------------------------------------------------------------------------



      கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்
      இயற்றிய மூவருலா
      விக்கிரம சோழனுலா குலோத்துங்க
      இராசராச சோழனுலா இராசேந்திர
      ------------------------------------------------------------------------
      ------------------------------------------------------------------------
      - .

      .
      . ..
      6 -90 3 1992
      .

      .
      2000 ...

      2000 .
      -8
      6 5
      -8 - .
      .
      .
      © 1999 - 2003



      .

      ..

      .
      ------------------------------------------------------------------------
      கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் இயற்றிய மூவருலா
      மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல்நிலைய வௌியீடு எண் 6 மூன்றாம்
      பதிப்பு 1992
      மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல்நிலையம் பெசன நகர் சென்னை
      600 090
      1. விக்கிரம சோழனுலா
      சீர்தந்த தாமரையாள் கேள்வன் றிருவுரு
      கார்தந்த வுந்தி கமலத்து - பார்தந்த 1
      ஆதி கடவு டிசைமுகனு மாங்கவன்றன்
      காதற் குலமைந்தன் காசிபனும் - மேதக்க 2
      மையறு காட்சி மரீசியு மண்டிலஞ்
      செய்ய தனியாழி தேரோனும் - மையல்கூர் 3
      சிந்தனை யாவிற்கு முற்ற திருத்தேரில்
      மைந்தனை யூர்ந்த மறவோனும் - பைந்தட 4
      தாடு துறையி லடுபுலியும்புல்வாயும்
      கூடநீ ரூட்டிய கொற்றவனும் - நீடிய 5
      மாக விமான தனியூர்ந்த மன்னவனும்
      போக புரிபுரிந்த பூபதியும் -மாகத்து 6
      கூற வரிய மனுக்கொணர்ந்து கூற்றுக்கு
      தேற வழக்குரைத்த செம்பியனும் - மாறழி 7
      தோடி மறலி யொளிப்ப முதுமக்க
      சாடி வகுத்த தராபதியும் - கூடார்தம் 8
      தூங்கு மெயிலெறிந்த சோழனு மேல்கடலில்
      வீங்குநீர் கீழ்கடற்கு விட்டோனும் - ஆங்கு 9
      பிலமதனிற் புக்குத்தன் பேரொளியா னாகர்
      குலமகளை கைப்பிடித்த கோவும் - உலகறி 10
      காக்குஞ் சிறபுறவு கா களிகூர்ந்து
      தூக்கு துலைபுக்க தூயோனும் - மேக்குயர 11
      கொள்ளுங் குட குவடூ டறுத்திழி
      தள்ளு திரைப்பொன்னி தந்தோனும் - தெள்ளருவி 12
      சென்னி புலியே றிருத்தி கிரிதிரித்து
      பொன்னி கரைகண்ட பூபதியும் -இன்னருளின் 13
      மேதக்க பொய்கை கவிகொண்டு வில்லவனை
      பா தளைவிட்ட பார்த்திவனும் -மீதெலாம் 14
      எண்கொண்ட தொண்ணூற்றின் மேலு மிருமூன்று
      புண்கொண்ட வென்றி புரவலனும் - கண்கொண்ட 15
      கோதிலா தேறல் குனிக்கு திருமன்றம்
      காதலாற் பொன்வேய்ந்த காவலனும் - தூதற்கா 16
      பண்டு பகலொன்றி லீரொன் பதுசுரமும்
      கொண்டு மலைநாடு கொண்டோனும் - தண்டேவி 17
      கங்கா நதியுங் கடாரமுங் கைக்கொண்டு
      சிங்கா தனத்திருந்த செம்பியனும் - வங்கத்தை 18
      முற்று முரணடக்கி மும்மடிபோ கல்யாணி
      செற்ற தனியாண்மை சேவகனும் - பற்றலரை 19
      வெப்ப தடுகளத்து வேழங்க ளாயிரமும்
      கொப்ப தொருகளிற்றாற் கொண்டோனும் - அப்பழநூல 20
      பாடவர தென்னரங்க மேயாற்கு பன்மணியால்
      ஆடவர பாய லமைத்தோனும் - கூடல 21
      சங்கமத்து கொள்ளு தனிப்பரணி கெண்ணிறந்த
      துங்கமத யானை துணித்தோனும் - அங்கவன்பின் 22
      காவல் புரிந்தவனி காந்தோனு மென்றிவர்கள்
      பூவலய முற்றும் புரந்ததற்பின் - மேவலர்தம் 23
      சேலை துரந்துசிலையை தடிந்திருகால்
      சாலை களமறுத்த தண்டினான் - மேலை 24
      கடல்கொண்டு கொங்கணமுங் கன்னடமுன் கைக்கொண்
      டடல்கொண்ட மாரா ரானை - உடலை 25
      இறக்கி வடவரையே யெல்லையா தொல்லை
      மறக்கலியுஞ் சுங்கமு மாற்றி - அறத்திகிரி 26
      வாரி புவனம் வலமாக வந்தளிக்கும்
      ஆரிற் பொலிதோ ளபயற்கு - பார்விளங்க 27
      தோன்றியகோன் விக்கிரம சோழன் றொடைத்தும்பை
      மூன்று முரசு முகின்முழங்க - நோன்றலைய 28
      மும்மை புவனம் புரக்க முடிகவித்து
      செம்மை தனிக்கோ றிசையளப்ப - தம்மை 29
      விடவு படுத்து விழுக்கவிகை யெட்டு
      கடவு களிறு கவிப்ப - சுடர்சேர் 30
      இணைத்தார் மகுட மிறக்கி யரசர்
      துணைத்தா ளபிடேகஞ் சூட - பணைத்தேறு 31
      நீராழி யேழு நிலவாழி யேழுந்தன்
      போராழி யொன்றாற் பொதுநீக்கி - சீராரும் 32
      மேய் திகிரி விரிமே கலையல்குற்
      றூய நிலமடந்தை தோள்களினும் - சாயலின் 33
      ஓது முலகங்க ளேழுங் தனித்துடைய
      கோதில் குலமங்கை கொங்கையினும் - போதில் 34
      நிறைகின்ற செல்வி நெடுங்கண் களினும்
      உறைகின்ற நாளி லொருநாள் - அறைகழற்காற் 35
      றென்னர் திறையளந்த முத்திற் சிலபூண்டு
      தென்னர் மலையார சேறணிந்து -
      வரவிட்ட தென்ற லடிவருட வாட்கண்
      பொரவிட்ட பேராயம் போற்ற - விரவிட்ட 37
      நித்தில பந்தர்க்கீழ் நீணிலா பாயலின்மேல்
      தொத்தலர் மாலை துணைத்தோளும் - மைந்தடங் 38
      கண்ணு முலையும் பெரிய களியன்னம்
      எண்ணு முலகங்க ளேழுடைய - பெண்ணணங்கு 39
      பெய்த மலரோதி பெண்சக்ர வர்த்தியுடன்
      எய்திய பள்ளி யினிதெழுந்து - பொய்யாத 40
      பொன்னி திருமஞ் சனமாடி பூசுரர்கை
      கன்னி தளிரறுகின் காப்பணிந்து - முன்னை 41
      மறைக்கொழுந்தை வெள்ளி மலைக்கொழுந்தை மோலி
      பிறைக்கொழுந்தை வைத்த பிரானை - கறைக்களத்து 42
      செக்கர பனிவிசும்பை தெய்வ தனிச்சுடரை
      முக்க கனியை முடிவணங்கி - மிக்குயர்ந்த 43
      அலங்காரங்கள் செய்துகொள்ளுதல்
      தான துறைமுடித்து சாத்து தகைமையன
      மான கலன்கள் வரவருளி - தேன்மொய்த்து 44
      சூழு மலர்முகத்து சொன்மா மகளுடனே
      தாழு மகர குழைதயங்க - வாழும் 45
      தடமுலை பார்மடந்தை தன்னுடனே தோளிற்
      சுடர்மணி கேயூரஞ் சூழ - படரும் 46
      தணிப்பில் பெருங்கீர்த்தி தைய லுடனே
      மணிக்கடகங் கையில் வயங்க - பிணிப்பின் 47
      முயங்கு திருவுடனே முந்நீர் கொடுத்த
      வயங்கு மணிமார்பின் மல்க - உயங்கா 48
      அருங்கொற்ற மாக்கு மணங்கி னுடனே
      மருங்கிற் றிருவுடைவாள் வா - பொருந்திய 49
      அண்ணற் படிவ தரும்பே ரணியணிந்து
      வண்ண தளவில் வனப்பமைந்து - கண்ணுதலோன் 50
      காமன் சிலைவணங்க வாங்கிய கட்டழகு
      தாம முடிவணங்க தந்தனைய - காமருபூங் 51
      பட்டத்து யானை
      கோல தொடும்பெயர்ந்து கோயிற் புறநின்று
      கால ததிருங் கடாக்களிறு - ஞாலத்து 52
      தானே முழங்குவ தன்றி தனக்கெதிர்
      வானே முழங்கினுமவ் வான்றடவி - வானு 53
      கணியு மருப்பு மடற்கையு மின்மை
      தணியும் யமராச தண்டம் - தணியா 54
      பரிய பொருங்கோ டிணைத்து பணைத்தற்
      கரிய தொருதானே யாகி -
      மலைக்கோ டனைத்து மடித்திடி குத்தும்
      கொலைக்கோட்டு வெங்கால கோபம் - அலைத்தோட 56
      ஊறு மதந்தனதே யாக வுலகத்து
      வேறு மதம்பொறா வேகத்தால் - கூறொன்ற 57
      தாங்கி பொறையாற்றா தத்தம் பிடர்நின்றும்
      வாங்கி பொதுநீக்கி மண்முழுதும் - ஓங்கிய 58
      கொற்ற புயமிரண்டாற் கோமா னகளங்கன்
      முற்ற பரித்ததற்பின் முன்புதாம் - உற்ற 59
      வருத்த மறமறந்து மாதிரத்து வேழம்
      பருத்த கடாந்திறந்து பா - பெருக்க 60
      துவற்று மதுர சுவடிபிடி தோடி
      அவற்றி னபரங்கண் டாறி - இவற்றை 61
      அளித்தன னெங்கோமா னாதலா லின்று
      களித்தன வென்றுவக்குங் காற்று - நௌித்திழிய 62
      வேற்று புலத்தை மிதித்து கொதித்தமரில்
      ஏற்று பொருமன்ன ரின்னுயிரை - கூற்று 63
      கருத்து மயிரா பதநின் றதனை
      இருத்தும் பிடிபடியா வேறி - திருத்தக்க 64
      கொற்ற கவிகை நிழற்ற குளிர்ந்திரட்டை
      கற்றை கவரியிளங் காலசைப்ப - ஒற்றை 65
      வலம்புரி யூத வளைக்குல மார்ப்ப
      சிலம்பு முரசஞ் சிலம்ப - புலம்பெயர்ந்து 66
      வாட்படை கொட்ப மறவன் னவர்நடுங
      கோட்புலி கொற்ற கொடியோங்க -சேட்புலத்து 67
      உடன் வருவோர்
      தென்னரு மாளுவருஞ் சிங்களரு தேற்றுதகை
      மன்னரு தோற்க மலைநாடு - முன்னம் 68
      குலை பொருதொருநா கொண்ட பரணி
      மலை தருந்தொண்டை மானும் - பலர்முடிமேல் 69
      ஆர்க்குங் கழற்கா லனகன் றனதவையுள்
      பார்க்கு மதிமந்த்ர பாலகரிற் - போர்க்கு 70
      தொடுக்குங் கமழ்தும்பை தூசினொடுஞ் சூட
      கொடுக்கும் புகழ்முனையர் கோனும் - முடுக்கரையும் 71
      கங்கரையு மாரா டரையுங் கலிங்கரையும்
      கொங்கரையு மேனை குடகரையும் - தங்கோன் 72
      முனியும் பொழுது முரிபுருவ தோடு
      குனியுஞ் சிலைச்சோழ கோனும் - சனபதிதன் 73
      தோளுங் கவசமுஞ் சுற்றமுங் கொற்றப்போர்
      வாளும் வலியு மதியமைச்சும் - நாளுமா 74
      மஞ்சை கிழித்து வளரும் பொழிற்புரிசை
      கஞ்சை திருமறையோன் கண்ணனும் - வெஞ்சமத்து 75
      புல்லாத மன்னர் புலாலுடம்பை பேய்வாங்க
      ஒல்லாத கூற்ற முயிர்வாங்க - புல்லார்வம் 76
      தாங்கு மடமகளிர் தத்தங் குழைவாங்க
      வாங்கு வரிசிலைக்கை வாணனும் - வேங்கையினும் 77
      கூடார் விழிஞத்துங் கொல்லத்துங் கொங்கத்தும்
      ஓடா விரட்டத்து மொட்டத்தும் - நாடா 78
      தடியெடுத்து வெவ்வே றரசிரிய வீர
      கொடியெடுத்த காலிங்கர் கோனும் - கடியரண 79
      செம்பொற் பதணஞ் செறியிஞ்சி செஞ்சியர்கோன்
      கம்ப களியானை காடவனும் - வெம்பி 80
      கலக்கிய வஞ்ச கலியதனை பாரில்
      விலக்கிய வேணாடர் வேந்தும் - தலைத்தருமம் 81
      வாரி குமரிமுதன் மந்தா கினியளவும்
      பாரி தவனனந்த பாலனும் -பேரமரில் 82
      முட்டி பொருதார் வடமண்ணை மும்மதிலும்
      மட்டித்த மால்யானை வத்தவனும் - அட்டையெழ 83
      காதி கருநாடர் கட்டரணங் கட்டழித்த
      சேதி திருநாடர் சேவகனும் - பூதலத்து 84
      முட்டிய தெவ்வர் சடைகட்ட மொய்கழல்
      கட்டிய காரானை காவலனும் - ஒட்டிய 85
      மான வரச ரிரிய வடகலிங்க
      தானை துணித்த வதிகனும் - மீனவர்தம் 86
      கோட்டாறுங் கொல்லமுங் கொண்ட குடைநுளம்பன்
      வாட்டார் மதயானை வல்லவனும் - மோட்டரண 87
      கொங்கை குலைத்து குட குவடிடித்த
      செங்கை களிற்று திகத்தனும் - அங்கத்து 88
      வல்லவனுங் கோசலுன மாளுவனு மாகதனும்
      வில்லவனுங் கேரளனு மீனவனும் - பல்லவனும் 89
      என்னும் பெரும்போ ரிகல்வேந்தர் மண்டலிகர்
      முன்னு மிருமருங்கு மொய்த்தீண்ட - பன்மணிசேர் 90
      குழாங்கள்
      சோதி வயிர மடக்குஞ் சுடர்த்தொடியார்
      வீதி குறுகுதலு மேலொருநாள் - மாதவத்தோன் 91
      சார்ந்த பொழுதனகன் றன்னை யறிவித்த
      பூந்துவரை யந்த புரம்போன்றும் - ஏந்தி 92
      பரக்குங் கலையல்குற் பாவையரே யாணை
      புரக்கு திருநாடு போன்றும் - வரக்கருதா 93
      ஏனை முனிக்குறும்பு கொல்ல விகன்மாரன்
      சேனை திரண்ட திரள்போன்றும் - கானலங் 94
      கண்டன் மணற்குன்ற தன்ன கணம்போன்றும்
      கொண்டலின் மின்னு குழாம்போன்றும் - மண்டும் 95
      திரைதொறு தோன்று திருக்குழாம் போன்றும்
      வரைதொறுஞ் சேர்மயில்கள் போன்றும் - விரைவினராய் 96
      இந்து நுதல்வெயர்ப்ப வெங்கணுங் கண்பரப்பி
      சிந்தை பரப்பி தெருவெங்கும் - வந்தீண்டி 97
      உத்தி சுடர வொளிமணி சூட்டெறி
      பத்தி வயிரம் பரந்தெறிப்ப - முத்தின் 98
      இணங்கு மமுத கலசங்க ளேந்தி
      வணங்கு தலையினராய் வந்து -கணங்கொண்டு 99
      பார்க்குங் கொடுநோக்கு நஞ்சுறைப்ப கிஞ்சுகவாய்
      கூர்க்கு மெயிறுவெறுங் கோளிழைப்ப - வேர்க்க 100
      வரைகொ ணெடுமாட கீணிலையின் மல்கி
      உரக வரமகளி ரொப்பார் - விரல்கவரும் 101
      வீணையும் யாழுங் குழலும் விசிமுழவும்
      பாணி பெயர பதம்பெயர்த்து -சேணுயர் 102
      மஞ்சிவரும் வெண்பளிக்கு மாட திடைநிலையில்
      விஞ்சையர் மாத ரெனமிடைவார் - அஞ்சன 103
      கண்ணிற் சிறிது மிமையாத காட்சியும்
      மண்ணிற் பொருந்தா மலரடியும் - தண்ணென்ற 104
      வாடா நறுஞ்செவ்வி மாலையுங் கொண்டழகு
      வீடா நிலாமுற்ற மேனிலையிற் - கூடி 105
      உருவி னொளியி னுணர்வி னுரையிற்
      பொருவி லரமகளிர் போல்வார் - அருகணைந்து 106
      குழாங்களின் கூற்று
      சீரள வில்லா திருத்தோ ளயன்படைத்த
      பாரள வல்ல பணைப்பென்பார் - பாருமின் 107
      செய்ய வொருதிருவே யாளுஞ் சிறுமைத்தோ
      வைய முடையபிரான் மார்பென்பார் - கையிரண்டே 108
      ஆனபோ தந்த முருகவே ளல்லனிவன்
      வேனில்வேள் கண்டீ ரெனமெலிவார் - யானெண்ணும் 109
      எண்ணு கிசைய வருமே யிவனென்பார்
      கண்ணிற் கருணை கடலென்பார் - மண்ணளிக்கும் 110
      ஆதி மனுகுலமிவ் வண்ணலான் மேம்படுகை
      பாதியே யன்றா லெனப்பகர்வார் - தாதடுத்த 111
      கொங்கை பசப்பார் கோல்வளை காப்பார்போல்
      செங்கை குவிப்பார் சிலர்செறிய - அங்கொருத்தி 112
      பேதை
      வந்து பிறந்து வளரு மிளந்திங்கள்
      கொந்து முகிழா கொழுங்கொழுந்து - பைந்தழை 113
      தோகை தொடாமஞ்ஞை சூடுண்டு தோற்றவன்மேல்
      வாகை புனைய வளர்கரும்பு - கோகுலத்தின் 114
      பிள்ளை யிளவன்ன பேடை பிறந்தணிய
      கிள்ளை பவளங் கிளைத்தகிளை - கள்ளம் 115
      தெரியா பெருங்க சிறுதேற றாயர
      பிரியா பருவத்து பேதை - பரிவோடு 116
      பாவையு மானு மயிலும் பசுங்கிளியும்
      பூவையு மன்னமும் பின்போத - காவலன் 117
      பொன்னி புகார்முத்தி னம்மனையு தென்னாகை
      நன்னி திலத்தி னகைக்கழங்கும் - சென்னிதன் 118
      கொற்றை குளிர்முத்த வல்சியுஞ் சோறடுகை
      கற்கைக்கு வேண்டுவன கைப்பற்றி - பொற்கொடியார் 119
      வீதி புகுந்து விளையாடு மெல்லைக்கண்
      ஆதி யுகம்வ தடிக்கொள்ள - மேதினிமேல் 120
      ஊன்று கலிகடிந்த வுத்துங்க துங்கன்றன்
      மூன்று முரச முகின்முழங்க - வான்றுணை 121
      தாயர் வரவந்து
      தாயர் மொழிந்தனவே தான்மொழிந்தாள் - சேயோன் 122
      படியின் மதியும் பகலவனு தோற்கும்
      முடியி லொருகாலு மூளா - வடிவில் 123
      மகிழ்ந்து மலராண் மலர்க்கண்ணு நெஞ்சும்
      நெகிழ்ந்த திருநோக்கி னேரா - முகிழ்ந்து 124
      சிரிக்கு திருப்பவள சேயொளியூ டாடா
      விரிக்கு திருநிலவின் வீழா - பரிக்கும் 125
      உலகம் பரவு திருப்புருவ தோரா
      திலக முகாம்புயத்து சேரா - பலவும் 126
      திசையை நெருக்கு திருத்தோளிற் செல்லா
      இசையு திருமார்ப தெய்தா - வசையிலா 127
      கைம்மலரிற் போகா வடிமலரின் கண்ணுறா
      மெய்ம்மலர பேரொளியின் மீதுறா - அம்மகள் 128
      கண்ணு மனமுங் கழுநீர குலமுழுதும்
      நண்ணு தொடையன்மே னாட்செய்ய - உண்ணெகிழா 129
      வம்மின்க ளன்னைமீர் மாலை யிதுவாங்கி
      தம்மின்க ளென்றுரைப்ப தாயரும் - அம்மே 130
      பெருமானை யஞ்சாதே பெண்ணமுதே யாமே
      திருமாலை தாவென்று செல்வேம் -
      யாங்கொள்ளும் வண்ண மௌிதோ வரிதென்ன
      தேங்கொள்ளு மின்சொற் சிறியாளும் - ஆங்குத்தன் 132
      மார்வத்து கண்ணினீர் வார பிறர்கொள்ளும்
      ஆர்வத்து கன்றே யடியிட்டாள் - சேர 133
      இருத்தி மணற்சோ றிளையோரை யூட்டும்
      அருத்தி யறவே யயர்த்தாள் - ஒருத்தி 134
      பெதும்பை
      மழலை தனது கிளிக்களித்து வாய்த்த
      குழலி னிசைக்கவர்ந்து கொண்டாள் - நிழல்விரவு 135
      முன்னர் நகைதனது முல்லை கொளமுத்தின்
      பின்னர் நகைகொண்ட பெற்றியாள் - கன்னி 136
      மடநோக்க தான்வளர்த்த மானு களித்து
      விடநோக்கம் வேலிரண்டிற் கொண்டாள் - சுடர்நோக்கும் 137
      தானுடைய மெய்ந்நுடக்க தன்மா தவிக்களித்து
      வானுடைய மின்னுடக்கம் வாங்கினாள் - பூநறும் 138
      பாவைகள் பைங்குர வேந்த பசுங்கிளியும்
      பூவையு மேந்தும் பொலிவினாள் - மேவும் 139
      மடநடை யன்ன பெடைபெற கன்னி
      பிடிநடை பெற்று பெயர்வாள் - சுடர்கன 140
      கொத்து குயின்ற கொடிப்பவள பந்தத்தின்
      முத்து பொதியுச்சி முச்சியாள் - எத்திறத்தும் 141
      வீரவேள் போல்வாரை வீட்டி விழுத்தவர்மேல்
      மாரவேள் கண்சிவப்ப வாய்சிவப்பாள் - நேரொத்த 142
      கோங்க முகையனைய கொங்கையா டன்கழுத்தாற்
      பூங்கமுகை யிப்போது பொற்பழிப்பாள் - பாங்கியரும் 143
      கனா கூறுதல்
      தாயரும் போற்றாமே தானே துயிலெழுந்து
      பாயல் புடைபெயர்ந்து பையச்சென் - றியாயே 144
      தளரு மிடையொதுங்க தாழுங் குழைத்தாய்
      வளரு மொருகுமரி வல்லி - கிளரும் 145
      கொழுந்து மளவிறந்த கொந்துங் கவினி
      எழுந்து கிளைகலிப்ப வேறி - தொழுந்தகைய 146
      கொங்குடைய பொன்னடருஞ் சென்னி கொழுங்கோங்கின்
      பங்குடைய மூரி பணையணைந்து - தங்குடைய 147
      வண்டு முரல மணநாற வைகுவது
      கண்டு மகிழ்ந்தேன் கனவிலென - கொண்டு 148
      வருக மடக்கிள்ளை
      தருக தருகவென தாயர் - பெருக 149
      விரும்பினர் புல்லி விரைய முலைவ
      தரும்பின வாக தணங்கே - பெரும்புயங்கள் 150
      புல்லி விடாத புதுவதுவை சென்னியுடன்
      வல்லி பெறுதி யெனவழுத்தும் -எல்லை 151
      அரச னபய னகளங்க னெங்கோன்
      புரசை மதவரைமேற் போத - முரசம் 152
      தழங்கு மறுகிற் றமரோடு மோடி
      முழங்கு முகின்மாட முன்றிற் - கொழுங்கயற்க 153
      பொன்னென வெல்லா வழகும் புனைவதொரு
      மின்னென வந்து வௌிப்பட்டு - மன்னருயிர் 154
      உண்டாற் றியவேங்கை வைக்க வொருதிருக்கை
      செண்டாற் கிரிதிரத்த சேவகனை - தண்டாத 155
      வேகங் கெடக்கலிவாய் வீழ்ந்தரற்றும் பார்மகளை
      சோகங் கெடுத்தணைத்த தோளானை - ஆகத்து 156
      கொங்கை பிரியாத வீறோடுங் கேகானக
      மங்கை பிரியாத மார்பானை - அங்கமல 157
      கையு மலரடியுங் கண்ணுங் கனிவாயும்
      செய்ய கரிய திருமாலை - தையலும் 158
      கண்டகண் வாங்காள் தொழமுகிழ்ந்த கைவிடான்
      மண்டு மனமீட்கு மாறறியாள் - பண்டறியா 159
      காமங் கல கலங்கி குழல்சரி
      தாமஞ் சரி தனிநின்றாள் - நாமவேற் 160
      சேரனு மீனவனுஞ் சேவிப்ப செம்பியரில்
      வீரனு மல்வெல்லை விட்டகன்றான் - மாரனும் 161
      தக்கு தகாதாளை யெய்து தரைப்படுத்த
      புக்கு தொடைமடக்கி போயினான் - மைக்குழல் 162
      மங்கை பருவ தொருத்தி மலர்பொதுளுங்
      கங்கை புளின களியன்னம் - எங்கோனை 163
      மன்னனை மன்னர் பிரானை வரோதயனை
      தென்னனை வானவனை செம்பியனை- முன்னொருநாள் 164
      கண்ட பெதும்பை பருவத்தே தன்கருத்தாற்
      கொண்ட பரிவு கடைக்கூட்ட - புண்டரிக 165
      செய்ய வடிமுதலா செம்பொன் முடியளவும்
      மைய லகல மனத்திழைத்து - கையினால் 166
      தீட்டுங் கிழியிற் பகற்கண் டிரவெல்லாம்
      காட்டுங் கனவு தரக்கண்டு -நாட்டங்கொண் 167
      டியாதொன்றுங் காணா திருப்பாள் பொருகளிற்று
      தாதொன்று தொங்கற் சயதுங்கன் - வீதி 168
      வருகின்றா னென்று மணியணிகள் யாவும்
      தருகென்றாள் வாங்கி தரித்தாள் - விரிகோதை 169
      சூடினாள் பைம்பொற் றுகிலுடுத்தாள் சந்தனச்சே
      றாடினா டன்பே ரணியணிந்தாள் - சேடியர் 170
      மங்கை தன்னையே ஐயுறுதல்
      காட்டும் படி கமலத்து கமலத்தை
      ஓட்டும் வதன தொளிமலர்ந்து - கேட்டு 171
      விடைபோ மனங்கன்போல் வேல்விழிக டாமும்
      படைபோய் வருவனபோற் பக்கம் - கடைபோய் 172
      மறித்து மதர்மதர்த்து வார்கடிப்பு வீக்கி
      எறிக்குங் குழைக்காதிற் கேற்றும் - நெறிக்கும் 173
      அளக முதலாக வைம்பாற் படுத்த
      வளர்கருங் கூந்தன் மலிந்துங் - கிளர 174
      அரியன நித்திலத்தி னம்பொற் றோடித்தோள்
      பரியன காம்பிற் பணைத்தும் - தெரியற் 175
      சுவடு படுகளப தொய்யில்சூழ் கொங்கை
      குவடு படவெழுச்சி கொண்டும் - திவடர 176
      முந்துங் கலையல்குன் மூரி தடமகன்றும்
      நொந்து மருங்கு னுடங்கியும் - வந்து 177
      மிடையும் புதுவனப்பு விண்ணோரும் வீழ
      அடையு தனதுருக்கண் டஞ்சி - கொடையனகன் 178
      பண்டறியு முன்னை பருவ துருவத்து
      கண்டறியு மவ்வடிவு காண்கிலேன் - பண்டறியும் 179
      முன்னை வடிவு மிழந்தேன் முகநோக்கி
      என்னை யறிகலன்யா னென்செய்கேன் - தன்னை 180
      வணங்கி வருவ தறிவ னெனவ
      திணங்கு மகளி ரிடைநின் - றணங்கும் 181
      இறைவ னகளங்க னெங்கோன் குமரி
      துறைவ னிருபகுல துங்கன் - முறைமையால் 182
      காக்குங் கடல்கடைந்த கைம்மலரு முந்திமலர்
      பூக்கு முலகளந்த பொற்கழலும் - நோக்கும் 183
      திருக்கொள்ளு மார்பமு தெவ்வேந்த ரெல்லாம்
      வெருக்கொள்ளு மூரித்தோள் வெற்பும் - உருக்கும் 184
      மகர குழைக்காது மாதரார் மாமை
      நுகர புடைபெயரு நோக்கும் - துகிரொளியை 185
      வௌவிய கோல மணிவாயு மெப்பொழுதும்
      செவ்வி யழியா திருமுகமும் - எவ்வுருவும் 186
      மாறுபடா வண்ணமுந்தன் வண்ண படிவத்து
      வேறு படுவனப்பு மெய்விரும்பி -தேறி 187
      பிறையாம் பருவத்து பேருவகை யாம்பல்
      நிறையா மதிக்கு நெகிழ்ந்தாங் - கிறைவனை 188
      கண்டு மனமு முயிருங் களிப்பளவிற்
      கொண்டு பெயர்ந்து கொல்யானை - பண்டு 189
      நனவு கிழியிற் பகற்கண்டு நல்ல
      கனவு தரவிரவிற் கண்டு - மனமகிழ்வாள் 190
      தீட்ட முடியாத செவ்வி குறிக்கொள்ளும்
      நாட்ட முறங்கா மையுநல்க - மீட்டு 191
      பெயர்ந்தா டமர்தம் பெருந்தோள் களில்வீழ
      தயர்ந்தா ளவணிலையீ தப்பாற் - சயந்தொலைய 192
      மடந்தை
      வெந்து வடிவிழந்த காமன் விழிச்சிவப்பு
      வந்து திரண்டனைய வாயினாள் - அந்தமில் 193
      ஓல கடலேழு மொன்றா யுலகொடுக்கும்
      கால கடையனைய கட்கடையாள் - ஞாலத்தை 194
      வீட்டி வினைமுடிக்க வெங்கால தூதுவர்கள்
      கோட்டி யிருக்குங் குவிமுலையாள் - நாட்ட 195
      வடிவின் மருங்குலான் மாரனைப்போன் மேலோர்
      முடிவு லுணர்வை முடிப்பாள் - கடிதோடி 196
      போகா தொழியா திடையென்று போய்முடியல்
      ஆகாமை கைவளரு மல்குலாள் - பாகாய 197
      பந்தாடுதல்
      சொல்லி யொருமடந்தை தோழியை தோள்வருந்த
      புல்லி நிலாமுற்றம் போயேறி - வல்லிநாம் 198
      சேடிய ரொப்ப வகுத்து திரள்பந்து
      கோடியர் கண்டுவப்ப கொண்டாடி - ஓடினால் 199
      என்மாலை நீகொள்வ தியாங்கொள்வ தெங்கோமான்
      தன்மாலை வாங்கி தருகென்று - மின்னனையான் 200
      வட்டி தளகமுங் கொங்கையும் வார்தயங
      கட்டி கனபந்து கைப்பற்றி - ஒட்டி 201
      பொருதிறத்து சேடியர்தம் போர்தொலை தானே
      இருதிறத்து கந்துகமு மேந்தி - பெரிதும் 202
      அழுந்து தரள தவைதன்னை சூழ
      விழுந்து மெழுந்து மிடைய - எழுந்துவரி 203
      சிந்த விசிறு திரையி னுரையூடு
      வந்த வனச மகளேய்ப்ப - முந்திய 204
      செங்காந்த ளங்கை சிவக்குஞ் சிவக்குமென்
      றங்காந்து தோள்வளைக ளார்ப்பெடுப்ப - தங்கள் 205
      நுடங்குங் கொடிமருங்கு னொந்தசைந்த தென்றென்
      றடங்குங் கலாப மரற்ற - தொடங்கி 206
      அரிந்த குரலினவா யஞ்சீ றடிக்கு
      பரிந்து சிலம்பு பதைப்ப - விரிந்தெழும் 207
      கைக்கோ விடைக்கோ கமல மலரடிக்கோ
      மைக்கோல வோதியின்மேல் வண்டிரங்க - அக்கோதை 208
      பந்தாடி வென்று பருதி யகளங்கன்
      சந்தாடு தோண்மாலை தாவென்று - பைந்துகிற் 209
      றானை பிடித்தலைக்கும் போதிற் றனிக்குடைக்கீழ்
      யானைமேல் வெண்சா மரையிரட்ட - சேனை 210
      மிடை பவளமு நித்திலமு மின்ன
      அடை பணிலங்க ளார்ப்ப - புடைபெயர 211
      வார்ந்து மகர வயமீன் குலமுழுதும்
      போந்து மறுகு புடைபிறழ - சேர்ந்து 212
      பதலை முழங்க பகட்டேற்றி விட்ட
      மதலைகண் முன்னர் மலிய - விதலையரா 213
      தாழு தொழிலிற் கிளைபுரக்க தன்னடைந்து
      வாழும் பரதர் மருங்கீண்ட - வீழுந்தி 214
      கன்னியு நன்மதையுங் கங்கையுஞ் சிந்துவும்
      பொன்னியு தோயும் புகார்விளங்க - மன்னிய 215
      செங்கோற் றியாக சமுத்திர நண்ணுதலும்
      தங்கோ மறுகிற் றலைப்பட்டு - தங்களில் 216
      ஒட்டிய வொட்ட முணராதே தோள்வளையும்
      கட்டிய மேகலையுங் காவாதே - கிட்டி 217
      தொழுதா ளயர்ந்தா டுளங்கினாள் சோர்ந்தாள்
      அழுதா ளொருதமிய ளானாள் - பழுதிலா 218
      காக்கு துகிலு மிலங்கு பொலன்கலையும்
      போக்கு நிதம்பம் புனைகென்று - வீக்கும் 219
      மணிக்கச்சு தம்முடைய வான்றூசுங் கொங்கை
      பணி கடைக்கண் பாரா - அணிக்கமைந்த 220
      குன்றாத நித்தில கோவையும் பொன்னிறத்த
      பொன்றாத பட்டும் புனைகென்று - நின்று 221
      கொடுத்தன கொங்கைகளுங் கொண்டன தானும்
      அடுத்தனர் தோண்மே லயர்ந்தாள் -கடுத்து 222
      கவரு மனங்கனுடன் கைகலந்த தன்றி
      தவரு முதுகிளவி தாய - ரவரெங்கும் 223
      கூசினார் சந்தம் பனிநீர் குழைத்திழைத்து
      பூசினா ராலி பொழிந்தொழிந்தார் - வீசினார் 224
      இட்டார் நிலவி லிளந்தென் றலுங்கொணர்ந்து
      சுட்டார் குளரி தொகுத்தெடுத்தார் - விட்டாரோ 225
      பள்ள மதனிற் படரும் பெரும்புனல்போல்
      உள்ள முயிரை யுடன்கொண்டு -வள்ளல்பின் 226
      ஓதை மறுகி லுடன்போன போக்காலி
      பேதை நடுவே பிழைத்தொழிந்தாள் - மாதரில் 227
      அரிவை
      வாரி படுமமுத மொப்பாண் மதுகரஞ்சூழ்
      வேரி கமழ்கோதை வேறொருத்தி - மூரித்தேர 228
      தட்டுஞ் சிறுக பெருகி மரகதத்தாற்
      கட்டுங் கனபொற் கலாபாரம் - பட்டும் 229
      துகிலுங் கரப்ப சுடர்பரப்ப கைபோய்
      அகில்கின்ற வல்கு லரிவை - இகலி 230
      ஒருக்கி மருங்குகடி தொன்றினைவ தொன்று
      நெருக்கிய மாமை நிரம்பி - தருக்கி 231
      இடங்கொண்டு மின்னு கொடியொன் றிரண்டு
      குடங்கொண்டு நின்றதென கூற - தடங்கொண் 232
      டிணைத்து ததும்பி யிளையோர்க ணெஞ்சம்
      பிணைத்து தடமுகட்டிற் பெய்து - பணைத்து 233
      பெருமை யுவமை பிறங்கொலிநீர் ஞால
      தருமை படைத்ததன தன்னம் - கருமை 234
      எறித்து கடைபோ யிருபுடையு மெல்லை
      குறித்து குழையளவுங் கொண்டு -மறித்து 235
      மதர்த்து வரிபரந்து மைந்தர் மனங்கள்
      பதைத்து விழநிறத்திற் பட்டு - ததைத்த 236
      கழுநீர் மலரின் கவினழித்து மானின்
      விழிநீர்மை வாய்த்த விழியாள் - முழுதும் 237
      நெறிந்து கடைகுழன்று நெய்த்திருண்டு நீண்டு
      செறிந்து பெருமுருகு தேக்கி - நறுந்துணர் 238
      வார்ந்து கொழுந்தெழுந்த வல்லியாய் மாந்தளிர்
      சோர்ந்து மிசையசைந்த சோலையா - சேர்ந்து 239
      திருவிருந்து தாமரையா சென்றடைந்த வண்டின்
      பெருவிருந்து பேணுங் குழலாள் - பொருகளிற்றின் 240
      வந்து மறுகி லொருநாண் மனுகுலத்தோன்
      தந்த பெரிய தனிமைக்கண் - செந்தமிழ 241
      கோனே கவர்ந்தெம்மை கொண்டனன் வந்தெமக்கு
      தானே தரிற்றருக வென்பனபோல் - பூநேர் 242
      இணைக்கையு தோளு மிடுதொடிக ளேந்தா
      துணைக்கண் டுயிற்ற துயிலா - மணிக்கூந்தல் 243
      போது மறந்தும் புனையா பொலங்கச்சு
      மீது படத்தரியா வெம்முலைகள் - சோதி 244
      அடுக்குங் கனபொற் றுகில்பேணா தல்குல்
      கொடுக்குங் தெருணெஞ்சு கொள்ளா - தெடுக்கும் 245
      கருப்பு சிலையனங்கன் கையம்பால் வீழும்
      நெருப்பு குருகி நிறைபோய் - இருப்புழி 246
      பாடிய பூவைக்கும் யாதும் பரிவின்றி
      ஆடிய தோகைக்கு மன்பின்றிக்- கூடிய 247
      கிள்ளைக்கு தம்மிற் கிளரு மிளவன்ன
      பிள்ளைக்குகு மாற்றான் பெயர்ந்துபோ - கொள்ளை 248
      பயக்கு மலர்க்குரவ பந்தர படப்பை
      நயக்கு மிளமரக்கா நண்ணி - வயக்களிற்று 249
      மன்னன் குலப்பொன்னி வைகலு மாடுதிரால்
      அன்னங்கா ணீரென் றழிவுற்றும் - சென்னி 250
      பெருகும் புகாரடை பெற்றீரான் மற்றை
      குருகுகா ளென்று குழைந்தும் - கருகிய 251
      நீல குயிலினங்கா ணீர்போலுஞ் சோணாட்டு
      சோலை பயில்வீ ரெனத்துவண்டும் - பீலிய 252
      பேரியன் மஞ்ஞை பெறுதிராற் கொல்லியும்
      நேரியுஞ் சேர வெனநெகிழ்ந்தும் - நேரியன் 253
      தண்டுணர்ப்பே ராரம் பலகாலு தைவந்து
      வண்டுகாள் வாழ்வீ ரெனமருண்டும் - தொண்டிக்கோன் 254
      மன்றன் மலயத்து வாளருவி தோய்ந்தன்றே
      தென்றல் வருவ தெனத்திகைத்தும் - நின்றயர்கால் 255
      மன்னர்க்கு மன்னன் வளவ னகளங்கள்
      முன்னர பணில முழங்குதலும் - மின்னிற்போய் 256
      பேணு திருமடனு மென்றும் பிரியாத
      நாணும் பெருவிருப்பா னல்கூர - காணுங்கால் 257
      ஏய்ப்ப வெதிர்வந்து விரவி யுருவவொளி
      வாய்ப்ப முகபங் கயமலர்ந்தாள் - போய்ப்பெருகும் 258
      மீதா ரகலல்குல் வீழ்கின்ற மேகலையும்
      போதாத வண்ணம் புடைபெயர்ந்தாள் - சோதி 259
      குழைய நடுவொடுக்குங் கொங்கையு தோளும்
      பழைய படியே பணைத்தான் - பிழையாத 260
      பொன்னி துறைவன் பொலந்தார் பெறத்தகுவார்
      தன்னிற் பிறரின்மை சாதித்தாள் - சென்னிக்கு 261
      பாராண் முலையாலும் பங்கயத்தா டோளாலும்
      வாரா விருப்பு வருவித்தான் - ஓராங்கு 262
      தெரிவை
      கோது விரவா கொழும்பாகு கொய்தளிரீன்
      போது புலரா பொலங்கொம்பு - மீது 263
      முயலா லழுங்கா முழுத்திங்கள் வானிற்
      புயலா லழுங்கா புதுமின் - இயல்கொண் 264
      டெழுதாத வோவிய மேழிசைய வண்டு
      கொழுதாத கற்பகத்தின் கொம்பு - முழுதும் 265
      இருளா கலாப திளந்தோகை யென்றும்
      தெருளா களியளிக்கு தேறல் - பொருளால் 266
      வருந்த கிடையாத மாணிக்கம் யார்க்கும்
      அருந தெவிட்டா வமுதம் - திருந்திய 267
      சோலை பசுந்தென்ற றூதுவர வந்தி
      மாலை பொழுதுமணி மண்டபத்து - வேலை 268
      விரிந்த நிலாமுன்றில் வீழ்மகர பேழ்வாய்
      சொரிந்த பனிக்கற்றை தூங்க - பரிந்துழையோர் 269
      பூசிய சாந்தங் கமழ பொறிவண்டு
      மூசிய மௌவன் முருகுயிர்ப்ப - தேசிக 270
      பேரிசை யாழ்ப்பாணன் பேதை விறலியொடும்
      சேர வினிதிருந்த செவ்விக்கண் - நேரியும் 271
      தசாங்கம்
      கோழியும் வேங்கையு முப்பணையுங் கோரமும்
      பாழி யயிரா பதப்பகடும் - ஆழியான் .272
      சூடிய வாரமு மாணையுஞ் சோணாடும்
      காடு திரைத்தெறியுங் காவிரியும் - பாடுகென 273
      கூன லியாழெடுத்தான் பாணன் கொதித்தெழுந்து
      வேன லரசனுந்தன் வில்லெடுத்தான் - தேனியிர் 274
      தந்திரி யாழ்ப்பாணன் றைவந்தான்
      வெந்திறன் மாரனுந்தன் வில்லினாண் - முந்த 275
      நிறைநரம்பு பண்ணி நிலைதெரிந்தான் பாணன்
      திறன்மதனு மம்பு தெரிந்தான் - விறலியொடும் 276
      பாண னெருபாணி கோத்தான் பலகோத்தான்
      தூணி தொலை சுளிந்துவேள் - மாண 277
      இசைத்தன பாண னியாழ்ப்பாணி யெய்து
      விசைத்தன வேனிலான் பாணி - விசைத்தெழுந்த 278
      வீணை யிசையாலோ வேனிலா னம்பாலோ
      வாணுதல் வீழா மதிமயங்கா - சேணுலாம் 279
      வாடை யனைய மலயா நிலந்தனையும்
      கோடை யிதுவென்றே கூறினான் - நீடிய 280
      வாரை முனிந்த வனமுலைமேல் விட்டபனி
      நீரை யிதுவோ நெருப்பென்றான் - ஊரெலாம் 281
      காக்கு துடியை யழிக்குங் கணைமாரன்
      தாக்கும் பறையென்றே சாற்றினாள் - சேக்கைதொறும் 282
      வாழு முலக தெவரு மனங்களிப்ப
      வீழு நிலவை வெயிலென்றாள் - கோழிக்கோன் 283
      எங்கோ னகளங்க னேழுலகுங் காக்கின்ற
      செங்கோல் கொடுங்கோல் சிலர்க்கென்றான் - கங்குல் 284
      புலரு தனையும் புலம்பினா ளாங்கு
      பலரும் பணிந்து பரவ - குலகிரிசூழ் 285
      ஆழி புவன மடைய வுடையபிரான்
      சூழி கடாயானை தோன்றுதலும் -யாழின் 286
      யானையை நோக்கி கூறுதல்
      இழைக்கு மிசைமுதலா மெப்பகைக்கு மாற்றா
      துழைக்கு முயிர்தழைப்ப வோடி - பிழைத்னளாய் 287
      முட்டு திகிரி கிரியின் முதுமுதுகிற்
      கட்டுங் கடவு கடாயானை - யெட்டும் 288
      தரிக்கு முலக தனிதரித்த கோனை
      பரிக்கு மயிரா பதமே - செருக்கி 289
      பொருந்த நினையாத போர்க்கலிங்க ரோடி
      இருந்த வடவரைக ளெல்லாம் - திருந்தா 290
      விதையம் பொருதழிந்த விந்தமே போல
      புதைய நடந்த பொருப்பே - சிதையாாத 291
      திங்க குலத்திற்கு தெய்வ பொதியிற்கும்
      அங்க பழங்குமரி யாற்றிற்கும் - தங்கள் 292
      படிக்கும் பொருநிருப பன்னகங்கள் வீழ
      இடிக்கு தனியசனி யேறே - கடிப்பமைந்த 293
      யாம முரசா லிழந்த நிறைநினது
      தாம முரசு தரப்பெற்றேன் - நாம 294
      விடைமணி யோசை விளைத்தசெவி புண்ணின்
      புடைமணி யோசை புலர்ந்தேன் - தடைமுலைமேல் 295
      ஆறா மலயக்கா லட்டசூ டுன்செவியில்
      மாறா பெருங்காற்றான் மாற்றினேன் - வேறா 296
      கூசும் பனித்திவலை கொண்டுபோ மென்னுயிர்நீ
      வீசு மதத்திவலை யான்மீட்டேன் - மூசிய 297
      காருலா மோத கடல்முழங்க வந்ததுயர்
      நேரிலா நீமுழங்க நீங்கினேன் - பேரிரவில் 298
      என்மே லனங்கன் பொரவந்த வின்னலெல்லாம்
      நின்மே லன்கன்வர நீங்கினேன் - இன்னும் 299
      கடைபோல வென்னுயிரை காத்தியேல் வண்டு
      புடைபோக போதும் பொருப்பே - விடைபோய்நீ 300
      ராட்டு தடங்கலக்கின் மாரற் கயில்வாளி
      காட்டு தடமே கலக்குவாய் - கேட்டருளாய் 301
      கார்நாணு நின்கடத்து வண்டொழி காமனார்
      போர்நாணின் வண்டே புடைத்துதிர்ப்பாய் - பார்நாதன் 302
      செங்கை கரும்பொழி தின்கை கனங்கனார்
      வெங்கை கரும்பே விரும்புவாய் - எங்க 303
      குயிரா யுடலா யுணர்வாகி யுள்ளாய்
      அயிரா பதமேநீ யன்றே - பெயராது 304
      நிற்கண்டா யென்றிரந்து நின்றா ணுதலாக
      விற்கொண்ட பேரிளம்பெண் வேறொருத்தி - கொற்கையர்கோன் 305
      பேரிளம் பெண்
      மல்லற் புயத்தினகன் மால்யானை கைபோல
      கொல்ல திரண்ட குறங்கினாள் - எல்லையில் 306
      கோடுங் கொலைகுயின்ற சேடன் குருமணிவே
      தாடும் படமனைய வல்குலான் - சேடியா 307
      தம்மை யெடுக்கு மிடைகடிந்த தம்பழிக்கு
      கொம்மை முகஞ்சாய்த்த கொங்கையாள் - செம்மை 308
      நிறையு மழகா னிகரழித்து செய்யாள்
      உறையு மலர்பறிப்பா ளொப்பாள்ன் - நறைகமழும் 309
      மாலை பலபுனைந்து மான்மத சாந்தெழுதி
      வேலை தருமுத்த மீதணிந்து - சோலையில் 310
      மானு மயிலு மனைய மடந்தையரும்
      தானு மழகு தரவிருப்ப - தேனிமிர் 311
      ஊற விளம்பாளை யுச்சி படுகடு
      தேறல் வழிந்திழிந்த செவ்விக்கண் - வேறாக 312
      வாக்கி மடனிறைத்து வண்டு மதுநுரையும்
      போக்கி யொருத்தி புகழ்ந்துகா - நோக்கி 313
      வருந்தி சிறுதுள்ளி வள்ளுகிரா வெற்றி
      அருந்தி தமர்மே லயர்ந்தாள் - பொருந்தும் 314
      மயக்கத்து வந்து மனுதுங்க துங்கன்
      நயக்க தகுங்கனவு நல்கும் - முயக்கத்து 315
      மிக்க விழைவு மிகுகளிப்பு மத்துயிலும்
      ஒக்க விகல வுடனெழுந்து - பக்கத்து 316
      வந்து சுடரு மொருபளிக்கு வார்சுவரில்
      தந்த தனதுநிழ றானோக்கி - பைந்துகிர 317
      காசுசூ ழல்குற் கலையே கலையாக
      தூசு புடைபெயர்ந்து தோணெகிழ்ந்து - வாசஞ்சேர் 318
      சூடிய மாலை பரிந்து துணைமுலைமேல்
      ஆடிய சாந்தி னணிசிதைந்து - கூடிய 319
      செவ்வாய் விளர்ப்ப கருங்கண் சிவப்பூர
      வெவ்வா ணுதலும் வெயரரும்ப - இவ்வாறு 320
      கண்டு மகிழ்ந்த கனவை நனவா
      கொண்டு பலர்க்குங் குலாவுதலும் - வண்டுசூழ் 321
      வேரி கமழ்கோதை வேறாக தன்மனத்திற்
      பூரித்த மெய்யுவகை பொய்யாக - பாரித்த 322
      தா கவிகை நிழற்ற சயதுங்கன்
      நா கடாக்களிற்று நண்ணுதலும் - தேமொழியும் 323
      கண்டதுங் கெட்டேன் கனவை நனவா
      கொண்டது மம்மதுச்செய் கோலமே - பண்டுலகிற் 324
      செய்த தவஞ்சிறிது மில்லாத தீவினையேற்
      கெய்த வருமோ விவையென்று - கைதொழுது 325
      தேறி யொருகாலு தேறா பெருமையல்
      ஏறி யிரண்டா வதுமயங்கி - மாறிலா 326
      தோழியர் தோண்மே லயர்ந்தாள தோழியரும்
      ஏழுயர் யானை யெதிரோடி - ஆழியாய் 327
      மாட புகாருக்கும் வஞ்சிக்குங் காஞ்சிக்கும்
      கூடற்குங் கோழிக்குங் கோமானே - பாடலர் 328
      சாரு திகிரி தனையுருட்டி யோரேழு
      பாரும் புரக்கும் பகலவனே - சோர்வின்றி 329
      காத்து குடையொன்றா லெட்டு திசைகவித்த
      வேத்து குலகிரியின் மேருவே - போர்த்தொழிலால் 330
      ஏனை கலிங்கங்க ளேழனையும் போய்க்கொண்ட
      தானை தியாக சமுத்திரமே - மானப்போர் 331
      இம்ப ரெழுபொழில் வட்ட திகல்வேந்தர்
      செம்பொன் மவுலி சிகாமணியே - நம்பநின் 332
      பாரிற் படுவன பன்மணியு நின்கடல்
      நீரிற் படுவன நித்திலமும் - நேரியநின் 333
      வெற்பில் வயிரமும் வேந்தநின் சோணாட்டு
      பொற்பின் மலிவன பூந்துகிலும் - நிற்பணி 334
      கொண்டா யிவடனது கொங்கை கொழுஞ்சுணங்கும்
      தண்டா நிறையு தளிர்நிறமும் - பண்டை
      துயிலுங் கவர்ந்ததுநின் தொல்குலத்து வேந்தர்
      பயிலு திருநூற் படியோ - புயல்வளவ 336
      மன்னிய தொண்டை வளநாடு வாளியும்
      பொன்னி வளநாடு பூஞ்சிலையும் - கன்னி 337
      திருநாடு தேருங் குறையறுப்ப செய்தால்
      திருநாண் மடமகளிர் தம்மை - ஒருநாளவ் 338
      வேனற் கரசன் விடுமே யவன்சினமி
      பானற்கண் ணல்லா ளுயிர்ப்பரமே - ஆனக்கால் 339
      குன்றே யெனத்தகுநின் கோபுரத்திற் றூங்குமணி
      ஒன்றே யுலகு கொழியுமே - என்றினைய 340
      கூறி வணங்கிடு மிவ்வளவுங் கோதையர்மேற்
      சீறி யனங்கன் சிலைவளைப்ப - மாறழி 341
      குத்துங் கடாக்களிற்று போந்தான் கொடைச்சென்னி
      உத்துங்க துங்க னுலா. 342
      வெண்பா
      கையு மலரடியுங் கண்ணுங் கனிவாயும்
      செய்ய கரிய திருமாலே - வையம்
      அளந்தா யகளங்கா வாலிலைமேற் பள்ளி
      வளர்ந்தாய் தளர்ந்தாளிம் மான்.
      விக்கிரம சோழனுலா முற்றிற்று
      ------------------------------------------------------------------------
      2. குலோத்துங்க சோழனுலா
      தேர்மேவு பாய்புரவி பாசடை செங்கமலம்
      போர்மேவு பாற்கடற் பூத்தனையோன் - பார்மேல் 1
      மருள பசுவொன் றின் மம்மர்நோய் தீர
      உருளு திருத்தே ருரவோன் - அருளினாற் 2
      பேரா பெரும்பகை தீர பிறவேந்தர்
      ஊரா குலிர விடையூர்ந்தோன் - சோரா 3
      துயில்கா தரமகளிர் சோர்குழைகா தும்பர்
      எயில்காத்த நேமி யிறையோன் - வெயில்காட்டும் 4
      அவ்வா னவர்கோ னொருமணி யாசனத்தில்
      ஒவ்வாம லேத்த வுடனிருந்தோன் - கல்வை 5
      எழக்குரைக்கும் பேழ்வா யிருங்கூற்று கேற்ப
      வழக்குரைக்குஞ் செங்கோல் வளவன் - பழக்கத்தாற் 6
      போந்த புலியுடனே புல்வா யொருதுறைநீர்
      மாந்த வுலகாண்ட மன்னர்பிரான் - காந்தெரியில் 7
      வெந்தா ருயிர்பெற் றுடல்பெற்று விண்ணாள
      மந்தா கினிகொணர்ந்த மன்னர்கோன் - முந்தி 8
      பொருதேர்க ளீரைந்தி னீரைவர் போர்பண்
      டொருதேரால் வென்ற வுரவோன் - கருதி 9
      மலைபத்தும் வெட்டு முருமின் உறவோன்
      தலைபத்தும் வெட்டுஞ் சரத்தோன் - நிலைதப்பா 10
      மீளி தலைகொண்ட தண்டத்தான் மீளிக்கு
      கூளி தலைபண்டு கொண்டகோன் - நாளும் 11
      பது கடவுள் படைப்படை காத்த
      முதுமக்க சாடி முதலோன் - பொதுமட்க 12
      வாங்கொயி னேமி வரையாக மண்ணாண்டு
      தூங்கெயில் கொண்ட சுடர்வாளோன் - ஓங்கிய 13
      மால்கடற் பள்ளி வறிதாக மண்காத்து
      மேல்கடல் கீழ்கடற்கு விட்டகோன் - கோல்கொன் 14
      றலையெறியுங் காவேரி யாற்று படைக்கு
      மலையெறியு மன்னர்க்கு மன்னன் - நிலையறியா 15
      தொல்லார் கலைவலை தோள்வலைய முன்றிருந்த
      வில்லா னடுவுள்ள வெற்பெடுத்தோன் - ஒல்லை 16
      கொலையே நுடம்படை கொய்தாலு மெய்தா
      துலையேறி வீற்றிருந்த தோன்றல் - தலையேறு 17
      மண்கொண்ட பொன்னி கரைகாட்ட வாராாதாள்
      கண்கொண்ட சென்னி கரிகாலன் -எண்கொள் 18
      பணம்புணர்ந்த மோலியான் கோமகளை பண்டு
      மணம்புணர்ந்த கிள்ளி வளவன் - அணங்கு 19
      படுத்து பொறையனை பொய்கைக்கு பண்டு
      கொடுத்து களவழிப்பா கொண்டோன் - அடுத்தடுத்து 20
      சீறுஞ் செருவிற் றிருமார்பிற் றொண்ணூறும்
      ஆறும் படுதழும்பி னாகத்தோன் - ஏற 21
      பிரம வரக்க னகலம் பிளந்து
      பரமர் திருத்தில்லை பார்த்தோன் - நரபதியர் 22
      தாழமுன் சென்று மதுரை தமிழ்ப்பதியும்
      ஈழமுங் கொண்ட விகலாளி - சூழ்வும் 23
      ஏறி பகலொன்றி லெச்சுரமும் போயுதகை
      நூறித்தன் றூதனை நோக்கினான் - வேறா 24
      கங்கா நதியுங் கடாரமுங் கைவர
      சிங்கா தனத்திருந்த செம்பியர்கோன் -எங்கோன் 25
      புவிராச ராசர் மனுமுதலோர் நாளில்
      தவிராத சுங்க தவிர்த்தோன் - கவிராசர் 26
      போற்றும் பெரியோ னிவன்பின்பு பூதலங்கள்
      ஆற்று திருந்தோ ளகளங்கன் - வேற்றார் 27
      விரும்பரணில் வெங்களத்தி வேட்டு கலிங்க
      பெரும்பரணி கொண்ட பெருமான் - தரும்புதல்வன் 28
      கொற்ற குலோத்துங்க சோழன் குவலயங்கள்
      முற்ற புரக்கு முகில்வண்ணன் - பொற்றுவரை 29
      இந்து மரபி லிருக்கு திருக்குலத்தில்
      வந்து மனுகுலத்தை வாழ்வித்த - பைந்தளிர்க்கை 30
      மாதர பிடிபெற்ற வாரணமவ் வாரணத்தின்
      காதற் பெயரன் கனகளபன் - யாதினும் 31
      தீட்ட கரிய திருவே திருமாலை
      சூட்ட திருமகுடஞ் சூடியபின் - நாட்டு 32
      முறைவிட்ட வேற்று முடிமன்னர் தத்தம்
      சிறைவி டரசருளி செய்து - கறைவிட்டு 33
      மைஞ்ஞாசு மெட்டு மதநாக மோரொட்டும்
      பைஞ்ஞாசு மெட்டும் பரந்தீர - இஞ்ஞாலம் 34
      தாதைக்கு பின்பு தபனற்கு தோலாத
      போ திமிர பொறைநீக்கி - மாதரில் 35
      ஒக்க வபிடேகஞ் சூடு முரிமைக்கண்
      தக்க தலைமை தனித்தேவி - மிக்க 36
      புவனி முழுதுடைய பொற்றொடியு தானும்
      அவனி சுரர்கருதி யார்ப்ப - நவநிதிதூய் 37
      தில்லையிற் செய்த திருப்பணிகள்
      ஏத்து தருங்கடவு ளெல்லையி லானந்த
      கூத்து களிகூர கும்பிட்டு - போத்தின்மேற் 38
      றில்லை திருமன்ற முன்றிற் சிறுதெய்வ
      தொல்லை குறும்பு தொலைத்தெடுத்து - மல்லற் 39
      றசும்பு வளர்கனி தண்பெரு நாவல்
      அசும்பு பசும்பொ னடுக்கி -பசும்பொன் 40
      அலகை யிகந்த அசலகுல வச்ர
      பலகை தது பதித்து - மலர்கவிகை 41
      காக்குங் கடலேழின் முத்தும் வரகங்கை
      தூக்கு மருவியிற் சூழ்போக்கி - நோக்கம் 42
      தொடுக்குஞ் சிரச்சேடன் சூடா மணிகொண்
      டெடுக்கு திருத்தீப மேற்றி - அடுக்கிய 43
      தூய வயிரத்தால் வாவியா சூழ்கடந்த
      பாய மரகத்தாற் பாசடையா - தூய 44
      பருமுத்தா வாலியா பற்பரா கத்தால்
      திருமிக்க செந்தா மரையா - பெருவர்க்க 45
      நீலத்தால் வண்டி னிரையா யுரையிருந்த
      கோலத்தாற் கோயிற் பணி குயிற்றி - சூலத்தான் 46
      ஆடு திருப்பெரும்பே ரம்பலமுங் கோபுர
      மாடம் பரந்தோங்கு மாளிகையும் - கூடி 47
      பொலங்கோட்டு மாமேரு பூதரமும் போய
      வலங்கோ டிகிரியு மான - தலங்கொள் 48
      நிலையேழு கோபுரங்க ணேரே நெருங்க
      மலையேழு மென்ன வகுத்து - தலையில் 49
      மகரங்கொள் கோபுரங்கண் மாக விமான
      சிகரங்க ளாகி திகழ - நிகரில் 50
      எரிபொற் படர்பாறை யென்னலா யெங்கும்
      விரிபொற் றிருமுற்ற மின்ன - சொரிபொற் 51
      கடார பனிநீர் கவினி கனபொற்
      றடாகங்க ளாகி ததும்ப - விடாதுநின் 52
      றற்பக லாக வனந்த சதகோடி
      கற்பக சாதி கதிர்கதுவ -பொற்பூண் 53
      வரமகளிர் தத்தம் பணிமுறைக்கு வந்த
      சுரமகளி ராகி துறும - ஒருதான் 54
      பிறக்கு மி பெருங்கடவு குன்றம்
      மறக்கும் படிசெல்வ மல்க - சிறக்கும் 55
      இருக்காதி யெம்மறையு மெவ்வுலகு மீன்றாள்
      திருக்கா கோட்ட திகழ்வி - தருக்கர் 56
      புனையா மணியாலும் பொன்னாலு மின்ன
      மனையாலோ ரோர்தேர் வகுத்து - முனைவன் 57
      திருவீதி யீரண்டு தேவர்கோன் மூதூர
      பெருவீதி நாண பிறக்கி - வருநாளிற் 58
      பொங்கார் கவிசூழ் புவனம் பதினாலும்
      கங்கா புரிபுகுந்து கண்டுவப்ப - தங்கள் 59
      புவனி பெறவந்த பூபாலர கெல்லாம்
      பவனி யெழுச்சி பணித்து -கவினும் 60
      மடமயி லொக்க மகுடங் கவித்தாள்
      உடனுறை பள்ளி யுணர்ந்து - தடமுகில் 61
      அஞ்சன சைல தபிடேகஞ் செய்வதென
      மஞ்சன மாடி வழிமுதற் - செஞ்சடை 62
      வானவன் பொற்றாள் வணங்கி மறையவர்க்கு
      தான மனைத்துங் தகைபெறுத்தி - வானிற் 63
      கிளைக்குஞ் சுடரிந்தர நீல கிரியை
      வளைக்கு மிளநிலா மான - திளைக்கும் 64
      உருவுடை யாடை தவிர்த்தொரு வெள்ளை
      திருவுடை யாடை திகழ்த்தி - ஒருபுடை 65
      பச்சை யுடைவாள் விசித்த தொருபசும்பொற்
      கச்சை நவரத்ன கட்டெறிப்ப - வச்ர 66
      வெருவுதர வெல்லா விரவிகளும் வீழ
      திருவுதர பந்தனஞ் சேர்த்தி - திருமார்பிற் 67
      கார்க்கடன் மீதே கதிர்மு தாமங்கள்
      பாற்கடல் போர்த்த தெனப்பரப்பி -
      வந்த வனச மகளேபோன் மற்றது
      தந்த கடவுண் மணிதயங்க - பந்த 69
      சுரகனக தோள்வலை சூட்டு கவித்த
      உரக பணாமணி யொப்ப - விரவி 70
      மகர குழைதோண்மேல் வந்தசைவ மேரு
      சிகர சுடர்போற் றிகழ - நிகரில் 71
      முடியின் மணிவெயிலும் முத்த குடையில்
      வடியு நிலவு மலை - படியில் 72
      வயங்கு கடக மகுடாதி மின்ன
      தயங்கு பெரும் போதி சாத்தி - முயங்கிய 73
      செவ்வி நுதலிற் றிருநீற்று புண்டரம்
      வவ்வி மகளிர் மனங்கவற்ற - நொவ்விய 74
      நாவியு மான்மத சாந்து நறையகில்
      ஆவியு மாகண் டமுமளப்ப - தீவிய 75
      தோண்மாலை வாச கழுநீர் சுழல்சோதி
      கோண்மாலை கூச குளிர்கொடுப்ப - நாண்மாலை 76
      வேந்தர் தொழுதிறைஞ்ச வேதிய ரேத்தெடு
      போந்து புறநின்ற போர்க்களிற்றை - வேந்தரில் 77
      மாக்காதல் யாதவனும் மாறழிந்த மீனவனும்
      வீக்காம லெங்குள்ள மெய்ம்முகிற்கும் - கோக்கடவு 78
      கெட்டாத வச்சிரமு மெலலா வுருமேறும்
      வெட்டாம லெங்குள்ள வெற்பினுக்கும் - முட்டா 79
      முதுவாய் வடவையு முந்நான்கு கோளும்
      கதுவாம லெல்லா கடற்கும் - பொதுவாய் 80
      அபயங் கொடுக்கு மயிரா பதத்தை
      உபய வயக்கோ டுருமை - விபவ 81
      நிரு தருமோர் நிதிப்பொருப்பை கண்ணுற்
      றெருத்த திருக்கவின வேறி - திருத்தக்க 82
      பள்ளி திருத்தொங்கற் சோலை பகல்விலக்க
      வெள்ளி கவிகை மிசையோங்க - ஒள்ளிய 83
      ஒற்றை வலம்புரி யூத வதன்பின்பு
      மற்றை யலகில் வளைகலிப்ப - கற்றை 84
      கவரி யிரட்ட கடவுண் முரசார
      துவரி யுவாவாடி யொப்ப - அவிர்வாளும் .85
      சங்கு திகிரியுஞ் சார்ங்கமு தண்டமும்
      எங்குஞ் சுடர்வி டிருள்களை - கொங்கத்து 86
      விற்கொடியு மீன கொடியுங் கொடுவரி
      பொற்கொடி யொன்றின் புடைபோ - தெற்கின் 87
      மலையா னிலம்வரவே வார்பூங் கருப்பு
      சிலையான் வரவு தெரி - தொலையாது 88
      வீசு திவலை விசும்புகூர் மங்குவால்
      வாசவன் வந்த வரவறி - கூசாதே 89
      யாவ ரொழிவா ரிவன்வரவே மற்றுள்ள
      தேவர் வருவ ரெனத்தௌிய- யாவர்க்கும் 90
      பின்னர் வழங்கு முழங்கு பெருங்களிற்று
      தென்னர் முதலானோர் சேவிப்ப - முன்னர 91
      பரவி யுலகிற் பலமண்ட லீகர்
      புரவி மிசைகொண்டு போத - அருவிபோல் 92
      விட்டு மதம்பொழியும் வேழ திசைவேழம்
      எட்டு மொழி புகுந்தீண்ட - கட்டி 93
      இரவிக்கு நிற்பன வேழு மொழி
      புரவி குலமுழுதும் போத - விரவி 94
      உடைய நிதி கடவு ளூர்தி யொழிய
      அடைய நரவெள்ள மார்ப்ப - விடையே 95
      எழுந்த துகளுருவ வேறியுஞ் சுண்ணம்
      விழுந்த துகளுருவ வீழ்ந்தும் - தொழுந்தகைய 96
      விண்ணுலகு மண்ணுல காகி விளங்கவிம்
      மண்ணுலகு பொன்னுலகாய் மாறாட - எண்ணரிய 97
      மாகதரும் மங்கல பாடகரும் விஞ்சையர்
      பூகத ராயினார் போற்பரவ - நாகர் 98
      கொழுந்தெழு கற்பக சாதி குவித்து
      தொழுந்தொறும் மன்னர் சொரிய - எழுந்துள 99
      கைம்மழை யென்ன கனக பெயறூர்த்து
      மைம்மழை மாட மறுகணைந்தான் - தம்முடைய 100
      சாலை தொறுந்திரள்வார் சாளரங்கள் கைக்கொள்வார்
      மேலை நிலாமுற்ற மேற்றொகுவார் - மாலைதாழ் 101
      தெற்றி யடைய மிடைவார் சிலர்பலர்
      நெற்றி சுருங்க நெருங்குவார் - பொற்றொடியார் 102
      மாளிகையி லேறுவார் மண்டபத்தின் மண்டுவார்
      சூளிகை மாட தொறுந்துறுவார் - நீளும் 103
      இரண்டு மருங்கினு மிப்படி மொய்ப்ப
      திரண்டு பலரெதிரே சென்று - புரண்ட 104
      கரும்புருவ வல்வில்லுங் கண்மல ரம்பும்
      பெரும்புவன வெல்லை பிடிப்ப - சுரும்பு 105
      நிரைக்கு நிரைமுரல நீல குழாங்கன்
      இரைப்பின் மொகுமொகு வென்ன - விரைச்சுருள் 106
      மேகா ளகங்கள் மிஞிறுவாய் வைத்தூத
      காகாள மென்னும் படிகலி - போக 107
      தகரங் கமழ்கதுப்பிற் றாழ்குழை தோடாழ்
      மகரம் பிறழ்கொடியின் வாய்ப்பு - இகலனங்கன் 108
      சேனா சமுக தெரிப்ப வதனெதிர்
      சேனா பராக மெனத்திகழ - பூநாறும் 109
      கண்ண மெதிர்தூ யுடனே தொடியுந்தூஉய்
      வண்ண மிழப்பார் மனமிழப்பார் - மண்ணுலகில் 110
      இன்னற் பகைவ னிவன்கா ணகளங்கன்
      மன்னர்க்கு மன்னன் மகனென்பார் - முன்னர் 111
      முதுகுல மன்னர் முடிவணங்க வந்த
      விதுகுல நாயகிசே யென்பார் - குதுகலத்தாற் 112
      கண்மருஞ் செவ்வி கடவு டிசாதேவர்
      எண்மருங் காணு மிவனென்பார் - மண்ணவர்க்கும் 113
      தேவர்க்கு நாகர்க்கு தெய்வ முனிவர்க்கும்
      யாவர்க்குங் காவ லிவனென்பார் - தீவிய 114
      மாதவியுஞ் செங்கழு நீரும் வலம்புரியும்
      தாதகியு கொள்ள தரினென்பார் - மாதை 115
      ஒறுக்கும் மிதிலை யொருவில்லை தொல்லை
      இறுக்கு மவனிவ னென்பார் - மறுக்காமற் 116
      சென்று கனைகட றூர்த்து திருக்குலத்து
      நின்ற பழிதுடைப்பாய் நீயென்பார் - இன்றளவும் 117
      துஞ்சு துயிலிழந்த தண்டர் சூழற்றுளையில்
      நஞ்சுங் குமிழியெழு நாளென்பார் - பஞ்சவனே 118
      வாடையினு தண்ணென்னும் மந்தா நிலமெமக்கு
      கோடையினு தீது கொடிதென்பார் - கூடி 119
      முருகுவார் கூந்தலார் மொய்த்தலர்ந்த கண்ணாற்
      பருகுவார் போல்வீழ்ந்து பார்ப்பார் - பொருமதனன் 120
      பார்த்தானோ புங்கானு புங்கம் படப்பகழி
      தூர்த்தானோ யாதென்று சொல்லுகேம் - ஆர்த்தான் 121
      உளைத்தான் சிலையி கொருகோடி கோடி
      வளைத்தா னரும்புலகின் மாய்த்தான் - இளைத்தார் 122
      பேதை
      இனையர் பலர்நிகழ வீங்கொருத்தி முத்திற்
      புனையுஞ் சிறுதொடிக்கை பூவை - கனைமுகினோர் 123
      ஆடாத தோகை யலராத புண்டரிகம்
      பாடாத பிள்ளை பசுங்கிள்ளை -சூட 124
      தளிராத சூத தழையாத வஞ்சி
      குளிராத திங்க குழவி - அளிகள் 125
      இயங்காத தண்கா விறக்காத தேறல்
      வயங்காத கற்பக வல்லி- தயங்கிணர 126
      கூழை சுருண்முடி கூடுவதுங் கூடாதாம்
      ஏழை பருவ திளம்பேதை - சூழும் 127
      நிலைத்தாய வெள்ள நெருங்க மருங்கே
      முலைத்தாயர் கைத்தாயர் மொய்ப்ப - தலைத்தாமம் 128
      தொக்க கவிகை குலோத்துங்க சோழனை
      மிக்க பராந்தகனை மீனவனை -புக்கார் 129
      வணங்க வணங்கி வழுத்த வழுத்தி
      அணங்க வணங்கா ளகலாள் -குணங்காவல் 130
      மன்னன் புனையு திருமுத்த மாலையை
      அன்னம் படிந்தாட வாறென்னும் - பின்னவன் 131
      கோவை திருப்பள்ளி தொங்கற் குழாங்கிளிக்கும்
      பூவைக்கு நல்ல பொழிலென்னும் - பாவை 132
      அயிர்க்கு மிருகோ டயிரா பதத்தை
      மயிற்கு மலையென்று மன்னும் - குயிற்கிளவி 133
      தேன்வாழு தாமஞ்சூழ் தெய்வ கவிகையை
      மான்வாழ மாசின் மதியென்னும் - கோனுடை 134
      பாங்குவளை யாழி பார்மடந்தை தன்னுடைய
      பூங்குவளை மாலை புனைகென்னும் -தேங்கமல 135
      தற்புத வல்லி யவளே பிறந்துடைய
      கற்பக மாலையை காதலிக்கும் - பொற்போர் 136
      பொலம்புரி காஞ்சி புகழ்மகட்கே தக்க
      வலம்புரி மாலைக்கு மாழ்கும் - பொலன்றொடி 137
      போரார வார பொலன்கொடி பெற்றுடைய
      பேரார மாலைக்கு பேதுறும் - நேரியன் 138
      ஏந்திழை மாத ரெவர்க்கும் பொதுவாய
      பூந்துழாய் மாலை புனைகென்னும் - வேந்தன்முன் 139
      இவ்வகை யல்ல திலங்கிழையார் மால்கூரும்
      அவ்வகை கூரா ளயலொருத்தி - எவ்வுலகும் 140
      முற்ற முடிக்க முடிக்காம வேள்சூட்டும்
      கொற்ற முடியனைய கொண்டையாள் - அற்றைநான் 141
      சாத்து மபிடேக தாரைபோற் றாழ்கின்ற
      கோத்த பருமுத்த கோவையாள் - தேத்து 142
      விடம்போற் பணிகட்டு வேழங்க கெல்லாம்
      கடம்போற் கொலையூறுங் கண்ணாள் - அடங்கா 143
      வயிர்ப்பான் மறலி மகளுருக்கொ லீதென்
      றயிர்ப்பா ரயிர்க்கு மழகாள் - உயிர்ப்பாவை 144
      கொல்லிக்கு முண்டுயி ருண்மைத்ரி கூடத்து
      சொல்லி கிடங்கு துணைமணிக்கும் - வல்லி 145
      இதற்கு நடைவா துயிர்வாய்த்த தென்ன
      மதர்க்கு மொருதிரு மாது -முதற்றன் 146
      பணிவாயி லாயம் பரந்தகல கிள்ளை
      கணிவாயின் முத்த மருளி - மணிவாயாற் 147
      சொல்ல யெனக்கன்னை சொல்லாயோ நீயன்றே
      வல்லாய் பிறவறிய வல்லவோ - கல்லரண 148
      கோழி திருநகர கொற்றவற்கு வெற்றிப்போர்
      ஆழி தடக்கை யபயற்கு - வாழியாய் 149
      காக்குங் கடலேழு மாடுங் கடாரமோ
      ஆக்கு நதியேழு மாரமோ - தேக்கிய 150
      பண்ணேழுங் கன்னாவ தங்கிசமோ பண்டளந்த
      மண்ணேழும் வாகு வலயமோ - தண்ணறு 151
      தூவ னறவ பொழிலேழுங் தொங்கலோ
      காவன் மலையேழுங் கந்துகமோ - ஏவலால் 152
      செய்யு நலனுடைய கோளேழு தீபமோ
      பெய்யு முகிேலூம் பேரியமோ - வையகம் 153
      கூறு மவையிவை யென்று குறுந்தொடி
      வேறு தனிவினவும் வேலைக்கண் - சீறும் 154
      ஒருத னடியின் மடிய வுபய
      மருது பொருது வயவன் - விருதன் 155
      விலையி லமுத மதன விமலை
      முலையின் முழுகு முருகன் - வலைய 156
      கனக சயில வெயிலி கணவன்
      அனக னதுல னமலன் - தினகரன் 157
      வாசவன் றென்னன் வருண னளநேசன்
      கேசவன் பூசக்ர கேயூரன் - வாசிகை 158
      ஆழி பெருமா னபய னனபாயன்
      சூழி கடாயானை தோன்றுதலும் - தாழாது 159
      சென்றா டிருமுன்பு செந்தளிர கைகுவித்து
      நின்றா ளினிவறிதே நிற்குமே - என்றாலும் 160
      கோடு கழல்கண்டல் கொண்டற்கு மாலதி
      ஓடு நகாதே யுடையாதே - பீடுற 161
      வந்து தொடுங்குன்ற வாடை கிளங்கொன்றை
      நொந்து தொடாதே குழையாதே - செந்தமிழ 162
      தென்ற லெதிர்கொண்ட தேமாங் கொழுங்கன்று
      மன்றல் கமழாதே வாழாதே - என்றுபோய் 163
      சூதள வல்ல துணைமுலை தூயகண்
      காதள வல்ல கடந்தனபோய் - மாதர் 164
      உருவ தளவன் றொளியோக்க மாக்கம்
      பருவ தளவன்று பாவம் - தெருவ 165
      துடைவ துடையாதா முள்ள முறவோர
      தடைவ தடையாதா மச்சம் - கடைகடந்து 166
      சேயினு நல்ல பெருமா டிருந்தடந்தோன்
      தோயினு தோய மனந்துணியும் - ஆயினும் 167
      ஏந்து தடந்தோ ளிணைப்பணைப்பு கண்டிலன்
      காந்து தனதடங் கண்டிலன் - பூந்தட 168
      தேரி னகலு திருந்தல்குல் கண்டிலன்
      காரி னெகிழளகங் கண்டிலன் - மாரவேள் 169
      எய்யு மொருகருப்பு வல்வில் லெடுத்தானோ
      கொய்யு மலரம்பு கோத்தானோ - தையன்மால் 170
      மந்தா கினிக்கோன் றிருப்புருவ வார்சிலையும்
      செந்தா மரைக்கண்ணுஞ் செய்ததென - நொந்தார் 171
      வளைத்தளிர செங்கை மடுத்தெடுத்து வாச
      கிளைத்தளிர பாயற் கிடத்தி - துளைத்தொகை 172
      ஆய்க்குழ லென்றா லதுவு மவனூதும்
      வேய்க்குழ லென்று விளம்பியும் -தீக்கோள் 173
      நிகழ்நிலா வன்று நிருபகுல துங்கன்
      புகழ்நிலா வென்று புகழ்ந்தும் - இகலிய 174
      பல்லிய மன்று பரராச கேசரி
      வல்லிய மென்று மருட்டியும் - மெல்லிய 175
      கல்லார மன்று கதிரோன் றிருமருமான்
      மெல்லார மென்று விளம்பியும் - நல்லார் 176
      அருத்தி யறிவா ரவையிவை யென்று
      திருத்தி விடவிடாய் தீர்ந்தாள் - ஒருத்தி 177
      மங்கை
      உருவ வரிக்க ணொழுக வொழுக
      புருவ முடன்போத போத - வெருவி 178
      வனமுலை விம்மி வளர வளர
      புனைதோள் புடைபோத போத - வினைவர் 179
      அருங்கலை யல்கு லகல வகல
      மருங்குபோ யுள்வாங்க வாங்க - நெருங்கு 180
      பரவர ராச பயங்கரன்மேல் வேட்கை
      வரவர வாற்றாத மங்கை - பொரவரு 181
      தேமிரைக்குங் காலையின் ஞாயிற் றிளஞ்செல்வி
      தாமரைக்கே சாலு தரத்ததோ - காமர் 182
      அமுத மதி தலர்நிலா முற்றும்
      குமுத நறுமுகைக்கே கூறோ - நமதுகார் 183
      கானின் மடமயிற்கே காணியோ தண்ணிள
      வேனில் குயிற்கே விதித்ததோர் - தேனிமிர் 184
      தண்டா மரையா டலைவனை யாமும்போய்
      கண்டாலென் னென்னுங் கடைப்பிடியாள் - பண்டை 185
      ஒளியா ரணங்காத றம்மைத்தா மொன்றும்
      தௌியாத வாறே தௌிந்தும் - களியன்னம் 186
      வாவி கரையில் வரநீ ரரமகளிர்
      சேவிக்க நின்றாடுஞ் செவ்வியாள் - காவிற் 187
      புகுதில் வனதெய்வ பூங்குழை யா
      தொகுதி புடைபரந்து சூழ்வாள் - மிகுதே 188
      னிரையர வந்தரு செய்குன்ற நீங்கா
      வரையர மாதரின் வாய்ப்பாள் - பெருவிலைய 189
      முத்தில் விளங்கின் முளரி தவளப்பூங்
      கொத்தி னணங்கனைய கோலத்தாள் - பத்திய 190
      பச்சை மரகதம் பூணிற் பணைமுலைசூழ்
      கச்சை நிலமகள்போற் காட்சியாள் -நிச்சம் 191
      உரக பணமணிகொண் டொப்பிக்கி லொப்பில்
      வரகமலை யன்ன வனப்பாள் - நரபதி 192
      மைம்முகில் வண்ணத்து வானவன் மீனவன்
      கைம்முகில் மேல்வர கண்டதற்பின் - மொய்ம்மலர் 193
      நீலமே வேய்ந்தெடுக்க
      நீலமே யன்றி நினையாதாள் -
      முன்னுடைய செங்கே ழெறிக்கு முறிக்கோலம்
      தன்னுடைய மாமை தழீஇக்கொள்ள - பின்னர் 195
      நெருங்கு கழுநீரும் நீலோற் பலமும்
      ஒருங்கு மலர்தட மொத்தும் -மருங்கே 196
      இறங்கிய கற்பக வல்லியு மேறி
      உறங்கிய தும்பியு மொத்தும் - பிறங்க 197
      வயங்கு தளிரீனு மாங்கொம்பர் பூக்கொண்
      டுயங்கு கருவிளை யொத்தும் - தயங்குவாள் 198
      கோலத்தார் மௌலி குலோத்துங்க சோழற்கு
      ஞாலாத்தார் ரெல்லார்க்கு நாயகற்கு - நீலத்தின் 199
      காசுங் கலாபமும் மேகலையுங் காஞ்சியும்
      தூசுங் துகிலுங் தொடியுநான் - கூசேன் 200
      வௌியே தருவேன் விரையார தொங்கல்
      கிளியே தருமேனீ கேளாய் - அளியேநீ 201
      தாது கடிகமழ் தாதகி தாமத்தின்
      போது கொழுத புறப்படாய்- ஓதிமமே 202
      எங்கள் பெருமாளை யிங்கே தரவாநீ
      உங்கள் பெருமா னுழைச்செல்வாய் - பைங்கழற்காற் 203
      சேயை நினைந்தேகி னம்முடைய சேக்கையான்
      சாயன் மயிலே தலைப்படாய் - பாயும் 204
      கடமானே போல்வார்க்கு நீநின்னை காட்டின்
      மடமானே தானே வருங்காண் - கடிதென்று 205
      கொள்ளைகொள் காமன் கொடும்பகைக்கு கூசித்தன்
      பிள்ளைக ளோடிருந்து பேசுவாள் - உள்ள 206
      அலகில் குலநீல ரத்னா பரணம்
      விலகி வெயிலை விலக்க - உலகிற் 207
      பெரிய பெருமாள் பெரும்பவனி வீதி
      இரிய வெதிரேற் றிழந்தாள் - வரிவளை 208
      ஆயத்தா ரென்னி லளியத்தா செல்லாரும்
      நேயத்தா ரல்லரே நிற்பாரே - தேயத்தார் 209
      மன்னனை யஞ்சாதே வாரணத்தை
      மின்னனை யாளையு மீதூரா -முன்னர் 210
      கடமாக்கு தெய்வ களிறு விரும்பும்
      இடமாதும் யாமென்பார் போல - படமாய் 211
      இரைப்ப சுரும்போ டிருளளக பாரம்
      நிரைத்து வனமாகி நிற்பார் - விரைப்பூண் 212
      முலையாய் வளரு முரட்குவடு கொண்டு
      மலையாய் நெருங்க வருவார் - தொலையாத 213
      பாய பருமுத்தின் மாலை பலதூக்கி
      தூய வருவியா தோன்றுவார் - சாயற் 214
      கொடியா யடிசுற்றி கொள்வார் புரக்கும்
      பிடியாய் நறுந்துகள் பெய்வார் - விடுதுமோ 215
      யாழாய் மிடற்றால் வணக்குதும் யாமென்பார்
      தோழாய் வளைத்தெங்குஞ் சூழ்போவார் - ஆழிக்கை 216
      தியாகனை மானதனை திக்கானை யெட்டுக்கும்
      பாகனையே பின்சென்று பற்றுவார் - தோகையார் 217
      நற்றுகில் கொண்ட நறுந்துழாய் மார்பாநின்
      பொற்றுகி றந்தருளி போதென்பார் - மற்றிவள் 218
      தன்சங்கங் கொண்ட தடந்தா மரைக்கண்ணா
      நின்சங்க தந்தருள னேரென்பார் - மின்கொள்ளும் 219
      இன்றுயிற் கெல்லா மெறிபாற் கடற்கொள்ளும்
      நின்றுயி றந்தரு ணீயென்பார் - என்றென்று 220
      மானு மயிலு மனையார் வளைத்துளைப்ப
      தானூங் களிறு தடையுண்ட - கோனும் 221
      தடுத்த கொடிக்கு சதமடங்கு வேட்கை
      அடுத்த திருநோ கருளா - கொடுத்த 222
      திருநகை மூர றிகழ்ந்தா னணங்கும்
      ஒருநகை கூர்ந்தொருவா றுய்ந்தாள் - பெருநகை 223
      எய்தி யனங்க னெழப்போனான் மாதரும்
      உய்து சிறந்தா ளுழை சென்றார் - நொய்திற் 224
      றொடுக்கும் புறஞ்சொற் றொடாமே முலைமீ
      தடுக்கும் பசலை யடாமே - உடுக்கும் 225
      துகிலுஞ் சரியாமே சுற்றத்தா ரெல்லாம்
      புகிலும் புகாமே பொராமே - அகினாறும் 226
      பள்ளியிற் செல்லாள் பருவ முருகற்றோய்
      வள்ளியிற் சால வயங்கினாள் - ஒள்ளிழை 227
      மடந்தை
      பின்ன ரொருத்தி பெருமை கரமகளிர்
      முன்ன ருரைக்கும் முதன்மையாள் - சென்னியில் 228
      வண்ட லிடுநாவி வார்குழற்கு மாறுடைந்து
      கொண்டல் சொரிமுத்தின் கொண்டையும் -பண்டுவ 229
      தேற்று பணைபணைக்கு மென்றோ ளிரண்டுக்கும்
      தோற்று சொரிமுத்தின் சூழ்தொடியும் - ஆற்றற் 230
      கலம்புரி செல்வ கழுத்திற்கு தோற்ற
      வலம்புரி முத்தின் வடமும் - பொலம்பூண் 231
      எதிர்க்கு முலைக்கிரிந்த திக்கயக்கோ டிட்ட
      கதிர்க்கு நகைமுத்தின் கச்சும் - அதிர்க்கும் 232
      அடல்விடு மல்குற் பரவை குடைந்து
      கடல்விடு முத்தின் கலையும் - உடலிமேல் 233
      ஏந்து மினைய விளநிலா விட்டெறி
      போந்து மறுகு புகுந்தொழிந்தாள் - வேந்தனும் 234
      சட்கோடி மாணிக்க மொன்றுஞ் சமந்தகமும்
      உட்கோடு கேயூர தூடெறிப்ப - கொட்கும் 235
      கடல்சேப்ப வந்த கவுத்துவ மொன்றும்
      அடல்சேக்கு மார்பிற் கமைய - உடலி 236
      அனந்த பணாமவுலி யாயிரமு மொற்றை
      மறுகு திருமலர வந்தான் - குறுகும் 237
      முறுகு கதிரின் முகந்திரிய வேற்று
      மறுகு திருமலர வந்தான் - குறுகும் 238
      நடையாய வெள்ளமும் நாணிரம்பு திங்க
      குடையாய வெள்ளமுங் கூடி - அடைய 239
      மதியுதய மென்று வணங்க வனச
      பதியுதய மென்று பணிய - துதியில் 240
      ஒருவரு மொல்வா வுருவமி கூறும்
      இருவரு மெய்திய வெல்லை - தெருவில் 241
      நெருங்க மகளிர் நிறந்திறக்க வெய்து
      மருங்கு வருகின்ற மாரன் - திருந்திய 242
      பாய பகட்டல்குல் பாரா வதன்பரப்பிற்
      போய மருங்குற் புறநோக்கார் -சாயா 243
      முலையின் கதிர்ப்பு முருகு கெழுதோள்
      நிலையின் பணைப்பு நினையா - கொலையால் 244
      உடைக்கு முலகடைய வூடாடு கண்ணின்
      கடைக்கு முடிவின்மை காணா - கிடைக்கும் 245
      பருவ கொடிவதன பங்கே ருகத்தின்
      புருவ கொடி முடி போகா - உருவ 246
      களிக்கும் புடவி சதகோடி கற்பம்
      அளிக்கும் பெருமானை யஞ்சா - குளிர்க்கும் 247
      கடுங்காற் கொடுந்தேரை முட்ட கடாவி
      கொடுங்காற் சிலையை குனித்து - நடுங்கா 248
      முகுந்த னிவனென்று முன்பெய்த வேவிற்
      புகுந்த திதுவென்று போனான் - திகந்த 249
      முழுதா ளபயனை முகிணகையு தோளும்
      தொழுதா ெள்ாருதானே தோற்றாள் - அழுதாள் 250
      திரிந்தாள் கலைநிலையுஞ் செம்பொற் றுகிலும்
      சரிந்தா டுணைவியர்மேற் சாய்ந்தாள் - பரிந்தார் 251
      முடைக்கை யெதிர்க்குரவை கோத்தாய் முரல்யாழ்
      கடைக்கை தொடுக்கை நகையோ - விடைப்பே 252
      ரினந்தழுவி பின்னையை கொள்வா யிவளை
      தனந்தழுவி கொள்கை தவறோ - அனந்தம் 253
      கருந்துகில கோவியரை கொள்வாய் கமலை
      தருந்துகி னோக்க தகாதோ - விருந்து 254
      துளவ முகிற்கிது வந்தது தூய
      வளவர் திருக்குலத்து வந்தோ - அளவிறந்த 255
      வன்கண் ணிவளளவுங் கண்டே மடவரல்
      புன்க ணடியேம் பொறேமென்று - மின்கண் 256
      இவையிவை சொல்லிப்போ யின்னமளி யேற்றி
      கவிரிதழ் பின்னுங் கலங்க - துவரின் 257
      வியக்கு துகிரியைய மேம்ப டுலகை
      மயங்கு திருவாய் மலர்க்கும் - நயக்கும் 258
      பொருப்புருவ தோளின் புதுமைக்கு நேரே
      திருப்புருவஞ் செய்த செயற்கும் - பரப்படை 259
      செங்கே ழெறித்து மறிக்கு திருநயன
      பங்கே ருகஞ்சூழ் படுகொலைக்கும் - அங்கே 260
      தரிக்குமே தென்றலுஞ் சந்த்ரோ தயமும்
      பரிக்குமே கண்கள் படுமே - புரிக்குழலார் 261
      பாலிருத்தி மம்மர் படப்பட பையப்போய்
      மாலிருத்தி யுள்ள மயங்கினாள் - மேலொருத்தி 262
      அரிவை
      தாளை யரவிந்த சாதி தலைவணங்க
      தோளை யுரகர் தொழவிருப்பாள் - நாளை 263
      வளவர் பெருமான் வரும்பவனி யென்று
      கிளவி விறலியர்வா கேட்டாள் - அளவுடை 264
      தோரிரா வன்றம்ம விவ்விரா வோதிமத்தோன்
      பேரிரா வென்று பிணங்கினான் -
      என்று விடியுங்கொ லென்றாள் விடிவளவும்
      நின்று சுடுங்கோ னிலவென்றான் - நின்றார் 266
      அடுத்தடு தேந்திய திவ்யா பரணம்
      எடுத்தெடு தொப்பி தெழுந்து - சுடர்க்கதிரோன் 267
      மாலை பகைவியை போக்கி வருவித்த
      காலை துணைவியை கண்டெழுந்தாள் - காலையோன் 268
      சேமித்த பூங்கோயி லெல்லா திருவென்று
      காமி திகழின் கடைதிறப்ப - நேமி 269
      மணக்க துணையன்றில் வாயலகு வாங்கி
      தண கடிகாவிற் சார்ந்தாள் - கணக்கதிர் 270
      வந்து பொருவதொரு மாணிக்க செய்குன்றில்
      இந்து சிலாதலத்தி லேறினான் - குந்தி 271
      கடப்பன கன்னிமா னேக்கியு மன்னம்
      நடப்பன பார்த்து நயந்தும் - தொடக்கி 272
      களிக்கு மயிற்குலங் கூத்தாட கண்டும்
      கிளக்குலம் பாட்டெடுப்ப கேட்டும் - பளிக்குருவ 273
      பாவை மணக்கோலம் பார்த்தும் பலநகை
      பூவை பகர புறஞ்சாய்ந்தும் - கோவை 274
      அளிக்களி யாட்ட மயர்ந்துங் கபோத
      விளிக்களி கூர்ந்து வியந்தும் - களிக்க 275
      பழிச்சி வணங்கி பெருமாள் பவனி
      எழுச்சி முரசோர திருந்தாள் - கழற்செழியர் 276
      தென்சங்கங் கொண்டான் றிருச்சங்கஞ் செய்குன்றில்
      தன்சங்க மாகி யெதிர்தழங்க - மின்சங்கம் 277
      போல விழுந்து மெழுந்தும் புடையாயம்
      கோல மறுகு குறுகுவாள் - ஞாலம் 278
      எடுக்கும் பணிமன்னன் மின்னென் றிறைஞ்சி
      கொடுக்குஞ் சுடிகை குதம்பை -கடுக்கும் 279
      மயில்வேண்டுஞ் சாயல் வதனாம் புயத்து
      வெயில்வேண்ட வேண்டி விளைப்ப - பயில்கதிர் 280
      வெல்லாது தோட்சுடிகை மேகா ளகவிருண்மேல்
      எல்லா பருதியும் போலெறிப்ப - கொல்குயத்து 281
      வீழ்சோதி சூழ்கச்சு மேரு கிரிச்சிகரம்
      சூழ்சோதி சக்ர தொலைவிப்ப - கேழொளிய 282
      பைம்பொற் கடிதடஞ்சூழ் மேகலை பார்சூழ்ந்த
      செம்பொற் றிகிரி யெனத்திகழ - அம்பொற் 283
      புறவுஞ் சகோரமும் பூவையு மானும்
      பிறவு மினமென்று பெட்ப - உறவாய் 284
      அடர்ந்த பொலன்கே ழடிச்சிலம்பு கன்னம்
      தொடர்ந்து மறுமாற்றஞ் சொல்ல - நடந்துபோய் 285
      மானவற்கு புக்கதுறை வல்லவற்கு வில்லவற்கு
      மீனவற்கு சென்று வௌிப்பட்டாள் - தானே 286
      அலகு முகமுங் குவிகையு மாகி
      மலரு முகளமுமான - பலர்காண 287
      தேனு மமுதுங் கலந்தனைய தீங்கிளவி
      மானு மடைய மனங்கொடுத்தாள் - கோனும் 288
      தடாதே தடுத்தாளை தன்கடைக்கண் சாத்தி
      விடாதே களிறகல விட்டான் - படாமுலைமேல் 289
      ஒத்திலங்கு வேர்வ துறைப்ப நறைக்கழுத்து
      நித்திலங்கால் சங்க நிதிநிகர்ந்தாள் - எத்திசையும் 290
      சோர்கின்ற சூழ்தொடிக்கை செம்பொற் றொடிவலயம்
      நேர்கின்ற பற்ப நிதிநிகர்த்தாள் - தேரின் 291
      அரிவை துகினெகிழ வல்கு லரவின்
      உரிவை விடும்படமு மொத்தாள் - சொரிதளிர் 292
      மாங்கொம்ப ரென்ன வருவாள் சுரமர
      பூங்கொம்ப ரென்ன புறங்கொடுத்தாள் - பாங்கியரும் 293
      ஒற்றை யுடைவா ளொருபுடையாள் கொற்றவையேல்
      மற்றை யருகிவளை வைத்திலனே - பெற்றுடைய 294
      வார தரணியாள் வாழ்தோ ளெதிர்மற்றை
      ஆர திருத்தோ ளளித்திலனே - நேரொத்த 295
      பூந்தா மரையா ளெதிரேயி பொற்றொடிக்கும்
      ஏந்தார மார்ப மிசைந்திலனே -வேந்தர்கோன் 296
      அன்னங்கா ணீர்சென் றரற்றீர் கபோதங்காள்
      இன்ன மபயம்பு கெய்திடீர் - நன்னுதற் 297
      பாவைகாள் கொல்யானை பாவடி கீழ்ப்பணியீர்
      பூவைகாள் செங்கோன்மை போற்றிசெய்யீர் - தாவிப்போ 298
      பேதை மடமான் பிணைகாள் வளைத்துளையீர்
      கோதை மதுசுரங்காள் கூப்பிடீர் - யாதெல்லை 299
      என்னா விதற்கென் றிரங்கி யிலங்கிழை
      தன்னார்வ மாற்றெதிர் சாற்றினார் - பின்னர 300
      தெரிவை
      பொருவி லொருத்தி புறங்காக்கு மாதர்
      இருவி லிடைநின் றிறைஞ்சி - திருவுலா 301
      போதும் பெருமாள் புகுது மளவுமிங்
      கியாதும் பயிலா திருத்துமோ - சூதாடேம் 302
      பந்தா டுதுநாம் பசும்பொற் குழைசென்று
      வந்தாடு கண்ணாய் வருகென்று - சந்தாடும் 303
      கொம்மை வருமுலையு தோளுங் குறியாதே
      அம்மென் மருங்குல்பார தஞ்சாதே - தம்முடனே 304
      கொண்டா ரருகிருந்த பாணருங் கோடியரும்
      கண்டா ரெவருங் கடுகினார் - மண்டி 305
      எடுத்தா ரெடுத்தன யாவு மெலரும்
      கொடுத்தா ரொருதானே கொண்டாள் - அடுத்தடுத்து 306
      முன்ன மெறிபந்தின் மும்மடங்கு நான்மடங்
      கின்ன மெறிய வருகென்றாள் - அன்னம் 307
      அடியு மிருகையு மம்புய மென்று
      படியு மொழுங்கிற் பயில -முடியும் 308
      தொடையிடை போய சுழல்கூந்தற் பந்தர
      கிடையிடை நின்றகா லேய்ப்ப - அடைய 309
      விழுந்தன பார்கடவா வாறுபோன் மேற்போய்
      எழுந்தன கைகடவா வென்ன - கொழுந்தளிரால் 310
      ஏற்றுதி விண்கொளா வம்மனை யெம்மனை
      ஆற்றுதி யீதிங் கரிதென்ன - போற்றரும் 311
      கையோ பதயுகமோ கண்ணோ கடுகினவை
      ஐயோ வறித லரிதென்ன - பொய்யோ 312
      திலக நுதலிற் றிருவேயென் றோதி
      உலகு வியப்பவென் றோத - அலகிறந்த 313
      பந்தா டயர்ந்து பணைமுலையார் பாராட்ட
      வந்தாட்டு நீராட்டு மண்டத்து - விந்தை 314
      பெருமா னனபாயன் பேரிய மூன்றும்
      தருமா வார தழந்த - ஒருமாதர் 315
      ஏந்து துகிலொன் றுடுத்தாளோ வில்லையோ
      போந்து மறுகு புகுந்தொழிந்தாள் - மாந்தளிரும் 316
      தாது தமினிய மாலையு தண்கழுநீர
      போதும் பிறவும் புறம்புதையா - ஓதிக்கு 317
      சென்னி யமுனை தரங்கமு தீம்புனற்
      பொன்னி யறலும் புறங்கொடு - பின்னர் 318
      ஒழுங்காய் சேயரிக்கண் ணூடொட்டும் மையால்
      மழுங்காது கைபோய் மதர்ப்ப - செழுங்கழு 319
      தொன்று புனைந்த தொருசங்க மாணிக்கம்
      இன்று பயந்த தெனவிளங்க - நின்றிலங்கும் 320
      உச்ச கலனணியா தோளினை கோரிரண்டு
      பச்சை பசுங்காம்பு பாடழிய - நிச்சம் 321
      அசும்பு பொலன்கச்சி னற்றத்தே கொங்கை
      விசும்பு குடிவாங்க வீங்க - பசுஞ்சுடர 322
      கோல வயிறுதர பந்தன கோணீங்கி
      ஆவின் வளர்தளிரி னைதாகி - மேலோர் 323
      இழியு மொருசாம ரேகையு முந்தி
      சுழியும் வௌிவந்து தோன்ற - கெழிய 324
      இசையின் கலாபாரம் யாப்புறா வல்குல்
      திசையின் புடையடை செல்ல - மிசையே 325
      பொறைபுரி கிம்புரி பூட்டா துடைதூ
      சுறையு மரகத மொப்ப - அறையும் 326
      சிலம்பு சுமவாத செந்தா மரைபோய்
      உலம்பு குரலஞ்சா தோட - கலம்பல 327
      தாங்கி யுலக தரிப்ப தரியென்று
      பாங்கிய ரெம்மருங்கும் பாராட்ட - பூங்கே 328
      ழுருவி லொளிபோ யுலகடை கோப்ப
      தெருவி லெதிர்கொண்டு சென்றாள் - பெருமாளும் 329
      கொற்ற குடைக்கீழ் வடமேரு குன்றனைய
      வெற்றி களியானை மேல்வந்தான்-பற்றி 330
      இருவரு தம்மி லெதிரெதிர் நோக்க
      ஒருவ ரெனவேட்கை யொத்தார் - குருசில் 331
      மறந்த கடல்கடைய வந்தாண்மே லன்பு
      சிறந்த திருவுள்ளஞ் செல்லச்- சிறந்தவள் 332
      ஆக னசுத்திருந்தா ளாக திருவுள்ள
      கோசு னகத்திற் கொடுசென்றாள் - நாகிள 333
      நல்வி மடநோக்கான் ஞாலத்தை யோரடியால்
      வவ்வி யிருதோளில் வைத்தமால் - செவ்வி 334
      முருகு கமழ முகந்து
      பருகு மடமகளை பாரா - அருகு 335
      மடுத்து முயங்கி மயங்கிய தாயர்
      எடுத்து மலரணைமே விட்டார் - அடுத்தொருவர் 336
      நொய்யாத கற்பக பூமாலை கொண்டைக்கும்
      நெய்யாத பொற்றுகி னீவிக்கும் - செய்யாத 337
      தொங்கற் றுளைக்கோவை யல்குற்குஞ் சூழ்கனக
      துங்க பணிவலை தோளுக்கும் - கொங்கைக்கு 338
      பொன்னி புகாரிற் பொலன்குழம்பும் வல்லத்திற்
      கன்னி பனந்தோடு காதிற்கும் - சென்னி 339
      அளிப்ப கொணர்ந்தனம்யா மன்னமே யென்று
      தௌிப்ப சிறிதே தௌிந்தாள் - கிளிக்கிளவி 340
      பேரிளம்பெண்
      மற்றொருத்தி செந்தா மரைமலர்மே லென்னுடனே
      செற்றொருத்தி வாழு மெனச்செறுவாள் - சுற்றவும் 341
      தெட்டு தசும்பசும்பு தெங்கி னிளம்பாளை
      மட்டு தமனிய வள்ளத்து - விட்டு 342
      மறித்து வயிர மடலொன்றின் வாக்கி
      தெறித்து ஞமிறோப்பி செவ்வி - குறித்துக்கொண் 343
      டேந்தி முகம னியம்பி யிருந்தொரு
      காந்தி மதிவதனி கைக்கொடுப்ப - மாந்தி 344
      குதலை சூழறி குயிற்குங் கிளிக்கும்
      விதலை யுலகில் விளைத்து - நுதலை 345
      வியரா லலங்கரியா வேந்தன் கொடுமை
      அயரா வௌிவிடா வஞ்சாப்- பெயரா 346
      அருகிருந்த பாணனை நோக்க அவனும்
      குருசில் வருதமரங் கூற - பரிபுர 347
      காலு நிதம்புமுங் கையு திருக்கழுத்தும்
      கோலு மதாணி குலமெல்லாம் - மேலோன் 348
      குரகத மேழு முழுகி குளிப்ப
      மரகத சோதி வயங்க - புருவ 349
      இடைபோ குமிழின் மலர்வ திறங்க
      புடைபோ கருவிளை பூப்ப - விடையாக 350
      ஏக முருக்கு மலர விளம்பாளை
      பூக மிடறு வரப்பொதிய - போக 351
      பொரும்பெருங் தெங்கிளநீர் தாழ்ந்து பிறங்க
      பரும்பொருங் காம்பு பணைப்ப - விரும்பிய 352
      நறுந்துணர் மாந்தளிர் வார்ந்து நளி
      குறுந்தொடி காந்தள் குலைப்ப - செறிந்து 353
      சலித்து தனியிள வஞ்சி தளர
      கலித்து கதலி கவின - ஒலித்தே 354
      அளிக்குஞ் சகோரமு மன்னமு மானும்
      களிக்கு மயூர கணமும் - விளிக்கும் 355
      புறவு தொடர்ந்துடனே போத வவையே
      பிறவு மினமென்று பெட்பர் - சுறவுயர்த்தோன் 356
      காலை புகுந்து காப்ப தொருபசும்பொற்
      சோலை யெனவந்து தோன்றினாள் - ஞாலத்தோர் 357
      தெய்வ பெருமாளுஞ் சேவடி முன்குவித்து
      கைவைத்து நின்றவளை கண்ணுற்றான் - தையல் 358
      வெருவமுன் சூர்தடித்த வேளே நயக்கும்
      பருவமு மார்பிற் பணைப்பும் - புருவமும் 359
      செந்தா மரைக்கண்ணும் மாமேரு வைச்சிறிய
      பந்தா கொள்ளும் பணைத்தோளும் - உந்தியும் 360
      உய்ய விருகாது மூக்கு முடுபதியை
      நைய வெறிக்கு நகைநிலவும் - செய்ய 361
      பவள துவர்வாயும் பாதாம் புயமும்
      கவள களிற்றௌிதிற் கண்டு - குவளை 362
      சுருநெடுங் கண்களிப்ப வுள்ளங் களி
      பருநெடு தோளும் பணைப்ப - ஒருநின் 363
      சிலம்புகளோ ரேழுஞ் சென்றடைந்து நோலேன்
      அலம்பு சுடலேழு மாடேன் - வலம்புவனம் 364
      ஏழுஞ் செலவயரே னெங்கோவே நின்குடைக்கீழ்
      வாழு திருவெனக்கு வாய்க்குமே - தாழி 365
      முடைதழுவு தோளும் முலையு தழுவ
      விடைதழுவு தாமரைக்கை வீரா - கடகரியை 366
      கைதழுவி கோரத்தை காறழுவி நின்புலியை
      மெய்தழுவி கொள்ள விடுவாயோ - மொய்திரைசூழ் 367
      ஞால மறிக்கவும் நாயக நின்புகல்விற்
      கால வுததி கலக்கவும் - சால 368
      வருந்தா வகைவருந்த வாழி பெயரும்
      பெருந்தேவி யார்க்கு பெறலாம் - திருந்திய 369
      குந்த மொசித்ததுவுங் கொற்ற திருத்தோளால்
      வந்த விடையேழு மாய்த்ததுவும் - முந்துற 370
      கோவிய மாதர்க்கே யுள்ளங் குறைகிடந்த
      ஆவியே மாதாக வஞ்சுமே - ஓவிய 371
      சேரன் சிலையினுஞ் சீரிதே சென்றொசிய
      மாரன் சிலையை வணக்காயால் - சேரன்றன் 372
      முன்றிற் பனைதடிந்தாய் முட்டா திரவொறுக்கும்
      அன்றிற் பனைதடித லாகாதோ - கன்றி 373
      மலைக்குஞ் செழியர் படைக்கடலை மாய்த்தாய்
      அலைக்குங் கடன்மா தருளாய் - மலைத்தவர் 374
      தங்கள் புகழ்நிலவை மாய்த்தா யரிமரபிற்
      றிங்களின் றண்ணிலவு தீராயால் - பொங்கொலிநீர 375
      தெம்முனை யாழ்தடிந்தா யெங்கள் செவிகவரும்
      எம்முனை யாழ்தடிந்தா லென்செய்யும் - செம்மணியின் 376
      செஞ்சோதி சிங்களத்து மாற்றுவாய் செக்கரின்
      வெஞ்சோதி கண்டால் விலக்காயால் - வெஞ்சுமத்து 377
      காதி விடைபண்டு காடவன் முன்றடிந்தாய்
      வீதி விடைதடிய வேண்டாவோ - யாதுகொல் 378
      வன்பல் வலந்துகைத்த வாட்டானை யின்றிந்த
      மென்பல் லவந்துகையா மேம்பாடு - தன்பூங் 379
      சுருப்பு சிலைகொண்டு மோதுங் கழுத்திற்
      சுருப்புசாண் புக்கழுந தூக்கும் - நெருப்புமிழ் 380
      அப்பு கழுவேற்று மாறா பெருங்கோப
      வெப்பு படுத்தெங்கண் மெய்யுருக்கும் - தப்பா 381
      உடல்பிள வோட வொருதேரி டூரும்
      அடன்மகர போசன மாக்கும்- விடுதூதால் 382
      அக்கால தண்ட மகற்றி யுலகளித்தாய்
      இக்காம தண்ட மௌிதன்றே - மைக்கோல 383
      வண்ணா வளர்ந்த மகரா லயமறந்த
      கண்ணா வநங்கன்போர் காவாயேல் - மண்ணுலகில் 384
      எப்புடி யாவா ரிளம்பிடியா ரென்றென்று
      மைப்படியுங் கண்ணாள் வருந்தினாள் - இப்படியே 385
      தையலார் பெற்றோகை சாயலார் கையகலா
      மையலார் போலராய் மன்றேற - வையம் 386
      பெருகுடையா நீரேழும் பாரேழும் பேணும்
      ஒருகுடையான் போந்த னுலா. 387
      குலோத்துங் சோழனுலா முற்றிற்று
      வெண்பா
      என்றினி மீள்வ தரிதி னிரணியனை
      அன்றிரு கூறா யடர்த்தருளி -கன்றுடனே
      ஆவின்பின் போன வனக னனபாயன்
      மாவின்பின் போன மனம்
      கட்டளை கலித்துறை
      ஆடுங் கடைமணி நாவசை யாம லகிலமெல்லாம்
      நீடுங் குடையிற் றரித்த பிரானென்பர் நித்தநித்தம்
      பாடுங் கவிப்பெரு மாளொட்ட கூத்தன் பதாம்புயத்தை
      சூடுங் குலோத்துங்க சோழனென் றேயெமை சொல்லுவரே. 2
      ------------------------------------------------------------------------
      3. இராச ராச சோழனுலா இராசேந்திர
      புயல்வண்ணன் பொற்பது போதிற் புவன
      செயல்வண்ணங் காட்டிய சேயோன் - உயிரனைத்தும் 1
      காட்டும் பதின்மரினுங் காசிப னேழ்புரவி
      பூட்டு தனியாழி பொற்றேரோன் - ஓட்டி 2
      அறவாழி மைந்தன்மே லூர்ந்தோ னவனி
      புறவாழி முட்ட புரந்தோன் - மறையோற்கு 3
      பூவிற் கிழத்தியையும் பூமி
      நாவிற் பழுதஞ்சி நல்கினோன் - வாவியிற் 4
      புக்க துறையிற் பகைப்புலியும் புல்வாயும்
      ஒக்க வொருகால தூட்டினோன் - புக்கால் 5
      மறானிறை யென்று சரணடைந்த வஞ்ச
      புறாநினை புக்க புகழோன் - அறாநீர 6
      தரங கடலோழு தன்பெயரே யாக
      துரங்க பசுநாடி தொட்டோன் - வரங்கொள் 7
      சுரநதி தன்பெய ராக சுருதி
      வரனதி சாபத்தை மாய்த்தோன் - தரணிபர் 8
      மல்லன் மரபை ரகுவின் மரபென்று
      சொல்ல வுலகளித்த தொல்லையோன் - செல்லலால் 9
      வந்திரந்த வானவர்க்கு தானவர்தம் போர்மாய
      இந்திரனை யேறாக்கி யேறினான் - முந்தும் 10
      ஒருதேரா லையிரண்டு தேரோட்டி யும்பர்
      வருதேரால் வான்பகையை மாய்த்தோன் - பொருது 11
      சிலையால் வழிபடு தெண்டிரையை பண்டு
      மலையால் வழிபட வைத்தோன் - நிலையாமே 12
      வாங்கு திருக்கொற்ற வாளொன்றின் வாய்வாய்ப்ப
      தூங்கும் புரிசை துணிந்தகோன் - வீங்கு 13
      குடகடற்கு சார்பு குணகடலே யாக்கும்
      வடகடற்கு தென்கடற்கு மன்னன் - தரையின் 14
      கரையெறிந்த பொன்னி கடலேழுங் கோப்ப
      வரையெறிந்த மன்னர்க்கு மன்னன் - தரையின் 15
      பெருமகளை தீவேட்ட பின்னருஞ் சேடன்
      திருமகளை கல்யாணஞ் செய்தோன் - பரநிருபர் 16
      கன்மலை மார்புங் கடவுள் வடமேரு
      பொன்மலை மார்பும் புலிபொறித்தோன் - சொன்மலைய 17
      நல்லவன் பொய்கை களவழி நாற்பதுக்கு
      வில்லவன் காற்றளையை விட்டகோன் - புல்லார் 18
      தொழும்புடைய வாகத்து தொண்ணூறு மாறும்
      தழும்புடைய சண்டப்ர சண்டன் - எழும்பகல் 19
      ஈழ மெழுநூற்று காதமுஞ் சென்றெறிந்து
      வேழ திறைகொண்டு மீண்டகோன் - சூழி 20
      மதகயத்தா லீரொன் பதுசுரமு மட்டி
      துதகையை தீத்த வுரவோன் - முதுவான 21
      கங்கையு நன்மதையுங் கௌதமியுங் காவிரியும்
      மங்கையுட னாடு மரபினோன் - பொங்கி 22
      அலைவீசி வேலை யனைத்தினும்போ தெம்மீன்
      வலைவீசி வாரிய மன்னன் - கொலையானை 23
      பப்ப தொருபசிப்பேய் பற்ற வொருபரணி
      கொப்ப தொருகளிற்றாற் கொண்டகோன் - ஒப்பொருவர் 24
      பாட வரிய பரணி பசுடொன்றின்
      கூடல சங்கமத்து கொண்டகோன் - நாடும் 25
      கலகமுஞ் சுங்கமுங் காய்கலியு மாற்றி
      உலகை முன்காத்த வுரவோன் - பலவும் 26
      தரணி யொருகவிகை தங கலிங்க
      பரணி புனைந்த பருதி - முரணில் 27
      புரந்தர னேமி பொருவு மகில
      துரந்தரன் விக்கிரம சோழன் - பரந்தபனென் 28
      றாய பெயர்கொண் டகிலாண் டமும்புரந்து
      சேய பெரிய திருக்குலத்து - நாயகன் 29
      சிற்றம் பலமு திருப்பெரும்பே ரம்பலமும்
      மற்றும் பலபல மண்டபமும் - சுற்றிய 30
      மாளிகையும் பீடிகையு மாடமுங் கோபுரமும்
      சூளிகையு மெத்தெருவு தோரணமும் - ஆளுடையான் 31
      கோயிற் றிருக்கா கோட்டமு மக்கோயில்
      வாயிற் றிருச்சுற்று மாளிகையும் - தூயசெம் 32
      பொன்னிற் குயிற்றி புறம்பிற் குறும்பனைத்தும்
      முன்னிற் கடலகழின் மூழ்குவித்த - சென்னி 33
      திருமகன் சீராச ராசன் கதிரோன்
      மருமக னாகி மறித்தும் - திருநெடுமால் 34
      ஆதி பிறவி யனைத்தினு மும்பர்க்கு
      பாதி பகைதடிந்து பாதிக்கு - மேதினியிற் 35
      செந்தா மரையா டிருமார்பில் வீற்றிருக்க
      வந்தான் மனுவங்க்ச மாமேரு - முந்தி 36
      உடுத்த திகிரி பதினா லுலகும்
      அடுத்த வரராச ராசன் - அடற்றிகிரி 37
      கண்ணன் கனகளபன் கண்டன் கதிரோனும்
      தண்ணென் கவிகை சனநாதன் - எண்ணும் 38
      தவன குலதிலகன் றன்பெரு தேவி
      புவன முழுதுடைய பூவை - அவனியில் 39
      எண்பெரு மாதிரத்து மேறு முடனாணை
      பெண்பெருமா ளந்த புரப்பெருமாள் - மண்பரவ 40
      ஓகை விளைக்கு முபய குலரத்ன
      தோகை யுடனே துயிலெழு - தாகிய 41
      மூர தனந்த முரசார்ப்ப காவிரி
      தீர தபிடேகஞ் செய்தருளி - போர்த்திகிரி 42
      மேலை குரவர்க்கும் விண்ணவர்க்கும் வேதியர்க்கும்
      காலை கடவ கடன்கழித்து - மூல 43
      பெரும்பே ரணிதம் பிதாமகன் காலை
      வரும்பே ரணியென்ன வாய்ப்ப - நிர 44
      பவள சடையோன் பணித்த படியே
      தவளத்ரி புண்டரஞ் சாத்தி - குவளைப்பூங் 45
      கார்க்கோல மாடியிற் காண்பான் மகன்காமன்
      போர்க்கோலங் காண்பானே போற்கொண்டு - பார்த்திபர்தம் 46
      தொல்லை திருமரபு கெல்லா தொழுகுலமாம்
      தில்லைதா திருநடனஞ் சிந்தித்து - வல்லவர் 47
      சூழ சுருதி யனைத்து தொகுத்தெடுப்ப
      வேழ பெருமானை மேல்கொண்டு - வாழி 48
      அரச வலம்புரி யார்ப்ப வதன்பின்
      முரசொரு மூன்று முழங்க - திரையின் 49
      சுடற்பொற் கவரி யெழப்பொங்க தொங்கற்
      கடவு கவிகை கவிப்ப - புடவியின் 50
      மீட்டுங் குறையவுணர் போர்கருதி விண்ணவர்கோன்
      தீட்டுங் கொடிப்புலியா சேவிப்ப - வாட்டானை 51
      தென்னருஞ் சேரலருஞ் சிங்களருங் கொங்கணத்து
      மன்னரு மாளவரு மாகதரும் - பின்னரும் 52
      காந்தாரர் காலிங்கர் கௌசல ருள்ளிட்ட
      பூந்தார் நரபாலர் முன்போத - வேந்தர் 53
      பொருவாத பூபால கோபால னென்னும்
      திருநாம நின்று சிறந்த - வருநாளில் 54
      தென்மாட கூடற் சிறைவிட்ட கார்புகார
      பொன்மாட வீதி பொடியடக்க - தன்மீது 55
      கன்மாரி பெய்யும் பிழையாற் கடவுளர்கோன்
      பொன்மாரி பெய்யும் புயலேவ - பின்னரும் 56
      காமாரி சேயென்ற காக்கு மெழுவரினும்
      பூமாரி கௌமாரி முன்பொழிய - யாமந்தீர் 57
      காலை வெயிலொதுங கார்களாற் கார்களும்போய்
      மாலை வெயிலால் மறித்தொதுங - கோல 58
      பெருங்குற் றுடைவாள பேரொளி மேரு
      மருங்கிற் பெரும்புலி மான - நெருங்கிய 59
      கோளி னொழுங்கு மழுங குலரத்ன
      ஒளி மகர வொளியெறிப்ப - தோளில் 60
      இருபொறை தீரு மிருபா பரசும்
      இருதொடி யாயகொல் லென்ன - வரரத்னம் 61
      தாமே குயின்று தடங்கோளு நாளுஞ்சூழ்
      மாமேரு வென்ன முடிவயங்க - பூமேற் 62
      புடைநிலவு தங்கள் புகழ்நிலவின் மேலே
      குடைநிலவுஞ் சக்ரகிரி கோல - உடையதன் 63
      கைவை தருளாமே தாமே கடன்கழிக்கும்
      தெய்வ படையைந்துஞ் சேவி - பெய்கணை 64
      தூணி புறத்தோடு தோளிற் சிலையோடும்
      பூணி தனங்கவேண் முன்போத - மாணி 65
      கோவையான் முக்குவட்டு குன்றா யொருதிரு
      பாவையாற் கொல்லி பனிவரையாய் - ஓவாது 66
      செய்ய தமிழ்முழங்க தெய்வ பொதியிலாய்
      வெய்ய புலிமுழங்க மேருவாய் - வையகஞ்சூழ் 67
      கோர முடன்பொத நேமி பொலன்குன்றாய்
      வார்சுவரி யாலிமய மால்வரையாய் - வேரி 68
      விடுங்குழையார் சென்னி மிலைச்சிய
      கொடுங்குழையார் வீதி குறுக - நடுங்காமல் 69
      குழாங்கள்
      விண்ணாடு காத்த முககுந்தன் மீண்டநாள்
      மண்ணாடு கண்ட மடந்தையரும் - நண்ணார்மேல் 70
      சோளன் பரிசார்ந்தே சூழ வருஞ்சக்ர
      வாள கிரியர மங்கையரும் - தோளிணையால் 71
      கோழியிற் சோழ குலத்தொருவன் முன்கடைந்த
      ஆழியிற் கொண்ட வரம்பையரும் - ஊழியின் 72
      சீத்த வரையிற் றிருக்கொற்ற வில்லொன்றால்
      வாய்த்த வரையர மாதரும் - போய்த்தனியே 73
      கோதண்டங் கொண்டிரு சேடி யுடன்கொண்ட
      வேதண்டலோக விமலையரும் - காதலால் 74
      தந்த பணிபதி தன்மகளை சேவித்து
      வந்த கடவுண் மடந்தையரும் - பந்தாடும் 75
      மேரு வரையிற் புலிபொறித்து மீண்டநாள்
      வாரும் வரையர மாதரும் - வீரவேள் 76
      வாங்கயிலிற் கூரிய கண்ணா ரொருவளவன்
      தூங்கெயிலிற் கைக்கொண்ட தோகையரும் - பாங்கின் 77
      நிதியோடுங் கூட நிதியோ னளகை
      பதியோடுங் கொண்டார் பலரும் - முதலாய 78
      சாய லரமகளிர் தந்த திருமரபில்
      கோயி லுரிமை சூழாநெருங்கி - வாயிலும் 79
      மாளிகையுஞ் சாலையு மாலயமு மண்டபமும்
      சூளிகையு மெம்மருங்கு தோரணமும் - சாளரமும் 80
      தெற்றியு மாடமு மாடரங்குஞ் செய்குன்றும்
      சுற்றிய பாங்கரு தோன்றாமே - பற்றி 81
      மயங்கி மறுகிற் பிணங்கி வணங்கி
      உயங்கி யொருவர கொருவர் - தயங்கிழையீர் 82
      குழாங்களின் கூற்று
      தற்கோடி யோரிரண்டு கொண்டு சதகோடி
      கற்கோடி செற்ற சிலைகாணீர் - முற்கோலி 83
      வட்ட மகோததி வேவ வொருவாளி
      விட்ட திருக்கொற்ற விற்காணீர் - வெட்டி 84
      சுழியிட்ட காவிரிக்கு சோணாடு வாழ
      வழிவிட்ட வாள்காண வாரீர் - ஒழிய 85
      மதியெறிந்து வல்லேற்று வானெறிந்து தூங்கும்
      பதியெறிந்த கொற்றவாள் பாரீர் - உதியர் 86
      இடப்புண்ட பேரிஞ்சி வஞ்சியி லிட்ட
      கடப்ப முதுமுரசங் காணீர் - கொடுப்ப 87
      தரைகொண்ட வேற்றரசர் தஞ்சென்னி பொன்னி
      கரைகொண்ட போர்முரசங் காணீர் - சரத 88
      பவித்ர விச படைப்பரசு ராமன்
      கவித்த வபிடேகங் காணீர் - தவித்துலகில் 89
      மூவெழுகா லெக்கோ களையு முடித்தவனி
      மூவெழுகாற் கொண்ட முடிபாரீர் - தாவி 90
      வரப்பு மலைசூழ் வரவா யிரங்கண்
      பரப்பு மொருவேங்கை பாரீர் - புரக்கநின் 91
      றூடம் பரமடங்க வோங்கி யுயரண்ட
      கூடம் பொருவுங் குடைபாரீர் - கூடற் 92
      பெரும்பெருமா ளெவ்வேந்து முன்போத பின்பு
      வரும்பொருமாள் வந்தனன் வாரீர் - இருங்கடற் 93
      றோன்றருக்க மண்டலமு தோற்க வுலகங்கள்
      மூன்றுக்குஞ் சூடி முடிபாரீர் - தோன்ற 94
      அணைத்தரு காயிர மாயிர மாக
      பணைத்த பணிவலயம் பாரீர் - அணைக்க 95
      சிரித்த சுரேசனை வென்றொரு தென்னன்
      பரித்த மணியாரம் பாரீர் - தரிந்தருள 96
      வேண்டிய நாளின் முனிவுண்டு வெட்டுண்ட
      பாண்டியன் கட்டு வடம்பாரீர் - மீண்டும் 97
      திருந்து மதனன் றிருத்தாதை செவ்வி
      இருந்த படிபாரீ ரென்பார் - பெருந்தேவர் 98
      முக்கொடி முப்பத்து மூவர்க்கு முன்னுயர்ந்த
      எக்கொடியு முன்ன ரெடுத்துளவால் - அக்கொடியால் 99
      தொல்லா ரணமனைத்துஞ் சொல்லுஞ் சுரவரசர்
      எல்லாருங் காணு மினவென்பார் - புல்லிய 100
      நீர்ப்பூ புதற்பூ முடியன்றி நேராதார்
      போர்ப்பூ முடிதடிந்து போக்கியபின் - போர்ப்பூவில் 101
      மேதகு கொற்றவைக்கு வேந்தர் பிரானுவந்த
      தாதகி யொன்றூமே சார்பென்பார் - மீது 102
      பரந்த வவுணர் சிறைப்படும தெண்ணி
      இரந்தன கொண்டன வென்று - புரந்து 103
      தனிச்சே வகம்பூமி தன்னதே யாக
      இனிச்சே வடிவிடா ளெனபார் - பனிச்சாரல் 104
      மண்டு மலையால் வருந்தா வகைவருந்தி
      பண்டு கலக்கிய பாற்கடலு - கொண்டதோர் 105
      செங்கோ கனகை திருமார்பி லன்றியே
      எங்கோ விருப்பா ளினியென்பார் - நங்காய் 106
      திருப்பதி மாபதி யித்திரு மார்பில்
      இருப்பது காட்டுமி னென்பார் - சிரித்தெதிரே 107
      அங்க கமலை யமலன் பெருந்தேவி
      கங்க புலனாயி னன்றென்பார் - நங்கைமீர் 108
      கண்ணாகு தாமரையுங் கைதொழுதே மெம்மறையும்
      பண்ணாகுஞ் செந்தா மரைபணிந்தேம் - வண்ண 109
      தொடித்தா மரையு தொழுதன நாபி
      கடித்தா மரைதொழுவேங் காட்டீர் - பிடித்தென்ன 110
      அத்தா மரைதன் னடித்தா மரைக்கன்றி
      மைத்தா மரைக்கொளிதோ மற்றென்பார் - உய்த்தால் 111
      ஒருபொரு தாதகி தோய்சுரும்பை யோட்டற்
      கிருபெருஞ் சாமரையு மென்பார் - அருவி 112
      அருகெய்த வொட்டா வயிரா பதத்தின்
      இருகன்ன சாமரையு மென்பார் - தெருவத்து 113
      தங்களின் மாறாடி யுள்ள தடுமாறி
      திங்க ணுதலார் தெருமரலும் - அங்கவரில் 114
      பேதை
      பேதை குழாத்தொரு பேதை சிலபழங்
      காதற் குழாத்தோர்தங் கையடைளாள் - மீது 115
      பிறந்தணிய கிள்ளை பெறாத்தாயர் கொங்கை
      மறந்தணிய செவ்வி மடமான் - புறந்தணி 116
      தோகை தொடாமஞ்ஞை தோற்றத்தாற் சுற்றத்தார
      கோகை விளைக்கு மொருகரும்பு - பாகை 117
      தொடைபோய முல்லை தொடையலே போல
      இடைபோய தூய வெயிற்றாள் - உடையோன் 118
      செறிந்து விடாத திருத்தோற்ற முற்றும்
      அறிந்து பிறந்த வறிவோ - நெறிந்தகுழல் 119
      எம்பாவை யெங்கொல்லி பாவை யெனப்பாடும்
      அம்பாவை பாடும் படியறிவாள் - உம்பர் 120
      வெருவ கரையை மிகும்பொன்னி யன்றி
      பருவத்து வேறு படியாள் - உருவ 121
      குறைவனை யென்றெழுதுங் கோலத்து ஞால
      திறைவனை யல்லா லெழுதாள் - இறைவன் 122
      முழங்கேழ் கடல்கொடுத்த முத்தேழு மல்லால்
      கழங்கேழு மாட கருதாள் - வழங்கிய 123
      முற்றி லெடுத்து கொழித்து முழுமுத்தால்
      சிற்றி லிழைக்கின்ற செவ்விக்கண் -சுற்றும் 124
      பனிநீங்க தோன்றும் பகலவன் போல் வையம்
      துனிநீங்க தோன்றிய தோன்றல் - முனியும் 125
      பொறைவி டெயில்விட்டு பொய்கை கவிக்கு
      சிறைவிட்ட சோளேந்த்ர சிங்கம் - நறைவிட்ட 126
      அந்தா செங்கழுநீர் மார்ப னழகிய
      செந்தா மரைக்க டிருநெடுமால் - வந்தானை 127
      ஓகைய ராகி யுலப்பில் பலகோடி
      தோகைய ரோட தொடர்ந்தோடி - தாகம் 128
      தணி தமரும்
      பணி பணிந்தாள் - மணிமார்பில்
      ஆரந்தான் கண்டா ளயிரா பதந்தொழுதாள்
      கோர தெரியவுங் கும்பிட்டாள் - வீரன் 130
      படாகை பெரும்புலியும் பார்த்தொழிந்தா ளண்ட
      கடாக ததிர்முரசுங் கண்டாள் - அடாதனவும் 131
      சொல்லி யறியா தொழிந்தாள் சுருப்புநாண்
      வில்லி யறியாது விட்டதே - நல்லார்சூழ் 132
      பெதும்பை
      மற்று மொருத்தி வலம்புரி யாயிரம்
      சுற்றுஞ் சலஞ்சலம்போற் றோன்றுவாள் - சுற்றுடன் 133
      அன்ன நடக்க நடந்தா ளருங்கிள்ளை
      பின்ன ருடன்பேச பேசினாள் - இன்னிசையாழ் 134
      பாட வதனுடனே பாடினாள் பைந்தோகை
      ஆட வதனுடனே யாடினாள் - கூடிய 135
      நல்லிள மானோக்க நோக்கினா ணாணிரம்பி
      முல்லை முகிழ்க்க நகைமுகிழ்த்தாள் - கொல்லும் 136
      மழகளிற்றின் கோடேழுச்சி யென்று மரவின்
      குழவி யெயிறெழுச்சி யென்றும் - பழகி 137
      எறியு மழையெழுச்சி யென்று முலகம்
      அறியு முலையெழுச்சி யன்னம் - செறியும் 138
      வரையேழி லுள்ள வயிரமும் வாங்கும்
      திரையேழின் முத்தின் றிரளும் - தரையேழிற் 139
      பொன்னும் பிலனேழிற் போகா விருள்போக
      மின்னுஞ் சுடிகை வெயின்மணியும் - பின்னும் 140
      பொழிலேழிற் போதும் புனை புனைவா
      கெழிலேறும் நாளையே யென்ன - கழிய 141
      உழப்போ மினியென் றுடலுள்ள போழ்தே
      எழப்போக வெண்ணு மிடையாள் - மழைத்து 142
      புடைபோ யுளகம் பொதுக்குவதன் முன்னே
      கடைபோ யுலகளக்குங் கண்ணாள் - உடையதன் 143
      சேரி சிறுசோறுஞ் சிற்றிலும்போ சில்லணிபோ
      பேரிற் பெருஞ்சோற்று பேரணியாள் - ஒரையில் 144
      தன்னாய நிற்ப தனிநா யகன்கொடுத்த
      மின்னாயஞ் சேவிப்ப வீற்றிருப்பாள் - மென்மலர் 145
      மேய சிறுமுல்லை பந்தர் விடவெடுக்கும்
      பாய பருமுத்தின் பந்தராள் - நாயக 146
      உச்சியிற் கொண்டை முடிப்பி னுலகுடையோன்
      முச்சியிற் சூட்டு முடிக்குரியாள் - நிச்சமும் 147
      நல்லுயிர பாவை துணைபெற நாயகன்
      கொல்லியிற் பாவை கொளவிருப்பாள் - மெல்லியற் 148
      பாங்கிக்கு நங்கோமன் விந்தை பசுங்கிளியை
      வாங்கி தரப்போய் வணங்கென்பான் - ஆங்கொருத்தி 149
      மாயமான் வேண்ட மறாதானை வான்மதியின்
      மேயமான் வேண்டி விடப்பெறுவாள் - சேயவொளி 150
      தென்பா லிலங்கைவாழ் தெய்வ மணிபணிப்பீர்
      என்பாவை பூண வினிதென்பாள் - அன்பால் 151
      உயிர்த்துணை பாங்கி யொருநோன் புணர்த்த
      எயிர்புற தெல்லாருஞ் சூழ - அயிற்படை 152
      வீரனை யெய்த வியன்காவிற் சென்றெய்தி
      மாரனை நோக்கி வழிபட - மாரன் 153
      படியில் கடவு பணைமுழங்க வென்றி
      கொடியின் மகரங் குமுற - நெடிய 154
      அலகி லசோக நிழற்ற வடைய
      உலகில் மதுகரமூத - கலகி 155
      தலங்க லடவி குயிற்குல மார்ப்ப
      விலங்கன் மலயக்கால் வீச - கலந்தெழும் 156
      ஆவி யகிலொடு நீரோ டரமகளிர்
      தூவிய தண்ணறுஞ் சுண்ணமும் - காவில் 157
      விடவிட வந்துயிர் மீதடுத்து போன
      வடிவும் பழம்படியே வாய்ப்ப - கொடியிடை 158
      எண்ணிய வெண்ண முடிப்ப வவளெய்தும்
      புண்ணியம் போல பொழில்புகுந்தான் - அண்ணல் 159
      சரம்போலுங் கண்ணி தனக்கனங்கன் றந்த
      வரம்போல் வளமறுகில் வந்தான் - வரும்போதில் 160
      ஏன்று மதன னியமியம்ப வேயனகன்
      மூன்று முரசு முழங்கின - தோன்றாத 161
      வாரி களிறு முழங்கவே மானதன்
      மூரி களிறு முழங்கியது - வேரித்தார் 162
      கற்கு மசோக நிழற்றவே பார்கவித்து
      நிற்குங் கவிகை நிழற்றியது - முற்கொண்டு 163
      மற்றை யலகின் மதுகர மூதவே
      ஒற்றை வலம்புரி யூதியது - முற்றாத 164
      சொற்குதலை கோகுலங்க ளார்க்கவே சோளேசன்
      அற்கமணி காகளங்க ளார்த்தன - தெற்கெழுந்த 165
      மல்லன் மலயக்கால் வீசவே மானதன்
      மெல்லென் கவரிக்கால் வீசியது - மெல்லியலும் 166
      காமன் பெருநோன்பு கைவந்த தென்றெதிரே
      கோமைந்தன் வேழங் குறிகினாள் - கோமனும் 167
      மல்கு மூவகை கலுமி வரவர
      பில்கு மதர்வை பெரும்பர - பல்குலும் 168
      கொங்கை புதுவரவு தோளுங் குறைநிரம்ப
      மங்கை பருவத்தை வாங்கினாள் - மங்கை 169
      திருக்கொள்ளு மார்பற்கு காமவேள் செவ்வேள்
      வெருக்கொள்ளுஞ் செவ்வி விளைத்தாள் - பெருக்க 170
      ஒருவ ரொருவர குருகி யுருகி
      இருவரு மீடழிய நோக்கி - வருகாமன் 171
      செஞ்சாயல் வல்லியையுஞ் செந்தா மரைத்தடங்கண்
      மஞ்சாய கோல மணாளனையும் - அஞ்சாதே 172
      கொய்யும் பகழி கரும்பிற் சுரும்பிற்கோ
      தெய்யு தரமே யெழப்போனான் - தையல் 173
      மங்கை
      ஒருத்தி தரள மிருநிரைகொண் டொப்பி
      திருத்தி யனைய வெயிற்றாள் - கருத்தின் 174
      நிலையிற் சிறந்த நிகரிலா மேரு
      மலையிற் பிறந்த வயிரம் - அலையிற 175
      பழக்க சலஞ்சலம் பாற்கடலே போல
      முழ கருவுயிர்த்த முத்தம் - தொழத்தகும் 176
      முன்னை யுலக முழுது தருமுரசு
      மன்ன னபிடேக மாணிக்கம் - முன்னவன் 177
      பாற்கட னீங்குநா ணீங்க பழம்படியே
      நாற்கட னாயகனை நண்ணுவாள் - மேற்கவின 178
      பண்டு கடல்கடைந்தும் பாரெடுத்தும் வில்லிறுத்தும்
      கொண்ட துணைவியருங் கூசுவாள் - புண்டரிக 179
      தாடும் பொழுதினு மன்ன பெடையயிர
      பாடு மழலை பரிபுரத்தாள்- நீடிய 180
      தூசுகள் வெள்ளென்று தூயன சேயன
      கோசிக மாக்குங் குறங்கினாள்- கூசி 181
      பணியு மரசு பணிச்சுடிகை யேகோ
      தணியு மரைப்ப டிகையாள் - துணியுங்கால் 182
      அற்றுண் டிலதென்று மம்மருங்கு லின்றெமக்கு
      பற்றுண் டெனுமுதர பந்தனந்தாள் - கொற்றவன் 183
      சங்க நிதிமு தாமத்தாள் பத்மநிதி
      துங்க நவரத்ன தோள்வளையாள் - புங்கம் 184
      தொடுக்கு மலரோன் சுறவு குறவு
      கொடுக்கு மகர குழையாள் - அடுத்து 185
      பணித தலகில் பராவெடுத்து சிந்தா
      மணிதந்த சூளா மணியாள் - அணியே 186
      பரவி விறலியரும் பாணரு தற்சூழ
      திரவி புகார்பாடு மெல்லை - வரவர 187
      கொங்கைக்கு தோளிணைக்கு மாற்றா கொடிமருங்குல்
      நங்கைக்கு வந்தொருத்தி நாயகியே - கங்கை 188
      துறைவன் பொறையன் றமிழ்நாடன் சோணா
      டிறைவன் றிருப்பவனி யென்றாள் - பிறைநுதலும் 189
      வேனிற் கணிய குயில்போன்றும் வீழ்தாரை
      வானிற் கணிய மயில்போன்றும் - தானே 190
      வரவே நினையு மனக்களியா லிற்றை
      இரவே நமக்கிடையூ றென்றாள் - இரவில் 191
      செயிர்க்கரங்கள் வேண்டா டிருக்குலத்து வெய்யோன்
      வெயிற்கரங்க ளூடாட வேண்டும் - உயிர்க்கொலைசூழ் 192
      தென்மல தென்றலை யோட்டி புலியிருந்த
      பொன்மலைய வாடாய் புகுதென்னும் - முன்மலைந்த 193
      கார்க்கடல் வாயடங்க நாயகன் கண்வளர்ந்த
      பாற்கடல் வாராய் பரந்தென்னும் - மேற்பரந்து 194
      கார்பாடும் புள்வா கடுப்பெய் தமுதிறைவன்
      பேர்பாடும் புள்வாயிற் பெய்கென்னும் - ஈர்குரல் 195
      அன்றிற் கொழிய மகன்றிற்கே யாக்குமிம்
      முன்றிற் பனையு மெனமொழியும் - இன்றிரவை 196
      ஊழி குயில்கா தொருபுலரி கூவிய
      கோழிக்கே சோலை கொடீரென்னும் - வாழிய 197
      பள்ளி யெழுச்சி பவனி யெழுச்சிதரும்
      வெள்ளி யெழுச்சி யெனவிளம்பும் - நள்ளிரு 198
      கங்குற் கடற்கெல்லை யிவ்வாறு கண்டுவந்த
      மங்கை பருவத்து வாணுதலும் - பொங்கொலிநீர் 199
      வையகங் காவலற்கு பெய்யு மலர்மழைக்கு
      கொய்பொழில் சென்று குறுகினாள் - செய்ய 200
      கொடுங்குழை மின்ன குயில்கொழுத கோத
      விடுங்குழை தேமாவின் மின்ன - நெடுங்குழை 201
      வல்லி கொடிய முறுவலிப்ப வந்தெதிர்
      முல்லை கொடியு முறுவலிப்ப - மெல்லியற் 202
      பாந்தளு தோற்கும் பகட்டல்குல் கைம்மலர
      காந்தளு நின்றெதிர் கைம்மலர - போந்தார் 203
      பரவு மரப்பாவை கொள்ள பயந்த
      குரவு மரப்பாவை கொள்ள -புரிகுழற் 204
      சோலையின் மான்மதஞ் சூழ்வர வேழிலை
      பாலையின் மான்மதம் பாரிப்ப - சோலையின் 205
      வாங்கும் புதுமது வாணுதல் கொப்புளிப்ப
      கோங்கு மதுவெதிர் கொப்புளிப்ப -ஆங்கு 206
      திருவஞ்சு கோலத்தாள் செவ்வியா லெல்லாம்
      பருவஞ்செய் சோலை - பெருவஞ்சி 207
      கொய்தன யாவும்
      செய்தனர் பின்செல்ல - கொய்யாத
      பொன்மல ராயம் பொழி பொழிற்கொண்ட
      மென்மலர் கொண்டு வௌிப்பட்டாள் - மன்னனும் 209
      எப்போதிற் போது மொருபோதி லேந்திழை
      கைப்போதிற் பெய்தன கண்டருளா - அப்போதே 210
      செங்கை தடவந்துஞ் சீறடி தீண்டியும்
      கொங்கை கணங்கெறிந்துங் கொப்பளித்தும் - மங்கை 211
      பரிசி லுருவம் பயந்தன வென்று
      குரிசி லெதிர்கவர்ந்து கொண்டான் - தெரிவரிய 212
      தூசு துகிலு தொடியுங் கடிதடஞ்சூழ்
      காசும் பலகாற் கவர்ந்ததற்கு -கூசி 213
      இலகுஞ் சுடர்முடியு மியானையு மீரேழ்
      உலகுங் கொடுப்பானே யொ - பலகாற் 214
      கொடாத திருநோக்க முற்றுங் கொடுத்து
      விடாது களிறகல விட்டான் - அடாதான்பால் 215
      மடந்தை
      ஈரடியான் மூவுலகுங் கொண்டானை யெப்பிறப்பும்
      ஓரடியு நீங்காதா ளோராணங்கு - சீருடைய 216
      மானுங் கலையும் வளர வுடன்வளர்ந்து
      தானு மதிய மெனத்தகுவாள் - பானின்று 217
      அனலுங் குழைமகர மஞ்ச புடைபோ
      கனலுங் கயலனைய கண்ணாள் - மினலால் 218
      இருளுடைய மேனின் றெறிசுடிகை பாப்பு
      சுருளுடைய வீங்கிய தோளாள் - அருளொடும் 219
      தம்புறஞ் சூழ்போ தாயரே வீக்கிய
      வம்பற வீங்கும் வனமுலையாள் - பைம்பொனின் 220
      பண்ணிற காஞ்சியுங் கட்டிய பட்டிகையும்
      கண்ணிற போய கடி தடத்தாள் - தண்ணுறந்தார் 221
      மின்மணி மோலியான் வீதி வரவேற்று
      தன்மணி மாளிகை தாழ்வரையிற் -பொன்னுருவில் 222
      தைத்து துகிரு மரகதமு தாறாக
      வைத்து கமுக வளஞ்செய்து - முத்தின் 223
      பொலன்றோ ரணநிரைத்து பொன்னடுத்த மேக
      தலந்தோய் விசால தலத்து - மலர்ந்தபூங் 224
      கற்ப தருநிரை
      பொற்ப மிசையடுத்த பூம்பந்தர் - நிற 225
      புகரற்ற ரத்ன விதானமேற் போக்கி
      நகைவச்ர மாலையே நாற்றி - பகல்விளங்கா 226
      மைவிளக்கு வையாதே மாணிக்க வர்க்கமே
      எல்விளக்கு மாசு வெதிரெடுத்து - நொல்விய 227
      பூநறுஞ் கண்ண பொடியடங்க வீசிய
      நான நறுநீர தளிநளிய - மேனிலையிற் 228
      கங்கையி னீர்முகந்தோ காவிரியி னீர்கொணர்ந்தோ
      கொங்கை யினைநீர குடநிரைத்து - எங்கும் 229
      அசும்பு பொலன்கொடியா லவ்வெல்லை யுள்ள
      விசும்பு தவிர வலிக்கி - பசும்பொன்யாழ் 230
      முட்ட முயன்ற விறலியர் முன்னிருப்ப
      இட்ட தவிசின் மிசையிருந்து -பட்டினஞ்சூழ் 231
      பொன்னிக்குங் கோதா விரிக்கும் பொருநைக்கும்
      கன்னிக்குங் கங்கைக்குங் காவலனை - சென்னியை 232
      தானை பெருமானை நல்ல சகோடங்கொண்
      டியானை பெருமானை யேந்தெடுப்பாள் - மேனாள் 233
      யானையின் பெருமை
      உகந்த பிடியுடனே யோரெண் பிடியும்
      திகந்த களிறெட்டுஞ் சென்று - முகந்து 234
      துறக்குங் கடன்முத லேழுஞ் சொரி
      சிறக்கு மபிடேகஞ் செய்து - விறக்கும் 235
      உயிர்காவன் மேற்கொண்டு டுலகைவலஞ் செய்யும்
      அயிரா பதமத யானை - உயரும் 236
      கடநாக மெட்டுங்
      படநாக மெட்டும் பரந்தீர - துடனாக 237
      தென்னர் வலம்புரியுஞ் சேரலர் சாமரையும்
      கன்னாவ தங்கிசமா கைக்கொண்டு - பின்னவர் 238
      வன்னகை மௌலி யிரண்டு மிருகோட்டு
      கோளகையா கக்கொண்ட கோக்களிறு - மாளிகை 239
      தாங்குண்ட வாயில்க டோறு தனிதூங்கி
      தூக்குண்ட கண்டை தொடருடனே - வீக்குண்டங் 240
      காராத நாளைக்கு போத கிடந்தார்ப்ப
      தாரா கொண்ட மதாசலநீர் - வாரா 241
      நதிக்கு மலைக்கு மடவிக்கு நாளும்
      குதிக்கு மதர்சுவடு கோத்து - மதிக்கும் 242
      பிடிவிடா காதற் பெருங்களிறுங் கன்றும்
      அடிவிடா தவ்வா றடை - படிவிடா 243
      தீட்டும் பெருவாரி யேழென்பா ரெட்டென்ன
      கூட்டும் பெருங்கடவு கொல்யானை - நாட்டில் 244
      பணிகொண்ட பூதம் படைநான்கும் பற்ற
      பணிகொண்ட பொவம் பரக்க -
      கார்முற்றும் பேரிடி வீழ்ப்ப கௌரியர்
      ஊர்முற்றுஞ் செற்ற தொருகூற்றம் - சேரர் 246
      கனக்கு மனீ களந்தொறுங் கைக்கொண்
      டினக்கு மரசுவா வெல்லாம் - தனக்கு 247
      துணிக்குங் கழைக்கரும்பு நெல்லுஞ் சுமக்க
      பணிக்குங் கடவு பசுடு - தணிப்பரிய 248
      பூகங்கை தாடோ செங்கை புயல்வானின்
      மாசுங்கை தோயப்போய் மாமேரு - நாகங்கை 249
      கொண்டு தனித்தங்கள் கோள்வேங்கை வீற்றிருப்ப
      கண்டு களிக்குங் களியானை - வண்டலம்ப 250
      நின்று குதிக்கு மதத்தி னிலநெகிழ்ந்தெ
      குன்று மொளித்து குளிப்பமுன் - சென்றழுத்தி 251
      பண்டு வௌியின் மகதத்தை பாவடியால்
      செண்டு வௌிகண்ட செங்கைமா - கண்ட 252
      மதிலே யகழாக வாங்கி யகழே
      மதிலா வெழாநிற்க வைத்து - புதுமலர்செய் 253
      வாவியை செய்குன்ற மாக்கி செய்குன்றை
      வாவிய தாக வெனவகுத்து - தாவுமான் 254
      வெள்ளிடை கோநக ராக்கி கோநகர்
      வெள்ளிடை யாக வுடன்விதித்து - தெள்ளி 255
      புரப்பா ரிரப்பாரா போத விரப்பார
      புரப்பாரே யாக்கும் புகர்மா - திருக்குலத்து 256
      கண்ட னயிரா பதமதங்கால் காலத்து
      கொண்ட தொருசுவடு மேல்கொண்டு - வண்டு 257
      கடியுங் களிறுங் களிறாமே காதற்
      பிடியும் பிடியாமே பின்னர - கடிமதில் 258
      மாற்று மருமணம் வங்காள பாகத்து
      வேற்று மதமா ம்ருகமத்தை - போற்றார் 259
      வயிரா கரமெறிந்த மானதன் கண்டன்
      அயிரா பதமதமே யாக்கி - செயிர்தீர்ந்த 260
      காதற் பிடிதேற்றற் தேறா கடாக்களிறென்
      றேத பெயரு மொருபொருப்பு - பாதையிற் 261
      கச்சியிற் கற்றளியிற் கல்லிற் கலிங்கத்திற்
      கொச்சியிற் கோதா விரிக்குளத்தில் - விச்சியில் 262
      வல்லூரிற் கொல்லா புரத்தின் மணலூரில்
      நெல்லூரிற் புத்தூரி னெட்டூரிற் - செல்லூரிற் 263
      கோட்டாற்றிற் கொங்கிற் குடக்கூரிற் கொப்பத்தில்
      வாட்டாற்றிற் காம்பிலியின் மண்ணையில் - வேட்டு 264
      தரணி கவர்ந்து தமிழ்வேந்தர் பாடும்
      பரணி புனைந்த பகடு - சரணென்று 265
      வாடா மதுரயாழ் வாங்கி மடவரல்
      பாடா விருந்த பருவத்து - நீடா 266
      பரிசி லுடனே பணிப்பதுபோல் யானை
      குரிசி லுடன்வந்து கூட - தெருவில் 267
      வரவந்தான் மன்னர் பிரானென்று மாரன்
      பொரவந்தான் கைவாங்கி போனான் - விரல்கவரும் 268
      வீணை சுகப்பட வேழ மிடற்றுக்கும்
      ஆணை பெருமா ளகப்பட - வாணுதல் 269
      ஐந்து சுரர்தருவு மைந்து திருமாலை
      தந்து தொழவெழுந்து சாத்தினாள் - மைந்தனும் 270
      பண்ணுக்கே தோற்பான் பணைமுலைக்கு மல்குலுக்கும்
      கண்ணுக்கு தோலானே கைக்கொண்டான் - வண்ணமும் 271
      வெண்டுகிலுங் காஞ்சியு மேகலையு தோள்வளையும்
      கொண்டவற்றின் மாறு கொடுப்பான்போற் - பண்டை 272
      முடியுஞ்சிங் காதனமு முத்த குடையும்
      படியு மரசும் பணித்தான் - பிடியும் 273
      சிவிகையு நிற்பவ சேயிழை வீதி
      கவிகையு தானுங் கடந்தான் - குவிமுலை 274
      அரிவை
      ஏனை யரிவை யொருத்தி யிகன்மாரன்
      சேனை திரண்டனைய செவ்வியாள் - வானில் 275
      விடுசுடர செக்கர் வியாழமு தோற்கும்
      படுசுடர செம்பொற் படியான் - வடிவு 276
      நெடிதோர்க்கு லொக்கு நிறைமதிய நேரே
      படிதோற்கும் முத்தின் படியாள் - முடிவில் 277
      குலபதும ராக பதிகுதி கொள்ளும்
      பலபதும ராக படியாள் - அலைகடலில் 278
      முற்றா மரையாண் முகத்தா மரையாள
      பொற்றா மரையாள போதுவாள் - அற்றைநாள் 279
      நீர் விளையாட்டு
      தண்ணென் கழுநீர தடம்பொய்கை நாமெலாம்
      அண்ணல் வருமளவும் மாடுதுமென் - றெண்ணி 280
      புணைக்கும் மொருதன் புறங்காவ லா
      துணைக்கு தடஞ்சுருங்க தோ - பணைத்து 281
      புடைக்கும் விசும்பிடம் போதா முலைக்கும்
      நடைக்கு முதற்பகை நாமென் - றுடைப்புண்டு 282
      பின்னர பெருஞ்சக்ர வாக பெருங்குலமும்
      அன்ன குழை மலம்வர -பின்னரும் 283
      காற்குங் கருங்கட்கு முட்காதே கைவகு
      தேற்கு தரமேநா மென்றுபோ - தோற்கின்ற 284
      வாவியி லுள்ள வரால்களுஞ் சேல்களும்
      தாவி விழுந்து தடுமாற - தீவிய 285
      பொம்மென் சிலம்பு புலம்பு புறவடிக்கும்
      அம்மென் கழுத்துக்கு மாற்றாது - மம்மர்ப்ப 286
      டெங்கு தரியா திரியல் போ யாமையும்
      சங்கு தடத்தை விடத்தவழ - நங்கைதன் 287
      செவ்வாயுங் காதுஞ் செயிர்த்தன வென்றாதுங்கி
      எவ்வாயுங் காணா தெதிரேநின் - றவ்வாய 288
      கொள்ளை குமுத மலருங் குழையிள
      வள்ளை கொடியு முடன்மயங்க - வெள்ளம்போல் 289
      பெய்யு மதயானை கோடும் பெருநெருங்
      கையும் புடைப்ப கலுழ்ந்தனபோல் - தொய்யில்சூழ் 290
      தாம முலையாலு தோளாலு தாக்குண்டு
      காமர் தடமுங் கரைகடப்ப - கோமகன் 291
      உள்ளம் பெருக பெருக வுலாக்கொண்டு
      கள்ளம் பெருகுங் கருநெடுங்கண் -வெள்ளம் 292
      படிய வருஞ்சிவப்பு வள்ள பசுந்தேன்
      வடிய வருஞ்சிவப்பின் வாய்ப்ப - நெடிது 293
      திளைக்கு திருமகளை வாவியிற் சேவி
      திளைக்குங் கொடியிடையா ரேத்தி - திளைத்துமிழ 294
      தம்மை கமல மலர்க்களித்து தாமவற்றின்
      செம்மை கவர்ந்த திருக்கண்ணும் - மெய்ம்மையே 295
      மெய்போய வைய மருங்குலு மேகலைபோ
      கைபோ யகன்ற கடிதடமும் - பைபோய் 296
      நெறிக்கும் பணிவலைய நீங்கிய வேய்த்தோள்
      எறிக்கும் பெரும்பே ரெழிலும் - நெறிப்பட 297
      கொண்டுபோ தேறிய கோமகள் பேரழகு
      பண்டுபோ னோக்க பயப்படுவார் - கண்டு 298
      கலன்கலன் கண்ணெச்சிற் கென்று கடிதிற்
      பொலன்கலன் கொண்டு பொதிந்தார் - இலங்கிழை 299
      யானை பெருமா ளயிரா பதத்திருந்த
      தானை பெருமாளை சந்தித்தாள் - மேனி 300
      பொருவிற்கே யெல்லா வரம்பையரும் போதா
      திருவிற்கே குற்றேவல் செய்வான் - பொருவிற்கை 301
      வானிற்கோ னஞ்ச வருவானை யஞ்சாதே
      வேனிற்கோ னேபரவ மேற்செல்வான் - வான 302
      தெடுக்குங் கொடிமகர ராசி தொடையிற்
      றொடுக்கு மகரம்போற் றோற்ற - வடுத்தெய்யும் 303
      மன்றன் மலரம்பு விற்கரும்பு வண்டுநாண்
      தென்றறேர் தானனங்கன் செற்றதென - மென்றோளி 304
      பாங்கி யெடுத்த படாகை பசும்பொற்பூ
      வாங்கி யெதிர்தூய் உணங்கினாள் - தாங்கி 305
      ஏடுப்ப வெழுவா ளிருதிருத்தோண் மாலை
      கொடுப்ப விறையவனுங் கொண்டான் - கொடுத்தவற்று 306
      பொன்மாலை போதகத்தை சூட்டி பொலன்குவளை
      நன்மாலை சாத்தினா னாயகனும் - தன்மார்பில் 307
      ஆர்மாலை கோமா னருளினா னம்மாலை
      கார்மாலை யுட்கொண்டு கைக்கொண்டாள் - பார்மாலே 308
      அரிவையின் முறையீடு
      மூதண்டங் காக்கு முதுதண்ட மாரவேள்
      கோதண்ட தீஞ்சாறு கொள்ளாதோ - மாதண்ட 309
      முற்ற கடல்கிடந்து வேவ முனிந்தின்னம்
      கொற்ற தனிவிற் குனியாதோ - நற்றடத்துள் 310
      ஏறு முதலை யெறிதிகிரி வேண்மகர
      வேறு முறிய வெறியாதோ- மாறாது 311
      காந்து முழுமதியை யோரோர் கலையாக
      ஏந்து சுடர்வடியா ளீராதோ - பாந்தண்மேல் 312
      வைய முடையான் வலம்புரியில் வைகறைவாய்
      உய்ய வொருகுரல்வ தூதாதோ - வையம் 313
      தணியு தகைத்தோ தமியன்மா லென்று
      பணியு மடக்கொடியை பாரா - வணிய 314
      உருத்தந்த தோற்றங்க ளொன்றினு தப்பா
      வருத்த திருமனத்து வைத்தே - திருந்தட 315
      தோளு திருமார்பு நீங்கா துணைவியரில்
      நாளும் பிரியாமை நல்கினான் - மீள 316
      ஒருமகள் கண்ட னொருபெரும்பே ராகம்
      திருமகன் போல திளைப்பான் - இருநிலம் 317
      தாளா வளந்து தரும்பெரியோன் றாதகி
      தோளா லளந்த துணைமுலையா - ணாளும் 318
      திரையர மாதருஞ் சேவிப்பாண் மேரு
      வரையர மாதரின் வாய்ப்பாள் -கரையில் 319
      விருப்பவனி கூர வருகின்ற மீளி
      திருப்பவனி முன்விரைந்து செல்வா - ளுருப்ப 320
      அணந்த பணிவலைய வண்ணன் முதனாண்
      மணந்த மணச்செவ்வி வாய்ப்ப - கொணர்ந்தணிந்த 321
      சூடா மணியும் பணிவளையுஞ் சூடகமும்
      கோட மணிமகர குண்டலமும் - ஆடிய 322
      சச்சையு மாலையு மாரமு தாமமுங்
      கச்சையு மேகலையுங் காஞ்சியும் - பச்சென்ற 323
      பட்டுங் குறங்கணியும் பட்டிகையு நூபுரமும்
      கட்டுங் கனவயிர காறையும் - இட்ட 324
      திலகமும் மான்மதமுஞ் செஞ்சாந்து மெல்லா
      உலகமு தோற்கு முருவும் - கலகமும் 325
      மாரனு தானும் வருவாளை மன்னரில்
      வீரனுங் காணா வெருவரா - பாரனைத்தும் 326
      தேறு திருவை திருவவ தாரங்கள்
      தோறும் பிரியா தொடர்பாலும் - ஏறுங்கண் 327
      வாளாலும் வார்புருவ வில்லாலும் வாங்கமை
      தோளாலு மீள துவக்குண்டு - நீளிய 328
      மைவிடா நோக்கி திருக்கைம் மலரணை
      கைவிடா வார்வங் கடைப்பிடித்து - தெய்வ 329
      புவனி விலையாய பொற்றுகிற் கெல்லாம்
      அவனி முழுது மளித்தான்போற் - கவினிய 330
      அற்புத மாலை யணி பணிசெய்யுங்
      கற்பக மொன்று கடைக்கணித்தான் - பொற்படிக்கு 331
      பாதங்க ளாதி முடியளவும் பாரிப்ப
      மாதங்க ராசிதிரு வாய்மலர்ந்தான் - ஓதி 332
      முடிக்கு தலைக்கோலம் போல்வன முத்தின்
      படிக்குச சலாபம் பணித்தான் - வடிப்பலகை 333
      அச்சிரா பரண மனைத்திற்கு தன்வட
      வச்சிரா கரமே வழங்கினான் - பச்சை 334
      மணிக்கு தலையாய மாணிக்க ரத்ன
      பணிக்கு த்ரிகூடம் பணித்தான் - தணிப்பில் 335
      பெரும்பே ருவகைய ளாகி பெருமாள்
      விரும்பேர் மலர்க்கண்ணி மீண்டாள் - பெரும்போர் 336
      வெருவரும் பார்வேந்தர் வேந்தனை போற்றும்
      பொருநரும் பாணரும் புக்கார் - தெரிவைக்கு 337
      பாடி குழலூதி பாம்பின் படக்கூத்தும்
      ஆடி குடக்கூத்து மாடினார் - பாடியில் 338
      ஆனிரையும் மாமா னிரையும்போ லானுலகிற்
      கோநிரையு மீள குழாங்கொண்டு - மீளிரையின் 339
      மீதும் புடையு மிடைய விழவெழவேய்
      ஊது திருப்பவள முட்கொண்டு - சீத 340
      கடந்தூர வந்தக ககன தளமும்
      இடந்தூர வந்து மிணை - குடங்கள் 341
      எழவெழ மேன்மே லெழுந்துங் குடங்கள்
      விழவிழ மேன்மேல் விழுந்தும் - பழகிய 342
      தோளிரண்டு தாளிரண்டுஞ் சோளேசன்றாளிரண்டும்
      தோளிரண்டு மென்றென்று சொல்லியும் - கோளொளிய 343
      நின்வேய் தவிர்கென்று நேரியன் மேருவிற்
      பொன்வேய்ங் குழலொன்று போக்கினான் - முன்னே 344
      தசும்பிற்கு மாறாக தங்கோமா னாவற்
      பசும்பொற் றசும்பு பணித்தாள் - ஒசிந்துபோய் 345
      நாடக பாம்பிற்கு நற்கற் பசுங்கொடுத்த
      ஆடக பாம்பொன் றருளினாள் -பாடுநர்மேல் 346
      வற்றாத மானத வாவியல் வாடாத
      பொற்றா மரையே புனைகென்றாள் - கொற்றவன் 347
      கொந்தார மாலை கொளவிளைத்த மாலைக்கு
      மந்தார மாலை வருகென்றாள் - நந்தாத 348
      பேறு திருவருளு மெய்தி யவர்பெயர
      ஏறு தவிசுதர வேறினாள் - வேறொருத்தி 349
      பேரிளம் பெண்
      கச்சை முனியுங் கனதனமுங் குங்கு
      சச்சை கமழு தடந்தோளு -நிச்சமுரு 350
      ஏந்த வுளதென் றிருந்த மலர்நின்றும்
      போந்த திருமகள் போலிருப்பாள் - வேந்தர் 351
      பணியு தடமகுடம் பன்னூறு கோடி
      அணியு திருத்தா ளபயன் - பணிவலய 352
      வீக்கிலே வீங்கியதோண் மேரு கிரச்சிகர
      தாக்கிலே சாய்ந்த தடமுலையாள்-பூக்கமழும் 353
      ஆரேற்ற பொற்றோ ளபயனை யாயிரம்
      பேரேற்ற தெய்வ பெருமானை - காரேற் 354
      றடல்போ லடுதிகிரி யண்ணலை தன்பாற்
      கடல்போல லகப்படுத்துங் கண்ணாள் - மடல்விரி 355
      தெங்கினு மேற்கு தசும்பினு தேர்ந்தளி
      பொங்கு நுரையினும் போய்ப்புகா - தங்கு 356
      நறவு குவளை நறுமலர்தோ துண்ணும்
      இறவு கடைக்கணி தெய்த - சுறவு 357
      கொடியோனை நோக்குவான் கண்டாள்பொற் கொற்கை
      நெடியோனை நேமி பிரானைப்-படியோனை 358
      கண்டனை மேதினியாள் காந்தனை வந்து
      கொண்டனை யென்று குறுகுவாள் - கண்டு 359
      மலர்கண் வெளுப்பு சிவப்பூர மற்ற
      திலகங் குறுவியராற் றே - பலகுதலை 360
      மாற்ற தடுமாற்ற மெய்த மனத்துள்ள
      தேற்றம்பி தேற்றஞ் சிதைவிப்ப- ஏற்று 361
      துகிலசைந்து நாணு தொலைய வளக
      முகிலசைந்து நோவிடைக்கு முற்ற - அகிலமும் 362
      சேனையு மன்னரு தெய்வ பெருமாளும்
      யானையு நிற்க வெதிர்நின்று - கோனே 363
      சதயுக மேனு தரணிபர் மக்கள்
      பதயுக மல்லது பாரார் - உதயாதி 364
      காந்தநின் கைத்தலத்தை பார்மடந்தை கற்பாந
      தேந்து மரவர சென்றிகவாள் -பூந்தொடி 365
      நற்போர் மடந்தை திருத்தோளை நாமுடைய
      வெற்போ ரிரண்டென்று வீற்றிருக்கும் - பொற்பிற் 366
      கலந்தாளுஞ் சொற்கிழத்தி கன்ன துவயமென்
      பொலந்தா மரையென்று போகாள் - நிலந்தாரா 367
      அந்தா மரையா ளருட்கண்ணை தண்ணிரண்டு
      செந்தா மரையென்று செம்மாக்கும் - முந்துற்ற 368
      மல்லா புரேச சிலகால மற்றிவை
      எல்லா தனித்துடையோம் யாமன்றே - அல்லாது 369
      மேகோ தகமிரந்த சாதகம் வெற்பைநிறை
      ஏகோ தகம்பொழிந்தா லென்செய்யும் - மாகத்து 370
      காலை வெயில்கொண்டு தாமரைக்கு கற்பாந்த
      வேலை வெயிலெறிக்க வேண்டுமோ - மாலை 371
      சிலாவட்டஞ் சிற்சில நின்றுருகு மென்றால்
      நிலாவட்ட நின்றெறிக்க நேரோ - குலாவலைஞர் 372
      சேற்றாக்கான் மீளு திருநாடா நீதருமால்
      ஆற்றாக்கான் மேன்மே லளிப்பரே - கோற்றொடியார் 373
      நீங்கரிய மேகமே யெம்பொல்வார் நீயளித்தால்
      தாங்கரிய வேட்கை தவிப்பாரே - யாங்களே 374
      தண்மை யறியா நிலவினேஞ் சந்ததமும்
      உண்மை யறியா வுணர்வினேம் - வெண்மையினிற் 375
      செல்லாத கங்குலே தீராத வாதரவேம்
      பொல்லாத வெம்பசலை போர்வையேம் - நில்லாத 376
      வாமே கலையே முலைவீக்கா வம்பினேம்
      யாமேயோ விப்போ தௌிவந்தேம் - யாமுடைய 377
      நன்மை யொருகால துள்ள தொருகாலா
      தின்மை யுணராயோ வெங்கோவே - மன்னவநீ 378
      முன்பு கருடன் முழுக்கழுத்தி லேறுவது
      பின்பு களிற்றின் பிணர்க்கழுத்தே - மின்போல் 379
      இமைக்குங் கடவு ளுடையினைபண் டிப்போ
      தமைக்கு துகிலினை யன்றே - அமைத்ததோர் 380
      பாற்கடற் சீபாஞ்ச சன்னியம்பண் டிப்போது
      கார்க்கடற் சென்று கவர்சங்கே-சீர்க்கின்ற 381
      தண்ண துழாய்பண்டு சாத்து திருத்தாமம்
      கண்ணியின் றாரின் கவட்டிலையே - தண்ணென்ற 382
      பள்ளியறை பாற்கடலே பண்டு திருத்துயில்கூர்
      பள்ளி யறையின்று பாசறையே - வெள்ளிய 383
      முத்த குடைகவித்து முன்கவித்த மாணி
      கொத்து குடையொ கூடுமே - இததிறத்தால் 384
      எண்ணற் கரிய பெரியோனீ யெங்களையும்
      அண்ணற் கிகழ வடுக்குமே - விண்ணப்பம் 385
      கொண்டருளு கென்ன முகிழ்த்த குறுமுறுவற்
      றண்டரள கொற்ற தனிக்குடையோன் -பண்டறியா 386
      ஆரமு மாலையும் நாணு மருங்கலா
      பாரமு மேகலையும் பல்வளையு - மூவரும் 387
      பிடியுஞ் சிவிகையு தேரும் பிறவும்
      படியுங் கடாரம் பலவும் - நெடியோன் 388
      கொடுத்தன கொள்ளாள் கொடாதன கொண்டாள்
      அடுத்தனர் தோண்மே லயர்ந்தாள் - எடுத்துரைத்த 389
      பேதை முதலாக பேரிளம்பெண் ணீறாக
      மாதர் மனங்கொள்ளா மால்கொள்ள -சோதி 390
      இலகுடையான் கொற்ற குடைநிழற்று மீரேழ்
      உலகுடையான் போந்த னுலா. 391
      வெண்பா
      அன்று தொழுத வரியை துளவணிவ
      தென்று துயில்பெறுவ தெக்காலம் - தென்றிசையில்
      நீரதிரா வண்ண நெடுஞ்சிலையை நாணெறிந்த
      வீரதரா வீரோ தயா.
      இராசராச சோழனுலா முற்றிற்று
      ---------------------------------------------
      ------------------------------------------------------------------------
      13 2001