திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த
      தேவார பதிகங்கள்
      ஐந்தாம் திருமுறை முதற் பகுதி
      பாடல்கள் 1- 509
      உள்ளுறை
      5.001 கோயில் 1-11 மின்பதிப்பு
      5.002 கோயில் 12-21 மின்பதிப்பு
      5.003 திருவரத்துறை 22-31 மின்பதிப்பு
      5.004 திருவண்ணாமலை 32-41 மின்பதிப்பு
      5.005 திருவண்ணாமலை 42-51 மின்பதிப்பு
      5.006 திருவாரூர் 52-61 மின்பதிப்பு
      5.007 திருவாரூர் 62-73 மின்பதிப்பு
      5.008 திருஅன்னியூர் 74-83 மின்பதிப்பு
      5.009 திருமறைக்காடு 84-93 மின்பதிப்பு
      5.010 திருமறைக்காடு 94-104 மின்பதிப்பு
      5.011 திருமீயச்சூர் 105-114 மின்பதிப்பு
      5.012 திருவீழிமிழலை 115-125 மின்பதிப்பு
      5.013 திருவீழிமிழலை 126-135 மின்பதிப்பு
      5.014 திருவிடைமருதூர் 136-146 மின்பதிப்பு
      5.015 திருவிடைமருதூர் 147-152 மின்பதிப்பு
      5.016 திருப்பேரெயில் 153-163 மின்பதிப்பு
      5.017 திருவெண்ணியூர் 164-174 மின்பதிப்பு
      5.018 திருக்கடம்பந்துறை 175-184 மின்பதிப்பு
      5.019 திருக்கடம்பூர் 185-195 மின்பதிப்பு
      5.020 திருக்கடம்பூர் 196-205 மின்பதிப்பு
      5.021 திருவின்னம்பர் 206-215 மின்பதிப்பு
      5.022 திருக்குடமூக்கு 216-225 மின்பதிப்பு
      5.023 திருநின்றியூர் 226-235 மின்பதிப்பு
      5.024 திருவொற்றியூர் 236-245 மின்பதிப்பு
      5.025 திருப்பாசூர் 246-256 மின்பதிப்பு
      5.026 திருவன்னியூர் 257-265 மின்பதிப்பு
      5.027 திருவையாறு 266-275 மின்பதிப்பு
      5.028 திருவையாறு 276-285 மின்பதிப்பு
      5.029 திருவாவடுதுறை 286-295 மின்பதிப்பு
      5.030 திருப்பராய்த்துறை 296-306 மின்பதிப்பு
      5.031 திருவானைக்கா 307-316 மின்பதிப்பு
      5.032 திருப்பூந்துருத்தி 317-326 மின்பதிப்பு
      5.033 திருச்சோற்றுத்துறை 327-337 மின்பதிப்பு
      5.034 திருநெய்த்தானம் 338-347 மின்பதிப்பு
      5.035 திருப்பழனம் 348-357 மின்பதிப்பு
      5.036 திருச்செம்பொன்பள்ளி 358-367 மின்பதிப்பு
      5.037 திருக்கடவூர்வீரட்டம் 368-378 மின்பதிப்பு
      5.038 திருக்கடவூர்மயானம் 379-386 மின்பதிப்பு
      5.039 திருமயிலாடுதுறை 387-397 மின்பதிப்பு
      5.040 திருக்கழிப்பாலை 398-406 மின்பதிப்பு
      5.041 திருப்பைஞ்ஞீலி 307-316 மின்பதிப்பு
      5.042 திருவேட்களம் 317-326 மின்பதிப்பு
      5.043 திருநல்லம் 327-337 மின்பதிப்பு
      5.044 திருவாமாத்தூர் 338-347 மின்பதிப்பு
      5.045 திருத்தோணிபுரம் 348-357 மின்பதிப்பு
      5.046 திருப்புகலூர் 358-367 மின்பதிப்பு
      5.047 திருவேகம்பம் 368-378 மின்பதிப்பு
      5.048 திருவேகம்பம் 379-386 மின்பதிப்பு
      5.049 திருவெண்காடு 387-397 மின்பதிப்பு
      5.050 திருவாய்மூர் 398-406 மின்பதிப்பு
      ----------
      ------------------------------------------------------------------------
      5.1 கோயில் - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      1 அன்னம் பாலிக்கு தில்லைச்சிற் றம்பலம்
      பொன்னம் பாலிக்கு மேலுமி பூமிசை
      என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற
      இன்னம் பாலிக்கு மோவி பிறவியே. 5.1.1
      2 அரும்பற் றப்பட ஆய்மலர் கொண்டுநீர்
      சுரும்பற் றப்பட தூவி தொழுமினோ
      கரும்பற் றச்சிலை காமனை காய்ந்தவன்
      பெரும்பற் றப்புலி யூரெம் பிரானையே. 5.1.2
      3 அரிச்சுற் றவினை யால்அடர புண்டுநீர்
      எரிச்சுற் றக்கிட தாரென் றயலவர்
      சிரிச்சுற் றப்பல பேசப்ப டாமுனம்
      திருச்சிற் றம்பலஞ் சென்றடை துய்ம்மினே. 5.1.3
      4 அல்லல் என்செயும் அருவினை
      தொல்லை வல்வினை தொந்தந்தான் என்செயும்
      தில்லை மாநகர சிற்றம் பலவனார
      கெல்லை யில்லதோர் அடிமைபூண் டேனுக்கே. 5.1.4
      5 ஊனி லாவி உயிர்க்கும் பொழுதெலாம்
      நானி லாவி யிருப்பனென் னாதனை
      தேனி லாவிய சிற்றம் பலவனார்
      வானி லாவி யிருக்கவும் வைப்பரே. 5.1.5
      6 சிட்டர் வானவர் சென்று வரங்கொளுஞ்
      சிட்டர் வாழ்தில்லை சிற்றம் பலத்துறை
      சிட்டன் சேவடி கைதொழ செல்லு
      சிட்டர் பாலணு கான்செறு காலனே. 5.1.6
      7 ஒருத்த னார்உல கங்க கொருசுடர்
      திருத்த னார்தில்லை சிற்றம் பலவனார்
      விருத்த னார்இளை யார்விட முண்டவெம்
      அருத்த னார்அடி யாரை அறிவரே. 5.1.7
      8 விண்ணி றைந்ததோர் வெவ்வழ லின்னுரு
      எண்ணி றைந்த இருவர கறிவொணா
      கண்ணி றைந்த கடிபொழில் அம்பல
      துண்ணி றைந்துநின் றாடும் ஒருவனே. 5.1.8
      9 வில்லைவ டப்பட வாங்கி அவுணர்தம்
      வல்லைவ டம்மதின் மூன்றுடன் மாய்த்தவன்
      தில்லைவ டந்திசை கைதொழு வார்வினை
      ஒல்லைவ டங்கட தோடுதல் உண்மையே. 5.1.9
      10 நாடி நாரணன் நான்முக னென்றிவர்
      தேடி யுந்திரி துங்காண வல்லரோ
      மாட மாளிகை சூழ்தில்லை யம்பல
      தாடி பாதமென் னெஞ்சுள் இருக்கவே. 5.1.10
      11 மதுர வாய்மொழி மங்கையோர் பங்கினன்
      சதுரன் சிற்றம் பலவன் திருமலை
      அதிர ஆர்த்தெடு தான்முடி பத்திற
      மிதிகொள் சேவடி சென்றடை துய்ம்மினே.
      5.1.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.2 கோயில் - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      12 பனைக்கை மும்மத வேழ முரித்தவன்
      நினைப்ப வர்மனங் கோயிலா கொண்டவன்
      அனைத்து வேடமாம் அம்பல கூத்தனை
      தினைத்த னைப்பொழு தும்மற துய்வனோ. 5.2.1
      13 தீர்த்த னைச்சிவ
      மூர்த்தி யைமுத லாய ஒருவனை
      பார்த்த னுக்கருள் செய்த சிற்றம்பல
      கூத்த னைக்கொடி யேன்மற துய்வனோ.
      5.2.2
      14 கட்டும் பாம்புங் கபாலங் கைமான்மறி
      இட்ட மாயிடு காட்டெரி யாடுவான்
      சிட்டர் வாழ்தில்லை யம்பல கூத்தனை
      எட்ட னைப்பொழு தும்மற துய்வனோ. 5.2.3
      15 மாணி பால்கற தாட்டி வழிபட
      நீணு லகெலாம் ஆள கொடுத்தவன்
      ஆணி யைச்செம்பொன் அம்பல துள்நின்ற
      தாணு வைத்தமி யேன்மற துய்வனோ. 5.2.4
      16 பித்த னைப்பெருங் காடரங் காவுடை
      முத்த னைமுளை வெண்மதி சூடியை
      சித்த னைச்செம்பொன் அம்பல துள்நின்ற
      அத்த னையடி யேன்மற துய்வனோ. 5.2.6
      17 நீதி யைநிறை வைமறை நான்குடன்
      ஓதி யையொரு வர்க்கு மறிவொணா
      சோதி யைச்சுடர செம்பொனின் அம்பல
      தாதி யையடி யேன்மற துய்வனோ. 5.2.6
      18 மைகொள் கண்டனெண் டோ ளன்மு கண்ணினன்
      பைகொள் பாம்பரை யார்த்த பரமனார்
      செய்ய மாதுறை சிற்றம்ப லத்தெங்கள்
      ஐய னையடி யேன்மற துய்வனோ. 5.2.7
      19 முழுதும் வானுல கத்துள தேவர்கள்
      தொழுதும் போற்றியு தூயசெம் பொன்னினால்
      எழுதி மேய்ந்தசிற் றம்பல கூத்தனை
      இழுதை யேன்மற தெங்ஙனம் உய்வனோ. 5.2.8
      20 காரு லாமலர கொன்றை தாரனை
      வாரு லாமுலை மங்கை மணாளனை
      தேரு லாவிய தில்லையு கூத்தனை
      ஆர்கி லாவமு தைமற துய்வனோ. 5.2.9
      21 ஓங்கு மால்வரை ஏந்தலுற் றான்சிரம்
      வீங்கி விம்முற ஊன்றிய தாளினான்
      தேங்கு நீர்வயல் சூழ்தில்லை கூத்தனை
      பாங்கி லாத்தொண்ட னேன்மற துய்வனோ. 5.2.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.3 திருவரத்துறை - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      22
      உடலு ளானையொ பாரியி லாதவெம்
      அடலு ளானை அரத்துறை மேவிய
      சுடரு ளானைக்கண் டீர்நா தொழுவதே. 5.3.1
      23 கரும்பொ பானை கரும்பினிற் கட்டியை
      விரும்பொ பானைவிண் ணோரு மறிகிலா
      அரும்பொ பானை அரத்துறை மேவிய
      சுரும்பொ பானைக்கண் டீர்நா தொழுவதே. 5.3.2
      24 ஏறொ பானையெல் லாவுயிர கும்மிறை
      வேறொ பானைவிண் ணோரு மறிகிலா
      ஆறொ பானை அரத்துறை மேவிய
      ஊறொ பானைக்கண் டீர்நா தொழுவதே. 5.3.3
      25 பரப்பொ பானை பகலிருள் நன்னிலா
      இரப்பொ பானை இளமதி சூடிய
      அரப்பொ பானை அரத்துறை மேவிய
      சுரப்பொ பானைக்கண் டீர்நா தொழுவதே. 5.3.4
      26 நெய்யொ பானைநெய் யிற்சுடர் போல்வதோர்
      மெய்யொ பானைவிண் ணோரு மறிகிலார்
      ஐயொ பானை அரத்துறை மேவிய
      கையொ பானைக்கண் டீர்நா தொழுவதே. 5.3.5
      27 நிதியொ பானை நிதியிற் கிழவனை
      விதியொ பானைவிண் ணோரு மறிகிலார்
      அதியொ பானை அரத்துறை மேவிய
      கதியொ பானைக்கண் டீர்நா தொழுவதே. 5.3.6
      28 புனலொ பானை பொருந்தலர் தம்மையே
      மினலொ பானைவிண் ணோரு மறிகிலார்
      அனலொ பானை அரத்துறை மேவிய
      கனலொ பானைக்கண் டீர்நா தொழுவதே. 5.3.7
      29 பொன்னொ பானைப்பொன் னிற்சுடர் போல்வதோர்
      மின்னொ பானைவிண் ணோரு மறிகிலார்
      அன்னொ பானை அரத்துறை மேவிய
      தன்னொ பானைக்கண் டீர்நா தொழுவதே. 5.3.8
      30 காழி யானை கனவிடை யூருமெய்
      வாழி யானைவல் லோருமென் றின்னவர்
      ஆழி யான்பிர மற்கும் அரத்துறை
      ஊழி யானைக்கண் டீர்நா தொழுவதே. 5.3.9
      31 கலையொ பானைக்கற் றார்க்கோ ரமுதினை
      மலையொ பானை மணிமுடி யூன்றிய
      அலையொ பானை அரத்துறை மேவிய
      நிலையொ பானைக்கண் டீர்நா தொழுவதே. 5.3.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.4 திருவண்ணாமலை - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      32 வட்ட னைமதி சூடியை வானவர்
      சிட்ட னைத்திரு வண்ணா மலையனை
      இட்ட னையிகழ தார்புர மூன்றையும்
      அட்ட னையடி யேன்மற துய்வனோ. 5.4.1
      33 வான னைமதி சூடிய மைந்தனை
      தேன னைத்திரு வண்ணா மலையனை
      ஏன னையிகழ தார்புர மூன்றெய்த
      ஆன னையடி யேன்மற துய்வனோ. 5.4.2
      34 மத்த னைமத யானை யுரித்தவெஞ்
      சித்த னைத்திரு வண்ணா மலையனை
      முத்த னைமுனி தார்புர மூன்றெய்த
      அத்த னையடி யேன்மற துய்வனோ. 5.4.3
      35 காற்ற னைக்கல கும்வினை போயற
      தேற்ற னைத்திரு வண்ணா மலையனை
      கூற்ற னைக்கொடி யார்புர மூன்றெய்த
      ஆற்ற னையடி யேன்மற துய்வனோ. 5.4.4
      36 மின்ன னைவினை தீர்த்தெனை யாட்கொண்ட
      தென்ன னைத்திரு வண்ணா மலையனை
      என்ன னையிகழ தார்புர மூன்றெய்த
      அன்ன னையடி யேன்மற துய்வனோ. 5.4.5
      37 மன்ற னைமதி யாதவன் வேள்விமேற்
      சென்ற னைத்திரு வண்ணா மலையனை
      வென்ற னைவெகுண் டார்புர மூன்றையுங்
      கொன்ற னைக்கொடி யேன்மற துய்வனோ. 5.4.6
      38 வீர னைவிட முண்டனை விண்ணவர்
      தீர னைத்திரு வண்ணா மலையனை
      ஊர னையுண ரார்புர மூன்றெய்த
      ஆர னையடி யேன்மற துய்வனோ. 5.4.7
      39 கருவி னைக்கடல் வாய்விட முண்டவெ
      திருவி னைத்திரு வண்ணா மலையனை
      உருவி னையுண ரார்புர மூன்றெய்த
      அருவி னையடி யேன்மற துய்வனோ. 5.4.8
      40 அருத்த னையர வைந்தலை நாகத்தை
      திருத்த னைத்திரு வண்ணா மலையனை
      கருத்த னைக்கடி யார்புர மூன்றெய்த
      அருத்த னையடி யேன்மற துய்வனோ. 5.4.9
      41 அரக்க னையல றவ்விர லூன்றிய
      திருத்த னைத்திரு வண்ணா மலையனை
      இரக்க மாயென் உடலுறு நோய்களை
      துரக்க னைத்தொண்ட னேன்மற துய்வனோ. 5.4.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.5 திருவண்ணாமலை - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      42 பட்டி ஏறுக தேறி பலஇலம்
      இட்ட மாக இரந்துண் டுழிதரும்
      அட்ட மூர்த்திஅண் ணாமலை கைதொழ
      கெட்டு போம்வினை கேடில்லை காண்மினே. 5.5.1
      43 பெற்ற மேறுவர் பெய்பலி கென்றவர்
      சுற்ற மாமிகு தொல்புக ழாளொடும்
      அற்ற தீர்க்கும்அண் ணாமலை கைதொழ
      நற்ற வத்தொடு ஞான திருப்பரே. 5.5.2
      44 பல்லி லோடுகை யேந்தி பலஇலம்
      ஒல்லை சென்றுணங் கல்கவர் வாரவர்
      அல்லல் தீர்க்கும்அண் ணாமலை கைதொழ
      நல்ல வாயின நம்மை அடையுமே. 5.5.3
      45 பாடி சென்று பலிக்கென்று நின்றவர்
      ஓடி போயினர் செய்வதொன் றென்கொலோ
      ஆடி பாடிஅண் ணாமலை கைதொழ
      ஓடி போகுநம் மேலை வினைகளே. 5.5.4
      46 தேடி சென்று திருந்தடி யேத்துமின்
      நாடி வந்தவர் நம்மையும் ஆட்கொள்வர்
      ஆடி பாடிஅண் ணாமலை கைதொழ
      ஓடி போம்நம துள்ள வினைகளே. 5.5.5
      47 கட்டி யொக்குங் கரும்பி னிடைத்துணி
      வெட்டி வீணைகள் பாடும் விகிர்தனார்
      அட்ட மூர்த்திஅண் ணாமலை மேவிய
      நட்ட மாடியை நண்ணநன் காகுமே. 5.5.6
      48 கோணி கொண்டையர் வேடமுன் கொண்டவர்
      பாணி நட்டங்க ளாடும் பரமனார்
      ஆணி பொன்னினண் ணாமலை கைதொழ
      பேணி நின்ற பெருவினை போகுமே. 5.5.7
      49 கண்ட தான்கறு தான்காலன் ஆருயிர்
      பண்டு கால்கொடு பாய்ந்த பரமனார்
      அண்ட தோங்கும்அண் ணாமலை கைதொழ
      விண்டு போகுநம் மேலை வினைகளே. 5.5.8
      50 முந்தி சென்றுமு போதும் வணங்குமின்
      அந்தி வாயொளி யான்றன்அண் ணாமலை
      சிந்தி யாஎழு வார்வினை தீர்த்திடுங்
      கந்த மாமலர் சூடுங் கருத்தனே. 5.5.9
      51 மறையி னானொடு மாலவன் காண்கிலா
      நிறையும் நீர்மையுள் நின்றருள் செய்தவன்
      உறையும் மாண்பின்அண் ணாமலை கைதொழ
      பறையும் நாஞ்செய்த பாவங்க ளானவே. 5.5.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.6 திருவாரூர் - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      52 எப்போ தும்மிறை யும்மற வாதுநீர்
      முப்போ தும்பிர மன்றொழ நின்றவன்
      செப்போ தும்பொனின் மேனி சிவனவன்
      அப்போ தைக்கஞ்சல் என்னும்ஆ ரூரனே. 5.6.1
      53 சடையின் மேலுமோர் தையலை வைத்தவர்
      அடைகி லாவர வைஅரை யார்த்தவர்
      படையின் நேர்தடங் கண்ணுமை பாகமா
      அடைவர் போல்இடு காடர்ஆ ரூரரே. 5.6.2
      54 விண்ட வெண்டலை யேகல னாகவே
      கொண்ட கம்பலி தேருங் குழகனார்
      துண்ட வெண்பிறை வைத்த இறையவர்
      அண்ட வாணர கருளும்ஆ ரூரரே. 5.6.3
      55 விடையும் ஏறுவர் வெண்டலை யிற்பலி
      கடைகள் தோறு திரியுமெங் கண்ணுதல்
      உடையுஞ் சீரை உறைவது காட்டிடை
      அடைவர் போல்அரங் காகஆ ரூரரே. 5.6.4
      56 துளைக்கை வேழ துரியுடல் போர்த்தவர்
      வளைக்கை யாளையோர் பாக மகிழ்வெய்தி
      திளைக்கு திங்க சடையிற் திசைமுழு
      தளக்கஞ் சிந்தையர் போலும்ஆ ரூரரே. 5.6.5
      57 பண்ணின் இன்மொழி யாளையோர் பாகமா
      விண்ணி னார்விளங் கும்மதி சூடியே
      சுண்ண நீறுமெ பூசி சுடலையின்
      அண்ணி யாடுவர் போலும்ஆ ரூரரே. 5.6.6
      58 மட்டு வார்குழ லாளொடு மால்விடை
      இட்ட மாவுக தேறும் இறைவனார்
      கட்டு வாங்கங் கனல்மழு மான்றனோ
      டட்ட மாம்புய மாகும்ஆ ரூரரே. 5.6.7
      59 தேய்ந்த திங்கள் கமழ்சடை யன்கனல்
      ஏந்தி எல்லியுள் ஆடும் இறைவனார்
      காய்ந்து காமனை நோக்கின கண்ணினார்
      ஆய்ந்த நான்மறை யோதும்ஆ ரூரரே. 5.6.8
      60 உண்டு நஞ்சுகண் டத்துள் அடக்கியங்
      கிண்டை செஞ்சடை வைத்த இயல்பினான்
      கொண்ட கோவண ஆடையன் கூரெரி
      அண்ட வாணர் அடையும்ஆ ரூரரே. 5.6.9
      61 மாலும் நான்முக னும்மறி கிற்கிலார்
      கால னாய அவனை கடந்திட்டு
      சூல மான்மழு வேந்திய கையினார்
      ஆலம் உண்டழ காயஆ ரூரரே. 5.6.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.7 திருவாரூர் - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      62 கொக்க ரைகுழல் வீணை கொடுகொட்டி
      பக்க மேபகு வாயன பூதங்கள்
      ஒக்க ஆட லுகந்துடன் கூத்தராய்
      அக்கி னோடர வார்ப்பர்ஆ ரூரரே. 5.7.1
      63 எந்த மாதவஞ் செய்தனை நெஞ்சமே
      பந்தம் வீடவை யாய பராபரன்
      அந்த மில்புகழ் ஆரூர் அரனெறி
      சிந்தை யுள்ளுஞ் சிரத்துளு தங்கவே. 5.7.2
      64 வண்டு லாமலர் கொண்டு வளர்சடை
      கிண்டை மாலை புனைந்தும் இராப்பகல்
      தொண்ட ராகி தொடர்ந்து விடாதவர
      கண்டம் ஆளவும் வைப்பர்ஆ ரூரரே. 5.7.3
      65 துன்பெ லாமற நீங்கி சுபத்தராய்
      என்பெ லாம்நெக்கி ராப்பக லேத்திநின்
      றின்ப ராய்நினை தென்றும் இடையறா
      அன்ப ராமவர கன்பர்ஆ ரூரரே. 5.7.4
      66 முருட்டு மெத்தையில் முன்கிட தாமுனம்
      அரட்டர் ஐவரை ஆசறு திட்டுநீர்
      முரட்ட டித்தவ தக்கன்றன் வேள்வியை
      அரட்ட டக்கிதன் ஆரூர் அடைமினே. 5.7.5
      67 எம்மை யாரிலை யானுமு ளேனலேன்
      எம்மை யாரும் இதுசெய வல்லரே
      அம்மை யாரென கென்றென் றரற்றினேற்
      கம்மை யாரைத்த தார்ஆரூர் ஐயரே. 5.7.6
      68 தண்ட ஆளியை தக்கன்றன் வேள்வியை
      செண்ட தாடிய தேவர கண்டனை
      கண்டு கண்டிவள் காதலி தன்பதா
      கொண்டி யாயின வாறென்றன் கோதையே. 5.7.7
      69 இவண மைப்பல பேச தொடங்கினாள்
      அவண மன்றெனில் ஆரூர் அரனெனும்
      பவணி வீதி விடங்கனை கண்டிவள்
      தவணி யாயின வாறென்றன் தையலே. 5.7.8
      70 நீரை செஞ்சடை வைத்த நிமலனார்
      காரொ தமிடற் றர்கனல் வாயரா
      ஆர தர்உறை யும்மணி ஆரூரை
      தூர தேதொழு வார்வினை தூளியே. 5.7.9
      71 உள்ள மேயொன் றுறுதி யுரைப்பன்நான்
      வெள்ள தாங்கு விரிசடை வேதியன்
      அள்ளல் நீர்வயல் ஆரூர் அமர்ந்தவெம்
      வள்ளல் சேவடி வாழ்த்தி வணங்கிடே. 5.7.10
      72 விண்ட மாமலர் மேலுறை வானொடுங்
      கொண்டல் வண்ணனுங் கூடி அறிகிலா
      அண்ட வாணன்றன் ஆரூர் அடிதொழ
      பண்டை வல்வினை நில்லா பறையுமே. 5.7.11
      73 மையு லாவிய கண்டத்தன் அண்டத்தன்
      கையு லாவிய சூலத்தன் கண்ணுதல்
      ஐயன் ஆரூர் அடிதொழு வார்க்கெலாம்
      உய்ய லாமல்லல் ஒன்றிலை காண்மினே. 5.7.12
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.8 திருஅன்னியூர் - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      74 பாற லைத்த படுவெண் டலையினன்
      நீற லைத்தசெம் மேனியன் நேரிழை
      கூற லைத்தமெய் கோளர வாட்டிய
      ஆற லைத்த சடைஅன்னி யூரரே. 5.8.1
      75 பண்டொ தமொழி யாளையோர் பாகமாய்
      இண்டை செஞ்சடை யன்னிருள் சேர்ந்ததோர்
      கண்ட தன்கரி யின்னுரி போர்த்தவன்
      அண்ட தப்புற தான்அன்னி யூரரே. 5.8.2
      76 பரவி நாளும் பணிந்தவர் தம்வினை
      துரவை யாக துடைப்பவர் தம்மிடங்
      குரவம் நாறுங் குழலுமை கூறராய்
      அரவ மாட்டுவர் போல்அன்னி யூரரே. 5.8.3
      77 வேத கீதர்விண் ணோர்க்கும் உயர்ந்தவர்
      சோதி வெண்பிறை துன்று சடைக்கணி
      நாதர் நீதியி னாலடி யார்த
      காதி யாகிநின் றார்அன்னி யூரரே. 5.8.4
      78 எம்பி ரான்இமை யோர்கள் தமக்கெலாம்
      இன்ப ராகி இருந்தவெம் மீசனார்
      துன்ப வல்வினை போக தொழுமவர
      கன்ப ராகிநின் றார்அன்னி யூரரே. 5.8.5
      79 வெந்த நீறுமெய் பூசுநன் மேனியர்
      கந்த மாமலர் சூடுங் கருத்தினர்
      சிந்தை யார்சிவ னார்செய்ய தீவண்ணர்
      அந்த ணாளர்கண் டீர்அன்னி யூரரே. 5.8.6
      80 ஊனை யார்தலை யிற்பலி கொண்டுழல்
      வானை வானவர் தாங்கள் வணங்கவே
      தேனை யார்குழ லாளையோர் பாகமா
      ஆனை யீருரி யார்அன்னி யூரரே. 5.8.7
      81 காலை போய்ப்பலி தேர்வர் கண்ணார்நெற்றி
      மேலை வானவர் வந்து விரும்பிய
      சோலை சூழ்புறங் காடரங் காகவே
      ஆலின் கீழற தார்அன்னி யூரரே. 5.8.8
      82 எரிகொள் மேனியர் என்பணி தின்பரா
      திரியு மூவெயில் தீயெழ செற்றவர்
      கரிய மாலொடு நான்முகன் காண்பதற்
      கரிய ராகிநின் றார்அன்னி யூரரே. 5.8.9
      83 வஞ்ச ரக்கன் கரமுஞ் சிரத்தொடும்
      அஞ்சு மஞ்சுமோ ராறுநான் கும்மிற
      பஞ்சின் மெல்விர லாலடர தாயிழை
      அஞ்ச லஞ்சலென் றார்அன்னி யூரரே. 5.8.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.9 திருமறைக்காடு - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      84 ஓத மால்கடல் பாவி உலகெலாம்
      மாத ரார்வலங் கொண்மறை காடரை
      காதல் செய்து கருத படுமவர்
      பாத மேத்த பறையுநம் பாவமே. 5.9.1
      85 பூக்கு தாழை புறணி அருகெலாம்
      ஆக்க தானுடை மாமறை காடரோ
      ஆர்க்குங் காண்பரி யீர்அடி யார்தமை
      நோக்கி காண்பது நும்பணி செய்யிலே. 5.9.2
      86 புன்னை ஞாழல் புறணி அருகெலாம்
      மன்னி னார்வலங் கொண்மறை காடரோ
      அன்ன மென்னடை யாளையோர் பாகமா
      சின்ன வேடம் உகப்பது செல்வமே. 5.9.3
      87 அட்ட மாமலர் சூடி அடம்பொடு
      வட்ட புன்சடை மாமறை காடரோ
      நட்ட மாடியும் நான்மறை பாடியும்
      இட்ட மாக இருக்கும் இடமிதே. 5.9.4
      88 நெய்த லாம்பல் நிறைவயல் சூழ்தரும்
      மெய்யி னார்வலங் கொண்மறை காடரோ
      தையல் பாகங்கொண் டீர்கவர் புன்சடை
      பைதல் வெண்பிறை பாம்புடன் வைப்பதே. 5.9.5
      89 துஞ்சும் போது துயிலின்றி ஏத்துவார்
      வஞ்சின் றிவலங் கொண்மறை காடரோ
      பஞ்சின் மெல்லடி பாவை பலிகொணர
      தஞ்சி நிற்பதும் ஐந்தலை நாகமே 5.9.6
      90 விண்ணு ளார்விரும் பியெதிர் கொள்ளவே
      மண்ணு ளார்வணங் கும்மறை காடரோ
      கண்ணி னாலுமை காண கதவினை
      திண்ண மாக திறந்தருள் செய்ம்மினே. 5.9.7
      91 திருவி னார்செல்வ மல்கு விழாவணி
      மருவி னார்வலங் கொண்மறை காடரோ
      உருவி னாளுமை மங்கையோர் பாகமாய்
      மருவி னாய்கங்கை யைச்சென்னி தன்னிலே. 5.9.8
      92 சங்கு வந்தலை குந்தடங் கானல்வாய்
      வங்க மார்வலங் கொண்மறை காடரோ
      கங்கை செஞ்சடை வைப்பது மன்றியே
      அங்கை யில்லனல் ஏந்தல் அழகிதே. 5.9.9
      93 குறைக்கா டான்விட்ட தேர்குத்த மாமலை
      இறைக்கா டியெடு தான்றலை ஈரைந்தும்
      மறைக்கா டானிறை ஊன்றலும் வாய்விட்டான்
      இறைக்கா டாயெம் பிரானுனை ஏத்தவே. 5.9.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.10 திருமறைக்காடு - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      94 பண்ணி னேர்மொழி யாளுமை பங்கரோ
      மண்ணி னார்வலஞ் செய்ம்மறை காடரோ
      கண்ணி னாலுமை காண கதவினை
      திண்ண மாக திறந்தருள் செய்ம்மினே. 5.10.1
      95 ஈண்டு செஞ்சடை யாகத்துள் ஈசரோ
      மூண்ட கார்முகி லின்முறி கண்டரோ
      ஆண்டு கொண்டநீ ரேயருள் செய்திடும்
      நீண்ட மாக்கத வின்வலி நீக்குமே. 5.10.2
      96 அட்ட மூர்த்திய தாகிய அப்பரோ
      துட்டர் வான்புரஞ் சுட்ட சுவண்டரோ
      பட்டங் கட்டிய சென்னி பரமரோ
      சட்ட விக்கத வந்திற பிம்மினே. 5.10.3
      97 அரிய நான்மறை யோதிய நாவரோ
      பெரிய வான்புரஞ் சுட்ட சுவண்டரோ
      விரிகொள் கோவண ஆடை விருத்தரோ
      பெரிய வான்கத வம்பிரி விக்கவே. 5.10.4
      98 மலையில் நீடிரு கும்மறை காடரோ
      கலைகள் வந்திறைஞ் சுங்கழ லேத்தரோ
      விலையில் மாமணி வண்ண வுருவரோ
      தொலைவி லாக்கத வந்துணை நீக்குமே. 5.10.5
      99 பூக்கு தாழை புறணி அருகெலாம்
      ஆக்கு தண்பொழில் சூழ்மறை காடரோ
      ஆர்க்குங் காண்பரி யீர்அடி கேள்உமை
      நோக்கி காண கதவை திறவுமே. 5.10.6
      100 வெந்த வெண்பொடி பூசும் விகிர்தரோ
      அந்த மில்லி அணிமறை காடரோ
      எந்தை நீயடி யார்வ திறைஞ்சிட
      இந்த மாக்கத வம்பிணி நீக்குமே. 5.10.7
      101 ஆறு சூடும் அணிமறை காடரோ
      கூறு மாதுமை கீந்த குழகரோ
      ஏற தேறிய எம்பெரு மானிந்த
      மாறி லாக்கத வம்வலி நீக்குமே. 5.10.8
      102 சுண்ண வெண்பொடி பூசுஞ் சுவண்டரோ
      பண்ணி யேறுக தேறும் பரமரோ
      அண்ண லாதி அணிமறை காடரோ
      திண்ண மாக்கத வந்திற பிம்மினே. 5.10.9
      103 விண்ணு ளார்விரும் பியெதிர் கொள்ளவே
      மண்ணு ளார்வணங் கும்மறை காடரோ
      கண்ணி னாலுமை காண கதவினை
      திண்ண மாக திறந்தருள் செய்ம்மினே. 5.10.10
      104 அரக்க னைவிர லாலடர திட்டநீர்
      இரக்க மொன்றிலீர் எம்பெரு மானிரே
      சுரக்கும் புன்னைகள் சூழ்மறை காடரோ
      சரக்க விக்கத வந்திற பிம்மினே. 5.10.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.11 திருமீயச்சூர் இளங்கோயில் - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      105 தோற்றுங் கோயிலு தோன்றிய கோயிலும்
      வேற்று கோயில் பலவுள மீயச்சூர
      கூற்றம் பாய்ந்த குளிர்புன் சடையரற்
      கேற்றங் கோயில்கண் டீரிளங் கோயிலே. 5.11.1
      106 வந்த னையடை கும்மடி தொண்டர்கள்
      பந்த னைசெய்து பாவிக்க நின்றவன்
      சிந்த னைதிரு துந்திரு மீயச்சூர்
      எந்த மையுடை யாரிளங் கோயிலே. 5.11.2
      107 பஞ்ச மந்திர மோதும் பரமனார்
      அஞ்ச ஆனை யுரித்தன லாடுவார்
      நெஞ்சம் வாழி நினைந்திரு மீயச்சூர்
      எந்த மையுடை யாரிளங் கோயிலே. 5.11.3
      108 நாறு மல்லிகை கூவிளஞ் செண்பகம்
      வேறு விரித்த
      ஆறு கொண்டுக தான்றிரு மீயச்சூர்
      ஏறு கொண்டுக தாரிளங் கோயிலே. 5.11.4
      109 வெவ்வ வண்ணத்து நாகம் வெருவவே
      கவ்வ வண்ண கனல்விரி தாடுவர்
      செவ்வ வண்ண திகழ்திரு மீயச்சூர்
      எவ்வ வண்ணம் பிரானிளங் கோயிலே. 5.11.5
      110 பொன்னங் கொன்றையும் பூவணி மாலையும்
      பின்னுஞ் செஞ்சடை மேற்பிறை சூடிற்று
      மின்னு மேகலை யாளொடு மீயச்சூர்
      இன்ன நாள்அக லாரிளங் கோயிலே. 5.11.6
      111 படைகொள் பூதத்தன் பைங்கொன்றை தாரினன்
      சடைகொள் வெள்ளத்தன் சாந்தவெண் ணீற்றினன்
      விடைகொ ளூர்தியி னான்றிரு மீயச்சூர்
      இடைகொண் டேத்தநின் றாரிளங் கோயிலே. 5.11.7
      112 ஆறு கொண்ட சடையினர் தாமுமோர்
      வேறு கொண்டதோர் வேடத்த ராகிலுங்
      கூறு கொண்டுக தாளொடு மீயச்சூர்
      ஏறு கொண்டுக தாரிளங் கோயிலே. 5.11.8
      113 வே தானென்பர் வேள்வியு ளானென்பர்
      பூ தானென்பர் புண்ணியன் றன்னையே
      கீ தான்கிள ருந்திரு மீயச்சூர்
      ஏத தீர்க்கநின் றாரிளங் கோயிலே. 5.11.9
      114 கடுக்கண் டன்கயி லாய மலைதனை
      எடுக்க லுற்ற இராவணன் ஈடற
      விடுக்க ணின்றி வெகுண்டவன் மீயச்சூர்
      இடுக்கண் தீர்க்கநின் றாரிளங் கோயிலே. 5.11.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.12 திருவீழிமிழலை - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      115 கரைந்து கைதொழு வாரையுங் காதலன்
      வரைந்து வைதெழு வாரையும் வாடலன்
      நிரந்த பாரிட தோடவர் நித்தலும்
      விரைந்து போவது வீழி மிழலைக்கே. 5.12.1
      116 ஏற்று வெல்கொடி ஈசன்ற னாதிரை
      நாற்றஞ் சூடுவர் நன்னறு திங்களார்
      நீற்று சந்தன வெள்ளை விரவலார்
      வேற்று கோலங்கொள் வீழி மிழலையே. 5.12.2
      117 புனைபொற் சூலத்தன் போர்விடை யூர்தியான்
      வினைவெல் நாகத்தன் வெண்மழு வாளினான்
      நினைய நின்றவன் ஈசனை யேயெனா
      வினையி லார்தொழும் வீழி மிழலையே. 5.12.3
      118 மாட தாடு மனத்துடன் வைத்தவர்
      கோட தார்குரு கேத்திர தார்பலர்
      பாட தார்பழி பார்பழி பல்லதோர்
      வேட தார்தொழும் வீழி மிழலையே. 5.12.4
      119 எடுத்த வெல்கொடி யேறுடை யான்றமர்
      உடுப்பர் கோவண முண்பது பிச்சையே
      கெடுப்ப தாவது கீழ்நின்ற வல்வினை
      விடுத்து போவது வீழி மிழலைக்கே. 5.12.5
      120 குழலை யாழ்மொழி யாரிசை வேட்கையால்
      உழலை யாக்கையை யூணும் உணர்விலீர்
      தழலை நீர்மடி கொள்ளன்மின் சாற்றினோம்
      மிழலை யானடி சாரவிண் ணாள்வரே. 5.12.6
      121 தீரன் தீத்திர ளன்சடை தங்கிய
      நீரன் ஆடிய நீற்றன்வண் டார்கொன்றை
      தாரன் மாலையன் றண்ணறுங் கண்ணியன்
      வீரன் வீழி மிழலை விகிர்தனே. 5.12.7
      122 எரியி னாரிறை யாரிடு காட்டிடை
      நரியி னார்பரி யாமகிழ் கின்றதோர்
      பெரிய னார்தம் பிறப்பொடு சாதலை
      விரியி னார்தொழு வீழி மிழலையே. 5.12.8
      123 நீண்ட சூழ்சடை மேலோர் நிலாமதி
      காண்டு சேவடி மேலோர் கனைகழல்
      வேண்டு வாரவர் வீதி புகுந்திலர்
      மீண்டும் போவது வீழி மிழலைக்கே. 5.12.9
      124 பாலை யாழொடு செவ்வழி பண்கொள
      மாலை வானவர் வந்து வழிபடும்
      ஆலை யாரழல் அந்தண ராகுதி
      வேலை யார்தொழும் வீழி மிழலையே. 5.12.10
      125 மழலை யேற்று மணாளன் திருமலை
      சுழல ஆர்த்தெடு தான்முடி தோளிற
      கழல்கொள் காலிற் றிருவிர லூன்றலும்
      மிழலை யானடி வாழ்கென விட்டதே. 5.12.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.13 திருவீழிமிழலை - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      126 என்பொ னேயிமை யோர்தொழு பைங்கழல்
      நன்பொ னேநல தீங்கறி வொன்றிலேன்
      செம்பொ னேதிரு வீழி மிழலையுள்
      அன்ப னேயடி யேனை குறிக்கொளே. 5.13.1
      127 கண்ணி னாற்களி கூரக்கை யாற்றொழு
      தெண்ணு மாறறி யாதிளை பேன்றனை
      விண்ணு ளார்தொழும் வீழி மிழலையுள்
      அண்ண லேயடி யேனை குறிக்கொளே. 5.13.2
      128 ஞால மேவிசும் பேநல தீமையே
      கால மேகரு தேகரு தாற்றொழுஞ்
      சீல மேதிரு வீழி மிழலையுள்
      கோல மேயடி யேனை குறிக்கொளே. 5.13.3
      129 முத்த னேமுதல் வாமுகி ழும்முளை
      ஒத்த னேயொரு வாவுரு வாகிய
      சித்த னேதிரு வீழி மிழலையுள்
      அத்த னேயடி யேனை குறிக்கொளே. 5.13.4
      130 கருவ னேகரு வாய்த்தெளி வார்க்கெலாம்
      ஒருவ னேஉயிர பாய்உணர் வாய்நின்ற
      திருவ னேதிரு வீழி மிழலையுள்
      குருவ னேயடி யேனை குறிக்கொளே. 5.13.5
      131 காத்த னேபொழி லேழையுங் காதலால்
      ஆத்த னேஅம ரர்க்கயன் றன்றலை
      சேர்த்த னேதிரு வீழி மிழலையுள்
      கூத்த னேயடி யேனை குறிகொளே. 5.13.6
      132 நீதி வானவர் நித்தல் நியமஞ்செய்
      தோதி வானவ ரும்முண ராததோர்
      வேதி யாவிகிர் தாதிரு வீழியுள்
      ஆதி யேயடி யேனை குறிக்கொளே. 5.13.7
      133 பழகி நின்னடி சூடிய பாலனை
      கழகின் மேல்வைத்த காலனை சாடிய
      அழக னேயணி வீழி மிழலையுள்
      குழக னேயடி யேனை குறிக்கொளே. 5.13.8
      134 அண்ட வானவர் கூடி கடைந்தநஞ்
      சுண்ட வானவ னேஉணர் வொன்றிலேன்
      விண்ட வான்பொழில் வீழி மிழலையுள்
      கொண்ட னேயடி யேனை குறிக்கொளே. 5.13.9
      135 ஒருத்தன் ஓங்கலை தாங்கலுற் றானுரம்
      வருத்தி னாய்வஞ்ச னேன்மனம் மன்னிய
      திருத்த னேதிரு வீழி மிழலையுள்
      அருத்த னேயடி யேனை குறிக்கொளே. 5.13.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.14 திருவிடைமருதூர் - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      136 பாச மொன்றில ராய்ப்பல பத்தர்கள்
      வாச நாண்மலர் கொண்டடி வைகலும்
      ஈச னெம்பெரு மான்இடை மருதினிற்
      பூச நாம்புகு தும்புன லாடவே. 5.14.1
      137 மறையின் நாண்மலர் கொண்டடி வானவர்
      முறையி னான்முனி கள்வழி பாடுசெய்
      இறைவன் எம்பெரு மான்இடை மருதினில்
      உறையும் ஈசனை உள்குமென் உள்ளமே. 5.14.2
      138 கொன்றை மாலையுங் கூவிள மத்தமுஞ்
      சென்று சேர திகழ்சடை வைத்தவன்
      என்று மெந்தை பிரான்இடை மருதினை
      நன்று கைதொழு வார்வினை நாசமே. 5.14.3
      139 இம்மை வானவர் செல்வம் விளைத்திடும்
      அம்மை யேற்பிற வித்துயர் நீத்திடும்
      எம்மை யாளும் இடைமரு தன்கழல்
      செம்மை யேதொழு வார்வினை சிந்துமே. 5.14.4
      140 வண்ட ணைந்தன வன்னியுங் கொன்றையுங்
      கொண்ட ணிந்த சடைமுடி கூத்தனார்
      எண்டி சைக்கும் இடைமரு தாவென
      விண்டு போயறும் மேலை வினைகளே. 5.14.5
      141 ஏற தேறும் இடைமரு தீசனார்
      கூறு வார்வினை தீர்க்குங் குழகனார்
      ஆறு செஞ்சடை வைத்த அழகனார
      கூறி யூறி உருகுமென் உள்ளமே. 5.14.6
      142 விண்ணு ளாரும் விரு படுவர்
      மண்ணு ளாரும் மதிக்க படுபவர்
      எண்ணி னார்பொழில் சூழிடை மருதினை
      நண்ணி னாரைநண் ணாவினை நாசமே. 5.14.7
      143 வெந்த வெண்பொடி பூசும் விகிர்தனார்
      கந்த மாலைகள் சூடுங் கருத்தனார்
      எந்தை யென்னிடை மருதினில் ஈசனை
      சிந்தை யால்நினை வார்வினை தேயுமே. 5.14.8
      144 வேத மோதும் விரிசடை அண்ணலார்
      பூதம் பாடநின் றாடும் புனிதனார்
      ஏத தீர்க்கும் இடைமரு தாவென்று
      பாத மேத்த பறையுநம் பாவமே. 5.14.9
      145 கனியி னுங்கட்டி பட்ட கரும்பினும்
      பனிம லர்க்குழற் பாவைநல் லாரினு
      தனிமு டிகவி தாளு மரசினும்
      இனியன் றன்னடை தார்க்கிடை மருதனே. 5.14.10
      146 முற்றி லாமதி சூடும் முதல்வனார்
      ஒற்றி னார்மலை யாலர கன்முடி
      எற்றி னார்கொடி யாரிடை மருதினை
      பற்றி னாரைப்பற் றாவினை பாவமே. 5.14.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.15 திருவிடைமருதூர் - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      147 பறையின் ஓசையும் பாடலின்
      மறையின் ஓசையும் வைகும் அயலெலாம்
      இறைவன் எங்கள் பிரானிடை மருதினில்
      உறையும் ஈசனை உள்குமென் உள்ளமே. 5.15.1
      148 மனத்துள் மாயனை மாசறு சோதியை
      புனிற்று பிள்ளைவெள் ளைம்மதி சூடியை
      எனக்கு தாயையெம் மானிடை மருதனை
      நினைத்தி டூறி நிறைந்ததென் னுள்ளமே. 5.15.2
      149 வண்ட ணைந்தன வன்னியும் மத்தமுங்
      கொண்ட ணிந்த சடைமுடி கூத்தனை
      எண்டி சைக்கும் இடைமரு தாவென
      விண்டு போயறும் மேலை வினைகளே. 5.15.3
      150 துணையி லாமையிற் றூங்கிரு பேய்களோ
      டணைய லாவதெ மக்கரி தேயெனா
      இணையி லாஇடை மாமரு தில்லெழு
      பணையி லாகமஞ் சொல்லுந்தன் பாங்கிக்கே. 5.15.4
      151 மண்ணை யுண்டமால் காணான் மலரடி
      விண்ணை விண்டயன் காணான் வியன்முடி
      மொண்ணை மாமரு தாவென்றென் மொய்குழல்
      பண்ணை யாயமு தானும் பயிலுமே. 5.15.5
      152 மங்கை காண கொடார்மண மாலையை
      கங்கை காண கொடார்முடி கண்ணியை
      நங்கை மீர்இடை மருதரி நங்கைக்கே
      எங்கு வாங்கி கொடுத்தார் இதழியே. 5.15.6
      இப்பதிகத்தில் 7891011-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.16 திருப்பேரெயில் - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      153 மறையு மோதுவர் மான்மறி கையினர்
      கறைகொள் கண்ட முடைய கபாலியார்
      துறையும் போகுவர் தூயவெண் ணீற்றினர்
      பிறையுஞ் சூடுவர் பேரெயி லாளரே. 5.16.1
      154 கணக்கி லாரையுங் கற்றுவல் லாரையும்
      வணக்கி லாநெறி கண்டுகொண் டாரையு
      தணக்கு வார்தணி பாரெ பொருளையும்
      பிணக்கு வாரவர் பேரெயி லாளரே. 5.16.2
      155 சொரிவி பார்மழை சூழ்கதிர திங்களை
      விரிவி பார்வெயிற் பட்ட விளங்கொளி
      எரிவி பார்தணி பாரெ பொருளையும்
      பிரிவி பாரவர் பேரெயி லாளரே. 5.16.3
      156 செறுவி பார்சிலை யால்மதில் தீர்த்தங்கள்
      உறுவி பார்பல பத்தர்கள் ஊழ்வினை
      அறுவி பாரது வன்றியும் நல்வினை
      பெறுவி பாரவர் பேரெயி லாளரே. 5.16.4
      157 மற்றை யாரறி யார்மழு வாளினார்
      பற்றி யாட்டியோர் ஐந்தலை பாம்பரை
      சுற்றி யாரவர் தூநெறி யால்மிகு
      பெற்றி யாரவர் பேரெயி லாளரே. 5.16.5
      158 திருக்கு வார்குழற் செல்வன சேவடி
      இருக்கு வாய்மொழி யாற்றனை யேத்துவார்
      சுருக்கு வார்துயர் தோற்றங்க ளாற்றற
      பெருக்கு வாரவர் பேரெயி லாளரே. 5.16.6
      159 முன்னை யார்மயி லூர்தி முருகவேள்
      தன்னை யாரெனிற் றானோர் தலைமகன்
      என்னை யாளும் இறையவ னெம்பிரான்
      பின்னை யாரவர் பேரெயி லாளரே. 5.16.7
      160 உழைத்து துள்ளியும் உள்ளத்து ளேயுரு
      இழைத்து மெந்தை பிரானென் றிராப்பகல்
      அழைக்கும் அன்பின ராய அடியவர்
      பிழைப்பு நீக்குவர் பேரெயி லாளரே. 5.16.8
      161 நீரு லாநிமிர் புன்சடை யாவெனா
      ஏரு லாவனங் கன்றிறல் வாட்டிய
      வாரு லாவன மென்முலை யாளொடும்
      பேரு ளாரவர் பேரெயி லாளரே. 5.16.9
      162 பாணி யார்படு தம்பெயர தாடுவர்
      தூணி யார்விச யற்கருள் செய்தவர்
      மாணி யாய்மண் ணளந்தவன் நான்முகன்
      பேணி யாரவர் பேரெயி லாளரே. 5.16.10
      163 மதத்த வாளர கன்மணி புட்பகஞ்
      சிதைக்க வேதிரு மாமலை கீழ்ப்புக்கு
      பதைத்தங் கார்த்தெடு தான்பத்து நீண்முடி
      பிதக்க வூன்றிய பேரெயி லாளரே. 5.16.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.17 திருவெண்ணி - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      164 முத்தி னைப்பவ ளத்தை முளைத்தவெ
      தொத்தி னைச்சுட ரைச்சுடர் போலொளி
      பித்த னைக்கொலும் நஞ்சினை வானவர்
      நித்த னைநெரு நற்கண்ட வெண்ணியே. 5.17.1
      165 வெண்ணி தொன்னகர் மேயவெண் டிங்களார்
      கண்ணி தொத்த சடையர் கபாலியார்
      எண்ணி தம்மை நினைந்திரு தேனுக்கு
      அண்ணி திட்டமு தூறுமென் நாவுக்கே. 5.17.2
      166 காற்றி னைக்கன லைக்கதிர் மாமணி
      நீற்றி னைநினை பார்வினை நீக்கிடுங்
      கூற்றி னையுதை திட்ட குணமுடை
      வீற்றி னைநெரு நற்கண்ட வெண்ணியே. 5.17.3
      167 நல்ல னைத்திகழ் நான்மறை யோதியை
      சொல்ல னைச்சுட ரைச்சுடர் போலொளிர்
      கல்ல னைக்கடி மாமதில் மூன்றெய்த
      வில்ல னைநெரு நற்கண்ட வெண்ணியே. 5.17.4
      168 சுடரை போலொளிர் சுண்ணவெண் ணீற்றனை
      அடருஞ் சென்னியில் வைத்த அமுதினை
      படருஞ் செஞ்சடை பான்மதி சூடியை
      இடரை நீக்கியை யான்கண்ட வெண்ணியே. 5.17.5
      169 பூத நாதனை பூம்புக லூரனை
      தாதெ னத்தவ ழும்மதி சூடியை
      நாத னைநல்ல நான்மறை யோதியை
      வேத னைநெரு நற்கண்ட வெண்ணியே. 5.17.6
      170 ஒருத்தி யையொரு பாக தடக்கியும்
      பொருத்தி யபுனி தன்புரி புன்சடை
      கருத்த னைக்கறை கண்டனை கண்ணுதல்
      நிருத்த னைநெரு நற்கண்ட வெண்ணியே. 5.17.7
      171 சடைய னைச்சரி கோவண ஆடைகொண்
      டுடைய னையுணர் வார்வினை தீர்த்திடும்
      படைய னைமழு வாளொடு பாய்தரும்
      விடைய னைநெரு நற்கண்ட வெண்ணியே. 5.17.8
      172 பொருப்ப னைப்புன லாளொடு புன்சடை
      அருப்ப னையிள திங்களங் கண்ணியான்
      பருப்ப தம்பர வித்தொழு தொண்டர்கள்
      விருப்ப னைநெரு நற்கண்ட வெண்ணியே. 5.17.9
      173 சூல வஞ்சனை வல்லவெஞ் சுந்தரன்
      கோல மாவருள் செய்ததோர் கொள்கையான்
      காலன் அஞ்ச வுதைத்திருள் கண்டமாம்
      வேலை நஞ்சனை கண்டது வெண்ணியே. 5.17.10
      174 இலையி னார்கொன்றை சூடிய ஈசனார்
      மலையி னாலர கன்றிறல் வாட்டினார்
      சிலையி னான்மதி லெய்தவன் வெண்ணியை
      தலையி னாற்றொழு வார்வினை தாவுமே. 5.17.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.18 திருக்கடம்பந்துறை - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      175 முற்றி லாமுலை யாளிவ ளாகிலும்
      அற்ற தீர்க்கும் அறிவில ளாகிலுங்
      கற்றை செஞ்சடை யான்கடம் பந்துறை
      பெற்ற மூர்தியென் றாளெங்கள் பேதையே. 5.18.1
      176 தனகி ருந்ததோர் தன்மைய ராகிலும்
      முனகு தீர தொழுதெழு மின்களோ
      கனக புன்சடை யான்கடம் பந்துறை
      நினைய வல்லவர் நீள்விசும் பாள்வரே. 5.18.2
      177 ஆரி யந்தமி ழோடிசை யானவன்
      கூரி யகுண தார்குறி நின்றவன்
      காரி கையுடை யான்கடம் பந்துறை
      சீரி யல்பத்தர் சென்றடை மின்களே. 5.18.3
      178 பண்ணின் இன்மொழி கேட்கும் பரமனை
      வண்ண நன்மல ரான்பல தேவருங்
      கண்ண னும்மறி யான்கடம் பந்துறை
      நண்ண நம்வினை யாயின நாசமே. 5.18.4
      179 மறைகொண் டமன தானை மனத்துளே
      நிறைகொண் டநெஞ்சி னுள்ளுற வைம்மினோ
      கறைகண் டனுறை யுங்கடம் பந்துறை
      சிறைகொண் டவினை தீர தொழுமினே. 5.18.5
      180 நங்கை பாகம்வை தநறுஞ் சோதியை
      பங்க மின்றி பணிந்தெழு மின்களோ
      கங்கை செஞ்சடை யான்கடம் பந்துறை
      அங்க மோதி அரனுறை கின்றதே. 5.18.6
      181 அரிய நான்மறை ஆறங்க மாயைந்து
      புரியன் தேவர்க ளேத்தநஞ் சுண்டவன்
      கரிய கண்டத்தி னான்கடம் பந்துறை
      உரிய வாறு நினைமட நெஞ்சமே. 5.18.7
      182 பூமென் கோதை உமையொரு பாகனை
      ஓமஞ் செய்தும் உணர்மின்கள் உள்ளத்தாற்
      காமற் காய்ந்த பிரான்கடம் பந்துறை
      நாம மேத்த தீவினை நாசமே. 5.18.8
      183 பார ணங்கி வணங்கி பணிசெய
      நார ணன்பிர மன்னறி யாததோர்
      கார ணன்கடம் பந்துறை மேவிய
      ஆர ணங்கொரு பாலுடை மைந்தனே. 5.18.9
      184 நூலால் நன்றா நினைமின்கள் நோய்கெட
      பாலான் ஐந்துடன் ஆடும் பரமனார்
      காலால் ஊன்றுக தான்கடம் பந்துறை
      மேலால் நாஞ்செய்த வல்வினை வீடுமே. 5.18.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.19 திருக்கடம்பூர் - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      185 தளருங் கோளர வத்தொடு தண்மதி
      வளருங் கோல வளர்சடை யார்க்கிடங்
      கிளரும் பேரிசை கின்னரம் பாட்டறா
      களருங் கார்க்கடம் பூர்க்கர கோயிலே. 5.19.1
      186 வெலவ லான்புலன் ஐந்தொடு வேதமுஞ்
      சொலவ லான்சுழ லுந்தடு மாற்றமும்
      அலவ லான்மனை யார்ந்தமென் றோளியை
      கலவ லான்கடம் பூர்க்கர கோயிலே. 5.19.2
      187 பொய்தொ ழாது புலியுரி யோன்பணி
      செய்தெ ழாவெழு வார்பணி செய்தெழா
      வைதெ ழாதெழு வாரவர் எள்கநீர்
      கைதொ ழாவெழு மின்கர கோயிலே. 5.19.3
      188 துண்ணெ னாமன தால்தொழு நெஞ்சமே
      பண்ணி னான்முனம் பாடல துசெய்தே
      எண்ணி லாரெயில் மூன்றும் எரித்தமு
      கண்ணி னான்கடம் பூர்க்கர கோயிலே. 5.19.4
      189 சுனையுள் நீல மலரன கண்டத்தன்
      புனையும் பொன்னிற கொன்றை புரிசடை
      கனையும் பைங்கழ லான்கர கோயிலை
      நினையும் உள்ள தவர்வினை நீங்குமே. 5.19.5
      190 குணங்கள் சொல்லியுங் குற்றங்கள் பேசியும்
      வணங்கி வாழ்த்துவர் அன்புடை யாரெலாம்
      வணங்கி வான்மலர் கொண்டடி வைகலுங்
      கணங்கள் போற்றிசை குங்கர கோயிலே. 5.19.6
      191 பண்ணி னார்மறை பல்பல பூசனை
      மண்ணி னார்செய்வ தன்றியும் வைகலும்
      விண்ணி னார்கள் வியக்க படுவன
      கண்ணி னார்கடம் பூர்க்கர கோயிலே. 5.19.7
      192 அங்கை ஆரழ லேந்திநின் றாடலன்
      மங்கை பாட மகிழ்ந்துடன் வார்சடை
      கங்கை யானுறை யுங்கர கோயிலை
      தங்கை யாற்றொழு வார்வினை சாயுமே. 5.19.8
      193 நங்க டம்பனை பெற்றவள் பங்கினன்
      தென்க டம்பை திருக்கர கோயிலான்
      தன்க டன்னடி யேனையு தாங்குதல்
      என்க டன்பணி செய்து கிடப்பதே. 5.19.9
      194 பணங்கொள் பாற்கடல் பாம்பணை யானொடும்
      மணங்க மழ்மலர தாமரை யானவன்
      பிணங்கும் பேரழல் எம்பெரு மாற்கிடங்
      கணங்கள் போற்றிசை குங்கர கோயிலே. 5.19.10
      195 வரைக்கண் நாலஞ்சு தோளுடை யான்றலை
      அரைக்க வூன்றி அருள்செய்த ஈசனார்
      திரைக்கு தண்புனல் சூழ்கர கோயிலை
      உரைக்கும் உள்ள தவர்வினை ஓயுமே. 5.19.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.20 திருக்கடம்பூர்க்கரக்கோயில் - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      196 ஒருவ ராயிரு மூவரு மாயவன்
      குருவ தாய குழகன் உறைவிடம்
      பருவ ரால்குதி கொள்ளும் பழனஞ்சூழ்
      கருவ தாங்கடம் பூர்க்கர கோயிலே. 5.20.1
      197 வன்னி மத்தம் வளரிள திங்களோர்
      கன்னி யாளை கதிர்முடி வைத்தவன்
      பொன்னின் மல்கு புணர்முலை யாளொடும்
      மன்னி னான்கடம் பூர்க்கர கோயிலே. 5.20.2
      198 இல்ல கோலமும் இந்த இளமையும்
      அல்லற் கோலம் அறுத்துய வல்லிரே
      ஒல்லை சென்றடை யுங்கடம் பூர்நகர
      செல்வ கோயில் திருக்கர கோயிலே. 5.20.3
      199 வேறு சிந்தை யிலாதவர் தீவினை
      கூறு செய்த குழகன் உறைவிடம்
      ஏறு செல்வ திமையவர் தாந்தொழும்
      ஆறு சேர்கடம் பூர்க்கர கோயிலே. 5.20.4
      200 திங்கள் தங்கிய செஞ்சடை மேலுமோர்
      மங்கை தங்கும் மணாளன் இருப்பிடம்
      பொங்கு சேர்மணற் புன்னையும் ஞாழலு
      தெங்கு சேர்கடம் பூர்க்கர கோயிலே. 5.20.5
      201 மல்லை ஞாலத்து வாழும் உயிர்க்கெலாம்
      எல்லை யான பிரானார் இருப்பிடங்
      கொல்லை முல்லை கொழுந்தகை மல்லிகை
      நல்ல சேர்கடம் பூர்க்கர கோயிலே. 5.20.6
      202 தளரும் வாளர வத்தொடு தண்மதி
      வளரும் பொற்சடை யாற்கிட மாவது
      கிளரும் பேரொலி கின்னரம் பாட்டறா
      களரி யார்கடம் பூர்க்கர கோயிலே. 5.20.7
      203 உற்றா ராயுற வாகி உயிர்க்கெலாம்
      பெற்றா ராய பிரானார் உறைவிடம்
      முற்றார் மும்மதி லெய்த முதல்வனார்
      கற்றார் சேர்கடம் பூர்க்கர கோயிலே. 5.20.8
      204 வெள்ளை நீறணி மேனிய வர்க்கெலாம்
      உள்ள மாய பிரானார் உறைவிடம்
      பிள்ளை வெண்பிறை சூடிய சென்னியான்
      கள்வன் சேர்கடம் பூர்க்கர கோயிலே. 5.20.9
      205 பரப்பு நீரிலங் கைக்கிறை வன்னவன்
      உரத்தி னாலடு கல்லெடு கல்லுற
      இரக்க மின்றி இறைவிர லாற்றலை
      அரக்கி னான்கடம் பூர்க்கர கோயிலே. 5.20.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.21 திருவின்னம்பர் - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      206 என்னி லாரும் எனக்கினி யாரில்லை
      என்னி லும்மினி யானொரு வன்னுளன்
      என்னு ளேஉயிர பாய்ப்புறம் போந்துபு
      கென்னு ளேநிற்கும் இன்னம்பர் ஈசனே. 5.21.1
      207 மட்டுண் பார்கள் மடந்தையர் வாட்கணால்
      கட்டுண் பார்கள் கருதுவ தென்கொலோ
      தட்டி முட்டித்தள் ளாடி தழுக்குழி
      எட்டு மூர்த்தியர் இன்னம்பர் ஈசனே. 5.21.2
      208 கனலுங் கண்ணியு தண்மதி யோடுடன்
      புனலுங் கொன்றையுஞ் சூடும் புரிசடை
      அனலுஞ் சூலமும் மான்மறி கையினர்
      எனலும் என்மன தின்னம்பர் ஈசனே. 5.21.3
      209 மழைக்கண் மாமயி லாலும் மகிழ்ச்சியான்
      அழைக்கு தன்னடி யார்கள்தம் அன்பினை
      குழைக்கு தன்னை குறிக்கொள வேண்டியே
      இழைக்கு மென்மன தின்னம்பர் ஈசனே. 5.21.4
      210 தென்ன வனென்னை யாளுஞ் சிவனவன்
      மன்ன வன்மதி யம்மறை யோதியான்
      முன்ன மன்னவன் சேரலன் பூழியான்
      இன்னம் இன்புற்ற இன்னம்பர் ஈசனே. 5.21.5
      211 விளக்கும் வேறு படப்பிறர் உள்ளத்தில்
      அளக்கு தன்னடி யார்மன தன்பினை
      குளக்கும் என்னை குறிக்கொள வேண்டியே
      இளக்கும் என்மன தின்னம்பர் ஈசனே. 5.21.6
      212 சடைக்க ணாள்புன லாள்அனல் கையதோர்
      கடைக்க ணால்மங்கை நோக்கிம வான்மகள்
      படைக்க ணாற்பரு கப்படு வான்ந
      கிடைக்க ணாய்நின்ற இன்னம்பர் ஈசனே. 5.21.7
      213 தொழுது தூமலர் தூவி துதித்துநின்
      றழுது காமுற் றரற்றுகின் றாரையும்
      பொழுது போக்கி புறக்கணி பாரையும்
      எழுதுங் கீழ்க்கண கின்னம்பர் ஈசனே. 5.21.8
      214 விரியு தண்ணிள வேனலில் வெண்பிறை
      புரியுங் காமனை வேவ புருவமு
      திரியும் எல்லையில் மும்மதில் தீயெழு
      தெரிய நோக்கிய இன்னம்பர் ஈசனே. 5.21.9
      215 சனியும் வெள்ளியு திங்களும் ஞாயிறும்
      முனிவ னாய்முடி பத்துடை யான்றனை
      கனிய வூன்றிய காரண மென்கொலோ
      இனிய னாய்நின்ற இன்னம்பர் ஈசனே. 5.21.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.22 திருக்குடமூக்கு - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      216 பூவ ணத்தவன் புண்ணியன் நண்ணியங்
      காவ ணத்துடை யானடி யார்களை
      தீவ ணத்திரு நீறுமெய் பூசியோர்
      கோவ ணத்துடை யான்குட மூக்கிலே. 5.22.1
      217 பூத்தா டிக்கழி யாதேநீர் பூமியீர்
      தீத்தா டித்திறஞ் சிந்தையுள் வைம்மினோ
      வேர்த்தா டுங்காளி தன்விசை தீர்கென்று
      கூத்தா டியுறை யுங்குட மூக்கிலே. 5.22.2
      218 நங்கை யாளுமை யாளுறை நாதனார்
      அங்கை யாளொ டறுபத தாழ்சடை
      கங்கை யாளவள் கன்னி யெனப்படுங்
      கொங்கை யாளுறை யுங்குட மூக்கிலே. 5.22.3
      219 ஓதா நாவன் திறத்தை யுரைத்திரேல்
      ஏதா னுமினி தாகும் மியமுனை
      சேதா ஏறுடை யானமர தவிடங்
      கோதா விரியுறை யுங்குட மூக்கிலே. 5.22.4
      220 நக்க ரையனை நாடொறும் நன்னெஞ்சே
      வக்க ரையுறை வானை வணங்குநீ
      அக்க ரையோ டரவரை யார்த்தவன்
      கொக்க ரையுடை யான்குட மூக்கிலே. 5.22.5
      221 துறவி நெஞ்சின ராகிய தொண்டர்காள்
      பிறவி நீங்க பிதற்றுமின் பித்தராய்
      மறவ னாய்ப்பார்த்தன் மேற்கணை தொட்டவெங்
      குறவ னாருறை யுங்குட மூக்கிலே. 5.22.6
      222 தொண்ட ராகி தொழுது பணிமினோ
      பண்டை வல்வினை பற்றற வேண்டுவீர்
      விண்ட வர்புரம் மூன்றொரு மாத்திரை
      கொண்ட வன்னுறை யுங்குட மூக்கிலே. 5.22.7
      223 காமி யஞ்செய்து காலம் கழியாதே
      ஓமி யஞ்செய்தங் குள்ள துணர்மினோ
      சாமி யோடு சரச்சுவ தியவள்
      கோமி யும்முறை யுங்குட மூக்கிலே. 5.22.8
      224 சிரமஞ் செய்து சிவனுக்கு பத்தரா
      பரம னைப்பல நாளும் பயிற்றுமின்
      பிரமன் மாலொடு மற்றொழி தார்க்கெலாங்
      குரவ னாருறை யுங்குட மூக்கிலே. 5.22.9
      225 அன்று தானர கன்கயி லாயத்தை
      சென்று தானெடு கவுமை யஞ்சலும்
      நன்று தான்நக்கு நல்விர லூன்றிப்பின்
      கொன்று கீதங்கே டான்குட மூக்கிலே. 5.22.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.23 திருநின்றியூர் - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      226 கொடுங்கண் வெண்டலை கொண்டு குறைவிலை
      படுங்க ணொன்றில ராய்ப்பலி தேர்ந்துண்பர்
      நெடுங்கண் மங்கைய ராட்டயர் நின்றியூர
      கடுங்கை கூற்றுதை திட்ட கருத்தரே. 5.23.1
      227 வீதி வேல்நெடுங் கண்ணியர் வெள்வளை
      நீதி யேகொள பாலது நின்றியூர்
      வேத மோதி விளங்குவெண் தோட்டரா
      காதில் வெண்குழை வைத்தவெங் கள்வரே. 5.23.2
      228 புற்றி னார்அர வம்புலி தோல்மிசை
      சுற்றி னார்சுண்ண போர்வைகொண் டார்சுடர்
      நெற்றி கண்ணுடை யாரமர் நின்றியூர்
      பற்றி னாரைப்பற் றாவினை பாவமே. 5.23.3
      229 பறையின் ஓசையும் பாடலின்
      மறையின் ஓசையும் மல்கி அயலெலாம்
      நிறையும் பூம்பொழில் சூழ்திரு நின்றியூர்
      உறையும் ஈசனை உள்குமென் உள்ளமே. 5.23.4
      230 சுனையுள் நீலஞ் சுளியும் நெடுங்கணாள்
      இனைய னென்றென்று மேசுவ தென்கொலோ
      நினையு தண்வயல் சூழ்திரு நின்றியூர
      பனையின் ஈருரி போர்த்த பரமரே. 5.23.5
      231 உரைப்ப கேண்மின்நும் உச்சியு ளான்றனை
      நிரைப்பொன் மாமதில் சூழ்திரு நின்றியூர்
      உரைப்பொற் கற்றைய ராரிவ ரோவெனிற்
      திரைத்து பாடி திரிதருஞ் செல்வரே. 5.23.6
      232 கன்றி யூர்முகில் போலுங் கருங்களி
      றின்றி ஏறல னாலிது வென்கொலோ
      நின்றி யூர்பதி யாக நிலாயவன்
      வென்றி யேறுடை எங்கள் விகிர்தனே. 5.23.7
      233 நிலையி லாவெள்ளை மாலையன் நீண்டதோர்
      கொலைவி லாலெயில் எய்த கொடியவன்
      நிலையி னார்வயல் சூழ்திரு நின்றியூர்
      உரையி னாற்றொழு வார்வினை ஓயுமே. 5.23.8
      234 அஞ்சி யாகிலும் அன்புப டாகிலும்
      நெஞ்சம் வாழி நினைநின்றி யூரைநீ
      இஞ்சி மாமதில் எய்திமை யோர்தொழ
      குஞ்சி வான்பிறை சூடிய கூத்தனே. 5.23.9
      235 எளிய னாமொழி யாஇலங் கைக்கிறை
      களியி னாற்கயி லாய மெடுத்தவன்
      நெளிய வூன்ற வலானமர் நின்றியூர்
      அளியி னாற்றொழு வார்வினை யல்குமே. 5.23.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.24 திருவொற்றியூர் - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      236 ஒற்றி யூரும் ஒளிமதி பாம்பினை
      ஒற்றி யூரு பாம்பும் அதனையே
      ஒற்றி யூர வொருசடை வைத்தவன்
      ஒற்றி யூர்தொழ நம்வினை ஓயுமே. 5.24.1
      237 வாட்ட மொன்றுரை கும்மலை யான்மகள்
      ஈட்ட வேயிரு ளாடி இடுபிண
      காட்டி லோரி கடிக்க எடுத்ததோர்
      ஓட்டை வெண்டலை கையொற்றி யூரரே. 5.24.2
      238 கூற்று தண்டத்தை அஞ்சி குறிக்கொண்மின்
      ஆற்று தண்ட தடக்கு மரனடி
      நீற்று தண்டத்த ராய்நினை வார்க்கெலாம்
      ஊற்று தண்டொப்பர் போலொற்றி யூரரே. 5.24.3
      239 சுற்றும் பேய்சுழ லச்சுடு காட்டெரி
      பற்றி யாடுவர் பாய்புலி தோலினர்
      மற்றை யூர்களெல் லாம்பலி தேர்ந்துபோய்
      ஒற்றி யூர்பு குறையும் ஒருவரே. 5.24.4
      240 புற்றில் வாளர வாட்டி உமையொடு
      பெற்ற மேறுக தேறும் பெருமையான்
      மற்றை யாரொடு வானவ ருந்தொழ
      ஒற்றி யூருறை வானோர் கபாலியே. 5.24.5
      241 போது தாழ்ந்து புதுமலர் கொண்டுநீர்
      மாது தாழ்சடை வைத்த மணாளனார்
      ஓது வேதிய னார்திரு வொற்றியூர்
      பாத மேத்த பறையுநம் பாவமே. 5.24.6
      242 பலவும் அன்னங்கள் பன்மலர் மேற்றுஞ்சுங்
      கலவ மஞ்ஞைகள் காரென வெள்குறும்
      உலவு பைம்பொழில் சூழ்திரு ஒற்றியூர்
      நிலவி னானடி யேயடை நெஞ்சமே. 5.24.7
      243 ஒன்று போலும் உகந்தவ ரேறிற்று
      ஒன்று போலும் உதைத்து களைந்தது
      ஒன்று போலொளி மாமதி சூடிற்று
      ஒன்று போலுக தாரொற்றி யூரரே. 5.24.8
      244 படைகொள் பூதத்தர் வேதத்தர் கீதத்தர்
      சடைகொள் வெள்ளத்தர் சாந்தவெண் ணீற்றினர்
      உடையு தோலுக தாருறை யொற்றியூர்
      அடையு முள்ள தவர்வினை யல்குமே. 5.24.9
      245 வரையி னாருயர் தோலுடை மன்னனை
      வரையி னால்வலி செற்றவர் வாழ்விட
      திரையி னார்புடை சூழ்திரு வொற்றியூர்
      உரையி னாற்பொலி தாருயர தார்களே. 5.24.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.25 திருப்பாசூர் - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      246 முந்தி மூவெயி லெய்த முதல்வனார்
      சிந்தி பார்வினை தீர்த்திடுஞ் செல்வனார்
      அந்தி கோன்றன கேயருள் செய்தவர்
      பந்தி செஞ்சடை பாசூ ரடிகளே. 5.25.1
      247 மடந்தை பாகம் மகிழ்ந்த மணாளனார்
      தொடர்ந்த வல்வினை போக்கிடுஞ் சோதியார்
      கடந்த காலனை கால்கொடு பாய்ந்தவர்
      படர்ந்த நாகத்தர் பாசூ ரடிகளே. 5.25.2
      248 நாறு கொன்றையும் நாகமு திங்களும்
      ஆறுஞ் செஞ்சடை வைத்த அழகனார்
      காறு கண்டத்தர் கையதோர் சூலத்தர்
      பாறி னோட்டினர் பாசூ ரடிகளே. 5.25.3
      249 வெற்றி யூருறை வேதிய ராவர்நல்
      ஒற்றி யேறுக தேறு மொருவனார்
      நெற்றி கண்ணினர் நீளர வந்தனை
      பற்றி யாட்டுவர் பாசூ ரடிகளே. 5.25.4
      250 மட்ட விழ்ந்த மலர்நெடுங் கண்ணிபால்
      இட்ட வேட்கைய ராகி யிருப்பவர்
      துட்ட ரேலறி யேனிவர் சூழ்ச்சிமை
      பட்ட நெற்றியர் பாசூ ரடிகளே. 5.25.5
      251 பல்லில் ஓடுகை யேந்தி பகலெலாம்
      எல்லி நின்றிடு பெய்பலி யேற்பவர்
      சொல்லி போய்ப்புகும் ஊரறி யேன்சொலீர்
      பல்கு நீற்றினர் பாசூ ரடிகளே. 5.25.6
      252 கட்டி விட்ட சடையர் கபாலியர்
      எட்டி நோக்கிவ தில்புகு தவ்வவர்
      இட்ட மாவறி யேனிவர் செய்வன
      பட்ட நெற்றியர் பாசூ ரடிகளே. 5.25.7
      253 வேத மோதிவ தில்புகு தாரவர்
      காதில் வெண்குழை வைத்த கபாலியார்
      நீதி யொன்றறி யார்நிறை கொண்டனர்
      பாதி வெண்பிறை பாசூ ரடிகளே. 5.25.8
      254 சாம்பற் பூசுவர் தாழ்சடை கட்டுவர்
      ஓம்பல் மூதெரு தேறு மொருவனார்
      தேம்பல் வெண்மதி சூடுவர் தீயதோர்
      பாம்பு மாட்டுவர் பாசூ ரடிகளே. 5.25.9
      255 மாலி னோடு மறையவன் றானுமாய்
      மேலுங் கீழும் அளப்பரி தாயவர்
      ஆலின் நீழல் அறம்பகர தார்மிக
      பால்வெண் ணீற்றினர் பாசூ ரடிகளே. 5.25.10
      256 திரியு மூவெயில் செங்கணை யொன்றினால்
      எரிய வெய்தன ரேனும் இலங்கைக்கோன்
      நெரிய வூன்றியி டார்விர லொன்றினாற்
      பரியர் நுண்ணியர் பாசூ ரடிகளே. 5.25.11
      இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - பாசூர்நாதர்
      தேவியார் - பசுபதிநாயகி.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.26 திருவன்னியூர் - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      257 காடு கொண்டரங் காக்கங்குல் வாய்க்கணம்
      பாட மாநட மாடும் பரமனார்
      வாட மானிறங் கொள்வர் மணங்கமழ்
      மாட மாமதில் சூழ்வன்னி யூரரே. 5.26.1
      258 செங்கண் நாகம் அரையது தீத்திரள்
      அங்கை யேந்திநின் றார்எரி யாடுவர்
      கங்கை வார்சடை மேலிடங் கொண்டவர்
      மங்கை பாகம்வை தார்வன்னி யூரரே. 5.26.2
      259 ஞானங் காட்டுவர் நன்னெறி
      தானங் காட்டுவர் தம்மடை தார்க்கெலா
      தானங் காட்டித்தன் றாளடை தார்கட்கு
      வானங் காட்டுவர் போல்வன்னி யூரரே. 5.26.3
      260 இம்மை அம்மை யெனவிரண் டும்மிவை
      மெய்ம்மை தானறி யாது விளம்புவர்
      மெய்ம்மை யால்நினை வார்கள்தம் வல்வினை
      வம்மின் தீர்ப்பர்கண் டீர்வன்னி யூரரே. 5.26.4
      261 பிறைகொள் வாணுதற் பெய்வளை தோளியர்
      நிறையை கொள்பவர் நீறணி மேனியர்
      கறைகொள் கண்டத்தர் வெண்மழு வாளினர்
      மறைகொள் வாய்மொழி யார்வன்னி யூரரே. 5.26.5
      262 திளைக்கும் வண்டொடு தேன்படு கொன்றையர்
      துளைக்கை வேழத்தர் தோலர் சுடர்மதி
      முளைக்கு மூரற் கதிர்கண்டு நாகம்நா
      வளைக்கும் வார்சடை யார்வன்னி யூரரே. 5.26.6
      263 குணங்கொள் தோளெட்டு மூர்த்தி இணையடி
      இணங்கு வார்க கினியனு மாய்நின்றான்
      வணங்கி மாமலர் கொண்டவர் வைகலும்
      வணங்கு வார்மன தார்வன்னி யூரரே. 5.26.7
      264 இயலு மாலொடு நான்முகன் செய்தவம்
      முயலிற் காண்பரி தாய்நின்ற மூர்த்திதான்
      அயலெ லாம்அன்ன மேயும்அ தாமரை
      வயலெ லாங்கயல் பாய்வன்னி யூரரே. 5.26.8
      இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 5.26.8
      265 நலங்கொள் பாகனை நன்று முனிந்திடா
      விலங்கல் கோத்தெடு தானது மிக்கிட
      இலங்கை மன்னன் இருபது தோளினை
      மலங்க வூன்றிவை தார்வன்னி யூரரே. 5.26.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.27 திருவையாறு - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      266 சிந்தை வாய்தலு ளான்வந்து சீரியன்
      பொந்து வார்புலால் வெண்டலை கையினன்
      முந்தி வாயதோர் மூவிலை வேல்பிடி
      தந்தி வாயதோர் பாம்பர்ஐ யாறரே. 5.27.1
      267 பாக மாலை மகிழ்ந்தனர் பான்மதி
      போக ஆனையின் ஈருரி போர்த்தவர்
      கோக மாலை குலாயதோர் கொன்றையும்
      ஆக ஆன்நெய்அஞ் சாடும்ஐ யாறரே. 5.27.2
      268 நெஞ்ச மென்பதோர் நீள்க தன்னுளே
      வஞ்ச மென்பதோர் வான்சுழி பட்டுநான்
      துஞ்சும் போழ்துநின் நா திருவெழு
      தஞ்சு தோன்ற அருளும்ஐ யாறரே. 5.27.3
      269 நினைக்கும் நெஞ்சினுள் ளார்நெடு மாமதில்
      அனைத்தும் ஒள்ளழல் வாயெரி யூட்டினார்
      பனைக்கை வேழ துரியுடல் போர்த்தவர்
      அனைத்து வாய்தலுள் ளாரும்ஐ யாறரே. 5.27.4
      270 பரியர் நுண்ணியர் பார்த்தற் கரியவர்
      அரிய பாடலர் ஆடல ரன்றியுங்
      கரிய கண்டத்தர் காட்சி பிறர்க்கெலாம்
      அரியர் தொண்டர கெளியர்ஐ யாறரே. 5.27.5
      271 புலரும் போது மிலாப்பட்ட பொற்சுடர்
      மலரும் போதுக ளாற்பணி யச்சிலர்
      இலரும் போதும் இலாதது மன்றியும்
      அலரும் போதும் அணியும்ஐ யாறரே. 5.27.6
      272 பங்க மாலை குழலியோர் பால்நிற
      கங்கை மாலையர் காதன்மை செய்தவர்
      மங்கை மாலை மதியமுங் கண்ணியும்
      அங்க மாலையுஞ் சூடும்ஐ யாறரே. 5.27.7
      273 முன்னை யாறு முயன்றெழு வீரெலாம்
      பின்னை யாறு பிரியெனும் பேதைகாள்
      மன்னை யாறு மருவிய மாதவன்
      தன்னை யாறு தொழத்தவ மாகுமே. 5.27.8
      274 ஆனை யாறென ஆடுகின் றான்முடி
      வானை யாறு வளாயது காண்மினோ
      நான்ஐ யாறுபு கேற்கவன் இன்னருள்
      தேனை யாறு திறந்தாலே யொக்குமே. 5.27.9
      275 அரக்கின் மேனியன் அந்தளிர்
      அரக்கின் சேவடி யாளஞ்ச அஞ்சலென்
      றரக்கன் ஈரைந்து வாயும் அலறவே
      அரக்கி னானடி யாலும்ஐ யாறனே. 5.27.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - செம்பொற்சோதீசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.28 திருவையாறு - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      276 சிந்தை வண்ணத்த ராய்த்திறம் பாவணம்
      முந்தி வண்ணத்த ராய்முழு நீறணி
      சந்தி வண்ணத்த ராய்த்தழல் போல்வதோர்
      அந்தி வண்ணமு மாவர்ஐ யாறரே. 5.28.1
      277 மூல வண்ணத்த ராய்முத லாகிய
      கோல வண்ணத்த ராகி கொழுஞ்சுடர்
      நீல வண்ணத்த ராகி நெடும்பளிங்
      கால வண்ணத்த ராவர்ஐ யாறரே. 5.28.2
      278 சிந்தை வண்ணமு தீயதோர் வண்ணமும்
      அந்தி போதழ காகிய வண்ணமும்
      பந்தி காலனை பாய்ந்ததோர் வண்ணமும்
      அந்தி வண்ணமு மாவர்ஐ யாறரே. 5.28.3
      279 இருளின் வண்ணமு மேழிசை வண்ணமுஞ்
      சுருளின் வண்ணமுஞ் சோதியின் வண்ணமும்
      மருளு நான்முகன் மாலொடு வண்ணமும்
      அருளும் வண்ணமு மாவர்ஐ யாறரே. 5.28.4
      280 இழுக்கின் வண்ணங்க ளாகிய வெவ்வழல்
      குழைக்கும் வண்ணங்க ளாகியுங் கூடியும்
      மழைக்கண் மாமுகி லாகிய வண்ணமும்
      அழைக்கும் வண்ணமு மாவர்ஐ யாறரே. 5.28.5
      281 இண்டை வண்ணமும் ஏழிசை வண்ணமு
      தொண்டர் வண்ணமுஞ் சோதியின் வண்ணமுங்
      கண்ட வண்ணங்க ளாய்க்கனல் மாமணி
      அண்ட வண்ணமு மாவர்ஐ யாறரே. 5.28.6
      282 விரும்பும் வண்ணமும் வேதத்தின் வண்ணமுங்
      கரும்பின் இன்மொழி காரிகை வண்ணமும்
      விரும்பு வார்வினை தீர்த்திடும் வண்ணமும்
      அரும்பின் வண்ணமு மாவர்ஐ யாறரே. 5.28.7
      283 ஊழி வண்ணமும் ஒண்சுடர்
      வேழ ஈருரி போர்த்ததோர் வண்ணமும்
      வாழி தீயுரு வாகிய வண்ணமும்
      ஆழி வண்ணமு மாவர்ஐ யாறரே. 5.28.8
      284 செய்த வன்றிரு நீறணி வண்ணமும்
      எய்த நோக்கரி தாகிய வண்ணமுங்
      கைது காட்சி யரியதோர் வண்ணமும்
      ஐது வண்ணமு மாவர்ஐ யாறரே. 5.28.9
      285 எடுத்த வாளர கன்றிறல் வண்ணமும்
      இடர்க்கள் போல்பெரி தாகிய வண்ணமுங்
      கடுத்த கைந்நரம் பாலிசை வண்ணமும்
      அடுத்த வண்ணமு மாவர்ஐ யாறரே. 5.28.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.29 திருவாவடுதுறை - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      286 நிறைக்க வாலியள் அல்லளி நேரிழை
      மறைக்க வாலியள் அல்லளிம் மாதராள்
      பிறைக்க வாலி பெரும்புனல் ஆவடு
      துறைக்க வாலியோ டாடிய சுண்ணமே. 5.29.1
      287 தவள மாமதி சாயலோர் சந்திரன்
      பிளவு சூடிய பிஞ்ஞகன் எம்மிறை
      அளவு கண்டிலள் ஆவடு தண்டுறை
      களவு கண்டனள் ஒத்தனள் கன்னியே. 5.29.2
      288 பாதி பெண்ணொரு பாகத்தன் பன்மறை
      ஓதி யென்னுளங் கொண்டவன் ஒண்பொருள்
      ஆதி ஆவடு தண்டுறை மேவிய
      சோதி யேசுட ரேயென்று சொல்லுமே. 5.29.3
      289 கார்க்கொள் மாமுகில் போல்வதோர் கண்டத்தன்
      வார்க்கொள் மென்முலை சேர்ந்திறு மாந்திவள்
      ஆர்க்கொள் கொன்றையன் ஆவடு தண்டுறை
      தார்க்கு நின்றிவள் தாழுமா காண்மினே. 5.29.4
      290 கருகு கண்டத்தன் காய்கதிர சோதியன்
      பருகு பாலமு தேயென்னும் பண்பினன்
      அருகு சென்றிலள் ஆவடு தண்டுறை
      ஒருவன் என்னை யுடையகோ வென்னுமே. 5.29.5
      291 குழலுங் கொன்றையுங் கூவிள மத்தமு
      தழலு தையலோர் பாகமா தாங்கினான்
      அழகன் ஆவடு தண்டுறை யாவென
      கழலுங் கைவளை காரிகை யாளுக்கே. 5.29.6
      292 பஞ்சின் மெல்லடி பாவையோர் பங்கனை
      தஞ்ச மென்றிறு மாந்திவ ளாரையும்
      அஞ்சு வாளல்லள் ஆவடு தண்டுறை
      மஞ்ச னோடிவள் ஆடிய மையலே. 5.29.7
      293 பிறையுஞ் சூடிநற் பெண்ணொடா ணாகிய
      நிறையு நெஞ்சமும் நீர்மையுங் கொண்டவன்
      அறையும் பூம்பொழில் ஆவடு தண்டுறை
      இறைவன் என்னை யுடையவன் என்னுமே. 5.29.8
      294 வை தானள தானும் அயனுமாய்
      மெய்யை காணலுற் றார்க்கழ லாயினான்
      ஐயன் ஆவடு தண்டுறை யாவென
      கையில் வெள்வளை யுங்கழல் கின்றதே. 5.29.9
      295 பக்கம் பூதங்கள் பாட பலிகொள்வான்
      மிக்க வாளர கன்வலி வீட்டினான்
      அக்க ணிந்தவன் ஆவடு தண்டுறை
      நக்கன் என்னுமி நாணிலி காண்மினே. 5.29.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.30 திருப்பராய்த்துறை - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      296 கரப்பர் கால மடைந்தவர் தம்வினை
      சுருக்கு மாறுவல் லார்கங்கை செஞ்சடை
      பரப்பு நீர்வரு காவிரி தென்கரை
      திருப்ப ராய்த்துறை மேவிய செல்வரே. 5.30.1
      297 மூடி னார்களி யானையின் ஈருரி
      பாடி னார்மறை நான்கினோ டாறங்கஞ்
      சேட னார்தென் பராய்த்துறை செல்வரை
      தேடி கொண்டடி யேன்சென்று காண்பனே. 5.30.2
      298 பட்ட நெற்றியர் பால்மதி கீற்றினர்
      நட்ட மாடுவர் நள்ளிருள் ஏமமுஞ்
      சிட்ட னார்தென் பராய்த்துறை செல்வனார்
      இட்ட மாயிரு பாரை அறிவரே. 5.30.3
      299 முன்பெ லாஞ்சில மோழைமை பேசுவர்
      என்பெ லாம்பல பூண்டங் குழிதர்வர்
      தென்ப ராய்த்துறை மேவிய செல்வனார்
      அன்ப ராயிரு பாரை அறிவரே. 5.30.4
      300 போது தாதொடு கொண்டு புனைந்துடன்
      தாத விழ்சடை சங்கரன் பாதத்துள்
      வாதை தீர்க்கவென் றேத்தி பராய்த்துறை
      சோதி யானை தொழுதெழு துய்ம்மினே. 5.30.5
      301 நல்ல நான்மறை யோதிய நம்பனை
      பல்லில் வெண்டலை யிற்பலி கொள்வனை
      தில்லை யான்றென் பராய்த்துறை செல்வனை
      வல்லை யாய்வணங் கித்தொழு வாய்மையே. 5.30.6
      302 நெருப்பி னாற்குவி தாலொக்கு நீள்சடை
      பருப்ப தம்மத யானை யுரித்தவன்
      திருப்ப ராய்த்துறை யார்திரு மார்பின்நூல்
      பொருப்ப ராவி இழிபுனல் போன்றதே. 5.30.7
      303 எட்ட விட்ட இடுமண லெக்கர்மேற்
      பட்ட நுண்டுளி பாயும் பராய்த்துறை
      சிட்டன் சேவடி சென்றடை கிற்றிரேல்
      விட்டு நம்வினை யுள்ளன வீடுமே. 5.30.8
      304 நெருப்ப ராய்நிமிர தாலொக்கு நீள்சடை
      மருப்ப ராவளை தாலொக்கும் வாண்மதி
      திருப்ப ராய்த்துறை மேவிய செல்வனார்
      விருப்ப ராயிரு பாரை அறிவரே. 5.30.9
      305 தொண்டு பாடியு தூமலர் தூவியும்
      இண்டை கட்டி இணையடி யேத்தியும்
      பண்ட ரங்கர் பராய்த்துறை பாங்கரை
      கண்டு கொண்டடி யேனுய்ந்து போவனே. 5.30.10
      306 அரக்கன் ஆற்றல் அழித்த அழகனை
      பரக்கு நீர்ப்பொன்னி மன்னு பராய்த்துறை
      இருக்கை மேவிய ஈசனை யேத்துமின்
      பொருக்க நும்வினை போயறுங் காண்மினே. 5.30.11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - திருப்பராய்த்துறைநாதர்
      தேவியார் - பசும்பொன்மயிலம்மை.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.31 திருவானைக்கா - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      307 கோனை காவி குளிர்ந்த மனத்தரா
      தேனை காவியுண் ணார்சில தெண்ணர்கள்
      ஆனை காவிலெம் மானை அணைகிலார்
      ஊனை காவி யுழிதர்வர் ஊமரே. 5.31.1
      308 திருகு சிந்தையை தீர்த்துச்செம் மைசெய்து
      பருகி யூறலை பற்றி பதமறி
      துருகி நைபவர கூனமொன் றின்றியே
      அருகு நின்றிடும் ஆனைக்கா அண்ணலே. 5.31.2
      309 துன்ப மின்றி துயரின்றி யென்றுநீர்
      இன்பம் வேண்டில் இராப்பகல் ஏத்துமின்
      என்பொன் ஈசன் இறைவனென் றுள்குவார
      கன்ப னாயிடும் ஆனைக்கா அண்ணலே. 5.31.3
      310 நாவால் நன்று நறுமலர சேவடி
      ஓவா தேத்தி யுளத்தடை தார்வினை
      காவா யென்றுதங் கைதொழு வார்க்கெலாம்
      ஆவா என்றிடும் ஆனைக்கா அண்ணலே. 5.31.4
      311 வஞ்ச மின்றி வணங்குமின் வைகலும்
      வெஞ்சொ லின்றி விலகுமின் வீடுற
      நைஞ்சு நைஞ்சுநின் றுள்குளிர் வார்க்கெலாம்
      அஞ்ச லென்றிடும் ஆனைக்கா அண்ணலே. 5.31.5
      312 நடையை மெய்யென்று நாத்திகம் பேசாதே
      படைகள் போல்வரும் பஞ்சமா பூதங்கள்
      தடையொன் றின்றியே தன்னடை தார்க்கெலாம்
      அடைய நின்றிடும் ஆனைக்கா அண்ணலே. 5.31.6
      313 ஒழுகு மாடத்துள் ஒன்பது வாய்தலுங்
      கழுக ரிப்பதன் முன்னங் கழலடி
      தொழுது கைகளாற் றூமலர் தூவிநின்
      றழும வர்க்கன்பன் ஆனைக்கா அண்ணலே. 5.317
      314 உருளும் போதறி வொண்ணா உலகத்தீர்
      தெருளுஞ் சிக்கென தீவினை சேராதே
      இருள றுத்துநின் றீசனென் பார்க்கெலாம்
      அருள் கொடுத்திடும் ஆனைக்கா அண்ணலே. 5.31.8
      315 நேச மாகி நினைமட நெஞ்சமே
      நாச மாய குலநலஞ் சுற்றங்கள்
      பாச மற்று பராபர ஆனந்த
      ஆசை யுற்றிடும் ஆனைக்கா அண்ணலே. 5.31.9
      316 ஓத மாகடல் சூழிலங் கைக்கிறை
      கீதங் கின்னரம் பாட கெழுவினான்
      பாதம் வாங்கி பரிந்தருள் செய்தங்கோர்
      ஆதி யாயிடும் ஆனைக்கா அண்ணலே. 5.31.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - சம்புகேசுவரர்
      தேவியார் - அகிலாண்டநாயகியம்மை.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.32 திருப்பூந்துருத்தி - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      317 கொடிகொள் செல்வ விழாக்குண லையறா
      கடிகொள் பூம்பொழிற் கச்சிஏ கம்பனார்
      பொடிகள் பூசிய பூந்துரு திந்நகர்
      அடிகள் சேவடி கீழ்நா மிருப்பதே. 5.32.1
      318 ஆர்த்த தோலுடை கட்டியோர் வேடனா
      பார்த்த னோடு படைதொடு மாகிலும்
      பூத்த நீள்பொழிற் பூந்துரு திந்நகர
      தீர்த்தன் சேவடி கீழ்நா மிருப்பதே. 5.32.2
      319 மாதி னைமதி தானொரு பாகமா
      காத லாற்கர தான்சடை கங்கையை
      பூத நாயகன் பூந்துரு திந்நகர
      காதி சேவடி கீழ்நா மிருப்பதே. 5.32.3
      320 மூவ னாய்முத லாயிவ் வுலகெலாங்
      காவ னாய்க்கடுங் காலனை காய்ந்தவன்
      பூவின் நாயகன் பூந்துரு திந்கர
      தேவன் சேவடி கீழ்நா மிருப்பதே. 5.32.4
      321 செம்பொ னேயொக்கும் மேனியன் தேசத்தில்
      உம்ப ராரவ ரோடங் கிருக்கிலும்
      பொன்பொ னார்செல்வ பூந்துரு திந்நகர்
      நம்பன் சேவடி கீழ்நா மிருப்பதே. 5.32.5
      322 வல்லம் பேசி வலிசெய்மூன் றூரினை
      கொல்லம் பேசி கொடுஞ்சரம் நூறினான்
      புல்லம் பேசியும் பூந்துரு திந்நகர
      செல்வன் சேவடி கீழ்நா மிருப்பதே. 5.32.6
      323 ஒருத்த னாயுல கேழு தொழநின்று
      பருத்த பாம்பொடு பான்மதி கங்கையும்
      பொருத்த னாகிலும் பூந்துரு திந்நகர
      திருத்தன் சேவடி கீழ்நா மிருப்பதே. 5.32.7
      324 அதிரர் தேவர் இயக்கர் விச்சாதரர்
      கருத நின்றவர் காண்பரி தாயினான்
      பொருத நீர்வரு பூந்துரு திந்நகர
      சதுரன் சேவடி கீழ்நா மிருப்பதே. 5.32.8
      325 செதுக றாமன தார்புறங் கூறினுங்
      கொதுக றாக்கண்ணி னோன்பிகள் கூறினும்
      பொதுவின் நாயகன் பூந்துரு திந்நகர
      கதிபன் சேவடி கீழ்நா மிருப்பதே. 5.32.9
      326 துடித்த தோல்வலி வாளர கன்றனை
      பிடித்த கைஞ்ஞெரி துற்றன கண்ணெலாம்
      பொடிக்க வூன்றிய பூந்துரு திந்நகர
      படிக்கொள் சேவடி கீழ்நா மிருப்பதே. 5.32.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - புஷ்பவனநாதர்
      தேவியார் - அழகாலமர்ந்தநாயகி.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.33 திருச்சோற்றுத்துறை - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      327 கொல்லை யேற்றினர் கோளர வத்தினர்
      தில்லை சிற்றம் பலத்துறை செல்வனார்
      தொல்லை யூழியர் சோற்று துறையர்க்கே
      வல்லை யாய்ப்பணி செய்மட நெஞ்சமே. 5.33.1
      328 முத்தி யாக வொருதவஞ் செய்திலை
      அத்தி யாலடி யார்க்கொன் றளித்திலை
      தொத்து நின்றலர் சோற்று துறையர்க்கே
      பத்தி யாய்ப்பணி செய்மட நெஞ்சமே. 5.33.2
      329 ஒட்டி நின்ற உடலுறு நோய்வினை
      கட்டி நின்ற கழிந்தவை போயற
      தொட்டு நின்று சோற்று துறையர்க்கே
      பட்டி யாய்ப்பணி செய்மட நெஞ்சமே. 5.333
      330 ஆதி யானண்ட வாணர கருள்நல்கு
      நீதி யானென்றும் நின்மல னேயென்றுஞ்
      சோதி யானென்றுஞ் சோற்று துறையர்க்கே
      வாதி யாய்ப்பணி செய்மட நெஞ்சமே. 5.33.4
      331 ஆட்டி னாயடி யேன்வினை யாயின
      ஓட்டி னாயொரு காதில் இலங்குவெண்
      தோட்டி னாயென்று சோற்று துறையர்க்கே
      நீட்டி நீபணி செய்மட நெஞ்சமே. 5.33.5
      332 பொங்கி நின்றெழு தகடல் நஞ்சினை
      பங்கி யுண்டதோர் தெய்வமுண் டோ சொலாய்
      தொங்கி நீயென்றுஞ் சோற்று துறையர்க்கு
      தங்கி நீபணி செய்மட நெஞ்சமே. 5.33.6
      333 ஆணி போலநீ ஆற்ற வலியைகாண்
      ஏணி போலிழி தேறியும் ஏங்கியு
      தோணி யாகிய சோற்று துறையர்க்கே
      பூணி யாய்ப்பணி செய்மட நெஞ்சமே. 5.33.7
      334 பெற்றம் ஏறிலென் பேய்படை யாகிலென்
      புற்றி லாடர வேயது பூணிலென்
      சுற்றி நீயென்றுஞ் சோற்று துறையர்க்கே
      பற்றி நீபணி செய்மட நெஞ்சமே. 5.33.8
      335 அல்லி யானர வைந்தலை நாகணை
      பள்ளி யானறி யாத பரிசெலாஞ்
      சொல்லி நீயென்றுஞ் சோற்று துறையர்க்கே
      புல்லி நீபணி செய்மட நெஞ்சமே. 5.33.9
      336 மிண்ட ரோடு விரவியும் வீறிலா
      குண்டர் தம்மை கழிந்து போந்துநீ
      தொண்டு செய்தென்றுஞ் சோற்று துறையர்க்கே
      உண்டு நீபணி செய்மட நெஞ்சமே. 5.33.10
      337 வாழ்ந்த வன்வலி வாளர கன்றனை
      ஆழ்ந்து போயல றவ்விர லூன்றினான்
      சூழ்ந்த பாரிடஞ் சோற்று துறையர்க்கு
      தாழ்ந்து நீபணி செய்மட நெஞ்சமே. 5.33.11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - தொலையாச்செல்வர்
      தேவியார் - ஒப்பிலாம்பிகையம்மை.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.34 திருநெய்த்தானம் - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      338 கொல்லி யான்குளிர் தூங்குகுற் றாலத்தான்
      புல்லி யார்புர மூன்றெரி செய்தவன்
      நெல்லி யானிலை யானநெ தானனை
      சொல்லி மெய்தொழு வார்சுடர் வாணரே. 5.34.1
      339 இரவ னையிடு வெண்டலை யேந்தியை
      பரவ னைப்படை யார்மதில் மூன்றையும்
      நிரவ னைநிலை யானநெ தானனை
      குரவ னைத்தொழு வார்கொடி வாணரே. 5.34.2
      340 ஆனி டையைந்தும் ஆடுவ ராரிருள்
      கானி டைநடம் ஆடுவர் காண்மினோ
      தேனி டைமலர் பாயுநெ தானனை
      வானி டைத்தொழு வார்வலி வாணரே. 5.34.3
      341 விண்ட வர்புர மூன்றும்வெண் ணீறெழ
      கண்ட வன்கடி தாகிய நஞ்சினை
      உண்ட வன்னொளி யானநெ தானனை
      தொண்ட ராய்த்தொழு வார்சுடர் வாணரே. 5.34.4
      342 முன்கை நோவ கடைந்தவர் நிற்கவே
      சங்கி யாது சமுத்திர நஞ்சுண்டான்
      நங்கை யோடு நவின்றநெ தானனை
      தங்கை யாற்றொழு வார்தலை வாணரே. 5.34.5
      343 சுட்ட நீறுமெய் பூசி சுடலையுள்
      நட்ட மாடுவர் நள்ளிரு பேயொடே
      சிட்டர் வானவர் தேருநெ தானனை
      இட்ட மாய்த்தொழு வாரின்ப வாணரே. 5.34.6
      344 கொள்ளி தீயெரி வீசி கொடியதோர்
      கள்ளி காட்டிடை யாடுவர் காண்மினோ
      தெள்ளி தேறி தெளிந்துநெ தானனை
      உள்ள தாற்றொழு வாரும்பர் வாணரே. 5.34.7
      345 உச்சி மேல்விளங் கும்மிள வெண்பிறை
      பற்றி யாடர வோடுஞ்ச டைப்பெய்தான்
      நெற்றி யாரழல் கண்டநெ தானனை
      சுற்றி மெய்தொழு வார்சுடர் வாணரே. 5.34.8
      346 மாலொ டும்மறை யோதிய நான்முகன்
      காலொ டும்முடி காண்பரி தாயினான்
      சேலொ டுஞ்செரு செய்யும்நெ தானனை
      மாலொ டுந்தொழு வார்வினை வாடுமே. 5.34.9
      347 வலிந்த தோள்வலி வாளர கன்றனை
      நெருங்க நீள்வரை யூன்றுநெ தானனார்
      புரிந்து கைந்நரம் போடிசை பாடலும்
      பரிந்த னைப்பணி வார்வினை பாறுமே. 5.34.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - நெய்யாடியப்பர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.35 திருப்பழனம் - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      348 அருவ னாய்அத்தி ஈருரி போர்த்துமை
      உருவ னாய்ஒற்றி யூர்பதி யாகிலும்
      பருவ ரால்வயல் சூழ்ந்த பழனத்தான்
      திருவி னாற்றிரு வேண்டுமி தேவர்க்கே. 5.35.1
      349 வையம் வந்து வணங்கி வலங்கொளும்
      ஐய னைஅறி யார்சிலர் ஆதர்கள்
      பைகொ ளாடர வார்த்த பழனன்பால்
      பொய்யர் காலங்கள் போக்கிடு வார்களே. 5.35.2
      350 வண்ண மாக முறுக்கிய வாசிகை
      திண்ண மாக திருச்சடை சேர்த்தியே
      பண்ணு மாகவே பாடும் பழனத்தான்
      எண்ணும் நீரவன் ஆயிர நாமமே. 5.35.3
      351 மூர்க்க பாம்பு பிடித்தது மூச்சிட
      வாக்க பாம்பினை கண்ட துணிமதி
      பாக்க பாம்பினை பற்றும் பழனத்தான்
      தார்க்கொண் மாலை சடைக்கர திட்டதே. 5.35.4
      352 நீல முண்ட மிடற்றினன் நேர்ந்ததோர்
      கோல முண்ட குணத்தான் நிறைந்ததோர்
      பாலு முண்டு பழனன்பா லென்னிடை
      மாலு முண்டிறை யென்றன் மனத்துளே. 5.35.5
      353 மந்த மாக வளர்பிறை சூடியோர்
      சந்த மாக திருச்சடை சாத்துவான்
      பந்த மாயின தீர்க்கும் பழனத்தான்
      எந்தை தாய்தந்தை எம்பெரு மானுமே. 5.35.6
      354 மார்க்க மொன்றறி யார்மதி யில்லிகள்
      பூக்க ரத்திற் புரிகிலர் மூடர்கள்
      பார்க்க நின்று பரவும் பழனத்தான்
      தாட்கண் நின்று தலைவணங் கார்களே. 5.35.7
      355 ஏறி னாரிமை யோர்கள் பணிகண்டு
      தேறு வாரலர் தீவினை யாளர்கள்
      பாறி னார்பணி வேண்டும் பழனத்தான்
      கூறி னானுமை யாளொடுங் கூடவே. 5.35.8
      356 சுற்று வார்தொழு வார்சுடர் வண்ணன்மேல்
      தெற்றி னார்திரி யும்புர மூன்றெய்தான்
      பற்றி னார்வினை தீர்க்கும் பழனனை
      எற்றி னான்மற கேனெம் பிரானையே. 5.35.9
      357 பொங்கு மாகடல் சூழ்இலங் கைக்கிறை
      அங்க மான இறுத்தருள் செய்தவன்
      பங்க னென்றும் பழனன் உமையொடு
      தங்கன் றானடி யேனுடை யுச்சியே. 5.35.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - ஆபத்சகாயர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.36 திருச்செம்பொன்பள்ளி - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      358 கான றாத கடிபொழில் வண்டின
      தேன றாத திருச்செம்பொன் பள்ளியான்
      ஊன றாததோர் வெண்டலை யிற்பலி
      தான றாததோர் கொள்கையன் காண்மினே. 5.36.1
      359 என்பும் ஆமையும் பூண்டங் குழிதர்வர
      கன்பு மாயிடும் ஆயிழை யீரினி
      செம்பொன் பள்ளியு ளான்சிவ லோகனை
      நம்பொன் பள்ளியுள் கவினை நாசமே. 5.36.2
      360 வேறு கோலத்தர் ஆணலர் பெண்ணலர்
      கீறு கோவண வைதுகி லாடையர்
      தேற லாவதொன் றன்றுசெம் பொன்பள்ளி
      ஆறு சூடிய அண்ணல் அவனையே. 5.36.3
      361 அருவ ராததோர் வெண்டலை யேந்திவ
      திருவ ராயிடு வார்கடை தேடுவார்
      தெருவெ லாமுழல் வார்செம்பொன் பள்ளியார்
      ஒருவர் தாம்பல பேருளர் காண்மினே. 5.36.4
      362 பூவு லாஞ்சடை மேற்புனல் சூடினான்
      ஏவ லாலெயில் மூன்றும் எரித்தவன்
      தேவர் சென்றிறைஞ் சுஞ்செம்பொன் பள்ளியான்
      மூவ ராய்முத லாய்நின்ற மூர்த்தியே. 5.36.5
      363 சலவ ராயொரு பாம்பொடு தண்மதி
      கலவ ராவதன் காரண மென்கொலோ
      திலக நீண்முடி யார்செம்பொன் பள்ளியார்
      குலவி லாலெயில் மூன்றெய்த கூத்தரே. 5.36.6
      364 கைகொள் சூலத்தர் கட்டுவாங் கத்தினர்
      மைகொள் கண்டத்த ராகி இருசுடர்
      செய்ய மேனிவெண் ணீற்றர்செம் பொன்பள்ளி
      ஐயர் கையதோர் ஐந்தலை நாகமே. 5.36.7
      365 வெங்கண் நாகம் வெருவுற ஆர்த்தவர்
      பைங்கண் ஆனையின் ஈருரி போர்த்தவர்
      செங்கண் மால்விடை யார்செம்பொன் பள்ளியார்
      அங்க ணாயடை தார்வினை தீர்ப்பரே. 5.36.8
      366 நன்றி நாரணன் நான்முக னென்றிவர்
      நின்ற நீண்முடி யோடடி காண்புற்று
      சென்று காண்பரி யான்செம்பொன் பள்ளியான்
      நின்ற சூழலில் நீளெரி யாகியே. 5.36.9
      367 திரியு மும்மதில் செங்கணை யொன்றினால்
      எரிய வெய்தன லோட்டி இலங்கைக்கோன்
      நெரிய வூன்றியி டார்செம்பொன் பள்ளியார்
      அரிய வானம் அவரருள் செய்வரே. 5.36.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - சொர்னபுரீசர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.37 திருக்கடவூர்வீரட்டம் - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      368 மலைக்கொ ளானை மயக்கிய வல்வினை
      நிலைக்கொ ளானை நினைப்புறு நெஞ்சமே
      கொலைக்கை யானையுங் கொன்றிடு மாதலாற்
      கலைக்கை யானைகண் டீர்கட வூரரே. 5.37.1
      369 வெள்ளி மால்வரை போல்வதோ ரானையார்
      உள்ள வாறெனை உள்புகு மானையார்
      கொள்ள மாகிய கோயிலு ளானையார்
      கள்ள வானைகண் டீர்கட வூரரே. 5.37.2
      370 ஞான மாகிய நன்குண ரானையார்
      ஊனை வேவ வுருக்கிய ஆனையார்
      வேன லானை யுரித்துமை அஞ்சவே
      கான லானைகண் டீர்கட வூரரே. 5.37.3
      371 ஆல முண்டழ காயதோ ரானையார்
      நீல மேனி நெடும்பளிங் கானையார்
      கோல மாய கொழுஞ்சுட ரானையார்
      கால வானைகண் டீர்கட வூரரே. 5.37.4
      372 அளித்த ஆனஞ்சு மாடிய வானையார்
      வெளுத்த நீள்கொடி யேறுடை யானையார்
      எளித்த வேழத்தை எள்குவி தானையார்
      களித்த வானைகண் டீர்கட வூரரே. 5.37.5
      373 விடுத்த மால்வரை விண்ணுற வானையார்
      தொடுத்த மால்வரை தூயதோ ரானையார்
      கடுத்த காலனை காய்ந்ததோ ரானையார்
      கடுத்த வானைகண் டீர்கட வூரரே. 5.37.6
      374 மண்ணு ளாரை மயக்குறு மானையார்
      எண்ணு ளார்பல ரேத்திடு மானையார்
      விண்ணு ளார்பல ரும்மறி யானையார்
      கண்ணு ளானைகண் டீர்கட வூரரே. 5.37.7
      375 சினக்குஞ் செம்பவ ளத்திர ளானையார்
      மனக்கும் வல்வினை தீர்த்திடு மானையார்
      அனைக்கும் அன்புடை யார்மன தானையார்
      கனைக்கு மானைகண் டீர்கட வூரரே. 5.37.8
      376 வேத மாகிய வெஞ்சுட ரானையார்
      நீதி யானில னாகிய வானையார்
      ஓதி யூழி தெரிந்துண ரானையார்
      காத லானைகண் டீர்கட வூரரே. 5.37.9
      377 நீண்ட மாலொடு நான்முகன் றானுமா
      காண்டு மென்றுபு கார்க ளிருவரும்
      மாண்ட வாரழ லாகிய வானையார்
      காண்ட லானைகண் டீர்கட வூரரே. 5.37.10
      378 அடுத்து வந்த இலங்கையர் மன்னனை
      எடுத்த தோள்கள் இறநெரி தானையார்
      கடுத்த காலனை காய்ந்ததோ ரானையார்
      கடுக்கை யானைகண் டீர்கட வூரரே. 5.37.11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - அமிர்தகடேசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.38 திருக்கடவூர்மயானம் - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      379 குழைகொள் காதினர் கோவண ஆடையர்
      உழையர் தாங்கட வூரின் மயானத்தார்
      பழைய தம்மடி யார்செயும் பாவமும்
      பிழையு தீர்ப்பர் பெருமா னடிகளே. 5.38.1
      380 உன்னி வானவர் ஓதிய சிந்தையிற்
      கன்னல் தேன்கட வூரின் மயானத்தார்
      தன்னை நோக்கி தொழுதெழு வார்க்கெலாம்
      பின்னை என்னார் பெருமா னடிகளே. 5.38.2
      381 சூல மேந்துவர் தோலுடை ஆடையர்
      ஆல முண்டமு தேமிக தேக்குவர்
      கால காலர் கடவூர் மயானத்தார்
      மாலை மார்பர் பெருமா னடிகளே. 5.38.3
      382 இறைவ னாரிமை யோர்தொழு பைங்கழல்
      மறவ னார்கட வூரின் மயானத்தார்
      அறவ னாரடி யாரடி யார்தங்கள்
      பிறவி தீர்ப்பர் பெருமா னடிகளே. 5.38.4
      383 கத்து காளி கதந்தணி வித்தவர்
      மத்தர் தாங்கட வூரின் மயானத்தார்
      ஒத்தொவ் வாதன செய்துழல் வாரொரு
      பித்தர் காணும் பெருமா னடிகளே. 5.38.5
      384 எரிகொள் மேனி இளம்பிறை வைத்தவர்
      கரியர் தாங்கட வூரின் மயானத்தார்
      அரியர் அண்டத்து ளோரயன் மாலுக்கும்
      பெரியர் காணும் பெருமா னடிகளே. 5.38.6
      385 அணங்கு பாகத்தர் ஆரண நான்மறை
      கணங்கள் சேர்கட வூரின் மயானத்தார்
      வணங்கு வாரிடர் தீர்ப்பர் மயக்குறும்
      பிணங்கொள் காடர் பெருமா னடிகளே. 5.38.7
      386 அரவு கையினர் ஆதி புராணனார்
      மரவு சேர்கட வூரின் மயானத்தார்
      பரவு வாரிடர் தீர்ப்பர் பணிகொள்வார்
      பிரமன் மாற்கும் பெருமா னடிகளே. 5.38.8
      இப்பதிகத்தில் 910-ம் செய்யுட்கள் சிதைந்து போயின. 5.38.9-10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - பிரமபுரீசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.39 திருமயிலாடுதுறை - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      387 கொள்ளுங் காதன்மை பெய்துறுங் கோல்வளை
      உள்ளம் உள்கி யுரைக்கு திருப்பெயர்
      வள்ளல் மாமயி லாடு துறையுறை
      வெள்ள தாங்கு சடையனை வேண்டியே. 5.39.1
      388 சித்த தேறுஞ் செறிவளை சிக்கெனும்
      பச்சை தீருமென் பைங்கொடி பான்மதி
      வைத்த மாமயி லாடு துறையரன்
      கொத்தி னிற்பொலி கொன்றை கொடுக்கிலே. 5.39.2
      389 அண்டர் வாழ்வும் அமரர் இருக்கையுங்
      கண்டு வீற்றிரு குங்கரு தொன்றிலோம்
      வண்டு சேர்மயி லாடு துறையரன்
      தொண்டர் பாதங்கள் சூடி துதையிலே. 5.39.3
      390 வெஞ்சி னக்கடுங் காலன் விரைகிலான்
      அஞ்சி றப்பும் பிறப்பும் அறுக்கலாம்
      மஞ்சன் மாமயி லாடு துறையுறை
      அஞ்சொ லாளுமை பங்கன் அருளிலே. 5.39.4
      391 குறைவி லோங்கொடு மானிட வாழ்க்கையாற்
      கறைநி லாவிய கண்டனெண் டோ ளினன்
      மறைவ லான்மயி லாடு துறையுறை
      இறைவன் நீள்கழ லேத்தி யிருக்கிலே. 5.39.5
      392 நிலைமை சொல்லுநெஞ் சேதவ மென்செய்தாய்
      கலைக ளாயவல் லான்கயி லாயநன்
      மலையன் மாமயி லாடு துறையன்நம்
      தலையின் மேலும் மனத்துளு தங்கவே. 5.39.6
      393 நீற்றி னான்நிமிர் புன்சடை யான்விடை
      ஏற்றி னான்நமை யாளுடை யான்புலன்
      மாற்றி னான்மயி லாடு துறையென்று
      போற்று வார்க்குமுண் டோ புவி வாழ்க்கையே. 5.39.7
      394 கோலும் புல்லும் ஒருகையிற் கூர்ச்சமு
      தோலும் பூண்டு துயரமுற் றென்பயன்
      நீல மாமயி லாடு துறையனே
      நூலும் வேண்டுமோ நுண்ணுணர தோர்கட்கே. 5.39.8
      395 பணங்கொ ளாடர வல்குற் பகீரதி
      மணங்கொ ளச்சடை வைத்த மறையவன்
      வணங்கு மாமயி லாடு துறையரன்
      அணங்கோர் பால்கொண்ட கோலம் அழகிதே. 5.39.9
      396 நீணி லாவர வச்சடை நேசனை
      பேணி லாதவர் பேதுற வோட்டினோம்
      வாணி லாமயி லாடு துறைதனை
      காணி லார்க்குங் கடுந்துய ரில்லையே. 5.39.10
      397 பருத்த தோளும் முடியும் பொடிபட
      இருத்தி னானவன் இன்னிசை கேட்டலும்
      வரத்தி னான்மயி லாடு துறைதொழுங்
      கரத்தி னார்வினை கட்டறுங் காண்மினே. 5.39.11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - மாயூரநாதர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.40 திருக்கழிப்பாலை - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      398 வண்ண மும்வடி வுஞ்சென்று கண்டிலள்
      எண்ணி நாமங்க ளேத்தி நிறைந்திலள்
      கண்ணு லாம்பொழில் சூழ்கழி பாலையெம்
      அண்ண லேயறி வானிவள் தன்மையே. 5.40.1
      399 மருந்து வானவர் உய்யநஞ் சுண்டுக
      திருந்த வன்கழி பாலையுள் எம்பிரான்
      திருந்து சேவடி சிந்தையுள் வைத்திவள்
      பரிந்து ரைக்கிலு மென்சொற் பழிக்குமே. 5.40.2
      400 மழலை தான்வர சொற்றெரி கின்றிலள்
      குழலின் நேர்மொழி கூறிய கேண்மினோ
      அழக னேகழி பாலையெம் மண்ணலே
      இகழ்வ தோயெனை ஏன்றுகொ ளென்னுமே. 5.40.3
      401 செய்ய மேனிவெண் ணீறணி வான்றனை
      மைய லாகி மதிக்கில ளாரையுங்
      கைகொள் வெண்மழு வன்கழி பாலையெம்
      ஐய னேஅறி வானிவள் தன்மையே. 5.40.4
      402 கருத்த னைக்கழி பாலையுள் மேவிய
      ஒருத்த னையுமை யாளொரு பங்கனை
      அருத்தி யாற்சென்று கண்டிட வேண்டுமென்
      றொருத்தி யாருளம் ஊசல தாகுமே. 5.40.5
      403 கங்கை யைச்சடை வைத்து மலைமகள்
      நங்கை யையுட னேவைத்த நாதனார்
      திங்கள் சூடி திருக்கழி பாலையான்
      இங்கு வந்திடு மென்றிறு மாக்குமே. 5.40.6
      404 ஐய னேஅழ கேஅன லேந்திய
      கைய னேகறை சேர்தரு கண்டனே
      மையு லாம்பொழில் சூழ்கழி பாலையெம்
      ஐய னேவிதி யேஅரு ளென்னுமே. 5.40.7
      405 பத்தர் கட்கமு தாய பரத்தினை
      முத்த னைமுடி வொன்றிலா மூர்த்தியை
      அத்த னைஅணி யார்கழி பாலையெஞ்
      சித்த னைச்சென்று சேருமா செப்புமே. 5.40.8
      இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 5.40.9
      406 பொன்செய் மாமுடி வாளர கன்றலை
      அஞ்சு நான்குமொன் றும்மிறு தானவன்
      என்செ யான்கழி பாலையு ளெம்பிரான்
      துஞ்சும் போது துணையென லாகுமே. 5.40.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - பால்வண்ண நாதர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.41 திருப்பைஞ்ஞீலி - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      407 உடையர் கோவண மொன்றுங் குறைவிலர்
      படைகொள் பாரிடஞ் சூழ்ந்தபைஞ் ஞீலியார்
      சடையிற் கங்கை தரித்த சதுரரை
      அடைய வல்லவர கில்லை அவலமே. 5.41.1
      408 மத்த மாமலர் சூடிய மைந்தனார்
      சித்த ராய்த்திரி வார்வினை தீர்ப்பரால்
      பத்தர் தாந்தொழு தேத்துபைஞ் ஞீலியெம்
      அத்த னைத்தொழ வல்லவர் நல்லரே. 5.41.2
      409 விழுது சூலத்தன் வெண்மழு வாட்படை
      கழுது துஞ்சிரு காட்டக தாடலான்
      பழுதொன் றின்றிப்பைஞ் ஞீலி பரமனை
      தொழுது செல்பவர் தம்வினை தூளியே. 5.41.3
      410 ஒன்றி மாலும் பிரமனு தம்மிலே
      நின்ற சூழ லறிவரி யானிடஞ்
      சென்று பாரிட மேத்துபைஞ் ஞீலியுள்
      என்றும் மேவி யிருந்த அடிகளே. 5.41.4
      411 வேழ தின்னுரி போர்த்த விகிர்தனார்
      தாழ செஞ்சடை மேற்பிறை வைத்தவர்
      தாழை தண்பொழில் சூழ்ந்தபைஞ் ஞீலியார்
      யாழின் பாட்டை யுகந்த அடிகளே. 5.41.5
      412 குண்டு பட்டு குறியறி யாச்சமண்
      மிண்ட ரோடு படுத்து போந்துநான்
      கண்டங் கார்வயல் சூழ்ந்தபைஞ் ஞீலியெம்
      அண்ட வாணன் அடியடை துய்ந்தனே. 5.41.6
      413 வரிப்பை யாடர வாட்டி மதகரி
      உரிப்பை மூடிய வுத்தம னாருறை
      திருப்பைஞ் ஞீலி திசைதொழு வார்கள்போய்
      இருப்பர் வானவ ரோடினி தாகவே. 5.41.7
      414 கோடல் கோங்கம் புறவணி முல்லைமேல்
      பாடல் வண்டிசை கேட்கும்பைஞ் ஞீலியார்
      பேடு மாணும் பிறரறி யாததோர்
      ஆடு நாகம் அசைத்த அடிகளே. 5.41.8
      415 காரு லாமலர கொன்றை தாரினான்
      வாரு லாமுலை மங்கையோர் பங்கினன்
      தேரு லாம்பொழில் சூழ்ந்தபைஞ் ஞீலியெம்
      ஆர்கி லாவமு தையடை துய்ம்மினே. 5.41.9
      416 தருக்கி சென்று தடவரை பற்றலும்
      நெருக்கி யூன்ற நினைந்து சிவனையே
      அரக்கன் பாட அருளுமெம் மானிடம்
      இருக்கை ஞீலியென் பார்க்கிட ரில்லையே. 5.41.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - நீலகண்டேசுவரர்
      தேவியார் - விசாலாட்சியம்மை.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.42 திருவேட்களம் - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      417 நன்று நாடொறும் நம்வினை போயறும்
      என்று மின்ப தழைக்க இருக்கலாஞ்
      சென்று நீர்திரு வேட்கள துள்ளுறை
      துன்று பொற்சடை யானை தொழுமினே. 5.42.1
      418 கருப்பு வெஞ்சிலை காமனை காய்ந்தவன்
      பொருப்பு வெஞ்சிலை யாற்புரஞ் செற்றவன்
      விருப்பன் மேவிய வேட்களங் கைதொழு
      திருப்ப னாகில் எனக்கிட ரில்லையே. 5.42.2
      419 வேட்க ளத்துறை வேதியன் எம்மிறை
      ஆக்க ளேறுவர் ஆனைஞ்சு மாடுவர்
      பூக்கள் கொண்டவன் பொன்னடி போற்றினால்
      காப்பர் நம்மை கறைமிடற் றண்ணலே. 5.42.3
      420 அல்ல லில்லை அருவினை தானில்லை
      மல்கு வெண்பிறை சூடு மணாளனார்
      செல்வ னார்திரு வேட்களங் கைதொழ
      வல்ல ராகில் வழியது காண்மினே. 5.42.4
      421 துன்ப மில்லை துயரில்லை யாமினி
      நம்ப னாகிய நன்மணி கண்டனார்
      என்பொ னாருறை வேட்கள நன்னகர்
      இன்பன் சேவடி யேத்தி யிருப்பதே. 5.42.5
      422 கட்ட பட்டு கவலையில் வீழாதே
      பொட்ட வல்லுயிர் போவதன் முன்னம்நீர்
      சிட்ட னார்திரு வேட்களங் கைதொழ
      பட்ட வல்வினை யாயின பாறுமே. 5.42.6
      423 வட்ட மென்முலை யாளுமை பங்கனார்
      எட்டு மொன்றும் இரண்டுமூன் றாயினார்
      சிட்டர் சேர்திரு வேட்களங் கைதொழு
      திட்ட மாகி யிருமட நெஞ்சமே. 5.42.7
      424 நட்ட மாடிய நம்பனை நாடொறும்
      இட்ட தாலினி தாக நினைமினோ
      வட்ட வார்முலை யாளுமை பங்கனார்
      சிட்ட னார்திரு வேட்கள தன்னையே. 5.42.8
      425 வட்ட மாமதில் மூன்றுடை வல்லரண்
      சுட்ட கொள்கைய ராயினுஞ் சூழ்ந்தவர்
      குட்ட வல்வினை தீர்த்து குளிர்விக்குஞ்
      சிட்டர் பொற்றிரு வேட்கள செல்வரே. 5.42.9
      426 சேட னாருறை யுஞ்செழு மாமலை
      ஓடி யாங்கெடு தான்முடி பத்திற
      வாட வூன்றி மலரடி வாங்கிய
      வேட னாருறை வேட்களஞ் சேர்மினே. 5.42.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - பாசுபதேசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.43 திருநல்லம் - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      427 கொல்ல தான்நம னார்தமர் வந்தக்கால்
      இல்ல தார்செய்ய லாவதென் ஏழைகாள்
      நல்ல தான்நமை யாளுடை யான்கழல்
      சொல்ல தான்வல்லி ரேற்றுயர் தீருமே. 5.43.1
      428 பொக்கம் பேசி பொழுது கழியாதே
      துக்க தீர்வகை சொல்லுவன் கேண்மினோ
      தக்கன் வேள்வி தகர்த்த தழல்வண்ணன்
      நக்கன் சேர்நல்லம் நண்ணுதல் நன்மையே. 5.43.2
      429 பிணிகொள் வார்குழற் பேதையர் காதலாற்
      பணிகள் மேவி பயனில்லை பாவிகாள்
      அணுக வேண்டில் அரனெறி யாவது
      நணுகு நாதன் நகர்திரு நல்லமே. 5.43.3
      430 தமக்கு நல்லது தம்முயிர் போயினால்
      இமைக்கும் போதும் இராதி குரம்பைதான்
      உமைக்கு நல்லவன் றானுறை யும்பதி
      நமக்கு நல்லது நல்ல மடைவதே. 5.43.4
      431 உரைத ளர்ந்துட லார்நடுங் காமுனம்
      நரைவி டையுடை யானிடம் நல்லமே
      பரவு மின்பணி
      விரவு மின்விர வாரை விடுமினே. 5.43.5
      432 அல்ல லாகஐம் பூதங்க ளாட்டினும்
      வல்ல வாறு சிவாய நமவென்று
      நல்லம் மேவிய நாத னடிதொழ
      வெல்ல வந்த வினைப்பகை வீடுமே. 5.43.6
      433 மாத ராரொடு மக்களுஞ் சுற்றமும்
      பேத மாகி பிரிவதன் முன்னமே
      நாதன் மேவிய நல்லம் நகர்தொழ
      போது மின்னெழு மின்புக லாகுமே. 5.43.7
      434 வெம்மை யான வினைக்கடல் நீங்கிநீர்
      செம்மை யாய சிவகதி சேரலாஞ்
      சும்மை யார்மலர் தூவி தொழுமினோ
      நம்மை யாளுடை யானிடம் நல்லமே. 5.43.8
      435 கால மான கழிவதன் முன்னமே
      ஏலு மாறு வணங்கிநின் றேத்துமின்
      மாலும் மாமல ரானொடு மாமறை
      நாலும் வல்லவர் கோனிடம் நல்லமே. 5.43.9
      436 மல்லை மல்கிய தோளர கன்வலி
      ஒல்லை யில்லொழி தானுறை யும்பதி
      நல்ல நல்லம் எனும்பெயர் நாவினாற்
      சொல்ல வல்லவர் தூநெறி சேர்வரே. 5.43.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - உமாமகேசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.44 திருவாமாத்தூர் - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      437 மாமா தாகிய மாலயன் மால்கொடு
      தாமா தேடியுங் காண்கிலர் தாள்முடி
      ஆமா தூரர னேஅரு ளாயென்றென்
      றேமா பெய்திக்கண் டாரிறை யானையே. 5.44.1
      438 சந்தி யானை சமாதிசெய் வார்தங்கள்
      புந்தி யானைப்பு தேளிர் தொழப்படும்
      அந்தி யானை ஆமத்தூர் அழகனை
      சிந்தி யாதவர் தீவினை யாளரே. 5.44.2
      439 காமா தம்மெனுங் கார்வலை பட்டுநான்
      போமா தையறி யாது புலம்புவேன்
      ஆமா தூரர னேயென் றழைத்தலு
      தேமா தீங்கனி போலத்தி திக்குமே. 5.44.3
      440 பஞ்ச பூத வலையிற் படுவதற்
      கஞ்சி நானும் ஆமாத்தூர் அழகனை
      நெஞ்சி னால்நினை தேன்நினை வெய்தலும்
      வஞ்ச ஆறுகள் வற்றின காண்மினே. 5.44.4
      441 குராம னுங்குழ லாளொரு கூறனார்
      அராம னுஞ்சடை யான்றிரு வாமாத்தூர்
      இராம னும்வழி பாடுசெய் ஈசனை
      நிராம யன்றனை நாளும் நினைமினே. 5.44.5
      442 பித்த னைப்பெரு தேவர் தொழப்படும்
      அத்த னையணி யாமாத்தூர் மேவிய
      முத்தி னையடி யேனுள் முயறலும்
      பத்தி வெள்ளம் பரந்தது காண்மினே. 5.44.6
      443 நீற்றி னார்திரு மேனியன் நேரிழை
      கூற்றி னான்குழல் கோல சடையிலோர்
      ஆற்றி னான்அணி ஆமாத்தூர் மேவிய
      ஏற்றி னான்எமை யாளுடை ஈசனே. 5.44.7
      444 பண்ணிற் பாடல்கள் பத்திசெய் வித்தகர
      கண்ணி தாகும் அமுதினை ஆமாத்தூர்
      சண்ணி பானை தமர்க்கணி தாயதோர்
      கண்ணிற் பாவையன் னானவன் காண்மினே. 5.44.8
      445 குண்டர் பீலிகள் கொள்ளுங் குணமிலா
      மிண்ட ரோடெனை வேறு படுத்து
      கொண்ட நாதன் குளிர்புனல் வீரட்ட
      தண்ட னாரிடம் ஆமாத்தூர் காண்மினே. 5.44.9
      446 வானஞ் சாடு மதியர வத்தொடு
      தானஞ் சாதுடன் வைத்த சடையிடை
      தேனஞ் சாடிய தெங்கிள நீரொடும்
      ஆனஞ் சாடிய ஆமாத்தூர் ஐயனே. 5.44.10
      447 விடலை யாய்விலங் கல்லெடு தான்முடி
      அடர வோர்விரல் ஊன்றிய ஆமாத்தூர்
      இடம தாக்கொண்ட ஈசனு கென்னுளம்
      இடம தாகக்கொண் டின்புற் றிருப்பனே. 5.44.11
      இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - அழகியநாதர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.45 திருத்தோணிபுரம் - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      448 மாதி யன்று மனைக்கிரு வென்றக்கால்
      நீதி தான்சொல நீயென காரெனுஞ்
      சோதி யார்தரு தோணி புரவர்க்கு
      தாதி யாவன்நா னென்னுமென் தையலே. 5.45.1
      449 நக்கம் வந்து பலியிடென் றார்க்கிட்ட
      மிக்க தையலை வெள்வளை கொள்வது
      தொக்க நீர்வயல் தோணி புரவர்க்கு
      தக்க தன்று தமது பெருமைக்கே. 5.45.2
      450 கெண்டை போல்நய னத்திம வான்மகள்
      வண்டு வார்குழ லாளுட னாகவே
      துண்ட வான்பிறை தோணி புரவரை
      கண்டு காமுறு கின்றனள் கன்னியே. 5.45.3
      451 பாலை யாழ்மொழி யாளவள் தாழ்சடை
      மேல ளாவது கண்டனள் விண்ணுற
      சோலை யார்தரு தோணி புரவர்க்கு
      சால நல்லளா கின்றனள் தையலே. 5.45.4
      452 பண்ணின் நேர்மொழி யாள்பலி யிட்டவி
      பெண்ணை மால்கொடு பெய்வளை கொள்வது
      சுண்ண மாடிய தோணி புரத்துறை
      அண்ண லாருக்கு சால அழகிதே. 5.45.5
      453 முல்லை வெண்ணகை மொய்குழ லாயுன
      கல்ல னாவ தறிந்திலை நீகனி
      தொல்லை யார்பொழில் தோணி புரவர்க்கே
      நல்லை யாயிடு கின்றனை நங்கையே. 5.45.6
      454 ஒன்று தானறி யாருல கத்தவர்
      நின்று சொல்லி நிகழ்ந்த நினைப்பிலர்
      துன்று வார்பொழில் தோணி புரவர்தங்
      கொன்றை சூடுங் குறிப்பது வாகுமே. 5.45.7
      455 உறவு பேய்க்கணம் உண்பது வெண்டலை
      உறைவ தீமம் உடலிலோர் பெண்கொடி
      துறைக ளார்கடல் தோணி புரத்துறை
      இறைவ னார்க்கிவள் என்கண்டன் பாவதே. 5.45.8
      456 மாக யானை மருப்பேர் முலையினர்
      போக யானு மவள்புக்க தேபுக
      தோகை சேர்தரு தோணி புரவர்க்கே
      ஆக யானு மவர்க்கினி யாளதே. 5.45.9
      457 இட்ட மாயின செய்வாளென் பெண்கொடி
      கட்டம் பேசிய காரர கன்றனை
      துட்ட டக்கிய தோணி புரத்துறை
      அட்ட மூர்த்திக்கு அன்பது வாகியே. 5.45.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - தோணியப்பர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.46 திருப்புகலூர் - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      458 துன்ன கோவண சுண்ணவெண் ணீறணி
      பொன்ன கன்ன சடைப்புக லூரரோ
      மின்ன கன்னவெண் டிங்களை பாம்புடன்
      என்னு கோவுடன் வைத்தி டிருப்பதே. 5.46.1
      459 இரைக்கும் பாம்பு மெறிதரு திங்களும்
      நுரைக்குங் கங்கையும் நுண்ணிய செஞ்சடை
      புரைப்பி லாத பொழிற்புக லூரரை
      உரைக்கு மாசொல்லி ஒள்வளை சோருமே. 5.46.2
      460 ஊச லாம்அர வல்குலென் சோர்குழல்
      ஏச லாம்பழி தந்தெழில் கொண்டனர்
      ஓசொ லாய்மக ளேமுறை யோவென்று
      பூசல் நாமிடு தும்புக லூரர்க்கே. 5.46.3
      461 மின்னின் நேரிடை யாளுமை பங்கனை
      தன்னை நேரொ பிலாத தலைவனை
      புன்னை கானற் பொழில்புக லூரனை
      என்னு ளாகவை தின்புற் றிருப்பனே. 5.46.4
      462 விண்ணி னார்மதி சூடிய வேந்தனை
      எண்ணி நாமங்கள் ஓதி எழுத்தஞ்சுங்
      கண்ணி னாற்கழல் காண்பிட மேதெனிற்
      புண்ணி யன்புக லூருமென் நெஞ்சுமே. 5.46.5
      463 அண்ட வாணர் அமுதுண நஞ்சுண்டு
      பண்டு நான்மறை யோதிய பாடலன்
      தொண்ட ராகி தொழுது மதிப்பவர்
      புண்ட ரீகத்து ளார்புக லூரரே. 5.46.6
      464 தத்து வந்தலை கண்டறி வாரிலை
      தத்து வந்தலை கண்டவர் கண்டிலர்
      தத்து வந்தலை நின்றவர கல்லது
      தத்து வன்னலன் தண்புக லூரனே. 5.46.7
      465 பெருங்கை யாகி பிளிறி வருவதோர்
      கருங்கை யானை களிற்றுரி போர்த்தவர்
      வருங்கை யானை மதகளி றஞ்சினை
      பொருங்கை யானைகண் டீர்புக லூரரே. 5.46.8
      466 பொன்னொ தநிற தானும் பொருகடல்
      தன்னொ தநிற தானும் அறிகிலா
      புன்னை தாது பொழிற்புக லூரரை
      என்ன தாவென என்னிடர் தீருமே. 5.46.9
      467 மத்த னாய்மதி யாது மலைதனை
      எத்தி னான்றிரள் தோள்முடி பத்திற
      ஒத்தி னான்விர லாலொருங் கேத்தலும்
      பொத்தி னான்புக லூரை தொழுமினே. 5.46.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - வர்த்தமானீசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.47 திருவேகம்பம் - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      468 பண்டு செய்த பழவினை யின்பயன்
      கண்டுங் களித்திகாண்
      வண்டு லாமலர செஞ்சடை யேகம்பன்
      தொண்ட னாய்த்திரி யாய்துயர் தீரவே. 5.47.1
      469 நச்சி நாளும் நயந்தடி யார்தொழ
      இச்சை யாலுமை நங்கை வழிபட
      கொச்சை யார்குறு கார்செறி தீம்பொழிற்
      கச்சி யேகம்ப மேகை தொழுமினே. 5.47.2
      470 ஊனி லாவி இயங்கி உலகெலாம்
      தானு லாவிய தன்மைய ராகிலும்
      வானு லாவிய பாணி பிறங்கவெங்
      கானி லாடுவர் கச்சியே கம்பரே. 5.47.3
      471 இமையா முக்கணர் என்னெஞ்ச துள்ளவர்
      தமையா ரும்மறி வொண்ணா தகைமையர்
      இமையோ ரேத்த இருந்தவன் ஏகம்பன்
      நமையா ளும்மவ னைத்தொழு மின்களே. 5.47.4
      472 மருந்தி னோடுநற் சுற்றமும் மக்களும்
      பொருந்தி நின்றென காயவெம் புண்ணியன்
      கருந்த டங்கண்ணி னாளுமை கைதொழ
      இருந்த வன்கச்சி ஏகம்ப தெந்தையே. 5.47.5
      473 பொருளி னோடுநற் சுற்றமும் பற்றிலர
      கருளும் நன்மைத தாய அரும்பொருள்
      சுருள்கொள் செஞ்சடை யான்கச்சி யேகம்பம்
      இருள்கெட சென்று கைதொழு தேத்துமே. 5.47.6
      474 மூக்கு வாய்செவி கண்ணுட லாகிவ
      தாக்கும் ஐவர்தம் ஆப்பை அவிழ்த்தருள்
      நோக்கு வான்நமை நோய்வினை வாராமே
      காக்கும் நாயகன் கச்சி யேகம்பனே. 5.47.7
      475 பண்ணில் ஓசை பழத்தினில் இன்சுவை
      பெண்ணொ டாணென்று பேசற் கரியவன்
      வண்ண மில்லி வடிவுவே றாயவன்
      கண்ணி லுண்மணி கச்சி யேகம்பனே. 5.47.8
      476 திருவின் நாயகன் செம்மலர் மேலயன்
      வெருவ நீண்ட விளங்கொளி சோதியான்
      ஒருவ னாயுணர் வாயுணர் வல்லதோர்
      கருவுள் நாயகன் கச்சி யேகம்பனே. 5.47.9
      477 இடுகு நுண்ணிடை ஏந்திள மென்முலை
      வடிவின் மாதர் திறம்மனம் வையன்மின்
      பொடிகொள் மேனியன் பூம்பொழிற் கச்சியுள்
      அடிகள் எம்மை அருந்துயர் தீர்ப்பரே. 5.47.10
      478 இலங்கை வேந்தன் இராவணன் சென்றுதன்
      விலங்க லையெடு கவ்விர லூன்றலுங்
      கலங்கி கச்சியே கம்பவோ வென்றலும்
      நலங்கொள் செலவளி தானெங்கள் நாதனே. 5.47.11
      இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - ஏகாம்பரநாதர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.48 திருவேகம்பம் - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      479 பூமே லானும் பூமகள் கேள்வனும்
      நாமே தேவ ரெனாமை நடுக்குற
      தீமே வும்முரு வாதிரு வேகம்பா
      ஆமோ அல்லற் படவடி யோங்களே. 5.48.1
      480 அருந்தி றல்அம ரர்அயன் மாலொடு
      திருந்த நின்று வழிபட தேவியோ
      டிருந்த வன்னெழி லார்கச்சி யேகம்பம்
      பொருந்த சென்று புடைப டெழுதுமே. 5.48.2
      481 கறைகொள் கண்டத்தெண் டோ ளிறை முக்கணன்
      மறைகொள் நாவினன் வானவர காதியான்
      உறையும் பூம்பொழில் சூழ்கச்சி யேகம்பம்
      முறைமை யாற்சென்று முந்தி தொழுதுமே. 5.48.3
      482 பொறிப்பு லன்களை போக்கறு துள்ளத்தை
      நெறிப்ப டுத்து நினைந்தவர் சிந்தையுள்
      அறிப்பு றும்மமு தாயவன் ஏகம்பம்
      குறிப்பி னாற்சென்று கூடி தொழுதுமே. 5.48.4
      483 சிந்தை யுட்சிவ மாய்நின்ற செம்மையோ
      டந்தி யாய்அன லாய்ப்புனல் வானமாய்
      புந்தி யாய்ப்புகு துள்ளம் நிறைந்தவெம்
      எந்தை யேகம்பம் ஏத்தி தொழுமினே. 5.48.5
      484 சாக்கி யத்தொடு மற்றுஞ் சமண்படும்
      பாக்கி யம்மிலார் பாடு செலாதுற
      பூக்கொள் சேவடி யான்கச்சி யேகம்பம்
      நாக்கொ டேத்தி நயந்து தொழுதுமே. 5.48.6
      485 மூப்பி னோடு முனிவுறு தெந்தமை
      ஆர்ப்ப தன்முன் னணிஅம ரர்க்கிறை
      காப்ப தாய கடிபொழில் ஏகம்பம்
      சேர்ப்ப தாகநாஞ் சென்றடை துய்துமே. 5.48.7
      486 ஆலு மாமயிற் சாயல்நல் லாரொடுஞ்
      சால நீயுறு மால்தவிர் நெஞ்சமே
      நீல மாமிடற் றண்ணலே கம்பனார்
      கோல மாமலர பாதமே கும்பிடே. 5.48.8
      487 பொய்ய னைத்தையும் விட்டவர் புந்தியுள்
      மெய்ய னைச்சுடர் வெண்மழு வேந்திய
      கைய னைக்கச்சி யேகம்பம் மேவிய
      ஐய னைத்தொழு வார்க்கில்லை யல்லலே. 5.48.9
      488 அரக்கன் றன்வலி உன்னி கயிலையை
      நெருக்கி சென்றெடு தான்முடி தோள்நெரி
      திரக்க இன்னிசை கேட்டவன் ஏகம்ப
      தருக்க தாகநாஞ் சார்ந்து தொழுதுமே. 5.48.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.49 திருவெண்காடு - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      489 பண்கா டிப்படி யாயதன் பத்தர்க்கு
      கண்கா டிக்கண்ணில் நின்ற மணியொக்கும்
      பெண்கா டிப்பிறை சென்னிவை தான்றிரு
      வெண்கா டையடை துய்ம்மட நெஞ்சமே. 5.49.1
      490 கொள்ளி வெந்தழல் வீசிநின் றாடுவார்
      ஒள்ளி யகணஞ் சூழுமை பங்கனார்
      வெள்ளி யன்கரி யன்பசு வேறிய
      தெள்ளி யன்றிரு வெண்கா டடைநெஞ்சே. 5.49.2
      491 ஊனோ குமின்பம் வேண்டி யுழலாதே
      வானோ கும்வழி யாவது நின்மினோ
      தானோ குந்தன் னடியவர் நாவினில்
      தேனோ குந்திரு வெண்கா டடைநெஞ்சே. 5.49.3
      492 பருவெண் கோட்டுப்பைங் கண்மத வேழத்தின்
      உருவங் காட்டிநின் றானுமை அஞ்சவே
      பெருவெண் காட்டிறை வன்னுறை யும்மிட
      திருவெண் காடடை துய்ம்மட நெஞ்சமே. 5.49.4
      493 பற்ற வன்கங்கை பாம்பு மதியுடன்
      உற்ற வன்சடை யானுயர் ஞானங்கள்
      கற்ற வன்கய வர்புரம் ஓரம்பால்
      செற்ற வன்றிரு வெண்கா டடைநெஞ்சே. 5.49.5
      494 கூடி னானுமை யாளொரு பாகமாய்
      வேட னாய்விச யற்கருள் செய்தவன்
      சேட னார்சிவ னார்சிந்தை மேயவெண்
      காட னாரடி யேஅடை நெஞ்சமே. 5.49.6
      495 தரித்த வன்கங்கை பாம்பு மதியுடன்
      புரித்த புன்சடை யான்கய வர்புரம்
      எரித்த வன்மறை நான்கினோ டாறங்கம்
      விரித்த வன்னுறை வெண்கா டடைநெஞ்சே. 5.49.7
      496 பட்டம் இண்டை யவைகொடு பத்தர்கள்
      ------------------------------------------------------------------------
      -
      5 2 510 -1016

      திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த
      தேவார பதிகங்கள்
      ஐந்தாம் திருமுறை இரண்டாம் பகுதி
      பாடல்கள் 510 -1016
      ------------------------------------------------------------------------
      ------------------------------------------------------------------------

      .

      .
      .


      .
      - . ..

      .
      . ..
      .

      .
      2000 ...

      2000 .
      -8
      6 5
      -8 - .
      .
      .
      © 1999 - 2004



      .

      ..

      .
      ------------------------------------------------------------------------
      திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த
      தேவார பதிகங்கள்
      ஐந்தாம் திருமுறை இரண்டாம் பகுதி
      பாடல்கள் 510 - 1006
      உள்ளுறை
      5.051 திருப்பாலைத்துறை 510-520 மின்பதிப்பு
      5.052 திருநாகேச்சரம் 521-530 மின்பதிப்பு
      5.053 திருவதிகைவீரட்டம் 531-542 மின்பதிப்பு
      5.054 திருவதிகைவீரட்டம் 543- 552 மின்பதிப்பு
      5.055 திருநாரையூர் 553-562 மின்பதிப்பு
      5.056 திருக்கோளிலி 563-572 மின்பதிப்பு
      5.057 திருக்கோளிலி 573 -582 மின்பதிப்பு
      5.058 திருப்பழையாறைவடதளி 583 -592 மின்பதிப்பு
      5.059 திருமாற்பேறு 593 -601 மின்பதிப்பு
      5.060 திருமாற்பேறு 601-610 மின்பதிப்பு
      5.061 திருஅரிசிற்கரைப்புத்தூர் 611 -620 மின்பதிப்பு
      5.062 திருக்கடுவாய்க்கரைப்புத்தூர் 621-630 மின்பதிப்பு
      5.063 திருக்குரங்காடுதுறை 631-641 மின்பதிப்பு
      5.064 திருக்கோழம்பம் 642-652 மின்பதிப்பு
      5.065 திருப்பூவனூர் 653-663 மின்பதிப்பு
      5.066 திருவலஞ்சுழி 664-673 மின்பதிப்பு
      5.067 திருவாஞ்சியம் 674- 680 மின்பதிப்பு
      5.068 திருநள்ளாறு 681-690 மின்பதிப்பு
      5.069 திருக்கருவிலி 691 -700 மின்பதிப்பு
      5.070 திருக்கொண்டீச்சரம் 701-710 மின்பதிப்பு
      5.071 திருவிசயமங்கை 711-720 மின்பதிப்பு
      5.072 திருநீலக்குடி 721-730 மின்பதிப்பு
      5.073 திருமங்கலக்குடி 731-740 மின்பதிப்பு
      5.074 திருஎறும்பியூர் 741 -750 மின்பதிப்பு
      5.075 திருக்குரக்குக்கா 751- 760 மின்பதிப்பு
      5.076 திருக்கானூர் 761-769 மின்பதிப்பு
      5.077 திருச்சேறை 770-779 மின்பதிப்பு
      5.078 திருக்கோடிகா 780-786 மின்பதிப்பு
      5.079 திருப்புள்ளிருக்குவேளூர் 787-795 மின்பதிப்பு
      5.080 திருஅன்பில்ஆலந்துறை 796- 805 மின்பதிப்பு
      5.081 திருப்பாண்டிக்கொடுமுடி 806-810 மின்பதிப்பு
      5.082 திருவான்மியூர் 811-820 மின்பதிப்பு
      5.083 திருநாகைக்காரோணம் 821-830 மின்பதிப்பு
      5.084 திருக்காட்டுப்பள்ளி 831-840 மின்பதிப்பு
      5.085 திருச்சிராப்பள்ளி 841-844 மின்பதிப்பு
      5.086 திருவாட்போக்கி 845-854 மின்பதிப்பு
      5.087 திருமணஞ்சேரி 855-864 மின்பதிப்பு
      5.088 திருமருகல் 865- 874 மின்பதிப்பு
      5.089 தனி 875-884 மின்பதிப்பு
      5.090 தனி 885-894 மின்பதிப்பு
      5.091 தனி 895-900 மின்பதிப்பு
      5.092 காலபாராயணம் 901-914 மின்பதிப்பு
      5.093 மறக்கிற்பனே என்னும் 915-924 மின்பதிப்பு
      5.094 தொழற்பாலனம் என்னும் 925-935 மின்பதிப்பு
      5.095 இலிங்கபுராணம் 936-946 மின்பதிப்பு
      5.096 மனத்தொகை 947-956 மின்பதிப்பு
      5.097 சித்தத்தொகை 957 -986 மின்பதிப்பு
      5.098 உள்ளம் 987-996 மின்பதிப்பு
      5.099 பாவநாசம் 997-1006 மின்பதிப்பு
      5.100 ஆதிபுராணம் 1007-1016 மின்பதிப்பு
      ------------------------------------------------------------------------
      5.51 திருப்பாலைத்துறை - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      510 நீல மாமணி கண்டத்தர் நீள்சடை
      கோல மாமதி கங்கையுங் கூட்டினார்
      சூல மான்மழு வேந்தி சுடர்முடி
      பால்நெய் யாடுவர் பாலை துறையரே. 5.51.1
      511 கவள மால்களிற் றின்னுரி போர்த்தவர்
      தவள வெண்ணகை மங்கையோர் பங்கினர்
      திவள வானவர் போற்றி திசைதொழும்
      பவள மேனியர் பாலை துறையரே. 5.51.2
      512 மின்னின் நுண்ணிடை கன்னியர் மிக்கெங்கும்
      பொன்னி நீர்மூழ்கி போற்றி யடிதொழ
      மன்னி நான்மறை யோடுபல் கீதமும்
      பன்னி னாரவர் பாலை துறையரே. 5.51.3
      513 நீடு காடிட மாய்நின்ற பேய்க்கணங்
      கூடு பூதங் குழுமிநின் றார்க்கவே
      ஆடி னாரழ காகிய நான்மறை
      பாடி னாரவர் பாலை துறையரே. 5.51.4
      514 சித்தர் கன்னியர் தேவர்கள் தானவர்
      பித்தர் நான்மறை வேதியர் பேணிய
      அத்த னேநமை யாளுடை யாயெனும்
      பத்தர் கட்கன்பர் பாலை துறையரே. 5.51.5
      515 விண்ணி னார்பணி தேத்த வியப்புறும்
      மண்ணி னார்மற வாதுசி வாயவென்
      றெண்ணி னார்க்கிட மாவெழின் வானகம்
      பண்ணி னாரவர் பாலை துறையரே. 5.51.6
      516 குரவ னார்கொடு கொட்டியுங் கொக்கரை
      விரவி னார்பண் கெழுமிய வீணையும்
      மருவு நாண்மலர் மல்லிகை செண்பகம்
      பரவு நீர்ப்பொன்னி பாலை துறையரே. 5.51.7
      517 தொடரு தொண்டரை துக்க தொடர்ந்துவ
      தடரும் போதர னாயருள் செய்பவர்
      கடலின் நஞ்சணி கண்டர் கடிபுனற்
      படருஞ் செஞ்சடை பாலை துறையரே. 5.51.8
      518 மேக தோய்பிறை சூடுவர் மேகலை
      நாக தோய்ந்த அரையினர் நல்லியற்
      போக தோய்ந்த புணர்முலை மங்கையோர்
      பாக தோய்ந்தவர் பாலை துறையரே. 5.51.9
      519 வெங்கண் வாளர வாட்டி வெருட்டுவர்
      அங்க ணாரடி யார்க்கருள் நல்குவர்
      செங்கண் மாலயன் தேடற் கரியவர்
      பைங்கண் ஏற்றினர் பாலை துறையரே. 5.51.10
      520 உரத்தி னாலர கன்னுயர் மாமலை
      நெருக்கி னானை நெரித்தவன் பாடலும்
      இரக்க மாவருள் செய்தபா லைத்துறை
      கரத்தி னாற்றொழு வார்வினை யோயுமே. 5.51.11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - பாலைவனநாதர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.52 திருநாகேச்சரம் - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      521 நல்லர் நல்லதோர் நாகங்கொண் டாட்டுவர்
      வல்லர் வல்வினை தீர்க்கும் மருந்துகள்
      பல்லில் ஓடுகை யேந்தி பலிதிரி
      செல்வர் போல்திரு நாகே சரவரே. 5.52.1
      522 நாவ லம்பெரு தீவினில் வாழ்பவர்
      மேவி வந்து வணங்கி வினையொடு
      பாவ மாயின பற்றறு வித்திடு
      தேவர் போல்திரு நாகே சரவரே. 5.52.2
      523 ஓத மார்கட லின்விட முண்டவர்
      ஆதி யார்அய னோடம ரர்க்கெலாம்
      மாதோர் கூறர் மழுவல னேந்திய
      நாதர் போல்திரு நாகே சரவரே. 5.52.3
      524 சந்தி ரன்னொடு சூரியர் தாமுடன்
      வந்து சீர்வழி பாடுகள் செய்தபின்
      ஐந்த லையர வின்பணி கொண்டருள்
      மைந்தர் போல்மணி நாகே சரவரே. 5.52.4
      525 பண்டோ ர் நாளிகழ் வான்பழி தக்கனார்
      கொண்ட வேள்வி குமண்டை யதுகெட
      தண்ட மாவிதா தாவின் றலைகொண்ட
      செண்டர் போல்திரு நாகே சரவரே. 5.52.5
      526 வம்பு பூங்குழல் மாது மறுகவோர்
      கம்ப யானை யுரித்த கரத்தினர்
      செம்பொ னாரித ழிம்மலர செஞ்சடை
      நம்பர் போல்திரு நாகே சரவரே. 5.52.6
      527 மானை யேந்திய கையினர் மையறு
      ஞான சோதியர் தியர் நாமந்தான்
      ஆன அஞ்செழு தோதவ தண்ணிக்கு
      தேனர் போல்திரு நாகே சரவரே. 5.52.7
      528 கழல்கொள் காலினர் காலனை காய்ந்தவர்
      தழல்கொள் மேனியர் சாந்தவெண் ணீறணி
      அழகர் ஆல்நிழற் கீழற மோதிய
      குழகர் போல்குளிர் நாகே சரவரே. 5.52.8
      529 வட்ட மாமதில் மூன்றுடன் வல்லரண்
      சுட்ட செய்கைய ராகிலுஞ் சூழ்ந்தவர்
      குட்ட வல்வினை தீர்த்து குளிர்விக்குஞ்
      சிட்டர் போல்திரு நாகே சரவரே. 5.52.9
      530 தூர்த்தன் றோண்முடி தாளு தொலையவே
      சேர்த்தி னார்திரு பா தொருவிரல்
      ஆர்த்து வந்துல கத்தவ ராடிடு
      தீர்த்தர் போல்திரு நாகே சரவரே. 5.52.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - செண்பகாரணியேசுவரர்
      தேவியார் - குன்றமுலைநாயகியம்மை.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.53 திருவதிகைவீரட்டம் - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      531 கோணன் மாமதி சூடியோர் கோவணம்
      நாணில் வாழ்க்கை நயந்தும் பயனிலை
      பாணில் வீணை பயின்றவன் வீரட்டங்
      காணில் அல்லதென் கண்டுயில் கொள்ளுமே. 5.53.1
      532 பண்ணி னைப்பவ ளத்திரள் மாமணி
      அண்ண லையம ரர்தொழு மாதியை
      சுண்ண வெண்பொடி யான்றிரு வீரட்டம்
      நண்ணி லல்லதென் கண்டுயில் கொள்ளுமே. 5.53.2
      533 உற்ற வர்தம் உறுநோய் களைபவர்
      பெற்ற மேறும் பிறங்கு சடையினர்
      சுற்றும் பாய்புனல் சூழ்திரு வீரட்டங்
      கற்கி லல்லதென் கண்டுயில் கொள்ளுமே. 5.53.13
      534 முற்றா வெண்மதி சூடும் முதல்வனார்
      செற்றார் வாழு திரிபுர தீயெழ
      விற்றான் கொண்டெயி லெய்தவர் வீரட்டங்
      கற்றா லல்லதென் கண்டுயில் கொள்ளுமே. 5.53.4
      535 பல்லா ரும்பல தேவர் பணிபவர்
      நல்லா ரு தேத்த படுபவன்
      வில்லால் மூவெயி லெய்தவன் வீரட்டங்
      கல்லே னாகிலென் கண்டுயில் கொள்ளுமே. 5.53.5
      536 வண்டார் கொன்றையும் மத்தம் வளர்சடை
      கொண்டான் கோல மதியோ டரவமும்
      விண்டார் மும்மதி லெய்தவன் வீரட்டங்
      கண்டா லல்லதென் கண்டுயில் கொள்ளுமே. 5.53.6
      537 அரையார் கோவண ஆடைய னாறெலா
      திரையார் ஒண்புனல் பாய்கெடி லக்கரை
      விரையார் நீற்றன் விளங்கு வீரட்டன்பாற்
      கரையே னாகிலென் கண்டுயில் கொள்ளுமே. 5.53.7
      538 நீறு டைத்தட தோளுடை நின்மலன்
      ஆறு டைப்புனல் பாய்கெடி லக்கரை
      ஏறு டைக்கொடி யான்றிரு வீரட்டங்
      கூறி லல்லதென் கண்டுயில் கொள்ளுமே. 5.53.8
      539 செங்கண் மால்விடை யேறிய செல்வனார்
      பைங்க ணானையின் ஈருரி போர்த்தவர்
      அங்கண் ஞாலம தாகிய வீரட்டங்
      கங்கு லாகவென் கண்டுயில் கொள்ளுமே. 5.53.9
      540 பூணா ணாரம் பொருந்த வுடையவர்
      நாணா கவ்வரை வில்லிடை யம்பினாற்
      பேணார் மும்மதி லெய்தவன் வீரட்டங்
      காணே னாகிலென் கண்டுயில் கொள்ளுமே. 5.53.10
      541 வரையார தவயி ரத்திரள் மாணிக்க
      திரையார தபுனல் பாய்கெடி லக்கரை
      விரையார் நீற்றன் விளங்கிய வீரட்டம்
      உரையே னாகிலென் கண்டுயில் கொள்ளுமே. 5.53.11
      542 உலந்தார் வெண்டலை உண்கல னாகவே
      வலந்தான் மிக்கவன் வாளர கன்றனை
      சிலம்பார் சேவடி யூன்றினான் வீரட்டம்
      புலம்பே னாகிலென் கண்டுயில் கொள்ளுமே. 5.53.12
      இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - வீரட்டானேசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.54 திருவதிகைவீரட்டம் - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      543 எட்டு நாண்மலர் கொண்டவன் சேவடி
      மட்ட லரிடு வார்வினை மாயுமாற்
      கட்டி தேன்கல தன்ன கெடிலவீ
      ரட்ட னாரடி சேரு மவருக்கே. 5.54.1
      544 நீள மாநினை தெண்மலர் இட்டவர்
      கோள வல்வினை யுங்குறை விப்பரால்
      வாள மாலிழி யுங்கெடி லக்கரை
      வேளி சூழ்ந்தழ காய வீரட்டரே. 5.54.2
      545 கள்ளின் நாண்மல ரோரிரு நான்குகொண்
      டுள்குவா ரவர் வல்வினை யோட்டுவார்
      தெள்ளு நீர்வயல் பாய்கெடி லக்கரை
      வெள்ளை நீறணி மேனிவீ ரட்டரே. 5.54.3
      546 பூங்கொ தாயின மூன்றொடோ ரைந்திட
      வாங்கி நின்றவர் வல்வினை யோட்டுவார்
      வீங்கு தண்புனல் பாய்கெடி லக்கரை
      வேங்கை தோலுடை யாடைவீ ரட்டரே. 5.54.4
      547 தேன போதுகள் மூன்றொடோ ரைந்துடன்
      தான போதிடு வார்வினை தீர்ப்பவர்
      மீன தண்புனல் பாய்கெடி லக்கரை
      வேன லானை யுரித்தவீ ரட்டரே. 5.54.5
      548 ஏழி தொன்மலர் கொண்டு பணிந்தவர்
      ஊழி தொல்வினை யோட அகற்றுவார்
      பாழி தண்புனல் பாய்கெடி லக்கரை
      வேழ தின்னுரி போர்த்தவீ ரட்டரே. 5.54.6
      549 உரைசெய் நூல்வழி யொண்மல ரெட்டிட
      திரைகள் போல்வரு வல்வினை தீர்ப்பரால்
      வரைகள் வந்திழி யுங்கெடி லக்கரை
      விரைகள் சூழ்ந்தழ காயவீ ரட்டரே. 5.54.7
      550 ஓலி வண்டறை யொண்மல ரெட்டினாற்
      காலை யேத்த வினையை கழிப்பரால்
      ஆலி வந்திழி யுங்கெடி லக்கரை
      வேலி சூழ்ந்தழ காயவீ ரட்டரே. 5.54.8
      551 தாரி துள்ளி தடமல ரெட்டினாற்
      பாரி தேத்தவல் லார்வினை பாற்றுவார்
      மூரி தெண்டிரை பாய்கெடி லக்கரை
      வேரி செஞ்சடை வேய்ந்தவீ ரட்டரே. 5.54.9
      552 அட்ட புட்பம் அவைகொளு மாறுகொண்
      டட்ட மூர்த்தி அனாதிதன் பாலணை
      தட்டு மாறுசெய் கிற்ப அதிகைவீ
      ரட்ட னாரடி சேரு மவர்களே. 5.54.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.55 திருநாரையூர் - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      553 வீறு தானுடை வெற்பன் மடந்தையோர்
      கூற னாகிலுங் கூன்பிறை சூடிலும்
      நாறு பூம்பொழில் நாரையூர் நம்பனு
      காறு சூடலும் அம்ம அழகிதே. 5.55.1
      554 புள்ளி கொண்ட புலியுரி யாடையும்
      வெள்ளி கொண்டவெண் பூதிமெய் யாடலும்
      நள்ளி தெண்டிரை நாரையூ ரான்நஞ்சை
      அள்ளி யுண்டலும் அம்ம அழகிதே. 5.55.2
      555 வேடு தங்கிய வேடமும் வெண்டலை
      ஓடு தங்கிய வுண்பலி கொள்கையும்
      நாடு தங்கிய நாரையூ ரான்நடம்
      ஆடு பைங்கழல் அம்ம அழகிதே. 5.55.3
      556 கொக்கின் றூவலுங் கூவிளங் கண்ணியும்
      மிக்க வெண்டலை மாலை விரிசடை
      நக்க னாகிலும் நாரையூர் நம்பனு
      கக்கி னாரமும் அம்ம அழகிதே. 5.55.4
      557 வடிகொள் வெண்மழு மானமர் கைகளும்
      பொடிகொள் செம்பவ ளம்புரை மேனியும்
      நடிகொள் நன்மயில் சேர்திரு நாரையூர்
      அடிகள் தம்வடி வம்ம அழகிதே. 5.55.5
      558 சூல மல்கிய கையுஞ் சுடரொடு
      பாலு நெய்தயி ராடிய பான்மையும்
      ஞால மல்கிய நாரையூர் நம்பனு
      கால நீழலும் அம்ம அழகிதே. 5.55.6
      559 பண்ணி னான்மறை பாடலொ டாடலும்
      எண்ணி லார்புர மூன்றெரி செய்ததும்
      நண்ணி னார்துயர் தீர்த்தலும் நாரையூர்
      அண்ண லார்செய்கை அம்ம அழகிதே. 5.55.7
      560 என்பு பூண்டெரு தேறி இளம்பிறை
      மின்பு ரிந்த சடைமேல் விளங்கவே
      நன்ப கற்பலி தேரினும் நாரையூர்
      அன்ப னுக்கது அம்ம அழகிதே. 5.55.8
      561 முரலுங் கின்னரம் மொந்தை முழங்கவே
      இரவி னின்றெரி யாடலு நீடுவான்
      நரலும் வாரிநன் னாரையூர் நம்பனு
      கரவும் பூணுதல் அம்ம அழகிதே. 5.55.9
      562 கடுக்கை யஞ்சடை யன்கயி லைம்மலை
      எடுத்த வாளர கன்றலை ஈரைஞ்சும்
      நடுக்கம் வந்திற நாரையூ ரான்விரல்
      அடுத்த தன்மையும் அம்ம அழகிதே. 5.55.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - சவுந்தரேசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.56 திருக்கோளிலி - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      563 மைக்கொள் கண்ணுமை பங்கினன் மான்மழு
      தொக்க கையினன் செய்யதோர் சோதியன்
      கொக்க மர்பொழில் சூழ்தரு கோளிலி
      நக்க னைத்தொழ நம்வினை நாசமே. 5.56.1
      564 முத்தி னைமுத லாகிய மூர்த்தியை
      வித்தி னைவிளை வாய விகிர்தனை
      கொத்த லர்பொழில் சூழ்தரு கோளிலி
      அத்த னைத்தொழ நீங்கும்நம் மல்லலே. 5.56.2
      565 வெண்டி ரைப்பர வைவிட முண்டதோர்
      கண்ட னைக்கல தார்த கன்பனை
      கொண்ட லம்பொழிற் கோளிலி மேவிய
      அண்ட னைத்தொழு வார்க்கல்ல லில்லையே. 5.56.3
      566 பலவும் வல்வினை பாறும் பரிசினால்
      உலவுங் கங்கையு திங்களும் ஒண்சடை
      குலவி னான்குளி ரும்பொழிற் கோளிலி
      நிலவி னான்றனை நித்தல் நினைமினே. 5.56.4
      567 அல்ல லாயின தீரும் அழகிய
      முல்லை வெண்முறு வல்லுமை யஞ்சவே
      கொல்லை யானை யுரித்தவன் கோளிலி
      செல்வன் சேவடி சென்று தொழுமினே. 5.56.5
      568 ஆவின் பால்கண் டளவில் அருந்தவ
      பாலன் வேண்டலுஞ் செல்லென்று பாற்கடல்
      கூவி னான்குளி ரும்பொழிற் கோளிலி
      மேவி னானை தொழவினை வீடுமே. 5.56.6
      569 சீர்த்த நன்மனை யாளுஞ் சிறுவரும்
      ஆர்த்த சுற்றமும் பற்றிலை யாதலாற்
      கூத்த னாருறை யுந்திரு கோளிலி
      ஏத்தி நீர்தொழு மின்னிடர் தீருமே. 5.56.7
      570 மால தாகி மயங்கு மனிதர்காள்
      காலம் வந்து கடைமுடி யாமுனங்
      கோல வார்பொழிற் கோளிலி மேவிய
      நீல கண்டனை நின்று நினைமினே. 5.56.8
      571 கேடு மூடி கிடந்துண்ணு நாடது
      தேடி நீர்திரி யாதே சிவகதி
      கூட லாந்திரு கோளிலி ஈசனை
      பாடு மின்னிர வோடு பகலுமே. 5.56.8
      572 மடுத்து மாமலை யேந்தலுற் றான்றனை
      அடர்த்து பின்னும் இரங்கி யவற்கருள்
      கொடுத்த வன்னுறை கோளிலி யேதொழ
      விடுத்து நீங்கிடும் மேலை வினைகளே. 5.56.9
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - கோளிலிநாதர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5. 57 திருக்கோளிலி - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      573 முன்ன மேநினை யாதொழி தேனுனை
      இன்னம் நானுன சேவடி யேத்திலேன்
      செந்நெ லார்வயல் சூழ்திரு கோளிலி
      மன்ன னேயடி யேனை மறவலே. 5.57.1
      574 விண்ணு ளார்தொழு தேத்தும் விளக்கினை
      மண்ணு ளார்வினை தீர்க்கு மருந்தினை
      பண்ணு ளார்பயி லுந்திரு கோளிலி
      அண்ண லாரடி யேதொழு துய்ம்மினே. 5.57.2
      575 நாளும் நம்முடை நாள்கள் அறிகிலோம்
      ஆளும் நோய்களோ ரைம்பதோ டாறெட்டும்
      ஏழை மைப்ப டிருந்துநீர் நையாதே
      கோளி லியரன் பாதமே கூறுமே. 5.57.3
      576 விழவி னோசை ஒலியறா தண்பொழில்
      பழகி னார்வினை தீர்க்கும் பழம்பதி
      அழல்கை யானம ருந்திரு கோளிலி
      குழக னார்திரு பாதமே கூறுமே. 5.57.4
      577 மூல மாகிய மூவர்க்கு மூர்த்தியை
      கால னாகிய காலற்குங் காலனை
      கோல மாம்பொழில் சூழ்திரு கோளிலி
      சூல பாணிதன் பாத தொழுமினே. 5.57.5
      578 காற்ற னைக்கடல் நஞ்சமு துண்டவெண்
      ணீற்ற னைநிமிர் புன்சடை யண்ணலை
      ஆற்ற னையம ருந்திரு கோளிலி
      ஏற்ற னாரடி யேதொழு தேத்துமே. 5.57.6
      579 வேத மாயவிண் ணோர்கள் தலைவனை
      ஓதி மன்னுயி ரேத்து மொருவனை
      கோதி வண்டறை யுந்திரு கோளிலி
      வேத நாயகன் பாதம் விரும்புமே. 5.57.7
      580 நீதி யாற்றொழு வார்கள் தலைவனை
      வாதை யான விடுக்கும் மணியினை
      கோதி வண்டறை யுந்திரு கோளிலி
      வேத நாயகன் பாதம் விரும்புமே. 5.57.8
      581 மாலும் நான்முக னாலும் அறிவொணா
      பாலின் மென்மொழி யாளொரு பங்கனை
      கோல மாம்பொழில் சூழ்திரு கோளிலி
      நீல கண்டனை நித்தல் நினைமினே. 5.57.9
      582 அரக்க னாய இலங்கையர் மன்னனை
      நெருக்கி யம்முடி பத்திறு தானவற்
      கிரக்க மாகிய வன்றிரு கோளிலி
      அருத்தி யாயடி யேதொழு துய்ம்மினே. 5.57.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.58 திருப்பழையாறைவடதளி - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      583 தலையெ லாம்பறி குஞ்சமண் கையருள்
      நிலையி னான்மறை தான்மறை கொண்ணுமே
      அலையி னார்பொழி லாறை வடதளி
      நிலையி னானடி யேநினை துய்ம்மினே. 5.58.1
      584 மூக்கி னால்முரன் றோதி குண்டிகை
      தூக்கி னார்குல தூரறு தேதன
      காக்கி னானணி யாறை வடதளி
      நோக்கி னார்க்கில்லை யாலரு நோய்களே. 5.58.2
      585 குண்ட ரைக்குண மில்லரை கூறையில்
      மிண்ட ரைத்துர தவிம லன்றனை
      அண்ட ரைப்பழை யாறை வடதளி
      கண்ட ரைத்தொழு துய்ந்தன கைகளே. 5.58.3
      586 முடைய ரைத்தலை முண்டிக்கும் மொட்டரை
      கடைய ரைக்கடி தார்கனல் வெண்மழு
      படைய ரைப்பழை யாறை வடதளி
      உடைய ரைக்குளிர துள்குமென் உள்ளமே. 5.58.4
      587 ஒள்ள ரிக்கணார் முன்னமண் நின்றுணுங்
      கள்ள ரைக்கடி தகரு பூறலை
      அள்ள லம்புன லாறை வடதளி
      வள்ள லைப்புக ழத்துயர் வாடுமே. 5.58.5
      588 நீதி யைக்கெட நின்றம ணேயுணுஞ்
      சாதி யைக்கெடு மாசெய்த சங்கரன்
      ஆதி யைப்பழை யாறை வடதளி
      சோதி யைத்தொழு வார்துயர் தீருமே. 5.58.6
      589 திரட்டி ரைக்க வளந்திணி குஞ்சமண்
      பிரட்ட ரைப்பிரி தபெரு மான்றனை
      அருட்டி றத்தணி யாறை வடதளி
      தெருட்ட ரைத்தொழ தீவினை தீருமே. 5.58.7
      590 ஓதி னத்தெழு தஞ்சுண ராச்சமண்
      வேதி னைப்படு தானைவெங் கூற்றுதை
      பாத னைப்பழை யாறை வடதளி
      நாத னைத்தொழ நம்வினை நாசமே.
      வேது என்பது - வெப்பம். 5.58.8
      591 வாயி ருந்தமி ழேபடி தாளுறா
      ஆயி ரஞ்சம ணும்மழி வாக்கினான்
      பாயி ரும்புன லாறை வடதளி
      மேய வன்னென வல்வினை வீடுமே. 5.58.9
      592 செருத்த னைச்செயுஞ் சேணர கன்னுடல்
      எருத்தி றவிர லாலிறை யூன்றிய
      அருத்த னைப்பழை யாறை வடதளி
      திருத்த னைத்தொழு வார்வினை தேயுமே. 5.58.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - சோமேசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.59 திருமாற்பேறு - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      593 பொருமாற் றின்படை வேண்டிநற் பூம்புனல்
      வருமாற் றின்மலர் கொண்டு வழிபடுங்
      கருமாற் கின்னருள் செய்தவன் காண்டகு
      திருமாற் பேறு தொழவினை தேயுமே. 5.59.1
      594 ஆல தார்நிழ லில்லறம் நால்வர்க்கு
      கோல தாலுரை செய்தவன் குற்றமில்
      மாலு காரருள் செய்தவன் மாற்பேறு
      ஏல தான்றொழு வார்க்கிட ரில்லையே. 5.59.2
      595 துணிவண் ணச்சுட ராழிகொள் வானெண்ணி
      அணிவண் ணத்தலர் கொண்டடி யர்ச்சித்த
      மணிவண் ணற்கருள் செய்தவன் மாற்பேறு
      பணிவண் ணத்தவர கில்லையாம் பாவமே. 5.59.3
      596 தீத வைசெய்து தீவினை வீழாதே
      காதல் செய்து கருத்தினில் நின்றநன்
      மாத வர்பயில் மாற்பேறு கைதொழ
      போது மின்வினை யாயின போகுமே. 5.59.4
      597 வார்கொள் மென்முலை மங்கையோர் பங்கினன்
      வார்கொள் நன்முர சம்மறை யவ்வறை
      வார்கொள் பைம்பொழில் மாற்பேறு கைதொழு
      வார்கள் மன்னுவர் பொன்னுல கத்திலே. 5.59.5
      598 பண்டை வல்வினை பற்றறு கும்வகை
      உண்டு சொல்லுவன் கேண்மின் ஒளிகிளர்
      வண்டு சேர்பொழில் சூழ்திரு மாற்பேறு
      கண்டு கைதொழ தீருங் கவலையே. 5.59.6
      599 மழுவ லான்றிரு நாமம் மகிழ்ந்துரை
      தழவ லார்களு கன்புசெய் தின்பொடும்
      வழுவி லாவருள் செய்தவன் மாற்பேறு
      தொழவ லார்த கில்லை துயரமே. 5.59.7
      600 முன்ன வனுல குக்கு முழுமணி
      பொன்ன வன்றிகழ் முத்தொடு போகமாம்
      மன்ன வன்றிரு மாற்பேறு கைதொழும்
      அன்ன வரெமை யாளுடை யார்களே. 5.59.8
      601 வேட னாய்விச யன்னொடும் எய்துவெங்
      காடு நீடுக தாடிய கண்ணுதல்
      மாட நீடுய ருந்திரு மாற்பேறு
      பாடு வார்பெறு வார்பர லோகமே. 5.59.9
      602 கருத்த னாய்க்கயி லாய மலைதனை
      தருக்கி னாலெடு தானை தகரவே
      வருத்தி யாரருள் செய்தவன் மாற்பேறு
      அருத்தி யாற்றொழு வார்க்கில்லை அல்லலே. 5.59.10
      இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - மால்வணங்குமீசர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.60 திருமாற்பேறு - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      603 ஏது மொன்று மறிவில ராயினும்
      ஓதி அஞ்செழு தும்முணர் வார்கட்கு
      பேத மின்றி அவரவர் உள்ளத்தே
      மாது தாமும் மகிழ்வர்மாற் பேறரே. 5.60.1
      604 அச்ச மில்லைநெஞ் சேயரன் நாமங்கள்
      நிச்ச லுந்நினை யாய்வினை போயற
      கச்ச மாவிட முண்டகண் டாவென
      வைச்ச மாநிதி யாவர் மாற்பேறரே. 5.60.2
      605 சாத்தி ரம்பல பேசுஞ் சழக்கர்காள்
      கோத்தி ரமுங்கு லமுங்கொண் டென்செய்வீர்
      பாத்தி ரஞ்சிவ மென்று பணிதிரேல்
      மாத்தி ரைக்குள் அருளுமாற் பேறரே. 5.60.3
      606 இருந்து சொல்லுவன் கேண்மின்கள் ஏழைகாள்
      அருந்த வந்தரும் அஞ்செழு தோதினாற்
      பொருந்து நோய்பிணி போக துரப்பதோர்
      மருந்து மாகுவர் மன்னுமாற் பேறரே. 5.60.4
      607 சாற்றி சொல்லுவன் கேண்மின் தரணியீர்
      ஏற்றின் மேல்வரு வான்கழ லேத்தினாற்
      கூற்றை நீக்கி குறைவறு தாள்வதோர்
      மாற்றி லாச்செம்பொ னாவர்மாற் பேறரே. 5.60.5
      608 ஈட்டு மாநிதி சால இழக்கினும்
      வீட்டுங் காலன் விரைய அழைக்கினுங்
      காட்டில் மாநட மாடுவாய் காவெனில்
      வாட்ட தீர்க்கவும் வல்லர்மாற் பேறரே. 5.60.6
      609 ஐய னேயர னேயென் றரற்றினால்
      உய்ய லாமுல கத்தவர் பேணுவர்
      செய்ய பாத மிரண்டும் நினையவே
      வைய மாளவும் வைப்பர்மாற் பேறரே. 5.60.7
      இப்பதிகத்தில் 89-ம் செய்யுட்கள் சிதைந்து போயின. 5.60.8-9
      610 உந்தி சென்று மலையை யெடுத்தவன்
      சந்து தோளொடு தாளிற வூன்றினான்
      மந்தி பாய்பொழில் சூழுமாற் பேறென
      அந்த மில்லதோர் இன்பம் அணுகுமே. 5.60.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.61 திருஅரிசிற்கரைப்புத்தூர் - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      611 முத்தூ ரும்புனல் மொய்யரி சிற்கரை
      புத்தூ ரன்னடி போற்றியென் பாரெலாம்
      பொய்த்தூ ரும்புல னைந்தொடு புல்கிய
      மைத்தூ ரும்வினை மாற்றவும் வல்லரே. 5.61.1
      612 பிறைக்க ணிச்சடை யெம்பெரு மானென்று
      கறைக்க ணித்தவர் கண்ட வணக்கத்தாய்
      உறக்க ணித்துரு காமன தார்களை
      புறக்க ணித்திடும் புத்தூர புனிதரே. 5.61.2
      613 அரிசி லின்கரை மேலணி யார்தரு
      புரிசை நந்திரு புத்தூர புனிதனை
      பரிசொ டும்பர விப்பணி வார்க்கெலா
      துரிசில் நன்னெறி தோன்றிடுங் காண்மினே. 5.61.3
      614 வேத னைமிகு வீணையின் மேவிய
      கீத னைக்கிள ருந்நறுங் கொன்றையம்
      போத னைப்புனல் சூழ்ந்தபு தூரனை
      நாத னைந்நினை தென்மனம் நையுமே. 5.61.4
      615 அருப்பு போன்முலை யாரல்லல் வாழ்க்கைமேல்
      விருப்பு சேர்நிலை விட்டுநல் லிட்டமாய்
      திருப்பு தூரனை சிந்தை செயச்செ
      கருப்பு சாற்றிலும் அண்ணிக்குங் காண்மினே. 5.61.5
      616 பாம்பொ டுமதி யும்படர் புன்சடை
      பூம்பு னலும்பொ திந்தபு தூருளான்
      நாம்ப ணிந்தடி போற்றிட நாடொறுஞ்
      சாம்பல் என்பு தனக்கணி யாகுமே. 5.61.6
      617 கனலங் கைதனி லேந்திவெங் காட்டிடை
      அனலங் கெய்திநின் றாடுவர் பாடுவர்
      பினலஞ் செஞ்சடை மேற்பிறை யுந்தரு
      புனலுஞ் சூடுவர் போலும்பு தூரரே. 5.61.7
      618 காற்றி னுங்கடி தாகி நடப்பதோர்
      ஏற்றி னும்மிசை தேறுவர் என்பொடு
      நீற்றி னையணி வர்நினை வாய்த்தமை
      போற்றி யென்பவர கன்பர்பு தூரரே. 5.61.8
      619 முன்னு முப்புரஞ் செற்றன ராயினும்
      அன்ன மொப்பர் அலந்தடை தார்க்கெலாம்
      மின்னு மொப்பர் விரிசடை மேனிசெம்
      பொன்னு மொப்பர்பு தூரெம் புனிதரே. 5.61.9
      620 செருத்த னாற்றன தேர்செல வுய்த்திடுங்
      கருத்த னாய்க்கயி லையெடு தானுடல்
      பருத்த தோள்கெட பா தொருவிரல்
      பொருத்தி னார்பொழி லார்ந்தபு தூரரே. 5.61.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - படிக்காசுவைத்தநாதர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.62 திருக்கடுவாய்க்கரைப்புத்தூர் - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      621 ஒருத்த னைமூ வுலகொடு தேவர்க்கும்
      அருத்த னையடி யேன்மன துள்ளமர்
      கருத்த னைக்கடு வாய்ப்புன லாடிய
      திருத்த னைப்புத்தூர் சென்றுகண் டுய்ந்தேனே. 5.62.1
      622 யாவ ருமறி தற்கரி யான்றனை
      மூவ ரின்முத லாகிய மூர்த்தியை
      நாவின் நல்லுரை யாகிய நாதனை
      தேவனை புத்தூர் சென்றுகண் டுய்ந்தேனே. 5.62.2
      623 அன்ப னையடி யாரிடர் நீக்கியை
      செம்பொ னைத்திக ழுந்திரு கச்சியே
      கம்ப னைக்கடு வாய்க்கரை தென்புத்தூர்
      நம்ப னைக்கண்டு நானு பெற்றேனே. 5.62.3
      624 மாத னத்தைமா தேவனை மாறிலா
      கோத னத்திலை தாடியை வெண்குழை
      காத னைக்கடு வாய்க்கரை தென்புத்தூர்
      நாத னைக்கண்டு நானு பெற்றேனே. 5.62.4
      625 குண்டு பட்டகுற் றந்தவிர தென்னையா
      கொண்டு நற்றிறங் காட்டிய கூத்தனை
      கண்ட னைக்கடு வாய்க்கரை தென்புத்தூர்
      அண்ட னைக்கண் டருவினை யற்றேனே. 5.62.5
      626 பந்த பாச மறுத்தெனை யாட்கொண்ட
      மைந்த னைம்மண வாளனை மாமலர
      கந்த நீர்க்கடு வாய்க்கரை தென்புத்தூர்
      எந்தை யீசனை கண்டினி தாயிற்றே. 5.62.6
      627 உம்ப ரானை உருத்திர மூர்த்தியை
      அம்ப ரானை அமலனை ஆதியை
      கம்பு நீர்க்கடு வாய்க்கரை தென்புத்தூர்
      எம்பி ரானைக்கண் டின்பம தாயிற்றே. 5.62.7
      628 மாசார் பாச மயக்கறு வித்தெனுள்
      நேச மாகிய நித்த மணாளனை
      பூச நீர்க்கடு வாய்க்கரை தென்புத்தூர்
      ஈச னேயென இன்பம தாயிற்றே. 5.62.8
      629 இடுவா ரிட்ட கவளங் கவர்ந்திரு
      கடுவா யிட்டவர் கட்டுரை கொள்ளாதே
      கடுவா தென்கரை புத்தூ ரடிகட்கா
      படவே பெற்றுநான் பாக்கியஞ் செய்தேனே. 5.62.9
      630 அரக்க னாற்றல் அழித்தவன் பாடல்கே
      டிரக்க மாகி அருள்புரி யீசனை
      திரைக்கொள் நீர்க்கடு வாய்க்கரை தென்புத்தூர்
      இருக்கு நாதனை காணப்பெற் றுய்ந்தேனே. 5.62.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - சொர்ணபுரீசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.63 திருக்குரங்காடுதுறை - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      631 இரங்கா வன்மன தார்கள் இயங்குமு
      புரங்கா வல்லழி யப்பொடி யாக்கினான்
      தரங்கா டுந்தட நீர்ப்பொன்னி தென்கரை
      குரங்கா டுதுறை கோல கபாலியே. 5.63.1
      632 முத்தி னைமணி யைப்பவ ளத்தொளிர்
      தொத்தி னைச்சுடர் சோதியை சோலைசூழ்
      கொத்த லர்குரங் காடு துறையுறை
      அத்த னென்னஅண் ணித்தி டிருந்ததே. 5.63.2
      633 குளிர்பு னற்குரங் காடு துறையனை
      தளிர்நி றத்தையல் பங்கனை தண்மதி
      ஒளிய னைந்நினை தேனுக்கென் உள்ளமு
      தெளிவி னைத்தெளி யத்தெளி திட்டதே. 5.63.3
      634 மணவன் காண்மலை யாள்நெடு மங்கல
      கணவன் காண்கலை ஞானிகள் காதலெண்
      குணவன் காண்குரங் காடு துறைதனில்
      அணவன் காணன்பு செய்யு மடியர்க்கே. 5.63.4
      635 ஞால தார்தொழு தேத்திய நன்மையன்
      கால தானுயிர் போக்கிய காலினன்
      நீல தார்மிடற் றான்வெள்ளை நீறணி
      கோல தான்குரங் காடு துறையனே. 5.63.5
      636 ஆட்டி னான்முன் அமணரோ டென்றனை
      பாட்டி னான்றன பொன்னடி கின்னிசை
      வீட்டி னான்வினை மெய்யடி யாரொடுங்
      கூட்டி னான்குரங் காடு துறையனே. 5.63.6
      637 மாத்தன் றான்மறை யார்முறை யான்மறை
      ஓத்தன் றாருகன் றன்னுயி ருண்டபெண்
      போத்தன் றானவள் பொங்கு சினந்தணி
      கூத்தன் றான்குரங் காடு துறையனே. 5.63.7
      638 நாடி நந்தம ராயின தொண்டர்காள்
      ஆடு மின்னழு மின்தொழு மின்னடி
      பாடு மின்பர மன்பயி லும்மிடங்
      கூடு மின்குரங் காடு துறையையே. 5.63.8
      639 தென்றல் நன்னெடு தேருடை யானுடல்
      பொன்ற வெங்கனல் பொங்க விழித்தவன்
      அன்ற வந்தக னையயிற் சூலத்தாற்
      கொன்ற வன்குரங் காடு துறையனே. 5.63.9
      640 நற்ற வஞ்செய்த நால்வர்க்கு நல்லறம்
      உற்ற நன்மொழி யாலருள் செய்தநற்
      கொற்ற வன்குரங் காடு துறைதொழ
      பற்று தீவினை யாயின பாறுமே. 5.63.10
      641 கடுத்த தேரர கன்கயி லைம்மலை
      எடுத்த தோள்தலை யிற்றல றவ்விரல்
      அடுத்த லுமவன் இன்னிசை கேட்டருள்
      கொடுத்த வன்குரங் காடு துறையனே. 5.63.11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - ஆபத்சகாயர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.64 திருக்கோழம்பம் - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      642 வேழம் பத்தைவர் வேண்டிற்று வேண்டிப்போய்
      ஆழம் பற்றிவீழ் வார்பல வாதர்கள்
      கோழம் பத்துறை கூத்தன் குரைகழற்
      தாழும் பத்தர்கள் சால சதுரரே. 5.64.1
      643 கயிலை நன்மலை யாளுங் கபாலியை
      மயிலி யன்மலை மாதின் மணாளனை
      குயில்ப யில்பொழிற் கோழம்ப மேயவென்
      உயிரி னைநினை துள்ளம் உருகுமே. 5.64.2
      644 வாழும் பான்மைய ராகிய வான்செல்வ
      தாழும் பான்மைய ராகித்தம் வாயினால்
      தாழம் பூமணம் நாறிய தாழ்பொழிற்
      கோழம் பாவென கூடிய செல்வமே. 5.64.3
      645 பாட லாக்கிடும் பண்ணொடு பெண்ணிவள்
      கூட லாக்கிடுங் குன்றின் மணற்கொடு
      கோடல் பூத்தலர் கோழம்ப துண்மகிழ
      தாடுங் கூத்தனு கன்புப டாளன்றே. 5.64.4
      646 தளிர்கொள் மேனியள் தான்மிக அஞ்சவோர்
      பிளிறு வாரண தீருரி போர்த்தவன்
      குளிர்கொள் நீள்வயல் கோழம்பம் மேவினான்
      நளிர்கொள் நீர்சடை மேலு நயந்ததே. 5.64.5
      647 நாத ராவர் நமக்கும் பிறர்க்குந்தாம்
      வேத நாவர் விடைக்கொடி யார்வெற்பிற்
      கோதை மாதொடுங் கோழம்பங் கோயில்கொண்
      டாதி பாத மடையவல் லார்களே. 5.64.6
      648 முன்னை நான்செய்த பாவ முதலற
      பின்னை நான்பெரி தும்மருள் பெற்றதும்
      அன்ன மார்வயற் கோழம்ப துள்ளமர்
      பின்னல் வார்சடை யானை பிதற்றியே. 5.64.7
      649 ஏழை மாரிடம் நின்றிரு கைக்கொடுண்
      கோழை மாரொடுங் கூடிய குற்றமாங்
      கூழை பாய்வயற் கோழம்ப தானடி
      ஏழை யேன்முன் மறந்தங் கிருந்ததே. 5.64.8
      650 அரவ ணைப்பயில் மாலயன் வந்தடி
      பரவ னைப்பர மாம்பரஞ் சோதியை
      குரவ னைக்குர வார்பொழிற் கோழம்ப
      துரவ னையொரு வர்க்குணர் வொண்ணுமே. 5.64.9
      651 சமர சூரபன் மாவை தடிந்தவேற்
      குமரன் தாதைநற் கோழம்ப மேவிய
      அமரர் கோவினு கன்புடை தொண்டர்கள்
      அமர லோகம தாளுடை யார்களே. 5.64.10
      652 துட்ட னாகி மலையெடு தஃதின்கீழ
      பட்டு வீழ்ந்து படர்ந்து போயினான்
      கொட்டம் நாறிய கோழம்ப தீசனென்
      றிட்ட கீத மிசைத்த அரக்கனே. 5.64.11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - கோகுலேசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.65 திருப்பூவனூர் - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      653 பூவ னூர்ப்புனி தன்றிரு நாமந்தான்
      நாவின் நூறுநூ றாயிரம் நண்ணினார்
      பாவ மாயின பாறி பறையவே
      தேவர் கோவினுஞ் செல்வர்க ளாவரே. 5.65.1
      654 என்ன னென்மனை எந்தையெ னாருயிர்
      தன்னன் றன்னடி யேன்றனமாகிய
      பொன்னன் பூவனூர் மேவிய புண்ணியன்
      இன்ன னென்றறி வொண்ணான் இயற்கையே. 5.65.2
      655 குற்றங் கூடி குணம்பல கூடாதீர்
      மற்று தீவினை செய்தன மாய்க்கலாம்
      புற்ற ராவினன் பூவனூர் ஈசன்பேர்
      கற்று வாழ்த்துங் கழிவதன் முன்னமே. 5.65.3
      656 ஆவின் மேவிய ஐந்தமர தாடுவான்
      தூவெண் ணீறு துதைந்தசெம் மேனியான்
      மேவ நூல்விரி வெண்ணியின் தென்கரை
      பூவ னூர்புகு வார்வினை போகுமே. 5.65.4
      657 புல்ல மூர்தியூர் பூவனூர் பூம்புனல்
      நல்ல மூர்திநல் லூர்நனி பள்ளியூர்
      தில்லை யூர்திரு வாரூர் சீர்காழிநல்
      வல்ல மூரென வல்வினை மாயுமே. 5.65.5
      658 அனுச யப்பட்ட துவிது வென்னாதே
      கனிம னத்தொடு கண்களும் நீர்மல்கி
      புனித னைப்பூவ னூரனை போற்றுவார்
      மனித ரிற்றலை யான மனிதரே. 5.65.6
      659 ஆதி நாதன் அமரர்க ளர்ச்சிதன்
      வேத நாவன்வெற் பின்மட பாவையோர்
      பாதி யானான் பரந்த பெரும்படை
      பூத நாதன்தென் பூவனூர் நாதனே. 5.65.7
      660 பூவ னூர்தண் புறம்பயம் பூம்பொழில்
      நாவ லூர்நள் ளாறொடு நன்னிலங்
      கோவ லூர்குட வாயில் கொடுமுடி
      மூவ லூருமு கண்ணனூர் காண்மினே. 5.65.8
      661 ஏவ மேது மிலாவம ணேதலர்
      பாவ காரிகள் சொல்வலை பட்டுநான்
      தேவ தேவன் திருநெறி யாகிய
      பூவ னூர்புகு தப்பெற்ற நாளின்றே. 5.65.9
      662 நார ணன்னொடு நான்முகன் இந்திரன்
      வார ணன்கும ரன்வணங் குங்கழற்
      பூர ணன்திரு பூவனூர் மேவிய
      கார ணன்னெனை யாளுடை காளையே. 5.65.10
      663 மைக்க டுத்த நிறத்தர கன்வரை
      புக்கெ டுத்தலும் பூவனூ ரன்னடி
      மிக்க டுத்த விரல்சிறி தூன்றலும்
      பக்க டுத்தபின் பாடியு தானன்றே. 5.65.11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - புஷ்பவனநாதர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.66 திருவலஞ்சுழி - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      664 ஓத மார்கட லின்விட முண்டவன்
      பூத நாயகன் பொற்கயி லைக்கிறை
      மாதொர் பாகன் வலஞ்சுழி யீசனை
      பாத மேத்த பறையுநம் பாவமே. 5.66.1
      665 கயிலை நாதன் கறுத்தவர் முப்புரம்
      எயில்கள் தீயெழ வெல்வல வித்தகன்
      மயில்க ளாலும் வலஞ்சுழி யீசனை
      பயில்கி லார்சிலர் பாவி தொழும்பரே. 5.66.2
      666 இளைய காலமெம் மானை யடைகிலா
      துளையி லாச்செவி தொண்டர்காள் நும்முடல்
      வளையுங் காலம் வலஞ்சுழி யீசனை
      களைக ணா கருதிநீர் உய்ம்மினே. 5.66.3
      667 நறைகொள் பூம்புனல் கொண்டெழு மாணிக்கா
      குறைவி லாக்கொடுங் கூற்றுதை திட்டவன்
      மறைகொள் நாவன் வலஞ்சுழி மேவிய
      இறைவ னையினி என்றுகொல் காண்பதே. 5.66.4
      668 விண்ட வர்புர மூன்று மெரிகொள
      திண்டி றற்சிலை யாலெரி செய்தவன்
      வண்டு பண்முர லுந்தண் வலஞ்சுழி
      அண்ட னுக்கடி மைத்திற தாவனே. 5.66.5
      669 படங்கொள் பாம்பொடு பான்மதி யஞ்சடை
      அடங்க வாழவல் லானும்பர் தம்பிரான்
      மடந்தை பாகன் வலஞ்சுழி யானடி
      அடைந்த வர்க்கடி மைத்திற தாவனே. 5.66.6
      670 நாக்கொண் டுபர வும்மடி யார்வினை
      போக்க வல்ல புரிசடை புண்ணியன்
      மாக்கொள் சோலை வலஞ்சுழி ஈசன்றன்
      ஏக்கொ ளப்புர மூன்றெரி யானவே. 5.66.7
      671 தேடு வார்பிர மன்திரு மாலவர்
      ஆடு பாத மவரும் அறிகிலார்
      மாட வீதி வலஞ்சுழி யீசனை
      தேடு வானுறு கின்றதென் சிந்தையே. 5.66.8
      672 கண்ப னிக்குங் கைகூப்புங் கண்மூன்றுடை
      நண்ப னுக்கெனை நான்கொடு பேனெனும்
      வண்பொ னித்தென் வலஞ்சுழி மேவிய
      பண்ப னிப்பொனை செய்த பரிசிதே. 5.66.9
      673 இலங்கை வேந்தன் இருபது தோளிற
      நலங்கொள் பா தொருவிர லூன்றினான்
      மலங்கு பாய்வயல் சூழ்ந்த வலஞ்சுழி
      வலங்கொள் வாரடி யென்றலை மேலவே. 5.66.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - வலஞ்சுழிநாதர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.67 திருவாஞ்சியம் - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      674 படையும் பூதமும் பாம்பும்புல் வாயதள்
      உடையு தாங்கிய உத்தம னார்க்கிடம்
      புடைநி லாவிய பூம்பொழில் வாஞ்சியம்
      அடைய வல்லவர கல்லலொன் றில்லையே. 5.67.1
      675 பறப்பை யும்பசு வும்படு துப்பல
      திறத்த வும்முடை யோர்திக ழும்பதி
      கறைப்பி றைச்சடை கண்ணுதல் சேர்தரு
      சிறப்பு டைத்திரு வாஞ்சியஞ் சேர்மினே. 5.67.2
      676 புற்றி லாடர வோடு புனல்மதி
      தெற்று செஞ்சடை தேவர் பிரான்பதி
      சுற்று மாடங்கள் சூழ்திரு வாஞ்சியம்
      பற்றி பாடுவார குப்பாவ மில்லையே. 5.67.3
      677 அங்க மாறும் அருமறை நான்குடன்
      தங்கு வேள்வியர் தாம்பயி லுந்நகர்
      செங்கண் மாலிட மார்திரு வாஞ்சி
      தங்கு வார்நம் மமரர கமரரே. 5.67.4
      678 நீறு பூசி நிமிர்சடை மேற்பிறை
      ஆறு சூடும் அடிகள் உறைபதி
      மாறு தானொருங் கும்வயல் வாஞ்சி
      தேறி வாழ்பவர குச்செல்வ மாகுமே. 5.67.5
      679 அற்று பற்றின்றி யாரையு மில்லவர
      குற்ற நற்றுணை யாவான் உறைபதி
      தெற்று மாடங்கள் சூழ்திரு வாஞ்சியங்
      கற்று சேர்பவர குக்கரு தாவதே. 5.67.6
      680 அருக்கன் அங்கி நமனொடு தேவர்கள்
      திருத்துஞ் சேவடி யான்றிக ழுந்நகர்
      ஒருத்தி பாக முகந்தவன் வாஞ்சியம்
      அருத்தி யாலடை வார்க்கில்லை யல்லலே. 5.67.7
      இப்பதிகத்தில் 8910-ம் செய்யுட்கள் சிதைந்து போயின. 5.67.8-10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - சுகவாஞ்சிநாதர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.68 திருநள்ளாறு - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      681 உள்ளா றாததோர் புண்டரி கத்திரள்
      தெள்ளா றாச்சிவ சோதி திரளினை
      கள்ளா றாதபொற் கொன்றை கமழ்சடை
      நள்ளா றாவென நம்வினை நாசமே. 5.68.1
      682 ஆர ணப்பொரு ளாமரு ளாளனார்
      வார ணத்துரி போர்த்த மணாளனார்
      நார ணன்நண்ணி யேத்துநள் ளாறனார்
      கார ணக்கலை ஞான கடவுளே. 5.68.2
      683 மேகம் பூண்டதோர் மேருவிற் கொண்டெயில்
      சோகம் பூண்டழல் சோரத்தொ டானவன்
      பாகம் பூண்டமால் பங்க தானொடு
      நாகம் பூண்டுகூ தாடுநள் ளாறனே. 5.68.3
      684 மலியுஞ் செஞ்சடை வாளர வம்மொடு
      பொலியும் பூம்புனல் வைத்த புனிதனார்
      நலியுங் கூற்றை நலிந்தநள் ளாறர்தம்
      வலியுங் கண்டிறு மாந்து மகிழ்வனே. 5.68.4
      685 உறவ னாய்நிறை துள்ளங் குளிர்ப்பவன்
      இறைவ னாகிநின் றெண்ணிறை தானவன்
      நறவ நாறும் பொழிற்றிரு நள்ளாறன்
      மறவ னாய்ப்பன்றி பின்சென்ற மாயமே. 5.68.5
      686 செக்க ரங்கழி செஞ்சுடர சோதியார்
      நக்க ரங்கர வார்த்தநள் ளாறனார்
      வக்க ரன்னுயிர் வவ்விய மாயற்கு
      சக்க ரமருள் செய்த சதுரரே. 5.68.6
      687 வஞ்ச நஞ்சிற் பொலிகின்ற கண்டத்தர்
      விஞ்சை யிற்செல்வ பாவைக்கு வேந்தனார்
      வஞ்ச நெஞ்ச தவர்க்கு வழிகொடார்
      நஞ்ச நெஞ்சர கருளுநள் ளாறரே. 5.68.7
      688 அல்ல னென்று மலர்க்கரு ளாயின
      சொல்ல னென்றுசொல் லாமறை சோதியான்
      வல்ல னென்றும்வல் லார்வள மிக்கவர்
      நல்ல னென்றுநல் லார்க்குநள் ளாறனே. 5.68.8
      689 பாம்ப ணைப்பள்ளி கொண்ட பரமனும்
      பூம்ப ணைப்பொலி கின்ற புராணனு
      தாம்ப ணிந்தள பொண்ணா தனித்தழல்
      நாம்ப ணிந்தடி போற்றுநள் ளாறனே. 5.68.9
      690 இலங்கை மன்னன் இருபது தோளிற
      மலங்க மால்வரை மேல்விரல் வைத்தவர்
      நலங்கொள் நீற்றர்நள் ளாறரை நாடொறும்
      வலங்கொள் வார்வினை யாயின மாயுமே. 5.68.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - திருநள்ளாற்றீசர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.69 திருக்கருவிலி - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      691 மட்டி டகுழ லார்சுழ லில்வலை
      பட்டி டுமயங் கிப்பரி யாதுநீர்
      கட்டி டவினை போ கருவிலி
      கொட்டி டையுறை வான்கழல் கூடுமே. 5.69.1
      692 ஞால மல்கு மனிதர்காள் நாடொறும்
      ஏல மாமல ரோடிலை கொண்டுநீர்
      கால னார்வரு தன்முன் கருவிலி
      கோல வார்பொழிற் கொட்டிட்டை சேர்மினே. 5.69.2
      693 பங்க மாயின பேச பறைந்துநீர்
      மங்கு மாநினை யாதே மலர்கொடு
      கங்கை சேர்சடை யான்றன் கருவிலி
      கொங்கு வார்பொழிற் கொட்டிட்டை சேர்மினே. 5.69.3
      694 வாடி நீர்வரு தாதே மனிதர்காள்
      வேட னாய்விச யற்கருள் செய்தவெண்
      காட னாருறை கின்ற கருவிலி
      கோடு நீள்பொழிற் கொட்டிட்டை சேர்மினே. 5.69.4
      695 உய்யு மாறிது கேண்மின் உலகத்தீர்
      பைகொள் பாம்பரை யான்படை யார்மழு
      கையி னானுறை கின்ற கருவிலி
      கொய்கொள் பூம்பொழிற் கொட்டிட்டை சேர்மினே. 5.69.5
      696 ஆற்ற வும்மவ லத்தழு தாதுநீர்
      தோற்று தீயொடு நீர்நில தூவெளி
      காற்று மாகிநின் றான்றன் கருவிலி
      கூற்றங் காய்ந்தவன் கொட்டிட்டை சேர்மினே. 5.69.6
      697 நில்லா வாழ்வு நிலைபெறு மென்றெண்ணி
      பொல்லா வாறு செயப்புரி யாதுநீர்
      கல்லா ரும்மதில் சூழ்தண் கருவிலி
      கொல்லே றூர்பவன் கொட்டிட்டை சேர்மினே. 5.69.7
      698 பிணித்த நோய்ப்பிற விப்பிறி வெய்துமா
      றுணர்த்த லாமிது கேண்மின் உருத்திர
      கணத்தி னார்தொழு தேத்துங் கருவிலி
      குணத்தி னானுறை கொட்டிட்டை சேர்மினே. 5.69.8
      699 நம்பு வீரிது கேண்மின்கள் நாடொறும்
      எம்பி ரானென் றிமையவ ரேத்துமே
      கம்ப னாருறை கின்ற கருவிலி
      கொம்ப னார்பயில் கொட்டிட்டை சேர்மினே. 5.69.9
      700 பாரு ளீரிது கேண்மின் பருவரை
      பேரு மாறெடு தானை யடர்த்தவன்
      கார்கொள் நீர்வயல் சூழ்தண் கருவிலி
      கூர்கொள் வேலினன் கொட்டிட்டை சேர்மினே. 5.69.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - சற்குணநாதர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.70 திருக்கொண்டீச்சரம் - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      701 கண்ட பேச்சினிற் காளையர் தங்கள்பால்
      மண்டி யேச்சுணு மாதரை சேராதே
      சண்டி யீச்சுர வர்க்கருள் செய்தவ
      கொண்டி யீச்சுர வன்கழல் கூறுமே. 5.70.1
      702 சுற்ற முந்துணை நன்மட வாளொடு
      பெற்ற மக்களும் பேண லொழிந்தனர்
      குற்ற மில்புகழ கொண்டீ சுரவனார்
      பற்ற லாலொரு பற்றுமற் றில்லையே. 5.70.2
      703 மாடு தானது வில்லெனின் மானிடர்
      பாடு தான்செல்வா ரில்லைபன் மாலையாற்
      கூட நீர்சென்று கொண்டீ சுரவனை
      பாடு மின்பர லோக திருத்துமே. 5.70.3
      704 தந்தை தாயொடு தார மெனுந்தளை
      பந்த மாங்கறு துப்பயில் வெய்திய
      கொந்த விழ்பொழிற் கொண்டீ சுரவனை
      சிந்தை செய்ம்மின் அவனடி சேரவே. 5.70.4
      705 கேளு மின்னிள மையது கேடுவ
      தீளை யோடிரு மல்லது வெய்தன்முன்
      கோள ராவணி கொண்டீ சுரவனை
      நாளு மேத்தி தொழுமின்நன் காகுமே. 5.70.5
      706 வெம்பு நோயும் இடரும் வெறுமையும்
      துன்ப முந்துய ரும்மெனுஞ் சூழ்வினை
      கொம்ப னார்பயில் கொண்டீ சுரவனை
      எம்பி ரானென வல்லவர கில்லையே. 5.70.6
      707 அல்ல லோடரு நோயில் அழுந்திநீர்
      செல்லு மாநினை யாதே கனைகுரற்
      கொல்லை யேறுடை கொண்டீ சுரவனை
      வல்ல வாறு தொழவினை மாயுமே. 5.70.7
      708 நாறு சாந்தணி நன்முலை மென்மொழி
      மாறி லாமலை மங்கையோர் பாகமா
      கூற னாருறை கொண்டீ சுரநினை
      தூறு வார்த கூனமொன் றில்லையே. 5.70.8
      709 அயிலார் அம்பெரி மேருவில் லாகவே
      எயிலா ரும்பொடி யாய்விழ எய்தவன்
      குயிலா ரும்பொழிற் கொண்டீ சுரவனை
      பயில்வா ரும்பெரு மைபெறும் பாலரே. 5.70.9
      710 நிலையி னார்வரை நின்றெடு தான்றனை
      மலையி னாலடர துவிறல் வாட்டினான்
      குலையி னார்பொழிற் கொண்டீ சுரவனை
      தலையி னால்வணங் கத்தவ மாகுமே. 5.70.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - பசுபதீச்சுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.71 திருவிசயமங்கை - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      711 குசையும் அங்கையிற் கோசமுங் கொண்டவவ்
      வசையின் மங்கல வாசகர் வாழ்த்தவே
      இசைய மங்கையு தானுமொன் றாயினான்
      விசைய மங்கையுள் வேதியன் காண்மினே. 5.71.1
      712 ஆதி நாதன் அடல்விடை மேலமர்
      பூத நாதன் புலியத ளாடையன்
      வேத நாதன் விசயமங் கையுளான்
      பாத மோதவல் லார்க்கில்லை பாவமே. 5.71.2
      713 கொள்ளி டக்கரை கோவந்த புத்தூரில்
      வெள்வி டைக்கருள் செய்விச யமங்கை
      உள்ளி டத்துறை கின்ற உருத்திரன்
      கிள்ளி டத்தலை யற்ற தயனுக்கே. 5.71.3
      714 திசையு மெங்குங் குலுங்க திரிபுரம்
      அசைய வங்கெய்தி டாரழ லூட்டினான்
      விசைய மங்கை விருத்தன் புறத்தடி
      விசையின் மங்கி விழுந்தனன் காலனே. 5.71.4
      715 பொள்ள லாக்கை அகத்திலைம் பூதங்கள்
      கள்ள மாக்கி கலக்கிய காரிருள்
      விள்ள லாக்கி விசயமங் கைப்பிரான்
      உள்ள நோக்கியெ னுள்ளுள் உறையுமே. 5.71.5
      716 கொல்லை யேற்று கொடியொடு பொன்மலை
      வில்லை யேற்றுடை யான்விச யமங்கை
      செல்வ போற்றியென் பாருக்கு தென்றிசை
      எல்லை யேற்றலும் இன்சொலு மாகுமே. 5.71.6
      717 கண்பல் உ கபாலம்அங் கைக்கொண்டு
      உண்ப லிக்குழல் உத்தம னுள்ளொளி
      வெண்பி றைக்கண்ணி யான்விச யமங்கை
      நண்ப னைத்தொழ பெற்றது நன்மையே. 5.71.7
      718 பாண்டு வின்மகன் பார்த்தன் பணிசெய்து
      வேண்டு நல்வரங் கொள்விச யமங்கை
      ஆண்ட வன்னடி யேநினை தாசையாற்
      காண்ட லேகரு தாகி யிருப்பனே. 5.71.8
      719 வந்து கேண்மின் மயல்தீர் மனிதர்காள்
      வெந்த நீற்றன் விசயமங் கைப்பிரான்
      சிந்தை யால்நினை வார்களை சிக்கென
      பந்து வாக்கி உயக்கொளுங் காண்மினே. 5.71.9
      720 இலங்கை வேந்தன் இருபது தோளிற
      விலங்கள் சேர்விர லான்விச யமங்கை
      வலஞ்செய் வார்களும் வாழ்த்திசை பார்களும்
      நலஞ்செய் வாரவர் நன்னெறி நாடியே. 5.72.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - விசையநாதேசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.72 திருநீலக்குடி - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      721 வைத்த மாடும் மனைவியும் மக்கள்நீர்
      செத்த போது செறியார் பிரிவதே
      நித்த நீல குடியர னைந்நினை
      சித்த மாகிற் சிவகதி சேர்திரே. 5.72.1
      722 செய்ய மேனியன் றேனொடு பால்தயிர்
      நெய்ய தாடிய நீல குடியரன்
      மைய லாய்மற வாமன தார்க்கெலாங்
      கையி லாமல கக்கனி யொக்குமே. 5.72.2
      723 ஆற்ற நீள்சடை ஆயிழை யாளொரு
      கூற்றன் மேனியிற் கோலம தாகிய
      நீற்றன் நீல குடியுடை யானடி
      போற்றி னாரிடர் போக்கும் புனிதனே. 5.72.3
      724 நாலு வேதியர கின்னருள் நன்னிழல்
      ஆலன் ஆலநஞ் சுண்டகண் டத்தமர்
      நீலன் நீல குடியுறை நின்மலன்
      கால னாருயிர் போக்கிய காலனே. 5.72.4
      725 நேச நீல குடியர னேயெனா
      நீச ராய்நெடு மால்செய்த மாயத்தால்
      ஈச னோர்சர மெய்ய எரிந்துபோய்
      நாச மானார் திரிபுர நாதரே. 5.72.5
      726 கொன்றை சூடியை குன்ற மகளொடு
      நின்ற நீல குடியர னேயெனீர்
      என்றும் வாழ்வுக தேயிறு மாக்குநீர்
      பொன்றும் போது நுமக்கறி வொண்ணுமே. 5.72.6
      727 கல்லி னோடெனை பூட்டி அமண்கையர்
      ஒல்லை நீர்புக நூக்கவென் வாக்கினால்
      நெல்லு நீள்வயல் நீல குடியரன்
      நல்ல நாமம் நவிற்றியு தேனன்றே. 5.72.7
      728 அழகி யோமிளை யோமெனு மாசையால்
      ஒழுகி ஆவி உடல்விடு முன்னமே
      நிழல தார்பொழில் நீல குடியரன்
      கழல்கொள் சேவடி கைதொழு துய்ம்மினே. 5.72.8
      729 கற்றை செஞ்சடை காய்கதிர் வெண்டிங்கள்
      பற்றி பாம்புடன் வைத்த பராபரன்
      நெற்றி கண்ணுடை நீல குடியரன்
      சுற்றி தேவர் தொழுங்கழற் சோதியே. 5.72.9
      730 தருக்கி வெற்பது தாங்கிய வீங்குதோள்
      அரக்க னாருட லாங்கோர் விரலினால்
      நெரித்து நீல குடியரன் பின்னையும்
      இரக்க மாயருள் செய்தனன் என்பரே. 5.72.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - நீலகண்டேசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.73 திருமங்கலக்குடி - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      731 தங்க லப்பிய தக்கன் பெருவேள்வி
      அங்க லக்கழி தாரருள் செய்தவன்
      கொங்க லர்க்குழற் கொம்பனை யாளொடு
      மங்க லக்குடி மேய மணாளனே. 5.73.1
      732 காவி ரியின்வ டகரை காண்டகு
      மாவி ரியும்பொ ழில்மங் கலக்குடி
      தேவ ரியும்பி ரமனு தேடொணா
      தூவெ ரிச்சுடர சோதியு சோதியே. 5.73.2
      733 மங்க லக்குடி ஈசனை மாகாளி
      வெங்க திர்ச்செல்வன் விண்ணொடு மண்ணுநேர்
      சங்கு சக்கர தாரி சதுர்முகன்
      அங்க கத்திய னும்மர்ச்சி தாரன்றே. 5.73.3
      734 மஞ்சன் வார்கடல் சூழ்மங்க லக்குடி
      நஞ்ச மாரமு தாக நயந்துகொண்
      டஞ்சு மாட லமர்ந்தடி யேனுடை
      நெஞ்ச மாலய மாக்கொண்டு நின்றதே. 5.73.4
      735 செல்வ மல்கு திருமங் கலக்குடி
      செல்வ மல்கு சிவநிய மத்தரா
      செல்வ மல்கு செழுமறை யோர்தொழ
      செல்வன் றேவியொ டுந்திகழ் கோயிலே. 5.73.5
      736 மன்னு சீர்மங் கலக்குடி மன்னிய
      பின்னு வார்சடை பிஞ்ஞகன் றன்பெயர்
      உன்னு வாரு முரைக்கவல் லார்களு
      துன்னு வார்நன் னெறிதொடர் வெய்தவே. 5.73.6
      737 மாத ரார்மரு வும்மங்க லக்குடி
      ஆதி நாயகன் அண்டர்கள்
      வேத நாயகன் வேதியர்
      பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே. 5.73.7
      738 வண்டு சேர்பொழில் சூழ்மங்க லக்குடி
      விண்ட தாதையை தாளற வீசிய
      சண்ட நாயக னுக்கருள் செய்தவன்
      துண்ட மாமதி சூடிய சோதியே. 5.73.8
      739 கூசு வாரலர் குண்டர் குணமிலர்
      நேச மேது மிலாதவர் நீசர்கள்
      மாசர் பால்மங்க லக்குடி மேவிய
      ஈசன் வேறு படுக்கவு தேனன்றே. 5.73.9
      740 மங்க லக்குடி யான்கயி லைமலை
      அங்க லைத்தெடு குற்ற அரக்கர்கோன்
      தன்க ரத்தொடு தாள்தலை தோள்தகர
      தங்க லைத்தழு துய்ந்தனன் தானன்றே. 5.73.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - பிராணேசவரதர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.74 திருஎறும்பியூர் - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      741 விரும்பி யூறு விடேல்மட நெஞ்சமே
      கரும்பி னூறல்கண் டாய்கல தார்க்கவன்
      இரும்பி னூறல றாததோர் வெண்டலை
      எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே. 5.74.1
      742 பிறங்கு செஞ்சடை பிஞ்ஞகன் பேணுசீர
      கறங்கு பூத கணமுடை கண்ணுதல்
      நறுங்கு ழல்மட வாளொடு நாடொறும்
      எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே. 5.74.2
      743 மருந்து வானவர் தானவர கின்சுவை
      புரிந்த புன்சடை புண்ணியன் கண்ணுதல்
      பொருந்து பூண்முலை மங்கைநல் லாளொடும்
      எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே. 5.74.3
      744 நிறங்கொள் கண்டத்து நின்மலன் எம்மிறை
      மறங்கொள் வேற்கண்ணி வாணுதல் பாகமா
      அறம்பு ரிந்தருள் செய்தவெம் அங்கணன்
      எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே. 5.74.4
      745 நறும்பொன் நாண்மலர கொன்றையு நாகமு
      துறும்பு செஞ்சடை தூமதி வைத்துவான்
      உறும்பொன் மால்வரை பேதையோ டூர்தொறும்
      எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே. 5.74.5
      746 கறும்பி யூர்வன ஐந்துள காயத்தில்
      திறம்பி யூர்வன மற்றும் பலவுள
      குறும்பி யூர்வதோர் கூட்டக திட்டெனை
      எறும்பி யூரரன் செய்த இயற்கையே. 5.74.6
      747 மறந்து மற்றிது பேரிடர் நாடொறு
      திறம்பி நீநினை யேல்மட நெஞ்சமே
      புறஞ்செய் கோல குரம்பையி லிட்டெனை
      எறும்பி யூரரன் செய்த இயற்கையே. 5.74.7
      748 இன்ப மும்பிற பும்மிற பின்னொடு
      துன்ப மும்முட னேவைத்த சோதியான்
      அன்ப னேயர னேயென் றரற்றுவார
      கின்ப னாகும் எறும்பியூ ரீசனே. 5.74.8
      749 கண்ணி றைந்த கனபவ ளத்திரள்
      விண்ணி றைந்த விரிசுடர சோதியான்
      உண்ணி றைந்துரு வாயுயி ராயவன்
      எண்ணி றைந்த எறும்பியூ ரீசனே. 5.74.9
      750 நிறங்கொள் மால்வரை ஊன்றி யெடுத்தலும்
      நறுங்கு ழல்மட வாள்நடு கெய்திட
      மறங்கொள் வாளர கன்வலி வாட்டினான்
      எறும்பி யூர்மலை எம்மிறை காண்மினே. 5.74.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - எறும்பீசுவரர்
      தேவியார் - நறுங்குழல்நாயகியம்மை.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.75 திருக்குரக்குக்கா - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      751 மரக்கொ காமென வாய்வி டலறிநீர்
      சரக்கு காவி திரிந்தய ராதுகால்
      பரக்குங் காவிரி நீரலை குங்கரை
      குரக்கு காவடை யக்கெடுங் குற்றமே. 5.75.1
      752 கட்டா றேகழி காவிரி பாய்வயல்
      கொட்டா றேபுன லூறு குரக்குக்கா
      முட்டா றாவடி யேத்த முயல்பவர
      கிட்டா றாவிட ரோட எடுக்குமே. 5.75.2
      753 கைய னைத்துங் கலந்தெழு காவிரி
      செய்ய னைத்திலுஞ் சென்றிடுஞ் செம்புனல்
      கொய்ய னைத்துங் கொணருங் குரக்குக்கா
      ஐய னைத்தொழு வார்க்கல்ல லில்லையே. 5.75.3
      754 மிக்க னைத்து திசையும் அருவிகள்
      புக்கு காவிரி போந்த புனற்கரை
      கொக்கி னம்பயில் சோலை குரக்குக்கா
      நக்க னைநவில் வார்வினை நாசமே. 5.75.4
      755 விட்டு வெள்ளம் விரிந்தெழு காவிரி
      இட்ட நீர்வய லெங்கும் பரந்திட
      கொட்ட மாமுழ வோங்கு குரக்குக்கா
      இட்ட மாயிரு பார்க்கிட ரில்லையே. 5.75.5
      756 மேலை வானவ ரோடு விரிகடல்
      மாலும் நான்முக னாலுமள பொணா
      கோல மாளிகை கோயில் குரக்குக்கா
      பால ராய்த்திரி வார்க்கில்லை பாவமே. 5.75.6
      757 ஆல நீழ லமர்ந்த அழகனார்
      கால னையுதை கொண்ட கருத்தனார்
      கோல மஞ்ஞைகள் ஆலும் குரக்குக்கா
      பால ருக்கருள் செய்வர் பரிவொடே. 5.75.7
      758 செக்க ரங்கெழு செஞ்சுடர சோதியார்
      அக்க ரையரெம் மாதிபு ராணனார்
      கொக்கி னம்வயல் சேருங் குரக்குக்கா
      நக்க னைத்தொழ நம்வினை நாசமே. 5.75.8
      759 உருகி ஊன்குழை தேத்தி யெழுமின்நீர்
      கரிய கண்டன் கழலடி தன்னையே
      குரவ னஞ்செழுங் கோயில் குரக்குக்கா
      இரவும் எல்லியும் ஏத்தி தொழுமினே. 5.75.9
      760 இரக்க மின்றி மலையெடு தான்முடி
      உரத்தை யொல்க அடர்த்தா னுறைவிடங்
      குரக்கி னங்குதி கொள்ளுங் குரக்குக்கா
      வரத்த னைப்பெற வானுல காள்வரே. 5.75.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - கொந்தளக்கருணைநாதர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.76 திருக்கானூர் - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      761 திருவின் நாதனுஞ் செம்மலர் மேலுறை
      உருவ னாயுல கத்தி னுயிர்க்கெலாங்
      கருவ னாகி முளைத்தவன் கானூரிற்
      பரம னாய பரஞ்சுடர் காண்மினே. 5.76.1
      762 பெண்டிர் மக்கள் பெருந்துணை நன்னிதி
      உண்டின் றேயென் றுகவன்மின் ஏழைகாள்
      கண்டு கொண்மின்நீர் கானூர் முளையினை
      புண்ட ரீக பொதும்பி லொதுங்கியே. 5.76.2
      763 தா தார்தமர் நன்னிதி யென்னுமிம்
      மா தேகிட திட்டு மயங்கிடேல்
      கா தேயுளன் கானூர் முளையினை
      வா தால்வணங் கீர்வினை மாயவே. 5.76.3
      764 குறியில் நின்றுண்டு கூறையி லாச்சமண்
      நெறியை விட்டு நிறைகழல் பற்றினேன்
      அறிய லுற்றிரேல் கானூர் முளையவன்
      செறிவு செய்தி டிருப்பதென் சிந்தையே. 5.76.4
      765 பொத்தல் மண்சுவர பொல்லா குரம்பையை
      மெய்த்த னென்று வியந்திடேல் ஏழைகாள்
      சித்தர் பத்தர்கள் சேர்திரு கானூரில்
      அத்தன் பாத மடைதல் கருமமே. 5.76.5
      766 கல்வி ஞான கலைப்பொரு ளாயவன்
      செல்வ மல்கு திருக்கானூ ரீசனை
      எல்லி யும்பக லும்மிசை வானவர்
      சொல்லி டீர்நு துயரங்கள் தீரவே. 5.76.6
      767 நீரும் பாரும் நெருப்பும் அருக்கனுங்
      காரு மாருதங் கானூர் முளைத்தவன்
      சேர்வு மொன்றறி யாது திசைதிசை
      ஓர்வு மொன்றில ரோடி திரிவரே. 5.76.7
      768 ஓ தோடயன் மாலறி யாவணம்
      வீ பேரொளி யாய விழுப்பொருள்
      காமற் காய்ந்தவன் கானூர் முளைத்தவன்
      சே தாலிரு பாவதென் சிந்தையே. 5.76.8
      இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 5.76.9
      769 வன்னி கொன்றை எருக்கணி தான்மலை
      உன்னி யேசென் றெடுத்தவன் ஒண்டிறல்
      தன்னை வீழ தனிவிரல் வைத்தவன்
      கன்னி மாமதிற் கானூர கருத்தனே. 5.76.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - செம்மேனிநாயகர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.77 திருச்சேறை - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      770 பூரி யாவரும் புண்ணியம் பொய்கெடுங்
      கூரி தாய அறிவுகை கூடிடுஞ்
      சீரி யார்பயில் சேறையு செந்நெறி
      நாரி பாகன்றன் நாமம் நவிலவே. 5.77.1
      771 என்ன மாதவஞ் செய்தனை நெஞ்சமே
      மின்னு வார்சடை வேதவி ழுப்பொருள்
      செந்நெ லார்வயல் சேறையு செந்நெறி
      மன்னு சோதிநம் பால்வந்து வைகவே. 5.77.2
      772 பிறப்பு மூப்பு பெரும்பசி வான்பிணி
      இறப்பு நீங்கியிங் கின்பம்வ தெய்திடுஞ்
      சிறப்பர் சேறையு செந்நெறி யான்கழல்
      மறப்ப தின்றி மனத்தினுள் வைக்கவே. 5.77.3
      773 மாடு தேடி மயக்கினில் வீழ்ந்துநீர்
      ஓடி யெய்த்தும் பயனிலை ஊமர்காள்
      சேடர் வாழ்சேறை செந்நெறி மேவிய
      ஆட லான்றன் அடியடை துய்ம்மினே. 5.77.4
      774 எண்ணி நாளும் எரியயிற் கூற்றுவன்
      துண்ணென் றோன்றிற் றுரக்கும் வழிகண்டேன்
      திண்ணன் சேறை திருச்செ நெறியுறை
      அண்ண லாருளர் அஞ்சுவ தென்னுக்கே. 5.77.5
      775 தப்பில் வான தரணிகம் பிக்கிலென்
      ஒப்பில் வேந்தர் ஒருங்குடன் சீறிலென்
      செப்ப மாஞ்சேறை செந்நெறி மேவிய
      அப்ப னாருளர் அஞ்சுவ தென்னுக்கே. 5.77.6
      776 வைத்த மாடும் மடந்தைநல் லார்களும்
      ஒத்தொவ் வாதவுற் றார்களு மென்செய்வார்
      சித்தர் சேறை திருச்செ நெறியுறை
      அத்தர் தாமுளர் அஞ்சுவ தென்னுக்கே. 5.77.7
      777 குலங்க ளென்செய்வ குற்றங்க
      துலங்கி நீநின்று சோர்ந்திடல் நெஞ்சமே
      இலங்கு சேறையிற் செந்நெறி மேவிய
      அலங்க னாருளர் அஞ்சுவ தென்னுக்கே. 5.77.8
      778 பழகி னால்வரும் பண்டுள சுற்றமும்
      விழவி டாவிடில் வேண்டிய எய்தொணா
      திகழ்கொள் சேறையிற் செந்நெறி மேவிய
      அழக னாருளர் அஞ்சுவ தென்னுக்கே. 5.77.9
      779 பொருந்து நீண்மலை யைப்பிடி தேந்தினான்
      வருந்த வூன்றி மலரடி வாங்கினான்
      திருந்து சேறையிற் செந்நெறி மேவியங்
      கிருந்த சோதியென் பார்க்கிட ரில்லையே. 5.77.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - செந்நெறியப்பர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.78 திருக்கோடிகா - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      780 சங்கு லாமுன்கை தையலோர் பாகத்தன்
      வெங்கு லாமத வேழம் வெகுண்டவன்
      கொங்கு லாம்பொழிற் கோடிகா வாவென
      எங்கி லாததோர் இன்பம்வ தெய்துமே. 5.78.1
      781 வாடி வாழ்வதென் னாவது மாதர்பால்
      ஓடி வாழ்வினை உள்கிநீர் நாடொறுங்
      கோடி காவனை கூறீரேற் கூறினேன்
      பாடி காவலிற் பட்டு கழிதிரே. 5.78.2
      782 முல்லை நன்முறு வல்லுமை பங்கனார்
      தில்லை யம்பல தில்லுறை செல்வனார்
      கொல்லை யேற்றினர் கோடிகா வாவென்றங்
      கொல்லை யேத்துவார கூனமொன் றில்லையே. 5.78.3
      783 நாவ ளம்பெறு மாறும னன்னுதல்
      ஆம ளஞ்சொலி அன்புசெ யின்னலாற்
      கோம ளஞ்சடை கோடிகா வாவென
      ஏவ ளின்றெனை ஏசுமவ் வேழையே. 5.78.4
      784 வீறு தான்பெறு வார்சில ராகிலும்
      நாறு பூங்கொன்றை தான்மிக நல்கானேற்
      கூறு வேன்கோடி காவுளாய் என்றுமால்
      ஏறு வேனும்மால் ஏச படுவனோ. 5.78.5
      785 நாடி நாரணன் நான்முகன் வானவர்
      தேடி யேசற வுந்தெரி யாததோர்
      கோடி காவனை கூறாத நாளெலாம்
      பாடி காவலிற் பட்டு கழியுமே. 5.78.6
      இப்பதிகத்தில் 789-ம் செய்யுட்கள் சிதைந்து போயின. 5.78.7-9
      - 786 வரங்க ளால்வரை யையெடு தான்றனை
      அரங்க வூன்றி யருள்செய்த அப்பனூர்
      குரங்கு சேர்பொழிற் கோடிகா வாவென
      இரங்கு வேன்மன தேதங்கள் தீரவே. 5.78.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - கோடீசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.79 திருப்புள்ளிருக்குவேளூர் - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      787 வெள்ளெ ருக்கர வம்விர வுஞ்சடை
      புள்ளி ருக்குவே ளூரரன் பொற்கழல்
      உள்ளி ருக்கு முணர்ச்சியில் லாதவர்
      நள்ளி ருப்பர் நர குழியிலே. 5.79.1
      788 மாற்ற மொன்றறி யீர்மனை வாழ்க்கைபோ
      கூற்றம் வந்துமை கொள்வதன் முன்னமே
      போற்ற வல்லிரேற் புள்ளிரு குவேளூர்
      சீற்ற மாயின தேய்ந்தறுங் காண்மினே. 5.79.2
      789 அரும றையனை ஆணொடு பெண்ணனை
      கருவி டம்மிக வுண்டவெங் கண்டனை
      புரிவெண் ணூலனை புள்ளிரு குவேளூர்
      உருகி நைபவர் உள்ளங் குளிருமே. 5.79.3
      790 தன்னு ருவை யொருவர கறிவொணா
      மின்னு ருவனை மேனிவெண் ணீற்றனை
      பொன்னு ருவனை புள்ளிரு குவேளூர்
      என்ன வல்லவர கில்லை யிடர்களே. 5.79.4
      791 செங்கண் மால்பிர மற்கு மறிவொணா
      அங்கி யின்னுரு வாகி அழல்வதோர்
      பொங்க ரவனை புள்ளிரு குவேளூர்
      மங்கை பாகனை வாழ்த்த வருமின்பே. 5.79.5
      792 குற்ற மில்லியை கோல சிலையினாற்
      செற்ற வர்புரஞ் செந்தழ லாக்கியை
      புற்ற ரவனை புள்ளிரு குவேளூர்
      பற்ற வல்லவர் பாவம் பறையுமே. 5.79.6
      793 கையி னோடுகால் கட்டி யுமரெலாம்
      ஐயன் வீடினன் என்பதன் முன்னம்நீர்
      பொய்யி லாவரன் புள்ளிரு குவேளூர்
      மையு லாவிய கண்டனை வாழ்த்துமே. 5.79.7
      794 உள்ளம் உள்கி உகந்து சிவனென்று
      மெள்ள வுள்க வினைகெடும் மெய்ம்மையே
      புள்ளி னார்பணி புள்ளிரு குவேளூர்
      வள்ளல் பாதம் வணங்கி தொழுமினே. 5.79.8
      இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 5.79.9
      795 அரக்க னார்தலை பத்தும் அழிதர
      நெருக்கி மாமலர பாதம் நிறுவிய
      பொருப்ப னாருறை புள்ளிரு குவேளூர்
      விருப்பி னாற்றொழு வார்வினை வீடுமே. 5.79.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - வைத்தியநாதர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.80 திருஅன்பில்ஆலந்துறை - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      796 வானஞ் சேர்மதி சூடிய மைந்தனை
      நீநெஞ் சேகெடு வாய்நினை கிற்கிலை
      ஆனஞ் சாடியை அன்பிலா லந்துறை
      கோனெஞ் செல்வனை கூறிட கிற்றியே. 5.80.1
      797 கார ணத்தர் கருத்தர் கபாலியார்
      வார ணத்துரி போர்த்த மணாளனார்
      ஆர ணப்பொருள் அன்பிலா லந்துறை
      நார ணற்கரி யானொரு நம்பியே. 5.80.2
      798 அன்பினா னஞ்ச மைந்துட னாடிய
      என்பின் ஆனை யுரித்து களைந்தவன்
      அன்பி லானையம் மானையள் ளூறிய
      அன்பி னால்நினை தாரறி தார்களே. 5.80.3
      799 சங்கை யுள்ளதுஞ் சாவது மெய்யுமை
      பங்க னாரடி பாவியே னானுய
      அங்க ணனெந்தை அன்பிலா லந்துறை
      செங்க ணாரடி சேரவும் வல்லனே. 5.80.4
      800 கொக்கி றகர் குளிர்மதி சென்னியர்
      மிக்க ரக்கர் புரமெரி செய்தவர்
      அக்க ரையினர் அன்பிலா லந்துறை
      நக்கு ருவரும் நம்மை யறிவரே. 5.80.5
      801 வெள்ள முள்ள விரிசடை நந்தியை
      கள்ள முள்ள மனத்தவர் காண்கிலார்
      அள்ள லார்வயல் அன்பிலா லந்துறை
      உள்ள வாறறி யார்சிலர் ஊமரே. 5.80.6
      802 பிறவி மா பிணக்கில் அழுந்தினும்
      உறவெ லாஞ்சிந்தி துன்னி உகவாதே
      அறவன் எம்பிரான் அன்பிலா லந்துறை
      மறவா தேதொழு தேத்தி வணங்குமே. 5.80.7
      803 நுணங்கு நூலயன் மாலும் இருவரும்
      பிணங்கி யெங்கு திரிந்தெய்த்துங் காண்கிலா
      அணங்கன் எம்பிரான் அன்பிலா லந்துறை
      வணங்கும் நும்வினை மாய்ந்தறும் வண்ணமே. 5.80.8
      804 பொய்யெ லாமுரை குஞ்சமண் சாக்கி
      கையன் மாருரை கேளா தெழுமினோ
      ஐயன் எம்பிரான் அன்பிலா லந்துறை
      மெய்யன் சேவடி யேத்துவார் மெய்யரே. 5.80.9
      805 இலங்கை வேந்தன் இருபது தோளிற்று
      மலங்க மாமலை மேல்விரல் வைத்தவன்
      அலங்கல் எம்பிரான் அன்பிலா லந்துறை
      வலங்கொள் வாரைவா னோர்வலங் கொள்வரே. 5.80.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - சத்திவாகீசர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.81 திருப்பாண்டிக்கொடுமுடி - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      806 சிட்ட னைச்சிவ னைச்செழுஞ் சோதியை
      அட்ட மூர்த்தியை ஆல நிழலமர்
      பட்ட னைத்திரு பாண்டி கொடுமுடி
      நட்ட னைத்தொழ நம்வினை நாசமே. 5.81.1
      807 பிரமன் மாலறி யாத பெருமையன்
      தரும மாகிய தத்துவன் எம்பிரான்
      பரம னாருறை பாண்டி கொடுமுடி
      கரும மாக தொழுமட நெஞ்சமே. 5.81.2
      808 ஊச லாளல்லள் ஒண்கழ
      தேச மாந்திரு பாண்டி கொடுமுடி
      ஈச னேயெனும் இத்தனை யல்லது
      பேசு மாறறி யாளொரு பேதையே. 5.81.3
      809 தூண்டி யசுடர் போலொக்குஞ் சோதியான்
      காண்ட லுமெளி யன்னடி யார்கட்கு
      பாண்டி கொடுமுடி மேய பரமனை
      காண்டு மென்பவர கேதுங் கருத்தொணான். 5.81.4
      810 நெருக்கி யம்முடி நின்றிசை வானவர்
      இருக்கொ டும்பணி தேத்த இருந்தவன்
      திருக்கொ டுமுடி யென்றலு தீவினை
      கருக்கெ டுமிது கைகண்ட யோகமே. 5.81.5
      இப்பதிகத்தில் 678910-ம் செய்யுட்கள் சிதைந்து போயின. 5.81.6-10
      இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - கொடுமுடிநாதேசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.82 திருவான்மியூர் - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      811 விண்ட மாமலர் கொண்டு விரைந்துநீர்
      அண்ட நாயகன் றன்னடி சூழ்மின்கள்
      பண்டு நீர்செய்த பாவம் பறைந்திடும்
      வண்டு சேர்பொழில் வான்மியூ ரீசனே. 5.82.1
      812 பொருளுஞ் சுற்றமும் பொய்ம்மையும் விட்டுநீர்
      மருளும் மாந்தரை மாற்றி மயக்கறு
      தருளு மாவல்ல ஆதியா யென்றலும்
      மருள றுத்திடும் வான்மியூ ரீசனே. 5.82.2
      813 மந்த மாகிய சிந்தை மயக்கறு
      தந்த மில்குண தானை யடைந்துநின்
      றெந்தை யீசனென் றேத்திட வல்லிரேல்
      வந்து நின்றிடும் வான்மியூ ரீசனே. 5.82.3
      814 உள்ள முள்கல தேத்தவல் லார்க்கலாற்
      கள்ள முள்ள வழிக்கசி வானலன்
      வெள்ள முமர வும்விர வுஞ்சடை
      வள்ள லாகிய வான்மியூ ரீசனே. 5.82.4
      815 படங்கொள் பாம்பரை பான்மதி சூடியை
      வடங்கொள் மென்முலை மாதொரு கூறனை
      தொடர்ந்து நின்று தொழுதெழு வார்வினை
      மடங்க நின்றிடும் வான்மியூ ரீசனே. 5.82.5
      816 நெஞ்சி லைவர் நினைக்க நினைக்குறார்
      பஞ்சின் மெல்லடி யாளுமை பங்கவென்
      றஞ்சி நாண்மலர் தூவி யழுதிரேல்
      வஞ்ச தீர்த்திடும் வான்மியூ ரீசனே. 5.82.6
      817 நுணங்கு நூலயன் மாலு மறிகிலா
      குணங்கள் தாம்பர விக்குறை துக்கவர்
      சுணங்கு பூண்முலை தூமொழி யாரவர்
      வணங்க நின்றிடும் வான்மியூ ரீசனே. 5.82.7
      818 ஆதி யும்மர னாயயன் மாலுமா
      பாதி பெண்ணுரு வாய பரமனென்
      றோதி யுள்குழை தேத்தவல் லாரவர்
      வாதை தீர்த்திடும் வான்மியூ ரீசனே. 5.82.8
      819 ஓட்டை மாடத்தி லொன்பது வாசலுங்
      காட்டில் வேவதன் முன்னங் கழலடி
      நாட்டி நாண்மலர் தூவி வலஞ்செயில்
      வாட்ட தீர்த்திடும் வான்மியூ ரீசனே. 5.82.9
      820 பார மாக மலையெடு தான்றனை
      சீர மாக திருவிர லூன்றினான்
      ஆர்வ மாக அழைத்தவ னேத்தலும்
      வார மாயினன் வான்மியூ ரீசனே. 5.82.10
      இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - மருந்தீசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.83 திருநாகைக்காரோணம் - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      821 பாண தான்மதில் மூன்று மெரித்தவன்
      பூண தானர வாமை பொறுத்தவன்
      காண தானினி யான்கடல் நாகைக்கா
      ரோண தானென நம்வினை ஓயுமே. 5.83.1
      822 வண்ட லம்பிய வார்சடை ஈசனை
      விண்ட லம்பணி தேத்தும் விகிர்தனை
      கண்ட லங்கமழ் நாகைக்கா ரோணனை
      கண்ட லும்வினை யான கழலுமே. 5.83.2
      823 புனையு மாமலர் கொண்டு புரிசடை
      நனையு மாமலர் சூடிய நம்பனை
      கனையும் வார்கடல் நாகைக்கா ரோணனை
      நினைய வேவினை யாயின நீங்குமே. 5.83.3
      824 கொல்லை மால்விடை யேறிய கோவினை
      எல்லி மாநட மாடும் இறைவனை
      கல்லி னார்மதில் நாகைக்கா ரோணனை
      சொல்ல வேவினை யானவை சோருமே. 5.83.4
      825 மெய்ய னைவிடை யூர்தியை வெண்மழு
      கைய னைக்கடல் நாகைக்கா ரோணனை
      மைய னுக்கிய கண்டனை வானவர்
      ஐய னைத்தொழு வார்க்கல்ல லில்லையே. 5.83.5
      826 அலங்கல் சேர்சடை ஆதி புராணனை
      விலங்கல் மெல்லியல் பாகம் விருப்பனை
      கலங்கள் சேர்கடல் நாகைக்கா ரோணனை
      வலங்கொள் வார்வினை யாயின மாயுமே. 5.83.6
      827 சினங்கொள் மால்கரி சீறிய ஏறினை
      இனங்கொள் வானவ ரேத்திய ஈசனை
      கனங்கொள் மாமதில் நாகைக்கா ரோணனை
      மனங்கொள் வார்வினை யாயின மாயுமே. 5.83.7
      828 அந்த மில்புகழ் ஆயிழை யார்பணி
      தெந்தை யீசனென் றேத்தும் இறைவனை
      கந்த வார்பொழில் நாகைக்கா ரோணனை
      சிந்தை செ கெடுந்துயர் திண்ணமே. 5.83.8
      829 கருவ னைக்கடல் நாகைக்கா ரோணனை
      இருவ ருக்கறி வொண்ணா இறைவனை
      ஒருவ னையுண ரார்புர மூன்றெய்த
      செருவ னைத்தொழ தீவினை தீருமே. 5.83.9
      830 கடல்க ழிதழி நாகைக்கா ரோணன்றன்
      வடவ ரையெடு தார்த்த அரக்கனை
      அடர வூன்றிய பாதம் அணைதர
      தொடர அஞ்சு துயக்கறுங் காலனே. 5.83.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - காயாரோகணேசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.84 திருக்காட்டுப்பள்ளி - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      831 மாட்டு பள்ளி மகிழ்ந்துறை வீர்க்கெலாங்
      கேட்டு பள்ளிகண் டீர்கெடு வீரிது
      ஓட்டு பள்ளிவி டோ ட லுறாமுனங்
      காட்டு பள்ளியு ளான்கழல் சேர்மினே. 5.84.1
      832 மாட்டை தேடி மகிழ்ந்துநீர் நும்முளே
      நாட்டு பொய்யெலாம் பேசிடு நாணிலீர்
      கூட்டை விட்டுயிர் போவதன் முன்னமே
      காட்டு பள்ளியு ளான்கழல் சேர்மினே. 5.84.2
      833 தேனை வென்றசொல் லாளொடு செல்வமும்
      ஊனை விட்டுயிர் போவதன் முன்னமே
      கான வேடர் கருதுங்கா டுப்பள்ளி
      ஞான நாயக னைச்சென்று நண்ணுமே. 5.84.3
      834 அருத்த முமனை யாளொடு மக்களும்
      பொருத்த மில்லை பொல்லாதது போக்கிடுங்
      கருத்தன் கண்ணுதல் அண்ணல்கா டுப்பள்ளி
      திருத்தன் சேவடி யைச்சென்று சேர்மினே. 5.84.4
      835 சுற்ற முந்துணை யும்மனை வாழ்க்கையும்
      அற்ற போதணை யாரவ ரென்றென்றே
      கற்ற வர்கள் கருதுங்கா டுப்பள்ளி
      பெற்ற மேறும் பிரானடி சேர்மினே. 5.84.5
      836 அடும்புங் கொன்றையும் வன்னியும் மத்தமு
      துடும்பல் செய்சடை தூமணி சோதியான்
      கடம்பன் தாதை கருதுங்கா டுப்பள்ளி
      உடம்பி னார்க்கோர் உறுதுணை யாகுமே. 5.84.6
      837 மெய்யின் மாசுடை யாருடல் மூடுவார்
      பொய்யை மெய்யென்று புக்குடன் வீழன்மின்
      கையின் மானுடை யான்காட்டு பள்ளியெம்
      ஐயன் றன்னடி யேயடை துய்மினே. 5.84.7
      838 வேலை வென்றகண் ணாரை விரும்பிநீர்
      சீலங் கெட்டு திகையன்மின் பேதைகாள்
      காலை யேதொழுங் காட்டுப்பள் ளியுறை
      நீல கண்டனை நித்தல் நினைமினே. 5.84.8
      839 இன்று ளார்நாளை இல்லை யெனும்பொருள்
      ஒன்று மோரா துழிதரும் ஊமர்காள்
      அன்று வானவர காக விடமுண்ட
      கண்ட னார்காட்டு பள்ளிகண் டுய்ம்மினே. 5.84.9
      840 எண்ணி லாவர கன்மலை யேந்திட
      எண்ணி நீண்முடி பத்து மிறுத்தவன்
      கண்ணு ளார்கரு துங்காட்டு பள்ளியை
      நண்ணு வாரவர் தம்வினை நாசமே. 5.84.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - ஆரணியசுந்தரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.85 திருச்சிராப்பள்ளி - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      841 மட்டு வார்குழ லாளொடு மால்விடை
      இட்ட மாவுக தேறும் இறைவனார்
      கட்டு நீத்தவர கின்னரு ளேசெயுஞ்
      சிட்டர் போலுஞ் சிராப்பள்ளி செல்வரே. 5.85.1
      842 அரிய யன்றலை வெட்டிவ டாடினார்
      அரிய யன்றொழு தேத்தும் அரும்பொருள்
      பெரிய வன்சிரா பள்ளியை பேணுவார்
      அரிய யன்றொழ அங்கிரு பார்களே. 5.85.2
      843 அரிச்சி ராப்பகல் ஐவரா லாட்டுண்டு
      சுரிச்சி ராதுநெஞ் சேயொன்று சொல்லக்கேள்
      திரிச்சி ராப்பள்ளி யென்றலு தீவினை
      நரிச்சி ராது நடக்கும் நடக்குமே. 5.85.3
      844 தாயு மாயென கேதலை கண்ணுமா
      பேய னேனையும் ஆண்ட பெருந்தகை
      தேய நாதன் சிராப்பள்ளி மேவிய
      நாய னாரென நம்வினை நாசமே. 5.85.4
      இப்பதிகத்தில் 5678910-ம் செய்யுட்கள் சிதைந்து போயின. 5.85.5-10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - தாயுமானேசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.86 திருவாட்போக்கி - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      845 கால பாசம் பிடித்தெழு தூதுவர்
      பால கர்விரு தர்பழை யாரெனார்
      ஆல நீழ லமர்ந்தவா போக்கியார்
      சீல மார்ந்தவர் செம்மையுள் நிற்பரே. 5.86.1
      846 விடுத்த தூதுவர் வந்து வினைக்குழி
      படுத்த போது பயனிலை பாவிகாள்
      அடுத்த கின்னரங் கேட்கும்வா போக்கியை
      எடுத்து மேத்தியும் இன்புறு மின்களே. 5.86.2
      847 வந்திவ் வாறு வளைத்தெழு தூதுவர்
      உந்தி யோடி நரக திடாமுனம்
      அந்தி யின்னொளி தாங்கும்வா போக்கியார்
      சிந்தி யாவெழு வார்வினை தீர்ப்பரே. 5.86.3
      848 கூற்றம் வந்து குமைத்திடும் போதினாற்
      தேற்றம் வந்து தெளிவுற லாகுமே
      ஆற்ற வுமருள் செய்யும்வா போக்கிபால்
      ஏற்று மின்விள கையிருள் நீங்கவே. 5.86.4
      849 மாறு கொண்டு வளைத்தெழு தூதுவர்
      வேறு படுப்பதன்
      ஆறு செஞ்சடை வைத்தவா போக்கியார
      கூறி யூறி உருகுமென் னுள்ளமே. 5.86.5
      850 கான மோடி கடிதெழு தூதுவர்
      தான மோடு தலைபிடி யாமுனம்
      ஆனஞ் சாடி யுகந்தவா போக்கியார்
      ஊன மில்லவர குண்மையில் நிற்பரே. 5.86.6
      851 பார்த்து பாசம் பிடித்தெழு தூதுவர்
      கூர்த்த வேலாற் குமைப்பதன் முன்னமே
      ஆர்த்த கங்கை யடக்கும்வா போக்கியார்
      கீர்த்தி மைகள் கிளர்ந்துரை மின்களே. 5.86.7
      852 நாடி வந்து நமன்தமர் நல்லிருள்
      கூடி வந்து குமைப்பதன் முன்னமே
      ஆடல் பாடல் உகந்தவா போக்கியை
      வாடி யேத்தநம் வாட்ட தவிருமே. 5.86.8
      853 கட்ட றுத்து கடிதெழு தூதுவர்
      பொட்ட நூக்கி புறப்படா முன்னமே
      அட்ட மாமலர் சூடும்வா போக்கியார
      கிட்ட மாகி யிணையடி யேத்துமே. 5.86.9
      854 இரக்க முன்னறி யாதெழு தூதுவர்
      பரக்க ழித்தவர் பற்றுதன் முன்னமே
      அரக்க னுக்கருள் செய்தவா போக்கியார்
      கரப்ப துங்கர பாரவர் தங்கட்கே. 5.86.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - இரத்தினகிரீசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.87 திருமணஞ்சேரி - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      855 பட்ட நெற்றியர் பாய்புலி தோலினர்
      நட்ட நின்று நவில்பவர் நாடொறுஞ்
      சிட்டர் வாழ்திரு வார்மணஞ் சேரியெம்
      வட்ட வார்சடை யார்வண்ணம் வாழ்த்துமே. 5.87.1
      856 துன்னு வார்குழ லாளுமை யாளொடும்
      பின்னு வார்சடை மேற்பிறை வைத்தவர்
      மன்னு வார்மணஞ் சேரி மருந்தினை
      உன்னு வார்வினை யாயின ஓயுமே. 5.87.2
      857 புற்றி லாடர வாட்டும் புனிதனார்
      தெற்றி னார்புர தீயெழ செற்றவர்
      சுற்றி னார்மதில் சூழ்மணஞ் சேரியார்
      பற்றி னாரவர் பற்றவர் காண்மினே. 5.87.3
      858 மத்த மும்மதி யும்வளர் செஞ்சடை
      முத்தர் முக்குணர் மூசர வம்மணி
      சித்தர் தீவணர் சீர்மணஞ் சேரியெம்
      வித்தர் தாம்விரு பாரை விருப்பரே. 5.87.4
      859 துள்ளு மான்மறி தூமழு வாளினர்
      வெள்ள நீர்கர தார்சடை மேலவர்
      அள்ள லார்வயல் சூழ்மணஞ் சேரியெம்
      வள்ள லார்கழல் வாழ்த்தவாழ் வாவதே. 5.87.5
      860 நீர்ப ரந்த நிமிர்புன் சடையின்மேல்
      ஊர்ப ரந்த உரகம் அணிபவர்
      சீர்ப ரந்த திருமணஞ் சேரியார்
      ஏர்ப ரந்தங் கிலங்குசூ லத்தரே. 5.87.6
      861 சுண்ண தர்சுடு நீறுக தாடலார்
      விண்ண தம்மதி சூடிய வேதியர்
      மண்ண தம்முழ வார்மணஞ் சேரியார்
      வண்ண தம்முலை யாளுமை வண்ணரே. 5.87.7
      862 துன்ன வாடையர் தூமழு வாளினர்
      பின்னு செஞ்சடை மேற்பிறை வைத்தவர்
      மன்னு வார்பொழில் சூழ்மணஞ் சேரியெம்
      மன்ன னார்கழ லேதொழ வாய்க்குமே. 5.87.8
      863 சித்தர் தேவர்கள் மாலொடு நான்முகன்
      புத்தர் தேரமண் கையர் புகழவே
      மத்தர் தாமறி யார்மணஞ் சேரியெம்
      அத்த னாரடி யார்க்கல்ல லில்லையே. 5.87.9
      864 கடுத்த மேனி அரக்கன் கயிலையை
      எடுத்த வனெடு நீண்முடி பத்திற
      படுத்த லுமணஞ் சேரி யருளென
      கொடுத்த னன்கொற்ற வாளொடு நாமமே. 5.87.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - அருள்வள்ளல்நாயகர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.88 திருமருகல் - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      865 பெருக லாந்தவம் பேதைமை தீரலா
      திருக லாகிய சிந்தை திருத்தலாம்
      பருக லாம்பர மாயதோ ரானந்தம்
      மருக லானடி வாழ்த்தி வணங்கவே. 5.88.1
      866 பாடங் கொள்பனு வற்றிறங் கற்றுப்போய்
      நாடங் குள்ளன தட்டிய நாணிலீர்
      மாடஞ் சூழ்மரு கற்பெரு மான்றிரு
      வேடங் கைதொழ வீடெளி தாகுமே. 5.88.2
      867 சினத்தி னால்வருஞ் செய்தொழி லாமவை
      அனைத்தும் நீங்கிநின் றாதர வாய்மிக
      மனத்தி னால்மரு கற்பெரு மான்றிறம்
      நினைப்பி னார்க்கில்லை நீணில வாழ்க்கையே. 5.88.3
      868 ஓது பைங்கிளி கொண்பால் அமுதூட்டி
      பாது காத்து பலபல கற்பித்து
      மாது தான்மரு கற்பெரு மானுக்கு
      தூது சொல்ல விடத்தான் தொடங்குமே. 5.88.4
      869 இன்ன வாறென்ப துண்டறி யேனின்று
      துன்னு கைவளை சோரக்கண் நீர்மல்கும்
      மன்னு தென்மரு கற்பெரு மான்றிறம்
      உன்னி யொண்கொடி உள்ள முருகுமே. 5.88.5
      870 சங்கு சோர கலையுஞ் சரியவே
      மங்கை தான்மரு கற்பெரு மான்வரும்
      அங்க வீதி அருகணை யாநிற்கும்
      நங்கை மீரிதற் கென்செய்கேன் நாளுமே. 5.88.6
      871 காட்சி பெற்றில ளாகிலுங் காதலே
      மீட்சி யொன்றறி யாது மிகுவதே
      மாட்சி யார்மரு கற்பெரு மானுக்கு
      தாழ்ச்சி சாலவுண் டாகுமென் தையலே. 5.88.7
      872 நீடு நெஞ்சுள் நினைந்துகண் ணீர்மல்கும்
      ஓடு மாலினோ டொண்கொடி மாதராள்
      மாட நீண்மரு கற்பெரு மான்வரிற்
      கூடு நீயென்று கூட லிழைக்குமே. 5.88.8
      873 கந்த வார்குழல் கட்டிலள் காரிகை
      அந்தி மால்விடை யோடுமன் பாய்மிக
      வந்தி டாய்மரு கற்பெரு மானென்று
      சிந்தை செய்து திகைத்திடுங் காண்மினே. 5.88.9
      874 ஆதி மாமலை அன்றெடு தானிற்று
      சோதி யென்றலு தொல்லருள் செய்திடும்
      ஆதி யான்மரு கற்பெரு மான்றிறம்
      ஓதி வாழ்பவர் உம்பர்க்கும் உம்பரே. 5.88.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - மாணிக்கவண்ணவீசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.89 தனி - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      875 ஒன்று வெண்பிறை கண்ணியோர் கோவணம்
      ஒன்று கீளுமை யோடு முடுத்தது
      ஒன்று வெண்டலை யேந்தியெம் முள்ளத்தே
      ஒன்றி நின்றங் குறையும் ஒருவனே. 5.89.1
      876 இரண்டு மாமவர குள்ளன செய்தொழில்
      இரண்டு மாமவர குள்ளன கோலங்கள்
      இரண்டு மில்லிள மானெமை யாளுக
      திரண்டு போதுமென் சிந்தையுள் வைகுமே. 5.89.2
      877 மூன்று மூர்த்தியுள் நின்றிய லுந்தொழில்
      மூன்று மாயின மூவிலை சூலத்தன்
      மூன்று கண்ணினன் தீத்தொழில் மூன்றினன்
      மூன்று போதுமென் சிந்தையுள் மூழ்குமே. 5.89.3
      878 நாலின் மேன்முகஞ் செற்றது மன்னிழல்
      நாலு நன்குணர திட்டது மின்பமாம்
      நாலு வேதஞ் சரித்தது நன்னெறி
      நாலு போலெம் அகத்துறை நாதனே. 5.89.4
      879 அஞ்சு மஞ்சுமோ ராடி யரைமிசை
      அஞ்சு போலரை யார்த்ததின் றத்துவம்
      அஞ்சு மஞ்சுமோ ரோரைஞ்சு மாயவன்
      அஞ்சு மாமெம் அகத்துறை ஆதியே. 5.89.5
      880 ஆறு கால்வண்டு மூசிய கொன்றையன்
      ஆறு சூடிய அண்ட முதல்வனார்
      ஆறு கூர்மையர கச்சம யப்பொருள்
      ஆறு போலெம் அகத்துறை ஆதியே. 5.89.6
      881 ஏழு மாமலை ஏழ்பொழில் சூழ்கடல்
      ஏழு போற்றுமி ராவணன் கைந்நரம்
      பேழு கேட்டருள் செய்தவன் பொற்கழல்
      ஏழுஞ் சூழடி யேன்மன துள்ளவே. 5.89.7
      882 எட்டு மூர்த்தியாய் நின்றிய லுந்தொழில்
      எட்டு வான்குண தீசனெம் மான்றனை
      எட்டு மூர்த்தியு மெம்மிறை யெம்முளே
      எட்டு மூர்த்தியு மெம்மு ளொடுங்குமே. 5.89.8
      883 ஒன்ப தொன்பதி யானை யொளிகளி
      றொன்ப தொன்பது பல்கணஞ் சூழவே
      ஒன்ப தாமவை தீத்தொழி லின்னுரை
      ஒன்ப தொத்துநின் றென்னு ளொடுங்குமே. 5.89.9
      884 பத்து நூறவன் வெங்கண்வெள் ளேற்றண்ணல்
      பத்து நூறவன் பல்சடை தோண்மிசை
      பத்தி யாமில மாதலின் ஞானத்தாற்
      பத்தி யானிடங் கொண்டது பள்ளியே. 5.89.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.90 தனி - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      885 மாசில் வீணையும் மாலை மதியமும்
      வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
      மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
      ஈசன் எந்தை இணையடி நீழலே. 5.90.1
      886 நமச்சி வாயவே ஞானமுங் கல்வியும்
      நமச்சி வாயவே நானறி விச்சையும்
      நமச்சி வாயவே நாநவின் றேத்துமே
      நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே. 5.90.2
      887 ஆளா காராளா னாரை அடைந்துய்யார்
      மீளா வாட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார்
      தோளா தசுரை யோதொழும் பர்செவி
      வாளா மாய்ந்துமண் ணாகி கழிவரே.
      தோளாத சுரையென்பது துவாரமிடாத சுரைக்காய் 5.90.3
      888 நடலை வாழ்வுகொண் டென்செய்திர் நாணிலீர்
      சுடலை சேர்வது சொற்பிர மாணமே
      கடலின் நஞ்சமு துண்டவர் கைவிட்டால்
      உடலி னார்கிட தூர்முனி பண்டமே. 5.90.4
      889 பூக்கை கொண்டரன் பொன்னடி போற்றிலார்
      நாக்கை கொண்டரன் நாமம் நவில்கிலார்
      ஆக்கை கேயிரை தேடி அலமந்து
      காக்கை கேயிரை யாகி கழிவரே. 5.90.5
      890 குறிக ளுமடை யாளமுங் கோயிலும்
      நெறிக ளுமவர் நின்றதோர் நேர்மையும்
      அறிய ஆயிரம் ஆரணம் ஓதிலும்
      பொறியி லீர்மன மென்கொல் புகாததே. 5.90.6
      891 வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்
      தாழ்த்த சென்னியு தந்த தலைவனை
      சூழ்த்த மாமலர் தூவி துதியாதே
      வீழ்த்த வாவினை யேன்நெடுங் காலமே. 5.90.7
      892 எழுது பாவைநல் லார்திறம் விட்டுநான்
      தொழுது போற்றிநின் றேனையுஞ் சூழ்ந்துகொண்
      டுழுத சால்வழி யேயுழு வான்பொரு
      டிழுதை நெஞ்சமி தென்படு கின்றதே. 5.90.8
      893 நெக்கு நினைபவர்
      புக்கு நிற்கும்பொன் னார்சடை புண்ணியன்
      பொக்க மிக்கவர் பூவுநீ ருங்கண்டு
      நக்கு நிற்ப ரவர்தமை நாணியே. 5.90.9
      894 விறகிற் றீயினன் பாலிற் படுநெய்போல்
      மறைய நின்றுளன் மாமணி சோதியான்
      உறவு கோல்ந டுணர்வு கயிற்றினான்
      முறுக வாங்கி கடையமுன் னிற்குமே. 5.90.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.91 தனி - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      895 ஏயி லானையெ னிச்சை யகம்படி
      கோயி லானை குணப்பெருங் குன்றினை
      வாயி லானை மனோன்மனி யைப்பெற்ற
      தாயி லானை தழுவுமென் ஆவியே. 5.91.1
      896 முன்னை ஞான முதற்றனி வித்தினை
      பின்னை ஞான பிறங்கு சடையனை
      என்னை ஞான திருளறு தாண்டவன்
      தன்னை ஞான தளையிட்டு வைப்பனே. 5.91.2
      897 ஞான தாற்றொழு வார்சில ஞானிகள்
      ஞான தாற்றொழு வேனுனை நானலேன்
      ஞான தாற்றொழு வார்கள் தொழக்கண்டு
      ஞான தாயுனை நானு தொழுவனே. 5.91.3
      898 புழுவு குங்குணம் நான்கென கும்மதே
      புழுவு கிங்கென குள்ளபொல் லாங்கில்லை
      புழுவி னுங்கடையேன்புனி தன்றமர்
      குழுவு கெவ்விட தேன்சென்று கூடவே. 5.91.4
      899 மலையே வந்து விழினும் மனிதர்காள்
      நிலையி னின்று கலங்க பெறுதிரேல்
      தலைவ னாகிய ஈசன் றமர்களை
      கொலைகை யானைதான் கொன்றிடு கிற்குமே. 5.91.5
      900 கற்று கொள்வன வாயுள நாவுள
      இட்டு கொள்வன பூவுள நீருள
      கற்றை செஞ்சடை யானுளன் நாமுளோம்
      எற்று கோநம னால்முனி வுண்பதே. 5.91.6
      901 மனிதர் காளிங்கே வம்மொன்று சொல்லுகேன்
      கனித தாற்கனி யுண்ணவும் வல்லிரே
      புனிதன் பொற்கழல் ஈசனெ னுங்கனி
      இனிது சாலவும் ஏசற் றவர்கட்கே. 5.91.7
      902 என்னை யேதும் அறிந்திலன் எம்பிரான்
      தன்னை நானுமு னேது மறிந்திலேன்
      என்னை தன்னடி யானென் றறிதலு
      தன்னை நானும் பிரானென் றறிந்தெனே. 5.91.8
      903 தெள்ள தேறி தெளிந்துதி திப்பதோர்
      உள்ள தேறல் அமுத ஒளிவெளி
      கள்ள தேன்கடி யேன்கவ லைக்கடல்
      வெள்ள தேனுக்கெவ் வாறு விளைந்ததே. 5.91.9
      இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 5.91.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.92 காலபாராயணம் - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      904 கண்டு கொள்ளரி யானை கனிவித்து
      பண்டு நான்செய்த பாழிமை கேட்டிரேல்
      கொண்ட பாணி கொடுகொட்டி தாளங்கை
      கொண்ட தொண்டரை துன்னிலுஞ் சூழலே. 5.92.1
      905 நடுக்க துள்ளும் நகையுளும் நம்பற்கு
      கடு கல்ல வடமிடு வார்கட்கு
      கொடு கொள்க வெனவுரை பார்களை
      இடுக்கண் செ பெறீரிங்கு நீங்குமே. 5.92.2
      906 கார்கொள் கொன்றை கடிமலர கண்ணியான்
      சீர்கொள் நாமஞ் சிவனென் றரற்றுவார்
      ஆர்க ளாகிலு மாக அவர்களை
      நீர்கள் சார பெறீரிங்கு நீங்குமே. 5.92.3
      907 சாற்றி னேன்சடை நீண்முடி சங்கரன்
      சீற்றங் காமன்கண் வைத்தவன் சேவடி
      ஆற்ற வுங்களி பட்ட மனத்தரா
      போற்றி யென்றுரை பார்புடை போகலே. 5.92.4
      908 இறையென் சொன்மற வேல்நமன் றூதுவீர்
      பிறையும் பாம்பு முடைப்பெரு மான்றமர்
      நறவம் நாறிய நன்னறுஞ் சாந்திலும்
      நிறைய நீறணி வாரெதிர் செல்லலே. 5.92.5
      909 வாம தேவன் வளநகர் வைகலுங்
      காம மொன்றில ராய்க்கை விளக்கொடு
      தா தூபமு தண்ணறுஞ் சாந்தமும்
      ஏம மும்புனை வாரெதிர் செல்லலே. 5.92.6
      910 படையும் பாசமும் பற்றிய கையினீர்
      அடையன் மின்னம தீசன் அடியரை
      விடைகொ ளூர்தியி னானடி யார்குழாம்
      புடைபு காதுநீர் போற்றியே போமினே. 5.92.7
      911 விச்சை யாவதும் வேட்கைமை
      நிச்சல் நீறணி வாரை நினைப்பதே
      அச்ச மெய்தி அருகணை யாதுநீர்
      பிச்சை புக்கவன் அன்பரை பேணுமே. 5.92.8
      912 இன்னங் கேண்மின் இளம்பிறை சூடிய
      மன்னன் பாதம் மனத்துட னேத்துவார்
      மன்னும் அஞ்செழு தாகிய மந்திர
      தன்னி லொன்றுவல் லாரையுஞ் சாரலே. 5.92.9
      913 மற்றுங் கேண்மின் மனப்பரி பொன்றின்றி
      சுற்றும் பூசிய நீற்றொடு கோவணம்
      ஒற்றை யேறுடை யானடியே யல்லாற்
      பற்றொன் றில்லிகள் மேற்படை போகலே. 5.92.10
      914 அரக்கன் ஈரை தலையுமோர் தாளினால்
      நெருக்கி யூன்றியி டான்தமர் நிற்கிலுஞ்
      சுருக்கெ னாதங்கு பேர்மின்கண் மற்றுநீர்
      சுருக்கெ னிற்சுட ரான்கழல் சூடுமே. 5.92.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.93 மறக்கிற்பனே என்னும் - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      915 காச னைக்கன லைக்கதிர் மாமணி
      தேச னைப்புக ழார்சிலர் தெண்ணர்கள்
      மாசி னைக்கழி தாட்கொள வல்லவெம்
      ஈச னையினி நான்மற கிற்பனே. 5.93.1
      916 புந்தி குவிள காய புராணனை
      சந்தி கண்ணட மாடுஞ் சதுரனை
      அந்தி வண்ணனை ஆரழல் மூர்த்தியை
      வந்தெ னுள்ளங்கொண் டானை மறப்பனே. 5.93.2
      917 ஈசன் ஈசனென் றென்றும் அரற்றுவன்
      ஈசன் றானென் மனத்திற் பிரிவிலன்
      ஈசன் றன்னையு மென்மன துக்கொண்டு
      ஈசன் றன்னையும் யான்மற கிற்பனே. 5.93.3
      918 ஈசன் என்னை யறிந்த தறிந்தனன்
      ஈசன் சேவடி யேற்ற பெறுதலால்
      ஈசன் சேவடி யேத்த பெற்றேனினி
      ஈசன் றன்னையும் யான்மற கிற்பனே. 5.93.4
      919 தேனை பாலினை திங்களை ஞாயிற்றை
      வான வெண்மதி சூடிய மைந்தனை
      வேனி லானை மெலிவுசெய் தீயழல்
      ஞான மூர்த்தியை நான்மற கிற்பனே. 5.93.5
      920 கன்ன லைக்கரும் பூறிய தேறலை
      மின்ன னைமின் னனைய வுருவனை
      பொன்ன னைமணி குன்று பிறங்கிய
      என்ன னையினி யான்மற கிற்பனே. 5.93.6
      921 கரும்பி னைக்கட்டி யைக்கந்த மாமலர
      சுரும்பி னைச்சுடர சோதியு சோதியை
      அரும்பி னிற்பெரும் போதுகொண் டாய்மலர்
      விரும்பும் ஈசனை நான்மற கிற்பனே. 5.93.7
      922 துஞ்சும் போதுஞ் சுடர்விடு சோதியை
      நெஞ்சுள் நின்று நினைப்பிக்கு நீதியை
      நஞ்சு கண்ட தடக்கிய நம்பனை
      வஞ்ச னேனினி யான்மற கிற்பனே. 5.93.8
      923 புதிய பூவினை புண்ணிய நாதனை
      நிதியை நீதியை நித்தில குன்றினை
      கதியை கண்டங் கறுத்த கடவுளை
      மதியை மைந்தனை நான்மற கிற்பனே. 5.93.9
      924 கருகு கார்முகில் போல்வதோர் கண்டனை
      உருவ நோக்கியை ஊழி முதல்வனை
      பருகு பாலனை பான்மதி சூடியை
      மருவு மைந்தனை நான்மற கிற்பனே. 5.93.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.94 தொழற்பாலனம் என்னும் - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      925 அண்ட தானை அமரர் தொழப்படும்
      பண்ட தானை பவித்திர மாந்திரு
      முண்ட தானைமுற் றாத இளம்பிறை
      துண்ட தானைக்கண் டீர்தொழற் பாலதே. 5.94.1
      926 முத்தொ பானை முளைத்தெழு கற்பக
      வித்தொ பானை விளக்கிடை நேரொளி
      ஒத்தொ பானை ஒளிபவ ளத்திரள்
      தொத்தொ பானைக்கண் டீர்தொழற் பாலதே. 5.94.2
      927 பண்ணொ தானை பவள திரண்டதோர்
      வண்ண தானை வகையுணர் வான்றனை
      எண்ண தானை இளம்பிறை போல்வெள்ளை
      சுண்ண தானைக்கண் டீர்தொழற் பாலதே. 5.94.3
      928 விடலை யானை விரைகமழ் தேன்கொன்றை
      படலை யானை பலிதிரி வான்செலும்
      நடலை யானை நரிபிரி யாததோர்
      சுடலை யானைக்கண் டீர்தொழற் பாலதே. 5.94.4
      929 பரிதி யானைப்பல் வேறு சமயங்கள்
      கருதி யானைக்கண் டார்மனம் மேவிய
      பிரிதி யானை பிறரறி யாததோர்
      சுருதி யானைக்கண் டீர்தொழற் பாலதே. 5.94.5
      930 ஆதி யானை அமரர் தொழப்படும்
      நீதி யானை நியம நெறிகளை
      ஓதி யானை உணர்தற் கரியதோர்
      சோதி யானைக்கண் டீர்தொழற் பாலதே. 5.94.6
      931 ஞால தானைநல் லானைவல் லார்தொழுங்
      கோல தானை குணப்பெருங் குன்றினை
      மூல தானை முதல்வனை மூவிலை
      சூல தானைக்கண் டீர்தொழற் பாலதே. 5.94.7
      932 ஆதி பாலட்ட மூர்த்தியை ஆனஞ்சும்
      வேதி பானைநம் மேல்வினை வெந்தற
      சாதி பானை தவத்திடை மாற்றங்கள்
      சோதி பானைக்கண் டீர்தொழற் பாலதே. 5.94.8
      933 நீற்றி னானை நிகரில்வெண் கோவண
      கீற்றி னானை கிளரொளி செஞ்சடை
      ஆற்றி னானை அமரர்தம் ஆருயிர்
      தோற்றி னானைக்கண் டீர்தொழற் பாலதே. 5.94.9
      934 விட்டி டானைமெய்ஞ் ஞானத்து மெய்ப்பொருள்
      கட்டி டானை கனங்குழை பாலன்பு
      பட்டி டானை பகைத்தவர் முப்புரஞ்
      சுட்டி டானைக்கண் டீர்தொழற் பாலதே. 5.94.10
      935 முற்றி னானை இராவணன் நீண்முடி
      ஒற்றி னானை ஒருவிர லாலுற
      பற்றி னானையோர் வெண்டலை பாம்பரை
      சுற்றி னானைக்கண் டீர்தொழற் பாலதே. 5.94.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.95 இலிங்கபுராணம் - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      936 புக்க ணைந்து புரிந்தல ரிட்டிலர்
      நக்க ணைந்து நறுமலர் கொய்திலர்
      சொக்க ணைந்த சுடரொளி வண்ணனை
      மிக்கு காணலுற் றாரங் கிருவரே. 5.95.1
      937 அலரு நீருங்கொண் டாட்டி தெளிந்திலர்
      திலக மண்டல தீட்டி திரிந்திலர்
      உலக மூர்த்தி யொளிநிற வண்ணனை
      செலவு காணலுற் றாரங் கிருவரே. 5.95.2
      938 ஆப்பி நீரோ டலகுகை கொண்டிலர்
      பூப்பெய் கூடை புனைந்து சுமந்திலர்
      காப்பு கொள்ளி கபாலிதன் வேடத்தை
      ஓப்பி காணலுற் றாரங் கிருவரே. 5.95.3
      939 நெய்யும் பாலுங்கொண் டாட்டி நினைந்திலர்
      பொய்யும் பொக்கமும் போக்கி புகழ்ந்திலர்
      ஐயன் வெய்ய அழல்நிற வண்ணனை
      மெய்யை காணலுற் றாரங் கிருவரே. 5.95.4
      940 எருக்கங் கண்ணிகொண் டிண்டை புனைந்திலர்
      பெரு கோவணம் பீறி யுடுத்திலர்
      தருக்கி னாற்சென்று தாழ்சடை யண்ணலை
      நெருக்கி காணலுற் றாரங் கிருவரே. 5.95.5
      941 மரங்க ளேறி மலர்பறி திட்டிலர்
      நிரம்ப நீர்சு தாட்டி நினைந்திலர்
      உரம்பொ ருந்தி யொளிநிற வண்ணனை
      நிரம்ப காணலுற் றாரங் கிருவரே. 5.95.6
      942 கட்டு வாங்கங் கபாலங்கை கொண்டிலர்
      அட்ட மாங்கங் கிடந்தடி வீழ்ந்திலர்
      சிட்டன் சேவடி சென்றெய்தி காணிய
      பட்ட கட்டமுற் றாரங் கிருவரே. 5.95.7
      943 வெந்த நீறு விளங்க அணிந்திலர்
      கந்த மாமலர் இண்டை புனைந்திலர்
      எந்தை ஏறுக தேறெரி வண்ணனை
      அந்தங் காணலுற் றாரங் கிருவரே. 5.95.8
      944 இளவெ ழுந்த இருங்குவ ளைம்மலர்
      பிளவு செய்து பிணைத்தடி யிட்டிலர்
      களவு செய்தொழிற் காமனை காய்ந்தவன்
      அளவு காணலுற் றாரங் கிருவரே. 5.95.9
      945 கண்டி பூண்டு கபாலங்கை கொண்டிலர்
      விண்ட வான்சங்கம் விம்மவாய் வைத்திலர்
      அண்ட மூர்த்தி அழல்நிற வண்ணனை
      கெண்டி காணலுற் றாரங் கிருவரே. 5.95.10
      946 செங்க ணானும் பிரமனு தம்முளே
      எங்கு தேடி திரிந்தவர் காண்கிலார்
      இங்குற் றேனென்றி லிங்கத்தே தோன்றினான்
      பொங்கு செஞ்சடை புண்ணிய மூர்த்தியே. 11 5.95.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.96 மனத்தொகை - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      947 பொன்னுள் ளத்திரள் புன்சடை யின்புறம்
      மின்னுள் ளத்திரள் வெண்பிறை யாயிறை
      நின்னுள் ளத்தருள் கொண்டிருள் நீங்குதல்
      என்னுள் ளத்துள தெந்தை பிரானிரே. 5.96.1
      948 முக்க ணும்முடை யாய்முனி கள்பலர்
      தொக்கெ ணுங்கழ லாயொரு தோலினோ
      டக்க ணும்மரை யாயரு ளெய்தலா
      தெக்க ணும்மிலன் எந்தை பிரானிரே. 5.96.2
      949 பனியாய் வெங்கதிர் பாய்படர் புன்சடை
      முனியாய் நீயுல கம்முழு தாளினு
      தனியாய் நீசரண் நீசல மேபெரி
      தினியாய் நீயென கெந்தை பிரானிரே. 5.96.3
      950 மறையும் பாடுதிர் மாதவர் மாலினு
      குறையு மாயினை கோளர வோடொரு
      பிறையுஞ் சூடினை யென்பத லாற்பிறி
      திறையுஞ் சொல்லிலை எந்தை பிரானிரே. 5.96.4
      951 பூத்தார் கொன்றையி னாய்புலி யின்னதள்
      ஆர்த்தா யாடர வோடன லாடிய
      கூத்தா நின்குரை யார்கழ லேயல
      தேத்தா நாவென கெந்தை பிரானிரே. 5.96.5
      952 பைம்மா லும்மர வாபர மாபசு
      மைம்மால் கண்ணியோ டேறுமை தாவெனும்
      அம்மா லல்லது மற்றடி நாயினேற்
      கெம்மா லும்மிலன் எந்தை பிரானிரே. 5.96.6
      953 வெப்ப தின்மன மாசு விளக்கிய
      செப்ப தாற்சிவ னென்பவர் தீவினை
      ஒப்ப தீர்த்திடும் ஒண்கழ லாற்கல்ல
      தெப்பற் றும்மிலன் எந்தை பிரானிரே. 5.96.7
      954 திகழுஞ் சூழ்சுடர் வானொடு வைகலும்
      நிகழு மொண்பொரு ளாயின நீதியென்
      புகழு மாறு மலானுன பொன்னடி
      இகழு மாறிலன் எந்தை பிரானிரே. 5.96.8
      955 கைப்பற் றித்திரு மால்பிர மன்னுனை
      எப்பற் றியறி தற்கரி யாயருள்
      அப்பற் றல்லது மற்றடி நாயினேன்
      எப்பற் றும்மிலன் எந்தை பிரானிரே. 5.96.9
      956 எந்தை யெம்பிரான் என்றவர் மேல்மனம்
      எந்தை யெம்பிரான் என்றிறைஞ் சித்தொழு
      தெந்தை யெம்பிரான் என்றடி யேத்துவார்
      எந்தை யெம்பிரான் என்றடி சேர்வரே. 5.96.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.97 சித்தத்தொகை - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      957 சிந்தி பார்மன தான்சிவன் செஞ்சுடர்
      அந்தி வானிற தானணி யார்மதி
      முந்தி சூடிய முக்கண்ணி னானடி
      வந்தி பாரவர் வானுல காள்வரே. 5.97.1
      958 அண்ட மாரிரு ளூடு கடந்தும்பர்
      உண்டு போலுமோ ரொண்சுட ரச்சுடர்
      கண்டிங் காரறி வாரறி வாரெலாம்
      வெண்டிங் கட்கண்ணி வேதியன் என்பரே. 5.97.2
      959 ஆதி யாயவ னாரு மிலாதவன்
      போது சேர்புனை நீண்முடி புண்ணியன்
      பாதி பெண்ணுரு வாகி பரஞ்சுடர
      சோதி யுட்சோதி யாய்நின்ற சோதியே. 5.97.3
      960 இட்ட திட்டதோ ரேறுக தேறியூர்
      பட்டி துட்டங்க னாய்ப்பலி தேர்வதோர்
      கட்ட வாழ்க்கைய னாகிலும் வானவர்
      அட்ட மூர்த்தி யருளென் றடைவரே. 5.97.4
      961 ஈறில் கூறைய னாகி எரிந்தவெண்
      ணீறு பூசி நிலாமதி சூடிலும்
      வீறி லாதன செய்யினும் விண்ணவர்
      ஊற லாயரு ளாயென் றுரைப்பரே. 5.97.5
      962 உச்சி வெண்மதி சூடிலும் ஊனறா
      பச்சை வெண்டலை யேந்தி பலஇலம்
      பிச்சை யேபுகு மாகிலும் வானவர்
      அச்ச தீர்த்தரு ளாயென் றடைவரே. 5.97.6
      963 ஊரி லாயென்றொன் றாக வுரைப்பதோர்
      பேரி லாய்பிறை சூடிய பிஞ்ஞகா
      காரு லாங்கண்ட னேயுன் கழலடி
      சேர்வி லார்கட்கு தீயவை தீயவே. 5.97.7
      964 எந்தை யேயெம் பிரானே யெனவுள்கி
      சிந்தி பாரவர் தீவினை தீருமால்
      வெந்த நீறுமெய் பூசிய வேதியன்
      அந்த மாவள பாரடை தார்களே. 5.97.8
      965 ஏன வெண்மரு போடென்பு பூண்டெழில்
      ஆனை யீருரி போர்த்தன லாடிலு
      தான வண்ணத்த னாகிலு தன்னையே
      வான நாடர் வணங்குவர் வைகலே. 5.97.9
      966 ஐயன் அந்தணன் ஆணொடு பெண்ணுமாம்
      மெய்யன் மேதகு வெண்பொடி பூசிய
      மைகொள் கண்டத்தன் மான்மறி கையினான்
      பைகொள் பாம்பரை யார்த்த பரமனே. 5.97.10
      967 ஒருவ னாகிநின் றானிவ் வுலகெலாம்
      இருவ ராகிநின் றார்க கறிகிலான்
      அருவ ராவரை ஆர்த்தவ னார்கழல்
      பரவு வாரவர் பாவம் பறையுமே. 5.97.11
      968 ஓத வண்ணனும் ஒண்மலர செல்வனும்
      நாத னேயரு ளாயென்று நாடொறுங்
      காதல் செய்து கருத படுமவர்
      பாத மேத்த பறையுநம் பாவமே. 5.97.12
      969 வ தன்மை யவரவ ராக்கையான்
      வெவ்வ தன்மைய னென்ப தொழிமினோ
      மௌவல் நீண்மலர் மேலுறை வானொடு
      பௌவ வண்ணனு மாய்ப்பணி வார்களே. 5.97.13
      970 அக்கும் ஆமையும் பூண்டன லேந்திஇல்
      புக்கு பல்பலி தேரும் புராணனை
      நக்கு நீர்கள் நரகம் புகேன்மினோ
      தொக்க வானவ ராற்றொழு வானையே. 5.97.14
      971 கங்கை தங்கிய செஞ்சடை மேலிள
      திங்கள் சூடிய தீநிற வண்ணனார்
      இங்க ணாரெழில் வானம் வணங்கவே
      அங்க ணாற்கது வாலவன் தன்மையே. 5.97.15
      972 நகர வெல்கொடி யானொடு நன்னெஞ்சே
      நுகர நீயுனை கொண்டு போக்குறில்
      மகர வெல்கொடி மைந்தனை காய்ந்தவன்
      புகரில் சேவடி யேபுக லாகுமே. 5.97.16
      973 சரண மாம்படி யார்பிற ரியாவரோ
      கரண தீர்த்துயிர் கையி லிகழ்ந்தபின்
      மரண மெய்திய பின்னவை நீக்குவான்
      அரண மூவெயி லெய்தவ னல்லனே. 5.97.17
      974 ஞமனென் பான்நர கர்க்கு நமக்கெலாஞ்
      சிவனென் பான்செழு மான்மறி கையினான்
      கவனஞ் செய்யுங் கனவிடை யூர்தியான்
      தமரென் றாலுங் கெடுந்தடு மாற்றமே. 5.97.18
      975 இடப மேறியும் இல்பலி யேற்பவர்
      அடவி காதலி தாடுவர் ஐந்தலை
      படவம் பாம்பரை யார்த்த பரமனை
      கடவி ராய்ச்சென்று கைதொழு துய்ம்மினே. 5.97.19
      976 இணர்ந்து கொன்றைபொற் றாது சொரிந்திடும்
      புணர்ந்த வாளர வம்மதி யோடுடன்
      அணைந்த அஞ்சடை யானவன் பாதமே
      உணர்ந்த உள்ள தவருணர் வார்களே. 5.97.20
      977 தரு தான்றவ தான்றவ தால்வருங்
      கரு தான்கரு மான்மறி கையினான்
      அரு தன்ன அதிர்கழல் சேர்மினோ
      சிரமஞ் சேரழல் தீவினை யாளரே. 5.97.21
      978 நமச்சி வாயவென் பாருள ரேலவர்
      தமச்ச நீங்க தவநெறி சார்தலால்
      அமைத்து கொண்டதோர் வாழ்க்கைய னாகிலும்
      இமைத்து நிற்பது சால அரியதே. 5.97.22
      979 பற்பல் காலம் பயிற்றி பரமனை
      சொற்பல் காலம்நின் றேத்துமின் தொல்வினை
      வெற்பில் தோன்றிய வெங்கதிர் கண்டவ
      புற்ப னிக்கெடு மாறது போலுமே. 5.97.23
      980 மணிசெய் கண்டத்து மான்மறி கையினான்
      கணிசெய் வேடத்தர் ஆயவர் காப்பினாற்
      பணிகள் தாஞ்செய வல்லவர் யாவர்தம்
      பிணிசெய் யாக்கையை நீக்குவர் பேயரே. 5.97.24
      981 இயக்கர் கின்னரர் இந்திரன் தானவர்
      நயக்க நின்றவன் நான்முகன் ஆழியான்
      மயக்க மெய்தவன் மாலெரி யாயினான்
      வியக்கு தன்மையி னானெம் விகிர்தனே. 5.97.25
      982 அரவ மார்த்தன லாடிய அண்ணலை
      பரவு வாரவர் பாவம் பறைதற்கு
      குரவை கோத்தவ னுங்குளிர் போதின்மேல்
      கரவில் நான்முக னுங்கரி யல்லரே. 5.97.26
      983 அழலங் கையினன் அந்தர தோங்கிநின்
      றுழலும் மூவெயில் ஒள்ளழ லூட்டினான்
      தழலு தாமரை யானொடு தாவினான்
      கழலுஞ் சென்னியுங் காண்டற் கரியனே. 5.97.27
      984 இளமை கைவி டகறலும் மூப்பினார்
      வளமை போய்ப்பிணி யோடு வருதலால்
      உளமெ லாமொளி யாய்மதி ஆயினான்
      கிளமை யேகிளை யாக நினைப்பனே. 5.97.28
      985 தன்னிற் றன்னை அறியு தலைமகன்
      தன்னிற் றன்னை அறியிற் றலைப்படு
      தன்னிற் றன்னை அறிவில னாயிடிற்
      தன்னிற் றன்னையுஞ் சார்தற் கரியனே. 5.97.29
      986 இலங்கை மன்னனை ஈரைந்து பத்துமன்
      றலங்க லோடுட னேசெல வூன்றிய
      நலங்கொள் சேவடி நாடொறும்
      வலம்கொண் டேத்துவார் வானுல காள்வரே. 5.97.30
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.98 உள்ளம் - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      987 நீற லைத்ததோர் மேனி நிமிர்சடை
      ஆற லைக்கநின் றாடும் அமுதினை
      தேற லைத்தெளி யைத்தெளி வாய்த்ததோர்
      ஊற லைக்கண்டு கொண்டதெ னுள்ளமே. 5.98.1
      988 பொந்தை யைப்புக்கு நீக்க புகுந்திடு
      தந்தை யைத்தழல் போல்வதோர் மேனியை
      சிந்தை யைத்தெளி வைத்தெளி வாய்த்ததோர்
      எந்தை யைக்கண்டு கொண்டதெ னுள்ளமே. 5.98.2
      989 வெள்ள தார்விஞ்சை யார்கள் விரும்பவே
      வெள்ள தைச்சடை வைத்த விகிர்தனார்
      கள்ள தைக்கழி யம்மன மொன்றிநின்
      றுள்ள தில்லொளி யைக்கண்ட துள்ளமே. 5.98.3
      990 அம்மா னையமு தின்னமு தேயென்று
      தம்மா னைத்தத்து வத்தடி யார்தொழுஞ்
      செம்மா னநிறம் போல்வதோர் சிந்தையுள்
      எம்மா னைக்கண்டு கொண்டதெ னுள்ளமே. 5.98.4
      991 கூறே றும்முமை பாகமோர் பாலராய்
      ஆறே றுஞ்சடை மேற்பிறை சூடுவர்
      பாறே றுந்தலை யேந்தி பலஇலம்
      ஏறேறு மெந்தையை கண்டதெ னுள்ளமே. 5.98.5
      992 முன்னெஞ் சம்மின்றி மூர்க்கரா சாகின்றார்
      தன்னெஞ் சந்த குத்தாம் இலாதவர்
      வன்னெஞ் சம்மது நீங்குதல் வல்லிரே
      என்னெஞ்சி லீசனை கண்டதெ னுள்ளமே. 5.98.6
      993 வென்றா னைப்புல னைந்துமென் தீவினை
      கொன்றா னைக்குண தாலே வணங்கிட
      நன்றா நன்மனம் வைத்திடு ஞானமாம்
      ஒன்றா னைக்கண்டு கொண்டதெ னுள்ளமே. 5.98.7
      994 மருவி னைமட நெஞ்சம் மனம்புகுங்
      குருவி னைக்குண தாலே வணங்கிடு
      திருவி னைச்சிந்தை யுட்சிவ னாய்நின்ற
      உருவி னைக்கண்டு கொண்டதெ னுள்ளமே. 5.98.8
      995 தேச னைத்திரு மால்பிர மன்செயும்
      பூச னைப்புண ரிற்புணர் வாயதோர்
      நேச னைநெஞ்சி னுள்நிறை வாய்நின்ற
      ஈச னைக்கண்டு கொண்டதெ னுள்ளமே. 5.98.9
      996 வெறுத்தா னைம்புல னும்பிர மன்றலை
      அறுத்தா னையர கன்கயி லாயத்தை
      கறுத்தா னைக்கா லில்விர லொன்றினால்
      ஒறுத்தா னைக்கண்டு கொண்டதெ னுள்ளமே. 5.98.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.99 பாவநாசம் - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      997 பாவ மும்பழி பற்றற வேண்டுவீர்
      ஆவில் அஞ்சுக தாடு மவன்கழல்
      மேவ ராய்மிக வும்மகிழ துள்குமின்
      காவ லாளன் கலந்தருள் செய்யுமே. 5.99.1
      998 கங்கை யாடிலென் காவிரி
      கொங்கு தண்கும ரித்துறை யாடிலென்
      ஒங்கு மாகட லோதநீ ராடிலென்
      எங்கு மீசனெ னாதவர கில்லையே. 5.99.2
      999 பட்ட ராகிலென் சாத்திரங் கேட்கிலென்
      இட்டு மட்டியு மீதொழில் பூணிலென்
      எட்டு மொன்றும் இரண்டு மறியிலென்
      இட்ட மீசனெ னாதவர கில்லையே. 5.99.3
      1000 வேத மோதிலென் வேள்விகள் செய்கிலென்
      நீதி நூல்பல நித்தல் பயிற்றிலென்
      ஓதி யங்கமோ ராறும் உணரிலென்
      ஈச னையுள்கு வார்க்கன்றி இல்லையே. 5.99.4
      1001 காலை சென்று கலந்துநீர் மூழ்கிலென்
      வேலை தோறும் விதிவழி நிற்கிலென்
      ஆலை வேள்வி யடைந்தது வேட்கிலென்
      ஏல ஈசனென் பார்க்கன்றி இல்லையே. 5.99.5
      1002 கான நாடு கலந்து திரியிலென்
      ஈன மின்றி இருந்தவஞ் செய்யிலென்
      ஊனை யுண்டல் ஒழிந்துவா னோக்கிலென்
      ஞான னென்பவர கன்றிநன் கில்லையே. 5.99.6
      1003 கூட வேடத்த ராகி குழுவிலென்
      வாடி யூனை வருத்தி திரியிலென்
      ஆடல் வேடத்தன் அம்பல கூத்தனை
      பாட லாளர்க்கல் லாற்பயன் இல்லையே. 5.99.7
      1004 நன்று நோற்கிலென் பட்டினி யாகிலென்
      குன்ற மேறி யிருந்தவஞ் செய்யிலென்
      சென்று நீரிற் குளித்து திரியிலென்
      என்று மீசனென் பார்க்கன்றி இல்லையே. 5.99.8
      1005 கோடி தீர்த்தங் கலந்து குளித்தவை
      ஆடி னாலும் அரனுக்கன் பில்லையேல்
      ஓடும் நீரினை ஓட்டை குடத்தட்டி
      மூடி வைத்திட்ட மூர்க்கனோ டொக்குமே. 5.99.9
      1006 மற்று நற்றவஞ் செய்து வருந்திலென்
      பொற்றை யுற்றெடு தானுடல் புக்கிற
      குற்ற நற்குரை யார்கழற் சேவடி
      பற்றி லாதவர குப்பயன் இல்லையே. 5.99.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      5.100 ஆதிபுராணம் - திருக்குறுந்தொகை
      திருச்சிற்றம்பலம்
      1007 வேத நாயகன் வேதியர்
      மாதின் நாயகன் மாதவர்
      ஆதி நாயகன் ஆதிரை
      பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே. 5.100.1
      1008 செத்து செத்து பிறப்பதே தேவென்று
      பத்தி செய்மன பாறைக கேறுமோ
      அத்த னென்றரி யோடு பிரமனு
      துத்தி யஞ்செய நின்றநற் சோதியே. 5.100.2
      1009 நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்
      ஆறு கோடி நாராயண ரங்ஙனே
      ஏறு கங்கை மணலெண்ணில் இந்திரர்
      ஈறி லாதவன் ஈசன் ஒருவனே. 5.100.3
      1010 வாது செய்து மயங்கு மனத்தராய்
      ஏது சொல்லுவீ ராகிலும் ஏழைகாள்
      யாதோர் தேவ ரெனப்படு வார கெல்லாம்
      மாதே வனலாற் றேவர்மற் றில்லையே. 5.100.4
      1011 கூவ லாமை குரைகட லாமையை
      கூவ லோடொக்கு மோகட லென்றல்போற்
      பாவ காரிகள் பார்ப்பரி தென்பராற்
      தேவ தேவன் சிவன்பெரு தன்மையே. 5.100.5
      1012 பேய்வ னத்தமர் வானைப்பி ரார்த்தித்தார
      கீவ னையிமை யோர்முடி தன்னடி
      சாய்வ னைச்சல வார்கள் தமக்குடற்
      சீவ னைச்சிவ னைச்சிந்தி யார்களே. 5.100.6
      1013 எரிபெ ருக்குவர் அவ்வெரி ஈசன
      துருவ ருக்கம தாவ துணர்கிலார்
      அரிய யற்கரி யானை அயர்த்துப்போய்
      நரிவி ருத்தம தாகுவர் நாடரே. 5.100.7
      1014 அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில்
      அருக்க னாவான் அரனுரு வல்லனோ
      இருக்கு நான்மறை ஈசனை யேதொழுங்
      கருத்தி னைநினை யார்கன் மனவரே. 5.100.8
      1015 தாயி னும்நல்ல சங்கர னுக்கன்பர்
      ஆய வுள்ள தமுதரு தப்பெறார்
      பேயர் பேய்முலை யுண்டுயிர் போக்கிய
      மாயன் மாயத்து பட்ட மனத்தரே. 5.100.9
      1016 அரக்கன் வல்லர டாங்கொழி தாரருள்
      பெருக்க செய்த பிரான்பெரு தன்மையை
      அருத்தி செய்தறி யப்பெறு கின்றிலர்
      கருத்தி லாக்கய வக்கண தோர்களே. 5.100.10
      திருச்சிற்றம்பலம்
      திருநாவுக்கரசுசுவாமிகள் அருளிச்செய்த தேவாரப்பதிகங்கள்
      ஐந்தாம் திருமுறை முற்றும்.
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      9 2003


      2.