------------------------------------------------------------------------
      -
      -
      மோகவாசல் ரஞ்சகுமாரின் சிறுகதைகள்
      ------------------------------------------------------------------------
      ------------------------------------------------------------------------
      .

      . -
      .
      -.
      -
      .
      95983.11

      ..
      ..5180.


      .



      ... -
      .
      .
      -
      .
      -
      .
      © 1999-2000


      .
      ..

      .
      ------------------------------------------------------------------------
      மோகவாசல் ரஞ்சகுமார்
      1. சுருக்கும் ஊஞ்சலும்
      2. கபர கொய்யாக்கள்
      3. காலம் உனக்கொரு பாட்டெழுதும்
      4. கோசலை
      5. அரசி
      6. கோளறு பதிகம்
      7. மோகவாசல்

      --- 30

      1989


      -
      .
      மோகவாசல்ரஞ்சகுமாரின் சிறுகதைகள் வயது 30
      விலாசம்- கயலகம் மத்தொனி கரவெட்டி மேற்கு
      முதல் பதிப்பு 1989 ஆடி பிரசுரிப்பாளர்கள் யதார்த்தா பருத்தித்துறை
      அச்சுப்பதிப்பு விஜயா அழுத்தகம் யாழ்ப்பாணம் எதிர்ப்படிவுமுறை
      தகட்டுவடிவமைப்பு கலைமகள் பிரின்ரோ கிரா· யாழ்ப்பாணம் விளக்கப்படங்கள் தயா
      வாசுகி ஜெகநாதன் அருந்ததி சபாநாதன் முன்புற அட்டை வீரசந்தானம் நன்றிபாலம்
      பின்புற அட்டை ரமணி நன்றிஆனந்தி.
      ------------------------------------------------------------------------
      1. சுருக்கும் ஊஞ்சலும்
      வெயில் கொளுத்துகிறது. ஆனிமாதத்து வெயில். மூச்சு விடவே சிரமமாக இருக்கிறது.
      இங்கே கல்லா பெட்டியில் இருந்துகொண்டு பார்த்தால் கிட்டத்தட்ட கால்மைல் தூரத்துக்கு
      முன்னால் கண்டிவீதி வி¡¢கிறது. வீதியின் இடது ஓடத்தில் கடை வாசலிலிருந்து
      சுமார் நூறுஅடி தூரம் தள்ளி இந்த ஊ¡¢ன் பெயரைத்தாங்கிய சிமெந்து பலகை ஒன்று
      வெள்ளையாக தொ¢கிறது. அதன்மேல் இந்த வெளியிலிலும் இரண்டு காக்கைகள் உட்கார்ந்து
      கொண்டு கரைகின்றன. அந்த காக்கைகளின் சத்தம் சன்னமாக காதுக்கு சிரமந்தருவதாக
      இருக்கிறது. சுறுசுறுப்பாக அங்குமிங்கும் பறந்து தி¡¢ந்து இரைதேடும் இந்த
      காக்கைகள் கூட ஓ¡¢டத்தில் சோம்பியிருக்கின்றனவே அவ்வளவு வெயிலா
      கடைவாசலுக்கு நேரே றோட்டுக்கு அப்பால் ஒரு கம்பிவேலி. அக்கம்வேலிக்கும் றோட்டுக்கும்
      இடையில் ஒரு பசுமாடு படுத்து கொண்டு அசைபோடுகிறது. பக்கத்தில்
      கன்றுக்குட்டி தலையை தொங்க போட்டுக்கொண்டு கண்கள் அரைத்தூக்கம் போல
      செருகிக்கொள்ள கால்களை பரப்பி கொண்டு நிற்கிறது. இந்தமாடு எப்போதும் ஆவ்
      என்று வாய்கொள்ளாமல் புல் மேயுமே இன்று இதற்கு என்னவந்தது ஆறுதலாக
      படுத்திருக்கிறதே கன்னத்தோலினுக்கூடாக தாடை எலும்புகள் பீறித்தொ¢ய மெதுவாக இது
      அசைபோடுவதை பார்க்க ஒரே சினமாக இருக்கிறது.
      கம்பிவேலிக்கு அப்பால் சிறிய வயல்வெளி அவ்வயல்வெளியின் மத்தியில் மஞ்சளாகவும்
      சற்று பொ¢தாகவும் காட்சியளிக்கிறது. அப்போதிக்கா¢ ஆசுப்பத்தி¡¢. வயல் வெளியில்
      நான் வந்திறங்கிய போது சிறிய பூண்டாக- இன்னசெடி என்று அடையாளம் காண முடியாத
      நிலையிலிருந்த-சணல் இப்போ வேலியளவுக்கு வளர்ந்து மஞ்சட்பூக்களுடன் குலங்கி
      சாய்கிறது. ஆசுபத்தி¡¢ விறாந்தையில் ஓடலி பரமசிவம் இருந்து சுருட்டு பிடித்து
      கொண்டிருக்கிறார். கால்கள் இரண்டையும் அகட்டிப்போட்டுக்கொண்டு வாங்கில் முதுகு
      சாயுமிடத்தில் கைகளை வீசிப்போட்டுக்கொண்டு தலையை கவிழ்த்துக்கொண்டுதான் இருக்கிறார்.
      சுருட்டு பிடிக்கிறாரா இல்லையா என்பதே சந்தேகமாக இருக்கிறது. குரங்கு
      தூக்கத்திலிருந்து விழிப்பதுபோல இடைக்கிடை புகை மெல்ல வருவதுதான் அதை
      ஊர்ஜிதப்படுத்துகிறது. அவரும் கூட இந்த வெயிலில் சோர்ந்து சுருண்டுபோய் இருப்பதாக
      எனக்குப்படுகிறது.
      ஆசுப்பத்தி¡¢க்கு இடதுபுறம் கொஞ்ச தூரம் தள்ளி சிவப்பாக அரசாங்க குவாட்டஸ்
      தொ¢கிறது. குவாட்டஸின் முன்விறாந்தையில் இருதூண்களுக்கு நடுவே ஒரு கயிற்றுக்கொடி
      கட்டப்பட்டு அதில் சிலதுணிகள் காய வி¡¢க்கப்பட்டிருக்கின்றன சுவரோடு சாய்ந்து
      சாயும் இடம் இல்லாத கதிரை ஒன்று வைக்கப்பட்டிருக்கின்றது. காற்றில் ஆடும் துணிகள்
      மெதுவாக ஆடிக்களிக்கவே பி¡¢யமற்றவைபோல பலவந்தமாக ஆட்டப்படுவதாக
      எனக்குப்படுகிறது. அனேகமான வேளைகளில் அந்த கதிரையில் கனகசிங்கம் கால்மேல்
      கால்போட்டுக்கொண்டு தொடையில் ஊன்றிய கையை நாடிக்கு முண்டு கொடுத்துக்கொண்டு
      இருப்பதை காணலாம். இப்போ அதுவெறுமே வெறிச்சோடி கிடக்கிறது.
      கல்லாவிலிருந்து பின்புறம் திரும்பிப்பார்த்தால் யன்னலினூடாக றெயில்வேலைன்
      தொ¢கிறது. அதை ஒட்டினாற்போல பற்றையும் மரமுமாக ஒரே காடு. அந்த பச்சைக்குமேல்
      நிர்மலமான நீல ஆகாயம். பச்சையும் நீலமும் பார்க்கவே சகிக்கவில்லையே. வானத்தை
      கண்கொண்டு பார்க்கவே முடியவில்லை. வெயில் கண்ணை குத்துகிறது. அப்பாடா
      இந்த வெயில் நாசமாய்ப்போக
      முன்புறம் இப்படி கிட்டவா காடு இல்லை. ஆசுபத்தி¡¢ குவாட்டஸ் எல்லாம் தாண்டி
      பொ¢ய வயல்வெளி. லக்ஷபானவிலிருந்து யாழ்ப்பாணக்குடாவுக்கு கரண்ட்டை
      சுமந்துசெல்லும் நீள நீளமான கம்பிகளும் அவற்றை தாங்கி நிற்கும் பிரமாண்டமான
      போஸ களும் அவ்வயல்வெளியை ஊடறுக்கின்றன. அதற்குமப்பால் கருநீலநிறமாகத்தான் காடு
      தோன்றுகிறது. எங்களூ¡¢ல் தொலைதூர பனைகள் காட்சியளிப்பதும் ஏறத்தாழ இதே காட்சிதான்.
      மேலே கூரைக்கு தகரம்தான் போட்டியிருக்கிறார்கள். அதனால் ஒரே வெக்கையாக
      அடிக்கிறது. அடிக்கிற வெக்கையில் முகம் கருகிவிடுமாற்போல் எ¡¢ந்து தள்ளுகிறது.
      போதாத குறைக்கு பின்னாலிருந்து பொய்லர் சூடு முதுகை எ¡¢க்கிறது. தண்ணீர்
      கொதிக்கும் தள சத்தம் வேறு காதுக்கு நாராசமாக
      கண்டி வீதியில் செருப்புச்சத்தம் சரசர என கையில் பிரப்பங் கூடையுடன் கருணே நடந்து
      போகிறான். அதற்குள் போத்தில்கள் இருக்கும். போகிற அவன் மெல்லிதாக என்னைப்பார்த்து
      சி¡¢த்துக்கொண்டு போகிறான். வெயில் வெக்கையில் கண்ணையும் முகத்தையும்
      இடுக்கிக்கொண்டு அவன் வேண்டா வெறுப்பாக சி¡¢ப்பதை பார்க்க பாவமாக இருக்கிறது.
      இப்படியே அவன் போகிற பாதையில் சிறிதுதூரம் போனால் முதுபண்டாவின் தச்சுவேலை
      கொட்டிலுக்கு முன்னால் சிறுபற்றைகளுக்கு இடையில் உள்ள பழுதடைந்த கிணற்றின்
      மிதியில் அவன் இந்த பிரப்பங்கூடையுடன் உட்கார்வதை காணலாம். இரண்டு ரூபா
      ஐந்து ரூபா பேர்வழிகள் அடிக்கடி அவனிடம் வருவார்கள். ஒருதடவை போலிசிடம்கூட
      அகப்பட்டிருக்கிறான்.
      அப்பா இப்போதைக்கு வரமாட்டார். வந்தால் நான்கொஞ்சம் தூங்கலாம். வர இரண்டுமணியாவது
      ஆகும். இப்போது நேரம் பன்னிரண்டிற்குள்தான் இருக்கும். பார்ப்பதற்கு
      மணிக்கூட்டை நம்ப முடியாது.
      உள்ளே குசினியிலிருந்து தேங்காய் துருவுகிற சத்தம் கேட்கிறது. யாரோ இரண்டு பேர்
      துருவுகிறார்கள் போல இருக்கிறது. யாராக இருக்கும் சமையல்காரனும்
      சி¡¢பாலாவும்தான். சிவலிங்கம்தான் இங்கே குழங்கையை முண்டு கொடுத்துக்கொண்டு
      மேசையில் தூங்கிவழிந்து கொண்டிருக்கிறானே. சின்னவன் அப்பாவுடன் சந்தைக்கு போய்விட்டான்.
      இது ஒரு சனியன்பிடித்த ஊர். சந்தைக்கு போவதானாலும் எட்டுமைல் தூரம் பஸ்ஸில்
      போகவேண்டும். எனக்கு இப்போதுள்ள நிலையில் பஸ்ஸைப்பற்றி நினைக்கவே எ¡¢ச்சலாக
      இருக்கிறது. அதிகம் ஏன் கக்கூசுக்கு போவதாக இருந்தாலும் பின்னால் ரெயில்வேலைனை
      கடந்து காட்டுக்குள்தான் போக வேண்டும். எனக்கு ரெயில்வேலைனை பார்க்கவே பயமாக
      இருக்கிறது. ஆயினும் என்ன செய்வது இயற்கை கடனை நிறைவேற்ற நானும் ரெயில்வேலனை
      கடந்துதான் தீரவேண்டும்.
      நெடுக இப்படி காட்டையும் றோட்டையும் பார்த்து கொண்டிருக்க சலிப்பாகத்தான்
      இருக்கிறது. இந்த ஒருமணி நேரமாக றோட்டிலும் வாகன நடமாட்டங் குறைவு.
      அப்படியிருந்தால் வியாபாரமாவது சுறுசுறுப்பாக இருக்கும்.
      யாராவது பேச்சுத்துணைக்கிருந்தால் பரவாயில்லை சிவலிங்கத்தை கூப்பிடலாமா
      வேண்டாம். பாவம் அவன் இரவு படுக்க போனபோது நேரம் இரண்டு மணியிருக்கும். அதுதான்
      இப்போது தூங்கி வழிகிறான்.
      ஐஸ் மாதி¡¢ குளிராக ஏதாவது குடித்தால் நல்லது.
      சோடா....வேண்டாம்...செலவுகூட இளநீர்....குடிக்கலாம்... என்ன செய்வது
      கத்திஎடுக்க சிவலிங்கத்தைத்தான் அருட்ட வேண்டியிருக்கிறது.
      சிவலிங்கம்...சிவலிங்கம்....டேய்
      அவன் மெல்ல அருண்டு விழிக்கிறான். சிவந்த கண்களை கைகளால் தேய்த்து கொட்டாவி
      சோம்பல் முறித்து கொள்கிறான்.
      எண்ண சிண்ண மொதலாளி
      குசினிக்கைபோய் சின்னக்கத்தி ஒண்டு எடுத்துக்கொண்டந்து ஒரு இளனி வெட்டித்தா...போ
      இவன் அரை சிங்களவன். தாய் சிங்களத்தி தகப்பன் இந்தியத்தமிழன். அதுதான் தமிழ
      பெயரும் சிங்கள கதையுமாக இருக்கிறான்.
      அதோ அந்தப்பெயர்ப்பலகையருகில் கனகசிங்கம் வருகிறார். எங்கோ இந்த வெயிலில்
      போய்விட்டு களைத்துவிழுந்து வியர்த்தொழுக டியூட்டி யூனிபோம் உடன் வருகிறார்.
      இந்த போறஸ்ற் கா வேலைகூட சிரமந்தான். காட்டுக்குள்ளே தனியாக அலையவேண்டும்.
      ஆனால் கனகசிங்கம் அப்படியல்ல. குவாட்டஸிலேயே அந்த கதிரையில் இருந்துகொள்ளுவார்.
      எப்போதாவது ஒருநாள் தான் அத்திப்பூத்தாற்போல் டியூட்டி யூனிபோம் உடம்பில் ஏறும்.
      சிவலிங்கம் குசினிக்குள்ளிருந்து நன்குசீவிவெட்டிய இளநீருடன் வருகிறான்.
      சிங்களவனாகியபடியால் குறும்ப வெட்டி பழகிய கையால் நல்ல அழுத்தமாக
      வாய்பொருத்தி குடிக்க ஏதுவாக இளநீர் வெட்டி தருகிறான். ஆனால் இதை தூக்கி
      குடிக்கவே பொ¢ய சோம்பலாக இருக்கிறது எனக்கு
      கனகசிங்கம் நேரே இங்கேதான் வருகிறார். சிகர வாங்கவாக இருக்கும். வாசலில்
      ஏறும்போதே சூ....சா¢யான வெயில் என்று அலுத்தபடியேதான் வருகிறார்.
      போறேசஸ் ஒண்டு தா...தம்பி
      இலாச்சியை இழுக்கவே அலுப்பாக இருக்கிறது. வேண்டா வெறுப்பாக சிகர விற்பனை
      நடத்துகிறேன். அவர் சிகரட்டை பற்றவைக்க சதா எ¡¢ந்து கொண்டிருக்கும் விளக்கண்டை
      போகிறார். அது அணைந்துபோயிருக்கின்றது.
      விளக்கு நூந்துபோச்சுத்தம்பி
      சிவலிங்கத்திடம் சொல்லி கொளுத்துவிக்கலாம்தான். அவன் பாவம் மீண்டும் மேசையில் தூங்கி
      வழிகிறான். எனக்கும் எழச்சோம்பலாக இருக்கிறது.
      இப்படி உள்ளைவந்து பொயிலர் நெருப்பிலை பத்துங்கோ. அல்லது உப்பிடி உந்தக்கூரை
      தகரத்திலை பிடியுங்கோ எ¡¢யும்
      என்னுடைய நகைச்சுவைக்காக ஏதோ கடமைக்காக சி¡¢ப்பதுபோல் சி¡¢த்துவிட்டு
      சிகரட்டை கொழுத்திக்கொண்டு மெதுவாக குவாட்டஸை நோக்கி நடக்கிறார் அவர்.
      மீண்டும் வெறுமை. ஒரே எ¡¢ச்சலாக இருக்கிறது. ரேடியோவை திருகுகின்றேன். ஏதோ
      கி¡¢க்கட்நேர்முக வர்ணனை நடக்கிறது. இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் டெஸ்ட
      நடப்பதாக கனகசிங்கம்தான் நேற்று சொன்னார். வெங்கட்ராகவனின் பந்துவீச்சுக்கு யாரோ
      ஒரு நியூசிலாந்துக்காரன் பெளண்டா¢ அடித்ததாக அறிவிப்பாளன் அறிவிக்கிறான். வெங்க
      தமிழன். ஒரு தமிழனின் பந்துவீச்சுக்கு அந்நியன் ஒருவன் அடித்தானாம் பெளண்டா¢
      தமிழனுக்கு சோம்பலா சே... இந்த அறிவிப்பாளனின் கரகரத்த சோம்பலான குரலை
      கேட்கவே பற்றி கொண்டு வருகிறது. ரேடியோவை வெறுப்புடன் மூடுகிறேன்.

      தூரத்தே யாரோ மஞ்சள்நிற ஜப்பான் குடையுடன் வருகிறார்கள்.
      ஜப்பான் குடைதான் இப்போது பாசன்
      பெண்கள்தான் அதிகமாக ஜப்பான்குடை பாவிக்கின்றார்கள். எதிரே வருவதுகூட ஒரு பெண்ணாக
      இருக்கலாம் என்ன
      மஞ்சளுக்கு கீழே சிறிது இடைவெளிவிட்டு மெல்லிய...மிக மெல்லிய சிவப்பாக
      தொ¢கிறது. றோட்டின் கறுத்த பின்னணியில் மஞ்சளும் மென்சிவப்பும் நல்ல எடுப்பாக
      இருக்கிறது. அந்த மென்சிவப்பு அப்பெண்ணின் ஆடையாக இருக்கும்.
      மினிகவுண்தான் இப்போது பாசன்
      இவளுக்கு தூரத்தேநின்று பார்க்க இது அழகாகத்தான் இருக்கிறது. கிட்டவர நன்கு
      பார்க்கலாம். முகத்தையும்
      அழகாக இருப்பாளோ அழகாகத்தான் இருப்பாள். அதையே நான்....நான்மட்டுமென்ன எல்லோரும்
      விரும்புகிறார்கள்.
      இந்த வெயிலில் நடந்து வருகிறாளே பாவம் சுடாதா
      குதிச்சப்பாத்து போட்டிருப்பாள்.
      குசிச்சப்பாத்துத்தான் இப்போது பாசன்
      குதிச்சப்பாத்து போட்டால் வேகமாக நடக்கமுடியாது. அதுவும் நல்லது. சில
      பெண்களுக்கு அதுவே ஆறஅமர.... நிதானமாக நடக்க பழக்குகிறது.
      இந்த பெண்ணின் நடை நன்றாயிருக்கிறது. மிக அன்னநடை
      அதுமாதி¡¢.
      இப்போது அவள் அந்த பெயர்ப்பலகைக்குக்கிட்ட வந்துவிட்டாள். நல்ல நிறம் நான் பெண்கள்
      எந்தநிறத்தில் இருக்க வேண்டுமென எண்ணுவேனோ அந்த நிறம்.
      இன்னும் கிட்டவந்தால் ஏன் கடைக்கே வந்தால்.... நான்றாக பார்க்கலாம்.
      இந்த நேரத்தில் எங்கே வருகிறாள் ஆகப்பத்தி¡¢க்காக இருக்கும். அழகான
      ஆசுப்பத்தி¡¢க்கு போகுமளவுக்கு நோயா சீ...கூடாது. அப்படியிருப்பதை நான்
      விரும்பவில்லை.
      இப்பொழுதுதான் நன்றா கவனிக்கக்கூடியதாக இருக்கிறது. குழுகுழு கண்ணாடி
      மாட்டியிருக்கிறாள். சிவந்த முகத்திற்கு கறுத்த கண்ணாடி எடுப்பாக இருக்கிறது.
      ஆமாம் இந்த சனியன் பிடித்த ஊ¡¢ல்கூட இப்படி பெண்கள் இருக்கிறார்களா ஏன் இரு
      கூடாது ஒருவேளை இவர்கள் இப்பெண்ணின் குடும்பத்தினர்-என்னைப்போல வெளியூர்க்காரர்களாக
      இருக்கலாமல்லவா இங்கே பாம் எதாவது....
      என்ன இவள் கடைக்கல்லவா வருகிறாள் நான் சற்று உஷாராக இருக்கவேண்டும். இப்படி
      இருந்தால் எப்படி அதுவும் ஒரு அழகான பெண்ணுக்கு முன்னால்.
      கடைவாசல்படி கொஞ்சம் உயரம். அதில் ஏறும்போது அவளுடைய குதிச்சப்பாத்து வழுக்க
      பார்க்கிறது. வாசல் தூணை பிடித்துக்கொண்டு சமாளித்து கொள்கிறாள்
      கவனம்....பாத்துவரக்கூடாதா

      ஆகா மதுரமான குரல்...இவள் இங்கிலீசு தொ¢ந்தவள். நானும் எனக்கு தொ¢ந்ததா
      காட்டிக்கொள்ளவேண்டும்.

      சோடா ஒண்டு தாங்க.
      சோடா என்று சொல்லும்போது சாயம்பூசிய சிறிய அளவான உதடுகளின் பின்னணியில் முத்து
      வெள்ளை பற்கள்... வடிவமே முத்துப்போல சிறிதான பற்கள். நன்றாக இருக்கின்றன. சோடா
      கொடுக்க சிவலிங்கத்தை எழுப்பலாமா வேண்டாம் நானே கொடுக்கலாமே எழுந்த வேகத்தில்
      பாதி திறந்திருந்த இலாச்சி தொடையை பதம்பார்க்கிறது. கனகசிங்கம்...அவரால்தானே
      இலாச்சி திறக்கவேண்டி வந்தது....அவர் பாழாய்ப்போக...
      அம்மாடி என்றவாறு திரும்ப உட்கார்ந்து கொள்கிறேன். அவள் முன்னாலிருந்த சோடா
      ரா கிலிருந்து சோடா ஒன்றை எடுக்கிறாள்.
      பரவாயில்லை ஐ தாங்க...நானே உடைக்கிறன்
      எடுத்து கொடுக்கிறேன். நல்லகாலம் அது கையெட்டும் தூரத்திலேயே இருக்கிறது.
      இல்லாவிடில் அவள் முன்னாலேயே நொண்டி...நொண்டி...சீ...வெட்கக்கேடு.
      சோடா குடிப்பதற்காக போலும் கண்ணாடியை கழற்றி கொள்கிறாள். நல்ல பொ¢ய
      விசாலமான கண்கள். உதட்டுக்கு சாயமிட்டவள் கண்ணுக்கு மையும் இட்டிருக்கலாமே
      இட்டிருந்தால் இன்னும் அழகாக இருந்திருக்கும்.
      எவ்வளவு காசு....
      ஒண்டிருபது தாங்க....
      காசு தரும்போது தான் கவனிக்கிறேன். கையில் மெல்லிய பூனை மயிர்கள். அது கறுப்பாக
      இல்லாமல் உடலின் நிறத்திலேயே இருக்கிறது. அதுவும் ஒரு அழகுதான்.... காலிலும்
      இருக்கும் எட்டிப்பார்க்கலாமா சீ.... அவள் என்ன நினைத்து கொள்வாள்...
      நான்தான் அவளையே பார்க்கிறேனே அவள் என்னை கவனிப்பதாகவே காணோம்...
      முகத்தை கைக்குட்டையால் ஒற்றித்துடைக்கிறாள். திரும்ப அதை மடிக்கும்போது...நான்
      நினைத்து நடக்கிறது. கணநேரம் தான். கண்களை திரும்பிக்கொள்கிறாளே ஆமாம்
      இப்படியான சந்தோச சமாச்சாரங்கள் எல்லாம் கணநேரம் தானோ
      இன்னும் நிற்கிறாள். ஏதாவது வேறு தேவைகளும் இருக்கும்...
      வேறை என்ன வேணும்
      வெறும் கொடுத்தா....நல்லது
      ஓ...அது நாங்கள் விக்கிறதில்லையே
      ...
      எண்டாலும் பரவாயில்லை..உதிலை கிடக்கிற போத்தலை எடுங்க. இன்னும் ஒரு ரூபா தாங்க
      அலுவல் முடிந்து போகும்போது மீண்டும் ஒரு தடவை மின்வெட்டு இப்போது அவள் மெதுவாக
      சி¡¢க்கிறதா எனக்குப்படுகிறது.

      திடீரென பெயர்தாங்கி பலகையில் இருக்கம் காக்கைகள் உச்சஸ் தாயியில் கத்துகின்றன. அவை
      ஆரவாரமாக....மகிழ்ச்சிப்பெருக்குடன் கரைவதாக எனக்கு படுகின்றது. அவை இப்போ
      நெருக்கமாக அமர்ந்து ஒன்றைஒன்று கொத்தியும் சீண்டியும் விளையாடுகின்றன.
      அந்த மாடு இப்போது எழுந்து நிற்கிறது. அசைபோடுவதை நிறுத்திவிட்டது. புல்மேய
      ஆயத்தமாகின்றதா... முதுகில் தொந்தரவு தரும் ஈக்களை வாலால் விளாசி
      விரட்டுகின்றது. அப்படி தான் இருக்கவேண்டும் எதி¡¢யை அடித்து ஓட....ஓட விரட்ட
      வேண்டும்.
      கன்றுக்குட்டி துள்ளி துள்ளி தாய்க்குக்கிட்ட வருகிறது. தாயைமுட்டி மோதி பால்
      குடிக்கிறது. அப்படித்தான் இருக்கவேண்டும். சேரவேண்டியதை எடுத்துக்கொண்டு
      ஆனந்தமாக...கோலாகலமாக வாழவேண்டும். ஓ வாழ்க்கைதான் எவ்வளவு இன்பகரமானது..
      அந்தப்பெண் ஆசுப்பத்தி¡¢க்கேதான் போகிறாள். பரமசிவம் யோகத்திலிருந்து
      விழித்தெழுகின்றார். போகத்திற்கா சி. என்ன அசிங்கமான எண்ணம்... சுருட்டு
      புக்..புக்... என்று புகை கக்குகிறது. அந்தப்புகை அப்படியே
      மேலெழுந்து...மேலே...இன்னும் மேலே போய்க்கரைந்து காற்றோடு ஐக்கியமாகின்றது.
      அப்படி கரைவதைப்பார்க்க எனக்கும் நான் அவ்வாறு மேலே போக வேண்டும்
      இருக்கிறது.
      குவாட்டஸ் முன்விறாந்தையில் கதிரையின் மேல் வழமையான பாணியில் கனகசிங்கம்
      உட்கார்ந்திருக்கிறார். கொடியிலுள்ள துணிகள் காற்றுடன் கலந்துறவாடி இன பெருக்கால்
      கனகசிங்கத்தின் முகத்தில் மெல்ல விசிறுகின்றன. ஓரொரு சமயம் அவா¢ன் முகத்திலேயே
      செல்லக்குழந்தையின் விளையாட்டு அடிகள் போலப்பட்டு விலகுகின்றன. அவர் முகத்தில்
      புன்னகை. அப்படித்தான் இருக்கவேண்டும்.... சதாநேரமும் சி¡¢த்த முகத்துடன் அதைவிட்டு
      விட்டு கடுவன் பூனைமாதி¡¢ கடுகடுத்த முகத்துடனா
      வெயில் இப்போதும்கூட சுள்ளென்று அடிக்கிறது. இந்த இல்லாவிட்டால்
      எதிரே தொ¢யும் காடு இல்லை.... தூங்கிவழியும் இந்த சிவலிங்கம்
      கடையில்லை.... அந்த கன்னியில்லை...ஒன்றுமே இருக்காது. வெயில் வேண்டும் நன்கு
      எறித்து எ¡¢ந்து தள்ளவேண்டும்.
      கருணே செருப்பு சத்தம் சரசர கடைக்கு வருகிறான். ¡£ குடிக்கவா
      வரட்டுமே ஒரே வீச்சில் ஒன்பது ¡£ அடிக்கமாட்டேனா நான் அவனும் வெகு உற்சாகமாக
      இருக்கிறான். சீட்டி கூட அடித்துக்கொள்கிறானே கைச்சரக்கு தீர்ந்துவிட்டதா காசு
      சேர்ந்து விட்டதா சந்தோசம் கொண்டாட வருகிறானா...
      அப்பா இப்போதைக்கு வரமாட்டார். வராவிட்டால் போகட்டும் நானிருக்கிறேன் கடையை
      நடத்த. வேலை செய்வது ஒன்றும் பொ¢ய கஷ்டமான கா¡¢யமில்லையே
      ரெயில்வேலைனின் கூட்ஸ்ஒன்று போகிறது. கடையே அதிருகிறது...கடை அதிர...கடையில்
      நிலம் அதிர...நான்..அதிர...என்னோடு பொய்லர் அதிர... எதிரே வீதி
      ஆசுபத்தி¡¢ அந்த பெண் அதிர... ஷோக்கேஸ்கள் அதிர...சிவலிங்கம்
      இந்த அதிர்வுகள்கூட இவ்வளவு லயத்தை தேக்கிவைத்திருக்கின்றனவே
      இந்த சத்தத்தில் சிவலிங்கம் விழித்துக்கொள்கிறான். அவனது சோம்பல் முறியவில்லையோ
      சனியன் பிடித்தவன். மத்தியான வியாபாரநேரம் தூங்கிவழிகிறானே
      சிவலிங்கம்...டே சிவலிங்கம் என்ன நெடுக தூங்கிவிழுகிறாய் போ..போய்
      முசுத்தை கழுவிக்கொண்டுவா...இப்பிடிநெடுக தூங்கிவழிஞ்ச வாறவனும் சாப்பிடாமல்
      திரும்பி போடுவான்...
      ரெயில்வே லைனைக்கடந்து ஒருவன் போகிறான் காலை கடனை மத்தியானத்தில் கழிக்க
      கூட்ஸ்போன கையோடே போகிறான். இவ்வளவு நேரமும் கூட்ஸ் போகட்டும் என்று காத்து
      நின்றானா பயந்தாங்கொள்ளி பயம்...என்னபயம் சாவதற்கு....ஆறிலுஞ் சாவு நூறிலுஞ்
      இருந்தாற்போல றோட்டில் ஒருபஸ் போகிறது. வேகம் அவ்வளவாக இல்லை. ஆமைவேகத்தில்
      உருட்டுகிறானே பஸ்ஸை அடே சோம்பேறி பயலே வேகமாக உன்னால்
      வேகமாக ஓட்டு பஸ்ஸை பார்க்க எனக்கு பரமானந்தமாக இருக்கிறது. றோட்டில்
      சுறுசுறுப்பு விஷம்போல் ஏறுவதாக எனக்கு தோன்றுகிறது.
      ரேடியோவை திருகுகிறேன். சத்தம்...ஏகச்சத்தம். யாரோ ஸிக்சர் அடித்துவிட்டானாம்
      யார் பந்து வீசுவது மடயன். ஸிக்சர் அடிக்கும்படியாகவா
      வெங்கட்ராகவனின் பந்துவீச்சு என்ன அறிவிப்பாளன் சொல்கிறான். அவனுடைய குரலில்
      மிகுந்த உற்சாகம் தொளிக்கிறதா அவனுடைய குரலில்
      அவனுடைய குரலையும் மீறி சனங்கள் கத்துகிறார்களே உயரேபோன பந்தை பார்த்து குதூகல
      வெறியுடன் அவர்கள் குரவையிடுகிறார்களா கத்துங்கள் மகாசனங்களே
      உலகமெங்கும் உற்சாகத்தை விதை கத்துங்கள்
      வெங்க தமிழன் என்றால் என்ன எந்த கொம்பனாக இருந்தால்
      பாராட்டியே ஆகவேண்டும். ஸிக்சர் அடித்தவனுக்கு ஜே
      ------------------------------------------------------------------------
      2. கபரக்கொய்யாக்கள்
      சாதாரணமான எல்லா ஊர்களையும் போலவே இங்கும் ஓர் அரசமரம். நடந்து போகிறவர்களின்
      தலைகளை வருடிக்கொடுப்பதைப்போல கிளைகளை தாழ்ந்து தொங்கவிட்டபடி.
      கீழே அழகிய தூய பீடமொன்றில் கண்மூடி ஏதோ அதிசய உலகத்தை நிஷ்டையில் தா¢சிக்கும்
      புத்தனின் சிலை.
      ஒரு பள்ளிக்கூடம் ஏதோவொரு பாலிக மஹா வித்தியாலய என்று பெயர். பையன்களும்கூட
      போனார்கள்
      சிறு பஸ் நிலையத்திலிருந்து கடைத்தெரு தொடங்குகிறது. அங்கிருந்து சறுக்கீஸ்
      விட்டால் அந்தத்திலிருக்கிற கருவாட்டு கடையில் முடிவடைகிறமாதி¡¢ லாவகம் கொண்டு
      வளைந்து போகிற தெரு. பளபள வென்றிருந்தது. இருபுறமும் புகையிலையும்
      வெற்றிலையும் அ¡¢சி பருப்பு கருவாடு விற்கிற கடைகள். சங்கக்கடை. சாளியின்
      சாப்பாட்டு கடை ரெக்கோடிங் பார் ஒன்றுமிருந்தது. எனக்கு சுருட்டுக்கடையில் மூச்சு
      வாங்குகிறபடிக்கு வேலை நிமிர்ந்து பார்க்க நேரமில்லாத
      ஓட்டு வீடுகள் வலு குறைவு. களிமண்ணும் நெறியற்று போன காட்டு கம்புகளும் கொண்டு
      சுவரெழுப்பி தென்னங்கீற்றுகளால் வேய்ந்த வீடுகள் விசாலமாகவே இருந்தன.
      பொலிஸ் கிடையாது. உப தபாற்கந்தோருண்டு. வெள்ளியும் புதனும் முறை வைத்து
      கூடுகிற சந்தை. அரசமரத்துக்கு பின்னால் கூடாரங்களிட்டு கூறி விப்பார்கள். வாயகன்ற
      மண்பானைகளில் காய்ச்சிய தேங்காயெண்ணெய்யும் எருமைத்தயிரும் காற்றில் சுகந
      தாதுகளை பரப்பும்.
      அடிக்கடி நினைத்து கொண்டு மழை ஒரு பிடி பிடிக்கும் போகிற போக்கில் குசாலாக
      கண்ணடித்துவிட்டு போகிற விளையாட்டுக்கார பெண்ணைப்போல சில நிமிட நேரங்களில்
      ஓய்ந்து மறுபடி வானம் வெளிக்கும் துடைத்து ஏற்றிவைத்த சிம்னிவிளக்கு மாதி¡¢.
      எல்லோரும் ஆற்றுக்குத்தான் குளிக்கப்போவார்கள். நானும் அருளும் பாதி விடியுமுன்னே
      போவோம். அருள் சுருட்டுப்புகைத்தபடி சாளி கடைக்கு பக்கத்திலிருக்கிற முடுக்கில்
      நுழைந்து விடவிடென்று நடந்து போவான். தென்ன தோப்புகள் தொ¢யும். அழகியருத்தி
      ஒருக்களித்து சயனித்து கிடப்பதென நிலத்தை செதுக்கியிருந்தது.
      தோப்புகளுக்கிடையே பெயர் தொ¢யாத பற்றைகள். நம்மூ¡¢ன் பாவட்டை புதர்களை ஞாபகம்
      காட்டின. அந்த நெடி கிடையாது. தொட்டால் ஒடிந்துபோகிற தன்மையும் இல்லை. கம்புகள்
      வலு மிகுந்திருந்தன. இலைகளும் தோற்றமும் பாவட்டை மாதி¡¢. எறும்பூர்ந்த தடங்களென
      ஒற்றை சுவட்டு பாதைகள் வகிடெடுத்து தொ¢யும்.
      ஒரு பெண்ணின் மார்புகளை போன்று இலயிப்புடன் வளைந்தபடி ஏறி இறங்கும் ரோட்டு
      பளபளவென்று திடுமென முன்னேவி¡¢யும். இது கடைத்தெருவிலிருந்து குறுக்கே
      பி¡¢ந்துவருகிற பாதை மார்பின் நுனிக்காம்பில் வலதுகை பக்கமாக சுநீதா
      முதலாளியின் பேக்கா¢. இன்னும் போக ரோட்டுக்கு கீழால் கள்ளத்தனமாக வருகிற மாதி¡¢
      சளசள சத்தத்துடன் ஆறு எதிர்ப்படும். பெயர் தொ¢யாத ஆறு. தண்ணீ¡¢ல் களிமண் நிறம்
      நிமிர்ந்து பார்த்தால் எதிரே தொடத்தொட விலகி போகிறதென மலை சிகரமென்று
      ஆசைகாட்டும்.
      மாங்கொட்டை போட்டு தத்தி ஓடலாம் என பாறைகள் ஒழுங்கற்று தெற்று
      போன்று தண்ணீருக்குள் துருத்திக்கொண்டு நின்றன. கொஞ்சதூரம் இறங்கினால் ஆளுயரத்துக்கு
      ஜல் என்று நீர் சா¢ந்து விழுகின்றது. ஒரு யுகம் கழியட்டும்
      தலையை இதமாக திருப்பி திருப்பி கொடுத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கலாம்.
      உச்சியில் முத்தமிட்டு களைத்து பி¡¢ந்து போவதென ஓவென்று அழுதவாறு தண்ணீர் பாயும்.
      மற்றபடி எங்கும் போலவே இவ்வூ¡¢லும் சனங்கள். சனங்கள் ஒருசாண் வயிற்றுக்கும் ஒருமுழ
      துணிக்கும் ஆலா பறக்கிற சனங்கள்
      திண்ணிய மார்புகளை இறுக்கி காட்டும் ரவிக்கைகளை பூட்டி ஒற்றை சீத்தை
      துணிகளில் கம்பாயம் கட்டிய பெண்கள்.
      காய்ச்சிய தேங்காயெண்ணெய்யை பூசி தலைமயிரை வழித்தெடுத்து பின்னுச்சியில் சிறு
      பாக்களவு குடுமி வைத்திருக்கிற ஆண்கள் கடைசியில் களுசுருட்டு கேட்பார்கள்.
      ஏழு மணிக்கெல்லாம் கீழேயிருந்து மெதுவாக மேலேறிவரும் ரோட்டில் வெள்ளை புறாக்கள்
      மாதி¡¢ பள்ளிக்கூடம் போகின்ற குழந்தைகள். கொப்பிபொ உம் பன்சில்
      வேண்டுமென்றே சற்றுநேரம் வீணடித்துவிட்டு வாங்கி போகின்ற குமா¢கள்.
      இந்த கபரக்கொய்யாக்கள் மட்டும்....
      எந்நேரம் எங்கே தலைகாட்டும் என்று சொல்லமுடியாது. பெயர் தொ¢யாத அந்த பற்றைக்குள்
      சரசர வென்று அரக்கிக்கொண்டு போகும்.
      தலைக்கு மேலே சளசளவென்று தண்ணீர் விழ சுகம் சுகம்... என முனகிக்கொண்டே
      குளிக்கிறபோது வாயை பிளந்து கொண்டு துருத்தி தொ¢கின்ற மூஞ்சியில் மூக்குகள்
      வி¡¢ந்து துவாரங்கள் பெரும் பொந்துகள் என்று தொ¢ கள்ளத்தனமா கிட்டவே வந்துவிடும்.
      நேரம் காலமற்று சோடி சேர்ந்தபடியே தண்ணீருக்குள் ஊறி வெடித்துவிடும் என்று
      அச்சங்கொள்ள வைக்கும்படி இறுகி பிணைந்து புணர்ந்தபடியே புரண்டு
      நெறிவன.
      அரைத்தூக்கத்தில் உழன்று புரள்கின்ற போது எ¡¢ச்சல்மி கொள்ளும்படி முன் கதவில்
      படீர் என்று ஓசைஎழ வாலை தூக்கி சுழற்றி ஒரு சாத்து சாத்தும். வால் பட்டால்
      சதையை பிய்த்து எடுத்து காகங்களுக்கு விருந்து போடுகிறமாதி¡¢ என்ன ஒரு
      வலிமையான சொடுக்கல் கத்தி முனைகள் மாதி¡¢. செதில்கள் குத்திக்கொண்டு நிற்கும்.
      இன்னுமொன்று இருந்தது அசாதாரணமாக நெஞ்சில் துருத்திக்கொண்டு....
      கடைக்கு பின்னே தோட்டத்து லயன்கள்மாதி¡¢ வா¢சையா காம்பராக்கள் இருந்தன. நேரே
      அடுத்தது காமினி...மீன் வியாபா¡¢க்கு. சோமரத்னவுக்கு.
      காய்கறி வியாபாரம்...பிறகு லியனமாத்தய அப்புஹாமிக்கு...அதற்கும் அடுத்தது
      ஆ¡¢யவதி ஆமினேக்கு...மணக்க மணக்க அப்பம் சுட்டுத்தருவாள்...இப்படி...ஏழோ எட்டு
      கழிய கடைசி கோடியில் எங்களுக்கு ஸ்ரோர் புகையிலை சிப்பங்களும் சுருட்டு
      பெட்டிகளும் வழியவழிய அடுக்கிக்கிடக்க ஒரு சோடிக்கு படுக்க இடம் வசதிப்பட்டது
      போல் பொ¢ய மேசை...சுறுட்டுக்கு கோடா தடவுவதற்கு. மூன்றுபேருக்கு படுக்க பாய்
      வி¡¢க்க இடம் மீந்திருந்தது தரையில். பின்னால் ஒரு சாய்ப்பு இறக்கி காட்டு
      கம்புகளாலும் பச்சை மண்ணாலும் அறுக்கை பண்ணி தந்திருந்தார்கள். ஏறக்குறைய
      இதேமாதி¡¢ பக்கத்து அறைக்கு பின்னாலும் ஒரு சாய்ப்பு இறங்கியிருந்தது. தூய்மையான
      ஆற்றுமணல் சொரசொரவென்று பரப்பியிருந்தது. அதில் கோலமிழைத்தது போல ஒரு அழகிய
      பாதங்கள் நெடுகிலும் படர்ந்து இருந்தன. தொட்டு கண்களில் ஒற்றி ஒருகணம் மூடி
      அனுபவிக்க சொல்லும்படியாக.
      சுற்றிலும் அரைவட்டமாக புல்லு செதுக்கியிருந்தது. தென்னைக்கும் சாய்ப்பு
      உச்சிக்குமாக ஒரு வயர் ஓடியது இளைய பெண்ணொருத்தியின் ஆடைகள் பெரும்பாலும்
      அதில் வெயில் குளித்தன.
      இரவுகள் முற்ற தொடங்கும்போது சுருட்டுக்கு கோடாதடவ வேண்டும். முணு முணுக்...
      என்று மண்ணெண்ணெ புகையினை கக்கிக்கொண்டு விளக்கு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க
      அருள் சுருட்டு புகையுடன் சேர்த்து பொய்புழுகுகளையும் அநாயாசமாக ஊதி
      தள்ளிக்கொண்டிருக்க...கைகள் பரபரவென்று சுருட்டு கட்டுகளை பி¡¢த்து
      பி¡¢த்து-...கோடா சட்டிக்குள் தோய்த்துத்...தோய்த்து....
      இருந்தாற் போல இரவின் நிசப்தத்தை தொலைத்து விட்டு ஒரு பாடல் வரும். ஹ¤ம் என்று
      கூடவே சுருதி சேர்க்கிற ஆர்மோனியம் இழையும். மண்ணெண்ய்ப்புகை மயங்கி மயங்கி
      சுழலும் சுவர்களும் செவிகளுக்கு பின்னே கைகளை குவிப்பதென தோன்றும்
      புகையிலை சிப்பங்களும் சுருட்டு பெட்டிகளும் மரத்துப்போய் பெரும் கரு நிழல்களை
      சுவா¢லே படியவிடும்.
      நெலா கண்ன பா
      மகே அத்த திகெ நா
      அனே ஐ தவ மல் பிப்பிங்
      சீறும் நாக படத்தின் கவர்ச்சியென ஒரு குரல் அழகா கொலைசெய்யும். சொள
      தலையை முத்தமிட்டு கழிந்து போகும் நீரென சுவர்களை தழுவி இதமாகத்துளைத்து
      கொண்டு நாதம் பிரம்மமென பெருகும்.
      அழகிய மலர்கள் மலர்ந்து கொண்டேயுள்ளன
      எனது கைகள் பறிக்கவென நீளும்போது
      அவை கூழங் கைகளா போவதென்ன
      ஓ.... அழகிய மலர்கள்
      இன்னும் மலர்ந்துகொண்டே இருக்கின்றன.
      கல்லா மேசைமீது அரை தொடைகளில் சாய்ந்து உட்கார்ந்துகொண்டு நீலக்கல்லு மோதிரம்
      சிமிட்ட சுநீதாமுதலாளி தொடைகளில் தாளம் போடும்போது கேட்டேன்.
      ஆர் அந்த பெட்டை பக்கத்து காம்பராவிலை பாட்டு பாடிக்கொண்டு...
      அவளரு மாதி¡¢யான...பெட்டை...
      தனியவோ இருக்கிறவள்..
      சாய்...கனபேர் வந்து போவினமே...
      கனபேர் வந்துபோனார்கள்.
      கண்ணாடி போட்ட கொக்கென தொங்கலுடன் விசுக்கென நடந்துபோகும் ஒரு பெண்...
      டீச்சரம்மா என எனக்குள் கணக்கு போட்டேன்.
      கட்டை காற்சட்டை போட்ட ஒரு பையன் அம்மா மடியில் உட்கார்ந்து நிலாப்பார்த்து சோறு
      தின்னு...ராசா என்று சொல்லவேண்டும் போல இருக்கும்.
      பிறகு
      தடித்த கண்ணாடிக்கு பின்னால் ஆழப்புதைந்திருந்த விழிகளுக்குள் இருந்து பார்வை
      குத்தும்படி தாடிவைத்த ஒருவன்... காமா சோமாவென்று உடுத்துவான்.
      சாறனை தூக்கி கட்டியபடி...தொடைகளில் பிலு என்று உரோமம்
      தொ¢யும் ஒருவன்... தலைமயிர் நீக்ரோமாதி¡¢ சுருண்டிருக்கும்.
      மைம்மலாக இருள் மெதுவாக சூழும்போது வருவார்கள். இராப்பொழுதுகள் அவளுக்கு
      குறுகி போயின. சமையல் அன்றை போதுகளில் மணக்கும். தீய்ந்துபோகிற மீனின் வாசனை
      வரும்.
      மெதுவான உறுதியான குரலில் ஒரு பிரசங்கமென ஒருவன் பேசிக்கொண்டே போவான்.
      சனங்கள் பெரும் மர்மத்தை காண்பதை போல பார்த்தார்கள்.
      பெருங்கோட்டையன்றை பிடிக்கும் திட்டமொன்றுக்காக அவர்கள் உத்வேகத்துடன் இருக்கிற
      மாதி¡¢ தென்பட்டனர்.
      கோட்டைகள் பிடிபட்டன
      றேடியோக்கள் கறுப்புக்குரலில் க தொடங்கின. ஊர்களை அடங்கிப்போகுமாறு
      உத்தரவுகளை பிறப்பித்தன. சந்தைகளை வைத்து போயிற்று. ஆறு தனியே ஏக்கத்துடன்
      போனது கடைகள் கதவிடுக்குகளால் பீதியுடன் ரகசியம் பார்த்தனபோல தோற்றம்காட்டின.
      றோட்டில் குறுக்கும் நெடுக்குமாக பச்சை நிறத்தில் ட்ரக்குகளும் ஜீப்புகளும் தென்பட்டன.
      பின் கதவை திறந்து போட்டபடி ஸ்ரோருக்குள்ளேயே கிடந்தோம். கால் வைத்தால் தொடைகளில்
      கூச்சம் காட்டும் படி உயரே வளர்ந்த புல் கதவுக்கு வெளியே தொ¢ந்தது. வளைந்தபடி
      சூ¡¢யனை நோக்கி கையசைத்தபடி ஆற்றாமையுடன் தலைவி¡¢த்து காற்றை சாடும்
      தென்னைகள் அரற்றின.
      புல்லுக்குள் கால்வைக்க அடிவயிற்றுக்குள் பிசைகிற பீதி தொடையளவு அகன்ற கா¢ய
      பெரும் நாகங்கள் படர்ந்திருப்பன போல... கபரக்கொய்யாக்கள் எந்நேரம் எங்கே தலைகாட்டும்
      என்று உணராது தவிப்பதை போல...
      இராப்பொழுதுகள் நிசப்தமாய் நீண்டுகொண்டே போயின. பக்கத்து அறை பெரும்பாலும் மூடியே
      கிடந்தது. பின் சாய்ப்புக்குள் மட்டும் கால்கள் கோலமிழைத்து தொ¢ந்தன.
      ஒரு முழுநிலவு நெருங்கி வந்தது. கடைக்குள் போய் சில சாடின் ¡¢ன்களை
      தூக்கிக்கொண்டு வந்திடும் அவசரம் எனக்கு தொற்றியது.
      பக்கத்து அறையின் முன்கதவு ஒருபாதி திறந்துகிடந்தது. சுவா¢லே இறுக்கிய சிறு
      மர பீடத்தில் புத்தன் உலகை மறந்த மோனத்தில் மூழ்கி போ கிடந்தான். ஒற்றை தீபம்
      ஒன்று அரையிருளில் சோபை இழந்து துடித்து கொண்டிருந்தது.
      மண்டியிட்டு ஒருக்களித்தவாறு ஒரு கையை தரையில் ஊன்றிய படி அவள்... முகத்தில்
      ஒருகோடி சூ¡¢யர்கள் உதயமாகி கொண்டிருந்தார்கள்.
      ஒரு கட்டில் வெள்ளை வி¡¢ப்பு மேசை குவிந்து கிடந்த புத்தகங்கள்.
      ஒன்றை மூடி கவிழ்ந்தபடி ஒரு தடித்த கிளாஸ். சுவரோடு ஒட்டி பதிக்க அலுமா¡¢
      ஒன்று.
      மற்றபடி எங்கும் தூய்மை.
      மெதுவாக தயங்கி தயங்கி உதயமாகும் நிலவை எதிர்பார்த்து காத்திருந்தாள் போல...
      நண்பர்களை எண்ணி துக்கித்திருந்தாள் போல...
      இரவு பிசாசுபோல துரத்திக்கொண்டு வந்தது. நிலவு தனித்துப்போய் இராப்பாராக்காரனாக
      ஒளியிழந்து ஊர்ந்து போய்க்கொண்டிருந்தது.
      குழம்பி குழம்பி உழன்றபடி சொப்பனாவஸ்தை கொடுக்கின்ற நித்திரை. கபரக்கொய்யாக்கள்
      வாலை சுழற்றி காற்றில் விசுக்குகிற சத்தங்கள் கேட்டன.
      சிறு தொலைவில் ஏதோ உறுமியது. பதில் சொல்வதுபோல இன்னுமொன்று. உறுமி
      நெருங்கி வருவனபோல்...
      வெளியே சப்பாத்து கால்களில் சந்தடிகள் திமுதிமு என்று கேட்டன. கதவை உதைத்து
      திறந்தார்கள்
      அரைத்தூக்கத்தில் உழன்று புரள்கின்ற போது எ¡¢ச்சல் மி கொள்ளும்படி கதவில் படீர்
      என வாலை தூக்கி சுழற்றி ஒரு சாத்து சாத்தும் கபரக்கொய்யாக்கள் போல...
      மொடமொட வென்று எல்லாவற்றையும் கொட்டி கவிழ்த்தனரென... கட்டிலை கொரகொரென
      இழுத்து தள்ளுவதென..ஏதோ ஒரு இனிய வஸ்து நிலத்தில் படீரென வீசப்பட்டு சிதறுண்டு
      போனது போல...
      காட்டு கூச்சல்களாக கேள்விகள் உறுக்கின.
      தலைக்குமேலே சளசளவென்று தண்ணீர்விழ திளைத்து களிக்கினபோது கள்ளத்தனமாக
      அசிங்கத்தை வீசிக்கொண்டு கிட்டவே கபரக்கொய்யாக்கள் வருவதென......
      ....ஏதோ ஒன்று....
      எந்நேரமும் சதா துள்ளலுடன் கூ¡¢ய கொம்புகளால் பூமியை உழுது கொண்டு பீ¡¢டும்
      வீ¡¢யத்தை ஒடுக்க இயலாது தவித்தபடி பிணையல்களை அறுத்துவிட உன்னிடும் ஒரு
      காளை...பிணையல்களை அறுத்துவிட....
      பூமியில் விழுத்தி புரட்டினார்களென...மூஞ்சியில் ஒருவன் பாரமா குந்தியிருக்க
      கால்களை அகலவே பி¡¢த்து அமுக்க... தொடைகளின் நடுவே...தொடைகளின் நடுவே...
      வலிய கம்புகளால் விதைப்பைகளை நசித்து காயடிப்பதேயென.... பொறுக்க முடியாத
      வலியுடன் பீதியும் சேர்ந்து இயலாமையுடன் அவலமும் சேர அடிவயிற்றிலிருந்து நாதியற்ற
      அப குரல் எழுந்தது. சுவர்கள் அதிர்ந்தன.
      கால்களை படபடவென்று தரையில் போட்டு அடித்தான் போலும். குரல் தேய்ந்து
      போக...இறுதிக்கணங்களில் சில முனகல்களே மிஞ்ச அதுவும் போய்...
      பிறகு
      வேகமாக மூச்சு வாங்கும் சப்தம் மட்டும்.
      நிலவு மிகவும் பயந்து போய் முகம் வெளிறி மேற்கே ஓடி சென்றது. சூ¡¢யன் சீறி
      சினந்தபடி சிவப்பு பந்தென எழுந்துவந்தான்.
      முரட்டு பூட்ஸ¤கள் தாம் தூமென பூமியில் தடமுழுது சென்றன. கூந்தலை பற்றி வலிந்து
      இழுத்தபடி சென்றனர்.
      புயலில் உருக்குலைந்த ஒரு கொடி போனது தொடைகளில் நடுவிலிருந்து குருதி
      பெய்தபடி...
      சனங்கள் கந்தையை மறந்துபோய் இதை பார்த்தபடி நின்றனர். கையினால் ஒரு சொடக்கு
      போடும் நேரத்தில் ஒன்று...பத்து...நூறு...கோடியென கபரக்கொய்யாக்கள் பெருகின.
      காலம் நேரமற்று முழுநாளும் புணர்ந்தவாறு தண்ணீருக்குள் நெடுநேரம் புரள்கின்ற...
      தனைமறந்து அருவிப்பெயலில் தலைமுழுகி சிலாகிக்கும்போது நீட்டிய மூஞ்சியில்
      மூக்கு துவாரங்கள் பெரும் பொந்துகளென தொ¢ய...
      பற்றைகளுக்குள் சரசரவென அரக்கிக்கோண்டு ஏதோஒரு இரையை குறிவைத்து கவ்வவென வாயை
      ஆவென பிளந்தபடி கள்ளத்தனமாக....
      எங்கணும் கபரக்கொய்யாக்கள் பெருகின குட்டியும் முற்றலுமாக...
      சனங்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
      வாலை சுழற்றி ஒரு வலிந்த சொடுக்கலில் சதையை பிய்த்தெடுத்து காகங்களை
      கபரக்கொய்யாக்கள் விருந்துக்கழைத்தன
      சனங்கள்.
      காமினி அப்புஹாமி ஆ¡¢யவதி ஆமினே....
      சுநீதா முதலாளி....அருள்... சாளி
      சனங்கள்
      ஒருசாண் வயிற்றுக்கு ஆலா பறக்கிற சனங்கள்
      சனங்கள் சும்மா பார்த்துக்கொண்டே இருந்தார்கள்
      கபரக்கொய்யா-
      இது முதலைக்கு தம்பி உடும்புக்கு அண்ணன் முதலையை போல அவ்வளவாக தீங்கற்றது.
      ஆனால் உடும்பை போல சாதுவும் அல்ல. நீ¡¢லும் நிலத்திலும் உயிர் வாழும்.
      மலைப்பாங்கான ஆற்றோர காடுகளில் மிகவும் பெருவா¡¢யா காணப்படும். அசிங்கங்களை
      உண்டு உயிர்வாழும். சிங்கள பகுதிகளில் இதை அதிகமா காணலாம்.
      ------------------------------------------------------------------------
      3. காலம் உனக்கொரு பாட்டெழுதும்
      வெகுநாட்களுக்கு பிறகு இன்று குளியல். இன்றை போத்தின் உதயகாலமே புதிய
      தோற்றத்துடன் எழுந்தது. மிகவும் வித்தியாசமாக ஒரு சித்திரை மாதத்தின் கதகதப்பான
      விடியலாக இன்றி சற்றே குளிரூட்டியபடி ஒவ்வொரு மயிர்க்காலிலும் நுழைந்து கிச்சு
      கிச்சு மூட்டுகிற குளிர்.
      இளவெயிலில் பசைபரவிய பெருமிலைகளை வி¡¢த்து காட்டியபடி எங்கு பார்த்தாலும்
      புகையிலை தோட்டங்கள் தொ¢ந்தன. கனவேகமாக நீரை உமிழ்ந்து கொண்டிருந்தன வாட்டர்
      பம்ப்புகள். புகையிலையின் இனிய மயக்கந்தரும் நெடியுடன் சேர்ந்து மண்ணென்ணெய்
      எ¡¢ந்துபோகிற புகை கதம்பமாய் மணத்தது.
      அருளுக்குத்தான் முதலில் ஐடியா வந்தது. சட்டென எழுந்துபோய் சேட்டை கூட கழற்றாமல்
      தலைவழி நீர் சொ¡¢யுமாறு குத்துக்காலிட்டு உட்கார்ந்து விட்டான். எல்லாரும்
      கோணாமலையை திரும்பி கேள்வியோடு பார்த்தார்கள். கோணாமலைக்கு ஏன் எந்தநேரமும்
      சிவந்தே போயிருக்கின்றன கண்கள் இறுக மூடிய மெல்லிய உதடுகளுக்குள் எப்போதும்
      கோபமும் ரோஷமும் ஒளிந்திருப்பதாக தோன்றும். முகம் கருங்கல்லு மாதிரி
      விசித்திரமானதொரு பளபளப்புடன் கடினமாகவிருக்கும்.
      கோணாமலை இன்று காலை சிவந்த கண்களால் சி¡¢த்தான். பொளபொள வென பாய்கின்ற
      நீர்த்தாரையில் ஒருசிறு குழந்தை மாதி¡¢ தலையை உதைத்து கொண்டிருந்த அருளை ஒரு
      தந்தையின் கனிவுடன் பார்த்தான்.
      ஓராள் கடைசியிலை குளிக்கலாம்
      அப்பா இது என்ன குரல் பேசாதவாய் பேசுகின்ற போது ஒவ்வொரு சொல்லிலும் மிகுந்த
      அழுத்தம் தொ¢கின்றது.
      மைக்கேல் உட்கார்ந்தான்.
      கோணாமலை கேதா¡¢ பொ¢யண்ணன் பெருமாள் யோசே அன்பரசன். பிறகு இவன்...
      எல்லோரும் உறுமிக்கொண்டிருந்த வாட்டர்பம்பை நோக்கி போனார்கள்.
      மைக்கேல் செய்திகளை சேகா¢க்க உட்கார்ந்திருந்தான்.
      சனங்கள் இவர்களை ஒருதரம் நிமிர்ந்து பார்த்தார்கள். பிறகு தலையை குலுக்கி கொண்டு
      தம்பாட்டில் வேலையில் ஆழ்ந்தார்கள். பத்தோ பன்னிரண்டோ வயதிருக்கும் ஒரு சிறுபையன்
      கையில் சோப்புப்பெட்டி குலுங்க இவர்களை நெருங்கி ஓடிவந்தான். நீட்டியபடியே நின்றான்.
      இவர்கள் சட்டை செய்யாதவர்களென உடம்பை தேய்த்துக்கொண்டிருந்தார்கள்.
      கோணாமலை நிமிர்ந்து பார்த்தான். பையனின் விழிகள் வாங்கிக்கொள்...வாங்கிக்கொள் என
      கெஞ்சும் பாவனை காட்டின.
      அருள் சோப்பை வாங்கு.
      அருள் தலை தோள் தொப்புள் தொடை பாதம் எங்கும் சோப்புநுரை பொங்கி வழிய இளிக்க
      வாரம்பித்தான். அருள் கொஞ்சம் குஷாலான பேர்வழி. இவனுக்கு அந்தரங்கம் எல்லாம்
      சொல்லுவான். ஒருமுறை இவனும் அருளும் சைக்கிளில் டபிள் அடித்து கொண்டு அவசர
      அலுவலாக போனார்கள். சீமைக்கிழுவை மரங்கள் பூத்திருந்த ஒரு உயரவேலிக்கு பின்னே
      கம்பீரமாக உயர்ந்து தொ¢ந்த ஒரு வீட்டுக்கு முன்னால் போகையில் அருள் இவன் விலாவில்
      இடித்தான்.
      என்ரை ஆளின்ரை வீடு... எனக்காதினுள் கிசுகிசுத்தான்.
      ..........
      எப்பிடி வீடு....
      வீடு...நல்லாத்தான் இருக்கு.....
      ஆளை நீ பார்க்கயில்லை...பாத்தாலெல்லோ தெரியும்...
      .......
      ஹ¤ம்....எல்லாம் நல்லபடியா முடிஞ்சு.....நானும் உயிரோட இருந்தா....
      இருந்தா.....
      ஹ¤ம்
      இவன் திரும்பி அருளின் முகத்தை ஏறிட்டு பார்த்தான். லோக செளந்தர்யங்கள் யாவும்
      அருளின் இறுகிய முகத்தில் ஒரு வினாடி பூத்திரு கண்டான். இவனும் அருளுக்காக
      ஒரு பெருமூச்சை உதிர்த்தான்.
      ஒரு கணம் தான்
      பிறகு அருள் மாறிவிட்டான். கண்களில் பழைய இறுக்கம் பரவியது. கால்கள் கனவேகமா
      சைக்கிளை உழக்க வாரம்பித்தன. ஒரு உண்மையான ஊழியன்
      வெகு காலத்திற்குப்பிறகு இன்று அருமையான சாப்பாடு. எந்த மகராசி கைகளோ
      மணக்கிற சமையல். அருள் கைகளை வழித்து வழித்து சூப்பியபடி இவனை பார்த்து
      கண்களை சிமிட்டி இளித்தான்.
      ஒவ்வொரு பெண் கைச்சமையலுக்கும் ருசி இருக்கிறது. என்றாலும்
      எளிமையான சமையலின் ருசி வேறெவருக்கும் வாய்க்காது. அம்மா கையால் வெந்நீர் தந்தாலே
      அதற்கு தனி ருசி இருக்கும். மெல்ல இருள் சூழும் போதுகளில் அம்மா கோவிலால்
      அவளுக்கு வலுக்கட்டாயமாக வெள்ளைச்சேலை உடுத்தி வன்மத்துடன் வேடிக்கை பார்த்தன. அம்மா
      தலை முழுகி ஈரக்கூந்தலை நுனியில் முடிந்து போட்டபடி ஒவ்வொரு நாள் மாலையிலும்
      கூந்தலிலிருந்து நீர் சொட்டி சொட்டி வெள்ளைச்சேலையின் பின்புறம் நனைந்தபடி
      தோற்றம்காட்ட அம்மன் கோயில்களை தேடிப்போக ஆரம்பித்தாள். திரும்பவரும்போது அம்மா
      மேனியில் கற்பூர வாசனை வீசும். அம்மா போ¢ல் அம்மன் குடியேறி வருவாள் போல பார்க்க
      பயமாகவும் அழகாகவும் இருக்கும்.
      அம்மா மச்சம் மாமிசம் சேர்ப்பது கிடையாது. இருட்டிய பிறகு தனியாக செங்கல்
      அடுப்பைமூட்டி தனி சமையல். ஒரு நேரம் மட்டுமே கொஞ்சம் போல சாப்பிடுகிற
      அம்மாவால் எவ்வாறு இப்படி பம்பரமாக சுழன்று கா¡¢யம் பார்க்கமுடிகிறது மிகவும்
      குழைந்து போ கஞ்சி பசையுடன் சோறும் ஏதோ ஒரு காயை வதக்கி வறட்டலாக
      குழம்பும் கடித்துக்கொள்ள அப்பளம் உண்டு கட்டாயமாக.
      நொடிக்குள் சமைப்பாள் அம்மா. இவன் நாவில் நீர் சொட்டச்சொட்ட காத்திருப்பான். அம்மா
      தோளளவு உயரமிருப்பாள். வெள்ளா¢ப்பழத்தை பிளந்து வைத்திருக்கிற மாதி¡¢ ஒரு
      நிறமும் குளுமையும் அம்மாவுக்கு. அம்மா அந்தக்காலத்தில் பேரழகியாக இருந்திருக்க
      வேண்டும். அதுதான் நிறை குழந்தைகள் பெற்றாளோ தோல்வற்றி நடை மெல்ல தளர்கிற இந்த
      வயதிலும் அம்மா கண்கள் ஜோதியென ஜொலிக்கின்றன.
      இவன் நிமிர்ந்து வீம்பாக நிற்பான் கண்களால் அம்மாவ பார்த்து கனி சி¡¢த்தபடி.
      அம்மா அண்ணாந்து இவன் நெற்றியில் திருநீறு பூசிவிடுவாள்.
      அம்மாளே... ஆத்மார்த்தமாக வேண்டுகிற அம்மா குரலில் இவன் கரைந்து போய் விடுவான்.
      கற்பூரம் எ¡¢ந்த மீதியின் வாசனையும் சூடுமாக ஈரலிப்பாக அம்மா நெற்றியை தீண்டுகிற
      போது வாசனை நாசியை நிரப்ப இவன் சிலிர்ப்பான். அம்மா மூச்சு ஒருகணம்
      பட்டுவிலகும். இவனுக்கு உடனே பசியெடுத்துவிடும்.
      சுலோசனா அக்கா அவசர சமையல் இவளுக்கு எதிலும் அவசரம் என்னத்தை கண்டாளோ இந்த
      அத்தானிடம். மகுடி கேட்ட நாகம்போல மயங்கி கிடக்கிறாள். அக்கா நிறையக்கறிகள்.
      வைத்திருப்பாள் நிறை குழந்தைகளை பெற்றது போலவே ஒன்றுக்கு உப்புக்கூடினால்
      இன்னொன்றில் உப்பே இருக்காது. மீன்குழம்பு மட்டும் அசலாக வைத்திருப்பாள்.
      எல்லாவற்றையும் சேர்த்து கலந்துவிட ஒரு அபூர்வ ருசி பிறக்கத்தான் செய்கிறது.
      சுலோ அக்கா வீட்டுக்கு இவன் கடைசியாக போனநாளே மறந்துவிட்டது. அத்தான்
      முணுமுணுத்தபடி சட்டென்று முகத்தை திருப்பிக்கொண்டு போனான். இந்த அத்தான் ஒரு
      சா¢யான சேற்று எருமை காட்ஸ் அடிக்கிறதையும் கடமைக்காக ஏதோ வேலைக்கு
      போவதையும் மீதி நேரமெல்லாம் ஒரே குடியையும் தவிர இவன் எதை சாதித்தான் சுலோ
      அக்காவை வருஷம் தவறாமல் அம்மாவாக்குகிறதில் மட்டும் படுசமர்த்தன். சுலோ அக்கா இதழ்கள்
      வெடித்து மார்பு வற்ற வதங்கிய கத்தா¢க்காய் போல ஆகிவிட்டாள். அத்தான் மீண்டும் ஏதோ
      வாய்க்குள் கசமுச என்றான். போனால் போகட்டுமே இவன் அக்காவை பார்க்க தானே வந்தான்.
      இருக்கிறதுகளுக்கும் வீண் கரைச்சல்...
      அத்தான் வெளிப்படையாகவே கொக்கா¢க்க ஆரம்பித்தான். அக்கா நாக்கை கடித்தபடி இவனை
      குசினிக்குள் இழுத்து போனாள் இவன் கைகளை விடாமல் இறுக பிடித்து கொண்டேயிருந்தாள்.
      சாப்பிடுகிறியடா... தளதளக்க கேட்டாள். இவன் நிமிர்ந்து பார்க்க சக்தியற்று
      போனதால் மெளனமாக உட்கார்ந்தான். அக்கா மளமளவென்று சாப்பாடு போட்டாள். பிசைந்து
      பிசைந்து இவன் கைகளில் கொடுக்க ஆரம்பித்தாள்.
      அக்கா மூக்கை உறிஞ்சுவது கேட்டது.
      அம்மா கோயிலுக்கு போவதை விட்டுட்டா....
      ......
      அம்மா கோயிலுக்கு போறதையும் விட்டுட்டா...
      ......
      அம்மா கோயிலுக்கு.... அக்கா குரல் உணர்ச்சிவேகத்தில் உடைந்து கீச்சிட ஆரம்பித்தது.
      இவன் கையை உதறிவிட்டு வேகமாக வெளியே போக ஆரம்பித்தான்.
      கையை கழுவவிட்டு போடா... அக்கா கடைசியில் அழுகை வெடிக்கிற குரலில்
      அழைத்தாள். இவன் திரும்பிப்பார்க்க விருப்பமில்லாமல் உள்ளங்கைகளை இறுக பொத்தியபடி
      காற்றை குத்தியபடியே போனான்.
      அக்கா குமுறி குமுறி அழைத்தபடி இவன்பின்னே வரும் அரவம் கேட்டது. காதை பொத்தி
      கொள்ள வேண்டும் போலிருந்தது.
      இனிமேல் ஒரு வீட்டுக்கும் போக மாட்டேன் இவன் காற்றுக்கு சபதம் செய்து கொடுத்தான்.
      ஒருதரம் நான்கு மெயின் ரோட்டுகளுக்கும் உள்ள பொ¢ய பாலங்களை உடைத்துவிட்டு
      போய்விட்டார்கள்
      கோணாமலை ஆட்களை பி¡¢த்து பி¡¢த்து விட்டான். இவனுக்கு வடக்கு ரோட்டு
      டிராக்டர்களில் மண்ணையும் கல்லையும் கொண்டுவந்து குழிகளை சனங்கள் பீதியால்
      பரபரத்தபடி நிரப்பினார்கள்.
      இவன் காவல் ரெடியாக நின்றான் சுறுசுறுப்பும் பொறுப்பும் மிக்கவனாக
      சுற்றுமுற்றும் பார்த்தபடி வான்களும் பஸ்களும் பாரத்தை குறைத்து பள்ளத்தில்
      மெதுவாக இறங்கி இறங்கி போயின.
      யாரோ இவன் முழங்கையில் இதமாக பற்றினார்கள்.
      திரும்பிப்பார்த்தான்.
      சுந்தா¢யக்கா
      விந்தி நடக்கிற சுந்தா¢யக்கா உதயகாலத்தில் பஸ்பிடித்து வேலைக்கு
      மாலை மயங்கி இருள்சூளும் நேரங்களில் வீட்டுக்கு போய்ச்சேர்கிற சுந்தா¢யக்கா அம்மா
      பதைபதைப்புடன் வாசலை பார்த்தபடியே நிற்பாளோ இந்த விந்தல் கால் மட்டும்
      இல்லாவிட்டால் இந்திரன் சந்திரன் எல்லாரும் கந்தா¢யக்கா பின்னால் வா¢சையாக காத்து
      நிற்க மாட்டார்களோ உதயகாலத்தில் பஸ்பிடித்து வேலைக்குப்போய் இருட்டியபிறகு
      வீட்டுக்கு போய்ச்சேர உறுதியுடன் பழக்கப்படுத்தி கொண்டாள் சுந்தா¢யக்கா.
      சுந்தா¢யக்கா இவனையே பார்த்தபடி நிற்க... இவன் பராக்கு பார்ப்பவன் போல வேறெங்கோ
      பார்த்தான். பஸ் மெல்ல பள்ளத்தில் இறங்கி கொண்டிருந்தது. சுந்தா¢யக்கா மேலும் இவனை
      நெருங்கி நின்றாள். கைப்பையை திறந்து சில நோட்டுகளை இவன் பொக்கெற்றுக்குள்
      திணித்தாள். இவன் திரும்ப அவள் கைகளுக்குள் திணிக்க... ஆற்றாமையுடன் இவனையே பார்த்தாள்.
      வச்சிரன்ரா...
      வேண்டாம்...எனக்கொண்டும் வேண்டாம்.
      சுந்தா¢யக்கா இவனை மேலும் கீழுமாக பார்த்தான். பறட்டை பற்றிப்போன
      தலைமுடியிலிருந்து வெயிலும் மழையிலும் அலைந்து தி¡¢ந்த கால்வரை செம்புழுதி
      படிந்திருந்தது. சாறனை உயரத்தூக்கி தொடை தொ¢யுமளவுக்கு முடிச்சுப்போட்டு
      இருந்தான். சே தோள்மூட்டில் பி¡¢ந்திருந்தது-
      ஒரு சேட்டாவது வாங்கலாமெல்லே...
      .....
      வச்சிரன்ரா...
      அக்கா....பார்...பஸ் வெளிக்கிட போகுது...
      பொ¢ய கண்கள் சுந்தா¢யக்காவுக்கு. இவனை உறுத்துப்பார்த்தாள். கண்களுக்குள் இவனை
      சிறைப்பிடித்து கொண்டு போய்விடும் உத்வேகத்துடன் பார்த்தாள். கன்னங்களை நனைத்து
      கொண்டு பாயுமாறு இரு வைரச்சொட்டுகள் உருக வழிவதென சிந்தினாள்.
      திரும்பி திரும்பி பார்த்தபடி சுந்தா¢யக்கா போனாள். கடைசி ஆளாக விந்தி விந்தி
      போய் பஸ்ஸில் ஏறினாள். பின்புற கண்ணாடியூடாக இவனையே பார்த்து கொண்டு நின்றாள்.
      இவன் தற்செயலாக திரும்புபவனென அந்தப்பக்கம் பார்த்தான்.
      பின்புறக்கண்ணாடி முழுவதும் விசாலித்தபடி சுந்தா¢யக்காவின் பொ¢ய கண்களை கண்டான்.
      இவன் சட்டென்று மறுபுறம் திரும்பிக்கொண்டான்.
      சொந்த உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்க மாட்டேன்
      காற்றிடம் சபதம் செய்தான்.

      இன்று எல்லாம் அசாதாரணமான புதியதோற்றம் காட்டின. திளைத்து குளித்த மேனியை
      குளிர்காற்று தழுவிக்கொண்டு போயிற்று. இவன் வானத்தை நிமிர்ந்து நோக்கினான். பளி
      செனும் நீலவானில் பஞ்சு பொதிகள் மிதப்பதன்ற அழகிய சித்திரைவானம் இன்றில்லை.
      மழைக்கோலம் காட்டிற்று. காற்று இறுக்கமாக இருந்தது. மெல்லமெல்ல கிழக்கு
      மூலையிலிருந்து இருண்டமேகங்கள் பரவி கொண்டிருந்தன.
      மைக்கேல் சேதி சொன்னான்
      தெற்கு றோட்டாலை சாமான் வருகுதாம்...நாங்கள் இடையிலே மாத்தி கொண்டு
      வரவேணுமாம்....
      கோணாமலை விருட்டென எழுந்தான். படபடவென சில உத்தரவுகளை போள்ளான்.
      தெற்கு றோட்டுத்தானே...பயமில்லை.....கனசாமான் வேண்டாம்....ஆளுக்கொண்டு போதும்.....
      பெருமாள் வெகிக்கிளை எடு....மழைவரும்போல கிடக்கு...சாமான் நனையாமல் கவனமாக
      மாத்தவேணும்....
      யோசே இஞ்சேயே இருக்கட்டும்....
      பெருமாள் ஒரு அருமையான ட்ரைவர் ரோட்டுகளை ஒவ்வொரு அங்குல அங்குலமாக படித்து
      வைத்திருந்தான். குண்டும் குழியுமாக இருக்கும் ரோட்டுகளிலே கியரை மாற்றாமலே
      ஒடித்து வெட்டியபடி பறந்து செல்ல முடியும் பெருமாளால்.
      பெருமாளுக்கு பக்கத்தில் கோணாமலை தாவி ஏறினான். அவனுக்கு
      இவன் ....கேதா¡¢...அருள்....அன்பரசன்.....மைக்கேல்.... பின்புறம் புகுந்து
      கொண்டார்கள். இவன் கதவுக்கு பக்கத்தில் உட்கார்ந்திருந்தான். பெருமாளை தவிர
      எல்லோருடைய உள்ளங்களிலும் பொத்தியபடி சாமான் இருந்தது. ரெடியாக இருந்தார்கள்.
      செம்புழுதியை கிளப்பியவாறு பாய்ந்து செல்ல வாரம்பித்தான் பெருமாள் வானம்
      ஒருமுறை பொ¢தாக உறுமிற்று.
      இன்னும் கொஞ்ச தூரத்தில் மெயின்ரோட்டில் ஏறிவிடலாம். சட்டென்று செங்கோணத்தில்
      திரும்பவேண்டும். பெருமாள் கியரை மாற்றுவதற்க ஆயத்தமானான். சந்திக்கும் இடத்தில்
      கிழட்டு ஆலமரத்தின் நிழலில் சனங்கள் கூடிநின்றார்கள். பெருமாள் வேகத்தை குறைத்து
      கொண்டான்.
      கண்கள் பெரும் ஒளிவெள்ளத்தில் கூசின. உச்சியிலிருந்து கீழ்வானம் நோக்கி படர்கிற ஒரு
      கொடியாக மின்னல் பளபளத்த படி இறங்கிற்று. வானம் மீண்டும் ஒருதரம் வஞ்சனையுடன்
      கனைத்தது. பெருமாள் தடுமாறினான். ஒரு கணம் நிதானித்தான்.
      படபடவென ஏதோ முறிந்து விழுகின்ற பொ¢யகிளையன்று ஓவென அலறியபடி பூமியை
      அறைந்தது.
      சனங்கள் முகத்தில் பெருங்குழப்பம் பரவிற்று. கோணாமலை முன்னேபோ என்றான். பெருமாள்
      கிளச்சை ஊன்றி மிதித்தான்.
      கோழை வழிகின்ற ஒரு திரைத்த கிழவன் கைகளை ஆட்டிக்கொண்டே முன்னே வந்தான்.
      மக்காள்...
      கோணாமலை என்ன என்பவனென பார்த்தான்.
      ஆல் முறிஞ்சு விழக்கூடாது மக்காள்...போறபயணம் ஆபத்து மக்காள்.
      அருள் கெக்கெலி கொட்டி சி¡¢க்கவாரம்பித்தான்.
      எங்களுக்கு ஒவ்வொரு நிமிசமும் ஆபத்து தானேணே அப்பு....
      கிழவன் பா¢தாபமும் பச்சாத்தாபமும் வழிய இவர்களை பார்த்தான்.
      பெருமாள் லாவமாக திரும்பியபடி மெயின் ரோட்டில் ஏறினான். மீண்டும் ஒரு மின்னல்
      அடிவானம் நோக்கி இறங்கிற்று. காற்று மிகவும் கனமாக இறுக்கிக்கொண்டே போனது. என்ன
      இது இன்று எல்லாம் அசாதாரணமாக மாறிவிட்டன. தென்கிழக்கு மூலையிலிருந்து
      சித்திரைமாதம் என்பதை மறந்துபோய் படுவேகத்தில் ஊதல்காற்று வீசிக்கொண்டிருந்தது.
      பெருமழை வரப்போகுது பெருமாள்...கெதியா...பெருமாள் பலங்கொண்டமட்டும் மிதித்தான்.
      சனங்கள் பரபரத்தவாறு வீடுகளுக்குள் புகுந்து கொண்டிருந்தார்கள். பருவ தப்பி
      பெய்யும் மழையை ஆச்சா¢யமும் ஆவலுமாக வரவேற்கும் பாவம் அவர்கள் முகங்களில் தொ¢ந்தது.
      இவர்களின் வான் உறுமிக்கொண்டே செல்வதை வாசல்களில் நின்று கவனமாக பார்த்தார்கள்.
      கனத்த பெருந்துளிகளாக மழை இறங்க ஆரம்பித்தது. கண்ணாடி மங்க தொடங்கிற்று. கனவில்
      தொ¢யும் தோற்றமென ரோட்டும் மரங்களும் விசித்திர தோற்றம் காட்டின. பெருமாள்
      வைப்பரை போட்டான்.
      வேலை செய்யவில்லை....
      பெருமாள் இலகுவில் சளைத்து விடுபவனல்ல. கும்மிருட்டை ஊடுருவி பூனையை போல
      பார்க்க இவர்கள் பழக்கப்படுத்தப்பட்டவர்கள். கூர்ந்து பார்த்து கொண்டே போனான்.
      என்ன மாதி¡¢ ஒரு மழை இவன் தனது வாழ்நாளில் காணாத மழை. புழுதி அடங்கி போகிற
      வாசனை மிகுந்தது. இவன் நாசி நிறைய வாசனையை வாங்கி அனுபவித்தான். காலைத்தூக்கி
      முன்சீட்டில் இலகுவாக வைத்துக்கொண்டான்.
      சட்டென்று ரோட்டு வெறிச்சோடி போகிறது. ஏனோ சனங்கள் எவரும் இல்லை. மழைதான்
      காரணமோ என்னவோ எதிரே ஒரு வாகனம் கூட வரவில்லை. கொட்டும் மழையில் சளைக்காமல்
      நனைந்தபடி ஆடி ஆடிப்போன ஒரு கிழட்டு எருதைத்தவிர வெறிச்சோடும் ரோட்டு.
      மூர்க்கத்தனமாக பூமியை மூழ்கடிக்கும் ஆவேசத்துடன் அம்புகளாக மழை
      வீழ்ந்துகொண்டிருந்தது. வானம் எச்சா¢க்கிறமாதி¡¢ அடிக்கடி பெருமிடிகளை
      கொடுத்தது. கூடவே உச்சியிலிருந்து கீழ்வான நோக்கி வானத்தை கூறுகளாக பி¡¢க்கும்
      கூர்வாளென பாயும் மின்னல்.
      இவர்கள் எல்லோருக்கும் ஏனோ மயிர்க்கால்கள் குத்திட ஆரம்பித்தன. இதைவிட குருதியை
      உறையவைக்கும் குளிரை தாங்க இவர்கள் பழகிக்கொண்டவர்கள். ஆனால் இன்று என்னவாயிற்று
      எலும்பு குருத்துக்குள் ஊடுருவி புகுந்து கொள்கிற குளிர்.
      அருள் கைகளை தேய்த்து சூடாக்கினான். நெஞ்சுக்கு குறுக்கே கைகளை கட்டி
      கொண்டான். இவனை பார்த்து இயல்பான தோழமையுடன் சி¡¢த்தான். அருள் இன்று ஏனோ வழமையை
      விட அதிகமாக இளிக்கிறான். முகத்தில் ஒரு விசித்திரமான ஒளி பிறந்தது அருளுக்கு.
      இவனுக்கு ஏனோ திடீரென அம்மா சுலோ அக்கா சுந்தா¢ எல்லோரும்
      மழையுடன்சேர்ந்து அம்மா மேனியில் மணக்கிற கற்பூரவாசனை வீசிற்று. மழையில் கற்பூரத்தை
      கரைத்தவன் எவன்
      சுந்தா¢யக்காவின் பொ¢யகண்கள் முன்னே தோன்றின. இரு கனத்த வைரத்துளிகளை சிந்தின.
      சுந்தா¢யக்கா இதமாக இவன் கைகளை தொடுவது போலிருந்தது.
      மழையிலும் வேலைக்கு போயிருப்பாள்
      சுலோ அக்காவின் கீச்சுக்குரல் பே காற்றில் கலந்து வந்தது. இவனை ஆதங்கமும் பொறுக்க
      முடியாமல் பீறிடுகிற அன்புமாக சுலோ அக்கா அழைத்துக்கொண்டு தொண்டைக்குழியை
      பிளந்துகொண்டு ஒரு நாகமென வெளிவந்தது.
      இவன் கண்களை திறந்தான். பெருமாள் ஒரு வளைவில் வேகத்தை மாற்றாமலே லாவகமாக
      திரும்பி கொண்டிருந்தான். சூரன்தான் ஒரு நூறுயார் தூரத்துக்கப்பால் பார்வை
      புலப்படாதபடிக்கு கனத்த திரைகளாக மழை விழுந்துகொண்டிருக்க வைப்பர்
      வேலைசெய்யாமலே படுவேகமாக வானை செலுத்தி போகிறான் வேறு எவனால் இப்படி
      முடியும் அசகாயசூரன்தான்
      ரோட்டு நேரே கோடுபோட்டதென செல்கின்றது. பெருமாள் கிழித்துக்கொண்டு போனான்.
      ஏன்...ஏன்... என்ன...
      பெருமாள் சடக்கென்று பிறே போட்டான். எதிரே ஏதோ பிசாசுத்தனமாக நெருங்கி
      கொண்டிருந்ததாக எல்லோரும் உணர வாரம்பித்தார்கள்.
      பெருமாள் கோணாமலையை திரும்பி பார்த்தான். கோணாமலை இறுகிய முகத்தவனாய்
      முன்னேபோ என தலையை குலுக்கினான். எல்லோருக்கும் வேகமாக மூச்சு வாங்கவேண்டும்
      போலிருந்தது. உள்ளங்கையை இறுக பொத்தி கொண்டார்கள்.
      பெருமாள் நிதானமாக முன்னே போனான். தலையை வெளியே நீட்டி நீட்டி பார்த்துக்கொண்டே
      போனான். எல்லா வீடுகளும் தெருவாசலை பூட்டியபடி மெளனமாய் மழையில் கொட்ட கொட்ட
      நனைந்து கொண்டிருந்தன.
      எதிரே ஒரு சிறிய ரோ மெயின் ரோட்டில் கலக்கும் அந்த சந்தியில் ஏதோ கள்ளத்தனத்துடன்
      வஞ்சகம் பு¡¢ய ஒளிந்திருப்பதாக பட்டது. பெருமாள் கொட்டும் மழையில் வெளியே
      தலையை போட்டான்.
      பொ¢ய வாகனம் ஒன்று தனது பூதாகரமான உடலை மறைக்க பெரும் பிரயத்தனம் செய்தவாறு
      நின்றுகொண்டிருந்தது
      ...பெருமாள் கொடுப்புகளை இறுக நெறுமினான்...முகம் சட்டென கறுத்து வீங்கி போனது.
      கோணாமலைபு¡¢ந்து கொண்டான். கண்கள் இரத்தம் கொட்டுபவையென சிவந்தன. இவர்கள்
      எல்லோருக்கம் பு¡¢ந்துவிட்டது. மண்டைக்குள் ஒரே விறு மிக
      மூச்சுவந்தது. உடல் தகிப்பதென சுட்டது.
      ரெடி...ரெடி...ரெடி... என இதயம் துடித்தது. உத்தரவுகளை பெற ஆயத்தமாக
      இருந்தார்கள். ஒவ்வொரு அங்கமும் துடிக்கவாரம்பித்தது.
      கோணாமலை பரபரத்தான்.
      அம்பிட்ட கையழுங்கையுக்குள்ளை விடு... உடைச்சுக்கொண்டு தப்பவேண்டியதுதான்...
      எங்கெங்கையெல்லாம் நிக்கிறாங்களோ... வளைச்சுப்போட்டான்களோவும் தொ¢யாது.... சனியன்
      பிடிச்ச மழை...
      பெருமாள் வேகமாக பின்னே போக ஆரம்பித்தான். இவன் பின்னால் பார்த்தான்.
      பின்புறமிருந்தும் வாகனம் ஒன்று பிசாசு மாதி¡¢ நெருங்கிக்கொண்டிருந்தது
      பக்கத்திலே ஒழுங்கைமாதி¡¢ ஒரு ஓடை தொ¢ந்தது. பெருமாள் பெரும் பிரயத்தனத்துடன்
      உள்ளே நுழைய முற்பட்டான். ஆனால் அதற்குள் அவர்கள் முந்திக்கொண்டார்கள். நெருப்பை
      உமிழ்ந்த படி இருபுறமிருந்தும் அச்சமும் அவதானமுமாக நெருங்க ஆரம்பித்தார்கள். மழை
      அவர்களுக்க வாழ்த்து கூறிக்கொண்டிருந்தது. வானம் இவர்களை பார்த்து இடிஇடியென
      சி¡¢த்தது. மின்னல் பழிப்பு காட்டுவதென அடிக்கடி பளபளத்து கண்சிமிட்டியது.
      ஒவ்வொரு நொடியும் மிக பெறுமதியானதென இவர்கள் உணர்ந்தார்கள். தோல்வி படுவேகமாக
      இவர்களை நோக்கி வாயை பிளந்தபடி வந்தது. தோற்று விடுவார்களோ இலகுவில்
      என்ன....அருள் மிக பரபரத்தான்.... தலையை அப்படியும் இப்படியும் குலுக்கினான்.
      உணர்ச்சி வேகத்தில் கிடுகிடுவென நடுங்கினான்....ஏதாவது
      செய்...அவசரமாக...கெதியாக...
      வாயில் கிளிப்பை கடித்து இழுத்தான். ஐயோ இடது கை...இடதுகை...வழமில்லை
      இழுபட மாட்டேன் என்கிறது.
      இவனுக்கு துரதிர்ஷ்டவசமான தப்பு ஒன்று நிகழ்வது நன்றாகவே தொ¢ந்தது.
      தொடைகளிலும் கணுக்காலிலும் குதிரைபலம் சேர்ந்தது. கால்விரல்களில் முழுபலத்தையும்
      சேர்த்துக்கொண்டே உந்தி எழுந்தான். பேய்த்தனமாக ஊதிக்கொண்டிருந்த காற்றிலும் பெரு
      அம்புகளாக துளைக்கும் மழையிலும் ஒருகணம் ஜிவ்வென பறந்து மழையில் நனைந்து
      சொசொதவென அனங்கிக்கொண்டிருந்த சகதியில் விழுந்தான். அவசர அவசரமாக நாலைந்து
      சுற்றுக்கள் புரண்டு தூரவிலகினான்.
      இவனுக்கு பு¡¢ந்துவிட்டது....அவ்வளவுதான்...இன்னும் ஒரு நொடிதான்...அருள்
      அடமுட்டாளே...அவசரப்பட்டுவிட்டாயே
      தொடைகளில் இலேசாக அடிபட்டிருக்க வேண்டும். நொண்டிக்கொண்டே எழுந்தான். கால்போன
      திக்கில் ஓட ஆரம்பித்தான். செம்மண் நிறத்திலே கணுக்கால்வரை உயர்ந்து கனவேகத்துடன்
      வெள்ளம் ஒழுங்கைகள் வழியே பாய்ந்துகொண்டிருந்தது. சளசள என்று இவன் கனத்த
      காலடிகளை தாங்கமாட்டாமல் வழிவிட்டு கொடுத்தது.
      பெரும் இடிபோல முதல் தரம் வெடித்தது. வான்ஒருதரம் பெரு குலுக்கிற்று. தொடர்ந்து
      ஒன்று...இரண்டு...மூன்று...நாலு...ஐந்து...ஆறு...
      அவர்கள் அஞ்சி நின்று விட்டார்கள் நிலையாக
      இவன் ஒடிக்கொண்டே ஒருதரம் திரும்பிப்பார்த்தான். பெரும் புகைமண்டலமொன்று மழையை
      விலக்கி செல்லும் கரும் பூதமென மேலெழுந்து கொண்டிருந்தது. மூச்சு திணறும்
      கந்தகநெடி எங்கும் சட்டென பரவிற்று.
      இவன் மூளை செயலற்று போய்விட்டது. கண்கள் நேரே வெறித்தன. கால்கள் மட்டும் தம்பாட்டில்
      இவளை கனவேகமாக எங்கோ இழுத்துச்சென்றன.
      கோணாமலை...பெருமாள்...கேதா¡¢....பொ¢யண்ணன்....கைக்கேல்...அன்பரசன்....
      அவ்வளவுதான்...இனியென்ன...அவ்வளவுதான்...துண்டு துண்டாக போயிருப்பார்கள்.
      இனி
      இவன் செய்யவேண்டியது என்ன எப்படியாவது தெற்கு ரோட்டுக்கு பத்திரமாக போய்ச்சேர
      வேண்டும். சாமான் வரும். அவர்களை திசை திருப்பி விடவேண்டும்.
      வருகிறவர்களுக்கு செய்தி தொ¢ந்து திரும்பி போயிருப்பார்களோ....செய்தி
      சொல்லுவது யார் இந்த காற்றும் மழையுமா
      இவன் தெற்கு ரோட்டுக்கு போய்ச்சேரவேண்டும் சனியனே மழையே நீ நிற்க மாட்டாயா.....
      வானம் கடைசித்தடவையாக பெருமிடியன்றை கொடுத்து ஓய்ந்தது. மழைவேகம் குறைய
      ஆரம்பித்தது இவனுக்கு பன்னீர் தெளிப்பதென மெதுவாக தூற்றல்களை போட்டது.
      இவன் வெகுதூரம் ஓடிவந்து விட்டான். இனி பயமில்லை போல் இருந்தது.
      பெருநடையாக நடக்க ஆரம்பித்தான். இன்னும் மூன்று மைல்களாவது கடக்க வேண்டியிருந்தது.
      இவன் கடந்துவிடுவான்...எப்படியாவது
      மழை முற்றாக ஓய்ந்தது. மயான அமைதி நிலவிற்று மரங்கள் மழையில் நடுங்கி அஞ்சிப்போய்
      ஆடாமல் அசையாமல் கண்ணீர் சிந்தின. வெள்ளம் மட்டும் இவனுடன் கூட வந்தது.
      ஒழுங்கைகள் வலை பின்னி கிடப்பதென திக்குமுக்காட வைத்தன.
      சனங்கள் வீட்டு வாசல்களில் நின்றார்கள். இவனை விசித்திரமாக பார்த்தார்கள்.
      ஆஜானுபாகுவான ஒரு வித்தியாசமான இந்த இளைஞன் கொட்டும் மழையில் நனைந்து விட்டு
      எங்கே இவ்வளவு அவசரமாக போகிறான்
      ஆறிப்போகலாமே கொஞ்சம் இளைப்பாறி போகலாமே...அல்லது போகலாமே விட்டுவிட்டால்
      என்ன.... இன்னும் என்ன விபா£தங்களும் நிகழ காத்திருக்கின்றனவோ
      இவன் போகாமலே விட்டால் என்ன
      சனங்கள் இவனை விசித்திரமாகவும் ஆவலாகவும் புதினம் பார்த்தார்கள். அவர்கள் கண்களில்
      ஒருவிதமான பயமோ....அன்றி பக்தியோ....தொ¢ந்தது. சிலர் கண்களில் அடக்கமாட்டாமல்
      பீ¡¢டுகின்ற நட்பு தொ¢ந்தது.
      ஜன்னல்களில் நிலவு முகங்கள் தோன்றின. கொஞ்சம் விழிகளால் இவன் முகத்தை துளைத்தன.
      போகாதே....போகாதா.... என கெஞ்சுவதுபோல் இருந்தது அவர்களின் பார்வை.
      இவன் விரும்பினால் ஒரு வீட்டுக்குள் புகுந்து ஓய்வெடுக்கலாம்.
      இவன்தான் ஒரு வீட்டுக்குள் போகமாட்டானே இவனுக்கு இவன்வேலை பொ¢து. தெற்கு
      ரோட்டுக்கு விரைவில் போ சேரவேண்டும். ஓழுங்கைகளை விட்டு பி¡¢ந்து ஒரு ரோட்டில்
      ஏறி விடுவிடென நடக்க ஆரம்பித்தான்.
      கொஞ்சம் வயல்கள் இடையில் இவனை கண்டன. மழை நீரை ஆவலாக உறிஞ்சி
      குடித்துக்கொண்டிருந்தன. வருணதேவனோ இவன் என நன்றியுடன் இவனை மெளனமாக பார்த்தன.
      இவன் தாண்டிப்போனான்.
      ஒரு மாதா கோயில் தொ¢ந்தது. கன்னிமோ¢ கையில் குழந்தை ஏசுவை
      இவனை கனிவுடன் பார்த்தாள். மறுகளை காற்றில் தூக்கி இவனுக்கு ஆசிர்வாதங்களை
      அனுப்பினாள்.
      இவன் தாண்டி தாண்டி போனான்.
      கோயில் ஒன்று வந்தது. விசித்திரம் தான் ஊ¡¢லிருந்து கொஞ்சம் விலகி தனியே
      இருந்தது. சில பனைகளுடன் சல்லாபித்தபடி. வெறுமையாக கதவுகளை திறந்து போட்டபடி
      இவனை ஆதங்கத்துடன் அழைப்பது போல இருந்தது. வானோக்கி உயரும் மணிக்கோபுரம்
      வா என அழைப்பதென தோற்றம் காட்டிற்று.
      இவன் விரும்பினால் கோயிலுக்குள் சற்று நேரம் படுத்து இளைப்பாறலாம்
      இவன் ஆறமாட்டான். இவனுக்கு வேலை பொ¢து. தெற்கு ரோட்டுக்கு கூடிய விரைவில்
      போய்ச்சேர வேண்டும். தனியாக நடந்ததோ....அல்லது...ஓடியோ....
      மீண்டும் ஓட ஆரம்பித்தான்.
      இவனுக்கு சற்று களைப்பு தொ¢ந்தது. அதிர்ச்சியும் ஓட்டமும்....சற்றுக்களைத்துத்தான்
      போனான். வான் ஏதாவது போகுமெனில் தொற்றி விடுவான். விரைந்து போ சேரலாம்....
      சற்று தூரே தெற்கு ரோட்டை போ சந்திக்கிற பாதை இவன் வழியை செங்குத்தாக
      வெட்டிப்போவதை கண்டான். பழைய காலத்து வான் ஒன்று நிறைந்த சுமையுடன் முக்கி
      முனகிப்போ கொண்டிருந்தது. கையைத்தட்டினால் கேட்குமா நிற்பாட்டுவார்களா
      இவனையும் தங்களுடன் அழைத்து போவார்களா
      கையை தட்டினான். திரும்ப
      வரட்டோ...நானும் வரட்டோ....
      மெல்ல ஓடிக்கொண்டே கேட்டான்.
      வா...வா...ஓடி வா... விசித்திரமான வேற்று பாணியில் ஒரு குரல் கூப்பிட்டது.
      இவன் நெருங்கி கொண்டிருந்தான். வெற்றுடம்புடன் சிலபேர் இருந்தார்கள். எல்லோரும்
      ஆண்கள். எங்காவது கோயிலுக்கு போய் வருகிறார்களோ
      இவன் மிகவும் நெருங்கிவிட்டான்.
      வான் நின்றுவிட்டது. பழகாத புதிய முகங்கள் போலும் வேறு புறம் திரும்பி
      அசட்டையாக பார்த்து கொண்டிருந்தார்கள். இல்லை....இல்லை...இல்லவே இல்லை சட்டென்று
      சொல்லி வைத்தாற்போல இவன் முகம்பார்த்து எல்லாரும் திரும்பினார்கள். கண்களில் சொல்லொனா
      வன்மம் தொனித்தது.
      ஒரே சமயத்தில் குதித்தார்கள். கைகளில் பளபள என குத்தீட்டிகளுடன் துப்பாக்கிகள்
      மின்னின. இவன் இதயம் சடக்கென நின்றுவிட்டது ஒருகணம்.
      தொலைந்தான் இவன் எதிர்பார்க்கவில்லை....கனவில் கூட....அவர்கள் இப்படி ஒரு
      கோலத்தில் தந்திரமாக உலாவுவார்களென
      துப்பாக்கிகள் இவனை பசியுடன் நெருங்கி சூழ்ந்தன. மார்பை நோக்கி ஒரு இடி
      இறங்கிற்று. பிறகு தொடைகளில் நடுவே குறிபிசகாத ஒரு உதை.
      சுருண்டு விழுந்தான். தலைமயிரை பற்றி இழுத்து வானுக்குள் எறிந்தனர்.
      இரத்தமும் நிணமும் குமட்டும் வாசனையை பிறப்பித்து கொண்டிருக்க சிதறிப்போன
      தசைத்துண்டுகளாக.....
      கோணாமலை கேதா¡¢....பெருமாள்.....பொ¢யண்ணன்....மைக்கேல்....அன்பரசன்.....
      எல்லையற்ற அந்தகாரம் இவனை சூழ்ந்தது.
      ------------------------------------------------------------------------
      4. கோசலை
      குலம்....மாடுகளுக்கு கொஞ்சம் வைக்கல் இழுத்துப்போடு மேனே
      குலம் மல்லாந்து படுத்து கிடந்தான். ஓலைப்பாயில் தலையணைகூட இன்றித்தான் இவன்
      படுப்பான். முதுகு வலிக்குமா இல்லையா இவன் ஏன் ஒரு காட்டு பிறவி மாதி¡¢
      இருக்கிறான்
      அம்மா திண்ணை குந்தில் கால் நீட்டி உட்கார்ந்தவாறே திரும்ப திரும்ப சொல்லி
      கொண்டிருந்தான்.
      கொஞ்சம் வைக்கல் இழுத்து போடன் அப்பன்....மாடுகள் கத்துதெல்லவே......
      குலம் நெற்றியில் முழங்கைகளை அழுந்த போட்டவாறு கால்களை ஆட்டியவாறு படுத்து
      கிடந்தான். அம்மா இவனையே பார்த்து கொண்டிருந்தான். மார்பில் உரோமங்கள் படர்கிற
      வயது. முரட்டுதனமான உடல்பாகு. குரல்கூட கட்டைக்குரல் இவனுடைய அப்பா மாதி¡¢.
      நெற்றியில் தூக்கி போட்டிருந்த கைகளை பார்த்தாள். நரம்புகள் புடைத்துக்கொண்டு
      விம்மி தொ¢ந்தன. உள்ளங்ககைகள் முதலையின் முதுகு மாதி¡¢ காய்த்து போயிருந்தன.
      விரல்கள் ஒயிலும் கிறீஸ¤ம் படிந்து பழுப்புநிறமாக தொ¢ந்தன. ந கண்களில் கறுப்பாக
      ஒயில் அழுக்கு படிந்திருந்தது.
      குலம்....கொஞ்சம் வைக்கல்.....
      அவசரமாக பாய்ந்து இடை வெட்டியவாறு மகன் சிடுசிடுத்தான்.
      நீயே இழுத்துப்போடேன்...எனக்கு ஒரே அலுப்பு
      அம்மா சற்றே வேதனையின் சாயல் படி சி¡¢த்தாள்.
      சீலன் இருந்தால் இப்படியா எல்லாம் இருக்கும் அம்மா சொல்லாமலே வேலை செய்து
      கொடுப்பான். மாடுகளுக்கு வேளாவேலைக்கு வைக்கோல் இழுத்து போடுவான். தண்ணீர் கொண்டு
      போய் வைப்பான் கோழிகளை கவனித்து கூடுகளில் அடைப்பான். சமயத்துக்கு தேங்காய் கூட
      அம்மாவுக்கு துருவி கொடுப்பான்.
      எவ்வளவு அருமையான மகன்
      அவன் ஏன் அப்படி போனான்
      ஊரை நீங்கி தூரே வயல்வெளிகள் பரந்திருக்கின்றன. இடையிடையே பனங்கூடல்களும்
      திடல்களும் தனித்து கிடக்கின்றன. மாலைநேரங்களில அம்மா அவ்விடங்களில் புல்
      செதுக்கி கொண்டு வரப்போவாள். சைக்கிள் ஓட்ட முடியாது அவ்விடங்களில் சீலன்
      சைக்கிளில் சாய்ந்த படியே ரோட்டில் காத்து நிற்பான். அம்மா புல்லு கட்டுடன் திரும்பி
      வரும் நேரங்களை அவன் நன்கு அறிவான். அம்மாவின் உருவம் மிகத்தூரே மங்கலாக தொ¢யும்
      போதே ரோட்டை விட்டிறங்கி அம்மாவை நோக்கி விரைந்து போவான். பாரத்தை மாற்றிக்கொண்டு
      அம்மாவுக்கு முன்னே வீட்டுக்கு சைக்கிளில் பறப்பான்.
      அம்மா வழியிலேயே துரவில் உடம்பை கழுவிக்கொள்ள முருகன் கோயில் மணி சிணுங்கி
      அழைக்கும். அம்மா உருகியவாறு கோயிலுக்கு போவாள். பூசை முடிய நன்றாக இருள்
      சூழ்ந்து விடும். உள்ளங்கையில் பொத்தியபடி விபூதியும் சந்தனமுமாக திரும்பி
      வரும்போது சீலன் வீட்டில் பளிச்சென விளக்கேற்றியிருப்பான்.
      மேசைக்கு முன்னால் விளக்கொளியில் முகம் விகசித்து தொ¢யும்படிக்கு அவன்
      உட்கார்ந்திருப்பான். ஏதாவது படித்து கொண்டோ எழுதிக்கொண்டோ இருப்பான். முன்னால்
      மென்குரலில் இசைத்தபடி ரேடியோ அவனை ரசிக்கும் பக்கத்திலே சைக்கிள் முன்சில்லை
      ஒயிலாக ஒடித்து சாய்த்தபடி அவனை பார்த்து பளீரென ஒளிவீசி சி¡¢க்கும்.
      மகள் அழகிய மொட்டு. மிகவும் சின்னவள்தான். ஆயினும் குசினியில் தேநீர் தயா¡¢க்க
      ஆயத்தமாகி கொண்டிருப்பாள். குலத்தை மட்டும் காண கிடைக்காது. அவன் வீட்டில்
      இருக்கும் நேரங்களை அம்மாவுக்கு அறுதியிட்டு கூறமுடியாது. அவன் தொழில் அப்படி
      மாடுகள் கழுத்துமணிகள் கிணுகிணுக்க புல்லை அரைக்கின்ற சத்தம் கேட்கும். கூடவே
      மாடுகள் பலத்து மூசி மூச்சுவிடுவதும் வாலை தூக்கி ஈக்களை விளாசி விரட்டுவதும்
      கேட்கும் சாணியின் மணத்துடன் பசும்புல்லின் வாசனை நாசியில் உறைக்கும் கோழிகள்
      எல்லாம் ஏற்கனவே கூடுகளில் அடைக்கப்பட்டிருக்கும். குறுகுறு வென கொக்கா¢க்கும்.
      படபட வென சிறகுகளை உல்லாசமாக அடிப்பது கேட்கும்.
      சுடச்சுட ஒரு கோப்பை தேநீர்...கடுமையான உழைப்புக்கு பின் தொழுகையின்
      மோகனமான இரவின் பிறப்பு நேரத்தில்.....அருமையான தனது பிள்ளைகளுடன் அம்மா
      அருந்துவாள். அதுவல்லவோ வாழ்க்கை
      எல்லாமே சீலனுடன் கூடவே சேர்ந்து அம்மாவிடம் பி¡¢வு சொல்லாமலே போயினவோ
      அம்மா அலுத்தபடியே வைக்கோல் போரை நோக்கி போனாள்.
      ஓரே வயிற்றில் உதித்த பிள்ளைகள் ஏனோ இவ்வாறு வேறு குணம் கொண்டவர்களாய்
      போனார்கள் இரண்டு பேரையும் அம்மா ஒரே மாதி¡¢த்தான் சீராட்டினாள்.
      உணவூட்டினாள். ஒரே பள்ளிக்கூடத்திலேதான் கொண்டுபோ சேர்த்து விட்டாள்.
      புத்தகங்களை தூக்கிக்கொண்டு எண்ணெய் பூசிபடி சீவிய தலைகளுடன் அவர்கள்
      பள்ளிக்கூடம் போவதை வாசலில் நின்று பார்த்து ரசித்தாள்.
      குலம் மட்டும் படிப்பை ஒரேயடியா குழம்பினான். அண்ணனுடன் நெடுகலும் சண்டை
      போட்டான். அம்மாவுடன் கோபித்துக்கொண்டு சிலவேளை சாப்பிடாமலே போனான். ஆறாம்
      வகுப்புக்குமேல் அவனால் ஏறவே முடியவில்லை. அம்மா அறிவாள் அவனது இளையமகன்
      மிகவும் புத்திசாலி. ஆனாலும் ஏன் அவனால் படிக்க முடியவில்லை என அம்மாவுக்கு
      பு¡¢யவில்லை.
      சீலன் அமைதியாக படித்தான். அவன் மிகவும் அமைதியான மகன். இரைந்து கதைக்க
      தொ¢யாதவனாக இருந்தான். நடப்பது கூட மிகவும் மென்மை. ஒரு கம்பீரம் இருக்கத்தான்
      செய்தது. ஆயினும் புல்லுக்கு கூட நோகாத நடை. கண்கள் பொ¢தாக இருந்தன. உள்ளங்கைகள்
      மென்மையாகவும் குளிர்ச்சியாகவும் இருந்தன. நகங்கள் ரோஸ் நிறமாகவும்
      நீளமாகவும்....விரல்கள் கூட மெலிந்து நீளமாக நளினமாக இருந்தன பெண்களை போல.
      சீலன் ஒரு மோகனமான மாலை நேரம் பிறந்தான். பறவைகளின் கீச்சொலிகள் அடங்கிய பிறகு
      மாடுகள் எல்லாம் மேச்சல் நிலங்களிலிருந்து திரும்பி வந்துவிட்ட பிறகு மென்மஞ்ச
      கதிர்களை மண்ணெண்ணெய் விளக்குகள் உமிழ்ந்து கொண்டிருக்கும் நேரத்தில்....அம்மாவின்
      இடது தொடையை சற்றே உரசியபடி ஒரு வளர்பிறை நாளில் சீலன் பிறந்தான். புணர்பூச
      நட்சத்திரம். இவன் பொ¢ய கா¡¢யங்களை சாதிக்க பிறந்தவன் என அவனது சாதகம்
      சொல்லிற்று.
      குலம் அத்த நட்சத்திரம். அது தான் அவனிடம் முரட்டு சுபாவங்கள் சேர்ந்து விட்டனவோ
      அத்தம் அதமம் என்றார்கள் சாத்தி¡¢மார்.
      மத்தியான நேரம் கொடுமையானது. மெளனமானது. காற்றை வெயில் விரட்டிவிடும்.
      ஒழுங்கைகளில் படிந்திருக்கிற புழுதியில் கச்சான் வறுக்கலாம் என தோன்றும். பூவரச
      மரங்கள் கொடுவெயிலில் வாடி துவளும். சனங்கள் வெளியில் தலை காட்டவே மாட்டார்கள்.
      சொறி பிடித்த நாய்கள் மட்டும் நாவை தொங்க போட்டபடி இளைத்தவாறு நிழல் தேடி
      ஓடித்தி¡¢யும் கர்ர்ர் என கடூரமா கத்துகின்ற காக்க்கைகள் நீர் தேடி பறக்கும்.
      குலம் ஒரு மத்தியான நேரம் பிறந்தான். பிறந்தவுடன் எட்டு இறாத்தல் நிறை காட்டினான்.
      அம்மா இராஜவலியில் துவண்டாள். மயக்கம் தீர நெடு நேரமாயிற்று. காய்ச்சல் ஓய சில
      நாளாயிற்று.
      என்னவோ அம்மாவுக்கு குலத்தைவிட சீலனை மிகவும் பிடித்தது. அவன் அவளை விட வளர்ந்து
      விட்ட பிறகும் மேலுதடு அரும்பிய பிறகும்...அவனது கேசங்களை வருடுவதில் அம்மா
      இன்புற்றாள். ஒரு குழந்தையினது போல மிகவும் மிருதுவான தலைமயிர்.
      குலத்துக்கு மிகவும் முரட்டு தலைமயிர். சுருண்டு இருக்கும்.
      சிறுத்து உள்வாங்கி இருந்தன. மேனியில் மண்ணெண்ணெய் நாற்றமும் ஒயில்
      வியர்வை வாடையும் சதாகாலமும் வீசிற்று. அவன் தொழில் அப்படி. குலம் ஒரு மெக்கானி
      ஆகவேண்டி ஆயிற்று. அவனது மாமனை போல நேரங்காலமற்ற வேலை. சில நாட்கள் சேர்ந்தாற்
      போல வராமல் இருக்க நேர்ந்தது. நேரத்துக்கு உண்ண முடியாமல் போயிற்று. தன்னை
      கவனிக்க நேரமில்லாமல் போயிற்று. அண்ணன் நிறை படிக்க வேண்டுமென நினைத்தானோ
      என்னவோ ஓய்வொழிச்சல் இல்லாமல் வேலை என
      நினைக்க அம்மாவுக்கு நெஞ்சை பிழக்கும்படி நெடுமூச்சு
      சீலன் ஏன் அப்படி போனான்.
      அம்மா மெல்ல போ¡¢லிருந்து வைக்கோலை பிடிங்கி இழுத்தாள். நாய்
      ஓடி வந்தது. கால்களில் சில்லென இருந்த ஈரமூக்கை தேய்த்தது. வாலைத்தூக்கி
      சுழற்றி சுழற்றி ஆட்டியது. அம்மா காலால் எட்டி உதைக்க நினைத்தாள்.
      நாயின் கண்களில் நன்றி வழிந்தது. அது சீலன் கொண்டு வந்த நாய். அம்மா அதை உதைப்பாளா
      கால்களை மடக்கி கொண்டாள்.
      சொதசொத வென்ற மா¡¢ காலத்தின் சோம்பலான ஒரு நாளில் சீலன் அதை தூக்கிக்கொண்டு
      வந்தான். வந்தபோது வெள்ளைநிறமாக இருந்தது. இப்போ பழுப்பு நிறமாக வளர்ந்துவிட்டது.
      மழைநீர் ஓடிக்கொண்டிருந்த தெருக்களில் மிகவும் நனைந்துபோய் அனுங்கிய குரலில்
      கத்தியபடி நடுங்கி கொண்டிருந்தது. யாருக்கும் தோன்றாத இரக்கம் அவனுக்குள்
      சுரந்தது. தூக்கிக்கொண்டு வந்தான். ஓலை பெட்டியால் கவிழ்த்து மூடினான். பொ¢ய
      கா¡¢யவாதி போன்ற பாவனையுடன் அம்மாவுக்கு சொன்னான்.
      வளர்ந்தா பிறகு நல்லது...மரநாய் வராதம்மா....கோழிகளுக்கு காவலாயிருக்கும்.
      தினமும் செங்கா¡¢ பசுவில் பால் கறந்து ஊட்டினான். அவனுக்கு தொ¢யும் எந்த
      பசுவின் பால் ருசியும் கொழுப்பும் மிக்கதென்று.
      அம்மா மாடுகளை நோக்கி போனாள். நாய் அம்மாவின் கால்களை தடுக்க பண்ணி
      விளையாடியபடி பின்னே ஓடியது.
      வாலிபத்தில் துள்ளுகிறது நாய். கொழுப்பேறி உடல் பளபளக்கிறது. நன்றாக தான்
      கொழுத்துவிட்டது. சீலன் கூட கொழுகொழு என்றுதான் இருந்தான். திரட்சியான கன்னங்களும்
      காந்த கண்களுமாக...எவ்வளவு அழகனாக இருந்தான் இந்த அம்மாவின் மகன்
      அமைதியாக இருந்தான். ரேடியோவை கூட சத்தமாக முடுக்கி விட மாட்டான். அவனை
      சுற்றி மட்டுமே இசை இருக்கும். அவன் படிக்கும்போது கூட ரேடியோ முன்னாலிருந்து
      எதாவது முணுமுணுத்து கொண்டிருக்கும். சைக்கிளை துடைக்கும் போதும் பாடியவாறு
      பார்த்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நாளும் உதயகாலத்தில் பளபள வென மின்னுமாறு
      சைக்கிளை துடைப்பான். காற்று இருக்கிறதா என கவனித்து திருப்தியுடன் தலையை
      குலுக்குவான். எதிலும் ஒரு ஒழுங்கு அவனிடம் இருந்தது.
      அவன் போன பிறகு எல்லாமே ஒழுங்கற்று போயிற்று. ரேடியோ அநேகமாக மெளனித்து
      விட்டது. அந்த வீடே ஜீவனற்று போயிற்று. சைக்கிள் சீந்துவாரற்று தூசி படிந்துபோய்
      ரயர்கள் காற்று இறங்கி மெலிந்துவிட சுவரோடு சாய்ந்து வைக்கப்பட்டு விட்டது.
      குலத்துக்கு சைக்கில் அவசியமென்றில்லை. அவனுக்கு நேரத்துக்கு ஒரு வாகனம் காரோ
      வானோ மோட்டார் பைக்கோ....காற்றை கிழித்துக்கொண்டு வருபவனென வந்து நிற்பான்.
      சீலன் போன பிறகு இந்த வீட்டில் முரட்டுத்தனமும் மெளனமும் அம்மாவின் ஏக்கப்பெரு
      மூச்சுகளும் மட்டுமே மிஞ்சிநிற்கின்றன. மகளோவெனில் மிகவும் சின்னவள். பு¡¢யாத
      பேதை. அழகிய சிறு மொட்டு.
      சீலன் ஏன் வீட்டை விட்டு போனான்
      அம்மா நன்றாகவே கவனித்தாள். சில நாட்களாக சீலன் சா¢யாகவே இல்லை. பா£ட்சை வேறு
      நெருங்கி கொண்டிருந்தது.
      எதையோ குறித்து தீவிரமாக சிந்தித்து கொண்டிருப்பதாக தோன்றியது
      குறித்து மிகவும் கவலை கொள்பவனாகவும் தொ¢ந்தது.
      பா£ட்சையை நினைத்து கலவர படுகிறானே ஏன் நன்றாகத்தானே படித்தான்
      பிடிப்பில்லாதவன் போல காணப்பட்டான். அம்மாவை நிமிர்ந்து பார்ப்பதை தவிர்த்தான்.
      வாய்க்குள் ஏதோ முனகிக்கொள்பவனாய் தலையை அடிக்கடிகுலுக்கினான். இரவுநேரங்களில்
      நித்திரையை தொலைத்து விட்டான். புரண்டு படுக்கின்ற அரவங்கள் கேட்டன.
      நேரங்களில் அவன் சைக்கிளை துடைப்பதில்லை. ரேடியோவை மீட்டுவதில்லை. ஆம்
      அவன் மீட்டுவதாக தான் அம்மா இவ்வளவு காலமும் எண்ணினாள். ரேடியோவில் இருந்து அவனது
      இனிய சா¡£ரமே மிதந்து வருகிறது போல...உலகின் வஸ்துகள்
      அவனுக்காகவே படைக்கப்பட்டிருப்பதென....அவன் தொட்டதெல்லாம் துலங்கும்
      என....அவனுக்காக எங்கோ ஒரு அ¡¢ய நங்கை வளர்ந்து வருகிறாள் என...அவர்கள்
      அம்மாவுக்கு அழகிய மதலை குதம்பும் பேர குழந்தைகளை பெற்று தருவார்கள் என....
      சீலனோ எனில் சில நாட்களாக ஏனோ தானோ என மாறிவிட்டான். பா£ட்சை எழுத போனான்.
      மற்ற பையன்களிடம் காணப்பட்ட ஆர்வமோ பரபரப்போ அவனிடம் காணப்படவில்லை. அம்மா அவனை
      ஏதும் கேட்கவில்லை. அவளது இனிய குழந்தையை தொந்தரவு செய்ய அவள் விரும்பவில்லை.
      எங்காவது காதல் கீதல்...என்று ஏதாவது....அவனாகவே சொல்லட்டும் என விட்டு விட்டாள்.
      நேரமாகுதெல்லே மேனே....
      சா¢யாக சாப்பிடத்தானும் இல்லை. சைக்கிளில் ஏறி உட்கார்ந்தான் வழமை போல் ஒரே
      தாவலில் ஏறி பறந்து விடவில்லை.
      மிக நிதானமாக ஏறி உட்கார்ந்தான். காற்றை அளப்பவனைப்போல் சுற்றிலும் பார்வை ஓட்டினான்.
      போயிட்டு வாறன் அம்மா.....
      வடிவா கடவுளை நேர்ந்து கொண்டு போ....
      பிறகும் ஏன் நிற்கிறான்......
      நேரமாகுதெல்லே....
      நான் போறன்..... மொட்டையாக முணுமுணுத்தான்.
      மெல்ல ஒரு கிழவனை போல உழக்கிக்கொண்டு போனான். அம்மா அவன்
      போனாள். தெருவில் இறங்கி நின்றுகொண்டு அவன் போவதை பார்த்தாள் முடுக்கால் திரும்பி
      மறையுமுன் ச என ஒருதரம் திரும்பி பார்த்தான்.
      அம்மா உள்ளே வந்தாள். சற்று நேரம் திண்ணையில் உட்கார்ந்தாள். பிறகு தலைக்கு எண்ணெய்
      பூசி சீவி முடிந்துகொள்ள நினைத்து எண்ணெ போத்தலை தேடினாள்.
      வாசலில் யாரோ சைக்கிளில் வந்து நிற்பதை போல உணர்ந்தாள். எட்டிப்பார்த்தாள்.
      சீலன்
      என்னவாயிற்று இன்று இவனுக்கு
      மீண்டும் சீலன் உள்ளே வந்தான். எதையாவது மறந்து போய் விட்டுவிட்டு போனானோ
      திண்ணையில் ஏறி அமர்ந்தான். முகம் செத்துப்போய் இருந்தது.
      ஏன் மேனே தலையிடிக்குதோ.....
      சா சாய்.....
      குனிந்துநிலத்தை கீறவாரம்பித்தான்.
      இரு கோப்பி போட்டு தாறன்....
      ........
      இண்டைக்கு பாடம் உனக்கு ஓடாதோ
      அசிரத்தையாக தலையை குலுக்கினான்.
      அப்ப ஏன் ஒரு மாதி¡¢யாய் இருக்கிறாய்
      .......
      காசு....கீசு....ஏதாவது வேணுமோ
      சி¡¢த்தான் அவசரமா கோப்பி கொண்டு வந்து கொடுத்தாள். வாங்கினான். இல்லை
      பறித்தான் அவனது ஆவலும் பரபரப்பும் அம்மாவை வியப்பிலாழ்த்தின. வாங்கும் போது
      அம்மாவின் கைகளை அவன் விரல்கள் தீண்டின. என்றுமில்லாத அழுத்தம் அவ்விரல்களில்
      இருந்தது. உள்ளங்கைகள் பிசுபிசுத்து வியர்த்திருந்தன.
      தங்கச்சி எங்கை அம்மா......
      ப்ச்...உங்கை தான் எங்கையாவது போயிருப்பாள்
      ......
      ஏன்
      சும்மா தான்
      அவளை பார்த்து கொண்டு நில்லாமல் வெளிக்கிடு....நேரம் போகுது.....
      ஏதோ ஒரு உறுதியுடன் விருட்டென எழுந்தான். விறைந்து நின்று கொண்டான். சிறு நேரம்.
      ஒரு நொடி அம்மாவின் கண்களை கூர்ந்து பார்த்தான். அவளது கண்களுக்குள் எதையோ
      தேடினான் போலும்
      நான்......போ-ற-ன்....அம்மா
      வெடுக்கென திரும்பி சைக்களில் பாய்ந்து ஏறினான். வெகுவேகமாக போனான். ஏதோ ஒரு
      இனம்பு¡¢யாத சக்தி அவனை அம்மாவிடமிருந்து பி¡¢த்து இழுத்து செல்கிறதென....
      அம்மா கலவரத்துடன் தெருவுக்கு விரைந்தாள். சீலன் முடுக்கால் திரும்பி மறைந்து
      கொண்டிருந்தான். ஒரு தரம் திரும்பி பார்ப்பான் என எதிர்பார்த்தாள். அவன்
      பார்க்கவில்லை. ஆனால் ஹாண்டிலில் ஒரு சிறு பொலித்தீன் பை தொங்கி கொண்டிருப்பதை
      அம்மா அப்போதுதான் கவனித்தாள். சைக்கிள் சில்லு தெரு நீளத்துக்கு பாம்பு ஊர்ந்து போன
      சுவடாக தடம் பதித்து தொ¢ந்தது.
      அம்மாவுக்கு ஒன்றுமே பு¡¢யவில்லை. புருவங்களை சுருக்கினாள்.
      மாலையில் யாவும் பு¡¢ந்தன. தயங்கி தயங்கி ஒரு பையன் சீலனின் கைக்கிளை தள்ளி
      கொண்டு வந்தான். தலையை குனிந்து கொண்டே போ சுவருடன் சைக்கிளை சாத்தினான்.
      அவனை எங்கோ பார்த்த ஞாபகம் காட்டிற்று அம்மாவுக்கு. அம்மாவின் முகத்தை பாராமல்
      எங்கோ வேண்டுமென்றே பார்வையை திருப்பினான்.
      வெகு ஆயத்தமாக தொண்டையை செருமி சா¢பண்ணி கொண்டான்.
      சீலன்....இதை...இஞ்சை கொண்டு வந்து விட சொன்னவர்....
      ஆங். சீலன் எங்கையப்பு...
      ......
      ஐயோ என்ரை பிள்ளை....
      அந்த குரலின் அவலம் பையனை துரத்தியது. தலையை குனிந்தவனாய் விடுவிடென
      விரைந்து போனான்.
      அம்மா பதைத்தாள் கி¡£ச்சிட்டாள்.
      சீலன் எங்கையப்பு....
      பையன் பின்னே தட்டுத்தடுமாறி ஓடியபடி அம்மா கேட்டாள். அவன் பதில் சொல்ல முடியாமல்
      ஓட தொடங்கினான்.
      சீலன் எங்கையப்பு....
      இலேசாக குளிர்ந்துபோய் தன்னை கடந்துபோன காற்றை அம்மா கேட்டாள் அது மெளனமாக
      போனது.
      இவ்வாறான எத்தனை அன்னையா¢ன் சோகங்களை அது பார்த்திருக்கிறது பேசாமல்
      ஐயோ என்ரை சீலன் எங்கே....
      சிவந்து மின்னி கொண்டிருந்த அந்திவானை அம்மா கேட்டாள்.
      இவ்வாறான எத்தனை சீலன்கள் அதன் கீழ் உள்ளனர். அது பேசாமல் கண்ணை மூடிற்று.
      சீலன் எங்கை
      அவளுக்கு திருப்பிதயான பதிலை தர ஒருவரும் இல்லை.
      சீலன் எங்கை
      அம்மாவின் பா¢தாபமான அக்கேள்வி ஊர் மேல் ஓங்கி அடித்தது. அம்மாவை சுற்றி
      ஊர்ப்பெண்கள் ஒவ்வொருவரா கூட தொடங்கினார்கள்.
      அவளுக்கு பு¡¢ந்தது சீலன் எங்கே போனான் என்று இவ்வாறான எத்தனை கதைகளை அவர்கள்
      அறிந்திருக்கின்றனர். அம்மாவை ஆதரவாக உள்ளே கூட்டிப்போயினர்.
      பிறகு
      அந்த எளிமையான சிறிய வீட்டின் ஆனந்தவாழ்வும் அவனுடன் கூட போய்விட்டதாய்....
      வெறுமை
      மாலை நேரங்களில் அம்மா ஊரை நீங்கி தூரே இருக்கின்ற வயல்வெளிகளிலும்
      பனங்கூடல்களுக்குள் தனித்து கிடக்கின்ற திடல்களிலும் புல் செதுக்கி கொண்டு வர
      போவாள். முழு தூரமும் இளைத்து முதுகொடி சுமந்து
      அவள் பாரத்தை மாற்றிக்கொள்ள யாருமில்லை.
      அவள் பாதி வழியில் வரும்போதே முருகன் கோயில் மணி சிணுங்கி கேட்கும். அவளால்
      வேளா வேளைக்கு பூசை காணப்போக முடியவில்லை. அவள் போகும்போது கோயில் நிசப்தமாக
      இருளில் மூழ்கி இருக்கும். பூசை முடிந்து போனதின் தடங்களாக. சிந்தி கிடக்கின்ற
      சில மலர்களும்...மெல்லமெல்ல காற்றில் கரைந்து கொண்டிருக்கிற கற்பூர வாசனையும்....
      முணுக்கென எ¡¢கின்ற ஒரு சிறு தூண்டாமணி விளக்கும்...இழுத்து பூட்டப்பட்டிருக்கிற
      சித்திர வேலை பாட்டுடன் கூடிய கனத்த கதவும்...
      அம்மா வாசலில் நின்று தனியே தொழுதாள். தனது அருமையான புதல்வனின் நலத்துக்காக
      அம்மா தினமும் தனியே நின்று உருகினாள்.
      வீட்டுக்கு திரும்பிவரும் நேரங்களில் மாடுகள் பின்புறத்தில் ஒன்றையன்று கொம்புகளால்
      குத்தி விரட்டியபடி துள்ளித்தி¡¢யும். கண்ட இடத்திலெல்லாம் குளம்புகளால் உழக்கிய
      அடையாளங்களும்...சாணியும்...
      அம்மாவே ஒவ்வொன்றாக இழுத்து வந்து கட்டைகளில் கட்ட வேண்டியிருந்தது.
      கோழிகள் பூவரச மரங்களில் குடிபுகப்பழகின. அம்மா கற்களை எடுத்து வீசுவாள். சூ
      என விரட்டுவாள். நிசப்தமான முன்னிரவு அவற்றின் கொக்கா¢ப்புகளாலும்
      சிறகடிப்புக்களாலும் நிம்மதி இழந்து தவிக்கும்.
      அம்மாவே தனியாக அவற்றின் கூடுகளில் அடைக்கவேண்டி இருந்தது.
      புகை படிந்துபோய் மங்கிய ஒளி சிந்தும் ஒரு சிறு விளக்கு. மேஜையின் மீது சீலனின்
      புத்தகங்கள். ஒரு சைக்கிள். மெளனமாகி விட்ட ரேடியோ. அருகிலே
      அமர்ந்திருப்பாள். அழகிய சிறு மொட்டு. வயதுக்கு மீறிய குருட்டு யோசனைகள் கொட்ட
      கொட்ட விழித்தபடி தனிமையில் உட்கார்ந்திருப்பாள். பாவம்
      அந்த அருமையான மாலைநேர தேநீர் அம்மாவுக்கு பிறகு கிடைக்கவேயில்லை.
      அம்மா வரவர மெலிந்தாள். கண்களை சுற்றி கருவளையங்கள் தோன்றின. நடை வரவ
      தளர்ந்தாள். முன்புபோல உற்சாகமாக வேலைசெய்ய முடியவில்லை. அம்மா வயோதிபத்தை நோக்கி
      மெல்ல
      இரவு நேரங்களில் நித்திரையின்றி வாடுவாள். புரண்டு
      அலுத்துப்போய் எழுந்து உட்கார்வாள். ஏதோ விபா£த எண்ணங்கள் தோன்ற
      விடுவாள்.
      குலத்தை பற்றியும் அம்மாவுக்கு வரவர ஒன்றும் பு¡¢யவில்லை. எப்போதாவது மூன்று
      நான்கு நாட்களுக்கொருமுறை வருவான். அம்மா அரைத்தூக்கத்தில் அவஸ்தையுடன் புரளும்போது
      கனவேகத்தில் வந்த ஒரு வாகனம் வாசலில் நின்று ஒருதரம் உறுமி ஓயும். குலம்
      திமுதிமுவென உள்ளே வருவான் அம்மாவுடன் ஒரு வார்த்தைகூட பேசாமலே...அம்மா
      முகத்தை சா¢யாக ஏறிட்டு கூட பார்க்காமலே...கைகளில் பணத்தை திணிப்பான்.
      சேட்டை கழற்றி கண்ட இடத்தில் எறிவான். ஓலைப்பாயை வி¡¢த்து தலையணைகூட இன்றி
      படுப்பான். வலிய கரங்களை நெற்றியின் மீது அழுந்த போட்டபடி....கால்களை
      ஆட்டியபடி...மயிரரும்பும் மார்புகளும் விம்மி தணிய ஒரு நொடியில் தூங்கி போவான்.
      இப்போ தூங்கி கொண்டிருக்கிறானே அது மாதி¡¢ ஒரு காட்டு பிறவி

      இப்போ
      குண்டு சத்தங்கள் அடிக்கடி கேட்கின்றன. சத்தங்களை கேட்டவுடன்
      நடுங்குவாள். கண்கள் பீதியால் வி¡¢யும். அடிவயிறு குலுங்கும்.
      அவர்கள் அடிக்கடி ஊர்களை சுற்றி வளைத்தனர். கன ரகவாகனங்களின் உறுமலை
      கேட்டவுடன் அம்மா பாதி உயிரற்று போவாள். நீட்டிய துப்பாக்கிகளுடன் மகன் எங்கே
      என உறுக்கியபடி அவர்கள் போகும் பாவனையில் பிள்ளைகளை வளைத்து
      செல்லும்போது-அம்மா படும் சஞ்சலம் சொல்லி மாளாது.
      கடவுளே...நான் சாக முதல் என்ரை பிள்ளையை ஒருக்கால் கண்ணிலை காட்டு...
      ஊ¡¢ல் தினமும் இரவுநேரங்களில் குண்டு சத்தங்கள் கேட்கின்றன. அம்மாவின் காது
      சவ்வுகள் கிழிந்து விடுமாற்போல் கிண் என வலிக்கின்றன. நெஞ்சு நீரற்று வரண்டு போய்
      விடுகின்றது.
      ஓ இந்த இரவுகள் மிகவும் கொடியன.
      அம்மாவுக்கு மிகவும் பா¢ச்சயமான அந்த வயல் வெளிகளிலே பனங் கூடல்களுக்குள்
      தனித்து கிடக்கும் திடல்களிலே பொடியன்கள் குண்டு வெடிக்கவைத்து பழகுகின்றார்கள்
      என ஊர்ப்பெண்கள் அம்மாவிடம் சொல்லினர்.
      சீலனும் அவர்களுள் ஒருவனான இருக்கலாமோ அம்மா பெரும் பீதியுடன் எண்ணினாள். ஆனால்
      சீலனை கண்டதாக ஒரு நாய் கூட அம்மாவிடம் சொல்லவில்லை.
      அவன் எந்த ஊ¡¢ல் குண்டு வெடிக்கவைத்து பழகுறானோ அம்மா பிற ஊர்களை அதிகம்
      அறியாள். இந்த சிறு குடிசைவீடும்....முருகன் கோயிலும்.....புழுதி பறக்கின்ற
      ஒழுங்கைகளும் ....பனங்கூடல்களும் ...திடல்களும் ...மாடுகளும் ...கோழிகளும் தான்
      அம்மாவின் உலகம். அவளது பிள்ளைகளே அவளீட்டிய ஈடற்ற செல்வம்.
      2
      இன்று அடிக்கடி குண்டு சத்தங்கள் கேட்கின்றன. ஒவ்வொரு சத்தத்திற்கும் சீலனின் நினைவு
      அம்மாவுக்குள் கனதியாக ஏறிற்று.
      குலம்கூட நாலைந்து நாட்களாக வீட்டுக்கு வரவில்லை. இன்றாவது அவன் வருவான் என அம்மா
      மிகவும் ஆசைப்பட்டாள்.
      இவன் என்ன பிள்ளை வீட்டுக்கு வருவதே குறைவு வந்தவுடன் விழுந்து படுக்கிறான்.
      அம்மா...பசிக்கிது என ஒரு வார்த்தை
      ம் ஹ¤ம்.
      பசி என ஒரு பிள்ளை கேட்டாலே தாயின் வயிறு நிறைந்துவிடுமே. இதுகூட
      பு¡¢யாது. ஒரு காட்டுப்பிறவி.
      எங்கேதான் இவன் சாப்பிடுகிறானோ
      இன்று குலம் கட்டாயம் வருவான் என எண்ணினாள் அம்மா. தூங்காமல் விழித்திருந்தாள்.
      திண்ணை குந்தில் கால் நீட்டி உட்கார்ந்தாள்.
      இன்று மங்கிய நிலவு வெளிச்சம் இருக்கிறது. சந்திரனின் முகம் ஒரு அழகிய பெண்ணின்
      நெற்றி போல தொ¢கிறது. வெள்ளை மேகங்கள் வேகமாக வானில் தி¡¢வதை அம்மா
      பார்த்துக்கொண்டிருத்தாள். பூவரசயிலைகள் மங்கின நிலவொளியில் பளபளத்து தொ¢கின்றன.
      அம்மா மட்டும் தனித்திருந்தாள். விளக்கில் சிம்னி புகை படிந்திருந்தது. மகள்
      அமைதியாக தூங்கி கொண்டிருந்தாள். மாடுகள் மூச்சு விடும் சத்தத்தை கோழிகள்
      குறுகுறுப்பதை நாய் மூச்சுவாங்க அங்கும் இங்கும் ஓடுவதை நிலத்தை
      பிராண்டுவதை...அம்மா பார்த்து கொண்டிருந்தாள்.
      சிள்வண்டு ஒன்று கி¡£ச்சென குரலெடுத்து அலற ஆரம்பித்தது. நாய் காரணமற்று பலமுறை
      குரைத்தது. நிலவை கண்டு அது குரைப்பதாக எண்ணினாள்.
      செங்கா¡¢ப்பசு வேதனையான குரலில் கதறியது எதுவோ அதை துன்புறுத்துவதாக
      தோன்றியது. அம்மாவால் எழுந்து பின்புறம் போக முடியவில்லை. ஆடாமல் அசையாமல்
      உட்கார்ந்திருந்தாள்.
      நடுநிசியின் மணத்தையும் உருவத்தையும் சத்தத்தையும் அம்மா உன்னிப்பாக கவனித்தாள்.
      எங்கோ புல்லாந்தி மலர்ந்திருக்க வேண்டும். குரக்கன் பிட்டு வாசனை மூக்கை கமற
      செய்கிறது. புடையன் பாம்பு இரையெடுக்கின்ற போதும் இதே வாசனை வேலி சரசரத்தது.
      உடலெங்கும் கபடான அழகுமிக்க முத்திரைகளை போர்த்தியபடி கொடிய விஷமுடைய புடையன்
      பாம்பு வழுவி வேலிக்குள் வருகிறதோ....அம்மாவுக்கு ஒரே
      குலம் எப்போது வருவான் அவன் கட்டாயம் வரவேண்டும் என அம்மா முருகனை அடிக்கடி
      வேண்டினாள்.
      அடிக்கடி குண்டு சத்தங்கள் கேட்கின்றன. நிலமும் காற்றும் வானும் அதிர்கின்றன.
      அடிவயிறு குலுங்குகிறது.
      சிறுவயதில் இருளை கண்டு பயந்து அம்மாக்கள் பக்கத்திலேயே ஒட்டியபடி படுத்திருந்த
      புதல்வர்கள் யாருமற்ற வயல்வெளிகளிலே பிசாசுகளும் உலவ தயங்கும் நடுநிசி
      வேளைகளிலே இவ்வாறு தி¡¢ய எப்படி பழகினர் இந்த பயங்கர சத்தங்களை எவ்வாறு
      தாங்கி கொள்கின்றனர் இந்த ஆபத்துக்களை எவ்வாறு சி¡¢ப்புடன் ஏற்று
      இவ்வாறு வேகத்தையும் வெஞ்சினத்தையும் அவர்களின் மனங்களில் விதைத்தது யார்
      கடவுளே....எவளெவள் பெத்த பிள்ளையளோ...இப்பிடி வாய்க்கு வயித்துக்கில்லாமல்....
      குண்டு ஒன்று பிசிறடித்த சத்தத்துடன் வெடிக்கின்றது. கேட்டு பழக்கமில்லாத
      வித்தியாசமான வெடிப்பு. மிகவும் வெறுக்கத்தக்க அருவருப்பான சத்தம் அரை குறையில்
      பிரசவமான ஒரு உயிரற்ற முண்டத்தை போல.
      அம்மாவுக்கு உடல் பட்டென வியர்த்தது. ஏதோ கெட்ட விஷயம் நடந்தேறியதாக உள்ளுணர்வு
      சொல்லிற்று.
      எழுந்து மேசையை நோக்கி போனாள். நடுங்கும் கரங்களால் விளக்கை தூண்டினாள். இறங்கி
      முற்றத்துக்கு வந்தாள். சேலையை இழுத்து போத்திக்கொண்டு குண்டு சத்தம் வந்த திசையில்
      பார்த்தாள். நாய் அம்மாவின் காலடியில் நின்றது. வாலை கால்களுக்கிடையில்
      நேராகத்தொங்க போட்டபடி செவிகளை வானோக்கி உயர்த்தி எதையோ உற்று கேட்டது. மெல்ல
      உறுமிற்று. பிறகு வேதனையான குரலில் ஊளையிட்டது. வீட்டை சுற்றிச்சுற்றி வேகமாக
      ஓடியது. அம்மாவின் காலடியில் நிற்பதும்...பிறகு ஓடுவதும்...கெட்ட சேதியன்றை
      அம்மாவுக்கு உணர்த்த அது துடித்ததும் போலும்
      செங்கா¡¢ பசு மீண்டும் கதறியது. சிள்வண்டின் பிலாக்கண ஓசை மிகைபட
      கேட்கலாயிற்று. குரக்கன் பிட்டுவாசனை எங்கும் நீக்கமற நிறைந்தது.
      அம்மா சோர்ந்துபோய் துடிக்கும் நெஞ்சுடன் முற்றத்தில் உட்கார்ந்தாள். நெஞ்சு மிக வரண்டு
      விட்டது. தொண்டை குழிக்குள் கனமான வஸ்து ஒன்று அடைத்துவிட்டது போல
      திமிறித்திமிறி மூச்சுவிட்டாள்.
      சீலனை நினைத்து ஏங்கினாள். குலம் இன்றாவது வருவான் என்ற
      பொய்த்தது. இரவும் பகலும் முற்றி அம்மாவை சுற்றி கனமாக படிந்தது துன்பம் தரும்
      குரலில் ஏதோ சொல்லிற்று.
      சற்று தூரே போகும் ரோட்டில் ஒரு வாகனம் விரைந்து சத்தம்.
      நோயாளியை யாரோ சிலர் அவசர அவசரமாக சுமந்துகொணடு காப்பாற்ற ஓடி
      கொண்டிருப்பதாக....
      எங்கோ ஏதோ பிசகு நடந்துவிட்டது.
      கோழிஒன்று பா¢தாபமா குழறுகிறது. மரநாய் பிடித்திருக்க வேண்டும். தீனமான அந்த
      சத்தம் மெல்ல மெல்ல தேய்ந்து தூரே போய் மறைகிறது. நாள் துரத்தி
      ஓடிப்போய் இயலாமையுடன் திரும்பி வருகிறது.
      விழிகள் திறந்தபடியே இருக்க அம்மா கனவு கண்டாள்.
      வயல் வெளியில் அம்மா நிற்கிறாள் சூ¡¢யன் பயங்கரமா காய்ச்சுகிறான். மழையும்
      பெய்கிறது. வெம்மையாக அம்மா உடலை பொசுக்கிற்று மழைநீர்.
      ஒழைத்து இழைத்து ஊருக்குள் நுழைகிறாள். ஒழுங்கைகளில் வெள்ளம் பாய்கிறது ஒரு
      சிவப்பு நூல்போல இரத்த ஓடை ஒன்று வெள்ளத்தில் கலக்கிறது. அம்மா அதன்வழி போனாள்.
      வெகுதூரம்...வெ-கு-தூ-ர-ம்...கடையில் வந்து சேர்ந்தாள். வீட்டு வாசலில் சீலன்
      தலையை கவிழ்ந்தபடி இருக்கிறான். கண்களிலிருந்து இரத்தம் தாரை தாரையா
      கொட்டுகிறது மழைநீ¡¢ல் கலக்கிறது. வீடெங்கும் இரத்தம். நாய் இரத்தத்தை நக்கி நக்கி
      குடிக்கிறது.
      கனவில் இரத்தத்தை காண்பது கூடாதே அம்மா வீ¡¢ட நினைத்தாள். இயலாமல் போயிற்று.
      குலம் அன்று வரவேயில்லை. அம்மா முழு இரவும் தூங்காமல் விழித்திருந்தாள். அந்த
      கொடிய இரவின் ஒவ்வொரு வினாடியையும் வேதனையுடன் அனுபவித்தாள்.
      கிழக்கு வானிலே விடிவெள்ளி காலித்தது. சந்திரனை அது மேற்கு நோக்கி விரட்டிற்று.
      காகங்கள் துன்பம் நிரம்பிய குரலில் விடிந்து கொண்டிருப்பதை பூமிக்கு சொல்லின.
      கோழிகள் சிறகடித்து கொக்கா¢த்தன கூவின. முதல் நாள் இரவில் பறிபோன தங்களது
      தோழனுக்காக அவை அஞ்சலி செலுத்தின. மாடுகள் மடிநிறை பால் சுரந்து கனக்கின்ற
      வேதனைதாளாமல் கன்றுகளை அழைத்தன. செத்த வீட்டுக்கு தலையை குனிந்து கொண்டுவரும்
      ஒருவனை போல சூ¡¢யன் மெல்ல
      பு¡¢யாத பேதையான மகள் சோம்பல் முறியடித்தபடி எழுந்து வந்தாள். முற்றத்தில்
      நாடியில் கையூன்றி உறைந்து போய்விட்ட அம்மாவை பு¡¢யாத பார்வையால் அளந்தாள்.
      அம்மாவின் ஜீவன் எங்கே ஓடி ஓளிந்துவிட்டது. சிறு காற்றுக்கூட
      தேகத்தை பூமியில் புரட்டி விடும்.
      மெல்ல எழுந்து திண்ணையில் கால் நீட்டி உட்கார்ந்தாள். யாராவது ஒரு வேலையற்ற பெண்
      அம்மாவைத்தேடி வரமாட்டாளா கேவும் குரலில் அவளிடம் தன் துன்பங்களை கொட்டி அம்மா
      ஒரு பாட்டம் அழுது ஓயமாட்டாளா
      ஒருவரும் வரவில்லை. பதிலாக மகள் பள்ளிக்கூடம் போக வேண்டியிருந்தது. மாடுகளை
      அவிழ்த்து மேய்ச்சலுக்கு துரத்த வேண்டியிருந்தது. கோழிகளை கவனித்து கொள்ள
      வேண்டியிருந்தது.
      அம்மா யந்திரகதியில் அவற்றை செய்தாள். மூளை வேலை செய்து மரத்து போயிற்று.
      கண்கள் காந்தின. அம்மாவுக்கு உட்காய்ச்சல் கண்டுவிட்டது. நெருப்பு காற்றுப்போல
      உஷ்ணமான மூச்சுக்கள் உதடுகளை பொசுக்கின. காரணமற்று சில தப்படிகள்
      நடப்பதும்...பிறகு நெடுநேரம் ஒரேயிடத்தில் உட்கார்வதும்...தூரே அர்த்தமற்று பார்வை
      பதித்து பெருமூச்சுக்கள் எறிவதும்...
      சூ¡¢யன் யாருக்கும் பி¡¢வு சொல்லாமல் மறைந்து போனது. இருளுடன் போ¡¢ட்டு
      தோற்றுப்போய் அழுது வடிகிறது நிலவு. காற்று சோர்வாக நடந்து போ கொண்டிருந்தது.
      அம்மாவால் இவற்றை கவனிக்க முடியவில்லை.
      சீலன் என்ன ஆனான்
      குலம் ஏன் நாலைந்து நாட்களாக வரவில்லை
      அம்மா மனதில் கேள்விகள் மாறிமாறி எழுந்தன ஒன்றை ஒன்று துரத்தின.
      தொடர்ந்து மூன்று நாட்களா குண்டு சத்தங்கள் கேட்கவில்லை அச்சமூட்டும் பேரமைதி
      ஊர்மேல் கவிந்தது. மூன்று நாட்களும் அம்மாவால் ஒரு வாய்கூட உண்ண முடியவில்லை. ஒரே
      விக்கல்
      நாலாவது இரவு வேகமாக வந்தது.
      ஓ இந்த இரவுகள் மிகவும் கொடியன.
      அம்மா திண்ணை குந்தில் கால்நீட்டி உட்கார்ந்திருந்தாள். மரஇலைகள் நடுநடுங்கி
      கொண்டிருக்க காற்று அவற்றை சீண்டிவிட்டு போ கொண்டிருந்தது. நிலவு
      மேகங்களுக்குள் பயந்து போய் ஒளித்துக்கொண்டு அடிக்கொருதரம் எட்டிப்பார்த்து சட
      என தலையை உள்ளிழுத்து கொண்டிருந்தது. ஒழுங்கையில் யாரோ சுருட்டு
      பிடித்துக்கொண்டு போனான் போலும். கும்பென சுருட்டின் நாற்றம் வீசிற்று. நாய்
      சுருண்டுபோய் அம்மா பக்கத்தில் படுத்திருந்தது.
      வாகனம் ஒன்று வருவதை அம்மா உணர்ந்தாள். அளவான வேகம். கண்களை கூ செய்யும் ஒளி
      வெள்ளத்தை உமிழ்ந்த படி வாசலில் நின்றது. ஹோர்ன் ஐ ஒலித்து வந்துவிட்டதாக சேதி
      சொல்லிற்று.
      அம்மா ஆசுவாச பெருமூச்சு விட்டாள்.
      கடவுளுக்கு நன்றி குலம் இன்று வீட்டுக்கு வந்திருக்கிறான்
      கதவுகளை திறந்து அறையுஞ் சத்தம். குலம் மட்டுமல்ல வேறும் சிலர் வந்திருக்கவேண்டும்.
      குசுகுசுவென கதைக்கின்ற சத்தம். படலையை மெல்ல தள்ளி திறந்தனர். கூட்டமாக வந்தனர்.
      யாரோ ஒருவனை கை தாங்களில் கூட்டிக்கொண்டு வந்தனர். அம்மா பயந்தவளாய் விருட்டென
      எழுந்தாள். விளக்கை தூக்கி உயரப்பிடித்தாள்.
      குலம் சோர்ந்துபோய் வந்துகொண்டிருந்தான். அவனை தாங்கி அழைத்து வருகின்றனர். வலது
      கையை ஒருவன் மென்மையாக பற்றியபடி வந்தான் மணிக்கட்டுக்கு கீழே இரத்தம் ஊறிப்போன
      ஒரு துணி பந்து
      ஐயோ இந்த அம்மாவின் முரட்டு குழந்தைக்கு என்ன வாயிற்று
      அம்மா அலற நினைத்தாள் முடியவில்லை. நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டது.
      அம்மா அசைய நினைத்தாள் முடியவில்லை பாதங்களை யாரோ ஆணியால் தரையுடன் சேர்த்து
      அறைந்ததுமாதி¡¢.
      அவர்கள் ஓலைப்பாயை வி¡¢த்தனர். தலையணைகளை போட்டனர். குலம் பொறுக்க முடியாமல்
      முனகியபடி சா¢ந்தான். முகம் மிக வெளிறியிருந்தது. உதடுகள் காய்ந்து
      தோலு¡¢ந்திருந்தன. மிகவும் தாகமாக இருந்தான். நாவால் உதடுகளை நீவினான்.
      அம்மா.....
      தீனக்குரல் அம்மாவை அழைக்கிறது அம்மாவால் பதில் சொல்ல முடியவில்லை.
      அவர்கள் கிட்ட வந்தனர். தலையை குனிந்தபடி அம்மாவை சூழ நின்றனர். ஒருவன் அம்மாவை
      தொட்டசைத்தான் அம்ம இமைக்க மறுக்கும் விழிகளால் அவர்களை பார்த்தாள்.
      அவர்களை அம்மா அடையாளங் கண்டாள் நடு நிசிகளில் ...யாருமற்ற
      வெளிகளில்....தி¡¢கின்ற புதல்வர்கள்
      ஓ குலமுமா இந்த அப்பாவி அம்மாவை இவ்வளவு காலமும் ஏமாற்றி தி¡¢ந்தான்
      கோப்பி வச்சுக்குடுங்கோ....
      அம்மாவின் தோள்களை குலுக்கியபடி ஒருவன் சொன்னான்.
      அவளுடைய முரட்டு மகன் பு¡¢யமுடியாத புதல்வன் கையை காவு கொடுத்து
      வந்திருக்கிறான் தாகத்தால் தவிக்கிறான்
      கடவுளே அம்மாவுக்கு கொஞ்சம் பலமளிக்கமாட்டாயோ
      அம்மா எதுவோ கேட்க உன்னினாள். அர்த்தம் குலைந்த பலகீனமான ஒரு முனகல் மட்டுமே வந்தது.
      அம்மா அசைய முயற்சித்தாள். பெரும் பிரயாசையுடன் கால்களை பெயர்ந்தாள். உடல்
      முழுவதும் மரண வேதனை போலும் நோவெடுத்தது. ஓரடி எடுத்து வைத்தாள். மொளக்கென
      ஏதோ சுளுக்கி கொண்டது. அம்மா பிருஷ்டம் அடிபட மல்லாந்து விழுந்தாள்.
      அவர்கள் அம்மாவை தூக்கினர். ஓலைப்பாயை வி¡¢த்தனர். தலையணைகளை போட்டனர். பாயில்
      அம்மாவை மெல்ல சா¢த்தனர்.
      ஊருக்குள் எப்படித்தான் விஷயம் பரவிற்றோ
      அவசர அவசரமாக மண்ணெண்ணெய் விளக்குகள் மீண்டும் ஏற்றப்பட்டன. ஒவ்வொருவராக ஊர பெண்கள்
      அம்மாவின் வீட்டு முற்றத்தில் கூடத்தொடங்கினர்.
      கையிலையே வெடிச்சிடுத்தாம்... ஒருத்தி பீதி கவ்விய குரலில் மற்றவளிடம்
      குசுகுசுத்ததை அம்மா கனவிற் கேட்பதை போல கேட்டாள்.
      குலத்தை திரும்பி பார்த்தாள். அரை மயக்கத்தில் கிடந்தான். சொட்டு சொட்டாக
      கருஞ்சிவப்பு இரத்தம் தலையணையில் சிந்தி கொண்டிருந்தது.
      முத்து முத்தாக சூடான கண்ணீர் அம்மாவின் கன்னங்களை நனைத்தபடி சிந தொடங்கிற்று.
      3
      முதுகு பிடிப்புடன் ஒரு முதியபெண். அவள் வெகுவேகமா கிழவியாகி
      கொண்டிருந்தாள். ஊ¡¢ல் ஒருவருடனும் அவள் இப்போ பேசி சி¡¢ப்பதில்லை.
      ஒரு அழகிய சிறுமொட்டு. பு¡¢யாத பேதை. வாடிக்கொண்டிருக்கும் பூமரம். அவளது
      வயதுக்கு மீறின குருட்டு யோசனைகள். கவலைகள் ஏக்கங்கள். தாயின் வேலையில்
      பாதிக்குமேல் இதன் பிஞ்சு தோள்களில் பலவந்தமாக இறக்கி வைக்கப்பட்டது.
      பள்ளிக்கூடத்துக்கு ஒழுங்காக போவதில்லை. போகும் நாட்களிலும் பிந்தித்தான் போகும்.
      ஒரு அழுக்கு யூனிபோமுடன் கலைந்த கேசத்துடன் வாடிய முகத்துடன். கண்களில்
      பிந்திவிட்டதில் கலவரமும் பயமும் தெறிக்க மார்பில் புத்த கட்டுக்களை அணைத்தபடி
      புழுதி பறக்கும் ஒழுங்கைகள் வழியே ஓட்டமும் நடையுமாக விரையும்.
      ஒரு முரட்டு இளைஞன். மணிக்கட்டுக்கு கீழே அவனது கரத்தை
      விட்டார்கள். அவனிடம் அடிக்கடி அவன் தோழர்கள் வருகின்றனர். ஒரு
      மெக்கானி மிகவும் மூளைசாலி. அவசியமானவன். ஒற்றை கையால் கடுமையாக
      உழைக்கக்கூடிய அசகாய சூரன். நாலைந்து நாட்களுக்கொரு முறை நடுநிசி நேரம்
      வீட்டுக்கு வருவான். அவன் முகத்தில் காணப்படும் கடுமையும். எதோ ஒரு வெறியும்
      காண்போரை பிரமிக்க செய்யும். அவன் ஒரு முசுடு. அதிகம் பேசமாட்டான். வீட்டுக்கு
      வந்தவுடன் அம்மாவுக்கு பணம் கொடுப்பான். உடனே ஓலைப்பாயை வி¡¢த்தபடி தலையனைகூட
      இன்றி தூங்கிப்போவான்.
      வீடு மிகவும் பழையது. ஒரு சிறு குடிசை கூரை உக்கி
      முற்றத்தில் எங்கணும் பூவரசமிலைகள் சருகாக குப்பையாக சேர்ந்திருக்கும்.
      ஒரு நாய். அதை கவனிப்பா¡¢ல்லை. எலும்பெடுத்து தொ¢ய மெலிந்துவிட்டது. சொறி
      பிடித்துவிட்டது. காதுகளில் உண்ணிகள் படையாக பெருகிவிட்டன. வளவின் ஒரு
      மூலையில் மண்ணை தோண்டிவிட்டு சோம்பி படுத்திருக்கும். அது குரைப்பதோ ஓடுவதோ
      கிடையாது விரைவில் இறந்துவிடும்.
      அடிக்கடி இந்த வீட்டுக்கு மாட்டு தரகர்கள் வருகின்றனர். கதற கதற ஒரு பசுவையோ
      கன்றையோ இழுத்து போகின்றனர். கால்களை பரப்பி கொண்டு போக மறுத்து அது கதறும்.
      உதவிக்கு அம்மாவை அழைக்கும். தன் இனத்தை பா¢தாபமான குரலில்
      எல்லாம் சேர்ந்து அழும்.
      இரவு நேரங்களில் அடிக்கடி குண்டு சத்தங்கள் கேட்கும் மரநாய்கள் கோழிகளை குழற
      குழற தொண்டையில் திருகியபடி இழுத்துப்போகும். உயிரை வாட்டும் அத்தீனமான ஓலம் மெல்ல
      மெல்ல தேய்ந்து தூரே போய் மறையும்.
      அம்மா இப்போ குண்டு சத்தங்களை சட்டை செய்வதில்லை. அவள் துன்பங்களுக்கும்
      இழப்புகளுக்கும் பழக்கப்பட்டவள்.
      குலத்தினதும் சீலனினதும் ஜாதகங்களை தூக்கிக்கொண்டு பெயர் பெற்ற சாத்தி¡¢மார்களை
      தேடி போகிறாள்.
      சீலன் புனர்பூச நட்சத்திரம் ராமன் கூட
      அவனும் காடுகளில் வசிக்க நேர்ந்தது கடலை கிடக்க
      நெடூகலும் போ¡¢ட்டு கொள்ள நேர்ந்தது.
      வெல்ல முடியாது என்ற இறுமாப்பில் தென்னிலங்கையில் மமதை கொண்டிருந்தவர்களை அவனும்
      வென்றான்
      சாபத்தால் பீடிக்கப்பட்டவர்களுக்கு அவனும் விமோசனமளித்தான்
      அவனும் பேதங்களை கடந்தவன் குரங்கும் வேடனும் அவனது தோழர்கள்
      ஓ ஆயினும் ராமன் போ¢ல் அன்பு கொண்டவர்கள் அவன் பா¢வால் துன்புற நேர்ந்தது.
      தசரதன்...கோசலை...சீதை
      குலம் அத்த நட்சத்திரம். அத்தம் அதமம் என்றார்கள் சாத்தி¡¢மார்.
      அவன் ராஜத்துரோகமான கா¡¢யங்களில ஈடுபடுவான் என்றும்......
      மிக பொ¢ய கண்டங்களில் மாட்டிக்கொள்ள நேரும் என்றும்.....
      மறியல் வீட்டுக்கு போகின்ற பலன் கூட அவனுக்கு உண்டென்றும்.....
      கிரகங்கள் யாவும் நீசதிசை அடைந்திருக்கின்றனவென்றும்......
      ------------------------------------------------------------------------
      5. அரசி
      ......பசிக்கு பிச்கை கேட்க யா¡¢டமும் என்னேரமும் முடிகிறதா தனக்கென ஒரு
      வீடு தனக்கென்று ஒரு மனைவி தன் பலவீனத்தை உணர்ந்ததில்தான் என்கிற
      கொண்டாட இடமேற்படுகிறது ஆண்களுக்கு பெண்ணோ வெனில் தன் பலத்தை மறக்க மறைக்கத்தான்
      மனைவியாகிறாள். ஒன்றிலும் கட்டுப்படாது தனியே நின்று உற்று பார்ப்பதே பெண்மையின்
      பயங்கர கருவிழிகள் தான்....
      - மெளனி
      நேற்றிரவு தூக்கமில்லை. சுதா விரைவில் போகப்போகிறாள் அதைவிட கிணற்றை பழுது
      பார்க்கும் வேலைகளும் நடந்து கெண்டிருக்கின்றன. தொப்பி கட்டு ஆங்காங்கே சிதிலமாகி
      விட்டது. உட்சுவா¢லும் பூச்சுக்கள் சில இடங்களில் உதிர ஆலங்கன்றுகளும் வேறும்
      பூண்டுகளும் முளை விட்டிருந்தன. எல்லாவற்றையும் சேர்த்து பழுதுபார்க்க முனைந்து
      நிற்கிறாள் அண்ணி.
      அண்ணியை தவிர இந்த வீட்டில் வேறுயார்தான் முனைப்புமி கொண்டவர்களாயுள்ளனர்.
      அண்ணாவுக்கோவெனில் கடைதான் உலகம். கடையையும் அண்ணியின் முகத்தையும் தவிர அவர்
      வேறெதையும் இப்போ ஏறிட்டு பார்ப்பது கிடையாது.
      முன்னரெல்லாம் அண்ணா இரவு நேரங்களில் வானத்தை பார்த்தபடி நெடுநேரம் நிற்பார்.
      அக்காலங்களில் அவரது நெஞ்சம் கசந்த நினைவுகளை மட்டுமே கொண்டிருந்தது. இருண்ட
      இரவுகளில் நட்சத்திரங்கள் கொண்டாட்டமாக கண் சிமிட்டுவதை பார்த்தபடி நிற்பார். அங்கே
      அம்மாவும் அப்பாவும் நட்சத்திரங்களாக ஜொலிக்கிறார்களாம். ஒரு நாளைக்கு
      வடக்குமூலையில் அவை தொ¢வதை காண்பார். பிறகொரு நாளில் சற்று இடம்
      போயிருக்கும். அவை பிரகாசமாக மின்னும் அருகருகாக இருந்து கொண்டு அண்ணாவை
      பார்க்கும். வெகு நேரம் வரைக்கும் அண்ணாவுக்கு அவை சேதிகள் சொல்லும். அவரது கண்களில்
      நீர் திரளும்.
      நிலவு பொழிகின்ற நாட்களில் அண்ணா மிகவும் மனவெழுச்சி கொண்டு காணப்படுவார்.
      கைகளை பின்புறமா கட்டியபடி முற்றத்திலோ அல்லது வானம் நிர்வாணமாக
      தொ¢யக்கூடிய இடத்திலோ நின்று மெது நடை போடுவார். அவரது கண்கள் உணர்ச்சி வேகத்தில்
      பளபளக்கும். அண்ணாவினது உணர்ச்சிகளை அந்த நாட்களில் பு¡¢ந்து கொண்டவர் எவரும் இலர்.
      அவருக்கு நெருங்கிய சினேகிதர்களும் கிடையாது. அந்த காலத்தில் எல்லாம் அண்ணா
      தனக்குள்ளாகவே சில விவகாரங்களை சீரணிப்பதும் மீள அசைபோடுவதுமாக இருந்தார்.
      அப்போ அண்ணா முகத்தில் சி¡¢ப்பு தொ¢வது அபூர்வம். யோசனை.... சதா குருட்டு
      யோசனைகளும் கண்களில் அடியாழத்திலிருந்து எட்டிப்பார்க்கும் துக்கக்குறியும்தான்.
      அவருக்கு நிறை கற்பனைகள். துக்கம் வழிகின்ற கற்பனைகள் தாம் அரைவாசி வாழ்நாளில்
      இறந்துபோய் விடுவோமென அவர் உறுதியாக நம்பினார். அதை விரும்பக்கூட செய்தார்.
      வாழ்க்கை அந்தளவுக்கு அவரை அடித்து வசக்கியிருந்தது. இழப்புக்களாலும்
      ஏமாற்றங்களினாலும் சத்திக்கு மீறிய செலவுகளாலும் சோர்ந்து போயிருந்தார்.
      பாலனுக்கும் சுதாவுக்கும் சுமிக்கும் அவர் சோறு போடவேண்டியிருந்தது. படிக்க
      வைக்க வேண்டியிருந்தது அவர்கள் ஏந்நேரமும் அவா¢டம் ஏதாவது கேட்டு
      கொண்டேயிருந்தார்கள். அவர்களுக்கு கொடுக்க தொ¢யவில்லை. முடியவுமில்லை.
      அவர்களுக்கு பராயம் காணாது சிறிசுகள் அப்படி அவர் எண்ணி கொண்டார்.
      அண்ணியை போலொரு பெண்ணை தனக்கு கல்யாணம் பண்ணிக்கொள்ள கிட்டும் என அவர்
      எதிர்பார்க்கவேயில்லை. அது எப்படி நடந்தது என இன்றும் கூட அவர் ஆச்சா¢யப்பட்டு
      கொண்டேயிருக்கிறார். அண்ணி வந்த பிறகு அவரும் கூட ஆச்சா¢யப்படும் விதத்தில்
      மாறித்தான் போனார்.
      உண்மையில் ஆரம்பத்தில் அவர் அண்ணியை வெறுத்தார். அவளை கண்டு பயந்தார். அவளது
      பிரகாசமான விழிகளை பார்க்கும் தோறும் அவர் மிரண்டார். அண்ணியின்
      பார்க்கும் தோறும் அவர் மிரண்டார். அண்ணியின் விழிகளில் கடும்கருமை நிறத்தனவல்ல
      ஆயினும் அவளது வெண்விழிகள் வியப்பூட்டும் அளவுக்கு வெண்மையாக இருந்தன. கண்மணிகள்
      பொ¢தாக இருந்தன. அவை எதிரேயிருப்பவரை ஊடுருவி பார்க்கும். அந்த பார்வை
      எவரையும் பணிய வைக்கும் ஆளுமை கொண்டது. அந்த தான் பிறகு
      தொற்றியிருக்க வேண்டும். இல்லாவிடில் இந்த பத்து வருடங்களில் இவ்வளவு கா¡¢யங்களை
      ஒப்பேற்றியிருக்க முடியுமா
      அண்ணி கொடுத்த நகைகள் தான் இப்படி பல்கி பெருகி விட்டனவா என அண்ணாவுக்கு
      சொல்ல தொ¢யவில்லை. அவரால் ஆச்சா¢யப்பட மட்டுமே முடிகிறது.
      கல்யாணமான புதிதில் ஒரு நாளிரவு தனது நகைகளையும் தன்னையும் முழுமையா
      கழற்றி அண்ணாவிடம் அவள் கொடுத்தாள். அன்றிலிருந்து அண்ணா புதுமனிதராகி விட்டார்.
      அவரது துக்கரமாக சிந்தனைகள் குடியோடி போயின. அவர் வாழ விரும்பினார். உலக
      இன்பங்களை மிகுந்த வெறியுடன் காதலித்தார். அவரது மனதில் புதுத்தெம்பு பிறந்தது.
      கன்னங்கள் சற்றே மெழுகினாற் போல தசை பிடிப்புள்ளவாகின. மேனி மினுங்கிற்று.
      ஆனால் அண்ணி அதற்கு பிறகு நகைகள் அணிவதை தவிர்த்து வந்தாள். இரண்டே வருடங்களில்
      அவள் கொடுத்ததை விட பத்துமங்கு நகைகள் செய்யுமளவுக்கு அண்ணா பொ¢ய மனிதர்
      ஆகிவிட்டார். செய்து செய்யுமளவுக்கு அண்ணா பொ¢ய மனிதர்
      கொடுக்கவும் செய்தார். ஆனால் அவள் அணிவதில்லை. இப்போதெல்லாம் காதுகளில் வெகு
      சாதாரணமான தோடுகளை மட்டும் அணிகிறாள். அதுவொன்றே அவளது கீர்த்தி வீசும்
      முகத்துக்கு வெகு சோவையை அளிக்கிறது. அவள் நெற்றியில் பொ¢ய வட்டமாக குங்குமம்
      குலங்கும். அது தான் அவளது உண்மையான ஆபரணம். மிகுந்த கவர்ச்சியை
      சிவந்து விழிக்கிறது. அந திலகத்தினால் அவள் அண்ணாவை சுண்டிச்சுண்டி தன்பால்
      இழுத்தாள்.
      கடை ஆரம்பித்த புதிதில் அண்ணாவுக்கு இருப்பு கொள்ளாது. ஏதாவது சாக்குப்போக்கு
      சொல்லி வீட்டுக்கு ஓடிஓடி வருவார். அண்ணியோ வெனில் குறும்பு குறுஞ்சி¡¢ப்புடன்
      திரும்ப ஓடஓட விரட்டுவாள்.
      இவ்வளவு காலமும் ஙே...ஙே எண்டு மேகத்தை பார்த்து முழிச்சது
      போதாதா...ஓடுங்கோ கடைக்கு ஓடுங்கோ....
      அண்ணா திரும்பி செல்வார். நடந்துதான் போவார். அதில் அவருக்கு பொ¢ய சுகம்
      தொ¢ந்தது. கடை கூப்பிடுதூரம்தான். பிறகு கார் வாங்கிய பின்பும் வீட்டுக்கும்
      கடைக்கு மிடையே நடைதான். கார் வீட்டின் முன்புறம் அலங்காரமாக நிற்கும். அண்ணியை
      விடவும் இந்த ஜடங்கள் வீட்டுக்கு அணிகலனா என்ன எதி¡¢ல் வரும் கா¡¢ன்
      பின்சீற்றிலிருந்து முகம் நிறைந்த சி¡¢ப்பும் கும்பிடுகளும் எட்டிப்பார்க்கும்.
      சைக்கிள்களோவெனில் ஸ்லோ பண்ணி வந்தனம் தொ¢வித்தபடி போகும். அவையெல்லாம் தனக்கா
      தனக்கா என அண்ணா ஆச்சா¢யப்படுவார்.
      அவளுக்கு என முணுமுணுத்தபடி ஏறுநடை போடுவார். அவருக்கு
      சாடையாக தொந்தி வைத்துவிட்டது. அண்ணிஅதில் அடிக்கடி செல்லமா குத்துவாள்.
      செல்லவண்டி...கள்ளவண்டி..... என்பாள்.
      அவளால்... அவளால் என்றபடி கடைவாசல்படியை அழுந்த மிதித்து ஏறுவார்.
      எதிர்புறமிருந்து ஜோன்சன் முதலாளி கண்களை மிக சிறப்பித்து காட்டும்
      கண்ணாடியினூடாக ஓரப்பார்வை பார்த்தபடி அண்ணாவை வம்புக்கிழுப்பார்.
      என்ன முதலாளி...வீட்டை போய் வாறியளோ....
      எமகாதகன் ஆள் சா¢யான ஜொலி பேர்வழி
      ஊம்...ஊம் என அண்ணா முனகுவார்.
      தண்ணி விடாய் போலை..கெஹ்கெஹ்ஹே...விடாய்க்கும் விடாய்க்கும் ஹி...ஹி...
      ஜோன்சன் முதலாளியின் பொ¢ய தொந்தி சி¡¢ப்பால் தழுமபி குலுங்கும் அண்ணா மானசீகமாக
      ஜோன்சன் முதலாளியின் தொந்தியில் ஒரு குத்து விடுவார். பிறகு எதிர்படுகிற பையனை
      காரண கா¡¢யமற்று விரட்டுவார்.
      அண்ணா தான் ஓடிஓடி அண்ணியை பார்க்க போவார். அவள் கடைக்கு வருவது அபூர்வம். விரல்
      விட்டெண்ண கூடிய தடவைகளே வந்திருக்கிறாள். அந்நேரங்களில் கடை நிறைந்து விடும்.
      றாக்கைகள் ஷோகேஸ்கள் எல்லாம் கொள்ளாமல் வழிவன போல இருக்கும். கடையில் கால்வைக்க இடம்
      பற்றாது என மொழி தோன்றும். ஒரு கோடி சூ¡¢ பிரகாசமுள்ள அ¡¢ய வஸ்து உள்ளே
      நுழைந்து விட்டதென ஒரு வசீகர தோற்றம் கிடைக்கம் அண்ணி சிலநொடி நேரம்தான்
      நிற்பாள். அவள் நெடுநேரம் நிற்க வேண்டும் கல்லா மேசையடியில் உட்கார
      என்பதில் அண்ணாவுக்கு நிறைய ஆசை. ஆனால் அவள் உட்கார்ந்தது கிடையாது உடனேயே போய்
      விடுவாள். எல்லாமே வெறிச்§¡டி விட்டது போல ஆகிவிடும் கடை சிப்பந்திகள்
      வாட்டமுற்றது போல காசு எண்ணியெண்ணி மாளாது. சாம்பிராணியுடன் மிளகாயும் உப்பும்
      இட்டு புகைக்கும் போது மிளகாயின் காரநெடி உறைப்பதேயில்லை. படபடவென பொ¡¢ந்து
      வெடிக்கும்.
      இலட்சுமி கடாட்சம்...இலட்சுமி கடாட்சம் என்கிறார்களே அது இதுதான் போலும்
      எல்லோருக்கும் அண்ணி எதை கொடுத்தாள் என்று சொல்வது கடினம் பாலன் சுமி சுதா
      எல்லாரும் அண்ணியை சார்ந்தவர்களாகி விட்டனர். கெளசல்யாவை பற்றி சொல்ல
      வேண்டியதேயில்லை. அண்ணி நொந்து பெற்ற பெண்ணில்லையா அவள் அண்ணாந்து அவர்கள் இப்போ
      தொந்தரவு படுத்துவது கிடையாது. அதிலும் இந்த சுதா- அண்ணி வந்த போது ஒரு
      சின்னப்பெண்ணை போன்று அவளை தொட்டு பார்த்து கையை இழுத்து கொண்டவள்-
      அண்ணியுடனேயே ஒட்டிக்கொண்டாள். அவளை பி¡¢ந்தால் அண்ணியின் உடலிலிருந்து உதிரம்
      பெருகும் என்பதென அண்ணிக்கும் அவள் மீது விசேஷப்பற்றுதல்.
      அந்த சுதா இனி போய்விடுவாள். இன்னும் ஒரேயரு நாள். அப்புறம்
      அண்ணியை விட்டு பி¡¢ந்தே இராத சுதா பஸ் ஏறி....பிளேன் ஏறி அவளுக்கு¡¢யவனிடம்
      போயே விடுவாள். அவன் அண்ணிக்கு தூரத்து உறவுமுறையில் தம்பியாக வேண்டும்.
      அவர்களுக்குள் முடிச்சு போட்டு வைத்தவளும் அண்ணி தான்.
      முதுலில் சுதா பிணங்கினாள் பயந்தாள்.
      அந்த ஆள் வில்லன் மாதி¡¢ இருக்கிறான்... என்றாள்.
      அண்ணி தேறுதல் சொன்னாள்.
      உங்கடை அண்ணா.... அப்ப பொ¢ய முனிவர் மாதி¡¢ இருந்தாரே...இப்ப எப்பிடி
      எனக்கு என்ன குறைவைச்சார்.... அதெல்லாம் சா¢வரும்....
      அப்படி சொல்கிற போது அண்ணியின் குரலில் ஒரு குறை இடறிற்று.
      எண்டாலும்...இந்த ஆம்பிள்ளை நம்பேலாதடி....சுதா என்றாள் நைந்துபோன குரலில்.
      அண்ணாவுக்கும் அண்ணிக்குமிடையே ஏதோ உண்டு
      இப்ப உப்பிடித்தான் சொல்லுவாய்...பிறகுபிறகு அண்ணியை பார்க்க நீ ஓடியா
      வரப்போறாய்.... எனக்கு தொ¢யாதா பெட்டையை பற்றி.... என்று நையாண்டியா
      குத்தவும் செய்தாள்.
      சுமியையும் இப்படித்தான் தனியே பி¡¢த்தணுப்பினாள். சுமியின் விஷயம் அண்ணா காதில்
      விழுந்ததும் அவர் வானத்துக்கும் பூமிக்குமாக பாய்ந்தார். யாரவன் என்று
      குதித்தார். எங்கடை அந்தஸ்தென்ன....குலமென்ன கோத்திரமென்ன என்று சொல்ல
      முனைந்தார். அண்ணி வேறுயாருக்கும் கேட்காத வகையில் அண்ணாவை ஏதோ சொல்லி கடிந்தாள்.
      அண்ணா தலையை குனிந்து கொண்டு கூனி குறுகி அப்பால் போனார். அண்ணாவுக்கும்
      அண்ணிக்குமிடையே ஏதோ புகைச்சல் உள்ளதை மற்றவர்கள் கவனித்தது அப்போதுதான்.
      சுமி மெளனமா போனாள். ஆனால் அண்ணி அறிவாள் சுமிக்கு அண்ணாமீதும் அண்ணிமீதும்
      தாளாத பி¡¢யம் உண்டென்பதை. சுமியின் சுபாவமே தனி. இல்லாவிடில் பூனை மாதி¡¢
      மெளனமாக இருந்துவிட்டு ¨தா¢யமா காதல் பண்ணினேன் கல்யாணம் பண்ணுவேன் என அடம்
      பிடித்திருப்பாளா எல்லோருடைய சுபாவமும் அண்ணிக்கு தொ¢யும்.
      பாலனை பற்றியும் அறிவாள். அவனுக்கும் ஒரு இடம் பார்க்க சொல்லி எப்போதிருந்தோ
      அண்ணாவை நச்சா¢த்து வருகிறாள். பாலன் இப்போ அவர்களுடன் இல்லை. அவனுக்கு சிறகு
      முளைத்துவிட்டது. அவனும் பறக்க வேண்டும் என அண்ணி மிக விரும்பினாள்.
      கெளசிக்குட்டியை பற்றி அண்ணியின் கற்பனைகளும் திட்டங்களும் எண்ணியோ எழுதியோ
      அடங்காதவை. இப்போதிருந்தே கெளசிக்காக நிறைய சம்பத்துக்கள் சேர்க்க தொடங்கிவிட்டான்.
      எல்லாவற்றையும் முனைப்புடன் நின்று கவனித்து வருகிறான். அண்ணாவுடனேயே அவள்
      எப்போதும் இருப்பாள். கிணறு பழுதுபார்க்க சொல்லி அவா¢டம் சொல்லி
      கடைசியில் தானே முன்னின்று முடித்து விட்டாள். தொப்பி கட்டும் உட்சுவரும்
      ஆங்காங்கே புதிய பூச்சுக்களை காட்டி இளித்தன. இறைந்து விட்ட நீர்வளவெங்கும்
      ஓடித்தேங்கியதில் காற்று ஈரத்தையும் இலேசான சேற்று வாசனையையும் சுமந்து
      தி¡¢கின்றது. தேங்கிய நீ¡¢ல் நட்சத்திரங்களும் குறைநிலவும் வீட்டின் பிரகாசமான
      வெளிவிளக்குகளும் பிரதிபலித்து தொ¢ந்தன. அவற்றை பார்த்தபடியே எண்ணி சற்றே
      தூங்கிவிழுந்தாள். நேற்றிரவு தூக்கமில்லை. இன்னும் எப்படியோ
      சுதா நாளைக்கு போகப்போகிறாள். தலைக்கு மேலே இன்னும் வேலைகள் காத்துக்கிடக்கின்றன.
      கூடவே பி¡¢வும் அண்ணியின் இதயத்தை தொட்டழுத்தியது.
      2
      விடிகாலையில் சுதா பயணமாகிறாள்.
      சுமி வந்திருந்தாள். வேறும் பலர் வந்திருந்தார்கள். இவர்களெல்லாம் ஒரு காலத்தில்
      அண்ணாவை கண்டும் காணாமலே போனவர்கள் தான். இப்போதோவெனில் தமது சமூகத்தை அண்ணா
      காணாமல் விட்டுவிடுவாரோ என அச்சபடுவர்களா காணப்பட்டனர். பெண்கள் அண்ணா பார்வையில்
      படும்படி நடமாடினர். ஒருத்தியோவெனில் கெளசிக்குட்டிக்கு முத்தம் கூட கொடுத்தாள்.
      வல்லவன் வீட்டு பெண்ணல்லவா ஆண்களெல்லாரும் அண்ணியை சூழ உட்கார்ந்து அரசியலும்
      விலைவாசியும் பேசினார்கள்.
      அண்ணாவுக்கு நிறைய வேலைகள். அங்குமிங்குமாக ஓடியாடி கொண்டிருந்தான்.
      கெளசிக்குட்டி அம்மாவின் சேலைத்தலப்பை பிடித்துக்கொண்டு பின்னாலேயே இழுபட்டது.
      அம்மா பொ¢ய பெட்டிகளில் விதவிதமான பளபளக்கும் சாறிகளும்
      திணி திணிய அடுக்குவதை பார்த்து. சுதா அன்¡¢யை இழுத்து வைத்துக்கொண்டு அம்மா
      கொஞ்சலும் சி¡¢ப்புமாக ஏதேதோ சொல்வதை கண்டது. ஆனால் சுதா அன்¡¢ அழுதாள்.
      அம்மாவின் தோள்களில் சாய்ந்து கொண்டு அழுதாள். அம்மாவும் கூடத்தான் கொஞ்சமாக
      அம்மா முகத்தில் இட்ட பொட்டு கரைந்து வழிந்தது. ஏற்கனவே சிவந்த அம்மாவின் முகம்
      மேலும் சிவந்து போயிற்று. அதை துடைக்க நேரமில்லாமல் அம்மா குசினிக்கும்
      அறைகளுக்கும் ஹோலுக்குமாக ஓடித்தி¡¢கிறாள்.
      எல்லா விளக்குகளையும் ஏற்றியிருந்ததில் வீடெல்லாம் ஓரே பிரகாசமாக ஜொலித்தது. அந்த
      ஜொலிப்பில் கெளசிக்குட்டிக்கு கண்ணை சுற்றியது. சீக்கிரம் தூங்கி போனது.
      கெளசிக்குட்டிக்கு மீள விழிப்பு வந்தபோதும் வீடெல்லாம் வெளிச்சம். வாசலில் கார்
      தயாராக நின்றது. அப்பா பின்னுக்கு கைகளை கட்டியபடி வானத்தை அண்ணாந்து
      கொண்டிருந்தார். அம்மா நல்லபுடவை கட்டியிருந்தாள். பொ¢தாக பொட்டு இட்டு
      கொண்டிருந்தாள். சுதா அன்¡¢ ¡¢ப்ரொப்பாக ஆயத்தமாக நிற்கிறாள். அவளிடமிருந்து
      நல்ல வாசனை வீசியது. அவள் எதையோ எண்ணி ரகசியமாக சுகிப்பதைப்போல கன்னங்களுக்குள்
      கள்ளச்சி¡¢ப்பொன்று ஓடியது.
      ஆனால் சுதா அன்¡¢ புறப்படும் போது மிகவும் அழுதாள். வாய்விட்டே
      அழுதாள். உம்முணா மூஞ்சியான சுமி அன்¡¢யும் அப்பா வெறெங்கோ
      சா¢தான்...வாங்கோடி....வாங்கோடி என இலேசாக அதட்டினார்.
      காருக்குள் ஒரே பிசுபிசுவென இருந்தது. சாலைகளில் இன்னும் இருள் விலகவில்லை.
      சுதா அன்¡¢ மேலும் கரைந்து கொண்டிருந்தாள். அப்பாவும் அம்மாவும் அவளுக்கு மாறிமாறி
      ஏதாவது சொல்லிக்கொண்டேயிருந்தார்கள். அவை எல்லாம் பொ¢யவர்களின் விஷயங்கள். அவற்றில்
      கெளசிக்குட்டி தலைபோடாது. அம்மா அப்படி சொல்லி தந்திருக்கிறாள்.
      கடைசியாக பஸ் புறப்பட்ட போது சுதா அன்¡¢யும் அம்மாவும் வெட்கம் கெட்டவர்களாய்
      சத்தமிட்டு அழுதார்கள். அப்பாகூட அழுதார். சுதா அன்¡¢ பாதியுடம்பை வெளியே
      நீட்டியபடி கைகளை ஆட்டியபடி போனாள்.
      திரும்ப வரும்போது சுமி அன்¡¢யை வீட்டில் இறக்கி விட்டு வந்தார்கள்.
      மெல்ல மிகவும் சோம்பலாக அன்றைய காலை
      வீடெல்லாம் ஓ என்ற ஒரு மெளனம். வெறுமை.
      கடையில் அண்ணாவுக்கு இருப்பு கொள்ளவில்லை. சுதாவை பற்றிய ஞாபகங்கள் மீண்டு மீண்டும்
      மேலெழுந்தன. சுதா அவருக்கு கடைசி தங்கை. அவளுடனான பி¡¢யமான சில நினைவுகள்
      அவருக்கு உண்டு. பழைய நாட்களில் சுதாவை பற்றிய கவலைகளும் நிறைய இருந்தன.
      அவளது அழகுக்கும் சுட்டித்தனத்துக்கும் கெட்டித்தனத்துக்கும் ஏற்ற ஒருவனை
      தேடிப்பிடித்து தம் அதை தான் எவ்வளவு சுலபமாக நிறைவேற்றியிருக்கிறள்
      அவருக்கு அண்ணியை பார்க்கவேண்டு அவளுடன் சிறிது நேரத்தை கழிக்கவேண்டும் போல
      இருந்தது.
      அட...தம்பியவன.....நான் வீட்டுப்பக்கம் ஒருக்கா
      போயிட்டுவாறான்....பாத்துக்கொள்ளுங்கோ...நான் வரச்சுணங்கினா சாவியை கொண்டந்து
      தந்திட்டு போங்கோ...
      அண்ணா நடக்க ஆரம்பித்தார். எதிர்புறமிருந்து ஜோன்சன் முதலாளி அடுக்கிக்கிடந்த
      மூடைகளினூடாக எட்டிப்பார்த்தார். அவரது தலைக்கு நேரே பின்புறம் சுவா¢ல் சிவமயம்
      இலாபம் என ஒன்றின் கீழ் ஒன்றாக எழுதப்பட்டிருப்பது தொ¢ந்தது.
      வீட்டுக்கா....
      ஓம்...என அண்ணா மெல்ல முனகினார்.
      தங்கச்சி போயிட்டாவோ
      தலையை ஆட்டினார்.
      எல்லாம் காலா காலத்திலை நடக்கவேண்டியது தானே.... சந்தோசம்...
      ......
      தம்பி .....உம்மடை வீட்டிலை லச்சுமி குடியிருக்கு...அது வந்த பிறகு தான் நீர்
      மனிசனா வந்தீர்....
      அண்ணா அசட்டு சி¡¢ப்புடன் நின்றார்.
      அப்ப நான் நிற்கிறன்....
      சா¢ என்றாவது அண்ணா மேலே நடந்தார்.
      அண்ணி வழக்கத்துக்கு மாறாக எதையோ பறிகொடுத்தவள் போல சோகித்து காணப்பட்டாள்.
      அண்ணா மெதுவாக அவளருகில் போய் அமர்ந்தார். அண்ணி அவருக்கு வழக்கம் போல பணிவிடை
      செய்ய முந்தவில்லை. தன் பாட்டில் எங்கோ கவனமாக தலையை நீவி விட்டுக்கொண்டிருந்தாள்.
      என்னப்பா...அவ்வளவு யோசினை....
      ப்ச்...ஒண்டுமில்லை.... என்றாள் அசிரத்தையாக.
      சுதாவை நினைச்சியா....
      ஏன் அவளை நினைக்க வேணும்....போக வேண்டியவள் தானே....போவிட்டாள்....
      அப்ப....என்ன யோசினை
      கட்டாயம் உங்களுக்கு சொல்ல வேணுமா
      எனக்கு என்னவோ என்னட்டையிருந்து கழண்டு போனது மாதி¡¢க்கு... என்று தயக்கத்துடன்
      இழுத்தார்.
      கழட்டி எவளட்டை குடுத்தனீங்கள்
      அண்ணாருக்கு ஆச்சா¢யமாக இருந்தது. அண்ணி ஒரு போதும் சு¡£ர் என தைக்கும்படி
      இவ்வாறு கதைத்தவளல்ல.
      சுமி போனாள்... சுதா போகிறாள்....பாலனும் ஒருத்திக்கு பின்னாலை போவான்...
      கெளசியும் போகும்....
      போகட்டும்
      பிறகு எனக்கு ஆரடி இருக்கிறது....
      ஏன் நீங்களும் உங்கடை அவளட்டை போங்கோவன்
      என்ன
      உங்கடை அவளட்டை
      அண்ணா அதிர்ந்தார். இதைப்பற்றி அண்ணிக்கு இலேசாக தொ¢யும் என
      ஆனாலும் இத்தனை காலத்துக்கு பிறகு இதை வெளிப்படையாக கேட்பாள் என அவர்
      எண்ணியதில்லை. அண்ணியும் கூட அதை விரும்பவில்லை. அப்படி கேட்பதனால் தனது
      தோல்வியை ஒப்புக்கொள்ள அவள் தயங்கினாள் போலும். ஆனால் இன்று அண்ணியின் மனம்
      மிகப்பேதலித்திருந்தது. பெண்களின் மனங்களே இப்படித்தானோ என்னவோ. கோடை காலத்து மழை
      மாதி¡¢
      ஏன் அவளை ஏமாத்தின்னீங்கள்
      ........
      அதுக்கு பிறகும் தொடர்பிருக்கா
      ........
      இப்பவும் காணிறனீங்களா
      ........
      செலவுக்கு ஏதாவது குடுக்கிறனீங்களா
      அண்ணா விக்கித்து போயிருந்தார்.
      ஏன் ஏமாத்தின்னீங்கள்....என்ரை காசுக்காகவா
      அண்ணா பற்களை நெறுமினார். கதிரையில் இருப்பு கொள்ளாமல் தவித்தார்.
      சொல்லுங்கோ....என்னுடைய காசுக்காக தானே என்னை கட்டின்னீங்கள்...அவளில்லை
      உங்களுக்கு ஆசை...ஆம்பிளையை நம்பக்கூடாது....
      அப்பிடி...எத்தனை ஆம்பிளையளோட உனக்கு பளக்கம் என அண்ணா திரும்ப சாடினார்.
      என்னையும் உங்களை போல நினைச்சியளோ என சீறுனாள். அந்த குரலில் தொனித்த
      உக்கிரம் அண்ணாவை அவளை ஏறிவிட்டு பார்க்க வைத்தது. அண்ணியின் அழகிய விழிகள் பெரு
      வெறுப்பை உமிழ்ந்தன. முகத்தில் ஒரு அருவருத்தபாவம் தொக்கி நின்றது.
      போங்கோ...உங்கடை அவளட்டை போங்கோ...உங்களுக்கு அவளிருக்கிறதன்....
      அண்ணாவின் கோபம் இயலாமை. அவமானம் எல்லாம் ஒன்றா திரண்டன. கைகள் முறுக்கேறின.
      கைகளை மடக்கி அண்ணியின் தாடையில் ஒரு அடி கொடுத்தார். அது தான் அண்ணி அண்ணாவின்
      கோபத்தை ஸ்பா¢சிக்கும் முதல் தடவை.
      அண்ணியின் பொ¢ய ஆளும் திறன் படைத்த விழிகள் கலங்கின. நீண்ட இமை மயிர்கள் சடுதியாக
      நனைந்து ஒரு பொ¢ய கண்ணீர்த்துளி பளபளவென மின்னியது. சொட்டென சிந்தி
      தெறித்தது. அவன் பெறுமதி அளவிடற்கா¢யது. அதில் ஒரு பெண்ணின் தன்மானமும் காதலும்
      பொதிந்திருக்கிறது.
      அண்ணா வெறுப்புடன் எழுந்து அப்பால் போனார். கட்டிலில் சாய்ந்து கைகளை தூக்கி
      முகத்தில் போட்டு மூடி கொண்டார். அண்ணி அப்படியே உறைந்தாள். அவள் தொடர்ந்து
      அழமாட்டாள். ஆளுமையும் மனவுறுதியும் மிக்கவர்கள் அப்படித்தான்
      பிறகு
      கெளசி பள்ளி கூடத்தால் ஒட்டமாக ஓடிவந்தது. அம்மா அதற்கு சாப்பாடு கொடுக்கவில்லை.
      உடம்பை கழுவி தலை சீவி சிங்கா¡¢த்து கன்னத்தில் ஒரு முத்தமும் கொடுக்கவில்லை.
      கெளசி அப்பாவிடம் ஓடிற்று. பிறகு அம்மாவிடம் ஓடி அவளது கன்னத்தை தாங்கி
      தன்புறம் திரும்ப முனைந்து தோற்றது. அம்மா உயிரற்றவள் போல இருந்தாள். கெளசி
      பு¡¢யமையுடனும் பசியுடனும் அங்குமிங்கும் அலைந்து தி¡¢ந்தது.
      அப்புறம் வெகுவேகமாக மாலை மங்கி இருள் சூழ்ந்தது. அம்மாவும் அப்படியே அப்பாவும்
      அப்படியே கெளசி கதிரைகளில் ஏறி நின்று விளக்குகளை போட்டது அம்மா ஒரு பெரு
      மூச்சுடன் எழுந்து உள்ளே போனாள். அப்பாவும் கைகளை முகத்திலிருந்து எடுத்துவிட்டு
      சிடுசிடு மூஞ்சியுடன் போய் கிணற்று கட்டில் உட்கார்ந்து கொண்டு வானத்தை நோக்கி
      நிமிர்ந்தார்.
      பாத்ரூமில் இருந்து தண்ணீர் விழுந்து சிதறும் சலங்கை சத்தம் சளசள என
      கேட்கவாரம்பித்தது. சோப்பின் நல்லன் வாசனை வீடெங்கும் வீசிற்று. அந்த வாசனையுடன்
      கெளசி அகப்பட்ட இடத்தில் விழுந்து தூங்கி போயிற்று.
      அண்ணி நிறைய நீராடினாள். ஈரம் சொட்டும் கூந்தலை நெடுநேரம் வரை உலவியபடி
      உலர்த்தினாள். பிறகு திலகமிட்டு கொண்டாள். அதுதான் அவளது உண்மையான ஆபரணம்.
      அண்ணாவை சுண்டி இழுக்க வல்லது. பிறகு அலுமா¡¢யை திறந்து அண்ணாவுக்கு பிடித்த
      அரக்கப்பச்சை வர்ணச்சேலையை எடுத்தாள். அதிலிருந்து வீசும் சுகமான வாசனையை
      நுகர்ந்தபடி அதை உடுத்த ஆரம்பித்தாள்.
      அண்ணாவோ வெனில் கிணற்றுக்கட்டில் உட்கார்ந்தபடியே வானத்தில் மூலை
      முடுக்குகளிலெல்லாம் அவரது பி¡¢யமான நட்சத்திரங்களை தேடினார். அவற்றை
      காணவில்லை நிலவு வரவும் இன்னும் சற்ற நேரமிருந்தது. ஒளியற்ற நட்சத்திரங்கள் வானில்
      அங்கொன்றும் இங்கொன்றுமாய் மெல்ல மின்னி பலகீனமாக முனகின. மோனமான மெல்லிய இருள்
      எங்கும் வியாபித்திருந்தது. நடமாடித்தி¡¢ய மனமற்று போன காற்று முடவனை போல
      தழ்ந்தது. வெல்ல மெல்ல ஒரு பெண்ணின் இனிய போதையூட்டும் வாசனையை அது. பெற்று
      கொண்டு இனிய போதையூட்டும் வாசனையை அது. பெற்ற அண்ணாவை நோக்கி
      அண்ணாவின் நாசியில் அதை தேய்த்தது. கழுத்தை சுற்றி இரு
      மாலையென விழுந்தன. அவை ஈரலிப்பாகவும் புத்துணர்ச்சியுடனும் இருந்தன. அதே சமயம்
      மெல்ல நடுங்கின. அண்ணாவை தம்முன்வளைக்க
      பிறகு....
      உங்களுக்கு ...நானிருக்கிறேன்... என மிக தவிப்புடனும் அடக்க முடியாமல்
      பீ¡¢ட்டெழும் அன்புடனும் ஒரு மிருதுவான பெண்குரல் அபயமளித்ததை கேட்டவுடன் காற்று
      அவ்விடத்தை விட்டு நாகா£கமாக நழுவிற்று.
      அண்ணா திரும்பி பார்த்தார். அந்த இருளிலும் ஜொலிக்கும் இரு விழிகளை கண்டார். அவை
      அண்ணாவை மன்னித்த சேதியை இதமாக தொ¢வித்தன.
      அவள் மீண்டும் தன்புறம் அவரை இழுத்தாள்.
      அப்புறம்
      அன்றிரவு அண்ணியால் தூங்க முடியவில்லை. அண்ணாவுக்கும் தூக்கம் வரவில்லை.

      ------------------------------------------------------------------------
      6. கோளறுபதிகம்
      பார்வையாளர்களை அனுமதிக்கும் நேரம் முடிவடைந்து விட்டது. அனேகமாக எல்லோரும்
      வெளியேறி விட்டார்கள். மாலை மங்க ஆரம்பிக்கும் போதுதான் நான் உள்ளே நுழைந்தேன்.
      ஆஸ்பத்தி¡¢களுக்கே உ¡¢ய அந்த நெடி கனமாக வீசிற்று. கூடவே ஈக்களும் தி¡¢ந்தன. நான்
      க்குள் நுழையும் தருவாயில் எனக்கு பின்னே ஒரு கனமான வாகனம் உறுமியபடி
      வந்து நின்றது. தன்னிச்சையாக திரும்பி பார்த்தேன்.
      ஒரு கை வெளியே நீட்டி கொண்டிருந்தது.
      மணிக்கட்டுக்கு ஓரங்குலம் மேலே ஒரு எலுமிச்சம்பழத்தை புதைத்து வைக்கலாம்
      எனத்தோன்றுபடி ஒரு பள்ளம் பறித்திருந்தது. அதன் ஓரத்திலிருந்து கிழிபட்டுப்போன
      தோலோ தசையோ ஒரு ஜாண் நீளமுள்ள சிவந்த பேப்பர் நாடா போன்று
      துடித்தது. மிகுதி கரம் முழுக்க காய்ந்த இரத்த ஓடைகள் கறுத்து போயிருந்தன.
      பள்ளத்திலிருந்து உறைந்த களி போன்ற இரத்தம் சொட்டு சொட்டாக பாகுத்தன்மையுடன்
      ஒழுகி தரையில் விழுந்தது. தரை அதை அவசர அவசரமாக விழுங்கிற்று.
      ஒரு ஸ்ரெட்சா¢ல் பிரதேசம் கிடத்த பட்டிருந்தது. மறுகரம் சேதமெதுவுமின்றி
      சுத்தமாக இருந்தது. ஆனால் வலிப்பினால் மிகவும் முறுக்கேறி ஸ்ரெட்சா¢ன் ஓரத்தை பற்ற
      விளைந்தது போல் பாவனை காட்டிற்று. விறைப்பேறிய நிலையிலும் அந்தக்கரம்
      வாளிப்பாகவும் மென்மையாகவும் இருந்தது.
      ஒரு பெண்ணின் பிரதேசம் தான்.
      சனங்கள் சிலர் கூடினார்கள். கூடவே ஈக்களும். ஓரு ஓடலி பையன் இன்னெரு ஸ்ரெட்சரை
      ஓசையெழ தள்ளியபடி அவசரமாக வந்தான். தோசையை திருப்பி போடுவதுபோல
      அசிரத்தையுடனும் இலாவத்துடனும் பிரேதத்தை தனது ஸ்ரெட்சருக்கு புரட்டி போட்டு
      கொண்டு ஐ நோக்கி ஓடினான். அவனுக்கு வீட்டுக்கு போகும் அவசரம் போலும்
      அவ்வளவாக உயரமில்லை. சாதாரணமாக பெண்கள் வீட்டில் அணியும் உடைகள் அணிந்திருந்தாள்.
      முழங்கால்களுக்கு கீழே உள்ள வாளிப்¡ன தசைப்பிடிப்பான கால்கள் விறைத்து போய்
      திகம்பரமாக தொ¢ந்தன. முகம் முழுக்க இரத்தவிளாறாக அடிக்கப்பட்டிருந்தது. இடது
      புருவத்துடன் கூடவே ஒரு குண்டு பாய்ந்திருந்தது. அவ்விடத்தில்
      அதிலிருந்து இரத்த கூழ் ஒழுகிற்று. மற்றைய குண்டு இடது மார்பில் பாய்ந்திருக்க
      வேண்டும். சட்டையின் மேற்புறம் இரத்தத்தில் தோய்ந்திருந்தது.
      சேதமாகி போன மேல் சட்டையினூடு வெளுப்பான திரட்சியான மார்புத்தசைகள் தொ¢ந்தன.
      ஒரு ஆணின் ஸ்பா¢சத்தையோ குழந்தையின் இதழ்களையோ அனுபவத்தறிந்திராத
      ஆ கூடினால் இருபது வயதிருக்கலாம்.
      யிலிருந்து ஒரு டாக்டரம்மா ஸ்டெதஸ்கோப்பையும் வார்த்தைகளையும் சுழற்றி வீசிய
      வண்ணம் வந்தாள். அவளுக்கு நிறைந்த களையான முகம். கூடவே ஒரு தாதி. முகம் முழுக்க
      பருக்களும் பீதியும்.
      பிறகு சனங்களும் ஈக்களும். சனங்களுக்கென்ன எல்லாமே புதினம் தான் ஈக்களுக்கு
      ருசிமிகுந்த சாப்பாடு
      ஆளரவம் அடங்கி கொண்டிருக்கும் ஒடுங்கிய நீண்ட ஆளோடிகளினூடாக நடக்க ஆரம்பித்தேன்.
      எனக்கு முன்னே நடுத்தர வயதை கடந்த மெலிந்த உயரமான ஒரு பெண்ணும் அவளை
      தாங்கியபடி வேறும் ஒரு பெண்களும் போ கொண்டிருந்தார்கள். அந்த பெண்ணுக்கு
      தொடைகளில் கூனிய முதுகுடன் கால்களை பதனமாக எடுத்து வைத்து தள்ளாடி தள்ளாடி
      மெல்ல அவள் நடந்து கொண்டிருந்தாள். அவர்களை கடக்கும் போது ஓரப்பார்வையால் பார்த்தேன்.
      அந்த பெண்ணின் முகத்திலுள்ள தசைகள் யாவும் ஒருவாறு கோணிப்போய் துடித்தன. வாயும்
      கண்களும் அகல வி¡¢ந்திருந்தன. கண்களில் அதிர்ச்சியும் ஏக்கமும் தேங்கி போய்க்கிடக்க
      வாய் சில வார்த்தைகளை வெளிப்படுத்த முயல்வதாய் மெல்ல அசைய உன்னியது.
      அவளுக்கு நோயல்ல துக்கம் தாங்க முடியாத துக்கம். அழுது குழறுவதால் மட்டும்
      அப்படியான துக்கங்களை முழுமை வெளிக்கொணர முடியாது. அனேகமாக அவளது கணவனோ
      குழந்தையோ எங்காவது குண்டு வெடிப்பிலோ துப்பாக்கி சூட்டிலோ மிக மோசமா
      காயப்பட்டிருக்க வேண்டும். இறந்து கூட போயிருக்கலாம்.
      நான் ஒரு பத்தடி தூரம் கடந்திருப்பேன். பின்னாலிருந்து ஐயோ
      ஈனஸ்வரத்தில் மூச்செடுக்க முடியாத அவதியுடனம் அவசரத்துடனும் ஒரு குரல் பிறந்தது.
      வர அதன் ஸ்தாயி கூடி உரத்த வீ¡¢டல்களாக தெறிந்தது. ஒடுக்கமான
      இருபுறமும் உயர்ந்திருந்த சுவர்களுக்குள்ளும் கூரையின்கீழும் தி¡¢கின்ற அசுத்தமான
      காற்று அந்த அவல கூக்குரலினால் மேலும் அசுத்தமாக்கப்பட்டு என் நெஞ்சினுள் புகுந்து
      கொண்டது.
      இன்னும் ஒரு நொடிகூட அந்தக்காற்றை என்னால் சுவாசிக்க முடியாது.
      காணமுடியாது. அவசர அவசரமாக திரும்ப நடந்தேன்.
      வெளியே சைக்கிள் பார்க்கின் முன்புறம் தேவனை சந்தித்தேன். வெகுகாலத்துக்கு பிறகு
      அவனை கண்டதில் சிறிய மகிழ்ச்சியும் பெருவியப்பும் ஒருங்கே எய்தினேன். கூடவே
      கொஞ்சம் பயமும்....

      தேவனை நான் கடைசியா கண்ட போது ஒரு நாவலை எழுத ஆரம்பித்திருப்பதாக சொன்னான்.
      அரசியல்லை தோத்தவனும் புறமொதுக்க பட்டவனும் இலக்கியத்திலோ அல்லது வேறேதாவது
      கலைத்துறையிலோ ஈடுபடவேண்டியது அவசியம்.... மச்சான் என்றான்.
      பிறகு அதுக்கிடையிலை நான் செத்தாலும் செத்துபோவன் போல கிடக்கு என்றபடி
      ஹோ...ஹோ என போலிக்குரலில் சி¡¢த்தான்.
      கூடவே மாட்டன்... என சங்கல்பமும் செய்தான்.
      அதன்பின் இன்று தான் அவனை காண்கிறேன். முன்னரைவிட கொஞ்சம் பருந்தும் உற்சாகமாகவும்
      இருந்தான். வழக்கம்போல இதழ்கள் சிவக்க வாய் நிறைய வெற்றிலையை குதப்பி
      துப்பிக்கொண்டிருந்தான்.
      தேவனை நான் முதன் முதலா கண்டபோது அவனது அய்யாவின் கைகளை பற்றிய வண்ணம்
      சுற்றுமுற்றும் பார்த்து கொண்டிருந்தான். அவனது சிலேற் மிகவும் பழையதாகவும்
      அழுக்கேறி கீறல் விழுந்ததாகவும் இருந்தது. புத்தகம்கூட மேலுறையை உ¡¢த்து விட்டும்
      பக்கங்கள் எல்லாம் ஓரம்மடிந்தும் காணப்பட்டது. எனது சிலேற்றும் புத்தகமும் புத்தம்
      புதியனவாயும் மிளிர்ந்தன. புத்தகத்திலிருந்து புதிய காகிதத்தின் இனிய மணமும்
      சிலேற்றிலிருந்து காய்ந்த மண்ணின் வாடையும் வீசின.
      தேவன் பள்ளி கூடத்துக்கு ஒழுங்காக வருவது கிடையாது வரும் நாட்களிலும் அனேகமாக
      வாங்கின் மீது ஏறி நிற்பது கட்டாயமாக பட்டது. எல்லா பாட வேலைகளிலும் அநேகமாக
      அடி வாங்கினான். கணக்குப்பாட வேளைகளில் அகோர விழுந்தது. ஆனால் அவன்
      கிடையாது. கல்லுளி மங்கன் போல முழித்து கொண்டே நிற்பான். அவன் மிகவும் சகிப்பு
      தன்மை வாய்ந்தவன். எனினும் எட்டாம் வகுப்புக்கு பிறகு அவன் பாடசாலைக்கு வரவில்லை.
      அதன் பின் அவனது அய்யாவுக்கு பின்னால் அவனும் ஒரு பழைய பொ¢ய கா¢யர்
      பூட்டிய சைக்கிளில் ஓலைப்பறியுடன் வலைகளை பொதிந்து ஏற்றியபடி முன்னால் சற்றே
      வளைந்தவனாய் சைக்கிளை உழக்கி கொண்டு வீச்சுக்கு போ காண்பேன். அந்நாட்களில் தான்
      அவன் வெற்றிலை போடப பழகியிருக்க வேண்டும்.
      தேவனது வீட்டுக்கு ஒரே ஒருதரம் போயிருக்கிறேன். அது எங்களது வீட்டிலிருந்து
      முக்கால் மைல் தூரம் தள்ளியிருந்தது. ஒரே ஓலை கூரையின் கீழான ஒரு சிறு அறையும்
      சற்றே அகன்ற காற்றோட்டமான மாலும் தான் வீடு. அறையின் சுவர்கள் தென்னங்கீற்றுகளால்
      நெருக்கமாக அடைக்கப்பட்ட தட்டிகளினால் ஆனவை. மாலுக்குள் கிடந்த தீராந்திகளிலும்
      வேலிகளிலும் வலைகள் கிடந்து மீன் நாற்றத்தை ஈன்றன. பக்கத்திலே இன்னுமொரு சிறு
      கொட்டில். அது அடுக்களை. அதற்குள் நுழைவதெனில் ஆள்பாதியாக மடியவேண்டும்.
      எந்நேரமும் அதற்குள் புகை வண்டி சுழலும்.
      எனக்கொரு பழையவலை அவசரமாக தேவைப்பட்டது. எங்களது தோட்டத்தில் நிறைய தக்காளிகள்
      இருந்தன. கிளிகளின் தொல்லை பொறுக்க முடியாமல் இருந்தது. வலைபோட்டால் கிளிவிழாது
      என அப்பு ஆலோசனை சொன்னார். ஆனாலும் ஒரே ஒரு கிளியாவது வலையில் விழவேண்டும்
      நான் உள்ளூர ஆசை வைத்திருந்தேன். தேவனிடம் வாங்க போகும் வலையில் சிறு துண்டொன்றை
      வெட்டியெடுத்து கிளிக்கூண்டு ஒன்றை செய்யும் உத்தேசமும் எனக்கு இருந்தது. அந்த
      வலையை கிளிகள் அறுக்க மாட்டா என அந்த இரண்டுங்கெட்டான் வயதிலும் பேதமையுடன் நான்
      நம்பினேன்.
      மாலின் ஒரு மூலையில் பழைய சன்லை பெட்டியும் அதற்குள் நிறை
      கிடந்தன. அவை எல்லாம் தேவனின் புத்தகங்கள் பள்ளிக்கூடத்தில் மாடுபோல் அடிவாங்கிய
      தேவனால் இவ்வளவு புத்தகங்களை படிக்க முடிகிறதா
      பிற்காலங்களில் அவனை அடிக்கடி இலக்கி கூட்டங்களில் காண நேர்ந்தது. நான் எண்ணியது
      போல தேவன் மக்கு அல்ல. அவனது புலன்களும் புத்தியும் வேறு திசைகளை நோக்கி
      திரும்பப்பட்டிருந்தன.
      இன்னும் கொஞ்ச காலம் போனதும் அவனது சைக்கிளின் பொ¢ய கா¢யர் வைக்கப்பட்டது.
      அவனது அய்யா வுக்கும் அவனுக்கும் ஒத்து வரவில்லை. தேவனின் சைக்கிள் விரைந்து
      செல்ல தக்கவாறு உருமாற்றப்பட்டது. அத்துடன் ஹாண்டிலில் ஒரு பொ¢ய துணிப்பை
      தொங்கிய வண்ணம் இருந்தது. அது சிறிய கனமான சில பொருட்களை சுமந்தது.
      ஒரு நாள் அவனது வீட்டின் பக்கமாக இருந்து பெரும் இடியோசை போன்ற சத்தத்துடன் கூடவே
      புதை மண்டலம் எழுந்தத. தீயில் கருகிய சருகுகள் வெகு உயரத்து கிழம்பி காற்றினால்
      அடித்து வரப்பட்டதையும் பலர் கூடி சத்தமிடுவதையும் கேட்டேன். அதற்கு பிறகு வெகு
      நாட்களாக தேவனை காணவில்லை. அவனது அய்யா அவனை கண்ட இடத்திலை வெட்டுவன்
      என சொல்லி தி¡¢ந்தார். அவர்களது சொற்ப சொத்துக்களான வலைகளும் அந்த சிறிய
      கொட்டில் வீடும் துணிமணிகளும் தேவனது புத்தகங்களும் அந்த விபத்தில் நாசமா போயின.
      அதற்கு பிறகு ஒப்பந்தம் முடிந்த கையோடே அவனை புத்த கடை ஒன்றில் முன்
      கண்டேன். அப்போது தான் அவன் நாவல் எழுதி கொண்டிருக்கும் விஷயத்தை சொன்னான். அன்று
      முழுக்க வெற்றிலை கூட போடவில்லை என்றும் சொன்னால் மிக மெலிந்து போய் இருந்தான்.
      என்னிடம் கொஞ்சம் காசு கடன் வாங்கினான்.
      அதற்கு பிறகு இன்று தான் காண்கிறேன். என்னுடன் தங்குவதற்கு தேவன் விரும்பினான்.

      நான் குடியிருக்கும் வாடகை வீட்டில் பேய்களும் அத்து மீறி குடியேறிவிட்டதாக
      சொல்லுகிறார்கள். வீடு மிக பொ¢யது. புதிய பாஷனில் அமைந்திருந்தது. மேல்
      மாடியில் நான் மட்டும் கீழே ஒரு இளந்தம்பதிகளும் அழகிய துடியான பெண்குழந்தையும்
      வீட்டின் முன்புறம் பாஷனுக்கு சற்றும் பொருந்தாத வகையில் ஒரு நீற்று
      பூசினிக்காயில் குங்குமத்தினால் வரைந்த கோரமுகம் தொங்கியது. பேய்களுக்கு சாந்தி
      செய்வித்ததை அது கட்டியம் கூறிற்று. சாந்தி செய்த பிறகு பேய்கள் வாலை சுருட்டி
      கொண்டனவாம்.
      அதற்கு முன்னரே வெனில் தினம் இருட்டியதும் தாகத்துடன் யாரோ நாவை
      கொண்டுவதும் அங்குமிங்கும் தடதடவென ஓடித்தி¡¢வதும். உபாதைகளுடன் முனகுவதும்
      என சத்தங்கள் கேட்குமாம். கதவுகளும் ஜன்னல்களும் தம்பாட்டில் திறந்து படார்
      சாத்தி கொள்ளுமாம்.
      எனது அறையின் ஜன்னலை திறந்தால் பூஞ்செடிகள் வா¢சையாக வளர்ந்திருந்த முற்றமும்
      சுற்றுமதிலும் அநேகமாக மெளனமாகவே இருக்கும் பாதையும் தொ¢யும். கதவை
      திறந்தால் கால்வட்டமாக வளைந்தபடி மாடிப்படிகள் இறங்கி ஹோலுக்குள் போவதை காணலாம்.
      அந்த கால்வட்ட விளிம்புடைய சுவா¢ன் சா¢பாதியில் ஒரு கண்ணாடி அலுமா¡¢ போல
      உள்வாங்கிய பீடம் இருக்கிறது. அதற்குள் செம்மஞ்சள் ஒளியில் குளிக்கின்ற கண்ணன்சிலை
      வேய்க்குழலை உதடுகளில் பொருத்தியபடி குறுஞ்சி¡¢ப்பு சி¡¢க்கிறது.
      அந்த கண்ணன் சிலை இதே வீட்டில் முன்பு நடந்த கோரங்களுக்கு சாட்சியாக அப்போதும்
      குழலூதி சி¡¢த்திருக்க வேண்டும். வீட்டின் சுவர்களில் எல்லாம் துப்பாக்கி குண்டுகள்
      மழையென பொழிந்ததில் மேற்பூச்சுகள் புண்பட்டு மூளியாக போயினவாம். இதே
      மாடிப்படிகளின் வழியாக இரத்த ஓடை குதூகலத்துடன் கீழிறங்கி போயிற்றாம். உட்கட்சி
      போராட்டத்தை சில துப்பாக்கி குண்டுகள் சப்தித்து முடித்து வைத்தனவாம். மொத்தமாக
      பன்னிரண்டு பேர்கள் ஒரே இரவில் சில நொடிகளுக்குள் கட்சியினின்றும் உலகத்தினின்றும்
      வெளியேற்றப்பட்டபின் மயான அமைதி நிலவிற்றாம். அதற்கு பிறகு அந்த பன்னிரண்டு
      பேரும் பேய்களாகி விட்டார்களாம். இல்லாத தொந்தரவுகள் எல்லாம் உண்டாக்கி
      காட்டினார்களாம். இரவானதும் சந்தடிகள் மிக செய்து தமக்கிழைக்கப்பட்ட அநியாயத்தை
      சொல்லி புலம்பினார்களாம்.
      பிறகு குடியிருக்க வந்தவர்கள் சாந்தி செய்தார்கள். எனக்கும்
      அறையும் கொஞ்சம் பயமும் கிடைத்தன.
      எனக்கு பேய் பிசாசுகளில் அவ்வளவு நம்பிக்கை இல்லை. தேவனுக்கும் இதையெல்லாம் சொன்னேன்.
      எனக்கு இப்ப ஒண்டிலும் நம்பிக்கை இல்லை மச்சான் என்றான்.
      தேவனின் அய்யா வின் தகப்பனார்- இப்போது இறந்து போய்விட்ட அப்பு-பல பேய்க்கதைகளை
      தேவனது சிறுவயதில் சொல்லியிருக்கிறாராம். அடிக்கடி அவர் பலபேய்களை
      பேய்க்காட்டிவிட்டு வெறும் பறியுடனும் காய்ச்சலுடனும் வீட்டுக்கு திரும்பி
      வந்திருக்கிறாராம்.
      ஒரு நாள் நல்ல நிலவு. அப்பு விடிகாலையில் வீச்சுக்கு போக ஆயத்தங்கள் பண்ணிவிட்டு
      படுக்க எண்ணினார். வெள்ளி காலிக்கும் போது கனகன் வந்து கூப்பிடுவதாக
      சொல்லியிருக்கிறான். அப்பு ஆச்சியிடம் அண்ணாந்து முகட்டு வளையை பார்த்தபடி
      படுத்திருக்கிறார். அன்றிரவு நாய்கள் மிகுதியா குரைத்தன. ஆச்சி சுருட்டு
      பிடித்தபடி கால் உளைவு போக்க முணுமுணுத்தபடி தைலம் தடவுகிறாள். சுருட்டின்
      காரநெடியுடன் தைலத்தின் வாசனையும் சேர்ந்து அபூர்வமான கிறக்கும் வாசனை. அப்பு
      கிறங்கினார்.
      எடேய்...கந்தப்பு...வாடா என கண்டாயத்திலிருந்து கனகன் கூப்பிடுவது போல
      கேட்கிறது. அப்பு எழுந்து ஒரு மிடறு தண்ணீர் குடித்தார். வலைகளை தூக்கி தோளில்
      போட்ட வண்ணம் ஆச்சியை பார்த்தார். ஆச்சி நல்ல நித்திரை. தலைமாட்டில் குறை சுருட்டு
      கருகி போய்க்கிடக்கிறது. தீப்பெட்டியும் சுருட்டும் வெற்றிலை கொட்ட பெட்டியும்
      திருநீற்று சம்புடமும் வில்லு கத்தியும் எடுத்து மடியில் பொதிந்து கொண்டு
      அப்பு முற்றத்தில் இறங்கினார். நிலவு வெளிச்சத்தில் கண்டாயத்தடியில் யாரோ நிற்பது
      தொ¢கிறது.
      டேய்....கந்தப்பு வெள்ளி காலிச்சு போட்டுது.... வாடா என கனகனின் குரல்
      கேட்கிறது. அப்பு மடியை தடவிய வண்ணம் அவனுடன் போ கொண்டிருக்கிறார். நிலவு
      வெளுறி ஒளியிழக்கிறதோ அல்லது மேகங்கள் மூடி மறைக்கிறதோ அப்பு வானை நிமிர்ந்து
      பார்த்தார். விடிவெள்ளி காலிக்க இன்னும் நிறைய நேரம் இருப்பதாக பட்டது. பக்கத்தில்
      வருபவன் சுண்ணாம்பு கேட்கிறான். எடுத்து கொடுத்தபோது தான்
      கால்கள் இல்லாததை அப்பு கண்டார். விக்கித்து போனார். திரேகம் ஜில் விட்டு
      குளிர்ந்தது. எவ்விடத்திலே நிற்கிறோம் என அறிய சுற்றும் முற்றும் பார்த்தார். எதிரே
      தண்ணீர் மினுங்குகிறது. குளிர்காற்றை அள்ளி தெளிக்கிறது. மறுபடியும் பக்கத்தில்
      பார்த்தால் கூடவந்தவனை காணோம்
      கந்தப்பா...வீசடா வீசு...நல்லா மீன் படும் என அசா£¡¢ மட்டும் கேட்கிறது. அப்பு
      அவதியுடன் நீருக்குள் இறங்கினார். தொள என தண்ணீர் குழப்பத்துடன் ஒலியெழுப்ப மேலும்
      மிரண்டார். அரையில் கட்டிய நான்கு முழத்தையும் மடியில் பாரங்களையும் சேர்த்து
      தலையில் முண்டாசா கட்டி கொண்டார். திருநீற்றை எடுத்து நெற்றியில் தா¢த்துக்கொண்ட
      வைரவா என உளமுருகி உர கூவினார்.
      கந்தப்பா...கந்தப்பா என கரையிலிருந்து குரல் நைச்சியம் பண்ணி கூப்பிடுகிறது.
      அப்புவுகுக்கு தேவாரங்கள் நல்ல மனனம் கோளது பதிகத்தை வா¢சை கிரமமாக
      பத்திலயத்துடனும் பயத்தால் நடுங்கும் குரலுடனும் பாடத்தொடங்கினார். பாடுகிறார்
      பாடுகிறார்... பயம் பறக்கிறது. விடிவெள்ளி மெல்ல உதயமாகி அப்புவுக்கு ¨தா¢யம்
      சொல்லிற்று. தூரே ஊ¡¢லிருந்து கோழிகள் கூவி அப்புவுக்கு சுருதி சேர்த்தன. அப்பு
      கோளறு பதிகத்தை திரும்ப திரு பாடுகிறார். கிழக்கு வெளுக்கிறது. மேனி
      விறைக்கிறது. அப்பு ¨தா¢யமா கரையில் ஏறினார். உடல் நடுங்குகிறது. நடுங்கிய
      படியே வீட்டில் வந்து விழுந்தவர் தான். ஒரே குலைப்பன் காய்ச்சல்.
      அட....மேனே இப்ப உந்த இஞ்சின் போட்டுகள் கடலுக்குள்ளை ஓடடா ஓடெண்டு ஓட...பேயும்
      இல்லை பிசாசும் இல்லை....நம்மோடொத்தவனுக்கு மீனும் இல்லை என்று தேவனின் அப்புவின்
      கதை முடியுமாம்.
      என்னுடைய அம்மாவின் தகப்பனார்-இன்னும் ஜீவியவந்தராய் தாடியை கோதி கொண்டிருக்கும்
      எனது அப்பு-ஒரு தரம் ஒரு பேய்க்கு துவரந்தடியால் விளாசியிருக்கிறார். அந்த பேய்
      வஞ்சம் மறக்காமல் சில இரவுகளில் ஞாபகமாய் வந்து அப்புவின் மென்னியை திருகுமாம்.
      உடலை பெரும் பாறையாக அழுத்துமாம். முறித்து எடுக்குமாம் உடலை
      முறுக்குவதையும் வாய் பிதற்றுவதையும் நானே நோ¢ல் கண்டிருக்கிறேன். தொடர்ந்து
      இங்கிலீசு மருந்துக்கும் ஒத்து வராது. காய்ச்சல் குடிநீரை அம்மா சுண்ட சுண்ட
      காய்ச்சி ஒரு துண்டு பனங்கட்டியுடன் கொடுப்பாள். அப்பாவோ வெனில் நல்ல தென்னஞ்
      சாராயத்தில் ஒரு அரை எடுத்துவந்து அம்மாவிடம் கொடுத்து விடுவார். கிழவனார்
      ஆசையால் கண்கள் மின்ன சாரா கிளாஸை பதபக்குவமாக பற்றுவார்.
      போடா அங்காலை...எளிய வடுவா வாய் பாக்காமல்... என்று என்னை விரட்டுவார்.
      பிறகுதொண்டையை செருமுவதும் நாவைச்சப்பு கொட்டுவதும் கேட்கும்.
      சற்று நேரத்தில் இஞ்சை வாடா மேனே.... என கிழவனார் ஆ¨சா கூப்பிடுவார்.
      அவரது முகத்திலிருந்தும் தாடியிலிருந்தும் சாராய நெடி அடிக்கும். ஒளியிழந்த
      கண்கள் சிமிட்டும். பல்லிழந்த பொக்கை வாய் இளிக்கும். துவரந்தடியால் பேய்க்கு விளாசிய
      கதை நூறாவது தடவைக்கு மேல் எனக்கு விஸ்தாரமாக சொல்லப்படும். கேட கேட்க
      அலுக்காத கதை. அப்பு கதை சொல்லும் பாணியே அலாதி. அடிக்கடி நான் ஊம் கொட்டி
      எனது ஆர்வத்தை காட்டி அவரது வீரத்தையும் மெச்ச வேண்டியது அவசியம்
      அப்பு கல்வீட்டினுள் படுப்பது கிடையாது. வேப்பமரத்தின் குளிர் நிழலின் கீழ் கிழவனார்
      தனக்காக ஒரு கொட்டில் போட்டு வைத்திருக்கிறார். தீராந்திகளில் கலப்பையும்
      பிக்கானும் நுக்காலும் நாலைந்து துவரந்தடிகளும் இரும்பு பூண் இட்ட கா¢ய
      ஏழுமுள்ளு கொட்டனும் சொருகப்பட்டிருக்கும். பாம்புகள் மாதி¡¢ மாடுகளின் கழுத்து
      சங்கிலிகள் வளைந்தபடி தூங்கும். ஒரு பழைய உறுதியான நார்ப்பெட்டிக்குள் லாடங்கள்.
      மாட்டின் கழுத்து சதங்கைகள்.... இன்னும் பல கிழவனா¡¢ன் அ¡¢ய பொக்கிஷங்கள் எல்லாம்
      உண்டு. அவையெல்லாம் அவருக்கு மிக இனியவை அவரது வாலிபத்தின் நினைவுகளை
      தூண்டுவனவல்லவா அவை எவ்வளவு கதைகளை அறிந்திருக்கும்
      அப்புவுடன் தோளோடு தோள் நின்று போராடியிருக்கும்
      அப்ப நான் நல்ல வடக்கன் மாடுகள் ஓறிணை வைச்சிருந்தனான்...என்னைவிட
      உயரம்...மாவெள்ளை நிறம்...ஒரு நாளைக்கு ஒரு கடகம் பருத்திக்கொட்டையும் புண்ணாக்கும்
      வேணும்.... என்று கதை தொடங்கும்.
      எனக்கு நல்ல ஞாபகம் இருக்கிறது. எங்களது வீட்டுக்கு அப்போ மதில் கட்டப்படவில்லை.
      அலம்பரும் பனையோலையும் கொண்டு மிக நெருக்கமாகவும் கலா நேர்த்தியுடனம் அடைக்கப்பட்ட
      அழகிய வேலி தான் இருந்தது. அந்தக்காலத்தில் எங்களூ¡¢ல் தோட்டவேலையும் வயல்வேலையும்
      குறைந்த வெயில் மிகுந்த ஆனி ஆடி மாதங்களில் எல்லோரும் கூட்டாக சேர்ந்து அலம்பல்
      காட்டுக்கு வண்டி பூட்டி போவார்கள். போகமுதல் வைரவர் கோயிலில் மடை பரவுவார்கள்
      ஒரு கிழமையோ பத்து நாட்களோ பயணம். பானைசட்டிகள் அ¡¢சி நல்லெண்ணைய் பருப்பு
      கருவாட்டுடன் போவார்களாம்.
      ஒரு தடவை மற்றவர்களை விட நல்ல அலம்பர் வெட்ட வேண்டும் என்ற அவாவில் அப்பு
      காட்டுக்குள் வெகுதூரம் போய்விட்டார். அப்புவுக்கு அப்போ நல்ல வாலிபம். மல்லன் போல
      உடல் கட்டு. கல்யாணமாகி எனது அம்மா பிறந்து அப்போது தான் தவழ்கிறாளாம். அப்புவின்
      வாழ்க்கையில் உல்லாசம் வீசுகின்ற காலம் நல்ல பாரமாக அலம்பர் வெட்டி விட்டார்.
      மற்றவர்களுக்கெல்லாம் பொறாமை. அப்புவையும் அவரது பிரசித்தி பெற்ற வடக்கன் களையும்
      விட்டு அவர்கள் முன்னே வண்டிகளை ஒட்டி சென்று விட்டார்கள். அப்பு
      மூன்று கட்டை பின் தங்கிவிட்டார். அக்காலங்களில் அப்புவுக்கு பயமே கிடையாது.
      வாலிபம் அல்லவா
      நிலவு பகல் போல காய்கிறது. அப்போ தார் ரோட்டுகள் கிடையாது. குண்டுங் குழியும்
      புழுதியும் நிறைந்த மக்கி ரோட்டுக்களும் வண்டி பாதைகளும் தான். வண்டி
      பாரம். வடக்கன்கள் முக்கித்தக்கி இழுக்கின்றன. வண்டி அப்படியும் இப்படியுமாக
      இலேசாக தாலாட்டுகிறது. பாதையின் இருபுறமும் தாழம்புதர்கள் மலர்ந்திருந்ததால்
      கம்மென்ற வாசனை. கண்டல் மரங்கள் நீருக்குள் முக்குளித்து நிமிர்ந்தன. நீ¡¢ல்
      சாயம் ஊறி தேயிலைச்சாயம் மனோரம்யமான சிவந்த நிறம் காட்டுகிறது. காற்று வேறு
      மெல்ல வீசிற்று. தனிமை தந்த சலிப்பும் ஏக்கமும் வாட்டுகிறது. அப்புவுக்கு பாட்டு
      வந்தது. பாட தொடங்கினார்.
      வயல் வெளிகளும் சிறுபற்றைகளும் மாறிமாறி வருகின்றன. அப்புவை நோக்கி கையசைத்து
      பின்னால் போய் நின்று திரும்பி பார்த்தன. வயல்வெளிகளினூடாக யாரோ ஒருவன் நொண்டி
      நொண்டி வருகிறான். செம்பாட்டு மண்ணில் விழுந்து புரண்டவன் போல பழுப்புநிற வேட்டி
      கட்டியிருக்கிறான். வந்தவன் வாய்பேசாமல் பிண்ணியத்தில் பிடித்து தூங்குகிறான்.
      பின்பாரம் மிக அதிகா¢த்து மாடுகளை தூக்க எத்தனித்தது. மாடுகளின் வாயிலிருந்து
      வெண்நுரை கக்கிற்று. அப்பு திட்டினார்.
      வேசைபிள்ளை எடடா கையை... துவரங்கம்பாலை வெளுப்பன்.
      அவன் முன்னால் வந்தான். வந்தவன் நுகத்தடியில் ஏறி உட்கார்ந்தான். அவனுடலிலிருந்து
      கெட்ட நாற்றம்- மலநாற்றம் வீசிற்று. மாடுகள் வெருண்டடித்தன. கதறின. பாரம் தாங்காமல்
      முன்னங்கால்களை மடித்து விழுந்தன. அப்புவுக்கு சினம் பொங்கிற்று.
      எளிய வடுவா... என உறுமியபடி ஆசனத்திலிருந்தபடியே எட்டி அவனது முதுகில்
      துவரங்கம்பால் சாத்தினார். கூர்மையான குரலில் ஓலமெழுப்பியபடி அவன் பாய்ந்து
      இறங்கினான். அப்போது கோடை வானம் கிழியும்படி ஒரு மின்னல் தெறித்தது.
      ஒளியில் வந்தவனை அப்பு நன்றா கண்டார். வானத்துக்கும் பூமிக்குமாக அவன்
      பிரமாண்டமாக வளர்ந்து கொண்டிருந்தான். சில நொடி கழித்து பெரும் இடியோசை கேட்டது.
      அத்துடன் கூடவே அப்புவின் நெஞ்சில் பலத்த உதை கிடைத்தது. வண்டியின் துலாவில் அப்பு
      மயங்கி சாய்ந்தார். எப்படி வீடு வந்து சேர்ந்தோமென அப்புவுக்கு இப்போது தொ¢யாதாம்.
      அதெல்லாம் அவரது பாதைபழகிய அருமையான வடக்கன் மாடுகளின் மகிமை என நன்றியுடன்
      சொல்லுவார்.
      நீ பேயை கண்டா என்னடா செய்வாய் என்று அப்பு எகத்தாளமா கேட்பார்.
      பயத்திலை கழிஞ்சு போடுவாய் என பொக்கைவாய் சி¡¢க்கும்.
      இப்ப உந்த மெஷினுகள் வயலுகளுக்கை ஒண்டுபாதி சாமமெண்டும் பாராமல் உழுது
      பேய்பிசாசெல்லாம் எந்த பக்கம் போனதெண்டு சொல்லேலாமல் போவிட்டுது என மிக
      வருத்தத்துடன் முத்தாய்ப்பு வைப்பார்.
      இதையெல்லாம் நான் அடங்கிய குரலில் சொல்லி கொண்டிருந்தேன். தேவன் வெகு
      சுவாரசியமா கேட்டு கொண்டிருந்தான். பிறகு தொண்டைக்குள்ளாகவே ஒரு சி¡¢ப்பு
      சி¡¢த்தான். பேசாமல் சிலநேரம் படுத்துக்கிடந்தோம்.
      வெளியேயிருந்து இரவின் மிகவும் சூக்குமமான ஒலிகள் கேட்டன. இருந்தாற்போல சிறு
      தொலைவிலிருந்து ஒரு நாய் ஊளையிட்டழுதது. பிறகு இந தெருவிலிருக்கும் எல்லா
      நாய்களும் சேர்ந்து எச்சா¢க்கையும் பயபிராந்தியும் கலந்த குரலில் குரைக்க
      தொடங்கின. எங்களது வீட்டின் பின்புறமாக சில நாய்கள் பயந்தடித்து ஓடியதால் ஏற்பட்ட
      துடியான காலடி சத்தங்களையும் அடித்தொண்டையிலிருந்து புறப்பட்ட அவற்றின் பீதி
      கலந்த முனகல் ஒலிகளையும் தெளிவா கேட்டோம்.
      ஒரு வெடிச்சத்தம் இருளை உறுக்கியது. நாய்களின் சந்தடிகள் ஓய்ந்தன. தெருவிளக்குகள்
      மட்டும் அச்சம்தரும் அமைதியை குலைக்க மாட்டாதனவாய் வெறித்து பார்த்தன.
      ஜன்னலை எச்சா¢க்கையாக திறந்தோம். தெருவில் சிலபேர் கனமாக நடந்துபோ
      கொண்டிருந்தார்கள். இரண்டு ஓரங்களினாலும் அவர்கள் வா¢சையாக போனார்கள். நிழல்கள்
      போல காலடி அரவங்களை கிளப்பாது ஈசலை பிடிக்க எத்தனிக்கும் பல்லிகளென
      போயினர். சுற்று சூழல் முழுவதற்கும் அச்சமூட்டும தோற்றமொன்றை அவர்கள் வெகு
      இலகுவா கொடுத்து சென்றனர்.
      யாரோ ஒருவன் பாடினான் போலும். அர்த்தம் பு¡¢யாத வேற்று மொழியில் ஒரு முரடான
      கரகரத்த குரல்....ஆனால் ஆத்மார்த்தமாக உணர்ச்சியை சிந்தும் வண்ணம் பாடிற்று.
      அனேகமாக அதுலொரு விரகந்தெறிக்கும் காதல் பாடல்.
      விளக்குகளை அணைத்துவிட்டு சிறு பெருமூச்சுகளுடன் படுத்தோம்.
      சற்று நேரத்தில் சற்று தூரத்திலிருந்து இன்னொரு வெடிச்சத்தம் கேட்டது. வெகுநேரம்
      வரை எமது காதுகளுக்குள் அந்த சத்தம் சுழன்று

      விடிந்தது தேவன் மேலும் சில நாட்கள் என்னுடன் தங்க விரும்புவதாக சொன்னான். எனது
      சைக்கிளை சில நாட்களுக்கு இரவல் தரும்படியும் கோ¡¢னான்.
      மிக சில நாட்களே என்னுடன் தங்கினான். நன்கு இருட்டிய பிறகு சாப்பாட்டு
      பார்சலுடனும் அலைந்து தி¡¢ந்த களைப்புடனும் வியர்வை நாற்றத்துடனும்
      துர்மரணங்களை பற்றிய செய்திகளுடனும் வருவான். இந்த சில நாட்களில் தேவனது பல
      நண்பர்கள் எனக்கு அறிமுகமானார்கள்.
      தேவன் என்னை விட்டு மறுபடியும் பி¡¢ந்து போனபிறகு வீட்டில் ஒரு விசித்திரமான
      விரும்பத்தகாத மாற்றம் ஏற்பட்டிருந்ததை உணர்ந்தேன். இப்போ வாடை காற்று மாறி சோளகம்
      புறப்பட்டுவிட்டது. இரவு நேரங்களில் எனக்கு தெளிவற்ற கனவுகளும் விவா¢க்க
      முடியாத பயப்பிராந்திகளும் ஏற்பட்டன. வெளியே உக்கிரமாக சோளகம் வீசிற்று.
      ஜன்னல்களும் கதவுகளும் தம்பாட்டில் திறந்து கொள்ள காற்று புழுதியையும் சருகுகளையும்
      அள்ளிக்கொண்டு வீட்டினுள் விசையாக நுழையும். தடார் என ஜன்னல்களும்
      மூடிக்கொள்ளும். சற்று நேரத்தில் தாமே திறந்து கொள்ளும். யாரோ சிலர்
      பிராணாவஸ்தையுடன் முனகும் அவல ஓலங்கள் கேட்பதை போலிருக்கும். மிக நெருங்கும்
      அபாயத்திலிருந்து தப்பித்து கொள்ளும் அவதியுடன் மூத்திரம் முட்ட சிலபேர் வீட்டினுள்
      தாறும் மாறுமாக தடுமாறி ஓடிக்கொண்டிருப்பதெனவும் அரவங்கள் எழுந்தன. சிலவேளைகளில்
      சொட்டு சொட்டாக நீர் விரைந்து சிந்துவதைப்போல ஆனால் மிகவும் பெருத்த உரப்புடன்
      குளியலறையிலிருந்து சத்தங்கள் வரும்.
      எனதுடல் வியர்க்கும். இதயம் துடிக்கும். வேகவேகமாக மூச்சு வரும். எழுந்து போகவோ
      மறுபுறம் திரும்பி பார்க்கவோ இயலாதவனாய் போர்வையால் முகத்தை மூடியபடி
      படுத்துக்கிடப்பேன்.
      ஒரு தரம் கனவு
      தேவனை யாரோ சிலர் கூட்டி கொண்டு போவது போல தெளிவற்ற காட்சி. அது மார்கழி
      மாதமாக இருக்க வேண்டும். ஒரே பனிப்புகார். தேவன் மறுபடியும் மெலிந்திருக்கிறான்.
      அவனது மேலில் சேட்இல்லை. வலையை தோள்கள் மீது போட்டிருக்கிறான். கிழிந்துபோன பழைய
      சாரன் உடுத்திருக்கிறான். அவனுக்கு கால்கள் இல்லை. அந்தரத்தில் தொங்குகிறான். ஒரு
      நிறைந்த நீர்நிலைப்பக்கமாக அவர்கள் போகையில் தேவன் நீருக்குள் இறங்க ஆரம்பித்தான்.
      அவர்கள் போகையில் தேவன் நீருக்குள் இறங்க ஆரம்பித்தான்.
      தம்பி...வாடா... என நைச்சியம் பண்ணும் குரலில் கூவி அழைத்தனர். அவன் மேலும்
      நீருக்குள் இறங்குகிறான். சாரனை கழற்றி தலையில் முண்டாசாக கட்டிக்கொள்கிறான்.
      திருநீறு பூசிக்கொள்கிறான். ஏதோ முணுமுணுக்கிறான். அவர்கள் கைகளை வீசி
      பயமுறுத்த எத்தனிக்கின்றனர். மலநாற்றம் வீசுகிறது. மலநாற்றமா அல்லது பிணம் கருகும்
      நெடியா அது மார்கழி மாதப்பனியா அல்லது ஊர்கள் எல்லாம் சுட்டொ¢க்கப்படும் புகையா
      எனக்கு மூச்சு முட்டுகிறது. ஒன்றுமே தெளிவாக தொ¢யமா டேன் என்கிறது.
      மிக பிரயாசைப்பட்டு கண்விழித்தேன். உடல் வியர்த்திருந்தது. மிக தாகமாக
      இருந்தது. நீர்க்குவளை இருந்த பக்கம் கைகளை துளாவி அதை இருட்டில் நிலத்தில்
      உருட்டி உடைத்தேன்.

      அடுத்த நாள் காலையில் தேவனின் நண்பன் ஒருவன் என்னை தேடிவந்தான். தேவனை கண்டாயா
      என வினாவினான்.
      மேலும் சில நாட்கள் கழித்து இன்னொருவன் வந்தான். இரண்டொரு நாள் இரண்டு
      வந்து தேவனை விசா¡¢த்தார்கள்.
      அதற்கு பிறகு நான் தேவனை காணவேயில்லை
      அத்துடன் நான் வீடு மாறிவிட்டேன். பேய்கள் பற்றி மிகவும் அஞ்சுகிறேன்.
      நிம்மதியின்றி தூக்கத்துக்கு போகிறேன். நடுஇரவில் விழித்தெழுந்து வேதனை நினைவு
      படுத்த முயற்சித்தவாறு நெடுநேரம் புகைபிடிக்கிறேன்.
      ------------------------------------------------------------------------
      7. மோகவாசல்
      தேவர்கள் இறைவனிடம் ஓடினார்கள்.
      விசுவாமித்தினின் தவவலிமையினால் அவர்களது தேஜஸ் குன்றி கொண்டே போயிற்று.
      இறைவனின் இதழ்களில் குமிண்சி¡¢ப்பு. கண்களில் விஷக்கிறக்கம்.
      தேவ தேவா...எமை காத்தருள்க... என தேவர்கள் இறைவனிடம் இறைஞ்சிய ஒலியில் சப்த
      சமுத்திரங்களின் குமுறல்களும் தோற்று அடங்கின.
      இறைவன் மதனை அழைத்துவர பூதகனங்களை ஏவினான். கரும்பு வில்லும் பஞ்சமலர்களும் மணம்
      பரப்ப மதனம் அவனுடன் குளிந்த சிரத்துடன் ரதியும் வந்தனர்.
      இறைவன் இதழ்களில் குமிண்சி¡¢ப்பு மேலும் சற்றே வி¡¢ந்தது. ரதி நடுங்கினாள். தன்
      நாதனுக்காக ஏங்கினாள்.
      விசுவாமித்திரன் சினத்தை ஈரேழு உலகமும் அறியும்.
      அவனது தவத்துக்கு பெண்களால் குந்தகம் ஏற்பட
      ஜ்வாலித்தது.
      தேவர்கள் விடாப்பிடியாக முயன்றனர். ¡¢ஷிகள் அதற்கு நெய் வார்த்தனர்.
      சகல சம்பத்துகளம் நால்வகை சேனையும் விசாலித்த தேசத்தையும் உடைய கெளசிகராஜன்
      பிரம்ம ¡¢ஷி என பட்டமும் பெற்ற விடுவானாகில்....
      வசிஷ்டன் கர்வபங்கம் செய்யப்படுவான் என அவர்கள் ஏங்கினர்.
      பெண்களால் உலகில் கலகம் விளையும் என்பது எவ்வளவு தூரம் பொருந்தி வருகிறது. என்ன
      தான் ஒரு பசுவேயாயினும் சபலையும் பெண்ணினம் அன்றோ அவளை
      வசிஷ்டனிடம் இச்சித்ததனால் அல்லவா கெளசிகராஜன் கடும் விரதம் அனுஷ்டிக்க
      விதியுண்டாயிற்று.
      விசுவாமித்திரனுக்கு பெண்களை எண்ண சினம்
      தேவர்கள் சளைத்து விடாமல் அப்சரஸ¤களை மாறி ஏவினர். முனிவனம்
      சபித்தல் தொடர்ந்தது. நீண்ட நெடுங்காலமாக தபஸ் இருந்து தான்பெற்ற ஆற்றல்களையெல்லாம்
      விசுவாமித்திரன் நொடி பொழுதுகளில் இழந்தான்.
      மீண்டு பூரக ரேசக முதலிய அட்டவாயுக்களையும் ஐம்புலன்களையும் மிகமுயன்று அடக்கி
      நிர்ச்சிந்தையாக லயிக்க முயன்றான்.
      தேவர்கள் மறுபடி இறைவனிடம்
      இறைவன் மேனகையை அழைத்துவர பூதகணங்களை ஏவினான்.
      வனத்தில் வசந்தம் பூத்து குலுங்கிற்று. மலர்களின் நறுமணமும் தேறலின் போதையும்
      தித்திப்பும் எங்கும் நிறைந்தன. காட்டுப்பட்சிகளின் உல்லாசமிருந்த கூவல் ஒலிகளும்
      வனவிலங்குகளின் வேட்கை ததும்பும் கனைப்பு ஒலிகளும் எங்கும் எதிரொலித்தன.
      முனிவனது சிந்தை தடுமாறிற்று. மதன் தருணம் அறிந்து குறிபிசகாமல் கணை தொடுத்தான்.
      கூடவே மின்னல் ஒன்றை பற்றியவனாய் மேனகை பூமியில் குதித்தாள்.
      அவளது தேகத்தை தழுவிய காற்றை சுவாசித்ததுமே முனிவன் சிலிர்த்தான். மிருக
      வேட்கையினால் அலைப்புற்றான். முன்னே ராஜனாயிருந்த காலத்தில் போகசமுத்திரங்களில்
      சளைக்காது நீந்தி திளைத்தவனல்லவா
      தாபத்துடன் மேனகா என முனிவன் கூவி அழைத்தான்.
      தேவர்கள் கனிகொண்டு துள்ளினர். விழிகளில் விஷக்கிறக்கம்.
      ரதிதேவி ஆசுவாச பெருமூச்சு விட்டாள். தன் நாதன் தோள்களில் சாய்ந்தாள்.
      கீழே பூமியில் மேனகை முனிவனை விழுங்கி கொண்டிருந்தாள்.
      முனிவனது விரதங்கள் மட்டுப்படுத்தப்பட்டன. ஈவிரக்கமற்ற அவனது உண்மைதேடல்
      தளர்த்தப்பட்டது. ஒரேவிதமான சலிப்பூட்டும் தடத்திலே அவனது வாழ்க்கை செல்லலாயிற்று.
      திகட்டும் வரை மேனகையை அவன் தழுவி கிடந்தான்.
      ஞானத்தை எய்துவதற்கு பதில் குழந்தையை ஏந்த வேண்டிய வனானான் முனிவன்
      முனிவனின் காய்த்து போன கரங்களில் குழந்தை வீ¡¢ட்டழுதது. விதி சி¡¢த்தது. கானகம்
      மானிட வாழ்வின் விசித்திரங்களை தா¢சித்ததில் பெருமூச்செறிந்து ஓய்ந்தது.
      மேனகைக்கு முனிவனிடம் சலிப்பு தட்டிற்று. முனிவனது தழுவல்களில் முன்புபோல
      மூழ்கடிக்கும் ஆவேசம் இருக்கவில்லை. தவிர தேவலோகத்தின் செளகர்ய வாழ்வு எங்கே
      கிழங்கையும் கனியையும் புசித்து தர்ப்பையின் மீது உறங்கும் இந்த மானிடன் எங்கே
      போகப்போக முனிவனின் உடலில் இன்ப வேட்கை குன்றிற்று. ஆண்டாண்டு காலமாக
      அடக்கிவைத்திருந்த இந்தி¡¢யங்கள் பீ¡¢ட்டு பாய்ந்து சென்றதும் முனிவனுக்கு பெண்ணை
      கூடுவதில் ஒருவிதமான யந்தி¡£க பாங்கு மேலோங்கிற்று. மேனகையின் மேனியில்
      புதுமை எதுவுமில்லாமல் போவதாக தொ¢ந்தது. அவள் ஒர சாதாரண பெண்ணே போன்று
      தோன்றினாள். அவளை காண்பதில் சலிப்பும் வெறுப்பும் தோன்றியது.
      முனிவன் திருதிரு வென விழித்தான்.
      வீணை ஒலி தூரே கேட்டது. நாதனின் மிதியடிகளின் ஓசையும் கலந்து வந்தது.
      கிண்டலுக்கும் கலகத்துக்கும் பெயர் பெற்ற நாரதன்...
      முனிவன் கூனி குறுகி நின்றான். அதலபாதாளத்தில் வீழ்ந்து புரள்வதாய் உழன்றான்.
      ஒரு பொறி தட்டிற்று.
      மோகம் என்பது ஒருவாசல் தான். கண்ணையும் கருத்தையும் பறிக்கும் அலங்காரமான
      மாயாவாசல். அந்த வாசலை ஒருதரம் நிதானமாக கடந்துவிட்டால் அதற்குமப்பால் பெரும்
      அதிசயங்கள் ஒன்றும் நிகழக்காத்திருக்கவில்லை என முனிவன் உணர்ந்தான்.
      மேகவாசலைக்கடக்கும் தருணத்தில் ஏற்படும் கணநேர சிலிப்புக்காக ஆண்டாண்டு காலமாக
      கட்டி வளர்த்த தனது தேஜஸை இழந்து விட்டோமே எனக்கலங்கினான்.
      வசிஷ்டனின் பா¢காசத்துக்கு ஆளாவோமே எனவெண்ணி ஏங்கினான்.
      முனிவன் மேனகையை கடைசி தடவையாக அழைத்தான். அவனது குரலில் வழமைக்கு மாறான
      ஏதோ ஒன்று இருந்தது.
      மேனகை அஞ்சினாள். சாபத்தை எதிர்கொள்ள நடுங்கும் இதழ்களுடன் காத்து நின்றாள்.
      முனிவனோ ஒரு சிசுவை ஏந்துதல் போன்று அவளை மென்மையாக தழுவி நேத்திரங்களிலும்
      நுதலிலும் முதத்தமிட்டான்.
      போய் வா மேனகா...ஞானத்தின் வாசற்கதவை நீ எனக்காக திறந்து விட்டாய்
      மேனகையை அழைத்து செல்ல மின்னல்கள் இறங்க ஆரம்பித்தன.
      ஸ்வாமி...தங்களது குழந்தை....
      குழந்தை என்னுடையதல்ல பெண்ணே....அது பூமியின் புத்திரன்..... பூமி அவனை
      காக்கட்டும். என்று மிகத்தெளிவுடன் பதில் சொன்னான் விசுவாமித்திரன்.
      முனிவன் தனது பயணத்தை மீண்டும் மிக நிதானத்துடன் ஆரம்பித்தான். மிகவடர்ந்த
      கானகங்களையும் பனிபடர்ந்த மலைகளையும் நோக்கி அவன் சென்றான்.
      மேனகை அவன் சென்ற திக்கை நோக்கி சிரம் தாழ்த்தி ஒரு முறை தொழுதாள். அவனது
      பாததூளியை எடுத்து சிரசில் தா¢த்து கொண்டு பிரகாசமான ஒரு மின்னலுடன் மறைந்தாள்.
      நிராதரவாக விடப்பட்ட குழந்தை அழுதது. வாழ்க்கை எதிரே நின்று அதை
      பயமுறுத்தியது. அழட்டும் பூமியில் பிறந்தவர்கள் அழாமல் இருத்தல் கூடுமா
      விசுவாமித்திரனின் உறுதி மிக்க பயணத்தை கண்டு தேவர்கள் வெட்கி தலை குனிந்தனர்.
      ¡¢ஷிகள் இடிந்தனர்.
      ஹே...முனிசிரேஷ்ட உனது இஷ்டசித்தியை நீ அடைவாய் என ஒரு அசா£¡¢ முழங்கிற்று.
      தேவலோகம்.
      இறைவன் முகத்தில் சதா குமிண்சி¡¢ப்பு. கண்களில் விஷக்கிறக்கம்.
      இறைவிக்கு ஒரே வியப்பு. கூடவே சந்தேகம்.
      நாதா தாங்கள் முனிவனுக்கு உதவி செய்தீர்களா அல்ல தேவர்களுக்கா
      யாருக்கும் எனது உதவி தேவையில்லை உபத்திரவமும் தேவையில்லை. அவரவர்
      அவரவருக்கு¡¢ய பாதையில் செல்லட்டும். இடையிடையே நான் கொஞ்சம் விளையாடுவேன்.
      அதிலொரு இன்பம் பொழுது போகாதே என அலுத்துக்கொண்டான் இறைவன்.
      நிசப்தம்.

      முற்றும்...
      ------------------------------------------------------------------------
      21 2000