திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த
      தேவார பதிகங்கள்
      நான்காம் திருமுறை முதற் பகுதி
      பாடல்கள் 1 - 487
      உள்ளுறை
      4.001 திருவதிகைவீரட்டானம் 1-10 மின்பதிப்பு
      4.002 திருக்கெடிலவடவீரட்டானம் 11-20 மின்பதிப்பு
      4.003 திருவையாறு 21-31 மின்பதிப்பு
      4.004 திருவாரூர் 32-41 மின்பதிப்பு
      4.005 திருவாரூர்ப்பழமொழி 42-51 மின்பதிப்பு
      4.006 திருக்கழிப்பாலை 52-61 மின்பதிப்பு
      4.007 திருஏகம்பம் 61-71 மின்பதிப்பு
      4.008 சிவனெனுமோசை 72-81 மின்பதிப்பு
      4.009 திருஅங்கமாலை 82-93 மின்பதிப்பு
      4.010 திருக்கெடிலவாணர் 94-103 மின்பதிப்பு
      4.011 நமச்சிவாயப்பதிகம் 104-113 மின்பதிப்பு
      4.012 திருப்பழனம் 114-123 மின்பதிப்பு
      4.013 திருவையாறு 124-133 மின்பதிப்பு
      4.014 தசபுராணம் 134-144 மின்பதிப்பு
      4.015 பாவநாசத்திருப்பதிகம் 145-155 மின்பதிப்பு
      4.016 திருப்புகலூர் 156-165 மின்பதிப்பு
      4.017 திருவாரூர் - அரநெறி 166-176 மின்பதிப்பு
      4.018 விடந்தீர்த்ததிருப்பதிகம் 177-186 மின்பதிப்பு
      4.019 திருவாரூர் 187-197 மின்பதிப்பு
      4.020 திருவாரூர் 198-207 மின்பதிப்பு
      4.021 திருவாரூர்திருவாதிரைப்பதிகம் 208-217 மின்பதிப்பு

      4.022 கோயில் 218-228 மின்பதிப்பு
      4.023 கோயில் 229-238 மின்பதிப்பு
      4.024 திருவதிகைவீரட்டானம் 239-248 மின்பதிப்பு
      4.025 திருவதிகைவீரட்டானம் 249-258 மின்பதிப்பு
      4.026 திருவதிகைவீரட்டானம் 259-268 மின்பதிப்பு
      4.027 திருவதிகைவீரட்டானம் 269-277 மின்பதிப்பு
      4.028 திருவதிகைவீரட்டானம் 278-283 மின்பதிப்பு
      4.029 திருச்செம்பொன்பள்ளி 284-293 மின்பதிப்பு
      4.030 திருக்கழிப்பாலை 294-303 மின்பதிப்பு
      4.031 திருக்கடவூர் 304-313 மின்பதிப்பு
      4.032 திருப்பயற்றூர் 314-323 மின்பதிப்பு
      4.033 திருமறைக்காடு 324-333 மின்பதிப்பு
      4.034 திருமறைக்காடு 334-343 மின்பதிப்பு
      4.035 திருவிடைமருது 344-353 மின்பதிப்பு
      4.036 திருப்பழனம் 354-363 மின்பதிப்பு
      4.037 திருநெய்த்தானம் 364-373 மின்பதிப்பு
      4.038 திருவையாறு 374-383 மின்பதிப்பு
      4.039 திருவையாறு 384-393 மின்பதிப்பு
      4.040 திருவையாறு 394-403 மின்பதிப்பு
      4.041 திருச்சோற்றுத்துறை 4104-413 மின்பதிப்பு
      4.042 திருத்துருத்தி 414-423 மின்பதிப்பு
      4.043 திருக்காஞ்சிமேற்றளி 424-433 மின்பதிப்பு
      4.044 திருஏகம்பம் 434-443 மின்பதிப்பு
      4.045 திருவொற்றியூர் 444-453 மின்பதிப்பு
      4.046 திருவொற்றியூர் 454-455 மின்பதிப்பு
      4.047 திருக்கயிலாயம் 456-465 மின்பதிப்பு
      4.048 திருஆப்பாடி 466-475 மின்பதிப்பு
      4.049 திருக்குறுக்கை 476-485 மின்பதிப்பு
      4.050 திருக்குறுக்கை 486-487 மின்பதிப்பு
      ------------------------------------------------------------------------
      4.01 திருவதிகைவீரட்டானம்
      பன் - கொல்லி
      திருச்சிற்றம்பலம்
      1 கூற்றாயின வாறுவி லக்ககிலீர்
      கொடுமைபல செய்தன நானறியேன்
      ஏற்றாயடி கேஇர வும்பகலும்
      பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
      தோற்றாதென் வயிற்றின் அகம்படியே
      குடரோடு துடக்கி முடக்கியிட
      ஆற்றேன் அடியேன்அதி கைக்கெடில
      வீரட்டா னத்துறை அம்மானே. 4.1.1
      2 நெஞ்சம்மு கேயிட மாகவைத்தேன்
      நினையாதொரு போதும் இருந்தறியேன்
      வஞ்சம்மிது வொப்பது கண்டறியேன்
      வயிற்றோடு துடக்கி முடக்கியிட
      நஞ்சாகி வந்தென்னை நலிவதனை
      நணுகாமல் துரந்து கரந்துமிடீர்
      அஞ்சேலுமென் னீர்அதி கைக்கெடில
      வீரட்டா னத்துறை அம்மானே. 4.1.2
      3 பணிந்தாரன பாவங்கள் பாற்றவல்லீர்
      படுவெண்டலை யிற்பலி கொண்டுழல்வீர்
      துணிந்தேயு காட்செய்து வாழலுற்றாற்
      சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்
      பிணிந்தார்பொடி கொண்டுமெய் பூசவல்லீர்
      பெற்றமேற்றுக தீர்சுற்றும் வெண்டலைகொண்
      டணிந்தீரடி கேள்அதி கைக்கெடில
      வீரட்டா னத்துறை அம்மனே. 4.1.3
      4 முன்னம்மடி யேன்அறி யாமையினான்
      முனிந்தென்னை நலிந்து முடக்கியிட
      பின்னையடி யேனு காளும்பட்டேன்
      சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்
      தன்னையடை தார்வினை தீர்ப்பதன்றோ
      தலையாயவர் தங்கட னாவதுதான்
      அன்னநடை யார்அதி கைக்கெடில
      வீரட்டா னத்துறை அம்மானே. 4.1.4
      5 காத்தாள்பவர் காவல் இகழ்ந்தமையாற்
      கரைநின்றவர் கண்டுகொ ளென்றுசொல்லி
      நீத்தாய கயம்புக நூக்கியிட
      நிலைக்கொள்ளும் வழித்துறை யொன்றறியேன்
      வார்த்தையிது வொப்பது கேட்டறியேன்
      வயிற்றோடு துடக்கி முடக்கியிட
      ஆர்த்தார்புன லார்அதி கைக்கெடில
      வீரட்டா னத்துறை அம்மானே. 4.1.5
      6 சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்
      தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
      நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன்
      உன்னாமம் என்னாவின் மறந்தறியேன்
      உலர்ந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய்
      உடலுள் ளுறுசூலை தவிர்த்தருளாய்
      அலந்தேன்அடி யேன்அதி கைக்கெடில
      வீரட்டா னத்துறை அம்மானே. 4.16
      7 உயர்ந்தேன்மனை வாழ்க்கையும் ஒண்பொருளும்
      ஒருவர்தலை காவலி லாமையினல்
      வயந்தேயு காட்செய்து வாழலுற்றால்
      வலிக்கின்றது சூலை தவிர்த்தருளீர்
      பயந்தேயென் வயிற்றின கம்படியே
      பறித்துப்புர டியறு தீர்த்திடநான்
      அயர்ந்தேன்அடி யேன்அதி கைக்கெடில
      வீரட்டா னாத்துறை அம்மானே. 4.1.7
      8 வலித்தேன்மனை வாழ்கை மகிழ்ந்தடியேன்
      வஞ்சம்மன மொன்று மிலாமையினாற்
      சலித்தாலொரு வர்துணை யாருமில்லை
      சங்கவெண்குழை காதுடை எம்பெருமான்
      கலித்தேயென் வயிற்றி னகம்படியே
      கலக்கி மலக்கிட்டு கவர்ந்துதின்ன
      அலுத்தேனடி யேன்அதி கைக்கெடில
      வீரட்டா னத்துறை அம்மானே. 4.1.8
      9 பொன்போல மிளிர்வதொர் மேனியினீர்
      புரிபுன்சடை யீர்மெலி யும்பிறையீர்
      துன்பேகவ லைபிணி யென்றிவற்றை
      நணுகாமற் றுரந்து கரந்துமிடீர்
      என்போலிக ளும்மை இனித்தெளியார்
      அடியார்படு வதிது வேயாகில்
      அன்பேஅமை யும்மதி கைக்கெடில
      வீரட்டா னத்துறை அம்மானே. 4.1.9
      10 போர்த்தாயங்கோ ரானையின் ஈருரிதோல்
      புறங்காடரங் காநட மாடவல்லாய்
      ஆர்த்தானர கன்றனை மால்வரைக்கீழ்
      அடர்த்திட்டருள் செய்த வதுகருதாய்
      வேர்த்தும்புரண் டும்விழு தும்மெழுந்தால்
      என்வேதனை யான விலக்கியிடாய்
      ஆர்த்தார்புனல் சூழ்அதி கைக்கெடில
      வீரட்டா னத்துறை அம்மானே. 4.1.10
      இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - வீரட்டானேசுவரர் தேவியார்
      இப்பதிகம் சூலைநோய்தீர ஓதியருளியது.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.02 திருக்கெடிலவடவீரட்டானம்
      திருவதிகைவீரட்டானம் என்பதும் இது
      பண் - காந்தாரம்
      திருச்சிற்றம்பலம்
      11 சுண்ணவெண் சந்தன சாந்துஞ்
      சுடர திங்க சூளாமணியும்
      வண்ண உரிவை யுடையும்
      வளரும் பவள நிறமும்
      அண்ணல் அரண்முர ணேறும்
      அகலம் வளாய அரவும்
      திண்ணன் கெடில புனலும்
      உடையா ரொருவர் தமர்நாம்
      அஞ்சுவ தியாதொன்று மில்லை
      அஞ்ச வருவது மில்லை. 4.2.1
      12 பூண்டதோர் கேழல் எயிறும்
      பொன்றிகழ் ஆமை புரள
      நீண்டதிண் டோ ள்வலஞ் சூழ்ந்து
      நிலாக்கதிர் போலவெண் ணூலுங்
      காண்டகு புள்ளின் சிறகுங்
      கலந்தக டங கொடியும்
      ஈண்டு கெடில புனலும்
      உடையா ரொருவர் தமர்நாம்
      அஞ்சுவ தியாதொன்று மில்லை
      அஞ்ச வருவது மில்லை. 4.2.2
      13 ஒத்த வடத்திள நாகம்
      உருத்திர பட்ட மிரண்டும்
      முத்து வடக்கண் டிகையும்
      முளைத்தெழு மூவிலை வேலுஞ்
      சித்த வடமும் அதிகை
      சேணுயர் வீரட்டஞ் சூழ்ந்து
      தத்துங் கெடி புனலும்
      உடையா ரொருவர் தமர்நாம்
      அஞ்சுவ தியாதொன்று மில்லை
      அஞ்ச வருவது மில்லை.
      சித்தவடம் என்பது இத்தலத்துக்கு சமீபத்திலிருப்பது. 4.2.3
      14 மடமான் மறிபொற் கலையும்
      மழுபாம் பொருகையில் வீணை
      குடமால் வரைய திண்டோ ளுங்
      குனிசிலை கூத்தின் பயில்வும்
      இடமால் தழுவிய பாகம்
      இருநில னேற்ற சுவடு
      தடமார் கெடில புனலும்
      உடையா ரொருவர் தமர்நாம்
      அஞ்சுவ தியாதொன்று மில்லை
      அஞ்ச வருவது மில்லை. 4.2.4
      15 பலபல காமத்த ராகி
      பதைத்தெழு வார்மன துள்ளே
      கலமல கிட்டு திரியுங்
      கணபதி யென்னுங் களிறும்
      வலமே திரண்டு சுடரும்
      வான்கயி லாய மலையும்
      நலமார் கெடில புனலும்
      உடையா ரொருவர் தமர்நாம்
      அஞ்சுவ தியாதென்று மில்லை
      அஞ்ச வருவது மில்லை. 4.2.5
      16 கரந்தன கொள்ளி விளக்குங்
      கறங்கு துடியின் முழக்கும்
      பரந்த பதினெண் கணமும்
      பயின்றறி யாதன பாட்டும்
      அரங்கிடை நூலறி வாளர்
      அறி படாததோர் கூத்தும்
      நிரந்த கெடில புனலும்
      உடையா ரொருவர் தமர்நாம்
      அஞ்சுவ தியாதொன்று மில்லை
      அஞ்ச வருவது மில்லை. 4.2.6
      17 கொலைவரி வேங்கை அதளுங்
      குலவோ டிலங்குபொற் றோடும்
      விலைபெறு சங குழையும்
      விலையில் கபால கலனும்
      மலைமகள் கைக்கொண்ட மார்பும்
      மணியார திலங்கு மிடறும்
      உலவு கெடில புனலும்
      உடையா ரொருவர் தமர்நாம்
      அஞ்சுவ தியாதொன்று மில்லை
      அஞ்ச வருவது மில்லை. 4.2.7
      18 ஆடல் புரிந்த நிலையும்
      அரையில் அசைத்த அரவும்
      பாடல் பயின்ற பல்பூதம்
      பல்லா யிரங்கொள் கருவி
      நாடற் கரியதோர் கூத்தும்
      நன்குயர் வீரட்டஞ் சூழ்ந்து
      ஓடுங் கெடில புனலும்
      உடையா ரொருவர் தமர்நாம்
      அஞ்சுவ தியாதொன்று மில்லை
      அஞ்ச வருவது மில்லை. 4.2.8
      19 சூழு மரவ துகிலு
      துகில்கிழி கோவண கீளும்
      யாழின் மொழியவள் அஞ்ச
      அஞ்சா தருவரை போன்ற
      வேழ முரித்த நிலையும்
      விரிபொழில் வீரட்டஞ் சூழ்ந்து
      தாழுங் கெடில புனலும்
      உடையா ரொருவர் தமர்நாம்
      அஞ்சுவ தியாதொன்று மில்லை
      அஞ்ச வருவது மில்லை. 4.2.9
      20 நரம்பெழு கைகள் பிடித்து
      நங்கை நடுங்க மலையை
      உரங்களெல் லாங்கொண் டெடுத்தான்
      ஒன்பதும் ஒன்றும் அலற
      வரங்கள் கொடுத்தருள் செய்வான்
      வளர்பொழில் வீரட்டஞ் சூழ்ந்து
      நிரம்பு கெடில புனலும்
      உடையா ரொருவர் தமர்நாம்
      அஞ்சுவ தியாதொன்று மில்லை
      அஞ்ச வருவது மில்லை. 4.2.10
      இப்பதிகம் சமணர்களேவிய யானை அஞ்சும்படி ஓதி அருளியது.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4. 03 திருவையாறு
      பண் - காந்தாரம்
      திருச்சிற்றம்பலம்
      21 மாதர பிறைக்கண்ணி யானை
      மலையான் மகளொடும் பாடி
      போதொடு நீர்சு தேத்தி
      புகுவா ரவர்பின் புகுவேன்
      யாதுஞ் சுவடு படாமல்
      ஐயா றடைகின்ற போது
      காதன் மடப்பிடி யோடுங்
      களிறு வருவன கண்டேன்
      கண்டே னவர்திரு பாதங்
      கண்டறி யாதன கண்டேன். 4.3.1
      22 போழிளங் கண்ணியி னானை
      பூந்துகி லாளொடும் பாடி
      வாழியம் போற்றியென் றேத்தி
      வட்டமி டாடா வருவேன்
      ஆழி வலவனின் றேத்தும்
      ஐயா றடைகின்ற போது
      கோழி பெடையொடுங் கூடி
      குளிர்ந்து வருவன கண்டேன்
      கண்டே னவர்திரு பாதங்
      கண்டறி யாதன கண்டேன். 4.3.2
      23 எரிப்பிறை கண்ணியி னானை
      யேந்திழை யாளொடும் பாடி
      முரித்த இலயங்க ளிட்டு
      முகமலர தாடா வருவேன்
      அரித்தொழு கும்வெள் ளருவி
      ஐயா றடைகின்ற போது
      வரிக்குயில் பேடையொ டாடி
      வைகி வருவன கண்டேன்
      கண்டே னவர்திரு பாதங்
      கண்டறி யாதன கண்டேன். 4.3.3
      24 பிறையிளங் கண்ணியி னானை
      பெய்வளை யாளொடும் பாடி
      துறையிளம் பன்மலர் தூவி
      தோளை குளிர தொழுவேன்
      அறையிளம் பூங்குயி லாலும்
      ஐயா றடைகின்ற போது
      சிறையிளம் பேடையொ டாடி
      சேவல் வருவன கண்டேன்
      கண்டே னவர்திரு பாதங்
      கண்டறி யாதன கண்டேன். 4.3.4
      25 ஏடு மதிக்கண்ணி யானை
      ஏந்திழை யாளொடும் பாடி
      காடொடு நாடு மலையுங்
      கைதொழு தாடா வருவேன்
      ஆட லமர்ந்துறை கின்ற
      ஐயா றடைகின்ற போது
      பேடை மயிலொடுங் கூடி
      பிணைந்து வருவன கண்டேன்
      கண்டே னவர்திரு பாதங்
      கண்டறி யாதன கண்டேன். 4.3.5
      26 தண்மதி கண்ணியி னானை
      தையல்நல் லாளொடும் பாடி
      உண்மெலி சிந்தைய னாகி
      உணரா வுருகா வருவேன்
      அண்ண லமர்ந்துறை கின்ற
      ஐயா றடைகின்ற போது
      வண்ண பகன்றிலொ டாடி
      வைகி வருவன கண்டேன்
      கண்டே னவர்திரு பாதங்
      கண்டறி யாதன கண்டேன். 4.3.6
      27 கடிமதி கண்ணியி னானை
      காரிகை யாலொடும் பாடி
      வடிவொடு வண்ண மிரண்டும்
      வாய்வேண் டுவசொல்லி வாழ்வேன்
      அடியிணை ஆர்க்குங் கழலான்
      ஐயா றடைகின்ற போது
      இடிகுர லன்னதோர் ஏனம்
      இசைந்து வருவன கண்டேன்
      கண்டே னவர்திரு பாதங்
      கண்டறி யாதன கண்டேன். 4.3.7
      28 விரும்பு மதிக்கண்ணி யானை
      மெல்லிய லாளொடும் பாடி
      பெரும்புலர் காலை யெழுந்து
      பெறுமலர் கொய்யா வருவேன்
      அருங்கலம் பொன்மணி யுந்தும்
      ஐயா றடைகின்ற போது
      கருங்கலை பேடையொ டாடி
      கலந்து வருவன கண்டேன்
      கண்டே னவர்திரு பாதங்
      கண்டறி யாதன கண்டேன். 4.3.8
      29 முற்பிறை கண்ணியி னானை
      மொய்குழ லாளொடும் பாடி
      பற்றி கயிறறு கில்லேன்
      பாடியும் ஆடா வருவேன்
      அற்றருள் பெற்றுநின் றாரோ
      டையா றடைகின்ற போது
      நற்றுணை பேடையொ டாடி
      நாரை வருவன கண்டேன்
      கண்டே னவர்திரு பாதங்
      கண்டறி யாதன கண்டேன். 4.3.9
      30 திங்கள் மதிக்கண்ணி யானை
      தேமொழி யாளொடும் பாடி
      எங்கருள் நல்குங்கொ லெந்தை
      எனக்கினி யென்னா வருவேன்
      அங்கிள மங்கைய ராடும்
      ஐயா ரடைகின்ற போது
      பைங்கிளி பேடையொ டாடி
      பறந்து வருவன கண்டேன்
      கண்டே னவர்திரு பாதங்
      கண்டறி யாதன கண்டேன். 4.3.10
      31 வளர்மதி கண்ணியி னானை
      வார்குழ லாளொடும் பாடி
      களவு படாததோர் காலங்
      காண்பான் கடைக்கணி கின்றேன்
      அளவு படாததோ ரன்போ
      டையா றடைகின்ற போது
      இளமண நாகு தழுவி
      ஏறு வருவன கண்டேன்
      கண்டே னவர்திரு பாதங்
      கண்டறி யாதன கண்டேன். 4.3.11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - செம்பொற்சோதீசுவரர் தேவியார்
      இது இந்தத்தலத்திலிருக்கும் ஆலயமே
      கயிலாசமாக சுவாமி தரிசனங்கட்டளையிட்டபோது ஓதியருளிய பதிகம்.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4. 04 திருவாரூர்
      பண் - காந்தாரம்
      திருச்சிற்றம்பலம்
      32 பாடிளம் பூதத்தி னானும்
      பவளச்செவ் வாய்வண்ண தானுங்
      கூடிள மென்முலை யாளை
      கூடிய கோலத்தி னானும்
      ஓடிள வெண்பிறை யானும்
      ஒளிதிகழ் சூலத்தி னானும்
      ஆடிளம் பாம்பசை தானும்
      ஆரூ ரமர்ந்தஅம் மானே. 4.4.1
      33 நரியை குதிரைசெய் வானும்
      நரகரை தேவுசெய் வானும்
      விரதங்கொண் டாடவல் லானும்
      விச்சின்றி நாறுசெய் வானும்
      முரசதிர தானை முன்னோட
      முன்பணி தன்பர்கள் ஏத்த
      அரவரை சாத்திநின் றானும்
      ஆரூ ரமர்ந்தஅம் மானே. 4.4.2
      34 நீறுமெய் பூசவல் லானும்
      நினைப்பவர் நெஞ்சத்து ளானும்
      ஏறுக தேறவல் லானும்
      எரிபுரை மேனியி னானும்
      நாறு கரந்தையி னானும்
      நான்மறை கண்டத்தி னானும்
      ஆறு சடைக்கர தானும்
      ஆரூ ரமர்ந்தஅம் மானே. 4.4.3
      35 கொம்புநல் வேனி லவனை
      குழைய முறுவல்செய் தானுஞ்
      செம்புனல் கொண்டெயில் மூன்று
      தீயெழ கண்சிவ தானும்
      வம்புநற் கொன்றையி னானும்
      வாட்கண்ணி வாட்டம தெய்த
      அம்பர ஈருரி யானும்
      ஆரூ ரமர்ந்தஅம் மானே. 4.4.4
      36 ஊழி யளக்கவல் லானும்
      உகப்பவர் உச்சியுள் ளானு
      தாழிளஞ் செஞ்சடை யானு
      தண்ணமர் திண்கொடி யானு
      தோழியர் தூதிடை யாட
      தொழுதடி யார்கள் வணங்க
      ஆழி வளைக்கையி னானும்
      ஆரூ ரமர்ந்தஅம் மானே. 4.4.5
      37 ஊர்திரை வேலையுள் ளானும்
      உலகிற தொண்பொரு ளானுஞ்
      சீர்தரு பாடலுள் ளானுஞ்
      செங்கண் விடைக்கொடி யானும்
      வார்தரு பூங்குழ லாளை
      மருவி யுடன்வை தவனும்
      ஆதிரை நாளுக தானும்
      ஆரூ ரமர்ந்தஅம் மானே. 4.4.6
      38 தொழற்கங்கை துன்னிநின் றார்க்கு
      தோன்றி யருளவல் லானுங்
      கழற்கங்கை பன்மலர் கொண்டு
      காதல் கனற்றநின் றானுங்
      குழற்கங்கை யாளையுள் வைத்து
      கோல சடைக்கர தானும்
      அழற்கங்கை ஏந்தவல் லானும்
      ஆரூ ரமர்ந்தஅம் மானே. 4.4.7
      39 ஆயிர தாமரை போலும்
      ஆயிரஞ் சேவடி யானும்
      ஆயிரம் பொன்வரை போலும்
      ஆயிர தோளுடை யானும்
      ஆயிர ஞாயிறு போலும்
      ஆயிர நீண்முடி யானும்
      ஆயிரம் பேருக தானும்
      ஆரூ ரமர்ந்தஅம் மானே. 4.4.8
      40 வீடரங் காநிறு பானும்
      விசும்பினை வேதி தொடர
      ஓடரங் காகவை தானும்
      ஓங்கியோ ரூழியுள் ளானுங்
      காடரங் காமகிழ தானுங்
      காரிகை யார்கள் மனத்துள்
      ஆடரங் கத்திடை யானும்
      ஆரூ ரமர்ந்தஅம் மானே. 4.4.9
      41 பையஞ் சுடர்விடு நாக
      பள்ளிகொள் வானுள்ள தானுங்
      கையஞ்சு நான்குடை யானை
      கால்விர லாலடர தானும்
      பொய்யஞ்சி வாய்மைகள் பேசி
      புகழ்புரி தார்க்கருள் செய்யும்
      ஐயஞ்சின் அப்புற தானும்
      ஆரூ ரமர்ந்தஅம் மானே. 4.4.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4. 05 திருவாரூர்ப்பழமொழி
      பண் - காந்தாரம்
      திருச்சிற்றம்பலம்
      42 மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்த
      மேனியான் தாள்தொ ழாதே
      உய்யலா மென்றெண்ணி உறிதூக்கி
      யுழிதந்தென் உள்ளம் விட்டு
      கொய்யுலா மலர்ச்சோலை குயில்கூவ
      மயிலாலும் ஆரூ ரரை
      கையினாற் றொழா தொழிந்து
      கனியிரு காய்கவர்ந்த கள்வனேனே. 4.5.1
      43 என்பிருத்தி நரம்புதோல் புகப்பெய்தி
      டென்னையோர் உருவ மாக்கி
      இன்பிருத்தி முன்பிருந்த வினைதீர்த்தி
      டென்னுள்ளங் கோயி லாக்கி
      அன்பிருத்தி அடியேனை கூழாட்கொண்
      டருள்செய்த ஆரூ ரர்தம்
      முன்பிருக்கும் விதியின்றி முயல்விட்டு
      காக்கைப்பின் போன வாறே. 4.5.2
      44 பெருகுவித்தென் பாவத்தை பண்டெலாங்
      குண்டர்கள்தஞ் சொல்லே கேட்டு
      உருகுவித்தென் உள்ளத்தின் உள்ளிருந்த
      கள்ளத்தை தள்ளி போக்கி
      அருகுவித்து பிணிகாட்டி ஆட்கொண்டு
      பிணிதீர்த்த ஆரூ ரர்தம்
      அருகிருக்கும் விதியின்றி அறமிருக்க
      மறம்விலைக்கு கொண்ட வாறே. 4.5.3
      45 குண்டானா தலைபறித்து குவிமுலையார்
      நகைகாணா துழிதர் வேனை
      பண்டமா படுத்தென்னை பால்தலையிற்
      றெளித்துத்தன் பாதங் காட்டி
      தொண்டெலா மிசைபாட தூமுறுவல்
      அருள்செய்யும் ஆரூ ரரை
      பண்டெலாம் அறியாதே பனிநீராற்
      பரவைசெ பாவி தேனே. 4.5.4
      46 துன்னாக தேனாகி துர்ச்சனவர்
      சொற்கேட்டு துவர்வா கொண்டு
      என்னாக திரிதந்தீங் கிருகையேற்
      றிடவுண்ட ஏழை யேன்நான்
      பொன்னாக தடியேனை புகப்பெய்து
      பொருட்படுத்த ஆரூ ரரை
      என்னாக திருத்தாதே ஏதன்போர
      காதனாய் அகப்ப டேனே. 4.5.5
      47 பப்போதி பவணனா பறித்ததொரு
      தலையோடே திரிதர் வேனை
      ஒப்போட வோதுவித்தென் உள்ளத்தின்
      உள்ளிருந்தங் குறுதி காட்டி
      அப்போதை கப்போதும் அடியவர்க
      காரமுதாம் ஆரூ ரரை
      எப்போது நினையாதே இருட்டறையின்
      மலடுகற தெய்த்த வாறே. 4.5.6
      48 கதியொன்றும் அறியாதே கண்ணழல
      தலைபறித்து கையில் உண்டு
      பதியொன்று நெடுவீதி பலர்காண
      நகைநாணா துழிதர் வேற்கு
      மதிதந்த ஆருரில் வார்தேனை
      வாய்மடுத்து பருகி உய்யும்
      விதியின்றி மதியிலியேன் விளக்கிருக்க
      மின்மினித்தீ காய்ந்த வாறே. 4.5.7
      49 பூவையா தலைபறித்து பொறியற்ற
      சமண்நீசர் சொல்லே கேட்டு
      காவிசேர் கண்மடவார கண்டோ டி
      கதவடைக்குங் கள்வ னேன்றன்
      ஆவியை போகாமே தவிர்த்தென்னை
      யாட்கொண்ட ஆரூ ரரை
      பாவியேன் அறியாதே பாழூரிற்
      பயிக்கம்பு கெய்த்த வாறே. 4.5.8
      50 ஒட்டாத வாளவுணர் புரம்மூன்றும்
      ஓரம்பின் வாயின் வீழ
      கட்டானை காமனையுங் காலனையுங்
      கண்ணினொடு காலின் வீழ
      அட்டானை ஆரூரில் அம்மானை
      ஆர்வச்செற் றக்கு ரோத
      தட்டானை சாராதே தவமிருக்க
      அவஞ்செய்து தருக்கி னேனே. 4.5.9
      51 மறுத்தானோர் வல்லரக்கன் ஈரைந்து
      முடியினொடு தோளு தாளும்
      இறுத்தானை எழில்முளரி தவிசின்மிசை
      இருத்தான்றன் தலையி லொன்றை
      அறுத்தானை ஆரூரில் அம்மானை
      ஆலாலம் உண்டு கண்டங்
      கறுத்தானை கருதாதே கரும்பிருக்க
      இரும்புகடி தெய்த்த வாறே. 4.5.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4. 06 திருக்கழிப்பாலை
      பண் - காந்தாரம்
      திருச்சிற்றம்பலம்
      52 வனபவள வாய்திறந்து வானவர்க்கு
      தானவனே என்கின் றாளாற்
      சினபவள திண்டோ ள்மேற் சேர்ந்திலங்கு
      வெண்ணீற்றன் என்கின் றாளால்
      அனபவள மேகலையோ டப்பாலை
      கப்பாலான் என்கின் றாளாற்
      கனபவளஞ் சிந்துங் கழிப்பாலை
      சேர்வானை கண்டாள் கொல்லோ. 4.6.1
      53 வண்டுலவு கொன்றை வளர்புன்
      சடையானே என்கின் றாளால்
      விண்டலர்ந்து நாறுவதோர் வெள்ளெருக்க
      நாண்மலருண் டென்கின் றாளால்
      உண்டயலே தோன்றுவதோர் உத்தரி
      பட்டுடையன் என்கின் றாளாற்
      கண்டயலே தோன்றுங் கழிப்பாலை
      சேர்வானை கண்டாள் கொல்லோ. 4.6.2
      54 பிறந்திளைய திங்களெம் பெம்மான்
      முடிமேல தென்கின் றாளால்
      நிறங்கிளருங் குங்குமத்தின் மேனி
      யவன்நிறமே யென்கின் றாளால்
      மறங்கிளர்வேற் கண்ணாள் மணிசேர்
      மிடற்றவனே யென்கின் றாளாற்
      கறங்கோத மல்குங் கழிப்பாலை
      சேர்வானை கண்டாள் கொல்லோ. 4.6.3
      55 இரும்பார்ந்த சூலத்தன் ஏந்தியோர்
      வெண்மழுவன் என்கின் றாளாற்
      சுரும்பார்ந்த மலர்க்கொன்றை சுண்ணவெண்
      ணீற்றவனே என்கின் றாளாற்
      பெரும்பால னாகியோர் பிஞ்ஞக
      வேடத்தன் என்கின் றாளாற்
      கரும்பானல் பூக்குங் கழிப்பாலை
      சேர்வானை கண்டாள் கொல்லோ. 4.6.4
      56 பழியிலான் புகழுடையன் பால்நீற்றான்
      ஆனேற்றன் என்கின் றாளால்
      விழியுலாம் பெருந்தடங்கண் இரண்டல்ல
      மூன்றுளவே என்கின் றாளாற்
      சுழியுலாம் வருகங்கை தோய்ந்த
      சடையவனே என்கின் றாளாற்
      கழியுலாஞ் சூழ்ந்த கழிப்பாலை
      சேர்வானை கண்டாள் கொல்லோ. 4.6.5
      57 பண்ணார்ந்த வீணை பயின்ற
      விரலவனே என்கின் றாளால்
      எண்ணார் புரமெரித்த எந்தை
      பெருமானே என்கின் றாளாற்
      பண்ணார் முழவதிர பாடலோ
      டாடலனே என்கின் றாளாற்
      கண்ணார் பூஞ்சோலை கழிப்பாலை
      சேர்வானை கண்டாள் கொல்லோ. 4.6.6
      58 முதிருஞ் சடைமுடிமேல் முழ்கும்
      இளநாகம் என்கின் றாளால்
      அதுகண் டதனருகே தோன்றும்
      இளமதியம் என்கின் றாளாற்
      சதுர்வெண் பளிக்கு குழைகாதின்
      மின்னிடுமே என்கின் றாளாற்
      கதிர்முத்தஞ் சிந்துங் கழிப்பாலை
      சேர்வானை கண்டாள் கொல்லோ. 4.6.7
      59 ஓரோத மோதி உலகம்
      பலிதிரிவான் என்கின் றாளால்
      நீரோத மேற நிமிர்புன்
      சடையானே என்கின் றாளாற்
      பாரோத மேனி பவளம்
      அவனிறமே என்கின் றாளாற்
      காரோத மல்குங் கழிப்பாலை
      சேர்வானை கண்டாள் கொல்லோ. 4.6.8
      60 வானுலா திங்கள் வளர்புன்
      சடையானே என்கின் றாளால்
      ஊனுலாம் வெண்டலைகொண் டூரூர்
      பலிதிரிவான் என்கின் றாளாற்
      தேனுலாங் கோதை திளைக்கு
      திருமார்பன் என்கின் றாளாற்
      கானுலாஞ் சூழ்ந்த கழிப்பாலை
      சேர்வானை கண்டாள் கொல்லோ. 4.6.9
      61 அடர்ப்பரிய இராவணனை அருவரைக்கீழ்
      அடர்த்தவனே என்கின் றாளாற்
      சுடர்ப்பெரிய திருமேனி சுண்ணவெண்
      ணீற்றவனே என்கின் றாளால்
      மடற்பெரிய ஆலின்கீழ் அறம்நால்வர
      கன்றுரைத்தான் என்கின் றாளாற்
      கடற்கருவி சூழ்ந்த கழிப்பாலை
      சேர்வானை கண்டாள் கொல்லோ. 4.6.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - பால்வண்ணநாதர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4. 07 திருஏகம்பம்
      பண் - காந்தாரம்
      திருச்சிற்றம்பலம்
      62 கரவாடும் வன்னெஞ்சர கரியானை கரவார்பால்
      விரவாடும் பெருமானை விடையேறும் வித்தகனை
      அரவாட சடைதாழ அங்கையினில் அனலேந்தி
      இரவாடும் பெருமானை என்மனத்தே வைத்தேனே. 4.7.1
      63 தேனோக்குங் கிளிமழலை உமைகேள்வன் செழும்பவள
      தானோக்கு திருமேனி தழலுருவாஞ் சங்கரனை
      வானோக்கும் வளர்மதிசேர் சடையானை வானோர்க்கும்
      ஏனோர்க்கும் பெருமானை என்மனத்தே வைத்தேனே. 4.7.2
      64 கைப்போது மலர்தூவி காதலித்து வானோர்கள்
      முப்போதும் முடிசாய்த்து தொழநின்ற முதல்வனை
      அப்போது மலர்தூவி ஐம்புலனும் அகத்தடக்கி
      எப்போதும் இனியானை என்மனத்தே வைத்தேனே. 4.7.3
      65 அண்டமாய் ஆதியாய் அருமறையோ டைம்பூத
      பிண்டமாய் உலகுக்கோர் பெய்பொருளாம் பிஞ்ஞகனை
      தொண்டர்தாம் மலர்தூவி சொன்மாலை புனைகின்ற
      இண்டைசேர் சடையானை என்மனத்தே வைத்தேனே. 4.7.4
      66 ஆறேறு சடையானை ஆயிரம்பே ரம்மானை
      பாறேறு படுதலையிற் பலிகொள்ளும் பரம்பரனை
      நீறேறு திருமேனி நின்மலனை நெடுந்தூவி
      ஏறேறும் பெருமானை என்மனத்தே வைத்தேனே. 4.7.5
      67 தேசனை தேசங்கள் தொழநின்ற திருமாலாற்
      பூசனை பூசனைகள் உகப்பானை பூவின்கண்
      வாசனை மலைநிலநீர் தீவளிஆ காசமாம்
      ஈசனை எம்மானை என்மனத்தே வைத்தேனே. 4.7.6
      68 நல்லானை நல்லான நான்மறையோ டாறங்கம்
      வல்லானை வல்லார்கள் மனத்துறையும் மைந்தனை
      சொல்லானை சொல்லார்ந்த பொருளானை துகளேதும்
      இல்லானை எம்மானை என்மனத்தே வைத்தேனே. 4.7.7
      69 விரித்தானை நால்வர்க்கு வெவ்வேறு வேதங்கள்
      புரித்தானை பதஞ்சந்தி பொருளுருவாம் புண்ணியனை
      தரித்தானை கங்கைநீர் தாழ்சடைமேல் மதில்மூன்றும்
      எரித்தானை எம்மானை என்மனத்தே வைத்தேனே. 4.7.8
      70 ஆகம்ப தரவணையான் அயன்அறிதற் கரியானை
      பாகம்பெண் ணாண்பாக மாய்நின்ற பசுபதியை
      மாகம்ப மறையோதும் இறையானை மதிற்கச்சி
      ஏகம்ப மேயானை என்மனத்தே வைத்தேனே. 4.7.9
      71 அடுத்தானை உரித்தானை அருச்சுனற்கு பாசுபதங்
      கொடுத்தானை குலவரையே சிலையா கூரம்பு
      தொடுத்தானை புரமெரி சுனைமல்கு கயிலாயம்
      எடுத்தானை தடுத்தானை என்மனத்தே வைத்தேனே. 4.7.10
      இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - ஏகாம்பரநாதர்
      தேவியார் - காமாட்சியம்மை.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4. 08 சிவனெனுமோசை
      பண் - பியந்தைக்காந்தாரம்
      திருச்சிற்றம்பலம்
      72 சிவனெனு மோசையல்ல தறையோ வுலகிற்
      றிருநின்ற செம்மை யுளதே
      அவனுமோ ரையமுண்ணி யதளாடை யாவ
      ததன்மேலொ ராட லரவங்
      கவணள வுள்ளஉண்கு கரிகாடு கோயில்
      கலனாவ தோடு கருதில்
      அவனது பெற்றிகண்டு மவனீர்மை கண்டு
      மகநேர்வர் தேவ ரவரே. 4.8.1
      73 விரிகதிர் ஞாயிறல்லர் மதியல்லர் வேத
      விதியல்லர் விண்ணு நிலனு
      திரிதரு வாயுவல்லர் செறுதீயு மல்லர்
      தெளிநீரு மல்லர் தெரியில்
      அரிதரு கண்ணியாளை ஒருபாக மாக
      அருள்கார ணத்தில் வருவார்
      எரியர வாரமார்பர் இமையாரு மல்லர்
      இமைப்பாரு மல்லர் இவரே. 4.8.2
      74 தேய்பொடி வெள்ளைபூசி யதன்மேலோர் திங்கள்
      திலகம் பதித்த நுதலர்
      காய்கதிர் வேலைநீல ஒளிமா மிடற்றர்
      கரிகாடர் காலோர் கழலர்
      வேயுட னாடுதோளி அவள்விம்ம வெய்ய
      மழுவீசி வேழவுரி போர
      தேயிவ ராடுமாறும் இவள்காணு மாறும்
      இதுதா னிவர்க்கோ ரியல்பே. 4.8.3
      75 வளர்பொறி யாமைபுல்கி வளர்கோதை வைகி
      வடிதோலும் நூலும் வளர
      கிளர்பொறி நாகமொன்று மிளிர்கின்ற மார்பர்
      கிளர்காடு நாடு மகிழ்வர்
      நளிர்பொறி மஞ்ஞையன்ன தளிர்போன்ற சாய
      லவள்தோன்று வாய்மை பெருகி
      குளிர்பொறி வண்டுபாடு குழலா லொருத்தி
      யுளள்போல் குலாவி யுடனே. 4.8.4
      76 உறைவது காடுபோலு முரிதோ லுடுப்பர்
      விடையூர்வ தோடு கலனா
      இறையிவர் வாழும்வண்ண மிதுவேலு மீச
      ரொருபா லிசைந்த தொருபால்
      பிறைநுதல் பேதைமாதர் உமையென்னு நங்கை
      பிறழ்பாட நின்று பிணைவான்
      அறைகழல் வண்டுபாடும் அடிநீழ லாணை
      கடவா தமர ருலகே. 4.8.5
      77 கணிவளர் வேங்கையோடு கடிதிங்கள் கண்ணி
      கழல்கால் சிலம்ப அழகார்
      அணிகிள ராரவெள்ளை தவழ்சுண்ண வண்ண
      மியலா ரொருவ ரிருவர்
      மணிகிளர் மஞ்ஞையால மழையாடு சோலை
      மலையான் மகட்கு மிறைவர்
      அணிகிள ரன்னவண்ணம் அவள் வண்ணவண்ணம்
      அவர்வண்ண வண்ணம் அழலே. 4.8.6
      78 நகைவலர் கொன்றைதுன்று நகுவெண் டலையர்
      நளிர்கங்கை தங்கு முடியர்
      மிகைவளர் வேதகீத முறையோடும் வல்ல
      கறைகொள் மணிசெய் மிடறர்
      முகைவளர் கோதைமாதர் முனிபாடு மாறு
      மெரியாடு மாறு மிவர்கை
      பகைவளர் நாகம்வீசி மதியங்கு மாறு
      மிதுபோலும் ஈச ரியல்பே. 4.8.7
      79 ஒளிவளர் கங்கைதங்கு மொளிமா லயன்ற
      னுடல்வெந்து வீய சுடர்நீ
      றணிகிள ராரவெள்ளை தவழ்சுண்ண வண்ணர்
      தமியா ரொருவ ரிருவர்
      களிகிளர் வேடமுண்டோ ர் கடமா வுரித்த
      உடைதோல் தொடுத்த கலனார்
      அணிகிள ரன்னதொல்லை யவள்பாக மாக
      எழில்வேத மோது மவரே. 4.8.8
      80 மலைமட மங்கையோடும் வடகங்கை நங்கை
      மணவாள ராகி மகிழ்வர்
      தலைகல னாகவுண்டு தனியே திரிந்து
      தவவாண ராகி முயல்வர்
      விலையிலி சாந்தமென்று வெறிநீறு பூசி
      விளையாடும் வேட விகிர்தர்
      அலைகடல் வெள்ளமுற்று மலற கடைந்த
      அழல்நஞ்ச முண்ட வவரே. 4.8.9
      81 புதுவிரி பொன்செயோலை யொருகாதோர் காது
      சுரிசங்க நின்று புரள
      விதிவிதி வேதகீத மொருபாடு மோத
      மொருபாடு மெல்ல நகுமால்
      மதுவிரி கொன்றைதுன்று சடைபாக மாதர்
      குழல்பாக மாக வருவர்
      இதுஇவர் வண்ணவண்ணம் இவள்வண்ண வண்ணம்
      எழில்வண்ண வண்ண மியல்பே. 4.8.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4. 9 திருஅங்கமாலை
      பண் - சாதாரி
      திருச்சிற்றம்பலம்
      82 தலையே நீவணங்காய் - தலை
      மாலை தலைக்கணிந்து
      தலையா லேபலி தேரு தலைவனை
      தலையே நீவணங்காய். 4.9.1
      83 கண்காள் காண்மின்களோ - கடல்
      நஞ்சுண்ட கண்டன்றன்னை
      எண்டோ ள் வீசிநின் றாடும் பிரான்றன்னை
      கண்காள் காண்மின்களோ. 4.9.2
      84 செவிகாள் கேண்மின்களோ - சிவன்
      எம்மிறை செம்பவள
      எரிபோல் மேனிப்பி ரான்றிறம் எப்போதுஞ்
      செவிகள் கேண்மின்களோ. 4.9.3
      85 மூக்கே நீமுரலாய் - முது
      காடுறை முக்கணனை
      வாக்கே நோக்கிய மங்கை மணாளனை
      மூக்கே நீமுரலாய். 4.9.4
      86 வாயே வாழ்த்துகண்டாய் - மத
      யானை யுரிபோர்த்து
      பேய்வாழ் காட்டக தாடும் பிரான்றன்னை
      வாயே வாழ்த்துகண்டாய். 4.9.5
      87 நெஞ்சே நீநினையாய் - நிமிர்
      புன்சடை நின்மலனை
      மஞ்சா டும்மலை மங்கை மணாளனை
      நெஞ்சே நீநினையாய். 4.9.6
      88 கைகாள் கூப்பித்தொழீர் - கடி
      மாமலர் தூவிநின்று
      பைவா பாம்பரை யார்த்த பரமனை
      கைகள் கூப்பித்தொழீர். 4.9.7
      89 ஆக்கை யாற்பயனென் - அரன்
      கோயில் வலம்வந்து
      பூக்கை யாலட்டி போற்றி யென்னாதவிவ்
      வாக்கை யாற்பயனென். 4.9.8
      90 கால்க ளாற்பயனென் - கறை
      கண்ட னுறைகோயில்
      கோல கோபுர கோகர ணஞ்சூழா
      கால்க ளாற்பயனென். 4.9.9
      91 உற்றா ராருளரோ - உயிர்
      கொண்டு போம்பொழுது
      குற்றா லத்துறை கூத்தனல் லால்ந
      குற்றார் ஆருளரோ. 4.9.10
      92 இறுமா திருப்பன்கொலோ - ஈசன்
      பல்கண தெண்ணப்பட்டு
      சிறுமா னேந்திதன் சேவடி கீழ்ச்சென்றங்
      கிறுமா திருப்பன்கொலோ. 4.9.11
      93 தேடி கண்டுகொண்டேன் - திரு
      மாலொடு நான்முகனு
      தேடி தேடொணா தேவனை என்னுளே
      தேடி கண்டுகொண்டேன். 4.9.12
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4. 10 திருக்கெடிலவாணர்
      பண் - காந்தாரம்
      திருச்சிற்றம்பலம்
      94 முளைக்கதிர் இளம்பிறை மூழ்க வெள்ளநீர்
      வளைத்தெழு சடையினர் மழலை வீணையர்
      திளைத்ததோர் மான்மழு கையர் செய்யபொன்
      கிளைத்துழி தோன்றிடுங் கெடில வாணரே. 4.10.1
      95 ஏறினர் ஏறினை ஏழை தன்னொரு
      கூறினர் வேதம்
      ஆறினர் ஆறிடு சடையர் பக்கமுங்
      கீறின வுடையினர் கெடில வாணரே. 4.10.2
      96 விடந்திகழ் கெழுதரு மிடற்றர் வெள்ளைநீ
      றுடம்பழ கெழுதுவர் முழுதும் வெண்ணிலா
      படந்தழ கெழுதரு சடையிற் பாய்புனல்
      கிடந்தழ கெழுதிய கெடில வாணரே. 4.10.3
      97 விழுமணி அயிலெயிற் றம்பு வெய்யதோர்
      கொழுமணி நெடுவரை கொளுவி கோட்டினார்
      செழுமணி மிடற்றினர் செய்யர் வெய்யதோர்
      கெழுமணி அரவினர் கெடில வாணரே. 4.10.4
      98 குழுவினர் தொழுதெழும் அடியர் மேல்வினை
      தழுவின கழுவுவர் பவள மேனியர்
      மழுவினர் மான்மறி கையர் மங்கையை
      கெழுவின யோகினர் கெடில வாணரே. 4.10.5
      99 அங்கையில் அனலெரி யேந்தி யாறெனும்
      மங்கையை சடையிடை மணப்பர் மால்வரை
      நங்கையை பாகமு நயப்பர் தென்றிசை
      கெங்கைய தெனப்படுங் கெடில வாணரே. 4.10.6
      100 கழிந்தவர் தலைகல னேந்தி காடுறை
      திழிந்தவ ரொருவரென் றெள்க வாழ்பவர்
      வழிந்திழி மதுகர மிழற்ற மந்திகள்
      கிழிந்ததேன் நுகர்தருங் கெடில வாணரே. 4.10.7
      101 கிடந்தபாம் பருகுகண் டரிவை பேதுற
      கிடந்தபாம் பவளையோர் மயிலென் றையுற
      கிடந்தநீர சடைமிசை பிறையும் ஏங்கவே
      கிடந்துதான் நகுதலை கெடில வாணரே. 4.10.8
      102 வெறியுறு விரிசடை புரள வீசியோர்
      பொறியுறு புலியுரி யரைய தாகவும்
      நெறியுறு குழலுமை பாக மாகவுங்
      கிறிபட உழிதர்வர் கெடில வாணரே. 4.10.9
      103 பூண்டதோர் அரக்கனை பொருவில் மால்வரை
      தூண்டுதோ ளவைபட அடர்த்த தாளினார்
      ஈண்டுநீர கமலவாய் மேதி பாய்தர
      கீண்டுதேன் சொரிதருங் கெடில வாணரே. 4.10.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4. 11 நமச்சிவாயப்பதிகம்
      பண் - காந்தாரம்
      திருச்சிற்றம்பலம்
      104 சொற்றுணை வேதியன் சோதி வானவன்
      பொற்றுணை திருந்தடி பொருந்த கைதொழ
      கற்றுணை பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
      நற்றுணை யாவது நமச்சி வாயவே. 4.11.1
      105 பூவினு கருங்கலம் பொங்கு தாமரை
      ஆவினனு கருங்கலம் அரனஞ் சாடுதல்
      கோவினு கருங்கலங் கோட்ட மில்லது
      நாவினு கருங்கலம் நமச்சி வாயவே. 4.11.2
      106 விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
      உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்
      பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை
      நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே. 4.11.3
      107 இடுக்கண்ப டிருக்கினும் இரந்தி யாரையும்
      விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம்
      அடுக்கற்கீழ கிடக்கினு மருளின் நாமுற்ற
      நடுக்கத்தை கெடுப்பது நமச்சி வாயவே. 4.11.4
      108 வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம்
      அந்தணர கருங்கலம் அருமறை யாறங்க
      திங்களு கருங்கல திகழு நீண்முடி
      நங்களு கருங்கலம் நமச்சி வாயவே. 4.11.5
      109 சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்
      நலமிலன் நாடொறு நல்கு வான்நலன்
      குலமில ராகிலுங் குலத்திற் கேற்பதோர்
      நலமி கொடுப்பது நமச்சி வாயவே. 4.11.6
      110 வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள்
      கூடினார் அந்நெறி கூடி சென்றலும்
      ஓடினே னோடிச்சென் றுருவங் காண்டலும்
      நாடினேன் நாடிற்று நமச்சி வாயவே. 4.11.7
      111 இல்லக விளக்கது இருள் கெடுப்பது
      சொல்லக விளக்கது சோதி யுள்ளது
      பல்லக விளக்கது பலருங் காண்பது
      நல்லக விளக்கது நமச்சி வாயவே. 4.11.8
      112 முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்
      தன்னெறி யேசர ணாதல் திண்ணமே
      அந்நெறி யேசென்றங் கடைந்த வர்க்கெலாம்
      நன்னெறி யாவது நமச்சி வாயவே. 4.11.9
      113 மாப்பிணை தழுவிய மாதோர் பாகத்தன்
      பூப்பிணை திருந்தடி பொருந்த கைதொழ
      நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்ப
      தேத்தவல் லார்த கிடுக்க ணில்லையே. 4.11.10
      இது சமணர்கள் கற்றூணிற்கட்டி கடலிலே வீழ்த்தினபோது ஓதியருளியது.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4. 12 திருப்பழனம்
      பண் - பழந்தக்கராகம்
      திருச்சிற்றம்பலம்
      114 சொன்மாலை பயில்கின்ற குயிலினங்காள் சொல்லீரே
      பன்மாலை வரிவண்டு பண்மிழற்றும் பழனத்தான்
      முன்மாலை நகுதிங்கள் முகிழ்விளங்கு முடிச்சென்னி
      பொன்மாலை மார்பன்என் புதுநலமுண் டிகழ்வானோ. 4.12.1
      115 கண்டகங்காள் முண்டகங்காள் கைதைகாள் நெய்தல்காள்
      பண்டரங்க வேடத்தான் பாட்டோ வா பழனத்தான்
      வண்டுலா தடமூழ்கி மற்றவனென் தளிர்வண்ணங்
      கொண்டநாள் தானறிவான் குறிக்கொள்ளா தொழிவானோ. 4.12.2
      116 மனைக்காஞ்சி இளங்குருகே மறந்தாயோ மதமுகத்த
      பனைக்கைமா வுரிபோர்த்தான் பலர்பாடும் பழனத்தான்
      நினைக்கின்ற நினைப்பெல்லாம் உரையாயோ நிகழ்வண்டே
      சுனைக்குவளை மலர்க்கண்ணாள் சொற்றூதா சோர்வாளோ.
      மனைக்காஞ்சியென்பது வீட்டுக்கு சமீபத்திலிருக்குங் காஞ்சிமரம். 4.12.3
      117 புதியையாய் இனியையாம் பூந்தென்றால் புறங்காடு
      பதியாவ திதுவென்று பலர்பாடும் பழனத்தான்
      மதியாதார் வேள்விதனை மதித்திட்ட மதிகங்கை
      விதியாளன் என்னுயிர்மேல் விளையாடல் விடுத்தானோ. 4.12.4
      118 மண்பொருந்தி வாழ்பவர்க்கும் மாதீர்த்த வேதியர்க்கும்
      விண்பொருந்து தேவர்க்கும் வீடுபேறாய் நின்றானை
      பண்பொருந்த இசைபாடும் பழனஞ்சேர் அப்பனையென்
      கண்பொருந்தும் போழ்தத்துங் கைவிடநான் கடவேனோ. 4.12.5
      119 பொங்கோத மால்கடலிற் புறம்புறம்போய் இரைதேருஞ்
      செங்கால்வெண் மடநாராய் செயற்படுவ தறியேன்நான்
      அங்கோல வளைகவர்ந்தான் அணிபொழில்சூழ் பழனத்தான்
      தங்கோல நறுங்கொன்றை தாரருளா தொழிவானோ. 4.12.6
      120 துணையார முயங்கிப்போ துறைசேரும் மடநாராய்
      பணையார வாரத்தான் பாட்டோ வா பழனத்தான்
      கணையார இருவிசும்பிற் கடியரணம் பொடிசெய்த
      இணையார மார்பன்என் எழில்நலமுண் டிகழ்வானோ. 4.12.7
      121 கூவைவாய் மணிவரன்றி கொழித்தோடுங் காவிரிப்பூம்
      பாவைவாய் முத்திலங்க பாய்ந்தாடும் பழனத்தான்
      கோவைவாய் மலைமகள்கோன் கொல்லேற்றின் கொடியாடை
      பூவைகாள் மழலைகாள் போகாத பொழுதுளதே.
      கூவைவாய்மணி என்பது பூமியினிடத்தில்
      பொருந்திய முத்துக்கள் - அவையாவன
      யானைக்கொம்பு பன்றிக்கொம்பு நாகம் பசுவின்பல்
      மூங்கிற்கணு கொக்கின்கழுத்து கற்புள்ள
      மாதர்கண்டம் என்னுமிவ்விடங்களி லுண்டாயிருக்கு
      முத்துக்களாம்.
      காவிரிப்பூம்பாவைவாய் முத்து என்பது நீர்முத்து
      எனக்கொள்க. அவை - சங்கு இப்பி மீன் தாமரைமலர்
      என்னு மிவைகளி லுண்டாகு முத்துக்கள். இதனை
      சிறைகொள் நீர்த்தரள திரல்கொணித்திலத்த என
      திருமாளிகைத்தேவர் அருளிச்செய்த திருவிசைப்பா
      2-வது பதிகம் 5-வது திருப்பாடலானுமுணர்க. 4.12.8
      122 புள்ளிமான் பொறியரவம் புள்ளுயர்த்தான் மணிநாக
      பள்ளியான் தொழுதேத்த இருக்கின்ற பழனத்தான்
      உள்ளுவார் வினைதீர்க்கும் என்றுரைப்பர் உலகெல்லாங்
      கள்ளியேன் நான்இவற்கென் கனவளையுங் கடவேனோ. 4.12.9
      123 வஞ்சித்தென் வளைகவர்ந்தான் வாரானே யாயிடினும்
      பஞ்சிக்காற் சிறகன்னம் பரந்தார்க்கும் பழனத்தான்
      அஞ்சிப்போ கலிமெலிய அழலோம்பும் அப்பூதி
      குஞ்சிப்பூ வாய்நின்ற சேவடியாய் கோடியையே. 4.12.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - ஆபத்சகாயர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.13 திருவையாறு
      பண் - பழந்தக்கராகம்
      திருச்சிற்றம்பலம்
      124 விடகிலேன் அடிநாயேன் வேண்டியக்கால் யாதொன்றும்
      இடைகிலேன் அமணர்கள்தம் அறவுறைகே டலமலந்தேன்
      தொடர்கின்றேன் உன்னுடைய தூமலர்ச்சே வடிகாண்பான்
      அடைகின்றேன் ஐயாறர காளாய்நான் உய்ந்தேனே. 4.13.1
      125 செம்பவள திருவுருவர் திகழ்சோதி குழைக்காதர்
      கொம்பமருங் கொடிமருங்கிற் கோல்வளையா ளொருபாகர்
      வம்பவிழும் மலர்க்கொன்றை வளர்சடைமேல் வைத்துகந்த
      அம்பவள ஐயாறர காளாய்நான் உய்ந்தேனே. 4.13.2
      126 நணியானே சேயானே நம்பானே செம்பொன்னின்
      துணியானே தோலானே சுண்ணவெண் ணீற்றானே
      மணியானே வானவர்க்கு மருந்தாகி பிணிதீர்க்கும்
      அணியானே ஐயாறர காளாய்நான் உய்ந்தேனே. 4.13.3
      127 ஊழித்தீ யாய்நின்றாய் உள்குவார் உள்ளத்தாய்
      வாழித்தீ யாய்நின்றாய் வாழ்த்துவார் வாயானே
      பாழித்தீ யாய்நின்றாய் படர்சடைமேற் பனிமதியம்
      ஆழித்தீ ஐயாறார காளாய்நான் உய்ந்தேனே. 4.13.4
      128 சடையானே சடையிடையே தவழுந்தண் மதியானே
      விடையானே விடையேறி புரமெரித்த வித்தகனே
      உடையானே உடைதலைகொண் டூரூருண் பலிக்குழலும்
      அடையானே ஐயாறர காளாய்நான் உய்ந்தேனே. 4.13.5
      129 நீரானே தீயானே நெதியானே கதியானே
      ஊரானே உலகானே உடலானே உயிரானே
      பேரானே பிறைசூடீ பிணிதீர்க்கும் பெருமானென்
      றாராத ஐயாறர காளாய்நான் உய்ந்தேனே. 4.13.6
      130 கண்ணானாய் மணியானாய் கருத்தானாய் அருத்தானாய்
      எண்ணானாய் எழுத்தானாய் எழுத்தினுக்கோர் இயல்பானாய்
      விண்ணானாய் விண்ணிடையே புரமெரித்த வேதியனே
      அண்ணான ஐயாறர காளாய்நான் உய்ந்தேனே.
      அருத்தனாயென்பதற்கு - உண்ணப்படும் பொருள்களாயின
      என பொருள்படுகின்றது. 4.13.7
      131 மின்னானாய் உருமானாய் வேதத்தின் பொருளானாய்
      பொன்னானாய் மணியானாய் பொருகடல்வாய் முத்தானாய்
      நின்னானார் இருவர்க்குங் காண்பரிய நிமிர்சோதி
      அன்னானே ஐயாறர காளாய்நான் உய்ந்தேனே. 4.13.8
      132 முத்திசையும் புனற்பொன்னி மொய்பவளங் கொழித்துந்த
      பத்தர்பலர் நீர்மூழ்கி பலகாலும் பணிந்தேத்த
      எத்திசையும் வானவர்கள் எம்பெருமா னெனஇறைஞ்சும்
      அத்திசையாம் ஐயாறர காளாய்நான் உய்ந்தேனே. 4.13.9
      133 கருவரைசூழ் கடலிலங்கை கோமானை கருத்தழி
      திருவிரலால் உதகரணஞ் செய்துகந்த சிவமூர்த்தி
      பெருவரைசூழ் வையகத்தார் பேர்நந்தி என்றேத்தும்
      அருவரைசூழ் ஐயாறர காளாய்நான் உய்ந்தேனே. 4.13.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.14 தசபுராணம்
      பண் - பழம்பஞ்சுரம்
      திருச்சிற்றம்பலம்
      134 பருவரை யொன்றுசுற்றி அரவங்கை விட்ட
      இமையோர் இரிந்து பயமா
      திருநெடு மால்நிறத்தை அடுவான் விசும்பு
      சுடுவா னெழுந்த விசைபோ
      பெருகிட மற்றிதற்கொர் பிதிகார மொன்றை
      அருளாய் பிரானே எனலும்
      அருள்கொடு மாவிடத்தை எரியாமல் உண்ட
      அவனண்டர் அண்ட ரரசே. 4.14.1
      135 நிரவொலி வெள்ளமண்டி நெடுவண்ட மூட
      நிலநின்று தம்ப மதுவ
      பரமொரு தெய்வமெய்த இதுவொப்ப தில்லை
      யிருபாலு நின்று பணி
      பிரமனு மாலுமேலை முடியோடு பாதம்
      அறியாமை நின்ற பெரியோன்
      பரமுத லாயதேவர் சிவனாய மூர்த்தி
      யவனா நமக்கோர் சரணே. 4.14.2
      136 காலமு நாள்கள்ஊழி படையா முன்ஏக
      உருவாகி மூவர் உருவில்
      சாலவு மாகிமிக்க சமயங்க ளாறின்
      உருவாகி நின்ற தழலோன்
      ஞாலமு மேலைவிண்ணோ டுலகேழு முண்டு
      குறளாயோ ராலின் இலைமேல்
      பாலனு மாயவற்கோர் பரமாய மூர்த்தி
      யவனா நமக்கோர் சரணே. 4.14.3
      137 நீடுயர் மண்ணுவிண்ணும் நெடுவேலை குன்றொ
      டுலகேழு மெங்கு நலி
      சூடிய கையராகி இமையோர் கணங்கள்
      துதியோதி நின்று தொழலும்
      ஓடிய தாருகன்றன் உடலம் பிளந்து
      ஒழியாத கோபம் ஒழிய
      ஆடிய மாநடத்தெ மனலாடி பாதம்
      அவையா நமக்கோர் சரணே. 4.14.4
      138 நிலைவலி இன்றியெங்கும் நிலனோடு விண்ணும்
      நிதனஞ்செய் தோடு புரமூன்
      றலைநலி வஞ்சியோடி அரியோடு தேவர்
      அரணம் புகத்தன் அருளாற்
      கொலைநலி வாளிமூள அரவங்கை நாணும்
      அனல்பாய நீறு புரமா
      மலைசிலை கையிலொல்க வளைவித்த வள்ள
      லவனா நமக்கோர் சரணே. 4.14.5
      139 நீலநன் மேனிசெங்கண் வளைவெள் ளெயிற்ற
      னெரிகேசன் நேடி வருநாள்
      காலைநன் மாலைகொண்டு வழிபாடு செய்யும்
      அளவின்கண் வந்து குறுகி
      பாலனை ஓடவோட பயமெய்து வித்த
      உயிர்வவ்வு பாசம் விடு
      காலனை வீடுசெய்த கழல்போலும் அண்டர்
      தொழுதோது சூடு கழலே. 4.14.6
      140 உயர்தவ மிக்கதக்கன் உயர்வேள்வி தன்னில்
      அவியுண்ண வந்த இமையோர்
      பயமுறு மெச்சனங்கி மதியோனு முற்ற
      படிகண்டு நின்று பயமாய்
      அயனொடு மாலுமெங்க ளறியாமை யாதி
      கமியென் றிறைஞ்சி யகல
      சயமுறு தன்மைகண்ட தழல்வண்ணன் எந்தை
      கழல்கண்டு கொள்கை சரணே. 4.14.7
      141 நலமலி மங்கைநங்கை விளையாடி யோடி
      நயன தலங்கள் கரமா
      உலகினை ஏழுமுற்றும் இருள்மூட மூட
      இருளோட நெற்றி ஒருகண்
      அலர்தர அஞ்சிமற்றை நயனங்கை விட்டு
      மடவாள் இறைஞ்ச மதிபோல்
      அலர்தரு சோதிபோல அலர்வித்த முக்கண்
      அவனா நமக்கோர் சரணே. 4.14.8
      142 கழைபடு காடுதென்றல் குயில்கூவ அஞ்சு
      கணையோன் அணைந்து புகலும்
      மழைவடி வண்ணன்எண்ணி மகவோனை விட்ட
      மலரான தொட்ட மதனன்
      எழில்பொடி வெந்துவீழ இமையோர் கணங்கள்
      எரியென் றிறைஞ்சி யகல
      தழல்படு நெற்றிஒற்றை நயனஞ் சிவந்த
      தழல்வண்ணன் எந்தை சரணே. 4.14.9
      143 தடமலர் ஆயிரங்கள் குறைவொன்ற தாக
      நிறைவென்று தன்க ணதனால்
      உடன்வழி பாடுசெய்த திருமாலை யெந்தை
      பெருமான் உகந்து மிகவும்
      சுடரடி யான்முயன்று சுழல்வி தரக்கன்
      இதயம் பிளந்த கொடுமை
      அடல்வலி ஆழியாழி யவனு களித்த
      அவனா நமக்கோர் சரணே. 4.14.10
      144 கடுகிய தேர்செலாது கயிலாய மீது
      கருதேலுன் வீரம் ஒழிநீ
      முடுகுவ தன்றுதன்ம மெனநின்று பாகன்
      மொழிவானை நன்று முனியா
      விடுவிடு வென்றுசென்று விரைவுற் றரக்கன்
      வரையுற் றெடுக்க முடிதோள்
      நெடுநெடு இற்றுவீழ விரலுற்ற பாதம்
      நினைவுற்ற தென்றன் மனனே. 4.14.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.15 பாவநாசத்திருப்பதிகம்
      பண் - பழம்பஞ்சுரம்
      திருச்சிற்றம்பலம்
      145 பற்றற் றார்சேற் பழம்பதியை
      பாசூர் நிலாய பவளத்தை
      சிற்றம் பலத்தெ திகழ்கனியை
      தீண்டற் கரிய திருவுருவை
      வெற்றி யூரில் விரிசுடரை
      விமலர் கோனை திரைசூழ்ந்த
      ஒற்றி யூரெம் உத்தமனை
      உள்ள துள்ளே வைத்தேனே.
      வெற்றியூரென்பது வைப்புத்தலங்களிலொன்று. 4.15.1
      146 ஆனை காவில் அணங்கினை
      ஆரூர் நிலாய அம்மானை
      கான பேரூர கட்டியை
      கானூர் முளைத்த கரும்பினை
      வான பேரார் வந்தேத்தும்
      வாய்மூர் வாழும் வலம்புரியை
      மான கயிலை மழகளிற்றை
      மதியை சுடரை மறவேனே. 4.15.2
      147 மதியங் கண்ணி ஞாயிற்றை
      மயக்க தீர்க்கும் மருந்தினை
      அதிகை மூதூர் அரசினை
      ஐயா றமர்ந்த ஐயனை
      விதியை புகழை வானோர்கள்
      வேண்டி தேடும் விளக்கினை
      நெதியை ஞான கொழுந்தினை
      நினைந்தேற் குள்ளம் நிறைந்ததே. 4.15.3
      148 புறம்ப யத்தெம் முத்தினை
      புகலூர் இலங்கு பொன்னினை
      உறந்தை யோங்கு சிராப்பள்ளி
      உலகம் விளக்கு ஞாயிற்றை
      கறங்கு மருவி கழுக்குன்றிற்
      காண்பார் காணுங் கண்ணானை
      அறஞ்சூழ் அதிகை வீரட்ட
      தரிமான் ஏற்றை அடைந்தேனே.
      உறந்தையென்பது உறையூர். 4.15.4
      149 கோல காவிற் குருமணியை
      குடமூ குறையும் விடமுணியை
      ஆலங் காட்டி லந்தேனை
      அமரர் சென்னி யாய்மலரை
      பாலிற் றிகழும் பைங்கனியை
      பரா துறையெம் பசும்பொன்னை
      சூல தானை துணையிலியை
      தோளை குளிர தொழுதேனே.
      குடமூக்கென்பது கும்பகோணம். 4.15.5
      150 மருக லுறையுமா ணிக்கத்தை
      வலஞ் சுழியின் மாலையை
      கருகா வூரிற் கற்பகத்தை
      காண்டற் கரிய கதிரொளியை
      பெருவே ளூரெம் பிறப்பிலியை
      பேணு வார்கள் பிரிவரிய
      திருவாஞ் சியத்தெஞ் செல்வனை
      சிந்தை யுள்ளே வைத்தேனே. 4.15.6
      151 எழிலார் இராச சிங்கத்தை
      இராமே சுரத்தெம் எழிலேற்றை
      குழலார் கோதை வரைமார்பிற்
      குற்றா லத்தெங் கூத்தனை
      நிழலார் சோலை நெடுங்களத்து
      நிலாய நித்த மணாளனை
      அழலார் வண்ண தம்மானை
      அன்பி லணைத்து வைத்தேனே. 4.15.7
      152 மாலை தோன்றும் வளர்மதியை
      மறைக்கா டுறையும் மணாளனை
      ஆலை கரும்பி னின்சாற்றை
      அண்ணா மலையெம் அண்ணலை
      சோலை துருத்தி நகர்மேய
      சுடரிற் றிகழு துளக்கிலியை
      மேலை வானோர் பெருமானை
      விருப்பால் விழுங்கி யிட்டேனே. 4.15.8
      153 சோற்று துறையெஞ் சோதியை
      துருத்தி மேய தூமணியை
      ஆற்றிற் பழன தம்மானை
      ஆல வாயெம் மருமணியை
      நீற்றிற் பொலிந்த நிமிர்திண்டோ ள்
      நெய்த்தா னத்தெ நிலாச்சுடரை
      தோற்ற கடலை அடலேற்றை
      தோளை குளிர தொழுதேனே. 4.15.9
      154 புத்தூ ருறையும் புனிதனை
      பூவ ணத்தெம் போரேற்றை
      வித்தாய் மிழலை முளைத்தானை
      வேள்வி குடியெம் வேதியனை
      பொய்த்தார் புரமூன் றெரித்தானை
      பொதியில் மேய புராணனை
      வைத்தேன் என்றன் மனத்துள்ளே
      மாத்தூர் மேய மருந்தையே.
      மாத்தூரென்பது - திருவாமாத்தூர். 4.15.10
      155 முந்தி தானே முளைத்தானை
      மூரி வெள்ளே றூர்ந்தானை
      அந்தி செவ்வான் படியானை
      அரக்க னாற்றல் அழித்தானை
      சிந்தை வெள்ள புனலாட்டி
      செஞ்சொன் மாலை யடிசேர்த்தி
      எந்தை பெம்மான் என்னெம்மான்
      என்பார் பாவ நாசமே. 4.15.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4. 16 திருப்புகலூர்
      பண் - இந்தளம்
      திருச்சிற்றம்பலம்
      156 செய்யர் வெண்ணூலர் கருமான் மறிதுள்ளுங்
      கையர் கனைகழல் கட்டிய காலினர்
      மெய்யர் மெய்ந்நின் றவர்க்கல்லா தவர்க்கென்றும்
      பொய்யர் புகலூர புரிசடை யாரே. 4.16.1
      157 மேகநல் ஊர்தியர் மின்போல் மிளிர்சடை
      பாக மதிநுத லாளையோர் பாகத்தர்
      நாக வளையினர்
      போகர் புகலூர புரிசடை யாரே. 4.16.2
      158 பெருந்தாழ் சடைமுடி மேற்பிறை சூடி
      கருந்தாழ் குழலியு தாமுங் கலந்து
      திருந்தா மனமுடை யார்திற தென்றும்
      பொருந்தார் புகலூர புரிசடை யாரே. 4.16.3
      159 அக்கார் அணிவடம் ஆகத்தர் நாகத்தர்
      நக்கார் இளமதி கண்ணியர் நாடொறும்
      உக்கார் தலைபிடி துன்பலி கூர்தொறும்
      புக்கார் புகலூர புரிசடை யாரே. 4.16.4
      160 ஆர்த்தார் உயிரடும் அந்தகன் றன்னுடல்
      பேர்த்தார் பிறைநுதற் பெண்ணின்நல் லாள்உட
      கூர்த்தார் மருப்பிற் கொலைக்களிற் றீருரி
      போர்த்தார் புகலூர புரிசடை யாரே. 4.16.5
      161 தூமன் சுறவ துதைந்த கொடியுடை
      காமன் கணைவலங் காய்ந்தமு கண்ணினர்
      சேம நெறியினர் சீரை யுடையவர்
      பூமன் புகலூர புரிசடை யாரே. 4.16.6
      162 உதைத்தார் மறலி உருளவோர் காலாற்
      சிதைத்தார் திகழ்தக்கன் செய்தநல் வேள்வி
      பதைத்தார் சிரங்கரங் கொண்டுவெய் யோன்கண்
      புதைத்தார் புகலூர புரிசடை யாரே. 4.16.7
      163 கரிந்தார் தலையர் கடிமதில் மூன்று
      தெரிந்தார் கணைகள் செழுந்தழ லுண்ண
      விரிந்தார் சடைமேல் விரிபுனற் கங்கை
      புரிந்தார் புகலூர புரிசடை யாரே. 4.16.8
      164 ஈண்டார் அழலி னிருவருங் கைதொழ
      நீண்டார் நெடுந்தடு மாற்ற நிலையஞ்ச
      மாண்டார்தம் என்பு மலர்க்கொன்றை மாலையும்
      பூண்டார் புகலூர புரிசடை யாரே. 4.16.9
      165 கறுத்தார் மணிகண்டங் கால்விர லூன்றி
      இறுத்தார் இலங்கையர் கோன்முடி பத்தும்
      அறுத்தார் புலனைந்தும் ஆயிழை பாகம்
      பொறுத்தார் புகலூர புரிசடை யாரே. 4.16.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - அக்கினீசுவரர்
      தேவியார் - கருந்தார்குழலியம்மை.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.17 திருவாரூர் - அரநெறி
      பண் - இந்தளம்
      திருச்சிற்றம்பலம்
      166 எத்தீ புகினும் எமக்கொரு தீதிலை
      தெத்தே யெனமுரன் றெம்முள் உழிதர்வர்
      முத்தீ யனையதோர் மூவிலை வேல்பிடி
      தத்தீ நிறத்தார் அரநெறி யாரே. 4.17.1
      167 வீரமும் பூண்பர் விசயனொ டாயதோர்
      தாரமும் பூண்பர் தமக்கன்பு பட்டவர்
      பாரமும் பூண்பர்நற் பைங்கண் மிளிரர
      வாரமும் பூண்பர் அரநெறி யாரே. 4.17.2
      168 தஞ்சவண் ணத்தர் சடையினர் தாமுமோர்
      வஞ்சவண் ணத்தர்வண் டார்குழ லாளொடு
      துஞ்சவண் ணத்தர்துஞ் சாதகண் ணார்தொழும்
      அஞ்சவண் ணத்தர் அரநெறி யாரே. 4.17.3
      169 விழித்தனர் காமனை வீழ்தர விண்ணின்
      றிழித்தனர் கங்கையை யேத்தினர் பாவங்
      கழித்தனர் கல்சூழ் கடியரண் மூன்றும்
      அழித்தனர் ஆரூர் அரநெறி யாரே. 4.17.4
      170 துற்றவர் வெண்டலை யிற்சுருள் கோவண
      தற்றவர் தம்வினை யானவெல் லாமற
      அற்றவர் ஆரூர் அறநெறி கைதொழ
      உற்றவர் தாமொளி பெற்றனர் தாமே. 4.17.5
      171 கூடர வத்தர் குரற்கிண் கிணியடி
      நீடர வத்தர்முன் மாலை யிடையிருள்
      பாடர வத்தர் பணமஞ்சு பைவிரி
      தாடர வத்தர் அரநெறி யாரே. 4.17.6
      172 கூடவல் லார்குறி பில்லுமை யாளொடும்
      பாடவல் லார்பயின் றந்தியுஞ் சந்தியும்
      ஆடவல் லார்திரு வாரூர் அரநெறி
      நாடவல் லார்வினை வீடவல் லாரே. 4.17.7
      173 பாலை நகுபனி வெண்மதி பைங்கொன்றை
      மாலையுங் கண்ணியு மாவன சேவடி
      காலையு மாலையுங் கைதொழு வார்மனம்
      ஆலயம் ஆரூர் அரநெறி யார்க்கே. 4.17.8
      174 முடிவண்ணம் வானமின் வண்ணந்தம் மார்பிற்
      பொடிவண்ண தம்புக ழூர்தியின் வண்ணம்
      படிவண்ணம் பாற்கடல் வண்ணஞ்செஞ் ஞாயி
      றடிவண்ணம் ஆரூர் அரநெறி யார்க்கே. 4.17.9
      175 பொன்னவில் புன்சடை யானடி யின்னிழல்
      இன்னருள் சூடியெள் காதுமி ராப்பகல்
      மன்னவர் கின்னரர் வானவர் தாந்தொழும்
      அன்னவர் ஆரூர் அரநெறி யாரே. 4.17.10
      176 பொருள்மன் னனைப்பற்றி புட்பகங் கொண்ட
      மருள்மன் னனையெற்றி வாளுட னீந்து
      கருள்மன் னுகண்டங் கறுக்க நஞ்சுண்ட
      அருள்மன்னர் ஆரூர் அரநெறி யாரே. 4.17.11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - வன்மீகநாதர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.18 விடந்தீர்த்ததிருப்பதிகம்
      பண் - இந்தளம்
      திருச்சிற்றம்பலம்
      177 ஒன்றுகொ லாமவர் சிந்தை யுயர்வரை
      ஒன்றுகொ லாமுய ரும்மதி சூடுவர்
      ஒன்றுகொ லாமிடு வெண்டலை கையது
      ஒன்றுகொ லாமவர் ஊர்வது தானே. 4.18.1
      178 இரண்டுகொ லாமிமை யோர்தொழு பாதம்
      இரண்டுகொ லாமிலங் குங்குழை பெண்ணாண்
      இரண்டுகொ லாமுரு வஞ்சிறு மான்மழு
      இரண்டுகொ லாமவர் எய்தின தாமே. 4.18.2
      179 மூன்றுகொ லாமவர் கண்ணுத லாவன
      மூன்றுகொ லாமவர் சூலத்தின் மொய்யிலை
      மூன்றுகொ லாங்கணை கையது வில்நாண்
      மூன்றுகொ லாம்புர மெய்தன தாமே. 4.18.3
      180 நாலுகொ லாமவர் தம்முக மாவன
      நாலுகொ லாஞ்சன னம்முதற் றோற்றமும்
      நாலுகொ லாமவர் ஊர்தியின் பாதங்கள்
      நாலுகொ லாமறை பாடின தாமே. 4.18.4
      181 அஞ்சுகொ லாமவர் ஆடர வின்படம்
      அஞ்சுகொ லாமவர் வெல்புல னாவன
      அஞ்சுகொ லாமவர் காயப்ப டான்கணை
      அஞ்சுகொ லாமவர் ஆடின தாமே. 4.18.5
      182 ஆறுகொ லாமவர் அங்கம் படைத்தன
      ஆறுகொ லாமவர் தம்மக னார்முகம்
      ஆறுகொ லாமவர் தார்மிசை வண்டின்கால்
      ஆறுகொ லாஞ்சுவை யாக்கின தாமே. 4.18.6
      183 ஏழுகொ லாமவர் ஊழி படைத்தன
      ஏழுகொ லாமவர் கண்ட இருங்கடல்
      ஏழுகொ லாமவர் ஆளு முலகங்கள்
      ஏழுகொ லாமிசை யாக்கின தாமே. 4.18.7
      184 எட்டுக்கொ லாமவர் ஈறில் பெருங்குணம்
      எட்டுக்கொ லாமவர் சூடு மினமலர்
      எட்டுக்கொ லாமவர் தோளிணை யாவன
      எட்டுக்கொ லாந்திசை யாக்கின தாமே. 4.18.8
      185 ஒன்பது போலவர் வாசல் வகுத்தன
      ஒன்பது போலவர் மார்பினில் நூலிழை
      ஒன்பது போலவர் கோல குழற்சடை
      ஒன்பது போலவர் பாரிட தானே. 4.18.9
      186 பத்துக்கொ லாமவர் பாம்பின்கண் பாம்பின்பல்
      பத்துக்கொ லாமெயி றுந்நெரி துக்கன
      பத்துக்கொ லாமவர் காயப்ப டான்றலை
      பத்துக்கொ லாமடி யார்செய்கை தானே. 4.18.10
      இது அப்பூதிநாயனார் புத்திரரை தீண்டியவிடம்
      நீங்கும்படி அருளிச்செய்தது.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.19 திருவாரூர்
      பண் - சீகாமரம்
      திருச்சிற்றம்பலம்
      187 சூல படையானை சூழாக வீழருவி
      கோலத்தோ குங்குமஞ்சேர் குன்றெ டுடையானை
      பாலொத்த மென்மொழியாள் பங்கனை பாங்காய
      ஆலத்தின் கீழானை நான்கண்ட தாரூரே. 4.19.1
      188 பக்கமே பாரிடங்கள் சூழ படுதலையிற்
      புக்கவூர பிச்சையேற் றுண்டு பொலிவுடைத்தா
      கொக்கிறகின் தூவல் கொடியெடுத்த கோவணத்தோ
      டக்கணிந்த அம்மானை நான்கண்ட தாரூரே. 4.19.2
      189 சேய உலகமுஞ் செல்சார்வு மானானை
      மாயப்போர் வல்லானை மாலைதாழ் மார்பனை
      வேயொத்த தோளியர்தம் மென்முலைமேல் தண்சாந்தின்
      ஆ திடையானை நான்கண்ட தாரூரே. 4.19.3
      190 ஏறேற்ற மாவேறி எண்கணமும் பின்படர
      மாறேற்றார் வல்லரணஞ் சீறி மயானத்தின்
      நீறேற்ற மேனியானாய் நீள்சடைமேல் நீர்ததும்ப
      ஆறேற்ற அந்தணனை நான்கண்ட தாரூரே. 4.19.4
      191 தாங்கோல வெள்ளெலும்பு பூண்டுதம் ஏறேறி
      பாங்கான வூர்க்கெல்லாஞ் செல்லும் பரமனார்
      தேங்காவி நாறு திருவாரூர தொன்னகரில்
      பூங்கோயி லுள்மகிழ்ந்து போகா திருந்தாரே. 4.19.5
      192 எம்பட்டம் பட்ட முடையானை யேர்மதியின்
      நும்பட்டஞ் சேர்ந்த நுதலானை அந்திவா
      செம்ப டுடுத்து சிறுமா னுரியாடை
      அம்ப டசைத்தானை நான்கண்ட தாரூரே. 4.19.6
      193 போழொத்த வெண்மதியஞ் சூடி பொலிந்திலங்கு
      வேழ துரிபோர்த்தான் வெள்வளையாள் தான்வெருவ
      ஊழித்தீ யன்னானை ஓங்கொலிமா பூண்டதோர்
      ஆழித்தேர் வித்தகனை நான்கண்ட தாரூரே. 4.19.7
      194 வஞ்சனையா ரார்பாடுஞ் சாராத மைந்தனை
      துஞ்சிருளில் ஆடல் உகந்தானை தன்தொண்டர்
      நெஞ்சிருள் கூரும் பொழுது நிலாப்பாரி
      தஞ்சுடராய் நின்றானை நான்கண்ட தாரூரே. 4.19.8
      195 காரமுது கொன்றை கடிநாறு தண்ணென்ன
      நீரமுது கோதையோ டாடிய நீள்மார்பன்
      பேரமுத முண்டார்கள் உ பெருங்கடல்நஞ்
      சாரமுதா வுண்டானை நான்கண்ட தாரூரே. 4.19.9
      196 தாட வுடுக்கையன் தாமரைப்பூஞ் சேவடியன்
      கோடலா வேடத்தன் கொண்டதோர் வீணையினான்
      ஆடரவ கிண்கிணிக்கால் அன்னானோர் சேடனை
      ஆடுந்தீ கூத்தனை நான்கண்ட தாரூரே. 4.19.10
      197 மஞ்சாடு குன்றடர வூன்றி மணிவிரலாற்
      றுஞ்சாப்போர் வாளரக்கன் றோள்நெரி கண்குருதி
      செஞ்சா தணிவித்து தன்மார்பில் பால்வெண்ணீற்
      றஞ்சா தணிந்தானை நான்கண்ட தாரூரே. 4.19.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.20 திருவாரூர்
      பண் - சீகாமரம்
      திருச்சிற்றம்பலம்
      198 காண்டலேகரு தாய்நினைந்திரு
      தேன்மனம்புகு தாய்கழலடி
      பூண்டுகொண் டொழிந்தேன்
      புறம்போயி னாலறையோ
      ஈண்டுமாடங்கள் நீண்டமாளிகை
      மேலெழுகொடி வானிளம்மதி
      தீண்டிவ துலவு
      திருவாரூ ரம்மானே. 4.20.1
      199 கடம்படந்நட மாடினாய்களை
      கண்ணெனக்கொரு காதல்செய்தடி
      ஒடுங்கி வந்தடை
      தேனொழிப்பாய் பிழைப்பவெல்லாம்
      முடங்கிறால்முது நீர்மலங்கிள
      வாளைசெங்கயல் சேல்வரால்களி
      றடைந்த தண்கழனி
      அணியாரூ ரம்மானே. 4.20.2
      200 அருமணித்தடம் பூண்முலை
      அரம்பையரொ டருளிப்பாடியர்
      உரிமையிற் றொழுவார்
      உத்திர பல்கணத்தார்
      விரிசடைவிர திகளந்தணர்
      சைவர்பாசுப தர்கபாலிகள்
      தெருவினிற் பொலியு
      திருவாரூ ரம்மானே. 4.20.3
      201 பூங்கழல்தொழு தும்பரவியும்
      புண்ணியாபுனி தாவுன்பொற்கழல்
      ஈங்கிருக்க பெற்றேன்
      என்னகுறை யுடையேன்
      ஓங்குதெங்கிலை யார்கமுகிப
      வாழைமாவொடு மாதுளம்பல
      தீங்கனி சிதறு
      திருவாரூ ரம்மானே. 4.20.4
      202 நீறுசேர்செழு மார்பினாய்நிரம்
      பாமதியொடு நீள்சடையிடை
      ஆறுபாய வைத்தாய்
      அடியே அடைந்தொழிந்தேன்
      ஏறிவண்டொடு தும்பியஞ்சிற
      கூன்றவிண்ட மலரிதழ்வழி
      தேறல்பா தொழுகு
      திருவாரூ ரம்மானே. 4.20.5
      203 அளித்துவந்தடி கைதொழுமவர்
      மேல்வினைகெடு மென்றிவையகங்
      களித்துவ துடனே
      கலந்தாட காதலரா
      குளித்துமூழ்கியு தூவியுங்குடை
      தாடுகோதையர் குஞ்சியுள்புக
      தெளிக்கு தீர்த்தமறா
      திருவாரூ ரம்மானே. 4.20.6
      204 திரியுமூவெயில் தீயெழச்சிலை
      வாங்கிநின்றவ னேயென்சிந்தையு
      பிரியுமா றெங்ஙனே
      பிழைத்தேயும் போகலொட்டேன்
      பெரியசெந்நெற் பிரம்புரிகெந்த
      சாலிதிப்பிய மென்றிவையக
      தரியு தண்கழனி
      யணியாரூ ரம்மானே. 4.20.7
      205 பிறத்தலும்பிற தாற்பிணிப்பட
      வாய்ந்தசைந்துட லம்புகுந்துநின்
      றிறக்குமா றுளதே
      இழித்தேன் பிறப்பினைநான்
      அறத்தையேபுரி தமனத்தனாய்
      ஆர்வச்செற்றக்கு ரோதநீக்கியுன்
      திறத்தனாய் ஒழிந்தேன்
      திருவாரூ ரம்மானே. 4.20.8
      206 முளைத்தவெண்பிறை மொய்சடையுடை
      யாயெப்போதுமென் னெஞ்சிடங்கொள்ள
      வளைத்து கொண்டிருந்தேன்
      வலிசெய்து போகலொட்டேன்
      அளைப்பிரிந்த அலவன்போய்ப்புகு
      தந்தகாலமுங் கண்டுதன்பெடை
      திளைக்கு தண்கழனி
      திருவாரூ ரம்மானே. 4.20.9
      207 நாடினார்கம லம்மலரய
      னோடிரணியன் ஆகங்கீண்டவன்
      நாடி காணமாட்டா
      தழலாய நம்பானை
      பாடுவார்பணி வார்பல்லாண்டிசை
      கூறுபத்தர்கள் சித்தத்துள்புக்கு
      தேடி கண்டுகொண்டேன்
      திருவாரூ ரம்மானே. 4.20.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.21 திருவாரூர்திருவாதிரைத்திருப்பதிகம்
      பண் - குறிஞ்சி
      திருச்சிற்றம்பலம்
      208 முத்து விதான மணிப்பொற் கவரி முறையாலே
      பத்தர்க ளோடு பாவையர் சூழ பலிப்பின்னே
      வித்த கோல வெண்டலை மாலை விரதிகள்
      அத்தன் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம். 4.21.1
      209 நணியார் சேயார் நல்லார் தீயார் நாடோ றும்
      பிணிதான் தீரும் என்று பிறங்கி கிடப்பாரும்
      மணியே பொன்னே மைந்தா மணாளா என்பார்க
      கணியான் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம். 4.21.2
      210 வீதிகள் தோறும் வெண்கொடி யோடுவி தானங்கள்
      சோதிகள் விட்டு சுடர்மா மணிகள் ஒளிதோன்ற
      சாதிக ளாய பவளமு முத்து தாமங்கள்
      ஆதி ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம். 4.21.3
      211 குணங்கள் பேசி கூடி பாடி தொண்டர்கள்
      பிணங்கி தம்மிற் பித்தரை போல பிதற்றுவார்
      வணங்கி நின்று வானவர் வந்து வைகலும்
      அணங்கன் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம். 4.21.4
      212 நிலவெண் சங்கும் பறையும் ஆர்ப்ப நிற்கில்லா
      பலரு மிட்ட கல்ல வடங்கள் பரந்தெங்குங்
      கலவ மஞ்ஞை காரென் றெண்ணி களித்துவ
      தலம ராரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம். 4.21.5
      213 விம்மா வெருவா விழியா தெழியா வெருட்டுவார்
      தம்மாண் பிலரா தரியார் தலையான் முட்டுவார்
      எம்மான் ஈசன் எந்தை எனப்பன் என்பார்க
      கம்மான் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம். 4.21.6
      214 செந்துவர் வாயார் செல்வன் சேவடி சிந்திப்பார்
      மைந்தர்க ளோடு மங்கையர் கூடிம யங்குவார்
      இந்திர னாதி வானவர் சித்தர் எடுத்தேத்தும்
      அந்திரன் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம். 4.21.7
      215 முடிகள் வணங்கி மூவா தார்கண் முன்செல்ல
      வடிகொள் வேய்த்தோள் வான்அர மங்கையர் பின்செல்ல
      பொடிகள் பூசி பாடு தொண்டர் புடைசூழ
      அடிகள் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம். 4.21.8
      216 துன்பம் நும்மை தொழாத நாள்கள் என்பாரும்
      இன்பம் நும்மை யேத்து நாள்கள் என்பாரும்
      நும்பின் எம்மை நுழை பணியே என்பாரும்
      அன்பன் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம். 4.21.9
      217 பாரூர் பௌவ தானை பத்தர் பணிந்தேத்த
      சீரூர் பாடல் ஆடல் அறாத செம்மாப்பார
      தோரூர் ஒழியா துலகம் எங்கும் எடுத்தேத்தும்
      ஆரூ ரன்றன் ஆதிரை நாளால் அதுவண்ணம். 4.21.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.22 கோயில் - திருநேரிசை
      பண் - காந்தாரம்
      திருச்சிற்றம்பலம்
      218 செஞ்சடை கற்றை முற்ற
      திளநிலா எறிக்குஞ் சென்னி
      நஞ்சடை கண்ட னாரை
      காணலா நறவ நாறும்
      மஞ்சடை சோலை தில்லை
      மல்குசிற் றம்ப லத்தே
      துஞ்சடை இருள் கிழி
      துளங்கெரி யாடு மாறே. 4.22.1
      219 ஏறனார் ஏறு தம்பால்
      இளநிலா எறிக்குஞ் சென்னி
      ஆறனார் ஆறு சூடி
      ஆயிழை யாளோர் பாகம்
      நாறுபூஞ் சோலை தில்லை
      நவின்றசிற் றம்ப லத்தே
      நீறுமெய் பூசி நின்று
      நீண்டெரி யாடு மாறே. 4.22.2
      220 சடையனார் சாந்த நீற்றர்
      தனிநிலா எறிக்குஞ் சென்னி
      உடையனா ருடைத லையில்
      உண்பதும் பிச்சை யேற்று
      கடிகொள்பூ தில்லை தன்னு
      கருதுசிற் றம்ப லத்தே
      அடிகழ லார்க்க நின்று
      வனலெரி யாடு மாறே. 4.22.3
      221 பையர வசைத்த அல்குற்
      பனிநிலா எறிக்குஞ் சென்னி
      மையரி கண்ணி யாளும்
      மாலுமோர் பாக மாகி
      செய்யெரி தில்லை தன்னு
      டிகழ்ந்தசிற் றம்ப லத்தே
      கையெரி வீசி நின்று
      கனலெரி யாடு மாறே. 4.22.4
      222 ஓதினார் வேதம் வாயால்
      ஒளிநிலா எறிக்குஞ் சென்னி
      பூதனார் பூதஞ் சூழ
      புலியுரி யதள னார்தாம்
      நாதனார் தில்லை தன்னுள்
      நவின்றசிற் றம்ப லத்தே
      காதில்வெண் குழைகள் தாழ
      கனலெரி யாடு மாறே. 4.22.5
      223 ஓருடம் பிருவ ராகி
      ஒளிநிலா எறிக்குஞ் சென்னி
      பாரிடம் பாணி செ
      பயின்றஎம் பரம மூர்த்தி
      காரிட தில்லை தன்னு
      கருதுசிற் றம்ப லத்தே
      பேரிடம் பெருக நின்று
      பிறங்கெரி யாடு மாறே. 4.22.6
      224 முதற்றனி சடையை மூழ்க
      முகிழ்நிலா எறிக்குஞ் சென்னி
      மதக்களிற் றுரிவை போர்த்த
      மைந்தரை காண லாகும்
      மதத்துவண் டறையுஞ் சோலை
      மல்குசிற் றம்ப லத்தே
      கதத்ததோ ரரவ மாட
      கனலெரி யாடு மாறே. 4.22.7
      225 மறையனார் மழுவொன் றேந்தி
      மணிநிலா எறிக்குஞ் சென்னி
      இறைவனார் எம்பி ரானார்
      ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார்
      சிறைகொள்நீர தில்லை தன்னு
      டிகழ்ந்தசிற் றம்ப லத்தே
      அறைகழ லார்க்க நின்று
      வனலெரி யாடு மாறே. 4.22.8
      226 விருத்தனா பால னாகி
      விரிநிலா எறிக்குஞ் சென்னி
      நிருத்தனார் நிருத்தஞ் செய்ய
      நீண்டபுன் சடைகள் தாழ
      கருத்தனார் தில்லை தன்னு
      கருதுசிற் றம்ப லத்தே
      அருத்தமா மேனி தன்னோ
      டனலெரி யாடு மாறே. 4.22.9
      227 பாலனாய் விருத்த னாகி
      பனிநிலா எறிக்குஞ் சென்னி
      காலனை காலாற் காய்ந்த
      கடவுளார் விடையொன் றேறி
      ஞாலமா தில்லை தன்னுள்
      நவின்றசிற் றம்ப லத்தே
      நீலஞ்சேர் கண்ட னார்தாம்
      நீண்டெரி யாடு மாறே. 4.22.10
      228 மதியிலா அரக்க னோடி
      மாமலை யெடுக்க நோக்கி
      நெதியன்றோள் நெரிய வூன்றி
      நீடிரும் பொழில்கள் சூழ்ந்த
      மதியந்தோய் தில்லை தன்னுள்
      மல்குசிற் றம்ப லத்தே
      அதிசயம் போல நின்று
      வனலெரி யாடு மாறே. 4.22.11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - மூலத்தானநாயகர் சபாநாதர். தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.23 கோயில் - திருநேரிசை
      பண் - கொல்லி
      திருச்சிற்றம்பலம்
      229 பத்தனா பாட மாட்டேன்
      பரமனே பரம யோகீ
      எத்தினாற் பத்தி செய்கேன்
      என்னைநீ இகழ வேண்டா
      முத்தனே முதல்வா தில்லை
      அம்பல தாடு கின்ற
      அத்தாவுன் ஆடல் காண்பான்
      அடியனேன் வந்த வாறே. 4.23.1
      230 கருத்தனா பாட மாட்டேன்
      காம்பன தோளி பங்கா
      ஒருத்தரா லறிய வொண்ணா
      திருவுரு வுடைய சோதீ
      திருத்தமா தில்லை தன்னு
      டிகழ்ந்தசிற் றம்ப லத்தே
      நிருத்தம்நான் காண வேண்டி
      நேர்பட வந்த வாறே. 4.23.2
      231 கேட்டிலேன் கிளைபி ரியேன்
      கேட்குமா கேட்டி யாகில்
      நாட்டினேன் நின்றன் பாதம்
      நடுப்பட நெஞ்சி னுள்ளே
      மாட்டினீர் வாளை பாயு
      மல்குசிற் றம்ப லத்தே
      கூட்டமாங் குவிமு லையாள்
      கூடநீ யாடு மாறே. 4.23.3
      232 சிந்தையை திகைப்பி யாதே
      செறிவுடை அடிமை செய்ய
      எந்தைநீ அருளி செய்யாய்
      யாதுநான் செய்வ தென்னே
      செந்தியார் வேள்வி ஓவா
      தில்லைச்சிற் றம்ப லத்தே
      அந்தியும் பகலும் ஆட
      அடியிணை அலசுங் கொல்லோ. 4.23.4
      233 கண்டவா திரிந்து நாளுங்
      கருத்தினால் நின்றன் பாதங்
      கொண்டிரு தாடி பாடி
      கூடுவன் குறிப்பி னாலே
      வண்டுபண் பாடுஞ் சோலை
      மல்குசிற் றம்ப லத்தே
      எண்டிசை யோரு மேத்த
      இறைவநீ யாடு மாறே. 4.23.5
      234 பார்த்திரு தடிய னேன்நான்
      பரவுவன் பாடி யாடி
      மூர்த்தியே என்பன் உன்னை
      மூவரில் முதல்வன் என்பன்
      ஏத்துவார் இடர்கள் தீர்ப்பாய்
      தில்லைச்சிற் றம்ப லத்து
      கூத்தாவுன் கூத்து காண்பான்
      கூடநான் வந்த வாறே. 4.23.6
      235 பொய்யினை தவிர விட்டு
      புறமலா அடிமை செய்ய
      ஐயநீ அருளி செய்யாய்
      ஆதியே ஆதி மூர்த்தி
      வையக தன்னில் மிக்க
      மல்குசிற் றம்ப லத்தே
      பையநின் னாடல் காண்பான்
      பரமநான் வந்த வாறே. 4.23.7
      236 மனத்தினார் திகைத்து நாளும்
      மாண்பலா நெறிகள் மேலே
      கனைப்பரால் என்செய் கேனோ
      கறையணி கண்ட தானே
      தினைத்தனை வேதங் குன்றா
      தில்லைச்சிற் றம்ப லத்தே
      அனைத்துநின் னிலயங் காண்பான்
      அடியனேன் வந்த வாறே. 4.23.8
      237 நெஞ்சினை தூய்மை செய்து
      நினைக்குமா நினைப்பி யாதே
      வஞ்சமே செய்தி யாலோ
      வானவர் தலைவ னேநீ
      மஞ்சடை சோலை தில்லை
      மல்குசிற் றம்ப லத்தே
      அஞ்சொலாள் காண நின்று
      அழகநீ யாடு மாறே. 4.23.9
      238 மண்ணுண்ட மால வனும்
      மலர்மிசை மன்னி னானும்
      விண்ணுண்ட திருவு ருவம்
      விரும்பினார் காண மாட்டார்
      திண்ணுண்ட திருவே மிக்க
      தில்லைச்சிற் றம்ப லத்தே
      பண்ணுண்ட பாட லோடும்
      பரமநீ யாடு மாறே. 4.23.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.24 திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை
      239 இரும்புகொ பளித்த யானை
      ஈருரி போர்த்த ஈசன்
      கரும்புகொ பளித்த இன்சொற்
      காரிகை பாக மாக
      சுரும்புகொ பளித்த கங்கை
      துவலைநீர் சடையி லேற்ற
      அரும்புகொ பளித்த சென்னி
      அதிகைவீ ரட்ட னாரே. 4.24.1
      240 கொம்புகொ பளித்த திங்க
      கோணல்வெண் பிறையுஞ் சூடி
      வம்புகொ பளித்த கொன்றை
      வளர்சடை மேலும் வைத்து
      செம்புகொ பளித்த மூன்று
      மதிலுடன் சுருங்க வாங்கி
      அம்புகொ பளிக்க எய்தார்
      அதிகைவீ ரட்ட னாரே. 4.24.2
      241 விடையுங்கொ பளித்த பாதம்
      விண்ணவர் பரவி யேத்த
      சடையுங்கொ பளித்த திங்க
      சாந்தவெண் ணீறு பூசி
      உடையுங்கொ பளித்த நாகம்
      உள்குவார் உள்ள தென்றும்
      அடையுங்கொ பளித்த சீரார்
      அதிகைவீ ரட்ட னாறே. 4.24.3
      242 கறையுங்கொ பளித்த கண்டர்
      காமவேள் உருவம் மங்க
      இறையுங்கொ பளித்த கண்ணார்
      ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார்
      மறையுங்கொ பளித்த நாவர்
      வண்டுண்டு பாடுங் கொன்றை
      அறையுங்கொ பளித்த சென்னி
      அதிகைவீ ரட்ட னாரே. 4.24.4
      243 நீறுகொ பளித்த மார்பர்
      நிழல்திகழ் மழுவொன் றேந்தி
      கூறுகொ பளித்த கோதை
      கோல்வளை மாதோர் பாகம்
      ஏறுகொ பளித்த பாதம்
      இமையவர் பரவி யேத்த
      ஆறுகொ பளித்த சென்னி
      அதிகைவீ ரட்ட னாரே. 4.24.5
      244 வணங்குகொ பளித்த பாதம்
      வானவர் பரவி யேத்த
      பிணங்குகொ பளித்த சென்னி
      சடையுடை பெருமை யண்ணல்
      சுணங்குகொ பளித்த கொங்கை
      சுரிகுழல் பாக மாக
      அணங்குகொ பளித்த மேனி
      அதிகைவீ ரட்ட னாரே. 4.24.6
      245 சூலங்கொ பளித்த கையர்
      சுடர்விடு மழுவாள் வீசி
      நூலுங்கொ பளித்த மார்பில்
      நுண்பொறி யரவஞ் சேர்த்தி
      மாலுங்கொ பளித்த பாகர்
      வண்டுபண் பாடுங் கொன்றை
      ஆலங்கொ பளித்த கண்ட
      ததிகைவீ ரட்ட னாறே. 4.24.7
      246 நாகங்கொ பளித்த கையர்
      நான்மறை யாய பாடி
      மேகங்கொ பளித்த திங்கள்
      விரிசடை மேலும் வைத்து
      பாகங்கொ பளித்த மாதர்
      பண்ணுடன் பாடி யாட
      ஆகங்கொ பளித்த தோளார்
      அதிகைவீ ரட்ட னாரே. 4.24.8
      247 பரவுகொ பளித்த பாடல்
      பண்ணுடன் பத்தர் ஏத்த
      விரவுகொ பளித்த கங்கை
      விரிசடை மேவ வைத்து
      இரவுகொ பளித்த கண்டர்
      ஏத்துவா ரிடர்கள் தீர்ப்பார்
      அரவுகொ பளித்த கையர்
      அதிகைவீ ரட்ட னாரே. 4.24.9
      248 தொண்டைகொ பளித்த செவ்வா
      துடியிடை பரவை யல்குற்
      கொண்டைகொ பளித்த கோதை
      கோல்வளை பாக மாக
      வண்டுகொ பளித்த தீந்தேன்
      வரிக்கயல் பருகி மாந்த
      கெண்டைகொ பளித்த தெண்ணீர
      கெடிலவீ ரட்ட னாரே. 4.24.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.25 திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை
      249 வெண்ணிலா மதி தன்னை
      விரிசடை மேவ வைத்து
      உண்ணிலா புகுந்து நின்றங்
      குணர்வினு குணர கூறி
      விண்ணிலார் மீ சூரர்
      வேண்டுவார் வேண்டு வார்க்கே
      அண்ணியார் பெரிதுஞ் சேயார்
      அதிகைவீ ரட்ட னாரே. 4.25.1
      250 பாடினார் மறைகள் நான்கும்
      பாயிருள் புகுந்தென் உள்ளங்
      கூடினார் கூட லால
      வாயிலார் நல்ல கொன்றை
      சூடினார் சூடல் மேவி
      சூழ்சுடர சுடலை வெண்ணீ
      றாடினார் ஆடல் மேவி
      அதிகைவீ ரட்ட னாரே. 4.25.2
      251 ஊனையே கழிக்க வேண்டில்
      உணர்மின்கள் உள்ள துள்ளே
      தேனைய மலர்கள் கொண்டு
      சிந்தையு சிந்தி கின்ற
      ஏனைய பலவு மாகி
      இமையவர் ஏத்த நின்று
      ஆனையின் உரிவை போர்த்தார்
      அதிகைவீ ரட்ட னாரே. 4.25.3
      252 துருத்தியாங் குரம்பை தன்னில்
      தொண்ணூற்றங் கறுவர் நின்று
      விருத்திதான் தருக வென்று
      வேதனை பலவுஞ் செய்ய
      வருத்தியால் வல்ல வாறு
      வந்துவ தடைய நின்ற
      அருத்தியார கன்பர் போலும்
      அதிகைவீ ரட்ட னாரே. 4.25.4
      253 பத்தியால் ஏத்தி நின்று
      பணிபவர் நெஞ்ச துள்ளார்
      துத்திஐ தலைய நாகஞ்
      சூழ்சடை முடிமேல் வைத்து
      உத்தர மலையர் பாவை
      உமையவள் நடுங்க அன்று
      அத்தியின் உரிவை போர்த்தார்
      அதிகைவீ ரட்ட னாரே. 4.25.5
      254 வரிமுரி பாடி யென்றும்
      வல்லவா றடைந்து நெஞ்சே
      கரியுரி மூட வல்ல
      கடவுளை கால தாலே
      சுரிபுரி விரிகு ழலாள்
      துடியிடை பரவை யல்குல்
      அரிவையோர் பாகர் போலும்
      அதிகைவீ ரட்ட னாரே. 4.25.6
      255 நீதியால் நினைசெய் நெஞ்சே
      நிமலனை நித்த மாக
      பாதியாம் உமைதன் னோடும்
      பாகமாய் நின்ற எந்தை
      சோதியா சுடர்வி ளக்கா
      சுண்ணவெண் ணீற தாடி
      ஆதியும் ஈறு மானார்
      அதிகைவீ ரட்ட னாரே. 4.25.7
      256 எல்லியும் பகலு மெல்லா
      துஞ்சுவேற் கொருவர் வந்து
      புல்லிய மனத்து கோயில்
      புக்கனர் காம னென்னும்
      வில்லிஐங் கணையி னானை
      வெந்துக நோக்கி யிட்டார்
      அல்லியம் பழன வேலி
      அதிகைவீ ரட்ட னாரே. 4.25.8
      257 ஒன்றவே யுணர்தி ராகில்
      ஓங்கார தொருவ னாகும்
      வென்றஐம் புலன்கள் தம்மை
      விலக்குதற் குரியீ ரெல்லாம்
      நன்றவன் நார ணனும்
      நான்முகன் நாடி காண்குற்
      றன்றவர கரியர் போலும்
      அதிகைவீ ரட்ட னாரே. 4.25.9
      258 தடக்கையால் எடுத்து வைத்து
      தடவரை குலுங்க ஆர்த்து
      கிடக்கையால் இடர்க ளோங
      கிளர்மணி முடிகள் சாய
      முடக்கினார் திருவி ரலான்
      முருகமர் கோதை பாக
      தடக்கினார் என்னை யாளும்
      அதிகைவீ ரட்ட னாரே. 4.25.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.26 திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை
      திருச்சிற்றம்பலம்
      259 நம்பனே எங்கள் கோவே
      நாதனே ஆதி மூர்த்தி
      பங்கனே பரம யோகி
      என்றென்றே பரவி நாளுஞ்
      செம்பொனே பவள குன்றே
      திகழ்மலர பாதங் காண்பான்
      அன்பனே அலந்து போனேன்
      அதிகைவீ ரட்ட னாரே. 4.26.1
      260 பொய்யினால் மிடைந்த போர்வை
      புரைபுரை அழுகி வீழ
      மெய்யனாய் வாழ மாட்டேன்
      வேண்டிற்றொன் றைவர் வேண்டார்
      செய்யதா மரைகள் அன்ன
      சேவடி இரண்டுங் காண்பான்
      ஐயநான் அலந்து போனேன்
      அதிகைவீ ரட்ட னாரே. 4.26.2
      261 நீதியால் வாழ மாட்டேன்
      நித்தலு தூயே னல்லேன்
      ஓதியும் உணர மாட்டேன்
      உன்னையுள் வைக்க மாட்டேன்
      சோதியே சுடரே உன்றன்
      தூமலர பாதங் காண்பான்
      ஆதியே அலந்து போனேன்
      அதிகைவீ ரட்ட னாரே. 4.26.3
      262 தெருளுமா தெருள மாட்டேன்
      தீவினை சுற்ற மென்னும்
      பொருளுளே அழுந்தி நாளும்
      போவதோர் நெறியுங் காணேன்
      இருளுமா மணிகண் டாநின்
      இணையடி இரண்டுங் காண்பான்
      அருளுமா றருள வேண்டும்
      அதிகைவீ ரட்ட னாரே. 4.26.4
      263 அஞ்சினால் இயற்ற பட்ட
      ஆக்கைபெற் றதனுள் வாழும்
      அஞ்சினால் அடர்க்க பட்டிங்
      குழிதரும் ஆத னேனை
      அஞ்சினால் உய்க்கும் வண்ணங்
      காட்டினா கச்ச தீர்ந்தேன்
      அஞ்சினால் பொலிந்த சென்னி
      அதிகைவீ ரட்ட னாரே. 4.26.5
      264 உறுகயி றூசல் போல
      ஒன்றுவி டொன்று பற்றி
      மறுகயி றூசல் போல
      வந்துவ துலவு நெஞ்சம்
      பெறுகயி றூசல் போல
      பிறைபுல்கு சடையாய் பா
      தறுகயி றூச லானேன்
      அதிகைவீ ரட்ட னாரே. 4.26.6
      265 கழித்திலேன் காம வெந்நோய்
      காதன்மை என்னும் பாசம்
      ஒழித்திலேன் ஊன்கண் நோக்கி
      உணர்வெனும் இமைதி றந்து
      விழித்திலேன் வெளிறு தோன்ற
      வினையெனுஞ் சரக்கு கொண்டேன்
      அழித்திலேன் அயர்த்து போனேன்
      அதிகைவீ ரட்ட னாரே. 4.26.7
      266 மன்றத்து புன்னை போல
      மரம்படு துயர மெய்தி
      ஒன்றினால் உணர மாட்டேன்
      உன்னையுள் வைக்க மாட்டேன்
      கன்றிய காலன் வந்து
      கருக்குழி விழுப்ப தற்கே
      அன்றினான் அல திட்டேன்
      அதிகைவீ ரட்ட னாரே. 4.26.8
      267 பிணிவிடா ஆக்கை பெற்றேன்
      பெற்றமொன் றேறு வானே
      பணிவிடா இடும்பை யென்னும்
      பாசன தழுந்து கின்றேன்
      துணிவிலேன் தூய னல்லேன்
      தூமலர பாதங் காண்பான்
      அணியனாய் அறிய மாட்டேன்
      அதிகைவீ ரட்ட னாரே. 4.26.9
      268 திருவினாள் கொழுந னாரு
      திசைமுக முடைய கோவும்
      இருவரும் எழுந்தும் வீழ்ந்தும்
      இணையடி காண மாட்டா
      ஒருவனே எம்பி ரானே
      உன்திரு பாதங் கண்பான்
      அருவனே அருள வேண்டும்
      அதிகைவீ ரட்ட னாரே. 4.26.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.27 திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை
      திருச்சிற்றம்பலம்
      269 மடக்கினார் புலியின் தோலை
      மாமணி நாகங் கச்சா
      முடக்கினார் முகிழ்வெண் டிங்கள்
      மொய்சடை கற்றை தன்மேல்
      தொடக்கினார் தொண்டை செவ்வா
      துடியிடை பரவை யல்குல்
      அடக்கினார் கெடில வேலி
      அதிகைவீ ரட்ட னாரே. 4.27.1
      270 சூடினார் கங்கை யாளை
      சூடிய துழனி கேட்டங்
      கூடினாள் நங்கை யாளும்
      ஊடலை ஒழிக்க வேண்டி
      பாடினார் சாம வேதம்
      பாடிய பாணி யாலே
      ஆடினார் கெடில வேலி
      அதிகைவீ ரட்ட னாரே. 4.27.2
      271 கொம்பினார் குழைத்த வேனற்
      கோமகன் கோல நீர்மை
      நம்பினார் காண லாகா
      வகையதோர் நடலை செய்தார்
      வெம்பினார் மதில்கள் மூன்றும்
      வில்லிடை எரித்து வீழ்த்த
      அம்பினார் கெடில வேலி
      அதிகைவீ ரட்ட னாரே. 4.27.3
      272 மறிபட கிடந்த கையர்
      வளரிள மங்கை பாகஞ்
      செறிபட கிடந்த செக்கர
      செழுமதி கொழுந்து சூடி
      பொறிபட கிடந்த நாகம்
      புகையுமிழ தழல வீக்கி
      கிறிபட நடப்பர் போலுங்
      கெடிலவீ ரட்ட னாரே. 4.27.4
      273 நரிவரால் கவ்வ சென்று
      நற்றசை இழந்த தொத்த
      தெரிவரால் மால்கொள் சிந்தை
      தீர்ப்பதோர் சிந்தை செய்வார்
      வரிவரால் உகளு தெண்ணீணர
      கழனிசூழ் பழன வேலி
      அரிவரால் வயல்கள் சூழ்ந்த
      அதிகைவீ ரட்ட னாரே. 4.27.5
      274 புள்ளலை துண்ட ஓட்டில்
      உண்டுபோய் பலாசங் கொம்பின்
      சுள்ளலை சுடலை வெண்ணீ
      றணிந்தவர் மணிவெள் ளேற்று
      துள்ளலை பாகன் றன்னை
      தொடர்ந்திங்கே கிடக்கின் றேனை
      அள்ளலை கடப்பி தாளும்
      அதிகைவீ ரட்ட னாரே. 4.27.6
      275 நீறிட்ட நுதலர் வேலை
      நீலஞ்சேர் கண்டர் மாதர்
      கூறிட்ட மெய்ய ராகி
      கூறினார் ஆறும் நான்குங்
      கீறிட்ட திங்கள் சூடி
      கிளர்தரு சடையி னுள்ளால்
      ஆறிட்டு முடிப்பர் போலும்
      அதிகைவீ ரட்ட னாரே. 4.27.7
      276 காணிலார் கருத்தில் வாரார்
      திருத்தலார் பொருத்த லாகார்
      ஏணிலார் இறப்பும் இல்லார்
      பிறப்பிலார் துறக்க லாகார்
      நாணிலார் ஐவ ரோடும்
      இட்டெனை விரவி வைத்தார்
      ஆணலார் பெண்ணும் அல்லார்
      அதிகைவீ ரட்ட னாரே. 4.27.8
      இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 4.27.9
      277 தீர்த்தமா மலையை நோக்கி
      செருவலி அரக்கன் சென்று
      பேர்த்தலும் பேதை அஞ்ச
      பெருவிர லதனை யூன்றி
      சீர்த்தமா முடிகள் பத்துஞ்
      சிதறுவி தவனை யன்று
      ஆர்த்தவாய் அலற வைத்தார்
      அதிகைவீ ரட்ட னாரே. 4.27.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.28 திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை
      திருச்சிற்றம்பலம்
      278 முன்பெலாம் இளைய காலம்
      மூர்த்தியை நினையா தோடி
      கண்கண இருமி நாளுங்
      கருத்தழி தருத்த மின்றி
      பின்பக லுணங்கல் அட்டும்
      பேதைமார் போன்றேன் உள்ளம்
      அன்பனாய் வாழ மாட்டேன்
      அதிகைவீ ரட்ட னாரே. 4.28.1
      279 கறைப்பெருங் கண்ட தானே
      காய்கதிர் நமனை யஞ்சி
      நிறைப்பெருங் கடலை கண்டேன்
      நீள்வரை யுச்சி கண்டேன்
      பிறைப்பெருஞ் சென்னி யானே
      பிஞ்ஞகா இவைய னைத்தும்
      அறுப்பதோர் உபாயங் காணேன்
      அதிகைவீ ரட்ட னாரே. 4.28.2
      280 நாதனா ரென்ன நாளும்
      நடுங்கின ராகி தங்கள்
      ஏதங்கள் அறிய மாட்டார்
      இணையடி தொழுதோம் என்பார்
      ஆதனா னவனென் றெள்கி
      அதிகைவீ ரட்ட னேநின்
      பாதநான் பரவா துய்க்கும்
      பழவினை பரிசி லேனே. 4.28.3
      281 சுடலைசேர் சுண்ண மெய்யர்
      சுரும்புண விரிந்த கொன்றை
      படலைசேர் அலங்கல் மார்பர்
      பழனஞ்சேர் கழனி தெங்கின்
      மடலைநீர் கிழிய வோடி
      அதனிடை மணிகள் சிந்துங்
      கெடிலவீ ரட்ட மேய
      கிளர்சடை முடிய னாரே. 4.28.4
      282 மந்திர முள்ள தாக
      மறிகட லெழுநெய் யாக
      இந்திரன் வேள்வி தீயில்
      எழுந்ததோர் கொழுந்தின் வண்ணஞ்
      சிந்திர மாக நோக்கி
      தெருட்டுவார் தெருட்ட வந்து
      கந்திரம் முரலுஞ் சோலை
      கானலங் கெடில தாரே. 4.28.5
      இப்பதிகத்தில் 6789-ம் செய்யுட்கள்
      சிதைந்து போயின. 4.28.6-9
      283 மைஞ்ஞல மனைய கண்ணாள்
      பங்கன்மா மலையை யோடி
      மெய்ஞ்ஞரம் புதிரம் பில்க
      விசைதணி தரக்கன் வீழ்ந்து
      கைஞ்ஞரம் பெழுவி கொண்டு
      காதலால் இனிது சொன்ன
      கின்னரங் கேட்டு கந்தார்
      கெடிலவீ ரட்ட னாரே. 4.28.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.29 திருச்செம்பொன்பள்ளி - திருநேரிசை
      திருச்சிற்றம்பலம்
      284 ஊனினுள் ளுயிரை வாட்டி
      யுணர்வினார கெளிய ராகி
      வானினுள் வான வர்க்கும்
      அறியலா காத வஞ்சர்
      நானெனிற் றானே யென்னு
      ஞானத்தார் பத்தர் நெஞ்சுள்
      தேனும்இன் னமுது மானார்
      திருச்செம்பொன் பள்ளி யாரே. 4.29.1
      285 நொய்யவர் விழுமி யாரும்
      நூலினுள் நெறியை காட்டும்
      மெய்யவர் பொய்யு மில்லார்
      உடலெனும் இடிஞ்சில் தன்னில்
      நெய்யமர் திரியு மாகி
      நெஞ்சத்துள் விளக்கு மாகி
      செய்யவர் கரிய கண்டர்
      திருச்செம்பொன் பள்ளி யாரே. 4.29.2
      286 வெள்ளியர் கரியர் செய்யர்
      விண்ணவ ரவர்கள் நெஞ்சுள்
      ஒள்ளியர் ஊழி யூழி
      யுலகம தேத்த நின்ற
      பள்ளியர் நெஞ்ச துள்ளார்
      பஞ்சமம் பாடி யாடு
      தெள்ளியர் கள்ள தீர்ப்பார்
      திருச்செம்பொன் பள்ளி யாரே. 4.29.3
      287 தந்தையு தாயு மாகி
      தானவன் ஞான மூர்த்தி
      முந்திய தேவர் கூடி
      முறைமுறை இருக்கு சொல்லி
      எந்தைநீ சரண மென்றங்
      கிமையவர் பரவி யேத்த
      சிந்தையு சிவம தானார்
      திருச்செம்பொன் பள்ளி யாரே. 4.29.4
      288 ஆறுடை சடையர் போலும்
      அன்பரு கன்பர் போலுங்
      கூறுடை மெய்யர் போலுங்
      கோளர வரையர் போலும்
      நீறுடை யழகர் போலும்
      நெய்தலே கமழு நீர்மை
      சேறுடை கமல வேலி
      திருச்செம்பொன் பள்ளி யாரே. 4.29.5
      289 ஞாலமும் அறிய வேண்டின்
      நன்றென வாழ லுற்றீர்
      காலமுங் கழிய லான
      கள்ளத்தை ஒழிய கில்லீர்
      கோலமும் வேண்டா ஆர்வ
      செற்றங்கள் குரோத நீக்கில்
      சீலமும் நோன்பு மாவார்
      திருச்செம்பொன் பள்ளி யாரே. 4.29.6
      290 புரிகாலே நேசஞ் செய்ய
      இருந்தபுண் டரீக தாரும்
      எரிகாலே மூன்று மாகி
      இமையவர் தொழநின் றாரும்
      தெரிகாலே மூன்று சந்தி
      தியானித்து வணங்க நின்று
      திரிகாலங் கண்ட எந்தை
      திருச்செம்பொன் பள்ளி யாரே. 4.29.7
      291 காருடை கொன்றை மாலை
      கதிர்மதி அரவி னோடும்
      நீருடை சடையுள் வைத்த
      நீதியார் நீதி யுள்ளார்
      பாரொடு விண்ணும் மண்ணும்
      பதினெட்டு கணங்க ளேத்த
      சீரொடு பாட லானார்
      திருச்செம்பொன் பள்ளி யாரே. 4.29.8
      292 ஓவாத மறைவல் லானும்
      ஓதநீர் வண்ணன் காணா
      மூவாத பிறப்பி லாரும்
      முனிகளா னார்கள் ஏத்தும்
      பூவான மூன்றும் முந்நூற்
      றறுபது மாகும் எந்தை
      தேவாதி தேவ ரென்று
      திருச்செம்பொன் பள்ளி யாரே. 4.29.9
      293 அங்கங்க ளாறு நான்கும்
      அந்தணர கருளி செய்து
      சங்கங்கள் பாட ஆடுஞ்
      சங்கரன் மலைஎ டுத்தான்
      அங்கங்கள் உதிர்ந்து சோர
      அலறிட அடர்த்து நின்றுஞ்
      செங்கண்வெள் ளேற தேறு
      திருச்செம்பொன் பள்ளி யாரே. 4.29.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - சொர்னபுரீசர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.30 திருக்கழிப்பாலை - திரு நேரிசை
      திருச்சிற்றம்பலம்
      294 நங்கையை பாகம் வைத்தார்
      ஞானத்தை நவில வைத்தார்
      அங்கையில் அனலும் வைத்தார்
      ஆனையின் உரிவை வைத்தார்
      தங்கையின் யாழும் வைத்தார்
      தாமரை மலரும் வைத்தார்
      கங்கையை சடையுள் வைத்தார்
      கழிப்பாலை சேர்ப்ப னாரே. 4.30.1
      295 விண்ணினை விரும்ப வைத்தார்
      வேள்வியை வேட்க வைத்தார்
      பண்ணினை பாட வைத்தார்
      பத்தர்கள் பயில வைத்தார்
      மண்ணினை தாவ நீண்ட
      மாலினு கருளும் வைத்தார்
      கண்ணினை நெற்றி வைத்தார்
      கழிப்பாலை சேர்ப்ப னாரே. 4.30.2
      296 வாமனை வணங்க வைத்தார்
      வாயினை வாழ்த்த வைத்தார்
      சோமனை சடைமேல் வைத்தார்
      சோதியு சோதி வைத்தார்
      ஆமனை யாட வைத்தார்
      அன்பெனும் பாசம் வைத்தார்
      காமனை காய்ந்த கண்ணார்
      கழிப்பாலை சேர்ப்ப னாரே. 4.30.3
      297 அரியன அங்கம் வேதம்
      அந்தணர கருளும் வைத்தார்
      பெரியன புரங்கள் மூன்றும்
      பேரழ லுண்ண வைத்தார்
      பரியதீ வண்ண ராகி
      பவளம்போல் நிறத்தை வைத்தார்
      கரியதோர் கண்டம் வைத்தார்
      கழிப்பாலை சேர்ப்ப னாரே. 4.30.4
      298 கூரிருள் கிழிய நின்ற
      கொடுமழு கையில் வைத்தார்
      பேரிருள் கழிய மல்கு
      பிறைபுனற் சடையுள் வைத்தார்
      ஆரிருள் அண்டம் வைத்தார்
      அறுவகை சமயம் வைத்தார்
      காரிருள் கண்டம் வைத்தார்
      கழிப்பாலை சேர்ப்ப னாரே. 4.30.5
      299 உட்டங்கு சிந்தை வைத்தார்
      உள்குவார குள்ளம் வைத்தார்
      விட்டங்கு வேள்வி வைத்தார்
      வெந்துயர் தீர வைத்தார்
      நட்டங்கு நடமும் வைத்தார்
      ஞானமு நவில வைத்தார்
      கட்டங்க தோண்மேல் வைத்தார்
      கழிப்பாலை சேர்ப்ப னாரே. 4.30.6
      300 ஊனப்பே ரொழிய வைத்தார்
      ஓதியே உணர வைத்தார்
      ஞானப்பேர் நவில வைத்தார்
      ஞானமு நடுவும் வைத்தார்
      வானப்பே ராறும் வைத்தார்
      வைகுந்தற் காழி வைத்தார்
      கானப்பேர் காதல் வைத்தார்
      கழிப்பாலை சேர்ப்ப னாரே 4.30.7
      301 கொங்கினும் அரும்பு வைத்தார்
      கூற்றங்கள் கெடுக்க வைத்தார்
      சங்கினுள் முத்தம் வைத்தார்
      சாம்பலும் பூச வைத்தார்
      அங்கமும் வேதம் வைத்தார்
      ஆலமும் உண்டு வைத்தார்
      கங்குலும் பகலும் வைத்தார்
      கழிப்பாலை சேர்ப்ப னாரே. 4.30.8
      302 சதுர்முகன் தானும் மாலு
      தம்மிலே இகல கண்டு
      எதிர்முக மின்றி நின்ற
      எரியுரு வதனை வைத்தார்
      பிதிர்முகன் காலன் றன்னை
      கால்தனிற் பிதிர வைத்தார்
      கதிர்முகஞ் சடையில் வைத்தார்
      கழிப்பாலை சேர்ப்ப னாரே. 4.30.9
      303 மாலினாள் நங்கை அஞ்ச
      மதிலிலங் கைக்கு மன்னன்
      வேலினான் வெகுண் டெடு
      காண்டலும் வேத நாவன்
      நூலினான் நோக்கி நக்கு
      நொடிப்பதோ ரளவில் வீழ
      காலினால் ஊன்றி யிட்டார்
      கழிப்பாலை சேர்ப்ப னாரே. 4.30.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - பால்வண்ணவீசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.31 திருக்கடவூர் - திருநேரிசை
      திருச்சிற்றம்பலம்
      304 பொள்ளத்த காய மா
      பொருளினை போக மாதர்
      வெள்ளத்தை கழிக்க வேண்டில்
      விரும்புமின் விளக்கு தூபம்
      உள்ளத்த திரியொன் றேற்றி
      உணருமா றுணர வல்லார்
      கள்ளத்தை கழிப்பர் போலுங்
      கடவூர்வீ ரட்ட னாரே. 4.31.1
      305 மண்ணிடை குரம்பை தன்னை
      மதித்துநீர் மைய லெய்தில்
      விண்ணிடை தரும ராசன்
      வேண்டினால் விலக்கு வாரார்
      பண்ணிடை சுவைகள் பாடி
      ஆடிடும் பத்தர கென்றுங்
      கண்ணிடை மணியர் போலுங்
      கடவூர்வீ ரட்ட னாரே. 4.31.2
      306 பொருத்திய குரம்பை தன்னு
      பொய்நடை செலுத்து கின்றீர்
      ஒருத்தனை யுணர மாட்டீர்
      உள்ளத்திற் கொடுமை நீக்கீர்
      வருத்தின களிறு தன்னை
      வருத்துமா வருத்த வல்லார்
      கருத்தினில் இருப்பர் போலுங்
      கடவூர்வீ ரட்ட னாரே. 4.31.3
      307 பெரும்புலர் காலை மூழ்கி
      பித்தற்கு பத்த ராகி
      அரும்பொடு மலர்கள் கொண்டாங்
      கார்வத்தை யுள்ளே வைத்து
      விரும்பிநல் விளக்கு தூபம்
      விதியினால் இடவல் லார்க்கு
      கரும்பினிற் கட்டி போல்வார்
      கடவூர்வீ ரட்ட னாரே. 4.31.4
      308 தலக்கமே செய்து வாழ்ந்து
      தக்கவா றொன்று மின்றி
      விலக்குவா ரிலாமை யாலே
      விளக்கதிற் கோழி போன்றேன்
      மலக்குவார் மனத்தி னுள்ளே
      காலனார் தமர்கள் வந்து
      கலக்கநான் கலங்கு கின்றேன்
      கடவூர்வீ ரட்ட னாரே. 4.31.5
      309 பழியுடை யாக்கை தன்னிற்
      பாழுக்கே நீரி றைத்து
      வழியிடை வாழ மாட்டேன்
      மாயமு தெளிய கில்லேன்
      அழிவுடை தாய வாழ்க்கை
      ஐவரால் அலைக்க பட்டு
      கழியிடை தோணி போன்றேன்
      கடவூர்வீ ரட்ட னாரே. 4.31.6
      310 மாயத்தை அறிய மாட்டேன்
      மையல்கொள் மனத்த னாகி
      பேயொத்து கூகை யானேன்
      பிஞ்ஞகா பிறப்பொன் றில்லீ
      நேயத்தால் நினைய மாட்டேன்
      நீதனே நீசனேன் நான்
      காயத்தை கழிக்க மாட்டேன்
      கடவூர்வீ ரட்ட னாரே. 4.31.7
      311 பற்றிலா வாழ்க்கை வாழ்ந்து
      பாழுக்கே நீரி றைத்தேன்
      உற்றலாற் கயவர் தேறா
      ரென்னுங்க டுரையோ டொத்தேன்
      எற்றுளேன் என்செய் கேன்நான்
      இடும்பையால் ஞான மேதுங்
      கற்றிலேன் களைகண் காணேன்
      கடவூர்வீ ரட்ட னாரே. 4.31.8
      312 சேலின்நேர் அனைய கண்ணார்
      திறம்விட்டு சிவனு கன்பா
      பாலுநற் றயிர்நெய் யோடு
      பலபல ஆட்டி யென்றும்
      மாலினை தவிர நின்ற
      மார்க்கண்டற் காக வன்று
      காலனை யுதைப்பர் போலுங்
      கடவூர்வீ ரட்ட னாரே. 4.31.9
      313 முந்துரு இருவ ரோடு
      மூவரு மாயி னாரும்
      இந்திர னோடு தேவர்
      இருடிகள் இன்பஞ் செய்ய
      வந்திரு பதுகள் தோளால்
      எடுத்தவன் வலியை வாட்டி
      கந்திரு வங்கள் கேட்டார்
      கடவூர்வீ ரட்ட னாரே. 4.31.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - அமிர்தகடேசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.32 திருப்பயற்றூர் - திரு நேரிசை
      திருச்சிற்றம்பலம்
      314 உரித்திட்டார் ஆனை யின்றோள்
      உதிரவா றொழுகி யோட
      விரித்திட்டார் உமையா ளஞ்சி
      விரல்விதிர தலக்கண் நோக்கி
      தரித்திட்டார் சிறிது போது
      தரிக்கில ராகி தாமுஞ்
      சிரித்திட்டார் எயிறு தோன்ற
      திருப்பயற் றூர னாரே. 4.32.1
      315 உவந்திட்டங் குமையோர் பாகம்
      வைத்தவர் ஊழி யூழி
      பவந்திட்ட பரம னார் தாம்
      மலைச்சிலை நாகம் ஏற்றி
      கவர்ந்திட்ட புரங்கள் மூன்றுங்
      கனலெரி யாக சீறி
      சிவந்திட்ட கண்ணர் போலு
      திருப்பயற் றூர னாரே. 4.32.2
      316 நங்களு கருள தென்று
      நான்மறை யோது வார்கள்
      தங்களு கருளும் எங்கள்
      தத்துவன் றழலன் றன்னை
      எங்களு கருள்செய் யென்ன
      நின்றவன் நாகம் அஞ்சு
      திங்களு கருளி செய்தார்
      திருப்பயற் றூர னாரே. 4.32.3
      317 பார்த்தனு கருளும் வைத்தார்
      பாம்பரை யாட வைத்தார்
      சாத்தனை மகனா வைத்தார்
      சாமுண்டி சாம வேதங்
      கூத்தொடும் பாட வைத்தார்
      கோளரா மதியம் நல்ல
      தீர்த்தமுஞ் சடைமேல் வைத்தார்
      திருப்பயற் றூர னாரே. 4.32.4
      318 மூவகை மூவர் போலும்
      முற்றுமா நெற்றி கண்ணர்
      நாவகை நாவர் போலும்
      நான்மறை ஞான மெல்லாம்
      ஆவகை யாவர் போலும்
      ஆதிரை நாளர் போலு
      தேவர்கள் தேவர் போலு
      திருப்பயற் றூர னாரே. 4.32.5
      319 ஞாயிறாய் நமனு மாகி
      வருணனா சோம னாகி
      தீயறா நிருதி வாயு
      திப்பிய சாந்த னாகி
      பேயறா காட்டி லாடும்
      பிஞ்ஞகன் எந்தை பெம்மான்
      தீயறா கையர் போலு
      திருப்பயற் றூர னாரே. 4.32.6
      320 ஆவியாய் அவியு மாகி
      அருக்கமா பெருக்க மாகி
      பாவியர் பாவ தீர்க்கும்
      பரமனா பிரம னாகி
      காவியங் கண்ண ளாகி
      கடல்வண்ண மாகி நின்ற
      தேவியை பாகம் வைத்தார்
      திருப்பயற் றூர னாரே. 4.32.7
      321 தந்தையா தாயு மாகி
      தரணியா தரணி யுள்ளார
      கெந்தையு மென்ன நின்ற
      ஏழுல குடனு மாகி
      எந்தையெம் பிரானே என்றென்
      றுள்குவா ருள்ள தென்றுஞ்
      சிந்தையுஞ் சிவமு மாவார்
      திருப்பயற் றூர னாரே. 4.32.8
      322 புலன்களை போக நீக்கி
      புந்தியை யொருங்க வைத்து
      இலங்களை போக நின்று
      இரண்டையும் நீக்கி யொன்றாய்
      மலங்களை மாற்ற வள்ளார்
      மனத்தினு போக மாகி
      சினங்களை களைவர் போலு
      திருப்பயற் றூர னாரே. 4.32.9
      323 மூர்த்திதன் மலையின் மீது
      போகாதா முனிந்து நோக்கி
      பார்த்துத்தான் பூமி மேலாற்
      பாய்ந்துடன் மலையை பற்றி
      ஆர்த்திட்டான் முடிகள் பத்தும்
      அடர்த்துநல் லரிவை யஞ்ச
      தேத்தெத்தா என்ன கேட்டார்
      திருப்பயற் றூர னாரே. 4.32.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - திருப்பயத்தீசுவரர்
      தேவியார் - காவியங்கண்ணியம்மை.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.33 திருமறைக்காடு - திரு நேரிசை
      திருச்சிற்றம்பலம்
      324 இந்திர னோடு தேவர்
      இருடிகள் ஏத்து கின்ற
      சுந்தர மானார் போலு
      துதிக்கலாஞ் சோதி போலுஞ்
      சந்திர னோடுங் கங்கை
      அரவையுஞ் சடையுள் வைத்து
      மந்திர மானார் போலும்
      மாமறை காட னாரே. 4.33.1
      325 தேயன நாட ராகி
      தேவர்கள் தேவர் போலும்
      பாயன நாட றுக்கும்
      பத்தர்கள் பணிய வம்மின்
      காயன நாடு கண்டங்
      கதனுளார் காள கண்டர்
      மாயன நாடர் போலும்
      மாமறை காட னாரே. 4.33.2
      326 அறுமையிவ் வுலகு தன்னை
      யாமென கருதி நின்று
      வெறுமையின் மனைகள் வாழ்ந்து
      வினைகளால் நலிவு ணாதே
      சிறுமதி அரவு கொன்றை
      திகழ்தரு சடையுள் வைத்து
      மறுமையும் இம்மை யாவார்
      மாமறை காட னாரே. 4.33.3
      327 கால்கொடு திருகை யேற்றி
      கழிநிரை திறைச்சி மேய்ந்து
      தோல்படு துதிர நீராற்
      சுவரெடு திரண்டு வாசல்
      ஏல்வுடை தாவ மைத்தங்
      கேழுசா லேகம் பண்ணி
      மால்கொடு தாவி வைத்தார்
      மாமறை காட னாரே. 4.33.4
      328 விண்ணினார் விண்ணின் மிக்கார்
      வேதங்கள் விரும்பி யோத
      பண்ணினார் கின்ன ரங்கள்
      பத்தர்கள் பாடி யாட
      கண்ணினார் கண்ணி னுள்ளே
      சோதியாய் நின்ற எந்தை
      மண்ணினார் வலங்கொண் டேத்தும்
      மாமறை காட னாரே. 4.33.5
      329 அங்கையுள் அனலும் வைத்தார்
      அறுவகை சமயம் வைத்தார்
      தங்கையில் வீணை வைத்தார்
      தம்மடி பரவ வைத்தார்
      திங்களை கங்கை யோடு
      திகழ்தரு சடையுள் வைத்தார்
      மங்கையை பாகம் வைத்தார்
      மாமறை காட னாரே. 4.33.6
      330 கீதரா கீதங் கேட்டு
      கின்னர தன்னை வைத்தார்
      வேதராய் வேத மோதி
      விளங்கிய சோதி வைத்தார்
      ஏதராய் நட்ட மாடி
      இட்டமா கங்கை யோடு
      மாதையோர் பாகம் வைத்தார்
      மாமறை காட னாரே. 4.33.7
      331 கனத்தினார் வலி யுடைய
      கடிமதில் அரணம் மூன்றுஞ்
      சினத்தினு சினமாய் நின்று
      தீயெழ செற்றார் போலு
      தனத்தினை தவிர்ந்து நின்று
      தம்மடி பரவு வார்க்கு
      மனத்தினுள் மாசு தீர்ப்பார்
      மாமறை காட னாரே. 4.33.8
      332 தேசனை தேசன் றன்னை
      தேவர்கள் போற்றி சைப்பார்
      வாசனை செய்து நின்று
      வைகலும் வணங்கு மின்கள்
      காசினை கனலை என்றுங்
      கருத்தினில் வைத்த வர்க்கு
      மாசினை தீர்ப்பர் போலும்
      மாமறை காட னாரே. 4.33.9
      333 பிணியுடை யாக்கை தன்னை
      பிறப்பறு துய்ய வேண்டிற்
      பணியுடை தொழில்கள் பூண்டு
      பத்தர்கள் பற்றி னாலே
      துணிவுடை அரக்க னோடி
      எடுத்தலு தோகை அஞ்ச
      மணிமுடி பத்தி றுத்தார்
      மாமறை காட னாரே. 4.33.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - வேதாரணியேசுவரர்
      தேவியார் - யாழைப்பழித்தமொழியம்மை.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.34 திருமறைக்காடு - திரு நேரிசை
      திருச்சிற்றம்பலம்
      334 தேரையு மேல்க டாவி
      திண்ணமா தெளிந்து நோக்கி
      யாரையு மேலு ணரா
      ஆண்மையான் மிக்கான் தன்னை
      பாரையும் விண்ணும் அஞ்ச
      பரந்த தோள் முடியடர்த்து
      காரிகை அஞ்ச லென்பார்
      கலிமறை காட னாரே. 4.33.1
      335 முக்கிமுன் வெகுண்டெ டுத்த
      முடியுடை அரக்கர்கோனை
      நக்கிரு தூன்றி சென்னி
      நாண்மதி வைத்த எந்தை
      அக்கர வாமை பூண்ட
      அழகனார் கருத்தி னாலே
      தெக்குநீர திரைகள் மோது
      திருமறை காட னாரே. 4.33.2
      336 மிகப்பெரு துலாவ மிக்கா
      னக்கொரு தேர்க டாவி
      அகப்படு தென்று தானும்
      ஆண்மையால் மிக்க ரக்கன்
      உகைத்தெடு தான்ம லையை
      ஊன்றலும் அவனை யாங்கே
      நகைப்படு தருளி னானூர்
      நான்மறை காடு தானே. 4.33.3
      337 அந்தர தேர்க டாவி
      யாரிவ னென்று சொல்லி
      உந்தினான் மாம லையை
      ஊன்றலும் ஒள்ள ரக்கன்
      பந்தமா தலைகள் பத்தும்
      வாய்கள்வி டலறி வீழ
      சிந்தனை செய்து விட்டார்
      திருமறை காட னாரே. 4.33.4
      338 தடுக்கவு தாங்க வொண்ணா
      தன்வலி யுடைய னாகி
      கடுக்கவோர் தேர்க டாவி
      கையிரு பதுக ளாலும்
      எடுப்பன்நான் என்ன பண்ட
      மென்றெடு தானை ஏங்க
      அடுக்கவே வல்ல னூராம்
      அணிமறை காடு தானே. 4.33.5
      339 நாண்முடி கின்ற சீரான்
      நடுங்கியே மீது போகான்
      கோள்பிடி தார்த்த கையான்
      கொடியன்மா வலிய னென்று
      நீண்முடி சடையர் சேரும்
      நீள்வரை யெடுக்க லுற்றான்
      தோண்முடி நெரிய வைத்தார்
      தொன்மறை காட னாரே. 4.33.6
      340 பத்துவாய் இரட்டி கைக
      ளுடையன்மா வலிய னென்று
      பொத்திவாய் தீமை செய்த
      பொருவலி அரக்கர் கோனை
      கத்திவாய் கதற அன்று
      கால்விர லூன்றி யிட்டார்
      முத்துவா திரைகள் மோதும்
      முதுமறை காட னாரே. 4.33.7
      341 பக்கமே விட்ட கையான்
      பாங்கிலா மதிய னாகி
      புக்கனன் மாம லைக்கீழ
      போதுமா றறிய மாட்டான்
      மிக்கமா மதிகள் கெட்டு
      வீரமும் இழந்த வாறே
      நக்கன பூத மெல்லாம்
      நான்மறை காட னாரே. 4.33.8
      342 நாணஞ்சு கைய னாகி
      நான்முடி பத்தி னோடு
      பாணஞ்சு முன்னி ழந்த
      பாங்கிலா மதிய னாகி
      நீணஞ்சு தானு ணரா
      நின்றெடு தானை அன்று
      ஏணஞ்சு கைகள் செய்தார்
      எழில்மறை காட னாரே. 4.33.9
      343 கங்கைநீர் சடையுள் வை
      காண்டலும் மங்கை யூட
      தென்கையான் தேர்க டாவி
      சென்றெடு தான் மலையை
      முன்கைமா நரம்பு வெட்டி
      முன்னிரு கிசைகள் பாட
      அங்கைவாள் அருளி னானூர்
      அணிமறை காடு தானே. 4.33.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.35 திருவிடைமருது - திருநேரிசை
      திருச்சிற்றம்பலம்
      344 காடுடை சுடலை நீற்றர்
      கையில்வெண் டலையர் தையல்
      பாடுடை பூதஞ் சூழ
      பரமனார் மருத வைப்பிற்
      தோடுடை கைதை யோடு
      சூழ்கிடங் கதனை சூழ்ந்த
      ஏடுடை கமல வேலி
      இடைமரு திடங்கொண் டாரே. 4.34.1
      345 முந்தையார் முந்தி யுள்ளார்
      மூவர்க்கு முதல்வ ரானார்
      சந்தியார் சந்தி யுள்ளார்
      தவநெறி தரித்து நின்றார்
      சிந்தையார் சிந்தை யுள்ளார்
      சிவநெறி யனைத்து மானார்
      எந்தையார் எம்பி ரானார்
      இடைமரு திடங் கொண்டாரே. 4.34.2
      346 காருடை கொன்றை மாலை
      கதிர்மணி அரவி னோடு
      நீருடை சடையுள் வைத்த
      நீதியார் நீதி யாய
      போருடை விடையொன் றேற
      வல்லவர் பொன்னி தென்பால்
      ஏருடை கமல மோங்கும்
      இடைமரு திடங் கொண்டாரே. 4.34.3
      347 விண்ணினார் விண்ணின் மிக்கார்
      வேதங்கள் நான்கும் அங்கம்
      பண்ணினார் பண்ணின் மிக்க
      பாடலார் பாவ தீர்க்குங்
      கண்ணினார் கண்ணின் மிக்க
      நுதலினார் காமர் காய்ந்த
      எண்ணினார் எண்ணின் மிக்கார்
      இடைமரு திடங் கொண்டாரே. 4.34.4
      348 வேதங்கள் நான்குங் கொண்டு
      விண்ணவர் பரவி ஏத்த
      பூதங்கள் பாடி யாட
      லுடையவன் புனிதன் எந்தை
      பாதங்கள் பரவி நின்ற
      பத்தர்கள் தங்கள் மேலை
      ஏதங்கள் தீர நின்றார்
      இடைமரு திடங் கொண்டாரே. 4.34.5
      349 பொறியர வரையி லார்த்து
      பூதங்கள் பலவுஞ் சூழ
      முறிதரு வன்னி கொன்றை
      முதிர்சடை மூழ்க வைத்து
      மறிதரு கங்கை தங்க
      வைத்தவர் எத்தி சையும்
      ஏறிதரு புனல்கொள் வேலி
      இடைமரு திடங் கொண்டாரே. 4.34.6
      350 படரொளி சடையி னுள்ளாற்
      பாய்புனல் அரவி னோடு
      சுடரொளி மதியம் வைத்து
      தூவொளி தோன்றும் எந்தை
      அடரொளி விடையொன் றேற
      வல்லவர் அன்பர் தங்கள்
      இடரவை கெடவு நின்றார்
      இடைமரு திடங் கொண்டாரே. 4.34.7
      351 கமழ்தரு சடையி னுள்ளாற்
      கடும்புனல் அரவி னோடு
      தவழ்தரு மதியம் வைத்து
      தன்னடி பலரும் ஏத்த
      மழுவது வலங்கை யேந்தி
      மாதொரு பாக மாகி
      எழில்தரு பொழில்கள் சூழ்ந்த
      இடைமரு திடங் கொண்டாரே. 4.34.8
      352 பொன்றிகழ் கொன்றை மாலை
      புதுப்புனல் வன்னி மத்தம்
      மின்றிகழ் சடையில் வைத்து
      மேதக தோன்று கின்ற
      அன்றவர் அளக்க லாகா
      அனலெரி யாகி நீண்டார்
      இன்றுட னுலக மேத்த
      இடைமரு திடங் கொண்டாரே. 4.34.9
      353 மலையுடன் விரவி நின்று
      மதியிலா அரக்கன் நூக்க
      தலையுட னடர்த்து மீண்டே
      தலைவனாய் அருள்கள் நல்கி
      சிலையுடை மலையை வாங்கி
      திரிபுர மூன்றும் எய்தார்
      இலையுடை கமல வேலி
      இடைமரு திடங் கொண்டாரே. 4.34.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - மருதீசர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.36 திருப்பழனம் - திருநேரிசை
      திருச்சிற்றம்பலம்
      354 ஆடினா ரொருவர் போலு
      மலர்கமழ் குழலி னாலை
      கூடினா ரொருவர் போலுங்
      குளிர்புனல் வளைந்த திங்கள்
      சூடினா ரொருவர் போலு
      தூயநன் மறைகள் நான்கும்
      பாடினா ரொருவர் போலும்
      பழனத்தெம் பரம னாரே. 4.35.1
      355 போவதோர் நெறியு மானார்
      புரிசடை புனித னார்நான்
      வேவதோர் வினையிற் பட்டு
      வெம்மைதான் விடவுங் கில்லேன்
      கூவல்தான் அவர்கள் கேளார்
      குணமிலா ஐவர் செய்யும்
      பாவமே தீர நின்றார்
      பழனத்தெம் பரம னாரே. 4.35.2
      356 கண்டராய் முண்ட ராகி
      கையிலோர் கபால மேந்தி
      தொண்டர்கள் பாடி யாடி
      தொழுகழற் பரம னார்தாம்
      விண்டவர் புரங்க ளெய்த
      வேதியர் வேத நாவர்
      பண்டையென் வினைகள் தீர்ப்பார்
      பழனத்தெம் பரம னாரே. 4.35.3
      357 நீரவன் தீயி னோடு
      நிழலவன் எழில தாய
      பாரவன் விண்ணின் மிக்க
      பரமவன் பரம யோகி
      யாரவ னண்ட மிக்க
      திசையினோ டொளிக ளாகி
      பாரக தமுத மானார்
      பழனத்தெம் பரம னாரே. 4.35.4
      358 ஊழியா ரூழி தோறும்
      உலகினு கொருவ ராகி
      பாழியார் பாவ தீர்க்கும்
      பராபரர் பரம தாய
      ஆழியான் அன்ன தானும்
      அன்றவர கள பரிய
      பாழியார் பரவி யேத்தும்
      பழனத்தெம் பரம னாரே. 4.35.5
      359 ஆலின்கீழ் அறங்க ளெல்லாம்
      அன்றவர கருளி செய்து
      நூலின்கீ ழவர்க கெல்லா
      நுண்பொரு ளாகி நின்று
      காலின்கீழ காலன் றன்னை
      கடுகத்தான் பாய்ந்து பின்னும்
      பாலின்கீழ் நெய்யு மானார்
      பழனத்தெம் பரம னாரே. 4.35.6
      360 ஆதித்தன் அங்கி சோமன்
      அயனொடு மால்பு தனும்
      போதித்து நின்று லகிற்
      போற்றிசை தாரி வர்கள்
      சோதித்தா ரேழு லகுஞ்
      சோதியு சோதி யாகி
      பாதிப்பெண் ணுருவ மானார்
      பழனத்தெம் பரம னாரே. 4.35.7
      361 காற்றனாற் காலற் காய்ந்து
      காருரி போர்த்த ஈசர்
      தோற்றனார் கடலுள் நஞ்சை
      தோடுடை காதர் சோதி
      ஏற்றினார் இளவெண் டிங்கள்
      இரும்பொழில் சூழ்ந்த காயம்
      பாற்றினார் வினைக ளெல்லாம்
      பழனத்தெம் பரம னாரே. 4.35.8
      362 கண்ணனும் பிரம னோடு
      காண்கில ராகி வந்தே
      எண்ணியு துதித்து மேத்த
      எரியுரு வாகி நின்று
      வண்ணநன் மலர்கள் தூவி
      வாழ்த்துவார் வாழ்த்தி ஏத்த
      பண்ணுலாம் பாடல் கேட்டார்
      பழனத்தெம் பரம னாரே. 4.35.9
      363 குடையுடை அரக்கன் சென்று
      குளிர்கயி லாய வெற்பின்
      இடைமட வரலை அஞ்ச
      எடுத்தலும் இறைவன் நோக்கி
      விடையுடை விகிர்தன் றானும்
      விரலினா லூன்றி மீண்டும்
      படைகொடை அடிகள் போலும்
      பழனத்தெம் பரம னாரே. 4.35.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.37 திருநெய்த்தானம் - திருநேரிசை
      திருச்சிற்றம்பலம்
      364 காலனை வீழ செற்ற
      கழலடி இரண்டும் வந்தென்
      மேலவா யிருக்க பெற்றேன்
      மேதக தோன்று கின்ற
      கோலநெ தான மென்னுங்
      குளிர்பொழிற் கோயில் மேய
      நீலம்வை தனைய கண்ட
      நினைக்குமா நினைக்கின் றேனே. 4.37.1
      365 காமனை யன்று கண்ணாற்
      கனலெரி யாக நோக்கி
      தூபமு தீபங் காட்டி
      தொழுமவர கருள்கள் செய்து
      சேமநெ தான மென்னுஞ்
      செறிபொழிற் கோயில் மேய
      வாமனை நினைந்த நெஞ்சம்
      வாழ்வுற நினைந்த வாறே. 4.37.2
      366 பிறைதரு சடையின் மேலே
      பெய்புனற் கங்கை தன்னை
      உறைதர வைத்த எங்கள்
      உத்தமன் ஊழி யாய
      நிறைதரு பொழில்கள் சூழ
      நின்றநெ தான மென்று
      குறைதரும் அடிய வர்க்கு
      குழகனை கூட லாமே. 4.37.3
      367 வடிதரு மழுவொன் றேந்தி
      வார்சடை மதியம் வைத்து
      பொடிதரு மேனி மேலே
      புரிதரு நூலர் போலும்
      நெடிதரு பொழில்கள் சூழ
      நின்றநெ தானம் மேவி
      அடிதரு கழல்கள் ஆர்ப்ப
      ஆடுமெம் அண்ண லாரே. 4.37.4
      368 காடிட மாக நின்று
      கனலெரி கையி லேந்தி
      பாடிய பூதஞ் சூழ
      பண்ணுடன் பலவுஞ் சொல்லி
      ஆடிய கழலார் சீரார்
      அந்தண்நெ தானம் என்றுங்
      கூடிய குழக னாரை
      கூடுமா றறிகி லேனே. 4.37.5
      369 வானவர் வணங்கி யேத்தி
      வைகலும் மலர்கள் தூவ
      தானவர கருள்கள் செய்யும்
      சங்கரன் செங்கண் ஏற்றன்
      தேனமர் பொழில்கள் சூழ
      திகழுநெ தானம் மேய
      கூனிள மதியி னானை
      கூடுமா றறிகி லேனே. 4.37.6
      370 காலதிற் கழல்க ளார்ப்ப
      கனலெரி கையில் வீசி
      ஞாலமுங் குழிய நின்று
      நட்டம தாடு கின்ற
      மேலவர் முகடு தோய
      விரிசடை திசைகள் பாய
      மாலொரு பாக மாக
      மகிழ்ந்தநெ தான னாரே. 4.37.7
      371 பந்தித்த சடையின் மேலே
      பாய்புன லதனை வைத்து
      அந்திப்போ தனலு மாடி
      அடிகள்ஐ யாறு புக்கார்
      வந்திப்பார் வணங்கி நின்று
      வாழ்த்துவார் வாயி னுள்ளார்
      சிந்திப்பார் சிந்தை யுள்ளார்
      திருந்துநெ தான னாரே. 4.37.8
      372 சோதியா சுடரு மானார்
      சுண்ணவெண் சாந்து பூசி
      ஓதிவா யுலகம் ஏத்த
      உகந்துதாம் அருள்கள் செய்வார்
      ஆதியாய் அந்த மானார்
      யாவரும் இறைஞ்சி யேத்த
      நீதியாய் நியம மாகி
      நின்றநெ தான னாரே. 4.37.9
      373 இலையுடை படைகை யேந்தும்
      இலங்கையர் மன்னன் றன்னை
      தலையுடன் அடர்த்து மீண்டே
      தானவற் கருள்கள் செய்து
      சிலையுடன் கணையை சேர்த்து
      திரிபுரம் எரி செற்ற
      நிலையுடை யடிகள் போலும்
      நின்றநெ தான னாரே. 4.37.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - நெய்யாடியப்பர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.38 திருவையாறு - திருநேரிசை
      திருச்சிற்றம்பலம்
      374 கங்கையை சடையுள் வைத்தார்
      கதிர்பொறி அரவும் வைத்தார்
      திங்களை திகழ வைத்தார்
      திசைதிசை தொழவும் வைத்தார்
      மங்கையை பாகம் வைத்தார்
      மான்மறி மழுவும் வைத்தார்
      அங்கையுள் அனலும் வைத்தார்
      ஐயனை யாற னாரே. 4.38.1
      375 பொடிதனை பூச வைத்தார்
      பொங்குவெண் ணூலும் வைத்தார்
      கடியதோர் நாகம் வைத்தார்
      காலனை காலில் வைத்தார்
      வடிவுடை மங்கை தன்னை
      மார்பிலோர் பாகம் வைத்தார்
      அடியிணை தொழவும் வைத்தார்
      ஐயனை யாற னாரே. 4.38.2
      376 உடைதரு கீளும் வைத்தார்
      உலகங்க ளனைத்தும் வைத்தார்
      படைதரு மழுவும் வைத்தார்
      பாய்புலி தோலும் வைத்தார்
      விடைதரு கொடியும் வைத்தார்
      வெண்புரி நூலும் வைத்தார்
      அடைதர அருளும் வைத்தார்
      ஐயனை யாற னாரே. 4.38.3
      377 தொண்டர்கள் தொழவும் வைத்தார்
      தூமதி சடையில் வைத்தார்
      இண்டையை திகழ வைத்தார்
      எமக்கென்று மின்பம் வைத்தார்
      வண்டுசேர் குழலி னாளை
      மருவியோர் பாகம் வைத்தார்
      அண்டவா னவர்கள் ஏத்தும்
      ஐயனை யாற னாரே. 4.38.4
      378 வானவர் வணங்க வைத்தார்
      வல்வினை மாய வைத்தார்
      கானிடை நடமும் வைத்தார்
      காமனை கனலா வைத்தார்
      ஆனிடை ஐந்தும் வைத்தார்
      ஆட்டுவார கருளும் வைத்தார்
      ஆனையின் உரிவை வைத்தார்
      ஐயனை யாற னாரே. 4.38.5
      379 சங்கணி குழையும் வைத்தார்
      சாம்பல்மெ பூச வைத்தார்
      வெங்கதிர் எரிய வைத்தார்
      விரிபொழி லனைத்தும் வைத்தார்
      கங்குலும் பகலும் வைத்தார்
      கடுவினை களைய வைத்தார்
      அங்கம தோத வைத்தார்
      ஐயனை யாற னாரே. 4.38.6
      380 பத்தர்க கருளும் வைத்தார்
      பாய்விடை யேற வைத்தார்
      சித்தத்தை ஒன்ற வைத்தார்
      சிவமதே நினைய வைத்தார்
      முத்தியை முற்ற வைத்தார்
      முறைமுறை நெறிகள் வைத்தார்
      அத்தியின் உரிவை வைத்தார்
      ஐயனை யாற னாரே. 4.38.7
      381 ஏறுக தேற வைத்தார்
      இடைமரு திடமும் வைத்தார்
      நாறுபூங் கொன்றை வைத்தார்
      நாகமும் அரையில் வைத்தார்
      கூறுமை யாகம் வைத்தார்
      கொல்புலி தோலும் வைத்தார்
      ஆறுமோர் சடையில் வைத்தார்
      ஐயனை யாற னாரே. 4.38.8
      382 பூதங்கள் பலவும் வைத்தார்
      பொங்குவெண் ணீறும் வைத்தார்
      கீதங்கள் பாட வைத்தார்
      கின்னர தன்னை வைத்தார்
      பாதங்கள் பரவ வைத்தார்
      பத்தர்கள் பணிய வைத்தார்
      ஆதியும் அந்தம் வைத்தார்
      ஐயனை யாற னாரே. 4.38.9
      383 இரப்பவர கீய வைத்தார்
      ஈபவர கருளும் வைத்தார்
      கரப்பவர் தங்க கெல்லாங்
      கடுநர கங்கள் வைத்தார்
      பரப்புநீர கங்கை தன்னை
      படர்சடை பாகம் வைத்தார்
      அரக்கனு கருளும் வைத்தார்
      ஐயனை யாற னாரே. 4.38.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.39 திருவையாறு - திருநேரிசை
      பண் - கொல்லி
      திருச்சிற்றம்பலம்
      384 குண்டனா சமண ரோடே
      கூடிநான் கொண்ட மாலை
      துண்டனே சுடர்கொள் சோதீ
      தூநெறி யாகி நின்ற
      அண்டனே அமரர் ஏறே
      திருவையா றமர்ந்த தேனே
      தொண்டனேன் தொழுதுன் பாதஞ்
      சொல்லிநான் திரிகின் றேனே. 4.39.1
      385 பீலிகை இடுக்கி நாளும்
      பெரியதோர் தவமென் றெண்ணி
      வாலிய தறிகள் போல
      மதியிலார் பட்ட தென்னே
      வாலியார் வணங்கி ஏத்து
      திருவையா றமர்ந்த தேனோ
      டாலியா எழுந்த நெஞ்சம்
      அழகிதா எழுந்த வாறே. 4.39.2
      386 தட்டிடு சமண ரோடே
      தருக்கிநான் தவமென் றெண்ணி
      ஒட்டிடு மனத்தி னீரே
      உம்மையான் செய்வ தென்னே
      மொட்டிடு கமல பொய்கை
      திருவையா றமர்ந்த தேனோ
      டொட்டிடும் உள்ள தீரே
      உம்மைநான் உகந்தி டேனே. 4.39.3
      387 பாசிப்பல் மாசு மெய்யர்
      பலமிலா சமண ரோடு
      நேசத்தா லிருந்த நெஞ்சை
      நீக்குமா றறிய மாட்டேன்
      தேசத்தார் பரவி யேத்து
      திருவையா றமர்ந்த தேனை
      வாசத்தால் வணங்க வல்லார்
      வல்வினை மாயு மன்றே. 4.39.4
      388 கடுப்பொடி யட்டி மெய்யிற்
      கருதியோர் தவமென் றெண்ணி
      வடுக்களோ டிசைந்த நெஞ்சே
      மதியிலி பட்ட தென்னே
      மடுக்களில் வாளை பாயு
      திருவையா றமர்ந்த தேனை
      அடுத்துநின் றுன்னு நெஞ்சே
      அருந்தவஞ் செய்த வாறே. 4.39.5
      389 துறவியென் றவம தோரேன்
      சொல்லிய செலவு செய்து
      உறவினால் அமண ரோடும்
      உணர்விலேன் உணர்வொன் றின்றி
      நறவமார் பொழில்கள் சூழ்ந்த
      திருவையா றமர்ந்த தேனை
      மறவிலா நெஞ்ச மேநன்
      மதியுன கடைந்த வாறே. 4.39.6
      390 பல்லுரை சமண ரோடே
      பலபல கால மெல்லாஞ்
      சொல்லிய செலவு செய்தேன்
      சோர்வனான் நினைந்த போது
      மல்லிகை மலருஞ் சோலை
      திருவையா றமர்ந்த தேனை
      எல்லியும் பகலு மெல்லாம்
      நினைந்தபோ தினிய வாறே. 4.39.7
      391 மண்ணுளார் விண்ணு ளாரும்
      வணங்குவார் பாவம் போக
      எண்ணிலா சமண ரோடே
      இசைந்தனை ஏழை நெஞ்சே
      தெண்ணிலா எறிக்குஞ் சென்னி
      திருவையா றமர்ந்த தேனை
      கண்ணினாற் காண பெற்று
      கருதிற்றே முடிந்த வாறே. 4.39.8
      392 குருந்தம தொசித்த மாலுங்
      குலமலர் மேவி னானு
      திருந்துநற் றிருவ டியு
      திருமுடி காண மாட்டார்
      அருந்தவ முனிவ ரேத்து
      திருவையா றமர்ந்த தேனை
      பொருந்திநின் றுன்னு நெஞ்சே
      பொய்வினை மாயு மன்றே. 4.39.9
      393 அறிவிலா அரக்க னோடி
      அருவரை எடுக்க லுற்று
      முறுகினான் முறு கண்டு
      மூதறி வாளன் நோக்கி
      நிறுவினான் சிறுவி ரலால்
      நெரிந்துபோய் நிலத்தில் வீழ
      அறிவினால் அருள்கள் செய்தான்
      திருவையா றமர்ந்த தேனே. 4.39.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.40 திருவையாறு - திருநேரிசை
      திருச்சிற்றம்பலம்
      394 தானலா துலக மில்லை
      சகமலா தடிமை யில்லை
      கானலா தாட லில்லை
      கருதுவார் தங்க ளுக்கு
      வானலா தருளு மில்லை
      வார்குழல் மங்கை யோடும்
      ஆனலா தூர்வ தில்லை
      ஐயனை யாற னார்க்கே. 4.40.1
      395 ஆலலால் இருக்கை இல்லை
      அருந்தவ முனிவர கன்று
      நூலலால் நொடிவ தில்லை
      நுண்பொரு ளாய்ந்து கொண்டு
      மாலுநான் முகனுங் கூடி
      மலரடி வணங்க வேலை
      ஆலலால் அமுத மில்லை
      ஐயனை யாற னார்க்கே. 4.40.2
      396 நரிபுரி சுடலை தன்னில்
      நடமலால் நவிற்ற லில்லை
      சுரிபுரி குழலி யோடு
      துணையலால் இருக்கை யில்லை
      தெரிபுரி சிந்தை யார்க்கு
      தெளிவலால் அருளு மில்லை
      அரிபுரி மலர்கொண் டேத்தும்
      ஐயனை யாற னார்க்கே. 4.40.3
      397 தொண்டலாற் றுணையு மில்லை
      தோலலா துடையு மில்லை
      கண்டலா தருளு மில்லை
      கலந்தபின் பிரிவ தில்லை
      பண்டைநான் மறைகள் காணா
      பரிசின னென்றென் றெண்ணி
      அண்டவா னவர்கள் ஏத்தும்
      ஐயனை யாற னார்க்கே. 4.40.4
      398 எரியலா லுருவ மில்லை
      ஏறலால் ஏற லில்லை
      கரியலாற் போர்வை யில்லை
      காண்டகு சோதி யார்க்கு
      பிரிவிலா அமரர் கூடி
      பெருந்தகை பிரானென் றேத்தும்
      அரியலாற் றேவி யில்லை
      ஐயனை யாற னார்க்கே. 4.40.5
      399 என்பலாற் கலனு மில்லை
      எருதலா லூர்வ தில்லை
      புன்புலால் நாறு காட்டிற்
      பொடியலாற் சாந்து மில்லை
      துன்பிலா தொண்டர் கூடி
      தொழுதழு தாடி பாடும்
      அன்பலாற் பொருளு மில்லை
      ஐயனை யாற னார்க்கே. 4.406
      400 கீளலால் உடையு மில்லை
      கிளர்பொறி யரவம் பைம்பூண்
      தோளலாற் றுணையு மில்லை
      தொத்தலர் கின்ற வேனில்
      வேளலாற் கா பட்ட
      வீரரு மில்லை மீளா
      ஆளலாற் கைம்மா றில்லை
      ஐயனை யாற னார்க்கே. 4.40.7
      401 சகமலா தடிமை யில்லை
      தானலாற் றுணையு மில்லை
      நகமெலா தே கையான்
      நாண்மலர் தொழுது தூவி
      முகமெலாங் கண்ணீர் மல்க
      முன்பணி தேத்து தொண்டர்
      அகமலாற் கோயி லில்லை
      ஐயனை யாற னார்க்கே. 4.40.8
      402 உமையலா துருவ மில்லை
      உலகலா துடைய தில்லை
      நமையெலா முடைய ராவர்
      நன்மையே தீமை யில்லை
      கமையெலா முடைய ராகி
      கழலடி பரவு தொண்டர
      கமைவிலா அருள் கொடுப்பார்
      ஐயனை யாற னார்க்கே. 4.40.9
      403 மலையலா லிருக்கை யில்லை
      மதித்திடா அரக்கன் றன்னை
      தலையலால் நெரித்த தில்லை
      தடவரை கீழ டர்த்து
      நிலையிலார் புரங்கள் வேவ
      நெருப்பலால் விரித்த தில்லை
      அலையினார் பொன்னி மன்னும்
      ஐயனை யாற னார்க்கே. 4.40.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.41 திருச்சோற்றுத்துறை - திருநேரிசை
      பண் - கொல்லி
      திருச்சிற்றம்பலம்
      404 பொய்விரா மேனி தன்னை
      பொருளென காலம் போக்கி
      மெய்விரா மனத்த னல்லேன்
      வேதியா வேத நாவா
      ஐவரால் அலைக்க பட்ட
      ஆக்கைகொண் டயர்த்து போனேன்
      செய்வரால் உகளுஞ் செம்மை
      திருச்சோற்று துறைய னாரே. 4.41.1
      405 கட்டராய் நின்று நீங்கள்
      காலத்தை கழிக்க வேண்டா
      எட்டவாங் கைகள் வீசி
      எல்லிநின் றாடு வானை
      அட்டமா மலர்கள் கொண்டே
      ஆனஞ்சும் ஆட்ட ஆடி
      சிட்டராய் அருள்கள் செய்வார்
      திருச்சோற்று துறைய னாரே. 4.41.2
      406 கல்லினாற் புரமூன் றெய்த
      கடவுளை காத லாலே
      எல்லியும் பகலு முள்ளே
      ஏகாந்த மாக ஏத்தும்
      பல்லில்வெண் டலைகை யேந்தி
      பல்லில திரியுஞ் செல்வர்
      சொல்லுநன் பொருளு மாவார்
      திருச்சோற்று துறைய னாரே. 4.41.3
      407 கறையரா கண்ட நெற்றி
      கண்ணரா பெண்ணோர் பாகம்
      இறையராய் இனிய ராகி
      தனியரா பனிவெண் டிங்க
      பிறையரா செய்த வெல்லாம்
      பீடரா கேடில் சோற்று
      துறையரா புகுந்தெ னுள்ள
      சோர்வுகண் டருளி னாரே. 4.41.4
      408 பொந்தையை பொருளா வெண்ணி
      பொருக்கென காலம் போனேன்
      எந்தையே ஏக மூர்த்தி
      யென்றுநின் றேத்த மாட்டேன்
      பந்தமாய் வீடு மாகி
      பரம்பர மாகி நின்று
      சிந்தையு டேறல் போலு
      திருச்சோற்று துறைய னாரே. 4.41.5
      409 பேர்த்தினி பிறவா வண்ணம்
      பிதற்றுமின் பேதை பங்கன்
      பார்த்தனு கருள்கள் செய்த
      பாசுப தன்றி றமே
      ஆர்த்துவ திழிவ தொத்த
      அலைபுனற் கங்கை யேற்று
      தீர்த்தமா போத விட்டார்
      திருச்சோற்று துறைய னாரே. 4.41.6
      410 கொந்தார்பூங் குழலி னாரை
      கூறியே காலம் போன
      எந்தையெம் பிரானாய் நின்ற
      இறைவனை ஏத்தா தந்தோ
      முந்தரா அல்கு லாளை
      யுடன்வைத்த ஆதி மூர்த்தி
      செந்தாது புடைகள் சூழ்ந்த
      திருச்சோற்று துறைய னாரே. 4.41.7
      411 அங்கதி ரோன வனை
      அண்ணலா கருத வேண்டா
      வெங்கதி ரோன் வழியே
      போவதற் கமைந்து கொண்மின்
      அங்கதி ரோன வனை
      யுடன்வைத்த ஆதி மூர்த்தி
      செங்கதி ரோன்வ ணங்குஞ்
      திருச்சோற்று துறைய னாரே. 4.41.8
      412 ஓதியே கழிக்கின் றீர்கள்
      உலகத்தீர் ஒருவன் றன்னை
      நீதியால் நினைக்க மாட்டீர்
      நின்மலன் என்று சொல்லீர்
      சாதியா நான்மு கனுஞ்
      சக்கர தானுங் காணா
      சோதியா சுடர தானார்
      திருச்சோற்று துறைய னாரே. 4.41.9
      413 மற்றுநீர் மனம்வை யாதே
      மறுமையை கழிக்க வேண்டிற்
      பெற்றதோர் உபா தன்னாற்
      பிரானையே பிதற்று மின்கள்
      கற்றுவ தரக்க னோடி
      கயிலாய மலைஎ டுக்க
      செற்றுக தருளி செய்தார்
      திருச்சோற்று துறைய னாரே. 4.41.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - தொலையாச்செல்வர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.42 திருத்துருத்தி - திருநேரிசை
      பண் - கொல்லி
      திருச்சிற்றம்பலம்
      414 பொருத்திய குரம்பை தன்னை
      பொருளென கருத வேண்டா
      இருத்தியெ போதும் நெஞ்சுள்
      இறைவனை ஏத்து மின்கள்
      ஒருத்தியை பாகம் வைத்தங்
      கொருத்தியை சடையில் வைத்த
      துருத்தியஞ் சுடரி னானை
      தொண்டனேன் கண்ட வாறே. 4.42.1
      415 சவைதனை செய்து வாழ்வான்
      சலத்துளே யழுந்து கின்ற
      இவையொரு பொருளு மல்ல
      இறைவனை ஏத்து மின்னோ
      அவைபுர மூன்றும் எய்தும்
      அடியவர கருளி செய்த
      சுவையினை துருத்தி யானை
      தொண்டனேன் கண்ட வாறே. 4.42.2
      416 உன்னியெ போதும் நெஞ்சுள்
      ஒருவனை ஏத்து மின்னோ
      கன்னியை ஒருபால் வைத்து
      கங்கையை சடையுள் வைத்து
      பொன்னியின் நடுவு தன்னுள்
      பூம்புனல் பொலிந்து தோன்று
      துன்னிய துருத்தி யானை
      தொண்டனேன் கண்ட வாறே. 4.42.3
      417 ஊன்றலை வலிய னாகி
      உலகத்துள் உயிர்க கெல்லா
      தான்றலை பட்டு நின்று
      சார்கன லகத்து வீழ
      வான்றலை தேவர் கூடி
      வானவர கிறைவா வென்னு
      தோன்றலை துருத்தி யானை
      தொண்டனேன் கண்ட வாறே. 4.42.4
      418 உடல்தனை கழிக்க லுற்ற
      உலகத்துள் உயிர்க கெல்லாம்
      இடர்தனை கழிக்க வேண்டில்
      இறைவனை ஏத்து மின்னோ
      கடல்தனில் நஞ்ச முண்டு
      காண்பரி தாகி நின்ற
      சுடர்தனை துருத்தி யானை
      தொண்டனேன் கண்ட வாறே. 4.42.5
      419 அள்ளலை கடக்க வேண்டில்
      அரனையே நினைமி னீணர்கள்
      பொள்ளலி கா தன்னு
      புண்டரீ கத்தி ருந்த
      வள்ளலை வான வர்க்குங்
      காண்பரி தாகி நின்ற
      துள்ளலை துருத்தி யானை
      தொண்டனேன் கண்ட வாறே. 4.42.6
      420 பாதியில் உமையாள் தன்னை
      பாகமா வைத்த பண்பன்
      வேதியன் என்று சொல்லி
      விண்ணவர் விரும்பி ஏத்த
      சாதியாஞ் சதுர்மு கனுஞ்
      சக்கர தானுங் காணா
      சோதியை துருத்தி யானை
      தொண்டனேன் கண்ட வாறே. 4.42.7
      421 சாமனை வாழ்க்கை யான
      சலத்துளே யழுந்த வேண்டா
      தூமநல் லகிலுங் காட்டி
      தொழுதடி வணங்கு மின்னோ
      சோமனை சடையுள் வைத்து
      தொன்னெறி பலவுங் காட்டு
      தூமன துருத்தி யானை
      தொண்டனேன் கண்டா வாறே. 4.42.8
      422 குண்டரே சமணர் புத்தர்
      குறியறி யாது நின்று
      கண்டதே கருது வார்கள்
      கருத்தெண்ணா தொழிமி னீணர்கள்
      விண்டவர் புரங்கள் எய்து
      விண்ணவர கருள்கள் செய்த
      தொண்டர்கள் துணையி னானை
      துருத்திநான் கண்ட வாறே. 4.42.9
      423 பிண்டத்தை கழிக்க வேண்டிற்
      பிரானையே பிதற்று மின்கள்
      அண்டத்தை கழிய நீண்ட
      அடலர கன்றன் ஆண்மை
      கண்டொத்து கால்வி ரலால்
      ஊன்றிமீண் டருளி செய்த
      துண்டத்து துருத்தி யானை
      தொண்டனேன் கண்ட வாறே. 4.42.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - வேதேசுவரர்
      தேவியார் - முகிழாம்பிகையம்மை.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.43 திருக்காஞ்சிமேற்றளி - திருநேரிசை
      பண் - கொல்லி
      திருச்சிற்றம்பலம்
      424 மறையது பாடி பிச்சை
      கென்றக திரிந்து வாழ்வார்
      பிறையது சடைமு டிமேற்
      பெய்வளை யாள்தன் னோடுங்
      கறையது கண்டங் கொண்டார்
      காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
      இறையவர் பாட லாடல்
      இலங்குமேற் றளிய னாரே. 4.43.1
      425 மாலன மாயன் றன்னை
      மகிழ்ந்தனர் விருத்த ராகும்
      பாலனார் பசுப தியார்
      பால்வெள்ளை நீறு பூசி
      காலனை காலாற் செற்றார்
      காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
      ஏலநற் கடம்பன் தாதை
      இலங்குமேற் றளிய னாரே. 4.43.2
      426 விண்ணிடை விண்ண வர்கள்
      விரும்பிவ திறைஞ்சி வாழ்த்த
      பண்ணிடை சுவையின் மிக்க
      கின்னரம் பாடல் கேட்டார்
      கண்ணிடை மணியி னொப்பார்
      காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
      எண்ணிடை யெழுத்து மானார்
      இலங்குமேற் றளிய னாரே. 4.43.3
      427 சோமனை அரவி னோடு
      சூழ்தர கங்கை சூடும்
      வாமனை வான வர்கள்
      வலங்கொடு வந்து போற்ற
      காமனை காய்ந்த கண்ணார்
      காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
      ஏமநின் றாடும் எந்தை
      இலங்குமேற் றளிய னாரே. 4.43.4
      428 ஊனவ ருயிரி னோடு
      முலகங்க ளூழி யாகி
      தானவர் தனமு மாகி
      தனஞ்சய னோடெ திர்ந்த
      கானவர் காள கண்டர்
      காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
      ஏன கோடு பூண்டார்
      இலங்குமேற் றளிய னாரே. 4.43.5
      429 மாயனாய் மால னாகி
      மலரவ னாகி மண்ணா
      தேயமா திசையெ டாகி
      தீர்த்தமா திரிதர் கின்ற
      காயமா கா துள்ளார்
      காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
      ஏயமென் றோளி பாகர்
      இலங்குமேற் றளிய னாரே. 4.43.6
      430 மண்ணினை யுண்ட மாயன்
      தன்னையோர் பாகங் கொண்டார்
      பண்ணினை பாடி யாடும்
      பத்தர்கள் சித்தங் கொண்டார்
      கண்ணினை மூன்றுங் கொண்டார்
      காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
      எண்ணினை யெண்ண வைத்தார்
      இலங்குமேற் றளிய னாரே. 4.43.7
      431 செல்வியை பாகங் கொண்டார்
      சேந்தனை மகனா கொண்டார்
      மல்லிகை கண்ணி யோடு
      மாமலர கொன்றை சூடி
      கல்வியை கரையி லாத
      காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
      எல்லியை விளங்க நின்றார்
      இலங்குமேற் றளிய னாரே. 4.43.8
      432 வேறிணை யின்றி யென்றும்
      விளங்கொளி மருங்கி னாளை
      கூறிய லாக வைத்தார்
      கோளரா மதியும் வைத்தார்
      ஆறினை சடையுள் வைத்தார்
      அணிபொழிற் கச்சி தன்னுள்
      ஏறினை யேறு மெந்தை
      இலங்குமேற் றளிய னாரே. 4.43.9
      433 தென்னவன் மலையெ டுக்க
      சேயிழை நடுங கண்டு
      மன்னவன் விரலா லூன்ற
      மணிமுடி நெரிய வாயாற்
      கன்னலின் கீதம் பாட
      கேட்டவர் காஞ்சி தன்னுள்
      இன்னவற் கருளி செய்தார்
      இலங்குமேற் றளிய னாரே. 4.43.10
      இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - திருமேற்றளிநாதர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.44 திருஏகம்பம் - திருநேரிசை
      திருச்சிற்றம்பலம்
      434 நம்பனை நகர மூன்றும்
      எரியுண வெருவ நோக்கும்
      அம்பனை அமுதை யாற்றை
      அணிபொழிற் கச்சி யுள்ளே
      கம்பனை கதிர்வெண் திங்க
      செஞ்சடை கடவுள் தன்னை
      செம்பொனை பவள தூணை
      சிந்தியா எழுகின் றேனே. 4.44.1
      435 ஒருமுழம் உள்ள குட்டம்
      ஒன்பது துளையு டைத்தாய்
      அரைமுழம் அதன் அகலம்
      அதனில்வாழ் முதலை ஐந்து
      பெருமுழை வாய்தல் பற்றி
      கிடந்துநான் பிதற்று கின்றேன்
      கருமுகில் தவழும் மாட
      கச்சியே கம்ப னீரே. 4.44.2
      436 மலையினார் மகளோர் பாக
      மைந்தனார் மழுவொன் றேந்தி
      சிலையினால் மதில்கள் மூன்று
      தீயெழ செற்ற செல்வர்
      இலையினார் சூலம் ஏந்தி
      ஏகம்பம் மேவி னாரை
      தலையினால் வணங்க வல்லார்
      தலைவர்க்கு தலைவர் தாமே. 4.44.3
      437 பூத்தபொற் கொன்றை மாலை
      புரிசடை கணிந்த செல்வர்
      தீர்த்தமாங் கங்கை யாளை
      திருமுடி திகழ வைத்து
      ஏத்துவார் ஏத்த நின்ற
      ஏகம்பம் மேவி னாரை
      வாழ்த்துமா றறிய மாட்டேன்
      மால்கொடு மயங்கி னேனே. 4.44.4
      438 மையினார் மலர்நெ டுங்கண்
      மங்கையோர் பங்க ராகி
      கையிலோர் கபாலம் ஏந்தி
      கடைதொறும் பலிகொள் வார்தாம்
      எய்வதோர் ஏனம் ஓட்டி
      ஏகம்பம் மேவி னாரை
      கையினாற் றொழவல் லார்க்கு
      கடுவினை களைய லாமே. 4.44.5
      439 தருவினை மருவுங் கங்கை
      தங்கிய சடையன் எங்கள்
      அருவினை அகல நல்கும்
      அண்ணலை அமரர் போற்று
      திருவினை திருவே கம்பஞ்
      செப்பிட உறைய வல்ல
      உருவினை உருகி ஆங்கே
      உள்ளத்தால் உகக்கின் றேனே. 4.44.6
      440 கொண்டதோர் கோல மாகி
      கோலக்கா வுடைய கூத்தன்
      உண்டதோர் நஞ்ச மாகில்
      உலகெலாம் உய்ய உண்டான்
      எண்டிசை யோரும் ஏத்த
      நின்றஏ கம்பன் றன்னை
      கண்டுநான் அடிமை செய்வான்
      கருதியே திரிகின் றேனே. 4.44.7
      441 படமுடை அரவி னோடு
      பனிமதி யதனை சூடி
      கடமுடை யுரிவை மூடி
      கண்டவர் அஞ்ச அம்ம
      இடமுடை கச்சி தன்னுள்
      ஏகம்பம் மேவி னான்றன்
      நடமுடை யாடல் காண
      ஞாலந்தான் உய்ந்த வாறே. 4.44.8
      442 பொன்றிகழ் கொன்றை மாலை
      பொருந்திய நெடுந்தண் மார்பர்
      நன்றியிற் புகுந்தெ னுள்ளம்
      மெள்ளவே நவில நின்று
      குன்றியில் அடுத்த மேனி
      குவளையங் கண்டர் எம்மை
      இன்றுயில் போது கண்டார்
      இனியர்ஏ கம்ப னாரே. 4.44.9
      443 துருத்தியார் பழன துள்ளார்
      தொண்டர்கள் பலரும் ஏத்த
      அருத்தியால் அன்பு செய்வார்
      அவரவர கருள்கள் செய்தே
      எருத்தினை இசைய ஏறி
      ஏகம்பம் மேவி னார்க்கு
      வருத்திநின் றடிமை செய்வார்
      வல்வினை மாயு மன்றே. 4.44.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.45 திருவொற்றியூர் - திருநேரிசை
      பண் - கொல்லி
      திருச்சிற்றம்பலம்
      444 வெள்ளத்தை சடையில் வைத்த
      வேதகீ தன்றன் பாதம்
      மெள்ளத்தான் அடைய வேண்டின்
      மெய்தரு ஞான தீயாற்
      கள்ளத்தை கழிய நின்றார்
      காயத்து கலந்து நின்று
      உள்ளத்துள் ஒளியு மாகும்
      ஒற்றியூ ருடைய கோவே. 4.45.1
      445 வசிப்பெனும் வாழ்க்கை வேண்டா
      வானவர் இறைவன் நின்று
      புசிப்பதோர் பொள்ள லாக்கை
      யதனொடும் புணர்வு வேண்டில்
      அசிர்ப்பெனும் அருந்த வத்தால்
      ஆன்மாவி னிடம தாகி
      உசிர்ப்பெனும் உணர்வு முள்ளார்
      ஒற்றியூ ருடைய கோவே. 4.45.2
      446 தானத்தை செய்து வாழ்வான்
      சலத்துளே அழுந்து கின்றீர்
      வானத்தை வணங்க வேண்டில்
      வம்மின்கள் வல்லீ ராகில்
      ஞானத்தை விளக்கை ஏற்றி
      நாடியுள் விரவ வல்லார்
      ஊனத்தை ஒழிப்பர் போலும்
      ஒற்றியூ ருடைய கோவே. 4.45.3
      447 காமத்துள் அழுந்தி நின்று
      கண்டரால் ஒறுப்புண் ணாதே
      சாமத்து வேத மாகி
      நின்றதோர் சயம்பு தன்னை
      ஏமத்தும் இடையி ராவும்
      ஏகாந்தம் இயம்பு வார்க்கு
      ஓமத்துள் ஒளிய தாகும்
      ஒற்றியூ ருடைய கோவே. 4.45.4
      448 சமையமே லாறு மாகி
      தானொரு சயம்பு வாகி
      இமையவர் பரவி யேத்த
      இனிதினங் கிருந்த ஈசன்
      கமையினை யுடைய ராகி
      கழலடி பரவு வார்க்கு
      உமையொரு பாகர் போலும்
      ஒற்றியூ ருடைய கோவே. 4.45.5
      449 ஒருத்திதன் றலைச்சென் றாளை
      கரந்திட்டான் உலக மேத்த
      ஒருத்திக்கு நல்ல னாகி
      மறுப்படு தொளித்து மீண்டே
      ஒருத்தியை பாகம் வைத்தான்
      உணர்வினால் ஐயம் உண்ணி
      ஒருத்திக்கு நல்ல னல்லன்
      ஒற்றியூ ருடைய கோவே. 4.45.6
      450 பிணமுடை உடலு காக
      பித்தரா திரிந்து நீங்கள்
      புணர்வெனும் போகம் வேண்டா
      போக்கலாம் பொய்யை நீங்க
      நிணமுடை நெஞ்சி னுள்ளால்
      நினைக்குமா நினைக்கின் றார்க்கு
      உணர்வினோ டிருப்பர் போலும்
      ஒற்றியூ ருடைய கோவே. 4.45.7
      451 பின்னுவார் சடையான் தன்னை
      பிதற்றிலா பேதை மார்கள்
      துன்னுவார் நரக தன்னுள்
      தொல்வினை தீர வேண்டின்
      மன்னுவான் மறைக ளோதி
      மனத்தினுள் விளக்கொன் றேற்றி
      உன்னுவார் உள்ள துள்ளார்
      ஒற்றியூ ருடைய கோவே. 4.45.8
      452 முள்குவார் போகம் வேண்டின்
      முயற்றியா லிடர்கள் வந்தால்
      எள்குவார் எள்கி நின்றங்
      கிதுவொரு மாய மென்பார்
      பள்குவார் பத்த ராகி
      பாடியு மாடி நின்று
      உள்குவார் உள்ள துள்ளார்
      ஒற்றியூ ருடைய கோவே. 4.45.9
      453 வெறுத்துக புலன்க ளைந்தும்
      வேண்டிற்று வேண்டு நெஞ்சே
      மறுத்துக ஆர்வ செற்ற
      குரோதங்க ளான மா
      பொறுத்துக புட்ப கத்தேர்
      உடையானை அடர வூன்றி
      ஒறுத்துக தருள்கள் செய்தார்
      ஒற்றியூ ருடைய கோவே. 4.45.10
      இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - மாணிக்கத்தியாகர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.46 திருவொற்றியூர் - திருநேரிசை
      திருச்சிற்றம்பலம்
      454 ஓம்பினேன் கூட்டை வாளா
      உள்ளத்தோர் கொடுமை வைத்து
      காம்பிலா மூழை போல
      கருதிற்றே முகக்க மாட்டேன்
      பாம்பின்வா தேரை போல
      பலபல நினைக்கின் றேனை
      ஓம்பிநீ உ கொள்ளாய்
      ஒற்றியூ ருடைய கோவே. 4.46.1
      455 மனமெனு தோணி பற்றி
      மதியெனுங் கோலை யூன்றி
      சினமெனுஞ் சரக்கை யேற்றி
      செறிகட லோடும் போது
      மதனெனும் பாறை தாக்கி
      மறியும்போ தறிய வொண்ணா
      துனையுனும் உணர்வை நல்காய்
      ஒற்றியூ ருடய கோவே. 4.46.2
      இப்பதிகத்தில் ஏனைய செய்யுட்கள் சிதைவுற்றன. 4.46.3-10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.47 திருக்கயிலாயம் - திருநேரிசை
      திருச்சிற்றம்பலம்
      456 கனகமா வயிர முந்து
      மாமணி கயிலை கண்டும்
      உனகனா யரக்க னோடி
      யெடுத்தலு முமையா ளஞ்ச
      அனகனாய் நின்ற ஈச
      னூன்றலு மலறி வீழ்ந்தான்
      மனகனா யூன்றி னானேல்
      மறித்துநோ கில்லை யன்றே. 4.47.1
      457 கதித்தவன் கண்சி வந்து
      கயிலைநன் மலையை யோடி
      அதிர்த்தவன் எடுத்தி டலும்
      அரிவைதான் அஞ்ச ஈசன்
      நெதித்தவ னூன்றி யிட்ட
      நிலையழி தலறி வீழ்ந்தான்
      மதித்திறை யூன்றி னானேல்
      மறித்துநோ கில்லை யன்றே. 4.47.2
      458 கறுத்தவன் கண்சி வந்து
      கயிலைநன் மலையை கையால்
      மறித்தலும் மங்கை அஞ்ச
      வானவர் இறைவன் நக்கு
      நெறித்தொரு விரலா லூன்ற
      நெடுவரை போல வீழ்ந்தான்
      மறித்திறை யூன்றி னானேல்
      மறித்துநோ கில்லை யன்றே. 4.47.3
      459 கடுத்தவன் கண்சி வந்து
      கயிலைநன் மலையை யோடி
      எடுத்தலும் மங்கை அஞ்ச
      இறையவ னிறையே நக்கு
      நொடிப்பள விரலா லூன்ற
      நோவது மலறி யிட்டான்
      மடித்திறை யூன்றி னானேல்
      மறித்துநோ கில்லை யன்றே. 4.47.4
      460 கன்றித்தன் கண்சி வந்து
      கயிலைநன் மலையை யோடி
      வென்றித்தன் கைத்த லத்தா
      லெடுத்தலும் வெருவ மங்கை
      நன்றுத்தான் நக்கு நாத
      னூன்றலு நகழ வீழ்ந்தான்
      மன்றித்தான் ஊன்றி னானேல்
      மறித்துநோ கில்லை யன்றே. 4.47.5
      461 களித்தவன் கண்சி வந்து
      கயிலைநன் மலையை யோடி
      நெளித்தவ னெடுத்தி டலும்
      நேரிழை அஞ்ச நோக்கி
      வெளித்தவ னூன்றி யிட்ட
      வெற்பினா லலறி வீழ்ந்தான்
      மளித்திறை யூன்றி னானேல்
      மறித்துநோ கில்லை யன்றே. 4.47.6
      462 கருத்தனா கண்சி வந்து
      கயிலைநன் மலையை கையால்
      எருத்தனாய் எடுத்த வாறே
      ஏந்திழை அஞ்ச ஈசன்
      திருத்தனாய் நின்ற தேவன்
      திருவிர லூன்ற வீழ்ந்தான்
      வருத்துவான் ஊன்றி னானேல்
      மறித்துநோ கில்லை யன்றே. 4.47.7
      463 கடியவன் கண்சி வந்து
      கயிலைநன் மலையை யோடி
      வடிவுடை மங்கை அஞ்ச
      எடுத்தலும் மருவ நோக்கி
      செடிபட திருவி ரலா
      லூன்றலுஞ் சிதைந்து வீழ்ந்தான்
      வடிவுற வூன்றி னானேல்
      மறித்துநோ கில்லை யன்றே. 4.47.8
      464 கரியத்தான் கண்சி வந்து
      கயிலைநன் மலையை பற்றி
      இரியத்தான் எடுத்தி டலும்
      ஏந்திழை அஞ்ச ஈசன்
      நெரியத்தான் ஊன்றா முன்னம்
      நிற்கிலா தலறி வீழ்ந்தான்
      மரியத்தான் ஊன்றி னானேல்
      மறித்துநோ கில்லை யன்றே. 4.47.9
      465 கற்றனன் கயிலை தன்னை
      காண்டலும் அரக்கன் ஓடி
      செற்றவன் எடுத்த வாறே
      சேயிழை அஞ்ச ஈசன்
      உற்றிறை ஊன்றா முன்னம்
      உணர்வழி வகையால் வீழ்ந்தான்
      மற்றிறை ஊன்றி னானேல்
      மறித்துநோ கில்லை யன்றே. 4.47.10
      இத்தலம் வடநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - கைலாயநாதர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.48 திருஆப்பாடி - திருநேரிசை
      திருச்சிற்றம்பலம்
      466 கடலகம் ஏழி னோடும்
      புவனமுங் கலந்த விண்ணும்
      உடலக துயிரும் பாரும்
      ஒள்ளழ லாகி நின்று
      தடமலர கந்த மாலை
      தண்மதி பகலு மாகி
      மடலவிழ் கொன்றை சூடி
      மன்னும்ஆ பாடி யாரே. 4.48.1
      467 ஆதியும் அறிவு மாகி
      அறிவினு செறிவு மாகி
      சோதியு சுடரு மாகி
      தூநெறி கொருவ னாகி
      பாதியிற் பெண்ணு மாகி
      பரவுவார் பாங்க னாகி
      வேதியர் வாழுஞ் சேய்ஞல்
      விரும்பும்ஆ பாடி யாரே. 4.48.2
      468 எண்ணுடை இருக்கு மாகி
      யிருக்கினு பொருளு மாகி
      பண்ணொடு பாடல் தன்னை
      பரவுவார் பாங்க னாகி
      கண்ணொரு நெற்றி யாகி
      கருதுவார் கருத லாகா
      பெண்ணொரு பாக மாகி
      பேணும்ஆ பாடி யாரே. 4.48.3
      469 அண்டமார் அமரர் கோமான்
      ஆதியெம் அண்ணல் பாதங்
      கொண்டவன் குறிப்பி னாலே
      கூப்பினான் தாப ரத்தை
      கண்டவன் தாதை பாய்வான்
      காலற எறி கண்டு
      தண்டியார கருள்கள் செய்த
      தலைவர்ஆ பாடி யாரே. 4.48.4
      470 சிந்தையு தெளிவு மாகி
      தெளிவினு சிவமு மாகி
      வந்தநற் பயனு மாகி
      வாணுதல் பாக மாகி
      மந்தமாம் பொழில்கள் சூழ்ந்த
      மண்ணித்தென் கரைமேல் மன்னி
      அந்தமோ டளவி லாத
      அடிகள்ஆ பாடி யாரே. 4.48.5
      471 வன்னிவா ளரவு மத்தம்
      மதியமும் ஆறுஞ் சூடி
      மின்னிய உருவாஞ் சோதி
      மெய்ப்பொரு பயனு மாகி
      கன்னியோர் பாக மாகி
      கருதுவார் கருத்து மாகி
      இன்னிசை தொண்டர் பாட
      இருந்தஆ பாடி யாரே. 4.48.6
      472 உள்ளுமா புறமு மாகி
      உருவுமாய் அருவு மாகி
      வெள்ளமா கரையு மாகி
      விரிகதிர் ஞாயி றாகி
      கள்ளமா கள்ள துள்ளார்
      கருத்துமாய் அருத்த மாகி
      அள்ளுவார கள்ளல் செய்தி
      டிருந்தஆ பாடி யாரே. 4.48.7
      473 மயக்கமா தெளிவு மாகி
      மால்வரை வளியு மாகி
      தியக்கமாய் ஒருக்க மாகி
      சிந்தையுள் ஒன்றி நின்று
      இயக்கமாய் இறுதி யாகி
      எண்டிசை கிறைவ ராகி
      அயக்கமாய் அடக்க மாய
      ஐவர்ஆ பாடி யாரே. 4.48.8
      474 ஆரழல் உருவ மாகி
      அண்டமேழ் கடந்த எந்தை
      பேரொளி உருவி னானை
      பிரமனும் மாலுங் காணா
      சீரவை பரவி யேத்தி
      சென்றடி வணங்கு வார்க்கு
      பேரருள் அருளி செய்வார்
      பேணும்ஆ பாடி யாரே. 4.48.9
      475 திண்டிறல் அரக்க னோடி
      சீகயி லா தன்னை
      எண்டிறல் இலனு மாகி
      எடுத்தலும் ஏழை அஞ்ச
      விண்டிறல் நெறிய வூன்றி
      மிகக்கடு தலறி வீழ
      பண்டிறல் கேட்டு கந்த
      பரமர்ஆ பாடி யாரே. 4.48.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - பாலுவந்தநாயகர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.49 திருக்குறுக்கை - திருநேரிசை
      476 ஆதியிற் பிரம னார்தாம்
      அர்ச்சித்தார் அடியி ணைக்கீழ்
      ஓதிய வேத நாவர்
      உணருமா றுணர லுற்றார்
      சோதியு சுடரா தோன்றி
      சொல்லினை யிறந்தார் பல்பூ
      கோதிவண் டறையுஞ் சோலை
      குறுக்கைவீ ரட்ட னாரே. 4.49.1
      477 நீற்றினை நிறை பூசி
      நித்தலும் நியமஞ் செய்து
      ஆற்றுநீர் பூரி தாட்டும்
      அந்தண னாரை கொல்வான்
      சாற்றுநாள் அற்ற தென்று
      தருமரா சற்காய் வந்த
      கூற்றினை குமைப்பர் போலுங்
      குறுக்கைவீ ரட்ட னாரே. 4.49.2
      478 தழைத்ததோர் ஆத்தி யின்கீழ
      தாபர மணலாற் கூப்பி
      அழைத்தங்கே ஆவின் பாலை
      கறந்துகொண் டாட்ட கண்டு
      பிழைத்ததன் றாதை தாளை
      பெருங்கொடு மழுவால் வீச
      குழைத்ததோர் அமுதம் ஈந்தார்
      குறுக்கைவீ ரட்ட னாரே. 4.49.3
      479 சிலந்தியும் ஆனை காவிற்
      திருநிழற் பந்தர் செய்து
      உலந்தவண் இறந்த போதே
      கோச்செங்க ணானு மா
      கலந்தநீர காவி ரிசூழ்
      சோணாட்டு சோழர் தங்கள்
      குலந்தனிற் பிறப்பி திட்டார்
      குறுக்கைவீ ரட்ட னாரே. 4.49.4
      480 ஏறுடன் ஏழ டர்த்தான்
      எண்ணியா யிரம்பூ கொண்டு
      ஆறுடை சடையி னானை
      அர்ச்சித்தான் அடியி ணைக்கீழ்
      வேறுமோர் பூக்கு றைய
      மெய்ம்மலர கண்ணை மிண்ட
      கூறுமோர் ஆழி ஈந்தார்
      குறுக்கைவீ ரட்ட னாரே. 4.49.5
      481 கல்லினால் எறிந்து கஞ்சி
      தாமுணுஞ் சாக்கி யனார்
      நெல்லினார் சோறு ணாமே
      நீள்விசும் பாள வைத்தார்
      எல்லியாங் கெரிகை ஏந்தி
      எழில்திகழ் நட்ட மாடி
      கொல்லியாம் பண்ணு கந்தார்
      குறுக்கைவீ ரட்ட னாரே. 4.49.6
      482 காப்பதோர் வில்லும் அம்புங்
      கையதோர் இறைச்சி பார
      தோற்பெருஞ் செருப்பு தொட்டு
      தூயவா கலசம் ஆட்டி
      தீப்பெருங் கண்கள் செ
      குருதிநீர் ஒழுக தன்கண்
      கோப்பதும் பற்றி கொண்டார்
      குறுக்கைவீ ரட்ட னாரே. 4.49.7
      483 நிறைமறை காடு தன்னில்
      நீண்டெரி தீப தன்னை
      கறைநிற தெலிதன் மூக்கு
      சுட்டிட கனன்று தூண்ட
      நிறைகடல் மண்ணும் விண்ணும்
      நீண்டவா னுலக மெல்லாங்
      குறைவற கொடுப்பர் போலுங்
      குறுக்கைவீ ரட்ட னாரே. 4.49.8
      484 அணங்குமை பாக மாக
      அடக்கிய ஆதி மூர்த்தி
      வணங்குவார் இடர்கள் தீர்க்கும்
      மருந்துநல் அருந்த வத்த
      கணம்புல்லர கருள்கள் செய்து
      காதலாம் அடியார கென்றுங்
      குணங்களை கொடுப்பர் போலுங்
      குறுக்கைவீ ரட்ட னாரே. 4.49.9
      485 எடுத்தனன் எழிற் கயிலை
      இலங்கையர் மன்னன் தன்னை
      அடுத்தொரு விரலால் ஊன்ற
      அலறிப்போய் அவனும் வீழ்ந்து
      விடுத்தனன் கைந ரம்பால்
      வேதகீ தங்கள் பாட
      கொடுத்தனர் கொற்ற வாணாள்
      குறுக்கைவீ ரட்ட னாரே. 4.49.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - வீரட்டேசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.50 திருக்குறுக்கை - திருநேரிசை
      486 நெடியமால் பிரம னோடு
      நீரெனும் பிலயங் கொள்ள
      அடியொடு முடியுங் காணார்
      அருச்சுனற் கம்பும் வில்லு
      துடியுடை வேட ராகி
      தூ திரங்கள் சொல்லி
      கொடிநெடு தேர்கொ டுத்தார்
      குறுக்கைவீ ரட்ட னாரே. 4.50.1
      487 ஆத்தமாம் அயனு மாலும்
      அன்றிமற் றொழிந்த தேவர்
      சோத்தமெம் பெருமான் என்று
      தொழுதுதோ திரங்கள் சொல்ல
      தீர்த்தமாம் அட்ட மிமுன்
      சீருடை ஏழு நாளுங்
      கூத்தராய் வீதி போந்தார்
      குறுக்கைவீ ரட்ட னாரே. 4.50.2
      இப்பதிகத்தில் ஏனைய செய்யுட்கள் சிதைவுற்றன. 4.50.3-10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      திருநாவுக்கரசுசுவாமிகள் அருளிச்செய்த தேவாரப்பதிகங்கள்
      நான்காம் திருமுறை முதற் பகுதி முற்றும்.
      திருச்சிற்றம்பலம்
      ------------------------------------------------------------------------
      25 2003


      -4 1.
      ------------------------------------------------------------------------
      - 4 2
      488-1070

      திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த
      தேவார பதிகங்கள்
      நான்காம் திருமுறை இரண்டாம் பகுதி
      பாடல்கள் 488 - 1070
      ------------------------------------------------------------------------
      ------------------------------------------------------------------------

      .

      .
      .


      .
      - . ..

      .
      .

      .
      2000 ...

      2000 .
      -8
      6 5
      -8 - .
      .
      .
      © 1999 - 2004



      .

      ..

      .
      ------------------------------------------------------------------------
      திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த
      தேவார பதிகங்கள்
      நான்காம் திருமுறை இரண்டாம் பகுதி
      பாடல்கள் 488 - 1070
      உள்ளுறை
      4.051 திருக்கோடிகா 488-497 மின்பதிப்பு
      4.052 திருவாரூர் 498 -507 மின்பதிப்பு
      4.053 திருவாரூர் 508 -517 மின்பதிப்பு
      4.054 திருப்புகலூர் 518 - 527 மின்பதிப்பு
      4.055 திருவலம்புரம் 528 -537 மின்பதிப்பு
      4.056 திருஆவடுதுறை 538-547 மின்பதிப்பு
      4.057 திருஆவடுதுறை 548- 557 மின்பதிப்பு
      4.058 திருப்பருப்பதம் 558-567 மின்பதிப்பு
      4.059 திருஅவளிவணல்லூர் 568-577 மின்பதிப்பு
      4.060 திருப்பெருவேளூர் 578-587 மின்பதிப்பு
      4.061 திருஇராமேச்சுரம் 588-598 மின்பதிப்பு
      4.062 திருவாலவாய் 598 -608 மின்பதிப்பு
      4.063 திருவண்ணாமலை 609-618 மின்பதிப்பு
      4.064 திருவீழிமிழலை 619-628 மின்பதிப்பு
      4.065 திருச்சாய்க்காடு 629-638 மின்பதிப்பு
      4.066 திருநாகேச்சரம் 639-648 மின்பதிப்பு
      4.067 திருக்கொண்டீச்சரம் 649-658 மின்பதிப்பு
      4.068 திருவாலங்காடு 659-668 மின்பதிப்பு
      4.069 திருக்கோவலூர்வீரட்டம் 669-678 மின்பதிப்பு
      4.070 திருநனிபள்ளி 679-687 மின்பதிப்பு
      4.071 திருநாகைக்காரோணம் 688-696 மின்பதிப்பு
      4.072 திருவின்னம்பர் 697-706 மின்பதிப்பு
      4.073 திருச்சேறை 707-716 மின்பதிப்பு
      4.074 நெஞ்சம்ஈசனைநினைந்த 717-725 மின்பதிப்பு
      4.075 தனி - திருநேரிசை 726-735 மின்பதிப்பு
      4.076 தனி - திருநேரிசை 736-745 மின்பதிப்பு
      4.077 தனி - திருநேரிசை 746-753 மின்பதிப்பு
      4.078 குறைந்த - திருநேரிசை 754-763 மின்பதிப்பு
      4.079 குறைந்த - திருநேரிசை 764-769 மின்பதிப்பு
      4.080 கோயில் - திருவிருத்தம் 770-779 மின்பதிப்பு
      4.081 கோயில் - திருவிருத்தம் 780-789 மின்பதிப்பு
      4.082 திருக்கழுமலம் 790-799 மின்பதிப்பு
      4.083 திருக்கழுமலம் 800 மின்பதிப்பு
      4.084 ஆருயிர - திருவிருத்தம் 801-811 மின்பதிப்பு
      4.085 திருச்சோற்றுத்துறை 812-821 மின்பதிப்பு
      4.086 திருவொற்றியூர் 822-832 மின்பதிப்பு
      4.087 திருப்பழனம் 833-842 மின்பதிப்பு
      4.088 திருப்பூந்துருத்தி 843-852 மின்பதிப்பு
      4.089 திருநெய்த்தானம் 853-862 மின்பதிப்பு
      4.090 திருவேதிகுடி 863-872 மின்பதிப்பு
      4.091 திருவையாறு 873-882 மின்பதிப்பு
      4.092 திருவையாறு 883-892 மின்பதிப்பு
      4.093 திருவையாறு 893-902 மின்பதிப்பு
      4.094 திருக்கண்டியூர் 903-912 மின்பதிப்பு
      4.095 திருப்பாதிரிப்புலியூர் 913-922 மின்பதிப்பு
      4.096 திருவீழிமிழலை 923-932 மின்பதிப்பு
      4.097 திருச்சத்திமுற்றம் 933-942 மின்பதிப்பு
      4.098 திருநல்லூர் 943-952 மின்பதிப்பு
      4.099 திருவையாறு 954-955 மின்பதிப்பு
      4.100 திருவேகம்பம் 956-965 மின்பதிப்பு
      4.101 திருவின்னம்பர் 966-975 மின்பதிப்பு
      4.102 திருவாரூர் 976-985 மின்பதிப்பு
      4.103 திருவாரூர் 986-992 மின்பதிப்பு
      4.104 திருநாகைக்காரோணம் 993-1001 மின்பதிப்பு
      4.105 திருவதிகைவீரட்டானம் 1002-1008 மின்பதிப்பு
      4.106 திருப்புகலூர் 1009-1012 மின்பதிப்பு
      4.107 திருக்கழிப்பாலை 1013-1015 மின்பதிப்பு
      4.108 திருக்கடவூர் 1016-1025 மின்பதிப்பு
      4.109 திருமாற்பேறு 1026-1027 மின்பதிப்பு
      4.110 திருத்தூங்கானைமாடம் 1028-1030 மின்பதிப்பு
      4.111 பசுபதி 1031-1038 மின்பதிப்பு
      4.112 சரக்கறை 1039-1049 மின்பதிப்பு
      4.113 தனி - திருவிருத்தம் 1050-1059 மின்பதிப்பு
      4.114 தனி - திருவிருத்தம் 1060-1070 மின்பதிப்பு
      ------------------------------------------------------------------------
      4.51 திருக்கோடிகா - திருநேரிசை
      திருச்சிற்றம்பலம்
      488 நெற்றிமேற் கண்ணி னானே
      நீறுமெய் பூசி னானே
      கற்றைப்புன் சடையி னானே
      கடல்விடம் பருகி னானே
      செற்றவர் புரங்கள் மூன்றுஞ்
      செவ்வழல் செலுத்தி னானே
      குற்றமில் குணத்தி னானே
      கோடிகா வுடைய கோவே. 4.51.1
      489 கடிகமழ் கொன்றை யானே
      கபாலங்கை யேந்தி னானே
      வடிவுடை மங்கை தன்னை
      மார்பிலோர் பாக தானே
      அடியிணை பரவ நாளும்
      அடியவர கருள்செய் வானே
      கொடியணி விழவ தோவா
      கோடிகா வுடைய கோவே. 4.51.2
      490 நீறுமெய் பூசி னானே
      நிழல்திகழ் மழுவி னானே
      ஏறுக தேறி னானே
      இருங்கடல் அமுதொ பானே
      ஆறுமோர் நான்கு வேதம்
      அறமுரை தருளி னானே
      கூறுமோர் பெண்ணி னானே
      கோடிகா வுடைய கோவே. 4.51.3
      491 காலனை காலாற் செற்றன்
      றருள்புரி கருணை யானே
      நீலமார் கண்ட தானே
      நீண்முடி யமரர் கோவே
      ஞாலமாம் பெருமை யானே
      நளிரிள திங்கள் சூடுங்
      கோலமார் சடையி னானே
      கோடிகா வுடைய கோவே. 4.51.4
      492 பூணர வார தானே
      புலியுரி அரையி னானே
      காணில்வெண் கோவ ணமுங்
      கையிலோர் கபால மேந்தி
      ஊணுமூர பிச்சை யானே
      உமையொரு பாக தானே
      கோணல்வெண் பிறையி னானே
      கோடிகா வுடைய கோவே. 4.51.5
      493 கேழல்வெண் கொம்பு பூண்ட
      கிளரொளி மார்பி னானே
      ஏழையேன் ஏழை யேன்நான்
      என்செய்கேன் எந்தை பெம்மான்
      மாழையொண் கண்ணி னார்கள்
      வலைதனில் மயங்கு கின்றேன்
      கூழைஏ றுடைய செல்வா
      கோடிகா வுடைய கோவே. 4.51.6
      494 அழலுமிழ் அங்கை யானே
      அரிவையோர் பாக தானே
      தழலுமிழ் அரவம் ஆர்த்து
      தலைதனிற் பலிகொள் வானே
      நிழலுமிழ் சோலை சூழ
      நீள்வரி வண்டி னங்கள்
      குழலுமிழ் கீதம் பாடுங்
      கோடிகா வுடைய கோவே. 4.51.7
      495 ஏவடு சிலையி னாலே
      புரமவை எரிசெய் தானே
      மாவடு வகிர்கொள் கண்ணாள்
      மலைமகள் பாக தானே
      ஆவடு துறையு ளானே
      ஐவரால் ஆட்ட பட்டேன்
      கோவடு குற்ற தீராய்
      கோடிகா வுடைய கோவே. 4.51.8
      496 ஏற்றநீர கங்கை யானே
      இருநில தாவி னானும்
      நாற்றமா மலர்மேல் ஏறும்
      நான்முகன் இவர்கள் கூடி
      ஆற்றலால் அளக்க லுற்றார
      கழலுரு வாயினானே
      கூற்றுக்குங் கூற்ற தானாய்
      கோடிகா வுடைய கோவே. 4.51.9
      497 பழகநான் அடிமை செய்வேன்
      பசுபதீ பாவ நாசா
      மழகளி யானை யின்றோல்
      மலைமகள் வெருவ போர்த்த
      அழகனே அரக்கன் திண்டோ ள்
      அருவரை நெரிய வூன்றுங்
      குழகனே கோல மார்பா
      கோடிகா வுடைய கோவே. 4.51.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - கோடீசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.52 திருவாரூர் - திருநேரிசை
      திருச்சிற்றம்பலம்
      498 படுகுழி பவ்வ தன்ன
      பண்டியை பெய்த வாற்றாற்
      கெடுவதிம் மனிதர் வாழ்க்கை
      காண்டொறுங் கேது கின்றேன்
      முடுகுவர் இருந்துள் ஐவர்
      மூர்க்கரே இவர்க ளோடும்
      அடியனேன் வாழ மாட்டேன்
      ஆரூர்மூ லட்ட னீரே. 4.52.1
      499 புழுப்பெய்த பண்டி தன்னை
      புறமொரு தோலால் மூடி
      ஒழுக்கறா ஒன்ப துவாய்
      ஒற்றுமை யொன்று மில்லை
      சழக்குடை இதனுள் ஐவர்
      சங்கடம் பலவுஞ் செய்ய
      அழிப்பனாய் வாழ மாட்டேன்
      ஆரூர்மூ லட்ட னீரே. 4.52.2
      500 பஞ்சின்மெல் லடியி னார்கள்
      பாங்கரா யவர்கள் நின்று
      நெஞ்சில்நோய் பலவுஞ் செய்து
      நினையினும் நினைய வொட்டார்
      நஞ்சணி மிடற்றி னானே
      நாதனே நம்ப னேநான்
      அஞ்சினேற் கஞ்ச லென்னீர்
      ஆரூர்மூ லட்ட னீரே. 4.52.3
      501 கெண்டை தடங்கண் நல்லார்
      தம்மையே கெழும வேண்டி
      குண்டரா திரித தைவர்
      குலைத்திடர குழியில் நூ
      கண்டுநான் தரிக்க கில்லேன்
      காத்துக்கொள் கறைசேர் கண்டா
      அண்டவா னவர்கள் போற்றும்
      ஆரூர்மூ லட்ட னீரே. 4.52.4
      502 தாழ்குழல் இன்சொல் நல்லார்
      தங்களை தஞ்ச மென்று
      ஏழையே னாகி நாளும்
      என்செய்கேன் எந்தை பெம்மான்
      வாழ்வதேல் அரிது போலும்
      வைகலும் ஐவர் வந்து
      ஆழ்குழி படுத்த வாற்றேன்
      ஆரூர்மூ லட்ட னீரே. 4.52.5
      503 மாற்றமொன் றருள கில்லீர்
      மதியிலேன் விதியி லாமை
      சீற்றமு தீர்த்தல் செய்யீர்
      சிக்கன வுடைய ராகி
      கூற்றம்போல் ஐவர் வந்து
      குலைத்திட்டு கோகு செய்ய
      ஆற்றவுங் கில்லேன் நாயேன்
      ஆரூர்மூ லட்ட னீரே. 4.52.6
      504 உயிர்நிலை யுடம்பே காலா
      உள்ளமே தாழி யாக
      துயரமே ஏற்ற மாக
      துன்பக்கோ லதனை பற்றி
      பயிர்தனை சுழிய விட்டு
      பாழ்க்குநீர் இறைத்து மிக்க
      அயர்வினால் ஐவர காற்றேன்
      ஆரூர்மூ லட்ட னீரே. 4.52.7
      505 கற்றதேல் ஒன்று மில்லை
      காரிகை யாரோ டாடி
      பெற்றதேற் பெரிது துன்பம்
      பேதையேன் பிழைப்பி னாலே
      முற்றினால் ஐவர் வந்து
      முறைமுறை துயரஞ் செய்ய
      அற்றுநான் அலந்து போனேன்
      ஆரூர்மூ லட்ட னீரே. 4.52.8
      506 பத்தனாய் வாழ மாட்டேன்
      பாவியேன் பரவி வந்து
      சித்தத்துள் ஐவர் தீய
      செய்வினை பலவுஞ் செய்ய
      மத்துறு தயிரே போல
      மறுகுமென் னுள்ள தானும்
      அத்தனே அமரர் கோவே
      ஆரூர்மூ லட்ட னீரே. 4.52.9
      507 தடக்கைநா லைந்துங் கொண்டு
      தடவரை தன்னை பற்றி
      எடுத்தவன் பேர்க்க ஓடி
      இரிந்தன பூத மெல்லாம்
      முடித்தலை யனைத்து தோளும்
      முறிதர இறையே யூன்றி
      அடர்த்தருள் செய்த தென்னே
      ஆரூர்மூ லட்ட னீரே. 4.52.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.53 திருவாரூர் - திருநேரிசை
      திருச்சிற்றம்பலம்
      508 குழல்வலங் கொண்ட சொல்லாள்
      கோலவேற் கண்ணி தன்னை
      கழல்வலங் கொண்டு நீங்கா
      கணங்கள கணங்க ளார
      அழல்வலங் கொண்ட கையான்
      அருட்கதிர் எறிக்கும் ஆரூர்
      தொழல்வலங் கொண்டல் செய்வான்
      தோன்றினார் தோன்றி னாரே. 4.53.1
      509 நாகத்தை நங்கை அஞ்ச
      நங்கையை மஞ்ஞை யென்று
      வேகத்தை தவிர நாகம்
      வேழத்தின் உரிவை போர்த்து
      பாகத்தின் நிமிர்தல் செய்யா
      திங்களை மின்னென் றஞ்சி
      ஆகத்திற் கிடந்த நாகம்
      அடங்கும்ஆ ரூர னார்க்கே. 4.53.2
      510 தொழுதகங் குழைய மேவி
      தோட்டிமை யுடைய தொண்டர்
      அழுதகம் புகுந்து நின்றார்
      அவரவர் போலும் ஆரூர்
      எழிலக நடுவெண் முத்த
      மன்றியும் ஏர்கொள் வேலி
      பொழிலகம் விளங்கு திங்க
      புதுமுகிழ் சூடி னாரே. 4.53.3
      511 நஞ்சிருள் மணிகொள் கண்டர்
      நகையிருள் ஈ கங்குல்
      வெஞ்சுடர் விளக்க தாடி
      விளங்கினார் போலும் மூவா
      வெஞ்சுடர் முகடு தீண்டி
      வெள்ளிநா ராச மன்ன
      அஞ்சுடர் அணிவெண் டிங்கள்
      அணியும்ஆ ரூர னாரே. 4.53.4
      512 எந்தளிர் நீர்மை கோல
      மேனியென் றிமையோ ரேத்த
      பைந்தளிர கொம்ப ரன்ன
      படர்கொடி பயில பட்டு
      தஞ்சடை தொத்தி னாலு
      தம்மதோர் நீர்மை யாலும்
      அந்தளிர் ஆகம் போலும்
      வடிவர்ஆ ரூர னாரே. 4.53.5
      513 வானகம் விளங்க மல்கும்
      வளங்கெழு மதியஞ் சூடி
      தானக மழிய வந்து
      தாம்பலி தேர்வர் போலும்
      ஊனகங் கழிந்த ஓட்டில்
      உண்பதும் ஒளிகொள் நஞ்சம்
      ஆனகம் அஞ்சும் ஆடும்
      அடிகள்ஆ ரூர னாரே. 4.53.6
      514 அஞ்சணை கணையி னானை
      அழலுற அன்று நோக்கி
      அஞ்சணை குழலி னாளை
      அமுதமா அணைந்து நக்கு
      அஞ்சணை அஞ்சும் ஆடி
      ஆடர வாட்டு வார்தாம்
      அஞ்சணை வேலி ஆரூர்
      ஆதரி திடங்கொண் டாரே. 4.53.7
      515 வணங்கிமுன் அமரர் ஏத்த
      வல்வினை யான தீர
      பிணங்குடை சடையில் வைத்த
      பிறையுடை பெருமை யண்ணல்
      மணங்கம ழோதி பாகர்
      மதிநிலா வட்ட தாடி
      அணங்கொடி மாட வீதி
      ஆரூரெம் அடிக ளாரே. 4.53.8
      516 நகலிடம் பிறர்க காக
      நான்மறை யோர்கள் தங்கள்
      புகலிட மாகி வாழும்
      புகலிலி இருவர் கூடி
      இகலிட மாக நீண்டங்
      கீண்டெழில் அழல தாகி
      அகலிடம் பரவி யேத்த
      அடிகள்ஆ ரூர னாரே. 4.53.9
      517 ஆயிர திங்கள் மொய்த்த
      அலைகடல் அமுதம் வாங்கி
      ஆயிரம் அசுரர் வாழும்
      அணிமதில் மூன்றும் வேவ
      ஆயிர தோளும் மட்டி
      தாடிய அசைவு தீர
      ஆயிரம் அடியும் வைத்த
      அடிகள்ஆ ரூர னாரே. 4.53.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.54 திருப்புகலூர் - திருநேரிசை
      பண் - காந்தாரம்
      திருச்சிற்றம்பலம்
      518 பகைத்திட்டார் புரங்கள் மூன்றும்
      பாறிநீ றாகி வீழ
      புகைத்திட்ட தேவர் கோவே
      பொறியிலேன் உடல தன்னுள்
      அகைத்திட்டங் கதனை நாளும்
      ஐவர்கொண் டாட்ட வாடி
      திகைத்திட்டேன் செய்வ தென்னே
      திருப்புக லூர னீரே. 4.54.1
      519 மையரி மதர்த்த ஒண்கண்
      மாதரார் வலையிற் பட்டு
      கையெரி சூல மேந்துங்
      கடவுளை நினைய மாட்டேன்
      ஐநெரி தகமி டற்றே
      அடைக்கும்போ தாவி யார்தாஞ்
      செய்வதொன் றறிய மாட்டேன்
      திருப்புக லூர னீரே. 4.54.2
      520 முப்பதும் முப்ப தாறும்
      முப்பதும் இடுகு ரம்பை
      அப்பர்போல் ஐவர் வந்து
      அதுதரு கிதுவி டென்று
      ஒப்பவே நலிய லுற்றால்
      உய்யுமா றறிய மாட்டேன்
      செப்பமே திகழு மேனி
      திருப்புக லூர னீரே. 4.54.3
      521 பொறியிலா அழுக்கை யோம்பி
      பொய்யினை மெய்யென் றெண்ணி
      நெறியலா நெறிகள் சென்றேன்
      நீதனேன் நீதி யேதும்
      அறிவிலேன் அமரர் கோவே
      அமுதினை மண்ணில் வைக்குஞ்
      செறிவிலேன் செய்வ தென்னே
      திருப்புக லூர னீரே. 4.54.4
      522 அளியினார் குழலி னார்கள்
      அவர்களு கன்ப தாகி
      களியினார் பாடல் ஓவா
      கடவூர்வீ ரட்ட மென்னு
      தளியினார் பாத நாளும்
      நினைவிலா தகவில் நெஞ்ச
      தெளிவிலேன் செய்வ தென்னே
      திருப்புக லூர னீரே. 4.54.5
      523 இலவினார் மாதர் பாலே
      இசைந்துநான் இருந்து பின்னும்
      நிலவுநாள் பலவென் றெண்ணி
      நீதனேன் ஆதி உன்னை
      உலவிநான் உள்க மாட்டேன்
      உன்னடி பரவு ஞானஞ்
      செலவிலேன் செய்வ தென்னே
      திருப்புக லூர னீரே. 4.54.6
      524 காத்திலேன் இரண்டும் மூன்றுங்
      கல்வியேல் இல்லை என்பால்
      வாய்த்திலேன் அடிமை தன்னுள்
      வாய்மையால் தூயே னல்லேன்
      பார்த்தனு கருள்கள் செய்த
      பரமனே பரவு வார்கள்
      தீர்த்தமே திகழும் பொய்கை
      திருப்புக லூர னீரே. 4.54.7
      525 நீருமா தீயு மாகி
      நிலனுமாய் விசும்பு மாகி
      ஏருடை கதிர்க ளாகி
      இமையவர் இறைஞ்ச நின்று
      ஆய்வதற் கரிய ராகி
      அங்கங்கே யாடு கின்ற
      தேவர்க்கு தேவ ராவார்
      திருப்புக லூர னாரே. 4.54.8
      526 மெய்யுளே விளக்கை ஏற்றி
      வேண்டள வுயர தூண்டி
      உய்வதோர் உபாயம் பற்றி
      உகக்கின்றேன் உகவா வண்ணம்
      ஐவரை அகத்தே வைத்தீர்
      அவர்களே வலியர் சால
      செய்வதொன் றறிய மாட்டேன்
      திருப்புக லூர னீரே. 4.54.9
      527 அருவரை தாங்கி னானும்
      அருமறை யாதி யானும்
      இருவரும் அறிய மாட்டா
      ஈசனார் இலங்கை வேந்தன்
      கருவரை எடுத்த ஞான்று
      கண்வழி குருதி சோர
      திருவிரல் சிறிது வைத்தார்
      திருப்புக லூர னாரே. 4.54.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - அக்கினீசுவரர்
      தேவியார் - கருந்தார்க்குழலியம்மை.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.55 திருவலம்புரம் - திருநேரிசை
      திருச்சிற்றம்பலம்
      528 தெண்டிரை தேங்கி ஓதஞ்
      சென்றடி வீழுங் காலை
      தொண்டிரை தண்டர் கோனை
      தொழுதடி வணங்கி யெங்கும்
      வண்டுகள் மதுக்கள் மாந்தும்
      வலம்புர தடிகள் தம்மை
      கொண்டுநற் கீதம் பாட
      குழகர்தாம் இருந்த வாறே. 4.55.1
      529 மடுக்களில் வாளை பாய
      வண்டினம் இரிந்த பொய்கை
      பிடிக்களி றென்ன தம்மிற்
      பிணைபயின் றணைவ ரால்கள்
      தொடுத்தநன் மாலை ஏந்தி
      தொண்டர்கள் பரவி யேத்த
      வடித்தடங் கண்ணி பாகர்
      வலம்புர திருந்த வாறே. 4.55.2
      530 தேனுடை மலர்கள் கொண்டு
      திருந்தடி பொருந்த சேர்த்தி
      ஆனிடை அஞ்சுங் கொண்டு
      அன்பினால் அமர வாட்டி
      வானிடை மதியஞ் சூடும்
      வலம்புர தடிகள் தம்மை
      நானடை தேத்த பெற்று
      நல்வினை பயனுற் றேனே. 4.55.3
      531 முளைஎயிற் றிளநல் ஏனம்
      பூண்டுமொய் சடைகள் தாழ
      வளைஎயிற் றிளைய நாகம்
      வலித்தரை யிசைய வீக்கி
      புளைகைய போர்வை போர்த்து
      புனலொடு மதியஞ் சூடி
      வளைபயில் இளைய ரேத்தும்
      வலம்புர தடிகள் தாமே. 4.55.4
      532 சுருளுறு வரையின் மேலாற்
      றுளங்கிளம் பளிங்கு சிந்த
      இருளுறு கதிர்நு ழைந்த
      இளங்கதிர பசலை திங்கள்
      அருளுறும் அடிய ரெல்லாம்
      அங்கையின் மலர்கள் ஏந்த
      மருளுறு கீதங் கேட்டார்
      வலம்புர தடிக ளாரே. 4.55.5
      533 நினைக்கின்றேன் நெஞ்சு தன்னால்
      நீண்டபுன் சடையி னானே
      அனைத்துடன் கொண்டு வந்தங்
      கன்பினால் அமைய வாட்டி
      புனைக்கின்றேன் பொய்ம்மை தன்னை
      மெய்ம்மையை புணர மாட்டேன்
      எனக்குநான் செய்வ தென்னே
      இனிவலம் புரவ னீரே. 4.55.6
      534 செங்கயல் சேல்கள் பாய்ந்து
      தேம்பழ மினிய நாடி
      தங்க துறந்து போந்து
      தடம்பொய்கை அடைந்து நின்று
      கொங்கையர் குடையுங் காலை
      கொழுங்கனி யழுங்கி னாராம்
      மங்கல மனையின் மிக்கார்
      வலம்புர தடிக ளாரே. 4.55.7
      535 அருகெலாங் குவளை செந்நெல்
      அகவிலை யாம்பல் நெய்தல்
      தெருவெலா தெங்கு மாவும்
      பழம்விழும் படப்பை யெல்லாங்
      குருகினங் கூடி யாங்கே
      கும்மலி திறகு லர்த்தி
      மருவலா மிடங்கள் காட்டும்
      வலம்புர தடிக ளாரே. 4.55.8
      536 கருவரை யனைய மேனி
      கடல்வண்ண னவனுங் காணான்
      திருவரை யனைய பூமேல்
      திசைமுக னவனுங் காணான்
      ஒருவரை உச்சி ஏறி
      ஓங்கினார் ஓங்கி வந்து
      அருமையில் எளிமை யானார்
      அவர்வலம் புரவ னாரே. 4.55.9
      537 வாளெயி றிலங்க நக்கு
      வளர்கயி லா தன்னை
      ஆள்வலி கருதி சென்ற
      அரக்கனை வரைக்கீ ழன்று
      தோளொடு பத்து வாயு
      தொலைந்துடன் அழுந்த வூன்றி
      ஆண்மையும் வலியு தீர்ப்பார்
      அவர்வலம் புரவ னாரே. 4.55.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - வலம்புரநாதர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.56 திருஆவடுதுறை - திருநேரிசை
      பண் - காந்தாரம்
      திருச்சிற்றம்பலம்
      538 மாயிரு ஞால மெல்லாம்
      மலரடி வணங்கும் போலும்
      பாயிருங் கங்கை யாளை
      படர்சடை வைப்பர் போலுங்
      காயிரும் பொழில்கள் சூழ்ந்த
      கழுமல வூரர கம்பொன்
      ஆயிரங் கொடுப்பர் போலும்
      ஆவடு துறைய னாரே. 4.56.1
      539 மடந்தை பாகத்தர் போலும்
      மான்மறி கையர் போலும்
      குடந்தையிற் குழகர் போலுங்
      கொல்புலி தோலர் போலுங்
      கடைந்தநஞ் சுண்பர் போலுங்
      காலனை காய்வர் போலும்
      அடைந்தவர கன்பர் போலும்
      ஆவடு துறைய னாரே. 4.56.2
      540 உற்றநோய் தீர்ப்பர் போலும்
      உறுதுணை யாவர் போலுஞ்
      செற்றவர் புரங்கள் மூன்று
      தீயெழ செறுவர் போலுங்
      கற்றவர் பரவி யேத்த
      கலந்துல தலந்து பாடும்
      அற்றவர கன்பர் போலும்
      ஆவடு துறைய னாரே. 4.56.3
      541 மழுவமர் கையர் போலும்
      மாதவள் பாகர் போலும்
      எழுநுனை வேலர் போலும்
      என்புகொண் டணிவர் போலு
      தொழுதெழு தாடி பாடி
      தோத்திரம் பலவுஞ் சொல்லி
      அழுமவர கன்பர் போலும்
      ஆவடு துறைய னாரே. 4.56.4
      542 பொடியணி மெய்யர் போலும்
      பொங்குவெண் ணூலர் போலுங்
      கடியதோர் விடையர் போலுங்
      காமனை காய்வர் போலும்
      வெடிபடு தலையர் போலும்
      வேட்கையாற் பரவு தொண்டர்
      அடிமையை அளப்பர் போலும்
      ஆவடு துறைய னாரே. 4.56.5
      543 வக்கரன் உயிரை வவ்வ
      கண்மலர் கொண்டு போற்ற
      சக்கரங் கொடுப்பர் போலு
      தானவர் தலைவர் போலு
      துக்கமா மூடர் தம்மை
      துயரிலே வீழ்ப்பர் போலும்
      அக்கரை ஆர்ப்பர் போலும்
      ஆவடு துறைய னாரே. 4.56.6
      544 விடைதரு கொடியர் போலும்
      வெண்புரி நூலர் போலும்
      படைதரு மழுவர் போலும்
      பாய்புலி தோலர் போலும்
      உடைதரு கீளர் போலும்
      உலகமு மாவர் போலும்
      அடைபவர் இடர்கள் தீர்க்கும்
      ஆவடு துறைய னாரே. 4.56.7
      545 முந்திவா னோர்கள் வந்து
      முறைமையால் வணங்கி யேத்த
      நந்திமா காள ரென்பார்
      நடுவுடை யார்கள் நிற்ப
      சிந்தியா தேயொ ழிந்தார்
      திரிபுரம் எரிப்பர் போலும்
      அந்திவான் மதியஞ் சூடும்
      ஆவடு துறைய னாரே. 4.56.8
      546 பானமர் ஏன மாகி
      பாரிட திட்ட மாலு
      தேனமர தேறும் அல்லி
      திசைமுக முடைய கோவு
      தீனரை தி கறுத்த
      திருவுரு வுடையர் போலும்
      ஆனரை ஏற்றர் போலும்
      ஆவடு துறைய னாரே. 4.56.9
      547 பார்த்தனு கருள்வர் போலும்
      படர்சடை முடியர் போலும்
      ஏத்துவார் இடர்கள் தீர
      இன்பங்கள் கொடுப்பர் போலுங்
      கூத்தரா பாடி யாடி
      கொடுவலி யரக்கன் றன்னை
      ஆர்த்தவாய் அலறு விப்பார்
      ஆவடு துறைய னாரே. 4.56.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - மாசிலாமணியீசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.57. திருஆவடுதுறை - திருநேரிசை
      திருச்சிற்றம்பலம்
      548 மஞ்சனே மணியு மானாய்
      மரக திரளு மானாய்
      நெஞ்சுளே புகுந்து நின்று
      நினைதரு நிகழ்வி னானே
      துஞ்சும்போ தாக வந்து
      துணையென காகி நின்று
      அஞ்சலென் றருள வேண்டும்
      ஆவடு துறையு ளானே. 4.57.1
      549 நானுக துன்னை நாளும்
      நணுகுமா கருதி யேயும்
      ஊனுக தோம்பும் நாயேன்
      உள்ளுற ஐவர் நின்றார்
      தானுக தேயு கந்த
      தகவிலா தொண்ட னேன்நான்
      ஆனுக தேறு வானே
      ஆவடு துறையு ளானே. 4.57.2
      550 கட்டமே வினைக ளான
      காத்திவை நோக்கி ஆளாய்
      ஒட்டவே ஒட்டி நாளும்
      உன்னையுள் வைக்க மாட்டேன்
      பட்டவான் தலைகை யேந்தி
      பலிதிரி தூர்கள் தோறும்
      அட்டமா வுருவி னானே
      ஆவடு துறையு ளானே. 4.57.3
      551 பெருமைநன் றுடைய தில்லை
      யென்றுநான் பேச மாட்டேன்
      ஒருமையால் உன்னை உள்கி
      உகந்துவா னேற மாட்டேன்
      கருமையி டாய வூனை
      கட்டமே கழிக்கின் றேன்நான்
      அருமையா நஞ்ச முண்ட
      ஆவடு துறையு ளானே. 4.57.4
      552 துட்டனாய் வினைய தென்னுஞ்
      சுழித்தலை அகப்ப டேனை
      கட்டனாய் ஐவர் வந்து
      கலக்காமை காத்து கொள்வாய்
      மட்டவிழ் கோதை தன்னை
      மகிழ்ந்தொரு பாகம் வைத்து
      அட்டமா நாக மாட்டும்
      ஆவடு துறையு ளானே. 4.57.5
      553 காரழற் கண்ட மேயாய்
      கடிமதிற் புரங்கள் மூன்றும்
      ஓரழல் அம்பி னாலே
      யுகைத்துத்தீ எரிய மூட்டி
      நீரழற் சடையு ளானே
      நினைப்பவர் வினைகள் தீர்ப்பாய்
      ஆரழல் ஏந்தி யாடும்
      ஆவடு துறையு ளானே. 4.57.6
      554 செறிவிலேன் சிந்தை யுள்ளே
      சிவனடி தெரிய மாட்டேன்
      குறியிலேன் குணமொன் றில்லேன்
      கூறுமா கூற மாட்டேன்
      நெறிபடு மதியொன் றில்லேன்
      நினையுமா நினைய மாட்டேன்
      அறிவிலேன் அயர்த்து போனேன்
      ஆவடு துறையு ளானே. 4.57.7
      555 கோலமா மங்கை தன்னை
      கொண்டொரு கோல மாய
      சீலமே அறிய மாட்டேன்
      செய்வினை மூடி நின்று
      ஞாலமாம் இதனுள் என்னை
      நைவியா வண்ணம் நல்காய்
      ஆலமா நஞ்ச முண்ட
      ஆவடு துறையு ளானே. 4.57.8
      556 நெடியவன் மலரி னானும்
      நேர்ந்திரு பாலும் நேட
      கடியதோர் உருவ மாகி
      கனலெரி யாகி நின்ற
      வடிவின வண்ண மென்றே
      என்றுதாம் பேச லாகார்
      அடியனேன் நெஞ்சி னுள்ளார்
      ஆவடு துறையு ளானே. 4.57.9
      557 மலைக்குநே ராய ரக்கன்
      சென்றுற மங்கை அஞ்ச
      தலைக்குமேற் கைக ளாலே
      தாங்கினான் வலியை மாள
      உலப்பிலா விரலால் ஊன்றி
      ஒறுத்தவற் கருள்கள் செய்து
      அலைத்தவான் கங்கை சூடும்
      ஆவடு துறையு ளானே. 4.57.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.58 திருப்பருப்பதம் - திருநேரிசை
      பண் - காந்தாரம்
      திருச்சிற்றம்பலம்
      558 கன்றினார் புரங்கள் மூன்றுங்
      கனலெரி யாக சீறி
      நின்றதோ ருருவ தன்னால்
      நீர்மையும் நிறையுங் கொண்டு
      ஒன்றியாங் குமையு தாமும்
      ஊர்பலி தேர்ந்து பின்னும்
      பன்றிப்பின் வேட ராகி
      பருப்பத நோக்கி னாரே. 4.58.1
      559 கற்றமா மறைகள் பாடி
      கடைதொறும் பலியு தேர்வார்
      வற்றலோர் தலைகை யேந்தி
      வானவர் வணங்கி வாழ்த்த
      முற்றவோர் சடையில் நீரை
      ஏற்றமு கண்ணர் தம்மை
      பற்றினார கருள்கள் செய்து
      பருப்பத நோக்கி னாரே. 4.58.2
      560 கரவிலா மனத்த ராகி
      கைதொழு வார்க கென்றும்
      இரவினின் றெரிய தாடி
      இன்னருள் செய்யும் எந்தை
      மருவலார் புரங்கள் மூன்று
      மாட்டிய நகைய ராகி
      பரவுவார கருள்கள் செய்து
      பருப்பத நோக்கி னாரே. 4.58.3
      561 கட்டிட்ட தலைகை யேந்தி
      கனலெரி யாடி சீறி
      சுட்டிட்ட நீறு பூசி
      சுடுபிண காட ராகி
      விட்டிட்ட வேட்கை யார்க்கு
      வேறிரு தருள்கள் செய்து
      பட்டிட்ட வுடைய ராகி
      பருப்பத நோக்கி னாரே. 4.58.4
      562 கையரா கபால மேந்தி
      காமனை கண்ணாற் காய்ந்து
      மெய்யராய் மேனி தன்மேல்
      விளங்குவெண் ணீறு பூசி
      உய்யரா யுள்கு வார்க
      குவகைகள் பலவுஞ் செய்து
      பையரா அரையி லார்த்து
      பருப்பத நோக்கி னாரே. 4.58.5
      563 வேடராய் வெய்ய ராகி
      வேழத்தி னுரிவை போர்த்து
      ஓடரா யுலக மெல்லா
      முழிதர்வர் உமையு தாமுங்
      காடரா கனல்கை யேந்தி
      கடியதோர் விடைமேற் கொண்டு
      பாடரா பூதஞ் சூழ
      பருப்பத நோக்கி னாரே. 4.58.6
      564 மேகம்போல் மிடற்ற ராகி
      வேழத்தி னுரிவை போர்த்து
      ஏகம்பம் மேவி னார்தாம்
      இமையவர் பரவி யேத்த
      காகம்பர் கழற ராகி
      கடியதோர் விடையொன் றேறி
      பாகம்பெண் ணுருவ மானார்
      பருப்பத நோக்கி னாரே. 4.58.7
      565 பேரிடர பிணிகள் தீர்க்கும்
      பிஞ்ஞகன் எந்தை பெம்மான்
      காருடை கண்ட ராகி
      கபாலமோர் கையி லேந்தி
      சீருடை செங்கண் வெள்ளே
      றேறிய செல்வர் நல்ல
      பாரிடம் பாணி செ
      பருப்பத நோக்கி னாரே. 4.58.8
      566 அங்கண்மா லுடைய ராய
      ஐவரா லாட்டு ணாதே
      உங்கள்மால் தீர வேண்டில்
      உள்ளத்தா லுள்கி யேத்துஞ்
      செங்கண்மால் பரவி யேத்தி
      சிவனென நின்ற செல்வர்
      பைங்கண்வெள் ளேற தேறி
      பருப்பத நோக்கி னாரே. 4.58.9
      567 அடல்விடை யூர்தி யாகி
      அரக்கன்றோள் அடர வூன்றி
      கடலிடை நஞ்ச முண்ட
      கறையணி கண்ட னார்தாஞ்
      சுடர்விடு மேனி தன்மேற்
      சுண்ணவெண் ணீறு பூசி
      படர்சடை மதியஞ் சேர்த்தி
      பருப்பத நோக்கி னாரே. 4.58.10
      இத்தலம் வடநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - பருப்பதேசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.59 திருஅவளிவணல்லூர் - திருநேரிசை
      திருச்சிற்றம்பலம்
      568 தோற்றினான் எயிறு கவ்வி
      தொழிலுடை யரக்கன் றன்னை
      தேற்றுவான் சென்று சொல்ல
      சிக்கென தவிரு மென்று
      வீற்றினை யுடைய னாகி
      வெடுவெடு தெழுந்த வன்றன்
      ஆற்றலை அழிக்க வல்லார்
      அவளிவ ணல்லூ ராரே. 4.59.1
      569 வெம்பினா ரரக்க ரெல்லாம்
      மிகச்சழ காயிற் றென்று
      செம்பினா லெடுத்த கோயில்
      சிக்கென சிதையு மென்ன
      நம்பினா ரென்று சொல்லி
      நன்மையான் மிக்கு நோக்கி
      அம்பினால் அழிய வெய்தார்
      அவளிவ ணல்லூ ராரே. 4.59.2
      570 கீழ்ப்பட கருத லாமோ
      கீர்த்திமை யுள்ள தாகிற்
      தோட்பெரு வலியி னாலே
      தொலைப்பன்யான் மலையை யென்று
      வேட்பட வைத்த வாறே
      விதிர்விதிர தரக்கன் வீழ்ந்து
      ஆட்பட கருதி புக்கார்
      அவளிவ ணல்லூ ராரே. 4.59.3
      571 நிலைவலம் வல்ல னல்லன்
      நேர்மையை நினைய மாட்டான்
      சிலைவலங் கொண்ட செல்வன்
      சீரிய கயிலை தன்னை
      தலைவலங் கருதி புக்கு
      தாக்கினான் தன்னை யன்று
      அலைகுலை யாக்கு வித்தார்
      அவளிவ ணல்லூ ராரே. 4.59.4
      572 தவ்வலி யொன்ற னாகி
      தனதொரு பெருமை யாலே
      மெய்வ்வலி யுடைய னென்று
      மிகப்பெரு தேரை யூர்ந்து
      செவ்வலி கூர்வி ழியாற்
      சிரமத்தான் எடுக்குற் றானை
      அவ்வலி தீர்க்க வல்லார்
      அவளிவ ணல்லூ ராரே. 4.59.5
      573 நன்மைதான் அறிய மாட்டான்
      நடுவிலா அரக்கர் கோமான்
      வன்மையே கருதி சென்று
      வலிதனை செலுத்த லுற்று
      கன்மையான் மலையை யோடி
      கருதித்தான் எடுத்து வாயால்
      அம்மையோ வென்ன வைத்தார்
      அவளிவ ணல்லூ ராரே. 4.59.6
      574 கதம்பட போது வார்கள்
      போது கருத்தி னாலே
      சிதம்பட நின்ற நீர்கள்
      சிக்கென தவிரு மென்று
      மதம்படு மனத்த னாகி
      வன்மையான் மிக்கு நோக்க
      அதம்பழ துருவு செய்தார்
      அவளிவ ணல்லூ ராரே. 4.59.7
      575 நாடுமி குழிதர் கின்ற
      நடுவிலா அரக்கர் கோனை
      ஓடுமி கென்று சொல்லி
      ஊன்றினான் உகிரி னாலே
      பாடுமி குய்வ னென்று
      பணியநற் றிறங்கள் காட்டி
      ஆடுமி கரவம் பூண்டார்
      அவளிவ ணல்லூ ராரே. 4.59.8
      576 ஏனமா யிடந்த மாலும்
      எழில்தரு முளரி யானும்
      ஞானந்தா னுடைய ராகி
      நன்மையை அறிய மாட்டார்
      சேனந்தான் இலாவ ரக்கன்
      செழுவரை எடுக்க வூன்றி
      ஆனந்த அருள்கள் செய்தார்
      அவளிவ ணல்லூ ராரே. 4.59.9
      577 ஊக்கினான் மலையை யோடி
      உணர்விலா அரக்கன் றன்னை
      தாக்கினான் விரலி னாலே
      தலைபத்து தகர வூன்றி
      நோக்கினான் அஞ்ச தன்னை
      நோன்பிற வூன்று சொல்லி
      ஆக்கினார் அமுத மாக
      அவளிவ ணல்லூ ராரே. 4.59.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - சாட்சிநாயகேசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.60 திருப்பெருவேளூர் - திருநேரிசை
      திருச்சிற்றம்பலம்
      578 மறையணி நாவி னானை
      மறப்பிலார் மனத்து ளானை
      கறையணி கண்டன் றன்னை
      கனலெரி யாடி னானை
      பிறையணி சடையி னானை
      பெருவேளூர் பேணி னானை
      நறையணி மலர்கள் தூவி
      நாடொறும் வணங்கு வேனே. 4.60.1
      579 நாதனாய் உலக மெல்லாம்
      நம்பிரான் எனவும் நின்ற
      பாதனாம் பரம யோகி
      பலபல திறத்தி னாலும்
      பேதனா தோன்றி னானை
      பெருவேளூர் பேணி னானை
      ஓதநா வுடைய னாகி
      உரைக்குமா றுரைக்கின் றேனே. 4.60.2
      580 குறவிதோள் மணந்த செல்வ
      குமரவேள் தாதை யென்று
      நறவிள நறுமென் கூந்தல்
      நங்கையோர் பாக தானை
      பிறவியை மாற்று வானை
      பெருவேளூர் பேணி னானை
      உறவினால் வல்ல னாகி
      உணருமா றுணர்த்து வேனே. 4.60.3
      581 மைஞ்ஞவில் கண்டன் றன்னை
      வலங்கையின் மழுவொன் றேந்தி
      கைஞ்ஞவில் மானி னோடுங்
      கனலெரி யாடி னானை
      பிஞ்ஞகன் றன்னை அந்தண்
      பெருவேளூர் பேணி னானை
      பொய்ஞ்ஞெக நினைய மாட்டா
      பொறியிலா அறிவி லேனே. 4.60.4
      582 ஓடைசேர் நெற்றி யானை
      உரிவையை மூடி னானை
      வீடதே காட்டு வானை
      வேதநான் காயி னானை
      பேடைசேர் புறவ நீங்கா
      பெருவேளூர் பேணி னானை
      கூடநான் வல்ல மாற்றங்
      குறுகுமா றறிகி லேனே. 4.60.5
      583 கச்சைசேர் நாக தானை
      கடல்விடங் கண்ட தானை
      கச்சியே கம்பன் றன்னை
      கனலெரி யாடு வானை
      பிச்சைசேர துழல்வி னானை
      பெருவேளூர் பேணி னானை
      இச்சைசேர தமர நானும்
      இறைஞ்சுமா றிறைஞ்சு வேனே. 4.60.6
      584 சித்தராய் வந்து தன்னை
      திருவடி வணங்கு வார்கள்
      முத்தனை மூர்த்தி யாய
      முதல்வனை முழுது மாய
      பித்தனை பிறரு மேத்த
      பெருவேளூர் பேணி னானை
      மெத்தனே யவனை நாளும்
      விரும்புமா றறிகி லேனே. 4.60.7
      585 முண்டமே தாங்கி னானை
      முற்றிய ஞான தானை
      வண்டுலாங் கொன்றை மாலை
      வளர்மதி கண்ணி யானை
      பிண்டமே ஆயி னானை
      பெருவேளூர் பேணி னானை
      அண்டமாம் ஆதி யானை
      அறியுமா றறிகி லேனே. 4.60.8
      586 விரிவிலா அறிவி னார்கள்
      வேறொரு சமயஞ் செய்து
      எரிவினாற் சொன்னா ரேனும்
      எம்பிராற் கேற்ற தாகும்
      பரிவினாற் பெரியோ ரேத்தும்
      பெருவேளூர் பற்றி னானை
      மருவிநான் வாழ்த்தி உய்யும்
      வகையது நினைக்கின் றேனே. 4.60.9
      587 பொருகடல் இலங்கை மன்னன்
      உடல்கெட பொருத்தி நல்ல
      கருகிய கண்ட தானை
      கதிரிளங் கொழுந்து சூடும்
      பெருகிய சடையி னானை
      பெருவேளூர் பேணி னானை
      உருகிய அடிய ரேத்தும்
      உள்ளத்தால் உள்கு வேனே. 4.60.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - பிரியாதநாதர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.61 திருஇராமேச்சுரம் - திருநேரிசை
      திருச்சிற்றம்பலம்
      588 பாசமுங் கழிக்க கில்லா
      அரக்கரை படுத்து தக்க
      வாசமி கலர்கள் கொண்டு
      மதியினால் மால்செய் கோயில்
      நேசமி கன்பி னாலே
      நினைமின்நீர் நின்று நாளு
      தேசமி கான் இருந்த
      திருஇரா மேச்சு ரமே. 4.61.1
      589 முற்றின நாள்கள் என்று
      முடிப்பதே கார ணமாய்
      உற்றவன் போர்க ளாலே
      உணர்விலா அரக்கர் தம்மை
      செற்றமால் செய்த கோயில்
      திருஇரா மேச்சு ரத்தை
      பற்றிநீ பரவு நெஞ்சே
      படர்சடை ஈசன் பாலே. 4.61.2
      590 கடலிடை மலைகள் தம்மால்
      அடைத்துமால் கருமம் முற்றி
      திடலிடை செய்த கோயில்
      திருஇரா மேச்சு ரத்தை
      தொடலிடை வைத்து நாவிற்
      சுழல்கின்றேன் தூய்மை யின்றி
      உடலிடை நின்றும் பேரா
      ஐவர்ஆ டுண்டு நானே. 4.61.3
      591 குன்றுபோல் தோளு டைய
      குணமிலா அரக்கர் தம்மை
      கொன்றுபோ ராழி யம்மால்
      வேட்கையாற் செய்த கோயில்
      நன்றுபோல் நெஞ்ச மேநீ
      நன்மையை அறிதி யாயிற்
      சென்றுநீ தொழுதுய் கண்டாய்
      திருஇரா மேச்சு ரமே. 4.61.4
      592 வீரமி கெயிறு காட்டி
      விண்ணுற நீண்ட ரக்கன்
      கூரமி கவனை சென்று
      கொன்றுடன் கடற் படுத்து
      தீரமி கானி ருந்த
      திருஇரா மேச்சு ரத்தை
      கோரமி கார்த வத்தாற்
      கூடுவார் குறிப்பு ளாரே. 4.61.5
      593 ஆர்வலம் நம்மின் மிக்கார்
      என்றஅவ் வரக்கர் கூடி
      போர்வலஞ் செய்து மிக்கு
      பொருதவர் தம்மை வீட்டி
      தேர்வலஞ் செற்ற மால்செய்
      திருஇரா மேச்சு ரத்தை
      சேர்மட நெஞ்ச மேநீ
      செஞ்சடை எந்தை பாலே. 4.61.6
      594 வாக்கினால் இன்பு ரைத்து
      வாழ்கிலார் தம்மை யெல்லாம்
      போக்கினாற் புடைத்த வர்கள்
      உயிர்தனை யுண்டு மால்தான்
      தேக்குநீர் செய்த கோயில்
      திருஇரா மேச்சு ரத்தை
      நோக்கினால் வணங்கு வார்க்கு
      நோய்வினை நுணுகு மன்றே. 4.61.7
      595 பலவுநாள் தீமை செய்து
      பார்தன்மேற் குழுமி வந்து
      கொலைவிலார் கொடிய ராய
      அரக்கரை கொன்று வீழ்த்த
      சிலையினான் செய்த கோயில்
      திருஇரா மேச்சு ரத்தை
      தலையினால் வணங்கு வார்கள்
      தாழ்வரா தவம தாமே. 4.618
      596 கோடிமா தவங்கள் செய்து
      குன்றினார் தம்மை யெல்லாம்
      வீடவே சக்க ரத்தால்
      எறிந்துபின் அன்பு கொண்டு
      தேடிமால் செய்த கோயில்
      திருஇரா மேச்சு ரத்தை
      நாடிவாழ் நெஞ்ச மேநீ
      நன்னெறி யாகு மன்றே. 4.61.9
      597 வன்கண்ணர் வாள ரக்கர்
      வாழ்வினை யொன்ற றியார்
      புன்கண்ண ராகி நின்று
      போர்கள்செய் தாரை மாட்டி
      செங்கண்மால் செய்த கோயில்
      திருஇரா மேச்சு ரத்தை
      தங்கணால் எய்த வல்லார்
      தாழ்வரா தலைவன் பாலே. 4.61.10
      598 வரைகளொ தேயு யர்ந்த
      மணிமுடி அரக்கர் கோனை
      விரையமுற் றறவொ டுக்கி
      மீண்டுமால் செய்த கோயில்
      திரைகள்மு தால்வ ணங்கு
      திருஇரா மேச்சு ரத்தை
      உரைகள்ப தாலு ரைப்பார்
      உள்குவார் அன்பி னாலே. 4.61.11
      இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - இராமலிங்கேசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.62 திருவாலவாய் - திருநேரிசை
      திருச்சிற்றம்பலம்
      599 வேதியா வேத கீதா
      விண்ணவர் அண்ணா என்றென்
      றோதியே மலர்கள் தூவி
      ஒடுங்கிநின் கழல்கள் காண
      பாதியோர் பெண்ணை வைத்தாய்
      படர்சடை மதியஞ் சூடும்
      ஆதியே ஆல வாயில்
      அப்பனே அருள்செ யாயே. 4.62.1
      600 நம்பனே நான்மு கத்தாய்
      நாதனே ஞான மூர்த்தி
      என்பொனே ஈசா என்றென்
      றேத்திநான் ஏசற் றென்றும்
      பின்பினே திரிந்து நாயேன்
      பேர்த்தினி பிறவா வண்ணம்
      அன்பனே ஆலவாயில் அப்பனே
      அருள் செயாயே. 4.62.2
      601 ஒருமரு தாகி யுள்ளாய்
      உம்பரோ டுலகு கெல்லாம்
      பெருமரு தாகி நின்றாய்
      பேரமு தின்சு வையா
      கருமரு தாகி யுள்ளாய்
      ஆளும்வல் வினைகள் தீர்க்கும்
      அருமரு தால வாயில்
      அப்பனே அருள்செ யாயே. 4.62.3
      602 செய்யநின் கமல பாதஞ்
      சேருமா தேவர் தேவே
      மையணி கண்ட தானே
      மான்மறி மழுவொன் றேந்துஞ்
      சைவனே சால ஞானங்
      கற்றறி விலாத நாயேன்
      ஐயனே ஆல வாயில்
      அப்பனே அருள்செ யாயே. 4.62.4
      603 வெண்டலை கையி லேந்தி
      மிகவுமூர் பலிகொண் டென்றும்
      உண்டது மில்லை சொல்லில்
      உண்டது நஞ்சு தன்னை
      பண்டுனை நினைய மாட்டா
      பளகனேன் உளம தார
      அண்டனே ஆல வாயில்
      அப்பனே அருள்செ யாயே. 4.62.5
      604 எஞ்சலில் புகலி தென்றென்
      றேத்திநான் ஏசற் றென்றும்
      வஞ்சக மொன்று மின்றி
      மலரடி காணும் வண்ணம்
      நஞ்சினை மிடற்றில் வைத்த
      நற்பொரு பதமே நாயேற்
      கஞ்சலென் றால வாயில்
      அப்பனே அருள்செ யாயே. 4.62.6
      605 வழுவிலா துன்னை வாழ்த்தி
      வழிபடு தொண்ட னேன்உன்
      செழுமலர பாதங் காண
      தெண்டிரை நஞ்ச முண்ட
      குழகனே கோல வில்லீ
      கூத்தனே மாத்தா யுள்ள
      அழகனே ஆல வாயில்
      அப்பனே அருள்செ யாயே. 4.62.7
      606 நறுமலர் நீருங் கொண்டு
      நாடொறு மேத்தி வாழ்த்தி
      செறிவன சித்தம் வைத்து
      திருவடி சேரும் வண்ணம்
      மறிகடல் வண்ணன் பாகா
      மாமறை யங்க மாறும்
      அறிவனே ஆல வாயில்
      அப்பனே அருள்செ யாயே. 4.62.8
      607 நலந்திகழ் வாயின் நூலாற்
      சருகிலை பந்தர் செய்த
      சிலந்தியை அரச தாள
      அருளினாய் என்று திண்ணங்
      கலந்துடன் வந்து நின்றாள்
      கருதிநான் காண்ப தாக
      அலந்தனன் ஆல வாயில்
      அப்பனே அருள்செ யாயே. 4.62.9
      608 பொடிக்கொடு பூசி பொல்லா
      குரம்பையிற் புந்தி யொன்றி
      பிடித்துநின் றாள்க ளென்றும்
      பிதற்றிநா னிருக்க மாட்டேன்
      எடுப்பனென் றிலங்கை கோன்வ
      தெடுத்தலும் இருப துதோள்
      அடர்த்தனே ஆல வாயில்
      அப்பனே அருள்செ யாயே. 4.62.10
      இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - சொக்கநாதேசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.63 திருவண்ணாமலை - திருநேரிசை
      திருச்சிற்றம்பலம்
      609 ஓதிமா மலர்கள் தூவி
      உமையவள் பங்கா மிக்க
      சோதியே துளங்கும் எண்டோ ள்
      சுடர்மழு படையி னானே
      ஆதியே அமரர் கோவே
      அணியணா மலையு ளானே
      நீதியால் நின்னை யல்லால்
      நினையுமா நினைவி லேனே. 4.63.1
      610 பண்டனை வென்ற இன்சொற்
      பாவையோர் பங்க நீல
      கண்டனே கார்கொள் கொன்றை
      கடவுளே கமல பாதா
      அண்டனே அமரர் கோவே
      அணியணா மலையு ளானே
      தொண்டனேன் உன்னை அல்லாற்
      சொல்லுமா சொல்லி லேனே. 4.63.2
      611 உருவமும் உயிரு மாகி
      ஓதிய உலகு கெல்லாம்
      பெருவினை பிறப்பு வீடாய்
      நின்றவெம் பெருமான் மிக்க
      அருவிபொன் சொரியும் அண்ணா
      மலையுளாய் அண்டர் கோவே
      மருவிநின் பாத மல்லான்
      மற்றொரு மாடி லேனே. 4.63.3
      612 பைம்பொனே பவள குன்றே
      பரமனே பால்வெண் ணீற்றாய்
      செம்பொனே மலர்செய் பாதா
      சீர்தரு மணியே மிக்க
      அம்பொனே கொழித்து வீழும்
      அணியணா மலையு ளானே
      என்பொனே உன்னை யல்லால்
      யாதும்நான் நினைவி லேனே. 4.63.4
      613 பிறையணி முடியி னானே
      பிஞ்ஞகா பெண்ணோர் பாகா
      மறைவலா இறைவா வண்டார்
      கொன்றையாய் வாம தேவா
      அறைகழல் அமர ரேத்தும்
      அணியணா மலையு ளானே
      இறைவனே உன்னை யல்லா
      லியாதுநான் நினைவி லேனே. 4.63.5
      614 புரிசடை முடியின் மேலோர்
      பொருபுனற் கங்கை வைத்து
      கரியுரி போர்வை யா
      கருதிய கால காலா
      அரிகுலம் மலிந்த அண்ணா
      மலையுளாய் அலரின் மிக்க
      வரிமிகு வண்டு பண்செய்
      பாதநான் மறப்பி லேனே. 4.63.6
      615 இரவியும் மதியும் விண்ணும்
      இருநிலம் புனலுங் காற்றும்
      உரகமார் பவனம் எட்டு
      திசையொளி உருவ மானாய்
      அரவுமிழ் மணிகொள் சோதி
      அணியணா மலையு ளானே
      பரவுநின் பாத மல்லாற்
      பரமநான் பற்றி லேனே. 4.63.7
      616 பார்த்தனு கன்று நல்கி
      பாசுப தத்தை ஈந்தாய்
      நீர்த்ததும் புலாவு கங்கை
      நெடுமுடி நிலாவ வைத்தாய்
      ஆர்த்துவ தீண்டு கொண்டல்
      அணியணா மலையு ளானே
      தீர்த்தனே நின்றன் பா
      திறமலாற் றிறமி லேனே. 4.63.8
      617 பாலுநெய் முதலா மிக்க
      பசுவில்ஐ தாடு வானே
      மாலுநான் முகனுங் கூடி
      காண்கிலா வகையுள் நின்றாய்
      ஆலுநீர் கொண்டல் பூகம்
      அணியணா மலையு ளானே
      வாலுடை விடையாய் உன்றன்
      மலரடி மறப்பி லேனே. 4.63.9
      618 இரக்கமொன் றியாது மில்லா
      காலனை கடிந்த எம்மான்
      உரத்தினால் வரையை ஊக்க
      ஒருவிரல் நுதியி னாலே
      அரக்கனை நெரித்த அண்ணா
      மலையுளாய் அமர ரேறே
      சிரத்தினால் வணங்கி யேத்தி
      திருவடி மறப்பி லேனே. 4.63.10
      இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - அருணாசலேசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.64 திருவீழிமிழலை - திருநேரிசை
      திருச்சிற்றம்பலம்
      619 பூதத்தின் படையர் பாம்பின்
      பூணினர் பூண நூலர்
      சீதத்திற் பொலிந்த திங்க
      கொழுந்தர்நஞ் சழுந்து கண்டர்
      கீதத்திற் பொலிந்த ஓசை
      கேள்வியர் வேள்வி யாளர்
      வேதத்தின் பொருளர் வீழி
      மிழலையுள் விகிர்த னாரே. 4.64.1
      620 காலையிற் கதிர்செய் மேனி
      கங்குலிற் கறுத்த கண்டர்
      மாலையின் மதியஞ் சேர்ந்த
      மகுடத்தர் மதுவும் பாலும்
      ஆலையிற் பாகும் போல
      அண்ணித்தி டடியார கென்றும்
      வேலையின் அமுதர் வீழி
      மிழலையுள் விகிர்த னாரே. 4.64.2
      621 வருந்தின நெருநல் இன்றாய்
      வழங்கின நாளர் ஆற்கீழ்
      இருந்துநன் பொருள்கள் நால்வர
      கியம்பினர் இருவ ரோடும்
      பொருந்தினர் பிரிந்து தம்பால்
      பொய்யரா மவர்க கென்றும்
      விருந்தினர் திருந்து வீழி
      மிழலையுள் விகிர்த னாரே. 4.64.3
      622 நிலையிலா வூர்மூன் றொன்ற
      நெருப்பரி காற்றம் பாக
      சிலையுநா ணதுவு நாகங்
      கொண்டவர் தேவர் தங்கள்
      தலையினாற் றரித்த என்பும்
      தலைமயிர் வடமும் பூண்ட
      விலையிலா வேடர் வீழி
      மிழலையுள் விகிர்த னாரே. 4.64.4
      623 மறையிடை பொருளர் மொட்டின்
      மலர்வழி வாச தேனர்
      கறவிடை பாலின் நெய்யர்
      கரும்பினிற் கட்டி யாளர்
      பிறையிடை பாம்பு கொன்றை
      பிணையல்சேர் சடையுள் நீரர்
      விறகிடை தீயர் வீழி
      மிழலையுள் விகிர்த னாரே. 4.64.5
      624 எண்ணக தில்லை அல்லர்
      உளரல்லர் இமவான் பெற்ற
      பெண்ணக தரையர் காற்றிற்
      பெருவலி யிருவ ராகி
      மண்ணக தைவர் நீரில்
      நால்வர்தீ யதனில் மூவர்
      விண்ணக தொருவர் வீழி
      மிழலையுள் விகிர்த னாரே. 4.64.6
      625 சந்தணி கொங்கை யாளோர்
      பங்கினர் சாம வேதர்
      எந்தையும் எந்தை தந்தை
      தந்தையு மாய ஈசர்
      அந்தியோ டுதயம் அந்த
      ணாளர்ஆன் நெய்யால் வேட்கும்
      வெந்தழ லுருவர் வீழி
      மிழலையுள் விகிர்த னாரே. 4.64.7
      626 நீற்றினை நிறை பூசி
      நித்தல்ஆ யிரம்பூ கொண்டு
      ஏற்றுழி ஒருநா ளொன்று
      குறையக்கண் நிறைய விட்ட
      ஆற்றலு காழி நல்கி
      யவன்கொணர திழிச்சுங் கோயில்
      வீற்றிரு தளிப்பர் வீழி
      மிழலையுள் விகிர்த னாரே. 4.64.8
      627 சித்திசெய் பவர்க கெல்லாஞ்
      சேர்விடஞ் சென்று கூட
      பத்திசெய் பவர்கள் பாவம்
      பறைப்பவர் இறப்பி லாளர்
      முத்திசை பவள மேனி
      முதிரொளி நீல கண்டர்
      வித்தினில் முளையர் வீழி
      மிழலையுள் விகிர்த னாரே. 4.64.9
      628 தருக்கின அரக்கன் தேரூர்
      சாரதி தடைநி லாது
      பொருப்பினை யெடுத்த தோளும்
      பொன்முடி பத்தும் புண்ணாய்
      நெரிப்புண்டங் கலறி மீண்டு
      நினைந்தடி பரவ தம்வாள்
      விருப்பொடுங் கொடுப்பர் வீழி
      மிழலையுள் விகிர்த னாரே. 4.64.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - வீழியழகீசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.65 திருச்சாய்க்காடு - திருநேரிசை
      திருச்சிற்றம்பலம்
      629 தோடுலா மலர்கள் தூவி
      தொழுதெழு மார்க்கண் டேயன்
      வீடுநாள் அணுகிற் றென்று
      மெய்கொள்வான் வந்த காலன்
      பாடுதான் செல்லு மஞ்சி
      பாதமே சரண மென்ன
      சாடினார் காலன் மாள
      சாய்க்காடு மேவி னாரே. 4.65.1
      630 வடங்கெழு மலை தாக
      வானவர் அசுர ரோடு
      கடைந்திட எழுந்த நஞ்சங்
      கண்டுபல் தேவ ரஞ்சி
      அடைந்துநும் சரண மென்ன
      அருள்பெரி துடைய ராகி
      தடங்கடல் நஞ்சம் உண்டார்
      சாய்க்காடு மேவி னாரே. 4.65.2
      631 அரணிலா வெளிய நாவல்
      அருள்நிழ லாக ஈசன்
      வரணிய லாகி தன்வாய்
      நூலினாற் பந்தர் செய்ய
      முரணிலா சிலந்தி தன்னை
      முடியுடை மன்ன னாக்கி
      தரணிதான் ஆள வைத்தார்
      சாய்க்காடு மேவி னாரே. 4.65.3
      632 அரும்பெருஞ் சிலைக்கை வேட
      னாய்விறற் பார்த்தற் கன்று
      உரம்பெரி துடைமை காட்டி
      ஒள்ளமர் செய்து மீண்டே
      வரம்பெரி துடைய னாக்கி
      வாளமர் முகத்தின் மன்னுஞ்
      சரம்பொலி தூணி ஈந்தார்
      சாய்க்காடு மேவி னாரே. 4.65.4
      633 இந்திரன் பிரமன் அங்கி
      எண்வகை வசுக்க ளோடு
      மந்திர மறைய தோதி
      வானவர் வணங்கி வாழ
      தந்திர மறியா தக்கன்
      வேள்வியை தகர்த்த ஞான்று
      சந்திரற் கருள்செய் தாருஞ்
      சாய்க்காடு மேவி னாரே. 4.65.5
      634 ஆமலி பாலும் நெய்யும்
      ஆட்டிஅர சனைகள் செய்து
      பூமலி கொன்றை சூட்ட
      பொறாததன் தாதை தாளை
      கூர்மழு வொன்றால் ஓச்ச
      குளிர்சடை கொன்றை மாலை
      தாமநற் சண்டி கீந்தார்
      சாய்க்காடு மேவி னாரே. 4.65.6
      635 மையறு மனத்த னாய
      பகீரதன் வரங்கள் வேண்ட
      ஐயமில் லமர ரேத்த
      ஆயிர முகம தாகி
      வையகம் நெளி பாய்வான்
      வந்திழி கங்கை யென்னு
      தையலை சடையில் ஏற்றார்
      சாய்க்காடு மேவி னாரே. 4.65.7
      636 குவப்பெரு தடக்கை வேடன்
      கொடுஞ்சிலை இறைச்சி பார
      துவர்ப்பெருஞ் செருப்பால் நீக்கி
      தூயவா கலசம் ஆட்ட
      உவப்பெருங் குருதி சோர
      ஒருகணை யிடந்தங் கப்ப
      தவப்பெரு தேவு செய்தார்
      சாய்க்காடு மேவி னாரே. 4.65.8
      637 நக்குலா மலர்பன் னூறு
      கொண்டுநன் ஞான தோடு
      மிக்கபூ சனைகள் செய்வான்
      மென்மல ரொன்று காணா
      தொக்குமென் மலர்க்கண் ணென்றங்
      கொருகணை யிடந்து மப்ப
      சக்கரங் கொடுப்பர் போலுஞ்
      சாய்க்காடு மேவி னாரே. 4.65.9
      638 புயங்கள்ஐஞ் ஞான்கும் பத்து
      மாயகொண் டரக்க னோடி
      சிவன்திரு மலையை பேர்க்க
      திருமலர குழலி யஞ்ச
      வியன்பெற எய்தி வீழ
      விரல்சிறி தூன்றி மீண்டே
      சயம்பெற நாம மீந்தார்
      சாய்க்காடு மேவி னாரே. 4.65.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - சாயவனேசுவரர்
      தேவியார் - குயிலின்நன்மொழியம்மை.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.66 திருநாகேச்சரம் - திருநேரிசை
      திருச்சிற்றம்பலம்
      639 கச்சைசேர் அரவர் போலுங்
      கறையணி மிடற்றர் போலும்
      பிச்சைகொண் டுண்பர் போலும்
      பேரரு ளாலர் போலும்
      இச்சையால் மலர்கள் தூவி
      இரவொடு பகலு தம்மை
      நச்சுவார கினியர் போலும்
      நாகஈ சரவ னாரே. 4.66.1
      640 வேடுறு வேட ராகி
      விசயனோ டெய்தார் போலுங்
      காடுறு பதியர் போலுங்
      கடிபுனற் கங்கை நங்கை
      சேடெறி சடையர் போலு
      தீவினை தீர்க்க வல்ல
      நாடறி புகழர் போலும்
      நாகஈ சரவ னாரே. 4.66.2
      641 கற்றுணை வில்ல தா
      கடியரண் செற்றார் போலும்
      பொற்றுணை பாதர் போலும்
      புலியத ளுடையார் போலுஞ்
      சொற்றுணை மாலை கொண்டு
      தொழுதெழு வார்க கெல்லாம்
      நற்றுணை யாவர் போலும்
      நாகஈ சரவ னாரே. 4.66.3
      642 கொம்பனாள் பாகர் போலுங்
      கொடியுடை விடையர் போலுஞ்
      செம்பொனா ருருவர் போலு
      திகழ்திரு நீற்றர் போலும்
      எம்பிரான் எம்மை யாளும்
      இறைவனே என்று தம்மை
      நம்புவார கன்பர் போலும்
      நாகஈ சரவ னாரே. 4.66.4
      643 கடகரி யுரியர் போலுங்
      கனல்மழு வாளர் போலும்
      படவர வரையர் போலும்
      பாரிடம் பலவுங் கூடி
      குடமுடை முழவம் ஆர்ப்ப
      கூளிகள் பாட நாளும்
      நடநவில் அடிகள் போலும்
      நாகஈ சரவ னாரே. 4.66.5
      644 பிறையுறு சடையர் போலும்
      பெண்ணொரு பாகர் போலும்
      மறையுறு மொழியர் போலும்
      மால்மறை யவன்ற னோடு
      முறைமுறை அமரர் கூடி
      முடிகளால் வணங்க நின்ற
      நறவமர் கழலர் போலும்
      நாகஈ சரவ னாரே. 4.66.6
      645 வஞ்சகர கரியர் போலும்
      மருவினோர கெளியர் போலுங்
      குஞ்சர துரியர் போலுங்
      கூற்றினை குமைப்பர் போலும்
      விஞ்சையர் இரிய அன்று
      வேலைவாய் வந்தெ ழுந்த
      நஞ்சணி மிடற்றர் போலும்
      நாகஈ சரவ னாரே. 4.66.7
      646 போகமார் மோடி கொங்கை
      புணர்தரு புனிதர் போலும்
      வேகமார் விடையர் போலும்
      வெண்பொடி யாடு மேனி
      பாகமா லுடையர் போலும்
      பருப்பத வில்லர் போலும்
      நாகநா ணுடையர் போலும்
      நாகஈ சரவ னாரே. 4.66.8
      647 கொக்கரை தாளம் வீணை
      பாணிசெய் குழகர் போலும்
      அக்கரை யணிவர் போலும்
      ஐந்தலை யரவர் போலும்
      வக்கரை யமர்வர் போலும்
      மாதரை மையல் செய்யும்
      நக்கரை யுருவர் போலும்
      நாகஈ சரவ னாரே. 4.66.9
      648 வின்மையாற் புரங்கள் மூன்றும்
      வெந்தழல் விரித்தார் போலும்
      தன்மையால் அமரர் தங்கள்
      தலைவர்க்கு தலைவர் போலும்
      வன்மையான் மலையெ டுத்தான்
      வலியினை தொலைவி தாங்கே
      நன்மையால் அளிப்பர் போலும்
      நாகஈ சரவ னாரே. 4.66.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - சண்பகாரண்ணியேசுவரர்
      தேவியார் - குன்றமுலைநாயகியம்மை.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.67 திருக்கொண்டீச்சரம் - திருநேரிசை
      திருச்சிற்றம்பலம்
      649 வரைகிலேன் புலன்க ளைந்தும்
      வரைகிலா பிறவி மா
      புரையிலே அடங்கி நின்று
      புறப்படும் வழியுங் காணேன்
      அரையிலே மிளிரு நாக
      தண்ணலே அஞ்ச லென்னாய்
      திரையுலாம் பழன வேலி
      திருக்கொண்டீ சரத்து ளானே. 4.67.1
      650 தொண்டனேன் பிறந்து வாளா
      தொல்வினை குழியில் வீழ்ந்து
      பிண்டமே சுமந்து நைந்து
      பேர்வதோர் வழியுங் காணேன்
      அண்டனே அண்ட வாணா
      அறிவனே அஞ்ச லென்னாய்
      தெண்டிரை பழனஞ் சூழ்ந்த
      திருக்கொண்டீ சரத்து ளானே. 4.67.2
      651 கால்கொடு தெலும்பு மூட்டி
      கதிர்நரம் பாக்கை யார்த்து
      தோலுடு துதிர மட்டி
      தொகுமயிர் மேய்ந்த கூரை
      ஓலெடு துழைஞர் கூடி
      ஒளிப்பதற் கஞ்சு கின்றேன்
      சேலுடை பழனஞ் சூழ்ந்த
      திருக்கொண்டீ சரத்து ளானே. 4.67.3
      652 கூட்டமாய் ஐவர் வந்து
      கொடுந்தொழிற் குணத்த ராகி
      ஆட்டுவார காற்ற கில்லேன்
      ஆடர வசைத்த கோவே
      காட்டிடை யரங்க மாக
      ஆடிய கடவு ளேயோ
      சேட்டிரும் பழன வேலி
      திருக்கொண்டீ சரத்து ளானே. 4.67.4
      653 பொக்கமாய் நின்ற பொல்லா
      புழுமிடை முடைகொள் ஆக்கை
      தொக்குநின் றைவர் தொண்ணூற்
      றறுவரு துயக்க மெய்த
      மிக்குநின் றிவர்கள் செய்யும்
      வேதனை கலந்து போனேன்
      செக்கரே திகழும் மேனி
      திருக்கொண்டீ சரத்து ளானே. 4.67.5
      654 ஊனுலா முடைகொள் ஆக்கை
      உடைகல மாவ தென்றும்
      மானுலா மழைக்க ணார்தம்
      வாழ்க்கையை மெய்யென் றெண்ணி
      நானெலா மினைய கால
      நண்ணிலேன் எண்ண மில்லேன்
      தேனுலாம் பொழில்கள் சூழ்ந்த
      திருக்கொண்டீ சரத்து ளானே. 4.67.6
      655 சாணிரு மடங்கு நீண்ட
      சழக்குடை பதிக்கு நாதர்
      வாணிகர் ஐவர் தொண்ணூற்
      றறுவரும் மயக்கஞ் செய்து
      பேணிய பதியின் நின்று
      பெயரும்போ தறிய மாட்டேன்
      சேணுயர் மாட நீடு
      திருக்கொண்டீ சரத்து ளானே. 4.67.7
      656 பொய்மறி தியற்றி வைத்து
      புலால்கமழ் பண்டம் பெய்து
      பைமறி தியற்றி யன்ன
      பாங்கிலா குரம்பை நின்று
      கைமறி தனைய வாவி
      கழியும்போ தறிய மாட்டேன்
      சென்னெறி செலவு காணேன்
      திருக்கொண்டீ சரத்து ளானே. 4.67.8
      657 பாலனா கழிந்த நாளும்
      பனிமலர கோதை மார்தம்
      மேலனா கழிந்த நாளும்
      மெலிவொடு மூப்பு வந்து
      கோலனா கழிந்த நாளுங்
      குறிக்கோளி லாது கெட்டேன்
      சேலுலாம் பழன வேலி
      திருக்கொண்டீ சரத்து ளானே. 4.67.9
      658 விரைதரு கருமென் கூந்தல்
      விளங்கிழை வேலொண் கண்ணாள்
      வெருவர இலங்கை கோமான்
      விலங்கலை எடுத்த ஞான்று
      பருவரை யனைய தோளும்
      முடிகளும் பாரி வீழ
      திருவிர லூன்றி னானே
      திருக்கொண்டீ சரத்து ளானே. 4.67.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - பசுபதீசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.68 திருவாலங்காடு - திருநேரிசை
      திருச்சிற்றம்பலம்
      659 வெள்ளநீர சடையர் போலும்
      விரும்புவார கெளியர் போலும்
      உள்ளுளே யுருகி நின்றங்
      குகப்பவர கன்பர் போலுங்
      கள்ளமே வினைக ளெல்லாங்
      கரிசறு திடுவர் போலும்
      அள்ளலம் பழனை மேய
      ஆலங்கா டடிக ளாரே. 4.68.1
      660 செந்தழ லுருவர் போலுஞ்
      சினவிடை யுடையர் போலும்
      வெந்தவெண் ணீறு கொண்டு
      மெய்க்கணி திடுவர் போலும்
      மந்தமாம் பொழிற் பழனை
      மல்கிய வள்ளல் போலும்
      அந்தமில் அடிகள் போலும்
      ஆலங்கா டடிக ளாரே. 4.68.2
      661 கண்ணினாற் காம வேளை
      கனலெழ விழிப்பர் போலும்
      எண்ணிலார் புரங்கள் மூன்று
      மெரியுண சிரிப்பர் போலும்
      பண்ணினார் முழவ மோவா
      பைம்பொழிற் பழனை மேய
      அண்ணலார் எம்மை யாளும்
      ஆலங்கா டடிக ளாரே. 4.68.3
      662 காறிடு விடத்தை யுண்ட
      கண்டரெண் தோளர் போலு
      தூறிடு சுடலை தன்னிற்
      சுண்ணவெண் ணீற்றர் போலுங்
      கூறிடு முருவர் போலுங்
      குளிர்பொழிற் பழனை மேய
      ஆறிடு சடையர் போலும்
      ஆலங்கா டடிக ளாரே. 4.68.4
      663 பார்த்தனோ டமர் பொருது
      பத்திமை காண்பர் போலுங்
      கூர்த்தவா யம்பு கோத்து
      குணங்களை அறிவர் போலும்
      பேர்த்துமோ ராவ நாழி
      அம்போடுங் கொடுப்பர் போலு
      தீர்த்தமாம் பழனை மேய
      திருவாலங் காட னாரே. 4.68.5
      664 வீட்டினார் சுடுவெண் ணீறு
      மெய்க்கணி திடுவர் போலுங்
      காட்டில்நின் றாடல் பேணுங்
      கருத்தினை யுடையர் போலும்
      பாட்டினார் முழவ மோவா
      பைம்பொழிற் பழனை மேயார்
      ஆட்டினார் அரவ தன்னை
      ஆலங்கா டடிக ளாரே. 4.68.6
      665 தாளுடை செங்க மல
      தடங்கொள்சே வடியர் போலும்
      நாளுடை காலன் வீழ
      உதைசெய்த நம்பர் போலுங்
      கோளுடை பிறவி தீர்ப்பார்
      குளிர்பொழிற் பழனை மேய
      ஆளுடை யண்ணல் போலும்
      ஆலங்கா டடிக ளாரே. 4.68.7
      666 கூடினார் உமைதன் னோடே
      குறிப்புடை வேடங் கொண்டு
      சூடினார் கங்கை யாளை
      சுவறிடு சடையர் போலும்
      பாடினார் சாம வேதம்
      பைம்பொழிற் பழனை மேயார்
      ஆடினார் காளி காண
      ஆலங்கா டடிக ளாரே. 4.68.8
      667 வெற்றரை சமண ரோடு
      விலையுடை கூறை போர்க்கும்
      ஒற்றரை சொற்கள் கொள்ளார்
      குணங்களை உகப்பர் போலும்
      பெற்றமே உகந்தங் கேறும்
      பெருமையை யுடையர் போலும்
      அற்றங்கள் அறிவர் போலும்
      ஆலங்கா டடிக ளாரே. 4.68.9
      668 மத்தனாய் மலையெ டுத்த
      அரக்கனை கரத்தோ டொல்க
      ஒத்தினார் திருவி ரலால்
      ஊன்றியி டருள்வர் போலும்
      பத்தர்தம் பாவ தீர்க்கும்
      பைம்பொழிற் பழனை மேய
      அத்தனார் நம்மை யாள்வார்
      ஆலங்கா டடிக ளாரே. 4.68.10
      இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - ஊர்த்ததாண்டவேசுவரர்
      தேவியார் - வண்டார்குழலியம்மை.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.69 திருக்கோவலூர்வீரட்டம் - திருநேரிசை
      திருச்சிற்றம்பலம்
      669 செத்தையேன் சிதம்ப நாயேன்
      செடியனேன் அழுக்கு பாயும்
      பொத்தையே போற்றி நாளும்
      புகலிடம் அறிய மாட்டேன்
      எத்தைநான் பற்றி நிற்கேன்
      இருளற நோக்க மாட்டா
      கொத்தையேன் செய்வ தென்னே
      கோவல்வீ ரட்ட னீரே. 4.69.1
      670 தலைசு திருகை நாற்றி
      தரணிக்கே பொறைய தாகி
      நிலையிலா நெஞ்ச தன்னுள்
      நித்தலும் ஐவர் வேண்டும்
      விலைகொடு தறுக்க மாட்டேன்
      வேண்டிற்றே வேண்டி எய்த்தேன்
      குலைகொள்மாங் கனிகள் சிந்தும்
      கோவல்வீ ரட்ட னீரே. 4.69.2
      671 வழித்தலை படவு மாட்டேன்
      வைகலு தூய்மை செய்து
      பழித்திலேன் பாச மற்று
      பரமநான் பரவ மாட்டேன்
      இழித்திலேன் பிறவி தன்னை
      என்னினை திருக்க மாட்டேன்
      கொழித்துவ தலைக்கு தெண்ணீர
      கோவல்வீ ரட்ட னீரே. 4.69.3
      672 சாற்றுவர் ஐவர் வந்து
      சந்தித்த குடிமை வேண்டி
      காற்றுவர் கனல பேசி
      கண்செவி மூக்கு வாயுள்
      ஆற்றுவர் அலந்து போனேன்
      ஆதியை அறிவொன் றின்றி
      கூற்றுவர் வாயிற் பட்டேன்
      கோவல்வீ ரட்ட னீரே. 4.69.4
      673 தடுத்திலேன் ஐவர் தம்மை
      தத்துவ துயர்வு நீர்மை
      படுத்திலேன் பரப்பு நோக்கி
      பன்மலர பாத முற்ற
      அடுத்திலேன் சிந்தை யார
      ஆர்வலி தன்பு திண்ணங்
      கொடுத்திலேன் கொடிய வாநான்
      கோவல்வீ ரட்ட னீரே. 4.69.5
      674 மாச்செய்த குரம்பை தன்னை
      மண்ணிடை மயக்க மெய்து
      நாச்செய்து நாலு மைந்தும்
      நல்லன வாய்தல் வைத்து
      காச்செய்த கா தன்னுள்
      நித்தலும் ஐவர் வந்து
      கோச்செய்து குமைக்க வாற்றேன்
      கோவல்வீ ரட்ட னீரே. 4.69.6
      675 படைகள்போல் வினைகள் வந்து
      பற்றியென் பக்கல் நின்றும்
      விடகிலா வாத லாலே
      விகிர்தனை விரும்பி யேத்தும்
      இடையிலேன் என்செய் கேன்நான்
      இரப்பவர் தங்க கென்றுங்
      கொடையிலேன் கொள்வ தேநான்
      கோவல்வீ ரட்ட னீரே. 4.69.7
      676 பிச்சிலேன் பிறவி தன்னை
      பேதையேன் பிணக்க மென்னு
      துச்சுளே அழுந்தி வீழ்ந்து
      துயரமே இடும்பை தன்னுள்
      அச்சனாய் ஆதி மூர்த்தி
      கன்பனாய் வாழ மாட்டா
      கொச்சையேன் செய்வ தென்னே
      கோவல்வீ ரட்ட னீரே. 4.69.8
      677 நிணத்திடை யாக்கை பேணி
      நியமஞ்செய் திருக்க மாட்டேன்
      மணத்திடை ஆட்டம் பேசி
      மக்களே சுற்ற மென்னுங்
      கணத்திடை ஆட்ட பட்டு
      காதலால் உன்னை பேணுங்
      குணத்திடை வாழ மாட்டேன்
      கோவல்வீ ரட்ட னீரே. 4.69.9
      678 விரிகடல் இலங்கை கோனை
      வியன்கயி லா தின்கீழ்
      இருபது தோளும் பத்து
      சிரங்களும் நெறிய வூன்றி
      பரவிய பாடல் கேட்டு
      படைகொடு தருளி செய்தார்
      குரவொடு கோங்கு சூழ்ந்த
      கோவல்வீ ரட்ட னாரே. 4.69.10
      இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - வீரட்டேசநாதர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.70 திருநனிபள்ளி - திருநேரிசை
      திருச்சிற்றம்பலம்
      679 முற்றுணை யாயி னானை
      மூவர்க்கு முதல்வன் றன்னை
      சொற்றுணை ஆயி னானை
      சோதியை ஆத ரித்து
      உற்றுணர துருகி யூறி
      உள்கசி வுடைய வர்க்கு
      நற்றுணை யாவர் போலும்
      நனிபள்ளி அடிக ளாரே. 4.70.1
      680 புலர்ந்தகால் பூவும் நீருங்
      கொண்டடி போற்ற மாட்டா
      வலஞ்செய்து வாயின் நூலால்
      வட்டணை பந்தர் செய்த
      சிலந்தியை அரைய னாக்கி
      சீர்மைகள் அருள வல்லார்
      நலந்திகழ் சோலை சூழ்ந்த
      நனிபள்ளி அடிக ளாரே. 4.70.2
      681 எண்பதும் பத்தும் ஆறு
      மென்னுளே இருந்து மன்னி
      கண்பழ கொன்று மின்றி
      கலக்கநான் அலக்க ழிந்தேன்
      செண்பக திகழும் புன்னை
      செழுந்திர குரவம் வேங்கை
      நண்புசெய் சோலை சூழ்ந்த
      நனிபள்ளி அடிக ளாரே. 4.70.3
      682 பண்ணினார் பாட லாகி
      பழத்தினில் இரத மாகி
      கண்ணினார் பார்வை யாகி
      கருத்தொடு கற்ப மாகி
      எண்ணினார் எண்ண மாகி
      ஏழுல கனைத்து மாகி
      நண்ணினார் வினைகள் தீர்ப்பார்
      நனிபள்ளி அடிக ளாரே. 4.70.4
      683 துஞ்சிருள் காலை மாலை
      தொடர்ச்சியை மற திராதே
      அஞ்செழு தோதின் நாளும்
      அரனடி கன்ப தாகும்
      வஞ்சனை பால்சோ றாக்கி
      வழக்கிலா அமணர் தந்த
      நஞ்சமு தாக்கு வித்தார்
      நனிபள்ளி அடிக ளாரே. 4.70.5
      684 செம்மலர கமல தோனு
      திருமுடி காண மாட்டான்
      அம்மலர பாதங் காண்பான்
      ஆழியான் அகழ்ந்துங் காணான்
      நின்மலன் என்றங் கேத்தும்
      நினைப்பினை அருளி நாளும்
      நம்மலம் அறுப்பர் போலும்
      நனிபள்ளி அடிக ளாரே. 4.70.6
      685 அரவத்தால் வரையை சுற்றி
      அமரரோ டசுரர் கூடி
      அரவித்து கடை தோன்றும்
      ஆலநஞ் சமுதா வுண்டார்
      விரவித்தம் அடிய ராகி
      வீடிலா தொண்டர் தம்மை
      நரகத்தில் வீழ வொட்டார்
      நனிபள்ளி அடிக ளாரே. 4.70.7
      686 மண்ணுளே திரியும் போது
      வருவன பலவுங் குற்றம்
      புண்ணுளே புரைபு ரையன்
      புழுப்பொதி பொள்ள லாக்கை
      -----
      இப்பதிகத்தில் 8-ம் செய்யுளின்
      பின்னிரண்டடிகளும் 9-ம்செய்யுளும்
      மறைந்து போயின. 4.70.8-9
      687 பத்துமோர் இரட்டி தோளான்
      பாரித்து மலையெ டுக்க
      பத்துமோர் இரட்டி தோள்கள்
      படருடம் படர வூன்றி
      பத்துவாய் கீதம் பாட
      பரிந்தவற் கருள்கொ டுத்தார்
      பத்தர்தாம் பரவி யேத்தும்
      நனிபள்ளி பரம னாரே. 4.70.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - நற்றுணையப்பர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.71 திருநாகைக்காரோணம் - திருநேரிசை
      திருச்சிற்றம்பலம்
      688 மனைவிதாய் தந்தை மக்கள்
      மற்றுள சுற்ற மென்னும்
      வினையுளே விழுந்த ழுந்தி
      வேதனை கிடமா காதே
      கனையுமா கடல்சூழ் நாகை
      மன்னுகா ரோண தானை
      நினையுமா வல்லீ ராகில்
      உய்யலாம் நெஞ்சி னீரே. 4.71..1
      689 வையனை வைய முண்ட
      மாலங்க தோண்மேற் கொண்ட
      செய்யனை செய்ய போதிற்
      திசைமுகன் சிரமொன் றேந்துங்
      கையனை கடல்சூழ் நாகை
      காரோணங் கோயில் கொண்ட
      ஐயனை நினைந்த நெஞ்சே
      அம்மநாம் உய்ந்த வாறே. 4.71..2
      690 நிருத்தனை நிமலன் றன்னை
      நீணிலம் விண்ணின் மிக்க
      விருத்தனை வேத வித்தை
      விளைபொருள் மூல மான
      கருத்தனை கடல்சூழ் நாகை
      காரோணங் கோயில் கொண்ட
      ஒருத்தனை உணர்த லால்நாம்
      உய்ந்தவா நெஞ்சி னீரே. 4.71.3
      691 மண்டனை இரந்து கொண்ட
      மாயனோ டசுரர் வானோர்
      தெண்டிரை கடைய வந்த
      தீவிட தன்னை யுண்ட
      கண்டனை கடல்சூழ் நாகை
      காரோணங் கோயில் கொண்ட
      அண்டனை நினைந்த நெஞ்சே
      அம்மநாம் உய்ந்த வாறே. 4.71.4
      692 நிறைபுனல் அணிந்த சென்னி
      நீணிலா அரவஞ் சூடி
      மறையொலி பாடி யாடல்
      மயானத்து மகிழ்ந்த மைந்தன்
      கறைமலி கடல்சூழ் நாகை
      காரோணங் கோயில் கொண்ட
      இறைவனை நாளு மேத்த
      இடும்பைபோய் இன்ப மாமே. 4.71.5
      693 வெம்பனை கருங்கை யானை
      வெருவவன் றுரிவை போர்த்த
      கம்பனை காலற் காய்ந்த
      காலனை ஞால மேத்தும்
      உம்பனை உம்பர் கோனை
      நாகைக்கா ரோண மேய
      செம்பொனை நினைந்த நெஞ்சே
      திண்ணம்நாம் உய்ந்த வாறே. 4.71.6
      694 வெங்கடுங் கான தேழை
      தன்னொடும் வேட னாய்ச்சென்
      றங்கமர் மலைந்து பார்த்தற்
      கடுசரம் அருளி னானை
      மங்கைமார் ஆட லோவா
      மன்னுகா ரோண தானை
      கங்குலும் பகலுங் காண
      பெற்றுநாங் களித்த வாறே. 4.71.7
      695 தெற்றினர் புரங்கள் மூன்று
      தீயினில் விழவோ ரம்பால்
      செற்றவெஞ் சிலையர் வஞ்சர்
      சிந்தையு சேர்வி லாதார்
      கற்றவர் பயிலும் நாகை
      காரோணங் கருதி யேத்த
      பெற்றவர் பிறந்தார் மற்று
      பிறந்தவர் பிறந்தி லாரே. 4.71.8
      இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 4.71.9
      696 கருமலி கடல்சூழ் நாகை
      காரோணர் கமல பா
      தொருவிரல் நுதிக்கு நில்லா
      தொண்டிறல் அரக்க னுக்கான்
      இருதிற மங்கை மாரோ
      டெம்பிரான் செம்பொ னாக
      திருவடி தரித்து நிற்க
      திண்ணம்நாம் உய்ந்த வாறே. 4.71.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - காயாரோகணேசுவரர்
      தேவியார் - நீலாயதாட்சியம்மை.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.72 திருவின்னம்பர் - திருநேரிசை
      திருச்சிற்றம்பலம்
      697 விண்ணவர் மகுட கோடி
      மிடைந்தசே வடியர் போலும்
      பெண்ணொரு பாகர் போலும்
      பேடலி யாணர் போலும்
      வண்ணமால் அயனுங் காணா
      மால்வரை எரியர் போலும்
      எண்ணுரு வநேகர் போலும்
      இன்னம்பர் ஈச னாரே. 4.72.1
      698 பன்னிய மறையர் போலும்
      பாம்பரை யுடையர் போலு
      துன்னிய சடையர் போலு
      தூமதி மத்தர் போலும்
      மன்னிய மழுவர் போலும்
      மாதிடம் மகிழ்வர் போலும்
      என்னையும் உடையர் போலும்
      இன்னம்பர் ஈச னாரே. 4.72.2
      699 மறியொரு கையர் போலும்
      மாதுமை யுடையர் போலும்
      பறிதலை பிறவி நீக்கி
      பணிகொள வல்லர் போலுஞ்
      செறிவுடை அங்க மாலை
      சேர்திரு வுருவர் போலும்
      எறிபுனற் சடையர் போலும்
      இன்னம்பர் ஈச னாரே. 4.72.3
      700 விடமலி கண்டர் போலும்
      வேள்வியை அழிப்பர் போலுங்
      கடவுநல் விடையர் போலுங்
      காலனை காய்வர் போலும்
      படமலி அரவர் போலும்
      பாய்புலி தோலர் போலும்
      இடர்களை தருள்வர் போலும்
      இன்னம்பர் ஈச னாரே. 4.72.4
      701 அளிமலர கொன்றை துன்றும்
      அவிர்சடை யுடையர் போலுங்
      களிமயிற் சாய லோடுங்
      காமனை விழிப்பர் போலும்
      வெளிவளர் உருவர் போலும்
      வெண்பொடி யணிவர் போலும்
      எளியவர் அடியர கென்றும்
      இன்னம்பர் ஈச னாரே. 4.72.5
      702 கணையமர் சிலையர் போலுங்
      கரியுரி உடையர் போலு
      துணையமர் பெண்ணர் போலு
      தூமணி குன்றர் போலும்
      அணையுடை அடியர் கூடி
      அன்பொடு மலர்கள் தூவும்
      இணையடி உடையர் போலும்
      இன்னம்பர் ஈச னாரே. 4.72.6
      703 பொருப்பமர் புயத்தர் போலும்
      புனலணி சடையர் போலும்
      மருப்பிள வாமை தாங்கு
      மார்பில்வெண் ணூலர் போலும்
      உருத்திர மூர்த்தி போலும்
      உணர்விலார் புரங்கள் மூன்றும்
      எரித்திடு சிலையர் போலும்
      இன்னம்பர் ஈச னாரே. 4.72.7
      704 காடிடம் உடையர் போலுங்
      கடிகுரல் விளியர் போலும்
      வேடுரு வுடையர் போலும்
      வெண்மதி கொழுந்தர் போலுங்
      கோடலர் வன்னி தும்பை
      கொக்கிற கலர்ந்த கொன்றை
      ஏடமர் சடையர் போலும்
      இன்னம்பர் ஈச னாரே. 4.72.8
      705 காறிடு விடத்தை யுண்ட
      கண்டரெண் டோ ளர் போலும்
      நீறுடை யுருவர் போலும்
      நினைப்பினை அரியர் போலும்
      பாறுடை தலைகை ஏந்தி
      பலிதிரி துண்பர் போலும்
      ஏறுடை கொடியர் போலும்
      இன்னம்பர் ஈச னாரே. 4.72.9
      706 ஆர்த்தெழு மிலங்கை கோனை
      அருவரை அடர்ப்பர் போலும்
      பார்த்தனோ டமர் பொருது
      படைகொடு தருள்வர் போலு
      தீர்த்தமாங் கங்கை தன்னை
      திருச்சடை வைப்பர் போலும்
      ஏத்தஏ ழுலகும் வைத்தார்
      இன்னம்பர் ஈச னாரே. 4.72.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - எழுத்தறிந்தவீசுவரர்
      தேவியார் - கொந்தார்பூங்குழலம்மை.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.73 திருச்சேறை - திருநேரிசை
      திருச்சிற்றம்பலம்
      707 பெருந்திரு இமவான் பெற்ற
      பெண்கொடி பிரிந்த பின்னை
      வருந்துவான் தவங்கள் செய்ய
      மாமணம் புணர்ந்து மன்னும்
      அருந்திரு மேனி தன்பால்
      அங்கொரு பாக மாக
      திருந்திட வைத்தார் சேறை
      செந்நெறி செல்வ னாரே. 4.73.1
      708 ஓர்த்துள வாறு நோக்கி
      உண்மையை உணரா குண்டர்
      வார்த்தையை மெய்யென் றெண்ணி
      மயக்கில்வீழ தழுந்து வேனை
      பேர்த்தெனை ஆளா கொண்டு
      பிறவிவான் பிணிக ளெல்லா
      தீர்த்தருள் செய்தார் சேறை
      செந்நெறி செல்வ னாரே. 4.73.2
      709 ஒன்றிய தவத்து மன்னி
      உடையனாய் உலப்பில் காலம்
      நின்றுதங் கழல்க ளேத்தும்
      நீள்சிலை விசய னுக்கு
      வென்றிகொள் வேட னாகி
      விரும்பிவெங் கான கத்து
      சென்றருள் செய்தார் சேறை
      செந்நெறி செல்வ னாரே. 4.73.3
      710 அஞ்சையும் அடக்கி ஆற்ற
      லுடையனாய் அநேக காலம்
      வஞ்சமில் தவத்துள் நின்று
      மன்னிய பகீர தற்கு
      வெஞ்சின முகங்க ளாகி
      விசையொடு பாயுங் கங்கை
      செஞ்சடை யேற்றார் சேறை
      செந்நெறி செல்வ னாரே. 4.73.4
      711 நிறைந்தமா மணலை கூப்பி
      நேசமோ டாவின் பாலை
      கறந்துகொண் டாட்ட கண்டு
      கறுத்ததன் தாதை தாளை
      எறிந்தமா ணிக்க போதே
      எழில்கொள்சண் டீசன் என்ன
      சிறந்தபே றளித்தார் சேறை
      செந்நெறி செல்வ னாரே. 4.73.5
      712 விரித்தபல் கதிர்கொள் சூலம்
      வெடிபடு தமரு கங்கை
      தரித்ததோர் கோல கால
      பயிரவ னாகி வேழம்
      உரித்துமை யஞ்ச கண்டு
      ஒண்டிரு மணிவாய் விள்ள
      சிரித்தருள் செய்தார் சேறை
      செந்நெறி செல்வ னாரே. 4.73.6
      713 சுற்றுமுன் இமையோர் நின்று
      தொழுதுதூ மலர்கள் தூவி
      மற்றெமை உயக்கொள் என்ன
      மன்னுவான் புரங்கள் மூன்றும்
      உற்றொரு நொடியின் முன்னம்
      ஒள்ளழல் வாயின் வீழ
      செற்றருள் செய்தார் சேறை
      செந்நெறி செல்வ னாரே. 4.73.7
      714 முந்தியிவ் வுலக மெல்லாம்
      படைத்தவன் மாலி னோடும்
      எந்தனி நாத னேயென்
      றிறைஞ்சிநின் றேத்தல் செய்ய
      அந்தமில் சோதி தன்னை
      அடிமுடி யறியா வண்ணஞ்
      செந்தழ லானார் சேறை
      செந்நெறி செல்வ னாரே. 4.73.8
      இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 4.73.9
      715 ஒருவரும் நிக ரிலாத
      ஒண்டிறல் அரக்கன் ஓடி
      பெருவரை யெடுத்த திண்டோ ள்
      பிறங்கிய முடிகள் இற்று
      மருவியெம் பெருமா னென்ன
      மலரடி மெள்ள வாங்கி
      திருவருள் செய்தார் சேறை
      செந்நெறி செல்வ னாரே. 4.73.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - சென்னெறியப்பர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.74 நெஞ்சம்ஈசனைநினைந்த - திருநேரிசை
      திருச்சிற்றம்பலம்
      716 முத்தினை மணியை பொன்னை
      முழுமுதற் பவள மேய்க்குங்
      கொத்தினை வயிர மாலை
      கொழுந்தினை அமரர் சூடும்
      வித்தினை வேத வேள்வி
      கேள்வியை விளங்க நின்ற
      அத்தனை நினைந்த நெஞ்சம்
      அழகிதா நினைந்த வாறே. 4.74.1
      717 முன்பனை யுலகு கெல்லாம்
      மூர்த்தியை முனிக ளேத்தும்
      இன்பனை இலங்கு சோதி
      இறைவனை அரிவை யஞ்ச
      வன்பனை தடக்கை வேள்வி
      களிற்றினை யுரித்த எங்கள்
      அன்பனை நினைந்த நெஞ்சம்
      அழகிதா நினைந்த வாறே. 4.74.2
      718 கரும்பினு மினியான் றன்னை
      காய்கதிர சோதி யானை
      இருங்கட லமுத தன்னை
      இறப்பொடு பிற பிலானை
      பெரும்பொரு கிளவி யானை
      பெருந்தவ முனிவ ரேத்தும்
      அரும்பொனை நினைந்த நெஞ்சம்
      அழகிதா நினைந்த வாறே. 4.74.3
      719 செருத்தனை யருத்தி செய்து
      செஞ்சரஞ் செலுத்தி யூர்மேல்
      கருத்தனை கனக மேனி
      கடவுளை கருதும் வானோர
      கொருத்தனை யொருத்தி பாகம்
      பொருத்தியும் அருத்தி தீரா
      நிருத்தனை நினைந்த நெஞ்சம்
      நேர்பட நினைந்த வாறே. 4.74.4
      720 கூற்றினை யுதைத்த பாத
      குழகனை மழலை வெள்ளே
      றேற்றனை இமையோ ரேத்த
      இருஞ்சடை கற்றை தன்மேல்
      ஆற்றனை அடிய ரேத்தும்
      அமுதனை அமுத யோக
      நீற்றனை நினைந்த நெஞ்சம்
      நேர்பட நினைந்த வாறே. 4.74.5
      721 கருப்பனை தடக்கை வேழ
      களிற்றினை யுரித்த கண்டன்
      விருப்பனை விளங்கு சோதி
      வியன்கயி லாய மென்னும்
      பொருப்பனை பொருப்பன் மங்கை
      பங்கனை அங்கை யேற்ற
      நெருப்பனை நினைந்த நெஞ்சம்
      நேர்பட நினைந்த வாறே. 4.74.6
      722 நீதியால் நினைப்பு ளானை
      நினைப்பவர் மனத்து ளானை
      சாதியை சங்க வெண்ணீற்
      றண்ணலை விண்ணில் வானோர்
      சோதியை துளக்க மில்லா
      விளக்கினை அளக்க லாகா
      ஆதியை நினைந்த நெஞ்சம்
      அழகிதா நினைந்த வாறே. 4.74.7
      723 பழகனை யுலகு கெல்லாம்
      பருப்பனை பொருப்போ டொக்கும்
      மழகளி யானை யின்றோல்
      மலைமகள் நடுங்க போர்த்த
      குழகனை குழவி திங்கள்
      குளிர்சடை மருவ வைத்த
      அழகனை நினைந்த நெஞ்சம்
      அழகிதா நினைந்த வாறே. 4.74.8
      724 விண்ணிடை மின்னொ பானை
      மெய்ப்பெரும் பொருளொ பானை
      கண்ணிடை மணியொ பானை
      கடுவிரு சுடரொ பானை
      எண்ணிடை யெண்ண லாகா
      இருவரை வெருவ நீண்ட
      அண்ணலை நினைந்த நெஞ்சம்
      அழகிதா நினைந்த வாறே. 4.74.9
      725 உரவனை திரண்ட திண்டோ ள்
      அரக்கனை யூன்றி மூன்றூர்
      நிரவனை நிமிர்ந்த சோதி
      நீண்முடி யமரர் தங்கள்
      குரவனை குளிர்வெண் டிங்கள்
      சடையிடை பொதியும் ஐவாய்
      அரவனை நினைந்த நெஞ்சம்
      அழகிதா நினைந்த வாறே. 4.74.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.75 தனி - திருநேரிசை
      திருச்சிற்றம்பலம்
      726 தொண்டனேன் பட்ட தென்னே
      தூயகா விரியின் நன்னீர்
      கொண்டிரு கோதி யாட்டி
      குங்கு குழம்பு சாத்தி
      இண்டைகொண் டேற நோக்கி
      ஈசனை எம்பி ரானை
      கண்டனை கண்டி ராதே
      காலத்தை கழித்த வாறே. 4.75.1
      727 பின்னிலேன் முன்னி லேன்நான்
      பிறப்பறு தருள்செய் வானே
      என்னிலேன் நாயி னேன்நான்
      இளங்கதிர பயலை திங்க
      சின்னிலா எறிக்குஞ் சென்னி
      சிவபுர தமர ரேறே
      நின்னலால் களைகண் ஆரே
      நீறுசே ரகல தானே. 4.75.2
      728 கள்ளனேன் கள்ள தொண்டா
      காலத்தை கழித்து போக்கி
      தெள்ளியே னாகி நின்று
      தேடினேன் நாடி கண்டேன்
      உள்குவார் உள்கிற் றெல்லாம்
      உடனிரு தறிதி யென்று
      வெள்கினேன் வெள்கி நானும்
      விலாவிற சிரித்தி டேனே. 4.75.3
      729 உடம்பெனு மனைய கத்துள்
      உள்ளமே தகளி யாக
      மடம்படும் உணர்நெய் யட்டி
      உயிரெனு திரிம யக்கி
      இடம்படு ஞான தீயால்
      எரிகொள இருந்து நோக்கில்
      கடம்பமர் காளை தாதை
      கழலடி காண லாமே. 4.75.4
      730 வஞ்சப்பெண் ணரங்கு கோயில்
      வாளெயிற் றரவ துஞ்சா
      வஞ்சப்பெண் இருந்த சூழல்
      வான்றவழ் மதி தோயும்
      வஞ்சப்பெண் வாழ்க்கை யாளன்
      வாழ்வினை வாழ லுற்று
      வஞ்சப்பெண் ணுறக்க மானேன்
      வஞ்சனேன் என்செய் கேனே. 4.75.5
      731 உள்குவார் உள்ள தானை
      உணர்வெனும் பெருமை யானை
      உள்கினேன் நானுங் காண்பான்
      உருகினேன் ஊறி யூறி
      எள்கினேன் எந்தை பெம்மான்
      இருதலை மின்னு கின்ற
      கொள்ளிமேல் எறும்பென் னுள்ளம்
      எங்ஙனங் கூடு மாறே. 4.75.6
      732 மோத்தையை கண்ட காக்கை
      போலவல் வினைகள் மொய்த்துன்
      வார்த்தையை பேச வொட்டா
      மயக்கநான் மயங்கு கின்றேன்
      சீத்தையை சிதம்பு தன்னை
      செடிகொள்நோய் வடிவொன் றில்லா
      ஊத்தையை கழிக்கும் வண்ணம்
      உணர்வுதா உலக மூர்த்தீ. 4.75.7
      733 அங்கத்தை மண்ணு காக்கி
      ஆர்வத்தை உனக்கே தந்து
      பங்கத்தை போக மாற்றி
      பாவித்தேன் பரமா நின்னை
      சங்கொத்த மேனி செல்வா
      சாதல்நாள் நாயேன் உன்னை
      எங்குற்றாய் என்ற போதா
      இங்குற்றேன் என்கண் டாயே. 4.75.8
      734 வெள்ளநீர சடைய னார்தாம்
      வினவுவார் போல வந்தென்
      உள்ளமே புகுந்து நின்றார
      குறங்குநான் புடைகள் போந்து
      கள்ளரோ புகுந்தீ ரென்ன
      கலந்துதான் நோக்கி நக்கு
      வெள்ளரோ மென்று நின்றார்
      விளங்கிளம் பிறைய னாரே. 4.75.9
      735 பெருவிரல் இறைதா னூன்ற
      பிறையெயி றிலங்க அங்கா
      தருவரை அனைய தோளான்
      அரக்கனன் றலறி வீழ்ந்தான்
      இருவரும் ஒருவ னாய
      உருவமங் குடைய வள்ளல்
      திருவடி சுமந்து கொண்டு
      காண்கநான் திரியு மாறே. 4.75.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.76 தனி - திருநேரிசை
      திருச்சிற்றம்பலம்
      736 மருளவா மனத்த னாகி
      மயங்கினேன் மதியி லாதேன்
      இருளவா அறுக்கும் எந்தை
      இணையடி நீழ லென்னும்
      அருளவா பெறுத லின்றி
      அஞ்சிநான் அல தேற்கு
      பொருளவா தந்த வாறே
      போதுபோ புலர்ந்த தன்றே. 4.76.1
      737 மெய்ம்மையாம் உழவை செய்து
      விருப்பெனும் வித்தை வித்தி
      பொய்ம்மையாங் களையை வாங்கி
      பொறையெனும் நீரை பாய்ச்சி
      தம்மையும் நோக்கி கண்டு
      தகவெனும் வேலி யிட்டு
      செம்மையுள் நிற்ப ராகிற்
      சிவகதி விளையு மன்றே. 4.76.2
      738 எம்பிரான் என்ற தேகொண்
      டென்னுளே புகுந்து நின்றிங்
      கெம்பிரான் ஆட்ட ஆடி
      என்னுளே உழிதர் வேனை
      எம்பிரான் என்னை பின்னை
      தன்னுளே கரக்கு மென்றால்
      எம்பிரான் என்னி னல்லால்
      என்செய்கேன் ஏழை யேனே. 4.76.3
      739 காயமே கோயி லா
      கடிமனம் அடிமை யாக
      வாய்மையே தூய்மை யாக
      மனமணி இலிங்க மாக
      நேயமே நெய்யும் பாலா
      நிறையநீர் அமைய வாட்டி
      பூசனை ஈச னார்க்கு
      போற்றவி காட்டி னோமே. 4.76.4
      740 வஞ்சக புலைய னேனை
      வழியற தொண்டிற் பூட்டி
      அஞ்சலென் றாண்டு கொண்டாய்
      அதுவுநின் பெருமை யன்றே
      நெஞ்சகங் கனிய மாட்டேன்
      நின்னையுள் வைக்க மாட்டேன்
      நஞ்சிடங் கொண்ட கண்டா
      என்னென நன்மை தானே. 4.76.5
      741 நாயினுங் கடைப்ப டேனை
      நன்னெறி காட்டி ஆண்டாய்
      ஆயிரம் அரவ மார்த்த
      அமுதனே அமுத மொத்து
      நீயுமென் னெஞ்சி னுள்ளே
      நிலாவினாய் நிலாவி நிற்க
      நோயவை சாரு மாகில்
      நோக்கிநீ அருள்செய் வாயே. 4.76.6
      742 விள்ளத்தா னொன்று மாட்டேன்
      விருப்பெனும் வேட்கை யாலே
      வள்ளத்தேன் போல நுன்னை
      வாய்மடு துண்டி டாமே
      உள்ளத்தே நிற்றி யேனும்
      உயிர்ப்புளே வருதி யேனுங்
      கள்ளத்தே நிற்றி அம்மா
      எங்ஙனங் காணு மாறே. 4.76.7
      743 ஆசைவன் பாச மெய்தி
      அங்குற்றே னிங்குற் றேனாய்
      ஊசலா டுண்டு வாளா
      உழந்துநான் உழித ராமே
      தேசனே தேச மூர்த்தி
      திருமறை காடு மேய
      ஈசனே உன்றன் பாதம்
      ஏத்துமா றருளெம் மானே. 4.76.8
      744 நிறைவிலேன் நேச மில்லேன்
      நினைவிலேன் வினையின் பாச
      மறைவிலே புறப்ப டேறும்
      வகையென கருளெ னெம்மான்
      சிறையிலேன் செய்வ தென்னே
      திருவடி பரவி யேத்த
      குறைவிலேன் குற்ற தீராய்
      கொன்றைசேர் சடையி னானே. 4.76.9
      745 நடுவிலா காலன் வந்து
      நணுகும்போ தறிய வொண்ணா
      அடுவன அஞ்சு பூதம்
      அவைத காற்ற லாகேன்
      படுவன பலவுங் குற்றம்
      பாங்கிலா மனிதர் வாழ்க்கை
      கெடுவதி பிறவி சீசீ
      கிளரொளி சடையி னீரே. 4.76.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.77 தனி - திருநேரிசை
      திருச்சிற்றம்பலம்
      746 கடும்பகல் நட்ட மாடி
      கையிலோர் கபால மேந்தி
      இடும்பலி கில்ல தோறு
      முழிதரும் இறைவ னீரே
      நெடும்பொறை மலையர் பாவை
      நேரிழை நெறிமென் கூந்தற்
      கொடுங்குழை புகுந்த வன்றுங்
      கோவண மரைய தேயோ. 4.77.1
      747 கோவண முடுத்த வாறுங்
      கோளர வசைத்த வாறு
      தீவண சாம்பர் பூசி
      திருவுரு இருந்த வாறும்
      பூவண கிழவ னாரை
      புலியுரி அரைய னாரை
      ஏவண சிலையி னாரை
      யாவரே எழுது வாரே. 4.77.2
      748 விளக்கினாற் பெற்ற இன்பம்
      மெழுக்கினாற் பதிற்றி யாகு
      துளக்கில்நன் மலர்தொ டுத்தால்
      தூயவிண் ணேற லாகும்
      விளக்கிட்டார் பேறு சொல்லின்
      மெய்ஞ்ஞெறி ஞான மாகும்
      அளப்பில கீதஞ் சொன்னார
      கடிகள்தாம் அருளு மாறே. 4.77.3
      749 சந்திரற் சடையில் வைத்த
      சங்கரன் சாம வேதி
      அந்தர தமரர் பெம்மான்
      ஆன்நல்வெள் ளூர்தி யான்றன்
      மந்திரம் நமச்சி வாய
      ஆகநீ றணி பெற்றால்
      வெந்தறும் வினையும் நோயும்
      வெவ்வழல் விறகி டன்றே. 4.77.4
      750 புள்ளுவர் ஐவர் கள்வர்
      புனத்திடை புகுந்து நின்று
      துள்ளுவர் சூறை கொள்வர்
      தூநெறி விளைய வொட்டார்
      முள்ளுடை யவர்கள் தம்மை
      முக்கணான் பாத நீழல்
      உள்ளிடை மறைந்து நின்றங்
      குணர்வினா லெய்ய லாமே. 4.77.5
      751 தொண்டனேன் பிறந்து வாளா
      தொல்வினை குழியில் வீழ்ந்து
      பிண்டமே சுமந்து நாளும்
      பெரியதோர் அவாவிற் பட்டேன்
      அண்டனே அமரர் கோவே
      அறிவனே அஞ்ச லென்னாய்
      தெண்டிரை கங்கை சூடு
      திகழ்தரு சடையி னானே. 4.77.6
      752 பாறினாய் பாவி நெஞ்சே
      பன்றிபோல் அளற்றிற் பட்டு
      தேறிநீ நினைதி யாயின்
      சிவகதி திண்ண மாகும்
      ஊறலே உவர்ப்பு நாறி
      உதிரமே யொழுகும் வாசல்
      கூறையால் மூட கண்டு
      கோலமா கருதி னாயே. 4.77.7
      இப்பதிகத்தில் 89-ம் செய்யுட்கள்
      சிதைந்து போயின. 4.77.8-9
      753 உய்த்தகால் உ தும்பர்
      உமையவள் நடுக்க தீர
      வைத்தகா லரக்க னோதன்
      வான்முடி தனக்கு நேர்ந்தான்
      மொய்த்தகான் முகிழ்வெண் டிங்கள்
      மூர்த்தியெ னுச்சி தன்மேல்
      வைத்தகால் வருந்து மென்று
      வாடிநான் ஒடுங்கி னேனே. 4.77.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.78 குறைந்த - திருநேரிசை
      திருச்சிற்றம்பலம்
      754 வென்றிலேன் புலன்க ளைந்தும்
      வென்றவர் வளாக தன்னுள்
      சென்றிலே னாத லாலே
      செந்நெறி யதற்குஞ் சேயேன்
      நின்றுளே துளும்பு கின்றேன்
      நீசனேன் ஈச னேயோ
      இன்றுளேன் நாளை யில்லேன்
      என்செய்வான் தோன்றி னேனே. 4.78.1
      755 கற்றிலேன் கலைகள் ஞானங்
      கற்றவர் தங்க ளோடும்
      உற்றிலே னாத லாலே
      உணர்வுக்குஞ் சேய னானேன்
      பெற்றிலேன் பெருந்த டங்கண்
      பேதைமார் தமக்கும் பொல்லேன்
      எற்றுளேன் இறைவ னேநான்
      என்செய்வான் தோன்றி னேனே. 4.78.2
      756 மாட்டினேன் மனத்தை முன்னே
      மறுமையை உணர மாட்டேன்
      மூட்டிநான் முன்னை நாளே
      முதல்வனை வணங்க மாட்டேன்
      பாட்டினாய் போல நின்று
      பற்றதாம் பாவ தன்னை
      ஈட்டினேன் களைய மாட்டேன்
      என்செய்வான் தோன்றி னேனே. 4.78.3
      757 கரைக்கட தோத மேறுங்
      கடல்விட முண்ட கண்டன்
      உரைக்கட தோது நீர்மை
      யுணர்ந்திலே னாத லாலே
      அரைக்கிட தசையு நாகம்
      அசைப்பனே இன்ப வாழ்க்கை
      கிரைக்கிடை துருகு கின்றேன்
      என்செய்வான் தோன்றி னேனே. 4.78.4
      758 செம்மைவெண் ணீறு பூசுஞ்
      ச்஢வனவன் தேவ தேவன்
      வெம்மைநோய் வினைகள் தீர்க்கும்
      விகிர்தனு கார்வ மெய்தி
      அம்மைநின் றடிமை செய்யா
      வடிவிலா முடிவில் வாழ்க்கை
      கிம்மைநின் றுருகு கின்றேன்
      என்செய்வான் தோன்றி னேனே. 4.78.5
      759 பேச்சொடு பேச்சு கெல்லாம்
      பிறர்தமை புறமே பேச
      கூச்சிலே னாத லாலே
      கொடுமையை விடுமா றோரேன்
      நாச்சொலி நாளும் மூர்த்தி
      நன்மையை யுணர மாட்டேன்
      ஏச்சுளே நின்று மெய்யே
      என்செய்வான் தோன்றி னேனே. 4.78.6
      760 தேசனை தேச மாகு
      திருமாலோர் பங்கன் றன்னை
      பூசனை புனிதன் றன்னை
      புணரும்புண் டரிக தானை
      நேசனை நெருப்பன் றன்னை
      நிவஞ்சக தகன்ற செம்மை
      ஈசனை அறிய மாட்டேன்
      என்செய்வான் தோன்றி னேனே. 4.78.7
      761 விளைக்கின்ற வினையை நோக்கி
      வெண்மயிர் விரவி மேலும்
      முளைக்கின்ற வினையை போக
      முயல்கிலேன் இயல வெள்ள
      திளைக்கின்ற முடியி னான்றன்
      திருவடி பரவ மாட்டா
      திளைக்கின்றே னிருமி யூன்றி
      என்செய்வான் தோன்றி னேனே. 4.78.8
      762 விளைவறி விலாமை யாலே
      வேதனை குழியி லாழ்ந்து
      களைகணு மில்லேன் எந்தாய்
      காமரங் கற்று மில்லேன்
      தளையவிழ் கோதை நல்லார்
      தங்களோ டின்ப மெய்த
      இளையனு மல்லேன் எந்தாய்
      என்செய்வான் தோன்றி னேனே. 4.78.9
      763 வெட்டன வுடைய னாகி
      வீரத்தால் மலை யெடுத்த
      துட்டனை துட்டு தீர்த்து
      சுவைப்பட கீதங் கேட்ட
      அட்டமா மூர்த்தி யாய
      ஆதியை ஓதி நாளும்
      எட்டனை எட்ட மாட்டேன்
      என்செய்வான் தோன்றி னேனே. 4.78.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.79 குறைந்த - திருநேரிசை
      திருச்சிற்றம்பலம்
      764 தம்மானங் காப்ப தாகி
      தையலார் வலையு ளாழ்ந்து
      அம்மானை அமுதன் றன்னை
      ஆதியை அந்த மாய
      செம்மான ஒளிகொள் மேனி
      சிந்தையு ளொன்றி நின்ற
      எம்மானை நினைய மாட்டேன்
      என்செய்வான் தோன்றி னேனே. 4.79.1
      765 மக்களே மணந்த தார
      மவ்வயிற் றவரை யோம்புஞ்
      சிக்குளே யழுந்தி ஈசன்
      திறம்படேன் றவம தோரேன்
      கொப்புளே போல தோன்றி
      யதனுளே மறை கண்டும்
      இக்களே பரத்தை யோம்ப
      என்செய்வான் தோன்றி னேனே. 4.79.2
      766 கூழையே னாக மாட்டேன்
      கொடுவினை குழியில் வீழ்ந்து
      ஏழினின் னிசையி னாலும்
      இறைவனை யேத்த மாட்டேன்
      மாழையொண் கண்ணின் நல்ல
      மடந்தைமார் தமக்கும் பொல்லேன்
      ஏழையே னாகி நாளு
      மென்செய்வான் தோன்றி னேனே. 4.79.3
      767 முன்னையென் வினையி னாலே
      மூர்த்தியை நினைய மாட்டேன்
      பின்னைநான் பித்த னாகி
      பிதற்றுவன் பேதை யேன்நான்
      என்னுளே மன்னி நின்ற
      சீர்மைய தாயி னானை
      என்னுளே நினைய மாட்டேன்
      என்செய்வான் தோன்றி னேனே. 4.79.4
      768 கறையணி கண்டன் றன்னை
      காமரங் கற்று மில்லேன்
      பிறைநுதற் பேதை மாதர்
      பெய்வளை யார்க்கு மல்லேன்
      மறைநவில் நாவி னானை
      மன்னிநின் றிறைஞ்சி நாளும்
      இறையேயு மேத்த மாட்டேன்
      என்செய்வான் தோன்றி னேனே. 4.79.5
      இப்பதிகத்தில் 6789-ம்செய்யுட்கள்
      மறைந்து போயின. 4.79.6-91
      769 வளைத்துநின் றைவர் கள்வர்
      வந்தெனை நடுக்கஞ் செ
      தளைத்துவை துலையை யேற்றி
      தழலெரி மடுத்த நீரில்
      திளைத்துநின் றாடு கின்ற
      ஆமைபோல் தெளிவி லாதேன்
      இளைத்துநின் றாடு கின்றேன்
      என்செய்வான் தோன்றி னேனே. 4.79.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.80 கோயில் - திருவிருத்தம்
      திருச்சிற்றம்பலம்
      770 பாளையு டைக்கமு கோங்கிப்பன்
      மாடம்நெ ருங்கியெங்கும்
      வாளையு டைப்புனல் வந்தெறி
      வாழ்வயல் தில்லைதன்னுள்
      ஆளவு டைக்கழற் சிற்றம்ப
      லத்தரன் ஆடல்கண்டாற்
      பீளையு டைக்கண்க ளாற்பின்னை
      பேய்த்தொண்டர் காண்பதென்னே. 4.80.1
      771 பொருவிடை யொன்றுடை புண்ணிய
      மூர்த்தி புலியதளன்
      உருவுடை யம்மலை மங்கைம
      ணாளன் உலகுக்கெல்லா
      திருவுடை அந்தணர் வாழ்கின்ற
      தில்லைச்சிற் றம்பலவன்
      திருவடி யைக்கண்ட கண்கொண்டு
      மற்றினி காண்பதென்னே. 4.80.2
      772 தொடுத்த மலரொடு தூபமுஞ்
      சாந்துங்கொண் டெப்பொழுதும்
      அடுத்து வணங்கும் அயனொடு
      மாலுக்குங் காண்பரியான்
      பொடிக்கொண் டணிந்துபொன் னாகிய
      தில்லைச்சிற் றம்பலவன்
      உடுத்த துகில்கண்ட கண்கொண்டு
      மற்றினி காண்பதென்னே. 4.80.3
      773 வைச்ச பொருள்ந காகுமென்
      றெண்ணி நமச்சிவாய
      அச்ச மொழிந்தேன் அணிதில்லை
      யம்பல தாடுகின்ற
      பிச்சன் பிறப்பிலி பேர்நந்தி
      உந்தியின் மேலசைத்த
      கச்சின் அழகுகண் டாற்பின்னை
      கண்கொண்டு காண்பதென்னே. 4.80.4
      774 செய்ஞ்ஞின்ற நீல மலர்கின்ற
      தில்லைச்சிற் றம்பலவன்
      மைஞ்ஞின்ற ஒண்கண் மலைமகள்
      கண்டு மகிழ்ந்துநிற்க
      நெய்ஞ்ஞின் றெரியும் விளக்கொத்த
      நீல மணிமிடற்றான்
      கைஞ்ஞின்ற ஆடல்கண் டாற்பின்னை
      கண்கொண்டு காண்பதென்னே. 4.80.5
      775 ஊனத்தை நீக்கி உலகறிய
      என்னை யாட்கொண்டவன்
      தேனொ தெனக்கினி யான்தில்லை
      சிற்றம் பலவனெங்கோன்
      வான தவருய்ய வன்னஞ்சை
      யுண்டகண் டத்திலங்கும்
      ஏன தெயிறு கண்டாற்பின்னை
      கண்கொண்டு காண்பதென்னே. 4.80.6
      776 தெரித்த கணையாற் திரிபுர
      மூன்றுஞ்செ தீயின்மூழ்க
      எரித்த இறைவன் இமையவர்
      கோமான் இணையடிகள்
      தரித்த மனத்தவர் வாழ்கின்ற
      தில்லைச்சிற் றம்பலவன்
      சிரித்த முகங்கண்ட கண்கொண்டு
      மற்றினி காண்பதென்னே. 4.80.7
      777 சுற்று மமரர் சுரபதி
      நின்திரு பாதமல்லால்
      பற்றொன் றிலோமென் றழை
      பரவையுள் நஞ்சையுண்டான்
      செற்றங் கனங்கனை தீவிழி
      தான்றில்லை யம்பலவன்
      நெற்றியிற் கண்கண்ட கண்கொண்டு
      மற்றினி காண்பதென்னே. 4.80.8
      778 சி தெழுந்த செழுங்கம
      லத்தன்ன சேவடிகள்
      வைத்த மனத்தவர் வாழ்கின்ற
      தில்லைச்சிற் றம்பலவன்
      முத்தும் வயிரமும் மாணிக்க
      தன்னுள் விளங்கியதூ
      மத்த மலர்கண்ட கண்கொண்டு
      மற்றினி காண்பதென்னே. 4.80.9
      779 தருக்கு மிகுத்துத்தன் றோள்வலி
      யுன்னி தடவரையை
      வரைக்கை களாலெடு தார்ப்ப
      மலைமகள் கோன்சிரித்து
      அரக்கன் மணிமுடி பத்தும்
      அணிதில்லை யம்பலவன்
      நெருக்கி மிதித்த விரல்கண்ட
      கண்கொண்டு காண்பதென்னே. 4.80.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - திருமூலத்தானநாயகர் சபாநாதர்
      தேவியார் - சிவகாமியம்மை.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.81 கோயில் - திருவிருத்தம்
      திருச்சிற்றம்பலம்
      780 கருநட்ட கண்டனை அண்ட
      தலைவனை கற்பகத்தை
      செருநட்ட மும்மதி லெய்யவல்
      லானைச்செ தீமுழங்க
      திருநட்ட மாடியை தில்லை
      கிறையைச்சிற் றம்பலத்து
      பெருநட்ட மாடியை வானவர்
      கோனென்று வாழ்த்துவனே. 4.81.1
      781 ஒன்றி யிருந்து நினைமின்கள்
      உந்த கூனமில்லை
      கன்றிய காலனை காலாற்
      கடிந்தான் அடியவற்கா
      சென்று தொழுமின்கள் தில்லையு
      சிற்றம் பலத்துநட்டம்
      என்றுவ தாயெனும் எம்பெரு
      மான்றன் திருக்குறிப்பே. 4.81.2
      782 கன்மன வீர்கழி யுங்கரு
      தேசொல்லி காண்பதென்னே
      நன்மன வர்நவில் தில்லையு
      சிற்றம் பலத்துநட்டம்
      பொன்மலை யில்வெள்ளி குன்றது
      போல பொலிந்திலங்கி
      என்மன மேயொன்றி புக்கனன்
      போந்த சுவடில்லையே. 4.81.3
      783 குனித்த புருவமுங் கொவ்வைச்செவ்
      வாயிற் குமிண்சிரிப்பும்
      பனித்த சடையும் பவளம்போல்
      மேனியிற் பால்வெண்ணீறும்
      இனித்த முடைய எடுத்தபொற்
      பாதமுங் காணப்பெற்றால்
      மனித்த பிறவியும் வேண்டுவதே
      இந்த மாநிலத்தே. 4.81.4
      784 வாய்த்தது நந்த கீதோர்
      பிறவி மதித்திடுமின்
      பார்த்தற்கு பாசு பதமருள்
      செய்தவன் பத்தருள்ளீர்
      கோத்தன்று முப்புர தீவளை
      தான்றில்லை யம்பலத்து
      கூத்தனு காட்ப டிருப்பதன்
      றோநந்தங் கூழைமையே. 4.81.5
      785 பூத்தன பொற்சடை பொன்போல்
      மிளிர புரிகணங்கள்
      ஆர்த்தன கொட்டி யரித்தன
      பல்குற பூதகண
      தேத்தென வென்றிசை வண்டுகள்
      பாடுசிற் றம்பலத்து
      கூத்தனிற் கூத்துவல் லாருள
      ரோவென்றன் கோல்வளைக்கே. 4.81.6
      786 முடிகொண்ட மத்தமும் முக்கண்ணின்
      நோக்கும் முறுவலிப்பு
      துடிகொண்ட கையு துதைந்தவெண்
      ணீறுஞ் சுரிகுழலாள்
      படிகொண்ட பாகமும் பாய்புலி
      தோலுமென் பாவிநெஞ்சிற்
      குடிகொண்ட வாதில்லை யம்பல
      கூத்தன் குரைகழலே. 4.81.7
      787 படைக்கல மாகவுன் னா
      தெழுத்தஞ்சென் நாவிற்கொண்டேன்
      இடைக்கல மல்லேன் எழுபிற
      பும்முன காட்செய்கின்றேன்
      துடைக்கினும் போகேன் தொழுது
      வணங்கித்தூ நீறணிந்துன்
      அடைக்கலங் கண்டாய் அணிதில்லை
      சிற்றம் பலத்தரனே. 4.81.8
      788 பொன்னொத்த மேனிமேல் வெண்ணீ
      றணிந்து புரிசடைகள்
      மின்னொ திலங்க பலிதேர
      துழலும் விடங்கவேட
      சின்னத்தி னான்மலி தில்லையு
      சிற்றம் பலத்துநட்டம்
      என்னத்தன் ஆடல்கண் டின்புற்ற
      தாலிவ் விருநிலமே. 4.81.9
      789 சாட எடுத்தது தக்கன்றன்
      வேள்வியிற் சந்திரனை
      வீட எடுத்தது காலனை
      நாரணன் நான்முகனு
      தேட எடுத்தது தில்லையு
      சிற்றம் பலத்துநட்டம்
      ஆட எடுத்திட்ட பாதமன்
      றோநம்மை யாட்கொண்டதே. 4.81.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.82 திருக்கழுமலம் - திருவிருத்தம்
      திருச்சிற்றம்பலம்
      790 பார்கொண்டு மூடி கடல்கொண்ட
      ஞான்றுநின் பாதமெல்லாம்
      நாலஞ்சு புள்ளினம் ஏந்தின
      என்பர் நளிர்மதியங்
      கால்கொண்ட வண்கை சடைவிரி
      தாடுங் கழுமலவர
      காளன்றி மற்றுமுண் டோ அந்த
      ணாழி அகலிடமே. 4.82.1
      791 கடையார் கொடிநெடு மாடங்க
      ளெங்குங் கலந்திலங்க
      உடையா னுடைதலை மாலையுஞ்
      சூடி உகந்தருளி
      விடைதா னுடையவவ் வேதியன்
      வாழுங் கழுமலத்துள்
      அடைவார் வினைக ளவையெள்க
      நாடொறும் ஆடுவரே. 4.82.2
      792 திரைவா பெருங்கடல் முத்தங்
      குவிப்ப முகந்துகொண்டு
      நுரைவாய் நுளைச்சிய ரோடி
      கழுமல துள்ளழுந்தும்
      விரைவாய் நறுமலர் சூடிய
      விண்ணவன் றன்னடிக்கே
      வரையா பரிசிவை நாடொறும்
      நந்தமை யாள்வனவே. 4.82.3
      793 விரிக்கும் அரும்பதம் வேதங்க
      ளோதும் விழுமியநூல்
      உரைக்கில் அரும்பொருள் உள்ளுவர்
      கேட்கில் உலகமுற்றும்
      இரிக்கும் பறையொடு பூதங்கள்
      பாட கழுமலவன்
      நிருத்தம் பழம்படி யாடுங்
      கழல்நம்மை ஆள்வனவே. 4.82.4
      794 சிந்தி தெழுமன மேநினை
      யாமுன் கழுமலத்தை
      பந்தித்த வல்வினை தீர்க்க
      வல்லானை பசுபதியை
      சந்தித்த கால மறுத்துமென்
      றெண்ணி யிருந்தவர்க்கு
      முந்தி தொழுகழல் நாடொறும்
      நந்தம்மை ஆள்வனவே. 4.82.5
      795 நிலையும் பெருமையும் நீதியுஞ்
      சால அழகுடைத்தாய்
      அலையும் பெருவெள்ள தன்று
      மிதந்தவி தோணிபுரஞ்
      சிலையில் திரிபுரம் மூன்றெரி
      தார்தங் கழுமலவர்
      அலருங் கழலடி நாடொறும்
      நந்தமை ஆள்வனவே. 4.82.6
      796 முற்றி கிடந்துமு நீரின்
      மிதந்துடன் மொய்த்தமரர்
      சுற்றி கிடந்து தொழப்படு
      கின்றது சூழரவ
      தெற்றி கிடந்துவெங் கொன்றள
      துன்றிவெண் திங்கள்சூடுங்
      கற்றை சடைமுடி யார்க்கிட
      மாய கழுமலமே. 4.82.7
      797 உடலும் உயிரும் ஒருவழி
      செல்லும் உலகத்துள்ளே
      அடையும் உனைவ தடைந்தார்
      அமரர் அடியிணைக்கீழ்
      நடையும் விழவொடு நாடொறும்
      மல்கும் கழுமலத்துள்
      விடையன் தனிப்பதம் நாடொறும்
      நந்தமை ஆள்வனவே. 4.82.8
      798 பரவை கடல்நஞ்ச முண்டது
      மில்லையி பார்முழுதும்
      நிரவி கிடந்து தொழப்படு
      கின்றது நீண்டிருவர்
      சிர படவந்து சார்ந்தார்
      கழலடி காண்பதற்கே
      அரவ கழலடி நாடொறும்
      நந்தமை ஆள்வனவே. 4.82.9
      799 கரையார் கடல்சூழ் இலங்கையர்
      கோன்றன் முடிசிதற
      தொலையா மலரடி ஊன்றலும்
      உள்ளம் விதிர்விதிர்த்து
      தலையா கிடந்துயர தான்றன்
      கழுமலங் காண்பதற்கே
      அலையா பரிசிவை நாடொறும்
      நந்தமை ஆள்வனவே. 4.82.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - பிரமபுரீசர் தேவியார்
      திருத்தோணியில் வீற்றிருப்பவர் தோணியப்பர்.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.83 திருக்கழுமலம் - திருவிருத்தம்
      திருச்சிற்றம்பலம்
      800 படையார் மழுவொன்று பற்றிய
      கையன் பதிவினவிற்
      கடையார் கொடிநெடு மாடங்க
      ளோங்குங் கழுமலமாம்
      மடைவா குருகினம் பாளை
      விரிதொறும் வண்டினங்கள்
      பெடைவாய் மதுவுண்டு பேரா
      திருக்கும் பெரும்பதியே. 4.83.1
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.84 ஆருயிர - திருவிருத்தம்
      திருச்சிற்றம்பலம்
      801 எட்டா திசைக்கும் இருதிசை
      கும்மிறை வாமுறையென்
      றிட்டார் அமரர்வெம் பூசல்
      எனக்கே டெரிவிழியா
      ஒட்டா கயவர் திரிபுரம்
      மூன்றையும் ஓரம்பினால்
      அட்டான் அடிநிழற் கீழதன்
      றோவென்றன் ஆருயிரே. 4.84.1
      802 பேழ்வாய் அரவின் அரைக்கமர
      தேறி பிறங்கிலங்கு
      தேய்வாய் இளம்பிறை செஞ்சடை
      மேல்வைத்த தேவர்பிரான்
      மூவான் இளகான் முழுவுல
      கோடுமண் விண்ணுமற்றும்
      ஆவான் அடிநிழற் கீழதன்
      றோவென்றன் ஆருயிரே. 4.84.2
      803 தரியா வெகுளிய னாய்த்தக்கன்
      வேள்வி தகர்த்துகந்த
      எரியார் இலங்கிய சூலத்தி
      னான்இமை யாதமுக்க
      பெரியான் பெரியார் பிறப்பறு
      பானென்று தன்பிறப்பை
      அரியான் அடிநிழற் கீழதன்
      றோவென்றன் ஆருயிரே. 4.84.3
      804 வடிவுடை வாணெடுங் கண்ணுமை
      யாளையோர் பால்மகிழ்ந்து
      வெடிகொள் அரவொடு வேங்கை
      அதள்கொண்டு மேல்மருவி
      பொடிகொ ளகலத்து பொன்பிதிர
      தன்னபைங் கொன்றையந்தார்
      அடிகள் அடிநிழற் கீழதன்
      றோவென்றன் ஆருயிரே. 4.84.4
      805 பொறுத்தான் அமரர கமுதரு
      ளிநஞ்ச முண்டுகண்டங்
      கறுத்தான் கறுப்பழ காவுடை
      யான்கங்கை செஞ்சடைமேற்
      செறுத்தான் தனஞ்சயன் சேணா
      ரகலங் கணையொன்றினால்
      அறுத்தான் அடிநிழற் கீழதன்
      றோவென்றன் ஆருயிரே. 4.84.5
      806 காய்ந்தான் செறற்கரி யானென்று
      காலனை காலொன்றினாற்
      பாய்ந்தான் பணைமதில் மூன்றுங்
      கணையென்னும் ஒள்ளழலால்
      மேய்ந்தான் வியனுல கேழும்
      விளங்க விழுமியநூல்
      ஆய்ந்தான் அடிநிழற் கீழதன்
      றோவென்றன் ஆருயிரே. 4.84.6
      807 உளைந்தான் செறுத்தற் கரியான்
      றலையை உகிரொன்றினாற்
      களைந்தான் அதனை நிறைய
      நெடுமால் கணார் குருதி
      வளைந்தான் ஒருவிர லின்னொடு
      வீழ்வித்து சாம்பர்வெண்ணீ
      றளைந்தான் அடிநிழற் கீழதன்
      றோவென்றன் ஆருயிரே. 4.84.7
      808 முந்திவ டத்திடை பட்டதெல்
      லாம்முடி வேந்தர்தங்கள்
      பந்திவ டத்திடை பட்டலை
      புண்பதற் கஞ்சிக்கொல்லோ
      நந்திவ டந்நறு மாமலர
      கொன்றையு நக்கசென்னி
      அந்திவ டத்தொளி யானடி
      சேர்ந்ததென் ஆருயிரே. 4.84.8
      809 மிகத்தான் பெரியதோர் வேங்கை
      யதள்கொண்டு மெய்ம்மருவி
      அகத்தான் வெருவநல் லாளை
      நடுக்குறு பான்வரும்பொன்
      முகத்தாற் குளிர்ந்திரு துள்ளத்தி
      னாலுக பானிசைந்த
      அகத்தான் அடிநிழற் கீழதன்
      றோவென்றன் ஆருயிரே. 4.84.9
      810 பைம்மா ணரவல்குற் பங்க
      சீறடி யாள்வெருவ
      கைம்மா வரிசிலை காமனை
      யட்ட கடவுள்முக்கண்
      எம்மான் இவனென் றிருவரு
      மேத்த எரிநிமிர்ந்த
      அம்மான் அடிநிழற் கீழதன்
      றோவென்றன் ஆருயிரே. 4.84.10
      811 பழகவோ ரூர்தி யரன்பைங்க
      பாரிடம் பாணிசெ
      குழலும் முழவொடு மாநட
      மாடி உயரிலங்கை
      கிழவன் இருபது தோளும்
      ஒருவிர லாலிறுத்த
      அழகன் அடிநிழற் கீழதன்
      றோவென்றன் ஆருயிரே. 4.84.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.85 திருச்சோற்றுத்துறை - திருவிருத்தம்
      திருச்சிற்றம்பலம்
      812 காலை யெழுந்து கடிமலர்
      தூயன தாங்கொணர்ந்து
      மேலை யமரர் விரும்பு
      மிடம்விரை யான்மலிந்த
      சோலை மணங்கமழ் சோற்று
      துறையுறை வார்சடைமேல்
      மாலை மதியமன் றோவெம்
      பிரானு கழகியதே. 4.85.1
      813 வண்டணை கொன்றையும் வன்னியும்
      மத்தமும் வாளரவுங்
      கொண்டணை தேறு முடியுடை
      யான்குரை சேர்கழற்கே
      தொண்டணை தாடிய சோற்று
      துறையுறை வார்சடைமேல்
      வெண்டலை மாலையன் றோவெம்
      பிரானு கழகியதே. 4.85.2
      814 அளக்கு நெறியினன் அன்பர்கள்
      தம்மன தாய்ந்துகொள்வான்
      விளக்கு மடியவர் மேல்வினை
      தீர்த்திடும் விண்ணவர்கோன்
      துளக்குங் குழையணி சோற்று
      துறையுறை வார்சடைமேற்
      றிளைக்கும் மதியமன் றோவெம்
      பிரானு கழகியதே. 4.85.3
      815 ஆய்ந்தகை வாளர வத்தொடு
      மால்விடை யேறியெங்கும்
      பேர்ந்தகை மானட மாடுவர்
      பின்னு சடையிடையே
      சேர்ந்தகைம் மாமலர் துன்னிய
      சோற்று துறையுறைவார்
      ஏந்துகை சூல மழுவெம்
      பிரானு கழகியதே. 4.85.4
      816 கூற்றை கடந்ததுங் கோளர
      வார்த்ததுங் கோளுழுவை
      நீற்றில் துதைந்து திரியும்
      பரிசது நாமறியோம்
      ஆற்றிற் கிடந்தங் கலைப்ப
      அலைப்புண் டசைந்ததொக்குஞ்
      சோற்று துறையுறை வார்சடை
      மேலதோர் தூமதியே. 4.85.5
      817 வல்லாடி நின்று வலிபேசு
      வார்கோளர் வல்லசுரர்
      கொல்லாடி நின்று குமைக்கிலும்
      வானவர் வந்திறைஞ
      சொல்லாடி நின்று பயில்கின்ற
      சோற்று துறையுறைவார்
      வில்லாடி நின்ற நிலையெம்
      பிரானு கழகியதே. 4.85.6
      818 ஆய முடையது நாமறி
      யோம்அர ணத்தவரை
      கா கணைசிலை வாங்கியு
      மெய்து துயக்கறுத்தான்
      தூயவெண் ணீற்றினன் சோற்று
      துறையுறை வார்சடைமேற்
      பாயும்வெண் ணீர்த்திரை கங்கையெம்
      மானு கழகியதே. 4.85.7
      819 அண்டர் அமரர் கடை
      தெழு தோடிய நஞ்சதனை
      உண்டும் அதனை ஒடுக்க
      வல்லான் மிக்க உம்பர்கள்கோன்
      தொண்டு பயில்கின்ற சோற்று
      துறையுறை வார்சடைமேல்
      இண்டை மதியமன் றோவெம்
      பிரானு கழகியதே. 4.85.8
      820 கடல்மணி வண்ணன் கருதிய
      நான்முகன் றானறியான்
      விடமணி கண்ட முடையவன்
      றானெனை ஆளுடையான்
      சுடரணி தாடிய சோற்று
      துறையுறை வார்சடைமேற்
      படமணி நாகமன் றோவெம்
      பிரானு கழகியதே. 4.85.9
      821 இலங்கை கிறைவன் இருபது
      தோளு முடிநெரி
      கலங்க விரலினா லூன்றி
      அவனை கருத்தழித்த
      துலங்கல் மழுவினன் சோற்று
      துறையுறை வார்சடைமேல்
      இலங்கு மதியமன் றோவெம்
      பிரானு கழகியதே. 4.85.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.86 திருவொற்றியூர் - திருவிருத்தம்
      திருச்சிற்றம்பலம்
      822 செற்று களிற்றுரி கொள்கின்ற
      ஞான்று செருவெண்கொம்பொன்
      றிற்று கிடந்தது போலும்
      இளம்பிறை பாம்பதனை
      சுற்றி கிடந்தது கிம்புரி
      போல சுடரிமைக்கும்
      நெற்றிக்கண் மற்றதன் முத்தொக்குமா
      லொற்றி யூரனுக்கே. 4.86.1
      823 சொல்ல கருதிய தொன்றுண்டு
      கேட்கிற் றொண்டாயடைந்தார்
      அல்லற் படக்கண்டு பின்னென்
      கொடுத்தி அலைகொள்முந்நீர்
      மல்லற் றிரைச்சங்க நித்திலங்
      கொண்டுவம் பக்கரைக்கே
      ஒல்லை திரைகொணர தெற்றொற்றி
      யூருறை யுத்தமனே. 4.86.2
      824 பரவை வருதிரை நீர்க்கங்கை
      பாய்ந்துக்க பல்சடைமேல்
      அரவ மணிதரு கொன்றை
      இளந்திங்க சூடியதோர்
      குரவ நறுமலர் கோங்க
      மணிந்து குலாய சென்னி
      உரவு திரைகொணர தெற்றொற்றி
      யூருறை யுத்தமனே. 4.86.3
      825 தானகங் காடரங் காக
      வுடையது தன்னடைந்தார்
      ஊனக நாறு முடைதலை
      யிற்பலி கொள்வதுந்தான்
      தேனக நாறு திருவொற்றி
      யூருறை வாரவர்தா
      தானக மேவந்து போனகம்
      வேண்டி உழிதர்வரே. 4.86.4
      826 வேலை கடல்நஞ்ச முண்டுவெள்
      ளேற்றொடும் வீற்றிருந்த
      மாலை சடையார குறைவிட
      மாவது வாரிகுன்றா
      ஆலை கரும்பொடு செந்நெற்
      கழனி அருகணைந்த
      சோலை திருவொற்றி யூரையெ
      போது தொழுமின்களே. 4.86.5
      827 புற்றினில் வாழும் அரவுக்கு
      திங்கட்குங் கங்கையென்னுஞ்
      சிற்றிடை யாட்குஞ் செறிதரு
      கண்ணிக்குஞ் சேர்விடமாம்
      பெற்றுடை யான்பெரும் பேச்சுடை
      யான்பிரி யாதெனையாள்
      விற்றுடை யானொற்றி யூருடை
      யான்றன் விரிசடையே. 4.86.6
      828 இன்றரை கண்ணுடை யாரெங்கு
      மில்லை இமய மென்னுங்
      குன்றரை கண்ணன் குலமக
      பாவைக்கு கூறிட்டநாள்
      அன்றரை கண்ணுங் கொடுத்துமை
      யாளையும் பாகம்வைத்த
      ஒன்றரை கண்ணன்கண் டீரொற்றி
      யூருறை உத்தமனே. 4.86.7
      829 சுற்றிவண் டியாழ்செயுஞ் சோலையுங்
      காவு துதைந்திலங்கு
      பெற்றிகண் டால்மற்று யாவருங்
      கொள்வர் பிறரிடைநீ
      ஒற்றிகொண் டாயொற்றி யூரையுங்
      கைவி டுறுமென்றெண்ணி
      விற்றிகண் டாய்மற் றிதுவொப்ப
      தில்லிடம் வேதியனே. 4.86.8
      830 சுற்றி கிடந்தொற்றி யூரனென்
      சிந்தை பிரிவறியான்
      ஒற்றி திரிதந்து நீயென்ன
      செய்தி உலகமெல்லாம்
      பற்றி திரிதந்து பல்லொடு
      நாமென்று கண்குழித்து
      தெற்றி திருப்பதல் லாலென்ன
      செய்யுமி தீவினையே. 4.86.9
      831 அங்க கடுக்கைக்கு முல்லை
      புறவம் முறுவல்செய்யும்
      பைங்க டலைக்கு சுடலை
      களரி பருமணிசேர்
      கங்கைக்கு வேலை அரவுக்கு
      புற்று கலைநிரம்பா
      திங்கட்கு வான திருவொற்றி
      யூரர் திருமுடியே. 4.86.10
      832 தருக்கின வாளர கன்முடி
      பத்திற பாதந்தன்னால்
      ஒருக்கின வாறடி யேனை
      பிறப்பறு தாளவல்லான்
      நெருக்கின வானவர் தானவர்
      கூடி கடைந்தநஞ்சை
      பருக்கின வாறென்செய் கேனொற்றி
      யூருறை பண்டங்கனே. 4.86.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.87 திருப்பழனம் - திருவிருத்தம்
      திருச்சிற்றம்பலம்
      833 மேவித்து நின்று விளைந்தன
      வெந்துயர் துக்கமெல்லாம்
      ஆவித்து நின்று கழிந்தன
      அல்லல் அவையறுப்பான்
      பாவித்த பாவனை நீயறி
      வாய்பழ னத்தரசே
      கூவித்து கொள்ளு தனையடி
      யேனை குறிக்கொள்வதே. 4.87.1
      834 சுற்றிநின் றார்புறங் காவ
      லமரர் கடைத்தலையில்
      மற்றுநின் றார்திரு மாலொடு
      நான்முகன் வந்தடிக்கீழ
      பற்றிநின் றார்பழ னத்தர
      சேயுன் பணியறிவான்
      உற்றுநின் றாரடி யேனை
      குறிக்கொண் டருளுவதே. 4.87.2
      835 ஆடிநின் றாயண்டம் ஏழுங்
      கடந்துபோய் மேலவையுங்
      கூடிநின் றாய்குவி மென்முலை
      யாளையுங் கொண்டுடனே
      பாடிநின் றாய்பழ னத்தர
      சேயங்கோர் பால்மதியஞ்
      சூடிநின் றாயடி யேனையஞ்
      சாமை குறிக்கொள்வதே. 4.87.3
      836 எரித்துவி டாய்அம்பி னாற்புர
      மூன்றுமுன் னேபடவும்
      உரித்துவி டாய்உமை யாள்நடு
      கெய்தவோர் குஞ்சரத்தை
      பரித்துவி டாய்பழ னத்தர
      சேகங்கை வார்சடைமேற்
      தரித்துவி டாயடி யேனை
      குறிக்கொண் டருளுவதே. 4.87.4
      837 முன்னியும் முன்னி முளைத்தன
      மூவெயி லும்முடனே
      மன்னியு மங்கும் இருந்தனை
      மாய மனத்தவர்கள்
      பன்னிய நூலின் பரிசறி
      வாய்பழ னத்தரசே
      உன்னியும் உன்னடி யேனை
      குறிக்கொண் டருளுவதே. 4.87.5
      838 ஏய்ந்தறு தாய்இன்ப னாய்இரு
      தேபடை தான்றலையை
      காய்ந்தறு தாய்கண்ணி னாலன்று
      காமனை காலனையும்
      பாய்ந்தறு தாய்பழ னத்தர
      சேயென் பழவினைநோய்
      ஆய்ந்தறு தாயடி யேனை
      குறிக்கொண் டருளுவதே. 4.87.6
      839 மற்றுவை தாயங்கோர் மாலொரு
      பாகம் மகிழ்ந்துடனே
      உற்றுவை தாய்உமை யாளொடுங்
      கூடும் பரிசெனவே
      பற்றிவை தாய்பழ னத்தர
      சேயங்கோர் பாம்பொருகை
      சுற்றிவை தாய்அடி யேனை
      குறிக்கொண் டருளுவதே. 4.87.7
      840 ஊரினின் றாய்ஒன்றி நின்றுவிண்
      டாரையும் ஒள்ளழலாற்
      போரினின் றாய்பொறை யாயுயி
      ராவி சுமந்துகொண்டு
      பாரிநின் றாய்பழ னத்தர
      சேபணி செய்பவர்க
      காரநின் றாய்அடி யேனை
      குறிக்கொண் டருளுவதே. 4.87.8
      841 போகம்வை தாய்புரி புன்சடை
      மேலோர் புனலதனை
      ஆகம்வை தாய்மலை யான்மட
      மங்கை மகிழ்ந்துடனே
      பாகம்வை தாய்பழ னத்தர
      சேயுன் பணியருளால்
      ஆகம்வை தாய்அடி யேனை
      குறிக்கொண் டருளுவதே. 4.87.9
      842 அடுத்திரு தாய்அர கன்முடி
      வாயொடு தோள்நெரி
      கெடுத்திரு தாய்கிளர தார்வலி
      யைக்கிளை யோடுடனே
      படுத்திரு தாய்பழ னத்தர
      சேபுலி யின்னுரிதோல்
      உடுத்திரு தாய்அடி யேனை
      குறிக்கொண் டருளுவதே. 4.87.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.88 திருப்பூந்துருத்தி - திருவிருத்தம்
      திருச்சிற்றம்பலம்
      843 மாலினை மாலுற நின்றான்
      மலைமகள் தன்னுடைய
      பாலனை பான்மதி சூடியை
      பண்புண ரார்மதின்மேற்
      போலனை போர்விடை யேறியை
      பூந்துரு திமகிழும்
      ஆலனை ஆதிபு ராணனை
      நானடி போற்றுவதே. 4.88.1
      844 மறியுடை யான்மழு வாளினன்
      மாமலை மங்கையோர்பால்
      குறியுடை யான்குண மொன்றறி
      தாரில்லை கூறிலவன்
      பொறியுடை வாளர வத்தவன்
      பூந்துரு தியுறையும்
      அறிவுடை ஆதி புராணனை
      நானடி போற்றுவதே. 4.88.2
      845 மறுத்தவர் மும்மதில் மாயவோர்
      வெஞ்சிலை கோத்தோரம்பால்
      அறுத்தனை ஆலதன் கீழனை
      ஆல்விட முண்டதனை
      பொறுத்தனை பூத படையனை
      பூந்துரு தியுறையும்
      நிறத்தனை நீல மிடற்றனை
      யானடி போற்றுவதே. 4.88.3
      846 உருவினை ஊழி முதல்வனை
      ஓதி நிறைந்துநின்ற
      திருவினை தேசம் படைத்தனை
      சென்றடை தேனுடைய
      பொருவினை யெல்லா துரந்தனை
      பூந்துரு தியுறையுங்
      கருவினை கண்மூன் றுடையனை
      யானடி போற்றுவதே. 4.88.4
      847 தக்கன்றன் வேள்வி தகர்த்தவன்
      சார மதுவன்றுகோள்
      மிக்கன மும்மதில் வீயவோர்
      வெஞ்சிலை கோத்தோரம்பால்
      புக்கனன் பொன்றிகழ தன்னதோர்
      பூந்துரு தியுறையும்
      நக்கனை நங்கள் பிரான்றனை
      நானடி போற்றுவதே. 4.88.5
      848 அருகடை மாலையு தானுடை
      யான்அழ காலமைந்த
      உருவுடை மங்கையு தன்னொரு
      பாலுல காயுநின்றான்
      பொருபடை வேலினன் வில்லினன்
      பூந்துரு தியுறையு
      திருவுடை தேச மதியனை
      யானடி போற்றுவதே. 4.88.6
      849 மன்றியு நின்ற மதிலரை
      மாய வகைகெடு
      கன்றியு நின்று கடுஞ்சிலை
      வாங்கி கனலம்பினாற்
      பொன்றியும் போக புரட்டினன்
      பூந்துரு தியுறையும்
      அன்றியுஞ் செய்த பிரான்றனை
      யானடி போற்றுவதே. 4.88.7
      850 மின்னிறம் மிக்க இடையுமை
      நங்கையோர் பான்மகிழ்ந்தான்
      என்னிற மென்றம ரர்பெரி
      யாரின்ன தாமறியார்
      பொன்னிற மிக்க சடையவன்
      பூந்துரு தியுறையும்
      என்னிற வெந்தை பிரான்றனை
      யானடி போற்றுவதே. 4.88.8
      851 அந்தியை நல்ல மதியினை
      யார்க்கும் அறிவரிய
      செந்தியை வாட்டுஞ்செம் பொன்னினை
      சென்றடை தேனுடைய
      புந்தியை புக்க அறிவினை
      பூந்துரு தியுறையும்
      நந்தியை நங்கள் பிரான்றனை
      நானடி போற்றுவதே. 4.88.9
      852 பைக்கையும் பாந்தி விழிக்கையும்
      பாம்பு சடையிடையே
      வைக்கையும் வானிழி கங்கையும்
      மங்கை நடுக்குறவே
      மொய்க்கை அரக்கனை யூன்றினன்
      பூந்துரு தியுறையும்
      மிக்கநல் வேத விகிர்தனை
      நானடி போற்றுவதே. 4.88.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.89 திருநெய்த்தானம் - திருவிருத்தம்
      திருச்சிற்றம்பலம்
      853 பாரிடஞ் சாடிய பல்லுயிர்
      வானம ரர்க்கருளி
      காரடை தகடல் வாயுமிழ்
      நஞ்சமு தாகவுண்டான்
      ஊரடை திவ்வுல கிற்பலி
      கொள்வது நாமறியோம்
      நீரடை தகரை நின்றநெ
      தான திருந்தவனே. 4.89.1
      854 தேய்ந்திலங் குஞ்சிறு வெண்மதி
      யாய்நின் திருச்சடைமேற்
      பாய்ந்தகங் கைப்புனற் பன்முக
      மாகி பரந்தொலிப்ப
      ஆய்ந்திலங் கும்மழு வேலுடை
      யாயடி யேற்குரைநீ
      ஏந்திள மங்கையும் நீயும்நெ
      தான திருந்ததுவே. 4.89.2
      855 கொன்றடை தாடி குமைத்திடுங்
      கூற்றமொன் னார்மதின்மேற்
      சென்றடை தாடி பொருதது
      தேசமெல் லாமறியுங்
      குன்றடை தாடுங் குளிர்பொழிற்
      காவிரி யின்கரைமேற்
      சென்றடை தார்வினை தீர்க்குநெ
      தான திருந்தவனே. 4.89.3
      856 கொட்டு முழவர வத்தொடு
      கோலம் பலஅணிந்து
      நட்டம் பலபயின் றாடுவர்
      நாகம் அரை கசைத்து
      சிட்டர் திரிபுர தீயெழ
      செற்ற சிலையுடையான்
      இட்ட முமையொடு நின்றநெ
      தான திருந்தவனே. 4.89.4
      857 கொய்மலர கொன்றை துழாய்வன்னி
      மத்தமுங் கூவிளமும்
      மெய்மலர் வேய்ந்த விரிசடை
      கற்றைவிண் ணோர்பெருமான்
      மைமலர் நீல நிறங்கருங்
      கண்ணியோர் பால்மகிழ்ந்தான்
      நின்மல னாடல் நிலயநெ
      தான திருந்தவனே. 4.89.5
      858 பூந்தார் நறுங்கொன்றை மாலையை
      வாங்கி சடைக்கணிந்து
      கூர்ந்தார் விடையினை யேறிப்பல்
      பூத படைநடுவே
      போந்தார் புறவிசை பாடவும்
      ஆடவுங் கேட்டருளி
      சேர்ந்தார் உமையவ ளோடுநெ
      தான திருந்தவனே. 4.89.6
      859 பற்றின பாம்பன் படுத்த
      புலியுரி தோலுடையன்
      முற்றின மூன்று மதில்களை
      மூட்டி யெரித்தறுத்தான்
      சுற்றிய பூத படையினன்
      சூல மழுவொருமான்
      செற்று தீவினை தீர்க்குநெ
      தான திருந்தவனே. 4.89.7
      860 விரித்த சடையினன் விண்ணவர்
      கோன்விட முண்டகண்டன்
      உரித்த கரியுரி மூடியொன்
      னார்மதில் மூன்றுடனே
      எரித்த சிலையினன் ஈடழியா
      தென்னை ஆண்டுகொண்ட
      தரித்த உமையவ ளோடுநெ
      தான திருந்தவனே. 4.89.8
      861 தூங்கான் துளங்கான் துழாய்கொன்றை
      துன்னிய செஞ்சடைமேல்
      வாங்கா மதியமும் வாளர
      வுங்கங்கை தான்புனைந்தான்
      தேங்கார் திரிபுர தீயெழ
      வெய்து தியக்கறுத்து
      நீங்கான் உமையவ ளோடுநெ
      தான திருந்தவனே. 4.89.9
      862 ஊட்டிநின் றான்பொரு வானில
      மும்மதில் தீயம்பினால்
      மாட்டிநின் றான்அன்றி னார்வெந்து
      வீழவும் வானவர்க்கு
      காட்டிநின் றான்கத மாக்கங்கை
      பாயவோர் வார்சடையை
      நீட்டிநின் றான்றிரு நின்றநெ
      தான திருந்தவனே. 4.89.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.90 திருவேதிகுடி - திருவிருத்தம்
      திருச்சிற்றம்பலம்
      863 கையது காலெரி நாகங்
      கனல்விடு சூலமது
      வெய்யது வேலைநஞ் சுண்ட
      விரிசடை விண்ணவர்கோன்
      செய்யினில் நீல மணங்கம
      ழுந்திரு வேதிகுடி
      ஐயனை ஆரா அமுதினை
      நாமடை தாடுதுமே. 4.90.1
      864 கைத்தலை மான்மறி யேந்திய
      கையன் கனல்மழுவன்
      பொய்த்தலை யேந்திநற் பூதி
      யணிந்து பலிதிரிவான்
      செய்த்தலை வாளைகள் பாய்ந்துக
      ளுந்திரு வேதிகுடி
      அத்தனை ஆரா அமுதினை
      நாமடை தாடுதுமே. 4.90.2
      865 முன்பின் முதல்வன் முனிவனெம்
      மேலை வினைகழித்தான்
      அன்பின் நிலையில் அவுணர்
      புரம்பொடி யானசெய்யுஞ்
      செம்பொனை நன்மலர் மேலவன்
      சேர்திரு வேதிகுடி
      அன்பனை நம்மை யுடையனை
      நாமடை தாடுதுமே. 4.90.3
      866 பத்தர்கள் நாளும் மறவார்
      பிறவியை யொன்றறுப்பான்
      முத்தர்கள் முன்னம் பணிசெய்து
      பாரிடம் முன்னுயர்த்தான்
      கொத்தன கொன்றை மணங்கம
      ழுந்திரு வேதிகுடி
      அத்தனை ஆரா அமுதினை
      நாமடை தாடுதுமே. 4.90.4
      867 ஆனணை தேறுங் குறிகுண
      மாரறி வாரவர்கை
      மானணை தாடு மதியும்
      புனலுஞ் சடைமுடியன்
      தேனணை தாடிய வண்டு
      பயில்திரு வேதிகுடி
      ஆனணை தாடு மழுவனை
      நாமடை தாடுதுமே. 4.90.5
      868 எண்ணும் எழுத்துங் குறியும்
      அறிபவர் தாமொழி
      பண்ணின் இசைமொழி பாடிய
      வானவர் தாம்பணிவார்
      திண்ணென் வினைகளை தீர்க்கும்
      பிரான்றிரு வேதிகுடி
      நண்ண அரிய அமுதினை
      நாமடை தாடுதுமே. 4.90.6
      869 ஊர்ந்த விடையுக தேறிய
      செல்வனை நாமறியோம்
      ஆர்ந்த மடமொழி மங்கையோர்
      பாகம் மகிழ்ந்துடையான்
      சேர்ந்த புனற்சடை செல்வ
      பிரான்றிரு வேதிகுடி
      சார்ந்த வயலணி தண்ணமு
      தையடை தாடுதுமே. 4.90.7
      870 எரியும் மழுவினன் எண்ணியும்
      மற்றொரு வன்றலையுள்
      திரியும் பலியினன் தேயமும்
      நாடுமெல் லாமுடையான்
      விரியும் பொழிலணி சேறு
      திகழ்திரு வேதிகுடி
      அரிய அமுதினை அன்பர்க
      ளோடடை தாடுதுமே. 4.90.8
      871 மையணி கண்டன் மறைவிரி
      நாவன் மதித்துகந்த
      மெய்யணி நீற்றன் விழுமிய
      வெண்மழு வாட்படையான்
      செய்ய கமல மணங்கம
      ழுந்திரு வேதிகுடி
      ஐயனை ஆரா அமுதினை
      நாமடை தாடுதுமே. 4.90.9
      872 வருத்தனை வாளர கன்முடி
      தோளொடு பத்திறுத்த
      பொருத்தனை பொய்யா அருளனை
      பூத படையுடைய
      திருத்தனை தேவர் பிரான்றிரு
      வேதி குடியுடைய
      அருத்தனை ஆரா அமுதினை
      நாமடை தாடுதுமே. 4.90.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - வேதபுரீசுவரர்
      தேவியார் - மங்கையர்க்கரசியம்மை.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.91 திருவையாறு - திருவிருத்தம்
      திருச்சிற்றம்பலம்
      873 குறுவித்த வாகுற்ற நோய்வினை
      காட்டி குறுவித்தநோய்
      உறுவித்த வாவுற்ற நோய்வினை
      தீர்ப்பான் உகந்தருளி
      அறிவித்த வாறடி யேனைஐ
      யாறன் அடிமைக்களே
      செறிவித்த வாதொண்ட னேனைத்தன்
      பொன்னடி கீழெனையே. 4.91.1
      874 கூர்வித்த வாகுற்ற நோய்வினை
      காட்டியுங் கூர்வித்தநோய்
      ஊர்வித்த வாவுற்ற நோய்வினை
      தீர்ப்பான் உகந்தருளி
      ஆர்வித்த வாறடி யேனைஐ
      யாறன் அடிமைக்களே
      சேர்வித்த வாதொண்ட னேனைத்தன்
      பொன்னடி கீழெனையே. 4.91.2
      875 தாக்கின வாசல மேவினை
      காட்டியு தண்டித்தநோய்
      நீக்கின வாநெடு நீரினின்
      றேற நினைந்தருளி
      ஆக்கின வாறடி யேனைஐ
      யாறன் அடிமைக்களே
      நோக்கின வாதொண்ட னேனைத்தன்
      பொன்னடி கீழெனையே. 4.91.3
      876 தருக்கின நான்றக வின்றியு
      மோட சலமதனால்
      நெருக்கின வாநெடு நீரினின்
      றேற நினைந்தருளி
      உருக்கின வாறடி யேனைஐ
      யாறன் அடிமைக்களே
      பெருக்கின வாதொண்ட னேனைத்தன்
      பொன்னடி கீழெனையே. 4.91.4
      877 இழிவித்த வாறிட்ட நோய்வினை
      காட்டி இடர்ப்படுத்து
      கழிவித்த வாகட்ட நோய்வினை
      தீர்ப்பான் கலந்தருளி
      அழிவித்த வாறடி யேனைஐ
      யாறன் அடிமைக்களே
      தொழுவித்த வாதொண்ட னேனைத்தன்
      பொன்னடி கீழெனையே. 4.91.5
      878 இடைவித்த வாறிட்ட நோய்வினை
      காட்டி இடர்ப்படுத்து
      உடைவித்த வாறுற்ற நோய்வினை
      தீர்ப்பான் உகந்தருளி
      அடைவித்த வாறடி யேனைஐ
      யாறன் அடிமைக்களே
      தொடர்வித்த வாதொண்ட னேனைத்தன்
      பொன்னடி கீழெனையே. 4.91.6
      879 படக்கின வாபட நின்றுபன்
      னாளும் படக்கினநோய்
      அடக்கின வாறது வன்றியு
      தீவினை பாவமெல்லாம்
      அடக்கின வாறடி யேனைஐ
      யாறன் அடிமைக்களே
      தொடக்கின வாதொண்ட னேனைத்தன்
      பொன்னடி கீழெனையே. 4.91.7
      880 மறப்பித்த வாவல்லை நோய்வினை
      காட்டி மறப்பித்தநோய்
      துறப்பித்த வாதுக்க நோய்வினை
      தீர்ப்பான் உகந்தருளி
      இறப்பித்த வாறடி யேனைஐ
      யாறன் அடிமைக்களே
      சிறப்பித்த வாதொண்ட னேனைத்தன்
      பொன்னடி கீழெனையே. 4.91.8
      881 துயக்கின வாதுக்க நோய்வினை
      காட்டி துயக்கினநோய்
      இயக்கின வாறிட்ட நோய்வினை
      தீர்ப்பான் இசைந்தருளி
      அயக்கின வாறடி யேனைஐ
      யாறன் அடிமைக்களே
      மயக்கின வாதொண்ட னேனைத்தன்
      பொன்னடி கீழெனையே. 4.91.9
      882 கறுத்துமி டார்கண்டங் கங்கை
      சடைமேற் கரந்தருளி
      இறுத்துமி டார்இலங் கைக்கிறை
      தன்னை இருபதுதோள்
      அறுத்துமி டாரடி யேனைஐ
      யாறன் அடிமைக்களே
      பொறுத்துமி டார்தொண்ட னேனைத்தன்
      பொன்னடி கீழெனையே. 4.91.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.92 திருவையாறு - திருவிருத்தம்
      திருச்சிற்றம்பலம்
      883 சிந்தி பரியன
      பவர்க்கு சிறந்துசெந்தேன்
      முந்தி பொழிவன முத்தி
      கொடுப்பன மொய்த்திருண்டு
      பந்தித்து நின்ற பழவினை
      தீர்ப்பன பாம்புசுற்றி
      அந்தி பிறையணி தாடும்ஐ
      யாறன் அடித்தலமே. 4.92.1
      884 இழித்தன ஏழேழ் பிறப்பும்
      அறுத்தன என்மனத்தே
      பொழித்தன போரெழிற் கூற்றை
      யுதைத்தன போற்றவர்க்கா
      கிழித்தன தக்கன் கிளரொளி
      வேள்வியை கீழமுன்சென்
      றழித்தன ஆறங்க மானஐ
      யாறன் அடித்தலமே. 4.92.2
      885 மணிநிற மொப்பன பொன்னிற
      மன்னின மின்னியல்வாய்
      கணிநிற மன்ன கயிலை
      பொருப்பன காதல்செ
      துணிவன சீலத்த ராகி
      தொடர்ந்து விடாததொண்டர
      கணியன சேயன தேவர்க்கை
      யாறன் அடித்தலமே. 4.92.3
      886 இருள்தரு துன படல
      மறைப்பமெய்ஞ் ஞானமென்னும்
      பொருள்தரு கண்ணிழ துண்பொருள்
      நாடி புகலிழந்த
      குருடரு தம்மை பரவ
      கொடுநர கக்குழிநின்
      றருள்தரு கைகொடு தேற்றும்ஐ
      யாறன் அடித்தலமே. 4.92.4
      887 எழுவாய் இறுவாய் இலாதன
      வெங்க பிணிதவிர்த்து
      வழுவா மருத்துவ மாவன
      மாநர கக்குழிவாய்
      விழுவார் அவர்தம்மை வீழ்ப்பன
      மீட்பன மிக்கவன்போ
      டழுவார கமுதங்கள் காண்கஐ
      யாறன் அடித்தலமே. 4.92.5
      888 துன்ப கடலிடை தோணி
      தொழில்பூண்ட தொண்டர்தம்மை
      இன்ப கரைமுக தேற்று
      திறத்தன மாற்றயலே
      பொன்ப டொழுக பொருந்தொளி
      செய்யு பொய்பொருந்தா
      அன்பர கணியன காண்கஐ
      யாறன் அடித்தலமே. 4.92.6
      889 களித்து கலந்ததோர் காதற்
      கசிவொடு காவிரிவா
      குளித்து தொழுதுமுன் நின்றவி
      பத்தரை கோதில்செந்தேன்
      தெளித்து சுவையமு தூட்டி
      யமரர்கள் சூழிருப்ப
      அளித்து பெருஞ்செல்வ மாக்கும்ஐ
      யாறன் அடித்தலமே. 4.92.7
      890 திருத்தி கருத்தினை செவ்வே
      நிறுத்தி செறுத்துடலை
      வருத்தி கடிமலர் வாளெடு
      தோச்சி மருங்குசென்று
      விருத்தி குழக்கவல் லோர்கட்கு
      விண்ப டிகையிடுமால்
      அருத்தி தருந்தவ ரேத்தும்ஐ
      யாறன் அடித்தலமே. 4.92.8
      891 பாடும் பறண்டையு மாந்தையு
      மார பரந்துபல்பே
      கூடி முழவ குவிகவிழ்
      கொட்ட குறுநரிகள்
      நீடுங் குழல்செய்ய வையம்
      நெளிய நிணப்பிணக்கா
      டாடு திருவடி காண்கஐ
      யாறன் அடித்தலமே. 4.92.9
      892 நின்போல் அமரர்கள் நீண்முடி
      சாய்த்து நிமிர்த்துகுத்த
      பைம்போ துழக்கி பவள
      தழைப்பன பாங்கறியா
      என்போ லிகள்பறி திட்ட
      இலையும் முகையுமெல்லாம்
      அம்போ தெனக்கொள்ளும் ஐயன்ஐ
      யாறன் அடித்தலமே. 4.92.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.93 திருவையாறு - திருவிருத்தம்
      திருச்சிற்றம்பலம்
      893 மலையார் மடந்தை மனத்தன
      வானோர் மகுடமன்னி
      நிலையா யிருப்பன நின்றோர்
      மதிப்பன நீணிலத்து
      புலையாடு புன்மை தவிர்ப்பன
      பொன்னுல கம்மளிக்கும்
      அலையார் புனற்பொன்னி சூழ்ந்தஐ
      யாறன் அடித்தலமே. 4.93.1
      894 பொலம்புண் டரீக புதுமலர்
      போல்வன போற்றியென்பார்
      புலம்பும் பொழுதும் புணர்துணை
      யாவன பொன்னனைய
      சிலம்புஞ் செறிபா டகமுஞ்
      செழுங்கிண் கிணித்திரளும்
      அலம்பும் திருவடி காண்கஐ
      யாறன் அடித்தலமே. 4.93.2
      895 உற்றா ரிலாதார குறுதுணை
      யாவன ஓதிநன்னூல்
      கற்றார் பரவ பெருமை
      யுடையன காதல்செய்ய
      கிற்பார் தமக்கு கிளரொளி
      வானக தான்கொடுக்கும்
      அற்றார கரும்பொருள் காண்கஐ
      யாறன் அடித்தலமே. 4.93.3
      896 வானை கடந்தண்ட தப்பால்
      மதிப்பன மந்திரிப்பார்
      ஊனை கழித்து கொண்டருள்
      செய்வன உத்தமர்க்கு
      ஞான சுடராய் நடுவே
      யுதிப்பன நங்கையஞ்ச
      ஆனை யுரித்தன காண்கஐ
      யாறன் அடித்தலமே. 4.93.4
      897 மாதர மானில மாவன
      வானவர் மாமுகட்டின்
      மீதன மென்கழல் வெங்கச்சு
      வீக்கின வெந்நமனார்
      தூதரை யோட துரப்பன
      துன்பற தொண்டுபட்டார
      காதர மாவன காண்கஐ
      யாறன் அடித்தலமே. 4.93.5
      898 பேணி தொழுமவர் பொன்னுல
      காள பிறங்கருளால்
      ஏணி படிநெறி யிட்டு
      கொடுத்திமை யோர்முடிமேல்
      மாணிக்க மொத்து மரகதம்
      போன்று வயிரமன்னி
      ஆணி கனகமு மொக்கும்ஐ
      யாறன் அடித்தலமே. 4.93.6
      899 ஓதிய ஞானமும் ஞான
      பொருளும் ஒலிசிறந்த
      வேதியர் வேதமும் வேள்வியு
      மாவன விண்ணுமண்ணுஞ்
      சோதியுஞ் செஞ்சுடர் ஞாயிறு
      மொப்பன தூமதியோ
      டாதியும் அந்தமு மானஐ
      யாறன் அடித்தலமே. 4.93.7
      900 சுணங்கு முகத்து துணைமுலை
      பாவை சுரும்பொடுவண்
      டணங்குங் குழலி யணியார்
      வளைக்கரங் கூப்பிநின்று
      வணங்கும் பொழுதும் வருடும்
      பொழுதும்வண் காந்தளொண்போ
      தணங்கும் அரவிந்த மொக்கும்ஐ
      யாறன் அடித்தலமே. 4.93.8
      901 சுழலார் துயர்வெயிற் சுட்டிடும்
      போதடி தொண்டர்துன்னும்
      நிழலா வனவென்று நீங்கா
      பிறவி நிலைகெடுத்து
      கழலா வினைகள் கழற்றுவ
      கால வனங்கடந்த
      அழலார் ஒளியன காண்கஐ
      யாறன் அடித்தலமே. 4.93.9
      902 வலியான் றலைபத்தும் வாய்வி
      டலற வரையடர்த்து
      மெலியா வலியுடை கூற்றை
      யுதைத்துவிண் ணோர்கள்முன்னே
      பலிசேர் படுகடை பார்த்துப்பன்
      னாளும் பலர்இகழ
      அலியா நிலைநிற்கும் ஐயன்ஐ
      யாறன் அடித்தலமே. 4.93.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.94 திருக்கண்டியூர் - திருவிருத்தம்
      திருச்சிற்றம்பலம்
      903 வானவர் தானவர் வைகல்
      மலர்கொணர திட்டிறைஞ்சி
      தானவர் மால்பிர மன்னறி
      யாத தகைமையினான்
      ஆனவ னாதிபு ராணனன்
      றோடிய பன்றியெய்த
      கானவ னைக்கண்டி யூரண்ட
      வாணர் தொழுகின்றதே. 4.94.1
      904 வான மதியமும் வாளர
      வும்புன லோடுசடை
      தான மதுவென வைத்துழல்
      வான்றழல் போலுருவன்
      கான மறியொன்று கையுடை
      யான்கண்டி யூரிருந்த
      ஊனமில் வேத முடையானை
      நாமடி யுள்குவதே. 4.94.2
      905 பண்டங் கறுத்ததோர் கையுடை
      யான்படை தான்றலையை
      உண்டங் கறுத்ததும் ஊரொடு
      நாடவை தானறியுங்
      கண்டங் கறுத்த மிடறுடை
      யான்கண்டி யூரிருந்த
      தொண்டர் பிரானைக்கண் டீரண்ட
      வாணர் தொழுகின்றதே. 4.94.3
      906 முடியின்முற் றாததொன் றில்லையெல்
      லாமுடன் தானுடையான்
      கொடியுமுற் றவ்விடை யேறியோர்
      கூற்றொரு பாலுடையான்
      கடியமுற் றவ்வினை நோய்களை
      வான்கண்டி யூரிருந்தான்
      அடியுமுற் றார்தொண்டர் இல்லைகண்
      டீரண்ட வானவரே. 4.94.4
      907 பற்றியோ ரானை யுரித்த
      பிரான்பவ ளத்திரள்போல்
      முற்றும் அணிந்ததோர் நீறுடை
      யான்முன்ன மேகொடுத்த
      கற்றங் குடையவன் றானறி
      யான்கண்டி யூரிருந்த
      குற்றமில் வேத முடையானை
      யாமண்டர் கூறுவதே. 4.94.5
      908 போர்ப்பனை யானை யுரித்த
      பிரான்பொறி வாயரவஞ்
      சேர்ப்பது வான திரைகடல்
      சூழுல கம்மிதனை
      காப்பது காரண மாகக்கொண்
      டான்கண்டி யூரிருந்த
      கூர்ப்புடை ஒள்வாள் மழுவனை
      யாமண்டர் கூறுவதே. 4.94.6
      909 அட்டது காலனை ஆய்ந்தது
      வேதமா றங்கமன்று
      சுட்டது காமனை கண்ணத
      னாலே தொடர்ந்தெரி
      கட்டவை மூன்று மெரித்த
      பிரான்கண்டி யூரிருந்த
      குட்டமுன் வேத படையனை
      யாமண்டர் கூறுவதே. 4.94.7
      910 அட்டும் ஒலிநீர் அணிமதி
      யும்மல ரானவெல்லாம்
      இட்டு பொதியுஞ் சடைமுடி
      யான்இண்டை மாலையங்கை
      கட்டும் அரவது தானுடை
      யான்கண்டி யூரிருந்த
      கொட்டும் பறையுடை கூத்தனை
      யாமண்டர் கூறுவதே. 4.94.8
      911 மாய்ந்தன தீவினை மங்கின
      நோய்கள் மறுகிவிழ
      தேய்ந்தன பாவஞ் செறுக்ககில்
      லாநம்மை செற்றநங்கை
      காய்ந்த பிரான்கண்டி யூரெம்
      பிரான்அங்க மாறினையும்
      ஆய்ந்த பிரானல்ல னோவடி
      யேனையா கொண்டவனே. 4.94.9
      912 மண்டி மலையை யெடுத்து
      தாக்கியவ் வாசுகியை
      தண்டி அமரர் கடைந்த
      கடல்விடங் கண்டருளி
      உண்ட பிரான்நஞ் சொளித்தபி
      ரான்அஞ்சி யோடிநண்ண
      கண்ட பிரானல்ல னோகண்டி
      யூரண்ட வானவனே. 4.94.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - வீரட்டேசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.95 திருப்பாதிரிப்புலியூர் - திருவிருத்தம்
      திருச்சிற்றம்பலம்
      913 ஈன்றாளு மாயென கெந்தையு
      மாயுடன் தோன்றினராய்
      மூன்றா யுலகம் படைத்துக
      தான்மன துள்ளிருக்க
      ஏன்றான் இமையவர கன்பன்
      திருப்பா திரிப்புலியூர
      தோன்றா துணையா யிருந்தனன்
      றன்னடி யோங்களுக்கே. 4.95.1
      914 பற்றாய் நினைந்திட போதுநெஞ்
      சேயிந்த பாரைமுற்றுஞ்
      சுற்றாய் அலைகடல் மூடினுங்
      கண்டேன் புகல்நமக்கு
      உற்றான் உமையவ கன்பன்
      திருப்பா திரிப்புலியூர்
      முற்றா முளைமதி கண்ணியி
      னான்றன மொய்கழலே. 4.95.2
      915 விடையான் விரும்பியென் னுள்ள
      திருந்தான் இனிநமக்கிங்
      கடையா அவலம் அருவினை
      சாரா நமனையஞ்சோம்
      புடையார் கமல தயன்போல்
      பவர்பா திரிப்புலியூர்
      உடையான் அடியார் அடியடி
      யோங்க கரியதுண்டே. 4.95.3
      916 மாயமெல் லாமுற்ற விட்டிருள்
      நீங்க மலைமகட்கே
      நேயம் நிலாவ இருந்தா
      னவன்றன் திருவடிக்கே
      தேயமெல் லாநின் றிறைஞ்சு
      திருப்பா திரிப்புலியூர்
      மேயநல் லான்மலர பாதமென்
      சிந்தையுள் நின்றனவே. 4.95.4
      917 வைத்த பொருள்ந காமென்று
      சொல்லி மனத்தடைத்து
      சித்த மொருக்கி சிவாய
      நமவென் றிருக்கினல்லால்
      மொய்த்த கதிர்மதி போல்வா
      ரவர்பா திரிப்புலியூர்
      அத்தன் அருள்பெற லாமோ
      அறிவிலா பேதைநெஞ்சே. 4.95.5
      918 கருவா கிடந்துன் கழலே
      நினையுங் கருத்துடையேன்
      உருவா தெரிந்துன்றன் நாமம்
      பயின்றேன் உனதருளாற்
      திருவாய் பொலி சிவாய
      நமவென்று நீறணிந்தேன்
      தருவாய் சிவகதி நீபா
      திரிப்புலி யூரரனே. 4.95.6
      919 எண்ணா தமரர் இரக்க
      பரவையுள் நஞ்சமுண்டாய்
      திண்ணார் அசுரர் திரிபுர
      தீயெழ செற்றவனே
      பண்ணார தமைந்த பொருள்கள்
      பயில்பா திரிப்புலியூர
      கண்ணார் நுதலாய் கழல்நங்
      கருத்தில் உடையனவே. 4.957
      920 புழுவா பிறக்கினும் புண்ணியா
      வுன்னடி யென்மனத்தே
      வழுவா திருக்க வரந்தர
      வேண்டுமிவ் வையகத்தே
      தொழுவார கிரங்கி யிருந்தருள்
      செய்பா திரிப்புலியூர
      செழுநீர புனற்கங்கை செஞ்சடை
      மேல்வைத்த தீவண்ணனே. 4.95.8
      921 மண்பா தலம்புக்கு மால்கடல்
      மூடிமற் றேழுலகும்
      விண்பால் திசைகெ டிருசுடர்
      வீழினும் அஞ்சல்நெஞ்சே
      திண்பால் நமக்கொன்று கண்டோ
      திருப்பா திரிப்புலியூர
      கண்பாவு நெற்றி கடவு
      சுடரான் கழலிணையே. 4.95.9
      922 திருந்தா அமணர்த தீநெறி
      பட்டு திகைத்துமுத்தி
      தருந்தா ளிணைக்கே சரணம்
      புகுந்தேன் வரையெடுத்த
      பொருந்தா அரக்கன் உடல்நெரி
      தாய்பா திரிப்புலியூர்
      இருந்தாய் அடியேன் இனிப்பிற
      வாமல்வ தேன்றுகொள்ளே. 4.95.10
      இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - தோன்றாத்துணையீசுவரர்
      தேவியார் - தோகையம்பிகையம்மை.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.96 திருவீழிமிழலை - திருவிருத்தம்
      திருச்சிற்றம்பலம்
      923 வான்சொட்ட சொட்டநின் றட்டும்
      வளர்மதி யோடயலே
      தேன்சொட்ட சொட்டநின் றட்டு
      திருக்கொன்றை சென்னிவைத்தீர்
      மான்பெட்டை நோக்கி மணாளீர்
      மணிநீர் மிழலையுள்ளீர்
      நான்சட்ட வும்மை மறக்கினும்
      என்னை குறிக்கொண்மினே. 4.96.1
      924 அந்தமும் ஆதியு மாகிநின்
      றீரண்டம் எண்டிசையும்
      பந்தமும் வீடும் பரப்புகின்
      றீர்பசு வேற்றுகந்தீர்
      வெந்தழல் ஓம்பு மிழலையுள்
      ளீரென்னை தென்றிசைக்கே
      உந்திடும் போது மறக்கினும்
      என்னை குறிக்கொண்மினே. 4.96.2
      925 அலைக்கின்ற நீர்நிலங் காற்றனல்
      அம்பர மாகிநின்றீர்
      கலைக்கன்று சேருங் கரத்தீர்
      கலைப்பொரு ளாகிநின்றீர்
      விலக்கின்றி நல்கும் மிழலையுள்
      ளீர்மெய்யிற் கையொடுகால்
      குலைக்கின்று நும்மை மறக்கினும்
      என்னை குறிக்கொண்மினே. 4.96.3
      926 தீத்தொழி லான்றலை தீயிலி
      டுச்செய்த வேள்விசெற்றீர்
      பேய்த்தொழி லாட்டியை பெற்றுடை
      யீர்பிடி துத்திரியும்
      வேய்த்தொழி லாளர் மிழலையுள்
      ளீர்விக்கி அஞ்செழுத்தும்
      ஓத்தொழி தும்மை மறக்கினும்
      என்னை குறிக்கொண்மினே. 4.96.4
      927 தோட்பட்ட நாகமுஞ் சூலமுஞ்
      சுத்தியும் பத்திமையான்
      மேற்பட்ட அந்தணர் வீழியும்
      என்னையும் வேறுடையீர்
      நாட்பட்டு வந்து பிறந்தேன்
      இறக்க நமன்தமர்தம்
      கோட்பட்டு நும்மை மறக்கினும்
      என்னை குறிக்கொண்மினே. 4.96.5
      928 கண்டியிற் பட்ட கழுத்துடை
      யீர்கரி காட்டிலிட்ட
      பண்டியிற் பட்ட பரிகல
      தீர்பதி வீழிகொண்டீர்
      உண்டியிற் பட்டினி நோயில்
      உறக்கத்தில் உம்மையைவர்
      கொண்டியிற் பட்டு மறக்கினும்
      என்னை குறிக்கொண்மினே. 4.96.6
      929 தோற்றங்கண் டான்சிர மொன்றுகொண்
      டீர்தூய வெள்ளெருதொன்
      றேற்றங்கொண் டீரெழில் வீழி
      மிழலை இருக்கைகொண்டீர்
      சீற்றங்கொண் டென்மேல் சிவந்ததோர்
      பாசத்தால் வீசியவெங்
      கூற்றங்கண் டும்மை மறக்கினும்
      என்னை குறிக்கொண்மினே. 4.96.7
      930 சுழிப்பட்ட கங்கையு திங்களுஞ்
      சூடிச்சொ கம்பயின்றீர்
      பழிப்பட்ட பாம்பரை பற்றுடை
      யீர்படர் தீப்பருக
      விழிப்பட்ட காமனை வீட்டீர்
      மிழலையுள் ளீர்பிறவி
      சுழிப்பட்டு நும்மை மறக்கினும்
      என்னை குறிக்கொண்மினே. 4.96.8
      931 பிள்ளையிற் பட்ட பிறைமுடி
      யீர்மறை யோதவல்லீர்
      வெள்ளையிற் பட்டதோர் நீற்றீர்
      விரிநீர் மிழலையுள்ளீர்
      நள்ளையிற் பட்டைவர் நக்கரை
      பிக்க நமன்தமர்தங்
      கொள்ளையிற் பட்டு மறக்கினும்
      என்னை குறிக்கொண்மினே. 4.96.9
      932 கறுக்கொண் டரக்கன் கயிலையை
      பற்றிய கையுமெய்யும்
      நெறுக்கென் றிறச்செற்ற சேவடி
      யாற்கூற்றை நீறுசெய்தீர்
      வெறிக்கொன்றை மாலை முடியீர்
      விரிநீர் மிழலையுள்ளீர்
      இறக்கின்று நும்மை மறக்கினும்
      என்னை குறிக்கொண்மினே. 4.96.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - வீழியழகர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.97 திருச்சத்திமுற்றம் - திருவிருத்தம்
      திருச்சிற்றம்பலம்
      933 கோவாய் முடுகி யடுதிறற்
      கூற்றங் குமைப்பதன்முன்
      பூவா ரடிச்சுவ டென்மேற்
      பொறித்துவை போகவிடின்
      மூவா முழுப்பழி மூடுங்கண்
      டாய்முழங் குந்தழற்கை
      தேவா திருச்சத்தி முற்ற
      துறையுஞ் சிவக்கொழுந்தே. 4.97.1
      934 காய்ந்தாய் அனங்கன் உடலம்
      பொடிபட காலனைமுன்
      பாய்ந்தாய் உயிர்செக பாதம்
      பணிவார்தம் பல்பிறவி
      ஆய்ந்தா தறுப்பாய் அடியேற்
      கருளாயுன் அன்பர்சிந்தை
      சேர்ந்தாய் திருச்சத்தி முற்ற
      துறையுஞ் சிவக்கொழுந்தே. 4.97.2
      935 பொத்தார் குரம்பை புகுந்தைவர்
      நாளும் புகலழிப்ப
      மத்தார் தயிர்போல் மறுகுமென்
      சிந்தை மறுக்கொழிவி
      அத்தா அடியேன் அடைக்கலங்
      கண்டாய் அமரர்கள்தஞ்
      சித்தா திருச்சத்தி முற்ற
      துறையுஞ் சிவக்கொழுந்தே. 4.97.3
      936 நில்லா குரம்பை நிலையா
      கருதியி நீணிலத்தொன்
      றல்லா குழிவீழ தயர்வுறு
      வேனைவ தாண்டுகொண்டாய்
      வில்லேர் புருவ துமையாள்
      கணவா விடிற்கெடுவேன்
      செல்வா திருச்சத்தி முற்ற
      துறையுஞ் சிவக்கொழுந்தே. 4.97.4
      937 கருவுற் றிருந்துன் கழலே
      நினைந்தேன் கருப்புவியிற்
      தெருவிற் புகுந்தேன் திகைத்தடி
      யேனை திகைப்பொழிவி
      உருவிற் றிகழும் உமையாள்
      கணவா விடிற்கெடுவேன்
      திருவிற் பொலிசத்தி முற்ற
      துறையுஞ் சிவக்கொழுந்தே. 4.97.5
      938 வெம்மை நமன்தமர் மிக்கு
      விரவி விழுப்பதன்முன்
      இம்மையுன் தாளென்றன் நெஞ்ச
      தெழுதிவை ஈங்கிகழில்
      அம்மை அடியேற் கருளுதி
      யென்பதிங் காரறிவார்
      செம்மை தருசத்தி முற்ற
      துறையுஞ் சிவக்கொழுந்தே. 4.97.6
      939 விட்டார் புரங்கள் ஒருநொடி
      வேவவோர் வெங்கணையாற்
      சுட்டாயென் பாச தொடர்பறு
      தாண்டுகொள் தும்பிபம்பும்
      மட்டார் குழலி மலைமகள்
      பூசை மகிழ்ந்தருளுஞ்
      சிட்டா திருச்சத்தி முற்ற
      துறையுஞ் சிவக்கொழுந்தே. 4.97.7
      940 இகழ்ந்தவன் வேள்வி அழித்தி
      டிமையோர் பொறையிரப்ப
      நிகழ்ந்திட அன்றே விசயமுங்
      கொண்டது நீலகண்டா
      புகழ்ந்த அடியேன்றன் புன்மைகள்
      தீர புரிந்துநல்காய்
      திகழ்ந்த திருச்சத்தி முற்ற
      துறையுஞ் சிவக்கொழுந்தே. 4.97.8
      941 தக்கார்வ மெய்தி சமண்தவிர
      துன்றன் சரண்புகுந்தேன்
      எக்காதல் எப்பயன் உன்றிற
      மல்லால் எனக்குளதே
      மிக்கார் திலையுள் விருப்பா
      மிகவட மேருவென்னு
      திக்கா திருச்சத்தி முற்ற
      துறையுஞ் சிவக்கொழுந்தே. 4.97.9
      942 பொறித்தேர் அரக்கன் பொருப்பெடு
      புற்றவன் பொன்முடிதோள்
      இறத்தாள் ஒருவிரல் ஊன்றி
      டலற இரங்கிஒள்வாள்
      குறித்தே கொடுத்தாய் கொடியேன்செய்
      குற்ற கொடுவினைநோய்
      செறுத்தாய் திருச்சத்தி முற்ற
      துறையுஞ் சிவக்கொழுந்தே. 4.97.10
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - சிவக்கொழுந்தீசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.98 திருநல்லூர் - திருவிருத்தம்
      திருச்சிற்றம்பலம்
      943 அட்டுமின் இல்பலி யென்றென்
      றகங்கடை தோறும்வந்து
      மட்டவி ழுங்குழ லார்வளை
      கொள்ளும் வகையென்கொலோ
      கொட்டிய பாணி யெடுத்திட்ட
      பாதமுங் கோளரவும்
      நட்டநின் றாடிய நாதர்நல்
      லூரிடங் கொண்டவரே. 4.98.1
      944 பெண்ணிட்டம் பண்டைய தன்றிவை
      பெய்பலி கென்றுழல்வார்
      நண்ணிட்டு வந்து மனைபுகு
      தாரும்நல் லூரகத்தே
      பண்ணிட்ட பாடலர் ஆடல
      ராய்ப்பற்றி நோக்கிநின்று
      கண்ணிட்டு போயிற்று காரண
      முண்டு கறைக்கண்டரே. 4.98.2
      945 படவேர் அரவல்ன்ற் பாவைநல்
      லீர்பக லேயொருவர்
      இடுவார் இடைப்பலி கொள்பவர்
      போலவ தில்புகுந்து
      நடவார் அடிகள் நடம்பயின்
      றாடிய கூத்தர்கொலோ
      வடபாற் கயிலையு தென்பால்நல்
      லூருந்தம் வாழ்பதியே. 4.98.3
      946 செஞ்சுடர சோதி பவள
      திரள்திகழ் முத்தனைய
      நஞ்சணி கண்டன்நல் லூருறை
      நம்பனை நானொருகாற்
      துஞ்சிடை கண்டு கனவின்
      றலைத்தொழு தேற்கவன்றான்
      நெஞ்சிடை நின்றக லான்பல
      காலமும் நின்றனனே. 4.98.4
      947 வெண்மதி சூடி விளங்கநின்
      றானைவிண் ணோர்கள்தொழ
      நண்ணில யத்தொடு பாட
      லறாதநல் லூரகத்தே
      திண்ணிலை யங்கொடு நின்றான்
      திரிபுர மூன்றெரித்தான்
      கண்ணுளும் நெஞ்ச தகத்தும்
      உளகழற் சேவடியே. 4.98.5
      948 தேற்ற படத்திரு நல்லூ
      ரகத்தே சிவனிருந்தாற்
      தோற்ற படச்சென்று கண்டுகொள்
      ளார்தொண்டர் துன்மதியால்
      ஆற்றிற் கெடுத்து குளத்தினிற்
      றேடிய ஆதரைப்போற்
      காற்றிற் கெடுத்துல கெல்லா
      திரிதர்வர் காண்பதற்கே. 4.98.6
      949 நாட்கொண்ட தாமரை பூத்தடஞ்
      சூழ்ந்த நல்லூரகத்தே
      கீட்கொண்ட கோவணங் காவென்று
      சொல்லி கிறிபடத்தான்
      வாட்கொண்ட நோக்கி மனைவியொ
      டுமங்கோர் வாணிகனை
      ஆட்கொண்ட வார்த்தை யுரைக்குமன்
      றோவிவ் வகலிடமே. 4.98.7
      950 அறைமல்கு பைங்கழ லார்ப்பநின்
      றானணி யார்சடைமேல்
      நறைமல்கு கொன்றை தாருடை
      யானும்நல் லூரகத்தே
      பறைமல்கு பாடலன் ஆடல
      னாகி பரிசழித்தான்
      பிறைமல்கு செஞ்சடை தாழநின்
      றாடிய பிஞ்ஞகனே. 4.98.8
      951 மன்னிய மாமறை யோர்மகிழ
      தேத்த மருவியெங்கு
      துன்னிய தொண்டர்கள் இன்னிசை
      பாடி தொழுதுநல்லூர
      கன்னியர் தாமுங் கனவிடை
      யுன்னிய காதலரை
      அன்னியர் அற்றவர் அங்கண
      னேயருள் நல்கென்பரே. 4.98.9
      952 திருவமர் தாமரை சீர்வளர்
      செங்கழு நீர்கொள்நெய்தல்
      குருவமர் கோங்கங் குராமகிழ்
      சண்பகங் கொன்றைவன்னி
      மருவமர் நீள்கொடி மாட
      மலிமறை யோர்கள்நல்லூர்
      உருவமர் பாக துமையவள்
      பாகனை உள்குதுமே. 4.98.10
      953 செல்லேர் கொடியன் சிவன்பெருங்
      கோயில் சிவபுரமும்
      வல்லேன் புகவும் மதில்சூழ்
      இலங்கையர் காவலனை
      கல்லார் முடியொடு தோளிற
      செற்ற கழலடியான்
      நல்லூ ரிருந்த பிரான்அல்ல
      னோநம்மை ஆள்பவனே. 4.98.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.99 திருவையாறு - திருவிருத்தம்
      திருச்சிற்றம்பலம்
      954 அந்திவ டத்திங்க கண்ணியன்
      ஐயா றமர்ந்துவந்தென்
      புந்திவ டத்திடை புக்குநின்
      றானையும் பொய்யென்பனோ
      சிந்திவ டச்சடை கற்றை
      யலம்ப சிறிதலர்ந்த
      நந்திவ டத்தொடு கொன்றை
      வளாவிய நம்பனையே. 4.99.1
      955 பாட கால்கழற் கால்பரி
      திக்கதி ருக்கவந்தி
      நாட கால்நங்கை முன்செங்கண்
      ஏனத்தின் பின்னடந்த
      காட கால்கணங் கைதொழுங்
      காலெங்க ணாய்நின்றகால்
      ஆட காலரி மான்றேர்
      வலவன்ஐ யாற்றனவே. 4.99.2
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.100 திருவேகம்பம் - திருவிருத்தம்
      திருச்சிற்றம்பலம்
      956 ஓதுவி தாய்முன் அறவுரை
      காட்டி அமணரொடே
      காதுவி தாய்கட்ட நோய்பிணி
      தீர்த்தாய் கலந்தருளி
      போதுவி தாய்நின் பணிபிழை
      கிற்புளி யம்வளாரால்
      மோதுவி பாய்உக பாய்முனி
      வாய்கச்சி யேகம்பனே. 4.100.1
      957 எத்தைக்கொண் டெத்தகை ஏழை
      அமணொ டிசைவித்தெனை
      கொத்தைக்கு மூங்கர் வழிகாட்டு
      வித்தென்னை கோகுசெய்தாய்
      முத்தின் திரளும் பளிங்கினிற்
      சோதியும் மொய்பவள
      தொத்தினை யேய்க்கும் படியாய்
      பொழிற்கச்சி யேகம்பனே. 4.100.2
      958 மெய்யம்பு கோத்த விசயனோ
      டன்றொரு வேடுவனா
      பொய்யம்பெய் தாவ மருளிச்செய்
      தாய்புர மூன்றெரி
      கையம்பெய் தாய்நுன் கழலடி
      போற்றா கயவர்நெஞ்சிற்
      குய்யம்பெய் தாய்கொடி மாமதில்
      சூழ்கச்சி யேகம்பனே. 4.100.3
      959 குறிக்கொண் டிருந்துசெ தாமரை
      ஆயிரம் வைகல்வைகல்
      நெறிப்பட இண்டை புனைகின்ற
      மாலை நிறையழிப்பான்
      கறைக்கண்ட நீயொரு பூக்குறை
      வித்துக்கண் சூல்விப்பதே
      பிறைத்துண்ட வார்சடை யாய்பெருங்
      காஞ்சியெம் பிஞ்ஞகனே. 4.100.4
      960 உரைக்குங் கழிந்திங் குணர்வரி
      யான்உள்கு வார்வினையை
      கரைக்கு மெனக்கை தொழுவதல்
      லாற்கதி ரோர்களெல்லாம்
      விரைக்கொண் மலரவன் மால்எண்
      வசுக்கள்ஏ காதசர்கள்
      இரைக்கும் அமிர்தர கறியவொண்
      ணானெங்கள் ஏகம்பனே. 4.100.5
      961 கருவுற்ற நாள்முத லாகவுன்
      பாதமே காண்பதற்கு
      உருகிற்றென் னுள்ளமும் நானுங்
      கிடந்தல தெய்த்தொழிந்தேன்
      திருவொற்றி யூரா திருவால
      வாயா திருவாரூரா
      ஒருபற் றிலாமையுங் கண்டிரங்
      காய்கச்சி யேகம்பனே. 4.100.6
      962 அரிஅயன் இந்திரன் சந்திரா
      தித்தர் அமரரெல்லாம்
      உரியநின் கொற்ற கடைத்தலை
      யார்உணங் காக்கிடந்தார்
      புரிதரு புன்சடை போக
      முனிவர் புலம்புகின்றார்
      எரிதரு செஞ்சடை ஏகம்ப
      என்னோ திருக்குறிப்பே. 4.100.7
      963 பாம்பரை சேர்த்தி படருஞ்
      சடைமுடி பால்வண்ணனே
      கூம்பலை செய்த கரதல
      தன்பர்கள் கூடிப்பன்னாள்
      சாம்பலை பூசி தரையிற்
      புரண்டுநின் றாள்சரணென்
      றேம்பலி பார்க கிரங்குகண்
      டாய்கச்சி யேகம்பனே. 4.100.8
      964 ஏன்றுகொண் டாயென்னை எம்பெரு
      மானினி யல்லமென்னிற்
      சான்றுகண் டாய்இவ் வுலகமெல்
      லாந்தனி யேனென்றென்னை
      ஊன்றிநின் றாரைவர கொற்றிவை
      தாய்பின்னை ஒற்றியெல்லாஞ்
      சோன்றுகொண் டாய்கச்சி யேகம்ப
      மேய சுடர்வண்ணனே. 4.100.9
      965 உந்திநின் றாருன்றன் ஓலக்க
      சூளைகள் வாய்தல்பற்றி
      துன்றிநின் றார்தொல்லை வானவ
      ரீட்டம் பணியறிவான்
      வந்துநின் றாரய னுந்திரு
      மாலும் மதிற்கச்சியாய்
      இந்தநின் றோமினி எங்ஙன
      மோவ திறைஞ்சுவதே. 4.100.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.101 திருவின்னம்பர் - திருவிருத்தம்
      திருச்சிற்றம்பலம்
      966 மன்னு மலைமகள் கையால்
      வருடின மாமறைகள்
      சொன்ன துறைதொறு தூப்பொரு
      ளாயின தூக்கமல
      தன்ன வடிவின அன்புடை
      தொண்டர கமுதருத்தி
      இன்னல் களைவன இன்னம்ப
      ரான்றன் இணையடியே. 4.101.1
      967 பைதற் பிணக்குழை காளிவெங்
      கோபம்பங் கப்படுப்பான்
      செய்தற் கரிய திருநடஞ்
      செய்தன சீர்மறையோன்
      உய்தற் பொருட்டுவெங் கூற்றை
      யுதைத்தன உம்பர்க்கெல்லாம்
      எய்தற் கரியன இன்னம்ப
      ரான்றன் இணையடியே. 4.101.2
      968 சுணங்குநின் றார்கொங்கை யாள்உமை
      சூடின தூமலரால்
      வணங்கிநின் றும்பர்கள் வாழ்த்தின
      மன்னு மறைகள்தம்மிற்
      பிணங்கிநின் றின்னன வென்றறி
      யாதன பேய்க்கணத்தோ
      டிணங்கிநின் றாடின இன்னம்ப
      ரான்றன் இணையடியே. 4.101.3
      969 ஆறொன் றியசம யங்களின்
      அவ்வவர கப்பொருள்கள்
      வேறொன் றிலாதன விண்ணோர்
      மதிப்பன மிக்குவமன்
      மாறொன் றிலாதன மண்ணொடு
      விண்ணகம் மாய்ந்திடினும்
      ஈறொன் றிலாதன இன்னம்ப
      ரான்றன் இணையடியே. 4.101.4
      970 அரக்கர்தம் முப்புரம் அம்பொன்றி
      னாலட லங்கியின்வா
      கரக்கமுன் வைதிக தேர்மிசை
      நின்றன கட்டுருவம்
      பரக்கவெங் கானிடை வேடுரு
      வாயின பல்பதிதோ
      றிரக்க நடந்தன இன்னம்ப
      ரான்றன் இணையடியே. 4.101.5
      971 கீண்டுங் கிளர்ந்தும்பொற் கேழல்முன்
      தேடின கேடுபடா
      ஆண்டும் பலபல வூழியு
      மாயின ஆரணத்தின்
      வேண்டும் பொருள்கள் விளங்கநின்
      றாடின மேவுசிலம்
      பீண்டும் கழலின இன்னம்ப
      ரான்றன் இணையடியே. 4.101.6
      972 போற்று தகையன பொல்லா
      முயலகன் கோபப்புன்மை
      ஆற்று தகையன ஆறு
      ச தவரவரை
      தேற்று தகையன தேறிய
      தொண்டரை செந்நெறிக்கே
      ஏற்று தகையன இன்னம்ப
      ரான்றன் இணையடியே. 4.101.7
      973 பயம்புன்மை சேர்தரு பாவ
      தவிர்ப்பன பார்ப்பதிதன்
      குயம்பொன்மை மாமல ரா
      குலாவின கூடவொண்ணா
      சயம்புவென் றேதகு தாணுவென்
      றேசதுர் வேதங்கள்நின்
      றியம்புங் கழலின இன்னம்ப
      ரான்றன் இணையடியே. 4.101.8
      974 அயன்நெடு மால்இ திரன்சந்தி
      ராதித்தர் அமரரெல்லாஞ்
      சயசய என்றுமு போதும்
      பணிவன தண்கடல்சூழ்
      வியனில முற்றுக்கும் விண்ணுக்கும்
      நாகர் வியன்நகர்க்கும்
      இயபர மாவன இன்னம்ப
      ரான்றன் இணையடியே. 4.101.9
      975 தருக்கிய தக்கன்றன் வேள்வி
      தகர்த்தன தாமரைப்போ
      துருக்கிய செம்பொன் உவமன்
      இலாதன வொண்கயிலை
      நெருக்கிய வாளர கன்றலை
      பத்தும் நெரித்தவன்றன்
      இருக்கியல் பாயின இன்னம்ப
      ரான்றன் இணையடியே. 4.101.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.102 திருவாரூர் - திருவிருத்தம்
      திருச்சிற்றம்பலம்
      976 குலம்பலம் பாவரு குண்டர்முன்
      னேந குண்டுகொலோ
      அலம்பலம் பாவரு தண்புனல்
      ஆரூர் அவிர்சடையான்
      சிலம்பலம் பாவரு சேவடி
      யான்றிரு மூலத்தானம்
      புலம்பலம் பாவரு தொண்டர்க்கு
      தொண்டராம் புண்ணியமே. 4.102.1
      977 மற்றிட மின்றி மனைதுற
      தல்லுணா வல்லமணர்
      சொற்றிட மென்று துரிசுப
      டேனுக்கு முண்டுகொலோ
      விற்றிடம் வாங்கி விசயனோ
      டன்றொரு வேடுவனா
      புற்றிடங் கொண்டான்றன் தொண்டர்க்கு
      தொண்டராம் புண்ணியமே. 4.102.2
      978 ஒருவடி வின்றிநின் றுண்குண்டர்
      முன்ன குண்டுகொலோ
      செருவடி வெஞ்சிலை யாற்புரம்
      அட்டவன் சென்றடையா
      திருவுடை யான்றிரு வாரூர
      திருமூல தானன்செங்க
      பொருவிடை யானடி தொண்டர்க்கு
      தொண்டராம் புண்ணியமே. 4.102.3
      979 மாசினை யேறிய மேனியர்
      வன்கண்ணர் மொண்ணரைவி
      டீசனை யேநினை தேசறு
      வேனுக்கும் உண்டுகொலோ
      தேசனை ஆரூர திருமூல
      தானனை சிந்தைசெய்து
      பூசனை பூசரர் தொண்டர்க்கு
      தொண்டராம் புண்ணியமே. 4.102.4
      980 அருந்தும் பொழுதுரை யாடா
      அமணர் திறமகன்று
      வருந்தி நினைந்தர னேயென்று
      வாழ்த்துவேற் குண்டுகொலோ
      திருந்திய மாமதில் ஆரூர
      திருமூல தானனுக்கு
      பொருந்து தவமுடை தொண்டர்க்கு
      தொண்டராம் புண்ணியமே. 4.102.5
      981 வீங்கிய தோள்களு தாள்களு
      மாய்நின்று வெற்றரையே
      மூங்கைகள் போலுண்ணு மூடர்முன்
      னேந குண்டுகொலோ
      தேங்கமழ் சோலைத்தென் னாரூர
      திருமூல தானன்செய்ய
      பூங்கழ லானடி தொண்டர்க்கு
      தொண்டராம் புண்ணியமே. 4.102.6
      982 பண்ணிய சாத்திர பேய்கள்
      பறிதலை குண்டரைவி
      டெண்ணிற் புகழீசன் றன்னருள்
      பெற்றேற்கு முண்டுகொலோ
      திண்ணிய மாமதில் ஆரூர
      திருமூல தானனெங்கள்
      புண்ணியன் றன்னடி தொண்டர்க்கு
      தொண்டராம் புண்ணியமே. 4.102.7
      983 கரப்பர்கள் மெய்யை தலைபறி
      கச்சுகம் என்னுங்குண்டர்
      உரைப்பன கேளாதிங் குய்யப்போ
      தேனுக்கும் உண்டுகொலோ
      திருப்பொலி ஆரூர திருமூல
      தானன் திருக்கயிலை
      பொருப்பன் விருப்பமர் தொண்டர்க்கு
      தொண்டராம் புண்ணியமே. 4.102.8
      984 கையி லிடுசோறு நின்றுண்ணுங்
      காதல் அமணரைவி
      டுய்யும் நெறிகண் டிங்கு
      போந்தேனுக்கு முண்டுகொலோ
      ஐயன் அணிவயல் ஆரூர
      திருமூல தானனுக்கு
      பொய்யன் பிலாவடி தொண்டர்க்கு
      தொண்டராம் புண்ணியமே. 4.102.9
      985 குற்ற முடைய அமணர்
      திறமது கையகன்றி
      டுற்ற கருமஞ்செய் துய்யப்போ
      தேனுக்கும் உண்டுகொலோ
      மற்பொலி தோளான் இராவணன்
      றன்வலி வாட்டுவித்த
      பொற்கழ லானடி தொண்டர்க்கு
      தொண்டராம் புண்ணியமே. 4.102.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.103 திருவாரூர் - திருவிருத்தம்
      திருச்சிற்றம்பலம்
      986 வேம்பினை பேசி விடக்கினை
      யோம்பி வினைபெருக்கி
      தூம்பினை தூர்த்தங்கோர் சுற்ற
      துணையென் றிருத்திர்தொண்டீர்
      ஆம்பலம் பூம்பொய்கை ஆரூர்
      அமர்ந்தான் அடிநிழற்கீழ
      சாம்பலை பூசி சலமின்றி
      தொண்டுப டுய்ம்மின்களே. 4.103.1
      987 ஆரா தடித்தொண்டர் ஆணிப்பொன்
      ஆரூர் அகத்தடக்கி
      பாரூர் பரிப்பத்தம் பங்குனி
      உத்திரம் பாற்படுத்தா
      னாரூர் நறுமலர் நாதன்
      அடித்தொண்டன் நம்பிநந்தி
      நீரால் திருவிள கிட்டமை
      நீணா டறியுமன்றே. 4.103.2
      988 பூம்படி மக்கலம் பொற்படி
      மக்கலம் என்றிவற்றால்
      ஆம்படி மக்கல மாகிலும்
      ஆரூர் இனிதமர்ந்தார்
      தாம்படி மக்கலம் வேண்டுவ
      ரேல்தமிழ் மாலைகளால்
      நாம்படி மக்கலஞ் செய்து
      தொழுதுய் மடநெஞ்சமே. 4.103.3
      989 துடிக்கின்ற பாம்பரை ஆர்த்து
      துளங்கா மதியணிந்து
      முடித்தொண்ட ராகி முனிவர்
      பணிசெய்வ தேயுமன்றி
      பொடிக்கொண்டு பூசி புகுந்தொண்டர்
      பாதம் பொறுத்தபொற்பால்
      அடித்தொண்டன் நந்தியென் பானுளன்
      ஆரூர் அமுதினுக்கே. 4.103.4
      990 கரும்பு பிடித்தவர் காயப்ப
      டாரங்கோர் கோடலியால்
      இரும்பு பிடித்தவர் இன்புற
      பட்டார் இவர்கள்நிற்க
      அரும்பவிழ் தண்பொழில் சூழணி
      ஆரூர் அமர்ந்தபெம்மான்
      விரும்பு மனத்தினை யாதொன்று
      நானுன்னை வேண்டுவனே. 4.103.5
      991 கொடிகொள் விதானங் கவரி
      பறைசங்கங் கைவிளக்கோ
      டிடிவில் பெருஞ்செல்வ மெய்துவர்
      எய்தியும் ஊனமில்லா
      அடிகளும் ஆரூர் அகத்தின
      ராயினும் அந்தவள
      பொடிகொண் டணிவார கிருளொக்கு
      நந்தி புறப்படிலே. 4.103.6
      இப்பதிகத்தில் 789-ம்செய்யுட்கள் சிதைந்து போயின. 4.103.7-8
      992 சங்கொலி பித்திடு மின்சிறு
      காலை தடவழலில்
      குங்கிலி யப்புகை கூட்டென்றுங்
      காட்டி இருபதுதோள்
      அங்குலம் வைத்தவன் செங்குரு
      திப்புன லோடஅஞ்ஞான்
      றங்குலி வைத்தான் அடித்தா
      மரையென்னை ஆண்டனவே. 4.103.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.104 திருநாகைக்காரோணம் - திருவிருத்தம்
      திருச்சிற்றம்பலம்
      993 வடிவுடை மாமலை மங்கைபங்
      காகங்கை வார்சடையாய்
      கடிகமழ் சோலை சுலவு
      கடல்நாகை காரோணனே
      பிடிமத வாரணம் பேணு
      துரகநிற் கப்பெரிய
      இடிகுரல் வெள்ளெரு தேறுமி
      தென்னைகொல் எம்மிறையே. 4.104.1
      994 கற்றார் பயில்கடல் நாகைக்கா
      ரோணத்தெங் கண்ணுதலே
      விற்றாங் கியகரம் வேல்நெடுங்
      கண்ணி வியன்கரமே
      நற்றாள் நெடுஞ்சிலை நாண்வலி
      தகர நின்கரமே
      செற்றார் புரஞ்செற்ற சேவக
      மென்னைகொல் செப்புமினே. 4.104.2
      995 தூமென் மலர்க்கணை கோத்துத்தீ
      வேள்வி தொழிற்படுத்த
      காமன் பொடிபட காய்ந்த
      கடல்நாகை காரோணநின்
      நாமம் பரவி நமச்சிவா
      யவென்னும் அஞ்செழுத்துஞ்
      சாமன் றுரைக்க தருதிகண்
      டாயெங்கள் சங்கரனே. 4.104.3
      996 பழிவழி யோடிய பாவி
      பறிதலை குண்டர்தங்கள்
      மொழிவழி யோடி முடிவேன்
      முடியாமை காத்துக்கொண்டாய்
      கழிவழி யோதம் உலவு
      கடல்நாகை காரோணவென்
      வழிவழி யாளாகும் வண்ணம்
      அருளெங்கள் வானவனே. 4.104.4
      997 செந்துவர் வாய்க்கருங் கண்ணிணை
      வெண்ணகை தேமொழியார்
      வந்து வலஞ்செய்து மாநட
      மாட மலிந்தசெல்வ
      கந்த மலிபொழில் சூழ்கடல்
      நாகைக்கா ரோணமென்றுஞ்
      சிந்தைசெய் வாரை பிரியா
      திருக்கு திருமங்கையே. 4.104.5
      998 பனைபுரை கைம்மத யானை
      யுரித்த பரஞ்சுடரே
      கனைகடல் சூழ்தரு நாகைக்கா
      ரோணத்தெங் கண்ணுதலே
      மனைதுற தல்லுணா வல்லமண்
      குண்டர் மயக்கைநீக்கி
      எனைநினை தாட்கொண்டா கென்னினி
      யான்செயும் இச்சைகளே. 4.104.6
      999 சீர்மலி செல்வம் பெரிதுடை
      யசெம்பொன் மாமலையே
      கார்மலி சோலை சுலவு
      கடல்நாகை காரோணனே
      வார்மலி மென்முலை யார்பலி
      வந்திட சென்றிரந்து
      ஊர்மலி பிச்சைகொண் டுண்பது
      மாதிமை யோவுரையே. 4.104.7
      1000 வங்கம் மலிகடல் நாகைக்கா
      ரோணத்தெம் வானவனே
      எங்கள் பெருமானோர் விண்ணப்பம்
      உண்டது கேட்டருளீர்
      கங்கை சடையு கரந்தா
      கள்ளத்தை மெள்ளவுமை
      நங்கை அறியிற்பொல் லாதுகண்டா
      யெங்கள் நாயகனே. 4.104.8
      இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் மறைந்து போயிற்று. 4.104.9
      1001 கருந்தடங் கண்ணியு தானுங்
      கடல்நாகை காரோணத்தான்
      இருந்த திருமலை யென்றிறைஞ்
      சாதன் றெடுக்கலுற்றான்
      பெருந்தலை பத்தும் இருபது
      தோளும் பிதிர்ந்தலற
      இருந்தரு ளிச்செய்த தேமற்று
      செய்திலன் எம்மிறையே. 4.104.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.105 திருவதிகைவீரட்டானம் - திருவிருத்தம்
      திருச்சிற்றம்பலம்
      1002 மாசிலொள் வாள்போல் மறியும்
      மணிநீர திரைத்தொகுதி
      ஊசலை யாடியங் கொண்சிறை
      அன்னம் உறங்கலுற்றால்
      பாசறை நீலம் பருகிய
      வண்டுபண் பாடல்கண்டு
      வீசுங் கெடில வடகரை
      தேயெந்தை வீரட்டமே. 4.105.1
      1003 பைங்காற் றவளை பறைகொட்ட
      பாசிலை நீர்ப்படுகர்
      அங்காற் குவளைமேல் ஆவி
      உயிர்ப்ப அருகுலவுஞ்
      செங்காற் குருகிவை சேருஞ்
      செறிகெடி லக்கரைத்தே
      வெங்காற் குருசிலை வீரன்
      அருள்வைத்த வீரட்டமே. 4.105.2
      1004 அம்மலர கண்ணியர் அஞ்சனஞ்
      செந்துவர் வாயிளையார்
      வெம்முலை சாந்தம் விலைபெறு
      மாலை யெடுத்தவர்கள்
      தம்மருங் கிற்கிரங் கார்தட
      தோள்மெலி யக்குடைவார்
      விம்மு புனற்கெடி லக்கரை
      தேயெந்தை வீரட்டமே. 4.105.3
      1005 மீனுடை தண்புனல் வீரட்ட
      ரேநும்மை வேண்டுகின்ற
      தியானுடை சில்குறை ஒன்றுள
      தால்நறு தண்ணெருக்கின்
      தேனுடை கொன்றை சடையுடை
      கங்கை திரைதவழுங்
      கூனுடை திங்க குழவியெ
      போதுங் குறிக்கொண்மினே. 4.105.4
      1006 ஆரட்ட தேனும் இரந்துண்
      டகமக வன்றிரிந்து
      வேரட்ட நிற்பி திடுகின்ற
      தால்விரி நீர்ப்பரவை
      சூரட்ட வேலவன் தாதையை
      சூழ்வய லாரதிகை
      வீரட்ட தானை விரும்பா
      வரும்பாவ வேதனையே. 4.105.5
      1007 படர்பொற் சடையும் பகுவாய்
      அரவும் பனிமதியுஞ்
      சுடலை பொடியு மெல்லா
      முளவேயவர் தூயதெண்ணீர
      கெடில கரைத்திரு வீரட்ட
      ராவர்கெ டேனடைந்தார்
      நடலைக்கு நற்றுணை யாகுங்கண்
      டீரவர் நாமங்களே. 4.105.6
      1008 காளங் கடந்ததோர் கண்டத்த
      ராகி கண்ணார்கெடில
      நாளங் கடிக்கோர் நகரமு
      மாதிற்கு நன்கிசைந்த
      தாளங்கள் கொண்டுங் குழல்கொண்டு
      மியாழ்கொண்டு தாமங்ஙனே
      வேடங்கள் கொண்டும் விசும்புசெல்
      வாரவர் வீரட்டரே. 4.105.7
      இப்பதிகத்தில் 8910-ம் செய்யுட்கள் மறைந்து போயின. 4.105.8-10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.106 திருப்புகலூர் - திருவிருத்தம்
      திருச்சிற்றம்பலம்
      1009 தன்னை சரணென்று தாளடை
      தேன்றன் அடியடை
      புன்னை பொழிற்புக லூரண்ணல்
      செய்வன கேண்மின்களோ
      என்னை பிறப்பறு தென்வினை
      கட்டறு தேழ்நரக
      தென்னை கிடக்கலொ டான்சிவ
      லோக திருத்திடுமே. 4.106.1
      1010 பொன்னை வகுத்தன்ன மேனிய
      னேபுணர் மென்முலையாள்
      தன்னை வகுத்தன்ன பாகத்தனே
      தமியேற் கிரங்காய்
      புன்னை மலர்த்தலை வண்டுறங்
      கும்புக லூரரசே
      என்னை வகுத்திலை யேலிடும்
      பைக்கிடம் யாதுசொல்லே. 4.106.2
      இப்பதிகத்தில் 3-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 4.106.3
      1011 பொன்னள வார்சடை கொன்றையி
      னாய்புக லூர்க்கரசே
      மன்னுள தேவர்கள் தேடு
      மருந்தே வலஞ்சுழியாய்
      என்னள வேயுன காட்ப
      டிடைக்கல தேகிடப்பார்
      உன்னள வேயென கொன்றுமி
      ரங்காத உத்தமனே. 4.106.4
      இப்பதிகத்தில் 56789-ம் செய்யுட்கள் சிதைந்து போயின. 4.106.5-9
      1012 ஓண பிரானும் ஒளிர்மா
      மலர்மிசை உத்தமனுங்
      காண பராவியுங் காண்கின்
      றிலர்கர நாலைந்துடை
      தோணற் பிரானை வலிதொலை
      தோன்தொல்லை நீர்ப்புகலூர
      கோண பிரானை குறு
      குறுகா கொடுவினையே. 4.106.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.107 திருக்கழிப்பாலை - திருவிருத்தம்
      திருச்சிற்றம்பலம்
      1013 நெய்தற் குருகுதன் பிள்ளையென்
      றெண்ணி நெருங்கிச்சென்று
      கைதை மடற்புல்கு தென்கழி
      பாலை யதனுறைவாய்
      பைதற் பிறையொடு பாம்புடன்
      வைத்த பரிசறியோம்
      எய்த பெறின்இரங் காதுகண்
      டாய்நம் மிறையவனே. 4.107.1
      1014 பருமா மணியும் பவளமு
      தும்பர துந்திவரை
      பொருமால் கரைமேற் றிரைகொணர
      தெற்ற பொலிந்திலங்குங்
      கருமா மிடறுடை கண்டனெம்
      மான்கழி பாலையெந்தை
      பெருமா னவனென்னை யாளுடை
      யானி பெருநிலத்தே. 4.107.2
      1015 நாட்ப டிருந்தின்பம் எய்தலுற்
      றிங்கு நமன்தமராற்
      கோட்ப டொழிவதன் முந்துற
      வேகுளி ரார்தடத்து
      தாட்பட்ட தாமரை பொய்கை
      தண்கழி பாலையண்ணற்
      காட்ப டொழிந்தவன் றேவல்ல
      மாயிவ் வகலிடத்தே. 4.107.3
      இப்பதிகத்தில் ஏனைய செய்யுட்கள் சிதைந்து போயின. 4.107.4-10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.108 திருக்கடவூர் - திருவிருத்தம்
      திருச்சிற்றம்பலம்
      1016 மருட்டுயர் தீரவன் றர்ச்சித்த
      மாணிமார கண்டேயற்காய்
      இருட்டிய மேனி வளைவாள்
      எயிற்றெரி போலுங்குஞ்சி
      சுருட்டிய நாவில்வெங் கூற்றம்
      பதைப்ப வுதைத்துங்ஙனே
      உருட்டிய சேவடி யான்கட
      வூருறை உத்தமனே. 4.108.1
      1017 பதத்தெழு மந்திரம் அஞ்செழு
      தோதி பரிவினொடும்
      இதத்தெழு மாணிதன் இன்னுயிர்
      உண்ண வெகுண்டடர்த்த
      கதத்தெழு காலனை கண்குரு
      திப்புன லாறொழுக
      உதைத்தெழு சேவடி யான்கட
      வூருறை உத்தமனே. 4.108.2
      1018 கரப்புறு சிந்தையர் காண்டற்
      கரியவன் காமனையும்
      நெருப்புமிழ் கண்ணினன் நீள்புனற்
      கங்கையும் பொங்கரவும்
      பரப்பிய செஞ்சடை பால்வண்ணன்
      காலனை பண்டொருகால்
      உரப்பிய சேவடி யான்கட
      வூருறை உத்தமனே. 4.108.3
      1019 மறித்திகழ் கையினன் வானவர்
      கோனை மனமகிழ்ந்து
      குறித்தெழு மாணிதன் ஆருயிர்
      கொள்வான் கொதித்தசிந்தை
      கறுத்தெழு மூவிலை வேலுடை
      காலனை தானலற
      உறுக்கிய சேவடி யான்கட
      வூருறை உத்தமனே. 4.108.4
      1020 குழைத்திகழ் காதினன் வானவர்
      கோனை குளிர்ந்தெழுந்து
      பழக்கமோ டர்ச்சித்த மாணிதன்
      ஆருயிர் கொள்ளவந்த
      தழற்பொதி மூவிலை வேலுடை
      காலனை தானலற
      உழக்கிய சேவடி யான்கட
      வூருறை உத்தமனே. 4.108.5
      1021 பாலனு காயன்று பாற்கடல்
      ஈந்து பணைத்தெழுந்த
      ஆலினிற் கீழிரு தாரண
      மோதி அருமுனிக்கா
      சூலமும் பாசமுங் கொண்டு
      தொடர்ந்தடர தோடிவந்த
      காலனை காய்ந்த பிரான்கட
      வூருறை உத்தமனே. 4.108.6
      1022 படர்சடை கொன்றையும் பன்னக
      மாலை பணிகயிறா
      உடைதலை கோத்துழல் மேனியன்
      உண்பலி கென்றுழல்வோன்
      சுடர்பொதி மூவிலை வேலுடை
      காலனை துண்டமதா
      உடறிய சேவடி யான்கட
      வூருறை உத்தமனே. 4.108.7
      1023 வெண்டலை மாலையுங் கங்கை
      கரோடி விரிசடைமேற்
      பெண்டனி நாயகன் பேயுக
      தாடும் பெருந்தகையான்
      கண்டனி நெற்றியன் காலனை
      காய்ந்து கடலின்விடம்
      உண்டருள் செய்தபி ரான்கட
      வூருறை உத்தமனே. 4.108.8
      1024 கேழல தாகி கிளறிய
      கேசவன் காண்பரிதாய்
      வாழிநன் மாமலர கண்ணிட
      திட்டவம் மாலவற்கன்
      றாழியும் ஈந்து அடுதிறற்
      காலனை அன்றடர்த்து
      ஊழியு மாய பிரான்கட
      வூருறை உத்தமனே. 4.108.9
      1025 தேன்றிகழ் கொன்றையுங் கூவிள
      மாலை திருமுடிமேல்
      ஆன்றிகழ் ஐந்துக தாடும்
      பிரான்மலை ஆர்த்தெடுத்த
      கூன்றிகழ் வாளர கன்முடி
      பத்துங் குலைந்துவிழ
      ஊன்றிய சேவடி யான்கட
      வூருறை உத்தமனே. 4.108.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.109 திருமாற்பேறு - திருவிருத்தம்
      திருச்சிற்றம்பலம்
      முதலிரு செய்யுட்கள் சிதைந்து போயின 4.109.1-2
      1026 மாணி குயிர்பெற கூற்றை
      யுதைத்தன மாவலிபால்
      காணி கிரந்தவன் காண்டற்
      கரியன கண்டதொண்டர்
      பேணி கிடந்து பரவ
      படுவன பேர்த்துமஃதே
      மாணிக்க மாவன மாற்பே
      றுடையான் மலரடியே. 4.109.3
      1027 கருட தனிப்பாகன் காண்டற்
      கரியன காதல்செய்யிற்
      குருடர்க்கு முன்னே குடிகொண்
      டிருப்பன கோலமல்கு
      செருட கடிமலர செல்விதன்
      செங்கம லக்கரத்தால்
      வருட சிவப்பன மாற்பே
      றுடையான் மலரடியே. 4.109.4
      இப்பதிகத்தில் ஏனைய செய்யுட்கள் சிதைந்து போயின. 4.109.5-10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.110 திருத்தூங்கானைமாடம் - திருவிருத்தம்
      திருச்சிற்றம்பலம்
      1028 பொன்னார் திருவடி கொன்றுண்டு
      விண்ணப்பம் போற்றிசெய்யும்
      என்னாவி காப்பதற் கிச்சையுண்
      டேலிருங் கூற்றகல
      மின்னாரு மூவிலை சூலமென்
      மேற்பொறி மேவுகொண்டல்
      துன்னார் கடந்தையுள் தூங்கானை
      மாட சுடர்க்கொழுந்தே. 4.110.1
      1029 ஆவா சிறுதொண்ட னென்நினை
      தானென் றரும்பிணிநோய்
      காவா தொழியிற் கலக்குமுன்
      மேற்பழி காதல்செய்வார்
      தேவா திருவடி நீறென்னை
      பூசுசெ தாமரையின்
      பூவார் கடந்தையுள் தூங்கானை
      மாடத்தெம் புண்ணியனே. 4.110.2
      இப்பதிகத்தில் 3456789-ம் செய்யுட்கள்
      சிதைந்து போயின. 4.110.3-9
      1030 கடவு திகிரி கடவா
      தொழி கயிலையுற்றான்
      படவு திருவிர லொன்றுவை
      தாய்பனி மால்வரைபோல்
      இடபம் பொறித்தென்னை ஏன்றுகொள்
      ளாயிருஞ் சோலைதிங்கள்
      தடவுங் கடந்தையுள் தூங்கானை
      மாடத்தெ தத்துவனே. 4.110.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.111 பசுபதி - திருவிருத்தம்
      திருச்சிற்றம்பலம்
      1031 சாம்பலை பூசி தரையிற்
      புரண்டுநின் றாள்பரவி
      ஏம்பலி பார்க கிரங்குகண்
      டாயிருங் கங்கையென்னுங்
      காம்பலை கும்பணை தோளி
      கதிர்ப்பூண் வனமுலைமேற்
      பாம்பலை குஞ்சடை யாயெம்மை
      யாளும் பசுபதியே. 4.111.1
      1032 உடம்பை தொலைவித்துன் பாத
      தலைவைத்த உத்தமர்கள்
      இடும்பை படாமல் இரங்குகண்
      டாயிரு ளோடச்செந்தீ
      அடும்பொ தனைய அழன்மழு
      வாவழ லேயுமிழும்
      படம்பொ தரவரை யாயெம்மை
      யாளும் பசுபதியே. 4.111.2
      1033 தாரி திரந்தவி ராவடி
      யார்தடு மாற்றமென்னும்
      மூரி திரைப்பௌவ நீக்குகண்
      டாய்முன்னை நாளொருகால்
      வேரித்தண் பூஞ்சுடர் ஐங்கணை
      வேள்வெந்து வீழச்செந்தீ
      பாரித்த கண்ணுடை யாயெம்மை
      யாளும் பசுபதியே. 4.111.3
      1034 ஒருவரை தஞ்சமென் றெண்ணாதுன்
      பாத மிறைஞ்சுகின்றார்
      அருவினை சுற்றம் அகல்விகண்
      டாயண்ட மேயணவும்
      பெருவரை குன்றம் பிளிற
      பிளந்துவே தோளியஞ்ச
      பருவரை தோலுரி தாயெம்மை
      யாளும் பசுபதியே. 4.111.4
      1035 இடுக்கொன்று மின்றியெஞ் சாமையுன்
      பாத மிறைஞ்சுகின்றார
      கடர்க்கின்ற நோயை விலக்குகண்
      டாயண்டம் எண்டிசையுஞ்
      சுடர்த்திங்கள் சூடி சுழற்கங்கை
      யோடுஞ் சுரும்புதுன்றி
      படர்க்கொண்ட செஞ்சடை யாயெம்மை
      யாளும் பசுபதியே. 4.1115
      1036 அடலை கடல்கழி வான்நின்
      னடியிணை யேயடைந்தார்
      நடலை படாமை விலக்குகண்
      டாய்நறுங் கொன்றை திங்கள்
      சுடலை பொடிச்சுண்ண மாசுணஞ்
      சூளா மணிகிடந்து
      படர சுடர்மகு டாயெம்மை
      யாளும் பசுபதியே. 4.111.6
      1037 துறவி தொழிலே புரிந்துன்
      சுரும்படி யேதொழுவார்
      மறவி தொழிலது மாற்றுகண்
      டாய்மதின் மூன்றுடைய
      அறவை தொழில்புரி தந்தர
      தேசெல்லு மந்திரத்தேர
      பறவை புரமெரி தாயெம்மை
      யாளும் பசுபதியே. 4.111.7
      இப்பதிகத்தில் 89-ம் செய்யுட்கள் சிதைந்து போயின. 4.111.8-9
      1038 சி துருகி சிவனெம்
      பிரானென்று சிந்தையுள்ளே
      பித்து பெருக பிதற்றுகின்
      றார்பிணி தீர்த்தருளாய்
      தரக்கன் இருபது
      தோளு முடியுமெல்லாம்
      பத்துற் றுறநெரி தாயெம்மை
      யாளும் பசுபதியே. 4.111.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.112 சரக்கறை - திருவிருத்தம்
      திருச்சிற்றம்பலம்
      1039 விடையும் விடைப்பெரும் பாகாவென்
      விண்ணப்பம் வெம்மழுவா
      படையும் படையாய் நிரைத்தபல்
      பூதமும் பாய்புலித்தோல்
      உடையு முடைதலை மாலையும்
      மாலை பிறையொதுங்குஞ்
      சடையு மிருக்குஞ் சரக்கறை
      யோவென் றனிநெஞ்சமே. 4.112.1
      1040 விஞ்ச தடவரை வெற்பாவென்
      விண்ணப்பம் மேலிலங்கு
      சங கலனுஞ் சரிகோ
      வணமு தமருகமும்
      அந்தி பிறையும் அனல்வா
      யரவும் விரவியெல்லாஞ்
      சந்தி திருக்குஞ் சரக்கறை
      யோவென் றனிநெஞ்சமே. 4.112.2
      1041 வீந்தார் தலைகல னேந்தீயென்
      விண்ணப்பம் மேலிலங்கு
      சாந்தாய வெந்த தவளவெண்
      ணீறு தகுணிச்சமும்
      பூந்தா மரைமேனி புள்ளி
      யுழைமா னதள்புலித்தோல்
      தாந்தா மிருக்குஞ் சரக்கறை
      யோவென் றனிநெஞ்சமே. 4.112.3
      1042 வெஞ்சமர் வேழ துரியாயென்
      விண்ணப்பம் மேலிலங்கு
      வஞ்சமா வந்த வருபுனற்
      கங்கையும் வான்மதியும்
      நஞ்சமா நாகம் நகுசிர
      மாலை நகுவெண்டலை
      தஞ்சமா வாழுஞ் சரக்கறை
      யோவென் றனிநெஞ்சமே. 4.112.4
      1043 வேலை கடல்நஞ்ச முண்டாயென்
      விண்ணப்பம் மேலிலங்கு
      காலற் கடந்தா னிடங்கயி
      லாயமுங் காமர்கொன்றை
      மாலை பிறையும் மணிவா
      யரவும் விரவியெல்லாஞ்
      சால கிடக்குஞ் சரக்கறை
      யோவென் றனிநெஞ்சமே. 4.112.5
      1044 வீழிட்ட கொன்றை தாராயென்
      விண்ணப்பம் மேலிலங்கு
      சூழி டிருக்குநற் சூளா
      மணியுஞ் சுடலைநீறும்
      ஏழி டிருக்குநல் லக்கு
      மரவுமென் பாமையோடு
      தாழி டிருக்குஞ் சரக்கறை
      யோவென் றனிநெஞ்சமே. 4.112.6
      1045 விண்டார் புரமூன்று மெய்தாயென்
      விண்ணப்பம் மேலிலங்கு
      தொண்டா டியதொண் டடிப்பொடி
      நீறு தொழுதுபாதங்
      கண்டார்கள் கண்டிரு குங்கயி
      லாயமுங் காமர்கொன்றை
      தண்டார் இருக்குஞ் சரக்கறை
      யோவென் றனிநெஞ்சமே. 4.112.7
      1046 விடுபட்டி ஏறுக தேறீயென்
      விண்ணப்பம் மேலிலங்கு
      கொடுகொட்டி கொக்கரை தக்கை
      குழல்தாளம் வீணைமொந்தை
      வடுவிட்ட கொன்றையும் வன்னியும்
      மத்தமும் வாளரவு
      தடுகுட்ட மாடுஞ் சரக்கறை
      யோவென் றனிநெஞ்சமே. 4.112.8
      1047 வெண்டிரை கங்கை விகிர்தாவென்
      விண்ணப்பம் மேலிலங்கு
      கண்டிகை பூண்டு கடிசூ
      திரமேற் கபாலவடங்
      குண்டிகை கொக்கரை கோணற்
      பிறைகுற பூதப்படை
      தண்டிவை திட்ட சரக்கறை
      யோவென் றனிநெஞ்சமே. 4.112.9
      1048 வேதித்த வெம்மழு வாளீயென்
      விண்ணப்பம் மேலிலங்கு
      சோதி திருக்குநற் சூளா
      மணியுஞ் சுடலைநீறும்
      பாதி பிறையும் படுதலை
      துண்டமும் பாய்புலித்தோல்
      சாதி திருக்குஞ் சரக்கறை
      யோவென் றனிநெஞ்சமே. 4.112.10
      1049 விவந்தா டியகழல் எந்தாயென்
      விண்ணப்பம் மேலிலங்கு
      தவந்தா னெடுக்க தலைப
      திறுத்தனை தாழ்புலித்தோல்
      சிவந்தா டியபொடி நீறுஞ்
      சிரமாலை சூடிநின்று
      தவந்தா னிருக்குஞ் சரக்கறை
      யோவென் றனிநெஞ்சமே. 4.112.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.113 தனி - திருவிருத்தம்
      திருச்சிற்றம்பலம்
      1050 வெள்ளி குழைத்துணி போலுங்
      கபாலத்தன் வீழ்ந்திலங்கு
      வெள்ளி புரியன்ன வெண்புரி
      நூலன் விரிசடைமேல்
      வெள்ளி தகடன்ன வெண்பிறை
      சூடிவெள் ளென்பணிந்து
      வெள்ளி பொடிப்பவ ளப்புறம்
      பூசிய வேதியனே. 4.113.1
      1051 உடலை துறந்துல கேழுங்
      கடந்துல வாததுன்ப
      கடலை கடந்து போயிட
      லாகுங் கனகவண்ண
      படலை சடைப்பர வைத்திரை
      கங்கை பனிப்பிறைவெண்
      சுடலை பொடிக்கட வுட்கடி
      மைக்கண் துணிநெஞ்சமே. 4.113.2
      1052 முன்னே யுரைத்தால் முகமனே
      யொக்குமிம் மூவுலகு
      கன்னையும் அத்தனு மாவா
      யழல்வணா நீயலையோ
      உன்னை நினைந்தே கழியுமென்
      னாவி கழிந்ததற்பின்
      என்னை மறக்க பெறாயெம்
      பிரானுன்னை வேண்டியதே. 4.113.3
      1053 நின்னையெ போது நினையலொ
      டாய்நீ நினையப்புகிற்
      பின்னை போதே மறப்பித்து
      பேர்த்தொன்று நாடுவித்தி
      உன்னையெ போதும் மறந்தி
      டுனக்கினி தாயிருக்கும்
      என்னையொ பாருள ரோசொல்லு
      வாழி இறையவனே. 4.113.4
      1054 முழுத்தழல் மேனி தவள
      பொடியன் கனகக்குன்ற
      தெழிற்பெருஞ் சோதியை எங்கள்
      பிரானை யிகழ்ந்திர்கண்டீர்
      தொழப்படு தேவர் தொழப்படு
      வானை தொழுதபின்னை
      தொழப்படு தேவர்தம் மால்தொழு
      விக்குந்தன் தொண்டரையே. 4.113.5
      1055 விண்ணக தான்மிக்க வே
      துளான்விரி நீருடுத்த
      மண்ணக தான்திரு மாலக
      தான்மரு வற்கினிய
      பண்ணக தான்பத்தர் சி
      துளான்பழ நாயடியேன்
      கண்ணக தான்மன தான்சென்னி
      யானெங் கறைக்கண்டனே. 4.113.6
      1056 பெருங்கடல் மூடி பிரளயங்
      கொண்டு பிரமனும்போய்
      இருங்கடல் மூடி இறக்கும்
      இறந்தான் களேபரமுங்
      கருங்கடல் வண்ணன் களேபர
      முங்கொண்டு கங்காளராய்
      வருங்கடல் மீளநின் றெம்மிறை
      நல்வீணை வாசிக்குமே. 4.113.7
      1057 வான துளங்கிலென் மண்கம்ப
      மாகிலென் மால்வரையு
      தான துளங்கி தலைதடு
      மாறிலென் தண்கடலும்
      மீனம் படிலென் விரிசுடர்
      வீழிலென் வேலைநஞ்சுண்
      டூனமொன் றில்லா ஒருவனு
      காட்பட்ட உத்தமர்க்கே. 4.113.8
      1058 சிவனெனும் நா தனக்கே
      யுடையசெம் மேனியெம்மான்
      அவனெனை ஆட்கொண் டளித்திடு
      மாகில் அவன்றனையான்
      பவனெனு நாமம் பிடித்து
      திரிந்துபன் னாளழைத்தால்
      இவனெனை பன்னாள் அழைப்பொழி
      யானென் றெதிர்ப்படுமே. 4.113.9
      1059 என்னையொ பாருன்னை எங்ஙனம்
      காண்பர் இகலியுன்னை
      நின்னையொ பார்நின்னை காணும்
      படித்தன்று நின்பெருமை
      பொன்னையொ பாரி தழலை
      வளாவிச்செம் மானஞ்செற்று
      மின்னையொ பார மிளிருஞ்
      சடைக்கற்றை வேதியனே. 4.113.10
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      4.114 தனி - திருவிருத்தம்
      திருச்சிற்றம்பலம்
      1060 பவள தடவரை போலுந்திண்
      டோ ள்கள தோள்மிசையே
      பவள குழைதழை தாலொக்கும்
      பல்சடை அச்சடைமேற்
      பவள கொழுந்தன்ன பைம்முக
      நாக நாகத்தொடும்
      பவளக்கண் வால மதியெந்தை
      சூடும் பனிமலரே. 4.114.1
      1061 முருகார் நறுமலர் இண்டை
      தழுவிவண் டேமுரலும்
      பெருகா றடைசடை கற்றையி
      னாய்பிணி மேய்ந்திருந்த
      இருகாற் குரம்பை யிதுநா
      னுடைய திதுபிரிந்தாற்
      தருவாய் எனக்குன் திருவடி
      கீழோர் தலைமறைவே. 4.114.2
      1062 மூவா உருவத்து முக்கண்
      முதல்வமீ கூரிடும்பை
      காவா யெனக்கடை தூங்கு
      மணியைக்கை யாலமரர்
      நாவா யசைத்த வொலியொலி
      மாறிய தில்லையப்பாற்
      தீயாய் எரிந்து பொடியா
      கழிந்த திரிபுரமே. 4.114.3
      1063 பந்தித்த பாவங்கள் அம்மையிற்
      செய்தன இம்மைவந்து
      சந்தித்த பின்னை சமழ்ப்பதென்
      னேவ தமரர்முன்னாள்
      முந்தி செழுமல ரிட்டு
      முடிதாழ தடிவணங்கும்
      நந்திக்கு முந்துற ஆட்செய்கி
      லாவிட்ட நன்னெஞ்சமே. 4.114.4
      1064 அந்திவ டத்திளங் கண்ணிய
      னாறமர் செஞ்சடையான்
      புந்திவ டத்திடை புக்குநின்
      றானையும் பொய்யென்பனோ
      சந்திவ டச்சடை கற்றை
      யலம்ப சிறிதலர்ந்த
      நந்திவ டத்தொடு கொன்றை
      வளாவிய நம்பனையே. 4.114.5
      1065 உன தகமலர் சூடி
      உலக தொழச்சுடலை
      பன தகங்கொண்டு பல்கடை
      தோறும் பலிதிரிவான்
      என தகத்தே இரவும்
      பகலும் பிரிவரியான்
      தன தகத்தோர் இளம்பிறை
      சூடிய சங்கரனே. 4.114.6
      1066 அரைப்பா லுடுப்பன கோவண
      சின்னங்கள் ஐயமுணல்
      வரைப்பாவை யைக்கொண்ட தெக்குடி
      வாழ்க்கைக்கு வானிரைக்கும்
      இரைப்பா படுதலை யேந்துகை
      யாமறை தேடுமெந்தாய்
      உரைப்பார் உரைப்பன வேசெய்தி
      யாலெங்கள் உத்தமனே. 4.114.7
      1067 துறக்க படாத உடலை
      துறந்துவெ தூதுவரோ
      டிறப்பன் இறந்தால் இருவிசும்
      பேறுவன் ஏறிவந்து
      பிறப்பன் பிறந்தாற் பிறையணி
      வார்சடை பிஞ்ஞகன்பேர்
      மறப்பன்கொ லோவென்றென் னுள்ளங்
      கிடந்து மறுகிடுமே. 4.114.8
      1068 வேரி வளாய விரைமலர
      கொன்றை புனைந்தனகன்
      சேரி வளாயவென் சிந்தை
      புகுந்தான் திருமுடிமேல்
      வாரி வளாய வருபுனற்
      கங்கை சடைமறிவாய்
      ஏரி வளாவி கிடந்தது
      போலும் இளம்பிறையே. 4.114.9
      1069 கன்னெடுங் காலம் வெதும்பி
      கருங்கடல் நீர்சுருங்கி
      பன்னெடுங் காலம் மழைதான்
      மறுக்கினும் பஞ்சமுண்டென்
      றென்னொடுஞ் சூளறும் அஞ்சல்நெஞ்
      சேயிமை யாதமுக்கண்
      பொன்னெடுங் குன்றமொன் றுண்டுகண்
      டீரி புகலிடத்தே. 4.114.10
      1070 மேலு மறிந்திலன் நான்முகன்
      மேற்சென்று கீழிடந்து
      மாலு மறிந்திலன் மாலுற்ற
      தேவழி பாடுசெய்யும்
      பாலன் மிசைச்சென்று பாசம்
      விசிறி மறிந்தசிந்தை
      கால னறிந்தான் அறிதற்
      கரியான் கழலடியே. 4.114.11
      திருச்சிற்றம்பலம்
      திருநாவுக்கரசுசுவாமிகள் அருளிச்செய்த தேவாரப்பதிகங்கள்
      நான்காம் திருமுறை முற்றும்.
      ------------------------------------------------------------------------
      25 2003


      2.