------------------------------------------------------------------------
      -
      -8
      சூளாமணி ஐஞ்சிறுகாப்பியங்களுள் ஒன்று
      ஆசிரியர் - தோலாமொழி தேவர்
      முதல் பாகம்
      ------------------------------------------------------------------------
      - .
      .
      .

      .
      2000 ...

      2000 .
      -8
      6 5
      -8 - .
      .

      ன 1999


      .
      ..

      .
      ------------------------------------------------------------------------
      -
      சூளாமணி - அணிந்துரை
      பெருமழை புலவர் திரு.பொ.வே.சோமசுந்தரனார்
      சூளாமணி என்பது செந்தமிழ் மொழியின்கண் சிறந்து விளங்கும் பெருங்காப்பியங்களுள் ஒன்று.
      இது ஆருகத சமயத்தை சார்ந்த தோலாமொழித்தேவர் என்னும் நல்லிசை புலவரால் இயற்றப்பட்டது.
      கடைச்சங்க காலத்திற்கு பின்னரும் தேவார காலத்திற்கு முன்னரும் நிகழ்ந்த காலத்தில் நம்
      தமிழகத்தின் கண் ஆருகத சமயம் என்னும் சமண யாண்டும் பரவி மிகவும்
      செழிப்புற்றிருந்தது. அக்காலத்தே அம்மத சார்புடைய நல்லிசை புலவர் பலர் அம் மதத்திற்கு
      ஆக்கமாக இயற்றிய பெருங்காப்பியங்கள் நிகண்டுகள் பல.
      சிந்தாமணி சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி இவை
      ஐம்பெருங்காப்பியமாம். சூளாமணி யசோதர காவியம் உதயண நாககுமார
      நீலகேசி இவை ஐஞ்சிறுகாப்பியமாம். இலக்கண வகையாலன்றி காப்பி பண்பு வகையாலும் தலை
      சிறந்த காவியம் சிந்தாமணியாகும். இதை அடியொற்றி அதற்கு பின் தோன்றிய பெருங்காப்பியமே
      இ சூளாமணியாகும். எனினும் சிந்தாமணியின் செய்யுளை காட்டிலும் சூளாமணியின்
      செய்யுட்கள் இனிய ஓசையுடையனவா சிறந்திருக்கிறது.
      சூளாமணி என்னும் இவ் வனப்பியல் நூல் ஆருகத நூலாகிய பிரதமாநுயோக மகாபுராணத்தில்
      கூறப்பட்ட பழைய கதை ஒன்றினை பொருளா கொண்டு எழுந்த நூலாகும். இந்நூலிற்கு அமைந்த
      சூளாமணி என்னும் இ பெயர் ஆசிரியரால் இடப்பட்ட பெயராக தோன்றவில்லை தன்மையால் வந்த
      பெயரே ஆகும்.
      நூலாசிரியர் வரலாறு
      சூளாமணியை இயற்றிய தோலாமொழி தேவரின் இயற்பெயர் இன்னதென்று தெரியவில்லை. இவர்
      இந்நூலின்கண் இரண்டிடங்களில் ஆர்க்கும் தோலாதாய் என்றும் தோலாநாவிற் சச்சுதன் இனிய
      அழகிய சொற்றொடரை வழங்கி யிருத்தலால் அதன் அருமை உணர்ந்த பெரியோர் இவரை தோலாமொழி
      தேவர் என்று வழங்கலாயினர் என பெரியோர்கள் கருதுகின்றனர்.
      இவர் கார்வெட்டியரசன் விசயன் என்பவனுடைய காலத்தவர் தருமதீர்த்தங்கரரிடத்தே பெரிதும்
      ஈடுபாடுடையவர் என்றும் மன்னன் விசயன் வேண்டுகோளின்படி இந்நூலை இயற்றினார் என்பதும் சில
      செய்யுட்களால் விளக்கப்பட்டு இருக்கிறது. கடை சங்க காலத்திற்கு பின்னர சமண சமயம்
      செழிப்புற்றிருந்த காலத்தே அ ச கணக்கர்கள் அதை பரப்பும் பொருட்டு அங்கங்கே சங்கங்கள்
      பல நிறுவினர் அதில் தமிழகத்தை சேர்ந்த தமிழ்ச்சங்கம் திரமிள சங்கம் மிகவும்
      சிறப்புற்றிருந்தது. இ சங்கங்களுக்கு அரசர்கள் தலைமை தாங்கினர்.இ சூளாமணி அரசன்
      விசயன் சேந்தன் அவையின்கண் அமைந்த சான்றோர்களால் கேட்கப்பட்டு அவர்களால் நல்லநூல் என ஏற்று
      கொள்ளப்பட்டும் இருக்கிறது.
      இனி தோலாமொழித்தேவர் வாழ்ந்த காலத்தை இதுகாறும் யாரும் வரையறுத்து கூறவில்லை. அ
      சூளாமணிக்கு முற்பட்ட சிந்தாமணியின் காலம் கி.பி. 897 க்கு பின்னாதல் வேண்டும்.
      எங்ஙனமாயினும் சிந்தாமணி ஆசிரியருக்கு தோலாமொழி தேவர் பிற்காலத்தவர் என்பதை
      மறுப்பார் யாருமில்லை. எனவே இவர் கடைச்சங்ககால்த்திற்கு பின்னிருந்த சிந்தாமணி
      ஆசிரியராகிய திருத்தக்கதேவர் காலத்திற்கு அணித்தா தேவார முற்பட்டதொரு
      காலத்தே வாழ்ந்தவர் என்பது ஒருவாறு பொருந்துவதாம்.
      ------------------------------------------------------------------------
      சூளாமணி - முதல் பாகம்
      பாயிரம்

      கடவுள் வாழ்த்து

      வென்றான் வினையின் தொகையாய விரிந்து தன்கண்
      ஒன்றா பரந்த வுணர்வின்னொழி யாது முற்றும்
      சென்றான் திகழுஞ் சுடர்சூழொளி மூர்த்தி யாகி
      நின்றா னடிக்கீழ் பணிந்தார் வினை நீங்கி நின்றார்
      கடவுள் வாழ்த்து முற்றிற்று
      நுதல் முதலிய பொருள்
      அங்கண் ணுலகிற் கணிவான்சுட ராகி நின்றான்
      வெங்கண் வினைபோழ திருவ சரண் சென்ற மேனாள்
      பைங்கண் மதர்வை பகுவாயரி யேறு போழ்ந்த
      செங்கண் ணெடியான் சரிதம்மிது செப்ப லுற்றேன்
      அவை அடக்கம்
      கொற்றங்கொ ணேமி நெடுமால்குணங் கூற விப்பால்
      உற்றிங்கொர் காதல் கிளரத்தமிழ் நூற்க லுற்றேன்
      மற்றிங்கொர் குற்றம் வருமாயினு நங்கள் போல்வார்
      அற்றங்கள் காப்பா ரறிவிற்பெரி யார்க ளன்றே
      நூலரங்கேற்றிய களனும் கேட்டோ ரும்
      நாமாண் புரைக்குங் குறையென்னிது நாம வென்வேல்
      தேமா ணலங்கற் றிருமால்நெடுஞ் சேந்த னென்னும்
      தூமாண் தமிழின் கிழவன்சுட ரார மார்பின்
      கோமா னவையு டெருண்டார்கொள பட்ட தன்றே
      செங்கண் ணெடியான் றிறம்பேசிய சிந்தை செய்த
      நங்கண் மறுவும் மறுவன்றுநல் லார்கண் முன்னர்
      அங்கண் விசும்பி நிருள்போழ்ந்தகல் வானெ ழுந்த
      திங்கண் மறுவுஞ் சிலர்கைதொழ செல்லு மன்றே
      நூல் வந்த வழி
      விஞ்சை கிறைவன் விரைசூழ்முடி வேந்தன் மங்கை
      பஞ்சி கனுங்கு சிலம்பாரடி பாவை பூவார்
      வஞ்சி கொடிபோல் பவள்காரண மாக வந்த
      செஞ்சொற் புராண துரையின்வழி சேறு மன்றே
      பாயிரம் முற்றிற்று
      -----------------------
      முதல் பாகம்

      முதலாவது - நாட்டு சருக்கம்

      சுரமை நாட்டின் சிறப்பு
      மஞ்சுசூழ் மணிவரை யெடுத்த மாலமர்
      இஞ்சிசூ ழணிநக ரிருக்கை நாடது
      விஞ்சைந்ண ளுலகுடன் விழாக்கொண் டன்னது
      துஞ்சுந்ணணள் ந்஢தியது சுரமை யென்பவே.
      கயல்களும் கண்களூம்
      பங்கயங் காடுகொண் டலர்ந்த பாங்கெலாம்
      செங்கய லினநிரை திளைக்குஞ் செல்வமும்
      மங்கையர் முகத்தன மதர்த்த வாளரி
      அங்கயர் பிறழ்ச்சியு மறாத நீரவே.
      வயல்களும் ஊர்களும்
      ஆங்கவ ரணிநடை யன்ன தோட்டன
      தீங்குரன் மழலையாற் சிலம்பு தண்பணை
      வீங்கிள முலையவர் மெல்லென் சீறடி
      ஓங்கிருஞ் சிலம்பினாற் சிலம்பு மூர்களே.
      பொழில்களிலும் வீடுகளிலும் இன்னிசை
      நிழலக தவழ்ந்துதே னிரந்து தாதுசேர்
      பொழிலகம் பூவையுங் கிளீ஢யும் பாடுமே
      குழலகங் குடைந்துவண் டுறங்குங் கோதையர்
      மழலையும் யாழுமே மலிந்த மாடமே.
      வண்டுகளுங் கொங்கைகளும்
      காவியும் குவளையு நெகிழ்ந்து கள்ளுமிழ்
      ஆவியுண் டடர்த்ததே னகத்து மங்கையர்
      நாவியுங் குழம்பு முண் ணகில நற்றவம்
      மேவிநின் றவரையு மெலிய விம்முமே.
      சுரமை நாட்டின் நானிலவளம்
      வானிலங் கருவிய வரையு முல்லைவா
      தேனிலங் கருவிய திணையுந தேரல்சேர்
      பானலங் கழனியுங் கடலும் பாங்கணி
      நானிலங் கலந்துபொன்னரலு நாடதே.
      குறிஞ்சி நிலம்
      முன்றி லெங்கு முருகயர் பாணியும்
      சென்று வீழரு வித்திர ளோசையும்
      வென்றி வேழ முழக்கொடு கூடிவான்
      ஒன்றி நின்றதி ரும்மொரு பாலெலாம்.
      முல்லை நிலம்
      ஏறு கொண்டெறி யும்பணை கோவலர்
      கூறு கொண்டெழு கொன்றை தீங்குழல்
      காறு கொண்டவர் கம்பலை யென்றிவை
      மாரு கொண்டுசி லம்புமொர் மாடெலாம்.
      மருத நிலம்
      அணங்க னாரண வாடல் முழவமும்
      கணங்கொள் வாரண கம்பலை செல்வமும்
      மணங்கொள் வார்முர சும்வய லோதையும்
      இணங்கி யெங்கு மிருக்குமொர் பாலெலாம்.
      நெய்தல் நிலம்
      கலவ ரின்னிய முங்கட லச்சிறார்
      புலவு நீர்ப்பொரு பூணெறி பூசலும்
      நிலவு வெண்மண னீளிருங் கானல்வாய்
      உலவு மோதமு மோங்குமொர் பாலெலாம்.
      குறிஞ்சி நிலம்
      கைவி ரிந்தன காந்தளும் பூஞ்சுனை
      மைவி ரிந்தன நீலமும் வான்செய்நாண்
      மெய்வி ரிந்தன வேங்கையும் சோர்ந்ததேன்
      நெய்வி ரிந்தன நீளிருங் குன்றெலாம்.
      முல்லை நிலம்
      கொன்றை யுங்குரு துங்குலை கோடலும்
      முன்றி லேறிய முல்லையம் பந்தரும்
      நின்று தேன்நிர தூதவி ரிந்தரோ
      மன்றெ லாமண நாரும ருங்கினே.
      மருதம்
      நாற விண்டன நெய்தலு நாண்மது
      சேறு விண்டசெ தாமரை கானமும்
      ஏறி வண்டின மூன்றவி ழிந்ததேன்
      ஊறி வந்தொழு கும்மொரு பாலெலாம்.
      நெய்தல்
      கோடு டைந்தன தாழையுங் கோழிருள்
      மோடு டைந்தன மூரி குவளையும்
      தோடு டைந்தன சூகமுங் கற்ப
      காடு டைந்தன போன்றுள கானலே.
      குறிஞ்சி
      நீல வால வட்டத்தி னிறங்கொள
      கோலும் பீலிய கோடுயர் குன்றின்மேல்
      ஆலு மாமழை நீள்முகி லார்த்தொறும்
      ஆலு மாமயி லாலுமொர் பாலெலாம்.
      முல்லை
      நக்க முல்லையு நாகிளங் கொன்றையும்
      உக்க தாதடர் கொண்டொலி வண்டறா
      எக்க ரீர்மணற் கிண்டியி ளம்பெடை
      பக்க நோக்கும் பறவையொர் பாலெலாம்.
      மருதம்
      துள்ளி றாக்கவு கொண்டு சுரும்பொடு
      கள்ள றாதசெ தாமரை கானக
      துள்ள றாதுதை தோகை யிரட்டுற
      புள்ள றதுபு லம்பின பொய்கையே.
      நெய்தல்
      வெண்மு ளைப்பசு தாமரை மென்சுருள்
      முண்மு ளைத்திர ளோடு முனிந்துகொண்
      டுண்மு ளைத்திள வன்ன முழக்கலால்
      கண்மு ளைத்த தடத்த கழியெலாம்.
      குறிஞ்சி
      காந்த ளங்குலை யாற்களி வண்டினம்
      கூந்தி ளம்பிடி வீசக்கு ழாங்களோ
      டேந்து சந்தன சர லிருங்கைமா
      மாந்தி நின்றுறங் கும்வரை மாடெலாம்
      முல்லை
      தார்செய் கொன்றை தளித்ததண் டேறலுண்
      டேர்செய் கின்ற விளம்பு லிருங்குழை
      கார்செய் காலை கறித்தொறு மெல்லவே
      போர்செய் மாவினம் பூத்தண்பு றணியே.
      மருதம்
      அள்ளி லைககுவ ளைத்தடம் மேய்ந்தசைஇ
      கள்ள லைத்தக வுட்கரு மேதிபால்
      உள்ள லைத்தொழு கக்குடை துண்டலால்
      புள்ள லைத்த புனலபு லங்களே.
      நெய்தல்
      கெண்டை யஞ்சினை மே து கிளர்ந்துபோய்
      முண்ட கத்துறை சேர்ந்த முதலைமா
      வண்டல் வார்கரை மாமக ரக்குழாம்
      கண்டு நின்று கனலும் கழியெலாம்.
      குறிஞ்சி
      கண்ணி லாங்கழை யின்கதிர கற்றையும்
      மண்ணி லாங்குரல் வார்தினை வாரியும்
      எண்ணி லாங்கவி ளைவன வீட்டமும்
      உண்ணி லாங்குல வாமை யுயர்ந்தவே.
      முல்லை
      பேழ்த்த காயின பேரெ பிறங்கிணர்
      தாழ்த்த காயின தண்ணவ ரைக்கொடி
      சூழ்த்த காய்த்துவ ரைவர கென்றிவை
      மூழ்த்த போன்றுள முல்லை நிலங்களே.
      மருதம்
      மோடு கொண்டெழு மூரி கழைக்கரும்
      பூடு கொண்ட பொதும்பரொ டுள்விரா
      தோடு கொண்டபைங் காய்துவள் செந்நெலின்
      காடு கொண்டுள கண்ணக னாடெலாம்.
      நெய்தல்
      சங்கு நித்தில முத்தவ ழிப்பியும்
      தெங்க தீங்குலை யூறிய தேறலும்
      வங்க வாரியும் வாரலை
      தங்கு வாரிய தண்கட னாடெலாம்.
      திணை மயக்கம் மலர்
      கொடிச்சியர் புனத்தயல் குறிஞ்சி நெய்பகர்
      இடைச்சியர் கதுப்பயர் கமழு மேழையம்
      கடைச்சியர் களையெறி குவளை கானல்வா
      தொடுத்தலர் பிணையலார் குழலு டோ ன்றுமே.
      திணை மயக்கம் ஒலி
      கலவர்தஞ் சிறுபறை யிசையிற் கைவினை
      புலவர்தேம் பிழிமகிழ் குரவை பொங்குமே
      குலவுகோற் கோவலர் கொன்றை தீங்குழல்
      உலவுநீ ளசுணமா வுறங்கு மென்பவே.
      சுரமை நாட்டின் சிறப்பு
      மாக்கொடி மாணையு மெளவற் பந்தரும்
      கார்க்கொடி முல்லையுங் கலந்து மல்லிகை
      பூக்கொடி பொதும்பரும் பொன்ன ஞாழலும்
      தூக்கடி கமழ்ந்துதான் றுறக்க மொக்குமே. 29
      முதலாவது நாட்டு சருக்கம் முற்றிற்று
      --------------------------
      இரண்டாவது
      நகர சருக்கம்

      சுரமை நாட்டு போதனமா நகரம்
      சொன்னநீர் வளமை தாய சுரமைநா டகணி சார்ந்து
      மன்னன்வீற் றிருந்து வைக நூலவர் வகுக்க பட்ட
      பொன்னவிர் புரிசை வேலி போதன மென்ப துண்டோ ர்
      நன்னகர் நாக லோக நகுவதொ தினிய தொன்றே.
      நகரத்தின் அமைதி
      சங்கமேய் தரங்க வேலி தடங்கடற் பொய்கை பூத்த
      அண்கண்மா ஞால மென்னு தாமரை யலரி னங்கேழ
      செங்கண்மால் சுரமை யென்னு தேம்பொகு டகத்து வைகும்
      நங்கையர் படிவங் கொண்ட நலத்தது நகர மன்றே.
      அகழியும் மதிலரணும்
      செஞ்சுடர கடவு டிண்டே ரிவுளிகா றிவள வூன்றும்
      மஞ்சுடை மதர்வை நெற்றி வானுழு வாயின் மாட
      தஞ்சுட ரிஞ்சி யாங்கோ ரழகணி தலர்ந்த தோற்றம்
      வெஞ்சுடர் விரியு முந்நீர் வேதிகை மீதி டன்றே.
      அம்மதிற் புறத்தே அமைந்த யானைகட்டுமிட மாண்பு
      இரும்பிடு தொடரின் மாவி னெழுமுதற் பிணித்த யானை
      கரும்பிடு கவள மூட்டும் கம்பலை கலந்த காவின்
      அரும்பிடை யலர்ந்த போதி னல்லியுண் டரற்று கின்ற
      கரும்பொடு துதைந்து தோன்றுஞ் சூழ்மதில் இருக்கை யெல்லாம்
      மாடங்களின் மாண்பு
      மானளா மதர்வை நோக்கின் மையரி மழைக்க ணார்தம்
      தேனளா முருவ கண்ணி செல்வர்தோ டிளைக்கு மாடங்
      கானளாங் காம வல்லி கற்பகங் கலந்த கண்ணார்
      வானளாய் மலர்ந்து தோன்று மணிவரை யனைய தொன்றே.
      இதுவுமது - வேறு
      அகிலெழு கொழும்புகை மஞ்சி னாடவும்
      முகிலிசை யெனமுழா முரன்று விம்மவும்
      துகிலிகை கொடியனார் மின்னிற் றோன்றவும்
      இகலின மலையொடு மாட மென்பவே.
      மாடங்களின் சிறப்பு
      கண்ணெலாங் கவர்வன கனக கூடமும்
      வெண்ணிலா சொரிவன வெள்ளி வேயுளும்
      தண்ணிலா தவழ்மணி தலமுஞ் சார்ந்தரோ
      மண்ணினா லியன்றில மதலை மாடமே.
      மாடத்திற் பலவகை ஒலிகள்
      மாடவாய் மணிமுழா விசையு மங்கையர்
      ஆடுவார் சிலம்பிணை யதிரு மோசையும்
      பாடுவார் பாணியும் பயின்று பல்கலம்
      முடிமா ணகரது முரல்வ தொக்குமே
      வண்டுகளின் மயக்கம்
      தாழிவா குவளையு தண்ணெ னோதியர்
      மாழைவா ணெடுங்கணு மயங்கி வந்துசென்
      றியாழவா மின்குர லாலி தார்த்தரோ
      ஏழைவா சுரும்பின மிளைக்கு மென்பவே.
      கடைத்தெரு
      பளிங்குபோழ தியற்றிய பலகை வேதிகை
      விளிம்புதோய் நெடுங்கடை வீதி வாயெலாம்
      துளங்குபூ மாலையுஞ் சுரும்பு தோன்றலால்
      வளங்கொள்பூங் கற்பக வனமும் போலுமே.
      சிலம்பொலிக்கு மயங்குஞ் சிறுஅன்னங்கள்
      காவிவா கருங்கணார் காமர் பூஞ்சிலம்
      பாவிவாய் மாளிகை யதிர கேட்டொறும்
      தூவிவான் பெடைதுணை துறந்த கொல்லென
      வாவிவா யிளவனம் மயங்கு மென்பவே.
      அரசர் தெருவழகு
      விலத்தகை பூந்துணர் விரிந்த கோதையர்
      நலத்தகை சிலம்படி நவில வூட்டிய
      அலத்த குழம்புதோ தரச வீதிகள்
      புலத்திடை தாமரை பூத்த போலுமே.
      செல்வ சிறப்பு
      கண்ணிலங் கடிமலர குவளை கற்றையும்
      வெண்ணிலா திரளென விளங்கு மாரமும்
      வண்ணவான் மல்லிகை வளாய மாலையும்
      அண்ணன்மா நகர்க்கவை கரிய அல்லவே.
      மாளிகைகளில் உணவுப்பொருள்களின் மிகுதி
      தேம்பழு தினியநீர் மூன்று தீம்பலா
      மேம்பழு தளிந்தன சுளையும் வேரியும்
      மாம்பழ குவைகளூ மதுத்தண் டீட்டமும்
      தாம்பழு துளசில தவள மாடமே.
      இன்ப உலகம்
      மைந்தரு மகளிரு மாலை காலையென்
      றந்தர படுத்தவ ரறிவ தின்மையால்
      சுந்தர பொற்றுக டுதைந்த பொன்னக
      ரிந்திர வுலகம்வ திழிந்த தொக்குமே.
      பயாபதி மன்னன் மாண்பு
      மற்றமா நகருடை மன்னன் றன்னுயா
      ஒற்றைவெண் குடைநிழ லுலகிற் கோருயிர
      பொற்றியான் பயாபதி யென்னும் பேருடை
      வெற்றிவேல் மணி முடி வேந்தர் வேந்தனே
      பயாபதி மன்னன் சிறப்பு
      எண்ணின ரெண்ணக படாத செய்கையான்
      அண்ணிய ரகன்றவர் திறத்து மாணையான்
      நண்ணுநர் பகைவரென் றிவர்க்கு நாளினும்
      தண்ணியன் வெய்யன தானை மன்னனே.
      மக்கட்கு பகையின்மை
      நாமவே னரபதி யுலகங் காத்தநா
      காமவேள் கவர்கணை கலந்த தல்லது
      தாமவேல் வயவர்த தழலங் கொல்படை
      நாமநீர் வரைப்பக நலித தில்லையே.
      குடிகளை வருத்தி இறை கொள்ளாமை
      ஆறிலொன் றறமென வருளி னல்லதொன்
      றூறுசெய் துலகினி னுவப்ப தில்லையே
      மாறிநின் றவரையும் வணக்கி னல்லது
      சீறிநின் றெவரையுஞ் செகுப்ப தில்லையே.
      மன்னனின் முந்நிழல்
      அடிநிழ லரசரை யளிக்கு மாய்கதிர்
      முடிநிழன் முனிவரர் சரண முழ்குமே
      வடிநிழல் வனைகதி ரெஃகின் மன்னவன்
      குடைநிழ லுலகெலாங் குளிர நின்றதே.
      இருவகைப்பகையும் அற்ற ஏந்தல்
      மன்னிய பகைக்குழா மாறும் வையகம்
      துன்னிய வரும்பகை தொகையும் மின்மையால்
      தன்னையு தரையையுங் காக்கு மென்பதம்
      மன்னவன் றிறத்தினி மருள வேண்டுமோ
      அரசியல் சுற்றத்துடன் உலக பொதுமை நீக்குதல்
      மேலவர் மெய்ப்பொருள் விரிக்கும் வீறுசால்
      நூலினாற் பெரியவர் நுழைந்த சுற்றமா
      ஆலுநீ ரன்னமோ டரச வன்னமே
      போலநின் றுலகினை பொதுமை நீக்கினான்
      அரசர் சுற்றத்தின் இயல்பு
      கொதிநுனை பகழியான் குறிப்பி னல்லதொன்
      றிதுந கிசைக்கென வெண்ணு மெண்ணிலா
      நொதுமலர் வெருவுறா நுவற்சி யாளர்பின்
      அதுவவன் பகுதிக ளமைதி வண்ணமே.
      அரசியர்
      மற்றவன் றேவியர் மகர வார்குழை
      கொற்றவர் குலங்களை விளக்க தோன்றினார்
      இற்றதிம் மருங்குலென் றிரங்க வீங்கிய
      முற்றுறா முலையினார் கலையின் முற்றியார்
      அரசியர் இயல்பு
      பஞ்சனுங் கடியினார் பரந்த வல்குலார்
      செஞ்சுணங் கிளமுலை மருங்கு சிந்தினார்
      வஞ்சியங் குழைத்தலை மதர்வை கொம்புதம்
      அஞ்சுட ரிணர்க்கொசி தனைய வைம்மையார்
      காமம் பூத்த காரிகையர்
      காமத்தொ தலர்ந்தவர் கதிர்த்த கற்பினார்
      தாமத்தொ தலர்ந்துதாழ திருண்ட கூந்தலார்
      தூமத்து சுடரொளி துளும்பு தோளினார்
      வாமத்தின் மயங்கிமை மதர்த்த வாட்கணார்.
      பட்டத்து அரசிகள் இருவர்
      ஆயிர ரவரவர கதிக தேவியர்
      மாயிரு விசும்பினி னிழிந்த மாண்பினார்
      சேயிரு தாமரை தெய்வ மன்னர் என்
      றேயுரை யிலாதவ ரிருவ ராயினார்
      பெருந்தேவியர் இருவரின் பெற்றி
      நீங்கரும் பமிழ்த மூட்டி தேனளா பிழிந்த போலும்
      ஓங்கிருங் கடல தானை வேந்தணங் குறுக்கு மின்சொல்
      வீங்கிருங் குவவு கொங்கை மிகாபதி மிக்க தேவி
      தாங்கருங் கற்பின் றங்கை சசிஎன்பாள் சசியோ டொப்பாள்
      மங்கையர்க்கரசியராகும் மாண்பு
      பூங்குழை மகளிர கெல்லாம் பொன்மலர் மணிக்கொம் பன்ன
      தேங்குழல் மங்கை மார்கள் திலகமா திகழ நின்றார்
      மாங்கொழு தசோக மென்றாங் கிரண்டுமே வயந்த கால
      தாங்கெழு தவற்றை யெல்லா மணிபெற வலரு மன்றே.
      இவ்விருவரும் பயாபதியுடன் கூடியுறைந்த இன்பநலம்
      பெருமக னுருகும் பெண்மை மாண்பினும் பேணி நாளும்
      மருவினும் புதிய போலும் மழலையங் கிளவி யாலும்
      திருமகள் புலமை யாக்குஞ் செல்விஎன் றிவர்கள் போல
      இருவரு மிறைவ னுள்ள தொருவரா யினிய ரானார்
      மன்னனும் மனைவியரும் ஓருயிர் ஆகி நிற்றல்
      மன்னவ னாவி யாவார் மகளிரம் மகளிர் தங்கள்
      இன்னுயி ராகி நின்றா னிறைமக னிவர்க டங்க
      கென்னைகொ லொருவர் தம்மே லொருவர்க்கிங் குள்ள மோட
      முன்னவன் புணர்த்த வாறம் மொய்ம்மலர கணையி னானே
      மங்கையர் மன்னனை பிணித்து வைத்தல்
      சொற்பகர துலகங் காக்கு தொழில்புற தொழிய வாங்கி
      மற்பக ரகல தானை மனத்திடை பிணித்து வைத்தார்
      பொற்பகங் கமழ பூத்த தேந்துணர் பொறுக்க லாற்றா
      கற்ப கொழுந்துங் காம வல்லியங் கொடியு மொப்பார்.
      மாலாகி நிற்கும் மன்னன்
      மங்கைய ரிருவ ராகி மன்னவ னொருவ னாகி
      அங்கவ ரமர்ந்த தெல்லா மமர்ந்தருள் பெருகி நின்றான்
      செங்கயல் மதர்த்த வாட்க டெய்வமா மகளிர் தோறும்
      தங்கிய வுருவ தாங்குஞ் சக்கரன் றகைமை யானான்
      முற்றுநீர் வளாக மெல்லா முழுதுட னிழற்று மூரி
      ஒற்றைவெண் குடையி னீழ லுலகுகண் படுப்ப வோம்பி
      கொற்றவ னெடுங்க ணார்தங் குவிமுலை தடத்து மூழ்கி
      மற்றவற் கர செல்வ மின்னண மமர்ந்த தன்றே.
      இரண்டாவது நகரச்சருக்கம் முடிந்தது.
      ---------------------------------------
      மூன்றாவது
      குமாரகால சருக்கம்

      தேவர்கள் இருவர் மண்ணுலகில் தோன்றுதல்
      ஆங்கவர் திருவயிற் றமரர் கற்பமாண்
      டீங்குட னிழிந்துவ திருவர் தோன்றினார்
      வாங்குநீர திரைவளர் வளையு மக்கடல்
      ஓங்குநீர் நிழலுமொ தொளிரு மூர்த்தியார்
      மிகாபதி விசயனை பெறுதல்
      பெண்ணிலா தகைப்பெரு தேவி பேரமர
      கண்ணிலாங் களிவள ருவகை கைம்மிக
      தண்ணிலா வுலகெலா தவழந்து வான்கொள
      வெண்ணிலா சுடரொளி விசயன் றோன்றினான்
      சசி திவிட்டனை பெறுதல்
      ஏரணங் கிளம்பெரு தேவி நாளுற
      சீரணங் கவிரொளி திவிட்டன் றோன்றினான்
      நீரணங் கொளிவளை நிரந்து விம்மின
      ஆரணங் கலர்மழை யமரர் சிந்தினார்
      விசயதிவிட்டர்கள் பிறந்தபொழுது உண்டான நன்மைகள்
      திசையெலா தெளிந்தன தேவர் பொன்னகர்
      இசையெலாம் பெருஞ்சிற பியன்ற வேற்பவர்
      நசையெலா மவிந்தன நலியு தீவினை
      பசையெலாம் பறந்தன பலர்க்கு மென்பவே
      மைந்தர்களிருவரும் மங்கையர் மனத்தை கவர்தல்
      செய்தமா ணகரியிற் சிறந்து சென்றுசென்று
      எய்தினார் குமரராம் பிராய மெய்தலும்
      மைதுழாம் நெடுங்கணார் மனத்து காமனார்
      ஐதுலாங் கவர்கணை யரும்பு வைத்தவே
      விசயனுடைய உடல் கண் குஞ்சிகாது
      காமரு வலம்புரி கமழு மேனியன்
      தாமரை யகவிதழ் தடுத்த கண்ணினன்
      தூமரு ளிருடுணர தனைய குஞ்சியன்
      பூமரு பொலங்குழை புரளுங் காதினன்
      மாலைமார்பு நிறம் தோள் நடை ஆகியவை
      வாடலில் கண்ணியன் மலர்ந்த மார்பினன்
      தாடவழ் தடக்கையன் றயங்கு சோதியன்
      கோடுயர் குன்றென குலவு தோளினன்
      பீடுடை நடையினன் பெரிய நம்பியே
      திவிட்டனுடய உடல் முதலியன
      பூவயம் புதுமலர் புரையு மேனியன்
      து஡விரி தாமரை தொலைத்த கண்ணினன்
      தீவிரி யாம்பலிற் சிவந்த வாயினன்
      மாவிரி திருமறு வணிந்த மார்பினன்
      கை முதலியன
      சங்கியல் வலம்புரி திகிரி யென்றிவை
      தங்கிய வங்கைய னடித்தண் போதினன்
      மங்கல மழகளி றனைய செல்கையன்
      இங்குமுன் மொழிந்தவற் கிளய நம்பியே
      இருவரும் இளமை எய்துதல்
      திருவிளை துலகுகண் மலர தெவ்வர்தம்
      யுரிவளை நன்னகர செல்வம் புல்லென
      வரிவளை தோளியர் மனத்து காமநோய்
      எரிவளை திடுவதோ ரிளமை யெய்தினார்
      மைந்தர்கள் இருவரும் மங்கயர்கட்கு தோன்றுதல்
      உவர் விளை கடற்கொடி பவள மோட்டிய
      துவரிதழ் வாயவர் துளங்கு மேனியர்
      அவர்கட மருள்கொலோ வனங்க னாய்மலர்
      கவர்கணை கடைக்கணி துருவு காட்டினார்.
      மங்கையர் மயங்குதல்
      கடலொளி மணிவணன் கனவில் வந்தெம
      துடலகம் வெருவிதா யுள்ளம் வவ்வினான்
      விடலில னெம்முயிர் விடுக்குங் கொல்லென
      மடவர லவர்குழா மயக்க முற்றதே
      நங்கையர் மனத்தில் விசயன்
      வார்வளை வண்ணனென் மனத்து ளான்பிறர்
      ஏர்வளர் நெடுங்கணு கிலக்க மல்லனாற்
      கார்வளர் கொம்பனா ரிவர்கள் காமநோய்
      ஆர்வளர தவர்கொலென் பருவ மாயினார்
      மங்கையர் மாட்சி
      கண்ணிலாங் கவினொளி காளை மார்திற
      துண்ணிலா வெழுதரு காம வூழெரி
      எண்ணிலா சுடர்சுட விரிந்து நாண்விடா
      பெண்ணலாற் பிறிதுயிர் பெரிய தில்லையே
      காதல் தீ வளர்க்கும் காளை பருவம்
      திருவளர் செல்வர்மேற் சென்ற சிந்தைநோய்
      ஒருவரி னொருவர்மி குடைய ராதலால்
      உருவளர் கொம்பனா ருள்ளங் காய்வதோர்
      எரிவளர திடுவதோ ரிளமை யெய்தினார்
      அரசன் மனைவியருடன் அமர்ந்திருத்தல்
      மற்றொர்நா ளமரிகை கொடிகொண் மாமணி
      சுற்றுவான் சுடரொளி தழுவி சூழ்மலர்
      முற்றிவண் டினம்விடா முடிகொள் சென்னி
      கொற்றவ னிளையவர் குழைய வைகினான்
      அரசன் உறங்குதல்
      மஞ்சுடை மணிநகு மாலை மண்டப
      தஞ்சுட ரகிற்புகை யளைந்து தேனளா
      பஞ்சுடை யமளிமேற் பள்ளி யேற்பவன்
      செஞ்சுட ரிரிவதோர் திறத்த னாயினான்
      உடற் பாதுகாப்பாளர்கள்
      மன்னவன் றுயில்விடு தருள மைந்தர்பொன்
      றுன்னிய வுடையினர் துதைந்த கச்சையர்
      பின்னிய ஞாணினர் பிடித்த வில்லினர்
      அன்னவ ரடிமுதற் காவ னண்ணிணார்
      திருப்பள்ளி எழுச்சி
      தங்கிய தவழழொளி தடாவி வில்லிட
      மங்கல வுழக்கல மருங்கு சேர்ந்தன
      அங்கவன் கண்கழூஉ வருளி செய்தனன்
      பங்கய முகத்தர்பல் லாண்டு கூறினார்
      அந்தணர் வாழ்த்து கூற அரசன் அவர்களை வணங்குதல்
      அந்தண ராசிடை கூறி யாய்மலர
      பைந்துணர் நெடுமுடி பயில வேற்றினார்
      செந்துணர் நறுமலர் தெளித்து தேவர்மா
      டிந்திர னனையவ னிறைஞ்சி யேத்தினான்
      வாயில் காப்போர் உலகு காப்போன் வரவை எதிர்பார்த்தல்
      விரையமர் கோதையர் வேணு கோலினர்
      உரையமர் காவல்பூண் கடையி னூடுபோய்
      முரசமர் முழங்கொலி மூரி தானையன்
      அரசவை மண்டப மடைவ தெண்ணினார்
      அரசன் வாயிலை அடைதல்
      பொன்னவிர் திருவடி போற்றி போற்றிஎன்
      றன்னமென் னடையவர் பரவ வாய்துகிற்
      கன்னியர் கவரிகா லெறி காவலன்
      முன்னிய நெடுங்கடை முற்ற முன்னினான்
      மெய்க்காப்பாளர் அரசனை காத்தல்
      மஞ்சிவர் வளநகர் காக்கும் வார்கழல்
      நஞ்சிவர் வேனர பதியை யாயிடை
      வெஞ்சுடர் வாளினர் விசித்த கச்சையர்
      கஞ்சுகி யவர்கண்மெய் காவ லோம்பினார்
      அரசன் திருவோலக்க மண்டபத்தை யடைதல்
      வாசநீர் தெளித்தலர் பரப்பி வானகம்
      எசுநீ ளிருக்கைய விலங்கு சென்னிய
      மூசுதே னெடுங்கடை மூன்றும் போய்ப்புற
      தோசைநீள் மண்டப முவந்த தெய்தினான்
      வேறு - மண்டபத்திற்குள் புகுதல்
      பளிங்கொளி கதுவ போழ்ந்த பலகைகண் குலவ சேர்த்தி
      விளங்கொளி விளிம்பிற் செம்பொன் வேதிகை வெள்ளி வேயு
      டுளொங்கொளி பவள திண்காற் சுடர்மணி தவழும் பூமி
      வளங்கவின் றனைய தாய மண்டப மலிர புக்கான்
      அரசன் அணையில் வீற்றிருக்கும் காட்சி
      குஞ்சர குழவி கவ்வி குளிர்மதி கோடு போலும்
      அஞ்சுட ரெயிற்ற வாளி யணிமுக மலர வூன்றி
      செஞ்சுட ரணிபொற் சிங்கா சனமிசை சேர்ந்த செல்வன்
      வெஞ்சுட ரு துச்சி விரிந்த வெய் யவனோ டொத்தான்
      அரசன் குறிப்பறிந்து அமர்தல்
      பூமரு விரிந்த நுண்ணூற் புரோகிதன் பொறிவண் டார்க்கும்
      மாமல ரணிந்த கண்ணி மந்திர கிழவர் மன்னார்
      ஏமரு கடல தானை யிறைமகன் குறிப்பு நோக்கி
      தாமரை செங்கண் டம்மாற் பணித்ததா னத்த ரானார்
      சிற்றரசர்கள் தங்கட்குரிய இடங்களில் அமர்தல்
      முன்னவ ரிருந்த பின்னை மூரிநீ ருலகங் காக்கும்
      மன்னவன் கழலை தங்கண் மணிமுடி நுதியிற் றீட்டி
      பின்னவன் பணித்த தானம் பெறுமுறை வகையிற் சேர்ந்தார்
      மின்னிவர் கடக பைம்பூண் வென்றிவேல் வேந்த ரெல்லாம்
      படை தலைவர்கள் உடனிருத்தல்
      வழிமுறை பயின்று வந்த மரபினார் மன்னர் கோமான்
      விழுமல ரடிக்கண் மிக்க வன்பினார் வென்றி நீரார்
      எழுவளர தனைய தோளா ரிளையவ ரின்ன நீரார்
      உழையவ ராக வைத்தா னோடைமால் களிற்றி னானே
      புலவர்கள் வருதல்
      காவல னென்னுஞ் செம்பொற் கற்பகங் கவின்ற போழ்தில்
      நாவல ரென்னும் வண்டு நகைமுக பெயரி னாய
      பூவலர் பொலிவு நோக்கி புலமயங் களிப்ப வாகி
      பாவல ரிசையிற் றோன்ற பாடுபு பயின்ற வன்றே
      இசை புலவர்கள் வாழ்த்து கூறுதல்
      பண்ணமை மகர நல்யாழ பனுவனூற் புலவர் பாடி
      மண்ணமர் வளாக மெல்லாம் மலர்ந்ததின் புகழோ டொன்றி
      விண்ணகம் விளங்கு திங்கள் வெண்குடை நிழலின் வைகி
      கண்ணம ருலகம் காக்கும் கழலடி வாழ்க வென்றார்
      இதுவும் அது
      மஞ்சுடை மலையின் வல்லி தொடரவான் வணங்க நின்ற
      அஞ்சுடர கடவுள் காத்த வருங்குல மலர தோன்றி
      வெஞ்சுட ரெஃக மொன்றின் வேந்துகண் ணகற்றி நின்ற
      செஞ்சுடர் முடியி னாய்நின் கோலிது செல்க வென்றார்
      வாயிற் காவலனுக்கு ஒரு கட்டளை
      இன்னணம் பலரு மேத்த வினிதினங் கிருந்த வேந்தன்
      பொன்னணி வாயில் காக்கும் பூங்கழ லவனை நோக்கி
      என்னவ ரேனு மாக நாழிகை யேழு காறும்
      கன்னவி றோளி னாய்நீ வரவிடு காவ லென்றான்
      நிமித்திகன் வரவு
      ஆயிடை யலகின் மெய்ந்நூ லபவுசென் றடங்கி நின்றான்
      சேயிடை நிகழ்வ தெல்லாஞ் சிந்தையிற் றெளிந்த நீரான்
      மேயிடை பெறுவ னாயின் வேந்துகாண் குறுவன் கொல்லோ
      நீயிடை யறிசொல் லென்றோர் நிமித்திக னெறியிற் சொன்னான்
      அரசன் நிமித்திகனை வரவேற்றல்
      ஆங்கவ னரசர் கோமான் குறிப்பறி தருள பட்டீர்
      ஈங்கினி புகுமி னென்றா னிறைவனை யவனுஞ் சேர்ந்தான்
      வீங்கிரு தானை யானும் வெண்மலர் பிடித்த கையால்
      ஓங்கிரு தானங் காட்டி யுவந்தினி திருக்க வென்றான்
      நிமித்திகன் தன் ஆற்றலை காட்ட தொடங்குதல்
      உற்றத னொழுக்கிற் கேற்ப வுலகுப சார நீக்கி
      கொற்றவன் குறிப்பு நோக்கி யிருந்தபின் குணக்குன் றொப்பான்
      முற்றிய வுலகின் மூன்று காலமூ முழுது நோக்கி
      கற்றநூற் புலமை தன்னை காட்டுதல் கருதி சொன்னான்
      அரசன் கனாக்கண்டதை நிமித்திகன் கூறுதல்
      கயந்தலை களிற்றி னாயோர் கனாக்கண்ட துளது கங்குல்
      நயந்தது தெரியி னம்பி நளிகடல் வண்ணன் றன்னை
      விசும்பக திழிந்து வந்தோர் வேழம்வெண் போது சேர்ந்த
      தயங்கொளி மாலை சூட்டி தன்னிட மடைந்த தன்றே
      கனவின் பயனை நிமித்திகன் கூறுதல்
      மன்மலர தகன்ற மார்ப மற்றதன் பயனுங் கேண்மோ
      நன்மலர் நகைகொள் கண்ணி நம்பித னாம மேத்தி
      மின்மலர திலங்கு பைம்பூண் விஞ்சைவே தொருவன் வந்து
      தன்மக ளொருத்தி தன்னை தந்தனன் போகு மென்றான்
      தூதன் ஒருவன் வருவான் என்றல்
      கட்பகர் திவலை சிந்துங் கடிகமழ் குவளை கண்ணி
      திட்பமாஞ் சிலையி னாய் நீ தெளிகநா னேளு சென்றால்
      ஒட்பமா யுரைக்க வல்லா னொருவனோ ரோலை கொண்டு
      புட்பமா கரண்ட மென்னும் பொழிலக திழியு மென்றான்
      நிமித்திகன் கூறியதை அவையோர் உடன்பட்டு கூறுதல்
      என்றவ னியம்ப கேட்டே யிருந்தவர் வியந்து நோக்கி
      சென்றுயர் தில கண்ணி திவிட்டனி திறத்த னேயாம்
      ஒன்றிய வுலக மெல்லா மொருகுடை நீழற் காக்கும்
      பொன்றிக ழலங்கன் மார்ப போற்றிபொய் யன்றி தென்றார்
      அரசன் ஆராய்ச்சி மன்றத்தை அடைதல்
      உரையமை திருப்ப விப்பா லோதுநா ழிகையொன் றோட
      முரசமொன் றதிர்த்த தோங்கி யதிர்தலு முகத்தி னாலே
      அரசவை விடுத்த வேந்த னகத்தநூ லவரை நோக்கி
      வரையுயர் மாட கோயின் மந்திர சாலை சேர்ந்தான்
      வேறு - அரசன் பேசுதல்
      கங்குல்வா கனவவன் கருதி சொற்றதும்
      மங்கல பெரும்பயன் வகுத்த வண்ணமும்
      கொங்கலர் தெரியலான் கூறி கொய்ம்மலர
      தொங்கலார் நெடுமுடி சுடர தூக்கினான்
      அமைச்சர்கள் பேசுதல்
      சூழுநீ ருலகெலா தொழுது தன்னடி
      நீழலே நிரந்துகண் படுக்கு நீர்மையான்
      ஆழியங் கிழவனா யலரு மென்பது
      பாழி தோளினாய் பண்டுங் கேட்டுமே
      திவிட்டன் சிறந்தவனே என்றல்
      நற்றவ முடையனே நம்பி யென்றுபூண்
      விற்றவழ் சுடரொளி விளங்கு மேனி
      கொற்றவன் குறிப்பினை யறிந்து கூறிய
      மற்றவர் தொடங்கினார் மந்தி ரத்துளார்
      வேறு - திவிட்டன் உருளைப்படை ஏந்துவான் என்றல்
      சங்க லேகையுஞ் சக்கர லேகையும்
      அங்கை யுள்ளன வையற் காதலால்
      சங்க பாணியான் சக்க ராயுதம்
      அங்கை யேந்துமென் றறையல் வேண்டுமே
      வித்தியாதரர் தொடர்புண்டாகுமானால் நலம் என்றல்
      விஞ்சைய ருலகுடை வேந்தன் றன்மகன்
      வஞ்சியங் கொடியிடை மயிலஞ் சாயலான்
      எஞ்சலின் றியங்கிவ திழியு மாய்விடில்
      அஞ்சிநின் றவ்வுல காட்சி செல்லுமே
      பளிங்குமேடை யமைத்து காவல் வைப்போம் என்றல்
      நாமினி மற்றவன் மொழிந்த நாளினால்
      தேமரு சிலாதல திருத்தி தெய்வமாம்
      தூமரு மாலையாய் துரும காந்தனை
      காமரு பொழிலிடை காவல் வைத்துமே
      அரசன் கட்டளை பிறப்பித்துவிட்டு அந்தப்புரஞ் செல்லுதல்
      என்றவர் மொழிந்தபி னிலங்கு பூணினான்
      நன்றது பெரிதுமென் றருளி நாடொறும்
      சென்றவன் காக்கென மொழிந்து தேங்குழல்஢
      இன்றுணை யவர்கடங் கோயி லெய்தினான்
      துருமகாந்தன் பொழிலையடைதல்
      எரிபடு விரிசுட ரிலங்கு பூணினான்
      திருவடி தொழுதுசெல் துரும காந்தனும்
      வரிபடு மதுகர முரல வார்சினை
      சொரிபடு மதுமலர சோலை நண்ணினான் 49
      குமாரகால சருக்கம் முற்றிற்று
      --------------------
      நான்காவது
      இரதநூபுர சருக்கம்

      நுதலிப்புகுதல்
      புரிசை நீண்மதிற் போதன மாநகர்
      அரசர் வார்த்தையவ் வாறது நிற்கவே
      விரைசெய் வார்பொழில் விஞ்சையர் சேடிமேல்
      உரையை யாமுரை பானுற நின்றதே
      வெள்ளிமலை
      நிலவு வெண்சுடர் பாய்நில மொப்பநீண்
      டுலவு நீள்கட றீண்டியு யர்ந்துபோய்
      இலகு வின்மணி வானியன் மாடெலாம்
      விலக நின்றது விஞ்சையர் குன்றமே
      தேவர் உடளொளிக்கு செவ்வான் ஒளி சிறிது ஒத்தல்
      தொக்க வானவர் சூழ்குழ லாரொடும்
      ஒக்க வாங்குள ராய்விளை யாடலால்
      உக்க சோதிகள் சோலையி னூடெலாம்
      செக்கர் வானக முஞ்சிறி தொக்குமே
      பொழிலில் தார் மணம்
      அவிழுங் காதல ராயர மங்கையர்
      பவழ வாயமு தம்பரு கிக்களி
      தவழு மென்முலை புல்ல ததைந்ததார்
      கமழு நின்றன கற்பக சோலையே
      பொழிலிற் குளிர்ச்சி
      கிளருஞ் சூழொளி கின்னர தேவர்தம்
      வளரும் பூண்முலை யாரொடு வைகலால்
      துளருஞ் சந்தன சோலைக ளூடெலாம்
      நளிரு தெய்வ நறுங்குளிர் நாற்றமே
      வாடையின் வருகை
      மங்குல் வாடை தார்வன மீதுழா
      பொங்கு தாதொடு பூமது கொப்பளி
      தங்க ராகம ளாயர மங்கையர்
      கொங்கை வாரிகள் மேற்குதி கொள்ளுமே
      தழை படுக்கை
      தேன கத்துறை யுஞ்செழுஞ் சந்தன
      கான கத்தழை யின்கமழ் சேக்கை மேல்
      ஊன கத்தவர் போகமு வந்தரோ
      வான கத்தவர் வைகுவர் வைகலே
      பாறையில் மகரந்தப்பொடி
      மஞ்சு தோய்வரை மைந்தரொ டடிய
      அஞ்சி லோதிய ராரள கப்பொடி
      பஞ்ச ராகம்ப தித்தப ளிக்கறை
      துஞ்சு பாறைகண் மேற்று தை வுற்றதே
      பாறையில் அடிக்குறி
      மாத ரார்நடை கற்கிய வானிழி
      தாது வண்டுண வூழடி யூன்றிய
      பாத ராகம்ப தித்தப ளிக்கறை
      காத லார்தம கண்கவர் கின்றவே
      அருவிநீரில் மல்லிகை மணம்
      ஆகு பொன்னறை மேலரு வித்திரள்
      நாக கன்னிய ராடலின் ஞால்கைம்மா
      வேக மும்மத வெள்ளம ளாவிய
      போக மல்லிகை நாறும்பு னல்களே
      சேடி நாட்டின் சிறப்பு
      பூக்க ளாவன பொன்மரை பூம்பொழில்
      காக்க ளாவன கற்பக சோலைகள்
      வீக்கு வார்கழல் விஞ்சையர் சேடிமே
      லூக்கி யமுரை கின்றதிங் கென்கொலோ
      இரதநூபுர சக்கரவாள நகரம்
      வரையின் மேன்மதி கோடுற வைகிய
      திருவ நீளொளி தென்றிசை சேடிமே
      லிரத நூபுர சக்கர வாளமென்
      றுரைசெய் பொன்னக ரொன்றுள தென்பவே
      வேறு -- வாழையின் மாண்பு
      அம்பொன் மாலையார்க ளித்த லத்தெ ழுந்த ரத்தவா
      கொம்பா னார் கொடுத்த முத்த நீர வாய கோழரை
      பைம்பொன் வாழை செம்பொ னேப ழுத்து வீழ்ந்த சோதியால்
      வம்பு பாய்ந்து வந்தொ சிந்து சாறு சோர்வ மானுமே
      பாக்கு மரங்கள்
      வேய்தி ழன்னி லாவி லங்கு வெள்ளி விம்மு பாளைவா
      பாய்நி ழற்ப சுங்க திர்ப்ப ரூஉம ணிக்கு லைகுலா
      சேய்நி ழற்செ ழும்பொ னாற்றி ரண்ட செம்ப ழத்தவா
      போய்நி ழற்பொ லிந்து வீழ்வ போன்ற பூக ராசியே
      மாடங்களும் மரங்களும்
      காந்தி நின்ற கற்ப கந்தி ழற்க லந்து கையற
      பாய்ந்தெ ரிந்த போல்வி ரிந்து பாரி சாத மோர்செய
      வாய்ந்தெ ரிந்த பொன் மாட வாயி லாறு கண்கொள
      போந்தெ ரிந்த போன்ம ரம்பு றம்பொ லிந்தி லங்குமே.
      இன்பத்திடையே தென்றல்
      மாசில் கண்ணி மைந்த ரோடு மங்கை மார்தி ளைத்தலில்
      பூசு சாந்த ழித்தி ழிந்த புள்ளி வேர்பு லர்த்தலால்
      வாச முண்ட மாரு தந்தென் வண்டு பாட மாடவாய்
      வீச வெள்ளி லோத்தி ரப்பொ தும்பர் பாய்ந்து விம்முமே
      பலவகை மரங்கள்
      ஆந்து ணர்த்த மால மும்ம சோக பல்ல வங்களும்
      தாந்து ணர்த்த சந்த னத்த ழைத்த லைத்த டாயின
      மாந்து ணர்ப்பொ தும்பர் வந்து வைக மற்ற தூன்றலால்
      தேந்து ணர்ச்சு மந்தொ சிந்த சைந்த தேவ தாரமே
      இன்ப துன்பம்
      தெய்வ யாறு காந்த ளஞ்சி லம்பு தேங்கொள் பூம்பொழில்
      பெளவ முத்த வார்ம ணற்ப றம்பு மெளவன் மண்டபம்
      எவ்வ மாடு மின்ன போலி டங்க ளின்ப மாக்கலால்
      கவ்வை யாவ தந்த கர்க்கு மார னார்செய் கவ்வையே
      சுவலனசடி
      மற்ற மாந கர்க்கு வேந்தன் மான யானை மன்னர் கோன்
      அற்ற மின்றி நின்ற சீர ழற்பெ யர்ப்பு ணர்ச்சியான்
      முற்று முன்ச டி பெ யர்சொன் மூன்று லஃகு மான்றெழ
      பெற்று நின்ற பெற்றியான் பீடி யாவர் பேசுவார்
      சுவலனசடியின் பெருமை
      இங்கண் ஞால மெல்லை சென்றி லங்கு வெண்கு டைந்நிழல்
      வெங்கண் யானை வேந்தி றைஞ்ச வென்றி யின்வி ளங்கினான்
      கொங்கு கொண்டு வண்ட றைந்து குங்கு மக்கு ழம்பளாய்
      அங்க ராக மங்க ணிந்த லர்ந்த வார மார்பினான்
      கல்விநலம் முதலியன
      விச்சை யாய முற்றினான் விஞ்சையார்க ளஞ்சநின்
      றிச்சை யாய வெய்தினா னேந்து செம்பொ னீண்முடி
      கச்சை யானை மானவேற் கண்ணி லங்கு தாரினான்
      வெச்ச னுஞ்சொ லொன்றுமே விடுத்து மெய்ம்மை மேயினான்
      அம் மன்னவன்பால் ஒரு குற்றம் - வேறு
      வெற்றி வெண்குடை விஞ்சையர் வேந்தவ
      னொற்றை யந்தனி கோலுல கோம்புநாள்
      குற்ற மாயதொன் றுண்டு குணங்களா
      லற்ற கீழுயிர் மேலரு ளாமையே
      அவ்வரசன் ஆட்சியில் நடுங்கியன
      செம்பொ னீண்முடி யான்சொரு வின்றலை
      வெம்பு வேலவன் விஞ்சையர் மண்டிலம்
      நம்பி யாள்கின்ற நாளி னடுங்கின
      கம்ப மாட கதலிகை போதுமே
      ஆடவர் மேல் வளைந்த வில்
      மின்னு வார்ந்த தாரவி ளங்கிணார்
      துன்னு தொன்முடி யானொளி சென்றநாள்
      மன்னு மாடவர் மேல்வளை திட்டன
      பொன்னு னார்புரு வச்சிலை போலுமே
      உண்ணாத வாய்கள்
      வெண்ணி லார்ச்சுட ருந்தனி வெண்குடை
      எண்ணி லாப்புக ழானினி தாண்டநா
      ளுண்ணி லாப்பல வாயுள வாயின
      கண்ண னாரொடு காமக்க லங்களே
      அந்நகரில் எவருங் கட்டுண்டு வருந்தார்
      மாக்கண் வைய மகிழ்ந்துதன் றாணிழல்
      நோக்கி வைக நுனித்தவ னாண்டநாள்
      தாக்க ணங்கனை யார் தம தாயரால்
      வீக்க பட்டன மென்முலை விம்முமே
      கடியவையுங் கொடியவையும்
      வடிய வாளவ னாளவும் வாய்களில்
      கடிய வாயின கள்ளவிழ் தேமல
      ரடிய வா பட்டடங் காவலர
      கொடிய வாயின கொங்கவிழ் சோலையே
      அரசன் மனைவி வாயுவேகை
      மாய மாயநின் றான்வரை மார்பிடை
      மேய பூமகள் போல விளங்கினாள்
      தூய வாமுறு வற்றுவர் வாயவள்
      வாயு வேகையென் பாள்வளர் கொம்பனாள்
      வாயுவேகையின் மேன்மை
      பைம்பொற் பட்ட மணிந்த கொல் யானையான்
      அம்பொற் பட்ட நறுங்குழ லார்க்கெலாம்
      செம்பொற் பட்டஞ் செறிந்த திருநுதல்
      அம்பொற் பட்டுடை யாளணி யாயினான்
      இருவரின் இன்பநிலை
      கோவை வாய்குழ லங்குளிர் கொம்பனாள்
      காவி வாணெடுங் கண்ணி காவலற்
      காவி யாயணங் காயமிழ் தாயவன்
      மேவு நீர்மைய ளாய்விரு தாயினாள்
      அருக்ககீர்த்தி என்னும் மகன் பிறத்தல்
      முருக்கு வாயவண் முள்ளெயிற் றேர்நகை
      யுருக்க வேந்த னொருங்குறை கின்றநாள்
      பெருக்க மாக பிறந்தனன் பெய்கழல்
      அருக்க கீர்த்தி யென் பானலர் தாரினான்
      சுயம்பிரபை என்னும் மகள் பிறத்தல்
      நாம நள்லொளி வேனம்பி நங்கையா
      யேம நல்லுல கின்னிழி தந்நகை
      தாம மல்லிகை மாலை சயம்பவை
      காம வல்லியுங் காமுற தோன்றினாள்
      சுயம்பிரபையின் அழகு சிறப்பு
      கங்கை நீரன ஞான்ற கதிரிள
      திங்க ளாற்றெழ பட்டது செக்கர்வான்
      மங்கை மார்பிற பும்மட மாதரி
      நங்கை யாற்றெழ பாடு நவின்றதே
      முகம் கண் புருவம் இடை ஆகியவை
      வண்டு சூழ்மலர் போன்றள கக்கொடி
      கொண்டு சூழ்ந்தது குண்டல வாண்முகங்
      கெண்டை கண்கிள ரும்புரு வஞ்சிலை
      உண்டு கொல்லென வுண்டும ருங்குலே
      புருவங்கள் துவளுதல்
      காதின் மீதணி கற்பக தொத்திணர்
      ஊது தேனிற கூன்றியி ருத்தொறும்
      போது தேர்முக தும்புரு வக்கொடி
      நோத லேகொல்நொ சிந்துள வாங்களே
      சுயம்பிரபையின் அழகு
      விண்ண ணங்க விழித்துவி ளங்கொளி
      மண்ண ணங்குற வேவளர் வெய்திய
      பெண்ண ணங்கிது தோன்றிய பின்கொலோ
      கன்ன ணங்குறு காரிகை கண்டதே
      கொங்கு போதரு வான்குமிழ் கின்றன
      அங்க ராகம ணிந்ததை யன்றியும்
      நங்கை நாகரி கம்பொறை நாண்மது
      தங்கு வார்கொடி யிற்றளர் வித்ததே
      வளருதல்
      மங்கு றோய்வரை மன்னவன் றொல்குடி
      நங்கை போற்றியென் றேத்தி நறுங்குழல்
      மங்கை மார்பலர் காப்ப வளர்ந்துதன்
      கொங்கை யாற்சிறி தேகுழை வெய்தினாள்
      பற்கள் தோன்றுதல்
      வாம வாணொடு நோக்கிம டங்கனி
      தூம வார்குழ லாடுவர் வாயிடை
      நாம நள்லொளி முள்ளெயி றுள்ளெழு
      காம னாளரும் பிற்கடி கொண்டவே.
      சுயம்பிரபை வித்தைகளடைதல்
      மஞ்சு தோய்வரை யாரஞ்சு மாண்பினால்
      அஞ்சி லோதிநி னைப்பின கத்தவாய்
      விஞ்சை தாம்பணி செய்தல்வி ரும்பினன்
      எஞ்சி லாவகை யாலிணர் கொண்டவே
      சுயம்பிரபையின் பிறப்பால் அரசன் சிறப்படைதல்
      நங்கை தோன்றிய பின்னகை வேலினாற்
      கங்கண் ஞாமல மர்ந்தடி மைத்தொழில்
      தங்க நீண்முடி யாற்றலை நின்றனர்
      வெங்கண் யானைவி ளங்கொளி வேந்தரே
      வேறு - வயந்ததிலகை மன்னனிடங் கூறுதல்
      நங்கையாள் வளர்ந்து காம நறுமுகை துணர வைத்து
      மங்கையாம் பிராய மெய்தி வளரிய நின்ற நாளும்
      பைங்கண்மால் யானை யாற்கு பருவம்வ திறுத்த தென்றாள்
      வங்கவா பவழ செவ்வாய் வயந்தமா திலகை யென்பாள்
      வேனில் வரவை கூறுதல்
      தேங்குலா மலங்கன் மாலை செறிகழன் மன்னர் மன்ன
      பூங்குலாய் விரிந்த சோலை பொழிமது திவலை தூவ
      கோங்கெலாங் கமழ மாட்டா குணமிலார் செல்வ மேபோல்
      பாங்கெலாஞ் செம்பொன் பூப்ப விரிந்தது பருவ மென்றாள்
      வண்டுகள் களிப்பு
      வேய்ந்திண ரொசிந்த சோலை வேனிலான் வென்றி யோகை
      தேந்துணர் கொடுப்ப மூழ்கி தேறல் வாய் நெகிழ மாந்தி
      தாந்துணர் துணையோ டாடி சாறுகொண் டூறு மேரார்
      மாந்துண ரொசிய வேறி மதர்த்தன மனிவண் டெல்லாம்
      இசைக்கு பரிசில்
      கடிமலர கணையி னான்றன் கழலடி பரவி காமர்
      படிமலர தும்பி யென்னும் பாண்படை தொடர்ந்து பாட
      கொடிவளர் மகளிர் பூங்க குடைந்துநீர் குடிமி னென்று
      வடிமலர் வள்ள தேந்த வாய்மடு திட்ட வன்றே
      தீயிடத்து கரியைப்போல் மலரிடத்திலே வண்டுகள் காணப்பெறல்
      அஞ்சுடர் முருக்கி னங்கே ழணிமல ரணிந்து கொம்பர
      துஞ்சிடை பெறாது தும்பி துவன்றிமேற் றுகைக்கு தோற்றம்
      செஞ்சுட ரிலங்குஞ் செந்தீ கருஞ்சுடர கந்துள் சிந்தி
      மஞ்சுடை மயங்கு கானம் மண்டிய வகையிற் றன்றே
      வண்டுகள் மயக்கமும் தெளிவும்
      அந்தழை யசோகம் பூத்த வழகுகண் டவாவி னோக்கி
      வெந்தழற் பிறங்க லென்று வெருவிய மறுவி றும்பி
      கொந்தவிழ துமிழ பட்ட குளிர்மது திவலை தூவ
      செந்தழற் பிறங்க லன்மை தெளிந்துசென் றடைந்த வன்றே
      மாமரமும் மனந்திரிந்த செல்வரும்
      மாஞ்சினை கறித்த துண்ட துவர்த்தலின் மருங்கு நீண்ட
      பூஞ்சினை முருக்கஞ் சோலை பூக்கள்வா யார மாந்தி
      தீஞ்சுவை மிழற்று கின்ற சிறுகுயில் செல்வ ரேனும்
      தாஞ்சுவை திரிந்த பிஇன்றை சார்பவ ரில்லை யன்றே
      பொழில்கள் புலம்புதல்
      கோவைவண் டூது கின்ற குரவெனுங் குரைகொண் மாதர்
      பாவைகொண் டாடு கின்ற பருவத்தே பயின்ற காமன்
      ஆவிகொண் டிவளி கைவி டகலுமோ வென்று தத்தம்
      பூவையுங் கிளியுங் கொண்டு புலம்பின பொழில்க ளெல்லாம்
      அரசன் மனைவிமக்களுடன் மனோவனம் யென்னும் பூம்பொழிலை யடைதல்
      வயந்தமாங் குணர்த்த கேட்டே மன்னவன் மக்க ளோடு
      முயர்ந்ததன் னுரிமை யோடு முரிமைகா பவர்க ளோடும்
      கயந்தலை களிரு தேரும் வையமுங் கவின வேறி
      நயந்தன னகரி னீங்கி னோவன நண்ணி னானே
      வேறு - அரசனை பொழில் வரவேற்றல்
      கோமான்சென் றணைதலுமே கொங்கணிந்த மலர்தூவி
      தேமாநின் றெதிர்கொள்ள சிறுகுயில்போற் றிசைத்தனவே
      வாமான்றேர் மன்னற்கு மங்கலஞ்சொன் மகளிரைப்போற்
      றூமாண்ட விளங்கொடித தளிர்க்கையாற் றொழுதனவே
      மணப்பொடி தூவி சாமரைகள் வீசி குடை பிடித்தல்
      கடிவாச மலர்விண்ட கமழ்தாது கழலவற்கு
      வடிவாச பொடியாக வனவல்லி சொரிந்தனவே
      புடைவாசங் கொள மாலம் பூங்கவரி யெடுத்தெறி
      குடைமாக மெனவேந்தி கோங்கம்போ தவிழ்ந்தனவே
      புகழ் பாடி பூவிறைத்தல்
      கொடியாடு நெடுநகர கோமான்றன் குணம்பரவி
      அடிபாடு மவர்களென வணிவண்டு முரன்றனவே
      வடிவாய வேலவற்கு மலர்ச்சின்னஞ் சொரிவனபோல்
      கொடுவாய கிளிகோதி குளிர்நறும்போ துகுத்தனவே
      தென்றல் வீசுதல்
      குரவகத்து குடைந்தாடி குளிர்நறவங் கொப்பளித்தார
      தரவவண்டின் னிசைபாட வருவிநீ ரளைந்துராய்
      விரைமலர்ந்த துணர்வீசி விரைஞாற வருதென்றல்
      புரவலன்றன் றிருமுடிமேற் போதலர வசைத்ததே
      அரசன் பெண்களுக்கு பொழில் வளங்காட்டி விளையாடுதல்
      இன்னவா றிளவேனி லெதிர்கொள்ள வெழில்யானை
      மன்னவா தனிச்செங்கோன் மறவேல்வை யகவேந்தன்
      தன்னவா மடவாரை தானுவந்து பொழில்காட்டி
      மின்னவா மிடைநோவ விளையாட வருளினான்
      இளவேனிற் பருவம் உங்கள் செல்வம் போன்றது என்றது
      எரியணிந்த விளம்பிண்டி யிணரார்ந்த விடமெல்லாம்
      பொரியணிந்த புன்குதிர்ந்து பூநாறு துறையெல்லாம்
      வரியணி ந்து வண்டூத வளர்கின்ற விளவேனில்
      புரியணிந்த குழலீர்நுஞ் செல்வம்போற் பொலிந்ததே
      கைகளும் இடைகளும்
      காரணிந்த குழலீர்நுங் கைத்தலங்க டகைநோக்கி
      சீரணிந்த செழும்பிண்டி தளிரீன்று திகழ்ந்தனவே
      வாரணிந்த முலையீர்நும் மருங்குறனின் வகைநோக்கி
      ஏரணிந்த குருக்கத்தி யிளங்கொடித்தா யீன்றனவே
      மாந்தளிர் முதலியவை
      மாந்தளிரிங் கிவைநுமது நிறங்கொண்டு வளர்ந்தனவே
      ஏந்திளந்தீங் குயிலிவைநுஞ் சொற்கற்பா னிசைந்தனவே
      தேந்தளங்கு குழலீர்நுஞ் செவ்வாயி னெழினோக்கி
      தாந்தளிர்மென் முருக்கினிய தாதொடு ததைந்தனவே
      கண்மலர்
      காவியுஞ் செங் கழுநீருங் கமலமுங் கண் விரிந்துநளி
      வாவியு மண் டபமுமெழின் மதனனையு மருட்டுமே
      தூதுயருங் கிளியன்ன சொல்லினீர் துணையில்லார்
      ஆவியு துள்ளாராத லரிதேயிவ் விள வேனில்
      வேறு - அரசன் திருக்கோயிலை அடைதல்
      இன்னண மிளையவர் மருள வீண்டுசீர்
      மன்னவன் வயந்தமா டருளி மாமணி
      கன்னவில் புரிசையு கடவு காக்கிய
      பொன்னவி றிருநகர் பூவொ டெய்தினான்
      திருக்கதவம் திறத்தல்
      உலமுறை தோளினா னுவகை கூர்ந்தனன்
      குலமுறை வழிபடு தெய்வ கோயிலை
      வலமுறை வந்தனன் வரலு மாமணி
      கலமுறை கதிர்நகை கபாடம் போழ்ந்ததே
      சுடர் விளங்குதல்
      பிணிநிலை பெயர்ப்பன பிறவி தீர்ப்பன
      மணிநிலை விசும்பொடு வரங்க ளீவன
      கணிநிலை யிலாத்திறற் கடவு டானகம்
      மணிநிலை சுடரொளி மலர்ந்து தோன்றவே
      அரசன் கடவுளை போற்ற தொடங்குதல்
      மெய்ம்மயி ரெறிந்தொளி துளும்பு மேனியன்
      கைம்முகிழ் முடித்தடங் கதழ சேர்த்தினான்
      வெம்மைசெய் வினைத்துகள் விளிய வென்றவன்
      செம்மலர திருந்தடி சீரி னேத்தினான்
      வேறு - வரிப்பாட்டு
      எல்லாமாகிய நின்னை உணர்வார் அரியர் என்றல்
      அணியாது மொளிதிகழு மாரணங்கு திருமூர்த்தி
      கணியாது முழுதுணர்ந்த கடவுளென் றறையுமே
      கணியாது முழுதுணர்ந்த கடவுளென் றறைந்தாலும்
      அணிஞால முடையாயை யறிவாரோ வரியரே
      படைக்கல தாங்காத நின்னை அறிபவர் அரியர் என்றல்
      பகைநாறு மயிற்படைகள் பயிலாத திருமூர்த்திறை
      இகன்மாற வென்றுயர்ந்த விறைவனென் றறையுமே
      இகன்மாற வென்றுயர்ந்த விறைவவென் றறைந்தாலும்
      அகன்ஞால முடையாயை யறிவாரோ வரியரே
      ஒருமருவுமற்ற நின்னை எல்லோரும் உணரார் என்றல்
      திருமறுவு வலனணிந்து திகழ்கின்ற திருமூர்த்தி
      ஒருமறுவு மிலையென்ப தொழியாம லுணர்த்துமே
      ஒருமறுவு மிலையென்ப தொழியாம லுணர்த்துகினும்
      அருமறையை விரித்தாயை யறிவாரோ வரியரே
      வேறு - அரசன் கோயில் வாயிலையடைதல்
      இன்னண மிறைவனை யேத்தி யேந்தறன்
      சென்னியு சேர்த்திய சேட பூவினன்
      கன்னவி றிருமனி கபாட தாழுறீஇ
      மின்னிய திருநகர் முற்ற முன்னினான்
      சாரணர்கள் கோயிலையடைந்து போற்றுதல்
      ஆரணங் கவிரொளி யெரிய வாயிடை
      சாரணர் விசும்பினின் றிழிந்து தாதைதன்
      ஏரணி வளநகர் வலங்கொண் டின்னணம்
      சீரணி மணிக்குரல் சிலம்ப வாழ்த்தினார்
      வேறு - வரிப்பாட்டு- அ சாரணர் இறைவனை ஏத்துதல்
      விரைமணந்த தாமரைமேல் விண்வணங்க சென்றாய்
      உரைமணந்தி யாம்பரவ வுண்மகிழ்வா யல்லை
      யுண்மகிழ்வா யல்லை யெனினு முலகெல்லாங்
      கண்மகிழ நின்றாய்க காத லொழியோமே
      இதுவுமது
      முருகணங்கு தாமரையின் மொய்ம்மலர்மேற் சென்று
      யருகணங்கி யேத்தி யதுமகிழ்வா யல்லை
      யதுமகிழ்வா யல்லை யெனினும் பெயரா
      கதிமகிழ நின்றாய்க காத லொழியோமே
      இதுவுமது
      மணமயங்கு தாமரைமேல் வான்வணங்க சென்றாய்
      குணமயங்கி யாம்பரவ கொண்டுவப்பா யல்லை
      கொண்டுவப்பா யல்லை யெனினுங் குளிர்ந்துலகம்
      கண்டுவப்ப நின்றாய்க காத லொழியோமே
      வேறு - முனிவர்கள் போற்றுதலைக்கேட்ட உயிர்கள் தீவினை தீர்த்தல்
      தீதறு முனிவர்தஞ் செல்வன் சேவடி
      காதலி னெழுவிய காம ரின்னிசை
      யேதமின் றெவ்வள விசைத்த தவ்வள
      வோதிய வுயிர்க்கெலா முறுகண் டீர்ந்தவே
      சமணமுனிவர்கள் அரசனுக்கு அறவுரை பகர விரும்பல்
      இறைவனை யின்னண மேத்தி தந்தொழில்
      குறைவிலா முடிந்தபின் குணக்குன் றாயினார்
      மறமலி மன்னனை நோக்கி மற்றவற்
      கறமழை பொழிவதோ ரார்வ மெய்தினார்
      சமணமுனிவர்கள் அமர்ந்த இடம்
      தென்றலுஞ் செழுமது திவலை மாரியும்
      என்றுநின் றறாததோ ரிளந்தண் பிண்டியும்
      நின்றொளி திகழ்வதோர் நிலாக்கல் வட்டமும்
      சென்றவ ரமர்ந்துழி திகழ்ந்து தோன்றுமே
      அரசன் சென்று பணிதல்
      வென்றவன் றிருநகர் விளங்கு வேதிகை
      மூன்றில்சேர திருந்தனர் முனிவ ராதலும்
      மின்றவழ் விளங்குவேல் வென்றி வேந்தனும்
      சென்றவர் திருந்தடி முடியிற் றீட்டினான்
      முனிவர்கள் அரசனுக்கு வாழ்த்துரை கூறி அமர செய்தல்
      பாசிடை பரப்புடை பழன நாடனை
      ஆசிடை கொடுத்தவ ரிருக்க வென்றலும்
      தூசுடை மணிக்கலை மகளிர் சூழ்தர
      ஏசிடை யிலாதவ னிருக்கை யெய்தினான்
      முனிவர்கள் அரசன் நலத்தை வினாவ வணங்குதல்
      தாளுயர் தாமரை திருவு தண்கதிர்
      நீளெழி லாரமு நிழன்ற கண்குலாம்
      தோளிணை செவ்வியோ வென்ன சூழொளி
      வாளவன் மணிமுடி வணங்கி வாழ்த்தினான்
      சடியரசன் வணங்கி சகநந்தனனை நோக்கி கூறுதல்
      முனிவரு பெரியவன் முகத்து நோக்கியொன்
      றினிதுள துணர்த்துவ தடிக ளென்றலும்
      பனிமலர தாமரை பழன நாடனை
      கனியமற் றின்னணங் கடவுள் கூறினான்
      தன் கருத்தையுணர்ந்து முனிவர் கூற அரசன் அவரை பணிதல்
      துன்னிய வினைப்பகை துணிக்கு தொன்மைசா
      லின்னுரை யமிழ்தெ கீமி னென்பதாம்
      மன்னநின் மனத்துள தென்ன மாமணி
      கன்னவில் கடகக்கை கதழ கூப்பினான்
      வேறு - சாரணர் அறிவுரை பிறவிகள் அளவிடற் கரியன என்றல்
      மெய்யறி விலாமை யென்னும் வித்தினிற் பிறந்து வெய்ய
      கையறு வினைகள் கைபோ கடுந்துயர் விளைத்த போழ்தில்
      மையுற வுழந்து வாடும் வாழுயிர பிறவி மாலை
      நெய்யுற நிழற்றும் வேலோ யினைத்தென நினைக்க லாமோ
      நற்சார்பு கிடைக்கும் வரையிலும் உயிர்கள் பிறந்து வருந்தும் என்றல்
      சூழ்வினை துரப்ப சென்று சூழ்வினை பயத்தினாலே
      வீழ்வினை பிறிது மாக்கி வெய்துற விளிந்து தோன்றி
      ஆழ்துய ருழக்கு மந்தோ வளியற்ற வறிவில் சாதி
      தாழ்வினை விலக்குஞ் சார்வு தலைப்படா வளவு மென்றான்
      அருகக்கடவுள் திருவடிகளே பிறவிப்பிணியை ஓழிக்கும் என்றல்
      காதியங் கிளைகள் சீறுங் காமரு நெறிக்குங் கண்ணா
      போதியங் கிழவர் தங்க டியானத்து புலங்கொண் டேத்தி
      யாதி தகன்று நின்ற வடிகளே சரணங் கண்டாய்
      மாதுய ரிடும்பை தீர்க்குஞ் சரணென படுவ மன்னா
      இரத்தின திரயம்
      மெய்ப்பொரு டெரிதல் மற்ற பொருண்மிசை விரிந்த ஞான
      மப்பொருள் வழாத நூலி னருந்தகை யொழுக்க தாங்கி
      யிப்பொருள் ளிவைகள் கண்டா யிறைவனால் விரிக்க பட்ட
      கைப்பொரு ளா கொண்டு கடைப்பிடி கனபொற் றாரோய்
      இரத்தின திரயத்தின் பயன் வீடுபேறு என்றல்
      உற்றடு பிணியு மூப்பு மூழுறு துயறு நீக்கி
      சுற்றிநின் றுலக மேத்துஞ் சுடரொளி யுருவ தாங்கி
      பெற்றதோர் வரம்பி லின்பம் பிறழ்விலா நிலைமை கண்டாய்
      மற்ரவை நிறைந்த மாந்தர் பெறப்படு நிலைமை மன்னா
      அறிவுரை கேட்டோ ர் மகிழ்ச்சி யடைதல்
      அருந்துய ரறுக்கு மாண்பி னாரமிர் தவைகண் மூன்றும்
      திருந்தநன் குரைப்ப கேட்டே தீவினை யிருள்கள் போழும்
      விரிந்தநல் லறிவின் சோதி விளங்கலிற் சனங்க ளெல்லாம்
      பரிந்தகங் கழு தேறி பாவம் பரி தவர்க ளொத்தார்
      அரசன் மெய்யறிவடைதலும் உறவினர் நோன்பு மேற்கொள்ளலும்
      மன்னிய முனிவன் வாயுண் மணிகொழி தனைய வாகி
      பன்னிய பவங்க டீர்க்கும் பயங்கெழு மொழிக டம்மால்
      கன்னவில் கடக தோளான் காட்சியங் கதிர்ப்பு சென்றான்
      பின்னவ னுரிமை தானும் பெருவத மருவிற் றன்றே
      வேறு - சுயம்பிரபை நோன்பு மேற்கொள்ள எண்ணுதல்
      மன்னவன் மடமகள் வணங்கி மற்றவ
      ரின்னுரை யமுதமுண் டெழுந்த சோதியள்
      பன்னியொர் நோன்பு மேற் கொண்டு பாங்கினால்
      பின்னது முடிப்பதோர் பெருமை யெண்ணினாள்
      அரசன் முனிவரை வணங்கி கோயிலை வலஞ்செய்து செல்லுதல்
      முனிவரர் திருந்தடி வணங்கி மூசுதேன்
      பனிமலர் விரவிய படலை மார்பினான்
      கனிவளர் பொழிலிடை கடவு ணன்னகர்
      இனிதினின் வலமுறை யெய்தி யேகினான்
      அரசன் பொழிலில் விளையாடி நகரத்தை அடைதல்
      வாமமே கலையவர் மனத்தில் வார்பொழில்
      காமவே ளிடங்கொள வருளி கண்ணொளிர்
      தாமவே லிளையவர் காப்ப தாழ்கதிர்
      நாமவே னரபதி நகர நண்ணினான்
      சமண முனிவர்கள் கடவுளை வணங்கி விண்வழியாக செல்லுதல்
      அகநக ரரைசரோ டரைசன் சென்றபின்
      சகதபி நந்தன ரென்னுஞ் சாரணர்
      மிகநவின் றிறைவனை வணங்கி விண்ணிடை
      பகனகு கடரொளி படர வேகினார்
      சுயம்பிரபை நோன்பினால் மேம்படுதல்
      அழற்கொடி யெறித்தொறுஞ் சுடரு மாடக
      நிழற்கொடி யதுவென நிறைந்த காரிகை
      குழற்கொடி யனையவள் கொண்ட நோன்பினால்
      எழிற்கொடி சுடர்வதோ ரியற்கை யெய்தினாள்
      மனநலத்தின் மாட்சி
      முகைத்தவார் முல்லையை முருக்கு மெல்லியல்
      நகைத்தவார் குழலவ டன்மை யாயினும்
      வகுத்தவா றுயர்ந்தன நோன்பு மாசிலா
      வகத்துமாண் புடையவர கரிய தில்லையே
      நோன்பினால் சுயம்பிரபை உடலொளி பெறுதல்
      இந்திர வுலகமும் வணக்கு மீடுடை
      தந்திர நோன்பொளி தவழ தையலாள்
      மந்திர நறுநெய்யால் வளர்ந்து மாசிலா
      வந்தர வழற்கொடி யனைய ளாயினாள்
      நோன்பு முடித்த சுயம்பிரபை அருகக்கடவுளுக்கு திருவிழா செய்தல்
      தாங்கருஞ் சுடொரொளி சக்கர வாளமென்
      றோங்கிரும் பெயர்கொணோன் புயர நோற்றபின்
      றீங்கரும் பனையசொற் சிறுமி தெய்வத
      காங்கொரு பெருஞ்சிற பயர்தல் மேயினாள்
      சுயம்பிரபை கடவுளை போற்ற தொடங்கல்
      தண்ணவிர் நிலாச்சுடர் தவழு மவ்வரை
      கண்ணவிர் சென்னிமேற் கடவு டானமஃ
      தண்ணலங் கோமக ளருச்சி தாயிடை
      விண்ணவ ருலகமூம் வியப்ப வேத்தினாள்
      வேறு - வரிப்பாட்டு சுயம்பிரபை கடவுளை போற்றுதல்
      ஆதியங் கடவுளை யருமறை பயந்தனை
      போதியங் கிழவனை பூமிசை யொதுங்கினை
      போதியங் கிழவனை யொதுங்கிய
      சேதியஞ் செல்வநின் றிருவடி வணங்கினம்
      இதுவுமது -
      காமனை கடிந்தனை காலனை காய்ந்தனை
      தேமலர் மாரியை திருமறு மார்பனை
      தேமலர் மாரியை திருமறு மார்பனை
      மாமலர் வண்ணநின் மலரடி வணங்கினம்
      ஆரருள் பயந்தனை யாழ்துய ரவித்தனை
      யோரரு ளாழியை யுலகுடை யொருவனை
      யோரரு ளாழியை யுலகுடை யொருவனை
      சீரருண் மொழியநின் றிருவடி தொழுதனம்
      வேறு - சுயம்பிரபை வழிபாட்டு மலர்களை சூடிக்கொள்ளுதல்
      கருவடி நெடுநல்வேற் கண்ணி யின்னணம்
      வெருவுடை வினைப்பகை விலக்கும் வீறுசால்
      மருவுடை மொழிகளாற் பரவி வாமன
      திருவடி சேடமு திகழ சூடினாள்
      சுயம்பிரபை தன் தந்தையின் அரண்மனையை அடைதல்
      வானுயர் கடவுளை வயங்கு சேவடி
      தேனுயர் திருமலர சேடங் கொண்டபின்
      மானுயர் நோக்கியர் பரவ மங்கைதன்
      கோனுயர் வளநகர கோயின் முன்னினாள்
      சுயம்பிரபை தன் தந்தைக்கு வழி பாட்டு பொருள் கொடுத்தல்
      வெஞ்சுடர் வேலவர குணர்த்தி மெல்லவே
      பஞ்சுடை சேவடி பரவ சென்றுகன்
      னஞ்சுடர் மெல்விரல் சிவப்ப வாழியின்
      செஞ்சுட ரங்கையிற் சேட நீட்டினான்
      அரசன் தன் மகளை உச்சிமோந்து சில மொழிகள் சொல்ல தொடங்குதல்
      அல்லியி னரவண் டிரிய வாய்மலர்
      வல்லியின் வணங்கிய மகளை மன்னவன்
      முல்லையஞ் சிகழிகை முச்சி மோந்திவை
      சொல்லிய தொடங்கினான் சுடரும் வேலினான்
      ஐந்து பாடல்கள் அரசன் தன் மகளை புகழ்ந்துரைத்தல்
      தேந்துணர் பலவுள வேனுஞ் செங்குழை
      மாந்துணர் வயந்தனை மலர தோன்றுமே
      பூந்துண ரோதிநீ பிறந்து பொன்செய்தார்
      வேந்துவ திறைஞ்சயான் விளங்கு கின்றதே
      கங்கைநீர் பாய்ந்துழி கடலு தீர்த்தமா
      மங்கணீ ருலகெலா மறி பட்டது
      நங்கைநீ பிறந்ததற் பின்னை நங்குடி
      வங்கநீர் வரைப்பெலாம் வணக்க பட்டதே
      போதுலா தாமரை பூத்த பொய்கையை
      தீதுலாங் கீழுயிர் தீண்ட செல்லல
      மாதுலா மடந்தைநீ பிறந்திம் மண்டில
      மேதிலா ரிடைதிற மிகந்து நின்றதே
      வானக திளம்பிறை வளர வையகம்
      ஈனக திருள்கெட வின்ப மெய்துமே
      நான குழலிநீ வளர நங்குடி
      தானக திருள்கெட தயங்கு கின்றதே
      கண்பகர் மல்லிகை கமழ காதலால்
      சண்பக தனிவன தும்பி சாருநீ
      பெண்பகர் திருவனாய் பிறந்து நங்குடி
      மண்பக ருலகெலா மகிழ செல்லுமே
      அரசன் தன் மகளை உண்டற்கு அனுப்புதல்
      கொவ்வை துவரிதழ கோல வாயவ
      கிவ்வகை யணியன கூறி யீண்டுநும்
      மவ்வைதன் கோயில்பு கடிசி லுண்கென
      மவ்வலங் குழலியை மன்ன னேயினான்
      கட்டளையும் மகிழ்ச்சியும்
      பல்கலம் பெரியன வணியிற் பாவைத
      னல்குனோ மெனச்சிலம் பணிந்து மெல்லவே
      செல்கவென் றிருமக ளென்று செம்பொனான்
      மல்கிய முடியினான் மகிழ்ந்து நோக்கினான்
      அரசன் தன் மகளை பற்றி மனத்தில் எண்ணுதல்
      மண்ணருங் கலமெலாம் வலிதின் வவ்வினும்
      விண்ணருங் கலமெலாம் விதியி னெய்தினும்
      பெண்ணருங் கலமிது பெறுதன் மானுடர
      கெண்ணரு தகைத்தென விறைவ னெண்ணினான்
      தன் மகளுக்குரிய கணவன் யாவன் என்று எண்ணுதல்
      மையணி வரையின்வாழ் மன்னர் தொல்குடி
      கையணி நெடுநல்வேற் காளை மார்களுள்
      நெய்யணி குழலிவ குரிய நீர்மையான்
      மெய்யணி பொறியவ னெவன்கொல் வீரனே
      மங்கையர் இயற்கை
      பொலங்கல குரியவாம் பொருவின் மாமணி
      யிலங்கல மென்மை வீயஞ் சேர்த்தினும்
      குலங்கல தில்வழி குரவர் கூட்டினும்
      மலங்கலங் குழலிய ரன்றென் கிற்பவோ
      தாய் தந்தையர் நோக்கப்படி நடப்பர் என்றல்
      அந்தைதா முறுவது கருதி யாருயிர
      தந்தைதா யென்றிவர் கொடுப்பிற் றையலார்
      சிந்தைதா யிலாதவர் திறத்துஞ் செவ்வனே
      நொந்துதாம் பிறிதுரை நொடிய வல்லரோ
      காமமுங் காதலும்
      காதலா லறிவது காமங் காதலே
      யேதிலா ருணர்வினா லெண்ண லாவதன்
      றாதலான் மாதரா டிறத்தி னாணைநூ
      லோதினா ருரைவழி யொட்டற் பாலதே
      அரசர் வாழ்க்கையும் அமைச்சர்களும்
      தன்னுணர் பொறிபிறர் தங்கண் கூட்டென
      வின்னண மிருவகை திறைவர் வாழ்க்கையே
      தன்னுணர் பொறிப்புல தன்னி னாம்பிறி
      தின்னணா மியற்றுகென் றமைச்ச ரேவுவார்
      அரசர்கள் அமைச்சராற் சிறப்படைவார்கள் என்றல்
      தண்ணிய தடத்தவே யெனினு தாமரை
      விண்ணியல் கதிரினால் விரியும் வேந்தரும்
      புண்ணி பொதும்பரே புரிந்து வைகினும்
      கண்ணிய புலவரா லலர்தல் காண்டுமே
      அமைச்சர் அறிவுரையால் அரசியல் இனிது நடைபெறும் என்றல்
      மாமலர் நெடுங்கடன் மதலை மாசிலா
      காலமை தொழுகுமேற் கரையுங் காணுமே
      நூலவர் நுழைவொடு நுழைந்து செல்லுமேல்
      மேலவ ரொழுக்கமும் வேலை காணுமே
      உலகம் பலவிதம்
      ஒன்றுநன் றென உணர தொருவன் கொள்ளுமே
      லன்றதென் றொருவனு கறிவு தோன்றுமே
      நின்றதொன் றுண்டினி நீதி நூலினோ
      டொன்றிநின் றவருரை யுலக மொட்டுமே
      ஆயிரங்கண்ணனுக்கும் ஆயிரம் அமைச்சர்கள் உண்டென எண்ணல்
      அந்தண ரொழுக்கமு மரைசர் வாழ்க்கையும்
      மந்திர மில்லையேன் மலரு மாண்பில
      இந்திர னிறைமையு மீரைஞ் ஞாற்றுவர்
      தந்திர கிழவர்க டாங்க செல்லுமே
      அமைச்சர்களை அழைக்குமாறு கட்டளையிடுதல்
      என்றுதன் மனத்தினா னெண்ணி யீண்டுசீர்
      நின்றநூற் கிழமையி னீதி மாக்களை
      யொன்றிநீர் தருகென வுழைக்குற் றேவலார்
      சென்றவர கருளிது வென்று செப்பினார் 120
      இரதநூபுர சருக்கம் முற்றிற்று
      ---------------

      ஐந்தாவது
      மந்திரசாலை சருக்கம்

      அமைச்சர்கள் அரசனிடத்திற்கு வருதல்
      செஞ்சினை தெரியலா னருளி செய்தது
      தஞ்செவி கிசைத்தலு தணப்பில் கேள்வியா
      ரஞ்சினர் நடுங்கின ராகி யாயிடை
      நஞ்சிவர் வேலினான் பாத நண்ணினார்
      மந்திரசாலையின் அமைப்பு
      உள்ளுணின் றொலிபுற படாத தொண் சிறை
      புள்ளுமல் லாதவும் புகாத நீரது
      வெள்ளிவெண் விளிம்பினால் விளங்கு வேதிகை
      வள்ளறன் மந்திர சாலை வண்ணமே
      அரசன் பேச தொடங்குதல்
      ஆங்கமர தமைச்சரோ டரைசர் கோமகன்
      பூங்கமழ் மண்டபம் பொலி புக்கபின்
      வீங்கொளி மணிக்குழை மிளிர்ந்து வில்லிட
      வீங்கிவை மொழிந்தன னிறைவ னென்பவே
      வேறு - மன்னன் அமைச்சர் மாண்பு கூறுதல்
      மண்ணியல் வளாகங் காக்கு மன்னவர் வணக்க லாக
      புண்ணிய நீர ரேனும் புலவராற் புகல பட்ட
      நுண்ணிய நூலி னன்றி நுழை பொரு ளுணர்த்த றேற்றா
      ரெண்ணிய துணிந்து செய்யுஞ் சூழ்ச்சியு மில்லை யன்றே
      அமைச்சர் மாண்பு
      வால்வளை பரவி மேயும் வளர்திரை வளாக மெல்லாம்
      கோல்வளை வுறாமற் காக்குங் கொற்றவ னெடிய னேனும்
      மேல்விளை பழியும் வெய்ய வினைகளும் விலக்கி நின்றார்
      நூல்விளை புலவ ரன்றே நுணங்குபோ தணங்கு தாரீர்
      அரசனுக்கு அனைத்தும் ஆகுபவர் அமைச்சர்களே
      சுற்றுநின் றெரியுஞ் செம்பொன் மணிமுடி சுடர சூட்டி
      வெற்றிவெண் குடையி னீழல் வேந்தன்வேற் றிருக்கு மேனு
      மற்றவன் மனமுங் கண்ணும் வாழ்க்கையும் வலியுஞ் சால்பு
      மற்றமி லரசுங் கோலு மாபவ ரமைச்ச ரன்றே
      அமைச்சர்கள் துணை கொண்டு அரசன் அரசியற் சுமையை தாங்குவான்
      வீங்குநீர் ருலகங் காக்கும் விழுநுக மொருவ னாலே
      தாங்கலா தன்மை தன்று தளையவிழ் தயங்கு தாரீர்
      பாங்கலார் பணி சூழு நூலவர் பாக மாக
      பூங்குலா மலங்கன் மாலை புரவலன் பொறுக்கு மன்றே
      அரசன் முகமன் பொழிதல்
      அற்றமின் றுலகங் காக்கு மருந்தொழில் புரிந்து நின்றான்
      கற்றவர் மொழிந்த வாறு கழிப்பது கடன தாகு
      மற்றவற் குறுதி நோக்கி வருபழி வழிகள் தூர
      செற்றவர செருக்குஞ் சூழ்ச்சி தெருண்டவர் கடவ வன்றே
      அரசனும் அமைச்சர்களும்
      செறிந்தவர் தெளிந்த நூலார் சிறந்தவை தெரிந்து சொன்னால்
      அறிந்தவை யமர்ந்து செய்யு மமைதியா னரச னாவான்
      செறிந்தவர் தெளிந்த நூலார் சிறந்தவை தெரிந்து கூறி
      அறிந்தவை யியற்று கிற்கு மமைதியா ரமைச்ச ராவார்
      தோள்வலியும் சூழ்ச்சியும்
      வாள்வலி தடக்கை மன்னர் வையகம் வணக்கும் வாயில்
      தோள்வலி சூழ்ச்சி யென்றாங் கிருவகை தொகையிற் றாகும்
      ஆள்வலி தானை யார்க காதிய தழகி தேனும்
      கோள்வலி சீய மொப்பீர் சூழ்ச்சியே குணம தென்றான்
      சூழ்ச்சியு சிறந்தோர் மாட்சிபெறுவர்
      ஊழ்வர வன்ன தேனு மொருவகை கரும மெல்லாம்
      சூழ்பவர் சூழ்ந்து சூழுஞ் சூழ்ச்சியு டோ ன்று மன்றே
      யாழ்பகர தினிய தீஞ்சொ லமிர்தனா ரேனுஞ் சூழ்ச்சி
      வாழ்பவர் வல்ல ராயின் மன்னராய் மலர்ப வன்றே
      சூழ்சியே அரசன் ஆற்றல்
      ஆற்றன்மூன் றோதப்பட்ட வரசர்க கவற்றின் மிக்க
      ஆற்றறான் சூழ்ச்சி யென்ப தாதலா லதனை யாயும்
      ஆற்றலா ரமைச்ச ராக வமைச்சரோ டமர்ந்து செல்லும்
      ஆற்றலா னரச னாகி னரியதொன் றில்லை யன்றே
      இன்ப வாழ்க்கையிற் படிந்த அரசர் துன்படைவர்
      வடந்திகழ் முலையி னார்தங் காமத்தின் மதர்த்த மன்னர
      கடைந்தவர் மாண்பு மாங்கொன் றில்லையே லரசர் வாழ்க்கை
      கடந்தவழ் கடாத்த வேழங் களித்தபின் கல்வி மாணா
      மடந்தவ ழொருவன் மேல்கொண் டன்னதோர் வகையிற் றாமே
      சூழ்ச்சி தவறினால் வீழ்ச்சி கிடமுண்டாம்
      சுந்தர சுரும்புண் கண்ணி சூழ்கழ லரசர் வாழ்க்கை
      தந்திர மறிந்து சூழ்வான் சூழ்ச்சிசார தமையல் வேண்டும்
      மந்திரம் வழுவு மாயின் வாளெயிற் றரவு காய்ந்து
      தந்திர தப்பி னாற்போற் றன்னையே தபுக்கு மன்றே
      அமைச்சர் அறவுரை வழியாவர் அரசர்
      எடுத்தன னிலங்கு சாதி யெழிலொடு திகழு மேனு
      மடுத்தன நிறத்த தாகு மணிகிளர் பளிங்கு போல
      வடுத்தவ மலர்ந்து நுண்ணூன் மதியவர் வினையின் மாட்சி
      கொடுத்தவா நிலைமை மன்னன் குணங்களா கொள்ப வன்றே
      உங்களால்தான் நான் சிறந்து விளங்குகிறேன் என்றல்
      மன்னுநீர் வளாக மெல்லாம் வணக்குதல் வல்லீ ராய
      பன்னுநூற் புலவீர் முன்னர பலபகர துரைப்ப தென்னை
      யென்னைநீ ரிறைவ னாக்கி யிராப்பக லியற்ற வன்றே
      யின்னநீ ரின்ப வெள்ள மியைந்தியா னுயர்ந்த தென்றான்
      அரசன் சுயம்பிரபைக்கு மணமகன் யாவன் என்று கேட்டல்
      கொங்குடை வயிர குன்றின் கொழுஞ்சுடர் விளக்கி டாங்கு
      நங்குடி விளங்க வந்த நங்கைதன் னலத்திற் கொத்தான்
      தங்குடி விளங்க நின்ற தன்மையா னெவன்கொ லென்றான்
      சங்குடை தனைய தாழை தடமலர தொடைய லானே
      அமச்சர்கள் பதிலுரைத்தல்
      இறையிவை மொழி கேட்டே யிருந்தவ ரிறைஞ்சி யேத்தி
      யறைகழ லரவ தானை யணிமுடி யரச ரேறே
      நிறைபுக ழுலகங் காத்து நிலாகநின் னிறைமை யென்று
      முறைமுறை மொழிய லுற்று முன்னிய முகத்த ரானார்
      சச்சுதன் என்னும் அமைச்சன் பேச தொடங்குதல்
      பணிந்துமற் றேனை யார்பாங் கிருப்பநூல் பலவு நோக்கி
      துணிந்துதன் புலைமை தோன்ற சச்சுதன் சொல்ல லுற்றான்
      இணந்துநின் றுலவு தும்பி யிடையிடை யிருண்டு தோன்ற
      அணிந்துநின் றலரும் பைந்தா ரணிமணி முடியி னாற்கே
      சூரியன் தோன்ற சூரியகாந்தக்கல் தீயை வெளிப்படுத்தும்
      பொற்கதிர் பரப்பி வந்து பொங்கிருள் புதைய நூறு
      தொழிற்கதிர கடவு டோ ன்ற சூரிய காந்தமென்னும்
      எழிற்கதிர பிறங்கல் வட்ட மெரியுமிழ திடுவ தன்றே
      அழற்சதி ரிலங்குஞ் செவ்வே லதிர்கழ லரசர் கோவே
      அரசர் பெருமையால் அமைச்சர் சிறப்புறுவர்
      கோணைநூற் றடங்க மாட்ட குணமிலார் குடர்க ணைய
      ஆணைநூற் றடங காக்கு மரசர்த மருளி னாலே
      பேணுநூற் புலவர் மாண்பும் பெருகுவ துருவ தார்மேல்
      பூணுநூற் பொலிந்து தோன்றும் பொன்வரை மார்ப வென்றான்
      திங்கள் தோன்றினால் சந்திரகாந்தக்கல் நீரினை வெளிப்படுத்தும்
      சூழ்கதிர் தொழுதி மாலை சுடர்பிறை கடவு டோ ன்றி
      நாழ்கதிர் சொரிந்த போழ்திற் சந்திர காந்த மென்னும்
      வீழ்கதிர் விளங்கு வட்டம் வெள்ளநீர் விரியு மன்றே
      போழ்கதிர் பொழிந்து பொங்கி புலானிணம் பொழியும் வேலோய்
      நூலோர் சூழ்ச்சி அரசர் பெருமையால் சிறக்கும்
      கண்ணளி துலக மெல்லாங் கவின்பெற காவல் பூண்டு
      தண்ணளி தயங்கு செங்கோற் றாரவர் தவத்தி னாலே
      மண்ணளி தினிய நூலோர் மந்திர மலரு மென்றான்
      விண்ணளி திலங்கும் வெள்ளி விரிந்தவெண் குடையி னாற்கே
      பொறுமையின் பெருமை
      கண்ணிய கடாத்த வேழங் கவுளினா னுரிஞ பட்டு
      தண்ணிய தன்மை நீங்கா சந்தன சாதி போல
      புண்ணிய கிழவர் கீழோர் பிழைத்தன பொறுப்ப வாயின்
      மண்ணியல் வளாக மெல்லாம் வழிநின்று வணங்கு மன்றே
      அரசன் கொடியவனாயின் உலகம் துன்பத்தை யடையும்
      நிறந்தலை மயங்க வெம்பி நெடுங்கடல் சுடுவ தாயின்
      இறந்தலை மயங்கு நீர்வா ழுயிர்க்கிட ரெல்லை யுண்டோ
      மறந்தலை மயங்கு செவ்வேன் மன்னவன் வெய்ய னாயின்
      அறந்தலை மயங்கி வைய மரும்பட ருழக்கு மன்றே
      இதுவுமது
      மண்குளிர் கொள்ள காக்கு மரபொழி தரசர் தங்கள்
      விண்குளிர் கொள்ள வோங்கும் வெண்குடை வெதும்பு மாயிற்
      கண்குளிர் கொள்ள பூக்குங் கடிக தடமுங் காவும்
      தண்குளிர் கொள்ளு மேனு தாமிக வெதும்பு மன்றே
      அரசன் தீயவனாயின் மக்கட்கு புகலிடமில்லை
      தீயினர் படர்ந்து வேந்தன் செறுவதே புரியு மாயிற்
      போயினம் படர்ந்து வாழும் புகலிட மின்மை யாலே
      வேயினம் படர்ந்த சாரல் வேங்கையை வெருவி புல்வாய்
      மாயினம் படர்ந்த தெல்லாம் வையகம் படரு மன்றே
      அறவழி நிற்கும் அரசன் அடிநிழலே அருந்துணை
      மறந்தலை மயங்கி வை தொருவரை யொருவர் வாட்ட
      விரந்தலை யுறாமை நோக்கி யின்னுயிர் போல காக்கும்
      அறந்தலை நின்ற வேந்த ரடிநிழ லன்றி யார்க்கும்
      சிறந்ததொன் றில்லை கண்டாய் திருமணி திகழும் பூணோய்
      ஒருமையாற் றுன்ப மெய்து மொருவனை யும்மை யாலே
      திருமையான் முயங்குஞ் செல்வ செருக்கொடு திளைப்ப நோக்கி
      இருமையு மொருமை யாலே யியற்றலி னிறைவன் போல
      பெருமையை யுடைய தெய்வம் பிறிதினி யில்லை யன்றே
      உலகத்திற்கு கண்கள் மூன்று
      கண்ணென படுவ மூன்று காவலன் கல்வி காமர்
      விண்ணினை சுழல வோடும் வெய்யவ னென்னும் பேரார்
      எண்ணினு டலைக்கண் வைத்த கண்ணஃ தில்லை யாயின்
      மண்ணினு கிருளை நீக்கும் வகைபிறி தில்லை மன்னா
      இவ்வுலகில் துன்பமின்றேல் எவரும் விண்ணுலக வாழ்வை நாடார்
      குடிமிசை வெய்ய கோலுங் கூற்றமும் பிணியு நீர்சூழ்
      படிமிசை யில்லை யாயின் வானுளயார் பயிறு மென்பார்
      முடிமிசை திவள வேந்தர் முறைமுறை பணிய விம்மி
      அடைமிசை நரலுஞ் செம்பொ னதிர்கழ லரச ரேறே
      அரசர்களைப்போல மக்கள் இலர்
      தண்சுடர் கடவுள் போல தாரகை குழாங்க டாமே
      விண்சுடர் விளக்க மாக விளங்கல வேந்தர் போல
      மண்சுடர் வரைப்பின் மிக்க மக்களு மில்லை கண்டாய்
      கண்சுடர் கனல சீறுங் கமழ்கடா களிற்று வேந்தே
      அருந்தவமும் அரசாட்சியும் ஒன்று என்றல்
      அருந்தவ மரைச பார மிரண்டுமே யரிய தம்மை
      வருந்தியு முயிரை யோம்பி மனத்தினை வணக்கல் வேண்டும்
      திருந்திய விரண்டு தத்தஞ் செய்கையிர் றிரியு மாயிற்
      பெருந்துயர் விளைக்கு மன்றே பிறங்குதார் நிறங்கொள் வேலோய்
      விண்ணுலக ஆட்சிபெற இருவழிகள்
      அந்தர திரியுஞ் செய்கை யமரர்தம் மரசு வேண்டி
      இந்திர வுலகங் காணு நெறியவை யாவை யென்னின்
      மந்திரம் வழாத வாய்மை மாதவம் முயற லன்றேல்
      தந்திர தழுவி செங்கோ றளர்விலன் றரித்த லென்றான்
      அருந்தவமும் அரசாட்சியும் ஆற்றல் அரிது
      மரந்தலை யிணங்கி வான்றோய் மணிவளர் வயிர குன்றம்
      உரந்தன குயர வேந்தி யுய்த்திடு மொருவற் கேனும்
      அருந்தவ மரசை பார மவைபொறை யரிது கண்டாய்
      இரந்தவர கீட்ட பட்ட விருநிதி கிழவ வென்றான்
      சூழ்ச்சியின் மாண்பு
      உரிதினி னொருவன் செய்த வூழ்வினை யுதயஞ் செய்து
      விரிதலி னதன துண்மை விளங்கினாற் போல வேந்தர்
      கருதிய கரு சூழ்ச்சி பயத்தினாற் கருதும் வண்ணம்
      எரிதவழ திலங்கும் வேலோய் என்ணுவ தென்ண மென்றான்
      இதுவுமது
      பஞ்சிநன் றூட்ட பட்ட மாதுளம் பருவ வித்து
      மஞ்சிநின் றகன்ற சாகை மலரிடை வடிவு காட்டும்
      அஞ்சிநின் றனலும் வேலோய் சூழ்ச்சியு மன்ன தேயால்
      வெஞ்சொலொன் றுரைக்க மாட்டா விடுசுடர் விளங்கு பூணோய்
      செய்திகூற தொடங்கும் சச்சுதன் முன்னுரைக்கு அடங கூறல்
      கொற்றவேன் மன்னர கோதுங் குணமெலாங் குழுமி வந்து
      முற்றுநின் றுருவு கொண்ட மூர்த்திநின் முன்னர் யாங்கள்
      இற்றென வுரைக்கு நீதி யோதுநூ லெல்லை காண
      கற்றவர் முன்னை யேனோர் கதையொத்து காட்டு மன்றே
      செவ்வி கேட்டல்
      தேன்மகிழ் தெரிய லாய்நின் றிருக்குல தெளிப்ப வந்த
      பான்மகிழ தனைய தீஞ்சொற் பவழவா பரவை யல்கும்
      வான்மகிழ் மணங்கொண் மேனி யணங்கினு குரிய கோனை
      யான்மகிழ் துணர்த்த கேட்பி னிடைசிறி தருளு கென்றான்
      வேறு - விஞ்சையர் சேடி வண்ணனை
      மஞ்சிவர் மால்வரை சென்னி வடமலை
      விஞ்சையர் வாழும் விழாவணி நல்லுல
      கஞ்சியல் வில்லோ யதுமற் றமரர்கள்
      துஞ்சிய வில்லா துறக்க மனைத்தே
      அது விண்ணுலகத்தை போன்றது
      மண்ணியல் வாழ்நர்க்கும் வானுல கொப்பது
      புண்ணிய மில்லார் புகுதற் கரியது
      கண்ணிய கற்ப கானங் கலந்தது
      வின்ணிய லின்பம் விரவிற் றினிதே
      எல்லா இன பொருள்களும் ஒருங்கமையப்பெற்றது
      எல்லா விருதுவு மீனும் பொழிலின்
      தெல்லா நிதியு மியன்ற விடத்தின
      தெல்லா வமரர் கணமு மிராப்பகல்
      எல்லா புலமு நுகர்தற் கினிதே
      பொன்னிதழ தாமரை பொய்கையு பூப்பன
      பொன்னிதழ தாமம் பொழில்வா யவிழ்ப்பன
      பொன்னிதழ தாது மணிநிலம் போர்ப்பன
      பொன்னிதழ தாது துகளா பொலிவன
      அந்நாட்டு பொழில் முதலியன
      கானங்க ளாவன கற்பகங் காமுகர்
      தானங்க ளாவன சந்தன தாழ்பொழில்
      நானங்க ளாவன நாவி நருவிரை
      வானங்க ளாம்வகை மற்றுமொன் றுண்டோ
      மணிக்கற் படாதன மண்டபம் செம்பொன்
      குணிக்க படாதன குளிர்புனல் நீத்தம்
      கணிக்க படாத கதிர்மணி குன்றம்
      பிணிக்க படாதவர் யாரவை பெற்றால்
      வடசேடியில் அறுபது பெரிய நகரங்கள்
      ஆங்கதன் மேல வறுபது மாநகர்
      தீங்கதிர் மண்டிலஞ் சேர்ந்து திளைப்பன
      நீங்கரு மாநகர் தம்மு ணிலாவிரி
      தோங்கிய சூளா மணியி னொளிர்வது
      இரத்தின பல்லவம்
      மரத்தினு மண்ணினு மாடங்கள் யாவும்
      திருத்தின வில்லது செம்பொ னுலகில்
      புரத்தினை வெல்வது பொன்னகர் பூந்தண்
      ணிரத்தின பல்லவ மென்பதொன் றுண்டே
      அந்நகர் விண்ணுலகம் மண்ணுலகில் வந்தாற் போன்றது
      வளைத்தகை மங்கையர் மைந்தரொ டாடி
      முளைத்தெழு காம முடிவில ராகி
      திளைத்தலி னின்னகர் தெய்வ வுலகம்
      களித்திழி தன்னதோர் கவ்வை யுடைத்தே
      அந்நகரத்தில் வாழ்வோர் வருந்தி செய்யும் தொழில்
      ஆடவர் கொம்பனை யாரிளை யாரவர்
      பாடக மெல்லோர் பரவிய சீறடி
      தோடலர் தொங்கலங் குஞ்சியு டோ யவை
      தூட லுணர்த்து தொழிலதொன் றுண்டே
      வருத்தமுள்ள நகர்
      சிலைத்தட தோளவர் செஞ்சா தணிந்த
      மலைத்தட மார்பிடை மைமதர கண்ணார்
      முலைத்தடம் பாய முரிந்து முடவண்
      டிலைத்தட தேங்கு மிரக்க முளதே
      முரிவன பல
      வனைத்தன போலும் வளர்ந்த முலையார்
      இனைந்துதங் காதல ரின்ப கனிகள்
      கனிந்து களித்தகங் காமங் கலந்துண
      முனிந்து புருவ முரிவ பலவே
      அந்நகரில் இளைப்போரும் கலங்குவோரும்
      செவ்வா பவழ கடிகை திரளெனும்
      அவ்வா யமிர்தமுண் டார்பல ராடவர்
      ஒவ்வா திளைப்ப ரொசிந்தன ரோடரி
      மைவா ணெடுங்கண் மலக்கம் பெரிதே
      அந்நகரத்தில் வாழ்பவரை வருந்த செய்வது
      வளர்வன போலு மருங்குல்க ணோவ
      தளர்வன போல்பவர் தா குழன்மேற்
      கிளர்வன போதிள வாசங் கிளைத்துண்
      டுளர்வன போதரு மூதை யுளதே
      அந்நகரத்தே அஞ்சி மறைவன
      பஞ்சா ரகலல்குற் பாவையர் பூண்முலை
      செங்சா தணிந்து திகழ்ந்த மணிவண்டு
      மஞ்சார் பொழிலுள் வளர்பெடை கண்டதற்
      கஞ்சா வொளிக்கு மயல ததுவே
      இன்றமிழியற்கை யின்பம்
      பாசிலை மென்றழை பள்ளியு பாவையர்
      தூசினு ணின்று சொரிமணி கோவையும்
      பூசின சாந்தும் பிணையலும் போர்த்திடை
      மூசின வண்டின மொய்ப்பொழி லெல்லாம்
      காதல் தூது
      காம விலேகையுங் கற்பக மாலையும்
      சேம மணிநகை செப்பினு ளேந்துபு
      தூ குழலவர் தூது திரிபவர்
      தா தெருவிடை தாம்பலர் கண்டாய்
      காமக்கடலை கலக்கும் தீமைத்தொழில்
      தா தொடையல் பரிந்து தமனிய
      வா கலங்கள் புலம்ப மகளிர்கள்
      கா கடலை கலக்குங் கழலவர்
      தீமை தொழிலவை தேர்ந்துள வன்றே
      வேறு - மயூரகண்டனுக்கும் நீலாங்கனைக்கும் பிறந்தவன் அச்சுவக்கிரீவன்
      பொன்னகர் தன்னை யாள்வான் புரந்தர னணைய மாண்பின்
      மன்னவன் மயூர கண்டன் மற்றவன் தேவி மாருள்
      மின்னவிர் மருங்கு னீலாங் கனையென விளங்கி நின்றா
      ளன்னவள் புதல்வன் கண்டா யச்சுவ கிரீவ னென்பான்
      அச்சுவக்கிரீவன் அரசு எய்தியபின் உலகம் முற்றும் அவனடிப்பட்டது
      அதிர்கழ லலங்கல் வேலோ யச்சுவ கிரீவ னென்னும்
      பொதியவிழ் பொலங்கொள் பைந்தார புரவலன் றிகிரி யெய்தி
      மதிதவழ் குன்ற மெல்லாம் வணக்கிய பின்றை மண்ணும்
      கொதிதவழ் வேலி னான்றன் குறிப்பொடு கூடிற் றன்றே
      அச்சுவக்கிரீவன் தன்னிகறற்ற தனி மன்னன்
      சுற்றமாண் புடைமை யாலுஞ் சூழ்கதிர திகிரி யாளுங்
      கொற்றமாங் குடைமை யாலுங் குலத்தது பெருமை
      சுற்றமாண் விஞ்சை யாலுங் கருதிய முடித்த லாலும்
      வெற்றிவே லவனோ டொப்பார் வேந்தர்மற் றில்லை வேந்தே
      அச்சுவக்கிரீவனுடைய தம்பியர்
      தம்பியர் நீல தேரோன் றயங்குதார் நீல கண்டன்
      வம்புயர் மகர பேழ்வாய் வயிரமா கண்டன் வண்டும்
      தும்பியு துவைக்கு தொங்கற் சுகண்டனென் றிவர்கள் கண்டாய்
      வெம்பிய வுருமு தீயுங் கூற்றமும் வெதுப்பு நீரார்
      அவனுக்கு நிகரானவர் பிறர் இலர்
      படையின தமைதி கூழின் பகுதியென் றிவற்றின் பன்மாண்
      புடையவ ரவனொ டொப்பா ரொருவர்மற் றில்லை வேந்தே
      விடயமொன் றின்றி வென்ற விடுசுடை ராழி யாளும்
      நடையவ னுவப்பின் ஞாலம் பிறருழை நடப்ப தென்றான்
      அமைச்சனும் நிமித்திகனும்
      ஆணைநூ லமைச்ச னாவா னரிமஞ்சு வவன தற்றல்
      கோணை நூற் பவரை தன்சொற் குறிப்பின்மே னிறுத்த வல்லான்
      பேணுநூ னிமித்தம் வல்லான் சதவிந்து பெரிய நீரான்
      காணுநூற் புலமை யாருங் காண்பவரில்லை கண்டாய்
      அச்சுவக்கிரீவன் தன்மை
      தன்னலாற் றெய்வம் பேணார் சார்ந்தவர் தானுஞ் சார்ந்தார
      கென்னலா லிவரு குற்றா ரில்லையென் றிரங்கு நீரான்
      பொன்னெலா நெதிய மார பொழிந்திடு கின்ற பூமி
      மன்னெலா மவனை யன்றி வணங்குவ தில்லை மன்னா
      அச்சுவக்கண்டனது தோள்வன்மை
      குளிருவா ளுழுவை யன்னான் குமாரகா லத்து முன்னே
      களிருநூ றெடுக்க லா கற்றிரள் கட கையால்
      ஒளிறுவா ளுழவ னேந்தி யுருட்டிவ டாட வன்றே
      வெளிறிலா கேள்வி யானை விஞ்சைய ரஞ்சி யிட்டார்
      அச்சுவக்கிரீவனைப்பற்றி மேலுஞ் சில கூறுதல்
      முற்றவ முடைமை யாலே மூரிநீ ருலக மெல்லாம்
      மற்றவ னேவல் கேளா மன்னவ ரில்லை மன்னா
      செற்றவ னலித லஞ்சி திறைகொடு தறிவி தன்றே
      நற்றவ நங்கை தோன்றா முன்னநா மாண்ட தெல்லம்
      சுயம்பிரபை பிறந்த பிறகு அவன் திறைகொள்ளவில்லை யென்றல்
      ஈங்குநங் குலக்கொம் பொப்பாள் பிறந்தபி னினிய னாகி
      தேங்கம ழலங்கல் வேலோன் றிறைகொள லொழிந்து செல்லு
      மாங்கவன் றிறங்க ளெல்லா மறிதியா லாணை வேந்தே
      தீங்கியா னுணர்த்திற் றுண்டோ திருவடி தெளிக வென்றான்
      சுயம்பிரபையை அவனுக்கு மணஞ்செய்விக்கலாம் என்றல்
      மற்றவற் குரிய ணங்கை யென்பதன் மனத்தி னோடு
      முற்றுவ துளது சால வுறுதியு முடைய தொக்கும்
      வெற்றிவேல் விஞ்சை யாரு மஞ்சுவர் மின்செய் பைம்பூண்
      கொற்றவ குறிப்புண் டாயிற் கொடுப்பது குணங்கொ லென்றான்
      பவச்சுதன் என்பவன் கூற தொடங்குதல்
      சுடர்மணி மருங்குற் பைங்க சுளிமு களிதல் யானை
      யடர்மணி கதிரும் பைம்பொன் மாலையு மணிந்த சென்னி
      தொடர்மணி பூணி னாற்கு சச்சுதன் சொல்ல கேட்டே
      படர்மணி படலை மாலை பவச்சுதன் பகர லுற்றான்
      வேறு - சச்சுதன் சொல்லியவை உண்மை என்றல்
      நூலா ராய்ந்து நுண்பொறி கண்ணு நொடிவல்லான்
      மேலா ராயு மேதமை யாலு மிகநல்லான்
      தோலா நாவிற் சச்சுதன் சொல்லும் பொருளெல்லாம்
      வேலார் கையாய் மெய்ம்மைய வன்றே மிகையாலோ 70
      அச்சுவக்கிரீவனுக்கு ஒரு குறை கூறுதல்
      தேனும் வண்டு தீதில பாடுஞ் செறிதாரோய்
      யானுங் கண்டே னச்சுவ கண்டேன் றிறமஃதே
      மானங் கொண்ட மாரதர் போரே றனையாயோ
      ரூனங் கண்டே னொட்டினு மொட்டே னுரைசெய்கேன்
      பிறந்த நா குறிப்பு கூறல்
      மான கோதை மாசறு வேலோய் வரவெண்ணி
      நான கோதை நங்கை பிறந்த நாளானே
      வான கோளின் மாண்புணர் வார்கண் மறுவில்லா
      தான கோளிற் சாதக வோலை தலைவைத்தார்
      காவி பட்டங் கள்விரி கானற் கடனாடன்
      மேவி பட்டம் பெற்றவன் காதன் மேயனால்
      ஏவி பட்ட மீந்தவ ரெல்லா மினிதேத்தும்
      தேவி பட்டஞ் சேர்பவ ளன்றே திருவன்னாள்
      இதுவும் அடுத்த செய்யுளும் ஒரு தொடர்
      நங்கோ னங்கை நன்மக னாகி நனிவந்தான்
      தங்கோ னேவ தானிள வேந்தா தலைநின்றான்
      எங்கோ னென்றே யிவ்வுல கேத்து மியறன்னால்
      செங்கோ லின்பஞ் சேர்பவ னன்றே செருவேலோன்
      என்றா லன்ற சாதக வோலை யெழுதிற்றால்
      குன்றா வென்றி குன்றுறழ் யானை கொலைவேலோய்
      நன்றா நங்கை கொன்றிய கா பருவத்தால்
      நின்றா னன்றே யின்றுணை யாகு நிலைமேயான்
      சாத குறிப்பு அச்சுவக்கிரீவனு கமையாமை கூறல்
      ஆழி கோமா னச்சுவ கண்ட னவனுக்கே
      ஊழி கால மோடின வென்னு முரையாலும்
      தாழி கோல போதன கண்ணா டகுவாளோ
      சூழி கோல சூழ்களி யானை சுடர்வேலோய்
      அச்சுவக்கிரீவனுக்கு பட்டத்தரசி யுண்மை கூறல்
      கண்ணார் கோதை காமரு வேய்த்தோ கனகப்பேர்
      மண்ணார் சீர்த்தி சித்திரை யென்னு மடமாதின்
      றெண்ணா ரின்ப காதலி யாகி யியல்கின்றாள்
      பெண்ணார் சாயல் பெற்றன டேவி பெறுபட்டம்
      இரத்தின கண்டன் இளவரசன்
      வானோ ருட்கு மக்களோ ரைஞ்ஞூற் றுவர்தம்முள்
      ஈனோ ருட்கு மிரத்தின கண்ட னெனநின்றான்
      ஏனோ ருட்கு மின்னிள வேந்தா யியல்கின்றான்
      ஊனோ ருட்கு மொண்சுடர் நஞ்சூ றொளிவேலோய்
      மன்னன் வினாதல்
      அன்னா னாயி னாதலி னன்றே யவனன்னால்
      என்னா னாவா னென்றனன் வேந்த னெனலோடும்
      இன்னா னின்னா னிந்நக ராள்வா னிவனென்றே
      அன்னா னன்னாற் கந்நக ரெல்லா மறிவித்தான்
      சிறந்தவனை தெரிந்துகொடு வென்றல்
      மையார் சென்னி மால்வரை யாளும் வயமொய்ம்பிற்
      கையா ரெஃகிற் காளைக டம்மு கமழ்கோதை
      மெய்யா மேவு மேதகு வானை மிகவெண்ணி
      கொய்யா விம்முங் கொங்கலர் தாரோய் கொடுவென்றான் 80
      வேறு - இதுமுதல் கூ உக ஆம் செய்யுள் முடிய ஒரு தொடர் பவச்சுதன் கூற்று
      பவனஞ்சன் மாண்பு
      கேடிலிம் மலையின் மேலாற் கின்னர கீத மாளும்
      தோடிலங் குருவ தொங்கற் சுடர்முடி யரசன் செம்மல்
      பாடல்வண் டிமிரும் பைந்தார பவனஞ்ச னென்ப பாரி
      தாடலம் புரவி வல்ல அரசிளங் குமர னென்றான்
      அமிழ்தபதி நாட்டு வேகரதன்
      அளந்தறி வரிய செய்கை யமிழ்தமா பதியை யாளும்
      வளந்தரு வயிர பைம்பூண் மன்னவன் சிறுவன் வண்டார்
      விளங்கொளி யுருவ திண்டோ ள் வேகமா ரதனை யன்றே
      இளங்களி யுழுவை யாக விருநிலம் புகழ்வ தென்றான்
      மேகபுரத்து பதுமரதன்
      வேழத்தாற் பொலிந்த சோலை மேகமா புரம தாளும்
      ஆழித்தே ரரவ தானை யரசர்கோன் புதல்வ னந்தார
      பாழித்தோ ளுருவ செங்க பதுமத்தேர பெயரி னானை
      ஊழித்தீ யென்று வேந்த ருட்குவ துருவ தாரோய்
      இரத்தினபுர தரசன் மகன் சுவர்ணரதன்
      இலங்கொளி மாடவீதி யிரத்தின புரம தாளும்
      உலங்கெழு வயிர திண்டோ ளொளிமுடி யரசன் செம்மல்
      அலங்கலம் புரவி தானை யருங்கல தேரின் பேரன்
      குலங்கெழு குரிசில் கண்டாய் கொண்டல்வா னுருமோ டொப்பான்
      கீதமாபுரத்தரசன் மகன் அரிகண்டன்
      நங்கண்மால் வரையின் மேலோன் நன்னகர் கீத மென்னும்
      திங்கண்மால் புரிசை வேலி செழுநக ரரசன் செம்மல்
      அங்கண்மா ஞால மாளு மரிகண்ட னவனை விண்மேல்
      செங்கண்மான் முனியு மேனுஞ் செய்வதொன் றில்லை கண்டாய்
      திரிபுர அரசன் மகன் நளிதாங்கன்
      சேந்தெரி செம்பொன் வீதி திரிபுர மதனை யாளும்
      வாய்ந்தெரி வயிர பைம்பூண் மன்னவன் புதல்வன் மல்லா
      டேந்துதோ ளரசர் போரே றிவனளி தாங்க னென்பன்
      காய்ந்தெரி கனலின் வெய்யோன் கல்வியாற் கடலோ டொப்பான்
      சித்திரகூடத்து அரசன் ஏமாங்கதன்
      செந்தளிர் புதைந்த சோலை சித்திர கூட மாளும்
      அந்தளி ரலங்கன் மாலை யரசர்கோன் சிறுவ னந்தார்
      இந்திரன் புதல்வ னன்னா னேந்தலே மாங்க தற்கிம்
      மந்திர வுலகின் வாழு மன்னர்மா றில்லை மன்னா
      அச்சுவபுரத்து கனக சித்திரன்
      அருமணி யடுத்த வீதி யச்சுவ புரம தாளும்
      திருமணி திகழும் பூணான் பெருமகன் சிறைவண் டென்னும்
      கருமணி துதைந்த பைந்தார கனகசி திரனை யன்றே
      ஒருமணி திலத மாக வுடையது நிலம தென்றான்
      சிரீ நிலையத்தரசன் மகன் சித்திராதன்
      சீரணி முழவ மோவா சிரீநிலை யதனை யாளும்
      காரணி தடக்கை வேந்தன் கான்முளை கனபொ னார்ந்த
      தேரணி யரவ தானை சித்திர தேரின் பேரான்
      தாரணி மார்ப னன்றே தரணிக்கோர் திலத மாவான்
      கனக பல்லவத்தரசன் மகன் சிங்ககேது
      கற்றவர் புகழுங் சீர்த்தி கனகபல் லவத்தை யாளும்
      கொற்றவன் சிறுவன் கோல குங்கு குவவு தோளான்
      செற்றவர செருக்குஞ் செய்கை செருவல்லான் சிங்க கேது
      மற்றவன் பிறந்த பின்னா மண்மகள் மகிழ்ந்த தென்றான் 90
      இந்திர சஞ்சயத்தரசன் மகன் அருஞ்சயன்
      இஞ்சிசூழ் ழெரிபொன் மாட திந்திரன் மிசைந்த நா
      சஞ்சய முடைய கோமான் றாண்முளை தரணி யெல்லாம்
      அஞ்சுநீ ரலங்கல் வேலா னருஞ்சய னவனை நங்கண்
      மஞ்சுசூழ் மலைக்கோர் சூளா மணியென கருது மன்னா
      எங்கிவர் தம்முள் யாவ ரிலங்கிரும் பவழ செவ்வா
      கோங்கிவர் குவிமென் கொங்கை கொம்பினு குரிய காளை
      ஆங்கவன் றன்னை யாரா தறிந்தருள் செய்க வென்றான்
      வாங்கிரும் பரவை முந்நீர் மணிகொழி தனைய சொல்லான்
      வேறு - பவச்சுதன் கூறியவற்றிற்கு எல்லாரும் உடன்படுதல்
      மன்னர் நீண்முடி மென்மணி தொத்தொளி
      துன்னு சேவடி யாற்கு சுருங்கவே
      பன்னு கேள்வி பவச்சுதன் சொல்லலும்
      அன்னதே யென்றெல் லார்களு மொட்டினார்
      சுதசாகரன் என்பவன் சொல்லுதல்
      அல்லி நாண்மலர தாருமு தாரமும்
      வல்லி யாங்கனி சாந்தும் வனைந்துராய்
      மல்லி னான்மலி மார்பற்கு மற்றிவை
      சொல்லி னான்சுத சாகர னென்பவே
      பவச்சுதன் கூறியது உண்மை என்றல்
      ஆழி யாள்கின்ற வச்சுவ கண்டன்மேல்
      பாழி யாகின்ற திண்டோ பவச்சுதன்
      சூழி யானையி னாய் சொல பட்டன
      ஊழி யாருரை யும்மொ துள கண்டாய்
      பிறருக்கு கொடுப்பினும் பகையாகுமென்றல்
      ஆயி னுஞ்சிறி துண்டறி வண்டினம்
      பாயி னும்பனி கும்படர கோதைதன்
      வேயி னும்பணை கின்றமென் றோள்பிறர்
      தோயி னும்பகை யாஞ்சுடர் வேலினாய்
      அச்சுவகண்டன் ஆற்றலிற் சிறந்தவனென்றல்
      வண்ட வாமுடி மன்னருண் மற்றவன்
      தண்ட மாற்றுநர் தாமிலை யாற்சிறி
      துண்டி யானுரை பானுறு கின்றது
      விண்டு வாழுநர் மேனகு வேலினாய்
      சுரேந்திரகாந்தத்து மேகவாகனன்
      போக மாண்டவி சேடியோர் பொன்னகர
      கேக நாயக னாயினி தாள்பவன்
      மேக வாகன னென்றுளன் வீழ்மத
      வேக மால்களி றும்மிகு வேலினான்
      மேகவாகனன் மனைவி மேகமாலினி
      நாக மாலைகண் மேனகு வண்டினம்
      ஏக மாலைய வாயிசை கைவிடா
      தோகை மாமயில் போற்சுரி கூந்தலாள்
      மேக மாலினி யென்றுரை மிக்குளாள்
      அவர்களுடைய மகன் விச்சுவன்
      தேவி மற்றவ டெய்வம் வழிபட
      மேவி வந்தனன் விச்சுவ னென்பவன்
      ஓவி றொல்புக ழானுளன் கூற்றமும்
      ஏவி நின்றினி தாண்டிடு மீட்டினான் 100
      விச்சுவன் பெருமை
      மையில் வானுல காண்டுமண் ணோர்களு
      குய்யும் வாயி லாணுர்த்திய தோன்றிய
      ஐய னற்பிற வாரஞர் நீங்கியிவ்
      வைய மாயதெல் லாம்வளர் கின்றதே
      இவ்வுலகிற்கருள் செய்தபின் மீண்டும் தேவருலகை யடைவான்
      மங்குல் வானுல காண்டு வரத்தினால்
      இங்கு வந்தென னீணண்டளி யீந்தபின்
      திங்கள் வானொளி யிற்றிகழ் சோதியா
      தங்கு வானுல கிற்றகை சான்றதே
      தன்னி னாய்விளை வித்திரு ளைத்தவிர
      தின்ன னாகவென் றெண்ணிய வெண்ணமோ
      டன்ன னாதலி னாலவன் மேற்பிறர்
      என்ன ரேனுமின் னாதன வெண்ணிலார்
      சுயம்பிரபைக்கு விச்சுவன் தகுந்தவன் ஆவன் எனல்
      காம்பின் வாய்ந்தமென் றோளி காதலன்
      தீம்பன் மாலைநன் மார்பகஞ் சேருமேல்
      ஆம்பன் மாலையு மாய்கதிர திங்களும்
      தாம்பன் மாலையுஞ் சார்ந்த தனைத்தரோ
      விச்சுவன் தங்கை
      நம்பி தங்கை நகைமலர கற்ப
      கொம்பி னன்னவன் கொங்கணி கூந்தலாள்
      அம்பி னீண்டரி சிந்திய மாக்கயல்
      வம்பி னீண்டமை வாணெடுங் கன்ணினாள்
      அவளுடைய பெயர் சோதிமாலை
      கோதின் மாலைகள் மேற்குதி கொண்டெழு
      கீத மாலைய கின்னர வண்டினம்
      ஊதி மாலைய வாயுறை யுங்குழல்
      சோதி மாலையென் பாள்சுடர பூணினாள்
      சோதிமாலை அருக்ககீர்த்திக்குரியவள் எனல்
      வெம்பு மால்களி யானை விலக்குநீர்
      நம்பி ஞாயிறு சேர்பெய ராற்கணி
      அம்பி னீளரி வாணெடுங் கண்ணவள்
      வம்பு சேர்முலை வாரி வளாகமே
      சுதசாகரன் முடிவுரை
      இன்ன வாறிசை யப்பெறின் யாவரும்
      என்ன வாறு மிகப்பவ ரின்மையால்
      அன்ன வாறரு ளுண்டெனி லாய்ந்தியான்
      சொன்ன வாறுகொண் டீசுடர் வேலினோய்
      சுமந்திரி என்பவன் கூறத்தொடங்குதல்
      கொங்குவண் டலைந்த தாரான் குறிப்பறி திவைக ளெல்லாம்
      அங்கவன் மொழிந்த பின்னை யவனையு மமைதி கூறி
      நங்கைதன் றாதை தோழர் நால்வரு ணால்வ னாவான்
      தொங்கல துணர்கொள் மார்பிற் சுமந்திரி சொல்ல லுற்றான்
      எல்லோரையும் விலக்கி கூறுதல்
      அண்ணலங் களிகொள் யானை யச்சுவ கண்டன் மூத்தாற்
      கெண்ணலு தகுவ தன்றா லிவன்பணி யகற்ற லாற்றா
      கண்ணலங் கவரும் வேலோர கீயினுங் கரும மன்றால்
      பெண்ணலங் கனிந்த பேதை யிருப்பதும் பெருமை யன்றே 110
      விச்சுவனை விலக்கி கூறுதல்
      சூழ்கதிர புரிசை வேலி சுரேந்திர மாளும்
      தாழ்கதி ரார மார்பிற் றமனி குழையி னான்றன்
      போழ்கதிர கடவுள் போலும் புதல்வனு குரிமை செய்ய
      தாழ்கதிர் விலங்க லாளு மரசவஃ தரிது கண்டாய்
      விலக்கியதற்கு காரணம் காட்டுதல்
      மங்கையர் முகத்தி னீண்டு மைகடை மதர்ப்ப மாந்தி
      அங்கயல் பிறழ்வ போலு மையரி யடர்த்த வாட்கண்
      பங்க செங்க ணான்மேற் படைத்தொழில் பயின்ற போழ்தும்
      தங்கிய மனத்த னாகி தளர்விலன் றவத்தின் மிக்கான்
      விச்சுவன் இயல்பு
      மண்கனி முழவ சீரு மடந்தையர் தூக்கு மற்றும்
      பண்கனி பாட லாடற் பாணியும் பயின்று மேவான்
      விண்கனி தனைய வின்ப வெள்ளமும் வெறுத்து நின்றான்
      கண்கனி யுருவ காளை கடவுளர் தகையன் கண்டாய்
      மேகவாகனன் விச்சுவன் வரலாறு கேட்டல்
      செறிகழ லவற்கு தாதை சித்திர கூட மென்னும்
      அறிவரன் கோயி லெய்தி யணிவிழ வயர்த்த காலை
      இறுதியி லவதி ஞானி யசோதர னென்னும் பேர
      உறுவனை வணங்கி கேட்டான் மகன்றிற முலங்கொ டோ ளான்
      அவதிஞானி விச்சுவனது பழம்பிறப்பு வரலாறு கூறுதல்
      பங்க பழன வேலி பவகிரி யரசன் பைந்தார்
      தங்கிய தடங்கொண் மார்பன் சயசேன னவற்கு தேவி
      செங்கய னெடுங்க செவ்வா பிரீதிமதி பயந்த காளை
      வெங்களி யானை வல்ல விசயப திரனென் பானே
      இதுவுமது -
      மந்திர தரசர் கோவே மற்றவன் வையங் காக்கும்
      தந்திர துறந்து நோற்று மறைந்தசா சார மென்னும்
      இந்திர வுலக மெய்தி யேழொடீ ரைந்து முன்னீர்
      அந்தர கால தேவர கரசனா யாண்டு வந்தான்
      ஆதலா லமர போக நுகர்ந்தவ னரைசர் செல்வம்
      போதுலா மலங்கன் மார்ப பொருளென மருளல் செல்லான்
      தீதெலா மகல நோற்று சிவகதி சேரு மென்ற
      கோதிலா முனிவன் சொன்ன வுரையிவை கூற கேட்டாம்
      இறைநிலையை எய்துவார்க்கு உறவினர் வேண்டியவரல்லர்
      அம்மையாற் றவங்க டாங்கி யலர்ந்தநல் லறிவி னாலும்
      இம்மையா னுடம்பு நீங்கி யிகந்துபோ மியற்கை யாலும்
      செம்மையாற் கடவு டானஞ் சேர்வதே சிந்தை யாற்கு
      மெய்ம்மையாற் கரு சுற்றம் வேண்டுவ தில்லை வேந்தே
      சுயம்பிரபைக்கு சுயம்வரமும் கூடாது என்றல்
      வாரணி முரச மார்ப்ப வயிரொடு வளைக ளேங்க
      தாரவர் குழாங்க ளீண்ட சயமர மறைது மேனும்
      ஆரவி ராழி யனை யஞ்சுது மறிய லாகா
      காரவி தடக்கை வேந்தே கழலவர் கரும மென்றான்
      ஊழ்வினையின் ஆற்றல் உரைத்தல்
      ஒன்றுநாங் கருதி சூழி னூழது விளைவு தானே
      கன்றிநாங் கருதிற் றின்றி மற்றோர்வா றாக நண்ணும்
      என்றுநா துணிந்த செய்கை யிதன்றிற தென்ன மாட்டாய்
      இன்றுநா துணிது மாயி னினிச்சிறி துரைப்ப னென்றான் 120
      சதவிந்து என்னும் நிமித்திகனை கலந்தெண்ணி ஆவனபுரிவோம் என்றல்
      வீழ்புரி விளங்கு நூலோய் மேலுநங் குலத்து ளார்க
      கூழ்புரி துறுதி கூறு முயர்குல மலர நின்றான்
      தாழ்புரி தயங்கு நுண்ணூற் சதவிந்து மொழிந்த வாற்றால்
      யாழ்புரி மழலை யாள் கண் ணாவதை யறிது மென்றான்
      சுமந்தரி உரையை மற்றையோர் உடன்பட்டு கூறல்
      என்றவன் மொழிந்த போழ்தி னேனையா ரினிதி னோக்கி
      மின்றவழ் விளங்கு வேலோய் மெய்யினு மேவல் வேண்டும்
      சென்றவன் மனையு ணீயே வினவென சேனை வேந்தன்
      நன்றவர் மொழிந்த வெல்லா நல்லவா நயந்து கேட்டான்
      அமைச்சர்கள் அரசனை அவையை கலைக்குமாறு கூறுதல்
      இந்திர னனைய நீரோ யினிப்பிறி தெண்ணல் வேண்டா
      மந்திர நீளு மாயின் வருவன வறிய லாகா
      சந்திரன் றவழ நீண்ட தமனி சூல நெற்றி
      அந்தர திவளு ஞாயிற் கோயில்பு கருளு கென்றார்
      அரசன் அரண்மனையை அடைதல்
      மந்திர கிழவர் தம்மை மனைபுக விடுத்து மன்னன்
      சுந்தர சுரும்பு தேனுஞ் சூழ்கழ னிரையு மார்ப்ப
      வந்தர மகளிர் போல்வார் வரன்முறை கவரி வீச
      அந்தர கடைக ணீங்கி யகனக ரருளி புக்கான்
      வேறு - நண்பகலாதல்
      மிகுகதிர் விலங்கலார் வேந்தன் றேனுடை
      துகுகதிர் மண்டப மொளிர வேறலும்
      தொகுகதிர் சுடுவன பரப்பி சூழொளி
      நகுகதிர் மாண்டில நடுவ ணின்றதே
      கண்டிரள் கழைவளர் கரும்பு கைமிகு
      தொண்டிரள் வெள்ளிலை யுரிஞ்சு மோடைமா
      வெண்டிரண் மணிபுடை சிலம்ப விட்டன
      வண்டிரள் கிளையொடு வளைக ளார்த்தவே
      ஒலிவிழா வண்டின மூத வூறுதேன்
      மலிவிழா பிணையலு மணங்கொள் சாந்தமும்
      பலிவிழா பதாகையும் பரந்து பாடுவார்
      கலிவிழா கழுமின கடவு டானமே
      குண்டுநீர குழுமலர குவளை பட்டமும்
      மண்டுநீர் மரகத மணிக்கல் வாவியும்
      கொண்டுநீ ரிளையவர் குடை கொங்கொடு
      வண்டுநீர திவலையின் மயங்கி வீழ்ந்தவே
      பங்க துகள்படு பழன நீர்த்திரை
      மங்கையர் முலையொடு பொருத வாவிகள்
      அங்கவ ரரிசன மழித்த சேற்றினும்
      குங்கு குழம்பினுங் குழம்பு கொண்டவே
      அங்கவள்வா கயம்வல ராம்ப றூம்புடை
      பொங்குகா டேர்பட ஞெறித்து பூவொடு
      கொங்கைவா குழலவர் குளிப்ப விட்டன
      திங்கள் வாண் முகவொளி திளைப்ப விண்டவே 130
      மாயிரும் பனித்தடம் படிந்து மையழி
      சேயரி நெடுமலர கண்கள் சேந்தென
      தாயரை மறைக்கிய குவளை தாதுதேன்
      பாயமோ திறைஞ்சினார் பாவை மார்களே
      ஈரணிப்பள்ளி வண்ணனை
      சந்தன துளித்தலை ததும்ப சாந்தளை
      தந்தர தசைப்பன வால வட்டமு
      மெந்திர திவலையு மியற்றி யீர்மணல்
      பந்தரு பாலிகை குவளை பாய்த்தினார்
      குருமணி தாமரை கொட்டை சூடிய
      திருமணி பீடமுஞ் செதுக்க மாயவும்
      பருமணி பளிங்கென விளங்கு வான்பலி
      அருமணி கொம்பனா ரலர வூட்டினார்
      பொழுதுணர்மாக்கள் நாழிகை கூறுதல்
      அன்னரும் பொழுதுகண் ணகற்ற வாயிடை
      பன்னருங் காலநூல் பயின்ற பண்புடை
      கன்னலங் கருவியோர் கழிந்த நாழிகை
      மன்னவ னடிமுத லுணர்த்தி வாழ்த்தினார்
      மன்னன் உண்ணுதல்
      வாரணி முலையவர் பரவ மன்னவன்
      ஈரணி பள்ளிபு கருளி னானிர
      தோரணி யின்னிய மிசைத்த வின்பமோ
      டாரணி தெரியலா னமிர்த மேயினான்
      அரசன் தெருவில் நடந்து செல்லுதல்
      வெள்ளிழை பொலிந்தொளி துளும்பு மேனியன்
      வள்ளிதழ் மல்லிகை மலர்ந்த மாலையான்
      அள்ளிதழ புதுமல ரடுத்த வீதிமேல்
      கள்ளிதழ கண்ணியான் காலி னேகினான்
      அரசன் நடந்து செல்லுதல்
      பொன்னலர் மணிக்கழல் புலம்ப தேனினம்
      துள்ளலர் தொடையலிற் சுரும்போ டார்த்தெழ
      மன்னவன் னடத்தொறு மகர குண்டலம்
      மின்மலர திலங்குவில் விலங்க விட்டவே
      மெய்காவலர் வேந்தனை சூழ்தல்
      நெய்யிலங் கெஃகினர் நிறைந்த விஞ்சையர்
      கையிலங் கீட்டியர் கழித்த வாளினர்
      மெய்யிலங் குறையினர் விசித்த கச்சையர்
      வையகங் காவலன் மருங்கு சுற்றினார்
      அரசன் நிமித்திகன் வாயிலை அடைதல்
      சுரும்புசூழ் பிணையலுஞ் சுண்ண மாரியும்
      கரும்புசூழ் கிளவியர் சொரிந்து கைதொழ
      நிரம்புநூ னிமித்திகன் மாட நீள்கடை
      அரும்புசூழ் தெரியலா னருளி னெய்தினான்
      நிமித்திகன் அரசனை வரவேற்றல்
      எங்குலம் விளங்கவி கருளி வந்தவெங்
      கொங்கலர் தெரியலாய் கொற்றங் கொள்கென
      மங்கல வுழைக்கலம் பரப்ப மன்னனு
      கங்கலர் கேள்வியா னாசி கூறினான்
      அரசன் மண்டபத்தை அடைதல்
      கொண்டமர தகிற்புகை கழுமி கோதைவாய்
      விண்டமர தொழுகுவ மதுக்கள் வீழ்ந்துராய்
      வண்டமர தொலிசெய மருங்குல் கொண்டதோர்
      மண்டப மணித்தல மன்ன னெய்தினான்
      அரசன் தான்வந்த காரியத்தை எண்ணுதல்
      தழையவிழ் சந்தன பொதும்பு போன்மது
      மழைதவழ் மண்டப மலிர வீற்றிரு
      துழையவர் குறிப்பறி தகல வொண்சுடர
      குழையவன் குமரிதன் கரும மென்னினான்
      நிமித்திகன் பேச தொடங்குதல்
      கனைத்தெதிர் கதிர்மணி கடகஞ் சூடிய
      பனைத்திர ளனையதோ படலை மாலையான்
      மனத்தினை மறுவினூல் வாயி னாற்சொல
      நினைத்திவை விளம்பினா னிமித்த நீதியான்
      அரசன் அடைந்த காரியத்தை சதவிந்து கூறுதல்
      மணங்கமழ் மதுமல ரலங்கன் மாலைபோல்
      வணங்கெழி னுடங்கிடை மாழை நோக்கிநங்
      கணங்குழை கருமமாங் கருதிற் றென்றனன்
      அணங்கெழில் விரிந்தநூ லலர்ந்த நாவினான்
      தெருவில் வலங்கொண்டு சென்றவள் திருமகள் என்றல்
      வெண்ணிலா விரிந்தென விளங்கு மாலையள்
      கண்ணிலாங் கவர்தகை கண்ணி மன்னனை
      மண்ணிலா மறுகிடை வலங்கொண் டெய்தினாள்
      எண்ணிலாங் கதுதிரு வெதிர்ந்த வன்ணமே
      பொன்சுலாஞ் சுடரிழை பொறுத்த பூண்முலை
      மின்சுலா நுடங்கிடை மெல்லி யாடிறம்
      என்சொலா லின்றியா னியம்பு நீரதோ
      மன்சுலா வகலநின் றலரும் வாளினாய்
      சுயம்பிரபைக்குரிய மணமகனை மாபுராணம் கூறுகிறது என்றல்
      ஆதிநா ளறக்கதி ராழி தாங்கிய
      சோதியான் றிருமொழி விளக்கி தோன்றுமால்
      போதுவார் புரிகுழற் பொலங்கொம் பன்னவிம்
      மாதராள் வனமுலை குரிய மைந்தனே
      சதவிந்து மொழியைக்கேட்ட அரசன் மகிழ்ச்சி அடைதல்
      அம்மயி லனையவ டிறத்தி னாரியன்
      செம்மையில் விளம்பிய செல்வங் கேட்டலும்
      மெய்ம்மையிற் றெரிந்தொளி துளும்பு மேனியன்
      பொய்ம்மையில் புகழவன் பொலிந்து தோன்றினான்
      மாபுராணத்தில் கூறப்பட்டிருத்தலைப்பற்றி அரசன் கேட்டல்
      முன்னிய வுலகுகண் விடுத்த மூர்த்தியான்
      மன்னிய திருமொழி யகத்து மாதராள்
      என்னைகொல் விரிந்தவா றெனலு மன்னனு
      கன்னவ னாதிமா புராண மோதினான்
      உலகங்கள் எண்ணிறந்தன என்றல்
      மூவகை யுலகினு ணடுவண் மூரிநீர
      தீவின தகலமுஞ் சிந்து வட்டமும்
      ஓவல வொன்றுக்கொன் றிரட்டி கண்ணறை
      ஏவலாய் விரிந்தவை யெண்ணி றந்தவே
      உலக அமைப்பு உரைத்தல்
      மந்தர நெடுமலை நடுவின் வாய்ந்தது
      சுந்தர வேதிகை மருங்கு சூழ்ந்தது
      நந்திய நளிசினை நாவன் மாமரம்
      அந்தர துடையதிவ் வவனி வட்டமே
      உலகில் உள்ளன
      குலகிரி யாறுகூர் கண்ட மேழ்குலாய்
      மலைதிரை வளர்புன லேழி ரண்டதா
      கொலைதரு வேலினாய் கூற பட்டதிவ்
      வலைதிரை நெடுங்கட லவனி வட்டமே
      மாற்றறு மண்டில மதனு ளூழியால்
      ஏற்றிழி புடையன விரண்டு கண்டமாம்
      தேற்றிய விரண்டினு தென்மு கத்தது
      பாற்றரும் புகழினாய் பரத கண்டமே
      பரதகண்டம் மூன்று ஊழிக்காலம் இன்ப நிலமாக இலங்கி நின்றது
      மற்றது மணிமய மாகி கற்பகம்
      பொற்றிர ளணிபொழிற் போக பூமியாய்
      முற்றிய வூழிமூன் றேறி மீள்வழி
      பிற்றகை யூழிவ பிரமர் தோன்றினார்
      போக காலம் கழிதல்
      வெங்கதிர பரிதியும் விரைவு தண்பனி
      அங்கதிர் வளையமு மாதி யாயின
      இங்கிவர் படைத்தன ரிழிந்த திவ்வகை
      பொங்கிய புரவியாய் போக காலமே
      அரு கடவுள் தோற்றம்
      ஊழிமூன் றாவதோ திறுதி மன்னுயிர்
      சூழ்துயர் பலகெட சோதி மூர்த்தியாய்
      ஏழுய ருலகுடன் பரவ வீண்டருள்
      ஆழியங் கிழமையெம் மடிக டோ ன்றினாய்
      உலகம் அருகக்கடவுளின் வழிப்பட்டது
      ஆரரு டழழுவிய வாழி காதியாம்
      பேரருண் மருவிய பிரான்றன் சேவடி
      காரிருள் கழிதர கண்க வின்றரோ
      சீரருள் சரணென வுலகஞ் சேர்ந்ததே
      அருகக்கடவுள் அறம் முதலியவற்றை ஆக்குதல்
      அலந்தவ ரழிபசி யகற்றும் வாயிலும்
      குலங்களுங் குணங்களுங் கொணார்ந்து நாட்டினான்
      புலங்கிளர் பொறிநுகர் விலாத புண்ணியன்
      நலங்கிளர் திருமொழி நாத னென்பவே
      பரதன் என்னும் அரசன்
      ஆங்கவன் றிருவரு ளலர சூடிய
      வீங்கிய விரிதிரை வேலி காவலன்
      ஓங்கிய நெடுங்குடை யொருவ னாயினான்
      பாங்குயர் பரிதிவேற் பரத னென்பவே
      பரதன் அரு கடவுளை போற்றி பணிதல்
      ஆழியா லகலிடம் வணக்கி யாண்டவன்
      பாழியா நவின்றதோ பரத னாங்கொர்நாள்
      ஊ ழியா னொளிமல ருருவ சேவடி
      சூழிமால் யானையான் றொழுது வாழ்த்தினான்
      பரதன் அரு கடவுளை போற்றி எதிர்கால நிகழ்ச்சி கேட்டல்
      கதிரணி மணிமுடி வணங்கி காவலன்
      எதிரது வினவினா னிறைவன் செப்பினான்
      அதிர்தரு விசும்பிடை யமிர்த மாரிசோர்
      முதிர்தரு முகிலிடை முழங்கிற் றென்னவே
      அரு கடவுள் கூறுதல்
      என்முத லிருபத்தீ ரிருவர் நாதர்கள்
      நின்முத லீரறு வகையர் நேமியர்
      மன்முதல் பலவர்கே சவர்கண் மாற்றவர்
      தொன்முத லவர்தொகை யொன்ப தொன்பதே
      முதல் வாசுதேவனை மொழிதல்
      மன்னவ நின்மகன் மரிசி மாற்றிடை
      பொன்னவிர் போதன முடைய பூங்கழல்
      கொன்னவில் வேலவன் குலத்து டோ ன்றினான்
      அன்னவன் கேசவர காதி யாகுமே
      அவன் அச்சுவனை கொன்று அரசாட்சியை கைப்பற்றுவான் என்றல்
      கேசவ னார்திறங் கிளப்பின் வெண்மலை
      காசறு வனப்பினோர் கன்னி யேதுவால்
      ஆசர வச்சுவ கிரீவ னாவியும்
      தேசறு திகரியுஞ் செவ்வன வெளவுமே
      பிறகு அவன் கடவுள் ஆவான் என்றல்
      தேரணி கடற்படை திவிட்டன் சென்றுபின்
      ஆரணி யறக்கதி ராழி நாதனாம்
      பாரணி பெரும்புகழ பரத வென்றனன்
      சீரணி திருமொழி தெய்வ தேவனே
      அரு கடவுள் கூறியதை பரதன் கேட்டு மகிழ்ந்தான் என்று நிமித்திகன் முடித்தல்
      ஆதியு மந்தமு நடுவு நம்மதே
      ஓதநீ ருலகுடை யுரிமை யென்றரோ
      காதுவே லரசர்கோ களிப்புற் றானிது
      போதுசே ரலங்கலாய் புராண நீர்மையே
      மாபுரணத்து கூறிய வாசுதேவனே திவிட்டன் என்றல்
      அன்னணம் புராணநூ லகத்து தோன்றிய
      கன்னவி விலங்குதோ காளை யானவன்
      மின்னவில் விசும்பின் றிழிந்து வீங்குநீர்
      மன்னிய வரைப்பக மலிர தோன்றினான்
      இதுவுமது
      திருவமர் சுரமைநா டணிந்து செம்பொனால்
      பொருவரு போதன முடைய பூங்கழல்
      செருவமர் தோளினான் சிறுவ ராகிய
      இருவரு ளிளையவ னீண்ட நம்பியே
      அவனுக்கு சுயம்பிரபை உரியவள் என்றல்
      கானுடை விரிதிரை வையங் காக்கிய
      மானுட வுடம்பினான் மறைந்து வந்தவ
      தேனுடை யலங்கலான் றெய்வ மார்பகம்
      தானடை தமர்வதற் குரிய டையலே
      திவிட்டனால் அடையவிருக்குஞ் சிறப்பை கூறுதல்
      ஆங்கவற் கீந்தபி னாழி தாங்கிய
      ஈங்கவற் கொன்றுன கிரண்டு சேடியும்
      தாங்கிய திருவினாற் றருமற் றென்றலும்
      வீங்கிய வுவகையன் வேந்த னாயினான்
      சதவிந்து தான் கூறும் நிமித்தத்திற்கு அடையாளமாக திவிட்டன் ஒரு சிங்கத்தின் வாயை
      பிளப்பான் என்றல்
      கொங்கலர் தெரியலான் றிறத்திற் கொள்குறி
      இங்கியா னிசைத்ததே யமையு மல்லதோர்
      திங்கணா ளகவையிற் றிவிட்ட னாங்கொரு
      சிங்கம்வாய் பிளந்திடு தெளியீ தென்னவே
      நிமித்திக னுரைத்தது நிறைந்த சோதியான்
      உமைத்தகை யிலாததோ ருவகை யாழ்ந்துகண்
      இமைத்ததில னெத்துணை பொழுது மீர்மலர
      சுமைத்தகை நெடுமுடி சுடர தூக்கினான்
      சடியரசன் சதவிந்துவிற்கு பரிசில் வழங்குதல்
      இருதில தலைமக னியன்ற நூற்கடல்
      திருநிதி செல்வன செம்பொன் மாரியா
      சொரினிதி புனலுடை சோதி மாலையென்
      றருநிதி வளங்கொணா டாள நல்கினான்
      அரசன் தன் மனைவி வாயுவேகைக்கு செய்தி கூறுவித்தல்
      மன்னவன் பெயர்ந்துபோய் வாயு வேகைதன்
      பொன்னகர் புக்கனன் பொழுதுஞ் சென்றது
      கன்னிதன் பெருமையுங் கரு சூழ்ச்சியும்
      அன்னமென் னடையவ கறி கூறினான்
      மக்கட்பேற்றின் மாண்பு கூறல்
      தொக்கின மலர்த்துதை விலாத சோலையும்
      புக்கிள தாமரை நகாத பொய்கையும்
      மிக்கிளம் பிறைவிசும் பிலாத வந்தியும்
      மக்களை யிலாததோர் மனையு மொக்குமே
      குலத்தை கற்பக மரமா கூறுதல்
      தலைமகள் றாடன காக சாகைய
      நிலைமைகொண் மனைவியர் நிமிர்ந்த பூந்துணர்
      நலமிகு மக்களா முதியர் தேன்களா
      குலமிகு கற்பகங் குளிர்ந்து தோன்றுமே
      நன்மக்களை பெறுதல் நங்கையர்க்கு அருமை என்றல்
      சூழிநீண் முகத்தன துளைக்கைம் மாவொடு
      மாழைநீண் மணியிவை யெளிய மாண்பினால்
      வாழுநீர் மக்களை பெறுதன் மாதரார
      காழிநீர் வையக தரிய தாவதே
      நின்மகள் விளக்கு போன்றவள் என்றல்
      தகளிவா கொழுங்சுடர் தனித்துங் கோழிருள்
      நிகளவா பிளந்தகஞ் சுடர நிற்குமே
      துகளிலா சுடர்மணி துளும்பு பூணினாய்
      மகளெலா திசைகளு மலிர மன்னினாள்
      மகளாற் குலஞ் சிறப்படைந்தது என்றல்
      வலம்புரி வயிற்றிடை பிறந்த மாமணி
      நலம்புரி பவித்திர மாகு நாமநீர்
      பொலம்புரி மயிலனாய் பயந்த பூங்கொடி
      குலம்புரி தவர்க்கெலாங் கோல மாகுமே
      நீ சிறப்படைந்தாய் எனல்
      மக்களை யிலாதவர் மரத்தொ டொப்பவென்
      றொக்கநின் றுரைப்பதோ ருரையு மூய்த்துநீர்
      நக்கவா னிளம்பிறை வளர்ந்த நாட்கதிர
      செக்கர்வா னனையதோர் திருவு மெய்தினாய்
      சுயம்பிரபையின் பெருமை
      மாவினை மருட்டிய நோக்கி நின்மகள்
      பூவினுண் மடந்தைபொற் பூவை நாளொளி
      தேவனு கமிர்தமா தெய்வ மாமென
      ஓவினூற் புரோகித னுணர வோதினான்
      வாயுவேகை பதிலுரைக்க தொடங்குதல்
      மத்தவார் மதகளிற் றுழவன் மற்றிவை
      ஒத்தவா றுரைத்தலு மூவகை கைம்மிக
      முத்தவாண் முகிழ்நகை யடக்கி மொய்குழல்
      தொத்துவார் பிணையலா டொழுது சொல்லினாள்
      சுயம்பிரபை நின்னருளினாற் சிறந்தவளாயினாள் என்றல்
      மின்னவிர் மணிமுடி வேந்தர் வேந்தவி
      கன்னிநின் னருளினே கருத பட்டனள்
      மன்னவ ரருளில ராயின் மக்களும்
      பின்னவர் பெறுவதோர் பெருமை யில்லையே
      இதுவும் அது
      பிடிகளை மகிழ்களிற் றரசர் பெய்ம்மலர்
      முடிகளின் மணிபொர முரலு மொய்கழல்
      அடிகள தருளினா லம்பொன் சாயலி
      கடிகமழ் குழலினாள் கவினு மெய்தினாள்
      அரசன் இன்புற்றிருத்தல்
      திருமனை கிழத்திதன் றேங்கொள் சின்மொழி
      மருமணி முடியினான் மகிழ்ந்து மற்றவள்
      பருமணி பூண்முலை பாய மார்பிடை
      அருமணி தெரியறே னழிய வைகினான்
      மறுநாள் மன்னன் மன்றங்கூடி பேசுதல்
      மற்றைநாண் மகனையு மமைச்சர் தம்மையும்
      கொற்றவா டடக்கையான் கூவி கொண்டிரு
      திற்றியான் கருதிய தென்று தொல்லைநூல்
      கற்றநா வலனது கதையுஞ் சொல்லினான்
      சுயம்பிரபை மணச்செய்தியை அரசன் சொல்ல அமைச்சர் பதில் கூறத்தொடங்குதல்
      வீங்கிய முலையவ டிருவும் வெம்முலை
      கோங்கிய முகிலவ னுரிய பெற்றியு
      தாங்கிய புகழவன் மொழி தாரவர்
      தேங்கிய வுவகையர் தெரிந்து சொல்லினார்
      பயாபதி யரசனிடம் தூது அனுப்புவோம் என்றல்
      தெய்வமே திரிகுழற் சிறுமி யாவதற்
      கையமே யொழிந்தன மனலும் வேலினாய்
      செய்யதோர் தூதினி திவிட்டன் றாதையாம்
      வெய்யவே லவனுழை விடுத்தும் வேந்தனே
      மரீசியே தூது செல்வதற்கு ஏற்றவன் என்றல்
      கற்றவன் கருதுங் கட்டுரை
      குற்றன வுற்றவு துரைக்கு மாற்றலான்
      மற்றவன் மருசியே யவனை நாம்விட
      சுற்றமுங் கருமமுஞ் சொல்ல வல்லனே
      மரீசியை தூது அனுப்புதல்
      காரி துணிந்தவர் மொழி காவலன்
      மாரி தடக்கையான் வருக வென்றொரு
      சீரிய திருமுகஞ் சிறப்பொ டீந்தனன்
      ஆரியன் கழலடி யவனும் வாழ்த்தினான்
      மரீசி சுரமைநாட்டு புட்பமாகரண்ட பொழிலை வந்து சேர்தல்
      மன்னவன் பணியொடு மருசி வானிடை
      மின்னவிர் முகிற்குழா முழங்கும் வீதிபோ
      துன்னினன் சுரமைநா டகணி சூடிய
      பொன்னகர் புறத்ததோர் பொழிலி னெல்லையே
      வண்டினம் களியாட்டயர்தல்
      புதுமலர புட்பமா கரண்ட மென்னு
      பொதுமலர பூம்பொழில் புகலும் பொம்மென
      மதுமலர் பொழிதர மழலை வண்டினம்
      கதுமல ரினையொடு கலவி யார்த்தவே. 192
      மந்திரசாலை சருக்கம் முற்றிற்று
      -----------------
      ஆறாவது
      தூதுவிடு சருக்கம்

      பொழிலிலுள்ள மரங்கள் மகிழ் தேமா சுரபுன்னை புன்கு முதலியன
      மருவினியன மதுவிரிவன மலரணிவன வகுளம்
      திருமருவிய செழுநிழலன செங்குழையன தேமா
      வரிமருவிய மதுகரமுண மணம்விரிவன நாகம்
      பொரிவிரிவன புதுமலரென புன்குதிர்வன புறனே
      சந்தனம் சண்பகம் குரா அசோகம் ஆகிய மரங்கள்
      நிழனகுவன நிமிர்தழையன நிறைகுளிர்வன சாந்தம்
      எழினகுவன விளமலரென வெழுசண்பக நிகரம்
      குழனகுவன மதுகரநிரை குடைவனபல குரவம்
      அழனகுவன வலர்நெரிதர வசை நிலையவ சோகம்
      இரதம் இருப்பை தாழை புன்னை ஆகியவை
      எழுதுருவின வெழுதளிரென விணரணிவன விரதம்
      இழுதுருவின கொழுமலரிடை யெழில்பொலிவன மதுகம்
      கழுதுருவின கஞலிலையன கழிமடலின் கைதை
      பொழுதுருவின வணிபொழிலின பொழி தளிரென புன்னை
      மல்லிகை முல்லை முதலிய கொடி வகைகளின் மாண்பு
      வளர்கொடியன மணம்விரிவன மல்லிகையொடு மெளவல்
      நளிர்கொடியன நறுவிரையக நறுமலரன நறவம்
      குளிர்கொடியன குழைமாதவி குவிமுகையன கொகுடி
      ஒளிர்கொடியன வுயர்திரளினோ டொழு கிணரன வோடை
      கோங்கு முதலியன
      குடையவிவன கொழுமலரின் குளிர்களின கோங்கம்
      புடையவிழ்வன புதுமலரன புன்னாகமொ டிலவம்
      கடியவிழ்வன கமழ் பாதிரி கலிகளிகைய சாகம்
      இடையவிழ்வன மலரளவில விதுபொழிலின தியல்பே
      பொழிலில் வாழும் வண்டு புள் முதலியவற்றின் சிறப்பு
      மதுமகிழ்வன மலர்குடைவன மணிவண்டொடு தும்பி
      குதிமகிழ்வன குவிகுடையன நுகிகோதுபு குயில்கள்
      புதுமகிழ்வன பொழிலிடையன புணர்துணையன பூவை
      விதிமகிழ்பவர் மதிமகிழ்வுற விரவுற்றன விரிவே
      மரீசி பூங்காவில் உள்ள பொய்கைக்கரையை அடைதல்
      அதுவழகுத கைமகிழ்வுற வலர்தாரவ னடைய
      இதுவழகிய திவண்வருகென வெழுபுள்ளொலி யிகவா
      விதிவழகுடை விரியிலையிடை வெறிவிரவிய வேரி
      பொதியவிழ்வன புதுமலரணி பொய்கைக்கரை புக்கான்
      பொய்கைக்கரை மரீசியை வரவேற்றல்
      புணர்கொண்டெழு பொய்கைக்கரை பொரு திவலைகள் சிதறா
      துணர்கொண்டன கரைமாநனி தூறுமலர்பல தூவா
      வணர்கொண்டன மலலுற்றலை வளர்வண்டின மெழுவா
      இணர்கொண்டெதி ரெழுதென்றலி னெதிர்கொண்டதவ் விடமே
      விஞ்சையர் தூதுவனாகிய மரீசி அசோகமரம் ஒன்றை காணுதல்
      புனல்விரவிய துளிர்பிதிர்வது புரிமுத்தணி மணல்மேல்
      மினல்விரவிய சுடர்பொன்னொளிர் மிளிர்வேதிகை மிகையொண்
      கனல்விரவிய மணியிடைகன கங்கணியணி திரளின்
      அனல்விரவிய வலரணியதொ ரசோகம்மது கண்டான்
      மரீசி அசோகமரத்தின் நிழலையடைந்ததும் துருமகாந்தன் கல்லிருக்கையை காட்ட
      திகைத்தல்
      அதனின்னிழ லவனடைதலு மதுகாவல னாவான்
      பொதியின்னவிழ் மலர்சிதறுபு பொலிகென் றுரை புகலா
      மதீயின்னொளி வளர்கின்றதொர் மணியின்சிலை காட்ட
      இதுவென்னென வினையன்பல சொன்னான் 10
      வேறு - நிலாநிழற்கல்லில் அமர்ந்திருக்குமாறு துருமகாந்தன் மரீசியை வேண்டிக்கொள்ளுதல்
      மினற்கொடி விலங்கிய விலங்கன்மிசை வாழும்
      புனற்கொடி மலர்த்தொகை புதைத்தபொலி தாரோய்
      நினக்கென வியற்றிய நிலாநிழன் மணிக்கல்
      மனக்கினிதி னேறினை மகிழ்ந்திருமி னென்றான்
      இதுபொழிற்கடவுளுக்காக ஆக்க பெற்ற பொன்னிடம் அன்றோ என்று மரீசி கேட்டல்
      அழற்கதி ரியங்கற வலங்கிண ரசோகம்
      நிழற்கதிர் மரத்தகைய தாக நினை கில்லேன்
      பொழிற்கடவுள் பொன்னிடமி தென்னைபுகு மாறென்
      றெழிற்கதிர் விசும்பிடை யிழிந்தவன் மொழிந்தான்
      துருமாந்தகன் மரீசிக்கு பதிலுரத்தல்
      நிலாவளர் நிழற்கதிர் நிமிர்ந்தொளி துளும்பும்
      சிலாதல மிதற்குரிய தெய்வமெனல் வேண்டா
      அலாதவ ரிதற்குரிய ரல்லரவ ராவிர்
      உலாவிய கழற் றகையி னீரென வுரைத்தான்
      அங்கத நிமித்திகன் கூறியவற்றை கூறத்தொடங்குதல்
      என்னவிது வந்தவகை யென்னினிது கேண்மின்
      நன்னகரி தற்கிறைவன் முன்னநனி நண்ணி
      தன்னிகரி கந்தவ னங்கத னெனும் பேர
      பொன்னருவி நூல்கெழுபு ரோகித னுரைத்தான்
      தூதன் வருவான் என்று கூறியதை சொல்லுதல்
      மின்னவிர் விளங்குசுடர் விஞ்சையுல காளும்
      வின்னவி றடக்கைவிறல் வேலொருவன் வேண்டி
      மன்னநின் மகற்கொரு மகட்கரும முன்னி
      இன்னவ னினைப்பகலு ளீண்டிழியு மென்றான்
      அச்சுவக்கிரீவனை கொல்வான் என்று அங்கத நிமித்திகன் கூறியதா கூறல்
      மடங்கலை யடுந்திற னெடுந்தகைதன் மாறாய்
      அடங்கல ரடங்கவடு மாழியஃ தாள்வான்
      உடங்கவ னுடன்றெரி துளும்பவரும் வந்தால்
      நடந்தவ னடுங்கவடு நம்பியிவ னென்றான்
      தன்னை அரசன் அங்கு இருக்குமாறு அமர்த்தியதை கூறுதல்
      ஆங்கவன் மொழிந்தபி னடங்கலரை யட்டான்
      தேங்கமழ் பொழிற்றிகழ் சிலாதலமி தாக்கி
      ஈங்கவ னிழிந்தபி னெழுந்தெதிர்கொ ளென்ன
      நீங்கல னிருந்தன னெடு தகையி தென்றான்
      மரீசி தூது வந்து பொழிலில் தங்கியுள்ளமையை யுணர்ந்த அரசன் தூதுவனின் வழிப்பயண
      துன்பை மாற்றுமாறு நான்கு நங்கையரை அனுப்புதல்
      என்றவன் மொழிந்தபி னருந்தன னிருப்ப
      சென்றவன் வழி சிரமை தீர்மினென நால்வர்
      பொன்றவழ் பொருந்திழை யணங்கினனை யாரை
      மின்றவழ் விளங்குகொடி வேந்தனும் விடுத்தான்
      பயாபதி மன்னன் விடுத்த பாவையர் புட்பமாகரண்ட பூங்காவை நோக்கி புறப்படுதல்
      பொன்னவிர் மணிக்கலை சிலம்பொடு புலம்ப
      மின்னவிர் மணிக்குழை மிளிர்ந்தொளி துளும்ப
      சின்னமலர் துன்னுகுழ றேறலொடு சோர
      அன்னமென வல்லவென வன்னண நடந்தார்
      நலங்கனி மடந்தையர் நடத்தொறு மிணர்ப்போ
      தலங்கலள கக்கொடி யயற்சுடர வோடி
      விலங்குபுரு வக்கொடி முரிந்துவெரு வெய்த
      மலங்கின விலங்கின மதர்த்தவவர் வாட்கண் 20
      அலத்தக மலைத்தன வடித்தல மரற்றும்
      கலைத்தலை மலைத்து விரி கின்றகடி யல்குல்
      முலைத்தலை முகிழ்த்தொளி துளும்பி யுள முத்தம்
      மலைத்தலை மயிற்கண் மருட்டுவர் சாயல்
      வண்டுகள் ஒலித்தல்
      கணங்கெழு கலாவமொளி காலுமக லல்குல்
      சுணங்கெழு தடத்துணை முலைசுமை யிடத்தாய்
      வணங்கியும் நுணங்கியும் வருந்திய மருங்கிற்
      கிணங்குதுணை யாய்ஞிமி றிரங்கின வெழுந்தே
      இடையின் வருத்தங் கண்டு வண்டுகள் இரங்கியெழுந்தனவென்க
      முலைத்தொழில் சிலைத்தொழிலி னாருயிர் முருக்கும்
      நிலைத்தொழில் வென்றுள நினைத்தொழுக வின்ப
      கலைத்தொழில்கள் காமனெய் கணைத்தொழில்க ளெல்லாம்
      கொலைத்தொழில்கொள் வாட்கணி னகத்தகுறி கண்டீர்
      துடித்ததுவர் வாயொடுது ளும்புநகை முத்தம்
      பொடித்தவியர் நீரொடுபொ லிந்தசுட ரோலை
      அடுத்ததில கத்தினொட ணிந்தவள கத்தார்
      வடித்தசிறு நோக்கொடுமு கத்தொழில்வ குத்தார்
      வண்டுகள் மயக்கம்
      பூவிரிகு ழற்சிகைம ணிப்பறவை போகா
      வாவிகொள கிற்புகையுள் விம்மியவ ரொண்கண்
      காவியென வூதுவன கைத்தலம் விலங்க
      மேவியிவை காந்தளென வீழமிக நொந்தார்
      சுரும்பொடு கழன்றுள குழற்றொகை யெழிற்கை
      கரும்பொடு கலந்துள களித்தவவர் தீம்பண்
      நரம்பொடு நடந்துள விரற்றலை யெயிற்றேர்
      அரும்பொடு பொலிந்ததுவர் வாயமிர்த மன்றே
      கணங்குழை மடந்தையர் கவின்பிற ழிருங்கண்
      அணங்குர விலங்குதொ றகம்புலர வாடி
      மணங்கம ழலங்கலுடை மைந்தர்த மனந்தாழ்
      வணங்கிடை வணங்குதொ றணங்கென வணங்கும்
      மைந்தர்கள் கலங்கி மெலிதல்
      நெய்யலர் குழற்றொகை நெருப்பினடு மென்பார்
      மையலர் நெடுங்கணிவை வல்லகொலை யென்பார்
      தொய்யலிள மென்முலையி னீர்சுடுதி ராயின்
      உய்யல மெனத்தொழுது மைந்தர்க ளுடைந்தார்
      வேறு--
      நாம நூற்கலை விச்சை யினன்னெறி யிவைதாம்
      தாம நீள்குழற் றளர்நடை யுருவுகொண் டனையார்
      வாம மேகலை மடவர லிவர்களை வளர்த்தார்
      காம நூலினு கிலக்கியங் காட்டிய வளர்த்தார்
      அம்மாதர்களின் தன்மை
      இனிய வீங்கிய விளமுலை யிவர்களை வளர்த்தார்
      பனியின் மென்மல ரலர்ந்தன வுவகையிற் பயில்வார்
      கனிப வேலிவர் கடல்விளை யமிர் தென கனிவார்
      முனிப வேலிவ ரனங்கனைங் கணையென முனிவார் 30
      புலவி தானுமோர் கலவியை விளிப்பதோர்
      கலவி தானுமோர் புலவியை விளைப்பதோர்
      குலவுவார் சிலை மதனனைங் கணையொடு குலவி
      இலவு வாயுடை யிளையவ ருடையன விவையே 31
      மன்னு வார்சிலை மதனனோர் வடிவுகொண் டிலாதான்
      தன்னை நாமுமோர் தகைமையிற் றணத்துமென் றிருப்பார்
      என்னை பாவமிங் கிவர்களை படைத்தன னிதுவால்
      பின்னை யாங்கவன் பிறவிக்கு முதல் கண்ட வகையே.
      வாம மேகலை முதனின்று வயிற்றிடை வளைர்ந்த
      சாம லேகைகண் மயிர்நிரை யலதல மீது
      காம நீரெரி யகத்து கனன்றெழ நிமிர்ந்த
      தூம லேகைகள் பொடித்தன துணை முலை யுறவே
      சூசு கருமைக்கோர் காரணஞ் சொல்லுதல்
      சனங்க டாஞ்சில தவங்களை தாங்குது மெனப்போய்
      வனங்கள் காப்பவ ருளரென முனிவமற் றன்றேல்
      தனங்க டாழ்ந்தவழ் சந்தன குழம்பிடை வளர்ந்த
      கனங்கொள் வெம்முகங் கறுப்பதென் காரண முரையீர்
      தூம மென்புகை துழாவிவண் டிடை யிடை துவைக்கும்
      தாம வோதியர் தம்முக தனபிறர் மனத்த
      காம நீள்சிலை கணையொடு குனிவகண் டாலும்
      யாமெ மின்னுயி ருடையமென் றிருப்பதிங் கெவனோ
      மங்கையர் மலர்ப்பொழிலை அடைதல்
      என்று மைந்தர்க ளிடருற வெழுதிய கொடிபோற்
      சென்று கற்பக வனமன செறிபொழி லடைந்தார்
      இன்று காமுகர் படையினை யிடர்பட நடந்த
      வென்றி காமனு குரைத்துமென் றிரைத்தளி விரைந்த
      வேறு - பணிப்பெண்கள் கொண்டுவந்த பலவகை பொருள்கள்
      ஆடைகை தலத்தொருத்தி கொண்டதங் கடைப்பைதன்
      மாடுகை தலத்தொருத்தி கொண்டது மணிக்கலம்
      சேடிகை தலத்தன செறிமணி திகழ்வசெங்
      கோடிகை தலத்தன குளிர்மணி பிணையலே
      மற்றும் பலர் பலபொருள்களை கொண்டுசெல்லுதல்
      வண்ண சந்தங்க ணிறைந்தன மணிச்செப்பு வளர்பூங்
      கண்ணி சந்தங்க ணிறைந்தன கரண்டகங் கமழ்பூஞ்
      சுண்ண சந்தங்க ணிறைந்தன சுடர்மணி பிரப்போ
      டெண்ண சந்தங்கள் படச்சு திளையவ ரிசைந்தார்
      மகளிர் பலரின் வருகையை கண்ட மரீசி இது விண்ணுலகமே யென்று வியத்தல்
      தகளி வெஞ்சுட ரெனத்திகழ் மணிக்குழை தயங்க
      மகளிர் மங்கல வுழைக்கலஞ் சுமந்தவர் பிறரோ
      டுகளு மான்பிணை யனையவ ருழை செல வொளிர்தார
      துகளில் விஞ்சையன் றுணிந்தனன் றுறக்கமீ தெனவே
      மரீசிக்கு வேண்டுவன புரிதல்
      துறக்கம் புக்கவர் பெறுவன விவையென துணியா
      வெறிக்கண் விம்மிய விரைவரி தாரவ னிருப்ப
      சிறைக்க ணோக்கமுஞ் சிறுநகை தொழில்களுஞ் சுருக்கி
      அறைக்கண் மாந்தனு கதிதி தொழிலினி லமைந்தார்
      மங்கையர் வழிபாட்டை பெறும் மரீசி தேவனைப்போல திகழ்தல்
      ஆட்டி னார்வெறி கமழ்வன வணிகிளர் நறுநீர்
      தீட்டி னார்நறுஞ் சாந்தமுஞ் சிறிதுமெய் கமழ
      சூட்டி னார்சிலர் நறுமல ரறுசுவை யடிசில்
      ஊட்டி னாரவ னமரரு ளொருவனொ தொளிர்ந்தான்
      மாதர்கள் மாட்சிமையை எண்ணி மரீசி மகிழ்ந்திருத்தல்
      வயந்த முன்னிய திலகைகல் லியாணிகை வடிவார்
      வியந்த சேனைமென் கமலமா லதையென விளம்பும்
      இயங்கு பூங்கொடி யனையவ ரியல்புக ணினையா
      வயங்கு தொல்புக ழம்பர சரன்மகிழ திருந்தான்
      வேறு - பயாபதி மன்னனுடைய கட்டளைப்படி மரீசியை அழைத்ததற்கு விசய திவிட்டர்கள் புறப்படுதல்
      ஆங்கெழிற் பொலிந்தவன் னிருந்தபின் னலங்குதார்
      வீங்கெழிற் பொலிந்தானை வேந்தனேவ வீவில்சீர
      பூங்கழற் பொலங் குழை திவிட்டனோடு போர்க்கத
      தாங்கெழிற் பெருங்கையானை சங்க வண்ண னேறினான்
      யானைமீது விசய திவிட்டர்கள் ஏறிய சிறப்பு
      தம்பியோடு ங்கவிசய திவிட்டர்கள் ஏறிய சிறப்பு
      பைம்பொ னோடை வீழ்மணி பகட்டெருத்த மேறினான்
      செம்பொன்மா மலைச்சிகை கருங்கொண்மூவி னோடெழூஉம்
      வம்பவெண்ணி லாவிங்கு திங்கள்போல மன்னினான்
      விசய திவிட்டர்களுடன் பலவகை படைகள் புறப்படுதல்
      ஆர்த்தபல்லி யக்குழா மதித்தகுஞ்ச ரக்குழாம்
      தேர்த்தவீரர் தேர்க்குழா திசைத்தபல்ச னக்குழாம்
      போர்த்தசா மரக்குழாம் புதைத்தவெண் கொடிக்குழாம்
      வேர்த்தவேந்தர் பல்குழாம் விரைந்தகூந்தல் மாக்குழாம்
      விசய திவிட்டர்கள் கண்ட விளங்கிழையார் மயக்கம்
      பாடுவார்வ ணங்குவார்ப லாண்டுகூறி வாழ்த்துவார்
      ஆடுவாரோ டார்வமாந்த ரன்னரின்ன ராயபின்
      சூடுமாலை சோரவு தொ டாரமாலை வீழவும்
      மாடவாயின் மேலெலாம டந்தைமார்ம யங்கினார்
      கொண்டலார்ந்த பொன்னொளி குழற்கொடிக்கு ழாமனார்
      மண்டலந்நி றைந்ததிங்கள் வட்டமொத்த வாண்முகம்
      குண்டலங்கொ ழும்பொனோலை யென்றிரண்டு கொண்டணிஇ
      வண்டலர்ந்து மாலைதாழ்ந்து மாடவாய்ம றைந்தவே
      கூடுதும்பி யூடுதோய்கு ழற்றொகைத்து ணர்துதை
      தோடுமேலெ ருத்திடைக்கு லைந்தகோதை யோடுலாய்
      மாடவாயின் மாலைஞால மாடமேறு மாதரார்
      ஆடுமஞ்ஞை கோடுகொள்வ தென்னலாவ தாயினார்
      தொண்டைவாய் மடந்தைமார்கள் சுடிகைவட்ட வாண்முகம்
      கொண்டகோல நீரவாய கோடிமாட மேலெலாம்
      வண்டுசூழ்ந்த பங்கயம லர்க்குழாமி ணைப்படூஉ
      கெண்டையோடு ந்ன்றலைந்த கேழவாய்க்கி ளர்ந்தவே
      விசயதிவிட்டர்களை நகரத்து மாதர்கள் காணுதல்
      மாலைதாழு மாடவாய் நிலத்தகத்து மங்கைமார்
      வேலவாய நெடியகண் விலங்கிநின் றிலங்கலால்
      சாலவாயி றாமெலாமொர் தாமரை தடத்திடை
      நீலமாம லர்க்குழாநி ரந்தலர்ந்த நீரவே
      சுண்ணமாரி தூவுவார் தொடர்ந்துசேர்ந்து தோழிமார்
      வண்ணவார வளைதயங்கு முன்கைமேல்வ ணங்குவார்
      நண்ணிநா ணொழிந்துசென்று நம்பிமார்கள் முன்னரே
      கண்ணிதம்மி னென்றிரந்து கொண்டுந்ன்று கண்ணுவார்
      பாடுவார்மு ரன்றபண்ம றந்தொர்வாறு பாடியும்
      ஆடுவார்ம றந்தணிம யங்கியர்மை யாடியும்
      சூடுவான்றொ டுத்த கோதை சூழ்குழன்ம றந்துகண்
      நாடுவாய்நி ழற்கணிந்து நாணுவாரு மாயினார்
      இட்டவில்லி ரட்டையுமி ரண்டுகெண்டை போல்பவும்
      விட்டிலண்க்கு தொண்டையங் கனிப்பிழம்பொ டுள்விரா
      சுட்டிசூட்ட ணிந்துசூளி மைமணிசு டர்ந்துனீள்
      பட்டம்வேய்ந்த வட்டமல்ல தில்லைநல்ல பாங்கெலாம்
      அலத்தகக்கு ழம்புதம்ம டித்தலத்தொர் பாகமா
      நிலத்தலத்தொர் பாகமா நீடுவாயில் கூடுவார்
      கலைத்தலைத்தொ டுத்தகோவை கண்ணெகிழ்ந்து சிந்தலான்
      மலைத்தலைத்த ழற்சிதர்ந்த போன்றமாட வாயெலாம்
      பாடகந்து ளங்கவும்பு சும்பொனோலை மின்னவும்
      சூலகந்து ளும்பவஞ் சு ரும்புகழ்ந்து பாடவும்
      ஊடகங்க சிந்தொசிந்து நின்றுசென்று வந்துலாய்
      நாடகங்க ணன்னர்க்க ணங்கைமார்ந விற்றினார்
      மாதர்கள் மயக்கம்
      மாலையால்வி ளங்கியும்பொன் வாசச்சுண்ணம் வீசியும்
      சாலவாயி லாறுசந்த னக்குழம்பு சிந்தியும்
      நீலவாணெ டுங்கணார்நி ரந்து நெஞ்சு தாழொரீஇ
      ஞாலமாளு நம்பிமாரின் மாலுமாகி நண்ணினார்
      வேய்மறிந்த தோள்விளர்த்து வெவ்வுயிர்ப்பொ டுள்விரா
      தோமறிந்த சூழ்துகின்னெ கிழ்ந்துடுத்து வீழ்ந்தசைஇ
      பூமறிந்த தேங்குழன் முடிப்பொதிந்து வீழ்த்துலா
      தாமறிந்த முல்லைவாய தாதுகுத்து டங்கினார்
      விசயதிவிட்டர்களுடைய படை பொழிலை அடைதல்
      கொங்குவார்ம லர்த்தடத்த மர்ந்தகோதை மார்களோ
      டங்கராகம் வீற்றிருந்த ணிந்தவார மாகுலாய்
      மங்கைமார்கள் கண்ணும்வண்டு மாலையும னங்களும்
      தங்குமார்பி னம்பிமார்க டானைசோலை சார்ந்ததே
      விசயதிவிட்டர்கள் பொழிலை அடைதல்
      மானளாய நோக்கினார்ம னங்கலந்து பின்செல
      வானளாய சோலைவாயின் மன்னவீரர் துன்னலலும்
      கானளாய போதணிந்து காவிவிம்மு கள்ளளைஇ
      தேனளாவு வண்டுகொண்டு தெறல்சென் றெழுந்ததே
      விசயதிவிட்டர்கள் வேழத்தினின்று இறங்குதல்
      செம்முகப்ப சும்பொ னோடை வெண்மருப்பி ணைக்கரு
      வெம்முகத்து வீழ்கடாத்து வேழநின்றி ழிந்தபின்
      கைம்முகத்து வேலிலங்கு காமர் தாங்கொ லென்றுசென்
      றம்முகத்து தும்பிவண்டு தேனொடாடி யார்த்தவே
      பொழிலின் காட்சி
      தாதுநின்ற தேறனீர் தளித்திவற்றின் மேலளி
      கோதுகின்ற போதுகொண்டு சிந்திநம்பி மார்களை
      மாதுநின்ற மாதவி கொடிகட தளிர்க்கையால்
      போதுகென்றி டங்கள்காட்டு கின்றபோற்பொ லிந்தவே
      பூங்காவின் பொதுக்காட்சி
      போதுலாய வேரிமாரிஇ சாரலாய்ப்பொ ழிந்துதேன்
      கோதலா னெரிந்துதாது கால்குடைந்து கொண்டுறீஇ
      மாதுலாய வண்டிரைத்து மங்குல்கொண்டு கண்மறை
      தேதிலார்க்கி யங்கலாவ தன்றுசோலை வண்ணமே
      தென்றல் வீசுதல்
      போதுலாய பூம்பொதும்பர் மேலதென்றல் வீசலால்
      தாதுலாய போதணிந்து தாழ்ந்துதாம வார்குழல்
      மாதரார்கள் போலவல்லி மார்புபுல்லி மைந்தரை
      காதலால்வ ளைப்பபோன்று காவினுட்க லந்தவே
      விசயதிவிட்டர்கள் அசோகமரத்தின் இடத்தை அடைதல்
      புல்லிவண்ட மர்ந்துகங்கு பூந்தழைப்பொ தும்பிடை
      மல்லிகைக்கொ டிக்கலந்து மெளவல்சூட வெளவுநீர்
      வல்லிமண்ட பங்கள்சென்று மாதவி கொழுந்தணி
      அல்லிமண்ட பத்தயல சோகமாங்க ணெய்தினார்
      விஞ்சையர் தூதுவன் விசயதிவிட்டர்களை வணங்குதல்
      பஞ்சிலங்கு மல்குலார்ப லாண்டுகூற வாண்டுபோய்
      மஞ்சிலங்க சோகநீழன் மன்னவீரர் துன்னலும்
      விஞ்சையன்ம கிழ்ந்தெழுந்து வென்றிவீரர் தங்களு
      கஞ்சலித்த டக்கைகூப்பி யார்வமிக்கி றைஞ்சினான்
      நீர் எம்மை வணங்குவது ஏன் என்று விசயன் மரீசியை கேட்டல்
      ஆங்கவனி றைஞ்சலு மலர்ந்ததிங்க ணீளொளி
      பூங்கழற்பொ லங்குழைப்பொ லிந்திலங்கு தாரினான்
      நீங்கருங்கு குணத்தினீவிர் நீடுகுரவ ராதலில்
      ஈங்கெமக்கு நீர்பணிந்த தென்னையென்றி யம்பினான்
      விசயதிவிட்டர்களை மரீசி வியந்து நோக்குதல்
      பானிறக்க திர்நகைப ரந்தசோதி யானையும்
      நீனிறக்க ருங்கட னிகர்க்குமேனி யானையும்
      வானெறிக்கண் வந்தவன்ம கிழ்ந்துகண்ம லர்ந்துதன்
      நூனெறிக்கண் மிக்கநீர்மை யொக்கநின்று நோக்கினான்
      மேலும் விசயதிவிட்டர்களை நன்கு பார்த்தல்
      வேல்கொடானை வீரர்தம்மை விஞ்சையன் வியந்துநீள்
      நூல்கொள்சிந்தை கண்கடாவ நோக்கிநோக்கி யார்காலன்
      கால்கள்கொண்டு கண்ணிகாறு முண்மகிழ்ந்து கண்டுகண்
      மால்கொள்சிந்தை யார்கள்போல மற்றுமற்று நோக்கினான்
      மரீசி விசயதிவிட்டர்களை பார்த்து பேச தொடங்குதல்
      வேரிமாலை விம்மவும்வி ளங்குபூண்டு ளும்பவு
      தாரொடார மின்னவுந்த யங்குசோதி கண்கொள
      வாரநோக்க கில்லனன்ன னரசநம்பி மார்களை
      சாரவாங்கொர் கற்றலத்தி ருந்துகான்வி ளம்பினான்
      விஞ்சையர் தூதுவன் விசயதிவிட்டரின் மேம்பாட்டை கூறுதல்
      செம்பொன்வான கட்டிழிந்து தெய்வ யானை யுண்மறைஇ
      வம்புநீர்வ ரைப்பகம்வ ணக்கவந்த மாண்புடை
      நம்பிமீர்க ணுங்கள்பாத நண்ணிநின் றி றைஞ்சுவார்
      அம்பொன்மாலை மார்பினீர ருந்தவஞ்செய் தார்களே
      திங்கள்வெண் கதிர்ச்சுடர திலதவட்ட மென்றிரண்
      டிங்கண்மா லுயிர்க்கெலாமெ ளிய்யவென்று தோன்றலும்
      தங்கள்சோதி சாரலாவ வல்லவன்ன நீரவால்
      எங்கண்முன்னை நுடங்கடன்மை யென்றுபின்னை யேத்தினான்
      தந்தையை காணச்செல்வோம் என்று விசயதிவிட்டர்கள் மரீசியை அழைத்தல்
      இமைகள்விட்ட நோக்கமேற வின்னபோல்வ சொல்லலு
      மமைகமாற்றம் நூம்மை யெங்க ளடிகள்காண வேகுவாம்
      சுமைகொண்மாலை தொடுகளிற்றெ ருத்தமேறு கென்றனர்
      சிமைகொடேவர் போலநின்று திகழுகின்ற சோதியார்
      மரீசியும் விசயதிவிட்டர்களும் யானைகள்மீது தனித்தனியே அரண்மனைக்கு புறப்படுதல்
      அம்பொன்மாலை கண் கவர்ந்த லர்ந்தசெல்வ வெள்ளமேய்
      வெம்புமால்க ளிற்றெருத்தம் விஞ்சையாளன் மேல்கொள
      பைம்பொன்மாலை வார்மதப்ப ரூஉக்கை யீரு வாக்கண்மீ
      செம்பொன்மாலை மார்பசேர்ந்து தேவரிற்று ளும்பினார்
      மகளிர் எதிர்கொள்ள நகரஞ் சேர்தல்
      கதிர்நகை கபாட வாயிற் கதலிகை கனக நெற்றி
      மதிநக வுரிஞ்சு கோட்டு மாளிகை நிரைத்த வீதி
      புதுநக ரிழைத்து முத்து பொலங்கல தொகையும் பூவும்
      எதிர்நகை துகைத்து மாத ரெதிர்கொள நகரஞ் சேர்ந்தார்
      மருசியும் விசயதிவிட்டரும் சேர்ந்திருந்ததன் வருணனை
      விரைக்கதி ரலங்கற் செங்கேழ் விண்ணியங் கொருவ னோடும்
      வரைக்கெதிர திலங்கு மார்பின் மன்னவ குமர செல்வர்
      எரிக்கதி ரேற்றை கால மெழுநிலா பருவ மேக
      நிரைத்தெழு மிருது மன்று நிரந்ததோர் சவிய ரானார்
      தெருவிற் செல்லுதல்
      வார்கல திலங்கு கொம்மை வனமுலை மகளி ரிட்ட
      ஏர்கல தெழுந்த தூம வியன்புகை கழுமி நான
      நீர்கல துகுத்த மாலை நிறமது திவலை சிந்த
      கார்கல திருண்ட போலுங் கண்ணகன் தெருவு சென்றார் 75
      அரண்மனையின் வாயிலை அடைதல்
      தெளிர்முத்த மணலுஞ் செம்பொற் சுண்ணமுஞ் சிதர்ந்து தீந்தேன்
      தளிர்முத்த மலரும் போதும் சாந்தமு வண்டார்
      ஒளிர்முத்த முறுவ லார்த முழைக்கலங் கலந்து மாலை
      குளிர்முத்த நிழற்றுங் கோயிற் பெருங்கடை குறுக சென்றார்
      பயாபதி மன்னன் பொற்கூடத்தில் அமருதல்
      மற்றவை ரடைந்த போழ்கின் வாயிலோ ருணர்த்த கேட்டு
      கொற்றவ னருவி தூங்குங் குளிர்மணி குன்றம் போல
      முற்றிநின் றிலங்குஞ் செம்பொன் முடிமிசை முத்த மாலை
      கற்றைகள் தவழ சென்றோர் கனககூ டத்தி ருந்தான்
      பயாபதி மன்னன் மூவரையும் அமர செய்தல்
      மன்னவ குமர ரோடும் விஞ்சையன் மகிழ்ந்து வை
      தின்னருள் புரிந்த வேந்த னிடையறி தினிதி னெய்தி
      கன்னவில் தோளி னான்றன் கழலடி தொழுது நின்றான்
      அன்னவர கிருக்கை தான மரசனு மருளி செய்தான்
      பயாபதி அம்மன்னன் வீற்றிருக்கும் காட்சி
      வீரி குமர ரொடும் விஞ்சையஞ் செல்வ னோடும்
      காரி கிழவர் சூழ கவின்றுகண் குளிர தோன்றி
      ஆரியன் னலர்ந்த சோதி யருங்கல பீட நெற்றி
      தாரகை யணிந்து தோன்றுஞ் சந்திர சவிய னானன்
      மன்னவன் விஞ்சையனுக்கு முகமன் கூறியிருத்தல்
      அலகையில் தானை வேந்த னம்பர சரனை நோக்கி
      உலகுப சார மாற்ற முரைத்தலு குரிய கூறி
      விலகிய கதிர வாகி விளங்கொளி கட கையான்
      மலரகங் கழு போந்து மனமகிழ திருந்த போழ்தின் 80
      மருசி கொண்டுவந்த திருமுகத்தை மதிவரன் வாங்குதல்
      விஞ்சைய னெழுந்து தங்கோன் வெள்ளிவே தண்ட நோக்கி
      அஞ்சலி தடக்கை கூப்பி யரக்கில சினையின் வைத்த
      எஞ்சலி லோலை காட்ட விறைமகன் குறிப்பு நோக்கி
      வஞ்சமில் வயங்கு கேள்வி மதிரவன் கரத்தில் வாங்கி
      மதிவரன் திருமுகவோலையை படித்தல்
      நிகரிக தழகி தாகி நெரிவடு படாத வேழ
      புகர்முக பொறிய தாய புகழ்ந்தசொல் லகத்து போகா
      மகரவாய் மணிக செப்பின் மசிகல தெழுத பட்ட
      பகரரும் பதங்கள் நோக்கி பயின்று பின் வாசி கின்றான்
      இதுவும் அடுத்த பாடலும் திருமுக செய்தி
      போதன திறைவன் காண்க விரதநூ புரத்தை யாளும்
      காதுவேன் மன்ன னோலை கழலவன் றனக்கு நாளும்
      ஆதிய வடிசி லொண்கே ழஞ்சன முள்ளி டெல்லாம்
      தீதுதீர் காப்பு பெற்று செல்கென விடுத்த தன்றே
      அல்லதூஉங் கரும தலங்குதா ரிவுளி திண்டேர்
      வல்லக னிளைய நம்பி குரியளா வழங்க பட்டாள்
      மல்லக மார்பி னன்றான் மருமக ளிவளை கூவி
      வல்லிதிற் கொடுக்க மன்னன் வாழ்கதன் கண்ணி மாதோ
      திருமுகச்செய்திகேட்ட பயாபதிமன்னன் யாதுங் கூறாதிருத்தல்
      என்றவ னோலைவாசி திருந்தன னிறைவன் கேட்டு
      வென்றியம் பெருமை விச்சா தரரென்பா ரெம்மின் மிக்கார்
      இன்றிவன் விடுத்த திவ்வா றென்கொலோ வென்று சிந்தி
      தொன்றுமற் றுரைக்க மாட்டா திருந்தன னுரங்கொ டோ ளான்
      மருசி சினத்துடன் கூறத்தொடங்குதல்
      தீட்டரு திலத கண்ணி செறிகழ லரசர் கோமான்
      மீட்டுரை கொடாது சால விம்மலோ டிருப்ப நோக்கி
      வாட்டரும் பெருமை யெங்கோ னோலையை மதியா வாறென்
      றோட்டருங் கதத்த னாகிக்கேசர னுரைக்க லுற்றான்
      மருசி சினந்து கூறுவன
      முன்னமோர் கருமம் வேண்டி மொழிபவேல் மனிதர் தம்மால்
      என்னவ ரேனு மாக விகழ்ந்திட படுப போலாம்
      அன்னதே யுலக வார்த்தை யாவதின் றறியும் வண்ணம்
      மின்னவின் றிலங்கும் வேலோய் நின்னுழை விளங்கிற் றன்றே
      பூவிரி யுருவ கண்ணி பொலங்குழை யிலங்கு சோதி
      தேவரே யெனினு தோற சில்பகல் செல்ப வாயில்
      ஏவரே போல நோக்கி யிகழ்ந்துரை தெழுவ தன்றே
      மாவிரி தானை மன்னா மனிதர தியற்கை யென்றான்
      வரைமலி வயங்கு தோளாய் வியாதியான் மயங்கி னார்க்கு
      சுரைமலி யமிர தீம்பால் சுவைதெரி துண்ண லாமோ
      விரைமலி விளங்கு பைந்தார் விஞ்சையர் செல்வ தானும்
      நுரைமலி பொள்ளல் யாக்கை மனித்தர்க்கு நுகர லாமோ
      அறவிய மனத்த ரன்றி யழுங்குத லியல்பி னார்க்கு
      பிறவியை யறுக்குங் காட்சி பெருநிலை யெய்த லாமோ
      வெறிமயங் குருவ கண்ணி விஞ்சையர் விளங்கு தானம்
      மறவியின் மயங்கி வாழும் மனித்தர்க்கு நிகழ்த்த லாமோ 90
      அருங்கடி கமழு தாரை யழிமத களிற்றி னாற்றல்
      மரங்கெட தின்று வாழுங் களபக்கு மதிக்க லாமோ
      இரங்கிடு சிறுபுன் வாழ்க்கை யிந்நில தவர்க கென்றும்
      வரங்கிட தெய்த லாமோ மற்றெமர் பெருமை மன்னா
      உள்ளிய மரங்கொள் சோலை மண்மிசை யுறையு மாந்தர்
      ஒள்ளிய ரேனு தக்க துணர்பவ ரில்லை போலாம்
      வெள்ளியஞ் சிலம்பி னென்கோன் விடுத்தே யேது வாக
      எள்ளியோ ருரையு மீயா திருந்தனை யிறைவ வென்றான்
      பயாபதி மன்னன் பதில் உரைத்தல்
      ஆங்கவ னுரைப்ப கேட்டே யம்பர சரனை நோக்கி
      தேங்கம ழலங்கன் மார்ப சிவந்துரை யாடல் வேண்டா
      ஓங்கிய வோலை மாற்ற குரியவா றுரைக்க மாட்டா
      தீங்கியா னிருந்த தென்றா னெரிசுடர் வயிர பூணான்
      வெஞ்சுடர் தெறுதீ விச்சா தரரென்பார் மிக்க நீரார்
      செஞ்சுடர திலத கண்ணி தேவரே தெரியுங் காலை
      மஞ்சிடை மண்ணுள் வாழும் மக்களு கவர்க டம்மோ
      டெஞ்சிய தொடர்ச்சி இன்ப மெய்துதற் கரிது மாதோ
      ஈட்டிய வூன்செய் யாக்கை யெம்முழை யின்ன வாறு
      வாட்டமில் வயங்கு கண்ணி மணிமுடி மன்ன னோலை
      காட்டிநீ யுரைத்த வெல்லாங் கனவென கருதி னல்லான்
      மீட்டது மெய்ம்மை யாக வியந்துரை விரிக்க லாமோ
      இன்னவ னின்ன நீரா னின்னவே யெய்து கென்று
      முன்னவன் செய்த மொய்ம்பின் வினைகளே முயல்வ தல்லால்
      பின்னவன் பிறந்து தன்னாற் பெறுதலு குரிய வாய
      துன்னுவ தென்று கான்று துணியுமோ சொல்ல வென்றான்
      மெய்ப்புடை தெரிந்து மேலை விழுத்தவம் முயன்று நோற்றார
      கொப்புடை துங்கள் சேரி யுயர்நிலை செல்வ மெல்லாம்
      எப்படி முயறு மேனு மெங்களு கெய்த லாகா
      தப்படி நீயு முன்னர் மொழிந்தனை யன்றே யென்றான்
      விஞ்சை சாரணான் நாணி சினம் மறுதல்
      இறைவனாங் குரைத்த சொற்கே டென்னைபா வம்பொ ருந்தா
      கறையவா மொழிகள் சொன்னேன் காவலன் கருதிற் றோரேன்
      பொறையினாற் பெரியன் பூபன் சிறியன்யா னென்று நாணி
      அறிவினாற் பெரிய நீரா னவிந்தன கதத்த னானான்
      பயாபதியின் ஐயத்தை மருசி அகற்றுதற்கு உரைக்க தொடங்கல்
      கிளர்ந்தொளி துளும்பும் மேனி கேசர ரோடு மண்மேல்
      வளர்ந்தொளி திவளும் பூணோர் மணவினை முயங்க லில்லென்
      றளந்தறி வரிய சீரோற் கையமீ தகற்று கென்றாங்
      குளர்ந்துன னுணர்வி னூக்கி யுரைக்கிய வெடுத்து கூறும்
      விஞ்சையரும் மனிதரே என்பதை மருசி விளக்கி கூறுதல்
      மஞ்சிவர் மணங்கொள் சோலை மணிவரை சென்னி வாழும்
      விஞ்சையர் விச்சை யாலே விழுமிய ரென்ப தல்லால்
      அஞ்சலில் தானை வேந்தே மனிதரே யவரும் யாதும்
      வெஞ்சுடர் விளங்கு வேலோய் வேற்றுமை யின்மை கேண்மோ 100
      விஞ்சையன் தன்னை விளக்கி கூறுதல்
      மண்ணவில் முழவின் மாநீர பவபுர முடைய மன்னன்
      பண்ணவில் களிதல் யானை பவனவே கற்கு தேவி
      கண்ணவில் வடிவிற் காந்தி மதியவள் பாவை
      வண்ணவிற் புருவ வாட்கண் வாயுமா வேகை யென்பான்
      மற்றவ ளோடும் வந்தேன் மன்னன்யான் மருசி யென்பேன்
      அற்றமில் கேள்வி யெந்தை யஞ்சுமா னென்னும் பேரான்
      பெற்றதா யருசி மாலை பெருமக னருளினால் யான்
      கற்றநூல் பல்ல வாகுங் கருமணி கட கையான்
      அலகைசா லாதி கால தரசர்கள் தொடர்ச்சி யெல்லாம்
      உலகநூல் பலவு மோதி யுணர்ந்தன னுரைப்ப கேண்மோ
      விலகிய கதிர வாகி விடுசுடர் வயிர கோல
      திலகம்வீற் றிருந்த கண்ணி திருமுடி செல்வ என்றான்
      மருசி நமியின் வரலாறு கூறுகின்றான்
      ஆதிநா ளரசர் தங்க ளருங்குல மைந்து மாக்கி
      ஓதநீ ருலகின் மிக்க வொழுக்கமு தொழிலு தோற்றி
      தீதுதீர திருந்த பெம்மான் திருவடி சார சென்று
      நீதி நூற் றுலகம் காத்து நிலத்திரு மலர நின்றான்
      முசிநா சுரும்பு பாய முருகுடை துருக்குஞ் சோலை
      காசிநா டரசன் செங்கோற் கதிர்முடி கச்ச னென்பான்
      மாசினாற் கடல தானை மன்னவற் றவற்கு தேவி
      தூசினாற் றுளும்பு மல்குல் சுதஞ்சனை சுடரும் பூணாய்
      வேய்ந்தக நிழற்றுங் கோதை மிளிர்மணி கலாப வட்டம்
      போந்தக திகழ்ந்து மின்னு பூந்துகில் பொலிந்த வல்குல்
      வாய்ந்தகங் கமழுங் கோதை யவள்பெற்ற வரச சிங்க
      நாந்த கிழவர் கோவே நமியென்பான் நலத்தின் மிக்கான் 106
      அங்கவ னரசு வேண்டா னற்கடல் படைத்த நாதன்
      பங்கயங் கமழு மேனி பவித்திர பரம யோகி
      தங்கிய தியான போழ்தி றாழ்ந்துதன் றடக்கை கூப்பி
      பொங்கிய காதல் கூர பாடினன் புலமை மிக்கான்
      அரு கடவுள் வணக்கம்
      அலகிலா ஞான தகத்தடங்க நுங்கி
      உலகெலாம் நின்று னொளித்தாயு நீயே
      ஒளித்தாயு நீயே யுயிர்க்கெலாங் கண்ணா
      யளித்தாயுங் காத்தாயு நீயேவாழி யறவேந்தே
      அழனாறும் வெங்கதிரோ னாண வலராது
      நிழனாறு மூர்த்தியாய் நின்றாயு நீயே
      நின்றாயு நீயே நிறைபொரு ளெல்லைக்க
      சென்றாயும் வென்றாயு நீயேவாழி திருமாலே
      நிறைதரு கேவலத்தோய் நின்னடியார கெல்லாங்
      குறைதலி லின்பங் கொடுப்பயு நீயே
      கொடுப்பயு நீயேயெங் குற்றவேல் வேண்டாய்
      விடுத்தாயு நீத்தாயு நீயேவென்ற பெருமானே 110
      நமிபாடிய இசையின் தன்மை
      என்றவன் பாட கேட்டே யிறஞ்சின குறிஞ்சி யேகா
      நின்றன விலங்கு சாதி நிலங்கொண்ட பறவை எல்லா
      மன்றுமெய் மறந்து சேர்ந்தார் கின்னர ரமரர் தாழ்ந்தார்
      வென்றவன் றியான துள்ளான் வியந்திலன் சிறிதும் வேந்தே
      நமியின் இசைகேட்டு ஆதிசேடன் வருதல்
      மணநிரை திலங்கு தாரோய் மற்றவ னுலோக நாதன்
      குணநிரை திசைத்த கீதங் கேட்டலு மணிகொள் கோவை
      கணநிரை திலங்குங் காய்பொன் முடிமிசை யீரைஞ்ஞாறு
      பணநிரை திலங்க புக்கான் பணதர ரரச னன்றே
      நமியை வணங்குதல்
      பன்னக ருலகங் காக்கும் பாய்கதிர பசும்பொன் மேனி
      மின்னவிர் வயிர சூட்டு விடுசுடர் மணிப்பொற் பூணான்
      தன்னிக ரிகந்த தோன்றல் சரணென பரமன் பாதம்
      மன்னர்க கரசன் முன்னை வலங்கொடு வணக்கங் செய்தான்
      நமியின் இசையில் தேவர்கள் ஈடுபட்டமை
      தேந்துண ரிலங்கு கண்ணி தேவன தேவர் கோனை
      தீந்தொடை நரம்பின் றெய்வ செழுங்குரல் சிலம்ப வேத்த
      பூந்துணர கற்ப லோகம் புடைபெயர திட்ட போற்றா
      வேந்துடை மான மெல்லாம் வேலினால் விடுத்த வேந்தே
      ஆதிசேடன் நமியரசனை வினவுதல்
      மாண்டதன் நிலைமை யுள்ளி வருபொருண் மெய்ம்மைநோக்கி
      தூண்டிய சுடரி னின்ற தியானத்தை துளங்கு வாய்போ
      லீண்டுவ திசைக்குற் றேவ லெம்மிறை யடிக்க செய்தாய்
      வேண்டுவ தெவன்கொ லென்றான் மிடைமணி பூணினானே
      நமியரசன் விடையிறுத்தல்
      பண்மிசை படர்ந்த சிந்தை பணதரற் பணிந்து மாற்ற
      துண்மிசை தொடர்பு நோக்கி யுறுவலி யதனை கேளா
      விண்மிசை யவர்கள் போல வேண்டிய விளைக்குஞ் செல்வ
      மண்மிசை பெறுவ னாக மற்றிதென் மனத்த தென்றான்
      ஆதிசேடன் நமிக்கு வரமளித்து செல்லுதல்
      இச்சையங் குரைப்ப கேட்டாங் கிமைய வரியற்கை யெய்தும்
      வீச்சையு துணையும் வெள்ளி விலங்கலுங் கொடுத்து வேந்தாய்
      நிச்சமு நிலாக வென்று நிறுவிப்போய் நிலத்தின் கீழ்த்த
      னச்சமி லுலகஞ் சேர்ந்தா னாயிரம் பணத்தி னானே
      நமியின் வழித்தோன்றலே சடியரசன் என்று மரீசி பயாபதிக்கு பகர்தல்
      ஆங்கவன் குலத்து ளானெம் மதிபதி யவனோ டொப்பா
      யோங்கிய குலமுஞ் செல்வ பெருமையு முடைய நீயு
      மீங்கிரு குலத்து ளீர்க்குங் கருமம்வ திசைத்த போழ்தி
      னீங்கரு நறுநெய் தீம்பால் சொரிந்தோர் நீர்மை தென்றான்
      பயாபதியின் வரலாறு கூறத்தொடங்குதல்
      தங்குல தொடர்ச்சி கூறி தானவ னிருந்த போழ்தி
      னுங்குல நிலைமை யெல்லா நூலினீ யுரைத்த வாறே
      எங்குல நிலைமை யானு முரைப்பனென் றெடுத்து கொண்டு
      பொங்கலர பிணைய லான்றன் புரோகிதன் புகல லூற்றான்
      அங்கனிமித்திகன் கூறுதல்
      யாவனாற் படைக்க பட்ட துலகெலாம் யாவன் பாத்த
      தேவனால் வணக்கப்பட்ட தியாவன தகலஞ் சேர்ந்து
      பூவினாள் பொறியொன் றானாள் புண்ணிய வுலகங் கான
      ஏவினான் யாவ னம்மை யாவன துலக மெல்லாம் 120
      மற்றவ னருளின் வந்தான் மரகத மணிக்குன் றொப்ப
      சுற்றி நின் றிலங்கு சோதி தோள்வலி யெனும்பே ரான
      கொற்றவ னுலகங் காத்த கோன்முறை வேண்டி யன்றே
      கற்றவ ரின்று காறுங் காவனூல் கற்ப தெல்ல்லம்
      வாகுவலி தவஞ்செ செல்லுதல்
      கொடிவரை தெழுத பட்ட குங்கு குவவு தோளான்
      இடிமுர சதிரு தானை யிறைத்தொழில் மகனு கீந்து
      கடிமண் மனுக்கு தெய்வ கழலடி யரசர் தங்கள்
      முடிபொர முனிவிற் றான்போய் முனிவன முன்னினானால்
      கயிலாயத்து முடியில் தவஞ்செய்தல்
      விண்ணுயர் விளங்கு கோட்டு விடுசுடர் விளங்க மாட்டா
      கண்ணுயர் கதலி வேலி கார்க்கயி லாய நெற்றி
      புண்ணி கிழவன் போகி பொலங்கலம் புலம்ப நீக்கி
      திண்ணிய தியான செந்தீ செங்சுடர் திகழ நின்றான்
      வாகுவலியின் தவநிலைமை
      கழலணி திலங்கு பாதங் கலந்தன கருங்க புற்ற
      தழலணி தெழுந்த வைவா யருமணி யாடு நாகம்
      பொழிலணி தெழுந்த வல்லி புதைந்தன பூமி நாதன்
      குழலணி தெழுந்த குஞ்சி குடைந்தன குருவி கூட்டம்
      அருமுடி யரசர் தாழ்ந்த வடிமிசை யரவ மூர
      கருவடி நெடுங்க ணல்லார் கலந்த தோள் வல்லி புல்ல
      மருவுடை யுலகம் பாடல் வனத்திடை பறவை பாட
      திருவுடை யடிக ணிண்ற திறமிது தெரிய லாமோ
      வெண்டவாங் குவளை கண்ணி மன்னர்தம் மகுட கோடி
      விண்டவாம் பிணைய லுக்க விரி மது துவலை மாரி
      உண்டவான் கழல்கள் சூழ்ந்த திருவடி யரவ மூர
      கண்டவா றிங்க ணார்க்குங் கருதுவ தரிது கண்டாய்
      அடுக்கிய வனிச்ச பூவி னளிமே லரத்த செவ்வாய்
      வடிக்கயல் நெடுங்க ணார்தம் வளிக்கையால் வளித்த மார்பில்
      தொடுக்கிய தொடுத்த போலு துறுமலர கத்தி மாதர்
      கொடிக்கையா லிடுக்க றன்மேல் கொற்றவன் குலவ பட்டன்
      புல்லிய பொலங்கொம் பொப்பார் புலவியு கலவி சென்று
      மெல்லிய மாலை தம்மால் விசித்தலை விடுத்து மீட்டு
      மல்லுய ரலர்ந்த மார்பின் மாதவி பேதை யார்த்த
      வல்லிகள் விடுக்க மாட்டா மனத்தினன் மன்ன னானான்
      வாகுவலி தேவரினும் உயர்நிலை யடைதல்
      ஓவலில் குணங்க ளென்னு மொளிர்மணி கலங்க டாங்கி
      தேவர்க ளுலக மெல்லாஞ் செழுமண மயர்ந்து கூட்ட
      கேவல பெண்ணென் பாளோர் கிளரரொளி மடந்தை தன்னை
      ஆவியு ளடக்கி பின்னை யமரர்க்கு மரிய னானான்
      வாகுவலியின் வழித்தோன்றலே பயாபதி மன்னன் என்றல்
      எங்கள்கோ னிவன்க ணின்று மிக்குயர் குலத்து வேந்தர்
      தங்களோர் புறஞ்சொல் வாரா தன்மையா லுலகங் காத்தார்
      அங்கவர் வழிக்கண் தோன்றி யகலிடம் வணங்க நின்ற
      இங்கிவன் பெருமை நீயுமறிதியா லேந்த லென்றான் 130
      மருசி மேலுங் கூறத்தொடங்குதல்
      குடித்தொட ரிரண்டுங் கேட்டே குறுமயி ரெறிந்து கண்ணுள்
      பொடித்தநீர திவலை சிந்த புகழ்ந்தன ரிருந்த வேந்தர்
      அடுத்தெரி யலர்ந்த செம்பொ னணிமணி முடியி னானங்
      கெடுத்துரை கெடாத முன்ன கேசர னிதனை சொன்னான்
      வாகுவலி கச்சனுக்கு மருமகன் என்று கூறுதல்
      இப்படி தாயிற் பண்டை யிசைந்தது சுற்ற மென்னை
      அப்படி யரிய செய்த வடிகளெம் மரச னாய
      கைப்புடை யிலங்கு செவ்வேற் கச்சற்கு மருக னாரென்
      றொப்புடை புராண நன்னூ லுரைப்பதியா னறிவ னென்றான்
      மன்னவன் மனத்தி னாற்ற மிறைவனை வணங்கி வாழ்த்தி
      பின்னவன் ரன்னை நோக்கி பேசினன் பிறங்கு தாரோய்
      முன்னிய வுலக நூலுங் குலங்களு முறையு முள்ளி
      டின்னவா றறியு நீரோ ரில்லை நின் போல வென்றான் 133
      அரசாட்சி பொறிக்கு வாய் தூதுவர் என்றல்
      மந்திர கிழவர் கண்ணா மக்கடன் றாள்க ளாக
      சுந்தர வயிர திண்டோ டோ ழரா செவிக ளொற்றா
      அந்தர வுணர்வ நூலா வரசெனு முருவு கொண்ட
      எந்திர மிதற்கு வாயா தூதுவ ரியற்ற பட்டார்
      சிறந்த தூதுவன் சிறப்பு
      ஆதிநூ லமைச்சர கோது மாண்பொலா மமைந்து நின்றான்
      தூதனா சொல்லிற் சொல்லா சூழ்பொரு ளில்லை போலா
      மேதிலார காவ துண்டோ வின்னன புகுந்த போழ்திற்
      கோதிலா குணங்க டேற்றி கொழித்துரை கொளுத்த லென்றான்
      பயாபதி மரிசியை பாராட்டல்
      மற்றிம்மாண் புடைய நின்னை யுடையவம் மன்னர் மன்னன்
      எற்றைநூற் றெய்த மாட்டா னிதன்றிற நிற்க வெம்மை
      சுற்றமா நினைந்து நின்னை தூதனா விடுத்து செல்ல
      பெற்றியாம் பிறவி தன்னாற் பெறும்பயன் பெற்ற தென்றான்
      பயாபதி மன்னன் மருசியை நோக்கி சில கூறுதல்
      இன்றியா னின்னை முன்வை தினிச்சில வுரைக்கல் வேண்டா
      ஒன்றியா னுரைக்கற் பால வுரையையு முணர்த்தி நீயே
      வென்றியால் விளங்கு தானை விஞ்சையங் கிழவன் கண்ணா
      நின்றியான் வாழ்வ தல்லா னினைப்பினி யில்லை மன்னோ
      கொற்றவன் குறிப்பி தாயிற் கூவித்த னடியன் மாரை
      உற்றதோர் சிறுகுற் றேவற் குரியரா கருதி தானே
      அற்றமி லலங்கல் வேலோ னறிந்தருள் செய்வ தல்லான்
      மற்றியா னுரைக்கு மாற்ற முடையனோ மன்னற் கென்றான்
      மருசிக்கு சிறப்பு செய்தல்
      தூதன்மற் றதனை கேட்டே தொழுதடி வணங்கி செங்கோல்
      ஏதமில் புகழி னாயானடிவலங் கொள்வ னென்ன
      போதுசே ரலங்க லானும் பொலங்கலம் பொறுக்க லாகா
      சோதிய சுடர சேர்த்தி பெருஞ்சிற பருளி செய்தான்
      மருசிக்கு நாடகங் காட்டி மறுநாள் அனுப்புதல்
      அற்றைநா ளங்கு தாழ்ப்பி தகனகர செல்வ தன்னோ
      டுற்றவ னுவப்ப கூறி யுரிமைநா டகங்கள் காட்டி
      பிற்றைநா குரவர் தம்மை பின்சென்று விடுமி னென்று
      மற்றவர கருளி செய்தான் மருசியு தொழுது சென்றான்
      மருசி தனது நகரத்தை அடைதல்
      உலனல னடுதிண்டோ ளூழிவே லோடை யானை
      சலநல சடியென்பேர தாமரை செங்க ணான்றன்
      குலநல மிகுசெல்கை கோவொடொ பார்கள் வாழு
      நலனமர் நளிசும்மை தொன்னகர் நண்ணி னானே 141
      தூதுவிடு சருக்கம் முற்றிற்று
      ----------
      ஏழாவது
      சீயவதை சருக்கம்

      மரீசி சடி மன்னனை காண்டல்
      மற்ற மாநகர் மருசி புக்கபின்
      கொற்ற வேலவன் கோயின் மாநெதி
      முற்று வான்கடை மூன்றுஞ் சென்றுகோன்
      சுற்று வார்கழ றெழுது துன்னினான் 7.1
      விலங்கு வார்குழை மிளிர்ந்து வில்லிட
      கலந்து மாமணி கடக மின்செய
      அலங்கல் வேலினா னங்கை யாலவற்
      கிலங்கு மாநில திருக்கை யேவினான்
      சடிமன்னன் மரீசியின் கருத்தை குறிப்பாலுணர்தல்
      தொகுத்த மாண்புடை தூதன் மன்னவன்
      வகுத்த மாமணி தலத்தின் மேன்மன
      தகத்தி னாலமர திருப்ப வாங்கவன்
      முகத்தி னாற்பொருண் முடிவு கண்ணினான்
      இதுவுமது
      தூத னின்முக பொலிவி னாற்சுடர
      காது வேலினான் கரும முற்றுற
      ஓதி ஞானிபோ லுணர்ந்த பின்னது
      கோதில் கேள்வியான் றொழுது கூறினான்
      இதுமுதல் உஅ செய்யுள்கள் மரீசியின் கூற்று
      வெல்க வாழிநின் வென்றிவார்கழல்
      செல்க தீயன சிறக்க நின்புகழ்
      மல்க நின்பணி முடித்து வந்தனன்
      பில்கு மும்மத பிணர்க்கை யானையாய்
      இங்கு நின்றுபோ யிழிந்த சூழலும்
      அங்கு வேந்தனை யணைந்த வாயிலும்
      பொங்கு தானையான் புகன்ற மாற்றமு
      தொங்கன் மார்பினாய் சொல்லு கேனெனா
      அள்ளி லைச்செழும் பலவி னார்சுளை
      முள்ளு டைக்கனி முறுகி விண்டென
      கள்ளு றைத்தொறுங் கழுமி யூற்றறா
      வள்ளி லைப்பொழின் மகிழ்ந்து புக்கதும்
      முள்ள ரைப்பசு முளரி யந்தட
      துள்ளி ரைத்தெழு மொலிசெய் வண்டினம்
      கள்ளி ரைத்து கண்டு வண்சிறை
      புள்ளி ரைப்பதோர் பொய்கை சார்ந்ததும்
      நித்தி லம்மணி நிரந்து வெள்ளிவேய்
      பத்தி சித்திர பலகை வேதிகை
      சித்தி ரங்களிற் செறிந்து காமனார்
      அத்தி ரம்மென அசோகங் கண்டதும்
      தன்ணி ழற்சுடர தமனி யத்தினான்
      மன்ணி ழற்கொள மருங்கு சுற்றிய
      வெண்ணி ழற்சுடர் விளங்கு கற்றலங்
      கண்ணி ழற்கொள கண்ட காட்சியும்
      சுரிந்த குஞ்சியன் சுடரு மேனியன்
      எரிந்த பூணின னிலங்கு தாரினன்
      வரிந்த கச்சைய னொருவன் வந்துவண்
      டிரிந்து பாயவிங் கேறு கென்றதும்
      மற்ற வன்றன குரைத்த மாற்றமுங்
      கொற்ற வன்விட கொம்ப னார்சிலர்
      உற்ற மங்கல கலங்க ளோடுடன்
      முற்ற வூண்டொழின் முடிந்த பெற்றியும்
      பங்கய யத்தலர செங்கண் மாமுடி
      திங்கள் வண்ணனுஞ் செம்பொ னீள்குழை
      பொங்கு வெண்டிரை புணரி வண்ணனும்
      அங்கு வந்தது மவர்கள் சொற்றதும்
      நற்பு றத்தன நாற்ப தாம்வய
      திப்பு ரத்தன விளங்க ருங்கைம்மா
      மொய்ப்பு றத்துமேன் முழங்கு தானையோ
      டப்பு றத்தர சவைய டைந்ததும்
      மன்ன வன்கழல் வணங்கி நின்றதும்
      பின்ன வன்றனா லிருக்கை பெற்றதும்
      பொன்னி றப்பொறி புகழ்ந்த சாதக
      துன்னி வாசக தொழுது கொண்டதும்
      ஓட்டி றானையா னோலை வாசகங்
      கேட்ட மன்னவன் கிளர்ந்த சோதியான்
      மீட்டொர் சொற்கொடா விம்மி தத்தனா
      யீட்டு மோனியா யிருந்த பெற்றியும்
      இருந்த மன்னன்மே லெடுத்த மாற்றமும்
      வருந்தி மற்றவன் மறுத்த வன்ணமும்
      புரிந்து தொல்குலம் புகன்ற பெற்றியு
      மரு தகை தொடர் பமைந்த வாக்கமும்
      பின்னை மன்னவன் பேணி நன்மொழி
      சொன்ன வண்ணமுஞ் சுற்ற மாயதும்
      பொன்ன கைக்குலம் பொலிந்து கண்கொள
      வின்ன கைச்சிற பருளி யீந்ததும்
      அருங்கல லக்குழா தரசன் றேவிமார்
      பெருங்கு லத்தவர் பெயர்ந்து கண்டது
      மொருங்கு மற்றுளோ ருரைத்த வார்த்தையுஞ்
      சுருங்கில் கேள்வியான் றொழுது சொல்லினான்
      இதுமுதல் எட்டு செய்யுள்கள் பயாபதி மன்னனின் பெருமையை மரீசி கூறல்
      சொன்ன வார்த்தையிஃ திருக்க சொல்லுவ
      தின்ன மொன்றுள வடிகள் யான்பல
      மன்னர் தங்களை மகிழ்ந்து கண்டன
      னன்ன னீர்மையா ரரச ரில்லையே 20
      கற்ற நூல்பிறர் நூலெலா
      முற்ற நோக்கினு நோக்கல
      வுற்ற நூலெலா முற்ற நூல்களா
      பெற்ற நூலவன் பெற்றி வண்ணமே
      எரியு மாணையான் குளிரு மீகையான்
      பெரியன் பெற்றியாற் சிறிய னண்பினா
      னரியன் வேந்தர்க கெளிய னாண்டையார
      குரிய னோங்குதற் கோடை யானையான்
      எல்லை நீருல கினிது கண்பட
      வெல்லும் வேலவன் விளங்கு தண்ணளி
      யில்லை யேலுல கில்லை யாமென
      நல்ல னேயவ னாம வேலினாய்
      கற்ற நூலினார் கலந்த காதலா
      லுற்ற போழ்துயிர் கொடுக்கு மாற்றலாற்
      கொற்ற வேலவன் குடையி னீழலார்
      சுற்ற மாண்பினர் சுடரும் வேலினாய்
      கோதிலார் குல மக்கண் மாக்கண்மற்
      றேதி லாரென வியைந்த தின்மையார்
      ஆத லாற்றமர் பிறர்க ளாவதங்
      கோதி லாரவர குள்ளஃ தில்லையே
      வைய மின்புறின் மன்ன னின்புறும்
      வெய்ய தொன்றுறிற் றானும் வெய்துறுஞ்
      செய்ய கோலினாய் செப்ப லாவதன்
      றைய தாரினா னருளின் வண்ணமே
      வீவில் வீங்குநீர் வேலி வாழ்பவர
      காவி யாபவ ரரச ராதலாற்
      காவ லோவுங்கொ லென்று கண்படான்
      மாவ றானையம் மன்னர் மன்னனே
      இதுமுதல் ஐந்து செய்யுட்கள் விசயதிவிட்டரின் பண்பு கூறுவன
      மங்குல் மாமழை மாரி வண்கையான்
      பொங்கு காதலால் புதல்வர் தாமுமற்
      றிங்கண் வேந்தர்க கேனை மான்கண்முன்
      சிங்க வேறென செப்பு நீரரே
      கைய வாச்சிலை காம னிங்கிரு
      மெய்யி னால் வெளி பட்ட நீரதால்
      வைய மாள்பவன் புதல்வர் வார்கழ
      லையன் மார்கடம் மழகின் வண்ணமே
      சங்க வண்ணனார் தம்பி தானுநீர்
      பொங்கு கார்முகில் புரையு மேனிய
      னங்க ணிவ்வுல காள நாட்டிய
      மங்க லப்பொறி மன்ன காண்டியால்
      செங்கண் மாலவன் தெய்வ மார்பகம்
      பங்க யத்துமேற் பாவை தன்னுட
      னங்கு லக்கொடி நங்கை சேர்வதற்
      கிங்கன் மாதவ மெவன்கொல் செய்ததே
      மரீசி திவிட்டனும் சுயம்பிரபைக்கும் அமைந்த ஒப்பினை வியத்தல்
      நங்கை யங்கவ னலத்திற் கொப்பவ
      ளிங்கி வட்குவ றேந்த லில்லிவர்
      பொங்கு புண்ணியம் புணர்த்த வாறிது
      வெங்கண் யனையாய் வியக்கு நீரதே
      சடி மன்னன் மரீசிக்கு சிறப்பு செய்தல்
      என்று கூறலு மேந்து நீண்முடி
      வென்றி நீள்புகழ் வேக யானையா
      னன்று மற்றவற் கருளி யீந்தன
      னின்று மின்சுடர் நிதியின் நீத்தமே
      சடிமன்னன் அமைச்சரை வினாதல்
      மற்ற வன்றனை மனைபு கப்பணி
      துற்ற மந்திரத்தவர்க ளோடிரு
      தெற்று நாமினி செய்வ தென்றனன்
      வெற்றி நீள்குடை வேந்தர் வேந்தனே
      அமைச்சரின் விடை
      செங்க ணீன்முடி செல்வ சென்றொரு
      திங்கள் நாளினு டிவிட்ட னாங்கொரு
      சிங்கம் வாய் பக தெறுவ னென்பது
      தங்கு கேள்வியான் றான்முன் சொன்னதே
      இதுவுமது
      ஆதலா லஃதறியும் வாயிலா
      வோது மாண்பினா னொருவ னெற்றனா
      தீதி றானையாய் செல்ல வைப்பதே
      நீதி யாமென நிகழ்த்தி னாரரோ
      மன்னன் ஒற்றாய்தல்
      உய்த்து ணர்ந்தவ ருரைத்த நீதிமேல்
      வைத்த வொற்றினன் மன்ன னானபி
      னத்தி றத்தனே யமர்ந்த சிந்தைய
      னொத்த சுற்றமோ டுவகை யெய்தினான்
      இனி அச்சுவகண்டன் செய்தியை கூறுவாம் எனல்
      இத்தி சைக்கணிவ் வாறிது செல்லுநா
      ளத்தி சைக்கணஞ் சப்படு மாழியா
      னெத்தி சைக்கும் வெய் யோனியன் முன்னுற
      வைத்தி சைத்தன மற்றதுங் கூறுவாம்
      இதுமுடல் 6 செய்யுள்கள் அச்சுவக்சுண்டன் கா களியாட்டம் கூறுவன
      பஞ்சி மேன்மிதி கிற்பனி குந்தகை
      யஞ்சி லோதிய ரம்முலை நாஞ்சிலா
      மஞ்சு தோய்வரை மார்ப மடுத்துழ
      துஞ்ச லோவு தொழிலின னாயினான்
      முத்த வாணகை மோய்பவ ளத்துணி
      யொத்த வாயமு தொண்கடி கைத்திரள்
      வைத்த வாயின னாய்மட வார்கடஞ்
      சித்த வாரிக ளுட்சென்று தங்கினான்
      ஆர தங்கிய மார்பனு மந்தளிர
      காருங் கொம்பனை யாருங் கலந்துழி
      தாருங் கொங்கை ளும்பொர தாஞ்சில
      வாரம் பட்டணி வண்டின மார்த்தவே
      வண்டு தோய்மது வாக்கிவள் ளத்தினு
      கொண்டு கொம்பனை யார்கள் கொடுப்பவஃ
      துண்டு மற்றவ ரொண்டுவர் வாயொளி
      தொண்டை யங்கனி யின்சுவை யெய்தினான்
      தாம மென்குழ லார்தடங் கண்ணெனு
      தேம யங்கிய செங்கழு நீரணி
      காம மென்பதொர் கள்ளது வுண்டரோ
      யாம மும்பக லும்மயர் வெய்தினான்
      சுற்று வார்முலை யார்த துகிற்றட
      முற்று மூழ்கும் பொழுது முனிவவ
      ருற்றபோழ் துணர தும்பொழு தும்மலான்
      மற்றொர் போழ்திலன் மன்னவ னாயினான்
      மண்க னிந்த முழவின் மடந்தையர்
      கண்க னிந்திடு நாட காட்சியும்
      பண்க னிந்தவின் றீங்குரற் பாடலும்
      விண்க னிந்திட வேவிழை வேய்தினான்
      வாவி யும்மது மண்டப சோலையு
      தூவி மஞ்ஞை துதைந்தசெய் குன்றமும்
      பாவும் வெண்மண லும்புனற் பட்டமு
      மேவு நீர்மைய னாய்விளை யாடினான்
      மின்னுஞ் செங்கதிர் மண்டிலம் வெய்தொளி
      துன்னுஞ் திங்க பனிச்சுடர் தண்ணிது
      என்னு மித்துணை யும்மறி யான்களி
      தன்ன னாயின னச்சுவ கண்டனே
      அச்சுவக்கண்டனின் அரசியல்
      சீறிற் றேந்துணர் வின்றி செகுத்திடு
      மாறுகண் டென்பதோர் மாற்றம் பொறான்மன
      தேறின் யாரையும் தேறுஞ் செருக்கொடிவ்
      வாறு சென்ற தவற்கர சென்பவே
      பூமகள் அச்சுவக்கண்டன் ஆட்சியிலிருந்தகல செவ்வி தேர்தல்
      தோடு மல்கு சுரும்பணி கோதையர்
      கோடி மென்றுகிற் கு தடம்படி
      தாடி தன்னணை யாமையிற் பூமகள்
      ஊட லுற்றிடம் பார்த்துள ளாயினாள்
      சதவிந்து என்பான் அச்சுவகண்டற்கு அரசியலறம் கூறல்
      ஆங்கொர் நாளிறை பெற்றறி வின்கடல்
      தாங்கி னான்சத விந்துவென் பானுளன்
      நீங்க லாப்புக ழான்ற னிமித்திகன்
      வீங்கு வெல்கழ லார்கு விளம்பினான் 7.50
      அரசர்க்குரிய அறுவகை பகைகள்
      மன்ன கேள்வளை மேய்திரை மண்டில
      தன்னை யாள்பவர கோதின் தங்கணே
      பன்னி னாறு பகைக்குல மாமவை
      முன்னம் வெல்கவென் றான்முகம் நோக்கினான்
      தன்னை வென்றதண் டார்வய வேந்தனை
      பின்னை வேறல பிறர்க்கரி தாதலான்
      மன்ன மற்றவ னாளும் வரைப்பகம்
      பொன்னின் மாரி பொழிந்திடு நன்றரோ
      மாசி றண்டன்ன தோண்மன்ன மன்னிய
      கோசி றண்டத்த னாய்விடிற் கொற்றவ
      னேசி றண்டம் பரவவின் வையக
      மாசி றண்டத்த னாயினி தாளுமே
      பெற்ற தன்முத லாப்பின் பெறாததுஞ்
      சுற்றி வந்தடை யும்படி சூழ்ந்துசென்
      றுற்ற வான்பொருள் காத்துய ரீகையுங்
      கற்ற வன்பிறர் காவல னாகுவான்
      அருக்கன் றன்னறி வாக வலர்ந்தநீர
      திருக்க வின்றசெல் வச்செழு தாமரை
      செருக்கெ னப்படு திண்பனி வீழுமேல்
      முருக்கு மற்றத னைமுக தாரினாய்
      இகழ்ச்சி யிற்கெடு வார்களை யெண்ணுக
      மகிழ்ச்சி யுண்மதி மைந்துறும் போதென
      புகழ்ச்சி நூலு புகன்றனர் பூவினு
      டிகழ்ச்சி செல்பொன் மணிமுடி மன்னனே
      அரசே நீ சினந்தாலும் நினக்கு ஓர் உறுதி கூறுவேன் எனல்
      நெறியி னீதிக்க னேரிவை யொப்பவு
      மறிதி நீயவை நிற்க வழன்று நீ
      செறுதி யேனுஞ்செம் பொன்முடி மன்னவோர்
      உறுதி யானுரை பானுறு கின்றதே
      அச்சுவக்கண்டனும் அங்ஙனமாயின் அவ்வுறுதி யாது கூறுதி எனல்
      என்ற லும்மிணர் வேய்முடி மாலையா
      னன்று சொல்லுக வென்று நகைமணி
      குன்ற மன்னதிண் டோ ண்மிசை குண்டலஞ்
      சென்று மின்சொரி யச்செவி தாழ்த்தினான்
      நிமித்திகன் கூறல்
      பூமி மேற்புரி சைம்மதிற் போதன
      நாம நன்னக ராளு நகைமலர
      தாம நீண்முடி யான்றன் புதல்வர்கள்
      காம வேளனை யாருளர் காண்டியால்
      இதுவுமது
      ஏந்து தோளவ ருள்ளிளை யான
      காய்ந்த தொல்பகை யாகுமென் றேயுற
      போந்தொர் புன்சொ னிமித்தம் புறப்பட
      வேந்த யான்மன தின்மெலி கேனரோ 60
      அச்சுவக்கண்டன் நிமித்திகன் கூற்றை தடுத்தல்
      முத்த நிண்முடி யான்மூன்ன மற்றதற்
      கொத்த வாறுணர தீயென வென்செயு
      மைத்த கைமன தன்மணி தன்னென
      கைத்த லங்கதிர் வீச மறித்தனன்
      அச்சுவக்கண்டன் கூறுதல்
      மிகையின் வந்தவி சாதர வேந்தர்த
      தொகையை வென்றவென் றோளுள வாப்பிற
      பகையி னிப்படர தென்செயு மென்றன
      னகைகொ ணீண்முடி நச்சர வம்மனான்
      அச்சுவக்கண்டனின் சினமொழிகள்
      மாசி லாலவ டத்தெழு மாதரும்
      வீச விண்டொடு மேரு துளங்குமோ
      பேசின் மானிட பேதைக ளாற்றலா
      லாசி றோளிவை தாமசை வெய்துமோ
      இதுவுமது
      வேழ தின்மரு புத்தடம் வீறுவ
      வாழை தண்டினு ளூன்ற மழுங்குமோ
      வாழி தானவர் தானையை யட்டவென்
      பாழி தோள்மனி தர்க்கு பணியுமோ
      வேக மாருதம் வீசவிண் பாற்சிறு
      மேக சாலம் விரிந்தெதிர் செல்லுமோ
      வேக மாயவென் சீற்றமஞ் சாதெதி
      ராக மானுடர் தாமசை கிற்பவோ
      குலிச மிந்திரன் கொண்டு பணிக்கு மேன்
      மலையின் மாசிக ரங்களும் வீழ்த்திடு
      நிலைய வெஞ்சுட ராழி நினைப்பனேற்
      றொலைவில் வானவர் தோளு துணிக்குமே
      விச்சை மற்றவர் தம்மை விடுப்பதோ
      ரிச்சை யென்கணுண் டாமெனின் யாவரே
      யச்ச மின்றி நிற் பார நிமித்த நூல்
      பொச்ச லாங்கொல் புல தெழு நீர்மையாய்
      புலவர் சொல்வழி போற்றில னென்பதோ
      ரலகிற் புன்சொலு கெஞ்சுவ னல்லதே
      லுலக மொப்ப வுடன்றெழு மாயினு
      மலைவன் மற்றதன் கண்மதி பில்லையே
      ஆத லாலாதற் கேற்ற தமைச்சர்க
      ளோதி யாங்குணர தீகவென் றொட்டினான்
      யாது தன்கணல் லார்செயற் கேன்றதோ
      ரேத முண்டெனு மெண்ணமில் லாதவன்
      அச்சுவ கண்டன் அமைச்சர் கூறுதல்
      அலங்க லாழியி னானது கூறலுங்
      கலங்கு நூற்கரு மத்தொழின் மாக்கடம்
      புலங்கொள் சூழ்ச்சிய ராகி புகன்றன
      ருலங்கொள் தோளவ னுக்குணர் வாயினார்
      எரியு தீத்திர ளெட்டுணை தாயினுங்
      கரி சுட்டிடுங் காந்தி கனலுமேற்
      றெரியிற் றொல்பகை தான்சிறி தாயினும்
      விரி பெற்றபின் வென்றிடு கிற்குமே
      முட்கொணச்சு மரமுளை யாகவே
      யுட்கி நீக்கி னுகிரினுங் கொல்லலாம்
      வட்கி நீண்டதற் பின் மழு வுந்தறு
      கட்கு டாரமு தாங்களை கிற்பவோ
      சிறிய வென்றிக ழார்பகை சென்றுசென்
      றறிய லாவவன் றாலணி மாமலர்
      வெறியும் வேரியும் விம்மி விரிந்துதேன்
      செறியு தொங்கற்செம் பொன்முடி மன்னனே
      அரிமஞ்சு என்னும் அமைச்சன் கூறுதல்
      அஞ்சி நின்றவர் கூறிய பின்னரி
      மஞ்சு வென்பவன் சொல்லுமற் றாங்கவன்
      செஞ்செ வேபகை யாமெனிற் றேர்ந்துகண்
      டெஞ்சி றொல்புக ழாய்பின்னை யெண்ணுவாம்
      இதுவுமது
      பகைய லாதவ ரைப்பகை யாக்கலும்
      நகையி றீமன தாமரை நண் பெண்ணலு
      முகையின் வேய்ந்தமென் மொய்ம்மலர கண்ணியாய்
      மிகையின் மற்றவை பின்னை வெதுப்புமே
      அரிமஞ்சு கூறும் சூழ்ச்சி
      அறி தேறு திறத்ததெவ் வாறெனிற்
      றிறையிற் கென்று விடுதும்வி டாற்றிறை
      முறையிற் றந்து முகமன் மொழிந்தெதிர்
      குறையிற் கொற்றவ குற்றமங் கில்லையே
      அச்சுவக்கண்டன் மகிழ்ந்து தூதுவிடுதல்
      என்ற லும்மிது நன்றென வேந்தொளி
      நின்ற நீண்முடி நீடிணர கண்ணியான்
      சென்று தூதுவர் தாந்திறை கொள்கென
      வென்றி வேலவன் மேல்விடை யேயினான்
      அத்தூதர்களின் பண்பு
      ஊட்ட ரக்குண்ட கோலரொண் கோலத்த
      ரோட்ட ரும்பொறி யொற்றிய வோலையர்
      நாட்டி யம்முணர் வாரொரு நால்வர்சேண்
      மோட்டெ ழின்முகில் சூழ்நெறி முன்னினார்
      வேறு - தூதர் போதன நகரத்தை எய்துதல்
      தீதறு தென்மலை மாதிர முன்னுபு
      தூதுவர் சூழ்சுடர் சூடிய சூளிகை
      யோதின ரோதி யுலப்பற வோங்கிய
      போதன மாநகர் புக்கன ரன்றே
      அந்நகர சிறப்பு
      செஞ்சுடர் மின்னொளி சென்று பரந்திட
      மஞ்சொடு வைகிய மாமணி மாளிகை
      வெஞ்சுடர் வீதி விலக்குவ கண்டுதம்
      விஞ்சையர் செல்வம் வெறுத்தன ரன்றே
      இதுவுமது
      முரி முழாவொலி விம்மி முரன்றெழு
      காரி மிழார்கலி யான் மயி லாலுவ
      சோரி முழாவிழ விற்றெரு துற்றபின்
      சீரி மிழாற்பொலி வெய்தினர் சென்றே
      சூளிகை சூடிய சூல விலைத்தலை
      மாளிகை மேன்மழை மாமுகில் போழ்தலின்
      னீளிய நீரரு வித்திரள் வீழ்வன
      காளைக டாதைந கர்ப்பல கண்டார்
      கூடுநர் கோவை மணிக்கலை யுக்கவு
      மூடினர் சிந்திய வொண்சுடர் மாலையு
      மூடிய மூரி நெடுந்தெரு வொப்பவு
      மூடு செலற்கரி தாயிட ருற்றார்
      மூரிநடைக்களி யானை மதத்தினொ
      டேரி னடைக்கலி மாதம் விலாழியு
      மோரி நுரைப்ப வுகுத்த பெருங்கடை
      வேரி வெறிக்கள மொப்பது கண்டார்
      தூதர்கள் அரண்மனையை அடைதல்
      வண்டு படக்குவ ளைப்பிணை நக்கலர்
      விண்ட மதுப்பரு கிக்களி யின்மதர்
      கொண்டு நடைக்களி யன்ன மிரைப்பதொர்
      மண்டு புனற்புரி சைப்பதி சார்ந்தார்
      கோயின் முகத்தது கோடுயர் சூளிகை
      வேயின் முகத்ததின் மாமழை வீழ்வது
      ஞாயின் முகத்த நகைத்திரண் முத்தணி
      வாயின் முகத்து மடுத்திது சொன்னார்
      தூதர்கள் தம் வருகை அறிவிக்கும்படி வாயிலோனு குரைத்தல்
      வேய்தலை நீடிய வெள்ளி விலங்கலி
      னோய்தலி லொண்சுட ராழியி னான்றமர்
      வாய்தலி னின்றனர் வந்தென மன்னன்முன்
      நீதலை சென்றுரை நீள்கடை காப்போய்
      பயாபதி தூதர்களை அழைத்துவர பணித்தல்
      என்றவர் கூற விருங்கடை யானடி
      னான்றென நாறொளி நீண்முடி யானடி
      மன்ற வணங்கி மொழிந்தனன் மன்னனும்
      ஒன்றிய போதக என்ப துரைத்தான்
      தூதர் பயாபதிக்கு ஓலை கொடுத்தல்
      பொன்னவிர் நீள்கடை காவலன் போதக
      வென்னலி னெய்தி யிலங்கொளி நீண்முடி
      மன்னவன் வார்கழல் வாழ்த்திமடக்கிய
      சொன்னவி லோலைகை தொழுதன ரீந்தார்
      அந்த ஓலையை படித்தல்
      வாசகன் மற்றது வாசினை செய்தபின்
      மாசக னீள்முடி மன்னவன் முன்னிவை
      தேசக மூசிய வாழியன் சீர்த்தம
      ரோசைக ளோலை கொடொப்ப வுரைத்தர்
      இதுமுதல் 6 செய்யுள்கள் தூதர்கள் கூறும் செய்தி
      ஊடக மோடி யெரிந்தொளி முந்தூறு
      மாடக மாயிர கோடியு மல்லது
      சூடக முன்கையர் தோடக மெல்லடி
      நாடக ராயிர நாரியர் தம்மையும்
      தெண்டிரை சிந்திய சங்கொடு செங்கதி
      ரெண்டர னம்பவ ழக்கொடி யீட்டமும்
      கண்டிரள் முத்தொடு காழகி லந்துகில்
      பண்டரு நீரன வும்பல் பண்டமும்
      வெண்கதிர் முத்தகில் வேழ மருப்பொடு
      கண்கவர் சாமரை வெண்மயி ரின்கணம்
      தண்கதிர் வெண்குடை யாய்தரல் வேண்டுமி
      தொண்சுட ராழியி னானுரை யென்றார்
      வேறு - பயாபதியின் மனநிலை
      வேந்தன்மற் றதனை கேட்டே வெற்றுவ னெறிந்த கல்லை
      காந்திய கந்த தா கவுட்கொண்ட களிரு போல
      சேந்தவ ருரைத்த மாற்றஞ் சிந்தையு ளடக்கி வைத்து
      நாந்த கிழவர் கோமா னயந்தெரி மனத்த னானான்
      இதுமுதல் 5 செய்யுள்கள் பயாபதியின் சிந்தனை
      கருத்துமாண் குலனு தேசுங் கல்வியும் வடிவு தம்மில்
      பொருத்தினாற் பழிக்க லாகா புலைமைமி குடைய ரேனு
      மொருத்தனு கொருத்தன் கூறக்கேட்டுற்று செய்து வாழ
      திருத்தினா னிறைவ னேகாண் செய்வினை கிழவ னென்பான்
      மதியினை மலர சூழ்ந்து வருந்தித்தாம் படைக்க பட்ட
      நிதியினை நுகர்ந்து மென்று நினைத்தினி திருந்த போழ்திற்
      பதியினை கலக்கி சென்று பறித்துத்தாம் பிறர்க்கு நீட்டும்
      விதியினை விலக்க மாட்டா மெலிபவால் வெளிய நீரார்
      ஓளியினாற் பெரிய னாய வொருவனு குவப்ப செய்தோ
      ரளியினால் வாழ்து மென்னும் மவாவினு ளழுந்து கின்றாம்
      தெளியநா மிதனை கண்டும் செய்வினை திறங்க ளோரா
      மளிய மோ வளியஞ் சால வறிவினாற் பெரிய மேகாண்
      அன்றுநா முயல பட்ட வினைகள்மற் றனைய வானா
      லின்று நா மவலி தென்னை யினிச்செய்வ தெண்ணி னல்ல
      வென்றியான் விளங்கு மாழி யவர்கட்கு மேலை வேந்த
      ரொன்றியாங் குவப்பி தாண்ட துரைப்பக்கே டுணர்ந்தா மன்றே
      பயாபதி தூதர்க்கு முகமன் மொழிதல்
      என்றுதன் மனத்தி னெண்ணி யிலங்குகோற் கைய ராகி
      நின்றகே சரரை நோக்கி நிலமன்ன னனைய சொன்னர
      கொன்றியா மிங்க ணுள்ள தொருப்படு துய்ப்ப கொண்டு
      சென்றுறு மிறவர கெம்வா யின்னுரை தெரிமி னென்றான்
      பயாபதி தன் மக்களறியாதபடி திறைப்பொருள் செலுத்த நினைத்தல்
      ஆளிக கரச னன்ன வரசர்கோ னதனை கூறி
      வாளிவிற் றடக்கை வெம்போர் மணிவரை யனைய மார்பிற்
      காளைக ளிதனை கேட்பிற் கனல்பவா லவரை யின்னே
      மீளுமா றமைப்ப னென்று வேண்டுவ விதியி னீந்தான் 7. 100
      இதுமுதல் ஐந்து செய்யுள்கள் ஒருதொடர் பயாபதி திறை நல்குதல்
      செய்யவா பசும்பொ னோலை சீறடி பரவை யல்கு
      லையநுண் மருங்கு நோவ வடிக்கொண்ட குவவு கொங்கை
      வெய்யவா தண்ணெ னீலம் விரிந்தென விலங்கி நீண்ட
      மையவா மழைக்க கூந்தன் மகளிரை வருக வென்றான்
      அணிமுழா வனைய தோளா னருளிய தறிந்த போழ்தின்
      மணிமுழா சிலம்ப கொண்ட மண்டல வரங்கி னங்கண்
      குணிமுழா பெயர்த்த பணி குயிற்றுத லிலயங் கொண்ட
      கணிமுழ மருங்குற் பாடற் கலிப்பிவை தவிர்த்து சென்றார்
      மஞ்சிடை மதர்த்த மஞ்ஞை வான்குழா மென்ன வாங்கண்
      வெஞ்சுடர் விளங்கு மாட திடைநிலை விரவி தோன்றி
      வஞ்சிநன் மருங்கு னோவ மணிநகை கலாவ மின்ன
      செஞ்சுடர் சிலம்பு பாட தேன்றிசை பரவ சேர்ந்தார்
      மாடெலா மெரிந்து மின்னும் வயிரக்குண் டலத்தோ டம்பொற்
      றோடுலா துளங்கி தோன்றுஞ் சுடிகைவாண் முகத்து நல்லார்
      பாடலா னரம்பின் தெய்வம் படிவங்கொண் டனைய நீரா
      ராடலா லரம்பை யொப்ப ரவரிலா யிரரை யீந்தான்
      காய்ந்தொளிர் பவழ சாதி கடிகைகள் காண மின்னு
      பாய்ந்தெழு சுடர்ச்சங் கீன்ற பருமணி தரளக்கோவை
      யேந்தொழிற் காக துண்ட மருப்பிணை கவரி கற்றை
      யாய்ந்தொழின் மகர பூணா னுவப்பன வனைத்து மீந்தான்
      பயாபதி திறை நல்கியதை விசயதிவிட்டர்கள் காண்டல்
      அஞ்சுடர் வயிர பூணா னருளினான் விடுப்ப வாங்கண்
      விஞ்சையர் விமான தோற்ற மேலருங் கலங்க ளேற்றி
      செஞ்சுடர் திலக செவ்வாய் மகளிரை விமானஞ் சேர்த்தி
      கஞ்சிகை மறைக்கும் போழ்திற் காளைக ளதனை கண்டார்
      திவிட்டன் அந்நிகழ்ச்சியை வினாதல்
      என்னிது விளைந்த வாறி தூதுவர் யாவ ரென்று
      கன்னவில் வயிர திண்டோ கடல்வண்ணன் வினவ யாரும்
      சொன்னவின் றுரைக்க மாட்டார் துட்கென்று துளங்க வாங்கோர்
      கொன்னவில் பூதம் போலுங் குறண்மக னிதனை சொன்னான்
      குறளன் கூற்று
      அறைகழ லரவ தானை யச்சுவ கிரீவ னென்பா
      னிறைபுக ழாழி தாங்கி நிலமெலாம் பணிய நின்றான்
      திறைதர வேண்டும் என்று விடுதர செருவ தானை
      யிறைவனு மருளி செய்தா னிதுவிங்கு விளைந்த தென்றான்
      இதுமுதல் மூன்று செய்யுள் ஒருதொடர் - திவிட்டன் சீற்றம்
      வேறு -
      திறைக்கட னென்னு தீச்சொற் கேட்டலு
      நிறைக்கட னிரம்பிய நெஞ்ச தீக்கலுண்
      முறைகெட முளைப்பதோர் முனிவி஢ னொள்ளெரி
      கரைப்படு படையவன் கனல் மூட்டினான்
      முடித்தலை முத்துதிர தாங்கு நெற்றிமேல்
      பொடித்தன சிறுவியர புள்ளி யொள்ளெரி
      யடுத்தெழு சுடரக துக்க நெய்த்துளி
      கடுத்தசெங் கண்ணுநீர திவலை கான்றவே
      படத்திடை சுடர்மணி தீண்ட பட்டெரி
      கடுத்திடு மரவென கனன்ற நோக்கமோ
      டடுத்தெரி தழல்நகை நக்கு நக்கிவை
      யெடுத்துரை கொடுத்தன னிளிய காளையே
      இதுமுதல் 7 செய்யுள் ஒரு தொடர் - திவிட்டன் சினமொழிகள்
      உழுதுதங் கடன்கழி துண்டு வேந்தரை
      வழிமொழி தின்னணம் வாழு மாந்தர்போ
      லெழுதிய திறையிறு திருந்து வாழ்வதே
      லழகிது பெரிதுநம் மரச வாழ்க்கையே
      நாளினு திறைநு குவப்ப தந்துநா
      டாளுது மன்றெனி லொழிது மேலெம
      தோளினு தொடுகழல் வலியி னானுமிவ்
      வாளினும் பயனெனை மயரி மாந்தர்காள்
      விடமுடை யெரிக்கொடி விலங்கு நோக்குடை
      யடைலுடை கடுந்தொழி லரவி னாரழற்
      படமுடை மணிகொள கருதி பார்ப்பதோர்
      மடமுடை மனத்தனும் மயரி மன்னனே
      இருங்கலி படையினு மிகலி னாலுமெம்
      மருங்கல் மிவைபெற்ற கரிய தாவதோர்
      மருங்குள தெனினது மகளி ராற்சில
      பெருங்கல தாங்கினாற் பெறலு மாகுமே
      பாழியான் மெலிந்தவற் திறத்து பண்டெலா
      மாழியால் வெருட்டி நின் றடர்த்தி போலுமஃ
      தேழைகா ளினியொழி திட்டு செவ்வனே
      வாழுமா றறிந்துயிர் காத்து வாழ்மினே
      அன்றெனிற் றிறைகொள கருதி னாங்கொடு
      குன்றின்மேற் பெறுவதென் வந்து கொள்கையா
      னின்றுத னெஞ்சக நிறைய வீழ்வன
      வென்றியாம் பகழியும் விசும்பு மீவனே
      இறைவனை மகளிர்போற் கழறி யென்னையெங்
      குறையிது கூறுமின் சென்று தூதிர்காள்
      திறையினை மறுத்தவர் திறத்து செய்வதோர்
      முறையுள தெனினது முயன்று கொள்கவே
      உட்கவாங் குரைத்தலு மொளிர்பொன் மாழையுங்
      கட்கமழ் கோதையர் கணமு மீண்டது
      வட்கிநம் மிறைவற்கு வலிது தெவ்வென
      துட்கெனு மனத்தினர் தூத ரேகினார்
      தூதர்கள் அரிமஞ்சு என்பானிடம் சொல்லுதல்
      போகிய தூதர் தங்கோன் பொலங்கழ றெழுத லஞ்சி
      யாகிய தறிந்து சூழு மரிமஞ்சு லவனை கண்டே
      யேகிய புகழி னானை கண்டது மீ பட்ட
      தோகையஞ் சாய லார்தங் குழாங்களு நெதியுஞ் சொல்லி
      இதுவுமது
      மீட்டிளங் குமரர் கண்டு விடுசுட ரிலங்கு நக்கு
      மோட்டிளங் கண்ணி தீய முனித்தழன் முழங்க நோக்கி
      யூட்டிலங் குருவ கோலோர் தங்களு குரைத்த வெல்லாம்
      தோட்டிலங் குருவ தொங்க லமைச்சற்கு சொல்லி யிட்டார்
      அரிமஞ்சு தனக்குள் சிந்தித்தல்
      அரும்பெற லறிவின் செல்வ னரிமஞ்சு வதனைக்கேட்டே
      பெரும்பகை யதனை கேட்டாற் பெரியவன் சிறிது நோனா
      னிரும்பகை யிதனை யென்கொல் விலக்குமாறென்று தானே
      சுரும்பிவர் தொடையன் மார்பன் சூழ்ச்சி கொண் மனத்தனானான்
      இதுவுமது
      மின்றொடர திலங்கு பூணான் விளைவுறா விளைமை தன்னா
      னன்றுதீ தென்னு தேர்ச்சி நவின்றில னாத லால்யா
      னொன்ற வோர் மாயங் காட்டி யுளைவித்து குறுக வோடி
      குன்றிடை சீ தன்மேற் கொளப்புணர திடுவனென்றான்
      அரிமஞ்சு அரிகேதுவினை மாயச்சிங்கமாக்கி ஏவுதல்
      அன்னண மனத்தி னாலே யிழைத்தரி கேது வென்னு
      மின்னணங் குருவ பைம்பூண் விஞ்சையன் றன்னை கூவி
      கன்னவி றோளி னாற்கு கருமமீ தென்று காட்டி
      மன்னுமோர் மா சீய மாகென வகுத்து விட்டான்
      அம்மாயச்சிங்கத்தின் தன்மை
      ஒள்ளெரி நெறிப்ப டன்ன சுரியுளை மலைகண் போழும்
      வள்ளுகிர் மதர்வை திங்க குழவிவா ளெயிற்று பைங்க
      ணுள்ளெரி யுமிழ நோக்கி வுருமென வதிரும் பேழ்வா
      கொள்ளரி யுருவு கொண்டான் கொடியவன் கடிய சூழ்ந்தான்
      அவ்வரிமாவின் செயல்
      இலைத்தடஞ் சோலை வேலி யிமவந்த மடைந்து நீண்ட
      சிலைத்தட தோளி னார்தஞ் சிந்துநா டதனை சேர்ந்து
      மலைத்தடம் பிளந்து சிந்த மாண்புடை பெயர முந்நீ
      ரலைத்துடன் கலங்கி விண்பா லதிரநின் றுரறி யிட்டான்
      அப்பொழுது உலகில் ஏற்பட்ட குழப்பம்
      பொடித்தலை புலம்பி கானம் போழ்ந்துமா நெரிந்து வீழ
      வடித்தலை கலங்கி வேழம் பிடிகளோ டலறி யாழ
      புடைத்துழி பதடி போல துறுகற்கள் புரண்டு பொங்க
      விடித்தலின் மனித்த ரெல்லா மெயிறுற விறுகி சோர்ந்தார்
      அரிமஞ்சு திவிட்டன்பால் தூதுவிடல்
      அப்படி யவனை யவ்வா றமைத்தபி னமைச்ச னாங்கண்
      மெய்ப்படை தெரிந்து சொன்ன தூதுவ ரவரை மீட்டே
      யிப்படி யிவைகள் சொல்லி பெயர்மினீ ரென்று வென்றி
      கைப்படை நவின்ற வெம்போர காளையை கனற்ற விட்டான்
      ஆங்கு தூதுவ ரதிர்முகி லாறுசென் றிழிந்து
      பூங்க டேமொழி போதன திறைவன்றன் புதல்வர்
      வீங்கு பைங்கழல் விடுசுடர் மிடைமணி பூணோர்
      ஓங்கு தானையோ டுலாப்போந்த விடஞ்சென்றீ துரைத்தார்
      தூதர்கள் திவிட்டனுக்கு இயம்புதல்
      திரையின் மாற்றமு திறையினை விலக்கிய திறமும்
      குறையென் றெங்களை குமரநீ பணித்ததுங் கூற
      வரையும் பைங்கழ லாழி தடக்கையெ மரைச
      னறையும் குஞ்சியா னன்றுநன் றெனச்சொல்லி நக்கான்
      இதுவுமது
      தளையின் விண்டுதேன் றயங்கிய தடங்கொடார் மார்ப
      விளையை யென்பது மெங்கள்வா கேட்டபி னிறைவ
      னொளியு மாற்றலும் தன்கணொன் றுள்ளது நினையா
      னளியின் பிள்ளைதா னுரைத்தவென் றழன்றில னமர்ந்தான்
      தூதுவர் திவிட்டனுக்கு அரிமா வுண்மை கூறல்
      அறியு மாயிற்ற னரும்பெற னாட்டினை யரிய
      வெறியு மின்னுரு மெனவிடி திறுவரை முழையு
      ளுறையுங் கோளரி யொழிக்கலா னமக்குவ தீயு
      திறையு மீட்கிய வலித்தவ செருக்குடை சிறியோன் 133
      திவிட்டன் வியந்து அயல் நின்றாரை வினாதல்
      என்று மற்றது மொழிமின் றுரைத்தெமை விடுத்தா
      னென்ற மாற்றமஃ திசைத்தலு மிளையவ னென்னே
      சென்ற நாட்டகஞ் சிலம்பதின் றிடித்துயி ரலற
      கொன்றொர் கோளரி கொடுமுடி யுறைவதோ வென்றான்
      அயனின்றோர் அவ்வரிமா உளதெனல்
      உனது வாழிநி னொலிபுனற் சிந்துநன் னாட்டிற்
      களைதல் யாவர்க்கு மரியது கனமணி குன்றி
      னுளது கோளரி யுருமென விடித்துயிர் பருகி
      அளவி ணீன் முழை யுறைகின்ற தடிகளென் றுரைத்தார்
      திவிட்டன் அவ்வரிமாவை கொல்வேன் என்று சூளுரைத்தல்
      ஆயின் மற்றத னருவரை பிலமென வகன்ற
      வாயை போழ்ந்துட லிருபிள பாவகு திடுவ
      னேயி பெற்றியே விளை த்தில னாயினும் வேந்தன்
      பேயிற் பேசிய பிள்ளையே யாகென்று பெயர்ந்தான்
      இதுவுமது
      புழற்கை திண்ணுதி மருப்பின் பொருகளி றிவைதா
      நிழற்க ணோக்கித்தின் றழன்றன நிலையிடம் புகுக
      வழற்க ணாறுப வடுபடை தொடுதலை மடியா
      தொழிற்க ணாளரு தவிர்கென சூளுற்று மொழிந்தான்
      இவரு மாமணி கொடுஞ்சிய விவுளி தேர் காலா
      கவரி நெற்றிய புரவிதங் காவிடம் புகுக
      வெவரு மென்னொடு வரப்பெறார் தவிர்கென வெழில்சே
      ருவரி நீர்வண்ண னுழையவ ரொழியுமா றுரைத்தான்
      விசயன் திவிட்டனுடன் செல்ல நினைத்தல்
      நகர மாசன மிரைப்பது தவிர்த்தபின் னளிநீர
      பகரு மாகடல் படிவங்கொண் டனையவன் படர
      சிகர மால்வரை தெளிந்தனன் திருவமார் பினன்பின்
      மகர மாகடல் வளைவண்ன னுடன்செல வலித்தான்
      இருவரும் அவ்வரிமா வதியும் இடம் எய்துதல்
      புழற்கை மால்களிற் றெருத்திடை புரோசையிற் பயின்ற
      கழற்கொள் சேவடி கருவரை யிடைநெறி கலந்த
      வழற்கொள் வெம்பொடி யவைமிசை புதையவவ் வரிமான்
      தொழிற்கொண் டாருயிர் செகுக்கின்ற சூழல்சென் றடைந்தார்
      அம்மாய அரிமாவின் முழக்கம்
      அடைந்த வீரரை காண்டலு மழலுளை யரிமா
      வுடைந்த போகவோ ரிடியிடி தெனவுடன் றிடிப்ப
      விடிந்து போயின விறுவரை துறுகலங் குடனே
      பொடிந்து போயின பொரியன நெரிவொடு புரளா
      அவ்வரிமாவின் எதிரில் திவிட்டன் போர்க்கோலம் பூண்டு முழங்குதல்
      காளி காளொளி முகில்வண்ணன் கழல்களை விசியா
      தோளின் மேற்செல சுடர்விடு கடகங்கள் செறியா
      சூளி மாமணி தொடர்கொண்டு சுரிகுஞ்சி பிணியா
      ஆளி மொய்ம்பனங் கார்த்தன னுடைத்ததவ் வரியே
      அஞ்சி ஓடும் அரிமாவை திவிட்டன் தொடர்தல்
      எங்கு போவதென் றுடைநெறி யிறுவரை நெரி
      பைங்க கோளரி யுருவுகொண் டவன்மிசை படர்ந்து
      வெங்க கூற்றமு திசைகளும் விசும்பொடு நடுங்க
      செங்க காரொளி நெடியவன் விசையினாற் சிறந்தான்
      திவிட்டன் ஓடும் தன்மை
      சுழலங் கார்த்தில காள்களு நிலமுறா முடங்கா
      அழலுஞ் செஞ்சுடர கடகக்கை யவைபுடை பெயரா
      குழலுங் குஞ்சியு மாலையுங் கொளுவிய தொடரு
      மெழிலு தோளிலு மெருத்திலுங் கிடந்தில வெழுந்தே
      இதுவும் அது
      மரங்கள் வேரொடுங் கீழ்ந்தென வழிதொடர தெழுந்த
      நிரந்த மான்களும் பறவையும் நிலங்கொண்டு பதைத்த
      வரங்கொள் வெம்பர லணிவரை கொடுமுடி யவைதா
      முரங்கொ டோ ளவன் விரனுதி யுறவுடை தொழிந்த
      அம்மாய அரிமா குகையிற் புக்கொளிதல்
      மூடி யிட்டன முகிற்கண முரன்றிடை நொறுங்கா
      கூடி யிட்டன கொடுமுடி துறுகற்கள் குளிர்ந்தாங்
      காடி யிட்டன வனதெய்வ மரியுரு வுடையா
      னோடி யிட்டன னொளிவரை முழையக தொளிந்தான்
      அக்குகையில் உறைந்த மெய் அரிமா இவ்வாரவாரத்தே துயில் நீத்து எழுதல்
      உலகத்தின் வீங்கிய வொளிமணி சுடரணி திணிதோ
      ணலத்தின் வீங்கிய நளிர்புக ழிளையவன் விரையின்
      நிலத்தின் கம்பமு நெடுவரை யதிர்ச்சியு மெழுவ
      பிலத்தின் வாழரி யரசுதன் றுயில்பெயர ததுவே
      திவிட்டன் முழக்கம்
      ஏங்கு வாழிய விருள்கெழு முழையக தொளித்தா
      யோங்கு மால்வரை பிளந்திடு கெனவுளை துரவோ
      னாங்க மாமுழை முகத்துல கதிரநின் றார்த்தான்
      வீங்கு வாய்திற தொலித்தது விலங்கலிற் சிலம்பே
      அக்குகைவாழ் அரிமாவின் முழக்கம்
      அதிர வார்த்தலு மழன்றுத னெயிற்றிடை யலர்ந்த
      கதிருங் கண்களிற் கனலென சுடர்களுங் கனல
      முதிர்வில் கோளரி முனிந்தெதிர் முழங்கலி னெரிந்து
      பிதிர்வு சென்றது பெருவரை பிளந்தத பிலமே
      எரிந்த கண்ணிணை யிறுவரை முழைநின்ற வனைத்தும்
      விரிந்த வாயொடு பணைத்தன வெளியுகிர் பரூஉத்தாள்
      சுரிந்த கேசரஞ் சுடரணி வளையெயிற் றொளியா
      விரிந்த தாயிடை யிருணிண்றங் கெழுந்ததவ் வரியே
      அவ்வரிமா வெளிப்படுதல்
      தாரி திட்டதன் றறுகண்மை குணங்களி னுலகை
      வாரி தீட்டிவண் வந்ததோ ரரியென மதியா
      பூரி திட்டதன் பெருவலி யொடுபுக ழரிமா
      பாரி திட்டது பனிவிசும் புடையவர் பனித்தார்
      திவிட்டன் அவ்வரிமாவை பிளந்து கொல்லுதல்
      அளைந்து மார்பினு ளிழிதரு குருதியை குடிப்பா
      னுளைந்து கோளரி யெழுதலு முளைமிசை மிதியா
      வளைந்த வாளெயிற் றிடைவலி தடக்கையிற் பிடித்தான்
      பிளந்து போழ்களா கிடந்தத பெருவலி யரியே
      அமரர்களின் வியப்பு
      சீய மாயிரஞ் செகுத்திடு திறலது வயமா
      வாய வாயிர மாயிர மடுதிற லரிமா
      ஏயெ னாமுனிங் கழித்தன னிவனென தத்தம்
      வாயின் மேல்விரல் வைத்துநின் றமரர்கண் மருண்டார்
      அழிந்த கோளரி குருதிய தடுங்கடங் களிற்றோ
      டொழிந்த வெண்மரு புடைந்தவு மொளிமுத்த மணியும்
      பொழிந்து கல்லறை பொலிவது குலிகச்சே றலம்பி
      யிழிந்த கங்கையி னருவியொ திழிந்தவவ் விடத்தே
      திவிட்டனின் சால்புடைமை
      யாது மற்றதற் குவந்திலன் வியந்தில னிகலோ
      னோத நித்திலம் புரிவளை யொளியவற் குறுகி
      யேத மற்றிது கடிந்தன னின்னினி யடிகள்
      போதும் போதன புரத்துக்கென் றுரைத்தனன் புகழோன்
      தம்பி யாற்றல்கண் டுவந்துதன் மனந்தளிர தொளியால்
      வம்பு கொண்டவன் போனின்று வளைவண்ணன் மொழிந்தா
      னம்பி நாமினி நளிவரை தாழ்வார்கண் டல்லா
      லிம்பர் போம்படி தன்றுசெங் குருதிய திழிவே
      இதுமுதல் 10 செய்யுள்கள் ஒருதொடர் -திவிட்டநம்பிக்கு விசயன் குறிஞ்சிநில வனப்பினை
      எடுத்து கூறல்
      ஆங்கண் மால்வரை யழகுகண் டரைசர்கள் பரவும்
      வீங்கு பைங்கழ லிளையவன் வியந்துகண் மலர
      வீங்கி மாண்பின வினையன விவையென வினிதின்
      வாங்கு நீரணி வளை வண்ண னுரைக்கிய வலித்தான் 154
      புள்ளுங் கொல்லென வொலிசெயும் பொழில்புடை யுடைய
      கள்ளி னுண்டுளி கலந்துகா லசைத்தொறுங் கமழு
      வுள்ளு தாதுகொண் டூதுவண் டறாதன வொளிசேர்
      வெள்ளென் றோன்றுவ கயமல்ல பளிக்கறை விறலோய்
      காளை வண்ணத்த களிவண்டு கதிவிய துகளாற்
      றாளை மூசிய தாமரை தடம்பல வவற்று
      ளாளி மொய்ம்பவங் ககலிலை யலரொடுங் கிழிய
      வாளை பாய்வன கயமல்ல வனத்திடர் மறவோய்
      மன்னு வார்துளி திவலைய மலைமருங் கிருண்டு
      துன்னு மாந்தர்கள் பனிப்புற துணைமையோ டதிர்வ
      இன்ன வாம்பல வுருவுக ளிவற்றினு ளிடையே
      மின்னு வார்ந்தன முகிலல்ல களிறுகள் விறலோய்
      உவரி மாக்க னுரையென வொளிர்தரு மயிர
      அவரை வார்புன தருந்திமே யருவிநீர் பருகி
      இவரு மால்வரை யிளமழை தவழ்ந்தென விவையே
      கவரி மாப்புடை பெயர்வன கடல்வண்ண காணாய்
      வேறு -
      துள்ளிய ரும்புனற் றுளங்குபா றைக்கல
      துள்ளுரா விக்கிட தொளிருமொண் கேழ்மணி
      நள்ளிரா வின்றலை நகுபவா னத்திடை
      பிள்ளைநா ளம்பிறை பிழற்தல்போ லுங்களே
      வழையும்வா ழைத்தடங் காடுமூ டிப்புடங்
      கழையும்வே யுங்கல திருண்டு காண் டற்கரு
      முழையுமூ ரிம்மணி கல்லுமெல் லாநின
      திழையினம் பொன்னொளி யெரிப்பத்தோன் றுங்களே
      பருவமோ வாமுகிற் படல மூடிக்கிட
      திரவுண்டே னைப்பக லில்லையொல் லென்றிழி
      தருவி யோ வாபுரண் டசும்புபற் றித்தட
      வரையின்றாழ் வார்நிலம் வழங்கலா கார்களே
      சூரல பித்தொடர தடர்துளங் கும்மரில்
      வேரலோ டும்மிடை திருண்டுவிண் டுவ்விடார்
      ஊரலோ வாதனன் றுயிரையுண் டிடுதலால்
      சாரலா காதன சாதிசா லப்பல
      பரியபா றைத்திரள் படர்ந்தபோ லக்கிட
      திரியவே ழங்களை விழுங்கியெங் குந்த
      குரியதா னம்பெறா வுறங்கியூ றுங்கொளா
      பெரியபாம் பும்முள பிலங்கொள்பேழ் வாயவே
      அவைகள்கண் டாய்சில வரவமா லிப்பன
      உவைகள்கண் டாய்சில வுளியமொல் லென்பன
      இவைகள்கண் டய்சில வேழவீ டம்பல
      நவைகள்கண் டாயின நம்மலா தார்க்கெலாம்
      குழல்கொடும் பிக்கணங் கூடியா டநகும்
      எழில்கொடா ரோய்விரை தியங்கலிங் குள்ளநின்
      கடில்களார குங்களே கலங்கிமே கக்குழாம்
      பொழில்கள்வெள்ள ளத்திடை புரளநூ றுங்களே
      ஆக்கலா காவசும் பிருந்துகண் ணிற்கொரு
      நீக்கநீங் காநிலம் போலத்தோன் றிப்புகிற்
      காக்கலா காகளி றாழவா ழும்புற
      தூக்கந்தூங் குந்தொளி தொடர்ந்துபொன் றுங்களே
      இதுவித்தாழ் வார்நில தியற்கைமே லாற்பல
      மதியம்பா ரித்தன மணிக்கற் பாறையின்மிசை
      நிதியம்பா ரித்தொளி நிழன்று துஞ் சன்னிலை
      கதியின் வாழ் வாரையுங் கண்கள்வாங் குங்களே
      வேறு
      இருது வேற்றுமை யின்மையாற்
      சுருதி மேற்றுற கத்தினோ
      டரிது வேற்றுமை யாகவே
      கருது வேற்றடங் கையினாய்
      தொல்லுறு சுடர்போலுஞ் சூழொளி மணிப்பாறை
      கல்லறை யவைகோங்கின் கடிமலர் கலந்துராய்
      மல்லுறு வரைமார்ப வளரொளி யின்முளைக்கு
      மெல்லுறு சுடர்வான தெழிலவா யினியவ்வே
      திரைத்த சாலிகை
      நிரைத்த போனிர
      திரைப்ப தேன்களே
      விரைகொண் மாலையாய்
      வரைவாய் நிவத்த வடுமா
      விரைவாய் நிவந்து விரியா
      புரைவா யசும்பு புலரா
      இரவா யிருள்செ யிடமே
      இளையா ரிளையா ருடனாய் முலையின்
      வளையார் மனம்வேண் டுருவம்
      விளையா விளையா டயரு தொழிறான்
      றளையார் தளையார் பொழிலின் றடமே
      அளியாடு மமரங்க ளமரங்கள் மகிழ்ந்தானா
      விளையாடும் விதமலர்ந்த மணிதூவும்
      வளையார்கண் மகிழ்பவான் மலர்சோர்வ
      இளையாரை யினையவே யிடமெல்லாம்
      தமரை திடத்திடை மலர்ந்த சாரல்வா
      தாமரை துளையொடு மறலி தாவில்சீர
      தாமரை தகுகுண செல்வன் சண்பகம்
      தாமரை தடித்தலர் ததைந்து தோன்றுமே
      நாகஞ் சந்தன தழைகொண்டு நளிர்வண்டு கடிவ
      நாகஞ் சந்தன பொதும்பிடை நளிர்ந்துதா துமிழ்வ
      நாகஞ் செஞ்சுடர் நகுமணி யுமிழ்ந்திருள் கடிவ
      நாக மற்றிது நாகர்தம் முலகினை நகுமே
      நகுமலரன நறவம் மவைசொரி வனநறவம்
      தொகுமலரன துருக்கம் மவைதரு வனதுருக்கம்
      மகமலரன வசோகம் மவைதருவ
      பகுமலரன பாங்கர் பலமலையன
      அணங்கமர் வனகோட லரிதவை பிறர்கோடல்
      வணங்கிளர் வனதோன்றி வகைசுடர்
      இணங்கிணர் வனவிஞ்சி யெரிபொன் புடையிஞ்சி
      மணங்கமழ் வனமருதம் வரையயல்
      சாந்து தண்டழை யுஞ்சுர மங்கையர
      கேந்தி நின்றன விம்மலை யாரமே
      வாய்ந்த பூம்புடை யும்மலர கண்ணியு
      மீந்த சாகைய விம்மலை யாரமே
      இயங்கு கின்னர ரின்புறு நீரவே
      தயங்கு கின்றன தான தாரமே
      பயங்கொள் வார்பயங் கொள்பவ வனைத்தையும்
      தயங்கு கின்றன தான தாரமே
      வேறு
      பொன்விரி தனைய பூங் கோங்கும் வேங்கையு
      முன்விரி துக்கன மொய்த்த கற்றல
      மின்விரி திடையிடை விளங்கி யிந்திரன்
      வின்முரி திருண்முகில் வீழ்ந்த போலுமே 180
      நிழற்பொதி நீலமா மணிக்க லந்திரள்
      பொழிற்பொதி யவிழ்ந்தபூ புதைந்து தோன்றுவ
      தழற்பொதி தெனத்துகி றரித்த காஞ்சியர்
      குழற்பொதி துறுமலர கொண்டை போலுமே
      மேவுவெஞ் சுடரொளி விளங்கு கற்றலம்
      தாவில்பூ துகளொடு ததைந்து தோன்றுவ
      பூவுக விளையவர் திளைத்த பொங்கணை
      பாவுசெ துகிலுடை பள்ளி போலுமே
      வேறு
      அழலணி யசோகஞ் செந்தா தணிந்துதே னரற்ற நின்று
      நிழலணி மணிக்கன் னீல நிறத்தொடு நிமிர்ந்த தோற்றம்
      குழலணி குஞ்சி மைந்தர் குங்கு குழம்பு பூசி
      எழிலணி திகழ நின்றா லெனையநீ ரனைய தொன்றே
      இணைந்துதேன் முழங்க விண்ட வேழிலம் பாலை வெண்பூ
      மணந்துதா தணிந்து தோன்று மரகத மணிக்கற் பாறை
      கணங்கெழு களிவண் டால பாசடை கலந்த பொய்கை
      தணந்தொளி விடாத வெண்டாமரை ததை தனையதொன்றே
      காரிரு குவளி கண்ணி கதிர்நகை கனபொற் றோட்டு
      கூரிருள் சுரிப டன்ன குழலணி கொடிறுண் கூந்தல்
      பேரிருள் கிழி தோன்றும் பிறையெயிற் றமர நோக்கிற்
      சூரர மகளிர் வாழு மிடமிவை சுடர்ப வெல்லாம்
      வாரிரு புடையும் வீக்கி வடஞ்சு தெழுந்து வேங்கை
      யேரிருஞ் சுணங்கு சிந்தி யெழுகின்ற விளமென் கொங்கை
      காரிருங் குழலங் கொண்டை கதிர்நகை கனக பைம்பூண்
      நீரர மகளிர் கண்டாய் நிறைபுனற் றடத்து வாழ்வார்
      மேகமேற் றவழ்ந்து வேய்கண் மிடைத்துகீ ழிருண்ட தாழ்வர்
      ஏகமா மலையி னெற்றி யிருஞ்சுனை தடங்க ளெல்லாம்
      நாகமா மகளி ரென்னு நங்கையர் குடை பொங்கி
      மாகமேற் றரங்கஞ் சிந்தி மணியறை கழுவு மன்றே
      ஆவிவீற் றிருந்த காத லவரொடு கவரி வேய்ந்து
      நாவின்வீற் றிருந்த நாறு நளிர்வரை சிலம்பின் மேயார்
      காவிவீற் றிருந்த கண்ணார் கந்தர்வ மகளிர் கண்டாய்
      பாவிவீற் றிருந்த பண்ணி னமுதினாற் படைக்க பட்டார்
      அலங்கிண ரணிந்த விஞ்சை யரிவைய ரிடங்கள் கண்டாய்
      விலங் கலின் விளங்கு கின்ற வெள்ளிவெண் கபாடமாடம்
      இலங்கொளி மகர பைம்பூ ணியக்கிய ரிடங்கள் கண்டாய்
      நலங்கிளர் பசும்பொற் கோயி னகுகின்ற நகர மெல்லாம்
      போய்நிழற் றுளும்பு மேனி புணர்முலை யமிர்த னாரோ
      டாய்நிழற் றுளும்பு வானோ ரசதியா டிடங்கள் கண்டாய்
      சேய்நிழற் றிகழுஞ் செம்பொற் றிலதவே திகைய வாய
      பாய்நிழற் பவழ செங்காற் பளிக்கு மண் டபங்க ளெல்லாம்
      எழின்மணி சுடர்கொண் மேனி யிமையவ ரிடங்கள் கண்டாய்
      முழுமணி புரிசை வேலி முத்தமண் டபத்த வாய
      கழுமணி கபாட வாயிற் கதிர்நகை கனக ஞாயிற்
      செழுமணி சிகர கோடி சித்திர கூட மெல்லாம்
      தும்பிவாய் துளைக்க பட்ட கீசகம் வாயு தன்னால்
      வம்பவாங் குழலி னேங்க மணியரை யரங்க மாக
      உம்பர்வான் மேக சால மொலிமுழா கருவி யாக
      நம்பதேன் பாட மஞ்ஞை நாடக நவில்வ காணாய்
      பொன்னவிர் மகர பைம்பூ பொலங்குழை யிலங்கு சோதி
      கன்னவில் வயிர திண்டோ கடல்வண்ண னுவப்ப காட்டி
      மன்னவின் றிறைஞ்சுஞ் செய்கை வளைவண்ணன் மலையின் மேலால்
      இன்னன பகர்ந்து சொல்லு மெல்லையு ணீங்க லுற்றார்
      பாசிலை பாரி சாதம் பரந்துபூ நிரந்த பாங்கர்
      மூசின மணிவண் டார்க்கு முருகறா மூரி குன்றம்
      காய்சின வேலி னான்றன் கண்களி கொள்ள காட்டி
      யோசனை யெல்லை சார்ந்து பின்னையிஃ துரைக்க லுற்றான்
      வலிகற்ற மதர்வை பைங்கண் வாளொயிற் றரங்க சீயங்
      கலிகற்ற களிறுண் பேழ்வா கலிங்கினா னிழிந்து போந்து
      குலிகச்சே றலம்பி குன்றங் கொப்புளி திட்ட தொப்ப
      ஒலிகற்ற வுதிர நீத்த மொழுகுவ தின்ன நோக்காய்
      இதுமுதல் 6 செய்யுட்கள் ஒரு தொடர் விசயன் திவிட்டனின் ஆற்றலை வியந்து பாராட்டுதல்
      வெம்பவேங் குயிரை யெல்லாம் விழுங்கிய வெகுண்டு நோக்கி
      கம்பமா வுலக தன்னை கண்டிடுங் களிகொள் சீயம்
      நம்பநீ யழித்த தல்லா னகையெயிற் றதனை நண்ணல்
      வம்பறா மகர பைம்பூண் வானவர் தமக்கு மாமோ
      ஆங்குநீ முனிந்த போழ்தி னரிது வகல நோக்கி
      வாங்குநீர் வண்ண கேளாய் மாயமா மதித்து நின்றே
      னோங்குநீண் மலையின் றாழ்வா ரொலிபுன லுதிர யாறு
      வீங்கிவ திழிந்த போழ்து மெய்யென வியப்பு சென்றேன்
      குன்றிற்கு மருங்கு வாழுங் குழூஉக்களிற் றினங்க ளெல்லா
      மன்றைக்கன் றலற கொன்றுண் டகலிடம் பிளப்ப சீறி
      வென்றிக்கண் விருப்பு நீங்கா வெங்கண்மா விதனை கொன்றா
      யின்றைக்கொண் டுலக மெல்லா மினிதுகண் படுக்கு மன்றே
      அரசரின் முதற் கடமை
      உரைசெய்நீ ளுலகின் வாழு முயிர்களு குறுகண் கண்டால்
      வரைசெய்தோண் மைந்தர் வாழ்க்கை மதிக்கிலார் வனப்பின் மிக்கார்
      திரைசெய்நீ ருலகங் காக்குஞ் செய்கை மேற் படைக்க பட்ட
      அரசர்தம் புதல்வர கையா வறம்பிறி ததனி லுண்டோ
      யாக்கையால் எய்தும் பயன்
      கற்றவர் கடவு டானஞ் சேர்ந்தவர் களைக ணில்லா
      ரற்றவ ரந்த ணாள ரன்றியு மனைய நீரார
      குற்றதோ ரிடுக்கண் வந்தா லுதவுதற் குரித்தன் றாயில்
      பெற்றவிவ் வுடம்பு தன்னாற் பெறுபய னில்லை மன்னா
      இறவாது நிற்போர் இவர் எனல்
      மன்னுயிர் வருத்தங் கண்டும் வாழ்வதே வலிக்கு மாயி
      லன்னவ னாண்மை யாவ தலிபெற்ற வழகு போலா
      மென்னையான் கொடுத்தும் வை திடுக்கணோய் கெடுப்ப னென்னும்
      நின்னையே போலு நீரார் நிலமிசை நிலவி நின்றார்
      ஒருவனுடைய இருவேறு யாக்கைகள்
      ஒருவன திரண்டி யாக்கை யூன்பயி னரம்பின் யாத்த
      உருவமும் புகழு மென்றாங் கவற்றினூழ் காத்து வந்து
      மருவிய வுருவ மிங்கே மறைந்துபோ மற்ற யாக்கை
      திருவமர துலக மேத்த சிறந்துபின் னிற்கு மன்றே
      வேறு - விசய திவிட்டர்கள் குறிஞ்சி நிலங்கடந்து பாலைநிலம் எய்துதல்
      என்று தங்கதை யோடிரு நீண்முகிற்
      குன்று சூழ்ந்த குழுமலர கானகம்
      சென்றொர் வெங்கடஞ் சேர்ந்தன ருச்சிமே
      னின்று வெய்யவ னுநிலங் காய்த்தினான்
      இதுமுதல் 8 செய்யுட்கள் ஒருதொடர்
      விசயன் பாலைநிலத்தின் தன்மையை எடுத்தியம்பல்
      ஆங்கவ் வெங்கடஞ் சேர்ந்த பினையகா
      ணீங்கிவ் வெங்கடுங் கானக தீடென
      ஏங்கு நீர்ககடல் வண்ணனு கின்னணம்
      வீங்கு வெண்டிரை வண்ணன் விளம்பினான்
      முழையு டைந்தழல் காலு முரம்பயற்
      கழையு டைந்துகு கண்கவர் நித்திலம்
      மழையு டைந்துகு நீரென வாய்மடு
      துழையு டைந்துகு கின்றன வூங்கெலாம்
      மிக்க நீள்கழை மேல்விளை வுற்றழ
      லொக்க வோடி யுறைத்தலி னான்மிசை
      உக்க நெற்பொரி யுற்றொரு சாரெலாம்
      தொக்க கற்றல மேற்றுடி கின்றவே
      ஏங்கு செங்கதி ரோனெ றிப்பநிழல்
      வேங்கொ லென்றொளி திட்டிபம் வீழ்ந்துசேர்
      பாங்க லார்மனை போல பறைந்தரோ
      ஓங்கி நின்றுல வுற்றன வோமையே
      அற்ற நீரழு வத்திடை நெல்லியின்
      வற்ற லஞ்சினை யூடு வலித்தரோ
      மற்ற வெவ்வெயி லுந்நிழல் வாயழ
      லுற்று வீழ்ந்தது போன்றுள வாங்கெலாம்
      பைத்த லைப்பட நாக மழன்றுதம்
      பொய்த்த ளைத்தலை போதர கார்செய்வான்
      கைத்த லம்முகிற் கின்றன காந்தளென்
      றத்த லைச்சிலை மானயர் வெய்துமே
      விசையி னோடு வெண் டேர்செல கண்டுநீர்
      தசையி னோடிய நவ்வி யிருங்குழா
      மிசையில் கீழ்மகன் கண்ணிர தெய்திய
      வசையின் மேன்மகன் போல வருந்துமே
      துடியர் தொண்டக பாணியர் வாளியர்
      கொடிய செய்துமு னைப்புலங் கூட்டுணுங்
      கடிய நீர்மையர் கானகங் காக்குநி
      னடிய ரல்லதல் லாரவ ணில்லையே
      வேறு- விசய திவிட்டர்கள் பாலை கடந்து நாட்டின்கண் ஏகுதல்
      அங்கவெங்க டங்கடந்த லங்குதாரி லங்குபூண்
      சிங்கம் வென்ற செங்கண்மாலொ டம்பொன்மாலை வெண்கடா
      திங்கள் வண்ணன் வெங்கண்யானை வேந்துசேர்ந்த நாடுசார
      திங்கணின்ன இன்னகாணெ னப்புகழ்ந்தி யம்பினான்
      முல்லை நிலத்தின் மாண்பு
      மாலும்வாரி திங்கண்மூன்றும் வந்தறாத மாண்பினா
      லாலுமாவ றானைநம்ம டிகளாளு நாட்டகம்
      காலமாண்பி னன்றியுங் கார்கவின்ற நீரவே
      போலுமாண்பி னேர்கலந்து பொங்குநீர புறணியே
      கொண்டல்வாடை யென்னுங் கூத்தன் யாத்தகூத்தின் மாட்சியால்
      விண்டமா மலர்ப்பொதும்ப ரங்கமா விரும்புநீர்
      வண்டுபாட வல்லியென்னு மாதராடு நாடகங்
      கண்டுகொன்றை பொன்சொரிந்த காந்தள்கை மறித்தவே
      கைமலர்த்த காந்தளுங் கரியநீர கருவிளை
      மைம்மலர தடங்கணேர் வகுத்தலர்ந்த வட்டமு
      மொய்மலர பொதும்பின்மேன் முறுவலித்த முல்லையும்
      கொய்மலர குழற்றிரட்சி கொண்டு காய்த்த கொறையும்
      தொண்டைவாய் நிறங்கொள கனிந்துதூங்கு கின்றவும்
      வண்டுபாய வார்கொடி மருங்குலாய் வளர்ந்தவுங்
      கண்டபாலெ லாங்கலந்து கண்கவற்று மாதலால்
      விண்டுமாலை மாதராரின் மேவுநீர கானமே
      தண்ணிலாவி ரிந்தமுல்லை தாதுசேர் தளிர்மிடை
      தெண்ணிலாய சாயலம் மிடாமணற் பிறங்கன்மேற்
      பண்ணிலாய வண்டுபாடு பாங்கரோடு பாங்கணிந்து
      வெண்ணிலா விரிந்தவெல்லை போலுமிங்கொர் பாலெலாம்
      தேனவாவி மூசுகின்ற தேம்பிறழ்பூ தாங்கலந்து
      கானநாவல் கொம்பினிற் கனிந்துகா லசைந்தவற்
      றேனைமாடு வண்டிரு திருண்டகான மிங்கிதற்
      கூனமா யிருட்பிழம் புறங்குகின்ற தொக்குமே
      வாயிதழ் திறங்கொள கனிந்த தொண்டை வந்தொசிந்து
      தூயிதழ துணர்துதைந்து தோன்றுகின்ற தோன்றியின்
      பாயிதழ பரப்பின்மே லரத்தகோப மூர்ந்தயற்
      சேயிதழ பொலிந்தகாடு செக்கர்வான மொக்குமே
      ஆடிணர கொடிப்பட ரகிற்பொழுதும் பயற்பொலிந்த
      கூடிணர குழாநிலை கொழுமலர குமிழ்மிசை
      கோடிணர குலைக்கொசிந்த கொன்றைவிண்ட தாதுசோர
      தோடிணர சுடர்ப்பொனுக்க கானமொக்கு மூங்கெலாம்
      பார்மகிழ்ந்த பைஞ்சுரு பயிர்மிசை பயின்றெழு
      தேர்கலந்து பாசிலை பரப்பினூ டிரைத்தரோ
      கார்மகிழ்ந்த கார்மயிற் கலாபமொய்த்த கானக
      நீர்மகிழ்ந்த நீர்க்கட னிரந்ததொக்கு நீரதே
      ஏறுகொண்ட கோவல ரேந்து தன்ன வக்குரன்
      மாறுகொண்ட கோடியர் மணிமுழா முழங்கலிற்
      றாறுகொண்ட தோகைமஞ்ஞை யாடல்கண்டு கண்மகிழ்ந்து
      சாறுகொண்டு மான்கண தயங்குநீர சாரெலாம்
      கார்மணந்த கானயாறு கல்லலை திழிந்தொலிக்கு
      நீர்மணந்த நீள்கரை நிரைத்தெழுந்த நாணல்சூழ்
      வார்மணற் பிறங்கன்மாலை வல்லிவிண்ட தாதணிந்து
      தார்மணந்த வாரமார்ப யாகசாலை போலுமே
      கரவைகன்று வாய்மிகுந்த வமிழ்தினோடு கண்ணகன்
      புறவின்மாம ரைம்முலை பொழிந்தபா றெகிழ்ந்தெழ
      பறவையுண்டு பாடவும் பால்பரந்த பூமியி
      னறவுவிண்ட நாகுமுல்லை வாய்திறந்து நக்கவே
      விசய திவிட்டர்கள் முல்லைநிலங்கடந்து மருதனிலம் எய்துதல்
      வேரல்வேலி மால்வரை கவானின் வேய் விலங்கலிற்
      சாரன்மேக நீர்முதிர்ந்து தண்டளந்து ளித்தலால்
      மூரல்வா யசும்பறாத முல்லைவிள்ளு மெல்லைபோய்
      நீரவாளை பூவின்வைகு நீள்பரப்பு நண்ணினார்
      விசயன் மருதநிலத்தின் மாண்புரைத்தல்
      புதுநாண் மலர்விண் டுபொழிந்த திழியு
      மதுநா றுபுனன் மரு தினைமற்
      றிதுகா ணெனவின் னனசொல் லினனே
      விதுமாண் மிகுசோ திவிளங் கொளியான்
      அயலோ தமிர டவலம் பொலிநீர்
      வயலோ தமயங் கமயங் கவதிர
      தியலோ தையிளஞ் சிறையன் னமெழ
      கயலோ டியொளி பனகாண் கழலோய்
      வளவா சநில பலவின் சுளையு
      மிளவா ழையினின் னெழிலங் கனியும்
      களமாங் கனியின் றிரளுங் கலவி
      குளமா யினயோ சனை கொண் டனவே
      வனமா வினிருங் கனியுண் டுமதர
      தினவா ளையிரை தெழுகின் றனகாண்
      கனவா ழைமடற் கடுவன் மறை
      புனவா னர திபுலம் புவகாண்
      வளமா நிலையே திமரு பினிட
      விளவா ழைநுதி கமழ்தே னொழுகி
      குளமார் குளிர்தா மரைக்கொண் டநகை
      தளவா யுகுகின் றனகாண் டகவோய்
      இவைசெ நெலிடை கருநீ லவன
      மவை நெலிடை கழுநீ ரழுவ
      முவையொண் டுறைவிண் டொளிவிம் முநகு
      நகைவென் றனதா மரைநாண் மலரே
      கழையா டுகரும் பினறை கடிகை
      பொழிசா றடுவெம் புகைபொங் கியயற்
      றழையோ டுயர்சோ லைகடாம் விரவி
      மழையோ டுமலை தடமொ துளவே
      இதுமுதல் 5 செய்யுள் ஒரு தொடர்
      மருத நிலத்தை ஒரு மகளாக உருவகித்தல்
      கருநீ லமணி தகது பினயற்
      கருநீ லமணி தனகண் ணிணைகள்
      கருநீ லமணி கதிர்க டியென
      கருநீ லமணி தகருங் குழலே
      வளர்செங் கிடையி னெழில்வை தநுதல்
      வளர்செங் கிடையி னொளிவவ் வியவாய்
      வளர்செங் கிடையின் வளையா டும்வயல்
      வளர்செங் கிடைமா மலர்மல் குசிகை
      வயலாம் பனெறி தவகை தழையன்
      வயலாம் பன்மிலை தவடி சவியன்
      வயலாம் பன்மலி தபர புடையன்
      வயலாம் பன்மலர தொகைமா லையினாள்
      வளர்தா மரையல் லிமலர தியகை
      வளர்தா மரையல் லி குமொளி
      வளர்தா மரையல் லிமகிழ தனள்போல்
      வளர்தா மரையல் லிவன திடையாள்
      நளிர்வார் கழலாய் புகழ்நா டி
      தொளிர்வார் குழலா ளொருமா தவளு
      ளுளர்வார் கனியும் மதுவு தெகிழ
      கிளர்பார் வையுற கிளர்கின் றதுகேள்
      மதிகா ணநிமர தமதிற் சிகர
      நுதிமா ளிகைமேல நுடங் குகொடி
      கதிரோ ணொளிமாழ் கவெழு துகல
      ததுகா ணமதா ரொளிமா நகரே
      அறவே தியரா குதியம் புகையார்
      உறவே திகைவிம் மியவொண் புறவ
      நிறவே திகைமீ துநிமிர தபொழிற்
      புரவே திகையே றுவகாண் புகழோய்
      விசய திவிட்டர் போதனமாநகர் புகுதல்
      இன்னன விளையவற் கியம்பு மெல்லையு
      பொன்னக ரடைந்தனர் பொழுதுஞ் சென்றது
      நன்னக ரிரைத்தது நரன்ற வின்னிய
      மன்னவ குமரரும் வறுமை நீங்கினார்
      இளங்களி குஞ்சர மிரட்டி தாயிரம்
      துளங்கொளி கலினமா தூளி யெல்லைய
      வளங்கெழு குமரரை வலங்கொண் டெய்தின
      அளந்தறி திலமகன் படையி னெல்லையே
      துன்னிய துணரிள தோன்றி மென்கொடி
      மன்னிய வனத்திடை மலர்ந்து நீண்டபோற்
      கன்னியர் கைவிள கேந்த காவலன்
      பொன்னியல் வளநகர் பொலி தோன்றினார்
      காவியங் கருங்கணார் கமழ வூட்டிய
      வாவியங் கொழும்புகை தழுவி யாய்மலர
      கோவையங் குழுநிலை மாடம் யாவையும்
      பாவிய பனிவரை படிவங் கொண்டவே
      மல்லிகை மனங்கமழ் மதுபெய் மாலையு
      முல்லையம் பிணையலு மொய்த்த பூண்கடை
      எல்லியங் கிளம்பிறை கதிர்கள் வீழ்ந்தன
      தொல்லையங் கடிநகர் துயில்வ போன்றவே
      பயாபதி மக்களை தன்பால் அழைத்தல்
      செம்பொன்மா மணிநகர செல்வ வீதியு
      கொம்பனா ரடிதொழ கோயி லெய்தலு
      நம்பிமார் வருகென நாறு நீரொளி
      அம்பொன்மா மணிமுடி யரச னேயினான்
      விசய திவிட்டர்கள் தந்தையை வணங்குதல்
      அருளுவ தென்கொலென் றஞ்சி செஞ்சுடர்
      இருளுக வெழுந்ததொ திருந்த கோனடி
      சுருளுறு குஞ்சிக டுதை தாழ்ந்தனர்
      மருளுறு மனத்தினன் மன்னன் னாயினான்
      பயாபதி மக்களை தழுவுதல்
      திருவரை யனையதோ சிழ்ருவர் தம்மை
      கருவரை யனையவெங் களிதல் யானையா
      னிருவரும் வருகென விரண்டு தோளினு
      மொருவரை யகலத்தி னெடுங்க புல்லினான்
      மானவா மதகளிற் றுழவன் மக்கட
      தேனவாஞ் செழுமலர் செறிந்த குஞ்சியு
      கானமா மலர்த்துகள் கழுமி வீழ்ந்தன
      வானவா தடக்கையான் மகிழ்ந்து நோக்கினான்
      என்னைநும் மீரலர குஞ்சி தம்முளி
      துன்னிய வனத்துக டுதைந்த வாறென
      மன்னவ னருளலு மகர வார்குழை
      மின்னிவர் மணிக்கழல் விசயன் செப்பினான்
      விசயன் தந்தைக்கு திவிட்டன் அரிமாவினை அழித்தமை விளம்பல்
      போற்றநம் புறணிசூழ் காடு பாழ்செய்வான்
      சீற்றமி குடையதோர் சீயஞ் சேர்ந்தது
      வேற்றுவன் றமர்கள்வ துரைப்ப வெம்பியிவ்
      வாற்றல்சா லடியன்சொன் றதனை நீக்கினான்
      பயாபதியின் கழி பேருவகை
      யானுமங் கிவனொடு மடிக ளேகினேன்
      வானுய ரிமகரி மருங்கி லென்றுபூ
      தேனுய ரலங்கலான் சிறுவன் சொல்லலு
      தானுயிர் தளிர்ப்பதோர் சவிய னாயினான்
      சுடரொளி மிகுசோதி சூழ்கழற் காளை மார்தம்
      அடரொளி முடிமன்ன னேவலா னாய்பொன் னாக
      தொடரொளி சுடர்ஞாயிற் சூளிகை சூழு நெற்றி
      படரொளி நெடுவாயிற் பள்ளிபம் பலங்கள் சேர்ந்தார் 7. 254
      ஏழாவது சீயவதை சருக்கம் முற்றிற்று
      முதல் பாகம் முற்றிற்று ------