திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
      தேவார பதிகங்கள்
      இரண்டாம் திருமுறை - முதல் பகுதி
      உள்ளுறை
      2.01 திருப்பூந்தராய் 1-10 மின்பதிப்பு
      2.02 திருவலஞ்சுழி 11 -21 மின்பதிப்பு
      2.03 திருத்தெளிச்சேரி 22-32 மின்பதிப்பு
      2.04 திருவான்மியூர் 33-43 மின்பதிப்பு
      2.05 திருவனேகதங்காபதம் 44-54 மின்பதிப்பு
      2.06 திருவையாறு 55-66 மின்பதிப்பு
      2.07 திருவாஞ்சியம் 6- 77 மின்பதிப்பு
      2.08 திருச்சிக்கல் 78-88 மின்பதிப்பு
      2.09 திருமழபாடி 89-99 மின்பதிப்பு
      2.10 திருமங்கலக்குடி 100-110 மின்பதிப்பு
      2.11 சீகாழி 111-120 மின்பதிப்பு
      2.12 திருவேகம்பம் 121-131 மின்பதிப்பு
      2.13 திருக்கோழம்பம் 132-142 மின்பதிப்பு
      2.14 திருவெண்ணியூர் 143-153 மின்பதிப்பு
      2.15 திருக்காறாயில் 154-164 மின்பதிப்பு
      2.16 திருமணஞ்சேரி 165-175 மின்பதிப்பு
      2.17 திருவேணுபுரம் 176-185 மின்பதிப்பு
      2.18 திருமருகல் 186-196 மின்பதிப்பு
      2.19 திருநெல்லிக்கா 197-207 மின்பதிப்பு
      2.20 திருஅழுந்தூர் 208-218 மின்பதிப்பு
      2.21 திருக்கழிப்பாலை 219-229 மின்பதிப்பு
      2.22 திருக்குடவாயில் 230-240 மின்பதிப்பு
      2.23 திருவானைக்கா 241-250 மின்பதிப்பு
      2.24 திருநாகேச்சரம் 251-261 மின்பதிப்பு
      2.25 திருப்புகலி 262-272 மின்பதிப்பு
      2.26 திருநெல்வாயில் 273-283 மின்பதிப்பு
      2.27 திருஇந்திரநீலப்பருப்பதம் 284-294 மின்பதிப்பு
      2.28 திருக்கருவூரானிலை 295-305 மின்பதிப்பு
      2.29 திருப்புகலி 306-316 மின்பதிப்பு
      2.30 திருப்புறம்பயம் 317-327 மின்பதிப்பு
      2.31 திருக்கருப்பறியலூர் 328-338 மின்பதிப்பு
      2.32 திருவையாறு 339-349 மின்பதிப்பு
      2.33 திருநள்ளாறு 350-360 மின்பதிப்பு
      2.34 திருப்பழுவூர் 361-371 மின்பதிப்பு
      2.35 திருக்குரங்காடுதுறை 372-382 மின்பதிப்பு
      2.36 திருஇரும்பூளை 383-392 மின்பதிப்பு
      2.37 திருமறைக்காடு 393-403 மின்பதிப்பு
      2.38 திருச்சாய்க்காடு 404-414 மின்பதிப்பு
      2.39 திருக்ஷேத்திரக்கோவை 415-425 மின்பதிப்பு
      2.40 திருப்பிரமபுரம் 426-436 மின்பதிப்பு
      2.41 திருச்சாய்க்காடு 437-447 மின்பதிப்பு
      2.42 திருஆக்கூர் 448-458 மின்பதிப்பு
      2.43 திருப்புள்ளிருக்குவேளூர் 459-469 மின்பதிப்பு
      2.44 திருஆமாத்தூர் 470-480 மின்பதிப்பு
      2.45 திருக்கைச்சினம் 481-490 மின்பதிப்பு
      2.46 திருநாலூர்த்திருமயானம் 491-501 மின்பதிப்பு
      2.47 திருமயிலாப்பூர் 502-512 மின்பதிப்பு
      2.48 திருவெண்காடு 513 - 523 மின்பதிப்பு
      2.49 சீகாழி 524-534 மின்பதிப்பு
      2.50 திருஆமாத்தூர் 535-545 மின்பதிப்பு
      2.51 திருக்களர் 546-556 மின்பதிப்பு
      2.52 திருக்கோட்டாறு 557-567 மின்பதிப்பு
      2.53 திருப்புறவார் 568-578 மின்பதிப்பு
      2.54 திருப்புகலி 579-589 மின்பதிப்பு
      2.55 திருத்தலைச்சங்காடு 590-600 மின்பதிப்பு
      2.56 திருவிடைமருதூர் 601-611 மின்பதிப்பு
      2.57 திருநல்லூர் 612-622 மின்பதிப்பு
      2.58 திருக்குடவாயில் 623-633 மின்பதிப்பு
      2.59 சீகாழி 634-643 மின்பதிப்பு
      2.60 திருப்பாசூர் 644-654 மின்பதிப்பு
      ------------------------------------------------------------------------
      திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
      தேவார பதிகங்கள்
      இரண்டாம் திருமுறை - முதல் பகுதி
      2.01 திருப்பூந்தராய்
      பண் - இந்தளம்
      திருச்சிற்றம்பலம்
      1 செந்நெ லங்கழ னிப்பழ னத்தய லேசெழும்
      புன்னை வெண்கிழி யிற்பவ ளம்புரை பூந்தரா
      துன்னி நல்லிமை யோர்முடி தோய்கழ லீர்சொலீர்
      பின்னு செஞ்சடை யிற்பிறை பாம்புடன் வைத்ததே. 2.1.1
      2 எற்று தெண்டிரை யேறிய சங்கினொ டிப்பிகள்
      பொற்றி கழ்கம லப்பழ னம்புகு பூந்தரா
      சுற்றி நல்லிமை யோர்தொழு பொன்கழ லீர்சொலீர்
      பெற்ற மேறுதல் பெற்றிமை யோபெரு மானிரே. 2.1.2
      3 சங்கு செம்பவ ளத்திரள் முத்தவை தாங்கொடு
      பொங்கு தெண்டிரை வந்தலை கும்புனற் பூந்தரா
      துங்க மால்களிற் றின்னுரி போர்த்துக தீர்சொலீர்
      மங்கை பங்கமும் அங்கத்தொ டொன்றிய மாண்பதே. 2.1.3
      4 சேம வன்மதில் பொன்னணி மாளிகை சேணுயர்
      பூம ணங்கம ழும்பொழில் சூழ்தரு பூந்தரா
      சோம னும்மர வுந்தொடர் செஞ்சடை யீர்சொலீர்
      காமன் வெண்பொடி யா கடைக்கண் சிவந்ததே. 2.1.4
      5 பள்ள மீனிரை தேர்ந்துழ லும்பகு வாயன
      புள்ளும் நாடொறுஞ் சேர்பொழில் சூழ்தரு பூந்தரா
      துள்ளும் மான்மறி யேந்திய செங்கையி னீர்சொலீர்
      வெள்ள நீரொரு செஞ்சடை வைத்த வியப்பதே. 2.1.5
      6 மாதி லங்கிய மங்கைய ராடம ருங்கெலாம்
      போதி லங்கம லமது வார்புனற் பூந்தரா
      சோதி யஞ்சுடர் மேனிவெண் ணீறணி வீர்சொலீர்
      காதி லங்குழை சங்கவெண் தோடுடன் வைத்ததே. 2.1.6
      இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் மறைந்து போயிற்று. 2.1.7
      7 வருக்க மார்தரு வான்கடு வன்னொடு மந்திகள்
      தருக்கொள் சோலை தருங்கனி மாந்திய பூந்தரா
      துரக்கும் மால்விடைமேல்வரு வீரடி கேள்சொலீர்
      அரக்க னாற்றல் அழித்தரு ளாக்கிய ஆக்கமே. 2.1.8
      8 வரிகொள் செங்கயல் பாய்புனல் சூழ்ந்த மருங்கெலாம்
      புரிசை நீடுயர் மாடம் நிலாவிய பூந்தரா
      சுருதி பாடிய பாணியல் தூமொழி யீர்சொலீர்
      கரிய மாலயன் நேடியு மைக்கண் டிலாமையே. 2.1.9
      9 வண்ட லங்கழ னிம்மடை வாளைகள் பாய்புனற்
      புண்ட ரீகம லர்ந்து மதுத்தரு பூந்தரா
      தொண்டர் வந்தடி போற்றிசெய் தொல்கழ லீர்சொலீர்
      குண்டர் சாக்கியர் கூறிய தாங்குறி யின்மையே. 2.1.10
      10 மகர வார்கடல் வந்தண வும்மணற் கானல்வா
      புகலி ஞானசம் பந்தன் எழில்மிகு பூந்தரா
      பகவ னாரை பரவுசொல் மாலைப தும்வல்லார்
      அகல்வர் தீவினை நல்வினை யோடுட னாவரே. 2.1.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.2 திருவலஞ்சுழி
      பண் - இந்தளம்
      திருச்சிற்றம்பலம்
      11 விண்டெ லாமல ரவ்விரை நாறுதண் டேன்விம்மி
      வண்டெ லாம்நசை யாலிசை பாடும் வலஞ்சுழி
      தொண்டெ லாம்பர வுஞ்சுடர் போலொளி யீர்சொலீர்
      பண்டெ லாம்பலி தேர்ந்தொலி பாடல் பயின்றதே. 2.2.1
      12 பாரல் வெண்குரு கும்பகு வாயன நாரையும்
      வாரல் வெண்டிரை வாயிரை தேரும் வலஞ்சுழி
      மூரல் வெண்முறு வல்நகு மொய்யொளி யீர்சொலீர்
      ஊரல் வெண்டலை கொண்டுல கொக்கவு ழன்றதே. 2.2.2
      13 கிண்ண வண்ணமல ருங்கிளர் தாமரை தாதளாய்
      வண்ண நுண்மணல் மேலனம் வைகும் வலஞ்சுழி
      சுண்ண வெண்பொடி கொண்டுமெய் பூசவ லீர்சொலீர்
      விண்ண வர்தொழ வெண்டலை யிற்பலி கொண்டதே. 2.2.3
      14 கோடெ லாம்நிறை யக்குவ ளைம்மல ருங்குழி
      மாடெ லாம்மலி நீர்மண நாறும் வலஞ்சுழி
      சேடெ லாமுடை யீர்சிறு மான்மறி யீர்சொலீர்
      நாடெ லாமறி யத்தலை யின்னற வேற்றதே. 2.2.4
      15 கொல்லை வென்றபுன திற்குரு மாமணி கொண்டுபோய்
      வல்லை நுண்மணல் மேலனம் வைகும் வலஞ்சுழி
      முல்லை வெண்முறு வல்நகை யாளொளி யீர்சொலீர்
      சில்லை வெண்டலை யிற்பலி கொண்டுழல் செல்வமே. 2.2.5
      16 பூச நீர்பொழி யும்புனற் பொன்னியிற் பன்மலர்
      வாச நீர்குடை வாரிடர் தீர்க்கும் வலஞ்சுழி
      தேச நீர்திரு நீர்சிறு மான்மறி யீர்சொலீர்
      ஏச வெண்டலை யிற்பலி கொள்வ திலாமையே. 2.2.6
      17 கந்த மாமலர சந்தொடு காரகி லுந்தழீஇ
      வந்த நீர்குடை வாரிடர் தீர்க்கும் வலஞ்சுழி
      அந்த நீர்முதல் நீர்நடு வாமடி கேள்சொலீர்
      பந்த நீர்கரு தாதுல கிற்பலி கொள்வதே. 2.2.7
      18 தேனுற் றநறு மாமலர சோலையில் வண்டினம்
      வானுற் றநசை யாலிசை பாடும் வலஞ்சுழி
      கானுற் றகளிற் றின்னுரி போர்க்கவல் லீர்சொலீர்
      ஊனுற் றதலை கொண்டுல கொக்க வுழன்றதே. 2.2.8
      19 தீர்த்த நீர்வ திழிபுனற் பொன்னியிற் பன்மலர்
      வார்த்த நீர்குடை வாரிடர் தீர்க்கும் வலஞ்சுழி
      ஆர்த்து வந்த அரக்கனை யன்றடர தீர்சொலீர்
      சீர்த்த வெண்டலை யிற்பலி கொள்வதுஞ் சீர்மையே. 2.2.9
      20 உரம னுஞ்சடை யீர்விடை யீரும தின்னருள்
      வரம னும்பெற லாவதும் எந்தை வலஞ்சுழி
      பிரம னுந்திரு மாலும் அளப்பரி யீர்சொலீர்
      சிரமெ னுங்கல னிற்பலி வேண்டிய செல்வமே. 2.2.10
      21 வீடு ஞானமும் வேண்டுதி ரேல்விர தங்களால்
      வாடி ஞானமென் னாவதும் எந்தை வலஞ்சுழி
      நாடி ஞானசம் பந்தன செந்தமிழ் கொண்டிசை
      பாடு ஞானம்வல் லாரடி சேர்வது ஞானமே. 2.2.11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - காப்பகத்தீசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.3 திருத்தெளிச்சேரி
      பண் - இந்தளம்
      திருச்சிற்றம்பலம்
      22 பூவ லர்ந்தன கொண்டுமு போதுமும் பொற்கழல்
      தேவர் வந்து வணங்கு மிகுதெளி சேரியீர்
      மேவ ருந்தொழி லாளொடு கேழற்பின் வேடனாம்
      பாவ கங்கொடு நின்றது போலுநும் பான்மையே. 2.3.1
      23 விளைக்கும் பத்திக்கு விண்ணவர் மண்ணவ ரேத்தவே
      திளைக்கு தீர்த்த மறாத திகழ்தெளி சேரியீர்
      வளைக்கு திண்சிலை மேலைந்து பாணமு தானெய்து
      களிக்குங் காமனை யெங்ஙனம் நீர்கண்ணிற் காய்ந்ததே. 2.3.2
      24 வம்ப டுத்த மலர்ப்பொழில் சூழ மதிதவழ்
      செம்ப டுத்த செழும்புரி சைத்தெளி சேரியீர்
      கொம்ப டுத்ததொர் கோல விடைமிசை கூர்மையோ
      டம்ப டுத்தகண் ணாளொடு மேவல் அழகிதே. 2.3.3
      25 காரு லாங்கட லிப்பிகள் முத்தங் கரைப்பெயு
      தேரு லாநெடு வீதிய தார்தெளி சேரியீர்
      ஏரு லாம்பலி கேகிட வைப்பிட மின்றியே
      வாரு லாமுலை யாளையொர் பாகத்து வைத்ததே. 2.3.4
      26 பக்க நுந்தமை பார்ப்பதி யேத்திமுன் பாவிக்குஞ்
      செக்கர் மாமதி சேர்மதில் சூழ்தெளி சேரியீர்
      மைக்கொள் கண்ணியர் கைவளை மால்செய்து வௌவவே
      நக்க ராயுல கெங்கும் பலிக்கு நடப்பதே. 2.3.5
      27 தவள வெண்பிறை தோய்தரு தாழ்பொழில் சூழநற்
      றிவள மாமணி மாட திகழ்தெளி சேரியீர்
      குவளை போற்கண்ணி துண்ணென வந்து குறுகிய
      கவள மால்கரி யெங்ஙனம் நீர்கையிற் காய்ந்ததே. 2.3.6
      28 கோட டுத்த பொழிலின் மிசைக்குயில் கூவிடுஞ்
      சேட டுத்த தொழிலின் மிகுதெளி சேரியீர்
      மாட டுத்த மலர்க்கண்ணி னாள்கங்கை நங்கையை
      தோட டுத்த மலர்ச்சடை யென்கொல்நீர் சூடிற்றே. 2.3.7
      29 கொத்தி ரைத்த மலர்க்குழ லாள்குயில் கோலஞ்சேர்
      சித்தி ரக்கொடி மாளிகை சூழ்தெளி சேரியீர்
      வித்த கப்படை வல்ல அரக்கன் விறற்றலை
      பத்தி ரட்டி கரம்நெரி திட்டதும் பாதமே. 2.3.8
      30 காலெ டுத்த திரைக்கை கரைக்கெறி கானல்சூழ்
      சேல டுத்த வயற்பழ னத்தெளி சேரியீர்
      மால டித்தல மாமல ரான்முடி தேடியே
      ஓல மிட்டிட எங்ஙன மோருரு கொண்டதே. 2.3.9
      31 மந்தி ரந்தரு மாமறை யோர்கள் தவத்தவர்
      செந்தி லங்கு மொழியவர் சேர்தெளி சேரியீர்
      வெந்த லாகிய சாக்கிய ரோடு சமணர்கள்
      தந்தி றத்தன நீக்குவி தீரோர் சதிரரே. 2.3.10
      32 திக்கு லாம்பொழில் சூழ்தெளி சேரியெஞ் செல்வனை
      மிக்க காழியுள் ஞானசம் பந்தன் விளம்பிய
      தக்க பாடல்கள் பத்தும் வல்லார்கள் தடமுடி
      தொக்க வானவர் சூழ இருப்பவர் சொல்லிலே. 2.3.11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - பார்வதீசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.4 திருவான்மியூர்
      பண் - இந்தளம்
      திருச்சிற்றம்பலம்
      33 கரையு லாங்கட லிற்பொலி சங்கம்வெள் ளிப்பிவன்
      திரையு லாங்கழி மீனுக ளுந்திரு வான்மியூர்
      உரையெ லாம்பொரு ளாயுல காளுடை யீர்சொலீர்
      வரையு லாமட மாதுட னாகிய மாண்பதே. 2.4.1
      34 சந்து யர்ந்தெழு காரகில் தண்புனல் கொண்டுதஞ்
      சிந்தை செய்தடி யார்பர வுந்திரு வான்மியூர
      சுந்த ரக்கழல் மேற்சிலம் பார்க்கவல் லீர்சொலீர்
      அந்தி யின்னொளி யின்னிற மாக்கிய வண்ணமே. 2.4.2
      35 கான யங்கிய தண்கழி சூழ்கட லின்புற
      தேன யங்கிய பைம்பொழில் சூழ்திரு வான்மியூர
      தோன யங்கம ராடையி னீரடி கேள்சொலீர்
      ஆனையங் கவ்வுரி போர்த்தன லாட வுகந்ததே. 2.4.3
      36 மஞ்சு லாவிய மாட மதிற்பொலி மாளிகை
      செஞ்சொ லாளர்கள் தாம்பயி லுந்திரு வான்மியூர்
      துஞ்சு வஞ்சிரு ளாடலு கக்கவல் லீர்சொலீர்
      வஞ்ச நஞ்சுண்டு வானவர கின்னருள் வைத்ததே. 2.4.4
      37 மண்ணி னிற்புகழ் பெற்றவர் மங்கையர் தாம்பயில்
      திண்ணெ னப்புரி சைத்தொழி லார்திரு வான்மியூர
      துண்ணெ னத்திரி யுஞ்சரி தைத்தொழி லீர்சொலீர்
      விண்ணி னிற்பிறை செஞ்சடை வைத்த வியப்பதே. 2.4.5
      38 போது லாவிய தண்பொழில் சூழ்புரி சைப்புற
      தீதி லந்தணர் ஓத்தொழி யாத்திரு வான்மியூர
      சூது லாவிய கொங்கையொர் பங்குடை யீர்சொலீர்
      மூதெ யில்லொரு மூன்றெரி யூட்டிய மொய்ம்பதே. 2.4.6
      39 வண்டி ரைத்த தடம்பொழி லின்னிழற் கானல்வா
      தெண்டி ரைக்கட லோதமல் குந்திரு வான்மியூர
      தொண்டி ரைத்தெழு தேத்திய தொல்கழ லீர்சொலீர்
      பண்டி ருக்கொரு நால்வர்க்கு நீருரை செய்ததே. 2.4.7
      40 தக்கில் வந்த தசக்கிரி வன்றலை பத்திற
      திக்கில் வந்தல றவ்வடர தீர்திரு வான்மியூர
      தொக்க மாதொடும் வீற்றிரு தீரரு ளென்சொலீர்
      பக்க மேபல பாரிடம் பேய்கள் பயின்றதே. 2.4.8
      41 பொருது வார்கட லெண்டிசை யுந்தரு வாரியால்
      திரித ரும்புகழ் செல்வமல் குந்திரு வான்மியூர்
      சுருதி யாரிரு வர்க்கும் அறிவரி யீர்சொலீர்
      எருது மேல்கொ டுழன் றுக தில்பலி யேற்றதே. 2.4.9
      42 மைத ழைத்தெழு சோலையின் மாலைசேர் வண்டினஞ்
      செய்த வத்தொழி லாரிசை சேர்திரு வான்மியூர்
      மெய்த வப்பொடி பூசிய மேனியி னீர்சொலீர்
      கைத வச்சமண் சாக்கியர் கட்டுரை கின்றதே. 2.4.10
      43 மாதொர் கூறுடை நற்றவ னைத்திரு வான்மியூர்
      ஆதி யெம்பெரு மானருள் செய்ய வினாவுரை
      ஓதி யன்றெழு காழியுள் ஞானசம் பந்தன்சொல்
      நீதி யால்நினை வார்நெடு வானுல காள்வரே. 2.4.11
      இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - மருந்தீசுவரர் தேவியார் சுந்தரமாது அல்லது
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.5 திருவனேகதங்காபதம்
      பண் - இந்தளம்
      திருச்சிற்றம்பலம்
      44 நீடல் மேவுநிமிர் புன்சடை மேலொர் நிலாமுளை
      சூடல் மேவுமறை யின்முறை யாலொர் சுலாவழல்
      ஆடல் மேவுமவர் மேய அனேகதங் காவதம்
      பாடல் மேவுமன தார்வினை பற்றறு பார்களே. 2.5.1
      45 சூல முண்டுமழு வுண்டவர் தொல்படை சூழ்கடல்
      ஆல முண்டபெரு மான்றன் அனேகதங் காவதம்
      நீல முண்டதடங் கண்ணுமை பாகம் நிலாயதோர்
      கோல முண்டள வில்லை குலாவிய கொள்கையே. 2.5.2
      46 செம்பி னாருமதில் மூன்றெரி யச்சின வாயதோர்
      அம்பி னாலெய்தருள் வில்லி யனேகதங் காவதங்
      கொம்பின் நேரிடை யாளொடுங் கூடிக்கொல் லேறுடை
      நம்பன் நாமநவி லாதன நாவென லாகுமே. 2.5.3
      47 தந திந்தத்தட மென்றரு வித்திரள் பாய்ந்துபோ
      சிந்த வெந்தகதி ரோனொடு மாசறு திங்களார்
      அந்த மில்லவள வில்ல அனேகதங் காவதம்
      எந்தை வெந்தபொடி நீறணி வார்க்கிட மாவதே. 2.5.4
      48 பிறையு மாசில்கதி ரோனறி யாமை பெயர்ந்துபோய்
      உறையுங் கோயில்பசும் பொன்னணி யாரசும் பார்புனல்
      அறையும் ஓசைபறை போலும் அனேகதங் காவதம்
      இறையெம் மீசனெம் மானிட மாகவு கந்ததே. 2.5.5
      49 தேனை யேறுநறு மாமலர் கொண்டடி சேர்த்துவீர்
      ஆனை யேறுமணி சாரல் அனேகதங் காவதம்
      வானை யேறுநெறி சென்றுண ருந்தனை வல்லிரேல்
      ஆனை யேறுமுடி யானருள் செய்வதும் வானையே. 2.5.6
      50 வெருவி வேழம்இரி யக்கதிர் முத்தொடு வெண்பளிங்
      குருவி வீழவயி ரங்கொழி யாவகி லுந்திவெள்
      ளருவி பாயுமணி சாரல் அனேகதங் காவதம்
      மருவி வாழும்பெரு மான்கழல் சேர்வது வாய்மையே. 2.5.7
      51 ஈர மேதுமில னாகி யெழுந்த இராவணன்
      வீர மேதுமில னாக விளைத்த விலங்கலான்
      ஆரம் பாம்பதணி வான்றன் அனேகதங் காவதம்
      வார மாகிநினை வார்வினை யாயின மாயுமே. 2.5.8
      52 கண்ணன் வண்ணமல ரானொடுங் கூடியோர கையமாய்
      எண்ணும் வண்ணமறி யாமையெ ழுந்ததோ ராரழல்
      அண்ணல் நண்ணுமணி சாரல் அனேகதங் காவதம்
      நண்ணும் வண்ணமுடை யார்வினை யாயின நாசமே. 2.5.9
      53 மாப தம்மறி யாதவர் சாவகர் சாக்கியர்
      ஏப தம்பட நின்றிறு மாந்துழல் வார்கள்தாம்
      ஆப தம்மறி வீருளி ராகில் அனேகதங்
      காப தம்மமர தான்கழல் சேர்தல் கருமமே. 2.5.10
      54 தொல்லை யூழிப்பெயர் தோன்றிய தோணி புரத்திறை
      நல்ல கேள்வித்தமிழ் ஞானசம் பந்தன்நல் லார்கள்முன்
      அல்லல் தீரவுரை செய்த அனேகதங் காவதஞ்
      சொல்ல நல்லஅடை யும்மடை யாசுடு துன்பமே. 2.5.11
      இத்தலம் வடதேசத்திலுள்ளது.
      சுவாமிபெயர் - அருள்மன்னர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.6 திருவையாறு
      பண் - இந்தளம்
      திருச்சிற்றம்பலம்
      55 கோடல் கோங்கங் குளிர்கூ விளமாலை குலாயசீர்
      ஓடு கங்கை ஒளிவெண் பிறைசூடு மொருவனார்
      பாடல் வீணைமுழ வங்குழன் மொந்தைபண் ணாகவே
      ஆடு மாறுவல் லானும் ஐயாறுடை ஐயனே. 01
      56 தன்மை யாரும் அறிவாரில்லை தாம்பிறர் எள்கவே
      பின்னு முன்னுஞ் சிலபே கணஞ்சூழ திரிதர்வர்
      துன்ன ஆடை யுடுப்பர் சுடலைப்பொடி பூசுவர்
      அன்னம் ஆலு துறையானும் ஐயாறுடை ஐயனே. 02
      57 கூறு பெண்ணுடை கோவணம் உண்பதும் வெண்டலை
      மாறி லாருங்கொள் வாரிலை மார்பி லணிகலம்
      ஏறும் ஏறி திரிவரிமை யோர்தொழு தேத்தவே
      ஆறும் நான்குஞ் சொன்னானும் ஐயாறுடை ஐயனே. 03
      58 பண்ணின் நல்லமொழி யார்பவ ளத்துவர் வாயினார்
      எண்ணின் நல்லகுண தாரிணை வேல்வென்ற கண்ணினார்
      வண்ணம் பாடிவலி பாடித்தம் வாய்மொழி பாடவே
      அண்ணல் கேட்டுக தானும் ஐயாறுடை ஐயனே. 04
      59 வேன லானை வெருவவுரி போர்த்துமை யஞ்சவே
      வானை யூடறு கும்மதி சூடிய மைந்தனார்
      தேன்நெய் பால்தயிர் தெங்கிள நீர்கரும் பின்தெளி
      ஆனஞ் சாடும் முடியானும் ஐயாறுடை ஐயனே. 05
      60 எங்கு மாகி நின்றானும் இயல்பறி யப்படா
      மங்கை பாகங் கொண்டானும் மதிசூடு மைந்தனும்
      பங்க மில்பதி னெட்டொடு நான்கு குணர்வுமாய்
      அங்க மாறுஞ் சொன்னானும் ஐயாறுடை ஐயனே. 06
      61 ஓதி யாருமறி வாரிலை யோதி யுலகெலாஞ்
      சோதி யாய்நிறை தான்சுடர சோதியு சோதியான்
      வேதி யாகிவிண் ணாகிமண் ணோடெரி காற்றுமாய்
      ஆதி யாகி நின்றானும் ஐயாறுடை ஐயனே. 07
      62 குரவ நாண்மலர் கொண்டடி யார்வழி பாடுசெய்
      விரவு நீறணி வார்சில தொண்டர் வியப்பவே.
      பரவி நாடொறும் பாடநம் பாவம் பறைதலால்
      அரவ மார்த்துக தானும் ஐயாறுடை ஐயனே. 08
      63 உரைசெய் தொல்வழி செய்தறி யாஇலங் கைக்குமன்
      வரைசெய் தோளடர தும்மதி சூடிய மைந்தனார்
      கரைசெய் காவிரி யின்வட பாலது காதலான்
      அரைசெய் மேகலை யானும் ஐயாறுடை ஐயனே. 09
      64 மாலுஞ் சோதி மலரானும் அறிகிலா வாய்மையான்
      காலங் காம்பு வயிரங் கடிகையன் பொற்கழல்
      கோல மாய்க்கொழு தீன்று பவள திரண்டதோர்
      ஆல நீழ லுளானும் ஐயாறுடை ஐயனே. 10
      65 கையி லுண்டுழல் வாருங் கமழ்துவ ராடையால்
      மெய்யை போர்த்துழல் வாரும் உரைப்பன மெய்யல
      மைகொள் கண்ட தெண்டோ ள்மு கணான்கழல் வாழ்த்தவே
      ஐ தேர்ந்தளி பானும்ஐ யாறுடை ஐயனே. 11
      66 பலிதி ரிந்துழல் பண்டங்கன் மேயஐ யாற்றினை
      கலிக டிந்தகை யான்கடல் காழியர் காவலன்
      ஒலிகொள் சம்பந்தன் ஒண்டமிழ் பத்தும்வல் லார்கள்போய்
      மலிகொள் விண்ணிடை மன்னிய சீர்பெறு வார்களே. 12
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.7 திருவாஞ்சியம்
      பண் - இந்தளம்
      திருச்சிற்றம்பலம்
      67 வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு கூவிளம்
      பொன்னி யன்ற சடையிற் பொலிவித்த புராணனார்
      தென்ன வென்றுவரி வண்டிசை செய்திரு வாஞ்சியம்
      என்னை யாளுடை யானிட மாகவு கந்ததே. 01
      68 கால காலர்கரி கானிடை மாநட மாடுவர்
      மேலர் வேலைவிட முண்டிருள் கின்ற மிடற்றினர்
      மாலை கோலமதி மாடமன் னுந்திரு வாஞ்சியம்
      ஞாலம் வந்துபணி யப்பொலி கோயில் நயந்ததே. 02
      69 மேவி லொன்றர்விரி வுற்ற இரண்டினர் மூன்றுமாய்
      நாவின் நாலர்உட லஞ்சினர் ஆறர்ஏ ழோசையர்
      தேவில் எட்டர்திரு வாஞ்சிய மேவிய செல்வனார்
      பாவ தீர்ப்பர்பழி போக்குவர் தம்மடி யார்கட்கே. 03
      70 சூல மேந்திவளர் கையினர் மெய்சுவண் டாகவே
      சால நல்லபொடி பூசுவர் பேசுவர் மாமறை
      சீல மேவுபுக ழாற்பெரு குந்திரு வாஞ்சியம்
      ஆல முண்டவடி கள்ளிட மாக அமர்ந்ததே. 04
      71 கையி லங்குமறி யேந்துவர் காந்தளம் மெல்விரல்
      தையல் பாகமுடை யாரடை யார்புரஞ் செற்றவர்
      செய்ய மேனிக்கரி யம்மிடற் றார்திரு வாஞ்சி
      தையர் பாதமடை வார்க்கடை யாவரு நோய்களே. 05
      72 அரவம் பூண்பரணி யுஞ்சிலம் பார்க்க அகந்தொறும்
      இரவில் நல்லபலி பேணுவர் நாணிலர் நாமமே
      பரவு வார்வினை தீர்க்கநின் றார்திரு வாஞ்சியம்
      மருவி யேத்தமட மாதொடு நின்றவெம் மைந்தரே. 06
      73 விண்ணி லானபிறை சூடுவர் தாழ்ந்து விளங்கவே
      கண்ணி னாலனங் கன்னுட லம்பொடி யாக்கினார்
      பண்ணி லானஇசை பாடல்மல் குந்திரு வாஞ்சி
      தண்ண லார்தம்அடி போற்றவல் லார்க்கில்லை அல்லலே. 07
      74 மாட நீடுகொடி மன்னிய தென்னிலங் கைக்குமன்
      வாடி யூடவரை யாலடர தன்றருள் செய்தவர்
      வேட வேடர்திரு வாஞ்சியம் மேவிய வேந்தரை
      பாட நீடுமன தார்வினை பற்றறு பார்களே. 08
      75 செடிகொள் நோயின்அடை யார்திறம் பார்செறு தீவினை
      கடிய கூற்றமுங் கண்டக லும்புகல் தான்வரும்
      நெடிய மாலொடயன் ஏத்தநின் றார்திரு வாஞ்சி
      தடிகள் பாதமடை தாரடி யாரடி யார்கட்கே. 09
      76 பிண்ட முண்டுதிரி வார்பிரி யுந்துவ ராடையார்
      மிண்டர் மிண்டுமொழி மெய்யல பொய்யிலை யெம்மிறை
      வண்டு கெண்டிமரு வும்பொழில் சூழ்திரு வாஞ்சி
      தண்ட வாணனடி கைதொழு வார்க்கில்லை அல்லலே. 10
      77 தென்றல் துன்றுபொழில் சென்றணை யுந்திரு வாஞ்சி
      தென்று நின்றஇறை யானையு ணர்ந்தடி யேத்தலால்
      நன்று காழிமறை ஞானசம் பந்தன செந்தமிழ்
      ஒன்று முள்ளமுடை யாரடை வாருயர் வானமே. 11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - வாஞ்சியநாதர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.8 திருச்சிக்கல்
      பண் - இந்தளம்
      திருச்சிற்றம்பலம்
      78 வானுலா வுமதி வந்துல வும்மதின் மாளிகை
      தேனுலா வுமலர சோலைமல் குந்திகழ் சிக்கலுள்
      வேனல்வே ளைவிழி திட்டவெண் ணெய்ப்பெரு மானடி
      ஞானமா கநினை வார்வினை யாயின நையுமே. 01
      79 மடங்கொள் வாளைகுதி கொள்ளும் மணமலர பொய்கைசூழ்
      திடங்கொள் மாமறை யோரவர் மல்கிய சிக்கலுள்
      விடங்கொள் கண்டத்து வெண்ணெய்ப்பெரு மானடி மேவியே
      அடைந்து வாழுமடி யாரவர் அல்லல் அறுப்பரே. 02
      80 நீல நெய்தல்நில விம்மல ருஞ்சுனை நீடிய
      சேலு மாலுங்கழ னிவ்வள மல்கிய சிக்கலுள்
      வேலொண் கண்ணியி னாளையொர் பாகன்வெண் ணெய்ப்பிரான்
      பால வண்ணன்கழ லேத்தநம் பாவம்ப றையுமே. 03
      81 கந்தமு தக்கைதை பூத்துக்க மழ்ந்துசே ரும்பொழிற்
      செந்துவண் டின்னிசை பாடல்மல் குந்திகழ் சிக்கலுள்
      வெந்தவெண் ணீற்றண்ணல் வெண்ணெய்ப்பி ரான்விரை யார்கழல்
      சிந்தைசெய் வார்வினை யாயின தேய்வது திண்ணமே. 04
      82 மங்குல்தங் கும்மறை யோர்கள்மா டத்தய லேமிகு
      தெங்குதுங் கப்பொழிற் செல்வமல் குந்திகழ் சிக்கலுள்
      வெங்கண்வெள் ளேறுடை வெண்ணெய்ப்பி ரானடி மேவவே
      தங்கு மேற்சர தந்திரு நாளுந்த கையுமே. 05
      83 வண்டிரை தும்மது விம்மிய மாமலர பொய்கைசூழ்
      தெண்டிரை கொள்புனல் வந்தொழுகும் வயற் சிக்கலுள்
      விண்டிரை தம்மல ராற்றிகழ் வெண்ணெய்ப்பி ரானடி
      கண்டிரை தும்மன மேமதி யாய்கதி யாகவே. 06
      84 முன்னுமா டம்மதில் மூன்றுட னேயெரி யாய்விழ
      துன்னுவார் வெங்கணை யொன்று செலுத்திய சோதியான்
      செந்நெலா ரும்வயற் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மானடி
      உன்னிநீ டம்மன மேநினை யாய்வினை ஓயவே. 07
      85 தெற்ற லாகிய தென்னிலங் கைக்கிறை வன்மலை
      பற்றி னான்முடி பத்தொடு தோள்கள் நெரியவே
      செற்ற தேவன்நஞ் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மானடி
      உற்று நீநினை வாய்வினை யாயின ஓயவே. 08
      86 மாலி னோடரு மாமறை வல்ல முனிவனுங்
      கோலி னார்குறு கச்சிவன் சேவடி கோலியுஞ்
      சீல தாமறி யார்திகழ் சிக்கல்வெண் ணெய்ப்பிரான்
      பாலும் பன்மலர் தூவ பறையும்நம் பாவமே. 09
      87 பட்டை நற்றுவ ராடையி னாரொடும் பாங்கிலா
      கட்ட மண்கழு கள்சொல்லி னைக்கரு தாதுநீர்
      சிட்டன் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மான்செழு மாமறை
      பட்டன் சேவடி யேபணி மின்பிணி போகவே. 10
      88 கந்த மார்பொழிற் காழியுள் ஞானசம் பந்தன்நல்
      செந்தண் பூம்பொழிற் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மானடி
      சந்தமா சொன்ன செந்தமிழ் வல்லவர் வானிடை
      வெந்த நீறணி யும்பெரு மானடி மேவரே. 11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - நவநீதநாதர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.9 திருமழபாடி
      பண் - இந்தளம்
      திருச்சிற்றம்பலம்
      89 களையும் வல்வினை யஞ்சல்நெஞ் சேகரு தார்புரம்
      உளையும் பூசல்செய் தானுயர் மால்வரை நல்விலா
      வளைய வெஞ்சரம் வாங்கியெய் தான்மது தும்பிவண்
      டளையுங் கொன்றை தார்மழ பாடியுள் அண்ணலே. 01
      90 காச்சி லாதபொன் நோக்குங் கனவயி ரத்திரள்
      ஆச்சி லாதப ளிங்கினன் அஞ்சுமுன் ஆடினான்
      பேச்சி னாலு காவதென் பேதைகாள் பேணுமின்
      வாச்ச மாளிகை சூழ்மழ பாடியை வாழ்த்துமே. 02
      91 உரங்கெ டுப்பவன் உம்பர்க ளாயவர் தங்களை
      பரங்கெ டுப்பவன் நஞ்சையுண் டுபக லோன்றனை
      முரண்கெ டுப்பவன் முப்புர தீயெழ செற்றுமுன்
      வரங்கொ டுப்பவன் மாமழ பாடியுள் வள்ளலே. 03
      92 பள்ள மார்சடை யிற்புடை யேயடை யப்புனல்
      வெள்ளம் ஆதரி தான்விடை யேறிய வேதியன்
      வள்ளல் மாமழ பாடியுள் மேய மருந்தினை
      உள்ளம் ஆதரி மின்வினை யாயின ஓயவே. 04
      93 தேனு லாமலர் கொண்டுமெ தேவர்கள் சித்தர்கள்
      பால்நெய் அஞ்சுடன் ஆட்டமுன் ஆடிய பால்வணன்
      வான நாடர்கள் கைதொழு மாமழ பாடியெங்
      கோனை நாடொறுங் கும்பிட வேகுறி கூடுமே. 05
      94 தெரிந்த வன்புரம் மூன்றுடன் மாட்டிய சேவகன்
      பரிந்து கைதொழு வாரவர் தம்மனம் பாவினான்
      வரிந்த வெஞ்சிலை யொன்றுடை யான்மழ பாடியை
      புரிந்து கைதொழு மின்வினை யாயின போகுமே. 06
      95 சந்த வார்குழ லாளுமை தன்னொரு கூறுடை
      எந்தை யான்இமை யாதமு கண்ணினன் எம்பிரான்
      மைந்தன் வார்பொழில் சூழ்மழ பாடிம ருந்தினை
      சிந்தி யாவெழு வார்வினை யாயின தேயுமே. 07
      96 இரக்க மொன்றுமி லான்இறை யான்திரு மாமலை
      உரக்கை யாலெடு தான்றன தொண்முடி பத்திற
      விரற்ற லைந்நிறு வியுமை யாளொடு மேயவன்
      வரத்தை யேகொடு கும்மழ பாடியுள் வள்ளலே. 08
      97 ஆலம் உண்டமு தம்மம ரர்க்கருள் அண்ணலார்
      காலன் ஆருயிர் வீட்டிய மாமணி கண்டனார்
      சால நல்லடி யார்தவ தார்களுஞ் சார்விடம்
      மால யன்வணங் கும்மழ பாடியெம் மைந்தனே. 09
      98 கலியின் வல்லம ணுங்கருஞ் சாக்கி பேய்களும்
      நலியும் நாள்கெடு தாண்டஎன் நாதனார் வாழ்பதி
      பலியும் பாட்டொடு பண்முழ வும்பல வோசையும்
      மலியும் மாமழ பாடியை வாழ்த்தி வணங்குமே. 10
      99 மலியு மாளிகை சூழ் மழபாடியுள் வள்ளலை
      கலிசெய் மாமதில் சூழ்கடற் காழி கவுணியன்
      ஒலிசெய் பாடல்கள் பத்திவை வல்லார்.......உலகத்திலே. 11
      இப்பதிகத்தின் 11-ம் செய்யுளின் பின்னிரண்டடிகள் சிதைவுற்றன.
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - வச்சிரத்தம்பேசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.10 திருமங்கலக்குடி
      பண் - இந்தளம்
      திருச்சிற்றம்பலம்
      100 சீரி னார்மணி யும்மகில் சந்துஞ் செறிவரை
      வாரி நீர்வரு பொன்னி வடமங்க லக்குடி
      நீரின் மாமுனி வன்நெடுங் கைகொடு நீர்தனை
      பூரி தாட்டியர சிக்கஇ ருந்த புராணனே. 01
      101 பணங்கொ ளாடர வல்குல்நல் லார்பயின் றேத்தவே
      மணங்கொள் மாமயி லாலும்பொ ழில்மங்க லக்குடி
      இணங்கி லாமறை யோரிமை யோர்தொழு தேத்திட
      அணங்கி னோடிரு தானடி யேசர ணாகுமே. 02
      102 கருங்கை யானையின் ஈருரி போர்த்திடு கள்வனார்
      மருங்கெ லாம்மண மார்பொழில் சூழ்மங்க லக்குடி
      அரும்பு சேர்மலர கொன்றையி னானடி யன்பொடு
      விரும்பி யேத்தவல் லார்வினை யாயின வீடுமே. 03
      103 பறையி னோடொலி பாடலும் ஆடலும் பாரிடம்
      மறையி னோடியல் மல்கிடு வார்மங்க லக்குடி
      குறைவி லாநிறை வேகுண மில்குண மேயென்று
      முறையி னால்வணங் கும்மவர் முன்னெறி காண்பரே. 04
      104 ஆனி லங்கிளர் ஐந்தும் அவிர்முடி யாடியோர்
      மானி லங்கையி னான்மண மார்மங்க லக்குடி
      ஊனில் வெண்டலை கையுடை யானுயர் பாதமே
      ஞான மாகநின் றேத்தவல் லார்வினை நாசமே. 05
      105 தேனு மாயமு தாகிநின் றான்றெளி சிந்தையுள்
      வானு மாய்மதி சூடவல் லான்மங்க லக்குடி
      கோனை நாடொறும் ஏத்தி குணங்கொடு கூறுவார்
      ஊன மானவை போயறும் உய்யும் வகையதே. 06
      106 வேள் படுத்திடு கண்ணினன் மேருவில் லாகவே
      வாள ரக்கர் புரமெரி தான்மங்க லக்குடி
      ஆளு மாதி பிரானடி கள்ளடை தேத்தவே
      கோளு நாளவை போயறுங் குற்றமில் லார்களே. 07
      107 பொலியும் மால்வரை புக்கெடு தான்புகழ தேத்திட
      வலியும் வாளொடு நாள்கொடு தான்மங்க லக்குடி
      புலியின் ஆடையி னானடி யேத்திடும் புண்ணியர்
      மலியும் வானுல கம்புக வல்லவர் காண்மினே. 08
      108 ஞாலம் முன்படை தான்நளிர் மாமலர் மேலயன்
      மாலுங் காணவொ ணாஎரி யான்மங்க லக்குடி
      ஏல வார்குழ லாளொரு பாகமி டங்கொடு
      கோல மாகிநின் றான்குணங் கூறுங் குணமதே. 09
      109 மெய்யின் மாசினர் மேனி விரிதுவ ராடையர்
      பொய்யை விட்டிடும் புண்ணியர் சேர்மங்க லக்குடி
      செய்ய மேனி செழும்புனற் கங்கைசெ றிசடை
      ஐயன் சேவடி யேத்தவல் லார்க்கழ காகுமே. 10
      110 மந்த மாம்பொழில் சூழ்மங்க லக்குடி மன்னிய
      எந்தை யையெழி லார்பொழிற் காழியர் காவலன்
      சிந்தை செய்தடி சேர்த்திடு ஞானசம் பந்தன்சொல்
      முந்தி யேத்தவல் லாரிமை யோர்முத லாவரே. 11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - புராணவரதேசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.11 சீகாழி
      பண் - இந்தளம்
      திருச்சிற்றம்பலம்
      111 நல்லானை நான்மறை யோடிய லாறங்கம்
      வல்லானை வல்லவர் பான்மலி தோங்கிய
      சொல்லானை தொன்மதிற் காழியே கோயிலாம்
      இல்லானை யேத்தநின் றார்க்குள தின்பமே. 01
      112 நம்மான மாற்றி நமக்கரு ளாய்நின்ற
      பெம்மானை பேயுடன் ஆடல் புரிந்தானை
      அம்மானை அந்தணர் சேரு மணிகாழி
      எம்மானை ஏத்தவல் லார்க்கிட ரில்லையே. 02
      113 அருந்தானை யன்புசெய் தேத்தகில் லார்பால்
      பொருந்தானை பொய்யடி மைத்தொழில் செய்வாருள்
      விருந்தானை வேதிய ரோதி மிடைகாழி
      இருந்தானை யேத்துமின் நும்வினை யேகவே. 03
      114 புற்றானை புற்றர வம்மரை யின்மிசை
      சுற்றானை தொண்டுசெய் வாரவர் தம்மொடும்
      அற்றானை அந்தணர் காழி யமர்கோயில்
      பற்றானை பற்றிநின் றார்க்கில்லை பாவமே. 04
      115 நெதியானை நெஞ்சிடங் கொள்ள நினைவார்தம்
      விதியானை விண்ணவர் தாம்வி தேத்திய
      கதியானை காருல வும்பொழிற் காழியாம்
      பதியானை பாடுமின் நும்வினை பாறவே. 05
      116 செப்பான மென்முலை யாளை திகழ்மேனி
      வைப்பானை வார்கழ லேத்தி நினைவார்தம்
      ஒப்பானை ஓதம் உலாவு கடற்காழி
      மெய்ப்பானை மேவிய மாந்தர் வியந்தாரே. 06
      117 துன்பானை துன்பம் அழித்தரு ளாக்கிய
      இன்பானை யேழிசை யின்னிலை பேணுவார்
      அன்பானை அணிபொழிற் காழி நகர்மேய
      நம்பானை நண்ணவல் லார்வினை நாசமே. 07
      118 குன்றானை குன்றெடு தான்புயம் நாலைந்தும்
      வென்றானை மென்மல ரானொடு மால்தேட
      நின்றானை நேரிழை யாளொடுங் காழியுள்
      நன்றானை நம்பெரு மானை நணுகுமே. 08
      இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் மறைந்து போயிற்று. 09
      119 சாவாயும் வாதுசெய் சாவகர் சாக்கியர்
      மேவாத சொல்லவை கேட்டு வெகுளேன்மின்
      பூவாய கொன்றையி னானை புனற்காழி
      கோவாய கொள்கையி னாணடி கூறுமே. 10
      120 கழியார்சீ ரோதமல் குங்கடற் காழியுள்
      ஒழியாது கோயில்கொண் டானை யுகந்துள்கி
      தழியார்சொல் ஞானசம் பந்தன் தமிழார
      மொழிவார்கள் மூவுல கும்பெறு வார்களே. 11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.12 திருவேகம்பம்
      பண் - இந்தளம்
      திருச்சிற்றம்பலம்
      121 மறையானை மாசிலா புன்சடை மல்குவெண்
      பிறையானை பெண்ணொடா ணாகிய பெம்மானை
      இறையானை யேர்கொள்க சித்திரு வேகம்ப
      துறைவானை யல்லதுள் காதென துள்ளமே. 01
      122 நொச்சியே வன்னிகொன் றைமதி கூவிளம்
      உச்சியே புனைதல்வே டம்விடை யூர்தியான்
      கச்சியே கம்பம்மே யகறை கண்டனை
      நச்சியே தொழுமின்நும் மேல்வினை நையுமே. 02
      123 பாராரு முழவமொ தைகுழல் யாழொலி
      சீராலே பாடலா டல்சிதை வில்லதோர்
      ஏரார்பூங் கச்சியே கம்பனை யெம்மானை
      சேராதார் இன்பமா யந்நெறி சேராரே. 03
      124 குன்றேய்க்கு நெடுவெண்மா டக்கொடி கூடிப்போய்
      மின்றேய்க்கு முகில்கள்தோ யும்வியன் கச்சியுள்
      மன்றேய்க்கு மல்குசீ ரான்மலி யேகம்பஞ்
      சென்றேய்க்குஞ் சிந்தையார் மேல்வினை சேராவே. 04
      125 சடையானை தலைகையே திப்பலி தருவார்தங்
      கடையேபோய் மூன்றுங்கொண் டான்கலி கச்சியுள்
      புடையேபொன் மலருங்கம் பைக்கரை யேகம்பம்
      உடையானை யல்லதுள் காதென துள்ளமே. 05
      126 மழுவாளோ டெழில்கொள்சூ லப்படை வல்லார்தங்
      கெழுவாளோ ரிமையாரு சியுமை யாள்கங்கை
      வழுவாமே மல்குசீ ரால்வள ரேகம்ப
      தொழுவாரே விழுமியார் மேல்வினை துன்னாவே. 06
      127 விண்ணுளார் மறைகள்வே தம்விரி தோதுவார்
      கண்ணுளார் கழலின்வெல் வார்கரி காலனை
      நண்ணுவா ரெழில்கொள்க சிநக ரேகம்ப
      தண்ணலா ராடுகின் றவலங் காரமே. 07
      128 தூயானை தூயவா யம்மறை யோதிய
      வாயானை வாளர கன்வலி வாட்டிய
      தீயானை தீதில்க சித்திரு வேகம்பம்
      மேயானை மேவுவா ரென்றலை மேலாரே. 08
      129 நாகம்பூண் ஏறதே றல்நறுங் கொன்றைதார்
      பாகம்பெண் பலியுமேற் பர்மறை பாடுவர்
      ஏகம்பம் மேவியா டுமிறை யிருவர்க்கும்
      மாகம்பம் அறியும்வண் ணத்தவ னல்லனே. 09
      130 போதியார் பிண்டியா ரென்றிவர் பொய்ந்நூலை
      வாதியா வம்மினம் மாவெனுங் கச்சியுள்
      ஆதியார் மேவியா டுந்திரு வேகம்பம்
      நீதியாற் றொழுமினும் மேல்வினை நில்லாவே. 10
      131 அந்தண்பூங் கச்சியே கம்பனை யம்மானை
      கந்தண்பூங் காழியூ ரன்கலி கோவையால்
      சந்தமே பாடவல் லதமிழ் ஞானசம்
      பந்தன்சொற் பாடியா டக்கெடும் பாவமே. 11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.13 திருக்கோழம்பம்
      பண் - இந்தளம்
      திருச்சிற்றம்பலம்
      132 நீற்றானை நீள்சடை மேல்நிறை வுள்ளதோர்
      ஆற்றானை அழகமர் மென்முலை யாளையோர்
      கூற்றானை குளிர்பொழிற் கோழம்பம் மேவிய
      ஏற்றானை யேத்துமின் நும்மிடர் ஏகவே. 01
      133 மையான கண்டனை மான்மறி யேந்திய
      கையானை கடிபொழிற் கோழம்பம் மேவிய
      செய்யானை தேன்நெய்பா லுந்திகழ தாடிய
      மெய்யானை மேவுவார் மேல்வினை மேவாவே. 02
      134 ஏதனை யேதமி லாஇமை யோர்தொழும்
      வேதனை வெண்குழை தோடுவி ளங்கிய
      காதனை கடிபொழிற் கோழம்பம் மேவிய
      நாதனை யேத்துமின் நும்வினை நையவே. 03
      135 சடையானை தண்மல ரான்சிர மேந்திய
      விடையானை வேதமும் வேள்வியு மாயநன்
      குடையானை குளிர்பொழில் சூழ்திரு கோழம்பம்
      உடையானை உள்குமின் உள்ளங்கு ளிரவே. 04
      136 காரானை கடிகமழ் கொன்றையம் போதணி
      தாரானை தையலோர்பால்மகிழ தோங்கிய
      சீரானை செறிபொழிற் கோழம்பம் மேவிய
      ஊரானை யேத்துமின் நும்மிடர் ஒல்கவே. 05
      137 பண்டாலின் நீழலா னைப்பரஞ் சோதியை
      விண்டார்கள் தம்புரம் மூன்றுட னேவேவ
      கண்டானை கடிகமழ் கோழம்பங் கோயிலா
      கொண்டானை கூறுமின் உள்ளங் குளிரவே. 06
      138 சொல்லானை சுடுகணை யாற்புரம் மூன்றெய்த
      வில்லானை வேதமும் வேள்வியு மானானை
      கொல்லானை உரியானை கோழம்பம் மேவிய
      நல்லானை யேத்துமின் நும்மிடர் நையவே. 07
      139 விற்றானை வல்லர கர்விறல் வேந்தனை
      குற்றானை திருவிர லாற்கொடுங் காலனை
      செற்றானை சீர்திக ழுந்திரு கோழம்பம்
      பற்றானை பற்றுவார் மேல்வினை பற்றாவே. 08
      140 நெடியானோ டயனறி யாவகை நின்றதோர்
      படியானை பண்டரங்க வேடம்ப யின்றானை
      கடியாருங் கோழம்பம் மேவிய வெள்ளேற்றின்
      கொடியானை கூறுமின் உள்ளங் குளிரவே. 09
      141 புத்தரு தோகையம் பீலிகொள் பொய்ம்மொழி
      பித்தரும் பேசுவ பேச்சல்ல பீடுடை
      கொத்தலர் தண்பொழிற் கோழம்பம் மேவிய
      அத்தனை யேத்துமின் அல்லல் அறுக்கவே. 10
      142 தண்புன லோங்குதண் ணந்தராய் மாநகர்
      நண்புடை ஞானசம் பந்தன்நம் பானுறை
      விண்பொழிற் கோழம்பம் மேவிய பத்திவை
      பண்கொள பாடவல் லார்க்கில்லை பாவமே. 11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - கோகுலேசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.14 திருவெண்ணியூர்
      பண் - இந்தளம்
      திருச்சிற்றம்பலம்
      143 சடையானை சந்திர னோடுசெங் கண்ணரா
      உடையானை உடைதலை யிற்பலி கொண்டூரும்
      விடையானை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியை
      உடையானை யல்லதுள் காதென துள்ளமே. 01
      144 சோதியை சுண்ணவெண் ணீறணி திட்டவெம்
      ஆதியை ஆதியும் அந்தமு மில்லாத
      வேதியை வேதியர் தாந்தொழும் வெண்ணியில்
      நீதியை நினையவல் லார்வினை நில்லாவே. 02
      145 கனிதனை கனிந்தவ ரைக்கல தாட்கொள்ளும்
      முனிதனை மூவுல குக்கொரு மூர்த்தியை
      நனிதனை நல்லவர் தாந்தொழும் வெண்ணியில்
      இனிதனை யேத்துவ ரேதமி லாதாரே. 03
      146 மூத்தானை மூவுல குக்கொரு மூர்த்தியா
      காத்தானை கனிந்தவ ரைக்கல தாளாக
      ஆர்த்தானை அழகமர் வெண்ணியம் மான்றன்னை
      ஏத்தாதா ரென்செய்வார் ஏழை பேய்களே. 04
      147 நீரானை நிறைபுனல் சூழ்தரு நீள்கொன்றை
      தாரானை தையலோர் பாகமு டையானை
      சீரானை திகழ்தரு வெண்ணிய மர்ந்துறை
      ஊரானை உள்கவல் லார்வினை யோயுமே. 05
      148 முத்தினை முழுவயி ரத்திரள் மாணிக்க
      தொத்தினை துளக்கமில் லாதவி ளக்காய
      வித்தினை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியில்
      அத்தனை யடையவல் லார்க்கில்லை அல்லலே. 06
      149 காய்ந்தானை காமனை யுஞ்செறு காலனை
      பாய்ந்தானை பரியகைம் மாவுரி தோன்மெய்யின்
      மேய்ந்தானை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியில்
      நீந்தானை நினையவல் லார்வினை நில்லாவே. 07
      150 மறுத்தானை மாமலை யைமதி யாதோடி
      செறுத்தானை தேசழி யத்திகழ் தோள்முடி
      இறுத்தானை யெழிலமர் வெண்ணியெம் மானென
      பொறுத்தானை போற்றுவா ராற்ற லுடையாரே. 08
      151 மண்ணினை வானவ ரோடுமனி தர்க்குங்
      கண்ணினை கண்ணனும் நான்முகனுங் காணா
      விண்ணினை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியில்
      அண்ணலை அடையவல் லார்க்கில்லை அல்லலே. 09
      152 குண்டருங் குணமிலா தசமண் சாக்கிய
      மிண்டர்கள் மிண்டவை கேட்டு வெகுளன்மின்
      விண்டவர் தம்புரம் எய்தவன் வெண்ணியில்
      தொண்டரா யேத்தவல் லார்துயர் தோன்றாவே. 10
      153 மருவாரு மல்குகா ழித்திகழ் சம்பந்தன்
      திருவாரு திகழ்தரு வெண்ணி யமர்ந்தானை
      உருவாரும் ஒண்டமிழ் மாலை யிவைவல்லார்
      பொருவாக புக்கிரு பார்புவ லோகத்தே. 11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - வெண்ணிநாயகர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.15 திருக்காறாயில்
      பண் - இந்தளம்
      திருச்சிற்றம்பலம்
      154 நீரானே நீள்சடை மேலொர் நிரைகொன்றை
      தாரானே தாமரை மேலயன் தான்றொழுஞ்
      சீரானே சீர்திக ழுந்திரு காறாயில் ஊரானே யென்பவர் ஊனமி லாதாரே. 01
      155 மதியானே வரியர வோடுடன் மத்தஞ்சேர்
      விதியானே விதியுடை வேதியர் தாந்தொழும்
      நெதியானே நீர்வயல் சூழ்திரு காறாயிற்
      பதியானே யென்பவர் பாவமி லாதாரே. 02
      156 விண்ணானே விண்ணவ ரேத்திவி ரும்புஞ்சீர்
      மண்ணானே மண்ணிடை வாழுமு யிர்க்கெல்லாங்
      கண்ணானே கடிபொழில் சூழ்திரு காறாயில்
      எண்ணானே யென்பவர் ஏதமி லாதாரே. 03
      157 தாயானே தந்தையு மாகிய தன்மைகள்
      ஆயானே ஆயநல் லன்பர்க்க ணியானே
      சேயானே சீர்திக ழுந்திரு காறாயில்
      மேயானே யென்பவர் மேல்வினை மேவாவே. 04
      158 கலையானே கலைமலி செம்பொற் கயிலாய
      மலையானே மலைபவர் மும்மதில் மாய்வித்த
      சிலையானே சீர்திக ழுந்திரு காறாயில்
      நிலையானே யென்பவர் மேல்வினை நில்லாவே. 05
      159 ஆற்றானே ஆறணி செஞ்சடை யாடர
      வேற்றானே ஏழுல கும்மிமை யோர்களும்
      போற்றானே பொழில்திக ழுந்திரு காறாயில்
      நீற்றானே யென்பவர் மேல்வினை நில்லாவே. 06
      160 சேர்த்தானே தீவினை தேய்ந்தற தேவர்கள்
      ஏத்தானே யேத்துநன் மாமுனி வர்க்கிடர்
      காத்தானே கார்வயல் சூழ்திரு காறாயில்
      ஆர்த்தானே யென்பவர் மேல்வினை யாடாவே. 07
      161 கடுத்தானே காலனை காலாற் கயிலாயம்
      எடுத்தானை யேதமா கம்முனி வர்க்கிடர்
      கெடுத்தானே கேழ்கிள ருந்திரு காறாயில்
      அடுத்தானே யென்பவர் மேல்வினை யாடாவே. 08
      162 பிறையானே பேணிய பாடலோ டின்னிசை
      மறையானே மாலொடு நான்முகன் காணாத
      இறையானே யெழில்திக ழுந்திரு காறாயில்
      உறைவானே யென்பவர் மேல்வினை ஓடுமே. 09
      163 செடியாரும் புன்சமண் சீவர தார்களும்
      படியாரும் பாவிகள் பேச்சு பயனில்லை
      கடியாரும் பூம்பொழில் சூழ்திரு காறாயில்
      குடியாருங் கொள்கையி னார்க்கில்லை குற்றமே. 10
      164 ஏய்ந்தசீ ரெழில்திக ழுந்திரு காறாயில்
      ஆய்ந்தசீ ரானடி யேத்தி யருள்பெற்ற
      பாய்ந்தநீர காழியுள் ஞானசம் பந்தன்சொல்
      வாய்ந்தவா றேத்துவார் வானுல காள்வாரே. 11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - கண்ணாயிரநாதர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.16 திருமணஞ்சேரி
      பண் - இந்தளம்
      திருச்சிற்றம்பலம்
      165 அயிலாரும் அம்பத னாற்புர மூன்றெய்து
      குயிலாரும் மென்மொழி யாளொரு கூறாகி
      மயிலாரும் மல்கிய சோலை மணஞ்சேரி
      பயில்வானை பற்றிநின் றார்க்கில்லை பாவமே. 01
      166 விதியானை விண்ணவர் தாந்தொழு தேத்திய
      நெதியானை நீள்சடை மேல்நிகழ் வித்தவான்
      மதியானை வண்பொழில் சூழ்ந்த மணஞ்சேரி
      பதியானை பாடவல் லார்வினை பாறுமே. 02
      167 எய்ப்பானார கின்புறு தேனளி தூறிய
      இப்பாலா யெனையும் ஆள வுரியானை
      வைப்பான மாடங்கள் சூழ்ந்த மணஞ்சேரி
      மெய்ப்பானை மேவிநின் றார்வினை வீடுமே. 03
      168 விடையானை மேலுல கேழுமி பாரெலாம்
      உடையானை ஊழிதோ றூழி உளதாய
      படையானை பண்ணிசை பாடு மணஞ்சேரி
      அடைவானை யடையவல் லார்க்கில்லை யல்லலே. 04
      169 எறியார்பூங் கொன்றையி னோடும் இளமத்தம்
      வெறியாருஞ் செஞ்சடை யார மிலைத்தானை
      மறியாருங் கையுடை யானை மணஞ்சேரி
      செறிவானை செப்பவல் லார்க்கிடர் சேராவே. 05
      170 மொழியானை முன்னொரு நான்மறை யாறங்கம்
      பழியாமை பண்ணிசை யான பகர்வானை
      வழியானை வானவ ரேத்து மணஞ்சேரி
      இழியாமை யேத்தவல் லார்க்கெய்தும் இன்பமே. 06
      171 எண்ணானை யெண்ணமர் சீரிமை யோர்கட்கு
      கண்ணானை கண்ணொரு மூன்று முடையானை
      மண்ணானை மாவயல் சூழ்ந்த மணஞ்சேரி
      பெண்ணானை பேசநின் றார்பெரி யோர்களே. 07
      172 எடுத்தானை யெழில்முடி யெட்டும் இரண்டுந்தோள்
      கெடுத்தானை கேடிலா செம்மை யுடையானை
      மடுத்தார வண்டிசை பாடும் மணஞ்சேரி
      பிடித்தார பேணவல் லார்பெரியோர்களே. 08
      173 சொல்லானை தோற்றங்கண் டானும் நெடுமாலுங்
      கல்லானை கற்றன சொல்லி தொழுதோங்க
      வல்லார்நன் மாதவ ரேத்து மணஞ்சேரி
      எல்லாமாம் எம்பெரு மான்கழல் ஏத்துமே. 09
      174 சற்றேயு தாமறி வில்சமண் சாக்கியர்
      சொற்றேயும் வண்ணமொர் செம்மை உடையானை
      வற்றாத வாவிகள் சூழ்ந்த மணஞ்சேரி
      பற்றாக வாழ்பவர் மேல்வினை பற்றாவே. 10
      175 கண்ணாருங் காழியர் கோன்கரு தார்வித்த
      தண்ணார்சீர் ஞானசம் பந்தன் தமிழ்மாலை
      மண்ணாரும் மாவயல் சூழ்ந்த மணஞ்சேரி
      பண்ணார பாடவல் லார்க்கில்லை பாவமே. 11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - மணவாளநாயகர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.17 திருவேணுபுரம்
      பண் - இந்தளம்
      திருச்சிற்றம்பலம்
      176 நிலவும் புனலும் நிறைவா ளரவும்
      இலகுஞ் சடையார கிடமாம் எழிலார்
      உலவும் வயலு கொளியார் முத்தம்
      விலகுங் கடலார் வேணு புரமே. 01
      177 அரவார் கரவன் அமையார் திரள்தோள்
      குரவார் குழலா ளொருகூ றனிடங்
      கரவா தகொடை கலந்தா ரவர்க்கு
      விரவா கவல்லார் வேணு புரமே. 02
      178 ஆகம் மழகா யவள்தான் வெருவ
      நாகம் உரிபோர தவனண் ணுமிடம்
      போக தருசீர் வயல்சூழ் பொழில்கள்
      மேக தவழும் வேணு புரமே.
      03
      179 காச கடலில் விடமுண் டகண்ட
      தீசர கிடமா வதுஇன் னறவ
      வாச கமல தனம்வன் றிரைகள்
      வீச துயிலும் வேணு புரமே. 04
      180 அரையார் கலைசேர் அனமென் னடையை
      உரையா வுகந்தா னுறையும் இடமாம்
      நிரையார் கமுகின் நிகழ்பா ளையுடை
      விரையார் பொழில்சூழ் வேணு புரமே. 05
      181 ஒளிரும் பிறையும் முறுகூ விளவின்
      தளிருஞ் சடைமே லுடையா னிடமாம்
      நளிரும் புனலின் னலசெங் கயல்கள்
      மிளிரும் வயல்சூழ் வேணு புரமே. 06
      இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 07
      182 ஏவும் படைவே தன்இரா வணனை
      ஆவென் றலற அடர்த்தா னிடமா
      தாவும் மறிமா னொடுதண் மதியம்
      மேவும் பொழில்சூழ் வேணு புரமே. 08
      183 கண்ணன் கடிமா மலரிற் றிகழும்
      அண்ணல் இருவர் அறியா இறையூர்
      வண்ண சுதைமா ளிகைமேற் கொடிகள்
      விண்ணிற் றிகழும் வேணு புரமே. 09
      184 போகம் மறியார் துவர்போர துழல்வார்
      ஆகம் மறியா அடியார் இறையூர்
      மூகம் மறிவார் கலைமு தமிழ்நூல்
      மீகம் மறிவார் வேணு புரமே. 10
      185 கலமார் கடல்போல் வளமார் தருநற்
      புலமார் தருவே ணுபுர திறையை
      நலமார் தருஞா னசம்ப தன்சொன்ன
      குலமார் தமிழ்கூ றுவர்கூர் மையரே. 11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.18 திருமருகல் - விடந்தீர்த்ததிருப்பதிகம் 186-196
      பண் - இந்தளம்
      திருச்சிற்றம்பலம்
      186 சடையா யெனுமால் சரண்நீ
      விடையா யெனுமால் வெருவா விழுமால்
      மடையார் குவளை மலரும் மருகல்
      உடையாய் தகுமோ இவள்உள் மெலிவே. 01
      187 சிந்தா யெனுமால் சிவனே
      முந்தா யெனுமால் முதல்வா எனுமால்
      கொந்தார் குவளை குலவும் மருகல்
      எந்தாய் தகுமோ இவள்ஏ சறவே. 02
      188 அறையார் கழலும் மழல்வா யரவும்
      பிறையார் சடையும் முடையாய் பெரிய
      மறையார் மருகல் மகிழ்வா யிவளை
      இறையார் வளைகொண் டெழில்வவ் வினையே. 03
      189 ஒலிநீர் சடையிற் கரந்தா யுலகம்
      பலிநீ திரிவாய் பழியில் புகழாய்
      மலிநீர் மருகல் மகிழ்வா யிவளை
      மெலிநீர் மையளா கவும்வேண் டினையே. 04
      190 துணிநீ லவண்ணம் முகில்தோன் றியன்ன
      மணிநீ லகண்ட முடையாய் மருகல்
      கணிநீ லவண்டார் குழலாள் இவள்தன்
      அணிநீ லவொண்கண் அயர்வா கினையே. 05
      191 பலரும் பரவ படுவாய் சடைமேல்
      மலரும் பிறையொன் றுடையாய் மருகல்
      புலரு தனையு துயிலாள் புடைபோ
      தலரும் படுமோ அடியா ளிவளே. 06
      192 வழுவாள் பெருமான் கழல்வாழ் கவெனா
      எழுவாள் நினைவாள் இரவும் பகலும்
      மழுவா ளுடையாய் மருகல் பெருமான்
      தொழுவா ளிவளை துயரா கினையே. 07
      193 இலங்கை கிறைவன் விலங்க லெடுப்ப
      துலங்கவ் விரலூன் றலுந்தோன் றலனாய்
      வலங்கொள் மதில்சூழ் மருகற் பெருமான்
      அலங்கல் லிவளை அலரா கினையே. 08
      194 எரியார் சடையும் மடியும் மிருவர்
      தெரியா ததோர்தீ திரளா யவனே
      மரியார் பிரியா மருகற் பெருமான்
      அரியாள் இவளை அயர்வா கினையே. 09
      195 அறிவில் சமணும் மலர்சா கியரும்
      நெறியல் லனசெய் தனர்நின் றுழல்வார்
      மறியே துகையாய் மருகற் பெருமான்
      நெறியார் குழலி நிறைநீ கினையே. 10
      196 வயஞா னம்வல்லார் மருகற் பெருமான்
      உயர்ஞா னமுணர தடியுள் குதலால்
      இயன்ஞா னசம்ப தனபா டல்வல்லார்
      வியன்ஞா லமெல்லாம் விளங்கும் புகழே. 11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.19 திருநெல்லிக்கா 197-207
      பண் - இந்தளம்
      திருச்சிற்றம்பலம்
      197 அறத்தா லுயிர்கா வலமர தருளி
      மறத்தால் மதில்மூன் றுடன்மாண் பழித்த
      திறத்தால் தெரிவெய் தியதீ வெண்டிங்கள்
      நிறத்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே. 01
      198 பதிதா னிடுகா டுபைங்கொன் றைதொங்கல்
      மதிதா னதுசூ டியமை தனுந்தான்
      விதிதான் வினைதான் விழுப்பம் பயக்கும்
      நெதிதான் நெல்லிக்கா வுள்நிலா யவனே. 02
      199 நலந்தா னவன்நான் முகன்றன் தலையை
      கலந்தா னதுகொண் டகபா லியுந்தான்
      புலந்தான் புகழா லெரிவிண் புகழும்
      நிலந்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே. 03
      200 தலைதா னதுஏ தியதம் மடிகள்
      கலைதான் திரிகா டிடம்நா டிடமா
      மலைதா னெடுத்தான் மதில்மூன் றுடைய
      நிலைதான் நெல்லிக்கா வுள்நிலா யவனே. 04
      201 தவந்தான் கதிதான் மதிவார் சடைமேல்
      உவந்தான் சுறவே தனுரு வழி
      சிவந்தான் செயச்செய் துசெறு துலகில்
      நிவந்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே. 05
      202 வெறியார் மலர்க்கொன் றையந்தார் விரும்பி
      மறியார் மலைமங் கைமகிழ தவன்றான்
      குறியாற் குறிகொண் டவர்போ குறுகும்
      நெறியான் நெல்லிக்கா வுள்நிலா யவனே. 06
      203 பிறைதான் சடைச்சேர தியஎ தைபெம்மான்
      இறைதான் இறவா கயிலை மலையான்
      மறைதான் புனலொண் மதிமல் குசென்னி
      நிறைதான் நெல்லிக்கா வுள்நிலா யவனே. 07
      204 மறைத்தான் பிணிமா தொருபா கந்தன்னை
      மிறைத்தான் வரையா லரக்கன் மிகையை
      குறைத்தான் சடைமேற் குளிர்கோல் வளையை
      நிறைத்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே. 08
      205 தழல்தா மரையான் வையந்தா யவனுங்
      கழல்தான் முடிகா ணியநா ணொளிரும்
      அழல்தான் அடியார கருளா பயக்கும்
      நிழல்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே. 09
      206 கனத்தார் திரைமாண் டழற்கான் றநஞ்சை
      எனத்தா வெனவாங் கியதுண் டகண்டன்
      மனத்தாற் சமண்சா கியர்மாண் பழிய
      நினைத்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே. 10
      207 புகரே துமிலா தபுத்தே ளுலகின்
      நிகரா நெல்லிக்கா வுள்நிலா யவனை
      நகரா நலஞா னசம்ப தன்சொன்ன
      பகர்வா ரவர்பா வமிலா தவரே. 11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - நெல்லிவனேசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.20 திருஅழுந்தூர் 208-218
      பண் - இந்தளம்
      திருச்சிற்றம்பலம்
      208 தொழுமா றுவல்லார் துயர்தீ ரநினை
      தெழுமா றுவல்லார் இசைபா டவிம்மி
      அழுமா றுவல்லார் அழுந்தை மறையோர்
      வழிபா டுசெய்மா மடம்மன் னினையே. 01
      209 கடலே றியநஞ் சமுதுண் டவனே
      உடலே உயிரே உணர்வே யெழிலே
      அடலே றுடையாய் அழுந்தை மறையோர்
      விடலே தொழமா மடம்மே வினையே. 02
      210 கழிகா டலனே கனலா டலினாய்
      பழிபா டிலனே யவையே பயிலும்
      அழிபா டிலராய் அழுந்தை மறையோர்
      வழிபா டுசெய்மா மடம்மன் னினையே. 03
      211 வானே மலையே யெனமன் னுயிரே
      தானே தொழுவார் தொழுதாள் மணியே
      ஆனே சிவனே அழுந்தை யவரெம்
      மானே யெனமா மடம்மன் னினையே. 04
      212 அலையார் புனல்சூழ் அழுந்தை பெருமான்
      நிலையார் மறியும் நிறைவெண் மழுவும்
      இலையார் படையும் மிவையே துசெல்வ
      நிலையா வதுகொள் கெனநீ நினையே. 05
      213 நறவார் தலையின் நயவா வுலகிற்
      பிறவா தவனே பிணியில் லவனே
      அறையார் கழலாய் அழுந்தை மறையோர்
      மறவா தெழமா மடம்மன் னினையே. 06
      214 தடுமா றுவல்லாய் தலைவா மதியம்
      சுடுமா றுவல்லாய் சுடரார் சடையில்
      அடுமா றுவல்லாய் அழுந்தை மறையோர்
      நெடுமா நகர்கை தொழநின் றனையே. 07
      215 பெரியாய் சிறியாய் பிறையாய் மிடறுங்
      கரியாய் கரிகா டுயர்வீ டுடையாய்
      அரியாய் எளியாய் அழுந்தை மறையோர்
      வெரியார் தொழமா மடம்மே வினையே. 08
      216 மணீநீள் முடியான் மலையை அரக்கன்
      தணியா தெடுத்தான் உடல நெரித்த
      அணியார் விரலாய் அழுந்தை மறையோர்
      மணிமா மடம்மன் னியிரு தனையே. 09
      217 முடியார் சடையாய் முனநா ளிருவர்
      நெடியான் மலரான் நிகழ்வா லிவர்கள்
      அடிமே லறியார் அழுந்தை மறையோர்
      படியாற் றொழமா மடம்பற் றினையே. 10
      218 அருஞா னம்வல்லார் அழுந்தை மறையோர்
      பெருஞா னமுடை பெருமா னவனை
      திருஞா னசம்ப தனசெ தமிழ்கள்
      உருஞா னமுண்டாம் உணர்ந்தார் தமக்கே. 11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - வேதபுரீசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.21 திருக்கழிப்பாலை
      பண் - இந்தளம்
      திருச்சிற்றம்பலம்
      219 புனலா டியபுன் சடையாய் அரணம்
      அனலா கவிழி தவனே அழகார்
      கனலா டலினாய் கழிப்பா லையுளாய்
      உனவார் கழல்கை தொழுதுள் குதுமே. 01
      220 துணையா கவொர்தூ வளமா தினையும்
      இணையா கவுக தவனே இறைவா
      கணையால் எயிலெய் கழிப்பா லையுளாய்
      இணையார் கழலே தவிடர் கெடுமே. 02
      221 நெடியாய் குறியாய் நிமிர்புன் சடையின்
      முடியாய் சுடுவெண் பொடிமுற் றணிவாய்
      கடியார் பொழில்சூழ் கழிப்பா லையுளாய்
      அடியார கடையா அவலம் மவையே. 03
      222 எளியாய் அரியாய் நிலம்நீ ரொடுதீ
      வளிகா யமென வெளிமன் னியதூ
      ஒளியாய் உனையே தொழுதுன் னுமவர
      களியாய் கழிப்பா லையமர தவனே. 04
      223 நடநண் ணியொர்நா கமசை தவனே
      விடநண் ணியதூ மிடறா விகிர்தா
      கடல்நண் ணுகழி பதிகா வலனே
      உடன்நண் ணிவணங் குவனுன் னடியே. 05
      224 பிறையார் சடையாய் பெரியாய் பெரியம்
      மறையார் தருவாய் மையினா யுலகிற்
      கறையார் பொழில்சூழ் கழிப்பா லையுளாய்
      இறையார் கழலே தவிடர் கெடுமே. 06
      225 முதிருஞ் சடையின் முடிமேல் விளங்குங்
      கதிர்வெண் பிறையாய் கழிப்பா லையுளாய்
      எதிர்கொள் மொழியால் இரந்தே துமவர
      கதிரும் வினையா யினஆ சறுமே. 07
      226 எரியார் கணையால் எயிலெய் தவனே
      விரியார் தருவீழ் சடையாய் இரவிற்
      கரிகா டலினாய் கழிப்பா லையுளாய்
      உரிதா கிவணங் குவனுன் னடியே. 08
      227 நலநா ரணன்நான் முகன்நண் ணலுற
      கனலா னவனே கழிப்பா லையுளாய்
      உனவார் கழலே தொழுதுன் னுமவர
      கிலதாம் வினைதான் எயிலெய் தவனே. 09
      228 தவர்கொண் டதொழிற் சமண்வே டரொடு
      துவர்கொண் டனநுண் துகிலா டையரும்
      அவர்கொண் டனவி டடிகள் ளுறையும்
      உவர்கொண் டகழி பதியுள் குதுமே. 10
      229 கழியார் பதிகா வலனை புகலி
      பழியா மறைஞா னசம்ப தனசொல்
      வழிபா டிவைகொண் டடிவாழ தவல்லார்
      கெழியார் இமையோ ரொடுகே டிலரே. 11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - பால்வண்ணநாதர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.22 திருக்குடவாயில்
      பண் - இந்தளம்
      திருச்சிற்றம்பலம்
      230 திகழு திருமா லொடுநான் முகனும்
      புகழும் பெருமான் அடியார் புகல
      மகிழும் பெருமான் குடவா யில்மன்னி
      நிகழும் பெருங்கோ யில்நிலா யவனே. 01
      231 ஓடு நதியும் மதியோ டுரகம்
      சூடுஞ் சடையன் விடைதொல் கொடிமேல்
      கூடுங் குழகன் குடவா யில்தனில்
      நீடும் பெருங்கோ யில்நிலா யவனே. 02
      232 கலையான் மறையான் கனலே துகையான்
      மலையா ளவள்பா கம்மகிழ தபிரான்
      கொலையார் சிலையான் குடவா யில்தனில்
      நிலையார் பெருங்கோ யில்நிலா யவனே. 03
      233 சுலவுஞ் சடையான் சுடுகா டிடமா
      நலமென் முலையாள் நகைசெய் யநடங்
      குலவுங் குழகன் குடவா யில்தனில்
      நிலவும் பெருங்கோ யில்நிலா யவனே. 04
      234 என்றன் உளமே வியிரு தபிரான்
      கன்றன் மணிபோல் மிடறன் கயிலை
      குன்றன் குழகன் குடவா யில்தனில்
      நின்ற பெருங்கோ யில்நிலா யவனே. 05
      235 அலைசேர் புனலன் னனலன் னமலன்
      தலைசேர் பலியன் சதுரன் விதிருங்
      கொலைசேர் படையன் குடவா யில்தனில்
      நிலைசேர் பெருங்கோ யில்நிலா யவனே. 06
      236 அறையார் கழலன் னமலன் னியலிற்
      பறையாழ் முழவும் மறைபா டநடங்
      குறையா அழகன் குடவா யில்தனில்
      நிறையார் பெருங்கோ யில்நிலா யவனே. 07
      237 வரையார் திரள்தோள் அரக்கன் மடியவ்
      வரையா ரவொர்கால் விரல்வை தபிரான்
      வரையார் மதில்சூழ் குடவா யில்மன்னும்
      வரையார் பெருங்கோ யில்மகிழ தவனே. 08
      238 பொன்னொ பவனும் புயலொ பவனு
      தன்னொ பறியா தழலாய் நிமிர்ந்தான்
      கொன்னற் படையான் குடவா யில்தனில்
      மன்னும் பெருங்கோ யில்மகிழ தவனே. 09
      239 வெயிலின் நிலையார் விரிபோர் வையினார்
      பயிலும் முரையே பகர்பா விகள்பாற்
      குயிலன் குழகன் குடவா யில்தனில்
      உயரும் பெருங்கோ யிலுயர தவனே. 10
      240 கடுவாய் மலிநீர் குடவா யில்தனில்
      நெடுமா பெருங்கோ யில்நிலா யவனை
      தடமார் புகலி தமிழார் விரகன்
      வடமார் தமிழ்வல் லவர்நல் லவரே. 11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - கோணேசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.23 திருவானைக்கா
      பண் - இந்தளம்
      திருச்சிற்றம்பலம்
      241 மழையார் மிடறா மழுவா ளுடையாய்
      உழையார் கரவா உமையாள் கணவா
      விழவா ரும்வெணா வலின்மே வியவெம்
      அழகா எனும்ஆ யிழையாள் அவளே. 01
      242 கொலையார் கரியின் னுரிமூ டியனே
      மலையார் சிலையா வளைவி தவனே
      விலையா லெனையா ளும்வெண்நா வலுளாய்
      நிலையா அருளாய் எனும்நே ரிழையே. 02
      243 காலா லுயிர்கா லனைவீ டுசய்தாய்
      பாலோ டுநெய்யா டியபால் வணனே
      வேலா டுகையா யெம்வெண்நா வலுளாய்
      ஆலார் நிழலாய் எனும்ஆ யிழையே. 03
      244 சுறவ கொடிகொண் டவன்நீ றதுவாய்
      உறநெற் றிவிழி தவெம்உ தமனே
      விறல்மி ககரி கருள்செய் தவனே
      அறமி கதுவென் னுமெனா யிழையே. 04
      245 செங்க பெயர்கொண் டவன்செம் பியர்கோன்
      அங்க கருணை பெரிதா யவனே
      வெங்கண் விடையா யெம்வெண்நா வலுளாய்
      அங்க தயர்வா யினள்ஆ யிழையே. 05
      246 குன்றே யமர்வாய் கொலையார் புலியின்
      தன்றோ லுடையாய் சடையாய் பிறையாய்
      வென்றாய் புரமூன் றைவெண்நா வலுளே
      நின்றா யருளாய் எனும்நே ரிழையே. 06
      இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 07
      247 மலையன் றெடுத்த வரக்கன் முடிதோள்
      தொலையவ் விரலூன் றியதூ மழுவா
      விலையா லெனையா ளும்வெண்நா வலுளாய்
      அலசா மல்நல்காய் எனும்ஆ யிழையே. 08
      248 திருவார் தருநா ரணன்நான் முகனும்
      மருவா வெருவா அழலாய் நிமிர்ந்தாய்
      விரையா ரும்வெண்நா வலுள்மே வியஎம்
      அரவா எனும்ஆ யிழையா ளவளே. 09
      249 புத்தர் பலரோ டமண்பொ தவர்கள்
      ஒத்தவ் வுரைசொல் லிவையோ ரகிலார்
      மெய்த்தே வர்வணங் கும்வெண்நா வலுளாய்
      அத்தா அருளாய் எனும்ஆ யிழையே. 10
      250 வெண்நா வலமர துறைவே தியனை
      கண்ணார் கமழ்கா ழியர்த தலைவன்
      பண்ணோ டிவைபா டியப தும்வல்லார்
      விண்ணோ ரவரே தவிரும் புவரே. 11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.24 திருநாகேச்சரம்
      பண் - இந்தளம்
      திருச்சிற்றம்பலம்
      251 பொன்னேர் தருமே னியனே புரியும்
      மின்னேர் சடையாய் விரைகா விரியின்
      நன்னீர் வயல்நா கேச்சர நகரின்
      மன்னே யெனவல் வினைமா தறுமே. 01
      252 சிறவார் புரமூன் றெரி சிலையில்
      உறவார் கணையு தவனே உயரும்
      நறவார் பொழில்நா கேச்சர நகருள்
      அறவா எனவல் வினையா சறுமே. 02
      253 கல்லால் நிழல்மே யவனே கரும்பின்
      வில்லான் எழில்வே வவிழி தவனே
      நல்லார் தொழுநா கேச்சர நகரில்
      செல்வா எனவல் வினைதே தறுமே. 03
      254 நகுவான் மதியோ டரவும் புனலும்
      தகுவார் சடையின் முடியாய் தளவம்
      நகுவார் பொழில்நா கேச்சர நகருள்
      பகவா எனவல் வினைபற் றறுமே. 04
      255 கலைமான் மறியுங் கனலும் மழுவும்
      நிலையா கியகை யினனே நிகழும்
      நலமா கியநா கேச்சர நகருள்
      தலைவா எனவல் வினைதான் அறுமே. 05
      256 குரையார் கழலா டநடங் குலவி
      வரையான் மகள்கா ணமகிழ தவனே
      நரையார் விடையே றுநாகே சரத்தெம்
      அரைசே எனநீங் கும்அரு துயரே. 06
      257 முடையார் தருவெண் டலைகொண் டுலகில்
      கடையார் பலிகொண் டுழல்கா ரணனே
      நடையார் தருநா கேச்சர நகருள்
      சடையா எனவல் வினைதான் அறுமே. 07
      258 ஓயா தஅர கன்ஒடி தலற
      நீயா ரருள்செய் துநிகழ தவனே
      வாயா ரவழு தவர்நா கேச்சர
      தாயே எனவல் வினைதான் அறுமே. 08
      259 நெடியா னொடுநான் முகன்நே டலுற
      சுடுமா லெரியாய் நிமிர்சோ தியனே
      நடுமா வயல்நா கேச்சர நகரே
      இடமா வுறைவா யெனஇன் புறுமே. 09
      260 மலம்பா வியகை யொடுமண் டையதுண்
      கலம்பா வியர்க டுரைவி டுலகில்
      நலம்பாவியநா கேச்சர நகருள்
      சிலம்பா எனத்தீ வினைதே தறுமே. 10
      261 கலமார் கடல்சூழ் தருகா ழியர்கோன்
      தலமார் தருசெ தமிழின் விரகன்
      நலமார் தருநா கேச்சர தரனை
      சொலன்மா லைகள்சொல் லநிலா வினையே. 11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - செண்பகாரணியேசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.25 திருப்புகலி
      பண் - இந்தளம்
      திருச்சிற்றம்பலம்
      262 உகலி யாழ்கட லோங்கு பாருளீர்
      அகலி யாவினை யல்லல் போயறும்
      இகலி யார்புர மெய்த வன்னுறை
      புகலி யாம்நகர் போற்றி வாழ்மினே. 01
      263 பண்ணி யாள்வதோ ரேற்றர் பால்மதி
      கண்ணி யார்கமழ் கொன்றை சேர்முடி
      புண்ணி யன்னுறை யும்பு கலியை
      நண்ணு மின்னல மான வேண்டிலே. 02
      264 வீசு மின்புரை காதன் மேதகு
      பாச வல்வினை தீர்த்த பண்பினன்
      பூசு நீற்றினன் பூம்பு கலியை
      பேசு மின்பெரி தின்ப மாகவே. 03
      265 கடிகொள் கூவிளம் மத்தம் வைத்தவன்
      படிகொள் பாரிடம் பேசும் பான்மையன்
      பொடிகொள் மேனியன் பூம்பு கலியுள்
      அடிகளை யடை தன்பு செய்யுமே. 04
      266 பா தாரொலி பல்சி லம்பினன்
      ஓ தார்விட முண்ட வன்படை
      பூ தான்புக லிந்ந கர்தொழ
      ஏ தார்க்கிட மில்லை யென்பரே. 05
      267 மறையி னான்ஒலி மல்கு வீணையன்
      நிறையி னார்நிமிர் புன்ச டையனெம்
      பொறையி னானுறை யும்பு கலியை
      நிறையி னாற்றொழ நேச மாகுமே. 06
      268 கரவி டைமன தாரை காண்கிலான்
      இரவி டைப்பலி கொள்ளும் எம்மிறை
      பொருவி டைஉயர தான்பு கலியை
      பரவி டப்பயில் பாவம் பாறுமே. 07
      269 அருப்பி னார்முலை மங்கை பங்கினன்
      விருப்பி னான்அர கன்னு ரஞ்செகும்
      பொருப்பி னான்பொழி லார்பு கலியூர்
      இருப்பி னானடி யேத்தி வாழ்த்துமே. 08
      270 மாலும் நான்முகன் றானும் வார்கழற்
      சீல மும்முடி தேட நீண்டெரி
      போலு மேனியன் பூம்பு கலியுள்
      பால தாடிய பண்ப னல்லனே. 09
      271 நின்று துய்ப்பவர் நீசர் தேரர்சொல்
      ஒன்ற தாகவை யாவு ணர்வினுள்
      நின்ற வன்னிக ழும்பு கலியை
      சென்று கைதொழ செல்வ மாகுமே. 10
      272 புல்ல மேறிதன் பூம்பு கலியை
      நல்ல ஞானசம் பந்தன் நாவினாற்
      சொல்லும் மாலையீ ரைந்தும் வல்லவர
      கில்லை யாம்வினை இருநி லத்துளே. 11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.26 திருநெல்வாயில்
      பண் - இந்தளம்
      திருச்சிற்றம்பலம்
      273 புடையி னார்புள்ளி கால்பொ ருந்திய
      மடையி னார்மணி நீர்நெல் வாயிலார்
      நடையி னால்விரற் கோவ ண
      துடையி னாரெம துச்சி யாரே. 01
      274 வாங்கி னார்மதில் மேற்க ணைவெள்ள
      தாங்கி னார்தலை யாய தன்மையர்
      நீங்கு நீரநெல் வாயி லார்தொழ
      ஓங்கி னாரெம துச்சி யாரே. 2
      275 நிச்ச லேத்தும்நெல் வாயி லார்தொழ
      இச்சை யாலுறை வாரெம் மீசனார்
      கச்சை யாவதோர் பாம்பி னார்கவின்
      இச்சை யாரெம துச்சி யாரே. 03
      276 மறையி னார்மழு வாளி னார்மல்கு
      பிறையி னார்பிறை யோடி லங்கிய
      நிறையி னாரநெல் வாயிலார் தொழும்
      இறைவ னாரெம துச்சி யாரே. 04
      277 விருத்த னாகிவெண் ணீறு பூசிய
      கருத்த னார்கன லாட்டு கந்தவர்
      நிருத்த னாரநெல் வாயில் மேவிய
      ஒருத்த னாரெம துச்சி யாரே. 05
      278 காரி னார்கொன்றை கண்ணி யார்மல்கு
      பேரி னார்பிறை யோடி லங்கிய
      நீரி னாரநெல் வாயிலார் தொழும்
      ஏரி னாரெம துச்சி யாரே. 06
      279 ஆதி யாரந்த மாயி னார்வினை
      கோதி யார்மதில் கூட்ட ழித்தவர்
      நீதி யாரநெல் வாயி லார்மறை
      ஓதி யாரெம துச்சி யாரே. 07
      280 பற்றி னான்அர கன்க யிலையை
      ஒற்றி னாரொரு கால்வி ரலுற
      நெற்றி யாரநெல் வாயி லார்தொழும்
      பெற்றி யாரெம துச்சி யாரே. 08
      281 நாடி னார்மணி வண்ணன் நான்முகன்
      கூடி னார்குறு காத கொள்கையர்
      நீடி னாரநெல் வாயி லார்தலை
      ஓடி னாரெம துச்சி யாரே. 09
      282 குண்ட மண்துவர கூறை மூடர்சொல்
      பண்ட மாகவை யாத பண்பினர்
      விண்ட யங்குநெல் வாயி லார்நஞ்சை
      உண்ட கண்டரெம் உச்சி யாரே. 10
      283 நெண்ப யங்குநெல் வாயி லீசனை
      சண்பை ஞானசம் பந்தன் சொல்லிவை
      பண்ப யன்கொள பாட வல்லவர்
      விண்ப யன்கொளும் வேட்கை யாளரே. 11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.27 திரு இந்திரநீலப்பருப்பதம்
      பண் - இந்தளம்
      திருச்சிற்றம்பலம்
      284 குலவு பாரிடம் போற்ற வீற்றிரு
      திலகு மான்மழு வேந்தும் அங்கையன்
      நிலவும் இந்திர நீல பர்ப்ப
      துலவி னான்அடி யுள்க நல்குமே. 01
      285 குறைவி லார்மதி சூடி யாடவண்
      டறையு மாமலர கொன்றை சென்னிசேர்
      இறைவன் இந்திர நீல பர்ப்ப
      துறைவி னான்றனை யோதி உய்ம்மினே. 02
      286 என்பொன் என்மணி யென்ன ஏத்துவார்
      நம்பன் நான்மறை பாடு நாவினான்
      இன்பன் இந்திர நீல பர்ப்ப
      தன்பன் பாதமே யடைந்து வாழ்மினே. 03
      287 நாச மாம்வினை நன்மை தான்வரு
      தேச மார்புக ழாய செம்மையெம்
      ஈசன் இந்திர நீல பர்ப்பதங்
      கூசி வாழ்த்துதுங் குணம தாகவே. 04
      288 மருவு மான்மட மாதொர் பாகமா
      பரவு வார்வினை தீர்த்த பண்பினான்
      இரவன் இந்திர நீல பர்ப்ப
      தருவி சூடிடும் அடிகள் வண்ணமே. 05
      289 வெண்ணி லாமதி சூடும் வேணியன்
      எண்ணி லார்மதி லெய்த வில்லினன்
      அண்ணல் இந்திர நீல பர்ப்ப
      துண்ணி லாவுறும் ஒருவன் நல்லனே. 06
      290 கொடிகொள் ஏற்றினர் கூற்று தைத்தவர்
      பொடிகொள் மேனியிற் பூண்ட பாம்பினர்
      அடிகள் இந்திர நீல பர்ப்பதம்
      உடைய வாண ருகந்த கொள்கையே. 07
      291 எடுத்த வல்லர கன்க ரம்புயம்
      அடர்த்த தோர்விர லான வனையா
      படுத்தன் இந்திர நீல பர்ப்பதம்
      முடித்த லம்முற முயலும் இன்பமே. 08
      292 பூவி னானொடு மாலும் போற்றுறு
      தேவன் இந்திர நீல பர்ப்பதம்
      பாவி யாதெழு வாரை தம்வினை
      கோவி யாவருங் கொல்லுங் கூற்றமே. 09
      293 கட்டர் குண்டமண் தேரர் சீரிலர்
      விட்டர் இந்திர நீல பர்ப்பதம்
      எட்ட னைநினை யாத தென்கொலோ
      சிட்ட தாயுறை யாதி சீர்களே. 10
      294 கந்த மார்பொழில் சூழ்ந்த காழியான்
      இந்தி ரன்தொழு நீல பர்ப
      தந்த மில்லியை யேத்து ஞானசம்
      பந்தன் பாடல்கொண் டோ தி வாழ்மினே. 11
      இத்தலம் வடதேசத்திலுள்ளது.
      சுவாமிபெயர் - நீலாசலநாதர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.28 திருக்கருவூரானிலை
      பண் - இந்தளம்
      திருச்சிற்றம்பலம்
      295 தொண்டெ லாமலர் தூவி யேத்தநஞ்
      சுண்ட லாருயி ராய தன்மையர்
      கண்ட னார்கரு வூரு ளானிலை
      அண்ட னாரரு ளீயும் அன்பரே. 01
      296 நீதி யார்நினை தாய நான்மறை
      ஓதி யாரொடுங் கூட லார்குழை
      காதி னார்கரு வூரு ளானிலை
      ஆதி யாரடி யார்தம் அன்பரே. 02
      297 விண்ணு லாமதி சூடி வேதமே
      பண்ணு ளார்பர மாய பண்பினர்
      கண்ணு ளார்கரு வூரு ளானிலை
      அண்ண லாரடி யார்க்கு நல்லரே. 03
      298 முடியர் மும்மத யானை யீருரி
      பொடியர் பூங்கணை வேளை செற்றவர்
      கடியு ளார்கரு வூரு ளானிலை
      அடிகள் யாவையு மாய ஈசரே. 04
      299 பங்க யம்மலர பாதர் பாதியோர்
      மங்கை யர்மணி நீல கண்டர்வான்
      கங்கை யர்கரு வூரு ளானிலை
      அங்கை யாடர வத்தெம் மண்ணலே. 05
      300 தேவர் திங்களும் பாம்புஞ் சென்னியில்
      மேவர் மும்மதி லெய்த வில்லியர்
      காவ லர்கரு வூரு ளானிலை
      மூவ ராகிய மொய்ம்ப ரல்லரே. 06
      301 பண்ணி னார்படி யேற்றர் நீற்றர்மெ
      பெண்ணி னார்பிறை தாங்கு நெற்றியர்
      கண்ணி னார்கரு வூரு ளானிலை
      நண்ணி னார்நமை யாளும் நாதரே. 07
      302 கடுத்த வாளர கன்க யிலையை
      எடுத்த வன்றலை தோளு தாளினால்
      அடர்த்த வன்கரு வூரு ளானிலை
      கொடுத்த வன்னருள் கூத்த னல்லனே. 08
      303 உழுது மாநில தேன மாகிமால்
      தொழுது மாமல ரோனுங் காண்கிலார்
      கழுதி னான்கரு வூரு ளானிலை
      முழுது மாகிய மூர்த்தி பாதமே. 09
      304 புத்தர் புன்சம ணாதர் பொய்யுரை
      பித்தர் பேசிய பேச்சை விட்டுமெ
      பத்தர் சேர்கரு வூரு ளானிலை
      அத்தர் பாதம் அடைந்து வாழ்மினே. 10
      305 கந்த மார்பொழிற் காழி ஞானசம்
      பந்தன் சேர்கரு வூரு ளானிலை
      எந்தை யைச்சொன்ன பத்தும் வல்லவர்
      சிந்தை யிற்றுய ராய தீர்வரே. 11
      இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - பசுபதீசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.29 திருப்புகலி - திருவிராகம்
      பண் - இந்தளம்
      திருச்சிற்றம்பலம்
      306 முன்னிய கலைப்பொருளும் மூவுலகில் வாழ்வும்
      பன்னிய வொருத்தர்பழ வூர்வினவின் ஞால
      துன்னிஇமை யோர்கள்துதி செய்துமுன் வணங்குஞ்
      சென்னியர் விருப்புறு திருப்புகலி யாமே. 01
      307 வண்டிரை மதிச்சடை மிலைத்த புனல்சூடி
      பண்டெரிகை யாடுபர மன்பதிய தென்பர்
      புண்டரிக வாசமது வீசமலர சோலை
      தெண்டிரை கடற்பொலி திருப்புகலி யாமே. 02
      308 பாவணவு சிந்தையவர் பத்தரொடு கூடி
      நாவணவு மந்தணன் விருப்பிடம தென்பர்
      பூவணவு சோலையிருள் மாலையெதிர் கூர
      தேவண விழாவளர் திருப்புகலி யாமே. 03
      309 மைதவழும் மாமிடறன் மாநடம தாடி
      கைவளையி னாளொடு கலந்தபதி யென்பர்
      செய்பணி பெருத்தெழும் உருத்திரங்கள் கூடி
      தெய்வம திணக்குறு திருப்புகலி யாமே. 04
      310 முன்னமிரு மூன்றுசம யங்களவை யாகி
      பின்னையருள் செய்தபிறை யாளனுறை கோயில்
      புன்னைய மலர்ப்பொழில் களக்கினொளி காட்ட
      செந்நெல்வய லார்தரு திருப்புகலி யாமே. 05
      311 வங்கமலி யுங்கடல்வி டத்தினை நுகர்ந்த
      அங்கணன் அருத்திசெய் திருக்குமிட மென்பர்
      கொங்கண வியன்பொழிலின் மாசுபணி மூச
      தெங்கணவு தேன்மலி திருப்புகலி யாமே. 06
      312 நல்குரவும் இன்பமும் நலங்களவை யாகி
      வல்வினைகள் தீர்த்தருளும் மைந்தனிட மென்பர்
      பல்குமடி யார்கள்படி யாரஇசை பாடி
      செல்வமறை யோருறை திருப்புகலி யாமே. 07
      313 பரப்புறு புகழ்ப்பெருமை யாளன்வரை தன்னால்
      அரக்கனை யடர்த்தருளும் அண்ணலிட மென்பர்
      நெருக்குறு கடற்றிரைகண் முத்தமணி சிந்த
      செருக்குறு பொழிற்பொலி திருப்புகலி யாமே. 08
      314 கோடலொடு கூன்மதி குலாயசடை தன்மேல்
      ஆடரவம் வைத்தருளும் அப்பன்இரு வர்க்கும்
      நேடஎரி யாகிஇரு பாலுமடி பேணி
      தேடவுறை யுந்நகர் திருப்புகலி யாமே. 09
      315 கற்றமண ருற்றுலவு தேரருரை செய்த
      குற்றமொழி கொள்கைய திலாதபெரு மானூர்
      பொற்றொடி மடந்தையரும் மைந்தர்புல னைந்துஞ்
      செற்றவர் விருப்புறு திருப்புகலி யாமே. 10
      316 செந்தமிழ் பரப்புறு திருப்புகலி தன்மேல்
      அந்தமுத லாகிநடு வாயபெரு மானை
      பந்தனுரை செந்தமிழ்கள் பத்துமிசை கூர
      வந்தவண மேத்துமவர் வானமுடை யாரே. 11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.30 திருப்புறம்பயம் - திருவிராகம்
      பண் - இந்தளம்
      திருச்சிற்றம்பலம்
      317 மறம்பய மலிந்தவர் மதிற்பரி சறுத்தனை
      நிரம்பசுமை செம்மையொ டிசைந்துனது நீர்மை
      திறம்பய னுறும்பொருள் தெரிந்துணரு நால்வர
      கறம்பய னுரைத்தனை புரம்பய மமர்ந்தோய். 01
      318 விரித்தனை திருச்சடை யரித்தொழுகு வெள்ள
      தரித்தனை யதன்றியும் மிகப்பெரிய காலன்
      எருத்திற வுதைத்தனை இலங்கிழையொர் பாகம்
      பொருத்துதல் கருத்தினை புறம்பய மமர்ந்தோய். 02
      319 விரிந்தனை குவிந்தனை விழுங்குயி ருமிழ்ந்தனை
      திரிந்தனை குருந்தொசி பெருந்தகையு நீயும்
      பிரிந்தனை புணர்ந்தனை பிணம்புகும யானம்
      புரிந்தனை மகிழ்ந்தனை புரம்பய மமர்ந்தோய். 03
      320 வளங்கெழு கதும்புன லொடுஞ்சடை யொடுங்க
      துளங்கம ரிளம்பிறை சுமந்தது விளங்க
      உளங்கொள வளைந்தவர் சுடுஞ்சுடலை நீறு
      புளங்கொள விளங்கினை புரம்பய மமர்ந்தோய். 04
      321 பெரும்பிணி பிறப்பினொ டிறப்பிலையொர் பாகங்
      கரும்பொடு படுஞ்சொலின் மடந்தையை மகிழ்ந்தோய்
      சுரும்புண அரும்பவிழ் திருந்தியெழு கொன்றை
      விரும்பினை புறம்பய மமர்ந்தஇறை யோனே. 05
      322 அனற்படு தடக்கையவ ரெத்தொழில ரேனும்
      நினைப்புடை மனத்தவர் வினைப்பகையு நீயே
      தனற்படு சுடர்ச்சடை தனிப்பிறையொ டொன்ற
      புனற்படு கிடைக்கையை புறம்பய மமர்ந்தோய். 06
      323 மறத்துறை மறுத்தவர் தவத்தடிய ருள்ளம்
      அறத்துறை யொறுத்துன தருட்கிழமை பெற்றோர்
      திறத்துள திறத்தினை மதித்தகல நின்றும்
      புறத்துள திறத்தினை புறம்பய மமர்ந்தோய். 07
      324 இலங்கைய ரிறைஞ்சிறை விலங்கலின் முழங்க
      உலங்கெழு தடக்கைக ளடர்த்திடலு மஞ்சி
      வலங்கொள எழுந்தவ னலங்கவின வஞ்சு
      புலங்களை விலங்கினை புறம்பய மமர்ந்தோய். 08
      325 வடங்கெட நுடங்குண இடந்தவிடை யல்லி
      கிடந்தவன் இருந்தவன் அளந்துணர லாகார்
      தொடர்ந்தவ ருடம்பொடு நிமிர்ந்துடன் வணங்க
      புடங்கருள்செய் தொன்றினை புறம்பய மமர்ந்தோய். 09
      326 விடக்கொருவர் நன்றென
      உடற்குடை களைந்தவ ருடம்பினை மறைக்கும்
      படக்கர்கள் பிடக்குரை படுத்துமையொர் பாகம்
      அடக்கினை புறம்பய மமர்ந்த வுரவோனே. 10
      327 கருங்கழி பொருந்திரை கரைக்குலவு முத்த
      தருங்கழு மலத்திறை தமிழ்க்கிழமை ஞானன்
      சுரும்பவிழ் புறம்பய மமர்ந்த தமிழ்வல்லார்
      பெரும்பிணி மருங்கற ஒருங்குவர் பிறப்பே. 11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - சாட்சிவரதநாதர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.31 திருக்கருப்பறியலூர் - திருவிராகம்
      பண் - இந்தளம்
      திருச்சிற்றம்பலம்
      328 சுற்றமொடு பற்றவை துயக்கற அறுத்து குற்றமில் குணங்களொடு கூடும்அடி யார்கள்
      மற்றவரை வானவர்தம் வானுலக மேற்ற
      கற்றவ னிருப்பது கருப்பறிய லூரே. 01
      329 வண்டணைசெய் கொன்றையது வார்சடைகள் மேலே
      கொண்டணைசெய் கோலமது கோளரவி னோடும்
      விண்டணைசெய் மும்மதிலும் வீழ்தரவோ ரம்பால்
      கண்டவ னிருப்பது கருப்பறிய லூரே. 02
      330 வேதமொடு வேதியர்கள் வேள்விமுத லாக
      போதினொடு போதுமலர் கொண்டுபுனை கின்ற
      நாதனென நள்ளிருண்முன் ஆடுகுழை தாழுங்
      காதவ னிருப்பது கருப்பறிய லூரே. 03
      331 மடம்படு மலைக்கிறைவன் மங்கையொரு பங்கன்
      உடம்பினை விடக்கருதி நின்றமறை யோனை
      தொடர்ந்தணவு காலனுயிர் காலவொரு காலால்
      கடந்தவ னிருப்பது கருப்பறிய லூரே. 04
      332 ஒருத்தியுமை யோடுமொரு பாகமது வாய
      நிருத்தனவன் நீதியவன் நித்தன்நெறி யாய
      விருத்தனவன் வேதமென அங்கமவை யோதுங்
      கருத்தவ னிருப்பது கருப்பறிய லூரே. 05
      333 விண்ணவர்கள் வெற்பரசு பெற்றமகள் மெய்த்தேன்
      பண்ணமரும் மென்மொழியி னாளையணை விப்பான்
      எண்ணிவரு காமனுடல் வேவஎரி காலுங்
      கண்ணவ னிருப்பது கருப்பறிய லூரே. 06
      334 ஆதியடி யைப்பணிய அப்பொடு மலர்ச்சேர்
      சோதியொளி நற்புகை வளர்க்குவடு புக்கு
      தீதுசெய வந்தணையும் அந்தகன் அரங
      காதின னிருப்பது கருப்பறிய லூரே. 07
      335 வாய்ந்தபுகழ் விண்ணவரும் மண்ணவரும் அஞ்ச
      பாய்ந்தமர்செ யுந்தொழிலி லங்கைநகர் வேந்தற்
      கேய்ந்தபுய மத்தனையும் இற்றுவிழ மேனாள்
      காய்ந்தவ னிருப்பது கருப்பறிய லூரே. 08
      336 பரந்தது நிரந்துவரு பாய்திரைய கங்கை
      கரந்தொர்சடை மேன்மிசை யுகந்தவளை வைத்து
      நிரந்தரம் நிரந்திருவர் நேடியறி யாமல்
      கரந்தவ னிருப்பது கருப்பறிய லூரே. 09
      337 அற்றமறை யாவமண ராதமிலி புத்தர்
      சொற்றமறி யாதவர்கள் சொன்னசொலை விட்டு
      குற்றமறி யாதபெரு மான்கொகுடி கோயில்
      கற்றென இருப்பது கருப்பறிய லூரே. 10
      338 நலந்தரு புனற்புகலி ஞானசம் பந்தன்
      கலந்தவர் கருப்பறியல் மேயகட வுள்ளை
      பலந்தரு தமிழ்க்கிளவி பத்துமிவை கற்று
      வலந்தரு மவர்க்குவினை வாடலெளி தாமே. 11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - குற்றம்பொறுத்தநாதர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.32 திருவையாறு - திருவிராகம்
      பண் - இந்தளம்
      திருச்சிற்றம்பலம்
      339 திருத்திகழ் மலைச்சிறுமி யோடுமிகு தேசர்
      உருத்திகழ் எழிற்கயிலை வெற்பிலுறை தற்கே
      விருப்புடைய அற்புத ரிருக்குமிட மேரார்
      மருத்திகழ் பொழிற்குலவு வண்டிருவை யாறே. 01
      340 கந்தமர வுந்துபுகை யுந்தலில் விளக்கேர்
      இந்திர னுணர்ந்துபணி யெந்தையிட மெங்குஞ்
      சந்தமலி யுந்தரு மிடைந்தபொழில் சார
      வந்தவளி நந்தணவு வண்டிருவை யாறே. 02
      341 கட்டுவட மெட்டுமுறு வட்டமுழ வத்தில்
      கொட்டுகர மிட்டவொலி தட்டும்வகை நந்தி
      கிட்டமிக நட்டமவை யிட்டவ ரிடஞ்சீர்
      வட்டமதி லுட்டிகழும் வண்டிருவை யாறே. 03
      342 நண்ணியொர் வடத்தினிழல் நால்வர்முனி வர்க்கன்
      றெண்ணிலி மறைப்பொருள் விரித்தவ ரிடஞ்சீர
      தண்ணின்மலி சந்தகிலொ டுந்திவரு பொன்னி
      மண்ணின்மிசை வந்தணவு வண்டிருவை யாறே. 04
      343 வென்றிமிகு தாருகன தாருயிர் மடங
      கன்றிவரு கோபமிகு காளிகத மோவ
      நின்றுநட மாடியிட நீடுமலர் மேலால்
      மன்றல்மலி யும்பொழில்கொள் வண்டிருவை யாறே. 05
      344 பூதமொடு பேய்கள்பல பாடநட மாடி
      பாதமுதல் பையரவு கொண்டணி பெறுத்தி
      கோதைய ரிடும்பலி கொளும்பர னிடம்பூ
      மாதவி மணங்கமழும் வண்டிருவை யாறே. 06
      345 துன்னுகுழல் மங்கையுமை நங்கைசுளி வெய்த
      பின்னொரு தவஞ்செய்துழல் பிஞ்ஞகனு மங்கே
      என்னசதி என்றுரைசெ யங்கண னிடஞ்சீர்
      மன்னுகொடை யாளர்பயில் வண்டிருவை யாறே. 07
      346 இரக்கமில் குணத்தொடுல கெங்கும்நலி வெம்போர்
      அரக்கன்முடி யத்தலை புயத்தொடு மடங்க
      துரக்கவிர லிற்சிறிது வைத்தவ ரிடஞ்சீர்
      வரக்கருணை யாளர்பயில் வண்டிருவை யாறே. 08
      347 பருத்துருவ தாகிவிண் ணடைந்தவனொர் பன்றி
      பெருத்துருவ தாயுல கிடந்தவனு மென்றுங்
      கருத்துரு வொணாவகை நிமிர்ந்தவ னிடங்கார்
      வருத்துவகை தீர்கொள்பொழில் வண்டிருவை யாறே. 09
      348 பாக்கியம தொன்றுமில் சமண்பதகர் புத்தர்
      சாக்கியர்க ளென்றுடல் பொதிந்துதிரி வார்தம்
      நோக்கரிய தத்துவ னிடம்படியின் மேலால்
      மாக்கமுற நீடுபொழில் வண்டிருவை யாறே. 10
      349 வாசமலி யும்பொழில்கொள் வண்டிருவை யாற்றுள்
      ஈசனை யெழிற்புகலி மன்னவன்மெய்ஞ் ஞான
      பூசுர னுரைத்ததமிழ் பத்துமிவை வல்லார்
      நேசமலி பத்தரவர் நின்மல னடிக்கே. 11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.33 திருநள்ளாறு - திருவிராகம்
      பண் - இந்தளம்
      திருச்சிற்றம்பலம்
      350 ஏடுமலி கொன்றையர விந்துஇள வன்னி
      மாடவல செஞ்சடையெம் மைந்தனிட மென்பர்
      கோடுமலி ஞாழல்குர வேறுசுர புன்னை
      நாடுமலி வாசமது வீசியநள் ளாறே. 01
      351 விண்ணியல் பிறைப்பிள வறைப்புனல் முடித்த
      புண்ணியன் இருக்குமிட மென்பர்புவி தன்மேல்
      பண்ணிய நடத்தொடிசை பாடுமடி யார்கள்
      நண்ணிய மனத்தின்வழி பாடுசெய்நள் ளாறே. 02
      352 விளங்கிழை மடந்தைமலை மங்கையொரு பாக
      துளங்கொள இருத்திய ஒருத்தனிட மென்பர்
      வளங்கெழுவு தீபமொடு தூபமலர் தூவி
      நளன்கெழுவி நாளும்வழி பாடுசெய்நள் ளாறே. 03
      353 கொக்கரவர் கூன்மதியர் கோபர்திரு மேனி
      செக்கரவர் சேருமிட மென்பர்தடம் மூழ்கி
      புக்கரவர் விஞ்சையரும் விண்ணவரும் நண்ணி
      நக்கரவர் நாமநினை வெய்தியநள் ளாறே. 04
      354 நெஞ்சமிது கண்டுகொ ளுனக்கென நினைந்தார்
      வஞ்சம தறுத்தருளும் மற்றவனை வானோர்
      அஞ்சமுது காகியவர் கைதொழ வெழுந்த
      நஞ்சமுது செய்தவன் இருப்பிடம்நள் ளாறே. 05
      355 பாலனடி பேணவவ னாருயிர் குறைக்குங்
      காலனுடன் மாளமு னுதைத்தஅர னூராங்
      கோலமலர் நீர்க்குட மெடுத்துமறை யாளர்
      நாலின்வழி நின்றுதொழில் பேணியநள் ளாறே. 06
      356 நீதியர் நெடுந்தகையர் நீள்மலையர் பாவை
      பாதியர் பராபரர் பரம்பர ரிருக்கை
      வேதியர்கள் வேள்வியொழி யாதுமறை நாளும்
      ஓதியரன் நாமமும் உணர்த்திடும்நள் ளாறே. 07
      357 கடுத்துவல் லரக்கன்முன் நெருக்கிவரை தன்னை
      எடுத்தவன் முடித்தலைகள் பத்தும்மிகு தோளும்
      அடர்த்தவர் தமக்கிடம தென்பரளி பாட
      நடத்தகல வைத்திரள்கள் வைகியநள் ளாறே. 08
      358 உயர்ந்தவ னுருக்கொடு திரிந்துலக மெல்லாம்
      பயந்தவன் நினைப்பரிய பண்பனிட மென்பர்
      வியந்தமரர் மெச்சமலர் மல்குபொழி லெங்கும்
      நயந்தரும வேதவொலி யார்திருநள் ளாறே. 09
      359 சிந்தைதிரு கற்சமணர் தேரர்தவ மென்னும்
      பந்தனை யறுத்தருளு கின்றபர மன்னூர்
      மந்தமுழ வந்தரு விழாவொலியும் வேத
      சந்தம்விர விப்பொழில் முழங்கியநள் ளாறே. 10
      360 ஆடலர வார்சடையன் ஆயிழைத னோடும்
      நாடுமலி வெய்திட இருந்தவன்நள் ளாற்றை
      மாடமலி காழிவளர் பந்தனது செஞ்சொல்
      பாடலுடை யாரையடை யாபழிகள் நோயே. 11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.34 திருப்பழுவூர் - திருவிராகம்
      பண் - இந்தளம்
      திருச்சிற்றம்பலம்
      361 முத்தன்மிகு மூவிலைநல் வேலன்விரி நூலன்
      அத்தன்எமை யாளுடைய அண்ணலிட மென்பர்
      மைத்தழை பெரும்பொழிலின் வாசமது வீச
      பத்தரொடு சித்தர்பயில் கின்றபழு வூரே. 01
      362 கோடலொடு கோங்கவை குலாவுமுடி தன்மேல்
      ஆடரவம் வைத்தபெரு மானதிட மென்பர்
      மாடமலி சூளிகையி லேறிமட வார்கள்
      பாடலொலி செய்யமலி கின்றபழு வூரே. 02
      363 வாலிய புரத்திலவர் வேவவிழி செய்த
      போலிய வொருத்தர்புரி நூலரிட மென்பர்
      வேலியின் விரைக்கமல மன்னமுக மாதர்
      பாலென மிழற்றிநட மாடுபழு வூரே. 03
      364 எண்ணுமொ ரெழுத்துமிசை யின்கிளவி தேர்வார்
      கண்ணுமுத லாயகட வுட்கிடம தென்பர்
      மண்ணின்மிசை யாடிமலை யாளர்தொழு தேத்தி
      பண்ணினொலி கொண்டுபயில் கின்றபழு வூரே. 04
      365 சாதல்புரி வார்சுடலை தன்னில்நட மாடும்
      நாதன்நமை யாளுடைய நம்பனிட மென்பர்
      வேதமொழி சொல்லிமறை யாளரிறை வன்றன்
      பாதமவை யேத்தநிகழ் கின்றபழு வூரே. 05
      366 மேவயரு மும்மதிலும் வெந்தழல் விளைத்து
      மாவயர வன்றுரிசெய் மைந்தனிட மென்பர்
      பூவையை மடந்தையர்கள் கொண்டுபுகழ் சொல்லி
      பாவையர்கள் கற்பொடு பொலிந்தபழு வூரே. 06
      367 மந்தண மிருந்துபுரி மாமடிதன் வேள்வி
      சிந்தவிளை யாடுசிவ லோகனிட மென்பர்
      அந்தணர்கள் ஆகுதியி லிட்டஅகில் மட்டார்
      பைந்தொடிநன் மாதர்சுவ டொற்றுபழு வூரே. 07
      368 உரக்கடல் விடத்தினை மிடற்றிலுற வைத்தன்
      றரக்கனை யடர்த்தருளும் அப்பனிட மென்பர்
      குரக்கினம் விரைப்பொழிலின் மீதுகனி யுண்டு
      பரக்குறு புனல்செய்விளை யாடுபழு வூரே. 08
      369 நின்றநெடு மாலுமொரு நான்முகனும் நேட
      அன்றுதழ லாய்நிமிரும் ஆதியிட மென்பர்
      ஒன்றுமிரு மூன்றுமொரு நாலுமுணர் வார்கள்
      மன்றினி லிருந்துடன் மகிழ்ந்தபழு வூரே. 09
      370 மொட்டையமண் ஆதர்துகில் மூடுவிரி தேரர்
      முட்டைகள் மொழிந்தமுனி வான்றனிட மென்பர்
      மட்டைமலி தாழைஇள நீரதிசை பூகம்
      பட்டையொடு தாறுவிரி கின்றபழு வூரே. 10
      371 அந்தணர்க ளானமலை யாளரவ ரேத்தும்
      பந்தமலி கின்றபழு வூரரனை யார
      சந்தமிகு ஞானசம் பந்தனுரை பேணி
      வந்தவண மேத்துமவர் வானமுடை யாரே. 11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - வடவனநாதர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.35 திருக்குரங்காடுதுறை
      பண் - இந்தளம்
      திருச்சிற்றம்பலம்
      372 பரவ கெடும்வல் வினைபா ரிடஞ்சூழ
      இரவிற் புறங்கா டிடைநின் றெரியாடி
      அரவ சடை தணன்மேய அழகார்
      குரவ பொழில்சூழ் குரங்காடு துறையே. 01
      373 விண்டார் புரமூன்று மெரித்த விமலன்
      இண்டார் புறங்கா டிடைநின் றெரியாடி
      வண்டார் கருமென் குழல்மங்கை யொர்பாகங்
      கொண்டான் நகர்போல் குரங்காடு துறையே. 02
      374 நிறைவில் புறங்கா டிடைநே ரிழையோடும்
      இறைவில் லெரியான் மழுவேந்தி நின்றாடி
      மறையின் னொலிவா னவர்தா னவரேத்துங்
      குறைவில் லவனூர் குரங்காடு துறையே. 03
      375 விழிக்கு நுதல்மே லொருவெண் பிறைசூடி
      தெழிக்கும் புறங்கா டிடைச்சேர தெரியாடி
      பழிக்கும் பரிசே பலிதேர தவனூர்பொன்
      கொழிக்கும் புனல்சூழ் குரங்காடு துறையே. 04
      376 நீறார்தரு மேனியன் நெற்றியொர் கண்ணன்
      ஏறார்கொடி யெம்மிறை யீண்டெரி யாடி
      ஆறார்சடை யந்தணன் ஆயிழை யாளோர்
      கூறான்நகர் போல்குரங் காடு துறையே. 05
      377 நளிரும் மலர்க்கொன் றையுநாறு கரந்தை
      துளிருஞ் சுலவி சுடுகா டெரியாடி
      மிளிரும் மரவார தவன்மே வியகோயில்
      குளிரும் புனல்சூழ் குரங்காடு துறையே. 06
      378 பழகும் வினைதீர பவன்பார பதியோடும்
      முழவங் குழல்மொந்தை முழங் கெரியாடும்
      அழகன் னயில்மூ விலைவேல் வலனேந்துங்
      குழகன் னகர்போல் குரங்காடு துறையே. 07
      379 வரையார தெடுத்தவ் வரக்கன் வலியொல்க
      நிரையார் விரலால் நெரித்தி டவனூராங்
      கரையார திழிகா விரிக்கோல கரைமேல்
      குரையார் பொழில்சூழ் குரங்காடு துறையே. 08
      380 நெடியா னொடுநான் முகனு நினைவொண்ணா
      படியா கியபண் டங்கனின் றெரியாடி
      செடியார் தலையே தியசெங்கண் வெள்ளேற்றின்
      கொடியான் நகர்போல் குரங்காடு துறையே. 09
      381 துவரா டையர்வே டமலா சமண்கையர்
      கவர்வாய் மொழிகா தல்செய்யா தவனூராம்
      நவையார் மணிபொன் னகில்ச தனமுந்தி
      குவையார் கரைசேர் குரங்காடு துறையே. 10
      382 நல்லார் பயில்கா ழியுள்ஞான சம்பந்தன்
      கொல்லே றுடையான் குரங்காடு துறைமேல்
      சொல்லார் தமிழ்மாலை பத்து தொழுதேத்த
      வல்லா ரவர்வா னவரோ டுறைவாரே. 11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - குலைவணங்குநாதர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.36 திருஇரும்பூளை - வினாவுரை
      பண் - இந்தளம்
      திருச்சிற்றம்பலம்
      383 சீரார் கழலே தொழுவீ ரிதுசெப்பீர்
      வாரார் முலைமங்கை யொடும் முடனாகி
      ஏரா ரிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
      காரார் கடல்நஞ் சமுதுண்ட கருத்தே. 01
      384 தொழலார் கழலேதொழு தொண்டர்கள் சொல்லீர்
      குழலார் மொழிக்கோல் வளையோ டுடனாகி
      எழிலா ரிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
      கழல்தான் கரிகா னிடையாடு கருத்தே. 02
      385 அன்பா லடிகை தொழுவீ ரறியீரே
      மின்போல் மருங்குல் மடவா ளொடுமேவி
      இன்பா யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
      பொன்போற் சடையிற் புனல்வைத்த பொருளே. 03
      386 நச்சி தொழுவீர்கள் நமக்கிது சொல்லீர்
      கச்சி பொலிகா கொடியுடன் கூடி
      இச்சி திரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
      உச்சி தலையிற் பலிகொண் டுழலூணே. 04
      387 சுற்றார தடியே தொழுவீ ரிதுசொல்லீர்
      நற்றாழ் குழல்நங்கை யொடும் முடனாகி
      எற்றே யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
      புற்றா டரவோடென்பு பூண்ட பொருளே. 05
      388 தோடார் மலர்தூ தொழுதொண்டர் கள்சொல்லீர்
      சேடார் குழற்சே யிழையோ டுடனாகி
      ஈடா யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
      காடார் கடுவே டுவனான கருத்தே. 06
      இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 07
      389 ஒருக்கும் மனத்தன்ப ருள்ளீ ரிதுசொல்லீர்
      பருக்கை மதவேழ முரித்துமை யோடும்
      இருக்கை யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
      அரக்கன் உரந்தீர தருளா கியவாறே. 08
      390 துயரா யினநீங்கி தொழுந்தொண்டர் சொல்லீர்
      கயலார் கருங்கண்ணி யொடும் முடனாகி
      இயல்பா யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
      முயல்வா ரிருவர கெரியா கியமொய்ம்பே. 09
      391 துணைநன் மலர்தூ தொழுந்தொண்டர் கள்சொல்லீர்
      பணைமென் முலைப்பார பதியோ டுடனாகி
      இணையில் லிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
      அணைவில் சமண்சா கியமா கியவாறே. 10
      392 எந்தை யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
      சந்தம் பயில்சண்பை யுண்ஞான சம்பந்தன்
      செந்தண் தமிழ்செ பியப திவைவல்லார்
      பந்தம் மறுத்தோங் குவர்பான் மையினாலே. 11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - காசியாரண்ணியேசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.37 திருமறைக்காடு - கதவடைக்கப்பாடியபதிகம்
      பண் - இந்தளம்
      திருச்சிற்றம்பலம்
      393 சதுரம் மறைதான் துதிசெய்து வணங்கும்
      மதுரம் பொழில்சூழ் மறைக்கா டுறைமைந்தா
      இதுநன் கிறைவை தருள்செய்க எனக்குன்
      கதவ திருக்காப்பு கொள்ளுங் கருத்தாலே. 01
      394 சங்க தரளம் மவைதான் கரைக்கெற்றும்
      வங கடல்சூழ் மறைக்கா டுறைமைந்தா
      மங்கை உமைபா கமுமா கவிதென்கொல்
      கங்கை சடைமே லடைவித்த கருத்தே. 02
      395 குரவங் குருக்கத்தி கள்புன்னை கள்ஞாழல்
      மருவும் பொழில்சூழ் மறைக்கா டுறைமைந்தா
      சிரமும் மலரு திகழ்செஞ் சடைதன்மேல்
      அரவம் மதியோ டடைவித்த லழகே. 03
      396 படர்செம் பவளத்தொடு பன்மலர் முத்தம்
      மடலம் பொழில்சூழ் மறைக்கா டுறைமைந்தா
      உடலம் முமைபங்க மதாகியு மென்கொல்
      கடல்நஞ் சமுதா அதுவுண்ட கருத்தே. 04
      397 வானோர் மறைமா தவத்தோர் வழிபட்ட
      தேனார் பொழில்சூழ் மறைக்கா டுறைசெல்வா
      ஏனோர் தொழுதேத்த இருந்தநீ யென்கொல்
      கானார் கடுவே டுவனான கருத்தே. 05
      398 பலகாலங்கள் வேதங்கள் பாதங்கள் போற்றி
      மலரால் வழிபாடு செய்மா மறைக்காடா
      உலகே ழுடையாய் கடைதோறு முன்னென்கொல்
      தலைசேர் பலிகொண் டதிலுண் டதுதானே. 06
      399 வேலா வல தயலே மிளிர்வெய்துஞ்
      சேலார் திருமா மறைக்கா டுறைசெல்வா
      மாலோ டயன்இ திரனஞ்ச முன்னென்கொல்
      காலார் சிலைக்கா மனைக்காய்ந்த கருத்தே. 07
      400 கலங்கொள் கடலோதம் உலாவுங் கரைமேல்
      வலங்கொள் பவர்வாழ திசைக்கும் மறைக்காடா
      இலங்கை யுடையான் அடர்ப்ப டிடரெய்த
      அலங்கல் விரலூன்றி யருள்செய்த வாறே. 08
      401 கோனென்று பல்கோடி உருத்திரர் போற்று
      தேனம் பொழில்சூழ் மறைக்கா டுறைசெல்வா
      ஏனங் கழுகா னவருன்னை முன்னென்கொல்
      வான தலமண்டி யுங்கண்டி லாவாறே. 09
      402 வேதம் பலவோமம் வியந்தடி போற்ற
      ஓதம் உலவும் மறைக்காட்டி லுறைவாய்
      ஏதில் சமண்சா கியர்வா கிவையென்கொல்
      ஆத ரொடுதா மலர்தூற் றியவாறே. 10
      403 காழி நகரான் கலைஞான சம்பந்தன்
      வாழிம் மறைக்கா டனைவா தறிவித்த
      ஏழின் னிசைமாலை யீரை திவைவல்லார்
      வாழி யுலகோர் தொழவான் அடைவாரே. 11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.38 திருச்சாய்க்காடு
      பண் - இந்தளம்
      திருச்சிற்றம்பலம்
      404 நித்த லுந்நிய மஞ்செய்து நீர்மலர் தூவி
      சித்த மொன்றவல் லார்க்கரு ளுஞ்சிவன் கோயில்
      மத்த யானையின் கோடும்வண் பீலியும் வாரி
      தத்து நீர்ப்பொன்னி சாகர மேவுசா காடே. 01
      405 பண்ட லைக்கொண்டு பூதங்கள் பாடநின் றாடும்
      வெண்ட லைக்கருங் காடுறை வேதியன் கோயில்
      கொண்ட லைத்திகழ் பேரிமு ழங குலாவி
      தண்ட லைத்தட மாமயி லாடுசா காடே. 02
      406 நாறு கூவிள நாகிள வெண்மதி யத்தோ
      டாறு சூடும் அமரர் பிரானுறை கோயில்
      ஊறு தேங்கனி மாங்கனி யோங்கிய சோலை
      தாறு தண்கத லிப்புதல் மேவுசா காடே. 03
      407 வரங்கள் வண்புகழ் மன்னிய எந்தை மருவார்
      புரங்கள் மூன்றும் பொடிபட எய்தவன் கோயில்
      இரங்க லோசையு மீட்டிய சரக்கொடு மீண்டி
      தரங்கம் நீள்கழி தண்கரை வைகுசா காடே. 04
      408 ஏழை மார்கடை தோறு மிடுபலி கென்று
      கூழை வாளர வாட்டும் பிரானுறை கோயில்
      மாழை யொண்கண் வளைக்கை நுளைச்சியர் வண்பூ
      தாழை வெண்மடல் கொய்துகொண் டாடுசா காடே. 05
      409 துங்க வானவர் சூழ்கடல் தாங்கடை போதில்
      அங்கொர் நீழ லளித்தஎம் மானுறை கோயில்
      வங்கம் அங்கொளிர் இப்பியும் முத்தும் மணியுஞ்
      சங்கும் வாரி தடங்கட லுந்து சாய்க்காடே. 06
      410 வேத நாவினர் வெண்பளிங் கின்குழை காதர்
      ஓத நஞ்சணி கண்டர் உகந்துறை கோயில்
      மாதர் வண்டுதன் காதல்வண் டாடிய புன்னை
      தாது கண்டு பொழில்மறை தூடுசா காடே. 07
      411 இருக்கு நீள்வரை பற்றி யடர்த்தன் றெடுத்த
      அரக்கன் ஆகம் நெரித்தருள் செய்தவன் கோயில்
      மரு குலாவிய மல்லிகை சண்பகம் வண்பூ
      தரு குலாவிய தண்பொழில் நீடுசா காடே. 08
      412 மாலி னோடயன் காண்டற் கரியவர் வாய்ந்த
      வேலை யார்விட முண்டவர் மேவிய கோயில்
      சேலின் நேர்விழி யார்மயி லால செருந்தி
      காலை யேகன கம்மலர் கின்றசா காடே. 09
      413 ஊத்தை வாய்ச்சமண் கையர்கள் சாக்கியர கென்றும்
      ஆத்த மாக அறிவரி தாயவன் கோயில்
      வாய்த்த மாளிகை சூழ்தரு வண்புகார் மாடே
      பூத்த வாவிகள் சூழ்ந்து பொலிந்தசா காடே. 10
      414 ஏனை யோர்புகழ தேத்திய எந்தைசா காட்டை
      ஞான சம்பந்தன் காழியர் கோன்நவில் பத்தும்
      ஊன மின்றி உரைசெய வல்லவர் தாம்போய்
      வான நாடினி தாள்வரிம் மாநில தோரே. 11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - சாயாவனேசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.39 திருக்ஷேத்திரக்கோவை
      பண் - இந்தளம்
      திருச்சிற்றம்பலம்
      415 ஆரூர் தில்லையம் பலம்வல் லந்நல்லம்
      வடக சியு சிறுபாக்கம் நல்ல
      கூரூர் குடவாயில் குடந்தை வெண்ணி
      கடல்சூழ் கழிப்பாலை தென்கோடி பீடார்
      நீரூர் வயல்நின்றி யூர்குன்றி யூருங்
      குருகா வையூர் நாரையூர் நீடுகான
      பேரூர் நன்னீள் வயல்நெ தானமும்
      பிதற்றாய் பிறைசூ டிதன்பே ரிடமே. 01
      416 அண்ணா மலையீங் கோயுமத்தி முத்தா
      றகலா முதுகுன் றங்கொடுங் குன்றமுங்
      கண்ணார் கழுக்குன் றங்கயிலை கோணம்
      பயில்கற் குடிகா ளத்திவா போக்கியும்
      பண்ணார் மொழிமங்கை யோர்பங் குடையான்
      பரங்குன் றம்பரு பதம்பேணி நின்றே
      எண்ணாய் இரவும் பகலும் இடும்பை
      கடல் நீ தலாங் காரணமே. 02
      417 அட்டா னமென் றோதியநா லிரண்டும்
      அழகன் னுறைகா வனைத்து துறைகள்
      எட்டா திருமூர தியின்கா டொன்பதுங்
      குளமூன் றுங்கள மஞ்சும்பாடி நான்கும்
      மட்டார் குழலாள் மலைமங்கை பங்கன்
      மதிக்கும் மிடமா கியபாழி மூன்றுஞ்
      சிட்டா னவன்பா சூரென்றே விரும்பாய்
      அரும்பா வங்களா யினதே தறவே. 03
      418 அறப்பள்ளி அகத்தியான் பள்ளிவெள் ளைப்பொடி
      பூசியா றணிவான் அமர்காட்டு பள்ளி
      சிறப்பள்ளி சிராப்பள்ளி செம்பொன் பள்ளி
      திருநனி பள்ளி சீர்மகே திரத்து
      பிறப்பில் லவன்பள்ளி வெள்ள சடையான்
      விரும்பும் மிடைப்பள்ளி வண்சக்க ரம்மால்
      உறைப்பா லடிபோற்ற கொடுத்த பள்ளி
      உணராய் மடநெஞ்ச மேயுன்னி நின்றே 04
      419 ஆறை வடமா கறலம்பர் ஐயா
      றணியார் பெருவேளூர் விளமர் தெங்கூர்
      சேறை துலைபுக லூரக லாதிவை
      காதலி தானவன் சேர்பதியே. 05
      இச்செய்யுளின் சிலஅடிகளும் சீர்களும் சிதைந்துபோயின.
      420 மனவஞ்சர் மற்றோட முன்மாத ராரும்
      மதிகூர் திருக்கூட லில்ஆல வாயும்
      இனவஞ் சொலிலா இடைமா மருதும்
      இரும்பை பதிமா காளம்வெற் றியூருங்
      கனமஞ் சினமால் விடையான் விரும்புங்
      கருகா வூர்நல் லூர்பெரும் புலியூர்
      தனமென் சொலிற்றஞ் சமென்றே நினைமின்
      தவமாம் மலமா யினதா னருமே. 06
      421 மாட்டூர் மடப்பா சிலாச்சி ராமம்
      முண்டீ சரம்வாத வூர்வார ணாசி
      காட்டூர் கடம்பூர் படம்பக்கங் கொட்டுங்
      கடலொற்றி யூர்மற் றுறையூ ரவையுங்
      கோட்டூர் திருவாமா தூர்கோ ழம்பமுங்
      கொடுங்கோ வலூர்திரு குணவாயில் 07
      இச்செய்யுளின் சிலஅடிகளும் சீர்களும் சிதைந்துபோயின.
      422 குலாவு திங்க
      சடையான் குளிரும் பரிதி நியமம்
      போற்றூ ரடியார் வழிபா டொழியா
      தென்புறம் பயம்பூ வணம்பூ ழியூருங்
      காற்றூர் வரையன் றெடுத்தான் முடிதோள்
      நெரித்தா னுறைகோயில் லென் றென்றுநீ கருதே. 08
      இச்செய்யுளின் சிலஅடிகளும் சீர்களும் சிதைந்துபோயின.
      423 நெற்குன்றம் ஓத்தூர் நிறைநீர் மருகல்
      நெடுவா யிற்குறும் பலாநீ டுதிரு
      நற்குன்றம் வலம்புரம் நாகே சுரம்நளிர்
      சோலை உஞ்சேனை மாகாளம் வாய்மூர்
      கற்குன்ற மொன்றே திமழை தடுத்த
      கடல்வண் ணனுமா மலரோனுங் காணா
      சொற்கென் றுந்தொலை விலாதா னுறையுங்
      குடமூ கென்றுசொல் லிக்குலா வுமினே. 09
      424 குத்தங் குடிவே திகுடி புனல்சூழ்
      குருந்தங் குடிதே வன்குடி மருவும்
      அத்தங் குடிதண் டிருவண் குடியும்
      அலம்புஞ் சலந்தன் சடைவை துகந்த
      நித்தன் நிமலன் உமையோ டுங்கூட
      நெடுங்கா லமுறை விடமென்று சொல்லா
      புத்தர் புறங்கூ றியபுன் சமணர்
      நெடும்பொய் களைவி டுநினை துய்ம்மினே. 10
      425 அம்மா னையரு தவமாகி நின்ற
      அமரர் பெருமான் பதியான வுன்னி
      கொய்ம்மா மலர்ச்சோலை குலாவு கொச்சை
      கிறைவன் சிவஞான சம்பந்தன் சொன்ன
      இம்மா லையீரை தும்இரு நிலத்தில்
      இரவும் பகலும் நினைந்தேத்தி நின்று
      விம்மா வெருவா விரும்பும் மடியார்
      விதியார் பிரியார் சிவன்சே வடிக்கே. 11
      இப்பதிகத்தில் வரும் குன்றியூர் இடைப்பள்ளி மாட்டூர் வாதவூர்
      வாரணாசி கோட்டூர் குணவாயில் நெற்குன்றம் நற்குன்றம்
      நெடுவாயில் உஞ்சேனைமாகாளம் குத்தங்குடி குருந்தேவன்குடி
      மத்தங்குடி திருவண்குடி இவைகட்கு தனித்தனி
      தேவார மில்லாமையால் வைப்புத்தலமென்று சொல்லப்படும்.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.40 திருப்பிரமபுரம்
      பண் - சீகாமரம்
      திருச்சிற்றம்பலம்
      426 எம்பிரான் எனக்கமுத மாவானு தன்னடைந்தார்
      தம்பிரான் ஆவானு தழலேந்து கையானுங்
      கம்பமா கரியுரித்த காபாலி கறைக்கண்டன்
      வம்புலாம் பொழிற்பிரம புரத்துறையும் வானவனே. 01
      427 தாமென்றும் மனந்தளரா தகுதியராய் உலகத்து
      காமென்று சரண்புகுந்தார் தமைக்காக்குங் கருணையினான்
      ஓமென்று மறைபயில்வார் பிரமபுர துறைகின்ற
      காமன்றன் னுடலெரி கனல்சேர்ந்த கண்ணானே. 02
      428 நன்னெஞ்சே யுனையிரந்தேன் நம்பெருமான் திருவடியே
      உன்னஞ்செய் திருகண்டாய் உய்வதனை வேண்டுதியேல்
      அன்னஞ்சேர் பிரமபுர தாரமுதை எப்போதும்
      பன்னுஞ்சீர் வாயதுவே பார்கண்ணே பரிந்திடவே. 03
      429 சாநாளின் றிம்மனமே சங்கைதனை தவிர்ப்பிக்குங்
      கோனாளு திருவடிக்கே கொழுமலர்தூ வெத்தனையு
      தேனாளும் பொழிற்பிரம புரத்துறையு தீவணனை
      நாநாளும் நன்னியமஞ் செய்தவன்சீர் நவின்றேத்தே. 04
      430 கண்ணுதலான் வெண்ணீற்றான் கமழ்சடையான் விடையேறி
      பெண்ணிதமாம் உருவத்தான் பிஞ்ஞகன்பேர் பலவுடையான்
      விண்ணுதலா தோன்றியசீர பிரமபுர தொழவிரும்பி
      எண்ணுதலாஞ் செல்வத்தை இயல்பாக அறிந்தோமே. 05
      431 எங்கேனும் யாதாகி பிறந்திடினு தன்னடியார
      கிங்கேயென் றருள்புரியும் எம்பெருமான் எருதேறி
      கொங்கேயும் மலர்ச்சோலை குளிர்பிரம புரத்துறையுஞ்
      சங்கேயொ தொளிர்மேனி சங்கரன்றன் தன்மைகளே. 06
      432 சிலையதுவெஞ் சிலையாக திரிபுரமூன் றெரிசெய்த
      இலைநுனைவேற் றடக்கையன் ஏந்திழையா ளொருகூறன்
      அலைபுனல்சூழ் பிரமபுர தருமணியை அடிபணிந்தால்
      நிலையுடைய பெருஞ்செல்வம் நீடுலகிற் பெறலாமே. 07
      433 எரித்தமயிர் வாளரக்கன் வெற்பெடுக்க தோளொடுதாள்
      நெரித்தருளுஞ் சிவமூர்த்தி நீறணிந்த மேனியினான்
      உரித்தவரி தோலுடையான் உறைபிரம புரந்தன்னை
      தரித்தமனம் எப்போதும் பெறுவார்தாம் தக்காரே. 08
      434 கரியானும் நான்முகனுங் காணாமை கனலுருவாய்
      அரியானாம் பரமேட்டி அரவஞ்சே ரகலத்தான்
      தெரியாதான் இருந்துறையு திகழ்பிரம புரஞ்சேர
      உரியார்தாம் ஏழுலகும் உடனாள உரியாரே. 09
      435 உடையிலார் சீவரத்தார் தன்பெருமை உணர்வரியான்
      முடையிலார் வெண்டலைக்கை மூர்த்தியா திருவுருவன்
      பெடையிலார் வண்டாடும் பொழிற்பிரம புரத்துறையுஞ்
      சடையிலார் வெண்பிறையான் தாள்பணிவார் தக்காரே. 10
      436 தன்னடைந்தார கின்பங்கள் தருவானை தத்துவனை
      கன்னடைந்த மதிற்பிரம புரத்துறையுங் காவலனை
      முன்னடைந்தான் சம்பந்தன் மொழிபத்து மிவைவல்லார்
      பொன்னடைந்தார் போகங்கள் பலவடைந்தார் புண்ணியரே. 11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.41 திருச்சாய்க்காடு
      பண் - சீகாமரம்
      திருச்சிற்றம்பலம்
      437 மண்புகார் வான்புகுவர் மனமிளையார் பசியாலுங்
      கண்புகார் பிணியறியார் கற்றாருங் கேட்டாரும்
      விண்புகா ரெனவேண்டா வெண்மாட நெடுவீதி
      தண்புகார சாய்க்காட்டெ தலைவன்றாள் சார்ந்தாரே. 01
      438 போய்க்காடே மறைந்துறைதல் புரிந்தானும் பூம்புகார
      சாய்க்காடே பதியாக உடையானும் விடையானும்
      வாய்க்காடு முதுமரமே இடமாக வந்தடைந்த
      பேய்க்காடல் புரிந்தானும் பெரியோர்கள் பெருமானே. 02
      439 நீநாளும் நன்னெஞ்சே நினைகண்டாய் யாரறிவார்
      சாநாளும் வாழ்நாளுஞ் சாய்க்காட்டெம் பெருமாற்கே
      பூநாளு தலைசு புகழ்நாமம் செவிகேட்ப
      நாநாளும் நவின்றேத்த பெறலாமே நல்வினையே. 03
      440 கட்டலர்த்த மலர்தூவி கைதொழுமின் பொன்னியன்ற
      தட்டலர்த்த பூஞ்செருந்தி கோங்கமரு தாழ்பொழில்வாய்
      மொட்டலர்த்த தடந்தாழை முருகுயிர்க்குங் காவிரிப்பூம்
      பட்டினத்து சாய்க்காட்டெம் பரமேட்டி பாதமே. 04
      441 கோங்கன்ன குவிமுலையாள் கொழும்பணைத்தோ கொடியிடையை
      பாங்கென்ன வைத்துகந்தான் படர்சடைமேற் பால்மதி
      தாங்கினான் பூம்புகார சாய்க்காட்டான் தாள்நிழற்கீழ்
      ஓங்கினார் ஓங்கினா ரெனவுரைக்கும் உலகமே. 05
      442 சாந்தாக நீறணிந்தான் சாய்க்காட்டான் காமனைமுன்
      தீந்தாகம் எரிகொளுவ செற்றுகந்தான் திருமுடிமேல்
      ஓய்ந்தார மதிசூடி ஒளிதிகழும் மலைமகள்தோள்
      தோய்ந்தாகம் பாகமா வுடையானும் விடையானே. 06
      443 மங்குல்தோய் மணிமாடம் மதிதவழும் நெடுவீதி
      சங்கெலாங் கரைபொருது திரைபுலம்புஞ் சாய்க்காட்டான்
      கொங்குலா வரிவண்டி னிசைபாடு மலர்க்கொன்றை
      தொங்கலான் அடியார்க்கு சுவர்க்கங்கள் பொருளலவே. 07
      444 தொடலரிய தொருகணையாற் புரமூன்றும் எரியுண்ண
      படவரவ தெழிலாரம் பூண்டான்பண் டரக்கனையு
      தடவரையால் தடவரைத்தோ ளூன்றினான் சாய்க்காட்டை
      இடவகையா லடைவோமென் றெண்ணுவார கிடரிலையே. 08
      445 வையநீ ரேற்றானும் மலருறையும் நான்முகனும்
      ஐயன்மார் இருவர்க்கும் அளப்பரிதால் அவன்பெருமை
      தையலார் பாட்டோ வா சாய்க்காட்டெம் பெருமானை
      தெய்வமா பேணாதார் தெளிவுடைமை தேறோமே. 09
      446 குறங்காட்டு நால்விரற் கோவணத்து கோலோவிப்போய்
      அறங்காட்டுஞ் சமணரும் சாக்கியரும் அலர்தூற்று
      திறங்காட்டல் கேளாதே தெளிவுடையீர் சென்றடைமின்
      புறங்காட்டில் ஆடலான் பூம்புகார சாய்க்காடே. 10
      447 நொம்பைந்து புடைத்தொல்கு நூபுரஞ்சேர் மெல்லடியார்
      அம்பந்தும் வரிக்கழலும் அரவஞ்செய் பூங்காழி
      சம்பந்தன் தமிழ்பகர்ந்த சாய்க்காட்டு பத்தினையும்
      எம்பந்த மெனக்கருதி ஏத்துவார கிடர்கெடுமே. 11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.42 திருஆக்கூர்
      பண் - சீகாமரம்
      திருச்சிற்றம்பலம்
      448 அக்கிருந்த ஆரமும் ஆடரவும் ஆமையு
      தொக்கிருந்த மார்பினான் தோலுடையான் வெண்ணீற்றான்
      புக்கிருந்த தொல்கோயில் பொய்யிலா மெய்ந்நெறிக்கே
      தக்கிருந்தார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே. 01
      449 நீரார வார்சடையான் நீறுடையான் ஏறுடையான்
      காரார்பூங் கொன்றையினான் காதலித்த தொல்கோயில்
      கூராரல் வாய்நிறை கொண்டயலே கோட்டகத்திற்
      தாராமல் காக்கூரில் தான்தோன்றி மாடமே. 02
      450 வாளார்கண் செந்துவர்வாய் மாமலையான் றன்மடந்தை
      தோளாகம் பாகமா புல்கினான் தொல்கோயில்
      வேளாள ரென்றவர்கள் வள்ளன்மையான் மிக்கிருக்கு
      தாளாளர் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே. 03
      451 கொங்குசேர் தண்கொன்றை மாலையினான் கூற்றடர
      பொங்கினான் பொங்கொளிசேர் வெண்ணீற்றான் பூங்கோயில்
      அங்கம் ஆறோடும் அருமறைகள் ஐவேள்வி
      தங்கினார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே. 04
      452 வீக்கினான் ஆடரவம் வீழ்ந்தழிந்தார் வெண்டலையென்
      பாக்கினான் பலகலன்க ளாதரித்து பாகம்பெண்
      ஆக்கினான் தொல்கோயில் ஆம்பலம்பூம் பொய்கைபுடை
      தாக்கினார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே. 05
      453 பண்ணொளிசேர் நான்மறையான் பாடலினோ டாடலினான்
      கண்ணொளிசேர் நெற்றியினான் காதலித்த தொல்கோயில்
      விண்ணொளிசேர் மாமதி தீண்டியக்கால் வெண்மாட
      தண்ணொளிசேர் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே. 06
      454 வீங்கினார் மும்மதிலும் வில்வரையால் வெந்தவிய
      வாங்கினார் வானவர்கள் வந்திறைஞ்சு தொல்கோயில்
      பாங்கினார் நான்மறையோ டாறங்கம் பலகலைகள்
      தாங்கினார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே. 07
      455 கன்னெடிய குன்றெடுத்தான் தோளடர காலூன்றி
      இன்னருளால் ஆட்கொண்ட எம்பெருமான் தொல்கோயில்
      பொன்னடிக்கே நாடோ றும் பூவோடு நீர்சுமக்கு
      தன்னடியார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே. 08
      456 நன்மையான் நாரணனும் நான்முகனுங் காண்பரிய
      தொன்மையான் தோற்றங்கே டில்லாதான் தொல்கோயில்
      இன்மையாற் சென்றிரந்தார கில்லையென்னா தீந்துவக்கு
      தன்மையார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே. 09
      457 நாமருவு புன்மை நவிற்ற சமண்தேரர்
      பூமருவு கொன்றையினான் புக்கமரு தொல்கோயில்
      சேன்மருவு பங்கயத்து செங்கழுநீர் பைங்குவளை
      தாமருவும் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே. 10
      458 ஆடல் அமர்ந்தானை ஆக்கூரில் தான்தோன்றி
      மாடம் அமர்ந்தானை மாடஞ்சேர் தண்காழி
      நாடற் கரியசீர் ஞானசம் பந்தன்சொல்
      பாடலிவை வல்லார கில்லையாம் பாவமே. 11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - சுயம்புநாதேசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.43 திருப்புள்ளிருக்குவேளூர்
      பண் - சீகாமரம்
      திருச்சிற்றம்பலம்

      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.44 திருஆமாத்தூர்
      பண் - சீகாமரம்
      திருச்சிற்றம்பலம்
      459 கள்ளார்ந்த பூங்கொன்றை மதமத்தங் கதிர்மதியம்
      உள்ளார்ந்த சடைமுடியெம் பெருமானார் உறையுமிட
      தள்ளாய சம்பாதி சடாயென்பார் தாமிருவர்
      புள்ளானார கரையனிடம் புள்ளிருக்கு வேளூரே. 01
      460 தையலாள் ஒருபாகஞ் சடைமேலாள் அவளோடும்
      ஐயந்தேர துழல்வாரோர் அந்தணனார் உறையுமிடம்
      மெய்சொல்லா இராவணனை மேலோடி யீடழித்து
      பொய்சொல்லா துயிர்போனான் புள்ளிருக்கு வேளூரே. 02
      461 வாசநலஞ் செய்திமையோர் நாடோ றும் மலர்தூவ
      ஈசனெம் பெருமானார் இனிதாக உறையுமிடம்
      யோசனைபோ பூக்கொணர்ந்தங் கொருநாளும் ஒழியாமே
      பூசனைசெய் தினிதிருந்தான் புள்ளிருக்கு வேளூரே. 03
      462 மாகாயம் பெரியதொரு மானுரிதோ லுடையாடை
      ஏகாய மிட்டுகந்த எரியாடி உறையுமிடம்
      ஆகா தேரோடும் இராவணனை அமரின்கண்
      போகாமே பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே. 04
      463 கீதத்தை மிகப்பாடும் அடியார்கள் குடியாக
      பாதத்தை தொழநின்ற பரஞ்சோதி பயிலுமிடம்
      வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாக
      போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்கு வேளூரே. 05
      464 திறங்கொண்ட அடியார்மேல் தீவினைநோய் வாராமே
      அறங்கொண்டு சிவதன்மம் உரைத்தபிரான் அமருமிடம்
      மறங்கொண்டங் கிராவணன்றன் வலிகருதி வந்தானை
      புறங்கண்ட சடாயென்பான் புள்ளிருக்கு வேளூரே. 06
      465 அத்தியின்ஈ ருரிமூடி அழகாக அனலேந்தி
      பித்தரைப்போற் பலிதிரியும் பெருமானார் பேணுமிடம்
      பத்தியினால் வழிபட்டு பலகால தவஞ்செய்து
      புத்தியொன்ற வைத்துகந்தான் புள்ளிருக்கு வேளூரே. 07
      466 பண்ணொன்ற இசைபாடும் அடியார்கள் குடியாக
      மண்ணின்றி விண்கொடுக்கும் மணிகண்டன் மருவுமிடம்
      எண்ணின்றி முக்கோடி வாணாள துடையானை
      புண்ணொன்ற பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே. 08
      467 வேதித்தார் புரமூன்றும் வெங்கணையால் வெந்தவி
      சாதித்த வில்லாளி கண்ணாளன் சாருமிடம்
      ஆதித்தன் மகனென்ன அகன்ஞால தவரோடும்
      போதித்த சடாயென்பான் புள்ளிருக்கு வேளூரே. 09
      468 கடுத்துவருங் கங்கைதனை கமழ்சடையொன் றாடாமே
      தடுத்தவரெம் பெருமானார் தாமினிதா யுறையுமிடம்
      விடைத்துவரும் இலங்கைக்கோன் மலங்கச்சென் றிராமற்கா
      புடைத்தவனை பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே. 10
      469 செடியாய வுடல்தீர்ப்பான் தீவினைக்கோர் மருந்தாவான்
      பொடியாடி கடிமைசெய்த புள்ளிருக்கு வேளூரை
      கடியார்ந்த பொழில்காழி கவுணியன்சம் பந்தன்சொல்
      மடியாது சொல்லவல்லார கில்லையாம் மறுபிறப்பே. 11
      470 துன்னம்பெய் கோவணமு தோலு முடையாடை
      பின்னஞ் சடைமேலோர் பிள்ளை மதிசூடி
      அன்னஞ்சேர் தண்கானல் ஆமாத்தூர் அம்மான்றன்
      பொன்னங் கழல்பரவா பொக்கமும் பொக்கமே. 01
      471 கைம்மாவின் தோல்போர்த்த காபாலி வானுலகில்
      மும்மா மதிலெய்தான் முக்கணான் பேர்பாடி
      அம்மா மலர்ச்சோலை ஆமாத்தூர் அம்மானெம்
      பெம்மானென் றேத்தாதார் பேயரிற் பேயரே. 02
      472 பாம்பரை சாத்தியோர் பண்டரங்கன் விண்டதோர்
      தேம்பல் இளமதியஞ் சூடிய சென்னியான்
      ஆம்பலம் பூம்பொய்கை ஆமாத்தூர் அம்மான்றன்
      சாம்பல் அகலத்தார் சார்பல்லாற் சார்பிலமே. 03
      473 கோணாக பேரல்குற் கோல்வளைக்கை மாதராள்
      பூணாகம் பாகமா புல்கி யவளோடும்
      ஆணாகங் காதல்செய் ஆமாத்தூர் அம்மானை
      காணாத கண்ணெல்லாங் கண்களே.
      474 பாடல் நெறிநின்றான் பைங்கொன்றை தண்டாரே
      சூடல் நெறிநின்றான் சூலஞ்சேர் கையினான்
      ஆடல் நெறிநின்றான் ஆமாத்தூர் அம்மான்றன்
      வேட நெறிநில்லா வேடமும் வேடமே. 05
      475 சாமவரை வில்லாக சந்தித்த வெங்கணையாற்
      காவல் மதிலெய்தான் கண்ணுடை நெற்றியான்
      யாவருஞ் சென்றேத்தும் ஆமாத்தூர் அம்மான
      தேவர் தலைவணங்கு தேவர்க்கு தேவனே. 06
      476 மாறாத வெங்கூற்றை மாற்றி மலைமகளை
      வேறாக நில்லாத வேடமே காட்டினான்
      ஆறாத தீயாடி ஆமாத்தூர் அம்மானை
      கூறாத நாவெல்லாங் நாக்களே.
      477 தாளால் அரக்கன்றோள் சாய்த்த தலைமகன்றன்
      நாளாதிரை யென்றே நம்பன்றன் நாமத்தால்
      ஆளானார் சென்றேத்தும் ஆமாத்தூர் அம்மானை
      கேளா செவியெல்லாங் செவிகளே.
      478 புள்ளுங் கமலமுங் கைக்கொண்டார் தாமிருவர்
      உள்ளு மவன்பெருமை ஒப்பளக்கு தன்மையதே
      அள்ளல் விளைகழனி ஆமாத்தூர் அம்மானெம்
      வள்ளல் கழல்பரவா வாழ்க்கையும் வாழ்க்கையே. 09
      479 பிச்சை பிறர்பெ பின்சார கோசார
      கொச்சை புலால்நாற ஈருரிவை போர்த்துகந்தான்
      அச்சந்தன் மாதேவி கீந்தான்றன் ஆமாத்தூர்
      நிச்ச னினையாதார் நெஞ்சமும் நெஞ்சமே. 10
      480 ஆட லரவசைத்த ஆமாத்தூர் அம்மானை
      கோட லிரும்புறவின் கொச்சை வயத்தலைவன்
      நாட லரியசீர் ஞானசம் பந்தன்றன்
      பாட லிவைவல்லார கில்லையாம் பாவமே. 11
      இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - அழகியநாதேசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.45 திருக்கைச்சினம்
      பண் - சீகாமரம்
      திருச்சிற்றம்பலம்
      481 தையலோர் கூறுடையான் தண்மதிசேர் செஞ்சடையான்
      மையுலா மணிமிடற்றன் மறைவிளங்கு பாடலான்
      நெய்யுலா மூவிலைவே லேந்தி நிவந்தொளிசேர்
      கையுடையான் மேவியுறை கோயில் கைச்சினமே. 01
      482 விடமல்கு கண்டத்தான் வெள்வளையோர் கூறுடையான்
      படமல்கு பாம்பரையான் பற்றாதார் புரமெரித்தான்
      நடமல்கும் ஆடலினான் நான்மறையோர் பாடலினான்
      கடமல்கு மாவுரியான் உறைகோயில் கைச்சினமே. 02
      483 பாடலார் நான்மறையான் பைங்கொன்றை பாம்பினொடுஞ்
      சூடலான் வெண்மதி துன்று கரந்தையொடும்
      ஆடலான் அங்கை அனலேந்தி யாடரவ
      காடலான் மேவியுறை கோயில் கைச்சினமே. 03
      484 பண்டமரர் கூடி கடைந்த படுகடல்நஞ்
      சுண்டபிரான் என்றிறைஞ்சி உம்பர் தொழுதேத்த
      விண்டவர்கள் தொன்னகரம் மூன்றுடனே வெந்தவி
      கண்ட பிரான் மேவியுறை கோயில் கைச்சினமே. 04
      485 தேய்ந்துமலி வெண்பிறையான் செய்யதிரு மேனியினன்
      வாய்ந்திலங்கு வெண்ணீற்றான் மாதினையோர் கூறுடையான்
      சாய்ந்தமரர் வேண்ட தடங்கடல்நஞ் சுண்டனங்கை
      காய்ந்தபிரான் மேவியுறை கோயில் கைச்சினமே. 05
      நஞ்சுண்டு--அனங்கை எனப்பிரித்து அனங்கை என்பதினுக்கு அனங்கனையெனப்பொருள் கொள்க.
      486 மங்கையோர் கூறுடையான் மன்னு மறைபயின்றான்
      அங்கையோர் வெண்டலையான் ஆடரவம் பூண்டுகந்தான்
      திங்களொடு பாம்பணிந்த சீரார் திருமுடிமேற்
      கங்கையினான் மேவியுறை கோயில் கைச்சினமே. 06
      487 வரியரவே நாணாக மால்வரையே வில்லாக
      எரிகணையால் முப்புரங்கள் எய்துகந்த எம்பெருமான்
      பொரிசுடலை யீ புறங்காட்டான் போர்த்ததோர்
      கரியுரியான் மேவியுறை கோயில் கைச்சினமே. 07
      488 போதுலவு கொன்றை புனைந்தான் திருமுடிமேல்
      மாதுமையா ளஞ்ச மலையெடுத்த வாளரக்கன்
      நீதியினா லேத்த நிகழ்வித்து நின்றாடுங்
      காதலினான் மேவியுறை கோயில் கைச்சினமே. 08
      489 மண்ணினைமுன் சென்றிரந்த மாலும் மலரவனும்
      எண்ணறியா வண்ணம் எரியுருவ மாயபிரான்
      பண்ணிசையா லேத்த படுவான்றன் நெற்றியின்மேற்
      கண்ணுடையான் மேவியுறை கோயில் கைச்சினமே. 09
      இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 10
      490 தண்வயல்சூழ் காழி தமிழ்ஞான சம்பந்தன்
      கண்ணுதலான் மேவியுறை கோயில் கைச்சினத்தை
      பண்ணிசையா லேத்தி பயின்ற இவைவல்லார்
      விண்ணவரா யோங்கி வியனுலக மாள்வாரே.
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - கைச்சினநாதர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.46 திருநாலூர்த்திருமயானம்
      பண் - சீகாமரம்
      திருச்சிற்றம்பலம்
      491 பாலூரும் மலைப்பாம்பும் பனிமதியும் மத்தமும்
      மேலூருஞ் செஞ்சடையான் வெண்ணூல்சேர் மார்பினான்
      நாலூர் மயானத்து நம்பான்றன் அடிநினைந்து
      மாலூருஞ் சிந்தையர்பால் வந்தூரா மறுபிறப்பே. 01
      492 சூடும் பிறைச்சென்னி சூழ்கா டிடமாக
      ஆடும் பறைசங் கொலியோ டழகாக
      நாடுஞ் சிறப்போவா நாலூர் மயனத்தை
      பாடுஞ் சிறப்போர்பாற் பற்றாவாம் பாவமே. 02
      493 கல்லால் நிழல்மேவி காமுறுசீர் நால்வர்க்கன்
      றெல்லா அறனுரையும் இன்னருளாற் சொல்லினான்
      நல்லார் தொழுதேத்தும் நாலூர் மயானத்தை
      சொல்லா தவரெல்லாஞ் செல்லாதார் தொன்னெறிக்கே. 03
      494 கோலத்தார் கொன்றையான் கொல்புலித்தோ லாடையான்
      நீலத்தார் கண்டத்தான் நெற்றியோர் கண்ணினான்
      ஞாலத்தார் சென்றேத்து நாலூர் மயானத்திற்
      சூலத்தா னென்பார்பாற் சூழாவா தொல்வினையே. 04
      495 கறையார் மணிமிடற்றான் காபாலி கட்டங்கன்
      பிறையார் வளர்சடையான் பெண்பாகன் நண்பாய
      நறையார் பொழில்புடைசூழ் நாலூர் மயானத்தெம்
      இறையானென் றேத்துவார கெய்துமாம் இன்பமே. 05
      496 கண்ணார் நுதலான் கனலா டிடமாக
      பண்ணார் மறைபாடி யாடும் பரஞ்சோதி
      நண்ணார் புரமெய்தான் நாலூர் மயானத்தை
      நண்ணா தவரெல்லாம் நண்ணாதார் நன்னெறியே. 06
      497 கண்பாவு வேகத்தாற் காமனைமுன் காய்ந்துகந்தான்
      பெண்பாவு பாகத்தான் நாகத்தோ லாகத்தான்
      நண்பார் குணத்தோர்கள் நாலூர் மயானத்தை
      எண்பாவு சிந்தையார கேலா இடர்தானே. 07
      498 பத்து தலையோனை பா தொருவிரலால்
      வைத்து மலையடர்த்து வாளோடு நாள்கொடுத்தான்
      நத்தின் ஒலியோவா நாலூர் மயானத்தென்
      அத்தன் அடிநினைவார கல்லல் அடையாவே. 08
      499 மாலோடு நான்முகனும் நேட வளரெரியாய்
      மேலோடு கீழ்காணா மேன்மையான் வேதங்கள்
      நாலோடும் ஆறங்கம் நாலூர் மயானத்தெம்
      பாலோடு நெய்யாடி பாதம் பணிவோமே. 09
      500 துன்பாய மாசார் துவராய போர்வையார்
      புன்பேச்சு கேளாதே புண்ணியனை நண்ணுமின்கள்
      நண்பாற் சிவாயவெனா நாலூர் மயானத்தே
      இன்பா யிருந்தானை யேத்துவார கின்பமே. 10
      501 ஞாலம் புகழ்காழி ஞானசம் பந்தன்றான்
      நாலு மறையோது நாலூர் மயானத்தை
      சீலம் புகழாற் சிறந்தேத்த வல்லாரு
      கேலும் புகழ்வான தின்பா யிருப்பாரே. 11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - பலாசவனேசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.47 திருமயிலாப்பூர் - பூம்பாவைத்திருப்பதிகம்
      பண் - சீகாமரம்
      திருச்சிற்றம்பலம்
      502 மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலை
      கட்டிட்டங் கொண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
      ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார
      கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய். 01
      503 மைப்பயந்த ஒண்கண் மடநல்லார் மாமயிலை
      கைப்பயந்த நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
      ஐப்பசி ஓண விழாவும் அருந்தவர்கள்
      துய்ப்பனவுங் காணாதே போதியோ பூம்பாவாய். 02
      504 வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில்
      துளக்கில் கபாலீ சரத்தான்தொல் கார்த்திகைநாள்
      தளத்தே திளமுலையார் தையலார் கொண்டாடும்
      விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய். 03
      505 ஊர்திரை வேலை யுலாவும் உயர்மயிலை
      கூர்தரு வேல்வல்லார் கொற்றங்கொள் சேரிதனில்
      கார்தரு சோலை கபாலீச்சரம் அமர்ந்தான்
      ஆதிரைநாள் காணாதே போதியோ பூம்பாவாய். 04
      506 மைப்பூசும் ஒண்கண் மடநல்லார் மாமயிலை
      கைப்பூசு நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
      நெய்ப்பூசு மொண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடு
      தைப்பூசங் காணாதே போதியோ பூம்பாவாய். 05
      507 மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசி
      கடலாட்டு கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
      அடலானே றூரும் அடிக ளடிபரவி
      நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய். 06
      508 மலிவிழா வீதி மடநல்லார் மாமயிலை
      கலிவிழா கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
      பலிவிழா பாடல்செய் பங்குனி யுத்திரநாள்
      ஒலிவிழா காணாதே போதியோ பூம்பாவாய். 07
      509 தண்ணா வரக்கன்றோள் சாய்த்துகந்த தாளினான்
      கண்ணார் மயிலை கபாலீச்சரம் அமர்ந்தான்
      பண்ணார் பதினெண் கணங்கள்தம் அட்டமிநாள்
      கண்ணார காணாதே போதியோ பூம்பாவாய். 08
      510 நற்றாமரை மலர்மேல் நான்முகனும் நாரணனும்
      உற்றாங் குணர்கிலா மூர்த்தி திருவடியை
      கற்றார்க ளேத்துங் கபாலீச்சரம் அமர்ந்தான்
      பொற்றாப்பு காணாதே போதியோ பூம்பாவாய். 09
      511 உரிஞ்சாய வாழ்க்கை அமணுடையை போர்க்கும்
      இருஞ்சா கியர்க ளெடுத்துரைப்ப நாட்டில்
      கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச்சரம் அமர்ந்தான்
      பெருஞ்சாந்தி காணாதே போதியோ பூம்பாவாய். 10
      512 கானமர் சோலை கபாலீச்சரம் அமர்ந்தான்
      தேனமர் பூம்பாவை பாட்டாக செந்தமிழான்
      ஞானசம் பந்தன் நலம்புகழ்ந்த பத்தும்வலார்
      வானசம் பந தவரோடும் வாழ்வாரே. 11
      இது எலும்பு பெண்ணாக ஓதியருளிய பதிகம்.
      இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - கபாலீசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.48 திருவெண்காடு
      பண் - சீகாமரம்
      திருச்சிற்றம்பலம்
      513 கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும்
      பெண்காட்டும் உருவானும் பிறைகாட்டுஞ் சடையானும்
      பண்காட்டும் இசையானும் பயிர்காட்டும் புயலானும்
      வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டுங் கொடியானே. 01
      514 பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை
      வாயினவே வரம்பெறுவர் ஐயுறவேண் டாவொன்றும்
      வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
      தோய்வினையா ரவர்தம்மை தோயாவா தீவினையே. 02
      515 மண்ணொடுநீ ரனல்காலோ டாகாயம் மதியிரவி
      எண்ணில்வரு மியமானன் இகபரமு மெண்டிசையும்
      பெண்ணினொடாண் பெருமையொடு சிறுமையுமாம் பேராளன்
      விண்ணவர்கோன் வழிபடவெண் காடிடமா விரும்பினனே. 03
      516 விடமுண்ட மிடற்றண்ணல் வெண்காட்டின் தண்புறவின்
      மடல்விண்ட முடத்தாழை மலர்நிழலை குருகென்று
      தடமண்டு துறைக்கெண்டை தாமரையின் பூமறை
      கடல்விண்ட கதிர்முத்த நகைகாட்டுங் காட்சியதே. 04
      517 வேலைமலி தண்கானல் வெண்காட்டான் திருவடிக்கீழ்
      மாலைமலி வண்சாந்தால் வழிபடுநன் மறையவன்றன்
      மேலடர்வெங் காலனுயிர் விண்டபினை நமன்தூதர்
      ஆலமிடற் றான்அடியார் என்றடர அஞ்சுவரே. 05
      518 தண்மதியும் வெய்யரவு தாங்கினான் சடையினுடன்
      ஒண்மதிய நுதலுமையோர் கூறுகந்தான் உறைகோயில்
      பண்மொழியால் அவன்நாமம் பலவோத பசுங்கிள்ளை
      வெண்முகில்சேர் கரும்பெணைமேல் வீற்றிருக்கும் வெண்காடே. 06
      519 சக்கரமாற் கீந்தானுஞ் சலந்தரனை பிளந்தானும்
      அக்கரைமே லசைத்தானும் அடைந்தயிரா வதம்பணிய
      மிக்கதனு கருள்சுரக்கும் வெண்காடும் வினைதுரக்கும்
      முக்குளம்நன் குடையானும் முக்கணுடை இறையவனே. 07
      520 பண்மொய்த்த இன்மொழியாள் பயமெய்த மலையெடுத்த
      உன்மத்தன் உரம்நெரித்தன் றருள்செய்தான் உறைகோயில்
      கண்மொய்த்த கருமஞ்ஞை நடமாட கடல்முழங்க
      விண்மொய்த்த பொழில்வரிவண் டிசைமுரலும் வெண்காடே. 08
      521 கள்ளார்செங் கமலத்தான் கடல்கிடந்தான் எனஇவர்கள்
      ஒள்ளாண்மை கொளற்கோடி உயர்ந்தாழ்ந்தும் உணர்வரியான்
      வெள்ளானை தவஞ்செய்யும் மேதகுவெண் காட்டானென்
      றுள்ளாடி உருகாதார் உணர்வுடைமை உணரோமே. 09
      522 போதியர்கள் பிண்டியர்கள் மிண்டுமொழி பொருளென்னும்
      பேதையர்கள் அவர்பிரிமின் அறிவுடையீர் இதுகேண்மின்
      வேதியர்கள் விரும்பியசீர் வியன்றிருவெண் காட்டானென்
      றோதியவர் யாதுமொரு தீதிலரென் றுணருமினே. 10
      523 தண்பொழில்சூழ் சண்பையர்கோன் தமிழ்ஞான சம்பந்தன்
      விண்பொலிவெண் பிறைச்சென்னி விகிர்தனுறை வெண்காட்டை
      பண்பொலிசெ தமிழ்மாலை பாடியப திவைவல்லார்
      மண்பொலிய வாழ்ந்தவர்போய் வான்பொலி புகுவாரே. 11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - சுவேதாரணியேசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.49 சீகாழி
      பண் - சீகாமரம்
      திருச்சிற்றம்பலம்
      524 பண்ணின் நேர்மொழி மங்கை மார்பலர்
      பாடி யாடிய வோசை நாடொறும்
      கண்ணின் நேரயலே பொலியுங் கடற்காழி
      பெண்ணின் நேரொரு பங்கு டைப்பெரு
      மானை யெம்பெரு மானென் றென்றுன்னும்
      அண்ண லாரடியார் அருளாலுங் குறைவிலரே. 01
      525 மொண்ட லம்பிய வார்தி ரைக்கடல்
      மோதி மீதெறி சங்கம் வங்கமுங்
      கண்டலம் புடைசூழ் வயல்சேர் கலிக்காழி
      வண்ட லம்பிய கொன்றை யானடி
      வாழ்த்தி யேத்திய மாந்தர் தம்வினை
      விண்டல் அங்கெளிதாம் அதுநல் விதியாமே. 02
      526 நாடெ லாமொளி யெய்த நல்லவர்
      நன்று மேத்தி வணங்கு வார்பொழிற்
      காடெ லாமலர் தேன்துளிக்குங் கடற்காழி
      தோடு லாவிய காது ளாய்சுரி
      சங்க வெண்குழை யாயென் றென்றுன்னும்
      வேடங் கொண்டவர் கள்வினைநீங்க லுற்றாரே. 03
      527 மையி னார்பொழில் சூழ நீழலில்
      வாச மார்மது மல்க நாடொறுங்
      கையி னார்மலர் கொண்டெழுவார் கலிக்காழி
      ஐய னேயர னேயென் றாதரி
      தோதி நீதியு ளேநி னைப்பவர்
      உய்யு மாறுலகில் உயர்ந்தாரி னுள்ளாரே. 04
      528 மலிக டுந்திரை மேல்நி மிர்ந்தெதிர்
      வந்து வந்தொளிர் நித்தி லம்விழ
      கலிக டிந்தகை யார்மருவுங் கலிக்காழி
      வலிய காலனை வீட்டி மாணிதன்
      இன்னு யிரளி தானை வாழ்த்திட
      மெலியு தீவினை நோயவைமே வுவர்வீடே. 05
      529 மற்று மிவ்வுல கத்து ளோர்களும்
      வானு ளோர்களும் வந்து வைகலுங்
      கற்ற சிந்தைய ராய்க்கருதுங் கலிக்காழி
      நெற்றி மேலமர் கண்ணி னானைநி
      னைந்தி ருந்திசை பாடுவார் வினை
      செற்ற மாந்தரெ னத்தெளிமின்கள் சிந்தையுளே. 06
      530 தான லம்புரை வேதி யரொடு
      தக்க மாதவர் தாந்தொ ழப்பயில்
      கான லின்விரை சேரவிம்முங் கலிக்காழி
      ஊனு ளாருயிர் வாழ்க்கை யாயுற
      வாகி நின்றவொ ருவனே யென்றென்
      றானலங் கொடுப்பா ரருள்வேந்த ராவாரே. 07
      531 மைத்த வண்டெழு சோலை யாலைகள்
      சாலி சேர்வய லார வைகலுங்
      கத்து வார்கடல் சென்றுலவுங் கலிக்காழி
      அத்த னேயர னேய ரக்கனை
      யன்ற டர்த்துக தாயு னகழல்
      பத்த ராய்ப்பர வும்பயனீங்கு நல்காயே. 08
      532 பரும ராமொடு தெங்கு பைங்கத
      லிப்ப ருங்கனி யுண்ண மந்திகள்
      கருவரா லுகளும் வயல்சூழ் கலிக்காழி
      திருவின் நாயக னாய மாலொடு
      செய்ய மாமலர செல்வ னாகிய
      இருவர் காண்பரியா னெனவேத்துத லின்பமே. 09
      533 பிண்ட முண்டுழல் வார்க ளும்பிரி
      யாது வண்டுகி லாடை போர்த்தவர்
      கண்டு சேரகிலா ரழகார் கலிக்காழி
      தொண்டை வாயுமை யோடுங் கூடிய
      வேடனே சுட லைப்பொ டியணி
      அண்ட வாணனென் பார்க்கடையா அல்லல்தானே. 10
      534 பெயரெ னும்மிவை பன்னி ரண்டினும்
      உண்டெ னப்பெயர் பெற்ற வூர்திகழ்
      கயலு லாம்வயல் சூழ்ந்தழகார் கலிக்காழி
      நயன டன்கழ லேத்தி வாழ்த்திய
      ஞான சம்பந்தன் செந்தமிழ் உரை
      உயரு மாமொழி வாருலக துயர்ந்தாரே. 11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.50 திருஆமாத்தூர்
      பண் - சீகாமரம்
      திருச்சிற்றம்பலம்
      535 குன்ற வார்சிலை நாண ராவரி
      வாளி கூரெரி காற்றின் மும்மதில்
      வென்றவா றெங்ஙனே விடையேறும் வேதியனே
      தென்ற லார்மணி மாட மாளிகை
      சூளிகை கெதிர் நீண்ட பெண்ணைமேல்
      அன்றில் வந்தணையும் ஆமாத்தூர் அம்மானே. 01
      536 பரவி வானவர் தான வர்பல
      ருங்க லங்கிட வந்த கார்விடம்
      வெருவ உண்டுகந்த அருளென்கொல் விண்ணவனே
      கரவின் மாமணி பொன்கொ ழித்திழி
      சந்து காரகில் தந்து பம்பைநீர்
      அருவி வந்தலைக்கும் ஆமாத்தூர் அம்மானே. 02
      பம்பை என்பது ஒரு நதி.
      537 நீண்ட வார்சடை தாழ நேரிழை
      பாட நீறுமெய் பூசி மாலயன்
      மாண்ட வார்சுடலை நடமாடும் மாண்பதுவென்
      பூண்ட கேழல்ம ருப்பரா விரி
      கொன்றை வாளரி யாமை பூணென
      ஆண்ட நாயகனே ஆமாத்தூர் அம்மானே. 03
      538 சேலின் நேரன கண்ணி வெண்ணகை
      மான்வி ழித்தி ருமாதை பாகம்வை
      தேல மாதவம் நீமுயல்கின்ற வேடமிதென்
      பாலின் நேர்மொழி மங்கை மார்நட
      மாடி யின்னிசை பாட நீள்பதி
      ஆலை சூழ்கழனி ஆமாத்தூர் அம்மானே. 04
      539 தொண்டர் வந்துவ ணங்கி மாமலர்
      தூவி நின்கழ லேத்து வாரவர்
      உண்டியால் வருந்த இரங்காத தென்னைகொலாம்
      வண்ட லார்கழ னிக்க லந்தும
      லர்ந்த தாமரை மாதர் வாண்முகம்
      அண்டவாணர் தொழும் ஆமாத்தூர் அம்மானே. 05
      540 ஓதி யாரண மாய நுண்பொருள்
      அன்று நால்வர்முன் கேட்க நன்னெறி
      நீதி யாலநீ ழல்உரைக்கின்ற நீர்மையதென்
      சோதியே சுடரே சுரும் பமர்
      கொன்றை யாய்திரு நின்றி யூருறை
      ஆதியே அரனே ஆமாத்தூர் அம்மானே. 06
      541 மங்கை வாணுதன் மான்ம னத்திடை
      வாடி யூடம ணங்க மழ்சடை
      கங்கையா ளிருந்த கருத்தாவ தென்னைகொலாம்
      பங்க யமது வுண்டு வண்டிசை
      பாட மாமயி லாட விண்முழ
      வங்கையா லதிர்க்கும் ஆமாத்தூர் அம்மானே. 07
      542 நின்ற டர்த்திடும் ஐம்பு லன்னிலை
      யாத வண்ணம்நி னைந்து ளத்திடை
      வென்றடர தொருபால் மடமாதை விரும்புதலென்
      குன்றெ டுத்தநி சாசரன் திரள்
      தோளி ருபது தான் நெரிதர
      அன்றடர துகந்தாய் ஆமாத்தூர் அம்மானே. 08
      543 செய்ய தாமரை மேலி ருந்தவ
      னோடு மாலடி தேட நீண்முடி
      வெய்ய ஆரழலாய் நிமிர்கின்ற வெற்றிமையென்
      தைய லாளொடு பிச்சை கிச்சைத
      யங்கு தோலரை யார்த்த வேடங்கொண்
      டைய மேற்றுகந்தாய் ஆமாத்தூர் அம்மானே. 09
      544 புத்தர் புன்சம ணாதர் பொய்ம்மொழி
      நூல்பி டித்தலர் தூற்ற நின்னடி
      பத்தர் பேணநின்ற பரமாய பான்மையதென்
      முத்தை வென்ற முறுவ லாளுமை
      பங்க னென்றிமை யோர் பரவிடும்
      அத்தனே அரியாய் ஆமாத்தூர் அம்மானே. 10
      545 வாடல் வெண்டலை மாலை யார்த்தும
      யங்கி ருள்ளெரி யேந்தி மாநடம்
      ஆடல் மேயதென்னென் றாமாத்தூர் அம்மானை
      கோடல் நாகம் அரும்பு பைம்பொழிற்
      கொச்சை யாரிறை ஞான சம்பந்தன்
      பாடல் பத்தும்வல்லார் பரலோகஞ் சேர்வாரே. 11
      ஆமாத்தூர் என்பது பசுக்களுக்கு தாயகமானவூர் என்றும்
      ஆமாதாவூர் எனற்பாலது ஆமாத்தூர் என மருவி நின்ற தென்றும் பெரியோர்களாற் சொல்ல
      கேள்வி. ஆ - பசு.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.51 திருக்களர்
      பண் - சீகாமரம்
      திருச்சிற்றம்பலம்
      546 நீருளார் கயல் வாவி சூழ்பொழில்
      நீண்ட மாவய லீண்டு மாமதில்
      தேரினார் மறுகில் விழாமல்கு திருக்களருள்
      ஊரு ளாரிடு பிச்சை பேணும்
      ஒருவனே யொளிர் செஞ்ச டைம்மதி
      ஆரநின் றவனே அடைந்தார கருளாயே. 01
      547 தோளின் மேலொளி நீறு தாங்கிய
      தொண்டர் வந்தடி போற்ற மிண்டிய
      தாளினார் வளரு தவமல்கு திருக்களருள்
      வேளின் நேர்விச யற்க ருள்புரி
      வித்த காவிரும் பும்ம டியாரை
      ஆளுக தவனே அடைந்தார கருளாயே. 02
      548 பாட வல்லநல் மைந்த ரோடு
      பனிம லர்பல கொண்டு போற்றிசெய்
      சேடர் வாழ்பொழில் சூழ்செழுமாட திருக்களருள்
      நீட வல்ல நிமல னேயடி
      நிரை கழல்சிலம் பார்க்க மாநடம்
      ஆடவல் லவனே அடைந்தார கருளாயே. 03
      549 அம்பின் நேர்தடங் கண்ணி னாருடன்
      ஆடவர் பயில் மாட மாளிகை
      செம்பொனார் பொழில்சூழ தழகாய திருக்களருள்
      என்பு பூண்டதோர் மேனி யெம்மிறை
      வாஇ ணையடி போற்றி நின்றவர
      கன்புசெய் தவனே அடைந்தார கருளாயே. 04
      550 கொங்கு லாமலர சோலை வண்டினங்
      கிண்டி மாமது வுண்டி சைசெ
      தெங்குபைங் கமுகம் புடைசூழ்ந்த திருக்களருள்
      மங்கை தன்னொடுங் கூடிய மண
      வாளனே பிணை கொண்டொர் கைத்தல
      தங்கையிற் படையாய் அடைந்தார கருளாயே. 05
      551 கோல மாமயில் ஆல கொண்டல்கள்
      சேர்பொ ழிற்குல வும்வ யலிடை
      சேலிளங் கயலார் புனல்சூழ்ந்த திருக்களருள்
      நீல மேவிய கண்டனே நிமிர்
      புன்ச டைப்பெரு மானெ னப்பொலி
      ஆலநீழ லுளாய் அடைந்தார கருளாயே. 06
      552 தம்ப லம்மறி யாதவர் மதில்
      தாங்கு மால்வரை யால ழலெழ
      திண்பலங் கெடுத்தாய் திகழ்கின்ற திருக்களருள்
      வம்ப லர்மலர் தூவி நின்னடி
      வானவர் தொழ கூத்து கந்துபே
      ரம்பல துறைவாய் அடைந்தார கருளாயே. 07
      553 குன்ற டுத்தநன் மாளிகை கொடி
      மாட நீடுயர் கோபு ரங்கள்மேல்
      சென்றடு துயர்வான் மதிதோயு திருக்களருள்
      நின்ற டுத்துயர் மால்வ ரைத்திரள்
      தோளி னாலெடு தான்றன் நீள்முடி
      அன்றடர துகந்தாய் அடைந்தார கருளாயே. 08
      554 பண்ணி யாழ்பயில் கின்ற மங்கையர்
      பாட லாடலொ டார வாழ்பதி
      தெண்ணிலா மதியம் பொழில்சேரு திருக்களருள்
      உண்ணி லாவிய வொருவ னேயிரு
      வர்க்கு நின்கழல் காட்சி யாரழல்
      அண்ணலாய எம்மான் அடைந்தார கருளாயே. 09
      555 பாக்கி யம்பல செய்த பத்தர்கள்
      பாட்டொ டும்பல பணிகள் பேணிய
      தீக்கியல் குணத்தார் சிறந்தாரு திருக்களருள்
      வாக்கின் நான்மறை யோதி னாயமண்
      தேரர் சொல்லிய சொற்க ளானபொய்
      ஆக்கி நின்றவனே அடைந்தார கருளாயே. 10
      556 இந்து வந்தெழு மாட வீதியெ
      ழில்கொள் காழி நகர கவுணியன்
      செந்துநேர் மொழியார் அவர்சேரு திருக்களருள்
      அந்தி யன்னதொர் மேனி யானை
      அமரர் தம்பெரு மானை ஞானசம்
      பந்தன்சொல் லிவைப தும்பாட தவமாமே. 11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - களர்முளையீசுவரர் தேவியார் -அழகேசுவரியம்மை.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.52 திருக்கோட்டாறு
      பண் - சீகாமரம்
      திருச்சிற்றம்பலம்
      557 கருந்த டங்கண்ணின் மாத ராரிசை
      செ காரதிர் கின்ற பூம்பொழில்
      குருந்த மாதவியின் விரைமல்கு கோட்டாற்றில்
      இருந்த எம்பெரு மானை யுள்கி
      இணையடி தொழு தேத்தும் மாந்தர்கள்
      வருந்துமா றறியார் நெறிசேர்வர் வானூடே. 01
      558 நின்று மேய்ந்து நினைந்து மாகரி
      நீரொ டும்மலர் வேண்டி வான்மழை
      குன்றின் நேர்ந்துகுத்தி பணிசெய்யுங் கோட்டாற்றுள்
      என்றும் மன்னிய எம்பிரான் கழ
      லேத்தி வானர சாள வல்லவர்
      பொன்று மாறறியார் புகழார்ந்த புண்ணியரே. 02
      559 விரவி நாளும் விழாவி டைப்பொலி
      தொண்டர் வந்து வியந்து பண்செ
      குரவ மாரும்நீழற் பொழில்மல்கு கோட்டாற்றில்
      அரவ நீள்சடை யானை யுள்கிநின்
      றாத ரித்துமுன் அன்பு செய்தடி
      பரவுமாறு வல்லார் பழிபற் றறுப்பாரே. 03
      560 அம்பின் நேர்விழி மங்கை மார்பலர்
      ஆட கம்பெறு மாட மாளிகை
      கொம்பி னேர்துகி லின்கொடியாடு கோட்டாற்றில்
      நம்பனே நடனே நல திகழ்
      நாதனே யென்று காதல் செய்தவர்
      தம்பின் நேர்ந்தறியார் தடுமாற்ற வல்வினையே. 04
      561 பழைய தம்மடி யார்துதி செ
      பாரு ளோர்களும் விண்ணு ளோர்தொழ
      குழலும் மொந்தை விழாவொலிசெய்யுங் கோட்டாற்றில்
      கழலும் வண்சிலம் பும்மொ லிசெ
      கானி டைக்கண மேத்த ஆடிய
      அழக னென்றெழுவா ரணியாவர் வானவர்க்கே. 05
      562 பஞ்சின் மெல்லடி மாத ராடவர்
      பத்தர் சித்தர்கள் பண்பு வைகலுங்
      கொஞ்சி இன்மொழியாற் றொழின்மல்கு கோட்டாற்றில்
      மஞ்ச னேமணி யேமணி மிடற்
      றண்ண லேயென வுண்ணெ கிழ்ந்தவர்
      துஞ்சு மாறறியார் பிறவாரி தொன்னிலத்தே. 06
      563 கலவ மாமயி லாளொர் பங்கனை
      கண்டு கண்மிசை நீர்நெ கிழ்த்திசை
      குலவு மாறுவல்லார் குடிகொண்ட கோட்டாற்றில்
      நிலவ மாமதி சேர்ச டையுடை
      நின்ம லாவென வுன்னு வாரவர்
      உலவு வானவரின் உயர்வாகுவ துண்மையதே. 07
      564 வண்ட லார்வயற் சாலி யாலைவ
      ளம்பொ லிந்திட வார்பு னற்றிரை
      கொண்ட லார்கொணர தங்குலவுந்திகழ் கோட்டாற்றில்
      தொண்டெ லாந்துதி செய்ய நின்ற
      தொழில னேகழ லால ரக்கனை
      மிண்டெ லாந்தவிர தென்னுகந்திட்ட வெற்றிமையே. 08
      565 கருதி வந்தடி யார்தொ ழுதெழ
      கண்ண னோடயன் தேட ஆனையின்
      குருதி மெய்கலப்ப உரிகொண்டு கோட்டாற்றில்
      விருதி னான்மட மாதும் நீயும்வி
      யப்பொ டும்முயர் கோயில் மேவிவெள்
      ளெருதுக தவனே இரங்காயுன தின்னருளே. 09
      566 உடையி லாதுலழ் கின்ற குண்டரும்
      ஊணரு தவ தாய சாக்கியர்
      கொடையிலார் மனத்தார் குறையாருங் கோட்டாற்றில்
      படையி லார்மழு வேந்தி யாடிய
      பண்ப னேயிவ ரென்கொ லோநுனை
      அடைகிலாத வண்ணம் அருளாயுன் அடியவர்க்கே. 10
      567 கால னைக்கழ லாலு தைத்தொரு
      காம னைக்கன லாக சீறிமெய்
      கோல வார்குழலாள் குடிகொண்ட கோட்டாற்றில்
      மூல னைமுடி வொன் றிலாதவெம்
      முத்த னைப்பயில் பந்தன் சொல்லிய
      மாலைபத்தும் வல்லார கெளிதாகும் வானகமே. 11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - ஐராபதேசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.53 திருப்புறவார் - பனங்காட்டூர்
      பண் - சீகாமரம்
      திருச்சிற்றம்பலம்
      568 விண்ண மர்ந்தன மும்ம தில்களை
      வீழ வெங்கணை யாலெய் தாய்வரி
      பண்ணமர தொலிசேர் புறவார் பனங்காட்டூர
      பெண்ண மர்ந்தொரு பாக மாகிய
      பிஞ்ஞ காபிறை சேர்நு தலிடை
      கண்ண மர்ந்தவ னேகலந்தார கருளாயே. 01
      569 நீடல் கோடல் அலரவெண் முல்லை
      நீர்ம லர்நிரை தாத ளஞ்செ
      பாடல் வண்டறையும் புறவார் பனங்காட்டூர
      துளங்க வெண்குழை துள்ள நள்ளிருள்
      ஆடுஞ் சங்கரனே அடைந்தார கருளாயே. 02
      570 வாளை யுங்கய லும்மி ளிர்பொய்கை
      வார்பு னற்கரை யருகெ லாம்வயற்
      பாளை யொண்கமுகம் புறவார் பனங்காட்டூர
      பூளை யுந்நறுங் கொன்றை யும்மத
      மத்த மும்புனை வாய்க ழலிணை
      தாளையே பரவு தவத்தார கருளாயே. 03
      571 மேய்ந்தி ளஞ்செந்நெல் மென்கதிர் கவ்வி
      மேற்ப டுகலின் மேதி வைகறை
      பாய்ந்த தண்பழன புறவார் பனங்காட்டூர்
      ஆய்ந்த நான்மறை பாடி யாடும்
      அடிக ளென்றென் றரற்றி நன்மலர்
      சாய்ந்தடி பரவு தவத்த்தார கருளாயே. 04
      572 செங்க யல்லொடு சேல்செ ருச்செ
      சீறி யாழ்முரல் தேனி னத்தொடு
      பங்கயம் மலரும் புறவார் பனங்காட்டூர
      கங்கை யும்மதி யுங்க மழ்சடை
      கேண்மை யாளொடுங் கூடி மான்மறி
      அங்கை யாடலனே அடியார கருளாயே. 05
      573 நீரி னார்வரை கோலி மால்கடல்
      நீடி யபொழில் சூழ்ந்து வைகலும்
      பாரினார் பிரியா புறவார் பனங்காட்டூர
      காரி னார்மலர கொன்றை தாங்கு
      கடவு ளென்றுகை கூப்பி நாடொறுஞ்
      சீரினால் வணங்கு திறத்தார கருளாயே. 06
      574 கைய ரிவையர் மெல்வி ரல்லவை
      காட்டி யம்மலர காந்த ளங்குறி
      பையரா விரியும் புறவார் பனங்காட்டூர்
      மெய்ய ரிவையோர் பாக மாகவும்
      மேவி னாய்கழ லேத்தி நாடொறும்
      பொய்யிலா அடிமை புரிந்தார கருளாயே. 07
      575 தூவி யஞ்சிறை மென்ன டையன
      மல்கி யொல்கிய தூமலர பொய்கை
      பாவில் வண்டறையும் புறவார் பனங்காட்டூர்
      மேவி யந்நிலை யாய ரக்கன
      தோள டர்த்தவன் பாடல் கேட்டருள்
      ஏவிய பெருமான் என்பவர கருளாயே. 08
      576 அந்தண் மாதவி புன்னை நல்ல
      அசோக மும்மர விந்த மல்லிகை
      பைந்தண் ஞாழல்கள் சூழ்புறவார் பனங்காட்டூர்
      எந்தி ளம்முகில் வண்ணன் நான்முகன்
      என்றி வர்க்கரி தாய்நி மிர்ந்ததொர்
      சந்தம் ஆயவனே தவத்தார கருளாயே. 09
      577 நீண மார்முரு குண்டு வண்டினம்
      நீல மாமலர் கவ்வி நேரிசை
      பாணில் யாழ்முரலும் புறவார் பனங்காட்டூர்
      நாண ழிந்துழல் வார்ச மணரும்
      நண்பில் சாக்கிய ருந்ந கத்தலை
      ஊணுரி யவனே உகப்பார கருளாயே. 10
      578 மையி னார்மணி போல்மி டற்றனை
      மாசில் வெண்பொடி பூசும் மார்பனை
      பைய தேன்பொழில் சூழ்புறவார் பனங்காட்டூர்
      ஐய னைப்புக ழான காழியுள்
      ஆய்ந்த நான்மறை ஞான சம்பந்தன்
      செய்யுள் பாடவல்லார் சிவலோகஞ் சேர்வாரே. 11
      இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - பனங்காட்டீசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.54 திருப்புகலி
      பண் - சீகாமரம்
      திருச்சிற்றம்பலம்
      579 உருவார்ந்த மெல்லியலோர் பாகமுடையீ ரடைவோர்க்கு
      கருவார்ந்த வானுலகங் காட்டிக்கொடுத்தல் கருத்தானீர்
      பொருவார்ந்த தெண்கடலொண் சங்கந்திளைக்கும் பூம்புகலி
      திருவார்ந்த கோயிலே கோயிலாக திகழ்ந்தீரே. 01
      580 நீரார்ந்த செஞ்சடையீர் நிரையார்கழல்சேர் பாதத்தீர்
      ஊரார்ந்த சில்பலியீர் உழைமானுரிதோ லாடையீர்
      போரார்ந்த தெண்டிரைசென் றணையுங்கானல் பூம்புகலி
      சீரார்ந்த கோயிலே கோயிலாக சேர்ந்தீரே. 02
      581 அழிமல்கு பூம்புனலும் அரவுஞ்சடைமே லடைவெய்த
      மொழிமல்கு மாமறையீர் கறையார்கண்ட தெண்தோளீர்
      பொழின்மல்கு வண்டினங்கள் அறையுங்கானற் பூம்புகலி
      எழில்மல்கு கோயிலே கோயிலாக இருந்தீரே. 03
      582 கையிலார்ந்த வெண்மழுவொன் றுடையீர்கடிய கரியின்தோல்
      மயிலார்ந்த சாயல்மட மங்கைவெருவ மெய்போர்த்தீர்
      பயிலார்ந்த வேதியர்கள் பதியாய்விளங்கும் பைம்புகலி
      எயிலார்ந்த கோயிலே கோயிலாக இசைந்தீரே. 04
      583 நாவார்ந்த பாடலீர் ஆடலரவம் அரைக்கார்த்தீர்
      பாவார்ந்த பல்பொருளின் பயன்களானீர் அயன்பேணும்
      பூவார்ந்த பொய்கைகளும் வயலுஞ்சூழ்ந்த பொழிற்புகலி
      தேவார்ந்த கோயிலே கோயிலாக திகழ்ந்தீரே. 05
      584 மண்ணார்ந்த மணமுழவ ததும்பமலையான் மகளென்னும்
      பெண்ணார்ந்த மெய்மகிழ பேணியெரிகொண் டாடினீர்
      விண்ணார்ந்த மதியமிடை மாடத்தாரும் வியன்புகலி
      கண்ணார்ந்த கோயிலே கோயிலா கலந்தீரே. 06
      585 களிபுல்கு வல்லவுணர் ஊர்மூன்றெரி கணைதொட்டீர்
      அளிபுல்கு பூமுடியீர் அமரரேத்த அருள்செய்தீர்
      தெளிபுல்கு தேனினமும் மலருள்விரைசேர் திண்புகலி
      ஒளிபுல்கு கோயிலே கோயிலாக உகந்தீரே. 07
      586 பரந்தோங்கு பல்புகழ்சேர் அரக்கர்கோனை வரைக்கீழி
      டுரந்தோன்றும் பாடல்கே டுகவையளித்தீர் உகவாதார்
      புரந்தோன்று மும்மதிலு மெரியச்செற்றீர் பூம்புகலி
      வரந்தோன்று கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே. 08
      587 சலந்தாங்கு தாமரைமேல் அயனுந்தரணி யளந்தானுங்
      கலந்தோங்கி வந்திழிந்துங் காணாவண்ணங் கனலானீர்
      புலந்தாங்கி ஐம்புலனுஞ் செற்றார்வாழும் பூம்புகலி
      நலந்தாங்கு கோயிலே கோயிலாக நயந்தீரே. 09
      588 நெடிதாய வன்சமணும் நிறைவொன்றில்லா சாக்கியருங்
      கடிதாய கட்டுரையாற் கழறமேலோர் பொருளானீர்
      பொடியாரும் மேனியினீர் புகலிமறையோர் புரிந்தேத்த
      வடிவாருங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே. 10
      589 ஒப்பரிய பூம்புகலி ஓங்குகோயில் மேயானை
      அப்பரிசில் பதியான அணிகொள்ஞான சம்பந்தன்
      செப்பரிய தண்டமிழால் தெரிந்தபாட லிவைவல்லார்
      எப்பரிசில் இடர்நீங்கி இமையோருலக திருப்பாரே. 11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.55 திருத்தலைச்சங்காடு
      பண் - காந்தாரம்
      திருச்சிற்றம்பலம்
      590 நலச்சங்க வெண்குழையு தோடும்பெய்தோர் நால்வேதஞ்
      சொலச்சங்கை யில்லாதீர் சுடுகாடல்லால் கருதாதீர்
      குலைச்செங்கா பைங்கமுகின் குளிர்கொள்சோலை குயிலாலு
      தலைச்சங்கை கோயிலே கோயிலாக தாழ்ந்தீரே. 01
      591 துணிமல்கு கோவணமு தோலுங்காட்டி தொண்டாண்டீர்
      மணிமல்கு கண்டத்தீர் அண்டர்க்கெல்லாம் மாண்பானீர்
      பிணிமல்கு நூல்மார்பர் பெரியோர்வாழு தலைச்சங்கை
      அணிமல்கு கோயிலே கோயிலாக அமர்ந்தீரே. 02
      பிணி - பிணித்தல்
      592 சீர்கொண்ட பாடலீர் செங்கண்வெள்ளேற் றூர்தியீர்
      நீர்கொண்டும் பூக்கொண்டு நீங்காத்தொண்டர் நின்றே
      தார்கொண்ட நூல்மார்பர் தக்கோர்வாழு தலைச்சங்கை
      ஏர்கொண்ட கோயிலே கோயிலாக இருந்தீரே. 03
      593 வேடஞ்சூழ் கொள்கையீர் வேண்டிநீண்ட வெண்டிங்கள்
      ஓடஞ்சூழ் கங்கையும் உச்சிவைத்தீர் தலைச்சங்கை
      கூடஞ்சூழ் மண்டபமுங் குலாயவாசல் கொடித்தோன்றும்
      மாடஞ்சூழ் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே. 04
      594 சூலஞ்சேர் கையினீர் சுண்ணவெண்ணீ றாடலீர்
      நீலஞ்சேர் கண்டத்தீர் நீண்டசடைமேல் நீரேற்றீர்
      ஆலஞ்சேர் தண்கானல் அன்னமன்னு தலைச்சங்கை
      கோலஞ்சேர் கோயிலே கோயிலா கொண்டீரே. 05
      595 நிலநீரொ டாகாசம் அனல்காலாகி நின்றைந்து
      புலநீர்மை புறங்கண்டார் பொக்கஞ்செய்யார் போற்றோவார்
      சலநீத ரல்லாதார் தக்கோர்வாழு தலைச்சங்கை
      நலநீர கோயிலே கோயிலாக நயந்தீரே. 06
      596 அடிபுல்கு பைங்கழல்கள் ஆர்ப்பப்பேர்ந்தோர் அனலேந்தி
      கொடிபுல்கு மென்சாயல் உமையோர்பாகங் கூடினீர்
      பொடிபுல்கு நூல்மார்பர் புரிநூலாளர் தலைச்சங்கை
      கடிபுல்கு கோயிலே கோயிலா கலந்தீரே. 07
      597 திரையார்ந்த மாகடல்சூழ் தென்னிலங்கை கோமானை
      வரையார்ந்த தோளடர விரலாலூன்றும் மாண்பினீர்
      அரையார்ந்த மேகலையீர் அந்தணாளர் தலைச்சங்கை
      நிரையார்ந்த கோயிலே கோயிலாக நினைந்தீரே. 08
      598 பாயோங்கு பாம்பணைமே லானும்பைந்தா மரையானும்
      போயோங்கி காண்கிலார் புறம்நின்றோரார் போற்றோவார்
      தீயோங்கு மறையாளர் திகழுஞ்செல்வ தலைச்சங்கை
      சேயோங்கு கோயிலே கோயிலாக சேர்ந்தீரே. 09
      599 அலையாரும் புனல்துறந்த அமணர்குண்டர் சாக்கியர்
      தொலையாதங் கலர்தூற்ற தோற்றங்காட்டி யாட்கொண்டீர்
      தலையான நால்வேத தரித்தார்வாழு தலைச்சங்கை
      நிலையார்ந்த கோயிலே கோயிலாக நின்றீரே. 10
      600 நளிரும் புனற்காழி நல்லஞான சம்பந்தன்
      குளிரு தலைச்சங்கை ஓங்குகோயில் மேயானை
      ஒளிரும் பிறையானை யுரைத்தபாட லிவைவல்லார்
      மிளிரு திரைசூழ்ந்த வையத்தார்க்கு மேலாரே. 11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - செங்கணாயகேசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.56 திருவிடைமருதூர்
      பண் - காந்தாரம்
      திருச்சிற்றம்பலம்
      601 பொங்குநூன் மார்பினீர் பூதப்படையீர் பூங்கங்கை
      தங்குசெஞ் சடையினீர் சாமவேதம் ஓதினீர்
      எங்குமெழிலார் மறையோர்கள் முறையாலேத்த இடைமருதில்
      மங்குல்தோய் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே. 01
      602 நீரார்ந்த செஞ்சடையீர் நெற்றித்திருக்கண் நிகழ்வித்தீர்
      போரார்ந்த வெண்மழுவொன் றுடையீர் பூதம்பாடலீர்
      ஏரார்ந்த மேகலையாள் பாகங்கொண்டீர் இடைமருதில்
      சீரார்ந்த கோயிலே கோயிலாக சேர்ந்தீரே. 02
      603 அழல்மல்கும் அங்கையி லேந்திப்பூதம் அவைபாட
      சுழல்மல்கும் ஆடலீர் சுடுகாடல்லாற் கருதாதீர்
      எழில்மல்கும் நான்மறையோர் முறையாலேத்த இடைமருதில்
      பொழில்மல்கு கோயிலே கோயிலாக பொலிந்தீரே. 03
      604 பொல்லா படுதலையொன் றேந்திப்புறங்கா டாடலீர்
      வில்லாற் புரமூன்றும் எரித்தீர்விடையார் கொடியினீர்
      எல்லா கணங்களும் முறையாலேத்த இடைமருதில்
      செல்வாய கோயிலே கோயிலாக சேர்ந்தீரே. 04
      605 வருந்திய மாதவத்தோர் வானோரேனோர் வந்தீண்டி
      பொருந்திய தைப்பூச மாடியுலகம் பொலிவெ
      திருந்திய நான்மறையோர் சீராலேத்த இடைமருதில்
      பொருந்திய கோயிலே கோயிலாக புக்கீரே. 05
      606 சலமல்கு செஞ்சடையீர் சாந்தநீறு பூசினீர்
      வலமல்கு வெண்மழுவொன் றேந்திமயான தாடலீர்
      இலமல்கு நான்மறையோ ரினிதாயேத்த இடைமருதில்
      புலமல்கு கோயிலே கோயிலாக பொலிந்தீரே. 06
      607 புனமல்கு கொன்றையீர் புலியின்அதளீர் பொலிவார்ந்த
      சினமல்கு மால்விடையீர் செய்யீர்கரிய கண்டத்தீர்
      இனமல்கு நான்மறையோ ரேத்துஞ்சீர்கொள் இடைமருதில்
      கனமல்கு கோயிலே கோயிலா கலந்தீரே. 07
      608 சிலையுய்த்த வெங்கணையாற் புரமூன்றெரித்தீர் திறலரக்கன்
      தலைபத்து திண்டோ ளும் நெரித்தீர் தையல்பாகத்தீர்
      இலைமொய்த்த தண்பொழிலும் வயலுஞ்சூழ்ந்த இடைமருதில்
      நலமொய்த்த கோயிலே கோயிலாக நயந்தீரே. 08
      609 மறைமல்கு நான்முகனும் மாலும்அறியா வண்ணத்தீர்
      கறைமல்கு கண்டத்தீர் கபாலமேந்து கையினீர்
      அறைமல்கு வண்டினங்கள் ஆலுஞ்சோலை இடைமருதில்
      நிறைமல்கு கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே. 09
      610 சின்போர்வை சாக்கியரும் மாசுசேருஞ் சமணரு
      துன்பாய கட்டுரைகள் சொல்லியல்லல் தூற்றவே
      இன்பாய அந்தணர்கள் ஏத்தும்ஏர்கொள் இடைமருதில்
      அன்பாய கோயிலே கோயிலாக அமர்ந்தீரே. 10
      611 கல்லின் மணிமாட கழுமலத்தார் காவலவன்
      நல்ல அருமறையான் நற்றமிழ்ஞான சம்பந்தன்
      எல்லி இடைமருதில் ஏத்துபாட லிவைபத்துஞ்
      சொல்லு வார்க்குங் கேட்பார்க்கு துயரமில்லையே. 11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.57 திருநல்லூர்
      பண் - காந்தாரம்
      திருச்சிற்றம்பலம்
      612 பெண்ணமரு திருமேனி யுடையீர்பிறங்கு சடைதாழ
      பண்ணமரும் நான்மறையே பாடியாடல் பயில்கின்றீர்
      திண்ணமரும் பைம்பொழிலும் வயலுஞ்சூழ்ந்த திருநல்லூர்
      மண்ணமருங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே. 01
      613 அலைமல்கு தண்புனலும் பிறையுஞ்சூடி அங்கையில்
      கொலைமல்கு வெண்மழுவும் அனலுமேந்துங் கொள்கையீர்
      சிலைமல்கு வெங்கணையாற் புரமூன்றெரித்தீர் திருநல்லூர்
      மலைமல்கு கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே. 02
      614 குறைநிரம்பா வெண்மதியஞ் சூடிக்குளிர்புன் சடைதாழ
      பறைநவின்ற பாடலோ டாடல்பேணி பயில்கின்றீர்
      சிறைநவின்ற தண்புனலும் வயலுஞ்சூழ்ந்த திருநல்லூர்
      மறைநவின்ற கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே. 03
      615 கூனமரும் வெண்பிறையும் புனலுஞ்சூடுங் கொள்கையீர்
      மானமரும் மென்விழியாள் பாகமாகும் மாண்பினீர்
      தேனமரும் பைம்பொழிலின் வண்டுபாடு திருநல்லூர்
      வானமருங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே. 04
      616 நிணங்கவரும் மூவிலையும் அனலுமேந்தி நெறிகுழலாள்
      அணங்கமரும் பாடலோ டாடல்மேவும் அழகினீர்
      திணங்கவரும் ஆடரவும் பிறையுஞ்சூடி திருநல்லூர்
      மணங்கமழுங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே. 05
      617 கார்மருவு பூங்கொன்றை சூடிக்கமழ்புன் சடைதாழ
      வார்மருவு மென்முலையாள் பாகமாகும் மாண்பினீர்
      தேர்மருவு நெடுவீதி கொடிகளாடு திருநல்லூர்
      ஏர்மருவு கோயிலே கோயிலாக இருந்தீரே. 06
      618 ஊன்தோயும் வெண்மழுவும் அனலுமேந்தி உமைகாண
      மீன்தோயு திசைநிறைய ஓங்கியாடும் வேடத்தீர்
      தேன்தோயும் பைம்பொழிலின் வண்டுபாடு திருநல்லூர்
      வான்தோயுங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே. 07
      619 காதமரும் வெண்குழையீர் கறுத்தவரக்கன் மலையெடுப்ப
      மாதமரும் மென்மொழியாள் மறுகும்வண்ணங் கண்டுகந்தீர்
      தீதமரா அந்தணர்கள் பரவியேத்து திருநல்லூர்
      மாதமருங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே. 08
      620 போதின்மேல் அயன்திருமால் போற்றியும்மை காணாது
      நாதனே இவனென்று நயந்தேத்த மகிழ்ந்தளித்தீர்
      தீதிலா அந்தணர்கள் தீமூன்றோம்பு திருநல்லூர்
      மாதராள் அவளோடு மன்னுகோயில் மகிழ்ந்தீரே. 09
      621 பொல்லாத சமணரொடு புறங்கூறுஞ் சாக்கியரொன்
      றல்லாதார் அறவுரைவி டடியார்கள் போற்றோவா
      நல்லார்கள் அந்தணர்கள் நாளுமேத்து திருநல்லூர்
      மல்லார்ந்த கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே. 10
      622 கொந்தணவும் பொழில்புடைசூழ் கொச்சைமேவு குலவேந்தன்
      செந்தமிழின் சம்பந்தன் சிறைவண்புனல்சூழ் திருநல்லூர
      பந்தணவு மெல்விரலாள் பங்கன்றன்னை பயில்பாடல்
      சிந்தனையால் உரைசெய்வார் சிவலோகஞ்சேர திருப்பாரே. 11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.58 திருக்குடவாயில்
      பண் - காந்தாரம்
      திருச்சிற்றம்பலம்
      623 கலைவாழும் அங்கையீர் கொங்கையாருங் கருங்கூந்தல்
      அலைவாழுஞ் செஞ்சடையில் அரவும்பிறையும் அமர்வித்தீர்
      குலைவாழை கமுகம்பொன் பவளம்பழுக்குங் குடவாயில்
      நிலைவாழுங் கோயிலே கோயிலாக நின்றீரே. 01
      624 அடியார்ந்த பைங்கழலுஞ் சிலம்புமார்ப்ப அங்கையில்
      செடியார்ந்த வெண்டலையொன் றேந்தியுலகம் பலிதேர்வீர்
      குடியார்ந்த மாமறையோர் குலாவியேத்துங் குடவாயிற்
      படியார்ந்த கோயிலே கோயிலாக பயின்றீரே. 02
      625 கழலார்பூம் பாதத்தீர் ஓதக்கடலில் விடமுண்டன்
      றழலாருங் கண்டத்தீர் அண்டர்போற்றும் அளவினீர்
      குழலார வண்டினங்கள் கீதத்தொலிசெய் குடவாயில்
      நிழலார்ந்த கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே. 03
      626 மறியாருங் கைத்தலத்தீர் மங்கைபாக மாகச்சேர
      தெறியாரும் மாமழுவும் எரியுமேந்துங் கொள்கையீர்
      குறியார வண்டினங்கள் தேன்மிழற்றுங் குடவாயில்
      நெறியாருங் கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே. 04
      627 இழையார்ந்த கோவணமுங் கீளும்எழிலார் உடையாக
      பிழையாத சூலம்பெய் தாடல்பாடல் பேணினீர்
      குழையாரும் பைம்பொழிலும் வயலுஞ்சூழ்ந்த குடவாயில்
      விழவார்ந்த கோயிலே கோயிலாக மிக்கீரே. 05
      628 அரவார்ந்த திருமேனி யானவெண்ணீ றாடினீர்
      இரவார்ந்த பெய்பலிகொண் டிமையோரேத்த நஞ்சுண்டீர்
      குரவார்ந்த பூஞ்சோலை வாசம்வீசுங் குடவாயிற்
      திருவார்ந்த கோயிலே கோயிலாக திகழ்ந்தீரே. 06
      629 பாடலார் வாய்மொழியீர் பைங்கண்வெள்ளே றூர்தியீர்
      ஆடலார் மாநடத்தீர் அரிவைபோற்றும் ஆற்றலீர்
      கோடலார் தும்பிமுரன் றிசைமிழற்றுங் குடவாயில்
      நீடலார் கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே. 07
      630 கொங்கார்ந்த பைங்கமல தயனுங்குறளாய் நிமிர்ந்தானும்
      அங்காந்து தள்ளாட அழலாய்நிமிர்ந்தீர் இலங்கைக்கோன்
      தங்காதல் மாமுடியு தாளுமடர்த்தீர் குடவாயில்
      பங்கார்ந்த கோயிலே கோயிலாக பரிந்தீரே. 08
      இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 09
      631 தூசார்ந்த சாக்கியரு தூய்மையில்லா சமணரும்
      ஏசார்ந்த புன்மொழிநீ தெழில்கொள்மாட குடவாயில்
      ஆசாரஞ் செய்மறையோர் அளவிற்குன்றா தடிபோற்ற
      தேசார்ந்த கோயிலே கோயிலாக சேர்ந்தீரே. 10
      632 நளிர்பூ திரைமல்கு காழிஞான சம்பந்தன்
      குளிர்பூங் குடவாயிற் கோயில்மேய கோமானை
      ஒளிர்பூ தமிழ்மாலை உரைத்தபாட லிவைவல்லார்
      தளர்வான தானொழி தகுசீர்வான திருப்பாரே. 11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.59 சீகாழி
      பண் - காந்தாரம்
      திருச்சிற்றம்பலம்
      633 நலங்கொள் முத்தும் மணியும் அணியு திரளோதங்
      கலங்கள் தன்னில் கொண்டு கரைசேர் கலிக்காழி
      வலங்கொள் மழுவொன் றுடையாய் விடையா யெனவேத்தி
      அலங்கல் சூட்ட வல்லார கடையா அருநோயே. 01
      634 ஊரார் உவரி சங்கம் வங்கங் கொடுவந்து
      காரார் ஓதங் கரைமேல் உயர்த்துங் கலிக்காழி
      நீரார் சடையாய் நெற்றி கண்ணா என்றென்று
      பேரா யிரமும் பிதற்ற தீரும் பிணிதானே. 02
      635 வடிகொள் பொழிலில் மிழலை வரிவண் டிசைசெ
      கடிகொள் போதிற் றென்றல் அணையுங் கலிக்காழி
      முடிகொள் சடையாய் முதல்வா வென்று முயன்றேத்தி
      அடிகை தொழுவார கில்லை அல்லல் அவலமே. 03
      636 மனைக்கே யேற வளஞ்செய் பவளம் வளர்முத்தங்
      கனைக்குங் கடலுள் ஓதம் ஏறுங் கலிக்காழி
      பனைக்கா பகட்டீ ருரியாய் பெரியாய் யெனப்பேணி
      நினைக்க வல்ல அடியார் நெஞ்சில் நல்லாரே. 04
      637 பருதி யியங்கும் பாரிற் சீரார் பணியாலே
      கருதி விண்ணோர் மண்ணோர் விரும்புங் கலிக்காழி
      சுருதி மறைநான் கான செம்மை தருவானை
      கருதி யெழுமின் வழுவா வண்ண துயர்போமே. 05
      638 மந்த மருவும் பொழிலில் எழிலார் மதுவுண்டு
      கந்த மருவ வரிவண் டிசைசெய் கலிக்காழி
      பந்தம் நீங்க அருளும் பரனே எனவேத்தி
      சிந்தை செய்வார் செம்மை நீங்கா திருப்பாரே. 06
      639 புயலார் பூமி நாமம் ஓதி புகழ்மல
      கயலார் கண்ணார் பண்ணார் ஒலிசெய் கலிக்காழி
      பயில்வான் றன்னை பத்தி யார தொழுதேத்த
      முயல்வார் தம்மேல் வெம்மை கூற்ற முடுகாதே. 07
      640 அரக்கன் முடிதோள் நெரிய அடர்த்தான் அடியார்க்கு
      கரக்ககில்லா தருள்செய் பெருமான் கலிக்காழி
      பரக்கும் புகழான் தன்னை யேத்தி பணிவார்மேல்
      பெருக்கும் இன்ப துன்ப மான பிணிபோமே. 08
      641 மாணா யுலகங் கொண்ட மாலும் மலரோனுங்
      காணா வண்ணம் எரியாய் நிமிர்ந்தான் கலிக்காழி
      பூணார் முலையாள் பங்க தானை புகழ்ந்தேத்தி
      கோணா நெஞ்சம் உடையார கில்லை குற்றமே. 09
      642 அஞ்சி யல்லல் மொழிந்து திரிவார் அமண்ஆதர்
      கஞ்சி காலை யுண்பார கரியான் கலிக்காழி
      தஞ்ச மாய தலைவன் தன்னை நினைவார்கள்
      துஞ்ச லில்லா நல்ல வுலகம் பெறுவாரே. 10
      643 ஊழி யாய பாரில் ஓங்கும் உயர்செல்வ
      காழி யீசன் கழலே பேணுஞ் சம்பந்தன்
      தாழும் மனத்தால் உரைத்த தமிழ்கள் இவைவல்லார்
      வாழி நீங்கா வானோ ருலகில் மகிழ்வாரே. 11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.60 திருப்பாசூர்
      பண் - காந்தாரம்
      திருச்சிற்றம்பலம்
      644 சிந்தை யிடையார் தலையின் மிசையார் செஞ்சொல்லார்
      வந்து மாலை வைகும் போழ்தென் மனத்துள்ளார்
      மைந்தர் மணாளர் என்ன மகிழ்வா ரூர்போலும்
      பைந்தண் மாதவி சோலை சூழ்ந்த பாசூரே. 01
      645 பேரும் பொழுதும் பெயரும்
      றாரு தனையும் அடியா ரேத்த அருள்செய்வார்
      ஊரும் அரவம் உடையார் வாழும் ஊர்போலும்
      பாரின் மிசையார் பாட லோவா பாசூரே. 02
      646 கையாற் றொழுது தலைசா துள்ளங் கசிவார்கள்
      மெய்யார் குறையு துயரு தீர்க்கும் விமலனார்
      நெய்யா டுதலஞ் சுடையார் நிலாவும் ஊர்போலும்
      பைவாய் நாகங் கோட லீனும் பாசூரே. 03
      647 பொங்கா டரவும் புனலுஞ் சடைமேல் பொலிவெய்த
      கொங்கார் கொன்றை சூடியென் னுள்ளங் குளிர்வித்தார்
      தங்கா தலியு தாமும் வாழும் ஊர்போலும்
      பைங்கான் முல்லை பல்லரும் பீனும் பாசூரே. 04
      648 ஆடற் புரியும் ஐவா யரவொன் றரைச்சாத்தும்
      சேட செல்வர் சிந்தையு ளென்றும் பிரியாதார்
      வாடற் றலையிற் பலிதேர் கையார் ஊர்போலும்
      பாடற் குயில்கள் பயில்பூஞ் சோலை பாசூரே. 05
      649 கானின் றதிர கனல்வாய் நாகம் கச்சாக
      தோலொன் றுடையார் விடையார் தம்மை தொழுவார்கள்
      மால்கொண் டோ ட மையல் தீர்ப்பார் ஊர்போலும்
      பால்வெண் மதிதோய் மாடஞ்சூழ்ந்த பாசூரே. 06
      650 கண்ணின் அயலே கண்ணொன் றுடையார் கழலுன்னி
      எண்ணு தனையும் அடியா ரேத்த அருள்செய்வார்
      உண்ணின் றுருக உவகை தருவார் ஊர்போலும்
      பண்ணின் மொழியார் பாட லோவா பாசூரே. 07
      651 தேசு குன்றா தெண்ணீ ரிலங்கை கோமானை
      கூச அடர்த்து கூர்வாள் கொடுப்பார் தம்மையே
      பேசி பிதற்ற பெருமை தருவார் ஊர்போலும்
      பாசி தடமும் வயலும் சூழ்ந்த பாசூரே. 08
      652 நகுவாய் மலர்மேல் அயனும் நாக தணையானும்
      புகுவா யறியார் புறம்நின் றோரார் போற்றோவார்
      செகுவாய் உகுபற் றலைசேர் கையார் ஊர்போலும்
      பகுவாய் நாரை ஆரல் வாரும் பாசூரே. 09
      653 தூய வெயில்நின் றுழல்வார் துவர்தோய் ஆடையர்
      நாவில் வெய்ய சொல்லி திரிவார் நயமில்லார்
      காவல் வேவ கணையொன் றெய்தார் ஊர்போலும்
      பாவை குரவம் பயில்பூஞ் சோலை பாசூரே. 10
      654 ஞானம் உணர்வான் காழி ஞான சம்பந்தன்
      தேனும் வண்டும் இன்னிசை பாடு திருப்பாசூர
      கானம் முறைவார் கழல்சேர் பாடல் இவைவல்லார்
      ஊனம் இலராய் உம்பர் வான துறைவாரே. 11
      இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - பாசூர்நாதர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      திருஞானசம்பந்தசுவாமிகள் அருளிச்செய்த தேவார பதிகங்கள்
      இரண்டாம் திருமுறை முதல் பகுதி முற்றும்.
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      20 2002


      1.
      ------------------------------------------------------------------------
      - 2
      655 - 1331

      திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
      தேவார பதிகங்கள்
      இரண்டாம் திருமுறை -
      பாடல்கள் 655 - 1331
      ------------------------------------------------------------------------
      ------------------------------------------------------------------------

      .

      .
      .


      .
      - . ..
      .
      .

      .
      2000 ...

      2000 .
      -8
      6 5
      -8 - .
      .
      .
      © 1999 - 2004



      .

      ..

      .
      ------------------------------------------------------------------------
      திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
      தேவார பதிகங்கள்
      இரண்டாம் திருமுறை -
      உள்ளுறை
      2.61 திருவெண்காடு 655-665 மின்பதிப்பு
      2.62 திருமீயச்சூர் 666-676 மின்பதிப்பு
      2.63 திருஅரிசிற்கரைப்புத்தூர் 677-687 மின்பதிப்பு
      2.64 திருமுதுகுன்றம் 688-697 மின்பதிப்பு
      2.65 திருப்பிரமபுரம் 698-708 மின்பதிப்பு
      2.66 திருஆலவாய் 709-719 மின்பதிப்பு
      2.67 திருப்பெரும்புலியூர் 720-730 மின்பதிப்பு
      2.68 திருக்கடம்பூர் 731-741 மின்பதிப்பு
      2.69 திருப்பாண்டிக்கொடுமுடி 742-752 மின்பதிப்பு
      2.70 திருப்பிரமபுரம் 753-764 மின்பதிப்பு
      2.71 திருக்குறும்பலா 765-775 மின்பதிப்பு
      2.72 திருநணா 776-786 மின்பதிப்பு
      2.73 திருப்பிரமபுரம் 787-798 மின்பதிப்பு
      2.74 திருப்பிரமபுரம் 799-810 மின்பதிப்பு
      2.75 சீகாழி 811-821 மின்பதிப்பு
      2.76 திருஅகத்தியான்பள்ளி 822-832 மின்பதிப்பு
      2.77 திருஅறையணிநல்லூர் 833-843 மின்பதிப்பு
      2.78 திருவிளநகர் 844-854 மின்பதிப்பு
      2.79 திருவாரூர் 855-865 மின்பதிப்பு
      2.80 திருக்கடவூர்மயானம் 866-876 மின்பதிப்பு
      2.81 திருவேணுபுரம் 877-886 மின்பதிப்பு
      2.82 திருத்தேவூர் 887-897 மின்பதிப்பு
      2.83 திருக்கொச்சைவயம் 898-908 மின்பதிப்பு
      2.84 திருநனிபள்ளி 908-918 மின்பதிப்பு
      2.85 கோளாறு திருப்பதிகம் 919-929 மின்பதிப்பு
      2.86 திருநாரையூர் 930-940 மின்பதிப்பு
      2.87 திருநறையூர் 941-951 மின்பதிப்பு
      2.88 திருமுல்லைவாயில் 952-962 மின்பதிப்பு
      2.89 திருக்கொச்சைவயம் 963-972 மின்பதிப்பு
      2.90 திருநெல்வாயில் 973-983 மின்பதிப்பு
      2.91 திருமறைக்காடு 984-994 மின்பதிப்பு
      2.92 திருப்புகலூர் 995-1005 மின்பதிப்பு
      2.93 திருத்தெங்கூர் 1006-1016 மின்பதிப்பு
      2.94 திருவாழ்கொளிபுத்தூர் 1017-1027 மின்பதிப்பு
      2.95 திருஅரைசிலி 1028-1037 மின்பதிப்பு
      2.96 சீகாழி 1038-1048 மின்பதிப்பு
      2.97 சீகாழி 1049-1058 மின்பதிப்பு
      2.98 திருத்துருத்தி 1059-1069 மின்பதிப்பு
      2.99 திருக்கோடிகா 1070-1080 மின்பதிப்பு
      2.100 திருக்கோவலூர் வீரட்டம் 1081-1091 மின்பதிப்பு
      2.101 திருவாரூர் 1092-1102 மின்பதிப்பு
      2.102 திருச்சிரபுரம் 1103-1113 மின்பதிப்பு
      2.103 திருஅம்பர்த்திருமாகாளம் 1114-1124 மின்பதிப்பு
      2.104 திருக்கடிக்குளம் 1125-1135 மின்பதிப்பு
      2.105 திருக்கீழ்வேளூர் 1136-1146 மின்பதிப்பு
      2.106 திருவலஞ்சுழி 1147- 1157 மின்பதிப்பு
      2.107 திருக்கேதீச்சரம் 1158-1168 மின்பதிப்பு
      2.108 திருவிற்குடிவீரட்டானம் 1169-1178 மின்பதிப்பு
      2.109 திருக்கோட்டூர் 1179-1189 மின்பதிப்பு
      2.110 திருமாந்துறை 1190-1200 மின்பதிப்பு
      2.111 திருவாய்மூர் 1201-1211 மின்பதிப்பு
      2.112 திருஆடானை 1212-1222 மின்பதிப்பு
      2.113 சீகாழி 1223-1233 மின்பதிப்பு
      2.114 திருக்கேதாரம் 1234-1244 மின்பதிப்பு
      2.115 திருப்புகலூர் 1245-1255 மின்பதிப்பு
      2.116 திருநாகைக்காரோணம் 1256-1266 மின்பதிப்பு
      2.117 திருஇரும்பைமாகாளம் 1267-1277 மின்பதிப்பு
      2.118 திருத்திலதைப்பதி 1278-1288 மின்பதிப்பு
      2.119 திருநாகேச்சரம் 1289-1299 மின்பதிப்பு
      2.120 திருமூக்கீச்சரம் 1300-1310 மின்பதிப்பு
      2.121 திருப்பாதிரிப்புலியூர் 1311-1321 மின்பதிப்பு
      2.122 திருப்புகலி 1322-1331 மின்பதிப்பு
      ------------------------------------------------------------------------
      2.61 திருவெண்காடு
      பண் - காந்தாரம்
      திருச்சிற்றம்பலம்
      655 உண்டாய் நஞ்சை உமையோர் பங்கா என்றுள்கி
      தொண்டா திரியும் அடியார் தங்கள் துயரங்கள்
      அண்டா வண்ணம் அறுப்பான் எந்தை ஊர்போலும்
      வெண்டா மரைமேல் கருவண் டியாழ்செய் வெண்காடே. 01
      656 நாதன் நம்மை ஆள்வான் என்று நவின்றேத்தி
      பாதம் பன்னால் பணியும் அடியார் தங்கள்மேல்
      ஏத தீர இருந்தான் வாழும் ஊர்போலும்
      வே தொலியாற் கிளிசொல் பயிலும் வெண்காடே. 02
      657 தண்மு தரும்ப தடமூன் றுடையான் றனையுன்னி
      கண்மு தரும்ப கழற்சே வடிகை தொழுவார்கள்
      உண்மு தரும்ப வுவகை தருவான் ஊர்போலும்
      வெண்மு தருவி புனல்வ தலைக்கும் வெண்காடே. 03
      658 நரையார் வந்து நாளுங் குறுகி நணுகாமுன்
      உரையால் வேறா வுள்குவார்கள் உள்ளத்தே
      கரையா வண்ணங் கண்டான் மேவும் ஊர்போலும்
      விரையார் கமல தன்னம் மருவும் வெண்காடே. 04
      659 பிள்ளை பிறையும் புனலுஞ் சூடும் பெம்மானென்
      றுள்ள துள்ளி தொழுவார் தங்கள் உறுநோய்கள்
      தள்ளி போக அருளு தலைவன் ஊர்போலும்
      வெள்ளை சுரிசங் குலவி திரியும் வெண்காடே. 05
      660 ஒளிகொள் மேனி யுடையாய் உம்பர் ஆளீயென்
      றளிய ராகி அழுதுற் றூறும் அடியார்க
      கெளியான் அமரர கரியான் வாழும் ஊர்போலும்
      வெளிய வுருவ தானை வணங்கும் வெண்காடே. 06
      661 கோள்வி தனைய கூற்ற தன்னை குறிப்பினால்
      மாள்வி தவனை மகிழ்ந்தங் கேத்த மாணிக்காய்
      ஆள்வி தமரர் உலகம் அளிப்பான் ஊர்போலும்
      வேள்வி புகையால் வானம் இருள்கூர் வெண்காடே. 07
      662 வளையார் முன்கை மலையாள் வெருவ வரையூன்றி
      முளையார் மதியஞ் சூடியென்று முப்போதும்
      இளையா தேத்த இருந்தான் எந்தை ஊர்போலும்
      விளையார் கழனி பழனஞ் சூழ்ந்த வெண்காடே. 08
      663 கரியா னோடு கமல மலரான் காணாமை
      எரியாய் நிமிர்ந்த எங்கள் பெருமான் என்பார்க
      குரியான் அமரர கரியான் வாழும் ஊர்போலும்
      விரியார் பொழிலின் வண்டு பாடும் வெண்காடே. 09
      664 பாடும் அடியார் பலருங் கூடி பரிந்தேத்த
      ஆடும் அரவம் அசைத்த பெருமான் அறிவின்றி
      மூடம் உடைய சமண்சா கியர்கள் உணராத
      வேடம் உடைய பெருமான் பதியாம் வெண்காடே. 10
      665 விடையார் கொடியான் மேவி யுறையும் வெண்காட்டை
      கடையார் மாடங் கலந்து தோன்றுங் காழியான்
      நடையா ரின்சொல் ஞானசம் பந்தன் தமிழ்வல்லார
      கடையா வினைகள் அமர லோகம் ஆள்வாரே. 11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.62 திருமீயச்சூர்
      பண் - காந்தாரம்
      திருச்சிற்றம்பலம்
      666 கா செவ்வி காமற் காய்ந்து கங்கையை
      பா படர்புன் சடையிற் பதித்த பரமேட்டி
      மா சூரன் றறுத்த மைந்தன் தாதைதன்
      மீ சூரே தொழுது வினையை வீட்டுமே. 01
      667 பூவார் சடையின் முடிமேற் புனலர் அனல்கொள்வர்
      நாவார் மறையர் பிறையர் நறவெண் டலையேந்தி
      ஏவார் மலையே சிலையா கழியம் பெரிவாங்கி
      மேவார் புரமூன் றெரித்தார் மீ சூராரே. 02
      668 பொன்னேர் கொன்றை மாலை புரளும் அகலத்தான்
      மின்னேர் சடைக ளுடையான் மீ சூரானை
      தன்னேர் பிறரில் லானை தலையால் வணங்குவார
      கன்னே ரிமையோர் உலக மெய்தற் கரிதன்றே. 03
      669 வேக மதநல் லியானை வெருவ வுரிபோர்த்து
      பாகம் உமையோ டாக படிதம் பலபாட
      நாகம் அரைமே லசைத்து நடமா டியநம்பன்
      மேகம் உரிஞ்சும் பொழில்சூழ் மீ சூரானே. 04
      670 விடையார் கொடியார் சடைமேல் விளங்கும் பிறைவேடம்
      படையார் பூதஞ் சூழ பாட லாடலார்
      பெடையார் வரிவண் டணையும் பிணைசேர் கொன்றையார்
      விடையார் நடையொன் றுடையார் மீ சூராரே. 05
      671 குளிருஞ் சடைகொள் முடிமேற் கோல மார்கொன்றை
      ஒளிரும் பிறையொன் றுடையா னொருவன் கைகோடி
      நளிரும் மணிசூழ் மாலை நட்டம் நவில்நம்பன்
      மிளிரும் மரவம் உடையான் மீ சூரானே. 06
      672 நீல வடிவர் மிடறு நெடியர் நிகரில்லார்
      கோல வடிவு தமதாங் கொள்கை யறிவொண்ணார்
      காலர் கழலர் கரியின் உரியர் மழுவாளர்
      மேலர் மதியர் விதியர் மீ சூராரே. 07
      673 புலியின் உரிதோ லாடை பூசும் பொடிநீற்றர்
      ஒலிகொள் புனலோர் சடைமேற் கரந்தார் உமையஞ்ச
      வலிய திரள்தோள் வன்கண் அரக்கர் கோன்தன்னை
      மெலிய வரைக்கீழ் அடர்த்தார் மீ சூராரே. 08
      674 காதின் மிளிருங் குழையர் கரிய கண்டத்தார்
      போதி லவனும் மாலு தொழ பொங் கெரியானார்
      கோதி வரிவண் டறைபூம் பொய்கை புனல்மூழ்கி
      மேதி படியும் வயல்சூழ் மீ சூராரே. 09
      675 கண்டார் நாணும் படியார் கலிங்க முடைபட்டை
      கொண்டார் சொல்லை குறுகா ருயர்ந்த கொள்கையார்
      பெண்டான் பாக முடையார் பெரிய வரைவில்லால்
      விண்டார் புரமூன் றெரித்தார் மீ சூராரே. 10
      676 வேட முடைய பெருமா னுறையும் மீயச்சூர்
      நாடும் புகழார் புகலி ஞான சம்பந்தன்
      பாட லாய தமிழீ ரைந்தும் மொழிந்துள்கி
      ஆடும் அடியார் அகல்வா னுலகம் அடைவாரே. 11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - முயற்சிநாதேசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.63 திருஅரிசிற்கரைப்புத்தூர்
      பண் - காந்தாரம்
      திருச்சிற்றம்பலம்
      677 மின்னுஞ் சடைமேல் இளவெண் திங்கள் விளங்கவே
      துன்னுங் கடல்நஞ் சிருள்தோய் கண்டர் தொன்மூதூர்
      அன்னம் படியும் புனலார் அரிசில் அலைகொண்டு
      பொன்னும் மணியும் பொருதென் கரைமேற் புத்தூரே. 01
      678 மேவா அசுரர் மேவெயில் வேவ மலைவில்லால்
      ஏவார் எரிவெங் கணையா லெய்தான் எய்துமூர்
      நாவால் நாதன் நாமம் ஓதி நாடோ றும்
      பூவால் நீராற் பூசுரர் போற்றும் புத்தூரே. 02
      679 பல்லார் தலைசேர் மாலைசூடி பாம்பும்பூண்
      டெல்லா விடமும் வெண்ணீ றணிந்தோ ரேறேறி
      கல்லார் மங்கை பங்க ரேனுங் காணுங்கால்
      பொல்லா ரல்லர் அழகியர் புத்தூர புனிதரே. 03
      680 வரியேர் வளையாள் அரிவை யஞ்ச வருகின்ற
      கரியேர் உரிவை போர்த்த கடவுள் கருதுமூர்
      அரியேர் கழனி பழனஞ் சூழ்ந்தங் கழகாய
      பொரியேர் புன்கு சொரிபூஞ் சோலை புத்தூரே. 04
      681 என்போ டரவம் ஏன தெயிறோ டெழிலாமை
      மின்போற் புரிநூல் விரவி பூண்ட மணிமார்பர்
      அன்போ டுருகும் அடியார கன்பர் அமருமூர்
      பொன்போ தலர்கோங் கோங்கு சோலை புத்தூரே. 05
      682 வள்ளி முலைதோய் குமரன் தாதை வான்தோயும்
      வெள்ளி மலைபோல் விடையொன் றுடையான் மேவுமூர்
      தெள்ளி வருநீர் அரிசில் தென்பாற் சிறைவண்டும்
      புள்ளும் மலிபூம் பொய்கை சூழ்ந்த புத்தூரே. 06
      683 நிலந்த ணீரோ டனல்கால் விசும்பின் நீர்மையான்
      சிலந்தி செங்க சோழனாக செய்தானூர்
      அலந்த அடியான் அற்றை கன்றோர் காசெய்தி
      புலர்ந்த காலை மாலை போற்றும் புத்தூரே. 07
      684 இத்தே ரேக இம்மலை பேர்ப்பன் என்றேந்தும்
      பத்தோர் வாயான் வரைக்கீழ் அலற பாதந்தான்
      வைத்தா ரருள்செய் வரதன் மருவும் ஊரான
      புத்தூர் காண புகுவார் வினைகள் போகுமே. 08
      685 முள்ளார் கமல தயன்மால் முடியோ டடிதேட
      ஒள்ளா ரெரியா யுணர்தற் கரியான் ஊர்போலுங்
      கள்ளார் நெய்தல் கழுநீ ராம்பல் கமலங்கள்
      புள்ளார் பொய்கை பூப்பல தோன்றும் புத்தூரே. 09
      686 கையார் சோறு கவர்குண் டர்களு துவருண்ட
      மெய்யார் போர்வை மண்டையர் சொல்லும் மெய்யல்ல
      பொய்யா மொழியா லந்தணர் போற்றும் புத்தூரில்
      ஐயா என்பார கையுற வின்றி யழகாமே. 10
      687 நறவங் கமழ்பூங் காழி ஞான சம்பந்தன்
      பொறிகொள் அரவம் பூண்டான் ஆண்ட புத்தூர்மேல்
      செறிவண் டமிழ்செய் மாலை செப்ப வல்லார்கள்
      அறவன் கழல்சேர தன்போ டின்பம் அடைவாரே. 11
      இத்தலம் சோழ நாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - படிக்காசளித்தவீசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.64 திருமுதுகுன்றம்
      பண் - காந்தாரம்
      திருச்சிற்றம்பலம்
      688 தேவா சிறியோம் பிழையை பொறுப்பாய் பெரியோனே
      ஆவா வென்றங் கடியார் தங்க கருள்செய்வாய்
      ஓவா உவரி கொள்ள உயர்ந்தா யென்றேத்தி
      மூவா முனிவர் வணங்குங் கோயில் முதுகுன்றே. 01
      689 எந்தை யிவனென் றிரவி முதலா இறைஞ்சுவார்
      சிந்தை யுள்ளே கோயி லாக திகழ்வானை
      மந்தி யேறி யினமா மலர்கள் பலகொண்டு
      முந்தி தொழுது வணங்குங் கோயில் முதுகுன்றே. 02
      690 நீடு மலரும் புனலுங் கொண்டு நிரந்தர
      தேடும் அடியார் சிந்தை யுள்ளே திகழ்வானை
      பாடுங் குயிலின் அயலே கிள்ளை பயின்றேத்த
      மூடுஞ் சோலை முகில்தோய் கோயில் முதுகுன்றே. 03
      691 தெரிந்த அடியார் சிவனே யென்று திசைதோறுங்
      குருந்த மலருங் குரவின் அலருங் கொண்டேந்தி
      இருந்து நின்றும் இரவும் பகலும் ஏத்துஞ்சீர்
      முரிந்து மேக தவழுஞ் சோலை முதுகுன்றே. 04
      692 வைத்த நிதியே மணியே யென்று வருந்தித்தஞ்
      சித்தம் நைந்து சிவனே யென்பார் சிந்தையார்
      கொத்தார் சந்துங் குரவும் வாரி கொணர்ந்துந்தும்
      முத்தா றுடைய முதல்வர் கோயில் முதுகுன்றே. 05
      693 வம்பார் கொன்றை வன்னி மத்த மலர்தூவி
      நம்பா வென்ன நல்கும் பெருமான் உறைகோயில்
      கொம்பார் குரவு கொகுடி முல்லை குவிந்தெங்கும்
      மொய்ம்பார் சோலை வண்டு பாடும் முதுகுன்றே. 06
      இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 07
      694 வாசங் கமழும் பொழில்சூழ் இலங்கை வாழ்வேந்தை
      நாசஞ் செய்த நங்கள் பெருமான் அமர்கோயில்
      பூசை செய்த அடியார் நின்று புகழ்ந்தேத்த
      மூசி வண்டு பாடுஞ் சோலை முதுகுன்றே. 08
      695 அல்லி மலர்மேல் அயனும் அரவின் அணையானுஞ்
      சொல்லி பரவி தொடர வொண்ணா சோதியூர்
      கொல்லை வேடர் கூடி நின்று கும்பிட
      முல்லை யயலே முறுவல் செய்யும் முதுகுன்றே. 09
      696 கருகும் உடலார் கஞ்சி யுண்டு கடுவேதின்
      றுருகு சிந்தை யில்லார கயலான் உறைகோயில்
      திருகல் வேய்கள் சிறிதே வளை சிறுமந்தி
      முருகின் பணைமே லிருந்து நடஞ்செய் முதுகுன்றே. 10
      697 அறையார் கடல்சூழ் அந்தண் காழி சம்பந்தன்
      முறையால் முனிவர் வணங்குங் கோயில் முதுகுன்றை
      குறையா பனுவல் கூடி பாட வல்லார்கள்
      பிறையார் சடையெம் பெருமான் கழல்கள் பிரியாரே. 11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.65 திருப்பிரமபுரம்
      பண் - காந்தாரம்
      திருச்சிற்றம்பலம்
      698 கறையணி வேலிலர் போலுங் கபால தரித்திலர் போலும்
      மறையும் நவின்றிலர் போலும் மாசுணம் ஆர்த்திலர்
      பறையுங் கரத்திலர் போலும் பாசம் பிடித்திலர்
      பிறையுஞ் சடைக்கிலர் போலும் பிரம புரம்அமர தாரே. 01
      699 கூரம் பதுவிலர் போலுங் கொக்கின் இறகிலர் போலும்
      ஆரமும் பூண்டிலர் போலும் ஆமை அணிந்திலர் போலு
      தாருஞ் சடைக்கிலர் போலும் சண்டி கருளிலர்
      பேரும் பலவிலர் போலும் பிரம புரம்அமர தாரே. 02
      700 சித்த வடிவிலர் போலு தேச திரிந்திலர் போலுங்
      கத்தி வருங் கடுங்காளி கதங்கள் தவிர்த்திலர் போலும்
      மெய்த்த நயனம் இடந்தார காழி யளித்திலர் போலும்
      பித்த வடிவிலர் போலும் பிரம புரம்அமர தாரே. 03
      701 நச்சர வாட்டிலர் போலும் நஞ்சம் மிடற்றிலர் போலுங்
      கச்சு தரித்திலர் போலுங் கங்கை
      மொய்ச்சவன் பேயிலர் போலும் முப்புரம் எய்திலர்
      பிச்சை இரந்திலர் போலும் பிரம புரம்அமர தாரே. 04
      702 தோடு செவிக்கிலர் போலுஞ் சூலம் பிடித்திலர் போலும்
      ஆடு தடக்கை வலிய ஆனை உரித்திலர் போலும்
      ஓடு கரத்திலர் போலும் ஒள்ளழல் கையிலர்
      பீடு மிகுத்தெழு செல்வ பிரம புரம்அமர தாரே. 05
      703 விண்ணவர் கண்டிலர் போலும் வேள்வி யழித்திலர்
      அண்ணல் அயன்றலை வீழ அன்று மறுத்திலர் போலும்
      வண்ண எலும்பினொ டக்கு வடங்கள் தரித்திலர் போலும்
      பெண்ணினம் மொய்த்தெழு செல்வ பிரம புரம்அமர தாரே. 06
      704 பன்றியின் கொம்பிலர் போலும் பார்த்தற் கருளிலர் போலுங்
      கன்றிய காலனை வீழ கால்கொடு பாய்ந்திலர் போலு
      துன்று பிணஞ்சுடு காட்டி லாடி துதைந்திலர் போலும்
      பின்றியும் பீடும் பெருகும் பிரம புரம்அமர தாரே. 07
      705 பரசு தரித்திலர் போலும் படுதலை பூண்டிலர்
      அரசன் இலங்கையர் கோனை அன்றும் அடர்த்திலர் போலும்
      புரைசெய் புனத்திள மானும் புலியின் அதளிலர் போலும்
      பிரச மலர்ப்பொழில் சூழ்ந்த பிரம புரம்அமர தாரே. 08
      706 அடிமுடி மாலயன் தேட அன்றும் அளப்பிலர் போலுங்
      கடிமலர் ஐங்கணை வேளை கனல விழித்திலர் போலும்
      படிமலர பாலனு காக பாற்கடல் ஈந்திலர் போலும்
      பிடிநடை மாதர் பெருகும் பிரம புரம்அமர தாரே. 09
      707 வெற்றரை சீவர தார்க்கு வெளிப்பட நின்றிலர் போலும்
      அற்றவர் ஆழ்நிழல் நால்வர கறங்கள் உரைத்திலர் போலும்
      உற்றவ ரொன்றிலர் போலும் ஓடு முடி கிலர்போலும்
      பெற்றமும் ஊர்ந்திலர் போலும் பிரம புரம்அமர தாரே. 10
      708 பெண்ணுரு ஆணுரு அல்லா பிரம புரநகர் மேய
      அண்ணல்செய் யாதன வெல்லாம் அறிந்து வகைவகை யாலே
      நண்ணிய ஞானசம் பந்தன் நவின்றன பத்தும் வல்லார்கள்
      விண்ணவ ரோடினி தாக வீற்றிரு பாரவர் தாமே. 11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.66 திருஆலவாய் - திருநீற்றுப்பதிகம்
      பண் - காந்தாரம்
      திருச்சிற்றம்பலம்
      709 மந்திர மாவது நீறு வானவர் மேலது
      சுந்தர மாவது நீறு துதிக்க படுவது
      தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது
      செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே. 01
      710 வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது
      போத தருவது நீறு புன்மை தவிர்ப்பது
      ஓ தகுவது நீறு வுண்மையி லுள்ளது
      சீத புனல்வயல் சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே. 02
      711 முத்தி தருவது நீறு முனிவ ரணிவது
      சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது
      பத்தி தருவது நீறு பரவ இனியது
      சித்தி தருவது நீறு திருஆல வாயான் திருநீறே. 03
      712 காண இனியது நீறு கவினை தருவது
      பேணி அணிபவர கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
      மாண தகைவது நீறு மதியை தருவது
      சேண தருவது நீறு திருஆல வாயான் திருநீறே. 04
      713 பூச இனியது நீறு புண்ணிய மாவது
      பேச இனியது நீறு பெருந்தவ தோர்களு கெல்லாம்
      ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது
      தேசம் புகழ்வது நீறு திருஆல வாயான் திருநீறே. 05
      714 அருத்தம தாவது நீறு அவல மறுப்பது
      வருத்த தணிப்பது நீறு வானம் அளிப்பது
      பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண் ணீறு
      திருத்தகு மாளிகை சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே. 06
      715 எயிலது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது
      பயில படுவது நீறு பாக்கிய மாவது
      துயிலை தடுப்பது நீறு சுத்தம தாவது
      அயிலை பொலிதரு சூல தால வாயான் திருநீறே. 07
      716 இராவணன் மேலது நீறு எண்ண தகுவது
      பராவண மாவது நீறு பாவ மறுப்பது
      தராவண மாவது நீறு தத்துவ
      அராவணங் குந்திரு மேனி ஆல வாயான் திருநீறே. 08
      717 மாலொ டயனறி யாத வண்ணமு முள்ளது நீறு
      மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு
      ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்ப தருவது நீறு
      ஆலம துண்ட மிடற்றெம் மால வாயான் திருநீறே. 09
      718 குண்டிகை கையர்க ளோடு சாக்கியர் கூட்டமுங் கூட
      கண்டிகை பிப்பது நீறு கருத இனியது
      எண்டிசை பட்ட பொருளார் ஏத்து தகையது நீறு
      அண்ட தவர்பணி தேத்தும் ஆல வாயான் திருநீறே. 10
      719 ஆற்றல் அடல்விடை யேறும் ஆலவா யான்திரு நீற்றை
      போற்றி புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன்
      தேற்றி தென்ன னுடலுற்ற தீப்பிணி யாயின தீர
      சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே. 11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.67 திருப்பெரும்புலியூர்
      பண் - காந்தாரம்
      திருச்சிற்றம்பலம்
      720 மண்ணுமோர் பாக முடையார் மாலுமோர்
      விண்ணுமோர் பாக முடையார் வேத முடைய விமலர்
      கண்ணுமோர் பாக முடையார் கங்கை சடையிற் கரந்தார்
      பெண்ணுமோர் பாக முடையார் பெரும்புலி யூர்பிரி யாரே. 01
      720 துன்னு கடற்பவ ளஞ்சேர் தூயன நீண்டதிண் டோ ள்கள்
      மின்னு சுடர்க்கொடி போலும் மேனியி னாளொரு கங்கை
      கன்னி களின்புனை யோடு கலைமதி மாலை கலந்த
      பின்னு சடைப்பெரு மானார் பெரும்புலி யூர்பிரி யாரே. 02
      கங்கைக்கன்னிகளின் புனையோடு - என்பதனுக்கு கங்கை
      யாறுகளாகிய மாலையுடனெனப்பொருள் தோன்றுகின்றது.
      722 கள்ள மதித்த கபாலங் கைதனி லேமிக ஏந்தி
      துள்ள மிதித்துநின் றாடு தொழிலர் எழில்மிகு செல்வர்
      வெள்ள நகுதலை மாலை விரிசடை மேல்மிளிர் கின்ற
      பிள்ளை மதிப்பெரு மானார் பெரும்புலி யூர்பிரி யாரே. 03
      723 ஆட லிலையம் உடையார் அருமறை தாங்கியா றங்கம்
      பாட லிலையம் உடையார் பன்மை யொருமைசெய் தஞ்சும்
      ஊட லிலையம் உடையார் யோகெனும் பேரொளி தாங்கி
      பீட லிலையம் உடையார் பெரும்புலி யூர்பிரி யாரே. 04
      724 தோடுடை யார்குழை காதிற் சுடுபொடி யாரன லாட
      காடுடை யாரெரி வீசுங் கையுடை யார்கடல் சூழ்ந்த
      நாடுடை யார்பொரு ளின்ப நல்லவை நாளு நயந்த
      பீடுடை யார்பெரு மானார் பெரும்புலி யூர்பிரி யாரே. 05
      725 கற்ற துறப்பணி செய்து காண்டுமென் பாரவர் தங்கண்
      முற்றி தறிதுமென் பார்கள் முதலியர் வேதபு ராணர்
      மற்றி தறிதுமென் பார்கள் மனத்திடை யார்பணி செ
      பெற்றி பெரிதும் உகப்பார் பெரும்புலி யூர்பிரி யாரே. 06
      726 மறையுடை யாரொலி பாடல் மாமலர சேவடி சேர்வார்
      குறையுடை யார்குறை தீர்ப்பார் குழகர் அழகர் நஞ்செல்வர்
      கறையுடை யார்திகழ் கண்டங் கங்கை சடையிற் கரந்தார்
      பிறையுடை யார்சென்னி தன்மேற் பெரும்புலி யூர்பிரி யாரே. 07
      727 உறவியும் இன்புறு சீரும் ஓங்குதல் வீடெளி தாகி
      துறவியுங் கூட்டமுங் காட்டி துன்பமும் இன்பமு தோற்றி
      மறவியென் சிந்தனை மாற்றி வாழவல் லார்த கென்றும்
      பிறவி யறுக்கும் பிரானார் பெரும்புலி யூர்பிரி யாரே. 08
      728 சீருடை யாரடி யார்கள் சேடரொ பார்சடை சேரும்
      நீருடை யார்பொடி பூசு நினைப்புடை யார்விரி கொன்றை
      தாருடை யார்விடை யூர்வார் தலைவரை நூற்றுப்ப தாய
      பேருடை யார்பெரு மானார் பெரும்புலி யூர்பிரி யாரே. 09
      729 உரிமை யுடையடி யார்கள் உள்ளுற வுள்கவல் லார்க
      கருமை யுடையன காட்டி அருள்செயும் ஆதி முதல்வர்
      கருமை யுடைநெடு மாலுங் கடிமல ரண்ணலுங் காணா
      பெருமை யுடை பெருமானார் பெரும்புலி யூர்பிரி யாரே. 10
      730 பிறைவள ரும்முடி சென்னி பெரும்புலி யூர்ப்பெரு மானை
      நறைவள ரும்பொழிற் காழி நற்றமிழ் ஞானசம் பந்தன்
      மறைவள ருந்தமிழ் மாலை வல்லவர் தந்துயர் நீங்கி
      நிறைவளர் நெஞ்சின ராகி நீடுல கத்திரு பாரே. 11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - வியாக்கிரபுரீசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.68 திருக்கடம்பூர்
      பண் - காந்தாரம்
      திருச்சிற்றம்பலம்
      731 வானமர் திங்களும் நீரும் மருவிய வார்சடை யானை
      தேனமர் கொன்றையி னானை தேவர் தொழப்படு வானை
      கானம ரும்பிணை புல்கி கலைபயி லுங்கடம் பூரில்
      தானமர் கொள்கையி னானை தாள்தொழ வீடெளி தாமே. 01
      732 அரவினொ டாமையும் பூண்டு அந்துகில் வேங்கை யதளும்
      விரவு திருமுடி தன்மேல் வெண்திங்கள் சூடி விரும்பி
      பரவு தனிக்கடம் பூரிற் பைங்கண்வெள் ளேற்றண்ணல் பாதம்
      இரவும் பகலும் பணிய இன்பம் நமக்கது வாமே. 02
      733 இளிபடும் இன்சொலி னார்கள் இருங்குழல் மேலிசை தேற
      தெளிபடு கொள்கை கலந்த தீத்தொழி லார்கடம் பூரில்
      ஒளிதரு வெண்பிறை சூடி யொண்ணுத லோடுட னாகி
      புலியத ளாடை புனைந்தான் பொற்கழல் போற்றுதும் நாமே. 03
      இளி - என்பது ஏழிசையிலொன்று.
      734 பறையொடு சங்கம் இ பல்கொடி சேர்நெடு மாடங்
      கறையுடை வேல்வரி கண்ணார் கலையொலி சேர்கடம் பூரில்
      மறையொலி கூடிய பாடல் மருவிநின் றாடல் மகிழும்
      பிறையுடை வார்சடை யானை பேணவல் லார்பெரி யோரே. 04
      735 தீவிரி யக்கழ லார்ப்ப சேயெரி கொண்டிடு காட்டில்
      நாவிரி கூந்தல்நற் பேய்கள் நகைசெய்ய நட்டம் நவின்றோன்
      காவிரி கொன்றை கலந்த கண்ணுத லான்கடம் பூரில்
      பாவிரி பாடல் பயில்வார் பழியொடு பாவ மிலாரே. 05
      736 தண்புனல் நீள்வயல் தோறு தாமரை மேலனம் வை
      கண்புணர் காவில்வண் டேற கள்ளவி ழுங்கடம் பூரில்
      பெண்புனை கூறுடை யானை பின்னு சடைப்பெரு மானை
      பண்புனை பாடல் பயில்வார் பாவமி லாதவர் தாமே. 06
      737 பலிகெழு செம்மலர் சார பாடலொ டாட லறாத
      கலிகெழு வீதி கலந்த கார்வயல் சூழ்கடம் பூரில்
      ஒலிதிகழ் கங்கை கரந்தான் ஒண்ணுத லாள்உமை கேள்வன்
      புலியத ளாடையி னான்றன் புனைகழல் போற்றல் பொருளே. 07
      738 பூம்படு கிற்கயல் பா புள்ளிரி யப்புறங் காட்டில்
      காம்படு தோளியர் நாளுங் கண்கவ ருங்கடம் பூரில்
      மேம்படு தேவியோர் பாகம் மேவியெம் மானென வாழ்த்தி
      தேம்படு மாமலர் தூவி திசைதொழ தீய கெடுமே. 08
      739 திருமரு மார்பி லவனு திகழ்தரு மாமல ரோனும்
      இருவரு மாயறி வொண்ணா எரியுரு வாகிய ஈசன்
      கருவரை காலில் அடர்த்த கண்ணுத லான்கடம் பூரில்
      மருவிய பாடல் பயில்வார் வானுல கம்பெறு வாரே. 09
      740 ஆடை தவிர்த்தறங் காட்டு மவர்களும் அந்துவராடை
      சோடைகள் நன்னெறி சொல்லார் சொல்லினுஞ் சொல்லல கண்டீர்
      வேடம் பலபல காட்டும் விகிர்தன்நம் வேதமு தல்வன்
      காடத னில்நட மாடுங் கண்ணுத லான்கடம் பூரே. 10
      741 விடைநவி லுங்கொடி யானை வெண்கொடி சேர்நெடு மாடங்
      கடைநவி லுங்கடம் பூரிற் காதல னைக்கடற் காழி
      நடைநவில் ஞானசம் பந்தன் நன்மையா லேத்திய பத்தும்
      படைநவில் பாடல்ப யில்வார் பழியொடு பாவ மிலாரே. 11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - அமுதகடேசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.69 திருப்பாண்டிக்கொடுமுடி
      பண் - காந்தாரம்
      திருச்சிற்றம்பலம்
      742 பெண்ணமர் மேனியி னாரும் பிறைபுல்கு செஞ்சடை யாருங்
      கண்ணமர் நெற்றியி னாருங் காதம ருங்குழை யாரும்
      எண்ணம ருங்குண தாரும் இமையவ ரேத்த நின்றாரும்
      பண்ணமர் பாடலி னாரும் பாண்டி கொடுமுடி யாரே. 01
      743 தனைக்கணி மாமலர் கொண்டு தாள்தொழு வாரவர் தங்கள்
      வினைப்பகை யாயின தீர்க்கும் விண்ணவர் விஞ்சையர் நெஞ்சில்
      நினைத்தெழு வார்துயர் தீர்ப்பார் நிரைவளை மங்கை நடுங்க
      பனைக்கை பகட்டுரி போர்த்தார் பாண்டி கொடுமுடி யாரே. 02
      744 சடையமர் கொன்றையி னாருஞ் சாந்தவெண் ணீறணி தாரும்
      புடையமர் பூதத்தி னாரும் பொறிகிளர் பாம்பசை தாரும்
      விடையம ருங்கொடி யாரும் வெண்மழு மூவிலை சூல
      படையமர் கொள்கையி னாரும் பாண்டி கொடுமுடி யாரே. 03
      745 நறைவளர் கொன்றையி னாரும் ஞாலமெல் லாந்தொழு தேத்த
      கறைவளர் மாமிடற் றாருங் காடரங் காக்கன லேந்தி
      மறைவளர் பாடலி னோடு மண்முழ வங்குழல் மொந்தை
      பறைவளர் பாடலி னாரும் பாண்டி கொடுமுடி யாரே. 04
      746 போகமு மின்பமு மாகி போற்றியென் பாரவர் தங்கள்
      ஆகமு றைவிட மாக அமர்ந்தவர் கொன்றையி னோடும்
      நாகமு திங்களுஞ் சூடி நன்னுதல் மங்கைதன் மேனி
      பாகமு கந்தவர் தாமும் பாண்டி கொடுமுடி யாரே. 05
      747 கடிபடு கூவிளம் மத்தங் கமழ்சடை மேலுடை யாரும்
      பொடிபட முப்புரஞ் செற்ற பொருசிலை யொன்றுடை யாரும்
      வடிவுடை மங்கைதன் னோடு மணம்படு கொள்கையி னாரும்
      படிபடு கோலத்தி னாரும் பாண்டி கொடுமுடி யாரே. 06
      748 ஊனமர் வெண்டலை யேந்தி உண்பலி கென்றுழல் வாரு
      தேனம ரும்மொழி மாது சேர்திரு மேனியி னாருங்
      கானமர் மஞ்ஞைக ளாலுங் காவிரி கோல கரைமேல்
      பானல நீறணி வாரும் பாண்டி கொடுமுடி யாரே. 07
      749 புரந்தரன் தன்னொடு வானோர் போற்றியென் றேத்த நின்றாரும்
      பெருந்திறல் வாளர கன்னை பேரிடர் செய்துக தாருங்
      கருந்திரை மாமிடற் றாருங் காரகில் பன்மணி யுந்தி
      பரந்திழி காவிரி பாங்கர பாண்டி கொடுமுடி யாரே. 08
      750 திருமகள் காதலி னானு திகழ்தரு மாமலர் மேலை
      பெருமக னும்மவர் காணா பேரழ லாகிய பெம்மான்
      மருமலி மென்மலர சந்து வந்திழி காவிரி மாடே
      பருமணி நீர்த்துறை யாரும் பாண்டி கொடுமுடி யாரே. 09
      751 புத்தரும் புந்தியி லாத சமணரும் பொய்ம்மொழி யல்லால்
      மெய்த்தவம் பேசிட மாட்டார் வேடம் பலபல வற்றால்
      சித்தரு தேவருங் கூடி செழுமலர் நல்லன கொண்டு
      பத்தர்கள் தாம்பணி தேத்தும் பாண்டி கொடுமுடி யாரே. 10
      752 கலமல்கு தண்கடல் சூழ்ந்த காழியுள் ஞானசம் பந்தன்
      பலமல்கு வெண்டலை யேந்தி பாண்டி கொடுமுடி தன்னை
      சொலமல்கு பாடல்கள் பத்துஞ் சொல்ல வல்லார் துயர்தீர்ந்து
      நலமல்கு சிந்தைய ராகி நன்னெறி யெய்துவர் தாமே. 11
      இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - கொடுமுடிநாதேசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.70 திருப்பிரமபுரம் - திருச்சக்கரமாற்று
      பண் - காந்தாரம்
      திருச்சிற்றம்பலம்
      753 பிரமனூர் வேணுபுரம் புகலி வெங்குரு பெருநீர தோணி
      புரமன்னு பூந்தராய் பொன்னஞ் சிரபுரம் புறவஞ் சண்பை
      அரன்மன்னு தண்காழி கொச்சை வயமுள்ளி டங்காதி யாய
      பரமனூர் பன்னிரண்டாய் நின்றதிரு கழுமலம் நாம்பரவு மூரே. 01
      754 வேணுபுரம் பிரமனூர் புகலிபெரு வெங்குரு வெள்ள தோங்கு
      தோணிபுரம் பூந்தராய் தூநீர சிரபுரம் புறவங் காழி
      கோணிய கோட்டாற்று கொச்சை வயஞ்சண்பை கூருஞ் செல்வங்
      காணிய வையகத்தா ரேத்துங் கழுமலம் நாங்கருது மூரே. 02
      755 புகலி சிரபுரம் வேணுபுரஞ் சண்பை புறவங் காழி
      நிகரில் பிரமபுரங் கொச்சை வயம்நீர்மேல் நின்ற மூதூர்
      அகலிய வெங்குருவோ டந்தண் டராய்அமரர் பெருமாற் கின்பம்
      பகரு நகர்நல்ல கழுமலநாங் கைதொழுது பாடு மூரே. 03
      756 வெங்குரு தண்புகலி வேணுபுரஞ் சண்பை வெள்ளங் கொள்ள
      தொங்கிய தோணிபுரம் பூந்தராய் தொகுபிரம புரந்தொல் காழி
      தங்கு பொழிற்புறவங் கொச்சை வயந்தலைபண் டாண்ட மூதூர்
      கங்கை சடைமுடிமே லேற்றான் கழுமலநாங் கருது மூரே. 04
      757 தொன்னீரில் தோணிபுரம் புகலி வெங்குரு துயர்தீர் காழி
      இன்னீர வேணுபுரம் பூந்தராய் பிரமனூர் எழிலார் சண்பை
      நன்னீர பூம்புறவங் கொச்சை வயஞ்சிலம்ப னகராம் நல்ல
      பொன்னீர புன்சடையான் பூந்தண் கழுமலம்நாம் புகழு மூரே. 05
      758 தண்ண தராய்புகலி தாமரையா னூர்சண்பை தலைமுன் ஆண்ட
      அண்ணல்நகர் கொச்சை வயந்தண் புறவஞ்சீர் அணியார் காழி
      விண்ணியல்சீர் வெங்குருநல் வேணுபுர தோணிபுரம் மேலா லேந்து
      கண்ணுதலான் மேவியநற் கழுமலம்நாங் கைதொழுது கருது மூரே. 06
      759 சீரார் சிரபுரமுங் கொச்சைவயஞ் சண்பையொடு புறவ நல்ல
      ஆரா தராய்பிரம னூர்புகலி வெங்குருவோ டந்தண் காழி
      ஏரார் கழுமலமும் வேணுபுர தோணிபுர மென்றென் றுள்கி
      பேரால் நெடியவனும் நான்முகனுங் காண்பரிய பெருமா னூரே. 07
      760 புறவஞ் சிரபுரமு தோணிபுரஞ் சண்பைமிகு புகலி காழி
      நறவ மிகுசோலை கொச்சை வயந்தராய் நான்முகன் றனூர்
      விறலாய வெங்குருவும் வேணுபுரம் விசயன் மேலம் பெய்து
      திறலால் அரக்கனைச்செற் றான்றன் கழுமலம்நாஞ் சேரு மூரே. 08
      761 சண்பை பிரமபுர தண்புகலி வெங்குருநற் காழி சாயா
      பண்பார் சிரபுரமுங் கொச்சை வயந்தராய் புறவம் பார்மேல்
      நண்பார் கழுமலஞ்சீர் வேணுபுர தோணிபுரம் நாணி லாத
      வெண்பற் சமணரொடு சாக்கியரை வியப்பழித்த விமல னூரே. 09
      762 செழுமலிய பூங்காழி புறவஞ் சிரபுரஞ்சீர புகலி செய்ய
      கொழுமலரான் நன்னகர தோணிபுரங் கொச்சைவயஞ் சண்பை யாய
      விழுமியசீர் வெங்குருவோ டோ ங்குதராய் வேணுபுரம் மிகுநன் மாட
      கழுமலமென் றின்னபெயர் பன்னிரண்டுங் கண்ணுதலான் கருது மூரே. 10
      763 கொச்சை வயம்பிரம னூர்புகலி வெங்குரு புறவங் காழி
      நிச்சல் விழவோவா நீடார் சிரபுரம்நீள் சண்பை மூதூர்
      நச்சினிய பூந்தராய் வேணுபுர தோணிபுர மாகி நம்மேல்
      அச்சங்கள் தீர்த்தருளும் அம்மான் கழுமலம்நாம் அமரு மூரே. 11
      764 காவி மலர்புரையுங் கண்ணார் கழுமலத்தின் பெயரை நாளும்
      பாவியசீர பன்னிரண்டும் நன்னூலா பத்திமையாற் பனுவல் மாலை
      நாவி னலம்புகழ்சீர் நான்மறையான் ஞானசம் பந்தன் சொன்ன
      மேவி யிசைமொழிவார் விண்ணவரில் எண்ணுதலை விருப்பு ளாரே. 12
      இது பாண்டியராசனுடைய சுரப்பிணிதீர்க்கச்சென்
      றாசனத்திலிருந்தபோது அவ்வரசன் சுவாமிகளை
      நோக்கி எந்தவூரென்று வினவ நாமின்னவூரென்று
      திருவாய் மலர்ந்தருளிய திருப்பதிகம்.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.71 திருக்குறும்பலா
      பண் - காந்தாரம்
      திருச்சிற்றம்பலம்
      765 திருந்த மதிசூடி தெண்ணீர் சடைக்கரந்து தேவி பாகம்
      பொருந்தி பொருந்தாத வேடத்தாற் காடுறைதல் புரிந்த செல்வர்
      இருந்த இடம்வினவில் ஏலங்கமழ் சோலையின் வண்டு யாழ்செய்
      குருந்த மணம்நாறுங் குன்றிடஞ்சூழ் தண்சாரற் குறும்ப லாவே. 01
      766 நாட்பலவுஞ் சேர்மதியஞ் சூடி பொடியணிந்த நம்பான் நம்மை
      ஆட்பலவு தானுடைய அம்மா னிடம்போலு மந்தண் சாரல்
      கீட்பலவுங் கீண்டு கிளைகிளையன் மந்திபா துண்டு விண்ட
      கோட்பலவின் தீங்கனியை மாக்கடுவ னுண்டுகளுங் குறும்ப லாவே. 02
      767 வாடல் தலைமாலை சூடி புலித்தோல் வலித்து வீக்கி
      ஆட லரவசைத்த அம்மா னிடம்போலு மந்தண் சாரல்
      பாடற் பெடைவண்டு போதலர்த்த தாதவிழ்ந்து பசும்பொ னுந்தி
      கோடன் மணங்கமழுங் குன்றிடஞ்சூழ் தண்சாரற் குறும்ப லாவே. 03
      768 பால்வெண் மதிசூடி பாகத்தோர் பெண்கலந்து பாடி யாடி
      கால னுடல்கிழி காய்ந்தா ரிடம்போலுங் கல்சூழ் வெற்பில்
      நீல மலர்க்குவளை கண்திறக்க வண்டரற்றும் நெடுந்தண் சாரல்
      கோல மடமஞ்ஞை பேடையோ டாட்டயருங் குறும்ப லாவே. 04
      769 தலைவாண் மதியங் கதிர்விரி தண்புனலை தாங்கி தேவி
      முலைபாகங் காதலித்த மூர்த்தி யிடம்போலும் முதுவேய் சூழ்ந்த
      மலைவாய் அசும்பு பசும்பொன் கொழித்திழியும் மல்கு சாரல்
      குலைவாழை தீங்கனியும் மாங்கனியு தேன்பிலிற்றுங் குறும்ப லாவே. 05
      770 நீற்றே துதைந்திலங்கு வெண்ணூலர் தண்மதியர் நெற்றி கண்ணர்
      கூற்றேர் சிதை கடிந்தா ரிடம்போலுங் குளிர்சூழ் வெற்பில்
      ஏற்றேனம் ஏன மிவையோ டவைவிரவி யிழிபூஞ் சாரல்
      கோற்றேன் இசைமுரல கேளா குயில்பயிலுங் குறும்ப லாவே. 06
      771 பொன்றொத்த கொன்றையும் பிள்ளை மதியும் புனலுஞ் சூடி
      பின்றொத்த வார்சடையெம் பெம்மா னிடம்போலும் பில தாங்கி
      மன்றத்து மண்முழவம் ஓங்கி மணிகொழித்து வயிரம் உந்தி
      குன்ற தருவி யயலே புனல்ததும்புங் குறும்ப லாவே. 07
      772 ஏந்து திணிதிண்டோ ள் இராவணனை மால்வரைக்கீழ் அடர வூன்றி
      சாந்தமென நீறணிந்த சைவர் இடம்போலுஞ் சாரற் சாரல்
      பூந்தண் நறுவேங்கை கொத்திறுத்து மத்தகத்தில் பொலிய ஏந்தி
      கூந்தற் பிடியுங் களிறு முடன்வணங்குங் குறும்ப லாவே. 08
      773 அரவின் அணையானும் நான்முகனுங் காண்பரிய அண்ணல் சென்னி
      விரவி மதியணிந்த விகிர்தர கிடம்போலும் விரிபூஞ் சாரல்
      மரவம் இருகரையும் மல்லிகையுஞ் சண்பகமும் மலர்ந்து மாந்த
      குரவம் முறுவல்செய்யுங் குன்றிடஞ்சூழ் தண்சாரல் குறும்ப லாவே. 09
      774 மூடிய சீவரத்தர் முன்கூறுண் டேறுதலும் பின்கூ றுண்டு
      காடி தொடுசமணை காய்ந்தா ரிடம்போலுங் கல்சூழ் வெற்பில்
      நீடுயர் வேய்குனி பாய்கடுவன் நீள்கழைமேல் நிருத்தஞ் செ
      கூடிய வேடுவர்கள் கூய்விளியா கைமறிக்குங் குறும்ப லாவே. 10
      775 கொம்பார்பூஞ் சோலை குறும்பலா மேவிய கொல்லேற் றண்ணல்
      நம்பான் அடிபரவும் நான்மறையான் ஞானசம் பந்தன் சொன்ன
      இன்பாய பாட லிவைபத்தும் வல்லார் விரும்பி கேட்பார்
      தம்பால தீவினைகள் போயகலும் நல்வினைகள் தளரா வன்றே. 11
      இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது. இதுவே திருக்குற்றாலம்.
      சுவாமிபெயர் - குறும்பலாநாதர்
      தேவியார் - குழன்மொழியம்மை.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.72 திருநணா
      பண் - காந்தாரம்
      திருச்சிற்றம்பலம்
      776 பந்தார் விரல்மடவாள் பாகமா
      நாகம்பூண் டேற தேறி
      அந்தார் அரவணிந்த அம்மா
      னிடம்போலும் அந்தண் சாரல்
      வந்தார் மடமந்தி கூத்தாட
      வார்பொழிலில் வண்டு பாட
      செந்தேன் தெளியொளிர தேமா
      கனியுதிர்க்கு திருந ணாவே. 01
      777 நாட்டம் பொலிந்திலங்கு நெற்றியினான்
      மற்றொருகை வீணை யேந்தி
      ஈட்டு துயரறுக்கும் எம்மா
      னிடம்போலு மிலைசூழ் கானில்
      ஓட்ட தருமருவி வீழும்
      விசைகாட்ட முந்தூ ழோசை
      சேட்டார் மணிகள் அணியு
      திரைசேர்க்கு திருந ணாவே. 02
      778 நன்றாங் கிசைமொழிந்து நன்னுதலாள்
      பாகமாய் ஞால மேத்த
      மின்றாங்கு செஞ்சடையெம் விகிதர
      கிடம்போலும் விரைசூழ் வெற்பில்
      குன்றோங்கி வன்றிரைகள் மோத
      மயிலாலுஞ் சாரற் செவ்வி
      சென்றோங்கி வானவர்க ளேத்தி
      அடிபணியு திருந ணாவே. 03
      779 கையில் மழுவேந்தி காலிற்
      சிலம்பணிந்து கரித்தோல் கொண்டு
      மெய்யில் முழுதணிந்த விகிர்தர
      கிடம்போலு மிடைந்து வானோர்
      ஐய ரவரெம் பெருமா
      னருளென்றென் றாத ரிக்க
      செய்ய கமலம் பொழிதே
      னளித்தியலு திருந ணாவே. 04
      780 முத்தேர் நகையா ளிடமாக
      தம்மார்பில் வெண்ணூல் பூண்டு
      தொத்தேர் மலர்ச்சடையில் வைத்தா
      ரிடம்போலுஞ் சோலை சூழ்ந்த
      அத்தேன் அளியுண் களியா
      லிசைமுரல ஆல தும்பி
      தெத்தே யெனமுரல கேட்டார்
      வினைகெடுக்கு திருந ணாவே. 05
      781 வில்லார் வரையாக மாநாகம்
      நாணாக வேடங் கொண்டு
      புல்லார் புரமூன் றெரித்தார
      கிடம்போலும் புலியு மானும்
      அல்லாத சாதிகளு மங்கழல்மேற்
      கைகூப்ப அடியார் கூடி
      செல்லா வருநெறிக்கே செல்ல
      அருள்புரியு திருந ணாவே. 06
      782 கானார் களிற்றுரிவை மேல்மூடி
      ஆடரவொன் றரைமேற் சாத்தி
      ஊனார் தலையோட்டி லூணுகந்தான்
      றானுகந்த கோயி லெங்கும்
      நானா விதத்தால் விரதிகள்நன்
      னாமமே யேத்தி வாழ
      தேனார் மலர்கொண் டடியார்
      அடிவணங்கு திருந ணாவே. 07
      783 மன்னீ ரிலங்கையர்தங் கோமான்
      வலிதொலைய விரலா லூன்றி
      முந்நீர கடல்நஞ்சை யுண்டார
      கிடம்போலும் முநனைசேர் சீயம்
      அன்னீர் மைகுன்றி அழலால்
      விழிகுறைய வழியு முன்றில்
      செந்நீர் பரப்ப சிறந்து
      கரியொளிக்கு திருந ணாவே. 08
      784 மையார் மணிமிடறன் மங்கையோர்
      பங்குடையான் மனைக டோ றும்
      கையார் பலியேற்ற கள்வன்
      இடம்போலுங் கழல்கள் நேடி
      பொய்யா மறையானும் பூமி
      யளந்தானும் போற்ற மன்னி
      செய்யார் எரியாம் உருவ
      முறவணங்கு திருந ணாவே. 09
      785 ஆடை யொழித்தங் கமணே
      திரிந்துண்பார் அல்லல் பேசி
      மூடு உருவம் உகந்தார்
      உரையகற்றும் மூர்த்தி கோயில்
      ஓடு நதிசேரும் நித்திலமும்
      மொய்த்தகிலுங் கரையில் சார
      சேடர் சிறந்தே தோன்றி
      யொளிபெருகு திருந ணாவே. 10
      786 கல்வி தகத்தால் திரைசூழ்
      கடற்காழி கவுணி சீரார்
      நல்வி தகத்தால் இனிதுணரும்
      ஞானசம் பந்தன் எண்ணுஞ்
      சொல்வி தகத்தால் இறைவன்
      திருநணா ஏத்து பாடல்
      வல்வி தகத்தான் மொழிவார்
      பழியிலரிம் மண்ணின் மேலே. 11
      இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது. இது பவானி நதி
      காவிரியுடன் சேருமிடமாதலால் பவானிகூடலென
      பெயர் வழங்கப்படுகின்றது.
      சுவாமிபெயர் - சங்கமுகநாதேசுவரர்
      தேவியார் - வேதமங்கையம்மை.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.73 திருப்பிரமபுரம் - திருச்சக்கரமாற்று
      பண் - காந்தாரம்
      திருச்சிற்றம்பலம்
      787 விளங்கியசீர பிரமனூர் வேணுபுரம்
      புகலிவெங் குருமேற் சோலை
      வளங்கவரு தோணிபுரம் பூந்தரா
      சிரபுரம்வண் புறவ மண்மேல்
      களங்கமிலூர் சண்பைகமழ் காழிவயங்
      கொச்சைகழு மலமென் றின்ன
      இளங்குமரன் றன்னைப்பெற் றிமையவர்தம்
      பகையெறிவி திறைவ னூரே. 01
      788 திருவளருங் கழுமலமே கொச்சைதே
      வேந்திரனூர் அயனூர் தெய்வ
      தருவளரும் பொழிற்புறவஞ் சிலம்பனூர்
      காழிதகு சண்பை யொண்பா
      வுருவளர்வெங் குருப்புகலி யோங்குதராய்
      தோணிபுரம் உயர்ந்த தேவர்
      வெருவவளர் கடல்விடம துண்டணிகொள்
      கண்டத்தோன் விரும்புமூரே. 02
      789 வாய்ந்தபுகழ் மறைவளரு தோணிபுரம்
      பூந்தராய் சிலம்பன் வாழூர்
      ஏய்ந்தபுற வந்திகழுஞ் சண்பையெழில்
      காழியிறை கொச்சை யம்பொன்
      வேய்ந்தமதிற் கழுமலம்விண் ணோர்பணிய
      மிக்கயனூர் அமரர் கோனூர்
      ஆய்ந்தகலை யார்புகலி வெங்குருவ
      தரன்நாளும் அமரு மூரே. 03
      790 மாமலையாள் கணவன்மகிழ் வெங்குருமா
      புகலிதராய் தோணிபுரம் வான்
      சேமமதில் புடைதிகழுங் கழுமலமே
      கொச்சைதே வேந்திரனூர் சீர
      பூமகனூர் பொலிவுடைய புறவம்விறற்
      சிலம்பனூர் காழி சண்பை
      பாமருவு கலையெட்டெ டுணர்ந்தவற்றின்
      பயன்நுகர்வோர் பரவு மூரே.
      04
      தரைத்தேவர் பணிசண்பை தமிழ்க்காழி
      791 வயங்கொச்சை தயங்கு பூமேல்
      விரைச்சேருங் கழுமலம்மெய் யுணர்ந்தயனூர்
      விண்ணவர்தங் கோனூர் வென்றி
      திரைச்சேரும் புனற்புகலி வெங்குருசெல்
      வம்பெருகு தோணிபுரஞ் சீர்
      உரைசேர்பூ தராய்சிலம்ப னூர்புறவம்
      உலகத்தில் உயர்ந்த வூரே. 05
      792 புண்டரிக தார்வயல்சூழ் புறவமிகு
      சிரபுரம்பூங் காழி சண்பை
      எண்டிசையோர் இறைஞ்சியவெங் குருப்புகலி
      பூந்தராய் தோணிபுரஞ் சீர்
      வண்டமரும் பொழில்மல்கு கழுமலம்நற்
      கொச்சைவா னவர்தங் கோனூர்
      அண்டயனூ ரிவையென்பர் அருங்கூற்றை
      யுதைத்துகந்த அப்ப னூரே. 06
      793 வண்மைவளர் வரத்தயனூர் வானவர்தங்
      கோனூர்வண் புகலி யிஞ்சி
      வெண்மதிசேர் வெங்குருமி கோரிறைஞ்சு
      சண்பைவியன் காழி கொச்சை
      கண்மகிழுங் கழுமலங்கற் றோர்புகழு
      தோணிபுரம் பூந்தராய் சீர
      பண்மலியுஞ் சிரபுரம்பார் புகழ்புறவம்
      பால்வண்ணன் பயிலு மூரே. 07
      794 மோடிபுறங் காக்குமூர் புறவஞ்சீர
      சிலம்பனூர் காழி மூதூர்
      நீடியலுஞ் சண்பைகழு மலங்கொச்சை
      வேணுபுரங் கமல நீடு
      கூடியய னூர்வளர்வெங் குருப்புகலி
      தராய்தோணி புரங்கூ டப்போர்
      தேடியுழல் அவுணர்பயில் திரிபுரங்கள்
      செற்றமலை சிலைய னூரே. 08
      795 இரக்கமுடை யிறையவனூர் தோணிபுரம்
      பூந்தராய் சிலம்பன் தன்னூர்
      நிரக்கவரு புனற்புறவம் நின்றதவ
      தயனூர்சீர தேவர் கோனூர்
      வரக்கரவா புகலிவெங் குருமாசி
      லாச்சண்பை காழி கொச்சை
      அரக்கன்விறல் அழித்தருளி கழுமல
      தணர்வேத மறாத வூரே. 09
      796 மேலோதுங் கழுமலமெ தவம்வளருங்
      கொச்சையி திரனூர் மெய்ம்மை
      நூலோதும் அயன்றனூர் நுண்ணறிவார்
      குருப்புகலி தராய்தூ நீர்மேல்
      சேலோடு தோணிபுர திகழ்புறவஞ்
      சிலம்பனூர் செருச்செய் தன்று
      மாலோடும் அயனறியான் வண்காழி
      சண்பைமண்ணோர் வாழ்த்து மூரே. 10
      797 ஆக்கமர்சீ ரூர்சண்பை காழியமர்
      கொச்சைகழு மலமன் பானூர்
      ஓக்கமுடை தோணிபுரம் பூந்தராய்
      சிரபுரமொண் புறவ நண்பார்
      பூக்கமல தோன்மகிழூர் புரந்தரனூர்
      புகலிவெங் குருவு மென்பர்
      சாக்கியரோ டமண்கையர் தாமறியா
      வகைநின்றான் தங்கு மூரே. 11
      798 அக்கரஞ்சேர் தருமனூர் புகலிதராய்
      தோணிபுரம் அணிநீர பொய்கை
      புக்கரஞ்சேர் புறவஞ்சீர சிலம்பனூர்
      புகழ்க்காழி சண்பை தொல்லூர்
      மிக்கரஞ்சீர கழுமலமே கொச்சைவயம்
      வேணுபுரம் அயனூர் மேலி
      சக்கரஞ்சீர தமிழ்விரகன் தான்சொன்ன
      தமிழ்தரிப்போர் தவஞ்செய் தோரே. 12
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.74 திருப்பிரமபுரம் - திருக்கோமூத்திரி
      பண் - காந்தாரம்
      திருச்சிற்றம்பலம்
      799 பூமகனூர் புத்தேளு கிறைவனூர்
      குறைவிலா புகலி பூமேல்
      மாமகளூர் வெங்குருநல் தோணிபுரம்
      பூந்தராய் வாய்ந்த இஞ்சி
      சேமமிகு சிரபுரஞ்சீர புறவநிறை
      புகழ்ச்சண்பை காழி கொச்சை
      காமனைமுன் காய்ந்தநுதற் கண்ணவனூர்
      கழுமலம்நாங் கருது மூரே. 01
      800 கருத்துடைய மறையவர்சேர் கழுமலம்மெ
      தோணிபுரம் கனக மாட
      உருத்திகழ்வெங் குருப்புகலி யோங்குதரா
      யுலகாருங் கொச்சை காழி
      திருத்திகழுஞ் சிரபுரந்தே வேந்திரனூர்
      செங்கமல தயனூர் தெய்வ
      தருத்திகழும் பொழிற்புறவஞ் சண்பைசடை
      முடியண்ணல் தங்கு மூரே. 02
      801 ஊர்மதியை கதுவவுயர் மதிற்சண்பை
      யொளிமருவு காழி கொச்சை
      கார்மலியும் பொழில்புடைசூழ் கழுமலமெ
      தோணிபுரங் கற்றோ ரேத்துஞ்
      சீர்மருவு பூந்தராய் சிரபுரம்மெ
      புறவம்அய னூர்பூங் கற்ப
      தார்மருவும் இந்திரனூர் புகலிவெங்
      குருக்கங்கை தரித்தோ னூரே. 03
      802 தரித்தமறை யாளர்மிகு வெங்குருச்சீர
      தோணிபுர தரியா ரிஞ்சி
      எரித்தவன்சேர் கழுமலமே கொச்சைபூ
      தராய்புகலி யிமையோர் கோனூர்
      தெரித்தபுகழ சிரபுரஞ்சீர் திகழ்காழி
      சண்பைசெழு மறைக ளெல்லாம்
      விரித்தபுகழ புறவம்விரை கமலத்தோ
      னூருலகில் விளங்கு மூரே. 04
      803 விளங்கயனூர் பூந்தராய் மிகுசண்பை
      வேணுபுரம் மேக மேய்க்கும்
      இளங்கமுகம் பொழிற்றோணி புரங்காழி
      யெழிற்புகலி புறவம் ஏரார்
      வளங்கவரும் வயற்கொச்சை வெங்குருமா
      சிரபுரம்வன் னஞ்ச முண்டு
      களங்கமலி களத்தவன்சீர கழுமலங்கா
      மன்னுடலங் காய்ந்தோ னூரே. 05
      804 காய்ந்துவரு காலனையன் றுதைத்தவனூர்
      கழுமலமா தோணிபுரஞ் சீர்
      ஏய்ந்தவெங் குருபுகலி இந்திரனூர்
      இருங்கமல தயனூர் இன்பம்
      வாய்ந்தபுற வந்திகழுஞ் சிரபுரம்பூ
      தராய்கொச்சை காழி சண்பை
      சேந்தனைமுன் பயந்துலகில் தேவர்கள்தம்
      பகைகெடுத்தோன் திகழு மூரே. 06
      805 திகழ்மாட மலிசண்பை பூந்தராய்
      பிரமனூர் காழி தேசார்
      மிகுதோணி புரந்திகழும் வேணுபுரம்
      வயங்கொச்சை புறவம் விண்ணோர்
      புகழ்புகலி கழுமலஞ்சீர சிரபுரம்வெங்
      குருவெம்போர் மகிடற் செற்று
      நிகழ்நீலி நின்மலன்றன் அடியிணைகள்
      பணிந்துலகில் நின்ற வூரே. 07
      806 நின்றமதில் சூழ்தருவெங் குருத்தோணி
      புரநிகழும் வேணு மன்றில்
      ஒன்றுகழு மலங்கொச்சை உயர்காழி
      சண்பைவளர் புறவ மோடி
      சென்றுபுறங் காக்குமூர் சிரபுரம்பூ
      தராய்புகலி தேவர் கோனூர்
      வென்றிமலி பிரமபுரம் பூதங்கள்
      தாங்காக்க மிக்க வூரே. 08
      807 மிக்ககம லத்தயனூர் விளங்குபுற
      வஞ்சண்பை காழி கொச்சை
      தொக்கபொழிற் கழுமலந்தூ தோணிபுரம்
      பூந்தராய் சிலம்பன் சேரூர்
      மைக்கொள்பொழில் வேணுபுரம் மதிற்புகலி
      வெங்குருவல் அரக்கன் திண்டோ ள்
      ஒக்கஇரு பதுமுடிகள் ஒருபதுமீ
      டழித்துகந்த எம்மா னூரே. 09
      808 எம்மான்சேர் வெங்குருச்சீர சிலம்பனூர்
      கழுமலநற் புகலி யென்றும்
      பொய்ம்மாண்பி லோர்புறவங் கொச்சைபுர
      தரனூர்நற் றோணிபுரம் போர
      கைம்மாவை யுரிசெய்தோன் காழியய
      னூர்தராய் சண்பை காரின்
      மெய்ம்மால்பூ மகனுணரா வகைதழலாய்
      விளங்கியஎம் இறைவ னூரே. 10
      809 இறைவனமர் சண்பையெழிற் புறவம்அய
      னூர்இமையோர கதிபன் சேரூர்
      குறைவில்புகழ புகலிவெங் குருத்தோணி
      புரங்குணமார் பூந்தராய் நீர
      சிறைமலிநற் சிரபுரஞ்சீர காழிவளர்
      கொச்சைகழு மலந்தே சின்றி
      பறிதலையோ டமண்கையர் சாக்கியர்கள்
      பரிசறியா அம்மா னூரே. 11
      810 அம்மான்சேர் கழுமலமா சிரபுரம்வெங்
      குருக்கொச்சை புறவ மஞ்சீர்
      மெய்ம்மான தொண்புகலி மிகுகாழி
      தோணிபுர தேவர் கோனூர்
      அம்மான்மன் னுயர்சண்பை தராய்அயனூர்
      வழிமுடக்கு மாவின் பாச்சல்
      தம்மானொன் றியஞான சம்பந்தன்
      தமிழ்கற்போர் தக்கோர் தாமே. 12
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.75 சீகாழி
      பண் - காந்தாரம்
      திருச்சிற்றம்பலம்
      811 விண்ணி யங்குமதி கண்ணியான்விரி யுஞ்சடை
      பெண்ண யங்கொள்திரு மேனியான்பெரு மானனற்
      கண்ண யங்கொள்திரு நெற்றியான்கலி காழியுள்
      மண்ண யங்கொள்மறை யாளரேத்துமலர பாதனே. 01
      812 வலிய காலனுயிர் வீட்டினான்மட வாளொடும்
      பலிவி ரும்பியதோர் கையினான்பர மேட்டியான்
      கலியை வென்றமறை யாளர்தங்கலி காழியுள்
      நலிய வந்தவினை தீர்த்துகந்தஎம் நம்பனே. 02
      813 சுற்ற லாநற்புலி தோலசைத்தயன் வெண்டலை
      துற்ற லாயதொரு கொள்கையான்சுடு நீற்றினான்
      கற்றல் கேட்டலுடை யார்கள்வாழ்கலி காழியுள்
      மற்ற யங்குதிரள் தோளெம்மைந்தனவன் அல்லனே. 03
      814 பல்ல யங்குதலை யேந்தினான்படு கானிடை
      மல்ல யங்குதிரள் தோள்களாரநட மாடியுங்
      கல்ல யங்குதிரை சூழநீள்கலி காழியுள்
      தொல்ல யங்குபுகழ் பேணநின்றசுடர் வண்ணனே. 04
      815 தூந யங்கொள்திரு மேனியிற்பொடி பூசிப்போய்
      நாந யங்கொள்மறை யோதிமாதொரு பாகமா
      கான யங்கொள்புனல் வாசமார்கலி காழியுள்
      தேன யங்கொள்முடி ஆனைந்தாடிய செல்வனே. 05
      816 சுழியி லங்கும்புனற் கங்கையாள்சடை யாகவே
      மொழியி லங்கும்மட மங்கைபாகம் உகந்தவன்
      கழியி லங்குங்கடல் சூழுந்தண்கலி காழியுள்
      பழியி லங்குந்துய ரொன்றிலாப்பர மேட்டியே. 06
      817 முடியி லங்கும்உயர் சிந்தையான்முனி வர்தொழ
      அடியி லங்குங்கழ லார்க்கவேயன லேந்தியுங்
      கடியி லங்கும்பொழில் சூழுந்தண்கலி காழியுள்
      கொடியி லங்கும்மிடை யாளொடுங்குடி கொண்டதே. 07
      818 வல்ல ரக்கன்வரை பேர்க்கவந்தவன் தோள்முடி
      கல்ல ரக்கிவ்விறல் வாட்டினான்கலி காழியுள்
      நல்லொ ருக்கியதோர் சிந்தையார்மலர் தூவவே
      தொல்லி ருக்குமறை யேத்துகந்துடன் வாழுமே. 08
      819 மருவு நான்மறை யோனுமாமணி வண்ணனும்
      இருவர் கூடியிசை தேத்தவேயெரி யான்றனூர்
      வெருவ நின்றதிரை யோதமார்வியன் முத்தவை
      கருவை யார்வயற் சங்குசேர்கலி காழியே. 09
      820 நன்றி யொன்றுமுண ராதவன்சமண் சாக்கியர்
      அன்றி யங்கவர் சொன்னசொல்லவை கொள்கிலான்
      கன்று மேதியிளங் கானல்வாழ்கலி காழியுள்
      வென்றி சேர்வியன் கோயில்கொண்டவிடை யாளனே. 10
      821 கண்ணு மூன்றுமுடை யாதிவாழ்கலி காழியுள்
      அண்ண லந்தண்ணருள் பேணிஞானசம் பந்தன்சொல்
      வண்ண மூன்றுந்தமி ழிற்றெரிந்திசை பாடுவார்
      விண்ணு மண்ணும்விரி கின்றதொல்புக ழாளரே. 11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.76 திருஅகத்தியான்பள்ளி
      பண் - காந்தாரம்
      திருச்சிற்றம்பலம்
      822 வாடிய வெண்டலை மாலைசூடி வயங்கிருள்
      நீடுயர் கொள்ளி விளக்குமாக நிவந்தெரி
      ஆடிய எம்பெரு மான்அகத்தியான் பள்ளியை
      பாடிய சிந்தையி னார்கட்கில்லையாம் பாவமே. 01
      823 துன்னங் கொண்டவுடை யான்துதைந்தவெண் ணீற்றினான்
      மன்னுங் கொன்றைமத மத்தஞ்சூடினான் மாநகர்
      அன்ன தங்கும்பொழில் சூழ்அகத்தியான் பள்ளியை
      உன்னஞ் செய்தமன தார்கள்தம்வினை யோடுமே. 02
      824 உடுத்ததுவும் புலித்தோல் பலிதிரி துண்பதுங்
      கடுத்துவந்த கழற்காலன் தன்னையுங் காலினால்
      அடுத்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்
      தொடுத்தது வுஞ்சரம் முப்புர துகளாகவே. 03
      825 காய்ந்ததுவு மன்றுகாமனை நெற்றி கண்ணினால்
      பாய்ந்ததுவுங் கழற்காலனை பண்ணி னான்மறை
      ஆய்ந்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்
      ஏய்ந்ததுவு மிமவான் மகளொரு பாகமே. 04
      826 போர்த்ததுவுங் கரியின் னுரிபுலி தோலுடை
      கூர்த்ததோர் வெண்மழு வேந்திக்கோளர வம்மரை
      கார்த்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்
      பார்த்ததுவும் மரணம் படரெரி மூழ்கவே. 05
      827 தெரிந்ததுவுங் கணையொன்று முப்புரஞ் சென்றுடன்
      எரிந்ததுவும் முன்னெழிலார் மலருறை வான்றலை
      அரிந்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்
      புரிந்ததுவும் முமையாளொர் பாகம் புனைதலே. 06
      828 ஓதியெல்லாம் உலகுக்கோர் ஒண்பொரு ளாகிமெ
      சோதியென்று தொழுவார் அவர்துயர் தீர்த்திடும்
      ஆதியெங்கள் பெருமான் அகத்தியான் பள்ளியை
      நீதியால் தொழுவார் அவர்வினை நீங்குமே. 07
      829 செறுத்ததுவு தக்கன் வேள்வியைத்திரு தார்புரம்
      ஒறுத்ததுவும் ஒளிமா மலருறை வான்சிரம்
      அறுத்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்
      இறுத்ததுவும் அரக்கன்றன் தோள்கள் இருபதே. 08
      830 சிரமுநல்ல மதிமத்த முந்திகழ் கொன்றையும்
      அரவுமல்குஞ் சடையான் அகத்தியான் பள்ளியை
      பிரமனோடு திருமாலு தேடிய பெற்றிமை
      பரவவல்லார் அவர்தங்கள் மேல்வினை பாறுமே. 09
      831 செந்துவ ராடையி னாரும்வெற்றரை யேதிரி
      புந்தியி லார்களும் பேசும்பேச்சவை பொய்ம்மொழி
      அந்தணன் எங்கள்பி ரான்அகத்தியான் பள்ளியை
      சிந்திமின் நும்வினை யானவைசிதை தோடுமே. 10
      832 ஞால மல்குந்தமிழ் ஞானசம்பந்தன் மாமயில்
      ஆலுஞ் சோலைபுடை சூழ்அகத்தியான் பள்ளியுள்
      சூல நல்லபடை யான்அடிதொழு தேத்திய
      மாலை வல்லாரவர் தங்கள்மேல்வினை மாயுமே. 11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - அகத்தீசுவரர்
      தேவியார் - மங்கைநாயகியம்மை.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.77 திருஅறையணிநல்லூர்
      பண் - காந்தாரம்
      திருச்சிற்றம்பலம்
      833 பீடினாற்பெரி யோர்களும் பேதைமைகெட தீதிலா
      வீடினாலுயர தார்களும் வீடிலாரிள வெண்மதி
      சூடினார்மறை பாடினார் சுடலைநீறணி தாரழல்
      ஆடினாரறை யணிநல்லூர் அங்கையால்தொழு வார்களே. 01
      834 இலையினார்சூலம் ஏறுக தேறியேயிமை யோர்தொழ
      நிலையினாலொரு காலுற சிலையினால்மதி லெய்தவன்
      அலையினார்புனல் சூடிய அண்ணலாரறை யணிநல்லூர்
      தலையினாற்றொழு தோங்குவார் நீங்குவார்தடு மாற்றமே. 02
      835 என்பினார்கனல் சூலத்தார் இலங்குமாமதி யுச்சியான்
      பின்பினார்பிறங் குஞ்சடை பிஞ்ஞகன்பிற பிலியென்று
      முன்பினார்மூவர் தாந்தொழு முக்கண்மூர்த்திதன் தாள்களு
      கன்பினாரறை யணிநல்லூர் அங்கையால்தொழு வார்களே. 03
      836 விரவுநீறுபொன் மார்பினில் விளங்கப்பூசிய வேதியன்
      உரவுநஞ்சமு தாகவுண் டுறுதிபேணுவ தன்றியும்
      அரவுநீள்சடை கண்ணியார் அண்ணலாரறை யணிநல்லூர்
      பரவுவார்பழி நீங்கிட பறையுந்தாஞ்செய்த பாவமே. 04
      837 தீயினார்திகழ் மேனியாய் தேவர்தாந்தொழும் தேவன்நீ
      ஆயினாய்கொன்றை யாய்அன லங்கையாயறை யணிநல்லூர்
      மேயினார்தம தொல்வினை வீட்டினாய்வெய்ய காலனை
      பாயினாயெதிர் கழலினாய் பரமனேயடி பணிவனே. 05
      838 விரையினார்கொன்றை சூடியும் வேகநாகமும் வீக்கிய
      அரையினாரறை யணிநல்லூர் அண்ணலாரழ காயதோர்
      நரையினார்விடை யூர்தியார் நக்கனார்நறும் போதுசேர்
      உரையினாலுயர தார்களும் தார்களே.
      839 வீரமாகிய வேதியர் வேகமாகளி யானையின்
      ஈரமாகிய வுரிவைபோர தரிவைமேற்சென்ற எம்மிறை
      ஆரமாகிய பாம்பினார் அண்ணலாரறை யணிநல்லூர்
      வாரமாய்நினை பார்கள்தம் வல்வினையவை மாயுமே. 07
      840 தக்கனார்பெரு வேள்வியை தகர்த்துகந்தவன் தாழ்சடை
      முக்கணான்மறை பாடிய முறைமையான்முனி வர்தொழ
      அக்கினோடெழில் ஆமைபூண் அண்ணலாரறை யணிநல்லூர்
      நக்கனாரவர் சார்வலால் நல்குசார்விலோம் நாங்களே. 08
      841 வெய்யநோயிலர் தீதிலர் வெறியராய்ப்பிறர் பின்செலார்
      செய்வதேயலங் காரமாம் இவையிவைதேறி யின்புறில்
      ஐயமேற்றுணு தொழிலராம் அண்ணலாரறை யணிநல்லூர
      சைவனாரவர் சார்வலால் யாதுஞ்சார்விலோம் நாங்களே. 09
      842 வாக்கியஞ்சொல்லி யாரொடும் வகையலாவகை செய்யன்மின்
      சாக்கியஞ்சம ணென்றிவை சாரேலும்மர ணம்பொடி
      ஆக்கியம்மழு வாட்படை அண்ணலாரறை யணிநல்லூர
      பாக்கியங்குறை யுடையீரேற் பறையுமாஞ்செய்த பாவமே. 10
      843 கழியுலாங்கடற் கானல்சூழ் கழுமலம்அமர் தொல்பதி
      பழியிலாமறை ஞானசம் பந்தன்நல்லதோர் பண்பினார்
      மொழியினாலறை யணிநல்லூர் முக்கண்மூர்த்திதன் தாள்தொழ
      கெழுவினாரவர் தம்மொடுங் கேடில்வாழ்பதி பெறுவரே. 11
      இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - அறையணிநாதேசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.78 திருவிளநகர்
      பண் - காந்தாரம்
      திருச்சிற்றம்பலம்
      844 ஒளிரிளம்பிறை சென்னிமேல் உடையர் கோவணஆடையர்
      குளிரிளம்மழை தவழ்பொழிற் கோலநீர்மல்கு காவிரி
      நளிரிளம்புனல் வார்துறை நங்கைகங்கையை நண்ணினார்
      மிளிரிளம்பொறி அரவினார் மேயதுவிள நகரதே. 01
      845 அக்கரவ்வணி கலனென அதனொடார்த்ததோர் ஆமைபூண்
      டுக்கவர்சுடு நீறணி தொளிமல்குபுனற் காவிரி
      புக்கவர்துயர் கெடுகென பூசுவெண்பொடி மேவிய
      மிக்கவர்வழி பாடுசெய் விளநகரவர் மேயதே. 02
      846 வாளிசேரடங் கார்மதில் தொலையநூறிய வம்பின்வே
      தோளிபாகம் அமர்ந்தவர் உயர்ந்ததொல்கடல் நஞ்சுண்ட
      காளமல்கிய கண்டத்தர் கதிர்விரிசுடர் முடியினர்
      மீளியேறுக தேறினார் மேயதுவிள நகரதே. 03
      847 கால்விளங்கெரி கழலினார் கையிளங்கிய வேலினார்
      நூல்விளங்கிய மார்பினார் நோயிலார்பிற பும்மிலார்
      மால்விளங்கொளி மல்கிய மாசிலாமணி மிடறினார்
      மேல்விளங்குவெண் பிறையினார் மேயதுவிள நகரதே. 04
      848 பன்னினார்மறை பாடினார் பாயசீர்ப்பழங் காவிரி
      துன்னுதண்டுறை முன்னினார் தூநெறிபெறு வாரென
      சென்னிதிங்களை பொங்கரா கங்கையோடுடன் சேர்த்தினார்
      மின்னுபொன்புரி நூலினார் மேயதுவிள நகரதே. 05
      849 தேவரும்மம ரர்களு திசைகள்மேலுள தெய்வமும்
      யாவரும்மறி யாததோர் அமைதியாற்றழ லுருவினார்
      மூவரும்மிவ ரென்னவும் முதல்வரும்மிவ
      மேவரும்பொரு ளாயினார் மேயதுவிள நகரதே. 06
      850 சொற்றரும்மறை பாடினார் சுடர்விடுஞ் சடைமுடியினார்
      கற்றருவ்வடங் கையினார் காவிரித்துறை காட்டினார்
      மற்றருந்திரள் தோளினார் மாசில்வெண்பொடி பூசினார்
      விற்றரும்மணி மிடறினார் மேயதுவிள நகரதே. 07
      851 படர்தருஞ்சடை முடியினார் பைங்கழல்லடி பரவுவார்
      அடர்தரும்பிணி கெடுகென அருளுவாரர வரையினார்
      விடர்தரும்மணி மிடறினார் மின்னுபொன்புரி நூலினார்
      மிடறரும்படை மழுவினார் மேயதுவிள நகரதே. 08
      852 கையிலங்கிய வேலினார் தோலினார்கரி காலினார்
      பையிலங்கர வல்குலாள் பாகமாகிய பரமனார்
      மையிலங்கொளி மல்கிய மாசிலாமணி மிடறினார்
      மெய்யிலங்குவெண் ணீற்றினார் மேயதுவிள நகரதே. 09
      853 உள்ளதன்றனை காண்பன்கீ ழென்றமாமணி வண்ணனும்
      உள்ளதன்றனை காண்பன்மே லென்றமாமலர் அண்ணலும்
      உள்ளதன்றனை கண்டிலார் ஒளியார்தருஞ்சடை முடியின்மேல்
      உள்ளதன்றனை கண்டிலா வொளியார்விளநகர் மேயதே. 10
      854 மென்சிறைவண் டியாழ்முரல் விளநகர்த்துறை மேவிய
      நன்பிறைநுதல் அண்ணலை சண்பைஞானசம் பந்தன்சீர்
      இன்புறுந்தமி ழாற்சொன்ன ஏத்துவார்வினை நீங்கிப்போ
      துன்புறு துயரம்மிலா தூநெறிபெறு வார்களே. 11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - துறைகாட்டும்வள்ளநாதர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.79 திருவாரூர்
      பண் - காந்தாரம்
      திருச்சிற்றம்பலம்
      855 கவனமா சோடையாய் நாவெழா
      பஞ்சுதோ சட்ட வுண்டு
      சிவனதா சிந்தியா பேதைமார்
      போலநீ வெள்கி னாயே
      கவனமா பாய்வதோர் ஏறுக
      தேறிய காள கண்டன்
      அவனதா ரூர்தொழு துய்யலாம்
      மையல்கொண் டஞ்சல் நெஞ்சே. 01
      856 தந்தையார் போயினார் தாயரும்
      போயினார் தாமும் போவார்
      கொந்தவேல் கொண்டொரு கூற்றத்தார்
      பார்க்கின்றார் கொண்டு போவார்
      எந்தநாள் வாழ்வதற் கேமனம்
      வைத்தியால் ஏழை நெஞ்சே
      அந்தணா ரூர்தொழு துய்யலா
      மையல்கொண் டஞ்சல் நெஞ்சே. 02
      857 நிணங்குடர் தோல்நரம் பென்புசேர்
      ஆக்கைதான் நிலாய தன்றால்
      குணங்களார கல்லது குற்றம்நீங்
      காதென குலுங்கி னாயே
      வணங்குவார் வானவர் தானவர்
      வைகலும் மனங்கொ டேத்தும்
      அணங்கனா ரூர்தொழு துய்யலாம்
      மையல்கொண் டஞ்சல் நெஞ்சே. 03
      858 நீதியால் வாழ்கிலை நாள்செலா
      நின்றன நித்த நோய்கள்
      வாதியா ஆதலால் நாளும்நாள்
      இன்பமே மருவி னாயே
      சாதியார் கின்னரர் தருமனும்
      வருணனும் ஏத்து முக்கண்
      ஆதியா ரூர்தொழு துய்யலாம்
      மையல்கொண் டஞ்சல் நெஞ்சே. 04
      859 பிறவியால் வருவன கேடுள
      ஆதலாற் பெரிய இன்ப
      துறவியார கல்லது துன்பம்நீங்
      காதென தூங்கி னாயே
      மறவல்நீ மார்க்கமே நண்ணினாய்
      தீர்த்தநீர் மல்கு சென்னி
      அறவனா ரூர்தொழு துய்யலாம்
      மையல்கொண் டஞ்சல் நெஞ்சே. 05
      860 செடிகொள்நோ யாக்கையம் பாம்பின்வா
      தேரையா சிறு பறவை
      கடிகொள்பூ தேன்சுவை தின்புற
      லாமென்று கருதி னாயே
      முடிகளால் வானவர் முன்பணி
      தன்பரா யேத்து முக்கண்
      அடிகளா ரூர்தொழு துய்யலாம்
      மையல்கொண் டஞ்சல் நெஞ்சே. 06
      861 ஏறுமால் யானையே சிவிகை
      தளகமீ சேர்ப்பி வட்டில்
      மாறிவா ழுடம்பினார் படுவதோர்
      நடலைக்கு மயங்கி னாயே
      மாறிலா வனமுலை மங்கையோர்
      பங்கினர் மதியம் வைத்த
      ஆறனா ரூர்தொழு துய்யலாம்
      மையல்கொண் டஞ்சல் நெஞ்சே. 07
      862 என்பினாற் கழிநிரை திறைச்சிமண்
      சுவரெறி திதுநம் இல்லம்
      புன்புலால் நாறுதோல் போர்த்துப்பொல்
      லாமையான் முகடு கொண்டு
      முன்பெலாம் ஒன்பது வாய்தலார்
      குரம்பையின் மூழ்கி டாதே
      அன்பனா ரூர்தொழு துய்யலாம்
      மையல்கொண் டஞ்சல் நெஞ்சே. 08
      863 தந்தைதாய் தன்னுடன் தோன்றினார்
      புத்திரர் தார மென்னும்
      பந்தம்நீங் காதவர குய்ந்துபோ
      கில்லென பற்றி னாயே
      வெந்தநீ றாடியார் ஆதியார்
      சோதியார் வேத கீதர்
      எந்தையா ரூர்தொழு துய்யலாம்
      மையல்கொண் டஞ்சல் நெஞ்சே. 09
      864 நெடியமால் பிரமனும் நீண்டுமண்
      ணிடந்தின்னம் நேடி காணா
      படியனார் பவளம்போல் உருவனார்
      பனிவளர் மலையாள் பாக
      வடிவனார் மதிபொதி சடையனார்
      மணியணி கண்ட தெண்டோ ள்
      அடிகளா ரூர்தொழு துய்யலாம்
      மையல்கொண் டஞ்சல் நெஞ்சே. 10
      865 பல்லிதழ் மாதவி அல்லிவண்
      டியாழ்செயுங் காழி யூரன்
      நல்லவே
      ஞானசம் பந்தன் ஆரூர்
      எல்லியம் போதெரி யாடுமெம்
      மீசனை யேத்து பாடல்
      சொல்லவே வல்லவர் தீதிலார்
      ஓதநீர் வைய கத்தே. 11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.80 திருக்கடவூர்மயானம்
      பண் - காந்தாரம்
      திருச்சிற்றம்பலம்
      866 வரிய மறையார் பிறையார் மலையோர் சிலையா வணக்கி
      எரிய மதில்கள் எய்தார் எறியு முசலம் உடையார்
      கரிய மிடறும் உடையார் கடவூர் மயானம் அமர்ந்தார்
      பெரிய விடைமேல் வருவா ரவரெம் பெருமான் அடிகளே. 01
      867 மங்கை மணந்த மார்பர் மழுவாள் வலனொன் றேந்தி
      கங்கை சடையிற் கரந்தார் கடவூர் மயானம் அமர்ந்தார்
      செங்கண் வெள்ளே றேறி செல்வஞ் செய்யா வருவார்
      அங்கை யேறிய மறியார் அவரெம் பெருமான் அடிகளே. 02
      868 ஈட லிடபம் இசைய ஏறி மழுவொன் றேந்தி
      காட திடமா வுடையார் கடவூர் மயானம் அமர்ந்தார்
      பாட லிசைகொள் கருவி படுதம் பலவும் பயில்வார்
      ஆட லரவம் உடையார் அவரெம் பெருமான் அடிகளே. 03
      869 இறைநின் றிலங்கு வளையாள் இளையா ளொருபா லுடையார்
      மறைநின் றிலங்கு மொழியார் மலையார் மனத்தின் மிசையார்
      கறைநின் றிலங்கு பொழில்சூழ் கடவூர் மயானம் அமர்ந்தார்
      பிறைநின் றிலங்கு சடையார் அவரெம் பெருமான் அடிகளே. 04
      870 வெள்ளை யெருத்தின் மிசையார் விரிதோ டொருகா திலங்க
      துள்ளு மிளமான் மறியார் சுடர்பொற் சடைகள் துளங
      கள்ள நகுவெண் டலையார் கடவூர் மயானம் அமர்ந்தார்
      பிள்ளை மதியம் உடையார் அவரெம் பெருமான் அடிகளே. 05
      871 பொன்றா துதிரு மணங்கொள் புனைபூங் கொன்றை புனைந்தார்
      ஒன்றா வெள்ளே றுயர்த்த துடையா ரதுவே யூர்வார்
      கன்றா வினஞ்சூழ் புறவிற் கடவூர் மயானம் அமர்ந்தார்
      பின்றாழ் சடையார் ஒருவர் அவரெம் பெருமான் அடிகளே. 06
      872 பாச மான களைவார் பரிவார கமுதம் அனையார்
      ஆசை தீர கொடுப்பார் அலங்கல் விடைமேல் வருவார்
      காசை மலர்போல் மிடற்றார் கடவூர் மயானம் அமர்ந்தார்
      பேச வருவார் ஒருவர் அவரெம் பெருமான் அடிகளே. 07
      873 செற்ற அரக்கன் அலற திகழ்சே வடிமெல் விரலாற்
      கற்குன் றடர்த்த பெருமான் கடவூர் மயானம் அமர்ந்தார்
      மற்றொன் றிணையில் வலிய மாசில் வெள்ளி மலைபோல்
      பெற்றொன் றேறி வருவார் அவரெம் பெருமான் அடிகளே. 08
      874 வருமா கரியின் உரியார் வளர்புன் சடையார் விடையார்
      கருமான் உரிதோல் உடையார் கடவூர் மயானம் அமர்ந்தார்
      திருமா லொடுநான் முகனு தேர்ந்துங் காணமுன் ஒண்ணா
      பெருமா னெனவும் வருவார் அவரெம் பெருமான் அடிகளே. 09
      875 தூய விடைமேல் வருவார் துன்னா ருடைய மதில்கள்
      காய வேவ செற்றார் கடவூர் மயானம் அமர்ந்தார்
      தீய கருமஞ் சொல்லுஞ் சிறுபுன் தேரர் அமணர்
      பேய்பே யென்ன வருவார் அவரெம் பெருமான் அடிகளே. 10
      876 மரவம் பொழில்சூழ் கடவூர் மன்னு மயானம் அமர்ந்த
      அரவ மசைத்த பெருமான் அகலம் அறிய லாக
      பரவு முறையே பயிலும் பந்தன் செஞ்சொல் மாலை
      இரவும் பகலும் பரவி நினைவார் வினைகள் இலரே. 11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - பிரமபுரீசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.81 திருவேணுபுரம்
      பண் - காந்தாரம்
      திருச்சிற்றம்பலம்
      877 பூதத்தின் படையினீர் பூங்கொன்றை தாரினீர்
      ஓதத்தின் ஒலியோடும் உம்பர்வா னவர்புகுந்து
      வேதத்தின் இசைபாடி விரைமலர்கள் சொரிந்தேத்தும்
      பாதத்தீர் வேணுபுரம் பதியா கொண்டீரே. 01
      878 சுடுகாடு மேவினீர் துன்னம்பெய் கோவணந்தோல்
      உடையாடை யதுகொண்டீர் உமையாளை யொருபாகம்
      அடையாளம் அதுகொண்டீர் அங்கையினிற் பரசுவெனும்
      படையாள்வீர் வேணுபுரம் பதியா கொண்டீரே. 02
      879 கங்கைசேர் சடைமுடியீர் காலனைமுன் செற்றுகந்தீர்
      திங்களோ டிளஅரவ திகழ்சென்னி வைத்துகந்தீர்
      மங்கையோர் கூறுடையீர் மறையோர்கள் நிறைந்தேத்த
      பங்கயஞ்சேர் வேணுபுரம் பதியா கொண்டீரே. 03
      880 நீர்கொண்ட சடைமுடிமேல் நீள்மதியம் பாம்பினொடும்
      ஏர்கொண்ட கொன்றையினோ டெழில்மத்தம் இலங்கவே
      சீர்கொண்ட மாளிகைமேற் சேயிழையார் வாழ்த்துரைப்ப
      கார்கொண்ட வேணுபுரம் பதியா கலந்தீரே. 04
      881 ஆலைசேர் தண்கழனி அழகாக நறவுண்டு
      சோலைசேர் வண்டினங்கள் இசைபாட தூமொழியார்
      காலையே புகுந்திறைஞ்சி கைதொழமெய் மாதினொடும்
      பாலையாழ் வேணுபுரம் பதியா கொண்டீரே. 05
      882 மணிமல்கு மால்வரைமேல் மாதினொடு மகிழ்ந்திருந்தீர்
      துணிமல்கு கோவணத்தீர் சுடுகாட்டில் ஆட்டுகந்தீர்
      பணிமல்கு மறையோர்கள் பரிந்திறைஞ்ச வேணுபுர
      தணிமல்கு கோயிலே கோயிலாக அமர்ந்தீரே. 06
      883 நீலஞ்சேர் மிடற்றினீர் நீண்டசெஞ் சடையினீர்
      கோலஞ்சேர் விடையினீர் கொடுங்காலன் தனைச்செற்றீர்
      ஆலஞ்சேர் கழனியழ கார்வேணு புரம்அமருங்
      கோலஞ்சேர் கோயிலே கோயிலா கொண்டீரே. 07
      884 இரைமண்டி சங்கேறுங் கடல்சூழ்தென் னிலங்கையர்கோன்
      விரைமண்டு முடிநெரிய விரல்வைத்தீர் வரைதன்னிற்
      கரைகண்டி பேரோதங் கலந்தெற்றுங் கடற்கவினார்
      விரைமண்டு வேணுபுர மேயமர்ந்து மிக்கீரே. 08
      885 தீயோம்பு மறைவாணர காதியா திசைமுகன்மால்
      போயோங்கி யிழிந்தாரும் போற்றரிய திருவடியீர்
      பாயோங்கு மரக்கலங்கள் படுதிரையால் மொத்துண்டு
      சேயோங்கு வேணுபுரஞ் செழும்பதியா திகழ்ந்தீரே. 09
      886 நிலையார்ந்த வுண்டியினர் நெடுங்குண்டர் சாக்கியர்கள்
      புலையானார் அறவுரையை போற்றாதுன் பொன்னடியே
      நிலையாக பேணிநீ சரணென்றார் தமையென்றும்
      விலையாக ஆட்கொண்டு வேணுபுரம் விரும்பினையே. 10
      இப்பதிகத்தில் 11-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.82 திருத்தேவூர்
      பண் - காந்தாரம்
      திருச்சிற்றம்பலம்
      887 பண்ணி லாவிய மொழியுமை பங்கனெம் பெருமான்
      விண்ணில் வானவர் கோன்விம லன்விடை யூர்தி
      தெண்ணி லாமதி தவழ்தரு மாளிகை தேவூர்
      அண்ணல் சேவடி அடைந்தனம் அல்லலொன் றிலமே. 01
      888 ஓதி மண்டல தோர்முழு துய்யவெற் பேறு
      சோதி வானவன் துதிசெய மகிழ்ந்தவன் தூநீர
      தீதில் பங்க தெரிவையர் முகமலர் தேவூர்
      ஆதி சேவடி யடைந்தனம் அல்லலொன் றிலமே. 02
      889 மறைக ளான்மிக வழிபடு மாணியை கொல்வான்
      கறுவு கொண்டவ காலனை காய்ந்தவெங் கடவுள்
      செறுவில் வாளைகள் சேலவை பொருவயல் தேவூர்
      அறவன் சேவடி யடைந்தனம் அல்லலொன் றிலமே. 03
      890 முத்தன் சில்பலி கூர்தொறும் முறைமுறை திரியும்
      பித்தன் செஞ்சடை பிஞ்ஞகன் தன்னடி யார்கள்
      சித்தன் மாளிகை செழுமதி தவழ்பொழில் தேவூர்
      அத்தன் சேவடி யடைந்தனம் அல்லலொன் றிலமே. 04
      891 பாடு வாரிசை பல்பொரு பயனுக தன்பால்
      கூடு வார்துணை கொண்டதம் பற்றற பற்றி
      தேடு வார்பொரு ளானவன் செறிபொழில் தேவூர்
      ஆடு வானடி யடைந்தனம் அல்லலொன் றிலமே. 05
      892 பொங்கு பூண்முலை புரிகுழல் வரிவளை பொருப்பின்
      மங்கை பங்கினன் கங்கையை வளர்சடை வைத்தான்
      திங்கள் சூடிய தீநிற கடவுள்தென் தேவூர்
      அங்க ணன்றனை அடைந்தனம் அல்லலொன் றிலமே. 06
      893 வன்பு யத்தவ தானவர் புரங்களை யெரி
      தன்பு யத்துற தடவரை வளைத்தவன் தக்க
      தென்ற மிழ்க்கலை தெரிந்தவர் பொருந்திய தேவூர்
      அன்பன் சேவடி யடைந்தனம் அல்லலொன் றிலமே. 07
      894 தருவு யர்ந்தவெற் பெடுத்தவ தசமுகன் நெரிந்து
      வெருவ வூன்றிய திருவிரல் நெகிழ்த்துவாள் பணித்தான்
      தெருவு தோறும்நல் தென்றல்வ துலவிய தேவூர்
      அரவு சூடியை அடைந்தனம் அல்லலொன் றிலமே. 08
      895 முந்தி கண்ணனும் நான்முக னும்மவர் காணா
      எந்தை திண்டிறல் இருங்களி றுரித்தவெம் பெருமான்
      செந்தி னத்திசை யறுபத முரல்திரு தேவூர்
      அந்தி வண்ணனை யடைந்தனம் அல்லலொன் றிலமே. 09
      896 பாறு புத்தரு தவமணி சமணரும் பலநாள்
      கூறி வைத்ததோர் குறியினை பிழையென கொண்டு
      தேறி மிக்கநஞ் செஞ்சடை கடவுள்தென் தேவூர்
      ஆறு சூடியை யடைந்தனம் அல்லலொன் றிலமே. 10
      897 அல்ல லின்றிவிண் ணாள்வர்கள் காழியர கதிபன்
      நல்ல செந்தமிழ் வல்லவன் ஞானசம் பந்தன்
      எல்லை யில்புகழ் மல்கிய எழில்வளர் தேவூர
      தொல்லை நம்பனை சொல்லிய பத்தும் வல்லாரே. 11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - தேவகுருநாதர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.83 திருக்கொச்சைவயம்
      பண் - பியந்தைக்காந்தாரம்
      திருச்சிற்றம்பலம்
      898 நீலநன் மாமிடற்றன் இறைவன் சினத்த
      நெடுமா வுரித்த நிகரில்
      சேலன கண்ணிவண்ணம் ஒருகூ றுருக்கொள்
      திகழ்தேவன் மேவு பதிதான்
      வேலன கண்ணிமார்கள் விளையாடு மோசை
      விழவோசை வேத வொலியின்
      சாலநல் வேலையோசை தருமாட வீதி
      கொடியாடு கொச்சை வயமே. 01
      899 விடையுடை யப்பனொப்பில் நடமாட வல்ல
      விகிர துருக்கொள் விமலன்
      சடையிடை வெள்ளெருக்க மலர்கங்கை திங்கள்
      தகவைத்த சோதிபதி தான்
      மடையிடை யன்னமெங்கும் நிறை பரந்து
      கமலத்து வைகும் வயல்சூழ்
      கொடையுடை வண்கையாளர் மறையோர்க ளென்றும்
      வளர்கின்ற கொச்சை வயமே. 02
      900 படவர வாடுமுன்கை யுடையா னிடும்பை
      களைவிக்கும் எங்கள் பரமன்
      இடமுடை வெண்டலைக்கை பலிகொள்ளு மின்பன்
      இடமாய வேர்கொள் பதிதான்
      நடமிட மஞ்ஞைவண்டு மதுவுண்டு பாடும்
      நளிர்சோலை கோலு கன
      குடமிடு கூடமேறி வளர்பூவை நல்ல
      மறையோது கொச்சை வயமே. 03
      901 எண்டிசை பாலரெங்கும் இகலி புகுந்து
      முயல்வுற்ற சிந்தை முடுகி
      பண்டொளி தீபமாலை யிடுதூப மோடு
      பணிவுற்ற பாதர் பதிதான்
      மண்டிய வண்டன்மிண்டி வரும்நீர பொன்னி
      வயல்பாய வாளை குழுமி
      குண்டகழ் பாயுமோசை படைநீட தென்ன
      வளர்கின்ற கொச்சை வயமே. 04
      902 பனிவளர் மாமலைக்கு மருகன் குபேர
      னொடுதோழ மைக்கொள் பகவன்
      இனியன அல்லவற்றை யினிதாக நல்கும்
      இறைவன் இடங்கொள் பதிதான்
      முனிவர்கள் தொக்குமிக்க மறையோர்க ளோமம்
      வளர்தூம மோடி யணவி
      குனிமதி மூடிநீடும் உயர்வான் மறைத்து
      நிறைகின்ற கொச்சை வயமே. 05
      903 புலியதள் கோவணங்கள் உடையாடை யாக
      வுடையான் நினைக்கு மளவில்
      நலிதரு முப்புரங்கள் எரிசெய்த நாதன்
      நலமா இருந்த நகர்தான்
      கலிகெட அந்தணாளர் கலைமேவு சிந்தை
      யுடையார் நிறைந்து வளர
      பொலிதரு மண்டபங்கள் உயர்மாட நீடு
      வரைமேவு கொச்சை வயமே. 06
      இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 07
      904 மழைமுகில் போலுமேனி யடல்வா ளரக்கன்
      முடியோடு தோள்கள் நெரி
      பிழைகெட மாமலர்ப்பொன் அடிவைத்த பேயொ
      டுடனாடி மேய பதிதான்
      இழைவள ரல்குல்மாதர் இசைபாடி யாட
      விடுமூச லன்ன கமுகின்
      குழைதரு கண்ணிவிண்ணில் வருவார்கள் தங்கள்
      அடிதேடு கொச்சை வயமே. 08
      905 வண்டமர் பங்கயத்து வளர்வானும் வையம்
      முழுதுண்ட மாலும் இகலி
      கண்டிட வொண்ணுமென்று கிளறி பறந்தும்
      அறியாத சோதி பதிதான்
      நண்டுண நாரைசெந்நெல் நடுவே யிருந்து
      விரைதேர போது மடுவிற்
      புண்டரி கங்களோடு குமுதம் மலர்ந்து
      வயல்மேவு கொச்சை வயமே. 09
      906 கையினி லுண்டுமேனி யுதிர்மாசர் குண்டர்
      இடுசீவ ரத்தி னுடையார்
      மெய்யுரை யாதவண்ணம் விளையாட வல்ல
      விகிர துருக்கொள் விமலன்
      பையுடை நாகவாயில் எயிறார மிக்க
      குரவம் பயின்று மலர
      செய்யினில் நீலமொட்டு விரி கமழ்ந்து
      மணநாறு கொச்சை வயமே. 10
      907 இறைவனை ஒப்பிலாத ஒளிமேனி யானை
      உலகங்க ளேழு முடனே
      மறைதரு வெள்ளமேறி வளர்கோயில் மன்னி
      இனிதா இருந்த மணியை
      குறைவில ஞானமேவு குளிர்பந்தன் வைத்த
      தமிழ்மாலை பாடு மவர்போய்
      அறைகழ லீசனாளும் நகர்மேவி யென்றும்
      அழகா இருப்ப தறிவே. 11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.84 திருநனிபள்ளி
      பண் - பியந்தைக்காந்தாரம்
      திருச்சிற்றம்பலம்
      908 காரைகள் கூகைமுல்லை களவாகை ஈகை
      படர்தொடரி கள்ளி கவினி
      சூரைகள் பம்மிவிம்மு சுடுகா டமர்ந்த
      சிவன்மேய சோலை நகர்தான்
      தேரைக ளாரைசாய மிதிகொள்ள வாளை
      குதிகொள்ள வள்ளை துவள
      நாரைக ளாரல்வார வயன்மேதி வைகும்
      நனிபள்ளி போலு நமர்காள். 01
      909 சடையிடை புக்கொடுங்கி உளதங்கு வெள்ளம்
      வளர்திங்கள் கண்ணி அயலே
      இடையிடை வைத்ததொக்கும் மலர்தொத்து மாலை
      யிறைவன்னி டங்கொள் பதிதான்
      மடையிடை வாளைபாய முகிழ்வாய் நெரிந்து
      மணநாறும் நீல மலரும்
      நடையுடை அன்னம்வைகு புனலம் படப்பை
      நனிபள்ளி போலு நமர்காள். 02
      910 பெறுமலர் கொண்டுதொண்டர் வழிபாடு செய்யல்
      ஒழிபாடி லாத பெருமான்
      கறுமலர் கண்டமாக விடமுண்ட காளை
      யிடமாய காதல் நகர்தான்
      வெறுமலர் தொட்டுவிட்ட விசைபோன கொம்பின்
      விடுபோ தலர்ந்த விரைசூழ்
      நறுமலர் அல்லிபல்லி ஒலிவண் டுறங்கும்
      நனிபள்ளி போலு நமர்காள். 03
      911 குளிர்தரு கங்கைதங்கு சடைமா டிலங்கு
      தலைமாலை யோடு குலவி
      ஒளிர்தரு திங்கள்சூடி உமைபாக மாக
      வுடையா னுகந்த நகர்தான்
      குளிர்தரு கொம்மலோடு குயில்பாடல் கேட்ட
      பெடைவண்டு தானும் முரல
      நளிர்தரு சோலைமாலை நரைகுருகு வைகும்
      நனிபள்ளி போலு நமர்காள். 04
      912 தோடொரு காதனாகி யொருகா திலங்கு
      சுரிசங்கு நின்று புரள
      காடிட மாகநின்று கனலாடு மெந்தை
      யிடமாய காதல் நகர்தான்
      வீடுடன் எய்துவார்கள் விதியென்று சென்று
      வெறிநீர் தெளிப்ப விரலால்
      நாடுட னாடுசெம்மை ஒளிவெள்ள மாரும்
      நனிபள்ளி போலு நமர்காள். 05
      913 மேகமொ டோ டுதிங்கள் மலரா அணிந்து
      மலையான் மடந்தை மணிபொன்
      ஆகமோர் பாகமாக அனலாடு மெந்தை
      பெருமான் அமர்ந்த நகர்தான்
      ஊகமோ டாடுமந்தி உகளுஞ் சிலம்ப
      அகிலுந்தி யொண்பொன் இடறி
      நாகமோ டாரம்வாரு புனல்வ தலைக்கும்
      நனிபள்ளி போலு நகர்காள். 06
      914 தகைமலி தண்டுசூலம் அனலுமிழு நாகங்
      கொடுகொட்டி வீணை முரல
      வகைமலி வன்னிகொன்றை மதமத்தம் வைத்த
      பெருமான் உகந்த நகர்தான்
      புகைமலி கந்தமாலை புனைவார்கள் பூசல்
      பணிவார்கள் பாடல் பெருகி
      நகைமலி முத்திலங்கு மணல்சூழ் கிடக்கை
      நனிபள்ளி போலு நமர்காள். 07
      பாலை நெய்தல் பாடியது - இந்த நான்காவது
      சரணத்தால் விளங்குகின்றது. எவ்வாறெனில்
      முத்துகள் விளங்கு மணல் சூழ்ந்த நிலமென்றதனா
      லென்க. பாலை நெய்தல் பாடியதும் -பாம்பழி
      பாடியதும் என்னு திருவெண்பாவானுமுணர்க.
      915 வலமிகு வாளன்வேலன் வளைவா ளெயிற்று
      மதியா அரக்கன் வலியோ
      டுலமிகு தோள்கள்ஒல்க விரலா லடர்த்த
      பெருமான் உகந்த நகர்தான்
      நிலமிகு கீழுமேலும் நிகராது மில்லை
      எனநின்ற நீதி யதனை
      நலம்மிகு தொண்டர்நாளும் அடிபரவல் செய்யும்
      நனிபள்ளி போலு நமர்காள். 08
      916 நிறவுரு வொன்றுதோன்றி யெரியொன்றி நின்ற
      தொருநீர்மை சீர்மை நினையார்
      அறவுரு வேதநாவன் அயனோடு மாலும்
      அறியாத அண்ணல் நகர்தான்
      புறவிரி முல்லைமௌவல் குளிர்பிண்டி புன்னை
      புனைகொன்றை துன்று பொதுளி
      நறவிரி போதுதாது புதுவாச நாறும்
      நனிபள்ளி போலு நமர்காள். 09
      917 அனமிகு செல்குசோறு கொணர்கென்று கையில்
      இடவுண்டு பட்ட அமணும்
      மனமிகு கஞ்சிமண்டை அதிலுண்டு தொண்டர்
      குணமின்றி நின்ற வடிவும்
      வினைமிகு வேதநான்கும் விரிவித்த நாவின்
      விடையா னுகந்த நகர்தான்
      நனிமிகு தொண்டர்நாளும் அடிபரவல் செய்யும்
      நனிபள்ளி போலு நமர்காள். 10
      918 கடல்வரை யோதமல்கு கழிகானல் பானல்
      கமழ்காழி என்று கருத
      படுபொரு ளாறுநாலும் உளதாக வைத்த
      பதியான ஞான முனிவன்
      இடுபறை யொன்றஅத்தர் பியன்மே லிருந்தி
      னிசையா லுரைத்த பனுவல்
      நடுவிரு ளாடுமெந்தை நனிபள்ளி யுள்க
      வினைகெடுதல் ஆணை நமதே. 11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.85 கோளாறு திருப்பதிகம்
      பண் - பியந்தைக்காந்தாரம்
      திருச்சிற்றம்பலம்
      919 வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
      மிகநல்ல வீணை தடவி
      மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென்
      உளமே புகுந்த அதனால்
      ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி
      சனிபாம்பி ரண்டு முடனே
      ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
      அடியா ரவர்க்கு மிகவே. 01
      920 என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க
      எருதேறி யேழை யுடனே
      பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்
      உளமே புகுந்த அதனால்
      ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும்
      உடனாய நாள்க ளவைதாம்
      அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
      அடியா ரவர்க்கு மிகவே. 02
      இரண்டாவது தேவாரம் மூன்றாவது சரணத்தில் பிரயாண துக்காகாத
      12-நட்சத்திரங்களை குறித்திருக்கின்றது.
      விவரம் நட்சத்திரங்களில் முதலுற்பத்தி கிருத்திகையாம்.
      ஆதலாலதனை முதலாகக்கொண்டு பார்க்கில் 9-வது
      நட்சத்திரம் பூரம். ஒன்றென்றது கிருத்திகை 7- ஆயிலிய
      நட்சத்திரம் 18 பூராடம் ஆறுமுடனாய நாள்கள் என்றது
      மேற்கூறிய நான்கும் அல்லாத 8 நட்சத்திரங்களுமாம்.
      12 நட்சத்திரங்களாவன பூரம் பூராடம் பூரட்டாதி மகம்
      கேட்டை பரணி கிருத்திகை சுவாதி ஆயிலியம் விசாகம்
      ஆதிரை சித்திரை என்பவைகளாகும்.
      921 உருவலர் பவளமேனி ஒளிநீ றணிந்து
      உமையோடும் வெள்ளை விடைமேன்
      முருகலர் கொன்றைதிங்கள் முடிமே லணிந்தென்
      உளமே புகுந்த அதனால்
      திருமகள் கலையதூர்தி செயமாது பூமி
      திசை தெய்வ மானபலவும்
      அருநெதி நல்லநல்ல அவைநல்ல நல்ல
      அடியா ரவர்க்கு மிகவே. 03
      922 மதிநுதல் மங்கையோடு வடபா லிருந்து
      மறையோது மெங்கள் பரமன்
      நதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தென்
      உளமே புகுந்த அதனால்
      கொதியுறு காலனங்கி நமனோடு தூதர்
      கொடுநோய்க ளான பலவும்
      அதிகுண நல்லநல்ல அவைநல்ல நல்ல
      அடியா ரவர்க்கு மிகவே. 04
      923 நஞ்சணி கண்டனெந்தை மடவாள் தனோடும்
      விடையேறும் நங்கள் பரமன்
      துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமே லணிந்தென்
      உளமே புகுந்த அதனால்
      வெஞ்சின அவுணரோடு முருமிடியு மின்னு
      மிகையான பூத மவையும்
      அஞ்சிடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
      அடியா ரவர்க்கு மிகவே. 05
      924 வாள்வரி யதளதாடை வரிகோ வணத்தர்
      மடவாள் தனோடு முடனாய்
      நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென்
      உளமே புகுந்த அதனால்
      கோளரி யுழுவையோடு கொலையானை கேழல்
      கொடுநாக மோடு கரடி
      ஆளரி நல்லநல்ல அவைநல்ல நல்ல
      அடியா ரவர்க்கு மிகவே. 06
      925 செப்பிள முலைநன்மங்கை ஒருபாக மாக
      விடையேறு செல்வ னடைவார்
      ஒப்பிள மதியுமப்பும் முடிமே லணிந்தென்
      உளமே புகுந்த அதனால்
      வெப்பொடு குளிரும்வாதம் மிகையான பித்தும்
      வினையான வந்து நலியா
      அப்படி நல்லநல்ல அவைநல்ல நல்ல
      அடியா ரவர்க்கு மிகவே. 07
      926 வேள்பட விழிசெய்தன்று விடமே லிருந்து
      மடவாள் தனோடும் உடனாய்
      வாண்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென்
      உளமே புகுந்த அதனால்
      ஏழ்கடல் சூழிலங்கை அரையன்ற னோடும்
      இடரான வந்து நலியா
      ஆழ்கடல் நல்லநல்ல அவைநல்ல நல்ல
      அடியா ரவர்க்கு மிகவே. 08
      927 பலபல வேடமாகும் பரனாரி பாகன்
      பசுவேறும் எங்கள் பரமன்
      சலமக ளோடெருக்கு முடிமேல் அணிந்தென்
      உளமே புகுந்த அதனால்
      மலர்மிசை யோனுமாலும் மறையோடு தேவர்
      வருகால மான பலவும்
      அலைகடல் மேருநல்ல அவைநல்ல நல்ல
      அடியா ரவர்க்கு மிகவே. 09
      928 கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு
      குணமாய வேட விகிர்தன்
      மத்தமு மதியுநாகம் முடிமே லணிந்தென்
      உளமே புகுந்த அதனால்
      புத்தரொ டமணைவாதில் அழிவிக்கு மண்ணல்
      திருநீறு செம்மை திடமே
      அத்தகு நல்லநல்ல அவைநல்ல நல்ல
      அடியா ரவர்க்கு மிகவே. 10
      929 தேனமர் பொழில்கொளாலை விளைசெந்நெல் துன்னி
      வளர்செம்பொன் எங்கும் நிகழ
      நான்முகன் ஆதியாய பிரமா புரத்து
      மறைஞான ஞான முனிவன்
      தானுறு கோளும்நாளும் அடியாரை வந்து
      நலியாத வண்ணம் உரைசெய்
      ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில்
      அரசாள்வர் ஆணை நமதே. 11
      இப்பதிகம் பாண்டிநாட்டு கெழுந்தருளியபோது அருளிச்செய்தது.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.86 திருநாரையூர்
      பண் - பியந்தைக்காந்தாரம்
      திருச்சிற்றம்பலம்
      930 உரையினில் வந்தபாவம் உணர்நோய்க ளும்ம
      செயல்தீங்கு குற்ற முலகில்
      வரையினி லாமைசெய்த அவைதீரும் வண்ணம்
      மிகவேத்தி நித்தம் நினைமின்
      வரைசிலை யாகவன்று மதில்மூன் றெரித்து
      வளர்கங்குல் நங்கை வெருவ
      திரையொலி நஞ்சமுண்ட சிவன்மேய செல்வ
      திருநாரை யூர்கை தொழவே. 01
      931 ஊனடை கின்றகுற்ற முதலாகி யுற்ற
      பிணிநோ யொருங்கும் உயரும்
      வானடை கின்றவெள்ளை மதிசூடு சென்னி
      விதியான வேத விகிர்தன்
      கானிடை யாடிபூத படையா னியங்கு
      விடையான் இலங்கு முடிமேல்
      தேனடை வண்டுபாடு சடையண்ணல் நண்ணு
      திருநாரை யூர்கை தொழவே. 02
      932 ஊரிடை நின்றுவாழும் உயிர்செற்ற காலன்
      துயருற்ற தீங்கு விரவி
      பாரிடை மெள்ளவந்து பழியுற்ற வார்த்தை
      ஒழிவுற்ற வண்ண மகலும்
      போரிடை யன்றுமூன்று மதிலெய்த ஞான்று
      புகழ்வானு ளோர்கள் புணரு
      தேரிடை நின்றஎந்தை பெருமா னிருந்த
      திருநாரை யூர்கை தொழவே. 03
      933 தீயுற வாயஆக்கை அதுபற்றி வாழும்
      வினைசெற்ற வுற்ற உலகின்
      தாயுறு தன்மையாய தலைவன்றன் நாமம்
      நிலையாக நின்று மருவும்
      பேயுற வாயகானில் நடமாடி கோல
      விடமுண்ட கண்டன் முடிமேல்
      தேய்பிறை வைத்துகந்த சிவன்மேய செல்வ
      திருநாரை யூர்கை தொழவே. 04
      934 வசையப ராதமாய வுவரோத நீங்கு
      தவமாய தன்மை வரும்வான்
      மிசையவ ராதியாய திருமார் பிலங்கு
      விரிநூலர் விண்ணும் நிலனும்
      இசையவ ராசிசொல்ல இமையோர்க ளேத்தி
      யமையாத காத லொடுசேர்
      திசையவர் போற்றநின்ற சிவன்மேய செல்வ
      திருநாரை யூர்கை தொழவே. 05
      935 உறைவள ரூன்நிலாய வுயிர்நிற்கும் வண்ணம்
      உணர்வாக்கும் உண்மை உலகில்
      குறைவுள வாகிநின்ற குறைதீர்க்கு நெஞ்சில்
      நிறைவாற்று நேசம் வளரும்
      மறைவளர் நாவன்மாவின் உரிபோர்த்த மெய்யன்
      அரவார்த்த அண்ணல் கழலே
      திறைவளர் தேவர்தொண்டின் அருள்பேண நின்ற
      திருநாரை யூர்கை தொழவே. 06
      936 தனம்வரும் நன்மையாகு தகுதி குழந்து
      வருதி குழன்ற உடலின்
      இனம்வள ரைவர்செய்யும் வினையங்கள் செற்று
      நினைவொன்று சிந்தை பெருகும்
      முனமொரு காலம்மூன்று புரம்வெந்து மங்க
      சரமுன் றெரிந்த அவுணர்
      சினமொரு காலழித்த சிவன்மேய செல்வ
      திருநாரை யூர்கை தொழவே. 07
      937 உருவரை கின்றநாளில் உயிர்கொள்ளுங் கூற்றம்
      நனியஞ்சு மாத லுறநீர்
      மருமலர் தூவியென்றும் வழிபாடு செய்ம்மின்
      அழிபா டிலாத கடலின்
      அருவரை சூழிலங்கை அரையன்றன் வீரம்
      அழி தடக்கை முடிகள்
      திருவிரல் வைத்துகந்த சிவன்மேய செல்வ
      திருநாரை யூர்கை தொழவே. 08
      938 வேறுயர் வாழ்வுதன்மை வினைதுக்க மிக்க
      பகைதீர்க்கு மேய வுடலில்
      தேறிய சிந்தைவாய்மை தெளிவிக்க நின்ற
      கரவை கரந்து திகழுஞ்
      சேறுயர் பூவின்மேய பெருமானு மற்றை
      திருமாலும் நேட எரியா
      சீறிய செம்மையாகுஞ் சிவன்மேய செல்வ
      திருநாரை யூர்கை தொழவே. 09
      939 மிடைபடு துன்பமின்பம் உளதாக்கு முள்ளம்
      வெளியாக்கு முன்னி யுணரும்
      படையொரு கையிலேந்தி பலிகொள்ளும் வண்ணம்
      ஒலிபாடி யாடி பெருமை
      உடையினை விட்டுளோரும் உடல்போர துளோரும்
      உரைமாயும் வண்ணம் அழி
      செடிபட வைத்துகந்த சிவன்மேய செல்வ
      திருநாரை யூர்கை தொழவே. 10
      940 எரியொரு வண்ணமாய உருவானை யெந்தை
      பெருமானை உள்கி நினையார்
      திரிபுர மன்றுசெற்ற சிவன்மேய செல்வ
      திருநாரை யூர்கை தொழுவான்
      பொருபுனல் சூழ்ந்தகாழி மறைஞான பந்தன்
      உரைமாலை பத்தும் மொழிவார்
      திருவளர் செம்மையாகி யருள்பேறு மிக்க
      துளதென்பர் செம்மை யினரே. 11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.87 திருநறையூர்
      பண் - பியந்தைக்காந்தாரம்
      திருச்சிற்றம்பலம்
      941 நேரிய னாகுமல்ல னொருபாலு மேனி
      யரியான்மு னாய வொளியான்
      நீரியல் காலுமாகி நிறைவானு மாகி
      யுறுதீயு மாய நிமலன்
      ஊரியல் பிச்சைபேணி யுலகங்க ளேத்த
      நலகண்டு பண்டு சுடலை
      நாரியோர் பாகமாக நடமாட வல்ல
      நறையூரின் நம்ப னவனே. 01
      942 இடமயி லன்னசாயல் மடமங்கை தன்கை
      யெதிர்நாணி பூண வரையிற்
      கடும்அயி லம்புகோத்து எயில்செற் றுகந்து
      அமரர களித்த தலைவன்
      மடமயில் ஊர்திதாதை எனநின்று தொண்டர்
      மனம்நின்ற மைந்தன் மருவும்
      நடமயி லாலநீடு குயில்கூவு சோலை
      நறையூரின் நம்ப னவனே. 02
      943 சூடக முன்கைமங்கை யொருபாக மாக
      அருள்கார ணங்கள் வருவான்
      ஈடக மானநோக்கி யிடுபிச்சை கொண்டு
      படுபிச்ச னென்று பரவ
      தோடக மாயோர்காதும் ஒருகா திலங்கு
      குழைதாழ வேழ வுரியன்
      நாடக மாகவாடி மடவார்கள் பாடும்
      நறையூரின் நம்ப னவனே. 03
      944 சாயல்நன் மாதோர்பாகன் விதியாய சோதி
      கதியாக நின்ற கடவுள்
      ஆயக மென்னுள்வந்த அருளாய செல்வன்
      இருளாய கண்டன் அவனி
      தாயென நின்றுகந்த தலைவன் விரும்பு
      மலையின்கண் வந்து தொழுவார்
      நாயக னென்றிறைஞ்சி மறையோர்கள் பேணும்
      நறையூரின் நம்ப னவனே. 04
      945 நெதிபடு மெய்யெம்ஐயன் நிறைசோலை சுற்றி
      நிகழம் பலத்தின் நடுவே
      அதிர்பட ஆடவல்ல அமரர கொருத்தன்
      எமர்சுற்ற மாய இறைவன்
      மதிபடு சென்னிமன்னு சடைதாழ வந்து
      விடையேறி இல்பலி கொள்வான்
      நதிபட வுந்திவந்து வயல்வாளை பாயும்
      நறையூரின் நம்ப னவனே. 05
      946 கணிகையோர் சென்னிமன்னு மதுவன்னி கொன்றை
      மலர்துன்று செஞ்சடை யினான்
      பணிகையின் முன்னிலங்க வருவேட மன்னு
      பலவாகி நின்ற பரமன்
      அணுகிய வேதவோசை யகலங்க மாறின்
      பொருளான ஆதி யருளான்
      நணுகிய தொண்டர்கூடி மலர்தூவி யேத்து
      நறையூரின் நம்ப னவனே. 06
      947 ஒளிர்தரு கின்றமேனி யுருவெங்கு மங்க
      மவையார ஆட லரவம்
      மிளிர்தரு கையிலங்க அனலேந்தி யாடும்
      விகிர்தன் விடங்கொள் மிடறன்
      துளிதரு சோலையாலை தொழில்மேவ வேதம்
      எழிலார வென்றி யருளும்
      நளிர்மதி சேருமாடம் மடவார்க ளாரும்
      நறையூரின் நம்ப னவனே. 07
      948 அடலெரு தேறுகந்த அதிருங் கழற்கள்
      எதிருஞ் சிலம்பொ டிசை
      கடலிடை நஞ்சமுண்டு கனிவுற்ற கண்டன்
      முனிவுற் றிலங்கை யரையன்
      உடலொடு தோளனைத்து முடிப திறுத்தும்
      இசைகே டிரங்கி யொருவாள்
      நடலைகள் தீர்த்துநல்கி நமையாள வல்ல
      நறையூரின் நம்ப னவனே. 08
      949 குலமலர் மேவினானும் மிகுமாய னாலும்
      எதிர்கூடி நேடி நினைவுற்
      றிலபல எய்தொணாமை எரியா யுயர்ந்த
      பெரியா னிலங்கு சடையன்
      சிலபல தொண்டர்நின்று பெருமைக்கள் பேச
      வருமை திகழ்ந்த பொழிலின்
      நலமலர் சிந்தவாச மணநாறு வீதி
      நறையூரின் நம்ப னவனே. 09
      950 துவருறு கின்றவாடை யுடல்போர துழன்ற
      வவர்தாமு மல்ல சமணுங்
      கவருறு சிந்தையாளர் உரைநீ துகந்த
      பெருமான் பிறங்கு சடையன்
      தவமலி பத்தர்சித்தர் மறையாளர் பேண
      முறைமாதர் பாடி மருவும்
      நவமணி துன்றுகோயில் ஒளிபொன்செய் மாட
      நறையூரின் நம்ப னவனே. 10
      951 கானலு லாவியோதம் எதிர்மல்கு காழி
      மிகுபந்தன் முந்தி யுணர
      ஞானமு லாவுசிந்தை யடிவை துகந்த
      நறையூரின் நம்ப னவனை
      ஈனமி லாதவண்ணம் இசையா லுரைத்த
      தமிழ்மாலை பத்தும் நினைவார்
      வானநி லாவவல்லர் நிலமெங்கு நின்று
      வழிபாடு செய்யும் மிகவே. 11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.88 திருமுல்லைவாயில்
      பண் - பியந்தைக்காந்தாரம்
      திருச்சிற்றம்பலம்
      952 துளிமண்டி யுண்டு நிறம்வந்த கண்டன்
      நடமன்னு துன்னு சுடரோன்
      ஒளிமண்டி யும்ப ருலகங் கடந்த
      உமைபங்க னெங்க ளரனூர்
      களிமண்டு சோலை கழனி கலந்த
      கமலங்கள் தங்கு மதுவின்
      தெளிமண்டி யுண்டு சிறைவண்டு பாடு
      திருமுல்லை வாயி லிதுவே. 01
      953 பருவத்தில் வந்து பயனுற்ற பண்பன்
      அயனை படைத்த பரமன்
      அரவ தொடங்க மவைகட்டி யெங்கு
      மரவிக்க நின்ற அரனூர்
      உருவத்தின் மிக்க ஒளிர்சங் கொடிப்பி
      யவையோத மோத வெருவி
      தெருவத்தில் வந்து செழுமு தலைக்கொள்
      திருமுல்லை வாயி லிதுவே. 02
      954 வாராத நாடன் வருவார்தம் வில்லின்
      உருமெல்கி நாளு முருகில்
      ஆராத வின்ப னகலாத அன்பன்
      அருள்மேவி நின்ற அரனூர்
      பேராத சோதி பிரியாத மார்பின்
      அலர்மேவு பேதை பிரியாள்
      தீராத காதல் நெதிநேர நீடு
      திருமுல்லை வாயி லிதுவே. 03
      955 ஒன்றொன்றொ டொன்றும் ஒருநான்கொ டைந்தும்
      இருமூன்றொ டேழு முடனாய்
      அன்றின்றொ டென்றும் அறிவான வர்க்கும்
      அறியாமை நின்ற அரனூர்
      குன்றொன்றொ டொன்று குலையொன்றொ
      கொடியொன்றொ டொன்று குழுமி
      சென்றொன்றொ டொன்று செறிவாய் நிறைந்த
      திருமுல்லை வாயி லிதுவே. 04
      956 கொம்பன்ன மின்னின் இடையாளோர் கூறன்
      விடைநாளும் ஏறு குழகன்
      நம்பன்னெ மன்பன் மறைநாவன் வானின்
      மதியேறு சென்னி அரனூர்
      அம்பன்ன வொண்க ணவரா டரங்கின்
      அணிகோபு ரங்க ளழகார்
      செம்பொன்ன செவ்வி தருமாடம் நீடு
      திருமுல்லை வாயி லிதுவே. 05
      957 ஊனேறு வேலின் உருவேறு கண்ணி
      ஒளியேறு கொண்ட வொருவன்
      ஆனேற தேறி யழகேறு நீறன்
      அரவேறு பூணு மரனூர்
      மானேறு கொல்லை மயிலேறி வந்து
      குயிலேறு சோலை மருவி
      தேனேறு மாவின் வளமேறி யாடு
      திருமுல்லை வாயி லிதுவே. 06
      958 நெஞ்சார நீடு நினைவாரை மூடு
      வினைதேய நின்ற நிமலன்
      அஞ்சாடு சென்னி அரவாடு கையன்
      அனலாடு மேனி யரனூர்
      மஞ்சாரு மாட மனைதோறும் ஐயம்
      உளதென்று வைகி வரினுஞ்
      செஞ்சாலி நெல்லின் வளர்சோ றளிக்கொள்
      திருமுல்லை வாயி லிதுவே. 07
      959 வரைவ தெடுத்த வலிவா ளரக்கன்
      முடிபத்து மிற்று நெரிய
      உரைவந்த பொன்னின் உருவந்த மேனி
      உமைபங்கன் எங்க ளரனூர்
      வரைவந்த சந்தொ டகிலுந்தி வந்து
      மிளிர்கின்ற பொன்னி வடபால்
      திரைவந்து வந்து செறிதேற லாடு
      திருமுல்லை வாயி லிதுவே. 08
      960 மேலோடி நீடு விளையாடல் மேவு
      விரிநூலன் வேத முதல்வன்
      பாலாடு மேனி கரியானு முன்னி
      யவர்தேட நின்ற பரனூர்
      காலாடு நீல மலர்துன்றி நின்ற
      கதிரேறு செந்நெல் வயலிற்
      சேலோடு வாளை குதிகொள்ள மல்கு
      திருமுல்லை வாயி லிதுவே. 09
      961 பனைமல்கு திண்கை மதமா வுரித்த
      பரமன்ன நம்ப னடியே
      நினைவன்ன சிந்தை அடையாத தேரர்
      அமண்மாய நின்ற அரனூர்
      வனமல்கு கைதை வகுளங்க ளெங்கு
      முகுளங்க ளெங்கு நெரி
      சினைமல்கு புன்னை திகழ்வாச நாறு
      திருமுல்லை வாயி லிதுவே. 10
      962 அணிகொண்ட கோதை யவள்நன்று மேத்த
      அருள்செய்த எந்தை மருவார்
      திணிகொண்ட மூன்று புரமெய்த வில்லி
      திருமுல்லை வாயி லிதன்மேல்
      தணிகொண்ட சிந்தை யவர்காழி ஞான
      மிகுபந்தன் ஒண்டமிழ் களின்
      அணிகொண்ட பத்தும் இசைபாடு பத்தர்
      அகல்வானம் ஆள்வர் மிகவே. 11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - முல்லைவனநாதர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.89 திருக்கொச்சைவயம்
      பண் - பியந்தைக்காந்தாரம்
      திருச்சிற்றம்பலம்
      963 அறையும் பூம்புன லோடு மாடர வச்சடை தன்மேற்
      பிறையுஞ் சூடுவர் மார்பிற் பெண்ணொரு பாக மமர்ந்தார்
      மறையி னொல்லொலி யோவா மந்திர வேள்வி யறாத
      குறைவில் அந்தணர் வாழுங் கொச்சை வயமமர தாரே. 01
      964 சுண்ணத்தர் தோலொடு நூல்சேர் மார்பினர் துன்னிய பூத
      கண்ணத்தர் வெங்கன லேந்தி கங்குல்நின் றாடுவர் கேடில்
      எண்ணத்தர் கேள்விநல் வேள்வி யறாதவர் மாலெரி யோம்பும்
      வண்ணத்த அந்தணர் வாழுங் கொச்சை வயமமர தாரே. 02
      965 பாலை யன்னவெண் ணீறு பூசுவர் பல்சடை தாழ
      மாலை யாடுவர் கீத மாமறை பாடுதல் மகிழ்வர்
      வேலை மால்கட லோதம் வெண்டிரை கரைமிசை விளங்குங்
      கோல மாமணி சிந்துங் கொச்சை வயமமர தாரே. 03
      966 கடிகொள் கூவிள மத்தங் கமழ்சடை நெடுமுடி கணிவர்
      பொடிகள் பூசிய மார்பிற் புனைவர்நன் மங்கையோர் பங்கர்
      கடிகொள் நீடொலி சங்கின் ஒலியொடு கலையொலி துதைந்து
      கொடிக ளோங்கிய மாட கொச்சை வயமமர தாரே. 04
      967 ஆடன் மாமதி யுடையா ராயின பாரிடஞ் சூழ
      வாடல் வெண்டலை யேந்தி வையக மிடுபலி குழல்வார்
      ஆடல் மாமட மஞ்ஞை அணிதிகழ் பேடையொ டாடி
      கூடு தண்பொழில் சூழ்ந்த கொச்சை வயமமர தாரே. 05
      968 மண்டு கங்கையும் அரவு மல்கிய வளர்சடை தன்மேற்
      துண்ட வெண்பிறை யணிவர் தொல்வரை வில்லது வாக
      விண்ட தானவர் அரணம் வெவ்வழல் எரிகொள விடைமேற்
      கொண்ட கோலம துடையார் கொச்சை வயமமர தாரே. 06
      இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 07
      969 அன்றவ் வால்நிழ லமர்ந்து வறவுரை நால்வர கருளி
      பொன்றி னார்தலை யோட்டி லுண்பது பொருகட லிலங்கை
      வென்றி வேந்தனை யொல்க வூன்றிய விரலினர் வான்தோய்
      குன்ற மன்னபொன் மாட கொச்சை வயமமர தாரே. 08
      970 சீர்கொள் மாமல ரானுஞ் செங்கண்மா லென்றிவ ரேத்த
      ஏர்கொள் வெவ்வழ லாகி யெங்கு முறநிமிர தாரும்
      பார்கொள் விண்ணழல் கால்நீர பண்பினர் பால்மொழி யோடுங்
      கூர்கொள் வேல்வல னேந்தி கொச்சை வயமமர தாரே. 09
      971 குண்டர் வண்துவ ராடை போர்த்ததோர் கொள்கை யினார்கள்
      மிண்டர் பேசிய பேச்சு மெய்யல மையணி கண்டர்
      பண்டை நம்வினை தீர்க்கும் பண்பின ரொண்கொடி யோடுங்
      கொண்டல் சேர்மணி மாட கொச்சை வயமமர தாரே. 10
      972 கொந்த ணிபொழில் சூழ்ந்த கொச்சை வயநகர் மேய
      அந்த ணன்னடி யேத்தும் அருமறை ஞானசம் பந்தன்
      சந்த மார்ந்தழ காய தண்டமிழ் மாலைவல் லோர்போய்
      முந்தி வானவ ரோடும் புகவலர் முனைகெட வினையே. 11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.90 திருநெல்வாயில் திருஅரத்துறை
      பண் - பியந்தைக்காந்தாரம்
      திருச்சிற்றம்பலம்
      973 எந்தை ஈசனெம் பெருமான்
      ஏறமர் கடவுளென் றேத்தி
      சிந்தை செய்பவர கல்லால்
      சென்றுகை கூடுவ தன்றாற்
      கந்த மாமல ருந்தி
      கடும்புனல் நிவாமல்கு கரைமேல்
      அந்தண் சோலைநெல் வாயில்
      அரத்துறை யடிகள்தம் அருளே. 01
      974 ஈர வார்சடை தன்மேல்
      இளம்பிறை யணிந்த எம்பெருமான்
      சீருஞ் செல்வமும் ஏத்தா
      சிதடர்கள் தொழச்செல்வ தன்றால்
      வாரி மாமல ருந்தி
      வருபுனல் நிவாமல்கு கரைமேல்
      ஆருஞ் சோலைநெல் வாயில்
      அரத்துறை யடிகள்தம் அருளே. 02
      975 பிணிக லந்தபுன் சடைமேற்
      பிறையணி சிவனென பேணி
      பணிக லந்துசெய் யாத
      பாவிகள் தொழச்செல் வதன்றால்
      மணிக லந்துபொன் னுந்தி
      வருபுனல் நிவாமல்கு கரைமேல்
      அணிக லந்தநெல் வாயில்
      அரத்துறை யடிகள்தம் அருளே. 03
      பிணி - கட்டுதல்
      976 துன்ன ஆடையொன் றுடுத்து
      தூயவெண் ணீற்றி னராகி
      உன்னி நைபவர கல்லால்
      ஒன்றுங்கை கூடுவ தன்றாற்
      பொன்னும் மாமணி யுந்தி
      பொருபுனல் நிவாமல்கு கரைமேல்
      அன்ன மாருநெல் வாயில்
      அரத்துறை யடிகள்தம் அருளே. 04
      977 வெருகு ரிஞ்சுவெங் காட்டி
      லாடிய விமலனென் றுள்கி
      உருகி நைபவர கல்லால்
      ஒன்றுங்கை கூடுவ தன்றால்
      முருகு ரிஞ்சுபூஞ் சோலை
      மொய்ம்மலர் சுமந்திழி நிவாவ
      தருகு ரிஞ்சுநெல் வாயில்
      அரத்துறை யடிகள்தம் அருளே. 05
      978 உரவு நீர்சடை கரந்த
      வொருவனென் றுள்குளிர தேத்தி
      பரவி நைபவர கல்லாற்
      பரிந்துகை கூடுவ தன்றால்
      குரவ நீடுயர் சோலை
      குளிர்புனல் நிவாமல்கு கரைமேல்
      அரவ மாருநெல் வாயில்
      அரத்துறை யடிகள்தம் அருளே. 06
      979 நீல மாமணி மிடற்று
      நீறணி சிவனென பேணுஞ்
      சீல மாந்தர்க கல்லாற்
      சென்றுகை கூடுவ தன்றால்
      கோல மாமல ருந்தி
      குளிர்புனல் நிவாமல்கு கரைமேல்
      ஆலுஞ் சோலைநெல் வாயில்
      அரத்துறை யடிகள்தம் அருளே. 07
      980 செழுந்தண் மால்வரை யெடுத்த
      செருவலி இராவணன் அலற
      அழுந்த ஊன்றிய விரலான்
      போற்றியென் பார்க்கல்ல தருளான்
      கொழுங் கனிசு துந்தி
      குளிர்புனல் நிவாமல்கு கரைமேல்
      அழுந்துஞ் சோலைநெல் வாயில்
      அரத்துறை யடிகள்தம் அருளே. 08
      981 நுணங்கு நூலயன் மாலும்
      இருவரும் நோக்கரி யானை
      வணங்கி நைபவர கல்லால்
      வந்துகை கூடுவ தன்றால்
      மணங்க மழ்ந்துபொன் னுந்தி
      வருபுனல் நிவாமல்கு கரைமேல்
      அணங்குஞ் சோலைநெல் வாயில்
      அரத்துறை யடிகள்தம் அருளே. 09
      982 சாக்கி யப்படு வாருஞ்
      சமண்படு வார்களும் மற்றும்
      பாக்கி யப்பட கில்லா
      பாவிகள் தொழச்செல்வ தன்றால்
      பூக்க மழ்ந்துபொன் னுந்தி
      பொருபுனல் நிவாமல்கு கரைமேல்
      ஆர்க்குஞ் சோலைநெல் வாயில்
      அரத்துறை யடிகள்தம் அருளே. 10
      983 கறையி னார்பொழில் சூழ்ந்த
      காழியுள் ஞான சம்பந்தன்
      அறையும் பூம்புனல் பரந்த
      அரத்துறை யடிகள்தம் அருளை
      முறைமை யாற்சொன்ன பாடல்
      மொழியும் மாந்தர்தம் வினைபோ
      பறையும் ஐயுற வில்லை
      பாட்டிவை பத்தும் வல்லார்க்கே. 11
      இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - அரத்துறைநாதர் தேவியார்
      நிவா வென்பது ஒரு நதி. புனல்-நிவாவென பதம்பிரிக்க.
      இது முத்துச்சிவிகை - முத்துச்சின்ன முதலியவை பெற்றபோதருளிச்செய்தது.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.91 திருமறைக்காடு
      பண் - பியந்தைக்காந்தாரம்
      திருச்சிற்றம்பலம்
      984 பொங்கு வெண்மணற் கானற் பொருகடல் திரைதவழ் முத்தங்
      கங்கு லாரிருள் போழுங் கலிமறை காடமர தார்தா
      திங்கள் சூடின ரேனு திரிபுரம் எரித்தன ரேனும்
      எங்கும் எங்கள் பிரானார் புகழல திகழ்பழி யிலரே. 01
      985 கூனி ளம்பிறை சூடி கொடுவரி தோலுடை யாடை
      ஆனி லங்கிள ரைந்தும் ஆடுவர் பூண்பது மரவங்
      கான லங்கழி யோதங் கரையொடு கதிர்மணி ததும்ப
      தேன லங்கமழ் சோலை திருமறை காடமர தாரே. 02
      986 நுண்ணி தாய்வெளி தாகி நூல்கிட திலங்கு பொன்மார்பிற்
      பண்ணி யாழென முரலும் பணிமொழி யுமையொரு பாகன்
      தண்ணி தாயவெள் ளருவி சலசல நுரைமணி ததும்ப
      கண்ணி தானுமோர் பிறையார் கலிமறை காடமர தாரே. 03
      986 ஏழை வெண்குரு கயலே யிளம்பெடை தனதென கருதி
      தாழை வெண்மடற் புல்கு தண்மறை காடமர தார்தாம்
      மாழை யங்கய லொண்கண் மலைமகள் கணவன தடியின்
      நீழ லேசர ணாக நினைபவர் வினைநலி விலரே. 04
      987 அரவம் வீக்கிய அரையும் அதிர்கழல் தழுவிய அடியும்
      பரவ நாஞ்செய்த பாவம் பறைதர வருளுவர் பதிதான்
      மரவம் நீடுயர் சோலை மழலைவண் டியாழ்செயும் மறைக்கா
      டிரவும் எல்லியும் பகலும் ஏத்துதல் குணமெ னலாமே. 05
      989 பல்லி லோடுகை யேந்தி பாடியும் ஆடியும் பலிதேர்
      அல்லல் வாழ்க்கைய ரேனும் அழகிய தறிவரெம் மடிகள்
      புல்ல மேறுவர் பூதம் புடைசெல வுழிதர்வர கிடமாம்
      மல்கு வெண்டிரை யோதம் மாமறை காடது தானே. 06
      990 நாக தான்கயி றாக நளிர்வரை யதற்கு மத்தாக
      பாக தேவரோ டசுரர் படுகடல் அளறெழ கடைய
      வேக நஞ்செழ ஆங்கே வெருவொடும் இரிந்தெங்கு மோட
      ஆக தன்னில்வை தமிர்தம் ஆக்குவி தான்மறை காடே. 07
      991 தக்கன் வேள்வியை தகர்த்தோன் தனதொரு பெருமையை ஓரான்
      மிக்கு மேற்சென்று மலையை யெடுத்தலும் மலைமகள் நடுங்க
      நக்கு தன்திரு விரலா லூன்றலும் நடுநடு தரக்கன்
      பக்க வாயும்வி டலற பரிந்தவன் பதிமறை காடே. 08
      992 விண்ட மாமல ரோனும் விளங்கொளி யரவணை யானும்
      பண்டுங் காண்பரி தாய பரிசினன் அவனுறை பதிதான்
      கண்ட லங்கழி யோதங் கரையொடு கதிர்மணி ததும்ப
      வண்ட லங்கமழ் சோலை மாமறை காடது தானே. 09
      993 பெரிய வாகிய குடையும் பீலியும் அவைவெயிற் கரவா
      கரிய மண்டைகை யேந்தி கல்லென வுழிதருங் கழுக்கள்
      அரிய வாகவுண் டோ து மவர்திறம் ஒழிந்து நம்மடிகள்
      பெரிய சீர்மறை காடே பேணுமின் மனமுடை யீரே. 10
      994 மையுலாம் பொழில் சூழ்ந்த மாமறை காடமர தாரை
      கையினாற் றொழு தெழுவான் காழியுள் ஞானசம் பந்தன்
      செய்த செந்தமிழ் பத்துஞ் சிந்தையுள் சேர்க்க வல்லார்போ
      பொய்யில் வானவ ரோடும் புகவலர் கொளவலர் புகழே. 11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - வேதாரணியேசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.92 திருப்புகலூர் வர்த்தமானீச்சரம்
      பண் - பியந்தைக்காந்தாரம்
      திருச்சிற்றம்பலம்
      995 பட்டம் பால்நிற மதியம் படர்சடை சுடர்விடு பாணி
      நட்டம் நள்ளிரு ளாடும் நாதனார் நவின்றுறை கோயில்
      புட்டன் பேடையோ டாடும் பூம்புக லூர்த்தொண்டர் போற்றி
      வட்டஞ் சூழ்ந்தடி பரவும் வர்த்தமா னீச்சர தாரே. 01
      996 முயல் வளாவிய திங்கள் வாண்முக தரிவையில் தெரிவை
      இயல் வளாவிய துடைய இன்னமு தெந்தையெம் பெருமான்
      கயல் வளாவிய கழனி கருநிற குவளைகள் மலரும்
      வயல் வளாவிய புகலூர் வர்த்தமா னீச்சர தாரே. 02
      997 தொண்டர் தண்கயம் மூழ்கி துணையலுஞ் சாந்தமும் புகையுங்
      கொண்டு கொண்டடி பரவி குறிப்பறி முருகன் செய்கோலங்
      கண்டு கண்டுகண் குளிர களிபர தொளிமல்கு கள்ளார்
      வண்டு பண்செயும் புகலூர் வர்த்தமா னீச்சர தாரே. 03
      998 பண்ண வண்ணத்த ராகி பாடலொ டாட லறாத
      விண்ண வண்ணத்த ராய விரிபுக லூரரோர் பாகம்
      பெண்ண வண்ணத்த ராகும் பெற்றியொ டாணிணை பிணைந்த
      வண்ண வண்ணத்தெம் பெருமான் வர்த்தமா னீச்சர தாரே. 04
      999 ஈசன் ஏறமர் கடவுள் இன்னமு தெந்தையெம் பெருமான்
      பூசு மாசில்வெண் ணீற்றர் பொலிவுடை பூம்புக லூரில்
      மூசு வண்டறை கொன்றை முருகன்மு போதுஞ்செய் முடிமேல்
      வாச மாமல ருடையார் வர்த்தமா னீச்சர தாரே. 05
      1000 தளிரி ளங்கொடி வளர தண்கயம் இரிய வண்டேறி
      கிளரி ளம்முழை நுழை கிழிதரு பொழிற்புக லூரில்
      உளரி ளஞ்சுனை மலரும் ஒளிதரு சடைமுடி யதன்மேல்
      வளரி ளம்பிறை யுடையார் வர்த்தமா னீச்சர தாரே. 06
      1001 தென்சொல் விஞ்சமர் வடசொல் திசைமொழி யெழில்நரம் பெடுத்து
      துஞ்சு நெஞ்சிருள் நீங்க தொழுதெழு தொல்புக லூரில்
      அஞ்ச னம்பிதிர தனைய அலைகடல் கடைய அன்றெழுந்த
      வஞ்ச நஞ்சணி கண்டர் வர்த்தமா னீச்சர தாரே. 07
      1002 சாம வேதமோர் கீத மோதி தசமுகன் பரவும்
      நாம தேயம துடையார் நன்குணர தடிகளென் றேத்த
      காம தேவனை வேவ கனலெரி கொளுவிய கண்ணார்
      வாம தேவர்தண் புகலூர் வர்த்தமா னீச்சர தாரே. 08
      1003 சீர ணங்குற நின்ற செருவுறு திசைமுக னோடு
      நார ணன்கரு தழிய நகைசெய்த சடைமுடி நம்பர்
      ஆர ணங்குறும் உமையை அஞ்சுவி தருளுதல் பொருட்டால்
      வார ணத்துரி போர்த்தார் வர்த்தமா னீச்சர தாரே. 09
      1004 கையி லுண்டுழல் வாருங் கமழ்துவ ராடையி னாற்றம்
      மெய்யை போர்த்துழல் வாரும் உரைப்பன மெய்யென விரும்பேற்
      செய்யில் வாளைக ளோடு செங்கயல் குதிகொளும் புகலூர்
      மைகொள் கண்டத்தெம் பெருமான் வர்த்தமா னீச்சர தாரே. 10
      1005 பொங்கு தண்புனல் சூழ்ந்து போதணி பொழிற் புகலூரில்
      மங்குல் மாமதி தவழும் வர்த்தமா னீச்சர தாரை
      தங்கு சீர்திகழ் ஞான சம்பந்தன் தண்டமிழ் பத்தும்
      எங்கும் ஏத்த வல்லார்கள் எய்துவர் இமையவ ருலகே. 11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - வர்த்தமானீசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.93 திருத்தெங்கூர்
      பண் - பியந்தைக்காந்தாரம்
      திருச்சிற்றம்பலம்
      1006 புரைசெய் வல்வினை தீர்க்கும் புண்ணியர் விண்ணவர் போற்ற
      கரைசெய் மால்கடல் நஞ்சை உண்டவர் கருதலர் புரங்கள்
      இரைசெய் தாரழ லூட்டி யுழல்பவர் இடுபலி கெழில்சேர்
      விரைசெய் பூம்பொழிற் றெங்கூர் வெள்ளியங் குன்றமர தாரே. 01
      1007 சித்த தன்னடி நினைவார் செடிபடு கொடுவினை தீர்க்குங்
      கொத்தின் தாழ்சடை முடிமேற் கோளெயிற் றரவொடு பிறையன்
      பத்தர் தாம்பணி தேத்தும் பரம்பரன் பைம்புனல் பதித்த
      வித்தன் தாழ்பொழிற் றெங்கூர் வெள்ளியங் குன்றமர தாரே. 02
      1008 அடையும் வல்வினை யகல அருள்பவர் அனலுடை மழுவா
      படையர் பாய்புலி தோலர் பைம்புனற் கொன்றையர் படர்புன்
      சடையில் வெண்பிறை சூடி தார்மணி யணிதரு தறுகண்
      விடையர் வீங்கெழிற் றெங்கூர் வெள்ளியங் குன்றமர தாரே. 03
      1009 பண்டு நான்செய்த வினைகள் பறையவோர் நெறியருள் பயப்பார்
      கொண்டல் வான்மதி சூடி குரைகடல் விடமணி கண்டர்
      வண்டு மாமல ரூதி மதுவுண இதழ் மறிவெய்தி
      விண்ட வார்பொழிற் றெங்கூர் வெள்ளியங் குன்றமர தாரே. 04
      1010 சுழித்த வார்புனற் கங்கை சூடியோர் காலனை காலால்
      தெழித்து வானவர் நடுங்க செற்றவர் சிறையணி பறவை
      கழித்த வெண்டலை யேந்தி காமன துடல் பொடியாக
      விழித்த வர்திரு தெங்கூர் வெள்ளியங் குன்றமர தாரே. 05
      1011 தொல்லை வல்வினை தீர்ப்பார் சுடலைவெண் பொடியணி சுவண்டர்
      எல்லி சூடிநின் றாடும் இறையவர் இமையவ ரேத்த
      சில்லை மால்விடை யேறி திரிபுர தீயெழ செற்ற
      வில்லி னார்திரு தெங்கூர் வெள்ளியங் குன்றமர தாரே. 06
      1012 நெறிகொள் சிந்தைய ராகி நினைபவர் வினைகெட நின்றார்
      முறிகொள் மேனிமு கண்ணர் முளைமதி நடுநடு திலங்க
      பொறிகொள் வாளர வணிந்த புண்ணியர் வெண்பொடி பூசி
      வெறிகொள் பூம்பொழிற் றெங்கூர் வெள்ளியங் குன்றமர தாரே. 07
      1013 எண்ணி லாவிற லரக்கன் எழில்திகழ் மால்வரை யெடு
      கண்ணெ லாம்பொடி தலற கால்விர லூன்றிய கருத்தர்
      தண்ணு லாம்புனற் கண்ணி தயங்கிய சடைமுடி சதுரர்
      விண்ணு லாம்பொழிற் றெங்கூர் வெள்ளியங் குன்றமர தாரே. 08
      1014 தேடி தானயன் மாலு திருமுடி யடியிணை காணார்
      பாட தான்பல பூத படையினர் சுடலையிற் பலகால்
      ஆட தான்மிக வல்லர் அருச்சுனற் கருள்செ கருதும்
      வேட தார்திரு தெங்கூர் வெள்ளியங் குன்ற மர்ந்தாரே. 09
      1015 சடங்கொள் சீவர போர்வை சாக்கியர் சமணர் சொல்தவிர
      இடங்கொள் வல்வினை தீர்க்கும் ஏத்துமின் இருமரு பொருகை
      கடங்கொள் மால்களிற் றுரியர் கடல்கடை திடக்கனன் றெழுந்த
      விடங்கொள் கண்டத்தர் தெங்கூர் வெள்ளியங் குன்றமர தாரே .10
      1016 வெந்த நீற்றினர் தெங்கூர் வெள்ளியங் குன்றமர தாரை
      கந்த மார்பொழில் சூழ்ந்த காழியுள் ஞானசம் பந்தன்
      சந்த மாயின பாடல் தண்டமிழ் பத்தும் வல்லார்மேல்
      பந்த மாயின பாவம் பாறுதல் தேறுதல் பயனே. 11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - வெள்ளிமலையீசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.94 திருவாழ்கொளிபுத்தூர்
      பண் - பியந்தைக்காந்தாரம்
      திருச்சிற்றம்பலம்
      1017 சாகை யாயிர முடையார் சாமமும் ஓதுவ துடையார்
      ஈகை யார்கடை நோக்கி யிரப்பதும் பலபல வுடையார்
      தோகை மாமயி லனைய துடியிடை பாகமும் உடையார்
      வாகை நுண்துளி வீசும் வாழ்கொளி புத்தூ ருளாரே. 01
      1018 எண்ணி லீரமும் உடையார் எத்தனை யோரிவர் அறங்கள்
      கண்ணு மாயிரம் உடையார் கையுமோ ராயிரம்
      பெண்ணு மாயிரம் உடையார் பெருமையோ ராயிரம்
      வண்ண மாயிரம் உடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே. 02
      1019 நொடியோ ராயிரம் உடையர் நுண்ணிய ராமவர் நோக்கும்
      வடிவு மாயிரம் உடையார் வண்ணமும் ஆயிரம்
      முடியு மாயிரம் உடையார் மொய்குழ லாளையும்
      வடிவு மாயிரம் உடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே. 03
      1020 பஞ்சி நுண்துகி லன்ன பைங்கழற் சேவடி யுடையார்
      குஞ்சி மேகலை யுடையார் கொந்தணி வேல்வல னுடையார்
      அஞ்சும் வென்றவர கணியார் ஆனையின் ஈருரி யுடையார்
      வஞ்சி நுண்ணிடை யுடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே. 04
      1021 பரவு வாரையும் உடையார் பழித்திகழ்
      விரவு வாரையும் உடையார் வெண்டலை பலிகொள்வ துடையார்
      அரவம் பூண்பதும் உடையார் ஆயிரம் பேர்மிக வுடையார்
      வரமும் ஆயிரம் உடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே. 05
      1022 தண்டு தாளமுங் குழலு தண்ணுமை கருவியும் புறவில்
      கொண்ட பூதமும் உடையார் கோலமும் பலபல வுடையார்
      கண்டு கோடலும் அரியார் காட்சியும் அரியதோர் கரந்தை
      வண்டு வாழ்பதி உடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே. 06
      1023 மான வாழ்க்கைய துடையார் மலைந்தவர் மதிற்பரி சறுத்தார்
      தான வாழ்க்கைய துடையார் தவத்தொடு நாம்புகழ தேத்த
      ஞான வாழ்க்கைய துடையார் நள்ளிருள் மகளிர் நின்றேத்த
      வான வாழ்க்கைய துடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே. 07
      1024 ஏழு மூன்றுமோர் தலைகள் உடையவன் இடர்பட அடர்த்து
      வேழ்வி செற்றதும் விரும்பி விருப்பவர் பலபல வுடையார்
      கேழல் வெண்பிறை யன்ன கெழுமணி மிடறுநின் றிலங்க
      வாழி சாந்தமும் உடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே. 08
      1025 வென்றி மாமல ரோனும் விரிகடல் துயின்றவன் றானும்
      என்றும் ஏத்துகை யுடையார் இமையவர் துதிசெய விரும்பி
      முன்றில் மாமலர் வாசம் முதுமதி தவழ்பொழில் தில்லை
      மன்றி லாடல துடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே. 09
      1026 மண்டை கொண்டுழல் தேரர் மாசுடை மேனிவன் சமணர்
      குண்டர் பேசிய பேச்சு கொள்ளன்மின் திகழொளி நல்ல
      துண்ட வெண்பிறை சூடி சுண்ணவெண் பொடியணி தெங்கும்
      வண்டு வாழ்பொழில் சூழ்ந்த வாழ்கொளி புத்தூ ருளாரே. 10
      1027 நலங்கொள் பூம்பொழிற் காழி நற்றமிழ் ஞான சம்பந்தன்
      வலங்கொள் வெண்மழு வாளன் வாழ்கொளி புத்தூ ருளானை
      இலங்கு வெண்பிறை யானை யேத்திய தமிழிவை வல்லார்
      நலங்கொள் சிந்தைய ராகி நன்னெறி யெய்துவர் தாமே. 11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - மாணிக்கவண்ணநாதர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.95 திருஅரைசிலி
      பண் - பியந்தைக்காந்தாரம்
      திருச்சிற்றம்பலம்
      1028 பாடல் வண்டறை கொன்றை பால்மதி பாய்புனற் கங்கை
      கோடல் கூவிள மாலை மத்தமுஞ் செஞ்சடை குலாவி
      வாடல் வெண்டலை மாலை மருவிட வல்லி தோல்மேல்
      ஆடல் மாசுணம் அசைத்த அடிகளு கிடம்அர சிலியே. 01
      1029 ஏறு பேணிய தேறி யிளமத களிற்றினை யெற்றி
      வேறு செய்ததன் உரிவை வெண்புலால் கலக்க மெய்போர்த்த
      ஊறு தேனவன் உம்பர கொருவன்நல் லொளிகொளொண் சுடராம்
      ஆறு சேர்தரு சென்னி யடிகளு கிடம்அர சிலியே. 02
      1030 கங்கை நீர்சடை மேலே கதம்மி கதிரிள வனமென்
      கொங்கை யாளொரு பாக மருவிய கொல்லை வெள்ளேற்றன்
      சங்கை யாய்த்திரி யாமே தன்னடி யார கருள்செய்து
      அங்கை யாலன லேந்தும் அடிகளு கிடம்அர சிலியே. 03
      1031 மிக்க காலனை வீட்டி மெய்கெட காமனை விழித்து
      புக்க ஊரிடு பிச்சை யுண்பது பொன்றிகழ் கொன்றை
      தக்க நூல்திகழ் மார்பில் தவளவெண் ணீறணி தாமை
      அக்கின் ஆரமும் பூண்ட அடிகளு கிடம்அர சிலியே. 04
      1032 மானஞ் சும்மட நோக்கி மலைமகள் பாகமு மருவி
      தானஞ் சாவரண் மூன்று தழலெழ சரமது துரந்து
      வானஞ் சும்பெரு விடத்தை யுண்டவன் மாமறை யோதி
      ஆனஞ் சாடிய சென்னி யடிகளு கிடம்அர சிலியே. 05
      1033 பரிய மாசுணங் கயிறா பருப்பத மதற்கு மத்தாக
      பெரிய வேலையை கலங்க பேணிய வானவர் கடை
      கரிய நஞ்சது தோன்ற கலங்கிய அவர்தமை கண்டு
      அரிய ஆரமு தாக்கும் அடிகளு கிடம்அர சிலியே. 06
      இப்பதிகத்தில் 7-ம்செய்யுள் சிதைந்துபோயிற்று. 07
      1034 வண்ண மால்வரை தன்னை மறித்திட லுற்றவல் லரக்கன்
      கண்ணு தோளுநல் வாயும் நெரிதர கால்விர லூன்றி
      பண்ணின் பாடல்கை நரம்பாற் பாடிய பாடலை கேட்டு
      அண்ண லாயருள் செய்த அடிகளு கிடம்அர சிலியே. 08
      1035 குறிய மாணுரு வாகி குவலயம் அளந்தவன் றானும்
      வெறிகொள் தாமரை மேலே விரும்பிய மெய்த்த வத்தோனுஞ்
      செறிவொ ணாவகை யெங்கு தேடியு திருவடி காண
      அறிவொ ணாவுரு வத்தெம் அடிகளு கிடம்அர சிலியே. 09
      1036 குருளை யெய்திய மடவார் நிற்பவே குஞ்சியை பறித்து
      திரளை கையிலுண் பவரு தேரருஞ் சொல்லிய தேறேல்
      பொருளை பொய்யிலி மெய்யெம் நாதனை பொன்னடி வணங்கும்
      அருளை ஆர்தர நல்கும் அடிகளு கிடம்அர சிலியே. 10
      1037 அல்லி நீள்வயல் சூழ்ந்த அரசிலி யடிகளை காழி
      நல்ல ஞானசம் பந்தன் நற்றமிழ் பத்திவை நாளுஞ்
      சொல்ல வல்லவர் தம்மை சூழ்ந்தம ரர்தொழு தேத்த
      வல்ல வானுல கெய்தி வைகலும் மகிழ்ந்திரு பாரே. 11
      இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - அரைசிலிநாதர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.96 சீகாழி
      பண் - பியந்தைக்காந்தாரம்
      திருச்சிற்றம்பலம்
      1038 பொங்கு வெண்புரி வளரும் பொற்புடை மார்பனெம் பெருமான்
      செங்கண் ஆடர வாட்டுஞ் செல்வனெஞ் சிவனுறை கோயில்
      பங்க மில்பல மறைகள் வல்லவர் பத்தர்கள் பரவு
      தங்கு வெண்டிரை கானல் தண்வயல் காழிநன் னகரே. 01
      1039 தேவர் தானவர் பரந்து திண்வரை மால்கடல் நிறுவி
      நாவ தாலமிர் துண்ண நயந்தவர் இரிந்திட கண்டு
      ஆவ வென்றரு நஞ்சம் உண்டவன் அமர்தரு மூதூர்
      காவ லார்மதில் சூழ்ந்த கடிபொழிற் காழிநன் னகரே. 02
      1040 கரியின் மாமுக முடைய கணபதி தாதை பல்பூத
      திரிய இல்பலி கேகுஞ் செழுஞ்சுடர் சேர்தரு மூதூர்
      சரியின் முன்கை நன்மாதர் சதிபட மாநட மாடி
      உரிய நாமங்க ளேத்தும் ஒலிபுனற் காழிநன் னகரே. 03
      1041 சங்க வெண்குழை செவியன் தண்மதி சூடிய சென்னி
      அங்கம் பூணென வுடைய அப்பனு கழகிய வூரா
      துங்க மாளிகை யுயர்ந்த தொகுகொடி வானிடை மிடைந்து
      வங்க வாண்மதி தடவு மணிபொழிற் காழிநன் னகரே. 04
      1042 மங்கை கூறமர் மெய்யான் மான்மறி யேந்திய கையான்
      எங்க ளீசனென் றெழுவார் இடர்வினை கெடுப்பவற் கூராஞ்
      சங்கை யின்றிநன் நி தாஞ்செய்து தகுதியின் மிக்க
      கங்கை நாடுயர் கீர்த்தி மறையவர் காழிநன் னகரே. 05
      1043 நாறு கூவிள மத்தம் நாகமுஞ் சூடிய நம்பன்
      ஏறு மேறிய ஈசன் இருந்தினி தமர்தரு மூதூர்
      நீறு பூசிய வுருவர் நெஞ்சினுள் வஞ்சமொன் றின்றி
      தேறு வார்கள்சென் றேத்துஞ் சீர்திகழ் காழிநன் னகரே. 06
      1044 நடம தாடிய நாதன் நந்திதன் முழவிடை காட்டில்
      விடம மர்ந்தொரு காலம் விரித்தறம் உரைத்தவற் கூராம்
      இடம தாமறை பயில்வார் இருந்தவர் திருந்தியம் போதிற்
      குடம தார்மணி மாடங் குலாவிய காழிநன் னகரே. 07
      1045 கார்கொள் மேனியவ் வரக்கன் றன்கடு திறலினை கருதி
      ஏர்கொள் மங்கையும் அஞ்ச எழில்மலை யெடுத்தவன் நெரி
      சீர்கொள் பாதத்தோர் விரலாற் செறுத்தவெஞ் சிவனுறை கோயில்
      தார்கொள் வண்டினஞ் சூழ்ந்த தண்வயல் காழிநன் னகரே. 08
      1046 மாலும் மாமல ரானும் மருவிநின் றிகலிய மனத்தாற்
      பாலுங் காண்பரி தாய பரஞ்சுடர் தன்பதி யாகுஞ்
      சேலும் வாளையுங் கயலுஞ் செறிந்துதன் கிளையொடு மேய
      ஆலுஞ் சாலிநற் கதிர்கள் அணிவயற் காழிநன் னகரே. 09
      1047 புத்தர் பொய்மிகு சமணர் பொலிகழ லடியிணை காணுஞ்
      சித்த மற்றவர கிலாமை திகழ்ந்தநற் செழுஞ்சுடர கூராஞ்
      சித்த ரோடுநல் லமரர் செறிந்தநன் மாமலர் கொண்டு
      முத்த னேயரு ளென்று முறைமைசெய் காழிநன் னகரே. 10
      1048 ஊழி யானவை பலவும் ஒழித்திடுங் காலத்தி லோங்கு
      ----
      ----
      ----
      இப்பதிகத்தில் 11-ம்செய்யுளின் பின்மூன்றடிகள்
      சிதைந்துபோயின.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.97 சீகாழி - திருவிராகம்
      பண் - நட்டராகம்
      திருச்சிற்றம்பலம்
      1049 நம்பொருள்நம் மக்களென்று நச்சிஇச்சை செய்துநீர்
      அம்பரம்அ டைந்துசால அல்லலுய்ப்ப தன்முனம்
      உம்பர்நாதன் உத்தமன் ஒளிமிகுத்த செஞ்சடை
      நம்பன்மேவு நன்னகர் நலங்கொள்காழி சேர்மினே. 01
      1050 பாவமேவும் உள்ளமோடு பத்தியின்றி நித்தலும்
      ஏவமான செய்துசாவ தன்முனம் மிசைந்துநீர்
      தீபமாலை தூபமுஞ் செறிந்தகைய ராகி
      தேவதேவன் மன்னுமூர் திருந்துகாழி சேர்மினே. 02
      1051 சோறுகூறை யின்றியே துவண்டுதூர மாய்நு
      கேறுசுற்றம் எள்கவே யிடுக்கணுய்ப்ப தன்முனம்
      ஆறுமோர் சடையினான் ஆதியானை செற்றவன்
      நாறுதேன் மலர்ப்பொழில் நலங்கொள்காழி சேர்மினே. 03
      1052 நச்சிநீர் பிறன்கடை நடந்துசெல்ல நாளையும்
      உச்சிவம் மெனும்முரை உணர்ந்துகேட்ப தன்முனம்
      பிச்சர்ந சரவரை பெரியசோதி பேணுவார்
      இச்சைசெய்யும் எம்பிரான் எழில்கொள்காழி சேர்மினே. 04
      1053 கண்கள்காண் பொழிந்துமேனி கன்றியொன் றலாதநோய்
      உண்கிலாமை செய்துநும்மை யுய்த்தழிப்ப தன்முனம்
      விண்குலாவு தேவருய்ய வேலைநஞ் சமுதுசெய்
      கண்கள்மூன் றுடையவெங் கருத்தர்காழி சேர்மினே. 05
      1054 அல்லல்வாழ்க்கை யுய்ப்பதற் கவத்தமே பிறந்துநீர்
      எல்லையில் பிணக்கினிற் கிடந்திடா தெழும்மினோ
      பல்லில்வெண் டலையினிற் பலிக்கியங்கு பான்மையான்
      கொல்லையேற தேறுவான் கோலக்காழி சேர்மினே. 06
      இப்பதிகத்தில் 7-ம்செய்யுள் சிதைந்துபோயிற்று. 07
      1055 பொய்மிகுத்த வாயரா பொறாமையோடு சொல்லுநீர்
      ஐமிகுத்த கண்டரா யடுத்துரைப்ப தன்முனம்
      மைமிகுத்த மேனிவா ளரக்கனை நெரித்தவன்
      பைமிகுத்த பாம்பரை பரமர்காழி சேர்மினே. 08
      1056 காலினோடு கைகளு தளர்ந்துகாம நோய்தனால்
      ஏலவார் குழலினார் இகழ்ந்துரைப்ப தன்முனம்
      மாலினோடு நான்முகன் மதித்தவர்கள் காண்கிலா
      நீலமேவு கண்டனார் நிகழ்ந்தகாழி சேர்மினே. 09
      1057 நிலைவெறுத்த நெஞ்சமோடு நேசமில் புதல்வர்கள்
      முலைவெறுத்த பேர்தொடங்கி யேமுனிவ தன்முன
      தலைபறித்த கையர்தேரர் தாந்தரி பரியவன்
      சிலைபிடித்தெ யிலெய்தான் திருந்துகாழி சேர்மினே. 10
      1058 தக்கனார் தலையரிந்த சங்கரன் றனதரை
      அக்கினோ டரவசைத்த அந்திவண்ணர் காழியை
      ஒக்கஞான சம்பந்தன் உரைத்தபாடல் வல்லவர்
      மிக்கஇன்ப மெய்திவீற் றிருந்துவாழ்தல் மெய்ம்மையே. 11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.98 திருத்துருத்தி - திருவிராகம்
      பண் - நட்டராகம்
      திருச்சிற்றம்பலம்
      1059 வரைத்தலை பசும்பொனோ டருங்கலங்கள் உந்திவ
      திரைத்தலை சுமந்துகொண் டெறிந்திலங்கு காவிரி
      கரைத்தலை துருத்திபு கிருப்பதே கருத்தினாய்
      உரைத்தலை பொலிந்துன குணர்த்துமாறு வல்லமே. 01
      1060 அடுத்தடுத்த கத்தியோடு வன்னிகொன்றை கூவிள
      தொடுத்துடன் சடைப்பெய்தாய் துருத்தியாயோர் காலனை
      கடுத்தடி புறத்தினா னிறத்துதைத்த காரணம்
      எடுத்தெடு துரைக்குமாறு வல்லமாகின் நல்லமே. 02
      1061 கங்குல்கொண்ட திங்களோடு கங்கைதங்கு செஞ்சடை
      சங்கிலங்கு வெண்குழை சரிந்திலங்கு காதினாய்
      பொங்கிலங்கு பூணநூல் உருத்திரா துருத்திபு
      கெங்குநின் இடங்களா அடங்கிவாழ்வ தென்கொலோ. 03
      1062 கருத்தினாலோர் காணியில் விருத்தியில்லை தொண்டர்தம்
      அருத்தியால்தம் மல்லல்சொல்லி ஐயமேற்ப தன்றியும்
      ஒருத்திபால் பொருத்திவை துடம்புவிட்டி யோகியாய்
      இருத்திநீ துருத்திபு கிதென்னமாயம் என்பதே. 04
      1063 துறக்குமா சொலப்படாய் துருத்தியாய் திருந்தடி
      மறக்குமா றிலாதஎன்னை மையல்செய்திம் மண்ணின்மேல்
      பிறக்குமாறு காட்டினாய் பிணிப்படும் உடம்புவி
      டிறக்குமாறு காட்டினா கிழுக்குகின்ற தென்னையே. 05
      1064 வெயிற்கெதிர திடங்கொடா தகங்குளிர்ந்த பைம்பொழில்
      துயிற்கெதிர்ந்த புள்ளினங்கள் மல்குதண் துருத்தியாய்
      மயிற்கெதிர தணங்குசாயல் மாதொர்பாக மாகமூ
      வெயிற்கெதிர தோரம்பினால் எரித்தவில்லி யல்லையே. 06
      1065 கணிச்சியம் படைச்செல்வா கழிந்தவர கொழிந்தசீர்
      துணிச்சிர கிரந்தையாய் கரந்தையாய் துருத்தியாய்
      அணிப்படு தனிப்பிறை பனிக்கதிர கவாவுநல்
      மணிப்படும்பை நாகம்நீ மகிழ்ந்தஅண்ணல் அல்லையே. 07
      1066 சுடப்பொடி துடம்பிழ தநங்கனாய மன்மதன்
      இடர்ப்பட கடந்திட துருத்தியாக எண்ணினாய்
      கடற்படை யுடையவ கடலிலங்கை மன்னனை
      அடற்பட அடுக்கலில் லடர்த்தஅண்ணல் அல்லையே. 08
      1067 களங்குளிர திலங்குபோது காதலானும் மாலுமாய்
      வளங்கிளம்பொ னங்கழல் வணங்கிவந்து காண்கிலார்
      துளங்கிளம்பி றைச்செனி துருத்தியாய் திருந்தடி
      உளங்குளிர்ந்த போதெலா முகந்துக துரைப்பனே. 09
      1068 புத்தர துவமிலா சமணுரைத்த பொய்தனை
      உத்தம மெனக்கொளா துகந்தெழுந்து வண்டின
      துத்தநின்று பண்செயுஞ் சூழ்பொழில் துருத்தியெம்
      பித்தர்பி தனைத்தொழ பிறப்பறுத்தல் பெற்றியே. 10
      1069 கற்றுமுற்றி னார்தொழுங் கழுமல தருந்தமிழ்
      சுற்றுமுற்று மாயினான் அவன்பகர்ந்த சொற்களால்
      பெற்றமொன் றுயர்த்தவன் பெருந்துருத்தி பேணவே
      குற்றமுற்று மின்மையின் குணங்கள்வந்து கூடுமே. 11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - வேதேசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.99 திருக்கோடிகா - திருவிராகம்
      பண் - நட்டராகம்
      திருச்சிற்றம்பலம்
      1070 இன்றுநன்று நாளைநன் றென்றுநின்ற இச்சையால்
      பொன்றுகின்ற வாழ்க்கையை போகவிட்டு போதுமின்
      மின்றயங்கு சோதியான் வெண்மதி விரிபுனல்
      கொன்றைதுன்று சென்னியான் கோடிகாவு சேர்மினே. 01
      1071 அல்லல்மிக்க வாழ்க்கையை ஆதரி திராதுநீர்
      நல்லதோர் நெறியினை நாடுதும் நடம்மினோ
      வில்லையன்ன வாணுதல் வெள்வளையோர் பாகமாங்
      கொல்லைவெள்ளை யேற்றினான் கோடிகாவு சேர்மினே. 02
      1072 துக்கமிக்க வாழ்க்கையின் சோர்வினை துறந்துநீர்
      தக்கதோர் நெறியினை சார்தல்செ போதுமின்
      அக்கணி தரைமிசை யாறணிந்த சென்னிமேல்
      கொக்கிற கணிந்தவன் கோடிகாவு சேர்மினே. 03
      1073 பண்டுசெய்த வல்வினை பற்றற கெடும்வகை
      உண்டு குரைப்பன்நான் ஒல்லைநீர் எழுமினோ
      மண்டுகங்கை செஞ்சடை வைத்துமாதோர் பாகமா
      கொண்டுகந்த மார்பினான் கோடிகாவு சேர்மினே. 04
      1074 முன்னைநீர்செய் பாவத்தான் மூர்த்திபாதஞ் சிந்தியா
      தின்னநீரி டும்பையின் மூழ்கிறீர் எழும்மினோ
      பொன்னைவென்ற கொன்றையான் பூதம்பாட ஆடலான்
      கொன்னவிலும் வேலினான் கோடிகாவு சேர்மினே. 05
      1075 ஏவமிக்க சிந்தையோ டின்பமெய்த லாமென
      பாவமெ தனையும்நீர் செய்தொரு பயனிலை
      காவல்மிக்க மாநகர் காய்ந்துவெங் கனல்பட
      கோவமிக்க நெற்றியான் கோடிகாவு சேர்மினே. 06
      1076 ஏணழிந்த வாழ்க்கையை இன்பமென் றிருந்துநீர்
      மாணழிந்த மூப்பினால் வருந்தன்முன்னம் வம்மினோ
      பூணல்வெள் ளெலும்பினான் பொன்றிகழ் சடைமுடி
      கோணல்வெண் பிறையினான் கோடிகாவு சேர்மினே. 07
      1077 மற்றிவாழ்க்கை மெய்யெனும் மனத்தினை தவிர்ந்துநீர்
      பற்றிவாழ்மின் சேவடி பணிந்துவ தெழுமினோ
      வெற்றிகொள் தசமுகன் விறல்கெட இருந்ததோர்
      குற்றமில் வரையினான் கோடிகாவு சேர்மினே. 08
      1078 மங்குநோய் உறும்பிணி மாயும்வண்ணஞ் சொல்லுவன்
      செங்கண்மால் திசைமுகன் சென்றளந்துங் காண்கிலா
      வெங்கண்மால் விடையுடை வேதியன் விரும்புமூர்
      கொங்குலாம் வளம்பொழிற் கோடிகாவு சேர்மினே. 09
      1079 தட்டொடு தழைமயில் பீலிகொள் சமணரும்
      பட்டுடை விரிதுகிலி னார்கள்சொற் பயனிலை
      விட்டபுன் சடையினான் மேதகு முழவொடுங்
      கொட்டமைந்த ஆடலான் கோடிகாவு சேர்மினே. 10
      1080 கொந்தணி குளிர்பொழிற் கோடிகாவு மேவிய
      செந்தழ லுருவனை சீர்மிகு திறலுடை
      அந்தணர் புகலியு ளாயகேள்வி ஞானசம்
      பந்தன தமிழ்வல்லார் பாவமான பாறுமே. 11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - கோடீசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.100 திருக்கோவலூர் வீரட்டம் - திருவிராகம்
      பண் - நட்டராகம்
      திருச்சிற்றம்பலம்
      1081 படைகொள்கூற்றம் வந்துமெ பாசம்விட்ட போதின்கண்
      இடைகொள்வா ரெமக்கிலை யெழுகபோது நெஞ்சமே
      குடைகொள்வேந்தன் மூதாதை குழகன்கோவ லூர்தனுள்
      விடையதேறுங் கொடியினான் வீரட்டானஞ் சேர்துமே. 01
      1082 கரவலாளர் தம்மனை கடைகள்தோறுங் கால்நிமிர
      திரவலாழி நெஞ்சமே இனியதெய்த வேண்டினீர்
      குரவமேறி வண்டினங் குழலொடியாழ்செய் கோவலூர்
      விரவிநாறு கொன்றையான் வீரட்டானஞ் சேர்துமே. 02
      1083 உள்ளத்தீரே போதுமின் னுறுதியாவ தறிதிரேல்
      அள்ளற்சேற்றிற் காலிட்டங் கவலத்துள் அழுந்தாதே
      கொள்ளப்பாடு கீதத்தான் குழகன்கோவ லூர்தனுள்
      வெள்ளந்தாங்கு சடையினான் வீரட்டானஞ் சேர்துமே. 03
      1084 கனைகொளிருமல் சூலைநோய் கம்பதாளி குன்மமும்
      இனையபலவும் மூப்பினோ டெய்திவந்து நலியாமுன்
      பனைகளுலவு பைம்பொழிற் பழனஞ்சூழ்ந்த கோவலூர்
      வினையைவென்ற வேடத்தான் வீரட்டானஞ் சேர்துமே. 04
      1085 உளங்கொள் போகமுய்த்திடார் உடம்பிழந்த போதின்கண்
      துளங்கிநின்று நாடொறு துயரலாழி நெஞ்சமே
      வளங்கொள்பெண்ணை வந்துலா வயல்கள்சூழ்ந்த கோவலூர்
      விளங்குகோவ ணத்தினான் வீரட்டானஞ் சேர்துமே. 05
      1086 கேடுமூப்பு சாக்காடு கெழுமிவந்து நாடொறும்
      ஆடுபோல நரைகளாய் யாக்கைபோக்க தன்றியுங்
      கூடிநின்று பைம்பொழிற் குழகன்கோவ லூர்தனுள்
      வீடுகாட்டு நெறியினான் வீரட்டானஞ் சேர்துமே. 06
      1087 உரையும்பாட்டு தளர்வெய்தி உடம்புமூத்த போதின்கண்
      நரையுந்திரையுங் கண்டெள்கி நகுவர்நமர்கள் ஆதலால்
      வரைகொள்பெண்ணை வந்துலா வயல்கள்சூழ்ந்த கோவலூர்
      விரைகொள்சீர்வெண் ணீற்றினான் வீரட்டானஞ் சேர்துமே. 07
      1088 ஏதமிக்க மூப்பினோ டிருமல்ஈளை யென்றிவை
      ஊதலாக்கை ஓம்புவீர் உறுதியாவ தறிதிரேல்
      போதில்வண்டு பண்செயும் பூந்தண்கோவ லூர்தனுள்
      வேதமோது நெறியினான் வீரட்டானஞ் சேர்துமே. 08
      1089 ஆறுபட்ட புன்சடை அழகனாயி ழைக்கொரு
      கூறுபட்ட மேனியான் குழகன்கோவ லூர்தனில்
      நீறுபட்ட கோலத்தான் நீலகண்ட னிருவர்க்கும்
      வேறுபட்ட சிந்தையான் வீரட்டானஞ் சேர்துமே. 09
      1090 குறிகொளாழி நெஞ்சமே கூறைதுவரி டார்களும்
      அறிவிலாத அமணர்சொல் அவத்தமாவ தறிதிரேல்
      பொறிகொள்வண்டு பண்செயும் பூந்தண்கோவ லூர்தனில்
      வெறிகொள்கங்கை தாங்கினான் வீரட்டானஞ் சேர்துமே. 10
      1091 கழியொடுலவு கானல்சூழ் காழிஞான சம்பந்தன்
      பழிகள்தீர சொன்னசொல் பாவநாச மாதலால்
      அழிவிலீர்கொண் டேத்துமின் அந்தண்கோவ லூர்தனில்
      விழிகொள்பூத படையினான் வீரட்டானஞ் சேர்துமே. 11
      இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - வீரட்டானேசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.101 திருவாரூர் - திருவிராகம்
      பண் - நட்டராகம்
      திருச்சிற்றம்பலம்
      1092 பருக்கையானை மத்தக தரிக்குல துகிர்ப்புக
      நெருக்கிவாய நித்தில நிரக்குநீள் பொருப்பனூர்
      கருக்கொள்சோலை சூழநீடு மாடமாளி கைக்கொடி
      அருக்கன்மண்ட லத்தணாவும் அந்தணாரூ ரென்பதே. 01
      1093 விண்டவெள்ளெ ருக்கலர்ந்த வன்னிகொன்றை மத்தமும்
      இண்டைகொண்ட செஞ்சடை முடிச்சிவ னிருந்தவூர்
      கெண்டைகொண் டலர்ந்தகண்ணி னார்கள்கீத வோசைபோய்
      அண்டரண்டம் ஊடறுக்கும் அந்தணாரூ ரென்பதே. 02
      1094 கறுத்தநஞ்சம் உண்டிருண்ட கண்டர்காலன் இன்னுயிர்
      மறுத்துமாணி தன்றனாகம் வண்மைசெய்த மைந்தனூர்
      வெறித்துமேதி யோடிமூசு வள்ளைவெள்ளை நீள்கொடி
      அறுத்துமண்டி யாவிபாயும் அந்தணாரூ ரென்பதே. 03
      1095 அஞ்சுமொன்றி ஆறுவீசி நீறுபூசி மேனியில்
      குஞ்சியார வந்திசெய்ய அஞ்சலென்னி மன்னுமூர்
      பஞ்சியாரு மெல்லடி பணைத்தகொங்கை நுண்ணிடை
      அஞ்சொலார் அரங்கெடுக்கும் அந்தணாரூ ரென்பதே. 04
      1096 சங்குலாவு திங்கள்சூடி தன்னையுன்னு வார்மன
      தங்குலாவி நின்றஎங்க ளாதிதேவன் மன்னுமூர்
      தெங்குலாவு சோலைநீடு தேனுலாவு செண்பகம்
      அங்குலாவி யண்டநாறும் அந்தணாரூ ரென்பதே. 05
      1097 கள்ளநெஞ்ச வஞ்ச கருத்தைவி டருத்தியோ
      டுள்ளமொன்றி யுள்குவார் உளத்துளான் உகந்தவூர்
      துள்ளிவாளை பாய்வயற் சுரும்புலாவு நெய்தல்வாய்
      அள்ளல்நாரை ஆரல்வாரும் அந்தணாரூ ரென்பதே. 06
      1098 கங்கைபொங்கு செஞ்சடை கரந்தகண்டர் காமனை
      மங்கவெங்க ணால்விழித்த மங்கைபங்கன் மன்னுமூர்
      தெங்கினூடு போகிவாழை கொத்திறுத்து மாவின்மேல்
      அங்கண்மந்தி முந்தியேறும் அந்தணாரூ ரென்பதே. 07
      1099 வரைத்தல மெடுத்தவன் முடித்தலம் முரத்தொடும்
      நெரித்தவன் புரத்தைமுன் னெரித்தவன் னிருந்தவூர்
      நிரைத்தமாளி கைத்திருவின் நேரனார்கள் வெண்ணகை
      அரத்தவாய் மடந்தைமார்கள் ஆடுமாரூ ரென்பதே. 08
      1100 இருந்தவன் கிடந்தவன் னிடந்துவிண் பறந்துமெய்
      வருந்தியும் அளப்பொணாத வானவன் மகிழ்ந்தவூர்
      செருந்திஞாழல் புன்னைவன்னி செண்பகஞ் செழுங்குரா
      அரும்புசோலை வாசநாறும் அந்தணாரூ ரென்பதே. 09
      1101 பறித்தவெண் டலைக்கடு படுத்தமேனி யார்தவம்
      வெறித்தவேடன் வேலைநஞ்சம் உண்டகண்டன் மேவுமூர்
      மறித்துமண்டு வண்டல்வாரி மிண்டுநீர் வயற்செநெல்
      அறுத்தவா யசும்புபாயு மந்தணாரூ ரென்பதே. 10
      1102 வல்லிசோலை சூதநீடு மன்னுவீதி பொன்னுலா
      அல்லிமா தமர்ந்திருந்த அந்தணாரூ ராதியை
      நல்லசொல்லும் ஞானசம் பந்தன்நாவின் இன்னுரை
      வல்லதொண்டர் வானமாள வல்லர்வாய்மை யாகவே. 11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.102 திருச்சிரபுரம்
      பண் - நட்டராகம்
      திருச்சிற்றம்பலம்
      1103 அன்ன மென்னடை அரிவையோ டினிதுறை
      அமரர்தம் பெருமானார்
      மின்னு செஞ்சடை வெள்ளெரு கம்மலர்
      வைத்தவர் வேதந்தாம்
      பன்னு நன்பொருள் பயந்தவர் பருமதிற்
      சிரபுர தார்சீரார்
      பொன்னின் மாமலர் அடிதொழும் அடியவர்
      வினையொடும் பொருந்தாரே. 01
      1104 கோல மாகரி உரித்தவர் அரவொடும்
      ஏனக்கொம் பிளஆமை
      சால பூண்டுதண் மதியது சூடிய
      சங்கர னார்தம்மை
      போல தம்மடி யார்க்குமின் பளிப்பவர்
      பொருகடல் விடமுண்ட
      நீல தார்மிடற் றண்ணலார் சிரபுர
      தொழவினை நில்லாவே. 02
      1105 மான திண்புய வரிசிலை பார்த்தனை
      தவங்கெட மதித்தன்று
      கான தேதிரி வேடனா யமர்செ
      கண்டருள் புரிந்தார்பூ
      தேனை தேர்ந்துசேர் வண்டுகள் திரிதருஞ்
      சிரபுர துறையெங்கள்
      கோனை கும்பிடும் அடியரை கொடுவினை
      குற்றங்கள் குறுகாவே. 03
      1106 மாணி தன்னுயிர் மதித்துண வந்தவ
      காலனை உதைசெய்தார்
      பேணி யுள்குமெய் யடியவர் பெருந்துயர
      பிணக்கறு தருள்செய்வார்
      வேணி வெண்பிறை யுடையவர் வியன்புகழ
      சிரபுர தமர்கின்ற
      ஆணி பொன்னினை அடிதொழும் அடியவர
      கருவினை யடையாவே. 04
      1107 பாரும் நீரொடு பல்கதிர் இரவியும்
      பனிமதி ஆகாசம்
      ஓரும் வாயுவும் ஒண்கனல் வேள்வியில்
      தலைவனு மாய்நின்றார்
      சேருஞ் சந்தனம் அகிலொடு வந்திழி
      செழும்புனற் கோட்டாறு
      வாரு தண்புனல் சூழ்சிர புரந்தொழும்
      அடியவர் வருந்தாரே. 05
      1108 ஊழி யந்தத்தில் ஒலிகடல் ஓட்டந்திவ்
      வுலகங்க ளவைமூட
      ஆழி யெந்தையென் றமரர்கள் சரண்புக
      அந்தர துயர்ந்தார்தாம்
      யாழின் நேர்மொழி யேழையோ டினிதுறை
      இன்பன்எம் பெருமானார்
      வாழி மாநகர சிரபுர தொழுதெழ
      வல்வினை அடையாவே. 06
      1109 பேய்கள் பாடப்பல் பூதங்கள் துதிசெய
      பிணமிடு சுடுகாட்டில்
      வேய்கொள் தோளிதான் வெள்கிட மாநடம்
      ஆடும்வி தகனாரொண்
      சாய்கள் தான்மிக வுடையதண் மறையவர்
      தகுசிர புரத்தார்தா
      தாய்க ளாயினார் பல்லுயிர குந்தமை
      தொழுமவர் தளராரே. 07
      1110 இலங்கு பூண்வரை மார்புடை இராவணன்
      எழில்கொள்வெற் பெடுத்தன்று
      கலங்க செய்தலுங் கண்டுதங் கழலடி
      நெரியவை தருள்செய்தார்
      புலங்கள் செங்கழு நீர்மலர தென்றல்மன்
      றதனிடை புகுந்தாருங்
      குலங்கொள் மாமறை யவர்சிர புரந்தொழு
      தெழவினை குறுகாவே. 08
      1111 வண்டு சென்றணை மலர்மிசை நான்முகன்
      மாயனென் றிவரன்று
      கண்டு கொள்ளவோர் ஏனமோ டன்னமா
      கிளறியும் பறந்துந்தாம்
      பண்டு கண்டது காணவே நீண்டவெம்
      பசுபதி பரமேட்டி
      கொண்ட செல்வத்து சிரபுர தொழுதெழ
      வினையவை கூடாவே. 09
      1112 பறித்த புன்தலை குண்டிகை சமணரும்
      பார்மிசை துவர்தோய்ந்த
      செறித்த சீவர தேரரு தேர்கிலா
      தேவர்கள் பெருமானார்
      முறித்து மேதிகள் கரும்புதின் றாவியில்
      மூழ்கிட இளவாளை
      வெறித்து பாய்வயற் சிரபுர தொழவினை
      விட்டிடும் மிகத்தானே. 10
      1113 பரசு பாணியை பத்தர்கள் அத்தனை
      பையர வோடக்கு
      நிரைசெய் பூண்திரு மார்புடை நிமலனை
      நித்தில பெருந்தொத்தை
      விரைசெய் பூம்பொழிற் சிரபுர தண்ணலை
      விண்ணவர் பெருமானை
      பரவு சம்பந்தன் செந்தமிழ் வல்லவர்
      பரமனை பணிவாரே. 11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.103 திரு அம்பர்த்திருமாகாளம்
      பண் - நட்டராகம்
      திருச்சிற்றம்பலம்
      1114 புல்கு பொன்னிறம் புரிசடை நெடுமுடி
      போழிள மதிசூடி
      பில்கு தேனுடை நறுமலர கொன்றையும்
      பிணையல்செய் தவர்மேய
      மல்கு தண்டுறை அரிசிலின் வடகரை
      வருபுனல் மாகாளம்
      அல்லும் நண்பக லுந்தொழும் அடியவர
      கருவினை அடையாவே. 01
      1115 அரவம் ஆட்டுவர் அந்துகில் புலியதள்
      அங்கையில் அனலேந்தி
      இரவும் ஆடுவர் இவையிவர் சரிதைக
      ளிசைவன பலபூதம்
      மரவ தோய்பொழில் அரிசிலின் வடகரை
      வருபுனல் மாகாளம்
      பரவி யும்பணி தேத்தவல் லாரவர்
      பயன்தலை படுவாரே. 02
      1116 குணங்கள் கூறியுங் குற்றங்கள் பரவியுங்
      குரைகழ லடிசேர
      கணங்கள் பாடவுங் கண்டவர் பரவவுங்
      கருத்தறி தவர்மேய
      மணங்கொள் பூம்பொழில் அரிசிலின் வடகரை
      வருபுனல் மாகாளம்
      வணங்கும் உள்ளமோ டணையவல் லார்களை
      வல்வினை அடையாவே. 03
      1117 எங்கு மேதுமோர் பிணியிலர் கேடிலர்
      இழைவளர் நறுங்கொன்றை
      தங்கு தொங்கலு தாமமுங் கண்ணியு
      தாமகிழ தவர்மேய
      மங்குல் தோய்பொழில் அரிசிலின் வடகரை
      வருபுனல் மாகாளங்
      கங்கு லும்பக லுந்தொழும் அடியவர்
      காதன்மை யுடையாரே. 04
      1118 நெதியம் என்னுள போகமற் றென்னுள
      நிலமிசை நலமாய
      கதியம் என்னுள வானவர் என்னுளர்
      கருதிய பொருள்கூடில்
      மதி தோய்பொழில் அரிசிலின் வடகரை
      வருபுனல் மாகாளம்
      புதிய பூவொடு சாந்தமும் புகையுங்கொண்
      டேத்துதல் புரிந்தோர்க்கே. 05
      1119 கண்ணு லாவிய கதிரொளி முடிமிசை
      கனல்விடு சுடர்நாக
      தெண்ணி லாவொடு திலதமு நகுதலை
      திகழவை தவர்மேய
      மண்ணு லாம்பொழில் அரிசிலின் வடகரை
      வருபுனல் மாகாளம்
      உண்ணி லாநினை புடையவ ரியாவரிவ்
      வுலகினில் உயர்வாரே. 06
      1120 தூசு தானரை தோலுடை கண்ணியஞ்
      சுடர்விடு நறுங்கொன்றை
      பூசு வெண்பொடி பூசுவ தன்றியும்
      புகழ்புரி தவர்மேய
      மாசு லாம்பொழில் அரிசிலின் வடகரை
      வருபுனல் மாகாளம்
      பேசு நீர்மையர் யாவரிவ் வுலகினிற்
      பெருமையை பெறுவாரே. 07
      1121 பவ்வ மார்கடல் இலங்கையர் கோன்றனை
      பருவரை கீழூன்றி
      எவ்வ தீரவன் றிமையவர கருள்செய்த
      இறையவன் உறைகோயில்
      மவ்வ தோய்பொழில் அரிசிலின் வடகரை
      வருபுனல் மாகாளங்
      கவ்வை யாற்றொழும் அடியவர் மேல்வினை
      கனலிடை செதிளன்றே. 08
      1122 உய்யுங் காரணம் உண்டென்று கருதுமின்
      ஒளிகிளர் மலரோனும்
      பைகொள் பாம்பணை பள்ளிகொள் அண்ணலும்
      பரவநின் றவர்மேய
      மையு லாம்பொழில் அரிசிலின் வடகரை
      வருபுனல் மாகாளங்
      கையி னாற்றொழு தவலமும் பிணியுந்தங்
      கவலையுங் களைவாரே. 09
      1123 பிண்டி பாலரும் மண்டைகொள் தேரரும்
      பீலிகொண் டுழல்வாருங்
      கண்ட நூலருங் கடுந்தொழி லாளருங்
      கழறநின் றவர்மேய
      வண்டு லாம்பொழில் அரிசிலின் வடகரை
      வருபுனல் மாகாளம்
      பண்டு நாஞ்செய்த பாவங்கள் பற்றற
      பரவுதல் செய்வோமே. 10
      1124 மாறு தன்னொடு மண்மிசை யில்லது
      வருபுனல் மாகாள
      தீறும் ஆதியு மாகிய சோதியை
      ஏறமர் பெருமானை
      நாறு பூம்பொழில் காழியுள் ஞானசம்
      பந்தன தமிழ்மாலை
      கூறு வாரையுங் கேட்கவல் லாரையுங்
      குற்றங்கள் குறுகாவே. 11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - காளகண்டேசுவரர்
      தேவியார் - பட்சநாயகியம்மை.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.104 திருக்கடிக்குளம்
      பண் - நட்டராகம்
      திருச்சிற்றம்பலம்
      1125 பொடிகொள் மேனிவெண் ணூலினர் தோலினர்
      புலியுரி யதளாடை
      கொடிகொள் ஏற்றினர் மணிகிணின் எனவரு
      குரைகழல் சிலம்பார
      கடிகொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குள
      துறையுங்கற் பகத்தைத்தம்
      முடிகள் சாய்த்தடி வீழ்தரும் அடியரை
      முன்வினை மூடாவே. 01
      1126 விண்க ளார்தொழும் விளக்கினை துளக்கிலா
      விகிர்தனை விழவாரும்
      மண்க ளார்துதி தன்பராய் இன்புறும்
      வள்ளலை மருவித்தங்
      கண்க ளார்தர கண்டுநங் கடிக்குள
      துறைதரு கற்பகத்தை
      பண்க ளார்தர பாடுவார் கேடிலர்
      பழியிலர் புகழாமே. 02
      1127 பொங்கு நற்கரி யுரியது போர்ப்பது
      புலியதள் அழல்நாக
      தங்க மங்கையை பாகம துடையவர்
      தழல்புரை திருமேனி
      கங்கை சேர்தரு சடையினர் கடிக்குள
      துறைதரு கற்பகத்தை
      எங்கு மேத்திநின் றின்புறும் அடியரை
      இடும்பைவ தடையாவே. 03
      1128 நீர்கொள் நீள்சடை முடியனை நித்தில
      தொத்தினை நிகரில்லா
      பார்கொள் பாரிட தவர்தொழும் பவளத்தை
      பசும்பொன்னை விசும்பாருங்
      கார்கொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குள
      துறையுங்கற் பகந்தன்னை
      சீர்கொள் செல்வங்க ளேத்தவல் லார்வினை
      தேய்வது திணமாமே. 04
      1129 சுரும்பு சேர்சடை முடியினன் மதியொடு
      துன்னிய தழல்நாகம்
      அரும்பு தாதவிழ தலர்ந்தன மலர்பல
      கொண்டடி யவர்போற்ற
      கரும்பு கார்மலி கொடிமிடை கடிக்குள
      துறைதரு கற்பகத்தை
      விரும்பு வேட்கையோ டுளமகிழ துரைப்பவர்
      விதியுடை யவர்தாமே. 05
      1130 மாதி லங்கிய பாகத்தன் மதியமொ
      டலைபுனல் அழல்நாகம்
      போதி லங்கிய கொன்றையும் மத்தமும்
      புரிசடை கழகா
      காதி லங்கிய குழையினன் கடிக்குள
      துறைதரு கற்பகத்தின்
      பாதங் கைதொழு தேத்தவல் லார்வினை
      பற்றற கெடுமன்றே. 06
      1131 குலவு கோலத்த கொடிநெடு மாடங்கள்
      குழாம்பல குளிர்பொய்கை
      உலவு புள்ளினம் அன்னங்கள் ஆலிடும்
      பூவைசே ருங்கூந்தல்
      கலவை சேர்தரு கண்ணியன் கடிக்குள
      துறையுங்கற் பகத்தைச்சீர்
      நிலவி நின்றுநின் றேத்துவார் மேல்வினை
      நிற்ககில் லாதானே. 07
      1132 மடுத்த வாளர கன்னவன் மலைதன்மேல்
      மதியிலா மையிலோடி
      எடுத்த லும்முடி தோள்கரம் நெரிந்திற
      இறையவன் விரலூன்ற
      கடுத்து வாயொடு கையெடு தலறிட
      கடிக்குள தனில்மேவி
      கொடுத்த பேரரு கூத்தனை யேத்துவார்
      குணமுடை யவர்தாமே. 08
      1133 நீரி னார்கடல் துயின்றவன் அயனொடு
      நிகழடி முடிகாணார்
      பாரி னார்விசும் புறப்பர தெழுந்ததோர்
      பவளத்தின் படியாகி
      காரி னார்பொழில் சூழ்தரு கடிக்குள
      துறையுங்கற் பகத்தின்றன்
      சீரி னார்கழ லேத்தவல் லார்களை
      தீவினை யடையாவே. 09
      1134 குண்டர் தம்மொடு சாக்கியர் சமணருங்
      குறியினில் நெறிநில்லா
      மிண்டர் மிண்டுரை கேட்டவை மெய்யென
      கொள்ளன்மின் விடமுண்ட
      கண்டர் முண்டநன் மேனியர் கடிக்குள
      துறைதரும் எம்மீசர்
      தொண்டர் தொண்டரை தொழுதடி பணிமின்கள்
      தூநெறி எளிதாமே. 10
      1135 தனம லிபுகழ் தயங்குபூ தராயவர்
      மன்னன்நற் சம்பந்தன்
      மனம லிபுகழ் வண்டமிழ் மாலைகள்
      மாலதாய் மகிழ்வோடுங்
      கனம லிகட லோதம்வ துலவிய
      கடிக்குள தமர்வானை
      இனம லிந்திசை பாடவல் லார்கள்போய்
      இறைவனோ டுறைவாரே. 11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - கற்பகேசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.105 திருக்கீழ்வேளூர்
      பண் - நட்டராகம்
      திருச்சிற்றம்பலம்
      1136 மின்னு லாவிய சடையினர் விடையினர்
      மிளிர்தரும் அரவோடும்
      பன்னு லாவிய மறைஒலி நாவினர்
      கறையணி கண்டத்தர்
      பொன்னு லாவிய கொன்றை தாரினர்
      புகழ்மிகு கீழ்வேளூர்
      உன்னு லாவிய சிந்தையர் மேல்வினை
      யோடிட வீடாமே. 01
      1137 நீரு லாவிய சடையிடை யரவொடு
      மதிசிர நிரைமாலை
      வாரு லாவிய வனமுலை யவளொடு
      மணிசிலம் பவையார்க்க
      ஏரு லாவிய இறைவன துறைவிடம்
      எழில்திகழ் கீழ்வேளூர்
      சீரு லாவிய சிந்தைசெய் தணைபவர்
      பிணியொடு வினைபோமே. 02
      1138 வெண்ணி லாமிகு விரிசடை யரவொடு
      வெள்ளெரு கலர்மத்தம்
      பண்ணி லாவிய பாடலோ டாடலர்
      பயில்வுறு கீழ்வேளூர
      பெண்ணி லாவிய பாகனை பெருந்திரு
      கோயிலெம் பெருமானை
      உண்ணி லாவிநின் றுள்கிய சிந்தையார்
      உலகினில் உள்ளாரே. 03
      1139 சேடு லாவிய கங்கையை சடையிடை
      தொங்கவை தழகாக
      நாடு லாவிய பலிகொளும் நாதனார்
      நலமிகு கீழ்வேளூர
      பீடு லாவிய பெருமையர் பெருந்திரு
      கோயிலு பிரியாது
      நீடு லாவிய நிமலனை பணிபவர்
      நிலைமிக பெறுவாரே. 04
      1140 துன்று வார்சடை சுடர்மதி நகுதலை
      வடமணி சிரமாலை
      மன்று லாவிய மாதவ ரினிதியன்
      மணமிகு கீழ்வேளூர்
      நின்று நீடிய பெருந்திரு கோயிலின்
      நிமலனை நினைவோடுஞ்
      சென்று லாவிநின் றேத்தவல் லார்வினை
      தேய்வது திணமாமே. 05
      1141 கொத்து லாவிய குழல்திகழ் சடையனை
      கூத்தனை மகிழ்ந்துள்கி
      தொத்து லாவிய நூலணி மார்பினர்
      தொழுதெழு கீழ்வேளூர
      பித்து லாவிய பத்தர்கள் பேணிய
      பெருந்திரு கோயில்மன்னும்
      முத்து லாவிய வித்தினை யேத்துமின்
      முடுகிய இடர்போமே. 06
      1142 பிறைநி லாவிய சடையிடை பின்னலும்
      வன்னியு துன்னாரும்
      கறைநி லாவிய கண்டரெண் டோ ளினர்
      காதல்செய் கீழ்வேளூர்
      மறைநி லாவிய அந்தணர் மலிதரு
      பெருந்திரு கோயில்மன்னும்
      நிறைநி லாவிய ஈசனை நேசத்தால்
      நினைபவர் வினைபோமே. 07
      1143 மலைநி லாவிய மைந்தனம் மலையினை
      யெடுத்தலும் அரக்கன்றன்
      தலையெ லாம்நெரி தலறிட வூன்றினான்
      உறைதரு கீழ்வேளூர
      கலைநி லாவிய நாவினர் காதல்செய்
      பெருந்திரு கோயிலுள்
      நிலைநி லாவிய ஈசனை நேசத்தால்
      நினையவல் வினைபோமே. 08
      1144 மஞ்சு லாவிய கடல்கிட தவனொடு
      மலரவன் காண்பொண்ணா
      பஞ்சு லாவிய மெல்லடி பார்ப்பதி
      பாகனை பரிவோடுஞ்
      செஞ்சொ லார்பலர் பரவிய தொல்புகழ்
      மல்கிய கீழ்வேளூர்
      நஞ்சு லாவிய கண்டனை நணுகுமின்
      நடலைகள் நணுகாவே. 09
      1145 சீறு லாவிய தலையினர் நிலையிலா
      அமணர்கள் சீவரத்தார்
      வீறி லாதவெஞ் சொற்பல விரும்பன்மின்
      சுரும்பமர் கீழ்வேளூர்
      ஏறு லாவிய கொடியனை யேதமில்
      பெருந்திரு கோயில்மன்னு
      பேறு லாவிய பெருமையன் திருவடி
      பேணுமின் தவமாமே. 10
      1146 குருண்ட வார்குழற் சடையுடை குழகனை
      அழகமர் கீழ்வேளூர
      திரண்ட மாமறை யவர்தொழும் பெருந்திரு
      கோயிலெம் பெருமானை
      இருண்ட மேதியின் இனமிகு வயல்மல்கு
      புகலிமன் சம்பந்தன்
      தெருண்ட பாடல்வல் லாரவர் சிவகதி
      பெறுவது திடமாமே. 11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - அட்சயலிங்கநாதர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.106 திருவலஞ்சுழி
      பண் - நட்டராகம்
      திருச்சிற்றம்பலம்
      1147 என்ன புண்ணியஞ் செய்தனை நெஞ்சமே
      யிருங்கடல் வையத்து
      முன்னம் நீபுரி நல்வினை பயனிடை
      முழுமணி தரளங்கள்
      மன்னு காவிரி சூழ்திரு வலஞ்சுழி
      வாணனை வாயார
      பன்னி யாதரி தேத்தியும் பாடியும்
      வழிபடும் அதனாலே. 01
      1148 விண்டொ ழிந்தன நம்முடை வல்வினை
      விரிகடல் வருநஞ்சம்
      உண்டி றைஞ்சுவா னவர்தமை தாங்கிய
      இறைவனை உலகத்தில்
      வண்டு வாழ்குழன் மங்கையோர் பங்கனை
      வலஞ்சுழி யிடமா
      கொண்ட நாதன்மெ தொழில்புரி தொண்டரோ
      டினிதிரு தமையாலே. 02
      1149 திருந்த லார்புர தீயெழ செறுவன
      விறலின்கண் அடியாரை
      பரிந்து காப்பன பத்தியில் வருவன
      மத்தமாம் பிணிநோய்க்கு
      மருந்து மாவன மந்திர
      வலஞ்சுழி யிடமாக
      இருந்த நாயகன் இமையவ ரேத்திய
      இணையடி தலந்தானே. 03
      1150 கறைகொள் கண்டத்தர் காய்கதிர் நிறத்தினர்
      அறத்திற முனிவர்க்கன்
      றிறைவ ராலிடை நீழலி லிருந்துக
      தினிதருள் பெருமானார்
      மறைக ளோதுவர் வருபுனல் வலஞ்சுழி
      யிடமகிழ தருங்கான
      தறைக ழல்சிலம் பார்க்கநின் றாடிய
      அற்புதம் அறியோமே. 04
      1151 மண்ணர் நீரர்விண் காற்றின ராற்றலாம்
      எரியுரு வொருபாகம்
      பெண்ண ராணென தெரிவரு வடிவினர்
      பெருங்கடற் பவளம்போல்
      வண்ண ராகிலும் வலஞ்சுழி பிரிகிலார்
      பரிபவர் மனம்புக்க
      எண்ண ராகிலும் எனைப்பல இயம்புவர்
      இணையடி தொழுவாரே. 05
      1152 ஒருவ ராலுவ மிப்பதை யரியதோர்
      மேனியர் மடமாதர்
      இருவ ராதரி பார்பல பூதமும்
      பேய்களும் அடையாளம்
      அருவ ராததோர் வெண்டலை கைப்பிடி
      தகந்தொறும் பலிக்கென்று
      வருவ ரேலவர் வலஞ்சுழி யடிகளே
      வரிவளை கவர்ந்தாரே. 06
      1153 குன்றி யூர்குட மூக்கிடம் வலம்புரங்
      குலவிய நெய்த்தானம்
      என்றிவ் வூர்களி லோமென்றும் இயம்புவர்
      இமையவர் பணிகேட்பார்
      அன்றி யூர்த குள்ளன அறிகிலோம்
      வலஞ்சுழி யரனார்பால்
      சென்ற வூர்தனில் தலைப்பட லாமென்று
      சேயிழை தளர்வாமே. 07
      1154 குயிலின் நேர்மொழி கொடியிடை வெருவுற
      குலவரை பரப்பாய
      கயிலை யைப்பிடி தெடுத்தவன் கதிர்முடி
      தோளிரு பதுமூன்றி
      மயிலி னேரன சாயலோ டமர்ந்தவன்
      வலஞ்சுழி யெம்மானை
      பயில வல்லவர் பரகதி காண்பவர்
      அல்லவர் காணாரே. 08
      1155 அழல தோம்பிய அலர்மிசை யண்ணலும்
      அரவணை துயின்றானுங்
      கழலுஞ் சென்னியுங் காண்பரி தாயவர்
      மாண்பமர் தடக்கையில்
      மழலை வீணையர் மகிழ்திரு வலஞ்சுழி
      வலங்கொடு பாதத்தால்
      சுழலு மாந்தர்கள் தொல்வினை யதனொடு
      துன்பங்கள் களைவாரே. 09
      1156 அறிவி லாதவன் சமணர்கள் சாக்கியர்
      தவம்புரி தவஞ்செய்வார்
      நெறிய லாதன கூறுவர் மற்றவை
      தேறன்மின் மாறாநீர்
      மறியு லாந்திரை காவிரி வலஞ்சுழி
      மருவிய பெருமானை
      பிறிவி லாதவர் பெறுகதி பேசிடில்
      அளவறு பொண்ணாதே. 10
      1157 மாதொர் கூறனை வலஞ்சுழி மருவிய
      மருந்தினை வயற்காழி
      நாதன் வேதியன் ஞானசம் பந்தன்வாய்
      நவிற்றிய தமிழ்மாலை
      ஆத ரித்திசை கற்றுவல் லார்சொல
      கேட்டுக தவர்தம்மை
      வாதி யாவினை மறுமைக்கும் இம்மைக்கும்
      வருத்தம்வ தடையாவே. 11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - சித்தீசநாதர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.107 திருக்கேதீச்சரம்
      பண் - நட்டராகம்
      திருச்சிற்றம்பலம்
      1158 விருது குன்றமா மேருவில் நாணர
      வாவனல் எரியம்பா
      பொருது மூவெயில் செற்றவன் பற்றிநின்
      றுறைபதி யெந்நாளுங்
      கருது கின்றவூர் கனைகடற் கடிகமழ்
      பொழிலணி மாதோட்டங்
      கருத நின்றகே தீச்சரங் கைதொழ
      கடுவினை யடையாவே. 01
      1159 பாடல் வீணையர் பலபல சரிதையர்
      எருதுகை தருநட்டம்
      ஆடல் பேணுவர் அமரர்கள் வேண்டநஞ்
      சுண்டிருள் கண்டத்தர்
      ஈட மாவது இருங்கடற் கரையினில்
      எழில்திகழ் மாதோட்டம்
      கேடி லாதகே தீச்சரங் கைதொழ
      கெடுமிடர் வினைதானே. 02
      1160 பெண்ணொர் பாகத்தர் பிறைதவழ் சடையினர்
      அறைகழல் சிலம்பார்க்க
      சுண்ண மாதரி தாடுவர் பாடுவர்
      அகந்தொறும் இடுபிச்சை
      குண்ண லாவதோர் இச்சையி னுழல்பவர்
      உயர்தரு மாதோட்ட
      தண்ணல் நண்ணுகே தீச்சரம் அடைபவர
      கருவினை யடையாவே. 03
      1161 பொடிகொள் மேனியர் புலியத ளரையினர்
      விரிதரு கரத்தேந்தும்
      வடிகொள் மூவிலை வேலினர் நூலினர்
      மறிகடல் மாதோட்ட
      தடிக ளாதரி திருந்தகே தீச்சரம்
      பரிந்தசி தையராகி
      முடிகள் சாய்த்தடி பேணவல் லார்தம்மேல்
      மொய்த்தெழும் வினைபோமே. 04
      1162 நல்ல ராற்றவும் ஞானநன் குடையர்தம்
      மடைந்தவர கருளீய
      வல்லர் பார்மிசை வான்பிற பிறப்பிலர்
      மலிகடல் மாதோட்ட
      தெல்லை யில்புகழ் எந்தைகே தீச்சரம்
      இராப்பகல் நினைந்தேத்தி
      அல்லல் ஆசறு தரனடி யிணைதொழும்
      அன்பராம் அடியாரே. 05
      1163 பேழை வார்சடை பெருந்திரு மகள்தனை
      பொருந்தவை தொருபாகம்
      மாழை யங்கயற் கண்ணிபா லருளிய
      பொருளினர் குடிவாழ்க்கை
      வாழை யம்பொழில் மந்திகள் களிப்புற
      மருவிய மாதோட்ட
      கேழல் வெண்மரு பணிந்தநீள் மார்பர்கே
      தீச்சரம் பிரியாரே. 06
      1164 பண்டு நால்வரு கறமுரை தருளிப்பல்
      லுலகினில் உயிர்வாழ்க்கை
      கண்ட நாதனார் கடலிடங் கைதொழ
      காதலி துறைகோயில்
      வண்டு பண்செயு மாமலர பொழில்மஞ்ஞை
      நடமிடு மாதோட்ட
      தொண்டர் நாடொறு துதிசெய அருள்செய்கே
      தீச்சர மதுதானே. 07
      1165 தென்னி லங்கையர் குலபதி மலைநலி
      தெடுத்தவன் முடிதிண்டோ ள்
      தன்ன லங்கெட அடர்த்தவற் கருள்செய்த
      தலைவனார் கடல்வா
      பொன்னி லங்கிய முத்துமா மணிகளும்
      பொருந்திய மாதோட்ட
      துன்னி யன்பொடும் அடியவ ரிறைஞ்சுகே
      தீச்சர துள்ளாரே. 08
      1166 பூவு ளானு பொருகடல் வண்ணனும்
      புவியிட தெழுந்தோடி
      மேவி நாடிநின் அடியிணை காண்கிலா
      வித்தக மென்னாகும்
      மாவும் பூகமுங் கதலியும் நெருங்குமா
      தோட்டநன் னகர்மன்னி
      தேவி தன்னொடு திருந்துகே தீச்சர
      திருந்தஎம் பெருமானே. 09
      1167 புத்த ராய்ச்சில புனைதுகி லுடையவர்
      புறனுரை சமணாதர்
      எத்த ராகிநின் றுண்பவ ரியம்பிய
      ஏழைமை கேலேன்மின்
      மத்த யானையை மறுகிட உரிசெய்து
      போர்த்தவர் மாதோட்ட
      தத்தர் மன்னுபா லாவியின் கரையிற்கே
      தீச்சரம் அடைமின்னே. 10
      1168 மாடெ லாமண முரசென கடலின
      தொலிகவர் மாதோட்ட
      தாட லேறுடை அண்ணல்கே தீச்சர
      தடிகளை யணிகாழி
      நாடு ளார்க்கிறை ஞானசம் பந்தன்சொல்
      நவின்றெழு பாமாலை
      பாட லாயின பாடுமின் பத்தர்காள்
      பரகதி பெறலாமே. 11
      இத்தலம் ஈழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - கேதீச்சுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.108 திருவிற்குடிவீரட்டானம்
      பண் - நட்டராகம்
      திருச்சிற்றம்பலம்
      1169 வடிகொள் மேனியர் வானமா மதியினர்
      நதியினர் மதுவார்ந்த
      கடிகொள் கொன்றையஞ் சடையினர் கொடியினர்
      உடைபுலி யதளார்ப்பர்
      விடைய தேறும்எம் மானமர தினிதுறை
      விற்குடி வீரட்டம்
      அடிய ராகிநின் றேத்தவல் லார்தமை
      அருவினை யடையாவே. 01
      1170 களங்கொள் கொன்றையுங் கதிர்விரி மதியமுங்
      கடிகமழ் சடைக்கேற்றி
      உளங்கொள் பத்தர்பால் அருளிய பெருமையர்
      பொருகரி யுரிபோர்த்து
      விளங்கு மேனியர் எம்பெரு மானுறை
      விற்குடி வீரட்டம்
      வளங்கொள் மாமல ரால்நினை தேத்துவார்
      வருத்தம தறியாரே. 02
      1171 கரிய கண்டத்தர் வெளியவெண் பொடியணி
      மார்பினர் வலங்கையில்
      எரியர் புன்சடை யிடம்பெற காட்டக
      தாடிய வேடத்தர்
      விரியும் மாமலர பொய்கைசூழ் மதுமலி
      விற்குடி வீரட்டம்
      பிரிவி லாதவர் பெருந்தவ தோரென
      பேணுவ ருலகத்தே. 03
      1172 பூதஞ் சேர்ந்திசை பாடலர் ஆடலர்
      பொலிதர நலமார்ந்த
      பாதஞ் சேரிணை சிலம்பினர் கலம்பெறு
      கடலெழு விடமுண்டார்
      வேத மோதிய நாவுடை யானிடம்
      விற்குடி வீரட்டஞ்
      சேரும் நெஞ்சினர கல்லதுண் டோ பிணி
      தீவினை கெடுமாறே. 04
      1173 கடிய ஏற்றினர் கனலன மேனியர்
      அனலெழ வூர்மூன்றும்
      இடிய மால்வரை கால்வளை தான்றன
      தடியவர் மேலுள்ள
      வெடிய வல்வினை வீட்டுவி பானுறை
      விற்குடி வீரட்டம்
      படிய தாகவே பரவுமின் பரவினாற்
      பற்றறும் அருநோயே. 05
      1174 பெண்ணொர் கூறினர் பெருமையர் சிறுமறி
      கையினர் மெய்யார்ந்த
      அண்ண லன்புசெய் வாரவர கெளியவர்
      அரியவர் அல்லார்க்கு
      விண்ணி லார்பொழில் மல்கிய மலர்விரி
      விற்குடி வீரட்டம்
      எண்ணி லாவிய சிந்தையி னார்த
      கிடர்கள்வ தடையாவே. 06
      இப்பதிகத்தின் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 07
      1175 இடங்கொள் மாகடல் இலங்கையர் கோன்றனை
      யிகலழி தரவூன்று
      திடங்கொள் மால்வரை யானுரை யார்தரு
      பொருளினன் இருளார்ந்த
      விடங்கொள் மாமிட றுடையவ னுறைபதி
      விற்குடி வீரட்ட
      தொடங்கு மாறிசை பாடிநின் றார்தமை
      துன்பநோ யடையாவே. 08
      1176 செங்கண் மாலொடு நான்முகன் தேடியு
      திருவடி யறியாமை
      எங்கு மாரெரி யாகிய இறைவனை
      யறைபுனல் முடியார்ந்த
      வெங்கண் மால்வரை கரியுரி துகந்தவன்
      விற்குடி வீரட்ட
      தங்கை யாற்றொழு தேத்தவல் லாரவர்
      தவமல்கு குணத்தாரே. 09
      1177 பிண்ட முண்டுழல் வார்களும் பிரிதுவ
      ராடைய ரவர்வார்த்தை
      பண்டு மின்றுமோர் பொருளென கருதன்மின்
      பரிவுறு வீர்கேண்மின்
      விண்ட மாமலர சடையவ னிடமெனில்
      விற்குடி வீரட்டங்
      கண்டு கொண்டடி காதல்செய் வாரவர்
      கருத்துறுங் குணத்தாரே. 10
      1178 விலங்க லேசிலை யிடமென வுடையவன்
      விற்குடி வீரட்ட
      திலங்கு சோதியை எம்பெரு மான்றனை
      யெழில்திகழ் கழல்பேணி
      நலங்கொள் வாழ்பொழிற் காழியுள் ஞானசம்
      பந்தனற் றமிழ்மாலை
      வலங்கொ டேயிசை மொழியுமின் மொழிந்தக்கால்
      மற்றது வரமாமே. 11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - வீரட்டானேசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.109 திருக்கோட்டூர்
      பண் - நட்டராகம்
      திருச்சிற்றம்பலம்
      1179 நீல மார்தரு கண்டனே நெற்றியோர்
      கண்ணனே ஒற்றைவிடை
      சூல மார்தரு கையனே துன்றுபைம்
      பொழில்கள்சூழ தழகாய
      கோல மாமலர் மணங்கமழ் கோட்டூர்நற்
      கொழுந்தேயென் றெழுவார்கள்
      சால நீள்தல மதனிடை புகழ்மிக
      தாங்குவர் பாங்காலே. 01
      1180 பங்க யம்மலர சீறடி பஞ்சுறு
      மெல்விர லரவல்குல்
      மங்கை மார்பலர் மயில்குயில் கிளியென
      மிழற்றிய மொழியார்மென்
      கொங்கை யார்குழாங் குணலைசெய் கோட்டூர்நற்
      கொழுந்தேயென் றெழுவார்கள்
      சங்கை யொன்றில ராகிச்சங் கரன்திரு
      அருள்பெறல் எளிதாமே. 02
      1181 நம்ப னார்நல மலர்கொடு தொழுதெழும்
      அடியவர் தமக்கெல்லாஞ்
      செம்பொ னார்தரும் எழில்திகழ் முலையவர்
      செல்வமல் கியநல்ல
      கொம்ப னார்தொழு தாடிய கோட்டூர்நற்
      கொழுந்தேயென் றெழுவார்கள்
      அம்பொ னார்தரு முலகினில் அமரரோ
      டமர்ந்தினி திருப்பாரே. 03
      1182 பலவு நீள்பொழில் தீங்கனி தேன்பலா
      மாங்கனி பயில்வாய
      கலவ மஞ்ஞைகள் நிலவுசொற் கிள்ளைகள்
      அன்னஞ்சேர தழகாய
      குலவு நீள்வயல் கயலுகள் கோட்டூர்நற்
      கொழுந்தேயென் றெழுவார்கள்
      நிலவு செல்வத்த ராகிநீள் நிலத்திடை
      நீடிய புகழாரே. 04
      1183 உருகு வாருள்ள தொண்சுடர் தனக்கென்றும்
      அன்பராம் அடியார்கள்
      பருகும் ஆரமு தெனநின்று பரிவொடு
      பத்திசெய் தெத்திசையுங்
      குருகு வாழ்வயல் சூழ்தரு கோட்டூர்நற்
      கொழுந்தேயென் றெழுவார்கள்
      அருகு சேர்தரு வினைகளும் அகலும்போய்
      அவனருள் பெறலாமே. 05
      1184 துன்று வார்சடை தூமதி மத்தமு
      துன்னெரு கார்வன்னி
      பொன்றி னார்தலை கலனொடு பரிகலம்
      புலியுரி யுடையாடை
      கொன்றை பொன்னென மலர்தரு கோட்டூர்நற்
      கொழுந்தேயென் றெழுவாரை
      என்று மேத்துவார கிடரிலை கேடிலை
      ஏதம்வ தடையாவே. 06
      1185 மாட மாளிகை கோபுரங் கூடங்கள்
      மணியரங் கணிசாலை
      பாடு சூழ்மதிற் பைம்பொன்செய் மண்டபம்
      பரிசொடு பயில்வாய
      கூடு பூம்பொழில் சூழ்தரு கோட்டூர்நற்
      கொழுந்தேயென் றெழுவார்கள்
      கேட தொன்றில ராகிநல் லுலகினிற்
      கெழுவுவர் புகழாலே. 07
      1186 ஒளிகொள் வாளெயிற் றரக்கனவ் வுயர்வரை
      யெடுத்தலும் உமையஞ்சி
      சுளிய வூன்றலுஞ் சோர்ந்திட வாளொடு
      நாளவற் கருள்செய்த
      குளிர்கொள் பூம்பொழில் சூழ்தரு கோட்டூர்நற்
      கொழுந்தினை தொழுவார்கள்
      தளிர்கொள் தாமரை பாதங்கள் அருள்பெறு
      தவமுடை யவர்தாமே. 08
      1187 பாடி யாடுமெ பத்தர்க கருள்செயும்
      முத்தினை பவளத்தை
      தேடி மாலயன் காணவொண் ணாதவ
      திருவினை தெரிவைமார்
      கூடி யாடவர் கைதொழு கோட்டூர்நற்
      கொழுந்தேயென் றெழுவார்கள்
      நீடு செல்வத்த ராகியிவ் வுலகினில்
      நிகழ்தரு புகழாரே. 09
      1188 கோணல் வெண்பிறை சடையனை கோட்டூர்நற்
      கொழுந்தினை செழுந்திரளை
      பூணல் செய்தடி போற்றுமின் பொய்யிலா
      மெய்யன்நல் லருளென்றுங்
      காண லொன்றிலா காரமண் தேரர்குண்
      டாக்கர்சொற் கருதாதே
      பேணல் செய்தர னைத்தொழும் அடியவர்
      பெருமையை பெறுவாரே. 10
      1189 பந்து லாவிரற் பவளவா தேன்மொழி
      பாவையோ டுருவாருங்
      கொந்து லாமலர் விரிபொழிற் கோட்டூர்நற்
      கொழுந்தினை செழும்பவளம்
      வந்து லாவிய காழியுள் ஞானசம்
      பந்தன்வா துரைசெய்த
      சந்து லாந்தமிழ் மாலைகள் வல்லவர்
      தாங்குவர் புகழாலே. 11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - கொழுந்தீசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.110 திருமாந்துறை
      பண் - நட்டராகம்
      திருச்சிற்றம்பலம்
      1190 செம்பொ னார்தரு வேங்கையும் ஞாழலுஞ்
      செருந்திசெண் பகமானை
      கொம்பும் ஆரமும் மாதவி சுரபுனை
      குருந்தலர் பரந்துந்தி
      அம்பொன் நேர்வரு காவிரி வடகரை
      மாந்துறை யுறைகின்ற
      எம்பி ரானிமை யோர்தொழு பைங்கழ
      லேத்துதல் செய்வோமே. 01
      1191 விளவு தேனொடு சாதியின் பலங்களும்
      வேய்மணி நிரந்துந்தி
      அளவி நீர்வரு காவிரி வடகரை
      மாந்துறை உறைவான
      துளவ மால்மக னைங்கணை காமனை
      சுடவிழி தவனெற்றி
      அளக வாணுதல் அரிவைதன் பங்கனை
      யன்றிமற் றறியோமே. 02
      1192 கோடு தேன்சொரி குன்றிடை பூகமுங்
      கூந்தலின் குலைவாரி
      ஓடு நீர்வரு காவிரி வடகரை
      மாந்துறை யுறைநம்பன்
      வாடி னார்தலை யிற்பலி கொள்பவன்
      வானவர் மகிழ்ந்தேத்துங்
      கேடி லாமணி யைத்தொழ லல்லது
      கெழுமுதல் அறியோமே. 03
      1193 இலவ ஞாழலும் ஈஞ்சொடு சுரபுன்னை
      இளமரு திலவங்கங்
      கலவி நீர்வரு காவிரி வடகரை
      மாந்துறை யுறைகண்டன்
      அலைகொள் வார்புனல் அம்புலி மத்தமும்
      ஆடர வுடன்வைத்த
      மலையை வானவர் கொழுந்தினை யல்லது
      வணங்குதல் அறியோமே. 04
      1194 கோங்கு செண்பகங் குருந்தொடு பாதிரி
      குரவிடை மலருந்தி
      ஓங்கி நீர்வரு காவிரி வடகரை
      மாந்துறை யுறைவானை
      பாங்கி னாலிடு தூபமு தீபமும்
      பாட்டவி மலர்சேர்த்தி
      தாங்கு வாரவர் நாமங்கள் நாவினில்
      தலைப்படு தவத்தோரே. 05
      1195 பெருகு சந்தனங் காரகில் பீலியும்
      பெருமரம் நிமிர்ந்துந்தி
      பொருது காவிரி வடகரை மாந்துறை
      புனிதனெம் பெருமானை
      பரிவி னாலிரு திரவியும் மதியமும்
      பார்மன்னர் பணிந்தேத்த
      மருத வானவர் வழிபடு மலரடி
      வணங்குதல் செய்வோமே. 06
      1196 நறவ மல்லிகை முல்லையும் மௌவலும்
      நாண்மல ரவைவாரி
      இறவில் வந்தெறி காவிரி வடகரை
      மாந்துறை யிறைஅன்றங்
      கறவ னாகிய கூற்றினை சாடிய
      அந்தணன் வரைவில்லால்
      நிறைய வாங்கி வலித்தெயி லெய்தவன்
      நிரைகழல் பணிவோமே. 07
      1197 மந்த மார்பொழில் மாங்கனி மாந்திட
      மந்திகள் மாணிக்கம்
      உந்தி நீர்வரு காவிரி வடகரை
      மாந்துறை யுறைவானை
      நிந்தி யாவெடு தார்த்தவல் லரக்கனை
      நெரித்திடு விரலானை
      சிந்தி யாமன தாரவர் சேர்வது
      தீநெறி யதுதானே. 08
      1198 நீல மாமணி நித்தில தொத்தொடு
      நிரைமலர் நிரந்துந்தி
      ஆலி யாவரு காவிரி வடகரை
      மாந்துறை யமர்வானை
      மாலு நான்முகன் தேடியுங் காண்கிலா
      மலரடி யிணைநாளுங்
      கோல மேத்திநின் றாடுமின் பாடுமின்
      கூற்றுவன் நலியானே. 09
      1199 நின்று ணுஞ்சமண் தேரரும் நிலையிலர்
      நெடுங்கழை நறவேலம்
      நன்று மாங்கனி கதலியின் பலங்களும்
      நாணலின் நுரைவாரி
      ஒன்றி நேர்வரு காவிரி வடகரை
      மாந்துறை யொருகாலம்
      அன்றி யுள்ளழி தெழும்பரி சழகிது
      அதுவவர கிடமாமே. 10
      1200 வரைவ ளங்கவர் காவிரி வடகரை
      மாந்துறை யுறைவானை
      சிரபு ரம்பதி யுடையவன் கவுணியன்
      செழுமறை நிறைநாவன்
      அரவெ னும்பணி வல்லவன் ஞானசம்
      பந்தனன் புறுமாலை
      பரவி டுந்தொழில் வல்லவர் அல்லலும்
      பாவமும் இலர்தாமே. 11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - ஐராவணேசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.111 திருவாய்மூர்
      பண் - நட்டராகம்
      திருச்சிற்றம்பலம்
      1201 தளிரிள வளரென உமைபாட
      தாள மிடவோர் கழல்வீசி
      கிளரிள மணியர வரையார
      தாடும் வேட கிறிமையார்
      விளரிள முலையவர கருள்நல்கி
      வெண்ணீ றணிந்தோர் சென்னியின்மேல்
      வளரிள மதியமொ டிவராணீர்
      வாய்மூ ரடிகள் வருவாரே. 01
      1202 வெந்தழல் வடிவினர் பொடிப்பூசி
      விரிதரு கோவண வுடைமேலோர்
      பந்தஞ்செய் தரவசை தொலிபாடி
      பலபல கடைதொறும் பலிதேர்வார்
      சிந்தனை புகுந்தென கருள்நல்கி
      செஞ்சுடர் வண்ணர்தம் மடிபரவ
      வந்தனை பலசெய இவராணீர்
      வாய்மூ ரடிகள் வருவாரே. 02
      1203 பண்ணிற் பொலிந்த வீணையர்
      பதினெண் கணமு முணராநஞ்
      சுண்ண பொலிந்த மிடற்றினார்
      உள்ள முருகி லுடனாவார்
      சுண்ண பொடிநீ றணிமார்பர்
      சுடர்பொற் சடைமேல் திகழ்கின்ற
      வண்ண பிறையோ டிவராணீர்
      வாய்மூ ரடிகள் வருவாரே. 03
      1204 எரிகிளர் மதியமொ டெழில்நுதல்மேல்
      எறிபொறி யரவினொ டாறுமூழ்க
      விரிகிளர் சடையினர் விடையேறி
      வெருவவ திடர்செய்த விகிர்தனார்
      புரிகிளர் பொடியணி திருவகலம்
      பொன்செய்த வாய்மையர் பொன்மிளிரும்
      வரியர வரைக்கசை திவராணீர்
      வாய்மூ ரடிகள் வருவாரே. 04
      1205 அஞ்சன மணிவணம் எழில்நிறமா
      வகமிட றணிகொள வுடல்திமில
      நஞ்சினை யமரர்கள் அமுதமென
      நண்ணிய நறுநுதல் உமைநடுங்க
      வெஞ்சின மால்களி யானையின்தோல்
      வெருவுற போர்த்ததன் நிறமுமஃதே
      வஞ்சனை வடிவினோ டிவராணீர்
      வாய்மூ ரடிகள் வருவாரே. 05
      1206 அல்லிய மலர்புல்கு விரிகுழலார்
      கழலிணை யடிநிழ லவைபரவ
      எல்லியம் போதுகொண் டெரியேந்தி
      யெழிலொடு தொழிலவை யிசையவல்லார்
      சொல்லிய அருமறை யிசைபாடி
      சூடிள மதியினர் தோடுபெய்து
      வல்லி தோலுடு திவராணீர்
      வாய்மூ ரடிகள் வருவாரே. 06
      1207 கடிபடு கொன்றைநன் மலர்திகழுங்
      கண்ணியர் விண்ணவர் கனமணிசேர்
      முடிபில்கும் இறையவர் மறுகின்நல்லார்
      முறைமுறை பலிபெய முறுவல்செய்வார்
      பொடியணி வடிவொடு திருவகலம்
      பொன்னென மிளிர்வதோர் அரவினொடும்
      வடிநுனை மழுவினொ டிவராணீர்
      வாய்மூ ரடிகள் வருவாரே. 07
      1208 கட்டிணை புதுமலர் கமழ்கொன்றை
      கண்ணியர் வீணையர் தாமுமஃதே
      எட்டுணை சாந்தமொ டுமைதுணையா
      இறைவனா ருறைவதோ ரிடம்வினவில்
      பட்டிணை யகலல்குல் விரிகுழலார்
      பாவையர் பலியெதிர் கொணர்ந்துபெய்ய
      வட்டணை யாடலொ டிவராணீர்
      வாய்மூ ரடிகள் வருவாரே. 08
      1209 ஏனம ருப்பினொ டெழிலாமை
      யிசை பூண்டோ ரேறேறி
      கானம திடமா வுறைகின்ற
      கள்வர் கனவில் துயர்செய்து
      தேனுண மலர்கள் உந்திவிம்மி
      திகழ்பொற் சடைமேல் திகழ்கின்ற
      வானநன் மதியினோ டிவராணீர்
      வாய்மூ ரடிகள் வருவாரே. 09
      1210 சூடல்வெண் பிறையினர் சுடர்முடியர்
      சுண்ணவெண் ணீற்றினர் சுடர்மழுவர்
      பாடல்வண் டிசைமுரல் கொன்றையந்தார்
      பாம்பொடு நூலவை பசைந்திலங
      கோடனன் முகிழ்விரல் கூப்பிநல்லார்
      குறையுறு பலியெதிர் கொணர்ந்துபெய்ய
      வாடல்வெண் டலைபிடி திவராணீர்
      வாய்மூ ரடிகள் வருவாரே. 10
      1211 திங்களோ டருவரை பொழிற்சோலை
      தேனலங் கானல திருவாய்மூர்
      அங்கமோ டருமறை யொலிபாடல்
      அழல்நிற வண்ணர்தம் மடிபரவி
      நங்கள்தம் வினைகெட மொழியவல்ல
      ஞானசம் பந்தன் தமிழ்மாலை
      தங்கிய மனத்தினால் தொழுதெழுவார்
      தமர்நெறி யுலகுக்கோர் தவநெறியே. 11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - வாய்மூரீசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.112 திருஆடானை
      பண் - நட்டராகம்
      திருச்சிற்றம்பலம்
      1212 மாதோர் கூறுக தேற தேறிய
      ஆதியா னுறை ஆடானை
      போதினாற் புனை தேத்து வார்தமை
      வாதியா வினை மாயுமே. 01
      1213 வாடல் வெண்டலை அங்கை யேந்திநின்
      றாடலா னுறை ஆடானை
      தோடுலா மலர் தூவி கைதொழ
      வீடும் நுங்கள் வினைகளே. 02
      1214 மங்கை கூறினன் மான்ம றியுடை
      அங்கை யானுறை ஆடானை
      தங்கை யாற்றொழு தேத்த வல்லவர்
      மங்கு நோய்பிணி மாயுமே. 03
      1215 சுண்ண நீறணி மார்பிற் றோல்புனை
      அண்ண லானுறை ஆடானை
      வண்ண மாமலர் தூவி கைதொழ
      எண்ணு வாரிடர் ஏகுமே. 04
      1216 கொய்ய ணிம்மலர கொன்றை சூடிய
      ஐயன் மேவிய ஆடானை
      கைய ணிம்மல ரால்வ ணங்கிட
      வெய்ய வல்வினை வீடுமே. 05
      1217 வானி ளம்மதி மல்கு வார்சடை
      ஆனஞ் சாடலன் ஆடானை
      தேன ணிம்மலர் சேர்த்த முன்செய்த
      ஊன முள்ள வொழியுமே. 06
      1218 துலங்கு வெண்மழு வேந்தி சூழ்சடை
      அலங்க லானுறை ஆடானை
      நலங்கொள் மாமலர் தூவி நாடொறும்
      வலங்கொள் வார்வினை மாயுமே. 07
      1219 வெந்த நீறணி மார்பிற் றோல்புனை
      அந்த மில்லவன் ஆடானை
      கந்த மாமலர் தூவி கைதொழுஞ்
      சிந்தை யார்வினை தேயுமே. 08
      1220 மறைவல் லாரொடு வான வர்தொழு
      தறையு தண்புனல் ஆடானை
      உறையும் ஈசனை யே தீவினை
      பறையும் நல்வினை பற்றுமே. 09
      1221 மாய னும்மல ரானுங் கைதொழ
      ஆய அந்தணன் ஆடானை
      தூய மாமலர் தூவி கைதொழ
      தீய வல்வினை தீருமே. 10
      1222 வீடி னார்மலி வேங்க டத்துநின்
      றாட லானுறை ஆடானை
      நாடி ஞானசம் பந்தன் செந்தமிழ்
      பாட நோய்பிணி பாறுமே. 11
      இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - ஆதிரத்தினேசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.113 சீகாழி
      பண் - செவ்வழி
      திருச்சிற்றம்பலம்
      1223 பொடியிலங்கு திருமேனி யாளர்புலி யதளினர்
      அடியிலங்குங் கழலார்க்க ஆடும்மடி கள்ளிடம்
      இடியிலங்குங் குரலோதம் மல்கவ்வெறி வார்திரை
      கடியிலங்கும் புனல்மு தலைக்குங்கடற் காழியே. 01
      1224 மயலிலங்கு துயர்மா சறுப்பானரு தொண்டர்கள்
      அயலிலங்க பணிசெய்ய நின்றவ்வடி கள்ளிடம்
      புயலிலங்குங் கொடையாளர் வேதத்தொலி பொலியவே
      கயலிலங்கும் வயற்கழனி சூழுங்கடற் காழியே. 02
      1225 கூர்விலங்கு திருசூல வேலர்குழை காதினர்
      மார்விலங்கும் புரிநூலு கந்தம்மண வாளனூர்
      நேர்விலங்கல் லனதிரைகள் மோதந்நெடு தாரைவா
      கார்விலங்கல் லெனக்கல தொழுகுங்கடற் காழியே. 03
      1226 குற்றமில்லார் குறைபாடு செய்வார்பழி தீர்ப்பவர்
      பெற்றநல்ல கொடிமுன் னுயர்த்தபெரு மானிடம்
      மற்றுநல்லார் மனத்தா லினியார்மறை கலையெலாங்
      கற்றுநல்லார் பிழைதெரி தளிக்குங்கடற் காழியே. 04
      1227 விருதிலங்குஞ் சரிதைத்தொழி லார்விரி சடையினார்
      எருதிலங்க பொலிந்தேறும் எந்தைக்கிட மாவது
      பெரிதிலங்கும் மறைகிளைஞர் ஓதப்பிழை கேட்டலாற்
      கருதுகிள்ளை குலந்தெரிந்து தீர்க்குங்கடற் காழியே. 05
      1228 தோடிலங்குங் குழைக்காதர் வேதர்சுரும் பார்மலர
      பீடிலங்குஞ் சடைப்பெருமை யாளர்க்கிட மாவது
      கோடிலங்கும் பெரும்பொழில்கள் மல்கப்பெருஞ் செந்நெலின்
      காடிலங்கும் வயல்பயிலும் அந்தண்கடற் காழியே. 06
      1229 மலையிலங்குஞ் சிலையாக வேகம்மதில் மூன்றெரி
      தலையிலங்கும் புனற்கங்கை வைத்தவ்வடி கட்கிடம்
      இலையிலங்கும் மலர்க்கைதை கண்டல்வெறி விரவலால்
      கலையிலங்குங் கணத்தினம் பொலியுங்கடற் காழியே. 07
      1230 முழுதிலங்கும் பெரும்பாருள் வாழும்முரண் இலங்கைக்கோன்
      அழுதிரங்க சிரமுர மொடுங்கவ்வடர தாங்கவன்
      தொழுதிரங்க துயர்தீர துகந்தார கிடமாவது
      கழுதும்புள்ளும் மதிற்புறம தாருங்கடற் காழியே. 08
      1231 பூவினானும் விரிபோதின் மல்குந்திரு மகள்தனை
      மேவினானும் வியந்தேத்த நீண்டாரழ லாய்நிறை
      தோவியங்கே யவர்க்கருள் புரிந்தவ்வொரு வர்க்கிடங்
      காவியங்கண் மடமங்கை யர்சேர்கடற் காழியே. 09
      1232 உடைநவின்றா ருடைவி டுழல்வாரிரு தவத்தார்
      முடைநவின்றம் மொழியொழி துகந்தம்முதல் வன்னிடம்
      மடைநவின்ற புனற்கெண்டை பாயும்வயல் மலிதர
      கடைநவின்ற நெடுமாட மோங்குங்கடற் காழியே. 10
      1233 கருகுமுந்நீர் திரையோத மாருங்கடற் காழியுள்
      உரகமாருஞ் சடையடிகள் தம்பாலுணர துறுதலாற்
      பெருகமல்கும் புகழ்பேணு தொண்டர்க்கிசை யார்தமிழ்
      விரகன்சொன்ன இவைபாடி யாடக்கெடும் வினைகளே. 11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.114 திருக்கேதாரம்
      பண் - செவ்வழி
      திருச்சிற்றம்பலம்
      1234 தொண்டரஞ்சுங் களிறு மடக்கி சுரும்பார்மலர்
      இண்டைகட்டி வழிபாடு செய்யுமிட மென்பரால்
      வண்டுபாட மயிலால மான்கன்று துள்ளவரி
      கெண்டைபா சுனைநீல மொட்டலருங் கேதாரமே. 01
      1235 பாதம்விண் ணோர்பலரும் பரவிப்பணி தேத்தவே
      வேதநான்கும் பதினெட்டொ டாறும்விரி தார்க்கிட
      தாதுவிண்ட மதுவுண்டு மிண்டிவரு வண்டினங்
      கீதம்பாட மடமந்தி கேட்டுகளுங் கேதாரமே. 02
      1236 முந்திவந்து புரோதாய மூழ்கிம் முனிகள்பலர்
      எந்தைபெம்மா னெனநின் றிறைஞ்சுமிட மென்பரால்
      மந்திபா சரேல சொரிந்தும் முரிந்துக்கபூ
      கெந்தநாற கிளருஞ் சடையெந்தை கேதாரமே. 03
      1237 உள்ளமிக்கார் குதிரைம் முகத்தாரொரு காலர்கள்
      எள்கலில்லா இமையோர்கள் சேரும்மிட மென்பரால்
      பிள்ளைதுள்ளி கிளைபயில்வ கேட்டுப்பிரி யாதுபோ
      கிள்ளையேனற் கதிர்கொணர்ந்து வாய்ப்பெய்யுங் கேதாரமே. 04
      1238 ஊழியூழி யுணர்வார்கள் வேதத்தினொண் பொருள்களால்
      வாழியெந்தை யெனவந்தி றைஞ்சும்மிட மென்பரால்
      மேழிதாங்கி யுழுவார்கள் போலவ்விரை தேரிய
      கேழல்பூழ்தி கிளைக்க மணிசிந்துங் கேதாரமே. 05
      1239 நீறுபூசி நிலத்துண்டு நீர்மூழ்கிநீள் வரைதன்மேல்
      தேறுசிந்தை யுடையார்கள் சேரும்மிட மென்பரால்
      ஏறிமாவின் கனியும்பலா வின்னிருஞ் சுளைகளுங்
      கீறிநாளும் முசுக்கிளையோ டுண்டுகளுங் கேதாரமே. 06
      1240 மடந்தைபாக தடக்கிம் மறையோதி வானோர்தொழ
      தொடர்ந்தநம்மேல் வினைதீர்க்க நின்றார்க்கிட மென்பரால்
      உடைந்தகாற்று குயர்வேங்கை பூத்துதிர கல்லறைகண்மேல்
      கிடந்தவேங்கை சினமா முகஞ்செய்யுங் கேதாரமே. 07
      1241 அரவமுந்நீர் அணியிலங்கை கோனையரு வரைதனால்
      வெருவவூன்றி விரலாலடர தார்க்கிட மென்பரால்
      குரவங்கோங்கங் குளிர்பிண்டி ஞாழல்சுர புன்னைமேல்
      கிரமமாக வரிவண்டு பண்செய்யுங் கேதாரமே. 08
      1242 ஆழ்ந்துகாணார் உயர்ந்தெய்த கில்லாரல மந்தவர்
      தாழ்ந்துதந்தம் முடிசாய நின்றார்க்கிட மென்பரால்
      வீழ்ந்துசெற்று நிழற்கிறங்கும் வேழத்தின்வெண் மருப்பினை
      கீழ்ந்துசிங்கங் குருகுண்ண முத்துதிருங் கேதாரமே. 09
      1243 கடுக்கள்தின்று கழிமீன்கவர் வார்கள் மாசுடம்பினர்
      இடுக்கணுய்ப்பா ரவரெய்த வொண்ணாவிட மென்பரால்
      அடுக்கநின்றவ் வறவுரைகள் கேட்டாங்கவர் வினைகளை
      கெடுக்கநின்ற பெருமான் உறைகின்ற கேதாரமே. 10
      1244 வாய்ந்தசெந்நெல் விளைகழனி மல்கும்வயற் காழியான்
      ஏய்ந்தநீர்க்கோ டிமையோர் உறைகின்ற கேதாரத்தை
      ஆய்ந்துசொன்ன அருந்தமிழ்கள் பத்தும்மிசை வல்லவர்
      வேந்தராகி யுலகாண்டு வீடு கதிபெறுவரே. 11
      இத்தலம் வடதேசத்திலுள்ளது.
      சுவாமிபெயர் - கேதாரேசுவரர்
      தேவியார் - கௌரியம்மை.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.115 திருப்புகலூர்
      பண் - செவ்வழி
      திருச்சிற்றம்பலம்
      1245 வெங்கள்விம்மு குழலிளைய ராடவ்வெறி விரவுநீர
      பொங்குசெங்க கருங்கயல்கள் பாயும்புக லூர்தனுள்
      திங்கள்சூடி திரிபுரமோ ரம்பாலெரி யூட்டிய
      எங்கள்பெம்மான் அடிபரவ நாளும்மிடர் கழியுமே. 01
      1246 வாழ்ந்தநாளும் மினிவாழு நாளும்மிவை யறிதிரேல்
      வீழ்ந்தநாளெம் பெருமானை யேத்தாவிதி யில்லிகாள்
      போழ்ந்ததிங்க புரிசடையி னான்றன்புக லூரையே
      சூழ்ந்தவுள்ளம் உடையீர்காள் உங்கள்துயர் தீருமே. 02
      1247 மடையின்நெய்தல் கருங்குவளை செய்யம்மலர தாமரை
      புடைகொள்செந்நெல் விளைகழனி மல்கும்புக லூர்தனுள்
      தொடைகொள்கொன்றை புனைந்தானோர் பாகம்மதி சூடியை
      அடையவல்லார் அமருலகம் ஆள பெறுவார்களே. 03
      1248 பூவுந்நீரும் பலியுஞ் சுமந்துபுக லூரையே
      நாவினாலே நவின்றேத்த லோவார்செவி துளைகளால்
      யாவுங்கேளார் அவன்பெருமை யல்லால்அடி யார்கள்தாம்
      ஓவுநாளும் உணர்வொழிந்த நாளென்றுள்ளங் கொள்ளவே. 04
      1249 அன்னங்கன்னி பெடைபுல்கி யொல்கியணி நடையவா
      பொன்னங்காஞ்சி மலர்ச்சின்ன மாலும்புக லூர்தனுள்
      முன்னம்மூன்று மதிலெரித்த மூர்த்திதிறங் கருதுங்கால்
      இன்னரென்ன பெரிதரியர் ஏத்தச்சிறி தெளியரே. 05
      1250 குலவரா குலம்இலரு மாகக்குணம் புகழுங்கால்
      உலகில்நல்ல கதிபெறுவ ரேனும்மல ரூறுதேன்
      புலவமெல்லாம் வெறிகமழும் அந்தண்புக ளுர்தனுள்
      நிலவமல்கு சடையடிகள் பாதம்நினை வார்களே. 06
      1251 ஆணும்பெண்ணும் மெனநிற்ப ரேனும்மர வாரமா
      பூணுமேனும் புகலூர் தனக்கோர் பொருளாயினான்
      ஊணும்ஊரார் இடுபிச்சை யேற்றுண்டுடை கோவணம்
      பேணுமேனும் பிரானென்ப ராலெம்பெரு மானையே. 07
      1252 உய்யவேண்டில் எழுபோத நெஞ்சேயுய ரிலங்கைக்கோன்
      கைகளொல கருவரை யெடுத்தானையோர் விரலினால்
      செய்கைதோன்ற சிதைத்தருள வல்லசிவன் மேயபூம்
      பொய்கைசூழ்ந்த புகலூர் புகழ பொருளாகுமே. 08
      1253 நேமியானும் முகநான் குடையந்நெறி யண்ணலும்
      ஆமிதென்று தகைந்தேத்த போயாரழ லாயினான்
      சாமிதாதை சரணாகு மென்றுதலை சாய்மினோ
      பூமியெல்லாம் புகழ்செல்வம் மல்கும்புக லூரையே. 09
      1254 வேர்த்தமெய்யர் உருவ துடைவி டுழல்வார்களும்
      போர்த்தகூறை போதிநீழ லாரும்புக லூர்தனுள்
      தீர்த்தமெல்லாஞ் சடைக்கரந்த தேவன்திறங் கருதுங்கால்
      ஓர்த்துமெய்யென் றுணராது பாதந்தொழு துய்ம்மினே. 10
      1255 புந்தியார்ந்த பெரியோர்கள் ஏத்தும்புக லூர்தனுள்
      வெந்தசாம்பற் பொடிப்பூச வல்லவிடை யூர்தியை
      அந்தமில்லா அனலாட லானையணி ஞானசம்
      பந்தன்சொன்ன தமிழ்பாடி யாடக்கெடும் பாவமே. 11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.116 திருநாகைக்காரோணம்
      பண் - செவ்வழி
      திருச்சிற்றம்பலம்
      1256 கூனல்திங்க குறுங்கண்ணி கான்றந்நெடு வெண்ணிலா
      வேனற்பூத்தம் மராங்கோதை யோடும்விரா வுஞ்சடை
      வானநாடன் னமரர் பெருமாற் கிடமாவது
      கானல்வேலி கழிசூழ் கடல்நாகை காரோணமே. 01
      1257 விலங்கலொன்று சிலையா மதில்மூன்றுடன் வீட்டினான்
      இலங்குகண்ட தெழிலாமை பூண்டாற் கிடமாவது
      மலங்கியோங்கிவ் வருவெண் டிரைமல்கிய மால்கடற்
      கலங்கலோதங் கழிசூழ் கடல்நாகை காரோணமே. 02
      1258 வெறிகொளாருங் கடற்கைதை நெய்தல்விரி பூம்பொழில்
      முறிகொள்ஞாழல் முடப்புன்னை முல்லைம்முகை வெண்மலர்
      நறைகொள்கொன்றை நயந்தோங்கு நாதற் கிடமாவது
      கறைகொளோதங் கழிசூழ் கடல்நாகை காரோணமே. 03
      1259 வண்டுபாடவ் வளர்கொன்றை மாலைம்மதி யோடுடன்
      கொண்டகோலங் குளிர்கங்கை தங்குங்குருள் குஞ்சியுள்
      உண்டுபோலும் மெனவை துகந்தவ்வொரு வற்கிடம்
      கண்டல்வேலி கழிசூழ் கடல்நாகை காரோணமே. 04
      1260 வார்கொள்கோலம் முலைமங்கை நல்லார்மகிழ தேத்தவே
      நீர்கொள்கோல சடைநெடுவெண் டிங்கள்நிகழ் வெய்தவே
      போர்கொள்சூல படைபுல்கு கையார கிடமாவது
      கார்கொளோதங் கழிசூழ் கடல்நாகை காரோணமே. 05
      1261 விடையதேறிவ் விடவர வசைத்த விகிர்தரவர்
      படைகொள்பூதம் பலபாட ஆடும் பரமாயவர்
      உடைகொள்வேங்கை யுரிதோ லுடையார கிடமாவது
      கடைகொள்செல்வங் கழிசூழ் கடல்நாகை காரோணமே. 06
      1262 பொய்துவாழ்வார் மனம்பாழ் படுக்கும்மலர பூசனை
      செய்துவாழ்வார் சிவன்சே வடிக்கேசெலுஞ் சிந்தையார்
      எய்தவாழ்வார் எழில்நக்க ரெம்மாற்கிட மாவது
      கைதல்வேலி கழிசூழ் கடல்நாகை காரோணமே. 07
      1263 பத்திரட்டி திரள்தோ ளுடையான்முடி பத்திற
      அத்திரட்டி விரலா லடர்த்தார கிடமாவது
      மைத்திரட்டிவ் வருவெண் டிரைமல்கிய வார்கடல்
      கைத்திரட்டுங் கழிசூழ் கடல்நாகை காரோணமே. 08
      1264 நல்லபோதில் லுறைவானும் மாலும்நடு கத்தினால்
      அல்லராவ ரெனநின்ற பெம்மாற் கிடமாவது
      மல்லலோங்கிவ் வருவெண் டிரைமல்கிய மால்கடல்
      கல்லலோதங் கழிசூழ் கடல்நாகை காரோணமே. 09
      1265 உயர்ந்தபோதின் னுருவ துடைவிட்டுழல் வார்களும்
      பெயர்ந்தமண்டை யிடுபிண்ட மாவுண்டுழல் வார்களும்
      நயந்துகாணா வகைநின்ற நாதர கிடமாவது
      கயங்கொளோதங் கழிசூழ் கடல்நாகை காரோணமே. 10
      1266 மல்குதண்பூம் புனல்வா தொழுகும்வயற் காழியான்
      நல்லகேள்வி தமிழ்ஞான சம்பந்தன் நல்லார்கள்முன்
      வல்லவாறே புனைந்தேத்துங் காரோணத்து வண்டமிழ்
      சொல்லுவார்க்கும் மிவைகே பவர்க்குந்துய ரில்லையே. 11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.117 திரு இரும்பைமாகாளம்
      பண் - செவ்வழி
      திருச்சிற்றம்பலம்
      1267 மண்டுகங்கை சடையிற் கரந்தும் மதிசூடிமான்
      கொண்டகையாற் புரம்மூன் றெரித்த குழகன்னிடம்
      எண்டிசையும் புகழ்போய் விளங்கும் இரும்பைதனுள்
      வண்டுகீதம் முரல்பொழில் சுலாய்நின்ற மாகாளமே. 01
      1268 வேதவித்தாய வெள்ளைநீறு பூசி வினையாயின
      கோதுவித்தாய நீறெழ கொடிமா மதிலாயின
      ஏதவித்தா யினதீர கும்மிடம் மிரும்பைதனுள்
      மாதவத்தோர் மறையோர் தொழநின்ற மாகாளமே. 02
      1269 வெந்தநீறு மெலும்பும் மணிந்த விடையூர்தியான்
      எந்தைபெம்மா னிடமெழில்கொள் சோலை இரும்பைதனுள்
      கந்தமாய பலவின் கனிகள் கமழும்பொழில்
      மந்தியேறி கொணர்ந்துண் டுகள்கின்ற மாகாளமே. 03
      1270 நஞ்சுகண்ட தடக்கி நடுங்கும் மலையான்மகள்
      அஞ்சவேழம் உரித்த பெருமான் அமரும்மிடம்
      எஞ்சலில்லா புகழ்போய் விளங்கும் இரும்பைதனுள்
      மஞ்சிலோங்கும் பொழில்சூழ தழகாய மாகாளமே. 04
      1271 பூசுமாசில் பொடியான் விடையான் பொருப்பன்மகள்
      கூசஆனை உரித்த பெருமான் குறைவெண்மதி
      ஈசனெங்கள் ளிறைவன் னிடம்போல் இரும்பைதனுள்
      மாசிலோர்கண் மலர்கொண் டணிகின்ற மாகாளமே. 05
      1272 குறைவதாய குளிர்திங்கள் சூடி குனித்தான்வினை
      பறைவதாக்கும் பரமன் பகவன் பரந்தசடை
      இறைவனெங்கள் பெருமான் இடம்போல் இரும்பைதனுள்
      மறைகள்வல்லார் வணங்கி தொழுகின்ற மாகாளமே. 06
      1273 பொங்குசெங்கண் ணரவும் மதியும் புரிபுன்சடை
      தங்கவைத்த பெருமா னெனநின் றவர்தாழ்விடம்
      எங்குமிச்சை யமர்ந்தான் இடம்போல் இரும்பைதனுள்
      மங்குல்தோயும் பொழில்சூழ தழகாய மாகாளமே. 07
      1274 நட்டத்தோடு நரியாடு கான தெரியாடுவான்
      அட்டமூர்த்தி அழல்போ லுருவன் னழகாகவே
      இட்டமாக இருக்கும் மிடம்போல் இரும்பைதனுள்
      வட்டஞ்சூழ்ந்து பணிவார் பிணிதீர்க்கும் மாகாளமே. 08
      1275 அட்டகாலன் றனைவவ்வி னானவ் வரக்கன்முடி
      எட்டுமற்றும் இருப திரண்டும் மிறவூன்றினான்
      இட்டமாக விருப்பா னவன்போல் இரும்பைதனுள்
      மட்டுவார்ந்த பொழில்சூழ தெழிலாரு மாகாளமே. 09
      1276 அரவமார்த்தன் றனலங்கை யேந்தி யடியும்முடி
      பிரமன்மாலும் மறியாமை நின்ற பெரியோனிடங்
      குரவமாரும் பொழிற்குயில்கள் சேரும் மிரும்பைதனுள்
      மருவிவானோர் மறையோர் தொழுகின்ற மாகாளமே. 10
      1277 எந்தைபெம்மா னிடமெழில்கொள் சோலை யிரும்பைதனுள்
      மந்தமாய பொழில்சூழ தழகாரு மாகாளத்தில்
      அந்தமில்லா அனலாடு வானை யணிஞானசம்
      பந்தன்சொன்ன தமிழ்பாட வல்லார் பழிபோகுமே. 11
      இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - மாகாளேசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.118 திருத்திலதைப்பதி - மதிமுத்தம்
      பண் - செவ்வழி
      திருச்சிற்றம்பலம்
      1278 பொடிகள்பூசி பலதொண்டர் கூடிப்புலர் காலையே
      அடிகளார தொழுதேத்த நின்றவ்வழ கன்னிடங்
      கொடிகளோங்கி குலவும் விழவார்தில தைப்பதி
      வடிகொள்சோலைம் மலர்மணங் கமழும்மதி முத்தமே. 01
      1279 தொண்டர்மிண்டி புகைவிம்மு சாந்துங்கமழ் துணையலுங்
      கொண்டுகண்டார் குறிப்புணர நின்றகுழ கன்னிட
      தெண்டிரைப்பூம் புனலரிசில் சூழ்ந்ததில தைப்பதி
      வண்டுகெண்டுற் றிசைபயிலுஞ் சோலைமதி முத்தமே. 02
      1280 அடலுளேறு துகந்தான் அடியார்அம ரர்தொழ
      கடலுள்நஞ்சம் அமுதாக வுண்டகட வுள்ளிட
      திடலடங்க செழுங்கழனி சூழ்ந்ததில தைப்பதி
      மடலுள்வாழை கனிதேன் பிலிற்றும்மதி முத்தமே. 03
      1281 கங்கைதிங்கள் வன்னிதுன் னெருக்கின்னொடு கூவிளம்
      வெங்கண்நாகம் விரிசடையில் வைத்தவிகிர் தன்னிடஞ்
      செங்கயல்பாய் புனலரிசில் சூழ்ந்ததில தைப்பதி
      மங்குல்தோயும் பொழில்சூழ தழகார்மதி முத்தமே. 04
      1282 புரவியேழும் மணிபூண் டியங்குங்கொடி தேரினான்
      பரவிநின்று வழிபாடு செய்யும்பர மேட்டியூர்
      விரவிஞாழல் விரிகோங்கு வேங்கைசுர புன்னைகள்
      மரவம்மவ்வன் மலரு திலதைமதி முத்தமே. 05
      1283 விண்ணர்வேதம் விரித்தோத வல்லார்ஒரு பாகமும்
      பெண்ணர்எண்ணார் எயில்செற் றுகந்தபெரு மானிட
      தெண்ணிலாவின் ஒளிதீண்டு சோலைத்தில தைப்பதி
      மண்ணுளார்வ தருள்பேணி நின்றமதி முத்தமே. 06
      1284 ஆறுசூடி யடையார்புரஞ் செற்றவர் பொற்றொடி
      கூறுசேரும் உருவர கிடமாவது கூறுங்கால்
      தேறலாரும் பொழில்சூழ தழகார்தில தைப்பதி
      மாறிலாவண் புனலரிசில் சூழ்ந்தமதி முத்தமே. 07
      1285 கடுத்துவந்த கனன்மேனி யினான்கரு வரைதனை
      எடுத்தவன்றன் முடிதோள் அடர்த்தார கிடமாவது
      புடைக்கொள்பூக திளம்பாளை புல்கும்மது பாயவாய்
      மடுத்துமந்தி யுகளு திலதைமதி முத்தமே. 08
      1286 படங்கொள்நாக தணையானும் பைந்தாமரை யின்மிசை
      இடங்கொள்நால் வேதனு மேத்தநின்ற இறைவன்னிட
      திடங்கொள்நாவின் னிசைதொண்டர் பாடு திலைதைப்பதி
      மடங்கல்வந்து வழிபாடு செய்யும்மதி முத்தமே. 09
      1287 புத்தர்தேரர் பொறியில் சமணர்களும் வீறிலா
      பித்தர்சொன்னம் மொழிகே கிலாதபெரு மானிடம்
      பத்தர்சித்தர் பணிவுற் றிறைஞ்சுந்தில தைப்பதி
      மத்தயானை வழிபாடு செய்யும்மதி முத்தமே. 10
      1288 மந்தமாரும் பொழில்சூழ் திலதைமதி முத்தமேற்
      கந்தமாருங் கடற்காழி யுள்ளான்தமிழ் ஞானசம்
      பந்தன்மாலை பழிதீரநின் றேத்தவல் லார்கள்போ
      சிந்தைசெய்வார் சிவன்சே வடிசேர்வது திண்ணமே. 11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - மதிமுத்தநாதேசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.119 திருநாகேச்சரம்
      பண் - செவ்வழி
      திருச்சிற்றம்பலம்
      1289 தழைகொள்சந்தும் மகிலும் மயில்பீலியுஞ் சாதியின்
      பழமுமுந்தி புனல்பாய் பழங்காவிரி தென்கரை
      நழுவில்வானோர் தொழநல்கு சீர்மல்கு நாகேச்சர
      தழகர்பாத தொழுதேத்த வல்லார்க்கழ காகுமே. 01
      1290 பெண்ணோர்பாகம் மடை சடையிற்புனல் பேணிய
      வண்ணமான பெருமான் மருவும்மிடம் மண்ணுளார்
      நண்ணிநாளு தொழுதேத்தி நன்கெய்து நாகேச்சரங்
      கண்ணினாற் காணவல்லா ரவர்கண்ணுடை யார்களே. 02
      1291 குறவர்கொல்லை புனங்கொள்ளை கொண்டும்மணி குலவுநீர்
      பறவையால பரக்கும் பழங்காவிரி தென்கரை
      நறவநாறும் பொழில்சூழ தழகாய நாகேச்சர
      திறைவர்பாத தொழுதேத்த வல்லார்க்கிட ரில்லையே. 03
      1292 கூசநோக்காது முன்சொன்ன பொய்கொடுவினை குற்றமும்
      நாசமாக்கும் மனத்தார்கள் வந்தாடு நாகேச்சர
      தேசமாக்கு திருக்கோயி லாக்கொண்ட செல்வன்கழல்
      நேசமாக்கு திறத்தார் அறத்தார் நெறிப்பாலரே. 04
      1293 வம்புநாறும் மலரும்மலை பண்டமுங் கொண்டுநீர்
      பைம்பொன்வாரி கொழிக்கும் பழங்காவிரி தென்கரை
      நம்பன்நாளும் அமர்கின்ற நாகேச்சரம் நண்ணுவார்
      உம்பர்வானோர் தொழச்சென் றுடனாவதும் உண்மையே. 05
      1294 காளமேக நிறக்கால னோடந்தகன் கருடனும்
      நீளமாய்நின் றெய்தகாம னும்பட்டன நினைவுறின்
      நாளுநாதன் அமர்கின்ற நாகேச்சரம் நண்ணுவார்
      கோளுநாளு தீயவேனும் நன்காங்குறி கொண்மினே. 06
      1295 வேயுதிர்மு தொடுமத்த யானைமரு பும்விராய்
      பாய்புனல்வ தலைக்கும் பழங்காவிரி தென்கரை
      நாயிறுந்திங் களுங்கூடி வந்தாடு நாகேச்சரம்
      மேயவன்றன் அடிபோற்றி யென்பார் வினைவீடுமே. 07
      1296 இலங்கைவேந்தன் சிரம்ப திரட்டியெழில் தோள்களும்
      மலங்கிவீழம் மலையா லடர்த்தானிட மல்கிய
      நலங்கொள்சிந்தை யவர்நாடொறும் நண்ணும் நாகேச்சரம்
      வலங்கொள்சிந்தை யுடையார் இடராயின மாயுமே. 08
      1297 கரியமாலும் அயனும் மடியும்முடி காண்பொணா
      எரியதாகி நிமிர்ந்தான் அமரும்மிட மீண்டுகா
      விரியின்நீர்வ தலைக்குங் கரைமேவு நாகேச்சரம்
      பிரிவிலாதவ் வடியார்கள் வானிற் பிரியார்களே. 09
      1298 தட்டிடுக்கி யுறிதூக்கிய கையினர் சாக்கியர்
      கட்டுரைக்கும் மொழிகொள்ளலும் வெள்ளிலங் காட்டிடை
      நட்டிருட்கண் நடமாடிய நாதன் நாகேச்சரம்
      மட்டிருக்கும் மலரிட்டடி வீழ்வது வாய்மையே. 10
      1299 கந்தநாறும் புனற்காவிரி தென்கரை கண்ணுதல்
      நந்திசேரு திருநாகே சரத்தின்மேன் ஞானசம்
      பந்தன்நாவிற் பனுவல்லிவை பத்தும்வல் லார்கள்போய்
      எந்தையீசன் னிருக்கும் முலகெய்த வல்லார்களே. 11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.120 திருமூக்கீச்சரம்
      பண் - செவ்வழி
      திருச்சிற்றம்பலம்
      1300 சாந்தம்வெண்ணீ றெனப்பூசி வெள்ளஞ்சடை வைத்தவர்
      காந்தளாரும் விரலேழை யோடாடிய காரணம்
      ஆய்ந்துகொண்டாங் கறி நிறைந்தாரவ ரார்கொலோ
      வேந்தன்மூக்கீ சரத்தடிகள் செய்கின்றதோர் மெய்ம்மையே. 01
      1301 வெண்டலையோர் கலனா பலிதேர்ந்து விரிசடை
      கொண்டலாரும் புனல்சேர துமையா ளொடுங்கூட்டமா
      விண்டவர்தம் மதிலெய்தபின் வேனில்வேள் வெந்தெழ
      கண்டவர்மூ கீச்சரத்தெம் மடிகள்செய் கன்மமே. 02
      1302 மருவலார்தம் மதிலெய் ததுவும்மான் மதலையை
      உருவிலாரவ் வெரியூ டியதும்முல குண்டதால்
      செருவிலாரும் புலிசெங் கயலானையி னான்செய்த
      பொருவின்மூ கீச்சரத்தெம் மடிகள்செயும் பூசலே. 03
      1303 அன்னமன்ன நடைச்சாய லாளொடழ கெய்தவே
      மின்னையன்ன சடைக்கங்கை யாள்மேவிய காரண
      தென்னன்கோழி யெழில்வஞ்சியும் ஓங்குசெங் கோலினான்
      மன்னன்மூக்கீ சரத்தடிகள் செய்கின்றதோர் மாயமே. 04
      1304 விடமுனாரவ் வழல்வாய தோர்பாம்பரை வீக்கியே
      நடமுனாரவ் வழலாடுவர் பேயொடு நள்ளிருள்
      வடமனீடு புகழ்ப்பூழியன் தென்னவன் கோழிமன்
      அடல்மன்மூக்கீ சரத்தடிகள் செய்கின்றதோ ரச்சமே. 05
      1305 வெந்தநீறு மெய்யிற்பூ சுவராடுவர் வீங்கிருள்
      வந்தெனாரவ் வளைகொள்வது மிங்கொரு மாயமாம்
      அந்தண்மா மானதன்னேரியன் செம்பிய னாக்கிய
      எந்தைமூக்கீ சரத்தடிகள் செய்கின்றதோ ரேதமே. 06
      1306 அரையிலாருங் கலையில்லவ னாணொடு பெண்ணுமாய்
      உரையிலாரவ் வழலாடுவ ரொன்றலர் காண்மினோ
      விரவலார்தம் மதில்மூன்றுடன் வெவ்வழ லாக்கினான்
      அரையான்மூக்கீ சரத்தடிகள் செய்கின்றதோ ரச்சமே. 07
      1307 ஈர்க்குநீர்செஞ் சடைக்கேற்ற துங்கூற்றை யுதைத்ததுங்
      கூர்க்குநன் மூவிலைவேல் வலனேந்திய கொள்கையும்
      ஆர்க்கும்வாயான் அரக்கன் னுரத்தைந்நெரி தவ்வடல்
      மூர்க்கன்மூக்கீ சரத்தடிகள் செய்யாநின்ற மொய்ம்பதே. 08
      1308 நீருளாரும் மலர்மேல் உறைவான் நெடுமாலுமா
      சீருளாருங் கழல்தேட மெய்த்தீ திரளாயினான்
      சீரினாலங் கொளிர்தென்னவன் செம்பியன் வல்லவன்
      சேருமூக்கீ சரத்தடிகள் செய்கின்றதோர் செம்மையே. 09
      1309 வெண்புலான்மார் பிடுதுகிலினர் வெற்றரை யுழல்பவர்
      உண்பினாலே யுரைப்பார் மொழியூனம தாக்கினான்
      ஒண்புலால்வேல் மிகவல்லவ னோங்கெழில் கிள்ளிசேர்
      பண்பின்மூக்கீ சரத்தடிகள் செய்கின்றதோர் பச்சையே. 10
      1310 மல்லையார்மும் முடிமன்னர் மூக்கீச்சர தடிகளை
      செல்வராக நினையும்படி சேர்த்திய செந்தமிழ்
      நல்லராய்வாழ் பவர்காழியுள் ஞானசம் பந்தன
      சொல்லவல்லா ரவர்வானுல காளவும் வல்லரே. 11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.121 திருப்பாதிரிப்புலியூர்
      பண் - செவ்வழி
      திருச்சிற்றம்பலம்
      1311 முன்னம்நின்ற முடக்கால் முயற்கருள் செய்துநீள்
      புன்னைநின்று கமழ்பா திரிப்புலி யூருளான்
      தன்னைநின்று வணங்கு தனைத்தவ மில்லிகள்
      பின்னைநின்ற பிணியா கையை பெறுவார்களே. 01
      1312 கொள்ளிநக்க பகுவாய பேய்கள் குழைந்தாடவே
      முள்ளிலவம் முதுகா டுறையும் முதல்வன்னிடம்
      புள்ளினங்கள் பயிலும் பாதிரி புலியூர்தனை
      உள்ள நம்மேல் வினையாயின வொழியுங்களே. 02
      1313 மருளினல்லார் வழிபாடு செய்யும் மழுவாளர்மேல்
      பொருளினல்லார் பயில்பா திரிப்புலி யூருளான்
      வெருளின்மானின் பிணைநோக்கல் செய்துவெறி செய்தபின்
      அருளியாக திடைவை ததுவும் மழகாகவே. 03
      1314 போதினாலும் புகையாலும் உய்த்தே யடியார்கள்தாம்
      போதினாலே வழிபாடு செ புலியூர்தனுள்
      ஆதினாலும் மவலம் மிலாதவடி கள்மறை
      ஓதிநாளும் மிடும்பிச்சை யேற்றுண் டுணப்பாலதே. 04
      1315 ஆகநல்லார் அமுதாக்க வுண்டான் அழலைந்தலை
      நாகநல்லார் பரவ தங்கரை யார்த்தவன்
      போகநல்லார் பயிலும் பாதிரிப்புலி யூர்தனுள்
      பாகநல்லா ளொடுநின்ற எம்பர மேட்டியே. 05
      1316 மதியமொய்த்த கதிர்போ லொளிம்மணற் கானல்வா
      புதியமுத்த திகழ்பா திரிப்புலி யூரெனும்
      பதியில்வைக்க படுமெந்தை தன்பழ தொண்டர்கள்
      குதியுங்கொள்வர் விதியுஞ் செய்வர் குழகாகவே. 06
      1317 கொங்கரவ படுவண் டறைகுளிர் கானல்வா
      சங்கரவ பறையின் னொலியவை சார்ந்தெழ
      பொங்கரவம் முயர்பா திரிப்புலி யூர்தனுள்
      அங்கரவம் மரையில் லசைத்தானை அடைமினே. 07
      1318 வீக்கமெழும் இலங்கை கிறைவிலங் கல்லிடை
      ஊக்கமொழி தலறவ் விரலாலிறை யூன்றினான்
      பூக்கமழும் புனல்பா திரிப்புலி யூர்தனை
      நோக்கமெலி தணுகா வினைநுணு குங்களே. 08
      1319 அன்னந்தாவும் மணியார் பொழின்மணி யார்புன்னை
      பொன்னந்தாது சொரிபா திரிப்புலி யூர்தனுள்
      முன்னந்தாவி அடிமூன் றளந்தவன் நான்முகன்
      தன்னந்தாளுற் றுணராத தோர்தவ நீதியே. 09
      1320 உரிந்தகூறை யுருவ தொடுதெரு வத்திடை
      திரிந்துதின்னுஞ் சிறுநோன் பரும்பெரு தேரரும்
      எரிந்துசொன்னவ் வுரைகொள் ளாதேயெடு தேத்துமின்
      புரிந்தவெண் ணீற்றண்ணல் பாதிரிப்புலி யூரையே. 10
      1321 அந்தண்நல் லாரகன் காழியுள் ஞானசம்
      பந்தன்நல் லார்பயில் பாதிரிப்புலி யூர்தனுள்
      சந்தமாலை தமிழ்ப திவைதரி தார்கள்மேல்
      வந்துதீயவ் வடையாமை யால்வினை மாயுமே. 11
      இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - தோன்றாத்துணையீசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      2.122 திருப்புகலி
      பண் - செவ்வழி
      திருச்சிற்றம்பலம்
      1322 விடையதேறி வெறி கரவார்த்த விமலனார்
      படையதாக பரசு தரித்தார கிடமாவது
      கொடையிலோவார் குலமும் முயர்ந்தம் மறையோர்கள்தாம்
      புடைகொள்வேள்வி புகையும்பர் உலாவும் புகலியே. 01
      1323 வேலைதன்னில் மிகுநஞ்சினை யுண்டிருள் கண்டனார்
      ஞாலமெங்கும் பலிகொண் டுழல்வார் நகராவது
      சாலநல்லார் பயிலும் மறைகேட்டு பதங்களை
      சோலைமேவுங் கிளித்தான் சொற்பயிலும் புகலியே. 02
      1324 வண்டுவாழுங் குழல்மங்கை யோர்கூ றுகந்தார்மதி
      துண்டமேவுஞ் சுடர்த்தொல் சடையார கிடமாவது
      கெண்டைபாய மடுவில் லுயர்கேதகை மாதவி
      புண்டரீக மலர்ப்பொய்கை நிலாவும் புகலியே. 03
      1325 திரியும்மூன்று புரமும் மெரித்து திகழ்வானவர
      கரியபெம்மான் அரவ குழையார கிடமாவது
      பெரியமாட துயருங் கொடியின் மிடைவால்வெயிற்
      புரிவிலாத தடம்பூம் பொழில்சூழ் தண்புகலியே. 04
      1326 ஏவிலாருஞ் சிலைப்பார தனுக்கின் னருள்செய்தவர்
      நாவினாள்மூ கரிவித்த நம்பர கிடமாவது
      மாவிலாருங் கனிவார் கிடங்கில்விழ வாளைபோ
      பூவிலாரும் புனற்பொய்கை யில்வைகும் புகலியே. 05
      1327 தக்கன்வேள்வி தகர்த்த தலைவன் தையலாளொடும்
      ஒக்கவேயெம் முரவோ னுறையும் மிடமாவது
      கொக்குவாழை பலவின் கொழுந்தண் கனிகொன்றைகள்
      புக்கவாச புன்னைபொன் திரள்காட்டும் புகலியே. 06
      இப்பதிகத்தில் 7-ம்செய்யுள் சிதைந்துபோயிற்று. 07
      1328 தொலைவிலாத அரக்கன் னுரத்தை தொலைவித்தவன்
      தலையுந்தோளும் நெரித்து சதுரர கிடமாவது
      கலையின்மேவும் மனத்தோர் இரப்போர்க்கு கரப்பிலார்
      பொலியுமந்தண் பொழில்சூழ தழகாரும் புகலியே. 08
      1329 கீண்டுபுக்கார் பறந்தார் அயர்ந்தார் கேழலன்னமா
      காண்டுமென்றார் கழல்பணிய நின்றார கிடமாவது
      நீண்டநாரை இரையாரல் வாரநிறை செறுவினிற்
      பூண்டுமிக்கவ் வயல்காட்டும் அந்தண் புகலியே. 09
      1330 தடுக்குடுத்து தலையை பறிப்பாரொடு சாக்கியர்
      இடுக்கணுய்ப்பார் இறைஞ்சாத எம்மாற் கிடமாவது
      மடுப்படுக்குஞ் சுருதிப்பொருள் வல்லவர் வானுளோர்
      அடுத்தடுத்து புகுந்தீண்டும் அந்தண் புகலியே. 10
      1331 எய்தவொண்ணா இறைவன் உறைகின்ற புகலியை
      கைதவமில்லா கவுணியன் ஞானசம் பந்தன்சீர்
      செய்தபத்தும் இவைசெப்ப வல்லார்சிவ லோகத்தில்
      எய்திநல்ல இமையோர்கள் ஏத்தவிரு பார்களே. 11
      திருச்சிற்றம்பலம்
      திருஞானசம்பந்தசுவாமிகள் அருளிச்செய்த
      தேவார பதிகங்கள் இரண்டாம் திருமுறை முற்றும்.
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      பண் - 24. அவை
      பகற் பண்
      புறநீர்மை காந்தாரம் பியந்தைக்காந்தாரம்
      கவுசிகம் இந்தளம் தக்கேசி சாதாரி நட்டபாஷை
      நட்டராகம் பழம்பஞ்சுரம் காந்தாரபஞ்சமம் பஞ்சமம். ஆக பகற்பண் - 12.
      இராப்பண்
      தக்கராகம் பழந்தக்கராகம் சீகாமரம் கொல்லி
      கொல்லிக்காவாணம் வியாழக்குறிஞ்சி மேகராகக்குறிஞ்சி
      அந்தாளிக்குறிஞ்சி குறிஞ்சி. ஆக இராப்பண் - 9
      பொதுப்பண்
      செவ்வழி செந்துருதி திருத்தாண்டகம். ஆக பொதுப்பண் - 3
      ------------------------------------------------------------------------
      15 . 2003


      2.