங் கண்ணி காண்வரி கோலமும்
அந்தி மாலை வந்ததற்கு இரங்கி
சிந்தை நோய் கூரும்என் சிறுமை நோக்கி
கிளிபுரை கிளவியும் மடஅன நடையும்
களிமயில் சாயலும் கரந்தனள் ஆகி
செருவேல் நெடுங்கண் சிலதியர் கோலத்து
ஒருதனி வந்த உள்வரி ஆடலும்
சிலம்புவாய் புலம்பவும் மேகலை ஆர்ப்பவும்
கலம்பெறா நுசுப்பினள் காதல் நோக்கமொடு
திறத்துவேறு ஆயஎன் சிறுமை நோக்கியும்
புறத்துநின்று ஆடிய புன்புற வரியும்
கோதையும் குழலும் தாதுசேர் அளகமும்
ஒருகாழ் முத்தமும் திருமுலை தடமும்
மின்இடை வருத்த நன்னுதல் தோன்றி
சிறுகுறு தொழிலியர் மறுமொழி
புணர்ச்சிஉ பொதிந்த கலாம்தரு கிளவியின்
இருபுற மொழிப்பொருள் கேட்டனள் ஆகி
தளர்ந்த சாயல் தகைமென் கூந்தல்
கிளர்ந்துவேறு ஆகிய கிளர்வரி கோலமும்
பிரிந்துஉறை காலத்து பரிந்தனள் ஆகி
என்உறு கிளைகட்கு தன்உறு துயரம்
தேர்ந்துதேர்ந்து உரைத்த தேர்ச்சிவரி அன்றியும்
வண்டுஅலர் கோதை மாலையுள் மயங்கி
கண்டவர்க்கு உரைத்த காட்சி வரியும்
அடுத்துஅடுத்து அவர்முன் மயங்கிய மயக்கமும்
எடுத்துஅவர் தீர்த்த எடுத்துக்கோள் வரியும்
ஆடல் மகளே ஆதலின் ஆயிழை
பாடுபெற் றனஅ பைந்தொடி தனக்குஎன
அணித்தோட்டு திருமுகத்து ஆயிழை எழுதிய
மணித்தோட்டு திருமுகம் மறுத்ததற்கு இரங்கி
வாடிய உள்ளத்து வசந்த மாலை
தோடுஅலர் கோதைக்கு துனைந்துசென்று உரைப்ப
மாலை வாரார் ஆயினும் மாண்இழை
காலைகாண் குவம்என கையறு நெஞ்சமொடு
பூமலர் அமளிமிசை பொருந்தாது வதிந்தனள்
மாமலர் நெடுங்கண் மாதவி தான்என்
வெண்பா
செந்தா மரைவிரி தேமாங் கொழுந்துஒழுக
மைந்தார் அசோகம் மடல்அவிழ கொந்தார்
இளவேனில் வந்ததால் என்ஆம்கொல் இன்று
வளவேல்நற் கண்ணி மனம்
ஊடினீர் எல்லாம் உருஇலான் தன்ஆணை
கூடுமின் என்று குயில்சாற்ற நீடிய
வேனற்பா ணிக்கலந்தாள் மென்பூ திருமுகத்தை
கானற்பா ணிக்குஅலந்தாய் காண்
கனாத்திறம் உரைத்த காதை
கலி வெண்பா
அகநகர் எல்லாம் அரும்புஅவிழ் முல்லை
நிகர்மலர் நெல்லொடு தூஉ பகல்மாய்ந்த
மாலை மணிவிளக்கம் காட்டி இரவிற்குஓர்
கோலம் கொடிஇடையார் தாம்கொள்ள மேல்ஓர்நாள்
மாலதி மாற்றாள் மகவுக்கு பால்அளிக்க

பால்விக்கி பாலகன் தான்சோர மாலதியும்
பார்ப்பா னொடுமனையாள் என்மேல் படாதனவிட்டு
ஏற்பன கூறார்என்று ஏங்கி மகக்கொண்டு
அமரர் தருக்கோட்டம் வெள்யானை கோட்டம்
புகர்வெள்ளை நாகர்தம் கோட்டம் பகல்வாயில்
உச்சி கிழான்கோட்டம் ஊர்க்கோட்டம் வேல்கோட்டம்
வச்சிர கோட்டம் புறம்பணையான் வாழ்கோட்டம்
நிக்கந்த கோட்டம் நிலாக்கோட்டம் புக்குஎங்கும்
தேவிர்காள் எம்உறுநோய் தீர்ம்அன்று மேவிஓர்
பாசண்ட சாத்தற்கு பாடு கிடந்தாளுக்கு
ஏசும் படிஓர் இளங்கொடியாய் ஆசுஇலாய்
செய்தவம் இல்லோர்க்கு தேவர் வரம்கொடார்
பொய்உரையே அன்று பொருள்உரையே கையிற்
படுபிணம்தா என்று பறித்துஅவள்கை கொண்டு
சுடுகாட்டு கோட்டத்து தூங்குஇருளில் சென்றுஆங்கு
இடுபிணம் தின்னும் இடாகினிப்பேய் வாங்கி
மடியகத்து இட்டாள் மகவை இடியுண்ட
மஞ்ஞைபோல் ஏங்கி அழுதாளுக்கு அச்சாத்தன்
அஞ்ஞைநீ ஏங்கி அழல்என்று முன்னை
உயிர்க்குழவி காணாய்என்று அக்குழவி யாய்ஓர்
குயில்பொதும்பர் நீழல் குறுக அயிர்ப்புஇன்றி
மா குழவி எடுத்து மடித்திரைத்து
தாய்கை கொடுத்தாள்அ தையலாள் து஡ய
மறையோன்பின் மாணியாய் வான்பொருள் கேள்வி
துறைபோய் அவர்முடிந்த பின்னர் இறையோனும்
தாயத்தா ரோடும் வழக்குஉரைத்து தந்தைக்கும்
தாயர்க்கும் வேண்டும் கடன்கழித்து மேயநாள்
தேவந்தி என்பாள் மனைவி அவளுக்கு
பூவந்த உண்கண் பொறுக்கென்று மேவித்தன்
மூவா இளநலம் காட்டிஎம் கோட்டத்து
நீவா எனஉரைத்து நீங்குதலும் தூமொழி
ஆர்த்த கணவன் அகன்றனன் போய்எங்கும்
தீர துறைபடிவேன் என்றுஅவனை பேர்த்துஇங்ஙன்
மீட்டு தருவாய் எனஒன்றன் மேல்இட்டு
கோட்டம் வழிபாடு கொண்டிருப்பாள் வாட்டருஞ்சீர
கண்ணகி நல்லாளுக்கு உற்ற குறைஉண்டுஎன்று
எண்ணிய நெஞ்சத்து இனையளாய் நண்ணி
அறுகு சிறுபூளை நெல்லொடு தூஉ சென்று
பெறுக கணவனோடு என்றாள் பெறுகேன்
கடுக்கும்என் நெஞ்சம் கனவினால் என்கை
பிடித்தனன் போய்ஓர் பெரும்பதியுள் பட்டேம்
பட்ட பதியில் படாதது ஒருவார்த்தை
இட்டனர் ஊரார் இடுதேள்இட்டு என்தன்மேல்
கோவலற்கு உற்றதுஓர் தீங்குஎன்று அதுகேட்டு
காவலன் முன்னர்யான் கட்டுரைத்தேன் காவலனோடு
ஊர்க்குஉற்ற தீங்கும்ஒன்று உண்டால் உரையாடேன்
தீக்குற்றம் போலும் செறிதொடீஇ
உற்றேனோடு உற்ற உறுவனொடு யான்உற்ற
நல்திறம் கேட்கின் நகைஆகும் பொற்றொடிஇ
கைத்தாயும் அல்லை கணவற்கு ஒருநோன்பு
பொய்த்தாய் பழம்பிறப்பில் போய்க்கெடுக உய்த்து
கடலொடு காவிரி சென்றுஅலைக்கும் முன்றில்
மடல்அவிழ் நெய்தல்அம் கானல் தடம்உள
சோமகுண்டம் சூரிய குண்டம் துறைமூழ்கி
காமவேள் கோட்டம் தொழுதார் கணவரொடு
தாம்இன் புறுவர் உலகத்து தையலார்
போகம்செய் பூமியினும் போய்ப்பிறப்பர் யாம்ஒருநாள்
ஆடுதும் என்ற அணிஇழைக்குஅவ் ஆய்இழையாள்
பீடுஅன்று எனஇருந்த பின்னரே நீடிய
காவலன் போலும் கடைத்தலையான் வந்துநம்
கோவலன் என்றாள்ஓர் குற்றிளையாள் கோவலனும்
பாடுஅமை சேக்கையுள் புக்குத்தன் பைந்தொடி
வாடிய மேனி வருத்தம்கண்டு யாவும்
சலம்புணர் கொள்கை சலதியொடு ஆடி
குலம்தரு வான்பொருள் குன்றம் தொலைந்த
இலம்பாடு நாணு தரும்எனக்கு என்ன
நலம்கேழ் முறுவல் நகைமுகம் காட்டி
சிலம்புஉள கொண்மின் எனச்சேயிழை கேள்இ
சிலம்பு முதலாக சென்ற கலனொடு
உலந்தபொருள் ஈட்டுதல் உற்றேன் மலர்ந்தசீர்
மாட மதுரை யகத்துச்சென்று என்னோடுஇங்கு
ஏடுஅலர் கோதாய் எழுகென்று நீடி
வினைகடை கூட்ட வியம்கொண்டான் கங்குல்
கனைசுடர் கால்சீயா முன்
வெண்பா
காதலி கண்ட கனவு கருநெடுங்கண்
மாதவிதன் சொல்லை வறிதாக்க மூதை
வினைகடை கூட்ட வியம்கொண்டான் கங்குல்
கனைசுடர் கால்சீயா முன்
நாடுகாண் காதை
நிலைமண்டில ஆசிரியப்பா
வான்கண் விழியா வைகறை யாமத்து
மீன்திகழ் விசும்பின் வெண்மதி நீங
கார்இருள் நின்ற கடைநாள் கங்குல்
ஊழ்வினை கடைஇ உள்ளம் துரப்ப
ஏழக தகரும் எகின கவரியும்

தூமயிர் அன்னமும் துணைஎன திரியும்
தாளொடு குயின்ற தகைசால் சிறப்பின்
நீள்நெடு வாயில் நெடுங்கடை கழிந்துஆங்கு
அணிகிளர் அரவின் அறிதுயில் அமர்ந்த
மணிவண்ணன் கோட்டம் வலம்செயா கழிந்து
பணைஐந்து ஓங்கிய பாசிலை போதி
அணிதிகழ் நீழல் அறவோன் திருமொழி
அந்தர சாரிகள் அறைந்தனர் சாற்றும்
இந்திர விகாரம் ஏழுடன் போகி
புலவுஊண் துறந்து பொய்யா விரதத்து
அவலம் நீத்துஅறிந்து அடங்கிய கொள்கை
மெய்வகை உணர்ந்த விழுமியோர் குழீஇய
ஐவகை நின்ற அருக தானத்து
சந்தி ஐந்தும் தம்முடன் கூடி
வந்துதலை மயங்கிய வான்பெரு மன்றத்து
பொலம்பூம் பிண்டி நலம்கிளர் கொழுநிழல்
நீர்அணி விழவினும் நெடுந்தேர்
சாரணர் வருஉம் தகுதிஉண் டாம்என
உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட
இலகுஒளி சிலாதலம் தொழுதுவலம் கொண்டு
மலைதலை கொண்ட பேர்யாறு போலும்
உலக இடைகழி ஒருங்குடன் நீங்கி
கலையி லாளன் காமர் வேனிலொடு
மலைய மாருதம் மன்னவற்கு இறுக்கும்
பன்மலர் அடுக்கிய நன்மர பந்தர்
இலவ திகையின் எயில்புறம் போகி
தாழ்பொழில் உடுத்த தண்பத பெருவழி
காவிரி வாயில் கடைமுகம் கழிந்து
குடதிசை கொண்டு கொழும்புனல் காவிரி
வடபெருங் கோட்டு மலர்ப்பொழில் நுழைந்து
காவதம் கடந்து கவுந்தி பள்ளி
பூமர பொதும்பர பொருந்தி ஆங்கண்
இறும்கொடி நுசுப்போடு இனைந்துஅடி வருந்தி
நறும்பல் கூந்தல் குறும்பல் உயிர்த்து
முதிரா கிளவியின் முள்எயிறு இலங்க
மதுரை மூது஡ர் யாதுஎன வினவ
ஆறுஐங் காதம்நம் அகல்நாட்டு உம்பர்
நாறுஐங் கூந்தல் நணித்துஎன நக்கு
தேமொழி தன்னொடும் சிறையகத்து இருந்த
காவுந்தி ஐயையை கண்டுஅடி தொழலும்
உருவும் குலனும் உயர்ப்பேர் ஒழுக்கமும்
பெருமகன் திருமொழி பிறழா நோன்பும்
உடையீர் என்னோ உறுக ணாளரின்
கடைகழிந்து இங்ஙனம் கருதிய வாறுஎன
உரையாட்டு இல்லை உறுதவ தீர்யான்
மதுரை மூது஡ர் வரைபொருள் வேட்கையேன்
பாடக சீறடி பரல்பகை உழவா
காடுஇடை யிட்ட நாடுநீர் கழிதற்கு
அரிதுஇவள் செவ்வி அறிகுநர் யாரோ
உரியது அன்றுஈங்கு ஒழிகஎன ஒழியீர்
மறஉரை நீத்த மாசுஅறு கேள்வியர்
அறஉரை கேட்டுஆங்கு அறிவனை
தென்தமிழ் நன்னாட்டு தீதுதீர் மதுரைக்கு
ஒன்றிய உள்ளம் உடையேன் ஆகலின்
போதுவல் யானும் போதுமின் என்ற
காவுந்தி ஐயையை கைதொழுது ஏத்தி
அடிகள் நீரே அருளிதிர் ஆயின்இ
தொடிவளை தோளி துயர்த்தீர தேன்என
கோவலன் காணாய் கொண்ட இந்நெறிக்கு
ஏதம் தருவன யாங்கும்பல கேண்மோ
வெயில்நிறம் பொறாஅ மெல்இயல் கொண்டு
பயில்பூ தண்டலை படர்குவம் எனினே
மண்பக வீழ்ந்த கிழங்குஅகழ் குழியை
சண்பகம் நிறைத்த தாதுசோர் பொங்கர்
பொய்யறை படுத்து போற்றா மாக்கட்கு
கையறு துன்பம் காட்டினும் காட்டும்
உதிர்ப்பூஞ் செம்மலின் ஒதுங்கினர் கழிவோர்
முதிர்த்தேம் பழம்பகை முட்டினும் முட்டும்
மஞ்சளும் இஞ்சியும் மயங்குஅரில் வலயத்து
செஞ்சுளை பலவின் பரல்பகை உறுக்கும்
கயல்நெடுங் கண்ணி காதல் கேள்வ
வயல்உழை படர்க்குவம் எனினே ஆங்கு
பூநாறு இலஞ்சி பொருகயல் ஓட்டி
நீர்நாய் கெளவிய நெடும்புற வாளை
மலங்குமிளிர் செறுவின் விலங்க பாயின்
கலங்கலும் உண்டுஇ காரிகை ஆங்கண்
கரும்பில் தொடுத்த பெருந்தேன் சிதைந்து
சுரும்புசூழ் பொய்கை தூநீர் கலக்கும்
அடங்கா வேட்கையின் அறிவுஅஞர் எய்தி
குடங்கையின் கொண்டு கொள்ளவும் கூடும்
குறுநர் இட்ட குவளைஅம் போதொடு
பொறிவரி வண்டினம் பொருந்திய கிடக்கை
நெறிசெல் வருத்தத்து நீர்அஞர் எய்தி
அறியாது அடிஆங்கு இடுதலும் கூடும்
எறிநீர் அடைகரை இயக்கம் தன்னில்
பொறிமாண் அலவனும் நந்தும் போற்றாது
ஊழ்அடி ஒதுக்கத்து உறுநோய் காணின்
தாழ்தரு துன்பம் தாங்கவும் ஒண்ணா
வயலும் சோலையும் அல்லது யாங்கணும்
அயல்பட கிடந்த நெறிஆங்கு இல்லை
நெறிஇருங் குஞ்சி நீவெய் யோளொடு
குறிஅறிந்து அவைஅவை குறுகாது ஓம்புஎன
தோம்அறு கடிஞையும் சுவல்மேல் அறுவையும்
காவுந்தி ஐயைகை பீலியும் கொண்டு
மொழிப்பொருள் தெய்வம் வழித்துணை ஆகென
பழிப்புஅருஞ் சிறப்பின் வழிப்படர் புரிந்தோர்
கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும்
விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்
கால்பொரு நிவப்பின் கடுங்குரல் ஏற்றொடும்
சூல்முதிர் கொண்மூ பெயல்வளம் சுரப்ப
குடமலை பிறந்த கொழும்பல் தாரமொடு
கடல்வளன் எதிர கயவாய் நெரிக்கும்
காவிரி புதுநீர கடுவரல் வாய்த்தலை
ஓஇறந்து ஒலிக்கும் ஒலியே அல்லது
ஆம்பியும் கிழாரும் வீங்குஇசை ஏத்தமும்
ஓங்குநீர பிழாவும் ஒலித்தல் செல்லா
கழனி செந்நெல் கரும்புசூழ் மருங்கில்
பழன தாமரை பைம்பூங் கானத்து
கம்பு கோழியும் கனைகுரல் நாரையும்
செங்கால் அன்னமும் பைங்கால் கொக்கும்
கான கோழியும் நீர்நிற காக்கையும்
உள்ளும் ஊரலும் புள்ளும் புதாவும்
வெல்போர் வேந்தர் முனையிடம் போல
பல்வேறு குழூஉக்குரல் பரந்த ஓதையும்
உழாஅ நுண்தொளி உள்புக்கு அழுந்திய
கழாஅமயிர் யாக்கை செங்கண் காரான்
சொரிபுறம் உரிஞ்ச புரிஞெகிழ்பு உற்ற
குமரி கூட்டில் கொழும்பல் உணவு
கவரி செந்நெல் காய்த்தலை சொரி
கருங்கை வினைஞரும் களமருங் கூடி
ஒருங்குநின்று ஆர்க்கும் ஒலியே அன்றியும்
கடிமலர் களைந்து முடிநாறு அழுத்தி
தொடிவளை தோளும் ஆகமும் தோய்ந்து
சேறுஆடு கோலமொடு வீறுபெற தோன்றி
செங்கயல் நெடுங்கண் சின்மொழி கடைசியர்
வெங்கள் தொலைச்சிய விருந்திற் பாணியும்
கொழுங்கொடி அறுகையும் குவளையும் கலந்து
விளங்குகதிர தொடுத்த விரியல் சூட்டி
பார்உடை பனர்ப்போல் பழிச்சினர் கைதொழ
ஏரொடு நின்றோர் ஏர்மங் கலமும்
அரிந்துகால் குவித்தோர் அரிகடா வுறுத்த
பெருஞ்செ நெல்லின் முகவை பாட்டும்
தெண்கிணை பொருநர் செருக்குடன் எடுத்த
மண்கனை முழவின் மகிழ்இசை ஓதையும்
பேர்யாற்று அடைகரை நீரிற் கேட்டுஆங்கு
ஆர்வ நெஞ்சமோடு அவலம் கொள்ளார்
உழைப்புலி கொடித்தேர் உரவோன் கொற்றமொடு
மழைக்கரு உயிர்க்கும் அழல்திகழ் அட்டில்
மறையோர் ஆக்கிய ஆவூதி நறும்புகை
இறைஉயர் மாடம் எங்கணும் போர்த்து
மஞ்சுசூழ் மலையின் மாண தோன்றும்
மங்கல மறையோர் இருக்கை அன்றியும்
பரப்புநீர காவிரி பாவைதன் புதல்வர்
இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும்
உழவிடை விளைப்போர் பழவிறல் ஊர்களும்
பொங்கழி ஆலை புகையொடும் பரந்து
மங்குல் வானத்து மலையின் தோன்றும்
ஊர்இடை யிட்ட நாடுஉடன் கண்டு
காவதம் அல்லது கடவார் ஆகி
பன்னாள் தங்கி செல்நாள் ஒருநாள்
ஆற்றுவீ அரங்கத்து வீற்றுவீற்று ஆகி
குரங்குஅமை உடுத்த மரம்பயில் அடுக்கத்து
வானவர் உறையும் பூநாறு ஒருசிறை
பட்டின பாக்கம் விட்டனர் நீங்கா
பெரும்பெயர் ஐயர் ஒருங்குடன் இட்ட
இலங்குஒளி சிலாதலம் மேல்இரு தருளி
பெருமகன் அதிசயம் பிறழா வாய்மை
தருமம் சாற்றும் சாரணர் தோன்ற
பண்டை தொல்வினை பாறுக என்றே
கண்டுஅறி கவுந்தியொடு கால்உற வீழ்ந்தோர்
வந்த காரணம் வயங்கிய கொள்கை
சிந்தை விளக்கில் தெரிந்தோன் ஆயினும்
ஆர்வமும் செற்றமும் அகல நீக்கிய
வீரன் ஆகலின் விழுமம் கொள்ளான்
கழிப்பெருஞ் சிறப்பின் கவுந்தி காணாய்
ஒழிகென ஒழியாது ஊட்டும் வல்வினை
இட்ட வித்தின் எதிர்வந்து எய்தி
ஒட்டுங் காலை ஒழிக்கவும் ஒண்ணா
கடுங்கால் நெடுவெளி இடும்சுடர் என்ன
ஒருங்குடன் நில்லா உடம்பிடை உயிர்கள்
அறிவன் அறவோன் அறிவுவரம்பு இகந்தோன்
செறிவன் சினேந்திரன் சித்தன் பகவன்
தரும முதல்வன் தலைவன் தருமன்
பொருளன் புனிதன் புராணன் புலவன்
சினவரன் தேவன் சிவகதி நாயகன்
பரமன் குணவதன் பரத்தில் ஒளியோன்
தத்துவன் சாதுவன் சாரணன் காரணன்
சித்தன் பெரியவன் செம்மல் திகழ்ஒளி
இறைவன் குரவன் இயல்குணன் எம்கோன்
குறைவில் புகழோன் குணப்பெருங் கோமான்
சங்கரன் ஈசன் சயம்பு சதுமுகன்
அங்கம் பயந்தோன் அருகன் அருள்முனி
பண்ணவன் எண்குணன் பாத்தில் பழம்பொருள்
விண்ணவன் வேத முதல்வன் விளங்குஓளி
ஓதிய வேதத்து ஒளிஉறின் அல்லது
போதார் பிறவி பொதிஅறை யோர்என
சாரணர் வாய்மொழி கேட்டு தவமுதல்
காவுந்தி யும்தன் கைதலை மேற்கொண்டு
ஒருமூன்று அவித்தோன் ஓதிய ஞான
திருமொழிக்கு அல்லதுஎன் செவியகம் திறவா
காமனை வென்றோன் ஆயிரத்து எட்டு
நாமம் அல்லது நவிலாது என்நா
ஐவரை வென்றோன் அடியிணை அல்லது
கைவரை காணினும் காணா என்கண்
அருள்அறம் பூண்டோ ன் திருமெய்க்கு அல்லதுஎன்
பொருள்இல் யாக்கை பூமியில் பொருந்தாது
அருகர் அறவன் அறிவோற்கு அல்லதுஎன்
இருகையும் கூடி ஒருவழி குவியா
மலர்மிசை நடந்தோன் மலர்அடி அல்லதுஎன்
தலைமிசை உச்சி தான்அணி பொறாஅது
இறுதிஇல் இன்பத்து இறைமொழிக்கு அல்லது
மறுதிர ஓதிஎன் மனம்புடை பெயராது
என்றவன் இசைமொழி ஏத்த கேட்டுஅதற்கு
ஒன்றிய மாதவர் உயர்மிசை ஓங்கி
நிவந்துஆங்கு ஒருமுழம் நீள்நிலம் நீங்கி
பவம்தரு பாசம் கவுந்தி கெடுகென்று
அந்தரம் ஆறா படர்வோர தொழுது
பந்தம் அறுகென பணிந்தனர் போந்து
கார்அணி பூம்பொழில் காவிரி பேர்யாற்று
நீர்அணி மாடத்து நெடுந்துறை போகி
மாதரும் கணவனும் மாதவ தாட்டியும்
தீதுதீர் நி தென்கரை எய்தி
போதுசூழ் கிடக்கைஓர் பூம்பொழில் இருந்துழி
பரத்தை வறுமொழி யாளனொடு
கொங்குஅலர் பூம்பொழில் குறுகினர் சென்றோர்
காமனும் தேவியும் போலும் ஈங்குஇவர்
ஆர்என கேட்டுஈங்கு அறிகுவம் என்றே
நோற்றுஉணல் யாக்கை நொசிதவ தீர்உடன்
ஆற்றுவழி பட்டோ ர் ஆர்என வினவஎன்
மக்கள் காணீர் மானிட யாக்கையர்
பக்கம் நீங்குமின் பரிபுலம் பினர்என
உடன்வயிற் றோர்க்கள் ஒருங்குடன் வாழ்க்கை
கடவதும் உண்டோ கற்றறி தீர்என
தீமொழி கேட்டு செவியகம் புதைத்து
காதலன் முன்னர கண்ணகி நடுங்க
எள்ளுநர் போலும்இவர் என்பூங் கோதையை
முள்உடை காட்டின் முதுநரி ஆகென
கவுந்தி இட்ட தவம்தரு சாபம்
கட்டியது ஆதலின் பட்டதை அறியார்
குறுநரி நெடுங்குரல் கூவிளி கேட்டு
நறுமலர கோதையும் நம்பியும் நடுங்கி
நெறியின் நீங்கியோர் நீர்அல கூறினும்
அறியா மைஎன்று அறியல் வேண்டும்
செய்தவ தீர்நும் திருமுன் பிழைத்தோர்க்கு
உய்தி காலம் உரையீ ரோஎன
அறியா மையின்இன்று இழிபிறப்பு உற்றோர்
உறையூர் நொச்சி ஒருபுடை ஒதுங்கி
பன்னிரு மதியம் படர்நோய் உழந்தபின்
முன்னை உருவம் பெறுகஈங்கு இவர்என
சாபவிடை செய்து தவப்பெருஞ் சிறப்பின்
காவுந்தி ஐயையும் தேவியும் கணவனும்
முறம்செவி வாரணம் முஞ்சமம் முருக்கிய
புறஞ்சிறை வாரணம் புக்கனர் புரிந்துஎன்
கட்டுரை
முடிஉடை வேந்தர் மூவ ருள்ளும்
தொடிவிளங்கு தடக்கை சோழர்க்குலத்து உதித்தோர்
அறனும் மறனும் ஆற்றலும் அவர்தம்
பழவிறல் மூது஡ர பண்புமேம் படுதலும்
விழவுமலி சிறப்பும் விண்ணவர் வரவும்

ஒடியா இன்பத்து அவர்உறை நாட்டு
குடியும் கூழின் பெருக்கமும் அவர்தம்
தெய்வ காவிரி தீதுதீர் சிறப்பும்
பொய்யா வானம் புதுப்புனல் பொழிதலும்
அரங்கும் ஆடலும் தூக்கும் வரியும்
பரந்துஇசை எய்திய பாரதி விருத்தியும்
திணைநிலை வரியும் இணைநிலை
அணைவுற கிடந்த யாழின் தொகுதியும்
ஈர்ஏழ் சகோடமும் இடநிலை பாலையும்
தாரத்து ஆக்கமும் தான்தெரி பண்ணும்
ஊரக தேரும் ஒளியுடை பாணியும்
என்றுஇவை அனைத்தும் பிறபொருள் வைப்போடு
ஒன்றி தோன்றும் தனிக்கோள் நிலைமையும்
ஒரு பரிசா நோக்கி கிடந்த
புகார காண்டம் முற்றிற்று
வெண்பா
காலை அரும்பி மலரும் கதிரவனும்
மாலை மதியமும்போல் வாழியரோ வேலை
அகழால் அமைந்த அவனிக்கு மாலை
புகழால் அமைந்த புகார்
புகார காண்டம் முற்றிற்று








சிலப்பதிகாரம் மதுரை காண்டம்
இளங்கோ அடிகள் இயற்றியது















©







சிலப்பதிகாரம் மதுரை காண்டம்
மின்னுரையாக்கம் திரு பொ ரா சிவகுமார் தொரோண்டோ ஒண் கனடா
பிழை திருத்தம் திரு பா கா இளங்கோ ஈரோடு தமிழ்நாடு இந்தியா
உயருரை குறிமொழியாக்கம் திரு கு கல்யாணசுந்தரம்
இம்மின்னுரை தகுதர தமிழெழுத்துக்களிலாக்க பெற்றது எனவே இதனை படிக்க தங்களுக்கு
தகுதர தமிழ்
எழுத்துரு தேவை பல்வேறு கணனி இயக்குதளங்களுக்கு தகுதர எழுத்துக்கள் இலவசமா
கிடைக்கின்றன
இவற்றை பின்வரும் வலையகங்களில் ஏதாவதொன்றிலிருந்து தங்களால் தருவிக்கவியலும்



மேலதிக உதவிக்கு தொடர்புகொள்ள வேண்டிய முகவரி

© மதுரை திட்டம்
மதுரை திட்டம் தமிழ செவ்விலக்கியங்களை மின்னுரைவடிவில் தளையின்றி ஊடுவலையின் மூலம்
பரப்பும் ஒரு திறந்த தன்னார்வ உலகளாவிய முனைப்பாகும் இத்திட்டம் குறித்த மேலதிக
விபரங்களை பின்வரும் வலையகத்திற் காணலாம்
இம்மின்னுரையை இம்முகப்பு பக்கத்திற்கு மாற்றமின்றி தாங்கள் எவ்வழியிலும்
பிரதியாக்கமோ மறுவௌியீடோ செய்யலாம்

இளங்கோ அடிகள் இயற்றிய சிலப்பதிகாரம்
மதுரை காண்டம்
உள்ளுரை
காடுகாண் காதை
வேட்டுவ வரி
புரஞ்சேரியிறுத்த காதை
ஊர்காண் காதை
அடைக்கல காதை
கொலைக்கள காதை
ஆய்ச்சியர் குரவை
துன்ப மாலை
ஊர்சூழ் வரி
வழக்குரை காதை
வஞ்சின மாலை
அழற்படு காதை
கட்டுரை காதை
கட்டுரை
காடுகாண் காதை
திங்கள்மூன் றடுக்கிய திருமு குடைக்கீழ
செங்கதிர் ஞாயிற்று திகழொளி சிறந்து
கோதைதாழ் பிண்டி கொழுநிழ லிருந்த
ஆதியில் தோற்ற தறிவனை வணங்கி
கந்தன் பள்ளி கடவுளர கெல்லாம்
அந்தி லரங்க தகன்பொழி லகவயிற்
சாரணர் கூறிய தகைசால் நன்மொழி
மாதவ தாட்டியும் மாண்புற மொழிந்தாங்கு
அன்றவ ருறைவிட தல்கின ரடங்கி
தென்றிசை மருங்கிற் செலவு விருப்புற்று
வைகறை யாமத்து வாரணங் கழிந்து
வெய்யவன் குணதிசை விளங்கி தோன்ற
வளநீர பண்ணையும் வாவியும் பொலிந்ததோர்
இளமர கான திருக்கை புக்குழி
வாழ்க எங்கோ மன்னவர் பெருந்தகை
ஊழிதொ றூழிதொ றுலகங் காக்க
அடியிற் றன்னள வரசர குணர்த்தி
வடிவேல் எறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்து
குமரி கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசை கங்கையும் இமயமுங் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி
திங்க செல்வன் திருக்குலம் விளங்க
செங்கணா யிரத்தோன் திறல்விளங் காரம்
பொங்கொளி மார்பிற் பூண்டோன் வாழி
முடிவளை யுடைத்தோன் முதல்வன் சென்னியென்று
இடியுடை பெருமழை யெய்தா தேக
பிழையா விளையு பெருவளஞ் சுரப்ப
மழைபிணி தாண்ட மன்னவன் வாழ்கென
தீதுதீர் சிறப்பின் தென்னனை வாழ்த்தி
மாமுது மறையோன் வந்திரு தோனை
யாது நும்மூர் ஈங்கென் வரவென
கோவலன் கேட்ப குன்றா சிறப்பின்
மாமறை யாளன் வருபொருள் உரைப்போன்
நீல மேகம் நெடும்பொற் குன்றத்து
பால்விரி தகலாது படிந்தது போல
ஆயிரம் விரித்தெழு தலையுடை அருந்திறற்
பாயற் பள்ளி பலர்தொழு தேத்த
விரிதிரை காவிரி வியன்பெரு துருத்தி
திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும்
வீங்குநீ ரருவி வேங்கட மென்னும்
ஓங்குயர் மலை துச்சி மீமிசை
விரிகதிர் ஞாயிறு திங்களும் விளங்கி
இருமருங் கோங்கிய இடைநிலை தானத்து
மின்னுக்கோடி யுடுத்து விளங்குவிற் பூண்டு
நன்னிற மேகம் நின்றது போல
பகையணங் காழியும் பால்வெண் சங்கமும்
தகைபெறு தாமரை கையி னேந்தி
நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு
பொலம்பூ வாடையிற் பொலிந்து தோன்றிய
செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்
என்கண் காட்டென் றென்னுளங் கவற்ற
வந்தேன் குடமலை மாங்கா டுள்ளேன்
தென்னவன் நாட்டு சிறப்புஞ் செய்கையும்
கண்மணி குளிர்ப்ப கண்டே னாதலின்
வாழ்த்திவ திருந்தேன் இதுவென் வரவென
தீத்திறம் புரிந்தோன் செப்ப கேட்டு
மாமறை முதல்வ மதுரை செந்நெறி
கூறு நீயென கோவலற் குரைக்கும்
கோத்தொழி லாளரொடு கொற்றவன் கோடி
வேத்தியல் இழந்த வியனிலம் போல
வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன்
தானல திருக தன்மையிற் குன்றி
முல்லையுங் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து
நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்து
பாலை யென்பதோர் படிவங் கொள்ளும்
காலை எய்தினிர் காரிகை தன்னுடன்
அறையும் பொறையும் ஆரிடை மயக்கமும்
நிறைநீர் வேலியும் முறைபட கிடந்தஇ
நெடும்பேர் அத்தம் நீந்தி சென்று
கொடும்பை நெடுங்குள கோட்டகம் புக்கால்
பிறைமுடி கண்ணி பெரியோன் ஏந்திய
அறைவா சூல தருநெறி கவர்க்கும்
வலம்பட கிடந்த வழிநீர் துணியின்
அலறுதலை மராமும் உலறுதலை ஓமையும்
பொரியரை உழிஞ்சிலும் புன்முளி மூங்கிலும்
வரிமரல் திரங்கிய கரிபுற கிடக்கையும்
நீர்நசைஇ வேட்கையின் மானின்று விளிக்கும்
கானமும் எயினர் கடமுங் கடந்தால்
ஐவன வெண்ணெலும் அறைக்க கரும்பும்
கொய்பூ தினையும் கொழும்புன வரகும்
காயமும் மஞ்சளும் ஆய்கொடி கவலையும்
வாழையும் கமுகும் தாழ்குலை தெங்கும்
மாவும் பலாவும் சூழடு தோங்கிய
தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும்
அம்மலை வலங்கொண் டகன்பதி செல்லுமின்
அவ்வழி படரீ ராயி னிடத்து
செவ்வழி பண்ணிற் சிறைவண் டரற்றும்
தடந்தாழ் வயலொடு தண்பூங் காவொடு
கடம்பல கிடந்த காடுடன் கழிந்து
திருமால் குன்றத்து செல்குவி ராயின்
பெருமால் கெடுக்கும் பிலமுண் டாங்கு
விண்ணோர் ஏத்தும் வியத்தகு மரபிற்
புண்ணிய சரவணம் பவகா ரணியோடு
இட்ட சித்தி யெனும்பெயர் போகி
விட்டு நீங்கா விளங்கிய பொய்கை
முட்டா சிறப்பின் மூன்றுள வாங்கு
புண்ணிய சரவணம் பொருந்துவி ராயின்
விண்ணவர் கோமான் விழுநூ லெய்துவிர்
பவகா ரணி படி தாடுவி ராயிற்
பவகா ரணத்திற் பழம்பிற பெய்துவிர்
இட்ட சித்தி எய்துவி ராயின்
இட்ட சித்தி எய்துவிர் நீரே
ஆங்கு பிலம்புக வேண்டுதி ராயின்
ஓங்குயர் மலை துயர்ந்தோற் றொழுது
சிந்தையில் அவன்றன் சேவடி வைத்து
வந்தனை மும்முறை மலைவலம் செய்தால்
நிலம்பக வீழ்ந்த சிலம்பாற் றகன்றலை
பொலங்கொடி மின்னிற் புயலைங் கூந்தற்
கடிமல ரவிழ்ந்த கன்னிகா ரத்து
தொடிவளை தோளி ஒருத்தி தோன்றி
இம்மை கின்பமும் மறுமை
இம்மையு மறுமையும் இரண்டும் இன்றியோர்
செம்மையில் நிற்பதுஞ் செப்புமின் நீயிர்இவ்
வரைத்தாள் வாழ்வேன் வரோத்தமை என்பேன்
உரைத்தார குரியேன் உரைத்தீ ராயின்
திருத்த கீர்க்கு திறந்தேன் கதவெனும்
கதவ திறந்தவள் காட்டிய நன்னெறி
புதவம் பலவுள போகிடை கழியன
ஒட்டு புதவமொன் றுண்டதன் உம்பர்
வட்டிகை பூங்கொடி வந்து தோன்றி
இறுதியில் இன்பம் எனக்கீங் குரைத்தாற்
பெறுதிர் போலும்நீர் பேணிய பொருளெனும்
உரையீ ராயினும் உறுகண் செய்யேன்
நெடுவழி புறத்து நீக்குவல் நும்மெனும்
உரைத்தார் உளரெனின் உரைத்த மூன்றின்
கரைப்படு தாங்கு காட்டினள் பெயரும்
அருமறை மருங்கின் ஐந்தினும் எட்டினும்
வருமுறை எழுத்தின் மந்திர மிரண்டும்
ஒருமுறை யாக உளங்கொண் டோதி
வேண்டிய தொன்றின் விரும்பினி ராடிற்
காண்டகு மரபின வல்ல மற்றவை
மற்றவை நினையாது மலைமிசை நின்றோன்
பொற்றா மரைத்தாள் உள்ளம் பொருந்துமின்
உள்ளம் பொருந்துவி ராயின் மற்றவன்
புள்ளணி நீள்கொடி புணர்நிலை தோன்றும்
தோன்றிய பின்னவன் துணைமலர தாளிணை
ஏன்றுதுயர் கெடுக்கும் இன்பம் எய்தி
மாண்புடை மரபின் மதுரை கேகுமின்
காண்டகு பிலத்தின் காட்சி யீதாங்கு
அந்நெறி படரீ ராயின் இடையது
செந்நெறி யாகும் தேம்பொழி லுடுத்த
ஊரிடை யிட்ட காடுபல கடந்தால்
ஆரிடை யுண்டோர் ஆரஞர தெய்வம்
நடுக்கஞ் சாலா நயத்தின் தோன்றி
இடுக்கண் செய்யா தியங்குநர தாங்கும்
மடுத்துடன் கிடக்கும் மதுரை பெருவழி
நீள்நிலங் கடந்த நெடுமுடி அண்ணல்
தாள்தொழு தகையேன் போகுவல் யானென
மாமறை யோன்வாய் வழித்திறம் கேட்ட
காவுந்தி யையையோர் கட்டுரை சொல்லும்
நலம்புரி கொள்கை நான்மறை யாள
பிலம்புக வேண்டும் பெற்றி ஈங்கில்லை
கப்ப திந்திரன் காட்டிய நூலின்
மெய்ப்பா டியற்கையின் விளங காணாய்
இறந்த பிறப்பின் எய்திய வெல்லாம்
பிறந்த பிறப்பிற் காணா யோநீ
வாய்மையின் வழாது மன்னுயி ரோம்புநர்க்கு
யாவது முண்டோ எய்தா அரும்பொருள்
காமுறு தெய்வங் கண்டடி பணிய
நீபோ யாங்களும் நீள்நெறி படர்குதும்
என்றம் மறையோற் கிசைமொழி யுணர்த்தி
குன்றா கொள்கை கோவலன் றன்னுடன்
அன்றை பகலோர் அரும்பதி தங்கி
பின்றையும் அவ்வழி பெயர்ந்துசெல் வழிநா
கருந்தடங் கண்ணியும் கவுந்தி யடிகளும்
வகுந்துசெல் வருத்தத்து வழிமருங் கிருப்ப
இடைநெறி கிடந்த இயவுகொள் மருங்கின்
புடைநெறி போயோர் பொய்கையிற் சென்று
நீர்நசைஇ வேட்கையின் நெடுந்துறை நிற்ப
கானுறை தெய்வம் காதலிற் சென்று
நயந்த காதலின் நல்குவன் இவனென
வயந்த மாலை வடிவில் தோன்றி
கொடிநடு குற்றது போல ஆங்கவன்
அடிமுதல் வீழ்ந்தாங் கருங்கணீர் உகுத்து
வாச மாலையின் எழுதிய மாற்றம்
தீதிலேன் பிழைமொழி செப்பினை யாதலின்
கோவலன் செய்தான் கொடுமையென் றென்முன்
மாதவி மயங்கி வான்துய ருற்று
மேலோ ராயினும் நூலோ
பால்வகை தெரிந்த பகுதியோ ராயினும்
பிணியென கொண்டு பிறக்கி டொழியும்
கணிகையர் வாழ்க்கை கடையே போன்மென
செவ்வரி ஒழுகிய செழுங்கடை மழைக்கண்
வெண்மு துதிர்த்து வெண்ணிலா திகழும்
தண்மு தொருகாழ் தன்கையாற் பரிந்து
துனியுற் றென்னையு துறந்தன ளாதலின்
மதுரை மூதூர் மாநகர போந்தது
எதிர்வழி பட்டோர் எனக்காங் குரைப்ப
சாத்தொடு போந்து தனித்துயர் உழந்தேன்
பாத்தரும் பண்பநின் பணிமொழி யாதென
மயக்கு தெய்வமிவ் வன்கா டுண்டென
வியத்தகு மறையோன் விளம்பின னாதலின்
வஞ்சம் பெயர்க்கும் மந்திர தால்இவ்
ஐஞ்சி லோதியை அறிகுவன் யானென
கோவலன் நாவிற் கூறிய மந்திரம்
பாய்கலை பாவை மந்திர மாதலின்
வனசா ரிணியான் மயக்கஞ் செய்தேன்
புனமயிற் சாயற்கும் புண்ணிய முதல்விக்கும்
என்திறம் உரையா தேகென் றேக
தாமரை பாசடை தண்ணீர் கொணர தாங்கு
அயாவுறு மடந்தை அருந்துயர் தீர்த்து
மீதுசெல் வெங்கதிர் வெம்மையின் தொடங்க
தீதியல் கானஞ் செலவரி தென்று
கோவலன் றன்னொடும் கொடுங்குழை மாதொடும்
மாதவ தாட்டியும் மயங்கதர் அழுவத்து
குரவமும் மரவமும் கோங்கமும் வேங்கையும்
விரவிய பூம்பொழில் விளங்கிய இருக்கை
ஆரிடை தியங்குந ரல்லது
மாரி வளம்பெறா வில்லேர் உழவர்
கூற்றுறழ் முன்பொடு கொடுவில் ஏந்தி
வேற்றுப்புலம் போகிநல் வெற்றங் கொடுத்து
கழிபே ராண்மை கடன்பார திருக்கும்
விழிநுதற் குமரி விண்ணோர் பாவை
மையறு சிறப்பின் வான நாடி
ஐயைதன் கோட்டம் அடைந்தனர் ஆங்கென்
வேட்டுவ வரி
கடுங்கதிர் திருகலின் நடுங்கஞர் எய்தி
ஆறுசெல் வருத்தத்து சீறடி சிவப்ப
நறும்பல் கூந்தல் குறும்பல உயிர தாங்கு
ஐயை கோட்ட தெய்யா வொருசிறை
வருந்துநோய் தணிய இருந்தனர் உப்பால்
வழங்குவில் தடக்கை மறக்குடி தாயத்து
பழங்கட னுற்ற முழங்குவா சாலினி
தெய்வ முற்று மெய்ம்மயிர் நிறுத்து
கையெடு தோச்சி கானவர் வியப்ப
இடுமுள் வேலி எயினர்கூ டுண்ணும்
நடுவூர் மன்ற தடிபெயர தாடி
கல்லென் பேரூர கணநிரை சிறந்தன
வல்வில் எயினர் மன்றுபாழ் பட்டன
மறக்குடி தாயத்து வழிவளஞ் சுரவாது
அறக்குடி போலவி தடங்கினர் எயினரும்
கலையமர் செல்வி கடனுணின் அல்லது
சிலையமர் வென்றி கொடுப்போ ளல்லள்
மட்டுண் வாழ்க்கை வேண்டுதி ராயின்
கட்டுண் மாக்கள் கடந்தரும் எனவாங்கு
இட்டு தலையெண்ணும் எயின ரல்லது
சுட்டு தலைபோகா தொல்குடி குமரியை
சிறுவெள் ளரவின் குருளைநாண் சுற்றி
குறுநெறி கூந்தல் நெடுமுடி கட்டி
இளைசூழ் படப்பை இழுக்கிய வேனத்து
வளைவெண் கோடு பறித்து மற்றது
முளைவெண் திங்க ளென்ன சாத்தி
மறங்கொள் வயப்புலி வாய்பிளந்து பெற்ற
மாலை வெண்பல் தாலிநிரை பூட்டி
வரியும் புள்ளியு மயங்கு வான்புறத்து
உரிவை மேகலை உடீஇ பரிவொடு
கருவில் வாங்கி கையகத்து கொடுத்து
திரிதரு கோட்டு கலைமே லேற்றி
பாவையுங் கிளியு தூவி அஞ்சிறை
கான கோழியும் நீனிற மஞ்ஞையும்
பந்துங் கழங்கு தந்தனர் பரசி
வண்ணமுஞ் சுண்ணமு தண்ணறுஞ் சாந்தமும்
புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும்
பூவும் புகையும் மேவிய விரையும்
ஏவல் எயிற்றியர் ஏந்தினர் பின்வர
ஆறெறி பறையுஞ் சூறை சின்னமும்
கோடும் குழலும் பீடுகெழு மணியும்
கணங்கொண்டு துவைப்ப அணங்குமுன் னிறீஇ
விலைப்பலி உண்ணும் மலர்பலி பீடிகை
கலைப்பரி ஊர்தியை கைதொழு தேத்தி
இணைமலர சீறடி இனைந்தனள் வருந்தி
கணவனோ டிருந்த மணமலி கூந்தலை
இவளோ கொங்க செல்வி குடமலை யாட்டி
தென்றமிழ பாவை செய்த தவக்கொழுந்து
ஒருமா மணியாய் உலகிற் கோங்கிய
திருமா மணியென தெய்வமுற் றுரை
பேதுறவு மொழிந்தனள் மூதறி வாட்டியென்று
அரும்பெறற் கணவன் பெரும்புற தொடுங்கி
விருந்தின் மூரல் அரும்பினள் நிற்ப
மதியின் வெண்தோடு சூடுஞ் சென்னி
நுதல்கிழித்து விழித்த இமையா நாட்டத்து
பவள வாய்ச்சி தவளவாள் நகைச்சி
நஞ்சுண்டு கறுத்த கண்டி வெஞ்சினத்து
அரவுநாண் பூட்டி நெடுமலை வளைத்தோள்
துளையெயிற் றுர கச்சுடை முலைச்சி
வளையுடை கையிற் சூல மேந்தி
கரியின் உரிவை போர தணங் காகிய
அரியின் உரிவை மேகலை யாட்டி
சிலம்புங் கழலும் புலம்புஞ் சீறடி
வலம்படு கொற்றத்து வாய்வா கொற்றவை
இரண்டுவே றுருவில் திரண்டதோள் அவுணன்
தலைமிசை நின்ற தையல் பலர்தொழும்
அமரி குமரி கவுரி சமரி
சூலி நீலி மாலவற் கிளங்கிளை
ஐயை செய்யவள் வெய்யவாள் தடக்கை
பாய்கலை பாவை பைந்தொடி
ஆய்கலை பாவை அருங்கல
தமர்தொழ வந்த குமரி கோலத்து
அமரிளங் குமரியும் அருளினள்
வரியுறு செய்கை வாய்ந்ததா லெனவே
உரைப்பாட்டுமடை
வேறு
நாகம் நாறு நரந்தம் நிரந்தன
ஆவும் ஆரமும் ஓங்கின எங்கணும்
சேவும் மாவும் செறிந்தன கண்ணுதல்
பாகம் ஆளுடை யாள்பலி முன்றிலே
செம்பொன் வேங்கை சொரிந்தன சேயிதழ்
கொம்பர் நல்லில வங்கள் குவிந்தன
பொங்கர் வெண்பொரி சிந்தின புன்கிள
திங்கள் வாழ்சடை யாள்திரு முன்றிலே
மரவம் பாதிரி புன்னை மணங்கமழ்
குரவம் கோங்கம் மலர்ந்தன கொம்பர்மேல்
அரவ வண்டினம் ஆர்த்துடன் யாழ்செய்யும்
திருவ மாற்கிளை யாள்திரு முன்றிலே
வேறு
கொற்றவை கொண்ட அணிகொண்டு நின்றவி
பொற்றொடி மாதர் தவமென்னை கொல்லோ
பொற்றொடி மாதர் பிறந்த குடிப்பிறந்த
விற்றொழில் வேடர் குலனே குலனும்
ஐயை திருவின் அணிகொண்டு நின்றவி
பையர வல்குல் தவமென்னை கொல்லோ
பையர வல்குல் பிறந்த குடிப்பிறந்த
எய்வில் எயினர் குலனே குலனும்
பாய்கலை பாவை அணிகொண்டு நின்றவிவ்
ஆய்தொடி நல்லாள் தவமென்னை கொல்லோ
ஆய்தொடி நல்லாள் பிறந்த குடிப்பிறந்த
வேய்வில் எயினர் குலனே குலனும்
வேறு
ஆனைத்தோல் போர்த்து புலியின் உரியுடுத்து
கான தெருமை கருந்தலைமேல் நின்றாயால்
வானோர் வணங்க மறைமேல் மறையாகி
ஞான கொழுந்தாய் நடுக்கின்றி யேநிற்பாய்
வரிவளைக்கை வாளேந்தி மாமயிடற் செற்று
கரியதிரி கோட்டு கலைமிசைமேல் நின்றாயால்
அரியரன்பூ மேலோன் அகமலர்மேல் மன்னும்
விரிகதிரஞ் சோதி விளக்காகி யேநிற்பாய்
சங்கமும் சக்கரமும் தாமரை கையேந்தி
செங்கண் அரிமால் சினவிடைமேல் நின்றாயால்
கங்கை முடிக்கணிந்த கண்ணுதலோன் பாகத்து
மங்கை உருவாய் மறையேத்த வேநிற்பாய்
வேறு
ஆங்கு
கொன்றையு துளவமும் குழு தொடுத்த
துன்று மலர்ப்பிணையல் தோள்மே லிட்டாங்கு
அசுரர் வாட அமரர காடிய
குமரி கோலத்து கூத்துள் படுமே
வேறு
ஆய்பொன் னரிச்சிலம்பும் சூடகமும் மேகலையும் ஆர்ப்ப வார்ப்ப
மாயஞ்செய் வாளவுணர் வீழநங்கை மரக்கான்மேல் வாளமலை யாடும் போலும்
மாயஞ்செய் வாளவுணர் வீழநங்கை மரக்கான்மேல் வாளமலை யாடுமாயின்
காயாமலர்மேனி யேத்திவானோர் கைபெய் மலர்மாரி காட்டும் போலும்
உட்குடை சீறூ ரொருமகன்ஆ னிரைகொள்ள உற்ற காலை
வெட்சி மலர்புனைய வெள்வா ளுழத்தியும் வேண்டும் போலும்
வெட்சி மலர்புனைய வெள்வா ளுழத்தியும் வேண்டின் வேற்றூர
கட்சியு காரி கடிய குரலிசைத்து காட்டும் போலும்
கள்விலை யாட்டி மறு பொறாமறவன் கைவில் ஏந்தி
புள்ளும் வழிப்படர புல்லார் நிரைகருதி போகும் போலும்
புள்ளும் வழிப்படர புல்லார் நிரை கருதி போகுங் காலை
கொள்ளும் கொடியெடுத்து கொற்றவையும் கொடுமரமுன் செல்லும் போலும்
வேறு
இளமா எயிற்றி இவைகாண் நின் னையர்
தலைநாளை வேட்டத்து தந்தநல் ஆனிரைகள்
கொல்லன் துடியன் கொளைபுணர் சீர்வல்ல
நல்லியாழ பாணர்தம் முன்றில் நிறைந்தன
முருந்தேர் இளநகை காணாய்நின் னையர்
கரந்தை யலற கவர்ந்த இனநிரைகள்
கள்விலை யாட்டிநல் வேய்தெரி கானவன்
புள்வாய்ப்பு சொன்னகணி முன்றில் நிறைந்தன
கயமல ருண்கண்ணாய் காணாய்நின் னையர்
அயலூர் அலற எறிந்தநல் ஆனிரைகள்
நயனில் மொழியின் நரைமுது தாடி
எயினர் எயிற்றியர் முன்றில் நிறைந்தன
துறைப்பாட்டுமடை
வேறு
சுடரொடு திரிதரு முனிவரும் அமரரும்
இடர்கெட அருளும்நின் இணையடி தொழுதேம்
அடல்வலி எயினர்நின் அடிதொடு கடனிது
மிடறுகு குருதிகொள் விறல்தரு விலையே
அணிமுடி அமரர்தம் அரசொடு பணிதரு
மணியுரு வினைநின மலரடி தொழுதேம்
கணநிறை பெறுவிறல் எயினிடு கடனிது
நிணனுகு குருதிகொள் நிகரடு விலையே
துடியொடு சிறுபறை வயிரொடு துவைசெய
வெடிபட வருபவர் எயினர்கள் அரையிருள்
அடுபுலி யனையவர் குமரிநின் அடிதொடு
படுகடன் இதுவுகு பலிமுக மடையே
வேறு
வம்பலர் பல்கி வழியும் வளம்பட
அம்புடை வல்வில் எயின்கடன் உண்குவாய்
சங்கரி அந்தரி நீலி சடாமுடி
செங்கண் அரவு பிறையுடன் சேர்த்துவாய்
துண்ணென் துடியொடு துஞ்சூர் எறிதரு
கண்ணில் எயினர் இடுகடன் உண்குவாய்
விண்ணோர் அமுதுண்டுஞ் சாவ ஒருவரும்
உண்ணாத நஞ்சுண் டிருந்தருள் செய்குவாய்
பொருள்கொண்டு புண்செயி னல்லதை யார்க்கும்
அருளில் எயினர் இடுகடன் உண்குவாய்
மருதின் நடந்துநின் மாமன்செய் வஞ்ச
உருளுஞ் சகடம் உதைத்தருள் செய்குவாய்
வேறு
மறைமுது முதல்வன் பின்னர் மேய
பொறையுயர் பொதியிற் பொருப்பன் பிறர்நாட்டு
கட்சியும் கரந்தையும் பாழ்பட
வெட்சி சூடுக விறல்வெய் யோனே
புறஞ்சேரியிறுத்த காதை
புறஞ்சிறை மூதூர் புக்கனர் புரிந்தென்
பெண்ணணி கோலம் பெயர்ந்தபிற் பாடு
புண்ணிய முதல்வி திருந்தடி பொருந்தி
கடுங்கதிர் வேனிலி காரிகை பொறாஅள்
படிந்தில சீறடி பரல்வெங் கானத்து
கோள்வல் உளியமுங் கொடும்புற் றகழா
வாள்வரி வேங்கையும் மான்கணம் மறலா
அரவுஞ் சூரும் இரைதேர் முதலையும்
உருமுஞ் சார்ந்தவர குறுகண் செய்யா
செங்கோல் தென்னவர் காக்கும் நாடென
எங்கணும் போகிய இசையோ பெரிதே
பகலொளி தன்னினும் பல்லுயி ரோம்பும்
நிலவொளி விளக்கின் நீளிடை மருங்கின்
இரவிடை கழிதற் கேத மில்லென
குரவரும் நேர்ந்த கொள்கையி னமர்ந்து
கொடுங்கோல் வேந்தன் குடிகள் போல
படுங்கதி ரமையம் பார்த்திரு தோர்க்கு
பன்மீன் தானையொடு பாற்கதிர் பரப்பி
தென்னவன் குலமுதற் செல்வன் தோன்றி
தாரகை கோவையும் சந்தின் குழம்பும்
சீரிள வனமுலை சேரா தொழியவும்
தாதுசேர் கழுநீர தண்பூம் பிணையல்
போதுசேர் பூங்குழற் பொருந்தா தொழியவும்
பைந்தளிர் ஆரமொடு பல்பூங் குறுமுறி
செந்தளிர் மேனி சேரா தொழியவும்
மல தோங்கி மதுரையின் வளர்ந்து
புலவர் நாவிற் பொருந்திய தென்றலொடு
பானிலா வெண்கதிர் பாவைமேற் சொரிய
வேனில் திங்களும் வேண்டுதி யென்றே
பார்மகள் அயாவுயிர தடங்கிய பின்னர்
ஆரிடை உழந்த மாதரை நோக்கி
கொடுவரி மறுகும் குடிஞை கூப்பிடும்
இடிதரும் உளியமும் இனையா தேகென
தொடிவளை செங்கை தோளிற் காட்டி
மறவுரை நீத்த மாசறு கேள்வி
அறவுரை கேட்டாங் காரிடைகழிந்து
வேனல் வீற்றிருந்த வேய்கரி கானத்து
கான வாரணங் கதிர்வர வியம்ப
வரிநவில் கொள்கை மறைநூல் வழுக்கத்து
புரிநூல் மார்பர் உறைபதி சேர்ந்து
மாதவ தாட்டியொடு காதலி தன்னையோர்
தீதுதீர் சிறப்பின் சிறையக திருத்தி
இடுமுள் வேலி நீங்கி ஆங்கோர்
நெடுநெறி மருங்கின் நீர்தலை படுவோன்
காதலி தன்னொடு கானகம் போந்ததற்
கூதுலை குருகின் உயிர்த்தனன் கலங்கி
உட்புலம் புறுதலின் உருவ திரி
கட்புல மயக்கத்து கௌசிகன் தெரியான்
கோவலன் பிரி கொடுந்துய ரெய்திய
மாமலர் நெடுங்கண் மாதவி போன்றிவ்
அருந்திறல் வேனிற் கலர்களை துடனே
வருந்தினை போலுநீ மாதவி யென்றோர்
பாசிலை குருகின் பந்தரிற் பொருந்தி
கோசிக மாணி கூற கேட்டே
யாதுநீ கூறிய உரையீ திங்கென
தீதிலன் கண்டேன் எனச்சென் றெய்தி
கோசிக மாணி கொள்கையின் உரைப்போன்
இருநிதி கிழவனும் பெருமனை கிழத்தியும்
அருமணி இழந்த நாகம் போன்றதும்
இன்னுயிர் இழந்த யாக்கை யென்ன
துன்னிய சுற்றம் துயர்க்கடல் வீழ்ந்ததும்
ஏவ லாளர் யாங்கணுஞ் சென்று
கோவலன் தேடி கொணர்கென பெயர்ந்ததும்
பெருமகன் ஏவ லல்ல தியாங்கணும்
அரசே தஞ்சமென் றருங்கான் அடைந்த
அருந்திறல் பிரிந்த அயோத்தி போல
பெரும்பெயர் மூதூர் பெரும்பே துற்றதும்
வசந்த மாலைவாய் மாதவி கேட்டு
பசந்த மேனியள் படர்நோ யுற்று
நெடுநிலை மாட திடைநில தாங்கோர்
படையமை சேக்கை பள்ளியுள் வீழ்ந்ததும்
வீழ்துய ருற்றோள் விழுமங் கேட்டு
தாழ்துயர் எய்தி தான்சென் றிருந்ததும்
இருந்துயர் உற்றோள் இணையடி தொழுதேன்
வருந்துயர் நீக்கென மலர்க்கையின் எழுதி
கண்மணி யனையாற்கு காட்டுக வென்றே
மண்ணுடை முடங்கல் மாதவி யீத்ததும்
ஈத்த வோலைகொண் டிடைநெறி திரிந்து
தீத்திறம் புரிந்தோன் சென்ற தேயமும்
வழிமருங் கிருந்து மாசற உரைத்தாங்கு
அழிவுடை உள்ள தாரஞ ராட்டி
போதவிழ் புரிகுழற் பூங்கொடி நங்கை
மாதவி யோலை மலர்க்கையின் நீட்ட
உடனுறை கால துரைத்தநெய் வாசம்
குறுநெறி கூந்தல் மண்பொறி உணர்த்தி
காட்டிய தாதலிற் கைவிட லீயான்
ஏட்டகம் விரி தாங் கெய்திய துணர்வோன்
அடிகள் முன்னர் யானடி வீழ்ந்தேன்
வடியா கிளவி மனக்கொளல் வேண்டும்
குரவர்பணி அன்றியுங் குலப்பிற பாட்டியோ
டிரவிடை கழிதற் கென்பிழை பறியாது
கையறு நெஞ்சம் கடியல் வேண்டும்
பொய்தீர் காட்சி புரையோய் போற்றி
என்றவள் எழுதிய இசைமொழி யுணர்ந்து
தன்றீ திலளென தளர்ச்சி நீங்கி
என்தீ தென்றே எய்திய துணர்ந்தாங்
கெற்ப தோற்கிம் மண்ணுடை முடங்கல்
பொற்புடை தாக பொருளுரை பொருந்தியது
மாசில் குரவர் மலரடி தொழுதேன்
கோசிக மாணி காட்டென கொடுத்து
நடுக்கங் களைந்தவர் நல்லகம் பொருந்திய
இடுக்கண் களைதற் கீண்டென போக்கி
மாசில் கற்பின் மனைவியோ டிருந்த
ஆசில் கொள்கை அறவிபால் அணைந்தாங்கு
ஆடியல் கொள்கை அந்தரி கோலம்
பாடும் பாணரிற் பாங்குற சேர்ந்து
செந்திறம் புரிந்த செங்கோ டியாழில்
தந்திரி கரத்தொடு திவவுறு தியாஅத்து
ஒற்றுறு புடைமையிற் பற்றுவழி சேர்த்தி
உழைமுதல் கைக்கிளை யிறுவா கட்டி
வரன்முறை வந்த மூவகை தானத்து
பாய்கலை பாவை பாடற் பாணி
ஆசான் திறத்தின் அமைவர கேட்டு
பாடற் பாணி அளைஇ அவரொடு
கூடற் காவதம் கூறுமின் நீரென
காழகிற் சாந்தம் கமழ்பூங் குங்குமம்
நாவி குழம்பு நலங்கொள் தேய்வை
மான்மத சாந்தம் மணங்கமழ் தெய்வ
தேமென் கொழுஞ்சே றாடி யாங்கு
தாதுசேர் கழுநீர் சண்ப கோதையொடு
மாதவி மல்லிகை மனைவளர் முல்லை
போதுவிரி தொடையல் பூவணை பொருந்தி
அட்டிற் புகையும் அகலங் காடி
முட்டா கூவியர் மோதக புகையும்
மைந்தரும் மகளிரும் மாட தெடுத்த
அந்தீம் புகையும் ஆகுதி
பல்வேறு பூம்புகை அளைஇ வெல்போர்
விளங்குபூண் மார்பிற் பாண்டியன் கோயிலின்
அளந்துணர் வறியா ஆருயிர் பிணிக்கும்
கலவை கூட்டம் காண்வர தோன்றி
புலவர் செந்நா பொருந்திய நிவப்பின்
பொதியில் தென்றல் போலா தீங்கு
மதுரை தென்றல் வந்தது காணீர்
நனிசே தன்றவன் திருமலி மூதூர்
தனிநீர் கழியினு தகைக்குநர் இல்லென
முன்னாள் முறைமையின் இருந்தவ முதல்வியொடு
பின்னையும் அல்லிடை பெயர்ந்தனர் பெயர்ந்தாங்கு
அருந்தெறற் கடவுள் அகன்பெருங் கோயிலும்
பெரும்பெயர் மன்னவன் பேரிசை கோயிலும்
பால்கெழு சிறப்பிற் பல்லியஞ் சிறந்த
காலை முரச கனைகுரல் ஓதையும்
நான்மறை அந்தணர் நவின்ற ஓதையும்
மாதவ ரோதி மலிந்த ஓதையும்
மீளா வென்றி வேந்தன் சிறப்பொடு
வாளோர் எடுத்த நாளணி முழவமும்
போரிற் கொண்ட பொருகரி முழக்கமும்
வாரி கொண்ட வயக்கரி முழக்கமும்
பணைநிலை புரவி ஆலும் ஓதையும்
கிணைநிலை பொருநர் வைகறை பாணியும்
கார்க்கடல் ஒலியிற் கலிகெழு கூடல்
ஆர்ப்பொலி எதிர்கொள ஆரஞர் நீங்கி
குரவமும் வகுளமும் கோங்கமும் வேங்கையும்
மரவமும் நாகமும் திலகமும் மருதமும்
சேடலும் செருந்தியும் செண்பக ஓங்கலும்
பாடலம் தன்னொடு பன்மலர் விரிந்து
குருகும் தளவமும் கொழுங்கொடி முசுண்டையும்
விரிமலர் அதிரலும் வெண்கூ தாளமும்
குடசமும் வெதிரமும் கொழுங்கொடி பகன்றையும்
பிடவமும் மயிலையும் பிணங்கரில் மணந்த
கொடுங்கரை மேகலை கோவை யாங்கணும்
மிடைந்துசூழ் போகிய அகன்றே தல்குல்
வாலுகங் குவைஇய மலர்ப்பூ துருத்தி
பால்புடை கொண்டு பன்மல ரோங்கி
எதிரெதிர் விளங்கிய கதிரிள வனமுலை
கரைநின் றுதிர்த்த கவிரிதழ செவ்வாய்
அருவி முல்லை அணிநகை யாட்டி
விலங்குநிமிர தொழுகிய கருங்கயல் நெடுங்கண்
விரைமலர் நீங்கா அவிரறற் கூந்தல்
உலகுபுர தூட்டும் உயர்பே ரொழுக்கத்து
புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி
வையை என்ற பொய்யா குலக்கொடி
தையற் குறுவது தானறி தனள்போல்
புண்ணிய நறுமல ராடை போர்த்து
கண்ணிறை நெடுநீர் கரந்தனள் அடக்கி
புனல்யா றன்றிது பூம்புனல் யாறென
அனநடை மாதரும் ஐயனு தொழுது
பரிமுக அம்பியும் கரிமுக
அரிமுக அம்பியும் அருந்துறை யியக்கும்
பெருந்துறை மருங்கிற் பெயரா தாங்கண்
மாதவ தாட்டியொடு மரப்புணை போகி
தேமலர் நறும்பொழில் தென்கரை யெய்தி
வானவர் உறையும் மதுரை வலங்கொள
தான்நனி பெரிது தகவுடை தென்றாங்கு
அருமிளை யுடுத்த அகழிசூழ் போகி
கருநெடுங் குவளையும் ஆம்பலும் கமலமும்
தையலும் கணவனும் தனித்துறு துயரம்
ஐய மின்றி அறிந்தன போல
பண்ணீர் வண்டு பரி தினை தேங்கி
கண்ணீர் கொண்டு காலுற நடுங்க
போருழ தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரலென் பனபோல் மறித்துக்கை காட்ட
புள்ளணி கழனியும் பொழிலும் பொருந்தி
வெள்ளநீர பண்ணையும் விரிநீர் ஏரியும்
காய்க்குலை தெங்கும் வாழையும் கமுகும்
வேய்த்திரள் பந்தரும் விளங்கிய இருக்கை
அறம்புரி மாந்தர் அன்றி சேரா
ஊர்காண் காதை
புறஞ்சிறை பொழிலும் பிறங்குநீர பண்ணையும்
இறங்குகதிர கழனியும் புள்ளெழு தார
புலரி வைகறை பொய்கை தாமரை
மலர்பொதி அவிழ்த்த உலகுதொழு மண்டிலம்
வேந்துதலை பனிப்ப ஏந்துவா செழியன்
ஒங்குயர் கூடல் ஊர்துயி லெடுப்ப
நுதல்விழி நாட்ட திறையோன் கோயிலும்
உவண சேவ லுயர்த்தோன் நியமமும்
மேழிவல னுயர்த்த வெள்ளை நகரமும்
கோழி சேவற் கொடியோன் கோட்டமும்
அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளியும்
மறத்துறை விளங்கிய மன்னவன் கோயிலும்
வால்வெண் சங்கொடு வகைபெற் றோங்கிய
காலை முரசங் கனைகுரல் இயம்ப
கோவலன் சென்று கொள்கையி னிருந்த
காவுந்தி ஐயையை கைதொழு தேத்தி
நெறியின் நீங்கியோர் நீர்மையே னாகி
நறுமலர் மேனி நடுங்குதுய ரெய்த
அறியா தே தாரிடை யுழந்து
சிறுமை யுற்றேன் செய்தவ தீர்யான்
தொன்னகர் மருங்கின் மன்னர் பின்னோர்க்கு
என்னிலை யுணர்த்தி யான்வருங் காறும்
பாத காப்பினள் பைந்தொடி யாகலின்
ஏத முண்டோ அடிக ளீங் கென்றலும்
கவுந்தி கூறுங் காதலி தன்னொடு
தவந்தீர் மருங்கின் தனித்துயர் உழந்தோய்
மறத்துறை நீங்குமின் வல்வினை யூட்டுமென்
றறந்துறை மாக்கள் திறத்திற் சாற்றி
நாக்கடி பாக வாய்ப்பறை யறையினும்
யாப்பறை மாக்கள் இயல்பிற் கொள்ளார்
தீதுடை வெவ்வினை யுருத்த காலை
பேதைமை கந்தா பெரும்பே துறுவர்
ஒய்யா வினைப்பயன் உண்ணுங் காலை
கையாறு கொள்ளார் கற்றறி மாக்கள்
பிரிதல் துன்பமும் புணர்தல்
உருவி லாளன் ஒறுக்கு துன்பமும்
புரிகுழல் மாதர புணந்தோர கல்லது
ஒருதனி வாழ்க்கை உரவோர கில்லை
பெண்டிரும் உண்டியும் இன்ப மென்றுலகிற்
கொண்டோ ருறூஉங் கொள்ளா துன்பம்
கண்டன ராகி கடவுளர் வரைந்த
காமஞ் சார்பா காதலின் உழந்தாங்கு
ஏமஞ் சாரா இடும்பை எய்தினர்
இன்றே யல்லால் இறந்தோர் பலரால்
தொன்று படவரூஉ தொன்மை தாதலின்
தாதை ஏவலின் மாதுடன் போகி
காதலி நீங கடுந்துய ருழந்தோன்
வேத முதல்வற் பயந்தோ னென்பது
நீயறி திலையோ நெடுமொழி யன்றோ
வல்லா டாயத்து மண்ணர சிழந்து
மெல்லியல் தன்னுடன் வெங்கா னடைந்தோன்
காதலிற் பிரிந்தோ னல்லன் காதலி
தீதொடு படூஉஞ் சிறுமைய ளல்லள்
அடவி கானக தாயிழை தன்னை
இடையிருள் யா திட்டு நீக்கியது
வல்வினை யன்றோ மடந்தைதன் பிழையென
சொல்லலும் உண்டேற் சொல்லா யோநீ
அனையையும் அல்லை ஆயிழை தன்னொடு
பிரியா வாழ்க்கை பெற்றனை யன்றே
வருந்தா தேகி மன்னவன் கூடல்
பொருந்துழி யறிந்து போதீங் கென்றலும்
இளைசூழ் மிளையொடு வளைவுடன் கிடந்த
இலங்குநீர பரப்பின் வலம்புண ரகழியில்
பெருங்கை யானை இனநிரை பெயரும்
சுருங்கை வீதி மருங்கிற் போகி
கடிமதில் வாயில் காவலிற் சிறந்த
அடல்வாள் யவனர கயிராது புக்காங்கு
ஆயிரங் கண்ணோன் அருங்கல செப்பு
வாய்திற தன்ன மதிலக வரைப்பில்
குடகாற் றெறிந்து கொடுநுடங்கு மறுகின்
கடைகழி மகளிர் காதலஞ் செல்வரொடு
வருபுனல் வையை மருதோங்கு முன்றுறை
விரிபூ துருத்தி வெண்மண லடைகரை
ஓங்குநீர் மாடமொடு நாவா யியக்கி
பூம்புணை தழீஇ புனலா டமர்ந்து
தண்ணறு முல்லையு தாழ்நீர குவளையும்
கண்ணவிழ் நெய்தலுங் கதுப்புற அடைச்சி
வெண்பூ மல்லிகை விரியலொடு தொடர்ந்த
தண்செங் கழுநீர தாதுவிரி பிணையல்
கொற்கையம் பெருந்துறை முத்தொடு பூண்டு
தெக்கண மல செழுஞ்சே றாடி
பொற்கொடி மூதூர பொழிலா டமர்ந்தாங்கு
எற்படு பொழுதின் இளநிலா முன்றில்
தாழ்தரு கோல தகை பாராட்ட
வீழ்பூஞ் சேக்கை மேலினி திருந்தாங்கு
அரத்த பூம்ப டரைமிசை யுடீஇ
குரற்றலை கூந்தற் குடசம் பொருந்தி
சிறுமலை சிலம்பின் செங்கூ தாளமொடு
நறுமலர குறிஞ்சி நாண்மலர் வேய்ந்து
குங்கும வருணங் கொங்கையி னிழைத்து
செங்கொடு வேரி செழும்பூம் பிணையல்
சிந்துர சுண்ணஞ் சேர்ந்த மேனியில்
அந்துகிர கோவை அணியொடு பூண்டு
மலைச்சிற கரிந்த வச்சிர வேந்தற்கு
கலிகெழு கூடற் செவ்வணி காட்ட
காரர சாளன் வாடையொடு வரூஉம்
கால மன்றியும் நூலோர் சிறப்பின்
முகில்தோய் மாட தகில்தரு விறகின்
மடவரல் மகளிர் தடவுநெரு பமர்ந்து
நறுஞ்சா தகலத்து நம்பியர் தம்மொடு
குறுங்கண் அடைக்கும் கூதிர காலையும்
வளமனை மகளிரும் மைந்தரும் விரும்பி
இளநிலா முன்றிலின் இளவெயில் நுகர
விரிகதிர் மண்டில தெற்கேர்பு வெண்மழை
அரிதில் தோன்றும் அச்சிர காலையும்
ஆங்க தன்றியும் ஓங்கிரும் பரப்பின்
வங்க ஈட்டத்து தொண்டியோ ரிட்ட
அகிலும் துகிலும் ஆரமும் வாசமும்
தொகுகரு பூரமுஞ் சுமந்துடன் வந்த
கொண்டலொடு புகுந்து கோமகன் கூடல்
வெங்கண் நெடுவேள் வில்விழா காணும்
பங்குனி முயக்கத்து பனியர சியாண்டுளன்
கோதை மாதவி கொழுங்கொடி யெடுப்ப
காவும் கானமும் கடிமல ரேந
தென்னவன் பொதியில் தென்றலொடு புகுந்து
மன்னவன் கூடல் மகிழ்துணை தழூஉம்
இன்னிள வேனில் யாண்டுளன் கொல்லென்று
உருவ கொடியோ ருடைப்பெருங் கொழுநரொடு
பருவ மெண்ணும் படர்தீர் காலை
கன்றம ராயமொடு களிற்றினம் நடுங்க
என்றூழ் நின்ற குன்றுகெழு நன்னாட்டு
காடுதீ பிறப்ப கனையெரி பொத்தி
கோடையொடு புகுந்து கூட லாண்ட
வேனில் வேந்தன் வேற்றுப்புலம் படர
ஓசனி கின்ற உறுவெயிற் கடைநாள்
வையமுஞ் சிவிகையும் மணிக்கால் அமளியும்
உய்யா னத்தின் உறுதுணை மகிழ்ச்சியும்
சாமரை கவரியு தமனிய அடைப்பையும்
கூர்நுனை வாளுங் கோமகன் கொடு
பெற்ற செல்வம் பிறழா வாழ்க்கை
பொற்றொடி மடந்தையர் புதுமணம் புணர்ந்து
செம்பொன் வள்ளத்து சிலதிய ரேந்திய
அந்தீ தேறல் மாந்தினர் மயங்கி
பொறிவரி வண்டினம் புல்லுவழி அன்றியும்
நறுமலர் மாலையின் வறிதிடங் கடிந்தாங்கு
இலவிதழ செவ்வாய் இளமு தரு
புலவி காலத்து போற்றா துரைத்த
காவியங் கண்ணார் கட்டுரை எட்டுக்கும்
நாவொடு நவிலா நகைபடு கிளவியும்
அஞ்செங் கழுநீர் அரும்பவிழ தன்ன
செங்கயல் நெடுங்க செழுங்கடை பூசலும்
கொலைவிற் புருவத்து கொழுங்கடை சுருள
திலக சிறுநுதல் அரும்பிய வியரும்
செவ்வி பார்க்குஞ் செழுங்குடி செல்வரொடு
வையங் காவலர் மகிழ்தரும் வீதியும்
சுடுமண் ஏறா வடுநீங்கு சிறப்பின்
முடியர சொடுங்குங் கடிமனை வாழ்க்கை
வேத்தியல் பொதுவியல் எனவிரு திறத்து
மாத்திரை யறிந்து மயங்கா மரபின்
ஆடலும் வரியும் பாணியு தூக்கும்
கூடிய குயிலுவ கருவியும் உணர்ந்து
நால்வகை மரபின் அவின களத்தினும்
ஏழ்வகை நிலத்தினும் எய்திய விரிக்கும்
மலைப்பருஞ் சிறப்பின் தலைக்கோ லரிவையும்
வாரம் பாடு தோரிய மடந்தையும்
தலைப்பாட்டு கூத்தியும் இடைப்பட்டு
நால்வேறு வகையின் நயத்தகு மரபின்
எட்டு கடைநிறுத்த ஆயிர தெண்கழஞ்சு
முட்டா வைகல் முறைமையின் வழாஅ
தாக்கணங் கனையார் நோக்குவலை பட்டாங்கு
அரும்பெறல் அறிவும் பெரும்பிறி தாக
தவத்தோ ராயினு தகைமலர் வண்டின்
நகைப்பதம் பார்க்கும் இளையோ ராயினும்
காம விருந்தின் மடவோ ராயினும்
ஏம வைகல் இன்றுயில் வதியும்
பண்ணுங் கிளையும் பழித்த தீஞ்சொல்
எண்ணெண் கலையோர் இருபெரு வீதியும்
வையமும் பாண்டிலும் மணித்தேர கொடுஞ்சியும்
மெய்புகு கவசமும் வீழ்மணி தோட்டியும்
அதள்புனை அரணமும் அரியா யோகமும்
வளைதரு குழியமும் வால்வெண் கவரியும்
ஏன படமும் கிடுகின்
கான படமும் காழூன்று கடிகையும்
செம்பிற் செய்நவும் கஞ்ச தொழிலவும்
வம்பின் முடிநவும் மாலையிற் புனைநவும்
வேதின துப்பவும் கோடுகடை தொழிலவும்
புகையவும் சாந்தவும் பூவிற் புனைநவும்
வகைதெரி வறியா வளந்தலை மயங்கிய
அரசுவிழை திருவின் அங்காடி வீதியும்
காக பாதமும் களங்கமும் விந்துவும்
ஏகையும் நீங்கி இயல்பிற் குன்றா
நூலவர் நொடிந்த நுழைநுண் கோடி
நால்வகை வருணத்து நலங்கேழ் ஒளியவும்
ஏகையும் மாலையும் இருளொடு துறந்த
பாசார் மேனி பசுங்கதிர் ஒளியவும்
பதுமமும் நீலமும் விந்தமும் படிதமும்
விதிமுறை பிழையா விளங்கிய சாதியும்
பூச உருவின் பொலந்தௌி தனையவும்
தீதறு கதிரொளி தெண டுருவவும்
இருள்தௌி தனையவும் இருவே றுருவவும்
ஒருமை தோற்ற தைவேறு வனப்பின்
இலங்குகதிர் விடூஉம் நலங்கெழு மணிகளும்
காற்றினும் மண்ணினும் கல்லினும் நீரினும்
தோற்றிய குற்ற துகளற துணிந்தவும்
சந்திர குருவே அங்காரக னென
வந்த நீர்மைய வட்ட தொகுதியும்
கருப்ப துளையவும் கல்லிடை முடங்கலும்
திருக்கு நீங்கிய செங்கொடி வல்லியும்
வகைதெரி மாக்கள் தொகைபெற் றோங்கி
பகைதெறல் அறியா பயங்கெழு வீதியும்
சாத ரூபம் கிளிச்சிறை ஆடகம்
சாம்பூ நதமென ஓங்கிய கொள்கையின்
பொலந்தெரி மாக்கள் கலங்கஞ ரொழித்தாங்கு
இலங்குகொடி யெடுக்கும் நலங்கிளர் வீதியும்
நூலினும் மயிரினும் நுழைநூற் பட்டினும்
பால்வகை தெரியா பன்னூ றடுக்கத்து
நறுமடி செறிந்த அறுவை வீதியும்
நிறைக்கோல் துலாத்தர் பறைக்க பராரையர்
அம்பண வளவையர் எங்கணு திரிதர
கால மன்றியும் கருங்கறி மூடையொடு
கூலங் குவித்த கூல வீதியும்
பால்வேறு தெரிந்த நால்வேறு தெருவும்
அந்தியும் சதுக்கமும் ஆவண வீதியும்
மன்றமும் கவலையும் மறுகும் திரிந்து
விசும்பகடு திருகிய வெங்கதிர் நுழையா
பசுங்கொடி படாகை பந்தர் நீழல்
காவலன் பேரூர் கண்டுமகிழ் வெய்தி
கோவலன் பெயர்ந்தனன் கொடிமதிற் புறத்தென்
அடைக்கல காதை
நிலந்தரு திருவின் நிழல்வாய் நேமி
கடம்பூண் டுருட்டும் கௌரியர் பெருஞ்சீர
கோலின் செம்மையும் குடையின் தண்மையும்
வேலின் கொற்றமும் விளங்கிய கொள்கை
பதியெழு வறியா பண்புமேம் பட்ட
மதுரை மூதூர் மாநகர் கண்டாங்கு
அறந்தரு நெஞ்சின் அறவோர் பல்கிய
புறஞ்சிறை மூதூர பொழிலிடம் புகுந்து
தீதுதீர் மதுரையும் தென்னவன் கொற்றமும்
மாதவ தாட்டிக்கு கோவலன் கூறுழி
தாழ்நீர் வேலி தலை செங்கானத்து
நான்மறை முற்றிய நலம்புரி கொள்கை
மாமறை முதல்வன் மாடலன் என்போன்
மாதவ முனிவன் மலைவலங் கொண்டு
குமரியம் பெருந்துறை கொள்கையிற் படிந்து
தமர்முதற் பெயர்வோன் தாழ்பொழி லாங்கண்
வகுந்துசெல் வருத்தத்து வான்றுயர் நீங
கவுந்தி இடவயிற் புகுந்தோன் தன்னை
கோவலன் சென்று சேவடி வணங்க
நாவ லந்தணன் தானவின் றுரைப்போன்
வேந்துறு சிறப்பின் விழுச்சீ ரெய்திய
மாந்தளிர் மேனி மாதவி மடந்தை
பால்வா குழவி பயந்தன ளெடுத்து
வாலா மைந்நாள் நீங்கிய பின்னர்
மாமுது கணிகையர் மாதவி மகட்கு
நாம நல்லுரை நாட்டுது மென்று
தாமின் புறூஉ தகைமொழி கே டாங்கு
இடையிருள் யா தெறிதிரை பெருங்கடல்
உடைகல பட்ட எங்கோன் முன்னாள்
புண்ணிய தானம் புரிந்தோ னாகலின்
நண்ணுவழி இன்றி நாள்சில நீந்த
இந்திரன் ஏவலின் ஈங்கு வாழ்வேன்
வந்தேன் அஞ்சல் மணிமே கலையான்
உன்பெரு தான துறுதி யொழியாது
துன்ப நீங்கி துயர்க்கட லொழிகென
விஞ்சையிற் பெயர்த்து விழு தீர்த்த
எங்குல தெய்வ பெயரீங் கிடுகென
அணிமே கலையார் ஆயிரங் கணிகையர்
மணிமே கலையென வாழ்த்திய ஞான்று
மங்கல மடந்தை மாதவி தன்னொடு
செம்பொன் மாரி செங்கையிற் பொழிய
ஞான நன்னெறி நல்வரம் பாயோன்
தானங் கொள்ளு தகைமையின் வருவோன்
தளர்ந்த நடையில் தண்டுகா லூன்றி
வளைந்த யாக்கை மறையோன் றன்னை
பாகுகழி தியாங்கணும் பறைபட வரூஉம்
வேக யானை வெம்மையிற் கைக்கொள
ஓய்யென தெழித்தாங் குயர்பிற பாளனை
கையக தொழித்ததன் கையகம் புக்கு
பொய்பொரு முடங்குகை வெண்கோ டடங்கி
மையிருங் குன்றின் விஞ்சையன்
பிடர்த்தலை இருந்து பெருஞ்சினம் பிறழா
கடக்களி றடக்கிய கருணை மறவ
பிள்ளை நகுலம் பெரும்பிறி தாக
எள்ளிய மனையோள் இனைந்துபின் செல்ல
வடதிசை பெயரும் மாமறை யாளன்
கடவ தன்றுநின் கைத்தூண் வாழ்க்கை
வடமொழி வாசகஞ் செய்த நல்லேடு
கடனறி மாந்தர் கைந்நீ கொடு கென
பீடிகை தெருவிற் பெருங்குடி வாணிகர்
மாட மறுகின் மனைதொறு மறுகி
கரு கழிபலங் கொண்மி னோவெனும்
அருமறை யாட்டியை அணு கூஉய்
யாதுநீ யுற்ற இடர்ஈ தென்னென
மாதர்தா னுற்ற வான்துயர் செப்பி
இப்பொரு ளெழுதிய இதழிது வாங்கி
கைப்பொருள் தந்தென் கடுந்துயர் களைகென
அஞ்சல் உன்றன் அருந்துயர் களைகேன்
நெஞ்சுறு துயரம் நீங்குக என்றாங்கு
ஓத்துடை அந்தணர் உரைநூற் கிடக்கையில்
தீத்திறம் புரிந்தோள் செய்துயர் நீங்க
தானஞ் செய் தவள் தன்றுயர் நீக்கி
கானம் போன கணவனை கூட்டி
ஒல்கா செல்வ துறுபொருள் கொடுத்து
நல்வழி படுத்த செல்லா செல்வ
பத்தினி யொருத்தி படிற்றுரை எய்த
மற்றவள் கணவற்கு வறியோன் ஒருவன்
அறியா கரிபொ தறைந்துணும் பூதத்து
கறைகெழு பாசத்து கையக படலும்
பட்டோன் றவ்வை படுதுயர் கண்டு
கட்டிய பாசத்து கடிதுசென் றெய்தி
என்னுயிர் கொண்டீங் கிவனுயிர் தாவென
நன்னெடும் பூதம் நல்கா தாகி
நரக னுயிர்க்கு நல்லுயிர் கொண்டு
பரகதி யிழக்கும் பண்பீங் கில்லை
ஒழிக நின் கருத்தென உயிர்முன் புடைப்ப
அழிதரு முள்ள தவளொடும் போந்தவன்
சுற்ற தோர்க்கும் தொடர்புறு கிளைகட்கும்
பற்றிய கிளைஞரின் பசிப்பிணி யறுத்து
பல்லாண்டு புரந்த இல்லோர் செம்மல்
இம்மை செய்தன யானறி நல்வினை
உம்மை பயன்கொல் ஒருதனி யுழந்தி
திருத்தகு மாமணி கொழுந்துடன் போந்தது
விருத்தகோ பால நீயென வினவ
கோவலன் கூறுமோர் குறுமகன் தன்னால்
காவல் வேந்தன் கடிநகர் தன்னில்
நாறைங் கூந்தல் நடுங்குதுய ரெய்த
கூறைகோ பட்டு கோட்டுமா ஊரவும்
அணித்தகு புரிகுழ லாயிழை தன்னொடும்
பிணிப்பறு தோர்தம் பெற்றி யெய்தவும்
மாமலர் வாளி வறுநில தெறிந்து
கா கடவுள் கையற் றேங்க
அணிதிகழ் போதி அறவோன் றன்முன்
மணிமேகலையை மாதவி யளிப்பவும்
நனவுபோல நள்ளிருள் யாமத்து
கனவு கண்டேன் கடிதீங் குறுமென
அறத்துறை மாக்க கல்ல திந்த
புறச்சிறை யிருக்கை பொருந்தா தாகலின்
அரைசர் பின்னோர் அகநகர் மருங்கினின்
உரையிற் கொள்வரிங் கொழிகநின் இருப்பு
காதலி தன்னொடு கதிர்செல் வதன்முன்
மாட மதுரை மாநகர் புகுகென
மாதவ தாட்டியும் மாமறை முதல்வனும்
கோவலன் றனக்கு கூறுங் காலை
அறம்புரி நெஞ்சின் அறவோர் பல்கிய
புறஞ்சிறை மூதூர பூங்கண் இயக்கிக்கு
பான்மடை கொடுத்து பண்பிற் பெயர்வோள்
ஆயர் முதுமகள் மாதரி என்போள்
காவுந்தி ஐயையை கண்டடி தொழலும்
ஆகா தோம்பி ஆப்பயன் அளிக்கும்
கோவலர் வாழ்க்கையோர் கொடும்பா டில்லை
தீதிலள் முதுமகள் செவ்வியள் அளியள்
மாதரி தன்னுடன் மடந்தையை இருத்துதற்கு
ஏதம் இன்றென எண்ணின ளாகி
மாதரி கேளிம் மடந்தைதன் கணவன்
தாதையை கேட்கில் தன்குல வாணர்
அரும்பொருள் பெறுநரின் விருந்தெதிர் கொண்டு
கருந்தடங் கண்ணியொடு கடிமனை படுத்துவர்
உடைப்பெருஞ் செல்வர் மனைப்புகு மளவும்
இடைக்குல மடந்தை கடைக்கல தந்தேன்
மங்கல மடந்தையை நன்னீ ராட்டி
செங்கயல் நெடுங்கண் அஞ்சன தீட்டி
தேமென் கூந்தற் சின்மலர் பெய்து
தூமடி உடீஇ தொல்லோர் சிறப்பின்
ஆயமும் காவலும் ஆயிழை தனக்கு
தாயும் நீயே யாகி தாங்கிங்கு
என்னொடு போந்த இளங்கொடி நங்கைதன்
வண்ண சீறடி மண்மகள் அறிந்திலள்
கடுங்கதிர் வெம்மையிற் காதலன் றனக்கு
நடுங்குதுய ரெய்தி நாப்புலர வாடி
தன்துயர்காணா தகைசால் பூங்கொடி
இன்துணை மகளிர கின்றியமையா
கற்பு கடம்பூண்ட இத்தெய்வ மல்லது
பொற்புடை தெய்வம் யாங்கண் டிலமால்
வானம் பொய்யாது வளம்பிழை பறியாது
நீணில வேந்தர் கொற்றம் சிதையாது
பத்தினி பெண்டிர் இருந்தநா டென்னும்
அத்தகு நல்லுரை அறியா யோநீ
தவத்தோர் அடக்கலம் தான்சிறி தாயினும்
மிகப்பே ரின்பம் தருமது கேளாய்
காவிரி படப்பை பட்டின தன்னுள்
பூவிரி பிண்டி பொதுநீங்கு திருநிழல்
உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட
இலகொளி சிலாதல மேலிரு தருளி
தருமஞ் சாற்றுஞ் சாரணர் தம்முன்
திருவில் இட்டு திகழ்தரு மேனியன்
தாரன் மாலையன் தமனி பூணினன்
பாரோர் காணா பலர்தொழு படிமையன்
கருவிரற் குரங்கின் கையொரு பாகத்து
பெருவிறல் வானவன் வந்துநின் றோனை
சாவக ரெல்லாம் சாரணர தொழுதீங்கு
யாதிவன் வரவென இறையோன் கூறும்
எட்டி சாயலன் இருந்தோன் றனது
பட்டினி நோன்பிகள் பலர்புகு மனையிலோர்
மாதவ முதல்வனை மனைப்பெருங் கிழத்தி
ஏதம் நீங்க எதிர்கொள் அமயத்து
ஊர்ச்சிறு குரங்கொன் றொதுங்கிஉள் புக்கு
பாற்படு மாதவன் பாதம் பொருந்தி
உண்டொழி மிச்சிலும் உகுத்த நீரும்
தண்டா வேட்கையில் தான்சிறி தருந்தி
எதிர்முகம் நோக்கிய இன்ப செவ்வியை
அதிரா கொள்கை அறிவனும் நயந்துநின்
மக்களின் ஓம்பு மனைக்கிழ தீயென
மிக்கோன் கூறிய மெய்மொழி ஓம்பி
காதற் குரங்கு கடைநா ளெய்தவும்
தானஞ் செய்வுழி அதற்கொரு கூறு
தீதறு கென்றே செய்தன ளாதலின்
மத்திம நன்னாட்டு வாரண தன்னுள்
உத்தர கௌத்தற் கொருமக னாகி
உருவினும் திருவினும் உணர்வினு தோன்றி
பெருவிறல் தானம் பலவுஞ் செய்தாங்கு
எண்ணால் ஆண்டின் இறந்தபிற் பாடு
விண்ணோர் வடிவம் பெற்றன னாதலின்
பெற்ற செல்வ பெரும்பய னெல்லாம்
தற்கா தளித்தோள் தான சிறப்பென
பண்டை பிறப்பிற் குரங்கின் சிறுகை
கொண்டொரு பாகத்து கொள்கையிற் புணர்ந்த
சாயலன் மனைவி தான தன்னால்
ஆயினன் இவ்வடிவு அறிமி னோவென
சாவகர கெல்லாம் சாற்றினன் காட்ட
தேவ குமரன் தோன்றினன் என்றலும்
சாரணர் கூறிய தகைசால் நன்மொழி
ஆரணங் காக அறந்தலை பட்டோர்
அன்ற பதியுள் அருந்தவ மாக்களும்
தன்தெறல் வாழ்க்கை சாவக மாக்களும்
இட்ட தான தெட்டியும் மனைவியும்
முட்டா இன்பத்து முடிவுல கெய்தினர்
கேட்டனை யாயினி தோட்டார் குழலியொடு
நீட்டி திராது நீபோ கென்றே
கவுந்தி கூற உவந்தன ளேத்தி
வளரிள வனமுலை வாங்கமை பணைத்தோள்
முளையிள வெண்பல் முதுக்குறை நங்கையொடு
சென்ற ஞாயிற்று செல்சுடர் அமயத்து
கன்றுதேர் ஆவின் கனைகுரல் இயம்ப
மறித்தோள் நவியத்து உறிக்கா வாளரொடு
செறிவளை ஆய்ச்சியர் சிலர் புறஞ் சூழ
மிளையும் கிடங்கும் வளைவிற் பொறியும்
கருவிர லூகமும் கல்லுமிழ் கவணும்
பரிவுறு வெந்நெயும் பாகடு குழிசியும்
காய்பொன் உலையும் கல்லிடு கூடையும்
தூண்டிலும் தொடக்கும் ஆண்டலை அடுப்பும்
கவையும் கழுவும் புதையும் புழையும்
ஐயவி துலாமும் கைபெயர் ஊசியும்
சென்றெறி சிரலும் பன்றியும் பணையும்
எழுவுஞ் சீப்பும் முழுவிறற் கணையமும்
கோலும் குந்தமும் வேலும் பிறவும்
ஞாயிலும் சிறந்து நாட்கொடி நுடங்கும்
வாயில் கழிந்துதன் மனைபு கனளால்
கோவலர் மடந்தை கொள்கையிற் புணர்ந்தென்
கொலைக்கள காதை
அரும்பெறற் பாவையை அடைக்கலம் பெற்ற
இரும்பே ருவகையின் இடைக்குல மடந்தை
அளைவிலை யுணவின் ஆய்ச்சியர் தம்மொடு
மிளைசூழ் கோவலர் இருக்கை யன்றி
பூவ லூட்டிய புனைமாண் பந்தர
காவற் சிற்றிற் கடிமனை படுத்து
செறிவளை யாய்ச்சியர் சிலருடன் கூடி
நறுமலர கோதையை நாணீ ராட்டி
கூடல் மகளிர் கோலங் கொள்ளும்
ஆடக பைம்பூ ணருவிலை யழிப்ப
செய்யா கோலமொடு வந்தீர கென்மகள்
ஐயை காணீ ரடித்தொழி லாட்டி
பொன்னிற் பொதிந்தேன் புனைபூங் கோதை
என்னுடன் நங்கையீங் கிருக்கென தொழுது
மாதவ தாட்டி வழித்துயர் நீக்கி
ஏத மில்லா இடந்தலை படுத்தினள்
நோதக வுண்டோ நும்மக னார்க்கினி
சாவக நோன்பிக ளடிக ளாதலின்
நாத்தூண் நங்கையொடு நாள்வழி படூஉம்
அடிசி லாக்குதற் கமைந்தநற் கலங்கள்
நெடியா தளிமின் நீரென கூற
இடைக்குல மடந்தையர் இயல்பிற் குன்றா
மடைக்கல தன்னொடு மாண்புடை மரபிற்
கோளி பாகற் கொழுங்கனி திரள்காய்
வாள்வரி கொடுங்காய் மாதுளம் பசுங்காய்
மாவின் கனியொடு வாழை தீங்கனி
சாலி யரிசி தம்பாற் பயனொடு
கோல்வளை மாதே கொள்கென கொடுப்ப
மெல்விரல் சிவ பல்வேறு பசுங்காய்
கொடுவா குயத்து விடுவாய் செ
திருமுகம் வியர்த்தது செங்கண் சேந்தன
கரிபுற அட்டில் கண்டனள் பெயர
வையெரி மூட்டிய ஐயை தன்னொடு
கையறி மடைமையிற் காதலற் காக்கி
தால புல்லின் வால்வெண் தோட்டு
கைவன் மகடூஉ கவின்பெற புனைந்த
செய்வினை தவிசிற் செல்வன் இருந்தபின்
கடிமல ரங்கையிற் காதல னடிநீர்
சுடுமண் மண்டையில் தொழுதனள் மாற்றி
மண்ணக மடந்தையை மயக்கொழி பனள்போல்
தண்ணீர் தௌித்து தன்கையால் தடவி
குமரி வாழையின் குருத்தகம் விரித்தீங்கு
அமுத முண்க அடிக ளீங்கென
அரசர் பின்னோர கருமறை மருங்கின்
உரிய வெல்லாம் ஒருமுறை கழித்தாங்கு
ஆயர் பாடியின் அசோதைபெற் றெடுத்த
பூவை புதுமலர் வண்ணன் கொல்லோ
நல்லமு துண்ணும் நம்பி யீங்கு
பல்வளை தோளியும் பண்டுநங் குலத்து
தொழுனை யாற்றினுள் தூமணி வண்ணனை
விழு தீர்த்த விளக்கு கொல்லென
ஐயையு தவ்வையும் விம்மிதம் எய்தி
கண்கொளா கிவர் காட்சி யீங்கென
உண்டினி திருந்த உயர்பே ராளற்கு
அம்மென் திரையலோ டடைக்கா யீத்த
மையீ ரோதியை வருகென பொருந்தி
கல்லதர் அத்தம் கடக்க யாவதும்
வல்லுந கொல்லோ மடந்தைமெல் லடியென
வெம்முனை யருஞ்சுரம் போந்ததற் கிரங்கி
எம்முது குரவர் என்னுற் றனர்கொல்
மாயங் கொல்லோ வல்வினை
யானுளங் கலங்கி யாவதும் அறியேன்
வறுமொழி யாளரொடு பரத்தரொடு
குறுமொழி கோட்டி நெடுநகை புக்கு
பொச்சா புண்டு பொருளுரை யாளர்
நச்சுக்கொன் றேற்கும் நன்னெறி யுண்டோ
இருமுது குரவ ரேவலும் பிழைத்தேன்
சிறுமுது குறைவிக்கு சிறுமையுஞ் செய்தேன்
வழுவெனும் பாரேன் மாநகர் மருங்கீண்டு
எழுகென எழுந்தாய் என்செய் தனையென
அறவோர களித்தலும் அந்தண ரோம்பலும்
துறவோர கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னைநும்
பெருமக டன்னொடும் பெரும்பெயர தலைத்தாள்
மன்பெருஞ் சிறப்பின் மாநிதி கிழவன்
முந்தை நில்லா முனிவிக தனனா
அற்புளஞ் சிறந்தாங் கருண்மொழி அளைஇ
எற்பா ராட்ட யானக தொளித்த
நோயும் துன்பமும் நொடிவது போலுமென்
வாயல் முறுவற்கவர் உள்ளகம் வருந்த
போற்றா வொழுக்கம் புரிந்தீர் யாவதும்
மாற்றா உள்ள வாழ்க்கையே னாதலின்
ஏற்றெழு தனன்யான் என்றவள் கூற
குடிமுதற் சுற்றமும் குற்றிளை யோரும்
அடியோர் பாங்கும் ஆயமும் நீங்கி
நாணமும் மடனும் நல்லோ ரேத்தும்
பேணிய கற்பும் பெருந்துணை யாக
என்னொடு போந்தீங் கென்றுயர் களைந்த
பொன்னே கொடியே புனைபூங் கோதாய்
நாணின் பாவாய் நீணில விளக்கே
கற்பின் கொழுந்தே பொற்பின் செல்வி
சீறடி சிலம்பி னொன்றுகொண் டியான்போய்
மாறி வருவன் மயங்கா தொழிகென
கருங்கயல் நெடுங்க காதலி தன்னை
ஒருங்குடன் தழீஇ உழையோ ரில்லா
ஒருதனி கண்டுதன் உள்ளகம் வெதும்பி
வருபனி கரந்த கண்ண னாகி
பல்லான் கோவல ரில்லம் நீங்கி
வல்லா நடையின் மறுகிற் செல்வோன்
இமிலே றெதிர்ந்த திழுக்கென அறியான்
தன்குலம் அறியு தகுதியன் றாதலின்
தாதெரு மன்ற தானுடன் கழிந்து
மாதர் வீதி மறுகிடை நடந்து
பீடிகை தெருவிற் பெயர்வோன் ஆங்கண்
கண்ணுள் வினைஞர் கைவினை முற்றிய
நுண்வினை கொல்லர் நூற்றுவர் பின்வர
மெய்ப்பை புக்கு விலங்குநடை செலவின்
கைக்கோற் கொல்லனை கண்டன னாகி
தென்னவன் பெயரொடு சிறப்பு பெற்ற
பொன்வினை கொல்லன் இவனென பொருந்தி
காவலன் றேவி காவதோர் காற்கணி
நீவிலை யிடுதற் காதி யோவென
அடியேன் அறியே னாயினும் வேந்தர்
முடிமுதற் கலன்கள் சமைப்பேன் யானென
கூற்ற தூதன் கைதொழு தேத்த
போற்றருஞ் சிலம்பின் பொதிவா யவிழ்த்தனன்
மத்தக மணியோடு வயிரம் கட்டிய
பத்தி கேவண பசும்பொற் குடைச்சூற்
சித்திர சிலம்பின் செய்வினை யெல்லாம்
பொய்த்தொழிற் கொல்லன் புரிந்துடன் நோக்கி
கோப்பெரு தேவி கல்லதை இச்சிலம்பு
யாப்புற வில்லை யெனமுன் போந்து
விறல்மிகு வேந்தற்கு விளம்பியான் வரவென்
சிறுகுடி லங்கண் இருமின் நீரென
கோவலன் சென்ற குறுமக னிருக்கையோர்
தேவ கோட்ட சிறையகம் புக்கபின்
கரந்தியான் கொண்ட காலணி ஈங்கு
பரந்து வௌிப்படா முன்னம் மன்னற்கு
புலம்பெயர் புதுவனிற் போக்குவன் யானென
கலங்கா வுள்ளம் கரந்தனன் செல்வோன்
கூடன் மகளிர் ஆடல் தோற்றமும்
பாடற் பகுதியும் பண்ணின் பயங்களும்
காவல னுள்ளம் கவர்ந்தன என்றுதன்
ஊட லுள்ளம் உள்கர தொளித்து
தலைநோய் வருத்த தன்மே லிட்டு
குலமுதல் தேவி கூடா தேக
மந்திர சுற்றம் நீங்கி மன்னவன்
சிந்தரி நெடுங்க சிலதியர் தம்மொடு
கோப்பெரு தேவி கோயில் நோக்கி
காப்புடை வாயிற் கடைகாண் அகவையின்
வீழ்ந்தனன் கிடந்து தாழ்ந்துபல ஏத்தி
கன்னக மின்றியும் கவைக்கோ லின்றியும்
துன்னிய மந்திர துணையென கொண்டு
வாயி லாளரை மயக்குதுயி லுறுத்து
கோயிற் சிலம்பு கொண்ட கள்வன்
கல்லென் பேரூர காவலர கரந்தென்
சில்லை சிறுகுடி லகத்திரு தோனென
வினைவிளை கால மாதலின் யாவதும்
சினையலர் வேம்பன் தேரான் ஆகி
ஊர்கா பாளரை கூவி ஈங்கென்
தாழ்பூங் கோதை தன்காற் சிலம்பு
கன்றிய கள்வன் கைய தாகில்
கொன்ற சிலம்பு கொணர்க ஈங்கென
காவலன் ஏவ கருந்தொழிற் கொல்லனும்
ஏவ லுள்ள தெண்ணியது முடித்தென
தீவினை முதிர்வலை சென்றுப டிருந்த
கோவலன் றன்னை குறுகின னாகி
வலம்படு தானை மன்னவன் ஏவ
சிலம்பு காணிய வந்தோர் இவரென
செய்வினை சிலம்பின் செய்தி யெல்லாம்
பொய்வினை கொல்லன் புரிந்துடன் காட்ட
இலக்கண முறைமையின் இருந்தோன் ஈங்கிவன்
கொலைப்படு மகனலன் என்றுகூறும்
அருந்திறல் மாக்களை அகநகை துரைத்து
கருந்தொழிற் கொல்லன் காட்டின னுரைப்போன்
மந்திரம் தெய்வம் மருந்தே நிமித்தம்
தந்திரம் இடனே காலம் கருவியென்று
எட்டுட னன்றே இழுக்குடை மரபிற்
கட்டுண் மாக்கள் துணையென திரிவது
மருந்திற் பட்டீ ராயின் யாவரும்
பெரும்பெயர் மன்னனிற் பெருநவை பட்டீர்
மந்திர நாவிடை வழுத்துவ ராயின்
இந்திர குமரரின் யாங்காண் குவமோ
தெய்வ தோற்றம் தௌிகுவ ராயின்
கையக துறுபொருள் காட்டியும் பெயர்குவர்
மருந்தின் நங்கண் மயக்குவ ராயின்
இருந்தோம் பெயரும் இடனுமா ருண்டோ
நிமித்தம் வாய்த்திடி னல்ல தியாவதும்
புகற்கிலா அரும்பொருள் வந்துகை புகுதினும்
தந்திர கரணம் எண்ணுவ ராயின்
இந்திரன் மார்ப தாரமும் எய்துவர்
இவ்விடம் இப்பொருள் கோடற் கிடமெனின்
அவ்விட தவரை யார்காண் கிற்பார்
காலங் கருதி அவர்பொருள் கையுறின்
மேலோ ராயினும் விலக்கலு முண்டோ
கருவி கொண்டவர் அரும்பொருள் கையுறின்
இருநில மருங்கின் யார்காண் கிற்பார்
இரவே பகலே என்றிரண் டில்லை
கரவிடங் கேட்பினோர் புகலிட மில்லை
தூதர் கோலத்து வாயிலின் இருந்து
மாதர் கோலத்து வல்லிரு புக்கு
விளக்கு நிழலில் துளக்கிலன் சென்றாங்கு
இளங்கோ வேந்தன் துளங்கொளி ஆரம்
வெயிலிடு வயிரத்து மின்னின் வாங்க
துயில்கண் விழித்தோன் தோளிற் காணான்
உடைவாள் உருவ உறைகை வாங்கி
எறிதொறுஞ் செறித்த இயல்பிற் காற்றான்
மல்லிற் காண மணித்தூண் காட்டி
கல்வியிற் பெயர்ந்த கள்வன் றன்னை
கண்டோர் உளரெனிற் காட்டும் ஈங்கிவர
குண்டோ வுலக தொப்போ ரென்ற
கருந்தொழிற் கொல்லன் சொல்ல ஆங்கோர்
திருந்துவேற் றடக்கை இளையோன் கூறும்
நிலனகழ் உளியன் நீல தானையன்
கலன்நசை வேட்கையிற் கடும்புலி போன்று
மாரி நடுநாள் வல்லிருள் மயக்கத்து
ஊர்மடி கங்குல் ஒருவன் தோன்ற
கைவாள் உருவஎன் வாங்க
எவ்வாய் மருங்கினும் யானவற் கண்டிலேன்
அரிதிவர் செய்தி அலைக்கும் வேந்தனும்
உரிய தொன் றுரைமின் உறுபடை யீரென
கல்லா களிமக னொருவன் கையில்
வெள்வாள் எறிந்தனன் விலங்கூ டறுத்தது
புண்ணுமிழ் குருதி பொழிந்துடன் பரப்ப
மண்ணக மடந்தை வான்றுயர் கூர
காவலன் செங்கோல் வளைஇய வீழ்ந்தனன்
கோவலன் பண்டை ஊழ்வினை உருத்தென்
நேரிசை வெண்பா
நண்ணும் இருவினையும் நண்ணுமின்கள் நல்லறமே
கண்ணகி தன் கேள்வன் காரணத்தான்மண்ணில்
வளையாத செங்கோல் வளைந்ததே பண்டை
விளைவாகி வந்த வினை
ஆய்ச்சியர் குரவை
கயலெழுதிய இமயநெற்றியின்
அயலெழுதிய புலியும்வில்லும்
நாவலந்தண் பொழின்மன்னர்
ஏவல்கேட பாரரசாண்ட
மாலை வெண்குடை பாண்டியன் கோயிலில்
காலை முரசங் கனைகுர லியம்புமாகலின்
நெய்ம்முறை நமக்கின் றாமென்று
ஐயைதன் மகளை கூஉ
கடைகயிறு மத்துங் கொண்டு
இடைமுதுமகள் வந்துதோன்றுமன்
உரைப்பாட்டு மடை
குடப்பால் உறையா குவியிமில் ஏற்றின்
மடக்கணீர் சோரும் வருவதொன் றுண்டு
உறிநறு வெண்ணெய் உருகா உருகும்
மறிதெறி தாடா வருவதொன் றுண்டு
நான்முலை யாயம் நடுங்குபு நின்றிரங்கும்
மான்மணி வீழும் வருவதொன் றுண்டு
கருப்பம்
குடத்துப்பா லுறையாமையும் குவியிமி லேற்றின்
மடக்கண்ணீீர் சோர்தலும் உறியில் வெண்ணெ
யுருகாமையும் மறி முடங்கியாடாமையும் மான்மணி
நிலத்தற்று வீழ்தலும் வருவதோர் துன்பமுண்டென
மகளை நோக்கி மனமயங்காதே மண்ணின்
மாதர்க்கணியாகிய கண்ணகியுந்தான்காண
ஆயர்பாடியில் எருமன்றத்து மாயவனுடன் தம்முன் ஆடிய
வாலசரிதை நாடகங்களில் வேல் நெடுங்கண்
பிஞ்ஞையோ டாடிய குரவை யாடுதும் யாமென்றாள்
கறவை கன்று துயர் நீங்குகவெனவே
கொளு
காரி கதனஞ்சான் பாய்ந்தானை காமுறுமிவ்
வேரி மலர கோதையாள்
கட்டு
நெற்றி செகிலை யடர்த்தாற் குரியவி
பொற்றொடி மாதராள் தோள்
மல்லல் மழவிடை யூர்ந்தாற் குரியளிம்
முல்லையம் பூங்குழல் தான்
நுண்பொறி வெள்ளை யடர்த்தாற்கே யாகுமி
பெண்கொடி மாதர்தன் தோள்
பொற்பொறி வெள்ளை யடர்த்தார்க்கே யாகுமி
நற்கொடி மென்முலை தான்
வென்றி மழவிடை யூர்ந்தாற் குரியளி
கொன்றையம் பூங்குழ லாள்
தூநிற வெள்ளை அடர்த்தாற் குரியளி
பூவை புதுமல ராள்
எடுத்து காட்டு
ஆங்கு
தொழுவிடை ஏறு குறித்து வளர்த்தார்
எழுவரிளங் கோதை யார்
என்றுதன் மகளை நோக்கி
தொன்றுபடு முறையால் நிறுத்தி
இடைமுது மகளிவர்க்கு
படைத்துக்கோ பெயரிடுவாள்
குடமுதல் இடமுறை யாக்குரல் துத்தம்
கைக்கிளை உழைஇளி விளரி தாரமென
விரிதரு பூங்குழல் வேண்டிய பெயரே
மாயவன் என்றாள் குரலை விறல்வெள்ளை
ஆயவன் என்றாள் இளிதன்னை ஆய்மகள்
பின்னையாம் என்றாளோர் துத்தத்தை மற்றையார்
முன்னையாம் என்றாள் முறை
மாயவன் சீருளார் பிஞ்ஞையு தாரமும்
வால்வெள்ளை சீரார் உழையும் விளரியும்
கைக்கிளை பிஞ்ஞை இடத்தாள் வலத்துளாள்
முத்தைக்கு நல்விளரி தான்
அவருள்
வண்டுழாய் மாலையை மாயவன் மேலிட்டு
தண்டா குரவைதான் உள்படுவாள்கொண்டசீர்
வையம் அளந்தான்றன் மார்பின் திருநோக்கா
பெய்வளை கையாள்நம் பின்னைதா னாமென்றே
ஐயென்றா ளாயர் மகள்
கூத்துள் படுதல்
அவர் தாம்
செந்நிலை மண்டிலத்தாற் கற்கட கைகோஒத்து
அந்நிலையே யாடற்சீ ராய்ந்துளார் முன்னை
குரற்கொடி தன்கிளையை நோக்கி பரப்புற்ற
கொல்லை புனத்து குருந்தொசித்தாற் பாடுதும்
முல்லைத்தீம் பாணி யென்றாள்
எனா
குரன்மந்த மாக இளிசம னாக
வரன்முறையே துத்தம் வலியா உரனிலா
மந்தம் விளரி பிடிப்பாள் அவள்நட்பின்
பின்றையை பாட்டெடு பாள்
பாட்டு
கன்று குணிலா கனியுதிர்த்த மாயவன்
இன்றுநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
கொன்றை தீங்குழல் கேளாமோ தோழீ
பாம்பு கயிறா கடல்கடைந்த மாயவன்
ஈங்குநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
ஆம்பல தீங்குழல் கேளாமோ தோழீ
கொல்லையஞ் சாரற் குருந்தொசித்த மாயவன்
எல்லைநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
முல்லை தீங்குழல் கேளாமோ தோழீ
தொழுனை துறைவனோ டாடிய பின்னை
அணிநிறம் பாடுகேம் யாம்
இறுமென் சாயல் நுடங்க நுடங்கி
அறுவை யொளித்தான் வடிவென் கோயாம்
அறுவை யொளித்தான் அயர அயரும்
நறுமென் சாயல் முகமென் கோயாம்
வஞ்சஞ் செய்தான் தொழுனை புனலுள்
நெஞ்சங் கவர்ந்தாள் நிறையென் கோயாம்
நெஞ்சங் கவர்ந்தாள் நிறையும் வளையும்
வஞ்சஞ் செய்தான் வடிவென் கோயாம்
தையல் கலையும் வளையும் இழந்தே
கையி லொளித்தாள் முகமென் கோயாம்
கையி லொளித்தாள் முகங்கண் டழுங்கி
மைய லுழந்தான் வடிவென் கோயாம்
ஒன்றன் பகுதி
கதிர்திகிரி யான்மறைத்த கடல்வண்ணன் இடத்துளாள்
மதிபுரையு நறுமேனி தம்முனோன் வலத்துளாள்
பொதியவிழ் மலர்க்கூந்தற் பிஞ்ஞைசீர் புறங்காப்பார்
முதுமறைதேர் நாரதனார் முந்தைமுறை நரம்புளர்வார்
மயிலெரு துறழ்மேனி மாயவன் வலத்துளாள்
பயிலிதழ் மலர்மேனி தம்முனோன் இடத்துளாள்
கயிலெருத்தம் கோட்டியநம் பின்னைசீர் புறங்காப்பார்
குயிலுவருள் நாரதனார் கொளைபுணர்சீர் நரம்புளர்வார்
ஆடுநர புகழ்தல்
மாயவன்றம் முன்னினொடும் வரிவளைக்கை பின்னையொடும்
கோவலர்தஞ் சிறுமியர்கள் குழற்கோதை புறஞ்சோர
ஆய்வளைச்சீர கடிபெயர்த்தி டசொதையார் தொழுதே
தாதெருமன் றத்தாடுங் குரவையோ தகவுடைத்தே
எல்லாநாம்
புள்ளூர் கடவுளை போற்றுதும்
உள்வரி பாணியொன் றுற்று
உள்வரி வாழ்த்து
கோவா மலையாரம் கோத்த கடலாரம்
தேவர்கோன் பூணாரம் தென்னர்கோன் மார்பினவே
தேவர்கோன் பூணாரம் பூண்டான் செழுந்துவரை
கோகுல மேய்த்து குருந்தொசித்தா னென்பரால்
பொன்னி கோட்டு புலிபொறித்து மண்ணாண்டான்
மன்னன் வளவன் மதிற்புகார் வாழ்வேந்தன்
மன்னன் வளவன் மதிற்புகார் வாழ்வேந்தன்
பொன்னன் திகிரி பொருபடையா னென்பரால்
முந்நீரி னுள்புக்கு மூவா கடம்பெறிந்தான்
மன்னர்கோ சேரன் வளவஞ்சி வாழ்வேந்தன்
மன்னர்கோ சேரன் வளவஞ்சி வாழ்வேந்தன்
கன்னவில் தோளோச்சி கடல்கடைந்தா னென்பரால்
முன்னிலை பரவல்
வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி
கடல்வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே
கலக்கியகை அசோதையார் கடைகயிற்றாற் கட்டுண்கை
மலர்க்கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே
அறுபொருள் இவனென்றே அமரர்கண தொழுதேத்த
உறுபசியொன் றின்றியே உலகடைய உண்டனையே
உண்டவாய் களவினான் உறிவெண்ணெ யுண்டவாய்
வண்டுழாய் மாலையாய் மாயமோ மருட்கைத்தே
திரண்டமரர் தொழுதேத்தும் திருமால்நின் செங்கமல
இரண்டடியான் மூவுலகும் இருள்தீர நடந்தனையே
நடந்தஅடி பஞ்சவர்க்கு தூதாக
மடங்கலாய் மாறட்டாய் மாயமோ மருட்கைத்தே
படர்க்கை பரவல்
மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடி
தாவியசே வடிசேப்ப தம்பியொடுங் கான்போந்து
சோவரணும் போர்மடி தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன்சீர் கேளாத செவி என்ன செவியே
திருமால்சீர் கேளாத செவி என்ன செவியே
பெரியவனை மாயவனை பேருலக மெல்லாம்
விரிகமல உந்தியுடை விண்ணவனை கண்ணும்
திருவடியும் கையும் திருவாயும் செய்ய
கரியவனை காணாத கண்ணென்ண கண்ணே
கண்ணிமைத்து காண்பார்தம் கண்ணென்ண கண்ணே
மடந்தாழு நெஞ்சத்து கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்ற
படர்ந்தா ரணமுழங்க பஞ்சவர்க்கு தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே
நாராயணா வென்னா நாவென்ன நாவே
என்றியாம்
கோத்த குரவையுள் ஏத்திய தெய்வநம்
ஆத்தலை பட்ட துயர்தீர்க்க வேத்தர்
மருள வைகல் மாறட்டு
வெற்றி விளைப்பது மன்னோ கொற்றத்து
இடிப்படை வானவன் முடித்தலை யுடைத்த
தொடித்தோ டென்னவன் கடிப்பிகு முரசே
துன்ப மாலை
ஆங்கு
ஆயர் முதுமகள் ஆடிய சாயலாள்
பூவும் புகையும் புனைசாந்துங் கண்ணியும்
நீடுநீர் வையை நெடுமா லடியே
தூவி துறைபடி போயினாள் மேவி
குரவை முடிவிலோர் ஊரரவங் கேட்டு
விரைவொடு வந்தாள் உளள்
அவள்தான்
சொல்லாடாள் நின்றாள்அ நங்கைக்கு
சொல்லாடும் சொல்லாடு தான்
எல்லாவோ
காதலற் காண்கிலேன் கலங்கிநோய் கைம்மிகும்
ஊதுலை தோற்க உயிர்க்கும்என் நெஞ்சன்றே
ஊதுலை தோற்க உயிர்க்கும்என் நெஞ்சாயின்
ஏதிலார் சொன்ன தெவன்வாழி யோதோழீ
நண்பகற் போதே நடுக்குநோய் கைம்மிகும்
அன்பனை காணாது அலவும்என் நெஞ்சன்றே
அன்பனை காணாது அலவும்என் நெஞ்சாயின்
மன்பதை சொன்ன தெவன்வாழி யோதோழீ
தஞ்சமோ தோழீ தலைவன் வரக்காணேன்
வஞ்சமோ உண்டு மயங்கும்என் நெஞ்சன்றே
வஞ்சமோ உண்டு மயங்கும்என் நெஞ்சாயின்
எஞ்சலார் சொன்ன தெவன்வாழி யோதோழீ
சொன்னது
அரைசுறை கோயில் அணியார் ஞெகிழம்
கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே
கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே
குரைகழல் மாக்கள் கொலைகுறி தனரே
என கேட்டு
பொங்கி எழுந்தாள் விழுந்தாள் பொழிகதிர
திங்கள் முகிலொடுஞ் சேண்நிலம் கொண்டென
செங்கண் சிவப்ப அழுதாள்தன் கேள்வனை
எங்கணா என்னா இனைந்தேங்கி மாழ்குவாள்
இன்புறு தங்கணவர் இடரெரி யகமூழ்க
துன்புறு வனநோற்று துயருறு மகளிரைப்போல்
மன்பதை அலர்தூற்ற மன்னவன் தவறிழைப்ப
அன்பனை இழந்தேன்யான் அவலங்கொண் டழிவலோ
நறைமலி வியன்மார்பின் நண்பனை இழந்தேங்கி
துறைபல திறமூழ்கி துயருறு மகளிரைப்போல்
மறனொடு திரியுங்கோல் மன்னவன் தவறிழைப்ப
அறனென்னும் மடவோய்யான் அவலங் கொண்டழிவலோ
தம்முறு பெருங்கணவன் தழலெரி யகமூழ
கைம்மைகூர் துறைமூழ்குங் கவலைய மகளிரைப்போல்
செம்மையின் இகந்தகோல் தென்னவன் தவறிழைப்ப
இம்மையும் இசையொரீஇ இனைந்தேங்கி அழிவலோ
காணிகா
வாய்வதின் வந்த குரவையின் வந்தீண்டும்
ஆய மடமகளி ரெல்லீருங் கேட்டீமின்
ஆய மடமகளி ரெல்லீருங் கேட்டைக்க
பாய்திரை வேலி படுபொருள் நீயறிதி
காய்கதிர செல்வனே கள்வனோ என்கணவன்
கள்வனோ அல்லன் கருங்கயற்கண் மாதராய்
ஒள்ளெரி உண்ணுமிவ் வூரென்ற தொருகுரல்
ஊர்சூழ் வரி
என்றனன் வெய்யோன் இலங்கீர் வளைத்தோளி
நின்றிலள் நின்ற சிலம்பொன்று கையேந்தி
முறையில் அரசன்றன் ஊரிருந்து வாழும்
நிறையுடை பத்தினி பெண்டிர்காள் ஈதொன்று
பட்டேன் படாத துயரம் படுகாலை
உற்றேன் உறாதது உறுவனே ஈதொன்று
கள்வனோ அல்லன் கணவன்என் காற்சிலம்பு
கொள்ளும் விலைப்பொருட்டாற் கொன்றாரே ஈதொன்று
மாதர தகைய மடவார்கண் முன்னரே
காதற் கணவனை காண்பனே ஈதொன்று
காதற் கணவனை கண்டா லவன்வாயில்
தீதறு நல்லுரை கேட்பனே ஈதொன்று
தீதறு நல்லுரை கேளா தொழிவேனேல்
நோதக்க செய்தாளென் றெள்ளல் இதுவொன்றென்று
அல்லலுற் றாற்றா தழுவாளை கண்டேங்கி
மல்லல் மதுரையா ரெல்லாரு தாமயங்கி
களையாத துன்பமி காரிகைக்கு காட்டி
வளையாத செங்கோல் வளைந்த திதுவென்கொல்
மன்னவர் மன்னன் மதிக்குடை வாள்வேந்தன்
தென்னவன் கொற்றம் சிதைந்த திதுவென்கொல்
மண்குளிர செய்யும் மறவேல் நெடுந்தகை
தண்குடை வெம்மை விளைத்த திதுவென்கொல்
செம்பொற் சிலம்பொன்று கையேந்தி நம்பொருட்டால்
பெருந்தெய்வம் வந்த திதுவென்கொல்
ஐயரி யுண்கண் அழுதேங்கி யரற்றுவாள்
தெய்வமுற்றாள் போலு தகைய ளிதுவென்கொல்
என்பன சொல்லி இனைந்தேங்கி யாற்றவும்
மன்பழி தூற்றுங் குடியதே மாமதுரை
கம்பலை மாக்கள் கணவனை தாங்காட்ட
செம்பொற் கொடியனையாள் கண்டாளை தான்காணான்
மல்லன்மா ஞாலம் இருளூட்டி மாமலைமேற்
செவ்வென் கதிர்சுருங்கி செங்கதிரோன் சென்றொளி
புல்லென் மருள்மாலை பூங்கொடியாள் பூசலிட
ஒல்லென் ஒலிபடைத்த தூர்
வண்டார் இருங்குஞ்சி மாலைதன் வார்குழன்மேற்
கொண்டாள் தழீஇ கொழுநன்பாற் காலைவா
புண்தாழ் குருதி புறஞ்சோர மாலைவா
கண்டாள் அவன்றன்னை காணா கடுந்துயரம்
என்னுறு துயர்கண்டும் இடருறும் இவள்என்னீர்
பொன்னுறு நறுமேனி பொடியாடி கிடப்பதோ
மன்னுறு துயர்செய்த மறவினை யறியாதேற்கு
என்னுறு வினைகாணா இதுவென உரையாரோ
யாருமில் மருள்மாலை இடருறு தமியேன்முன்
தார்மலி மணிமார்பம் தரைமூழ்கி கிடப்பதோ
பார்மிகு பழிதூற்ற பாண்டியன் தவறிழைப்ப
ஈர்வதோர் வினைகாணா இதுவென உரையாரோ
கண்பொழி புனல்சோரும் கடுவினை யுடையேன்முன்
புண்பொழி குருதியிரா பொடியாடி கிடப்பதோ
மன்பதை பழிதூற்ற மன்னவன் தவறிழைப்ப
உண்பதோர் வினைகாணா இதுவென உரையாரோ
பெண்டிரும் உண்டுகொல்
கொண்ட கொழுந ருறுகுறை தாங்குறூஉம்
பெண்டிரும் உண்டுகொல்
சான்றோரும் உண்டுகொல்
ஈன்ற குழுவி எடுத்து வளர்க்குறூஉம்
சான்றோரும் உண்டுகொல்
தெய்வமும் உண்டுகொல்
வைவாளில் தப்பிய மன்னவன் கூடலில்
தெய்வமும் உண்டுகொல்
என்றிவை சொல்லி அழுவாள் கணவன்றன்
பொன்துஞ்சு மார்பம் பொருந தழீஇக்கொள்ள
நின்றான் எழுந்து நிறைமதி வாள்முகம்
கன்றிய தென்றவள் கண்ணீர்கை யான்மாற்ற
அழுதேங்கி நிலத்தின்வீழ தாயிழையாள் தன்கணவன்
தொழுதகைய திருந்தடியை துணைவளைக்கை யாற்பற்ற
பழுதொழி தெழுந்திருந்தான் பல்லமரர் குழாத்துளான்
எழுதெழில் மலருண்கண் இருந்தைக்க எனப்போனான்
மாயங்கொல் மற்றென்கொல் மருட்டியதோர் தெய்வங்கொல்
போயெங்கு நாடுகேன் பொருளுரையோ இதுவன்று
காய்சின தணிந்தன்றி கணவனை கைகூடேன்
தீவேந்தன் தனைக்கண்டி திறங்கேட்பல் யானென்றாள்
என்றாள் எழுந்தாள் இடருற்ற தீக்கனா
நின்றாள் நினைந்தாள் நெடுங்கயற்கண் நீர்சோர
நின்றால் நினைந்தாள் நெடுங்கயற்கண் நீர்துடையா
சென்றால் அரசன் செழுங்கோயில் வாயில்முன்
வழக்குரை காதை
ஆங்கு
குடையொடு கோல்வீழ நின்று நடுங்கும்
கடைமணி இன்குரல் காண்பென்காண் எல்லா
திசையிரு நான்கும் அதிர்ந்திடும் அன்றி
கதிரை இருள்விழுங காண்பென்காண் எல்லா
விடுங்கொடி வில்லிர வெம்பகல் வீழும்
கடுங்கதிர் மீனிவை காண்பென்காண் எல்லா
கருப்பம்
செங்கோலும் வெண்குடையும்
செறிநிலத்து மறிந்துவீழ்தரும்
நங்கோன்றன் கொற்றவாயில்
மணிநடுங்க நடுங்குமுள்ளம்
இரவுவில்லிடும் பகல்மீன்விழும்
இருநான்கு திசையும் அதிர்ந்திடும்
வருவதோர் துன்பமுண்டு
மன்னவற் கியாம் உரைத்துமென
ஆடியேந்தினர் கலனேந்தினர்
அவிர்ந்துவிளங்கும் அணியிழையினர்
கோடியேந்தினர் பட்டேந்தினர்
கொழுந்திரையலின் செப்பேந்தினர்
வண்ணமேந்தினர் சுண்ணமேந்தினர்
மான்மதத்தின் சாந்தேந்தினர்
கண்ணியேந்தினர் பிணையலேந்தினர்
கவரியேந்தினர் தூபமேந்தினர்
கூனுங்குறளும் ஊமுங்கூடிய
குறுந்தொழிலிளைஞர் செறிந்துசூழ்தர
நரைவிரைஇய நறுங்கூந்தலர்
உரைவிரைஇய பலர்வாழ்த்திட
ஈண்டுநீர் வையங்காக்கும்
பாண்டியன்பெரு தேவிவாழ்கென
ஆயமுங் காவலுஞ்சென் றடியீடு பரசியேத்த
கோப்பெரு தேவிசென்றுதன் தீக்கனா திறமுரைப்ப
அரிமா னேந்திய அமளிமிசை இருந்தனன்
திருவீழ் மார்பின் தென்னவர் கோவே இப்பால்
வாயி லோயே
அறிவறை போகிய பொறியறு நெஞ்சத்து
இறைமுறை பிழைத்தோன் வாயி லோயே
இணையரி சிலம்பொன் றேந்திய கையள்
கணவனை இழந்தாள் கடையக தாளென்று
அறிவி பாயே
வாயிலோன் வாழியெங் கொற்கை வேந்தே வாழி
தென்னம் பொருப்பின் தலைவ வாழி
செழிய வாழி தென்னவ
பழியொடு படரா பஞ்வ வாழி
அடர்த்தெழு குருதி யடங்கா பசுந்துணி
பிடர்த்தலை பீடம் ஏறிய மடக்கொடி
வெற்றிவேற் றடக்கை கொற்றவை அல்லள்
அறுவர கிளைய நங்கை இறைவனை
ஆடல்கண் டருளிய அணங்கு சூருடை
கானகம் உகந்த காளி தாருகன்
பேருரங் கிழித்த பெண்ணு மல்லள்
செற்றனள் போலும் செயிர்த்தனள்
பொற்றொழிற் சிலம்பொன் றேந்திய கையள்
கணவனை இழந்தாள் கடையக தாளே
கணவனை இழந்தாள் கடையக தாளே என
வருக மற்றவள் தருக ஈங்கென
வாயில் வந்து கோயில் காட்ட
கோயில் மன்னனை குறுகினள் சென்றுழி
நீர்வார் கண்ணை எம்முன் வந்தோய்
யாரை யோநீ மடக்கொடி யோய்என
தேரா மன்னா செப்புவ துடையேன்
எள்ளறு சிறப்பின் இமையவர் வி
புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்
வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுட தான்தன்
அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும்பெயர புகாரென் பதியே அவ்வூர்
ஏசா சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி
மாசாத்து வாணிகன் மகனை யாகி
வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்ப
சூழ்கழல் மன்னா நின்னகர புகுந்தீங்கு
என்காற் சிலம்புபகர்தல் வேண்டி நின்பாற்
கொலைக்கள பட்ட கோவலன் மனைவி
கண்ணகி யென்பதென் பெயரேயென பெண்ணணங்கே
கள்வனை கோறல் கடுங்கோ லன்று
வெள்வேற் கொற்றங் காண்என ஒள்ளிழை
நற்றிறம் படரா கொற்கை வேந்தே
என்காற் பொற்சிலம்பு மணியுடை அரியே என
தேமொழி யுரைத்தது செவ்வை நன்மொழி
யாமுடை சிலம்பு முத்துடை அரியே
தருகென தந்து தான்முன் வைப்ப
கண்ணகி அணிமணி காற்சிலம் புடைப்ப
மன்னவன் வாய்முதல் தெறித்தது மணியே மணி கண்டு
தாழ்ந்த குடையன் தளர்ந்தசெங் கோலன்
பொன்செய் கொல்லன் தன்சொற் கேட்ட
யானோ அரசன் யானே கள்வன்
மன்பதை காக்கு தென்புலங் காவல்
என்முதற் பிழைத்தது கெடுகவென் ஆயுளென
மன்னவன் மயங்கிவீழ தனனே தென்னவன்
கோப்பெரு தேவி குலைந்தனள் நடுங்கி
கணவனை இழந்தோர்க்கு காட்டுவ தில்லென்று
இணையடி தொழுதுவீழ தனளே மடமொழி
வெண்பா
அல்லவை செய்தார கறங்கூற்ற மாமென்னும்
பல்லவையோர் சொல்லும் பழுதன்றேபொல்லா
வடுவினையே செய்த வயவேந்தன் றேவி
கடுவினையேன் செய்வதூஉங் காண்
காவி யுகுநீருங் கையில் தனிச்சிலம்பும்
ஆவி குடிபோன அவ்வடிவும்பாவியேன்
காடெல்லாஞ் சூழ்ந்த கருங்குழலுங் கண்டஞ்சி
கூடலான் கூடாயி னான்
மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும்
கையில் தனிச்சிலம்பும் கண்ணீரும்வையைக்கோன்
கண்டளவே தோற்றான்அ காரிகைதன் சொற்செவியில்
உண்டளவே தோற்றான் உயிர்
வஞ்சின மாலை
கோவேந்தன் தேவி கொடுவினை யாட்டியேன்
யாவு தெரியா இயல்பினே னாயினும்
முற்பகற் செய்தான் பிறன்கேடு தன்கேடு
பிற்பகற் காண்குறூஉம் பெற்றியகாண் நற்பகலே
வன்னி மரமும் மடைப்பளியுஞ் சான்றாக
முன்னிறுத்தி காட்டிய மொய்குழ லாள் பொன்னி
கரையின் மணற்பாவை நின்கணவ னாமென்று
உரைசெய்த மாதரொடும் போகாள் திரைவந்து
அழியாது சூழ்போக வாங்குந்தி நின்ற
வரியா ரகலல்குல் மாதர் உரைசான்ற
மன்னன் கரிகால் வளவன்மகள் வஞ்சிக்கோன்
தன்னை புனல்கொள்ள தான்புனலின் பின்சென்று
கல்நவில் தோளாயோ வென்ன கடல்வந்து
முன்னிறுத்தி காட்ட அவனை தழீஇ கொண்டு
பொன்னங் கொடிபோல போதந்தாள் மன்னி
மணல்மலி பூங்கானல் வருகலன்கள் நோக்கி
கணவன்வர கல்லுருவம் நீத்தாள் இணையாய
மாற்றாள் குழவிவிழ தன்குழவி யுங்கிணற்று
வீழ்த்தேற்று கொண்டெடுத்த வேற்கண்ணாள் வேற்றொருவன்
நீள்நோக்கங் கண்டு நிறைமதி வாள்முகத்தை
தானோர் குரக்குமுக மாகென்று போன
கொழுநன் வரவே குரக்குமுக நீத்த
பழுமணி அல்குற்பூம் பாவை விழுமிய
பெண்ணறி வென்பது பேதைமைத்தே என்றுரைத்த
நுண்ணறிவி னோர்நோக்கம் நோக்காதே எண்ணிலேன்
வண்டல் அயர்விட தியானோர் மகள்பெற்றால்
ஒண்டொடி நீயோர் மகற்பெறில் கொண்ட
கொழுநன் அவளுக்கென் றியானுரைத்த மாற்றம்
கெழுமி அவளுரைப்ப கேட்ட விழுமத்தால்
சிந்தைநோய் கூரு திருவிலேற் கென்றெடுத்து
தந்தைக்கு தாயுரைப்ப கேட்டாளாய் முந்தியோர்
கோடி கலிங்கம் உடுத்து குழல்கட்டி
நீடி தலையை வணங்கி தலைசுமந்த
ஆடகப்பூம் பாவை அவள்போல்வார் நீடிய
மட்டார் குழலார் பிறந்த பதிப்பிறந்தேன்
பட்டாங் கியானுமோர் பத்தினியே யாமாகில்
ஒட்டே னரசோ டொழிப்பேன் மதுரையுமென்
பட்டிமையுங் காண்குறுவாய் நீயென்னா விட்டகலா
நான்மாட கூடல் மகளிரு மைந்தரும்
வான கடவளரும் மாதவருங் கேட்டீமின்
யானமர் காதலன் தன்னை தவறிழைத்த
கோநகர் சீறினேன் குற்றமிலேன் யானென்று
இடமுலை கையால் திருகி மதுரை
வலமுறை மும்முறை வாரா அலமந்து
மட்டார் மறுகின் மணிமுலையை வட்டித்து
விட்டா ளெறிந்தாள் விளங்கிழையாள் வட்டித்த
நீல நிறத்து திரிசெக்கர் வார்சடை
பால்புரை வெள்ளெயிற்று பார்ப்பன கோலத்து
மாலை எரியங்கி வானவன் தான்தோன்றி
மாப தினிநின்னை மாண பிழைத்தநாள்
பாயெரி இந்த பதியூட்ட பண்டேயோர்
ஏவ லுடையேனா லியார்பிழைப்பா ரீங்கென்ன
பார்ப்பார் அறவோர் பசுப்ப தினிப்பெண்டிர்
மூத்தோர் குழவி யெனுமிவரை கைவிட்டு
தீத்திறத்தார் பக்கமே சேர்கென்று காய்த்திய
பொற்றொடி ஏவ புகையழல் மண்டிற்றே
நற்றேரான் கூடல் நகர்
வெண்பா
பொற்பு வழுதியுந்தன் பூவையரும் மாளிகையும்
விற்பொலியுஞ் சேனையுமா வேழமுங்கற்புண்ண
தீத்தரு வெங்கூடற் றெய்வ கடவுளரும்
மாத்துவ தான்மறைந்தார் மற்று
அழற்படு காதை
ஏவல் தெய்வ தெரிமுகம் திறந்தது
காவல் தெய்வங் கடைமுகம் அடைத்தன
அரைசர் பெருமான் அடுபோர செழியன்
வளைகோல் இழுக்க துயிராணி கொடுத்தாங்கு
இருநில மடந்தைக்கு செங்கோல் காட்ட
புரைதீர் கற்பின் தேவி தன்னுடன்
அரைசு கட்டிலில் துஞ்சியது அறியாது
ஆசான் பெருங்கணி அறக்களத்து அந்தணர்
காவிதி மந்திர கணக்கர் தம்மொடு
கோயில் மாக்களும் குறுந்தொடி மகளிரும்
ஓவி சுற்ற துரையவி திருப்ப
காழோர் வாதுவர் கடுந்தே ரூருநர்
வாய்வாள் மறவர் மயங்கினர் மலிந்து
கோமகன் கோயிற் கொற்ற வாயில்
தீமுகங் கண்டு தாமிடை கொள்ள
நித்தில பைம்பூண் நிலாத்திகழ் அவிரொளி
தண்கதிர் மதி தன்ன மேனியன்
ஒண்கதிர் நித்திலம் பூணொடு புனைந்து
வெண்ணிற தாமரை அறுகை நந்தியென்று
இன்னவை முடித்த நன்னிற சென்னியன்
நுரையென விரிந்த நுண்பூங் கலிங்கம்
புலரா துடுத்த உடையினன் மலரா
வட்டிகை இளம்பொரி வன்னிகை சந்தனம்
கொட்டமோ டரைத்து கொண்ட மார்பினன்
தேனும் பாலும் கட்டியும் பெட்ப
சேர்வன பெறூஉ தீம்புகை மடையினன்
தீர்த்த கரையும் தேவர் கோட்டமும்
ஓத்தின் சாலையும் ஒருங்குடன் நின்று
பிற்பகற் பொழுதிற் பேணினன் ஊர்வோன்
நன்பகல் வரவடி யூன்றிய காலினன்
விரிகுடை தண்டே குண்டிகை காட்டம்
பிரியா தருப்பை பிடித்த கையினன்
நாவினும் மார்பினும் நவின்ற நூலினன்
முத்தீ வாழ்க்கை முறைமையின் வழாஅ
வேத முதல்வன் வேள்வி கருவியோடு
ஆதி பூதத்து அதிபதி கடவுளும்
வென்றி வெங்கதிர் புரையும் மேனியன்
குன்றா மணிபுனை பூணினன் பூணொடு
முடிமுதற் கலன்கள் பூண்டனன் முடியொடு
சண்பகம் கருவிளை செங்கூ தாளம்
தண்கமழ் பூநீர சாதியோடு இனையவை
கட்டும் கண்ணியும் தொடுத்த மாலையும்
ஒட்டிய திரணையோடு ஒசிந்த பூவினன்
அங்குலி கையறிந்து அஞ்சுமகன் விரித்த
குங்கும வருணங் கொண்ட மார்பினன்
பொங்கொளி யரத்த பூம்ப டுடையினன்
முகிழ்த்தகை
சாலி அயினி பொற்கல தேந்தி
ஏலு நற்சுவை இயல்புளி கொணர்ந்து
வெம்மையிற் கொள்ளும் மடையினன் செம்மையில்
பவள செஞ்சுடர் திகழொளி மேனியன்
ஆழ்கடல் ஞால மாள்வோன் தன்னின்
முரைசொடு வெண்குடை கவரி நெடுங்கொடி
உரைசா லங்குசம் வடிவேல் வடிகயிறு
எனவிவை பிடித்த கையின னாகி
எண்ணருஞ் சிறப்பின் மன்னரை யோட்டி
மன்ணகம் கொண்டு செங்கோல் ஓச்சி
கொடுந்தொழில் கடிந்து கொற்றங் கொண்டு
நடும்புகழ் வளர்த்து நானிலம் புரக்கும்
உரைசால் சிறப்பின் நெடியோன் அன்ன
அரைச பூதத்து அருந்திறற் கடவுளும்
செந்நிற பசும்பொன் புரையும் மேனியன்
மன்னிய சிறப்பின் மறவேல் மன்னவர்
அரைசுமுடி யொழிய அமைத்த பூணினன்
வாணிக மரபின் நீள்நிலம் ஓம்பி
நாஞ்சிலும் துலாமும் ஏந்திய கையினன்
உரைசால் பொன்னிறங் கொண்ட உடையினன்
வெட்சி தாழை கட்கமழ் ஆம்பல்
சேட னெய்தல் பூளை மருதம்
கூட முடித்த சென்னியன் நீடொளி
பொன்னென விரிந்த நன்னிற சாந்தம்
தன்னொடு புனைந்த மின்னிற மார்பினன்
கொள்ளும் பயறும் துவரையும் உழுந்தும்
நன்னியம் பலவும் நயந்துடன் அளைஇ
கொள்ளென கொள்ளும் மடையினன் புடைதரு
நெல்லுடை களனே புள்ளுடை கழனி
வாணிக பீடிகை நீள்நிழற் காஞ்சி
பாணிகை கொண்டு முற்பகற் பொழுதில்
உள்மகிழ துண்ணு வோனே அவனே
நாஞ்சிலம் படையும் வாய்ந்துறை துலாமுஞ்
சூழொளி தாலு மியாழும் ஏந்தி
விலைந்துபத மிகுந்து விருந்துபதம் தந்து
மலையவும் கடலவு மரும்பலம் கொணர்ந்து
விலைய வாக வேண்டுநர களித்தாங்கு
உழவுதொழி லுதவும் பழுதில் வாழ்க்கை
கிழவன் என்போன் கிளரொளி சென்னியின்
இளம்பிறை சூடிய இறையவன் வடிவினோர்
விளங்கொளி பூத வியன்பெருங் கடவுளும்
கருவிளை புரையு மேனிய னரியொடு
வெள்ளி புனைந்த பூணினன் தெள்ளொளி
காழகம் செறிந்த உடையினன் காழகில்
சாந்து புலர்ந்தகன்ற மார்பினன் ஏந்திய
கோட்டினும் கொடியினும் நீரினும் நிலத்தினும்
காட்டிய பூவிற் கலந்த பித்தையன்
கம்மியர் செய்வினை கலப்பை ஏந்தி
செம்மையின் வரூஉஞ் சிறப்பு பொருந்தி
மண்ணுறு திருமணி புரையு மேனியன்
ஒண்ணிற காழகஞ் சேர்ந்த உடையினன்
ஆடற் கமைந்த அவற்றொடு பொருந்தி
பாடற் கமைந்த பலதுறை போகி
கலிகெழு கூடற் பலிபெறு பூ
தலைவ னென்போன் தானு தோன்றி
கோமுறை பிழைத்த நாளி லிந்நகர்
தீமுறை உண்பதோர் திறனுண் டென்ப
தாமுறை யாக அறிந்தன மாதலின்
யாமுறை போவ தியல்பன் றோவென
கொங்கை குறித்த கொற்ற நங்கைமுன்
நாற்பாற் பூதமும் பாற்பாற் பெயர
கூல மறுகும் கொடித்தேர் வீதியும்
பால்வேறு தெரிந்த நால்வேறு தெருவும்
உரக்குரங்கு உயர்த்த ஒண்சிலை உரவோன்
காவெரி யூட்டிய நாள்போற் கலங்க
அறவோர் மருங்கின் அழற்கொடி விடாது
மறவோர் சேரி மயங்கெரி மண்ட
கறவையும் கன்றும் கனலெரி சேரா
அறவை யாயர் அகன்றெரு அடைந்தன
மறவெங் களிறும் மடப்பிடி நிரைகளும்
விரைபரி குதிரையும் புறமதிற் பெயர்ந்தன
சாந்த தோய்ந்த ஏந்திள வனமுலை
மைத்தடங் கண்ணார் மைந்தர் தம்முடன்
செப்புவா யவிழ்ந்த தேம்பொதி நறுவிரை
நறுமல ரவிழ்ந்த நாறிரு முச்சி
துறுமலர பிணையல் சொரிந்த பூந்துகள்
குங்குமம் எழுதிய கொங்கை முன்றில்
பைங்கா ழாரம் பரிந்தன பரந்த
தூமென் சேக்கை துனிப்பதம் பாரா
கா கள்ளா டடங்கினர் மயங்க
திதலை அல்குல் தேங்கமழ் குழலியர்
குதலை செவ்வா குறுநடை புதல்வரொடு
பஞ்சியா ரமளியில் துஞ்சுதுயில் எடுப்பி
வால்நரை கூந்தல் மகளிரொடு போத
வருவிரு தோம்பி மனையற முட்டா
பெருமனை கிழத்தியர் பெருமகிழ் வெய்தி
இலங்குபூண் மார்பிற் கணவனை இழந்து
சிலம்பின் வென்ற சேயிழை நங்கை
கொங்கை பூசல் கொடிதோ வன்றென
பொங்கெரி வானவன் தொழுதனர் ஏத்தினர்
எண்ணான் கிரட்டி இருங்கலை பயின்ற
பண்ணியல் மடந்தையர் பயங்கெழு வீதி
தண்ணுமை முழவம் தாழ்தரு தீங்குழல்
பண்ணுக்கிளை பயிரும் பண்ணியாழ பாணியொடு
நாடக மடந்தைய ராடரங் கிழந்தாங்கு
எந்நா டாள்கொல் யார்மகள் கொல்லோ
இந்நா டிவ்வூர் இறைவனை யிழந்து
தேரா மன்னனை சிலம்பின் வென்றிவ்
ஊர்தீ யூட்டிய ஒருமக ளென்ன
அந்தி விழவும் ஆரண ஓதையும்
செந்தீ வேட்டலு தெய்வம் பரவலும்
மனைவிள குறுத்தலும் மாலை அயர்தலும்
வழங்குகுரன் முரசமு மடிந்த மாநகர
காதலற் கெடுத்த நோயொ டுளங்கனன்று
ஊதுலை குருகின் உயிர்த்தன ளுயிர்த்து
மறுகிடை மறுகுங் கவலையிற் கவலும்
இயங்கலும் இயங்கும் மயங்கலும் மயங்கும்
ஆரஞ ருற்ற வீரப தினிமுன்
கொந்தழல் வெம்மை கூரெரி பொறாஅள்
வந்து தோன்றினள் மதுராபதியென்
வெண்பா
மாமகளும் நாமகளும் மாமயிடற் செற்றுகந்த
கோமகளும் தாம்படைத்த கொற்றத்தாள் நாம
முதிரா முலைகுறைத்தாள் முன்னரே வந்தாள்
மதுரா பதியென்னு மாது
இக்காதையின் பாடல் வரிகள்
முதல் வரையும்
முதல் வரையும்
முதல் வரையும்
முதல் வரையும்
ஆம் வரியும்
பிற்கால இடைச்சேர்க்கையென உரையாசிரியர் பலரும் கருதுவர்
கட்டுரை காதை
சடையும் பிறையு தாழ்ந்த சென்னி
குவளை உண்கண் தவளவாள் முகத்தி
கடையெயிறு அரும்பிய பவளச்செவ் வாய்த்தி
இடைநிலா விரிந்த நித்தில நகைத்தி
இடமருங் கிருண்ட நீல மாயினும்
வலமருங்கு பொன்னிறம் புரையு மேனியள்
இடக்கை பொலம்பூ தாமரை யேந்தினும்
வலக்கை அம்சுடர கொடுவாள் பிடித்தோள்
வலக்கால் புனைகழல் கட்டினும் இடக்கால்
தனிச்சிலம்பு அரற்றும் தகைமையள் பனித்துறை
கொற்கை கொண்கன் குமரி துறைவன்
பொற்கோட்டு வரம்பன் பொதியிற் பொருப்பன்
குலமுதற் கிழத்தி ஆதலின் அலமந்து
ஒருமுலை குறைத்த திருமா பத்தினி
அலமரு திருமுக தாயிழை நங்கைதன்
முன்னிலை ஈயாள் பின்னிலை தோன்றி
கேட்டிசின் வாழி நங்கையென் குறையென
வாட்டிய திருமுகம் வலவயிற் கோட்டி
யாரைநீ யென்பின் வருவோய் என்னுடை
ஆரஞ ரெவ்வ மறிதியோவென
ஆரஞ ரெவ்வ மறிந்தேன் அணிஇழாஅய்
மாபெருங் கூடல் மதுரா பதியென்பேன்
கட்டுரை யாட்டியேன் யானின் கணவற்கு
பட்ட கவற்சியேன் பைந்தொடி கேட்டி
பெருந்தகை பெண்ணொன்று கேளாயென் நெஞ்சம்
வருந்தி புலம்புறு நோய்
தோழீநீ ஈதொன்று கேட்டியென் கோமகற்கு
ஊழ்வினை வந்த கடை
மாதராய் ஈதொன்று கேளுன் கணவற்கு
தீதுற வந்த வினை காதின்
மறைநா வோசை யல்ல தியாவதும்
மணிநா வோசை கேட்டது மிலனே
அடிதொழு திறைஞ்சா மன்ன ரல்லது
குடிபழி தூற்றுங் கோலனு மல்லன்
இன்னுங் கேட்டி நன்னுதல் மடந்தையர்
மடங்கெழு நோக்கின் மதமுக திறப்புண்டு
இடங்கழி நெஞ்சத்து இளமை யானை
கல்வி பாகன் கையக படாஅது
ஒல்கா உள்ள தோடு மாயினும்
ஒழுக்கொடு புணர்ந்தவிவ் விழுக்குடி பிறந்தோர்க்கு
இழுக்க தாராது இதுவுங் கேட்டி
உதவா வாழ்க்கை கீரந்தை மனைவி
புதவ கதவம் புடைத்தனன் ஒருநாள்
அரைச வேலி யல்ல தியாவதும்
புரைதீர் வேலி இல்லென மொழிந்து
மன்ற திருத்தி சென்றீ ரவ்வழி
இன்றவ் வேலி காவா தோவென
செவிச்சூ டாணியிற் புகையழல் பொத்தி
நெஞ்சஞ் சுடுதலின் அஞ்சி நடுக்குற்று
வச்சிர தடக்கை அமரர் கோமான்
உச்சி பொன்முடி ஒளிவளை உடைத்தகை
குறைத்த செங்கோல் குறையா கொற்றத்து
இறைக்குடி பிறந்தோர்க்கு இழுக்க மின்மை
இன்னுங் கேட்டி நன்வா யாகுதல்
பெருஞ்சோறு பயந்த திருந்துவேல் தடக்கை
திருநிலை பெற்ற பெருநா ளிருக்கை
அறனறி செங்கோல் மறநெறி நெடுவாள்
புறவுநிறை புக்கோன் கறவைமுறை செய்தோன்
பூம்புனற் பழன புகார்நகர் வேந்தன்
தாங்கா விளையுள் நன்னா டதனுள்
வலவை பார்ப்பான் பராசர னென்போன்
குலவுவேற் சேரன் கொடைத்திறங் கேட்டு
வண்டமிழ் மறையோற்கு வானுறை கொடுத்த
திண்டிறல் நெடுவேற் சேரலற் காண்கென
காடும் நாடும் ஊரும் போகி
நீடுநிலை மலயம் பிற்பட சென்றாங்கு
ஒன்றுபுரி கொள்கை இருபிற பாளர்
முத்தீ செல்வத்து நான்மறை முற்றி
ஐம்பெரு வேள்வியுஞ் செய்தொழில் ஓம்பும்
அறுதொழி லந்தணர் பெறுமுறை வகுக்க
நாவலங் கொண்டு நண்ணா ரோட்டி
பார்ப்பன வாகை சூடி ஏற்புற
நன்கலங் கொண்டு தன்பதி பெயர்வோன்
செங்கோல் தென்னன் திருந்துதொழில் மறையவர்
தங்கா லென்ப தூரே அவ்வூர
பாசிலை பொதுளிய போதி மன்றத்து
தண்டே குண்டிகை வெண்குடை காட்டம்
பண்ட சிறுபொதி பாத காப்பொடு
களைந்தனன் இருப்போன் காவல் வெண்குடை
விளைந்துமுதிர் கொற்றத்து விறலோன் வாழி
கடற்கடம் பெறிந்த காவலன் வாழி
விடர்ச்சிலை பொறித்த வேந்தன் வாழி
பூந்தண் பொருநை பொறையன் வாழி
மாந்தரஞ் சேரல் மன்னவன் வாழ்கென
குழலும் குடுமியும் மழலை செவ்வா
தளர்நடை யாயத்து தமர்முதல் நீங்கி
விளையாடு சிறாஅ ரெல்லாஞ் சூழ்தர
குண்ட பார்ப்பீ ரென்னோ டோதியென்
பண்ட சிறுபொதி கொண்டுபோ மின்னென
சீர்த்தகு சிறப்பின் வார்த்திகன் புதல்வன்
ஆலமர் செல்வன் பெயர்கொண்டு வளர்ந்தோன்
பால்நாறு செவ்வா படியோர் முன்னர
தளர்நா வாயினும் மறைவிளி வழாஅது
உளமலி உவகையோ டொப்ப வோ
தக்கிணன் தன்னை மிக்கோன் வியந்து
முத்த பூணூல் அத்தகு புனைகலம்
கடகம் தோட்டொடு கையுறை ஈத்து
தன்பதி பெயர்ந்தன னாக நன்கலன்
புனைபவும் பூண்பவும் பொறாஅ ராகி
வார்த்திகன் தன்னை காத்தன ரோம்பி
கோத்தொழி லிளையவர் கோமுறை அன்றி
படுபொருள் வௌவிய பார்ப்பா னிவனென
இடுசிறை கோட்ட திட்டன ராக
வார்த்திகன் மனைவி கார்த்திகை என்போள்
அலந்தனள் ஏங்கி அழுதனள் நிலத்தில்
புலந்தனள் புரண்டனள் பொங்கினள் அதுகண்டு
மையறு சிறப்பின் ஐயை கோயில்
செய்வினை கதவ திறவா தாகலின்
திறவா தடைத்த திண்ணிலை கதவம்
மறவேல் மன்னவன் கேட்டனன் மயங்கி
கொடுங்கோ லுண்டுகொல் கொற்றவை குற்ற
இடும்பை யாவதும் அறிந்தீ மின்னென
ஏவ லிளையவர் காவலற் றொழுது
வார்த்திகற் கொணர்ந்த வாய்மொழி யுரைப்ப
நீர்த்தன் றிதுவென நெடுமொழி கூறி
அறியா மாக்களின் முறைநிலை திரிந்தவென்
இறைமுறை பிழைத்தது பொறுத்தல்நுங் கடனென
தடம்புனற் கழனி தங்கால் தன்னுடன்
மடங்கா விளையுள் வயலூர் நல்கி
கார்த்திகை கணவன் வார்த்திகன் முன்னர்
இருநில மடந்தைக்கு திருமார்பு நல்கியவள்
தணியா வேட்கையுஞ் சிறிதுதணி தனனே
நிலைகெழு கூடல் நீள்நெடு மறுகின்
மலைபுரை மாடம் எங்கணும் கேட்ப
கலையமர் செல்வி கதவ திறந்தது
சிறைப்படு கோட்டஞ் சீமின் யாவதுங்
கறைப்படு மாக்கள் கறைவீடு செய்ம்மின்
இடுபொரு ளாயினும் படுபொரு
உற்றவர குறுதி பெற்றவர காமென
யானை யெருத்தத்து அணிமுரசு இரீஇ
கோன்முறை யறைந்த கொற்ற வேந்தன்
தான்முறை பிழைத்த தகுதியுங் கேள்நீ
ஆடி திங்கள் பேரிரு பக்கத்து
அழல்சேர் குட்ட தட்டமி ஞான்று
வெள்ளி வாரத்து ஒள்ளெரி யுண்ண
உரைசால் மதுரையோடு அரைசுகே டுறுமெனும்
உரையு முண்டே நிரைதொடி யோயே
கடிபொழி லுடுத்த கலிங்கநன் னாட்டு
வடிவேல் தடக்கை வசுவுங் குமரனும்
தீம்புனற் பழன சிங்க புரத்தினும்
காம்பெழு கான கபில புரத்தினும்
அரைசாள் செல்வத்து நிரைதார் வேந்தர்
வீயா திருவின் விழுக்குடி பிறந்த
தாய வேந்தர் தம்முள் பகையுற
இருமு காவ திடைநில தியாங்கணுஞ்
செருவல் வென்றியிற் செல்வோ ரின்மையின்
அரும்பொருள் வேட்கையிற் பெருங்கலன் சுமந்து
கரந்துறை மாக்களிற் காதலி தன்னொடு
சிங்கா வண்புகழ சிங்க புரத்தினோர்
அங்கா டிப்ப டருங்கலன் பகரும்
சங்கமன் என்னும் வாணிகன் தன்னை
முந்தை பிறப்பிற் பைந்தொடி கணவன்
வெந்திறல் வேந்தற்கு கோத்தொழில் செய்வோன்
பரத னென்னும் பெயரன கோவலன்
விரத நீங்கிய வெறுப்பின னாதலின்
ஒற்றன் இவனென பற்றினன் கொண்டு
வெற்றிவேல் மன்னற்கு காட்டி கொல்வுழி
கொலைக்கள பட்ட சங்கமன் மனைவி
நிலைக்களங் காணாள் நீலி என்போள்
அரசர் முறையோ பரதர்
ஊரீர் முறையோ சேரியீர் முறையோவென
மன்றினும் மறுகினும் சென்றனள் பூசலிட்டு
எழுநா ளிரட்டி எல்லை சென்றபின்
தொழுநா ளிதுவென தோன்ற வாழ்த்தி
மலைத்தலை யேறியோர் மால்விசும் பேணியில்
கொலைத்தலை மகனை கூடுபு நின்றோள்
எம்முறு துயரம் செய்தோ ரியாவதும்
தம்முறு துயரமிற் றாகுக வென்றே
விழுவோ ளிட்ட வழுவில் சாபம்
பட்டனி ராதலிற் கட்டுரை கேள்நீ
உம்மை வினைவ துருத்த காலை
செம்மையி லோர்க்கு செய்தவ முதவாது
வாரொலி கூந்தல்நின் மணமகன் தன்னை
ஈரேழ் நாளக தெல்லை நீங்கி
வானோர் தங்கள் வடிவின் அல்லதை
ஈனோர் வடிவிற் காண்டல் இல்லென
மதுரைமா தெய்வம் மாப தினிக்கு
விதிமுறை சொல்லி அழல்வீடு கொண்டபின்
கருத்துறு கணவற் கண்டபின் அல்லது
இருத்தலும் இல்லேன் நிற்றலும் இலனென
கொற்றவை வாயிற் பொற்றொடி தகர்த்து
கீழ்த்திசை வாயிற் கணவனொடு புகுந்தேன்
மேற்றிசை வாயில் வறியேன் பெயர்கென
இரவும் பகலும் மயங்கினள் கையற்று
உரவுநீர் வையை ஒருகரை கொண்டாங்கு
அவல என்னாள் அவலித்து இழிதலின்
மிசைய என்னாள் மிசைவை தேறலிற்
கடல்வயிறு கிழித்து மலைநெஞ்சு பிளந்தாங்கு
அவுணரை கடந்த சுடரிலை நெடுவேல்
நெடுவேள் குன்றம் அடிவை தேறி
பூத்த வேங்கை பொங்கர கீழோர்
தீத்தொழி லாட்டியேன் யானென் றேங்கி
எழுநா ளிரட்டி எல்லை சென்றபின்
தொழுநா ளிதுவென தோன்ற வாழ்த்தி
பீடுகெழு நங்கை பெரும்பெய ரேத்தி
வாடா மாமலர் மாரி பெய்தாங்கு
அமரர கரசன் தமர்வ தேத்த
கோநகர் பிழைத்த கோவலன் றன்னொடு
வான வூர்தி ஏறினள் மாதோ
கானமர் புரிகுழற் கண்ணகி தானென்
வெண்பா
தெய்வ தொழாஅள் கொழுநற் றொழுவாளை
தெய்வ தொழுந்தகைமை திண்ணிதால் தெய்வமாய்
மண்ணக மாதர கணியாய கண்ணகி
விண்ணக மாதர்க்கு விருந்து
கட்டுரை
முடிகெழு வேந்தர் மூவ ருள்ளும்
படைவிளங்கு தடக்கை பாண்டியர் குலத்தோர்
அறனும் மறனும் ஆற்றலும் அவர்தம்
பழவிறல் மூதூர பண்புமேம் படுதலும்
விழவுமலி சிறப்பும் விண்ணவர் வரவும்
ஒடியா இன்ப தவருடை நாட்டு
குடியுங் கூழின் பெருக்கமும் அவர்தம்
வையை பேரியாறு வளஞ்சுர தூட்டலும்
பொய்யா வானம் புதுப்பெயல் பொழிதலும்
ஆரபடி சாத்துவதி யென்றிரு விருத்தியும்
நேர தோன்றும் வரியுங் குரவையும்
என்றிவை அனைத்தும் பிறபொருள் வைப்போடு
ஒன்றி தோன்றும் தனிக்கோள் நிலைமையும்
வடஆரியர் படைகடந்து
தென்றமிழ்நா டொருங்குகாண
புரைதீர் கற்பின் தேவி தன்னுடன்
அரைசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன்
நெடுஞ்செழியனோ டொருபரிசா
நோக்கி கிடந்த
மதுரை காண்டம் முற்றிற்று
முற்றும்