கந்தர் அனுபூதி
அருணகிரி நாதர் அருளியது
காப்பு
நெஞ்ச கனகல்லு நெகிழ துருக
தஞ்ச தருள்சண் முகனு கியல்சேர்
செஞ்சொற் புனைமாலை சிற திடவே
பஞ்ச கரவானை பதம் பணிவாம்
நூல்
ஆடும் பணிவே லணிசே வலென
பாடும் பணிவே பணியா யருள்வாய்
தேடுங் கயமா முகனை செருவிற்
காடு தனியா னைசகோ தரனே
உல்லாச நிராகுல யோக வித
சல்லாப விநோதனு நீயலையோ
எல்லாமற என்னை யிழந்த நலஞ்
சொல்லாய் முருகா கரபூ பதியே
வானோ புனல்பார் கனல்மா ருதமோ
ஞானோ தயமோ நவில்நான் மறையோ
யானோ மனமோ எனையாண் டவிட
தானோ பொருளா வதுசண்முகனே
வளைபட்டகைம் மாதொடு மக்க ளெனு
தளைப டழி தகுமோ
கிளைப டெழுகு ருரமுங் கிரியு
தொளைப டுருவ தொடுவே லவனே
மகமாயை களைந்திட வல்ல பிரான்
முகமாறு மொழிந்து மொழி திலனே
அகமாடை மடந்தைய ரென் றயருஞ்
சகமாயையுள் நின்று தயங் குவதே
திணியா னமனோ சிலைமீ துனதாள்
அணியா ரரவிந்த மரும்பு மதோ
பணியா வென வள்ளி பதம் பணியு
தணியா வதிமோத தயா பரனே
கெடுவாய் மனனை கதிகேள் கரவா
திடுவாய் வடிவே லிறைதாள் நினைவாய்
சுடுவாய் நெடுவே தனைதூள் படவே
விடுவாய் வினையா வையுமே
அமரும் பதிதே ளகமா மெனுமி
பிமரங் கெட்மெ பொருள் பேசியவா
குமரன் கிரிராச குமாரி மகன்
சமரம் பொரு தானவ நாசகனே
மட்டூர்குழல் மங்கையர் மையல் வலை
பட்டூசல் படும் பரிசென் றொழிவேன்
தட்டூ டறவேல் சயில தெறியும்
திட்டூர நிராகுல நிர பயனே
கார்மா மிசைகா லன்வரிற் கலப
தேர்மா மிகைவ தெதிர படுவாய்
தார்மார்ப வலாரி தலாரி யெனுஞ்
சூர்மா மடி தொடுவே லவனே
கூகா வெனவென் கிளைகூ டியழ
போகா வகைமெ பொருள்பே சியவா
தாகாசல வேலவ நாலு கவி
தியாகா கரலோக சிகா மணியே
செம்மான் மகளை திருடு திருடன்
பெம்மான் முருகன் பிறவா னிறவான்
சும்மா இருசொல் லறவென் றலுமே
அம்மா பொரு ளொன்று மறிந்திலனே
முருகன் தனிவேல் முனிநங் குருவென்
றருள்கொண் டறியா ரறியு தரமோ
உருவன் றருவன் றுளதன் றிலதன்
றிருளன் றொளியன் றென்நின் றதுவே
கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்
றுய்வாய் மனனே யொழிவா யொழிவாய்
மெய்வாய் விழி நாசியொடுஞ் செவியாம்
ஐவாய் வழி செல்லு மவாவினையே
முருகன் குமரன் குகனென்று மொழி
துருகுஞ் செயல்த துணர்வென் றருள்வாய்
பொருபுங் கவரும் புவியும் பரவுங்
குருபுங்கவ எண்குண பஞ் சரனே
பேராசை யெனும் பிணியிற் பிணிப
டோ ரா வினையே னுழல தகுமோ
வீரா முதுசூர் படவே லெறியுஞ்
சூரா சுரலோக துர தரனே
யாமோதிய கல்வியு மெம் மறிவு
தாமே பெற வேலவர் தந்தனாற்
பூமேல் மயல் போ யறமெ புணர்வீர்
தாமேல் நடவீர் நடவீ ரினியே
உதியா மரியா வுணரா மறவா
விதிமா லறியா விமலன் புதல்வா
அதிகா வநகா வபயா வமரா
பதிகா வலசூர் பயங் கரனே
வடிவு தனமும் மனமுங் குணமுங்
குடியுங் குலமுங் குடிபோ கியவா
அடி தமிலா அயில்வே லரசே
மிடி யென்றொரு பாவி வௌ படினே
அரிதா கியமெ பொருளு கடியேண்
உரிதா வுபதேச முணர தியவா
விரிதாரண விக்ரம் வேளி மையோர்
புரிதா ரக நாக புரந்தரனே
கருதா மறவா நெறிகாண என
கிருதாள் வனச தரஎன் றிசைவாய்
வரதா முருகா மயில்வா கனனே
விரதா கரசூர விபாட ணனே
காளை குமரேச னென கருதி
தாளை பணி தவமெய் தியவா
பாளை சூழல் வள்ளி பதம்புணியும்
வேளை சுரபூ
அடியை குறியா தறியா மையினால்
முடி கெடவோ முறையோ
வடிவி ரமமேல் மகிபா குறமின்
கொடியை புணருங் குணபூத ரனே
கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே
சேர்வே னருள் சேரவு மெண்ணுமதோ
சூர்வே ரொடு குன்று தொளைத்தநெடும்
போர்வேல புரத்தா பூப தியே
மெய்ய யெனவெவ் வினைவாழ் வையுக
தையோ அடியே னலை தகுமோ
கையோ அயிலோ கழலோ முழுதுஞ்
செய்யோய் மயிலே றிய சேவகனே
ஆதார மிலே னருளை பெறவே
நீதா னொரு சற்று நினைந்திலையே
வேதாகம ஞான விநோ தமனோ
கீதா சுரலோக சிகா மணியே
மின்னே நிகர்வாழ்வை விரும்பிய யான்
என்னே விதியின் பயனிங் கிதுவோ
பொன்னே மணியே பொருளே யருளே
மன்னே மயிலேறிய வானவனே
ஆனா அமுதே அயில்வே லரசே
ஞானா கரனே நவில தகுமோ
யானாகிய வென்னை விழுங்கி வெறு
தானாய் நிலைநின் றதுதற் பரவே
இல்லே யெனுமா யையி லிட்டனைநீ
பொல்லே னறியாமை பொறு திலையே
மல்லே புரி பன்னிரு வாகுவிலென்
சொல்லே புனையுஞ் சுடர்வே லவனே
செல்வா னுருவிற் றிகழ்வே லவனன்
றொவ்வா ததென வுணர்வி ததுதான்
அவ்வா றறிவா ரறிகின் றதலால்
எவ்வா றொருவர கிசைவி பதுவே
பாழ்வாழ் வெனுமி படுமா யையிலே
வீழ்வா யென என்னை விதித்தனையே
தாழ்வா னவைசெய் தனதா முளவோ
வாழ்வா யினிநீ மயில்வா கனனே
கலையே பதறி கதறி தலையூ
டலையே படுமா றதுவாய் விடவோ
கொலையே புரி வேடர்குல பிடிதோய்
மலையே மலை கூறிடு வாகையானே
சிந்தா குலவில் லொடுசெல் வமெனும்
விந்தா டவியென்று விட பெறுவேன்
மந்தா கினிதந்த வரோ தயனே
கந்தா முருகா கருணா கரனே
சிங்கார மடந்தையர் தீநெறி போய்
மங்கார லெனக்கு வரந்தருவாய்
சங்க்ராம சிகா வலசண் முகனே
கங்கா நதி பால க்ருபாகரனே
விதிகாணு முடம்பை விடா வினையேன்
கதிகாண மலர்க்கழ லென் றருள்வாய்
மதிவா ணுதல்வள்ளியையல் லதுபின்
துதியா விரதா சுரபூ பதியே
நாதா குமரா நமவென் றரனார்
ஓதா யெனவோ தியதெ பொருள்தான்
வேதா முதல் விண்ணவர் சூடுமலர
பாதா குறமின் பதசே கரனே
கிரிவாய் விடுவி ரம வேலிறையோன்
பரிவா ரமெனும் பதமே வலையே
புரிவாய் மனனே பொறையா மறிவால்
அரிவா யடியொடு மக தையையே
ஆதாளிய யொன் றறியே னையற
தீதாளியை யாண் டதுசெ புமதோ
கூதாள கிராத குலி கிறைவா
வேதாள கணம் புகழ்வே லவனே
மாவேழ் சனனங் கெடமா யைவிடா
மூவேடணை யென்று முடி திடுமோ
கோவே குறமின் கொடிதோள் புணரு
தேவே சிவ சங்கர தேசிகனே
வினையோட விடுங் கதிர்வேல் மறவேன்
மனையோடு தியங்கி மயங் கிடவோ
கனையோ டருவி துறையோடு பசு
தினையோ டிதணோடு திரி தவனே
சாகா தெனையே சரணங் களிலே
காகா நமனார் கலகஞ் செயுநாள்
வாகா முருகா மயில்வா கனனே
யோகா சிவஞா னொபதே சிகனே
குறியை குறியாது குறித்தறியும்
நெறியை தனிவோல நிகழ திடலுஞ்
செறிவற் றுலகோ டுரைசி தையுமற்
றறிவற் றறியா மையு மற்றதுவே
தூசா மணியு துகிலும் புனைவாள்
நேசா முருகா நினதன் பருளால்
ஆசா நிகள துகளா யின்பின்
பேசா அநுபூதி பிற ததுவே
சாடு தனிவேல் முருகன் சரணஞ்
சூடும் படித ததுசொல் லுமதோ
வீடுஞ் சுரர்மா முடிவே தமும்வெங்
காடும் புனமுங் கமழுங் கழலே
கரவா கியகல்வி யுளார் கடைசென்
றிரவா வகைமெ பொருளீ குவையோ
குரவா குமரா குலிசா யுதகுஞ்
சரவா சிவயோக தயா பரனே
எந்தாயுமென கருள்தந்தையுநீ
சிந்தா குலமா னவைதீர தெனையாள்
கந்தா கதிர்வே லவனே யுமையாள்
மைந்தா குமரா மறைநா யகனே
ஆறா றையுநீ ததன்மேல் நிலையை
பேறா வடியேன் பெறுமா றுளதோ
சீறா வருசூர் சிதைவி திமையோர்
கூறா வுலகங் குளிர்வி தவனே
அறிவொன் றறநின் றறிவா ரறிவிற்
பிறிவொன் றறநின் றபிரா னலையோ
செறிவொன் றறவ திருளே சிதைய
வெறிவென்றவ ரோடுறும் வேலவனே
தன்ன தனிநின் றதுதா னறிய
இன்னம் மொருவர கிசைவி பதுவோ
மின்னுங் கதிர்வேல் விகிர்தா நினைவார்
கின்னங் களையும் க்ருபைசூழ் சுடரே
மதிகெட்டறவா டிமயங் கியற
கதிகெட்டவமே கெடவோ கடவேன்
நதிபுத்திர ஞான சுகா திபவ
திதிபு திரர்வீ றடுசே வகனே
உருவா யருவா யுளதா யிலதாய்
மருவாய் மலராய் மணியா யொளியாய்
க்கருவா யுயிரா கதியாய்
விதியாய்க்குருவாய் வருவா யருள்வாய் குகனே
திருச்சிற்றம்பலம்
கந்தர் அலங்காரம்
அருணகிரி நாதர் அருளியது
காப்பு
அடலருணை திரு கோபுர தேயந்த வாயிலுக்கு
வட வருகிற் சென்று கண்டுகொண்டேன்வருவார் தலையில்
தடபடெனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகை
கடதட கும்பக களிற்று கிளைய களிற்றினையே
நூல்
பேற்றை தவஞ் சற்றுமில்லாத வென்னைப்ர பஞ்ச மென்னுஞ்
சேற்றை கழிய வழிவிட்ட வா செஞ்சடாடவிமேல்
ஆற்றை பணியை யிதழியை தும்பையை யம்புலியின்
கீற்றை புனைந்த பெருமான் குமாரன் க்ருபாகரனே
அழித்து பிற கவொட்டாவயில் வேலன் கவியையன்பால்
எழுத்து பிழையற கற்கின்றி வீரெரி மூண்டதென்ன
விழித்து புகையெழ பொங்குவெங் கூற்றன் விடுங்கயிற்றாற்
கழுத்திற் சுருக்கி டிழுக்குமன் றோகவி கற்கின்றதே
தேரணி யிட்டுபட புரமெரி தான்மகன் செங்கையில்வேற்
கூரணி யிட்டணு வாகி கிரௌஞ்சங் குலைந்தரக்கர்
நேரணி யிட்டு வளைந்த கடக நௌந்ததுசூர
பேரணி கெட்டது தேவேந்தர லோகம் பிழைத்ததுவே
ஓரவொட்டாரொன்றை யுன்னவொட்டார்மலரிட்டுனதான்
சேரவொட்டாரைவர் செய்வதென்யான் சென்று தேவரு
சோரநி டூரனை சூரனை காருடல் சோரி
கூரகட்டாரியி டோ ரிமை போதினிற் கொன்றவனே
திருந்த புவனங்களீன்ற பொற்பாவை திருமுலைப்பால்
அருந்தி சரவண பூந்தொட்டி லேறி யறுவர்கொங்கை
விரும்பி கடலழ குன்றழ சூரழ விம்மியழுங்
குருந்தை குறிஞ்சி கிழவனென் றோதுங் குவலயமே
பெரும்பைம் புனத்தினு சிற்றேனல் காக்கின்ற பேதை கொங்கை
விரும்புங் குமரனை மெய்யின்பி னான்மெல்ல மெல்லவுள்ள
அரும்பு தனிப்பர மாநந்த தித்தி தறிந்தவன்றே
கரும்பு துவர்த்துச்செ தேனும் புளித்தற கைத்ததுவே
சளத்திற் பிணிபட்டசட்டு க்ரியைக்கு டவிக்கு மென்றன்
உளத்திற் ப்ரமத்தை தவிர்ப்பா யவுண ருரத்துதிர
குளத்திற் குதித்து குளித்து களித்து குடித்துவெற்றி
களத்திற் செருக்கி கழுதாட வேல்தொட்ட காவலனே
ஔயில் விளைந்த வுயர்ஞான பூதர துச்சியின்மேல்
அளியில் விளைந்ததொரா நந தேனை யநாதியிலே
வௌயில் விளைந்த வெறும்பாழை பெற்ற வெறுந்தனியை
தௌய விளம்பிய வா முகமாறுடைத்தேசிகனே
தேனென்று பாகனெறுவமி கொணாமொழி தெய்வ வள்ளி
கோனன் றெனக்குப தேசித்த தொன்றுண்டு கூறவற்றோ
வானன்று காலன்று தீயன்று நீரன்று மண்ணுமன்று
தானன்று நானன் றசிரீரி யன்று சரீரியன்றே
சொல்லுகை கில்லையென் றெல்லா மிழந்துசும்மாவிருக்கு
மெல்லையு செல்ல எனைவிட்டவா இகல் வேலனல்ல
கொல்லியை சேர்க்கின்ற சொல்லியை கல்வரை கொவ்வை
செவ்வாய்வல்லியை புல்கின்ற மால்வரை தோளண்ணல் வல்லபமே
குசைநெகி ழாவெற்றி வேலோ னவுணர் குடர்குழம்ப
கசையிடு வாசி விசைகொண்ட வாகன பீலியின்கொ
தசைபடு கால்ப டசைந்து மேரு அடியிடவெண்
டிசைவரை தூள்பட்ட அத்தூளின் வாரி திடர்பட்டே
படைபட்ட வேலவன் பால்வந்த வாகை பதாகையென்னு
தடைபட்ட சேவல் சிறகடி கொள்ள சலதிகழி
துடைபட்ட தண்டகடாக முதிர்ந்த துடுபடலம்
இடைப்பட்ட குன்றமு மாமேரு வெற்பு மிடிபட்டவே
ஒருவரை பங்கி லுடையாள் குமார னுடைமணிசேர்
திருவரை கிண்கிணி யோசை படத்திடு கிட்டரக்கர்
வெருவர திக்கு செவிப டெட்டு வெற்புங்கனக
பருவரை குன்று மதிர்ந்தன தேவர் பயங் கெட்டதே
குப்பாச வாழ்க்கையு கூத்தாடு மைவரிற் கொட்படைந்த
இப்பாச நெஞ்சனை ஈடேற்று வாயிரு நான்கு வெற்பும்
அப்பாதி யாய் விழ மேருங் குலங்கவிண்ணாரு மு
சப்பாணி கொட்டிய கையா றிரண்டுடை சண்முகனே
தாவடி யோட்டு மயிலிலு தேவர் தலையிலுமென்
பாவடி யேட்டிலும் பட்டதன் றோபடி மாவலிபால்
மூவடி கேட்டன்று மூதண்ட கூடி முகடுமுட்ட
சேவடி நீட்டும் பெருமாள் சிற்றடியே
இடுங்கோ ளிருந்த படியிருங் கோளெரு பாருமு
கொடுங்கோப சூருடன் குன்ற திறக்க தொளக்கலை வேல்
விடுங்கொ னருள் வந்து தானே யுமக்கு வெளிப்படுமே
வேதா கமசித்ர வேலா யுதன்வெட்சி பூத்ததண்டை
பாதார விந்த மரணாக அல்லும் பகலுமில்லா
சூதான தற்ற வௌக்கே யொளித்துச்சும் மாவிருக்க
போதா யினிமன மேதெரி யாதொரு பூதர்க்குமே
வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி வறிஞர்க்கென்றும்
நொய்யிற் பிளவன வேனும் பகிர்மின்க ணுங்கட்கிங்ஙன்
வெய்யிற் கொதுங்க வுதவா வுடம்பின் வெறுநிழல்போற்
கையிற் பொருளு முதவாது காணுங் கடைவழிக்கே
சொன்ன கிரௌஞ்ச கிரியூ டுருவ தொளுத்தவைவேல்
மன்ன கடம்பின் மலர்மாலை மார்பமௌ னத்தையுற்று
நின்னை யுணர்ந்துணர தெல்லா மொருங்கிய நிர்க்குணம் பூண்
டென்னை மறந்திரு தேனிற தேவிட்ட திவ்வுடம்பே
கோழி கொடிய னடிபணி யாமற் குவலயத்தே
வாழ கருது மதியிலி காளுங்கள் வல்வினைநோய்
ஊழிற் பெருவலி யுண்ணவொ டாதுங்க ளத்தமெல்லாம்
ஆழ புதைத்துவை தால் வருமோநும் மடிப்பிறகே
மரணப்ர மாத நமக்கில்லை யாமென்றும் வாய்த்ததுணை
கிரண கலாபியும் வேலுமுண் டேகிண் கிணிமுகுள
சரணப்ர தாப சசிதேவி மங்கல்ய தந்துரக்ஷா
பரணக்ரு பாகர ஞானா கரசுர பாஸ்கரனே
மொய்தர ரணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால்
வைதா ரையுமங்கு வாழவை போன்வெய்ய வாரணம்போற்
கைதா னிருப துடையான் தலைபத்துங் கத்தரிக்க
எய்தான் மருகன் உமையாள் பயந்த இலஞ்சியமே
தெய்வ திருமலை செங்கோட்டில் வாழுஞ் செழுஞ்சுடரே
வைவைத்த வேற்படை வானவ னே மறவேனுனைநான்
ஐவர கிடம்பெற காலிரண்டோ ட்டி யதிலிரண்டு
கைவைத்த வீடு குலையுமுன் னே வந்து காத்தருளே
கின்னங் குறித்தடி னேசெவி நீயன்று கேட்கச்சொன்ன
குன்னங் குறிச்சி வௌயாக்கி விட்டது கோடுகுழல்
சின்னங் குறி குறிஞ்சி கிழவர் சிறுமிதனை
முன்னங் குறிச்சியிற் சென்றுகல் யாண முயன்றவனே
தண்டாயுதமு திரிசூல மும்விழ தாக்கியுன்னை
திண்டாட வெட்டி விழவிடு வேன்செந்தில் வேலவனுக்கு
தொண்டா கியவென் னவிரோத ஞான சுடர்வடிவாள்
கண்டாய டாவந்த காவந்து பார்சற்றென் கை கெட்டவே
நீல சிகண்டியி லேறும் பிரானெந்த நேரத்திலுங்
கோல குறத்தி யுடன்வரு வான் குருநாதன் சொன்ன
சீலத்தை மௌள தௌந்தறி வார் சிவயோகிகளே
காலத்தை வென்றிருப்பார் மரி பார்வெறுங்களே
ஓலையு தூதருங் கண்டுதிண்டாட லொழி தெனக்கு
காலையு மாலையு முன்னிற்கு மேகந்த வேள் மருங்கிற்
சேலையுங் கட்டிய சீராவுங் கையிற் சிவந்தசெச்சை
மாலையுஞ் சேவற் பதாகையு தோகையும் வாகையுமே
வேலே விளங்குகை யான் செய்ய தாளினில் வீழ்ந்திறைஞ்சி
மாலே கொளவிங்ஙன் காண்பதல் லான் மனவாக்குச்செய
லாலே யடைதற் கரிதா யருவுரு வாகியொன்று
போலே யிருக்கும் பொருளையெவ்வாறு புகல்வதுவே
கடத்திற் குறத்தி பிரானரு ளாற்கலங் காதசி
திடத்திற் புணையென யான் கட தேன் சித்ர மாதரல்குற்
படத்திற் கழுத்திற் பழுத்தசெவ்வாயிற் பனையிலுந்தி
தடத்திற் றனத்திற் கிடக்கும் வெங்காம சமுத்திரமே
பாலென் பதுமொழி பஞ்னெ பதுபதம் பாவையர்கண்
சேலென்ப தாக திரிகின்ற நீசெந்தி லோன்றிருக்கை
வேலென் கிலைகொற்ற மயூர மென்கிலை வெட்சித்தண்டை
காலென் கிலைமன மேயெங்ங னேமுத்தி காண்பதுவே
பொ குடிலிற் புகுதா வகைபுண்ட ரீகத்தினுஞ்
செக்க சிவந்த கழல்வீடு தந்தருள் சிந்துவெந்து
கொக்கு தறிப டெறிப டுதிரங் குமுகுமென
கிரியுரு வக்கதிர் வேல் தொட்ட காவலனே
கிளைத்து புறப்பட்ட சூர்மார் புடன்கிரி யூடுருவ
தொளைத்து புறப்பட்ட வேற்கந்த னே துற தோருளத்தை
வளைத்து பிடித்து பதைக்க பதைத்த வதைக்குங் கண்ணார
கிளைத்து தவிக்கின்ற என்னை யெந்தாள் வந்திரட்சிப்பையே
முடியா பிறவி கடலிற் புகார்முழு துங்கெடுக்கு
மிடியாற் படியில் விதன படார்வெற்றி வேற்பெருமாள்
அடியார்க்கு நல்ல பெருமாள் அவுணர் குலமடங்க
பொடியா கியபெரு மாள் திரு நாமம் புகல்பவரே
பொட்டாக வெற்பை பொருதகந்தா தப்பி போனதொன்றற்
கெட்டாத ஞான கலைதரு வாயிருங் காமவிடா
பட்டா ருயிரை திருகி பருகி பசிதணிக்குங்
கட்டாரி வேல்வழி யார்வலைக்கேமனங் கட்டுண்டதே
பத்திற் துறையிழி தாநந்த வாரி படிவதானால்
புத்தி தரங்க தௌவதென் றோபொங்கு வெங்குருதி
மெத்தி குதிகொள்ள வெஞ்சூ ரனைவிட்ட கட்டியிலே
குத்தி தரங்கொண் டமரா வதிகொண்ட கொற்றவனே
கழித்தோடு மாற்றிற் பெருக்கானது செல்வ துன்பமின்பங்
கழித்தோடு கின்றதெக்கால நெஞ் சேகரி கோட்டுமுத்தை
கொழித்தோடு காவிரி செங்கோட னென்கிலை குன்றமெட்டுங்
கிழித்தோடு வேலென் கிலையெங்ங னே முத்தி கிட்டுவதே
கண்டுண்ட சொல்லியர் மெல்லியர் கா கலவிக்கள்ளை
மொண்டுண் டயர்கினும் வேன் மறவேன் முதுகூளித்திரள்
குண்டுண் டுடுடுடு டூடூ டுண்டுடுண்டு
டிண்டிண் டெனக்கொட்டி யாடவெஞ் சூர்க்கொன்ற ராவுத்தனே
நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றன் செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையு தண்டையுஞ் சண்முகமு
தோளுங் கடம்பு மெனக்கு முன்னே வந்து தோன்றிடினே
உதித்தாங் குழல்வதுஞ் சாவது தீர்த்தெனை யுன்னிலொன்றா
விதித்தாண் டருள்தருங் காலமுண் டோ வெற்பு நட்டுரக
பதித்தாம்பு வாங்கிநின் றம்பரம் பம்பரம் பட்டுழல
மதித்தான் திருமரு காமயி லேறிய மாணிக்கமே
சேல்ப டழிந்தது செந்துர் வயற்பொழில் தேங்கடம்பின்
மால்ப டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன்
வேல்ப டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்புமவன்
கால்ப டழிந்ததிங் கென்றலை மேலயன் கையெழுத்தே
பாலே யனைய மொழியார்த மின்பத்தை பற்றியென்றும்
மாலே கொண்டுய்யும் வகையறி யேன் மலர்த்தாள் தருவாய்
காலே மிகவுண்டு யிலாத கணபணத்தின்
மேலே துயில்கொள்ளு மாலோன் மருகசெவ்வேலவனே
நிணங்காட்டுங் கொட்டிலை விட்டொரு வீடெய்தி நிற்கநிங்குங்
குணங்காட்டி யாண்ட குருதே சிகனங் குறச்சிறுமான்
பணங்காட்டி மல்குற் குரகுங் குமரன் பதாம்புயத்தை
வணங்லா தவைங்கி தெங்கே யெனக்கிங் ஙன் வாய்த்ததுவே
கவியாற் கடலடை தோன் மரு கொனை கணபணக்க
செவியாற் பணியணி கோமான் மகனை திறலரக்கர்
புவியார பெழத்தொட்ட போர்வேன் முருகனை போற்றி யன்பாற்
குவியா கரங்கள் வந்தெங்கே யெனக்கிங்ஙன் கூடியவே
தோலாற் கவர்வைத்து நாலாறு காலிற் சுமத்தியிரு
காலா லெழுப்பி வளைமுது கோட்டிக்கை நாற்றிநரம்
பாலார்க்கை யிட்டு தசைகொண்டு மேய்ந்த அகம்பிரிந்தால்
வேலாற் கிரிதொளை தோனிடி தாளன்றி வேறில்லையே
ஒருபூ தருமறி யாத்தனி வீட்டி லுரையுணர்வற்
றிருபூத வீட்டி லிராமலென் றானிரு கோட்டொருகை
பொருபூ தரமுரி தேகாச மிட்ட புராந்தகற்கு
குருபூத வேலவ னிட்டூர சூர குலாந்தகனே
நீயான ஞான விநோத தனையென்று நீயருள்வாய்
சேயான வேற்கந்த னேசெந்தி லாய் சித்ர மாதரல்குற்
றோயா வுருகி பருகி பெருகி துவளுமிந்த
மாயா விநோத மநோதுக்க மானது மாய்வயதற்கே
பத்தி திருமுக மாறுடன் பன்னிரு தோள்களுமா
தித்தி திருக்கு மமுதுகண் டேன்செயன் மாண்டடங்க
புத்தி கமல துருகி பெருகி புவனமெற்றி
தத்தி கரைபுர ளும்பர மாநந்த சாகரத்தே
பத்தியை வாங்கிநின் பாதாம் புயத்திற் புகட்டியன்பாய்
முத்திரை வாங்க அறிகின்றி லேன் முது சூர்நடுங்க
சத்தியை வாங்க தரமோ குவடு தவிடுபட
குத்திர காங்கேய னேவினை யேற்கென் குறித்தனையே
சூரிற் கிரியிற் கதிர்வே லெறிந்தவன் தொண்டர்சூழாஞ்
சாரிற் கதியின்றி வேறிலை காண்தண்டு தாவடிபோ
தேரிற் கரியிற் பரியிற் றிரிபவர் செல்வமெல்லாம்
நீரிற் பொறியென் றறியாத பாவி நெடுநெஞ்சமே
படிக்கும் திருப்புகழ் போற்றுவன் கூற்றவன் பாசத்தினாற்
பிடிக்கும் பொழுதுவ தஞ்சலென் பாய்பெரும் பாம்பினின்று
நடிக்கும் பிரான்மரு காகொடுஞ் சூர னடுங்கவெற்பை
இடிக்குங் கலாப தனிமயி லேறு மிராவுத்தனே
மலையாறு கூறெழ வேல்வாங்கி னானை வணங்கியபின்
நிலையான மாதவஞ் செய்குமி னோநும்மை நேடிவரு
தொலையா வழிக்கு பொதிசோறு முற்ற துணையுங்கண்டீர்
இலையா யினும் வெந்த தேதா யினும்பகிர தேற்றவர்க்கே
சிகாராத்ரி கூறிட்ட வேலுஞ்செஞ் சேவலுஞ் செந்தமிழாற்
பகரார்வமீ பணி பாசசங் க்ராம பணாமகுட
நிகரா சமபட்ச பட்சி துரங்க ந்ருபகுமார
குமரா சசபட்ச விட்சோப தீர குணதுங்கனே
வேடிச்சி கொங்கை விரும்புங் குமரனை மெய்யன்பினாற்
பாடி கசிந்துள்ள போதே கொடாதவர் பாதகத்தாற்
றேடி புதைத்து திருட்டிற் கொடுத்து திகைத்திளைத்து
வாடி கிலேசித்து வாழ்நாளை வீணுக்கு மாய்ப்பவரே
சாகைக்கு மீண்டு பிறக்கைக்கு மன்றி தளர்ந்தவர்கொன்
றீகை கெனை விதி தாயிலை யே யிலங் காபுரிக்கு
போகைக்கு நீவழி காட்டென்று போய்க்கடல் தீக்கொளுந்த
வாகை சிலைவளை தோன்மரு காமயில் வாகனனே
ஆங்கா ரமுமடங் காரொடுங் கார்பர மாநந்தத்தே
தேங்கார் நினைப்பு மறப்பு மறார் தினை போதளவும்
ஓங்கார துள்ளொளி குள்ளே முருக னுருவங்கண்டு
தூங்கார் தொழும்புசெய்யா ரென்செய்வார் யம தூதருக்கே
கிழியும் படியடற் குன்றெறி தோன்கவி கேட்டுருகி
இழியுங் கவிகற் றிடாதிரு பீரெரி வாய் நர
குழியு துயரும் விடாப்பட கூற்றுவனூர குச்செல்லும்
வழியு துயரும் பகரீர் மறந்தவர்க்கே
பொருபிடி யுங்களி றும் விளையாடும் புனச்சிறுமான்
தருபிடி காவல சண்முக வாவென் சாற்றிநித்தம்
இருபிடி சோகொண் டிட்டுண்டிருவினை யோமிறந்தால்
ஒருபிடி சாம்பருங் காணாது மாயவுடம்பிதுவே
நெற்றா பசுங்கதிர செவ்வேனல் காக்கின்ற நீலவள்ளி
முற்றா தனத்திற் கினிய பிரானிக்கு முல்லையுடன்
பற்றாக்கை யும்வெந்து சங்க்ராம வேளும் படவிழியாற்
செற்றார கினியவன் தேவேந்த்ர லோக சிகாமணியே
பொங்கார வேலையில் வேலைவி டோ னருள் போலுதவ
எங்கா யினும்வரு மேற்பவர கிட்ட திடாமல்வைத்த
வங்கா ரமுமுங்கள் சிங்கார வீடு மடந்தையருஞ்
சங்காத மோகெடு வீருயிர் போ தனிவழிக்கே
சிந்தி கிலேனின்று சேவிக்கு லேன்றண்டை சிற்றடியை
வந்தி கிலேனொன்றும் வாழ்த்துகி லேன் மயில் வாகனனை
சந்தி கிலேன் பொய்யை நிந்தி கிலேனுண்மை சாதிக்கிலேன்
புந்தி கிலேசமுங் கா கிலேசமும் போக்குதற்கே
வரையற் றவுணர் சிரமற்று வாரிதி வற்றச்செற்ற
புரையற்ற வேலவன் போதி தவா பஞ்ச பூதமுமற்
றுரையற் றுவர்வற் றுடலற் றுயிரற் றுபாயமற்று
கரையற் றிருளற் றெனதற் றிருக்கு காட்சியதே
ஆலு கணிகலம் வெண்டலை மாலை யகிலமுண்ட
மாலு கணிகலம் தண்ண துழாய்மயி லேறுமையன்
காலு கணிகலம் வானோர் முடியுங் கடம்புங்கையில்
வேலு கணிகலம் வேலையுஞ் சூரனு மேருவுமே
பாதி திருவுரு பச்சென் றவர்க்குத்தன் பாவனையை
போதித்த நாதனை போர் வேலனைச்சென்று போற்றியு
சோதித்த மெய்யன்பு பொய்யோ அழுது தொழுதுருகி
சாதிதத புத்திவ தெங்கே யென கிங்ஙன் சந்தித்ததே
பட்டி கடாவில் வருமந்த காவுனை பாரறிய
வெட்டி புறங்கண் டலாதுவிடேன் வெய்ய சூரனை போய்
முட்டி பொருதசெவ் வேற்பொரு மாள் திரு முன்புநின்றேன்
கட்டி புறப்பட டாசத்தி வாளென்றன் கையதுவே
வெட்டுங் கடாமிசை தோன்றும் வெங்கூற்றன் விடுங் கயிற்றாற்
கட்டும் பொழுது விடுவிக்க வேண்டும் கராசலங்கள்
எட்டுங் குலகிரி யெட்டும் வி டோ வெ டாதவெளி
மட்டும் புதைய விரிக்குங் கலாப மயூரத்தனே
நீர்க்குமிழக்கு நிகரென்பர் யாக்கைநில்லாது செல்வம்
பார்க்கு மிட தந்த மின் போலுமென்பர் பசித்துவந்தே
ஏற்கு மவர்க்கிட வென்னினெங் கேனு மெழுந்திருப்பார்
வேற்குமரற் கன்பிலாதவர் ஞான மிகவுநன்றெ
பெறுதற் கறிய பிறவியை பெற்றுநின் சிற்றடியை
குறிகி பணிந்து பெறக்கற் றிலேன் மத கும்பகம்ப
தறுக சிறுக சங்க்ராம சயில சரசவல்லி
இறுக தழுவுங் கடகா சலபன் னிருபுயனே
சாடுஞ் சமர தனிவேல் முருகன் சரணத்திலே
ஓடுங் கருத்தை யிருத்தவல் லார்க்குகம் போய்ச்சகம்போ
பாடுங் கவுரி பவுரிகொண்டா டப்பசுபதின்
றாடும் பொழுது பரமா யிருக்கு மதீதத்திலே
தந்தைக்கு முன்ன தனிஞான வாளொன்று சாதித்தருள்
கந்த சுவாமி யெனை தேற் றிய பின்னர காலன்வெம்பி
வந்தி பொழுதென்னை யென் செய்ய லாஞ்சத்தி வாளொன்றினாற்
சிந துணிப்பன் தணிப்பருங் கோபத்ரி சூலத்தையே
விழிக்கு துணைதிரு மென்மலர பாதங்கள் மெய்ம்மை குன்றா
மொழிக்கு துணைமுரு காவெனு நாமங்கள் முன்பு செய்த
பழிக்கு துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி
வழிக்கு துணைவடி வேலுஞ் செங்கோடன் மயூரமுமே
துருத்தி யெனும்படி கும்பித்து வாயுவை சுற்றிமுறி
தருத்தி யுடம்பை யொறுக்கிலென் னாஞ்சிவ யோக மென்னுங்
குருத்தை யறிந்து முகமா றுடைக்குரு நாதன்சொன்ன
கருத்தை மனத்தி லிருந்துங்கண் டீர்முத்தி கைகண்டதே
சேந்தனை கந்தனை செங்கோட்டு வெற்பனை செஞ்சுடர்வேல்
வேந்தனை செந்தமிழ் நூல்விரி தோனை விளங்குவள்ளி
காந்தனை கந்த கடம்பனை கார்மயில் வாகனனை
சாந்துணை போது மறவா தவர்க்கொரு தாழ்வில்லையே
போக்கும் வரவு மிரவும் பகலும் புறம்புமுள்ளும்
வாக்கும் வடிவு முடிவுமில்லாத தொன்று வந்துவந்து
தாக்கு மநோல தானே தருமெனை தன்வசத்தே
ஆக்கு மறுமுக வாசொல் லொணாதிந்த ஆநந்தமே
அராப்புனை வேணியன் சேயருள் வேண்டு மவிழ்ந்த அன்பாற்
குராப்புனை தண்டையந்தாள் தொழல் வேண்டுங் கொடிய ஐவர்
பராக்கறல் வேண்டும் மனமும் பதைப்பறல் வேண்டுமென்றால்
இராப்பக லற்ற இடத்தே யிருக்கை யௌதல்லவே
படிக்கின் றிலைபழு நித்திரு நாமம் படிப்பவர்தாள்
முடிக்கின் றிலைமுருகா வென் கிலைமுசி யாமலிட்டு
மிடிக்கின் றிலைபர மாநந்த மேற்கொள விம்மிவிம்மி
நடிக்கின் றிலைநெஞ்ச மேதஞ்ச மேது நமக்கினியே
கோடாத வேதனு கியான்செய்த குற்றமென் குன்றெறிந்த
தாடாள னெதென் தணிகை குமரநின் றண்டைந்தாள்
சூடாத சென்னியு நாடாத கண்ணு தொழாதகையும்
பாடாத நாவு மெனக்கே தெரிந்து படைத்தனனே
சேல்வாங்கு கண்ணியர் வண்ண் பயோதரஞ் சேரஎண்ணி
மால்வாங்கி யேங்கி மயங்காமல் வௌளி மலையெனவே
கால்வாங்கி நிற்குங் களிற்றான் கிழத்தி கழுத்திற்கட்டு
நூல் வாங்கி டாதன்று வேல்வாங்கி பூங்கழல் நோக்கு நெஞ்சே
கூர்கொண்ட வேலனை போற்றாம லேற்றங்கொண்டாடுவிர்காள்
போர்கொண்ட கால னுமைக்கொண்டு போமன்று பூண்பனவு
தார்கொண்ட மாதரு மாளிகை யும்பண சாளிகையும்
ஆர்கொண்டு போவரையே கெடுவீர்நும் மறிவின்மையே
பந்தாடு மங்கையர் செங்கயற் பார்வையிற் பட்டுழலுஞ்
சிந்தா குலந்தனை தீர்த்தருள் வாய்செய்ய வேல்முருகா
கொந்தார் கடம்பு புடைசூழ் திருத்தணி குன்றினிற்குங்
கந்தா இளங்குமரா அமராவதி காவலனே
மாகத்தை முட்டி வருநெடுங் கூற்றன்வந்தா லென்முன்னே
தோகை புரவியிற் றோன்நிற் பாய்சுத்த நித்தமுத்தி
த்யாக பொருப்பை த்ரிபுரா தகனை த்ரியம்பகனை
பாகத்தில் வைக்கும் பரமகல் யாணிதன் பாலகனே
தாரா கணமெனு தாய்மார் அறுவர் தருமுலைப்பால்
ஆரா துமைமுலை பாலுண்ட பால னரையிற் கட்டுஞ்
சீராவுங் கையிற் சிறுவாளும் வேலுமென் சிந்தையவே
வாரா தகலந்த காவந்த போதுயிர் வாங்குவனே
தகட்டிற் சிவந்த கடம்பையு நெஞ்சையு தாளிணைக்கே
புகட்டி பணி பணித்தரு ளாய்புண்ட ரீகனண்ட
முகட்டை பிளந்து வளர்ந்திந்த்ர லோகத்தை முட்டவெட்டி
பகட்டிற் பொருதிட்ட நிட்டூர சூர பயங்கரனே
தேங்கிய அண்ட திமையோர் சிறைவிட சிற்றடிக்கே
பூங்கழல் கட்டும் பெருமாள் கலா புரவிமிசை
தாங்கி நடப்ப முறிந்தது சூரன் தளந்தனிவேல்
வாங்கி யினுப்பிட குன்றங்க ளெட்டும் வழிவிட்டவே
மைவருங் கண்டத்தர் மைந்தகந்தாவென்று வாழ்த்துமிந்த
கைவரு தொண்டன்றி மற்றறியேன் கற்ற கல்வியும்போய்
பைவரும் கேளும் பதியுங் கதற பழகிநிற்கும்
ஐவருங் கைவிட்டு மெய்விடும் போதுன்னடைக்கலமே
காட்டிற் குறத்தி பிரான்ப தேகருத்தைப்புகட்டின்
வீட்டிற் புகுதன் மிகவௌ தேவிழி நாசிவைத்து
மூட்டி கபாலமூ லாதார நேரண்ட மூச்சையுள்ளே
ஓட்டி பிடித்தெங்கு மோடாமற் சாதிக்கும் யோகிகளே
வேலாயுதன் சங்கு சக்ராயுதன் விரிஞ் சன்னறியா
சூலா யுதன் தந்த கந்த சுவாமி சுடர்க்குடுமி
காலா யுதக்கொடி யோனரு ளாய கவசமுண்டென்
பாலா யுதம் வருமோய னோடு பகைக்கினுமே
குமரா சரணஞ் சரணமனெ றண்டர் குழாந்துதிக்கும்
அமரா வதியிற் பெருமாள் திருமுக மாறுங்கண்ட
தமராகி வைகு தனியான ஞான தபோதனர்க்கிங்
கெமராசன் விட்ட கடையோடு வந்தினி யென்செயுமே
வணங்கி துதிக்க அறியா மனித ருடனிணங்கிக்குணங்
கெட்ட துட்டனை யீடேற்றுவாய் கொடி யுங்கழுகும்
பிணங்க துணங்கை யலகை கொண்டாட பிசிதர்தம்வாய்
நிணங்கக்க விக்ரம வேலா யுத தொட்ட நிர்மலனே
பங்கே ருகனெனை பட்டோ லையிலிட பண்டுதளை
தங்காலி லிட்ட தறிந்தில னோதனி வேலெடுத்து
போங்கோதம் வாய்விட பொன்னஞ் சிலம்பு புலம்பவரும்
எங்கோ னறியி னினிநான் முகனு கிருவிலங்கே
மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை வானவர்க்கு
மேலான தேவனை மெய்ஞ்ஞான தெய்வத்தை மேதினியில்
சேலார் வயற்பொழிற் செஙகோடனை சென்று கண்டுதொழ
நாலா யிரங்கண் படைத்தில னேயந்த நான்முகனே
கருமான் மருகனை செம்மான் மகளை களவுகொண்டு
வருமா குலவனை சேவற்கை கோளனை வானமு
பொருமா வினை செற்ற போர்வேல னைக்கன்னி பூகமுடன்
தருமா மருவுசெங் கோடனை வாழ்த்துகை சாலநன்றே
தொண்டர்கண் டண்டிமொண் டுண்டுரு குஞ்சுத்த ஞானமெனு
தண்டயம் புண்டரி கந்தருவாய் சண்ட தண்ட வெஞ்சூர்
மண்டலங் கொண்டுபண் டண்லரண் டங்கொண்டு மண்டிமிண்ட
கண்டுருண் டண்டர்விண் டோ டாமல் வேல்தொட்ட காவலனே
மண்கம ழுந்தி திருமால் வலம்புரி யோசையந்த
விண்கமழ் சோலையும் வாவியுங் கேட்டது வேலெடுத்து
திண்கிரி சிந்த விளையாடும் பிள்ளை திருவரையிற்
கிண்கிணி யோசை பதினா லுலகமுங் கேட்டதுவே
தௌளிய ஏனவிற் கிள்ளையை கள்ள சிறுமியெனும்
வள்ளியை வேட்டவன் தாள் வேட்டிலை சிறு வள்ளைதள்ளி
துள்ளிய கெண்டையை தொண்டையை தோத சொல்லைநல்ல
வௌளிய நித்தில வித்தார மூரலை வேட்டநெஞ்சே
யான்றானெனுஞ்சொல் லிரண்டுங் கெட்டாலன்றி யாவருக்கு
தோன்றாது சத்தி தொல்லை பெருநிலஞ் சூகரமா
கீன்றான் மருகன் முருகன்க்ரு பாகரன் கேள்வியினாற்
சான்றாரு மற்ற தனிவௌ கேவந்து சந்திப்பதே
தடக்கொற்ற வேள்மயி லேயிடர் தீர தனிவிடில்ந
ணவடக்கிற் கிரிக்க புறத்துநின் றோகையின் வட்டமிட்டு
கடற்க புறத்துங் கதிர்க்க கனகசக்ர
திடர்க்க புறத்து திசைக்க புறத்து திரிகுவையே
சேலிற் றிகழ்வயற் செங்கோடை வெற்பன் செழுங்கலபி
ஆலி தநந்தன் பணாமுடி தாக்க அதிர்ந்ததிர்ந்து
காலிற் கிடப்பன மாணிக்க ராசியுங் காசினியை
பாலிக்கு மாயனுஞ சக்ரா யுதமும் பணிலமுமே
கதிதனை யொன்றையுங் காண்கின்றி லேன் கந்த வேல்முருகா
நதிதினை யன்னபொய் வாழ்விலன் பாய்நரம் பாற்பொதிந்த
பொதிதனை யுங்கொண்டு திண்டாடு மாறெனை போதவிட்ட
விதிதனை நொந்துநொ திங்கேயென் றன்மனம் வேகின்றதே
காவி கமல கழலுடன் சேர்த்தெனை காத்தருளாய்
தாவி குலமயில் வாகன னேதுணை யேதுமின்றி
தாவி படர கொழுகொம் பிலாத தனிக்கொடிபோல்
பாவி தனிமன தள்ளாடி வாடி பதைக்கின்றதே
இடுதலை சற்றுங் கருதேனை போதமி லேனையன்பாற்
கெடுதலி லாத்தொண் டரிற் கூ டியவா கிரௌஞ்ச வெற்பை
அடுதலை சாதித்த வேலோன் பிறவி யறவிச்சிறை
விடுதலை பட்டது விட்டது பாச வினைவிலங்கே
சலங்காணும் வேந்தர் தமக்கு மஞ்சார் யமன் சண்டைக்கஞ்சார்
துலங்கா நர குழியணு கார்துட்ட நோயணுகார்
கலங்கார் புலிக்குங் கரடிக்கும் யானைக்குங் கந்தனன்னூல்
அலங்கார நூற்று ளொருகவி தான் கற்றறிந்தவரே
திருவடி யுந்தண்டை யுஞ்சிலம் புஞ்சிலம் பூடுருவ
பொருவடி வேலுங் கடம்பு தடம்புயம் ஆறிரண்டும்
மருவடி வாண வதனங்க ளாறும் மலர்க்கண்களுங்
குருவடி வாய்வந்தென் னுள்ளங் குளிர குதிகொண்டவே
இராப்பக லற்ற இடங்காட்டி யானிரு தேதுதி
குராப்புனை தண்டை தாளரு ளாய் கரி கூப்பிட்டநாள்
கராப்புட கொன்ற கரிபோற்ற நின்ற கடவுள் மெச்சும்
பராக்ரம வேல நிருதசங் கார பயங்கரனே
செங்கே ழடுத்த சிவனடி வேலு திருமுகமும்
பங்கே நிரைத்தநற் பன்னிரு தோளும் பதுமமலர
கொங்கே தரளஞ் சொரியுஞ்செங் கோடை குமரனென
எங்கே நினைப்பினும் அங்கேயென் முன்வந்தெதிர் நிற்பனே
ஆவிக்கு மோசம் வருமா றறிந்துன் னருட்பதங்கள்
சேவிக்க என்று நினைக்கின்றி லேன் வினை தீர்த்தருளாய்
வாவி தடவயல் சூழு திருத்தணி மாமலைவாழ்
சேவற் கொடியுடை யானே யமர சிகாமணியே
கொள்ளி தலையில் எறும்பது போல குலையுமென்றன்
உள்ள துயரை யொழித்தரு ளாயொரு கோடிமுத்த
தௌளி கொழிக்குங் கடற்செந்தின் மேவி
வள்ளிக்கு வாய்த்தவ னே மயிலேறிய மாணிக்கமே
சூலம் பிடித்தெம பாசஞ் சுழற்றி தொடர்ந்துவருங்
காலன் தனக்கொரு காலுமஞ் சேன்கடல் மீதெழுந்த
ஆலங் குடித்த பெருமான் குமாரன் அறுமுகவன்
வேலு திருக்கையு முண்ட நமக்கொரு மெய்த்துணையே
கந்தர் அலங்காரம் முற்றிற்று
வேல் மயில் சேவல் விருத்தம்
அருணகிரி நாதர் அருளியது
மயில் விருத்தம் காப்பு
நாட்டை ஆதி களை
சந்தன பாளித குங்கும புளகித சண்பக கடக புய
சமர சிகாவல குமர ஷடானன சரவண குரவணியும்
கொந்தள பார கிராத புராதனி கொண்க எனப்பரவும்
கூதள சீதள பாதம் எனக்கருள் குஞ்ஜரி மஞ்ஜரிதோய்
கந்த க்ருபாகர கோமள கும்ப கராதிப மோகரத
கரமுக சாமர கர்ண விசால கபோல விதான
எந்த மகோதர முஷிக வாகன சிந்துர பத்மமுக
சிவசுத கனபதி விக்ன வினாயக தெய்வ சகோதரனே
கனபதி தெய்வ சகோதரனே வினாயக

சேவல் விருத்தம் காப்பு
கொந்தார் குழல்வரி வண்டோ லிடுமியல் கொண்டேழ் இசைமருள
குதலை மொழிந்தருள் கவுரி சுதந்தரி குமரன் இதம்பெறு பொற்
செந்தாமரை கடம் நந்தா வனமுள செந்தூர் எங்குமுளான்
திலக மயிலில்வரு குமரன் வரிசைபெறு சேவல் தனைப்பாட
வந்தே சமர்ப்பொரு மிண்டாகிய கய மா முகனை கோறி
வன் கோடொன்றை ஒடித்து பாரதம் மா மேருவில் எழுதி
பைந்தார் கொடு பல ராவணன் அன்பொடு பணி சிவ லிங்கம் அதை
பார்மிசை வைத்த வினாயகன் முக்க பரமன் துணையாமே
முக்க பரமன் துணையாமே வினாயகன்

வேல் விருத்தம்
கம்சத்வனி கண்ட சாபு
மகரம் அளறிடை புரள உரககண பணமவுலி
மதியும் இரவியும் அலையவே
வளரெழிலி குடருழல இமையவர்கள் துயரகல
மகிழ்வு பெறும் அறு சிறையவான்
சிகரவரை மனை மறுகு தொறு ஞுளைய மகளிர் செழு
செனெல்களொடு தரளம் இடவே
ஜகசிர பகிரதி முதல் நதிகள்கதி பெற உததி
திடர் அடைய ஞுகரும் வடிவேல்
தகர மிருகமதம் என மணமருவு கடகலுழி
தரு கவுளும் உறு வள் எயிறுன்
தழை செவியும் ஞுதல்விழியும் உடைய ஒருகடவுள் மகிழ்
தரு துணைவன் அமரர் குயிலும்
குகரமலை எயினர்க்குல மடமயிலும் என இருவர்
குயமொடமர் புரியு முருகன்
குமரன் அறுமுகன் எதிரும் விருது நிசிசரர் அணிகள்
குலையவிடு கொடிய வேலே
குமரன்விடு கொடிய வேலே அறுமுகவன் விடு

மயில் விருத்தம்
கம்சட்வனி கண்ட சாபு
சந்தான புஷப பரிமள கிண்கிணீ முக
சரண யுகளமிர்த்த ப்ரபா
சன்ற சேகர முஷிகாருட வெகுமோக
சத்ய ப்ரியாலிங்கன
சிந்தாமணி கலச கர கட கபோல த்ரி
யம்பக வினாயகன் முதற்
சிவனைவலம் வரும் அளவில் உலகடைய நொடியில் வரு
சித்ர கலாப மயிலாம்
மந்தா கினி பிரபவ தரங்க விதரங்க
வன சரோதய கிர்த்திகா
வர புத்ர ராஜீவ பரியங்க தந்திய
வராசலன் குலிசாயு
இந்த்ராணி மாங்கில்ய தந்து ரக்ஷாபரண
இகல்வேல் வினோதன் அருள்கூர்
இமையகிரி குமரிமகன் ஏரு நீலக்ரீவ
ரத்ன கலாப மயிலே
ரத்ன கலாப மயிலே
ரத்ன கலாப மயிலே

சேவல் விரித்தம்
கம்சத்வனி கண்ட சாபு
உலகில் அனுதினமும் வரும் அடியவர்கள் இடரகல
உரிய பர கதி தெரியவே
உரகமணி எனவுழலும் இருவினையும் முறைபடவும்
இருள்கள்மிடி கெட அருளியே
கலகமிடும் அலகைகுறள் மிகுபணிகள் வலிமையொடு
கடினமுற வரில் அவைகளை
கண்ணை பிடுங்கியுடல் தன்னை பிளந்து சிற
கைக்கொட்டி நின்றா டுமாம்
மலைகள் நெறு நெறென அலைகள் சுவறிட அசுரர்
மடிய அயில் கடவு முருகன்
மகுட வட கிரியலைய மலையுமுலை வனிதை குற
வரிசையின மகள் அவளுடன்
சிலைகுலிசன் மகள்மருவு புயன் இலகு சரவண
சிறுவன் அயன் வெருவ விரகிற்
சிரமிசையில் வெகு சினமொ அடியுதவும் அறுமுகவன்
சேவற் திரு துவஜமே
சேவற்திரு துவஜமே அறுமுகவன்

வேல் விருத்தம்
மோகனம் கண்ட சாபு
வெங காள கண்டர் கை சூலமுன் திருமாயன்
வெற்றிபெறு சுடர் ஆழியும்
விபுதர் பதி குலிசமும் சூரன் குலங கல்லி
வெல்லா என கருதியே
சங்க்ராம நீஜயித்து அருளென தேவரும்
சதுர்முகனும் நின்றிரப்ப
சயிலமொடு சூரனுடல் ஒருனொடியில் உருவியே
தனி ஆண்மை கொண்ட நெடுவேல்
கங்காளி சாமுண்டி வராகி இந்த்ராணி
கெளமாரி கமலாசன
கன்னி நாரணி குமரி த்ரிபுரை பயிரவி அமலை
கெளரி காமாக்ஷி சைவ
சிங்காரி யாமளை பவானி கார்த்திகை கொற்றி
த்ரியம்பகி அளித்த செல்வ
சிறுவன் அறுமுகன் முருகன் நிருதர்க்கள் குலாந்தகன்
செம்பொட்ற்றிருக்கை வேலே
முருகன் திருக்கை வேலே அறுமுகவன்

மயில் விருத்தம்
மோகனம் கண்ட சாபு
சக்ர ப்ரசண்ட கிரி முட்ட கிழிந்து வெளி
பட்டு க்ரவுஞ்ச சயிலன்
தகர பெருங கனக சிகர சிலம்புமெழு
தனிவெற்பும் அம்புவியும் எண்
திக்கு தடங்குவடும் குலுங்கவரு
சித்ர பதம் பெயரவே
சேடன்முடி திண்டாட ஆடல்புரி வெஞ்சூரர்
திடுக்கிட நடிக்கு மயிலாம்
பக்கத்தில் ஒன்றுபடு பச்சை பசுன் கவுரி
பத பதங கமழ்தரும்
பகீரதி ஜடில யொகீசுரர உரிய
பரம உபதேசம் அறிவி
கைக்கு செழும் சரவணத்திற் பிறந்த ஒரு
கந்த சுவாமி தணிகை
கல்லார கிரியுருக வரு கிரண மரகத
கலாபத்தில் இலகு மயிலே
கலாபத்தில் இலகு மயிலே
மரகத கலாபத்தில் இலகு மயிலே

சேவல் விருத்தம்
மோகனம் கண்ட சாபு
எரியனைய வியனவிரம் உளகழுது பல பிரம
ராக்ஷதர்கள் மிண்டுகள் செயும்
ஏவல் பசாசு நனி பேயிற் கொலை
ஈன பசாசு களையும்
கரி முருடு பெரியமலை பணையெனவும் முனையின் உயர்
ககனமுற நிமிரும் வெங்க
கடிகளையும் மடமடென மறுகி அலறிட உகிர்
கர தடர்த்து கொத்துமாம்
தரணிபல இடமென்வன மதகரிகள் தறிகள்பணி
சமணர் கிடு கிடென நடனம்
தண்டைகள் சிலம்புகள் கலிங்கலினென சிறிய
சரண அழகொடு புரியும் வேள்
திரிபுரம் அதெரிய நகைபுரியும் இறையவன் மறைகள்
தெரியும் அரன் உதவு குமரன்
திமிர தினகர முருக சரவண பவன் குகன்
சேவற் திரு துவஜமே
சேவற்திரு துவஜமே குகன் சேவற் திரு

வேல் விருத்தம்
சாரங்கா கண்ட சாபு
வேதாள பூதமொடு காளி காளத்ரிகளும்
வெகுளுறு பசாச கணமும்
வென் கழுகுடன் கொடி பருந்து செம் புவனத்தில்
வெம்பசி ஒழிக்கவந்தே
ஆதார கமடமுங கணபண வியாளமும்
அடக்கிய தட கிரியெலாம்
அலைய நடமிடு நெடுன் தானவர் நிணத்தசை
அருந்தி புரந்த வைவேல்
தாதார் மலர்ச்சுவனி பழனிமலை சோலைமலை
தனிப்பரங குன்றேரகம்
தணிகை செந்தூரிடை கழி ஆவினங்குடி
தடங கடல் இலங்கை அதனிற்
போதார் பொழில் கதிர்க்கா தலத்தினை
புகழும் அவரவர் நாவினிற்
புந்தியில் அமர்ந்தவன் கந்தன் முருகன் குகன்
புங்கவன் செங்கை வேலே
கந்தங்குகன் செங்கை வேலே முருகன் குகன்

மயில் விருத்தம்
சாரங்கா கண்டசாபு
ஆதார பாதளம் பெயர அடி மு
தண்ட முகடது பெயரவே
ஆடரவ முடிபெயர எண்டிசைகள் பெயர எறி
கவுட்கிரி சரம் பெயரவே
வேதாள தாளங்களு கிசைய ஆடுவார்
மிக்க ப்ரியப்பட விடா
விழிபவுரி கவுரி கண உளமகிழ விளையாடும்
விச்தார நிர்த்த மயிலாம்
மாதானு பங்கியெனு மாலது சகோதரி
மகீதரி கிராத குலிமா
மறைமுனி குமாரி சாரங்கனன் தனிவந்த
வள்ளிமணி ஞூபுர மலர்
பாதார விந்த சேகரனேய மலரும் உற்
பலகிரி அமர்ந்த பெருமாள்
படைனிருதர் கடகம் உடைபட நடவு பச்சை
பசுந்தோகை வாகை மயிலே
பசுந்தோகை வாகை மயிலே
பச்சை பசுந்தோகை வாகை மயிலே

சேவல் விருத்தம்
சார்ங்கா கண்டசாபு
கரி முரட்டடி வலை கயிறெடு தெயிறு பற்
களை இறுக்கியு முறைத்து
கலகமிட்டி யமன் முற் கரமுற துடரும்
காலத்தில் வேலு மயிலும்
குருபர குகனும் அப்பொழுதில் நட்புடன் வர
குரலொலி அடியரிடை
குலத்தலறு முக்கிற்சின பேய்களை கொத்தி
வட்டத்தில் முட்ட வருமாம்
அரிய கொற்கையன் உடற்கருகும் வெப்பகையை உற்
பனமுறை தத மிகவுமே
அமணரை கழுவில் வைத்தவரு மெ பொடிதரித்து
அவனிமெ திட அருளதார்
சிவபுர அவதரி தவமு தினமணி
சிவிகை பெற்றினிய தமிழை
சிவன புற விரித்துரை செய் விற்பனன் நிகற்
சேவற்திரு துவஜமே
சேவற்திரு துவஜமே
குருபரன் சேவற்திரு துவஜமே

வேல் விருத்தம்
மனோலயம் ஆதி
அண்டர் உலகும் சுழல எண்திசைகளும்
அங்கியும் உடன் சுழலவே
அலைகடல்களும் சுழல அவுணர் உயிரும்
அகில தலமும் சுழலவே
மண்டல நிறைந்த ரவி சதகோடி மதி உதிர
மாண பிறங்கி அணியும்
மணி ஒலியினிற் சகல தலமு மருள சிரம
வகை வகையினிற் சுழலும் வேல்
தண்டம் உடனுங கொடிய பாசம் கரிய
சந்தம் உடனும் பிறைகள்போல்
தந்தமுட ஞும் தழலும் வெங்கண் உடனும் பகடு
தன்புறம் வரும் சமனை யான்
கண்டு குலையும் பொழுதில் அஞ்ஜலென மெஞ்சரண
கஞ்ஜம் உதவும் கருணைவேள்
கந்தன் முருகன் குமரன் வண்குறவர் தம்புதல்வி
கணவன் அடல் கொண்ட வேலே
கந்தன் அடல் கொண்ட வேலே
முருகன் அடல் கொண்ட வேலே

மயில் விருத்தம்
மனோலயம் ஆதி
யுககோடி முடிவின் மண்டிய சண்ட மாருதம்
உதித்த தென்ற் அயன் அஞ்ஜவே
ஒருகோடி அண்டர் அண்டங்களும் பாதாள
லோகமும் பொற் குவடுறும்
வெகுகோடி மலைகளும் அடியினில் தகர இரு
விசும்பிற் பறக்க விரினீர்
வேலை சுவற சுரர் நடுக்கங கொளச்சிறகை
வீசி பறக்கு மயிலாம்
நககோடி கொண்டவுணர் நெஞ்ஜம் பிளந்த நர
கேசரி முராரி திருமால்
நாரணன் கேசவன் சீதரன் தேவகீ
நந்தனன் முகுந்தன் மருகன்
முககோடி நதிகரன் குருகோடி அனவரதம்
முகிலுலவு நீலகிரிவாழ்
முருகனுமை குமரன் அறு முகன் நடவு விகடதட
முரி கலாப மயிலே
விகடதட முரிக்கலாப மயிலே
சிறகை வீசி பறக்கு மயிலாம்

சேவல் விருத்தம்
மனோலயம் ஆதி
அச்ச பட குரல் முழக்கி பகட்டி அல
றி கொட்டமி அமரிடும்
அற்ப குற பலிகள் வெட்டுக்கள் பட்டுகடி
அறு குழைகளை கொத்தியே
பிச்சு சின உதறி எட்டுத்திசை பலிகள்
இட்டு கொதித்து விறலே
பெற்று சுடர் சிறகு தட்டி குதித்தியல்
பெற கொக்கரித்து வருமாம்
பொய் சித்திர பலவும் உட்க திரை ஜலதி
பொற்றை கறு அயில்விடும்
புட்தி ப்ரியத்தன் வெகு வித்தை குணக்கடல்
புகழ் செட்டி சுப்ரமணியன்
செச்சை புயத்தன் நவ ரத்ன க்ரிடத்தன் மொழி
தித்திக்கு மு தமிழினை
தெரியவரு பொதிகைமலை முனிவர குரைத்தவன்
சேவற் திரு துவஜமே
சேவற்திரு துவஜமே
சுப்ரமணியன் சேவற்திரு துவஜமே

வேல் விருத்தம்
பாகேஸ்ரீ கண்ட சாபு
ஆலமாய் அவுணரு அமரரு அமுதமாய்
ஆதவனின் வெம்மை ஒளிமீது
அரியதவ முனிவரு இந்துவில் தண்ணென்ற்
அமைந அன்பருக்கு முற்றா
முலமாம் வினை அறு அவர்கள் வெம் பகையினை
முடி இந்திரர்க்கும் எட்டா
முடிவில் ஆனந்த நல்கும் பதம் அளி எந்த
முதண்டமும் புகழும் வேல்
ஏலமா யானையின் கோடதிற் சொரிமுத்தும்
இன்பணைகள் உமிழு முத்தும்
இனிவாடை மான் மதம் அகிலோடு சந்தனம்
இலவங்க நறவமாருன்
தாலமா மரமுதற் பொருள் படை திடும் எயினர்
தரு வனிதை மகிழ்னன் ஐயன்
தனினடம் புரி சமர முருகன் அறுமுகன் குகன்
சரவண குமரன் வேலே
முதண்ட மும்புகழும் வேல்
சரவண குமரன் வேலே

மயில் விருத்தம்
பாகேஸ்ரீ கண்டசாபு
ஜோதியிம வேதண்ட கன்னிகையர் தந்த அபி
நய துல்ய சோம வதன
துங்க த்ரிசூலதரி கங்காளி சிவகாம
சுந்தரி பயந்த நிரைசேர்
ஆதினெடு முதண்ட அண்ட பகிரண்டங்கள்
யாவுங கொடுஞ்ஜ சிறகினால்
அணையுன் தனது பேடை அண்டங்கள் என்னவே
அணைக்குங கலப மயிலாம்
நீதிமரை ஓதண்ட முப்பத்து முக்கோடி
நித்தரும் பரவு கிரியாம்
நீலகிரி வேலவன் நிராலம்பன் நிர்ப்பயன்
நிர்வியாகுலன் சங்குவாள்
மாதிகிரி கோதண்ட தண்டன் தரித்த புயன்
மாதவன் முராரி திருமால்
மதுகைட வாரி திரு மருகன் முருகன் குமரன்
வரமுதவு வாகை மயிலே
முருகன் கலாப மயிலே
வரமுதவு வாகை மயிலே

சேவல் விருத்தம்
பாகேஸ்ரீ கண்ட சாபு
தான இடும்புசெயு மோகினி இடாகினி
தரித்த வேதாஅள பூதம்
சருவ சூனியமும் அங்கிரியினால் உதறி
தடிந்து சந்தோட முறவே
கோனாகி மகவானும் வனாள வனாடர்
குலவு சிறை மீள அட்ட
குலகிரிகள் அசுரர் கிளை பொடியாக வெஞ்ஜிறைகள்
கொட்டி எட்டி கூவுமாம்
மானாகம் அக்கறுகு மானுடையன் நிர்த்தமிடு
மாதேவனற் குருபரன்
வானீரம் அவனியழல் காலாய் நவ கிரகம்
வாழ்னாள் அனைத்தும் அவனாம்
சேனா பதி தலைவன் வேதாவினை சிறைசெய்
தேவாதி கரசு
டேனான மைக்கடலின் மீனானவற் கினியன்
சேவற் திரு துவஜமே
சேவற் திரு துவஜமே
குருபரன் சேவற் திரு துவஜமே

வேல் விருத்தம்
சிந்துபைரவி கண்ட சாபு
பந்தாடலிற் கழங காடலிற் சுடர் ஊசல்
பாடலினொ டாடலின் எலாம்
பழந்தெவ்வர் கட்கம் துணி இந்திரர அரசு
பாலித்த திறல் புகழ்ந்தே
சந்தாரு நாண்மலர் குழல் அரம்பையர்களும்
சசிமங்கை அனையர்த்தாமுன்
தன்னை அன்பொடு பாடி ஆடும் ப்ரதாபமும்
தலைமையும் பெற்ற வைவேல்
மந்தாகினி தரங்க சடிலரு அரிய
மந்த்ற்ற உபதேச நல்கும்
வரதேசிகன் கிஞ்சுக சிகா லங்கார
வாரண கொடி உயர்த்தோன்
கொந்தார் மலர கடம்பும் செச்சை மாலையும்
குவளையும் செங காந்தளும்
கூதாள மலரும் தொடுத்தணியு மார்பினன்
கோல திருக்கை வேலே
தேசிகன் கோல திருக்கை வேலே

மயில் விருத்தம்
சின்துப்கைரவி கண்ட சாபு
சங்கார காலமென அரிபிரமர் வெருவுற
சகல லோகமு நடுங்க
சந்த்ர சூரியர் ஒளித்து இந்த்ராதி அமரரும்
சஞ்சல பட உமையுடன்
கங்காளர் தனி நாடகம் செய்தபோ அந்த
காரம் பிறன்டிட நெடும்
ககன கூடமு மேலை முகடு முடிய பசுங
கற்றை கலாப மயிலாம்
சிங்கார குங்கும படீர ம்ருகமத யுகள
சித்ர பயோதர கிரி
தெய்வ வாரண வனிதை புனிதன் குமாரன்
திருத்தணி மகீதரன் இருங
கெங்கா தரன் கீதம் ஆகிய சுராலய
க்ருபாகரன் கார்த்திகேயன்
கீர்த்திமா அசுரர்கள் மடிய க்ரவுஞ்சகிரி
கிழிபட நடாவு மயிலே
பசுங கற்றை கலாப மயிலாம்

சேவல் விருத்தம்
சின்டுப்கைரவி கண்ட சாபு
பங்கமாகிய விட புயங்கமா படமது
பறித்து சிவ அருந்தி
பகிரண்ட முழுதும் பறந்து நிர்த்தங்கள் புரி
பச்சை கலாப மயிலை
துங்கமாய் அன்புற்று வன்புற்ற் அடர்ந்துவரு
துடரும் பிரேத பூத
தொகுதிகள் பசாசுகள் நிசாசரர் அடங்கலும்
துண்ட பட கொத்துமாம்
மங்கை யாமளை குமரி கங்கை மாலினி கவுரி
வஞ்ஜி நான்முகி வராகி
மலையரையன் உதவு அமலை திருமுலையில் ஒழுகுபால்
மகிழ அமுதுண்ட பாலன்
செங கணன் மதலையிடம் இங்குளான் என்னு நர
சிங்கமாய் இரணியனுடல்
சிந்த உகிரிற்கொடு பிளந்த மால் மருமகன்
சேவற் திரு துவஜமே
மால் மருமகன் சேவற்திரு துவஜமே
வேல் விருத்தம்
பீம்பளா கண்ட சாபு
அண்டங்கள் ஒருகோடி ஆயினுங குலகிரி
அனதமாயினு மேவினால்
அடைய உருவி புறம் போவதல் லது தங்கல்
அறியாது சூரனுடலை
கண்டம் படப்பொருது காலனுங குலைவுறுங
கடியகொலை புரியும் அது செங
கனகா சலத்தை கடைந்து முனை யிட்டு
கடுக்கின்ற துங்க நெடுவேல்
தண்டன் தனு திகிரி சங்கு கட்கம் கொண்ட
தானவான் தகன் மாயவன்
தழல்விழி கொடுவரி பருவுடற் பற்றலை
தமனி சுடிகையின் மேல்
வண்டொன்று கமலத்து மங்கையும் கடல் ஆடை
மகையும் பதம் வருடவே
மதுமலர கண்துயில் முகுந்தன் மருகன் குகன்
வாகை திருக்கை வேலே
வாகை திருக்கை வேலே
குகன் வாகை திருக்கை வேலே

மயில் விருத்தம்
பீம்பலா கண்ட சாபு
தீர பயோததி கதிக்கும் ஆகாயமும்
ஜகதலமு நின்று சுழல
திகழ்கின்ற முடிமவுலி சிதறிவிழ வெஞ்ஜிகை
தீ கொப்புளிக்க வெருளும்
பார பணாமுடி அனந்தன் முதல் அரவெலாம்
பதைபதைத்தே நடுங்க
படர்ச்சக்ர வாளகிரி துகள்பட வையாளிவரு
பச்சை ப்ரவாள மயிலாம்
ஆர ப்ரதாப புளகித மதன பாடீர
அமிர்த்த கலச கொங்கையாள்
ஆடுமயில் நிகர்வல்லி அபிராம வல்லி பர
மானந்த வல்லி சிறுவன்
கோர த்ரிசூல த்ரியம்பக ஜடாதார
குருதரு திருத்தணிகை வேள்
கொடிய நிசிசரர் உதரம் எரிபுகுத விபுதர் பதி
குடிபுகுத நடவு மயிலே
பச்சை ப்ரவாள மயிலாம்
வைய்யளி வருபச்சை ப்ரவாள மயிலாம்

சேவல் விருத்தம்
பீம்பலா கண்ட சாபு
வீறான காரிகதி முன்னோடி பின்னோடி
வெங்க குறும்புகள் தரும்
விடு பேய்களே கழுவன் கொலைசாவு கொள்ளிவாய்
வெம் பேய்களை துரத்தி
பேறான ஏசரவண பவாஏ என்னு மந்திரம்
பேசி உச்சாடனத்தார்
பிடர் பிடித்து கொத்தி நகனுதியினால் உற
பிய்ச்சு களி தாடுமாம்
மாறாத முயலகன் வயிற்றுவலி குன்மம்
மகோதரம் பெருவியாதி
வாத பித்தம் சிலேர்ப்பனம் குட்ட முதலான
வல்ல பிணிகளை மாற்றியே
சீறாத ஓராறு திருமுக மலர அடியர்
சி இருக்கு முருகன்
சிலைகள் உரு இட அயிலை விடுகுமர குருபரன்
சேவற் திரு துவஜமே
செவற் திரு துவஜமே
குருபரன் சேவற் திரு துவஜமே

வேல் விருத்தம்
மாண கண்ட சாபு
மாமுதல் தடிந்து தண் மல்குகிரி யூடு போய்
வலிய தானவர் மார்பிடம்
வழிகண்டு கமல பவனத்தனை சிறையிட்டு
மகவான் தனை சிறைவிடுத்து
ஓமவிருடி தலைவர் ஆசிபெற்ற் உயர்வானில்
உம்பர் சொற்றுதி பெற்று நா
உடைய கீரன் தனது பாடல் பெற்றுலகு தனில்
ஒப்பில் புகழ் பெற்ற வைவேல்
சோம கலச ப்ரபா லங்கார தர ஜடா
சூடி காலாந்த காலர்
துங்க ரக்ஷக த்ரோண கட்க குலிசஞ்சூல
துரக கேசர மாம்பர
சேம வடவாம்பு பரண சங்காபரண
திகம்பர த்ரியம்பக மகா
தேவ நந்தன கஜானன சகோதர குகன்
செம்பொற்றிருக்கை வேல்
ஒப்பில் புகழ் பெற்ற வைவேல்

மயில் விருத்தம்
மாண கண்ட சாபு
செக்கர் அளகேச சிகரத்ன புரி ராசினிரை
சிந்த புராரி