திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
      தேவார பதிகங்கள்
      முதல் திருமுறை -
      உள்ளுறை
      1.1 திருப்பிரமபுரம் 1-11 மின்பதிப்பு
      1.2 திருப்புகலூர் 12-22 மின்பதிப்பு
      1.3 திருவலிதாயம் 23-33 மின்பதிப்பு
      1.4 திருப்புகலியும் - திருவீழிமிழலையும் 34-44 மின்பதிப்பு

      1.5 திருக்காட்டுப்பள்ளி 45-54 மின்பதிப்பு
      1.6 திருமருகலும் - திருச்செங்காட்டங்குடியும் 55-64 மின்பதிப்பு

      1.7 திருநள்ளாறும் - திருஆலவாயும் 65-75 மின்பதிப்பு
      1.8 திருஆவூர்ப்பசுபதீச்சரம் 76-86 மின்பதிப்பு
      1.9 திருவேணுபுரம் 87-96 மின்பதிப்பு
      1.10 திரு அண்ணாமலை 97-107 மின்பதிப்பு
      1.11 திருவீழிமிழலை 108-118 மின்பதிப்பு
      1.12 திருமுதுகுன்றம் 119-129 மின்பதிப்பு
      1.13 திருவியலூர் 130 - 140 மின்பதிப்பு
      1.14 திருக்கொடுங்குன்றம் 141-151 மின்பதிப்பு
      1.15 திருநெய்த்தானம் 152-162 மின்பதிப்பு
      1.16 திருப்புள்ளமங்கை - திரு ஆலந்துறை 163-173 மின்பதிப்பு

      1.17 திருஇடும்பாவனம் 174-184 மின்பதிப்பு
      1.18 திருநின்றியூர் 185-194 மின்பதிப்பு
      1.19 திருக்கழுமலம் - திருவிராகம் 195-205 மின்பதிப்பு
      1.20 திருவீழிமிழலை - திருவிராகம் 206-216 மின்பதிப்பு
      1.21 திருச்சிவபுரம் - திருவிராகம் 217-227 மின்பதிப்பு
      1.22 திருமறைக்காடு - திருவிராகம் 228-238 மின்பதிப்பு
      1.23 திருக்கோலக்கா 239-249 மின்பதிப்பு
      1.24 சீகாழி 250-260 மின்பதிப்பு
      1.25 திருச்செம்பொன்பள்ளி 261-271 மின்பதிப்பு
      1.26 திருப்புத்தூர் 272-282 மின்பதிப்பு
      1.27 திருப்புன்கூர் 283-293 மின்பதிப்பு
      1.28 திருச்சோற்றுத்துறை 294-304 மின்பதிப்பு
      129 திருநறையூர்ச்சித்தீச்சரம் 305-315 மின்பதிப்பு
      1.30 திருப்புகலி 316-326 மின்பதிப்பு
      1.31 திருக்குரங்கணின்முட்டம் 327-337 மின்பதிப்பு
      1.32 திருவிடைமருதூர் 338-348 மின்பதிப்பு
      1.33 திரு அன்பிலாலந்துறை 349-359 மின்பதிப்பு
      1.34 சீகாழி 360-370 மின்பதிப்பு
      1.35 திருவீழிமிழலை 371-381 மின்பதிப்பு
      1.36 திரு ஐயாறு 382-392 மின்பதிப்பு
      1.37 திருப்பனையூர் 393-403 மின்பதிப்பு
      1.38 திருமயிலாடுதுறை 404-414 மின்பதிப்பு
      1.39 திருவேட்களம் 415-425 மின்பதிப்பு
      1.40 திருவாழ்கொளிபுத்தூர் 426-436 மின்பதிப்பு
      1.41 திருப்பாம்புரம் 437-447 மின்பதிப்பு
      1.42 திருப்பேணுபெருந்துறை 448-458 மின்பதிப்பு
      1.43 திருக்கற்குடி 459-469 மின்பதிப்பு
      1.44 திருப்பாச்சிலாச்சிராமம் 470-480 மின்பதிப்பு
      1.45 திருப்பழையனூர்-திரு ஆலங்காடு 481-492 மின்பதிப்பு
      1.46 திரு அதிகைவீரட்டானம் 493-503 மின்பதிப்பு
      1.47 திருச்சிரபுரம் 504-514 மின்பதிப்பு
      1.48 திருச்சேய்ஞலூர் 515-525 மின்பதிப்பு
      1.49 திருநள்ளாறு 526-536 மின்பதிப்பு
      1.50 திருவலிவலம் 537-547 மின்பதிப்பு
      1.51 திருச்சோபுரம் 548-558 மின்பதிப்பு
      1.52 திருநெடுங்களம் 559-569 மின்பதிப்பு
      1.53 திருமுதுகுன்றம் 570-579 மின்பதிப்பு
      1.54 திருஓத்தூர் 580-590 மின்பதிப்பு
      1.55 திருமாற்பேறு 591-600 மின்பதிப்பு
      1.56 திருப்பாற்றுறை 601-611 மின்பதிப்பு
      1.57 திருவேற்காடு 612-622 மின்பதிப்பு
      1.58 திருக்கரவீரம் 623-633 மின்பதிப்பு
      1.59 திருத்தூங்கானைமாடம் 634-644 மின்பதிப்பு
      1.60 திருத்தோணிபுரம் 645-655 மின்பதிப்பு
      1.61 திருச்செங்காட்டங்குடி 656-666 மின்பதிப்பு
      1.62 திருக்கோளிலி 667 - 677 மின்பதிப்பு
      1.63 திருப்பிரமபுரம் - பல்பெயர்ப்பத்து 678-689 மின்பதிப்பு

      1.64 திருப்பூவணம் 690-700 மின்பதிப்பு
      1.65 காவிரிப்பூம்பட்டினத்துப்பல்லவனீச்சரம் 701-711 மின்பதிப்பு

      1.66 திருச்சண்பைநகர் 702-721 மின்பதிப்பு
      ------------------------------------------------------------------------
      திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
      தேவார பதிகங்கள்
      முதல் திருமுறை -
      1.1 திருப்பிரமபுரம்
      பண் - நட்டபாடை
      1 தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடி
      காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர் கள்வன்
      ஏடுடையமல ரான்முனைநாட்பணி தேத்த அருள்செய்த
      பீடுடையபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. 1.1.1
      2 முற்றலாமையிள நாகமோடேன முளைக்கொம் பவைபூண்டு
      வற்றலோடுகலனா பலிதேர்ந்தென துள்ளங் கவர்கள்வன்
      கற்றல்கேட்டலுடை யார்பெரியார்கழல் கையால் தொழுதேத்த
      பெற்றமூர்ந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. 1.1.2
      3 நீர்பரந்தநிமிர் புன்சடைமேலோர் நிலாவெண் மதிசூடி
      ஏர்பரந்தஇன வெள்வளைசோரஎன் னுள்ளங்கவர் கள்வன்
      ஊர்பரந்தவுல கின்முதலாகிய வோரூரிது வென்ன
      பேர்பரந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. 1.1.3
      4 விண்மகிழ்ந்தமதி லெய்ததுமன்றி விளங்குதலை யோட்டில்
      உண்மகிழ்ந்துபலி தேரியவந்தென துள்ளங்கவர் கள்வன்
      மண்மகிழ்ந்தஅரவம் மலர்க்கொன்றை மலிந்தவரை மார்பிற்
      பெண்மகிழ்ந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. 1.1.4
      5 ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை யூருமிவ னென்ன
      அருமையாகவுரை செய்யவமர்ந்தென துள்ளங்கவர் கள்வன்
      கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததோர் காலமிது வென்ன
      பெருமைபெற்றபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. 1.1.5
      6 மறைகலந்தவொலி பாடலொடாடல ராகிமழு வேந்தி
      இறைகலந்தவின வெள்வளைசோரவென் னுள்ளங்கவர் கள்வன்
      கறைகலந்தகடி யார்பொழில்நீடுயர் சோலைக்கதிர் சிந்த
      பிறைகலந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. 1.1.6
      7 சடைமுயங்குபுன லன்அனலன்எரி வீசிச்சதிர் வெய்த
      உடைமுயங்கும் அரவோடுழிதந்தென துள்ளங்கவர் கள்வன்
      கடல்முயங்குகழி சூழ்குளிர்கானலம் பொன்னஞ்சிற கன்னம்
      பெடைமுயங்குபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. 1.1.7
      8 வியரிலங்குவரை யுந்தியதோள்களை வீரம்விளை வித்த
      உயரிலங்கையரை யன்வலிசெற்றென துள்ளங்கவர் கள்வன்
      துயரிலங்குமுல கில்பலவூழிகள் தோன்றும்பொழு தெல்லாம்
      பெயரிலங்குபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. 1.1.8
      9 தாணுதல்செய்திறை காணியமாலொடு தண்டாமரை யானும்
      நீணுதல்செய்தொழி யந்நிமிர்ந்தானென துள்ளங்கவர் கள்வன்
      வாணுதல்செய்மக ளிர்முதலாகிய வையத்தவ ரேத்த
      பேணுதல்செய்பிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. 1.1.9
      10 புத்தரோடுபொறி யில்சமணும்புறங் கூறநெறி நில்லா
      ஒத்தசொல்லவுல கம்பலிதேர்ந்தென துள்ளங்கவர் கள்வன்
      மத்தயானைமறு கவ்வுரிபோர்த்ததோர் மாயமிது வென்ன
      பித்தர்போலும்பிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. 1.1.10
      11 அருநெறியமறை வல்லமுனியகன் பொய்கையலர் மேய
      பெருநெறியபிர மாபுரமேவிய பெம்மானிவன் றன்னை
      ஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம் பந்தன்னுரை செய்த
      திருநெறியதமிழ் வல்லவர்தொல்வினை தீர்த லெளிதாமே. 1.1.11
      திருப்பிரமபுர மென்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - பிரமபுரீசர் தேவியார்
      திருத்தோணியில் வீற்றிருப்பவர் தோணியப்பர்.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

      ------------------------------------------------------------------------

      1.2 திருப்புகலூர்

      பண் - நட்டபாடை
      12 குறிகலந்தஇசை பாடலினான்நசை யாலிவ்வுல கெல்லாம்
      நெறிகலந்ததொரு நீர்மையனாயெரு தேறும்பலி பேணி
      முறிகலந்ததொரு தோலரைமேலுடை யானிடம்மொய்ம் மலரின்
      பொறிகலந்தபொழில் சூழ்ந்தயலேபுய லாரும்புக லூரே. 1.2.1
      13 காதிலங்குகுழை யன்னிழைசேர்திரு மார்பன்னொரு பாகம்
      மாதிலங்குதிரு மேனியினான்கரு மானின்னுரி யாடை
      மீதிலங்கவணி தானிமையோர்தொழ மேவும்மிடஞ் சோலை
      போதிலங்குநசை யால்வரிவண்டிசை பாடும்புக லூரே. 1.2.2
      14 பண்ணிலாவுமறை பாடலினானிறை சேரும்வளை யங்கை
      பெண்ணிலாவவுடை யான்பெரியார்கழ லென்றுந்தொழு தேத்த
      உண்ணிலாவியவர் சிந்தையுள்நீங்கா வொருவற்கிட மென்பர்
      மண்ணிலாவும்அடி யார்குடிமைத்தொழில் மல்கும்புக லூரே. 1.2.3
      15 நீரின்மல்குசடை யன்விடையன்னடை யார்தம்அரண் மூன்றுஞ்
      சீரின்மல்குமலை யேசிலையாக முனிந்தன்றுல கு
      காரின்மல்குகடல் நஞ்சமதுண்ட கடவுள்ளிட மென்பர்
      ஊரின்மல்கிவளர் செம்மையினாலுயர் வெய்தும்புக லூரே.
      முனிந்தானுலகுய்ய என்றும் பாடம். 1.2.4
      16 செய்யமேனிவெளி யபொடிப்பூசுவர் சேரும்மடி யார்மேல்
      பையநின்றவினை பாற்றுவர்போற்றிசை தென்றும்பணி வாரை
      மெய்யநின்றபெரு மானுறையும்மிட மென்பரருள் பேணி
      பொய்யிலாதமன தார்பிரியாதுபொ ருந்தும்புக லூரே.
      1.2.5
      17 கழலினோசைசிலம் பின்னொலியோசை கலிக்கப்பயில் கானிற்
      குழலினோசைகுற பாரிடம்போற்ற குனித்தாரிட மென்பர்
      விழவினோசையடி யார்மிடைவுற்று விரும்பிப்பொலி தெங்கும்
      முழவினோசைமு நீரயர்வெய்த முழங்கும்புக லூரே. 1.2.6
      17 வெள்ளமார்ந்துமிளிர் செஞ்சடைதன்மேல் விளங்கும்மதி சூடி
      உள்ளமார்ந்தஅடி யார்தொழுதேத்த உகக்கும்அருள் தந்தெங்
      கள்ளமார்ந்துகழி யப்பழிதீர்த்த கடவுட்கிட மென்பர்
      புள்ளையார்ந்தவய லின்விளைவால்வளம் மல்கும்புக லூரே. 1.2.7
      18 தென்னிலங்கையரை யன்வரைபற்றி யெடுத்தான்முடி திண்டோ ள்
      தன்னிலங்குவிர லால்நெரிவித்திசை கேட்டன்றருள் செய்த
      மின்னிலங்குசடை யான்மடமாதொடு மேவும்மிட மென்பர்
      பொன்னிலங்குமணி மாளிகைமேல்மதி தோயும்புக லூரே. 1.2.8
      19 நாகம்வைத்தமுடி யானடிகைதொழு தேத்தும்மடி யார்கள்
      ஆகம்வைத்தபெரு மான்பிரமன்னொடு மாலுந்தொழு தேத்த
      ஏகம்வைத்தஎரி யாய்மிகவோங்கிய எம்மானிடம் போலும்
      போகம்வைத்தபொழி லின்நிழலான்மது வாரும்புக லூரே.
      1.2.9
      20 செய்தவத்தர்மிகு தேரர்கள்சாக்கியர் செப்பிற்பொரு ளல்லா
      கைதவத்தர்மொழி யைத்தவிர்வார்கள் கடவுள்ளிடம் போலுங்
      கொய்துபத்தர்மல ரும்புனலுங்கொடு தூவித்துதி செய்து
      மெய்தவத்தின்முயல் வாருயர்வானக மெய்தும்புக லூரே. 1.2.10
      21 புற்றில்வாழும்அர வம்மரையார்த்தவன் மேவும்புக லூரை
      கற்றுநல்லவவர் காழியுள்ஞானசம் பந்தன்தமிழ் மாலை
      பற்றியென்றுமிசை பாடியமாந்தர் பரமன்னடி சேர்ந்து
      குற்றமின்றிக்குறை பாடொழியாப்புக ழோங்கிப்பொலி வாரே. 1.2.11

      காவிரி தென்கரை தலம்.
      சுவாமிபெயர் - அக்கினீசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

      ------------------------------------------------------------------------

      1.3 திருவலிதாயம்

      பண் - நட்டபாடை
      23 பத்தரோடுபல ரும்பொலியம்மலர் அங்கைப்புனல் தூவி
      ஒத்தசொல்லிஉல கத்தவர்தாம்தொழு தேத்தஉயர் சென்னி
      மத்தம்வைத்தபெரு மான்பிரியாதுறை கின்றவலி தாயஞ்
      சித்தம்வைத்தஅடி யாரவர்மேல்அடை யாமற்றிடர் நோயே. 1.3.1
      24 படையிலங்குகரம் எட்டுடையான்படி றாகக்கன லேந்தி
      கடையிலங்குமனை யில்பலிகொண்டுணுங் கள்வன்னுறை கோயில்
      மடையிலங்குபொழி லின்நிழல்வாய்மது வீசும்வலி தாயம்
      அடையநின்றஅடி யார்க்கடையாவினை அல்லல்துயர் தானே. 1.3.2
      25 ஐயனொய்யன்னணி யன்பிணியில்லவ ரென்றுந்தொழு தேத்த
      செய்யன்வெய்யபடை யேந்தவல்லான்திரு மாதோடுறை கோயில்
      வையம்வந்துபணி யப்பிணிதீர்த்துயர் கின்றவலி தாயம்
      உய்யும்வண்ணந்நினை மின்நினைந்தால்வினை தீருந்நல மாமே. 1.3.3
      26 ஒற்றையேறதுடை யான்நடமாடியோர் பூதப்படை சூழ
      புற்றின்நாகம்அரை யார்த்துழல்கின்றஎம் பெம்மான்மட வாளோ
      டுற்றகோயிலுல கத்தொளிமல்கிட உள்கும்வலி தாயம்
      பற்றிவாழும்மது வேசரணாவது பாடும்மடி யார்க்கே. 1.3.4
      27 புந்தியொன்றிநினை வார்வினையாயின தீரப்பொரு ளாய
      அந்தியன்னதொரு பேரொளியானமர் கோயில்அய லெங்கும்
      மந்திவந்துகடு வன்னொடுகூடி வணங்கும்வலி தாயஞ்
      சிந்தியாதஅவர் தம்மடும்வெந்துயர் தீர்தலெளி தன்றே. 1.3.5
      28 ஊனியன்றதலை யிற்பலிகொண்டுல கத்துள்ளவ ரேத்த
      கானியன்றகரி யின்உரிபோர்த்துழல் கள்வன்சடை தன்மேல்
      வானியன்றபிறை வைத்தஎம்மாதி மகிழும்வலி தாயம்
      தேனியன்றநறு மாமலர்கொண்டுநின் றேத்தத்தெளி வாமே. 1.3.6
      29 கண்ணிறைந்தவிழி யின்னழலால்வரு காமனுயிர் வீட்டி
      பெண்ணிறைந்தஒரு பால்மகிழ்வெய்திய பெம்மானுறை கோயில்
      மண்ணிறைந்தபுகழ் கொண்டடியார்கள் வணங்கும்வலி தா
      துண்ணிறைந்தபெரு மான்கழலேத்தநம் உண்மைக்கதி யாமே. 1.3.7
      30 கடலின்நஞ்சமமு துண்டிமையோர்தொழு தேத்தநட மாடி
      அடலிலங்கையரை யன்வலிசெற்றருள் அம்மானமர் கோயில்
      மடலிலங்குகமு கின்பலவின்மது விம்மும்வலி தாயம்
      உடலிலங்குமுயிர் உள்ளளவுந்தொழ உள்ளத்துயர் போமே. 1.3.8
      31 பெரியமேருவரை யேசிலையாமலை வுற்றாரெயில் மூன்றும்
      எரியவெய்தவொரு வன்னிருவர்க்கறி வொண்ணாவடி வாகும்
      எரியதாகியுற வோங்கியவன்வலி தாயந்தொழு தேத்த
      உரியராகவுடை யார்பெரியாரென உள்கும்முல கோரே. 1.3.9
      32 ஆசியாரமொழி யாரமண்சாக்கிய ரல்லாதவர் கூடி
      ஏசியீரமில ராய்மொழிசெய்தவர் சொல்லைப்பொரு ளென்னேல்
      வாசிதீரவடி யார்க்கருள்செய்து வளர்ந்தான்வலி தாயம்
      பேசுமார்வமுடை யாரடியாரென பேணும்பெரி யோரே. 1.3.10
      33 வண்டுவைகும்மணம் மல்கியசோலை வளரும்வலி தா
      தண்டவாணனடி யுள்குதலாலருள் மாலைத்தமி ழா
      கண்டல்வைகுகடல் காழியுள்ஞானசம் பந்தன்தமிழ் பத்துங்
      கொண்டுவைகியிசை பாடவல்லார்குளிர் வானத்துயர் வாரே. 1.3.11

      இத்தலம் தொண்டைநாட்டில் பாடியென வழங்கப்பட்டிருக்கின்றது.
      சுவாமிபெயர் - வலிதாயநாதர்
      தேவியார் - தாயம்மை
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

      ------------------------------------------------------------------------

      1.4 திருப்புகலியும் - திருவீழிமிழலையும்


      வினாவுரை
      பண் - நட்டபாடை
      34 மைம்மரு பூங்குழல் கற்றைதுற்ற
      வாணுதல் மான்விழி மங்கையோடும்
      பொய்ம்மொழி யாமறை யோர்களேத்த
      புகலி நிலாவிய புண்ணியனே
      எம்மிறை யேயிமை யாதமுக்கண்
      ஈசவென்நேச விதென்கொல் சொல்லாய்
      மெய்ம்மொழி நான்மறை யோர்மிழலை
      விண்ணிழி கோயில் விரும்பியதே. 1.4.1
      35 கழன்மல்கு பந்தொடம் மானைமுற்றில்
      கற்றவர் சிற்றிடை கன்னிமார்கள்
      பொழின்மல்கு கிள்ளையை சொற்பயிற்றும்
      புகலி நிலாவிய புண்ணியனே
      எழின்மல ரோன்சிர மேந்தியுண்டோ ர்
      இன்புறு செல்வமி தென்கொல்சொல்லாய்
      மிழலையுள் வேதிய ரேத்திவாழ்த்த
      விண்ணிழி கோயில் விரும்பியதே. 1.4.2
      36 கன்னிய ராடல் கலந்துமிக்க
      கந்துக வாடை கலந்துதுங்க
      பொன்னியல் மாடம் நெருங்குசெல்வ
      புகலி நிலாவிய புண்ணியனே
      இன்னிசை யாழ்மொழி யாளோர்பாக
      தெம்மிறையேயிது வென்கொல் சொல்லாய்
      மின்னியல் நுண்ணிடை யார்மிழலை
      விண்ணிழி கோயில் விரும்பியதே. 1.4.3
      37 நாகப ணந்திகழ் அல்குல்மல்கும்
      நன்னுதல் மான்விழி மங்கையோடும்
      பூகவ ளம்பொழில் சூழ்ந்தஅந்தண்
      புகலிநி லாவிய புண்ணியனே
      ஏகபெ ருந்தகை யாயபெம்மான்
      எம்மிறையேயிது வென்கொல் சொல்லாய்
      மேகமு ரிஞ்செயில் சூழ்மிழலை
      விண்ணிழி கோயில் விரும்பியதே. 1.4.4
      38 சந்தள றேறுத டங்கொள்கொங்கை
      தையலோடு தளராத வாய்மை
      புந்தியி னான்மறை யோர்களேத்தும்
      புகலி நிலாவிய புண்ணியனே
      எந்தமை யாளுடை ஈசஎம்மான்
      எம்மிறை யேயிது வென்கொல்சொல்லாய்
      வெந்தவெண் ணீறணி வார்மிழலை
      விண்ணிழி கோயில் விரும்பியதே. 1.4.5
      39 சங்கொலி இப்பிசு றாமகர
      தாங்கி நிரந்து தரங்கம்மேன்மேற்
      பொங்கொலி நீர்சு தோங்குசெம்மை
      புகலி நிலாவிய புண்ணியனே
      எங்கள்பி ரானிமை யோர்கள்பெம்மான்
      எம்மிறையேயிது வென்கொல் சொல்லாய்
      வெங்கதிர் தோய்பொழில் சூழ்மிழலை
      விண்ணிழி கோயில் விரும்பியதே. 1.4.6
      40 காமனெ ரிப்பிழம் பாகநோக்கி
      காம்பன தோளியொ டுங்கலந்து
      பூமரு நான்முகன் போல்வரேத்த
      புகலி நிலாவிய புண்ணியனே
      ஈமவ னத்தெரி யாட்டுகந்த
      எம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
      வீமரு தண்பொழில் சூழ்மிழலை
      விண்ணிழி கோயில் விரும்பியதே. 1.4.7
      41 இலங்கையர் வேந்தெழில் வாய்த்ததிண்டோ ள்
      இற்றல றவ்விர லொற்றியைந்து
      புலங்களை கட்டவர் போற்றஅந்தண்
      புகலி நிலாவிய புண்ணியனே
      இலங்கெரி யேந்திநின் றெல்லியாடும்
      எம்மிறை யேயிது வென்கொல்சொல்லாய்
      விலங்கலொண் மாளிகை சூழ்மிழலை
      விண்ணிழி கோயில் விரும்பியதே. 1.4.8
      42 செறிமுள ரித்தவி சேறியாறுஞ்
      செற்றதில் வீற்றிரு தானும்மற்றை
      பொறியர வத்தணை யானுங்காணா
      புகலி நிலாவிய புண்ணியனே
      எறிமழு வோடிள மான்கையின்றி
      இருந்தபி ரானிது வென்கொல்சொல்லாய்
      வெறிகமழ் பூம்பொழில் சூழ்மிழலை
      விண்ணிழி கோயில் விரும்பியதே. 1.4.9
      43 பத்தர்க ணம்பணி தேத்தவாய்த்த
      பான்மைய தன்றியும் பல்சமணும்
      புத்தரும் நின்றலர் தூற்றஅந்தண்
      புகலி நிலாவிய புண்ணியனே
      எத்தவ தோர்க்குமி லக்காய்நின்ற
      எம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
      வித்தகர் வாழ்பொழில் சூழ்மிழலை
      விண்ணிழி கோயில் விரும்பியதே. 1.4.10
      44 விண்ணிழி கோயில் விரும்பிமேவும்
      வித்தக மென்கொலி தென்றுசொல்லி
      புண்ணிய னைப்புக லிந்நிலாவு
      பூங்கொடி யோடிரு தானைப்போற்றி
      நண்ணிய கீர்த்தி நலங்கொள்கேள்வி
      நான்மறை ஞானசம் பந்தன்சொன்ன
      பண்ணியல் பாடல்வல் லார்களிந்த
      பாரொடு விண்பரி பாலகரே. 1.4.11

      இவ்விரண்டும் சோழநாட்டிலுள்ளவை. புகலி என்பது சீகாழிக்கொருபெயர்
      வீழிமிழலையில் சுவாமிபெயர் - வீழியழகர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

      ------------------------------------------------------------------------

      1.5 திருக்காட்டுப்பள்ளி

      பண் - நட்டபாடை
      45 செய்யரு கேபுனல் பாயஓங்கி
      செங்கயல் பா சிலமலர்த்தேன்
      கையரு கேகனி வாழையீன்று
      கானலெலாங் கமழ் காட்டுப்பள்ளி
      பையரு கேயழல் வாயவைவா
      பாம்பணை யான்பணை தோளிபாகம்
      மெய்யரு கேயுடை யானையுள்கி
      விண்டவ ரேறுவர் மேலுலகே. 1.5.1
      45 இப்பதிகத்தில் 2-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 1.5.2
      46 திரைகளெல் லாமல ருஞ்சுமந்து
      செழுமணி முத்தொடு பொன்வரன்றி
      கரைகளெல் லாமணி சேர்ந்துரிஞ்சி
      காவிரி கால்பொரு காட்டுப்பள்ளி
      உரைகளெல் லாமுணர் வெய்திநல்ல
      உத்தம ராயுயர தாருலகில்
      அரவமெல் லாமரை யார்த்தசெல்வர
      காட்செய அல்லல் அறுக்கலாமே. 1.5.3
      47 தோலுடை யான்வண்ண போர்வையினான்
      சுண்ணவெண் ணீறுது தைந்திலங்கு
      நூலுடை யானிமை யோர்பெருமான்
      நுண்ணறி வால்வழி பாடுசெய்யுங்
      காலுடை யான்கரி தாயகண்டன்
      காதலி கப்படுங் காட்டுப்பள்ளி
      மேலுடை யானிமை யாதமுக்கண்
      மின்னிடை யாளொடும் வேண்டினானே. 1.5.4
      48 சலசல சந்தகி லோடும்உந்தி
      சந்தன மேகரை சார்த்தியெங்கும்
      பலபல வாய்த்தலை யார்த்துமண்டி
      பாய்ந்திழி காவிரி பாங்கரின்வாய்
      கலகல நின்றதி ருங்கழலான்
      காதலி கப்படுங் காட்டுப்பள்ளி
      சொலவல தொண்டர்க ளேத்தநின்ற
      சூலம்வல் லான்கழல் சொல்லுவோமே. 1.5.5
      49 தளையவிழ் தண்ணிற நீலம்நெய்தல்
      தாமரை செங்கழு நீருமெல்லாங்
      களையவி ழுங்குழ லார்கடி
      காதலி கப்படுங் காட்டுப்பள்ளி
      துளைபயி லுங்குழல் யாழ்முரல
      துன்னிய இன்னிசை யால்துதைந்த
      அளைபயில் பாம்பரை யார்த்தசெல்வர
      காட்செய அல்லல் அறுக்கலாமே. 1.5.6
      50 முடிகையி னாற்றொடும் மோட்டுழவர்
      முன்கை தருக்கை கரும்பின்கட்டி
      கடிகையி னாலெறி காட்டுப்பள்ளி
      காதல்செய் தான்கரி தாயகண்டன்
      பொடியணி மேனியி னானையுள்கி
      போதொடு நீர்சு தேத்திமுன்னின்
      றடிகையி னாற்றொழ வல்லதொண்டர்
      அருவினை யைத்துர தாட்செய்வாரே. 1.5.7
      51 பிறையுடை யான்பெரி யோர்கள்பெம்மான்
      பெய்கழல் நாடொறும் பேணியேத்த
      மறையுடை யான்மழு வாளுடையான்
      வார்தரு மால்கடல் நஞ்சமுண்ட
      கறையுடை யான்கன லாடுகண்ணாற்
      காமனை காய்ந்தவன் காட்டுப்பள்ளி
      குறையுடை யான்குற பூதச்செல்வன்
      குரைகழ லேகைகள் கூப்பினோமே. 1.5.8
      52 செற்றவர் தம்அர ணம்மவற்றை
      செவ்வழல் வாயெரி யூட்டிநின்றுங்
      கற்றவர் தாந்தொழு தேத்தநின்றான்
      காதலி கப்படுங் காட்டுப்பள்ளி
      உற்றவர் தாமுணர் வெய்திநல்ல
      உம்பருள் ளார்தொழு தேத்தநின்ற
      பெற்றம ரும்பெரு மானையல்லால்
      பேசுவதும் மற்றோர் பேச்சிலோமே. 1.5.9
      53 ஒண்டுவ ரார்துகி லாடைமெய்போர
      துச்சிகொ ளாமையுண் டேயுரைக்குங்
      குண்டர்க ளோடரை கூறையில்லார்
      கூறுவ தாங்குண மல்லகண்டீர்
      அண்டம றையவன் மாலுங்காணா
      ஆதியி னானுறை காட்டுப்பள்ளி
      வண்டம ரும்மலர கொன்றைமாலை
      வார்சடை யான்கழல் வாழ்த்துவோமே. 1.5.10
      54 பொன்னியல் தாமரை நீலம்நெய்தல்
      போதுக ளாற்பொலி வெய்துபொய்கை
      கன்னியர் தாங்குடை காட்டுப்பள்ளி
      காதல னைக்கடற் காழியர்கோன்
      துன்னிய இன்னிசை யாற்றுதைந்து
      சொல்லிய ஞானசம் பந்தன்நல்ல
      தன்னிசை யாற்சொன்ன மாலைபத்து
      தாங்கவல் லார்புகழ் தாங்குவாரே. 1.5.11

      இதுவுஞ் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - ஆரணியச்சுந்தரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

      ------------------------------------------------------------------------

      1.6 திருமருகலும் - திருச்செங்காட்டங்குடியும்


      வினாவுரை
      பண் - நட்டபாடை
      55 அங்கமும் வேதமும் ஓதுநாவர்
      அந்தணர் நாளும் அடிபரவ
      மங்குல் மதிதவழ் மாடவீதி
      மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
      செங்கய லார்புனற் செல்வமல்கு
      சீர்கொள் செங்காட்டங் குடியதனுள்
      கங்குல் விளங்கெரி யேந்தியாடுங்
      கணபதி யீச்சரங் காமுறவே. 1.6.1
      56 நெய்தவழ் மூவெரி காவலோம்பும்
      நேர்புரி நூன்மறை யாளரேத்த
      மைதவழ் மாட மலிந்தவீதி
      மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
      செய்தவ நான்மறை யோர்களேத்துஞ்
      சீர்கொள் செங்காட்டங் குடியதனுள்
      கைதவழ் கூரெரி யேந்தியாடுங்
      கணபதி யீச்சரங் காமுறவே. 1.6.2
      57 தோலொடு நூலிழை சேர்ந்தமார்பர்
      தொகுமறை யோர்கள் வளர்த்தசெந்தீ
      மால்புகை போய்விம்மு மாடவீதி
      மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
      சேல்புல்கு தண்வயல் சோலைசூழ்ந்த
      சீர்கொள் செங்காட்டங் குடியதனுள்
      கால்புல்கு பைங்கழ லார்க்கஆடுங்
      கணபதி யீச்சரங் காமுறவே. 1.6.3
      58 நாமரு கேள்வியர் வேள்வியோவா
      நான்மறை யோர்வழி பாடுசெய்ய
      மாமரு வும்மணி கோயில்மேய
      மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
      தேமரு பூம்பொழிற் சோலைசூழ்ந்த
      சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
      காமரு சீர்மகிழ தெல்லியாடுங்
      கணபதி யீச்சரங் காமுறவே. 1.6.4
      59 பாடல் முழவும் விழவும்ஓவா
      பன்மறை யோரவர் தாம்பரவ
      மாட நெடுங்கொடி விண்தடவும்
      மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
      சேடக மாமலர சோலைசூழ்ந்த
      சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
      காடக மேயிட மாகஆடுங்
      கணபதி யீச்சரங் காமுறவே. 1.6.5
      60 புனையழ லோம்புகை அந்தணாளர்
      பொன்னடி நாடொறும் போற்றிசைப்ப
      மனைகெழு மாட மலிந்தவீதி
      மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
      சினைகெழு தண்வயல் சோலைசூழ்ந்த
      சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
      கனைவளர் கூரெரி ஏந்தியாடுங்
      கணபதி யீச்சரங் காமுறவே. 1.6.6
      60 இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 1.6.7
      61 பூண்டங்கு மார்பின் இலங்கைவேந்தன்
      பொன்னெடு தோள்வரை யாலடர்த்து
      மாண்டங்கு நூன்மறை யோர்பரவ
      மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
      சேண்டங்கு மாமலர சோலைசூழ்ந்த
      சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
      காண்டங்கு தோள்பெயர தெல்லியாடுங்
      கணபதி யீச்சரங் காமுறவே. 1.6.8
      62 அந்தமும் ஆதியும் நான்முகனும்
      அரவணை யானும் அறிவரிய
      மந்திர வேதங்க ளோதுநாவர்
      மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
      செந்தமி ழோர்கள் பரவியேத்துஞ்
      சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
      கந்தம் அகிற்புகை யேகமழுங்
      கணபதி யீச்சரங் காமுறவே. 1.6.9
      63 இலைமரு தேயழ காகநாளும்
      இடுதுவர காயொடு சுக்குத்தின்னும்
      நிலையமண் டேரரை நீங்கிநின்று
      நீதரல் லார்தொழும் மாமருகல்
      மலைமகள் தோள்புணர் வாயருளாய்
      மாசில்செங் காட்டங் குடியதனுள்
      கலைமல்கு தோலுடு தெல்லியாடுங்
      கணபதி யீச்சரங் காமுறவே. 1.6.10
      64 நாலுங் குலைக்கமு கோங்குகாழி
      ஞானசம் பந்தன் நலந்திகழும்
      மாலின் மதிதவழ் மாடமோங்கும்
      மருகலின் மற்றதன் மேல்மொழிந்த
      சேலுங் கயலு திளைத்தகண்ணார்
      சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
      சூலம்வல் லான்கழ லேத்துபாடல்
      சொல்லவல் லார்வினை யில்லையாமே. 1.6.11

      இவைகளுஞ் சோழநாட்டிலுள்ளவை.
      திருமருகலில் சுவாமிபெயர் - மாணிக்கவண்ணர் தேவியார்
      திருச்செங்காட்டங்குடியில் சுவாமிபெயர் - கணபதீசுவரர்
      தேவியார் - திருக்குழல்நாயகி.
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

      ------------------------------------------------------------------------

      1.7 திருநள்ளாறும் - திருஆலவாயும்


      வினாவுரை
      பண் - நட்டபாடை
      65 பாடக மெல்லடி பாவையோடும்
      படுபிண காடிடம் பற்றிநின்று
      நாடக மாடுநள் ளாறுடைய
      நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
      சூடக முன்கை மடந்தைமார்கள்
      துணைவரொ டுந்தொழு தேத்திவாழ்த்த
      ஆடக மாடம் நெருங்குகூடல்
      ஆலவா யின்கண் அமர்ந்தவாறே. 1.7.1
      66 திங்களம் போதுஞ் செழும்புனலுஞ்
      செஞ்சடை மாட்டயல் வைத்துகந்து
      நங்கள் மகிழுநள் ளாறுடைய
      நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
      பொங்கிள மென்முலை யார்களோடும்
      புனமயி லாட நிலாமுளைக்கும்
      அங்கள கச்சுதை மாடக்கூடல்
      ஆலவா யின்கண் அமர்ந்தவாறே. 1.7.2
      67 தண்ணறு மத்தமுங் கூவிளமும்
      வெண்டலை மாலையு தாங்கியார்க்கும்
      நண்ணல் அரியநள் ளாறுடைய
      நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
      புண்ணிய வாணரும் மாதவரும்
      புகுந்துட னேத்த புனையிழையார்
      அண்ணலின் பாட லெடுக்குங்கூடல்
      ஆலவா யின்கண் அமர்ந்தவாறே. 1.7.3
      68 பூவினில் வாசம் புனலிற்பொற்பு
      புதுவிரை சாந்தினின் நாற்றத்தோடு
      நாவினிற் பாடநள் ளாறுடைய
      நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
      தேவர்கள் தானவர் சித்தர்விச்சா
      தரர்கண தோடுஞ் சிறந்துபொங்கி
      ஆவினில் ஐந்துக தாட்டுங்கூடல்
      ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
      ஆவினிலைந்து - பஞ்சகவ்வியம். 1.7.4
      69 செம்பொன்செய் மாலையும் வாசிகையு
      திருந்து புகையு மவியும்பாட்டும்
      நம்பும்பெ ருமைநள் ளாறுடைய
      நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
      உம்பரும் நாக ருலகந்தானும்
      ஒலிகடல் சூழ்ந்த வுலகத்தோரும்
      அம்புத நால்களால் நீடுங்கூடல்
      ஆலவா யின்கண் அமர்ந்தவாறே. 1.7.5
      70 பாகமு தேவியை வைத்துக்கொண்டு
      பைவிரி துத்தி பரியபேழ்வாய்
      நாகமும் பூண்டநள் ளாறுடைய
      நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
      போகமும் நின்னை மனத்துவைத்து
      புண்ணியர் நண்ணும் புணர்வுபூண்ட
      ஆகமு டையவர் சேருங்கூடல்
      ஆலவா யின்கண் அமர்ந்தவாறே. 1.7.6
      71 கோவண ஆடையும் நீறுப்பூச்சுங்
      கொடுமழு ஏந்தலுஞ் செஞ்சடையும்
      நாவண பாட்டுநள் ளாறுடைய
      நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
      பூவண மேனி இளையமாதர்
      பொன்னும் மணியுங் கொழித்தெடுத்து
      ஆவண வீதியில் ஆடுங்கூடல்
      ஆலவா யின்கண் அமர்ந்தவாறே. 1.7.7
      72 இலங்கை யிராவணன் வெற்பெடுக்க
      எழில்விர லூன்றி யிசைவிரும்பி
      நலம்கொள சேர்ந்த நள்ளாறுடைய
      நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
      புலன்களை செற்று பொறியைநீக்கி
      புந்தியிலு நினை சிந்தைசெய்யும்
      அலங்கல்நல் லார்கள் அமருங்கூடல்
      ஆலவா யின்கண் அமர்ந்தவாறே. 1.7.8
      73 பணியுடை மாலும் மலரினோனும்
      பன்றியும் வென்றி பறவையாயும்
      நணுகல் அரியநள் ளாறுடைய
      நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
      மணியொலி சங்கொலி யோடுமற்றை
      மாமுர சின்னொலி என்றும்ஓவா
      தணிகிளர் வேந்தர் புகுதுங்கூடல்
      ஆலவா யின்கண் அமர்ந்தவாறே. 1.7.9
      74 தடுக்குடை கையருஞ் சாக்கியருஞ்
      சாதியின் நீங்கிய வத்தவத்தர்
      நடுக்குற நின்றநள் ளாறுடைய
      நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
      எடுக்கும் விழவும் நன்னாள்விழவும்
      இரும்பலி யின்பினோ டெத்திசையும்
      அடுக்கும் பெருமைசேர் மாடக்கூடல்
      ஆலவா யின்கண் அமர்ந்தவாறே. 1.7.10
      75 அன்புடை யானை அரனைக்கூடல்
      ஆலவாய் மேவிய தென்கொலென்று
      நன்பொனை நாதனை நள்ளாற்றானை
      நயம்பெற போற்றி நலங்குலாவும்
      பொன்புடை சூழ்தரு மாடக்காழி
      பூசுரன் ஞானசம் பந்தன்சொன்ன
      இன்புடை பாடல்கள் பத்தும்வல்லார்
      இமையவ ரேத்த இருப்பர்தாமே. 1.7.11

      இதுவுஞ் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - தெர்ப்பாரணியேசுவரர்
      தேவியார் - போகமார்த்தபூண்முலையம்மை.
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

      ------------------------------------------------------------------------

      1.8 திருஆவூர்ப்பசுபதீச்சரம்

      பண் - நட்டபாடை
      76 புண்ணியர் பூதியர் பூதநாதர்
      புடைபடு வார்தம் மனத்தார்திங்க
      கண்ணிய ரென்றென்று காதலாளர்
      கைதொழு தேத்த இருந்தவூராம்
      விண்ணுயர் மாளிகை மாடவீதி
      விரைகமழ் சோலை சுலாவியெங்கும்
      பண்ணியல் பாடல றாதஆவூர
      பசுபதி யீச்சரம் பாடுநாவே. 1.8.1
      77 முத்தியர் மூப்பில ராப்பினுள்ளார்
      முக்கணர் தக்கன்றன் வேள்விசாடும்
      அத்திய ரென்றென் றடியரேத்தும்
      ஐயன் அணங்கொ டிருந்தவூராம்
      தொத்திய லும்பொழில் மாடுவண்டு
      துதைந்தெங்கும் தூமது பாயக்கோயிற்
      பத்திமை பாடல றாதஆவூர
      பசுபதி யீச்சரம் பாடுநாவே. 1.8.2
      78 பொங்கி வரும்புனற் சென்னிவைத்தார்
      போம்வழி வந்திழி வேற்றமானார்
      இங்குயர் ஞானத்தர் வானோரேத்தும்
      இறையவ ரென்றுமி ருந்தவூராம்
      தெங்குயர் சோலைசே ராலைசாலி
      திளைக்கும் விளைவயல் சேரும்பொய்கை
      பங்கய மங்கை விரும்புமாவூர
      பசுபதி யீச்சரம் பாடுநாவே. 1.8.3
      79 தேவியோர் கூறின ரேறதேறுஞ்
      செலவினர் நல்குர வென்னைநீக்கும்
      ஆவிய ரந்தண ரல்லல்தீர்க்கும்
      அப்பனா ரங்கே அமர்ந்தவூராம்
      பூவிய லும்பொழில் வாசம்வீச
      புரிகுழ லார்சுவ டொற்றிமுற்ற
      பாவியல் பாடல றாதஆவூர
      பசுபதி யீச்சரம் பாடுநாவே. 1.8.4
      80 இந்தணை யுஞ்சடை யார்விடையார்
      இப்பிற பென்னை யறுக்கவல்லார்
      வந்தணை தின்னிசை பாடுவார்பால்
      மன்னினர் மன்னி யிருந்தவூராம்
      கொந்தணை யுங்குழ லார்விழவில்
      கூட்டமி டையிடை சேரும்வீதி
      பந்தணை யும்விர லார்தம்ஆவூர
      பசுபதி யீச்சரம் பாடுநாவே. 1.8.5
      81 குற்ற மறுத்தார் குணத்தினுள்ளார்
      கும்பிடு வார்த கன்புசெய்வார்
      ஒற்றை விடையினர் நெற்றிக்கண்ணார்
      உறைபதி யாகுஞ் செறிகொள்மாடஞ்
      சுற்றிய வாசலின் மாதர்விழா
      சொற்கவி பாடநி தானம்நல்க
      பற்றிய கையினர் வாழும்ஆவூர
      பசுபதி யீச்சரம் பாடுநாவே. 1.8.6
      82 நீறுடை யார்நெடு மால்வணங்கும்
      நிமிர்சடை யார்நினை வார்தமுள்ளம்
      கூறுடை யாருடை கோவணத்தார்
      குவலய மேத்த இருந்தவூராம்
      தாறுடை வாழையிற் கூழைமந்தி
      தகுகனி யுண்டுமிண் டிட்டினத்தை
      பாறிட பாய்ந்து பயிலும்ஆவூர
      பசுபதி யீச்சரம் பாடுநாவே. 1.8.7
      83 வெண்டலை மாலை விரவிப்பூண்ட
      மெய்யுடை யார்விறல் ஆரரக்கன்
      வண்டமர் பூமுடி செற்றுகந்த
      மைந்த ரிடம்வள மோங்கியெங்குங்
      கண்டவர் சிந்தை கருத்தின்மிக்கார்
      கதியரு ளென்றுகை யாரக்கூப்பி
      பண்டலர் கொண்டு பயிலும்ஆவூர
      பசுபதி யீச்சரம் பாடுநாவே. 1.8.8
      84 மாலும் அயனும் வணங்கிநேட
      மற்றவ ருக்கெரி யாகிநீண்ட
      சீலம் அறிவரி தாகிநின்ற
      செம்மையி னாரவர் சேருமூராம்
      கோல விழாவி னரங்கதேறி
      கொடியிடை மாதர்கள் மைந்தரோடும்
      பாலென வேமொழி தேத்தும்ஆவூர
      பசுபதி யீச்சரம் பாடுநாவே. 1.8.9
      85 பின்னிய தாழ்சடை யார்பிதற்றும்
      பேதைய ராஞ்சமண் சாக்கியர்கள்
      தன்னிய லும்முரை கொள்ளகில்லா
      சைவரி டந்தள வேறுசோலை
      துன்னிய மாதரும் மைந்தர்தாமும்
      சுனையிடை மூழ்கி தொடர்ந்தசிந்தை
      பன்னிய பாடல் பயிலும்ஆவூர
      பசுபதி யீச்சரம் பாடுநாவே. 1.8.10
      86 எண்டிசை யாரும் வணங்கியேத்தும்
      எம்பெரு மானையெ ழில்கொளாவூர
      பண்டுரி யார்சிலர் தொண்டர்போற்றும்
      பசுபதி யீச்சர தாதிதன்மேல்
      கண்டல்கள் மிண்டிய கானற்காழி
      கவுணியன் ஞானசம் பந்தன்சொன்ன
      கொண்டினி தாயிசை பாடியாடி
      கூடு மவருடை யார்கள்வானே. 1.8.11

      இது சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - பசுபதீச்சுரர்
      தேவியார் - மங்களநாயகியம்மை
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

      ------------------------------------------------------------------------

      1.9 திருவேணுபுரம்

      பண் - நட்டபாடை
      87 வண்டார்குழ லரிவையொடும் பிரியாவகை பாகம்
      பெண்டான்மிக ஆனான்பிறை சென்னிப்பெரு மானூர்
      தண்டாமரை மலராளுறை தவளந்நெடு மாடம்
      விண்டாங்குவ போலும்மிகு வேணுபுர மதுவே. 1.9.1
      80 படைப்பும்நிலை யிறுதிப்பயன் பருமையொடு நேர்மை
      கிடைப்பல்கண முடையான்கிறி பூதப்படை யானூர்
      புடைப்பாளையின் கமுகின்னொடு புன்னைமலர் நாற்றம்
      விடைத்தேவரு தென்றல்மிகு வேணுபுர மதுவே.
      குடைப்பாளை என்றும் பாடம். 1.9.2
      89 கடந்தாங்கிய கரியையவர் வெருவவுரி போர்த்து
      படந்தாங்கிய அரவக்குழை பரமேட்டிதன் பழவூர்
      நடந்தாங்கிய நடையார்நல பவளத்துவர் வாய்மேல்
      விடந்தாங்கிய கண்ணார்பயில் வேணுபுர மதுவே. 1.9.3
      90 தக்கன்தன சிரமொன்றினை அரிவித்தவன் தனக்கு
      மிக்கவ்வரம் அருள்செய்தஎம் விண்ணோர்பெரு மானூர்
      பக்கம்பல மயிலாடிட மேகம்முழ வதிர
      மிக்கம்மது வண்டார்பொழில் வேணுபுர மதுவே. 1.9.4
      91 நானாவித உருவாய்நமை யாள்வான்நணு காதார்
      வானார்திரி புரமூன்றெரி யுண்ணச்சிலை தொட்டான்
      தேனார்ந்தெழு கதலிக்கனி யுண்பான்திகழ் மந்தி
      மேனோக்கிநின் றிரங்கும்பொழில் வேணுபுர மதுவே. 1.9.5
      92 மண்ணோர்களும் விண்ணோர்களும் வெருவிமிக அஞ்ச
      கண்ணார்சலம் மூடிக்கட லோங்கவ்வுயர தானூர்
      தண்ணார்நறுங் கமலம்மலர் சாயவ்விள வாளை
      விண்ணோர்துதி கொள்ளும்வியன் வேணுபுர மதுவே.
      விண்ணார் குதிகொள்ளும் என்றும் பாடம். 1.9.6
      இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 1.9.7
      93 மலையான்மகள் அஞ்சவ்வரை எடுத்தவ்வலி யரக்கன்
      தலைதோளவை நெரியச்சரண் உகிர்வைத்தவன் தன்னூர்
      கலையாறொடு சுருதித்தொகை கற்றோர்மிகு கூட்டம்
      விலையாயின சொற்றேர்தரு வேணுபுர மதுவே. 1.9.8
      94 வயமுண்டவ மாலும்அடி காணாதல மாக்கும்
      பயனாகிய பிரமன்படு தலையேந்திய பரனூர்
      கயமேவிய சங்கந்தரு கழிவிட்டுயர் செந்நெல்
      வியன்மேவிவ துறங்கும்பொழில் வேணுபுர மதுவே. 1.9.9
      95 மாசேறிய உடலாரமண் கழுக்கள்ளொடு தேரர்
      தேசேறிய பாதம்வணங் காமைத்தெரி யானூர்
      தூசேறிய அல்குல்துடி இடையார்துணை முலையார்
      வீசேறிய புருவத்தவர் வேணுபுர மதுவே.
      குழுக்கள் என்றும் பாடம். 1.9.10
      96 வேதத்தொலி யானும்மிகு வேணுபுர தன்னை
      பாதத்தினின் மனம்வைத்தெழு பந்தன்தன பாடல்
      ஏதத்தினை இல்லா இவை பத்தும்இசை வல்லார்
      கேதத்தினை இல்லார்சிவ கெதியைப்பெறு வாரே. 11

      வேணுபுரம் என்பது சீகாழிக்கொருபெயர்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

      ------------------------------------------------------------------------

      1.10 திரு அண்ணாமலை

      பண் - நட்டபாடை
      97 உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்
      பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
      மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும்
      அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே. 1.10.1
      98 தேமாங்கனி கடுவன்கொள விடுகொம்பொடு தீண்டி
      தூமாமழை துறுவன்மிசை சிறுநுண்துளி சிதற
      ஆமாம்பிணை யணையும்பொழில் அண்ணாமலை யண்ணல்
      பூமாங்கழல் புனைசேவடி நினைவார்வினை யிலரே. 1.10.2
      99 பீலிம்மயில் பெடையோடுறை பொழில்சூழ் கழைமுத்தஞ்
      சூலிம்மணி தரைமேல்நிறை சொரியும்விரி சாரல்
      ஆலிம்மழை தவழும்பொழில் அண்ணாமலை அண்ணல்
      காலன்வலி தொலைசேவடி தொழுவாரன புகழே. 1.10.3
      100 உதிரும்மயி ரிடுவெண்டலை கலனாவுல கெல்லாம்
      எதிரும்பலி யுணலாகவும் எருதேறுவ தல்லால்
      முதிருஞ்சடை இளவெண்பிறை முடிமேல்கொள அடிமேல்
      அதிருங்கழல் அடிகட்கிடம் அண்ணாமலை யதுவே. 1.10.4
      101 மரவஞ்சிலை தரளம்மிகு மணியுந்துவெள் ளருவி
      அரவஞ்செய முரவம்படும் அண்ணாமலை யண்ணல்
      உரவஞ்சடை யுலவும்புனல் உடனாவதும் ஓரார்
      குரவங்கமழ் நறுமென்குழல் உமைபுல்குதல் குணமே. 1.10.5
      102 பெருகும்புனல் அண்ணாமலை பிறைசேர்கடல் நஞ்சை
      பருகுந்தனை துணிவார்பொடி அணிவாரது பருகி
      கருகும்மிட றுடையார்கமழ் சடையார்கழல் பரவி
      உருகும்மனம் உடையார்த குறுநோயடை யாவே. 1.10.6
      103 கரிகாலன குடர்கொள்வன கழுகாடிய காட்டில்
      நரியாடிய நகுவெண்டலை யுதையுண்டவை யுருள
      எரியாடிய இறைவர்க்கிடம் இனவண்டிசை முரல
      அரியாடிய கண்ணாளொடும் அண்ணாமலை யதுவே. 1.10.7
      104 ஒளிறூபுலி அதளாடையன் உமையஞ்சுதல் பொருட்டால்
      பிளிறூகுரல் மதவாரணம் வதனம்பிடி துரித்து
      வெளிறூபட விளையாடிய விகிர்தன்னிரா வணனை
      அளறூபட அடர்த்தானிடம் அண்ணாமலை யதுவே. 1.10.8
      105 விளவார்கனி படநூறிய கடல்வண்ணனும் வேத
      கிளர்தாமரை மலர்மேலுறை கேடில்புக ழோனும்
      அளவாவணம் அழலாகிய அண்ணாமலை யண்ணல்
      தளராமுலை முறுவல்உமை தலைவன்னடி சரணே. 1.10.9
      106 வேர்வந்துற மாசூர்தர வெயில்நின்றுழல் வாரும்
      மார்வம்புதை மலிசீவர மறையாவரு வாரும்
      ஆரம்பர்தம் உரைகொள்ளன்மின் அண்ணாமலை யண்ணல்
      கூர்வெண்மழு படையான்நல கழல்சேர்வது குணமே. 1.10.10
      107 வெம்புந்திய கதிரோனொளி விலகும்விரி சாரல்
      அம்புந்திமூ வெயிலெய்தவன் அண்ணாமலை யதனை
      கொம்புந்துவ குயிலாலுவ குளிர்காழியுள் ஞான
      சம்பந்தன தமிழ்வல்லவர் அடிபேணுதல் தவமே. 1.10.11

      இது நடுநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - அருணாசலேசுவரர்
      தேவியார் - உண்ணாமுலையம்மை
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

      ------------------------------------------------------------------------

      1.11 திருவீழிமிழலை

      பண் - நட்டபாடை
      108 சடையார்புன லுடையானொரு சரிகோவண முடையான்
      படையார்மழு வுடையான்பல பூதப்படை யுடையான்
      மடமான்விழி யுமைமாதிடம் உடையானெனை யுடையான்
      விடையார்கொடி யுடையானிடம் வீழிம்மிழ லையே. 1.11.1
      109 ஈறாய்முத லொன்றாயிரு பெண்ணாண்குண மூன்றாய்
      மாறாமறை நான்காய்வரு பூதம்மவை ஐந்தாய்
      ஆறார்சுவை ஏழோசையொ டெட்டுத்திசை தானாய்
      வேறாயுடன் ஆனானிடம் வீழிம்மிழ லையே. 1.11.2
      110 வம்மின்னடி யீர்நாண்மல ரிட்டுத்தொழு துய்ய
      உம்மன்பினொ டெம்மன்புசெய் தீசன்னுறை கோயில்
      மும்மென்றிசை முரல்வண்டுகள் கொண்டித்திசை யெங்கும்
      விம்மும்பொழில் சூழ்தண்வயல் வீழிம்மிழ லையே. 1.11.3
      111 பண்ணும்பதம் ஏழும்பல வோசைத்தமி ழவையும்
      உண்ணின்றதொர் சுவையும்முறு தாளத்தொலி பலவும்
      மண்ணும்புனல் உயிரும்வரு காற்றுஞ்சுடர் மூன்றும்
      விண்ணும்முழு தானானிடம் வீழிம்மிழ லையே. 1.11.4
      112 ஆயாதன சமயம்பல அறியாதவன் நெறியின்
      தாயானவன் உயிர்கட்குமுன் தலையானவன் மறைமு
      தீயானவன் சிவனெம்மிறை செல்வத்திரு வாரூர்
      மேயானவன் உறையும்மிடம் வீழிம்மிழ லையே. 1.11.5
      113 கல்லால்நிழற் கீழாயிடர் காவாயென வானோர்
      எல்லாம்ஒரு தேராயயன் மறைபூட்டிநின் றுய்ப்ப
      வல்லாய்எரி காற்றீர்க்கரி கோல்வாசுகி நாண்கல்
      வில்லால்எயில் எய்தானிடம் வீழிம்மிழ லையே. 1.11.6
      114 கரத்தான்மலி சிரத்தான்கரி யுரித்தாயதொர் படத்தான்
      புரத்தார்பொடி படத்தன்னடி பணிமூவர்க கோவா
      வரத்தான்மிக அளித்தானிடம் வளர்புன்னைமு தரும்பி
      விரைத்தாதுபொன் மணியீன்றணி வீழிம்மிழ லையே. 1.11.7
      115 முன்னிற்பவர் இல்லாமுரண் அரக்கன்வட கயிலை
      தன்னைப்பிடி தெடுத்தான்முடி தடந்தோளிற வூன்றி
      பின்னைப்பணி தேத்தப்பெரு வாள்பேரொடு கொடுத்த
      மின்னிற்பொலி சடையானிடம் வீழிம்மிழ லையே. 1.11.8
      116 பண்டேழுல குண்டானவை கண்டானுமுன் னறியா
      ஒண்டீயுரு வானானுறை கோயில்நிறை பொய்கை
      வண்டாமரை மலர்மேல்மட அன்னந்நடை பயில
      வெண்டாமரை செந்தாதுதிர் வீழிம்மிழ லையே. 1.11.9
      117 மசங்கற்சமண் மண்டைக்கையர் குண்டக்குண மிலிகள்
      இசங்கும்பிற பறுத்தானிடம் இருந்தேன்களி திரைத்து
      பசும்பொற்கிளி களிமஞ்ஞைகள் ஒளிகொண்டெழு பகலோன்
      விசும்பைப்பொலி விக்கும்பொழில் வீழிம்மிழ லையே. 1.11.10
      118 வீழிம்மிழ லைம்மேவிய விகிர்தன்றனை விரைசேர்
      காழிந்நகர கலைஞானசம் பந்தன்தமிழ் பத்தும்
      யாழின்னிசை வல்லார்சொல கேட்டாரவ ரெல்லாம்
      ஊழின்மலி வினைபோயிட உயர்வானடை வாரே.
      ஊழின்வலி என்றும் பாடம். 1.11.11

      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - வீழியழகர்
      தேவியார் - சுந்தரகுசாம்பிகை.
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

      ------------------------------------------------------------------------

      1.12 திருமுதுகுன்றம்

      பண் - நட்டபாடை
      119 மத்தாவரை நிறுவிக்கடல் கடைந்தவ்விடம் உண்ட
      தொத்தார்தரு மணிநீண்முடி சுடர்வண்ணன திடமாங்
      கொத்தார்மலர் குளிர்சந்தகில் ஒளிர்குங்குமங் கொண்டு
      முத்தாறுவ தடிவீழ்தரு முதுகுன்றடை வோமே. 1.12.1
      120 தழையார்வட வியவீதனில் தவமேபுரி சைவன்
      இழையாரிடை மடவாளொடும் இனிதாவுறை விடமாம்
      மழைவானிடை முழவவ்வெழில் வளைவாளுகிர் எரிகண்
      முழைவாளரி குமிறும்முயர் முதுகுன்றடை வோமே. 1.12.2
      121 விளையாததொர் பரிசில்வரு பசுபாசவே தனையொண்
      டளையாயின தவிரவ்வருள் தலைவன்னது சார்பாம்
      களையார்தரு கதிராயிரம் உடையவ்வவ னோடு
      முளைமாமதி தவழும்முயர் முதுகுன்றடை வோமே. 1.12.3
      122 சுரர்மாதவர் தொகுகின்னரர் அவரோதொலை வில்லா
      நரரானபன் முனிவர்தொழ இருந்தானிடம் நலமார்
      அரசார்வர அணிபொற்கல னவைகொண்டுபன் னாளும்
      முரசார்வரு மணமொய்ம்புடை முதுகுன்றடை வோமே. 1.12.4
      123 அறையார்கழல் அந்தன்றனை அயில்மூவிலை யழகார்
      கறையார்நெடு வேலின்மிசை யேற்றானிடங் கருதில்
      மறையாயின பலசொல்லியொண் மலர்சாந்தவை கொண்டு
      முறையால்மிகு முனிவர்தொழு முதுகுன்றடை வோமே. 1.12.5
      124 ஏவார்சிலை எயினன்னுரு வாகியெழில் விசயற்
      கோவாதவின் னருள்செய்தஎம் மொருவற்கிடம் உலகில்
      சாவாதவர் பிறவாதவர் தவமேமிக வுடையார்
      மூவாதபன் முனிவர்தொழு முதுகுன்றடை வோமே. 1.12.6
      125 தழல்சேர்தரு திருமேனியர் சசிசேர்சடை முடிய
      மழமால்விடை மிகவேறிய மறையோனுறை கோயில்
      விழவோடொலி மிகுமங்கையர் தகுமாடக சாலை
      முழவோடிசை நடமுஞ்செயும் முதுகுன்றடை வோமே.
      முடியர் என்றும் பாடம்.
      நடமுன் செயும் என்றும் பாடம். 1.12.7
      127 செதுவாய்மைகள் கருதிவ்வரை யெடுத்ததிற லரக்கன்
      கதுவாய்கள்ப தலறியிட கண்டானுறை கோயில்
      மதுவாயசெங் காந்தள்மலர் நிறையக்குறை வில்லா
      முதுவேய்கள்மு துதிரும்பொழில் முதுகுன்றடை வோமே.
      குறை யில்லா என்றும் பாடம். 1.12.8
      127 இயலாடிய பிரமன்னரி இருவர்க்கறி வரிய
      செயலாடிய தீயாருரு வாகியெழு செல்வன்
      புயலாடுவண் பொழில்சூழ்புனற் படப்பைத்தட தருகே
      முயலோடவெண் கயல்பாய்தரு முதுகுன்றடை வோமே. 1.12.9
      128 அருகரொடு புத்தரவ ரறியாவரன் மலையான்
      மருகன்வரும் இடபக்கொடி யுடையானிடம் மலரார்
      கருகுகுழன் மடவார்கடி குறிஞ்சியது பாடி
      முருகன்னது பெருமைபகர் முதுகுன்றடை வோமே. 1.12.10
      129 முகில்சேர்தரு முதுகுன்றுடை யானைம்மிகு தொல்சீர
      புகலிந்நகர் மறைஞானசம் பந்தன்னுரை செய்த
      நிகரில்லன தமிழ்மாலைகள் இசையோடிவை பத்தும்
      பகரும்மடி யவர்கட்கிடர் பாவம்மடை யாவே. 1.12.11

      இத்தலம் நடுநாட்டிலுள்ளது - இதுவே விருத்தாசலம்.
      சுவாமிபெயர் - பழமலைநாதர்
      தேவியார் - பெரியநாயகியம்மை.
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

      ------------------------------------------------------------------------

      1.13 திருவியலூர்

      பண் - நட்டபாடை
      130 குரவங்கமழ் நறுமென்குழல் அரிவையவள் வெருவ
      பொருவெங்கரி படவென்றதன் உரிவையுடல் அணிவோன்
      அரவும்மலை புனலும்மிள மதியுந்நகு தலையும்
      விரவுஞ்சடை யடிகட்கிடம் விரிநீர்விய லூரே. 1.13.1
      131 ஏறார்தரும் ஒருவன்பல உருவன்னிலை யானான்
      ஆறார்தரு சடையன்னன லுருவன்புரி வுடையான்
      மாறார்புரம் எரியச்சிலை வளைவித்தவன் மடவாள்
      வீறார்தர நின்றானிடம் விரிநீர்விய லூரே. 1.13.2
      132 செம்மென்சடை யவைதாழ்வுற மடவார்மனை தோறும்
      பெய்ம்மின்பலி எனநின்றிசை பகர்வாரவ ரிடமாம்
      உம்மென்றெழும் அருவித்திரள் வரைபற்றிட உறைமேல்
      விம்மும்பொழில் கெழுவும்வயல் விரிநீர்விய லூரே. 1.13.3
      133 அடைவாகிய அடியார்தொழ அலரோன்றலை யதனில்
      மடவாரிடு பலிவந்துண லுடையானவ னிடமாங்
      கடையார்தர அகிலார்கழை முத்தம்நிரை சிந்தி
      மிடையார்பொழில் புடைசூழ்தரு விரிநீர்விய லூரே. 1.13.4
      134 எண்ணார்தரு பயனாயய னவனாய்மிகு கலையா
      பண்ணார்தரு மறையாயுயர் பொருளாயிறை யவனா
      கண்ணார்தரும் உருவாகிய கடவுள்ளிட மெனலாம்
      விண்ணோரொடு மண்ணோர்தொழு விரிநீர்விய லூரே. 1.13.5
      135 வசைவிற்கொடு வருவேடுவ னவனாய்நிலை யறிவான்
      திசையுற்றவர் காணச்செரு மலைவான்நிலை யவனை
      அசையப்பொரு தசையாவணம் அவனுக்குயர் படைகள்
      விசையற்கருள் செய்தானிடம் விரிநீர்வியலூரே. 1.13.6
      136 மானார்அர வுடையான்இர வுடையான்பகல் நட்டம்
      ஊனார்தரும் உயிரானுயர் விசையான்விளை பொருள்கள்
      தானாகிய தலைவன்னென நினைவாரவ ரிடமாம்
      மேனாடிய விண்ணோர்தொழும் விரிநீர்விய லூரே. 1.13.7
      137 பொருவாரென கெதிராரென பொருப்பையெடு தான்றன்
      கருமால்வரை கரந்தோளுரங் கதிர்நீள்முடி நெரிந்து
      சிரமாயின கதறச்செறி கழல்சேர்திரு வடியின்
      விரலாலடர் வித்தானிடம் விரிநீர்விய லூரே. 1.13.8
      138 வளம்பட்டலர் மலர்மேலயன் மாலும்மொரு வகையால்
      அளம்பட்டறி வொண்ணாவகை அழலாகிய அண்ணல்
      உளம்பட்டெழு தழல்தூணதன் நடுவேயொரு உருவம்
      விளம்பட்டருள் செய்தானிடம் விரிநீர்விய லூரே. 1.13.9
      139 தடுக்காலுடல் மறைப்பாரவர் தவர்சீவர மூடி
      பிடக்கேயுரை செய்வாரொடு பேணார்நமர் பெரியோர்
      கடற்சேர்தரு விடமுண்டமு தமரர்க்கருள் செய்த
      விடைச்சேர்தரு கொடியானிடம் விரிநீர்விய லூரே. 1.13.10
      140 விளங்கும்பிறை சடைமேலுடை விகிர்தன்விய லூரை
      தளங்கொண்டதொர் புகலித்தகு தமிழ்ஞானசம் பந்தன்
      துளங்கில்தமிழ் பரவித்தொழும் அடியாரவர் என்றும்
      விளங்கும்புகழ் அதனோடுயர் விண்ணும்முடை யாரே. 1.13.11

      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - யோகாநந்தேசுவரர்
      தேவியார் - சவுந்தரநாயகியம்மை
      சாந்தநாயகியம்மை என்றும் பாடம்.
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

      ------------------------------------------------------------------------
      1.14 திருக்கொடுங்குன்றம்

      பண் - நட்டபாடை
      141 வானிற்பொலி வெய்தும்மழை மேகங்கிழி தோடி
      கூனற்பிறை சேருங்குளிர் சாரற்கொடுங் குன்றம்
      ஆனிற்பொலி வைந்தும்மமர தாடியுல கே
      தேனிற்பொலி மொழியாளொடு மேயான்திரு நகரே. 1.14.1
      142 மயில்புல்குதண் பெடையோடுடன் ஆடும்வளர் சாரல்
      குயிலின்னிசை பாடுங்குளிர் சோலைக்கொடுங் குன்றம்
      அயில்வேல்மலி நெடுவெஞ்சுடர் அனலேந்திநின் றாடி
      எயில்முன்பட எய்தானவன் மேயவ்வெழில் நகரே. 1.14.2
      143 மிளிரும்மணி பைம்பொன்னொடு விரைமாமல ருந்தி
      குளிரும்புனல் பாயுங்குளிர் சாரற்கொடுங் குன்றம்
      கிளர்கங்கையொ டிளவெண்மதி கெழுவுஞ்சடை தன்மேல்
      வளர்கொன்றையும் மதமத்தமும் வைத்தான்வள நகரே. 1.14.3
      144 பருமாமத கரியோடரி யிழியும்விரி சாரல்
      குருமாமணி பொன்னோடிழி யருவிக்கொடுங் குன்றம்
      பொருமாஎயில் வரைவிற்றரு கணையிற்பொடி செய்த
      பெருமானவன் உமையாளொடு மேவும்பெரு நகரே. 1.14.4
      145 மேகத்திடி குரல்வந்தெழ வெருவிவ்வரை யிழியும்
      கூகைக்குலம் ஓடித்திரி சாரற்கொடுங் குன்றம்
      நாகத்தொடும் இளவெண்பிறை சூடிந்நல மங்கை
      பாகத்தவன் இமையோர்தொழ மேவும்பழ நகரே. 1.14.5
      146 கைம்மாமத கரியின்னினம் இடியின்குர லதிர
      கொய்ம்மாமலர சோலைபுக மண்டுங்கொடுங் குன்றம்
      அம்மானென உள்கித்தொழு வார்கட்கருள் செய்யும்
      பெம்மானவன் இமையோர்தொழ மேவும்பெரு நகரே. 1.14.6
      147 மரவத்தொடு மணமாதவி மௌவல்லது விண்ட
      குரவத்தொடு விரவும்பொழில் சூழ்தண்கொடுங் குன்றம்
      அரவத்தொடு மிளவெண்பிறை விரவும்மலர கொன்றை
      நிரவச்சடை முடிமேலுடன் வைத்தான்நெடு நகரே. 1.14.7
      148 முட்டாமுது கரியின்னினம் முதுவேய்களை முனிந்து
      குட்டாச்சுனை யவைமண்டிநின் றாடுங்கொடுங் குன்றம்
      ஒட்டாவர கன்றன்முடி ஒருபஃதவை யுடனே
      பிட்டானவன் உமையாளொடு மேவும்பெரு நகரே. 1.14.8
      149 அறையும்மரி குரலோசையை அஞ்சியடும் ஆனை
      குறையும்மன மாகிம்முழை வைகுங்கொடுங் குன்றம்
      மறையும்மவை யுடையானென நெடியானென இவர்கள்
      இறையும்மறி வொண்ணாதவன் மேயவ்வெழில் நகரே. 1.14.9
      150 மத்தக்களி றாளிவ்வர வஞ்சிம்மலை தன்னை
      குத்திப்பெரு முழைதன்னிடை வைகுங்கொடுங் குன்றம்
      புத்தரொடு பொல்லாமன சமணர்புறங் கூற
      பத்தர்க்கருள் செய்தானவன் மேயபழ நகரே. 1.14.10
      151 கூனற்பிறை சடைமேல்மிக வுடையான்கொடுங் குன்றை
      கானற்கழு மலமாநகர தலைவன்நல கவுணி
      ஞானத்துயர் சம்பந்தன நலங்கொள்தமிழ் வல்லார்
      ஊனத்தொடு துயர்தீர்ந்துல கேத்தும்மெழி லோரே. 1.14.11

      இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - கொடுங்குன்றேசுவரர் கொடுங்குன்றீசர் என்றும் பாடம்.
      தேவியார் - அமுதவல்லியம்மை குயிலமுதநாயகி என்றும் பாடம்.
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

      ------------------------------------------------------------------------

      1.15 திருநெய்த்தானம்

      பண் - நட்டபாடை
      152 மையாடிய கண்டன்மலை மகள்பாகம துடையான்
      கையாடியகேடில் கரியுரிமூடிய வொருவன்
      செய்யாடிய குவளைம்மலர் நயனத்தவ ளோடும்
      நெய்யாடிய பெருமானிடம் நெய்த்தானமெ னீரே. 1.15.1
      152 பறையும்பழி பாவம்படு துயரம்பல தீரும்
      பிறையும்புனல் அரவும்படு சடையெம்பெருமா னூர்
      அறையும்புனல் வருகாவிரி அலைசேர்வட கரைமேல்
      நிறையும்புனை மடவார்பயில் நெய்த்தானமெ னீரே. 1.15.2
      154 பேயாயின பாடப்பெரு நடமாடிய பெருமான்
      வேயாயின தோளிக்கொரு பாகம்மிக வுடையான்
      தாயாகிய வுலகங்களை நிலைபேறுசெய் தலைவன்
      நேயாடிய பெருமானிடம் நெய்த்தானமெ னீரே. 1.15.3
      155 சுடுநீறணி யண்ணல்சுடர் சூலம்மனல் ஏந்தி
      நடுநள்ளிருள் நடமாடிய நம்பன்னுறை யிடமாம்
      கடுவாளிள அரவாடுமிழ் கடல்நஞ்சம துண்டான்
      நெடுவாளைகள் குதிகொள்ளுயர் நெய்த்தானமெ னீரே. 1.15.4
      156 நுகராரமொ டேலம்மணி செம்பொன்னுரை யுந்தி
      பகராவரு புனற்காவிரி பரவிப்பணி தேத்தும்
      நிகரான்மண லிடுதன்கரை நிகழ்வாயநெ தான
      நகரானடி யேத்தந்நமை நடலையடை யாவே.
      தண்கரை என்றும் பாடம். 1.15.5
      157 விடையார்கொடி யுடையவ்வணல் வீந்தார்வெளை யெலும்பும்
      உடையார்நறு மாலைச்சடை யுடையாரவர் மேய
      புடையேபுனல் பாயும்வயல் பொழில்சூழ்தணெ தானம்
      அடையாதவ ரென்றும்அம ருலகம்மடை யாரே.
      சூழ்ந்த நெய்த்தானம் என்றும் பாடம். 1.15.6
      158 நிழலார்வயல் கமழ்சோலைகள் நிறைகின்றநெ தான
      தழலானவன் அனலங்கையி லேந்தியழ காய
      கழலானடி நாளுங்கழ லாதேவிட லின்றி
      தொழலாரவர் நாளுந்துய ரின்றித்தொழு வாரே. 1.15.7
      159 அறையார்கட லிலங்கைக்கிறை யணிசேர்கயி லாயம்
      இறையாரமுன் எடுத்தான்இரு பதுதோளிற ஊன்றி
      நிறையார்புனல் நெய்த்தானன்நன் நிகழ்சேவடி பரவ
      கறையார்கதிர் வாளீந்தவர் கழலேத்துதல் கதியே. 1.15.8
      160 கோலம்முடி நெடுமாலொடு கொய்தாமரை யானும்
      சீலம்மறி வரிதாயொளி திகழ்வாயநெ தானம்
      காலம்பெற மலர்நீரவை தூவித்தொழு தேத்தும்
      ஞாலம்புகழ் அடியாருடல் உறுநோய்நலி யாவே. 1.15.9
      161 மத்தம்மலி சித்தத்திறை மதியில்லவர் சமணர்
      புத்தரவர் சொன்னம்மொழி பொருளாநினை யேன்மின்
      நித்தம்பயில் நிமலன்னுறை நெய்த்தானம தேத்தும்
      சித்தம்முடை யடியாருடல் செறுநோயடை யாவே. 1.15.10
      162 தலம்மல்கிய புனற்காழியுள் தமிழ்ஞானசம் பந்தன்
      நிலம்மல்கிய புகழான்மிகு நெய்த்தானனை நிகரில்
      பலம்மல்கிய பாடல்லிவை பத்தும்மிக வல்லார்
      சிலமல்கிய செல்வன்னடி சேர்வர்சிவ கதியே. 1.15.11

      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - நெய்யாடியப்பர்
      தேவியார் - வாலாம்பிகையம்மை.
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

      ------------------------------------------------------------------------

      1.16 திருப்புள்ளமங்கை - திரு ஆலந்துறை

      பண் - நட்டபாடை
      163 பாலுந்துறு திரளாயின பரமன்பிர மன்தான்
      போலுந்திற லவர்வாழ்தரு பொழில்சூழ்புள மங்கை
      காலன்திற லறச்சாடிய கடவுள்ளிடங் கருதில்
      ஆலந்துறை தொழுவார்தமை யடையாவினை தானே. 1.16.1
      164 மலையான்மகள் கணவன்மலி கடல்சூழ்தரு தன்மை
      புலையாயின களைவானிடம் பொழில்சூழ்புள மங்கை
      கலையால்மலி மறையோரவர் கருதித்தொழு தேத்த
      அலையார்புனல் வருகாவிரி ஆலந்துறை அதுவே. 1.16.2
      165 கறையார்மிட றுடையான்கமழ் கொன்றைச்சடை முடிமேல்
      பொறையார்தரு கங்கைப்புன லுடையான்புள மங்கை
      சிறையார்தரு களிவண்டறை பொழில்சூழ்திரு வால
      துறையானவன் நறையார்கழல் தொழுமின்துதி செய்தே. 1.16.3
      166 தணியார்மதி அரவின்னொடு வைத்தானிடம் மொய்த்தெம்
      பணியாயவன் அடியார்தொழு தேத்தும்புள மங்கை
      மணியார்தரு கனகம்மவை வயிரத்திர ளோடும்
      அணியார்மணல் அணைகாவிரி யாலந்துறை யதுவே. 1.16.4
      167 மெய்த்தன்னுறும் வினைதீர்வகை தொழுமின்செழு மலரின்
      கொத்தின்னொடு சந்தாரகில் கொணர்காவிரி கரைமேல்
      பொத்தின்னிடை யாந்தைபல பாடும்புள மங்கை
      அத்தன்நமை யாள்வானிடம் ஆலந்துறை யதுவே. 1.16.5
      168 மன்னானவன் உலகிற்கொரு மழையானவன் பிழையில்
      பொன்னானவன் முதலானவன் பொழில்சூழ்புள மங்கை
      என்னானவன் இசையானவன் இளஞாயிறின் சோதி
      அன்னானவன் உறையும்மிடம் ஆலந்துறை யதுவே. 1.16.6
      169 முடியார்தரு சடைமேல்முளை இளவெண்மதி சூடி
      பொடியாடிய திருமேனியர் பொழில்சூழ்புள மங்கை
      கடியார்மலர் புனல்கொண்டுதன் கழலேதொழு தேத்தும்
      அடியார்த கினியானிடம் ஆலந்துறை யதுவே. 1.16.7
      170 இலங்கைமன்னன் முடிதோளிற எழிலார்திரு விரலால்
      விலங்கல்லிடை அடர்த்தானிடம் வேதம்பயின் றேத்தி
      புலன்கள்தமை வென்றார்புக ழவர்வாழ்புள மங்கை
      அலங்கல்மலி சடையானிடம் ஆலந்துறை யதுவே. 1.16.8
      171 செறியார்தரு வெள்ளைத்திரு நீற்றின்திரு முண்ட
      பொறியார்தரு புரிநூல்வரை மார்பன்புள மங்கை
      வெறியார்தரு கமலத்தயன் மாலுந்தனை நாடி
      அறியாவகை நின்றானிடம் ஆலந்துறை யதுவே. 1.16.9
      172 நீதியறி யாதாரமண் கையரொடு மண்டை
      போதியவ ரோதும்முரை கொள்ளார்புள மங்கை
      ஆதியவர் கோயில்திரு ஆலந்துறை தொழுமின்
      சாதிம்மிகு வானோர்தொழு தன்மைபெற லாமே. 1.16.10
      173 பொந்தின்னிடை தேனூறிய பொழில்சூழ்புள மங்கை
      அந்தண்புனல் வருகாவிரி யாலந்துறை யானை
      கந்தம்மலி கமழ்காழியுள் கலைஞானசம் பந்தன்
      சந்தம்மலி பாடல்சொலி ஆடத்தவ மாமே. 1.16.11

      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - பசுபதிநாயகர்
      தேவியார் - பால்வளைநாயகியம்மை.
      பல்வளைநாயகியம்மை என்றும் பாடம்.
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

      ------------------------------------------------------------------------

      1.17 திருஇடும்பாவனம்

      பண் - நட்டபாடை
      174 மனமார்தரு மடவாரொடு மகிழ்மைந்தர்கள் மலர்தூ
      தனமார்தரு சங்கக்கடல் வங்கத்திர ளுந்தி
      சினமார்தரு திறல்வாளெயிற் றரக்கன்மிகு குன்றில்
      இனமாதவர் இறைவர்க்கிடம் இடும்பாவன மிதுவே. 1.17.1
      175 மலையார்தரு மடவாளொரு பாகம்மகிழ் வெய்தி
      நிலையார்தரு நிமலன்வலி நிலவும்புகழ் ஒளிசேர்
      கலையார்தரு புலவோரவர் காவல்மிகு குன்றில்
      இலையார்தரு பொழில்சூழ்வரும் இடும்பாவன மிதுவே. 1.17.2
      176 சீலம்மிகு சித்தத்தவர் சிந்தித்தெழும் எந்தை
      ஞாலம்மிகு கடல்சூழ்தரும் உலகத்தவர் நலமார்
      கோலம்மிகு மலர்மென்முலை மடவார்மிகு குன்றில்
      ஏலங்கமழ் பொழில்சூழ்தரும் இடும்பாவன மிதுவே. 1.17.3
      177 பொழிலார்தரு குலைவாழைகள் எழிலார்திகழ் போழ்தில்
      தொழிலான்மிகு தொண்டரவர் தொழுதாடிய முன்றில்
      குழலார்தரு மலர்மென்முலை மடவார்மிகு குன்றில்
      எழிலார்தரும் இறைவர்க்கிடம் இடும்பாவன மிதுவே. 1.17.4
      178 பந்தார்விரல் உமையாளொரு பங்காகங்கை முடிமேல்
      செந்தாமரை மலர்மல்கிய செழுநீர்வயற் கரைமேல்
      கொந்தார்மலர் புன்னைமகிழ் குரவங்கமழ் குன்றில்
      எந்தாயென இருந்தானிடம் இடும்பாவன மிதுவே. 1.17.5
      179 நெறிநீர்மையர் நீள்வானவர் நினையுந்நினை வாகி
      அறிநீர்மையி லெய்தும்மவர கறியும்மறி வருளி
      குறிநீர்மையர் குணமார்தரு மணமார்தரு குன்றில்
      எறிநீர்வயல் புடைசூழ்தரும் இடும்பாவன மிதுவே.
      குளமார்தரும் என்றும் பாடம். 1.17.6
      180 நீறேறிய திருமேனியர் நிலவும்முல கெல்லாம்
      பாறேறிய படுவெண்டலை கையிற்பலி வாங்கா
      கூறேறிய மடவாளொரு பாகம்மகிழ் வெய்தி
      ஏறேறிய இறைவர்க்கிடம் இடும்பாவன மிதுவே. 1.17.7
      181 தேரார்தரு திகழ்வாளெயிற் றரக்கன்சிவன் மலையை
      ஓராதெடு தார்த்தான்முடி யொருபஃதவை நெரித்து
      கூரார்தரு கொலைவாளொடு குணநாமமுங் கொடுத்த
      ஏரார்தரும் இறைவர்க்கிடம் இடும்பாவன மிதுவே. 1.17.8
      182 பொருளார்தரு மறையோர்புகழ் விருத்தர்பொலி மலிசீர
      தெருளார்தரு சிந்தையொடு சந்தம்மலர் பலதூய்
      மருளார்தரு மாயன்னயன் காணார்மய லெய்த
      இருளார்தரு கண்டர்க்கிடம் இடும்பாவன மிதுவே. 1.17.9
      183 தடுக்கையுடன் இடுக்கித்தலை பறித்துச்சம ணடப்பர்
      உடுக்கைபல துவர்க்கூறைகள் உடம்பிட்டுழல் வாரும்
      மடுக்கண்மலர் வயல்சேர்செந்நெல் மலிநீர்மலர கரைமேல்
      இடுக்கண்பல களைவானிடம் இடும்பாவன மிதுவே. 10
      சமண்டப்பர் என்றும் பாடம். 1.17.10
      184 கொடியார்நெடு மாடக்குன்ற ளூரிற்கரை கோல
      இடியார்கட லடிவீழ்தரும் இடும்பாவன திறையை
      அடியாயு தணர்காழியுள் அணிஞானசம் பந்தன்
      படியாற்சொன்ன பாடல்சொல பறையும்வினை தானே. 1.17.11

      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - சற்குணநாதர்
      தேவியார் - மங்களநாயகியம்மை.
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

      ------------------------------------------------------------------------

      1.18 திருநின்றியூர்

      பண் - நட்டபாடை
      185 சூலம்படை சுண்ணப்பொடி சாந்தஞ்சுடு நீறு
      பாலம்மதி பவளச்சடை முடிமேலது பண்டை
      காலன்வலி காலின்னொடு போக்கிக்கடி கமழும்
      நீலம்மலர பொய்கைநின்றி யூரின்நிலை யோர்க்கே.
      சூலப்படை என்றும் பாடம்.
      சாத்துஞ் சுடுநீறு என்றும் பாடம். 1.18.1
      186 அச்சம்மிலர் பாவம்மிலர் கேடும்மில ரடியார்
      நிச்சம்முறு நோயும்மிலர் தாமுந்நின்றி யூரில்
      நச்சம்மிட றுடையார்நறுங் கொன்றை தாளும்
      பச்சம்முடை யடிகள்திரு பாதம்பணி வாரே.
      நயந்தானா என்றும் பாடம். 1.18.2
      187 பறையின்னொலி சங்கின்னொலி பாங்காரவு மார
      அறையும்மொலி யெங்கும்மவை யறிவாரவர் தன்மை
      நிறையும்புனல் சடைமேலுடை யடிகள்நின்றி யூரில்
      உறையும்மிறை யல்லதென துள்ளம் முணராதே. 1.18.3
      188 பூண்டவ்வரை மார்பிற்புரி நூலன்விரி கொன்றை
      ஈண்டவ்வத னோடும்மொரு பாலம்மதி யதனை
      தீண்டும்பொழில் சூழ்ந்ததிரு நின்றியது தன்னில்
      ஆண்டகழல் தொழலல்லது அறியாரவ ரறிவே. 1.18.4
      189 குழலின்னிசை வண்டின்னிசை கண்டுகுயில் கூவும்
      நிழலின்னெழில் தாழ்ந்தபொழில் சூழ்ந்தநின்றி யூரில்
      அழலின்வலன் அங்கையது ஏந்தியன லாடுங்
      கழலின்னோலி ஆடும்புரி கடவுள்களை கண்ணே.
      எய்தி என்றும் பாடம். 1.18.5
      190 மூரன்முறு வல்வெண்ணகை யுடையாளொரு பாகம்
      சாரல்மதி யதனோடுடன் சலவஞ்சடை வைத்த
      வீரன்மலி அழகார்பொழில் மிடையுந்திரு நின்றி
      யூரன்கழ லல்லாதென துள்ள முணராதே. 1.18.6
      191 பற்றியொரு தலைகையினி லேந்திப்பலி தேரும்
      பெற்றியது வாகித்திரி தேவர்பெரு மானார்
      சுற்றியொரு வேங்கையத ளோடும்பிறை சூடும்
      நெற்றியொரு கண்ணார்நின்றி யூரின்நிலை யாரே. 1.18.7
      இப்பதிகத்தில் 8-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 1.18.8
      192 நல்லமலர் மேலானொடு ஞாலம்மது வுண்டான்
      அல்லரென ஆவரென நின்றும்மறி வரிய
      நெல்லின்பொழில் சூழ்ந்தநின்றி யூரில்நிலை யாரெஞ்
      செல்வரடி யல்லாதென சிந்தையுண ராதே. 1.18.9
      193 நெறியில்வரு பேராவகை நினையாநினை வொன்றை
      அறிவில்சமண் ஆதருரை கேட்டும்மய ராதே
      நெறியில்லவர் குறிகள்நினை யாதேநின்றி யூரில்
      மறியேந்திய கையானடி வாழ்த்தும்மது வாழ்த்தே. 1.18.10
      194 குன்றமது எடுத்தானுடல் தோளுந்நெரி வாக
      நின்றங்கொரு விரலாலுற வைத்தான்நின்றி யூரை
      நன்றார்தரு புகலித்தமிழ் ஞானம்மிகு பந்தன்
      குன்றாத்தமிழ் சொல்லக்குறை வின்றிநிறை புகழே. 1.18.11

      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - இலட்சுமியீசுவரர்
      தேவியார் - உலகநாயகியம்மை.
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

      ------------------------------------------------------------------------

      1.19 திருக்கழுமலம் - திருவிராகம்

      பண் - நட்டபாடை
      195 பிறையணி படர்சடை முடியிடை
      பெருகிய புனலுடை யவனிறை
      இறையணி வளையிணை முலையவ
      ளிணைவன தெழிலுடை யிடவகை
      கறையணி பொழில்நிறை வயலணி
      கழுமலம் அமர்கனல் உருவினன்
      நறையணி மலர்நறு விரைபுல்கு
      நலம்மலி கழல்தொழன் மருவுமே. 1.19.1
      196 பிணிபடு கடல்பிற விகளற
      லெளிதுள ததுபெரு கியதிரை
      அணிபடு கழுமலம் இனிதம
      ரனலுரு வினனவிர் சடைமிசை
      தணிபடு கதிர்வள ரிளமதி
      புனைவனை உமைதலை வனைநிற
      மணிபடு கறைமிட றனைநல
      மலிகழ லிணைதொழன் மருவுமே. 1.19.2
      197 வரியுறு புலியத ளுடையினன்
      வளர்பிறை யொளிகிளர் கதிர்பொதி
      விரியுறு சடைவிரை புழைபொழில்
      விழவொலி மலிகழு மலம்அமர்
      எரியுறு நிறஇறை வனதடி
      இரவொடு பகல்பர வுவர்தம
      தெரியுறு வினைசெறி கதிர்முனை
      இருள்கெட நனிநினை வெய்துமதே. 1.19.3
      198 வினைகெட மனநினை வதுமுடி
      கெனின்நனி தொழுதெழு குலமதி
      புனைகொடி யிடைபொருள் தருபடு
      களிறின துரிபுதை யுடலினன்
      மனைகுட வயிறுடை யனசில
      வருகுறள் படையுடை யவன்மலி
      கனைகட லடைகழு மலமமர்
      கதிர்மதி யினனதிர் கழல்களே. 1.19.4
      199 தலைமதி புனல்விட அரவிவை
      தலைமைய தொருசடை யிடையுடன்
      நிலைமரு வவொரிட மருளினன்
      நிழன்மழு வினொடழல் கணையினன்
      மலைமரு வியசிலை தனின்மதி
      லெரியுண மனமரு வினன்நல
      கலைமரு வியபுற வணிதரு
      கழுமலம் இனிதமர் தலைவனே. 1.19.5
      200 வரைபொரு திழியரு விகள்பல
      பருகொரு கடல்வரி மணலிடை
      கரைபொரு திரையொலி கெழுமிய
      கழுமலம் அமர்கன லுருவினன்
      அரைபொரு புலியதள் உடையினன்
      அடியிணை தொழவரு வினையெனும்
      உரைபொடி படவுறு துயர்கெட
      வுயருல கெய்தலொரு தலைமையே. 1.19.6
      201 முதிருறு கதிர்வளர் இளமதி
      சடையனை நறநிறை தலைதனில்
      உதிருறு மயிர்பிணை தவிர்தசை
      யுடைபுலி அதளிடை யிருள்கடி
      கதிருறு சுடரொளி கெழுமிய
      கழுமலம் அமர்மழு மலிபடை
      அதிருறு கழலடி களதடி
      தொழுமறி வலதறி வறியமே. 1.19.7
      202 கடலென நிறநெடு முடியவ
      னடுதிறல் தெறஅடி சரணென
      அடல்நிறை படையரு ளியபுக
      ழரவரை யினன்அணி கிளர்பிறை
      விடம்நிறை மிடறுடை யவன்விரி
      சடையவன் விடையுடை யவனுமை
      உடனுறை பதிகடல் மறுகுடை
      யுயர்கழு மலவியன் நகரதே. 1.19.8
      203 கொழுமல ருறைபதி யுடையவன்
      நெடியவ னெனவிவர் களுமவன்
      விழுமையை யளவறி கிலரிறை
      விரைபுணர் பொழிலணி விழவமர்
      கழுமலம் அமர்கன லுருவினன்
      அடியிணை தொழுமவ ரருவினை
      எழுமையு மிலநில வகைதனி
      லெளிதிமை யவர்விய னுலகமே. 1.19.9
      204 அமைவன துவரிழு கியதுகி
      லணியுடை யினர்அமண் உருவர்கள்
      சமையமும் ஒருபொரு ளெனுமவை
      சலநெறி யனஅற வுரைகளும்
      இமையவர் தொழுகழு மலமம
      ரிறைவன தடிபர வுவர்தமை
      நமையல வினைநல னடைதலி
      லுயர்நெறி நனிநணு குவர்களே. 1.19.10
      205 பெருகிய தமிழ்விர கினன்மலி
      பெயரவ னுறைபிணர் திரையொடு
      கருகிய நிறவிரி கடலடை
      கழுமல முறைவிட மெனநனி
      பெருகிய சிவனடி பரவிய
      பிணைமொழி யனவொரு பதுமுடன்
      மருவிய மனமுடை யவர்மதி
      யுடையவர் விதியுடை யவர்களே. 1.19.11

      கழுமலம் என்பது சீகாழிக்கொருபெயர்.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

      ------------------------------------------------------------------------

      1.20 திருவீழிமிழலை - திருவிராகம்

      பண் - நட்டபாடை
      206 தடநில வியமலை நிறுவியொர்
      தழலுமிழ் தருபட அரவுகொ
      டடல்அசு ரரொடம ரர்கள்அலை
      கடல்கடை வுழியெழு மிகுசின
      விடமடை தருமிட றுடையவன்
      விடைமிசை வருமவ னுறைபதி
      திடமலி தருமறை முறையுணர்
      மறையவர் நிறைதிரு மிழலையே. 1.20.1
      207 தரையொடு திவிதல நலிதரு
      தகுதிற லுறுசல தரனது
      வரையன தலைவிசை யொடுவரு
      திகிரியை அரிபெற அருளினன்
      உரைமலி தருசுர நதிமதி
      பொதிசடை யவனுறை பதிமிகு
      திரைமலி கடல்மண லணிதரு
      பெறுதிடர் வளர்திரு மிழலையே. 1.20.2
      208 மலைமகள் தனையிகழ் வதுசெய்த
      மதியறு சிறுமன வனதுயர்
      தலையினொ டழலுரு வனகரம்
      அறமுனி வுசெய்தவ னுறைபதி
      கலைநில வியபுல வர்களிடர்
      களைதரு கொடைபயில் பவர்மிகு
      சிலைமலி மதில்புடை தழுவிய
      திகழ்பொழில் வளர்திரு மிழலையே. 1.20.3
      209 மருவலர் புரமெரி யினின்மடி
      தரவொரு கணைசெல நிறுவிய
      பெருவலி யினன்நலம் மலிதரு
      கரனுர மிகுபிணம் அமர்வன
      இருளிடை யடையுற வொடுநட
      விசையுறு பரனினி துறைபதி
      தெருவினில் வருபெரு விழவொலி
      மலிதர வளர்திரு மிழலையே. 1.20.4
      210 அணிபெறு வடமர நிழலினி
      லமர்வொடு மடியிணை யிருவர்கள்
      பணிதர அறநெறி மறையொடு
      மருளிய பரனுறை விடமொளி
      மணிபொரு வருமர கதநில
      மலிபுன லணைதரு வயலணி
      திணிபொழில் தருமணம் மதுநுக
      ரறுபத முரல்திரு மிழலையே. 1.20.5
      211 வசையறு வலிவன சரவுரு
      வதுகொடு நினைவரு தவமுயல்
      விசையன திறன்மலை மகளறி
      வுறுதிற லமர்மிடல்கொடுசெய்து
      அசைவில படையருள் புரிதரு
      மவனுறை பதியது மிகுதரு
      திசையினின் மலர்குல வியசெறி
      பொழின்மலி தருதிரு மிழலையே. 1.20.6
      212 நலமலி தருமறை மொழியொடு
      நதியுறு புனல்புகை ஒளிமுதல்
      மலரவை கொடுவழி படுதிறன்
      மறையவ னுயிரது கொளவரு
      சலமலி தருமற லிதனுயிர்
      கெடவுதை செய்தவர னுறைபதி
      திலகமி தெனவுல குகள்புகழ்
      தருபொழி லணிதிரு மிழலையே.
      திலதமிதென என்றும் பாடம். 1.20.7
      213 அரனுறை தருகயி லையைநிலை
      குலைவது செய்ததச முகனது
      கரமிரு பதுநெரி தரவிரல்
      நிறுவிய கழலடி யுடையவன்
      வரன்முறை யுலகவை தருமலர்
      வளர்மறை யவன்வழி வழுவிய
      சிரமது கொடுபலி திரிதரு
      சிவனுறை பதிதிரு மிழலையே. 1.20.8
      214 அயனொடும் எழிலமர் மலர்மகள்
      மகிழ்கண னளவிட லொழியவொர்
      பயமுறு வகைதழல் நிகழ்வதொர்
      படியுரு வதுவர வரன்முறை
      சயசய வெனமிகு துதிசெய
      வெளியுரு வியவவ னுறைபதி
      செயநில வியமதில் மதியது
      தவழ்தர வுயர்திரு மிழலையே. 1.20.9
      215 இகழுரு வொடுபறி தலைகொடு
      மிழிதொழில் மலிசமண் விரகினர்
      திகழ்துவ ருடையுடல் பொதிபவர்
      கெடஅடி யவர்மிக அருளிய
      புகழுடை யிறையுறை பதிபுன
      லணிகடல் புடைதழு வியபுவி
      திகழ்சுரர் தருநிகர் கொடையினர்
      செறிவொடு திகழ்திரு மிழலையே. 1.20.10
      216 சினமலி கரியுரி செய்தசிவ
      னுறைதரு திருமிழ லையைமிகு
      தனமனர் சிரபுர நகரிறை
      தமிழ்விர கனதுரை யொருபதும்
      மனமகிழ் வொடுபயில் பவரெழின்
      மலர்மகள் கலைமகள் சயமகள்
      இனமலி புகழ்மக ளிசைதர
      இருநில னிடையினி தமர்வரே. 1.20.11

      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

      ------------------------------------------------------------------------

      1.21 திருச்சிவபுரம் - திருவிராகம்

      பண் - நட்டபாடை
      217 புவம்வளி கனல்புனல் புவிகலை
      யுரைமறை திரிகுணம் அமர்நெறி
      திவமலி தருசுரர் முதலியர்
      திகழ்தரும் உயிரவை யவைதம
      பவமலி தொழிலது நினைவொடு
      பதுமநன் மலரது மருவிய
      சிவனது சிவபுரம் நினைபவர்
      செழுநில னினில்நிலை பெறுவரே. 01
      கலைபுரை என்றும் பாடம். 1.21.1
      218 மலைபல வளர்தரு புவியிடை
      மறைதரு வழிமலி மனிதர்கள்
      நிலைமலி சுரர்முதல் உலகுகள்
      நிலைபெறு வகைநினை வொடுமிகும்
      அலைகடல் நடுவறி துயிலமர்
      அரியுரு வியல்பர னுறைபதி
      சிலைமலி மதிள்சிவ புரம்நினை
      பவர்திரு மகளொடு திகழ்வரே. 1.21.2
      219 பழுதில கடல்புடை தழுவிய
      படிமுத லியவுல குகள்மலி
      குழுவிய சுரர்பிறர் மனிதர்கள்
      குலம்மலி தருமுயி ரவையவை
      முழுவதும் அழிவகை நினைவொடு
      முதலுரு வியல்பர னுறைபதி
      செழுமணி யணிசிவ புரநகர்
      தொழுமவர் புகழ்மிகு முலகிலே.
      முதலுருவிய வரனுரைபதி என்றும் பாடம். 1.21.3
      220 நறைமலி தருமள றொடுமுகை
      நகுமலர் புகைமிகு வளரொளி
      நிறைபுனல் கொடுதனை நினைவொடு
      நியதமும் வழிபடும் அடியவர்
      குறைவில பதமணை தரஅருள்
      குணமுடை யிறையுறை வனபதி
      சிறைபுன லமர்சிவ புரமது
      நினைபவர் செயமகள் தலைவரே. 1.21.4
      221 சினமலி யறுபகை மிகுபொறி
      சிதைதரு வகைவளி நிறுவிய
      மனனுணர் வொடுமலர் மிசையெழு
      தருபொருள் நியதமும் உணர்பவர்
      தனதெழி லுருவது கொடுஅடை
      தகுபர னுறைவது நகர்மதில்
      கனமரு வியசிவ புரம்நினை
      பவர்கலை மகள்தர நிகழ்வரே. 1.21.5
      222 சுருதிகள் பலநல முதல்கலை
      துகளறு வகைபயில் வொடுமிகு
      உருவிய லுலகவை புகழ்தர
      வழியொழு குமெயுறு பொறியொழி
      அருதவ முயல்பவர் தனதடி
      யடைவகை நினையர னுறைபதி
      திருவளர் சிவபுரம் நினைபவர்
      திகழ்குலன் நிலனிடை நிகழுமே. 1.21.6
      223 கதமிகு கருவுரு வொடுவுகி
      ரிடைவட வரைகண கணவென
      மதமிகு நெடுமுக னமர்வளை
      மதிதிகழ் எயிறதன் நுதிமிசை
      இதமமர் புவியது நிறுவிய
      எழிலரி வழிபட அருள்செய்த
      பதமுடை யவனமர் சிவபுரம்
      நினைபவர் நிலவுவர் படியிலே.
      உகிரிடவட என்றும் படம். 1.21.7
      224 அசைவுறு தவமுயல் வினிலயன்
      அருளினில் வருவலி கொடுசிவன்
      இசைகயி லையையெழு தருவகை
      இருபது கரமவை நிறுவிய
      நிசிசரன் முடியுடை தரவொரு
      விரல்பணி கொளுமவ னுறைபதி
      திசைமலி சிவபுரம் நினைபவர்
      செழுநில னினில்நிகழ் வுடையரே. 1.21.8
      225 அடல்மலி படையரி அயனொடும்
      அறிவரி யதொரழல் மலிதரு
      சுடருரு வொடுநிகழ் தரவவர்
      வெருவொடு துதியது செயவெதிர்
      விடமலி களநுத லமர்கண
      துடையுரு வெளிபடு மவன்நகர்
      திடமலி பொழிலெழில் சிவபுரம்
      நினைபவர் வழிபுவி திகழுமே. 1.21.9
      226 குணமறி வுகள்நிலை யிலபொரு
      ளுரைமரு வியபொருள் களுமில
      திணமெனு மவரொடு செதுமதி
      மிகுசம ணருமலி தமதுகை
      உணலுடை யவருணர் வருபர
      னுறைதரு பதியுல கினில்நல
      கணமரு வியசிவ புரம்நினை
      பவரெழி லுருவுடை யவர்களே. 1.21.10
      227 திகழ்சிவ புரநகர் மருவிய
      சிவனடி யிணைபணி சிரபுர
      நகரிறை தமிழ்விர கனதுரை
      நலமலி யொருபதும் நவில்பவர்
      நிகழ்குல நிலநிறை திருவுரு
      நிகரில கொடைமிகு சயமகள்
      புகழ்புவி வளர்வழி யடிமையின்
      மிகைபுணர் தரநலம் மிகுவரே. 1.21.11

      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - பிரமபுரிநாயகர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

      ------------------------------------------------------------------------

      1.22 திருமறைக்காடு - திருவிராகம்

      பண் - நட்டபாடை
      228 சிலைதனை நடுவிடை நிறுவியொர்
      சினமலி அரவது கொடுதிவி
      தலமலி சுரரசு ரர்களொலி
      சலசல கடல்கடை வுழிமிகு
      கொலைமலி விடமெழ அவருடல்
      குலைதர வதுநுகர் பவனெழில்
      மலைமலி மதில்புடை தழுவிய
      மறைவனம் அமர்தரு பரமனே. 1.22.1
      229 கரமுத லியஅவ யவமவை
      கடுவிட அரவது கொடுவரு
      வரல்முறை அணிதரு மவனடல்
      வலிமிகு புலியத ளுடையினன்
      இரவலர் துயர்கெடு வகைநினை
      இமையவர் புரமெழில் பெறவளர்
      மரநிகர் கொடைமனி தர்கள்பயில்
      மறைவனம் அமர்தரு பரமனே. 1.22.2
      230 இழைவளர் தருமுலை மலைமக
      ளினிதுறை தருமெழி லுருவினன்
      முழையினின் மிகுதுயி லுறுமரி
      முசிவொடும் எழமுள ரியொடெழு
      கழைநுகர் தருகரி யிரிதரு
      கயிலையின் மலிபவ னிருளுறும்
      மழைதவழ் தருபொழில் நிலவிய
      மறைவனம் அமர்தரு பரமனே. 1.22.3
      231 நலமிகு திருவித ழியின்மலர்
      நகுதலை யொடுகன கியின்முகை
      பலசுர நதிபட அரவொடு
      மதிபொதி சடைமுடி யினன்மிகு
      தலநில வியமனி தர்களொடு
      தவமுயல் தருமுனி வர்கள்தம
      மலமறு வகைமனம் நினைதரு
      மறைவன மமர்தரு பரமனே. 1.22.4
      232 கதிமலி களிறது பிளிறிட
      வுரிசெய்த அதிகுண னுயர்பசு
      பதியதன் மிசைவரு பசுபதி
      பலகலை யவைமுறை முறையுணர்
      விதியறி தருநெறி யமர்முனி
      கணனொடு மிகுதவ முயல்தரும்
      அதிநிபு ணர்கள்வழி படவளர்
      மறைவனம் அமர்தரு பரமனே. 1.22.5
      233 கறைமலி திரிசிகை படையடல்
      கனல்மழு வெழுதர வெறிமறி
      முறைமுறை யொலிதம ருகமுடை
      தலைமுகிழ் மலிகணி வடமுகம்
      உறைதரு கரனுல கினிலுய
      ரொளிபெறு வகைநினை வொடுமலர்
      மறையவன் மறைவழி வழிபடு
      மறைவனம் அமர்தரு பரமனே. 1.22.6
      234 இருநில னதுபுன லிடைமடி
      தரஎரி புகஎரி யதுமிகு
      பெருவளி யினிலவி தரவளி
      கெடவிய னிடைமுழு வதுகெட
      இருவர்க ளுடல்பொறை யொடுதிரி
      யெழிலுரு வுடையவன் இனமலர்
      மருவிய அறுபதம் இசைமுரல்
      மறைவனம் அமர்தரு பரமனே. 1.22.7
      235 சனம்வெரு வுறவரு தசமுக
      னொருபது முடியொடு மிருபது
      கனமரு வியபுயம் நெரிவகை
      கழலடி யிலொர்விரல் நிறுவினன்
      இனமலி கணநிசி சரன்மகிழ்
      வுறவருள் செய்தகரு ணையனென
      மனமகிழ் வொடுமறை முறையுணர்
      மறைவனம் அமர்தரு பரமனே. 1.22.8
      236 அணிமலர் மகள்தலை மகனயன்
      அறிவரி யதொர்பரி சினிலெரி
      திணிதரு திரளுரு வளர்தர
      அவர்வெரு வுறலொடு துதிசெய்து
      பணியுற வெளியுரு வியபர
      னவனுரை மலிகடல் திரளெழும்
      மணிவள ரொளிவெயில் மிகுதரு
      மறைவனம் அமர்தரு பரமனே. 1.22.9
      237 இயல்வழி தரவிது செலவுற
      இனமயி லிறகுறு தழையொடு
      செயல்மரு வியசிறு கடமுடி
      யடைகையர் தலைபறி செய்துதவம்
      முயல்பவர் துவர்படம் உடல்பொதி
      பவரறி வருபர னவனணி
      வயலினில் வளைவளம் மருவிய
      மறைவனம் அமர்தரு பரமனே. 1.22.10
      238 வசையறு மலர்மகள் நிலவிய
      மறைவனம் அமர்பர மனைநினை
      பசையொடு மிகுகலை பலபயில்
      புலவர்கள் புகழ்வழி வளர்தரு
      இசையமர் கழுமல நகரிறை
      தமிழ்விர கனதுரை யியல்வல
      இசைமலி தமிழொரு பதும்வல
      அவருல கினிலெழில் பெறுவரே. 1.22.11

      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - மறைக்காட்டீசுரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

      ------------------------------------------------------------------------

      1.23 திருக்கோலக்கா

      பண் - தக்கராகம்
      239 மடையில் வாளை பாய மாதரார்
      குடையும் பொய்கை கோல காவுளான்
      சடையும் பிறையுஞ் சாம்பற் பூச்சுங்கீழ்
      உடையுங் கொண்ட வுருவ மென்கொலோ. 1.23.1
      240 பெண்டான் பாகமாக பிறை சென்னி
      கொண்டான் கோல காவு கோயிலா
      கண்டான் பாதங் கையாற் கூப்பவே
      உண்டான் நஞ்சை உலக முய்யவே. 1.23.2
      241 பூணற் பொறிகொள் அரவம் புன்சடை
      கோணற் பிறையன் குழகன் கோலக்கா
      மாண பாடி மறைவல் லானையே
      பேண பறையும் பிணிக ளானவே. 1.23.3
      242 தழுக்கொள் பாவ தளர வேண்டுவீர்
      மழுக்கொள் செல்வன் மறிசே ரங்கையான்
      குழுக்கொள் பூத படையான் கோலக்கா
      இழுக்கா வண்ணம் ஏத்தி வாழ்மினே. 1.23.4
      243 மயிலார் சாயல் மாதோர் பாகமா
      எயிலார் சாய எரித்த எந்தைதன்
      குயிலார் சோலை கோல காவையே
      பயிலா நிற்க பறையும் பாவமே. 1.23.5
      244 வெடிகொள் வினையை வீட்ட வேண்டுவீர்
      கடிகொள் கொன்றை கலந்த சென்னியான்
      கொடிகொள் விழவார் கோல காவுளெம்
      அடிகள் பாதம் அடைந்து வாழ்மினே. 1.23.6
      245 நிழலார் சோலை நீல வண்டினங்
      குழலார் பண்செய் கோல காவுளான்
      கழலால் மொய்த்த பாதங் கைகளாற்
      தொழலார் பக்கல் துயர மில்லையே. 1.23.7
      246 எறியார் கடல்சூழ் இலங்கை கோன்றனை
      முறியார் தடக்கை யடர்த்த மூர்த்திதன்
      குறியார் பண்செய் கோல காவையே
      நெறியால் தொழுவார் வினைகள் நீங்குமே. 1.23.8
      247 நாற்ற மலர்மேல் அயனும் நாகத்தில்
      ஆற்ற லணைமே லவனுங் காண்கிலா
      கூற்ற முதைத்த குழகன் கோலக்கா
      ஏற்றான் பாதம் ஏத்தி வாழ்மினே. 1.23.9
      248 பெற்ற மாசு பிறக்குஞ் சமணரும்
      உற்ற துவர்தோ யுருவி லாளருங்
      குற்ற நெறியார் கொள்ளார் கோலக்கா
      பற்றி பரவ பறையும் பாவமே. 1.23.10
      249 நலங்கொள் காழி ஞான சம்பந்தன்
      குலங்கொள் கோல காவு ளானையே
      வலங்கொள் பாடல் வல்ல வாய்மையார்
      உலங்கொள் வினைபோய் ஓங்கி வாழ்வரே. 1.23.11

      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - சத்தபுரீசர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

      ------------------------------------------------------------------------

      1.24 சீகாழி

      பண் - தக்கராகம்
      250 பூவார் கொன்றை புரிபுன் சடையீசா
      காவா யெனநின் றேத்துங் காழியார்
      மேவார் புரம்மூன் றட்டா ரவர்போலாம்
      பாவா ரின்சொற் பயிலும் பரமரே. 1.24.1
      251 எந்தை யென்றங் கிமையோர் புகுந்தீண்டி
      கந்த மாலை கொடுசேர் காழியார்
      வெந்த நீற்றர் விமல ரவர்போலாம்
      அந்தி நட்டம் ஆடும் அடிகளே. 1.24.2
      252 தேனை வென்ற மொழியா ளொருபாகங்
      கான மான்கை கொண்ட காழியார்
      வான மோங்கு கோயி லவர்போலாம்
      ஆன இன்பம் ஆடும் அடிகளே. 1.24.3
      253 மாணா வென்றி காலன் மடியவே
      காணா மாணி களித்த காழியார்
      நாணார் வாளி தொட்டா ரவர்போலாம்
      பேணார் புரங்கள் அட்ட பெருமானே. 1.24.4
      254 மாடே ஓதம் எறிய வயற்செந்நெல்
      காடே றிச்சங் கீனுங் காழியார்
      வாடா மலராள் பங்க ரவர்போலாம்
      ஏடார் புரமூன் றெரித்த இறைவரே. 1.24.5
      255 கொங்கு செருந்தி கொன்றை மலர்கூட
      கங்கை புனைந்த சடையார் காழியார்
      அங்கண் அரவம் ஆட்டும் அவர்போலாஞ்
      செங்கண் அரக்கர் புரத்தை யெரித்தாரே. 1.24.6
      256 கொல்லை விடைமுன் பூதங் குனித்தாடுங்
      கல்ல வடத்தை யுகப்பார் காழியார்
      அல்ல விடத்து நடந்தா ரவர்போலாம்
      பல்ல விடத்தும் பயிலும் பரமரே. 1.24.7
      257 எடுத்த அரக்கன் நெரிய விரலூன்றி
      கடுத்து முரிய அடர்த்தார் காழியார்
      எடுத்த பாடற் கிரங்கு மவர்போலாம்
      பொடிக்கொள் நீறு பூசும் புனிதரே. 1.24.8
      258 ஆற்ற லுடைய அரியும் பிரமனு
      தோற்றங் காணா வென்றி காழியார்
      ஏற்ற மேறங் கேறு மவர்போலாங்
      கூற்ற மறு குமைத்த குழகரே. 1.24.9
      259 பெருக்க பிதற்றுஞ் சமணர் சாக்கியர்
      கரக்கும் உரையை விட்டார் காழியார்
      இருக்கின் மலிந்த இறைவ ரவர்போலாம்
      அருப்பின் முலையாள் பங்க தையரே. 1.24.10
      260 காரார் வயல்சூழ் காழி கோன்றனை
      சீரார் ஞான சம்ப தன்சொன்ன
      பாரார் புகழ பரவ வல்லவர்
      ஏரார் வான தினிதா இருப்பரே. 1.24.11

      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

      ------------------------------------------------------------------------

      1.25 திருச்செம்பொன்பள்ளி

      பண் - தக்கராகம்
      261 மருவார் குழலி மாதோர் பாகமா
      திருவார் செம்பொன் பள்ளி மேவிய
      கருவார் கண்ட தீசன் கழல்களை
      மருவா தவர்மேல் மன்னும் பாவமே. 1.25.1
      262 வாரார் கொங்கை மாதோர் பாகமா
      சீரார் செம்பொன் பள்ளி மேவிய
      ஏரார் புரிபுன் சடையெம் ஈசனை
      சேரா தவர்மேற் சேரும் வினைகளே. 1.25.2
      263 வரையார் சந்தோ டகிலும் வருபொன்னி
      திரையார் செம்பொன் பள்ளி மேவிய
      நரையார் விடையொன் றூரும் நம்பனை
      உரையா தவர்மே லொழியா வூனமே. 1.25.3
      264 மழுவா ளேந்தி மாதோர் பாகமா
      செழுவார் செம்பொன் பள்ளி மேவிய
      எழிலார் புரிபுன் சடையெம் மிறைவனை
      தொழுவார் தம்மேல் துயர மில்லையே. 1.25.4
      265 மலையான் மகளோ டுடனாய் மதிலெய்த
      சிலையார் செம்பொன் பள்ளி யானையே
      இலையார் மலர்கொண் டெல்லி நண்பகல்
      நிலையா வணங்க நில்லா வினைகளே. 1.25.5
      266 அறையார் புனலோ டகிலும் வருபொன்னி
      சிறையார் செம்பொன் பள்ளி மேவிய
      கறையார் கண்ட தீசன் கழல்களை
      நிறையால் வணங்க நில்லா வினைகளே. 1.25.6
      267 பையார் அரவே ரல்கு லாளொடுஞ்
      செய்யார் செம்பொன் பள்ளி மேவிய
      கையார் சூல மேந்து கடவுளை
      மெய்யால் வணங்க மேவா வினைகளே. 1.25.7
      268 வானார் திங்கள் வளர்புன் சடைவைத்து
      தேனார் செம்பொன் பள்ளி மேவிய
      ஊனார் தலையிற் பலிகொண் டுழல்வாழ்க்கை
      ஆனான் கழலே அடைந்து வாழ்மினே. 1.25.8
      269 காரார் வண்ணன் கனகம் அனையானு
      தேரார் செம்பொன் பள்ளி மேவிய
      நீரார் நிமிர்புன் சடையெ நிமலனை
      ஓரா தவர்மே லொழியா வூனமே. 1.25.9
      270 மாசா ருடம்பர் மண்டை தேரரும்
      பேசா வண்ணம் பேசி திரியவே
      தேசார் செம்பொன் பள்ளி மேவிய
      ஈசா என்ன நில்லா இடர்களே. 1.25.10
      271 நறவார் புகலி ஞான சம்பந்தன்
      செறுவார் செம்பொன் பள்ளி மேயானை
      பெறுமா றிசையாற் பாட லிவைபத்தும்
      உறுமா சொல்ல வோங்கி வாழ்வரே. 1.25.11

      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - சொர்னபுரீசர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

      ------------------------------------------------------------------------

      1.26 திருப்புத்தூர்

      பண் - தக்கராகம்
      272 வெங்கள் விம்மு வெறியார் பொழிற்சோலை
      திங்க ளோடு திளைக்கு திருப்புத்தூர
      கங்கை தங்கு முடியா ரவர்போலும்
      எங்கள் உச்சி உறையும் இறையாரே. 1.26.1
      273 வேனல் விம்மு வெறியார் பொழிற்சோலை
      தேனும் வண்டு திளைக்கு திருப்புத்தூர்
      ஊனம் இன்றி யுறைவா ரவர்போலும்
      ஏன முள்ளும் எயிறும் புனைவாரே. 1.26.2
      274 பாங்கு நல்ல வரிவண் டிசைபாட
      தேங்கொள் கொன்றை திளைக்கு திருப்புத்தூர்
      ஓங்கு கோயில் உறைவா ரவர்போலு
      தாங்கு திங்கள் தவழ்புன் சடையாரே. 1.26.3
      275 நாற விண்ட நறுமா மலர்கவ்வி
      தேறல் வண்டு திளைக்கு திருப்புத்தூர்
      ஊறல் வாழ்க்கை யுடையா ரவர்போலும்
      ஏறு கொண்ட கொடியெம் இறையாரே. 1.26.4
      276 இசை விளங்கும் எழில்சூழ தியல்பாக
      திசை விளங்கும் பொழில்சூழ் திருப்புத்தூர்
      பசை விளங்க படித்தா ரவர்போலும்
      வசை விளங்கும் வடிசேர் நுதலாரே. 1.26.5
      277 வெண்ணி றத்த விரையோ டலருந்தி
      தெண்ணி றத்த புனல்பாய் திருப்புத்தூர்
      ஒண்ணி றத்த ஒளியா ரவர்போலும்
      வெண்ணி றத்த விடைசேர் கொடியாரே. 1.26.6
      278 நெய்த லாம்பல் கழுநீர் மலர்ந்தெங்குஞ்
      செய்கண் மல்கு சிவனார் திருப்புத்தூர
      தையல் பாகம் மகிழ்ந்தா ரவர்போலும்
      மையுண் நஞ்சம் மருவும் மிடற்றாரே. 1.26.7
      279 கருக்கம் எல்லாங் கமழும் பொழிற்சோலை
      திருக்கொள் செம்மை விழவார் திருப்புத்தூர்
      இருக்க வல்ல இறைவ ரவர்போலும்
      அரக்கன் ஒல்க விரலால் அடர்த்தாரே. 1.26.8
      280 மருவி யெங்கும் வளரும் மடமஞ்ஞை
      தெருவு தோறு திளைக்கு திருப்புத்தூர
      பெருகி வாழும் பெருமா னவன்போலும்
      பிரமன் மாலும் அறியா பெரியோனே. 1.26.9
      281 கூறை போர்க்கு தொழிலா ரமண்கூறல்
      தேறல் வேண்டா தெளிமின் திருப்புத்தூர்
      ஆறும் நான்கும் அமர்ந்தா ரவர்போலும்
      ஏறு கொண்ட கொடியெம் இறையாரே. 1.26.10
      282 நல்ல கேள்வி ஞான சம்பந்தன்
      செல்வர் சேடர் உறையு திருப்புத்தூர
      சொல்லல் பாடல் வல்லார் தமக்கென்றும்
      அல்லல் தீரும் அவலம் அடையாவே. 1.26.11

      இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - புத்தூரீசர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

      ------------------------------------------------------------------------

      1.27 திருப்புன்கூர்

      பண் - தக்கராகம்
      283 முந்தி நின்ற வினைக ளவைபோக
      சிந்தி நெஞ்சே சிவனார் திருப்புன்கூர்
      அந்தம் இல்லா அடிக ளவர்போலுங்
      கந்த மல்கு கமழ்புன் சடையாரே. 1.27.1
      284 மூவ ராய முதல்வர் முறையாலே
      தேவ ரெல்லாம் வணங்கு திருப்புன்கூர்
      ஆவ ரென்னும் அடிக ளவர்போலும்
      ஏவின் அல்லார் எயில்மூன் றெரித்தாரே. 1.27.2
      285 பங்க யங்கள் மலரும் பழனத்து
      செங்க யல்கள் திளைக்கு திருப்புன்கூர
      கங்கை தங்கு சடையா ரவர்போலும்
      எங்கள் உச்சி உறையும் மிறையாரே. 1.27.3
      286 கரையு லாவு கதிர்மா மணிமுத்தம்
      திரையு லாவு வயல்சூழ் திருப்புன்கூர்
      உரையின் நல்ல பெருமா னவர்போலும்
      விரையின் நல்ல மலர்ச்சே வடியாரே. 1.27.4
      287 பவழ வண்ண பரிசார் திருமேனி
      திகழும் வண்ணம் உறையு திருப்புன்கூர்
      அழக ரென்னும் அடிக ளவர்போலும்
      புகழ நின்ற புரிபுன் சடையாரே. 1.27.5
      288 தெரிந்தி லங்கு கழுநீர் வயற்செந்நெல்
      திருந்த நின்ற வயல்சூழ் திருப்புன்கூர
      பொருந்தி நின்ற அடிக ளவர்போலும்
      விரிந்தி லங்கு சடைவெண் பிறையாரே. 1.27.6
      289 பாரும் விண்ணும் பரவி தொழுதேத்தும்
      தேர்கொள் வீதி விழவார் திருப்புன்கூர்
      ஆர நின்ற அடிக ளவர்போலுங்
      கூர நின்ற எயில்மூன் றெரித்தாரே. 1.27.7
      290 மலையத னாருடை யமதில் மூன்றுஞ்
      சிலையத னாலெரி தார்திரு புன்கூர
      தலைவர் வல்ல அரக்கன் தருக்கினை
      மலையத னாலடர துமகிழ தாரே. 1.27.8
      291 நாட வல்ல மலரான் மாலுமா
      தேட நின்றா ருறையு திருப்புன்கூர்
      ஆட வல்ல அடிக ளவர்போலும்
      பாட லாடல் பயிலும் பரமரே. 1.27.9
      292 குண்டு முற்றி கூறை யின்றியே
      பிண்ட முண்ணும் பிராந்தர் சொற்கொளேல்
      வண்டு பாட மலரார் திருப்புன்கூர
      கண்டு தொழுமின் கபாலி வேடமே. 1.27.10
      293 மாட மல்கு மதில்சூழ் காழிமன்
      சேடர் செல்வ ருறையு திருப்புன்கூர்
      நாட வல்ல ஞான சம்பந்தன்
      பாடல் பத்தும் பரவி வாழ்மினே. 1.27.11

      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - சிவலோகநாதர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

      ------------------------------------------------------------------------

      1.28 திருச்சோற்றுத்துறை

      பண் - தக்கராகம்
      294 செப்ப நெஞ்சே நெறிகொள் சிற்றின்பம்
      துப்ப னென்னா தருளே துணையாக
      ஒப்ப ரொப்பர் பெருமான் ஒளிவெண்ணீற்
      றப்பர் சோற்று துறைசென் றடைவோமே. 1.28.1
      295 பாலும் நெய்யு தயிரும் பயின்றாடி
      தோலும் நூலு துதைந்த வரைமார்பர்
      மாலுஞ் சோலை புடைசூழ் மடமஞ்ஞை
      ஆலுஞ் சோற்று துறைசென் றடைவோமே. 1.28.2
      296 செய்யர் செய்ய சடையர் விடையூர்வர்
      கைகொள் வேலர் கழலர் கரிகாடர்
      தைய லாளொர் பாக மாயஎம்
      ஐயர் சோற்று துறைசென் றடைவோமே. 1.28.3
      297 பிணிகொ ளாக்கை யொழி பிறப்புளீர்
      துணிகொள் போரார் துளங்கு மழுவாளர்
      மணிகொள் கண்டர் மேய வார்பொழில்
      அணிகொள் சோற்று துறைசென் றடைவோமே. 1.28.4
      298 பிறையும் அரவும் புனலுஞ் சடைவைத்து
      மறையும் ஓதி மயானம் இடமாக
      உறையுஞ் செல்வம் உடையார் காவிரி
      அறையும் சோற்று துறைசென் றடைவோமே. 1.28.5
      299 துடிக ளோடு முழவம் விம்மவே
      பொடிகள் பூசி புறங்கா டரங்காக
      படிகொள் பாணி பாடல் பயின்றாடும்
      அடிகள் சோற்று துறைசென் றடைவோமே. 1.28.6
      300 சாடி காலன் மாள தலைமாலை
      சூடி மிக்கு சுவண்டாய் வருவார்தாம்
      பாடி ஆடி பரவு வாருள்ள
      தாடி சோற்று துறைசென் றடைவோமே. 1.28.7
      301 பெண்ணோர் பாகம் உடையார் பிறைச்சென்னி
      கண்ணோர் பாகங் கலந்த நுதலினார்
      எண்ணா தரக்கன் எடுக்க வூன்றிய
      அண்ணல் சோற்று துறைசென் றடைவோமே. 1.28.8
      302 தொழுவா ரிருவர் துயரம் நீங்கவே
      அழலா யோங்கி அருள்கள் செய்தவன்
      விழவார் மறுகில் விதியால் மிக்கஎம்
      எழிலார் சோற்று துறைசென் றடைவோமே. 1.28.9
      303 கோது சாற்றி திரிவார் அமண்குண்டர்
      ஓதும் ஓத்தை யுணரா தெழுநெஞ்சே
      நீதி நின்று நினைவார் வேடமாம்
      ஆதி சோற்று துறைசென் றடைவோமே.
      போதுசாற்றி என்றும் பாடம். 1.28.10
      304 அந்தண் சோற்று துறையெம் மாதியை
      சிந்தை செய்ம்மின் அடியீ ராயினீர்
      சந்தம் பரவு ஞான சம்பந்தன்
      வந்த வாறே புனைதல் வழிபாடே. 1.28.11

      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - தொலையாச்செல்வர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

      ------------------------------------------------------------------------

      1.29 திருநறையூர்ச்சித்தீச்சரம்

      பண் - தக்கராகம்
      305 ஊரு லாவு பலிகொண் டுலகேத்த
      நீரு லாவு நிமிர்புன் சடையண்ணல்
      சீரு லாவு மறையோர் நறையூரிற்
      சேருஞ் சித்தீ சரஞ்சென் றடைநெஞ்சே. 1.29.1
      306 காடு நாடுங் கலக்க பலிநண்ணி
      ஓடு கங்கை ஒளிர்புன் சடைதாழ
      வீடு மாக மறையோர் நறையூரில்
      நீடுஞ் சித்தீ சரமே நினைநெஞ்சே. 1.29.2
      307 கல்வி யாளர் கனக மழல்மேனி
      புல்கு கங்கை புரிபுன் சடையானூர்
      மல்கு திங்கள் பொழில்சூழ் நறையூரிற்
      செல்வர் சித்தீ சரஞ்சென் றடைநெஞ்சே. 1.29.3
      308 நீட வல்ல நிமிர்புன் சடைதாழ
      ஆட வல்ல அடிக ளிடமாகும்
      பாடல் வண்டு பயிலும் நறையூரிற்
      சேடர் சித்தீ சரமே தெளிநெஞ்சே. 1.29.4
      309 உம்ப ராலும் உலகின் னவராலும்
      தம்பெ ருமைய ளத்தற் கரியானூர்
      நண்பு லாவு மறையோர் நறையூரிற்
      செம்பொன் சித்தீ சரமே தெளிநெஞ்சே. 1.29.5
      310 கூரு லாவு படையான் விடையேறி
      போரு லாவு மழுவான் அனலாடி
      பேரு லாவு பெருமான் நறையூரிற்
      சேருஞ் சித்தீ சரமே யிடமாமே. 1.29.6
      311 அன்றி நின்ற அவுணர் புரமெய்த
      வென்றி வில்லி விமலன் விரும்புமூர்
      மன்றில் வாச மணமார் நறையூரிற்
      சென்று சித்தீ சரமே தெளிநெஞ்சே.
      அன்றி நின்ற - பகைத்து
      312 அரக்கன் ஆண்மை யழிய வரைதன்னால்
      நெருக்க வூன்றும் விரலான் விரும்புமூர்
      பரக்குங் கீர்த்தி யுடையார் நறையூரிற்
      திருக்கொள் சித்தீ சரமே தெளிநெஞ்சே. 1.29.8
      313 ஆழி யானும் அலரின் உறைவானும்
      ஊழி நாடி உணரார் திரிந்துமேல்
      சூழு நேட எரியாம் ஒருவன்சீர்
      நீழல் சித்தீ சரமே நினைநெஞ்சே. 1.29.9
      314 மெய்யின் மாசர் விரிநுண் துகிலிலார்
      கையி லுண்டு கழறும் உரைகொள்ளேல்
      உய்ய வேண்டில் இறைவன் நறையூரிற்
      செய்யுஞ் சித்தீ சரமே தவமாமே. 1.29.10
      315 மெய்த்து லாவு மறையோர் நறையூரிற்
      சித்தன் சித்தீ சரத்தை உயர்காழி
      அத்தன் பாதம் அணிஞான சம்பந்தன்
      பத்தும் பாட பறையும் பாவமே. 1.29.11

      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - சித்தநாதேசர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

      ------------------------------------------------------------------------

      1.30 திருப்புகலி

      பண் - தக்கராகம்
      316 விதியாய் விளைவாய் விளைவின் பயனாகி
      கொதியா வருகூற் றையுதை தவர்சேரும்
      பதியா வதுபங் கயநின் றலரத்தேன்
      பொதியார் பொழில்சூழ் புகலி நகர்தானே. 1.30.1
      317 ஒன்னார்புர மூன்று மெரித்த ஒருவன்
      மின்னாரிடை யாளொடுங் கூடிய வேட
      தன்னாலுறை வாவது தண்கடல் சூழ்ந்த
      பொன்னார் வயற்பூம் புகலி நகர்தானே. 1.30.2
      318 வலியின்மதி செஞ்சடை வைத்தம ணாளன்
      புலியின்னதள் கொண்டரை யார்த்த புனிதன்
      மலியும்பதி மாமறை யோர்நிறை தீண்டி
      பொலியும்புனற் பூம்புக லிந்நகர் தானே. 1.30.3
      319 கயலார்தடங் கண்ணி யொடும்மெரு தேறி
      அயலார்கடை யிற்பலி கொண்ட அழகன்
      இயலாலுறை யும்மிடம் எண்டிசை யோர்க்கும்
      புயலார்கடற் பூம்புக லிந்நகர் தானே. 1.30.4
      320 காதார்கன பொற்குழை தோட திலங்க
      தாதார்மலர் தண்சடை யேற முடித்து
      நாதான்உறை யும்மிட மாவது நாளும்
      போதார்பொழிற் பூம்புக லிந்நகர் தானே.
      நாதன் - நாதான் என நீண்டது. 1.30.5
      321 வலமார்படை மான்மழு ஏந்திய மைந்தன்
      கலமார்கடல் நஞ்சமு துண்ட கருத்தன்
      குலமார்பதி கொன்றைகள் பொன்சொரி யத்தேன்
      புலமார்வயற் பூம்புக லிந்நகர் தானே. 1.30.6
      322 கறுத்தான்கன லால்மதில் மூன்றையும் வேவ
      செறுத்தான்திக ழுங்கடல் நஞ்சமு தாக
      அறுத்தான்அயன் தன்சிரம் ஐந்திலும் ஒன்றை
      பொறுத்தானிடம் பூம்புக லிந்நகர் தானே. 1.30.7
      323 தொழிலால்மிகு தொண்டர்கள் தோத்திரஞ் சொல்ல
      எழிலார்வரை யாலன் றரக்கனை செற்ற
      கழலானுறை யும்மிடங் கண்டல்கள் மிண்டி
      பொழிலால்மலி பூம்புக லிந்நகர் தானே. 1.30.8
      324 மாண்டார்சுட லைப்பொடி பூசி மயான
      தீண்டாநட மாடிய வேந்தன்றன் மேனி
      நீண்டானிரு வர்க்கெரி யாய்அர வாரம்
      பூண்டான்நகர் பூம்புக லிந்நகர் தானே. 1.30.9
      325 உடையார்துகில் போர்த்துழல் வார்சமண் கையர்
      அடையாதன சொல்லுவர் ஆதர்கள் ஓத்தை
      கிடையாதவன் றன்னகர் நன்மலி பூகம்
      புடையார்தரு பூம்புக லிந்நகர் தானே. 1.30.10
      326 இரைக்கும்புனல் செஞ்சடை வைத்தஎம் மான்றன்
      புரைக்கும்பொழில் பூம்புக லிந்நகர் தன்மேல்
      உரைக்குந்தமிழ் ஞானசம் பந்தனொண் மாலை
      வரைக்குந்தொழில் வல்லவர் நல்லவர் தாமே. 1.30.11

      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

      ------------------------------------------------------------------------

      1.31 திருக்குரங்கணின்முட்டம்

      பண் - தக்கராகம்
      327 விழுநீர்மழு வாள்படை அண்ணல் விளங்குங்
      கழுநீர்குவ ளைம்மல ரக்கயல் பாயுங்
      கொழுநீர்வயல் சூழ்ந்த குரங்கணின் முட்ட
      தொழுநீர்மையர் தீதுறு துன்ப மிலரே. 1.31.1
      328 விடைசேர்கொடி அண்ணல் விளங்குயர் மாட
      கடைசேர்கரு மென்குள தோங்கிய காட்டில்
      குடையார்புனல் மல்கு குரங்கணின் முட்டம்
      உடையானெனை யாளுடை யெந்தை பிரானே. 1.31.2
      329 சூலப்படை யான்விடை யான்சுடு நீற்றான்
      காலன்றனை ஆருயிர் வவ்விய காலன்
      கோலப்பொழில் சூழ்ந்த குரங்கணின் முட்ட
      தேலங்கமழ் புன்சடை யெந்தை பிரானே. 1.31.3
      330 வாடாவிரி கொன்றை வலத்தொரு காதில்
      தோடார்குழை யான்நல பாலன நோக்கி
      கூடாதன செய்த குரங்கணின் முட்டம்
      ஆடாவரு வாரவ ரன்புடை யாரே. 1.31.4
      331 இறையார்வளை யாளையொர் பாக தடக்கி
      கறையார்மிடற் றான்கரி கீறிய கையான்
      குறையார்மதி சூடி குரங்கணின் முட்ட
      துறைவானெமை யாளுடை யொண்சுட ரானே. 1.31.5
      332 பலவும்பய னுள்ளன பற்றும் ஒழிந்தோங்
      கலவம்மயில் காமுறு பேடையொ டாடி
      குலவும்பொழில் சூழ்ந்த குரங்கணின் முட்டம்
      நிலவும்பெரு மானடி நித்தல் நினைந்தே. 1.31.6
      333 மாடார்மலர கொன்றை வளர்சடை வைத்து
      தோடார்குழை தானொரு காதில் இலங
      கூடார்மதி லெய்து குரங்கணின் முட்ட
      தாடாரர வம்மரை யார்த்தமர் வானே. 1.31.7
      334 மையார்நிற மேனி யரக்கர்தங் கோனை
      உய்யாவகை யாலடர தின்னருள் செய்த
      கொய்யாமலர் சூடி குரங்கணின் முட்டங்
      கையால்தொழு வார்வினை காண்ட லரிதே. 1.31.8
      335 வெறியார்மலர தாமரை யானொடு மாலும்
      அறியாதசை தேத்தவோர் ஆரழ லாகுங்
      குறியால்நிமிர தான்றன் குரங்கணின் முட்டம்
      நெறியால்தொழு வார்வினை நிற்ககி லாவே. 1.31.9
      336 கழுவார்துவ ராடை கலந்துமெய் போர்க்கும்
      வழுவாச்சமண் சாக்கியர் வாக்கவை கொள்ளேல்
      குழுமின்சடை யண்ணல் குரங்கணின் முட்ட
      தெழில்வெண்பிறை யானடி சேர்வ தியல்பே. 1.31.10
      337 கல்லார்மதிற் காழியுள் ஞானசம் பந்தன்
      கொல்லார்மழு வேந்தி குரங்கணில் முட்டஞ்
      சொல்லார்தமிழ் மாலை செவிக்கினி தாக
      வல்லார்க்கெளி தாம்பிற வாவகை வீடே. 1.31.11

      இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - வாலீசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

      ------------------------------------------------------------------------

      1.32 திருவிடைமருதூர்

      பண் - தக்கராகம்
      338 ஓடேகலன் உண்பதும் ஊரிடு பிச்சை
      காடேயிட மாவது கல்லால் நிழற்கீழ்
      வாடாமுலை மங்கையு தானும் மகிழ
      தீடாவுறை கின்ற இடைமரு தீதோ. 1.32.1
      339 தடம்கொண்டதொர் தாமரை பொன்முடி தன்மேல்
      குடங்கொண்டடி யார்குளிர் நீர்சு தாட்ட
      படங்கொண்டதொர் பாம்பரை யார்த்த பரமன்
      இடங்கொண்டிரு தான்றன் இடைமரு தீதோ. 1.32.2
      340 வெண்கோவணங் கொண்டொரு வெண்டலை யேந்தி
      அங்கோல்வளை யாளையொர் பாகம் அமர்ந்து
      பொங்காவரு காவிரி கோல கரைமேல்
      எங்கோ னுறைகின்ற இடைமரு தீதோ. 1.32.3
      341 அந்தம்மறி யாத அருங்கல முந்தி
      கந்தங்கமழ் காவிரி கோல கரைமேல்
      வெந்தபொடி பூசிய வேத முதல்வன்
      எந்தையுறை கின்ற இடைமரு தீதோ. 1.32.4
      342 வாசங்கமழ் மாமலர சோலையில் வண்டே
      தேசம்புகு தீண்டியொர் செம்மை யுடைத்தாய்
      பூசம்புகு தாடி பொலிந்தழ காய
      ஈசனுறை கின்ற இடைமரு தீதோ. 1.32.5
      343 வன்புற்றிள நாகம் அசை தழகாக
      என்பிற்பல மாலையும் பூண்டெரு தேறி
      அன்பிற்பிரி யாதவ ளோடு முடனாய்
      இன்புற்றிரு தான்றன் இடைமரு தீதோ. 1.32.6
      344 தேக்குந்திமி லும்பல வுஞ்சு துந்தி
      போக்கிப்புறம் பூச லடிப்ப வருமால்
      ஆர்க்குந்திரை காவிரி கோல கரைமேல்
      ஏற்கஇரு தான்றன் இடைமரு தீதோ. 1.32.7
      345 பூவார்குழ லாரகில் கொண்டு புகைப்ப
      ஓவாதடி யாரடி யுள்குளிர தேத்த
      ஆவாஅர கன்றனை ஆற்ற லழித்த
      ஏவார்சிலை யான்றன் இடைமரு தீதோ. 1.32.8
      346 முற்றாததொர் பால்மதி சூடு முதல்வன்
      நற்றாமரை யானொடு மால தேத்த
      பொற்றோளியு தானும் பொலிந்தழ காக
      எற்றேயுறை கின்ற இடைமரு தீதோ. 1.32.9
      347 சிறுதேரரும் சில்சம ணும்புறங் கூற
      நெறியேபல பத்தர்கள் கைதொழு தேத்த
      வெறியாவரு காவிரி கோல கரைமேல்
      எறியார்மழு வாளன் இடைமரு தீதோ. 1.32.10
      348 கண்ணார்கமழ் காழியுள் ஞானசம் பந்தன்
      எண்ணார்புக ழெந்தை யிடைமரு தின்மேல்
      பண்ணோடிசை பாடிய பத்தும்வல் லார்கள்
      விண்ணோருல கத்தினில் வீற்றிரு பாரே. 1.32.11

      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - மருதீசர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

      ------------------------------------------------------------------------

      1.33 திரு அன்பிலாலந்துறை

      பண் - தக்கராகம்
      349 கணைநீடெரி மாலர வம்வரை வில்லா
      இணையாஎயில் மூன்றும் எரித்த இறைவர்
      பிணைமாமயி லுங்குயில் சேர்மட அன்னம்
      அணையும்பொழி லன்பி லால துறையாரே. 1.33.1
      350 சடையார்சது ரன்முதி ராமதி சூடி
      விடையார்கொடி யொன்றுடை யெந்தை விமலன்
      கிடையாரொலி ஓத்தர வத்திசை கிள்ளை
      அடையார்பொழில் அன்பி லாலந்துறை யாரே. 1.33.2
      352 ஊரும்மர வஞ்சடை மேலுற வைத்து
      பாரும்பலி கொண்டொலி பாடும் பரமர்
      நீருண்கய லும்வயல் வாளை வராலோ
      டாரும்புனல் அன்பி லாலந்துறை யாரே. 1.33.3
      353 பிறையும்மர வும்முற வைத்த முடிமேல்
      நறையுண்டெழு வன்னியு மன்னு சடையார்
      மறையும்பல வேதிய ரோத ஒலிசென்
      றறையும்புனல் அன்பி லாலந்துறை யாரே. 1.33.4
      354 நீடும்புனற் கங்கையு தங்க முடிமேல்
      கூடும்மலை யாளொரு பாகம் அமர்ந்தார்
      மாடும்முழ வம்மதி ரம்மட மாதர்
      ஆடும்பதி அன்பி லாலந்துறை யாரே. 1.33.5
      355 நீறார்திரு மேனிய ரூனமி லார்பால்
      ஊறார்சுவை யாகிய உம்பர் பெருமான்
      வேறாரகி லும்மிகு சந்தனம் உந்தி
      ஆறார்வயல் அன்பி லாலந்துறை யாரே. 1.33.6
      356 செடியார்தலை யிற்பலி கொண்டினி துண்ட
      படியார்பர மன்பர மேட்டிதன் சீரை
      கடியார்மல ரும்புனல் தூவிநின் றேத்தும்
      அடியார்தொழும் அன்பி லாலந்துறை யாரே. 1.33.7
      357 விடத்தார் திகழும்மிட றன்நட மாடி
      படத்தாரர வம்விர வுஞ்சடை ஆதி
      கொடித்தேரிலங் கைக்குல கோன்வரை யார
      அடர்த்தாரருள் அன்பி லாலந்துறை யாரே. 1.33.8
      358 வணங்கிம்மலர் மேலய னும்நெடு மாலும்
      பிணங்கியறி கின்றிலர் மற்றும் பெருமை
      சுணங்குமுக தம்முலை யாளொரு பாகம்
      அணங்குந்திக ழன்பி லாலந்துறை யாரே. 1.33.9
      359 தறியார்துகில் போர்த்துழல் வார்சமண் கையர்
      நெறியாஉண ராநிலை கேடினர் நித்தல்
      வெறியார்மலர் கொண்டடி வீழு மவரை
      அறிவாரவர் அன்பி லாலந்துறை யாரே. 1.33.10
      360 அரவார்புனல் அன்பி லாலந்துறை தன்மேல்
      கரவாதவர் காழியுள் ஞானசம் பந்தன்
      பரவார்தமிழ் பத்திசை பாடவல் லார்போய்
      விரவாகுவர் வானிடை வீடெளி தாமே. 1.33.11

      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      அன்பில் என வழங்கப்பெறும்.
      சுவாமிபெயர் - சத்திவாகீசர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

      ------------------------------------------------------------------------

      1.34 சீகாழி

      பண் - தக்கராகம்
      360 அடலே றமருங் கொடியண்ணல்
      மடலார் குழலா ளொடுமன்னுங்
      கடலார் புடைசூழ் தருகாழி
      தொடர்வா ரவர்தூ நெறியாரே. 1.34.1
      361 திரையார் புனல்சூ டியசெல்வன்
      வரையார் மகளோ டுமகிழ்ந்தான்
      கரையார் புனல்சூழ் தருகாழி
      நிரையார் மலர்தூ வுமினின்றே. 1.34.2
      362 இடியார் குரலே றுடையெந்தை
      துடியா ரிடையா ளொடுதுன்னுங்
      கடியார் பொழில்சூழ் தருகாழி
      அடியார் அறியார் அவலம்மே. 1.34.3
      363 ஒளியார் விடமுண் டவொருவன்
      அளியார் குழல்மங் கையொடன்பாய்
      களியார் பொழில்சூழ் தருகாழி
      எளிதாம் அதுகண் டவரின்பே. 1.34.4
      364 பனியார் மலரார் தருபாதன்
      முனிதா னுமையோ டுமுயங்கி
      கனியார் பொழில்சூழ் தருகாழி
      இனிதாம் அதுகண் டவரீடே. 1.34.5
      365 கொலையார் தருகூற் றமுதைத்து
      மலையான் மகளோ டுமகிழ்ந்தான்
      கலையார் தொழுதே தியகாழி
      தலையால் தொழுவார் தலையாரே. 1.34.6
      366 திருவார் சிலையால் எயிலெய்து
      உருவார் உமையோ டுடனானான்
      கருவார் பொழில்சூழ் தருகாழி
      மருவா தவர்வான் மருவாரே. 1.34.7
      367 அரக்கன் வலியொல் கஅடர்த்து
      வரைக்கு மகளோ டுமகிழ்ந்தான்
      சுரக்கும் புனல்சூழ் தருகாழி
      நிரக்கும் மலர்தூ வுநினைந்தே. 1.34.8
      368 இருவர கெரியா கிநிமிர்ந்தான்
      உருவிற் பெரியா ளொடுசேருங்
      கருநற் பரவை கமழ்காழி
      மருவ பிரியும் வினைமாய்ந்தே. 1.34.9
      369 சமண்சா கியர்தாம் அலர்தூற்ற
      அமைந்தான் உமையோ டுடனன்பா
      கமழ்ந்தார் பொழில்சூழ் தருகாழி
      சுமந்தார் மலர்தூ வுதல்தொண்டே. 1.34.10
      370 நலமா கியஞான சம்பந்தன்
      கலமார் கடல்சூழ் தருகாழி
      நிலையா கநினை தவர்பாடல்
      வலரா னவர்வான் அடைவாரே. 1.34.11

      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

      ------------------------------------------------------------------------

      1.35 திருவீழிமிழலை

      பண் - தக்கராகம்
      371 அரையார் விரிகோ வணஆடை
      நரையார் விடையூர் திநயந்தான்
      விரையார் பொழில்வீ ழிம்மிழலை
      உரையால் உணர்வார் உயர்வாரே. 1.35.1
      372 புனைதல் புரிபுன் சடைதன்மேல்
      கனைதல் லொருகங் கைகரந்தான்
      வினையில் லவர்வீ ழிம்மிழலை
      நினைவில் லவர்நெஞ் சமும்நெஞ்சே. 1.35.2
      373 அழவல் லவரா டியும்பாடி
      எழவல் லவரெ தையடிமேல்
      விழவல் லவர்வீ ழிம்மிழலை
      தொழவல் லவர்நல் லவர்தொண்டே. 1.35.3
      374 உரவம் புரிபுன் சடைதன்மேல்
      அரவம் மரையார தஅழகன்
      விரவும் பொழில்வீ ழிம்மிழலை
      பரவும் மடியார் அடியாரே. 1.35.4
      375 கரிதா கியநஞ் சணிகண்டன்
      வரிதா கியவண் டறைகொன்றை
      விரிதார் பொழில்வீ ழிம்மிழலை
      உரிதா நினைவார் உயர்வாரே. 1.35.5
      376 சடையார் பிறையான் சரிபூத
      படையான் கொடிமே லதொர்பைங்கண்
      விடையான் உறைவீ ழிம்மிழலை
      அடைவார் அடியார் அவர்தாமே. 1.35.6
      377 செறியார் கழலுஞ் சிலம்பார்க்க
      நெறியார் குழலா ளொடுநின்றான்
      வெறியார் பொழில்வீ ழிம்மிழலை
      அறிவார் அவலம் அறியாரே. 1.35.7
      378 உளையா வலியொல் கஅரக்கன்
      வளையா விரலூன் றியமைந்தன்
      விளையார் வயல்வீ ழிம்மிழலை
      அளையா வருவா ரடியாரே. 1.35.8
      379 மருள்செய் திருவர் மயலாக
      அருள்செய் தவனார் அழலாகி
      வெருள்செய் தவன்வீ ழிம்மிழலை
      தெருள்செய் தவர்தீ வினைதேய்வே. 1.35.9
      380 துளங்கு நெறியா ரவர்தொன்மை
      வளங்கொள் ளன்மின்புல் லமண்தேரை
      விளங்கும் பொழில்வீ ழிம்மிழலை
      உளங்கொள் பவர்தம் வினையோய்வே. 1.35.10
      381 நளிர்கா ழியுள்ஞான சம்பந்தன்
      குளிரார் சடையான் அடிகூற
      மிளிரார் பொழில்வீ ழிம்மிழலை
      கிளர்பா டல்வல்லார கிலைகேடே. 1.35.11

      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

      ------------------------------------------------------------------------

      1.36 திரு ஐயாறு

      பண் - தக்கராகம்
      382 கலையார் மதியோ டுரநீரும்
      நிலையார் சடையா ரிடமாகும்
      மலையா ரமுமா மணிசந்தோ
      டலையார் புனல்சே ருமையாறே. 1.36.1
      383 மதியொன் றியகொன் றைவடத்தன்
      மதியொன் றவுதை தவர்வாழ்வும்
      மதியின் னொடுசேர் கொடிமாடம்
      மதியம் பயில்கின் றவையாறே. 1.36.2
      384 கொக்கின் னிறகின் னொடுவன்னி
      புக்க சடையார கிடமாகு
      திக்கின் னிசைதே வர்வணங்கும்
      அக்கின் னரையா ரதையாறே. 1.36.3
      385 சிறைகொண் டபுரம் மவைசிந்த
      கறைகொண் டவர்கா தல்செய்கோயில்
      மறைகொண் டநல்வா னவர்தம்மில்
      அறையும் மொலிசே ருமையாறே. 1.36.4
      386 உமையா ளொருபா கமதாக
      சமைவார் அவர்சார் விடமாகும்
      அமையா ருடல்சோர் தரமுத்தம்
      அமையா வரு தணையாறே. 1.36.5
      387 தலையின் தொடைமா லையணிந்து
      கலைகொண் டதொர்கை யினர்சேர்வாம்
      நிலைகொண் டமன தவர்நித்தம்
      மலர்கொண் டுவணங் குமையாறே. 1.36.6
      388 வரமொன் றியமா மலரோன்றன்
      சிரமொன் றையறு தவர்சேர்வாம்
      வரைநின் றிழிவார் தருபொன்னி
      அரவங் கொடுசே ருமையாறே. 1.36.7
      389 வரையொன் றதெடு தஅரக்கன்
      சிரமங் கநெரி தவர்சேர்வாம்
      விரையின் மலர்மே தகுபொன்னி
      திரைதன் னொடுசே ருமையாறே. 1.36.8
      390 சங கயனும் மறியாமை
      பொங்குஞ் சுடரா னவர்கோயில்
      கொங்கிற் பொலியும் புனல்கொண்டு
      அங்கி கெதிர்கா டுமையாறே.
      சங்கத்தயனும் என்றும் பாடம். 1.36.9
      391 துவரா டையர்தோ லுடையார்கள்
      கவர்வாய் மொழிகா தல்செய்யாதே
      தவரா சர்கள்தா மரையானோ
      டவர்தா மணை தணையாறே. 1.36.10
      392 கலையார் கலிக்கா ழியர்மன்னன்
      நலமார் தருஞான சம்பந்தன்
      அலையார் புனல்சூ ழுமையாற்றை
      சொலுமா லைவல்லார் துயர்வீடே. 1.36.11

      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - செம்பொன்சோதீசுரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

      ------------------------------------------------------------------------

      1.37 திருப்பனையூர்

      பண் - தக்கராகம்
      393 அரவ சடைமேல் மதிமத்தம்
      விரவி பொலிகின் றவனூராம்
      நிரவி பலதொண் டர்கள்நாளும்
      பரவி பொலியும் பனையூரே. 1.37.1
      394 எண்ணொன் றிநினை தவர்தம்பால்
      உண்ணின் றுமகிழ தவனூராம்
      கண்ணின் றெழுசோ லையில்வண்டு
      பண்ணின் றொலிசெய் பனையூரே. 1.37.2
      395 அலரும் மெறிசெஞ் சடைதன்மேல்
      மலரும் பிறையொன் றுடையானூர்
      சிலரென் றுமிரு தடிபேண
      பலரும் பரவும் பனையூரே. 1.37.3
      396 இடியார் கடல்நஞ் சமுதுண்டு
      பொடியா டியமே னியினானூர்
      அடியார் தொழமன் னவரேத்த
      படியார் பணியும் பனையூரே. 1.37.4
      397 அறையார் கழல்மே லரவாட
      இறையார் பலிதேர தவனூராம்
      பொறையார் மிகுசீர் விழமல்க
      பறையா ரொலிசெய் பனையூரே. 1.37.5
      398 அணியார் தொழவல் லவரேத்த
      மணியார் மிடறொன் றுடையானூர்
      தணியார் மலர்கொண் டிருபோதும்
      பணிவார் பயிலும் பனையூரே. 1.37.6
      399 அடையா தவர்மூ வெயில்சீறும்
      விடையான் விறலார் கரியின்தோல்
      உடையா னவனெண் பலபூத
      படையா னவனூர் பனையூரே.
      உடையா னவனொண் பலபூத என்றும் பாடம். 1.37.7
      400 இலகும் முடிப துடையானை
      அலல்கண் டருள்செய் தவெம்மண்ணல்
      உலகில் லுயிர்நீர் நிலமற்றும்
      பலகண் டவனூர் பனையூரே. 1.37.8
      401 வரமுன் னிமகிழ தெழுவீர்காள்
      சிரமுன் னடிதா ழவணங்கும்
      பிரமன் னொடுமா லறியாத
      பரமன் னுறையும் பனையூரே. 1.37.9
      402 அழிவல் லமண ரொடுதேரர்
      மொழிவல் லனசொல் லியபோதும்
      இழிவில் லதொர்செம் மையினானூர்
      பழியில் லவர்சேர் பனையூரே.
      அழிவில் லமணஃ தொடுதேரர் என்றும் பாடம். 1.37.10
      403 பாரார் விடையான் பனையூர்மேல்
      சீரார் தமிழ்ஞா னசம்பந்தன்
      ஆரா தசொன்மா லைகள்பத்தும்
      ஊரூர் நினைவா ருயர்வாரே.
      விடையார் என்றும் பாடம். 1.37.11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - சவுந்தரேசர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

      ------------------------------------------------------------------------

      1.38 திருமயிலாடுதுறை

      பண் - தக்கராகம்
      404 கரவின் றிநன்மா மலர்கொண்டே
      இரவும் பகலு தொழுவார்கள்
      சிரமொன் றியசெஞ் சடையான்வாழ்
      வரமா மயிலா டுதுறையே. 1.38.1
      405 உரவெங் கரியின் னுரிபோர்த்த
      பரமன் னுறையும் பதியென்பர்
      குரவஞ் சுரபுன் னையும்வன்னி
      மருவும் மயிலா டுதுறையே. 1.38.2
      406 ஊன திருள்நீங் கிடவேண்டில்
      ஞான பொருள்கொண் டடிபேணு
      தேனொ தினியா னமருஞ்சேர்
      வானம் மயிலா டுதுறையே. 1.38.3
      407 அஞ்சொண் புலனும் மவைசெற்ற
      மஞ்சன் மயிலா டுதுறையை
      நெஞ்சொன் றிநினை தெழுவார்மேல்
      துஞ்சும் பிணியா யினதானே. 1.38.4
      408 தணியார் மதிசெஞ் சடையான்றன்
      அணியார தவரு கருளென்றும்
      பிணியா யினதீர தருள்செய்யும்
      மணியான் மயிலா டுதுறையே.
      கணியார் என்றும் பாடம். 1.38.5
      409 தொண்ட ரிசைபா டியுங்கூடி
      கண்டு துதிசெய் பவனூராம்
      பண்டும் பலவே தியரோத
      வண்டார் மயிலா டுதுறையே. 1.38.6
      410 அணங்கோ டொருபா கமமர்ந்து
      இணங்கி யருள்செய் தவனூராம்
      நுணங்கும் புரிநூ லர்கள்கூடி
      வணங்கும் மயிலா டுதுறையே. 1.38.7
      411 சிரங்கை யினிலே தியிரந்த
      பரங்கொள் பரமே டிவரையால்
      அரங்கவ் வரக்கன் வலிசெற்ற
      வரங்கொள் மயிலா டுதுறையே. 1.38.8
      412 ஞால தைநுகர தவன்றானுங்
      கோல தயனும் மறியாத
      சீல தவனூர் சிலர்கூடி
      மாலை தீர்மயிலா டுதுறையே. 1.38.9
      413 நின்றுண் சமணும் நெடுந்தேரர்
      ஒன்றும் மறியா மையுயர்ந்த
      வென்றி யருளா னவனூராம்
      மன்றன் மயிலா டுதுறையே. 1.38.10
      414 நயர்கா ழியுள்ஞா னசம்பந்தன்
      மயல்தீர் மயிலா டுதுறைமேல்
      செயலா லுரைசெய் தனபத்தும்
      உயர்வாம் இவையுற் றுணர்வார்க்கே. 1.38.11

      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - மாயூரநாதர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

      ------------------------------------------------------------------------

      1.39 திருவேட்களம்

      பண் - தக்கராகம்
      415 அந்தமும் ஆதியு மாகிய வண்ணல்
      ஆரழ லங்கை அமர்ந்திலங்க
      மந்த முழவம் இயம்ப
      மலைமகள் காண நின்றாடி
      சந்த மிலங்கு நகுதலை கங்கை
      தண்மதியம் மயலே ததும்ப
      வெந்தவெண் ணீறு மெய்பூசும்
      வேட்கள நன்னக ராரே. 1.39.1
      415 சடைதனை தாழ்தலும் ஏற முடித்து
      சங்கவெண் டோ டு சரிந்திலங்க
      புடைதனிற் பாரிடஞ் சூழ
      போதரு மாறிவர் போல்வார்
      உடைதனில் நால்விரற் கோவண ஆடை
      உண்பது மூரிடு பிச்சைவெள்ளை
      விடைதனை ஊர்தி நயந்தார்
      வேட்கள நன்னக ராரே. 1.39.2
      416 பூதமும் பல்கண மும்புடை சூழ
      பூமியும் விண்ணும் உடன்பொருந்த
      சீதமும் வெம்மையு மாகி
      சீரொடு நின்றவெஞ் செல்வர்
      ஓதமுங் கானலுஞ் சூழ்தரு வேலை
      உள்ளங் கலந்திசை யாலெழுந்த
      வேதமும் வேள்வியும் ஓவா
      வேட்கள நன்னக ராரே. 1.39.3
      418 அரைபுல்கும் ஐந்தலை யாட லரவம்
      அமையவெண் கோவண தோடசைத்து
      வரைபுல்கு மார்பி லோராமை
      வாங்கி யணி தவர்தா
      திரைபுல்கு தெண்கடல் தண்கழி யோத
      தேனலங் கானலில் வண்டுபண்செய்ய
      விரைபுல்கு பைம்பொழில் சூழ்ந்த
      வேட்கள நன்னக ராரே. 1.39.4
      419 பண்ணுறு வண்டறை கொன்றை யலங்கல்
      பால்புரை நீறுவெண் ணூல்கிடந்த
      பெண்ணுறு மார்பினர் பேணார்
      மும்மதில் எய்த பெருமான்
      கண்ணுறு நெற்றி கலந்த வெண்திங்க
      கண்ணியர் விண்ணவர் கைதொழுதேத்தும்
      வெண்ணிற மால்விடை அண்ணல்
      வேட்கள நன்னக ராரே. 1.39.5
      420 கறிவளர் குன்ற மெடுத்தவன் காதற்
      கண்கவ ரைங்கணை யோனுடலம்
      பொறிவளர் ஆரழ லுண்ண
      பொங்கிய பூத புராணர்
      மறிவள ரங்கையர் மங்கையொர் பங்கர்
      மைஞ்ஞிற மானுரி தோலுடையாடை
      வெறிவளர் கொன்றை தாரார்
      வேட்கள நன்னக ராரே. 1.39.6
      421 மண்பொடி கொண்டெரி தோர் சுடலை
      மாமலை வேந்தன் மகள்மகிழ
      நுண்பொடி சேர நின்றாடி
      நொய்யன செய்யல் உகந்தார்
      கண்பொடி வெண்டலை யோடுகை யேந்தி
      காலனை காலாற் கடிந்துகந்தார்
      வெண்பொடி சேர்திரு மார்பர்
      வேட்கள நன்னக ராரே. 1.39.7
      422 ஆழ்தரு மால்கடல் நஞ்சினை யுண்டார்
      அமுத மமரர கருளி
      சூழ்தரு பாம்பரை யார்த்து
      சூலமோ டொண்மழு வேந்தி
      தாழ்தரு புன்சடை யொன்றினை வாங்கி
      தண்மதி யம்மய லேததும்ப
      வீழ்தரு கங்கை கரந்தார்
      வேட்கள நன்னக ராரே. 1.39.8
      423 திருவொளி காணிய பேதுறு கின்ற
      திசைமுக னுந்திசை மேலளந்த
      கருவரை யேந்திய மாலுங்
      கைதொழ நின்றது மல்லால்
      அருவரை யொல்க எடுத்த வரக்கன்
      ஆடெழிற் றோள்களா ழத்தழுந்த
      வெருவுற வூன்றிய பெம்மான்
      வேட்கள நன்னக ராரே. 1.39.9
      424 அத்தமண் டோ ய்துவ ராரமண் குண்டர்
      யாதுமல் லாவுரை யேயுரைத்து
      பொய்த்தவம் பேசுவ தல்லால்
      புறனுரை யாதொன்றுங் கொள்ளேல்
      முத்தன வெண்முறு வல்லுமை யஞ்ச
      மூரிவல் லானையின் ஈருரி போர்த்த
      வித்தகர் வேத முதல்வர்
      வேட்கள நன்னக ராரே. 1.39.10
      425 விண்ணியன் மாடம் விளங்கொளி வீதி
      வெண்கொடி யெங்கும் விரிந்திலங்க
      நண்ணிய சீர்வளர் காழி
      நற்றமிழ் ஞானசம் பந்தன்
      பெண்ணின்நல் லாளொரு பாகம மர்ந்து
      பேணிய வேட்கள மேல்மொழிந்த
      பண்ணியல் பாடல் வல்லார்கள்
      பழியொடு பாவமி லாரே. 1.39.11

      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - பாசுபதேசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

      ------------------------------------------------------------------------

      1.40 திருவாழ்கொளிபுத்தூர்

      பண் - தக்கராகம்
      திருவாளொளிபுற்றூர் என்றும் பாடம்.

      426 பொடியுடை மார்பினர் போர்விடை யேறி
      பூதகணம் புடை சூழ
      கொடியுடை யூர்திரி தையங்
      கொண்டு பலபல கூறி
      வடிவுடை வாள்நெடுங் கண்ணுமை பாகம்
      ஆயவன் வாழ்கொளி புத்தூர
      கடிகமழ் மாமல ரிட்டு
      கறைமிடற் றானடி காண்போம். 1.40.1
      427 அரைகெழு கோவண ஆடையின் மேலோர்
      ஆடரவம் அசை தையம்
      புரைகெழு வெண்டலை யேந்தி
      போர்விடை யேறி புகழ
      வரைகெழு மங்கைய தாகமொர் பாகம்
      ஆயவன் வாழ்கொளி புத்தூர்
      விரைகெழு மாமலர் தூவி
      விரிசடை யானடி சேர்வோம். 1.40.2
      428 பூண்நெடு நாகம் அசைத்தன லாடி
      புன்றலை யங்கையி லேந்தி
      ஊணிடு பிச்சையூ ரையம்
      உண்டி யென்று பலகூறி
      வாணெடுங் கண்ணுமை மங்கையொர் பாகம்
      ஆயவன் வாழ்கொளி புத்தூர்
      தாணெடு மாமல ரிட்டு
      தலைவன தாள்நிழல் சார்வோம். 1.40.3
      429 தாரிடு கொன்றையொர் வெண்மதி கங்கை
      தாழ்சடை மேலவை சூடி
      ஊரிடு பிச்சை கொள்செல்வம்
      உண்டி யென்று பலகூறி
      வாரிடு மென்முலை மாதொரு பாகம்
      ஆயவன் வாழ்கொளி புத்தூர
      காரிடு மாமலர் தூவி
      கறைமிடற் றானடி காண்போம். 1.40.4
      430 கனமலர கொன்றை அலங்கல் இலங
      காதிலொர் வெண்குழை யோடு
      புனமலர் மாலை புனைந்தூர்
      புகுதி யென்றே பலகூறி
      வனமுலை மாமலை மங்கையொர் பாகம்
      ஆயவன் வாழ்கொளி புத்தூர்
      இனமல ரேய்ந்தன தூவி
      எம்பெரு மானடி சேர்வோம். 1.40.5
      431
      அளைவளர் நாகம் அசைத்தன லாடி
      அலர்மிசை அந்தணன் உச்சி
      களைதலை யிற்பலி கொள்ளுங்
      கருத்தனே கள்வனே யென்னா
      வளைபொலி முன்கை மடந்தையொர் பாகம்
      ஆயவன் வாழ்கொளி புத்தூர
      தளையவிழ் மாமலர் தூவி
      தலைவன தாளிணை சார்வோம்.
      வளையொலி என்றும் பாடம். 1.40.6
      432 அடர்செவி வேழத்தின் ஈருரி போர்த்து
      வழிதலை யங்கையி லேந்தி
      உடலிடு பிச்சை யோடைய
      முண்டி யென்று பலகூறி
      மடல்நெடு மாமலர கண்ணியொர் பாகம்
      ஆயவன் வாழ்கொளி புத்தூர
      தடமல ராயின தூவி
      தலைவன தாள்நிழல் சார்வோம். 1.40.7
      433 உயர்வரை யொல்க எடுத்த அரக்கன்
      ஒளிர்கட கக்கை யடர்த்து
      அயலிடு பிச்சை யோடையம்
      ஆர்தலை யென்றடி போற்றி
      வயல்விரி நீல நெடுங்கணி பாகம்
      ஆயவன் வாழ்கொளி புத்தூர
      சயவிரி மாமலர் தூவி
      தாழ்சடை யானடி சார்வோம். 1.40.8
      434 கரியவன் நான்முகன் கைதொழு தேத்த
      காணலுஞ் சாரலு மாகா
      எரியுரு வாகி யூரையம்
      இடுபலி யுண்ணி யென்றேத்தி
      வரியர வல்குல் மடந்தையொர் பாகம்
      ஆயவன் வாழ்கொளி புத்தூர்
      விரிமல ராயின தூவி
      விகிர்தன சேவடி சேர்வோம். 1.40.9
      435 குண்டம ணர்துவர கூறைகள் மெய்யில்
      கொள்கை யினார் புறங்கூற
      வெண்டலை யிற்பலி கொண்டல்
      விரும்பினை யென்று விளம்பி
      வண்டமர் பூங்குழல் மங்கையொர் பாகம்
      ஆயவன் வாழ்கொளி புத்தூர
      தொண்டர்கள் மாமலர் தூவ
      தோன்றி நின்றான் அடிசேர்வோம். 1.40.10
      436 கல்லுயர் மாக்கடல் நின்று முழங்குங்
      கரைபொரு காழிய மூதூர்
      நல்லுயர் நான்மறை நாவின்
      நற்றமிழ் ஞானசம் பந்தன்
      வல்லுயர் சூலமும் வெண்மழு வாளும்
      வல்லவன் வாழ்கொளி புத்தூர
      சொல்லிய பாடல்கள் வல்லார்
      துயர்கெடு தல்எளி தாமே. 1.40.11

      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - மாணிக்கவண்ணவீசுரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

      ------------------------------------------------------------------------

      1.41 திருப்பாம்புரம்

      பண் - தக்கராகம்
      437 சீரணி திகழ்திரு மார்பில் வெண்ணூலர்
      திரிபுர மெரிசெய்த செல்வர்
      வாரணி வனமுலை மங்கையோர் பங்கர்
      மான்மறி யேந்திய மைந்தர்
      காரணி மணிதிகழ் மிடறுடை யண்ணல்
      கண்ணுதல் விண்ணவ ரேத்தும்
      பாரணி திகழ்தரு நான்மறை யாளர்
      பாம்புர நன்னக ராரே. 1.41.1
      438 கொக்கிற கோடு கூவிள மத்தங்
      கொன்றையொ டெருக்கணி சடையர்
      அக்கினொ டாமை பூண்டழ காக
      அனலது ஆடுமெம் மடிகள்
      மிக்கநல் வேத வேள்வியு ளெங்கும்
      விண்ணவர் விரைமலர் தூவ
      பக்கம்பல் பூதம் பாடிட வருவார்
      பாம்புர நன்னக ராரே. 1.41.2
      439 துன்னலி னாடை யுடுத்ததன் மேலோர்
      சூறைநல் லரவது சுற்றி
      பின்னுவார் சடைகள் தாழவி டாடி
      பித்தரா திரியுமெம் பெருமான்
      மன்னுமா மலர்கள் தூவிட நாளும்
      மாமலை யாட்டியு தாமும்
      பன்னுநான் மறைகள் பாடிட வருவார்
      பாம்புர நன்னக ராரே. 1.41.3
      440 துஞ்சுநாள் துறந்து தோற்றமு மில்லா
      சுடர்விடு சோதியெம் பெருமான்
      நஞ்சுசேர் கண்ட முடையவென் நாதர்
      நள்ளிருள் நடஞ்செயும் நம்பர்
      மஞ்சுதோய் சோலை மாமயி லாட
      மாடமா ளிகைதன்மே லேறி
      பஞ்சுசேர் மெல்லடி பாவையர் பயிலும்
      பாம்புர நன்னக ராரே. 1.41.4
      441 நதியத னயலே நகுதலை மாலை
      நாண்மதி சடைமிசை யணிந்து
      கதியது வா காளிமுன் காண
      கானிடை நடஞ்செய்த கருத்தர்
      விதியது வழுவா வேதியர் வேள்வி
      செய்தவர் ஓத்தொலி ஓவா
      பதியது வாக பாவையு தாமும்
      பாம்புர நன்னக ராரே. 1.41.5
      442 ஓதிநன் குணர்வார குணர்வுடை யொருவர்
      ஒளிதிகழ் உருவஞ் சேரொருவர்
      மாதினை யிடமா வைத்தவெம் வள்ளல்
      மான்மறி யேந்திய மைந்தர்
      ஆதிநீ யருளென் றமரர்கள் பணிய
      அலைகடல் கடையவன் றெழுந்த
      பாதிவெண் பிறைசடை வைத்தவெம் பரமர்
      பாம்புர நன்னக ராரே. 1.41.6
      443 மாலினு கன்று சக்கர மீந்து
      மலரவற் கொருமுக மொழித்து
      ஆலின்கீ ழறமோர் நால்வரு கருளி
      அனலது ஆடுமெம் மடிகள்
      காலனை காய்ந்து தங்கழ லடியாற்
      காமனை பொடிபட நோக்கி
      பாலனு கருள்கள் செய்தவெம் மடிகள்
      பாம்புர நன்னக ராரே. 1.41.7
      444 விடைத்தவல் லரக்கன் வெற்பினை யெடுக்க
      மெல்லிய திருவிர லூன்றி
      அடர்த்தவன் றனக்கன் றருள்செய்த வடிகள்
      அனலது ஆடுமெம் மண்ணல்
      மடக்கொடி யவர்கள் வருபுன லாட
      வந்திழி அரிசிலின் கரைமேற்
      படப்பையிற் கொணர்ந்து பருமணி சிதறும்
      பாம்புர நன்னக ராரே. 1.41.8
      445 கடிபடு கமல தயனொடு மாலுங்
      காதலோ டடிமுடி தேட
      செடிபடு வினைகள் தீர்த்தருள் செய்யு
      தீவணர் எம்முடை செல்வர்
      முடியுடையமரர் முனிகண தவர்கள்
      முறைமுறை யடிபணி தேத்த
      படியது வாக பாவையு தாமும்
      பாம்புர நன்னக ராரே. 1.41.9
      446 குண்டர்சா கியருங் குணமிலா தாருங்
      குற்றுவி டுடுக்கையர் தாமுங்
      கண்டவா றுரைத்து கால்நிமிர துண்ணுங்
      கையர்தாம் உள்ளவா றறியார்
      வண்டுசேர் குழலி மலைமகள் நடுங்க
      வாரணம் உரிசெய்து போர்த்தார்
      பண்டுநாம் செய்த பாவங்கள் தீர்ப்பார்
      பாம்புர நன்னக ராரே. 1.41.10
      447 பார்மலி தோங்கி பருமதில் சூழ்ந்த
      பாம்புர நன்னக ராரை
      கார்மலி தழகார் கழனிசூழ் மாட
      கழுமல முதுபதி கவுணி
      நார்மலி தோங்கும் நால்மறை ஞான
      சம்பந்தன் செந்தமிழ் வல்லார்
      சீர்மலி தழகார் செல்வம தோங்கி
      சிவனடி நண்ணுவர் தாமே. 1.41.11

      இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - பாம்புரேசர்
      பாம்புரநாதர் என்றும் பாடம். தேவியார் - வண்டமர்பூங்குழலம்மை
      வண்டார்பூங்குழலி என்றும் பாடம்.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

      ------------------------------------------------------------------------

      1.42 திருப்பேணுபெருந்துறை

      பண் - தக்கராகம்
      448 பைம்மா நாகம் பன்மலர கொன்றை
      பன்றிவெண் கொம்பொன்று பூண்டு
      செம்மா தையம் பெய்கென்று சொல்லி
      செய்தொழில் பேணியோர் செல்வர்
      அம்மா னோக்கிய அந்தளிர் மேனி
      அரிவையோர் பாக மமர்ந்த
      பெம்மான் நல்கிய தொல்புக ழாளர்
      பேணு பெருந்துறை யாரே. 1.42.1
      449 மூவரு மாகி இருவரு
      முதல்வனு மாய்நின்ற மூர்த்தி
      பாவங்கள் தீர்தர நல்வினை நல்கி
      பல்கணம் நின்று பணி
      சாவம தாகிய மால்வரை கொண்டு
      தண்மதில் மூன்று மெரித்த
      தேவர்கள் தேவர் எம்பெரு மானார்
      தீதில் பெருந்துறை யாரே. 1.42.2
      450 செய்பூங் கொன்றை கூவிள மாலை
      சென்னியு சேர்புனல் சேர்த்தி
      கொய்பூங் கோதை மாதுமை பாகங்
      கூடியோர் பீடுடை வேடர்
      கைபோ னான்ற கனிகுலை வாழை
      காய்குலை யிற்கமு கீன
      பெய்பூம் பாளை பாய்ந்திழி தேறல்
      பில்கு பெருந்துறை யாரே. 1.42.3
      451 நிலனொடு வானும் நீரொடு தீயும்
      வாயுவு மாகியோ ரைந்து
      புலனொடு வென்று பொய்ம்மைகள் தீர்ந்த
      புண்ணியர் வெண்பொடி பூசி
      நலனொடு தீங்கு தானல தின்றி
      நன்கெழு சிந்தைய ராகி
      மலனொடு மாசும் இல்லவர் வாழும்
      மல்கு பெருந்துறை யாரே. 1.42.4
      452 பணிவா யுள்ள நன்கெழு நாவின்
      பத்தர்கள் பத்திமை செ
      துணியார் தங்கள் உள்ள மிலாத
      சுமடர்கள் சோதி பரியார்
      அணியார் நீல மாகிய கண்டர்
      அரிசி லுரிஞ்சு கரைமேல்
      மணிவாய் நீலம் வாய்கமழ் தேறல்
      மல்கு பெருந்துறை யாரே. 1.42.5
      453 எண்ணார் தங்கள் மும்மதில் வேவ
      ஏவலங் காட்டிய எந்தை
      விண்ணோர் சார தன்னருள் செய்த
      வித்தகர் வேத முதல்வர்
      பண்ணார் பாடல் ஆடல றாத
      பசுபதி ஈசனோர் பாகம்
      பெண்ணாண் ஆய வார்சடை யண்ணல்
      பேணு பெருந்துறை யாரே. 1.42.6
      454 விழையா ருள்ளம் நன்கெழு நாவில்
      வினைகெட வேதமா றங்கம்
      பிழையா வண்ணம் பண்ணிய வாற்றல்
      பெரியோ ரேத்தும் பெருமான்
      தழையார் மாவின் தாழ்கனி யுந்தி
      தண்அரி சில்புடை சூழ்ந்த
      குழையார் சோலை மென்னடை யன்னங்
      கூடு பெருந்துறை யாரே.
      அரிசில் என்பது ஒரு நதி. அது அரிசொல்ல வந்ததினால்
      அரிசொல் நதியென்று கும்பகோண புராணத்திற் சொல்லப்படுகின்றது. 1.42.7
      455 பொன்னங் கானல் வெண்டிரை சூழ்ந்த
      பொருகடல் வேலி இலங்கை
      மன்ன னொல்க மால்வரை யூன்றி
      மாமுரண் ஆகமு தோளும்
      முன்னவை வாட்டி பின்னருள் செய்த
      மூவிலை வேலுடை மூர்த்தி
      அன்னங் கன்னி பேடையொ டாடி
      அணவு பெருந்துறை யாரே. 1.42.8
      456 புள்வாய் போழ்ந்து மாநிலங் கீண்ட
      பொருகடல் வண்ணனும் பூவின்
      உள்வா யல்லி மேலுறை வானும்
      உணர்வரி யான்உமை கேள்வன்
      முள்வாய் தாளில் தாமரை மொட்டின்
      முகம்மல ரக்கயல் பா
      கள்வாய் நீலம் கண்மல ரேய்க்குங்
      காமர் பெருந்துறை யாரே. 1.42.9
      457 குண்டு தேருங் கூறை களைந்துங்
      கூப்பிலர் செப்பில ராகி
      மிண்டும் மிண்டர் மிண்டவை கண்டு
      மிண்டு செயாது விரும்பும்
      தண்டும் பாம்பும் வெண்டலை சூல
      தாங்கிய தேவர் தலைவர்
      வண்டு தேனும் வாழ்பொழிற் சோலை
      மல்கு பெருந்துறை யாரே. 1.42.10
      458 கடையார் மாடம் நன்கெழு வீதி
      கழுமல வூரன் கலந்து
      நடையா ரின்சொல் ஞானசம் பந்தன்
      நல்ல பெருந்துறை மேய
      படையார் சூலம் வல்லவன் பாதம்
      பரவிய பத்திவை வல்லார்
      உடையா ராகி உள்ளமு மொன்றி
      உலகினில் மன்னுவர் தாமே. 1.42.11

      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - சிவாநந்தநாதர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

      ------------------------------------------------------------------------

      1.43 திருக்கற்குடி

      பண் - தக்கராகம்
      459 வடந்திகழ் மென்முலை யாளை பாகம தாக மதித்து
      தடந்திரை சேர்புனல் மாதை தாழ்சடை வைத்த சதுரர்
      இடந்திகழ் முப்புரி நூலர் துன்பமொ டின்பம தெல்லாங்
      கடந்தவர் காதலில் வாழுங் கற்குடி மாமலை யாரே. 1.43.1
      460 அங்கமொ ராறுடை வேள்வி யான அருமறை நான்கும்
      பங்கமில் பாடலோ டாடல் பாணி பயின்ற படிறர்
      சங்கம தார்குற மாதர் தங்கையின் மைந்தர்கள் தாவி
      கங்குலின் மாமதி பற்றுங் கற்குடி மாமலை யாரே. 1.43.2
      461 நீரக லந்தரு சென்னி நீடிய மத்தமும் வைத்து
      தாரகை யின்னொளி சூழ்ந்த தண்மதி சூடிய சைவர்
      போரக லந்தரு வேடர் புனத்திடை யிட்ட விறகில்
      காரகி லின்புகை விம்முங் கற்குடி மாமலை யாரே. 1.43.3
      462 ஒருங்களி நீயிறை வாவென் றும்பர்கள் ஓல மிடக்கண்
      டிருங்கள மார விடத்தை இன்னமு துன்னிய ஈசர்
      மருங்களி யார்பிடி வாயில் வாழ்வெதி ரின்முளை வாரி
      கருங்களி யானை கொடுக்குங் கற்குடி மாமலை யாரே. 1.43.4
      463 போர்மலி திண்சிலை கொண்டு பூதக ணம்புடை சூழ
      பார்மலி வேடுரு வாகி பண்டொரு வர்க்கருள் செய்தார்
      ஏர்மலி கேழல் கிளைத்த இன்னொளி மாமணி யெங்குங்
      கார்மலி வேடர் குவிக்குங் கற்குடி மாமலை யாரே. 1.43.5
      464 உலந்தவ ரென்ப தணிந்தே ஊரிடு பிச்சைய ராகி
      விலங்கல்வில் வெங்கன லாலே மூவெயில் வேவ முனிந்தார்
      நலந்தரு சிந்தைய ராகி நாமலி மாலையி னாலே
      கலந்தவர் காதலில் வாழுங் கற்குடி மாமலை யாரே. 1.43.6
      465 மானிட மார்தரு கையர் மாமழு வாரும் வலத்தார்
      ஊனிடை யார்தலை யோட்டில் உண்கல னாக வுகந்தார்
      தேனிடை யார்தரு சந்தின் திண்சிறை யால்தினை வித்தி
      கானிடை வேடர் விளைக்குங் கற்குடி மாமலை யாரே. 1.43.7
      466 வாளமர் வீரம் நினைந்த இராவணன் மாமலை யின்கீழ
      தோளமர் வன்றலை குன்ற தொல்விர லூன்று துணைவர்
      தாளமர் வேய்தலை பற்றி தாழ்கரி விட்ட விசைபோ
      காளம தார்முகில் கீறுங் கற்குடி மாமலை யாரே. 1.43.8
      467 தண்டமர் தாமரை யானு தாவியிம் மண்ணை அளந்து
      கொண்டவ னும்மறி வொண்ணா கொள்கையர் வெள்விடை யூர்வர்
      வண்டிசை யாயின பாட நீடிய வார்பொழில் நீழல்
      கண்டமர் மாமயி லாடுங் கற்குடி மாமலை யாரே. 1.43.9
      468 மூத்துவ ராடையி னாரும் மூசு கருப்பொடி யாரும்
      நாத்துவர் பொய்ம்மொழி யார்கள் நயமி லராமதி வைத்தார்
      ஏத்துயர் பத்தர்கள் சித்தர் இறைஞ்ச அவரிட ரெல்லாங்
      காத்தவர் காமரு சோலை கற்குடி மாமலை யாரே.
      மூசு கடுப்பொடி என்றும் பாடம். 1.43.10
      469 காமரு வார்பொழில் சூழுங் கற்குடி மாமலை யாரை
      நாமரு வண்புகழ காழி நலந்திகழ் ஞானசம் பந்தன்
      பாமரு செந்தமிழ் மாலை பத்திவை பாடவல் லார்கள்
      பூமலி வானவ ரோடும் பொன்னுல கிற்பொலி வாரே. 1.43.11

      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - முத்தீசர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

      ------------------------------------------------------------------------

      1.44 திருப்பாச்சிலாச்சிராமம் - முயலகன் தீர்த்தது.

      பண் - தக்கராகம்
      470 துணிவளர் திங்கள் துளங்கி விளங்க
      சுடர்ச்சடை சுற்றி முடித்து
      பணிவளர் கொள்கையர் பாரிடஞ் சூழ
      வாரிடமும் பலி தேர்வர்
      அணிவளர் கோல மெலாஞ்செய்து பாச்சி
      லாச்சிரா மத்துறை கின்ற
      மணிவளர் கண்டரோ மங்கையை வாட
      மயல்செய்வ தோயிவர் மாண்பே. 1.44.1
      471 கலைபுனை மானுரி தோலுடை யாடை
      கனல்சுட ராலிவர் கண்கள்
      தலையணி சென்னியர் தாரணி மார்பர்
      தம்மடி கள்ளிவ ரென்ன
      அலைபுனல் பூம்பொழில் சூழ்ந்தமர் பாச்சி
      லாச்சிரா மத்துறை கின்ற
      இலைபுனை வேலரோ ஏழையை வாட
      இடர்செய்வ தோயிவ ரீடே. 1.44.2
      472 வெஞ்சுட ராடுவர் துஞ்சிருள் மாலை
      வேண்டுவர் பூண்பது வெண்ணூல்
      நஞ்சடை கண்டர் நெஞ்சிட மாக
      நண்ணுவர் நம்மை நயந்து
      மஞ்சடை மாளிகை சூழ்தரு பாச்சி
      லாச்சிரா மத்துறை கின்ற
      செஞ்சுடர் வண்ணரோ பைந்தொடி வாட
      சிதைசெய்வ தோவிவர் சீரே. 1.44.3
      473 கனமலர கொன்றை யலங்க லிலங
      கனல்தரு தூமதி கண்ணி
      புனமலர் மாலை யணி தழகாய
      புனிதர் கொலாமிவ ரென்ன
      வனமலி வண்பொழில் சூழ்தரு பாச்சி
      லாச்சிரா மத்துறை கின்ற
      மனமலி மைந்தரோ மங்கையை வாட
      மயல்செய்வ தோவிவர் மாண்பே. 1.44.4
      474 மாந்தர்தம் பால்நறு நெய்மகிழ தாடி
      வளர்சடை மேற்புனல் வைத்து
      மோந்தை முழாக்குழல் தாளமோர் வீணை
      முதிரவோர் வாய்மூரி பாடி
      ஆந்தை விழிச்சிறு பூதத்தர் பாச்சி
      லாச்சிரா மத்துறை கின்ற
      சாந்தணி மார்பரோ தையலை வாட
      சதுர்செய்வ தோவிவர் சார்வே. 1.44.5
      475 நீறுமெய்பூசி நிறைசடை தாழ
      நெற்றிக்கண் ணாலுற்று நோக்கி
      ஆறது சூடி ஆடர வாட்டி
      யைவிரற் கோவண ஆடை
      பாறரு மேனியர் பூதத்தர் பாச்சி
      லாச்சிரா மத்துறை கின்ற
      ஏறது ஏறியர் ஏழையை வாட
      இடர்செய்வ தோவிவ ரீடே. 1.44.6
      476 பொங்கிள நாகமொ ரேகவ டத்தோ
      டாமைவெண் ணூல்புனை கொன்றை
      கொங்கிள மாலை புனை தழகாய
      குழகர்கொ லாமிவ ரென்ன
      அங்கிள மங்கையோர் பங்கினர் பாச்சி
      லாச்சிரா மத்துறை கின்ற
      சங்கொளி வண்ணரோ தாழ்குழல் வாட
      சதிர்செய்வ தோவிவர் சார்வே. 1.44.7
      477 ஏவல தால்விச யற்கருள் செய்து
      இராவண னையீ டழித்து
      மூவரி லும்முத லாய்நடு வாய
      மூர்த்தியை யன்றி மொழியாள்
      யாவர் களும்பர வும்மெழிற் பாச்சி
      லாச்சிரா மத்துறை கின்ற
      தேவர்கள் தேவரோ சேயிழை வாட
      சிதைசெய்வ தோவிவர் சேர்வே. 1.44.8
      478 மேலது நான்முக னெய்திய தில்லை
      கீழது சேவடி தன்னை
      நீலது வண்ணனு மெய்திய தில்லை
      எனவிவர் நின்றது மல்லால்
      ஆலது மாமதி தோய்பொழிற் பாச்சி
      லாச்சிரா மத்துறை கின்ற
      பாலது வண்ணரோ பைந்தொடி வாட
      பழிசெய்வ தோவிவர் பண்பே. 1.44.9
      479 நாணொடு கூடிய சாயின ரேனும்
      நகுவ ரவரிரு போதும்
      ஊணொடு கூடிய உட்கு தகையார்
      உரைக ளவைகொள வேண்டா
      ஆணொடு பெண்வடி வாயினர் பாச்சி
      லாச்சிரா மத்துறை கின்ற
      பூணெடு மார்பரோ பூங்கொடி வாட
      புனைசெய்வ தோவிவர் பொற்பே. 1.44.10
      480 அகமலி அன்பொடு தொண்டர் வணங்க
      ஆச்சிரா மத்துறை கின்ற
      புகைமலி மாலை புனை தழகாய
      புனிதர்கொ லாமிவ ரென்ன
      நகைமலி தண்பொழில் சூழ்தரு காழி
      நற்றமிழ் ஞானசம் பந்தன்
      தகைமலி தண்டமிழ் கொண்டிவை யேத்த
      சாரகி லாவினை தானே. 1.44.11

      முயலகன் என்பது ஒருவித வலிநோய். இது கொல்லி மழவனின்
      மகளுக்கு கண்டிருந்து இந திருப்பதிகம் ஓதியருளினவளவில் தீர்ந்தது.
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - மாற்றறிவரதர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

      ------------------------------------------------------------------------

      1.45 திருப்பழையனூர்-திரு ஆலங்காடு

      பண் - தக்கராகம்
      481 துஞ்ச வருவாரு தொழுவிப்பாரும் வழுவிப்போய்
      நெஞ்சம் புகுந்தென்னை நினைவிப்பாரும் முனைநட்பாய்
      வஞ்ச படுத்தொருத்தி வாழ்நாள்கொள்ளும் வகைகே
      டஞ்சும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே. 1.45.1
      482 கேடும் பிறவியும் ஆக்கினாருங் கேடிலா
      வீடு மாநெறி விளம்பினாரெம் விகிர்தனார்
      காடுஞ் சுடலையும் கைக்கொண்டெல்லி கணப்பேயோ
      டாடும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே. 1.45.2
      483 கந்தங் கமழ்கொன்றை கண்ணிசூடி கனலாடி
      வெந்த பொடிநீற்றை விளங்கப்பூசும் விகிர்தனார்
      கொந்தண் பொழிற்சோலை யரவின்தோன்றி கோடல்பூ
      தந்தண் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே. 1.45.3
      484 பால மதிசென்னி படரச்சூடி பழியோரா
      கால னுயிர்செற்ற காலனாய கருத்தனார்
      கோலம் பொழிற்சோலை பெடையோடாடி மடமஞ்ஞை
      ஆலும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே. 1.45.4
      485 ஈர்க்கும் புனல்சூடி இளவெண்டிங்கள் முதிரவே
      பார்க்கு மரவம்பூண் டாடிவேடம் பயின்றாருங்
      கார்க்கொள் கொடிமுல்லை குருந்தமேறி கருந்தேன்மொ
      தார்க்கும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே. 1.45.5
      486 பறையுஞ் சிறுகுழலும் யாழும்பூதம் பயிற்றவே
      மறையும் பலபாடி மயானத்துறையும் மைந்தனார்
      பிறையும் பெரும்புனல்சேர் சடையினாரும் பேடைவண்
      டறையும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே. 1.45.6
      487 நுணங்கு மறைபாடி யாடிவேடம் பயின்றாரும்
      இணங்கு மலைமகளோ டிருகூறொன்றாய் இசைந்தாரும்
      வணங்குஞ் சிறுத்தொண்டர் வைகலேத்தும் வாழ்த்துங்கே
      டணங்கும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே. 1.45.7
      488 கணையும் வரிசிலையும் எரியுங்கூடி கவர்ந்துண்ண
      இணையில் எயின்மூன்றும் எரித்திட்டாரெம் இறைவனார்
      பிணையுஞ் சிறுமறியுங் கலையுமெல்லாங் கங்குல்சேர
      தணையும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே. 1.45.8
      489
      கவிழ மலைதரள கடகக்கையால் எடுத்தான்றோள்
      பவழ நுனைவிரலாற் பையவூன்றி பரிந்தாரும்
      தவழுங் கொடிமுல்லை புறவஞ்சேர நறவம்பூ
      தவிழும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே. 1.45.9
      490 பகலும் இரவுஞ்சேர் பண்பினாரும் நண்போரா
      திகலும் இருவர்க்கும் எரியாய்த்தோன்றி நிமிர்ந்தாரும்
      புகலும் வழிபாடு வல்லார்க்கென்று தீயபோய்
      அகலும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே. 1.45.10
      491 போழம் பலபேசி போதுசாற்றி திரிவாரும்
      வேழம் வருமளவும் வெயிலேதுற்றி திரிவாரும்
      கேழல் வினைபோ கேட்பிப்பாரும் கேடிலா
      ஆழ்வர் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே. 1.45.11
      492 சாந்தங் கமழ்மறுகிற் சண்பைஞான சம்பந்தன்
      ஆந்தண் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளை
      வேந்த னருளாலே விரித்தபாடல் இவைவல்லார்
      சேர்ந்த விடமெல்லா தீர்த்தமாக சேர்வாரே. 1.45.12

      இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - ஊர்த்ததாண்டவேசுரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

      ------------------------------------------------------------------------

      1.46 திரு அதிகைவீரட்டானம்

      பண் - தக்கராகம்
      493 குண்டை குறட்பூதங் குழும அனலேந்தி
      கெண்டை பிறழ்தெண்ணீர கெடில வடபக்கம்
      வண்டு மருள்பாட வளர்பொன் விரிகொன்றை
      விண்ட தொடையலா னாடும்வீர டானத்தே. 1.46.1
      493 அரும்புங் குரும்பையு மலைத்த மென்கொங்கை
      கரும்பின் மொழியாளோ டுடன்கை அனல்வீசி
      சுரும்புண் விரிகொன்றை சுடர்பொற் சடைதாழ
      விரும்பு மதிகையு ளாடும்வீர டானத்தே. 1.46.2
      494 ஆடல் அழல்நாக மரைக்கி டசைத்தாட
      பாடல் மறைவல்லான் படுதம்பலி பெயர்வான்
      மாட முகட்டின்மேல் மதிதோய் அதிகையுள்
      வேடம் பலவல்லா னாடும்வீர டானத்தே. 1.46.3
      496 எண்ணார் எயிலெய்தான் இறைவன் அனலேந்தி
      மண்ணார் முழவதிர முதிரா மதிசூடி
      பண்ணார் மறைபாட பரமன் அதிகையுள்
      விண்ணோர் பரவநின் றாடும்வீர டானத்தே. 1.46.4
      497 கரிபுன் புறமாய கழிந்தார் இடுகாட்டில்
      திருநின் றொருகையால் திருவாம் அதிகையுள்
      எரியே தியபெருமான் எரிபுன் சடைதாழ
      விரியும் புனல்சூடி யாடும்வீர டானத்தே. 1.46.5
      498 துளங்குஞ் சுடரங்கை துதைய விளையாடி
      இளங்கொம் பனசாயல் உமையோ டிசைபாடி
      வளங்கொள் புனல்சூழ்ந்த வயலா ரதிகையுள்
      விளங்கும் பிறைசூடி யாடும்வீர டானத்தே. 1.46.6
      499 பாதம் பலரேத்த பரமன் பரமேட்டி
      பூதம் புடைசூழ புலித்தோ லுடையா
      கீதம் உமைபாட கெடில வடபக்கம்
      வேத முதல்வன்நின் றாடும்வீர டானத்தே. 1.46.7
      500 கல்லார் வரையரக்கன் தடந்தோள் கவின்வாட
      ஒல்லை யடர்த்தவனு கருள்செய் ததிகையுள்
      பல்லார் பகுவாய நகுவெண் டலைசூடி
      வில்லால் எயிலெய்தான் ஆடும்வீர டானத்தே. 1.46.8
      501 நெடியான் நான்முகனும் நிமிர்ந்தானை காண்கிலார்
      பொடியாடு மார்பானை புரிநூ லுடையானை
      கடியார் கழுநீலம் மலரு மதிகையுள்
      வெடியார் தலையேந்தி யாடும்வீர டானத்தே. 1.46.9
      511 அரையோ டலர்பிண்டி மருவி குண்டிகை
      சுரையோ டுடனேந்தி உடைவி டுழல்வார்கள்
      உரையோ டுரையொவ்வா துமையோ டுடனாகி
      விரைதோ யலர்தாரான் ஆடும்வீர டானத்தே. 1.46.10
      512 ஞாழல் கமழ்காழி யுள்ஞான சம்பந்தன்
      வேழம் பொருதெண்ணீர் அதிகைவீர டானத்து
      சூழுங் கழலானை சொன்ன தமிழ்மாலை
      வாழு துணையாக நினைவார் வினையிலாரே. 1.46.11

      இத்தலம் நடுநாட்டில் கெடிலநதிக்கு வடபாலுள்ளது.
      சுவாமிபெயர் - அதிகைநாதர் வீரட்டானேசுவரர்
      தேவியார் - திருவதிகைநாயகி.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

      ------------------------------------------------------------------------

      1.47 திருச்சிரபுரம்

      பண் - பழந்தக்கராகம்
      504 பல்லடைந்த வெண்டலையிற் பலிகொள்வ தன்றியும்போய்
      வில்லடைந்த புருவநல்லாள் மேனியில் வைத்தலென்னே
      சொல்லடைந்த தொல்மறையோ டங்கங் கலைகளெல்லாஞ்
      செல்லடைந்த செல்வர்வாழுஞ் சிரபுரம் மேயவனே. 1.47.1
      505 கொல்லைமுல்லை நகையினாளோர் கூறது வன்றியும்போய்
      அல்லல்வாழ்க்கை பலிகொண்டுண்ணும் ஆதர வென்னைகொலாஞ்
      சொல்லநீண்ட பெருமையாளர் தொல்கலை கற்றுவல்லார்
      செல்லநீண்ட செல்வமல்கு சிரபுரம் மேயவனே. 1.47.2
      506 நீரடைந்த சடையின்மேலோர் நிகழ்மதி யன்றியும்போய்
      ஊரடைந்த ஏறதேறி யுண்பலி கொள்வதென்னே
      காரடைந்த சோலைசூழ்ந்து காமரம் வண்டிசைப்ப
      சீரடைந்த செல்வமோங்கு சிரபுரம் மேயவனே. 1.47.3
      507 கையடைந்த மானினோடு காரர வன்றியும்போய்
      மெய்யடைந்த வேட்கையோடு மெல்லியல் வைத்ததென்னே
      கையடைந்த களைகளாக செங்கழு நீர்மலர்கள்
      செய்யடைந்த வயல்கள்சூழ்ந்த சிரபுரம் மேயவனே. 1.47.4
      508 புரமெரித்த பெற்றியோடும் போர்மத யானை தன்னை
      கரமெடுத்து தோலுரித்த காரணம் ஆவதென்னே
      மரமுரித்த தோலுடுத்த மாதவர் தேவரோடுஞ்
      சிரமெடுத்த கைகள்கூப்புஞ் சிரபுரம் மேயவனே. 1.47.5
      509 கண்ணுமூன்றும் உடையதன்றி கையினில் வெண்மழுவும்
      பண்ணுமூன்று வீணையோடு பாம்புடன் வைத்ததென்னே
      எண்ணுமூன்று கனலுமோம்பி எழுமையும் விழுமியரா
      திண்ணமூன்று வேள்வியாளர் சிரபுரம் மேயவனே. 1.47.6
      510 குறைபடாத வேட்கையோடு கோல்வளை யாளொருபாற்
      பொறைபடாத இன்பமோடு புணர்தரு மெய்ம்மையென்னே
      இறைபடாத மென்முலையார் மாளிகை மேலிருந்து
      சிறைபடாத பாடலோங்கு சிரபுரம் மேயவனே. 1.47.7
      511 மலையெடுத்த வாளரக்கன் அஞ்ச ஒருவிரலால்
      நிலையெடுத்த கொள்கையானே நின்மல னேநினைவார்
      துலையெடுத்த சொற்பயில்வார் மேதகு வீதிதோறுஞ்
      சிலையெடுத்த தோளினானே சிரபுரம் மேயவனே. 1.47.8
      512 மாலினோடு மலரினானும் வந்தவர் காணாது
      சாலுமஞ்ச பண்ணிநீண்ட தத்துவ மேயதென்னே
      நாலுவேதம் ஓதலார்கள் நந்துணை யென்றிறைஞ
      சேலுமேயுங் கழனிசூழ்ந்த சிரபுரம் மேயவனே. 1.47.9
      513 புத்தரோடு சமணர்சொற்கள் புறனுரை யென்றிருக்கும்
      பத்தர்வந்து பணியவைத்த பான்மைய தென்னைகொலாம்
      மத்தயானை யுரியும்போர்த்து மங்கையொ டும்முடனே
      சித்தர்வந்து பணியுஞ்செல்வ சிரபுரம் மேயவனே. 1.47.10
      514 தெங்குநீண்ட சோலைசூழ்ந்த சிரபுரம் மேயவனை
      அங்கம்நீண்ட மறைகள்வல்ல அணிகொள்சம் பந்தனுரை
      பங்கம்நீங்க பாடவல்ல பத்தர்கள் பாரிதன்மேற்
      சங்கமோடு நீடிவாழ்வர் தன்மையி னாலவரே. 1.47.11

      சிரபுரமென்பதும் சீகாழிக்கொருபெயர்.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

      ------------------------------------------------------------------------

      1.48 திருச்சேய்ஞலூர்

      பண் - பழந்தக்கராகம்
      515 நூலடைந்த கொள்கையாலே நுன்னடி கூடுதற்கு
      மாலடைந்த நால்வர்கேட்க நல்கிய நல்லறத்தை
      ஆலடைந்த நீழல்மேவி யருமறை சொன்னதென்னே
      சேலடைந்த தண்கழனி சேய்ஞலூர் மேயவனே. 1.48.1
      516 நீறடைந்த மேனியின்கண் நேரிழையா ளொருபால்
      கூறடைந்த கொள்கையன்றி கோலவளர் சடைமேல்
      ஆறடைந்த திங்கள்சூடி யரவம் அணிந்ததென்னே
      சேறடைந்த தண்கழனி சேய்ஞலூர் மேயவனே. 1.48.2
      517 ஊனடைந்த வெண்டலையி னோடுபலி திரிந்து
      கானடைந்த பேய்களோடு பூதங் கலந்துடனே
      மானடைந்த நோக்கிகாண மகிழ்ந்தெரி யாடலென்னே
      தேனடைந்த சோலைமல்கு சேய்ஞலூர் மேயவனே. 1.48.3
      518 வீணடைந்த மும்மதிலும் வில்மலை யாவரவின்
      நாணடைந்த வெஞ்சரத்தால் நல்லெரி யூட்டலென்னே
      பாணடைந்த வண்டுபாடும் பைம்பொழில் சூழ்ந்தழகார்
      சேணடைந்த மாடம்மல்கு சேய்ஞலூர் மேயவனே. 1.48.4
      519 பேயடைந்த காடிடமா பேணுவ தன்றியும்போய்
      வேயடைந்த தோளியஞ்ச வேழம் உரித்ததென்னே
      வாயடைந்த நான்மறையா றங்கமோ டைவேள்வி
      தீயடைந்த செங்கையாளர் சேய்ஞலூர் மேயவனே. 1.48.5
      520 காடடைந்த ஏனமொன்றின் காரண மாகிவந்து
      வேடடைந்த வேடனாகி விசயனொ டெய்ததென்னே
      கோடடைந்த மால்களிற்று கோச்செங்க ணாற்கருள்செய்
      சேடடைந்த செல்வர்வாழுஞ் சேய்ஞலூர் மேயவனே. 1.48.6
      521 பீரடைந்த பாலதாட்ட பேணா தவன்தாதை
      வேரடைந்து பாய்ந்ததாளை வேர்த்தடி தான்றனக்கு
      தாரடைந்த மாலைசூட்டி தலைமை வகுத்ததென்னே
      சீரடைந்த கோயில்மல்கு சேய்ஞலூர் மேயவனே. 1.48.7
      522 மாவடைந்த தேரரக்கன் வலிதொலை வித்தவன்றன்
      நாவடைந்த பாடல்கேட்டு நயந்தருள் செய்ததென்னே
      பூவடைந்த நான்முகன்போற் பூசுரர் போற்றிசெய்யுஞ்
      சேவடைந்த ஊர்தியானே சேய்ஞலூர் மேயவனே. 1.48.8
      523 காரடைந்த வண்ணனோடு கனக மனையானும்
      பாரிடந்தும் விண்பறந்தும் பாத முடிகாணார்
      சீரடைந்து வந்துபோற்ற சென்றருள் செய்ததென்னே
      தேரடைந்த மாமறுகிற் சேய்ஞலூர் மேயவனே. 1.48.9
      524 மாசடைந்த மேனியாரும் மனந்திரி யாதகஞ்சி
      நேசடைந்த ஊணினாரும் நேசமி லாததென்னே
      வீசடைந்த தோகையாட விரைகமழும் பொழில்வா
      தேசடைந்த வண்டுபாடுஞ் சேய்ஞலூர் மேயவனே. 1.48.10
      525 சேயடைந்த சேய்ஞலூரிற் செல்வன சீர்பரவி
      தோயடைந்த தண்வயல்சூழ் தோணி புரத்தலைவன்
      சாயடைந்த ஞானமல்கு சம்பந்தன் இன்னுரைகள்
      வாயடைந்து பாடவல்லார் வானுல காள்பவரே. 1.48.11

      சோழநாட்டில் சுப்பிரமணியசுவாமியினா லுண்டான தலம்.
      சுவாமிபெயர் - சத்தகிரீசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

      ------------------------------------------------------------------------

      1.49 திருநள்ளாறு

      பண் - பழந்தக்கராகம்
      பச்சைத்திருப்பதிகம்
      இது சமணர்கள் வாதின்பொருட்டு தீயிலிட்டபோது
      வேகாதிருந்தது.
      526 போகமார்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்
      பாகமார்த்த பைங்கண்வெள் ளேற்றண்ணல் பரமேட்டி
      ஆகமார்த்த தோலுடையன் கோவண ஆடையின்மேல்
      நாகமார்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே. 1.49.1
      527 தோடுடைய காதுடையன் தோலுடை யன்தொலையா
      பீடுடைய போர்விடையன் பெண்ணுமோர் பாலுடையன்
      ஏடுடைய மேலுலகோ டேழ்கடலுஞ் சூழ்ந்த
      நாடுடைய நம்பெருமான் மேயது நள்ளாறே. 1.49.2
      528 ஆன்முறையா லாற்றவெண்ணீ றாடி அணியிழையோர்
      பான்முறையால் வைத்தபாதம் பத்தர் பணிந்தேத்த
      மான்மறியும் வெண்மழுவுஞ் சூலமும் பற்றியகை
      நான்மறையான் நம்பெருமான் மேயது நள்ளாறே. 1.49.3
      529 புல்கவல்ல வார்சடைமேல் பூம்புனல் பெய்தயலே
      மல்கவல்ல கொன்றைமாலை மதியோ டுடன்சூடி
      பல்கவல்ல தொண்டர்தம்பொற் பாத நிழல்சேர
      நல்கவல்ல நம்பெருமான் மேயது நள்ளாறே. 1.49.4
      530 ஏறுதாங்கி யூர்திபேணி யேர்கொள் இளமதியம்
      ஆறுதாங்குஞ் சென்னிமேலோர் ஆடர வஞ்சூடி
      நீறுதாங்கி நூல்கிடந்த மார்பில் நிரைகொன்றை
      நாறுதாங்கு நம்பெருமான் மேயது நள்ளாறே. 1.49.5
      531 திங்களுச்சி மேல்விளங்கு தேவன் இமையோர்கள்
      எங்களுச்சி யெம்மிறைவன் என்றடி யேயிறைஞ்ச
      தங்களுச்சி யால்வணங்கு தன்னடி யார்கட்கெல்லாம்
      நங்களுச்சி நம்பெருமான் மேயது நள்ளாறே. 1.49.6
      532 வெஞ்சுடர்த்தீ யங்கையேந்தி விண்கொள் முழவதிர
      அஞ்சிடத்தோர் ஆடல்பாடல் பேணுவ தன்றியும்போ
      செஞ்சடைக்கோர் திங்கள்சூடி திகழ்தரு கண்டத்துள்ளே
      நஞ்சடைத்த நம்பெருமான் மேயது நள்ளாறே. 1.49.7
      533 சிட்டமார்ந்த மும்மதிலுஞ் சிலைவரை தீயம்பினால்
      சுட்டுமாட்டி சுண்ணவெண்ணீ றாடுவ தன்றியும்போ
      பட்டமார்ந்த சென்னிமேலோர் பால்மதி யஞ்சூடி
      நட்டமாடும் நம்பெருமான் மேயது நள்ளாறே. 1.49.8
      534 உண்ணலாகா நஞ்சுகண்ட துண்டுட னேயொடுக்கி
      அண்ணலாகா வண்ணல்நீழ லாரழல் போலுருவம்
      எண்ணலாகா வுள்வினையென் றெள்க வலித்திருவர்
      நண்ணலாகா நம்பெருமான் மேயது நள்ளாறே. 1.49.9
      535 மாசுமெய்யர் மண்டைத்தேரர் குண்டர் குணமிலிகள்
      பேசும்பேச்சை மெய்யென்றெண்ணி அந்நெறி செல்லன்மின்
      மூசுவண்டார் கொன்றைசூடி மும்மதி லும்முடனே
      நாசஞ்செய்த நம்பெருமான் மேயது நள்ளாறே. 1.49.10
      536 தண்புனலும் வெண்பிறையு தாங்கிய தாழ்சடையன்
      நண்புநல்லார் மல்குகாழி ஞானசம் பந்தன்நல்ல
      பண்புநள்ளா றேத்துபாடல் பத்தும் இவைவல்லார்
      உண்புநீங்கி வானவரோ டுலகி லுறைவாரே. 1.49.11

      இத்தலம் சோழநாட்டிலுள்ள சப்த தியாகர் தலங்களிலொன்று.
      சுவாமிபெயர் - தெர்ப்பாரணியர்
      தேவியார் - போகமார்த்தபூண்முலையம்மை.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

      ------------------------------------------------------------------------

      1.50 திருவலிவலம்

      பண் - பழந்தக்கராகம்
      537 ஒல்லையாறி உள்ளமொன்றி கள்ளம்ஒழி துவெய்ய
      சொல்லையாறி தூய்மைசெய்து காமவினை யகற்றி
      நல்லவாறே உன்றன்நாமம் நாவில்நவின் றேத்த
      வல்லவாறே வந்துநல்காய் வலிவலமே யவனே. 1.50.1
      538 இயங்குகின்ற இரவிதிங்கள் மற்றுநற் றேவரெல்லாம்
      பயங்களாலே பற்றிநின்பால் சித்தந்தெளி கின்றிலர்
      தயங்குசோதி சாமவேதா காமனைக்கா தவனே
      மயங்குகின்றேன் வந்துநல்காய் வலிவல மேயவனே. 1.50.2
      539 பெண்டிர்மக்கள் சுற்றமென்னும் பேதை பெருங்கடலை
      விண்டுபண்டே வாழமாட்டேன் வேதனை நோய்நலி
      கண்டுகண்டே யுன்றன்நாமங் காதலி கின்றதுள்ளம்
      வண்டுகிண்டி பாடுஞ்சோலை வலிவல மேயவனே. 1.50.3
      540 மெய்யராகி பொய்யைநீக்கி வேதனை யைத்துறந்து
      செய்யரானார் சிந்தையானே தேவர் குலக்கொழுந்தே
      நைவன்நாயேன் உன்றன்நாமம் நாளும் நவிற்றுகின்றேன்
      வையம்முன்னே வந்துநல்காய் வலிவல மேயவனே. 1.50.4
      541 துஞ்சும்போது துற்றும்போதுஞ் சொல்லுவ னுன்றிறமே
      தஞ்சமில்லா தேவர்வந்துன் தாளிணை கீழ்ப்பணிய
      நஞ்சையுண்டா கென்செய்கேனோ நாளும் நினைந்தடியேன்
      வஞ்சமுண்டென் றஞ்சுகின்றேன் வலிவல மேயவனே. 1.50.5
      542 புரிசடையாய் புண்ணியனே நண்ணலார் மூவெயிலும்
      எரியஎய்தாய் எம்பெருமான் என்றிமை யோர்பரவும்
      கரியுரியாய் காலகாலா நீலமணி மிடற்று
      வரியரவா வந்துநல்காய் வலிவல மேயவனே. 1.50.6
      543 தாயுநீயே தந்தைநீயே சங்கர னேயடியேன்
      ஆயுநின்பால் அன்புசெய்வான் ஆதரி கின்றதுள்ளம்
      ஆயமாய காயந்தன்னுள் ஐவர்நின் றொன்றலொட்டார்
      மாயமேயென் றஞ்சுகின்றேன் வலிவல மேயவனே. 1.50.7
      544 நீரொடுங்குஞ் செஞ்சடையாய் நின்னுடைய பொன்மலையை
      வேரொடும்பீழ தேந்தலுற்ற வேந்தனி ராவணனை
      தேரொடும்போய் வீழ்ந்தலற திருவிர லால்அடர்த்த
      வாரொடுங்கும் கொங்கைபங்கா வலிவல மேயவனே. 1.50.8
      545 ஆதியாய நான்முகனு மாலு மறிவரிய
      சோதியானே நீதியில்லேன் சொல்லுவன் நின்றிறமே
      ஓதிநாளும் உன்னையேத்தும் என்னை வினைஅவலம்
      வாதியாமே வந்துநல்காய் வலிவல மேயவனே. 1.50.9
      546 பொதியிலானே பூவணத்தாய் பொன்திக ழுங்கயிலை
      பதியிலானே பத்தர்சித்தம் பற்றுவி டாதவனே
      விதியிலாதார் வெஞ்சமணர் சாக்கிய ரென்றிவர்கள்
      மதியிலாதார் என்செய்வாரோ வலிவல மேயவனே.
      பொதியில் என்பது பொதிகைமலை. அது வைப்புத்தலங்களிலொன்று. 1.50.10
      547 வன்னிகொன்றை மத்தஞ்சூடும் வலிவல மேயவனை
      பொன்னிநாடன் புகலிவேந்தன் ஞானசம் பந்தன்சொன்ன
      பன்னுபாடல் பத்தும்வல்லார் மெய்த்தவ தோர்விரும்பும்
      மன்னுசோதி ஈசனோடே மன்னி யிருப்பாரே. 1.50.11

      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - மனத்துணைநாதர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

      ------------------------------------------------------------------------

      1.51 திருச்சோபுரம்

      பண் - பழந்தக்கராகம்
      548 வெங்கண்ஆனை யீருரிவை போர்த்து விளங்குமொழி
      மங்கைபாகம் வைத்துகந்த மாண்பது வென்னைகொலாங்
      கங்கையோடு திங்கள்சூடி கடிகம ழுங்கொன்றை
      தொங்கலானே தூயநீற்றாய் சோபுர மேயவனே. 1.51.1
      549 விடையமர்ந்து வெண்மழுவொன் றேந்திவி ரிந்திலங்கு
      சடையொடுங்க தண்புனலை தாங்கிய தென்னைகொலாங்
      கடையுயர்ந்த மும்மதிலுங் காய்ந்தன லுள்ளழுந
      தொடைநெகிழ்ந்த வெஞ்சிலையாய் சோபுர மேயவனே. 1.51.2
      550 தீயராய வல்லரக்கர் செந்தழ லுள்ளழுந்த
      சாயவெய்து வானவரை தாங்கிய தென்னைகாலாம்
      பாயும்வெள்ளை ஏற்றையேறி பாய்புலி தோலுடுத்த
      தூயவெள்ளை நீற்றினானே சோபுர மேயவனே. 1.513
      551 பல்லிலோடு கையிலேந்தி பல்கடை யும்பலிதேர
      தல்லல்வாழ்க்கை மேலதான ஆதர வென்னைகொலாம்
      வில்லைவென்ற நுண்புருவ வேல்நெடுங் கண்ணியொடு
      தொல்லையூழி யாகிநின்றாய் சோபுர மேயவனே. 1.51.4
      552 நாற்றமிக்க கொன்றைதுன்று செஞ்சடை மேல்மதியம்
      ஏற்றமாக வைத்துகந்த காரண மென்னைகொலாம்
      ஊற்றமிக்க காலன்றன்னை ஒல்க வுதைத்தருளி
      தோற்றமீறு மாகிநின்றாய் சோபுர மேயவனே. 1.51.5
      553 கொன்னவின்ற மூவிலைவேல் கூர்மழு வாட்படையன்
      பொன்னைவென்ற கொன்றைமாலை சூடும்பொற் பென்னைகொலாம்
      அன்னமன்ன மென்னடையாள் பாக மமர்ந்தரைசேர்
      துன்னவண்ண ஆடையினாய் சோபுர மேயவனே. 1.51.6
      554 குற்றமின்மை யுண்மைநீயென் றுன்னடி யார்பணிவார்
      கற்றல்கேள்வி ஞானமான காரண மென்னைகொலாம்
      வற்றலாமை வாளரவம் பூண்டயன் வெண்டலையில்
      துற்றலான கொள்கையானே சோபுர மேயவனே. 1.51.7
      555 விலங்கலொன்று வெஞ்சிலையா கொண்டு விறலரக்கர்
      குலங்கள்வாழும் ஊரெரித்த கொள்கையி தென்னைகொலாம்
      இலங்கைமன்னு வாளவுணர் கோனை யெழில்விரலால்
      துலங்கவூன்றி வைத்துகந்தாய் சோபுர மேயவனே. 1.51.8
      556 விடங்கொள்நாக மால்வரையை சுற்றி விரிதிரைநீர்
      கடைந்தநஞ்சை யுண்டுகந்த காரண மென்னைகொலாம்
      இடந்துமண்ணை யுண்டமாலு மின்மலர் மேலயனு
      தொடர்ந்துமுன்னங் காணமாட்டா சோபுர மேயவனே. 1.51.9
      557 புத்தரோடு புன்சமணர் பொய்யுரை யேரைத்து
      பித்தரா கண்டுகந்த பெற்றிமை யென்னைகொலாம்
      மத்தயானை யீருரிவை போர்த்து வளர்சடைமேல்
      துத்திநாகஞ் சூடினானே சோபுர மேயவனே. 1.51.10
      558 சோலைமிக்க தண்வயல்சூழ் சோபுர மேயவனை
      சீலமிக்க தொல்புகழார் சிரபுர கோன்நலத்தான்
      ஞாலம்மிக்க தண்டமிழான் ஞானசம் பந்தன்சொன்ன
      கோலம்மிக்க மாலைவல்லார் கூடுவர் வானுலகே. 1.51.11

      இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - சோபுரநாதர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

      ------------------------------------------------------------------------

      1.52 திருநெடுங்களம்

      பண் - பழந்தக்கராகம்
      559 மறையுடையாய் தோலுடையாய் வார்சடை மேல்வளரும்
      பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனை பேசினல்லால்
      குறையுடையார் குற்றமோராய் கொள்கையி னாலுயர்ந்த
      நிறையுடையார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே. 1.52.1
      560 கனைத்தெழுந்த வெண்டிரைசூழ் கடலிடை நஞ்சுதன்னை
      தினைத்தனையா மிடற்றில்வைத்த திருந்திய தேவநின்னை
      மனத்தகத்தோர் பாடலாடல் பேணி யிராப்பகலும்
      நினைத்தெழுவார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே. 1.52.2
      561 நின்னடியே வழிபடுவான் நிமலா நினைக்கருத
      என்னடியான் உயிரைவவ்வேல் என்றடல் கூற்றுதைத்த
      பொன்னடியே பரவிநாளும் பூவொடு நீர்சுமக்கும்
      நின்னடியார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே. 1.52.3
      562 மலைபுரிந்த மன்னவன்றன் மகளையோர் பால்மகிழ்ந்தாய்
      அலைபுரிந்த கங்கைதங்கும் அவிர்சடை ஆரூரா
      தலைபுரிந்த பலிமகிழ்வாய் தலைவநின் றாள்நிழற்கீழ்
      நிலைபுரிந்தார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே. 1.52.4
      563 பாங்கினல்லார் படிமஞ்செய்வார் பாரிட மும்பலிசேர்
      தூங்கிநல்லார் பாடலோடு தொழுகழ லேவணங்கி
      தாங்கிநில்லா அன்பினோடு தலைவநின் றாள்நிழற்கீழ்
      நீங்கிநில்லார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே. 1.52.5
      564 விருத்தனாகி பாலனாகி வேதமோர் நான்குணர்ந்து
      கருத்தனாகி கங்கையாளை கமழ்சடை மேற்கரந்தாய்
      அருத்தனாய ஆதிதேவன் அடியிணை யேபரவும்
      நிருத்தர்கீதர் இடர்களையாய் நெடுங்கள மேயவனே. 1.52.6
      565 கூறுகொண்டாய் மூன்றுமொன்றா கூட்டியோர் வெங்கணையால்
      மாறுகொண்டார் புரமெரித்த மன்னவ னேகொடிமேல்
      ஏறுகொண்டாய் சாந்தமீதென் றெம்பெரு மானணிந்த
      நீறுகொண்டார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே. 1.52.7
      566 குன்றினுச்சி மேல்விளங்குங் கொடிமதிற் சூழிலங்கை
      அன்றிநின்ற அரக்கர்கோனை அருவரை கீழடர்த்தாய்
      என்றுநல்ல வாய்மொழியால் ஏத்தியி ராப்பகலும்
      நின்றுநைவா ரிடர்களையாய் நெடுங்கள மேயவனே. 1.52.8
      567 வேழவெண்கொம் பொசித்தமாலும் விளங்கிய நான்முகனுஞ்
      சூழவெங்கும் நேடவாங்கோர் சோதியு ளாகிநின்றாய்
      கேழல்வெண்கொம் பணிந்தபெம்மான் கேடிலா பொன்னடியின்
      நீழல்வாழ்வா ரிடர்களையாய் நெடுங்கள மேயவனே. 1.52.9
      568 வெஞ்சொல்தஞ்சொல் லாக்கிநின்ற வேடமி லாச்சமணு
      தஞ்சமில்லா சாக்கியரு தத்துவ மொன்றறியார்
      துஞ்சலில்லா வாய்மொழியால் தோத்திரம் நின்னடியே
      நெஞ்சில்வைப்பார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே. 1.52.10
      569 நீடவல்ல வார்சடையான் மேயநெ டுங்களத்தை
      சேடர்வாழும் மாமறுகிற் சிரபுர கோன்நலத்தால்
      நாடவல்ல பனுவல்மாலை ஞானசம் பந்தன்சொன்ன
      பாடல்பத்தும் பாடவல்லார் பாவம் பறையுமே. 1.52.11

      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - நித்தியசுந்தரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

      ------------------------------------------------------------------------

      1.53 திருமுதுகுன்றம்

      பண் - பழந்தக்கராகம்
      570 தேவராயும் அசுரராயுஞ் சித்தர் செழுமறைசேர்
      நாவராயும் நண்ணுபாரும் விண்ணெரி கால்நீரும்
      மேவராய விரைமலரோன் செங்கண்மால் ஈசனென்னும்
      மூவராய முதலொருவன் மேயது முதுகுன்றே. 1.53.1
      571 பற்றுமாகி வானுளோர்க்கு பல்கதி ரோன்மதிபார்
      எற்றுநீர்தீ காலுமேலை விண்ணிய மானனொடு
      மற்றுமாதோர் பல்லுயிராய் மாலய னும்மறைகள்
      முற்றுமாகி வேறுமானான் மேயது முதுகுன்றே. 1.53.2
      572 வாரிமாகம் வைகுதிங்கள் வாளர வஞ்சூடி
      நாரிபாகம் நயந்துபூமேல் நான்முகன் றன்றலையில்
      சீரிதாக பலிகொள்செல்வன் செற்றலு தோன்றியதோர்
      மூரிநாக துரிவைபோர்த்தான் மேயது முதுகுன்றே. 1.53.3
      573 பாடுவாரு கருளுமெந்தை பனிமுது பௌவமுந்நீர்
      நீடுபாரும் முழுதுமோடி அண்டர் நிலைகெடலும்
      நாடுதானும் ஊடுமோடி ஞாலமும் நான்முகனும்
      ஊடுகாண மூடும்வெள்ள துயர்ந்தது முதுகுன்றே. 1.53.4
      574 வழங்குதிங்கள் வன்னிமத்தம் மாசுணம் மீசணவி
      செழுங்கல்வேந்தன் செல்விகாண தேவர் திசைவணங்க
      தழங்குமொந்தை தக்கைமிக்க பேய்க்கணம் பூதஞ்சூழ
      முழங்குசெந்தீ யேந்தியாடி மேயது முதுகுன்றே. 1.53.5
      575 சுழிந்தகங்கை தோய்ந்ததிங்கள் தொல்லரா நல்லிதழி
      சழிந்தசென்னி சைவவேட தானினை தைம்புலனும்
      அழிந்தசிந்தை அந்தணாளர கறம்பொரு ளின்பம்வீடு
      மொழிந்தவாயான் முக்கணாதி மேயது முதுகுன்றே. 1.53.5
      இப்பதிகத்தின் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 1.53.6
      576 மயங்குமாயம் வல்லராகி வானி னொடுநீரும்
      இயங்குவோரு கிறைவனாய இராவணன் தோள்நெரித்த
      புயங்கராக மாநடத்தன் புணர்முலை மாதுமையாள்
      முயங்குமார்பன் முனிவரேத்த மேயது முதுகுன்றே. 1.53.8
      577 ஞாலமுண்ட மாலுமற்றை நான்முக னும்மறியா
      கோலமண்டர் சிந்தைகொள்ளா ராயினுங் கொய்மலரால்
      ஏலஇண்டை கட்டிநாமம் இசையஎ போதுமேத்தும்
      மூலமுண்ட நீற்றர்வாயான் மேயது முதுகுன்றே. 1.53.9
      578 உறிகொள்கையர் சீவரத்தர் உண்டுழல் மிண்டர்சொல்லை
      நெறிகளென்ன நினைவுறாதே நித்தலுங் கைதொழுமின்
      மறிகொள்கையன் வங்கமுந்நீர் பொங்கு விடத்தையுண்ட
      முறிகொள்மேனி மங்கைபங்கன் மேயது முதுகுன்றே. 1.53.10
      579 மொய்த்துவானோர் பல்கணங்கள் வணங்கும் முதுகுன்றை
      பித்தர்வேடம் பெருமையென்னும் பிரமபுர தலைவன்
      ....
      ....
      11-ம் செய்யுளின் பின்னிரண்டடிகள் சிதைந்து போயின.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

      ------------------------------------------------------------------------

      1.54 திருஓத்தூர்

      பண் - பழந்தக்கராகம்
      580 பூத்தேர தாயன கொண்டுநின் பொன்னடி
      ஏத்தா தாரில்லை யெண்ணுங்கால்
      ஓத்தூர் மேய வொளிமழு வாள்அங்கை
      கூத்தீ ரும்ம குணங்களே. 1.54.1
      581 இடையீர் போகா இளமுலை யாளையோர்
      புடையீ ரேபுள்ளி மானுரி
      உடையீ ரேயும்மை யேத்துதும் ஓத்தூர
      சடையீ ரேயும தாளே. 1.54.2
      582 உள்வேர் போல நொடிமையி னார்திறம்
      கொள்வீ ரல்குலோர் கோவணம்
      ஒள்வா ழைக்கனி தேன்சொரி யோத்தூர
      கள்வீ ரேயும காதலே. 1.54.3
      583 தோட்டீ ரேதுத்தி யைந்தலை நாகத்தை
      ஆட்டீ ரேயடி யார்வினை
      ஓட்டீ ரேயும்மை யேத்துதும் ஓத்தூர்
      நாட்டீ ரேயருள் நல்குமே. 1.54.4
      584 குழையார் காதீர் கொடுமழு வாட்படை
      உழையாள் வீர்திரு வோத்தூர்
      பிழையா வண்ணங்கள் பாடிநின் றாடுவார்
      அழையா மேயருள் நல்குமே. 1.54.5
      585 மிக்கார் வந்து விரும்பி பலியிட
      தக்கார் தம்மக்க ளீரென்
      றுட்கா தாருள ரோதிரு வோத்தூர்
      நக்கீ ரேயருள் நல்குமே. 1.54.6
      586 தாதார் கொன்றை தயங்கு முடியுடை
      நாதா என்று நலம்புகழ
      தோதா தாருள ரோதிரு வோத்தூர்
      ஆதீ ரேயருள் நல்குமே. 1.54.7
      587 என்றா னிம்மலை யென்ற அரக்கனை
      வென்றார் போலும் விரலினால்
      ஒன்றார் மும்மதி லெய்தவ னோத்தூர்
      என்றார் மேல்வினை யேகுமே. 1.54.8
      588 நன்றா நால்மறை யானொடு மாலுமா
      சென்றார் போலு திசையெலாம்
      ஒன்றா யொள்ளெரி யாய்மிக வோத்தூர்
      நின்றீ ரேயுமை நேடியே. 1.54.9
      589 கார மண்கலிங் கத்துவ ராடையர்
      தேரர் சொல்லவை தேறன்மின்
      ஓரம் பாலெயி லெய்தவ னோத்தூர
      சீர வன்கழல் சேர்மினே. 1.54.10
      590 குரும்பை யாண்பனை யின்குலை யோத்தூர்
      அரும்பு கொன்றை யடிகளை
      பெரும்பு கலியுள் ஞானசம் பந்தன்சொல்
      விரும்பு வார்வினை வீடே. 1.54.11

      இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - வேதநாதர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

      ------------------------------------------------------------------------

      1.55 திருமாற்பேறு

      பண் - பழந்தக்கராகம்
      591 ஊறி யார்தரு நஞ்சினை யுண்டுமை
      நீறு சேர்திரு மேனியர்
      சேறு சேர்வயல் தென்திரு மாற்பேற்றின்
      மாறி லாமணி கண்டரே. 1.55.1
      592 தொடையார் மாமலர் கொண்டிரு போதும்மை
      அடைவா ராமடி கள்ளென
      மடையார் நீர்மல்கு மன்னிய மாற்பே
      றுடையீ ரேயுமை யுள்கியே. 1.55.2
      593 பையா ரும்மர வங்கொடு வாட்டிய
      கையா னென்று வணங்குவர்
      மையார் நஞ்சுண்டு மாற்பேற் றிருக்கின்ற
      ஐயா நின்னடி யார்களே. 1.55.3
      594 சால மாமலர் கொண்டு சரணென்று
      மேலை யார்கள் விரும்புவர்
      மாலி னார்வழி பாடுசெய் மாற்பேற்று
      நீல மார்கண்ட நின்னையே. 1.55.4
      595 மாறி லாமணி யேயென்று வானவர்
      ஏற வேமிக ஏத்துவர்
      கூற னேகுல வுந்திரு மாற்பேற்றின்
      நீற னேயென்று நின்னையே. 1.55.5
      596 உரையா தாரில்லை யொன்றுநின் தன்மையை
      பரவா தாரில்லை நாள்களும்
      திரையார் பாலியின் தென்கரை மாற்பேற்
      றரையா னேயருள் நல்கிடே. 1.55.6
      இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் மறைந்து போயிற்று. 1.55.7
      597 அரச ளிக்கும் அரக்கன் அவன்றனை
      உரைகெ டுத்தவன் ஒல்கிட
      வரமி குத்தவெம் மாற்பேற் றடிகளை
      பரவி டக்கெடும் பாவமே. 1.55.8
      598 இருவர் தேவரு தேடி திரிந்தினி
      ஒருவ ராலறி வொண்ணிலன்
      மருவு நீள்கழல் மாற்பேற் றடிகளை
      பரவு வார்வினை பாறுமே. 1.55.9
      599 தூசு போர்த்துழல் வார்கையில் துற்றுணும்
      நீசர் தம்முரை கொள்ளெலு
      தேசம் மல்கிய தென்திரு மாற்பேற்றின்
      ஈச னென்றெடு தேத்துமே. 1.55.10
      600 மன்னி மாலொடு சோமன் பணிசெயும்
      மன்னும் மாற்பேற் றடிகளை
      மன்னு காழியுள் ஞானசம் பந்தன்சொல்
      பன்ன வேவினை பாறுமே. 1.55.11

      இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - மால்வணங்குமீசர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

      ------------------------------------------------------------------------

      1.56 திருப்பாற்றுறை

      பண் - பழந்தக்கராகம்
      601 காரார் கொன்றை கலந்த முடியினர்
      சீரார் சிந்தை செலச்செய்தார்
      பாரார் நாளும் பரவிய பாற்றுறை
      ஆரா ராதி முதல்வரே. 1.56.1
      602 நல்லா ரும்மவர் தீய ரெனப்படுஞ்
      சொல்லார் நன்மலர் சூடினார்
      பல்லார் வெண்டலை செல்வரெம் பாற்றுறை
      எல்லா ருந்தொழும் ஈசரே. 1.56.2
      603 விண்ணார் திங்கள் விளங்கு நுதலினர்
      எண்ணார் வந்தென் எழில் கொண்டார்
      பண்ணார் வண்டினம் பாடல்செய் பாற்றுறை
      யுண்ணா ணாளும் உறைவரே. 1.56.3
      604 பூவு திங்கள் புனைந்த முடியினர்
      ஏவின் அல்லா ரெயிலெய்தார்
      பாவ தீர்புனல் மல்கிய பாற்றுறை
      ஓவென் சிந்தை யொருவரே. 1.56.4
      605 மாக தோய்மதி சூடிமகிழ தென
      தாகம் பொன்னிற மாக்கினார்
      பாகம் பெண்ணும் உடையவர் பாற்றுறை
      நாகம் பூண்ட நயவரே. 1.56.5
      606 போது பொன்றிகழ் கொன்றை புனைமுடி
      நாதர் வந்தென் நலங்கொண்டார்
      பாத தொண்டர் பரவிய பாற்றுறை
      வேத மோதும் விகிர்தரே. 1.56.6
      607 வாடல் வெண்டலை சூடினர் மால்விடை
      கோடல் செய்த குறிப்பினார்
      பாடல் வண்டினம் பண்செயும் பாற்றுறை
      ஆடல் நாகம் அசைத்தாரே. 1.56.7
      608 வெவ்வ மேனிய ராய்வெள்ளை நீற்றினர்
      எவ்வஞ் செய்தென் எழில்கொண்டார்
      பவ்வம் நஞ்சடை கண்டரெம் பாற்றுறை
      மவ்வல் சூடிய மைந்தரே. 1.56.8
      608 ஏனம் அன்னமும் ஆனவ ருக்கெரி
      ஆன வண்ணத்தெம் அண்ணலார்
      பான லம்மலர் விம்மிய பாற்றுறை
      வான வெண்பிறை மைந்தரே. 1.56.9
      610 வெந்த நீற்றினர் வேலினர் நூலினர்
      வந்தென் நன்னலம் வௌவினார்
      பைந்தண் மாதவி சூழ்தரு பாற்றுறை
      மைந்தர் தாமோர் மணாளரே. 1.56.10
      611 பத்தர் மன்னிய பாற்றுறை மேவிய
      பத்து நூறு பெயரானை
      பத்தன் ஞானசம் பந்தன தின்றமிழ்
      பத்தும் பாடி பரவுமே. 1.56.11

      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - திருமூலநாதர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

      ------------------------------------------------------------------------

      1.57 திருவேற்காடு

      பண் - பழந்தக்கராகம்
      612 ஒள்ளி துள்ள கதிக்கா மிவனொளி
      வெள்ளி யானுறை வேற்காடு
      உள்ளி யாருயர தாரிவ் வுலகினில்
      தெள்ளி யாரவர் தேவரே. 1.57.1
      613 ஆடல் நாகம் அசைத்தள வில்லதோர்
      வேடங் கொண்டவன் வேற்காடு
      பாடி யும்பணி தாரிவ் வுலகினில்
      சேட ராகிய செல்வரே. 1.57.2
      614 பூதம் பாட புறங்கா டிடையாடி
      வேத வித்தகன் வேற்காடு
      போதுஞ் சாந்தும் புகையுங் கொடுத்தவர
      கேதம் எய்துத லில்லையே. 1.57.3
      615 ஆழ்க டலென கங்கை கரந்தவன்
      வீழ்ச டையினன் வேற்காடு
      தாழ்வு டைமன தாற்பணி தேத்திட
      பாழ்ப டும்மவர் பாவமே. 1.57.4
      616 காட்டி னாலும் அயர்த்திட காலனை
      வீட்டி னானுறை வேற்காடு
      பாட்டி னாற்பணி தேத்திட வல்லவர்
      ஓட்டி னார்வினை ஒல்லையே. 1.57.5
      617 தோலி னாலுடை மேவவல் லான்சுடர்
      வேலி னானுறை வேற்காடு
      நூலி னாற்பணி தேத்திட வல்லவர்
      மாலி னார்வினை மாயுமே. 1.57.6
      618 மல்லல் மும்மதில் மாய்தர எய்ததோர்
      வில்லி னானுறை வேற்காடு
      சொல்ல வல்ல சுருங்கா மனத்தவர்
      செல்ல வல்லவர் தீர்க்கமே. 1.57.8
      619 மூரல் வெண்மதி சூடு முடியுடை
      வீரன் மேவிய வேற்காடு
      வார மாய்வழி பாடு நினைந்தவர்
      சேர்வர் செய்கழல் திண்ணமே. 1.57.8
      620 பரக்கி னார்படு வெண்டலை யிற்பலி
      விரக்கி னானுறை வேற்காட்டூர்
      அரக்கன் ஆண்மை யடர பட்டானிறை
      நெருக்கி னானை நினைமினே. 1.57.9
      621 மாறி லாமல ரானொடு மாலவன்
      வேற லானுறை வேற்காடு
      ஈறி லாமொழி யேமொழி யாயெழில்
      கூறி னார்க்கில்லை குற்றமே. 1.57.10
      622 விண்ட மாம்பொழில் சூழ்திரு வேற்காடு
      கண்டு நம்பன் கழல்பேணி
      சண்பை ஞானசம் பந்தன செந்தமிழ்
      கொண்டு பாட குணமாமே. 1.57.11

      இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - வேற்காட்டீசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

      ------------------------------------------------------------------------

      1.58 திருக்கரவீரம்

      பண் - பழந்தக்கராகம்
      623 அரியும் நம்வினை யுள்ளன ஆசற
      வரிகொள் மாமணி போற்கண்டங்
      கரிய வன்றிக ழுங்கர வீரத்தெம்
      பெரிய வன்கழல் பேணவே. 1.58.1
      624 தங்கு மோவினை தாழ்சடை மேலவன்
      திங்க ளோடுடன் சூடிய
      கங்கை யான்றிக ழுங்கர வீரத்தெம்
      சங்க ரன்கழல் சாரவே. 1.58.2
      625 ஏதம் வந்தடை யாவினி நல்லன
      பூதம் பல்படை யாக்கிய
      காத லான்திக ழுங்கர வீரத்தெம்
      நாதன் பாதம் நணுகவே. 1.58.3
      626 பறையும் நம்வினை யுள்ளன பாழ்பட
      மறையும் மாமணி போற்கண்டங்
      கறைய வன்றிக ழுங்கர வீரத்தெம்
      இறைய வன்கழல் ஏத்தவே. 1.58.4
      627 பண்ணி னார்மறை பாடலன் ஆடலன்
      விண்ணி னார்மதி லெய்தமு
      கண்ணி னானுறை யுங்கர வீரத்தை
      நண்ணு வார்வினை நாசமே. 1.58.5
      628 நிழலி னார்மதி சூடிய நீள்சடை
      அழலி னாரன லேந்திய
      கழலி னாருறை யுங்கர வீரத்தை
      தொழவல் லார்க்கில்லை துக்கமே. 1.58.6
      629 வண்டர் மும்மதில் மாய்தர எய்தவன்
      அண்டன் ஆரழல் போலொளிர்
      கண்ட னாருறை யுங்கர வீரத்து
      தொண்டர் மேற்றுயர் தூரமே. 1.58.7
      630 புனலி லங்கையர் கோன்முடி பத்திற
      சினவ லாண்மை செகுத்தவன்
      கனல வனுறை கின்ற கரவீரம்
      எனவல் லார்க்கிட ரில்லையே. 1.58.8
      631 வெள்ள தாமரை யானொடு மாலுமா
      தெள்ள தீத்திர ளாகிய
      கள்ள தானுறை யுங்கர வீரத்தை
      உள்ள தான்வினை ஓயுமே. 1.58.9
      632 செடிய மண்ணொடு சீவர தாரவர்
      கொடிய வெவ்வுரை கொள்ளன்மின்
      கடிய வன்னுறை கின்ற கரவீர
      தடிய வர்க்கில்லை யல்லலே. 1.58.10
      633 வீடி லான்விளங் குங்கர வீரத்தெம்
      சேடன் மேற்கசி வாற்றமிழ்
      நாடு ஞானசம் பந்தன சொல்லிவை
      பாடு வார்க்கில்லை பாவமே. 1.58.11

      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - கரவீரேசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

      ------------------------------------------------------------------------

      1.59 திருத்தூங்கானைமாடம்

      பண் - பழந்தக்கராகம்
      634 ஒடுங்கும் பிணிபிறவி கேடென்றிவை
      யுடைத்தாய வாழ்க்கை யொழியத்தவம்
      அடங்கு மிடங்கருதி நின்றீரெல்லாம்
      அடிக ளடிநிழற்கீ ழாளாம்வண்ணங்
      கிடங்கும் மதிலுஞ் சுலாவியெங்குங்
      கெழுமனைகள் தோறும்ம றையின்னொலி
      தொடங்குங் கடந்தை தடங்கோயில்சேர்
      தூங்கானை மாட தொழுமின்களே. 1.59.1
      635 பிணிநீர சாதல் பிறத்தலிவை
      பிரி பிரியாத பேரின்பத்தோ
      டணிநீர மேலுலகம் எய்தலுறில்
      அறிமின் குறைவில்லை ஆனேறுடை
      மணிநீல கண்ட முடையபிரான்
      மலைமகளு தானும் மகிழ்ந்துவாழு
      துணிநீர கடந்தை தடங்கோயில்சேர்
      தூங்கானை மாட தொழுமின்களே. 1.59.2
      636 சாநாளும் வாழ்நாளு தோற்றமிவை
      சலிப்பாய வாழ்க்கை யொழியத்தவம்
      ஆமா றறியா தலமந்துநீர்
      அயர்ந்துங் குறைவில்லை ஆனேறுடை
      பூமாண் அலங்கல் இலங்குகொன்றை
      புனல்பொதிந்த புன்சடையி னானுறையு
      தூமாண் கடந்தை தடங்கோயில்சேர்
      தூங்கானை மாட தொழுமின்களே. 1.59.3
      637 ஊன்றும் பிணிபிறவி கேடென்றிவை
      உடைத்தாய வாழ்க்கை யொழியத்தவம்
      மான்று மனங்கருதி நின்றீரெல்லாம்
      மனந்திரிந்து மண்ணில் மயங்காதுநீர்
      மூன்று மதிலெய்த மூவாச்சிலை
      முதல்வர கிடம்போலும் முகில்தோய்கொடி
      தோன்றுங் கடந்தை தடங்கோயில்சேர்
      தூங்கானை மாட தொழுமின்களே. 1.59.4
      638 மயல்தீர்மை யில்லாத தோற்றம்மிவை
      மரணத்தொ டொத்தழியு மாறாதலால்
      வியல்தீர மேலுக மெய்தலுறின்
      மிக்கொன்றும் வேண்டா விமலனிடம்
      உயர்தீர வோங்கிய நாமங்களா
      லோவாது நாளும் அடிபரவல்செய்
      துயர்தீர் கடந்தை தடங்கோயில்சேர்
      தூங்கானை மாட தொழுமின்களே. 1.59.5
      639 பன்னீர்மை குன்றி செவிகேட்பிலா
      படர்நோ கின்கண் பவளந்நிற
      நன்னீர்மை குன்றி திரைதோலொடு
      நரைதோன்றுங் காலம் நமக்காதல்முன்
      பொன்னீர்மை துன்ற புறந்தோன்றுநற்
      புனல்பொதிந்த புன்சடையி னானுறையு
      தொன்னீர கடந்தை தடங்கோயில்சேர்
      தூங்கானை மாட தொழுமின்களே. 1.59.6
      640 இறையூண் துகளோ டிடுக்கணெய்தி
      யிழிப்பாய வாழ்க்கை யொழியத்தவம்
      நிறையூண் நெறிகருதி நின்றீரெல்லாம்
      நீள்கழ லேநாளும் நினைமின்சென்னி
      பிறைசூ ழலங்கல் இலங்குகொன்றை
      பிணையும் பெருமான் பிரியாதநீர
      துறைசூழ் கடந்தை தடங்கோயில்சேர்
      தூங்கானை மாட தொழுமின்களே. 1.59.7
      641 பல்வீழ்ந்து நாத்தளர்ந்து மெய்யில்வாடி
      பழிப்பாய வாழ்க்கை ஒழியத்தவம்
      இல்சூ ழிடங்கருதி நின்றீரெல்லாம்
      இறையே பிரியா தெழுந்துபோதுங்
      கல்சூ ழரக்கன் கதறச்செய்தான்
      காதலியு தானுங் கருதிவாழு
      தொல்சீர கடந்தை தடங்கோயில்சேர்
      தூங்கானை மாட தொழுமின்களே. 1.59.8
      642 நோயும் பிணியும் அருந்துயரமும்
      நுகருடைய வாழ்க்கை யொழியத்தவம்
      வாயும் மனங்கருதி நின்றீரெல்லாம்
      மலர்மிசைய நான்முகனும் மண்ணும்விண்ணும்
      தாய அடியளந்தான் காணமாட்டா
      தலைவர கிடம்போலு தண்சோலைவிண்
      டோ யும் கடந்தை தடங்கோயில்சேர்
      தூங்கானை மாட தொழுமின்களே. 1.59.9
      643 பகடூர் பசிநலிய நோய்வருதலாற்
      பழிப்பாய வாழ்க்கை ஒழியத்தவம்
      முகடூர் மயிர்கடிந்த செய்கையாரும்
      மூடுதுவ ராடையாரும் நாடிச்சொன்ன
      திகழ்தீர்ந்த பொய்ம்மொழிகள் தேறவேண்டா
      திருந்திழை யுந்தானும் பொருந்திவாழு
      துகள்தீர் கடந்தை தடங்கோயில்சேர்
      தூங்கானை மாட தொழுமின்களே. 1.59.10
      644 மண்ணார் முழவதிரும் மாடவீதி
      வயல்காழி ஞானசம் பந்தன்நல்ல
      பெண்ணா கடத்து பெருங்கோயில்சேர்
      பிறையுரிஞ்சு தூங்கானை மாடமேயான்
      கண்ணார் கழல்பரவு பாடல்பத்துங்
      கருத்துணர கற்றாருங் கேட்டாரும்போய்
      விண்ணோ ருலகத்து மேவிவாழும்
      விதியது வேயாகும் வினைமாயுமே. 1.59.11

      இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - சுடர்க்கொழுந்தீசர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

      ------------------------------------------------------------------------

      1.60 திருத்தோணிபுரம்

      பண் - பழந்தக்கராகம்
      645 வண்டரங்க புனற்கமல மதுமாந்தி பெடையினொடும்
      ஒண்டரங்க இசைபாடும் அளிஅரசே ஒளிமதி
      துண்டரங்க பூண்மார்பர் திருத்தோணி புரத்துறையும்
      பண்டரங்கர கென்நிலைமை பரிந்தொருகால் பகராயே. 1.60.1
      646 எறிசுறவங் கழிக்கானல் இளங்குருகே என்பயலை
      அறிவுறா தொழிவதுவும் அருவினையேன் பயனன்றே
      செறிசிறார் பதமோது திருத்தோணி புரத்துறையும்
      வெறிநிறார் மலர்க்கண்ணி வேதியர்க்கு விளம்பாயே. 1.60.2
      647 பண்பழன கோட்டகத்து வாட்டமிலா செஞ்சூட்டு
      கண்பகத்தின் வாரணமே கடுவினையேன் உறுபயலை
      செண்பகஞ்சேர் பொழில்புடைசூழ் திருத்தோணி புரத்துறையும்
      பண்பனுக்கென் பரிசுரைத்தால் பழியாமோ மொழியாயே. 1.60.3
      648 காண்டகைய செங்காலொண் கழிநாராய் காதலாற்
      பூண்டகைய முலைமெலிந்து பொன்பயந்தா ளென்றுவளர்
      சேண்டகைய மணிமாட திருத்தோணி புரத்துறையும்
      ஆண்டகையாற் கின்றேசென் றடியறிய உணர்த்தாயே. 1.60.4
      649 பாராரே யெனையொருகால் தொழுகின்றேன் பாங்கமைந்த
      காராரும் செழுநிறத்து பவளக்கால் கபோதகங்காள்
      தேராரும் நெடுவீதி திருத்தோணி புரத்துறையும்
      நீராருஞ் சடையாரு கென்நிலைமை நிகழ்த்தீரே. 1.60.5
      650 சேற்றெழுந்த மலர்க்கமல செஞ்சாலி கதிர்வீச
      வீற்றிருந்த அன்னங்காள் விண்ணோடு மண்மறைகள்
      தோற்றுவித்த திருத்தோணி புரத்தீசன் துளங்காத
      கூற்றுதைத்த திருவடியே கூடுமா கூறீரே. 1.60.6
      651 முன்றில்வாய் மடல்பெண்ணை குரம்பைவாழ் முயங்குசிறை
      அன்றில்காள் பிரிவுறும்நோய் அறியாதீர் மிகவல்லீர்
      தென்றலார் புகுந்துலவு திருத்தோணி புரத்துறையுங்
      கொன்றைவார் சடையார்க்கென் கூர்பயலை கூறீரே. 1.60.7
      652 பானாறு மலர்ச்சூத பல்லவங்க ளவைகோதி
      ஏனோர்க்கும் இனிதாக மொழியுமெழில் இளங்குயிலே
      தேனாரும் பொழில்புடைசூழ் திருத்தோணி புரத்தமரர்
      கோனாரை என்னிடத்தே வரவொருகாற் கூவாயே. 1.60.8
      653 நற்பதங்கள் மிகஅறிவாய் நானுன்னை வேண்டுகின்றேன்
      பொற்பமைந்த வாயலகின் பூவைநல்லாய் போற்றுகின்றேன்
      சொற்பதஞ்சேர் மறையாளர் திருத்தோணி புரத்துறையும்
      விற்பொலிதோள் விகிர்தனுக்கென் மெய்ப்பயலை விளம்பாயே. 1.60.9
      654 சிறையாரும் மடக்கிளியே இங்கேவா தேனொடுபால்
      முறையாலே உணத்தருவேன் மொய்பவள தொடுதரள
      துறையாருங் கடற்றோணி புரத்தீசன் துளங்குமிளம்
      பிறையாளன் திருநாமம் எனக்கொருகாற் பேசாயே. 1.60.10
      655 போர்மிகுத்த வயற்றோணி புரத்துறையும் புரிசடையெங்
      கார்மிகுத்த கறைக்கண்ட திறையவனை வண்கமல
      தார்மிகுத்த வரைமார்பன் சம்பந்தன் உரைசெய்த
      சீர்மிகுத்த தமிழ்வல்லார் சிவலோகஞ் சேர்வாரே. 1.60.11

      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

      ------------------------------------------------------------------------

      1.61 திருச்செங்காட்டங்குடி

      பண் - பழந்தக்கராகம்
      656 நறைகொண்ட மலர்தூவி விரையளிப்ப நாடோ றும்
      முறைகொண்டு நின்றடியார் முட்டாமே பணிசெ
      சிறைகொண்ட வண்டறையுஞ் செங்காட்டங் குடியதனுள்
      கறைகொண்ட கண்டத்தான் கணபதீ சரத்தானே. 1.61.1
      657 வாரேற்ற பறையொலியுஞ் சங்கொலியும் வந்தியம்ப
      ஊரேற்ற செல்வத்தோ டோ ங்கியசீர் விழவோவா
      சீரேற்ற முடைத்தாய செங்காட்டங் குடியதனுள்
      காரேற்ற கொன்றையான் கணபதீ சரத்தானே. 1.61.2
      658 வரந்தையான் சோபுரத்தான் மந்திரத்தான் தந்திரத்தான்
      கிரந்தையான் கோவணத்தான் கிண்கிணியான் கையதோர்
      சிரந்தையான் செங்காட்டங் குடியான்செஞ் சடைசேருங்
      கரந்தையான் வெண்ணீற்றான் கணபதீ சரத்தானே. 1.61.3
      659 தொங்கலுங் கமழ்சாந்தும் அகிற்புகையு தொண்டர்கொண்
      டங்கையால் தொழுதேத்த அருச்சுனற்கன் றருள்செய்தான்
      செங்கயல்பாய் வயலுடுத்த செங்காட்டங் குடியதனுள்
      கங்கைசேர் வார்சடையான் கணபதீ சரத்தானே. 1.61.4
      660 பாலினால் நறுநெய்யாற் பழத்தினாற் பயின்றாட்டி
      நூலினால் மணமாலை கொணர்ந்தடியார் புரிந்தேத்த
      சேலினார் வயல்புடைசூழ் செங்காட்டங் குடியதனுள்
      காலினாற் கூற்றுதைத்தான் கணபதீ சரத்தானே. 1.61.5
      661 நுண்ணியான் மிகப்பெரியான் ஓவுளார் வாயுளான்
      தண்ணியான் வெய்யான தலைமேலான் மனத்துளான்
      திண்ணியான் செங்காட்டங் குடியான்செஞ் சடைமதி
      கண்ணியான் கண்ணுதலான் கணபதீ சரத்தானே. 1.61.6
      662 மையினார் மலர்நெடுங்கண் மலைமகளோர் பாகமாம்
      மெய்யினான் பையரவம் அரைக்கசைத்தான் மீன்பிறழ
      செய்யினார் தண்கழனி செங்காட்டங் குடியதனுள்
      கையினார் கூரெரியான் கணபதீ சரத்தானே. 1.61.7
      663 தோடுடையான் குழையுடையான் அரக்கன்றன் தோளடர்த்த
      பீடுடையான் போர்விடையான் பெண்பாகம் மிகப்பெரியான்
      சேடுடையான் செங்காட்டாங் குடியுடையான் சேர்ந்தாடுங்
      காடுடையான் நாடுடையான் கணபதீ சரத்தானே. 1.61.8
      664 ஆனூரா வுழிதருவான் அன்றிருவர் தேர்ந்துணரா
      வானூரான் வையகத்தான் வாழ்த்துவார் மனத்துளான்
      தேனூரான் செங்காட்டாங் குடியான்சிற் றம்பலத்தான்
      கானூரான் கழுமலத்தான் கணபதீ சரத்தானே. 1.61.9
      665 செடிநுகருஞ் சமணர்களுஞ் சீவரத்த சாக்கியரும்
      படிநுகரா தயருழப்பார கருளாத பண்பினான்
      பொடிநுகருஞ் சிறுத்தொண்டர கருள்செய்யும் பொருட்டா
      கடிநகராய் வீற்றிருந்தான் கணபதீ சரத்தானே. 1.61.10
      666 கறையிலங்கு மலர்க்குவளை கண்காட்ட கடிபொழிலின்
      நறையிலங்கு வயல்காழி தமிழ்ஞான சம்பந்தன்
      சிறையிலங்கு புனற்படப்பை செங்காட்டங் குடிசேர்த்தும்
      மறையிலங்கு தமிழ்வல்லார் வானுலக திருப்பாரே. 1.61.11

      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - கணபதீசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

      ------------------------------------------------------------------------

      1.62 திருக்கோளிலி

      பண் - பழந்தக்கராகம்
      667 நாளாய போகாமே நஞ்சணியுங் கண்டனுக்கே
      ஆளாய அன்புசெய்வோம் மடநெஞ்சே அரன்நாமங்
      கேளாய்நங் கிளைகிளைக்குங் கேடுபடா திறமருளி
      கோளாய நீக்குமவன் கோளிலியெம் பெருமானே. 1.62.1
      668 ஆடரவ தழகாமை அணிகேழற் கொம்பார்த்த
      தோடரவ தொருகாதன் துணைமலர்நற் சேவடிக்கே
      பாடரவ திசைபயின்று பணிந்தெழுவார் தம்மனத்தில்
      கோடரவ தீர்க்குமவன் கோளிலியெம் பெருமானே. 1.62.2
      669 நன்றுநகு நாண்மலரால் நல்லிருக்கு மந்திரங்கொண்
      டொன்றிவழி பாடுசெய லுற்றவன்றன் ஓங்குயிர்மேல்
      கன்றிவரு காலனுயிர் கண்டவனு கன்றளித்தான்
      கொன்றைமலர் பொன்றிகழுங் கோளிலியெம் பெருமானே. 1.62.3
      670 வந்தமண லாலிலிங்கம் மண்ணியின்க பாலாட்டுஞ்
      சிந்தைசெய்வோன் தன்கரு தேர்ந்துசிதை பான்வரு
      தந்தைதனை சாடுதலுஞ் சண்டீச னென்றருளி
      கொந்தணவு மலர்கொடுத்தான் கோளிலியெம் பெருமானே. 1.62.4
      671 வஞ்சமன தஞ்சொடுக்கி வைகலும்நற் பூசனையால்
      நஞ்சமுது செய்தருளும் நம்பியென வேநினையும்
      பஞ்சவரிற் பார்த்தனுக்கு பாசுபதம் ஈந்துகந்தான்
      கொஞ்சுகிளி மஞ்சணவுங் கோளிலியெம் பெருமானே. 1.62.5
      672 தாவியவ னுடனிருந்துங் காணாத தற்பரனை
      ஆவிதனி லஞ்சொடுக்கி அங்கணனென் றாதரிக்கும்
      நாவியல்சீர் நமிநந்தி யடிகளுக்கு நல்குமவன்
      கோவியலும் பூவெழுகோற் கோளிலியெம் பெருமானே. 1.62.6
      673 கன்னவிலும் மால்வரையான் கார்திகழும் மாமிடற்றான்
      சொன்னவிலும் மாமறையான் தோத்திரஞ்செய் வாயினுளான்
      மின்னவிலுஞ் செஞ்சடையான் வெண்பொடியான் அங்கையினிற்
      கொன்னவிலும் சூலத்தான் கோளிலியெம் பெருமானே. 1.62.7
      674 அந்தரத்தில் தேரூரும் அரக்கன்மலை அன்றெடுப்ப
      சுந்தரத்தன் திருவிரலால் ஊன்றஅவன் உடல்நெரிந்து
      மந்திரத்த மறைபாட வாளவனு கீந்தானுங்
      கொந்தரத்த மதிச்சென்னி கோளிலியெம் பெருமானே. 1.62.8
      675 நாணமுடை வேதியனும் நாரணனும் நண்ணவொணா
      தாணுவெனை ஆளுடையான் தன்னடியார கன்புடைமை
      பாணனிசை பத்திமையாற் பாடுதலும் பரிந்தளித்தான்
      கோணலிளம் பிறைச்சென்னி கோளிலியெம் பெருமானே. 1.62.9
      676 தடுக்கமருஞ் சமணரொடு தர்க்கசா திரத்தவர்சொல்
      இடுக்கண்வரு மொழிகேளா தீசனையே ஏத்துமின்கள்
      நடுக்கமிலா அமருலகம் நண்ணலுமாம் அண்ணல்கழல்
      கொடுக்ககிலா வரங்கொடுக்குங் கோளிலியெம் பெருமானே. 1.62.10
      677 நம்பனைநல் லடியார்கள் நாமுடைமா டென்றிருக்குங்
      கொம்பனையாள் பாகனெழிற் கோளிலியெம் பெருமானை
      வம்பமரு தண்காழி சம்பந்தன் வண்டமிழ்கொண்
      டின்பமர வல்லார்க ளெய்துவர்கள் ஈசனையே. 1.62.11

      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - கோளிலியப்பர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

      ------------------------------------------------------------------------

      1.63 திருப்பிரமபுரம் - பல்பெயர்ப்பத்து

      பண் - தக்கேசி
      678 எரியார்மழுவொன் றேந்தியங்கை இடுதலையேகலனா
      வரியார்வளையா ரையம்வவ்வாய் மாநலம்வவ்வுதியே
      சரியாநாவின் வேதகீதன் தாமரைநான்முகத்தன்
      பெரியான்பிரமன் பேணியாண்ட பிரமபுரத்தானே. 1.63.1
      679 பெயலார்சடைக்கோர் திங்கள்சூடி பெய்பலிக்கென்றயலே
      கயலார்தடங்கண் அஞ்சொல்நல்லார் கண்டுயில்வவ்வுதியே
      இயலால்நடாவி இன்பமெய்தி இந்திரனாள்மண்மேல்
      வியலார்முரச மோங்குசெம்மை வேணுபுரத்தானே. 1.63.2
      680 நகலார்தலையும் வெண்பிறையும் நளிர்சடைமாட்டயலே
      பகலாப்பலிதேர தையம்வவ்வாய் பாய்கலைவவ்வுதியே
      அகலாதுறையும் மாநிலத்தில் அயலின்மையாலமரர்
      புகலால்மலிந்த பூம்புகலி மேவியபுண்ணியனே. 1.63.3
      681 சங்கோடிலங்க தோடுபெய்து காதிலோர்தாழ்குழையன்
      அங்கோல்வளையார் ஐயம்வவ்வா யால்நலம்வவ்வுதியே
      செங்கோல்நடாவி பல்லுயிர்க்குஞ் செய்வினைமெய்தெரிய
      வெங்கோத்தருமன் மேவியாண்ட வெங்குருமேயவனே. 1.63.4
      682 தணிநீர்மதியஞ் சூடிநீடு தாங்கியதாழ்சடையன்
      பிணிநீர்மடவார் ஐயம்வவ்வாய் பெய்கலைவவ்வுதியே
      அணிநீருலக மாகியெங்கும் ஆழ்கடலாலழுங்க
      துணிநீர்பணி தான்மிதந்த தோணிபுரத்தானே. 1.63.5
      683 கவர்பூம்புனலு தண்மதியுங் கமழ்சடைமாட்டயலே
      அவர்பூம்பலியோ டையம்வவ்வா யால்நலம்வவ்வுதியே
      அவர்பூணரையர காதியாயவள்தன் மன்னனாள்மண்மேற்
      தவர்பூம்பதிகள் எங்குமெங்கு தங்குதராயவனே. 1.63.6
      684 முலையாழ்கெழும மொந்தைகொட்ட முன்கடைமாட்டயலே
      நிலையாப்பலிதேர தையம்வவ்வாய் நீநலம்வவ்வுதியே
      தலையாய்க்கிடந்திவ் வையமெல்லா தன்னதோராணைநடா
      சிலையால்மலிந்த சீர்ச்சிலம்பன் சிரபுரமேயவனே. 1.63.7
      685 எருதேகொணர்கென் றேறியங்கை இடுதலையேகலனா
      கருதேர்மடவார் ஐயம்வவ்வாய் கண்டுயில்வவ்வுதியே
      ஒருதேர்கடாவி ஆரமரு ளொருபதுதோள்தொலை
      பொருதேர்வலவன் மேவியாண்ட புறவமர்புண்ணியனே. 1.63.8
      686 துவர்சேர்கலிங்க போர்வையாரு தூய்மையிலாச்சமணுங்
      கவர்செய்துழல கண்டவண்ணங் காரிகைவார்குழலார்
      அவர்பூம்பலியோ டையம்வவ்வா யால்நலம்வவ்வுதியே
      தவர்செய்நெடுவேற் சண்டனாள சண்பையமர்ந்தவனே. 1.63.9
      687 நிழலால்மலிந்த கொன்றைசூடி நீறுமெய்பூசிநல்ல
      குழலார்மடவா ரையம்வவ்வாய் கோல்வளைவவ்வுதியே
      அழலாயுலகங் கவ்வைதீர ஐந்தலைநீண்முடிய
      கழல்நாகரையன் காவலா காழியமர்ந்தவனே. 1.63.10
      688 கட்டார்துழாயன் தாமரையான் என்றிவர்காண்பரிய
      சிட்டார்பலிதேர தையம்வவ்வாய் செய்கலைவவ்வுதியே
      நட்டார்நடுவே நந்தனாள நல்வினையாலுயர்ந்த
      கொட்டாறுடுத்த தண்வயல்சூழ் கொச்சையமர்ந்தவனே. 1.63.11
      689 கடையார்கொடிநன் மாடவீதி கழுமலவூர்க்கவுணி
      நடையார்பனுவல் மாலையாக ஞானசம்பந்தன்நல்ல
      படையார்மழுவன் றன்மேல்மொழிந்த பல்பெயர்ப்பத்தும்வல்லார
      கடையாவினைகள் உலகில்நாளும் அமருலகாள்பவரே. 1.63.12

      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

      ------------------------------------------------------------------------

      1.64 திருப்பூவணம்

      பண் - தக்கேசி
      690 அறையார்புனலு மாமலரும் ஆடரவார்சடைமேல்
      குறையார்மதியஞ் சூடிமாதோர் கூறுடையானிடமாம்
      முறையால்முடிசேர் தென்னர்சேரர் சோழர்கள்தாம்வணங்கு
      திறையாரொளிசேர் செம்மையோங்கு தென்திருப்பூவணமே. 1.64.1
      691 மருவார்மதில்மூன் றொன்றவெய்து மாமலையான்மடந்தை
      ஒருபால்பாக மாகச்செய்த உம்பர்பிரானவனூர்
      கருவார்சாலி ஆலைமல்கி கழல்மன்னர்காத்தளித்த
      திருவால்மலிந்த சேடர்வாழு தென்திருப்பூவணமே. 1.64.2
      692 போரார்மதமா உரிவைபோர்த்து பொடியணிமேனியனா
      காரார்கடலில் நஞ்சமுண்ட கண்ணுதல்விண்ணவனூர்
      பாரார்வைகை புனல்வாய்பரப்பி பன்மணிபொன்கொழித்து
      சீரார்வாரி சேரநின்ற தென்திருப்பூவணமே. 1.64.3
      693 கடியாரலங்கல் கொன்றைசூடி காதிலோர்வார்குழையன்
      கொடியார்வெள்ளை ஏறுகந்த கோவணவன்னிடமாம்
      படியார்கூடி நீடியோங்கும் பல்புகழாற்பரவ
      செடியார்வைகை சூழநின்ற தென்திருப்பூவணமே. 1.64.4
      694 கூரார்வாளி சிலையிற்கோத்து கொடிமதிற்கூட்டழித்த
      போரார்வில்லி மெல்லியலாளோர் பால்மகிழ்ந்தானிடமாம்
      ஆராவன்பில் தென்னர்சேரர் சோழர்கள்போற்றிசைப்ப
      தேரார்வீதி மாடம்நீடு தென்திருப்பூவணமே. 1.64.5
      695 நன்றுதீதென் றொன்றிலாத நான்மறையோன்கழலே
      சென்றுபேணி யேத்தநின்ற தேவர்பிரானிடமாங்
      குன்றிலொன்றி ஓங்கமல்கு குளிர்பொழில்சூழ்மலர்மேல்
      தென்றலொன்றி முன்றிலாரு தென்திருப்பூவணமே. 1.64.6
      696 பைவாயரவம் அரையிற்சாத்தி பாரிடம்போற்றிசைப்ப
      மெய்வாய்மேனி நீறுபூசி ஏறுகந்தானிடமாம்
      கைவாழ்வளையார் மைந்தரோடுங் கலவியினால்நெருங்கி
      செய்வார்தொழிலின் பாடலோவா தென்திருப்பூவணமே. 1.64.7
      697 மாடவீதி மன்னிலங்கை மன்னனைமாண்பழித்து
      கூடவென்றி வாள்கொடுத்தாள் கொள்கையினார்க்கிடமாம்
      பாடலோடும் ஆடலோங்கி பன்மணிபொன்கொழித்து
      ஓடநீரால் வைகைசூழும் உயர்திருப்பூவணமே. 1.64.8
      698 பொய்யாவேத நாவினானும் பூமகள்காதலனுங்
      கையாற்றொழுது கழல்கள்போற்ற கனலெரியானவனூர்
      மையார்பொழிலின் வண்டுபாட வைகைமணிகொழித்து
      செய்யார்கமல தேனரும்பு தென்திருப்பூவணமே. 1.64.9
      699 அலையார்புனலை நீத்தவரு தேரருமன்புசெய்யா
      நிலையாவண்ணம் மாயம்வைத்த நின்மலன்றன்னிடமாம்
      மலைபோல்துன்னி வென்றியோங்கும் மாளிகைசூழ்ந்தயலே
      சிலையார்புரிசை பரிசுபண்ணு தென்திருப்பூவணமே. 1.64.10
      700 திண்ணார்புரிசை மாடமோங்கு தென்திருப்பூவணத்து
      பெண்ணார்மேனி எம்மிறையை பேரியல்இன்றமிழால்
      நண்ணார்உட காழிமல்கும் ஞானசம்பந்தன்சொன்ன
      பண்ணார்பாடல் பத்தும்வல்லார் பயில்வதுவானிடையே. 1.64.11

      இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - பூவணநாதர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

      ------------------------------------------------------------------------

      1.65 காவிரிப்பூம்பட்டினத்துப்பல்லவனீச்சரம்

      பண் - தக்கேசி
      701 அடையார்தம் புரங்கள்மூன்றும் ஆரழலில்லழுந்த
      விடையார்மேனிய ராய்ச்சீறும் வித்தகர்மேயவிடம்
      கடையார்மாடம் நீடியெங்குங் கங்குல்புறந்தடவ
      படையார்புரிசை பட்டினஞ்சேர் பல்லவனீச்சரமே. 1.65.1
      702 எண்ணாரெயில்கள் மூன்றுஞ்சீறும் எந்தைபிரானிமையோர்
      கண்ணாயுலகங் காக்கநின்ற கண்ணுதல்நண்ணுமிடம்
      மண்ணார்சோலை கோலவண்டு வைகலுந்தேனருந்தி
      பண்ணார்செய்யும் பட்டினத்து பல்லவனீச்சரமே. 1.65.2
      703 மங்கையங்கோர் பாகமாக வாள்நிலவார்சடைமேல்
      கங்கையங்கே வாழவைத்த கள்வனிருந்தவிடம்
      பொங்கயஞ்சேர் புணரியோத மீதுயர்பொய்கையின்மேற்
      பங்கயஞ்சேர் பட்டினத்து பல்லவனீச்சரமே. 1.65.3
      704 தாரார்கொன்றை பொன்றயங்க சாத்தியமார்பகலம்
      நீரார்நீறு சாந்தம்வைத்த நின்மலன்மன்னுமிடம்
      போரார்வேற்கண் மாதர்மைந்தர் புக்கிசைபாடலினாற்
      பாரார்கின்ற பட்டினத்து பல்லவனீச்சரமே. 1.65.4
      705 மைசேர்கண்டர் அண்டவாணர் வானவருந்துதிப்ப
      மெய்சேர்பொடியர் அடியாரேத்த மேவியிருந்தவிடங்
      கைசேர்வளையார் விழைவினோடு காதன்மையாற்கழலே
      பைசேரரவார் அல்குலார்சேர் பல்லவனீச்சரமே. 1.65.5
      706 குழலினோசை வீணைமொந்தை கொட்டமுழவதிர
      கழலினோசை யார்க்கஆடுங் கடவுளிருந்தவிடஞ்
      சுழியிலாருங் கடலிலோத தெண்டிரை மொண்டெறி
      பழியிலார்கள் பயில்புகாரிற் பல்லவனீச்சரமே. 1.65.6
      707 வெந்தலாய வேந்தன்வேள்வி வேரறச்சாடிவிண்ணோர்
      வந்தெலாமுன் பேணநின்ற மைந்தன்மகிழ்ந்தவிடம்
      மந்தலாய மல்லிகையும் புன்னைவளர்குரவின்
      பந்தலாரும் பட்டினத்து பல்லவனீச்சரமே. 1.65.7
      708 தேரரக்கன் மால்வரையை தெற்றியெடுக்கஅவன்
      தாரரக்கு திண்முடிகள் ஊன்றியசங்கரனூர்
      காரரக்குங் கடல்கிளர்ந்த காலமெலாமுணர
      பாரரக்கம் பயில்புகாரில் பல்லவனீச்சரமே. 1.65.8
      709 அங்கமாறும் வேதநான்கும் ஓதும்அயன்நெடுமால்
      தங்கணாலும் நேடநின்ற சங்கரன்தங்குமிடம்
      வங்கமாரும் முத்தம்இப்பி வார்கடலூடலை
      பங்கமில்லார் பயில்புகாரிற் பல்லவனீச்சரமே. 1.65.9
      710 உண்டுடுக்கை யின்றியேநின் றூர்நகவேதிரிவார்
      கண்டுடுக்கை மெய்யிற்போர்த்தார் கண்டறியாதவிட
      தண்டுடுக்கை தாளந்தக்கை சாரநடம்பயில்வார்
      பண்டிடுக்கண் தீரநல்கும் பல்லவனீச்சரமே. 1.65.10
      711 பத்தரேத்தும் பட்டினத்து பல்லவனீச்சரத்தெம்
      அத்தன்தன்னை அணிகொள்காழி ஞானசம்பந்தன்சொல்
      சித்தஞ்சேர செப்புமாந்தர் தீவினைநோயிலராய்
      ஒத்தமைந்த உம்பர்வானில் உயர்வினொடோ ங்குவரே. 1.65.11

      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - பல்லவனேசர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப

      ------------------------------------------------------------------------

      1.66 திருச்சண்பைநகர்

      பண் - தக்கேசி
      712 பங்மேறு மதிசேர்சடையார் விடையார்பலவேதம்
      அங்கமாறும் மறைநான்கவையு மானார்மீனாரும்
      வங்கமேவு கடல்வாழ்பரதர் மனைக்கேநுனைமூக்கின்
      சங்கமேறி முத்தமீனுஞ் சண்பைநகராரே. 1.66.1
      713 சூதகஞ்சேர் கொங்கையாளோர் பங்கர்சுடர்க்கமல
      போதகஞ்சேர் புண்ணியனார் பூதகணநாதர்
      மேதகஞ்சேர் மேகமந்தண் சோலையில்விண்ணார்ந்த
      சாதகஞ்சேர் பாளைநீர்சேர் சண்பைநகராரே. 1.66.2
      714 மகரத்தாடு கொடியோனுடலம் பொடிசெய்தவனுடைய
      நிகரொப்பில்லா தேவிக்கருள்செய் நீலகண்டனார்
      பகரத்தாரா வன்னம்பகன்றில் பாதம்பணிந்தே
      தகரப்புன்னை தாழைப்பொழில்சேர் சண்பைநகராரே. 1.66.3
      715 மொய்வல்லசுரர் தேவர்கடைந்த முழுநஞ்சதுவுண்ட
      தெய்வர்செய்ய வுருவர்கரிய கண்டர்திகழ்சுத்தி
      கையர்கட்டங் கத்தர்கரியின் உரியர்காதலாற்
      சைவர்பாசு பதர்கள்வணங்குஞ் சண்பைநகராரே. 1.66.4
      716 கலமார்கடலுள் விடமுண்டமரர கமுதம்அருள்செய்த
      குலமார்கயிலை குன்றதுடைய கொல்லையெருதேறி
      நலமார்வெள்ளை நாளிகேரம் விரியார்நறும்பாளை
      சலமார்கரியின் மருப்புக்காட்டுஞ் சண்பைநகராரே. 1.66.5
      717 மாகரஞ்சேர் அத்தியின்தோல் போர்த்துமெய்ம்மாலான்
      சூகரஞ்சேர் எயிறுபூண்ட சோதியன்மேதக்க
      ஆகரஞ்சேர் இப்பிமுத்தை அந்தண்வயலுக்கே
      சாகரஞ்சேர் திரைகளுந்துஞ் சண்பைநகராரே. 1.66.6
      இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 1.66.7
      718 இருளைப்புரையும் நிறத்திலரக்கன்ன்றனையீடழிவித்து
      அருளைச்செய்யும் அம்மானேரா ரந்தண்கந்தத்தின்
      மருளைச்சுரும்பு பாடியளக்கர் வரையார்திரைக்கையால்
      தரளத்தோடு பவளமீனுஞ் சண்பைநகராரே. 1.66.8
      719 மண்டான்முழுதும் உண்டமாலும் மலர்மிசைமேலயனும்
      எண்டானறியா வண்ணம்நின்ற இறைவன்மறையோதி
      தண்டார்குவளை கள்ளருந்தி தாமரைத்தாதின்மேற்
      பண்டான்கொண்டு வண்டுபாடுஞ் சண்பைநகராரே. 1.66.9
      720 போதியாரும் பிண்டியாரும் புகழலசொன்னாலும்
      நீதியா கொண்டங்கருளும் நிமலனிருநான்கின்
      மாதிசித்தர் மாமறையின் மன்னியதொன்னூலர்
      சாதிகீத வர்த்தமானர் சண்பைநகராரே. 1.66.10
      721 வந்தியோடு பூசையல்லா போழ்தில்மறைபேசி
      சந்திபோதிற் சமாதிசெய்யுஞ் சண்பைநகர்மேய
      அந்திவண்ணன் தன்னையழகார் ஞானசம்பந்தன்சொல்
      சிந்தைசெய்து பாடவல்லார் சிவகதிசேர்வாரே. 1.66.11

      திருச்சிற்றம்பலம்
      தேவார பதிகங்கள் முதல் திருமுறை பகுதி

      ------------------------------------------------------------------------
      7 2002
      1
      .


      -2.
      ------------------------------------------------------------------------
      1
      722 -1469

      திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
      தேவார பதிகங்கள்
      முதல் திருமுறை - இரண்டாம் பகுதி
      பாடல்கள் 722 - 1469
      ------------------------------------------------------------------------
      ------------------------------------------------------------------------

      .

      .
      .


      .
      - . ..
      .
      .

      .
      2000 ...

      2000 .
      -8
      6 5
      -8 - .
      .
      .
      © 1999 - 2004



      .

      ..

      .
      ------------------------------------------------------------------------
      திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
      தேவார பதிகங்கள்
      முதல் திருமுறை - இரண்டாம் பகுதி
      உள்ளுறை
      1.67 திருப்பழனம் 722-732 மின்பதிப்பு
      1.68 திருக்கயிலாயம் 733-742 மின்பதிப்பு
      1.69 திரு அண்ணாமலை 743-753 மின்பதிப்பு
      1.70 திரு ஈங்கோய்மலை 754-764 மின்பதிப்பு
      1.71 திருநறையூர்ச்சித்தீச்சரம் 765-775 மின்பதிப்பு
      1.72 திருக்குடந்தைக்காரோணம் 776-786 மின்பதிப்பு
      1.73 திருக்கானூர் 787-797 மின்பதிப்பு
      1.74 திருப்புறவம் 798-808 மின்பதிப்பு
      1.75 திருவெங்குரு 809-819 மின்பதிப்பு
      1.76 திரு இலம்பையங்கோட்டூர் 820-830 மின்பதிப்பு
      1.77 திருஅச்சிறுபாக்கம் 831-841 மின்பதிப்பு
      1.78 திருஇடைச்சுரம் 842-852 மின்பதிப்பு
      1.79 திருக்கழுமலம் 853-863 மின்பதிப்பு
      1.80 கோயில் 864-874 மின்பதிப்பு
      1.81 சீர்காழி 875-881 மின்பதிப்பு
      1.82 திருவீழிமிழலை 882-892 மின்பதிப்பு
      1.83 திரு அம்பர்மாகாளம் 893-903 மின்பதிப்பு
      1.84 திருக்கடனாகைக்காரோணம் 904-914 மின்பதிப்பு
      1.85 திருநல்லம் 915-925 மின்பதிப்பு
      1.86 திருநல்லூர் 926-936 மின்பதிப்பு
      1.87 திருவடுகூர் 937-947 மின்பதிப்பு
      1.88 திரு ஆப்பனூர் 948-958 மின்பதிப்பு
      189 திரு எருக்கத்தம்புலியூர் 959-968 மின்பதிப்பு
      1.90 திருப்பிரமபுரம் - திருவிருக்குக்குறள் 969-980 மின்பதிப்பு

      1.91 திருஆரூர் - திருவிருக்குக்குறள் 981-991 மின்பதிப்பு

      1.92 திருவீழிமிழலை - திருவிருக்குக்குறள் 992-1002 மின்பதிப்பு

      1.93 திருமுதுகுன்றம் - திருவிருக்குக்குறள் 1003-1013 மின்பதிப்பு

      1.94 திருஆலவாய் - திருவிருக்குக்குறள் 1014-1024 மின்பதிப்பு

      1.95 திருவிடைமருதூர் - திருவிருக்குக்குறள் 1025-1035
      மின்பதிப்பு
      1.96 திரு அன்னியூர் - திருவிருக்குக்குறள் 1036-1046 மின்பதிப்பு

      1.97 திருப்புறவம் 1047-1057 மின்பதிப்பு
      1.98 திருச்சிராப்பள்ளி 1058-1068 மின்பதிப்பு
      1.99 திருக்குற்றாலம் 1069-1079 மின்பதிப்பு
      1.100 திருப்பரங்குன்றம் 1080-1090 மின்பதிப்பு
      1.101 திருக்கண்ணார்கோயில் 1091-1101 மின்பதிப்பு
      1.102 சீகாழி 1102-1111 மின்பதிப்பு
      1.103 திருக்கழுக்குன்றம் 1112-1121 மின்பதிப்பு
      1.104 திருப்புகலி 1122-1132 மின்பதிப்பு
      1.105 திருஆரூர் 1133-1142 மின்பதிப்பு
      1.106 திருஊறல் 1143-1151 மின்பதிப்பு
      1.107 திருக்கொடிமாடச்செங்குன்றூர் 1152-1162 மின்பதிப்பு
      1.108 திருப்பாதாளீச்சரம் 1163-1173 மின்பதிப்பு
      1.109 திருச்சிரபுரம் 1174-1184 மின்பதிப்பு
      1.110 திருவிடைமருதூர் 1185-1195 மின்பதிப்பு
      1.111 திருக்கடைமுடி 1196-1206 மின்பதிப்பு
      1.112 திருச்சிவபுரம் 1207-1217 மின்பதிப்பு
      1.113 திருவல்லம் 1218-1227 மின்பதிப்பு
      1.114 திருமாற்பேறு 1228-1237 மின்பதிப்பு
      1.115 திரு இராமனதீச்சரம் 1238-1248 மின்பதிப்பு
      1.116 திரு நீலகண்டம் 1249-1258 மின்பதிப்பு
      1.117 திருப்பிரமபுரம் - மொழிமாற்று 1259-1270 மின்பதிப்பு
      1.118 திருப்பருப்பதம் 1271-1281 மின்பதிப்பு
      1.119 திருக்கள்ளில் 1282-1292 மின்பதிப்பு
      1.120 திருவையாறு - திருவிராகம் 1293-1303 மின்பதிப்பு
      1.121 திருவிடைமருதூர் - திருவிராகம் 1304-1314 மின்பதிப்பு

      1.122 திருவிடைமருதூர் - திருவிராகம் 1315-1325 மின்பதிப்பு

      1.123 திருவலிவலம் - திருவிராகம் 1326-1336 மின்பதிப்பு
      1.124 திருவீழிமிழலை - திருவிராகம் 1337-1347 மின்பதிப்பு

      1.125 திருச்சிவபுரம் - திருவிராகம் 1348-1358 மின்பதிப்பு

      1.126 திருக்கழுமலம் - திருத்தாளச்சதி 1359-1369 மின்பதிப்பு

      1.127 சீகாழி - திருஏகபாதம் 1370-1381 மின்பதிப்பு
      1.128 திருவெழுகூற்றிருக்கை 1382 மின்பதிப்பு
      1.129 திருக்கழுமலம் 1383-1393 மின்பதிப்பு
      1.130 திருவையாறு 1394-1404 மின்பதிப்பு
      1.131 திருமுதுகுன்றம் 1405-1415 மின்பதிப்பு
      1.132 திருவீழிமிழலை 1416-1426 மின்பதிப்பு
      1.133 திருவேகம்பம் 1427-1436 மின்பதிப்பு
      1.134 திருப்பறியலூர் - திருவீரட்டம் 1437-1447 மின்பதிப்பு

      1.135 திருப்பராய்த்துறை 1448-1458 மின்பதிப்பு
      1.136 திருத்தருமபுரம் 1459-1469 மின்பதிப்பு
      ------------------------------------------------------------------------
      திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
      தேவார பதிகங்கள்
      முதல் திருமுறை -இரண்டாம் பகுதி
      1.67 திருப்பழனம்
      பண் - தக்கேசி
      722 வேதமோதி வெண்ணூல்பூண்டு வெள்ளையெருதேறி
      பூதஞ்சூழ பொலியவருவார் புலியினுரிதோலார்
      நாதாஎனவும் நக்காஎனவும் நம்பாஎனநின்று
      பாதந்தொழுவார் பாவந்தீர்ப்பார் பழனநகராரே. 1.67.1
      723 கண்மேற்கண்ணுஞ் சடைமேற்பிறையும் உடையார்காலனை
      புண்ணாறுதிர மெதிராறோட பொன்றப்புறந்தாளால்
      எண்ணாதுதைத்த எந்தைபெருமான் இமவான்மகளோடும்
      பண்ணார்களிவண் டறைபூஞ்சோலை பழனநகராரே. 1.67.2
      724 பிறையும்புனலுஞ் சடைமேலுடையார் பறைபோல்விழிகட்பேய்
      உறையுமயான மிடமாவுடையார் உலகர்தலைமகன்
      அறையும்மலர்கொண் டடியார்பரவி ஆடல்பாடல்செய்
      பறையுஞ்சங்கும் பலியுமோவா பழனநகராரே. 1.67.3
      725 உரம்மன்னுயர்கோ டுலறுகூகை யலறுமயானத்தில்
      இரவிற்பூதம் பாடஆடி எழிலாரலர்மேலை
      பிரமன்றலையின் நறவமேற்ற பெம்மானெமையாளும்
      பரமன்பகவன் பரமேச்சுவரன் பழனநகராரே. 1.67.4
      726 குலவெஞ்சிலையால் மதில்மூன்றெரித்த கொல்லேறுடையண்ணல்
      கலவமயிலுங் குயிலும்பயிலுங் கடல்போற்காவேரி
      நலமஞ்சுடைய நறுமாங்கனிகள் குதிகொண்டெதிருந்தி
      பலவின்கனிகள் திரைமுன்சேர்க்கும் பழனநகராரே. 1.67.5
      727 வீளைக்குரலும் விளிசங்கொலியும் விழவின்னொலியோவா
      மூளைத்தலைகொண் டடியாரேத்த பொடியாமதிளெய்தார்
      ஈளைப்படுகில் இலையார்தெங்கின் குலையார்வாழையின்
      பாளைக்கமுகின் பழம்வீழ்சோலை பழனநகராரே. 1.67.6
      728 பொய்யாமொழியார் முறையாலேத்தி புகழ்வார்திருமேனி
      செய்யார்கரிய மிடற்றார்வெண்ணூல் சேர்ந்தஅகலத்தார்
      கையாடலினார் புனலால்மல்கு சடைமேற்பிறையோடும்
      பையாடரவ முடனேவைத்தார் பழனநகராரே. 1.67.7
      729 மஞ்சோங்குயரம் உடையான்மலையை மாறாயெடுத்தான்றோள்
      அஞ்சோடஞ்சும் ஆறுநான்கும் அடரவூன்றினார்
      நஞ்சார்சுடலை பொடிநீறணிந்த நம்பான்வம்பாரும்
      பைந்தாமரைகள் கழனிசூழ்ந்த பழனநகராரே. 1.67.8
      730 கடியார்கொன்றை சுரும்பின்மாலை கமழ்புன்சடையார்விண்
      முடியாப்படிமூ வடியாலுலக முழுதுந்தாவிய
      நெடியான்நீள்தா மரைமேலயனும் நேடிக்காணாத
      படியார்பொடியா டகலமுடையார் பழனநகராரே. 1.67.9
      731 கண்டான்கழுவா முன்னேயோடி கலவைக்கஞ்சியை
      உண்டாங்கவர்கள் உரைக்குஞ்சிறுசொல் லோரார்பாராட்ட
      வண்டாமரையின் மலர்மேல்நறவ மதுவாய்மிகவுண்டு
      பண்டான்கெழும வண்டியாழ்செய்யும் பழனநகராரே. 1.67.10
      732 வேய்முத்தோங்கி விரைமுன்பரக்கும் வேணுபுரந்தன்னுள்
      நாவுய்த்தனைய திறலான்மிக்க ஞானசம்பந்தன்
      பேசற்கினிய பாடல்பயிலும் பெருமான்பழனத்தை
      வாயிற்பொலிந்த மாலைபத்தும் வல்லார்நல்லாரே. 1.67.11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - ஆபத்சகாயர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      1.68 திருக்கயிலாயம்
      பண் - தக்கேசி
      733 பொடிகொளுருவர் புலியினதளர் புரிநூல்திகழ்மார்பில்
      கடிகொள்கொன்றை கலந்தநீற்றர் கறைசேர்கண்டத்தர்
      இடியகுரலால் இரியுமடங்கல் தொடங்குமுனைச்சாரல்
      கடியவிடைமேற் கொடியொன்றுடையார் கயிலைமலையாரே. 1.68.1
      734 புரிகொள்சடையார் அடியர்க்கெளியார் கிளிசேர்மொழிமங்கை
      தெரியவுருவில் வைத்துகந்த தேவர்பெருமானார்
      பரியகளிற்றை யரவுவிழுங்கி மழுங்கவிருள்கூர்ந்த
      கரியமிடற்றர் செய்யமேனி கயிலைமலையாரே. 1.68.2
      735 மாவினுரிவை மங்கைவெருவ மூடிமுடிதன்மேல்
      மேவுமதியும் நதியும்வைத்த விளைவர்கழலுன்னு
      தேவர்தேவர் திரிசூலத்தர் திரங்கல்முகவன்சேர்
      காவும்பொழிலுங் கடுங்கற்சுனைசூழ் கயிலைமலையாரே. 1.68.3
      736 முந்நீர்சூழ்ந்த நஞ்சமுண்ட முதல்வர்மதனன்றன்
      தென்னீருருவம் அழியத்திருக்கண் சிவந்தநுதலினார்
      மன்னீணர்மடுவும் படுகல்லறையின் உழுவைசினங்கொண்டு
      கன்னீணர்வரைமே லிரைமுன்தேடுங் கயிலைமலையாரே. 1.68.4
      737 ஒன்றும்பலவு மாயவேட தொருவர்கழல்சேர்வார்
      நன்றுநினைந்து நாடற்குரியார் கூடித்திரண்டெங்கு
      தென்றியிருளில் திகைத்தகரிதண் சாரல்நெறியோடி
      கன்றும்பிடியும் அடிவாரஞ்சேர் கயிலைமலையாரே. 1.68.5
      738 தாதார்கொன்றை தயங்குமுடியர் முயங்குமடவாளை
      போதார்பாக மாகவைத்த புனிதர்பனிமல்கும்
      மூதாருலகில் முனிவருடனாய் அறநான்கருள்செய்த
      காதார்குழையர் வேதத்திரளர் கயிலைமலையாரே. 1.68.6
      இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 1.68.7
      734 தொடுத்தார்புரமூன் றெரியச்சிலைமே லெரியொண்பகழியால்
      எடுத்தான்றிரள்தோள் முடிகள்பத்தும் இடியவிரல்வைத்தார்
      கொடுத்தார்படைகள் கொண்டாராளா குறுகிவருங்கூற்றை
      கடுத்தாங்கவனை கழலாலுதைத்தார் கயிலைமலையாரே. 1.68.8
      740 ஊணாப்பலிகொண் டுலகிலேற்றார் இலகுமணிநாகம்
      பூணாணார மாகப்பூண்டார் புகழுமிருவர்தாம்
      பேணாவோடி நேடவெங்கும் பிறங்குமெரியாகி
      காணாவண்ண முயர்ந்தார்போலுங் கயிலைமலையாரே. 1.68.9
      741 விருதுபகரும் வெஞ்சொற்சமணர் வஞ்சச்சாக்கியர்
      பொருதுபகரும் மொழியைக்கொள்ளார் புகழ்வார்க்கணியராய்
      எருதொன்றுகைத்திங் கிடுவார்தம்பால் இரந்துண்டிகழ்வார்கள்
      கருதும்வண்ணம் உடையார்போலுங் கயிலைமலையாரே. 1.68.10
      742 போரார்கடலிற் புனல்சூழ்காழி புகழார்சம்பந்தன்
      காரார்மேகங் குடிகொள்சாரற் கயிலைமலையார்மேல்
      தேராவுரைத்த செஞ்சொல்மாலை செப்புமடியார்மேல்
      வாராபிணிகள் வானோருலகில் மருவும்மனத்தாரே. 1.68.11
      சுவாமிபெயர் - கயிலாயநாதர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      1.69 திரு அண்ணாமலை
      பண் - தக்கேசி
      743 பூவார்மலர்கொண் டடியார்தொழுவார் புகழ்வார்வானோர்கள்
      மூவார்புரங்கள் எரித்தஅன்று மூவர்க்கருள்செய்தார்
      தூமாமழைநின் றதிரவெருவி தொறுவின்நிரையோடும்
      ஆமாம்பிணைவ தணையுஞ்சாரல் அண்ணாமலையாரே. 1.69.1
      744 மஞ்சைப்போழ்ந்த மதியஞ்சூடும் வானோர்பெருமானார்
      நஞ்சைக்கண்ட தடக்குமதுவும் நன்மைப்பொருள்போலும்
      வெஞ்சொற்பேசும் வேடர்மடவார் இதணமதுவேறி
      அஞ்சொற்கிளிகள் ஆயோஎன்னும் அண்ணாமலையாரே. 1.69.2
      745 ஞானத்திரளாய் நின்றபெருமான் நல்லஅடியார்மேல்
      ஊனத்திரளை நீக்குமதுவும் உண்மைப்பொருள்போலும்
      ஏனத்திரளோ டினமான்கரடி இழியுமிரவின்கண்
      ஆனைத்திரள்வ தணையுஞ்சாரல் அண்ணாமலையாரே. 1.69.3
      746 இழைத்தஇடையாள் உமையாள்பங்கர் இமையோர்பெருமானார்
      தழைத்தசடையார் விடையொன்றேறி தரியார்புரமெய்தார்
      பிழைத்தபிடியை காணாதோடி பெருங்கைமதவேழம்
      அழைத்துத்திரிந்தங் குறங்குஞ்சாரல் அண்ணாமலையாரே. 1.69.4
      747 உருவிற்றிகழும் உமையாள்பங்கர் இமையோர்பெருமானார்
      செருவில்லொருகால் வளையஊன்றி செந்தீயெழுவித்தார்
      பருவிற்குறவர் புனத்திற்குவித்த பருமாமணிமுத்தம்
      அருவித்திரளோ டிழியுஞ்சாரல் அண்ணாமலையாரே. 1.69.5
      748 எனைத்தோரூழி யடியாரேத்த இமையோர்பெருமானார்
      நினைத்துத்தொழுவார் பாவந்தீர்க்கும் நிமலருறைகோயில்
      கனைத்தமேதி காணாதாயன் கைம்மேற்குழலூத
      அனைத்துஞ்சென்று திரளுஞ்சாரல் அண்ணாமலையாரே. 1.69.6
      749 வந்தித்திருக்கும் அடியார்தங்கள் வருமேல்வினையோடு
      பந்தித்திருந்த பாவந்தீர்க்கும் பரமனுறைகோயில்
      முந்தியெழுந்த முழவினோசை முதுகல்வரைகள்மேல்
      அந்திப்பிறைவ தணையுஞ்சாரல் அண்ணாமலையாரே. 1.69.7
      750 மறந்தான்கருதி வலியைநினைந்து மாறாயெடுத்தான்றோள்
      நிறந்தான்முரிய நெரியவூன்றி நிறையஅருள்செய்தார்
      திறந்தான்காட்டி அருளாயென்று தேவரவர்வேண்ட
      அறந்தான்காட்டி அருளிச்செய்தார் அண்ணாமலையாரே. 1.69.8
      751 தேடிக்காணார் திருமால்பிரமன் தேவர்பெருமானை
      மூடியோங்கி முதுவேயுகுத்த முத்தம்பலகொண்டு
      கூடிக்குறவர் மடவார்குவித்து கொள்ளவம்மினென்
      றாடிப்பாடி யளக்குஞ்சாரல் அண்ணாமலையாரே. 1.69.9
      752 தட்டையிடுக்கி தலையைப்பறித்து சமணேநின்றுண்ணும்
      பிட்டர்சொல்லு கொள்ளவேண்டா பேணித்தொழுமின்கள்
      வட்டமுலையாள் உமையாள்பங்கர் மன்னியுறைகோயில்
      அட்டமாளி திரள்வந்தணையும் அண்ணாமலையாரே. 1.69.10
      753 அல்லாடரவம் இயங்குஞ்சாரல் அண்ணாமலையாரை
      நல்லார்பரவ படுவான்காழி ஞானசம்பந்தன்
      சொல்லால்மலிந்த பாடலான பத்துமிவைகற்று
      வல்லாரெல்லாம் வானோர்வணங்க மன்னிவாழ்வாரே. 1.69.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      1.70 திரு ஈங்கோய்மலை
      பண் - தக்கேசி
      754 வானத்துயர்தண் மதிதோய்சடைமேல் மத்தமலர்சூடி
      தேனொத்தனமென் மொழிமான்விழியாள் தேவிபாகமா
      கானத்திரவில் எரிகொண்டாடுங் கடவுளுலகேத்த
      ஏனத்திரள்வ திழியுஞ்சாரல் ஈங்கோய்மலையாரே. 1.70.1
      755 சூலப்படையொன் றேந்தியிரவிற் சுடுகாடிடமா
      கோலச்சடைகள்தாழ குழல்யாழ் மொந்தைகொட்டவே
      பாலொத்தனைய மொழியாள்காண ஆடும்பரமனார்
      ஏலத்தொடுநல் இலவங்கமழும் ஈங்கோய்மலையாரே. 1.70.2
      756 கண்கொள்நுதலார் கறைகொள்மிடற்றார் கரியினுரிதோலார்
      விண்கொள்மதிசேர் சடையார்விடையார் கொடியார்வெண்ணீறு
      பெண்கொள்திருமார் பதனில்பூசும் பெம்மானெமையாள்வார்
      எண்கும்அரியு திரியுஞ்சாரல் ஈங்கோய்மலையாரே. 1.70.3
      757 மறையின்னிசையார் நெறிமென்கூந்தல் மலையான்மகளோடுங்
      குறைவெண்பிறையும் புனலும்நிலவுங் குளிர்புன்சடைதாழ
      பறையுங்குழலுங் கழலுமார படுகாட்டெரியாடும்
      இறைவர்சிறைவண் டறைபூஞ்சாரல் ஈங்கோய்மலையாரே. 1.70.4
      758 நொந்தசுடலை பொடிநீறணிவார் நுதல்சேர்கண்ணினார்
      கந்தமலர்கள் பலவும்நிலவு கமழ்புன்சடைதாழ
      பந்தண்விரலாள் பாகமாக படுகாட்டெரியாடும்
      எந்தம்மடிகள் கடிகொள்சாரல் ஈங்கோய்மலையாரே. 1.70.5
      759 நீறாரகலம் உடையார்நிரையார் கொன்றையரவோடும்
      ஆறார்சடையார் அயில்வெங்கணையால் அவுணர்புரம்மூன்றுஞ்
      சீறாவெரிசெய் தேவர்பெருமான் செங்கண்அடல்வெள்ளை
      ஏறார்கொடியார் உமையாளோடும் ஈங்கோய்மலையாரே. 1.70.6
      760 வினையாயினதீர தருளேபுரியும் விகிர்தன்விரிகொன்றை
      நனையார்முடிமேல் மதியஞ்சூடும் நம்பானலமல்கு
      தனையார்கமல மலர்மேலுறைவான் தலையோடனலேந்தும்
      எனையாளுடையான் உமையாளோடும் ஈங்கோய்மலையாரே. 1.70.7
      761 பரக்கும்பெருமை இலங்கையென்னும் பதியிற்பொலிவாய
      அரக்கர்க்கிறைவன் முடியுந்தோளும் அணியார்விரல்தன்னால்
      நெருக்கியடர்த்து நிமலாபோற்றி யென்றுநின்றேத்த
      இரக்கம்புரிந்தார் உமையாளோடும் ஈங்கோய்மலையாரே. 1.70.8
      762 வரியார்புலியின் உரிதோலுடையான் மலையான்மகளோடும்
      பிரியாதுடனாய் ஆடல்பேணும் பெம்மான்திருமேனி
      அரியோடயனும் அறியாவண்ணம் அளவில்பெருமையோ
      டெரியாய்நிமிர்ந்த எங்கள்பெருமான் ஈங்கோய்மலையாரே. 1.70.9
      763 பிண்டியேன்று பெயராநிற்கும் பிணங்குசமணரும்
      மண்டைகலனா கொண்டுதிரியும் மதியில்தேரரும்
      உண்டிவயிறார் உரைகள்கொள்ளா துமையோடுடனாகி
      இண்டைச்சடையான் இமையோர்பெருமான் ஈங்கோய்மலையாரே. 1.70.10
      764 விழவாரொலியும் முழவும்ஓவா வேணுபுரந்தன்னுள்
      அழலார்வண்ண தடிகளருள்சேர் அணிகொள்சம்பந்தன்
      எழிலார்சுனையும் பொழிலும்புடைசூழ் ஈங்கோய்மலையீசன்
      கழல்சேர்பாடல் பத்தும்வல்லார் கவலைகளைவாரே. 1.70.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      1.71 திருநறையூர்ச்சித்தீச்சரம்
      பண் - தக்கேசி
      765
      பிறைகொள்சடையர் புலியினுரியர் பேழ்வாய்நாகத்தர்
      கறைகொள்கண்டர் கபாலமேந்துங் கையர்கங்காளர்
      மறைகொள்கீதம் பாடச்சேடர் மனையில்மகிழ்வெய்தி
      சிறைகொள்வண்டு தேனார்நறையூர சித்தீச்சரத்தாரே. 1.71.1
      766 பொங்கார்சடையர் புனலர்அனலர் பூதம்பாடவே
      தங்காதலியு தாமுமுடனா தனியோர்விடையேறி
      கொங்கார்கொன்றை வன்னிமத்தஞ் சூடிக்குளிர்பொய்கை
      செங்கால்அனமும் பெடையுஞ்சேரும் சித்தீச்சரத்தாரே. 1.71.2
      767 முடிகொள்சடையர் முளைவெண்மதியர் மூவாமேனிமேல்
      பொடிகொள்நூலர் புலியினதளர் புரிபுன்சடைதாழ
      கடிகொள்சோலை வயல்சூழ்மடுவிற் கயலாரினம்பா
      கொடிகொள்மாட குழாமார்நறையூர சித்தீச்சரத்தாரே. 1.71.3
      768 பின்றாழ்சடைமேல் நகுவெண்டலையர் பிரமன்றலையேந்தி
      மின்றாழுருவிற் சங்கார்குழைதான் மிளிரும்ஒருகாதர்
      பொன்றாழ்கொன்றை செருந்திபுன்னை பொருந்துசெண்பகஞ்
      சென்றார்செல்வ திருவார்நறையூர சித்தீச்சரத்தாரே. 1.71.4
      769 நீரார்முடியர் கறைகொள்கண்டர் மறைகள்நிறைநாவர்
      பாரார்புகழால் பத்தர்சித்தர் பாடியாடவே
      தேரார்வீதி முழவார்விழவின் ஒலியுந்திசைசெல்ல
      சீரார்கோலம் பொலியும்நறையூர சித்தீச்சரத்தாரே. 1.71.5
      770 நீண்டசடையர் நிரைகொள்கொன்றை விரைகொள்மலர்மாலை
      தூண்டுசுடர்பொன் னொளிகொள்மேனி பவளத்தெழிலார்வ
      தீண்டுமாடம் எழிலார்சோலை இலங்குகோபுர
      தீண்டுமதி திகழும்நறையூர சித்தீச்சரத்தாரே. 1.71.6
      771 குழலார்சடையர் கொக்கின்இறகர் கோலநிறமத்த
      தழலார்மேனி தவளநீற்றர் சரிகோவணக்கீளர்
      எழிலார்நாகம் புலியினுடைமேல் இசைத்துவிடையேறி
      கழலார்சிலம்பு புலம்பவருவார் சித்தீச்சரத்தாரே. 1.71.7
      772 கரையார்கடல்சூழ் இலங்கைமன்னன் கயிலைமலைதன்னை
      வரையார்தோளா லெடுக்கமுடிகள் நெரித்துமனமொன்றி
      உரையார்கீதம் பாடநல்ல வுலப்பிலருள்செய்தார்
      திரையார்புனல்சூழ் செல்வநறையூர சித்தீச்சரத்தாரே. 1.71.8
      773 நெடியான்பிரமன் நேடிக்காணார் நினைப்பார்மனத்தாராய்
      அடியாரவரும் அருமாமறையும் அண்டத்தமரரும்
      முடியால்வணங்கி குணங்களேத்தி முதல்வாஅருளென்ன
      செடியார்செந்நெல் திகழும்நறையூர சித்தீச்சரத்தாரே. 1.71.9
      774 நின்றுண்சமணர் இருந்துண்தேரர் நீண்டபோர்வையார்
      ஒன்றுமுணரா ஊமர்வாயில் உரைகேட்டுழல்வீர்காள்
      கன்றுண்பயப்பா லுண்ணமுலையில் கபாலமயல்பொழி
      சென்றுண்டார்ந்து சேரும்நறையூர சித்தீச்சரத்தாரே. 1.71.10
      775 குயிலார்கோல மாதவிகள் குளிர்பூஞ்சுரபுன்னை
      செயிலார்பொய்கை சேரும்நறையூர சித்தீச்சரத்தாரை
      மயிலார்சோலை சூழ்ந்தகாழி மல்குசம்பந்தன்
      பயில்வார்க்கினிய பாடல்வல்லார் பாவநாசமே. 1.71.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      1.72 திருக்குடந்தைக்காரோணம்
      பண் - தக்கேசி
      776 வாரார்கொங்கை மாதோர்பாக மாகவார்சடை
      நீரார்கங்கை திங்கள்சூடி நெற்றிஒற்றைக்கண்
      கூரார்மழுவொன் றேந்தியந்தண் குழகன்குடமூக்கிற்
      காரார்கண்ட தெண்டோ ளெந்தை காரோணத்தாரே. 1.72.1
      777 முடியார்மன்னர் மடமான்விழியார் மூவுலகும்மேத்தும்
      படியார்பவள வாயார்பலரும் பரவிப்பணிந்தேத்த
      கொடியார்விடையார் மாடவீதி குடந்தைக்குழகாருங்
      கடியார்சோலை கலவமயிலார் காரோணத்தாரே. 1.72.2
      778 மலையார்மங்கை பங்கரங்கை அனலர்மடலாருங்
      குலையார்தெங்கு குளிர்கொள்வாழை யழகார்குடமூக்கின்
      முலையாரணிபொன் முளைவெண்ணகையார் மூவாமதியினார்
      கலையார்மொழியார் காதல்செய்யுங் காரோணத்தாரே. 1.72.3
      779 போதார்புனல்சேர் கந்தமுந்தி பொலியவ்வழகாரு
      தாதார்பொழில்சூழ தெழிலார்புறவி லந்தண்குடமூக்கின்
      மாதார்மங்கை பாகமாக மனைகள்பலிதேர்வார்
      காதார்குழையர் காளகண்டர் காரோணத்தாரே. 1.72.4
      780 பூவார்பொய்கை அலர்தாமரைசெங் கழுநீர்புறவெல்லா
      தேவார்சிந்தை அந்தணாளர் சீராலடிபோற்ற
      கூவார்குயில்கள் ஆலும்மயில்கள் இன்சொற்கிளிப்பிள்ளை
      காவார்பொழில்சூழ தழகார்குடந்தை காரோணத்தாரே. 1.72.5
      781 மூப்பூர்நலிய நெதியார்விதியாய் முன்னேஅனல்வாளி
      கோப்பார்பார்த்தன் நிலைகண்டருளுங் குழகர்குடமூக்கில்
      தீர்ப்பாருடலில் அடுநோயவலம் வினைகள்நலியாமை
      காப்பார்காலன் அடையாவண்ணங் காரோணத்தாரே. 1.72.6
      782 ஊனார்தலைகை யேந்தியுலகம் பலிதேர்ந்துழல்வாழ்க்கை
      மானார்தோலார் புலியினுடையார் கரியினுரிபோர்வை
      தேனார்மொழியார் திளைத்தங்காடி திகழுங்குடமூக்கிற்
      கானார்நட்டம் உடையார்செல்வ காரோணத்தாரே. 1.72.7
      783 வரையார்திரள்தோள் மதவாளரக்கன் எடுப்பமலைசேரும்
      விரையார்பாதம் நுதியாலூன்ற நெரிந்துசிரம்பத்தும்
      உரையார்கீதம் பாடக்கேட்டங் கொளிவாள்கொடுத்தாருங்
      கரையார்பொன்னி சூழ்தண்குடந்தை காரோணத்தாரே. 1.72.8
      784 கரியமாலுஞ் செய்யபூமேல் அயனுங்கழறிப்போய்
      அரியவண்ட தேடிப்புக்கும் அளக்கவொண்கிலார்
      தெரியவரிய தேவர்செல்வ திகழுங்குடமூக்கிற்
      கரியகண்டர் காலகாலர் காரோணத்தாரே. 1.72.9
      785 நாணார்அமணர் நல்லதறியார் நாளுங்குரத்திகள்
      பேணார்தூய்மை மாசுகழியார் பேசேலவரோடுஞ்
      சேணார்மதிதோய் மாடமல்கு செல்வநெடுவீதி
      கோணாகரமொன் றுடையார்குடந்தை காரோணத்தாரே. 1.72.10
      786 கருவார்பொழில்சூழ தழகார்செல்வ காரோணத்தாரை
      திருவார்செல்வம் மல்குசண்பை திகழுஞ்சம்பந்தன்
      உருவார்செஞ்சொல் மாலையிவைப துரைப்பாருலகத்து
      கருவாரிடும்பை பிறப்பதறுத்து கவலைகழிவாரே. 1.72.11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - சோமநாதர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      1.73 திருக்கானூர்
      பண் - தக்கேசி
      787 வானார்சோதி மன்னுசென்னி வன்னிபுனங்கொன்றை
      தேனார்போது தானார்கங்கை திங்களொடுசூடி
      மானேர்நோக்கி கண்டங்குவப்ப மாலையாடுவார்
      கானூர்மேய கண்ணார்நெற்றி ஆனூர் செல்வரே. 1.73.1
      788 நீந்தலாகா வெள்ளமூழ்கு நீள்சடைதன்மேலோர்
      ஏய்ந்தகோணற் பிறையோடரவு கொன்றையெழிலார
      போந்தமென்சொல் இன்பம்பயந்த மைந்தரவர்போலாங்
      காந்தள்விம்மு கானூர்மேய சாந்தநீற்றாரே. 1.73.2
      789 சிறையார்வண்டு தேனும்விம்மு செய்யமலர்க்கொன்றை
      மறையார்பாட லாடலோடு மால்விடைமேல்வருவார்
      இறையார்வந்தென் இல்புகுந்தென் எழில்நலமுங்கொண்டார்
      கறையார்சோலை கானூர்மேய பிறையார்சடையாரே. 1.73.3
      790 விண்ணார்திங்கள் கண்ணிவெள்ளை மாலையதுசூடி
      தண்ணாரக்கோ டாமைபூண்டு தழைபுன்சடைதாழ
      எண்ணாவந்தென் இல்புகுந்தங் கெவ்வநோய்செய்தான்
      கண்ணார்சோலை கானூர்மேய விண்ணோர்பெருமானே. 1.73.4
      791 தார்கொள்கொன்றை கண்ணியோடு தண்மதியஞ்சூடி
      சீர்கொள்பாட லாடலோடு சேடராய்வந்து
      ஊர்கள்தோறும் ஐயம்ஏற்றென் னுள்வெந்நோய்செய்தார்
      கார்கொள்சோலை கானூர்மேய கறைக்கண்டத்தாரே. 1.73.5
      792 முளிவெள்ளெலும்பு நீறுநூலும் மூழ்குமார்பராய்
      எளிவந்தார்போல் ஐயமென்றென் இல்லேபுகுந்துள்ள
      தெளிவுநாணுங் கொண்டகள்வர் தேறலார்பூவில்
      களிவண்டியாழ்செய் கானூர்மேய ஒளிவெண்பிறையாரே. 1.73.6
      793 மூவாவண்ணர் முளைவெண்பிறையர் முறுவல்செய்திங்கே
      பூவார்கொன்றை புனைந்துவந்தார் பொக்கம்பலபேசி
      போவார்போல மால்செய்துள்ளம் புக்கபுரிநூலர்
      தேவார்சோலை கானூர்மேய தேவதேவரே. 1.73.7
      794 தமிழின்நீர்மை பேசித்தாளம் வீணைபண்ணிநல்ல
      முழவம்மொந்தை மல்குபாடல் செய்கையிடமோவார்
      குமிழின்மேனி தந்துகோல நீர்மையதுகொண்டார்
      கமழுஞ்சோலை கானூர்மேய பவளவண்ணரே. 1.73.8
      795 அந்தமாதி அயனுமாலும் ஆர்க்குமறிவரியான்
      சிந்தையுள்ளும் நாவின்மேலுஞ் சென்னியுமன்னினான்
      வந்தென்னுள்ளம் புகுந்துமாலை காலையாடுவான்
      கந்தமல்கு கானூர்மேய எந்தைபெம்மானே. 1.73.9
      796 ஆமையரவோ டேனவெண்கொம் பக்குமாலைபூண்
      டாமோர்கள்வர் வெள்ளர்போல உள்வெந்நோய்செய்தார்
      ஓமவேத நான்முகனுங் கோணாகணையானுஞ்
      சேமமாய செல்வர்கானூர் மேயசேடரே. 1.73.10
      797 கழுதுதுஞ்சுங் கங்குலாடுங் கானூர்மேயானை
      பழுதில்ஞான சம்பந்தன்சொல் பத்தும்பாடியே
      தொழுதுபொழுது தோத்திரங்கள் சொல்லித்துதித்துநின்
      றழுதுநக்கும் அன்புசெய்வார் அல்லலறுப்பாரே. 1.73.11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - செம்மேனிநாயகர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      1.74 திருப்புறவம்
      பண் - தக்கேசி
      798 நறவநிறைவண் டறைதார்க்கொன்றை நயந்துநயனத்தால்
      சுறவஞ்செறிவண் கொடியோனுடலம் பொடியாவிழிசெய்தான்
      புறவமுறைவண் பதியாமதியார் புரமூன்றெரிசெய்த
      இறைவனறவன் இமையோரேத்த உமையோடிருந்தானே. 1.74.1
      799 உரவன்புலியின் உரிதோலாடை உடைமேல்படநாகம்
      விரவிவிரிபூங் கச்சாவசைத்த விகிர்தன்னுகிர்தன்னால்
      பொருவெங்களிறு பிளிறவுரித்து புறவம்பதியாக
      இரவும்பகலும் இமையோரேத்த உமையோடிருந்தானே. 1.74.2
      800 பந்தமுடைய பூதம்பாட பாதஞ்சிலம்பார
      கந்தமல்கு குழலிகாண கரிகாட்டெரியாடி
      அந்தண்கடல்சூழ தழகார்புறவம் பதியாவமர்வெய்தி
      எந்தம்பெருமான் இமையோரேத்த உமையோடிருந்தானே. 1.74.3
      801 நினைவார்நினைய இனியான்பனியார் மலர்தூய்நித்தலுங்
      கனையார்விடையொன் றுடையான்கங்கை திங்கள்கமழ்கொன்றை
      புனைவார்சடையின் முடியான்கடல்சூழ் புறவம்பதியாக
      எனையாளுடையான் இமையோரேத்த உமையோடிருந்தானே. 1.74.4
      802 செங்கண்அரவும் நகுவெண்டலையும் முகிழ்வெண்திங்களு
      தங்குசடையன் விடையனுடையன் சரிகோவணஆடை
      பொங்குதிரைவண் கடல்சூழ்ந்தழகார் புறவம்பதியாக
      எங்கும்பரவி இமையோரேத்த உமையோடிருந்தானே. 1.74.5
      803 பின்னுசடைகள் தாழக்கேழல் எயிறுபிறழப்போய்
      அன்னநடையார் மனைகள்தோறும் அழகார்பலிதேர்ந்து
      புன்னைமடலின் பொழில்சூழ்ந்தழகார் புறவம்பதியாக
      என்னையுடையான் இமையோரேத்த உமையோடிருந்தானே. 1.74.6
      804 உண்ணற்கரிய நஞ்சையுண் டொருதோழந்தேவர்
      விண்ணிற்பொலிய அமுதமளித்த விடைசேர்கொடியண்ணல்
      பண்ணிற்சிறைவண் டறைபூஞ்சோலை புறவம்பதியாக
      எண்ணிற்சிறந்த இமையோரேத்த உமையோடிருந்தானே. 1.74.7
      805 விண்டானதிர வியனார்கயிலை வேரோடெடுத்தான்றன்
      திண்டோ ளுடலும் முடியுநெரி சிறிதேயூன்றிய
      புண்டானொழிய அருள்செய்பெருமான் புறவம்பதியாக
      எண்டோ ளுடையான் இமையோரேத்த உமையோடிருந்தானே. 1.74.8
      806 நெடியான்நீள்தா மரைமேலயனும் நேடிக்காண்கில்லா
      படியாமேனி யுடையான்பவள வரைபோல்திருமார்பிற்
      பொடியார்கோலம் உடையான்கடல்சூழ் புறவம்பதியாக
      இடியார்முழவார் இமையோரேத்த உமையோடிருந்தானே. 1.74.9
      807 ஆலும்மயிலின் பீலியமணர் அறிவில்சிறுதேரர்
      கோலும்மொழிகள் ஒழியக்குழுவு தழலுமெழில்வானும்
      போலும்வடிவும் உடையான்கடல்சூழ் புறவம்பதியாக
      ஏலும்வகையான் இமையோரேத்த உமையோடிருந்தானே. 1.74.10
      808 பொன்னார்மாடம் நீடுஞ்செல்வ புறவம்பதியாக
      மின்னாரிடையாள் உமையாளோடும் இருந்தவிமலனை
      தன்னார்வஞ்செய் தமிழின்விரகன் உரைத்ததமிழ்மாலை
      பன்னாள்பாடி யாடப்பிரியார் பரலோகந்தானே. 1.74.11
      திருப்புறவம் என்பதும் சீகாழிக்கொருபெயர்.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      1.75 திருவெங்குரு
      பண் - குறிஞ்சி
      809 காலைநன் மாமலர் கொண்டடி பரவி
      கைதொழு மாணியை கறுத்தவெங் காலன்
      ஓலம திடமுன் உயிரொடு மாள
      உதைத்தவ னுமையவள் விருப்பனெம் பெருமான்
      மாலைவ தணுக ஓதம்வ துலவி
      மறிதிரை சங்கொடு பவளம்முன் உந்தி
      வேலைவ தணையுஞ் சோலைகள் சூழ்ந்த
      வெங்குரு மேவியுள் வீற்றிரு தாரே. 1.75.1
      810 பெண்ணினை பாகம் அமர்ந்துசெஞ் சடைமேற்
      பிறையொடும் அரவினை யணி தழகாக
      பண்ணினை பாடி யாடிமுன் பலிகொள்
      பரமரெம் மடிகளார் பரிசுகள் பேணி
      மண்ணினை மூடி வான்முக டேறி
      மறிதிரை கடல்முக தெடுப்பமற் றுயர்ந்து
      விண்ணள வோங்கி வந்திழி கோயில்
      வெங்குரு மேவியுள் வீற்றிரு தாரே. 1.75.2
      811 ஓரியல் பில்லா உருவம தாகி
      ஒண்டிறல் வேடன துருவது கொண்டு
      காரிகை காண தனஞ்சயன் றன்னை
      கறுத்தவற் களித்துடன் காதல்செய் பெருமான்
      நேரிசை யாக அறுபத முரன்று
      நிரைமலர தாதுகள் மூசவிண் டுதிர்ந்து
      வேரிக ளெங்கும் விம்மிய சோலை
      வெங்குரு மேவியுள் வீற்றிரு தாரே. 1.75.3
      812 வண்டணை கொன்றை வன்னியு மத்தம்
      மருவிய கூவிளம் எருக்கொடு மிக்க
      கொண்டணி சடையர் விடையினர் பூதங்
      கொடுகொட்டி குடமுழா கூடியு முழவ
      பண்டிகழ் வாக பாடியோர் வேதம்
      பயில்வர்முன் பாய்புனற் கங்கையை சடைமேல்
      வெண்பிறை சூடி உமையவ ளோடும்
      வெங்குரு மேவியுள் வீற்றிரு தாரே. 1.75.4
      813 சடையினர் மேனி நீறது பூசி
      தக்கைகொள் பொக்கண மிட்டுட னா
      கடைதொறும் வந்து பலியது கொண்டு
      கண்டவர் மனமவை கவர தழகாக
      படையது ஏந்தி பைங்கயற் கண்ணி
      உமையவள் பாகமு மமர்ந்தருள் செய்து
      விடையொடு பூதஞ் சூழ்தர சென்று
      வெங்குரு மேவியுள் வீற்றிரு தாரே. 1.75.5
      814 கரைபொரு கடலில் திரையது மோத
      கங்குல்வ தேறிய சங்கமு மிப்பி
      உரையுடை முத்தம் மணலிடை வைகி
      ஓங்குவா னிருளற துரப்பவெண் டிசையும்
      புரைமலி வேதம் போற்றுபூ சுரர்கள்
      புரிந்தவர் நலங்கொள்ஆ குதியினில் நிறைந்த
      விரைமலி தூபம் விசும்பினை மறைக்கும்
      வெங்குரு மேவியுள் வீற்றிரு தாரே. 1.75.6
      815 வல்லிநுண் ணிடையாள் உமையவள் தன்னை
      மறுகிட வருமத களிற்றினை மயங்க
      ஒல்லையிற் பிடித்தங் குரித்தவள் வெருவல்
      கெடுத்தவர் விரிபொழில் மிகுதிரு ஆலில்
      நல்லற முரைத்து ஞானமோ டிருப்ப
      நலிந்திட லுற்று வந்தவ கருப்பு
      வில்லியை பொடிபட விழித்தவர் விரும்பி
      வெங்குரு மேவியுள் வீற்றிரு தாரே. 1.75.7
      816 பாங்கிலா வரக்கன் கயிலைஅன் றெடு
      பலதலை முடியொடு தோளவை நெரிய
      ஓங்கிய விரலால் ஊன்றியன் றவற்கே
      ஒளிதிகழ் வாளது கொடு தழகாய
      கோங்கொடு செருந்தி கூவிள மத்தம்
      கொன்றையுங் குலாவிய செஞ்சடை செல்வர்
      வேங்கைபொன் மலரார் விரைதரு கோயில்
      வெங்குரு மேவியுள் வீற்றிரு தாரே. 1.75.8
      817 ஆறுடை சடையெம் அடிகளை காண
      அரியொடு பிரமனும் அளப்பதற் காகி
      சேறிடை திகழ்வா னத்திடை புக்குஞ்
      செலவற தவிர்ந்தனர் எழிலுடை திகழ்வெண்
      நீறுடை கோல மேனியர் நெற்றி
      கண்ணினர் விண்ணவர் கைதொழு தேத்த
      வேறெமை யாள விரும்பிய விகிர்தர்
      வெங்குரு மேவியுள் வீற்றிரு தாரே. 1.75.9
      818 பாடுடை குண்டர் சாக்கியர் சமணர்
      பயில்தரு மறவுரை விட்டழ காக
      ஏடுடை மலராள் பொருட்டு வன்தக்கன்
      எல்லையில் வேள்வியை தகர்த்தருள் செய்து
      காடிடை கடிநாய் கலந்துடன் சூழ
      கண்டவர் வெருவுற விளித்து வெய்தாய
      வேடுடை கோலம் விரும்பிய விகிர்தர்
      வெங்குரு மேவியுள் வீற்றிரு தாரே. 1.75.10
      819 விண்ணியல் விமானம் விரும்பிய பெருமான்
      வெங்குரு மேவியுள் வீற்றிரு தாரை
      நண்ணிய நூலன் ஞானச ம்பந்தன்
      நவின்றயிவ் வாய்மொழி நலம்மிகு பத்தும்
      பண்ணியல் பாக பத்திமை யாலே
      பாடியு மாடியும் பயில வல்லார்கள்
      விண்ணவர் விமானங் கொடுவர வேறி
      வியனுல காண்டுவீற் றிருப்பவர் தாமே. 1.75.11
      இதுவுஞ் சீகாழிக்குப்பெயர்.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      1.76 திரு இலம்பையங்கோட்டூர்
      பண் - குறிஞ்சி
      820 மலையினார் பருப்பத துருத்தி மாற்பேறு
      மாசிலா சீர்மறை காடுநெ தானம்
      நிலையினான் எனதுரை தனதுரை யாக
      நீறணி தேறுக தேறிய நிமலன்
      கலையினார் மடப்பிணை துணையொடு துயில
      கானலம் பெடைபுல்கி கணமயி லாலும்
      இலையினார் பைம்பொழில் இலம்பையங் கோட்டூர்
      இருக்கையா பேணியென் எழில்கொள்வ தியல்பே. 1.76.1
      821 திருமலர கொன்றையான் நின்றியூர் மேயான்
      தேவர்கள் தலைமகன் திருக்கழி பாலை
      நிருமல னெனதுரை தனதுரை யாக
      நீறணி தேறுக தேறிய நிமலன்
      கருமலர கமழ்சுனை நீள்மலர குவளை
      கதிர்முலை யிளையவர் மதிமுக துலவும்
      இருமலர தண்பொய்கை இலம்பையங் கோட்டூர்
      இருக்கையா பேணியென் எழில்கொள்வ தியல்பே. 1.76.2
      822 பாலனாம் விருத்தனாம் பசுபதி தானாம்
      பண்டுவெங் கூற்றுதை தடியவர கருளுங்
      காலனாம் எனதுரை தனதுரை யா
      கனலெரி யங்கையில் ஏந்திய கடவுள்
      நீலமா மலர்ச்சுனை வண்டுபண் செய்ய
      நீர்மலர குவளைகள் தாதுவிண் டோ ங்கும்
      ஏலம்நா றும்பொழில் இலம்பையங் கோட்டூர்
      இருக்கையா பேணியென் எழில்கொள் வதியல்பே. 1.76.3
      823 உளங்கொள்வார் உச்சியார் கச்சியே கம்பன்
      ஒற்றியூ ருறையுமண் ணாமலை யண்ணல்
      விளம்புவா னெனதுரை தனதுரை யாக
      வெள்ளநீர் விரிசடை தாங்கிய விமலன்
      குளம்புற கலைதுள மலைகளுஞ் சிலம்ப
      கொழுங்கொடி யெழுந்தெங்குங் கூவிளங் கொள்ள
      இளம்பிறை தவழ்பொழில் இலம்பையங் கோட்டூர்
      இருக்கையா பேணியென் எழில்கொள்வ தியல்பே. 1.76.4
      824 தேனுமா யமுதமா தெய்வமு தானா
      தீயொடு நீருடன் வாயுவா தெரியில்
      வானுமா மெனதுரை தனதுரை யாக
      வரியரா வரைக்கசை துழிதரு மைந்தன்
      கானமான் வெருவுற கருவிர லூகங்
      கடுவனோ டுகளுமூர் கற்கடுஞ் சாரல்
      ஏனமா னுழிதரும் இலம்பையங் கோட்டூர்
      இருக்கையா பேணியென் எழில்கொள்வ தியல்பே. 1.76.5
      825 மனமுலாம் அடியவர கருள்புரி கின்ற
      வகையலாற் பலிதிரி துண்பிலான் மற்றோர்
      தனமிலா னெனதுரை தனதுரை யாக
      தாழ்சடை யிளமதி தாங்கிய தலைவன்
      புனமெலாம் அருவிகள் இருவிசேர் முத்தம்
      பொன்னொடு மணிகொழி தீண்டிவ தெங்கும்
      இனமெலாம் அடைகரை இலம்பையங் கோட்டூர்
      இருக்கையா பேணியென் எழில்கொள்வ தியல்பே. 1.76.6
      826 நீருளான் தீயுளான் அந்தர துள்ளான்
      நினைப்பவர் மனத்துளான் நித்தமா ஏத்தும்
      ஊருளான் எனதுரை தனதுரை யாக
      ஒற்றைவெள் ளேறுக தேறிய வொருவன்
      பாருளார் பாடலோ டாடல றாத
      பண்முரன் றஞ்சிறை வண்டினம் பாடும்
      ஏருளார் பைம்பொழில் இலம்பையங் கோட்டூர்
      இருக்கையா பேணியென் எழில்கொள்வ தியல்பே. 1.76.7
      827 வேருலா மாழ்கடல் வருதிரை யிலங்கை
      வேந்தன தடக்கைகள் அடர்த்தவ னுலகில்
      ஆருலா மெனதுரை தனதுரை யாக
      ஆகமோ ரரவணி துழிதரு மண்ணல்
      வாருலா நல்லன மாக்களுஞ் சார
      வாரண முழிதரும் மல்லலங் கானல்
      ஏருலாம் பொழிலணி இலம்பையங் கோட்டூர்
      இருக்கையா பேணியென் எழில்கொள்வ தியல்பே. 1.76.8
      828 கிளர்மழை தாங்கினான் நான்முக முடையோன்
      கீழடி மேல்முடி தேர்ந்தள கில்லா
      உளமழை யெனதுரை தனதுரை யாக
      வொள்ளழல் அங்கையி லேந்திய வொருவன்
      வளமழை யெனக்கழை வளர்துளி சோர
      மாசுண முழிதரு மணியணி மாலை
      இளமழை தவழ்பொழில் இலம்பையங் கோட்டூர்
      இருக்கையா பேணியென் எழில்கொள்வ தியல்பே. 1.76.9
      829 உரிஞ்சன கூறைகள் உடம்பின ராகி
      உழிதரு சமணருஞ் சாக்கி பேய்கள்
      பெருஞ்செல்வ னெனதுரை தனதுரை யாக
      பெய்பலி கென்றுழல் பெரியவர் பெருமான்
      கருஞ்சுனை முல்லைநன் பொன்னடை வேங்கை
      களிமுக வண்டொடு தேனின முரலும்
      இருஞ்சுனை மல்கிய இலம்பையங் கோட்டூர்
      இருக்கையா பேணியென் எழில்கொள்வ தியல்பே. 1.76.10
      830 கந்தனை மலிகனை கடலொலி யோதங்
      கானலங் கழிவளர் கழுமல மென்னும்
      நந்தியா ருறைபதி நால்மறை நாவன்
      நற்றமிழ கின்துணை ஞானசம் பந்தன்
      எந்தையார் வளநகர் இலம்பையங் கோட்டூர்
      இசையொடு கூடிய பத்தும்வல் லார்போய்
      வெந்துயர் கெடுகிட விண்ணவ ரோடும்
      வீடுபெற் றிம்மையின் வீடெளி தாமே. 1.76.11
      இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - சந்திரசேகரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      1.77 திருஅச்சிறுபாக்கம்
      பண் - குறிஞ்சி
      831 பொன்றிரண் டன்ன புரிசடை புரள
      பொருகடற் பவளமொ டழல்நிறம் புரை
      குன்றிரண் டன்ன தோளுடை யகலங்
      குலாயவெண் ணூலொடு கொழும்பொடி யணிவர்
      மின்றிரண் டன்ன நுண்ணிடை யரிவை
      மெல்லிய லாளையோர் பாகமா பேணி
      அன்றிரண் டுருவ மாயவெம் அடிகள்
      அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே. 1.77.1
      832 தேனினு மினியர் பாலன நீற்றர்
      தீங்கரும் பனையர்த திருவடி தொழுவார்
      ஊன துருக உவகைகள் தருவார்
      உச்சிமே லுறைபவர் ஒன்றலா தூரார்
      வானக மிறந்து வையகம் வணங்க
      வயங்கொள நிற்பதோர் வடிவினை யுடையார்
      ஆனையி னுரிவை போர்த்தவெம் மடிகள்
      அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே. 1.77.2
      833 காரிரு ளுருவ மால்வரை புரை
      களிற்றின துரிவைகொண் டரிவைமே லோடி
      நீருரு மகளை நிமிர்சடை தாங்கி
      நீறணி தேறுக தேறிய நிமலர்
      பேரரு ளாளர் பிறவியில் சேரார்
      பிணியிலர் கேடிலர் பேய்க்கணஞ் சூழ
      ஆரிருள் மாலை ஆடுமெம் மடிகள்
      அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே. 1.77.3
      834 மைம்மலர கோதை மார்பின ரெனவும்
      மலைமக ளவளொடு மருவின ரெனவும்
      செம்மலர பிறையுஞ் சிறையணி புனலுஞ்
      சென்னிமே லுடையரெஞ்
      தம்மல ரடியொன் றடியவர் பரவ
      தமிழ்ச்சொலும் வடசொலு தாள்நிழற் சேர
      அம்மலர கொன்றை யணிந்த வெம்மடிகள்
      அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே. 1.77.4
      835 விண்ணுலா மதியஞ் சூடின ரெனவும்
      விரிசடை யுள்ளது வெள்ளநீ ரெனவும்
      பண்ணுலாம் மறைகள் பாடின ரெனவும்
      பலபுக ழல்லது பழியில ரெனவும்
      எண்ணலா காத இமையவர் நாளும்
      ஏத்தர வங்களோ டெழில்பெற நின்ற
      அண்ணலா னூர்தி ஏறுமெம் மடிகள்
      அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே. 1.77.5
      836 நீடிருஞ் சடைமேல் இளம்பிறை துளங்க
      நிழல்திகழ் மழுவொடு நீறுமெய் பூசி
      தோடொரு காதினிற் பெய்துவெய் தாய
      சுடலையி லாடுவர் தோலுடை யா
      காடரங் கா கங்குலும் பகலுங்
      கழுதொடு பாரிடங் கைதொழு தேத்த
      ஆடர வாட ஆடுமெம் மடிகள்
      அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே. 1.77.6
      837 ஏறுமொன் றேறி நீறுமெய் பூசி
      இளங்கிளை யரிவையொ டொருங்குட னாகி
      கூறுமொன் றருளி கொன்றை தாருங்
      குளிரிள மதியமுங் கூவிள மலரும்
      நாறுமல் லிகையும் எருக்கொடு முருக்கும்
      மகிழிள வன்னியும் இவைநலம் பகர
      ஆறுமோர் சடைமேல் அணிந்த வெம்மடிகள்
      அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே. 1.77.7
      838 கச்சும்ஒள் வாளுங் கட்டிய வுடையர்
      கதிர்முடி சுடர்விட கவரியுங் குடையும்
      பிச்சமும் பிறவும் பெண்ணணங் காய
      பிறைநுத லவர்தமை பெரியவர் பேண
      பச்சமும் வலியுங் கருதிய வரக்கன்
      பருவரை யெடுத்ததிண் டோ ள்களை யடர்வி
      தச்சமும் அருளுங் கொடுத்த வெம்மடிகள்
      அச்சிறு பாக்கம தாட்சி கொண்டாரே. 1.77.8
      839 நோற்றலா ரேனும் வேட்டலா
      நுகர்புகர் சாந்தமோ டேந்திய மாலை
      கூற்றலா ரேனும் இன்னவா றென்றும்
      எய்தலா காததோர் இயல்பினை யுடையார்
      தோற்றலார் மாலும் நான்முக முடைய
      தோன்றலும் அடியொடு முடியுற தங்கள்
      ஆற்றலாற் காணா ராயவெம் மடிகள்
      அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே. 1.77.9
      840 வாதுசெய் சமணுஞ் சாக்கியப்பேய்கள்
      நல்வினை நீக்கிய வல்வினை யாளர்
      ஓதியுங் கேட்டும் உணர்வினை யிலாதார்
      உள்கலா காததோர் இயல்பினை யுடையார்
      வேதமும் வேத நெறிகளு மாகி
      விமலவே டத்தொடு கமலமா மதிபோல்
      ஆதியும் ஈறும் ஆயவெம் மடிகள்
      அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே. 1.77.10
      841 மைச்செறி குவளை தவளைவாய் நிறைய
      மதுமலர பொய்கையிற் புதுமலர் கிழி
      பச்சிற வெறிவயல் வெறிகமழ் காழி
      பதியவ ரதிபதி கவுணியர் பெருமான்
      கைச்சிறு மறியவன் கழலலாற் பேணா
      கருத்துடை ஞானசம் பந்தன தமிழ்கொண்
      டச்சிறு பாக்க தடிகளை யேத்தும்
      அன்புடை யடியவர் அருவினை யிலரே. 1.77.11
      இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - பாக்கபுரேசர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      1.78 திரு இடைச்சுரம்
      பண் - குறிஞ்சி
      842 வரிவள ரவிரொளி யரவரை தாழ
      வார்சடை முடிமிசை வளர்மதி சூடி
      கரிவளர் தருகழல் கால்வல னேந்தி
      கனலெரி யாடுவர் காடரங் காக
      விரிவளர் தருபொழில் இனமயி லால
      வெண்ணிற தருவிகள் திண்ணென வீழும்
      எரிவள ரினமணி புனமணி சாரல்
      இடைச்சுர மேவிய இவர்வண மென்னே. 1.78.1
      843 ஆற்றையு மேற்றதோர் அவிர்சடை யுடையர்
      அழகினை யருளுவர் குழகல தறியார்
      கூற்றுயிர் செகுப்பதோர் கொடுமையை யுடையர்
      நடுவிரு ளாடுவர் கொன்றை தாரார்
      சேற்றயல் மிளிர்வன கயலிள வாளை
      செருச்செய வோர்ப்பன செம்முக மந்தி
      ஏற்றையொ டுழிதரும் எழில்திகழ் சாரல்
      இடைச்சுர மேவிய இவர்வண மென்னே. 1.78.2
      844 கானமுஞ் சுடலையுங் கற்படு நிலனுங்
      காதலர் தீதிலர் கனல்மழு வாளர்
      வானமும் நிலமையும் இருமையு மானார்
      வணங்கவும் இணங்கவும் வாழ்த்தவும் படுவார்
      நானமும் புகையொளி விரையொடு கமழ
      நளிர்பொழி லிளமஞ்ஞை மன்னிய பாங்கர்
      ஏனமும் பிணையலும் எழில்திகழ் சாரல்
      இடைச்சுர மேவிய இவர்வண மென்னே. 1.78.3
      845 கடமணி மார்பினர் கடல்தனி லுறைவார்
      காதலர் தீதிலர் கனல்மழு வாளர்
      விடமணி மிடறினர் மிளிர்வதோ ரரவர்
      வேறுமோர் சரிதையர் வேடமும் உடையர்
      வடமுலை யயலன கருங்குரு தேறி
      வாழையின் தீங்கனி வார்ந்து தேனட்டும்
      இடமுலை யரிவையர் எழில்திகழ் சாரல்
      இடைச்சுர மேவிய இவர்வண மென்னே. 1.78.4
      844 கார்கொண்ட கடிகமழ் விரிமலர கொன்றை
      கண்ணியர் வளர்மதி கதிர்விட கங்கை
      நீர்கொண்ட சடையினர் விடையுயர் கொடியர்
      நிழல்திகழ் மழுவினர் அழல்திகழ் நிறத்தர்
      சீர்கொண்ட மென்சிறை வண்டுபண் செய்யுஞ்
      செழும்புன லனையன செங்குலை வாழை
      ஏர்கொண்ட பலவினொ டெழில்திகழ் சாரல்
      இடைச்சுர மேவிய இவர்வண மென்னே. 1.78.5
      845 தோடணி குழையினர் சுண்ணவெண் ணீற்றர்
      சுடலையி னாடுவர் தோலுடை யாக
      பீடுயர் செய்ததோர் பெருமையை யுடையர்
      பேயுட னாடுவர் பெரியவர் பெருமான்
      கோடல்கள் ஒழுகுவ முழுகுவ தும்பி
      குரவமும் மரவமும் மன்னிய பாங்கர்
      ஏடவிழ் புதுமலர் கடிகமழ் சாரல்
      இடைச்சுர மேவிய இவர்வண மென்னே. 1.78.6
      846 கழல்மல்கு காலினர் வேலினர் நூலர்
      கவர்தலை யரவொடு கண்டியும் பூண்பர்
      அழல்மல்கு மெரியொடும் அணிமழு வேந்தி
      ஆடுவர் பாடுவர் ஆரணங் குடையர்
      பொழில்மல்கு நீடிய அரவமு மரவம்
      மன்னிய கவட்டிடை புணர்குயி லாலும்
      எழில்மல்கு சோலையில் வண்டிசை பாடும்
      இடைச்சுர மேவிய இவர்வண மென்னே. 1.78.7
      847 தேங்கமழ் கொன்றை திருமலர் புனைவார்
      திகழ்தரு சடைமிசை திங்களுஞ் சூடி
      வீந்தவர் சுடலைவெண் ணீறுமெய் பூசி
      வேறுமோர் சரிதையர் வேடமு முடையர்
      சாந்தமும் அகிலொடு முகில்பொதி தலம்பி
      தவழ்கன மணியொடு மிகுபளிங் கிடறி
      ஏந்துவெள் ளருவிகள் எழில்திகழ் சாரல்
      இடைச்சுர மேவிய இவர்வண மென்னே. 1.78.8
      850 பலஇலம் இடுபலி கையிலொன் றேற்பர்
      பலபுக ழல்லது பழியிலர் தாமு
      தலையிலங் கவிரொளி நெடுமுடி யரக்கன்
      தடக்கைகள் அடர்த்ததோர் தன்மையை யுடையர்
      மலையிலங் கருவிகள் மணமுழ வதிர
      மழைதவ ழிளமஞ்ஞை மல்கிய சாரல்
      இலைஇல வங்கமும் ஏலமுங் கமழும்
      இடைச்சுர மேவிய இவர்வண மென்னே. 1.78.9
      851 பெருமைகள் தருக்கியோர் பேதுறு கின்ற
      பெருங்கடல் வண்ணனும் பிரமனு மோரா
      அருமையர் அடிநிழல் பரவிநின் றேத்தும்
      அன்புடை யடியவர கணியரு மாவர்
      கருமைகொள் வடிவொடு சுனைவளர் குவளை
      கயலினம் வயலிள வாளைகள் இரிய
      எருமைகள் படிதர இளஅனம் ஆலும்
      இடைச்சுர மேவிய இவர்வண மென்னே. 1.78.10
      852 மடைச்சுர மறிவன வாளையுங் கயலும்
      மருவிய வயல்தனில் வருபுனற் காழி
      சடைச்சுர துறைவதோர் பிறையுடை யண்ணல்
      சரிதைகள் பரவிநின் றுருகுசம் பந்தன்
      புடைச்சுர தருவரை பூக்கமழ் சாரல்
      புணர்மட நடையவர் புடையிடை யார்ந்த
      இடைச்சுர மேத்திய இசையொடு பாடல்
      இவைசொல வல்லவர் பிணியிலர் தாமே. 1.78.11
      இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - இடைச்சுரநாதர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      1.79 திருக்கழுமலம்
      பண் - குறிஞ்சி
      853 அயிலுறு படையினர் விடையினர் முடிமேல்
      அரவமும் மதியமும் விரவிய அழகர்
      மயிலுறு சாயல் வனமுலை யொருபால்
      மகிழ்பவர் வானிடை முகில்புல்கு மிடறர்
      பயில்வுறு சரிதையர் எருதுக தேறி
      பாடியு மாடியும் பலிகொள்வர் வலிசேர்
      கயிலையும் பொதியிலும் இடமென வுடையார்
      கழுமலம் நினையநம் வினைகரி சறுமே. 1.79.1
      854 கொண்டலும் நீலமும் புரைதிரு மிடறர்
      கொடுமுடி யுறைபவர் படுதலை கையர்
      பண்டல ரயன்சிரம் அரிந்தவர் பொருந்தும்
      படர்சடை யடிகளார் பதியத னயலே
      வண்டலும் வங்கமுஞ் சங்கமுஞ் சுறவும்
      மறிகடல் திரைகொணர தெற்றிய கரைமேற்
      கண்டலுங் கைதையும் நெய்தலுங் குலவுங்
      கழுமலம் நினையநம் வினைகரி சறுமே. 1.792
      855 எண்ணிடை யொன்றினர் இரண்டின ருருவம்
      எரியிடை மூன்றினர் நான்மறை யாளர்
      மண்ணிடை ஐந்தினர் ஆறின ரங்கம்
      வகுத்தன ரேழிசை எட்டிருங் கலைசேர்
      பண்ணிடை யொன்பதும் உணர்ந்தவர் பத்தர்
      பாடிநின் றடிதொழ மதனனை வெகுண்ட
      கண்ணிடை கனலினர் கருதிய கோயில்
      கழுமலம் நினையநம் வினைகரி சறுமே. 1.79.3
      856 எரியொரு கரத்தினர் இமையவர கிறைவர்
      ஏறுக தேறுவர் நீறுமெய் பூசி
      திரிதரு மியல்பினர் அயலவர் புரங்கள்
      தீயெழ விழித்தனர் வேய்புரை தோளி
      வரிதரு கண்ணிணை மடவர லஞ்ச
      மஞ்சுற நிமிர்ந்ததோர் வடிவொடும் வந்த
      கரியுரி மருவிய அடிகளு கிடமாங்
      கழுமலம் நினையநம் வினைகரி சறுமே. 1.79.4
      857 ஊரெதிர திடுபலி தலைகல னாக
      உண்பவர் விண்பொலி திலங்கிய வுருவர்
      பாரெதிர தடிதொழ விரைதரு மார்பிற்
      படஅர வாமை கணிந்தவர கிடமாம்
      நீரெதிர திழிமணி நித்தில முத்தம்
      நிரைசொரி சங்கமொ டொண்மணி வரன்றி
      காரெதிர தோதம்வன் திரைகரை கெற்றுங்
      கழுமலம் நினையநம் வினைகரி சறுமே. 1.79.5
      858 முன்னுயிர தோற்றமும் இறுதியு மாகி
      முடியுடை அமரர்கள் அடிபணி தேத்த
      பின்னிய சடைமிசை பிறைநிறை வித்த
      பேரரு ளாளனார் பேணிய கோயில்
      பொன்ணியல் நறுமலர் புனலொடு தூபஞ்
      சாந்தமு மேந்திய கையின ராகி
      கன்னியர் நாடொறும் வேடமே பரவுங்
      கழுமலம் நினையநம் வினைகரி சறுமே. 1.79.6
      859 கொலைக்கணி தாவரு கூற்றுதை செய்தார்
      குரைகழல் பணிந்தவர கருளிய பொருளின்
      நிலைக்கணி தாவர நினையவல் லார்தம்
      நெடுந்துயர் தவிர்த்தவெம் நிமலரு கிடமாம்
      மலைக்கணி தாவர வன்றிரை முரல
      மதுவிரி புன்னைகள் முத்தென வரும்ப
      கலைக்கணங் கானலின் நீழலில் வாழுங்
      கழுமலம் நினையநம் வினைகரி சறுமே. 1.79.7
      860 புயம்பல வுடையதென் இலங்கையர் வேந்தன்
      பொருவரை யெடுத்தவன் பொன்முடி திண்டோ ள்
      பயம்பல படவடர தருளிய பெருமான்
      பரிவொடு மினிதுறை கோயில தாகும்
      வியன்பல விண்ணினும் மண்ணினு மெங்கும்
      வேறுவே றுகங்களிற் பெயருள தென்ன
      கயம்பல படக்கடற் றிரைகரை கெற்றுங்
      கழுமலம் நினையநம் வினைகரி சறுமே. 1.79.8
      861 விலங்கலொன் றேந்திவன் மழைதடு தோனும்
      வெறிகமழ் தாமரை யோனுமென் றிவர்தம்
      பலங்களால் நேடியும் அறிவரி தாய
      பரிசினன் மருவிநின் றினிதுறை கோயில்
      மலங்கிவன் றிரைவரை எனப்பர தெங்கும்
      மறிகட லோங்கிவெள் ளிப்பியுஞ் சுமந்து
      கலங்கடன் சரக்கொடு நிரக்கவ தேறுங்
      கழுமலம் நினையநம் வினைகரி சறுமே. 1.79.9
      862 ஆம்பல தவமுயன் றறவுரை சொல்லும்
      அறிவிலா சமணரு தேரருங் கணிசேர்
      நோம்பல தவமறி யாதவர் நொடிந்த
      மூதுரை கொள்கிலா முதல்வர் தம்மேனி
      சாம்பலும் பூசிவெண் டலைகல னாக
      தையலா ரிடுபலி வையக தேற்று
      காம்பன தோளியொ டினிதுறை கோயில்
      கழுமலம் நினையநம் வினைகரி சறுமே. 1.79.10
      863 கலிகெழு பாரிடை யூரென வுளதாங்
      கழுமலம் விரும்பிய கோயில்கொண் டவர்மேல்
      வலிகெழு மனம்மிக வைத்தவன் மறைசேர்
      வருங்கலை ஞானசம் பந்தன தமிழின்
      ஒலிகெழு மாலையென் றுரைசெய்த பத்தும்
      உண்மையி னால்நினை தேத்தவல் லார்மேல்
      மெலிகெழு துயரடை யாவினை சிந்தும்
      விண்ணவ ராற்றலின் மிகப்பெறு வாரே. 1.79.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      1.80 கோயில்
      பண் - குறிஞ்சி
      864 கற்றாங் கெரியோம்பி கலியை வாராமே
      செற்றார் வாழ்தில்லை சிற்றம் பலமேய
      முற்றா வெண்திங்கள் முதல்வன் பாதமே
      பற்றா நின்றாரை பாவமே.
      865 பறப்பை படுத்தெங்கும் பசுவே டெரியோம்புஞ்
      சிறப்பர் வாழ்தில்லை சிற்றம் பலமேய
      பிறப்பில் பெருமானை பின்தாழ் சடையானை
      மறப்பி லார்கண்டீர் மையல் தீர்வாரே. 1.80.2
      866 மையா ரொண்கண்ணார் மாட நெடுவீதி
      கையாற் பந்தோச்சுங் கழிசூழ் தில்லையுள்
      பொய்யா மறைபாடல் புரிந்தா னுலகேத்த
      செய்யா னுறைகோயில் சிற்றம் பலந்தானே. 1.80.3
      867 நிறைவெண் கொடிமாட நெற்றி நேர்தீண்ட
      பிறைவ திறைதாக்கும் பேரம் பலந்தில்லை
      சிறைவண் டறையோவா சிற்றம் பலமேய
      இறைவன் கழலேத்தும் இன்பம் இன்பமே. 1.80.4
      868 செல்வ நெடுமாடஞ் சென்று சேண்ஓங்கி
      செல்வ மதிதோ செல்வம் உயர்கின்ற
      செல்வர் வாழ்தில்லை சிற்றம் பலமேய
      செல்வன் கழலேத்துஞ் செல்வஞ் செல்வமே. 1.80.5
      869 வருமா தளிர்மேனி மாதோர் பாகமா
      திருமா தில்லையு சிற்றம் பலமேய
      கருமான் உரியாடை கறைசேர் கண்டத்தெம்
      பெருமான் கழலல்லாற் பேணா துள்ளமே. 1.80.6
      870 அலையார் புனல்சூடி யாக தொருபாகம்
      மலையான் மகளோடு மகிழ்ந்தான் உலகேத்த
      சிலையால் எயிலெய்தான் சிற்றம் பலந்தன்னை
      தலையால் வணங்குவார் தலையா னார்களே. 1.80.7
      871 கூர்வாள் அரக்கன்றன் வலியை குறைவித்து
      சீரா லேமல்கு சிற்றம் பலமேய
      நீரார் சடையானை நித்த லேத்துவார்
      தீரா நோயெல்லா தீர்தல் திண்ணமே. 1.80.8
      872 கோணா கணையானுங் குளிர்தா மரையானுங்
      காணார் கழலேத்த கனலாய் ஓங்கினான்
      சேணார் வாழ்தில்லை சிற்றம் பலமேத்த
      மாணா நோயெல்லாம் வாளா மாயுமே. 1.80.9
      873 பட்டை துவராடை படிமங் கொண்டாடும்
      முட்டை கட்டுரை மொழிவ கேளாதே
      சிட்டர் வாழ்தில்லை சிற்றம் பலமேய
      நட்ட பெருமானை நாளு தொழுவோமே. 1.80.10
      874 ஞால துயர்காழி ஞான சம்பந்தன்
      சீல தார்கொள்கை சிற்றம் பலமேய
      சூல படையானை சொன்ன தமிழ்மாலை
      கோல தாற்பாட வல்லார் நல்லாரே. 1.80.11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - திருமூலத்தானநாயகர் சபாநாதர்
      தேவியார் - சிவகாமியம்மை.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      1.81 சீர்காழி
      பண் - குறிஞ்சி
      875 நல்லார் தீமேவு தொழிலார் நால்வேதஞ்
      சொல்லார் கேண்மையார் சுடர்பொற் கழலேத்த
      வில்லாற் புரஞ்செற்றான் மேவும் பதிபோலுங்
      கல்லார் மதில்சூழ்ந்த காழி நகர்தானே. 1.81.1
      876 துளிவண் டேன்பாயும் இதழி தூமத்த
      தெளிவெண் டிங்கள்மா சுணநீர் திகழ்சென்னி
      ஒளிவெண் டலைமாலை உகந்தா னூர்போலுங்
      களிவண்டியாழ் செய்யுங் காழி நகர்தானே. 1.81.2
      877 ஆல கோலத்தின் நஞ்சுண் டமுதத்தை
      சால தேவர்க்கீ தளித்தான் தன்மையால்
      பாலற் காய்நன்றும் பரிந்து பாதத்தால்
      காலற் காய்ந்தானூர் காழி நகர்தானே. 1.81.3
      இப்பதிகத்தில் 4567-ம்செய்யுட்கள் மறைந்துபோயின. 1.81.4-7
      878 இரவில் திரிவோர்க கிறைதோ ளிணைபத்தும்
      நிரவி கரவாளை நேர்ந்தா னிடம்போலும்
      பரவி திரிவோர்க்கும் பால்நீ றணிவோர்க்குங்
      கரவில் தடக்கையார் காழி நகர்தானே. 1.81.8
      879 மாலும் பிரமனும் அறியா மாட்சியான்
      தோலும் புரிநூலு துதைந்த வரைமார்பன்
      ஏலும் பதிபோலும் இரந்தோர கெந்நாளுங்
      காலம் பகராதார் காழி நகர்தானே. 1.81.9
      880 தங்கை யிடவுண்பார் தாழ்சீ வரத்தார்கள்
      பெங்கை யுணராதே பேணி தொழுமின்கள்
      மங்கை யொருபாகம் மகிழ்ந்தான் மலர்ச்சென்னி
      கங்கை தரித்தானூர் காழி நகர்தானே. 1.81.10
      881 வாசங் கமழ்காழி மதிசெஞ் சடைவைத்த
      ஈசன் நகர்தன்னை இணையில் சம்பந்தன்
      பேசு தமிழ்வல்லோர் பெருநீ ருலகத்து
      பாச தனையற்று பழியில் புகழாரே. 1.81.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      1.82 திருவீழிமிழலை
      பண் - குறிஞ்சி
      882 இரும்பொன் மலைவில்லா எரியம் பாநாணில்
      திரிந்த புரமூன்றுஞ் செற்றான் உறைகோயில்
      தெரிந்த அடியார்கள் சென்ற திசைதோறும்
      விரும்பி யெதிர்கொள்வார் வீழி மிழலையே. 1.82.1
      883 வாதை படுகின்ற வானோர் துயர்தீர
      ஓத கடல்நஞ்சை உண்டான் உறைகோயில்
      கீ திசையோடுங் கேள்வி கிடையோடும்
      வே தொலியோவா வீழி மிழலையே. 1.82.2
      884 பயிலும் மறையாளன் தலையிற் பலிகொண்டு
      துயிலும் பொழுதாடுஞ் சோதி யுறைகோயில்
      மயிலும் மடமானும் மதியும் மிளவேயும்
      வெயிலும் பொலிமாதர் வீழி மிழலையே. 1.82.3
      885 இரவன் பகலோனும் எச்ச திமையோரை
      நிரவி டருள்செய்த நிமலன் உறைகோயில்
      குரவஞ் சுரபுன்னை குளிர்கோங் கிளவேங்கை
      விரவும் பொழிலந்தண் வீழி மிழலையே. 1.82.4
      886 கண்ணிற் கனலாலே காமன் பொடியாக
      பெண்ணு கருள்செய்த பெருமான் உறைகோயில்
      மண்ணிற் பெருவேள்வி வளர்தீ புகைநாளும்
      விண்ணிற் புயல்காட்டும் வீழி மிழலையே. 1.82.5
      887 மாலா யிரங்கொண்டு மலர்க்கண் ணிடஆழி
      ஏலா வலயத்தோ டீந்தான் உறைகோயில்
      சேலா கியபொய்கை செழுநீர கமலங்கள்
      மேலா லெரிகாட்டும் வீழி மிழலையே. 1.82.6
      888 மதியால் வழிபட்டான் வாணாள் கொடுபோவான்
      கொதியா வருகூற்றை குமைத்தான் உறைகோயில்
      நெதியான் மிகுசெல்வர் நித்த நியமங்கள்
      விதியால் நிற்கின்றார் வீழி மிழலையே. 1.82.7
      889 எடுத்தான் தருக்கினை இழித்தான் விரலூன்றி
      கொடுத்தான் வாள்ஆளா கொண்டான் உறைகோயில்
      படித்தார் மறைவேள்வி பயின்றார் பாவத்தை
      விடுத்தார் மிகவாழும் வீழி மிழலையே. 1.82.8
      890 கிடந்தான் இருந்தானுங் கீழ்மேல் காணாது
      தொடர்ந்தாங் கவரேத்த சுடரா யவன்கோயில்
      படந்தாங் கரவல்குல் பவள துவர்வாய்மேல்
      விடந்தாங் கியகண்ணார் வீழி மிழலையே. 1.82.9
      891 சிக்கார் துவராடை சிறுத டுடையாரும்
      நக்காங் கலர்தூற்றும் நம்பான் உறைகோயில்
      தக்கார் மறைவேள்வி தலையா யுலகுக்கு
      மிக்கார் அவர்வாழும் வீழி மிழலையே. 1.82.10
      892 மேனின் றிழிகோயில் வீழி மிழலையுள்
      ஏன தெயிற்றானை எழிலார் பொழில்காழி
      ஞான துயர்கின்ற நலங்கொள் சம்பந்தன்
      வாய்மை திவைசொல்ல வல்லோர் நல்லோரே. 1.82.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      1.83 திரு அம்பர்மாகாளம்
      பண் - குறிஞ்சி
      893 அடையார் புரமூன்றும் அனல்வாய்விழ வெய்து
      மடையார் புனலம்பர் மாகா ளம்மேய
      விடையார் கொடியெந்தை வெள்ளை பிறைசூடுஞ்
      சடையான் கழலேத்த சாரா வினைதானே. 1.83.1
      894 தேனார் மதமத்த திங்கள் புனல்சூடி
      வானார் பொழிலம்பர் மாகா ளம்மேய
      ஊனார் தலைதன்னிற் பலிகொண் டுழல்வாழ்க்கை
      ஆனான் கழலேத்த அல்லல் அடையாவே. 1.83.2
      895 திரையார் புனலோடு செல்வ மதிசூடி
      விரையார் பொழிலம்பர் மாகா ளம்மேய
      நரையார் விடையூரும் நம்பான் கழல்நாளும்
      உரையா தவர்கண்மேல் ஒழியா வூனம்மே. 1.83.3
      896 கொந்தண் பொழிற்சோலை கோல வரிவண்டு
      மந்தம் மலியம்பர் மாகா ளம்மேய
      கந்தங் கமழ்கொன்றை கமழ்புன் சடைவைத்த
      எந்தை கழலேத்த இடர்வ தடையாவே. 1.83.4
      897 அணியார் மலைமங்கை ஆகம் பாகமாய்
      மணியார் புனலம்பர் மாகா ளம்மேய
      துணியா ருடையினான் துதைபொற் கழல்நாளும்
      பணியா தவர்தம்மேற் பறையா பாவம்மே. 1.83.5
      898 பண்டாழ் கடல்நஞ்சை உண்டு களிமாந்தி
      வண்டார் பொழிலம்பர் மாகா ளம்மேய
      விண்டார் புரம்வேவ மேரு சிலையா
      கொண்டான் கழலேத்த குறுகா குற்றம்மே. 1.83.6
      899 மிளிரும் மரவோடு வெள்ளை பிறைசூடி
      வளரும் பொழிலம்பர் மாகா ளம்மேய
      கிளருஞ் சடையண்ணல் கேடில் கழலே
      தளரும் முறுநோய்கள் சாரு தவந்தானே. 1.83.7
      900 கொலையார் மழுவோடு கோல சிலையேந்தி
      மலையார் புனலம்பர் மாகா ளம்மேய
      இலையார் திரிசூல படையான் கழல்நாளும்
      நிலையா நினைவார்மேல் நில்லா வினைதானே. 1.83.8
      901 சிறையார் வரிவண்டு தேனுண் டிசைபாட
      மறையார் நிறையம்பர் மாகா ளம்மேய
      நறையார் மலரானும் மாலுங் காண்பொண்ணா
      இறையான் கழலேத்த எய்தும் இன்பமே. 1.83.9
      902 மாசூர் வடிவின்னார் மண்டை யுணல்கொள்வார்
      கூசா துரைக்குஞ்சொற் கொள்கை குணமல்ல
      வாசார் பொழிலம்பர் மாகா ளம்மேய
      ஈசா என்பார்க கில்லை யிடர்தானே. 1.83.10
      903 வெருநீர் கொளவோங்கும் வேணு புரந்தன்னுள்
      திருமா மறைஞான சம்ப தனசேணார்
      பெருமான் மலியம்பர் மாகா ளம்பேணி
      உருகா வுரைசெய்வார் உயர்வான் அடைவாரே. 1.83.11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - காளகண்டேசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      1.84 திருக்கடனாகைக்காரோணம்
      பண் - குறிஞ்சி
      904 புனையும் விரிகொன்றை கடவுள் புனல்பாய
      நனையுஞ் சடைமேலோர் நகுவெண் டலைசூடி
      வினையில் லடியார்கள் விதியால் வழிபட்டு
      கனையுங் கடல்நாகை காரோ ணத்தானே. 1.84.1
      905 பெண்ணா ணெனநின்ற பெம்மான் பிறைச்சென்னி
      அண்ணா மலைநாடன் ஆரூ ருறையம்மான்
      மண்ணார் முழவோவா மாட நெடுவீதி
      கண்ணார் கடல்நாகை காரோ ணத்தானே. 1.84.2
      906 பாரோர் தொழவிண்ணோர் பணியம் மதில்மூன்றும்
      ஆரார் அழலூட்டி அடியார கருள்செய்தான்
      தேரார் விழவோவா செல்வன் திரைசூழ்ந்த
      காரார் கடல்நாகை காரோ ணத்தானே. 1.84.3
      907 மொழிசூழ் மறைபாடி முதிருஞ் சடைதன்மேல்
      அழிசூழ் புனலேற்ற அண்ண லணியா
      பழிசூழ் விலராய பத்தர் பணிந்தேத்த
      கழிசூழ் கடல்நாகை காரோ ணத்தானே. 1.84.4
      908 ஆணும் பெண்ணுமாய் அடியார கருள்நல்கி
      சேணின் றவர்க்கின்னஞ் சிந்தை செயவல்லான்
      பேணி வழிபாடு பிரியா தெழுந்தொண்டர்
      காணுங் கடல்நாகை காரோ ணத்தானே. 1.84.5
      909 ஏன தெயிறோடும் மரவ மெய்பூண்டு
      வான திளந்திங்கள் வளருஞ் சடையண்ணல்
      ஞான துறைவல்லார் நாளும் பணிந்தேத்த
      கானற் கடல்நாகை காரோ ணத்தானே. 1.84.6
      910 அரையார் அழல்நாகம் அக்கோ டசைத்திட்டு
      விரையார் வரைமார்பின் வெண்ணீ றணியண்ணல்
      வரையார் வனபோல வளரும்வங்கங்கள்
      கரையார் கடல்நாகை காரோ ணத்தானே. 1.84.7
      911 வலங்கொள் புகழ்பேணி வரையா லுயர்திண்டோ ள்
      இலங்கை கிறைவாட அடர்த்தங் கருள்செய்தான்
      பலங்கொள் புகழ்மண்ணிற் பத்தர் பணிந்தேத்த
      கலங்கொள் கடல்நாகை காரோ ணத்தானே. 1.84.8
      912 திருமா லடிவீழ திசைநான் முகனேத்த
      பெருமா னெனநின்ற பெம்மான் பிறைச்சென்னி
      செருமால் விடையூருஞ் செல்வன் திரைசூழ்ந்த
      கருமால் கடல்நாகை காரோ ணத்தானே. 1.84.9
      913 நல்லா ரறஞ்சொல்ல பொல்லார் புறங்கூற
      அல்லா ரலர்தூற்ற அடியார கருள்செய்வான்
      பல்லார் தலைமாலை யணிவான் பணிந்தேத்த
      கல்லார் கடல்நாகை காரோ ணத்தானே. 1.84.10
      914 கரையார் கடல்நாகை காரோ ணம்மேய
      நரையார் விடையானை நவிலுஞ் சம்பந்தன்
      உரையார் தமிழ்மாலை பாடு மவரெல்லாங்
      கரையா வுருவாகி கலிவான் அடைவாரே. 1.84.11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - காயாரோகணேசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      1.85 திருநல்லம்
      பண் - குறிஞ்சி
      915 கல்லால் நிழல்மேய கறைசேர் கண்டாவென்
      றெல்லா மொழியாலும் இமையோர் தொழுதேத்த
      வில்லால் அரண்மூன்றும் வெந்து விழவெய்த
      நல்லான் நமையாள்வான் நல்லம் நகரானே. 1.85.1
      916 தக்கன் பெருவேள்வி தன்னில் அமரரை
      துக்கம் பலசெய்து சுடர்பொற் சடைதாழ
      கொக்கின் இறகோடு குளிர்வெண் பிறைசூடும்
      நக்கன் நமையாள்வான் நல்லம் நகரானே. 1.85.2
      917 அந்தி மதியோடும் அரவ சடைதாழ
      முந்தி யனலேந்தி முதுகா டெரியாடி
      சிந்தி தெழவல்லார் தீரா வினைதீர்க்கும்
      நந்தி நமையாள்வான் நல்லம் நகரானே. 1.85.3
      918 குளிரும் மதிசூடி கொன்றை சடைதாழ
      மிளிரும் மரவோடு வெண்ணூல் திகழ்மார்பில்
      தளிரு திகழ்மேனி தையல் பாகமாய்
      நளிரும் வயல்சூழ்ந்த நல்லம் நகரானே. 1.85.4
      919 மணியார் திகழ்கண்டம் முடையான் மலர்மல்கு
      பிணிவார் சடையெந்தை பெருமான் கழல்பேணி
      துணிவார் மலர்கொண்டு தொண்டர் தொழுதேத்த
      நணியான் நமையாள்வான் நல்லம் நகரானே. 1.85.5
      920 வாசம் மலர்மல்கு மலையான் மகளோடும்
      பூசுஞ் சுடுநீறு புனைந்தான் விரிகொன்றை
      ஈச னெனவுள்கி யெழுவார் வினைகட்கு
      நாசன் நமையாள்வான் நல்லம் நகரானே. 1.85.6
      921 அங்கோல் வளைமங்கை காண அனலேந்தி
      கொங்கார் நறுங்கொன்றை சூடி குழகாக
      வெங்கா டிடமாக வெந்தீ விளையாடும்
      நங்கோன் நமையாள்வான் நல்லம் நகரானே. 1.85.7
      922 பெண்ணார் திருமேனி பெருமான் பிறைமல்கு
      கண்ணார் நுதலினான் கயிலை கருத்தினால்
      எண்ணா தெடுத்தானை இறையே விரலூன்றி
      நண்ணார் புரமெய்தான் நல்லம் நகரானே. 1.85.8
      923 நாக தணையானும் நளிர்மா மலரானும்
      போக தியல்பினாற் பொலிய அழகாகும்
      ஆக தவளோடும் அமர்ந்தங் கழகாரும்
      நாகம் மரையார்த்தான் நல்லம் நகரானே. 1.85.9
      924 குறியில் சமணோடு குண்டர் வண்தேரர்
      அறிவில் லுரைகேட்டங் கவமே கழியாதே
      பொறிகொள் ளரவார்த்தான் பொல்லா வினைதீர்க்கும்
      நறைகொள் பொழில்சூழ்ந்த நல்லம் நகரானே. 1.85.10
      925 நலமார் மறையோர்வாழ் நல்லம் நகர்மேய
      கொலைசேர் மழுவானை கொச்சை யமர்ந்தோங்கு
      தலமார் தமிழ்ஞான சம்ப தன்சொன்ன
      கலைக ளிவைவல்லார் கவலை கழிவாரே. 1.85.11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - உமாமகேசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      1.86 திருநல்லூர்
      பண் - குறிஞ்சி
      926 கொட்டும் பறைசீராற் குழும அனலேந்தி
      நட்டம் பயின்றாடும் நல்லூர பெருமானை
      முட்டின் றிருபோதும் முனியா தெழுந்தன்பு
      பட்ட மனத்தார்கள் அறியார் பாவமே. 1.86.1
      927 ஏறில் எருதேறும் எழிலா யிழையோடும்
      வேறும் முடனுமாம் விகிர்தர் அவரென்ன
      நாறும் மலர்ப்பொய்கை நல்லூர பெருமானை
      கூறு மடியார்க கடையா குற்றமே. 1.86.2
      928 சூடும் இளந்திங்கள் சுடர் பொற்சடைதாழ
      ஓடுண் கலனாக வூரூ ரிடுபிச்சை
      நாடும் நெறியானை நல்லூர பெருமானை
      பாடும் மடியார்க கடையா பாவமே. 1.86.3
      929 நீத்த நெறியானை நீங்கா தவத்தானை
      நாத்த நெறியானை நல்லூர பெருமானை
      காத்த நெறியானை கைகூப்பி தொழு
      தேத்தும் அடியார்க கில்லை யிடர்தானே. 1.86.4
      930 ஆக துமைகேள்வன் அரவ சடைதாழ
      நாகம் மசைத்தானை நல்லூர பெருமானை
      தாகம் புகுந்தண்மி தாள்கள் தொழுந்தொண்டர்
      போகம் மனத்தரா புகழ திரிவாரே. 1.86.5
      931 கொல்லுங் களியானை யுரிபோர துமையஞ்ச
      நல்ல நெறியானை நல்லூர பெருமானை
      செல்லும் நெறியானை சேர்ந்தா ரிடர்தீர
      சொல்லு மடியார்கள் அறியார் துக்கமே. 1.86.6
      932 எங்கள் பெருமானை இமையோர் தொழுதேத்தும்
      நங்கள் பெருமானை நல்லூர் பிரிவில்லா
      தங்கை தலைக்கேற்றி ஆளென் றடிநீழல்
      தங்கும் மனத்தார்கள் தடுமாற் றறுப்பாரே. 1.86.7
      933 காமன் எழில்வாட்டி கடல்சூழ் இலங்கைக்கோன்
      நாமம் இறுத்தானை நல்லூர பெருமானை
      ஏம மனத்தாராய் இகழா தெழுந்தொண்டர்
      தீப மனத்தார்கள் அறியார் தீயவே. 1.86.8
      934 வண்ண மலரானும் வையம் அளந்தானும்
      நண்ண லரியானை நல்லூர பெருமானை
      தண்ண மலர்தூவி தாள்கள் தொழுதேத்த
      எண்ணும் அடியார்க கில்லை யிடுக்கணே. 1.86.9
      935 பிச்ச குடைநீழற் சமணர் சாக்கியர்
      நிச்சம் அலர்தூற்ற நின்ற பெருமானை
      நச்சு மிடற்றானை நல்லூர பெருமானை
      எச்சும் அடியார்க கில்லை யிடர்தானே. 1.86.10
      936 தண்ணம் புனற்காழி ஞான சம்பந்தன்
      நண்ணும் புனல்வேலி நல்லூர பெருமானை
      வண்ணம் புனைமாலை வைகலேத்துவார்
      விண்ணும் நிலனுமாய் விளங்கும் புகழாரே. 1.86.11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - பெரியாண்டேசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      1.87 திருவடுகூர்
      பண் - குறிஞ்சி
      937 சுடுகூ ரெரிமாலை யணிவர் சுடர்வேலர்
      கொடுகூர் மழுவாளொன் றுடையார் விடையூர்வர்
      கடுகூர் பசிகாமங் கவலை பிணியில்லார்
      வடுகூர் புனல்சூழ்ந்த வடுகூ ரடிகளே. 1.87.1
      938 பாலு நறுநெய்யு தயிரும் பயின்றாடி
      ஏலுஞ் சுடுநீறும் என்பும் ஒளிமல
      கோலம் பொழிற்சோலை கூடி மடவன்னம்
      ஆலும் வடுகூரில் ஆடும் மடிகளே. 1.87.2
      939 சூடும் இளந்திங்கள் சுடர்பொற் சடைதன்மேல்
      ஓடுங் களியானை உரிபோர துமையஞ்ச
      ஏடு மலர்மோந்தங் கெழிலார் வரிவண்டு
      பாடும் வடுகூரில் ஆடும் மடிகளே. 1.87.3
      940 துவரும் புரிசையு துதைந்த மணிமாடம்
      கவர வெரியோட்டி கடிய மதிலெய்தார்
      கவரு மணிகொல்லை கடிய முலைநல்லார்
      பவரும் வடுகூரில் ஆடும் மடிகளே. 1.87.4
      941 துணியா ருடையாடை துன்னி யரைதன்மேல்
      தணியா அழல்நாக தரியா வகைவைத்தார்
      பணியா ரடியார்கள் பலரும் பயின்றேத்த
      அணியார் வடுகூரில் ஆடும் மடிகளே. 1.87.5
      942 தளருங் கொடியன்னாள் தன்னோ டுடனாகி
      கிளரும் அரவார்த்து
      வளரும் பிறைசூடி வரிவண் டிசைபாட
      ஒளிரும் வடுகூரில் ஆடும் மடிகளே. 1.87.6
      943 நெடியர் சிறிதாய நிரம்பா மதிசூடும்
      முடியர் விடையூர்வர் கொடியர் மொழிகொள்ளார்
      கடிய தொழிற்காலன் மடிய வுதைகொண்ட
      அடியர் வடுகூரில் ஆடும் மடிகளே. 1.87.7
      944 பிறையும் நெடுநீரும் பிரியா முடியினார்
      மறையும் பலபாடி மயான துறைவாரும்
      பறையும் அதிர்குழலும் போல பலவண்டாங்
      கறையும் வடுகூரில் ஆடும் மடிகளே. 1.87.8
      945 சந்தம் மலர்வேய்ந்த சடையின் இடைவிம்மு
      கந்தம் மிகுதிங்கள் சிந்து கதிர்மாலை
      வந்து நயந்தெம்மை நன்றும் அருள்செய்வார்
      அந்தண் வடுகூரில் ஆடும் மடிகளே. 1.87.9
      946 திருமா லடிவீழ திசைநான் முகனாய
      பெருமா னுணர்கில்லா பெருமான் நெடுமுடிசேர்
      செருமால் விடையூருஞ் செம்மான் திசைவில்லா
      அருமா வடுகூரில் ஆடும் மடிகளே. 1.87.10
      947 படிநோன் பவையாவர் பழியில் புகழான
      கடிநாண் நிகழ்சோலை கமழும் வடுகூரை
      படியா னசிந்தை மொழியார் சம்பந்தன்
      அடிஞா னம்வல்லா ரடிசேர் வார்களே. 1.87.11
      இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - வடுகேசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      1.88 திரு ஆப்பனூர்
      பண் - குறிஞ்சி
      948 முற்றுஞ் சடைமுடிமேன் முதிரா இளம்பிறையன்
      ஒற்றை படவரவம் அதுகொண் டரைக்கணிந்தான்
      செற்றமில் சீரானை திருஆப்ப னூரானை
      பற்று மனமுடையார் வினைபற் றறுப்பாரே. 1.88.1
      949 குரவங் கமழ்குழலாள் குடிகொண்டு நின்றுவிண்ணோர்
      விரவு திருமேனி விளங்கும் வளையெயிற்றின்
      அரவம் அணிந்தானை அணியாப்ப னூரானை
      பரவும் மனமுடையார் வினைபற் றறுப்பாரே. 1.88.2
      950 முருகு விரிகுழலார் மனங்கொள் அநங்கனைமுன்
      பெரிது முனிந்துகந்தான் பெருமான் பெருங்காட்டின்
      அரவம் அணிந்தானை அணியாப்ப னூரானை
      பரவும் மனமுடையார் வினைபற் றறுப்பாரே. 1.88.3
      951 பிணியும் பிறப்பறுப்பான் பெருமான் பெருங்காட்டில்
      துணியின் உடைதாழ சுடரேந்தி யாடுவான்
      அணியும் புனலானை அணியாப்ப னூரானை
      பணியும் மனமுடையார் வினைபற் றறுப்பாரே. 1.88.4
      952 தகர மணியருவி தடமால்வரை சிலையா
      நகர மொருமூன்றும் நலங்குன்ற வென்றுகந்தான்
      அகர முதலானை அணியாப்ப னூரானை
      பகரு மனமுடையார் வினைபற் றறுப்பாரே. 1.88.5
      953 ஓடு திரிபுரங்கள் உடனே யுலந்தவி
      காட திடமா கனல்கொண்டு நின்றிரவில்
      ஆடு தொழிலானை அணியாப்ப னூரானை
      பாடு மனமுடையார் வினைபற் றறுப்பாரே. 1.88.6
      954 இயலும் விடையேறி எரிகொள் மழுவீசி
      கயலி னிணைக்கண்ணாள் ஒருபால் கலந்தாட
      இயலும் இசையானை எழிலாப்ப னூரானை
      பயிலு மனமுடையார் வினைபற் றறுப்பாரே. 1.88.7
      955 கருக்கு மணிமிடறன் கதநா கச்சையினான்
      உருக்கும் அடியவரை ஒளிவெண் பிறைசூடி
      அரக்கன் றிறலழித்தான் அணியாப்ப னூரானை
      பருக்கு மனமுடையார் வினைபற் றறுப்பாரே. 1.88.8
      956 கண்ணன் கடிக்கமல மலர்மே லினிதுறையும்
      அண்ணற் களப்பரிதாய் நின்றங் கடியார்மேல்
      எண்ணில் வினைகளைவான் எழிலாப்ப னூரானை
      பண்ணின் னிசைபகர்வார் வினைபற் றறுப்பாரே. 1.88.9
      957 செய்ய கலிங்கத்தார் சிறுத டுடையார்கள்
      பொய்யர் புறங்கூற புரிந்தவடியாரை
      ஐயம் அகற்றுவான் அணியாப்ப னூரானை
      பைய நினைந்தெழுவார் வினைபற் றறுப்பாரே. 1.88.10
      958 அந்தண் புனல்வைகை அணியாப்ப னூர்மேய
      சந்த மலர்க்கொன்றை சடைமே லுடையானை
      நந்தி யடிபரவும் நலஞான சம்பந்தன்
      சந்த மிவைவல்லார் தடுமாற் றறுப்பாரே. 1.88.11
      இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - ஆப்பனூரீசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      1.89 திரு எருக்கத்தம்புலியூர்
      பண் - குறிஞ்சி
      959 படையார் தருபூத பகடார் உரிபோர்வை
      உடையான் உமையோடும் உடனா யிடுகங்கை
      சடையான் எருக்கத்தம் புலியூர தகுகோயில்
      விடையான் அடியேத்த மேவா வினைதானே. 1.89.1
      960 இலையார் தருசூல படையெம் பெருமானாய்
      நிலையார் மதில்மூன்றும் நீறாய் விழவெய்த
      சிலையான் எருக்கத்தம் புலியூர திகழ்கோயிற்
      கலையான் அடியேத்த கருதா வினைதானே. 1.89.2
      961 விண்ணோர் பெருமானே விகிர்தா விடையூர்தீ
      பெண்ணாண் அலியாகும் பித்தா பிறைசூடி
      எண்ணார் எருக்கத்தம் புலியூ ருறைகின்ற
      அண்ணா எனவல்லார கடையா வினைதானே. 1.89.3
      962 அரையார் தருநாகம் அணிவான் அலர்மாலை
      விரையார் தருகொன்றை யுடையான் விடையேறி
      வரையான் எருக்கத்தம் புலியூர் மகிழ்கின்ற
      திரையார் சடையானை சேர திருவாமே. 1.89.4
      963 வீறார் முலையாளை பாகம் மிகவைத்து
      சீறா வருகாலன் சினத்தை யழிவித்தான்
      ஏறான் எருக்கத்தம் புலியூ ரிறையானை
      வேறா நினைவாரை விரும்பா வினைதானே. 1.89.5
      964 நகுவெண் டலையேந்தி நானா விதம்பாடி
      புகுவா னயம்பெ புலித்தோல் பியற்கிட்டு
      தகுவான் எருக்கத்தம் புலியூர தகைந்தங்கே
      தொகுவான் கழலே தொடரா வினைதானே. 1.89.6
      இப்பதிகத்தின் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 1.89.7
      965 ஆவா வெனஅரக்கன் அலற அடர்த்திட்டு
      தேவா எனஅருளார் செல்வங் கொடுத்திட்ட
      கோவே யெருக்கத்தம் புலியூர் மிகுகோயிற்
      தேவே யெனஅல்லல் தீர்தல் திடமாமே. 1.89.8
      966 மறையான் நெடுமால்காண் பரியான் மழுவேந்தி
      நிறையா மதிசூடி நிகழ்மு தின்தொத்தே
      இறையான் எருக்கத்தம் புலியூ ரிடங்கொண்ட
      கறையார் மிடற்றானை கருத கெடும்வினையே. 1.89.9
      967 புத்தர் அருகர்தம் பொய்கள் புறம்போக்கி
      சுத்தி தரித்துறையுஞ் சோதி யுமையோடும்
      நித்தன் எருக்கத்தம் புலியூர் நிகழ்வாய
      அத்தன் அறவன்றன் அடியே அடைவோமே. 1.89.10
      968 ஏரார் எருக்கத்தம் புலியூர் உறைவானை
      சீரார் திகழ்காழி திருவார் சம்பந்தன்
      ஆரா அருந்தமிழ் மாலை யிவைவல்லார்
      பாரா ரவரேத்த பதிவான் உறைவாரே. 1.89.11
      இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - நீலகண்டேசுரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      1.90 திருப்பிரமபுரம் - திருவிருக்குக்குறள்
      பண் - குறிஞ்சி
      969 அரனை உள்குவீர் பிரம னூருளெம்
      பரனை யேமனம் பரவி உய்ம்மினே. 1.90.1
      970 காண உள்குவீர் வேணு நற்புர
      தாணுவின் கழல் பேணி உய்ம்மினே. 1.90.2
      971 நாதன் என்பிர்காள் காதல் ஒண்புகல்
      ஆதி பாதமே ஓதி உய்ம்மினே. 1.90.3
      972 அங்கம் மாதுசேர் பங்கம் ஆயவன்
      வெங்கு ருமன்னும் எங்க ளீசனே. 1.90.4
      973 வாணி லாச்சடை தோணி வண்புர
      தாணி நற்பொனை காணு மின்களே. 1.90.5
      974 பாந்த ளார்சடை பூந்த ராய்மன்னும்
      ஏந்து கொங்கையாள் வேந்த னென்பரே. 1.90.6
      975 கரிய கண்டனை சிரபு ரத்துளெம்
      அரசை நாடொறும் பரவி உய்ம்மினே. 1.90.6
      976 நறவ மார்பொழிற் புறவம் நற்பதி
      இறைவன் நாமமே மறவல் நெஞ்சமே. 1.90.8
      977 தென்றில் அரக்கனை குன்றிற் சண்பைமன்
      அன்று நெரித்தவா நின்று நினைமினே. 1.90.9
      978 அயனும் மாலுமாய் முயலுங் காழியான்
      பெயல்வை எய்திநின் றியலும் உள்ளமே. 1.90.10
      979 தேரர் அமணரை சேர்வில் கொச்சைமன்
      நேரில் கழல்நினை தோரும் உள்ளமே. 1.90.11
      980 தொழும னத்தவர் கழும லத்துறை
      பழுதில் சம்பந்தன் மொழிகள் பத்துமே. 1.90.12
      பிரம்மபுரமென்பது சீகாழி.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      1.91 திருஆரூர் - திருவிருக்குக்குறள்
      பண் - குறிஞ்சி
      981 சித்தம் தெளிவீர்காள் அத்தன் ஆரூரை
      பத்தி மலர்தூவ முத்தி யாகுமே. 1.91.1
      982 பிறவி யறுப்பீர்காள் அறவன் ஆரூரை
      மறவா தேத்துமின் துறவி யாகுமே. 1.91.2
      983 துன்ப துடைப்பீர்காள் அன்பன் அணியாரூர்
      நன்பொன் மலர்தூவ இன்ப மாகுமே. 1.91.3
      984 உய்ய லுறுவீர்காள் ஐயன் ஆரூரை
      கையி னாற்றொழ நையும் வினைதானே. 1.91.4
      985 பிண்டம் அறுப்பீர்காள் அண்டன் ஆரூரை
      கண்டு மலர்தூவ விண்டு வினைபோமே. 1.915
      986 பாசம் அறுப்பீர்காள் ஈசன் அணியாரூர்
      வாச மலர்தூவ நேச மாகுமே. 1.91.6
      987 வெய்ய வினைதீர ஐயன் அணியாரூர்
      செய்ய மலர்தூவ வைய முமதாமே. 1.91.7
      988 அரக்கன் ஆண்மையை நெருக்கி னானாரூர்
      கரத்தி னாற்றொழ திருத்த மாகுமே. 1.91.8
      989 துள்ளும் இருவர்க்கும் வள்ளல் ஆரூரை
      உள்ளு மவர்தம்மேல் விள்ளும் வினைதானே. 1.91.9
      990 கடுக்கொள் சீவரை அடக்கி னானாரூர்
      எடுத்து வாழ்த்துவார் விடுப்பர் வேட்கையே. 1.91.10
      991 சீரூர் சம்பந்தன் ஆரூரை சொன்ன
      பாரூர் பாடலார் பேரா ரின்பமே. 1.91.11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - வன்மீகநாதர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      1.92 திருவீழிமிழலை - திருவிருக்குக்குறள்
      பண் - குறிஞ்சி
      992 வாசி தீரவே காசு நல்குவீர்
      மாசின் மிழலையீர் ஏச லில்லையே. 1.92.1
      993 இறைவ ராயினீர் மறைகொள் மிழலையீர்
      கறைகொள் காசினை முறைமை நல்குமே. 1.92.2
      994 செய்ய மேனியீர் மெய்கொள் மிழலையீர்
      பைகொள் அரவினீர் உய்ய நல்குமே. 1.92.3
      995 நீறு பூசினீர் ஏற தேறினீர்
      கூறு மிழலையீர் பேறும் அருளுமே. 1.92.4
      996 காமன் வேவவோர் தூ கண்ணினீர்
      நாம மிழலையீர் சேமம் நல்குமே. 1.92.5
      997 பிணிகொள் சடையினீர் மணிகொள் மிடறினீர்
      அணிகொள் மிழலையீர் பணிகொண் டருளுமே. 1.92.6
      998 மங்கை பங்கினீர் துங்க மிழலையீர்
      கங்கை முடியினீர் சங்கை தவிர்மினே. 1.92.7
      999 அரக்கன் நெரிதர இரக்க மெய்தினீர்
      பரக்கு மிழலையீர் கரக்கை தவிர்மினே. 1.92.8
      1000 அயனும் மாலுமாய் முயலும் முடியினீர்
      இயலும் மிழலையீர் பயனும் அருளுமே. 1.92.9
      1001 பறிகொள் தலையினார் அறிவ தறிகிலார்
      வெறிகொள் மிழலையீர் பிரிவ தரியதே. 1.92.10
      1002 காழி மாநகர் வாழி சம்பந்தன்
      வீழி மிழலைமேல் தாழும் மொழிகளே. 1.92.11
      இது படிக்காசு சுவாமியருளியபோது வட்டந்தீர ஓதியது.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      1.93 திருமுதுகுன்றம் - திருவிருக்குக்குறள்
      பண் - குறிஞ்சி
      1003 நின்று மலர்தூவி இன்று முதுகுன்றை
      நன்றும் ஏத்துவீர கென்றும் இன்பமே. 1.93.1
      1004 அத்தன் முதுகுன்றை பத்தி யாகிநீர்
      நித்தம் ஏத்துவீர குய்த்தல் செல்வமே. 1.93.2
      1005 ஐயன் முதுகுன்றை பொய்கள் கெடநின்று
      கைகள் கூப்புவீர் வைய முமதாமே. 1.93.3
      1006 ஈசன் முதுகுன்றை நேச மாகிநீர்
      வாச மலர்தூவ பாச வினைபோமே. 1.93.4
      1007 மணியார் முதுகுன்றை பணிவா ரவர்கண்டீர்
      பிணியா யினகெட்டு தணிவா ருலகிலே. 1.93.5
      1008 மொய்யார் முதுகுன்றில் ஐயா வெனவல்லார்
      பொய்யா ரிரவோர்க்கு செய்யாள் அணியாளே. 1.93.6
      1009 விடையான் முதுகுன்றை இடையா தேத்துவார்
      படையா யினசூழ உடையா ருலகமே. 1.93.7
      1010 பத்து தலையோனை கத்த விரலூன்றும்
      அத்தன் முதுகுன்றை மொய்த்து பணிமினே. 1.93.8
      1011 இருவ ரறியாத ஒருவன் முதுகுன்றை
      உருகி நினைவார்கள் பெருகி நிகழ்வோரே. 1.93.9
      1012 தேரர் அமணருஞ் சேரும் வகைஇல்லான்
      நேரில் முதுகுன்றை நீர்நின் றுள்குமே. 1.93.10
      1013 நின்று முதுகுன்றை நன்று சம்பந்தன்
      ஒன்றும் உரைவல்லார் என்றும் உயர்வோரே. 1.93.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      1.94 திருஆலவாய் - திருவிருக்குக்குறள்
      பண் - குறிஞ்சி
      1014 நீல மாமிடற் றால வாயிலான்
      பால தாயினார் ஞாலம் ஆள்வரே. 1.94.1
      1015 ஞால மேழுமாம் ஆல வாயிலார்
      சீல மேசொலீர் காலன் வீடவே. 1.94.2
      1015 ஆல நீழலார்
      கால காலனார் பால தாமினே. 1.94.3
      1017 அந்த மில்புகழ் எந்தை யாலவாய்
      பந்தி யார்கழல் சிந்தை செய்ம்மினே. 1.94.4
      1018 ஆட லேற்றினான் கூட லாலவாய்
      பாடி யேமனம் நாடி வாழ்மினே. 1.94.5
      1019 அண்ணல் ஆலவாய் நண்ணி னான்றனை
      எண்ணி யேதொழ திண்ணம் இன்பமே. 1.94.6
      1020 அம்பொன் ஆலவாய் நம்ப னார்கழல்
      நம்பி வாழ்பவர் துன்பம் வீடுமே. 1.94.7
      1021 அரக்க னார்வலி நெருக்க னாலவாய்
      உரைக்கு முள்ளத்தார கிரக்கம் உண்மையே. 1.94.8
      1022 அருவன் ஆலவாய் மருவி னான்றனை
      இருவ ரேத்தநின் றுருவ மோங்குமே. 1.94.9
      1023 ஆரம் நாகமாம் சீரன் ஆலவா
      தேர மண்செற்ற வீர னென்பரே. 1.94.10
      1024 அடிகள் ஆலவா படிகொள் சம்பந்தன்
      முடிவி லின்றமிழ செடிகள் நீக்குமே. 1.94.11
      இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது. இதுவே மதுரை.
      சுவாமிபெயர் - சொக்கநாதசுவாமி தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      1.95 திருவிடைமருதூர் - திருவிருக்குக்குறள்
      பண் - குறிஞ்சி
      1025 தோடொர் காதினன் பாடு மறையினன்
      காடு பேணிநின் றாடு மருதனே. 1.95.1
      1026 கருதார் புரமெய்வர் எருதே இனிதூர்வர்
      மருதே யிடமாகும் விருதாம் வினைதீர்ப்பே. 1.95.2
      1027 எண்ணும் அடியார்கள் அண்ணல் மருதரை
      பண்ணின் மொழிசொல்ல விண்ணு தமதாமே. 1.95.3
      1028 விரியார் சடைமேனி எரியார் மருதரை
      தரியா தேத்துவார் பெரியா ருலகிலே. 1.95.4
      1029 பந்த விடையேறும் எந்தை மருதரை
      சிந்தை செய்பவர் புந்தி நல்லரே. 1.95.5
      1030 கழலுஞ் சிலம்பார்க்கும் எழிலார் மருதரை
      தொழலே பேணுவார குழலும் வினைபோமே. 1.95.6
      1031 பிறையார் சடையண்ணல் மறையார் மருதரை
      நிறையால் நினைபவர் குறையா ரின்பமே. 1.95.7
      1032 எடுத்தான் புயந்தன்னை அடுத்தார் மருதரை
      தொடுத்தார் மலர்சூட்ட விடுத்தார் வேட்கையே. 1.95.8
      1033 இருவர கெரியாய உருவ மருதரை
      பரவி யேத்துவார் மருவி வாழ்வரே. 1.95.9
      1034 நின்றுண் சமண்தேரர் என்று மருதரை
      அன்றி யுரைசொல்ல நன்று மொழியாரே. 1.95.10
      1035 கருது சம்பந்தன் மருத ரடிபாடி
      பெரிது தமிழ்சொல்ல பொருத வினைபோமே. 1.95.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      1.96 திரு அன்னியூர் - திருவிருக்குக்குறள்
      பண் - குறிஞ்சி
      1036 மன்னி யூரிறை சென்னி யார்பிறை
      அன்னி யூரமர் மன்னு சோதியே. 1.96.1
      1037 பழகு தொண்டர்வம் அழகன் அன்னியூர
      குழகன் சேவடி தொழுது வாழ்மினே. 1.96.2
      1038 நீதி பேணுவீர் ஆதி அன்னியூர
      சோதி நாமமே ஓதி உய்ம்மினே. 1.96.3
      1039 பத்த ராயினீர் அத்தர் அன்னியூர
      சித்தர் தாள்தொழ முத்த ராவரே. 1.96.4
      1040 நிறைவு வேண்டுவீர் அறவன் அன்னியூர்
      மறையு ளான்கழற் குறவு செய்ம்மினே. 1.96.5
      1041 இன்பம் வேண்டுவீர் அன்பன் அன்னியூர்
      நன்பொ னென்னுமின் உம்ப ராகவே. 1.96.6
      1042 அந்த ணாளர்தம் தந்தை அன்னியூர்
      எந்தை யேயென பந்தம் நீங்குமே. 1.96.7
      1043 தூர்த்த னைச்செற்ற தீர்த்தன் அன்னியூர்
      ஆத்த மாவடை தேத்தி வாழ்மினே. 1.96.8
      1044 இருவர் நாடிய அரவன் அன்னியூர்
      பரவுவார் விண்ணு கொருவ ராவரே. 1.96.9
      1045 குண்டர் தேரரு கண்டன் அன்னியூர
      தொண்டு ளார்வினை விண்டு போகுமே. 1.96.10
      1046 பூந்த ராய்ப்பந்தன் ஆய்ந்த பாடலால்
      வேந்தன் அன்னியூர் சேர்ந்து வாழ்மினே. 1.96.11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - ஆபத்சகாயர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      1.97 திருப்புறவம்
      பண் - குறிஞ்சி
      1047 எய்யாவென்றி தானவரூர்மூன் றெரிசெய்த
      மையார்கண்டன் மாதுமைவைகு திருமேனி
      செய்யான்வெண்ணீ றணிவான்றிகழ்பொற் பதிபோலும்
      பொய்யாநாவின் அந்தணர்வாழும் புறவம்மே. 1.97.1
      1048 மாதொருபாலும் மாலொருபாலும் மகிழ்கின்ற
      நாதனென்றேத்தும் நம்பரன்வைகு நகர்போலும்
      மாதவிமேய வண்டிசைபாட மயிலாட
      போதலர்செம்பொன் புன்னைகொடுக்கும் புறவம்மே. 1.97.2
      1049 வற்றாநதியும் மதியும்பொதியும் சடைமேலே
      புற்றாடரவின் படமாடவுமி புவனிக்கோர்
      பற்றாயிடுமின் பலியென்றடைவார் பதிபோலும்
      பொற்றாமரையின் பொய்கைநிலாவும் புறவம்மே. 1.97.3
      1050 துன்னார்புரமும் பிரமன்சிரமு துணிசெய்து
      மின்னார்சடைமேல் அரவும்மதியும் விளையாட
      பன்னாளிடுமின் பலியென்றடைவார் பதிபோலும்
      பொன்னார்புரிநூல் அந்தணர்வாழும் புறவம்மே. 1.97.4
      1051 தேவாஅரனே சரணென்றிமையோர் திசைதோறுங்
      காவாயென்று வந்தடையக்கார் விடமுண்டு
      பாவார்மறையும் பயில்வோருறையும் பதிபோலும்
      பூவார்கோல சோலைசுலாவும் புறவம்மே. 1.97.5
      1052 கற்றறிவெய்தி காமன்முன்னாகும் முகவெல்லாம்
      அற்றரனேநின் னடிசரணென்னும் அடியோர்க்கு
      பற்றதுவாய பாசுபதன்சேர் பதியென்பர்
      பொற்றிகழ்மாட தொளிகள்நிலாவும் புறவம்மே. 1.97.6
      1053 எண்டிசையோரஞ் சிடுவகைகார்சேர் வரையென்ன
      கொண்டெழுகோல முகில்போற் பெரியகரிதன்னை
      பண்டுரிசெய்தோன் பாவனைசெய்யும் பதியென்பர்
      புண்டரிகத்தோன் போன்மறையோர்சேர் புறவம்மே. 1.97.7
      1054 பரக்குந்தொல்சீர தேவர்கள்சேனை பௌவத்தை
      துரக்குஞ்செந்தீ போலமர்செய்யு தொழில்மேவும்
      அரக்கன்திண்டோ ள் அழிவித்தான காலத்திற்
      புரக்கும்வேந்தன் சேர்தருமூதூர் புறவம்மே. 1.97.8
      1055 மீத்திகழண்ட தந்தயனோடு மிகுமாலும்
      மூர்த்தியைநாடி காணவொணாது முயல்விட்டாங்
      கேத்தவெளிப்பா டெய்தியவன்றன் னிடமென்பர்
      பூத்திகழ்சோலை தென்றலுலாவும் புறவம்மே. 1.97.9
      1056 வையகம்நீர்தீ வாயுவும்விண்ணும் முதலானான்
      மெய்யலதேரர் உண்டிலையென்றே நின்றேதம்
      கையினிலுண்போர் காணவொணாதான் நகரென்பர்
      பொய்யகமில்லா பூசுரர்வாழும் புறவம்மே. 1.97.10
      1057 பொன்னியல்மாட புரிசைநிலாவும் புறவத்து
      மன்னியஈசன் சேவடிநாளும் பணிகின்ற
      தன்னியல்பில்லா சண்பையர்கோன்சீர சம்பந்தன்
      இன்னிசைஈரை தேத்தவல்லோர்க கிடர்போமே. 1.97.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      1.98 திருச்சிராப்பள்ளி
      பண் - குறிஞ்சி
      1058 நன்றுடையானை தீயதிலானை நரைவெள்ளே
      றொன்றுடையானை உமையொருபாகம் உடையானை
      சென்றடையாத திருவுடையானை சிராப்பள்ளி
      குன்றுடையானை கூறவென்னுள்ளங் குளிரும்மே. 1.98.1
      1059 கைம்மகவேந்தி கடுவனொடூடி கழைபாய்வான்
      செம்முகமந்தி கருவரையேறுஞ் சிராப்பள்ளி
      வெம்முகவேழ தீருரிபோர்த்த விகிர்தாநீ
      பைம்முகநாகம் மதியுடன்வைத்தல் பழியன்றே. 1.98.2
      1060 மந்தம்முழவம் மழலைததும்ப வரைநீழல்
      செந்தண்புனமுஞ் சுனையுஞ்சூழ்ந்த சிராப்பள்ளி
      சந்தம்மலர்கள் சடைமேலுடையார் விடையூரும்
      எந்தம்மடிகள் அடியார்க்கல்லல் இல்லையே. 1.98.3
      1061 துறைமல்குசாரற் சுனைமல்குநீல திடைவைகி
      சிறைமல்குவண்டு தும்பியும்பாடுஞ் சிராப்பள்ளி
      கறைமல்குகண்டன் கனலெரியாடுங் கடவுள்ளெம்
      பிறைமல்குசென்னி யுடையவனெங்கள் பெருமானே. 1.98.4
      1062 கொலைவரையாத கொள்கையர்தங்கண் மதின்மூன்றுஞ்
      சிலைவரையாக செற்றனரேனுஞ் சிராப்பள்ளி
      தலைவரைநாளு தலைவரல்லாமை யுரைப்பீர்காள்
      நிலவரைநீல முண்டதும்வெள்ளை நிறமாமே. 1.98.5
      1063 வெய்யதண்சாரல் விரிநிறவேங்கை தண்போது
      செய்யபொன்சேருஞ் சிராப்பள்ளிமேய செல்வனார்
      தையலொர்பாகம் மகிழ்வர்நஞ்சுண்பர் தலையோட்டில்
      ஐயமுங்கொள்வர் ஆரிவர்செய்கை அறிவாரே. 1.98.6
      1064 வேயுயர்சாரல் கருவிரலூகம் விளையாடும்
      சேயுயர்கோயில் சிராப்பள்ளிமேய செல்வனார்
      பேயுயர்கொள்ளி கைவிளக்காக பெருமானார்
      தீயுகந்தாடல் திருக்குறிப்பாயிற் றாகாதே. 1.98.7
      1065 மலைமல்குதோளன் வலிகெடவூன்றி மலரோன்றன்
      தலைகலனாக பலிதிரிந்துண்பர் பழியோரார்
      சொலவலவேதஞ் சொலவலகீதஞ் சொல்லுங்கால்
      சிலவலபோலுஞ் சிராப்பள்ளிச்சேடர் செய்கையே. 1.98.8
      1066 அரப்பள்ளியானும் மலருறைவானும் அறியாமை
      கரப்புள்ளிநாடி கண்டிலரேனுங் கல்சூழ்ந்த
      சிரப்பள்ளிமேய வார்சடைச்செல்வர் மனைதோறும்
      இரப்புள்ளீரும்மை ஏதிலர்கண்டால் இகழாரே. 1.98.9
      1067 நாணாதுடைநீ தோர்களுங்கஞ்சி நாட்காலை
      ஊணாப்பகலுண் டோ துவோர்கள் உரைக்குஞ்சொல்
      பேணாதுறுசீர் பெறுதுமென்பீரெம் பெருமானார்
      சேணார்கோயில் சிராப்பள்ளிசென்று சேர்மினே. 1.98.10
      1068 தேனயம்பாடுஞ் சிராப்பள்ளியானை திரைசூழ்ந்த
      கானல்சங்கேறுங் கழுமலவூரில் கவுணியன்
      ஞானசம்பந்தன் நலம்மிகுபாடல் இவைவல்லார்
      வானசம்பந தவரொடுமன்னி வாழ்வாரே. 1.98.11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - தாயுமானேசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      1.99 திருக்குற்றாலம்
      பண் - குறிஞ்சி
      1069 வம்பார்குன்றம் நீடுயர்சாரல் வளர்வேங்கை
      கொம்பார்சோலை கோலவண்டியாழ்செய் குற்றாலம்
      அம்பால்நெய்யோ டாடலமர்ந்தான் அலர்கொன்றை
      நம்பான்மேய நன்னகர்போலு நமரங்காள். 1.99.1
      1070 பொடிகள்பூசி தொண்டர்பின்செல்ல புகழ்வி
      கொடிகளோடு நாள்விழமல்கு குற்றாலங்
      கடிகொள்கொன்றை கூவிளமாலை காதல்செய்
      அடிகள்மேய நன்னகர்போலு மடியீர்காள். 1.99.2
      1071 செல்வம்மல்கு செண்பகம்வேங்கை சென்றேறி
      கொல்லைமுல்லை மெல்லரும்பீனுங் குற்றாலம்
      வில்லின்ஒல்க மும்மதிலெய்து வினைபோக
      நல்குநம்பான் நன்னகர்போலு நமரங்காள். 1.99.3
      1072 பக்கம்வாழை பாய்கனியோடு பலவின்றேன்
      கொக்கின்கோட்டு பைங்கனிதூங்குங் குற்றாலம்
      அக்கும்பாம்பும் ஆமையும்பூண்டோ ர் அனலேந்தும்
      நக்கன்மேய நன்னகர்போலு நமரங்காள். 1.99.4
      1073 மலையார்சாரல் மகவுடன்வந்த மடமந்தி
      குலையார்வாழை தீங்கனிமாந்துங் குற்றாலம்
      இலையார்சூல மேந்தியகையான் எயிலெய்த
      சிலையான்மேய நன்னகர்போலுஞ் சிறுதொண்டீர். 1.99.5
      1074 மைம்மாநீல கண்ணியர்சாரல் மணிவாரி
      கொய்ம்மாஏனல் உண்கிளியோப்புங் குற்றாலங்
      கைம்மாவேழ தீருரிபோர்த்த கடவுள்ளெம்
      பெம்மான்மேய நன்னகர்போலும் பெரியீர்காள். 1.99.6
      1075 நீலநெய்தல் தண்சுனைசூழ்ந்த நீள்சோலை
      கோலமஞ்ஞை பேடையொடாடுங் குற்றாலங்
      காலன்றன்னை காலாற்காய்ந்த கடவுள்ளெஞ்
      சூலபாணி நன்னகர்போலு தொழுவீர்காள். 1.99.7
      1076 போதும்பொன்னும் உந்தியருவி புடைசூழ
      கூதன்மாரி நுண்துளிதூங்குங் குற்றாலம்
      மூதூரிலங்கை முட்டியகோனை முறைசெய்த
      நாதன்மேய நன்னகர்போலு நமரங்காள். 1.99.8
      1077 அரவின்வாயின் முள்ளெயிறேய்ப்ப அரும்பீன்று
      குரவம்பாவை முருகமர்சோலை குற்றாலம்
      பிரமன்னோடு மாலறியாத பெருமையெம்
      பரமன்மேய நன்னகர்போலும் பணிவீர்காள். 1.99.9
      1078 பெருந்தண்சாரல் வாழ்சிறைவண்டு பெடைபுல்கி
      குருந்தம்மேறி செவ்வழிபாடுங் குற்றாலம்
      இருந்துண்தேரும் நின்றுண்சமணும் எடுத்தார்ப்ப
      அருந்தண்மேய நன்னகர்போலும் அடியீர்காள். 1.99.10
      1079 மாடவீதி வருபுனற்காழி யார்மன்னன்
      கோடலீன்று கொழுமுனைகூம்புங் குற்றாலம்
      நாடவல்ல நற்றமிழ்ஞான சம்பந்தன்
      பாடல்பத்தும் பாடநம்பாவம் பறையுமே. 1.99.11
      இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - குறும்பலாவீசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      1.100 திருப்பரங்குன்றம்
      பண் - குறிஞ்சி
      1080 நீடலர்சோதி வெண்பிறையோடு நிரைகொன்றை
      சூடலனந்தி சுடரெரியேந்தி சுடுகானில்
      ஆடலனஞ்சொல் அணியிழையாளை யொருபாகம்
      பாடலன்மேய நன்னகர்போலும் பரங்குன்றே. 1.100.1
      1081 அங்கமொராறும் அருமறைநான்கு மருள்செய்து
      பொங்குவெண்ணூலும் பொடியணிமார்பிற் பொலிவித்து
      திங்களும்பாம்பு திகழ்சடைவைத்தோர் தேன்மொழி
      பங்கினன்மேய நன்னகர்போலும் பரங்குன்றே. 1.100.2
      1082 நீரிடங்கொண்ட நிமிர்சடைதன்மேல் நிரைகொன்றை
      சீரிடங்கொண்ட எம்மிறைபோலுஞ் சேய்தாய
      ஓருடம்புள்ளே உமையொருபாகம் உடனாகி
      பாரிடம்பாட இனிதுறைகோயில் பரங்குன்றே. 1.100.3
      1083 வளர்பூங்கோங்கம் மாதவியோடு மல்லிகை
      குளிர்பூஞ்சாரல் வண்டறைசோலை பரங்குன்ற
      தளிர்போல்மேனி தையல்நல்லாளோ டொருபாகம்
      நளிர்பூங்கொன்றை சூடினன்மேய நகர்தானே. 1.100.4
      1084 பொன்னியல்கொன்றை பொறிகிளர்நாகம் புரிசடை
      துன்னியசோதி யாகியஈசன் தொன்மறை
      பன்னியபாடல் ஆடலன்மேய பரங்குன்றை
      உன்னியசிந்தை உடையவர்க்கில்லை உறுநோயே. 1.100.5
      1085 கடைநெடுமாட கடியரண்மூன்றுங் கனல்மூழ்க
      தொடைநவில்கின்ற வில்லினனந்தி சுடுகானில்
      புடைநவில்பூதம் பாடநின்றாடும் பொருசூல
      படைநவில்வான்றன் நன்னகர்போலும் பரங்குன்றே. 1.100.6
      1086 அயிலுடைவேலோர் அனல்புல்குகையின் அம்பொன்றால்
      எயில்படவெய்த எம்மிறைமேய இடம்போலும்
      மயில்பெடைபுல்கி மாநடமாடும் வளர்சோலை
      பயில்பெடைவண்டு பாடலறாத பரங்குன்றே. 1.100.7
      1087 மைத்தகுமேனி வாளரக்கன்றன் மகுடங்கள்
      பத்தினதிண்டோ ளிருபதுஞ்செற்றான் பரங்குன்றை
      சித்தமதொன்றி செய்கழலுன்னி சிவனென்று
      நித்தலுமே தொல்வினைநம்மேல் நில்லாவே. 1.100.8
      1088 முந்தியிவ்வை தாவியமாலும் மொய்யொளி
      உந்தியில்வந்திங் கருமறையீந்த உரவோனும்
      சிந்தையினாலு தெரிவரிதாகி திகழ்சோதி
      பந்தியலங்கை மங்கையொர்பங்கன் பரங்குன்றே. 1.100.9
      1089 குண்டாய்முற்று திரிவார்கூறை மெய்போர்த்து
      மிண்டாய்மிண்டர் பேசியபேச்சு மெய்யல்ல
      பண்டால்நீழல் மேவியஈசன் பரங்குன்றை
      தொண்டாலே தொல்வினைநம்மேல் நில்லாவே. 1.100.10
      1090 தடமலிபொய்கை சண்பைமன்ஞான சம்பந்தன்
      படமலிநாகம் அரைக்கசைத்தான்றன் பரங்குன்றை
      தொடைமலிபாடல் பத்தும்வல்லார்த துயர்போகி
      விடமலிகண்டன் அருள்பெறுந்தன்மை மிக்கோரே. 1.100.11
      இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - பரங்கிரிநாதர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      1.101 திருக்கண்ணார்கோயில்
      பண் - குறிஞ்சி
      1091 தண்ணார்திங்க பொங்கரவந்தாழ் புனல்சூடி
      பெண்ணாணாய பேரருளாளன் பிரியாத
      கண்ணார்கோயில் கைதொழுவோர்க கிடர்பாவம்
      நண்ணாவாகும் நல்வினையாய நணுகும்மே. 1.101.1
      1092 கந்தமர்சந்துங் காரகிலுந்தண் கதிர்முத்தும்
      வந்தமர்தெண்ணீர் மண்ணிவளஞ்சேர் வயல்மண்டி
      கொந்தலர்சோலை கோகிலமாட குளிர்வண்டு
      செந்திசைபாடுஞ் சீர்திகழ்கண்ணார் கோயிலே. 1.101.2
      1093 பல்லியல்பாணி பாரிடமேத்த படுகானின்
      எல்லிநடஞ்செய் யீசனெம்மான்றன் இடமென்பர்
      கொல்லையின்முல்லை மல்லிகைமௌவற் கொடிபின்னி
      கல்லியல்இஞ்சி மஞ்சமர்கண்ணார் கோயிலே. 1.101.3
      1094 தருவளர்கான தங்கியதுங்க பெருவேழம்
      மருவளர்கோதை அஞ்சவுரித்து மறைநால்வர
      குருவற்ஆல நீழலமர்ந்தீங் குரைசெய்தார்
      கருவளர்கண்ணார் கோயிலடைந்தோர் கற்றோரே. 1.101.4
      1095 மறுமாணுருவாய் மற்றிணையின்றி வானோரை
      செறுமாவலிபால் சென்றுலகெல்லாம் அளவிட்ட
      குறுமாணுருவன் தற்குறியா கொண்டாடும்
      கறுமாகண்டன் மேயதுகண்ணார் கோயிலே. 1.101.5
      1096 விண்ணவருக்காய் வேலையுள்நஞ்சம் விருப்பாக
      உண்ணவனைத்தே வர்க்கமுதீந்தெவ் வுலகிற்கும்
      கண்ணவனைக்கண் ணார்திகழ்கோயிற் கனிதன்னை
      நண்ணவல்லோர்க கில்லைநமன்பால் நடலையே. 1.101.6
      1097 முன்னொருகால திந்திரனுற்ற முனிசாபம்
      பின்னொருநாளவ் விண்ணவரேத்த பெயர்வெய்தி
      தன்னருளாற்கண் ணாயிரமீந்தோன் சார்பென்பர்
      கன்னியர்நாளு துன்னமர்கண்ணார் கோயிலே. 1.101.7
      1098 பெருக்கெண்ணாத பேதையரக்கன் வரைக்கீழால்
      நெருக்குண்ணாத்தன் நீள்கழல்நெஞ்சில் நினைந்தேத்த
      முருக்குண்ணாதோர் மொய்கதிர்வாள்தேர் முன்னீந்த
      திருக்கண்ணாரென் பார்சிவலோகஞ் சேர்வாரே. 1.101.8
      1099 செங்கமலப்போ திற்திகழ்செல்வன் திருமாலும்
      அங்கமலக்கண் நோக்கரும்வண்ண தழலானான்
      தங்கமலக்கண் ணார்திகழ்கோயில் தமதுள்ள
      தங்கமலத்தோ டேத்திடஅண்ட தமர்வாரே. 1.101.9
      1100 தாறிடுபெண்ணை தட்டுடையாரு தாமுண்ணுஞ்
      சோறுடையார்சொல் தேறன்மின்வெண்ணூல் சேர்மார்பன்
      ஏறுடையன்பரன் என்பணிவான்நீள் சடைமேலோர்
      ஆறுடையண்ணல் சேர்வதுகண்ணார் கோயிலே. 1.101.10
      1101 காமருகண்ணார் கோயிலுளானை கடல்சூழ்ந்த
      பூமருசோலை பொன்னியல்மாட புகலிக்கோன்
      நாமருதொன்மை தன்மையுள்ஞான சம்பந்தன்
      பாமருபாடல் பத்தும்வல்லார்மேல் பழிபோமே. 1.101.11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - கண்ணாயிரேசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      1.102 சீகாழி
      பண் - குறிஞ்சி
      1102 உரவார்கலையின் கவிதைப்புலவர கொருநாளுங்
      கரவாவண்கை கற்றவர்சேருங் கலிக்காழி
      அரவார்அரையா அவுணர்புரமூன் றெரிசெய்த
      சரவாவென்பார் தத்துவஞான தலையாரே. 1.102.1
      1103 மொய்சேர்வண்டுண் மும்மதநால்வாய் முரண்வேழ
      கைபோல்வாழை காய்குலையீனுங் கலிக்காழி
      மைசேர்கண்ட தெண்டோ ள்முக்கண் மறையோனே
      ஐயாவென்பார கல்லல்களான அடையாவே. 1.102.2
      1104 இளகக்கமல தீன்களியங்குங் கழிசூழ
      களகப்புரிசை கவினார்சாருங் கலிக்காழி
      அளகத்திருநன் நுதலிபங்கா அரனேயென்
      றுளகப்பாடும் அடியார்க்குறுநோய் அடையாவே. 1.102.3
      1105 எண்ணார்முத்தம் ஈன்றுமரகதம் போற்காய்த்து
      கண்ணார்கமுகு பவளம்பழுக்குங் கலிக்காழி
      பெண்ணோர்பாகா பித்தாபிரானே யென்பார்க்கு
      நண்ணாவினைகள் நாடொறுமின்பம் நணுகும்மே. 1.102.4
      1106 மழையார்சாரல் செம்புனல்வந்தங் கடிவருட
      கழையார்கரும்பு கண்வளர்சோலை கலிக்காழி
      உழையார்கரவா உமையாள்கணவா ஒளிர்சங
      குழையாவென்று கூறவல்லார்கள் குணவோரே. 1.102.5
      1107 குறியார்திரைகள் வரைகள்நின்றுங் கோட்டாறு
      கறியார்கழிசம் பிரசங்கொடுக்குங் கலிக்காழி
      வெறியார்கொன்றை சடையாவிடையா என்பாரை
      அறியாவினைகள் அருநோய்பாவம் அடையாவே. 1.102.6
      இப்பதிகத்தின் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 1.102.7
      1108 உலங்கொள்சங்க தார்கலியோ துதையுண்டு
      கலங்கள்வந்து கார்வயலேறுங் கலிக்காழி
      இலங்கைமன்னன் தன்னையிடர்கண் டருள்செய்த
      சலங்கொள்சென்னி மன்னாஎன்ன தவமாமே. 1.102.8
      1109 ஆவிக்கமல தன்னமியங்குங் கழிசூழ
      காவிக்கண்ணார் மங்கலம்ஓவா கலிக்காழி
      பூவிற்றோன்றும் புத்தேளொடுமா லவன்றானும்
      மேவிப்பரவும் அரசேயென்ன வினைபோமே. 1.102.9
      1110 மலையார்மாடம் நீடுயர்இஞ்சி மஞ்சாருங்
      கலையார்மதியஞ் சேர்தரும்அந்தண் கலிக்காழி
      தலைவாசமணர் சாக்கியர்க்கென்றும் அறிவொண்ணா
      நிலையாயென்ன தொல்வினையாய நில்லாவே. 1.102.10
      1111 வடிகொள்வாவி செங்கழுநீரிற் கொங்காடி
      கடிகொள்தென்றல் முன்றிலில்வைகுங் கலிக்காழி
      அடிகள்தம்மை அந்தமில்ஞான சம்பந்தன்
      படிகொள்பாடல் வல்லவர்தம்மேற் பழிபோமே. 1.102.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      1.103 திருக்கழுக்குன்றம்
      பண் - குறிஞ்சி
      1112 தோடுடையானொரு காதில்தூய குழைதாழ
      ஏடுடையான் தலைகலனாக இரந்துண்ணும்
      நாடுடையான் நள்ளிருள்ஏம நடமாடுங்
      காடுடையான் காதல்செய்கோயில் கழுக்குன்றே. 1.103.1
      1113 கேணவல்லான் கேழல்வெண்கொம்பு குறளாமை
      பூணவல்லான் புரிசடைமேலொர் புனல்கொன்றை
      பேணவல்லான் பெண்மகள்தன்னை யொருபாகங்
      காணவல்லான் காதல்செய்கோயில் கழுக்குன்றே. 1.103.2
      1114 தேனகத்தார் வண்டதுவுண்ட திகழ்கொன்றை
      தானகத்தார் தண்மதிசூடி தலைமேலோர்
      வானகத்தார் வையகத்தார்கள் தொழுதேத்துங்
      கானகத்தான் காதல்செய்கோயில் கழுக்குன்றே. 1.103.3
      1115 துணையல்செய்தான் தூயவண்டியாழ்செய் சுடர்க்கொன்றை
      பிணையல்செய்தான் பெண்ணின்நல்லாளை யொருபாகம்
      இணையல்செய்யா இலங்கெயின்மூன்றும் எரியுண்ண
      கணையல்செய்தான் காதல்செய்கோயில் கழுக்குன்றே. 1.103.4
      1116 பையுடைய பாம்பொடுநீறு பயில்கின்ற
      மெய்யுடையான் வெண்பிறைசூடி விரிகொன்றை
      மையுடைய மாமிடற்றண்ணல் மறிசேர்ந்த
      கையுடையான் காதல்செய்கோயில் கழுக்குன்றே. 1.103.5
      1117 வெள்ளமெல்லாம் விரிசடைமேலோர் விரிகொன்றை
      கொள்ளவல்லான் குரைகழலேத்துஞ் சிறுத்தொண்டர்
      உள்ளமெல்லாம் உள்கிநின்றாங்கே உடனாடுங்
      கள்ளம்வல்லான் காதல்செய்கோயில் கழுக்குன்றே. 1.103.6
      இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 1.103.7
      1118 ஆதல்செய்தான் அரக்கர்தங்கோனை அருவரையின்
      நோதல்செய்தான் நொடிவரையின்கண் விரலூன்றி
      பேர்தல்செய்தான் பெண்மகள்தன்னோ டொருபாகங்
      காதல்செய்தான் காதல்செய்கோயில் கழுக்குன்றே. 1.103.8
      1119 இடந்தபெம்மான் ஏனமதாயும் அனமாயு
      தொடர்ந்தபெம்மான் தூமதிசூடி வரையார்தம்
      மடந்தைபெம்மான் வார்கழலோச்சி காலனை
      கடந்தபெம்மான் காதல்செய்கோயில் கழுக்குன்றே. 1.103.9
      1120 தேயநின்றான் திரிபுரங்கங்கை சடைமேலே
      பாயநின்றான் பலர்புகழ்ந்தேத்த வுலகெல்லாஞ்
      சாயநின்றான் வன்சமண்குண்டர் சாக்கியர்
      காயநின்றான் காதல்செய்கோயில் கழுக்குன்றே. 1.103.10
      1121 கண்ணுதலான் காதல்செய்கோயில் கழுக்குன்றை
      நண்ணியசீர் ஞானசம்பந்தன் தமிழ்மாலை
      பண்ணியல்பாற் பாடியபத்தும் இவைவல்லார்
      புண்ணியராய் விண்ணவரோடும் புகுவாரே. 1.103.11
      இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - வேதகிரீசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      1.104 திருப்புகலி
      பண் - வியாழக்குறிஞ்சி
      1122 ஆடல் அரவசைத்தான் அருமாமறை தான்விரித்தான் கொன்றை
      சூடிய செஞ்சடையான் சுடுகாடமர்ந்த பிரான்
      ஏடவிழ் மாமலையாள் ஒருபாகம் அமர்ந்தடியார் ஏத்த
      ஆடிய எம்மிறையூர் புகலி பதியாமே. 1.104.1
      1123 ஏல மலிகுழலார் இசைபாடி எழுந்தருளாற் சென்று
      சோலை மலிசுனையிற் குடைந்தாடி துதிசெய்ய
      ஆலை மலிபுகைபோய் அண்டர்வானத்தை மூடிநின்று நல்ல
      மாலை யதுசெய்யும் புகலி பதியாமே. 1.104.2
      1124 ஆறணி செஞ்சடையான் அழகார்புரம் மூன்றுமன்று வேவ
      நீறணி யாகவைத்த நிமிர்புன்சடை எம்மிறைவன்
      பாறணி வெண்டலையிற் பகலேபலி என்றுவந்து நின்ற
      வேறணி கோலத்தினான் விரும்பும் புகலியதே. 1.104.3
      1125 வெள்ள மதுசடைமேற் கரந்தான் விரவார்புரங்கள் மூன்றுங்
      கொள்ள எரிமடுத்தான் குறைவின்றி யுறைகோயில்
      அள்ளல் விளைகழனி அழகார்விரை தாமரைமேல் அன்ன
      புள்ளினம் வைகியெழும் புகலி பதிதானே. 1.104.4
      1126 சூடும் மதிச்சடைமேல் சுரும்பார்மலர கொன்றைதுன்ற நட்டம்
      ஆடும் அமரர்பிரான் அழகார்உமை யோடுமுடன்
      வேடு படநடந்த விகிர்தன் குணம்பரவி தொண்டர்
      பாட இனிதுறையும் புகலி பதியாமே. 1.104.5
      1127 மைந்தணி சோலையின்வாய் மதுப்பாய்வரி வண்டினங்கள் வந்து
      நந்திசை பாடநடம் பயில்கின்ற நம்பனிடம்
      அந்திசெய் மந்திரத்தால் அடியார்கள் பரவியெழ விரும்பும்
      புந்திசெய் நால்மறையோர் புகலி பதிதானே. 1.104.6
      1128 மங்கையோர் கூறுகந்த மழுவாளன் வார்சடைமேல் திங்கள்
      கங்கைதனை கரந்த கறைக்கண்டன் கருதுமிடஞ்
      செங்கயல் வார்கழனி திகழும் புகலிதனை சென்றுதம்
      அங்கையி னால்தொழுவார் அவலம் அறியாரே. 1.104.7
      1129 வல்லிய நுண்ணிடையாள் உமையாள் விருப்பனவன் நண்ணும்
      நல்லிட மென்றறியான் நலியும் விறலரக்கன்
      பல்லொடு தோள்நெரிய விரலூன்றி பாடலுமே கைவாள்
      ஒல்லை அருள்புரிந்தான் உறையும் புகலியதே. 1.104.8
      1130 தாதலர் தாமரைமேல் அயனு திருமாலு தேடி
      ஓதியுங் காண்பரிய உமைகோன் உறையுமிடம்
      மாதவி வான்வகுளம் மலர்ந்தெங்கும் விரைதோய வாய்ந்த
      போதலர் சோலைகள்சூழ் புகலி பதிதானே. 1.104.9
      1131 வெந்துவர் மேனியினார் விரிகோவ ணநீத்தார் சொல்லும்
      அந்தர ஞானமெல்லாம் அவையோர் பொருளென்னேல்
      வந்தெதி ரும்புரமூன் றெரித்தான் உறைகோயில் வாய்ந்த
      புந்தியினார் பயிலும் புகலி பதிதானே. 1.104.10
      1132 வேதமோர் கீதமுணர் வாணர்தொழு தேத்தமிகு வாச
      போதனை போல்மறையோர் பயிலும் புகலிதன்னுள்
      நாதனை ஞானமிகு சம்பந்தன் தமிழ்மாலை நாவில்
      ஓதவல் லாருலகில் உறுநோய் களைவாரே. 1.104.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      1.105 திருஆரூர்
      பண் - வியாழக்குறிஞ்சி
      1133 பாடலன் நான்மறையன் படிபட்ட கோலத்தன் திங்கள்
      சூடலன் மூவிலைய சூலம் வலனேந்தி
      கூடலர் மூவெயிலும் எரியுண்ண கூரெரிகொண் டெல்லி
      ஆடலன் ஆதிரையன் ஆரூர் அமர்ந்தானே. 1.105.1
      1134 சோலையில் வண்டினங்கள் சுரும்போ டிசைமுரல சூழ்ந்த
      ஆலையின் வெம்புகைபோய் முகில்தோயும் ஆரூரில்
      பாலொடு நெய்தயிரும் பயின்றாடும் பரமேட்டி பாதம்
      காலையும் மாலையும்போ பணிதல் கருமமே. 1.105.2
      1135 உள்ளமோர் இச்சையினால் உகந்தேத்தி தொழுமின்தொண்டீர் மெய்யே
      கள்ளம் ஒழிந்திடுமின் கரவா திருபொழுதும்
      வெள்ளமோர் வார்சடைமேற் கரந்திட்ட வெள்ளேற்றான் மேய
      அள்ளல் அகன்கழனி ஆரூர் அடைவோமே. 1.105.6
      1136 வெந்துறு வெண்மழுவா படையான் மணிமிடற்றான் அரையின்
      ஐந்தலை யாடரவம் அசைத்தான் அணியாரூர
      பைந்தளிர கொன்றையந்தார பரமன் அடிபரவ பாவம்
      நைந்தறும் வந்தணையும் நாடொறும் நல்லனவே. 1.105.7
      1137 வீடு பிறப்பெளிதாம் அதனை வினவுதிரேல் வெய்ய
      காடிட மாகநின்று கனலேந்தி கைவீசி
      ஆடும் அவிர்சடையான் அவன்மேய ஆரூரை சென்று
      பாடுதல் கைதொழுதல் பணிதல் கருமமே. 1.105.8
      1138 கங்கையோர் வார்சடைமேற் கரந்தான் கிளிமழலை கேடில்
      மங்கையோர் கூறுடையான் மறையான் மழுவேந்தும்
      அங்கையி னான்அடியே பரவி யவன்மேய ஆரூர்
      தங்கையினாற் றொழுவார் தடுமாற் றறுப்பாரே. 1.105.6
      1138 நீறணி மேனியனாய் நிரம்பா மதிசூடி நீண்ட
      ஆறணி வார்சடையான் ஆரூர் இனிதமர்ந்தான்
      சேறணி மாமலர்மேல் பிரமன் சிரமரிந்த செங்கண்
      ஏறணி வெல்கொடியான் அவனெம் பெருமானே. 1.105.7
      இப்பதிகத்தில் 8-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 1.105.8
      1140 வல்லி தோலுடையான் வளர்திங்கள் கண்ணியினான் வாய்த்த
      நல்லியல் நான்முகத்தோன் தலையின் னறவேற்றான்
      அல்லியங் கோதைதன்னை ஆக தமர்ந்தருளி ஆரூர
      புல்லிய புண்ணியனை தொழுவாரும் புண்ணியரே. 1.105.9
      1141 செந்துவர் ஆடையினார் உடைவிட்டு நின்றுழல்வார் சொன்ன
      இந்திர ஞாலமொழி தின்புற வேண்டுதிரேல்
      அந்தர மூவெயிலு மரணம் எரியூட்டி ஆரூர
      தந்திர மாவுடையான் அவனெ தலைமையனே. 1.105.10
      1142 நல்ல புனற்புகலி தமிழ்ஞான சம்பந்தன்
      அல்லி மலர்க்கழனி ஆரூர் அமர்ந்தானை
      வல்லதோ ரிச்சையினால் வழிபாடிவை பத்தும் வாய்க்க
      சொல்லுதல் கேட்டல்வல்லார் துன்ப துடைப்பாரே. 1.105.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      1.106 திருஊறல்
      பண் - வியாழக்குறிஞ்சி
      1143 மாறில் அவுணரரணம் மவைமாயவோர் வெங்கணையா லன்று
      நீறெழ எய்தவெங்கள் நிமலன் இடம்வினவில்
      தேறல் இரும்பொழிலும் திகழ்செங்கயல் பாய்வயலுஞ் சூழ்ந்த
      ஊறல் அமர்ந்தபிரான் ஒலியார்கழல் உள்குதுமே. 1.106.1
      1144 மத்த மதக்கரியை மலையான்மகள் அஞ்சவன்று கையால்
      மெத்த உரித்தவெங்கள் விமலன் விரும்புமிடம்
      தொத்தல ரும்பொழில்சூழ் வயல்சேர்ந்தொளிர் நீலம்நாளு நயனம்
      ஒத்தல ருங்கழனி திருவூறலை உள்குதுமே. 1.106.2
      1145 ஏன மருப்பினொடும் எழிலாமையும் பூண்டழகார் நன்றுங்
      கானமர் மான்மறி கைக்கடவுள் கருதுமிடம்
      வான மதிதடவும் வளர்சோலைகள் சூழ்ந்தழகார் நம்மை
      ஊனம் அறுத்தபிரான் திருவூறலை உள்குதுமே. 1.106.3
      1146 நெய்யணி மூவிலைவேல் நிறைவெண்மழு வும்மனலும் அன்று
      கையணி கொள்கையினான் கடவுள் ளிடம்வினவின்
      மையணி கண்மடவார் பலர்வ திறைஞ்சமன்னி நம்மை
      உய்யும் வகைபுரிந்தான் திருவூறலை உள்குதுமே. 1.106.4
      1147 எண்டிசை யோர்மகிழ எழில்மாலையும் போனகமும் பண்டு
      சண்டி தொழவளித்தான் அவன்றாழும் இடம்வினவில்
      கொண்டல்கள் தங்குபொழிற் குளிர்பொய்கை கள்சூழ்ந்து நஞ்சை
      உண்டபி ரானமரு திருவூறலை உள்குதுமே. 1.106.5
      1148 இப்பதிகத்தில் 67-ம் செய்யுட்கள் சிதைந்து போயின. 1.106.6
      1149 கறுத்த மனத்தினொடுங் கடுங்காலன்வ தெய்துதலுங் கலங்கி
      மறுக்குறும் மாணிக்கருள மகிழ்ந்தானிடம் வினவில்
      செறுத்தெழு வாளரக்கன் சிரந்தோளும் மெய்யுந்நெரிய அன்று
      ஒறுத்தருள் செய்தபிரான் திருவூறலை உள்குதுமே. 1.106.7
      1150 நீரின் மிசைத்துயின்றோன் நிறைநான் முகனும்மறியா தன்று
      தேரும் வகைநிமிர்ந்தான் அவன்சேரும் இடம்வினவில்
      பாரின் மிசையடியார் பலர்வ திறைஞ்சமகிழ தாகம்
      ஊரும் அரவசைத்தான் திருவூறலை உள்குதுமே. 1.106.8
      1151 பொன்னியல் சீவரத்தார் புளித்தட்டையர் மோட்டமணர் குண்டர்
      என்னும் இவர்க்கருளா ஈசன் இடம்வினவில்
      தென்னென வண்டினங்கள் செறியார்பொழில் சூழ்ந்தழகார் தன்னை
      உன்னவினை கெடுப்பான் திருவூறலை உள்குதுமே. 1.106.9
      1152 கோட லிரும்புறவிற் கொடிமாட கொச்சையர்மன் மெச்ச
      ஓடுபுனல் சடைமேற் கரந்தான் திருவூறல்
      நாட லரும்புகழான் மிகுஞானசம் பந்தன்சொன்ன நல்ல
      பாடல்கள் பத்தும்வல்லார் பரலோகத்து இருப்பாரே. 1.106.10
      இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. தக்கோலமென வழங்குகின்றது.
      சுவாமிபெயர் - உமாபதீசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      1.107 திருக்கொடிமாடச்செங்குன்றூர்
      பண் - வியாழக்குறிஞ்சி
      1152 வெந்தவெண் ணீறணிந்து விரிநூல் திகழ்மார்பின் நல்ல
      பந்தணவும் விரலாள் ஒருபாகம் அமர்ந்தருளி
      கொந்தணவும் பொழில்சூழ் கொடிமாட செங்குன்றூர் நின்ற
      அந்தணனை தொழுவார் அவலம் அறுப்பாரே. 1.107.1
      1153 அலைமலி தண்புனலோ டரவஞ் சடைக்கணி தாகம்
      மலைமகள் கூறுடையான் மலையார் இளவாழை
      குலைமலி தண்பொழில்சூழ் கொடிமாட செங்குன்றூர் நின்ற
      தலைமக னைத்தொழுவார் தடுமாற் றறுப்பாரே. 1.107.2
      1154 பாலன நீறுபுனை திருமார்பிற் பல்வளைக்கை நல்ல
      ஏலம லர்க்குழலாள் ஒருபாகம் அமர்ந்தருளி
      கோல மலர்ப்பொழில்சூழ் கொடிமாட செங்குன்றூர் மல்கும்
      நீலநன் மாமிடற்றான் கழலேத்தல் நீதியே. 1.107.3
      1155 வாருறு கொங்கைநல்ல மடவாள் திகழ்மார்பில் நண்ணுங்
      காருறு கொன்றையொடுங் கதநாகம் பூண்டருளி
      சீருறும் அந்தணர்வாழ் கொடிமாட செங்குன்றூர் நின்ற
      நீருறு செஞ்சடையான் கழலேத்தல் நீதியே. 1.107.4
      1156 பொன்றிகழ் ஆமையொடு புரிநூல் திகழ்மார்பில் நல்ல
      பன்றியின் கொம்பணிந்து பணைத்தோளியோர் பாகமா
      குன்றன மாளிகைசூழ் கொடிமாட செங்குன்றூர் வானில்
      மின்றிகழ் செஞ்சடையான் கழலேத்தல் மெய்ப்பொருளே. 1.107.5
      1157 ஓங்கிய மூவிலைநற் சூல மொருகையன் சென்னி
      தாங்கிய கங்கையொடு மதியஞ் சடைக்கணிந்து
      கோங்கண வும்பொழில்சூழ் கொடிமாட செங்குன்றூர் வாய்ந்த
      பாங்கன தாள்தொழுவார் வினையாய பற்றறுமே. 1.107.6
      1158 நீடலர் கொன்றையொடு நிமிர்புன் சடைதாழ வெள்ளை
      வாடலுடை தலையிற் பலிகொள்ளும் வாழ்க்கையனா
      கோடல் வளம்புறவிற் கொடிமாட செங்குன்றூர் நின்ற
      சேடன தாள்தொழுவார் வினையாய தேயுமே. 1.107.7
      1159 மத்தநன் மாமலரும் மதியும்வளர் கொன்றையுடன் துன்று
      தொத்தலர் செஞ்சடைமேல் துதைய வுடன்சூடி
      கொத்தலர் தண்பொழில்சூழ் கொடிமாட செங்குன்றூர் மேய
      தத்துவனை தொழுவார் தடுமாற் றறுப்பாரே. 1.107.8
      1160 செம்பொனின் மேனியனாம் பிரமன்திரு மாலுந்தேட நின்ற
      அம்பவ ளத்திரள்போல் ஒளியாய ஆதிபிரான்
      கொம்பண வும்பொழில்சூழ் கொடிமாட செங்குன்றூர் மேய
      நம்பன தாள்தொழுவார் வினையாய நாசமே. 1.107.9
      1161 போதியர் பிண்டியரென் றிவர்கள் புறங்கூறும் பொய்ந்நூல்
      ஓதிய கட்டுரைகே டுழல்வீர் வரிக்குயில்கள்
      கோதிய தண்பொழில்சூழ் கொடிமாட செங்குன்றூர் நின்ற
      வேதியனை தொழநும் வினையான வீடுமே. 1.107.10
      1162 அலைமலி தண்புனல்சூழ தழகார் புகலிந்நகர் பேணு
      தலைமக னாகிநின்ற தமிழ்ஞான சம்பந்தன்
      கொலைமலி மூவிலையான் கொடிமாட செங்குன்றூ ரேத்தும்
      நலம்மலி பாடல்வல்லார் வினையான நாசமே. 1.107.11
      இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது.
      திருச்செங்கோடு என வழங்குகின்றது.
      சுவாமிபெயர் - அர்த்தநாரீசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      1.108 திருப்பாதாளீச்சரம்
      பண் - வியாழக்குறிஞ்சி
      1163 மின்னியல் செஞ்சடைமேல் விளங்கும்மதி மத்தமொடு நல்ல
      பொன்னியல் கொன்றையினான் புனல்சூடி பொற்பமரும்
      அன்னம் அனநடையாள் ஒருபாக தமர்ந்தருளி நாளும்
      பன்னிய பாடலினான் உறைகோயில் பாதாளே. 1.108.1
      1164 நீடலர் கொன்றையொடு நிரம்பா மதிசூடி வெள்ளை
      தோடமர் காதில்நல்ல குழையான் சுடுநீற்றான்
      ஆடர வம்பெருக அனலேந்தி கைவீசி வேதம்
      பாடலி னாலினியான் உறைகோயில் பாதாளே. 1.108.2
      1165 நாகமும் வான்மதியும் நலம்மல்கு செஞ்சடையான் சாமம்
      போகநல் வில்வரையாற் புரம்மூன் றெரித்துகந்தான்
      தோகைநல் மாமயில்போல் வளர்சாயல் தூமொழியை கூட
      பாகமும் வைத்துகந்தான் உறைகோயில் பாதாளே. 1.108.3
      1166 அங்கமும் நான்மறையு மருள்செய் தழகார்ந்த அஞ்சொல்
      மங்கையோர் கூறுடையான் மறையோன் உறைகோயில்
      செங்கயல் நின்றுகளுஞ் செறுவில் திகழ்கின்ற சோதி
      பங்கயம் நின்றலரும் வயல்சூழ்ந்த பாதாளே. 1.108.4
      1167 பேய்பல வுந்நிலவ பெருங்காடரங் காகவுன்னி நின்று
      தீயொடு மான்மறியும் மழுவும் திகழ்வித்து
      தேய்பிறை யும்மரவும் பொலிகொன்றை சடைதன்மேற் சேர
      பாய்புன லும்முடையான் உறைகோயில் பாதாளே. 1.108.5
      1168 கண்ணமர் நெற்றியினான் கமழ்கொன்றை சடைதன்மே னின்றும்
      விண்ணியல் மாமதியு முடன்வைத்தவன் விரும்பும்
      பெண்ணமர் மேனியினான் பெருங்கா டரங்காக ஆடும்
      பண்ணியல் பாடலினான் உறைகோயில் பாதாளே. 1.108.6
      1169 விண்டலர் மத்தமொடு மிளிரும்மிள நாகம்வன்னி திகழ்
      வண்டலர் கொன்றைநகு மதிபுல்கு வார்சடையான்
      விண்டவர் தம்புரம்மூன் றெரிசெய் துரைவேதம் நான்குமவை
      பண்டிசை பாடலினான் உறைகோயில் பாதாளே. 1.108.7
      1170 மல்கிய நுண்ணிடையாள் உமைநங்கை மறுகஅன்று கையால்
      தொல்லை மலையெடுத்த அரக்கன்றலை தோள்நெரித்தான்
      கொல்லை விடையுகந்தான் குளிர்திங்கள் சடைக்க ணிந்தோன்
      பல்லிசை பாடலினான் உறைகோயில் பாதாளே. 1.108.8
      1171 தாமரை மேலயனும் அரியுந்தம தாள்வினையாற் றேடி
      காமனை வீடுவித்தான் கழல்காண்பில ராயகன்றார்
      பூமரு வுங்குழலாள் உமைநங்கை பொருந்தியிட்ட நல்ல
      பாமரு வுங்குணத்தான் உறைகோயில் பாதாளே. 1.108.9
      1172 காலையில் உண்பவருஞ் சமண்கையருங் கட்டுரைவி டன்று
      ஆலவிடம் நுகர்ந்தான் அவன்றன் அடியேபரவி
      மாலையில் வண்டினங்கள் மதுவுண் டிசைமுரல வாய்த்த
      பாலையாழ பாட்டுகந்தான் உறைகோயில் பாதாளே. 1.108.10
      1173 பன்மலர் வைகுபொழில் புடைசூழ்ந்த பாதாளை சேர
      பொன்னியன் மாடமல்கு புகலிந்நகர் மன்னன்
      தன்னொளி மிக்குயர்ந்த தமிழ்ஞான சம்பந்தன் சொன்ன
      இன்னிசை பத்தும்வல்லார் எழில்வான திருப்பாரே. 1.108.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      1.109 திருச்சிரபுரம்
      பண் - வியாழக்குறிஞ்சி
      1174 வாருறு வனமுலை மங்கைபங்கன்
      நீருறு சடைமுடி நிமலனிடங்
      காருறு கடிபொழில் சூழ்ந்தழகார்
      சீருறு வளவயற் சிரபுரமே. 1.109.1
      1175 அங்கமொ டருமறை யருள்புரிந்தான்
      திங்களொ டரவணி திகழ்முடியன்
      மங்கையொ டினிதுறை வளநகரஞ்
      செங்கயல் மிளிர்வயல் சிரபுரமே. 1.109.2
      1176 பரிந்தவன் பன்முடி அமரர்க்காகி
      திரிந்தவர் புரமவை தீயின்வேவ
      வரிந்தவெஞ் சிலைபிடி தடுசரத்தை
      தெரிந்தவன் வளநகர் சிரபுரமே. 1.109.3
      1177 நீறணி மேனியன் நீள்மதியோ
      டாறணி சடையினன் அணியிழையோர்
      கூறணி தினிதுறை குளிர்நகரஞ்
      சேறணி வளவயல் சிரபுரமே. 1.109.4
      1178 அருந்திறல் அவுணர்கள் அரணழி
      சரந்துர தெரிசெய்த சங்கரனூர்
      குருந்தொடு கொடிவிடு மாதவிகள்
      திருந்திய புறவணி சிரபுரமே. 1.109.5
      1179 கலையவன் மறையவன் காற்றொடுதீ
      மலையவன் விண்ணொடு மண்ணுமவன்
      கொலையவன் கொடிமதில் கூட்டழித்த
      சிலையவன் வளநகர் சிரபுரமே. 1.109.6
      1180 வானமர் மதியொடு மத்தஞ்சூடி
      தானவர் புரமெய்த சைவனிடங்
      கானமர் மடமயில் பெடைபயிலு
      தேனமர் பொழிலணி சிரபுரமே. 1.109.7
      1181 மறுத்தவர் திரிபுரம் மாய்ந்தழி
      கறுத்தவன் காரர கன்முடிதோள்
      இறுத்தவன் இருஞ்சின காலனைமுன்
      செறுத்தவன் வளநகர் சிரபுரமே. 1.109.8
      1182 வண்ணநன் மலருறை மறையவனுங்
      கண்ணனுங் கழல்தொழ கனலுருவாய்
      விண்ணுற வோங்கிய விமலனிடம்
      திண்ணநன் மதிலணி சிரபுரமே. 1.109.9
      1183 வெற்றரை யுழல்பவர் விரிதுகிலார்
      கற்றிலர் அறவுரை புறனுரைக்க
      பற்றலர் திரிபுரம் மூன்றும்வேவ
      செற்றவன் வளநகர் சிரபுரமே. 1.109.10
      1184 அருமறை ஞானசம் பந்தனந்தண்
      சிரபுர நகருறை சிவனடியை
      பரவிய செந்தமிழ் பத்தும்வல்லார்
      திருவொடு புகழ்மல்கு தேசினரே. 1.109.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      1.110 திருவிடைமருதூர்
      பண் - வியாழக்குறிஞ்சி
      1185 மருந்தவன் வானவர் தானவர்க்கும்
      பெருந்தகை பிறவினொ டிறவுமானான்
      அருந்தவ முனிவரொ டால்நிழற்கீழ்
      இருந்தவன் வளநகர் இடைமருதே. 1.110.1
      1186 தோற்றவன் கேடவன் துணைமுலையாள்
      கூற்றவன் கொல்புலி தோலசைத்த
      நீற்றவன் நிறைபுனல் நீள்சடைமேல்
      ஏற்றவன் வளநகர் இடைமருதே. 1.110.2
      1187 படையுடை மழுவினன் பால்வெண்ணீற்றன்
      நடைநவில் ஏற்றினன் ஞாலமெல்லாம்
      முடைதலை இடுபலி கொண்டுழல்வான்
      இடைமரு தினிதுறை யெம்மிறையே. 1.110.3
      1188 பணைமுலை உமையொரு பங்கனொன்னார்
      துணைமதில் மூன்றையுஞ் சுடரில்மூழ
      கணைதுர தடுதிறற் காலற்செற்ற
      இணையிலி வளநகர் இடைமருதே. 1.110.4
      1189 பொழிலவன் புயலவன் புயலியக்கு
      தொழிலவன் துயரவன் துயரகற்றுங்
      கழலவன் கரியுரி போர்த்துகந்த
      எழிலவன் வளநகர் இடைமருதே. 1.110.5
      1190 நிறையவன் புனலொடு மதியும்வைத்த
      பொறையவன் புகழவன் புகழநின்ற
      மறையவன் மறிகடல் நஞ்சையுண்ட
      இறையவன் வளநகர் இடைமருதே. 1.110.6
      1191 நனிவளர் மதியொடு நாகம்வைத்த
      பனிமலர கொன்றையம் படர்சடையன்
      முனிவரொ டமரர்கள் முறைவணங்க
      இனிதுறை வளநகர் இடைமருதே. 1.110.7
      1192 தருக்கின அரக்கன தாளுந்தோளும்
      நெரித்தவன் நெடுங்கைமா மதகரியன்
      றுரித்தவன் ஒன்னலர் புரங்கள்மூன்றும்
      எரித்தவன் வளநகர் இடைமருதே. 1.110.8
      1193 பெரியவன் பெண்ணினொ டாணுமானான்
      வரியர வணைமறி கடற்றுயின்ற
      கரியவன் அலரவன் காண்பரிய
      எரியவன் வளநகர் இடைமருதே. 1.110.9
      1194 சிந்தையில் சமணொடு தேரர்சொன்ன
      புந்தியில் உரையவை பொருள்கொளாதே
      அந்தணர் ஓத்தினொ டரவமோவா
      எந்தைதன் வளநகர் இடைமருதே.
      ஓத்து என்பது வேதம். 1.110.10
      1195 இலைமலி பொழிலிடை மருதிறையை
      நலமிகு ஞானசம் பந்தன்சொன்ன
      பலமிகு தமிழிவை பத்தும்வல்லார்
      உலகுறு புகழினொ டோ ங்குவரே. 1.110.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      1.111 திருக்கடைமுடி
      பண் - வியாழக்குறிஞ்சி
      1196 அருத்தனை அறவனை அமுதனைநீர்
      விருத்தனை பாலனை வினவுதிரேல்
      ஒருத்தனை யல்லதிங் குலகமேத்துங்
      கருத்தவன் வளநகர் கடைமுடியே. 1.111.1
      1197 திரைபொரு திருமுடி திங்கள்விம்மும்
      அரைபொரு புலியதள் அடிகளிட
      திரையொடு நுரைபொரு தெண்சுனைநீர்
      கரைபொரு வளநகர் கடைமுடியே. 1.111.2
      1198 ஆலிள மதியினொ டரவுகங்கை
      கோலவெண் ணீற்றனை தொழுதிறைஞ்சி
      ஏலநன் மலரொடு விரைகமழுங்
      காலன வளநகர் கடைமுடியே. 1.111.3
      1199 கொய்யணி நறுமலர கொன்றையந்தார்
      மையணி மிடறுடை மறையவனூர்
      பையணி யரவொடு மான்மழுவாள்
      கையணி பவனிடங் கடைமுடியே. 1.111.4
      1200 மறையவன் உலகவன் மாயமவன்
      பிறையவன் புனலவன் அனலுமவன்
      இறையவன் எனவுல கேத்துங்கண்டங்
      கறையவன் வளநகர் கடைமுடியே. 1.111.5
      1201 படவர வேரல்குற் பல்வளைக்கை
      மடவர லாளையொர் பாகம்வைத்து
      குடதிசை மதியது சூடுசென்னி
      கடவுள்தன் வளநகர் கடைமுடியே. 1.111.6
      1202 பொடிபுல்கு மார்பினிற் புரிபுல்குநூல்
      அடிபுல்கு பைங்கழல் அடிகளிடங்
      கொடிபுல்கு மலரொடு குளிர்சுனைநீர்
      கடிபுல்கு வளநகர் கடைமுடியே. 1.111.7
      1203 நோதல்செய் தரக்கனை நோக்கழி
      சாதல்செய் தவனடி சரணெனலும்
      ஆதர வருள்செய்த அடிகளவர்
      காதல்செய் வளநகர் கடைமுடியே. 1.111.8
      1204 அடிமுடி காண்கிலர் ஓரிருவர்
      புடைபுல்கி யருளென்று போற்றிசைப்ப
      சடையிடை புனல்வைத்த சதுரனிடங்
      கடைமுடி யதனயல் காவிரியே. 1.111.9
      1205 மண்ணுதல் பறித்தலு மாயமிவை
      எண்ணிய காலவை யின்பமல்ல
      ஒண்ணுத லுமையையொர் பாகம்வைத்த
      கண்ணுதல் வளநகர் கடைமுடியே. 1.111.10
      1206 பொன்றிகழ் காவிரி பொருபுனல்சீர்
      சென்றடை கடைமுடி சிவனடியை
      நன்றுணர் ஞானசம் பந்தன்சொன்ன
      இன்றமி ழிவைசொல இன்பமாமே. 1.111.11
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - கடைமுடியீசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      1.112 திருச்சிவபுரம்
      பண் - வியாழக்குறிஞ்சி
      1207 இன்குர லிசைகெழும் யாழ்முரல
      தன்கரம் மருவிய சதுரன்நகர்
      பொன்கரை பொருபழங் காவிரியின்
      தென்கரை மருவிய சிவபுரமே. 1.112.1
      1208 அன்றடற் காலனை பாலனுக்கா
      பொன்றிட வுதைசெய்த புனிதன்நகர்
      வென்றிகொள் ளெயிற்றுவெண் பன்றிமுன்னாள்
      சென்றடி வீழ்தரு சிவபுரமே. 1.112.2
      1209 மலைமகள் மறுகிட மதகரியை
      கொலைமல்க வுரிசெய்த குழகன்நகர்
      அலைமல்கும் அரிசிலி னதனயலே
      சிலைமல்கு மதிலணி சிவபுரமே.
      அரிசில் என்பது ஒரு நதி. 1.112.3
      1210 மண்புன லனலொடு மாருதமும்
      விண்புனை மருவிய விகிர்தன்நகர்
      பண்புனை குரல்வழி வண்டுகெண்டி
      செண்பக மலர்பொழிற் சிவபுரமே. 1.112.4
      1211 வீறுநன் குடையவள் மேனிபாகங்
      கூறுநன் குடையவன் குளிர்நகர்தான்
      நாறுநன் குரவிரி வண்டுகிண்டி
      தேறலுண் டெழுதரு சிவபுரமே. 1.112.5
      1212 மாறெதிர் வருதிரி புரமெரித்து
      நீறது வாக்கிய நிமலன்நகர்
      நாறுடை நடுபவர் உழவரொடுஞ்
      சேறுடை வயலணி சிவபுரமே. 1.112.6
      1213 ஆவிலை தமர்ந்தவன் அரிவையொடு
      மேவிநன் கிருந்ததொர் வியனகர்தான்
      பூவில்வண் டமர்தரு பொய்கையன்ன
      சேவல்தன் பெடைபுல்கு சிவபுரமே. 1.112.7
      1214 எழின்மலை யெடுத்தவல் லிராவணன்றன்
      முழுவலி யடக்கிய முதல்வன்நகர்
      விழவினி லெடுத்தவெண் கொடிமிடைந்து
      செழுமுகி லடுக்கும்வண் சிவபுரமே. 1.112.8
      1215 சங்கள வியகையன் சதுர்முகனும்
      அங்கள வறிவரி யவன்நகர்தான்
      கங்குலும் பறவைகள் கமுகுதொறுஞ்
      செங்கனி நுகர்தரு சிவபுரமே. 1.112.9
      1216 மண்டையின் குண்டிகை மாசுதரும்
      மிண்டரை விலக்கிய விமலன்நகர்
      பண்டமர் தருபழங் காவிரியின்
      தெண்டிரை பொருதெழு சிவபுரமே. 1.112.10
      1217 சிவனுறை தருசிவ புரநகரை
      கவுணியர் குலபதி காழியர்கோன்
      தவமல்கு தமிழிவை சொல்லவல்லார்
      நவமொடு சிவகதி நண்ணுவரே. 1.112.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      1.113 திருவல்லம்
      பண் - வியாழக்குறிஞ்சி
      1218 எரித்தவன் முப்புரம் எரியில்மூழ்க
      தரித்தவன் கங்கையை தாழ்சடைமேல்
      விரித்தவன் வேதங்கள் வேறுவேறு
      தெரித்தவன் உறைவிட திருவல்லமே. 1.113.1
      1219 தாயவன் உலகுக்கு தன்னொப்பிலா
      தூயவன் தூமதி சூடியெல்லாம்
      ஆயவன் அமரர்க்கும் முனிவர்கட்குஞ்
      சேயவன் உறைவிட திருவல்லமே. 1.113.2
      1220 பார்த்தவன் காமனை பண்பழி
      போர்த்தவன் போதக தின்னுரிவை
      ஆர்த்தவன் நான்முகன் தலையையன்று
      சேர்த்தவன் உறைவிட திருவல்லமே. 1.113.3
      1221 கொய்தஅம் மலரடி கூடுவார்தம்
      மைதவழ் திருமகள் வணங்கவைத்து
      பெய்தவன் பெருமழை யுலகமு
      செய்தவன் உறைவிட திருவல்லமே. 1.113.4
      1222 சார்ந்தவர கின்பங்கள் தழைக்கும்வண்ணம்
      நேர்ந்தவன் நேரிழை யோடுங்கூடி
      தேர்ந்தவர் தேடுவார் தேடச்செய்தே
      சேர்ந்தவன் உறைவிட திருவல்லமே. 1.113.5
      1223 பதைத்தெழு காலனை பாதமொன்றால்
      உதைத்தெழு மாமுனி குண்மைநின்று
      விதிர்த்தெழு தக்கன்றன் வேள்வியன்று
      சிதைத்தவன் உறைவிட திருவல்லமே. 1.113.6
      இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 1.113.7
      1224 இகழ்ந்தரு வரையினை எடுக்கலுற்றாங்
      ககழ்ந்தவல் லரக்கனை அடர்த்தபாதம்
      நிகழ்ந்தவர் நேடுவார் நேடச்செய்தே
      திகழ்ந்தவன் உறைவிட திருவல்லமே. 1.113.8
      1225 பெரியவன் சிறியவர் சிந்தைசெய்ய
      அரியவன் அருமறை யங்கமானான்
      கரியவன் நான்முகன் காணவொண்ணா
      தெரியவன் உறைவிட திருவல்லமே. 1.113.9
      1226 அன்றிய அமணர்கள் சாக்கியர்கள்
      குன்றிய அறவுரை கூறாவண்ணம்
      வென்றவன் புலனைந்தும் விளங்கவெங்குஞ்
      சென்றவன் உறைவிட திருவல்லமே. 1.113.10
      1227 கற்றவர் திருவல்லங் கண்டுசென்று
      நற்றமிழ் ஞானசம் பந்தன்சொன்ன
      குற்றமில் செந்தமிழ் கூறவல்லார்
      பற்றுவர் ஈசன்பொற் பாதங்களே. 1.113.11
      இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - வல்லநாதர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      1.114 திருமாற்பேறு
      பண் - வியாழக்குறிஞ்சி
      1228 குருந்தவன் குருகவன் கூர்மையவன்
      பெருந்தகை பெண்ணவன் ஆணுமவன்
      கருந்தட மலர்க்கண்ணி காதல்செய்யும்
      மருந்தவன் வளநகர் மாற்பேறே. 1.114.1
      1229 பாறணி வெண்டலை கையிலேந்தி
      வேறணி பலிகொளும் வேட்கையனாய்
      நீறணி துமையொரு பாகம்வைத்த
      மாறிலி வளநகர் மாற்பேறே. 1.114.2
      1230 கருவுடை யாருல கங்கள்வேவ
      செருவிடை ஏறியுஞ் சென்றுநின்
      றுருவுடை யாளுமை யாளுந்தானும்
      மருவிய வளநகர் மாற்பேறே. 1.114.3
      1231 தலையவன் தலையணி மாலைபூண்டு
      கொலைநவில் கூற்றினை கொன்றுகந்தான்
      கலைநவின் றான்கயி லாயமென்னும்
      மலையவன் வளநகர் மாற்பேறே. 1.114.4
      1232 துறையவன் தொழிலவன் தொல்லுயிர்க்கும்
      பிறையணி சடைமுடி பெண்ணொர்பாகன்
      கறையணி மிடற்றண்ணல் காலற்செற்ற
      மறையவன் வளநகர் மாற்பேறே. 1.114.3
      1233 பெண்ணின்நல் லாளையொர் பாகம்வைத்து
      கண்ணினாற் காமனை காய்ந்தவன்றன்
      விண்ணவர் தானவர் முனிவரொடு
      மண்ணவர் வணங்குநன் மாற்பேறே. 1.114.4
      இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 1.114.5
      1234 தீதிலா மலையெடு தவ்வரக்கன்
      நீதியால் வேதகீ தங்கள்பாட
      ஆதியா னாகிய அண்ணலெங்கள்
      மாதிதன் வளநகர் மாற்பேறே. 1.114.8
      1235 செய்யதண் தாமரை கண்ணனொடுங்
      கொய்யணி நறுமலர் மேலயனும்
      ஐயன்நன் சேவடி அதனையுள்க
      மையல்செய் வளநகர் மாற்பேறே. 1.114.9
      1236 குளித்துணா அமணர்குண் டாக்கரென்றுங்
      களித்துநன் கழலடி காணலுற்றார்
      முளைத்தவெண் மதியினொ டரவஞ்சென்னி
      வளைத்தவன் வளநகர் மாற்பேறே. 1.114.10
      1237 அந்தமில் ஞானசம் பந்தன்நல்ல
      செந்திசை பாடல்செய் மாற்பேற்றை
      சந்தமின் றமிழ்கள்கொண் டேத்தவல்லார்
      எந்தைதன் கழலடி எய்துவரே. 1.114.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      1.115 திரு இராமனதீச்சரம்
      பண் - வியாழக்குறிஞ்சி
      1238 சங்கொளிர் முன்கையர் தம்மிடையே
      அங்கிடு பலிகொளு மவன்கோ
      பொங்கர வாடலோன் புவனியோங்க
      எங்குமன் இராமன தீச்சுரமே. 1.115.1
      1239 சந்தநன் மலரணி தாழ்சடையன்
      தந்தம தத்தவன் தாதையோதான்
      அந்தமில் பாடலோன் அழகன்நல்ல
      எந்தவன் இராமன தீச்சுரமே. 1.115.2
      1240 தழைமயி லேறவன் தாதையோதான்
      மழைபொதி சடையவன் மன்னுகாதிற்
      குழையது விலங்கிய கோலமார்பின்
      இழையவன் இராமன தீச்சுரமே. 1.115.3
      1241 சத்தியு ளாதியோர் தையல்பங்கன்
      முத்திய தாகிய மூர்த்தியோதான்
      அத்திய கையினில் அழகுசூலம்
      வைத்தவன் இராமன தீச்சுரமே. 1.115.4
      1242 தாழ்ந்த குழற்சடை முடியதன்மேல்
      தோய்ந்த இளம்பிறை துளங்குசென்னி
      பாய்ந்தகங் கையொடு படவரவம்
      ஏய்ந்தவன் இராமன தீச்சுரமே. 1.115.5
      1243 சரிகுழல் இலங்கிய தையல்காணும்
      பெரியவன் காளிதன் பெரியகூத்தை
      அரியவன் ஆடலோன் அங்கையேந்தும்
      எரியவன் இராமன தீச்சுரமே. 1.115.6
      1244 மாறிலா மாதொரு பங்கன்மேனி
      நீறது ஆடலோன் நீள்சடைமேல்
      ஆறது சூடுவான் அழகன்விடை
      ஏறவன் இராமன தீச்சுரமே. 1.115.7
      1245 தடவரை அரக்கனை தலைநெரித்தோன்
      படவர வாட்டிய படர்சடையன்
      நடமது வாடலான் நான்மறைக்கும்
      இடமவன் இராமன தீச்சுரமே. 1.115.8
      1246 தனமணி தையல்தன் பாகன்றன்னை
      அனமணி அயன்அணி முடியுங்காணான்
      பனமணி அரவரி பாதங்காணான்
      இனமணி இராமன தீச்சுரமே. 1.115.9
      1247 தறிபோலாஞ் சமணர்சா கியர்சொற்கொளேல்
      அறிவோரால் நாமம் அறிந்துரைமின்
      மறிகையோன் தன்முடி மணியார்கங்கை
      எறிபவன் இராமன தீச்சுரமே. 1.115.10
      1248 தேன் மலர கொன்றை யோன்........
      ........ முந்தமக்கூனமன்றே. 1.115.11
      இப்பதிகத்தில் 11-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - இராமநாதேசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      1.116 திரு நீலகண்டம்
      பண் - வியாழக்குறிஞ்சி
      1249 அவ்வினை கிவ்வினை யாமென்று சொல்லு மஃதறிவீர்
      உய்வினை நாடா திருப்பதும் உந்த கூனமன்றே
      கைவினை செய்தெம் பிரான்கழற் போற்றுதும் நாமடியோஞ்
      செய்வினை வந்தெமை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். 1.116.1
      1250 காவினை யிட்டுங் குளம்பல தொட்டுங் கனிமனத்தால்
      ஏவினை யாலெயில் மூன்றெரி தீரென் றிருபொழுதும்
      பூவினை கொய்து மலரடி போற்றுதும் நாமடியோம்
      தீவினை வந்தெமை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். 1.116.2
      1251 முலைத்தடம் மூழ்கிய போகங்களும்மற் றெவையு மெல்லாம்
      விலைத்தலை யாவணங் கொண்டெமை யாண்ட விரிசடையீர்
      இலைத்தலை சூலமு தண்டும் மழுவும் இவையுடையீர்
      சிலைத்தெமை தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். 1.116.3
      1252 விண்ணுல காள்கின்ற விச்சா தரர்களும் வேதியரும்
      புண்ணிய ரென்றிரு போது தொழப்படும் புண்ணியரே
      கண்ணிமை யாதன மூன்றுடை யீருங் கழலடைந்தோம்
      திண்ணிய தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். 1.116.4
      1253 மற்றிணை யில்லா மலைதிரண் டன்னதிண் டோ ளுடையீர்
      கிற்றெமை யாட்கொண்டு கேளா தொழிவது தன்மைகொல்லோ
      சொற்றுணை வாழ்க்கை துறந்து திருவடி யேயடைந்தோம்
      செற்றெமை தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். 1.116.5
      1254 மறக்கு மனத்தினை மாற்றியெம் மாவியை வற்புருத்தி
      பிறப்பில் பெருமான் திருந்தடி கீழ்ப்பிழை யாதவண்ணம்
      பறித்த மலர்கொடு வந்துமை யேத்தும் பணியடியோம்
      சிறப்பிலி தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். 1.116.6
      இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 1.116.7
      1255 கருவை கழித்திட்டு வாழ்க்கை கடிந்துங் கழலடிக்கே
      உருகி மலர்கொடு வந்துமை யேத்துதும் நாமடியோம்
      செருவி லரக்கனை சீரி லடர்த்தருள் செய்தவரே
      திருவிலி தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். 1.116.8
      1256 நாற்ற மலர்மிசை நான்முகன் நாரணன் வாதுசெய்து
      தோற்ற முடைய அடியும் முடியு தொடர்வரியீர்
      தோற்றினு தோற்று தொழுது வணங்குதும் நாமடியோம்
      சீற்றம தாம்வினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். 1.116.9
      1257 சாக்கி பட்டுஞ் சமணுரு வாகி யுடையொழிந்தும்
      பாக்கிய மின்றி இருதலை போகமும் பற்றும்விட்டார்
      பூக்கமழ் கொன்றை புரிசடை யீரடி போற்றுகின்றோம்
      தீக்குழி தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். 1.116.10
      1258 பிறந்த பிறவியிற் பேணியெஞ் செல்வன் கழலடைவான்
      இறந்த பிறவியுண் டாகில் இமையவர் கோனடிக்கண்
      திறம்பயில் ஞானசம் பந்தன செந்தமிழ் பத்தும்வல்லார்
      நிறைந்த உலகினில் வானவர் கோனொடுங் கூடுவரே. 1.116.11
      இது திருக்கொடிமாட செங்குன்றூரில் அடியார்களுக்கு
      கண்ட சுரப்பிணிநீங்க வோதியருளியது.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      1.117 திருப்பிரமபுரம் - மொழிமாற்று
      பண் - வியாழக்குறிஞ்சி
      1259 காட தணிகலங் காரர வம்பதி காலதனிற்
      தோட தணிகுவர் சுந்தர காதினில் தூச்சிலம்பர்
      வேட தணிவர் விசயற் குருவம்வில் லுங்கொடுப்பர்
      பீட தணிமணி மாட பிரம புரத்தாரே. 1.117.1
      1260 கற்றை சடையது கங்கணம் முன்கையில் திங்கள்கங்கை
      பற்றித்து முப்புரம் பார்படை தோன்றலை சுட்டதுபண்
      டெற்றித்து பாம்பை யணிந்தது கூற்றை யெழில்விளங்கும்
      வெற்றி சிலைமதில் வேணு புரத்தெங்கள் வேதியரே. 1.117.2
      1261 கூவிளங் கையது பேரி சடைமுடி கூட்டத்தது
      தூவிளங் கும்பொடி பூண்டது பூசிற்று துத்திநாகம்
      ஏவிளங் குந்நுத லாளையும் பாகம் உரித்தனரின்
      பூவிளஞ் சோலை புகலியுள் மேவிய புண்ணியரே. 1.117.3
      1262 உரித்தது பாம்பை யுடல்மிசை இட்டதோர் ஒண்களிற்றை
      எரித்ததொ ராமையை இன்புற பூண்டது முப்புரத்தை
      செருத்தது சூலத்தை ஏந்திற்று தக்கனை வேள்விபன்னூல்
      விரித்தவர் வாழ்தரு வேங்குரு வில்வீற் றிருந்தவரே. 1.117.4
      1263 கொட்டுவர் அக்கரை யார்ப்பது தக்கை குறுந்தாளன
      விட்டுவர் பூதங் கலப்பில ரின்புக ழென்புலவின்
      மட்டுவ ருந்தழல் சூடுவர் மத்தமும் ஏந்துவர்வான்
      தொட்டுவ ருங்கொடி தோணி புரத்துறை சுந்தரரே. 1.117.5
      1264 சாத்துவர் பாச தடக்கையி லேந்துவர் கோவணந்தங்
      கூத்தவர் கச்சு குலவிநின் றாடுவர் கொக்கிறகும்
      பேர்த்தவர் பல்படை பேயவை சூடுவர் பேரெழிலார்
      பூத்தவர் கைதொழு பூந்தராய் மேவிய புண்ணியரே. 1.117.6
      1265 காலது கங்கை கற்றைச்சடை யுள்ளாற் கழல்சிலம்பு
      மாலது ஏந்தல் மழுவது பாகம் வளர்கொழுங்கோ
      டாலது ஊர்வர் அடலேற் றிருப்பர் அணிமணிநீர
      சேலது கண்ணியொர் பங்கர் சிரபுரம் மேயவரே. 1.117.7
      1266 நெருப்புரு வெள்விடை மேனியர் ஏறுவர் நெற்றியின்கண்
      மருப்புரு வன்கண்ணர் தாதையை காட்டுவர் மாமுருகன்
      விருப்புறு பாம்புக்கு மெய்த்தந்தை யார்விறல் மாதவர்வாழ்
      பொருப்புறு மாளிகை தென்புற வத்தணி புண்ணியரே. 1.117.8
      1267 இலங்கை தலைவனை யேந்திற் றிறுத்த திரலை யின்னாள்
      கலங்கிய கூற்றுயிர் பெற்றது மாணி குமைபெற்றது
      கலங்கிளர் மொந்தையின் ஆடுவர் கொட்டுவர் காட்டகத்து
      சலங்கிளர் வாழ்வயல் சண்பையுள் மேவிய தத்துவரே. 1.117.9
      1268 அடியிணை கண்டிலன் தாமரை யோன்மால் முடிகண்டிலன்
      கொடியணி யும்புலி யேறுக தேறுவர் தோலுடுப்பர்
      பிடியணி யுந்நடை யாள்வெற் பிருப்பதோர் கூறுடையர்
      கடியணி யும்பொழிற் காழியுள் மேய கறைக்கண்டரே. 1.117.10
      1269 கையது வெண்குழை காதது சூலம் அமணர்புத்தர்
      எய்துவர் தம்மை அடியவர் எய்தாரோர் ஏனக்கொம்பு
      மெய்திகழ் கோவணம் பூண்ப துடுப்பது மேதகைய
      கொய்தலர் பூம்பொழில் கொச்சையுள் மேவிய கொற்றவரே. 1.117.11
      1270 கல்லுயர் கழுமல விஞ்சியுள் மேவிய கடவுள்தன்னை
      நல்லுரை ஞானசம் பந்தன்ஞா னத்தமிழ் நன்குணர
      சொல்லிடல் கேட்டல் வல்லோர் தொல்லைவானவர் தங்களொடுஞ்
      செல்குவர் சீரரு ளாற்பெற லாம்சிவ லோகமதே. 1.117.12
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      1.118 திருப்பருப்பதம்
      பண் - வியாழக்குறிஞ்சி
      1271 சுடுமணி யுமிழ்நாகஞ் சூழ்தர அரைக்கசைத்தான்
      இடுமணி யெழிலானை யேறலன் எருதேறி
      விடமணி மிடறுடையான் மேவிய நெடுங்கோட்டு
      படுமணி விடுசுடரார் பருப்பதம் பரவுதுமே. 1.118.1
      1272 நோய்புல்கு தோல்திரைய நரைவரு நுகருடம்பில்
      நீபுல்கு தோற்றமெல்லாம் நினையுள்கு மடநெஞ்சே
      வாய்புல்கு தோத்திரத்தால் வலஞ்செய்து தலைவணங்கி
      பாய்புலி தோலுடையான் பருப்பதம் பரவுதுமே. 1.118.2
      1273 துனியுறு துயர்தீர தோன்றியோர் நல்வினையால்
      இனியுறு பயனாதல் இரண்டுற மனம்வையேல்
      கனியுறு மரமேறி கருமுசு கழையுகளும்
      பனியுறு கதிர்மதியான் பருப்பதம் பரவுதுமே. 1.118.3
      1274 கொங்கணி நறுங்கொன்றை தொங்கலன் குளிர்சடையான்
      எங்கள்நோய் அகலநின்றா னெனவரு ளீசனிடம்
      ஐங்கணை வரிசிலையான் அநங்கனை அழகழித்த
      பைங்கண்வெள் ளேறுடையான் பருப்பதம் பரவுதுமே. 1.118.4
      1275 துறைபல சுனைமூழ்கி தூமலர் சுமந்தோடி
      மறையொலி வாய்மொழியால் வானவர் மகிழ்ந்தேத்த
      சிறையொலி கிளிபயிலு தேனினம் ஒலியோவா
      பறைபடு விளங்கருவி பருப்பதம் பரவுதுமே. 1.118.5
      1276 சீர்கெழு சிறப்போவா செய்தவ நெறிவேண்டில்
      ஏர்கெழு மடநெஞ்சே யிரண்டுற மனம்வையேல்
      கார்கெழு நறுங்கொன்றை கடவுள திடம்வகையால்
      பார்கெழு புகழோவா பருப்பதம் பரவுதுமே. 1.118.6
      1277 புடைபுல்கு படர்கமலம் புகையொடு விரைகமழ
      தொடைபுல்கு நறுமாலை திருமுடி மிசையேற
      விடைபுல்கு கொடியேந்தி வெந்தவெண் ணீறணிவான்
      படைபுல்கு மழுவாளன் பருப்பதம் பரவுதுமே. 1.118.7
      1278 நினைப்பெனும் நெடுங்கிணற்றை நின்றுநின் றயராதே
      மனத்தினை வலித்தொழிந்தேன் அவலம்வ தடையாமை
      கனைத்தெழு திரள்கங்கை கமழ்சடை கரந்தான்றன்
      பனைத்திரள் பாயருவி பருப்பதம் பரவுதுமே. 1.118.8
      1279 மருவிய வல்வினைநோய் அவலம்வ தடையாமல்
      திருவுரு அமர்ந்தானு திசைமுகம் உடையானும்
      இருவரும் அறியாமை எழுந்ததோ ரெரிநடுவே
      பருவரை யுறநிமிர்ந்தான் பருப்பதம் பரவுதுமே. 1.118.10
      1279 சடங்கொண்ட சாத்திரத்தார் சாக்கியர் சமண்குண்டர்
      மடங்கொண்ட விரும்பியராய் மயங்கியோர் பேய்த்தேர்ப்பின்
      குடங்கொண்டு நீர்க்குச்செல்வார் போதுமின் குஞ்சரத்தின்
      படங்கொண்ட போர்வையினான் பருப்பதம் பரவுதுமே. 1.118.11
      1280 வெண்செநெல் விளைகழனி விழவொலி கழுமலத்தான்
      பண்செல பலபாடல் இசைமுரல் பருப்பதத்தை
      நன்சொலி னாற்பரவு ஞானசம் பந்தன்நல்ல
      ஒண்சொலின் இவைமாலை யுருவெண தவமாமே. 1.118.12
      இத்தலம் வடதேசத்திலுள்ளது. ஸ்ரீசைலமென்றும்
      மல்லிகார்ச்சுன மென்றும் வழங்குகின்றது.
      சுவாமிபெயர் - பருப்பதேசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      1.119 திருக்கள்ளில்
      பண் - வியாழக்குறிஞ்சி
      1282 முள்ளின்மேல் முதுகூகை முரலுஞ் சோலை
      வெள்ளின்மேல் விடுகூறை கொடி விளைந்த
      கள்ளில்மேய அண்ணல் கழல்கள் நாளும்
      உள்ளுமேல் உயர்வெய்தல் ஒரு தலையே. 1.119.1
      1283 ஆடலான் பாடலான் அரவங்கள் பூண்டான்
      ஓடலாற் கலனில்லான் உறை பதியால்
      காடலாற் கருதாத கள்ளில் மேயான்
      பாடெலாம் பெரியார்கள் பரசு வாரே. 1.119.2
      1284 எண்ணார்மும் மதிலெய்த இமையா முக்கண்
      பண்ணார்நான் மறைபாடும் பரம யோகி
      கண்ணார் நீறணிமார்பன் கள்ளில் மேயான்
      பெண்ணாணாம் பெருமானெம் பிஞ்ஞ கனே. 1.119.3
      1285 பிறைபெற்ற சடையண்ணல் பெடைவண் டாலும்
      நறைபெற்ற விரிகொன்றை தார் நயந்த
      கறைபெற்ற மிடற்றண்ணல் கள்ளில் மேயான்
      நிறைபெற்ற அடியார்கள் நெஞ்சு ளானே. 1.119.4
      1286 விரையாலும் மலராலும் விழுமை குன்றா
      உரையாலு மெதிர்கொள்ள வூரா ரம்மா
      கரையார்பொன் புனல்வேலி கள்ளில் மேயான்
      அரையார்வெண் கோவணத்த அண்ணல் தானே. 1.119.5
      1287 நலனாய பலிகொள்கை நம்பான் நல்ல
      வலனாய மழுவாளும் வேலும் வல்லான்
      கலனாய தலையோட்டான் கள்ளில் மேயான்
      மலனாய தீர்த்தெய்தும் மாதவ தோர்க்கே. 1.119.6
      1288 பொடியார்மெய் பூசினும் புறவின் நறவங்
      குடியாவூர் திரியினுங் கூப்பி டினுங்
      கடியார்பூம் பொழிற்சோலை கள்ளில் மேயான்
      அடியார்பண் பிகழ்வார்கள் ஆதர் களே. 1.119.7
      1289 திருநீல மலரொண்கண் தேவி பாகம்
      புரிநூலு திருநீறும் புல்கு மார்பில்
      கருநீல மலர்விம்மு கள்ளி லென்றும்
      பெருநீல மிடற்றண்ணல் பேணு வதே. 1.119.8
      1290 வரியாய மலரானும் வை தன்னை
      உரிதாய அளந்தானும் உள்ளு தற்கங்
      கரியானும் அறியாத கள்ளில் மேயான்
      பெரியானென் றறிவார்கள் பேசு வாரே. 1.119.9
      1291 ஆச்சி பேய்களோ டமணர் குண்டர்
      பேச்சிவை நெறியல்ல பேணு மின்கள்
      மாச்செய்த வளவயல் மல்கு கள்ளில்
      தீச்செய்த சடையண்ணல் திரு தடியே. 1.119.10
      1292 திகைநான்கும் புகழ்காழி செல்வம் மல்கு
      பகல்போலும் பேரொளியான் பந்தன் நல்ல
      முகைமேவு முதிர்சடையான் கள்ளி லேத்த
      புகழோடும் பேரின்பம் புகுதும் அன்றே. 1.119.11
      இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - சிவானந்தேசுவரர் தேவியார்
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      1.120 திருவையாறு - திருவிராகம்
      பண் - வியாழக்குறிஞ்சி
      1293 பணிந்தவர் அருவினை பற்றறு தருள்செ
      துணிந்தவன் தோலொடு நூல்துதை மார்பினில்
      பிணிந்தவன் அரவொடு பேரெழி லாமைகொண்
      டணிந்தவன் வளநகர் அந்தண் ஐயாறே. 1.120.1
      1294 கீர்த்திமி கவன்நகர் கிளரொளி யுடனட
      பார்த்தவன் பனிமதி படர்சடை வைத்து
      போர்த்தவன் கரியுரி புலியதள் அரவரை
      ஆர்த்தவன் வளநகர் அந்தண் ஐயாறே. 1.120.2
      1295 வரிந்தவெஞ் சிலைபிடி தவுணர்தம் வளநகர்
      எரிந்தற வெய்தவன் எழில்திகழ் மலர்மேல்
      இருந்தவன் சிரமது இமையவர் குறைகொள
      அரிந்தவன் வளநகர் அந்தண் ஐயாறே. 1.120.3
      1296 வாய்ந்தவல் லவுணர்தம் வளநகர் எரியிடை
      மாய்ந்தற எய்தவன் வளர்பிறை விரிபுனல்
      தோய்ந்தெழு சடையினன் தொன்மறை ஆறங்கம்
      ஆய்ந்தவன் வளநகர் அந்தண் ஐயாறே. 1.120.4
      1297 வானமர் மதிபுல்கு சடையிடை அரவொடு
      தேனமர் கொன்றையன் திகழ்தரு மார்பினன்
      மானன மென்விழி மங்கையொர் பாகமும்
      ஆனவன் வளநகர் அந்தண் ஐயாறே. 1.120.5
      1298 முன்பனை முனிவரொ டமரர்கள் தொழுதெழும்
      இன்பனை இணையில இறைவனை எழில்திகழ்
      என்பொனை யேதமில் வேதியர் தாந்தொழும்
      அன்பன வளநகர் அந்தண் ஐயாறே. 1.120.6
      1299 வன்றிறல் அவுணர்தம் வளநகர் எரியிடை
      வெந்தற எய்தவன் விளங்கிய மார்பினில்
      பந்தமர் மெல்விரல் பாகம தாகிதன்
      அந்தமில் வளநகர் அந்தண் ஐயாறே. 1.120.7
      1300 விடைத்தவல் லரக்கன்நல் வெற்பினை யெடுத்தலும்
      அடித்தல தால்இறை யூன்றிமற் றவனது
      முடித்தலை தோளவை நெரிதர முறைமுறை
      அடர்த்தவன் வளநகர் அந்தண் ஐயாறே. 1.120.8
      1301 விண்ணவர் தம்மொடு வெங்கதி ரோனனல்
      எண்ணிலி தேவர்கள் இந்திரன் வழிபட
      கண்ணனும் பிரமனும் காண்பரி தாகிய
      அண்ணல்தன் வளநகர் அந்தண் ஐயாறே. 1.120.9
      1302 மருளுடை மனத்துவன் சமணர்கள் மாசறா
      இருளுடை இணைத்துவர போர்வையி னார்களு
      தெருளுடை மனத்தவர் தேறுமின் திண்ணமா
      அருளுடை யடிகள்தம் அந்தண் ஐயாறே. 1.120.10
      1303 நலம்மலி ஞானசம் பந்தன தின்றமிழ்
      அலைமலி புனல்மல்கும் அந்தண்ஐ யாற்றினை
      கலைமலி தமிழிவை கற்றுவல் லார்மிக
      நலமலி புகழ்மிகு நன்மையர் தாமே. 1.120.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      1.121 திருவிடைமருதூர் - திருவிராகம்
      பண் - வியாழக்குறிஞ்சி
      1304 நடைமரு திரிபுரம் எரியுண நகைசெய்த
      படைமரு தழலெழ மழுவல பகவன்
      புடைமரு திளமுகில் வளமமர் பொதுளிய
      இடைமரு தடையநம் இடர்கெடல் எளிதே. 1.121.1
      1305 மழைநுழை மதியமொ டழிதலை மடமஞ்ஞை
      கழைநுழை புனல்பெய்த கமழ்சடை முடியன்
      குழைநுழை திகழ்செவி அழகொடு மிளிர்வதொர்
      இழைநுழை புரியணல் இடமிடை மருதே. 1.121.2
      1306 அருமையன் எளிமையன் அழல்விட மிடறினன்
      கருமையின் ஒளிபெறு கமழ்சடை முடியன்
      பெருமையன் சிறுமையன் பிணைபெணொ டொருமையின்
      இருமையும் உடையணல் இடமிடை மருதே. 1.121.3
      1307 பொரிபடு முதுகுற முளிகளி புடைபுல்கு
      நரிவளர் சுடலையுள் நடமென நவில்வோன்
      வரிவளர் குளிர்மதி யொளிபெற மிளிர்வதொர்
      எரிவளர் சடையணல் இடமிடை மருதே. 1.121.4
      1308 வருநல மயிலன மடநடை மலைமகள்
      பெருநல முலையிணை பிணைசெய்த பெருமான்
      செருநல மதிலெய்த சிவனுறை செழுநகர்
      இருநல புகழ்மல்கும் இடமிடை மருதே. 1.121.5
      1309 கலையுடை விரிதுகில் கமழ்குழல் அகில்புகை
      மலையுடை மடமகள் தனையிடம் உடையோன்
      விலையுடை அணிகலன் இலனென மழுவினொ
      டிலையுடை படையவன் இடமிடை மருதே. 1.121.6
      1310 வளமென வளர்வன வரிமுரல் பறவைகள்
      இளமணல் அணைகரை யிசைசெயும் இடைமரு
      துளமென நினைபவர் ஒலிகழல் இணையடி
      குளமண லுறமூழ்கி வழிபடல் குணமே. 1.121.7
      1311 மறையவன் உலகவன் மதியவன் மதிபுல்கு
      துறையவன் எனவல அடியவர் துயரிலர்
      கறையவன் மிடறது கனல்செய்த கமழ்சடை
      இறையவன் உறைதரும் இடமிடை மருதே. 1.121.8
      1312 மருதிடை நடவிய மணிவணர் பிரமரும்
      இருதுடை யகலமொ டிகலின ரினதென
      கருதிடல் அரியதொர் உருவொடு பெரியதொர்
      எருதுடை யடிகள்தம் இடமிடை மருதே. 1.121.9
      1313 துவருறு விரிதுகில் உடையரும் அமணரும்
      அவருறு சிறுசொலை நயவன்மின் இடுமணல்
      கவருறு புனலிடை மருதுகை தொழுதெழும்
      அவருறு வினைகெடல் அணுகுதல் குணமே. 1.121.10
      1314 தடமலி புகலியர் தமிழ்கெழு விரகினன்
      இடமலி பொழிலிடை மருதினை யிசைசெய்த
      படமலி தமிழிவை பரவவல் லவர்வினை
      கெடமலி புகழொடு கிளரொளி யினரே. 1.121.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      1.122 திருவிடைமருதூர் - திருவிராகம்
      பண் - வியாழக்குறிஞ்சி
      1315 விரிதரு புலியுரி விரவிய அரையினர்
      திரிதரும் எயிலவை புனைகணை யினிலெய்த
      எரிதரு சடையினர் இடைமரு தடைவுனல்
      புரிதரு மன்னவர் புகழ்மிக வுளதே. 1.122.1
      1316 மறிதிரை படுகடல் விடமடை மிடறினர்
      எறிதிரை கரைபொரும் இடைமரு தெனுமவர்
      செறிதிரை நரையொடு செலவிலர் உலகினில்
      பிறிதிரை பெறுமுடல் பெருகுவ தரிதே. 1.122.2
      1317 சலசல சொரிபுனல் சடையினர் மலைமகள்
      நிலவிய உடலினர் நிறைமறை மொழியினர்
      இலரென இடுபலி யவரிடை மருதினை
      வலமிட வுடல்நலி விலதுள வினையே. 1.122.3
      1318 விடையினர் வெளியதொர் தலைகல னெனநனி
      கடைகடை தொறுபலி யிடுகென முடுகுவர்
      இடைவிட லரியவர் இடைமரு தெனும்நகர்
      உடையவர் அடியிணை தொழுவதெம் உயர்வே. 1.122.4
      1319 உரையரும் உருவினர் உணர்வரு வகையினர்
      அரைபொரு புலியதள் உடையினர் அதன்மிசை
      இரைமரும் அரவினர் இடைமரு தெனவுளம்
      உரைகள துடையவர் புகழ்மிக வுளதே. 1.122.5
      1320 ஒழுகிய புனல்மதி யரவமொ டுறைதரும்
      அழகிய முடியுடை அடிகள தறைகழல்
      எழிலினர் உறையிடை மருதினை மலர்கொடு
      தொழுதல்செய் தெழுமவர் துயருறல் இலரே. 1.122.6
      1321 கலைமலி விரலினர் கடியதொர் மழுவொடும்
      நிலையினர் சலமகள் உலவிய சடையினர்
      மலைமகள் முலையிணை மருவிய வடிவினர்
      இலைமலி படையவர் இடமிடை மருதே. 1.122.7
      1322 செருவடை யிலவல செயல்செ திறலொடும்
      அருவரை யினிலொரு பதுமுடி நெரிதர
      இருவகை விரனிறி யவரிடைமருதது
      பரவுவர் அருவினை ஒருவுதல் பெரிதே. 1.122.8
      1323 அரியொடு மலரவன் எனவிவ ரடிமுடி
      தெரிவகை அரியவர் திருவடி தொழுதெழ
      எரிதரும் உருவர்தம் இடைமரு தடைவுறல்
      புரிதரும் மன்னவர் புகழ்மிக உளதே. 1.122.9
      1324 குடைமயி லினதழை மருவிய வுருவினர்
      உடைமரு துவரினர் பலசொல வுறவிலை
      அடைமரு திருவினர் தொழுதெழு கழலவர்
      இடைமரு தெனமனம் நினைவதும் எழிலே. 1.122.10
      1325 பொருகடல் அடைதரு புகலியர் தமிழொடு
      விரகினன் விரிதரு பொழிலிடைமருதினை
      பரவிய ஒருபது பயிலவல் லவரிடர்
      விரவிலர் வினையொடு வியனுல குறவே. 1.122.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      1.123 திருவலிவலம் - திருவிராகம்
      பண் - வியாழக்குறிஞ்சி
      1326 பூவியல் புரிகுழல் வரிசிலை நிகர்நுதல்
      ஏவியல் கணைபிணை எதிர்விழி யுமையவள்
      மேவிய திருவுரு வுடையவன் விரைமலர்
      மாவியல் பொழில்வலி வலமுறை யிறையே. 1.123.1
      1327 இட்டம தமர்பொடி யிசைதலின் நசைபெறு
      பட்டவிர் பவளநல் மணியென அணிபெறு
      விட்டொளிர் திருவுரு வுடையவன் விரைமலர்
      மட்டமர் பொழில்வலி வலமுறை யிறையே. 1.123.2
      1328 உருமலி கடல்கடை வுழியுல கமருயிர்
      வெருவுறு வகையெழு விடம்வெளி மலையணி
      கருமணி நிகர்களம் உடையவன் மிடைதரு
      மருமலி பொழில்வலி வலமுறை யிறையே. 1.123.3
      1329 அனல்நிகர் சடையழல் அவியுற வெனவரு
      புனல்நிகழ் வதுமதி நனைபொறி அரவமும்
      எனநினை வொடுவரு மிதுமெல முடிமிசை
      மனமுடை யவர்வலி வலமுறை யிறையே. 1.123.4
      1330 பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
      வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
      கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
      வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே. 1.123.5
      1331 தரைமுதல் உலகினில் உயிர்புணர் தகைமிக
      விரைமலி குழலுமை யொடுவிர வதுசெய்து
      நரைதிரை கெடுதகை யதுவரு ளினனெழில்
      வரைதிகழ் மதில்வலி வலமுறை யிறையே. 1.123.6
      1332 நலிதரு தரைவர நடைவரும் இடையவர்
      பொலிதரு மடவர லியர்மனை யதுபுகு
      பலிகொள வருபவன் எழில்மிகு தொழில்வளர்
      வலிவரு மதில்வலி வலமுறை யிறையே. 1.123.7
      1333 இரவணன் இருபது கரமெழில் மலைதனின்
      இரவண நினைதர அவன்முடி பொடிசெய்து
      இரவணம் அமர்பெயர் அருளின னகநெதி
      இரவண நிகர்வலி வலமுறை யிறையே. 1.123.8
      1334 தேனமர் தருமலர் அணைபவன் வலிமிகும்
      ஏனம தாய்நிலம் அகழ்அரி யடிமுடி
      தானணை யாவுரு வுடையவன் மிடைகொடி
      வானணை மதில்வலி வலமுறை யிறையே. 1.123.9
      1335 இலைமலி தரமிகு துவருடை யவர்களும்
      நிலைமையில் உணலுடை யவர்களும் நினைவது
      தொலைவலி நெடுமறை தொடர்வகை யுருவினன்
      மலைமலி மதில்வலி வலமுறை யிறையே. 1.123.10
      1336 மன்னிய வலிவல நகருறை யிறைவனை
      இன்னியல் கழுமல நகரிறை யெழில்மறை
      தன்னியல் கலைவல தமிழ்விர கனதுரை
      உன்னிய வொருபதும் உயர்பொருள் தருமே. 1.123.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      1.124 திருவீழிமிழலை - திருவிராகம்
      பண் - வியாழக்குறிஞ்சி
      1337 அலர்மகள் மலிதர அவனியில் நிகழ்பவர்
      மலர்மலி குழலுமை தனையிடம் மகிழ்பவர்
      நலம்மலி யுருவுடை யவர்நகர் மிகுபுகழ்
      நிலமலி மிழலையை நினையவ லவரே. 1.124.1
      1338 இருநில மிதன்மிசை யெழில்பெறும் உருவினர்
      கருமலி தருமிகு புவிமுதல் உலகினில்
      இருளறு மதியினர் இமையவர் தொழுதெழு
      நிருபமன் மிழலையை நினையவ லவரே. 1.124.2
      1339 கலைமகள் தலைமகன் இவனென வருபவர்
      அலைமலி தருபுனல் அரவொடு நகுதலை
      இலைமலி யிதழியு மிசைதரு சடையினர்
      நிலைமலி மிழலையை நினையவ லவரே. 1.124.3
      1340 மாடமர் சனமகிழ் தருமனம் உடையவர்
      காடமர் கழுதுக ளவைமுழ வொடுமிசை
      பாடலின் நவில்பவர் மிகுதரும் உலகினில்
      நீடமர் மிழலையை நினையவ லவரே. 1.124.4
      1341 புகழ்மகள் துணையினர் புரிகுழல் உமைதனை
      இகழ்வுசெய் தவனுடை யெழின்மறை வழிவளர்
      முகமது சிதைதர முனிவுசெய் தவன்மிகு
      நிகழ்தரு மிழலையை நினையவ லவரே. 1.124.5
      1342
      அன்றினர் அரியென வருபவர் அரிதினில்
      ஒன்றிய திரிபுரம் ஒருநொடி யினிலெரி
      சென்றுகொள் வகைசிறு முறுவல்கொ டொளிபெற
      நின்றவன் மிழலையை நினையவ லவரே. 1.124.6
      1343 கரம்பயில் கொடையினர் கடிமல ரயனதொர்
      சிரம்பயில் வறவெறி சிவனுறை செழுநகர்
      வரம்பயில் கலைபல மறைமுறை யறநெறி
      நிரம்பினர் மிழலையை நினையவ லவரே. 1.124.7
      1344 ஒருக்கிய வுணர்வினொ டொளிநெறி செலுமவர்
      அரக்கன்நன் மணிமுடி யொருபதும் இருபது
      கரக்கன நெரிதர மலரடி விரல்கொடு
      நெருக்கினன் மிழலையை நினையவ லவரே. 1.124.8
      1345 அடியவர் குழுமிட அவனியில் நிகழ்பவர்
      கடிமலர் அயனரி கருதரு வகைதழல்
      வடிவுரு வியல்பினொ டுலகுகள் நிறைதரு
      நெடியவன் மிழலையை நினையவ லவரே. 1.124.9
      1346 மன்மத னெனவொளி பெறுமவர் மருதமர்
      வன்மலர் துவருடை யவர்களும் மதியிலர்
      துன்மதி யமணர்கள் தொடர்வரு மிகுபுகழ்
      நின்மலன் மிழலையை நினையவ லவரே. 1.124.10
      1347 நித்திலன் மிழலையை நிகரிலி புகலியுள்
      வித்தக மறைமலி தமிழ்விர கனமொழி
      பத்தியில் வருவன பத்திவை பயில்வொடு
      கற்றுவல் லவருல கினிலடி யவரே. 1.124.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      1.125 திருச்சிவபுரம் - திருவிராகம்
      பண் - வியாழக்குறிஞ்சி
      1348 கலைமலி யகலல்குல் அரிவைதன் உருவினன்
      முலைமலி தருதிரு வுருவம துடையவன்
      சிலைமலி மதில்பொதி சிவபுர நகர்தொழ
      இலைநலி வினையிரு மையுமிடர் கெடுமே. 1.125.1
      1349 படரொளி சடையினன் விடையினன் மதிலவை
      சுடரெரி கொளுவிய சிவனவன் உறைபதி
      திடலிடு புனல்வயல் சிவபுரம் அடையநம்
      இடர்கெடும் உயர்கதி பெறுவது திடனே. 1.125.2
      1350 வரைதிரி தரவர வகடழ லெழவரு
      நுரைதரு கடல்விடம் நுகர்பவன் எழில்திகழ்
      திரைபொரு புனலரி சிலதடை சிவபுரம்
      உரைதரும் அடியவர் உயர்கதி யினரே. 1.125.3
      1351 துணிவுடை யவர்சுடு பொடியினர் உடலடு
      பிணியடை விலர்பிற வியுமற விசிறுவர்
      தணிவுடை யவர்பயில் சிவபுரம் மருவிய
      மணிமிட றனதடி இணைதொழு மவரே. 1.125.4
      1352 மறையவன் மதியவன் மலையவன் நிலையவன்
      நிறையவன் உமையவள் மகிழ்நடம் நவில்பவன்
      இறையவன் இமையவர் பணிகொடு சிவபுரம்
      உறைவென உடையவன் எமையுடை யவனே. 1.125.5
      1353 முதிர்சடை யிளமதி நதிபுனல் பதிவுசெய்
      ததிர்கழல் ஒலிசெய வருநடம் நவில்பவன்
      எதிர்பவர் புரமெய்த இணையிலி யணைபதி
      சதிர்பெறும் உளமுடை யவர்சிவ புரமே. 1.125.6
      1354 வடிவுடை மலைமகள் சலமக ளுடனமர்
      பொடிபடும் உழையதள் பொலிதிரு வுருவினன்
      செடிபடு பலிதிரி சிவனுறை சிவபுரம்
      அடைதரும் அடியவர் அருவினை யிலரே. 1.125.7
      1355 கரமிரு பதுமுடி யொருபதும் உடையவன்
      உரம்நெரி தரவரை யடர்வுசெய் தவனுறை
      பரனென அடியவர் பணிதரு சிவபுர
      நகரது புகுதல்நம் உயர்கதி யதுவே. 1.125.8
      1356 அன்றிய லுருவுகொள் அரியய னெனுமவர்
      சென்றள விடலரி யவனுறை சிவபுரம்
      என்றிரு பொழுதுமுன் வழிபடு மவர்துயர்
      ஒன்றிலர் புகழொடும் உடையரிவ் வுலகே. 1.125.9
      1357 புத்தரொ டமணர்கள் அறவுரை புறவுரை
      வித்தக மொழிகில விடையுடை யடிகள்தம்
      இத்தவம் முயல்வுறில் இறைவன சிவபுரம்
      மெய்த்தக வழிபடல் விழுமிய குணமே. 1.125.10
      1358 புந்தியர் மறைநவில் புகலிமன் ஞானசம்
      பந்தன தமிழ்கொடு சிவபுர நகருறை
      எந்தையை யுரைசெய்த இசைமொழி பவர்வினை
      சிந்திமு னுறவுயர் கதிபெறு வர்களே. 1.125.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      1.126 திருக்கழுமலம் - திருத்தாளச்சதி
      பண் - வியாழக்குறிஞ்சி
      1359 பந்தத்தால் வந்தெப்பால் பயின்றுநின் றவும்பர
      பாலேசேர்வா யேனோர்கான் பயில்கண முனிவர்களுஞ்
      சிந்தித்தே வந்திப்ப சிலம்பின்மங்கை தன்னொடுஞ்
      சேர்வார்நாள்நாள் நீள்கயிலை திகழ்தரு பரிசதெலாஞ்
      சந்தித்தே யிந்தப்பார் சனங்கள்நின்று தங்கணாற்
      தாமேகாணா வாழ்வார தகவுசெய் தவனதிடங்
      கந்தத்தால் எண்டிக்குங் கமழ்ந்திலங்கு சந்தன
      காடார்பூவார் சீர்மேவுங் கழுமல வளநகரே. 1.126.1
      1360 பிச்சைக்கே யிச்சித்து பிசைந்தணிந்த வெண்பொடி
      பீடார்நீடார் மாடாரும் பிறைநுதல் அரிவையொடும்
      உச்சத்தால் நச்சிப்போல் தொடர்ந்தடர்ந்த வெங்கணே
      றூராவூரா நீள்வீதி பயில்வொடும் ஒலிசெயிசை
      வச்சத்தான் நச்சுச்சேர் வடங்கொள்கொங்கை மங்கைமார்
      வாராநேரே மாலாகும் வசிவல வவனதிடங்
      கச்சத்தான் மெச்சிப்பூ கலந்திலங்கு வண்டினங்
      காரார்காரார் நீள்சோலை கழுமல வளநகரே. 1.126.2
      1361 திங்கட்கே தும்பைக்கே திகழ்ந்திலங்கு மத்தையின்
      சேரேசேரே நீராக செறிதரு சுரநதியோ
      டங்கைச்சேர் வின்றிக்கே அடைந்துடைந்த வெண்டலை
      பாலேமேலே மாலே படர்வுறு மவனிறகும்
      பொங்கப்பேர் நஞ்சைச்சேர் புயங்கமங்கள் கொன்றையின்
      போதார்தாரே தாமேவி புரிதரு சடையனிடங்
      கங்கைக்கே யும்பொற்பார் கலந்துவந்த பொன்னியின்
      காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே. 1.126.3
      1362 அண்டத்தா லெண்டிக்கு மமைந்தடங்கு மண்டல
      தாறேவேறே வானாள்வார் அவரவ ரிடமதெலாம்
      மண்டிப்போய் வென்றிப்போர் மலைந்தலைந்த வும்பரும்
      மாறேலாதார் தாமேவும் வலிமிகு புரமெரிய
      முண்டத்தே வெந்திட்டே முடிந்திடிந்த இஞ்சிசூழ்
      மூவாமூதூர் மூதூரா முனிவுசெய் தவனதிடங்
      கண்டிட்டே செஞ்சொற்சேர் கவின்சிறந்த மந்திர
      காலேயோவா தார்மேவுங் கழுமல வளநகரே. 1.126.4
      1363 திக்கிற்றே வற்றற்றே திகழ்ந்திலங்கு மண்டல
      சீறார்வீறார் போரார்தா ரகனுட லவனெதிரே
      புக்கிட்டே வெட்டிட்டே புகைந்தெழுந்த சண்டத்தீ
      போலேபூநீர் தீகான்மீ புணர்தரு முயிர்கள்திறஞ்
      சொக்கத்தே நிர்த்தத்தே தொடர்ந்தமங்கை செங்க
      தோடேயாமே மாலோக துயர்களை பவனதிடங்
      கைக்கப்போ யுக்கத்தே கனன்றுமிண்டு தண்டலை
      காடேயோடா ஊரேசேர் கழுமல வளநகரே. 1.126.5
      1364 செற்றிட்டே வெற்றிச்சேர் திகழ்ந்ததும்பி மொய்ம்புறுஞ்
      சேரேவாரா நீள்கோதை தெரியிழை பிடியதுவாய்
      ஒற்றைச்சேர் முற்றல்கொம் புடைத்தடக்கை முக்கண்மி
      கோவாதேபாய் மாதான துறுபுகர் முகஇறையை
      பெற்றிட்டே மற்றிப்பார் பெருத்துமிக்க துக்கமும்
      பேராநோய்தா மேயாமை பிரிவுசெய் தவனதிடங்
      கற்றிட்டே யெட்டெட்டு கலைத்துறை கரைச்செல
      காணாதாரே சேராமெ கழுமல வளநகரே. 1.126.6
      1365 பத்திப்பேர் வித்திட்டே பரந்தஐம் புலன்கள்வா
      பாலேபோகா மேகாவா பகையறும் வகைநினையா
      முத்திக்கே விக்கத்தே முடிக்குமு குணங்கள்வாய்
      மூடாவூடா நாலந்த கரணமும் ஒருநெறியா
      சித்திக்கே யுய்த்திட்டு திகழ்ந்தமெ பரம்பொருள்
      சேர்வார்தாமே தானாக செயுமவன் உறையுமிடங்
      கத்திட்டோ ர் சட்டங்கங் கலந்திலங்கும் நற்பொருள்
      காலேயோவா தார்மேவுங் கழுமல வளநகரே. 1.126.7
      1366 செம்பைச்சேர் இஞ்சிச்சூழ் செறிந்திலங்கு பைம்பொழிற்
      சேரேவாரா வாரீச திரையெறி நகரிறைவன்
      இம்பர்க்கே தஞ்செய்தி டிருந்தரன் பயின்றவெற்
      பேரார்பூநே ரோர்பா தெழில்விரல் அவண்நிறுவி
      டம்பொற்பூண் வென்றித்தோள் அழிந்துவந்த னஞ்செய்தாற்
      காரார்கூர்வாள் வாணாளன் றருள்புரி பவனதிடங்
      கம்பத்தார் தும்பித்திண் கவுட்சொரிந்த மும்மத
      காரார்சேறார் மாவீதி கழுமல வளநகரே. 1.126.8
      1367 பன்றிக்கோ லங்கொண்டி படித்தடம் பயின்றிட
      பானாமால்தா னாமே பறவையி னுருவுகொள
      ஒன்றிட்டே யம்புச்சே ருயர்ந்தபங் கயத்தவ
      னோதானோதான் அஃதுணரா துருவின தடிமுடியுஞ்
      சென்றிட்டே வந்திப்ப திருக்களங்கொள் பைங்கணின்
      றேசால்வேறோ ராகார தெரிவுசெய் தவனதிடங்
      கன்றுக்கே முன்றிற்கே கலந்தில நிறைக்கவுங்
      காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே. 1.126.9
      1368 தட்டிட்டே முட்டிக்கை தடுக்கிடுக்கி நின்றுணா
      தாமேபேணா தேநாளுஞ் சமணொடு முழல்பவரும்
      இட்டத்தா லத்தந்தா னிதன்றதென்று நின்றவர
      கேயாமேவா யேதுச்சொல் லிலைமலி மருதம்பூ
      புட்டத்தே யட்டிட்டு புதைக்குமெய்க்கொள் புத்தரும்
      போல்வார்தாமோ ராமேபோ புணர்வுசெய் தவனதிடங்
      கட்டிக்கால் வெட்டித்தீங் கரும்புதந்த பைம்புனற்
      காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே. 1.126.10
      1369 கஞ்சத்தேன் உண்டிட்டே களித்துவண்டு சண்ப
      கானேதேனே போராருங் கழுமல நகரிறையை
      தஞ்சைச்சார் சண்பைக்கோன் சமைத்தநற் கலைத்துறை
      தாமேபோல்வார் தேனேரார் தமிழ்விர கனமொழிகள்
      எஞ்சத்தேய் வின்றிக்கே இமைத்திசை தமைத்தகொண்
      டேழேயேழே நாலேமூன் றியலிசை இசையியல்பா
      வஞ்சத்தேய் வின்றிக்கே மனங்கொள பயிற்றுவோர்
      மார்பேசேர்வாள் வானோர்சீர் மதிநுதல் மடவரலே. 1.126.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      1.127 சீகாழி - திருஏகபாதம்
      பண் - வியாழக்குறிஞ்சி
      1370 பிரம புரத்துறை பெம்மா னெம்மான்
      பிரம புரத்துறை பெம்மா னெம்மான்
      பிரம புரத்துறை பெம்மா னெம்மான்
      பிரம புரத்துறை பெம்மா னெம்மான். 1.127.1
      1371 விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன்
      விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன்
      விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன்
      விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன். 1.127.2
      1372 புண்டரி கத்தவன் மேவிய புகலியே
      புண்டரி கத்தவன் மேவிய புகலியே
      புண்டரி கத்தவன் மேவிய புகலியே
      புண்டரி கத்தவன் மேவிய புகலியே. 1.127.3
      1373 விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்
      விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்
      விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்
      விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன். 1.127.4
      1374 சுடர்மணி மாளிகை தோணி புரத்தவன்
      சுடர்மணி மாளிகை தோணி புரத்தவன்
      சுடர்மணி மாளிகை தோணி புரத்தவன்
      சுடர்மணி மாளிகை தோணி புரத்தவன். 1.127.5
      1375 பூசுரர் சேர்பூ தராயவன் பொன்னடி
      பூசுரர் சேர்பூ தராயவன் பொன்னடி
      பூசுரர் சேர்பூ தராயவன் பொன்னடி
      பூசுரர் சேர்பூ தராயவன் பொன்னடி. 1.127.6
      1376 செருக்குவா புடையான் சிரபுர மென்னில்
      செருக்குவா புடையான் சிரபுர மென்னில்
      செருக்குவா புடையான் சிரபுர மென்னில்
      செருக்குவா புடையான் சிரபுர மென்னில். 1.127.7
      1377 பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன்
      பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன்
      பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன்
      பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன். 1.127.8
      1378 தசமுக னெறிதர வூன்று சண்பையான்
      தசமுக னெறிதர வூன்று சண்பையான்
      தசமுக னெறிதர வூன்று சண்பையான்
      தசமுக னெறிதர வூன்று சண்பையான். 1.127.9
      1379 காழி யானய னுள்ளவா காண்பரே
      காழி யானய னுள்ளவா காண்பரே
      காழி யானய னுள்ளவா காண்பரே
      காழி யானய னுள்ளவா காண்பரே. 1.127.10
      1380 கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே
      கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே
      கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே
      கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே. 1.127.11
      1381 கழுமல முதுபதி கவுணியன் கட்டுரை
      கழுமல முதுபதி கவுணியன் கட்டுரை
      கழுமல முதுபதி கவுணியன் கட்டுரை
      கழுமல முதுபதி கவுணியன் கட்டுரை. 1.127.12
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      1.128 திருவெழுகூற்றிருக்கை
      பண் - வியாழக்குறிஞ்சி
      1382 ஓருரு வாயினை மானாங் கார
      தீரியல் பாயொரு விண்முதல் பூதலம்
      ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும்
      படைத்தளி தழிப்பமும் மூர்த்திக ளாயினை
      இருவரோ டொருவ னாகி நின்றனை 05
      ஓரால் நீழல் ஒண்கழல் இரண்டும்
      முப்பொழு தேத்திய நால்வர கொளிநெறி
      காட்டினை நாட்டமூன் றா கோட்டினை
      இருநதி யரவமோ டொருமதி சூடினை
      ஒருதா ளீரயின் மூவிலை சூலம் 10
      நாற்கால் மான்மறி ஐந்தலை யரவம்
      ஏந்தினை காய்ந்த நால்வாய் மு
      திருகோ டொருகரி யீடழி துரித்தனை
      ஒருதனு இருகால் வளைய வாங்கி
      முப்புர தோடு நானிலம் அஞ்ச 15
      கொன்று தலத்துற அவுணரை யறுத்தனை
      ஐம்புலன் நாலாம் அந்த கரணம்
      முக்குணம் இருவளி யொருங்கிய வானோர்
      ஏத்த நின்றனை யொருங்கிய மனத்தோ
      டிருபிற போர்ந்து முப்பொழுது குறைமுடித்து 20
      நான்மறை யோதி ஐவகை வேள்வி
      அமைத்தா றங்க முதலெழு தோதி
      வரன்முறை பயின்றெழு வான்றனை வளர்க்கும்
      பிரமபுரம் பேணினை
      அறுபதம் முரலும் வேணுபுரம் விரும்பினை 25
      இகலிய மைந்துணர் புகலி யமர்ந்தனை
      பொங்குநாற் கடல்சூழ் வெங்குரு விளங்கினை
      பாணிமூ வுலகும் புதையமேல் மிதந்த
      தோணிபுர துறைந்தனை தொலையா இருநிதி
      வாய்ந்த பூந்தராய் ஏய்ந்தனை 30
      வரபுர மென்றுணர் சிரபுர துறைந்தனை
      ஒருமலை யெடுத்த இருதிறல் அரக்கன்
      விறல்கெடு தருளினை புறவம் புரிந்தனை
      முந்நீர துயின்றோன் நான்முகன் அறியா
      பண்பொடு நின்றனை சண்பை யமர்ந்தனை 35
      ஐயுறும் அமணரும் அறுவகை தேரரும்
      ஊழியும் உணரா காழி யமர்ந்தனை
      எச்சனே ழிசையோன் கொச்சையை மெச்சினை
      ஆறு பதமும் ஐந்தமர் கல்வியும்
      மறை முதல் நான்கும் 40
      மூன்று காலமு தோன்ற நின்றனை
      இருமையின் ஒருமையும் ஒருமையின் பெருமையும்
      மறுவிலா மறையோர்
      கழுமல முதுபதி கவுணியன் கட்டுரை
      கழுமல முதுபதி கவுணியன் அறியும் 45
      அனைய தன்மையை யாதலின் நின்னை
      நினைய வல்லவ ரில்லை நீள்நிலத்தே.
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      1.129 திருக்கழுமலம்
      பண் - மேகராகக்குறிஞ்சி
      1383 சேவுயரு திண்கொடியான் திருவடியே
      சரணென்று சிறந்தவன்பால்
      நாவியலும் மங்கையொடு நான்முகன்றான்
      வழிபட்ட நலங்கொள்கோயிற்
      வாவிதொறும் வண்கமலம் முகம்காட்ட
      செங்குமுதம் வாய்கள்காட்ட
      காவியிருங் கருங்குவளை கருநெய்தல்
      கண்காட்டுங் கழுமலமே. 1.129.1
      1384 பெருந்தடங்கண் செந்துவர்வா பீடுடைய
      மலைச்செல்வி பிரியாமேனி
      அருந்தகைய சுண்ணவெண்ணீ றலங்கரித்தான்
      அமரர்தொழ வமருங்கோயில்
      தருந்தடக்கை முத்தழலோர் மனைகள்தொறும்
      இறைவனது தன்மைபாடி
      கருந்தடங்கண் ணார்கழல்ப தம்மானை
      பாட்டயருங் கழுமலமே. 1.129.2
      1385 அலங்கல்மலி வானவரு தானவரும்
      அலைகடலை கடையப்பூதங்
      கலங்கவெழு கடுவிடமுண் டிருண்டமணி
      கண்டத்தோன் கருதுங்கோயில்
      விலங்கலமர் புயன்மறந்து மீன்சனிபு
      கூன்சலிக்குங் காலத்தானுங்
      கலங்கலிலா மனப்பெருவண் கையுடைய
      மெய்யர்வாழ் கழுமலமே. 1.129.3
      1386 பாரிதனை நலிந்தமரர் பயமெய்த
      சயமெய்தும் பரிசுவெம்மை
      போரிசையும் புரமூன்றும் பொன்றவொரு
      சிலைவளைத்தோன் பொருந்துங்கோயில்
      வாரிசைமென் முலைமடவார் மாளிகையின்
      சூளிகைமேல் மகப்பாராட்ட
      காரிசையும் விசும்பியங்குங் கணங்கேட்டு
      மகிழ்வெய்துங் கழுமலமே. 1.129.4
      1387 ஊர்கின்ற அரவமொளி விடுதிங்க
      ளொடுவன்னி மத்தமன்னும்
      நீர்நின்ற கங்கைநகு வெண்டலைசேர்
      செஞ்சடையான் நிகழுங்கோயில்
      ஏர்தங்கி மலர்நிலவி யிசைவெள்ளி
      மலையென்ன நிலவிநின்ற
      கார்வண்டின் கணங்களாற் கவின்பெருகு
      சுதைமாட கழுமலமே. 1.129.5
      1388 தருஞ்சரத தந்தருளென் றடிநினைந்து
      தழலணைந்து தவங்கள்செய்த
      பெருஞ்சதுரர் பெயலர்க்கும் பீடார்தோ
      ழமையளித்த பெருமான்கோயில்
      அரிந்தவய லரவிந்த மதுவுகுப்ப
      அதுகுடித்து களித்துவாளை
      கருஞ்சகடம் இளகவளர் கரும்பிரிய
      அகம்பாயுங் கழுமலமே. 1.129.6
      1389 புவிமுதலைம் பூதமா புலனைந்தாய்
      நிலனைந்தா கரணம்நான்காய்
      அவையவைசேர் பயனுருவா யல்லவுரு
      வாய்நின்றான் அமருங்கோயில்
      தவமுயல்வோர் மலர்பறிப்ப தாழவிடு
      கொம்புதைப்ப கொக்கின்காய்கள்
      கவணெறிகற் போற்சுனையின் கரைசேர
      புள்ளிரியுங் கழுமலமே. 1.129.7
      1390 அடல்வந்த வானவரை யழித்துலகு
      தெழித்துழலும் அரக்கர்கோமான்
      மிடல்வந்த இருபதுதோள் நெரியவிரல்
      பணிகொண்டோ ன் மேவுங்கோயில்
      நடவந்த உழவரிது நடவொணா
      வகைபரலா தென்றுதுன்று
      கடல்வந்த சங்கீன்ற முத்துவயற்
      கரைகுவிக்குங் கழுமலமே. 1.129.8
      1391 பூமகள்தன் கோனயனும் புள்ளினொடு
      கேழலுரு வாகிப்புக்கி
      டாமளவுஞ் சென்றுமுடி யடிகாணா
      வகைநின்றான் அமருங்கோயில்
      பாமருவும் கலைப்புலவோர் பன்மலர்கள்
      கொண்டணிந்து பரிசினாலே
      காமனைகள் பூரித்து களிகூர்ந்து
      நின்றேத்துங் கழுமலமே. 1.129.9
      1392 குணமின்றி புத்தர்களும் பொய்த்தவத்தை
      மெய்த்தவமாய் நின்றுகையில்
      உணல்மருவுஞ் சமணர்களு முணராத
      வகைநின்றான் உறையுங்கோயில்
      மணமருவும் வதுவையொலி விழவினொலி
      யிவையிசைய மண்மேல்தேவர்
      கணமருவும் மறையினொலி கீழ்ப்படுக்க
      மேல்படுக்குங் கழுமலமே. 1.129.10
      1393 கற்றவர்கள் பணிந்தேத்துங் கழுமலத்து
      ளீசன்றன் கழல்மேல்நல்லோர்
      நற்றுணையாம் பெருந்தன்மை ஞானசம்
      பந்தன்றான் நயந்துசொன்ன
      சொற்றுணையோ ரைந்தினொடை திவைவல்லார்
      தூமலராள் துணைவராகி
      முற்றுலக மதுவாண்டு முக்கணான்
      அடிசேர முயல்கின்றாரே. 1.129.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      1.130 திருவையாறு
      பண் - மேகராகக்குறிஞ்சி
      1394 புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி
      அறிவழிந்தி டைம்மே஧லுந்தி
      அலமந்த போதாக அஞ்சேலென்
      றருள்செய்வான் அமருங்கோயில்
      வலம்வந்த மடவார்கள் நடமாட
      முழவதிர மழையென்றஞ்சி
      சிலமந்தி யலமந்து மரமேறி
      முகில்பார்க்கு திருவையாறே. 1.130.1
      1395 விடலேறு படநாகம் அரைக்கசைத்து
      வெற்பரையன் பாவையோடும்
      அடலேறொன் றதுவேறி அஞ்சொலீர்
      பலியென்னு மடிகள்கோயில்
      கடலேறி திரைமோதி காவிரியி
      னுடன்வந்து கங்குல்வைகி
      திடலேறி சுரிசங்கஞ் செழுமுத்தங்
      கீன்றலைக்கு திருவையாறே. 1.130.2
      1396 கங்காளர் கயிலாய மலையாளர்
      கானப்பே ராளர்மங்கை
      பங்காளர் திரிசூல படையாளர்
      விடையாளர் பயிலுங்கோயில்
      கொங்காள பொழில்நுழைந்து கூர்வாயால்
      இறகுலர்த்தி கூதல்நீங்கி
      செங்கால்நன் வெண்குருகு பைங்கானல்
      இரைதேரு திருவையாறே. 1.130.3
      1397 ஊன்பாயு முடைதலைக்கொண் டூரூரின்
      பலிக்குழல்வார் உமையாள்பங்கர்
      தான்பாயும் விடையேறுஞ் சங்கரனார்
      தழலுருவர் தங்குங்கோயில்
      மான்பாய வயலருகே மரமேறி
      மந்திபாய் மடுக்கள்தோறு
      தேன்பாய மீன்பாய செழுங்கமல
      மொட்டலரு திருவையாறே. 1.130.4
      1398 நீரோடு கூவிளமும் நிலாமதியும்
      வெள்ளெருக்கும் நிறைந்தகொன்றை
      தாரோடு தண்கரந்தை சடைக்கணிந்த
      தத்துவனார் தங்குங்கோயில்
      காரோடி விசும்பளந்து கடிநாறும்
      பொழிலணைந்த கமழ்தார்வீதி
      தேரோடும் அரங்கேறி சேயிழையார்
      நடம்பயிலு திருவையாறே. 1.130.5
      1399 வேந்தாகி விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும்
      நெறிகாட்டும் விகிர்தனாகி
      பூந்தாம நறுங்கொன்றை சடைக்கணிந்த
      புண்ணியனார் நண்ணுங்கோயில்
      காந்தார மிசையமைத்து காரிகையார்
      பண்பாட கவினார்வீதி
      தேந்தாமென் றரங்கேறி சேயிழையார்
      நடமாடு திருவையாறே. 1.130.6
      1400 நின்றுலா நெடுவிசும்பில் நெருக்கிவரு
      புரமூன்றும் நீள்வாயம்பு
      சென்றுலாம் படிதொட்ட சிலையாளி
      மலையாளி சேருங்கோயில்
      குன்றெலாங் குயில்கூவ கொழும்பிரச
      மலர்பாய்ந்து வாசமல்கு
      தென்றலா ரடிவருட செழுங்கரும்பு
      கண்வளரு திருவையாறே. 1.130.7
      1401 அஞ்சாதே கயிலாய மலையெடுத்த
      அரக்கர்கோன் தலைகள்பத்தும்
      மஞ்சாடு தோள்நெரிய அடர்த்தவனு
      கருள்புரிந்த மைந்தர்கோயில்
      இஞ்சாயல் இளந்தெங்கின் பழம்வீழ
      இளமேதி இரிந்தங்கோடி
      செஞ்சாலி கதிருழக்கி செழுங்கமல
      வயல்படியு திருவையாறே. 1.130.8
      1402 மேலோடி விசும்பணவி வியன்நிலத்தை
      மிகவகழ்ந்து மிக்குநாடும்
      மாலோடு நான்முகனு மறியாத
      வகைநின்றான் மன்னுங்கோயில்
      கோலோட கோல்வளையார் கூத்தாட
      குவிமுலையார் முகத்தினின்று
      சேலோட சிலையாட சேயிழையார்
      நடமாடு திருவையாறே. 1.130.9
      1403 குண்டாடு குற்றுடுக்கை சமணரொடு
      சாக்கியருங் குணமொன்றில்லா
      மிண்டாடு மிண்டருரை கேளாதே
      யாளாமின் மேவித்தொண்டீர்
      எண்டோ ளர் முக்கண்ணர் எம்மீசர்
      இறைவரினி தமருங்கோயில்
      செண்டாடு புனல்பொன்னி செழுமணிகள்
      வந்தலைக்கு திருவையாறே. 1.130.10
      1404 அன்னமலி பொழில்புடைசூழ் ஐயாற்றெம்
      பெருமானை அந்தண்காழி
      மன்னியசீர் மறைநாவன் வளர்ஞான
      சம்பந்தன் மருவுபாடல்
      இன்னிசையா லிவைபத்தும் இசையுங்கால்
      ஈசனடி யேத்துவார்கள்
      தன்னிசையோ டமருலகில் தவநெறிசென்
      றெய்துவார் தாழாதன்றே. 1.130.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      1.131 திருமுதுகுன்றம்
      பண் - மேகராகக்குறிஞ்சி
      1405 மெய்த்தாறு சுவையும் ஏழிசையும்
      எண்குணங்களும் விரும்பும்நால்வே
      தத்தாலும் அறிவொண்ணா நடைதெளி
      பளிங்கேபோல் அரிவைபாகம்
      ஒத்தாறு சமயங்க கொருதலைவன்
      கருதுமூர் உலவுதெண்ணீர்
      முத்தாறு வெதிருதிர நித்திலம்வா
      ரிக்கொழிக்கும் முதுகுன்றமே. 1.131.1
      1406 வேரிமிகு குழலியொடு வேடுவனாய்
      வெங்கானில் விசயன்மேவு
      போரின்மிகு பொறையளந்து பாசுபதம்
      புரிந்தளித்த புராணர்கோயில்
      காரின்மலி கடிபொழில்கள் கனிகள்பல
      மலருதிர்த்து கயமுயங்கி
      மூரிவளம் கிளர்தென்றல் திருமுன்றிற்
      புகுந்துலவு முதுகுன்றமே. 1.131.2
      1407 தக்கனது பெருவேள்வி சந்திரனி
      திரனெச்சன் அருக்கன்அங்கி
      மிக்கவிதா தாவினொடும் விதிவழியே
      தண்டித்த விமலர்கோயில்
      கொக்கினிய கொழும்வருக்கை கதலிகமு
      குயர்தெங்கின் குவைகொள்சோலை
      முக்கனியின் சாறொழுகி சேறுலரா
      நீள்வயல்சூழ் முதுகுன்றமே. 1.131.3
      1408 வெம்மைமிகு புரவாணர் மிகைசெய்ய
      விறலழிந்து விண்ணுளோர்கள்
      செம்மலரோன் இந்திரன்மால் சென்றிரப்ப
      தேவர்களே தேரதாக
      மைம்மருவு மேருவிலு மாசுணநாண்
      அரியெரிகால் வாளியாக
      மும்மதிலும் நொடியளவிற் பொடிசெய்த
      முதல்வனிடம் முதுகுன்றமே. 1.131.4
      1409 இழைமேவு கலையல்குல் ஏந்திழையாள்
      ஒருபாலா யொருபாலெள்கா
      துழைமேவும் உரியுடுத்த ஒருவனிரு
      பிடமென்பர் உம்பரோங்கு
      கழைமேவு மடமந்தி மழைகண்டு
      மகவினொடும் புகவொண்கல்லின்
      முழைமேவு மால்யானை இரைதேரும்
      வளர்சாரல் முதுகுன்றமே. 1.131.5
      1410 நகையார்வெண் டலைமாலை முடிக்கணிந்த
      நாதனிடம் நன்முத்தாறு
      வகையாரும் வரைப்பண்டங் கொண்டிரண்டு
      கரையருகு மறியமோதி
      தகையாரும் வரம்பிடறி சாலிகழு
      நீர்குவளை சாயப்பாய்ந்து
      முகையார்செ தாமரைகள் முகம்மலர
      வயல்தழுவு முதுகுன்றமே. 1.131.6
      1411 அறங்கிளரும் நால்வேத மாலின்கீழ்
      இருந்தருளி யமரர்வேண்ட
      நிறங்கிளர்செ தாமரையோன் சிரமைந்தின்
      ஒன்றறுத்த நிமலர்கோயில்
      திறங்கொள்மணி தரளங்கள் வரத்திரண்டங்
      கெழிற்குறவர் சிறுமிமார்கள்
      முறங்களினாற் கொழித்துமணி செலவிலக்கி
      முத்துலைப்பெய் முதுகுன்றமே. 1.131.7
      1411 கதிரொளிய நெடுமுடிப துடையகடல்
      இலங்கையர்கோன் கண்ணும்வாயும்
      பிதிரொளிய கனல்பிறங்க பெருங்கயிலை
      மலையைநிலை பெயர்த்தஞான்று
      மதிலளகை கிறைமுரல மலரடியொன்
      றூன்றிமறை பாடவாங்கே
      முதிரொளிய சுடர்நெடுவாள் முன்னீந்தான்
      வாய்ந்தபதி முதுகுன்றமே. 1.131.8
      1413 பூவார்பொற் றவிசின்மிசை யிருந்தவனும்
      பூந்துழாய் புனைந்தமாலும்
      ஓவாது கழுகேன மாயுயர்ந்தாழ
      துறநாடி யுண்மைகாணா
      தேவாரு திருவுருவன் சேருமலை
      செழுநிலத்தை மூடவந்த
      மூவாத முழங்கொலிநீர் கீழ்தாழ
      மேலுயர்ந்த முதுகுன்றமே. 1.131.9
      1414 மேனியில்சீ வரத்தாரும் விரிதருத
      டுடையாரும் விரவலாகா
      ஊனிகளா யுள்ளார்சொற் கொள்ளாதும்
      உள்ளுணர்ந்தங் குய்மின்தொண்டீர்
      ஞானிகளா யுள்ளார்கள் நான்மறையை
      முழுதுணர்ந்தைம் புலன்கள்செற்று
      மோனிகளாய் முனிச்செல்வர் தனித்திருந்து
      தவம்புரியும் முதுகுன்றமே. 1.131.10
      1415 முழங்கொலிநீர் முத்தாறு வலஞ்செய்யும்
      முதுகுன்ற திறையைமூவா
      பழங்கிழமை பன்னிருபேர் படைத்துடைய
      கழுமலமே பதியாக்கொண்டு
      தழங்கெரிமூன் றோம்புதொழில் தமிழ்ஞான
      சம்பந்தன் சமைத்தபாடல்
      வழங்குமிசை கூடும்வகை பாடுமவர்
      நீடுலகம் ஆள்வர்தாமே. 1.131.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      1.132 திருவீழிமிழலை
      பண் - மேகராகக்குறிஞ்சி
      1416 ஏரிசையும் வடவாலின் கீழிருந்தங்
      கீரிருவர கிரங்கிநின்று
      நேரியநான் மறைப்பொருளை யுரைத்தொளிசேர்
      நெறியளித்தோன் நின்றகோயில்
      பாரிசையும் பண்டிதர்கள் பன்னா஡ளும்
      பயின்றோது மோசைகேட்டு
      வேரிமலி பொழிற்கிள்ளை வேதங்கள்
      பொருள்சொல்லும் மிழலையாமே. 1.132.1
      1417 பொறியரவ மதுசுற்றி பொருப்பே
      தாகப்பு தேளிர்கூடி
      மறிகடலை கடைந்திட்ட விடமுண்ட
      கண்டத்தோன் மன்னுங்கோயில்
      செறியிதழ்த்தா மரைத்தவிசிற் றிகழ்ந்தோங்கு
      மிலைக்குடைக்கீழ செய்யார்செந்நெல்
      வெறிகதிர்ச்சா மரையிரட்ட இளவன்னம்
      வீற்றிருக்கும் மிழலையாமே. 1.132.2
      1418 எழுந்துலகை நலிந்துழலும் அவுணர்கள்தம்
      புரமூன்றும் எழிற்கண்நாடி
      உழந்துருளும் அளவையினொள் ளெரிகொளவெஞ்
      சிலைவளைத்தோன் உறையுங்கோயில்
      கொழுந்தரளம் நகைகாட்ட கோகநதம்
      முகங்காட்ட குதித்துநீர்மேல்
      விழுந்தகயல் விழிகாட்ட விற்பவளம்
      வாய்காட்டும் மிழலையாமே. 1.132.3
      1419 உரைசேரும் எண்பத்து நான்குநூ
      றாயிரமாம் யோனிபேதம்
      நிரைசேர படைத்தவற்றின் உயிர்க்குயிராய்
      அங்கங்கே நின்றான்கோயில்
      வரைசேரும் முகில்முழவ மயில்கள்பல
      நடமாட வண்டுபாட
      விரைசேர்பொன் னிதழிதர மென்காந்தள்
      கையேற்கும் மிழலையாமே. 1.132.4
      1420 காணுமா றரியபெரு மானாகி
      காலமா குணங்கள்மூன்றா
      பேணுமூன் றுருவாகி பேருலகம்
      படைத்தளிக்கும் பெருமான்கோயில்
      தாணுவாய் நின்றபர தத்துவனை
      உத்தமனை இறைஞ்சீரென்று
      வேணுவார் கொடிவிண்ணோர் தமைவிளிப்ப
      போலோங்கு மிழலையாமே. 1.132.5
      1421 அகனமர்ந்த அன்பினராய் அறுபகைசெற்
      றைம்புலனும் அடக்கிஞான
      புகலுடையோர் தம்முள்ள புண்டரிக
      துள்ளிருக்கும் புராணர்கோயில்
      தகவுடைநீர் மணித்தலத்து சங்குளவர
      கந்திகழ சலசத்தீயுள்
      மிகவுடைய புன்குமலர பொரியட்ட
      மணஞ்செய்யும் மிழலையாமே. 1.132.6
      1422 ஆறாடு சடைமுடியன் அனலாடு
      மலர்க்கையன் இமயப்பாவை
      கூறாடு திருவுருவன் கூத்தாடுங்
      குணமுடையோன் குளிருங்கோயில்
      சேறாடு செங்கழுநீர தாதாடி
      மதுவுண்டு சிவந்தவண்டு
      வேறாய உருவாகி செவ்வழிநற்
      பண்பாடும் மிழலையாமே. 1.132.7
      1423 கருப்பமிகும் உடலடர்த்து காலூன்றி
      கைமறித்து கயிலையென்னும்
      பொருப்பெடுக்க லுறுமரக்கன் பொன்முடிதோள்
      நெரித்தவிரற் புனிதர்கோயில்
      தருப்பமிகு சலந்தரன்றன் உடல்தடிந்த
      சக்கரத்தை வேண்டியீண்டு
      விருப்பொடுமால் வழிபாடு செய்யவிழி
      விமானஞ்சேர் மிழலையாமே. 1.132.8
      1424 செந்தளிர்மா மலரோனு திருமாலும்
      ஏனமொடு அன்னமாகி
      அந்தமடி காணாதே அவரேத்த
      வெளிப்பட்டோ ன் அமருங்கோயில்
      புந்தியினான் மறைவழியே புற்பரப்பி
      நெய்சமிதை கையிற்கொண்டு
      வெந்தழலின் வேட்டுலகின் மிகவளிப்போர்
      சேருமூர் மிழலையாமே. 1.132.9
      1425 எண்ணிறந்த அமணர்களும் இழிதொழில்சேர்
      சாக்கியரும் என்றுந்தன்னை
      நண்ணரிய வகைமயக்கி தன்னடியார
      கருள்புரியும் நாதன்கோயில்
      பண்ணமரும் மென்மொழியார் பாலகரை
      பாராட்டும் ஓசைகேட்டு
      விண்ணவர்கள் வியப்பெய்தி விமானத்தோ
      டும்மிழியும் மிழலையாமே. 1.132.10
      1426 மின்னியலும் மணிமாடம் மிடைவீழி
      மிழலையான் விரையார்பாதஞ்
      சென்னிமிசை கொண்டொழுகுஞ் சிரபுரக்கோன்
      செழுமறைகள் பயிலும்நாவன்
      பன்னியசீர் மிகுஞான சம்பந்தன்
      பரிந்துரைத்த பத்துமேத்தி
      இன்னிசையாற் பாடவல்லார் இருநிலத்தில்
      ஈசனெனும் இயல்பினோரே. 1.132.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      1.133 திருவேகம்பம்
      பண் - மேகராகக்குறிஞ்சி
      1427 வெந்தவெண் பொடிப்பூசு மார்பின்விரி நூலொருபால் பொருந்த
      கந்தமல்கு குழலியோடுங் கடிபொழிற் கச்சி தன்னுள்
      அந்தமில் குணத்தா ரவர்போற்ற அணங்கினொ டாடல்புரி
      எந்தை மேவிய ஏகம்பந்தொழு தேத்த இடர்கெடுமே. 1.133.1
      1428 வரந்திகழு மவுணர் மாநகர்மூன் றுடன்மா தவி
      சரந்துர தெரிசெய்த தாழ்சடை சங்கரன் மேயவிடம்
      குருந்தம் மல்லிகை கோங்குமா தவிநல்ல குராமரவ
      திருந்துபைம் பொழிற்கச்சி யேகம்பஞ் சேர விடர்கெடுமே. 1.133.2
      1429 வண்ணவெண் பொடிப்பூசு மார்பின் வரியர வம்புனைந்து
      பெண்ணமர தெரியாடற் பேணிய பிஞ்ஞகன் மேயவிடம்
      விண்ணமர் நெடுமாட மோங்கி விளங்கிய கச்சிதன்னுள்
      திண்ணமாம் பொழில்சூழ்ந்த ஏகம்பஞ் சேர விடர்கெடுமே. 1.133.3
      1430 தோலும்நூ லுந்துதைந்த வரைமார்பிற் சுடலைவெண் ணீறணிந்து
      காலன்மாள் வுறக்காலாற் காய்ந்த கடவுள் கருதுமிடம்
      மாலைவெண் மதிதோயு மாமதிற் கச்சி மாநகருள்
      ஏலம்நாறிய சோலைசூழ் ஏகம்பம் ஏத்த விடர்கெடுமே. 1.133.4
      1431 தோடணிம் மலர்க்கொன்றை சேர்சடை தூமதி யம்புனைந்து
      பாடல்நான் மறையாக பல்கண பேய்க ளவைசூழ
      வாடல்வெண் டலையோ டனலேந்தி மகிழ்ந்துடன் ஆடல்புரி
      சேடர்சேர் கலிக்கச்சி ஏகம்பஞ் சேர விடர்கெடுமே. 1.133.5
      1432 சாகம்பொன் வரையாக தானவர் மும்மதில் சாயவெய்
      தாகம்பெண் ணொருபாக மாக அரவொடு நூலணிந்து
      மாகந்தோய் மணிமாட மாமதிற் கச்சி மாநகருள்
      ஏகம்ப துறையீசன் சேவடி யேத்த விடர்கெடுமே. 1.133.6
      இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 1.133.7
      1433 வாணிலா மதிபுல்கு செஞ்சடை வாளர வம்மணிந்து
      நாணிட தினில்வாழ்க்கை பேணி நகுதலையிற் பலிதேர
      தேணிலா அரக்கன்றன் நீள்முடி பத்தும் இறுத்தவனூர்
      சேணுலாம் பொழிற்கச்சி ஏகம்பஞ் சேர விடர்கெடுமே. 1.133.8
      1434 பிரமனு திருமாலுங் கைதொழ பேரழ லாயபெம்மான்
      அரவஞ் சேர்சடை அந்தணன் அணங்கினொ டமருமிடம்
      கரவில்வண் கையினார்கள் வாழ்கலி கச்சி மாநகருள்
      மரவஞ்சூழ் பொழிலேகம் பந்தொழ வில்வினை மாய்ந்தறுமே. 1.133.9
      1435 குண்டுப டமணா யவரொடுங் கூறைதம் மெய்போர்க்கும்
      மிண்டர் கட்டிய கட்டுரை யவைகொண்டு விரும்பேன்மின்
      விண்டவர் புரமூன்றும் வெங்கணை ஒன்றி னாலவி
      கண்டவன் கலிக்கச்சி யேகம்பங் காண விடர்கெடுமே. 1.133.10
      1436 ஏரினார் பொழில்சூழ்ந்த கச்சி யேகம்பம் மேயவனை
      காரினார் மணிமாட மோங்கு கழுமல நன்னகருள்
      பாரினார் தமிழ்ஞான சம்பந்தன் பரவிய பத்தும்வல்லார்
      சீரினார் புகழோங்கி விண்ணவ ரோடுஞ் சேர்பவரே. 1.133.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      1.134 திருப்பறியலூர் - திருவீரட்டம்
      பண் - மேகராகக்குறிஞ்சி
      1437 கருத்தன் கடவுள் கனலே தியாடும்
      நிருத்தன் சடைமேல் நிரம்பா மதியன்
      திருத்த முடையார் திருப்பறி யலூரில்
      விருத்தன் எனத்தகும் வீரட்ட தானே. 1.134.1
      1438 மருந்தன் அமுதன் மயானத்துள் மைந்தன்
      பெருந்தண் புனற்சென்னி வைத்த பெருமான்
      திருந்து மறையோர் திருப்பறி யலூரில்
      விரிந்த மலர்ச்சோலை வீரட்ட தானே. 1.134.2
      1439 குளிர்ந்தார் சடையன் கொடுஞ்சிலை விற்காமன்
      விளிந்தான் அடங்க வீந்தெய்த செற்றான்
      தெளிந்தார் மறையோர் திருப்பறி யலூரில்
      மிளிர்ந்தார் மலர்ச்சோலை வீரட்ட தானே. 1.134.3
      1440 பிறப்பாதி யில்லான் பிறப்பார் பிறப்பு
      செறப்பாதி யந்தஞ் செலச்செய்யு தேசன்
      சிறப்பா டுடையார் திருப்பறி யலூரில்
      விறற்பா ரிடஞ்சூழ வீரட்ட தானே. 1.134.4
      1441 கரிந்தார் இடுகாட்டி லாடுங் கபாலி
      புரிந்தார் படுதம் புறங்கா டிலாடும்
      தெரிந்தார் மறையோர் திருப்பறி யலூரில்
      விரிந்தார் மலர்ச்சோலை வீரட்ட தானே. 1.134.5
      1442 அரவுற்ற நாணா அனலம்ப தாக
      செருவுற் றவர்புர தீயெழ செற்றான்
      தெருவிற் கொடிசூழ் திருப்பறி யலூரில்
      வெருவுற் றவர்தொழும் வீரட்ட தானே. 1.134.6
      1443 நரையார் விடையான் நலங்கொள் பெருமான்
      அரையா ரரவம் அழகா வசைத்தான்
      திரையார் புனல்சூழ் திருப்பறி யலூரில்
      விரையார் மலர்ச்சோலை வீரட்ட தானே. 1.134.7
      1444 வளைக்கும் மெயிற்றின் னரக்கன் வரைக்கீழ்
      இளைக்கும் படிதா னிருந்தேழை யன்னம்
      திளைக்கும் படுகர திருப்பறி யலூரில்
      விளைக்கும் வயல்சூழ்ந்த வீரட்ட தானே. 1.134.8
      1445 வளங்கொள் மலர்மேல் அயனோத வண்ணன்
      துளங்கும் மனத்தார் தொழத்தழ லாய்நின்றான்
      இளங்கொம் பனாளோ டிணைந்தும் பிணைந்தும்
      விளங்கு திருப்பறியல் வீரட்ட தானே. 1.134.9
      1446 சடையன் பிறையன் சமண்சா கியரோ
      டடையன் பிலாதான் அடியார் பெருமான்
      உடையன் புலியின் உரிதோல் அரைமேல்
      விடையன் திருப்பறியல் வீரட்ட தானே. 1.134.10
      1447 நறுநீ ருகுங்காழி ஞானசம் பந்தன்
      வெறிநீர திருப்பறியல் வீரட்ட தானை
      பொறிநீ டரவன் புனைபாடல் வல்லார
      கறுநீ டவலம் அறும்பிற புத்தானே. 1.134.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      1.135 திருப்பராய்த்துறை
      பண் - மேகராகக்குறிஞ்சி
      இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - பராய்த்துறைநாதவீசுவரர் தேவியார்
      1448 நீறுசேர்வதொர் மேனியர்நேரிழை
      கூறுசேர்வதொர் கோலமா
      பாறுசேர்தலை கையர்பராய்த்துறை
      ஆறுசேர்சடை அண்ணலே. 1.135.1
      1449 கந்தமாமலர கொன்றைகமழ்சடை
      வந்தபூம்புனல் வைத்தவர்
      பைந்தண்மாதவி சூழ்ந்தபராய்த்துறை
      அந்தமில்ல அடிகளே. 1.135.2
      1450 வேதர்வேதமெல் லாமுறையால்விரி
      தோதநின்ற ஒருவனார்
      பாதிபெண்ணுரு ஆவர்பராய்த்துறை
      ஆதியாய அடிகளே. 1.135.3
      1451 தோலுந்தம்மரை யாடைசுடர்விடு
      நூலுந்தாமணி மார்பினர்
      பாலும்நெய்பயின் றாடுபராய்த்துறை
      ஆலநீழல் அடிகளே. 1.135.4
      1452 விரவிநீறுமெய் பூசுவர்மேனிமேல்
      இரவில்நின்றெரி யாடுவர்
      பரவினாரவர் வேதம்பராய்த்துறை
      அரவமார்த்த அடிகளே. 1.135.5
      1453 மறையுமோதுவர் மான்மறிக்கையினர்
      கறைகொள்கண்ட முடையவர்
      பறையுஞ்சங்கும் ஒலிசெய்பராய்த்துறை
      அறையநின்ற அடிகளே. 1.135.6
      1454 விடையுமேறுவர் வெண்பொடிப்பூசுவர்
      சடையிற்கங்கை தரித்தவர்
      படைகொள்வெண்மழு வாளர்பராய்த்துறை
      அடையநின்ற அடிகளே. 1.135.7
      1455 தருக்கின்மிக்க தசக்கிரிவன்றனை
      நெருக்கினார்விர லொன்றினால்
      பருக்கினாரவர் போலும்பராய்த்துறை
      அருக்கன்றன்னை அடிகளே. 1.135.8
      1456 நாற்றமாமல ரானொடுமாலுமா
      தோற்றமும் மறியாதவர்
      பாற்றினார்வினை யானபராய்த்துறை
      ஆற்றல்மிக்க அடிகளே. 1.135.9
      1457 திருவிலிச்சில தேரமண்ஆதர்கள்
      உருவிலாவுரை கொள்ளேலும்
      பருவிலாலெயில் எய்துபராய்த்துறை
      மருவினான்றனை வாழ்த்துமே. 1.135.10
      1458 செல்வமல்கிய செல்வர்பராய்த்துறை
      செல்வர்மேற் சிதையாதன
      செல்வன்ஞான சம்பந்தனசெந்தமிழ்
      செல்வமாமிவை செப்பவே. 1.135.11
      திருச்சிற்றம்பலம்
      உள்ளுறை அட்டவணைக்கு திரும்ப
      ------------------------------------------------------------------------
      1.136 திருத்தருமபுரம்
      பண் - யாழ்மூரி
      1459 மாதர் மடப்பிடி யும்மட வன்னமு மன்னதோர்
      நடை யுடைம் மலை மகள் துணையென மகிழ்வர்
      பூதவி னப்படை நின்றிசை பாடவு மாடுவர்
      அவர் படர் சடை நெடு முடியதொர் புனலர்
      வேதமொ டேழிசை பாடுவ ராழ்கடல் வெண்டிரை
      இரை நுரை கரை பொரு துவிம்மி நின்றயலே
      தாதவிழ் புன்னை தயங்கு மலர்ச்சிறை வண்டறை
      எழில் பொழில் குயில் பயில் தருமபு ரம்பதியே. 1.136.1
      1460 பொங்கு நடைப்புக லில்விடை யாமவ ரூர்திவெண்
      பொடி யணி தடங் கொள்மார் புபூண நூல்புரள
      மங்குலி டைத்தவ ழும்மதி சூடுவ ராடுவர்
      வளங் கிளர் புன லரவம் வைகிய சடையர்
      சங்கு கடற்றிரை யாலுதை யுண்டுச ரிந்திரி
      தொசி தசை திசைந்து சேரும் வெண்மணற் குவைமேல்
      தங்கு கதிர்மணி நித்தில மெல்லிரு ளொல்கநின்
      றிலங் கொளி நலங் கெழிற் றருமபு ரம்பதியே. 1.136.2
      1461 விண்ணுறு மால்வரை போல்விடை யேறுவர் ஆறுசூ
      டுவர் விரி சுரி யொளிகொள் தோடுநின் றிலங
      கண்ணுற நின்றொளி ருங்கதிர் வெண்மதி கண்ணியர்
      கழி தவ ரிழி திடும் முடைதலை கலனா
      பெண்ணுற நின்றவர் தம்முரு வம்மயன் மால்தொழவ்
      வரி வையை பிணை திணை தணைந்ததும் பிரியார்
      தண்ணிதழ் முல்லையொ டெண்ணிதழ் மௌவல் மருங்கலர்
      கருங் கழி நெருங் குநற் றரும புரம்பதியே. 1.136.3
      1462 வாருறு மென்முலை நன்னுதல் ஏழையொ டாடுவர்
      வளங் கிளர் விளங் குதிங் கள்வைகிய சடையர்
      காருற நின்றல ரும்மலர கொன்றை யங்கண்ணியர்
      கடு விடை கொடி வெடிகொள் காடுறை பதியர்
      பாருற விண்ணுல கம்பர வப்படு வோரவர்
      படு தலை பலி கொளல் பரிபவ நினையார்
      தாருறு நல்லர வம்மலர் துன்னிய தாதுதிர்
      தழை பொழின் மழை நுழை தருமபு ரம்பதியே. 1.136.4
      1463 நேரும வர்க்குண ரப்புகி லில்லைநெ டுஞ்சடை
      கடும் புனல் படர திடம் படுவதொர் நிலையர்
      பேரும வர்க்கெனை யாயிரம் முன்னைப்பி றப்பிற
      பிலா தவ ருடற் றடர்த்த பெற்றி யாரறிவார்
      ஆரம வர்க்கழல் வாயதொர் நாகம ழஃகுறவ்
      வெழுஃ கொழும் மலர் கொள்பொன் னிதழிநல் லலங்கல்
      தாரம வர்க்கிம வான்மகள் ஊர்வது போர்விடை
      கடி படு செடி பொழிற் றருமபு ரம்பதியே. 1.136.5
      1464 கூழையங் கோதைகு லாயவள் தம்பிணை புல்கமல்
      குமென் முலை பொறி கொள்பொற் கொடியிடை துவர்வாய்
      மாழையொண் கண்மட வாளையொர் பாகம கிழ்ந்தவர்
      வலம் மலி படை விடை கொடிகொ டும்மழுவாள்
      யாழையும் மெள்கிட வேழிசை வண்டுமு ரன்றின
      துவன் றிமென் சிறஃ கறை யுறந்நறவ் விரியும்நற்
      தாழையும் ஞாழலும் நீடிய கானலி னள்ளிசை
      புள் ளின துயில் பயில் தருமபு ரம்பதியே. 1.136.6
      1465 தேமரு வார்குழல் அன்ன நடைப்பெடை மான்விழி
      திரு திழை பொருந்து மேனி செங்கதிர் விரிய
      தூமரு செஞ்சடை யிற்றுதை வெண்மதி துன்றுகொன்றை
      தொல் புனல் சிரங் கர துரித்த தோலுடையர்
      காமரு தண்கழி நீடிய கானல கண்டகங்
      கடல் அடை கழி யிழிய முண்ட கத்தயலே
      தாமரை சேர்குவ ளைப்படு கிற்கழு நீர்மலர்
      வெறி கமழ் செறி வயற் றருமபு ரம்பதியே. 1.136.7
      1466 தூவண நீறக லம்பொலி யவ்விரை புல்கமல்
      குமென் மலர் வரை புரை திரள்பு யம்மணிவர்
      கோவண மும்முழை யின்னத ளும்முடை யாடையர்
      கொலை மலி படையொர் சூல மேந்திய குழகர்
      பாவண மாவல றத்தலை பத்துடை யவ்வர
      கனவ் வலியொர் கவ்வை செய் தருள்புரி தலைவர்
      தாவண ஏறுடை யெம்மடி கட்கிடம் வன்றடங்
      கடல் லிடு தடங் கரை தருமபு ரம்பதியே. 1.136.8
      1467 வார்மலி மென்முலை மாதொரு பாகம தாகுவர்
      வளங் கிளர் மதி யரவம் வைகிய சடையர்
      கூர்மலி சூலமும் வெண்மழு வும்மவர் வெல்படை
      குனி சிலை தனிம் மலைய தேந்திய குழகர்
      ஆர்மலி ஆழிகொள் செல்வனும் அல்லி கொள்தாமரைம்
      மிசை யவன் அடிம் முடி யளவு தாமறியார்
      தார்மலி கொன்றைய லங்கலு கந்தவர் தங்கிட
      தடங் கடல் லிடு திரை தருமபு ரம்பதியே. 1.136.9
      1468 புத்தர் கடத்துவர் மொய்த்துறி புல்கிய கையர்பொய்ம்
      மொழி தழிவில் பெற்றி யுற்ற நற்றவர் புலவோர்
      பத்தர்கள் அத்தவ மெய்ப்பய னாகவு கந்தவர்
      நிகழ தவர் சிவ சுடலைப்பொடி
      முத்தன வெண்ணகை யொண்மலை மாதுமை பொன்னணி
      புணர் முலை யிணை துணை யணைவ தும்பிரியார்
      தத்தரு வித்திர ளுந்திய மால்கட லோதம்வ
      தடர திடும் தடம் பொழிற் றருமபு ரம்பதியே. 1.136.10
      1469 பொன்னெடு நன்மணி மாளிகை சூழ்விழ வம்மலி
      பொரு புனல் திரு வமர் புகலியென் றுலகிற்
      தன்னொடு நேர்பிற வில்பதி ஞானசம் பந்தனஃ
      துசெ தமிழ தடங் கடற் றருமபு ரம்பதியை
      பின்னெடு வார்சடை யிற்பிறை யும்மர வும்முடை
      யவன் பிணை துணை கழல்கள் பேணுத லுரியார்
      இன்னெடு நன்னுல கெய்துவ ரெய்திய போகமும்
      உறு வர்க ளிடர் பிணி துயரணை விலரே. 1.136.11
      திருச்சிற்றம்பலம்
      திருஞானசம்பந்தசுவாமிகள் அருளிச்செய்த
      தேவார பதிகங்கள்
      முதல் திருமுறை முற்றும்.
      ------------------------------------------------------------------------
      7 2002
      1
      .


      -2.