ஞான பாடல்கள் பல்வகை


























ஞான பாடல்கள்

அச்சமில்லை
பண்டார பாட்டு
அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்
அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மை தூறுசெய்த போதினும்
அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள்வீசு போதினும்
அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
நச்சைவாயி லே கொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்
அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதினும்
அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்
அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
ஐய பேரிகை
பல்லவி
ஐய பேரிகை கொட்டடாகொட்டடா
ஐய பேரிகை கொட்டடா
சரணங்கள்
பயமெனும் பேய்தனை யடித்தோம்பொய்ம்மை
பாம்பை பிளந்துயிரை குடித்தோம்
வியனுல கனைத்தையும் அமுதென நுகரும்
வேத வாழ்வினை கை பிடித்தோம்ஐயபேரிகை
இரவியினொளியிடை குளித்தோம்ஒளி
இன்னமு தினையுண்டு களித்தோம்
கரவினில் வந்துயிர குலத்தினை யழிக்கும்
காலன் நடுநடுங்க விழித்தோம் ஐய பேரிகை
காக்கை குருவி எங்கள் ஜாதிநீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்கு திசையெலாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோ களியாட்டம் ஐய பேரிகை
விடுதலைசிட்டுக்குருவி
பல்லவி
விட்டு விடுதலை யாகிநிற் பாயிந்த
சிட்டு குருவியை போலே
சரணங்கள்
எட்டு திசையும் பறந்து திரிகுவை
ஏறி காற்றில் விரைவொடு நீந்துவை
மட்டு படாதெங்கும் கொட்டி கிடக்குமிவ்
வானொளி யென்னும் மதுவின் சுவையுண்டு விட்டு
பெட்டையி னோடின்பம் பேசி களிப்புற்று
பீடையிலாத தொர் கூடு கட்டிக்கொண்டு
முட்டைதருங் குஞ்சை காத்து மகிழ்வெய்தி
முந்த வுணவு கொடுத்தன்பு செய்திங்கு விட்டு
முற்றத்தி லேயுங் கழனி வெளியிலும்
முன்கண்ட தானியம் தன்னை கொணர்ந்துண்டு
மற்ற பொழுது கதைசொல்லி தூங்கிப்பின்
வைகறை யாகுமுன் பாடி விழிப்புற்று விட்டு
விடுதலை வேண்டும்
ராகம் நாட்டை
பல்லவி
வேண்டுமடி எப்போதும் விடுதலைஅம்மா
சரணங்கள்
தூண்டு மின்ப வாடை வீசு துய்ய தேன் கடல்
சூழ நின்ற தீவிலங்கு சோதி வானவர்
ஈண்டு நமது தோழ ராகி எம்மோ டமுதமுண்டு குலவ
நீண்ட மகிழ்ச்சி மூண்டு விளைய
நினைத்திடு மின்பம் அனைத்தும் உதவ வேண்டுமடி
விருத்தி ராதி தானவர்க்கு மெலிவ தின்றியே
விண்ணு மண்ணும் வந்து பணிய மேன்மை துன்றியே
பொருத்த முறநல் வேத மோர்ந்து
பொய்ம்மை தீரமெய்ம்மை நேர
வருத்த மழிய வறுமை யொழிய
வையம் முழுதும் வண்மை பொழிய வேண்டுமடி
பண்ணில் இனிய பாடலோடு பாயு மொளியெலாம்
பாரில் எம்மை உரிமை கொண்டு பற்றி நிற்கவே
நண்ணி யமரர் வெற்றி கூற
நமது பெண்கள் அமரர் கொள்ள
வண்ண மினிய தேவ மகளிர்
மருவ நாமும் உவகைதுள்ள வேண்டுமடி
உறுதி வேண்டும்
மனதி லுறுதி வேண்டும்
வாக்கினி லேயினிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
கண் திறந்திட வேண்டும்
காரியத்தி லுறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்
மண் பயனுற வேண்டும்
வானகமிங்கு தென்பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்
ஓம்
ஆத்ம ஜெயம்
கண்ணில் தெரியும் பொருளினை கைகள்
கவர்ந்திட மாட்டாவோஅட
மண்ணில் தெரியுது வானம்அதுநம்
வசப்பட லாகாதோ
எண்ணி யெண்ணிப்பல நாளு முயன்றிங்
கிறுதியிற் சோர்வோமோஅட
விண்ணிலும் மண்ணிலும் கண்ணிலும் எண்ணிலும்
மேவு ப்ராசக்தியே
என்ன வரங்கள்பெருமைகள்வெற்றிகள்
எத்தனை மேன்மைகளோ
தன்னை வென்றாலவை யாவும் பெறுவது
சத்திய மாகுமென்றே
முன்னை முனிவர் உரைத்த மறை பொருள்
முற்றுமுணர்ந்த பின்னும்
தன்னை வென்றாளும் திறமை பெறாதிங்கு
தாழ்வுற்று நிற்போமோ
காலனுக்கு உரைத்தல் ராகம்சக்கரவாகம்
தாளம்ஆதி
பல்லவி
காலாஉனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்என்றன்
காலருகே வாடாசற்றே உனை மிதிக்கிறேன்அட காலா
சரணங்கள்
வேலாயுத விருதினை மனதிற் மதிக்கிறேன்என்றன்
வேதாந்த முரைத்த ஞானியர் தமை யெண்ணி
துதிக்கிறேன்ஆதி
மூலா வென்று கதறிய யானையை காக்கவேநின்றன்
முதலைக்கு நேர்ந்ததை மறந்தாயோ கெட்ட
மூடனேஅட காலா
ஆலாலமுண்டவனடி சரணென்ற மார்க்கண்டன்தன
தாவி கவரப்போய் நீ பட்ட பாட்டினை
யறிகுவேன்இங்கு
நாலாயிரம் காதம் விட்டகல்உனைவிதிக்கிறேன்ஹரி
நாராயண னாகநின் முன்னே உதிக்கிறேன்அட
காலா
மாயையை பழித்தல் ராகம்காம்போதி
தாளம்ஆதி
உண்மை யறிந்தவர் உன்னை கணிப்பாரோ
மாயையேமன
திண்மையுள்ளாரை நீ செய்வது
மொன்றுண்டோ மாயையே
எத்தனை கோடி படைகொண்டு வந்தாலும்
மாயையேநீ
சி தெளிவெனு தீயின்முன்
நிற்பாயோமாயையே
என்னை கெடுப்பதற் கெண்ணமுற்றாய்
கெட்ட மாயையேநான்
உன்னை கெடுப்ப துறுதியென்
றேயுணர்மாயையே
சாக துணியிற் சமுத்திர மெம்மட்டு
மாயையேஇந
தேகம் பொய் யென்றுணார் தீரரை யென்
செய்வாய்மாயையே
இருமை யழிந்தபின் எங்கிருப்பாய்அற்ப
மாயையேதெளி
தொருமை கண்டார் முன்னம் ஓடாது
நிற்பையோமாயையே
நீதரும் இன்பத்தை நேரென்று கொள்வனோ
மாயையேசிங்கம்
நாய்தர கொள்ளுமோ நல்லர
சாட்சியைமாயையே
என்னிச்சை கொண்டுனை யெற்றி விட
வல்லேன் மாயையேஇனி
உன்னிச்சை கொண்டென கொன்றும்
வராது காண்மாயையே
யார்க்கும் குடியல்லேன் யானென்ப
தோர்ந்தனன் மாயையேஉன்றன்
போர்க்கஞ்சு வேனோ பொடியாக்குவேன்
உன்னைமாயையே
சங்கு
செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம்
சேர்ந்திடலா மென்றே எண்ணியிருப்பார்
பித்த மனிதர்அவர் சொலுஞ் சாத்திரம்
பேயுரை யாமென்றிங் கூதேடா சங்கம்
இத்தரை மீதினி லேயிந்த நாளினில்
இப்பொழு தேமுக்தி சேர்ந்திட நாடி
சுத்த அறிவு நிலையிற் களிப்பவர்
தூய ராமென்றிங் கூதேடா சங்கம்
பொய்யுறு மாயையை பொய்யென கொண்டு
புலன்களை வெட்டி புறத்தில் எறிந்தே
ஐயுற லின்றி களித்டிரு பாரவர்
ஆரிய ராமென்றிங் கூதேடா சங்கம்
மையுறு வாள்விழி யாரையும் பொன்னையும்
மண்ணென கொண்டு மயக்கற் றிருந்தாரே
செய்யுறு காரியம் தாமன்றி செய்வார்
சித்தர ளாமென்றிங் கூதேடா சங்கம்
அறிவே தெய்வம்
கண்ணிகள்
ஆயிர தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகாள்பல்
லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்
டாமெனல் கேளீரோ
மாடனை காடனை வேடனை போற்றி
மயங்கும் மதியிலிகாள்எத
னூடும்நின் றோங்கும் அறிவென்றே தெய்வமென்
றோதி யறியிரோ
சுத்த அறிவே சிவமென்று கூறுஞ்
சுருதிகள் கேளீரோபல
பித்த மதங்களி லேதடு மாறி
பெருமை யழிவீரோ
வேடம்பல் கோடியொர் உண்மை குளவென்று
வேதம் புகன்றிடுமேஆங்கோர்
வேடத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றவ்
வேத மறியாதே
நாமம்பல் கோடியொர் உண்மை குளவென்று
நான்மறை கூறிடுமேஆங்கோர்
நாமத்தை நீருண்மை யென்று கொள் வீரென்ற
நான்மறை கண்டிலதே
போந்த நிலைகள் பலவும் பராசக்தி
பூணு நிலையாமேஉப
சாந்த நிலையே வேதாந்த நிலையென்று
சான்றவர் கண்டனரே
கவலை துறந்திங்கு வாழ்வது வீடென்று
காட்டும் மறைகளெலாம்நீவிர்
அவலை நினைந்துமி மெல்லுதல் போலிங்கு
அவங்கள் புரிவீரோ
உள்ள தனைத்திலும் உள்ளொளி யாகி
ஒளிர்ந்திடும் ஆன்மாவேஇங்கு
கொள்ளற் கரிய பிரமமென் றேமறை
கூவுதல் கேளீரோ
மெள்ள பலதெய்வம் கூட்டி வளர்த்து
வெறுங் கதைகள் சேர்த்துப்பல
கள்ள மதங்கள் பரப்புதற் கோர்மறை
காட்டவும் வல்லீரோ
ஒன்று பிரம முளதுண்மை யஃதுன்
உணர்வெனும் வேதமெலாம்என்றும்
ஒன்ரு பிரம முள துண்மை யஃதுன்
உணர்வென கொள்வாயே
பரசிவ வெள்ளம்
உள்ளும் புறமுமாய் உள்ள தெலா தானாகும்
வெள்ளமொன்றுண் டாமதனை தெய்வமென்பார்
வேதியரே
காணுவன நெஞ்சிற் கருதுவன உட்கருத்தை
பேணுவன யாவும் பிறப்பதந்த வெள்ளத்தே
எல்லை பிரி வற்றதுவாய் யாதெனுமோர் பற்றிலதாய்
இல்லையுள தென்றறிஞர் என்றுமய லெய்துவதாய்
வெட்டவெளி யாயறிவாய் வேறுபல சக்திகளை
கொட்டுமுகி லாயணுக்கள் கூட்டி பிரிப்பதுவாய்
தூல வணுக்களா சூக்குமமா சூக்குமத்திற்
சாலவுமே நுண்ணியதா தன்மையெலா தானாகி
தன்மையொன் றிலாததுவா தானே ஒரு பொருளா
தன்மைபல வுடைத்தா தான்பலவாய் நிற்பதுவே
எங்குமுளான் யாவும் வலான் யாவுமறி வானெனவே
தங்குபல மதத்தோர் சாற்றுவதும் இங்கிதையே
வேண்டுவோர் வேட்கையாய் வேட்பாராய் வேட்பாரு
கீண்டுபொரு ளாயதனை யீட்டுவதாய் நிற்குமிதே
காண்பார்தங் காட்சியா காண்பாரா காண்பொரு
ளாய்
மாண்பார திருக்கும்வகுத்துரைக்க வொண்ணாதே
எல்லா தானாகி யிரிந்திடினும் இஃதறிய
வல்லார் சிலரென்பர் வாய்மையெல்லாங் கண்டவரே
மற்றிதனை கண்டார் மலமற்றார் துன்பமற்றார்
பற்றிதனை கொண்டார் பயனைத்துங் கண்டாரே
இப்பொருளை கண்டார் இடருக்கோர் எல்லைகண்டார்
எப்பொருளு தாம்பெற்றிங் கின்பநிலை யெய்துவரே
வேண்டுவ வெலாம் பெறுவார் வேண்டா ரெதனையுமற்
றீண்டுபுவி யோரவரை யீசரென போற்றுவரே
ஒன்றுமே வேண்டா துலகனைத்தும் ஆளுவர்காண்
என்றுமே யிப்பொருளோ டேகாந துள்ளவரே
வெள்ளமடா தம்பி விரும்பியபோ தெய்திநின
துள்ள மிசை தானமுத வூற்றா பொழியுமடா
யாண்டுமிந்த இன்பவெள்ளம் என்றுநின்னுள் வீழ்வதற்கே
வேண்டு முபாயம் மிகவுமெளி தாகுமடா
எண்ணமிட்ட லேபோதும் எண்ணுவதே இவ்வின்ப
தண்ணமுதை யுள்ளே தது புரியுமடா
எங்கு நிறைந்திருந்த ஈசவெள்ள மென்னகத்தே
பொங்குகின்ற தென்றெண்ணி போற்றி நின்றாற்
போதுமடா
யாதுமாம் ஈசவெள்ளம் என்னுள் நிரம்பியதென்
றோதுவதே போதுமதை உள்ளுவதே போதுமடா
காவி துணிவேண்டாகாற்றை சடைவேண்டா
பாவித்தல் போதும் பரமநிலை யெய்துதற்கே
சாத்திரங்கள் வேண்டா சதுமறைக ளேதுமில்லை
தோத்திரங்க ளில்லையுள தொட்டுநின்றாற் போதுமடா
தவமொன்று மில்லையொரு சாதனையு மில்லையடா
சிவமொன்றே யுள்ளதென சிந்தைசெய்தாற்
போதுமடா
சந்ததமு மெங்குமெல்லா தானாகி நின்றசிவம்
வந்தெனுளே பாயுதென்று வாய்சொன்னாற் போதுமடா
நித்தசிவ வெள்ள மென்னுள் வீழ்ந்து நிரம்புதென்றுன்
சித்தமிசை கொள்ளுஞ்சிரத்தை யொன்றே போதுமடா
உலகத்தை நோக்கி வினவுதல்
நிற்பதுவேநடப்பதுவேபறப்பதுவேநீங்க ளெல்லாம்
சொற்பன தானாபல தோற்ற மயக்கங்களோ
கற்பதுவேகேட்பதுவேகருதுவதே நீங்க ளெல்லாம்
அற்ப மாயைகளோஉம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ
வானகமேஇளவெயிலேமரச்செறிவே நீங்க ளெல்லாம்
கானலின் நீரோவெறுங் காட்சி பிழைதானோ
போனதெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே
போனதனால்
நானுமோர் கனவோஇந்த ஞாலமும் பொய்தானோ
கால மென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பலநினைவும்
கோலமும் பொய்களோஅங்கு குணங்களும் பொய்களோ
சோலையிலே மரங்க ளெல்லாம் தோன்றுவதோர்
விதையிலென்றால்
சோலை பொய்யாமோஇதை சொல்லொடு
சேர்ப்பாரோ
காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம்
காண்ப மென்றோ
வீண்படு பொய்யிலேநித்தம் விதிதொடர திடுமோ
காண்பதுவே உறுதிகண்டோ ம் காண்பதல்லால் உறுதியில்லை
காண்பது சக்தியாம்இந்த காட்சி நித்தியமாம்
நான்
இரட்டை குறள் வெண் செந்துறை
வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்
மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்
கானிழல் வளரும் மரமெலாம் நான்
காற்றும் புனலும் கடலுமே நான்
விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான்
வெட்ட வெளியின் விரிவெலாம் நான்
மண்ணில் கிடக்கும் புழுவெலாம் நான்
வாரியிலுள்ள உயிரெலாம் நான்
கம்பனிசைத்த கவியெலாம் நான்
காருகர் தீட்டும் உருவெலாம் நான்
இம்பர் வியக்கின்ற மாட கூடம்
எழில் நகர் கோபுரம் யாவுமே நான்
இன்னிசை மாத ரிசையுளேன் நான்
இன்ப திரள்கள் அனைத்துமே நான்
புன்னிலை மாந்தர் தம் பொய்யெலாம் நான்
பொறையரு துன புணர்ப்பெலாம் நான்
மந்திரங் கோடி இயக்குவோன் நான்
இயங்கு பொருளின் இயல்பெலாம் நான்
தந்திரங் கோடி சமைத்துளோன் நான்
சாத்திர வேதங்கள் சாற்றினோன் நான்
அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான்
அவை பிழையாமே சுழற்றுவோன் நான்
கண்டநற் சக்தி கணமெலாம் நான்
காரண மாகி கதித்துளோன் நான்
நானெனும் பொய்யை நடத்துவோன் நான்
ஞான சுடர்வானில் செல்லுவோன் நான்
ஆனபொருள்கள் அனைத்தினும் ஒன்றாய்
அறிவாய் விளங்குமுதற சோதிநான்
சித்தாந்த சாமி கோயில்
சித்தாந்த சாமி திருக்கோயில் வாயிலில்
தீபவொளி யுண்டாம்பெண்ணே
முத்தாந்த வீதி முழுதையுங் காட்டிட
மூண்டதிரு சுடராம்பெண்ணே
உள்ள தழுக்கும் உடலிற் குறைகளும்
ஒட்டவருஞ் சுடராம்பெண்ணே
கள்ள தனங்கள் அனைத்தும் வெளிப்பட
காட்ட வருஞ் சுடராம்பெண்ணே
தோன்று முயிர்கள் அனைத்டும்நன் றென்பது
தோற்ற முறுஞ் சுடராம்பெண்ணே
மூன்று வகைப்படும் காலநன் றென்பதை
முன்ன ரிடுஞ் சுடராம்பெண்ணே
பட்டின தன்னிலும் பாக்கநன் றென்பதை
பார்க்க வொளிர்ச்சுடராம்பெண்ணே
கட்டு மனையிலுங் கோயில்நன் றென்பதை
காண வொளிர சுடராம்பெண்ணே
பக்தி ராகம்பிலஹரி
பல்லவி
பக்தியினாலெதெய்வபக்தியினாலே
சரணங்கள்
பக்தியினாலேஇந்த
பாரினி லெய்திடும் மேன்மைகள் கேளடீ
சித்த தெளியும்இங்கு
செய்கை யனைத்திலும் செம்மை பிறந்திடும்
வித்தைகள் சேரும்நல்ல
வீர ருறவு கிடைக்கும்மனத்திடை
தத்துவ முண்டாம்நெஞ்சிற்
சஞ்சலம் நீங்கி உறுதி விளங்கிடும் பக்தி
கா பிசாசைக்குதி
கால்கொண் டடித்து விழுந்திடலாகும்இ
தாமச பேயைக்கண்டு
தாக்கி மடித்திட லாகும்எந்நேரமும்
தீமையை எண்ணிஅஞ்சு
தேம்பற் பிசாசை திருகியெ றிந்துபொ
நாம மில்லாதேஉண்மை
நாமத்தி னாலிங்கு நன்மை விளைந்திடும் பக்தி
ஆசையை கொல்வோம்புலை
அச்சத்தை கொன்று பொசுக்கிடுவோம்கெட்ட
பாச மறுப்போம்இங்கு
பார்வதி சக்தி விளங்குதல் கண்டதை
மோசஞ் செய்யாமல்உண்மை
முற்றிலுங் கண்டு வணங்கி வணங்கியொர்
ஈசனை போற்றிஇன்பம்
யாவையு முண்டு புகழ்கொண்டு வாழ்குவம் பக்தி
சோர்வுகள் போகும்பொ
சுகத்தினை தள்ளி சுகம்பெறலாகும்நற்
பார்வைகள் தோன்றும்மிடி
பாம்பு கடித்த விஷமகன் றேநல்ல
சேர்வைகள் சேரும்பல
செல்வங்கள் வந்து மகிழ்ச்சி விளைந்திடும்
தீர்வைகள் தீரும்பிணி
தீரும்பலபல இன்பங்கள் சேர்ந்திடும் பக்தி
கல்வி வளரும்பல
காரியங் கையுறும்வீரிய மோங்கிடும்
அல்ல லொழியும்நல்ல
ஆண்மை யுண்டாகும்அறிஉ தெளிந்திடும்
சொல்லுவ தெல்லாம்மறை
சொல்லினை போல பயனுள தாகும்மெய்
வல்லமை தோன்றும்தெய்வ
வாழ்க்கையுற் றேயிங்கு வாழ்ந்திடலாம்உண்மை
சோம்ப லழியும்உடல்
சொன்ன படிக்கு நடக்கும்முடி சற்றுங்
கூம்புத லின்றி நல்ல
கோபுரம் போல நிமிர்ந்த நிலைபெறும்
வீம்புகள் போகும்நல்ல
மேன்மை யுண்டாகி புயங்கள் பருக்கும்பொ
பாம்பு மடியும்மெ
பரம் வென்று நல்ல நெறிகளுண் டாய்விடும் பக்தி
சந்ததி வாழும்வெறுஞ்
சஞ்சலங் கெட்டு வலிமைகள் சேர்ந்திடும்
இந்த புவிக்கேஇங்கொர்
ஈசனுண்டா யின் அறிக்கையி டேனுன்றன்
கந்தமலர்த்தாள்துணை
காதல் மகவு வளர்ந்திட வேண்டும்என்
சிந்தையறிந்தேஅருள்
செய்திட வேண்டும்என்றால் அருளெய்திடும்பக்தி
அம்மாக்கண்ணு பாட்டு
பூட்டை திறப்பது கையாலேநல்ல
மன திறப்பது மதியாலே
பாட்டை திறப்பது பண்ணாலேஇன்ப
வீட்டை திறப்பது பெண்ணாலே
ஏட்டை துடைப்பது கையாலேமன
வீட்டை துடைப்பது மெய்யாலே
வேட்டை யடிப்பது வில்லாலேஅன்பு
கோட்டை பிடிப்பது சொல்லாலே
காற்றை யடைப்பது மனதாலேஇந்த
காயத்தை காப்பது செய்கையாலே
சோற்றை புசிப்பது வாயாலேஉயிர்
துணி வுறுவது தாயாலே
வண்டிக்காரன் பாட்டு
அண்ணனுக்கும் தம்பிக்கும் உரையாடல்
காட்டு வழிதனிலேஅண்ணே
கள்ளர் பயமிருந்தால்எங்கள்
வீட்டு குலதெய்வம்தம்பி
வீரம்மை காக்குமடா
நிறுத்து வண்டி யென்றேகள்ளர்
நெருங்கி கேட்கையிலேஎங்கள்
கறுத்த மாரியின் பேர்சொன்னால்
காலனும் அஞ்சுமடா
கடமை
கடமை புரிவா ரின்புறுவார்
என்னும் பண்டை கதை பேணோம்
கடமை யறிவோம் தொழிலறியோம்
கட்டென் பதனை வெட்டென் போம்
மடமைசிறுமைதுன்பம்பொய்
வருத்தம்நோவுமற்றிவை போல்
கடமை நினைவு தொலை திங்கு
களியுற் றென்றும் வாழ்குவமே
அன்பு செய்தல்
இந்த புவிதனில் வாழும் மரங்களும்
இன்ப நறுமலர பூஞ்செடி கூட்டமும்
அந்த மரங்களை சூழ்ந்த கொடிகளும்
ஔடத மூலிகை பூண்டு புல் யாவையும்
எந தொழில் செய்து வாழ்வன வோ
வேறு
மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும்
வரம்பு கட்டாவிடினும் அன்றிநீர் பாய்ச்சாவிடினும்
வானுலகு நீர்தருமேல் மண்மீது மரங்கள்
வகைவகையா நெற்கள்புற்கள் மலிந்திருக்குமென்றே
யானெதற்கும் அஞ்சுகிலேன்மானுடரேநீவிர்
என்மதத்தை கை கொண்மின்பாடுபடல்வேண்டா
ஊனுடலை வருத்தாதீர்உணவியற்கை கொடுக்கும்
உங்களுக்கு தொழிலிங்கே அன்புசெய்தல் கண்டீர்
சென்றது மீளாது
சென்றதினி மீளாது மூடரேநீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்சென்றதனை குறித்தல் வேண்டாம்
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ண மதை திண்ணமுற இசைத்து கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்
தீமையெலாம் அழிந்துபோம்திரும்பி வாரா
மனத்திற்கு கட்டளை
பேயா யுழலுஞ் சிறுமனமே
பேணா யென்சொல் இன்றுமுதல்
நீயா யொன்றும் நாடாதே
நினது தலைவன் யானேகாண்
தாயாம் சக்தி தாளினிலும்
தரும மெனயான் குறிப்பதிலும்
ஓயா தேநின் றுழைத்திடுவாய்
உரைத்தேன் அடங்கி உய்யுதியால்
பா
மன பெண்
மனமெனும் பெண்ணேவாழிநீ கேளாய்
ஒன்றையே பற்றி யூச லாடுவாய்
அடுத்ததை நோக்கி யடுத்தடு துலவுவாய்
நன்றையே கொள்ளெனிற் சோர்ந்துகை நழுவுவாய்
விட்டுவி டென்றதை விடாதுபோய் விழுவாய்
தொட்டதை மீள மீளவு தொடுவாய்
புதியது காணிற் புலனழி திடுவாய்
புதியது விரும்புவாய்புதியதை அஞ்சுவாய்
அடிக்கடி மதுவினை அணுகிடும் வண்டுபோல்
பழமையாம் பொருளிற் பரிந்துபோய் வீழ்வாய்
பழமையே யன்றி பார்மிசை யேதும்
புதுமை காணோமென பொருமுவாய்சீச்சீ
பிணத்தினை விரும்புங் காக்கையே போல
அழுகுதல்சாதல்அஞ்சுதல் முதலிய
இழிபொருள் காணில் விரைந்ததில் இசைவாய்
அங்ஙனே
என்னிட தென்று மாறுத லில்லா
அன்புகொண் டிருப்பாய்ஆவிகா திடுவாய்
கண்ணினோர் கண்ணாய்காதின் காதா
புலன்புல படுத்தும் புலனா யென்னை
உலக வுருளையில் ஓட்டுற வகுப்பாய்
இன்பெலா தருவாய்இன்பத்து மய்ங்குவாய்
இன்பமே நாடி யெண்ணிலா பிழை செய்வாய்
இன்பங் காத்து துன்பமே யழிப்பாய்
இன்பமென் றெண்ணி துன்பத்து வீழ்வாய்
தன்னை யறியாய்சகத்தெலா தொளைப்பாய்
தன்பின் னிற்கு தனிப்பரம் பொருளை
காணவே வருந்துவாய்காணெனிற் காணாய்
சகத்தின் விதிகளை தனித்தனி அறிவாய்
பொதுநிலை அறியாய்பொருளையுங் காணாய்
மனமெனும் பெண்ணேவாழிநீ கேளாய்
நின்னொடு வாழும் நெறியுநன் கறிந்திடேன்
இத்தனை நாட்போல் இனியுநின் னின்பமே
விரும்புவன்நின்னை மேம்படு திடவே
முயற்சிகள் புரிவேன்முத்தியு தேடுவேன்
உன்விழி படாமல் என்விழி பட்ட
சிவமெனும் பொருளை தினமும் போற்றி
உன்றன கின்பம் ஓங்கிட செய்வேன்
பகைவனுக்கு அருள்வாய்
பகைவனு கருள்வாய்நன்னெஞ்சே
பகைவனு கருள்வாய்
புகை நடுவினில் தீயிருப்பதை
பூமியிற் கண்டோ மேநன்னெஞ்சே
பூமியிற் கண்டோ மே
பகை நடுவினில் அன்புரு வானநம்
பரமன் வாழ்கின்றான் நன்னெஞ்சே
பரமன் வாழ்கின்றான் பகைவ
சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடுஞ்
செய்தி யறியாயோநன்னெஞ்சே
குப்பையிலே மலர் கொஞ்சுங் குருக்கத்தி
கொடி வளராதோநன்னெஞ்சே பகைவ
உள்ள நிறைவிலொர் கள்ளம் புகுந்திடில்
உள்ளம் நிறைவாமோநன்னெஞ்சே
தெள்ளிய தேனிலொர் சிறிது நஞ்சையும்
சேர்த்தபின் தேனோமோநன்னெஞ்சே பகைவ
வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது
வாழ்வுக்கு நேராமோநன்னெஞ்சே
தாழ்வு பிறர்க்கெண்ண தானழிவா னென்ற
சாத்திரங் கேளாயோநன்னெஞ்சே பகைவ
போருக்கு வந்தங் கெதிர்த்த கவுரவர்
போலவ தானுமவன்நன்னெஞ்சே
நேரு கருச்சுனன் தேரிற் கசைகொண்டு
நின்றதுங் கண்ணனன்றோநன்னெஞ்சே பகைவ
தின்ன வரும்புலி தன்னையும் அன்பொடு
சிந்தையிற் போற்றிடுவாய்நன்னெஞ்சே
அன்னை பராசக்தி யவ்வுரு வாயினள்
அவளை கும்பிடுவாய்நன்னெஞ்சே பகைவ
தெளிவு
எல்லா மகி கலந்து நிறைந்தபின்
ஏழைமை யுண்டோ டாமனமே
பொல்லா புழுவினை கொல்ல நினைத்த்பின்
புத்தி மயக்க முண்டோ
உள்ள தெலாமோர் உயிரென்று தேர்ந்தபின்
உள்ளங் குலைவதுண்டோ மனமே
வெள்ள மெனப்பொழி தண்ணரு ளாழ்ந்தபின்
வேதனை யுண் டோ டா
சித்தி னியல்பு மதன்பெருஞ் சத்தியின்
செய்கையு தேர்ந்துவிட்டால்மனெமே
எத்தனை கோடி இடர்வந்து சூழினும்
எண்ணஞ் சிறிது முண்டோ
செய்க செயல்கள் சிவத்திடை நின்றென
தேவனுரை தனனேமனமே
பொய்கருதாம லதன்வழி நிற்பவர்
பூதல மஞ்ச வரோ
ஆன்ம வொளிக்கடல் மூழ்கி திளை பவர
கச்சமு முண்டோ டாமனமே
தேன்மடை யிங்கு திறந்தது கண்டு
தேக்கி திரிவ மடா
கற்பனையூர்
கற்பனை யூரென்ற நகருண்டாம்அங்கு
கந்தர்வர் விளையாடு வராம்
சொப்பன நாடென்ற சுடர்நாடுஅங்கு
சூழ்ந்தவர் யாவர்க்கும் பேருவகை
திருமணை யிதுகொள்ளை போர்க்கப்பல்இது
ஸ்பானி கடலில் யாத்திரை போம்
வெருவுற மாய்வார் பலர் கடலில்நாம்
மீளவும் நம்மூர் திரும்பு முன்னே
அந்நகர் தனிலோர் இளவரசன்நம்மை
அன்பொடு கண்டுரை செய்திடுவான்
மன்னவன் முத்தமி டெழுப்பிடவேஅவன்
மனைவியும் எழுந்தங்கு வந்திடுவாள்
எக்கால மும்பெரு நேராகும்நம்மை
எவ்வகை கவலையும் போருமில்லை
பக்குவ தேயிலை நீர் குடிப்போம்அங்கு
பதுமை கை கிண்ணத்தில் அளித்திடவே
இன்னமு திற்கது நேராகும்நம்மை
யோவான் விடுவிக்க வருமளவும்
நன்னக ரதனிடை வாழ்ந்திடு வோம்நம்மை
நலித்திடும் பேயங்கு வாராதே
குழந்தைகள் வாழ்ந்திடும் பட்டணங்காண்அங்கு
கோல்பந்து யாவிற்குமுயி ருண்டாம்
அழகிய பொன்முடி யரசிகளாம்அன்றி
அரசிளங் குமரிகள் பொம்மையெலாம்
செந்தோ லசுரனை கொன்றிடவேஅங்கு
சிறுவிற கெல்லாம் சுடர்மணி வாள்
சந்தோ ஷத்துடன் செங்கலையும் அட்டை
தாளையுங் கொண்டங்கு மனைகட்டுவோம்
கள்ளரவ் வீட்டினு புகுந்திடவேவழி
காண்ப திலாவகை செய்திடுவோம்ஓ
பிள்ளை பிராயத்தை இழந்தீரேநீர்
பின்னு நிலைபெற வேண்டீரோ
குழந்தைக ளாட்டத்தின் கனவை யெல்லாம்அந்த
கோலநன் னாட்டிடை காண்பீரே
இழந்தநல் லின்பங்கள் மீட்குறலாம்நீர்
ஏகுதிர் கற்பனை நகரினுக்கே
ஜான் ஸ்கர் என்ற ஆங்கில புலவன்நக்ஷத்ர தூதன்
என்ற பத்திரிகையில் பிரசுரித்த தி டவுன்
லெட்ஸ் பிரெடெண்டுஎன்ற பாட்டின் மொழி
பெயர்ப்பு
குறிப்பு இப்பாடலின் பொருள் கற்பனை நகரமென்பது
சித்தத்தில் குழந்தை நிலை பெறுவதை இங்கு
குறிப்பிடுகிறதுயோவான்என்பது குமார தேவனுடைய
பெயர்அக்கடவுள் மனிதனுக்குள்ளே நிலைபெற்று
மனிதன் அடைய வேண்டும்என்று யேசு கிறிஸ்து நாதர்
சொல்லியிருக்கும் பொருளை இப்பாடல் குறிப்பிடுகிறது
கவலைகளை முற்று துறந்துவிட்டு உலகத்தை வெறுமே
லீலையா கருதி னாலன்றி மோக்ஷம் எய்த படாது

பல்வகை பாடல்கள்
காப்புபரம்பொருள் வாழ்த்து
ஆத்தி சூடி இளம்பிறை யணிந்து
மோன திருக்கு முழுவெண் மேனியான்
கருநிறங் கொண்டு பாற் கடல் மிசை கிடப்போன்
மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்
ஏசுவின் தந்தை எனப்பல மதத்தினர்
உருவக தாலே உணர்ந்துண ராது
பலவகை யாக பரவிடும் பரம்பொருள் ஒன்றே
அதனியல் ஒளியுறும் அறிவாம்
அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்
அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம்
நூல்
அச்சம் தவிர்
ஆண்மை தவறேல்
இளைத்தல் இகழ்ச்சி
ஈகை திறன்
உடலினை உறுதிசெய்
ஊண்மிக விரும்பு
எண்ணுவ துயர்வு
ஏறுபோல் நட
ஐம்பொறி ஆட்சிகொள்
ஒற்றுமை வலிமையாம்
ஓய்த லொழி
ஔடதங் குறை
கற்ற தொழுகு
காலம் அழியேல்
கிளைபல தாங்கேல்
கீழோர்க்கு அஞ்சேல்
குன்றென நிமிர்ந்துநில்
கூடி தொழில் செய்
கெடுப்பது சோர்வு
கேட்டிலும் துணிந்துநில்
கைத்தொழில் போற்று
கொடுமையை எதிர்த்து நில்
கோல்கை கொண்டு வாழ்
கவ்வியதை விடேல்
சரித்திர தேர்ச்சிகொள்
சாவதற்கு அஞ்சேல்
சிதையா நெஞ்சு கொள்
சீறுவோர சீறு
சுமையினுக்கு இளைத்திடேல்
சூரரை போற்று
செய்வது துணிந்து செய்
சேர்க்கை அழியேல்
சைகையிற் பொருளுணர்
சொல்வது தெளிந்து சொல்
சோதிட தனையிகழ்
சௌரி தவறேல்
ஞமலிபோல் வாழேல்
ஞாயிறு போற்று
ஞிமிரென இன்புறு
ஞெகிழ்வத தருளின்
ஞேயங் காத்தல் செய்
தன்மை இழவேல்
தாழ்ந்து நடவேல்
திருவினை வென்றுவாழ்
தீயோர்க்கு அஞ்சேல்
துன்பம் மறந்திடு
தூற்றுதல் ஒழி
தெய்வம் நீ என்றுணர்
தேசத்தை காத்தல்செய்
தையலை உயர்வு செய்
தொன்மைக்கு அஞ்சேல்
தோல்வியிற் கலங்கேல்
தவத்தினை நிதம் புரி
நன்று கருது
நாளெலாம் வினைசெய்
நினைப்பது முடியும்
நீதிநூல் பயில்
நுனியளவு செல்
நூலினை பகுத்துணர்
நெற்றி சுருக்கிடேல்
நேர்பட பேசு
நை புடை
நொந்தது சாகும்
நோற்பது கைவிடேல்
பணத்தினை பெருக்கு
பாட்டினில் அன்புசெய்
பிணத்தினை போற்றேல்
பீழைக்கு இடங்கொடேல்
புதியன விரும்பு
பூமி யிழந்திடேல்
பெரிதினும் பெரிதுகேள்
பேய்களுக்கு அஞ்சேல்
பொய்ம்மை இகழ்
போர்த்தொழில் பழகு
மந்திரம் வலிமை
மானம் போற்று
மிடிமையில் அழிந்திடேல்
மீளுமாறு உணர்ந்துகொள்
முனையிலே முகத்து நில்
மூப்பினுக்கு இடங்கொடேல்
மெல்ல தெரிந்து சொல்
மேழி போற்று
மொய்ம்புற தவஞ் செய்
மோனம் போற்று
மௌட்டி தனை கொல்
யவனர்போல் முயற்சிகொள்
யாவரையும் மதித்து வாழ்
யௌவனம் காத்தல் செய்
ரஸத்திலே தேர்ச்சிகொள்
ராஜஸம் பயில்
ரீதி தவறேல்
ருசிபல வென்றுணர்
ரூபம் செம்மை செய்
ரேகையில் கனி கொள்
ரோதனம் தவிர்
ரௌத்திரம் பழகு
லவம் பல வெள்ளமாம்
லாகவம் பயிற்சிசெய்
லீலை இவ் வுலகு
உலுத்தரை இகழ்
உலோகநூல் கற்றுணர்
லௌகிகம் ஆற்று
வருவதை மகிழ்ந்துண்
வானநூற் பயிற்சிகொள்
விதையினை தெரிந்திடு
வீரியம் பெருக்கு
வெடிப்புற பேசு
வேதம் புதுமைசெய்
வை தலைமைகொள்
வௌவுதல் நீக்கு
பாப்பா பாட்டு
ஓடி விளையாடு பாப்பா நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா
கூடிவிளையாடு பாப்பா ஒரு
குழைந்தையை வையாதே பாப்பா
சின்னஞ் சிறுகுருவி போலே நீ
திரிந்து பறந்துவா பாப்பா
வன்ன பறவைகளை கண்டு நீ
மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா
கொத்தி திரியுமந்த கோழி அதை
கூட்டி விளையாடு பாப்பா
எத்தி திருடுமந்த காக்காய் அதற்கு
இரக்க படவேணும் பாப்பா
பாலை பொழிந்து தரும் பாப்பா அந்த
பசுமிக நல்லதடி பாப்பா
வாலை குழைத்துவரும் நாய்தான் அது
மனிதர்க்கு தோழனடி பாப்பா
வண்டி இழுக்கும் நல்ல குதிரை நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு
அண்டி பிழைக்கும் நம்மை ஆடு இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா
காலை எழுந்தவுடன் படிப்பு பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு என்று
வழக்க படுத்திக்கொள்ளு பாப்பா
பொய்சொல்ல கூடாது பாப்பா என்றும்
புறஞ்சொல்ல லாகாது பாப்பா
தெய்வம் நமக்குத்துணை பாப்பா ஒரு
தீங்குவர மாட்டாது பாப்பா
பாதகஞ் செய்பவரை கண்டால் நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா
மோதி மிதித்துவிடு பாப்பா அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா
துன்பம் நெருங்கிவந்த போதும் நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா
அன்பு மிகுந்த தெய்வ முண்டு துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா
சோம்பல் மிகக்கெடுதி பாப்பா தாய்
சொன்ன சொல்லை தட்டாதே பாப்பா
தேம்பி யழுங்குழந்தை நொண்டி நீ
திடங்கொண்டு போராடு பாப்பா
தமிழ்த்திரு நாடு தன்னை பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
அமிழ்தில் இனியதடி பாப்பா நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா
சொல்லில் உயர்வுதமிழ சொல்லே அதை
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்த ஹிந்துஸ் தானம் அதை
தினமும் புகழ்ந்திடடி பாப்பா
வடக்கில் இமயமலை பாப்பா தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா
கிடக்கும் பெரிய கடல் கண்டாய் இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா
வேத முடையதிந்த நாடு நல்ல
வீரர் பிறந்த திந்த நாடு
சேதமில் லாதஹிந்துஸ் தானம் இதை
தெய்வமென்று கும்பிடடி பாப்பா
சாதிகள் இல்லையடி பாப்பா குல
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்
நீதிஉயர்ந்தமதிகல்வி அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்
உயிர்க ளிடத்தில் அன்பு வேணும் தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்
வயிர முடைய நெஞ்சு வேணும் இது
வாழும் முறைமையடி பாப்பா
முரசு
வெற்றி எட்டு திக்கு மெட்ட கொட்டு முரசே
வேதம் என்றும் வாழ்கஎன்று கொட்டு முரசே
நெற்றி யொற்றை கண்ணனோடே நிர்த்தனம் செய்தாள்
நித்த சக்தி வாழ்க வென்று கொட்டு முரசே
ஊருக்கு நல்லது சொல்வேன் என
குண்மை தெரிந்தது சொல்வேன்
சீரு கெல்லாம் முதலாகும் ஒரு
தெய்வம் துணைசெய்ய வேண்டும்
வேத மறிந்தவன் பார்ப்பான் பல
வித்தை தெரிந்தவன் பார்ப்பான்
நீதி நிலைதவ றாமல் தண்ட
நேமங்கள் செய்பவன் நாய்க்கன்
பண்டங்கள் விற்பவன் செட்டி பிறர்
பட்டினி தீர்ப்பவன் செட்டி
தொண்டரென் றோர்வகு பில்லை தொழில்
சோம்பலை போல்இழி வில்லை
நாலு வகுப்பும்இங் கொன்றே இந்த
நான்கினில் ஒன்று குறைந்தால்
வேலை தவறி சிதைந்தே செத்து
வீழ்ந்திடும் மானிட சாதி
ஒற்றை குடும்ப தனிலே பொருள்
ஓங்க வளர்ப்பவன் தந்தை
மற்றை கருமங்கள் செய்தே மனை
வாழ்ந்திட செய்பவள் அன்னை
ஏவல்கள் செய்பவர் மக்கள் இவர்
யாவரும் ஓர்குலம் அன்றோ
மேவி அனைவரும் ஒன்றாய் நல்ல
வீடு நடத்துதல் கண்டோ ம்
சாதி பிரிவுகள் சொல்லி அதில்
தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்
நீதி பிரிவுகள் செய்வார் அங்கு
நித்தமும் சண்டைகள் செய்வார்
சாதி கொடுமைகள் வேண்டாம் அன்பு
தன்னில் செழித்திடும் வையம்
ஆதர வுற்றிங்கு வாழ்வோம் தொழில்
ஆயிரம் மாண்புற செய்வோம்
பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் புவி
பேணி வளர்த்திடும் ஈசன்
மண்ணு குள்ளே சிலமூடர் நல்ல
மாத ரறிவை கெடுத்தார்
கண்கள் இரண்டினில் ஒன்றை குத்தி
காட்சி கெடுத்திட லாமோ
பெண்க ளறிவை வளர்த்தால் வையம்
பேதைமை யற்றிடுங் காணீர்
தெய்வம் பலபல சொல்லி பகை
தீயை வளர்ப்பவர் மூடர்
உய்வ தனைத்திலும் ஒன்றாய் எங்கும்
ஓர்பொருளானது தெய்வம்
தீயினை கும்பிடும் பார்ப்பார் நித்தம்
திக்கை வணங்கும் துருக்கர்
கோவிற் சிலுவையின் முன்னே நின்று
கும்பிடும் யேசு மதத்தார்
யாரும் பணிந்திடும் தெய்வம் பொருள்
யாவினும் நின்றிடும் தெய்வம்
பாருக்குள்ளே தெய்வம் ஒன்று இதில்
பற்பல சண்டைகள் வேண்டாம்
வெள்ளை நிறத்தொரு பூனை எங்கள்
வீட்டில் வளருது கண்டீர்
பிள்ளைகள் பெற்றத பூனை அவை
பேரு கொருநிற மாகும்
சாம்பல் நிறமொரு குட்டி கருஞ்
சாந்து நிறமொரு குட்டி
பாம்பு நிறமொரு குட்டி வெள்ளை
பாலின் நிறமொரு குட்டி
எந்த நிறமிருந்தாலும் அவை
யாவும் ஒரேதர மன்றோ
இந்த நிறம்சிறி தென்றும் இஃது
ஏற்ற மென்றும் சொல்லலாமோ
வண்ணங்கள் வேற்றுமை பட்டால் அதில்
மானுடர் வேற்றுமை யில்லை
எண்ணங்கள் செய்கைக ளெல்லாம் இங்கு
யாவர்க்கும் ஒன்றெனல் காணீர்
நிகரென்று கொட்டு முரசே இந்த
நீணிலம் வாழ்பவ ரெல்லாம்
தகரென்று கொட்டு முரசே பொய்ம்மை
சாதி வகுப்பினை யெல்லாம்
அன்பென்று கொட்டு முரசே அதில்
ஆக்கமுண் டாமென்று கொட்டு
துன்பங்கள் யாவுமே போகும் வெறுஞ்
சூது பிரிவுகள் போனால்
அன்பென்று கொட்டு முரசே மக்கள்
அத்தனை பேரும் நிகராம்
இன்பங்கள் யாவும் பெருகும் இங்கு
யாவரும் ஒன்றென்று கொண்டால்
உடன்பிற தார்களை போலே இவ்
வுலகில் மனிதரெல் லாரும்
இடம்பெரி துண்டுவை யத்தில் இதில்
ஏதுக்கு சண்டைகள் செய்வீர்
மரத்தினை நட்டவன் தண்ணீர் நன்கு
வார்த்ததை ஓங்கிட செய்வான்
சிரத்தை யுடையது தெய்வம் இங்கு
சேர்த்த உணவெல்லை யில்லை
வயிற்றுக்கு சோறுண்டு கண்டீர் இங்கு
வாழும் மனிதரெல் லோருக்கும்
பயிற்றி உழுதுண்டு வாழ்வீர் பிறர்
பங்கை திருடுதல் வேண்டாம்
உடன்பிற தவர்களை போலே இவ்
வுலகினில் மனிதரெல் லாரும்
திடங்கொண் டவர்மெலி தோரை இங்கு
தின்று பிழைத்திட லாமோ
வலிமை யுடையது தெய்வம் நம்மை
வாழ்ந்திட செய்வது தெய்வம்
மெலிவுகண் டாலும் குழந்தை தன்னை
வீழ்த்தி மிதத்திட லாமோ
தம்பி சற்றே மெலிவானால் அண்ணன்
தானடிமை கொள்ள லாமோ
செம்புக்கும் கொம்புக்கும் அஞ்சி மக்கள்
சிற்றடி மைப்பட லாமோ
அன்பென்று கொட்டு முரசே அதில்
யார்க்கும் விடுதலை உண்டு
பின்பு மனிதர்க ளெல்லாம் கல்வி
பெற்று பதம்பெற்று வாழ்வார்
அறிவை வளர்த்திட வேண்டும் மக்கள்
அத்தனை பேருக்கும் ஒன்றாய்
சிறியரை மேம்பட செய்தால் பின்பு
தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும்
பாருக்குள்ளே சமத்தன்மை தொடர்
பற்றுஞ் சகோதர தன்மை
யாருக்கும் தீமைசெய் யாது புவி
யெங்கும் விடுதலை செய்யும்
வயிற்றுக்கு சோறிட வேண்டும் இங்கு
வாழும் மனிதரு கெல்லாம்
பயிற்றி பலகல்வி தந்து இந்த
பாரை உயர்த்திட வேண்டும்
ஒன்றென்று கொட்டு முரசேஅன்பில்
ஓங்கென்று கொட்டு முரசே
நன்றென்று கொட்டு முரசேஇந்த
நானில மாந்தரு கெல்லாம்
புதுமை பெண்
போற்றி போற்றிஓர் ஆயிரம் நின்
பொன்ன டிக்குப்பல் லாயிரம் போற்றிகாண்
சேற்றி லேபுதி தாக முளைத்த தோர்
செய்ய தாமரை தேமலர் போலோளி
தோற்றி நின்றனை பாரத நாடைலே
துன்பம் நீக்கும் சுதந்திர பேரிகை
சாற்றி வந்தனைமாதரசே எங்கள்
சாதி செய்த தவப்பயன் வாழி நீ
மாதர குண்டு சுதந்திரம் என்றுநின்
வண்ம லர்த்திரு வாயின் மொழிந்தசொல்
நாத தானது நாரதர் வீணையோ
நம்பிரான் கண்ணன் வேய்ங்குழ லின்பமோ
வேதம் பொன்னுரு கன்னிகை யாகியே
மேன்மை செய்தெமை காத்திட சொல்வதொ
சாதல் மூத்தல் கெடுக்கும் அமிழ்தமொ
தையல் வாழ்கபல் லாண்டுபல் லாண்டிங்கே
அறிவு கொண்ட மனித வுயிர்களை
அடிமையாக்க முயல்பவர் பித்தராம்
நெறிகள் யாவினும் மேம்பட்டு மானிடர்
நேர்மை கொண்டுயர் தேவர்க ளாதற்கே
சிறிய தொண்டுகள் தீர்த்தடி மைச்சுருள்
தீயிலிட்டு பொசுக்கிட வேண்டுமாம்
நறிய பொன்மலர் மென்சிறு வாயினால்
நங்கை கூறும் நவீனங்கள் கேட்டிரோ
ஆணும் பெண்ணும் நிகரென கொள்வதால்
அறிவி லோங்கி இவ் வையம் தழைக்குமாம்
பூணு நல்லற தோடிங்கு பெண்ணுரு
போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்
நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்
ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்குடி பெண்ணின் குணங்களாம்
பெண்மை தெய்வத்தின் பேச்சுகள் கேட்டீரோ
நிலத்தின் தன்மை பயிர்க்குள தாகுமாம்
நீச தொண்டு மடமையும் கொண்டதாய்
தலத்தில் மாண்புயர் மக்களை பெற்றிடல்
சாலவே யரி தாவதொர் செய்தியாம்
குலத்து மாதர்கு கற்பியல் பாகுமாம்
கொடுமை செய்தும் அறிவை யழித்து
நலத்தை காக்க விரும்புதல் தீமையாம்
நங்கை கூறும் வியப்புகள் கேட்டீரோ
புதுமை பெண்ணிவள் சொற்களும் செய்கையும்
பொய்ம்மை கொண்ட கலிக்கு புதிதன்றி
சதுமறைப்படி மாந்தர் இருந்தநாள்
தன்னி லேபொது வான் வழக்கமாம்
மதுர தேமொழி மங்கையர் உண்மைதேர்
மாத வப்பெரி யோருட னொப்புற்றே
முதுமை காலத்தில் வேதங்கள் பேசிய
முறைமை மாறிட கேடு விளைந்ததாம்
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞான செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்
அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
அவல மெய்தி கலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதய கன்னி உரைப்பது கேட்டீரோ
உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்
ஓது பற்பல நூல்வகை கற்கவும்
இலகு சீருடை நாற்றிசை நாடுகள்
யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே
திலக வாணுத லார்நங்கள் பாரத
தேசமோங்க உழைத்திடல் வெண்டுமாம்
விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை
வீர பெண்கள் விரைவில் ஒழிப்பாராம்
சாத்தி ரங்கள் பலபல கற்பாராம்
சவுரி யங்கள் பலபல செய்வராம்
மூத்த பொய்ம்மைகள் யாவும் அழிப்பராம்
மூட கட்டுக்கள் யாவு தகர்ப்பராம்
காத்து மானிடர் செய்கை யனைத்தையும்
கடவு ளர்க்கினி தாக சமைப்பராம்
ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம்
இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்டீரோ
போற்றிபோற்றிஜயஜய போற்றிஇ
புதுமை பெண்ணொளி வாழிபல் லாண்டிங்கே
மாற்றி வையம் புதுமை யுறச்செய்து
மனிதர் தம்மை அமர்க ளாக்கவே
ஆற்றல் கொண்ட பராசக்தி யன்னைநல்
அருளி நாலொரு கன்னிகை யாகியே
தேற்றி உண்மைகள் கூறிட வந்திட்டாள்
செல்வம் யாவினும் மேற்செல்வம் எய்தினோம்
பெண்மை
பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா
பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா
தண்மை இன்பம்நற் புண்ணியஞ் சேர்ந்தன
தாயின் பெயரும் சதியென்ற நாமமும்
அன்பு வாழ்கென் றமைதியில் ஆடுவோம்
ஆசை காதலை கைகொட்டி வாழ்த்துவோம்
துன்பம் தீர்வது பெண்மையி னாலடா
சூர பிள்ளைகள் தாயென்று போற்றுவோம்
வலிமை சேர்ப்பது தாய்முலை பாலடா
மானஞ் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்
கலிய ழிப்பது பெண்க ளறமடா
கைகள் கோத்து களித்துநின் றாடுவோம்
பெண்ண றத்தினை ஆண்மக்கள் வீரந்தான்
பேணு மாயிற் பிறகொரு தாழ்வில்லை
கண்ணை காக்கும் இரண்டிமை போலவே
காத லின்பத்தை காத்திடு வோமடா
சக்தி யென்ற மதுவையுண் போமடா
தாளங் கொட்டி திசைகள் அதிரவே
ஓத்தி யல்வதொர் பாட்டும் குழல்கழும்
ஊர்வி களித்துநின் றாடுவோம்
உயிரை காக்கும்உயரினை சேர்த்திடும்
உயிரினு குயிராய் இன்ப மாகிடும்
உயிரு னும்இந்த பெண்மை இனிதடா
ஊது கொம்புகள் ஆடு களிகொண்டே
போற்றி தாய் என்று தோழ் கொட்டி யாடுவீர்
புகழ்ச்சி கூறுவீர் காதற் கிளிகட்கே
நூற்றி ரண்டு மலைகளை சாடுவோம்
நுண்ணி டைப்பெண் ணொருத்தி பணியிலே
போற்றி தாய் என்று தாளங்கள் கொட்டடா
போற்றி தாய்என்று பொற்குழ லூதடா
காற்றி லேறியவ் விண்ணையுஞ் சாடுவோம்
காதற் பெண்கள் கடைக்கண் பணியிலே
அன்ன மூட்டிய தெய்வ மணி கையின்
ஆணை காட்டில் அனலை விழுங்குவோம்
கன்ன தேமுத்தம் கொண்டு களிப்பினும்
கையை தள்ளும்பொற் கைகளை பாடுவோம்
பெண்கள் விடுதலை கும்பி
காப்பு
பெண்கள் விடுதலை பெற்ற மகிழ்ச்சிகள்
பேசி களிப்பொடு நாம்பாட
கண்களி லேயொளி போல வுயிரில்
கலந்தொளிர் தெய்வம்நற் காப்பாமே
கும்மியடிதமிழ் நாடு முழுதும்
குலுங்கிட கைகொட்டி கும்மியடி
நம்மை பிடித்த பிசாசுகள் போயின
நன்மை கண்டோ மென்று கும்மியடி கும்மி
ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்
வீட்டு குள்ளே பெண்ணை பூட்டிவை போமென்ற
விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார் கும்மி
மாட்டை யடித்து வசக்கி தொழுவினில்
மாட்டும் வழக்கத்தை கொண்டு வந்தே
வீட்டினில் எம்மிடங் காட்ட வந்தார்அதை
வெட்டி விட்டோ மென்று கும்மியடி கும்மி
நல்ல விலை கொண்டு நாயை விற்பார்அந்த
நாயிடம் யோசனை கேட்ப துண்டோ
கொல்ல துணிவின்றி நம்மையும் அந்நிலை
கூட்டிவை தார்பழி கூட்டி விட்டார் கும்மி
கற்பு நிலையென்று சொல்ல வந்தார்இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்
வற்புறு திப்பெண்ணை கட்டிக்கொடுக்கும்
வழக்கத்தை தள்ளி மிதித்திடுவோம் கும்மி
பட்டங்கள் ஆள்வதுஞ் சட்டங்கள் செய்வதும்
பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டு மறிவினில் ஆணு கிங்கேபெண்
இளைப்பில்லை கணென்று கும்மியடி கும்மி
வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும்
வேண்டி வந்தோ மென்று கும்மியடி
சாதம் படைக்கவும் செய்திடுவோம்தெய்வ
சாதி படைக்கவும் செய்திடு வோம் கும்மி
காத லொருவனை கைப்பிடித்தேஅவன்
காரியம் யாவினும் கைகொடுத்து
மாத ரறங்கள் பழமையை காட்டிலும்
மாட்சி பெற செய்து வாழ்வமடி கும்மி
பெண் விடுதலை
விடுதலைக்கு மகளிரெல் லோரும்
வேட்கை கொண்டனம்வெல்லுவம் என்றெ
திடம னத்தின் மதுக்கிண்ண மீது
சேர்ந்து நாம்பிர திக்கினை செய்வோம்
உடைய வள்சக்தி ஆண்பெண் ணிரண்டும்
ஒருநி கர்செய் துரிமை சமைத்தாள்
இடையிலேபட்ட கீழ்நிலை கண்டீர்
இதற்கு நாமொரு பட்டிரு போமோ
திறமை யால்இங்கு மேனிலைசேர்வோம்
தீய பண்டை இகழ்ச்சிகள் தேய்ப்போம்
குறைவி லாது முழுநிகர் நம்மை
கொள்வ ராண்க ளெனிலவ ரோடும்
சிறுமை தீர தாய்த்திரு நாட்டை
திரும்ப வெல்வதில் சேர்ந்திங் குழைப்போம்
அறவி ழுந்தது பண்டை வழக்கம்
ஆணு குப்பெண் விலங்கெனும் அஃதே
விடியு நல்லொளி காணுதி நின்றே
மேவு நாக ரிகம்புதி தொன்றே
கொடியர் நம்மை அடிமைகள் என்றே
கொண்டுதாம்முதல் என்றன ரன்றே
அடியொ டந்த வழக்கத்தை கொன்றே
அறிவு யாவும் பயிற்சியில் வென்றே
கடமை செய்வீர்நந்தேசத்து வீர
காரிகை கணத்தீர்துணி வுற்றே
தொழில்
இரும்பை காய்ச்சி உருக்கிடு வீரே
யந்திரங்கள் வகுத்திடு வீரே
கரும்பை சாறு பிழிந்திடு வீரே
கடலில் மூழ்கிநன் முத்தெடுப்பீரே
அரும்பும் வேர்வை உதிர்த்து புவிமேல்
ஆயி ரந்தொழில் செய்திடு வீரே
பெரும்பு கழ்நு கேயிசை கின்றேன்
பிரம தேவன் கலையிங்கு நீரே
மண்ணெடுத்து குடங்கள்செய் வீரே
மரத்தை வெட்டி மனைசெய்கு வீரே
உண்ண காய்கனி தந்திடு வீரே
உழுது நன்செ பயிரிடு வீரே
எண்ணெய்பால்நெய் கொணர்ந்திடு வீரே
இழையை நாற்றுநல் லாடைசெய் வீரே
விண்ணி னின்றெமை வானவர் காப்பார்
மேவி பார்மிசை காப்பவர் நீரே
பாட்டும் செய்யுளும் கோத்திடு வீரே
பரத நாட்டி கூத்திடு வீரே
காட்டும் வை பொருள்களின் உண்மை
கண்டு சாத்திரம் சேர்த்திடு வீரே
நாட்டி லேயறம் கூட்டிவை பீரே
நாடும் இன்பங்கள் ஊட்டிவை பீரே
தேட்ட மின்றி விழியெதிர் காணும்
தெய்வ மாக விளங்குவிர் நீரே
மறவன் பாட்டு
மண்வெட்டி கூலிதின லாச்சேஎங்கள்
வாள்வலியும் வேல்வலியும் போச்சே
விண்முட்டி சென்றபுகழ் போச்சேஇந்த
மேதினியில் கெட்டபெய ராச்சே
நாணிலகு வில்லினொடு தூணிநல்ல
நாதமிகு சங்கொலியும் பேணி
பூணிலகு திண்கதையும் கொண்டுநாங்கள்
போர்செய்த கால்மெல்லாம் ப்ண்டு
கன்னங் கரியவிருள் நேரம்அதில்
காற்றும் பெருமழையும் சேரும்
சின்ன கரியதுணி யாலேஎங்கள்
தேகமெல்லாம் மூடிநரி போலே
ஏழை யெளியவர்கள் வீட்டில்இந்த
ஈன வயிறுபடும் பாட்டில்
கோழை யெலிக ளென்னவேபொருள்
கொண்டு வந்து
முன்னாளில் ஐவரெல்லாம் வேதம்ஓதுவார்
மூன்று மழை பெய்யுமடா மாதம்
இந்நாளி லேபொய்ம்மை பார்ப்பார்இவர்
ஏதுசெய்தும் காசுபெற பார்ப்பார்
பேராசை காரனடா பார்ப்பான்ஆனால்
பெரியதுரை என்னிலுடல் வேர்ப்பான்
யாரானா லும்கொடுமை

பிள்ளைக்கு பூணூலாம் என்பான்நம்மை
பிச்சு பணங்கொடென தின்பான்
கொள்ளை கேசென்

சொல்ல கொதிக்குதடா நெஞ்சம்வெறுஞ்
சோற்றுக்கோ வந்ததிந்த பஞ்சம்


நாயும் பிழைக்கும் இந்தப்பிழைப்பு
நாளெல்லாம் மற்றிதிலே உழைப்பு
பாயும் கடிநா போலீசுக்கார
பார்ப்பானு குண்டிதிலே பீசு
சோர தொழிலா கொள்வோமோமுந்தை
சூரர் பெயரை அழி போமோ
வீர மறவர் நாமன்றோஇந்த
வீண் வாழ்க்கை வாழ்வதினி நன்றோ
நாட்டு கல்வி
ஆங்கிலத்தில் ரவீந்திரநாதர் எழுதிய பாடலின்
மொழிபெயர்ப்பு
விளக்கி லேதிரி நன்கு சமைந்தது
மேவு வீர்இங்கு தீக்கொண்டு தோழரே
களக்க முற்ற இருள்கட தேகுவார்
காலை சோதி கதிரவன் கோவிற்கே
துளக்க முற்றவிண் மீனிடம் செல்லுவார்
தொகையில் சேர்ந்திட உம்மையும் கூவினார்
களிப்பு மிஞ்சி ஓளியினை பண்டொரு
காலன் நீர்சென்று தேடிய தில்லையோ
அன்று நுங்கள் கொடியினை முத்திட்டே
ஆசை யென்ற விண் மீன்ஒளிர் செய்ததே
துன்று நள்ளிருள் மலை மயக்கத்தால்
சோம்பி நீரும் வழிநடை பிந்தினீர்
நின் றவிந்தன நுங்கள் விளக்கெலாம்
நீங்கள் கண்ட கனாக்களெல் லாம் இசை
குன்றி தீக்குறி தோன்றும்இராப்புட்கள்
கூவ மாறொ திருந்தன காண்டிரோ
இன்னு மிங்கிருள் கூடி யிருப்பினும்
ஏங்கு கின்ற நரக துயிர்கள்போல்
இன்னு மிங்கு வனத்திடை காற்றுத்தான்
ஓங்கும் ஓதை இருதிடும் ஆயினும்
முன்னை காலத்தின் நின்றெழும் பேரொலி
முறை முறைபல ஊழியின் ஊடுற்றே
பின்னை இங்குவ தெய்திய பேரொலி
இருளை நீக்கி ஒளியினை காட்டுவாய்
இறப்பை நீக்கிஅமிர்தத்தை ஊட்டுவாய்
அருளும் இந்த மறையொலி வந்திங்கே
ஆழ்ந்த தூக்கத்தில் வீழ்ந்திரு பீர்தமை
தெருளு றுத்தவும் நீர்எழு கில்லிரோ
தீய நாச உறக்கத்தில் வீழ்ந்தனீர்
மருளை நீக்கி அறிதிர் அறிதிரோ
வான்ஒ ளிக்கு மகாஅர்இ யாம்என்றே
புதிய கோணங்கி
குடுகுடு
நல்ல காலம் வருகுதுநல்ல வருகுது
சாதிகள் சேருதுசண்டைகள் தொலையுது
சொல்லடிசொல்லடிசக்திமாகாளீ
வேதபுர தாருக்கு நல்ல குறி சொல்லு
தரித்திரம் போகுதுசெல்வம் வருகுது
படிப்பு வளருதுபாவம் தொலையுது
படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்
போவான்போவான்ஐயோவென்று போவான்
வேத புரத்திலே வியாபாரம் பெருகுது
தொழில் பெருகுதுதொழிலாளி வாழ்வான்
சாத்திரம் வளருதுசூத்திரம் தெரியுது
யந்திரம் பெருகுதுதந்திரம் வளருது
மந்திர மெல்லாம் வளருதுவளருது
குடுகுடு
சொல்லடிசொல்லடிமலையாள பகவதீ
அந்தரிவீரிசண்டிகைசூலி
குடுகுடு
குடுகுடு
சாமிமார கெல்லாம் தைரியம் வளருது
தொப்பை சுருங்குதுசுறுசுறுப்பு விளையுது
எட்டு லச்சுமியும் ஏறி வளருது
சாத்திரம் வளருதுசாதி குறையுது
நேத்திரம் திறக்குதுநியாயம் தெரியுது
பழைய பயித்தியம் படீலென்று தெளியுது
வீரம் வருகுதுமேன்மை கிடைக்குது
சொல்லடி சக்திமலையாள் பகவதி
தர்மம் பெருகுதுதர்மம் பெருகுது

சுயசரிதை
கனவு
பொய்யா பழங்கதையா கனவாய்
மெல்ல போனதுவே
பட்டினத்துப்பிள்ளை
முன்னுரை
வாழ்வு முற்றும் கனவென கூறிய
மறைவ லோர்தம் உரைபிழை யன்றுகாண்
தாழ்வு பெற்ற புவித்தல கோலங்கள்
ச்ரத மன்றெனல் யானும் அறிகுவேன்
பாழ்க டந்த பரனிலை யென்றவர்
பகரும் அந்நிலை பார்த்திலன் பார்மிசை
ஊள் கடந்து வருவதும் ஒண்றுண்டோ
உண்மை தன்னிலொர் பாதி யுணர்ந்திட்டேன்
மாயை பொய்யெனல் முற்றிலும் கண்டனன்
மற்றும் இந்த பிர தியல்பினை
ஆய நல்லருள் பெற்றிலன்தன்னுடை
அறிவி னுக்கு புலப்பட லின்றியே
தேய மீதெவ ரோசொலுஞ் சொல்லினை
செம்மை யென்று மனத்திடை கொள்வதாம்
தீய பக்தி யியற்கையும் வாய்ந்திலேன்
சிறிது காலம் பொறுத்தினுங் காண்பமே
உலகெ லாமொர் பெருங்கன வஃதுளே
உண்டு றங்கி யிடர்செய்து செத்திடும்
கலக மானிட பூச்சிகள் வாழ்க்கையோர்
கனவி லுங்கன வாகும்இதனிடை
சிலதி னங்கள் உயிர்க்கமு தாகியே
செப்பு தற்கரி தாகம யக்குமால்
திலத வாணுத லார்தரு மையலா
தெய்வி கக்கன வன்னது வாழ்கவே
ஆண்டோ ர் பத்தினில் ஆடியும் ஓடியும்
ஆறு குட்டையின் நீச்சினும் பேச்சினும்
ஈண்டு பன்மர தேறியி றங்கியும்
என்னோ டொத்த சிறியர் இருப்பரால்
வேண்டு தந்தை விதிப்பினு கஞ்சியான்
வீதி யாட்டங்க ளேதினுங் கூடிலேன்
தூண்டு நூற்கண தோடு தனியனா
தோழ் மைபிறி தின்றி வருந்தினேன்
பிள்ளை காதல்
அன்ன போழ்தினி லுற்ற கனவினை
அந்த மிழ சொலில் எவ்வண்ணம் சொல்லுகேன்
சொன்ன தீங்கன வங்கு துயிலிடை
தோய்ந்த தன்றுநனவிடை தோய்ந்ததால்
மென்ன டை கனி யின்சொற் கருவிழி
மேனி யெங்கும் நறுமலர் வீசிய
கன்னி யென்றுறு தெய்வத மொன்றனை
கண்டு காதல் வெறியிற் கலந்தனன்
ஒன்ப தாயபி ராயத்த ளென்விழி
கோது காதை சகுந்தலை யொத்தனள்
என்ப தார்க்கும் வியப்பினை நல்குமால்
என்செய் கேன் பழியென் மிசை யுண்டுகொல்
அன்பெ நும்பெரு வெள்ளம் இழுக்குமேல்
அதனை யாவர் பிழைத்திட வல்லரே
முன்பு மாமுனி வோர்தமை வென்றவில்
முன்ன ரேழை குழந்தையென் செய்வனே
வயது முற்றிய பின்னுறு காதலே
மாசு டைத்தது தெய்விக மன்றுகாண்
இயலு புன்மை யுடலினு கின்பெனும்
எண்ண முஞ்சிறி தேன்றத காதலாம்
நயமி குந்தனி மாதை மாமணம்
நண்ணு பாலர் தமக்குரி தாமன்றோ
கயல்வி ழிச்சிறு மானினை காணநான்
காம னம்புகள் என்னுயிர் கண்டவே
கனகன் மைந்தன் குமர குருபரன்
கனியும் ஞானசம் பந்தன் துருவன்மற்
றெனையர் பாலர் கடவுளர் மீதுதாம்
எண்ணில் பக்திகொண் டின்னுயிர் வாட்டினோர்
மனதி லேபிற தோன்மன முண்ணுவோன்
மதன தேவனு கென்னுயிர் நல்கினன்
முனமு ரைத்தவர் வான்புகழ் பெற்றனர்
மூட னேன்பெற்ற தோதுவன் பின்னரே
நீரெ டுத்து வருவதற் கவள் மணி
நித்தி லப்புன் நகைசுடர் வீசிட
போரெ டுத்து வருமதன் முன்செல
போகும் வேளை யதற்கு தினந்தொறும்
வேரெ டுத்து சுதந்திர நற்பயிர்
வீந்திட செய்தல் வேண்டிய மன்னர்தம்
சீரெ டுத்த புலையியற் சாரர்கள்
தேச பக்தர் வரவினை காத்தல்போல்
காத்தி ருந்தவள் போம்வழி முற்றிலும்
கண்கள் பின்னழ கார்ந்து களித்திட
யாத்த தேருரு ளைப்படு மேளைதான்
யாண்டு தேர்செலு மாங்கிழு புற்றென
கோத்த சிந்தனையோ டேகி யதில்மகிழ்
கொண்டு நாட்கள் பலகழி திட்டனன்
பூத்த ஜோதி வதனம் திரும்புமேல்
புலன ழிந்தொரு புத்துயி ரெய்துவேன்
புலங்க ளோடு கரணமும் ஆவியும்
போந்து நின்ற விருப்புடன் மானிடன்
நலங்க ளேது விரும்புவன் அங்கவை
நண்ணு றப்பெறல் திண்ணம தாமென
இலங்கு நூலுணர் ஞானியர் கூறுவர்
யானும் மற்றது மெய்யென தேர்ந்துளேன்
விலங்கி யற்கை யிலையெனில் யாமெலாம்
விருன்பு மட்டினில் விண்ணுற லாகுமே
சூழு மாய வுலகினிற் காணுறு
தோற்றம் யாவையும் மானத மாகூமால்
ஆழு நெஞ்சக தாசையின் றுள்ளதேல்
அதனு டைப்பொருள் நாளை விளைந்திடும்
தாழு முள்ளத்தர்சோர்வினர்ஆடுபோல்
தாவி தாவி பலபொருள் நாடுவோர்
வீழு மோரிடை யூற்றினு கஞ்சுவோர்
விரும்பும் யாவும் பெறாரிவர் தாமன்றே
விதியை நோவர்தம் நண்பரை தூற்றுவர்
வெகுளி பொங்கி பகைவரை நிந்திப்பர்
சதிகள் செய்வர்பொ சாத்திரம் பேசுவர்
சாத கங்கள் புரட்டுவர் பொய்மைசேர்
மதியி னிற்புலை நாத்திகங் கூறுவர்
மாய்ந்தி டாத நிறைந்த விருப்பமே
கதிகள் யாவும் தருமென லோர்ந்திடார்
கண்ணி லாதவர் போல திகைப்பர்காண்
கன்னி மீதுறு காதலின் ஏழையேன்
கவலை யுற்றனன் கோடியென் சொல்லுகேன்
பன்னி யாயிரங் கூறினும்பக்தியின்
பான்மை நன்கு பகர்ந்திட லாகுமோ
முன்னி வான்கொம்பிற் றேனு குழன்றதோர்
முடவன் கால்கள் முழுமைகொண் டாலென
என்னி யன்றுமற் ஦ற்ங்ஙனம் வாய்ந்ததோ
என்னி டத்தவள் இங்கிதம் பூண்டதே
காதலென்பதும் ஓர்வயின் நிற்குமேல்
கடலின் வந்த கடுவினை யொக்குமால்
ஏத மின்றி யிருபுடை தாமெனில்
இன்னமிர்தும் இணைசொல லாகுமோ
ஓதொ ணாத பெருந்தவம் கூடினோர்
உம்பர் வாழ்வினை யெள்ளிடும் வாழ்வினோர்
மாத ரார்மிசை தாமுறுங் காதலை
மற்ற வர்தர பெற்றிடும் மாந்தரே
மொய்க்கும் மேகத்தின் வாடிய மாமதி
மூடு வெம்பனி கீழுறு மென்மலர்
கைக்கும் வேம்பு கலந்திடு செய்யபால்
காட்சி யற்ற கவினுறு நீள்விழி
பொ கிளைத்து வருந்திய மெய்யரோ
பொன்ன னாரருள் பூண்டில ராமெனில்
கைக்கி ளைப்பெயர் கொண்ட பெருந்துயர
காத லஃது கருதவு தீயதால்
தேவர் மன்னன் மிடிமையை பாடல்போல்
தீய கைக்கிளை யானெவன் பாடுதல்
ஆவல் கொண்ட அரும்பெறற் கன்னிதான்
அன்பெ னக்கங் களித்திட லாயினள்
பாவம் தீமைபழியெது தேர்ந்திடோ ம்
பண்டை தேவ யுகத்து மனிதர்போல்
காவல் கட்டு விதிவழ கென்றிடுங்
கயவர் செய்திக ளேதும்அறிந்திலோம்
கான கத்தில் இரண்டு பறவைகள்
காத லுற்றது போலவும் ஆங்ஙனே
வான கத்தில் இயக்க ரியக்கியர்
மையல் கொண்டு மயங்குதல் போலவும்
ஊன கத்த துவட்டுறும் அன்புதான்
ஒன்று மின்றி உயிர்களில் ஒன்றியே
தேன் கத்த மணிமொழி யாளொடு
தெய்வ நாட்கள் சிலகழி தேனரோ
ஆதி ரைத்திரு நாளொன்றிற் சங்கரன்
ஆலயத்தொரு மண்டப தன்னில்யாள்
சோதி மானொடு தன்ன தனியனா
சொற்க ளாடி யிருப்ப ம்ற்றாங்கவள்
பாதி பேசி மறைந்துபின் தோன்றித்தன்
பங்க யக்கையில் மைகொணர்ந்தேஒரு
சேதி நெற்றியில் பொட்டுவை பேன் என்றாள்
திலத மிட்டனள்செய்கை யழிந்தனன்
என்னை யீன்றென கைந்து பிராயத்தில்
ஏங்க விட்டுவிண் ணெய்திய தாய்தனை
முன்னை யீன்றவன் செந்தமிழ செய்யுளால்
மூன்று போழ்துஞ் சிவனடி யேத்துவோன்
அன்ன வந்தவ பூசனை தீர்ந்தபின்
அருச்ச னைப்படு தேமலர் கொண்டுயான்
பொன்னை யென்னுயிர் தன்னை யணுகலும்
பூவை புன்னகை நன்மலர் பூப்பள் காண்
ஆங்கில பயிற்சி
நெல்லையூர் சென்றவ் வூணர் கலைத்திறன்
நேரு மாறெனை எந்தை பணித்தனன்
புல்லை யுண்கென வாளரி சேயினை
போக்கல் போலவும்ஊன்விலை வாணிகம்
நல்ல தென்றொரு பார்ப்பன பிள்ளையை
நாடு விப்பது போலவும்எந்தைதான்
அல்லல் மிக்கதோர் மண்படு கல்வியை
ஆரி யர்க்கிங் கருவரு பாவதை
நரியு யிர்ச்சிறு சேவகர்தாதர்கள்
நாயெ னத்திரி யொற்றர்உணவினை
பெரிதெ னக்கொடு தம்முயிர் விற்றிடும்
பேடியர்பிறர கிச்சகம் பேசுவோர்
கருது மிவ்வகை மாக்கள் பயின்றிடுங்
கலைப யில்கென என்னை விடுத்தனன்
அருமை மிக்க மயிலை பிரிந்துமிவ்
அற்பர் கல்வியின் நெஞ்சுபொ ருந்துமோ
கணிதம் பன்னிரண் டாண்டு பயில்வர்பின்
கார்கொள் வானிலோர் மீனிலை தேர்ந்திலார்
அணிசெய் காவியம் ஆயிரங் கற்கினும்
ஆழ்ந்தி ருக்கும் கவியுளம் காண்கிலார்
வணிக மும்பொருள் நூலும் பிதற்றுவார்
வாழு நாட்டிற் பொருள்கெடல் கேட்டிலார்
துணியு மாயிரஞ் சாத்திர நாமங்கள்
சொல்லு வாரெ டுணைப்பயன் கண்டிலார்
கம்ப னென்றொரு மானிடன் வாழ்ந்ததும்
காளி தாசன் கவிதை புனைந்ததும்
உம்பர் வானத்து கோளையும் மீனையும்
ஓர்ந்த ளந்ததொர் பாஸ்கரன் மாட்சியும்
நம்ப ருந்திற லோடொரு பாணினி
ஞால மீதில் இலக்கணங் கண்டதும்
இம்பர் வாழ்வின் இறுதிகண் டுண்மையின்
இயல்பு ணர்த்திய சங்கரன் ஏற்றமும்
சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்
தெய்வ வள்ளுவன் வான்மறை செய்ததும்
பாரில் நல்லிசை பாண்டிய சோழர்கள்
பார ளித்து தர்மம் வளர்த்ததும்
பேர ருட்சுடர் வாள்கொண் டசோகனார்
பிழை படாது புவித்தலங் காத்ததும்
வீரர் வாழ்த்த மிலேச்சர்த தீயகோல்
வீழ்த்தி வென்ற சிவாஜியின் வெற்றியும்
அன்ன யாவும் அறிந்திலர் பார
தாங்கி லம்பயில் பள்ளியு போகுநர்
முன்ன நாடு திகழ்ந்த பெருமையும்
மூண்டி ருக்குமி நாளின் இகழ்ச்சியும்
பின்னர் நாடுறு பெற்றியு தேர்கிலார்
பேடி கல்வி பயின்ருழல் பித்தர்கள்
என்ன கூறிமற் றெங்ஙன் உணர்த்துவேன்
இங்கி வர்க்கென துள்ளம் எரிவதே
சூதி லாத யுளத்தினன் எந்தைதான்
சூழ்ந்தெ னக்கு நலஞ்செயல் நாடியே
ஏதி லாதருங் கல்வி படுகுழி
ஏறி யுய்தற் கரிய கொடும்பிலம்
தீதி யன்ற மயக்கமும் ஐயமும்
செய்கை யாவினு மேயசி ரத்தையும்
வாதும் பொய்மையும் என்றவி லங்கினம்
வாழும் வெங்குகை கென்னை வழங்கினன்
ஐய ரென்றும் துரைனென்றும் மற்றென
காங்கி லக்கலை யென்றொன் றுணர்த்திய
பொய்ய ருக்கிது கூறுவன்கேட்பீரேல்
பொழுதெ லாமுங்கள் பாடத்தில் போக்கிநான்
மெய்ய யர்ந்து விழிகுழி வெய்திட
வீறி ழந்தென துள்ளநொய் தாகிட
ஐயம் விஞ்சி சுதந்திர நீங்கியென்
அறிவு வாரி துரும்பென் றலைந்ததால்
செலவு தந்தைக்கோ ராயிரஞ் சென்றது
தீதெ னக்குப்பல் லாயிரஞ் சேர்ந்தன
நலமொ ரெட்டுணை யுங்கண்டி லேனிதை
நாற்ப தாயிரங் கோயிலிற் சொல்லுவேன்
சிலமுன் செய்நல் வினைப்பய னாலு
தேவி பார தன்னை யருளினும்
அலைவு றுத்துநும் பேரிருள் வீழ்ந்துநான்
அழிந்தி டாதொரு வாறுபி ழைத்ததே
மணம்
நினைக்க நெஞ்ச முருகும்பிறர்க்கிதை
நிகழ்த்த நாநனி கூசு மதன்றியே
எனைத்திங் கெண்ணி வருந்தியும் இவ்விடர்
யாங்ஙன் மாற்றுவ தென்பதும் ஓர்ந்திலம்
அனைத்தொர் செய்திமற் றேதெனிற் கூறுவேன்
அம்மமாக்கள் மணமெனுஞ் செய்தியே
வினைத்தொ டர்களில் மானுட வாழ்க்கையுள்
மேவு மிம்மணம் போற்பிறி தின்றரோ
வீடு றாவணம் யாப்பதை வீடென்பார்
மிகவி ழிந்த பொருளை பொருளென்பார்
நாடுங் காலொர் மணமற்ற செய்கையை
நல்ல தோர்மண மாமென நாட்டுவார்
கூடு மாயிற் பிரம சரியங் கொள்
கூடு கின்றில தென்னிற் பிழைகள் செய்து
ஈட ழிந்து நரகவழி செல்வாய்
யாது செய்யினும் இம்மணம் செய்யல்காண்
வசிட்ட ருக்கும் இராமருக்கும் பின்னொரு
வள்ளு வர்க்கும்முன் வாய்த்திட்ட மாதர்போல்
பசித்தொ ராயிரம் ஆண்டு தவஞ்செய்து
பார்க்கி நும்பெறல் சால வரிதுகாண்
புசிப்ப தும்பரின் நல்லமு தென்றெணி
புலையர் விற்றிடும் கள்ளுண லாகுமோ
அசுத்தர் சொல்வது கேட்களிர்காளையீர்
ஆண்மை வேண்டின் மணஞ்செய்தல் ஓம்புமின்
வேறு தே தெவரெது செய்யினும்
வீழ்ச்சி பெற்றவி பாரத நாட்டினில்
ஊற ழிந்து பிணமென வாழுமிவ்
வூனம் நீக்க விரும்பும் இளையர்தாம்
கூறு மெந துயர்கள் விளையினும்
கோடி மக்கள் பழிவந்து சூழினும்
நீறு பட்டவி பாழ்ச்செயல் மட்டினும்
நெஞ்ச தாலும் நினைப்ப தொழிகவே
பால ருந்து மதலையர் தம்மையே
பாத கக்கொடும் பாதக பாதகர்
மூல தோடு குலங்கெடல் நாடிய
மூட மூடநிர் மூட புலையர்தாம்
கோல மாக மணத்திடை கூட்டுமி
கொலையெ நுஞ்செய லொன்ரினை யுள்ளவும்
சால வின்னுமோ ராயிரம் ஆண்டிவர்
தாத ராகி அழிகென தோன்றுமே
ஆங்கொர் கன்னியை பத்து பிராயத்தில்
ஆள் நெஞ்சிடை யூன்றி வணங்கினன்
ஈங்கொர் கன்னியை பன்னிரண் டாண்டனுள்
எந்தை வந்து மணம்புரி வித்தனன்
தீங்கு ம்ற்றிதி லுண்டென் றறிந்தவன்
செயலெ திர்க்கு திறனில நாயினேன்
ஓங்கு காதற் றழலெவ் வளவென்றன்
உளமெ ரித்துள தென்பதுங் கண்டிலேன்
மற்றொர் பெண்ணை மணஞ்செய்த போழ்துமுன்
மாத ராளிடை கொண்டதொர் காதல்தான்
நிற்றல் வேண்டு மெனவுள தெண்ணிலேன்
நினைவை யேயிம் மணத்திற் செலுத்திலேன்
முற்றொ டர்பினில் உண்மை யிருந்ததால்
மூண்ட பின்னதொர் கேளியென் றெண்ணினேன்
கற்றுங் கேட்டும் அறிவு முதிருமுன்
காத லொன்று கடமையொன் றாயின
மதனன் செய்யும் மயக்க மொருவயின்
மாக்கள் செய்யும் பிணிப்புமற் றோர்வயின்
இதனிற் பன்னிரண் டாட்டை யிளைஞனு
கென்னை வேண்டும் இடர்க்குறு சூழ்ச்சிதான்
எதனி லேனுங் கடமை விளையுமேல்
எத்து யர்கள் உழன்றுமற் றென்செய்தும்
அதனி லுண்மையோ டார்ந்திடல் சாலுமென்று
அறம்வி திப்பதும் அப்பொழு தோர்ந்திலேன்
சாத்தி ரங்கள் கிரியைகள் பூசைகள்
சகுன மந்திர தாலி மணியெலாம்
யாத்தெ னைக்கொலை செய்தன ரல்லது
யாது தர்ம முறையெனல் காட்டிலர்
தீத்தி றன்கொள் அறிவற்ற பொய்ச்செயல்
செய்து மற்றவை ஞான நெறியென்பர்
மூத்த வர்வெறும் வேடத்தின் நிற்குங்கால்
மூட பிள்ளை அறமெவண் ஓர்வதே
தந்தை வறுமை எய்திடல்
ஈங்கி தற்கிடை யெந்தை பெருந்துயர்
எய்தி நின்றனன்தீய வறுமையான்
ஓங்கி நின்ற பெருஞ்செல்வம் யாவையும்
ஊணர் செய்த சதியில் இழந்தனன்
பாங்கி நின்று புகழ்ச்சிகள் பேசிய
பண்டை நண்பர்கள் கைநெகிழ தேகினர்
வாங்கி யுய்ந்த கிளைஞரும் தாதரும்
வாழ்வு தேய்ந்தபின் யாது மதிப்பரோ
பர்ப்ப நக்குலங் கெட்டழி வெய்திய
பாழ டைந்த கலியுக மாதலால்
வேர்ப்ப வேர பொருள் செய்வ தொன்றையே
மேன்மை கொண்ட தொழிலென கொண்டனன்
ஆர்ப்பு மிஞ்ச பலபல வாணிகம்
ஆற்றி மிக்க பொருள்செய்து வாழ்ந்தனன்
நீர்ப்ப டுஞ்சிறு புற்புத மாமது
நீங்க வேயுளங் குன்றி தளர்ந்தனன்
தீய மாய வுலகிடை யொன்றினில்
சிந்தை செய்து விடாயுறுங் காலதை
வாய டங்க மென்மேலும் பருகினும்
மா தாகம் தவிர்வது கண்டிலம்
நேய முற்றது வந்து மிகமிக
நித்த லும்மதற் காசை வளருமால்
காய முள்ள வரையுங் கிடைப்பினும்
கயவர் மாய்வது காய்ந்த உளங்கொண்டே
ஆசை கோரள வில்லை விடயத்துள்
ஆழ்ந்த பின்னங் கமைதியுண் டாமென
மோசம் போகலிர்என்றிடி தோதிய
மோனி தாளிணை முப்பொழு தேத்துவாம்
தேச தார்புகழ் நுண்ணறி வோடுதான்
திண்மை விஞ்சிய நெஞ்சின னாயினும்
நாச காசினில் ஆசையை நாட்டினன்
நல்லன் எந்தை துயர்க்கடல் வீழ்ந்தனன்
பொரு பெருமை
பொருளி லார்க்கிலை யிவ்வுலகென்றநம்
புலவர் தம்மொழி பொய்ம்மொழி யன்றுகாண்
பொருளி லார்க்கின மில்லை துணையிலை
பொழுதெ லாமிடர் வெள்ளம்வ தெற்றுமால்
பொருளி லார்பொருள் செய்தல் முதற்கடன்
போற்றி காசினு கேங்கி யுவிர்விடும்
மருளர் தம்மிசை யேபழி கூறுவன்
மாம்க கிங்கொர் ஊன முரைத்திலன்
அறமொன் றேதரும் மெய்யின்பம் என்றநல்
லறிஞர் தம்மை அனுதினம் போற்றுவேன்
பிறவி ரும்பி உலகினில் யான்பட்ட
பீழை எத்தனை கோடிநினைக்கவும்
திறன ழிந்தென் மனமுடை வெய்துமால்
தேச துள்ள இளைஞர் அறிமினோ
அறமொன் றேதரும் மெய்யின்பம்ஆதலால்
அறனை யேதுணை யென்றுகொண் டுய்திரால்
வெய்ய கர பயஙளின் நொந்துதான்
மெய்யு ணர்ந்திட லாகு மென்றாக்கிய
தெய்வ மேயிது நீதி யெனினும்நின்
திருவ ருட்கு பொருந்திய தாகுமோ
ஐய கோசிறி துண்மை விளங்குமுன்
ஆவி நை துயருறல் வேண்டுமே
பை பையவோர் ஆமைகுன் றேறல்போல்
பாருளோர் உண்மை கண்டிவண் உய்வரால்
தந்தை போயினன் பாழ்மிடி சூழ்ந்தது
தரணிமீதினில் அஞ்சலென் பாரிலர்
சிந்தை யில்தெளி வில்லைஉடலினில்
திறனு மில்லைஉரனுள தில்லையால்
மந்தர் பாற்பொருள் போக்கி பயின்றதாம்
மடமை கல்வியால் மண்ணும் பயனிலை
எந்த மார்க்கமும் தோற்றில தென்செய்கேன்
ஏன்பி றந்தனன் இத்துயர் நாட்டிலே
முடிவுரை
உலகெ லாமொர் பெருங்கன வஃதுளே
உண்டு றங்கி இடர்செய்து செத்திடும்
கலக மானிட பூச்சிகள் வாழ்க்கையோர்
கனவி னுங்கன வாகும்இதற்குநான்
பலநி நைந்து வருந்தியிங் கென்பயன்
பண்டு போனதை எண்ணி யென்னாவது
சிலதி னங்கள் இருந்து மறைவதில்
சிந்தை செய்தெவன் செத்திடு வானடா
ஞான் முந்துற வும்பெற் றிலாதவர்
நானி லத்து துயரன்றி காண்கிலர்
போன தற்கு வருந்திலன் மெய்த்தவ
புலமை யோனது வான தொளிருமோர்
மீனை நாடி வளைத்திட தூண்டிலை
வீச லொக்கு மெனலை மறக்கிலேன்
ஆன தாவ தனைத்தையுஞ் செய்ததோர்
அன்னை யேஇனி யேனும் அருள்வையால்
வேறு
அறிவிலே தெளிவுநெஞ்சிலே உறுதி
அகத்திலே அன்பினோர் வெள்ளம்
பொறிகளின்மீது தனியர சாணை
பொழுதெலாம் நினதுபே ரருளின்
நெறியிலே நாட்டம்கரும யோகத்தில்
நிலைத்திடல் என்றிவை யருளாய்
குறிகுண மேதும் இல்லதாய் அனைத்தா
குலவிடு தனிப்பரம் பொருளே
பாரதிஅறுபத்தாறு
கடவுள் வாழ்த்துபராசக்தி துதி
எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தா ரப்பா
யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்
மனத்தினிலே நின்றிதனை எழுது கின்றாள்
மனோன் மணியென் மாசக்தி வையத்தேவி
தினத்தினிலே புதிதாக பூத்து நிற்கும்
செய்யமணி தாமரை நேர் முகத்தாள் காதல்
வனத்தினிலே தன்னையொரு மலரை போலும்
வண்டினைப்போல் எனையுமுரு மாற்றி விட்டாள்
தீராத காலமெலாம் தானும் நிற்பாள்
தெவிட்டாத இன்னமுதின் செவ்வி தழ்ச்சி
நீரா கனலாக வானா காற்றா
நிலமாக வடிவெடுத்தாள்நிலத்தின் மீது
போராக நோயாக மரண மாக
போந்திதனை யழித்திடுவாள்புணர்ச்சி கொண்டால்
நேராக மோனமகா னந்த வாழ்வை
நிலத்தின்மிசை அளி தமர தன்மை ஈவாள்
மாகாளி பராசக்தி உமையாள் அன்னை
வைரவிகங் காளிமனோன் மணிமா மாயி
பாகார்ந்த தேமொழியாள்படருஞ் செந்தீ
பாய்ந்திடுமோர் விழியுடையாள்பரம சக்தி
ஆகார மளித்திடுவாள்அறிவு தந்தாள்
ஆதிபரா சக்தியென தமிர்த பொய்கை
சோகா டவிக்குளெனை புகவொட்டாமல்
துய்யசெழு தேன்போலே கவிதை சொல்வாள்
மரணத்தை வெல்லும் வழி
பொன்னார்ந்த திருவடியை போற்றி யிங்கு
புகலுவேன் யானறியும் உண்மை யெல்லாம்
முன்னோர்கள் எவ்வுயிரும் கடவுள் என்றார்
முடிவாக அவ்வுரையை நான்மேற் கொண்டேன்
அன்னோர்கள் உரத்ததன்றி செய்கையில்லை
அத்வைத நிலைகண்டால் மரணமுண்டோ
முன்னோர்கள் உரைத்தபல சித்த ரெல்லாம்
முடிந்திட்டார்மடிந்திட்டார்மண்ணாய் விட்டார்
பொந்திலே யுள்ளாராம்வனத்தில் எங்கோ
புதர்களிலே யிருப்பாராம்பொதிகை மீதே
சந்திலே சவுத்தியிலே நிழலை போலே
சற்றெ யங்கங்கேதென் படுகின் றாராம்
நொந்தபுண்ணை குத்துவதில் பயனென் றில்லை
நோவாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர்
அந்தண்னாம் சங்கரா சார்யுன் மாண்டான்
அதற்கடுத்த இராமா நுஜனும் போனான்
சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்
தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்
பலர் புகழும் இராமனுமே யாற்றில் வீழ்ந்தான்
பார்மீது நான்சாகா திருப்பேன்காண்பீர்
மலிவுகண்டீர் இவ்வுண்மை பொய்கூ றேன்யான்
மடிந்தாலும் பொய்கூறேன் மானுடர்க்கே
நலிவுமில்லைசாவுமில்லைகேளீர்கேளீர்
நாணத்தை கவலையினை சினத்தை பொய்யை
அசுரர்களின் பெயர்
அச்சத்தை வேட்கைதனை அழித்து விட்டால்
அப்போது சாவுமங்கே அழிந்துபோகும்
மிச்சத்தை பின் சொல்வேன்சினத்தை முன்னே
வென்றிடுவீர்மேதினியில் மரணமில்லை
துக்சமென பிறர்பொருளை கருத லாலே
சூழ்ந்ததெலாம் கடவுளென சுருதி சொல்லும்
நிச்சயமாம் ஞானத்தை மறத்த லாலே
நேர்வதே மானுடர்க்கு சினத்தீ நெஞ்சில்
சினத்தின் கேடு
சினங்கொள்வார் தமைத்தாமே தீயாற் சுட்டு
செத்திடுவா ரொப்பாவார்சினங்கொள் வார்தாம்
மனங்கொண்டு தங்கழுத்தை தாமே வெய்ய
வாள்கொண்டு கிழித்திடுவார் மானு வாராம்
தினங்கோடி முறைமனிதர் சினத்தில் வீழ்வார்
சினம்பிறர்மேற் றாங்கொண்டு கவலையாக
செய்ததெணி துயர்க்கடலில் வீழ்ந்து சாவார்
மாகாளி பராசக்தி துணையே வேண்டும்
வையகத்தில் எதற்கும் இனி கவலை வேண்டா
சாகா மலிருப்பதுநம் சதுரா லன்று
சக்தியரு ளாலன்றோ பிறந்தோம் பார்மேல்
பாகான தமிழினிலே பொருளை சொல்வேன்
பாரீர்நீர் கேளீரோபடைத்தோன் காப்பான்
வேகாத மனங்கொண்டு களித்து வாழ்வீர்
மேதினியி லேதுவந்தால் எமக்கென் னென்றே
தேம்பாமை
வடகோடிங் குயர்ந்தென்னேசாய்ந்தா லென்னே
வான் பிறைக்கு தென்கோடுபார்மீ திங்கே
விடமுண்டுஞ் சாகாம லிரு கற்றால்
வேறெதுதான் யாதாயின் எமக்கிங் கென்னே
திடங்கொண்டு வாழ்ந்திடுவோம்தேம்பல் வேண்டா
தேம்புவதில் பயனில்லைதேம்பி தேம்பி
இடருற்று மடிந்தவர்கள் கோடி
எதற்கு மினி அஞ்சாதீர் புவியி லுள்ளீர்
பொறுமையின் பெருமை
திருத்தணிகை மலைமேலே குமார தேவன்
திருக்கொலுவீற் றிருக்குமதன் பொருளை கேளீர்
திருத்தணிகை யென் பதிங்கு பொறுமை யின்பேர்
செந்தமிழ்கண் டீர்பகுதிதணியெ னுஞ்சொல்
பொறுத்தமுறு தணிகையினால் புலமை சேரும்
பொறுத்தவரே பூமியினை ஆள்வார்என்னும்
அருத்தமிக்க பழமொழியும் தமிழி லுண்டாம்
அவனியிலே பொறையுடையான் அவனே தேவன்
பொறுமையினைஅறக்கடவுள் புதல்வ னென்னும்
யுதிட்டிரனும் நெடுநாளி புவிமேல் காத்தான்
இறுதியிலே பொறுமைநெறி தவறி விட்டான்
ஆதலாற் போர்புரிந்தான் இளையாரோடே
பொறுமை யின்றி போர்செய்து பரத நாட்டை
போர்க்களத்தே அழித்துவிட்டு புவியின் மீது
வறுமையையுங் கலியினையும் நிறுத்தி விட்டு
மலைமீது சென்றான்பின் வானஞ் சென்றான்
ஆனாலும் புவியின்மிசை உயிர்க ளெல்லாம்
அநியாய் மரணமெய்தல் கொடுமை யன்றொ
தேனான உயிரைவிட்டு சாக லாமோ
செத்திடற்கு காரணந்தான் யாதென் பீரேல்
கோனாகி சாத்திரத்தை யாளு மாண்பார்
ஜகதீச சந்த்ரவஸு கூறு கின்றான்
ஞானானு பவத்திலிது முடிவாங் கண்டீர்
நாடியிலே அதிர்ச்சியினால் மரணம்என்றான்
கோபத்தால் நாடியிலே அதிர்ச்சி யுண்டாம்
கொடுங்கோபம் பேரதிர்ச்சி சிறிய கோபம்
ஆபத்தாம்அதிர்ச்சியிலே சிறிய தாகும்
அச்சத்தால் நாடியெலாம் அவிந்து போகும்
தாபத்தால் நாடியெலாம் சிதைந்து போகும்
கவலையினால் நாடியெலாம் தழலாய் வேகும்
கோபத்தை வென்றிடலே பிறவற் றைத்தான்
கொல்வதர்கு வழியெனநான் குறித்திட்டேனே
கடவுள் எங்கே இருக்கிறார்
சொல்லடா ஹரியென்ற கடவுள் எங்கே
சொல் லென்று ஹைரணியந்தான் உறுமி கேட்க
நல்லதொரு மகன் சொல்வான்தூணி லுள்ளான்
நாரா யணந்துரும்பி லுள்ளான்என்றான்
வல்லபெருங் கடவுளிலா அணுவொன் றில்லை
மஹாசக்தி யில்லாத வஸ்து வில்லை
அல்லலில்லை
அனைத்துமே தெய்வமென்றால் அல்லலுண்டோ
சுயசரிதை
கேளப்பாசீடனேகழுதை யொன்றை
கீழான்பன்றியினை தேளை கண்டு
தாளைப்பார திருகரமுஞ் சிரமேற் கூப்பி
சங்கரசங் கரவென்று பணிதல் வேண்டும்
கூளத்தை மலத்தினையும் வணங்கல் வேண்டும்
கூடி நின்ற பொருளனைத்தின் கூட்டம் தெய்வம்
மீளத்தான் இதை தெளிவா விரித்து சொல்வேன்
விண்மட்டும் கடவுளன்று மண்ணும் அஃதே
சுத்த அறி வேசிவமென் றுரைத்தார் மேலோர்
சுத்த மண்ணும் சிவமென்றே உரைக்கும் வேதம்
வித்தகனாம் குருசிவமென் றுரைத்தார் மேலோர்
வித்தை யிலா புலையனு மஃதென்னும் வேதம்
பித்தரே அனைத்துயிருங் கடவுளென்று
பேசுவது மெய்யானால் பெண்டிரென்றும்
நித்தநும தருகினிலே குழந்தை யென்றும்
நிற்பனவு தெய்வமன்றொ நிகழ்த்து வீரே
உயிர்களெல்லாம் தெய்வமன்றி பிறவொன் ரில்லை
ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்
பயிலுமுயிர் வகைமட்டு மன்றி யிங்கு
பார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்
வெயிலளிக்கும் இரவிமதிவிண்மீன்மேகம்
மேலுமிங்கு பலபலவாம் தோற்றங் கொண்டே
இயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்
எழுதுகோல் தெய்வமிந்த எழுத்தும் தெய்வம்
குருக்கள் துதிகுள்ளச்சாமி புகழ்
ஞான்குரு தேசிகனை போற்று கின்றேன்
நாடனைத்து தானாவான் நலிவி லாதான்
மோனகுரு திருவருளால் பிறப்பு மாறி
முற்றிலும்நாம் அமரநிலை சூழ்ந்து விட்டோ ம்
தேன்னைய பராசக்தி திறத்தை காட்டி
சித்தினியல் காட்டிமன தெளிவு தந்தான்
வானகத்தை இவ்வுலகிலிருந்து தீண்டும்
வகையுணர்த்தி காத்த பிரான் பதங்கள் போற்றி
எப்போதும் குருசரணம் நினைவாய்நெஞ்சே
எம்பெருமான் சிதம்பரதே சிகந்தாள் எண்ணாய்
முப்பொழுங் கடந்தபெரு வெளியை கண்டான்
முத்தியெனும் வானகத்தே பரிதி யாவான்
தப்பாத சாந்தநிலை அளித்த கோமான்
தவம் நிறைந்த மாங்கொட்டை சாமி தேவன்
குப்பாய ஞானத்தால் மரண மென்ற
குளிர்நீக்கி யெனைக்காத்தான்குமார தேவன்
தேசத்தார் இவன்பெயரை குள்ளச்சாமி
தேவர்பிரான் என்றுரைப்பார்தெளிந்த ஞானி
பாசத்தை அறுத்துவிட்டான்பயத்தை சுட்டான்
பாவனையால் பரவெளிக்கு மேலே தொட்டான்
நாசத்தை அழித்துவிட்டான்யமனை கொன்றான்
ஞானகங்கை தனைமுடிமீ தேந்தி நின்றான்
ஆசையெனும் கொடிக்கொருதாழ் மரமே போன்றான்
ஆதியவன் சுடர்பாதம் புகழ்கின் றேனே
வாயினால் சொல்லிடவும் அடங்கா தப்பா
வரிசையுடன் எழுதிவைக்க வகையும் எல்லை
ஞாயிற்றை சங்கிலியால் அளக்க லாமோ
ஞானகுரு புகழினைநாம் வகுக்க லாமோ
ஆயிரனூல் எழுதிடினும் முடிவ்ய் றாதாம்
ஐயனவன் பெருமையைநான் சுருக்கி சொல்வேன்
காயகற்பஞ் செய்துவிட்டான்அவன்வாழ் நாளை
மணக்கிட்டு வயதுரைப்பார் யாரும் இல்லை
குரு தரிசனம்
அன்றொருநா புதுவைநகர் தனிலே கீர்த்தி
அடை கலஞ்சேர் ஈசுவரன் தர்மராஜா
என்றபெயர் வீதியிலோர் சிறிய வீட்டில்
இராஜாரா மையனென்ற நாகை பார்ப்பான்
முன்றனது பிதா தமிழில் உபநிடதத்தை
மொழிபெயர்த்து வைத்ததனை திருத்த சொல்லி
என்றனைவேண் டிக்கொள்ள யான்சென் றாங்கண்
இருக்கையிலே அங்குவந்தான் குள்ள சாமி
அப்போது நான்குள்ள சாமி கையை
அன்புடனே பற்றியது பேச லுர்றேன்
அப்பனேதேசிகனேஞானி என்பார்
அவனியிலே சிலர்நின்னை பித்தன் என்பார்
செப்புறுநல் லஷ்டாங்க யோக சித்தி
சேர்ந்தவனென் றுனைப்புகழ்வார் சிலரென் முன்னே
ஒப்பனைகள் காட்டாமல் உண்மை சொல்வாய்
உத்தமனேஎனக்குநினை உணர்த்து வாயே
யாவன் நீ நினைக்குள்ள திறமை என்னே
யாதுணர்வாய் கந்தைசுற்றி திரிவ தென்னே
தேவனைப்போல் விழிப்ப தென்னே சிறியாரோடும்
தெருவிலே நாய்களொடும் விளையா டென்னே
பாவனையிற் பித்தரைப்போல் அலைவ தென்னே
பரமசிவன் போலுருவம் படைத்த தென்னே
ஆவலற்று நின்றதென்னே அறிந்த தெல்லாம்
ஆரியனேஅனக்குணர்த்த வேண்டும்என்றேன்
பற்றியகை திருகியந்த குள்ள சாமி
பரிந்தோட பார தான்யான் விடவே யில்லை
சுற்றுமுற்றும் பார்த்துப்பின் முறுவல் பூத்தான்
தூயதிரு கமலப துணையை பார்த்தேன்
குற்றமற்ற தேசிகனும் திமிறி கொண்டு
குதித்தோடி அவ்வீட்டு கொல்லை சேர்ந்தான்
மற்றவன்பின் யானோடி விரைந்து சென்று
வாவனை கொல்லையிலே மறித்து கொண்டேன்
உபதேசம்
பக்கத்து வீடிடிந்து சுவர்கள் வீழ்ந்த
பாழ்மனையொன் றிருந்ததங்கேபரம யோகி
ஒக்கத்தன் அருள்விழியால் என்னை நோக்கி
ஒருகுட்டி சுவர்காட்டி பரிதி காட்டி
அக்கணமே கிணற்றுளதன் விம்பங் காட்டி என்றேன்
அறிதிகொலோஎனக்கேட்டான்அறிந்தேன்
மிக்கமகிழ் கொண்டவனும் சென்றான்யானும்
வேதாந்த மரத்திலொரு வேரை கண்டேன்
தேசிகன்கை காட்டியென குரைத்த செய்தி
செந்தமிழில் உலகத்தார குணர்த்து கின்றேன்
வாசியைநீ கும்பகத்தால் வலி கட்டி
மண்போலே சுவர்போலேவாழ்தல் வேண்டும்
தேசுடைய பரிதியுரு கிணற்றி நுள்஧ள்
தெரிவதுபோல் உனக்குள்஧ள் சிவனை காண்பாய்
பேசுவதில் பயனில்லைஅனுப வத்தால்
பேரின்பம் எய்துவதே ஞானம்என்றான்
கையிலொரு நூலிருந்தால் விரிக்க சொல்வேன்
கருத்தையதில் காட்டுவேன்வானை காட்டி
மையிலகு விழியாளின் காத லொன்றே
வையகத்தில் வாழுநெறி யென்றுகாட்டி
ஐயனென குணார்த்தியன பலவாம் ஞானம்
அகற்கவன்கா டியகுறிப்போ அநந்த மாகும்
பொய்யறியா ஞானகுரு சிதம்ப ரேசன்
பூமிவிநா யகன்குள்ள சாமி யங்கே
மற்றொருநாள் பழங்கந்தை யழுக்கு மூட்டை
வளமுறவே கட்டியவன் முதுகின் மீது
கற்றவர்கள் பணிந்தேத்தும் கமல பாத
கருணைமுனி சுமந்துகொண்டென் னெதிரே வந்தான்
சற்றுநகை புரிந்தவன்பால் கேட்க லானேன்
தம்பிரா னே இந தகைமை என்னே
முற்றுமிது பித்தருடை செய்கை யன்றொ
மூட்டைசு திடுவதென்னேமொழிவாய்அன்றென்
புன்னகைபூ தாரினும் புகலுகின்றான்
புறததேநான் சுமக்கின்றேன்அகத்தி னுள்ளே
இன்னதொரு பழங்குப்பை சுமக்கி றாய்நீ
என்றுரைத்து விரைந்தவனும் ஏகி விட்டான்
மன்னவன்சொற் பொருளினையான் கண்டு கொண்டேன்
மனத்தினுள்ளே பழம்பொய்கள் வளர்ப்ப தாலே
இன்னலுற்று மாந்தரெல்லாம் மடிவார் வீணே
இருதயத்தில் விடுதலையை இசைத்தால் வேண்டும்
சென்றதினி மீளாதுமூடரேநீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்சென்றதனை குறித்தல் வேண்டா
இன்று புடிதா பிறந்தோம் என்று நெஞ்சில்
எண்ணமதை திண்ணமுற இசைத்து கொண்டு
தின்றுவிளாஇ யாடியின்புற் றிருந்து வாழ்வீர்
அஃதின்றி சென்றதையே மீட்டும்
மேன்மேலும் நினைந்தழுதல் வேண்டாஅந்தோ
மேதையில்லா மானுடரேமேலும் மேலும்
மேன்மேலும் புதியகாற் றெம்முள்வந்து
மேன்மேலும் புதியவுயிர் விளைத்தல் கண்டீர்
ஆன்மாவென் றெகரு தொடர்பை யெண்ணி
அறிவு கங்கொண்டு கெடுகின்றீரே
மான்மானும் விழியுடையாள் சக்தி தேவி
வசப்பட்டு தனைமறந்து வாழ்தல் வேண்டும்
சென்றவினை பயன்களெனை தீண்ட மாட்டா
ஸ்ரீதரன்யான் சிவகுமா ரன்யா னன்றோ
நன்றிந்த கணம்புதிதா பிறழ்து விட்டேன்
நான் புதியவன்நான் கடவுள்நலிவி லாதோன்
என்றிந்த வுலகின்மிசை வானோர் போலே
இயன்றிடுவார் சித்தரென்பார்பரம தர
குன்றின்மிசை யொருபாய்ச்ச லாக பாய்ந்து
குறிப்பற்றார் கேடற்றார் குலைத லற்றார்
குறியனந்த முடையோரா கோடி செய்தும்
குவலயத்தில் வினைக்கடிமை படாதா ராகி
வெறியுடையோன் உமயாளை இடத்தி லேற்றான்
வேதகுரு பரமசிவன் வித்தை பெற்று
செறியுடைய பழவினையாம் இருளை செற்று
தீயினைப்போல் மண்மீது திரிவார் மேலோர்
அறிவுடைய சீடாநீ குறிப்பை நீக்கி
அநந்தமாம் தொழில் செய்தால் அமர னாவாய்
கேளப்பாமேற்சொன்ன உண்மை யெல்லாம்
கேடற்ற மதியுடையான் குள்ள சாமி
நாளும்பல் காட்டாலும் குறிப்பி னாலும்
நலமுடைய மொழியாலும் விளக்கி தந்தான்
தோளை பார துக்களித்தல் போலே யன்னான்
துணையடிகள் பார்த்துமனம் களிப்பேன் யானே
வாளைப்பார தின்பமுறு மன்னர் போற்றும்
மலர்த்தாளான் மாங்கொட்டை சாமி வாழ்க
கோவிந்த சுவாமி புகழ்
மாங்கொட்டை சாமி புகழ் சிறிது சொன்னோம்
வண்மை திகழ் கோவிந்த ஞானிபார்மேல்
யாங்கற்ற கல்வியெலாம் பலிக்க செய்தான்
எம்பெருமான் பெருமையையிங் கிசை கேளீர்
தீங்கற்ற குணமுடையான் புதுவை யூரார்
செய்தபெரு தவத்தாலே உதித்த தேவன்
பாங்குற்ற மாங்கொட்டை சாமி போலே
பயிலுமதி வர்ணாசிர மத்தே நிற்போன்
அன்பினால் முத்தியென்றான் புத்தன் அந்நாள்
அதனையிந்நா கோவிந்த சாமி செய்தான்
துன்பமுறும் உயிர்க்கெல்லாம் தாயை போலே
சுரக்குமரு ளுடையபிரான் துணிந்த யோகி
அன்பினுக்கு கடலையுந்தான் விழுங்க வல்லான்
அன்பினையே தெய்வமென்பான் அன்பே யாவான்
மன்பதைகள் யாவுமிங்கே தெய்வம் என்ற
மதியுடையான்கவலையெனும் மயக்கம் தீர்ந்தான்
பொன்னடியால் என்மனையை புனித மாக்க
போந்தானிம் முனியொருநாள்இறந்த எந்தை
தன்னுருவங் காட்டினான்பின்னர் என்னை
தரணிமிசை பெற்றவளின் வடிவ முற்றான்
அன்னவன்மா யோகியென்றும் பரம ஞான
தனுபூதி யுடையனென்றும் அறிந்து கொண்டேன்
மன்னவனை குருவெனநான் சரண டைந்தேன்
மரணபயம் நீங்கினேன்வலிமை பெற்றேன்
யாழ்ப்பாணத்து சுவாமியின் புகழ்
கோவிந்த சாமிபுகழ் சிறிது சொன்னேன்
குவலயத்தின் விழிபோன்ற யாழ்ப்பா ணத்தான்
தேவிபதம் மறவாத தீர ஞானி
சிதம்பரத்து நடராஜ மூர்த்தி யாவான்
பாவியரை கரையேற்றும் ஞான தோணி
பரமபத வாயிலெனும் பார்வை யாளன்
காவிவளர் தடங்களிலே மீஙள் பாயும்
கழனிகள் சூழ் புதுவையிலே அவனை கண்டேன்
தங்கத்தாற் பதுமைசெய்தும் இரத லிங்கம்
சமைத்துமவற் றினிலீசன் தாளை போற்றும்
துங்கமுறு பக்தர்பலர் புவிமீ துள்ளார்
தோழரேஎந்நாளும் எனக்கு பார்மேல்
மக்களஞ்சேர் திருவிழியால் அருளை பெய்யும்
வானவர்கோன்யாழ்ப்பாண தீசன் தன்னை
சங்கரெனன் றெப்போதும் முன்னே கொண்டு
சரணடைந்தால் அது கண்டீர் சர்வ சித்தி
குவளை கண்ணன் புகழ்
யாழ்ப்பாண தையனையென் நிடங்கொ ணர்ந்தான்
இணையடியை நந்திபிரான் முதுகில் வைத்து
காழ்ப்பான கயிலைமிசை வாழ்வான்பார்மேல்
கனத்தபுகழ குவளையூர கண்ணன் என்பான்
பார்ப்பார குலத்தினிலே பிறந்தான் கண்ணன்
பறையரையும் மறவரையும் நிகரா கொண்டான்
தீர்ப்பான சுருதிவநி தன்னிற் சேர்ந்தான்
சிவனடியார் இவன்மீது கருணை கொண்டார்
மகத்தான் முனிவரெலாம் கண்ணன் தோழர்
வானவரெல் லாங்கண்ணன் அடியா ராவார்
மிகத்தானு முயர்ந்ததுணி வுடைய நெஞ்சின்
வீரப்பிரான் குவளையூர கண்ணன் என்பான்
ஜகத்தினிலோர் உவமையிலா யாழ்ப்பா ணத்து
சமிதனை யிவனென்றன் மனைக்கொ ணர்ந்தான்
அகத்தினிலே அவன்பாத மலரை பூண்டேன்
அன்றே போதேவீ டதுவே வீடு
பாங்கான குருக்களை நாம் போற்றி கொண்டோ ம்
பாரினிலே பயந்தெளிந்தோம்பாச மற்றோம்
நீங்காத சிவசக்தி யருளை பெற்றோம்
நிலத்தின்மிசை அமரநிலை யுற்றோம்அப்பா
தாங்காமல் வையகத்தை அழிக்கும் வேந்தர்
தாரணியில் பலருள்ளார்தருக்கி வீழ்வார்
ஏங்காமல் அஞ்சாமல் இடர்செய் யாமல்
என்றுமருள் ஞானியரே எமக்கு வேந்தர்
பெண் விடுதலை
பெண்ணுக்கு விடுதலையென் றிங்கோர் நீதி
பிறப்பித்தேன்அதற்குரிய பெற்றி கேளீர்
மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வ மென்றால்
மனையாளும் தெய்வமன்றோமதிகெட்டீரே
விண்ணுக்கு பறப்பதுபோல் கதைகள் சொல்வீர்
விடுதலையென் பீர் கருணை வெள்ள மென்பீர்
பெண்ணுக்கு விடுதலைநீ ரில்லை யென்றால்
பின்னிந்த உலகினிலே வாழ்க்கை யில்லை
தாய் மாண்பு
பெண்டாட்டி தனையடிமை படுத்த வேண்டி
பெண்குலத்தை முழுதடிமை படுத்த லாமோ
கண்டார்க்கு நகைப்பென்னும் உலக வாழ்க்கை
காதலெனும் கதையினுடை குழப்பமன்றோ
உண்டாக்கி பாலூட்டி வளர்த்த தாயை
உமையவளென் றறியீரோஉணர்ச்சி கெட்டீர்
பண்டாய்ச்சி ஔவை அன்னையும் பிதாவும்
பாரிடை முன் னறிதெய்வம்என்றா அன்றோ
தாய்க்குமேல் இங்கேயோர் தெய்வ முண்டோ
தாய்பெண்ணே யல்லளோதமக்கைதங்கை
வாய்க்கும்பெண் மகவெல்லாம் பெண்ணே யன்றோ
மனைவியொரு தியையடிமை படுத்த வேண்டி
தாய்க்குலத்தை முழுதடிமை படுத்த லாமோ
தாயைப்போ லேபிள்ளைஎன்று முன்னோர்
வாக்குளதன் றோபெண்மை அடிமை யுற்றால்
மக்களெலாம் அடிமையுறல் வியப்பொன் றாமோ
வீட்டிலுள்ள பழக்கமே நாட்டி லுண்டாம்
வீட்டினிலே தனக்கடிமை பிறராம் என்பான்
நாட்டினிலே
நாடோ றும் முயன்றிடுவான் நலிந்து சாவான்
காட்டிலுள்ள பறவைகள் போல் வாழ்வோம்அப்பா
காதலிங்கே உண்டாயிற் கவலை யில்லை
பாட்டினிலே காதலை நான் பாட வேண்டி
பரமசிவன் பாதமலர் பணிகின் றேனே
காதலின் புகழ்
காதலினால் மானுடர்க்கு கலவி யுண்டாம்
கலவியிலே மானுடர்க்கு கவலை தீரும்
காதலினால் மானுடர்க்கு கவிதை யுண்டாம்
கானமுண்டாம்சிற்பமுதற் கலைக ளுண்டாம்
ஆதலினால் காதல்செய்வீர்உலக தீரே
அஃதன்றோ இவ்வுலக தலைமை யின்பம்
காதலினால் சாகாம லிருத்தல் கூடும்
கவலைபோம்அதனாலே மரணம் பொய்யாம்
ஆதி சக்தி தனையுடம்பில் அரனும் கோத்தான்
அயன்வாணி தனைநாவில் அமர்த்தி கொண்டான்
சோதிமணி முகத்தினளை செல்வ மெல்லாம்
சுரந்தருளும் விழியாளை திருவை மார்பில்
மாதவனும் ஏந்தினான்வானோர கேனும்
மாதரின்பம் போற்பிறிதோர் இன்பம் உண்டோ
காதல்செயும் மனைவியே சக்தி கண்டீர்
கடவுள்நிலை அவளாலே எய்த வேண்டும்
கொங்கைகளே சிவலிங்கம் என்று கூறி
கோக்கவிஞன் காளிதா சனும்பூ ஜித்தான்
மங்கைதனை காட்டினிலும் உடண்கொண் டேகி
மற்றவட்கா மதிமயங்கி பொன்மான் பின்னே
சிங்கநிகர் வீரர்பிரான் தெளிவின் மிக்க
ஸ்ரீதரனுஞ் சென்றுபல துன்ப முற்றான்
இங்குபுவி மிசைக்காவி யங்க ளெல்லாம்
இலக்கியமெல் லாங்காதற் புகழ்ச்சி யன்றோ
நாடகத்தில் காவியத்தில் காதலென்றால்
நாட்டினர்தாம் வியப்பெய்தி நன்றாம் என்பர்
ஊடகத்தே வீட்டினுள்ளே கிணற்றோ ரத்தே
ஊரினிலே காதலென்றால் உறுமு கின்றார்
பாடைகட்டி அதைக்கொல்ல வழிசெய் கின்றார்
பாரினிலே காதலென்னும் பயிரை மாய்க்க
மூடரெலாம் பொறாமையினால் விதிகள் செய்து
முறைதவறி இடரெய்தி கெடுகின் றாரே
காதலிலே இன்பமெய்தி களித்து நின்றால்
கனமான மன்னவர்போர் எண்ணு வாரோ
மாதருடன் மனமொன்றி மயங்கி விட்டால்
மந்திரிமார் போர்த்தொழிலை மனங்கொள் வாரோ
பாதிநடு கலவியிலே காதல் பேசி
பகலெல்லாம் இரவெல்லாம் குருவிபோலே
காதலிலே மாதருடன் களித்து வாழ்ந்தால்
படைத்தலைவர் போர்த்தொழிலை கருது வாரோ
விடுதலை காதல்
காதலிலே விடுதலையென் றாங்கோர் கொள்கை
கடுகிவளர திடுமென்பார் யூரோ பாவில்
மாதரெலாம் தம்முடைய விருப்பின் வண்ணம்
மனிதருடன் வாழ்ந்திடலாம் என்பார் அன்னோர்
பேதமின்றி மிருகங்கள் கலத்தல் போலே
பிரியம்வந்தால் கலந்தன்பு பிரிந்துவிட்டால்
வேதனையொன் றில்லாதே பிரிந்து சென்று
வேறொருவன் றனைக்கூட வேண்டும் என்பார்
வீரமிலா மனிதர் சொலும் வார்த்தை கண்டீர்
விடுதலையாங் காதலெனிற் பொய்மை காதல்
சோரரைப்போல் ஆண்மக்கள் புவியின் மீது
சுவைமிக்க பெண்மைநல முண்ணு கின்றார்
காரணந்தான் யாதெனிலோஆண்க ளெல்லாம்
களவின்பம் விரும்புகின்றார்கற்பே மேலென்று
ஈரமின்றி யெப்போதும் உபதே சங்கள்
எடுத்தெடுத்து பெண்களிடம் இயம்பு வாரே
ஆணெல்லாம் கற்பைவிட்டு தவறு செய்தால்
அப்போது பெண்மையுங்கற் பழிந்தி டாதோ
நாணற்ற வார்த்தையன்றோவீட்டை சுட்டால்
நலமான் கூரையுந்தான் எரிந்தி டாதோ
பேணுமொரு காதலினை வேண்டி யன்றோ
பெண்மக்கள் கற்புநிலை பிறழு கின்றார்
காணுகின்ற காட்சியெலாம் மறைத்து வைத்து
கற்புக்கற் பென்றுலகோர் கதைக்கின் றாரே
சர்வ மத சமரசம்
கோவிந்த சுவாமியுடன் உரையாடல்
மீளவுமங் கொருபகலில் வந்தான் என்றன்
மனையிடத்தே கோவிந்த வீர ஞானி
ஆளவந்தான் பூமியினைஅவனி வேந்தர்
அனைவருக்கும் மேலானோன்அன்பு வேந்தன்
நாளைப்பார தொளிர்தருநன் மலரைப்போலே
நம்பிரான் வரவுகண்டு மனம் மலர்ந்தேன்
வேளையிலே நமதுதொழில் முடித்து கொள்வோம்
வெயிலுள்ள போதினிலே உலர்த்தி கொள்வோம்
காற்றுள்ள போதேநாம் தூற்றி கொள்வோம்
கனமான குருவையெதிர் கண்டபோதே
மாற்றான அகந்தையினை துடைத்து கொள்வோம்
மலமான மறதியினை மடித்து கொள்வோம்
கூற்றான அரக்கருயிர் முடித்து கொள்வோம்
குலைவான மாயைதனை அடித்து கொள்வோம்
பேற்றாலே குருவந்தான்இவன்பால் ஞான
பேற்றையெல்லாம் பெறுவோம்யாம்அன்றெனுள்ளே
சிந்தித்து மெய்ப்பொருளை உணர்த்தாய் ஐயே
தேய்வென்ற மரணத்தை தேய்க்கும் வண்ணம்
வந்தித்து நினைக்கே டேன் கூறாய்என்றேன்
வானவனாம் கோவிந்த சாமி சொல்வான்
அந்தமிலா மாதேவன் கயிலை வேந்தன்
அரவிந்த சரணங்கள் முடிமேற் கொள்வோம்
பந்தமில்லைபந்தமில்லைபந்தம் இல்லை
பயமில்லைபயமில்லைபயமே இல்லை
அதுவேநீ யென்பதுமுன் வேத வோத்தாம்
அதுவென்றால் எதுவெனநான் அறை கேளாய்
அதுவென்றால் முன்னிற்கும் பொருளின் நாமம்
அவனியிலே பொருளெல்லாம் அதுவாம்நீயும்
அதுவன்றி பிறிதில்லைஆத லாலே
அவனியின்மீ தெதுவரினும் அசைவு றாமல்
மதுவுண்ட மலர்மாலை இராமன் தாளை
மனத்தினிலே நிறுத்தியிங்கு வாழ்வாய் சீடா
பாரான உடம்பினிலே மயிர்களைப்போல்
பலப்பலவாம் பூண்டு வரும் இயற்கை யாலே
நேராக மானுடர்தாம் பிறரை கொல்ல
நினையாமல் வாழ்ந்திட்டால் உழுதல் வேண்டா
காரான நிலத்தைப்போ திருத்தவேண்டா
கால்வாய்கள் பாய்ச்சுவதில் கலகம் வேண்டா
சீரான மழைபெய்யும் தெய்வ முண்டு
சிவன் செத்தா லன்றிமண்மேல் செழுமை உண்டு
ஆதலால் மானிடர்கள் களவை விட்டால்
அனைவருக்கும் உழைப்பின்றி உணவுண் டாகும்
பேதமிட்டு கலகமிட்டு வேலி கட்டி
பின்னதற்கு காவலென்று பேருமிட்டு
நீதமில்லா கள்வர்நெறி யாயிற் றப்பா
நினைக்குங்கால் இது கொடிய நிகழ்ச்சி யன்றோ
பாதமலர் காட்டினினை அன்னை காத்தாள்
பாரினிலி தருமம்நீ பகரு வாயே
ஒருமொழியே பலமொழிக்கும் இடங்கொ டுக்கும்
ஒருமொழியே மலமொழிக்கும் ஒழிக்கும் என்ற
ஒருமொழியை கருத்தினிலே நிறுத்தும் வண்ணம்
ஒருமொழி ஓம் சிவாய வென்பர்
ஹரிஹரியென் றிடினும் அஃதேராம ராம
சிவசிவவென்றிட்டாலும் அஃதேயாகும்
தெரிவுறவே ஓம்சக்தியென்று மேலோர்
ஜெபம்புரிவ தப்பொருளின் பெயரே யாகும்
சாரமுள்ள பொருளினைநான் சொல்லிவிட்டேன்
சஞ்சலங்கள் இனிவேண்டாசரத தெய்வம்
ஈரமிலா நெஞ்சுடையார் சிவனை காணார்
எப்போதும் அருளைமன திசைத்து கொள்வாய்
வீரமிலா நெஞ்சுடையார் சிவனை காணார்
எப்போதும் வீரமிக்க வினைகள் செய்வாய்
பேருயர்ந்த ஏஹோவா அல்லா நாமம்
பேணுமவர் பதமலரும் பேணல் வேண்டும்
பூமியிலேகண்டம் ஐந்துமதங்கள் கோடி
புத்த மதம்சமண மதம்பார்ஸி மார்க்கம்
சாமியென யேசுபதம் போற்றும் மார்க்கம்
சநாதனமாம் ஹிந்து மதம்இஸ்லாம்யூதம்
நாமமுயர் சீனத்து தாவுமர்க்கம்
நல்ல கண் பூசிமதம் முதலா பார்மேல்
யாமறிந்த மதங்கள் பல உளவாம் அன்றே
யாவினுக்கும் உட்புதைந்த கருத்திங் கொன்றே
பூமியிலே வழங்கிவரும் மதத்து கெல்லாம்
பொருளினைநாம் இங்கெடுத்து புகல கேளாய்
சாமி நீசாமி நீகடவுள் நீயே
தத்வமஸிதத்வமஸிநீயே அஃதாம்
பூமியிலே நீகடவு ளில்லை யென்று
புகல்வதுநின் மனத்துள்ளே புகுந்த மாயை
சாமிநீ அம் மாயை தன்னை நீக்கி
சதாகாலம் சிவோஹமென்று சாதி பாயே





சிசுப்ரமணிய பாரதியார் பாடல்கள்
கண்ணன் பாட்டு குயில்
























சிசுப்ரமணிய பாரதியார் பாடல்கள் பாகம்
கண்ணன் பாட்டு
கண்ணன் என் தோழன்

புன்னாகவராளி திஸ்ரஜாதி ஏகதாளம்
வத்ஸல ரசம்
பொன்னவிர் மேனி சுபத்திரை மாதை
புறங்கொண்டு போவ தற்கே இனி
என்ன வழியென்று கேட்கில் உபாயம்
இருகண தேயுரை பான் அந்த
கன்னன் வில்லாளர் தலைவனை கொன்றிட
காணும் வழியொன் றில்லேன் வந்திங்கு
உன்னை யடைந்தேன் என்னில் உபாயம்
ஒருகண தேயுரை பான்
கானகத்தே சுற்று நாளிலும் நெஞ்சிற்
கலக்க மிலாதுசெய் வான் பெருஞ்
சேனை தலைநின்று போர்செய்யும் போதினில்
தேர்நட திக்கொடு பான் என்றன்
ஊனை வருத்திடு நோய்வரும் போதினில்
உற்ற மருந்துசொல் வான் நெஞ்சம்
ஈன கவலைக ளெய்திடும் போதில்
இதஞ்சொல்லி மாற்றிடு வான்
பிழைக்கும் வழிசொல்ல வேண்டுமென் றாலொரு
பேச்சினி லேசொல்லுவான்
உழைக்கும் வழிவினை யாளும் வழிபயன்
உண்ணும் வழியுரை பான்
அழைக்கும் பொழுதினிற் போக்கு சொல்லாமல்
அரைநொடி குள்வருவான்
மழைக்கு குடை பசிநேர துணவென்றன்
வாழ்வினு கெங்கள்கண் ணன்
கேட்டபொழுதில் பொருள் கொடுப்பான் சொல்லுங்
கேலி பொறுத்திடு வான் எனை
ஆட்டங்கள் காட்டியும் பாட்டுக்கள் பாடியும்
ஆறுதல் செய்திடுவான் என்றன்
நாட்டத்திற் கொண்ட குறிப்பினை இஃதென்று
நான்சொல்லும் முன்னுணர் வான் அன்பர்
கூட்டத்தி லேயிந்த கண்ணனை போலன்பு
கொண்டவர் வேறுள ரோ
உள்ளத்தி லேகரு வங்கொண்ட போதினில்
ஓங்கி யடி திடுவான் நெஞ்சில்
கள்ளத்தை கொண்டொரு வார்த்தைசொன் னாலங்கு
காறி யுமிழ்ந்திடு வான் சிறு
பள்ளத்தி லேநெடு நாளழு குங்கெட்ட
பாசியை யெற்றி விடும் பெரு
வெள்ளத்தை போலருள் வார்த்தைகள் சொல்லி
மெலிவு தவிர்த்திடு வான்
சின்ன குழந்தைகள் போல்விளை யாடி
சிரித்து களித்திடு வான் நல்ல
வன்ன மகளிர் வசப்பட வேபல
மாயங்கள் சூழ்ந்திடு வான் அவன்
சொன்ன படிநட வாவிடி லோமிக
தொல்லை யிழைத்திடு வான் கண்ணன்
தன்னை யிழந்து விடில் ஐயகோ பின்
சகத்தினில் வாழ்வதி லேன்
கோபத்தி லேயொரு சொல்லிற் சிரித்து
குலுங்கிட செய்திடு வான் மனஸ்
தாபத்திலே யொன்று செய்து மகிழ்ச்சி
தளிர்த்திட செய்திடுவான் பெரும்
ஆபத்தி னில்வந்து பக்கத்தி லேநின்று
அதனை விலக்கிடு வான் சுடர
தீபத்தி லேவிடும் பூச்சிகள் போல்வரு
தீமைகள் கொன்றிடு வான்
உண்மை தவறி நடப்பவர் தம்மை
உதைத்து நசுக்கிடுவான் அருள்
வண்மையி னாலவன் மாத்திரம் பொய்கள்
மலைமலை யாவுரை பான் நல்ல
பெண்மை குணமுடை யான் சில நேரத்தில்
பித்தர் குணமுடை யான் மிக
தண்மை குணமுடை யான் சில நேரம்
தழலின் குணமுடை யான்
கொல்லுங் கொலைக்கஞ்சி டாத மறவர்
குணமிக தானுடை யான் கண்ணன்
சொல்லு மொழிகள் குழந்தைகள் போலொரு
சூதறி யாதுசொல் வான் என்றும்
நல்லவ ருக்கொரு தீங்கு நண்ணாது
நயமுற காத்திடு வான் கண்ணன்
அல்லவ ருக்கு விடத்தினில் நோயில்
அழலினி லுங்கொடி யான்
காதல் விளைய மயக்கிடும் பாட்டினில்
கண்மகிழ் சித்திர தில் பகை
மோதும் படைத்தொழில் யாவினு மேதிறம்
முற்றிய பண்டிதன் காண் உயர்
வேத முணர்ந்த முனிவ ருணர்வினில்
மேவு பரம்பொருள் காண் நல்ல
கீதை யுரைத்தெனை இன்புற செய்தவன்
கீர்த்திகள் வாழ்த்திடு வேன்

கண்ணன் என் தாய்

நொண்டி சிந்து
உண்ண உண்ண தெவிட்டாதே அம்மை
உயிரெனும் முலையினில் உயர்வெனும் பால்
வண்ணமுற வைத்தென கே என்றன்
வாயினிற்கொண் டூட்டுமோர் வண்மையுடையாள்
கண்ணனெனும் பெயருடையாள் என்னை
கட்டிநிறை வான் எனுந்தன் கையி லணைத்து
மண்ணெனுந்தன் மடியில்வைத்தே பல
மாயமுறுங் கதைசொல்லி மனங்களி பாள்
இன்பமென சிலகதைகள் என
கேற்றமென்றும் வெற்றி யென்றும் சில கதைகள்
துன்பமென சில கதைகள் கெட்ட
தோல்வியென்றும் வீழ்ச்சியென்றும் சில கதைகள்
என்பருவம் என்றன் விருப்பம் எனும்
இவற்றினு கிணங்கவென் னுளமறிந்தே
அன்பொடவள் சொல்லிவரு வாள் அதில்
அற்புதமுண் டாய்ப்பர வசமடைவேன்
விந்தைவிந்தை யாக எனக்கே பல
விதவி தோற்றங்கள் காட்டுவி பாள்
சந்திரனென் றொரு பொம்மை அதில்
தண்ணமுதம் போலஒளி பரந்தொழுகும்
மந்தை மந்தையா மேகம் பல
வண்ணமுறும் பொம்மையது மழைபொழியும்
முந்தஒரு சூரியனுண்டு அதன்
முக தொளி கூறுதற்கொர் மொழியிலை யே
வானத்து மீன்க ளுண்டு சிறு
மணிகளை போல்மின்னி நிறைந்திருக்கும்
நானத்தை கணக்கிடவே மனம்
நாடிமிக முயல்கினும் கூடுவதில்லை
கானத்து மலைக ளுண்டு எந்த
காலமுமொ ரிடம்விட்டு நகர்வதில்லை
மோனத்தி லேயிருக்கும் ஒரு
மொழியுலை யாதுவிளை யாடவருங் காண்
நல்லநல்ல நதிகளுண்டு அவை
நாடெங்கும் ஓடிவிளை யாடி வருங்காண்
மெல்ல மெல்ல போயவை தாம் விழும்
விரிகடற் பொம்மையது மிக பெரிதாம்
எல்லையதிற் காணுவ தில்லை அலை
எற்றிநுரை கக்கியொரு பாட்டிசைக்கும்
ஒல்லெனு பாட்டினிலே அம்மை
ஓமெனும் பெயரென்றும் ஒலித்திடுங் காண்
சோலைகள் காவினங் கள் அங்கு
சூழ்தரும் பலநிற மணிமலர் கள்
சாலவும் இனியன வாய் அங்கு
தருக்களில் தூங்கிடும் கனிவகை கள்
ஞாலமுற்றிலும் நிறை தே மிக
நயந்தரு பொம்மைகள் எனக்கென வே
கோலமுஞ் சுவையு முற அவள்
கோடிபல கோடிகள் குவித்துவை தாள்
தின்றிட பண்டங்களும் செவி
தெவிட்டற கேட்கநற் பாட்டுக்க ளும்
ஒன்றுற பழகுதற் கே அறி
வுடையமெ தோழரும் அவள்கொடு தாள்
கொன்றிடு மெனஇனி தாய் இன்ப
கொடுநெரு பாய் அனற் சுவையமு தாய்
நன்றியல் காதலு கே இந்த
நாரியர் தமையெனை சூழவை தாள்
இறகுடை பறவைக ளும் நில
திரிந்திடும் விலங்குகள் ஊர்வனங்கள்
அறைகடல் நிறைந்திட வே எண்ணில்
அமைத்திடற் கரியபல் வகைப்பட வே
சுறவுகள் மீன்வகை கள் என
தோழர்கள் பலருமிங் கெனக்களி தாள்
நிறைவுற இன்பம்வை தாள் அதை
நினைக்கவும் முழுதிலுங் கூடுதில்லை
சாத்திரம் கோடி வைத்தாள் அவை
தம்மினும் உயர்ந்தோர் ஞானம் வைத்தாள்
மீத்திடும் பொழுதினி லே நான்
வேடிக்கை யுறக்கண்டு நகைப்பதற் கே
கோத்தபொய் வேதங்களும் மத
கொலைகளும் அரசர்தம் கூத்துக்க ளும்
மூத்தவர் பொய்ந்நடை யும் இள
மூடர்தம் கவலையும் அவள்புனை தாள்
வேண்டிய கொடுத்திடு வாள் அவை
விரும்புமுன் கொடுத்திட விரைந்திடு வாள்
ஆண்டருள் புரிந்திடு வாள் அண்ணன்
அருச்சுனன் போலெனை ஆக்கிடு வாள்
யாண்டுமெ காலத்தி னும் அவள்
இன்னருள் பாடுநற் றெழில்புரி வேன்
நீண்டதொர் புகழ்வாழ் வும் பிற
நிகரறு பெருமையும் அவள் கொடுப்பாள்

கண்ணன் என் தந்தை

நொண்டி சிந்து
ப்ரதான ரஸம் அற்புதம்
பூமி கெனைய னுப்பி னான் அந்த
புதுமண்ட லத்திலென் தம்பிக ளுண்டு
நேமித்த நெறிப்படி யே இந்த
நெடுவெளி யெங்கணும் நித்தம் உருண்டே
போமி தரைகளி லெல்லாம் மனம்
போலவிரு தாளுபவர் எங்க ளினத்தார்
சாமி இவற்றினு கெல்லாம் எங்க
தந்தையவன் சரிதைகள் சிறி துரைப்பேன்
செல்வத்திற்கோர் குறையில்லை எந்தை
சேமித்து வைத்த பொன்னு களவொன் றில்லை
கல்வியில் மிக சிறந்தோன் அவன்
கவிதையின் இனிமையொர் கணக்கி லில்லை
பல்வகை மாண்பி னிடையே கொஞ்சம்
பயித்தியம் அடிக்கடி தோன்றுவ துண்டு
நல்வழி செல்லு பவரை மனம்
நையும்வரை சோதனைசெய் நடத்தை யுண்டு
நாவு துணிகுவ தில்லை உண்மை
நாமத்தை வெளிப்பட உரைப்பதற்கே
யாவரு தெரிந்திடவே எங்கள்
ஈசனென்றும் கண்ணனென்றும் சொல்லுவதுண்டு
மூவகை பெயர் புனைந்தே அவன்
முகமறி யாதவர் சண்டைகள் செய்வார்
தேவர் குலத்தவன் என்றே அவன்
செய்திதெரி யாதவர் சிலருரைப்பார்
பிறந்தது மற குலத்தில் அவன்
பேதமற வளர்ந்ததும் இடைக்குலத்தில்
சிறந்தது பார்ப்பன ருள்ளே சில
செட்டிமக்க ளோடுமிக பழக்க முண்டு
நிறந்தனிற் கருமை கொண்டான் அவன்
நேயமுற களிப்பது பொன்னிற பெண்கள்
துறந்த நடைக ளுடையான் உங்கள்
சூனியப்பொ சாத்திரங்கள் கண்டு நகைப்பான்
ஏழைகளை தோழமை கொள்வான் செல்வம்
ஏறியார் தமைக்கண்டு சீறி விழுவான்
தாழவரு துன்ப மதிலும் நெஞ்ச
தளர்ச்சிகொள் ளாதவார்க்கு செல்வ மளிப்பான்
நாழிகைக்கொர் புத்தி யுடையான் ஒரு
நாளிருந்த படிமற்றொர் நாளினி லில்லை
பாழிடத்தை நாடி யிருப்பான் பல
பாட்டினிலும் கதையிலும் நேரமழி பான்
இன்பத்தை இனிதெனவும் துன்பம்
இனிதில்லை யென்றுமவன் எண்ணுவ தில்லை
அன்பு மிகவு முடையான் தெளி
தறிவினில் உயிர்க்குலம் ஏற்ற முறவே
வன்புகள் பல புரிவான் ஒரு
மந்திரியுண் டெந்தைக்கு விதியென்பவன்
முன்பு விதித்த தனையே பின்பு
முறைப்படி அறிந்துண்ண மூட்டி விடுவான்
வேதங்கள் கோத்து வைத்தான் அந்த
வேதங்கள் மனிதர்தம் மொழியி லில்லை
வேதங்க ளென்று புவியோர் சொல்லும்
வெறுங்கதை திரளிலவ் வேதமில்லை
வேதங்க ளென்றவற் றுள்ளே அவன்
வேதத்திற் சிலசில கலந்ததுண்டு
வேதங்க ளன்றி யொன்றில்லை இந்த
மேதினி மாந்தர் சொலும் வார்த்தைக ளெல்லாம்
நாலு குலங்கள் அமைத்தான் அதை
நாசமுற புரிந்தனர் மூடமனிதர்
சீலம் அறிவு கருமம் இவை
சிறந்தவர் குலத்தினில் சிறந்தவராம்
மேலவர் கீழவ ரென்றே வெறும்
வேடத்திற் பிறப்பினில் விதிப்பன வாம்
போலி சுவடியை யெல்லாம் இன்று
பொசுக்கிவிட்டாலெவர்க்கும் நன்மையுண்டென்பான்
வயது முதிர்ந்து விடினும் எந்தை
வாலிப களையென்றும் மாறுவதில்லை
துயரில்லை மூப்பு மில்லை என்றும்
சோர்வில்லை நோயொன்றும் தொடுவ தில்லை
பயமில்லை பரிவொன்றில்லை எவர்
பக்கமும்நின் றெதிர்ப்பக்கம் வாட்டுவ தில்லை
நயமிக தெரிந்தவன் காண் தனி
நடுநின்று விதிச்செயல் கண்டு மகிழ்வான்
துன்பத்தில் நொந்து வருவோர் தம்மை
தூவென் றிகழ்ந்து சொல்லி வன்பு கனிவான்
அன்பினை கைக்கொள் என்பான் துன்பம்
அத்தனையும் அப்பொழுது தீர்ந்திடும் என்பான்
என்புடை பட்ட பொழுதும் நெஞ்சில்
ஏக்கமுற பொறுப்பவர் தம்மை உகப்பான்
இன்பத்தை எண்ணு பவர்க்கே என்றும்
இன்பமிக தருவதில் இன்ப முடையான்

கண்ணன் என் சேவகன்

கூலிமி கேட்பார் கொடுத்ததெலாம் தாம் மறப்பார்
வேலைமிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார்
ஏனடா நீ நேற்றை கிங்குவர வில்லை யென்றால்
பானையிலே தேளிருந்து பல்லால் கடித்த தென்பார்
வீட்டிலே பெண்டாட்டி மேற்பூதம் வந்ததென்பார்
பாட்டியார் செத்துவிட்ட பன்னிரண்டாம் நாளென்பார்
ஓயாமல் பொய்யுரைப்பார் ஒன்றுரைக்க வேறுசெய்வார்
தாயாதி யோடு தனியிடத்தே பேசிடுவார்
உள்வீட்டு செய்தியெல்லாம் ஊரம் பலத்துரைப்பார்
என்வீட்டில் இல்லையென்றால் எங்கும் முரசறைவார்
சேவகரால் பட்ட சிரமமிக உண்டு கண்டீர்
சேவகரில் லாவிடிலோ செய்கை நடக்கவில்லை
இங்கிதனால் யானும் இடர்மிகுந்து வாடுகையில்
எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
மாடுகன்று மேய்த்திடுவேன் மக்களை நான் காத்திடுவேன்
வீடு பெருக்கி விளக்கேற்றி வைத்திடுவேன்
சொன்னபடி கேட்பேன் துணிமணிகள் காத்திடுவேன்
சின்ன குழந்தைக்கு சிங்கார பாட்டிசைத்தே
ஆட்டங்கள் காட்டி அழாதபடி பார்த்திடுவேன்
காட்டுவழி யானாலும் கள்ளர்பய மானாலும்
இரவிற் பகலிலே எந்நேர மானாலும்
சிரமத்தை பார்ப்பதில்லை தேவரீர் தம்முடனே
சுற்றுவேன் தங்களுக்கோர் துன்பமுறா மற்காப்போன்
கற்ற வித்தை யேதுமில்லை காட்டு மனிதன் ஐயே
ஆன பொழுதுங் கோலடி குத்துப்போர் மற்போர்
நானறிவேன் சற்றும் நயவஞ் சனைபுரியேன்
என்றுபல சொல்லி நின்றான் ஏது பெயர் சொல் என்றேன்
ஒன்றுமில்லை கண்ணனென்பார் ஊரிலுள்ளோர் என்னை என்றான்
கட்டுறுதி யுள்ளவுடல் கண்ணிலே நல்லகுணம்
ஒட்டுறவே நன்றா உரைத்திடுஞ்சொல் ஈங்கிவற்றால்
தக்கவனென் றுள்ளத்தே சார்ந்த மகிழ்ச்சியுடன்
மிக்கவுரை பலசொல்லி விருதுபல சாற்றுகிறாய்
கூலியென்ன கேட்கின்றாய் கூறு கென்றேன் ஐயனே
தாலிகட்டும் பெண்டாட்டி சந்ததிக ளேதுமில்லை
நானோர் தனியாள் நரைதிரை தோன்றா விடினும்
ஆன வயதிற் களவில்லை தேவரீர்
ஆதரித்தாற் போதும் அடியேனை நெஞ்சிலுள்ள
காதல் பெரிதெனக்கு காசுபெரி தில்லை யென்றான்
பண்டை காலத்து பயித்தியத்தில் ஒன்றெனவே
கண்டு மிகவும் களிப்புடனே நானவனை
ஆளா கொண்டு விட்டேன் அன்று முதற்கொண்டு
நாளாக நம்மிடத்தே
பற்று மிகுந்துவரல் பார்க்கின்றேன் கண்ணனால்
பெற்றுவரும் நன்மையெல்லாம் பேசி முடியாது
கண்ணை இமையிரண்டும் காப்பதுபோல் என் குடும்பம்
வண்ணமுற காக்கின்றான் வாய்முணுத்தல் கண்டிறியேன்
வீதி பெருக்குகிறான் வீடு சுத்த மாக்குகிறான்
தாதியர்செய் குற்றமெல்லாம் தட்டி யடக்குகிறான்
மக்களுக்கு வாத்தி வளர்ப்புத்தாய் வைத்தியனாய்
ஒக்கநயங் காட்டுகிறான் ஒன்றுங் குறைவின்றி
பண்டமெலாம் சேர்த்துவைத்து பால்வாங்கி மோர் வாங்கி
பெண்டுகளை தாய்போற் பிரியமுற ஆதரித்து
நண்பனாய் மந்திரியாய் நல்ல சிரியனுமாய்
பண்பிலே தெய்வமா பார்வையிலே சேவகனாய்
எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதியென்று சொன்னான்
இங்கிவனை யான் பெறவே என்னதவஞ் செய்து விட்டேன்
கண்ணன் என தகத்தே கால்வைத்த நாள்முதலாய்
எண்ணம் விசாரம் எதுவுமவன் பொறுப்பா
செல்வம் இளமாண்பு சீர் சிறப்பு நற்கீர்த்தி
கல்வி அறிவு கவிதை சிவ யோகம்
தெளிவே வடிவாம் சிவஞானம் என்றும்
ஒளிசேர் நலமனைத்தும் ஓங்கிவரு கின்றன காண்
கண்ணனைநான் ஆட்கொண்டேன் கண்கொண்டேன் கண்கொ ண்டேன்
கண்ணனை யாட்கொள்ள காரணமும் உள்ளனவே

கண்ணன் என் அரசன்

பகைமை முற்றி முதிர்ந்திடு மட்டிலும்
பார்த்திருப்ப தல்லா லொன்றுஞ் செய்திடான்
நகைபுரிந்து பொறுத்து பொறுத்தையோ
நாட்கள் மாதங்கள் ஆண்டுகள் போக்குவான்
கண்ணன் வென்று பகைமை யழிந்துநாம்
கண்ணிற் காண்ப தரிதென தோன்றுமே
எண்ணமி டெண்ண மிட்டு சலித்துநாம்
இழந்த நாட்கள் யுகமென போகுமே
படைகள் சேர்த்தல் பரிசனம் சேர்த்திடல்
பணமுண் டாக்கல் எதுவும் புரிந்திடான்
இடையன் வீரமி லாதவன் அஞ்சினோன்
என்றவர் சொல்லும் ஏச்சிற்கு நாணிலான்
கொல்ல பூத மனுப்பிடு மாமனே
கோலு யர்த்துல காண்டு களித்திட
முல்லை மென்னகை மாதர்க்கும் பாட்டிற்கும்
மோக முற்று பொழுதுகள் போக்குவான்
வான நீர்க்கு வருந்தும் பயிரென
மாந்தர் மற்றிவண் போர்க்கு தவிக்கவும்
தானம் கீர்த்தனை தாளங்கள் கூத்துக்கள்
தனிமை வேய்ங்குழல் என்றிவை போற்றுவான்
காலினை கையினால் பற்றிக்கொண்டு நாம்
கதியெ கொன்று காட்டுவை யென்றிட்டால்
நாலி லொன்று பலித்திடுங் காணென்பான்
நா சொல்லின் பொருளெங் குணர்வதே
நாம வன்வலி நம்பியி ருக்கவும்
நாண மின்றி பதுங்கி வளருவான்
தீமை தன்னை விலக்கவுஞ் செய்குவான்
சிறுமை கொண்டொழி தோடவுஞ் செய்குவான்
தந்தி ரங்கள் பயிலவுஞ் செய்குவான்
சவுரி யங்கள் பழகவுஞ் செய்குவான்
மந்தி ரத்திற னும்பல காட்டுவான்
வலிமை யின்றி சிறுமையில் வாழ்வான்
காலம் வந்துகை கூடு போதிலோர்
கணத்தி லேடதி தாக விளங்குவான்
ஆல கால விடத்தினை போலவே
அகில முற்றும் அசைந்திட சீறுவான்
வேரும் வேரடி மண்ணு மிலாமலே
வெந்து போக பகைமை பொசுக்குவான்
பாரும் வானமும் ஆயிர மாண்டுகள்
பட்ட துன்பங்கள் கணத்திடை மாற்றுவான்
சக்கரத்தை யெடுப்ப தொருகணம்
தருமம் பாரில் தழைத்தல் மறுகணம்
இக்க ணத்தில் இடைக்கண மொன்றுண்டோ
இதனுள் ளேபகை மாய்த்திட வல்லன்காண்
கண்ண னெங்கள் அரசன் புகழினை
கவிதை கொண்டெந்த காலமும் போற்றுவேன்
திண்ணை வாயில் பெருக்கவ தேனெனை
தேசம் போற்றத்தன் மந்திரி யாக்கினான்
நித்த சோற்றினு கேவல் செயவந்தேன்
நிகரி லாப்பெருஞ் செல்வம் உதவினான்
வித்தை நன்குகல் லாதவன் என்னுள்ளே
வேத நுட்பம் விளங்கிட செய்திட்டான்
கண்ண னெம்பெரு மானருள் வாழ்கவே
கலிய ழிந்து புவித்தலம் வாழ்கவே
அண்ண லின்னருள் வாடி நாடுதான்
அவலம் நீங்கி புகழில் உயர்கவே

கண்ணன் என் சீடன்

ஆசிரியப்பா
யானே யாகி என்னலாற் பிறவாய்
யானும் அவையுமாய் இரண்டினும் வேறாய்
யாதோ பொருளாம் மா கண்ணன்
என்னிலும் அறிவினிற் குறைந்தவன் போலவும்
என்னை துணைக்கொண்டு என்னுடை முயற்சியால்
என்னடை பழகலால் என்மொழி கேட்டலால்
மேம்பா டெய்த வேண்டினோன் போலவும்
யான்சொலுங் கவிதை என்மதி யளவை
இவற்றினை பெருமை யிலங்கின வென்று
கருதுவான் போலவும் கண்ண கள்வன்
சீடனா வந்தெனை சேர்ந்தனன் தெய்வமே
பேதையேன் அவ்வலை பின்னலில் வீழ்ந்து
பட்டன தொல்லை பலபெரும் பாரதம்
உளத்தினை வென்றிடேன் உலகினை வெல்லவும்
தானகஞ் சுடாதேன் பிறர்தமை தானெனும்
சிறுமையி னகற்றி சிவத்திலே நிறுத்தவும்
தன்னுள்ளே தெளிவும் சலிப்பிலா மகிழ்ச்சியும்
உற்றிடேன் இந்த சகத்திலே யுள்ள
மாந்தர குற்ற துயரெலாம் மாற்றி
இன்ப திருத்தவும் எண்ணிய பிழைக்கெனை
தண்டனை புரிந்திட தானுளங் கொண்டு
மா கண்ணன் வலிந்தெனை சார்ந்து
புகழ்ச்சிகள் கூறியும் புலமையை வியந்தும்
பல்வகை யால்அக பற்றுற செய்தான்
வெறும்வாய் மெல்லுங் கிழவி கிஃதோர்
அவலாய்மூண்டது யானுமங் கவனை
உயர்நிலை படுத்தலில் ஊக்கமி கவனாய்
இன்னது செய்திடேல் இவரோடு பழகேல்
இவ்வகை மொழிந்திடேல் இனையன விரும்பேல்
இன்னது கற்றிடேல் இன்னநூல் கற்பாய்
இன்னவ ருறவுகொள் இன்னவை விரும்புவாய்
எனப்பல தருமம் எடுத்தெடு தோதி
ஓய்விலா தவனோ டுயிர்விட லானேன்
கதையிலே கணவன் சொல்லினு கெல்லாம்
எதிர்செயும் மனைவிபோல் இவனும்நான் காட்டும்
நெறியின கெல்லாம் நேரெதிர் நெறியே
நடப்பா னாயினன் நானில தவர்தம்
மதிப்பையும் புகழுறு வாழ்வையும் புகழையும்
தெய்வமா கொண்ட சிறுமதி யுடையேன்
கண்ணனாஞ் சீடன் யான் காட்டிய வழியெலாம்
விலகியே நடக்கும் விநோதமிங் கன்றியும்
உலகினர் வெறுப்புறும் ஒழுக்க தனையும்
தலையா கொண்டு சார்பெலாம் பழிச்சொலும்
இகழுமி கவனாய் என்மனம் வருந்த
நடந்திடல் கண்டேன் நாட்பட நாட்பட
கண்ணனும் தனது கழிபடு நடையில்
மிஞ்சுவா னாகி வீதியிற் பெரியோர்
கிழவிய ரெல்லாம் கிறுக்கனென் றிவனை
இகழ்ச்சியோ டிரக்கமுற் றேளனம் புரியும்
நிலையும் வந்திட்டான் நெஞ்சிலே யெனக்கு
தோன்றிய வருத்தஞ் சொல்லிட படாது
முத்தனா கிடநான் முயன்றதோர் இளைஞன்
பித்தனென் றுலகினர் பேசிய பேச்சென்
நெஞ்சினை அறுத்தது நீதிகள் பலவும்
தந்திரம் பலவும் சாத்திரம்
சொல்லிநான் கண்ணனை தொளைத்திட லாயினேன்
தேவ நிலையிலே சேர்த்திடா விடினும்
மானுட தவறி மடிவுறா வண்ணம்
கண்ணனை நானும் காத்திட விரும்பி
தீயென கொதித்து சினமொழி யுரைத்தும்
சிரித்துரை கூறியும் செள்ளென விழுந்தும்
கேலிகள் பேசி கிளறியும் இன்னும்
எத்தனை வகையிலோ என்வழி கவனை
கொணர்ந்திட முயன்றேன் கொள்பய னொன்றிலை
கண்ணன் பித்தனா காட்டா ளாகி
எவ்வகை தொழிலிலும் எண்ணமற் றவனாய்
எவ்வகை பயனிலுங் கருத்திழ தவனாய்
குரங்கா கரடியா கொம்புடை பிசாசாய்
யாதோ பொருளாய் எங்ஙனோ நின்றான்
இதனால்
அகந்தையும் மமதையும் ஆயிரம் புண்ணுற
யான்கடுஞ் சினமுற்று எவ்வகை யானும்
கண்ணனை நேருற கண்டே தீர்ப்பேன்
எனப்பெரு தாபம் எய்தினே னாகி
எவ்வா றேனும் இவனையோர் தொழிலில்
ஓரிட தன்னில் ஒருவழி வலிய
நிறுத்துவோ மாயின் நேருற் றிடுவான்
என்றுள தெண்ணி இசைந்திடு ஞ் சமயங்
காத்திரு திட்டேன் ஒருநாள் கண்ணனை
தனியே எனது வீட்டினிற் கொண்டு
மகனே என்பால் வரம்பிலா நேசமும்
அன்பும்நீ யுடையை அதனையான் நம்பி
நின்னிட மொன்று கேட்பேன் நீயது
செய்திடல் வேண்டும் சேர்க்கையின் படியே
மாந்தர்தஞ் செயலெலாம் வகுப்புறல் கண்டாய்
சாத்திர நாட்டமும் தருக்கமும் கவிதையில்
மெய்ப்பொரு ளாய்வதில் மிஞ்சிய விழைவும்
கொண்டோ ர் தமையே அருகினிற் கொண்டு
பொருளினு கலையும் நேரம் போக
மிஞ்சிய பொழுதெலாம் அவருடன் மேவி
இருந்திட லாகுமேல் எனக்குநன் றுண்டாம்
பொழுதெலாம் என்னுடன் போக்கிட விரும்பும்
அறிவுடை மகனிங் குனையலால் அறிந்திடேன்
ஆதலால்
என்பயன் கருதி எனக்கொரு துணையாய்
என்னுடன் சிலநாள் இருந்திட நின்னை
வேண்டி நிற்கின்றேன் வேண்டுதல் மறுத்தே
என்னைநீ துன்பம் எய்துவி திடாமே
இவ்வுரை கிணங்குவாய் என்றேன் கண்ணனும்
அங்ஙனே புரிவேன் ஆயின் நின் னிடத்தே
தொழிலிலாது யாங்ஙனம் சோம்பரில் இருப்பது
காரிய மொன்று காட்டுவை யாயின்
இருப்பேன் என்றான் இவனுடைய இயல்பையும்
திறனையுங் கருதி என் செய்யுளை யெல்லாம்
நல்லதோர் பிரதியில் நாடொறும் எழுதி
கொடுத்திடு தொழிலினை கொள்ளுதி என்றேன்
நன்றென கூறியோர் நாழிகை யிருந்தான்
செல்வேன் என்றான் சினத்தொடு நானும்
பழங்கதை யெழுதிய பகுதியொன் றினையவன்
கையினிற் கொடுத்து கவினுற இதனை
எழுதுக என்றேன் இணங்குவான் போன்றதை
கையிலே கொண்டு கணப்பொழு திருந்தான்
செல்வேன் என்றான் சினந்தீ யாகிநான்
ஏதடா சொன்ன சொல் அழித்துரை கின்றாய்
பித்தனென் றுன்னை உலகினர் சொல்வது
பிழையிலை போலும் என்றேன் அதற்கு
நாளவ திவ்வினை நடத்துவேன் என்றான்
இத்தொழி லிங்கே இப்பொழு தெடுத்து
செய்கின் றனையா செய்குவ தில்லையா
ஓருரை சொல் என்றுமினேன் கண்ணனும்
இல்லை யென் றொருசொல் இமைக்கு முன் கூறினான்
வெடுக்கென சினத்தீ வெள்ளமா பாய்ந்திட
கண்விச திதழ்கள் துடித்திட கனன்றுநான்
சீச்சி பேயே சிறிதுபோழ் தேனும்
இனியென் முகத்தின் எதிர்நின் றிடாதே
என்றுமிவ் வுலகில் என்னிட தினிநீ
போந்திடல் வேண்டா போ
இடியுற சொன்னேன் கண்ணனும் எழுந்து
செல்குவ னாயினன் விழிநீர் சேர்ந்திட
மகனே போகுதி வாழ்கநீ நின்னை
தேவர் காத்திடுக நின்தனை செம்மை
செய்திட கருதி ஏதேதோ செய்தேன்
தோற்றுவிட்டேனடா சூழ்ச்சிகள் அறிந்தேன்
மறித்தினி வாராய் செல்லுதி வாழி நீ
எனத்துயர் நீங்கி அமைதியோ டிசைத்தேன்
சென்றனன் கண்ணன் திரும்பியோர் கணத்தே
எங்கிரு தோநல் லெழுதுகோல் கொணர்ந்தான்
காட்டிய பகுதியை கவினுற வரைந்தான்
ஐயனே நின்வழி யனைத்தையுங் கொள்ளுவேன்
தொழில்பல புரிவேன் துன்பமிங் கென்றும்
இனிநின கென்னால் எய்திடா தெனப்பல
நல்லசொல் லுரைத்து நகைத்தனன் மறைந்தான்
மறைந்ததோர் கண்ணன் மறுகண தென்றன்
நெஞ்சிலே தோன்றி நிகழ்த்துவா னாயினன்
மகனே ஒன்றை யாக்குதல் மாற்றுதல்
அழித்திட லெல்லாம் நின்செய லன்றுகாண்
தோற்றேன் எனநீ உரைத்திடும் பொழுதிலே
வென்றாய் உலகினில் வேண்டிய தொழிலெல்லாம்
ஆசையு தாபமும் அகற்றியே புரிந்து
வாழ்க நீ என்றான் வாழ்கமற் றவனே

கண்ணன் எனது சற்குரு

புன்னாகவராளி திஸ்ர ஜாதி ஏகதாளம்
ரசங்கள் அற்புதம் பக்தி
சாத்திரங் கள்பல தேடினேன் அங்கு
சங்கையில் லாதன சங்கையாம் பழங்
கோத்திரங்கள் சொல்லு மூடர்தம் பொய்மை
கூடையில் உண்மை கிடைக்குமோ நெஞ்சில்
மாத்திரம் எந்த வகையிலும் சக
மாயம் உணர்ந்திடல் வேண்டுமே என்னும்
ஆத்திரம்நின்ற திதனிடை நித்தம்
ஆயிர தொல்லைகள் சூழ்ந்தன
நாடு முழுதிலுஞ் சுற்றிநான் பல
நாட்கள் அலைந்திடும் போதினில் நிறை
தோடும் யமுனை கரையிலே தடி
ஊன்றி சென்றாரோர் கிழவனார் ஒளி
கூடு முகமும் தெளிவுதான் குடி
கொண்ட விழியும் சடைகளும் வெள்ளை
தாடியும் கண்டு வணங்கியே பல
சங்கதி பேசி வருகையில்
என்னுள தாசை யறிந்தவர் மிக
இன்புற் றுரைத்திட லாயினர் தம்பி
நின்னுள திற்கு தகுந்தவன் சுடர்
நித்திய மோன திருப்பவன் உயர்
மன்னர் குலத்தில் பிறந்தவன் வட
மாமது ரைப்பதி யாள்கின்றான் கண்ணன்
தன்னை சரணென்று போவையில் அவன்
சத்தியங் கூறுவன் என்றனர்
மாமது ரைப்பதி சென்றுநான் அங்கு
வாழ்கின்ற கண்ணனை போற்றியே என்தன்
நாமமும் ஊரும் கருத்துமே சொல்லி
நன்மை தருகென வேண்டினன் அவன்
காமனை போன்ற வடிவமும் இளங்
காளையர் நட்பும் பழக்கமும் கெட்ட
பூமியை காக்கு தொழிலிலே எந்த
போதுஞ் செலுத்திடுஞ் சிந்தையும்
ஆடலும் பாடலும் கண்டுநான் முன்னர்
ஆற்றங் கரையினில் கண்டதோர் முனி
வேட தரித்த கிழவரை கொல்ல
வேண்டுமென் றுள்ளத்தில் எண்ணினேன் சிறு
நாடு புரந்திடு மன்னவன் கண்ணன்
நாளுங் கவலையில் மூழ்கினோன் தவ
பாடுப டோ ர்க்கும் விளங்கிடா உண்மை
பார்த்திவன் எங்ஙனம் கூறுவான்
என்று கருதி யிருந்திட்டேன் பின்னர்
என்னை தனியிடங் கொண்டுபோய் நினை
நன்று மருவூக மைந்தனே பர
ஞான முரைத்திட கேட்பைநீ நெஞ்சில்
ஒன்றுங் கவலையில் லாமலே சிந்தை
ஊன்ற நிறுத்தி களிப்புற்றே தன்னை
வென்று மறந்திடும் போழ்தினில் அங்கு
விண்ணை யளக்கும் அறிவுதான்
சந்திரன் சோதி யுடையதாம் அது
சத்திய நித்திய வஸ்துவாம் அதை
சிந்திக்கும் போதினில் வந்துதான் நினை
சேர்ந்து தழுவி அருள்செயும் அதன்
மந்திர தாலிவ் வுலகெலாம் வந்த
மா களிப்பொருங் கூத்துக்காண் இதை
சந்ததம் பொய்யென் றுரைத்திடும் மட
சாத்திரம் பொய் யென்று தள்ளடா
ஆதி தனிக்பொரு ளாகுமோர் கடல்
ஆருங் குமிழி உயிர்களாம் அந்த
சோதி யறிவென்னும் ஞாயிறு தன்னை
சூழ்ந்த கதிர்கள் உயிர்களாம் இங்கு
மீதி பொருள்கள் எவையுமே அதன்
மேனியில் தோன்றிடும் வண்ணங்கள் வண்ண
நீதி யறிந்தின்பம் எய்தியே ஒரு
நேர்மை தொழிலில் இயங்குவார்
சித்தத்தி லேசிவம் நாடுவார் இங்கு
சேர்ந்து களித்துல காளுவார் நல்ல
மத்த மதவெங் களிறுபோல் நடை
வாய்ந்திறு மாந்து திரிகுவார் இங்கு
நித்தம் நிகழ்வ தனைத்துமே எந்தை
நீண்ட திருவரு ளால்வரும் இன்பம்
சுத்த சுகந்தனி யாநந்தம் என
சூழ்ந்து கவலைகள் தள்ளியே
சோதி அறிவில் விளங்கவும் உயர்
சூழ்ச்சி மதியில் விளங்கவும் அற
நீதி முறைவழு வாமலே எந்த
நேரமும் பூமி தொழில்செய்து கலை
ஓதி பொருளியல் கண்டுதாம் பிறர்
உற்றிடு தொல்லைகள் மாற்றியே இன்பம்
மோதி விழிக்கும் விழியினார் பெண்மை
மோகத்தில் செல்வத்தில் கீர்த்தியில்
ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி
யாதி யினைய கலைகளில் உள்ளம்
ஈடுப டென்றும் நடப்பவர் பிறர்
ஈன நிலைகண்டு துள்ளுவார் அவர்
நாடும் பொருள்கள் அனைத்தையும் சில
நாளினில் எய்த பெறுகுவார் அவர்
காடு புதரில் வளரினும் தெய்வ
காவனம் என்றதை போற்றலாம்
ஞானியர் தம்மியல் கூறினேன் அந்த
ஞானம் விரைவினில் எய்துவாய் என
தேனி லினிய குரலிலே கண்ணன்
செப்பவும் உண்மை நிலைகண்டேன் பண்டை
ஈன மனித கனவெலாம் எங்ஙன்
ஏகி மறைந்தது கண்டிலேன் அறி
வான தனிச்சுடர் நான்கண்டேன் அதன்
ஆட லுலகென நான் கண்டேன்

கண்ணம்மா என் குழந்தை

பராசக்தியை குழந்தையா கண்டு சொல்லிய பாட்டு
ராகம் பைரவி தாளம் ரூபகம்

தநீத பதப பா
பபப பதப பமா கரிஸா
ரிகம ரிகரி ஸா
என்ற ஸ்வர வரிசைகளை மாதிரியாக வைத்துக்கொண்டு
மனோவாபப்படி மாற்றி பாடுக
சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா
செல்வ களஞ்சியமே
என்னை கலி தீர்த்தே உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்
பிள்ளை கனியமுதே கண்ணம்மா
பேசும்பொற் சித்திரமே
அள்ளி யணைத்திடவே என் முன்னே
ஆடி வரு தேனே
ஓடி வருகையிலே கண்ணம்மா
உள்ளங் குளிரு தடீ
ஆடித்திரிதல் கண்டால் உன்னைப்போய்
ஆவி தழுவு தடீ
உச்சி தனை முகந்தால் கருவம்
ஓங்கி வளரு தடீ
மெச்சி யுனை யூரார் புகழ்ந்தால்
மேனி சிலிர்க்குதடீ
கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான்
கள்வெறி கொள்ளு தடீ
உன்னை தழுவிடிலோ கண்ணம்மா
உன்மத்த மாகுதடீ
சற்றுன் முகஞ் சிவந்தால் மனது
சஞ்சல மாகு தடீ
நெற்றி சுருங கண்டால் எனக்கு
நெஞ்சம் பதைக்கு தடீ
உன்கண்ணில் நீர்வழிந்தால் என்நெஞ்சில்
உதிரம் கொட்டு தடீ
என்கண்ணிற் பாவையன்றோ கண்ணம்மா
என்னுயிர் நின்ன தன்றோ
சொல்லு மழலையிலே கண்ணம்மா
துன்பங்கள் தீர்த்திடு வாய்
முல்லை சிரிப்பாலே எனது
மூர்க்க தவிர்த்திடு வாய்
இன்ப கதைகளெல்லாம் உன்னைப்போல்
ஏடுகள் சொல்வ துண்டோ
அன்பு தருவதிலே உனைநேர்
ஆகுமோர் தெய்வ முண்டோ
மார்பில் அணிவதற்கே உன்னைப்போல்
வைர மணிக ளுண்டோ
சீர்பெற்று வாழ்வதற்கே உன்னைப்போல்
செல்வம் பிறிது முண்டோ

கண்ணன் என் விளையாட்டு பிள்ளை

நகேதாரம் கண்டஜாதி ஏகதாளம்
ரசங்கள் அற்புதம் சிருங்காரம்
தீராத விளையாட்டு பிள்ளை கண்ணன்
தெருவிலே பெண்களு கோயாத தொல்லை தீராத

தின்ன பழங்கொண்டு தருவான் பாதி
தின்கின்ற போதிலே தட்டி பறிப்பான்
என்னப்பன் என்னையன் என்றால் அதனை
எச்சிற் படுத்தி கடித்து கொடுப்பான் தீராத

தேனொத்த பண்டங்கள் கொண்டு என்ன
செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்
மானொத்த பெண்ணடி என்பான் சற்று
மனமகிழும் நேரத்தி லேகிள்ளி விடுவான் தீராத

அழகுள்ள மலர்கொண்டு வந்தே என்னை
அழஅழ செய்துபின் கண்ணை மூடிக்கொள்
குழலிலே சூட்டுவேன் என்பான் என்னை
குருடாக்கி மலரினை தோழிக்கு வைப்பான் தீராத

பின்னலை பின்னின் றிழுப்பான் தலை
பின்னே திரும்புமுன் னேசென்று மறைவான்
வன்ன புதுச்சேலை தனிலே புழுதி
வாரி சொரிந்தே வருத்தி குலைப்பான் தீராத

புல்லாங் குழல்கொண்டு வருவான் அமுது
பொங்கி ததும்புநற் பீதம் படிப்பான்
கள்ளால் மயங்குவது போலே அதை
கண்மூடி வாய்திற தேகே டிருப்போம் தீராத

அங்கா திருக்கும்வாய் தனிலே கண்ணன்
ஆறேழு கட்டெறும் பைப்போட்டு விடுவான்
எங்காகிலும் பார்த்த துண்டோ கண்ணன்
எங்களை செய்கின்ற வேடிக்கை யொன்றோ தீராத

விளையாட வாவென் றழைப்பான் வீட்டில்
வேலையென் றாலதை கேளா திழுப்பான்
இளையாரொ டாடி குதிப்பான் எம்மை
இடையிற் பிரிந்துபோய் வீட்டிலே சொல்வான் தீராத

அம்மைக்கு நல்லவன் கண்டீர் மூளி
அத்தைக்கு நல்லவன் தந்தைக்கு மஃதே
எம்மை துயர்செய்யும் பெரியோர் வீட்டில்
யாவர்க்கும் நல்லவன் போலே நடப்பான் தீராத

கோளுக்கு மிகவும் சமர்த்தன் பொய்ம்மை
குத்திரம் பழிசொல கூசா சழக்கன்
ஆளு கிசைந்தபடி பேசி தெருவில்
அத்தனை பெண்களையும் ஆகா தடிப்பான் தீராத

கண்ணன் என் காதலன்

செஞ்சுருட்டி திஸ்ர ஏக தாளம்
சிருங்கார ரசம்
தூண்டிற் புழுவினைப்போல் வெளியே
சுடர் விளக்கினை போல்
நீண்ட பொழுதாக எனது
நெஞ்ச துடித்த தடீ
கூண்டு கிளியினை போல் தனிமை
கொண்டு மிகவும் நொந்தேன்
வேண்டும் பொருளை யெல்லாம் மனது
வெறுத்து விட்டதடீ
பாயின் மிசை நானும் தனியே
படு திருக்கை யிலே
தாயினை கண்டாலும் சகியே
சலிப்பு வந்த தடீ
வாயினில் வந்ததெல்லாம் சகியே
வளர்த்து பேசிடுவீர்
நோயினை போலஞ் சினேன் சகியே
நுங்க ளுறவை யெல் லாம்
உணவு செல்லவில்லை சகியே
உறக்கங் கொள்ளவில்லை
மணம் விரும்பவில்லை சகியே
மலர் பிடிக்க வில்லை
குண முறுதி யில்லை எதிலும்
குழப்பம் வந்த தடீ
கணமும் உளத்திலே சுகமே
காண கிடைத்ததில்லை
பாலுங் கசந்தடீ தடீ சகியே
படுக்கை நொந்த தடீ
கோல கிளிமொழியும் செவியில்
குத்த லெடுத்த தடீ
நாலு வயித்தியரும் இனிமேல்
நம்புதற் கில்லை யென்றார்
பாலத்து சோசியனும் கிரகம்
படுத்து மென்று விட்டான்
கனவு கண்டதிலே ஒருநாள்
கண்ணுக்கு தோன்றாமல்
இனம் விளங்க வில்லை எவனோ
என்னக தொட்டு விட்டான்
வினவ கண்விழித்தேன் சகியே
மேனி மறைந்து விட்டான்
மனதில் மட்டிலுமே புதிதோர்
மகிழ்ச்சி கண்டதடீ
உச்சி குளிர்ந்ததடீ சகியே
உடம்பு நேராச்சு
மச்சிலும் வீடுமெல்லாம் முன்னைப்போல்
மனத்து கொத்தடீ
இச்சை பிறந்ததடீ எதிலும்
இன்பம் விளைளந்ததடீ
அச்ச மொழிந்ததடீ சகியே
அழகு வந்ததடீ
எண்ணும் பொழுதி லெல்லாம் அவன்கை
இட்ட விடத்தினிலே
தண்ணென் றிருந்ததடீ புதிதோர்
சாந்தி பிறந்ததடீ
எண்ணி யெண்ணி பார்த்தேன் அவன்தான்
யாரென சிந்தை செய்தேன்
கண்ணன் திருவுருவம் அங்ஙனே
கண்ணின் முன் நின்றதடீ

கண்ணன் என் காதலன்

உறக்கமும் விழிப்பும்
நாதநாமக்கிரியை ஆதி தாளம்
ரசங்கள் பீபத்ஸம் சிருங்காரம்
நோம் மிகுந்ததின்னும் நித்திரையின்றி உங்கள்
நினைப்பு தெரியவில்லை கூத்தடிக்கிறீர்
சோரன் உறங்கிவிழும் நள்ளிரவிலே என்ன
தூளி படுகுதடி இவ்விடத்திலே
ஊரை யெழுப்பிவிட நிச்சயங் கொண்டீர் அன்னை
ஒருத்தியுண் டென்பதையும் மறந்து விட்டீர்
சாரம் மிகுந்த தென்று வார்த்தை சொல்கிறீர் மிக
சலிப்பு தருகுதடி சகி பெண்களே
நானும் பல தினங்கள் பொறுத்திருந்தேன் இது
நாளுக்கு நாளதிக மாகி விட்டதே
கூன னொருவன் வந்தி நாணி பின்னலை
கொண்டை மலர்சிதற நின்றிழுத்ததும்
ஆனைமதம் பிடித்திவ் வஞ்சி யம்மையின்
அருகினி லோட இவள் மூர்ச்சை யுற்றதும்
பானையில் வெண்ணெய் முற்றும் தின்றுவிட்டதால்
பாங்கி யுரோகிணிக்கு நோவு கண்டதும்
பத்தினி யாளையொரு பண்ணை வெளியில்
பத்து சிறுவர் வந்து முத்தமிட்டதும்
நத்தி மகளினுக்கோர் சோதிடன் வந்து
நாற்ப தரசர் தம்மை வாக்களித்ததும்
கொத்து கனல் விழி கோவினி பெண்ணை
கொங்கத்து மூளிகண்டு கொக்கரித்தும்
வித்தை பெயருடைய வீணியவளும்
மேற்கு திசை மொழிகள் கற்று வந்ததும்
எத்தனை பொய்களடி என்ன கதைகள்
என்னை உறக்கமின்றி இன்னல் செய்கிறீர்
சத்தமிடுங் குழல்கள் வீணைக ளெல்லாம்
தாளங்க ளோடுகட்டி மூடிவை தங்கே
மெத்த வெளிச்சமின்றி ஒற்றை விளக்கை
மேற்கு சுவரருகில் வைத்ததன் பின்னர்
நித்திரை கொள்ளஎனை தனியில் விட்டே
நீங்களெல் லோருமுங்கள் வீடு செல்வீர்
பாங்கியர் போன பின்பு தனியிருந்து சொல்லுதல்
கண்கள் உறங்கவொரு காரண முண்டோ
கண்ணனை இன்றிரவு காண்பதன் முன்னே
பெண்களெல் லோருமவர் வீடு சென்றிட்டார்
பிரிய மிகுந்த கண்ணன் காத்திருக்கின்றான்
வெண்கல வாணிகரின் வீதி முனையில்
வேலி புறத்திலெனை காணமுடி யென்றான்
கண்கள் உறங்கலெனுங் காரிய முண்டோ
கண்ணனை கையிரண்டுங் கட்ட லின்றியே

கண்ணன் என் காதலன்
காட்டிலே தேடுதல்
ஹிந்துஸ்தானி தோடி ஆதி தாளம்
ரசங்கள் பயாநகம் அற்புதம்
திக்கு தெரியாத காட்டில் உனை
தேடி தேடி இளைத்தேனே

மிக்க நலமுடைய மரங்கள் பல
விந்தை சுவையுடைய கனிகள் எந்த
பக்கத்தையும் மறைக்கும் வரைகள் அங்கு
பாடி நகர்ந்து வரு நதிகள் ஒரு திக்கு

நெஞ்சிற் கனல்மணக்கும் பூக்கள் எங்கும்
நீள கிடக்குமலை கடல்கள் மதி
வஞ்சி திடுமகழி சுனைகள் முட்கள்
மண்டி துயர்பொடுக்கும் புதர்கள் ஒரு திக்கு

ஆசை பெறவிழிக்கும் மான்கள் உள்ளம்
அஞ்ச குரல்பழகும் புலிகள் நல்ல
நேச கவிதைசொல்லும் பறவை அங்கு
நீண்டே படுத்திருக்கும் பாம்பு ஒரு திக்கு

தன்னிச்சை கொண்டலையும் சிங்கம் அதன்
தினிற்கலங்கு யானை அதன்
முன்னின் றோடுமிள மான்கள் இவை
முட்டா தயல்பதுங்கு தவளை ஒரு திக்கு

கால்கை சோர்ந்துவிழ லானேன் இரு
கண்ணும் துயில்படர லானேன் ஒரு
வேல்கை கொண்டுகொலைவேடன் உள்ளம்
வெட்கம் கொண்டொழிய விழித்தான் ஒரு திக்கு

பெண்ணே உனதழகை கண்டு மனம்
பித்தங்கொள்ளு தென்று நகைத்தான் அடி
கண்ணே எனதிருகண் மணியே எனை
கட்டி தழுவமனம் கொண்டேன்

சோர்ந்தே படுத்திருக்க லாமோ நல்ல
துண்ட கறிசமைத்து தின்போம் சுவை
தேர்ந்தே கனிகள் கொண்டு வருவேன் நல்ல
தேங்கள் ளுண்டினிது களிப்போம்

என்றே கொடியவிழி வேடன் உயிர்
இற்று போகவிழி துரைத்தான் தனி
நின்றே இருகரமுங் குவித்து அந்த
நீசன் முன்னர் இவை சொல்வேன்

அண்ணா உனதடியில் வீழ்வேன் எனை
அஞ்ச கொடுமைசொல்ல வேண்டா பிறன்
கண்ணலஞ் செய்துவிட்ட பெண்ணே என்றன்
கண்ணற் பார்த்திடவு தகுமோ

ஏடி சாத்திரங்கள் வேண்டேன் நின
தின்பம் வேண்டுமடி கனியே நின்றன்
மோடி கிறுக்குதடி தலையை நல்ல
மொந்தை பழையகள்ளை போலே

காதா லிந்தவுதை கேட்டேன் அட
கண்ணா வென்றலறி வீழ்ந்தேன் மிக
போதாக வில்லையிதற் குள்ளே என்றன்
போத தெளியநினை கண்டேன்

கண்ணா வேடனெங்கு போனான் உனை
கண்டே யலறிவிழு தானோ மணி
வண்ணா என தப குரலில் எனை
வாழ்விக்க வந்தஅருள் வாழி

கண்ணன் என் காதலன்
பாங்கியை தூது விடுத்தல்
தங்கப்பாட்டு மெட்டு
ரசங்கள் சிருங்காரம் ரௌத்ரம்
கண்ணன் மனநிலையை தங்கமே தங்கம்
அடி தங்கமே தங்கம்
கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம்
எண்ண முரைத்துவிடில் தங்கமே தங்கம் பின்னர்
ஏதெனிலுஞ் செய்வமடி தங்கமே தங்கம்
கன்னிகை யாயிருந்து தங்கமே தங்கம் நாங்கள்
காலங் கழிப்பமடி தங்கமே தங்கம்
அன்னிய மன்னர் மக்கள் பூமியிலுண்டாம் என்னும்
அதனையுஞ் சொல்லிடடி தங்கமே தங்கம்
சொன்ன மொழிதவறும் மன்னவ னுக்கே எங்கும்
தோழமை யில்லையடி தங்கமே தங்கம்
என்ன பிழைகளிங்கு கண்டிருக்கின்றான் அவை
யாவும் தெளிவுபெற கோட்டு விடடீ
மையல் கொடுத்துவிட்டு தங்கமே தங்கம் தலை
மறைந்து திரிபவர்க்கு மானமு முண்டோ
பொய்யை யுருவமென கொண்டவ னென்றே கிழ
பொன்னி யுரைத்ததுண்டு தங்கமே தங்கம்
ஆற்றங் கரையதனில் முன்னமொருநாள் எனை
அழைத்து தனியிடத்தில் பேசிய தெல்லாம்
தூற்றி நகர்முரசு சாற்றுவ னென்றே
சொல்லி வருவையடி தங்கமே தங்கம்
சோர மிழைத்திடையர் பெண்களுடனே அவன்
சூழ்ச்சி திறமை பல காட்டுவ தெல்லாம்
வீர மறக்குலத்து மாதரிடத்தே
வேண்டிய தில்லையென்று சொல்லி விடடீ
பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால் மிக
பீழை யிருக்குதடி தங்கமே தங்கம்
பண்ணொன்று வேய்ங்குழலில் ஊதி வந்திட்டான் அதை
பற்றி மறக்கு தில்லை பஞ்சை யுள்ளமே
நேர முழுவதிலு பாவி தன்னையே உள்ளம்
நினைத்து மறுகுதடி தங்கமே தங்கம்
தீர ஒருசொலின்று கேட்டு வந்திட்டால் பின்பு
தெய்வ மிருக்குதடி தங்கமே தங்கம்

கண்ணன் என் காதலன்
பிரிவாற்றாமை
ராகம் பிலஹரி
ஆசை முகமறந்து போச்சே இதை
ஆரிடம் செல்வேனடி தோழி
நேச மறக்கவில்லை நெஞ்சம் எனில்
நினைவு முகமறக்க லாமோ
கண்ணில் தெரியுதொரு தோற்றம் அதில்
கண்ண னழகுமுழு தில்லை
நண்ணு முகவடிவு காணில் அந்த
நல்ல மலர்ச்சிரிப்பை காணோம்
ஓய்வு மொழிதலுமில் லாமல் அவன்
உறவை நினைத்திருக்கும் உள்ளம்
வாயு முரைப்ப துண்டு கண்டாய் அந்த
மாயன் புகழினையெ போதும்
கண்கள் புரிந்துவிட்ட பாவம் உயிர
கண்ண னுருமறக்க லாச்சு
பெண்க ளினிடத்திலிது போலே ஒரு
பேதையை முன்புகண்ட துண்டோ
தேனை மறந்திருக்கும் வண்டும் ஒளி
சிறப்பை மறந்துவிட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும் இந்த
வைய முழுதுமில்லை தோழி
கண்ணன் முகம்மறந்து போனால் இந்த
கண்க ளிருந்து பயனுண்டோ
வண்ண படமுமில்லை கண்டாய் இனி
வாழும் வழியென்னடி தோழி

கண்ணன் என் காந்தன்

வராளி திஸ்ர ஏக தாளம்
சிருங்கார ரசம்
கனிகள் கொண்டுதரும் கண்ணன்
கற்கண்டு போலினிதாய்
பனிசெய் சந்தனமும் பின்னும்
பல்வகை அத்தர்களும்
குனியும் வாண்முகத்தான் கண்ணன்
குலவி நெற்றியிலே
இனிய பொட்டிடவே வண்ணம்
இயன்ற சவ்வாதும்
கொண்டை முடிப்பதற்கே மணங்
கூடு தயிலங்களும்
வண்டு விழியினுக்கே கண்ணன்
மையுங் கொண்டுதரும்
தண்டை பதங்களுக்கே செம்மை
சார்த்துசெம் பஞ்சுதரும்
பெண்டிர் தமக்கெல்லாம் கண்ணன்
பேசரு தெய்வமடீ
குங்குமங் கொண்டுவரும் கண்ணன்
குழைத்து மார்பொழுத
சங்கையி லாதபணம் தந்தே
தழுவி மையல் செய்யும்
பங்கமொன் றில்லாமல் மகம்
பார்த்திரு தாற்போதும்
மங்கள மாகுமடீ பின்னோர்
வருத்த மில்லையடி

கண்ணம்மா என் காதலி
காட்சி வியப்பு
செஞ்சுருட்டி ஏகதாளம்
ரசங்கள் சிருங்காரம் அற்புதம்
சுட்டும் விழிச்சுடர் தான் கண்ணம்மா
சூரிய சந்திர ரோ
வட்ட கரிய விழி கண்ணம்மா
வான கருமை கொல்லோ
பட்டு கருநீல புடவை
பதித்த நல் வயிரம்
நட்ட நடு நிசியில் தெரியும்
நக்ஷ திரங்க ளடீ
சோலை மல ரொளியோ உனது
சுந்தர புன்னகை தான்
நீல கடலலையே உனது
நெஞ்சி லலைக ளடீ
கோல குயி லோசை உனது
குரலி னிமை யடீ
வாலை குமரி யடீ கண்ணம்மா
மருவ காதல் கொண்டேன்
சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா
சாத்திர மேது கடீ
ஆத்திரங் கொண்டவர்க்கே கண்ணம்மா
சாத்திர முண்டோ டீ
மூத்தவர் சம்மதியில் வதுவை
முறைகள் பின்பு செய்வோம்
காத்திரு பேனோ டீ இதுபார்
கன்னத்து முத்த மொன்று

கண்ணம்மா என் காதலி
பின் வந்து நின்று கண் மறைத்தல்
நாதநாமக்கிரியை ஆதிதாளம்
சிருங்கார ரசம்
மாலை பொழுதிலொரு மேடை மிசையே
வானையும் கடலையும் நோக்கி யிருந்தேன்
மூலை கடலினையவ் வான வளையம்
முத்தமி டேதழுவி முகிழ்த்தல் கண்டேன்
நீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி
நேரங் கழிவ திலும் நினைப்பின்றியே
சால பலபல நற் பகற்கனவில்
தன்னை மறந்தல தன்னில் இருந்தேன்
ஆங்க பொழுதிலென் பின்பு றத்திலே
ஆள்வந்து நின்றெனது கண்ம றைக்கவே
பாங்கினிற் கையிரண்டு தீண்டி யறிந்தேன்
பட்டுடை வீசுகமழ் தன்னி லறிந்தேன்
ஓங்கிவரு முவகை யூற்றி லறிந்தேன்
ஒட்டுமி ரண்டுளத்தின் தட்டி லறிந்தேன்
வாங்கி விடடிகையை யேடி கண்ணம்மா
மாய மெவரிடத்தில் என்று மொழிந்தேன்
சிரித்த ஒலியிலவள் கைவி லக்கியே
திருமி தழுவி என்ன செய்தி சொல் என்றேன்
நெரித்த திரைக்கடலில் என்ன கண்டிட்டாய்
நீல விசும்பினிடை என்ன கண்டிட்டாய்
திரித்த நுரையினிடை என்ன கண்டிட்டாய்
சின்ன குமிழிகளில் என்ன கண்டிட்டாய்
பிரித்து பிரித்துநிதம் மேகம் அளந்தே
பெற்ற நலங்கள் என்ன பேசுதி என்றாள்
நெரித்த திரைக்கடலில் நின்முகங் கண்டேன்
நீல விசும்பினிடை நின்முகங் கண்டேன்
திரித்த நுரையினிடை நின்முகங் கண்டேன்
சின்ன குமிழிகளில் நின்முகங் கண்டேன்
பிரித்து பிரித்துநிதம் மேகம் அளந்தே
பெற்றுதுன் முகமன்றி பிறிதொன் றில்லை
சிரித்த ஒலியினிலுன் கைவி லக்கியே
திருமி தழுவியதில் நின்முகங் கண்டேன்

கண்ணம்மா என் காதலி
முகத்திரை களைத்தல்
நாதநாமக்கிரியை ஆதிதாளம்
சிருங்கார ரசம்
தில்லி துருக்கர் செய்த வழக்கமடி பெண்கள்
திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்
வல்லி யிடையினையும் ஓங்கி முன்னிற்கும் இந்த
மார்பையும் மூடுவது சாத்திரங் கண்டாய்
வல்லி யிடையினையும் மார்பு ரண்டையும் துணி
மறைத்தத னாலழகு மறைந்த தில்லை
சொல்லி தெரிவ தில்லை மன்மதக்கலை முக
சோதி மறைத்துமொரு காதலிங் குண்டோ
ஆரியர் முன்னெறிகள் மேன்மை யென் கிறாய் பண்டை
ஆரி பெண்களுக்கு திரைகள் உண்டோ
ஓரிரு முறைகண்டு பழகிய பின் வெறும்
ஒப்புக்கு காட்டுவதி நாண மென்னடீ
யாரிரு தென்னை யிங்கு தடுத்திடுவார் வலு
வாக முகத்திரையை அகற்றி விட்டால்
காரிய மில்லையடி வீண்ட சப்பிலே கனி
கண்டவன் தோலுரி காத்தி ருப்பனோ

கண்ணம்மா என் காதலி
நாணி கண் புதைத்தல்
நாதநாமக்கிரியை ஆதிதாளம்
சிருங்கார ரசம்
மன்னர் குலத்தினிடை பிறந்தவளை இவன்
மருவ நிகழ்ந்ததென்று நாண முற்றதோ
சின்னஞ் சிறுகுழந்தை யென்ற கருத்தோ இங்கு
செ தகாதசெய்கை செய்தவ ருண்டோ
வன்ன முகத்திரையை களைந்தி டென்றேன் நின்றன்
மதங்கண்டு துகிலினை வரிதுரிந்தேன்
என்ன கருத்திலடி கண்புதைக்கிறாய் என
கெண்ண படுவதில்லை யேடி கண்ணம்மா
கன்னி வயதிலுனை கண்டதில்லையோ கன்னங்
கன்றி சிவக்கமுத்த மிட்ட தில்லையோ
அன்னிய மகாநம்முள் எண்ணுவதில்லை இரண்
டாவிவயுமொன் றாகுமென கொண்ட தில்லையோ
பன்னி பலவுரைகள் சொல்லுவ தென்னே துகில்
பறித்தவள் கைப்பறிக்க பயங்கொள்வனோ
என்னை புறமெனவுங் கருதுவதோ கண்கள்
இரண்டினில் ஒன்றையொன்று கண்டு வெள்குமோ
நாட்டினிற் பெண்களுக்கு நாயகர் சொல்லும் சுவை
நைந்த பழங்கதைகள் நானுரைப்பதோ
பாட்டுஞ் சுதியு மொன்று கலந்திடுங்கால் தம்முள்
பன்னி உபசரணை பேசுவ துண்டோ
நீட்டுங் கதிர்களொடு நிலவு வந்தே விண்ணை
நின்று புகழ்ந்து விட்டு பின்மருவுமோ
மூட்டும் விறகிளை சோதி கவ்வுங்கால் அவை
முன்னுப சாரவகை மொழிந்திடுமோ
சாத்திர காரரிடம் கேட்டு வந்திடேன் அவர்
சாத்திரஞ் சொல்லியதை நினக்குரைப்பேன்
நேற்று முன்னாளில் வந்து உறவன்றடீ மிக
நெடும்பண்டை காலமுதற் சேர்ந்து வந்ததாம்
போற்றுமி ராமனென முன்புதித்தனை அங்கு
பொன்மிதிலை கரசன் பூமடந்தை நான்
ஊற்றுமு தென்னவொரு வேய்ங்குழல் கொண்டோ ன் கண்ணன்
உருவம் நினக்கமை பார்த்தன் அங்கு நான்
முன்னை மிகப்பழமை இரணியனாம் எந்தை
மூர்க்க தவிர்க்க வந்த நரசிங்கன் நீ
பின்னையொர் புத்தனென நான் வளர்ந்திட்டேன் ஒளி
பெண்மை அசோதரையென் றுன்னை யெய்தினேன்
சொன்னவர் சாத்திரத்தில் மிக வல்லர்காண் அவர்
சொல்லிற் பழுதிரு காரண மில்லை
இன்னுங் கடைசிவரை ஒட்டிருக்குமாம் இதில்
ஏதுக்கு நாணமுற்று கண்புதைப்பதே

கண்ணம்மா என் காதலி
குறிப்பிடம் தவறியது
செஞ்சுருட்டி ஆதி தாளம்
சிருங்கார ரசம்
தீர்த்த கரையினிலே தெற்கு மூலையில்
செண்பக தோட்டத்திலே
பார்த்திருந்தால் வருவேன் வெண்ணிலாவிலே
பாங்கியோ டென்று சொன்னாய்
வார்த்தை தவறிவிட்டாய் அடி கண்ணம்மா
மார்பு துடிக்கு தடீ
பார்த்த விடத்திலெல்லாம் உன்னைப்போலவே
பாவை தெரியு தடீ
மேனி கொதிக்கு தடீ தலை சுற்றியே
வேதனை செய்கு தடீ
வானி லிடத்தை யெல்லாம் இந்த வெண்ணிலா
வந்து தழுவுது பார்
மோன திருக்கு தடீ இந்த வையகம்
மூழ்கி துயிலினிலே
நானொருவன் மட்டிலும் பிரி வென்பதோர்
நகர துழலுவதோ
கடுமை யுடைய தடீ எந்த நேரமும்
காவலுன் மாளிகையில்
அடிமை புகுந்த பின்னும் எண்ணும்போது நான்
அங்கு வருவதற் கில்லை
கொடுமை பொறுக்க வில்லை கட்டுங் காவலும்
கூடி கிடக்கு தங்கே
நடுமை யரசி யவள் எதற்காகவோ
நாணி குலைந்திடுவாள்
கூடி பிரியாமலே ஓரி ரவெலாம்
கொஞ்சி குலவி யங்கே
ஆடி விளை யாடியே உன்றன் மேனியை
ஆயிரங்கோடி முறை
நாடி தழுவி மன குறை தீர்ந்து நான்
நல்ல களி யெய்தியே
பாடி பரவசமாய் நிற்கவே தவம்
பண்ணிய தில்லை யடி

கண்ணம்மா என் காதலி
யோகம்
பாயு மொளி நீ யெனக்கு பார்க்கும் விழி நானுனக்கு
தோயும் மது நீ யெனக்கு தும்பியடி நானுனக்கு
வாயுரைக்க வருகுதில்லை வாழிநின்றன் மேன்மை யெல்லாம்
தூயசுடர் வானொளியே சூறையமுதே கண்ணம்மா
வீணையடி நீ யெனக்கு மேவும் விரல் நானுனக்கு
பூணும் வடம் நீ யெனக்கு புது வயிரம் நானுனக்கு
காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடி
மாணுடைய பேரரசே வாழ்வு நிலையே கண்ணம்மா
வான மழை நீ யெனக்கு வண்ணமயில் நானுனக்கு
பான மடி நீ யெனக்கு பாண்டமடி நானுனக்கு
ஞான வொளி வீசுதடி நங்கை நின்றன் சோதிமுகம்
ஊனமறு நல்லழகே ஊறு சுவையே கண்ணம்மா
வெண்ணிலவு நீ யெனக்கு மேவு கடல் நானுனக்கு
பண்ணுசுதி நீ யெனக்கு பாட்டினிமை நானுனக்கு
எண்ணியெண்ணி பார்த்திடிலோர் எண்ணமிலை நின்சுவைக்கே
கண்ணின் மணி போன்றவளே கட்டியமுதே கண்ணம்மா
வீசு கமழ் நீ யெனக்கு விரியுமலர் நானுனக்கு
பேசுபொருள் நீ யெனக்கு பேணு மொழி நானுனக்கு
நேசமுள்ள வான்சுடரே நின்னழகை யேதுரைப்பேன்
ஆசை மதுவே கனியே அள்ளு சுவையே கண்ணம்மா
காதலடி நீ யெனக்கு காந்தமடி நானுனக்கு
வேதமடி நீ யெனக்கு வித்தையடி நானுனக்கு
போதமுற்ற போதியிலே பொங்கிவரு தீஞ்சுவையே
நாதவடி வானவளே நல்ல உயிரே கண்ணம்மா
நல்லவுயிர் நீ யெனக்கு நாடியடி நானுனக்கு
செல்வமடி நீ யெனக்கு சேம நிதி நானுனக்கு
எல்லையற்ற பேரழகே எங்கும் நிறை பொற்சுடரே
முல்லை நிகர் புன்னகையாய் மோதுமின்பமே கண்ணம்மா
தரையடி நீ யெனக்கு தண்மதியம் நானுனக்கு
வீரமடி நீ யெனக்கு வெற்றியடி நானுனக்கு
தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்
ஓருருவமா சமைத்தாய் உள்ளமுதே கண்ணம்மா

கண்ணன் என் ஆண்டான்

புன்னாகவராளி திஸ்ர ஏகதாளம்
ரசங்கள் அற்புதம் கருணை
தஞ்ச முலகினில் எங்கணு மின்றி
தவித்து தடுமாறி
பஞ்சை பறையன் அடிமை புகுந்தேன்
பார முன காண்டே
ஆண்டே பாரமுன காண்டே
துன்பமும் நோயும் மிடிமையு தீர்த்து
சுகமருளல் வேண்டும்
அன்புடன் நின்புகழ் பாடிக்குதித்து நின்
ஆணை வழி நடப்பேன்
ஆண்டே ஆணைவழி நடப்பேன்
சேரி முழுதும் பறையடி தேயரு
சீர்த்திகள் பாடிடுவேன்
பேரிகை கொட்டி திசைக ளதிரநின்
பெயர் முழக்கிடுவேன்
ஆண்டே பெயர் முழக்கிடுவேன்
பண்ணை பறையர் தங் கூட்டத்தி லேயிவன்
பாங்கிய மோங்கி விட்டான்
கண்ண னடிமை யிவனெனுங் கீர்த்தியில்
காதலுற் றிங்கு வந்தேன்
ஆண்டே காதலுற் றிங்குவந்தேன்
காடு கழனிகள் காத்திடுவேன் நின்றன்
காலிகள் மேய்த்திடுவேன்
பாடுபட சொல்லி பார்த்ததன் பின்னரென்
பக்குவஞ் சொல்லாண்டே
ஆண்டே பக்குவஞ் சொல்லாண்டே
தோட்டங்கள் கொத்தி செடிவளர்க்க சொல்லி
சோதனை போடாண்டே
காட்டு மழைக்குறி தப்பி சொன்னா லெனை
கட்டியடி யாண்டே
ஆண்டே கட்டியடி யாண்டே
பெண்டு குழந்தைகள் கஞ்சி குடித்து
பிழைத்திட வேண்டுமையே
அண்டை யலுக்கென் னாலுப காரங்கள்
ஆகிட வேண்டுமையே
உபகாரங்கள் ஆகிட வேண்டுமையே
மானத்தை காக்கவோர் நாலுமுழத்துணி
வாங்கி தரவேணும்
தானத்துக்கு சில வேட்டிகள் வாங்கி
தரவுங் கடனாண்டே
சில வேட்டி தரவுங் கடனாண்டே
ஒன்பது வாயிற் குடிலினை சுற்றி
யொருசில பேய்கள் வந்தே
துன படுத்துது மந்திரஞ் செய்து
தொலைத்திட வேண்டுமையே
பகையாவு தொலைத்திட வேண்டுமையே
பேயும் பிசாசு திருடரு மென்றன்
பெயரினை கேட்டளவில்
வாயுங் கையுங்கட்டி அஞ்சி நடக்க
வழி செய்ய வேண்டுமையே
தொல்லைதீரும் வழிசெய்ய வேண்டுமையே

கண்ணம்மா எனது குலதெய்வம்

ராகம் புன்னாகவராளி
பல்லவி
நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்

பொன்னை உயர்வை புகழை விரும்பிடும்
என்னை கவலைகள் தின்ன தகாதென்று நின்னை

மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில்
குடிமை புகுந்தன கொன்றவைபோ கென்று நின்னை

தன்செய லெண்ணி தவிப்பது தீர்ந்திங்கு
நின்செயல் செய்து நிறைவு பெறும்வளம் நின்னை

துன்ப மினியில்லை சோர்வில்லை தோற்பில்லை
அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட நின்னை

நல்லது தீயது நாமறியோம் அன்னை
நல்லது நாட்டுக தீமையை ஓட்டுக நின்னை

குயில் பாட்டு
குயில்

காலை யிளம்பரிதி வீசுங் கதிர்களிலே
நீல கடலோர் நெருப்பெதிரே சேர்மணிபோல்
மோகனமாஞ் சோதி பொருந்தி முறைதவறா
வேக திரைகளினால் வேத பொருள்பாடி
வந்து தழுவும் வளஞ்சார் கரையுடைய
செந்தமிழ தென்புதுவை யென்னு திருநகரின்
மேற்கே சிறுதொலையில் மேவுமொரு மாஞ்சோலை
நாற்கோண துள்ளபல நத்தத்து வேடர்களும்
வந்து பறவைசுட வாய்ந்த பெருஞ்சோலை
அந்தமாஞ் சோலை யதனிலோர் காலையிலே
வேடர் வாராத விருந்து திருநாளில்
பேடை குயிலொன்று பெட்புறவோர் வான்கிளையில்
வீற்றிருந்தே ஆண்குயில்கள் மேனி புளகமுற
ஆற்ற லழிவுபெற உள்ள தனல் பெருக
சோலை பறவையெல்லாம் சூழ்ந்து பரவசமா
காலை கடனிற் கருத்தின்றி கேட்டிருக்க
இன்னமுதை காற்றினிடை எங்குங் கலந்ததுபோல்
மின்னற் சுவைதான் மெலிதாய் மிகவினிதாய்
வந்து பரவுதல்போல் வானத்து மோகினியாள்
இந்தவுரு வெய்தித்தான் ஏற்றம் விளங்குதல்போல்
இன்னிசை தீம்பாடல் இசைத்திருக்கும் விந்தைதனை
முன்னி கவிதைவெறி மூண்டே நனவழி
பட்ட பகலிலே பாவலர்க்கு தோன்றுவதாம்
நெட்டை கனவின் நிகழ்ச்சியிலே கண்டேன் யான்
கன்னி குயிலொன்று காவிடத்தே பாடியதோர்
இன்னிசை பாட்டினிலே யானும் பரவசமாய்
மனிதவுரு நீங்கி குயிலுருவம் வாரோதோ
இனிதி குயிற்பேட்டை என்றும் பிரியாமல்
காதலித்து கூடி களியுடனே வாழோமோ
நாத கனலிலே நம்முயிரை போக்கோமோ
என்றுபல வெண்ணி ஏக்கமுற பாடிற்றால்
அன்றுநான் கேட்டது அமரர்தாங் கேட்பாரோ
குக்குக்கூ வென்று குயில்பாடும் பாட்டினிலே
தொக்க பொருளெல்லாம் தோன்றியதென் சிந்தைக்கே
அந்த பொருளை அவனி குரைத்திடுவேன்
விந்தை குரலுக்கு மேதினியீர் என்செய்கேன்

குயிலின் பாட்டு
ராகம் சங்கராபரணம் தாளம் ஏக
ஸ்வரம் ஸகா ரிமா காரீ
பாபாபாபா மாமாமாமா
ரீகா ரிகமா மாமா
சந்த பேதங்களுக்கு தக்கபடி மாற்றி கொள்க
காதல்
காதல் போயிற்
சாதல்

அருளே யாநல் லொளியே
ஒளிபோ மாயின்
இருளே

இன்பம்
இன்ப திற்கோ ரெல்லை காணில்
துன்பம்

நாதம்
நா தேயோர் நலிவுண் டாயின்
சேதம்

தாளம்
தாள திற்கோர் தடையுண் டாயின்
கூளம்

பண்ணே
பண்ணிற் கேயோர் பழுதுண் டாயின்
மண்ணே

புகழே
புகழு கேயோர் புரையுண் டாயின்
இகழே

உறுதி
உறுதி கேயோர் உடைவுண் டாயின்
இறுதி

கூடல்
கூடி பின்னே குமரன் போயின்
வாடல்

குழலே
குழலிற் கீறல் கூடுங்காலை
விழலே

குயிலின் காதற் கதை

மோகன பாட்டு முடிவுபெற பாரெங்கும்
ஏக மவுன மியன்றதுகாண் மற்றதிலோர்
இன்ப வெறியு துயரும் இணைந்தனவால்
பின்புநான் பார்க்க பெடைக்குயிலஃ தொன்றல்லால்
மற்றை பறவை மறைந்தெங்கோ போகவுமிவ்
ஒற்றை குயில் சோக முற்று தலைகுனிந்து
வாடுவது கண்டேன் மரத்தருகே போய்நின்று
பேடே திரவியமே பேரின பாட்டுடையாய்
ஏழுலகம் இன்பத்தீ ஏற்று திறனுடையாய்
பீழையுன கெய்தியதென் பேசாய் என கேட்டேன்
மா குயிலதுதான் மானுடவர் பேச்சினிலோர்
மாயச்சொல் கூற மன தீயுற நின்றேன்
காதலை வேண்டி கரைகின்றேன் இல்லை யெனில்
சாதலை வேண்டி தகிக்கின்றேன் என்றதுவால்
வானத்து புள்ளெல்லாம் மையலுற பாடுகிறாய்
ஞானத்திற் புட்களிலும் நன்கு சிறந்துள்ளாய்
காதலர்நீ யெய்துகிலா காரணந்தான் யா தென்றேன்
வேதனையும் நாணும் மிகுந்த குரலினிலே
கான குயிலி கதைசொல்ல லாயிற்று
மான குலைவும் வருத்தமுநான் பார்க்காமல்
உண்மை முழுதும் உரைத்திடுவேன் மேற்குலத்தீர்
பெண்மை கிரங்கி பிழைபொறுத்தல் கேட்கின்றேன்
அறிவும் வடிவுங் குறுகி அவனியிலே
சிறியதொரு புள்ளா சிறியேன் பிறந்திடினும்
தேவர் கருணையிலோ தெய்வ சினத்தாலோ
யாவர் மொழியும் எளிதுணரும் பேறு பெற்றேன்
மானுடவர் நெஞ்ச வழக்கெல்லா தேர்ந்திட்டேன்
கான பறவை கலகலெனும் ஓசையிலும்
காற்று மரங்களிடை காட்டும் இசைகளிலும்
ஆற்று நீரோசை அருவி யொலியினிலும்
நீல பெருங்கடலெ நேரமுமே தானிசைக்கும்
ஓல திடையே உதிக்கும் இசையினிலும்
மானுட பெண்கள் வளமொரு காதலினால்
ஊனுருக பாடுவதில் ஊறிடுந்தேன் வாரியிலும்
ஏற்றநீர பாட்டின் இசையினிலும் நெல்லிடிக்குங்
கோற்றொடியார் குக்குவென கொஞ்சும் ஒலியினிலும்
கண்ண மிடிப்பார்தஞ் சுவைமிகுந்த பண்களிலும்
பண்ணை மடவார் பழகு பல பாட்டினிலும்
வட்டமிட்டு பெண்கள் வளைக்கரங்கள் தாமொலி
கொட்டி யிசைத்திடுமோர் கூட்டமுத பாட்டினிலும்
வேயின் குழலோடு வீணைமுதலா மனிதர்
வாயினிலுங் கையாலும் வாசிக்கும் பல்கருவி
நாட்டினிலுங் காட்டினிலும் நாளெல்லாம் நன்றொலிக்கும்
பாட்டினிலும் நெஞ்சை பறிகொடுத்தேன் பாவியேன்
நாவும் மொழிய நடுக்கமுறும் வார்த்தைகளை
பாவிமன தானிறுக பற்றிநிற்ப தென்னையோ
நெஞ்சத்தே தைக்க நெடுநோக்கு நோக்கிடுவீர்
மஞ்சரே என்றன் மனநிகழ்ச்சி காணீரோ
காதலை வேண்டி கரைகின்றேன் இல்லையெனில்
சாதலை வேண்டி தவிக்கின்றேன் என்றதுவே
சின்ன குயிலிதனை செப்பியவ போழ்தினிலே
என்னை புதியதோர் இன்ப சுரங்கவர
உள்ள திடையும் உயிரிடையும் ஆங்கந்த
பிள்ளை குயிலினதோர் பேச்சன்றி வேறற்றேன்
காதலோ காதலினி காதல் கிடைத்திலதேல்
சாதலோ சாதல் என சாற்றுமொரு பல்லவியென்
உள்ளமாம் வீணைதனில் உள்ளவீ டத்தனையும்
விள்ள ஒலிப்பதால் வேறொர் ஒலியில்லை
சித்தம் மயங்கி திகைப்பொடுநான் நின்றிடவும்
அத்தருண தேபறவை யத்தனையு தாந்திரும்பி
சோலை கிளையிலெலா தோன்றி யொலித்தனவால்
நீல குயிலும் நெடிதுயிர்த்தாங் கிஃதுரைக்கும்
காதல் வழிதான் கரடுமுர டாமென்பார்
சோதி திருவிழியீர் துன்ப கடலினிலே
நல்லுதுறுதி கொண்டதோர் நாவாய்போல் வந்திட்டீர்
அல்லலற நும்மோ டளவாளாய் நான்பெறுமிவ்
வின்ப தினுக்கும் இடையூறு மூண்டதுவே
அன்பொடு நீரிங்கே அடுத்தநான் காநாளில்
வந்தருளல் வேண்டும் மறவாதீர் மேற்குலத்தீர்
சிந்தை பறிகொண்டு செல்கின்றீர் வாரீரேல்
ஆவி தரியேன் அறிந்திடுவீர் நான் காநாள்
பாவியந்த நான்குநாள் பத்துயுகமா கழிப்பேன்
சென்று வருவீர் என்சிந்தை கொடுபோகின்றீர்
சென்று வருவீர் என தேறா பெருந்துயரங்
கொண்டு சிறுகுயிருங் கூறி மறைந்ததுகாண்

காதலோ காதல்

கண்டதொரு காட்சி கனவுநன வென்றறியேன்
எண்ணுதலுஞ் செய்யேன் இருபதுபேய் கொண்டவன்போல்
கண்ணும் முகமும் களியேறி காமனார்
அம்பு நுனிகள் அகத்தே அமிழ்ந்திருக்க
கொம்பு குயிலுருவங் கோடிபல கோடியாய்
ஒன்றே யாதுவாய் உலகமெலா தோற்றமுற
சென்றே மனைபோந்து சித்த தனதின்றி
நாளொன்று போவதற்கு நான்பட்ட பாடனைத்தும்
தாளம் படுமோ தறுபடுமோ யார் படுவார்
நாளொன்று போயினது நானு மெனதுயிரும்
நீளச்சிலை கொண்டு நின்றதொரு மன்மதனும்
மா குயிலுமதன் மாமா தீம்பாட்டும்
சாயைபோ லிந்திரமா சாலம்போல் வையமுமா
மிஞ்சி நின்றோம் ஆங்கு மறுநாள் விடிந்தவுடன்
வஞ்சனை நான் கூறவில்லை மன்மதனார் விந்தையால்
புத்திமனஞ் சித்தம் புலனொன் றறியாமல்
வித்தைசெயுஞ் சூத்திரத்தின் மேவுமொரு பொம்மை யென
காலிரண்டுங் கொண்டு கடுகவுநான் சோலையிலே
நீலிதனை காண வந்தேன் நீண்ட வழியினிலே
நின்றபொருள் கண்ட நினைவில்லை சோலையிடை
சென்றுநான் பார்க்கையிலே செஞ்ஞாயிற் றொண்கதிரால்
பச்சைமர மெல்லாம் பளபளென என்னுளத்தின்
இச்சை யுணர்ந்தனபோல் ஈண்டும் பறவையெல்லாம்
வேறெங்கோ போயிருப்ப வெம்மை கொடுங்காதல்
மீறலெனை தான்புரிந்த விந்தை சிறுகுயிலை
காணநான் வேண்டி கரைகடந்த வேட்கையுடன்
கோணமெலாஞ் சுற்றிமர கொம்பையெலாம் நோக்கி வந்தேன்

குயிலும் குரங்கும்

மற்றைநா கண்ட மரத்தே குயிலில்லை
சுற்றுமுற்றும் பார்த்தும் துடித்து வருகையிலே
வஞ்சனையே பெண்மையே மன்மதனாம் பொய்த்தேவே
நெஞ்சகமே தொல்விதியின் நீதியே பாழுலகே
கண்ணாலே நான்கண்ட காட்சிதனை என்னுரைப்பேன்
பெண்ணால் அறிவிழக்கும் பித்தரெலாங் கேண்மினோ
காதலை போற்றுங் கவிஞரெலாங் கேண்மினோ
மாதரெலாங் கேண்மினோ வல்விதியே கேளாய் நீ
மா குயிலோர் மரக்கிளையின் வீற்றிருந்தே
பாயும் விழி நீர் பதைக்குஞ் சிறியபுடல்
விம்மி பரிந்து சொலும் வெந்துயர்ச்சொல் கொண்டதுவாய்
அம்மவோ மற்றாங்கோர் ஆண்குரங்கு தன்னுடனே
ஏதேதோ கூறி இரங்கும் நிலைகண்டேன்
தீதேது நன்றேது செய்கை தெளிவேது
அந்த கணமே அதையுங் குரங்கினையும்
சிந்த கருதி உடைவாளிற் கைசேர்த்தேன்
கொன்றுவிடு முன்னே குயிலுரைக்கும் வார்த்தைகளை
நின்று சற்றே கேட்பதற்கென் நெஞ்சம் விரும்பிடவும்
ஆங்கவற்றின் கண்ணில் அகப்படா வாறாருகே
ஓங்கு மரத்தின்பால் ஒளிந்துநின்று கேட்கையிலே
பேடை குயிலிதனை பேசியது வானரரே
ஈடறியா மேன்மையழ கேய்ந்தவரே பெண்மைதான்
எப்பிறப்பு கொண்டாலும் ஏந்தலே நின்னழகை
தப்புமோ மையல் தடுக்கு தரமாமோ
மண்ணிலுயிர கெல்லா தலைவரென மானிடரே
எண்ணிநின்றார் தம்மை எனிலொருகால் ஊர்வகுத்தல்
கோயில் அரசு குடிவகுப்பு போன்ற சில
வாயிலிலே அந்த மனிதர் உயர்வெனலாம்
மேனி யழகினிலும் விண்டுரைக்கும் வார்த்தையிலும்
கூனி யிருக்கும் கொலுநேர்த்தி தன்னிலுமே
வானரர்தஞ் சாதிக்கு மாந்தர் நிக ராவாரோ
ஆன வரையும் அவர் முயன்று பார்த்தாலும்
பட்டுமயிர் மூடப்படாத தமதுடலை
எட்டுடையால் மூடி எதிருமக்கு வந்தாலும்
மீசையையும் தாடியையும் விந்தைசெய்து வானரர்தம்
ஆசை முகத்தினை போல லாக்க முயன்றிடினும்
ஆடி குதிக்கும் அழகிலுமை நேர்வதற்கே
கூடி குதிக்கும் குதித்தாலும் கோபுரத்தில்
ஏற தெரியாமல் ஏணி வைத்து சென்றாலும்
வேறெத்தை செய்தாலும் வேகமுற பாய்வதிலே
வானரர்போ லாவரோ வாலுக்கு போவதெங்கே
ஈனமுறுங் கச்சை இதற்கு நிகராமோ
பாகையிலே வாலிருக்க பார்த்ததுண்டு கந்தைபோல்
வேகமுற தாவுகையில் வீசி எழுவதற்கே
தெய்வங் கொடுத்த திருவாலை போலாமோ
சைவசுத்த போசனமும் சாதுரி பார்வைகளும்
வானரர் போற் சாதியொன்று மண்ணுலகின் மீதுளதோ
வானரர் தம்முள்ளே மணிபோல் உமையடைந்தேன்
பிச்சை பறவை பிறப்பிலே தோன்றிடினும்
நிச்சயமா முன்புரிந்த நே தவங்களினால்
தேவரீர் காதல்பெறுஞ் சீர்த்தி கொண்டேன் தம்மிடத்தே
ஆவலினாற் பாடுகின்றேன் ஆரியரே கேட்டருள்வீர்
வானர பேச்சினிலே மைக்குயிலி பேசியதை
யானறிந்து கொண்டுவிட்டேன் யாதோ ஒரு திறத்தால்
காதல்
காதல் போயிற்
சாதல்
முதலியன குயிலின் பாட்டு
நீசக்குயிலும் நெருப்பு சுவைக்குரலில்
ஆசை ததும்பி அமுதூற பாடியதே
காட்டின் விலங்கறியும் கைக்குழந்தை தானறியும்
பாட்டின் சுவையதனை பாம்பறியும் என்றுரைப்பார்
வற்றற் குரங்கு மதிமயங்கி கள்ளினிலே
முற்றும் வெறிபோல் முழுவெறிகொண் டாங்ஙனே
தாவி குதிப்பதுவு தாளங்கள் போடுவதும்
ஆவி யுருகுதடி ஆஹா ஹா என்பதுவும்
கண்ணை சிமிட்டுவதும் காலாலுங் கையாலும்
மண்ணை பிறாண்டியெங்கும் வாரியிறைப்பதுவும்
ஆசை குயிலே அரும் பொருளே தெய்வதமே
பேச முடியா பெருங்காதல் கொண்டுவிட்டேன்
காதலில்லை யானாற் கணத்திலே சாதலென்றாய்
காதலினாற் சாகுங் கதியினிலே தன்னை வைத்தாய்
எப்பொழுதும் நின்னை இனிப்பிரிவ தாற்றுகிலேன்
இப்போதே நின்னை முத்தமிட்டு களியுறுவேன்
என்றுபல பேசுவதும் என்னுயிரை புண்செயவே
கொன்றுவிட எண்ணி குரங்கின்மேல் வீசினேன்
கைவாளை யாங்கே கனவோ நனவுகொலோ
தெய்வ வலியோ சிறு குரங்கென் வாளுக்கு
தப்பி முகஞ்சுளித்து தாவி யொளித்திடவும்
ஒப்பிலா மா தொருகுயிலு தான்மறைய
சோலை பறவை தொகைதொகையா தாமொலிக்க
மேலை செயலறியா வெள்ளறிவிற் பேதையேன்
தட்டு தடுமாறி சார்பனைத்து தேடியுமே
குட்டி பிசாச குயிலையெங்கும் காணவில்லை

இருளும் ஒளியும்

வான நடுவிலே மாட்சியுற ஞாயிறுதான்
மோனவொளி சூழ்ந்திடவும் மொய்ம்பிற் கொலுவிருந்தான்
மெய்யெல்லாஞ் சோர்வு விழியில் மயக்கமுற
உய்யும் வழியுணரா துள்ளம் பதைபதைக்க
நாணு துயரும் நலிவுறுத்த நான்மீண்டு
பேணும்மனை வந்தேன் பிரக்கினைபோய் வீழ்ந்துவிட்டேன்
மாலையிலே மூர்ச்சைநிலை மாறி தெளிவடைந்தேன்
நாலுபுறமுமெனை நண்பர் வந்து சூழ்ந்துநின்றார்
ஏனடா மூர்ச்சையுற்றாய் எங்கு சென்றாய் ஏது செய்தாய்
வானம் வெளிறுமுன்னே வைகறையி லேதனித்து
சென்றனை என்கின்றார செய்தி என்னே ஊணின்றி
நின்றதென்னே என்று நெரித்துவிட்டார் கேள்விகளை
இன்னார கிதுசொல்வ தென்று தெரியாமல்
என்னாற் பலவுரைத்தல் இப்பொழுது கூடாதாம்
நாளை வருவீரேல் நடந்ததெலாஞ் சொல்வேன் இவ்
வேளை எனைத்தனியே விட்டகல்வீர் என்றுரைத்தேன்
நண்பரெல்லாஞ் சென்றுவிட்டார் நைந்துநின்ற தாயார்தாம்
உண்பதற்கு பண்டம் உதவிநல்ல பால்கொணர்ந்தார்
சற்று விடாய்தீர்ந்து தனியே படுத்திருந்தேன்
முற்றும் மறந்து முமுத்துயிலில் ஆழ்ந்து விட்டேன்
பண்டு நடந்ததனை பாடுகின்ற இப்பொழுதும்
மண்டு துயரரெனது மார்பை யெலாங் கவ்வுவதே
ஓடி தவறி உடையனவாம் சொற்களெலாம்
கூடி மதியிற் குவிந்திடுமாம் செய்தியெலாம்
நாச கதையை நடுவே நிறுத்திவிட்டு
பேசு மிடை பொருளின் பின்னே மதிபோக்கி
கற்பனையும் வர்ணனையுங் காட்டி கதைவளர்க்கும்
விற்பனர்தஞ் செய்கை விதமு தெரிகிலன்யான்
மேலை கதையுரைக்க வெள்கி குலையுமனம்
காரை கதிரழகின் கற்பனைகள் பாடுகிறேன்
தங்க முருக்கி தழல் கறைத்து தேனாக்கி
எங்கும் பரப்பியதோர் இங்கிதமோ வான்வெளியை
சோதி கவர்ந்து சுடர்மயமாம் விந்தையினை
ஓதி புகழ்வார் உவமையொன்று காண்பாரோ
கண்ணையினி தென்றுரைப்பார் கண்ணுக்கு கண்ணாகி
விண்ணை அளக்கும்மொளி மேம்படுமோர் இன்பமன்றோ
மூல தனிப்பொருளை மோனத்தே சிந்தை செய்யும்
மேலவரும் அஃதோர் விரியுமொளி என்பாரேல்
நல்லொளிக்கு வேறுபொருள் ஞாலமிசை யொ புளதோ
புல்லை நகையுறுத்தி பூவை வியப்பாக்கி
மண்ணை தெளிவாக்கி நீரில் மலர்ச்சி தந்து
விண்ணை வெளியாக்கி விந்தைசெயுஞ் சோதியினை
காலை பொழுதினிலே கண்விழித்து நான்தொழுதேன்
நாலு புறத்துமுயிர் நாதங்க ளோங்கிடவும்
இன்ப களியில் இயங்கும் புவிகண்டேன்
துன்ப கதையின் தொடருரைப்பேன் கேளீரோ

குயிலும் மாடும்

காலை துயிலெழுந்து காலிரண்டு முன்போலே
சோலை கிழுத்திட நான் சொந்தவுணர் வில்லாமே
சோலையினில் வந்துநின்று சுற்றுமுற்று தேடினேன்
கோல பறவைகளின் கூட்டமெலாங் காணவில்லை
மூலையிலோர் மாமரத்தின் மோட்டு கிளியினிலே
நீல குயிலிருந்து நீண்ட கதை சொல்லுவதும்
கீழே யிருந்தோர் கிழக்காளை மாடதனை
ஆழ மதியுடனே ஆவலுற கேட்பதுவும்
கண்டேன் வெகுண்டேன் கலக்கமுற்றேன் நெஞ்சிலனல்
கொண்டேன் குமைந்தேன் குமுறினேன் மெய்வெயர்த்தேன்
கொல்லவாள் வீசல் குறித்தேன் பொய்ப்பறவை
சொல்லுமொழி கேட்டதன்பின் கொல்லுதலே சூழ்ச்சி யென
முன்போல் மறைந்துநின்றேன் மோக பழங்கதையை
பொன்போற் குரலும் புதுமின்போல் வார்த்தைகளும்
கொண்டு குயிலாங்கே கூறுவதாம் நந்தியே
பெண்டிர் மனத்தை பிடித்திழுக்கும் காந்தமே
காமனே மாடா காட்சிதரும் மூர்த்தியே
பூமியிலே மாடுபோற் பொற்புடைய சாதியுண்டோ
மானுடரு தம்முள் வலிமிகுந்த மைந்தர் தமை
மேனுயுறுங் காளையென்று மேம்பா டுறப்புகழ்வார்
காளையர்தம் முள்ளே கனமிகுந்தீர் ஆரியரே
நீள முகமும் நிமிர்ந்திருக்கும் கொம்புகளும்
பஞ்சு பொதிபோல் படர்ந்த திருவடிவும்
மிஞ்சு புறச்சுமையும் வீர திருவாலும்
வான திடிபோல மாவென் றுறுமுவதும்
ஈன பறவை முதுகின்மிசை ஏறிவிட்டால்
வாலை குழைத்து வளைத்தடிக்கும் நேர்மையும் பல்
காலம்நான் கண்டு கடுமோக மெய்திவிட்டேன்
பார வடிவும் பயிலு முடல்வலியும்
தீர நடையும் சிறப்புமே இல்லாத
சல்லி துளிப்பறவை சாதியிலே நான் பிறந்தேன்
அல்லும் பகலுநிதம் அற்ப வயிற்றினுக்கே
காடெல்லாஞ் சுற்றிவந்து காற்றிலே எற்றுண்டு
மூட மனிதர் முடைவயிற்று கோருணவாம்
சின்ன குயிலின் சிறுகுலத்தி லேதோன்றி
என்னபயன் பெற்றேன் என்னை போலோர் பாவியுண்டோ
சேற்றிலே தாமரையும் சீழுடைய மீன் வயிற்றில்
போற்றுமொளி முத்தும் புறப்படுதல் கேட்டிலிரோ
நீச பிறப்பொருவர் நெஞ்சிலே தோன்றிவரும்
ஆசை தடுக்கவல்ல தாகுமோ காமனுக்கே
சாதி பிறப்பு தராதரங்கள் தோன்றிடுமோ
வாதித்து பேச்சை வளர்த்தோர் பயனுமில்லை
மூடமதியாலோ முன்னை தவத்தாலோ
ஆடவர்தம் முள்ளே அடியாளுமை தெரிந்தேன்
மானுடராம் பேய்கள் வயிற்றுக்கு சோறிடவும்
கூனர்தமை ஊர்களிலே கொண்டு விடுவதற்கும்
தெய்வமென நீருதவி செய்தபின்னர் மேனிவிடாய்
எய்தி யிருக்க மிடையினிலே பாவியேன்
வந்துமது காதில் மதுரவிசை பாடுவேன்
வந்து முதுகில் ஒதுங்கி படுத்திருப்பேன்
வாலிலடி பட்டு மனமகிழ்வேன் மா வென்றே
ஒலிடுநும் பேரொலியோ டொன்றுபட கத்துவேன்
மேனியுளே உண்ணிகளை மேவாது கொன்றிடுவேன்
கானிடையே சுற்றி கழனியெலாம் மேய்ந்து நீர்
மிக்கவுண வுண்டுவாய் மென்றசைதான் போடுகையில்
பக்கத்திருந்து பலகதைகள் சொல்லிடுவேன்
காளை யெருதரே காட்டிலுயர் வீரரே
தாளை சரணடைந்தேன் தையலெனை காத்தருள்வீர்
காதலுற்று வாடுகின்றேன் காதலுற்ற செய்தியினை
மாத ருரைத்தல் வழக்கமில்லை என்றறிவேன்
ஆனாலும் என்போல் அபூர்வமாங் காதல் கொண்டால்
தானா வுரைத்தலின்றி சாரும் வழியுளதோ
ஒத்த குலத்தவர்பால் உண்டாகும் வெட்கமெலாம்
இத்தரையில் மேலோர்முன் ஏழையர்க்கு நாணமுண்டோ
தேவர் முன்னே அன்புரைக்க சிந்தை வெட்கங் கொள்வ துண்டோ
காவலர்க்கு தங்குறைகள் காட்டாரோ கீழடியார்
ஆசைதான் வெட்கம் அறியுமோ என்றுபல
நேசவுரை கூறி நெடிதுயிர்த்து பொய்க்குயிலி
பண்டுபோ லேதனது பாழடைந்த பொய்ப்பாட்டை
எண்டிசையும் இன்ப களியேற பாடியதே
காதல்
காதல் போயிற்
சாதல்
முதலியன குயிலின் பாட்டு
பாட்டு முடியும்வரை பாரறியேன் விண்ணறியேன்
கோட்டு பெருமரங்கள் கூடிநின்ற காவறியேன்
தன்னை யறியேன் தனைப்போல் எருதறியேன்
பொன்னை நிகர்த்தகுரல் பொங்கிவரும் இன்பமொன்றே
கண்டேன் படைப்பு கடவுளே நான் முகனே
பண்டே யுலகு படைத்தனைநீ என்கின்றார்
நீரை படைத்து நிலத்தை திரட்டி வைத்தாய்
நீரை பழைய நெருப்பிற் குளிர்வித்தாய்
காற்றைமுன்னே ஊதினாய் காணரிய வானவெளி
தோற்றுவித்தாய் நின்றன் தொழில்வலிமை யாரறிவார்
உள்ளந்தான் கவ்வ ஒருசிறிதுங் கூடாத
கொள்ளை பெரியவுரு கொண்ட பலகோடி
வட்ட வுருளைகள் போல் வானத்தில் அண்டங்கள்
எட்ட நிரப்பியவை எப்போதும் ஓட்டுகின்றாய்
எல்லா மசைவில் இருப்பதற்கே சக்திகளை
பொல்லா பிரமா புகுத்திவிட்டாய் அம்மாவோ
காலம் படைத்தாய் கடப்பதிலா திக்கமைத்தாய்
ஞாலம் பலவினிலும் நாடோ று தாம்பிறந்து
தோன்றி மறையும் தொடர்பா பல அனந்தம்
சான்ற உயிர்கள் சமைத்துவிட்டாய் நான்முகனே
சால மிகப்பெரிய சாதனைகாண் இஃதெல்லாம்
தாலமிசை நின்றன் சமர்த்துரைக்க வல்லார் யார்
ஆனாலும் நின்றன் அதிசயங்கள் யாவினுமே
கானா முதம்படைத்த காட்சிமிக விந்தையடா
காட்டுநெடு வானம் கடலெல்லாம் விந்தையெனில்
பாட்டினைப்போல் ஆச்சரியம் பாரின்மிசை இல்லையடா
பூதங்க ளொத்து புதுமைதரல் விந்தையெனில்
நாதங்கள் நேரும் நயத்தினுக்கு நேராமோ
ஆசைதருங் கோடி அதிசயங்கள் கண்டதிலே
ஓசைதரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ
செத்தை குயில்புரிந்த தெய்விகத்தீம் பாட்டெனுமோர்
வித்தை முடிந்தவுடன் மீட்டுமறி வெய்திநான்
கையினில் வாயெடுத்து காளையின் மேல் வீசினேன்
மெய்யிற் படுமுன் விரைந்துததுதான் ஓடிவிட
வன்ன குயில்மறைய மற்றை பறவையெலாம்
முன்னைப்போற் கொம்பு முனைகளிலே வந்தொலிக்க
நாணமில்லா காதல்கொண்ட நானுஞ் சிறுகுயிலை
வீணிலே தேடியபின் வீடுவந்து சேர்ந்துவிட்டேன்

எண்ணியெண்ணி பார்த்தேன் எதுவும் விளங்கவில்லை
கண்ணிலே நீர்ததும்ப கான குயிலெனக்கே
காதற் கதையுரைத்து நெஞ்சங் கதைத்ததையும்
பேதைநா னங்கு பெரியமயல் கொண்டதையும்
இன்ப கதையின் இடையே தடையாக
புன்பறவை யெல்லாம் புகுந்த வியப்பினையும்
ஒன்றை பொருள்செய்யா உள்ளத்தை காமவனல்
தின்றெனது சித்தம் திகைப்புறவே செய்ததையும்
சொற்றை குரங்கும் தொழுமாடும் வந்தெனக்கு
முற்றும் வயிரிகளா மூண்ட கொடுமையையும்
இத்தனைகோ லத்தினுக்கு யான்வேட்கை தீராமல்
பித்தம் பிடித்த பெரிய கொடுமையையும்
எண்ணியெண்ணி பார்த்தேன் எதுவும் விளங்கவில்லை
கண்ணிரண்டும் மூட கடுந்துயிலில் ஆழ்ந்துவிட்டேன்

நான்காம் நாள்

நான் காம்நாள் என்னை நயவஞ் சனைபுரிந்து
வான்காதல் காட்டி மயக்கி சதிசெய்த
பொய்ம்மை குயிலென்னை போந்திடவே கூறியநாள்
மெய்ம்மை யறிவிழந்தேன் வீட்டிலே மாடமிசை
சி திகைப்புற்றோர் செய்கை யறியாமல்
எத்து குயிலென்னை எய்துவித்த தாழ சியெலாம்
மீட்டும் நினைத்தங்கு வீற்றிருக்கும் போழ்தினிலே
காட்டு திசையினிலென் கண்ணிரண்டும் நாடியவால்
வானத்தே ஆங்கோர் கரும்பறவை வந்திடவும்
யானதனை கண்டே இது நமது பொய்க்குயிலோ
என்று திகைத்தேன் இருந்தொலைக்கே நின்றதனால்
நன்று வடிவம் துலங்கவில்லை நாடுமனம்
ஆங்கதனை விட்டு பிரிவதற்கு மாக வில்லை
ஓங்கு திகைப்பில் உயர்மாடம் விட்டுநான்
வீதியிலே வந்துநின்றேன் மேற்றிசையில் அவ்வுருவம்
சோதி கடலிலே தோன்றுகரும் புள்ளியென
காணுதலும் சற்றே கடுகி யருகே போய்
நாணமிலா பொய்க்குயிலோ என்பதனை நன்கறிவோம்
என்ற கருத்துடனே யான்விரைந்து சென்றிடுங்கால்
நின்ற பறவையுந்தான் நேராக போயினதால்
யான் நின்றால் தான்நிற்கும் சென்றால் தான்செல்லும்
மேனிநன்கு தோன்ற அருகினிலே மேவாது
வானி லதுதான் வழிகாட்டி சென்றிடவும்
யான்நிலத்தே சென்றேன் இறுதியில் முன்புநாம்
கூறியுள்ள மாஞ்சோலை தன்னை குறுகியந்த
ஊரிலா புள்ளுமத னுள்ளே மறைந்ததுவால்
மாஞ்சோலை குள்ளே மதியிலிநான் சென்றாங்கே
ஆஞ்சோதி வெள்ளம் அலையுமொரு கொம்பரின்மேல்
சின்ன கருங்கயிலி செவ்வனே வீற்றிருந்து
பொன்னங்குழலின் புதிய ஒளிதனிலே
பண்டை பொய்க்காதற் பழம்பாட்டை தாம்பாடி
கொண்டிருத்தல் கண்டேன் குமைந்தேன் எதிரேபோய்
நீச குயிலே நிலையறியா பொய்ம்மையே
ஆசை குரங்கினையும் அன்பார் எருதினையும்
எண்ணிநீ பாடும் இழிந்த புலைப்பாட்டை
நண்ணியிங்கு கேட்க நடத்திவந்தாய் போலுமெனை
என்று சினம்பெருகி ஏதேதோ சொல்லுரைத்தேன்
கொன்றுவிட நெஞ்சிற் குறித்தேன் மறுபடியும்
நெஞ்ச மிளகி நிறுத்திவிட்டேன் ஈங்கிதற்குள்
வஞ்ச குயிலி மனத்தை இரும்பாக்கி
கண்ணிலே பொய்ந்நீர் கடகடவென தானூற்ற
பண்ணிசைபோ லின்குரலாற் பரவியது கூறிடுமால்
ஐயனே என்னுயிரின் ஆசையே ஏழையெனை
வையமிசை வைக்க திருவுளமோ மற்றெனையே
கொன்றுவிட சித்தமோ கூறீர் ஒருமொழியில்
அன்றிற் சிறுபறவை ஆண்பிரிய வாழாது
ஞாயிறுதான் வெம்மைசெயில் நாண்மலக்கு வாழ்வுளதோ
தாயிருந்து கொன்றால் சரண்மதலை கொன்றுளதோ
தேவர் சினந்துவிட்டால் சிற்றுயிர்கள் என்னாகும்
ஆவற் பொருளே அரசே என் ஆரியரே
சிந்தையில் நீர் என்மேற் சினங்கொண்டால் மாய்ந்திடுவேன்
வெந்தழலில் வீழ்வேன் விலங்குகளின் வாய்ப்படுவேன்
குற்றம்நீர் என்மேற்கொணர்ந்ததனை யானறிவேன்
குற்றநுமை கூறுகிலேன் குற்றமிலேன் யானம்ம
புன்மை குரங்கை பொதிமாட்டை நான்கண்டு
மென்மையுற காதல் விளையாடி னேன்என்றீர்
என்சொல்கேன் எங்ஙனுய்வேன் ஏதுசெய்கேன் ஐயனே
நின்சொல் மறக்க நெறியில்லை ஆயிடினும்
என்மேல் பிழையில்லை யாரிதனை நம்பிடுவார்
நின்மேல் சுமைமுழுதும் நேராக போட்டுவிட்டேன்
வெவ்விதியே நீ என்னை மேம்பாடுற செய்து
செவ்விதினிங் கென்னை என்றன் வேந்தனொடு சேர்த்திடினும்
அல்லாதென் வார்த்தை அவர்சிறிதும் நம்பாமே
புல்லாக எண்ணி புறக்கணித்து போய்விட நான்
அக்கணத்தே தீயில் அழிந்துவிழ நேரிடினும்
எக்கதிக்கும் ஆளாவேன் என்செய்கேன் வெவ்விதியே

குயில் தனது பூர்வ ஜன கதையுரைத்தல்

தேவனே என்னருமை செல்வமே என்னுயிரே
போவதன் முன்னொன்று புகல்வதனை கேட்டருள் வீர்
முன்னம்ஒருநாள் முடிநீள் பொதியமலை
தன்னருகே நானும் தனியேயோர் சோலைதனில்
தாங்கிளையி லேதோ மனதிலெண்ணி வீற்றிருந்தேன்
ஆங்குவந்தார் ஓர் முனிவர் ஆரோ பெரியரென்று
பாதத்தில் வீழ்ந்து பரவினேன் ஐயரெனை
ஆதரித்து வாழ்த்தி அருளினார் மற்றதன்பின்
வேத முனிவரே மேதினியில் கீழ்ப்பறவை
சாதியிலே நான் பிறந்தேன் சாதி குயில்களைப்போல்
இல்லாமல் என்றன் இயற்கை பிரிவாகி
எல்லாம் மொழியும் எனக்கு விளங்குவதேன்
மானுடர்போல் சித்தநிலை வாயித்திருக்குஞ் செய்தியேன்
யானுணர சொல்வீர் என வணங்கி கேட்கையிலே
கூறுகின்றாய் ஐயர் குயிலே கேள் முற்பிறப்பில்
வீறுடைய வெந்தொழிலார் வேடர் குலத்தலைவன்
வீர முருகனென்னும் வேடன் மகளாக
சேர வளநாட்டில் தென்புறத்தே ஓர்மலையில்
வந்து பிறந்து வள்ர்ந்தாய் நீ நல்லிளமை
முந்து மழகினிலே மூன்றுதமிழ் நாட்டில்
யாரும் நினக்கோர் இணையில்லை என்றிடவே
சீருயர நின்றாய் செழுங்கான வேடரிலுன்
மாமன் மகனொருவன் மாடனெனும் பேர்கொண்டான்
காமன் கணைக்கிரையாய் நின்னழகை கண்டுருகி
நின்னை மணக்க நெடுநாள் விரும்பி அவன்
பொன்னை மலரை புதுத்தேனை கொண்டுனக்கு
நித்தம் கொடுத்து நினைவெல்லாம் நீயாக
சித்தம் வருந்துகையில் தேமொழியே நீயவனை
மாலையிட வாக்களித்தாய் மையலினா லில்லை அவன்
சால வருந்தல் சகிக்காமல் சொல்லிவிட்டாய்
ஆயிழையே நின்றன் அழகின் பெருங்கீர்த்தி
தேயமெங்கு தான்பரவ தேனமலையின் சார்பினிலோர்
வேடர்கோன் செல்வமும் நல் வீரமுமே தானுடையான்
நாடனைத்தும் அஞ்சி நடுங்குஞ் செயலுடையான்
மொட்டை புலியனுந்தன் முத்த மகனான
நெட்டை குரங்கனுக்கு நேரான பெண்வேண்டி
நின்னை மணம் புரிய நிச்சயித்து நின்னப்பன்
தன்னை யணுகி நின்னேர் தையலையென் பிள்ளைக்கு
கண்ணாலஞ் செய்யும் கருத்துடையேன் என்றிடலும்
எண்ணா பெருமகிழ்ச்சி எய்தியே நின்தந்தை
ஆங்கே உடம்பட்டான் ஆறிரண்டு நாட்களிலே
பாங்கா மணம்புரி தாமுறுதி பண்ணிவிட்டார்
பன்னிரண்டு நாட்களிலே பாவையுனை தேன்மலையில்
அன்னியன்கொண் டேகிடுவான் என்னும் அதுகேட்டு
மாடன் மனம்புகைந்து மற்றைநாள் உன்னை வந்து
நாடி சினத்துடனே நானா மொழிகூற
நீயும் அவனிடத்தே நீண்ட கருணையினால்
காயுஞ் சினந்தவிர்ப்பாய் மாடா கடுமையினால்
நெட்டை குரங்கனுக்கு பெண்டாக நேர்ந்தாலும்
கட்டு படிஅவர்தங் காவலிற்போய் வாழ்ந்தாலும்
மாதமொரு மூன்றில் மருமம் சிலவெய்து
பேதம் விளைவித்து பின்னிங்கே வந்திடுவேன்
தாலிதனை மீட்டுமவர் தங்களிடமே கொடுத்து
நாலிரண்டு மாதத்தே நாயகனா நின்றனையே
பெற்றிடுவேன் நின்னிடத்தே பேச்சு தவறுவனோ
மற்றிதனை நம்பிடுவாய் மாடப்பா என்றுரைத்தாய்
காதலினா லில்லை கருணையினால் இஃதுரைத்தாய்
மாதரசாய் வேடன் மகளான முற்பிறப்பில்
சின்ன குயிலியென்று செப்பிடுவார் நின்நாமம்
பின்னர சிலதினங்கள் சென்றதன்பின் பெண்குயிலி
நின்னொத்த தோழியரும் நீயுமொரு மாலையிலே
மின்னற் கொடிகள் விளையாடு தல்போலே
காட்டி னிடையே களித்தாடி நிற்கையிலே
வேட்டை கெனவந்தான் வெல்வேந்தன் சேரமான்
தன்னருமை மைந்தன் தனியே துணைபிரிந்து
மன்னவன்றன் மைந்தனொரு மானை தொடர்ந்துவர
தோழியரும் நீயும் தொகுத்துநின்றே ஆடுவதை
வாழியவன் கண்டுவிட்டான் மையல் கரைகடந்து
நின்னை தனக்காக நிச்சயித்தான் மாது நீ
மன்னவனை கண்டவுடன் மாமோகங் கொண்டுவிட்டாய்
நின்னையவன் நோக்கினான் நீயவனை நோக்கி நின்றாய்
அன்னதொரு நோக்கினிலே ஆவி கலந்துவிட்டீர்
தோழியரும் வேந்தன் சுடர்க்கோல தான்கண்டே
ஆழியரசன் அரும்புதல்வன் போலு மென்றே
அஞ்சி மறைத்து விட்டார் ஆங்கவனும் நின்னிடத்தே
வஞ்சி தலைவன் மகன்யான் எனவுரைத்து
வேடர் தவமகளே விந்தை யழகுடையாய்
ஆடவனா தோன்றி யதன்பயனை இன்று பெற்றேன்
கண்டதுமே நின்மிசைநான் காதல்கொண்டேன் என்றிசைக்க
மண்டு பெருங்காதல் மனத்தடக்கி நீ மொழிவாய்
ஐயனே உங்கள் அரமனையில் ஐந்நூறு
தையலருண் டாம் அழகில் தன்னிகரில் லாதவராம்
கல்வி தெரிந்தவராம் கல்லுருக பாடுவராம்
அன்னவரை சேர்ந்தே நீர் அன்புடனே வாழ்ந்திருப்பீர்
மன்னவரே வேண்டேன் மலைக்குறவர் தம்மகள்யான்
கொல்லு மடற்சிங்கம் குழிமுயலை வேட்பதுண்டோ
வெல்லுதிறல்மாவேந்தர் வேடருள்ளோ பெண்ணெடுப்பார்
பத்தினியா வாழ்வதல்லாம் பார்வேந்தர் தாமெனினும்
நத்தி விரைமகளா நாங்கள்குடி போவதில்லை
பொன்னடியை போற்றுகின்றேன் போய் வருவீர் தோழியரும்
என்னைவிட்டு போயினரே என்செய்கேன் என்று நீ
நெஞ்சங் கலக்கமெய்தி நிற்கையிலே வேந்தன் மகன்
மிஞ்சுநின்றன் காதல் விழிக்குறிப்பி னாலறிந்தே
பக்கத்தில் வந்து பளிச்சென் றுனது கன்னஞ்
செக்க சிவக்க முத்தமிட்டான் சினங்காட்டி
நீ விலகி சென்றாய் நெறியேது சாமியர்க்கே
தாவி நின்னைவந்து தழுவினான் மார்பிறுக
நின்னையன்றி ஓர் பெண் நிலத்திலுண்டோ என்றனுக்கே
பொன்னை ஒளிர்மணியே புத்தமுதே இன்பமே
நீயே மனையாட்டி
நீயே துணை எனக்கு
நின்னையன்றி பெண்ணை நினைப்பேனொ வீணிலே
என்னை நீ ஐயுறுதல் ஏதுக்காம் இப்பொழுதே
நின்மனைக்கு சென்றிடுவோம் நின்வீட்டி லுள்ளோர்பால்
என்மனதை சொல்வேன் எனதுநிரை யுரைப்பேன்
வேத நெறியில் விவாகமுனை செய்துகொள்வேன்
மாதரசே என்று வல கைதட்டி வாக்களித்தான்
பூரிப்பு கொண்டாய் புளகம்நீ எய்திவிட்டாய்
வாரி பெருந்திரைபோல் வந்த மகிழ்ச்சியிலே
நாண தவிர்த்தாய் நனவே தவிர்ந்தவளாய்
காண தெவிட்டாதோர் இன்ப கனவிலே
சேர்ந்துவிட்டாய் மன்னன்றன் திண்டோ ளை நீயுவகை
ஆர்ந்து தழுவி அவனிதழில் தேன்பருக
சிந்தை கொண்டாய் வேந்தன் மகன் தேனில் விழும் வண்டினைப்போல்
விந்தையுறு காந்தமிசை வீழும் இரும்பினைப்போல்
ஆவலுடன் நின்னை யறக்தழுவி ஆங்குனது
கோவை யிதழ்பருகி கொண்டிருக்கும் வேளையிலே
சற்றுமுன்னே ஊரினின்று தான்வ திறங்கியவன்
மற்றுநீ வீட்டைவிட்டு மாதருடன் காட்டினிலே
கூத்தினுக்கு சென்றதனை கேட்டு குதூகலமாய்
ஆத்திரந்தான் மிஞ்சிநின்னை ஆங்கெய்தி காணவந்தோன்
நெட்டை குரங்கன் நெருங்கிவந்து பார்த்து விட்டான்
பட்ட பகலிலே பாவிமகள் செய்தியை பார்
கண்ணாலங் கூடஇன்னுங் கட்டி முடியவில்லை
மண்ணாக்கி விட்டாள் என்மானந்தொலைத்துவிட்டாள்
நிச்சய தாம்பூலம் நிலையா நட ந்திருக்க
பிச்சை சிறுக்கி செய்த பேதகத்தை பார்த்தாயோ
என்று மனதில் எழுகின்ற தீயுடனே
நின்று கலங்கினான் செட்டை குரங்கனங்கே
மாப்பிள்ளைதான் ஊருக்கு வந்ததையும் பெண்குயிலி
தோப்பிலே தானுந்தன் தோழிகளு மாச்சென்று
பாடி விளையாடும் பண்புகே டேகுரங்கன்
ஓடி யிருப்பதோர் உண்மையையும் மாடனிடம்
யாரோ உரைத்துவிட்டார் ஈரிரண்டு பாய்ச்சலிலே
நீரோடும் மேனி நெருப்போடுங் கண்ணுடனே
மாடனங்கு வந்துநின்றான் மற்றிதனை தேன்மலையின்
வேடர்கோன் மைந்தன் விழிகொண்டு பார்க்கவில்லை
நெட்டை குரங்கனங்கு நீண்ட மரம்போல
எட்டிநிற்குஞ் செய்தி இவன்பார்க்க நேரமில்லை
அன்னியனை பெண்குயிலி ஆர்ந்திருக்குஞ் செய்தியொன்று
தன்னையே இவ்விருவர் தாங்கண்டார் வேறறியார்
மாடனதை தான்கண்டான் மற்றவனும் அங்ஙனமே
மாடன் வெறிகொண்டான் மற்றுவனும் அவ்வாறே
காவலன்றன் மைந்தனு கன்னிகையும் தானுமங்கு
தேவசுகங் கொண்டு விழியே திறக்கவில்லை
ஆவி கலப்பின் அமுத சுகந்தனிலே
மேவியங்கு மூடி யிருந்த விழிநான்கு
ஆங்கவற்றை கண்டமையால் ஆவியிலே தீப்பற்றி
ஓங்கும் பொறிகள் உதிர்க்கும் விழிநான்கு
மாடனுந்தன் வாளுருவி மன்னவனை கொன்றிடவே
ஓடிவந்தான் நெட்டை குரங்கனும் வாளோங்கி வந்தான்
வெட்டிரண்டு வீழ்ந்தனகாண் வேந்தன் முதுகினிலே
சட்டெனவே மன்னவனும் தான்திரும்பி வாளுருவி
வீச்சிரண்டில் ஆங்கவரை வீழ்த்தினான் வீழ்ந்தவர்தாம்
பேச்சிழந்தே அங்கு பிணமா கிடந்துவிட்டார்
மன்னவனும் சோர்வெய்தி மண்மேல் விழுந்து விட்டான்
பின்னவனை நீயும் பெருந்துயர்கொண் டேமடியில்
வாரி யெடுத்துவைத்து வாய்புலம்ப கண்ணிரண்டும்
மாரி பொழிய மனமிழந்து நிற்கையிலே
கண்ணை விழித்துனது காவலனும் கூறுகின்றான்
பெண்ணே இனிநான் பிழைத்திடேன் சில்கணத்தே
ஆவி துறப்பேன் அழுதோர் பயனில்லை
சாவிலே துன்பமில்லை தையலே இன்னமும் நாம்
பூமியிலே தோன்றிடுவோம் பொன்னே நினைக்கண்டு
காமுறுவேன் நின்னை கலந்தினிது வாழ்ந்திடுவேன்
இன்னும் பிறவியுண்டு மாதரசே இன்பமுண்டு
நின்னுடன் வாழ்வினினி நேரும் பிறப்பினிலே
என்று சொல்லி கண்மூடி இன்பமுறு புன்னகைதான்
நின்று முகத்தே நிலவுதர மாண்டனன்காண்
மாடனிங்கு செய்ததோர் மாயத்தால் இப்பொழுது
பீடையுற புள்வடிவம் பேதையுன கெய்தியது
வாழி நின்றனன் மன்னவனும் தொண்டை வளநாட்டில்
ஆழி கரையின் அருகேயோர் பட்டினத்தில்
மானிடனா தோன்றி வளருகின்றான் நின்னையொர
கானிடத்தே காண்பான் கனிந்துநீ பாடும்நல்ல
பாட்டினைத்தான் கேட்பான் பழவினையின் கட்டினால்
மீட்டு நின்மேற் காதல்கொள்வான் மென்குயிலே என்றந
தென் பொதியை மாமுனிவர் செப்பினார் சாமீ
குயிலுருவங் கொண்டேன் யான் கோமானோ மென்மை
பயிலு மனிதவுரு பற்றிநின்றான் எம்முள்ளே
காதலிசை தாலுங் கடிமணந்தான் கூடாதாம்
சாதற் பொழுதிலே தார்வேந்தன் கூறியசொல்
பொய்யாய் முடியாயதோ என்றிசைத்தேன் புன்னகையில்
ஐயர் உரைப்பார் அடி பேதாய் இப்பிறவி
தன்னிலும் நீ விந்திகிரி சார்பினிலோர் வேடனுக்கு
கன்னியென தான் பிறந்தாய் கர்ம வசத்தினால்
மாடன் குரங்கன் இருவருமே வன்பேயா
காடுமலை சுற்றி வருகையிலே கண்டுகொண்டார்
நின்னையங்கே இப்பிறப்பில் நீயும் பழமைபோல்
மன்னனையே சேர்வையென்று தாஞ்சூழ்ந்து மற்றவரும்
நின்னை குயிலாக்கிநீ செல்லு திக்கிலெலாம்
நின்னுடனே சுற்றுகின்றார் நீயிதனை தேர்கிலையோ
என்றார் விதியே இறந்தவர்தாம் வாழ்வாரை
நின்று துயருறுத்தல் நீதியோ பேய்களெனை
பேதை படுத்தி பிறப்பை மறப்புறுத்தி
வாதை படுத்தி வருமாயில் யானெனது
காதலனை காணுங்கால் காய்சினத்தால் ஏதேனும்
தீதிழைத்தால் என்செய்வேன் தேவரே மற்றிதற் கோர்
மாற்றிலை யோ என்று மறுகி நான் கேட்கையிலே
தேற்றமுறு மாமுனிவர் செப்பு கின்றார் பெண்குயிலே
தொண்டைவள நாட்டிலோர் சோலையிலே வேந்தன்மகன்
கண்டுனது பாட்டில் கருத்திளகி காதல்கொண்டு
நேசம் மிகுதியுற்று நிற்கையிலே பேயிரண்டும்
மோசம் மிகுந்த முழுமா செய்கைபல
செய்துபல பொய்த்தோற்றங் காட்டி திறல் வேந்தன்
ஐயமுற செய்துவிடும் ஆங்கவனும் நின்றனையே
வஞ்சகியென் றெண்ணி மதிமருண்டு நின்மீது
வெஞ்சினந்தான் எய்திநினை விட்டுவிட நிச்சயிப்பான்
பிந்தி விளைவதெல்லாம் பின்னே நீ கண்டு கொள்வாய்
சந்தி ஜபம் செய்யுஞ் சமயமாய்விட்ட தென்றே
காற்றில் மறைந்து சென்றார் மாமுனிவர் காதலரே
மாற்றி உரைக்கவில்லை மாமுனிவர் சொன்னதெல்லாம்
அப்படியே சொல்லிவிட்டேன் ஐயா திருவுளத்தில்
எப்படிநீர் கொள்வீரோ யானறியேன் ஆரியரே
காத லருள்புரிவீர் காதலில்லை யென்றிடிலோ
சாத லருளி தமது கையால் கொன்றிடுவீர்
என்று குயிலும் எனதுகையில் வீழ்ந்ததுகாண்
கொன்றுவிட மனந்தான் கொள்ளுமோ பெண்ணென்றால்
பேயு மிரங்காதோ பேய்கள் இரக்கமின்றி
மாயமிழை தாலதனை மானிடனுங் கொள்ளுவதோ
காதலிலே ஐயம் கலந்தாலும் நிற்பதுண்டோ
மாதரன்பு கூறில் மனமிளகார் இங்குளரோ
அன்புடனே யானும் அருங்குயிலை கைக்கொண்டு
முன்புவைத்து நோக்கிபின் மூண்டுவதும் இன்பவெறி
கொண்டதனை முத்தமிட்டேன் கோகிலத்தை காணவில்லை
விண்டுரைக்க மாட்டாத விந்தையடா
ஆசை கடலின் அமுதமடா அற்புதத்தின்
தேசமடா பெண்மைதான் தெய்விகமாம் காட்சியடா
பெண்ணொருத்தி அங்குநின்றாள் பேருவகை கொண்டு தான்
கண்ணெடுக்காதென்னை கணப்பொழுது நோக்கினாள்
சற்றே தலைகுனிந்தாள் சாமீ இவளழகை
எற்றே தமிழில் இசைத்திடுவேன் கண்ணிரண்டும்
ஆளை விழுங்கும் அதிசயத்தை கூறுவனோ
மீன விழியில் மிதந்த கவிதையெலாம்
சொல்லில் அகப்படுமோ தூயசுடர் முத்தையொப்பாம்
பல்லில் கனியிதழில் பாய்ந்த நிலவினை யான்
என்றும் மறத்தல் இயலுமோ பாரின்மிசை
நின்றதொருமின் கொடிபோல் நேர்ந்தமனி பெண்ணரசின்
மேனி நலத்தினையும் வெட்டினையுங் கட்டினையும்
தேனி லினியாள் திருத்த நிலையினையும்
மற்றவர்க்கு சொல்ல வசமாமோ ஓர் வார்த்தை
கற்றவர்க்கு சொல்வேன் கவிதை கனிபிழிந்த
சாற்றினிலே பண்கூ தெனுமிவற்றின் சாரமெலாம்
ஏற்றி அதனோடே இன்னமுதை தான்கலந்து
காதல் வெயிலிலே காயவைத்த கட்டியினால்
மாதவளின் மேனி வகுத்தான் பிரமனென்பேன்
பெண்ணவளை கண்டு பெருங்களிகொண் டாங்ஙனே
நண்ணி தழுவி நறுங்கள் ளிதழினையே
முத்தமிட்டு மோக
சித்தம் மயங்கி சிலபோழ் திருந்த பின்னே
பக்க திருந்தமணி பாவையுடன் சோலையெலாம்
ஒக்க மறைந்திடலும் ஓஹோ எனக்கதறி
வீழ்ந்தேன் பிறகு விழிதிறந்து பார்க்கையிலே
சூழ்ந்திருக்கும் பண்டை சுவடி எழுதுகோல்
பத்திரிகை கூட்டம் பழம்பாய் வரிசையெல்லாம்
ஒத்திருக்க நாம் வீட்டில் உள்ளோம் எனவுணர்ந்தேன்
சோலை குயில் காதல் சொன்னகதை யத்தனையும்
மாலை யழகின் மயக்கத்தால் உள்ளத்தே
தோன்றியதோர் கற்கனையின் சூழ்ச்சியென்றே கண்டு கொண்டேன்
ஆன்ற தமிழ புலவீர் கற்பனையே யானாலும்
வேதாந்த மாக விரித்து பொருளுரைக்க
யாதானுஞ் சற்றே இடமிருந்தாற் கூறீரோ










சி சுப்ரமணிய பாரதியார் பாடல்கள்
தேசிய கீதங்கள்














சி சுப்ரமணிய பாரதியார் பாடல்கள்
தேசிய கீதங்கள்
வந்தே மாதரம்
ராகம் நாதநாமக்கிரியை தாளம் ஆதி
பல்லவி
வந்தே மாதரம் என்போம் எங்கள்
மாநில தாயை வணங்குதும் என்போம் வந்தே
சரணங்கள்
ஜாதி மதங்களை பாரோம் உயர்
ஜன்மம்இ தேசத்தில் எய்தின ராயின்
வேதிய ராயினும் ஒன்றே அன்றி
வேறு குலத்தின ராயினும் ஒன்றே வந்தே
ஈன பறையர்க ளேனும் அவர்
எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ
சீன தராய்விடு வாரோ பிற
தேசத்தர் போற்பல தீங்கிழை பாரோ வந்தே
ஆயிரம் உண்டிங்கு ஜாதி எனில்
அன்னியர் வந்து புகல்என்ன நீதி ஓர்
தாயின் வயிற்றில் பிறந்தோர் தம்முள்
சண்டைசெய் தாலும் சகோதரர் அன்றோ வந்தே
ஒன்று பட்டால் உண்டு வாழ்வே நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும் இந்த
ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும் வந்தே
எப்பதம் வாய்த்திடு மேனும் நம்மில்
யாவர்க்கும் அந்த நிலைபொது வாகும்
முப்பது கோடியும் வாழ்வோம் வீழில்
முப்பது கோடி முழுமையும் வீழ்வோம் வந்தே
புல்லடி மைத்தொழில் பேணி பண்டு
போயின நாட்களு கினிமனம் நாணி
தொல்லை இகழ்ச்சிகள் தீர இந
தொண்டு நிலைமையை தூவென்று தள்ளி வந்தே

ஜய வந்தே மாதரம்
ராகம் ஹிந்துஸ்தானி பியா தாளம் ஆதி
பல்லவி
வந்தே மாதரம் ஜய
வந்தே மாதரம்
சரணங்கள்
ஜயஜய பாரத
ஜயஜய பாரத
ஆரிய பூமியில் நாரிய ரும் நர
சூரிய ரும்சொலும் வீரிய வாசகம் வந்தே
நொந்தே போயினும் வெந்தே மாயினும்
நந்தே சத்தர்உ வந்தே சொல்வது
ஒன்றாய் நின்றினி வென்றா யினுமுயிர்
சென்றா யினும்வலி குன்றா தோதுவம் வந்தே

நாட்டு வணக்கம்
ராகம் காம்போதி தாளம் ஆதி
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே இதை
வந்தனை கூறி மனத்தில் இருத்திஎன்
வாயுற வாழ்த்தேனோ இதை
வந்தே மாதரம்
என்று வணங்கேனோ
இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்து அருள்
ஈந்ததும் இந்நாடே எங்கள்
அன்னையர் தோன்றி மழலைகள் கூறி
அறிந்ததும் இந்நாடே அவர்
கன்னிய ராகி நிலவினி லாடி
களித்ததும் இந்நாடே தங்கள்
பொன்னுடல் இன்புற நீர்விளை யாடி இல்
போந்ததும் இந்நாடே இதை
வந்தே மாதரம்
என்று வணங்கேனோ
மங்கைய ராயவர் இல்லறம் நன்கு
வளர்த்ததும் இந்நாடே அவர்
தங்க மதலைகள் ஈன்றமு தூட்டி
தழுவிய திந்நாடே மக்கள்
துங்கம் உயர்ந்து வளர்கென கோயில்கள்
சூழ்ந்ததும் இந்நாடே பின்னர்
அங்கவர் மாய அவருடற் பூந்துகள்
ஆர்ந்ததும் இந்நாடே இதை
வந்தே மாதரம்
என்று வணங்கேனோ

பாரத நாடு
ராகம் இந்துஸ்தானி தாளம் தோடி
பல்லவி
பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள்
பாரத நாடு
சரணங்கள்
ஞானத்தி லேபர மோனத்திலே உயர்
மானத்தி லேஅன்ன தானத்திலே
கானத்தி லேஅமு தாக நிறைந்த
கவிதையி லேஉயர் நாடு இந்த பாரு
தீரத்தி லேபடை வீரத்திலே நெஞ்சில்
ஈரத்தி லேஉப காரத்திலே
சாரத்தி லேமிகு சாத்திரங் கண்டு
தருவதி லேஉயர் நாடு இந்த பாரு
நன்மையி லேஉடல் வன்மையிலே செல்வ
பன்மையி லேமற தன்மையிலே
பொன்மயி லொத்திடும் மாதர்தம் கற்பின்
புகழினி லேஉயர் நாடு இந்த பாரு
ஆக்கத்தி லேதொழில் ஊக்கத்திலே புய
வீக்கத்தி லேஉயர் நோக்கத்திலே
காக்க திறல்கொண்ட மல்லர்தம் சேனை
கடலினி லேஉயர் நாடு இந்த பாரு
வண்மையி லேஉள திண்மையிலே மன
தண்மையி லேமதி நுண்மையிலே
உண்மையி லேதவ றாத புலவர்
உணர்வினி லேஉயர் நாடு இந்த பாரு
யாகத்தி லேதவ வேகத்திலே தனி
யோகத்தி லேபல போகத்திலே
ஆகத்தி லேதெய்வ பக்திகொண் டார்தம்
அருளினி லேஉயர் நாடு இந்த பாரு
ஆற்றினி லேசுனை யூற்றினிலே தென்றல்
காற்றினி லேமலை பேற்றினிலே
ஏற்றினி லேபயன் ஈந்திடுங் காலி
இனத்தினி லேஉயர் நாடு இந்த பாரு
தோட்டத்தி லேமர கூட்டத்திலே கனி
ஈட்டத்தி லேபயிர் ஊட்டத்திலே
தேட்டத்தி லேஅடங் காத நதியின்
சிறப்பினி லேஉயர் நாடு இந்த பாரு

பாரத தேசம்
ராகம் புன்னாகவராளி
பல்லவி
பாரத தேசமென்று பெயர்சொல்லு வார் மிடி
பயங்கொல்லு வார்துயர பகைவெல்லு வார்
சரணங்கள்
வெள்ளி பனிமலையின் மீதுலவு வோம் அடி
மேலை கடல்முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளி தலமனைத்தும் கோயில் செய்கு வோம் எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்
சிங்கள தீவினுக்கோர் பாலம் அமைப்போம்
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர்செய்குவோம் பாரத
வெட்டு கனிகள் செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடை தெடுப்போம்
எட்டு திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம் பாரத
முத்து குளிப்பதொரு தென் கடலிலே
மொய்த்து வணிகர்பல நாட்டினர்வந்தே
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்தே
நம்மருள் வேண்டுவது மேற்க ரையிலே பாரத
சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேர நன்னாட்டிளம் பெண்களுட னே
சுந்தர தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம் பாரத
கங்கை நதிப்புறத்து கோதுமை பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம் பாரத
காசி நகர்ப்புலவர் பேசும் உரை தான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்
ராசபு தானத்து வீரர் தமக்கு
நல்லியற் கன்னடத்து தங்கம் அளிப்போம் பாரத
பட்டினில் ஆடையும் பஞ்சினில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்
கட்டி திரவியங்கள் கொண்டுவரு வார்
காசினி வணிகருக்கு அவை கொடுப்போம் பாரத
ஆயுதம் செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆலைகள் வைப்போம் கல்வி சாலைகள்
ஒயுதல்செய் யோம்தலை சாயுதல் செய்யோம்
உண்மைகள்சொல் வோம்பல வண்மைகள் செய்வோம் பாரத
குடைகள்செய் வோம்உழு படைகள் செய் வோம்
கோணிகள்செய் வோம் இரும் பாணிகள் செய்வோம்
நடையும் பறப்புமுணர் வண்டிகள் செய்வோம்
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம் பாரத
மந்திரம்கற் போம்வினை தந்திரம்கற் போம்
வானையள போம்கடல் மீனையளப்போம்
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்
சந்திதெரு பெருக்கும் சாத்திரம் கற்போம் பாரத
காவியம் செய்வோம் நல்ல காடு வளர்ப்போம்
கலைவளர போம் கொல்ல ருலைவளர
ஓவியம்செய் வோம் நல்லஊசிகள் செய்
உலக தொழிலனைத்து முவந்து செய்வோம் பாரத
சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மென்போம்
நீதிநெறி யினின்று பிறர்க்கு தவும்
நேர்மையர் மேலவர் கீழவர் மற்றோர் பாரத
எங்கள் நாடு
ராகம் பூபாளம்
மன்னும் இமயமலை யெங்கள் மலையே
மாநில மீதிது போற்பிறி திலையே
இன்னறு நீர்க்கங்கை யாறெங்கள் யாறே
இங்கிதன் மாண்பிற் கெதிரெது வேறே
பன்னரும் உபநிடநூ லெங்கள் நூலே
பார் மிசை யேதொரு நூல்இது போலே
பொன்னொளிர் பாரதநா டெங்கள் நாடே
போற்றுவம் இஃதை எமக்கில்லை ஈடே
மாரத வீரர் மலிந்தநன் னாடு
மாமுனி வோர்பலர் வாழ்ந்த பொன்னாடு
நாரத கான நலந்திகழ் நாடு
நல்லன யாவையும் நாடுறு நாடு
பூரண ஞானம் பொலிந்தநன் னாடு
புத்தர் பிரானருள் பொங்கிய நாடு
பாரத நாடு பழம்பெரு நாடே
பாடுவம் இஃதை எமக்கிலை ஈடே
இன்னல்வ துற்றிடும் போததற் கஞ்சோம்
ஏழைய ராகிஇனி மண்ணில் துஞ்சோம்
தன்னலம் பேணி இழிதொழில்கற் போம்
தாய்த்திரு நாடெனில் இனிக்கையை விரியோம்
கன்னலும் தேனும் கனியும் இன் பாலும்
கதலியும் செந்நெலும் நல்கும் காலும்
உன்னத ஆரிய நாடெங்கள் நாடே
ஓதுவம் இஃதை எமக்கில்லை ஈடே
ஜயபாரத
சிறந்து நின்ற சிந்தை யோடு
தேயம் நூறு வென்றிவள்
மறந்த விர்ந நாடர் வந்து
வாழி சொன்ன போழ்தினும்
இறந்து மாண்பு தீர மிக்க
ஏழ்மை கொண்ட போழ்தினும்
அறந்த விர்க்கி லாது நிற்கும்
அன்னை வெற்றி கொள்கவே
நூறு கோடி நூல்கள் செய்து
நூறு தேய வாணர்கள்
தேறும் உண்மை கொள்ள இங்கு
தேடி வந்த நாளினும்
மாறு கொண்டு கல்லி தேய
வண்ணி தீர்ந்த நாளினும்
ஈறு நிற்கும் உண்மை யொன்று
இறைஞ்சி நிற்பவள் வாழ்கவே
வில்லர் வாழ்வு குன்றி ஓய
வீர வாளும் மாயவே
வெல்லுஞானம் விஞ்சி யோர்செய்
மெய்மை நூல்கள் தேயவும்
சொல்லும் இவ் வனைத்தும் வேறு
சூழ நன்மை யுந்தர
வல்ல நூல் கெடாது காப்பள்
வாழி அன்னை வாழியே
தேவ ருண்ணும் நன்ம ருந்து
சேர்ந்த கும்பம் என்னவும்
மேவுவார் கடற்கண் உள்ள
வெள்ள நீரை ஒப்பவும்
பாவ நெஞ்சினோர் நிதம்
பறித்தல் செய்வ ராயினும்
ஓவி லாதசெல்வம் இன்னும்
ஓங்கும் அன்னை வாழ்கவே
இதந்தரும் தொழில்கள் செய்து
இரும்பு விக்கு நல்கினள்
பதந்தரற் குரிய வாய
பன்ம தங்கள் நாட்டினள்
விதம்பெறும்பல் நாடி னர்க்கு
வேறொ ருண்மை தோற்றவே
சுதந்திரத்தி லாசை இன்று
தோற்றி னாள்மன் வாழ்கவே
பாரத மாதா
தான தனந்தன
தானன தானா னே
முன்னை இலங்கை அரக்கர் அழிய
முடித்தவில் யாருடை வில் எங்கள்
அன்னை பயங்கரி பாரத தேவி நல்
ஆரிய ராணியின் வில்
இந்திர சித்தன் இரண்டு துண்டாக
எடுத்தவில் யாருடைய வில் எங்கள்
மந்திர தெய்வம் பாரத ராணி
வயிரவி தன்னுடைய வில்
ஒன்று பரம்பொருள் நாம்அதன் மக்கள்
உலகின்ப கேணி என்றே மிக
நன்று பல்வேதம் வரைந்தகை பாரத
நாயகி தன்திரு கை
சித்த மயமிவ் உலகம் உறுதி நம்
சித்தத்தில் ஓங்கி விட்டால் துன்பம்
அத்தனை யும்வெல்ல லாமென்று சொன்னசொல்
ஆரிய ராணியின் சொல்
சகுந்தலை பெற்றதோர் பிள்ளைசிங் கத்தினை
தட்டி விளையாடி நன்று
உகந்ததோர் பிள்ளைமுன் பாரத ராணி
ஒளியுற பெற்ற பிள்ளை
காண்டிவம் ஏந்தி உலகினை வென்றது
கல்லொத்த தோள்எவர் தோள் எம்மை
ஆண்டருள் செய்பவள் பெற்று வளர்ப்பவள்
ஆரிய தேவியின் தோள்
சாகும் பொழுதில் இருசெவி குண்டலம்
தந்த தெவர் கொடைக்கை சுவை
பாகு மொழியிற் புலவர்கள் போற்றிடும்
பாரத ராணியின் கை
போர்க்கள தேபர ஞானமெ கீதை
புகன்ற தெவருடை வாய் பகை
தீர்க்க திறந்தரு பேரினள் பாரத
தேவிமலர் திரு வாய்
தந்தை இனிதுற தான் அர சாட்சியும்
தையலர் தம்முறவும் இனி
இந்த உலகில் விரும்புகி லேன் என்றது
எம் அனை செய்த உள்ளம்
அன்பு சிவம்உல கத்துயர் யாவையும்
அன்பினிற் போகும் என்றே இங்கு
முன்பு மொழிந்துல காண்டதோர் புத்தன்
மொழி எங்கள் அன்னை
மிதிலை எரிந்திட வேத பொருளை
வினவும் சனகன் மதி தன்
மதியினிற் கொண்டதை நின்று முடிப்பது
வல்ல நம் அன்னை மதி
தெய்வீக சாகுந்தல மெனும் நாடகம்
செய்த தெவர் கவிதை அயன்
செய்வ தனைத்தின் குறிப்புணர் பாரத
தேவி அரு கவிதை

எங்கள் தாய்
காவடி சிந்தில் ஆறுமுக வடிவேலவனே என்ற மெட்டு
தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு
சூழ்கலை வாணர்களும் இவள்
என்று பிறந்தவள் என்றுண ராத
இயல்பின ளாம் எங்கள் தாய்
யாரும் வகுத்தற் கரிய பிராயத்த
ளாயினு மேயங்கள் தாய் இந்த
பாருள்எ நாளுமோர் கன்னிகை என்ன
பயின்றிடு வாள்எங்கள் தாய்
முப்பதுகோடி முகமுடை யாள்உயிர்
மொய்ம்புற வொன்றுடையாள் இவள்
செப்பு மொழிபதி னெட்டுடை யாள் எனிற்
சிந்தனை ஒன்றுடையாள்
நாவினில் வேத முடையவள் கையில்
நலந்திகழ் வாளுடை யாள் தனை
மேவினர கின்னருள் செய்பவள் தீயரை
வீட்டிடு தோளுடையாள்
அறுபது கோடி தடக்கைக ளாலும்
அறங்கள் நடத்துவள் தாய் தனை
செறுவது நாடி வருபவ ரைத்துகள்
செய்து கிடத்துவள் தாய்
பூமி யி னும்பொறை மிக்குடை யாள்பெறும்
புண்ணிய நெஞ்சினள் தாய் எனில்
தோமிழை பார்முன் நின்றிடுங் காற்கொடு
துர்க்கை யனையவள் தாய்
கற்றை சடைமதி வைத்த துறவியை
கைதொழு வாள்எங்கள் தாய் கையில்
ஒற்றை திகிரிகொண் டேழுல காளும்
ஒருவனை யுந்தொழு வாள்
யோகத்தி லேநிக ரற்றவள் உண்மையும்
ஒன்றென நன்றறி வாள் உயர்
போகத்தி லேயும் நிறைந்தவள் எண்ணரும்
பொற்குவை தானுடையாள்
நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி
நயம்புரி வாள்எங்கள் தாய் அவர்
அல்லவ ராயின் அவரைவி ழுங்கிப்பின்
ஆனந்த கூத்தி டுவாள்
வெண்மை வளரிம யாசலன் தந்த
விறன்மக ளாம்எங்கள் தாய் அவன்
திண்மை மறையினும் தான்மறை யாள்நித்தஞ்
சீருறு வாள்எங்கள் தாய்

வெறி கொண்ட தாய்
ராகம் ஆபோகி தாளம் ரூபகம்
பேயவள் காண் எங்கள் அன்னை பெரும்
பித்துடையாள் எங்கள் அன்னை
காய்தழல் ஏந்திய பித்தன் தனை
காதலிப்பாள் எங்கள் அன்னை பேயவள்
இன்னிசை யாம்இன்ப கடலில் எழுந்து
எற்றும் அலைத்திரள் வெள்ளம்
தன்னிடை மூழ்கி திளைப்பாள் அங்கு
தாவி குதிப்பாள் எம் அன்னை பேயவள்
தீஞ்சொற் கவிதையஞ் சோலை தனில்
தெய்வீக நன்மணம் வீசும்
தேஞ்சொரி மாமலர் சூடி மது
தேக்கி நடிப்பாள்எம் அன்னை பேயவள்
வேதங்கள் பாடுவள் காணீர் உண்மை
வேல்கையிற் பற்றி குதிப்பாள்
ஓதருஞ் சாத்திரம் கோடி உணர
தோதி யுலகெங்கும் விதைப்பாள் பேயவள்
பாரத போரெனில் எளிதோ விறற்
பார்த்தன்கை வில்லிடை ஒளிர்வாள்
மாரதர் கோடிவ தாலும் கணம்
மாய்த்து குருதியில் திளைப்பாள் பேயவள்

பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி
பொழுது புலர்ந்தது யாம்செய்த தவத்தால்
புன்மை யிருட்கணம் போயின யாவும்
எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி
எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி
தொழுதுனை வாழ்த்தி வனங்குதற்கு இங்குஉன்
தொண்டர்பல் லாயிரர் சூழ்ந்துநிற் கின்றோம
விழிதுயில் கின்றனை இன்னும்எம் தாயே
வியப்பிது காண் பள்ளி யெழுந்தரு ளாயே
புள்ளினம் ஆர்த்தன முரசம்
பொங்கியது எங்குஞ் சுதந்திர நாதம்
வெள்ளிய சங்கம் முழங்கின கேளாய்
வீதியெ லாம்அணு குற்றனர் மாதர்
தெள்ளிய அந்தணர் வேதமும் நின்றன்
சீர்த்திரு நாமமும் ஓதி நிற் கின்றார்
அள்ளிய தெள்ளமு தன்னை எம் அன்னை
ஆருயிரே பள்ளி யெழுந்தரு ளாயே
பருதியின் பேரொளி வானிடை கண்டோ ம்
பார்மிசை நின்னொளி காணுதற்கு அளந்தோம்
கருதிநின் சேவடி அணிவதற்கு என்றே
கனிவுறு நெஞ்சக மலர்கொடு வந்தோம்
சுருதிகள் பயந்தனை சாத்திரம் கோடி
சொல்லரு மாண்பின ஈன்றனை அம்மே
நிருதர்கள் நடுக்குற சூல்கரத்து ஏற்றாய்
நிர்மலையே பள்ளி யெழுந்தரு ளாயே
நின்னெழில் விழியருள் காண்பதற்கு எங்கள்
நெஞ்சகத்து ஆவலை நீயறி யாயோ
பொன்னனை யாய் வெண் பனிமுடி யி
பொருப்பினன் ஈந்த பெருந்தவ பொருளே
என்ன தவங்கள் செய்து எத்தனை காலம்
ஏங்குவம் நின்னருட்கு ஏழையம் யாமே
இன்னமும் துயிலுதி யேல்இது நன்றோ
இன்னுயிரே பள்ளி யெழுந்தரு ளாயே
மதலையர் எழுப்பவும் தாய்துயில் வாயோ
மாநிலம் பெற்றவள் இஃதுண ராயோ
குதலை மொழிக்கிரங் காதொரு தாயோ
கோமகளே பெரும் பாரதர கரசே
விதமுறு நின்மொழி பதினெட்டும் கூறி
வேண்டிய வாறுஉனை பாடுதும் காணாய்
இதமுற வந்துஎமை ஆண்டருள் செய்வாய்
ஈன்றவளே பள்ளி யெழுந்தரு ளாயே

பாரத மாதா நவரத்தின மாலை
இப்பாடல்களில் முறையே ஒன்பது இரத்தினங்களின்
பெயர்கள் இயற்கை பொருளிலேனும் சிலேடை
வழங்க பட்டிருக்கின்றன
காப்பு
வீரர்மு பத்திரண்டு கோடி விளைவித்த
பாரதமா தாவின் பதமலர்க்கே சீரார்
நவரத்ன மாலையிங்கு நான் சூட்ட காப்பாம்
சிவரத்தன மைந்தன் திறம்
வெண்பா
திறமிக்க நல்வயி சீர்திகழும் மேனி
அறமிக்க சிந்தை அறிவு பிறநலங்கள்
எண்ணற் றனபெறுவார் இந்தியா என்ற நின்றன்
கண்ணொத்த பேருரைத்த கால்
கட்டளை கலித்துறை
காலன் எதிர்ப்படிற் கைகூப்பி
கும்பிட்டு கம்பனமுற்
றோலிமிட்டோ டி மறைந்தொழி
வான் பகை யொன்றுளதோ
நீல கடலொத்த கோலத்தி
ளாள்மூன்று நேத்திரத்தாள்
கால கடலுக்கோ பாலமி
டாள்அன்னை காற்படினே
எண்சீர் கழிநெடி லாசிரிய விருத்தம்
அன்னையே அந்நாளில் அவனி கெல்லாம்
ஆணிமுத்து போன்றமணிமொழிக ளாலே
பன்னிநீ வேதங்கள் உபநிட தங்கள்
பரவுபுகழ புராணங்கள் இதிகா சங்கள்
இன்னும்பல நூல்களிலே இசைத்த ஞானம்
என்னென்று புகழ்ந்துரைப்போம் அதனை இந்நாள்
மின்னுகின்ற பேரொளிகாண் காலங் கொன்ற
விருந்துகாண் கடவுளுக்கோர் வெற்றி காணே
ஆசிரியப்பா
வெற்றி கூறுமின் வெண்சங் கூதுமின்
கற்றவ ராலே உலகுகா புற்றது
உற்றதிங் கிந்நாள் உலகினு கெல்லாம்
இற்றைநாள் வரையினும் அறமிலா மறவர்
குற்றமே தமது மகுடமா கொண்டோ ர்
மற்றை மனிதரை அடிமை படுத்தலே
முற்றிய அறிவின் முறையென்று எண்ணுவார்
பற்றை அரசர் பழிபடு படையுடன்
சொற்றை நீதி தொகுத்துவை திருந்தார்
இற்றைநாள்
பாரி லுள்ள பலநா டினர்க்கும்
பாரத நாடு புதுநெறி பழக்கல்
உற்றதிங் கிந்நாள் உலகெலாம் புகழ
இன்பவ ளம்செறி பண்பல பயிற்றும்
கவீந்திரனாகிய ரவீந்திர நாதன்
சொற்றது கேளீர் புவிமிசை யின்று
மனிதர கெல்லாம் தலைப்படு மனிதன்
தர்மமே உருவமாம் மோஹன தாஸ்
கர்ம சந்திர காந்தி யென் றுரைத்தான்
அத்தகை காந்தியை அரசியல் நெறியிலே
தலைவனா கொண்டு புவிமிசை தருமமே
அரசிய லதனிலும் பிறஇய லனைத்திலும்
வெற்றி தருமென வேதம் சொன்னதை
முற்றும் பேண முற்பட்டு நின்றார்
பாரத மக்கள் இதனால் படைஞர் தம்
செருக்கொழி துலகில் அறந்திறம் பாத
கற்றோர் தலைப்பட காண்போம் விரைவிலே
வெற்றி கூறுமின் வெண்சங் கூதுமின்
தரவு கொச்ச கலிப்பா
ஊதுமினோ வெற்றி ஒலிமினோ வாழ்த்தொலிகள்
ஓதுமினோ வேதங்கள் ஓங்குமினோ
தீதுசிறி தும்பயிலா செம்மணிமா நெறிகண்டோ ம்
வேதனைகள் இனிவேண்டா விடுதலையோ திண்ணமே
வஞ்சி விருத்தம்
திண்ணங் காணீர் பச்சை
வண்ணன் பா தாணை
எண்ணம் கெடுதல் வேண்டா
திண்ணம் விடுதலை
கலிப்பா
விடுத லைபெறு வீர்வரை வாநீர்
வெற்றி கொள்வீர் என்றுரை தெங்கும்
கெடுத லின்றி தாய்த்திரு நாட்டின்
கிளர்ச்சி தன்னை வளர்ச்சிசெய் கின்றான்
சுடுத லும்குளி ரும்உயிர கில்லை
சோர்வு வீழ்ச்சிகள் தொண்டரு கில்லை
எடுமி னோஅற போரினை என்றான்
எங்கோ மேதகம் ஏந்திய காந்தி
அறுசீர் விருத்தம்
காந்திசேர் பதுமரா கடிமலர் வாழ்ஸ்ரீதேவி
போந்துநிற் கின்றாள் இன்று பாரத பொன்னாடெங்கும்
மாந்தரெல்லோரும் சோர்வை அச்சத்தை மறந்துவிட்டார்
காந்திசொற் கேட்டார் காண்பார் விடுதலை கணத்தினுள்ளே
எழுசீர கழிநெடி லாசிரிய விருத்தம்
கணமெனு மென்றன் கண்முன்னே வருவாய்
பாரத தேவியே கனல்கால்
இணைவழி வால வாயமாஞ் சிங்க
முதுகினில் ஏறிவீற் றிருந்தே
துணைநினை வேண்டும் நாட்டினர கெல்லாம்
துயர்கெட விடுதலை யருளி
மணிநகை புரிந்து திகழ்திரு கோலம்
கண்டுநான் மகிழ்ந்திடு மாறே

பாரத தேவியின் திரு தசாங்கம்
நாமம் காம்போதி
பச்சை மணிக்கிளியே பாவியென கேயோக
பிச்சை யருளியதாய் பேருரையாய் இச்சகத்தில்
பூரணமா ஞான புகழ்விளக்கை நாட்டுவித்த
பாரதமா தேவியென பாடு
நாடு வசந்தா
தேனார் மொழிக்கிள்ளாய் தேவியென கானந்த
மானாள் பொன் னாட்டை அறிவிப்பாய் வானாடு
பேரிமய வெற்புமுதல் பெண்குமரி ஈறாகும்
ஆரியநா டென்றே அறி
நகர் மணிரங்கு
இன்மழலை பைங்கிளியே எங்கள் உயிரானாள்
நன்மையுற வாழும் நகரெதுகொல் சின்மயமே
நானென் றறிந்த நனிபெரியோர கின்னமுது
தானென்ற காசி தலம்
ஆறு சுருட்டி
வண்ண கிளி வந்தே மாதரமென் றோதுவரை
இன்னலற காப்பா ளியாறுரையாய் நன்னர்செ
தான்போம் வழியெலாம் தன்மமொடு பொன்விளைக்கும்
வான்போந்த கங்கையென வாழ்த்து
மலை கானடா
சோலை பசுங்கிளியே தொன்மறைகள் நான்குடையாள்
வாலை வளரும் மலைகூறாய் ஞாலத்துள்
வெற்பொன்றும் ஈடிலதாய் விண்ணில் முடிதாக்கும்
பொற்பொன்று வெள்ளை பொருப்பு
ஊர்தி தன்யாசி
சீரும் சிறப்புமுயர் செல்வமுமோ ரெண்ணற்றாள்
ஊரும் புரவி உரைதத்தாய் தேரின்
பரிமிசையூர் வாளல்லள் பாரனைத்தும் அஞ்சும்
அரிமிசையே ஊர்வாள் அவள்
படை முகாரி
கருணை யுருவானாள் காய்ந்தெழுங்காற் கிள்ளாய்
செருநரைவீழ தும்படையென் செப்பாய் பொருபவர்
மேல்தண்ணளியால் வீழாது வீழின் தகைப்பரிதாம்
திண்ணமுறு வான்குலிசம் தேறு
முரசு செஞ்சுருட்டி
ஆசை மரகதமே அன்னை திரு முன்றிலிடை
ஓசை வளர்முரசம் ஓதுவாய் பேசுகவோ
சத்தியமே செய்க தருமமே என்றொலிசெய்
முத்திதரும் வேத முரசு
தார் பிலகரி
வாராய் இளஞ்சுகமே வந்திப்பார கென்றுமிடர்
தாராள் புனையுபணி தார்கூறாய் சேராரை
முற்றா குறுநகையால் முற்றுவித்து தானொளிர்வாள்
பொற்றா மரைத்தார் புனைந்து
கொடி கேதாரம்
கொடிப்பவள வாய்க்கிள்ளாய் சூத்திரமும் தீங்கும்
மடிப்பவளின் வெல்கொடிதான் மற்றென் அடிப்பணிவார்
நன்றார தீயார் நலிவுறவே வீசுமொளி
குன்றா வயிர கொடி

தாயின் மணிக்கொடி பாரீர்
பாரத நாட்டு கொடியினை புகழ்தல்
தாயுமானவர் ஆனந்த களிப்பு மெட்டு
பல்லவி
தாயின் மணிக்கொடி பாரீர் அதை
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்
சரணங்கள்
ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் அதன்
உச்சியின் மேல் வந்தே மாதரம் என்றே
பாங்கின் எழுதி திகழும் செய்ய
பட்டொளி வீசி பறந்தது பாரீர் தாயின்
பட்டு துகிலென லாமோ அதில்
பாய்ந்து சுழற்றும் பெரும்புயற் காற்று
மட்டு மிகுந்தடி தாலும் அதை
மதியாதவ் வுறுதிகொள் மாணங்க்க படலம் தாயின்
இந்திரன் வச்சிரம் ஓர்பால் அதில்
எங்கள் துருக்கர் இளம்பிறை ஓர்பால்
மந்திரம் நடுவுற தோன்றும் அதன்
மாண்பை வகுத்திட வல்லவன் யானோ தாயின்
கம்பத்தின் கீழ் நிற்றல் காணீர் எங்கும்
காணரும் வீரர் பெருந்திரு கூட்டம்
நம்பற குரியர் அவ்வீரர் தங்கள்
நல்லுயிர் ஈந்தும் கொடியினை காப்பார் தாயின்
அணியணி யாயவர் நிற்கும் இந்த
ஆரி காட்சியோர் ஆனந்தம் அன்றோ
பணிகள் பொருந்திய மார்பும் விறல்
பைந்திரு வோங்கும் வடிவமும் காணீர் தாயின்
செந்தமிழ் நாட்டு பொருநர் கொடு
தீக்கண் மறவர்கள் சேரன்றன் வீரர்
சிந்தை துணிந்த தெலுங்கர் தாயின்
சேவடி கேபணி செய்திடு துளுவர் தாயின்
கன்னடர் ஓட்டிய ரோடு போரில்
காலனும் அஞ்ச கலக்கும் மராட்டர்
பொனகர தேவர்க ளொப்ப நிற்கும்
பொற்புடையார் இந்துஸ் தானத்து மல்லர் தாயின்
பூதலம் முற்றிடும் வரையும் அற
போர்விறல் யாவும் மறுப்புறும் வரையும்
மாதர்கள் கற்புள்ள வரையும் பாரில்
மறைவரும் கீர்த்திகொள் ரஜபுத்ர வீரர் தாயின்
பஞ்ச நதத்து பிறந்தோர் முன்னை
பார்த்தன் முதற்பலர் வாழ்ந்தநன் னாட்டார்
துஞ்சும் பொழுதினும் தாயின்
தொண்டு நினைந்திடும் வங்கத்தி னோரும் தாயின்
சேர்ந்ததை காப்பது காணீர் அவர்
சிந்தையின் வீரம் நிரந்தரம் வாழ்க
தேர்ந்தவர் போற்றும் பரத நில
தேவி துவஜம் சிறப்புற வாழ்க தாயின்

பாரத ஜனங்களின் தற்கால நிலைமை
நொண்டி சிந்து
நெஞ்சு பொறுக்கு திலையே இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
அஞ்சி யஞ்சி சாவார் இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே
வஞ்சனை பேய்கள் என்பார் இந்த
மரத்தில் என்பார் அந்த குளத்தில்
துஞ்சுது முகட்டில் என்பார் மிக
துயர்ப்படுவார் எண்ணி பயப்படுவார் நெஞ்சு
மந்திர வாதி என்பார் சொன்ன
மாத்திரத்தி லேமன கிலிபிடிப்பார்
யந்திர சூனி யங்கள் இன்னும்
எத்தனை ஆயிரம் இவர் துயர்கள்
தந்த பொருளை கொண்டே ஜனம்
தாங்குவர் உலகத்தில் அரசரெல்லாம
அந்த அரசியலை இவர்
அஞ்சுதரு பேயென்றெண்ணி நெஞ்சம் அயர்வார் நெஞ்சு
சிப்பாயை கண்டு அஞ்சுவார் ஊர
சேவகன் வருதல்கண்டு மனம்பதைப்பார்
துப்பாக்கி கொண்டு ஒருவன் வெகு
தூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிவார்
அப்பால் எவனோ செல்வான் அவன்
ஆடையை கண்டுப தெழுந்து நிற்பார்
எப்போதும் கைகட்டுவார் இவர்
யாரிடத்தும் பூனைகள்போல் ஏங்கிநடப்பார் நெஞ்சு
நெஞ்சு பொறுக்கு திலையே இந்த
நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்
கொஞ்சமோ பிரிவினைகள் ஒரு
கோடிஎன் றால் அது பெரிதா மோ
ஐந்துதலை பாம்பென் பான் அப்பன்
ஆறுதலை யென்றுமகன் சொல்லி விட்டால்
நெஞ்சு பிரிந்திடுவார் பின்பு
நெடுநாள் இருவரும் பகைத்திருப்பார் நெஞ்சு
சாத்திரங்கள் ஒன்றும் காணார் பொ
சாத்திர பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே
கோத்திரம் ஒன்றா யிருந்தாலும் ஒரு
கொள்கையிற் பிரிந்தவனை குலைத்திகழ் வார்
தோத்திரங்கள் சொல்லி அவர்தாம் தமை
சூதுசெய்யும் நீசர்களை பணிந்திடுவார
ஆத்திரங் கொண்டே இவன் சைவன்
அரிபக்தன் என்றுபெருஞ் சண்டையிடுவார் நெஞ்சு
நெஞ்சு பொறுக்கு திலையே இதை
நினைந்து நினைந்திடினும் வெறுக்குதிலையே
கஞ்சி குடிப்பதற் கிலார் அதன்
காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்
பஞ்சமோ பஞ்சம் என்றே நிதம்
பரிதவித்தே உயிர் துடிதுடித்து
துஞ்சி மடிகின் றாரே இவர்
துயர்களை தீர்க்கவோர் வழியிலையே நெஞ்சு
எண்ணிலா நோயுடையார் இவர்
எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார்
கண்ணிலா குழந்தை கள்போல் பிறர்
காட்டிய வழியிற்சென்று மாட்டி கொள்வார்
நண்ணிய பெருங்கலைகள் பத்து
நாலாயிரங் கோடி நயந்துநின்ற
புண்ணிய நாட்டினிலே இவர்
பொறியற்ற விலங்குகள்போல வாழ்வார் நெஞ்சு

போகின்ற பாரதமும் வருகின்ற
போகின்ற பாரதத்தை சபித்தல்
வலிமையற்ற தோளினாய் போ
மார்பி லேஒடுங்கினாய் போ
பொலிவி லாமுகத்தினாய் போ
பொறி யிழந்த விழியினாய் போ
ஔங்யி ழந்த குரலினாய் போ
ஒளியி ழந்த மேனியாய் போ
கிலிபி டித்த நெஞ்சினாய் போ
கீழ்மை யென்றும் வேண்டுவாய் போ
இன்று பார தத்திடை நாய்போல
ஏற்ற மின்றி வாழுவாய் போ
நன்று கூறில் அஞ்சுவாய் போ
நாணி லாது கெஞ்சுவாய் போ
சென்று போன பொய்யெலாம் மெய்யாக
சிந்தை கொண்டு போற்றுவாய் போ
வென்று நிற்கும் மெய்யெலாம் பொய்யாக
விழிம யங்கி நோக்குவாய் போ
வேறு பாஷைகள் கற்பாய் நீ
வீட்டு வார்த்தை கற்கிலாய் போ
நூறு நூல்கள் போற்றுவாய் மெய்கூறும்
நூலி லொத்தி யல்கிலாய் போ
மாறு பட்ட வாதமே ஐந்நூறு
வாயில் நீள ஓதுவாய் போ
சேறுபட்ட நாற்றமும் தூறுஞ்சேர்
சிறிய வீடு கட்டுவாய் போ
ஜாதி நூறு சொல்லுவாய் போ
தரும மொன்றி யற்றிலாய் போ
நீதி நூறு சொல்லுவாய் காசொன்று
நீட்டினால் வணங்குவாய் போ
தீது செய்வ தஞ்சிலாய் நின்முன்னே
தீமை நிற்கி லோடுவாய் போ
சோதி மிக்க மணியிலே காலத்தால்
சூழ்ந்த மாசு போன்றனை போ
வருகின்ற பாரதத்தை வாழ்த்தல்
ஒளிப டைத்த கண்ணினாய் வா
உறுதிகொண்ட நெஞ்சினாய் வா
களிப டைத்த மொழியினாய் வா
கடுமை கொண்ட தோளினாய் வா
தெளிவு பெற்ற மதியினாய் வா
சிறுமை கண்டு பொங்குவாய் வா
எளிமை கண்டு இரங்குவாய் வா
ஏறு போல் நடையினாய் வா
மெய்ம்மை கொண்ட நூலையே அன்போடு
வேதமென்று போற்றுவாய் வா
பொய்ம்மை கூற லஞ்சுவாய் வா
பொய்ம்மை நூல்க ளெற்றுவாய் வா
நொய்ம்மை யற்ற சிந்தையாய் வா
நோய்க ளற்ற உடலினாய் வா
தெய்வ சாபம் நீங்கவே நங்கள் சீர
தேசமீது தோன்றுவாய் வா
இளைய பார தத்தினாய் வா
எதிரிலா வலத்தினாய் வா
ஒளியிழந்த நாட்டிலே நின்றேறும்
உதய ஞாயி றொப்பவே வா
களையி ழந்த நாட்டிலே முன்போலே
கலைசி றக்க வந்தனை வா
விளையு மாண்பு யாவையும் பார்த்த ன்போல்
விழியி னால் விளக்குவாய் வா
வெற்றி கொண்ட கையினாய் வா
விநயம் நின்ற நாவினாய் வா
முற்றி நின்ற வடிவினாய் வா
முழுமை சேர்மு கத்தினாய் வா
கற்ற லொன்று பொய்க்கிலாய் வா
கருதிய தியற் றுவாய் வா
ஒற்றுமைக்கு ளுய்யவே நாடெல்லாம்
ஒரு பெருஞ் செயல் செய்வாய் வா

பாரத சமுதாயம்
ராகம் பியா தாளம் திஸ்ர ஏகதாளம்
பல்லவி
பாரத சமுதாயம் வாழ்கவே வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே ஜய
அனுபல்லவி
முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை
ஒப்பிலாத சமுதாயம்
உலக துக்கொரு புதுமை வாழ்க பாரத
சரணங்கள்
மனித ருணவை மனிதர் பறிக்கும்
வழக்கம் இனியுண்டோ
மனிதர் நோக பார்க்கும்
வாழ்க்கை இனியுண்டோ புலனில்
வாழ்க்கை இனியுண்டோ நம்மி லந்த
வாழ்க்கை இனியுண்டோ
இனிய பொழில்கள் நெடிய வயல்கள்
எண்ணரும் பெருநாடு
கனியும் கிழங்கும் தானி யங்களும்
கணக்கின்றி தரு நாடு இது
கணக்கின்றி தரு நாடு நித்த நித்தம்
கணக்கின்றி தரு நாடு வாழ்க பாரத
இனியொரு விதிசெய் வோம் அதை
எந்த நாளும் காப்போம்
தனியொரு வனு குணவிலை யெனில்
ஜகத்தினை அழித்திடு வோம் வாழ்க பாரத
எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன்
என்றுரைத்தான் கண்ண பெருமான்
எல்லாரும் அமரநிலை எய்தும்நன் முறையை
இந்தியா உலகிற் களிக்கும் ஆம்
இந்தியா உலகிற் களிக்கும் ஆம்
இந்தியா உலகிற் களிக்கும் வாழ்க பாரத
எல்லாரும் ஓர்குலம் ஓரினம்
எல்லாரும் இந்திய மக்கள்
எல்லாரும் ஓர்நிறை எல்லோரும் ஓர்விலை
எல்லாரும் இந்நாட்டு மன்னர் நாம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர் ஆம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர் வாழ்க பாரத

ஜாதீய கீதம்
பங்கிம் சந்திர சட்டோ பாத்தியாயர் எழுதிய
வந்தே மாதரம் கீதத்தின் மொழிபெயர்ப்பு
இனிய நீர பெருக்கினை இன்கனி வளத்தினை
தனிநறு மல தண்காற் சிறப்பினை
பைந்நிற பழனம் பரவிய வடிவினை வந்தே
வெண்ணிலா கதிர்மகிழ் விரித்திடும் இரவினை
மலர் மணி பூத்திகழ் மரன்பல செறிந்தனை
குறுநகை யின்சொலார் குலவிய மாண்பினை
நல்குவை இன்பம் வரம்பல
முப்பதுகோடி வாய் நின்னிசை முழங்கவும்
அறுபது கோடிதோ ளுயர்ந்துன காற்றவும்
திறனிலாள் என்றுனை யாவனே செப்புவன்
அருந்திற லுடையாய் அருளினை போற்றி
பொருந்தலர் படைபுற தொழித்திடும் பொற்பினை
வந்தே
நீயே வித்தை தருமம்
நீயே இதயம் மருமம்
உடலக திருக்கும் உயிருமன் நீயே வந்தே
தடந்தோ ளகலா சக்திநீ அம்மே
சித்தம் நீங்காதுறு பக்தியும் நீயே
ஆல தோறும் அணிபெற விளங்கும்
தெய்விக வடிவமும் தேவியிங் குனதே வந்தே
ஒருபது படைகொளும் உமையவள் நீயே
கமலமெல் லிதழ்களிற் களித்திடுங் கமலைநீ
வித்தை நன் கருளும் வெண்மலர தேவிநீ வந்தே
போற்றி வான்செல்வி புரையிலை நிகரிலை
இனிய நீர பெருக்கினை இன்கனி வளத்தினை
சாமள நிறத்தினை சரளமா தகையினை
இனியபுன் முறுவலாய் இலங்குநல் லணியினை
தரித்தெமை காப்பாய் தாயே போற்றி வந்தே

ஜாதீய கீதம்
புதிய மொழிபெயர்ப்பு
நளிர்மணி நீரும் நயம்படு கனிகளும்
குளிர்பூ தென்றலும் கொழும்பொழிற் பசுமையும்
வாய்ந்துநன் கிலகுவை வாழிய அன்னை வந்தே
தெண்ணில வதனிற் சிலிர்த்திடும் இரவும்
தண்ணியல் விரிமலர் தாங்கிய தருக்களும்
புன்னகை ஒளியும் தேமொழி பொலிவும்
வாய்ந்தனை இன்பமும் வரங்களும் நல்குவை வந்தே
கோடி குரல்கள் ஒலிக்கவும்
கோடி புயத்துணை கொற்றமார்
நீடு பல்படை தாங்கிமுன் னிற்கவும்
கூடு திண்மை குறைந்தனைஎ என்பதென்
ஆற்றலின் மிகுந்தனை அரும்பதங் கூட்டுவை
மாற்றலர் கொணர்ந்த வன்படை யோட்டுவை வந்தே
அறிவும் நீ தருமம் உள்ளம்
மருமம் நீ உடற்கண் வாழ்ந்திடும் உயிர்
தோளிடை வன்புநீ நெஞ்சகத்து அன்புநீ
ஆல தோறும் அணிபெற விளங்கும்
தெய்வ சிலையெலாம் தேவி இங்குனதே வந்தே
பத்து படைகொளும் பார்வதி தேவியும்
கமல திகழ்களிற் களித்திடும் கமலையும்
அறிவினை யருளும் வாணியும் அன்னைநீ வந்தே
திருநி றைந்தனை தன்னிக ரொன்றிலை
தீது தீர்ந்தனை நீர்வளஞ் சார்ந்தனை
மருவு செய்களின் நற்பயன் மல்குவை
வளனின் வந்ததோர் பைந்நிறம் வாய்ந்தனை
பெருகு மின்ப முடையை குறுநகை
பெற்றொ ளிர்ந்தனை பல்பணி பூண்டணை
இருநி லத்துவ தெம்முயிர் தாங்குவை
எங்கள் தாய்நின் பாதங்கள் இறைஞ்சுவாம் வந்தே

தமிழ்நாடு
செந்தமிழ் நாடு
செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்ப
தேன் வந்து பாயுது காதினிலே எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே செந்தமிழ்
வேதம் நிறைந்த தமிழ்நாடு உயர்
வீரம் செறிந்த தமிழ்நாடு நல்ல
காதல் புரியும் அரம்பையர் போல் இளங்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு செந்தமிழ்
காவிரி தென்பெண்ணை பாலாறு தமிழ்
கண்டதோர் வையை பொருனை நதி என
மேவிய யாறு பலவோட திரு
மேனி செழித்த தமிழ்நாடு செந்தமிழ்
முத்தமிழ் மாமுனி நீள்வரையே நின்று
மொய்ம்புற காக்கு தமிழ்நாடு செல்வம்
எத்தனையுண்டு புவிமீதே அவை
யாவும் படைத்த தமிழ்நாடு செந்தமிழ்
நீல திரைக்கட லோரத்திலே நின்று
நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை வட
மாலவன் குன்றம் இவற்றிடையே புகழ்
மண்டி கிடக்கு தமிழ்நாடு செந்தமிழ்
கல்வி சிறந்த தமிழ்நாடு புகழ
கம்பன் பிறந்த தமிழ்நாடு நல்ல
பல்விதமாயின சாத்திரத்தின் மணம்
பாரெங்கும் வீசு தமிழ்நாடு செந்தமிழ்
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென்றோர் மணி
யாரம் படைத்த தமிழ்நாடு செந்தமிழ்
சிங்களம் புட்பகம் சாவக மாதிய
தீவு பலவினுஞ் சென்றேறி அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் நின்று
சால்புற கண்டவர் தாய்நாடு செந்தமிழ்
விண்ணை யிடிக்கும் தலையிமயம் எனும்
வெற்பை யடிக்கும் திறனுடையார் சமர்
பண்ணி கலிங்க திருள்கெடுத்தார் தமிழ
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு செந்தமிழ்
சீன மிசிரம் யவனரகம் இன்னும்
தேசம் பலவும் புகழ்வீசி கலை
ஞானம் படை தொழில் வாணிபமும் மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு செந்தமிழ்

தமிழ்த்தாய்
தன் மக்களை புதிய சாத்திரம் வேண்டுதல்
தாயுமானவர் ஆனந்த களிப்பு சந்தம்
ஆதி சிவன் பெற்று விட்டான் என்னை
ஆரிட மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே நிறை
மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்
முன்று குலத்தமிழ் மன்னர் என்னை
மூண்டநல் லன்போடு நித்தம் வளர்த்தார்
ஆன்ற மொழிகளி னுள்ளே உயர்
ஆரி திற்கு நிகரென வாழ்ந்தேன்
கள்ளையும் தீயையும் சேர்த்து நல்ல
காற்றையும் வான வெளியையும் சேர்த்து
தெள்ளு தமிழ்ப்புல வோர்கள் பல
தீஞ்சுவை காவியம் செய்து கொடுத்தார்
சாத்திரங் கள்பல தந்தார் இந
தாரணி யெங்கும் புகழ்ந்திட வாழ்ந்தேன்
நேத்திரங் கெட்டவன் காலன் தன்முன்
நேர்ந்த தனைத்தும் துடைத்து முடிப்பான்
நன்றென்று தீதென்றும் பாரான் முன்
நாடும் பொருள்கள் அனைத்தையும் வாரி
சென்றிடுங் காட்டுவெள் ளம்போல் வை
சேர்க்கை யனைத்தையும் கொன்று நடப்பான்
கன்னி பருவத்தில் நாள் என்றன்
காதில் விழுந்த திசைமொழி யெல்லாம்
என்னென்ன வோ பெய ருண்டு பின்னர்
யாவும் அழிவுற் றிருந்தன கண்டீர்
தந்தை அருள்வலி யாலும் முன்பு
சான்ற புலவர் தவ வலி யாலும்
இந்த கணமட்டும் காலன் என்னை
ஏறிட்டு பார்க்கவும் அஞ்சியிருந்தான்
இன்றொரு சொல்லினை கேட்டேன் இனி
ஏது செய்வேன் என தாருயிர் மக்காள்
கொன்றிடல் போலொரு வார்த்தை இங்கு
கூற தகாதவன் கூறினன் கண்டீர்
புத்தம் புதிய கலைகள் பஞ்ச
பூத செயல்களின் நுட்பங்கள் கூறும
மெத்த வளருது மேற்கே அந்த
மேன்மை கலைகள் தமிழினில் இல்லை
சொல்லவும் கூடுவ தில்லை அவை
சொல்லு திறமை தமிழ்மொழி கில்லை
மெல்ல தமிழினி சாகும் அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்
என்றந்த பேதை உரத்தான்
இந்த வசையென கெய்திடலாமோ
சென்றிடுவீர் எட்டு திக்கும் கலை
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்
தந்தை அருள்வலி யாலும் இன்று
சார்ந்த புலவர் தவவலி யாலும்
இந்த பெரும்பழி தீரும் புகழ்
ஏறி புவிமிசை என்றும் இருப்பேன்

தமிழ்
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்
பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும்
இகழ்ச்சிசொல பான்மை கெட்டு
நாமமது தமிழரென கொண்டு இங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ சொல்லீர்
தேமதுர தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்
யாமறிந்த புலவரிலே கம்பனை போல்
வள்ளுவர்போல் இளங்கோ வைப்போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை
உண்மை வெறும் புகழ்ச்சியில்லை
ஊமையரா செவிடர்களா குருடர்களாய்
வாழ்கின்றோம் ஒரு சொற் கேளீர்
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்க செய்வீர்
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழங் கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை
திறமான புலமையெனில் வெளி நாட்டோ ர்
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்
உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்
வாக்கினிலே ஒளி யுண்டாகும்
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவு மாயின்
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்று பதவி கொள்வார்
தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
இங்கமரர் சிறப்பு கண்டார்

தமிழ்மொழி வாழ்த்து
தான தனத்தன
வாழ்க நிரந்தரம் தமிழ்மொழி
வாழிய வே
வான மளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழிய வே
ஏழ்கடல் வைப்பினு தன்மணம் வீசி
இசைகொண்டு வாழிய வே
எங்கள் தமிழ்மொழி
என்றென்றும் வாழிய வே
சூழ்கலி நீங்க தமிழ்மொழி ஓங்க
துலங்குக வையக மே
தொல்லை வினை தரு யகன்று
சுடர்க தமிழ்நா டே
வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழி யே
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே

தமிழ சாதி
எனப்பல பேசி இறைஞ்சிட படுவதாய்
நாட்பட நாற்றமு சேறும்
பாசியும் புதைந்து பயன்நீர் இலதாய்
நோ களமாகி அழிகெனும் நோக்கமோ
விதியே தமிழ சாதியை
என்செய நினைத்தாய் எனக்குரை யாயோ
சார்வினு கெல்லாம் தகத்தக மாறி
தன்மையும் தனது தருமமும் மாயாது
என்றுமோர் நிலையா யிருந்துநின் அருளால்
வாழ்ந்திடும் பொருளோடு வகுத்திடு வாயோ
தோற்றமும் புறத்து தொழிலுமே காத்துமற்று
உள்ளுறு தருமமும் உண்மையும் மாறி
சிதவற் றழியும் பொருள்களில் சேர்ப்பையோ
அழியா கடலோ அணிமலர தடமோ
வானுறு மீனோ மாளிகை விளக்கோ
கற்பக தருவோ காட்டிடை மரமோ
விதியே தமிழ சாதியை எவ்வகை
விதித்தாய் என்பதன் மெய்யென குணர்த்துவாய்
ஏனெனில்
சிலப்பதி கார செய்யுளை கருதியும்
திருக்குற ளுறுதியும் தெளிவும் பொருளின்
ஆழமும் விரிவும் அழகும் கருதியும்
எல்லை யொன் றின்மைஎ எனும் பொருள் அதனை
கம்பன் குறிகளாற் காட்டிட முயலும்
முயற்சியை கருதியும் முன்புநான் தமிழ
சாதியை அமர தன்மை வாய்ந்தது என்று
உறுதிகொண்டிருந்தேன் ஒருபதி னாயிரம்
சனிவா பட்டும் தமிழ சாதிதான்
உள்ளுடை வின்றி உயர்த்திடு நெறிகளை
கண்டு எனது உள்ளம் கலங்கிடா திருந்தேன்
ஆப்பிரி கத்து காப்பிரி நாட்டிலும்
தென்முனை யடுத்த தீவுகள் பலவினும்
பூமி பந்தின் கீழ்ப்புற துள்ள
பற்பல தீவினும் பரவி யிவ்வெளிய
தமிழ சாதி தடியுதை யுண்டும்
காலுதை யுண்டும் கயிற்றடி
வருந்திடுஞ் செய்தியும் மாய்ந்திடுஞ்
பெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறாது
செத்திடுஞ் செய்தியும் பசியாற் சாதலும்
பிணிகளாற் சாதலும் பெருந்தொலை யுள்ளதம்
நாட்டினை பிரிந்த நலிவினார் சாதலும்
இஃதெலாம் கேட்டும் எனதுளம் அழிந்திலேன்
தெய்வம் மறவார செயுங்கடன் பிழையார்
ஏதுதான் செயினும் வருந்தினும்
இறுதியில் பெருமையும் இன்பமும் பெறுவார்
என்பதென் னுலத்து வேரகழ திருத்தலால்
எனினும்
இப்பெருங் கொள்கை இதயமேற் கொண்டு
கலங்கிடா திருந்த எனைக்கல குறுத்தும்
செய்தியொன் றதனை தெளிவுற கேட்பாய்
ஊனமற் றெவை தாம் உறினுமே பொறுத்து
வானமும் பொய்க்கின் மடிந்திடும் உலகுபோல்
தானமும் தவமு தாழ்ந்திடல் பொறுத்து
ஞானமும் பொய்க்க நசிக்குமோர் சாதி
சாத்திரங் கண்டாய் சாதியின் உயர்த்தலம்
சாத்திர மின்றேற் சாதியில்லை
பொய்ம்மை சாத்திரம் புகுந்திடும் மக்கள்
பொய்ம்மை யாகி புழுவென மடிவார்
நால்வகை குலத்தார் நண்ணுமோர் சாதியில்
அறிவு தலைமை யாற்றிடும் தலைவர்
மற்றிவர் வகுப்பதே சாத்திரமாகும்
இவர்தம்
உடலும் உள்ளமும் தன்வச மிலராய்
நெறிபிழை திகழ்வுறு நிலைமையில் வீழினும்
பெரிதிலை பின்னும் மருந்திதற் குண்டு
செய்கையுஞ் சீலமும் குன்றிய பின்னரும்
உய்வகை குரிய வழிசில உளவாம்
மற்றிவர்
சாத்திரம் அதாவது மதியிலே தழுவிய
கொள்கை கருத்து குளிர்ந்திடு நோக்கம்
ஈங்கிதில் கலக்க மெய்திடு மாயின்
மற்றதன் பின்னர் மருந்தொன்று இல்லை
இந்நாள் எமது தமிழ்நா டிடையே
அறிவு தலைமை தமதென கொண்டார்
தம்மிலே இருவகை தலைபட கண்டேன்
ஒரு சார்
மேற்றிசை வாழும் வெண்ணிற மக்களின்
செய்கையும் நடையும் தீனியும் உடையும்
கொள்கையும் மதமும் குறிகளும் நம்முடை
யவற்றினுஞ் சிறந்தன ஆதலின் அவற்றை
முழுதுமே தழுவி மூழ்கிடி நல்லால்
தமிழ சாதி தரணிமீ திராது
பொ தழி வெய்தல் முடி பென புகழும்
நன்றடா நன்று நாமினி மேற்றிசை
வழியெலா தழுவி வாழ்குவம் எனிலோ
அஃது கிசையா தென்பர்
உயிர்தரு மேற்றிசை நெறிகளை உவந்து நீர்
தழுவிடா வண்ண தடுத்திடும் பெரு தடை
பல அவை நீங்கும் பான்மையை வல்ல
என்றருள் புரிவர் இதன் பொருள் சீமை
மருந்துகள் கற்ற மருத்துவர் தமிழ
சாதியின் நோய்க்கு தலையசை தேகினர்
என்பதே யாகும் இஃதொரு சார்பாம்
பின்னொரு சார்பினர் வைதிக பெயரோடு
நமதுமூ தாதையர் நாற்பதிற் றாண்டின்
முன்னிருந்தவரோ முந்நூற்றாண்டிற்கு
அப்பால் வாழ்ந்தவர் கொல்லோ ஆயிரம்
ஆண்டின் முன்னவரோ ஐயா யிரமோ
பவுத்தரே நாடெலாம் பல்கிய கால
தவரோ புராண மாக்கிய காலமோ
சைவரோ வைணவ தாரோ
இந்திரன் தானே தனிமுதற் கடவுள்
என்றுநம் முன்னோர் ஏந்திய வைதி
கால தவரோ கருத்திலா தவர்தாம்
எமதுமூ தாதைய ரென்பதிங் கெவர்கொல்
நமதுமூ தாதையர் நயமுற காட்டிய
ஒழுக்கமும் நடையும் கிரியையும் கொள்கையும்
ஆங்கவர் காட்டிய அவ்வ படியே
தழுவிடின் வாழ்வு தமிழர குண்டு
எனில் அது தழுவல் இயன்றிடா வண்ணம்
கலிதடை புரிவன் கலியின் வலியை
வெல்லலா காதென விளிம்புகின் றனரால்
நாசங் கூறும் எநாட்டு வயித்தியர்
இவராம் இங்கிவ் விருதலை கொள்ளியின்
இடையே நம்மவர் எப்படி உய்வர்
விதியே தமிழ சாதியை
என்செ கருவி யிருக்கின் றாயடா
விதி
மேலே நீ கூறிய விநாச புலவரை
நம்மவர் இகழ்ந்து நன்மையும் அறிவும்
எத்திசை தெனினும் யாவரே காட்டினும்
மற்றவை தழுவி வாழ்வீ ராயின்
அச்சமொன்று இல்லை ஆரிய நாட்டின்
அறிவும் பெருமையும்

வாழிய செந்தமிழ்
ஆசிரி பா
வாழிய செந்தமிழ் வாழ்கநற் றமிழர்
வாழிய பாரத மணித்திரு நாடு
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க
நன்மைவ தெய்துக தீதெலாம் நலிக
அறம்வளர திடுக மறம்மடி வுறுக
ஆரிய நாட்டினர் ஆண்மையோ டியற்றும்
சீரிய முயற்சிகள் சிறந்துமி கோங்குக
நந்தே யத்தினர் நாடொறும் உயர்க
வந்தே மாதரம்

சுதந்தங்ரம்
சுதந்திர பெருமை
தில்லை வெளியிலே கலந்துவிட்டாலவர்
திரும்பியும் வருவாரோ என்னும் வர்ணமெட்டு
வீர சுதந்திரம் வேண்டிநின்றார் பின்னர்
வேறொன்று கொள்வாரோ என்றும்
ஆரமு துண்ணுதற் காசைகொண்டார் கள்ளில்
அறிவை செலுத்துவா ரோ வீர
புகழுநல் லறமுமே யன்றியெல் லாம்வெறும்
பொய்யென்று கண்டாரேல் அவர்
இகழுறும் ஈனத்தொண் டியற்றியும் வாழ்வதற்கு
இச்சையுற் றிருப்பா ரோ வீர
பிறந்தவர் யாவரும் இறப்ப துறுதியெனும்
பெற்றியை அறிந்தாரேல் மானம்
துறந்தரம் மறந்தும்பின் உயிர்கொண்டு வாழ்வது
சுகமென்று மதிப்பா ரோ வீர
மானுட ஜன்மம் பெறுவதற் கரிதெனும்
வாய்மையை உணர்ந்தாரேல் அவர்
ஊனுடல் தீயினும் உண்மை நிலைதவற
உடன்படு மாறுளதோ வீர
விண்ணி லிரவிதனை விற்றுவி டெவரும்போய்
மின்மினி கொள்வாரோ
கண்ணினும் இனிய சுதந்திரம் போனபின்
கை கட்டி பிழைப்பாரோ வீர
மண்ணிலின் பங்களை விரும்பி சுதந்திரத்தின்
மாண்பினை யிழப்பாரோ
கண்ணிரெண்டும் விற்று சித்திரம் வாங்கினால்
கைகொட்டி சிரியா ரோ வீர
வந்தே மாதரம் என்று வணங்கியபின்
மாயத்தை வணங்கு வாரோ
வந்தே மாதரம் ஒன்றே தாரகம்
என்பதை மறப்பாரோ வீர

சுதந்திர பயிர்
தண்ணீர்வி டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை
கண்ணீராற் காத்தோம் கருக திருவுளமோ
எண்ணமெலாம் நெய்யாக எம்முயிரி னுள்வளர்ந்த
வண்ண விளக்கிஃது மடி திருவுளமோ
ஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்
வாராது போலவந்த மாமணியை தோற்போமோ
தர்மமே வெல்லுமேனும் சான்றோர்சொல் பொய்யாமோ
கர்ம விளைவுகள் யாம் கண்டதெலாம் போதாதோ
மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ
எண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கியிரு
கண்ணற்ற சேய்போற் கலங்குவதுங் காண்கிலையோ
மாதரையும் மக்களையும் வன்கண்மை யாற்பிரிந்து
காத லிளைஞர் கருத்தழிதல் காணாயோ
எந்தாய் நீ தந்த இயற்பொருளெ லாமிழந்து
நொந்தார்க்கு நீயன்றி நோவழிப்பார் யாருளரோ
இன்ப சுதந்திரம்நின் இன்னருளாற் பெற்றதன்றோ
அன்பற்ற மாக்கள் அதைப்பறித்தாற் காவாயோ
வான்மழை யில்லையென்றால் வாழ்வுண்டோ எந்தை சுயா
தீனமெ கில்லை யென்றால் தீனரெது செய்வோமே
நெஞ்சகத்தே பொய்யின்றி நேர்ந்ததெலாம் நீ தருவாய்
வஞ்சகமோ எங்கள் மனத்தூய்மை காணாயோ
பொய்க்கோ உடலும் பொருளுயிரும் வாட்டுகிறோம்
பொய்க்கோ தீராது புலம்பி துடிப்பதுமே
நின்பொருட்டு நின்னருளால் நின்னுரிமையாம் கேட்டால்
என்பொருட்டு நீதான் இரங்கா திருப்பதுவோ
இன்று புதிதாய் இரக்கின்றோ மோ முன்னோர்
அன்றுகொடு வாழ்ந்த அருமையெலாம் ஓராயோ
நீயும் அறமும் நிலத்திருத்தல் மெய்யானால்
ஓயுமுனர் எங்களுக்கிவ் ஓர்வரம் நீ நல்குதியே

சுதந்திர தாகம்
ராகம் கமாஸ் தாளம் ஆதி
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்
என்றெம தன்னைகை விலங்குகள் போகும்
என்றெம தின்னல்கள் தீர்ந்துபொய் யாகும்
அன்றொரு பாரதம் ஆக்கவ தோனே
ஆரியர் வாழ்வினை ஆதரி போனே
வென்றி தருந்துணை நின்னரு ளன்றோ
மெய்யடி யோம்இன்னும் வாடுதல் நன்றோ
பஞ்சமும் நோயும்நின் மெய்யடி யார்க்கோ
பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ
தஞ்ச மடைந்தபின் கை விடலோமோ
தாயுந்தன் குழந்தையை தள்ளிட போமோ
அஞ்சலென் றருள் செயுங் கடமை யில்லாயோ
ஆரிய நீயும்நின் அறம்மற தாயோ
வெஞ்செயல் அரக்கரை வீட்டிடு வோனோ
வீர சிகாமணி ஆரியர் கோனே

சுதந்திர தேவியின் துதி
இதந்தரு மனையின் நீங்கி
இடர்மிகு சிறப்ப டாலும்
பதந்திரு இரண்டும் மாறி
பழிமிகு திழிவுற் றாலும்
விதந்தரு கோடி இன்னல்
விளைந்தெனை அழித்தி டாலும்
சுதந்திர தேவி நின்னை
தொழுதிடல் மறக்கி லேனே
நின்னருள் பெற்றி லாதார்
நிகரிலா செல்வ ரேனும்
பன்னருங் கல்வி கேள்வி
படைத்துயர திட்டா ரேனும்
பின்னரும் எண்ணி லாத
பெருமையிற் சிறந்தா ரேனும்
அன்னவர் வாழ்க்கை பாழாம்
அணிகள்வேய் பிணத்தோ டொப்பார்
தேவி நின்னொளி பெறாத
தேயமோர் தேய மாமோ
ஆவியங் குண்டோ செம்மை
அறிவுண்டோ ஆக்க முண்டோ
காவிய நூல்கள் ஞான
கலைகள் வேதங்க ளுண்டோ
பாவிய ரன்றோ நிந்தன்
பாலனம் படைத்தி லாதார்
ஒழிவறு நோயிற் சாவார்
ஊக்கமொன் றறிய மாட்டார்
கழிவுறு மாக்க ளெல்லாம்
இகழ்ந்திட கடையில் நிற்பார்
இழிவறு வாழ்க்கை தேரார்
கனவிலும் இன்பங் காணார்
அழிவுறு பெருமை நல்கும்
அன்னை நின் அருள் பெறாதார்
வேறு
தேவி நின்னருள் தேடி யுளந்தவித்து
ஆவி யுந்தம தன்பும் அளிப்பவர்
மேவி நிற்பது வெஞ்சிறை யாயினும்
தாவில் வானுல கென்ன தகுவதே
அம்மை உன்றன் அருமை யறிகிலார்
செம்மை யென்றிழி தொண்டினை சிந்திப்பார்
இம்மை யின்பங்கள் எய்துபொன் மாடத்தை
வெம்மை யார்புன் சிறையெனல் வேண்டுமே
மேற்றிசைப்பல நாட்டினர் வீரத்தால்
போற்றிநினை புதுநிலை யெய்தினர்
கூற்றினுக்குயிர் கோடி கொடுத்தும்நின்
பேற்றினைப்பெறு வேமெனல் பேணினர்
அன்னை தன்மைகொள்நின்னை அடியனேன்
என்ன கூறிஇசைத்திட வல்லனே
பின்ன முற்று பெருமை யிழந்துநின்
சின்ன மற்றழி தேயத்தில் தோன்றினேன்
பேர றத்தினை பேணுதல் வேலியே
சோர வாழ்க்கை துயர் மிடி யாதிய
கார று கதித்திடு சோதியே
வீர ருக்கமு தே நினை வேண்டுவேன்

விடுதலை
ராகம் பிலகரிவிடுதலை
விடுதலை
பறைய ருக்கும் இங்கு தீயர்
புலைய ருக்கும் விடுதலை
பரவ ரோடு குறவருக்கும்
மறவ ருக்கும் விடுதலை
திறமை கொண்டதீமை யற்ற
தொழில் புரங்ந்து யாவரும்
தேர்ந்த கல்வி ஞானம் எய்தி
வாழ்வம் இந்த நாட்டிலே விடுதலை
ஏழை யென்றும் அடிமையென்றும்
எவனும் இல்லை ஜாதியில்
இழிவு கொண்ட மனித ரென்பது
இந்தி யாவில் இல்லையே
வாழி கல்வி செல்வம் எய்தி
மனம கிழ்ந்து கூடியே
மனிதர் யாரும் ஒருநிகர் கர்ச
மானமாக வாழ்வமே விடுதலை
மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமை யைக்கொ ளுத்துவோம்
வைய வாழ்வு தன்னில் எந்த
வகையி னும்ந மக்குள்ளே
தாதர் என்ற நிலைமை மாறி
ஆண்க ளோடு பெண்களும்
சரிநி கர்ச மான மாக
வாழ்வம் இந்த நாட்டிலே விடுதலை

சுதந்திர பள்ளு
பள்ளர் களியாட்டம்
ராகம் வராளி தாளம் ஆதி
பல்லவி
ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோ மென்று ஆடு
பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே வெள்ளை
பரங்கியை துரையென்ற காலமும் போச்சே பிச்சை
ஏற்பாரை பணிகின்ற காலமும் போச்சே நம்மை
ஏய்ப்போரு கேவல்செய்யும் காலமும் போச்சே ஆடு
எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு நாம்
எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு
சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே இதை
தரணிக்கெல் லாமெடுத்து ஓதுவோமே ஆடு
எல்லோரும் ஒன்றென்னும் காலம் வந்ததே பொய்யும்
ஏமாற்றும் தொலைகின்ற காலம் வந்ததே இனி
நல்லோர் பெரியரென்னும் காலம் வந்ததே கெட்ட
நயவஞ்ச காரருக்கு நாசம் வந்ததே ஆடு
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் வீணில்
உண்டுகளி திருப்போரை நிந்தனை செய்வோம்
விழலுக்கு நீர்பாய்ச்சி மாய மாட்டோ ம் வெறும்
வீணருக்கு உழைத்துடலம் ஓய மாட்டோ ம் ஆடு
நாமிருக்கும் நாடு நமதுஎன்ப தறிந்தோம் இது
நமக்கே உரிமையாம் என்ப தறிந்தோம் இந்த
பூமியில் எவர்க்கும்இனி அடிமை செய்யோம் பரி
பூரணனு கேயடிமை செய்து வாழ்வோம் ஆடு

தேசிய இயக்க பாடல்கள்
சத்ரபதி சிவாஜி
தன் சைனியத்திற்கு கூறியது
ஜயஜய பவானி பாரதம்
ஜயஜய மாதா துர்க்கா
வந்தே மாதரம்
சேனை தலைவர்காள் சிறந்த மந்திரிகாள்
யானை தலைவரும் அருந்திறல் வீரர்காள்
அதிரத மனர்காள் துரக ததிபர்காள்
எதிரிகள் துணுக்குற இடித்திடு பதாதிகாள்
வேலெறி படைகாள் சூலெறி மறவர்காள்
கால னுருக்க்கொளும் கணைதுர திடுவீர்
மற்றுமா யிரவிதம் பற்றலர் தம்மை
செற்றிடு திறனுடை தீரர தினங்காள்
யாவிரும் வாழிய
தேவிநு தமக்கெலாம் திருவருள் புரிக
மாற்றலர் தம்புலை நாற்றமே யறியா
ஆற்றல்கொண் டிருந்ததில் வரும்புகழ் நாடு
வேதநூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர்
பாதமும் பொறுப்பளோ பாரத தேவி
வீரரும் அவரிசை விரித்திடு புலவரும்
பாரெலாம் பெரும்புகழ் பரப்பிய நாடு
தர்மமே உருவமா தழைத்த பே ரரசரும்
நிர்மல முனிவரும் நிறந்த நன் னாடு
வீரரை பெறாத மேன்மைநீர் மங்கையை
ஊரவர் மலடியென் றுரைத்திடு நாடு
பாரத பூமி பழம்பெரும்
நீரதன் புதல்வர் நினைவகற் றாதீர்
பாரத நாடு பார்க்கெலாம் திலகம்
நீரதன் புதல்வர் நினைவகற் றாதீர்
வானக முட்டும் இமயமால் வரையும்
ஏனைய திசைகளில் இருந்திரை கடலும்
காத்திடு நாடு கங்கையும் சிந்துவும்
தூத்திரை யமுனையும் சுனைகளும் புனல்களும்
இன்னரும் பொழில்களும் இணையிலா வளங்களும்
உன்னத மலைகளும் ஒளிர்தரு நாடு
பைந்நிற பழனம் பசியிலா தளிக்க
மைந்நிற முகில்கள் வழங்கும் பொன்னாடு
தேவர்கள் வாழ்விடம் திறலுயர் முனிவர்
ஆவலோ டடையும் அரும்புகழ் நாடு
ஊனமொன்றறியா ஞானமெய் பூமி
வானவர் விழையும் மாட்சியார் தேயம்
பாரத நாட்டிசை பகரயான் வல்லனோ
நீரதன் புதல்வர் நினைவகற் றாதீர்
தாய்த்திரு நாட்டை தறுகண் மிலேச்சர்
பேய்த்தகை கொண்டோ ர் பெருமையும் வன்மையும்
ஞானமும் அறியா நவைபுரி பகைவர்
வானகம் அடக்க வந்திடும் அரக்கர் போல்
இந்நாள் படை கொணர்ந்து இன்னல்செய் கின்றார்
ஆலயம் அழித்தலும் அருமறை பழித்தலும்
பாலரை விருத்தரை பசுக்களை ஒழித்தலும்
மாதர்கற் பழித்தலும் மறைவர் வேள்விக்கு
ஏதமே சூழ்வதும் இயற்றிநிற் கின்றார்
சாத்திர தொகுதங்யை தாழ்த்துவை கங்ன்றார்
கோத்தங்ர மங்கையர் குலங்கெடு கின்றார்
எண்ணில துணைவர்காள் எமக்கிவர் செயுந்துயர்
கண்ணியம் மறுத்தனர ஆண்மையுங் கடிந்தனர்
பொருளினை சிதைத்தனர் மருளினை விதைத்தனர்
திண்மையை யழித்து பெண்மையிங் களித்தனர்
பாரத பெரும்பெயர் பழிப்பெய ராக்கினர்
சூரர்தம் மக்களை தொழும்பரா புரிந்தனர்
வீரியம் அழிந்து மேன்மையும் ஒழிந்து நம்
ஆரியர் புலையரு கடிமைக ளாயினர்
மற்றிதை பொறுத்து வாழ்வதோ வாழ்க்கை
வெற்றிகொள் புலையர்தாள் வீழ்ந்துகொல் வாழ்வீர்
மொக்குகள்தான் தோன்றி முடிவது போல
மக்களா பிறந்தோர் மடிவது திண்ணம்
தாய்த்திரு நாட்டை தகர்த்திடு மிலேச்சரை
மாய்த்திட விரும்பான் வாழ்வுமோர் வாழ்வுகொல்
மானமென் றிலாது மாற்றலர் தொழும்பாய்
ஈனமுற் றிருக்க எவன்கொலோ விரும்புவன்
தாய்பிறன் கைப்பட சகிப்பவ னாகி
நாயென வாழ்வோன் நமரில்இங் குளனோ
பிச்சைவாழ் வுகந்து பிறருடைய யாட்சியில்
அச்சமுற் றிருப்போன் ஆரிய னல்லன்
புன்புலால் யாழ்க்கையை போற்றியே தாய்நாட்டு
அன்பிலா திருப்போன் ஆரிய னல்லன்
மாட்சிதீர் மிலேச்சர் மனப்படி யாளும்
ஆட்சியி லடங்குவோன் ஆரிய னல்லன்
ஆரி தன்மை அற்றிடுஞ் சிறியர்
யாரிவண் உளரவர் யாண்டேனும் ஒழிக
படைமுகத்து இறந்து பதம்பெற விரும்பா
கடைபடு மாக்களென் கண்முனில் லாதீர்
சோதரர் தம்மை துரோகிகள் அழிப்ப
மாதரர் நலத்தின் மகிழ்பவன் மகிழ்க
நாடெலாம் பிறர்வசம் நண்ணுதல் நினையான்
வீடுசென் றொளிக்க விரும்புவோன் விரும்புக
தேசமே நலிவொடு தேய்ந்திட மக்களின்
பாசமே பெரிதென பார்ப்பவன் செல்க
நாட்டுளார் பசியினால் நலிந்திட தன்வயிறு
ஊட்டுதல் பெரங்தென உண்ணுவோன் செல்க
ஆணுரு கொண்ட பெண்களும் அலிகளும்
வீணில்இங் கிருந்தெனை வெறுத்திடல் விரும்பேன்
ஆரியர் இருமின் ஆண்கள்இங்கு
வீரியம் மிகுந்த மேன்மையோர் இருமின்
மானமே பெரிதென மதிப்பவர் இருமின்
ஈனமே பொறாத இயல்பினர் இருமின்
தாய்நா டன்புறு தனையர் இங்கு இருமின்
மாய்நா பெருமையின் மாய்பவர் இருமின்
புலையர்தம் தொழும்பை பொறுக்கிலார் இருமின்
கலையறு மிலேச்சரை கடிபவர் இருமின்
ஊரவர் துயரில்நெஞ் சுருகுவீர் இருமின்
சோர நெஞ்சங்லா தூயவர் இருமின்
தேவிதாள் பணியு தீரர் இங்கு இருமின்
பாவியர் குருதியை பருகுவார் இருமின்
உடலினை போற்றா உத்தமர் இருமின்
கடல்மடு பினும்மனம் கலங்கலர் உதவுமின்
வம்மினோ துணைவீர் மருட்சிகொள் ளாதீர்
நம்மினோ ராற்றலை நாழிகை பொழுதெனும்
புல்லிய மாற்றலர் பொறுக்கவல் லார்கொல்
மெல்லிய திருவடி வீறுடை தேவியின்
இன்னருள் நமக்கோர் இருந்துணை யாகும்
பன்னரும் புகழுடை பார்த்தனும் கண்ணனும்
வீமனும் துரோணனும் வீட்டுமன் றானும்
ராமனும் வேறுள இருந்திறல் வீரரும்
நற்றுணை புரிவர் வானக நாடுறும்
வெற்றியே யன்றி வேறெதும் பெறுகிலேம்
பற்றறு முனிவரும் ஆசிகள் பகர்வர்
செற்றினி மிழேச்சரை தீர்த்திட வம்மீன்
ஈட்டியாற் சிரங்களை வீட்டிட எழுமின்
நீட்டிய வேல்களை நேரிருந்து எறிமின்
வாளுடை முனையினும் வயந்திகழ் சூலினும்
ஆளுடை கால்க ளடியினு தேர்களின்
உருளையி னிடையினும் மாற்றலர் தலைகள்
உருளையிற் கண்டுநெஞ் சுவப்புற வம்மின்
நம்இதம் பெருவளம் நலிந்திட விரும்பும்
வன்மியை வேரற தொலைத்தபின் னன்றோ
ஆணென பெறுவோம் அன்றிநாம் இறப்பினும்
வானுறு தேவர் மணியுல கடைவோம்
வாழ்வமேற் பாரத வான்புகழ தேவியை
தாழ்வினின் றுயர்த்திய தடம்புகழ் பெறுவோம்
போரெனில் இதுபோர் புண்ணி திருப்போர்
பாரினில் இதுபோற் பார்த்திடற் கெளிதோ
ஆட்டினை கொன்று வேள்விகள் இயற்றி
வீட்டினை பெறுவான் விரும்புவார் சிலரே
நெஞ்ச குருதியை நிலத்திடை வடித்து
வஞ்சக மழிக்கும் மாமகம் புரிவம்யாம்
வேள்வியில்இதுபோல் வேள்வியொன் றில்லை
தவத்தினில் இதுபோல் தவம்பிறி தில்லை
முன்னையோர் பார்த்தன் முனைத்திசை நின்று
தன்னெதிர் நின்ற தளத்தினை நோக்கிட
மாதுலர் சோதரர் மைத்துனர் தாதையர்
காதலின் நண்பர் கலைதரு குரவரென்று
இன்னவர் இருத்தல்கண்டு இதயம்நொ தோனா
தன்னரு தெய்விக சாரதி முன்னர்
ஐயனே இவர்மீ தம்பையோ தொடுப்பேன்
வையக தரசும் வானக ஆட்சியும்
போயினும் இவர்தமை போரினில் வீழ்த்தேன்
மெய்யினில் நடுக்கம் மேவுகின் றதுவால
கையினில் வில்லும் கழன்றுவீழ் கின்றது
வாயுலர் கின்றது மனம் பதைக்கின்றது
ஓய்வுறுங் கால்கள உலைந்தது சிரமமும்
வெற்றியை விரும்பேன் மேன்மையை
சுற்றமிங் கறுத்து சுகம்பெறல் விரும்பேன்
எனையிவர் கொல்லினும் இவரையான் தீண்டேன்
சினையறு திட்டபின் செய்வதோ ஆட்சி
எனப்பல கூறியவ் விந்திரன் புதல்வன்
கனப்படை வில்லை களத்தினில் எறிந்து
சோர்வோடு வீழ்ந்தனன் சுருதியின் முடிவா
தேர்வயின் நின்றநம் தெய்விக பெருமான்
வில்லெறி திருந்த வீரனை நோக்கி
புல்லிய அறிவொடு புலம்புகின் றனையால்
அறத்தினை பிரிந்த சுயோதனா தியரை
செறுத்தினி மாய்ப்பது தீமையென் கின்றாய்
உண்மையை அறியாய் உறவையே கருதி
பெண்மைகொண் டேதோ பிதற்றிநிற் கின்றாய்
வஞ்சகர் தீயர் மனிதரை வருத்துவோர்
நெஞ்சக தருக்குடை நீசர்கள் இன்னோர்
தம்மொடு பிறந்த சகோதரராயினும்
வெம்மையோ டொறுத்தல் வீரர்தஞ் செயலாம்
ஆரிய நீதிநீ அறிகிலை போலும்
பூரியர் போல்மனம் புழுங்குற லாயினை
அரும்புகழ் தேய்ப்பதும் அனாரி தகைத்தும்
பெரும்ப தடையுமாம் பெண்மையெங் கெய்தினை
பேடிமை யகற்று நின் பெருமையை மறந்திடேல்
ஈடிலா புகழினாய் எழுகவோ எழுக என்று
மெய்ஞ் ஞானம்நம் இறையவர் கூற
குன்றெனும் வயிர கொற்றவான் புயத்தோன்
அறமே பெரிதென அறிந்திடு மனத்தனாய்
மறமே உருவுடை மாற்றலர் தம்மை
சுற்றமும் நோக்கான் தோழமை மதியான்
பற்றலர் தமையெலாம் பார்க்கிரை யாக்கினன்
விசயனன் றிருந்த வியன்புகழ் நாட்டில்
இசையுநற் றவத்தால் இன்றுவாழ திருக்கும்
ஆரிய வீரர்காள் அவருடை மாற்றலர்
தேரில்இ நாட்டினர் செறிவுடை உறவினர்
நம்மையின் றெதிர்க்கும் நயனிலா புல்லோர்
செம்மைதீர் மிலேச்சர் தேசமும் பிறிதாம்
பிறப்பினில் அன்னியர் பேச்சினில்
சிறப்புடை யாரி சீர்மையை அறியார்

கோக்கலே சாமியார் பாடல்
இராமலிங்க சுவாமிகள் ஏகளக்கமற பொதுநடம் நான்
கண்டுகொண்ட தருணம என்று பாடிய பாட்டை
திரித்து பாடியது
களக்கமுறும் மார்லிநடம் கண்ண்டுகொண்ட தருணம்
கடைச்சிறியேன் உளம்பூத்து காய்த்ததொரு காய்தான்
விளக்கமுற பழுத்திடுமோ வெம்பிவிழு திடுமோ
வெம்பாது விழினுமென்றன் கரத்திலக படுமோ
வளர்த்தபழம் கர்சா னென்ற குரங்குகவர திடுமோ
மற்றிங்ஙன் ஆட்சிசெய்யும் அணில்கடித்து விடுமோ
துளக்கமற யான்பெற்றிங் குண்ணுவனோ அல்லால்
தொண்டவிக்குமோ ஏதும் சொல்லறிய தாமோ

தொண்டு செய்யும் அடிமை
சுயராஜ்யம் வேண்டுமென்ற பாரதவாசிக்கு
ஆங்கிலேயஉத்தியோகஸ்தன் கூறுவது
நந்தனார் சரித்திரத்திலுள்ள மாடு தின்னும் புலையா உனக்கு
மார்கழி திருநாளா என்ற பாட்டின் வர்ணமெட்டு
தொண்டு செய்யும் அடிமை உனக்கு
சுதந்திர நினைவோடா
பண்டு கண்ட துண்டோ அதற்கு
பாத்திர மாவாயோ தொண்டு
ஜாதி சண்டை போச்சோ உங்கள்
சண்டை போச்சோ
நீதி சொல்ல வந்தாய் கண்முன்
நிற்கொ ணாது போடா தொண்டு
அச்சம் நீங்கி னாயோ அடிமை
ஆண்மை தாங்கி னாயோ
பிச்சை வாங்கி பிழைக்கும் ஆசை
பேணு தலொழி தாயோ தொண்டு
கப்ப லேறு வாயோ அடிமை
கடலை தாண்டு வாயோ
குப்பை விரும்பும் நாய்க்கே அடிமை
கொற்ற தவிசு முண்டோ தொண்டு
ஒற்றுமை பயின் றாயோ அடிமை
உடல்பில் வலிமை யுண்டோ
வெற்று ரைபே சாதே அடிமை
வீரியம் அறி வாயோ தொண்டு
சேர்ந்து வாழு வீரோ உங்கள்
சிறுமை குணங்கள் போச்சோ
சோர்ந்து வீழ்தல் போச்சோ உங்கள்
சோம்பரை துடை தீரோ தொண்டு
வெள்ளை நிறத்தை கண்டால் பதறி
வெருவலை ஒழி தாயோ
உள்ளது சொல்வேன் கேள் சுதந்திரம்
உனக்கில்லை மற திடடா தொண்டு
நாடு காப்ப தற்கே உனக்கு
ஞானம் சிறது முண்டோ
வீடு காக்க போடா அடிமை
வேலை செ போடா தொண்டு
சேனை நடத்து வாயோ தொழும்புகள்
செய்திட விரும்பு வாயோ
ஈன மான தொழிலே உங்களுக்கு
இசைவ தாகும் போடா தொண்டு

நம்ம ஜாதி கடுக்குமோ
புதிய கட்சி தலைவரை நோக்கி நிதான கட்சியார்
சொல்லுதல்
ஓய் நந்தனாரே நம்ம ஜாதி கடுக்குமோ
நியா தானோ நீர் சொல்லும் என்ற வர்ணமெட்டு
பல்லவி
ஓய் திலகரே நம்ம ஜாதி கடுக்குமோ
செய்வது சரியோ சொல்லும்
கண்ணிகள்
முன்னறி யா புது வழக்கம் நீர்
மூட்டி விட்ட திந்த பழக்கம் இப்போது
எந்நகரிலு மிது முழக்கம் மிக
இடும்பை செய்யும் இந்த ஒழுக்கம் ஓய் திலகரே
சுதந்திரம் என்கிற பேச்சு எங்கள்
தொழும்புக ளெல்லாம் வீணா போச்சு இது
மதம்பிடி ததுபோலாச்சு எங்கள்
மனிதர கெல்லாம் வந்த தேச்சு ஓய் திலகரே
வெள்ளை நிறத்தவர்க்கே ராஜ்யம் அன்றி
வேறெ வர்க்குமது தியாஜ்யம் சிறு
பிள்ளைக ளுக்கே உபதேசம் நீர்
பேசிவைத்த தெல்லாம் மோசம் ஓய் திலகரே

நாம் என்ன செய்வோம்
நாம் என்ன செய்வோம் புலையரே இந்த
பூமியி லில்லாத புதுமையை கண்டோ ம் என்றவர்ணமெட்டு
ராகம் புன்னாகவராளி தாளம் ரூபகம்
பல்லவி
நாம் என்ன செய்வோம் துணைவரே இந்த
பூமியிலில்லாத புதுமையை கண்டோ ம் நாம்
சரணங்கள்
திலகன் ஒருவனாலே இப்படி யாச்சு
செம்மையும் தீமையும் இல்லாமலே போச்சு
இபலதிசையும் துஷ்டர் கூட்டங்க ளாச்சு
பையல்கள் நெஞ்சில் பயமென்பதே போச்சு நாம்
தேசத்தில் எண்ணற்ற பேர்களுங் கெட்டார்
செய்யு தொழில்முறை யாவரும் விட்டார்
பேசுவோர் வார்த்தை தாதா சொல்லிவிட்டார்
பின்வர வறியாமல் சுதந்திரம் தொட்டார் நாம்
பட்டம்பெற் றோர்க்குமதி பென்பது மில்லை
பரதேச பேச்சில் மயங்குபவ ரில்லை
சட்டம் மறந்தோர்க்கு பூஜை குறைவில்லை
சர்க்கா ரிடம்சொல்லி பார்த்தும் பயனில்லை நாம்
சீமை துணியென்றால் உள்ளம் கொதிக்கிறார்
சீரில்லை என்றாலோ எட்டி மிதிக்கிறார்
தாமெ தையோ எவந்தேஎ யென்று துதிக்கிறார்
தரமற்ற வார்த்தைகள் பேசி குதிக்கிறார் நாம்

பாரத தேவியின் அடிமை
நந்தன் சரித்திரத்திலுள்ள ஆண்டை கடிமைக்காரன்
அல்லவே என்ற பாட்டின் வர்ணமெட்டையும் கருத்தையும்
பின்பற்றி எழுதியது
பல்லவி
அன்னியர் தமக்கடிமை யல்லவே நான்
அன்னியர் தமக்கடிமை யல்லவே
சரணங்கள்
மன்னிய புகழ் பாரத தேவி
தன்னிரு தாளிணை கடிமை காரன் அன்னியர்
இலகு பெருங்குணம் யாவைக்கும் எல்லையாம்
திலக முனி கொத்த அடிமைக்காரன் அன்னியர்
வெய்ய சிறைக்குள்ளே புன்னகை யோடுபோம்
ஐயன் பூபேந்தரனு கடிமை காரன் அன்னியர்
காவலர் முன்னிற்பினும் மெய் தவறா எங்கள்
பாலர் தமக்கொத்த அடிமை காரன் அன்னியர்
காந்தன லிட்டாலும் தர்மம் விடாப்ரமம்
பாந்தவன் தாளிணை கடிமை காரன் அன்னியர்

வெள்ளை கார விஞ துரை கூற்று
ராகம் தாண்டகம் தாளம் ஆதி
நாட்டி லெங்கும் சுதந்திர வாஞ்சையை
நாட்டினாய் கனல் மூட்டினாய்
வாட்டி யுன்னை மடக்கி சிறைக்குள்ளே
மாட்டுவேன் வலி காட்டுவேன் நாட்டி
கூட்டம் கூடி வந்தே மாதரமென்று
கோஷித்தாய் எமை தூஷித்தாய்
ஓட்டம் நாங்க ளெடுக்க வென்றே கப்பல்
ஓட்டினாய் பொருள் ஈட்டினாய் நாட்டி
கோழைப்பட்ட ஜனங்களு குண்மைகள்
கூறினாய் சட்டம் மீறினாய்
ஏழைப்ப டிங்கு இறத்தல் இழிவென்றே
ஏசினாய் வீரம் பேசினாய் நாட்டி
அடிமை பேடிகள் தம்மை மனிதர்கள்
ஆக்கினாய் புன்மை போக்கினாய்
மிடிமை போதும் நமக்கென் றிருந்தோரை
மீட்டினாய் ஆசை ஊட்டினாய் நாட்டி
தொண்டொன் றேதொழிலா கொண்டிருந்தோரை
தூண்டினாய் புகழ் வேண்டினாய்
கண்கண்ட தொழில் கற்க மார்க்கங்கள்
காட்டினாய் சோர்வை ஓட்டினாய் நாட்டி
எங்கும் இந்த சுயராஜ்ய விருப்பத்தை
ஏவினாய் விதை தூவினாய்
சிங்கம் செய்யும் தொழிலை சிறுமுயல்
செய்யவோ நீங்கள் உய்யவோ நாட்டி
சுட்டு வீழ்த்தியே புத்தி வருத்தி
சொல்லுவேன் குத்தி கொல்லுவேன்
தடி பேசுவோ ருண்டோ சிறைக்குள்ளே
தள்ளுவேன் பழி கொள்ளுவேன் நாட்டி

தேசபக்தர் சிதம்பரம் பிள்ளை மறுமொழி
சொந்த நாட்டிற் பரர்க்கடிமை செய்தே
துஞ்சிடோ ம் இனி அஞ்சிடோ
எந்த நாட்டினும் இந்த அநீதிகள்
ஏற்குமோ தெய்வம் பார்க்குமோ
வந்தே மாதரம் என்றுயிர் போம்வரை
வாழ்த்துவோம் முடி தாழ்த்துவோம்
எந்த மாருயி ரன்னையை போற்றுதல்
ஈனமோ அவ மானமோ
பொழுதெல்லாம் எங்கள் செல்வங் கொள்ளை கொண்டு
போகவோ நாங்கள் சாகவோ
அழுது கொண்டிரு போமோ ஆண்பிள்ளைகள்
அல்லமோ உயிர் வெல்லமோ
நாங்கள் முப்பது கோடி ஜனங்களும்
நாய்களோ பன்றி சேய்களோ
நீங்கள் மட்டும் மனிதர்களோ
நீதமோ பிடி வாதமோ
பார தத்திடை அன்பு செலுத்துதல்
பாபமோ மனஸ் தாபமோ
கூறும் எங்கள் மிடிமையை தீர்ப்பது
குற்றமோ இதில் செற்றமோ
ஒற்றுமை வழி யொன்றே வழியென்பது
ஓர்ந்திட்டோ ம் நன்கு தேர்ந்திட்டோ
மற்று நீங்கள் செய்யுங்கொடு மைக்கெல்லாம்
மலைவு றோம் சித்தம் கலைவுறோம்
சதையை துண்டுதுண் டாக்கினும் உன்னெண்ணம்
சாயுமோ ஜீவன் ஓயுமோ
துள்ளே இலங்கு மஹாபக்தி
ஏகுமோ நெஞ்சம் வேகுமோ

நடிப்பு சுதேசிகள்
பழித்தறிவுறுத்தல்
கிளிக்கண்ணிகள்
நெஞ்சில் உரமுமின்றி நேர்மை திறமு மின்றி
வஞ்சனை சொல்வா ரடீ கிளியே
வா சொல்லில் வீரரடி
கூட்டத்தில் கூடிநின்று கூவி பிதற்ற லன்றி
நாட்டத்தில் கொள்ளா ரடீ கிளியே
நாளில் மறப்பா ரடீ
சொந்த அரசும்புவி சுகங்களும் மாண்பு களும்
அந்தகர குண்டாகு மோ கிளியே
அகலிகளு கின்ப முண்டோ
கண்கள் இரண்டிருந்தும் காணு திறமை யற்ற
பெண்களின் கூட்டமடீ கிளியே
பேசி பயனென் னடீ
யந்திர சாலை யென்பார் எங்கள் துணிகளென்பார்
மந்திர தாலே யெங்கும் கிளியே
மாங்கனி வீழ்வ துண்டோ
உப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டு சேலை
செப்பி திரிவா ரடீ கிளியே
செய்வ தறியா ரடீ
தேவியர் மானம் என்றும் தெய்வத்தின் பக்தி
நாவினாற் சொல்வ தல்லால் கிளியே
நம்புத லற்றா ரடீ
மாதரை கற்பழித்து வன்கண்மை பிறர் செ
பேதைகள் போலு யிரை கிளியே
பேணி யிருந்தா ரடீ
தேவி கோயிலிற் சென்று தீமை பிறர்கள் செய்ய
ஆவி பெரிதென் றெண்ணி கிளியே
அஞ்சி கிடந்தா ரடீ
அச்சமும் பேடி மையும் அடிமை சிறு மதியும்
உச்சத்திற் கொண்டா ரடீஸ்ரீ கிளியே
ஊமை சனங்க ளடீ
ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்று மில்லா
மாக்களு கோர் கணமும் கிளியே
வாழ தகுதி யுண்டோ
மானம் சிறிதென் றெண்ணி வாழ்வு பெரிதென் றெண்ணும்
ஈனர குலக தனில் கிளியே
இருக்க நிலைமை யுண்டோ
சிந்தையிற் கள்விரும்பி சிவசிவ வென்பது போல்
வந்தே மாதர மென்பார் கிளியே
மனத்தி லதனை கொள்ளார்
பழமை யென்று பாவனை பேச லன்றி
பழமை இருந்த நிலை கிளியே
பாமர ரேதறி வார்
நாட்டில் அவமதிப்பும் நாணின்றி இழி செல்வ
தேட்டில் விருப்புங் கொண்டே கிளியே
சிறுமை யடைவா ரடீ
சொந்த சகோ தரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்
சிந்தை இரங்கா ரடீ கிளியே
செம்மை மறந்தா ரடீ
பஞ்சத்தும் நோய்க ளிலும் பாரதர் புழுக்கள் போல்
துஞ்சத்தும் கண்ணாற் கண்டும் கிளியே
சோம்பி கிடப்பா ரடீ
தாயை கொல்லும் பஞ்சத்தை தடுக்க முயற்சி யுறார்
வாயை திறந்து சும்மா கிளியே
வந்தே மாதர மென்பார்

தேசீ தலைவர்கள்
மகாத்மா காந்தி பஞ்சகம்
வாழ்க நீ எம்மான்
வாழ்க நீ எம்மான் இந்த வையத்து நாட்டி லெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறி கெட்டு
பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேச தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா நீ வாழ்க
அடிமை வாழ்வ கன்றி நாட்டார் விடுதலை யார்ந்து செல்வம்
குடிமையி லுயர்வு கல்வி ஞானமும் கூடி யோங்கி
படிமிசை தலைமை யெய்தும் படிக்கொரு சூழ்ச்சி செய்தாய்
முடிவிலா கீர்த்தி பெற்றாய புவிக்குள்ளே முதன்மை யுற்றாய்
வேறு
கொடியவெ நாக பாசத்தை மாற்ற
மூலிகை கொணர்ந்தவன் என்கோ
இடிமின்னல் தாங்கும் குடை செய்தான் என்கோ
என்சொலி புகழ்வதிங் குனையே
விடிவிலா துன்பஞ் செயும் பராதீன
வெம்பிணி யகற்றிடும் வண்ணம்
படிமிசை புதிதா சாலவும் எளிதாம்
படிக்கொரு சூழ்ச்சி நீ படைத்தாய்
தன்னுயிர் போலே தனக்கழி வெண்ணும்
பிறனுயிர் தன்னையும் கணித்தல்
மன்னுயி ரெல்லாம் கடவுளின் வடிவம்
கடவுளின் மக்களென் றுணர்தல்
இன்னமெய்ஞ் ஞான துணிவினை மற்றாங்கு
இழிபடு போர் கொலை தண்டம்
பின்னியே கிடக்கும் அரசிய லதனில்
பிணைத்திட துணிந்தனை பெருமான்
பெருங்கொலை வழியாம் போர்வழி இகழ்ந்தாய்
அதனி லு திறன்பெரி துடைத்தாம்
அருங்கலை வாணர் மெய்த்தொண்டர் தங்கள்
அறவழி யென்று நீ அறிந்தாய்
நெருங்கிய பயன்சேர் ஒத்துழை யாமை
நெறியினால் இந்தியா விற்கு
வருங்கதி கண்டு பகைத்தொழில் மறந்து
வையகம் வாழ்கநல் லறத்தே

குரு கோவிந்தர்
ஆயிர தெழுநூற் றைம்ப தாறு
விக்ரம நாண்டு வீரரு கமுதாம்
ஆனந்த புரத்தி லார்ந்தினி திருந்தனன்
பாஞ்சா லத்து படர்தரு சிங
குலத்தினை வகுத்த குருமணி யாவான்
ஞான பெருங்கடல் நல்லிசை கவிஞன்
வானம்வீழ துதிரினும் வாள்கொடு தடுக்கும்
வீரர் நாயகன் மேதினி காத்த
குருகோ விந்த சிங்கமாங் கோமகன்
அவந்திரு கட்டளை அறிந்துபல் திசயினும்
பாஞ்சா லத்துறு படைவலோர் நாடொறும்
நாடொறும் வந்து நண்ணுகின் றாரால்
ஆனந்த புரத்தில் ஆயிர மாயிரம்
வீரர்கள் குருவின் விருப்பினை தெரிவான்
கூடிவ தெய்தினர் கொழும்பொழி லினங்களும்
புன்னகை புனைந்த புதுமலர தொகுதியும்
பைந்நிறம் விரிந்த பழன காட்சியும்
நல்வர வாகுக நம்மனோர் வரவு என்று
ஆசிகள் கூரி ஆர்ப்பன போன்ற
புண்ணிய நாளிற் புகழ்வளர் குரவன்
திருமொழி கேட்க செறிந்தனர் சீடர்கள்
யாதவன் கூறும் என்னெ கருளும்
எப்பணி விதித்தெம தேழேழ் பிறவியும்
இன்புடை தாக்கும் எனப்பல கருதி
மாலோன் திருமுனர் வந்துகண் ணுயர்த்தே
ஆக்கினை தெரிவான் ஆவலொடு துடிக்கும்
தேவரை யொத்தனர் திடுக்கென பீடத்து
ஏறிநின் றதுகாண் இளமையும் திறலும்
ஆதிப தகைமையும் அமைந்ததோர் உருவம்
விழிகளில் தெய்வ பெருங்கனல் வீசிட
திருமுடி சூழ்ந்தோர் தேசிகா திருப்ப
தூக்கிய கரத்தில் சுடருமிழ திருந்தது
கூறநா நடுங்குமோல் கொற்ற கூர்வாள்
எண்ணிலா வீரர் இவ்வுரு நோக்கி
வான்நின் றிறங்கிய மாந்திரி கன்முனர
சிங கூட்டம் திகைத்திரு தாங்கு
மோனமுற் றடங்கி முடிவணங் கினரால்
வாள்நுனி காட்டி மாட்சியார் குரவன்
திருவுள நோக்கஞ் செப்புவன் தெய்வ
சேயித ழசைவுற சினந்தோர் எரிமலை
குமுறுதல் போல்வெளி கொண்டன திருமொழி
வாளிதை மனிதர் மார்பிடை குளிப்ப
விரும்புகின் றேன்யான் தீர்கிலா விடாய்கொள்
தரு தெய்வ தான்பல குருதி
பலவிழை கின்றதால் பக்தர்கள் நும்மிடை
நெஞ்சினை கிழித்து நிலமிசை யுதிரம்
வீழ்த்தி தேவியின் விடாயினை தவிர்ப்ப
யார்வரு கின்றீர் என்னலும் சீடர்கள்
நடுங்கியோர் கணம்வரை நாவெழா திருந்தனர்
கம்மென ஓர்சிறு கணங்கழி வுற்றது
ஆங்கிரு தார்பல் லாயிர ருள்ளொரு
வீரன்முன் வந்து விளம்புவான் இஃதே
குருமணி நின்னொரு கொற்றவள் கிழிப்ப
விடாயறா தருமம் மேம்படு தெய்வத்து
இரையென மாயவன் ஏற்றருள் புரிகவே
புன்னகை மலர்ந்தது புனிதநல் வதனம்
கோயிலுள் அவனை குரவர்கோன் கொடுசெல
மற்றதன் நின்றொர் மடுவின்வ தாலென
குருதிநீர் பா குழாத்தினர் கண்டஜர்
பார்மின் சற்குரு பளீரென கோயிலிஜ்
வெளிப்போ தாங்கு மேவினோர் முன்னம்
முதற்பலி முடித்து முகமலர தோனாய்
மின்னென பாய்ந்து மீண்டுவ துற்றனன்
மீண்டுமவ் வுதிரவாள் விண்வழி தூக்கி
பின்வரு மொழிகள் பேசுபவன் குரவன்கோன்
மானுடர் நெஞ்சிலிவ் வாளினை பதிக்க
சித்தம்நான் கொண்டேன் தேவிதான் பின்னுமோர்
பலிகே கின்றாள் பக்தர்காள்
நும்முளேஇன்னும்இங் கொருவன் இரத்தமே தந்துஇ
காளியை தாகங் கழித்திட துணிவோன்
எவனுளன் எனலும் இன்னுமோர் துணிவுடை
வீரன்முன் நின்று விருப்பினை உணர்த்தினன்
இவனையுங் கோயிலுள் இனிதழை தேகி
இரண்டாம் பலிமுடி தீண்டினன் குரவன்
குருதியை கண்டு குழாத்தினர் நடுங்கினர்
இங்ஙன மீண்டுமே இயற்றிபப
லியோ ரைந்து பரமனங் களித்தனன்
அறத்தினை தமதோர் அறிவினாற் கொண்ட
மட்டிலே மானிடர் மாண்பெற லாகார்
அறமது தழைப்ப நெஞ்சகம் காட்டி
வாட்குத்து ஏற்று மாய்பவர் பெரியோர்
அவரே மெய்மையோர் முத்தரும்
தோன்றுநூ றாயிரம் தொண்டர் தம்முள்ளே
அத்தகை நல்லரை அறிகுதல் வேண்டியே
தண்ணரு கடலா தகவுயர் குரவன்
கொடுமைசேர் சோதனை புரிந்திடல் குறித்தனன்
அன்பின் மிகையால் ஆருயிர் நல்குவோர்
ஐவரை கண்டபின் அவ்வியல் உடையார்
எண்ணிலர் உளரென துணிந்துஇன்பு எய்தினன்
வெய்யசெங் குருதியின் வீழ்ந்துதா மிறந்து
சொர்க்கமுற் றாரென தொண்டர்கொண் டிருக்கும்
ஐந்துநன் மணியெனும் ஐந்துமு தரையும்
கோயிலு ளிருந்துபே ரவைமுனர கொணர்ந்தான்
ஆர்த்தனர் தொண்டர் அருவி பெய்தினர்
விழிகளை துடைத்து மீளவும் நோக்கினர்
ஜயஜய குருமணி ஜயகுரு சிங்கம்
எனப்பல வாழிகள் இசைத்தனர் ஆடினர்
அப்போழ் தின்னருள் அவதரி தனையான்
நற்சுடர பரிதி நகைபுரி தாங்கு
குறுநகை புரிந்து குறையறு முத்தர்
ஐவர்கள் தம்மையிம் அகமுற தழுவி
ஆசிகள் கூறி அவையினை நோக்கி
கடல்முழ கென்ன முழங்குவன் காணீர்
ஏகாளியும் நமது கனகநன் னாட்டு
தேவியும் ஒன்றென தேர்ந்தநல் அன்பர்காள்
நடுக்கம் நீரெய்த நான்ஐம் முறையும
பலியிட சென்றது பாவனை மன்ற
என்கர தாற்கொலோ நும்முயிர் எடுப்பன்
ஐம்முறை தானும் அன்பரை மறைத்துநும்
நெஞ்சக சோதனை நிகழ்த்தினன் யானே
தாய்மணி நாட்டின் உண்மை தனயர் நீர்
என்பது தெளிந்தேன் என்கர வாளால்
அறுத்ததிங் கின்றை தாடுகள் காண்பீர்
சோதனை வழியினு துணிவினை கண்டேன்
களித்ததென் நெஞ்சம் கழிந்தன கவலைகள்
குருகோ விந்தன் கொண்டதோர் தருமம்
சீடர்தம் மார்க்கம்எ எனப்புகழ் சிறந்தது
இன்னுமம் மார்க்க திருப்பவர் தம்பெயர்
காலசா என்ப எனுமொழி
முத்தர்தம் சங்க முறையெனும் பொருளது
முத்தர்தம் சபைக்கு மூலர்க ளாகமற்று
ஐவரன் னோர்தமை அருளினன் ஆரங்யன்
சமைந்தது எகாலசாஎ எனும் பெயர சங்கம்
பாரத மென்ற பழம்பெரு நாட்டினர்
ஆவிதே தழித்திலர் ஆண்மையிற் குறைந்திலர்
வீரமுஞ் சிரத்தையும் வீந்தில ரென்று
புவியினோர் அறி புரிந்தனன் முனிவன்
அந்நாள் முகுந்தன் அவதரி தாங்கு ஓர்
தெய்விக தலைவன் சீருற தோன்றி
மண்மா சகன்ற வான்படு சொற்களால்
எழுப்பிடுங் காலை இறந்துதான் கிடக்கிலள்
இளமையும் துணிவும் இசைந்துநம் அன்னை
சாதியின் மான தாங்கமுற் படுவளென்று
உலகினோ ரறிவிடை யுறுத்தினன் முனிவன்
ஐம்பெரும் பூ தகிலமே சமைத்த
முன்னவ னொப்ப முனிவனும் ஐந்து
சீடர்கள் மூலமா தேசுறு பாரத
சாதியை வகுத்தனன் தழைத்தது தருமம்
கொடுங்கோல் பற்றிய புன்னகை குரிசிலர்
நடுங்குவ ராயினர் நகைத்தனள் சுதந்திரை
ஆயிர தெழுநூற் றைம்ப தாறு
விக்கிர மார்க்க னாண்டினில் வியன்புகழ
குருகோ விந்தன் கொற்றமர் சீடரை
கூட்டியே தெய்வ கொலுவொன் றமைத்தனன்
காண்டற் கரிய காட்சி கவின் திகழ்
அரியா தனத்தில் அமர்ந்தனன் முனிவர்கோன்
சூழ்ந்திரு தனர் உயிர் தொண்டர்தாம் ஐவரும்
தன் திரு கரத்தால் ஆடைகள் சார்த்தி
மாலைகள் சூட்டி மதிப்புற இருத்தி
கண்மணி போன்றார் ஐவர்மேற் கனிந்து
குழைவுற வாழ்த்தி குழாத்தினை நோக்கி
காண்டிரோ முதலாங் காலசா என்றனன்
நாடும் தருமமும் நன்கிதிற் காப்பான்
அமைந்ததி சங்கம் அறமின்நீர் என்றான்
அருகினில் ஓடிய ஆற்றின்நின் றையன்
இரும்பு சிறுகல தின்னீர் கொணர்ந்து
வாள்முனை கொண்டு மற்றதை கலக்கி
மந்திர மோதினன் மனத்தினை அடக்கி
சித்தமே முழுதுஞ் சிவத்திடை யாக்கி
சபமுரை திட்டான் சயப்பெருந்திரு
கொலுமுனர் வந்து குதித்துநின் றிட்டாள்
ஆற்றுநீர் தனையோ அடித்தத திருவாள்
அயர்ந்துபோய் நின்ற அரும்புகழ் பாரத
சாதியின் திறல்கள் தம்மையே இயக்கி
நல்லுயிர் நல்கினன் நாடெலாம் இயங்கின
தவமுடை ஐவரை தன்முனா நிறுத்தி
மந்திர நீரை மாசற தெளித்து
அருள்மய மாகி அவர்விழி தீண்டினன்
பார்மினோ உலகீர் பரமனங் கரத்தால்
அவர்விழி தீண்டிய அக்கண தன்றே
நாடனை திற்கும் நல்வழி திறந்தது
சீடர்கள னைவரும் தீட்சை இஃதடைந்தனர்
ஐயன் சொல்வான் அன்பர்காள் நீவிர்
செய்திட பெற்ற தீட்சையின் நாமம்
அமிர்தம்எ என்று அறிமின் அரும்பே றாம் இது
பெற்றார் யாவரும் பேரருள்
நுமக்கினி தருமம் நுவன்றிட கேண்மின்
ஒன்றாம் கடவுள் உலகிடை தோன்றிய
மானிடரெல்லாஞ் சோதரர்
மானிடர்சமத்துவ முடையார் சுதந்திரஞ் சார்ந்தவர்
சீடர்காள் குலத்தினும் செயலினும் அனைத்தினும்
இக்கண தொட்டுநீர் யாவிரும் ஒன்றே
பிரிவுகள் துடைப்பீர் பிரிதலே சாதல்
ஆரியர் சாதியுள் ஆயிரஞ் சாதி
வகுப்பவர் வகுத்து மாய்க நீர் அனைவிரும்
தருமம் கடவுள் சத்தியம் சுதந்திரம்
என்பவை போற்ற எழுந்திடும் வீர
சாதியொன் றினையே சார்ந்ததோ ராவீர்
அநீதியும் கொடுமையும் அழித்திடுஞ் சாதி
இமழித்திடலறியா வன்முக சாதி
இரும்புமு திரையும் இறுகிய கச்சையும்
கையினில் வாளும் கழன்றிடா சாதி
இசோதர நட்பு தொடர்ந்திடு சாதி
அரசன் இல்லாது தெய்வமே யரசா
மானுடர் துணைவரா மறமே பகையா
குடியர சியற்றுங் கொள்கையார் சாதி
அறத்தினை வெறுக்கிலீர் மறத்தினை பொறுக்கிலீர்
தாய்த்திரு நாட்டை சந்ததம் போற்றி
புகழொடு வாழ்மின்
என்றுரை தையன் இன்புற வாழ்த்தினன்
அவனடி போற்றி ஆர்த்தனர் சீடர்கள்
குருகோ விந்த கோமகன் நாட்டிய
கொடிஉயர தசை குவலயம் புகழ்ந்தது
ஆடியே மாய்ந்தது அரங்கசீ ஆட்சி

தாதாபாய் நௌரோஜி
முன்னாலில் இராமபிரான் கோதமனா
தியபுதல்வர் முறையி னீன்று
பன்னாடு முடிவணங்க தலைமைநிறு
தியஎமது பரத கண்ட
மின்னாள் இங் கிந்நாளின் முதியோளா
பிறரெள்ள வீழ்ந்த காலை
அன்னாளை துயர் தவிர்ப்பான் முயல்வர்சில
மக்களவ ரடிகள் சூழ்வாம்
அவ்வறிஞ ரனைவோர்க்கும் முதல்வனாம்
மைந்தன் தன் அன்னை கண்ணீர்
எவ்வகையி னுந்துடைப்பேன் இன்றே லென்
உயிர் துடைப்பேன் என்ன போந்து
யௌவன நாள் முதற்கொடுதான்
எண்பதின்மேல் வயதுற்ற இன்றுகாறும்
செவ்வியுற தனதுடலம் பொருளாவி
யானுழைப்பு தீர்த லில்லான்
கல்வியை போல் அறிவும் அறிவினைப்போல
கருணையும்அ கருணை போல
பல்விதவூ கங்கள்செயு திறனுமொரு
நிகரின்றி படைத்த வீரன்
வில்விறலாற் போர்செய்தல் பயனிலதாம்
எனஅதனை வெறுத்தே உண்மை
சொல்விறலாற் போர்செய்வோன் பிறர்க்கின்றி
தனக்குழையா துறவி யாவோன்
மாதா வாய் விட்டலற அதைச்சிறிதும்
மதியாதே வாணாள் போக்கு
தீதாவார் வரினுமவர கினியசொலி
நன்குணர்த்துஞ் செவ்வி யாளன்
வேதாவா யினுமவனு கஞ்சாமே
உண்மைநெறி விரிப்போன் எங்கள்
தாதாவாய் விளங்குறுநல் தாதாபாய்
நவுரோஜி சரணம் வாழ்க
எண்பஃதாண் டிருந்த வன்இனி பல்லாண்டு
இருந்தெம்மை இனிது காக்க
பண்பல்ல நமக்கிழைப்போர் அறிவுதிரு
துக எமது பரதநாட்டு
பெண்பல்லார் வயிற்றினு நவுரோஜி
போற்புதல்வர் பிறந்து வாழ்க
விண்புல்லு மீன்களென அவனன்னார்
எவ்வயினும் மிகுக மன்னோ

பூபேந்திர விஜயம்
பாபேந்திரியஞ் செறுத்த எங்கள்
விவேகானந்த பரமன் ஞான
ருபேந்திரன் தனக்கு பின்வந்தோன்
விண்ணவர்த முலகை யாள்ப்ர
தாபேந்திரன் கோப முறினுமதற்கு
அஞ்சியற தவிர்க்கி லாதான்
பூபேந்திர பெயரோன் பாரதநா
டிற்கடிமை பூண்டு வாழ்வோன்
வீழ்த்தல்பெற தருமமெலாம் மறமனைத்துங்
கிளைத்துவர மேலோர் தம்மை
தாழ்த்ததமர் முன்னோங்க நிலைபுரண்டு
பாதகமே ததும்பி நிற்கும்
பாழ்த்த கலியுகஞ்சென்று மற்றொருகம்
அருகில்வரும் பான்மை தோன்ற
காழ்த்தமன வீரமுடன் யுகாந்திரத்தின்
நிலையினிது காட்டி நின்றான்
மண்ணாளு மன்ன ரவன் றனை சிறைசெய்
திட்டாலும் மாந்த ரெல்லாம்
கண்ணா கருதியவன் புகழோதி
வாழ்த்திமனங் களிக்கின் றாரால்
எண்ணாது நற்பொருளை தீதென்பார்
சிலருலகில் இருப்ப ரன்றே
விண்ணாரும் பரிதியொளி வெறுத்தொருபுள்
இருளினது விரும்பல் போன்றே
இன்னாத பிறர்க்கெண்ணான் பாரதநா
டிற்கிரங்கி இதயம் நைவான்
ஒன்னாரென் றெவருமிலான் உலகனைத்தும்
ஓருயிரென் றுணர்ந்த ஞானி
அன்னானை சிறைப்படுத்தார் மேலோர்தம்
பெருமையெதும் அறிகி லாதார்
முன்னாளில் துன்பின்றி இன்பம்வரா
தென பெரியோர் மொழிந்தா ரன்றே

வாழ்க திலகன் நாமம்
பல்லவி
வாழ்க திலகன் நாமம் வாழ்கவே
வீழ்க கொடுங் கோன்மை வீழ்கவே
சரணங்கள்
நாலுதிசையும் ஸ்வாதந்தர்ய நாதம் எழுகவே
நரக மொட்த அடிமை வாழ்வு நைந்து கழிகவே
ஏலுமனிதர் அறிவை யடர்க்கும் இருள் அழிகவே
எந்தநாளும் உலகமீதில் அச்சம் ஒழிகவே வாழ்க
கல்வி யென்னும் வலிமை கொண்ட
கோட்டை கட்டினான் நல்ல
கருத்தினா லதனை சூழ்ந்தோர்
அகழி வெட்டினான்
சொல் விளக்க மென்ற தனிடை
கோயி லாக்கினான்
ஸ்வாத தர்யமென்ற தனிடை
கொடியை தூக்கினான் வாழ்க
துன்பமென்னும் கடலை கடக்கு
தோணி யவன் பெயர்
சோர்வென்னும் பேயை யோட்டுஞ்
சூழ்ச்சி யவன் பெயர்
அன்பெனுந்தேன் ஊறி ததும்பும்
புதுமலர் அவன்பேர்
ஆண்மையென்னும் பொருளை காட்டும்
அறிகுறி யவன்பேர் வாழ்க

திலகர் முனிவர் கோன்
நாம கட்கு பெருந்தொண் டியற்றிப்பல்
நாட்டி னோர்தம் கலையிலும் அவ்வவர்
தாம கத்து வி பயின்றொரு
சாத்தி ரக்கடலென விளங்குவோன்
மாம கட்கு பிறப்பிட மாகமுன்
வாழ்ந்தி நாளில் வறண்டயர் பாரத
பூம கட்கு மனந்துடி தேயிவள்
புன்மை போக்குவல் என்ற விரதமே
நெஞ்ச கத்தோர் கணத்திலும் நீங்கிலான்
நீத மேயோர் உருவென தோன்றினோன்
வஞ்ச கத்தை பகையென கொண்டதை
மாய்க்கு மாறு மனத்திற் கொதிக்கின்றோன்
துஞ்சு மட்டுமி பாரத நாட்டிற்கே
தொண்டிழைக்க துணிந்தவர் யாவரும்
அஞ்செ ழுத்தினை சைவர் மொழிதல்போல்
அன்பொ டோ தும் பெயருடை யாவரின்
வீர மிக்க மராட்டியர் ஆதரம்
மேவி பாரத தேவி திருநுதல்
ஆர வைத்த திலகமென திகழ்
ஐயன் நல்லிசை பாலகங் காதரன்
சேர லர்க்கு நினைக்கவு தீயென
நின்ற எங்கள் திலக முனிவர்கோன்
சீர டிக்கம லத்தினை வாழ்த்துவேன்
சிந்தை தூய்மை பெறுகென சிந்தித்தே

லாஜபதி
விண்ணகத்தே இரவிதனை வைத்தாலும்
அதன்கதிர்கள் விரைந்து வந்து
கண்ணகத்தே ஒளிதருதல் காண்கிலமோ
நினையவர் கனன்றி நாட்டு
மண்ணகத்தே வாழாது புறஞ்செய்தும்
யாங்களெலாம் மறக்கொ ணாதெம்
எண்ணகத்தே லாஜபதி இடையின்றி
நீவளர்தற் கென்செய் வாரே
ஒருமனிதன் தனைப்பற்றி பலநாடு
கடத்தியவர்க்கு ஊறு செய்தல்
அருமையில்லை எளிதினவர் புரிந்திட்டா
ரென்றிடினும் அந்த மேலோன்
பெருமையைநன் கறிந்தவனை தெய்வமென
நெஞ்சினுளே பெட்பிற் பேணி
வருமனிதர் எண்ணற்றார் இவரையெலாம்
ஓட்டியெவர் வாழ்வ திங்கே
பேரன்பு செய்தாரில் யாவரே
பெருந்துயரர்ம் பிழைத்து நின்றார்
ஆரன்பு நாரணன்பால் இரணியன்சேய்
செய்ததனால் அவனு குற்ற
கோரங்கள் சொல தகுமோ பாரதநா
டிற்பக்தி குலவி வாழும்
வீரங்கொள் மனமுடையார் கொடுந்துயரம்
பலவடைதல் வியத்தற் கொன்றோ

லாஜபதியின் பிரலாபம்
கண்ணிகள்
நாடிழந்து மக்களையும் நல்லாளை யும்பிரிந்து
வீடிழந்திங் குற்றேன் விதியினையென் சொல்கேனே
வேதமுனி போன்றோர் விருத்தரா மெந்தையிரு
பாதமலர் கண்டு பரவ பெறுவேனோ
ஆசை குமரன் அர்ச்சுனனை போல்வான்றன்
மாசற்ற சோதி வதனமினி காண்பேனோ
அன்றிலைப்போன் றென்னை அரைக்கணமே னும்பிரிந்தால்
குன்றிமனஞ் சோர்வாளி கோலம் பொறுப்பாளோ
வீடும் உறவும் வெறுத்தாலும் என்னருமை
நாடு பிரிந்த நலிவினுக்கென் செய்கேனே
ஆதிமறை தோன்றியநல் லாரியநா டெந்நாளும்
நீதிமறை வின்றி நிலைத்த திருநாடு
சிந்துவெனு தெய்வ திருநதியும் மற்றதிற்சேர்
ஐந்துமணி யாறும் அளிக்கும் புனல்நாடு
ஐம்புலனை வென்ற அறவோர்க்கும் மாற்றலர் தம்
வெம்புலனை வென்ற எண்ணில் வீரர்க்கு தாய்நாடு
நல்லறத்தை நாட்டுதற்கு நம்பெருமான் கௌரவராம்
புல்லியரை செற்றாழ்ந்த புனித பெருநாடு
கன்னாணு திண்டோ களவீரன் பார்த்தனொரு
வின்னா ணொலிகேட்ட மேன்மை திருநாடு
கன்ன னிருந்த கருணை நிலம் தர்மனெனும்
மன்னன் அறங்கள் வளர்த்த புகழ்நாடு
ஆரியர்தம் தர்மநிலை ஆதரிப்பான் வீட்டுமனார்
நாரியர்தங் காதல் துறந்திருந்த நன்னாடு
வீமன் வளர்த்த விறல்நாடு வில்லசுவ
தாம னிருந்து சமர்புரிந்த வீரநிலம்
சீக்கரெனும் எங்கள்நற் சிங்கங்கள் வாழ்தருநல்
ஆக்கமுயர் குன்றம் அடர்ந்திருக்கும் பொன்னாடு
ஆரியர் பாழாக தருமறையின் உண்மைதந்த
சீரியர் மெஞ்ஞான தயாநந்தர் திருநாடு
என்னருமை பாஞ்சாலம் என்றேனும் காண்பேனோ
பன்னரிய துன்பம் படர்ந்திங்கே மாய்வேனோ
ஏதெல்லாம் பாரதத்தே இந்நாள் நடப்பனவோ
ஏதெல்லாம் யானறியாது என்மனிதர் பட்டனரோ
என்னை நினைத்தும் இரங்குவரோ அல்லாது
பின்னை துயர்களிலென் பேருமற திட்டாரோ
தொண்டுபட்டு வாடுமென்றன் தூயபெருநாட்டில்
கொண்டுவிட்டங் கென்னையுடன் கொன்றாலும் இன்புறுவேன்
எத்தனை ஜன்மங்கள் இருட்சிறையி லிட்டாலும்
தத்துபுனற் பாஞ்சால தனில்வைத்தால் வாடுகிலேன்

வஉசிக்கு வாழ்த்து
வேளாளன் சிறைபுகுந்தான் தமிழகத்தார்
மன்னனென மீண்டான் என்றே
கேளாத கதைவிரைவிற் கேட்பாய் நீ
வருந்தலைஎன் கேண்மைக்கோவே
தாளாண்மை சிறினுகொலோ யாம்புரிவேம்
நீஇறைக்கு தவங்கள் ஆற்றி
வேளாண்மை நின் துணைவர் பெறுகெனவே
வாழ்த்துதிநீ வாழ்தி

பிற நாடுகள்
மாஜினியின் சபதம் பிரதிக்கினை
பேரரு கடவுள் திருவடி யாணை
பிறப்பளி தெமையெலாம் புரக்கும்
தாரணி விளக்காம் என்னரு நாட்டின்
தவப்பெய ரதன்மிசை யாணை
பாரவெ துயர்கள் தாய்த்திரு நாட்டின்
பணிக்கென பலவி துழன்ற
வீரர் நம்நாடு வாழ்கென வீழ்ந்த
விழுமியோர் திருப்பெய ராணை
ஈசனிங் கெனக்கும் என்னுடன் பிறந்தோர்
யாவர்க்கும் இயற்கையின் அளித்த
தேசமின் புறுவான் எனக்கவன் பணித்த
சீருய ரறங்களி னாணை
மாசறு மென்நற் றாயினை பயந்தென்
வழிக்கெலாம் உறையுளாம் நாட்டின்
ஆசையிங் கெவர்க்கும் இயற்கையா மன்றோ
அத்தகை யன்பின்மீ தாணை
தீயன புரிதல் முறைதவி ருடைமை
செம்மைதீர் அரசியல் அநீதி
ஆயவற் றென்னஞ் சியற்கையின் எய்தும்
அரும்பகை யதன்மிசை யாணை
தேயமொன் றற்றேன் நற்குடி குரிய
உரிமைகள் சிறிதெனு மில்லேன்
தூயசீ ருடைத்தாம் சுதந்திர துவசம்
துளங்கிலா நாட்டிடை பிறந்தேன்
மற்றை நாட்டவர்முன் நின்றிடும் போழ்து
மண்டுமென் வெட்கத்தி னாணை
முற்றிய வீடு பெறுகென படைப்புற்று
அச்செயல் முடித்திட வலிமை
அற்றதால் மறுகும் என்னுயிர கதனில்
ஆர்ந்த பேராவலி னாணை
நற்றவம் புரி பிறந்த தாயினுமி
நலனறு மடிமையின் குணத்தால்
வலியிழ திருக்கும் என்னுயிர் கதன்கண்
வளர்ந்திடும் ஆசைமீ தாணை
மலிவுறு சிறப்பின் எம்முடை முன்னோர்
மாண்பதன் நினைவின்மீ தாணை
மெலிவுடன் இந்நாள் யாங்கள் வீழ்ந்திருக்கும்
வீழ்ச்சியி னுணர்ச்சிமீ தாணை
பொலிவுறு புதல்வர் தூக்கினி லிறந்தும்
புன்சிறை களத்திடை யழிந்தும்
வேற்று நாடுகளில் அவர் துர துண்டும்
மெய்குலை திறந்துமே படுதல்
ஆற்ற கிலாராய் எம்மரு நாட்டின்
அன்னைமார் அழுங்கணீ ராணை
மாற்றல ரெங்கள் கோடியர கிழைக்கும்
வகுக்கொணா துயர்களி னாணை
ஏற்ற இவ்வாணை யனைத்துமேற் கொண்டே
யான்செயுஞ் சபதங்கள் இவையே
கடவுளி நாட்டிற் கீந்ததோர் புனித
கட்டளை தன்னினும் அதனை
திடனுற நிறுவ முயலுதல் மற்றி
தேசத்தே பிறந்தவர கெல்லாம்
உடனுறு கடமை யாகுமென் பதினும்
ஊன்றிய நம்புதல் கொண்டும்
தடநில மிசையோர் சாதியை இறைவன்
சமைகென பணிப்பனேல் அதுதான்
சமைதலு குரிய திறமையும் அதற்கு
தந்துள னென்பதை யறிந்தும்
அமையு திறமை ஜனங்களை சாரும்
அன்னவர் தமக்கென தாமே
தமையல தெவர்கள் துணையு மில்லாது
தம்மரு திறமையை செலுத்தல்
சுமையென பொறுப்பின் செயத்தினு கதுவே
சூழ்ச்சியாம் என்பதை யறிந்தும்
கருமமுஞ் சொந்த நலத்தினை சிறிதும்
கருதிடா தளித்தலு தானே
தருமமாம் என்றும் ஒற்றுமை யோடு
தளர்விலா சிந்தனை கொளலே
பெருமைகொள் வலியாம் என்றுமே மனத்திற்
பெயர்ந்திடா உறுதிமேற் கொண்டும்
அருமைசால் சபத மிவைபுரி கின்றேன்
ஆணைக ளனைத்து முற்கொண்டே
என்னுடனொத்த தருமத்தை யேற்றார்
இயைந்தஇவ் வாலிபர் சபை க்கே
தன்னுடல் பொருளும் ஆவியு மெல்லாம்
தத்தமா வழங்கினேன் எங்கள்
பொன்னுயர் நாட்டை ஒற்றுமை யுடைத்தா
சுதந்திரம் பூண்டது வாகி
இன்னுமோர் நாட்டின் சார்வில தாகி
குடியர சியன்றதா யிலக
இவருடன் யானும் இணங்கியே யென்றும்
இதுவலாற் பிறதொழி லிலனா
தவமுறு முயற்சி செய்திட கடவேன்
சந்ததஞ் சொல்லினால் எழுத்தால்
அவமறு செய்கை யதனினால் இயலும்
அளவெல்லாம் எம்மவ ரிந்த
நவமுறு சபையி னொருபெருங் கருத்தை
நன்கிதன் அறிந்திட புரிவேன்
உயருமி நோக்கம் நிறைவுற இணக்கம்
ஒன்றுதான் மார்க்கமென் பதுவும்
செயம்நிலை யாக செய்திடற் கறமே
சிறந்ததோர் மார்க்கமென் பதுவும்
பெயர்வர எங்கள் நாட்டினர் மனத்திற்
பேணுமா றியற்றிட கடவேன்
அயலொரு சபையி லின்றுதோ றென்றும்
அமைந்திடா திருந்திட கடவேன்
எங்கள்நா டொருமை என்னொடுங் குறிக்கும்
இச்சபை தலைவரா யிருப்போர்
தங்களா கினைக ளனைத்தையும் பணிந்து
தலைக்கொளற் கென்றுமே கடவேன்
இங்கென தாவி மாய்ந்திடு மேனும்
இவர்பணி வெளியிடா திருப்பேன்
துங்கமார் செயலாற் போதனை யாலும்
இயன்றிடு துணையிவர களிப்பேன்
இன்றும் எந்நாளும் இவைசெ தவறேன்
மெய்யிது இவற்றை
என்றுமே தவறு யிழைப்பனேல் என்னை
ஈசனார் நாசமே புரிக
அன்றியும் மக்கள் வெறுத்தெனை இகழ்க
அசத்தி பாதகஞ் சூழ்க
நின்றதீ யெழுவாய் நரகத்தின் வீழ்ந்து
நித்தம்யா னுழலுக மன்னோ
வேறு
பேசி நின்ற பெரும்பிர திக்கினை
மாசி லாது நிறைவுறும் வண்ணமே
ஆசி கூறி யருளு ஏழையேற்கு
ஈசன் என்றும் திலகியே

பெல்ஜியம் நாட்டிற்கு வாழ்த்து
அறத்தினால் வீழ்ந்து விட்டாய்
அன்னியன் வலியனாகி
மறத்தினால் வந்து செய்த
வன்மையை பொறுத்தல் செய்வாய்
முறத்தினால் புலியை தாக்க்ம்
மொய்வரை குறப்பெண் போல
திறத்தினான் எளியை யாகி
செய்கையால் உயர்ந்து நின்றாய்
வண்மையால் வீழ்ந்து விட்டாய்
வாரிபோற் பகைவன் சேனை
திண்மையோடு அடர்க்கும் போதில்
சிந்தனை மெலித லின்றி
ஒண்மைசேர் புகழே மேலென்று
உளத்திலே உறுதி கொண்டாய்
உண்மைதேர் கோல நாட்டார்
உரிமையை காத்து நின்றாய்
மானத்தால் வீழ்ந்து விட்டாய்
மதங்ப்பிலா பகைவர் வேந்தன்
வானத்தாற் பெருமை கொண்ட
வலிமைதான் உடைய னேனும்
ஊனத்தால் உள்ள மஞ்சி
ஒதுங்கிட மனமொவ் வாமல்
ஆசனத்தை செய்வோ மென்றே
அவன்வழி யெதிர்த்து நின்றாய்
வீரத்தால் வீழ்ந்து விட்டாய்
மேல்வரை யுருளுங் காலை
ஓரத்தே ஒதுங்கி தன்னை
ஒளித்திட மனமொவ் வாமல்
பாரத்தை எளிதா கொண்டாய்
பாம்பினை புழுவே யென்றாய்
நேரத்தே பகைவன் தன்னை
எநில்எலென முனைந்து நின்றாய்
துணிவினால் வீழ்ந்து விட்டாய்
தொகையிலா படைக ளோடும்
பிணிவலர் செருக்கி னோடும்
பெரும்பகை எதிர்த்த போது
பணிவது கருத மாட்டாய்
பதுங்குதல் பயனென் றெண்ணாய்
தணிவதை நினைக்க மாட்டாய்
நில் லென தடுத்தல் செய்தாய்
வெருளுத லறிவென் றெண்ணாய
விபத்தையோர் பொருட்டா கொள்ளாய்
சுருளலை வெள்ளம் போல
தொகையிலா படைகள் கொண்டே
மருளுறு பகைவர் வேந்தன்
வலிமையாற் புகுந்த வேளை
உருளுக தலைகள் மானம்
ஓங்குகெஎன் றெதிர்த்து நின்றாய்
யாருக்கே பகையென் றாலும்
யார் மிசை இவன்சென் றாலும்
ஊருக்குள் எல்லை தாண்டி
உத்திர வெண்ணி டாமல்
போருக்கு கோலம் பூண்டு
புகுந்தவன் செருக்கு காட்டை
வேருக்கும் இடமில் லாமல்
வெட்டுவேன் என்று நின்றாய்
வேள்வியில் வீழ்வ தெல்லாம்
வீரமும் புகழும் மிக்கு
மீள்வதுண்டு டுலகிற் கென்றே
வேதங்கள் விதிக்கும் என்பர்
ஆள்வினை செய்யும் போதில்
அறத்திலே இளைத்து வீழ்ந்தார்
கேள்வியுண் டுடனே மீள
கிளர்ச்சிகொண் டுயிர்த்து வாழ்தல்
விளக்கொளி மழுங்கி போக
வெயிலொளி தோன்றும் மட்டும்
களக்கமா ரிருளின் மூழ்குங்
கனக மாளிகையு முண்டாம்
அளக்கரு தீதுற் றாலும்
அச்சமே யுளத்து கொள்ளார்
துளக்கற ஓங்கி நிற்பர்
துயருண்டோ துணிவுள் ளோர்க்கே

புதிய ருஷியா
ஜார் சக்கரவர்த்தியின் வீழ்ச்சி
மாகாளி பராசக்தி உருசியநா
டினிற்கடைக்கண் வைத்தாள் அங்கே
ஆகாவென் றெழுந்ததுபார் யுகப்புரட்சி
கொடுங்காலன் அலறி வீழ்ந்தான்
வாகான தோள்புடைத்தார் வானமரர்
பேய்க ளெல்லாம் வருந்தி கண்ணீர்
போகாமற் கண்புதைந்து மடிந்தனவாம்
வையகத்தீர் புதுமை காணீர்
இரணியன்போ லரசாண்டான் கொடுங்கோலன்
ஜாரெனும்பே ரிசைந்த பாவி
சரணின்றி தவித்திட்டார் நல்லோரும்
சான்றோரும் தரு தன்னை
திரணமென கருதிவிட்டான் ஜார்மூடன்
பொய்சூது தீமை யெல்லாம்
அரணியத்திற் பாம்புகள்போல் மலிந்துவளர்ந்த
தோங்கினவே அந்த நாட்டில்
உழுதுவிதை தறுப்பாரு குணவில்லை
பிணிகள் பலவுண்டு பொய்யை
தொழுதடிமை செய்வாருக்கு செல்வங்க
ளுண்டு உண்மை சொல்வோர கெல்லாம்
எழுதரிய பெருங்கொடுமை சிறையுண்டு
தூக்குண்டே யிறப்ப துண்டு
முழுதுமொரு பேய்வனமாஞ் சிவேரியங்லே
ஆவிகெட முடிவ துண்டு
இம்மென்றால் சிறைவாசம் ஏனென்றால்
வனவாசம் இவ்வா றங்கே
செம்மையெல்லாம் பாழாகி கொடுமையே
அறமாகி தீர்ந்த போதில்
அம்மைமனங் கனிந்திட்டாள் அடிபரவி
உண்மைசொலும் அடியார் தம்மை
மும்மையிலும் காத்திடுநல் விழியாலே
நோக்கினாள்ஈ முடிந்தான் காலன்
இமயமலை வீந்ததுபோல் வீழ்ந்துவிட்டான்
ஜாரரசன் இவனை சூழ்ந்து
சமயமுள படிக்கெல்லாம் பொய்கூறி
அறங்கொன்று சதிகள் செய்த
சுமடர் சடசடவென்று சரிந்திட்டார்
புயற்காற்றுங் குறை தன்னில்
திமுதிமென மரம்விழுந்து காடெல்லாம்
விறகான செய்தி போலே
குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு
மேன்மையுற குடிமை நீதி
கடியொன்றி லெழுந்ததுபார் குடியரசென்று
உலகறி கூறி விட்டார்
அடிமைக்கு தளையில்லை யாருமிப்போது
அடிமையில்லை அறிக என்றார்
இடிப்பட்ட சுவர்ப்போல் கலிவிழுந்தான்
கிருத யுகம் எழுக மாதோ

கரும்பு தோட்டத்திலே
ஹரிகாம்போதி ஜன்யம்
ராகம் ஸைந்தவி தாளம் திஸ்ரசாப்பு
பல்லவி
கரும்பு தோட்டத்திலே
கரும்பு தோட்டத்திலே
சரணங்கள்
கரும்பு தோட்டத்திலே அவர்
கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி
வருந்து கின்றனரே ஹிந்து
மாதர்தம் நெஞ்சு கொதித்து கொதித்துமெய்
சுருங்குகின்றனரே அவர்
துன்பத்தை நீக்க வழியில்லையோ ஒரு
மருந்திதற் கிலையோ செக்கு
மாடுகள் போலுழை தேங்குகின்றார் அந்த கரும்புத்தோட்டத்திலே
பெண்ணென்று சொல்லிடிலோ ஒரு
பேயும் இரங்கும் என்பார் தெய்வமே நினது
எண்ணம் இரங்காதோ அந்த
ஏழைகள் அங்கு சொரியுங் கண்ணீர்வெறும்
மண்ணிற் கலந்திடுமோ தெற்கு
மாகடலுக்கு நடுவினிலே அங்கோர்
கண்ணற்ற தீவினிலே தனி
காட்டினிற் பெண்கள் புழுங்குகின்றார் அந்த கரும்புத்தோட்டத்திலே
நாட்டை நினைப்பாரோ எந்த
நாளினி போயதை காண்பதென்றே அன்னை
வீட்டை நினைப்பாரோ அவர்
விம்மி விம்மியழுங்
கேட்டிருப்பாய் காற்றே துன்ப
கேணியிலே எங்கள் பெண்கள் அழுதசொல்
மீட்டும் உரையாயோ அவர்
விம்மி யழவு திறங்கெட்டும் போயினர் கரும்புத்தோட்டத்திலே
நெஞ்சம் குமுறுகிறார் கற்பு
நீங்கிட செய்யும் கொடுமையிலே அந்த
பஞ்சை மகளிரெல்லாம் துன
பட்டு மடிந்து மடிந்தொரு
தஞ்சமு மில்லாதே அவர்
சாகும் வழக்கத்தை இந்த கணத்தினில்
மிஞ்ச விடலாமோ ஹே
வீரமா காளி சாமுண்டி காளீஸ்வரி கரும்புத்தோட்டத்திலே
தேசிய கீதங்கள் முற்றிற்று



ஞான பாடல்கள் பல்வகை


























ஞான பாடல்கள்

அச்சமில்லை
பண்டார பாட்டு
அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்
அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மை தூறுசெய்த போதினும்
அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள்வீசு போதினும்
அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
நச்சைவாயி லே கொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்
அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதினும்
அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்
அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
ஐய பேரிகை
பல்லவி
ஐய பேரிகை கொட்டடாகொட்டடா
ஐய பேரிகை கொட்டடா
சரணங்கள்
பயமெனும் பேய்தனை யடித்தோம்பொய்ம்மை
பாம்பை பிளந்துயிரை குடித்தோம்
வியனுல கனைத்தையும் அமுதென நுகரும்
வேத வாழ்வினை கை பிடித்தோம்ஐயபேரிகை
இரவியினொளியிடை குளித்தோம்ஒளி
இன்னமு தினையுண்டு களித்தோம்
கரவினில் வந்துயிர குலத்தினை யழிக்கும்
காலன் நடுநடுங்க விழித்தோம் ஐய பேரிகை
காக்கை குருவி எங்கள் ஜாதிநீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்கு திசையெலாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோ களியாட்டம் ஐய பேரிகை
விடுதலைசிட்டுக்குருவி
பல்லவி
விட்டு விடுதலை யாகிநிற் பாயிந்த
சிட்டு குருவியை போலே
சரணங்கள்
எட்டு திசையும் பறந்து திரிகுவை
ஏறி காற்றில் விரைவொடு நீந்துவை
மட்டு படாதெங்கும் கொட்டி கிடக்குமிவ்
வானொளி யென்னும் மதுவின் சுவையுண்டு விட்டு
பெட்டையி னோடின்பம் பேசி களிப்புற்று
பீடையிலாத தொர் கூடு கட்டிக்கொண்டு
முட்டைதருங் குஞ்சை காத்து மகிழ்வெய்தி
முந்த வுணவு கொடுத்தன்பு செய்திங்கு விட்டு
முற்றத்தி லேயுங் கழனி வெளியிலும்
முன்கண்ட தானியம் தன்னை கொணர்ந்துண்டு
மற்ற பொழுது கதைசொல்லி தூங்கிப்பின்
வைகறை யாகுமுன் பாடி விழிப்புற்று விட்டு
விடுதலை வேண்டும்
ராகம் நாட்டை
பல்லவி
வேண்டுமடி எப்போதும் விடுதலைஅம்மா
சரணங்கள்
தூண்டு மின்ப வாடை வீசு துய்ய தேன் கடல்
சூழ நின்ற தீவிலங்கு சோதி வானவர்
ஈண்டு நமது தோழ ராகி எம்மோ டமுதமுண்டு குலவ
நீண்ட மகிழ்ச்சி மூண்டு விளைய
நினைத்திடு மின்பம் அனைத்தும் உதவ வேண்டுமடி
விருத்தி ராதி தானவர்க்கு மெலிவ தின்றியே
விண்ணு மண்ணும் வந்து பணிய மேன்மை துன்றியே
பொருத்த முறநல் வேத மோர்ந்து
பொய்ம்மை தீரமெய்ம்மை நேர
வருத்த மழிய வறுமை யொழிய
வையம் முழுதும் வண்மை பொழிய வேண்டுமடி
பண்ணில் இனிய பாடலோடு பாயு மொளியெலாம்
பாரில் எம்மை உரிமை கொண்டு பற்றி நிற்கவே
நண்ணி யமரர் வெற்றி கூற
நமது பெண்கள் அமரர் கொள்ள
வண்ண மினிய தேவ மகளிர்
மருவ நாமும் உவகைதுள்ள வேண்டுமடி
உறுதி வேண்டும்
மனதி லுறுதி வேண்டும்
வாக்கினி லேயினிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
கண் திறந்திட வேண்டும்
காரியத்தி லுறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்
மண் பயனுற வேண்டும்
வானகமிங்கு தென்பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்
ஓம்
ஆத்ம ஜெயம்
கண்ணில் தெரியும் பொருளினை கைகள்
கவர்ந்திட மாட்டாவோஅட
மண்ணில் தெரியுது வானம்அதுநம்
வசப்பட லாகாதோ
எண்ணி யெண்ணிப்பல நாளு முயன்றிங்
கிறுதியிற் சோர்வோமோஅட
விண்ணிலும் மண்ணிலும் கண்ணிலும் எண்ணிலும்
மேவு ப்ராசக்தியே
என்ன வரங்கள்பெருமைகள்வெற்றிகள்
எத்தனை மேன்மைகளோ
தன்னை வென்றாலவை யாவும் பெறுவது
சத்திய மாகுமென்றே
முன்னை முனிவர் உரைத்த மறை பொருள்
முற்றுமுணர்ந்த பின்னும்
தன்னை வென்றாளும் திறமை பெறாதிங்கு
தாழ்வுற்று நிற்போமோ
காலனுக்கு உரைத்தல் ராகம்சக்கரவாகம்
தாளம்ஆதி
பல்லவி
காலாஉனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்என்றன்
காலருகே வாடாசற்றே உனை மிதிக்கிறேன்அட காலா
சரணங்கள்
வேலாயுத விருதினை மனதிற் மதிக்கிறேன்என்றன்
வேதாந்த முரைத்த ஞானியர் தமை யெண்ணி
துதிக்கிறேன்ஆதி
மூலா வென்று கதறிய யானையை காக்கவேநின்றன்
முதலைக்கு நேர்ந்ததை மறந்தாயோ கெட்ட
மூடனேஅட காலா
ஆலாலமுண்டவனடி சரணென்ற மார்க்கண்டன்தன
தாவி கவரப்போய் நீ பட்ட பாட்டினை
யறிகுவேன்இங்கு
நாலாயிரம் காதம் விட்டகல்உனைவிதிக்கிறேன்ஹரி
நாராயண னாகநின் முன்னே உதிக்கிறேன்அட
காலா
மாயையை பழித்தல் ராகம்காம்போதி
தாளம்ஆதி
உண்மை யறிந்தவர் உன்னை கணிப்பாரோ
மாயையேமன
திண்மையுள்ளாரை நீ செய்வது
மொன்றுண்டோ மாயையே
எத்தனை கோடி படைகொண்டு வந்தாலும்
மாயையேநீ
சி தெளிவெனு தீயின்முன்
நிற்பாயோமாயையே
என்னை கெடுப்பதற் கெண்ணமுற்றாய்
கெட்ட மாயையேநான்
உன்னை கெடுப்ப துறுதியென்
றேயுணர்மாயையே
சாக துணியிற் சமுத்திர மெம்மட்டு
மாயையேஇந
தேகம் பொய் யென்றுணார் தீரரை யென்
செய்வாய்மாயையே
இருமை யழிந்தபின் எங்கிருப்பாய்அற்ப
மாயையேதெளி
தொருமை கண்டார் முன்னம் ஓடாது
நிற்பையோமாயையே
நீதரும் இன்பத்தை நேரென்று கொள்வனோ
மாயையேசிங்கம்
நாய்தர கொள்ளுமோ நல்லர
சாட்சியைமாயையே
என்னிச்சை கொண்டுனை யெற்றி விட
வல்லேன் மாயையேஇனி
உன்னிச்சை கொண்டென கொன்றும்
வராது காண்மாயையே
யார்க்கும் குடியல்லேன் யானென்ப
தோர்ந்தனன் மாயையேஉன்றன்
போர்க்கஞ்சு வேனோ பொடியாக்குவேன்
உன்னைமாயையே
சங்கு
செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம்
சேர்ந்திடலா மென்றே எண்ணியிருப்பார்
பித்த மனிதர்அவர் சொலுஞ் சாத்திரம்
பேயுரை யாமென்றிங் கூதேடா சங்கம்
இத்தரை மீதினி லேயிந்த நாளினில்
இப்பொழு தேமுக்தி சேர்ந்திட நாடி
சுத்த அறிவு நிலையிற் களிப்பவர்
தூய ராமென்றிங் கூதேடா சங்கம்
பொய்யுறு மாயையை பொய்யென கொண்டு
புலன்களை வெட்டி புறத்தில் எறிந்தே
ஐயுற லின்றி களித்டிரு பாரவர்
ஆரிய ராமென்றிங் கூதேடா சங்கம்
மையுறு வாள்விழி யாரையும் பொன்னையும்
மண்ணென கொண்டு மயக்கற் றிருந்தாரே
செய்யுறு காரியம் தாமன்றி செய்வார்
சித்தர ளாமென்றிங் கூதேடா சங்கம்
அறிவே தெய்வம்
கண்ணிகள்
ஆயிர தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகாள்பல்
லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்
டாமெனல் கேளீரோ
மாடனை காடனை வேடனை போற்றி
மயங்கும் மதியிலிகாள்எத
னூடும்நின் றோங்கும் அறிவென்றே தெய்வமென்
றோதி யறியிரோ
சுத்த அறிவே சிவமென்று கூறுஞ்
சுருதிகள் கேளீரோபல
பித்த மதங்களி லேதடு மாறி
பெருமை யழிவீரோ
வேடம்பல் கோடியொர் உண்மை குளவென்று
வேதம் புகன்றிடுமேஆங்கோர்
வேடத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றவ்
வேத மறியாதே
நாமம்பல் கோடியொர் உண்மை குளவென்று
நான்மறை கூறிடுமேஆங்கோர்
நாமத்தை நீருண்மை யென்று கொள் வீரென்ற
நான்மறை கண்டிலதே
போந்த நிலைகள் பலவும் பராசக்தி
பூணு நிலையாமேஉப
சாந்த நிலையே வேதாந்த நிலையென்று
சான்றவர் கண்டனரே
கவலை துறந்திங்கு வாழ்வது வீடென்று
காட்டும் மறைகளெலாம்நீவிர்
அவலை நினைந்துமி மெல்லுதல் போலிங்கு
அவங்கள் புரிவீரோ
உள்ள தனைத்திலும் உள்ளொளி யாகி
ஒளிர்ந்திடும் ஆன்மாவேஇங்கு
கொள்ளற் கரிய பிரமமென் றேமறை
கூவுதல் கேளீரோ
மெள்ள பலதெய்வம் கூட்டி வளர்த்து
வெறுங் கதைகள் சேர்த்துப்பல
கள்ள மதங்கள் பரப்புதற் கோர்மறை
காட்டவும் வல்லீரோ
ஒன்று பிரம முளதுண்மை யஃதுன்
உணர்வெனும் வேதமெலாம்என்றும்
ஒன்ரு பிரம முள துண்மை யஃதுன்
உணர்வென கொள்வாயே
பரசிவ வெள்ளம்
உள்ளும் புறமுமாய் உள்ள தெலா தானாகும்
வெள்ளமொன்றுண் டாமதனை தெய்வமென்பார்
வேதியரே
காணுவன நெஞ்சிற் கருதுவன உட்கருத்தை
பேணுவன யாவும் பிறப்பதந்த வெள்ளத்தே
எல்லை பிரி வற்றதுவாய் யாதெனுமோர் பற்றிலதாய்
இல்லையுள தென்றறிஞர் என்றுமய லெய்துவதாய்
வெட்டவெளி யாயறிவாய் வேறுபல சக்திகளை
கொட்டுமுகி லாயணுக்கள் கூட்டி பிரிப்பதுவாய்
தூல வணுக்களா சூக்குமமா சூக்குமத்திற்
சாலவுமே நுண்ணியதா தன்மையெலா தானாகி
தன்மையொன் றிலாததுவா தானே ஒரு பொருளா
தன்மைபல வுடைத்தா தான்பலவாய் நிற்பதுவே
எங்குமுளான் யாவும் வலான் யாவுமறி வானெனவே
தங்குபல மதத்தோர் சாற்றுவதும் இங்கிதையே
வேண்டுவோர் வேட்கையாய் வேட்பாராய் வேட்பாரு
கீண்டுபொரு ளாயதனை யீட்டுவதாய் நிற்குமிதே
காண்பார்தங் காட்சியா காண்பாரா காண்பொரு
ளாய்
மாண்பார திருக்கும்வகுத்துரைக்க வொண்ணாதே
எல்லா தானாகி யிரிந்திடினும் இஃதறிய
வல்லார் சிலரென்பர் வாய்மையெல்லாங் கண்டவரே
மற்றிதனை கண்டார் மலமற்றார் துன்பமற்றார்
பற்றிதனை கொண்டார் பயனைத்துங் கண்டாரே
இப்பொருளை கண்டார் இடருக்கோர் எல்லைகண்டார்
எப்பொருளு தாம்பெற்றிங் கின்பநிலை யெய்துவரே
வேண்டுவ வெலாம் பெறுவார் வேண்டா ரெதனையுமற்
றீண்டுபுவி யோரவரை யீசரென போற்றுவரே
ஒன்றுமே வேண்டா துலகனைத்தும் ஆளுவர்காண்
என்றுமே யிப்பொருளோ டேகாந துள்ளவரே
வெள்ளமடா தம்பி விரும்பியபோ தெய்திநின
துள்ள மிசை தானமுத வூற்றா பொழியுமடா
யாண்டுமிந்த இன்பவெள்ளம் என்றுநின்னுள் வீழ்வதற்கே
வேண்டு முபாயம் மிகவுமெளி தாகுமடா
எண்ணமிட்ட லேபோதும் எண்ணுவதே இவ்வின்ப
தண்ணமுதை யுள்ளே தது புரியுமடா
எங்கு நிறைந்திருந்த ஈசவெள்ள மென்னகத்தே
பொங்குகின்ற தென்றெண்ணி போற்றி நின்றாற்
போதுமடா
யாதுமாம் ஈசவெள்ளம் என்னுள் நிரம்பியதென்
றோதுவதே போதுமதை உள்ளுவதே போதுமடா
காவி துணிவேண்டாகாற்றை சடைவேண்டா
பாவித்தல் போதும் பரமநிலை யெய்துதற்கே
சாத்திரங்கள் வேண்டா சதுமறைக ளேதுமில்லை
தோத்திரங்க ளில்லையுள தொட்டுநின்றாற் போதுமடா
தவமொன்று மில்லையொரு சாதனையு மில்லையடா
சிவமொன்றே யுள்ளதென சிந்தைசெய்தாற்
போதுமடா
சந்ததமு மெங்குமெல்லா தானாகி நின்றசிவம்
வந்தெனுளே பாயுதென்று வாய்சொன்னாற் போதுமடா
நித்தசிவ வெள்ள மென்னுள் வீழ்ந்து நிரம்புதென்றுன்
சித்தமிசை கொள்ளுஞ்சிரத்தை யொன்றே போதுமடா
உலகத்தை நோக்கி வினவுதல்
நிற்பதுவேநடப்பதுவேபறப்பதுவேநீங்க ளெல்லாம்
சொற்பன தானாபல தோற்ற மயக்கங்களோ
கற்பதுவேகேட்பதுவேகருதுவதே நீங்க ளெல்லாம்
அற்ப மாயைகளோஉம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ
வானகமேஇளவெயிலேமரச்செறிவே நீங்க ளெல்லாம்
கானலின் நீரோவெறுங் காட்சி பிழைதானோ
போனதெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே
போனதனால்
நானுமோர் கனவோஇந்த ஞாலமும் பொய்தானோ
கால மென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பலநினைவும்
கோலமும் பொய்களோஅங்கு குணங்களும் பொய்களோ
சோலையிலே மரங்க ளெல்லாம் தோன்றுவதோர்
விதையிலென்றால்
சோலை பொய்யாமோஇதை சொல்லொடு
சேர்ப்பாரோ
காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம்
காண்ப மென்றோ
வீண்படு பொய்யிலேநித்தம் விதிதொடர திடுமோ
காண்பதுவே உறுதிகண்டோ ம் காண்பதல்லால் உறுதியில்லை
காண்பது சக்தியாம்இந்த காட்சி நித்தியமாம்
நான்
இரட்டை குறள் வெண் செந்துறை
வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்
மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்
கானிழல் வளரும் மரமெலாம் நான்
காற்றும் புனலும் கடலுமே நான்
விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான்
வெட்ட வெளியின் விரிவெலாம் நான்
மண்ணில் கிடக்கும் புழுவெலாம் நான்
வாரியிலுள்ள உயிரெலாம் நான்
கம்பனிசைத்த கவியெலாம் நான்
காருகர் தீட்டும் உருவெலாம் நான்
இம்பர் வியக்கின்ற மாட கூடம்
எழில் நகர் கோபுரம் யாவுமே நான்
இன்னிசை மாத ரிசையுளேன் நான்
இன்ப திரள்கள் அனைத்துமே நான்
புன்னிலை மாந்தர் தம் பொய்யெலாம் நான்
பொறையரு துன புணர்ப்பெலாம் நான்
மந்திரங் கோடி இயக்குவோன் நான்
இயங்கு பொருளின் இயல்பெலாம் நான்
தந்திரங் கோடி சமைத்துளோன் நான்
சாத்திர வேதங்கள் சாற்றினோன் நான்
அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான்
அவை பிழையாமே சுழற்றுவோன் நான்
கண்டநற் சக்தி கணமெலாம் நான்
காரண மாகி கதித்துளோன் நான்
நானெனும் பொய்யை நடத்துவோன் நான்
ஞான சுடர்வானில் செல்லுவோன் நான்
ஆனபொருள்கள் அனைத்தினும் ஒன்றாய்
அறிவாய் விளங்குமுதற சோதிநான்
சித்தாந்த சாமி கோயில்
சித்தாந்த சாமி திருக்கோயில் வாயிலில்
தீபவொளி யுண்டாம்பெண்ணே
முத்தாந்த வீதி முழுதையுங் காட்டிட
மூண்டதிரு சுடராம்பெண்ணே
உள்ள தழுக்கும் உடலிற் குறைகளும்
ஒட்டவருஞ் சுடராம்பெண்ணே
கள்ள தனங்கள் அனைத்தும் வெளிப்பட
காட்ட வருஞ் சுடராம்பெண்ணே
தோன்று முயிர்கள் அனைத்டும்நன் றென்பது
தோற்ற முறுஞ் சுடராம்பெண்ணே
மூன்று வகைப்படும் காலநன் றென்பதை
முன்ன ரிடுஞ் சுடராம்பெண்ணே
பட்டின தன்னிலும் பாக்கநன் றென்பதை
பார்க்க வொளிர்ச்சுடராம்பெண்ணே
கட்டு மனையிலுங் கோயில்நன் றென்பதை
காண வொளிர சுடராம்பெண்ணே
பக்தி ராகம்பிலஹரி
பல்லவி
பக்தியினாலெதெய்வபக்தியினாலே
சரணங்கள்
பக்தியினாலேஇந்த
பாரினி லெய்திடும் மேன்மைகள் கேளடீ
சித்த தெளியும்இங்கு
செய்கை யனைத்திலும் செம்மை பிறந்திடும்
வித்தைகள் சேரும்நல்ல
வீர ருறவு கிடைக்கும்மனத்திடை
தத்துவ முண்டாம்நெஞ்சிற்
சஞ்சலம் நீங்கி உறுதி விளங்கிடும் பக்தி
கா பிசாசைக்குதி
கால்கொண் டடித்து விழுந்திடலாகும்இ
தாமச பேயைக்கண்டு
தாக்கி மடித்திட லாகும்எந்நேரமும்
தீமையை எண்ணிஅஞ்சு
தேம்பற் பிசாசை திருகியெ றிந்துபொ
நாம மில்லாதேஉண்மை
நாமத்தி னாலிங்கு நன்மை விளைந்திடும் பக்தி
ஆசையை கொல்வோம்புலை
அச்சத்தை கொன்று பொசுக்கிடுவோம்கெட்ட
பாச மறுப்போம்இங்கு
பார்வதி சக்தி விளங்குதல் கண்டதை
மோசஞ் செய்யாமல்உண்மை
முற்றிலுங் கண்டு வணங்கி வணங்கியொர்
ஈசனை போற்றிஇன்பம்
யாவையு முண்டு புகழ்கொண்டு வாழ்குவம் பக்தி
சோர்வுகள் போகும்பொ
சுகத்தினை தள்ளி சுகம்பெறலாகும்நற்
பார்வைகள் தோன்றும்மிடி
பாம்பு கடித்த விஷமகன் றேநல்ல
சேர்வைகள் சேரும்பல
செல்வங்கள் வந்து மகிழ்ச்சி விளைந்திடும்
தீர்வைகள் தீரும்பிணி
தீரும்பலபல இன்பங்கள் சேர்ந்திடும் பக்தி
கல்வி வளரும்பல
காரியங் கையுறும்வீரிய மோங்கிடும்
அல்ல லொழியும்நல்ல
ஆண்மை யுண்டாகும்அறிஉ தெளிந்திடும்
சொல்லுவ தெல்லாம்மறை
சொல்லினை போல பயனுள தாகும்மெய்
வல்லமை தோன்றும்தெய்வ
வாழ்க்கையுற் றேயிங்கு வாழ்ந்திடலாம்உண்மை
சோம்ப லழியும்உடல்
சொன்ன படிக்கு நடக்கும்முடி சற்றுங்
கூம்புத லின்றி நல்ல
கோபுரம் போல நிமிர்ந்த நிலைபெறும்
வீம்புகள் போகும்நல்ல
மேன்மை யுண்டாகி புயங்கள் பருக்கும்பொ
பாம்பு மடியும்மெ
பரம் வென்று நல்ல நெறிகளுண் டாய்விடும் பக்தி
சந்ததி வாழும்வெறுஞ்
சஞ்சலங் கெட்டு வலிமைகள் சேர்ந்திடும்
இந்த புவிக்கேஇங்கொர்
ஈசனுண்டா யின் அறிக்கையி டேனுன்றன்
கந்தமலர்த்தாள்துணை
காதல் மகவு வளர்ந்திட வேண்டும்என்
சிந்தையறிந்தேஅருள்
செய்திட வேண்டும்என்றால் அருளெய்திடும்பக்தி
அம்மாக்கண்ணு பாட்டு
பூட்டை திறப்பது கையாலேநல்ல
மன திறப்பது மதியாலே
பாட்டை திறப்பது பண்ணாலேஇன்ப
வீட்டை திறப்பது பெண்ணாலே
ஏட்டை துடைப்பது கையாலேமன
வீட்டை துடைப்பது மெய்யாலே
வேட்டை யடிப்பது வில்லாலேஅன்பு
கோட்டை பிடிப்பது சொல்லாலே
காற்றை யடைப்பது மனதாலேஇந்த
காயத்தை காப்பது செய்கையாலே
சோற்றை புசிப்பது வாயாலேஉயிர்
துணி வுறுவது தாயாலே
வண்டிக்காரன் பாட்டு
அண்ணனுக்கும் தம்பிக்கும் உரையாடல்
காட்டு வழிதனிலேஅண்ணே
கள்ளர் பயமிருந்தால்எங்கள்
வீட்டு குலதெய்வம்தம்பி
வீரம்மை காக்குமடா
நிறுத்து வண்டி யென்றேகள்ளர்
நெருங்கி கேட்கையிலேஎங்கள்
கறுத்த மாரியின் பேர்சொன்னால்
காலனும் அஞ்சுமடா
கடமை
கடமை புரிவா ரின்புறுவார்
என்னும் பண்டை கதை பேணோம்
கடமை யறிவோம் தொழிலறியோம்
கட்டென் பதனை வெட்டென் போம்
மடமைசிறுமைதுன்பம்பொய்
வருத்தம்நோவுமற்றிவை போல்
கடமை நினைவு தொலை திங்கு
களியுற் றென்றும் வாழ்குவமே
அன்பு செய்தல்
இந்த புவிதனில் வாழும் மரங்களும்
இன்ப நறுமலர பூஞ்செடி கூட்டமும்
அந்த மரங்களை சூழ்ந்த கொடிகளும்
ஔடத மூலிகை பூண்டு புல் யாவையும்
எந தொழில் செய்து வாழ்வன வோ
வேறு
மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும்
வரம்பு கட்டாவிடினும் அன்றிநீர் பாய்ச்சாவிடினும்
வானுலகு நீர்தருமேல் மண்மீது மரங்கள்
வகைவகையா நெற்கள்புற்கள் மலிந்திருக்குமென்றே
யானெதற்கும் அஞ்சுகிலேன்மானுடரேநீவிர்
என்மதத்தை கை கொண்மின்பாடுபடல்வேண்டா
ஊனுடலை வருத்தாதீர்உணவியற்கை கொடுக்கும்
உங்களுக்கு தொழிலிங்கே அன்புசெய்தல் கண்டீர்
சென்றது மீளாது
சென்றதினி மீளாது மூடரேநீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்சென்றதனை குறித்தல் வேண்டாம்
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ண மதை திண்ணமுற இசைத்து கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்
தீமையெலாம் அழிந்துபோம்திரும்பி வாரா
மனத்திற்கு கட்டளை
பேயா யுழலுஞ் சிறுமனமே
பேணா யென்சொல் இன்றுமுதல்
நீயா யொன்றும் நாடாதே
நினது தலைவன் யானேகாண்
தாயாம் சக்தி தாளினிலும்
தரும மெனயான் குறிப்பதிலும்
ஓயா தேநின் றுழைத்திடுவாய்
உரைத்தேன் அடங்கி உய்யுதியால்
பா
மன பெண்
மனமெனும் பெண்ணேவாழிநீ கேளாய்
ஒன்றையே பற்றி யூச லாடுவாய்
அடுத்ததை நோக்கி யடுத்தடு துலவுவாய்
நன்றையே கொள்ளெனிற் சோர்ந்துகை நழுவுவாய்
விட்டுவி டென்றதை விடாதுபோய் விழுவாய்
தொட்டதை மீள மீளவு தொடுவாய்
புதியது காணிற் புலனழி திடுவாய்
புதியது விரும்புவாய்புதியதை அஞ்சுவாய்
அடிக்கடி மதுவினை அணுகிடும் வண்டுபோல்
பழமையாம் பொருளிற் பரிந்துபோய் வீழ்வாய்
பழமையே யன்றி பார்மிசை யேதும்
புதுமை காணோமென பொருமுவாய்சீச்சீ
பிணத்தினை விரும்புங் காக்கையே போல
அழுகுதல்சாதல்அஞ்சுதல் முதலிய
இழிபொருள் காணில் விரைந்ததில் இசைவாய்
அங்ஙனே
என்னிட தென்று மாறுத லில்லா
அன்புகொண் டிருப்பாய்ஆவிகா திடுவாய்
கண்ணினோர் கண்ணாய்காதின் காதா
புலன்புல படுத்தும் புலனா யென்னை
உலக வுருளையில் ஓட்டுற வகுப்பாய்
இன்பெலா தருவாய்இன்பத்து மய்ங்குவாய்
இன்பமே நாடி யெண்ணிலா பிழை செய்வாய்
இன்பங் காத்து துன்பமே யழிப்பாய்
இன்பமென் றெண்ணி துன்பத்து வீழ்வாய்
தன்னை யறியாய்சகத்தெலா தொளைப்பாய்
தன்பின் னிற்கு தனிப்பரம் பொருளை
காணவே வருந்துவாய்காணெனிற் காணாய்
சகத்தின் விதிகளை தனித்தனி அறிவாய்
பொதுநிலை அறியாய்பொருளையுங் காணாய்
மனமெனும் பெண்ணேவாழிநீ கேளாய்
நின்னொடு வாழும் நெறியுநன் கறிந்திடேன்
இத்தனை நாட்போல் இனியுநின் னின்பமே
விரும்புவன்நின்னை மேம்படு திடவே
முயற்சிகள் புரிவேன்முத்தியு தேடுவேன்
உன்விழி படாமல் என்விழி பட்ட
சிவமெனும் பொருளை தினமும் போற்றி
உன்றன கின்பம் ஓங்கிட செய்வேன்
பகைவனுக்கு அருள்வாய்
பகைவனு கருள்வாய்நன்னெஞ்சே
பகைவனு கருள்வாய்
புகை நடுவினில் தீயிருப்பதை
பூமியிற் கண்டோ மேநன்னெஞ்சே
பூமியிற் கண்டோ மே
பகை நடுவினில் அன்புரு வானநம்
பரமன் வாழ்கின்றான் நன்னெஞ்சே
பரமன் வாழ்கின்றான் பகைவ
சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடுஞ்
செய்தி யறியாயோநன்னெஞ்சே
குப்பையிலே மலர் கொஞ்சுங் குருக்கத்தி
கொடி வளராதோநன்னெஞ்சே பகைவ
உள்ள நிறைவிலொர் கள்ளம் புகுந்திடில்
உள்ளம் நிறைவாமோநன்னெஞ்சே
தெள்ளிய தேனிலொர் சிறிது நஞ்சையும்
சேர்த்தபின் தேனோமோநன்னெஞ்சே பகைவ
வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது
வாழ்வுக்கு நேராமோநன்னெஞ்சே
தாழ்வு பிறர்க்கெண்ண தானழிவா னென்ற
சாத்திரங் கேளாயோநன்னெஞ்சே பகைவ
போருக்கு வந்தங் கெதிர்த்த கவுரவர்
போலவ தானுமவன்நன்னெஞ்சே
நேரு கருச்சுனன் தேரிற் கசைகொண்டு
நின்றதுங் கண்ணனன்றோநன்னெஞ்சே பகைவ
தின்ன வரும்புலி தன்னையும் அன்பொடு
சிந்தையிற் போற்றிடுவாய்நன்னெஞ்சே
அன்னை பராசக்தி யவ்வுரு வாயினள்
அவளை கும்பிடுவாய்நன்னெஞ்சே பகைவ
தெளிவு
எல்லா மகி கலந்து நிறைந்தபின்
ஏழைமை யுண்டோ டாமனமே
பொல்லா புழுவினை கொல்ல நினைத்த்பின்
புத்தி மயக்க முண்டோ
உள்ள தெலாமோர் உயிரென்று தேர்ந்தபின்
உள்ளங் குலைவதுண்டோ மனமே
வெள்ள மெனப்பொழி தண்ணரு ளாழ்ந்தபின்
வேதனை யுண் டோ டா
சித்தி னியல்பு மதன்பெருஞ் சத்தியின்
செய்கையு தேர்ந்துவிட்டால்மனெமே
எத்தனை கோடி இடர்வந்து சூழினும்
எண்ணஞ் சிறிது முண்டோ
செய்க செயல்கள் சிவத்திடை நின்றென
தேவனுரை தனனேமனமே
பொய்கருதாம லதன்வழி நிற்பவர்
பூதல மஞ்ச வரோ
ஆன்ம வொளிக்கடல் மூழ்கி திளை பவர
கச்சமு முண்டோ டாமனமே
தேன்மடை யிங்கு திறந்தது கண்டு
தேக்கி திரிவ மடா
கற்பனையூர்
கற்பனை யூரென்ற நகருண்டாம்அங்கு
கந்தர்வர் விளையாடு வராம்
சொப்பன நாடென்ற சுடர்நாடுஅங்கு
சூழ்ந்தவர் யாவர்க்கும் பேருவகை
திருமணை யிதுகொள்ளை போர்க்கப்பல்இது
ஸ்பானி கடலில் யாத்திரை போம்
வெருவுற மாய்வார் பலர் கடலில்நாம்
மீளவும் நம்மூர் திரும்பு முன்னே
அந்நகர் தனிலோர் இளவரசன்நம்மை
அன்பொடு கண்டுரை செய்திடுவான்
மன்னவன் முத்தமி டெழுப்பிடவேஅவன்
மனைவியும் எழுந்தங்கு வந்திடுவாள்
எக்கால மும்பெரு நேராகும்நம்மை
எவ்வகை கவலையும் போருமில்லை
பக்குவ தேயிலை நீர் குடிப்போம்அங்கு
பதுமை கை கிண்ணத்தில் அளித்திடவே
இன்னமு திற்கது நேராகும்நம்மை
யோவான் விடுவிக்க வருமளவும்
நன்னக ரதனிடை வாழ்ந்திடு வோம்நம்மை
நலித்திடும் பேயங்கு வாராதே
குழந்தைகள் வாழ்ந்திடும் பட்டணங்காண்அங்கு
கோல்பந்து யாவிற்குமுயி ருண்டாம்
அழகிய பொன்முடி யரசிகளாம்அன்றி
அரசிளங் குமரிகள் பொம்மையெலாம்
செந்தோ லசுரனை கொன்றிடவேஅங்கு
சிறுவிற கெல்லாம் சுடர்மணி வாள்
சந்தோ ஷத்துடன் செங்கலையும் அட்டை
தாளையுங் கொண்டங்கு மனைகட்டுவோம்
கள்ளரவ் வீட்டினு புகுந்திடவேவழி
காண்ப திலாவகை செய்திடுவோம்ஓ
பிள்ளை பிராயத்தை இழந்தீரேநீர்
பின்னு நிலைபெற வேண்டீரோ
குழந்தைக ளாட்டத்தின் கனவை யெல்லாம்அந்த
கோலநன் னாட்டிடை காண்பீரே
இழந்தநல் லின்பங்கள் மீட்குறலாம்நீர்
ஏகுதிர் கற்பனை நகரினுக்கே
ஜான் ஸ்கர் என்ற ஆங்கில புலவன்நக்ஷத்ர தூதன்
என்ற பத்திரிகையில் பிரசுரித்த தி டவுன்
லெட்ஸ் பிரெடெண்டுஎன்ற பாட்டின் மொழி
பெயர்ப்பு
குறிப்பு இப்பாடலின் பொருள் கற்பனை நகரமென்பது
சித்தத்தில் குழந்தை நிலை பெறுவதை இங்கு
குறிப்பிடுகிறதுயோவான்என்பது குமார தேவனுடைய
பெயர்அக்கடவுள் மனிதனுக்குள்ளே நிலைபெற்று
மனிதன் அடைய வேண்டும்என்று யேசு கிறிஸ்து நாதர்
சொல்லியிருக்கும் பொருளை இப்பாடல் குறிப்பிடுகிறது
கவலைகளை முற்று துறந்துவிட்டு உலகத்தை வெறுமே
லீலையா கருதி னாலன்றி மோக்ஷம் எய்த படாது

பல்வகை பாடல்கள்
காப்புபரம்பொருள் வாழ்த்து
ஆத்தி சூடி இளம்பிறை யணிந்து
மோன திருக்கு முழுவெண் மேனியான்
கருநிறங் கொண்டு பாற் கடல் மிசை கிடப்போன்
மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்
ஏசுவின் தந்தை எனப்பல மதத்தினர்
உருவக தாலே உணர்ந்துண ராது
பலவகை யாக பரவிடும் பரம்பொருள் ஒன்றே
அதனியல் ஒளியுறும் அறிவாம்
அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்
அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம்
நூல்
அச்சம் தவிர்
ஆண்மை தவறேல்
இளைத்தல் இகழ்ச்சி
ஈகை திறன்
உடலினை உறுதிசெய்
ஊண்மிக விரும்பு
எண்ணுவ துயர்வு
ஏறுபோல் நட
ஐம்பொறி ஆட்சிகொள்
ஒற்றுமை வலிமையாம்
ஓய்த லொழி
ஔடதங் குறை
கற்ற தொழுகு
காலம் அழியேல்
கிளைபல தாங்கேல்
கீழோர்க்கு அஞ்சேல்
குன்றென நிமிர்ந்துநில்
கூடி தொழில் செய்
கெடுப்பது சோர்வு
கேட்டிலும் துணிந்துநில்
கைத்தொழில் போற்று
கொடுமையை எதிர்த்து நில்
கோல்கை கொண்டு வாழ்
கவ்வியதை விடேல்
சரித்திர தேர்ச்சிகொள்
சாவதற்கு அஞ்சேல்
சிதையா நெஞ்சு கொள்
சீறுவோர சீறு
சுமையினுக்கு இளைத்திடேல்
சூரரை போற்று
செய்வது துணிந்து செய்
சேர்க்கை அழியேல்
சைகையிற் பொருளுணர்
சொல்வது தெளிந்து சொல்
சோதிட தனையிகழ்
சௌரி தவறேல்
ஞமலிபோல் வாழேல்
ஞாயிறு போற்று
ஞிமிரென இன்புறு
ஞெகிழ்வத தருளின்
ஞேயங் காத்தல் செய்
தன்மை இழவேல்
தாழ்ந்து நடவேல்
திருவினை வென்றுவாழ்
தீயோர்க்கு அஞ்சேல்
துன்பம் மறந்திடு
தூற்றுதல் ஒழி
தெய்வம் நீ என்றுணர்
தேசத்தை காத்தல்செய்
தையலை உயர்வு செய்
தொன்மைக்கு அஞ்சேல்
தோல்வியிற் கலங்கேல்
தவத்தினை நிதம் புரி
நன்று கருது
நாளெலாம் வினைசெய்
நினைப்பது முடியும்
நீதிநூல் பயில்
நுனியளவு செல்
நூலினை பகுத்துணர்
நெற்றி சுருக்கிடேல்
நேர்பட பேசு
நை புடை
நொந்தது சாகும்
நோற்பது கைவிடேல்
பணத்தினை பெருக்கு
பாட்டினில் அன்புசெய்
பிணத்தினை போற்றேல்
பீழைக்கு இடங்கொடேல்
புதியன விரும்பு
பூமி யிழந்திடேல்
பெரிதினும் பெரிதுகேள்
பேய்களுக்கு அஞ்சேல்
பொய்ம்மை இகழ்
போர்த்தொழில் பழகு
மந்திரம் வலிமை
மானம் போற்று
மிடிமையில் அழிந்திடேல்
மீளுமாறு உணர்ந்துகொள்
முனையிலே முகத்து நில்
மூப்பினுக்கு இடங்கொடேல்
மெல்ல தெரிந்து சொல்
மேழி போற்று
மொய்ம்புற தவஞ் செய்
மோனம் போற்று
மௌட்டி தனை கொல்
யவனர்போல் முயற்சிகொள்
யாவரையும் மதித்து வாழ்
யௌவனம் காத்தல் செய்
ரஸத்திலே தேர்ச்சிகொள்
ராஜஸம் பயில்
ரீதி தவறேல்
ருசிபல வென்றுணர்
ரூபம் செம்மை செய்
ரேகையில் கனி கொள்
ரோதனம் தவிர்
ரௌத்திரம் பழகு
லவம் பல வெள்ளமாம்
லாகவம் பயிற்சிசெய்
லீலை இவ் வுலகு
உலுத்தரை இகழ்
உலோகநூல் கற்றுணர்
லௌகிகம் ஆற்று
வருவதை மகிழ்ந்துண்
வானநூற் பயிற்சிகொள்
விதையினை தெரிந்திடு
வீரியம் பெருக்கு
வெடிப்புற பேசு
வேதம் புதுமைசெய்
வை தலைமைகொள்
வௌவுதல் நீக்கு
பாப்பா பாட்டு
ஓடி விளையாடு பாப்பா நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா
கூடிவிளையாடு பாப்பா ஒரு
குழைந்தையை வையாதே பாப்பா
சின்னஞ் சிறுகுருவி போலே நீ
திரிந்து பறந்துவா பாப்பா
வன்ன பறவைகளை கண்டு நீ
மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா
கொத்தி திரியுமந்த கோழி அதை
கூட்டி விளையாடு பாப்பா
எத்தி திருடுமந்த காக்காய் அதற்கு
இரக்க படவேணும் பாப்பா
பாலை பொழிந்து தரும் பாப்பா அந்த
பசுமிக நல்லதடி பாப்பா
வாலை குழைத்துவரும் நாய்தான் அது
மனிதர்க்கு தோழனடி பாப்பா
வண்டி இழுக்கும் நல்ல குதிரை நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு
அண்டி பிழைக்கும் நம்மை ஆடு இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா
காலை எழுந்தவுடன் படிப்பு பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு என்று
வழக்க படுத்திக்கொள்ளு பாப்பா
பொய்சொல்ல கூடாது பாப்பா என்றும்
புறஞ்சொல்ல லாகாது பாப்பா
தெய்வம் நமக்குத்துணை பாப்பா ஒரு
தீங்குவர மாட்டாது பாப்பா
பாதகஞ் செய்பவரை கண்டால் நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா
மோதி மிதித்துவிடு பாப்பா அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா
துன்பம் நெருங்கிவந்த போதும் நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா
அன்பு மிகுந்த தெய்வ முண்டு துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா
சோம்பல் மிகக்கெடுதி பாப்பா தாய்
சொன்ன சொல்லை தட்டாதே பாப்பா
தேம்பி யழுங்குழந்தை நொண்டி நீ
திடங்கொண்டு போராடு பாப்பா
தமிழ்த்திரு நாடு தன்னை பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
அமிழ்தில் இனியதடி பாப்பா நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா
சொல்லில் உயர்வுதமிழ சொல்லே அதை
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்த ஹிந்துஸ் தானம் அதை
தினமும் புகழ்ந்திடடி பாப்பா
வடக்கில் இமயமலை பாப்பா தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா
கிடக்கும் பெரிய கடல் கண்டாய் இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா
வேத முடையதிந்த நாடு நல்ல
வீரர் பிறந்த திந்த நாடு
சேதமில் லாதஹிந்துஸ் தானம் இதை
தெய்வமென்று கும்பிடடி பாப்பா
சாதிகள் இல்லையடி பாப்பா குல
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்
நீதிஉயர்ந்தமதிகல்வி அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்
உயிர்க ளிடத்தில் அன்பு வேணும் தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்
வயிர முடைய நெஞ்சு வேணும் இது
வாழும் முறைமையடி பாப்பா
முரசு
வெற்றி எட்டு திக்கு மெட்ட கொட்டு முரசே
வேதம் என்றும் வாழ்கஎன்று கொட்டு முரசே
நெற்றி யொற்றை கண்ணனோடே நிர்த்தனம் செய்தாள்
நித்த சக்தி வாழ்க வென்று கொட்டு முரசே
ஊருக்கு நல்லது சொல்வேன் என
குண்மை தெரிந்தது சொல்வேன்
சீரு கெல்லாம் முதலாகும் ஒரு
தெய்வம் துணைசெய்ய வேண்டும்
வேத மறிந்தவன் பார்ப்பான் பல
வித்தை தெரிந்தவன் பார்ப்பான்
நீதி நிலைதவ றாமல் தண்ட
நேமங்கள் செய்பவன் நாய்க்கன்
பண்டங்கள் விற்பவன் செட்டி பிறர்
பட்டினி தீர்ப்பவன் செட்டி
தொண்டரென் றோர்வகு பில்லை தொழில்
சோம்பலை போல்இழி வில்லை
நாலு வகுப்பும்இங் கொன்றே இந்த
நான்கினில் ஒன்று குறைந்தால்
வேலை தவறி சிதைந்தே செத்து
வீழ்ந்திடும் மானிட சாதி
ஒற்றை குடும்ப தனிலே பொருள்
ஓங்க வளர்ப்பவன் தந்தை
மற்றை கருமங்கள் செய்தே மனை
வாழ்ந்திட செய்பவள் அன்னை
ஏவல்கள் செய்பவர் மக்கள் இவர்
யாவரும் ஓர்குலம் அன்றோ
மேவி அனைவரும் ஒன்றாய் நல்ல
வீடு நடத்துதல் கண்டோ ம்
சாதி பிரிவுகள் சொல்லி அதில்
தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்
நீதி பிரிவுகள் செய்வார் அங்கு
நித்தமும் சண்டைகள் செய்வார்
சாதி கொடுமைகள் வேண்டாம் அன்பு
தன்னில் செழித்திடும் வையம்
ஆதர வுற்றிங்கு வாழ்வோம் தொழில்
ஆயிரம் மாண்புற செய்வோம்
பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் புவி
பேணி வளர்த்திடும் ஈசன்
மண்ணு குள்ளே சிலமூடர் நல்ல
மாத ரறிவை கெடுத்தார்
கண்கள் இரண்டினில் ஒன்றை குத்தி
காட்சி கெடுத்திட லாமோ
பெண்க ளறிவை வளர்த்தால் வையம்
பேதைமை யற்றிடுங் காணீர்
தெய்வம் பலபல சொல்லி பகை
தீயை வளர்ப்பவர் மூடர்
உய்வ தனைத்திலும் ஒன்றாய் எங்கும்
ஓர்பொருளானது தெய்வம்
தீயினை கும்பிடும் பார்ப்பார் நித்தம்
திக்கை வணங்கும் துருக்கர்
கோவிற் சிலுவையின் முன்னே நின்று
கும்பிடும் யேசு மதத்தார்
யாரும் பணிந்திடும் தெய்வம் பொருள்
யாவினும் நின்றிடும் தெய்வம்
பாருக்குள்ளே தெய்வம் ஒன்று இதில்
பற்பல சண்டைகள் வேண்டாம்
வெள்ளை நிறத்தொரு பூனை எங்கள்
வீட்டில் வளருது கண்டீர்
பிள்ளைகள் பெற்றத பூனை அவை
பேரு கொருநிற மாகும்
சாம்பல் நிறமொரு குட்டி கருஞ்
சாந்து நிறமொரு குட்டி
பாம்பு நிறமொரு குட்டி வெள்ளை
பாலின் நிறமொரு குட்டி
எந்த நிறமிருந்தாலும் அவை
யாவும் ஒரேதர மன்றோ
இந்த நிறம்சிறி தென்றும் இஃது
ஏற்ற மென்றும் சொல்லலாமோ
வண்ணங்கள் வேற்றுமை பட்டால் அதில்
மானுடர் வேற்றுமை யில்லை
எண்ணங்கள் செய்கைக ளெல்லாம் இங்கு
யாவர்க்கும் ஒன்றெனல் காணீர்
நிகரென்று கொட்டு முரசே இந்த
நீணிலம் வாழ்பவ ரெல்லாம்
தகரென்று கொட்டு முரசே பொய்ம்மை
சாதி வகுப்பினை யெல்லாம்
அன்பென்று கொட்டு முரசே அதில்
ஆக்கமுண் டாமென்று கொட்டு
துன்பங்கள் யாவுமே போகும் வெறுஞ்
சூது பிரிவுகள் போனால்
அன்பென்று கொட்டு முரசே மக்கள்
அத்தனை பேரும் நிகராம்
இன்பங்கள் யாவும் பெருகும் இங்கு
யாவரும் ஒன்றென்று கொண்டால்
உடன்பிற தார்களை போலே இவ்
வுலகில் மனிதரெல் லாரும்
இடம்பெரி துண்டுவை யத்தில் இதில்
ஏதுக்கு சண்டைகள் செய்வீர்
மரத்தினை நட்டவன் தண்ணீர் நன்கு
வார்த்ததை ஓங்கிட செய்வான்
சிரத்தை யுடையது தெய்வம் இங்கு
சேர்த்த உணவெல்லை யில்லை
வயிற்றுக்கு சோறுண்டு கண்டீர் இங்கு
வாழும் மனிதரெல் லோருக்கும்
பயிற்றி உழுதுண்டு வாழ்வீர் பிறர்
பங்கை திருடுதல் வேண்டாம்
உடன்பிற தவர்களை போலே இவ்
வுலகினில் மனிதரெல் லாரும்
திடங்கொண் டவர்மெலி தோரை இங்கு
தின்று பிழைத்திட லாமோ
வலிமை யுடையது தெய்வம் நம்மை
வாழ்ந்திட செய்வது தெய்வம்
மெலிவுகண் டாலும் குழந்தை தன்னை
வீழ்த்தி மிதத்திட லாமோ
தம்பி சற்றே மெலிவானால் அண்ணன்
தானடிமை கொள்ள லாமோ
செம்புக்கும் கொம்புக்கும் அஞ்சி மக்கள்
சிற்றடி மைப்பட லாமோ
அன்பென்று கொட்டு முரசே அதில்
யார்க்கும் விடுதலை உண்டு
பின்பு மனிதர்க ளெல்லாம் கல்வி
பெற்று பதம்பெற்று வாழ்வார்
அறிவை வளர்த்திட வேண்டும் மக்கள்
அத்தனை பேருக்கும் ஒன்றாய்
சிறியரை மேம்பட செய்தால் பின்பு
தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும்
பாருக்குள்ளே சமத்தன்மை தொடர்
பற்றுஞ் சகோதர தன்மை
யாருக்கும் தீமைசெய் யாது புவி
யெங்கும் விடுதலை செய்யும்
வயிற்றுக்கு சோறிட வேண்டும் இங்கு
வாழும் மனிதரு கெல்லாம்
பயிற்றி பலகல்வி தந்து இந்த
பாரை உயர்த்திட வேண்டும்
ஒன்றென்று கொட்டு முரசேஅன்பில்
ஓங்கென்று கொட்டு முரசே
நன்றென்று கொட்டு முரசேஇந்த
நானில மாந்தரு கெல்லாம்
புதுமை பெண்
போற்றி போற்றிஓர் ஆயிரம் நின்
பொன்ன டிக்குப்பல் லாயிரம் போற்றிகாண்
சேற்றி லேபுதி தாக முளைத்த தோர்
செய்ய தாமரை தேமலர் போலோளி
தோற்றி நின்றனை பாரத நாடைலே
துன்பம் நீக்கும் சுதந்திர பேரிகை
சாற்றி வந்தனைமாதரசே எங்கள்
சாதி செய்த தவப்பயன் வாழி நீ
மாதர குண்டு சுதந்திரம் என்றுநின்
வண்ம லர்த்திரு வாயின் மொழிந்தசொல்
நாத தானது நாரதர் வீணையோ
நம்பிரான் கண்ணன் வேய்ங்குழ லின்பமோ
வேதம் பொன்னுரு கன்னிகை யாகியே
மேன்மை செய்தெமை காத்திட சொல்வதொ
சாதல் மூத்தல் கெடுக்கும் அமிழ்தமொ
தையல் வாழ்கபல் லாண்டுபல் லாண்டிங்கே
அறிவு கொண்ட மனித வுயிர்களை
அடிமையாக்க முயல்பவர் பித்தராம்
நெறிகள் யாவினும் மேம்பட்டு மானிடர்
நேர்மை கொண்டுயர் தேவர்க ளாதற்கே
சிறிய தொண்டுகள் தீர்த்தடி மைச்சுருள்
தீயிலிட்டு பொசுக்கிட வேண்டுமாம்
நறிய பொன்மலர் மென்சிறு வாயினால்
நங்கை கூறும் நவீனங்கள் கேட்டிரோ
ஆணும் பெண்ணும் நிகரென கொள்வதால்
அறிவி லோங்கி இவ் வையம் தழைக்குமாம்
பூணு நல்லற தோடிங்கு பெண்ணுரு
போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்
நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்
ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்குடி பெண்ணின் குணங்களாம்
பெண்மை தெய்வத்தின் பேச்சுகள் கேட்டீரோ
நிலத்தின் தன்மை பயிர்க்குள தாகுமாம்
நீச தொண்டு மடமையும் கொண்டதாய்
தலத்தில் மாண்புயர் மக்களை பெற்றிடல்
சாலவே யரி தாவதொர் செய்தியாம்
குலத்து மாதர்கு கற்பியல் பாகுமாம்
கொடுமை செய்தும் அறிவை யழித்து
நலத்தை காக்க விரும்புதல் தீமையாம்
நங்கை கூறும் வியப்புகள் கேட்டீரோ
புதுமை பெண்ணிவள் சொற்களும் செய்கையும்
பொய்ம்மை கொண்ட கலிக்கு புதிதன்றி
சதுமறைப்படி மாந்தர் இருந்தநாள்
தன்னி லேபொது வான் வழக்கமாம்
மதுர தேமொழி மங்கையர் உண்மைதேர்
மாத வப்பெரி யோருட னொப்புற்றே
முதுமை காலத்தில் வேதங்கள் பேசிய
முறைமை மாறிட கேடு விளைந்ததாம்
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞான செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்
அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
அவல மெய்தி கலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதய கன்னி உரைப்பது கேட்டீரோ
உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்
ஓது பற்பல நூல்வகை கற்கவும்
இலகு சீருடை நாற்றிசை நாடுகள்
யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே
திலக வாணுத லார்நங்கள் பாரத
தேசமோங்க உழைத்திடல் வெண்டுமாம்
விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை
வீர பெண்கள் விரைவில் ஒழிப்பாராம்
சாத்தி ரங்கள் பலபல கற்பாராம்
சவுரி யங்கள் பலபல செய்வராம்
மூத்த பொய்ம்மைகள் யாவும் அழிப்பராம்
மூட கட்டுக்கள் யாவு தகர்ப்பராம்
காத்து மானிடர் செய்கை யனைத்தையும்
கடவு ளர்க்கினி தாக சமைப்பராம்
ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம்
இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்டீரோ
போற்றிபோற்றிஜயஜய போற்றிஇ
புதுமை பெண்ணொளி வாழிபல் லாண்டிங்கே
மாற்றி வையம் புதுமை யுறச்செய்து
மனிதர் தம்மை அமர்க ளாக்கவே
ஆற்றல் கொண்ட பராசக்தி யன்னைநல்
அருளி நாலொரு கன்னிகை யாகியே
தேற்றி உண்மைகள் கூறிட வந்திட்டாள்
செல்வம் யாவினும் மேற்செல்வம் எய்தினோம்
பெண்மை
பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா
பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா
தண்மை இன்பம்நற் புண்ணியஞ் சேர்ந்தன
தாயின் பெயரும் சதியென்ற நாமமும்
அன்பு வாழ்கென் றமைதியில் ஆடுவோம்
ஆசை காதலை கைகொட்டி வாழ்த்துவோம்
துன்பம் தீர்வது பெண்மையி னாலடா
சூர பிள்ளைகள் தாயென்று போற்றுவோம்
வலிமை சேர்ப்பது தாய்முலை பாலடா
மானஞ் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்
கலிய ழிப்பது பெண்க ளறமடா
கைகள் கோத்து களித்துநின் றாடுவோம்
பெண்ண றத்தினை ஆண்மக்கள் வீரந்தான்
பேணு மாயிற் பிறகொரு தாழ்வில்லை
கண்ணை காக்கும் இரண்டிமை போலவே
காத லின்பத்தை காத்திடு வோமடா
சக்தி யென்ற மதுவையுண் போமடா
தாளங் கொட்டி திசைகள் அதிரவே
ஓத்தி யல்வதொர் பாட்டும் குழல்கழும்
ஊர்வி களித்துநின் றாடுவோம்
உயிரை காக்கும்உயரினை சேர்த்திடும்
உயிரினு குயிராய் இன்ப மாகிடும்
உயிரு னும்இந்த பெண்மை இனிதடா
ஊது கொம்புகள் ஆடு களிகொண்டே
போற்றி தாய் என்று தோழ் கொட்டி யாடுவீர்
புகழ்ச்சி கூறுவீர் காதற் கிளிகட்கே
நூற்றி ரண்டு மலைகளை சாடுவோம்
நுண்ணி டைப்பெண் ணொருத்தி பணியிலே
போற்றி தாய் என்று தாளங்கள் கொட்டடா
போற்றி தாய்என்று பொற்குழ லூதடா
காற்றி லேறியவ் விண்ணையுஞ் சாடுவோம்
காதற் பெண்கள் கடைக்கண் பணியிலே
அன்ன மூட்டிய தெய்வ மணி கையின்
ஆணை காட்டில் அனலை விழுங்குவோம்
கன்ன தேமுத்தம் கொண்டு களிப்பினும்
கையை தள்ளும்பொற் கைகளை பாடுவோம்
பெண்கள் விடுதலை கும்பி
காப்பு
பெண்கள் விடுதலை பெற்ற மகிழ்ச்சிகள்
பேசி களிப்பொடு நாம்பாட
கண்களி லேயொளி போல வுயிரில்
கலந்தொளிர் தெய்வம்நற் காப்பாமே
கும்மியடிதமிழ் நாடு முழுதும்
குலுங்கிட கைகொட்டி கும்மியடி
நம்மை பிடித்த பிசாசுகள் போயின
நன்மை கண்டோ மென்று கும்மியடி கும்மி
ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்
வீட்டு குள்ளே பெண்ணை பூட்டிவை போமென்ற
விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார் கும்மி
மாட்டை யடித்து வசக்கி தொழுவினில்
மாட்டும் வழக்கத்தை கொண்டு வந்தே
வீட்டினில் எம்மிடங் காட்ட வந்தார்அதை
வெட்டி விட்டோ மென்று கும்மியடி கும்மி
நல்ல விலை கொண்டு நாயை விற்பார்அந்த
நாயிடம் யோசனை கேட்ப துண்டோ
கொல்ல துணிவின்றி நம்மையும் அந்நிலை
கூட்டிவை தார்பழி கூட்டி விட்டார் கும்மி
கற்பு நிலையென்று சொல்ல வந்தார்இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்
வற்புறு திப்பெண்ணை கட்டிக்கொடுக்கும்
வழக்கத்தை தள்ளி மிதித்திடுவோம் கும்மி
பட்டங்கள் ஆள்வதுஞ் சட்டங்கள் செய்வதும்
பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டு மறிவினில் ஆணு கிங்கேபெண்
இளைப்பில்லை கணென்று கும்மியடி கும்மி
வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும்
வேண்டி வந்தோ மென்று கும்மியடி
சாதம் படைக்கவும் செய்திடுவோம்தெய்வ
சாதி படைக்கவும் செய்திடு வோம் கும்மி
காத லொருவனை கைப்பிடித்தேஅவன்
காரியம் யாவினும் கைகொடுத்து
மாத ரறங்கள் பழமையை காட்டிலும்
மாட்சி பெற செய்து வாழ்வமடி கும்மி
பெண் விடுதலை
விடுதலைக்கு மகளிரெல் லோரும்
வேட்கை கொண்டனம்வெல்லுவம் என்றெ
திடம னத்தின் மதுக்கிண்ண மீது
சேர்ந்து நாம்பிர திக்கினை செய்வோம்
உடைய வள்சக்தி ஆண்பெண் ணிரண்டும்
ஒருநி கர்செய் துரிமை சமைத்தாள்
இடையிலேபட்ட கீழ்நிலை கண்டீர்
இதற்கு நாமொரு பட்டிரு போமோ
திறமை யால்இங்கு மேனிலைசேர்வோம்
தீய பண்டை இகழ்ச்சிகள் தேய்ப்போம்
குறைவி லாது முழுநிகர் நம்மை
கொள்வ ராண்க ளெனிலவ ரோடும்
சிறுமை தீர தாய்த்திரு நாட்டை
திரும்ப வெல்வதில் சேர்ந்திங் குழைப்போம்
அறவி ழுந்தது பண்டை வழக்கம்
ஆணு குப்பெண் விலங்கெனும் அஃதே
விடியு நல்லொளி காணுதி நின்றே
மேவு நாக ரிகம்புதி தொன்றே
கொடியர் நம்மை அடிமைகள் என்றே
கொண்டுதாம்முதல் என்றன ரன்றே
அடியொ டந்த வழக்கத்தை கொன்றே
அறிவு யாவும் பயிற்சியில் வென்றே
கடமை செய்வீர்நந்தேசத்து வீர
காரிகை கணத்தீர்துணி வுற்றே
தொழில்
இரும்பை காய்ச்சி உருக்கிடு வீரே
யந்திரங்கள் வகுத்திடு வீரே
கரும்பை சாறு பிழிந்திடு வீரே
கடலில் மூழ்கிநன் முத்தெடுப்பீரே
அரும்பும் வேர்வை உதிர்த்து புவிமேல்
ஆயி ரந்தொழில் செய்திடு வீரே
பெரும்பு கழ்நு கேயிசை கின்றேன்
பிரம தேவன் கலையிங்கு நீரே
மண்ணெடுத்து குடங்கள்செய் வீரே
மரத்தை வெட்டி மனைசெய்கு வீரே
உண்ண காய்கனி தந்திடு வீரே
உழுது நன்செ பயிரிடு வீரே
எண்ணெய்பால்நெய் கொணர்ந்திடு வீரே
இழையை நாற்றுநல் லாடைசெய் வீரே
விண்ணி னின்றெமை வானவர் காப்பார்
மேவி பார்மிசை காப்பவர் நீரே
பாட்டும் செய்யுளும் கோத்திடு வீரே
பரத நாட்டி கூத்திடு வீரே
காட்டும் வை பொருள்களின் உண்மை
கண்டு சாத்திரம் சேர்த்திடு வீரே
நாட்டி லேயறம் கூட்டிவை பீரே
நாடும் இன்பங்கள் ஊட்டிவை பீரே
தேட்ட மின்றி விழியெதிர் காணும்
தெய்வ மாக விளங்குவிர் நீரே
மறவன் பாட்டு
மண்வெட்டி கூலிதின லாச்சேஎங்கள்
வாள்வலியும் வேல்வலியும் போச்சே
விண்முட்டி சென்றபுகழ் போச்சேஇந்த
மேதினியில் கெட்டபெய ராச்சே
நாணிலகு வில்லினொடு தூணிநல்ல
நாதமிகு சங்கொலியும் பேணி
பூணிலகு திண்கதையும் கொண்டுநாங்கள்
போர்செய்த கால்மெல்லாம் ப்ண்டு
கன்னங் கரியவிருள் நேரம்அதில்
காற்றும் பெருமழையும் சேரும்
சின்ன கரியதுணி யாலேஎங்கள்
தேகமெல்லாம் மூடிநரி போலே
ஏழை யெளியவர்கள் வீட்டில்இந்த
ஈன வயிறுபடும் பாட்டில்
கோழை யெலிக ளென்னவேபொருள்
கொண்டு வந்து
முன்னாளில் ஐவரெல்லாம் வேதம்ஓதுவார்
மூன்று மழை பெய்யுமடா மாதம்
இந்நாளி லேபொய்ம்மை பார்ப்பார்இவர்
ஏதுசெய்தும் காசுபெற பார்ப்பார்
பேராசை காரனடா பார்ப்பான்ஆனால்
பெரியதுரை என்னிலுடல் வேர்ப்பான்
யாரானா லும்கொடுமை

பிள்ளைக்கு பூணூலாம் என்பான்நம்மை
பிச்சு பணங்கொடென தின்பான்
கொள்ளை கேசென்

சொல்ல கொதிக்குதடா நெஞ்சம்வெறுஞ்
சோற்றுக்கோ வந்ததிந்த பஞ்சம்


நாயும் பிழைக்கும் இந்தப்பிழைப்பு
நாளெல்லாம் மற்றிதிலே உழைப்பு
பாயும் கடிநா போலீசுக்கார
பார்ப்பானு குண்டிதிலே பீசு
சோர தொழிலா கொள்வோமோமுந்தை
சூரர் பெயரை அழி போமோ
வீர மறவர் நாமன்றோஇந்த
வீண் வாழ்க்கை வாழ்வதினி நன்றோ
நாட்டு கல்வி
ஆங்கிலத்தில் ரவீந்திரநாதர் எழுதிய பாடலின்
மொழிபெயர்ப்பு
விளக்கி லேதிரி நன்கு சமைந்தது
மேவு வீர்இங்கு தீக்கொண்டு தோழரே
களக்க முற்ற இருள்கட தேகுவார்
காலை சோதி கதிரவன் கோவிற்கே
துளக்க முற்றவிண் மீனிடம் செல்லுவார்
தொகையில் சேர்ந்திட உம்மையும் கூவினார்
களிப்பு மிஞ்சி ஓளியினை பண்டொரு
காலன் நீர்சென்று தேடிய தில்லையோ
அன்று நுங்கள் கொடியினை முத்திட்டே
ஆசை யென்ற விண் மீன்ஒளிர் செய்ததே
துன்று நள்ளிருள் மலை மயக்கத்தால்
சோம்பி நீரும் வழிநடை பிந்தினீர்
நின் றவிந்தன நுங்கள் விளக்கெலாம்
நீங்கள் கண்ட கனாக்களெல் லாம் இசை
குன்றி தீக்குறி தோன்றும்இராப்புட்கள்
கூவ மாறொ திருந்தன காண்டிரோ
இன்னு மிங்கிருள் கூடி யிருப்பினும்
ஏங்கு கின்ற நரக துயிர்கள்போல்
இன்னு மிங்கு வனத்திடை காற்றுத்தான்
ஓங்கும் ஓதை இருதிடும் ஆயினும்
முன்னை காலத்தின் நின்றெழும் பேரொலி
முறை முறைபல ஊழியின் ஊடுற்றே
பின்னை இங்குவ தெய்திய பேரொலி
இருளை நீக்கி ஒளியினை காட்டுவாய்
இறப்பை நீக்கிஅமிர்தத்தை ஊட்டுவாய்
அருளும் இந்த மறையொலி வந்திங்கே
ஆழ்ந்த தூக்கத்தில் வீழ்ந்திரு பீர்தமை
தெருளு றுத்தவும் நீர்எழு கில்லிரோ
தீய நாச உறக்கத்தில் வீழ்ந்தனீர்
மருளை நீக்கி அறிதிர் அறிதிரோ
வான்ஒ ளிக்கு மகாஅர்இ யாம்என்றே
புதிய கோணங்கி
குடுகுடு
நல்ல காலம் வருகுதுநல்ல வருகுது
சாதிகள் சேருதுசண்டைகள் தொலையுது
சொல்லடிசொல்லடிசக்திமாகாளீ
வேதபுர தாருக்கு நல்ல குறி சொல்லு
தரித்திரம் போகுதுசெல்வம் வருகுது
படிப்பு வளருதுபாவம் தொலையுது
படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்
போவான்போவான்ஐயோவென்று போவான்
வேத புரத்திலே வியாபாரம் பெருகுது
தொழில் பெருகுதுதொழிலாளி வாழ்வான்
சாத்திரம் வளருதுசூத்திரம் தெரியுது
யந்திரம் பெருகுதுதந்திரம் வளருது
மந்திர மெல்லாம் வளருதுவளருது
குடுகுடு
சொல்லடிசொல்லடிமலையாள பகவதீ
அந்தரிவீரிசண்டிகைசூலி
குடுகுடு
குடுகுடு
சாமிமார கெல்லாம் தைரியம் வளருது
தொப்பை சுருங்குதுசுறுசுறுப்பு விளையுது
எட்டு லச்சுமியும் ஏறி வளருது
சாத்திரம் வளருதுசாதி குறையுது
நேத்திரம் திறக்குதுநியாயம் தெரியுது
பழைய பயித்தியம் படீலென்று தெளியுது
வீரம் வருகுதுமேன்மை கிடைக்குது
சொல்லடி சக்திமலையாள் பகவதி
தர்மம் பெருகுதுதர்மம் பெருகுது

சுயசரிதை
கனவு
பொய்யா பழங்கதையா கனவாய்
மெல்ல போனதுவே
பட்டினத்துப்பிள்ளை
முன்னுரை
வாழ்வு முற்றும் கனவென கூறிய
மறைவ லோர்தம் உரைபிழை யன்றுகாண்
தாழ்வு பெற்ற புவித்தல கோலங்கள்
ச்ரத மன்றெனல் யானும் அறிகுவேன்
பாழ்க டந்த பரனிலை யென்றவர்
பகரும் அந்நிலை பார்த்திலன் பார்மிசை
ஊள் கடந்து வருவதும் ஒண்றுண்டோ
உண்மை தன்னிலொர் பாதி யுணர்ந்திட்டேன்
மாயை பொய்யெனல் முற்றிலும் கண்டனன்
மற்றும் இந்த பிர தியல்பினை
ஆய நல்லருள் பெற்றிலன்தன்னுடை
அறிவி னுக்கு புலப்பட லின்றியே
தேய மீதெவ ரோசொலுஞ் சொல்லினை
செம்மை யென்று மனத்திடை கொள்வதாம்
தீய பக்தி யியற்கையும் வாய்ந்திலேன்
சிறிது காலம் பொறுத்தினுங் காண்பமே
உலகெ லாமொர் பெருங்கன வஃதுளே
உண்டு றங்கி யிடர்செய்து செத்திடும்
கலக மானிட பூச்சிகள் வாழ்க்கையோர்
கனவி லுங்கன வாகும்இதனிடை
சிலதி னங்கள் உயிர்க்கமு தாகியே
செப்பு தற்கரி தாகம யக்குமால்
திலத வாணுத லார்தரு மையலா
தெய்வி கக்கன வன்னது வாழ்கவே
ஆண்டோ ர் பத்தினில் ஆடியும் ஓடியும்
ஆறு குட்டையின் நீச்சினும் பேச்சினும்
ஈண்டு பன்மர தேறியி றங்கியும்
என்னோ டொத்த சிறியர் இருப்பரால்
வேண்டு தந்தை விதிப்பினு கஞ்சியான்
வீதி யாட்டங்க ளேதினுங் கூடிலேன்
தூண்டு நூற்கண தோடு தனியனா
தோழ் மைபிறி தின்றி வருந்தினேன்
பிள்ளை காதல்
அன்ன போழ்தினி லுற்ற கனவினை
அந்த மிழ சொலில் எவ்வண்ணம் சொல்லுகேன்
சொன்ன தீங்கன வங்கு துயிலிடை
தோய்ந்த தன்றுநனவிடை தோய்ந்ததால்
மென்ன டை கனி யின்சொற் கருவிழி
மேனி யெங்கும் நறுமலர் வீசிய
கன்னி யென்றுறு தெய்வத மொன்றனை
கண்டு காதல் வெறியிற் கலந்தனன்
ஒன்ப தாயபி ராயத்த ளென்விழி
கோது காதை சகுந்தலை யொத்தனள்
என்ப தார்க்கும் வியப்பினை நல்குமால்
என்செய் கேன் பழியென் மிசை யுண்டுகொல்
அன்பெ நும்பெரு வெள்ளம் இழுக்குமேல்
அதனை யாவர் பிழைத்திட வல்லரே
முன்பு மாமுனி வோர்தமை வென்றவில்
முன்ன ரேழை குழந்தையென் செய்வனே
வயது முற்றிய பின்னுறு காதலே
மாசு டைத்தது தெய்விக மன்றுகாண்
இயலு புன்மை யுடலினு கின்பெனும்
எண்ண முஞ்சிறி தேன்றத காதலாம்
நயமி குந்தனி மாதை மாமணம்
நண்ணு பாலர் தமக்குரி தாமன்றோ
கயல்வி ழிச்சிறு மானினை காணநான்
காம னம்புகள் என்னுயிர் கண்டவே
கனகன் மைந்தன் குமர குருபரன்
கனியும் ஞானசம் பந்தன் துருவன்மற்
றெனையர் பாலர் கடவுளர் மீதுதாம்
எண்ணில் பக்திகொண் டின்னுயிர் வாட்டினோர்
மனதி லேபிற தோன்மன முண்ணுவோன்
மதன தேவனு கென்னுயிர் நல்கினன்
முனமு ரைத்தவர் வான்புகழ் பெற்றனர்
மூட னேன்பெற்ற தோதுவன் பின்னரே
நீரெ டுத்து வருவதற் கவள் மணி
நித்தி லப்புன் நகைசுடர் வீசிட
போரெ டுத்து வருமதன் முன்செல
போகும் வேளை யதற்கு தினந்தொறும்
வேரெ டுத்து சுதந்திர நற்பயிர்
வீந்திட செய்தல் வேண்டிய மன்னர்தம்
சீரெ டுத்த புலையியற் சாரர்கள்
தேச பக்தர் வரவினை காத்தல்போல்
காத்தி ருந்தவள் போம்வழி முற்றிலும்
கண்கள் பின்னழ கார்ந்து களித்திட
யாத்த தேருரு ளைப்படு மேளைதான்
யாண்டு தேர்செலு மாங்கிழு புற்றென
கோத்த சிந்தனையோ டேகி யதில்மகிழ்
கொண்டு நாட்கள் பலகழி திட்டனன்
பூத்த ஜோதி வதனம் திரும்புமேல்
புலன ழிந்தொரு புத்துயி ரெய்துவேன்
புலங்க ளோடு கரணமும் ஆவியும்
போந்து நின்ற விருப்புடன் மானிடன்
நலங்க ளேது விரும்புவன் அங்கவை
நண்ணு றப்பெறல் திண்ணம தாமென
இலங்கு நூலுணர் ஞானியர் கூறுவர்
யானும் மற்றது மெய்யென தேர்ந்துளேன்
விலங்கி யற்கை யிலையெனில் யாமெலாம்
விருன்பு மட்டினில் விண்ணுற லாகுமே
சூழு மாய வுலகினிற் காணுறு
தோற்றம் யாவையும் மானத மாகூமால்
ஆழு நெஞ்சக தாசையின் றுள்ளதேல்
அதனு டைப்பொருள் நாளை விளைந்திடும்
தாழு முள்ளத்தர்சோர்வினர்ஆடுபோல்
தாவி தாவி பலபொருள் நாடுவோர்
வீழு மோரிடை யூற்றினு கஞ்சுவோர்
விரும்பும் யாவும் பெறாரிவர் தாமன்றே
விதியை நோவர்தம் நண்பரை தூற்றுவர்
வெகுளி பொங்கி பகைவரை நிந்திப்பர்
சதிகள் செய்வர்பொ சாத்திரம் பேசுவர்
சாத கங்கள் புரட்டுவர் பொய்மைசேர்
மதியி னிற்புலை நாத்திகங் கூறுவர்
மாய்ந்தி டாத நிறைந்த விருப்பமே
கதிகள் யாவும் தருமென லோர்ந்திடார்
கண்ணி லாதவர் போல திகைப்பர்காண்
கன்னி மீதுறு காதலின் ஏழையேன்
கவலை யுற்றனன் கோடியென் சொல்லுகேன்
பன்னி யாயிரங் கூறினும்பக்தியின்
பான்மை நன்கு பகர்ந்திட லாகுமோ
முன்னி வான்கொம்பிற் றேனு குழன்றதோர்
முடவன் கால்கள் முழுமைகொண் டாலென
என்னி யன்றுமற் ஦ற்ங்ஙனம் வாய்ந்ததோ
என்னி டத்தவள் இங்கிதம் பூண்டதே
காதலென்பதும் ஓர்வயின் நிற்குமேல்
கடலின் வந்த கடுவினை யொக்குமால்
ஏத மின்றி யிருபுடை தாமெனில்
இன்னமிர்தும் இணைசொல லாகுமோ
ஓதொ ணாத பெருந்தவம் கூடினோர்
உம்பர் வாழ்வினை யெள்ளிடும் வாழ்வினோர்
மாத ரார்மிசை தாமுறுங் காதலை
மற்ற வர்தர பெற்றிடும் மாந்தரே
மொய்க்கும் மேகத்தின் வாடிய மாமதி
மூடு வெம்பனி கீழுறு மென்மலர்
கைக்கும் வேம்பு கலந்திடு செய்யபால்
காட்சி யற்ற கவினுறு நீள்விழி
பொ கிளைத்து வருந்திய மெய்யரோ
பொன்ன னாரருள் பூண்டில ராமெனில்
கைக்கி ளைப்பெயர் கொண்ட பெருந்துயர
காத லஃது கருதவு தீயதால்
தேவர் மன்னன் மிடிமையை பாடல்போல்
தீய கைக்கிளை யானெவன் பாடுதல்
ஆவல் கொண்ட அரும்பெறற் கன்னிதான்
அன்பெ னக்கங் களித்திட லாயினள்
பாவம் தீமைபழியெது தேர்ந்திடோ ம்
பண்டை தேவ யுகத்து மனிதர்போல்
காவல் கட்டு விதிவழ கென்றிடுங்
கயவர் செய்திக ளேதும்அறிந்திலோம்
கான கத்தில் இரண்டு பறவைகள்
காத லுற்றது போலவும் ஆங்ஙனே
வான கத்தில் இயக்க ரியக்கியர்
மையல் கொண்டு மயங்குதல் போலவும்
ஊன கத்த துவட்டுறும் அன்புதான்
ஒன்று மின்றி உயிர்களில் ஒன்றியே
தேன் கத்த மணிமொழி யாளொடு
தெய்வ நாட்கள் சிலகழி தேனரோ
ஆதி ரைத்திரு நாளொன்றிற் சங்கரன்
ஆலயத்தொரு மண்டப தன்னில்யாள்
சோதி மானொடு தன்ன தனியனா
சொற்க ளாடி யிருப்ப ம்ற்றாங்கவள்
பாதி பேசி மறைந்துபின் தோன்றித்தன்
பங்க யக்கையில் மைகொணர்ந்தேஒரு
சேதி நெற்றியில் பொட்டுவை பேன் என்றாள்
திலத மிட்டனள்செய்கை யழிந்தனன்
என்னை யீன்றென கைந்து பிராயத்தில்
ஏங்க விட்டுவிண் ணெய்திய தாய்தனை
முன்னை யீன்றவன் செந்தமிழ செய்யுளால்
மூன்று போழ்துஞ் சிவனடி யேத்துவோன்
அன்ன வந்தவ பூசனை தீர்ந்தபின்
அருச்ச னைப்படு தேமலர் கொண்டுயான்
பொன்னை யென்னுயிர் தன்னை யணுகலும்
பூவை புன்னகை நன்மலர் பூப்பள் காண்
ஆங்கில பயிற்சி
நெல்லையூர் சென்றவ் வூணர் கலைத்திறன்
நேரு மாறெனை எந்தை பணித்தனன்
புல்லை யுண்கென வாளரி சேயினை
போக்கல் போலவும்ஊன்விலை வாணிகம்
நல்ல தென்றொரு பார்ப்பன பிள்ளையை
நாடு விப்பது போலவும்எந்தைதான்
அல்லல் மிக்கதோர் மண்படு கல்வியை
ஆரி யர்க்கிங் கருவரு பாவதை
நரியு யிர்ச்சிறு சேவகர்தாதர்கள்
நாயெ னத்திரி யொற்றர்உணவினை
பெரிதெ னக்கொடு தம்முயிர் விற்றிடும்
பேடியர்பிறர கிச்சகம் பேசுவோர்
கருது மிவ்வகை மாக்கள் பயின்றிடுங்
கலைப யில்கென என்னை விடுத்தனன்
அருமை மிக்க மயிலை பிரிந்துமிவ்
அற்பர் கல்வியின் நெஞ்சுபொ ருந்துமோ
கணிதம் பன்னிரண் டாண்டு பயில்வர்பின்
கார்கொள் வானிலோர் மீனிலை தேர்ந்திலார்
அணிசெய் காவியம் ஆயிரங் கற்கினும்
ஆழ்ந்தி ருக்கும் கவியுளம் காண்கிலார்
வணிக மும்பொருள் நூலும் பிதற்றுவார்
வாழு நாட்டிற் பொருள்கெடல் கேட்டிலார்
துணியு மாயிரஞ் சாத்திர நாமங்கள்
சொல்லு வாரெ டுணைப்பயன் கண்டிலார்
கம்ப னென்றொரு மானிடன் வாழ்ந்ததும்
காளி தாசன் கவிதை புனைந்ததும்
உம்பர் வானத்து கோளையும் மீனையும்
ஓர்ந்த ளந்ததொர் பாஸ்கரன் மாட்சியும்
நம்ப ருந்திற லோடொரு பாணினி
ஞால மீதில் இலக்கணங் கண்டதும்
இம்பர் வாழ்வின் இறுதிகண் டுண்மையின்
இயல்பு ணர்த்திய சங்கரன் ஏற்றமும்
சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்
தெய்வ வள்ளுவன் வான்மறை செய்ததும்
பாரில் நல்லிசை பாண்டிய சோழர்கள்
பார ளித்து தர்மம் வளர்த்ததும்
பேர ருட்சுடர் வாள்கொண் டசோகனார்
பிழை படாது புவித்தலங் காத்ததும்
வீரர் வாழ்த்த மிலேச்சர்த தீயகோல்
வீழ்த்தி வென்ற சிவாஜியின் வெற்றியும்
அன்ன யாவும் அறிந்திலர் பார
தாங்கி லம்பயில் பள்ளியு போகுநர்
முன்ன நாடு திகழ்ந்த பெருமையும்
மூண்டி ருக்குமி நாளின் இகழ்ச்சியும்
பின்னர் நாடுறு பெற்றியு தேர்கிலார்
பேடி கல்வி பயின்ருழல் பித்தர்கள்
என்ன கூறிமற் றெங்ஙன் உணர்த்துவேன்
இங்கி வர்க்கென துள்ளம் எரிவதே
சூதி லாத யுளத்தினன் எந்தைதான்
சூழ்ந்தெ னக்கு நலஞ்செயல் நாடியே
ஏதி லாதருங் கல்வி படுகுழி
ஏறி யுய்தற் கரிய கொடும்பிலம்
தீதி யன்ற மயக்கமும் ஐயமும்
செய்கை யாவினு மேயசி ரத்தையும்
வாதும் பொய்மையும் என்றவி லங்கினம்
வாழும் வெங்குகை கென்னை வழங்கினன்
ஐய ரென்றும் துரைனென்றும் மற்றென
காங்கி லக்கலை யென்றொன் றுணர்த்திய
பொய்ய ருக்கிது கூறுவன்கேட்பீரேல்
பொழுதெ லாமுங்கள் பாடத்தில் போக்கிநான்
மெய்ய யர்ந்து விழிகுழி வெய்திட
வீறி ழந்தென துள்ளநொய் தாகிட
ஐயம் விஞ்சி சுதந்திர நீங்கியென்
அறிவு வாரி துரும்பென் றலைந்ததால்
செலவு தந்தைக்கோ ராயிரஞ் சென்றது
தீதெ னக்குப்பல் லாயிரஞ் சேர்ந்தன
நலமொ ரெட்டுணை யுங்கண்டி லேனிதை
நாற்ப தாயிரங் கோயிலிற் சொல்லுவேன்
சிலமுன் செய்நல் வினைப்பய னாலு
தேவி பார தன்னை யருளினும்
அலைவு றுத்துநும் பேரிருள் வீழ்ந்துநான்
அழிந்தி டாதொரு வாறுபி ழைத்ததே
மணம்
நினைக்க நெஞ்ச முருகும்பிறர்க்கிதை
நிகழ்த்த நாநனி கூசு மதன்றியே
எனைத்திங் கெண்ணி வருந்தியும் இவ்விடர்
யாங்ஙன் மாற்றுவ தென்பதும் ஓர்ந்திலம்
அனைத்தொர் செய்திமற் றேதெனிற் கூறுவேன்
அம்மமாக்கள் மணமெனுஞ் செய்தியே
வினைத்தொ டர்களில் மானுட வாழ்க்கையுள்
மேவு மிம்மணம் போற்பிறி தின்றரோ
வீடு றாவணம் யாப்பதை வீடென்பார்
மிகவி ழிந்த பொருளை பொருளென்பார்
நாடுங் காலொர் மணமற்ற செய்கையை
நல்ல தோர்மண மாமென நாட்டுவார்
கூடு மாயிற் பிரம சரியங் கொள்
கூடு கின்றில தென்னிற் பிழைகள் செய்து
ஈட ழிந்து நரகவழி செல்வாய்
யாது செய்யினும் இம்மணம் செய்யல்காண்
வசிட்ட ருக்கும் இராமருக்கும் பின்னொரு
வள்ளு வர்க்கும்முன் வாய்த்திட்ட மாதர்போல்
பசித்தொ ராயிரம் ஆண்டு தவஞ்செய்து
பார்க்கி நும்பெறல் சால வரிதுகாண்
புசிப்ப தும்பரின் நல்லமு தென்றெணி
புலையர் விற்றிடும் கள்ளுண லாகுமோ
அசுத்தர் சொல்வது கேட்களிர்காளையீர்
ஆண்மை வேண்டின் மணஞ்செய்தல் ஓம்புமின்
வேறு தே தெவரெது செய்யினும்
வீழ்ச்சி பெற்றவி பாரத நாட்டினில்
ஊற ழிந்து பிணமென வாழுமிவ்
வூனம் நீக்க விரும்பும் இளையர்தாம்
கூறு மெந துயர்கள் விளையினும்
கோடி மக்கள் பழிவந்து சூழினும்
நீறு பட்டவி பாழ்ச்செயல் மட்டினும்
நெஞ்ச தாலும் நினைப்ப தொழிகவே
பால ருந்து மதலையர் தம்மையே
பாத கக்கொடும் பாதக பாதகர்
மூல தோடு குலங்கெடல் நாடிய
மூட மூடநிர் மூட புலையர்தாம்
கோல மாக மணத்திடை கூட்டுமி
கொலையெ நுஞ்செய லொன்ரினை யுள்ளவும்
சால வின்னுமோ ராயிரம் ஆண்டிவர்
தாத ராகி அழிகென தோன்றுமே
ஆங்கொர் கன்னியை பத்து பிராயத்தில்
ஆள் நெஞ்சிடை யூன்றி வணங்கினன்
ஈங்கொர் கன்னியை பன்னிரண் டாண்டனுள்
எந்தை வந்து மணம்புரி வித்தனன்
தீங்கு ம்ற்றிதி லுண்டென் றறிந்தவன்
செயலெ திர்க்கு திறனில நாயினேன்
ஓங்கு காதற் றழலெவ் வளவென்றன்
உளமெ ரித்துள தென்பதுங் கண்டிலேன்
மற்றொர் பெண்ணை மணஞ்செய்த போழ்துமுன்
மாத ராளிடை கொண்டதொர் காதல்தான்
நிற்றல் வேண்டு மெனவுள தெண்ணிலேன்
நினைவை யேயிம் மணத்திற் செலுத்திலேன்
முற்றொ டர்பினில் உண்மை யிருந்ததால்
மூண்ட பின்னதொர் கேளியென் றெண்ணினேன்
கற்றுங் கேட்டும் அறிவு முதிருமுன்
காத லொன்று கடமையொன் றாயின
மதனன் செய்யும் மயக்க மொருவயின்
மாக்கள் செய்யும் பிணிப்புமற் றோர்வயின்
இதனிற் பன்னிரண் டாட்டை யிளைஞனு
கென்னை வேண்டும் இடர்க்குறு சூழ்ச்சிதான்
எதனி லேனுங் கடமை விளையுமேல்
எத்து யர்கள் உழன்றுமற் றென்செய்தும்
அதனி லுண்மையோ டார்ந்திடல் சாலுமென்று
அறம்வி திப்பதும் அப்பொழு தோர்ந்திலேன்
சாத்தி ரங்கள் கிரியைகள் பூசைகள்
சகுன மந்திர தாலி மணியெலாம்
யாத்தெ னைக்கொலை செய்தன ரல்லது
யாது தர்ம முறையெனல் காட்டிலர்
தீத்தி றன்கொள் அறிவற்ற பொய்ச்செயல்
செய்து மற்றவை ஞான நெறியென்பர்
மூத்த வர்வெறும் வேடத்தின் நிற்குங்கால்
மூட பிள்ளை அறமெவண் ஓர்வதே
தந்தை வறுமை எய்திடல்
ஈங்கி தற்கிடை யெந்தை பெருந்துயர்
எய்தி நின்றனன்தீய வறுமையான்
ஓங்கி நின்ற பெருஞ்செல்வம் யாவையும்
ஊணர் செய்த சதியில் இழந்தனன்
பாங்கி நின்று புகழ்ச்சிகள் பேசிய
பண்டை நண்பர்கள் கைநெகிழ தேகினர்
வாங்கி யுய்ந்த கிளைஞரும் தாதரும்
வாழ்வு தேய்ந்தபின் யாது மதிப்பரோ
பர்ப்ப நக்குலங் கெட்டழி வெய்திய
பாழ டைந்த கலியுக மாதலால்
வேர்ப்ப வேர பொருள் செய்வ தொன்றையே
மேன்மை கொண்ட தொழிலென கொண்டனன்
ஆர்ப்பு மிஞ்ச பலபல வாணிகம்
ஆற்றி மிக்க பொருள்செய்து வாழ்ந்தனன்
நீர்ப்ப டுஞ்சிறு புற்புத மாமது
நீங்க வேயுளங் குன்றி தளர்ந்தனன்
தீய மாய வுலகிடை யொன்றினில்
சிந்தை செய்து விடாயுறுங் காலதை
வாய டங்க மென்மேலும் பருகினும்
மா தாகம் தவிர்வது கண்டிலம்
நேய முற்றது வந்து மிகமிக
நித்த லும்மதற் காசை வளருமால்
காய முள்ள வரையுங் கிடைப்பினும்
கயவர் மாய்வது காய்ந்த உளங்கொண்டே
ஆசை கோரள வில்லை விடயத்துள்
ஆழ்ந்த பின்னங் கமைதியுண் டாமென
மோசம் போகலிர்என்றிடி தோதிய
மோனி தாளிணை முப்பொழு தேத்துவாம்
தேச தார்புகழ் நுண்ணறி வோடுதான்
திண்மை விஞ்சிய நெஞ்சின னாயினும்
நாச காசினில் ஆசையை நாட்டினன்
நல்லன் எந்தை துயர்க்கடல் வீழ்ந்தனன்
பொரு பெருமை
பொருளி லார்க்கிலை யிவ்வுலகென்றநம்
புலவர் தம்மொழி பொய்ம்மொழி யன்றுகாண்
பொருளி லார்க்கின மில்லை துணையிலை
பொழுதெ லாமிடர் வெள்ளம்வ தெற்றுமால்
பொருளி லார்பொருள் செய்தல் முதற்கடன்
போற்றி காசினு கேங்கி யுவிர்விடும்
மருளர் தம்மிசை யேபழி கூறுவன்
மாம்க கிங்கொர் ஊன முரைத்திலன்
அறமொன் றேதரும் மெய்யின்பம் என்றநல்
லறிஞர் தம்மை அனுதினம் போற்றுவேன்
பிறவி ரும்பி உலகினில் யான்பட்ட
பீழை எத்தனை கோடிநினைக்கவும்
திறன ழிந்தென் மனமுடை வெய்துமால்
தேச துள்ள இளைஞர் அறிமினோ
அறமொன் றேதரும் மெய்யின்பம்ஆதலால்
அறனை யேதுணை யென்றுகொண் டுய்திரால்
வெய்ய கர பயஙளின் நொந்துதான்
மெய்யு ணர்ந்திட லாகு மென்றாக்கிய
தெய்வ மேயிது நீதி யெனினும்நின்
திருவ ருட்கு பொருந்திய தாகுமோ
ஐய கோசிறி துண்மை விளங்குமுன்
ஆவி நை துயருறல் வேண்டுமே
பை பையவோர் ஆமைகுன் றேறல்போல்
பாருளோர் உண்மை கண்டிவண் உய்வரால்
தந்தை போயினன் பாழ்மிடி சூழ்ந்தது
தரணிமீதினில் அஞ்சலென் பாரிலர்
சிந்தை யில்தெளி வில்லைஉடலினில்
திறனு மில்லைஉரனுள தில்லையால்
மந்தர் பாற்பொருள் போக்கி பயின்றதாம்
மடமை கல்வியால் மண்ணும் பயனிலை
எந்த மார்க்கமும் தோற்றில தென்செய்கேன்
ஏன்பி றந்தனன் இத்துயர் நாட்டிலே
முடிவுரை
உலகெ லாமொர் பெருங்கன வஃதுளே
உண்டு றங்கி இடர்செய்து செத்திடும்
கலக மானிட பூச்சிகள் வாழ்க்கையோர்
கனவி னுங்கன வாகும்இதற்குநான்
பலநி நைந்து வருந்தியிங் கென்பயன்
பண்டு போனதை எண்ணி யென்னாவது
சிலதி னங்கள் இருந்து மறைவதில்
சிந்தை செய்தெவன் செத்திடு வானடா
ஞான் முந்துற வும்பெற் றிலாதவர்
நானி லத்து துயரன்றி காண்கிலர்
போன தற்கு வருந்திலன் மெய்த்தவ
புலமை யோனது வான தொளிருமோர்
மீனை நாடி வளைத்திட தூண்டிலை
வீச லொக்கு மெனலை மறக்கிலேன்
ஆன தாவ தனைத்தையுஞ் செய்ததோர்
அன்னை யேஇனி யேனும் அருள்வையால்
வேறு
அறிவிலே தெளிவுநெஞ்சிலே உறுதி
அகத்திலே அன்பினோர் வெள்ளம்
பொறிகளின்மீது தனியர சாணை
பொழுதெலாம் நினதுபே ரருளின்
நெறியிலே நாட்டம்கரும யோகத்தில்
நிலைத்திடல் என்றிவை யருளாய்
குறிகுண மேதும் இல்லதாய் அனைத்தா
குலவிடு தனிப்பரம் பொருளே
பாரதிஅறுபத்தாறு
கடவுள் வாழ்த்துபராசக்தி துதி
எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தா ரப்பா
யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்
மனத்தினிலே நின்றிதனை எழுது கின்றாள்
மனோன் மணியென் மாசக்தி வையத்தேவி
தினத்தினிலே புதிதாக பூத்து நிற்கும்
செய்யமணி தாமரை நேர் முகத்தாள் காதல்
வனத்தினிலே தன்னையொரு மலரை போலும்
வண்டினைப்போல் எனையுமுரு மாற்றி விட்டாள்
தீராத காலமெலாம் தானும் நிற்பாள்
தெவிட்டாத இன்னமுதின் செவ்வி தழ்ச்சி
நீரா கனலாக வானா காற்றா
நிலமாக வடிவெடுத்தாள்நிலத்தின் மீது
போராக நோயாக மரண மாக
போந்திதனை யழித்திடுவாள்புணர்ச்சி கொண்டால்
நேராக மோனமகா னந்த வாழ்வை
நிலத்தின்மிசை அளி தமர தன்மை ஈவாள்
மாகாளி பராசக்தி உமையாள் அன்னை
வைரவிகங் காளிமனோன் மணிமா மாயி
பாகார்ந்த தேமொழியாள்படருஞ் செந்தீ
பாய்ந்திடுமோர் விழியுடையாள்பரம சக்தி
ஆகார மளித்திடுவாள்அறிவு தந்தாள்
ஆதிபரா சக்தியென தமிர்த பொய்கை
சோகா டவிக்குளெனை புகவொட்டாமல்
துய்யசெழு தேன்போலே கவிதை சொல்வாள்
மரணத்தை வெல்லும் வழி
பொன்னார்ந்த திருவடியை போற்றி யிங்கு
புகலுவேன் யானறியும் உண்மை யெல்லாம்
முன்னோர்கள் எவ்வுயிரும் கடவுள் என்றார்
முடிவாக அவ்வுரையை நான்மேற் கொண்டேன்
அன்னோர்கள் உரத்ததன்றி செய்கையில்லை
அத்வைத நிலைகண்டால் மரணமுண்டோ
முன்னோர்கள் உரைத்தபல சித்த ரெல்லாம்
முடிந்திட்டார்மடிந்திட்டார்மண்ணாய் விட்டார்
பொந்திலே யுள்ளாராம்வனத்தில் எங்கோ
புதர்களிலே யிருப்பாராம்பொதிகை மீதே
சந்திலே சவுத்தியிலே நிழலை போலே
சற்றெ யங்கங்கேதென் படுகின் றாராம்
நொந்தபுண்ணை குத்துவதில் பயனென் றில்லை
நோவாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர்
அந்தண்னாம் சங்கரா சார்யுன் மாண்டான்
அதற்கடுத்த இராமா நுஜனும் போனான்
சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்
தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்
பலர் புகழும் இராமனுமே யாற்றில் வீழ்ந்தான்
பார்மீது நான்சாகா திருப்பேன்காண்பீர்
மலிவுகண்டீர் இவ்வுண்மை பொய்கூ றேன்யான்
மடிந்தாலும் பொய்கூறேன் மானுடர்க்கே
நலிவுமில்லைசாவுமில்லைகேளீர்கேளீர்
நாணத்தை கவலையினை சினத்தை பொய்யை
அசுரர்களின் பெயர்
அச்சத்தை வேட்கைதனை அழித்து விட்டால்
அப்போது சாவுமங்கே அழிந்துபோகும்
மிச்சத்தை பின் சொல்வேன்சினத்தை முன்னே
வென்றிடுவீர்மேதினியில் மரணமில்லை
துக்சமென பிறர்பொருளை கருத லாலே
சூழ்ந்ததெலாம் கடவுளென சுருதி சொல்லும்
நிச்சயமாம் ஞானத்தை மறத்த லாலே
நேர்வதே மானுடர்க்கு சினத்தீ நெஞ்சில்
சினத்தின் கேடு
சினங்கொள்வார் தமைத்தாமே தீயாற் சுட்டு
செத்திடுவா ரொப்பாவார்சினங்கொள் வார்தாம்
மனங்கொண்டு தங்கழுத்தை தாமே வெய்ய
வாள்கொண்டு கிழித்திடுவார் மானு வாராம்
தினங்கோடி முறைமனிதர் சினத்தில் வீழ்வார்
சினம்பிறர்மேற் றாங்கொண்டு கவலையாக
செய்ததெணி துயர்க்கடலில் வீழ்ந்து சாவார்
மாகாளி பராசக்தி துணையே வேண்டும்
வையகத்தில் எதற்கும் இனி கவலை வேண்டா
சாகா மலிருப்பதுநம் சதுரா லன்று
சக்தியரு ளாலன்றோ பிறந்தோம் பார்மேல்
பாகான தமிழினிலே பொருளை சொல்வேன்
பாரீர்நீர் கேளீரோபடைத்தோன் காப்பான்
வேகாத மனங்கொண்டு களித்து வாழ்வீர்
மேதினியி லேதுவந்தால் எமக்கென் னென்றே
தேம்பாமை
வடகோடிங் குயர்ந்தென்னேசாய்ந்தா லென்னே
வான் பிறைக்கு தென்கோடுபார்மீ திங்கே
விடமுண்டுஞ் சாகாம லிரு கற்றால்
வேறெதுதான் யாதாயின் எமக்கிங் கென்னே
திடங்கொண்டு வாழ்ந்திடுவோம்தேம்பல் வேண்டா
தேம்புவதில் பயனில்லைதேம்பி தேம்பி
இடருற்று மடிந்தவர்கள் கோடி
எதற்கு மினி அஞ்சாதீர் புவியி லுள்ளீர்
பொறுமையின் பெருமை
திருத்தணிகை மலைமேலே குமார தேவன்
திருக்கொலுவீற் றிருக்குமதன் பொருளை கேளீர்
திருத்தணிகை யென் பதிங்கு பொறுமை யின்பேர்
செந்தமிழ்கண் டீர்பகுதிதணியெ னுஞ்சொல்
பொறுத்தமுறு தணிகையினால் புலமை சேரும்
பொறுத்தவரே பூமியினை ஆள்வார்என்னும்
அருத்தமிக்க பழமொழியும் தமிழி லுண்டாம்
அவனியிலே பொறையுடையான் அவனே தேவன்
பொறுமையினைஅறக்கடவுள் புதல்வ னென்னும்
யுதிட்டிரனும் நெடுநாளி புவிமேல் காத்தான்
இறுதியிலே பொறுமைநெறி தவறி விட்டான்
ஆதலாற் போர்புரிந்தான் இளையாரோடே
பொறுமை யின்றி போர்செய்து பரத நாட்டை
போர்க்களத்தே அழித்துவிட்டு புவியின் மீது
வறுமையையுங் கலியினையும் நிறுத்தி விட்டு
மலைமீது சென்றான்பின் வானஞ் சென்றான்
ஆனாலும் புவியின்மிசை உயிர்க ளெல்லாம்
அநியாய் மரணமெய்தல் கொடுமை யன்றொ
தேனான உயிரைவிட்டு சாக லாமோ
செத்திடற்கு காரணந்தான் யாதென் பீரேல்
கோனாகி சாத்திரத்தை யாளு மாண்பார்
ஜகதீச சந்த்ரவஸு கூறு கின்றான்
ஞானானு பவத்திலிது முடிவாங் கண்டீர்
நாடியிலே அதிர்ச்சியினால் மரணம்என்றான்
கோபத்தால் நாடியிலே அதிர்ச்சி யுண்டாம்
கொடுங்கோபம் பேரதிர்ச்சி சிறிய கோபம்
ஆபத்தாம்அதிர்ச்சியிலே சிறிய தாகும்
அச்சத்தால் நாடியெலாம் அவிந்து போகும்
தாபத்தால் நாடியெலாம் சிதைந்து போகும்
கவலையினால் நாடியெலாம் தழலாய் வேகும்
கோபத்தை வென்றிடலே பிறவற் றைத்தான்
கொல்வதர்கு வழியெனநான் குறித்திட்டேனே
கடவுள் எங்கே இருக்கிறார்
சொல்லடா ஹரியென்ற கடவுள் எங்கே
சொல் லென்று ஹைரணியந்தான் உறுமி கேட்க
நல்லதொரு மகன் சொல்வான்தூணி லுள்ளான்
நாரா யணந்துரும்பி லுள்ளான்என்றான்
வல்லபெருங் கடவுளிலா அணுவொன் றில்லை
மஹாசக்தி யில்லாத வஸ்து வில்லை
அல்லலில்லை
அனைத்துமே தெய்வமென்றால் அல்லலுண்டோ
சுயசரிதை
கேளப்பாசீடனேகழுதை யொன்றை
கீழான்பன்றியினை தேளை கண்டு
தாளைப்பார திருகரமுஞ் சிரமேற் கூப்பி
சங்கரசங் கரவென்று பணிதல் வேண்டும்
கூளத்தை மலத்தினையும் வணங்கல் வேண்டும்
கூடி நின்ற பொருளனைத்தின் கூட்டம் தெய்வம்
மீளத்தான் இதை தெளிவா விரித்து சொல்வேன்
விண்மட்டும் கடவுளன்று மண்ணும் அஃதே
சுத்த அறி வேசிவமென் றுரைத்தார் மேலோர்
சுத்த மண்ணும் சிவமென்றே உரைக்கும் வேதம்
வித்தகனாம் குருசிவமென் றுரைத்தார் மேலோர்
வித்தை யிலா புலையனு மஃதென்னும் வேதம்
பித்தரே அனைத்துயிருங் கடவுளென்று
பேசுவது மெய்யானால் பெண்டிரென்றும்
நித்தநும தருகினிலே குழந்தை யென்றும்
நிற்பனவு தெய்வமன்றொ நிகழ்த்து வீரே
உயிர்களெல்லாம் தெய்வமன்றி பிறவொன் ரில்லை
ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்
பயிலுமுயிர் வகைமட்டு மன்றி யிங்கு
பார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்
வெயிலளிக்கும் இரவிமதிவிண்மீன்மேகம்
மேலுமிங்கு பலபலவாம் தோற்றங் கொண்டே
இயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்
எழுதுகோல் தெய்வமிந்த எழுத்தும் தெய்வம்
குருக்கள் துதிகுள்ளச்சாமி புகழ்
ஞான்குரு தேசிகனை போற்று கின்றேன்
நாடனைத்து தானாவான் நலிவி லாதான்
மோனகுரு திருவருளால் பிறப்பு மாறி
முற்றிலும்நாம் அமரநிலை சூழ்ந்து விட்டோ ம்
தேன்னைய பராசக்தி திறத்தை காட்டி
சித்தினியல் காட்டிமன தெளிவு தந்தான்
வானகத்தை இவ்வுலகிலிருந்து தீண்டும்
வகையுணர்த்தி காத்த பிரான் பதங்கள் போற்றி
எப்போதும் குருசரணம் நினைவாய்நெஞ்சே
எம்பெருமான் சிதம்பரதே சிகந்தாள் எண்ணாய்
முப்பொழுங் கடந்தபெரு வெளியை கண்டான்
முத்தியெனும் வானகத்தே பரிதி யாவான்
தப்பாத சாந்தநிலை அளித்த கோமான்
தவம் நிறைந்த மாங்கொட்டை சாமி தேவன்
குப்பாய ஞானத்தால் மரண மென்ற
குளிர்நீக்கி யெனைக்காத்தான்குமார தேவன்
தேசத்தார் இவன்பெயரை குள்ளச்சாமி
தேவர்பிரான் என்றுரைப்பார்தெளிந்த ஞானி
பாசத்தை அறுத்துவிட்டான்பயத்தை சுட்டான்
பாவனையால் பரவெளிக்கு மேலே தொட்டான்
நாசத்தை அழித்துவிட்டான்யமனை கொன்றான்
ஞானகங்கை தனைமுடிமீ தேந்தி நின்றான்
ஆசையெனும் கொடிக்கொருதாழ் மரமே போன்றான்
ஆதியவன் சுடர்பாதம் புகழ்கின் றேனே
வாயினால் சொல்லிடவும் அடங்கா தப்பா
வரிசையுடன் எழுதிவைக்க வகையும் எல்லை
ஞாயிற்றை சங்கிலியால் அளக்க லாமோ
ஞானகுரு புகழினைநாம் வகுக்க லாமோ
ஆயிரனூல் எழுதிடினும் முடிவ்ய் றாதாம்
ஐயனவன் பெருமையைநான் சுருக்கி சொல்வேன்
காயகற்பஞ் செய்துவிட்டான்அவன்வாழ் நாளை
மணக்கிட்டு வயதுரைப்பார் யாரும் இல்லை
குரு தரிசனம்
அன்றொருநா புதுவைநகர் தனிலே கீர்த்தி
அடை கலஞ்சேர் ஈசுவரன் தர்மராஜா
என்றபெயர் வீதியிலோர் சிறிய வீட்டில்
இராஜாரா மையனென்ற நாகை பார்ப்பான்
முன்றனது பிதா தமிழில் உபநிடதத்தை
மொழிபெயர்த்து வைத்ததனை திருத்த சொல்லி
என்றனைவேண் டிக்கொள்ள யான்சென் றாங்கண்
இருக்கையிலே அங்குவந்தான் குள்ள சாமி
அப்போது நான்குள்ள சாமி கையை
அன்புடனே பற்றியது பேச லுர்றேன்
அப்பனேதேசிகனேஞானி என்பார்
அவனியிலே சிலர்நின்னை பித்தன் என்பார்
செப்புறுநல் லஷ்டாங்க யோக சித்தி
சேர்ந்தவனென் றுனைப்புகழ்வார் சிலரென் முன்னே
ஒப்பனைகள் காட்டாமல் உண்மை சொல்வாய்
உத்தமனேஎனக்குநினை உணர்த்து வாயே
யாவன் நீ நினைக்குள்ள திறமை என்னே
யாதுணர்வாய் கந்தைசுற்றி திரிவ தென்னே
தேவனைப்போல் விழிப்ப தென்னே சிறியாரோடும்
தெருவிலே நாய்களொடும் விளையா டென்னே
பாவனையிற் பித்தரைப்போல் அலைவ தென்னே
பரமசிவன் போலுருவம் படைத்த தென்னே
ஆவலற்று நின்றதென்னே அறிந்த தெல்லாம்
ஆரியனேஅனக்குணர்த்த வேண்டும்என்றேன்
பற்றியகை திருகியந்த குள்ள சாமி
பரிந்தோட பார தான்யான் விடவே யில்லை
சுற்றுமுற்றும் பார்த்துப்பின் முறுவல் பூத்தான்
தூயதிரு கமலப துணையை பார்த்தேன்
குற்றமற்ற தேசிகனும் திமிறி கொண்டு
குதித்தோடி அவ்வீட்டு கொல்லை சேர்ந்தான்
மற்றவன்பின் யானோடி விரைந்து சென்று
வாவனை கொல்லையிலே மறித்து கொண்டேன்
உபதேசம்
பக்கத்து வீடிடிந்து சுவர்கள் வீழ்ந்த
பாழ்மனையொன் றிருந்ததங்கேபரம யோகி
ஒக்கத்தன் அருள்விழியால் என்னை நோக்கி
ஒருகுட்டி சுவர்காட்டி பரிதி காட்டி
அக்கணமே கிணற்றுளதன் விம்பங் காட்டி என்றேன்
அறிதிகொலோஎனக்கேட்டான்அறிந்தேன்
மிக்கமகிழ் கொண்டவனும் சென்றான்யானும்
வேதாந்த மரத்திலொரு வேரை கண்டேன்
தேசிகன்கை காட்டியென குரைத்த செய்தி
செந்தமிழில் உலகத்தார குணர்த்து கின்றேன்
வாசியைநீ கும்பகத்தால் வலி கட்டி
மண்போலே சுவர்போலேவாழ்தல் வேண்டும்
தேசுடைய பரிதியுரு கிணற்றி நுள்஧ள்
தெரிவதுபோல் உனக்குள்஧ள் சிவனை காண்பாய்
பேசுவதில் பயனில்லைஅனுப வத்தால்
பேரின்பம் எய்துவதே ஞானம்என்றான்
கையிலொரு நூலிருந்தால் விரிக்க சொல்வேன்
கருத்தையதில் காட்டுவேன்வானை காட்டி
மையிலகு விழியாளின் காத லொன்றே
வையகத்தில் வாழுநெறி யென்றுகாட்டி
ஐயனென குணார்த்தியன பலவாம் ஞானம்
அகற்கவன்கா டியகுறிப்போ அநந்த மாகும்
பொய்யறியா ஞானகுரு சிதம்ப ரேசன்
பூமிவிநா யகன்குள்ள சாமி யங்கே
மற்றொருநாள் பழங்கந்தை யழுக்கு மூட்டை
வளமுறவே கட்டியவன் முதுகின் மீது
கற்றவர்கள் பணிந்தேத்தும் கமல பாத
கருணைமுனி சுமந்துகொண்டென் னெதிரே வந்தான்
சற்றுநகை புரிந்தவன்பால் கேட்க லானேன்
தம்பிரா னே இந தகைமை என்னே
முற்றுமிது பித்தருடை செய்கை யன்றொ
மூட்டைசு திடுவதென்னேமொழிவாய்அன்றென்
புன்னகைபூ தாரினும் புகலுகின்றான்
புறததேநான் சுமக்கின்றேன்அகத்தி னுள்ளே
இன்னதொரு பழங்குப்பை சுமக்கி றாய்நீ
என்றுரைத்து விரைந்தவனும் ஏகி விட்டான்
மன்னவன்சொற் பொருளினையான் கண்டு கொண்டேன்
மனத்தினுள்ளே பழம்பொய்கள் வளர்ப்ப தாலே
இன்னலுற்று மாந்தரெல்லாம் மடிவார் வீணே
இருதயத்தில் விடுதலையை இசைத்தால் வேண்டும்
சென்றதினி மீளாதுமூடரேநீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்சென்றதனை குறித்தல் வேண்டா
இன்று புடிதா பிறந்தோம் என்று நெஞ்சில்
எண்ணமதை திண்ணமுற இசைத்து கொண்டு
தின்றுவிளாஇ யாடியின்புற் றிருந்து வாழ்வீர்
அஃதின்றி சென்றதையே மீட்டும்
மேன்மேலும் நினைந்தழுதல் வேண்டாஅந்தோ
மேதையில்லா மானுடரேமேலும் மேலும்
மேன்மேலும் புதியகாற் றெம்முள்வந்து
மேன்மேலும் புதியவுயிர் விளைத்தல் கண்டீர்
ஆன்மாவென் றெகரு தொடர்பை யெண்ணி
அறிவு கங்கொண்டு கெடுகின்றீரே
மான்மானும் விழியுடையாள் சக்தி தேவி
வசப்பட்டு தனைமறந்து வாழ்தல் வேண்டும்
சென்றவினை பயன்களெனை தீண்ட மாட்டா
ஸ்ரீதரன்யான் சிவகுமா ரன்யா னன்றோ
நன்றிந்த கணம்புதிதா பிறழ்து விட்டேன்
நான் புதியவன்நான் கடவுள்நலிவி லாதோன்
என்றிந்த வுலகின்மிசை வானோர் போலே
இயன்றிடுவார் சித்தரென்பார்பரம தர
குன்றின்மிசை யொருபாய்ச்ச லாக பாய்ந்து
குறிப்பற்றார் கேடற்றார் குலைத லற்றார்
குறியனந்த முடையோரா கோடி செய்தும்
குவலயத்தில் வினைக்கடிமை படாதா ராகி
வெறியுடையோன் உமயாளை இடத்தி லேற்றான்
வேதகுரு பரமசிவன் வித்தை பெற்று
செறியுடைய பழவினையாம் இருளை செற்று
தீயினைப்போல் மண்மீது திரிவார் மேலோர்
அறிவுடைய சீடாநீ குறிப்பை நீக்கி
அநந்தமாம் தொழில் செய்தால் அமர னாவாய்
கேளப்பாமேற்சொன்ன உண்மை யெல்லாம்
கேடற்ற மதியுடையான் குள்ள சாமி
நாளும்பல் காட்டாலும் குறிப்பி னாலும்
நலமுடைய மொழியாலும் விளக்கி தந்தான்
தோளை பார துக்களித்தல் போலே யன்னான்
துணையடிகள் பார்த்துமனம் களிப்பேன் யானே
வாளைப்பார தின்பமுறு மன்னர் போற்றும்
மலர்த்தாளான் மாங்கொட்டை சாமி வாழ்க
கோவிந்த சுவாமி புகழ்
மாங்கொட்டை சாமி புகழ் சிறிது சொன்னோம்
வண்மை திகழ் கோவிந்த ஞானிபார்மேல்
யாங்கற்ற கல்வியெலாம் பலிக்க செய்தான்
எம்பெருமான் பெருமையையிங் கிசை கேளீர்
தீங்கற்ற குணமுடையான் புதுவை யூரார்
செய்தபெரு தவத்தாலே உதித்த தேவன்
பாங்குற்ற மாங்கொட்டை சாமி போலே
பயிலுமதி வர்ணாசிர மத்தே நிற்போன்
அன்பினால் முத்தியென்றான் புத்தன் அந்நாள்
அதனையிந்நா கோவிந்த சாமி செய்தான்
துன்பமுறும் உயிர்க்கெல்லாம் தாயை போலே
சுரக்குமரு ளுடையபிரான் துணிந்த யோகி
அன்பினுக்கு கடலையுந்தான் விழுங்க வல்லான்
அன்பினையே தெய்வமென்பான் அன்பே யாவான்
மன்பதைகள் யாவுமிங்கே தெய்வம் என்ற
மதியுடையான்கவலையெனும் மயக்கம் தீர்ந்தான்
பொன்னடியால் என்மனையை புனித மாக்க
போந்தானிம் முனியொருநாள்இறந்த எந்தை
தன்னுருவங் காட்டினான்பின்னர் என்னை
தரணிமிசை பெற்றவளின் வடிவ முற்றான்
அன்னவன்மா யோகியென்றும் பரம ஞான
தனுபூதி யுடையனென்றும் அறிந்து கொண்டேன்
மன்னவனை குருவெனநான் சரண டைந்தேன்
மரணபயம் நீங்கினேன்வலிமை பெற்றேன்
யாழ்ப்பாணத்து சுவாமியின் புகழ்
கோவிந்த சாமிபுகழ் சிறிது சொன்னேன்
குவலயத்தின் விழிபோன்ற யாழ்ப்பா ணத்தான்
தேவிபதம் மறவாத தீர ஞானி
சிதம்பரத்து நடராஜ மூர்த்தி யாவான்
பாவியரை கரையேற்றும் ஞான தோணி
பரமபத வாயிலெனும் பார்வை யாளன்
காவிவளர் தடங்களிலே மீஙள் பாயும்
கழனிகள் சூழ் புதுவையிலே அவனை கண்டேன்
தங்கத்தாற் பதுமைசெய்தும் இரத லிங்கம்
சமைத்துமவற் றினிலீசன் தாளை போற்றும்
துங்கமுறு பக்தர்பலர் புவிமீ துள்ளார்
தோழரேஎந்நாளும் எனக்கு பார்மேல்
மக்களஞ்சேர் திருவிழியால் அருளை பெய்யும்
வானவர்கோன்யாழ்ப்பாண தீசன் தன்னை
சங்கரெனன் றெப்போதும் முன்னே கொண்டு
சரணடைந்தால் அது கண்டீர் சர்வ சித்தி
குவளை கண்ணன் புகழ்
யாழ்ப்பாண தையனையென் நிடங்கொ ணர்ந்தான்
இணையடியை நந்திபிரான் முதுகில் வைத்து
காழ்ப்பான கயிலைமிசை வாழ்வான்பார்மேல்
கனத்தபுகழ குவளையூர கண்ணன் என்பான்
பார்ப்பார குலத்தினிலே பிறந்தான் கண்ணன்
பறையரையும் மறவரையும் நிகரா கொண்டான்
தீர்ப்பான சுருதிவநி தன்னிற் சேர்ந்தான்
சிவனடியார் இவன்மீது கருணை கொண்டார்
மகத்தான் முனிவரெலாம் கண்ணன் தோழர்
வானவரெல் லாங்கண்ணன் அடியா ராவார்
மிகத்தானு முயர்ந்ததுணி வுடைய நெஞ்சின்
வீரப்பிரான் குவளையூர கண்ணன் என்பான்
ஜகத்தினிலோர் உவமையிலா யாழ்ப்பா ணத்து
சமிதனை யிவனென்றன் மனைக்கொ ணர்ந்தான்
அகத்தினிலே அவன்பாத மலரை பூண்டேன்
அன்றே போதேவீ டதுவே வீடு
பாங்கான குருக்களை நாம் போற்றி கொண்டோ ம்
பாரினிலே பயந்தெளிந்தோம்பாச மற்றோம்
நீங்காத சிவசக்தி யருளை பெற்றோம்
நிலத்தின்மிசை அமரநிலை யுற்றோம்அப்பா
தாங்காமல் வையகத்தை அழிக்கும் வேந்தர்
தாரணியில் பலருள்ளார்தருக்கி வீழ்வார்
ஏங்காமல் அஞ்சாமல் இடர்செய் யாமல்
என்றுமருள் ஞானியரே எமக்கு வேந்தர்
பெண் விடுதலை
பெண்ணுக்கு விடுதலையென் றிங்கோர் நீதி
பிறப்பித்தேன்அதற்குரிய பெற்றி கேளீர்
மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வ மென்றால்
மனையாளும் தெய்வமன்றோமதிகெட்டீரே
விண்ணுக்கு பறப்பதுபோல் கதைகள் சொல்வீர்
விடுதலையென் பீர் கருணை வெள்ள மென்பீர்
பெண்ணுக்கு விடுதலைநீ ரில்லை யென்றால்
பின்னிந்த உலகினிலே வாழ்க்கை யில்லை
தாய் மாண்பு
பெண்டாட்டி தனையடிமை படுத்த வேண்டி
பெண்குலத்தை முழுதடிமை படுத்த லாமோ
கண்டார்க்கு நகைப்பென்னும் உலக வாழ்க்கை
காதலெனும் கதையினுடை குழப்பமன்றோ
உண்டாக்கி பாலூட்டி வளர்த்த தாயை
உமையவளென் றறியீரோஉணர்ச்சி கெட்டீர்
பண்டாய்ச்சி ஔவை அன்னையும் பிதாவும்
பாரிடை முன் னறிதெய்வம்என்றா அன்றோ
தாய்க்குமேல் இங்கேயோர் தெய்வ முண்டோ
தாய்பெண்ணே யல்லளோதமக்கைதங்கை
வாய்க்கும்பெண் மகவெல்லாம் பெண்ணே யன்றோ
மனைவியொரு தியையடிமை படுத்த வேண்டி
தாய்க்குலத்தை முழுதடிமை படுத்த லாமோ
தாயைப்போ லேபிள்ளைஎன்று முன்னோர்
வாக்குளதன் றோபெண்மை அடிமை யுற்றால்
மக்களெலாம் அடிமையுறல் வியப்பொன் றாமோ
வீட்டிலுள்ள பழக்கமே நாட்டி லுண்டாம்
வீட்டினிலே தனக்கடிமை பிறராம் என்பான்
நாட்டினிலே
நாடோ றும் முயன்றிடுவான் நலிந்து சாவான்
காட்டிலுள்ள பறவைகள் போல் வாழ்வோம்அப்பா
காதலிங்கே உண்டாயிற் கவலை யில்லை
பாட்டினிலே காதலை நான் பாட வேண்டி
பரமசிவன் பாதமலர் பணிகின் றேனே
காதலின் புகழ்
காதலினால் மானுடர்க்கு கலவி யுண்டாம்
கலவியிலே மானுடர்க்கு கவலை தீரும்
காதலினால் மானுடர்க்கு கவிதை யுண்டாம்
கானமுண்டாம்சிற்பமுதற் கலைக ளுண்டாம்
ஆதலினால் காதல்செய்வீர்உலக தீரே
அஃதன்றோ இவ்வுலக தலைமை யின்பம்
காதலினால் சாகாம லிருத்தல் கூடும்
கவலைபோம்அதனாலே மரணம் பொய்யாம்
ஆதி சக்தி தனையுடம்பில் அரனும் கோத்தான்
அயன்வாணி தனைநாவில் அமர்த்தி கொண்டான்
சோதிமணி முகத்தினளை செல்வ மெல்லாம்
சுரந்தருளும் விழியாளை திருவை மார்பில்
மாதவனும் ஏந்தினான்வானோர கேனும்
மாதரின்பம் போற்பிறிதோர் இன்பம் உண்டோ
காதல்செயும் மனைவியே சக்தி கண்டீர்
கடவுள்நிலை அவளாலே எய்த வேண்டும்
கொங்கைகளே சிவலிங்கம் என்று கூறி
கோக்கவிஞன் காளிதா சனும்பூ ஜித்தான்
மங்கைதனை காட்டினிலும் உடண்கொண் டேகி
மற்றவட்கா மதிமயங்கி பொன்மான் பின்னே
சிங்கநிகர் வீரர்பிரான் தெளிவின் மிக்க
ஸ்ரீதரனுஞ் சென்றுபல துன்ப முற்றான்
இங்குபுவி மிசைக்காவி யங்க ளெல்லாம்
இலக்கியமெல் லாங்காதற் புகழ்ச்சி யன்றோ
நாடகத்தில் காவியத்தில் காதலென்றால்
நாட்டினர்தாம் வியப்பெய்தி நன்றாம் என்பர்
ஊடகத்தே வீட்டினுள்ளே கிணற்றோ ரத்தே
ஊரினிலே காதலென்றால் உறுமு கின்றார்
பாடைகட்டி அதைக்கொல்ல வழிசெய் கின்றார்
பாரினிலே காதலென்னும் பயிரை மாய்க்க
மூடரெலாம் பொறாமையினால் விதிகள் செய்து
முறைதவறி இடரெய்தி கெடுகின் றாரே
காதலிலே இன்பமெய்தி களித்து நின்றால்
கனமான மன்னவர்போர் எண்ணு வாரோ
மாதருடன் மனமொன்றி மயங்கி விட்டால்
மந்திரிமார் போர்த்தொழிலை மனங்கொள் வாரோ
பாதிநடு கலவியிலே காதல் பேசி
பகலெல்லாம் இரவெல்லாம் குருவிபோலே
காதலிலே மாதருடன் களித்து வாழ்ந்தால்
படைத்தலைவர் போர்த்தொழிலை கருது வாரோ
விடுதலை காதல்
காதலிலே விடுதலையென் றாங்கோர் கொள்கை
கடுகிவளர திடுமென்பார் யூரோ பாவில்
மாதரெலாம் தம்முடைய விருப்பின் வண்ணம்
மனிதருடன் வாழ்ந்திடலாம் என்பார் அன்னோர்
பேதமின்றி மிருகங்கள் கலத்தல் போலே
பிரியம்வந்தால் கலந்தன்பு பிரிந்துவிட்டால்
வேதனையொன் றில்லாதே பிரிந்து சென்று
வேறொருவன் றனைக்கூட வேண்டும் என்பார்
வீரமிலா மனிதர் சொலும் வார்த்தை கண்டீர்
விடுதலையாங் காதலெனிற் பொய்மை காதல்
சோரரைப்போல் ஆண்மக்கள் புவியின் மீது
சுவைமிக்க பெண்மைநல முண்ணு கின்றார்
காரணந்தான் யாதெனிலோஆண்க ளெல்லாம்
களவின்பம் விரும்புகின்றார்கற்பே மேலென்று
ஈரமின்றி யெப்போதும் உபதே சங்கள்
எடுத்தெடுத்து பெண்களிடம் இயம்பு வாரே
ஆணெல்லாம் கற்பைவிட்டு தவறு செய்தால்
அப்போது பெண்மையுங்கற் பழிந்தி டாதோ
நாணற்ற வார்த்தையன்றோவீட்டை சுட்டால்
நலமான் கூரையுந்தான் எரிந்தி டாதோ
பேணுமொரு காதலினை வேண்டி யன்றோ
பெண்மக்கள் கற்புநிலை பிறழு கின்றார்
காணுகின்ற காட்சியெலாம் மறைத்து வைத்து
கற்புக்கற் பென்றுலகோர் கதைக்கின் றாரே
சர்வ மத சமரசம்
கோவிந்த சுவாமியுடன் உரையாடல்
மீளவுமங் கொருபகலில் வந்தான் என்றன்
மனையிடத்தே கோவிந்த வீர ஞானி
ஆளவந்தான் பூமியினைஅவனி வேந்தர்
அனைவருக்கும் மேலானோன்அன்பு வேந்தன்
நாளைப்பார தொளிர்தருநன் மலரைப்போலே
நம்பிரான் வரவுகண்டு மனம் மலர்ந்தேன்
வேளையிலே நமதுதொழில் முடித்து கொள்வோம்
வெயிலுள்ள போதினிலே உலர்த்தி கொள்வோம்
காற்றுள்ள போதேநாம் தூற்றி கொள்வோம்
கனமான குருவையெதிர் கண்டபோதே
மாற்றான அகந்தையினை துடைத்து கொள்வோம்
மலமான மறதியினை மடித்து கொள்வோம்
கூற்றான அரக்கருயிர் முடித்து கொள்வோம்
குலைவான மாயைதனை அடித்து கொள்வோம்
பேற்றாலே குருவந்தான்இவன்பால் ஞான
பேற்றையெல்லாம் பெறுவோம்யாம்அன்றெனுள்ளே
சிந்தித்து மெய்ப்பொருளை உணர்த்தாய் ஐயே
தேய்வென்ற மரணத்தை தேய்க்கும் வண்ணம்
வந்தித்து நினைக்கே டேன் கூறாய்என்றேன்
வானவனாம் கோவிந்த சாமி சொல்வான்
அந்தமிலா மாதேவன் கயிலை வேந்தன்
அரவிந்த சரணங்கள் முடிமேற் கொள்வோம்
பந்தமில்லைபந்தமில்லைபந்தம் இல்லை
பயமில்லைபயமில்லைபயமே இல்லை
அதுவேநீ யென்பதுமுன் வேத வோத்தாம்
அதுவென்றால் எதுவெனநான் அறை கேளாய்
அதுவென்றால் முன்னிற்கும் பொருளின் நாமம்
அவனியிலே பொருளெல்லாம் அதுவாம்நீயும்
அதுவன்றி பிறிதில்லைஆத லாலே
அவனியின்மீ தெதுவரினும் அசைவு றாமல்
மதுவுண்ட மலர்மாலை இராமன் தாளை
மனத்தினிலே நிறுத்தியிங்கு வாழ்வாய் சீடா
பாரான உடம்பினிலே மயிர்களைப்போல்
பலப்பலவாம் பூண்டு வரும் இயற்கை யாலே
நேராக மானுடர்தாம் பிறரை கொல்ல
நினையாமல் வாழ்ந்திட்டால் உழுதல் வேண்டா
காரான நிலத்தைப்போ திருத்தவேண்டா
கால்வாய்கள் பாய்ச்சுவதில் கலகம் வேண்டா
சீரான மழைபெய்யும் தெய்வ முண்டு
சிவன் செத்தா லன்றிமண்மேல் செழுமை உண்டு
ஆதலால் மானிடர்கள் களவை விட்டால்
அனைவருக்கும் உழைப்பின்றி உணவுண் டாகும்
பேதமிட்டு கலகமிட்டு வேலி கட்டி
பின்னதற்கு காவலென்று பேருமிட்டு
நீதமில்லா கள்வர்நெறி யாயிற் றப்பா
நினைக்குங்கால் இது கொடிய நிகழ்ச்சி யன்றோ
பாதமலர் காட்டினினை அன்னை காத்தாள்
பாரினிலி தருமம்நீ பகரு வாயே
ஒருமொழியே பலமொழிக்கும் இடங்கொ டுக்கும்
ஒருமொழியே மலமொழிக்கும் ஒழிக்கும் என்ற
ஒருமொழியை கருத்தினிலே நிறுத்தும் வண்ணம்
ஒருமொழி ஓம் சிவாய வென்பர்
ஹரிஹரியென் றிடினும் அஃதேராம ராம
சிவசிவவென்றிட்டாலும் அஃதேயாகும்
தெரிவுறவே ஓம்சக்தியென்று மேலோர்
ஜெபம்புரிவ தப்பொருளின் பெயரே யாகும்
சாரமுள்ள பொருளினைநான் சொல்லிவிட்டேன்
சஞ்சலங்கள் இனிவேண்டாசரத தெய்வம்
ஈரமிலா நெஞ்சுடையார் சிவனை காணார்
எப்போதும் அருளைமன திசைத்து கொள்வாய்
வீரமிலா நெஞ்சுடையார் சிவனை காணார்
எப்போதும் வீரமிக்க வினைகள் செய்வாய்
பேருயர்ந்த ஏஹோவா அல்லா நாமம்
பேணுமவர் பதமலரும் பேணல் வேண்டும்
பூமியிலேகண்டம் ஐந்துமதங்கள் கோடி
புத்த மதம்சமண மதம்பார்ஸி மார்க்கம்
சாமியென யேசுபதம் போற்றும் மார்க்கம்
சநாதனமாம் ஹிந்து மதம்இஸ்லாம்யூதம்
நாமமுயர் சீனத்து தாவுமர்க்கம்
நல்ல கண் பூசிமதம் முதலா பார்மேல்
யாமறிந்த மதங்கள் பல உளவாம் அன்றே
யாவினுக்கும் உட்புதைந்த கருத்திங் கொன்றே
பூமியிலே வழங்கிவரும் மதத்து கெல்லாம்
பொருளினைநாம் இங்கெடுத்து புகல கேளாய்
சாமி நீசாமி நீகடவுள் நீயே
தத்வமஸிதத்வமஸிநீயே அஃதாம்
பூமியிலே நீகடவு ளில்லை யென்று
புகல்வதுநின் மனத்துள்ளே புகுந்த மாயை
சாமிநீ அம் மாயை தன்னை நீக்கி
சதாகாலம் சிவோஹமென்று சாதி பாயே





சிசுப்ரமணிய பாரதியார் பாடல்கள்
கண்ணன் பாட்டு குயில்
























சிசுப்ரமணிய பாரதியார் பாடல்கள் பாகம்
கண்ணன் பாட்டு
கண்ணன் என் தோழன்

புன்னாகவராளி திஸ்ரஜாதி ஏகதாளம்
வத்ஸல ரசம்
பொன்னவிர் மேனி சுபத்திரை மாதை
புறங்கொண்டு போவ தற்கே இனி
என்ன வழியென்று கேட்கில் உபாயம்
இருகண தேயுரை பான் அந்த
கன்னன் வில்லாளர் தலைவனை கொன்றிட
காணும் வழியொன் றில்லேன் வந்திங்கு
உன்னை யடைந்தேன் என்னில் உபாயம்
ஒருகண தேயுரை பான்
கானகத்தே சுற்று நாளிலும் நெஞ்சிற்
கலக்க மிலாதுசெய் வான் பெருஞ்
சேனை தலைநின்று போர்செய்யும் போதினில்
தேர்நட திக்கொடு பான் என்றன்
ஊனை வருத்திடு நோய்வரும் போதினில்
உற்ற மருந்துசொல் வான் நெஞ்சம்
ஈன கவலைக ளெய்திடும் போதில்
இதஞ்சொல்லி மாற்றிடு வான்
பிழைக்கும் வழிசொல்ல வேண்டுமென் றாலொரு
பேச்சினி லேசொல்லுவான்
உழைக்கும் வழிவினை யாளும் வழிபயன்
உண்ணும் வழியுரை பான்
அழைக்கும் பொழுதினிற் போக்கு சொல்லாமல்
அரைநொடி குள்வருவான்
மழைக்கு குடை பசிநேர துணவென்றன்
வாழ்வினு கெங்கள்கண் ணன்
கேட்டபொழுதில் பொருள் கொடுப்பான் சொல்லுங்
கேலி பொறுத்திடு வான் எனை
ஆட்டங்கள் காட்டியும் பாட்டுக்கள் பாடியும்
ஆறுதல் செய்திடுவான் என்றன்
நாட்டத்திற் கொண்ட குறிப்பினை இஃதென்று
நான்சொல்லும் முன்னுணர் வான் அன்பர்
கூட்டத்தி லேயிந்த கண்ணனை போலன்பு
கொண்டவர் வேறுள ரோ
உள்ளத்தி லேகரு வங்கொண்ட போதினில்
ஓங்கி யடி திடுவான் நெஞ்சில்
கள்ளத்தை கொண்டொரு வார்த்தைசொன் னாலங்கு
காறி யுமிழ்ந்திடு வான் சிறு
பள்ளத்தி லேநெடு நாளழு குங்கெட்ட
பாசியை யெற்றி விடும் பெரு
வெள்ளத்தை போலருள் வார்த்தைகள் சொல்லி
மெலிவு தவிர்த்திடு வான்
சின்ன குழந்தைகள் போல்விளை யாடி
சிரித்து களித்திடு வான் நல்ல
வன்ன மகளிர் வசப்பட வேபல
மாயங்கள் சூழ்ந்திடு வான் அவன்
சொன்ன படிநட வாவிடி லோமிக
தொல்லை யிழைத்திடு வான் கண்ணன்
தன்னை யிழந்து விடில் ஐயகோ பின்
சகத்தினில் வாழ்வதி லேன்
கோபத்தி லேயொரு சொல்லிற் சிரித்து
குலுங்கிட செய்திடு வான் மனஸ்
தாபத்திலே யொன்று செய்து மகிழ்ச்சி
தளிர்த்திட செய்திடுவான் பெரும்
ஆபத்தி னில்வந்து பக்கத்தி லேநின்று
அதனை விலக்கிடு வான் சுடர
தீபத்தி லேவிடும் பூச்சிகள் போல்வரு
தீமைகள் கொன்றிடு வான்
உண்மை தவறி நடப்பவர் தம்மை
உதைத்து நசுக்கிடுவான் அருள்
வண்மையி னாலவன் மாத்திரம் பொய்கள்
மலைமலை யாவுரை பான் நல்ல
பெண்மை குணமுடை யான் சில நேரத்தில்
பித்தர் குணமுடை யான் மிக
தண்மை குணமுடை யான் சில நேரம்
தழலின் குணமுடை யான்
கொல்லுங் கொலைக்கஞ்சி டாத மறவர்
குணமிக தானுடை யான் கண்ணன்
சொல்லு மொழிகள் குழந்தைகள் போலொரு
சூதறி யாதுசொல் வான் என்றும்
நல்லவ ருக்கொரு தீங்கு நண்ணாது
நயமுற காத்திடு வான் கண்ணன்
அல்லவ ருக்கு விடத்தினில் நோயில்
அழலினி லுங்கொடி யான்
காதல் விளைய மயக்கிடும் பாட்டினில்
கண்மகிழ் சித்திர தில் பகை
மோதும் படைத்தொழில் யாவினு மேதிறம்
முற்றிய பண்டிதன் காண் உயர்
வேத முணர்ந்த முனிவ ருணர்வினில்
மேவு பரம்பொருள் காண் நல்ல
கீதை யுரைத்தெனை இன்புற செய்தவன்
கீர்த்திகள் வாழ்த்திடு வேன்

கண்ணன் என் தாய்

நொண்டி சிந்து
உண்ண உண்ண தெவிட்டாதே அம்மை
உயிரெனும் முலையினில் உயர்வெனும் பால்
வண்ணமுற வைத்தென கே என்றன்
வாயினிற்கொண் டூட்டுமோர் வண்மையுடையாள்
கண்ணனெனும் பெயருடையாள் என்னை
கட்டிநிறை வான் எனுந்தன் கையி லணைத்து
மண்ணெனுந்தன் மடியில்வைத்தே பல
மாயமுறுங் கதைசொல்லி மனங்களி பாள்
இன்பமென சிலகதைகள் என
கேற்றமென்றும் வெற்றி யென்றும் சில கதைகள்
துன்பமென சில கதைகள் கெட்ட
தோல்வியென்றும் வீழ்ச்சியென்றும் சில கதைகள்
என்பருவம் என்றன் விருப்பம் எனும்
இவற்றினு கிணங்கவென் னுளமறிந்தே
அன்பொடவள் சொல்லிவரு வாள் அதில்
அற்புதமுண் டாய்ப்பர வசமடைவேன்
விந்தைவிந்தை யாக எனக்கே பல
விதவி தோற்றங்கள் காட்டுவி பாள்
சந்திரனென் றொரு பொம்மை அதில்
தண்ணமுதம் போலஒளி பரந்தொழுகும்
மந்தை மந்தையா மேகம் பல
வண்ணமுறும் பொம்மையது மழைபொழியும்
முந்தஒரு சூரியனுண்டு அதன்
முக தொளி கூறுதற்கொர் மொழியிலை யே
வானத்து மீன்க ளுண்டு சிறு
மணிகளை போல்மின்னி நிறைந்திருக்கும்
நானத்தை கணக்கிடவே மனம்
நாடிமிக முயல்கினும் கூடுவதில்லை
கானத்து மலைக ளுண்டு எந்த
காலமுமொ ரிடம்விட்டு நகர்வதில்லை
மோனத்தி லேயிருக்கும் ஒரு
மொழியுலை யாதுவிளை யாடவருங் காண்
நல்லநல்ல நதிகளுண்டு அவை
நாடெங்கும் ஓடிவிளை யாடி வருங்காண்
மெல்ல மெல்ல போயவை தாம் விழும்
விரிகடற் பொம்மையது மிக பெரிதாம்
எல்லையதிற் காணுவ தில்லை அலை
எற்றிநுரை கக்கியொரு பாட்டிசைக்கும்
ஒல்லெனு பாட்டினிலே அம்மை
ஓமெனும் பெயரென்றும் ஒலித்திடுங் காண்
சோலைகள் காவினங் கள் அங்கு
சூழ்தரும் பலநிற மணிமலர் கள்
சாலவும் இனியன வாய் அங்கு
தருக்களில் தூங்கிடும் கனிவகை கள்
ஞாலமுற்றிலும் நிறை தே மிக
நயந்தரு பொம்மைகள் எனக்கென வே
கோலமுஞ் சுவையு முற அவள்
கோடிபல கோடிகள் குவித்துவை தாள்
தின்றிட பண்டங்களும் செவி
தெவிட்டற கேட்கநற் பாட்டுக்க ளும்
ஒன்றுற பழகுதற் கே அறி
வுடையமெ தோழரும் அவள்கொடு தாள்
கொன்றிடு மெனஇனி தாய் இன்ப
கொடுநெரு பாய் அனற் சுவையமு தாய்
நன்றியல் காதலு கே இந்த
நாரியர் தமையெனை சூழவை தாள்
இறகுடை பறவைக ளும் நில
திரிந்திடும் விலங்குகள் ஊர்வனங்கள்
அறைகடல் நிறைந்திட வே எண்ணில்
அமைத்திடற் கரியபல் வகைப்பட வே
சுறவுகள் மீன்வகை கள் என
தோழர்கள் பலருமிங் கெனக்களி தாள்
நிறைவுற இன்பம்வை தாள் அதை
நினைக்கவும் முழுதிலுங் கூடுதில்லை
சாத்திரம் கோடி வைத்தாள் அவை
தம்மினும் உயர்ந்தோர் ஞானம் வைத்தாள்
மீத்திடும் பொழுதினி லே நான்
வேடிக்கை யுறக்கண்டு நகைப்பதற் கே
கோத்தபொய் வேதங்களும் மத
கொலைகளும் அரசர்தம் கூத்துக்க ளும்
மூத்தவர் பொய்ந்நடை யும் இள
மூடர்தம் கவலையும் அவள்புனை தாள்
வேண்டிய கொடுத்திடு வாள் அவை
விரும்புமுன் கொடுத்திட விரைந்திடு வாள்
ஆண்டருள் புரிந்திடு வாள் அண்ணன்
அருச்சுனன் போலெனை ஆக்கிடு வாள்
யாண்டுமெ காலத்தி னும் அவள்
இன்னருள் பாடுநற் றெழில்புரி வேன்
நீண்டதொர் புகழ்வாழ் வும் பிற
நிகரறு பெருமையும் அவள் கொடுப்பாள்

கண்ணன் என் தந்தை

நொண்டி சிந்து
ப்ரதான ரஸம் அற்புதம்
பூமி கெனைய னுப்பி னான் அந்த
புதுமண்ட லத்திலென் தம்பிக ளுண்டு
நேமித்த நெறிப்படி யே இந்த
நெடுவெளி யெங்கணும் நித்தம் உருண்டே
போமி தரைகளி லெல்லாம் மனம்
போலவிரு தாளுபவர் எங்க ளினத்தார்
சாமி இவற்றினு கெல்லாம் எங்க
தந்தையவன் சரிதைகள் சிறி துரைப்பேன்
செல்வத்திற்கோர் குறையில்லை எந்தை
சேமித்து வைத்த பொன்னு களவொன் றில்லை
கல்வியில் மிக சிறந்தோன் அவன்
கவிதையின் இனிமையொர் கணக்கி லில்லை
பல்வகை மாண்பி னிடையே கொஞ்சம்
பயித்தியம் அடிக்கடி தோன்றுவ துண்டு
நல்வழி செல்லு பவரை மனம்
நையும்வரை சோதனைசெய் நடத்தை யுண்டு
நாவு துணிகுவ தில்லை உண்மை
நாமத்தை வெளிப்பட உரைப்பதற்கே
யாவரு தெரிந்திடவே எங்கள்
ஈசனென்றும் கண்ணனென்றும் சொல்லுவதுண்டு
மூவகை பெயர் புனைந்தே அவன்
முகமறி யாதவர் சண்டைகள் செய்வார்
தேவர் குலத்தவன் என்றே அவன்
செய்திதெரி யாதவர் சிலருரைப்பார்
பிறந்தது மற குலத்தில் அவன்
பேதமற வளர்ந்ததும் இடைக்குலத்தில்
சிறந்தது பார்ப்பன ருள்ளே சில
செட்டிமக்க ளோடுமிக பழக்க முண்டு
நிறந்தனிற் கருமை கொண்டான் அவன்
நேயமுற களிப்பது பொன்னிற பெண்கள்
துறந்த நடைக ளுடையான் உங்கள்
சூனியப்பொ சாத்திரங்கள் கண்டு நகைப்பான்
ஏழைகளை தோழமை கொள்வான் செல்வம்
ஏறியார் தமைக்கண்டு சீறி விழுவான்
தாழவரு துன்ப மதிலும் நெஞ்ச
தளர்ச்சிகொள் ளாதவார்க்கு செல்வ மளிப்பான்
நாழிகைக்கொர் புத்தி யுடையான் ஒரு
நாளிருந்த படிமற்றொர் நாளினி லில்லை
பாழிடத்தை நாடி யிருப்பான் பல
பாட்டினிலும் கதையிலும் நேரமழி பான்
இன்பத்தை இனிதெனவும் துன்பம்
இனிதில்லை யென்றுமவன் எண்ணுவ தில்லை
அன்பு மிகவு முடையான் தெளி
தறிவினில் உயிர்க்குலம் ஏற்ற முறவே
வன்புகள் பல புரிவான் ஒரு
மந்திரியுண் டெந்தைக்கு விதியென்பவன்
முன்பு விதித்த தனையே பின்பு
முறைப்படி அறிந்துண்ண மூட்டி விடுவான்
வேதங்கள் கோத்து வைத்தான் அந்த
வேதங்கள் மனிதர்தம் மொழியி லில்லை
வேதங்க ளென்று புவியோர் சொல்லும்
வெறுங்கதை திரளிலவ் வேதமில்லை
வேதங்க ளென்றவற் றுள்ளே அவன்
வேதத்திற் சிலசில கலந்ததுண்டு
வேதங்க ளன்றி யொன்றில்லை இந்த
மேதினி மாந்தர் சொலும் வார்த்தைக ளெல்லாம்
நாலு குலங்கள் அமைத்தான் அதை
நாசமுற புரிந்தனர் மூடமனிதர்
சீலம் அறிவு கருமம் இவை
சிறந்தவர் குலத்தினில் சிறந்தவராம்
மேலவர் கீழவ ரென்றே வெறும்
வேடத்திற் பிறப்பினில் விதிப்பன வாம்
போலி சுவடியை யெல்லாம் இன்று
பொசுக்கிவிட்டாலெவர்க்கும் நன்மையுண்டென்பான்
வயது முதிர்ந்து விடினும் எந்தை
வாலிப களையென்றும் மாறுவதில்லை
துயரில்லை மூப்பு மில்லை என்றும்
சோர்வில்லை நோயொன்றும் தொடுவ தில்லை
பயமில்லை பரிவொன்றில்லை எவர்
பக்கமும்நின் றெதிர்ப்பக்கம் வாட்டுவ தில்லை
நயமிக தெரிந்தவன் காண் தனி
நடுநின்று விதிச்செயல் கண்டு மகிழ்வான்
துன்பத்தில் நொந்து வருவோர் தம்மை
தூவென் றிகழ்ந்து சொல்லி வன்பு கனிவான்
அன்பினை கைக்கொள் என்பான் துன்பம்
அத்தனையும் அப்பொழுது தீர்ந்திடும் என்பான்
என்புடை பட்ட பொழுதும் நெஞ்சில்
ஏக்கமுற பொறுப்பவர் தம்மை உகப்பான்
இன்பத்தை எண்ணு பவர்க்கே என்றும்
இன்பமிக தருவதில் இன்ப முடையான்

கண்ணன் என் சேவகன்

கூலிமி கேட்பார் கொடுத்ததெலாம் தாம் மறப்பார்
வேலைமிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார்
ஏனடா நீ நேற்றை கிங்குவர வில்லை யென்றால்
பானையிலே தேளிருந்து பல்லால் கடித்த தென்பார்
வீட்டிலே பெண்டாட்டி மேற்பூதம் வந்ததென்பார்
பாட்டியார் செத்துவிட்ட பன்னிரண்டாம் நாளென்பார்
ஓயாமல் பொய்யுரைப்பார் ஒன்றுரைக்க வேறுசெய்வார்
தாயாதி யோடு தனியிடத்தே பேசிடுவார்
உள்வீட்டு செய்தியெல்லாம் ஊரம் பலத்துரைப்பார்
என்வீட்டில் இல்லையென்றால் எங்கும் முரசறைவார்
சேவகரால் பட்ட சிரமமிக உண்டு கண்டீர்
சேவகரில் லாவிடிலோ செய்கை நடக்கவில்லை
இங்கிதனால் யானும் இடர்மிகுந்து வாடுகையில்
எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
மாடுகன்று மேய்த்திடுவேன் மக்களை நான் காத்திடுவேன்
வீடு பெருக்கி விளக்கேற்றி வைத்திடுவேன்
சொன்னபடி கேட்பேன் துணிமணிகள் காத்திடுவேன்
சின்ன குழந்தைக்கு சிங்கார பாட்டிசைத்தே
ஆட்டங்கள் காட்டி அழாதபடி பார்த்திடுவேன்
காட்டுவழி யானாலும் கள்ளர்பய மானாலும்
இரவிற் பகலிலே எந்நேர மானாலும்
சிரமத்தை பார்ப்பதில்லை தேவரீர் தம்முடனே
சுற்றுவேன் தங்களுக்கோர் துன்பமுறா மற்காப்போன்
கற்ற வித்தை யேதுமில்லை காட்டு மனிதன் ஐயே
ஆன பொழுதுங் கோலடி குத்துப்போர் மற்போர்
நானறிவேன் சற்றும் நயவஞ் சனைபுரியேன்
என்றுபல சொல்லி நின்றான் ஏது பெயர் சொல் என்றேன்
ஒன்றுமில்லை கண்ணனென்பார் ஊரிலுள்ளோர் என்னை என்றான்
கட்டுறுதி யுள்ளவுடல் கண்ணிலே நல்லகுணம்
ஒட்டுறவே நன்றா உரைத்திடுஞ்சொல் ஈங்கிவற்றால்
தக்கவனென் றுள்ளத்தே சார்ந்த மகிழ்ச்சியுடன்
மிக்கவுரை பலசொல்லி விருதுபல சாற்றுகிறாய்
கூலியென்ன கேட்கின்றாய் கூறு கென்றேன் ஐயனே
தாலிகட்டும் பெண்டாட்டி சந்ததிக ளேதுமில்லை
நானோர் தனியாள் நரைதிரை தோன்றா விடினும்
ஆன வயதிற் களவில்லை தேவரீர்
ஆதரித்தாற் போதும் அடியேனை நெஞ்சிலுள்ள
காதல் பெரிதெனக்கு காசுபெரி தில்லை யென்றான்
பண்டை காலத்து பயித்தியத்தில் ஒன்றெனவே
கண்டு மிகவும் களிப்புடனே நானவனை
ஆளா கொண்டு விட்டேன் அன்று முதற்கொண்டு
நாளாக நம்மிடத்தே
பற்று மிகுந்துவரல் பார்க்கின்றேன் கண்ணனால்
பெற்றுவரும் நன்மையெல்லாம் பேசி முடியாது
கண்ணை இமையிரண்டும் காப்பதுபோல் என் குடும்பம்
வண்ணமுற காக்கின்றான் வாய்முணுத்தல் கண்டிறியேன்
வீதி பெருக்குகிறான் வீடு சுத்த மாக்குகிறான்
தாதியர்செய் குற்றமெல்லாம் தட்டி யடக்குகிறான்
மக்களுக்கு வாத்தி வளர்ப்புத்தாய் வைத்தியனாய்
ஒக்கநயங் காட்டுகிறான் ஒன்றுங் குறைவின்றி
பண்டமெலாம் சேர்த்துவைத்து பால்வாங்கி மோர் வாங்கி
பெண்டுகளை தாய்போற் பிரியமுற ஆதரித்து
நண்பனாய் மந்திரியாய் நல்ல சிரியனுமாய்
பண்பிலே தெய்வமா பார்வையிலே சேவகனாய்
எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதியென்று சொன்னான்
இங்கிவனை யான் பெறவே என்னதவஞ் செய்து விட்டேன்
கண்ணன் என தகத்தே கால்வைத்த நாள்முதலாய்
எண்ணம் விசாரம் எதுவுமவன் பொறுப்பா
செல்வம் இளமாண்பு சீர் சிறப்பு நற்கீர்த்தி
கல்வி அறிவு கவிதை சிவ யோகம்
தெளிவே வடிவாம் சிவஞானம் என்றும்
ஒளிசேர் நலமனைத்தும் ஓங்கிவரு கின்றன காண்
கண்ணனைநான் ஆட்கொண்டேன் கண்கொண்டேன் கண்கொ ண்டேன்
கண்ணனை யாட்கொள்ள காரணமும் உள்ளனவே

கண்ணன் என் அரசன்

பகைமை முற்றி முதிர்ந்திடு மட்டிலும்
பார்த்திருப்ப தல்லா லொன்றுஞ் செய்திடான்
நகைபுரிந்து பொறுத்து பொறுத்தையோ
நாட்கள் மாதங்கள் ஆண்டுகள் போக்குவான்
கண்ணன் வென்று பகைமை யழிந்துநாம்
கண்ணிற் காண்ப தரிதென தோன்றுமே
எண்ணமி டெண்ண மிட்டு சலித்துநாம்
இழந்த நாட்கள் யுகமென போகுமே
படைகள் சேர்த்தல் பரிசனம் சேர்த்திடல்
பணமுண் டாக்கல் எதுவும் புரிந்திடான்
இடையன் வீரமி லாதவன் அஞ்சினோன்
என்றவர் சொல்லும் ஏச்சிற்கு நாணிலான்
கொல்ல பூத மனுப்பிடு மாமனே
கோலு யர்த்துல காண்டு களித்திட
முல்லை மென்னகை மாதர்க்கும் பாட்டிற்கும்
மோக முற்று பொழுதுகள் போக்குவான்
வான நீர்க்கு வருந்தும் பயிரென
மாந்தர் மற்றிவண் போர்க்கு தவிக்கவும்
தானம் கீர்த்தனை தாளங்கள் கூத்துக்கள்
தனிமை வேய்ங்குழல் என்றிவை போற்றுவான்
காலினை கையினால் பற்றிக்கொண்டு நாம்
கதியெ கொன்று காட்டுவை யென்றிட்டால்
நாலி லொன்று பலித்திடுங் காணென்பான்
நா சொல்லின் பொருளெங் குணர்வதே
நாம வன்வலி நம்பியி ருக்கவும்
நாண மின்றி பதுங்கி வளருவான்
தீமை தன்னை விலக்கவுஞ் செய்குவான்
சிறுமை கொண்டொழி தோடவுஞ் செய்குவான்
தந்தி ரங்கள் பயிலவுஞ் செய்குவான்
சவுரி யங்கள் பழகவுஞ் செய்குவான்
மந்தி ரத்திற னும்பல காட்டுவான்
வலிமை யின்றி சிறுமையில் வாழ்வான்
காலம் வந்துகை கூடு போதிலோர்
கணத்தி லேடதி தாக விளங்குவான்
ஆல கால விடத்தினை போலவே
அகில முற்றும் அசைந்திட சீறுவான்
வேரும் வேரடி மண்ணு மிலாமலே
வெந்து போக பகைமை பொசுக்குவான்
பாரும் வானமும் ஆயிர மாண்டுகள்
பட்ட துன்பங்கள் கணத்திடை மாற்றுவான்
சக்கரத்தை யெடுப்ப தொருகணம்
தருமம் பாரில் தழைத்தல் மறுகணம்
இக்க ணத்தில் இடைக்கண மொன்றுண்டோ
இதனுள் ளேபகை மாய்த்திட வல்லன்காண்
கண்ண னெங்கள் அரசன் புகழினை
கவிதை கொண்டெந்த காலமும் போற்றுவேன்
திண்ணை வாயில் பெருக்கவ தேனெனை
தேசம் போற்றத்தன் மந்திரி யாக்கினான்
நித்த சோற்றினு கேவல் செயவந்தேன்
நிகரி லாப்பெருஞ் செல்வம் உதவினான்
வித்தை நன்குகல் லாதவன் என்னுள்ளே
வேத நுட்பம் விளங்கிட செய்திட்டான்
கண்ண னெம்பெரு மானருள் வாழ்கவே
கலிய ழிந்து புவித்தலம் வாழ்கவே
அண்ண லின்னருள் வாடி நாடுதான்
அவலம் நீங்கி புகழில் உயர்கவே

கண்ணன் என் சீடன்

ஆசிரியப்பா
யானே யாகி என்னலாற் பிறவாய்
யானும் அவையுமாய் இரண்டினும் வேறாய்
யாதோ பொருளாம் மா கண்ணன்
என்னிலும் அறிவினிற் குறைந்தவன் போலவும்
என்னை துணைக்கொண்டு என்னுடை முயற்சியால்
என்னடை பழகலால் என்மொழி கேட்டலால்
மேம்பா டெய்த வேண்டினோன் போலவும்
யான்சொலுங் கவிதை என்மதி யளவை
இவற்றினை பெருமை யிலங்கின வென்று
கருதுவான் போலவும் கண்ண கள்வன்
சீடனா வந்தெனை சேர்ந்தனன் தெய்வமே
பேதையேன் அவ்வலை பின்னலில் வீழ்ந்து
பட்டன தொல்லை பலபெரும் பாரதம்
உளத்தினை வென்றிடேன் உலகினை வெல்லவும்
தானகஞ் சுடாதேன் பிறர்தமை தானெனும்
சிறுமையி னகற்றி சிவத்திலே நிறுத்தவும்
தன்னுள்ளே தெளிவும் சலிப்பிலா மகிழ்ச்சியும்
உற்றிடேன் இந்த சகத்திலே யுள்ள
மாந்தர குற்ற துயரெலாம் மாற்றி
இன்ப திருத்தவும் எண்ணிய பிழைக்கெனை
தண்டனை புரிந்திட தானுளங் கொண்டு
மா கண்ணன் வலிந்தெனை சார்ந்து
புகழ்ச்சிகள் கூறியும் புலமையை வியந்தும்
பல்வகை யால்அக பற்றுற செய்தான்
வெறும்வாய் மெல்லுங் கிழவி கிஃதோர்
அவலாய்மூண்டது யானுமங் கவனை
உயர்நிலை படுத்தலில் ஊக்கமி கவனாய்
இன்னது செய்திடேல் இவரோடு பழகேல்
இவ்வகை மொழிந்திடேல் இனையன விரும்பேல்
இன்னது கற்றிடேல் இன்னநூல் கற்பாய்
இன்னவ ருறவுகொள் இன்னவை விரும்புவாய்
எனப்பல தருமம் எடுத்தெடு தோதி
ஓய்விலா தவனோ டுயிர்விட லானேன்
கதையிலே கணவன் சொல்லினு கெல்லாம்
எதிர்செயும் மனைவிபோல் இவனும்நான் காட்டும்
நெறியின கெல்லாம் நேரெதிர் நெறியே
நடப்பா னாயினன் நானில தவர்தம்
மதிப்பையும் புகழுறு வாழ்வையும் புகழையும்
தெய்வமா கொண்ட சிறுமதி யுடையேன்
கண்ணனாஞ் சீடன் யான் காட்டிய வழியெலாம்
விலகியே நடக்கும் விநோதமிங் கன்றியும்
உலகினர் வெறுப்புறும் ஒழுக்க தனையும்
தலையா கொண்டு சார்பெலாம் பழிச்சொலும்
இகழுமி கவனாய் என்மனம் வருந்த
நடந்திடல் கண்டேன் நாட்பட நாட்பட
கண்ணனும் தனது கழிபடு நடையில்
மிஞ்சுவா னாகி வீதியிற் பெரியோர்
கிழவிய ரெல்லாம் கிறுக்கனென் றிவனை
இகழ்ச்சியோ டிரக்கமுற் றேளனம் புரியும்
நிலையும் வந்திட்டான் நெஞ்சிலே யெனக்கு
தோன்றிய வருத்தஞ் சொல்லிட படாது
முத்தனா கிடநான் முயன்றதோர் இளைஞன்
பித்தனென் றுலகினர் பேசிய பேச்சென்
நெஞ்சினை அறுத்தது நீதிகள் பலவும்
தந்திரம் பலவும் சாத்திரம்
சொல்லிநான் கண்ணனை தொளைத்திட லாயினேன்
தேவ நிலையிலே சேர்த்திடா விடினும்
மானுட தவறி மடிவுறா வண்ணம்
கண்ணனை நானும் காத்திட விரும்பி
தீயென கொதித்து சினமொழி யுரைத்தும்
சிரித்துரை கூறியும் செள்ளென விழுந்தும்
கேலிகள் பேசி கிளறியும் இன்னும்
எத்தனை வகையிலோ என்வழி கவனை
கொணர்ந்திட முயன்றேன் கொள்பய னொன்றிலை
கண்ணன் பித்தனா காட்டா ளாகி
எவ்வகை தொழிலிலும் எண்ணமற் றவனாய்
எவ்வகை பயனிலுங் கருத்திழ தவனாய்
குரங்கா கரடியா கொம்புடை பிசாசாய்
யாதோ பொருளாய் எங்ஙனோ நின்றான்
இதனால்
அகந்தையும் மமதையும் ஆயிரம் புண்ணுற
யான்கடுஞ் சினமுற்று எவ்வகை யானும்
கண்ணனை நேருற கண்டே தீர்ப்பேன்
எனப்பெரு தாபம் எய்தினே னாகி
எவ்வா றேனும் இவனையோர் தொழிலில்
ஓரிட தன்னில் ஒருவழி வலிய
நிறுத்துவோ மாயின் நேருற் றிடுவான்
என்றுள தெண்ணி இசைந்திடு ஞ் சமயங்
காத்திரு திட்டேன் ஒருநாள் கண்ணனை
தனியே எனது வீட்டினிற் கொண்டு
மகனே என்பால் வரம்பிலா நேசமும்
அன்பும்நீ யுடையை அதனையான் நம்பி
நின்னிட மொன்று கேட்பேன் நீயது
செய்திடல் வேண்டும் சேர்க்கையின் படியே
மாந்தர்தஞ் செயலெலாம் வகுப்புறல் கண்டாய்
சாத்திர நாட்டமும் தருக்கமும் கவிதையில்
மெய்ப்பொரு ளாய்வதில் மிஞ்சிய விழைவும்
கொண்டோ ர் தமையே அருகினிற் கொண்டு
பொருளினு கலையும் நேரம் போக
மிஞ்சிய பொழுதெலாம் அவருடன் மேவி
இருந்திட லாகுமேல் எனக்குநன் றுண்டாம்
பொழுதெலாம் என்னுடன் போக்கிட விரும்பும்
அறிவுடை மகனிங் குனையலால் அறிந்திடேன்
ஆதலால்
என்பயன் கருதி எனக்கொரு துணையாய்
என்னுடன் சிலநாள் இருந்திட நின்னை
வேண்டி நிற்கின்றேன் வேண்டுதல் மறுத்தே
என்னைநீ துன்பம் எய்துவி திடாமே
இவ்வுரை கிணங்குவாய் என்றேன் கண்ணனும்
அங்ஙனே புரிவேன் ஆயின் நின் னிடத்தே
தொழிலிலாது யாங்ஙனம் சோம்பரில் இருப்பது
காரிய மொன்று காட்டுவை யாயின்
இருப்பேன் என்றான் இவனுடைய இயல்பையும்
திறனையுங் கருதி என் செய்யுளை யெல்லாம்
நல்லதோர் பிரதியில் நாடொறும் எழுதி
கொடுத்திடு தொழிலினை கொள்ளுதி என்றேன்
நன்றென கூறியோர் நாழிகை யிருந்தான்
செல்வேன் என்றான் சினத்தொடு நானும்
பழங்கதை யெழுதிய பகுதியொன் றினையவன்
கையினிற் கொடுத்து கவினுற இதனை
எழுதுக என்றேன் இணங்குவான் போன்றதை
கையிலே கொண்டு கணப்பொழு திருந்தான்
செல்வேன் என்றான் சினந்தீ யாகிநான்
ஏதடா சொன்ன சொல் அழித்துரை கின்றாய்
பித்தனென் றுன்னை உலகினர் சொல்வது
பிழையிலை போலும் என்றேன் அதற்கு
நாளவ திவ்வினை நடத்துவேன் என்றான்
இத்தொழி லிங்கே இப்பொழு தெடுத்து
செய்கின் றனையா செய்குவ தில்லையா
ஓருரை சொல் என்றுமினேன் கண்ணனும்
இல்லை யென் றொருசொல் இமைக்கு முன் கூறினான்
வெடுக்கென சினத்தீ வெள்ளமா பாய்ந்திட
கண்விச திதழ்கள் துடித்திட கனன்றுநான்
சீச்சி பேயே சிறிதுபோழ் தேனும்
இனியென் முகத்தின் எதிர்நின் றிடாதே
என்றுமிவ் வுலகில் என்னிட தினிநீ
போந்திடல் வேண்டா போ
இடியுற சொன்னேன் கண்ணனும் எழுந்து
செல்குவ னாயினன் விழிநீர் சேர்ந்திட
மகனே போகுதி வாழ்கநீ நின்னை
தேவர் காத்திடுக நின்தனை செம்மை
செய்திட கருதி ஏதேதோ செய்தேன்
தோற்றுவிட்டேனடா சூழ்ச்சிகள் அறிந்தேன்
மறித்தினி வாராய் செல்லுதி வாழி நீ
எனத்துயர் நீங்கி அமைதியோ டிசைத்தேன்
சென்றனன் கண்ணன் திரும்பியோர் கணத்தே
எங்கிரு தோநல் லெழுதுகோல் கொணர்ந்தான்
காட்டிய பகுதியை கவினுற வரைந்தான்
ஐயனே நின்வழி யனைத்தையுங் கொள்ளுவேன்
தொழில்பல புரிவேன் துன்பமிங் கென்றும்
இனிநின கென்னால் எய்திடா தெனப்பல
நல்லசொல் லுரைத்து நகைத்தனன் மறைந்தான்
மறைந்ததோர் கண்ணன் மறுகண தென்றன்
நெஞ்சிலே தோன்றி நிகழ்த்துவா னாயினன்
மகனே ஒன்றை யாக்குதல் மாற்றுதல்
அழித்திட லெல்லாம் நின்செய லன்றுகாண்
தோற்றேன் எனநீ உரைத்திடும் பொழுதிலே
வென்றாய் உலகினில் வேண்டிய தொழிலெல்லாம்
ஆசையு தாபமும் அகற்றியே புரிந்து
வாழ்க நீ என்றான் வாழ்கமற் றவனே

கண்ணன் எனது சற்குரு

புன்னாகவராளி திஸ்ர ஜாதி ஏகதாளம்
ரசங்கள் அற்புதம் பக்தி
சாத்திரங் கள்பல தேடினேன் அங்கு
சங்கையில் லாதன சங்கையாம் பழங்
கோத்திரங்கள் சொல்லு மூடர்தம் பொய்மை
கூடையில் உண்மை கிடைக்குமோ நெஞ்சில்
மாத்திரம் எந்த வகையிலும் சக
மாயம் உணர்ந்திடல் வேண்டுமே என்னும்
ஆத்திரம்நின்ற திதனிடை நித்தம்
ஆயிர தொல்லைகள் சூழ்ந்தன
நாடு முழுதிலுஞ் சுற்றிநான் பல
நாட்கள் அலைந்திடும் போதினில் நிறை
தோடும் யமுனை கரையிலே தடி
ஊன்றி சென்றாரோர் கிழவனார் ஒளி
கூடு முகமும் தெளிவுதான் குடி
கொண்ட விழியும் சடைகளும் வெள்ளை
தாடியும் கண்டு வணங்கியே பல
சங்கதி பேசி வருகையில்
என்னுள தாசை யறிந்தவர் மிக
இன்புற் றுரைத்திட லாயினர் தம்பி
நின்னுள திற்கு தகுந்தவன் சுடர்
நித்திய மோன திருப்பவன் உயர்
மன்னர் குலத்தில் பிறந்தவன் வட
மாமது ரைப்பதி யாள்கின்றான் கண்ணன்
தன்னை சரணென்று போவையில் அவன்
சத்தியங் கூறுவன் என்றனர்
மாமது ரைப்பதி சென்றுநான் அங்கு
வாழ்கின்ற கண்ணனை போற்றியே என்தன்
நாமமும் ஊரும் கருத்துமே சொல்லி
நன்மை தருகென வேண்டினன் அவன்
காமனை போன்ற வடிவமும் இளங்
காளையர் நட்பும் பழக்கமும் கெட்ட
பூமியை காக்கு தொழிலிலே எந்த
போதுஞ் செலுத்திடுஞ் சிந்தையும்
ஆடலும் பாடலும் கண்டுநான் முன்னர்
ஆற்றங் கரையினில் கண்டதோர் முனி
வேட தரித்த கிழவரை கொல்ல
வேண்டுமென் றுள்ளத்தில் எண்ணினேன் சிறு
நாடு புரந்திடு மன்னவன் கண்ணன்
நாளுங் கவலையில் மூழ்கினோன் தவ
பாடுப டோ ர்க்கும் விளங்கிடா உண்மை
பார்த்திவன் எங்ஙனம் கூறுவான்
என்று கருதி யிருந்திட்டேன் பின்னர்
என்னை தனியிடங் கொண்டுபோய் நினை
நன்று மருவூக மைந்தனே பர
ஞான முரைத்திட கேட்பைநீ நெஞ்சில்
ஒன்றுங் கவலையில் லாமலே சிந்தை
ஊன்ற நிறுத்தி களிப்புற்றே தன்னை
வென்று மறந்திடும் போழ்தினில் அங்கு
விண்ணை யளக்கும் அறிவுதான்
சந்திரன் சோதி யுடையதாம் அது
சத்திய நித்திய வஸ்துவாம் அதை
சிந்திக்கும் போதினில் வந்துதான் நினை
சேர்ந்து தழுவி அருள்செயும் அதன்
மந்திர தாலிவ் வுலகெலாம் வந்த
மா களிப்பொருங் கூத்துக்காண் இதை
சந்ததம் பொய்யென் றுரைத்திடும் மட
சாத்திரம் பொய் யென்று தள்ளடா
ஆதி தனிக்பொரு ளாகுமோர் கடல்
ஆருங் குமிழி உயிர்களாம் அந்த
சோதி யறிவென்னும் ஞாயிறு தன்னை
சூழ்ந்த கதிர்கள் உயிர்களாம் இங்கு
மீதி பொருள்கள் எவையுமே அதன்
மேனியில் தோன்றிடும் வண்ணங்கள் வண்ண
நீதி யறிந்தின்பம் எய்தியே ஒரு
நேர்மை தொழிலில் இயங்குவார்
சித்தத்தி லேசிவம் நாடுவார் இங்கு
சேர்ந்து களித்துல காளுவார் நல்ல
மத்த மதவெங் களிறுபோல் நடை
வாய்ந்திறு மாந்து திரிகுவார் இங்கு
நித்தம் நிகழ்வ தனைத்துமே எந்தை
நீண்ட திருவரு ளால்வரும் இன்பம்
சுத்த சுகந்தனி யாநந்தம் என
சூழ்ந்து கவலைகள் தள்ளியே
சோதி அறிவில் விளங்கவும் உயர்
சூழ்ச்சி மதியில் விளங்கவும் அற
நீதி முறைவழு வாமலே எந்த
நேரமும் பூமி தொழில்செய்து கலை
ஓதி பொருளியல் கண்டுதாம் பிறர்
உற்றிடு தொல்லைகள் மாற்றியே இன்பம்
மோதி விழிக்கும் விழியினார் பெண்மை
மோகத்தில் செல்வத்தில் கீர்த்தியில்
ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி
யாதி யினைய கலைகளில் உள்ளம்
ஈடுப டென்றும் நடப்பவர் பிறர்
ஈன நிலைகண்டு துள்ளுவார் அவர்
நாடும் பொருள்கள் அனைத்தையும் சில
நாளினில் எய்த பெறுகுவார் அவர்
காடு புதரில் வளரினும் தெய்வ
காவனம் என்றதை போற்றலாம்
ஞானியர் தம்மியல் கூறினேன் அந்த
ஞானம் விரைவினில் எய்துவாய் என
தேனி லினிய குரலிலே கண்ணன்
செப்பவும் உண்மை நிலைகண்டேன் பண்டை
ஈன மனித கனவெலாம் எங்ஙன்
ஏகி மறைந்தது கண்டிலேன் அறி
வான தனிச்சுடர் நான்கண்டேன் அதன்
ஆட லுலகென நான் கண்டேன்

கண்ணம்மா என் குழந்தை

பராசக்தியை குழந்தையா கண்டு சொல்லிய பாட்டு
ராகம் பைரவி தாளம் ரூபகம்

தநீத பதப பா
பபப பதப பமா கரிஸா
ரிகம ரிகரி ஸா
என்ற ஸ்வர வரிசைகளை மாதிரியாக வைத்துக்கொண்டு
மனோவாபப்படி மாற்றி பாடுக
சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா
செல்வ களஞ்சியமே
என்னை கலி தீர்த்தே உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்
பிள்ளை கனியமுதே கண்ணம்மா
பேசும்பொற் சித்திரமே
அள்ளி யணைத்திடவே என் முன்னே
ஆடி வரு தேனே
ஓடி வருகையிலே கண்ணம்மா
உள்ளங் குளிரு தடீ
ஆடித்திரிதல் கண்டால் உன்னைப்போய்
ஆவி தழுவு தடீ
உச்சி தனை முகந்தால் கருவம்
ஓங்கி வளரு தடீ
மெச்சி யுனை யூரார் புகழ்ந்தால்
மேனி சிலிர்க்குதடீ
கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான்
கள்வெறி கொள்ளு தடீ
உன்னை தழுவிடிலோ கண்ணம்மா
உன்மத்த மாகுதடீ
சற்றுன் முகஞ் சிவந்தால் மனது
சஞ்சல மாகு தடீ
நெற்றி சுருங கண்டால் எனக்கு
நெஞ்சம் பதைக்கு தடீ
உன்கண்ணில் நீர்வழிந்தால் என்நெஞ்சில்
உதிரம் கொட்டு தடீ
என்கண்ணிற் பாவையன்றோ கண்ணம்மா
என்னுயிர் நின்ன தன்றோ
சொல்லு மழலையிலே கண்ணம்மா
துன்பங்கள் தீர்த்திடு வாய்
முல்லை சிரிப்பாலே எனது
மூர்க்க தவிர்த்திடு வாய்
இன்ப கதைகளெல்லாம் உன்னைப்போல்
ஏடுகள் சொல்வ துண்டோ
அன்பு தருவதிலே உனைநேர்
ஆகுமோர் தெய்வ முண்டோ
மார்பில் அணிவதற்கே உன்னைப்போல்
வைர மணிக ளுண்டோ
சீர்பெற்று வாழ்வதற்கே உன்னைப்போல்
செல்வம் பிறிது முண்டோ

கண்ணன் என் விளையாட்டு பிள்ளை

நகேதாரம் கண்டஜாதி ஏகதாளம்
ரசங்கள் அற்புதம் சிருங்காரம்
தீராத விளையாட்டு பிள்ளை கண்ணன்
தெருவிலே பெண்களு கோயாத தொல்லை தீராத

தின்ன பழங்கொண்டு தருவான் பாதி
தின்கின்ற போதிலே தட்டி பறிப்பான்
என்னப்பன் என்னையன் என்றால் அதனை
எச்சிற் படுத்தி கடித்து கொடுப்பான் தீராத

தேனொத்த பண்டங்கள் கொண்டு என்ன
செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்
மானொத்த பெண்ணடி என்பான் சற்று
மனமகிழும் நேரத்தி லேகிள்ளி விடுவான் தீராத

அழகுள்ள மலர்கொண்டு வந்தே என்னை
அழஅழ செய்துபின் கண்ணை மூடிக்கொள்
குழலிலே சூட்டுவேன் என்பான் என்னை
குருடாக்கி மலரினை தோழிக்கு வைப்பான் தீராத

பின்னலை பின்னின் றிழுப்பான் தலை
பின்னே திரும்புமுன் னேசென்று மறைவான்
வன்ன புதுச்சேலை தனிலே புழுதி
வாரி சொரிந்தே வருத்தி குலைப்பான் தீராத

புல்லாங் குழல்கொண்டு வருவான் அமுது
பொங்கி ததும்புநற் பீதம் படிப்பான்
கள்ளால் மயங்குவது போலே அதை
கண்மூடி வாய்திற தேகே டிருப்போம் தீராத

அங்கா திருக்கும்வாய் தனிலே கண்ணன்
ஆறேழு கட்டெறும் பைப்போட்டு விடுவான்
எங்காகிலும் பார்த்த துண்டோ கண்ணன்
எங்களை செய்கின்ற வேடிக்கை யொன்றோ தீராத

விளையாட வாவென் றழைப்பான் வீட்டில்
வேலையென் றாலதை கேளா திழுப்பான்
இளையாரொ டாடி குதிப்பான் எம்மை
இடையிற் பிரிந்துபோய் வீட்டிலே சொல்வான் தீராத

அம்மைக்கு நல்லவன் கண்டீர் மூளி
அத்தைக்கு நல்லவன் தந்தைக்கு மஃதே
எம்மை துயர்செய்யும் பெரியோர் வீட்டில்
யாவர்க்கும் நல்லவன் போலே நடப்பான் தீராத

கோளுக்கு மிகவும் சமர்த்தன் பொய்ம்மை
குத்திரம் பழிசொல கூசா சழக்கன்
ஆளு கிசைந்தபடி பேசி தெருவில்
அத்தனை பெண்களையும் ஆகா தடிப்பான் தீராத

கண்ணன் என் காதலன்

செஞ்சுருட்டி திஸ்ர ஏக தாளம்
சிருங்கார ரசம்
தூண்டிற் புழுவினைப்போல் வெளியே
சுடர் விளக்கினை போல்
நீண்ட பொழுதாக எனது
நெஞ்ச துடித்த தடீ
கூண்டு கிளியினை போல் தனிமை
கொண்டு மிகவும் நொந்தேன்
வேண்டும் பொருளை யெல்லாம் மனது
வெறுத்து விட்டதடீ
பாயின் மிசை நானும் தனியே
படு திருக்கை யிலே
தாயினை கண்டாலும் சகியே
சலிப்பு வந்த தடீ
வாயினில் வந்ததெல்லாம் சகியே
வளர்த்து பேசிடுவீர்
நோயினை போலஞ் சினேன் சகியே
நுங்க ளுறவை யெல் லாம்
உணவு செல்லவில்லை சகியே
உறக்கங் கொள்ளவில்லை
மணம் விரும்பவில்லை சகியே
மலர் பிடிக்க வில்லை
குண முறுதி யில்லை எதிலும்
குழப்பம் வந்த தடீ
கணமும் உளத்திலே சுகமே
காண கிடைத்ததில்லை
பாலுங் கசந்தடீ தடீ சகியே
படுக்கை நொந்த தடீ
கோல கிளிமொழியும் செவியில்
குத்த லெடுத்த தடீ
நாலு வயித்தியரும் இனிமேல்
நம்புதற் கில்லை யென்றார்
பாலத்து சோசியனும் கிரகம்
படுத்து மென்று விட்டான்
கனவு கண்டதிலே ஒருநாள்
கண்ணுக்கு தோன்றாமல்
இனம் விளங்க வில்லை எவனோ
என்னக தொட்டு விட்டான்
வினவ கண்விழித்தேன் சகியே
மேனி மறைந்து விட்டான்
மனதில் மட்டிலுமே புதிதோர்
மகிழ்ச்சி கண்டதடீ
உச்சி குளிர்ந்ததடீ சகியே
உடம்பு நேராச்சு
மச்சிலும் வீடுமெல்லாம் முன்னைப்போல்
மனத்து கொத்தடீ
இச்சை பிறந்ததடீ எதிலும்
இன்பம் விளைளந்ததடீ
அச்ச மொழிந்ததடீ சகியே
அழகு வந்ததடீ
எண்ணும் பொழுதி லெல்லாம் அவன்கை
இட்ட விடத்தினிலே
தண்ணென் றிருந்ததடீ புதிதோர்
சாந்தி பிறந்ததடீ
எண்ணி யெண்ணி பார்த்தேன் அவன்தான்
யாரென சிந்தை செய்தேன்
கண்ணன் திருவுருவம் அங்ஙனே
கண்ணின் முன் நின்றதடீ

கண்ணன் என் காதலன்

உறக்கமும் விழிப்பும்
நாதநாமக்கிரியை ஆதி தாளம்
ரசங்கள் பீபத்ஸம் சிருங்காரம்
நோம் மிகுந்ததின்னும் நித்திரையின்றி உங்கள்
நினைப்பு தெரியவில்லை கூத்தடிக்கிறீர்
சோரன் உறங்கிவிழும் நள்ளிரவிலே என்ன
தூளி படுகுதடி இவ்விடத்திலே
ஊரை யெழுப்பிவிட நிச்சயங் கொண்டீர் அன்னை
ஒருத்தியுண் டென்பதையும் மறந்து விட்டீர்
சாரம் மிகுந்த தென்று வார்த்தை சொல்கிறீர் மிக
சலிப்பு தருகுதடி சகி பெண்களே
நானும் பல தினங்கள் பொறுத்திருந்தேன் இது
நாளுக்கு நாளதிக மாகி விட்டதே
கூன னொருவன் வந்தி நாணி பின்னலை
கொண்டை மலர்சிதற நின்றிழுத்ததும்
ஆனைமதம் பிடித்திவ் வஞ்சி யம்மையின்
அருகினி லோட இவள் மூர்ச்சை யுற்றதும்
பானையில் வெண்ணெய் முற்றும் தின்றுவிட்டதால்
பாங்கி யுரோகிணிக்கு நோவு கண்டதும்
பத்தினி யாளையொரு பண்ணை வெளியில்
பத்து சிறுவர் வந்து முத்தமிட்டதும்
நத்தி மகளினுக்கோர் சோதிடன் வந்து
நாற்ப தரசர் தம்மை வாக்களித்ததும்
கொத்து கனல் விழி கோவினி பெண்ணை
கொங்கத்து மூளிகண்டு கொக்கரித்தும்
வித்தை பெயருடைய வீணியவளும்
மேற்கு திசை மொழிகள் கற்று வந்ததும்
எத்தனை பொய்களடி என்ன கதைகள்
என்னை உறக்கமின்றி இன்னல் செய்கிறீர்
சத்தமிடுங் குழல்கள் வீணைக ளெல்லாம்
தாளங்க ளோடுகட்டி மூடிவை தங்கே
மெத்த வெளிச்சமின்றி ஒற்றை விளக்கை
மேற்கு சுவரருகில் வைத்ததன் பின்னர்
நித்திரை கொள்ளஎனை தனியில் விட்டே
நீங்களெல் லோருமுங்கள் வீடு செல்வீர்
பாங்கியர் போன பின்பு தனியிருந்து சொல்லுதல்
கண்கள் உறங்கவொரு காரண முண்டோ
கண்ணனை இன்றிரவு காண்பதன் முன்னே
பெண்களெல் லோருமவர் வீடு சென்றிட்டார்
பிரிய மிகுந்த கண்ணன் காத்திருக்கின்றான்
வெண்கல வாணிகரின் வீதி முனையில்
வேலி புறத்திலெனை காணமுடி யென்றான்
கண்கள் உறங்கலெனுங் காரிய முண்டோ
கண்ணனை கையிரண்டுங் கட்ட லின்றியே

கண்ணன் என் காதலன்
காட்டிலே தேடுதல்
ஹிந்துஸ்தானி தோடி ஆதி தாளம்
ரசங்கள் பயாநகம் அற்புதம்
திக்கு தெரியாத காட்டில் உனை
தேடி தேடி இளைத்தேனே

மிக்க நலமுடைய மரங்கள் பல
விந்தை சுவையுடைய கனிகள் எந்த
பக்கத்தையும் மறைக்கும் வரைகள் அங்கு
பாடி நகர்ந்து வரு நதிகள் ஒரு திக்கு

நெஞ்சிற் கனல்மணக்கும் பூக்கள் எங்கும்
நீள கிடக்குமலை கடல்கள் மதி
வஞ்சி திடுமகழி சுனைகள் முட்கள்
மண்டி துயர்பொடுக்கும் புதர்கள் ஒரு திக்கு

ஆசை பெறவிழிக்கும் மான்கள் உள்ளம்
அஞ்ச குரல்பழகும் புலிகள் நல்ல
நேச கவிதைசொல்லும் பறவை அங்கு
நீண்டே படுத்திருக்கும் பாம்பு ஒரு திக்கு

தன்னிச்சை கொண்டலையும் சிங்கம் அதன்
தினிற்கலங்கு யானை அதன்
முன்னின் றோடுமிள மான்கள் இவை
முட்டா தயல்பதுங்கு தவளை ஒரு திக்கு

கால்கை சோர்ந்துவிழ லானேன் இரு
கண்ணும் துயில்படர லானேன் ஒரு
வேல்கை கொண்டுகொலைவேடன் உள்ளம்
வெட்கம் கொண்டொழிய விழித்தான் ஒரு திக்கு

பெண்ணே உனதழகை கண்டு மனம்
பித்தங்கொள்ளு தென்று நகைத்தான் அடி
கண்ணே எனதிருகண் மணியே எனை
கட்டி தழுவமனம் கொண்டேன்

சோர்ந்தே படுத்திருக்க லாமோ நல்ல
துண்ட கறிசமைத்து தின்போம் சுவை
தேர்ந்தே கனிகள் கொண்டு வருவேன் நல்ல
தேங்கள் ளுண்டினிது களிப்போம்

என்றே கொடியவிழி வேடன் உயிர்
இற்று போகவிழி துரைத்தான் தனி
நின்றே இருகரமுங் குவித்து அந்த
நீசன் முன்னர் இவை சொல்வேன்

அண்ணா உனதடியில் வீழ்வேன் எனை
அஞ்ச கொடுமைசொல்ல வேண்டா பிறன்
கண்ணலஞ் செய்துவிட்ட பெண்ணே என்றன்
கண்ணற் பார்த்திடவு தகுமோ

ஏடி சாத்திரங்கள் வேண்டேன் நின
தின்பம் வேண்டுமடி கனியே நின்றன்
மோடி கிறுக்குதடி தலையை நல்ல
மொந்தை பழையகள்ளை போலே

காதா லிந்தவுதை கேட்டேன் அட
கண்ணா வென்றலறி வீழ்ந்தேன் மிக
போதாக வில்லையிதற் குள்ளே என்றன்
போத தெளியநினை கண்டேன்

கண்ணா வேடனெங்கு போனான் உனை
கண்டே யலறிவிழு தானோ மணி
வண்ணா என தப குரலில் எனை
வாழ்விக்க வந்தஅருள் வாழி

கண்ணன் என் காதலன்
பாங்கியை தூது விடுத்தல்
தங்கப்பாட்டு மெட்டு
ரசங்கள் சிருங்காரம் ரௌத்ரம்
கண்ணன் மனநிலையை தங்கமே தங்கம்
அடி தங்கமே தங்கம்
கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம்
எண்ண முரைத்துவிடில் தங்கமே தங்கம் பின்னர்
ஏதெனிலுஞ் செய்வமடி தங்கமே தங்கம்
கன்னிகை யாயிருந்து தங்கமே தங்கம் நாங்கள்
காலங் கழிப்பமடி தங்கமே தங்கம்
அன்னிய மன்னர் மக்கள் பூமியிலுண்டாம் என்னும்
அதனையுஞ் சொல்லிடடி தங்கமே தங்கம்
சொன்ன மொழிதவறும் மன்னவ னுக்கே எங்கும்
தோழமை யில்லையடி தங்கமே தங்கம்
என்ன பிழைகளிங்கு கண்டிருக்கின்றான் அவை
யாவும் தெளிவுபெற கோட்டு விடடீ
மையல் கொடுத்துவிட்டு தங்கமே தங்கம் தலை
மறைந்து திரிபவர்க்கு மானமு முண்டோ
பொய்யை யுருவமென கொண்டவ னென்றே கிழ
பொன்னி யுரைத்ததுண்டு தங்கமே தங்கம்
ஆற்றங் கரையதனில் முன்னமொருநாள் எனை
அழைத்து தனியிடத்தில் பேசிய தெல்லாம்
தூற்றி நகர்முரசு சாற்றுவ னென்றே
சொல்லி வருவையடி தங்கமே தங்கம்
சோர மிழைத்திடையர் பெண்களுடனே அவன்
சூழ்ச்சி திறமை பல காட்டுவ தெல்லாம்
வீர மறக்குலத்து மாதரிடத்தே
வேண்டிய தில்லையென்று சொல்லி விடடீ
பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால் மிக
பீழை யிருக்குதடி தங்கமே தங்கம்
பண்ணொன்று வேய்ங்குழலில் ஊதி வந்திட்டான் அதை
பற்றி மறக்கு தில்லை பஞ்சை யுள்ளமே
நேர முழுவதிலு பாவி தன்னையே உள்ளம்
நினைத்து மறுகுதடி தங்கமே தங்கம்
தீர ஒருசொலின்று கேட்டு வந்திட்டால் பின்பு
தெய்வ மிருக்குதடி தங்கமே தங்கம்

கண்ணன் என் காதலன்
பிரிவாற்றாமை
ராகம் பிலஹரி
ஆசை முகமறந்து போச்சே இதை
ஆரிடம் செல்வேனடி தோழி
நேச மறக்கவில்லை நெஞ்சம் எனில்
நினைவு முகமறக்க லாமோ
கண்ணில் தெரியுதொரு தோற்றம் அதில்
கண்ண னழகுமுழு தில்லை
நண்ணு முகவடிவு காணில் அந்த
நல்ல மலர்ச்சிரிப்பை காணோம்
ஓய்வு மொழிதலுமில் லாமல் அவன்
உறவை நினைத்திருக்கும் உள்ளம்
வாயு முரைப்ப துண்டு கண்டாய் அந்த
மாயன் புகழினையெ போதும்
கண்கள் புரிந்துவிட்ட பாவம் உயிர
கண்ண னுருமறக்க லாச்சு
பெண்க ளினிடத்திலிது போலே ஒரு
பேதையை முன்புகண்ட துண்டோ
தேனை மறந்திருக்கும் வண்டும் ஒளி
சிறப்பை மறந்துவிட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும் இந்த
வைய முழுதுமில்லை தோழி
கண்ணன் முகம்மறந்து போனால் இந்த
கண்க ளிருந்து பயனுண்டோ
வண்ண படமுமில்லை கண்டாய் இனி
வாழும் வழியென்னடி தோழி

கண்ணன் என் காந்தன்

வராளி திஸ்ர ஏக தாளம்
சிருங்கார ரசம்
கனிகள் கொண்டுதரும் கண்ணன்
கற்கண்டு போலினிதாய்
பனிசெய் சந்தனமும் பின்னும்
பல்வகை அத்தர்களும்
குனியும் வாண்முகத்தான் கண்ணன்
குலவி நெற்றியிலே
இனிய பொட்டிடவே வண்ணம்
இயன்ற சவ்வாதும்
கொண்டை முடிப்பதற்கே மணங்
கூடு தயிலங்களும்
வண்டு விழியினுக்கே கண்ணன்
மையுங் கொண்டுதரும்
தண்டை பதங்களுக்கே செம்மை
சார்த்துசெம் பஞ்சுதரும்
பெண்டிர் தமக்கெல்லாம் கண்ணன்
பேசரு தெய்வமடீ
குங்குமங் கொண்டுவரும் கண்ணன்
குழைத்து மார்பொழுத
சங்கையி லாதபணம் தந்தே
தழுவி மையல் செய்யும்
பங்கமொன் றில்லாமல் மகம்
பார்த்திரு தாற்போதும்
மங்கள மாகுமடீ பின்னோர்
வருத்த மில்லையடி

கண்ணம்மா என் காதலி
காட்சி வியப்பு
செஞ்சுருட்டி ஏகதாளம்
ரசங்கள் சிருங்காரம் அற்புதம்
சுட்டும் விழிச்சுடர் தான் கண்ணம்மா
சூரிய சந்திர ரோ
வட்ட கரிய விழி கண்ணம்மா
வான கருமை கொல்லோ
பட்டு கருநீல புடவை
பதித்த நல் வயிரம்
நட்ட நடு நிசியில் தெரியும்
நக்ஷ திரங்க ளடீ
சோலை மல ரொளியோ உனது
சுந்தர புன்னகை தான்
நீல கடலலையே உனது
நெஞ்சி லலைக ளடீ
கோல குயி லோசை உனது
குரலி னிமை யடீ
வாலை குமரி யடீ கண்ணம்மா
மருவ காதல் கொண்டேன்
சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா
சாத்திர மேது கடீ
ஆத்திரங் கொண்டவர்க்கே கண்ணம்மா
சாத்திர முண்டோ டீ
மூத்தவர் சம்மதியில் வதுவை
முறைகள் பின்பு செய்வோம்
காத்திரு பேனோ டீ இதுபார்
கன்னத்து முத்த மொன்று

கண்ணம்மா என் காதலி
பின் வந்து நின்று கண் மறைத்தல்
நாதநாமக்கிரியை ஆதிதாளம்
சிருங்கார ரசம்
மாலை பொழுதிலொரு மேடை மிசையே
வானையும் கடலையும் நோக்கி யிருந்தேன்
மூலை கடலினையவ் வான வளையம்
முத்தமி டேதழுவி முகிழ்த்தல் கண்டேன்
நீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி
நேரங் கழிவ திலும் நினைப்பின்றியே
சால பலபல நற் பகற்கனவில்
தன்னை மறந்தல தன்னில் இருந்தேன்
ஆங்க பொழுதிலென் பின்பு றத்திலே
ஆள்வந்து நின்றெனது கண்ம றைக்கவே
பாங்கினிற் கையிரண்டு தீண்டி யறிந்தேன்
பட்டுடை வீசுகமழ் தன்னி லறிந்தேன்
ஓங்கிவரு முவகை யூற்றி லறிந்தேன்
ஒட்டுமி ரண்டுளத்தின் தட்டி லறிந்தேன்
வாங்கி விடடிகையை யேடி கண்ணம்மா
மாய மெவரிடத்தில் என்று மொழிந்தேன்
சிரித்த ஒலியிலவள் கைவி லக்கியே
திருமி தழுவி என்ன செய்தி சொல் என்றேன்
நெரித்த திரைக்கடலில் என்ன கண்டிட்டாய்
நீல விசும்பினிடை என்ன கண்டிட்டாய்
திரித்த நுரையினிடை என்ன கண்டிட்டாய்
சின்ன குமிழிகளில் என்ன கண்டிட்டாய்
பிரித்து பிரித்துநிதம் மேகம் அளந்தே
பெற்ற நலங்கள் என்ன பேசுதி என்றாள்
நெரித்த திரைக்கடலில் நின்முகங் கண்டேன்
நீல விசும்பினிடை நின்முகங் கண்டேன்
திரித்த நுரையினிடை நின்முகங் கண்டேன்
சின்ன குமிழிகளில் நின்முகங் கண்டேன்
பிரித்து பிரித்துநிதம் மேகம் அளந்தே
பெற்றுதுன் முகமன்றி பிறிதொன் றில்லை
சிரித்த ஒலியினிலுன் கைவி லக்கியே
திருமி தழுவியதில் நின்முகங் கண்டேன்

கண்ணம்மா என் காதலி
முகத்திரை களைத்தல்
நாதநாமக்கிரியை ஆதிதாளம்
சிருங்கார ரசம்
தில்லி துருக்கர் செய்த வழக்கமடி பெண்கள்
திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்
வல்லி யிடையினையும் ஓங்கி முன்னிற்கும் இந்த
மார்பையும் மூடுவது சாத்திரங் கண்டாய்
வல்லி யிடையினையும் மார்பு ரண்டையும் துணி
மறைத்தத னாலழகு மறைந்த தில்லை
சொல்லி தெரிவ தில்லை மன்மதக்கலை முக
சோதி மறைத்துமொரு காதலிங் குண்டோ
ஆரியர் முன்னெறிகள் மேன்மை யென் கிறாய் பண்டை
ஆரி பெண்களுக்கு திரைகள் உண்டோ
ஓரிரு முறைகண்டு பழகிய பின் வெறும்
ஒப்புக்கு காட்டுவதி நாண மென்னடீ
யாரிரு தென்னை யிங்கு தடுத்திடுவார் வலு
வாக முகத்திரையை அகற்றி விட்டால்
காரிய மில்லையடி வீண்ட சப்பிலே கனி
கண்டவன் தோலுரி காத்தி ருப்பனோ

கண்ணம்மா என் காதலி
நாணி கண் புதைத்தல்
நாதநாமக்கிரியை ஆதிதாளம்
சிருங்கார ரசம்
மன்னர் குலத்தினிடை பிறந்தவளை இவன்
மருவ நிகழ்ந்ததென்று நாண முற்றதோ
சின்னஞ் சிறுகுழந்தை யென்ற கருத்தோ இங்கு
செ தகாதசெய்கை செய்தவ ருண்டோ
வன்ன முகத்திரையை களைந்தி டென்றேன் நின்றன்
மதங்கண்டு துகிலினை வரிதுரிந்தேன்
என்ன கருத்திலடி கண்புதைக்கிறாய் என
கெண்ண படுவதில்லை யேடி கண்ணம்மா
கன்னி வயதிலுனை கண்டதில்லையோ கன்னங்
கன்றி சிவக்கமுத்த மிட்ட தில்லையோ
அன்னிய மகாநம்முள் எண்ணுவதில்லை இரண்
டாவிவயுமொன் றாகுமென கொண்ட தில்லையோ
பன்னி பலவுரைகள் சொல்லுவ தென்னே துகில்
பறித்தவள் கைப்பறிக்க பயங்கொள்வனோ
என்னை புறமெனவுங் கருதுவதோ கண்கள்
இரண்டினில் ஒன்றையொன்று கண்டு வெள்குமோ
நாட்டினிற் பெண்களுக்கு நாயகர் சொல்லும் சுவை
நைந்த பழங்கதைகள் நானுரைப்பதோ
பாட்டுஞ் சுதியு மொன்று கலந்திடுங்கால் தம்முள்
பன்னி உபசரணை பேசுவ துண்டோ
நீட்டுங் கதிர்களொடு நிலவு வந்தே விண்ணை
நின்று புகழ்ந்து விட்டு பின்மருவுமோ
மூட்டும் விறகிளை சோதி கவ்வுங்கால் அவை
முன்னுப சாரவகை மொழிந்திடுமோ
சாத்திர காரரிடம் கேட்டு வந்திடேன் அவர்
சாத்திரஞ் சொல்லியதை நினக்குரைப்பேன்
நேற்று முன்னாளில் வந்து உறவன்றடீ மிக
நெடும்பண்டை காலமுதற் சேர்ந்து வந்ததாம்
போற்றுமி ராமனென முன்புதித்தனை அங்கு
பொன்மிதிலை கரசன் பூமடந்தை நான்
ஊற்றுமு தென்னவொரு வேய்ங்குழல் கொண்டோ ன் கண்ணன்
உருவம் நினக்கமை பார்த்தன் அங்கு நான்
முன்னை மிகப்பழமை இரணியனாம் எந்தை
மூர்க்க தவிர்க்க வந்த நரசிங்கன் நீ
பின்னையொர் புத்தனென நான் வளர்ந்திட்டேன் ஒளி
பெண்மை அசோதரையென் றுன்னை யெய்தினேன்
சொன்னவர் சாத்திரத்தில் மிக வல்லர்காண் அவர்
சொல்லிற் பழுதிரு காரண மில்லை
இன்னுங் கடைசிவரை ஒட்டிருக்குமாம் இதில்
ஏதுக்கு நாணமுற்று கண்புதைப்பதே

கண்ணம்மா என் காதலி
குறிப்பிடம் தவறியது
செஞ்சுருட்டி ஆதி தாளம்
சிருங்கார ரசம்
தீர்த்த கரையினிலே தெற்கு மூலையில்
செண்பக தோட்டத்திலே
பார்த்திருந்தால் வருவேன் வெண்ணிலாவிலே
பாங்கியோ டென்று சொன்னாய்
வார்த்தை தவறிவிட்டாய் அடி கண்ணம்மா
மார்பு துடிக்கு தடீ
பார்த்த விடத்திலெல்லாம் உன்னைப்போலவே
பாவை தெரியு தடீ
மேனி கொதிக்கு தடீ தலை சுற்றியே
வேதனை செய்கு தடீ
வானி லிடத்தை யெல்லாம் இந்த வெண்ணிலா
வந்து தழுவுது பார்
மோன திருக்கு தடீ இந்த வையகம்
மூழ்கி துயிலினிலே
நானொருவன் மட்டிலும் பிரி வென்பதோர்
நகர துழலுவதோ
கடுமை யுடைய தடீ எந்த நேரமும்
காவலுன் மாளிகையில்
அடிமை புகுந்த பின்னும் எண்ணும்போது நான்
அங்கு வருவதற் கில்லை
கொடுமை பொறுக்க வில்லை கட்டுங் காவலும்
கூடி கிடக்கு தங்கே
நடுமை யரசி யவள் எதற்காகவோ
நாணி குலைந்திடுவாள்
கூடி பிரியாமலே ஓரி ரவெலாம்
கொஞ்சி குலவி யங்கே
ஆடி விளை யாடியே உன்றன் மேனியை
ஆயிரங்கோடி முறை
நாடி தழுவி மன குறை தீர்ந்து நான்
நல்ல களி யெய்தியே
பாடி பரவசமாய் நிற்கவே தவம்
பண்ணிய தில்லை யடி

கண்ணம்மா என் காதலி
யோகம்
பாயு மொளி நீ யெனக்கு பார்க்கும் விழி நானுனக்கு
தோயும் மது நீ யெனக்கு தும்பியடி நானுனக்கு
வாயுரைக்க வருகுதில்லை வாழிநின்றன் மேன்மை யெல்லாம்
தூயசுடர் வானொளியே சூறையமுதே கண்ணம்மா
வீணையடி நீ யெனக்கு மேவும் விரல் நானுனக்கு
பூணும் வடம் நீ யெனக்கு புது வயிரம் நானுனக்கு
காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடி
மாணுடைய பேரரசே வாழ்வு நிலையே கண்ணம்மா
வான மழை நீ யெனக்கு வண்ணமயில் நானுனக்கு
பான மடி நீ யெனக்கு பாண்டமடி நானுனக்கு
ஞான வொளி வீசுதடி நங்கை நின்றன் சோதிமுகம்
ஊனமறு நல்லழகே ஊறு சுவையே கண்ணம்மா
வெண்ணிலவு நீ யெனக்கு மேவு கடல் நானுனக்கு
பண்ணுசுதி நீ யெனக்கு பாட்டினிமை நானுனக்கு
எண்ணியெண்ணி பார்த்திடிலோர் எண்ணமிலை நின்சுவைக்கே
கண்ணின் மணி போன்றவளே கட்டியமுதே கண்ணம்மா
வீசு கமழ் நீ யெனக்கு விரியுமலர் நானுனக்கு
பேசுபொருள் நீ யெனக்கு பேணு மொழி நானுனக்கு
நேசமுள்ள வான்சுடரே நின்னழகை யேதுரைப்பேன்
ஆசை மதுவே கனியே அள்ளு சுவையே கண்ணம்மா
காதலடி நீ யெனக்கு காந்தமடி நானுனக்கு
வேதமடி நீ யெனக்கு வித்தையடி நானுனக்கு
போதமுற்ற போதியிலே பொங்கிவரு தீஞ்சுவையே
நாதவடி வானவளே நல்ல உயிரே கண்ணம்மா
நல்லவுயிர் நீ யெனக்கு நாடியடி நானுனக்கு
செல்வமடி நீ யெனக்கு சேம நிதி நானுனக்கு
எல்லையற்ற பேரழகே எங்கும் நிறை பொற்சுடரே
முல்லை நிகர் புன்னகையாய் மோதுமின்பமே கண்ணம்மா
தரையடி நீ யெனக்கு தண்மதியம் நானுனக்கு
வீரமடி நீ யெனக்கு வெற்றியடி நானுனக்கு
தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்
ஓருருவமா சமைத்தாய் உள்ளமுதே கண்ணம்மா

கண்ணன் என் ஆண்டான்

புன்னாகவராளி திஸ்ர ஏகதாளம்
ரசங்கள் அற்புதம் கருணை
தஞ்ச முலகினில் எங்கணு மின்றி
தவித்து தடுமாறி
பஞ்சை பறையன் அடிமை புகுந்தேன்
பார முன காண்டே
ஆண்டே பாரமுன காண்டே
துன்பமும் நோயும் மிடிமையு தீர்த்து
சுகமருளல் வேண்டும்
அன்புடன் நின்புகழ் பாடிக்குதித்து நின்
ஆணை வழி நடப்பேன்
ஆண்டே ஆணைவழி நடப்பேன்
சேரி முழுதும் பறையடி தேயரு
சீர்த்திகள் பாடிடுவேன்
பேரிகை கொட்டி திசைக ளதிரநின்
பெயர் முழக்கிடுவேன்
ஆண்டே பெயர் முழக்கிடுவேன்
பண்ணை பறையர் தங் கூட்டத்தி லேயிவன்
பாங்கிய மோங்கி விட்டான்
கண்ண னடிமை யிவனெனுங் கீர்த்தியில்
காதலுற் றிங்கு வந்தேன்
ஆண்டே காதலுற் றிங்குவந்தேன்
காடு கழனிகள் காத்திடுவேன் நின்றன்
காலிகள் மேய்த்திடுவேன்
பாடுபட சொல்லி பார்த்ததன் பின்னரென்
பக்குவஞ் சொல்லாண்டே
ஆண்டே பக்குவஞ் சொல்லாண்டே
தோட்டங்கள் கொத்தி செடிவளர்க்க சொல்லி
சோதனை போடாண்டே
காட்டு மழைக்குறி தப்பி சொன்னா லெனை
கட்டியடி யாண்டே
ஆண்டே கட்டியடி யாண்டே
பெண்டு குழந்தைகள் கஞ்சி குடித்து
பிழைத்திட வேண்டுமையே
அண்டை யலுக்கென் னாலுப காரங்கள்
ஆகிட வேண்டுமையே
உபகாரங்கள் ஆகிட வேண்டுமையே
மானத்தை காக்கவோர் நாலுமுழத்துணி
வாங்கி தரவேணும்
தானத்துக்கு சில வேட்டிகள் வாங்கி
தரவுங் கடனாண்டே
சில வேட்டி தரவுங் கடனாண்டே
ஒன்பது வாயிற் குடிலினை சுற்றி
யொருசில பேய்கள் வந்தே
துன படுத்துது மந்திரஞ் செய்து
தொலைத்திட வேண்டுமையே
பகையாவு தொலைத்திட வேண்டுமையே
பேயும் பிசாசு திருடரு மென்றன்
பெயரினை கேட்டளவில்
வாயுங் கையுங்கட்டி அஞ்சி நடக்க
வழி செய்ய வேண்டுமையே
தொல்லைதீரும் வழிசெய்ய வேண்டுமையே

கண்ணம்மா எனது குலதெய்வம்

ராகம் புன்னாகவராளி
பல்லவி
நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்

பொன்னை உயர்வை புகழை விரும்பிடும்
என்னை கவலைகள் தின்ன தகாதென்று நின்னை

மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில்
குடிமை புகுந்தன கொன்றவைபோ கென்று நின்னை

தன்செய லெண்ணி தவிப்பது தீர்ந்திங்கு
நின்செயல் செய்து நிறைவு பெறும்வளம் நின்னை

துன்ப மினியில்லை சோர்வில்லை தோற்பில்லை
அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட நின்னை

நல்லது தீயது நாமறியோம் அன்னை
நல்லது நாட்டுக தீமையை ஓட்டுக நின்னை

குயில் பாட்டு
குயில்

காலை யிளம்பரிதி வீசுங் கதிர்களிலே
நீல கடலோர் நெருப்பெதிரே சேர்மணிபோல்
மோகனமாஞ் சோதி பொருந்தி முறைதவறா
வேக திரைகளினால் வேத பொருள்பாடி
வந்து தழுவும் வளஞ்சார் கரையுடைய
செந்தமிழ தென்புதுவை யென்னு திருநகரின்
மேற்கே சிறுதொலையில் மேவுமொரு மாஞ்சோலை
நாற்கோண துள்ளபல நத்தத்து வேடர்களும்
வந்து பறவைசுட வாய்ந்த பெருஞ்சோலை
அந்தமாஞ் சோலை யதனிலோர் காலையிலே
வேடர் வாராத விருந்து திருநாளில்
பேடை குயிலொன்று பெட்புறவோர் வான்கிளையில்
வீற்றிருந்தே ஆண்குயில்கள் மேனி புளகமுற
ஆற்ற லழிவுபெற உள்ள தனல் பெருக
சோலை பறவையெல்லாம் சூழ்ந்து பரவசமா
காலை கடனிற் கருத்தின்றி கேட்டிருக்க
இன்னமுதை காற்றினிடை எங்குங் கலந்ததுபோல்
மின்னற் சுவைதான் மெலிதாய் மிகவினிதாய்
வந்து பரவுதல்போல் வானத்து மோகினியாள்
இந்தவுரு வெய்தித்தான் ஏற்றம் விளங்குதல்போல்
இன்னிசை தீம்பாடல் இசைத்திருக்கும் விந்தைதனை
முன்னி கவிதைவெறி மூண்டே நனவழி
பட்ட பகலிலே பாவலர்க்கு தோன்றுவதாம்
நெட்டை கனவின் நிகழ்ச்சியிலே கண்டேன் யான்
கன்னி குயிலொன்று காவிடத்தே பாடியதோர்
இன்னிசை பாட்டினிலே யானும் பரவசமாய்
மனிதவுரு நீங்கி குயிலுருவம் வாரோதோ
இனிதி குயிற்பேட்டை என்றும் பிரியாமல்
காதலித்து கூடி களியுடனே வாழோமோ
நாத கனலிலே நம்முயிரை போக்கோமோ
என்றுபல வெண்ணி ஏக்கமுற பாடிற்றால்
அன்றுநான் கேட்டது அமரர்தாங் கேட்பாரோ
குக்குக்கூ வென்று குயில்பாடும் பாட்டினிலே
தொக்க பொருளெல்லாம் தோன்றியதென் சிந்தைக்கே
அந்த பொருளை அவனி குரைத்திடுவேன்
விந்தை குரலுக்கு மேதினியீர் என்செய்கேன்

குயிலின் பாட்டு
ராகம் சங்கராபரணம் தாளம் ஏக
ஸ்வரம் ஸகா ரிமா காரீ
பாபாபாபா மாமாமாமா
ரீகா ரிகமா மாமா
சந்த பேதங்களுக்கு தக்கபடி மாற்றி கொள்க
காதல்
காதல் போயிற்
சாதல்

அருளே யாநல் லொளியே
ஒளிபோ மாயின்
இருளே

இன்பம்
இன்ப திற்கோ ரெல்லை காணில்
துன்பம்

நாதம்
நா தேயோர் நலிவுண் டாயின்
சேதம்

தாளம்
தாள திற்கோர் தடையுண் டாயின்
கூளம்

பண்ணே
பண்ணிற் கேயோர் பழுதுண் டாயின்
மண்ணே

புகழே
புகழு கேயோர் புரையுண் டாயின்
இகழே

உறுதி
உறுதி கேயோர் உடைவுண் டாயின்
இறுதி

கூடல்
கூடி பின்னே குமரன் போயின்
வாடல்

குழலே
குழலிற் கீறல் கூடுங்காலை
விழலே

குயிலின் காதற் கதை

மோகன பாட்டு முடிவுபெற பாரெங்கும்
ஏக மவுன மியன்றதுகாண் மற்றதிலோர்
இன்ப வெறியு துயரும் இணைந்தனவால்
பின்புநான் பார்க்க பெடைக்குயிலஃ தொன்றல்லால்
மற்றை பறவை மறைந்தெங்கோ போகவுமிவ்
ஒற்றை குயில் சோக முற்று தலைகுனிந்து
வாடுவது கண்டேன் மரத்தருகே போய்நின்று
பேடே திரவியமே பேரின பாட்டுடையாய்
ஏழுலகம் இன்பத்தீ ஏற்று திறனுடையாய்
பீழையுன கெய்தியதென் பேசாய் என கேட்டேன்
மா குயிலதுதான் மானுடவர் பேச்சினிலோர்
மாயச்சொல் கூற மன தீயுற நின்றேன்
காதலை வேண்டி கரைகின்றேன் இல்லை யெனில்
சாதலை வேண்டி தகிக்கின்றேன் என்றதுவால்
வானத்து புள்ளெல்லாம் மையலுற பாடுகிறாய்
ஞானத்திற் புட்களிலும் நன்கு சிறந்துள்ளாய்
காதலர்நீ யெய்துகிலா காரணந்தான் யா தென்றேன்
வேதனையும் நாணும் மிகுந்த குரலினிலே
கான குயிலி கதைசொல்ல லாயிற்று
மான குலைவும் வருத்தமுநான் பார்க்காமல்
உண்மை முழுதும் உரைத்திடுவேன் மேற்குலத்தீர்
பெண்மை கிரங்கி பிழைபொறுத்தல் கேட்கின்றேன்
அறிவும் வடிவுங் குறுகி அவனியிலே
சிறியதொரு புள்ளா சிறியேன் பிறந்திடினும்
தேவர் கருணையிலோ தெய்வ சினத்தாலோ
யாவர் மொழியும் எளிதுணரும் பேறு பெற்றேன்
மானுடவர் நெஞ்ச வழக்கெல்லா தேர்ந்திட்டேன்
கான பறவை கலகலெனும் ஓசையிலும்
காற்று மரங்களிடை காட்டும் இசைகளிலும்
ஆற்று நீரோசை அருவி யொலியினிலும்
நீல பெருங்கடலெ நேரமுமே தானிசைக்கும்
ஓல திடையே உதிக்கும் இசையினிலும்
மானுட பெண்கள் வளமொரு காதலினால்
ஊனுருக பாடுவதில் ஊறிடுந்தேன் வாரியிலும்
ஏற்றநீர பாட்டின் இசையினிலும் நெல்லிடிக்குங்
கோற்றொடியார் குக்குவென கொஞ்சும் ஒலியினிலும்
கண்ண மிடிப்பார்தஞ் சுவைமிகுந்த பண்களிலும்
பண்ணை மடவார் பழகு பல பாட்டினிலும்
வட்டமிட்டு பெண்கள் வளைக்கரங்கள் தாமொலி
கொட்டி யிசைத்திடுமோர் கூட்டமுத பாட்டினிலும்
வேயின் குழலோடு வீணைமுதலா மனிதர்
வாயினிலுங் கையாலும் வாசிக்கும் பல்கருவி
நாட்டினிலுங் காட்டினிலும் நாளெல்லாம் நன்றொலிக்கும்
பாட்டினிலும் நெஞ்சை பறிகொடுத்தேன் பாவியேன்
நாவும் மொழிய நடுக்கமுறும் வார்த்தைகளை
பாவிமன தானிறுக பற்றிநிற்ப தென்னையோ
நெஞ்சத்தே தைக்க நெடுநோக்கு நோக்கிடுவீர்
மஞ்சரே என்றன் மனநிகழ்ச்சி காணீரோ
காதலை வேண்டி கரைகின்றேன் இல்லையெனில்
சாதலை வேண்டி தவிக்கின்றேன் என்றதுவே
சின்ன குயிலிதனை செப்பியவ போழ்தினிலே
என்னை புதியதோர் இன்ப சுரங்கவர
உள்ள திடையும் உயிரிடையும் ஆங்கந்த
பிள்ளை குயிலினதோர் பேச்சன்றி வேறற்றேன்
காதலோ காதலினி காதல் கிடைத்திலதேல்
சாதலோ சாதல் என சாற்றுமொரு பல்லவியென்
உள்ளமாம் வீணைதனில் உள்ளவீ டத்தனையும்
விள்ள ஒலிப்பதால் வேறொர் ஒலியில்லை
சித்தம் மயங்கி திகைப்பொடுநான் நின்றிடவும்
அத்தருண தேபறவை யத்தனையு தாந்திரும்பி
சோலை கிளையிலெலா தோன்றி யொலித்தனவால்
நீல குயிலும் நெடிதுயிர்த்தாங் கிஃதுரைக்கும்
காதல் வழிதான் கரடுமுர டாமென்பார்
சோதி திருவிழியீர் துன்ப கடலினிலே
நல்லுதுறுதி கொண்டதோர் நாவாய்போல் வந்திட்டீர்
அல்லலற நும்மோ டளவாளாய் நான்பெறுமிவ்
வின்ப தினுக்கும் இடையூறு மூண்டதுவே
அன்பொடு நீரிங்கே அடுத்தநான் காநாளில்
வந்தருளல் வேண்டும் மறவாதீர் மேற்குலத்தீர்
சிந்தை பறிகொண்டு செல்கின்றீர் வாரீரேல்
ஆவி தரியேன் அறிந்திடுவீர் நான் காநாள்
பாவியந்த நான்குநாள் பத்துயுகமா கழிப்பேன்
சென்று வருவீர் என்சிந்தை கொடுபோகின்றீர்
சென்று வருவீர் என தேறா பெருந்துயரங்
கொண்டு சிறுகுயிருங் கூறி மறைந்ததுகாண்

காதலோ காதல்

கண்டதொரு காட்சி கனவுநன வென்றறியேன்
எண்ணுதலுஞ் செய்யேன் இருபதுபேய் கொண்டவன்போல்
கண்ணும் முகமும் களியேறி காமனார்
அம்பு நுனிகள் அகத்தே அமிழ்ந்திருக்க
கொம்பு குயிலுருவங் கோடிபல கோடியாய்
ஒன்றே யாதுவாய் உலகமெலா தோற்றமுற
சென்றே மனைபோந்து சித்த தனதின்றி
நாளொன்று போவதற்கு நான்பட்ட பாடனைத்தும்
தாளம் படுமோ தறுபடுமோ யார் படுவார்
நாளொன்று போயினது நானு மெனதுயிரும்
நீளச்சிலை கொண்டு நின்றதொரு மன்மதனும்
மா குயிலுமதன் மாமா தீம்பாட்டும்
சாயைபோ லிந்திரமா சாலம்போல் வையமுமா
மிஞ்சி நின்றோம் ஆங்கு மறுநாள் விடிந்தவுடன்
வஞ்சனை நான் கூறவில்லை மன்மதனார் விந்தையால்
புத்திமனஞ் சித்தம் புலனொன் றறியாமல்
வித்தைசெயுஞ் சூத்திரத்தின் மேவுமொரு பொம்மை யென
காலிரண்டுங் கொண்டு கடுகவுநான் சோலையிலே
நீலிதனை காண வந்தேன் நீண்ட வழியினிலே
நின்றபொருள் கண்ட நினைவில்லை சோலையிடை
சென்றுநான் பார்க்கையிலே செஞ்ஞாயிற் றொண்கதிரால்
பச்சைமர மெல்லாம் பளபளென என்னுளத்தின்
இச்சை யுணர்ந்தனபோல் ஈண்டும் பறவையெல்லாம்
வேறெங்கோ போயிருப்ப வெம்மை கொடுங்காதல்
மீறலெனை தான்புரிந்த விந்தை சிறுகுயிலை
காணநான் வேண்டி கரைகடந்த வேட்கையுடன்
கோணமெலாஞ் சுற்றிமர கொம்பையெலாம் நோக்கி வந்தேன்

குயிலும் குரங்கும்

மற்றைநா கண்ட மரத்தே குயிலில்லை
சுற்றுமுற்றும் பார்த்தும் துடித்து வருகையிலே
வஞ்சனையே பெண்மையே மன்மதனாம் பொய்த்தேவே
நெஞ்சகமே தொல்விதியின் நீதியே பாழுலகே
கண்ணாலே நான்கண்ட காட்சிதனை என்னுரைப்பேன்
பெண்ணால் அறிவிழக்கும் பித்தரெலாங் கேண்மினோ
காதலை போற்றுங் கவிஞரெலாங் கேண்மினோ
மாதரெலாங் கேண்மினோ வல்விதியே கேளாய் நீ
மா குயிலோர் மரக்கிளையின் வீற்றிருந்தே
பாயும் விழி நீர் பதைக்குஞ் சிறியபுடல்
விம்மி பரிந்து சொலும் வெந்துயர்ச்சொல் கொண்டதுவாய்
அம்மவோ மற்றாங்கோர் ஆண்குரங்கு தன்னுடனே
ஏதேதோ கூறி இரங்கும் நிலைகண்டேன்
தீதேது நன்றேது செய்கை தெளிவேது
அந்த கணமே அதையுங் குரங்கினையும்
சிந்த கருதி உடைவாளிற் கைசேர்த்தேன்
கொன்றுவிடு முன்னே குயிலுரைக்கும் வார்த்தைகளை
நின்று சற்றே கேட்பதற்கென் நெஞ்சம் விரும்பிடவும்
ஆங்கவற்றின் கண்ணில் அகப்படா வாறாருகே
ஓங்கு மரத்தின்பால் ஒளிந்துநின்று கேட்கையிலே
பேடை குயிலிதனை பேசியது வானரரே
ஈடறியா மேன்மையழ கேய்ந்தவரே பெண்மைதான்
எப்பிறப்பு கொண்டாலும் ஏந்தலே நின்னழகை
தப்புமோ மையல் தடுக்கு தரமாமோ
மண்ணிலுயிர கெல்லா தலைவரென மானிடரே
எண்ணிநின்றார் தம்மை எனிலொருகால் ஊர்வகுத்தல்
கோயில் அரசு குடிவகுப்பு போன்ற சில
வாயிலிலே அந்த மனிதர் உயர்வெனலாம்
மேனி யழகினிலும் விண்டுரைக்கும் வார்த்தையிலும்
கூனி யிருக்கும் கொலுநேர்த்தி தன்னிலுமே
வானரர்தஞ் சாதிக்கு மாந்தர் நிக ராவாரோ
ஆன வரையும் அவர் முயன்று பார்த்தாலும்
பட்டுமயிர் மூடப்படாத தமதுடலை
எட்டுடையால் மூடி எதிருமக்கு வந்தாலும்
மீசையையும் தாடியையும் விந்தைசெய்து வானரர்தம்
ஆசை முகத்தினை போல லாக்க முயன்றிடினும்
ஆடி குதிக்கும் அழகிலுமை நேர்வதற்கே
கூடி குதிக்கும் குதித்தாலும் கோபுரத்தில்
ஏற தெரியாமல் ஏணி வைத்து சென்றாலும்
வேறெத்தை செய்தாலும் வேகமுற பாய்வதிலே
வானரர்போ லாவரோ வாலுக்கு போவதெங்கே
ஈனமுறுங் கச்சை இதற்கு நிகராமோ
பாகையிலே வாலிருக்க பார்த்ததுண்டு கந்தைபோல்
வேகமுற தாவுகையில் வீசி எழுவதற்கே
தெய்வங் கொடுத்த திருவாலை போலாமோ
சைவசுத்த போசனமும் சாதுரி பார்வைகளும்
வானரர் போற் சாதியொன்று மண்ணுலகின் மீதுளதோ
வானரர் தம்முள்ளே மணிபோல் உமையடைந்தேன்
பிச்சை பறவை பிறப்பிலே தோன்றிடினும்
நிச்சயமா முன்புரிந்த நே தவங்களினால்
தேவரீர் காதல்பெறுஞ் சீர்த்தி கொண்டேன் தம்மிடத்தே
ஆவலினாற் பாடுகின்றேன் ஆரியரே கேட்டருள்வீர்
வானர பேச்சினிலே மைக்குயிலி பேசியதை
யானறிந்து கொண்டுவிட்டேன் யாதோ ஒரு திறத்தால்
காதல்
காதல் போயிற்
சாதல்
முதலியன குயிலின் பாட்டு
நீசக்குயிலும் நெருப்பு சுவைக்குரலில்
ஆசை ததும்பி அமுதூற பாடியதே
காட்டின் விலங்கறியும் கைக்குழந்தை தானறியும்
பாட்டின் சுவையதனை பாம்பறியும் என்றுரைப்பார்
வற்றற் குரங்கு மதிமயங்கி கள்ளினிலே
முற்றும் வெறிபோல் முழுவெறிகொண் டாங்ஙனே
தாவி குதிப்பதுவு தாளங்கள் போடுவதும்
ஆவி யுருகுதடி ஆஹா ஹா என்பதுவும்
கண்ணை சிமிட்டுவதும் காலாலுங் கையாலும்
மண்ணை பிறாண்டியெங்கும் வாரியிறைப்பதுவும்
ஆசை குயிலே அரும் பொருளே தெய்வதமே
பேச முடியா பெருங்காதல் கொண்டுவிட்டேன்
காதலில்லை யானாற் கணத்திலே சாதலென்றாய்
காதலினாற் சாகுங் கதியினிலே தன்னை வைத்தாய்
எப்பொழுதும் நின்னை இனிப்பிரிவ தாற்றுகிலேன்
இப்போதே நின்னை முத்தமிட்டு களியுறுவேன்
என்றுபல பேசுவதும் என்னுயிரை புண்செயவே
கொன்றுவிட எண்ணி குரங்கின்மேல் வீசினேன்
கைவாளை யாங்கே கனவோ நனவுகொலோ
தெய்வ வலியோ சிறு குரங்கென் வாளுக்கு
தப்பி முகஞ்சுளித்து தாவி யொளித்திடவும்
ஒப்பிலா மா தொருகுயிலு தான்மறைய
சோலை பறவை தொகைதொகையா தாமொலிக்க
மேலை செயலறியா வெள்ளறிவிற் பேதையேன்
தட்டு தடுமாறி சார்பனைத்து தேடியுமே
குட்டி பிசாச குயிலையெங்கும் காணவில்லை

இருளும் ஒளியும்

வான நடுவிலே மாட்சியுற ஞாயிறுதான்
மோனவொளி சூழ்ந்திடவும் மொய்ம்பிற் கொலுவிருந்தான்
மெய்யெல்லாஞ் சோர்வு விழியில் மயக்கமுற
உய்யும் வழியுணரா துள்ளம் பதைபதைக்க
நாணு துயரும் நலிவுறுத்த நான்மீண்டு
பேணும்மனை வந்தேன் பிரக்கினைபோய் வீழ்ந்துவிட்டேன்
மாலையிலே மூர்ச்சைநிலை மாறி தெளிவடைந்தேன்
நாலுபுறமுமெனை நண்பர் வந்து சூழ்ந்துநின்றார்
ஏனடா மூர்ச்சையுற்றாய் எங்கு சென்றாய் ஏது செய்தாய்
வானம் வெளிறுமுன்னே வைகறையி லேதனித்து
சென்றனை என்கின்றார செய்தி என்னே ஊணின்றி
நின்றதென்னே என்று நெரித்துவிட்டார் கேள்விகளை
இன்னார கிதுசொல்வ தென்று தெரியாமல்
என்னாற் பலவுரைத்தல் இப்பொழுது கூடாதாம்
நாளை வருவீரேல் நடந்ததெலாஞ் சொல்வேன் இவ்
வேளை எனைத்தனியே விட்டகல்வீர் என்றுரைத்தேன்
நண்பரெல்லாஞ் சென்றுவிட்டார் நைந்துநின்ற தாயார்தாம்
உண்பதற்கு பண்டம் உதவிநல்ல பால்கொணர்ந்தார்
சற்று விடாய்தீர்ந்து தனியே படுத்திருந்தேன்
முற்றும் மறந்து முமுத்துயிலில் ஆழ்ந்து விட்டேன்
பண்டு நடந்ததனை பாடுகின்ற இப்பொழுதும்
மண்டு துயரரெனது மார்பை யெலாங் கவ்வுவதே
ஓடி தவறி உடையனவாம் சொற்களெலாம்
கூடி மதியிற் குவிந்திடுமாம் செய்தியெலாம்
நாச கதையை நடுவே நிறுத்திவிட்டு
பேசு மிடை பொருளின் பின்னே மதிபோக்கி
கற்பனையும் வர்ணனையுங் காட்டி கதைவளர்க்கும்
விற்பனர்தஞ் செய்கை விதமு தெரிகிலன்யான்
மேலை கதையுரைக்க வெள்கி குலையுமனம்
காரை கதிரழகின் கற்பனைகள் பாடுகிறேன்
தங்க முருக்கி தழல் கறைத்து தேனாக்கி
எங்கும் பரப்பியதோர் இங்கிதமோ வான்வெளியை
சோதி கவர்ந்து சுடர்மயமாம் விந்தையினை
ஓதி புகழ்வார் உவமையொன்று காண்பாரோ
கண்ணையினி தென்றுரைப்பார் கண்ணுக்கு கண்ணாகி
விண்ணை அளக்கும்மொளி மேம்படுமோர் இன்பமன்றோ
மூல தனிப்பொருளை மோனத்தே சிந்தை செய்யும்
மேலவரும் அஃதோர் விரியுமொளி என்பாரேல்
நல்லொளிக்கு வேறுபொருள் ஞாலமிசை யொ புளதோ
புல்லை நகையுறுத்தி பூவை வியப்பாக்கி
மண்ணை தெளிவாக்கி நீரில் மலர்ச்சி தந்து
விண்ணை வெளியாக்கி விந்தைசெயுஞ் சோதியினை
காலை பொழுதினிலே கண்விழித்து நான்தொழுதேன்
நாலு புறத்துமுயிர் நாதங்க ளோங்கிடவும்
இன்ப களியில் இயங்கும் புவிகண்டேன்
துன்ப கதையின் தொடருரைப்பேன் கேளீரோ

குயிலும் மாடும்

காலை துயிலெழுந்து காலிரண்டு முன்போலே
சோலை கிழுத்திட நான் சொந்தவுணர் வில்லாமே
சோலையினில் வந்துநின்று சுற்றுமுற்று தேடினேன்
கோல பறவைகளின் கூட்டமெலாங் காணவில்லை
மூலையிலோர் மாமரத்தின் மோட்டு கிளியினிலே
நீல குயிலிருந்து நீண்ட கதை சொல்லுவதும்
கீழே யிருந்தோர் கிழக்காளை மாடதனை
ஆழ மதியுடனே ஆவலுற கேட்பதுவும்
கண்டேன் வெகுண்டேன் கலக்கமுற்றேன் நெஞ்சிலனல்
கொண்டேன் குமைந்தேன் குமுறினேன் மெய்வெயர்த்தேன்
கொல்லவாள் வீசல் குறித்தேன் பொய்ப்பறவை
சொல்லுமொழி கேட்டதன்பின் கொல்லுதலே சூழ்ச்சி யென
முன்போல் மறைந்துநின்றேன் மோக பழங்கதையை
பொன்போற் குரலும் புதுமின்போல் வார்த்தைகளும்
கொண்டு குயிலாங்கே கூறுவதாம் நந்தியே
பெண்டிர் மனத்தை பிடித்திழுக்கும் காந்தமே
காமனே மாடா காட்சிதரும் மூர்த்தியே
பூமியிலே மாடுபோற் பொற்புடைய சாதியுண்டோ
மானுடரு தம்முள் வலிமிகுந்த மைந்தர் தமை
மேனுயுறுங் காளையென்று மேம்பா டுறப்புகழ்வார்
காளையர்தம் முள்ளே கனமிகுந்தீர் ஆரியரே
நீள முகமும் நிமிர்ந்திருக்கும் கொம்புகளும்
பஞ்சு பொதிபோல் படர்ந்த திருவடிவும்
மிஞ்சு புறச்சுமையும் வீர திருவாலும்
வான திடிபோல மாவென் றுறுமுவதும்
ஈன பறவை முதுகின்மிசை ஏறிவிட்டால்
வாலை குழைத்து வளைத்தடிக்கும் நேர்மையும் பல்
காலம்நான் கண்டு கடுமோக மெய்திவிட்டேன்
பார வடிவும் பயிலு முடல்வலியும்
தீர நடையும் சிறப்புமே இல்லாத
சல்லி துளிப்பறவை சாதியிலே நான் பிறந்தேன்
அல்லும் பகலுநிதம் அற்ப வயிற்றினுக்கே
காடெல்லாஞ் சுற்றிவந்து காற்றிலே எற்றுண்டு
மூட மனிதர் முடைவயிற்று கோருணவாம்
சின்ன குயிலின் சிறுகுலத்தி லேதோன்றி
என்னபயன் பெற்றேன் என்னை போலோர் பாவியுண்டோ
சேற்றிலே தாமரையும் சீழுடைய மீன் வயிற்றில்
போற்றுமொளி முத்தும் புறப்படுதல் கேட்டிலிரோ
நீச பிறப்பொருவர் நெஞ்சிலே தோன்றிவரும்
ஆசை தடுக்கவல்ல தாகுமோ காமனுக்கே
சாதி பிறப்பு தராதரங்கள் தோன்றிடுமோ
வாதித்து பேச்சை வளர்த்தோர் பயனுமில்லை
மூடமதியாலோ முன்னை தவத்தாலோ
ஆடவர்தம் முள்ளே அடியாளுமை தெரிந்தேன்
மானுடராம் பேய்கள் வயிற்றுக்கு சோறிடவும்
கூனர்தமை ஊர்களிலே கொண்டு விடுவதற்கும்
தெய்வமென நீருதவி செய்தபின்னர் மேனிவிடாய்
எய்தி யிருக்க மிடையினிலே பாவியேன்
வந்துமது காதில் மதுரவிசை பாடுவேன்
வந்து முதுகில் ஒதுங்கி படுத்திருப்பேன்
வாலிலடி பட்டு மனமகிழ்வேன் மா வென்றே
ஒலிடுநும் பேரொலியோ டொன்றுபட கத்துவேன்
மேனியுளே உண்ணிகளை மேவாது கொன்றிடுவேன்
கானிடையே சுற்றி கழனியெலாம் மேய்ந்து நீர்
மிக்கவுண வுண்டுவாய் மென்றசைதான் போடுகையில்
பக்கத்திருந்து பலகதைகள் சொல்லிடுவேன்
காளை யெருதரே காட்டிலுயர் வீரரே
தாளை சரணடைந்தேன் தையலெனை காத்தருள்வீர்
காதலுற்று வாடுகின்றேன் காதலுற்ற செய்தியினை
மாத ருரைத்தல் வழக்கமில்லை என்றறிவேன்
ஆனாலும் என்போல் அபூர்வமாங் காதல் கொண்டால்
தானா வுரைத்தலின்றி சாரும் வழியுளதோ
ஒத்த குலத்தவர்பால் உண்டாகும் வெட்கமெலாம்
இத்தரையில் மேலோர்முன் ஏழையர்க்கு நாணமுண்டோ
தேவர் முன்னே அன்புரைக்க சிந்தை வெட்கங் கொள்வ துண்டோ
காவலர்க்கு தங்குறைகள் காட்டாரோ கீழடியார்
ஆசைதான் வெட்கம் அறியுமோ என்றுபல
நேசவுரை கூறி நெடிதுயிர்த்து பொய்க்குயிலி
பண்டுபோ லேதனது பாழடைந்த பொய்ப்பாட்டை
எண்டிசையும் இன்ப களியேற பாடியதே
காதல்
காதல் போயிற்
சாதல்
முதலியன குயிலின் பாட்டு
பாட்டு முடியும்வரை பாரறியேன் விண்ணறியேன்
கோட்டு பெருமரங்கள் கூடிநின்ற காவறியேன்
தன்னை யறியேன் தனைப்போல் எருதறியேன்
பொன்னை நிகர்த்தகுரல் பொங்கிவரும் இன்பமொன்றே
கண்டேன் படைப்பு கடவுளே நான் முகனே
பண்டே யுலகு படைத்தனைநீ என்கின்றார்
நீரை படைத்து நிலத்தை திரட்டி வைத்தாய்
நீரை பழைய நெருப்பிற் குளிர்வித்தாய்
காற்றைமுன்னே ஊதினாய் காணரிய வானவெளி
தோற்றுவித்தாய் நின்றன் தொழில்வலிமை யாரறிவார்
உள்ளந்தான் கவ்வ ஒருசிறிதுங் கூடாத
கொள்ளை பெரியவுரு கொண்ட பலகோடி
வட்ட வுருளைகள் போல் வானத்தில் அண்டங்கள்
எட்ட நிரப்பியவை எப்போதும் ஓட்டுகின்றாய்
எல்லா மசைவில் இருப்பதற்கே சக்திகளை
பொல்லா பிரமா புகுத்திவிட்டாய் அம்மாவோ
காலம் படைத்தாய் கடப்பதிலா திக்கமைத்தாய்
ஞாலம் பலவினிலும் நாடோ று தாம்பிறந்து
தோன்றி மறையும் தொடர்பா பல அனந்தம்
சான்ற உயிர்கள் சமைத்துவிட்டாய் நான்முகனே
சால மிகப்பெரிய சாதனைகாண் இஃதெல்லாம்
தாலமிசை நின்றன் சமர்த்துரைக்க வல்லார் யார்
ஆனாலும் நின்றன் அதிசயங்கள் யாவினுமே
கானா முதம்படைத்த காட்சிமிக விந்தையடா
காட்டுநெடு வானம் கடலெல்லாம் விந்தையெனில்
பாட்டினைப்போல் ஆச்சரியம் பாரின்மிசை இல்லையடா
பூதங்க ளொத்து புதுமைதரல் விந்தையெனில்
நாதங்கள் நேரும் நயத்தினுக்கு நேராமோ
ஆசைதருங் கோடி அதிசயங்கள் கண்டதிலே
ஓசைதரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ
செத்தை குயில்புரிந்த தெய்விகத்தீம் பாட்டெனுமோர்
வித்தை முடிந்தவுடன் மீட்டுமறி வெய்திநான்
கையினில் வாயெடுத்து காளையின் மேல் வீசினேன்
மெய்யிற் படுமுன் விரைந்துததுதான் ஓடிவிட
வன்ன குயில்மறைய மற்றை பறவையெலாம்
முன்னைப்போற் கொம்பு முனைகளிலே வந்தொலிக்க
நாணமில்லா காதல்கொண்ட நானுஞ் சிறுகுயிலை
வீணிலே தேடியபின் வீடுவந்து சேர்ந்துவிட்டேன்

எண்ணியெண்ணி பார்த்தேன் எதுவும் விளங்கவில்லை
கண்ணிலே நீர்ததும்ப கான குயிலெனக்கே
காதற் கதையுரைத்து நெஞ்சங் கதைத்ததையும்
பேதைநா னங்கு பெரியமயல் கொண்டதையும்
இன்ப கதையின் இடையே தடையாக
புன்பறவை யெல்லாம் புகுந்த வியப்பினையும்
ஒன்றை பொருள்செய்யா உள்ளத்தை காமவனல்
தின்றெனது சித்தம் திகைப்புறவே செய்ததையும்
சொற்றை குரங்கும் தொழுமாடும் வந்தெனக்கு
முற்றும் வயிரிகளா மூண்ட கொடுமையையும்
இத்தனைகோ லத்தினுக்கு யான்வேட்கை தீராமல்
பித்தம் பிடித்த பெரிய கொடுமையையும்
எண்ணியெண்ணி பார்த்தேன் எதுவும் விளங்கவில்லை
கண்ணிரண்டும் மூட கடுந்துயிலில் ஆழ்ந்துவிட்டேன்

நான்காம் நாள்

நான் காம்நாள் என்னை நயவஞ் சனைபுரிந்து
வான்காதல் காட்டி மயக்கி சதிசெய்த
பொய்ம்மை குயிலென்னை போந்திடவே கூறியநாள்
மெய்ம்மை யறிவிழந்தேன் வீட்டிலே மாடமிசை
சி திகைப்புற்றோர் செய்கை யறியாமல்
எத்து குயிலென்னை எய்துவித்த தாழ சியெலாம்
மீட்டும் நினைத்தங்கு வீற்றிருக்கும் போழ்தினிலே
காட்டு திசையினிலென் கண்ணிரண்டும் நாடியவால்
வானத்தே ஆங்கோர் கரும்பறவை வந்திடவும்
யானதனை கண்டே இது நமது பொய்க்குயிலோ
என்று திகைத்தேன் இருந்தொலைக்கே நின்றதனால்
நன்று வடிவம் துலங்கவில்லை நாடுமனம்
ஆங்கதனை விட்டு பிரிவதற்கு மாக வில்லை
ஓங்கு திகைப்பில் உயர்மாடம் விட்டுநான்
வீதியிலே வந்துநின்றேன் மேற்றிசையில் அவ்வுருவம்
சோதி கடலிலே தோன்றுகரும் புள்ளியென
காணுதலும் சற்றே கடுகி யருகே போய்
நாணமிலா பொய்க்குயிலோ என்பதனை நன்கறிவோம்
என்ற கருத்துடனே யான்விரைந்து சென்றிடுங்கால்
நின்ற பறவையுந்தான் நேராக போயினதால்
யான் நின்றால் தான்நிற்கும் சென்றால் தான்செல்லும்
மேனிநன்கு தோன்ற அருகினிலே மேவாது
வானி லதுதான் வழிகாட்டி சென்றிடவும்
யான்நிலத்தே சென்றேன் இறுதியில் முன்புநாம்
கூறியுள்ள மாஞ்சோலை தன்னை குறுகியந்த
ஊரிலா புள்ளுமத னுள்ளே மறைந்ததுவால்
மாஞ்சோலை குள்ளே மதியிலிநான் சென்றாங்கே
ஆஞ்சோதி வெள்ளம் அலையுமொரு கொம்பரின்மேல்
சின்ன கருங்கயிலி செவ்வனே வீற்றிருந்து
பொன்னங்குழலின் புதிய ஒளிதனிலே
பண்டை பொய்க்காதற் பழம்பாட்டை தாம்பாடி
கொண்டிருத்தல் கண்டேன் குமைந்தேன் எதிரேபோய்
நீச குயிலே நிலையறியா பொய்ம்மையே
ஆசை குரங்கினையும் அன்பார் எருதினையும்
எண்ணிநீ பாடும் இழிந்த புலைப்பாட்டை
நண்ணியிங்கு கேட்க நடத்திவந்தாய் போலுமெனை
என்று சினம்பெருகி ஏதேதோ சொல்லுரைத்தேன்
கொன்றுவிட நெஞ்சிற் குறித்தேன் மறுபடியும்
நெஞ்ச மிளகி நிறுத்திவிட்டேன் ஈங்கிதற்குள்
வஞ்ச குயிலி மனத்தை இரும்பாக்கி
கண்ணிலே பொய்ந்நீர் கடகடவென தானூற்ற
பண்ணிசைபோ லின்குரலாற் பரவியது கூறிடுமால்
ஐயனே என்னுயிரின் ஆசையே ஏழையெனை
வையமிசை வைக்க திருவுளமோ மற்றெனையே
கொன்றுவிட சித்தமோ கூறீர் ஒருமொழியில்
அன்றிற் சிறுபறவை ஆண்பிரிய வாழாது
ஞாயிறுதான் வெம்மைசெயில் நாண்மலக்கு வாழ்வுளதோ
தாயிருந்து கொன்றால் சரண்மதலை கொன்றுளதோ
தேவர் சினந்துவிட்டால் சிற்றுயிர்கள் என்னாகும்
ஆவற் பொருளே அரசே என் ஆரியரே
சிந்தையில் நீர் என்மேற் சினங்கொண்டால் மாய்ந்திடுவேன்
வெந்தழலில் வீழ்வேன் விலங்குகளின் வாய்ப்படுவேன்
குற்றம்நீர் என்மேற்கொணர்ந்ததனை யானறிவேன்
குற்றநுமை கூறுகிலேன் குற்றமிலேன் யானம்ம
புன்மை குரங்கை பொதிமாட்டை நான்கண்டு
மென்மையுற காதல் விளையாடி னேன்என்றீர்
என்சொல்கேன் எங்ஙனுய்வேன் ஏதுசெய்கேன் ஐயனே
நின்சொல் மறக்க நெறியில்லை ஆயிடினும்
என்மேல் பிழையில்லை யாரிதனை நம்பிடுவார்
நின்மேல் சுமைமுழுதும் நேராக போட்டுவிட்டேன்
வெவ்விதியே நீ என்னை மேம்பாடுற செய்து
செவ்விதினிங் கென்னை என்றன் வேந்தனொடு சேர்த்திடினும்
அல்லாதென் வார்த்தை அவர்சிறிதும் நம்பாமே
புல்லாக எண்ணி புறக்கணித்து போய்விட நான்
அக்கணத்தே தீயில் அழிந்துவிழ நேரிடினும்
எக்கதிக்கும் ஆளாவேன் என்செய்கேன் வெவ்விதியே

குயில் தனது பூர்வ ஜன கதையுரைத்தல்

தேவனே என்னருமை செல்வமே என்னுயிரே
போவதன் முன்னொன்று புகல்வதனை கேட்டருள் வீர்
முன்னம்ஒருநாள் முடிநீள் பொதியமலை
தன்னருகே நானும் தனியேயோர் சோலைதனில்
தாங்கிளையி லேதோ மனதிலெண்ணி வீற்றிருந்தேன்
ஆங்குவந்தார் ஓர் முனிவர் ஆரோ பெரியரென்று
பாதத்தில் வீழ்ந்து பரவினேன் ஐயரெனை
ஆதரித்து வாழ்த்தி அருளினார் மற்றதன்பின்
வேத முனிவரே மேதினியில் கீழ்ப்பறவை
சாதியிலே நான் பிறந்தேன் சாதி குயில்களைப்போல்
இல்லாமல் என்றன் இயற்கை பிரிவாகி
எல்லாம் மொழியும் எனக்கு விளங்குவதேன்
மானுடர்போல் சித்தநிலை வாயித்திருக்குஞ் செய்தியேன்
யானுணர சொல்வீர் என வணங்கி கேட்கையிலே
கூறுகின்றாய் ஐயர் குயிலே கேள் முற்பிறப்பில்
வீறுடைய வெந்தொழிலார் வேடர் குலத்தலைவன்
வீர முருகனென்னும் வேடன் மகளாக
சேர வளநாட்டில் தென்புறத்தே ஓர்மலையில்
வந்து பிறந்து வள்ர்ந்தாய் நீ நல்லிளமை
முந்து மழகினிலே மூன்றுதமிழ் நாட்டில்
யாரும் நினக்கோர் இணையில்லை என்றிடவே
சீருயர நின்றாய் செழுங்கான வேடரிலுன்
மாமன் மகனொருவன் மாடனெனும் பேர்கொண்டான்
காமன் கணைக்கிரையாய் நின்னழகை கண்டுருகி
நின்னை மணக்க நெடுநாள் விரும்பி அவன்
பொன்னை மலரை புதுத்தேனை கொண்டுனக்கு
நித்தம் கொடுத்து நினைவெல்லாம் நீயாக
சித்தம் வருந்துகையில் தேமொழியே நீயவனை
மாலையிட வாக்களித்தாய் மையலினா லில்லை அவன்
சால வருந்தல் சகிக்காமல் சொல்லிவிட்டாய்
ஆயிழையே நின்றன் அழகின் பெருங்கீர்த்தி
தேயமெங்கு தான்பரவ தேனமலையின் சார்பினிலோர்
வேடர்கோன் செல்வமும் நல் வீரமுமே தானுடையான்
நாடனைத்தும் அஞ்சி நடுங்குஞ் செயலுடையான்
மொட்டை புலியனுந்தன் முத்த மகனான
நெட்டை குரங்கனுக்கு நேரான பெண்வேண்டி
நின்னை மணம் புரிய நிச்சயித்து நின்னப்பன்
தன்னை யணுகி நின்னேர் தையலையென் பிள்ளைக்கு
கண்ணாலஞ் செய்யும் கருத்துடையேன் என்றிடலும்
எண்ணா பெருமகிழ்ச்சி எய்தியே நின்தந்தை
ஆங்கே உடம்பட்டான் ஆறிரண்டு நாட்களிலே
பாங்கா மணம்புரி தாமுறுதி பண்ணிவிட்டார்
பன்னிரண்டு நாட்களிலே பாவையுனை தேன்மலையில்
அன்னியன்கொண் டேகிடுவான் என்னும் அதுகேட்டு
மாடன் மனம்புகைந்து மற்றைநாள் உன்னை வந்து
நாடி சினத்துடனே நானா மொழிகூற
நீயும் அவனிடத்தே நீண்ட கருணையினால்
காயுஞ் சினந்தவிர்ப்பாய் மாடா கடுமையினால்
நெட்டை குரங்கனுக்கு பெண்டாக நேர்ந்தாலும்
கட்டு படிஅவர்தங் காவலிற்போய் வாழ்ந்தாலும்
மாதமொரு மூன்றில் மருமம் சிலவெய்து
பேதம் விளைவித்து பின்னிங்கே வந்திடுவேன்
தாலிதனை மீட்டுமவர் தங்களிடமே கொடுத்து
நாலிரண்டு மாதத்தே நாயகனா நின்றனையே
பெற்றிடுவேன் நின்னிடத்தே பேச்சு தவறுவனோ
மற்றிதனை நம்பிடுவாய் மாடப்பா என்றுரைத்தாய்
காதலினா லில்லை கருணையினால் இஃதுரைத்தாய்
மாதரசாய் வேடன் மகளான முற்பிறப்பில்
சின்ன குயிலியென்று செப்பிடுவார் நின்நாமம்
பின்னர சிலதினங்கள் சென்றதன்பின் பெண்குயிலி
நின்னொத்த தோழியரும் நீயுமொரு மாலையிலே
மின்னற் கொடிகள் விளையாடு தல்போலே
காட்டி னிடையே களித்தாடி நிற்கையிலே
வேட்டை கெனவந்தான் வெல்வேந்தன் சேரமான்
தன்னருமை மைந்தன் தனியே துணைபிரிந்து
மன்னவன்றன் மைந்தனொரு மானை தொடர்ந்துவர
தோழியரும் நீயும் தொகுத்துநின்றே ஆடுவதை
வாழியவன் கண்டுவிட்டான் மையல் கரைகடந்து
நின்னை தனக்காக நிச்சயித்தான் மாது நீ
மன்னவனை கண்டவுடன் மாமோகங் கொண்டுவிட்டாய்
நின்னையவன் நோக்கினான் நீயவனை நோக்கி நின்றாய்
அன்னதொரு நோக்கினிலே ஆவி கலந்துவிட்டீர்
தோழியரும் வேந்தன் சுடர்க்கோல தான்கண்டே
ஆழியரசன் அரும்புதல்வன் போலு மென்றே
அஞ்சி மறைத்து விட்டார் ஆங்கவனும் நின்னிடத்தே
வஞ்சி தலைவன் மகன்யான் எனவுரைத்து
வேடர் தவமகளே விந்தை யழகுடையாய்
ஆடவனா தோன்றி யதன்பயனை இன்று பெற்றேன்
கண்டதுமே நின்மிசைநான் காதல்கொண்டேன் என்றிசைக்க
மண்டு பெருங்காதல் மனத்தடக்கி நீ மொழிவாய்
ஐயனே உங்கள் அரமனையில் ஐந்நூறு
தையலருண் டாம் அழகில் தன்னிகரில் லாதவராம்
கல்வி தெரிந்தவராம் கல்லுருக பாடுவராம்
அன்னவரை சேர்ந்தே நீர் அன்புடனே வாழ்ந்திருப்பீர்
மன்னவரே வேண்டேன் மலைக்குறவர் தம்மகள்யான்
கொல்லு மடற்சிங்கம் குழிமுயலை வேட்பதுண்டோ
வெல்லுதிறல்மாவேந்தர் வேடருள்ளோ பெண்ணெடுப்பார்
பத்தினியா வாழ்வதல்லாம் பார்வேந்தர் தாமெனினும்
நத்தி விரைமகளா நாங்கள்குடி போவதில்லை
பொன்னடியை போற்றுகின்றேன் போய் வருவீர் தோழியரும்
என்னைவிட்டு போயினரே என்செய்கேன் என்று நீ
நெஞ்சங் கலக்கமெய்தி நிற்கையிலே வேந்தன் மகன்
மிஞ்சுநின்றன் காதல் விழிக்குறிப்பி னாலறிந்தே
பக்கத்தில் வந்து பளிச்சென் றுனது கன்னஞ்
செக்க சிவக்க முத்தமிட்டான் சினங்காட்டி
நீ விலகி சென்றாய் நெறியேது சாமியர்க்கே
தாவி நின்னைவந்து தழுவினான் மார்பிறுக
நின்னையன்றி ஓர் பெண் நிலத்திலுண்டோ என்றனுக்கே
பொன்னை ஒளிர்மணியே புத்தமுதே இன்பமே
நீயே மனையாட்டி
நீயே துணை எனக்கு
நின்னையன்றி பெண்ணை நினைப்பேனொ வீணிலே
என்னை நீ ஐயுறுதல் ஏதுக்காம் இப்பொழுதே
நின்மனைக்கு சென்றிடுவோம் நின்வீட்டி லுள்ளோர்பால்
என்மனதை சொல்வேன் எனதுநிரை யுரைப்பேன்
வேத நெறியில் விவாகமுனை செய்துகொள்வேன்
மாதரசே என்று வல கைதட்டி வாக்களித்தான்
பூரிப்பு கொண்டாய் புளகம்நீ எய்திவிட்டாய்
வாரி பெருந்திரைபோல் வந்த மகிழ்ச்சியிலே
நாண தவிர்த்தாய் நனவே தவிர்ந்தவளாய்
காண தெவிட்டாதோர் இன்ப கனவிலே
சேர்ந்துவிட்டாய் மன்னன்றன் திண்டோ ளை நீயுவகை
ஆர்ந்து தழுவி அவனிதழில் தேன்பருக
சிந்தை கொண்டாய் வேந்தன் மகன் தேனில் விழும் வண்டினைப்போல்
விந்தையுறு காந்தமிசை வீழும் இரும்பினைப்போல்
ஆவலுடன் நின்னை யறக்தழுவி ஆங்குனது
கோவை யிதழ்பருகி கொண்டிருக்கும் வேளையிலே
சற்றுமுன்னே ஊரினின்று தான்வ திறங்கியவன்
மற்றுநீ வீட்டைவிட்டு மாதருடன் காட்டினிலே
கூத்தினுக்கு சென்றதனை கேட்டு குதூகலமாய்
ஆத்திரந்தான் மிஞ்சிநின்னை ஆங்கெய்தி காணவந்தோன்
நெட்டை குரங்கன் நெருங்கிவந்து பார்த்து விட்டான்
பட்ட பகலிலே பாவிமகள் செய்தியை பார்
கண்ணாலங் கூடஇன்னுங் கட்டி முடியவில்லை
மண்ணாக்கி விட்டாள் என்மானந்தொலைத்துவிட்டாள்
நிச்சய தாம்பூலம் நிலையா நட ந்திருக்க
பிச்சை சிறுக்கி செய்த பேதகத்தை பார்த்தாயோ
என்று மனதில் எழுகின்ற தீயுடனே
நின்று கலங்கினான் செட்டை குரங்கனங்கே
மாப்பிள்ளைதான் ஊருக்கு வந்ததையும் பெண்குயிலி
தோப்பிலே தானுந்தன் தோழிகளு மாச்சென்று
பாடி விளையாடும் பண்புகே டேகுரங்கன்
ஓடி யிருப்பதோர் உண்மையையும் மாடனிடம்
யாரோ உரைத்துவிட்டார் ஈரிரண்டு பாய்ச்சலிலே
நீரோடும் மேனி நெருப்போடுங் கண்ணுடனே
மாடனங்கு வந்துநின்றான் மற்றிதனை தேன்மலையின்
வேடர்கோன் மைந்தன் விழிகொண்டு பார்க்கவில்லை
நெட்டை குரங்கனங்கு நீண்ட மரம்போல
எட்டிநிற்குஞ் செய்தி இவன்பார்க்க நேரமில்லை
அன்னியனை பெண்குயிலி ஆர்ந்திருக்குஞ் செய்தியொன்று
தன்னையே இவ்விருவர் தாங்கண்டார் வேறறியார்
மாடனதை தான்கண்டான் மற்றவனும் அங்ஙனமே
மாடன் வெறிகொண்டான் மற்றுவனும் அவ்வாறே
காவலன்றன் மைந்தனு கன்னிகையும் தானுமங்கு
தேவசுகங் கொண்டு விழியே திறக்கவில்லை
ஆவி கலப்பின் அமுத சுகந்தனிலே
மேவியங்கு மூடி யிருந்த விழிநான்கு
ஆங்கவற்றை கண்டமையால் ஆவியிலே தீப்பற்றி
ஓங்கும் பொறிகள் உதிர்க்கும் விழிநான்கு
மாடனுந்தன் வாளுருவி மன்னவனை கொன்றிடவே
ஓடிவந்தான் நெட்டை குரங்கனும் வாளோங்கி வந்தான்
வெட்டிரண்டு வீழ்ந்தனகாண் வேந்தன் முதுகினிலே
சட்டெனவே மன்னவனும் தான்திரும்பி வாளுருவி
வீச்சிரண்டில் ஆங்கவரை வீழ்த்தினான் வீழ்ந்தவர்தாம்
பேச்சிழந்தே அங்கு பிணமா கிடந்துவிட்டார்
மன்னவனும் சோர்வெய்தி மண்மேல் விழுந்து விட்டான்
பின்னவனை நீயும் பெருந்துயர்கொண் டேமடியில்
வாரி யெடுத்துவைத்து வாய்புலம்ப கண்ணிரண்டும்
மாரி பொழிய மனமிழந்து நிற்கையிலே
கண்ணை விழித்துனது காவலனும் கூறுகின்றான்
பெண்ணே இனிநான் பிழைத்திடேன் சில்கணத்தே
ஆவி துறப்பேன் அழுதோர் பயனில்லை
சாவிலே துன்பமில்லை தையலே இன்னமும் நாம்
பூமியிலே தோன்றிடுவோம் பொன்னே நினைக்கண்டு
காமுறுவேன் நின்னை கலந்தினிது வாழ்ந்திடுவேன்
இன்னும் பிறவியுண்டு மாதரசே இன்பமுண்டு
நின்னுடன் வாழ்வினினி நேரும் பிறப்பினிலே
என்று சொல்லி கண்மூடி இன்பமுறு புன்னகைதான்
நின்று முகத்தே நிலவுதர மாண்டனன்காண்
மாடனிங்கு செய்ததோர் மாயத்தால் இப்பொழுது
பீடையுற புள்வடிவம் பேதையுன கெய்தியது
வாழி நின்றனன் மன்னவனும் தொண்டை வளநாட்டில்
ஆழி கரையின் அருகேயோர் பட்டினத்தில்
மானிடனா தோன்றி வளருகின்றான் நின்னையொர
கானிடத்தே காண்பான் கனிந்துநீ பாடும்நல்ல
பாட்டினைத்தான் கேட்பான் பழவினையின் கட்டினால்
மீட்டு நின்மேற் காதல்கொள்வான் மென்குயிலே என்றந
தென் பொதியை மாமுனிவர் செப்பினார் சாமீ
குயிலுருவங் கொண்டேன் யான் கோமானோ மென்மை
பயிலு மனிதவுரு பற்றிநின்றான் எம்முள்ளே
காதலிசை தாலுங் கடிமணந்தான் கூடாதாம்
சாதற் பொழுதிலே தார்வேந்தன் கூறியசொல்
பொய்யாய் முடியாயதோ என்றிசைத்தேன் புன்னகையில்
ஐயர் உரைப்பார் அடி பேதாய் இப்பிறவி
தன்னிலும் நீ விந்திகிரி சார்பினிலோர் வேடனுக்கு
கன்னியென தான் பிறந்தாய் கர்ம வசத்தினால்
மாடன் குரங்கன் இருவருமே வன்பேயா
காடுமலை சுற்றி வருகையிலே கண்டுகொண்டார்
நின்னையங்கே இப்பிறப்பில் நீயும் பழமைபோல்
மன்னனையே சேர்வையென்று தாஞ்சூழ்ந்து மற்றவரும்
நின்னை குயிலாக்கிநீ செல்லு திக்கிலெலாம்
நின்னுடனே சுற்றுகின்றார் நீயிதனை தேர்கிலையோ
என்றார் விதியே இறந்தவர்தாம் வாழ்வாரை
நின்று துயருறுத்தல் நீதியோ பேய்களெனை
பேதை படுத்தி பிறப்பை மறப்புறுத்தி
வாதை படுத்தி வருமாயில் யானெனது
காதலனை காணுங்கால் காய்சினத்தால் ஏதேனும்
தீதிழைத்தால் என்செய்வேன் தேவரே மற்றிதற் கோர்
மாற்றிலை யோ என்று மறுகி நான் கேட்கையிலே
தேற்றமுறு மாமுனிவர் செப்பு கின்றார் பெண்குயிலே
தொண்டைவள நாட்டிலோர் சோலையிலே வேந்தன்மகன்
கண்டுனது பாட்டில் கருத்திளகி காதல்கொண்டு
நேசம் மிகுதியுற்று நிற்கையிலே பேயிரண்டும்
மோசம் மிகுந்த முழுமா செய்கைபல
செய்துபல பொய்த்தோற்றங் காட்டி திறல் வேந்தன்
ஐயமுற செய்துவிடும் ஆங்கவனும் நின்றனையே
வஞ்சகியென் றெண்ணி மதிமருண்டு நின்மீது
வெஞ்சினந்தான் எய்திநினை விட்டுவிட நிச்சயிப்பான்
பிந்தி விளைவதெல்லாம் பின்னே நீ கண்டு கொள்வாய்
சந்தி ஜபம் செய்யுஞ் சமயமாய்விட்ட தென்றே
காற்றில் மறைந்து சென்றார் மாமுனிவர் காதலரே
மாற்றி உரைக்கவில்லை மாமுனிவர் சொன்னதெல்லாம்
அப்படியே சொல்லிவிட்டேன் ஐயா திருவுளத்தில்
எப்படிநீர் கொள்வீரோ யானறியேன் ஆரியரே
காத லருள்புரிவீர் காதலில்லை யென்றிடிலோ
சாத லருளி தமது கையால் கொன்றிடுவீர்
என்று குயிலும் எனதுகையில் வீழ்ந்ததுகாண்
கொன்றுவிட மனந்தான் கொள்ளுமோ பெண்ணென்றால்
பேயு மிரங்காதோ பேய்கள் இரக்கமின்றி
மாயமிழை தாலதனை மானிடனுங் கொள்ளுவதோ
காதலிலே ஐயம் கலந்தாலும் நிற்பதுண்டோ
மாதரன்பு கூறில் மனமிளகார் இங்குளரோ
அன்புடனே யானும் அருங்குயிலை கைக்கொண்டு
முன்புவைத்து நோக்கிபின் மூண்டுவதும் இன்பவெறி
கொண்டதனை முத்தமிட்டேன் கோகிலத்தை காணவில்லை
விண்டுரைக்க மாட்டாத விந்தையடா
ஆசை கடலின் அமுதமடா அற்புதத்தின்
தேசமடா பெண்மைதான் தெய்விகமாம் காட்சியடா
பெண்ணொருத்தி அங்குநின்றாள் பேருவகை கொண்டு தான்
கண்ணெடுக்காதென்னை கணப்பொழுது நோக்கினாள்
சற்றே தலைகுனிந்தாள் சாமீ இவளழகை
எற்றே தமிழில் இசைத்திடுவேன் கண்ணிரண்டும்
ஆளை விழுங்கும் அதிசயத்தை கூறுவனோ
மீன விழியில் மிதந்த கவிதையெலாம்
சொல்லில் அகப்படுமோ தூயசுடர் முத்தையொப்பாம்
பல்லில் கனியிதழில் பாய்ந்த நிலவினை யான்
என்றும் மறத்தல் இயலுமோ பாரின்மிசை
நின்றதொருமின் கொடிபோல் நேர்ந்தமனி பெண்ணரசின்
மேனி நலத்தினையும் வெட்டினையுங் கட்டினையும்
தேனி லினியாள் திருத்த நிலையினையும்
மற்றவர்க்கு சொல்ல வசமாமோ ஓர் வார்த்தை
கற்றவர்க்கு சொல்வேன் கவிதை கனிபிழிந்த
சாற்றினிலே பண்கூ தெனுமிவற்றின் சாரமெலாம்
ஏற்றி அதனோடே இன்னமுதை தான்கலந்து
காதல் வெயிலிலே காயவைத்த கட்டியினால்
மாதவளின் மேனி வகுத்தான் பிரமனென்பேன்
பெண்ணவளை கண்டு பெருங்களிகொண் டாங்ஙனே
நண்ணி தழுவி நறுங்கள் ளிதழினையே
முத்தமிட்டு மோக
சித்தம் மயங்கி சிலபோழ் திருந்த பின்னே
பக்க திருந்தமணி பாவையுடன் சோலையெலாம்
ஒக்க மறைந்திடலும் ஓஹோ எனக்கதறி
வீழ்ந்தேன் பிறகு விழிதிறந்து பார்க்கையிலே
சூழ்ந்திருக்கும் பண்டை சுவடி எழுதுகோல்
பத்திரிகை கூட்டம் பழம்பாய் வரிசையெல்லாம்
ஒத்திருக்க நாம் வீட்டில் உள்ளோம் எனவுணர்ந்தேன்
சோலை குயில் காதல் சொன்னகதை யத்தனையும்
மாலை யழகின் மயக்கத்தால் உள்ளத்தே
தோன்றியதோர் கற்கனையின் சூழ்ச்சியென்றே கண்டு கொண்டேன்
ஆன்ற தமிழ புலவீர் கற்பனையே யானாலும்
வேதாந்த மாக விரித்து பொருளுரைக்க
யாதானுஞ் சற்றே இடமிருந்தாற் கூறீரோ