மணிமேகலை
      ஆசிரியர் - சீத்தலைச்சாத்தனார்
      இளங் கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து
      விளங்கு ஒளி மேனி விரி சடையாட்டி
      பொன் திகழ் நெடு வரை உச்சி தோன்றி
      தென் திசை பெயர்ந்த இ தீவ தெய்வதம்
      சாகை சம்பு தன் கீழ் நின்று
      மா நில மடந்தைக்கு வரும் துயர் கேட்டு
      வெ திறல் அரக்கர்க்கு வெம் பகை நோற்ற
      சம்பு என்பாள் சம்பாபதியினள்
      செங்கதிர செல்வன் திரு குலம் விளக்கும்
      கஞ்ச வேட்கையின் காந்த மன் வேண்ட 00-010
      அமர முனிவன் அகத்தியன் தனாது
      கரகம் கவிழ்த்த காவிரி பாவை
      செங் குணக்கு ஒழுகி அ சம்பாபதி அயல்
      பொங்கு நீர பரப்பொடு பொருந்தி தோன்ற
      ஆங்கு இனிது இருந்த அரு தவ முதியோள்
      ஓங்கு நீர பாவையை உவந்து எதிர்கொண்டு ஆங்கு
      ஆணு விசும்பின் ஆகாயகங்கை
      வேணவா தீர்த்த விளக்கே வா என
      பின்னிலை முனியா பெரு தவன் கேட்டு ஈங்கு
      அன்னை கேள் இவ் அரு தவ முதியோள் 00-020
      நின்னால் வணங்கும் தகைமையள் வணங்கு என
      பாடல்சால் சிறப்பின் பரதத்து ஓங்கிய
      கோடா செங்கோல் சோழர் தம் குலக்கொடி
      கோள் நிலை திரிந்து கோடை நீடினும்
      தான் நிலை திரியா தண் தமிழ பாவை
      தொழுதனள் நிற்ப அ தொல் மூதாட்டி
      கழுமிய உவகையின் கவான் கொண்டிருந்து
      தெய்வ கருவும் திசைமு
      செம்மலர் முதியோன் செய்த அ நாள்
      என் பெயர படுத்த இவ் விரும் பெயர் மூதூர் 00-030
      நின் பெயர படுத்தேன் நீ வாழிய என
      இரு பால் பெயரிய உரு கெழு மூதூர்
      ஒரு நூறு வேள்வி உரவோன் தனக்கு
      பெரு விழா அறைந்ததும் பெருகியது அலர் என
      சிதைந்த நெஞ்சின் சித்திராபதி தான்
      வயந்த மாலையான் மாதவிக்கு உரைத்ததும்
      மணிமேகலை தான் மா மலர் கொய்ய
      அணி மலர பூம்பொழில் அகவயின் சென்றதும்
      ஆங்கு அ பூம்பொழில் அரசு இளங் குமரனை
      பாங்கில் கண்டு அவள் பளிக்கறை புக்கதும் 00-040
      பளிக்கறை புக்க பாவையை கண்டு அவன்
      துளக்குறு நெஞ்சில் துயரொடும் போய பின்
      மணிமேகலா தெய்வம் வந்து தோன்றியதும்
      மணிமேகலையை மணிபல்லவத்து உய்த்ததும்
      உவவன மருங்கின் அவ் உரைசால் தெய்வதம்
      சுதமதி தன்னை துயில் எடுப்பியதூஉம்
      ஆங்கு அ தீவகத்து ஆய் இழை நல்லாள்
      தான் துயில் உணர்ந்து தனி துயர் உழந்ததும்
      உழந்தோள் ஆங்கண் ஓர் ஒளி மணி பீடிகை
      பழம் பிறப்பு எல்லாம் பான்மையின் உணர்ந்ததும் 00-050
      உணர்ந்தோள் முன்னர் உயர் தெய்வம் தோன்றி
      மனம் கவல் ஒழிக என மந்திரம் கொடுத்ததும்
      தீபதிலகை செவ்வனம் தோன்றி
      மா பெரும் பாத்திரம் மடக்கொடிக்கு அளித்ததும்
      பாத்திரம் பெற்ற பைந்தொடி தாயரொடு
      யாப்புறு மா தவத்து அறவணர தொழுததும்
      அறவண அடிகள் ஆபுத்திரன் திறம்
      நறு மலர கோதைக்கு நன்கனம் உரைத்ததும்
      அங்கை பாத்திரம் ஆபுத்திரன்பால்
      சிந்தாதேவி கொடுத்த வண்ணமும் 00-060
      மற்று அ பாத்திரம் மடக்கொடி ஏந்தி
      பிச்சைக்கு அவ் ஊர பெரு தெரு அடைந்ததும்
      பிச்சை ஏற்ற பெய் வளை கடிஞையில்
      பத்தினி பெண்டிர் பாத்தூண் ஈத்ததும்
      காரிகை நல்லாள் காயசண்டிகை வயிற்று
      ஆனைத்தீ கெடுத்து அம்பலம் அடைந்ததும்
      அம்பலம் அடைந்தனள் ஆய் இழை என்றே
      கொங்கு அலர் நறு தார கோமகன் சென்றதும்
      அம்பலம் அடைந்த அரசு இளங் குமரன்முன்
      வஞ்ச விஞ்சையன் மகள் வடிவு ஆகி 00-070
      மறம் செய் வேலோன் வான் சிறைக்கோட்டம்
      அறம் செய் கோட்டம் ஆக்கிய வண்ணமும்
      காயசண்டிகை என விஞ்சை காஞ்சனன்
      ஆய் இழை தன்னை அகலாது அணுகலும்
      வஞ்ச விஞ்சையன் மன்னவன் சிறுவனை
      மைந்து உடை வாளின் தப்பிய வண்ணமும்
      ஐ அரி உண் கண் அவன் துயர் பொறாஅள்
      தெய்வ கிளவியின் தௌிந்த வண்ணமும்
      அறை கழல் வேந்தன் ஆய் இழை தன்னை
      சிறை செய்க என்றதும் சிறைவீடு செய்ததும் 00-080
      நறு மலர கோதைக்கு நல் அறம் உரைத்து ஆங்கு
      ஆய் வளை ஆபுத்திரன் நாடு அடைந்ததும்
      ஆங்கு அவன்தன்னோடு அணி இழை போகி
      ஓங்கிய மணிபல்லவத்திடை உற்றதும்
      உற்றவள் ஆங்கு ஓர் உயர் தவன் வடிவு ஆய்
      பொன் கொடி வஞ்சியில் பொருந்திய வண்ணமும்
      நவை அறு நன்பொருள் உரைமினோ என
      ச கணக்கர் தம் திறம் கேட்டதும்
      ஆங்கு அ தாயரோடு அறவணர தேர்ந்து
      பூங்கொடி கச்சி மா நகர் புக்கதும் 00-090
      புக்கு அவள் கொண்ட பொய் உரு களைந்து
      மற்று அவர் பாதம் வணங்கிய வண்ணமும்
      தவ திறம் பூண்டு தருமம் கேட்டு
      பவ திறம் அறுக என பாவை நோற்றதும்
      இளங்கோ வேந்தன் அருளி கேட்ப
      வளம் கெழு கூல வாணிகன் சாத்தன்
      மா வண் தமிழ திறம் மணிமேகலை துறவு
      ஆறு ஐம் பாட்டினுள் அறிய வைத்தனன் என் 00-098
      1. விழாவறை காதை
      உலகம் திரியா ஓங்கு உயர் விழு சீர
      பலர் புகழ் மூதூர பண்பு மேம்படீஇய
      ஓங்கு உயர் மலயத்து அரு தவன் உரைப்ப
      தூங்கு எயில் எறிந்த தொடி தோள் செம்பியன்
      விண்ணவர் தலைவனை வணங்கி முன் நின்று
      மண்ணகத்து என்தன் வான் பதி தன்னுள்
      மேலோர் விழைய விழா கோள் எடுத்த
      நால் ஏழ் நாளினும் நன்கு இனிது உறைக என
      அமரர் தலைவன் ஆங்கு அது நேர்ந்தது
      கவரா கேள்வியோர் கடவார் ஆகலின் 01-010
      மெ திறம் வழக்கு நன்பொருள் வீடு எனும்
      இ திறம் தம் இயல்பினின் காட்டும்
      ச கணக்கரும் தம் துறை போகிய
      அ கணக்கரும் அகலார் ஆகி
      கரந்து உரு எய்திய கடவுளாளரும்
      பரந்து ஒருங்கு ஈண்டிய பாடை மாக்களும்
      ஐம் பெருங்குழுவும் எண் பேர் ஆயமும்
      வந்து ஒருங்கு குழீஇ வான்பதி தன்னுள்
      கொடி தேர தானை கொற்றவன் துயரம்
      விடுத்த பூதம் விழாக்கோள் மறப்பின் 01-020
      மடித்த செவ் வாய் வல் எயிறு இலங்க
      இடி குரல் முழக்கத்து இடும்பை செய்திடும்
      தொடுத்த பாசத்து தொல் பதி நரகரை
      புடைத்து உணும் பூதமும் பொருந்தாதாயிடும்
      மா இரு ஞாலத்து அரசு தலையீண்டும்
      ஆயிரம்கண்ணோன் விழா கால்கொள்க என
      வச்சிர கோட்டத்து மணம் கெழு முரசம்
      கச்சை யானை பிடர்த்தலை ஏற்றி
      ஏற்று உரி போர்த்த இடி உறு முழக்கின்
      கூற்றுக்கண் விளிக்கும் குருதி வேட்கை 01-030
      முரசு கடிப்பு இகூஉம் முதுகுடி பிறந்தோன்
      திரு விழை மூதூர் வாழ்க என்று ஏத்தி
      வானம் மும் மாரி பொழிக மன்னவன்
      கோள் நிலை திரியா கோலோன் ஆகுக
      தீவக சாந்தி செய்தரு நல் நாள்
      ஆயிரம்கண்ணோன் தன்னோடு ஆங்கு உள
      நால் வேறு தேவரும் நலத்தகு சிறப்பில்
      பால் வேறு தேவரும் இ பதி படர்ந்து
      மன்னன் கரிகால்வளவன் நீங்கிய நாள்
      இ நகர் போல்வதோர் இயல்பினது ஆகி 01-040
      பொன்நகர் வறிதா போதுவர் என்பது
      தொல் நிலை உணர்ந்தோர் துணிபொருள் ஆதலின்
      தோரண வீதியும் தோம் அறு கோட்டியும்
      பூரண கும்பமும் பொலம் பாலிகைகளும்
      பாவை விளக்கும் பல உடன் பரப்புமின்
      கா குலை கமுகும் வாழையும் வஞ்சியும்
      பூ கொடி வல்லியும் கரும்பும் நடுமின்
      பத்தி வேதிகை பசும் பொன் தூணத்து
      முத்து தாமம் முறையொடு நாற்றுமின்
      விழவு மலி மூதூர் வீதியும் மன்றமும் 01-050
      பழ மணல் மாற்றுமின் புது பரப்புமின்
      கதலிகை கொடியும் காழ் ஊன்று விலோதமும்
      மதலை மாடமும் வாயிலும் சேர்த்துமின்
      நுதல் விழி நாட்டத்து இறையோன் முதலா
      பதி வாழ் சதுக்கத்து தெய்வம் ஈறு ஆக
      வேறுவேறு சிறப்பின் செய்வினை
      ஆறு அறி மரபின் அறிந்தோர் செய்யுமின்
      தண் மணல் பந்தரும் தாழ்தரு பொதியிலும்
      புண்ணிய நல்லுரை அறிவீர் பொருந்துமின்
      ஒட்டிய சமயத்து உறு பொருள் வாதிகள் 01-060
      பட்டி மண்டபத்து பாங்கு அறிந்து ஏறுமின்
      பற்றாமாக்கள் தம்முடன் ஆயினும்
      செற்றமும் கலாமும் செய்யாது அகலுமின்
      வெண் மணல் குன்றமும் விரி பூஞ் சோலையும்
      தண் மணல் துருத்தியும் தாழ் பூ துறைகளும்
      தேவரும் மக்களும் ஒத்து உடன் திரிதரும்
      நால் ஏழ் நாளினும் நன்கு அறிந்தீர் என
      ஒளிறு வாள் மறவரும் தேரும் மாவும்
      களிறும் சூழ்தர கண் முரசு இயம்பி
      பசியும் பிணியும் பகையும் நீங்கி
      வசியும் வளனும் சுரக்க என வாழ்த்தி
      அணி விழா அறைந்தனன் அகநகர் மருங்கு என் 01-072
      2. ஊரலர் உரைத்த காதை
      நாவல் ஓங்கிய மா பெரு தீவினுள்
      காவல் தெய்வதம் தேவர்கோற்கு எடுத்த
      தீவக சாந்தி செய்தரு நல் நாள்
      மணிமேகலையொடு மாதவி வாரா
      தணியா துன்பம் தலைத்தலை மேல் வர
      சித்திராபதி தான் செல்லல் உற்று இரங்கி
      தத்து அரி நெடுங் கண் தன் மகள் தோழி
      வயந்தமாலையை வருக என கூஉய்
      பயம் கெழு மா நகர் அலர் எடுத்து உரை என
      வயந்த மாலையும் மாதவி துறவிக்கு 02-010
      அயர்ந்து மெய் வாடிய அழிவினள் ஆதலின்
      மணிமேகலையொடு மாதவி இருந்த
      அணி மலர் மண்டபத்து அகவயின் செலீஇ
      ஆடிய சாயல் ஆய் இழை மடந்தை
      வாடிய மேனி கண்டு உளம் வருந்தி
      பொன் நேர் அனையாய் புகுந்தது கேளாய்
      உன்னோடு இவ் ஊர் உற்றது ஒன்று உண்டுகொல்
      வேத்தியல் பொதுவியல் என்று இரு திறத்து
      கூத்தும் பாட்டும் தூக்கும் துணிவும்
      பண் யாழ கரணமும் பாடை பாடலும் 02-020
      தண்ணுமை கருவியும் தாழ் தீம் குழலும்
      கந்து கருத்தும் மடைநூல் செய்தியும்
      சுந்தர சுண்ணமும் தூ நீர் ஆடலும்
      பாயல் பள்ளியும் பருவத்து ஒழுக்கமும்
      கா கரணமும் கண்ணியது உணர்தலும்
      கட்டுரை வகையும் கரந்து உறை கணக்கும்
      வட்டிகை செய்தியும் மலர் ஆய்ந்து தொடுத்தலும்
      கோலம் கோடலும் கோவையின் கோப்பும்
      கால கணிதமும் கலைகளின் துணிவும்
      நாடக மகளிர்க்கு நன்கனம் வகுத்த 02-030
      ஓவி செ நூல் உரை கிடக்கையும்
      கற்று துறைபோகிய பொன் தொடி நங்கை
      நல் தவம் புரிந்தது நாண் உடைத்து என்றே
      அலகு இல் மூதூர் ஆன்றவர் அல்லது
      பலர் தொகுபு உரைக்கும் பண்பு இல் வாய்மொழி
      நயம்பாடு இல்லை நாண் உடைத்து என்ற
      வயந்தமாலைக்கு மாதவி உரைக்கும்
      காதலன் உற்ற கடு துயர் கேட்டு
      போதல்செய்யா உயிரொடு நின்றே
      பொன் கொடி மூதூர பொருளுரை இழந்து 02-040
      நல் தொடி நங்காய் நாணு துறந்தேன்
      காதலர் இறப்பின் கனை எரி பொத்தி
      ஊது உலை குருகின் உயிர்த்து அகத்து அடங்காது
      இன் உயிர் ஈவர் ஈயார் ஆயின்
      நல் நீர பொய்கையின் நளி எரி புகுவர்
      நளி எரி புகாஅர் ஆயின் அன்பரோடு
      உடன் உறை வாழ்க்கைக்கு நோற்று உடம்பு அடுவர்
      பத்தினி பெண்டிர் பரப்புநீர் ஞாலத்து
      அ திறத்தாளும் அல்லள் எம் ஆய் இழை
      கணவற்கு உற்ற கடு துயர் பொறா அள் 02-050
      மணம் மலி கூந்தல் சிறுபுறம் புதைப்ப
      கண்ணீர் ஆடிய கதிர் இள வன முலை
      திண்ணிதின் திருகி தீ அழல் பொத்தி
      காவலன் பேர் ஊர் கனை எரி ஊட்டிய
      மா பெரும் பத்தினி மகள் மணிமேகலை
      அரு தவ படுத்தல் அல்லது யாவதும்
      திருந்தா செய்கை தீ தொழில் படாஅள்
      ஆங்கனம் அன்றியும் ஆய் இழை கேளாய்
      ஈங்கு இம் மாதவர் உறைவிடம் புகுந்தேன்
      மற வணம் நீத்த மாசு அறு கேள்வி 02-060
      அறவண அடிகள் அடிமிசை வீழ்ந்து
      மா பெரு துன்பம் கொண்டு உளம் மயங்கி
      காதலன் உற்ற கடு துயர் கூற
      பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்
      பிறவார் உறுவது பெரும் பேர் இன்பம்
      பற்றின் வருவது முன்னது பின்னது
      அற்றோர் உறுவது அறிக என்று அருளி
      ஐவகை சீலத்து அமைதியும் காட்டி
      உய் வகை இவை கொள் என்று உரவோன் அருளினன்
      மை தடங் கண்ணார் தமக்கும் எற் பயந்த 02-070
      சித்திராபதிக்கும் செப்பு நீ என
      ஆங்கு அவள் உரை கேட்டு அரும் பெறல் மா மணி
      ஓங்கு திரை பெருங் கடல் வீழ்த்தோர் போன்று
      மையல் நெஞ்சமொடு வயந்த மாலையும்
      கையற்று பெயர்ந்தனள் காரிகை திறத்து என் 02-075
      3. மலர்வனம் புக்க காதை
      வயந்தமாலைக்கு மாதவி உரைத்த
      உயங்கு நோய் வருத்தத்து உரைமுன் தோன்றி
      மா மலர் நாற்றம் போல் மணிமேகலைக்கு
      ஏது நிகழ்ச்சி எதிர்ந்துளது ஆதலின்
      தந்தையும் தாயும் தாம் நனி உழந்த
      வெ துயர் இடும்பை செவிஅகம் வெதுப்ப
      காதல் நெஞ்சம் கலங்கி காரிகை
      மாதர் செங் கண் வரி வனப்பு அழித்து
      புலம்பு நீர் உருட்டி பொதி அவிழ் நறு மலர்
      இலங்கு இதழ் மாலையை இட்டு நீராட்ட 03-010
      மாதவி மணிமேகலை முகம் நோக்கி
      தாமரை தண் மதி சேர்ந்தது போல
      காமர் செங் கையின் கண்ணீர் மாற்றி
      தூ நீர் மாலை தூத்தகை இழந்தது
      நிகர் மலர் நீயே கொணர்வாய் என்றலும்
      மது மலர குழலியொடு மா மலர் தொடுக்கும்
      சுதமதி கேட்டு துயரொடும் கூறும்
      குரவர்க்கு உற்ற கொடு துயர் கேட்டு
      தணியா துன்பம் தலைத்தலை எய்தும்
      மணிமேகலை தன் மதி முகம் தன்னுள் 03-020
      அணி திகழ் நீலத்து ஆய் மலர் ஒட்டிய
      கடை மணி உகு நீர் கண்டனன் ஆயின்
      படை இட்டு நடுங்கும் காமன் பாவையை
      ஆடவர் கண்டால் அகறலும் உண்டோ
      பேடியர் அன்றோ பெற்றியின் நின்றிடின்
      ஆங்கனம் அன்றியும் அணி இழை கேளாய்
      ஈங்கு இ நகரத்து யான் வரும் காரணம்
      பாராவார பல் வளம் பழுநிய
      காராளர் சண்பையில் கௌசிகன் என்போன்
      இருபிறப்பாளன் ஒரு மகள் உள்ளேன் 03-030
      ஒரு தனி அஞ்சேன் ஒரா நெஞ்சமோடு
      ஆராமத்திடை அலர் கொய்வேன் தனை
      மாருதவேகன் என்பான் ஓர் விஞ்சையன்
      திரு விழை மூதூர் தேவர்கோற்கு எடுத்த
      பெரு விழா காணும் பெற்றியின் வருவோன்
      தாரன் மாலையன் தமனி பூணினன்
      பாரோர் காணா பலர் தொழு படிமையன்
      எடுத்தனன் எற் கொண்டு எழுந்தனன் விசும்பில்
      படுத்தனன் ஆங்கு அவன் பான்மையேன் ஆயினேன்
      ஆங்கு அவன் ஈங்கு எனை அகன்று கண்மாறி 03-040
      நீங்கினன் தன் பதி நெட்டிடை ஆயினும்
      மணி பூங் கொம்பர் மணிமேகலை தான்
      தனித்து அலர் கொய்யும் தகைமையள் அல்லள்
      பல் மலர் அடுக்கிய நல் மர பந்தர்
      இலவந்திகையின் எயில் புறம் போகின்
      உலக மன்னவன் உழையோர் ஆங்கு உளர்
      விண்ணவர் கோமான் விழா கொள் நல் நாள்
      மண்ணவர் விழையார் வானவர் அல்லது
      பாடு வண்டு இமிரா பல் மரம் யாவையும்
      வாடா மா மலர் மாலைகள் தூக்கலின் 03-050
      கைபெய் பாசத்து பூதம் காக்கும் என்று
      உய்யானத்திடை உணர்ந்தோர் செல்லார்
      வெங்கதிர் வெம்மையின் விரி சிறை இழந்த
      சம்பாதி இருந்த வனமும்
      தவா நீர காவிரி பாவை தன் தாதை
      கவேரன் ஆங்கு இருந்த கவேர வனமும்
      மூப்பு உடை முதுமைய தாக்கு அணங்கு உடைய
      யாப்பு உடைத்தாக அறிந்தோர் எய்தார்
      அருளும் அன்பும் ஆர் உயிர் ஓம்பும்
      ஒரு பெரும் பூட்கையும் ஒழியா நோன்பின் 03-060
      பகவனது ஆணையின் பல் மரம் பூக்கும்
      உவவனம் என்பது ஒன்று உண்டு அதன் உள்ளது
      விளிப்பு அறைபோகாது மெய் புறத்து இடூஉம்
      பளிக்கறை மண்டபம் உண்டு அதன் உள்ளது
      தூ நிற மா மணி சுடர் ஒளி விரிந்த
      தாமரை பீடிகை தான் உண்டு ஆங்கு இடின்
      அரும்பு அவிழ்செய்யும் அலர்ந்தன வாடா
      சுரும்பு இனம் மூசா தொல் யாண்டு கழியினும்
      மறந்தேன் அதன் திறம் மாதவி கேளாய்
      கடம் பூண்டு ஓர் தெய்வம் கருத்திடை வைத்தோர் 03-070
      ஆங்கு அவர் அடிக்கு இடின் அடி தான் உறும்
      நீங்காது யாங்கணும் நினைப்பிலராய் இடின்
      ஈங்கு இதன் காரணம் என்னை என்றியேல்
      சிந்தை இன்றியும் செய் வினை உறும் எனும்
      வெ திறல் நோன்பிகள் விழுமம் கொள்ளவும்
      செய் வினை சிந்தை இன்று எனின் யாவதும்
      எய்தாது என்போர்க்கு ஏது ஆகவும்
      பயம் கெழு மா மலர் இட்டுக்காட்ட
      மயன் பண்டு இழைத்த மரபினது அது தான்
      அவ் வனம் அல்லது அணி இழை நின் மகள் 03-080
      செவ்வனம் செல்லும் செம்மை தான் இலள்
      மணிமேகலையொடு மா மலர் கொய்ய
      அணி இழை நல்லாய் யானும் போவல் என்று
      அணி பூங் கொம்பர் அவளொடும் கூடி
      மணி தேர் வீதியில் சுதமதி செல்வுழீஇ
      சிமிலி கரண்டையன் நுழை கோல் பிரம்பினன்
      தவல் அருஞ் சிறப்பின் அராந்தாணத்து உளோன்
      நாணமும் உடையும் நன்கணம் நீத்து
      காணா உயிர்க்கும் கையற்று ஏங்கி
      உண்ணா நோன்போடு உயவல் யானையின் 03-090
      மண்ணா மேனியன் வருவோன் தன்னை
      வந்தீர் அடிகள் நும் மலர் அடி தொழுதேன்
      எம் தம் அடிகள் உரை கேண்மோ
      அழுக்கு உடை யாக்கையில் புகுந்த நும் உயிர்
      புழுக்கறை பட்டோர் போன்று உளம் வருந்தாது
      இம்மையும் மறுமையும் இறுதி இல் இன்பமும்
      தன் வயின் தரூஉம் என் தலைமகன் உரைத்தது
      கொலையும் உண்டோ கொழு மடல் தெங்கின்
      விளை பூ தேறலில் மெ தவத்தீரே
      உண்டு தௌிந்து இவ் யோகத்து உறு பயன் 03-100
      கண்டால் எம்மையும் கையுதிர்க்கொணம் என
      உண்ணா நோன்பி தன்னொடும் சூளுற்று
      உண்ம் என இரக்கும் ஓர் களிமகன் பின்னரும்
      கணவிர மாலையின் கட்டிய திரள் புயன்
      குவி முகிழ் எருக்கின் கோத்த மாலையன்
      சிதவல் துணியொடு சேண் ஓங்கு நெடுஞ் சினை
      ததர் வீழ்பு ஒடித்து கட்டிய உடையினன்
      வெண் பலி சாந்தம் மெய்ம் முழுது உரீஇ
      பண்பு இல் கிளவி பலரொடும் உரைத்து ஆங்கு
      அழூஉம் விழூஉம் அரற்றும் கூஉம் 03-110
      தொழூஉம் எழூஉம் சுழலலும் சுழலும்
      ஓடலும் ஓடும் ஒரு சிறை ஒதுங்கி
      நீடலும் நீடும் நிழலொடு மறலும்
      மையல் உற்ற மகன் பின் வருந்தி
      கையறு துன்பம் கண்டு நிற்குநரும்
      சுரியல் தாடி மருள் படு பூங் குழல்
      பவள செவ் வாய் தவள வாள் நகை
      ஒள் அரி நெடுங் கண் வெள்ளி வெண் தோட்டு
      கருங் கொடி புருவத்து மருங்கு வளை பிறை நுதல்
      காந்தள் அம் செங் கை ஏந்து இள வன முலை 03-120
      அகன்ற அல்குல் அம் நுண் மருங்குல்
      இகந்த வட்டுடை எழுது வரிக்கோலத்து
      வாணன் பேர் ஊர் மறுகிடை தோன்றி
      நீள் நிலம் அளந்தோன் மகன் முன் ஆடிய
      பேடி கோலத்து பேடு காண்குநரும்
      வம்ப மாக்கள் கம்பலை மூதூர்
      சுடுமண் ஓங்கிய நெடு நிலை மனைதொறும்
      மை அறு படிவத்து வானவர் முதலா
      எவ் வகை உயிர்களும் உவமம் காட்டி
      வெண் சுதை விளக்கத்து வித்தகர் இயற்றிய 03-130
      கண் கவர் ஓவியம் கண்டு நிற்குநரும்
      விழவு ஆற்று படுத்த கழி பெரு வீதியில்
      பொன் நாண் கோத்த நன் மணி கோவை
      ஐயவி அப்பிய நெய் அணி முச்சி
      மயிர புறம் சுற்றிய கயிற்கடை மு காழ்
      பொலம் பிறை சென்னி நலம் பெற தாழ
      செவ் வா குதலை மெய் பெறா மழலை
      சிந்துபு சில் நீர் ஐம்படை நனைப்ப
      அற்றம் காவா சுற்று உடை பூ துகில்
      தொடுத்த மணி கோவை உடுப்பொடு துயல்வர 03-140
      தளர் நடை தாங்கா கிளர் பூண் புதல்வரை
      பொல தேர் மீமிசை புகர் முக வேழத்து
      இலங்கு தொடி நல்லார் சிலர் நின்று ஏற்றி
      ஆல் அமர் செல்வன் மகன் விழா கால்கோள்
      காண்மினோ என கண்டு நிற்குநரும்
      விராடன் பேர் ஊர் விசயன் ஆம் பேடியை
      காணிய சூழ்ந்த கம்பலை மாக்களின்
      மணிமேகலை தனை வந்து புறம் சுற்றி
      அணி அமை தோற்றத்து அரு தவ படுத்திய
      தாயோ கொடியள் தகவு இலள் ஈங்கு இவள் 03-150
      மா மலர் கொய்ய மலர்வனம் தான் புகின்
      நல் இள அன்னம் நாணாது ஆங்கு உள
      வல்லுநகொல்லோ மடந்தை தன் நடை
      மா மயில் ஆங்கு உள வந்து முன் நிற்பன
      சாயல் கற்பனகொலோ தையல் தன்னுடன்
      பைங் கிளி தாம் உள பாவை தன் கிளவிக்கு
      எஞ்சலகொல்லோ இசையுந அல்ல
      என்று இவை சொல்லி யாவரும் இனைந்து உக
      செ தளிர சேவடி நிலம் வடு உறாமல்
      குரவமும் மரவமும் குருந்தும் கொன்றையும் 03-160
      திலகமும் வகுளமும் செங் கால் வெட்சியும்
      நரந்தமும் நாகமும் பரந்து அலர் புன்னையும்
      பிடவமும் தளவமும் முட முள் தாழையும்
      குடசமும் வெதிரமும் கொழுங் கால் அசோகமும்
      செருந்தியும் வேங்கையும் பெருஞ் சண்பகமும்
      எரி மலர் இலவமும் விரி பரப்பி
      வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினை
      சித்திர செய்கை படாம் போர்த்ததுவே
      ஒப்ப தோன்றிய உவவனம் தன்னை
      தொழுதனள் காட்டிய சுதமதி தன்னொடு
      மலர் கொ புகுந்தனள் மணிமேகலை என் 03-171
      4. பளிக்கறை புக்ககாதை
      பரிதி அம் செல்வன் விரி கதிர தானைக்கு
      இருள் வளைப்புண்ட மருள் படு பூம்பொழில்
      குழல் இசை தும்பி கொளுத்திக்காட்ட
      மழலை வண்டு இனம் நல் யாழ்செய்ய
      வெயில் நுழைபு அறியா குயில் நுழை பொதும்பர்
      மயில் ஆடு அரங்கில் மந்தி காண்பன காண்
      மாசு அற தௌிந்த மணி நீர் இலஞ்சி
      பாசடை பரப்பில் பல் மலர் இடை நின்று
      ஒரு தனி ஓங்கிய விரை மலர தாமரை
      அரச அன்னம் ஆங்கு இனிது இருப்ப 04-010
      கரை நின்று ஆலும் ஒரு மயில் தனக்கு
      கம்புள் சேவல் கனை குரல் முழவா
      கொம்பர் இருங் குயில் விளிப்பது காணாய்
      இயங்கு தேர் வீதி எழு துகள் சேர்ந்து
      வயங்கு ஒளி மழுங்கிய மாதர் நின் முகம் போல்
      விரை மலர தாமரை கரை நின்று ஓங்கிய
      கோடு உடை தாழை கொழு மடல் அவிழ்ந்த
      வால் வெண் சுண்ணம் ஆடியது இது காண்
      மாதர் நின் கண் போது என சேர்ந்து
      தாது உண் வண்டு இனம் மீது கடி செங் கையின் 04-020
      அம் சிறை விரிய அலர்ந்த தாமரை
      செங் கயல் பாய்ந்து பிறழ்வன கண்டு ஆங்கு
      எறிந்து அது பெறா இரை இழந்து வருந்தி
      மறிந்து நீங்கும் மணி சிரல் காண் என
      பொழிலும் பொய்கையும் சுதமதி காட்ட
      மணிமேகலை அம் மலர்வனம் காண்புழி
      மதி மருள் வெண்குடை மன்னவன் சிறுவன்
      உதயகுமரன் உரு கெழு மீது ஊர்
      மீயான் நடுங்க நடுவு நின்று ஓங்கிய
      கூம்பு முதல் முறிய வீங்கு பிணி அவிழ்ந்து 04-030
      கயிறு கால் பரிய வயிறு பாழ்பட்டு ஆங்கு
      இதை சிதைந்து ஆர்ப்ப திரை பொரு முந்நீர்
      இயங்கு திசை அறியாது யாங்கணும் ஓடி
      மயங்கு கால் எடுத்த வங்கம் போல
      காழோர் கையற மேலோர் இன்றி
      பாகின் பிளவையின் பணை முகம் துடைத்து
      கோவியன் வீதியும் கொடி தேர்
      பீடிகை தெருவும் பெருங் கலக்குறுத்து ஆங்கு
      இரு பால் பெயரிய ஒரு கெழு மூதூர்
      ஒரு பால் படாஅது வழி தங்காது 04-040
      பாகும் பறையும் பருந்தின் பந்தரும்
      ஆதுல மாக்களும் அலவுற்று விளிப்ப
      நீல மால் வரை நிலனொடு படர்ந்தென
      காலவேகம் களி மயக்குற்றென
      விடு பரி குதிரையின் விரைந்து சென்று எய்தி
      கடுங்கண் யானையின் கடா திறம் அடக்கி
      அணி தேர தானையொடு அரசு இளங் குமரன்
      மணி தேர கொடுஞ்சி கையான் பற்றி
      கார் அலர் கடம்பன் அல்லன் என்பது
      ஆரங்கண்ணியின் சாற்றினன் வருவோன் 04-050
      நாடக மடந்தையர் நலம் கெழு வீதி
      ஆடக செய்வினை மாடத்து ஆங்கண்
      சாளரம் பொளித்த கால் போகு பெரு வழி
      வீதி மருங்கு இயன்ற பூ அணை பள்ளி
      தகர குழலாள் தன்னொடு மயங்கி
      மகர யாழின் வான் கோடு தழீஇ
      வட்டிகை செய்தியின் வரைந்த பாவையின்
      எட்டிகுமரன் இருந்தோன் தன்னை
      மாதர் தன்னொடு மயங்கினை இருந்தோய்
      யாது நீ உற்ற இடுக்கண் என்றலும் 04-060
      ஆங்கு அது கேட்டு வீங்கு இள முலையொடு
      பாங்கில் சென்று தான் தொழுது ஏத்தி
      மட்டு அவிழ் அலங்கல் மன்ன குமரற்கு
      எட்டிகுமரன் எய்தியது உரைப்போன்
      வகை வரி செப்பினுள் வைகிய மலர் போல்
      தகை நலம் வாடி மலர் வனம் புகூஉம்
      மாதவி பயந்த மணிமேகலையொடு
      கோவலன் உற்ற கொடு துயர் தோன்ற
      நெஞ்சு இறை கொண்ட நீர்மையை நீக்கி
      வெம் பகை நரம்பின் என் கை செலுத்தியது 04-070
      இது யான் உற்ற இடும்பை என்றலும்
      மது மலர தாரோன் மனம் மகிழ்வு எய்தி
      ஆங்கு அவள் தன்னை என் அணி தேர் ஏற்றி
      ஈங்கு யான் வருவேன் என்று அவற்கு உரைத்து ஆங்கு
      ஓடு மழை கிழியும் மதியம் போல
      மாட வீதியில் மணி தேர் கடைஇ
      கார் அணி பூம்பொழில் கடைமுகம் குறுக அ
      தேர் ஒலி மாதர் செவிமுதல் இசைத்தலும்
      சித்திராபதியோடு உதயகுமரன் உற்று
      என்மேல் வைத்த உள்ளத்தான் என 04-080
      வயந்தமாலை மாதவிக்கு ஒரு நாள்
      கிளந்த மாற்றம் கேட்டேன் ஆதலின்
      ஆங்கு அவன் தேர் ஒலி போலும் ஆய் இழை
      ஈங்கு என் செவிமுதல் இசைத்தது செய்கு என
      அமுது உறு தீம் சொல் ஆய் இழை உரைத்தலும்
      சுதமதி கேட்டு துளக்குறு மயில் போல்
      பளிக்கறை மண்டபம் பாவையை புகுக என்று
      ஒளித்து அறை தாழ் கோத்து உள்ளகத்து இரீஇ
      ஆங்கு அது தனக்கு ஓர் ஐ விலின் கிடக்கை
      நீங்காது நின்ற நேர் இழை தன்னை 04-090
      கல்லென் தானையொடு கடு தேர் நிறுத்தி
      பல் மலர பூம்பொழில் பகல் முளைத்தது போல்
      பூ மர சோலையும் புடையும் பொங்கரும்
      தாமரை செங் கண் பரப்பினன் வரூஉம்
      அரசு இளங் குமரன் ஆரும் இல் ஒரு சிறை
      ஒரு தனி நின்றாய் உன் திறம் அறிந்தேன்
      வளர் இள வன முலை மடந்தை மெல் இயல்
      தளர் இடை அறியும் தன்மையள்கொல்லோ
      விளையா மழலை விளைந்து மெல் இயல்
      முளை எயிறு அரும்பி முத்து நிரைத்தனகொல் 04-100
      செங் கயல் நெடுங் கண் செவி மருங்கு ஓடி
      வெங் கணை நெடு வேள் வியப்பு உரைக்கும்கொல்
      மாதவர் உறைவிடம் ஒரீஇ மணிமேகலை
      தானே தமியள் இங்கு எய்தியது உரை என
      பொதி அறை பட்டோர் போன்று உளம் வருந்தி
      மது மலர கூந்தல் சுதமதி உரைக்கும்
      இளமை நாணி முதுமை எய்தி
      உரை முடிவு காட்டிய உரவோன் மருகற்கு
      அறிவும் சால்பும் அரசியல் வழக்கும்
      செறி வளை மகளிர் செப்பலும் உண்டோ 04-110
      அனையது ஆயினும் யான் ஒன்று கிளப்பல்
      வினை விளங்கு தட கை விறலோய் கேட்டி
      வினையின் வந்தது வினைக்கு விளைவு ஆயது
      புனைவன நீங்கின் புலால் புறத்திடுவது
      மூப்பு விளிவு உடையது தீ பிணி இருக்கை
      பற்றின் பற்றிடம் குற்ற கொள்கலம்
      புற்று அடங்கு அரவின் செற்ற சேக்கை
      அவலம் கவலை கையாறு அழுங்கல்
      தவலா உள்ளம் தன்பால் உடையது
      மக்கள் யாக்கை இது என உணர்ந்து 04-120
      மிக்கோய் இதனை புறமறிப்பாராய்
      என்று அவள் உரைத்த இசை படு தீம் சொல்
      சென்று அவன் உள்ளம் சேராமுன்னர்
      பளிங்கு புறத்து எறிந்த பவள பாவையின்
      இளங்கொடி தோன்றுமால் இளங்கோ முன் என் 04-125
      5. மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை
      இளங்கோன் கண்ட இளம் பொன் பூங்கொடி
      விளங்கு ஒளி மேனி விண்ணவர் வியப்ப
      பொரு முக பளிங்கின் எழினி வீழ்த்து
      திருவின் செய்யோள் ஆடிய பாவையின்
      விரை மலர் ஐங் கணை மீன விலோதனத்து
      உருவிலாளனொடு உருவம் பெயர்ப்ப
      ஓவியன் உள்ளத்து உள்ளியது வியப்போன்
      காவி அம் கண்ணி ஆகுதல் தௌிந்து
      தாழ் ஒளி மண்டபம் தன் கையின் தடைஇ
      சூழ்வோன் சுதமதி தன் முகம் நோக்கி 05-010
      சித்திர கைவினை திசைதொறும் செறிந்தன
      எ திறத்தாள் நின் இளங்கொடி உரை என
      குருகு பெயர குன்றம் கொன்றோன் அன்ன நின்
      முருக செவ்வி முகந்து தன் கண்ணால்
      பருகாள் ஆயின் பைந்தொடி நங்கை
      ஊழ் தரு தவத்தள் சாப சரத்தி
      காமற் கடந்த வாய்மையள் என்றே
      தூ மலர கூந்தல் சுதமதி உரைப்ப
      சிறையும் உண்டோ செழும் புனல் மிக்குழீஇ
      நிறையும் உண்டோ காமம் காழ்க்கொளின் 05-020
      செவ்வியள் ஆயின் என் ஆக என
      அவ்விய நெஞ்சமொடு அகல்வோன் ஆயிடை
      அம் செஞ் சாயல் அராந்தாணத்துள் ஓர்
      விஞ்சையன் இட்ட விளங்கு இழை என்றே
      கல்லென் பேர் ஊர பல்லோர் உரையினை
      ஆங்கு அவர் உறைவிடம் நீங்கி ஆய் இழை
      ஈங்கு இவள் தன்னோடு எய்தியது உரை என
      வார் கழல் வேந்தே வாழ்க நின் கண்ணி
      தீ நெறி படரா நெஞ்சினை ஆகு மதி
      ஈங்கு இவள் தன்னோடு எய்திய காரணம் 05-030
      வீங்குநீர் ஞாலம் ஆள்வோய் கேட்டருள்
      யாப்பு உடை உள்ளத்து எம் அனை இழந்தோன்
      பார்ப்பன முதுமகன் படிம உண்டியன்
      மழை வளம் தரூஉம் அழல் ஓம்பாளன்
      பழ வினை பயத்தான் பிழை மணம் எய்திய
      எற்கெடுத்து இரங்கி தன் தகவு உடைமையின்
      குரங்கு செய் கடல் குமரி அம் பெரு துறை
      பரந்து செல் மாக்களொடு தேடினன் பெயர்வோன்
      கடல் மண்டு பெரு துறை காவிரி ஆடிய
      வட மொழியாளரொடு வருவோன் கண்டு ஈங்கு 05-040
      யாங்கனம் வந்தனை என் மகள் என்றே
      தாங்கா கண்ணீர் என் தலை உதிர்த்து ஆங்கு
      ஓதல் அந்தணர்க்கு ஒவ்வேன் ஆயினும்
      காதலன் ஆதலின் கைவிடலீயான்
      இரந்து ஊண் தலைக்கொண்டு இ நகர் மருங்கில்
      பரந்து படு மனைதொறும் திரிவோன் ஒரு நாள்
      புனிற்று ஆ பாய்ந்த வயிற்று புண்ணினன்
      கணவிர மாலை கைக்கொண்டென்ன
      நிணம் நீடு பெருங் குடர் கை அகத்து ஏந்தி
      என் மகள் இருந்த இடம் என்று எண்ணி 05-050
      தன் உறு துன்பம் தாங்காது புகுந்து
      சமணீர்காள் நும் சரண் என்றோனை
      இவன் நீர் அல்ல என்று என்னொடும் வெகுண்டு
      மை அறு படிவத்து மாதவர் புறத்து எமை
      கையுதிர்க்கோடலின் கண் நிறை நீரேம்
      அறவோர் உளீரோ ஆரும் இலோம் என
      புறவோர் வீதியில் புலம்பொடு சாற்ற
      மங்குல் தோய் மாட மனைதொறும் புகூஉம்
      அங்கையில் கொண்ட பாத்திரம் உடையோன்
      கதிர் சுடும் அமயத்து பனி மதி முகத்தோன் 05-060
      பொன்னின் திகழும் பொலம் பூ ஆடையன்
      என் உற்றனிரோ என்று எமை நோக்கி
      அன்புடன் அளைஇய அருள்மொழி அதனால்
      அஞ்செவி நிறைந்து நெஞ்சகம் குளிர்ப்பித்து
      தன் கை பாத்திரம் என் கை தந்து ஆங்கு
      எந்தைக்கு உற்ற இடும்பை நீங்க
      எடுத்தனன் தழீஇ கடுப்ப தலை ஏற்றி
      மாதவர் உறைவிடம் காட்டிய மறையோன்
      சா துயர் நீங்கிய தலைவன் தவ முனி
      சங்கதருமன் தான் எமக்கு அருளிய 05-070
      எம் கோன் இயல் குணன் ஏதம் இல் குண பொருள்
      உலக நோன்பின் பல கதி உணர்ந்து
      தனக்கு என வாழா பிறர்க்கு உரியாளன்
      இன்ப செவ்வி மன்பதை எய்த
      அருளறம் பூண்ட ஒரு பெரும் பூட்கையின்
      அற கதிர் ஆழி திறப்பட உருட்டி
      காமற் கடந்த வாமன் பாதம்
      தகைபாராட்டுதல் அல்லது யாவதும்
      மிகை நா இல்லேன் வேந்தே வாழ்க என
      அம் சொல் ஆய் இழை இன் திறம் அறிந்தேன் 05-080
      வஞ்சி நுண் இடை மணிமேகலை தனை
      சித்திராபதியால் சேர்தலும் உண்டு என்று
      அ பொழில் ஆங்கு அவன் அயர்ந்து போய பின்
      பளிக்கறை திறந்து பனி மதி முகத்து
      களி கயல் பிறழா காட்சியள் ஆகி
      கற்பு தான் இலள் நல் தவ உணர்வு
      வருண காப்பு இலள் பொருள் விலையாட்டி என்று
      இகழ்ந்தனன் ஆகி நயந்தோன் என்னாது
      புதுவோன் பின்றை போனது என் நெஞ்சம்
      இதுவோ அன்னாய் காமத்து இயற்கை 05-090
      இதுவே ஆயின் கெடுக தன் திறம் என
      மது மலர குழலாள் மணிமேகலை தான்
      சுதமதி தன்னொடும் நின்ற எல்லையுள்
      இந்திர கோடணை விழா அணி விரும்பி
      வந்து காண்குறூஉம் மணிமேகலா தெய்வம்
      பதிஅகத்து உறையும் ஓர் பைந்தொடி ஆகி
      மணி அறை பீடிகை வலம் கொண்டு ஓங்கி
      புலவன் தீர்த்தன் புண்ணியன் புராணன்
      உலக நோன்பின் உயர்ந்தோய் என்கோ
      குற்றம் கெடுத்தோய் செற்றம் செறுத்தோய் 05-100
      முற்ற உணர்ந்த முதல்வா என்கோ
      காமற் கடந்தோய் ஏமம் ஆயோய்
      தீ நெறி கடும் பகை கடிந்தோய் என்கோ
      ஆயிர ஆரத்து ஆழி அம் திருந்து அடி
      நா ஆயிரம் இலேன் ஏத்துவது எவன் என்று
      எரி மணி பூங் கொடி இரு நில மருங்கு வந்து
      ஒரு தனி திரிவது ஒத்து ஓதியின் ஒதுங்கி
      நில வரை இறந்து ஓர் முடங்கு நா நீட்டும்
      புல வரை இறந்த புகார் எனும் பூங்கொடி
      பல் மலர் சிறந்த நல் நீர் அகழி 05-110
      புள் ஒலி சிறந்த தெள் அரி சிலம்பு அடி
      ஞாயில் இஞ்சி நகை மணி மேகலை
      வாயில் மருங்கு இயன்ற வான் பணை தோளி
      தருநிலை வச்சிரம் என இரு கோட்டம்
      எதிர் ஓங்கிய கதிர் இள வன முலை
      ஆர் புனை வேந்தற்கு பேர் அளவு இயற்றி
      ஊழி எண்ணி நீடு நின்று ஓங்கிய
      ஒரு பெருங் கோயில் திருமுகவாட்டி
      குண திசை மருங்கில் நாள் முதிர் மதியமும்
      குட திசை மருங்கில் சென்று வீழ் கதிரும் 05-120
      வெள்ளி வெண் தோட்டொடு பொன் தோடு ஆக
      எள் அறு திருமுகம் பொலி பெய்தலும்
      அன்ன சேவல் அயர்ந்து விளையாடிய
      தன்னுறு பெடையை தாமரை அடக்க
      பூம் பொதி சிதை கிழித்து பெடை கொண்டு
      ஓங்கு இரு தெங்கின் உயர் மடல் ஏற
      அன்றில் பேடை அரி குரல் அழைஇ
      சென்று வீழ் பொழுது சேவற்கு இசைப்ப
      பவள செங் கால் பறவை கானத்து
      குவளை மேய்ந்த குட கண் சேதா 05-130
      முலை பொழி தீம் பால் எழு துகள் அவிப்ப
      கன்று நினை குரல மன்று வழி படர
      அந்தி அந்தணர் செ தீ பேண
      பை தொடி மகளிர் பலர் விளக்கு எடுப்ப
      யாழோர் மருதத்து இன் நரம்பு உளர
      கோவலர் முல்லை குழல் மேற்கொள்ள
      அமரக மருங்கில் கணவனை இழந்து
      தமர் அகம் புகூஉம் ஒரு மகள் போல
      கதிர் ஆற்றுப்படுத்த முதிரா துன்பமோடு
      அந்தி என்னும் பசலை மெய்யாட்டி
      வந்து இறுத்தனளால் மா நகர் மருங்கு என் 05-141
      6. சக்கரவாள கோட்டம் உரைத்த காதை
      அந்தி மாலை நீங்கிய பின்னர்
      வந்து தோன்றிய மலர் கதிர் மண்டிலம்
      சான்றோர் தம் கண் எய்திய குற்றம்
      தோன்றுவழி விளங்கும் தோற்றம் போல
      மாசி அறு விசும்பின் மறு நிறம் கிளர
      ஆசு அற விளங்கிய அம் தீம் தண்கதிர்
      வெள்ளி வெண் குடத்து பால் சொரிவது போல்
      கள் அவிழ் பூம் பொழில் இடைஇடை சொரிய
      உருவு கொண்ட மின்னே போல
      திருவில் இட்டு திகழ்தரு மேனியள் 06-010
      ஆதி முதல்வன் அற ஆழி ஆள்வோன்
      பாத பீடிகை பணிந்தனள் ஏத்தி
      பதிஅகத்து உறையும் ஓர் பைந்தொடி ஆகி
      சுதமதி நல்லாள் மதி முகம் நோக்கி
      ஈங்கு நின்றீர் என் உற்றீர் என
      ஆங்கு அவள் அவன் கூறியது உரைத்தலும்
      அரசு இளங் குமரன் ஆய் இழை தன் மேல்
      தணியா நோக்கம் தவிர்ந்திலனாகி
      அறத்தோர் வனம் என்று அகன்றனன் ஆயினும்
      புறத்தோர் வீதியில் பொருந்துதல் ஒழியான் 06-020
      பெரு தெரு ஒழித்து இப்பெரு வனம் சூழ்ந்த
      திருந்து எயில் குடபால் சிறு புழை போகி
      மிக்க மாதவர் விரும்பினர் உறையும்
      சக்கரவாள கோட்டம் புக்கால்
      கங்குல் கழியினும் கடு நவை எய்தாது
      அங்கு நீர் போம் என்று அரு தெய்வம் உரைப்ப
      வஞ்ச விஞ்சையன் மாருதவேகனும்
      அம் செஞ் சாயல் நீயும் அல்லது
      நெடு நகர் மருங்கின் உள்ளோர் எல்லாம்
      சுடுகாட்டு கோட்டம் என்று அலது உரையார் 06-030
      சக்கரவாள கோட்டம் அஃது என
      மிக்கோய் கூறிய உரை பொருள் அறியேன்
      ஈங்கு இதன் காரணம் என்னையோ என
      ஆங்கு அதன் காரணம் அறி கூறுவன்
      மாதவி மகளொடு வல் இருள் வரினும்
      நீ கேள் என்றே நேர் இழை கூறும் இ
      நா பேர் ஊர் தன்னொடு தோன்றிய
      ஈ புறங்காடு ஈங்கு இதன் அயலது
      ஊரா நல் தேர் ஓவி படுத்து
      தேவர் புகுதரூஉம் செழுங் கொடி வாயிலும் 06-040
      நெல்லும் கரும்பும் நீரும் சோலையும்
      நல்வழி எழுதிய நலம் கிளர் வாயிலும்
      வெள்ளி வெண் சுதை இழுகிய மாடத்து
      உள் உரு எழுதா வெள்ளிடை வாயிலும்
      மடித்த செவ் வாய் கடுத்த நோக்கின்
      தொடுத்த பாசத்து பிடித்த சூலத்து
      நெடு நிலை மண்ணீடு நின்ற வாயிலும்
      நால் பெரு வாயிலும் பாற்பட்டு ஓங்கிய
      காப்பு உடை இஞ்சி கடி வழங்கு ஆர் இடை
      உலையா உள்ளமோடு உயிர கடன் இறுத்தோர் 06-050
      தலை தூங்கு நெடு மரம் தாழ்ந்து புறம் சுற்றி
      பீடிகை ஓங்கிய பெரும் பலி முன்றில்
      காடு அமர் செல்வி கழி பெருங் கோட்டமும்
      அரு தவர்க்கு ஆயினும் அரசர்க்கு
      ஒருங்கு உடன் மாய்ந்த பெண்டிர்க்கு ஆயினும்
      நால் வேறு வருண பால் காட்டி
      இறந்தோர் மருங்கில் சிறந்தோர் செய்த
      குறியவும் நெடியவும் குன்று கண்டன்ன
      சுடுமண் ஓங்கிய நெடுநிலை கோட்டமும்
      அரு திறல் கடவுள் திருந்து பலி கந்தமும் 06-060
      நிறை கல் தெற்றியும் மிறை கள சந்தியும்
      தண்டும் மண்டையும் பிடித்து காவலர்
      உண்டு கண் படுக்கும் உறையுள் குடிகையும்
      தூ கொடியும் சுடர தோரணங்களும்
      ஈ பந்தரும் யாங்கணும் பரந்து
      சுடுவோர் இடுவோர் தொடு குழி படுப்போர்
      தாழ் வயின் அடைப்போர் தாழியில் கவிப்போர்
      இரவும் பகலும் இளிவுடன் தரியாது
      வருவோர் பெயர்வோர் மாறா சும்மையும்
      எஞ்சியோர் மருங்கின் ஈமம் சாற்றி 06-070
      நெஞ்சு நடுக்குறூஉம் நெய்தல் ஓசையும்
      துறவோர் இறந்த தொழு விளி பூசலும்
      பிறவோர் இறந்த அழு விளி பூசலும்
      நீள் முக நரியின் தீ விளி கூவும்
      சாவோர பயிரும் கூகையின் குரலும்
      புலவு ஊண் பொருந்திய குராலின் குரலும்
      ஊண் தலை துற்றிய ஆண்டலை குரலும்
      நல் நீர புணரி நளி கடல் ஓதையின்
      இன்னா இசை ஒலி என்றும் நின்று அறாது
      தான்றியும் ஒடுவையும் உழிஞ்சிலும் ஓங்கி 06-080
      கான்றையும் சூரையும் கள்ளியும் அடர்ந்து
      காய் பசி கடும் பேய் கணம் கொண்டு ஈண்டும்
      மால் அமர் பெருஞ்சினை வாகை மன்றமும்
      வெண் நிணம் தடியொடு மாந்தி மகிழ் சிறந்து
      புள் இறைகூரும் வெள்ளில் மன்றமும்
      சுடலை நோன்பிகள் ஒடியா உள்ளமொடு
      மடைதீ உறுக்கும் வன்னி மன்றமும்
      விரத யாக்கையர் உடை தலை தொகுத்து ஆங்கு
      இரு தொடர படுக்கும் இரத்தி மன்றமும்
      பிணம் தின் மாக்கள் நிணம் படு குழிசியில் 06-090
      விருந்தாட்டு அயரும் வெள்ளிடை மன்றமும்
      அழல் பெய் குழிசியும் புழல் மண்டையும்
      வெள்ளில் பாடையும் உள்ளீட்டு அறுவையும்
      பரிந்த மாலையும் உடைந்த கும்பமும்
      நெல்லும் பொரியும் சில் பலி அரிசியும்
      யாங்கணும் பரந்த ஓங்கு இரும் பறந்தலை
      தவ துறை மாக்கள் மிக பெருஞ் செல்வர்
      ஈற்று இளம் பெண்டிர் ஆற்றா பாலகர்
      முதியோர் என்னான் இளையோர்
      கொடுந்தொழிலாளன் கொன்றனன் குவிப்ப இவ் 06-100
      அழல் வா சுடலை தின்ன கண்டும்
      கழி பெருஞ் செல்வ கள்ளாட்டு அயர்ந்து
      மிக்க நல் அறம் விரும்பாது வாழும்
      மக்களின் சிறந்த மடவோர் உண்டோ
      ஆங்கு அது தன்னை ஓர் அருங் கடி நகர் என
      சார்ங்கலன் என்போன் தனி வழி சென்றோன்
      என்பும் தடியும் உதிரமும் யாக்கை என்று
      அன்புறு மாக்கட்கு அறி சாற்றி
      வழுவொடு கிடந்த புழு ஊன் பிண்டத்து
      அலத்தகம் ஊட்டிய அடி நரி வா கொண்டு 06-110
      உலப்பு இல் இன்பமோடு உளைக்கும் ஓதையும்
      கலை புற அல்குல் கழுகு குடைந்து உண்டு
      நிலைத்தலை நெடு விளி எடுக்கும் ஓதையும்
      கடகம் செறித்த கையை தீநாய்
      உடை கவ்வி ஒடுங்கா ஓதையும்
      சாந்தம் தோய்ந்த ஏந்து இள வன முலை
      காய்ந்த பசி எருவை கவர்ந்து ஊண் ஓதையும்
      பண்பு கொள் யாக்கையின் வெண்பலி அரங்கத்து
      மண் கணை முழவம் ஆக ஆங்கு ஓர்
      கரு தலை வாங்கி கை அகத்து ஏந்தி 06-120
      இரும் பேர் உவகையின் எழுந்து ஓர் பேய் மகள்
      புயலோ குழலோ கயலோ கண்ணோ
      குமிழோ மூக்கோ இதழோ கவிரோ
      பல்லோ முத்தோ என்னாது இரங்காது
      கண் தொட்டு உண்டு கவை அடி பெயர்த்து
      தண்டா களிப்பின் ஆடும் கூத்து
      கண்டனன் வெரீஇ கடு நவை எய்தி
      விண்டு ஓர் திசையின் விளித்தனன் பெயர்ந்து ஈங்கு
      எம் அனை காணாய் ஈ சுடலையின்
      வெம் முது பேய்க்கு என் உயிர் கொடுத்தேன் என 06-130
      தம் அனை தன் முன் வீழ்ந்து மெய் வைத்தலும்
      பார்ப்பான் தன்னொடு கண் இழந்து இருந்த இ
      தீத்தொழிலாட்டியேன் சிறுவன் தன்னை
      யாரும் இல் தமியேன் என்பது நோக்காது
      ஆர் உயிர் உண்டது அணங்கோ பேயோ
      துறையும் மன்றமும் தொல் வலி மரனும்
      உறையுளும் கோட்டமும் காப்பாய் காவாய்
      தகவு இலைகொல்லோ சம்பாபதி என
      மகன் மெய் யாக்கையை மார்பு உற தழீஇ
      ஈ புறங்காட்டு எயில் புற வாயிலில் 06-140
      கோதமை என்பாள் கொடு துயர் சாற்ற
      கடி வழங்கு வாயிலில் கடு துயர் எய்தி
      இடை இருள் யாமத்து என்னை ஈங்கு அழைத்தனை
      என் உற்றனையோ எனக்கு உரை என்றே
      பொன்னின் பொலிந்த நிறத்தாள் தோன்ற
      ஆரும்இலாட்டியேன் அறியா பாலகன்
      ஈ புறங்காட்டு எய்தினோன் தன்னை
      அணங்கோ பேயோ ஆர் உயிர் உண்டது
      உறங்குவான் போல கிடந்தனன் காண் என
      அணங்கும் பேயும் ஆர் உயிர் உண்ணா 06-150
      பிணங்கு நூல் மார்பன் பேது கந்தாக
      ஊழ்வினை வந்து இவன் உயிர் உண்டு கழிந்தது
      மா பெரு துன்பம் நீ ஒழிவாய் என்றலும்
      என் உயிர் கொண்டு இவன் தந்தருளில்
      கண் இல் கணவனை இவன் காத்து ஓம்பிடும்
      இவன் உயிர் தந்து என் வாங்கு என்றலும்
      முது மூதாட்டி இரங்கினள் மொழிவோள்
      ஐயம் உண்டோ ஆர் உயிர் போனால்
      செய்வினை மருங்கின் சென்று பிறப்பு எய்துதல்
      ஆங்கு அது கொணர்ந்து நின் ஆர் இடர் நீக்குதல் 06-160
      ஈங்கு எனக்கு ஆவது ஒன்று அன்று நீ இரங்கல்
      கொலை அறம் ஆம் எனும் தொழில் மாக்கள்
      அவல படிற்று உரை ஆங்கு அது மடவாய்
      உலக மன்னவர்க்கு உயிர்க்கு உயிர் ஈவோர்
      இலரோ இந்த ஈ புறங்காட்டு
      அரசர்க்கு அமைந்தன ஆயிரம் கோட்டம்
      நிர கொடு மொழி நீ ஒழிக என்றலும்
      தேவர் தருவர் வரம் என்று ஒரு முறை
      நான்மறை அந்தணர் நல் நூல் உரைக்கும்
      மா பெரு தெய்வம் நீ அருளாவிடின் 06-170
      யானோ காவேன் என் உயிர் ஈங்கு என
      ஊழி முதல்வன் உயிர் தரின் அல்லது
      ஆழி தாழி அகவரை திரிவோர்
      தாம் தரின் யானும் தருகுவன் மடவாய்
      ஈங்கு என் ஆற்றலும் காண்பாய் என்றே
      நால் வகை மரபின் அரூ பிரமரும்
      நால் வகையில் உரூ பிரமரும்
      இரு வகை சுடரும் மூவகையின்
      பெரு வனப்பு எய்திய தெய்வத கணங்களும்
      பல் வகை அசுரரும் படு துயர் உறூஉம் 06-180
      எண் வகை நரகரும் இரு விசும்பு இயங்கும்
      பல் மீன் ஈட்டமும் நாளும் கோளும்
      தன் அகத்து அடக்கிய சக்கரவாளத்து
      வரம் தரற்கு உரியோர் தமை முன் நிறுத்தி
      அரந்தை கெடும் இவள் அரு துயர் இது என
      சம்பாபதி தான் உரைத்த அம் முறையே
      எங்கு வாழ் தேவரும் உரைப்ப கேட்டே
      கோதமை உற்ற கொடு துயர் நீங்கி
      ஈ சுடலையில் மகனை இட்டு இறந்த பின்
      சம்பாபதி தன் ஆற்றல் தோன்ற 06-190
      எங்கு வாழ் தேவரும் கூடிய இடம் தனில்
      சூழ் கடல் வளைஇய ஆழி அம் குன்றத்து
      நடுவு நின்ற மேரு குன்றமும்
      புடையின் நின்ற எழு வகை குன்றமும்
      நால் வகை மரபின் மா பெரு தீவும்
      ஓர் ஈர் ஆயிரம் சிற்றிடை தீவும்
      பிறவும் ஆங்கு அதன் இடவகை உரியன
      பெறு முறை மரபின் அறிவு வர காட்டி
      ஆங்கு வாழ் உயிர்களும் அவ் உயிர் இடங்களும்
      பாங்குற மண்ணீட்டில் பண்புற வகுத்து 06-200
      மிக்க மயனால் இழைக்கப்பட்ட
      சக்கரவாள கோட்டம் ஈங்கு இது காண்
      இடு பிண கோட்டத்து எயில் புறம் ஆதலின்
      சுடுகாட்டு கோட்டம் என்று அலது உரையார்
      இதன் வரவு இது என்று இரு தெய்வம் உரைக்க
      மதன் இல் நெஞ்சமொடு வான் துயர் எய்தி
      பிறந்தோர் வாழ்க்கை சிறந்தோள் உரைப்ப
      இறந்து இருள் கூர்ந்த இடை யாமத்து
      தூங்கு துயில் எய்திய சுதமதி ஒழி
      பூங்கொடி தன்னை பொருந்தி தழீஇ 06-210
      அந்தரம் ஆறா ஆறு ஐந்து யோசனை
      தென் திசை மருங்கில் சென்று திரை உடுத்த
      மணிபல்லவத்திடை மணிமேகலா தெய்வம்
      அணி இழை தன்னை வைத்து அகன்றது தான் என் 06-214
      7. துயிலெழுப்பிய காதை
      மணிமேகலை தனை மணிபல்லவத்திடை
      மணிமேகலா தெய்வம் வைத்து நீங்கி
      மணிமேகலை தனை மலர பொழில் கண்ட
      உதயகுமரன் உறு துயர் எய்தி
      கங்குல் கழியின் என் கை அகத்தாள் என
      பொங்கு மெல் அமளியில் பொருந்தாது இருந்தோன்
      முன்னர தோன்றி மன்னவன் மகனே
      கோல் நிலை திரிந்திடின் கோள் திரியும்
      கோள் நிலை திரிந்திடின் மாரி வறம் கூரும்
      மாரி வறம் கூரின் மன் உயிர் இல்லை 07-010
      மன் உயிர் எல்லாம் மண் ஆள் வேந்தன்
      தன் உயிர் என்னும் தகுதி இன்று ஆகும்
      தவ திறம் பூண்டோள் தன்மேல் வைத்த
      அவ திறம் ஒழிக என்று அவன்வயின் உரைத்த பின்
      உவவனம் புகுந்து ஆங்கு உறு துயில் கொள்ளும்
      சுதமதி தன்னை துயிலிடை நீக்கி
      இந்திர கோடணை இ நகர காண
      வந்தேன் அஞ்சல் மணிமேகலை யான்
      ஆதிசால் முனிவன் அறவழிப்படூஉம்
      ஏது முதிர்ந்தது இளங்கொடிக்கு ஆதலின் 07-020
      விஞ்சையின் பெயர்த்து நின் விளங்கு இழை தன்னை ஓர்
      வஞ்சம் இல் மணிபல்லவத்திடை வைத்தேன்
      பண்டை பிறப்பும் பண்புற உணர்ந்து ஈங்கு
      இன்று ஏழ் நாளில் இ நகர் மருங்கே
      வந்து தோன்றும் மடக்கொடி நல்லாள்
      களிப்பு மாண் செல்வ காவல் பேர் ஊர்
      ஒளித்து உரு எய்தினும் உன்திறம் ஒளியாள்
      ஆங்கு அவள் இ நகர் புகுந்த அ நாள்
      ஈங்கு நிகழ்வன ஏது பல உள
      மாதவி தனக்கு யான் வந்த வண்ணமும் 07-030
      ஏதும் இல் நெறி மகள் எய்திய வண்ணமும்
      உரையாய் நீ அவள் என் திறம் உணரும்
      திரை இரும் பௌவத்து தெய்வம் ஒன்று உண்டு என
      கோவலன் கூறி இ கொடி இடை தன்னை என்
      நாமம் செய்த நல் நாள் நள் இருள்
      காமன் கையற கடு நவை அறுக்கும்
      மா பெரு தவக்கொடி ஈன்றனை என்றே
      நனவே போல கனவு அகத்து உரைத்தேன்
      ஈங்கு இவ் வண்ணம் ஆங்கு அவட்கு உரை என்று
      அந்தரத்து எழுந்து ஆங்கு அரு தெய்வம் போய பின் 07-040
      வெ துயர் எய்தி சுதமதி எழுந்து ஆங்கு
      அகல் மனை அரங்கத்து ஆசிரியர் தம்மொடு
      வகை தெரி மாக்கட்கு வட்டணை காட்டி
      ஆடல் புணர்க்கும் அரங்கு இயல் மகளிரின்
      கூடிய குயிலுவ கருவி கண் துயின்று
      பண்ணு கிளை பயிரும் பண் யாழ தீம் தொடை
      கொளை வல் ஆயமோடு இசை கூட்டுண்டு
      வளை சேர் செங் கை மெல் விரல் உதைத்த
      வெம்மை வெய்து உறாது தன்மையில் திரியவும்
      பண்பு இல் காதலன் பரத்தமை நோனாது 07-050
      உண் கண் சிவந்து ஆங்கு ஒல்கு கொடி போன்று
      தெருட்டவும் தெருளாது ஊடலோடு துயில்வோர்
      விரை பூம் பள்ளி வீழ் துணை தழுவவும்
      தளர் நடை ஆயமொடு தங்காது ஓடி
      விளையாடு சிறு தேர் ஈர்த்து மெய் வருந்தி
      அமளி துஞ்சும் ஐம்படை தாலி
      குதலை செவ் வாய் குறு நடை புதல்வர்க்கு
      காவல் பெண்டிர் கடிப்பகை எறிந்து
      தூபம் காட்டி தூங்கு துயில் வதியவும்
      இறை உறை புறவும் நிறை நீர புள்ளும் 07-060
      கா உறை பறவையும் நா உள் அழுந்தி
      விழவு களி அடங்கி முழவு கண் துயின்று
      பழ விறல் மூதூர் பாயல் கொள் நடு நாள்
      கோமகன் கோயில் குறு நீர கன்னலின்
      யாமம் கொள்பவர் ஏத்து ஒலி அரவமும்
      உறையுள் நின்று ஒடுங்கிய உண்ணா உயக்கத்து
      நிறை அழி யானை நெடுங் கூ விளியும்
      தேர் வழங்கு தெருவும் சிற்றிடை முடுக்கரும்
      ஊர் காப்பாளர் எறி துடி ஓதையும்
      முழங்கு நீர் முன் துறை கலம் புணர் கம்மியர் 07-070
      துழந்து அடு கள்ளின் தோப்பி உண்டு அயர்ந்து
      பழஞ் செருக்கு உற்ற அனந்தர பாணியும்
      அர வா கடிப்பகை ஐயவி
      விரவிய மகளிர் ஏந்திய தூமத்து
      புதல்வரை பயந்த புனிறு தீர் கயக்கம்
      தீர் வினை மகளிர் குளன் ஆடு அரவமும்
      வலித்த நெஞ்சின் ஆடவர் இன்றியும்
      புலி கணத்து அன்னோர் பூத சதுக்கத்து
      கொடி தேர் வேந்தன் கொற்றம் கொள்க என
      இடி குரல் முழக்கத்து இடும் பலி ஓதையும் 07-080
      ஈற்று இளம் பெண்டிர் ஆற்றா பாலகர்
      கடுஞ் சூல் மகளிர் நெடும் புண் உற்றோர்
      தம் துயர் கெடுக்கும் மந்திர மாக்கள்
      மன்ற பேய்மகள் வந்து கைக்கொள்க என
      நின்று எறி பலியின் நெடுங் குரல் ஓதையும்
      பல் வேறு ஓதையும் பரந்து ஒருங்கு இசைப்ப
      கேட்டு உளம் கலங்கி ஊட்டு இருள் அழுவத்து
      முருந்து ஏர் இள நகை நீங்கி பூம்பொழில்
      திருந்து எயில் குடபால் சிறு புழை போகி
      மிக்க மா தெய்வம் வியந்து எடுத்து உரைத்த 07-090
      சக்கரவாள கோட்டத்து ஆங்கண்
      பலர் புக திறந்த பகு வாய் வாயில்
      உலக அறவியின் ஒரு புடை இருத்தலும்
      கந்து உடை நெடு நிலை காரணம் காட்டிய
      அந்தில் எழுதிய அற்புத பாவை
      மை தடங் கண்ணாள் மயங்கினள் வெருவ
      திப்பியம் உரைக்கும் தெய்வ கிளவியின்
      இரவிவன்மன் ஒரு பெரு மகளே
      துரக தானை துச்சயன் தேவி
      தயங்கு இணர கோதை தாரை சாவுற 07-100
      மயங்கி யானை முன் மன் உயிர் நீத்தோய்
      காராளர் சண்பையில் கௌசிகன் மகளே
      மாருதவேகனோடு இ நகர் புகுந்து
      தாரை தவ்வை தன்னொடு கூடிய
      வீரை ஆகிய சுதமதி கேளாய்
      இன்று ஏழ் நாளில் இடை இருள் யாமத்து
      தன் பிறப்பு அதனொடு நின் உணர்ந்து ஈங்கு
      இலக்குமி ஆகிய நினக்கு இளையாள் வரும்
      அஞ்சல் என்று உரைத்தது அவ் உரை கேட்டு
      நெஞ்சம் நடுக்குறூஉம் நேர் இழை நல்லாள் 07-110
      காவலாளர் கண் துயில்கொள்ள
      தூ மென் சேக்கை துயில் கண் விழிப்ப
      வலம்புரி சங்கம் வறிது எழுந்து ஆர
      புலம் புரி சங்கம் பொருளொடு முழங்க
      புகர் முக வாரணம் நெடுங் கூ விளிப்ப
      பொறி மயிர் வாரணம் குறுங் கூ விளிப்ப
      பணை நிலை புரவி பல எழுந்து ஆல
      பணை நிலை புள்ளும் பல எழுந்து ஆல
      பூம்பொழில் ஆர்கை புள் ஒலி சிற
      பூங்கொடியார் கை புள் ஒலி சிறப்ப 07-120
      கடவுள் பீடிகை பூ பலி கடைகொள
      கலம் பகர் பீடிகை பூ பலி கடை கொள
      குயிலுவர் கடைதொறும் பண் இயம் பரந்து எழ
      கொடுப்போர் கடைதொறும் பண்ணியம் பரந்து எழ
      ஊர் துயில் எடுப்ப உரவுநீர் அழுவத்து
      கார் இருள் சீத்து கதிரவன் முளைத்தலும்
      ஏ உறு மஞ்ஞையின் இனைந்து அடி வருந்த
      மா நகர் வீதி மருங்கில் போகி
      போய கங்குலில் புகுந்ததை எல்லாம்
      மாதவி தனக்கு வழு இன்று உரைத்தலும் 07-130
      நல் மணி இழந்த நாகம் போன்று அவள்
      தன் மகள் வாரா தனி துயர் உழப்ப
      இன் உயிர் இழந்த யாக்கையின் இருந்தனள்
      துன்னியது உரைத்த சுதமதி தான் என் 07-134
      8. மணிபல்லவத்து துயருற்ற காதை
      ஈங்கு இவள் இன்னணம் ஆக இருங் கடல்
      வாங்கு திரை உடுத்த மணிபல்லவத்திடை
      தத்து நீர் அடைகரை சங்கு உழு தொடுப்பின்
      முத்து விளை கழனி முரி செம் பவளமொடு
      விரை மரம் உருட்டும் திரை உலா பரப்பின்
      ஞாழல் ஓங்கிய தாழ் கண் அசும்பின்
      ஆம்பலும் குவளையும் தாம் புணர்ந்து மயங்கி
      வண்டு உண மலர்ந்த குண்டு நீர் இலஞ்சி
      முட கால் புன்னையும் மடல் பூ தாழையும்
      வெயில் வரவு ஒழித்த பயில் பூம் பந்தர் 08-010
      அறல் விளங்கு நிலா மணல் நறு மலர பள்ளி
      துஞ்சு துயில் எழூஉம் அம் சில் ஓதி
      காதல் சுற்றம் மறந்து கடைகொள
      வேறு இடத்து பிறந்த உயிரே போன்று
      பண்டு அறி கிளையொடு பதியும் காணாள்
      கண்டு அறியாதன கண்ணில் காணா
      நீல மா கடல் நெட்டிடை அன்றியும்
      காலை ஞாயிறு கதிர் விரித்து முளைப்ப
      உவவன மருங்கினில் ஓர் இடம்கொல் இது
      சுதமதி ஒளித்தாய் துயரம் செய்தனை 08-020
      நனவோ கனவோ என்பதை அறியேன்
      மனம் நடுக்குறூஉம் மாற்றம் தாராய்
      வல் இருள் கழிந்தது மாதவி மயங்கும்
      மெல் வளை வாராய் விட்டு அகன்றனையோ
      விஞ்சையின் தோன்றிய விளங்கு இழை மடவாள்
      வஞ்சம் செய்தனள்கொல்லோ அறியேன்
      ஒரு தனி அஞ்சுவென் திருவே வா என
      திரை தவழ் பறவையும் விரி சிறை
      எழுந்து வீழ் சில்லையும் ஒடுங்கு சிறை முழுவலும்
      அன்ன சேவல் அரசன் ஆக 08-030
      பல் நிற புள் இனம் பரந்து ஒருங்கு ஈண்டி
      பாசறை மன்னர் பாடி போல
      வீசு நீர பரப்பின் எதிர் இருக்கும்
      துறையும் துறை சூழ் நெடு மணல் குன்றமும்
      யாங்கணும் திரிவோள் பாங்கு இனம் காணாள்
      குரல் தலை கூந்தல் குலைந்து பின் வீழ
      அரற்றினள் கூஉய் அழுதனள் ஏங்கி
      வீழ் துயர் எய்திய விழு கிளவியின்
      தாழ் துயர் உறுவோள் தந்தையை உள்ளி
      எம் இதில் படுத்தும் வெவ் வினை உருப்ப 08-040
      கோல் தொடி மாதரொடு வேற்று நாடு அடைந்து
      வை வாள் உழந்த மணி பூண் அகலத்து
      ஐயாவோ என்று அழுவோள் முன்னர்
      விரிந்து இலங்கு அவிர் ஒளி சிறந்து கதிர் பரப்பி
      உரை பெறு மும் முழம் நிலமிசை ஓங்கி
      திசைதொறும் ஒன்பான் முழ நிலம் அகன்று
      விதி மாண் நாடியின் வட்டம் குயின்று
      பதும சதுரம் மீமிசை விளங்கி
      அறவோற்கு அமைந்த ஆசனம் என்றே
      நறு மலர் அல்லது பிற மரம் சொரியாது 08-050
      பறவையும் முதிர் சிறை பாங்கு சென்று அதிராது
      தேவர் கோன் இட்ட மா மணி பீடிகை
      பிறப்பு விளங்கு அவிர் ஒளி அறத்தகை ஆசனம்
      கீழ் நில மருங்கின் நாக நாடு ஆளும்
      இருவர் மன்னவர் ஒரு வழி தோன்றி
      எமது ஈது என்றே எடுக்கல் ஆற்றார்
      தம பெரும் பற்று நீங்கலும் நீங்கார்
      செங் கண் சிவந்து நெஞ்சு புகையுயிர்த்து
      தம் பெருஞ் சேனையொடு வெஞ் சமம் புரி நாள்
      இருஞ் செரு ஒழிமின் எமது ஈது என்றே 08-060
      பெரு தவ முனிவன் இருந்து அறம் உரைக்கும்
      பொரு அறு சிறப்பின் புரையோர் ஏத்தும்
      தரும பீடிகை தோன்றியது ஆங்கு என் 08-063
      பீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை
      ஆங்கு அது கண்ட ஆய் இழை அறியாள்
      காந்தள் அம் செங் கை தலை மேல் குவிந்தன
      தலைமேல் குவிந்த கையள் செங் கண்
      முலை மேல் கலுழ்ந்து மு திரள் உகுத்து அதின்
      இடமுறை மும் முறை வலமுறை வாரா
      கொடி மின் முகிலொடு நிலம் சேர்ந்தென்ன
      இறு நுசுப்பு அலச வெறு நிலம் சேர்ந்து ஆங்கு
      எழுவோள் பிறப்பு வழு இன்று உணர்ந்து
      தொழு தகை மாதவ துணி பொருள் உணர்ந்தோய்
      காயங்கரையில் நீ உரைத்ததை எல்லாம் 09-010
      வாயே ஆகுதல் மயக்கு அற உணர்ந்தேன்
      காந்தாரம் என்னும் கழி பெரு நாட்டு
      பூருவ தேயம் பொறை கெட வாழும்
      அத்திபதி எனும் அரசு ஆள் வேந்தன்
      மைத்துனன் ஆகிய பிரமதருமன்
      ஆங்கு அவன் தன்பால் அணைந்து அறன் உரைப்போய்
      தீம் கனி நாவல் ஓங்கும் இ தீவிடை
      இன்று ஏழ் நாளில் இரு நில மாக்கள்
      நின்று நடுக்கு எய்த நீள் நில வேந்தே
      பூமி நடுக்குறூஉம் போழ்தத்து இ நகர் 09-020
      நாக நல் நாட்டு நானூறு யோசனை
      வியன் பாதலத்து வீழ்ந்து கேடு எய்தும்
      இதன்பால் ஒழிக என இரு நில வேந்தனும்
      மா பெரும் பேர் ஊர் மக்கட்கு எல்லாம்
      ஆவும் மாவும் கொண்டு கழிக என்றே
      பறையின் சாற்றி நிறை அரு தானையோடு
      இடவயம் என்னும் இரும் பதி நீங்கி
      வட வயின் அவந்தி மா நகர செல்வோன்
      காயங்கரை எனும் பேர் யாற்று அடைகரை
      சேய் உயர் பூம்பொழில் பாடி யெய்து இருப்ப 09-030
      எம் கோன் நீ ஆங்கு உரைத்த அ நாளிடை
      தங்காது அ நகர் வீழ்ந்து கேடு எய்தலும்
      மருள் அறு புலவ நின் மலர் அடி அதனை
      அரசொடு மக்கள் எல்லாம் ஈண்டி
      சூழ்ந்தனர் வணங்கி தாழ்ந்து பல ஏத்திய
      அருளறம் பூண்ட ஒரு பேர் இன்பத்து
      உலகு துயர் கெடுப்ப அருளிய அ நாள்
      அரவ கடல் ஒலி அசோதரம் ஆளும்
      இரவிவன்மன் ஒரு பெருந்தேவி
      அலத்தக சீறடி அமுதபதி வயிற்று 09-040
      இலக்குமி என்னும் பெயர் பெற்று பிறந்தேன்
      அத்திபதி எனும் அரசன் பெருந்தேவி
      சித்திபுரம் ஆளும் சீதரன் திருமகள்
      நீலபதி எனும் நேர் இழை வயிற்றில்
      காலை ஞாயிற்று கதிர் போல் தோன்றிய
      இராகுலன் தனக்கு புக்கேன் அவனொடு
      பராவரும் மரபின் நின் பாதம் பணிதலும்
      எட்டு இரு நாளில் இவ் இராகுலன் தன்னை
      திட்டிவிடம் உணும் செல் உயிர் போனால்
      தீ அழல் அவனொடு சேயிழை மூழ்குவை 09-050
      ஏது நிகழ்ச்சி ஈங்கு இன்று ஆதலின்
      கவேர கன்னி பெயரொடு விளங்கிய
      தவா களி மூதூர சென்று பிறப்பு எய்துதி
      அணி இழை நினக்கு ஓர் அரு துயர் வரு நாள்
      மணிமேகலா தெய்வம் வந்து தோன்றி
      அன்று அ பதியில் ஆர் இருள் எடுத்து
      தென் திசை மருங்கில் ஓர் தீவிடை வைத்தலும்
      வேக வெ திறல் நாக நாட்டு அரசர்
      சின மாசு ஒழித்து மன தீர்த்து ஆங்கு
      அற செவி திறந்து மற அடைத்து 09-060
      பிறவி பிணி மருத்துவன் இருந்து அறம் உரைக்கும்
      திருந்து ஒளி ஆசனம் சென்று கைதொழுதி
      அன்றை பகலே உன் பிறப்பு உணர்ந்து ஈங்கு
      இன்று யான் உரைத்த உரை தௌிவாய் என
      சா துயர் கேட்டு தளர்ந்து உகு மனத்தேன்
      காதலன் பிறப்பு காட்டாயோ என
      ஆங்கு உனை கொணர்ந்த அரும் பெரு தெய்வம்
      பாங்கில் தோன்றி பைந்தொடி கணவனை
      ஈங்கு இவன் என்னும் என்று எடுத்து ஓதினை
      ஆங்கு அ தெய்வதம் வாராதோ என
      ஏங்கினள் அழூஉம் இளங்கொடி தான் என் 09-071
      10. மந்திரம் கொடுத்த காதை
      அறவோன் ஆசனத்து ஆய் இழை அறிந்த
      பிறவியள் ஆயினள் பெற்றியும் ஐது என
      விரை மலர் ஏந்தி விசும்பூடு இழிந்து
      பொரு அறு பூங் கொடி பூமியில் பொலிந்தென
      வந்து தோன்றிய மணிமேகலா தெய்வம்
      முந்தை பிறப்பு எய்தி நின்றோள் கேட்ப
      உயிர்கள் எல்லாம் உணர்வு பாழாகி
      பொருள் வழங்கு செவி துளை தூர்ந்து அறிவு இழந்த
      வறம் தலை உலகத்து அறம் பாடு சிறக்க
      சுடர் வழக்கு அற்று தடுமாறுகாலை ஓர் 10-010
      இள வள ஞாயிறு தோன்றியதென்ன
      நீயோ தோன்றினை நின் அடி பணிந்தேன்
      நீயே ஆகி நிற்கு அமைந்த இவ் ஆசனம்
      நாமிசை வைத்தேன் தலைமிசை கொண்டேன்
      பூமிசை ஏற்றினேன் புலம்பு அறுக என்றே
      வலம் கொண்டு ஆசனம் வணங்குவோள் முன்னர
      பொலம் கொடி நிலமிசை சேர்ந்தென பொருந்தி
      உன் திருவருளால் என் பிறப்பு உணர்ந்தேன்
      என் பெருங் கணவன் யாங்கு உளன் என்றலும்
      இலக்குமி கேளாய் இராகுலன் தன்னொடு 10-020
      புலத்தகை எய்தினை பூம்பொழில் அகவயின்
      இடங்கழி காமமொடு அடங்கானாய் அவன்
      மடந்தை மெல் இயல் மலர் அடி வணங்குழி
      சாதுசக்கரன் மீவிசும்பு திரிவோன்
      தெரு மரல் ஒழித்து ஆங்கு இரத்தின தீவத்து
      தரும சக்கரம் உருட்டினன் வருவோன்
      வெங்கதிர் அமயத்து வியன் பொழில் அகவயின்
      வந்து தோன்றலும் மயங்கினை கலங்கி
      மெல் இயல் கண்டனை மெ நடுக்குற்றனை
      நல்கூர் நுசுப்பினை நாணினை இறைஞ்ச 10-030
      இராகுலன் வந்தோன் யார் என வெகுளலும்
      விரா மலர கூந்தல் அவன் வாய் புதையா
      வானூடு இழிந்தோன் மலர் அடி வணங்காது
      நா நல்கூர்ந்தனை என்று அவன் தன்னொடு
      பகை அறு பாத்தியன் பாதம் பணிந்து ஆங்கு
      அமர கேள் நின் தமர் அலம் ஆயினும்
      அம் தீம் தண்ணீர் அமுதொடு கொணர்கேம்
      உண்டி யாம் உன் குறிப்பினம் என்றலும்
      எம் அனை உண்கேன் ஈங்கு கொணர்க என
      அ நாள் அவன் உண்டருளிய அவ் அறம் 1 10-040
      நின்னாங்கு ஒழியாது நின் பிறப்பு அறுத்திடும்
      உவவன மருங்கில் உன்பால் தோன்றிய
      உதயகுமரன் அவன் உன் இராகுலன்
      ஆங்கு அவன் அன்றியும் அவன்பால் உள்ளம்
      நீங்கா தன்மை நினக்கும் உண்டு ஆகலின்
      கந்தசாலியின் கழி பெரு வித்து ஓர்
      வெந்து உகு வெங் களர் வீழ்வது போன்ம் என
      அறத்தின் வித்து ஆங்கு ஆகிய உன்னை ஓர்
      திறப்படற்கு ஏதுவா சேயிழை செய்தேன்
      இன்னும் கேளாய் இலக்குமி நீ நின் 10-050
      தவ்வையர் ஆவோர் தாரையும் வீரையும்
      ஆங்கு அவர் தம்மை அங்க நாட்டு அகவயின்
      கச்சயம் ஆளும் கழல் கால் வேந்தன்
      துச்சயன் என்போன் ஒருவன் கொண்டனன்
      அவருடன் ஆங்கு அவன் அகல் மலை ஆடி
      கங்கை பேர் யாற்று அடைகரை இருந்துழி
      மற வணம் நீத்த மாசு அறு கேள்வி
      அறவணன் ஆங்கு அவன்பால் சென்றோனை
      ஈங்கு வந்தீர் யார் என்று எழுந்து அவன்
      பாங்கு உளி மாதவன் பாதம் பணிதலும் 10-060
      ஆதி முதல்வன் அற ஆழி ஆள்வோன்
      மா துயர் எவ்வம் மக்களை நீக்கி
      விலங்கும் தம்முள் வெரூஉம் பகை நீக்கி
      உடங்கு உயிர் வாழ்க என்று உள்ளம் கசிந்து உக
      தொன்று காலத்து நின்று அறம் உரைத்த
      குன்ற மருங்கில் குற்றம் கெடுக்கும்
      பாத பங்கயம் கிடத்தலின் ஈங்கு இது
      பாதபங்கய மலை எனும் பெயர்த்து ஆயது
      தொழுது வலம் கொள்ள வந்தேன் ஈங்கு இ
      பழுது இல் காட்சியீர் நீயிரும் தொழும் என 10-070
      அன்று அவன் உரைத்த அவ் உரை பிழையாது
      சென்று கைதொழுது சிறப்பு செய்தலின்
      மாதவி ஆகியும் சுதமதி
      கோதை அம் சாயல் நின்னொடு கூடினர்
      அறிபிறப்பு உற்றனை அறம் பாடு அறிந்தனை
      பிற அறம் உரைப்போர் பெற்றியும் கேட்குவை
      பல் வேறு ச படிற்று உரை எல்லாம்
      அல்லி அம் கோதை கேட்குறும் அ நாள்
      இளையள் வளையோள் என்று உனக்கு யாவரும்
      விளை பொருள் உரையார் வேற்று உரு எய்தவும் 10-080
      அந்தரம் திரியவும் ஆக்கும் இவ் அரு திறல்
      மந்திரம் கொள்க என வாய்மையின் ஓதி
      மதி நாள் முற்றிய மங்கல திருநாள்
      பொது அறிவு இகழ்ந்து புலம் உறு மாதவன்
      திருவறம் எய்துதல் சித்தம் என்று உணர் நீ
      மன் பெரும் பீடிகை வணங்கினை ஏத்தி
      நின் பதி புகுவாய் என்று எழுந்து ஓங்கி
      மறந்ததும் உண்டு என மறித்து ஆங்கு இழிந்து
      சிறந்த கொள்கை சேயிழை கேளாய்
      மக்கள் யாக்கை உணவின் பிண்டம் 10-090
      இ பெரு மந்திரம் இரும் பசி அறுக்கும் என்று
      ஆங்கு அது கொடுத்து அந்தரம் எழுந்து
      நீங்கியது ஆங்கு நெடு தெய்வம் தான் என் 10-093
      11. பாத்திரம் பெற்ற காதை
      மணிமேகலா தெய்வம் நீங்கிய பின்னர்
      மணிபல்லவத்திடை மணிமேகலை தான்
      வெண் மணல் குன்றமும் விரி பூஞ்சோலையும்
      தண் மலர்ப்பொய்கையும் தாழ்ந்தனள் நோக்கி
      காவதம் திரிய கடவுள் கோலத்து
      தீவதிலகை செவ்வனம் தோன்றி
      கலம் கவிழ் மகளிரின் வந்து ஈங்கு எய்திய
      இலங்கு தொடி நல்லாய் யார் நீ என்றலும்
      எ பிறப்பு அகத்துள் யார் நீ என்றது
      பொன் கொடி அன்னாய் பொருந்தி கேளாய் 11-010
      போய பிறவியில் பூமி அம் கிழவன்
      இராகுலன் மனை யான் இலக்குமி என் பேர்
      ஆய பிறவியில் ஆடல் அம் கணிகை
      மாதவி ஈன்ற மணிமேகலை யான்
      என் பெயர தெய்வம் ஈங்கு எனை கொணர இம்
      மன் பெரும் பீடிகை என் பிறப்பு உணர்ந்தேன்
      ஈங்கு என் வரவு இது எய்திய பயன்
      பூங் கொடி அன்னாய் யார் நீ என்றலும்
      ஆய் இழை தன் பிறப்பு அறிந்தமை அறிந்த
      தீவதிலகை செவ்வனம் உரைக்கும் 11-020
      ஈங்கு இதன் அயல் அகத்து இரத்தின தீவத்து
      ஓங்கு உயர் சமந்தத்து உச்சி மீமிசை
      அறவியங் கிழவோன் அடி இணை ஆகிய
      பிறவி என்னும் பெருங் கடல் விடூஉம்
      அறவி நாவாய் ஆங்கு உளது ஆதலின்
      தொழுது வலம் கொண்டு வந்தேன் ஈங்கு
      பழுது இல் காட்சி இ நல் மணி பீடிகை
      தேவர் கோன் ஏவலின் காவல் பூண்டேன்
      தீவதிலகை என் பெயர் இது கேள்
      தரும தலைவன் தலைமையின் உரைத்த 11-030
      பெருமைசால் நல் அறம் பிறழா நோன்பினர்
      கண்டு கைதொழுவோர் கண்டதன் பின்னர்
      பண்டை பிறவியர் ஆகுவர் பைந்தொடி
      அரியர் உலகத்து ஆங்கு அவர்க்கு அறமொழி
      உரியது உலகத்து ஒருதலையாக
      ஆங்கனம் ஆகிய அணி இழை இது கேள்
      ஈங்கு இ பெரும் பெயர பீடிகை முன்னது
      மா மலர குவளையும் நெய்தலும் மயங்கிய
      கோமுகி என்னும் கொழு நீர் இலஞ்சி
      இருது இளவேனிலில் எரி கதிர் இடபத்து 11-040
      ஒருபதின் மேலும் ஒருமூன்று சென்ற பின்
      மீனத்து இடைநிலை அகவையின்
      போதி தலைவனொடு பொருந்தி தோன்றும்
      ஆபுத்திரன் கை அமுதசுரபி எனும்
      மா பெரும் பாத்திரம் மடக்கொடி கேளாய்
      அ நாள் இ அ பொழுது இ
      நின்னாங்கு வருவது போலும் நேர் இழை
      ஆங்கு அதில் பெய்த ஆருயிர்மருந்து
      வாங்குநர் கைஅகம் வருத்துதல் அல்லது
      தான் தொலைவு இல்லா தகைமையது ஆகும் 11-050
      நறு மலர கோதை நின் ஊர் ஆங்கண்
      அறவணன் தன்பால் கேட்குவை இதன் திறம்
      என்று அவள் உரைத்தலும் இளங்கொடி விரும்பி
      மன் பெரும் பீடிகை தொழுதனள் வணங்கி
      தீவதிலகை தன்னொடும் கூடி
      கோமுகி வலம் செய்து கொள்கையின் நிற்றலும்
      எழுந்து வலம் புரிந்த இளங்கொடி செங் கையில்
      தொழும்தகை மரபின் பாத்திரம் புகுதலும்
      பாத்திரம் பெற்ற பை தொடி மடவாள்
      மாத்திரை இன்றி மனம் மகிழ்வு எய்தி 11-060
      மாரனை வெல்லும் வீர நின் அடி
      தீ நெறி கடும் பகை கடிந்தோய் நின் அடி
      பிறர்க்கு அறம் முயலும் பெரியோய் நின் அடி
      துறக்கம் வேண்டா தொல்லோய் நின் அடி
      எண் பிறக்கு ஒழிய இறந்தோய் நின் அடி
      கண் பிறர்க்கு அளிக்கும் கண்ணோய் நின் அடி
      தீ மொழிக்கு அடைத்த செவியோய் நின் அடி
      வாய்மொழி சிறந்த நாவோய் நின் அடி
      நரகர் துயர் கெட நடப்போய் நின் அடி
      உரகர் துயரம் ஒழிப்போய் நின் அடி 11-070
      வணங்குதல் அல்லது வாழ்த்தல் என் நாவிற்கு
      அடங்காது என்ற ஆய் இழை முன்னர்
      போதி நீழல் பொருந்தி தோன்றும்
      நாதன் பாதம் நவை கெட ஏத்தி
      தீவதிலகை சேயிழைக்கு உரைக்கும்
      குடி பிறப்பு அழிக்கும் விழுப்பம் கொல்லும்
      பிடித்த கல்வி பெரும் புணை விடூஉம்
      நாண் அணி களையும் மாண் எழில் சிதைக்கும்
      பூண் முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்
      பசி பிணி என்னும் பாவி அது தீர்த்தோர் 11-080
      இசை சொல் அளவைக்கு என் நா நிமிராது
      புல் மரம் புகை புகை அழல் பொங்கி
      மன் உயிர் மடிய மழைவளம் கரத்தலின்
      அரசு தலைநீங்கிய அரு மறை அந்தணன்
      இரு நில மருங்கின் யாங்கணும் திரிவோன்
      அரும் பசி களைய ஆற்றுவது காணான்
      திருந்தா நாய் ஊன் தின்னுதல் உறுவோன்
      இந்திர சிறப்பு செய்வோன் முன்னர்
      வந்து தோன்றிய வானவர் பெருந்தகை
      மழை வளம் தருதலின் மன் உயிர் ஓங்கி 11-090
      பிழையா விளையுளும் பெருகியது அன்றோ
      ஆற்றுநர்க்கு அளிப்போர் அறம் விலைபகர்வோர்
      ஆற்றா மாக்கள் அரும் பசி களைவோர்
      மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை
      மண் திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்
      உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
      உயிர கொடை பூண்ட உரவோய் ஆகி
      கயக்கு அறு நல் அறம் கண்டனை என்றலும்
      விட்ட பிறப்பில் யான் விரும்பிய காதலன்
      திட்டிவிடம் உண செல் உயிர் போவுழி 11-100
      உயிரொடு வேவேன் உணர்வு ஒழி காலத்து
      வெயில் விளங்கு அமயத்து விளங்கி தோன்றிய
      சாதுசக்கரன் தனை யான் ஊட்டிய
      காலம் போல்வதோர் கனா மயக்கு உற்றேன்
      ஆங்கு அதன் பயனே ஆர் உயிர் மருந்து ஆய்
      ஈங்கு இ பாத்திரம் என் கை புகுந்தது
      நாவலொடு பெயரிய மா பெரு தீவத்து
      வித்தி நல் அறம் விளைந்த அதன் பயன்
      துய்ப்போர் தம் மனை துணி சிதர் உடுத்து
      வயிறு காய் பெரும் பசி அலைத்தற்கு இரங்கி 11-110
      வெயில் என முனியாது புயல் மடியாது
      புறங்கடை நின்று புன்கண் கூர்ந்து முன்
      அறங்கடை நில்லாது அயர்வோர் பலரால்
      ஈன்ற குழவி முகம் கண்டு இரங்கி
      தீம் பால் சுரப்போள் தன் முலை போன்றே
      நெஞ்சு வழிப்படூஉம் விஞ்சை பாத்திரத்து
      அகன் சுரை பெய்த ஆருயிர்மருந்து அவர்
      முகம் கண்டு சுரத்தல் காண்டல் வேட்கையேன் என
      மறந்தேன் அதன் திறம் நீ எடுத்து உரைத்தனை
      அறம் கரியாக அருள் சுரந்து ஊட்டும் 11-120
      சிறந்தோர்க்கு அல்லது செவ்வனம் சுரவாது
      ஆங்கனம் ஆயினை அதன் பயன் அறிந்தனை
      ஈங்கு நின்று எழுவாய் என்று அவள் உரைப்ப
      தீவதிலகை தன் அடி வணங்கி
      மா பெரும் பாத்திரம் மலர கையின் ஏந்தி
      கோமகன் பீடிகை தொழுது வலம் கொண்டு
      வானூடு எழுந்து மணிமேகலை தான்
      வழு அறு தெய்வம் வாய்மையின் உரைத்த
      எழு நாள் வந்தது என் மகள் வாராள்
      வழுவாய் உண்டு என மயங்குவோள் முன்னர் 11-130
      வந்து தோன்றி அவர் மயக்கம் களைந்து
      அந்தில் அவர்க்கு ஓர் அற்புதம் கூறும்
      இரவிவன்மன் ஒரு பெரு மகளே
      துரக தானை துச்சயன் தேவி
      அமுதபதி வயிற்று அரிதின் தோன்றி
      தவ்வையர் ஆகிய தாரையும் வீரையும்
      அவ்வையர் ஆயினீர் நும் அடி தொழுதேன்
      வாய்வதாக மானிட யாக்கையில்
      தீவினை அறுக்கும் செய் தவம் நுமக்கு ஈங்கு
      அறவண அடிகள் தம்பால் பெறுமின் 11-140
      செறி தொடி நல்லீர் உம் பிறப்பு ஈங்கு இஃது
      ஆபுத்திரன் கை அமுதசுரபி எனும்
      மா பெரும் பாத்திரம் நீயிரும் தொழும் என
      தொழுதனர் ஏத்திய தூமொழியாரொடும்
      பழுது அறு மாதவன் பாதம் படர்கேம்
      எழுக என எழுந்தனள் இளங்கொடி தான் என் 11-146
      12. அறவணர தொழுத கதை
      ஆங்கு அவர் தம்முடன் அறவண அடிகள்
      யாங்கு உளர் என்றே இளங்கொடி வினாஅய்
      நரை முதிர் யாக்கை நடுங்கா நாவின்
      உரை மூதாளன் உறைவிடம் குறுகி
      மைம் மலர குழலி மாதவன் திருந்து அடி
      மும் முறை வணங்கி முறையுளி ஏத்தி
      புது மலர சோலை பொருந்திய வண்ணமும்
      உதயகுமரன் ஆங்கு உற்று உரைசெய்ததும்
      மணிமேகலா தெய்வம் மணிபல்லவத்திடை
      அணி இழை தன்னை அகற்றிய வண்ணமும் 12-010
      ஆங்கு அ தீவகத்து அறவோன் ஆசனம்
      நீங்கிய பிறப்பு நேர் இழைக்கு அளித்ததும்
      அளித்த பிறப்பின் ஆகிய கணவனை
      களி கயல் நெடுங் கண் கடவுளின் பெற்றதும்
      தவ்வையர் ஆகிய தாரையும் வீரையும்
      வெவ் வினை உருப்ப விளிந்து கேடு எய்தி
      மாதவி ஆகியும் சுதமதி
      கோதை அம் சாயல் நின்னொடும் கூடினர்
      ஆங்கு அவர் தம் திறம் அறவணன் தன்பால்
      பூங் கொடி நல்லாய் கேள் என்று உரைத்ததும் 12-020
      உரைத்த பூங்கொடி ஒரு மூன்று மந்திரம்
      தனக்கு உரைசெய்து தான் ஏகிய வண்ணமும்
      தெய்வம் போய பின் தீவதிலகையும்
      ஐயென தோன்றி அருளொடும் அடைந்ததும்
      அடைந்த தெய்வம் ஆபுத்திரன் கை
      வணங்குறு பாத்திரம் வாய்மையின் அளித்ததும்
      ஆபுத்திரன் திறம் அறவணன் தன்பால்
      கேள் என்று உரைத்து கிளர் ஒளி மா தெய்வம்
      போக என மடந்தை போந்த வண்ணமும்
      மாதவன் தன்னை வணங்கினள் உரைத்தலும் 12-030
      மணிமேகலை உரை மாதவன் கேட்டு
      தணியா இன்பம் தலைத்தலை மேல் வர
      பொன் தொடி மாதர் நல் திறம் சிறக்க
      உற்று உணர்வாய் நீ இவர் திறம் உரைக்கேன்
      நின் நெடு தெய்வம் நினக்கு எடுத்து உரைத்த
      அ நாள் அன்றியும் அரு வினை கழூஉம்
      ஆதி முதல்வன் அடி இணை ஆகிய
      பாதபங்கய மலை பரவி செல்வேன்
      கச்சயம் ஆளும் கழல் கால் வேந்தன்
      துச்சயன் தன்னை ஓர் சூழ் பொழில் கண்டேன் 12-040
      மா பெரு தானை மன்ன நின்னொடும்
      தேவியர் தமக்கும் தீது இன்றோ என
      அழிதகவு உள்ளமொடு அரற்றினன் ஆகி
      ஒளி இழை மாதர்க்கு உற்றதை உரைப்போன்
      புது கோள் யானைமுன் போற்றாது சென்று
      மது களி மயக்கத்து வீரை மாய்ந்ததூஉம்
      ஆங்கு அது கேட்டு ஓர் அரமியம் ஏறி
      தாங்காது வீழ்ந்து தாரை சாவுற்றதூஉம்
      கழி பெரு துன்பம் காவலன் உரைப்ப
      பழ வினை பயன் நீ பரியல் என்று எழுந்தேன் 12-050
      ஆடும் கூத்தியர் அணியே போல
      வேற்று ஓர் அணியொடு வந்தீரோ என
      மணிமேகலைமுன் மடக்கொடியார் திறம்
      துணி பொருள் மாதவன் சொல்லியும் அமையான்
      பிறவியும் அறவியும் பெற்றியின் உணர்ந்த
      நறு மலர கோதாய் நல்கினை கேளாய்
      தரும தலைவன் தலைமையின் உரைத்த
      பெருமைசால் நல் அறம் பெருகாதாகி
      இறுதி இல் நல் கதி செல்லும் பெரு வழி
      அறுகையும் நெருஞ்சியும் அடர்ந்து கண் அடைத்தாங்கு 12-060
      செயிர் வழங்கு தீ கதி திறந்து கல்லென்று
      உயிர் வழங்கு பெரு நெறி ஒரு திறம் பட்டது
      தண் பனி விழுங்கிய செங்கதிர் மண்டிலம்
      உண்டு என உணர்தல் அல்லது யாவதும்
      கண்டு இனிது விளங்கா காட்சி போன்றது
      சலாகை நுழைந்த மணி துளை அகவையின்
      உலா நீர பெருங் கடல் ஓடாது ஆயினும்
      ஆங்கு அ துளை வழி உகு நீர் போல
      ஈங்கு நல் அறம் எய்தலும் உண்டு என
      சொல்லலும் உண்டு யான் சொல்லுதல் தேற்றார் 12-070
      மல்லல் மா ஞாலத்து மக்களே ஆதலின்
      சக்கரவாளத்து தேவர் எல்லாம்
      தொக்கு ஒருங்கு ஈண்டி துடித லோகத்து
      மிக்கோன் பாதம் விழுந்தனர் இரப்ப
      இருள் பரந்து கிடந்த மலர் தலை உலகத்து
      விரி கதிர செல்வன் தோன்றினன் என்ன
      ஈர் எண்ணூற்றோடு எட்டு ஆண்டில்
      பேர் அறிவாளன் தோன்றும் அதன் பிற்பாடு
      பெருங் குள மருங்கில் சுருங்கை சிறு வழி
      இரும் பெரு நீத்தம் புகுவது போல 12-080
      அளவா சிறு செவி அளப்பு அரு நல் அறம்
      உளம் மலி உவகையோடு உயிர் கொள புகூஉம்
      கதிரோன் தோன்றும் காலை ஆங்கு அவன்
      அவிர் ஒளி காட்டும் மணியே போன்று
      மைத்து இருள் கூர்ந்த மன மாசு தீர
      புத்த ஞாயிறு தோன்றும்காலை
      திங்களும் ஞாயிறும் தீங்கு உறா விளங்க
      தங்கா நாள் மீன் தகைமையின் நடக்கும்
      வானம் பொய்யாது மா நிலம் வளம்படும்
      ஊன் உடை உயிர்கள் உறு துயர் காணா 12-090
      வளி வலம் கொட்கும் மாதிரம் வளம்படும்
      நளி இரு முந்நீர் நலம் பல தரூஉம்
      கறவை கன்று ஆர்த்தி கலம் நிறை பொழியும்
      பறவை பயன் துய்த்து உறைபதி நீங்கா
      விலங்கும் மக்களும் வெரூஉம் பகை நீங்கும்
      கலங்கு அஞர் நரகரும் பேயும் கைவிடும்
      கூனும் குறளும் ஊமும் செவிடும்
      மாவும் மருளும் மன் உயிர் பெறாஅ
      அ நாள் பிறந்து அவன் அருளறம் கேட்டோர்
      இன்னா பிறவி இகந்தோர் ஆதலின் 12-100
      போதி மூலம் பொருந்திய சிறப்பின்
      நாதன் பாதம் நவை கெட ஏத்துதல்
      பிறவி தோறும் மறவேன் மடக்கொடி
      மாதர் நின்னால் வருவன இவ் ஊர்
      ஏது நிகழ்ச்சி யாவும் பல உள
      ஆங்கு அவை நிகழ்ந்த பின்னர் அல்லது
      பூங் கொடி மாதர் பொருளுரை பொருந்தாய்
      ஆதி முதல்வன் அரு துயர் கெடுக்கும்
      பாதபங்கய மலை பரசினர் ஆதலின்
      ஈங்கு இவர் இருவரும் இளங்கொடி நின்னோடு 12-110
      ஓங்கு உயர் போதி உரவோன் திருந்து அடி
      தொழுது வலம் கொண்டு தொடர் வினை நீங்கி
      பழுது இல் நல் நெறி படர்குவர் காணாய்
      ஆர் உயிர் மருந்து ஆம் அமுதசுரபி எனும்
      மா பெரும் பாத்திரம் மடக்கொடி பெற்றனை
      மக்கள் தேவர் என இரு சார்க்கும்
      ஒத்த முடிவின் ஓர் அறம் உரைக்கேன்
      பசி பிணி தீர்த்தல் என்றே அவரும்
      தவ பெரு நல் அறம் சாற்றினர் ஆதலின்
      மடுத்த தீ கொளிய மன் உயிர பசி கெட
      எடுத்தனள் பாத்திரம் இளங்கொடி தான் என் 12-121
      13. ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை
      மா பெரும் பாத்திரம் மடக்கொடிக்கு அருளிய
      ஆபுத்திரன் திறம் அணி இழை கேளாய்
      வாரணாசி ஓர் மறை ஓம்பாளன்
      ஆரண உவாத்தி அபஞ்சிகன் என்போன்
      பார்ப்பனி சாலி காப்பு கடைகழிந்து
      கொண்டோற் பிழைத்த தண்டம் அஞ்சி
      தென் திசை குமரி ஆடி வருவோள்
      சூல் முதிர் பருவத்து துஞ்சு இருள் இயவிடை
      ஈன்ற குழவிக்கு இரங்காள்ஆகி
      தோன்றா துடவையின் இட்டனள் நீங்க 13-010
      தாய் இல் தூவா குழவி துயர் கேட்டு ஓர்
      ஆ வந்து அணைந்து ஆங்கு அதன் துயர் தீர
      நாவான் நக்கி நன் பால் ஊட்டி
      போகாது எழு நாள் புறங்காத்து ஓம்ப
      வயனங்கோட்டில் ஓர் மறை ஓம்பாளன்
      இயவிடை வருவோன் இளம்பூதி என்போன்
      குழவி ஏங்கிய கூ குரல் கேட்டு
      கழுமிய துன்பமொடு கண்ணீர் உகுத்து ஆங்கு
      ஆ மகன் அல்லன் என் என்றே
      காதலி தன்னொடு கைதொழுது எடுத்து 13-020
      நம்பி பிறந்தான் பொலிக நம் கிளை என
      தம் பதி பெயர்ந்து தமரொடும் கூடி
      மார்பிடை முந்நூல் வனையாமுன்னர்
      நாவிடை நல் நூல் நன்கனம் நவிற்றி
      ஓத்து உடை அந்தணர்க்கு ஒப்பவை எல்லாம்
      நா தொலைவு இன்றி நன்கனம் அறிந்த பின்
      அ பதி தன்னுள் ஓர் அந்தணன் மனைவயின்
      புக்கோன் ஆங்கு புலை சூழ் வேள்வியில்
      குரூஉ தொடை மாலை கோட்டிடை சுற்றி
      வெரூஉ பகை அஞ்சி வெய்து உயிர்த்து புலம்பி 13-030
      கொலை நவில் வேட்டுவர் கொடுமரம் அஞ்சி
      வலையிடை பட்ட மானே போன்று ஆங்கு
      அஞ்சி நின்று அழைக்கும் ஆ துயர் கண்டு
      நெஞ்சு நடுக்குற்று நெடுங் கணீர் உகுத்து
      கள்ள வினையின் கடு துயர் பாழ்பட
      நள் இருள் கொண்டு நடக்குவன் என்னும்
      உள்ளம் கரந்து ஆங்கு ஒரு புடை ஒதுங்கி
      அல்லிடை ஆ கொண்டு அ பதி அகன்றோன்
      கல் அதர் அத்தம் கடவாநின்றுழி
      அடர குறு மாக்களொடு அந்தணர் எல்லாம் 13-040
      கடத்திடை ஆவொடு கையகப்படுத்தி
      ஆ கொண்டு இந்த ஆர் இடை கழிய
      நீ மகன் அல்லாய் நிகழ்ந்ததை உரையாய்
      புலை சிறு மகனே போக்கப்படுதி என்று
      அலை கோல் அதனால் அறைந்தனர் கேட்ப
      ஆட்டி நின்று அலைக்கும் அந்தணர் உவாத்தியை
      கோட்டினில் குத்தி குடர் புய்த்துறுத்து
      காட்டிடை நல் ஆ கதழ்ந்து கிளர்ந்து ஓட
      ஆபுத்திரன் தான் ஆங்கு அவர்க்கு உரைப்போன்
      நோவன செய்யன்மின் நொடிவன கேண்மின் 13-050
      விடு நில மருங்கில் படு புல் ஆர்ந்து
      நெடு நில மருங்கின் மக்கட்கு எல்லாம்
      பிறந்த நாள் தொட்டும் சிறந்த தன் தீம் பால்
      அறம் தரு நெஞ்சோடு அருள் சுரந்து ஊட்டும்
      இதனொடு வந்த செற்றம் என்னை
      முது மறை அந்தணிர் முன்னியது உரைமோ
      பொன் அணி நேமி வலம் கொள் சக்கர கை
      மன் உயிர் முதல்வன் மகன் எமக்கு அருளிய
      அரு மறை நல் நூல் அறியாது இகழ்ந்தனை
      தெருமரல் உள்ளத்து சிறியை நீ அவ் 13-060
      ஆ மகன் ஆதற்கு ஒத்தனை அறியாய்
      நீ மகன் அல்லாய் கேள் என இகழ்தலும்
      ஆன் மகன் அசலன் மான் சிருங்கி
      புலி மகன் விரிஞ்சி புரையோர் போற்றும்
      நரி மகன் அல்லனோ கேசகம்பளன்
      ஈங்கு இவர் நும் குலத்து இருடி கணங்கள் என்று
      ஓங்கு உயர் பெருஞ் சிறப்பு உரைத்தலும் உண்டால்
      ஆவொடு வந்த அழி குலம் உண்டோ
      நான்மறை மாக்காள் நல் நூல் அகத்து என
      ஆங்கு அவர் தம்முள் ஓர் அந்தணன் உரைக்கும் 13-070
      ஈங்கு இவன் தன் பிறப்பு யான் அறிகுவன் என
      நடவை வருத்தமொடு நல்கூர் மேனியள்
      வடமொழியாட்டி மறை முறை எய்தி
      குமரி பாதம் கொள்கையின் வணங்கி
      தமரின் தீர்ந்த சாலி என்போள் தனை
      யாது நின் ஊர் ஈங்கு என் வரவு என
      மா மறையாட்டி வரு திறம் உரைக்கும்
      வாரணாசி ஓர் மா மறை முதல்வன்
      ஆரண உவாத்தி அரும் பெறல் மனைவி யான்
      பார்ப்பார்க்கு ஒவ்வா பண்பின் ஒழுகி 13-080
      காப்பு கடைகழிந்து கணவனை இகழ்ந்தேன்
      எறி பயம் உடைமையின் இரியல் மாக்களொடு
      தெற்கண் குமரி ஆடிய வருவேன்
      பொன் தேர செழியன் கொற்கை அம் பேர் ஊர
      காவதம் கடந்து கோவலர் இருக்கையின்
      ஈன்ற குழவிக்கு இரங்கேனாகி
      தோன்றா துடவையின் இட்டனன் போந்தேன்
      செல் கதி உண்டோ தீவினையேற்கு என்று
      அல்லல் உற்று அழுத அவள் மகன் ஈங்கு இவன்
      சொல்லுதல் தேற்றேன் சொல் பயம் இன்மையின் 13-090
      புல்லல் ஓம்பன்மின் புலை மகன் இவன் என
      ஆபுத்திரன் பின்பு அமர் நகை செய்து
      மா மறை மாக்கள் வரும் குலம் கேண்மோ
      முது மறை முதல்வன் முன்னர தோன்றிய
      கடவுள் கணிகை காதல் அம் சிறுவர்
      அரு மறை முதல்வர் அந்தணர் இருவரும்
      புரி நூல் மார்பீர் பொய் உரை ஆமோ
      சாலிக்கு உண்டோ தவறு என உரைத்து
      நான்மறை மாக்களை நகுவனன் நிற்ப
      ஓதல் அந்தணர்க்கு ஒவ்வான் என்றே 13-100
      தாதை பூதியும் தன் மனை கடிதர
      ஆ கவர் கள்வன் என்று அந்தணர் உறைதரும்
      கிராமம் எங்கணும் கடிஞையில் கல் இட
      மிக்க செல்வத்து விளங்கியோர் வாழும்
      தக்கண மதுரை தான் சென்று எய்தி
      சிந்தா விளக்கின் செழுங் கலை நியமத்து
      அந்தில் முன்றில் அம்பல பீடிகை
      தங்கினன் வதிந்து அ தக்கண பேர் ஊர்
      ஐ கடிஞை கையின் ஏந்தி
      மை அறு சிறப்பின் மனைதொறும் மறுகி 13-110
      காணார் கேளார் கால் முடப்பட்டோர்
      பேணுநர் இல்லோர் பிணி நடுக்குற்றோர்
      யாவரும் வருக என்று இசைத்து உடன் ஊட்டி
      உண்டு ஒழி மிச்சில் ஓடு தலை மடுத்து
      கண்படைகொள்ளும் காவலன் தான் என் 13-115
      14 பாத்திர மரபு கூறிய காதை
      ஆங்கு அவற்கு ஒரு நாள் அம்பல பீடிகை
      பூங் கொடி நல்லாய் புகுந்தது கேளாய்
      மாரி நடு நாள் வல் இருள் மயக்கத்து
      ஆர் இடை உழந்தோர் அம்பலம் மரீஇ
      துயில்வோன் தன்னை தொழுதனர் ஏத்தி
      வயிறு காய் பெரும் பசி மலைக்கும் என்றலும்
      ஏற்றூண் அல்லது வேற்றூண் இல்லோன்
      ஆற்றுவது காணான் ஆர் அஞர் எய்த
      கேள் இது மாதோ கெடுக நின் தீது என
      யாவரும் ஏத்தும் இருங் கலை நியமத்து 14-010
      தேவி சிந்தாவிளக்கு தோன்றி
      ஏடா அழியல் எழுந்து இது கொள்ளாய்
      நாடு வறம் கூரினும் இவ் ஓடு கூராது
      வாங்குநர் கைஅகம் வருந்துதல் அல்லது
      தான் தொலைவு இல்லா தகைமையது என்றே
      தன் கை பாத்திரம் அவன் கை கொடுத்தலும்
      சிந்தாதேவி செழுங் கலை நியமத்து
      நந்தா விளக்கே நாமிசை பாவாய்
      வானோர் தலைவி மண்ணோர் முதல்வி
      ஏனோர் உற்ற இடர் களைவாய் என 14-020
      தான் தொழுது ஏத்தி தலைவியை வணங்கி
      ஆங்கு அவர் பசி தீர்த்து அ நாள் தொட்டு
      வாங்கு கை வருந்த மன் உயிர் ஓம்பலின்
      மக்களும் மாவும் மரம் சேர் பறவையும்
      தொக்கு உடன் ஈண்டி சூழ்ந்தன விடாஅ
      பழு மரத்து ஈண்டிய பறவையின் எழூஉம்
      இழுமென் சும்மை இடை இன்று ஒலிப்ப
      ஈண்டுநீர் ஞாலத்து இவன் செயல் இந்திரன்
      பாண்டு கம்பளம் துளக்கியது ஆதலின்
      தளர்ந்த நடையின் தண்டு கால் ஊன்றி 14-030
      வளைந்த யாக்கை ஓர் மறையோன் ஆகி
      மா இரு ஞாலத்து மன் உயிர் ஓம்பும்
      ஆர் உயிர் முதல்வன் தன் முன் தோன்றி
      இந்திரன் வந்தேன் யாது நின் கருத்து
      உன் பெரும் தானத்து உறு பயன் கொள்க என
      வெள்ளை மகன் போல் விலா இற நக்கு ஈங்கு
      எள்ளினன் போம் என்று எடுத்து உரை செய்வோன்
      ஈண்டு செய் வினை ஆண்டு நுகர்ந்திருத்தல்
      காண்தரு சிறப்பின் நும் கடவுளர் அல்லது
      அறம் செய் மாக்கள் புறங்காத்து ஓம்புநர் 14-040
      நல் தவம் செய்வோர் பற்று அற முயல்வோர்
      யாவரும் இல்லா தேவர் நல் நாட்டுக்கு
      இறைவன் ஆகிய பெரு விறல் வேந்தே
      வருந்தி வந்தோர் அரும் பசி களைந்து அவர்
      திருந்து முகம் காட்டும் என் தெய்வ கடிஞை
      உண்டிகொல்லோ உடுப்பனகொல்லோ
      பெண்டிர்கொல்லோ பேணுநர்கொல்லோ
      யாவை ஈங்கு அளிப்பன தேவர்கோன் என்றலும்
      புரப்போன் பாத்திரம் பொருந்து ஊண் சுரந்து ஈங்கு
      இரப்போர காணாது ஏமாந்திருப்ப 14-050
      நிரப்பு இன்று எய்திய நீள் நிலம் அடங்கலும்
      பரப்பு நீரால் பல் வளம் சுரக்க என
      ஆங்கு அவன் பொருட்டால் ஆயிரம்கண்ணோன்
      ஓங்கு உயர் பெருஞ் சிறப்பு உலகோர்க்கு அளித்தலும்
      பன்னீராண்டு பாண்டி நல் நாடு
      மன் உயிர் மடிய மழை வளம் இழந்தது
      வசி தொழில் உதவ மா நிலம் கொழு
      பசிப்பு உயிர் அறியா பான்மைத்து ஆகலின்
      ஆர் உயிர் ஓம்புநன் அம்பல பீடிகை
      ஊண் ஒலி அரவம் ஒடுங்கியது ஆகி 14-060
      விடரும் தூர்த்தரும் விட்டேற்றாளரும்
      நடவை மாக்களும் நகையொடு வைகி
      வட்டும் சூதும் வம்ப கோட்டியும்
      முட்டா வாழ்க்கை முறைமையது ஆக
      ஆபுத்திரன் தான் அம்பலம் நீங்கி
      ஊரூர் தோறும் உண்போர் வினாஅய்
      யார் இவன் என்றே யாவரும் இகழ்ந்து ஆங்கு
      அருந்த ஏமாந்த ஆர் உயிர் முதல்வனை
      இருந்தாய் நீயோ என்பார் இன்மையின்
      திருவின் செல்வம் பெருங் கடல் கொள்ள 14-070
      ஒரு தனி வரூஉம் பெருமகன் போல
      தானே தமியன் வருவோன் தன்முன்
      மாநீர் வங்கம் வந்தோர் வணங்கி
      சாவக நல் நாட்டு தண் பெயல் மறுத்தலின்
      ஊன் உயிர் மடிந்தது உரவோய் என்றலும்
      அமரர் கோன் ஆணையின் அருந்துவோர பெறாது
      குமரி மூத்த என் பாத்திரம் ஏந்தி
      அங்கு அ நாட்டு புகுவது என் கருத்து என
      வங்க மாக்களொடு மகிழ்வுடன் ஏறி
      கால் விசை கடு கடல் கலக்குறுதலின் 14-080
      மால் இதை மணிபல்லவத்திடை வீழ்த்து
      தங்கியது ஒரு நாள் தான் ஆங்கு இழிந்தனன்
      இழிந்தோன் ஏறினன் என்று இதை எடுத்து
      வழங்கு நீர் வங்கம் வல் இருள் போதலும்
      வங்கம் போய பின் வருந்து துயர் எய்தி
      அங்கு வாழ்வோர் யாவரும் இன்மையின்
      மன் உயிர் ஓம்பும் இம் மா பெரும் பாத்திரம்
      என் உயிர் ஓம்புதல் யானோ பொறேஎன்
      தவம் தீர் மருங்கின் தனி துயர் உழந்தேன்
      சுமந்து என் பாத்திரம் என்றனன் தொழுது 14-090
      கோமுகி என்னும் கொழு நீர் இலஞ்சியின்
      ஓர் யாண்டு ஒரு நாள் தோன்று என விடுவோன்
      அருள் அறம் பூண்டு ஆங்கு ஆர் உயிர் ஓம்புநர்
      உளர்எனில் அவர் கை புகுவாய் என்று ஆங்கு
      உண்ணா நோன்போடு உயிர் பதி பெயர்ப்புழி
      அ நாள் ஆங்கு அவன் தன்பால் சென்றேன்
      என் உற்றனையோ என்று யான் கேட்ப
      தன் உற்றன பல தான் எடுத்து உரைத்தனன்
      குண திசை தோன்றி கார் இருள் சீத்து
      குட திசை சென்ற ஞாயிறு போல 14-100
      மணிபல்லவத்திடை மன் உடம்பு இட்டு
      தணியா மன் உயிர் தாங்கும் கருத்தொடு
      சாவகம் ஆளும் தலை தாள் வேந்தன்
      ஆ வயிற்று உதித்தனன் ஆங்கு அவன்தான் என் 14-104
      15. பாத்திரம் கொண்டு பிச்சை புக்க காதை
      இன்னும் கேளாய் இளங்கொடி மாதே
      அ நாள் அவனை ஓம்பிய நல் ஆ
      தண்ணென் சாவக தவள மால் வரை
      மண்முகன் என்னும் மா முனி இடவயின்
      பொன்னின் கோட்டது பொன் குளம்பு உடையது
      தன் நலம் பிறர் தொழ தான் சென்று எய்தி
      ஈனாமுன்னம் இன் உயிர்க்கு எல்லாம்
      தான் முலை சுரந்து தன் பால் ஊட்டலும்
      மூன்று காலமும் தோன்ற நன்கு உணர்ந்த
      ஆன்ற முனிவன் அதன் வயிற்று அகத்து 15-010
      மழை வளம் சுரப்பவும் மன் உயிர் ஓம்பவும்
      உயிர் காவலன் வந்து ஒருவன் தோன்றும்
      குடர தொடர் மாலை பூண்பான் அல்லன்
      அடர பொன் முட்டை அகவையினான் என
      பிணி நோய் இன்றியும் பிறந்து அறம் செய்ய
      மணிபல்லவத்திடை மன் உயிர் நீத்தோன்
      தற்காத்து அளித்த தகை ஆ அதனை
      ஒல்கா உள்ளத்து ஒழியான் ஆதலின்
      ஆங்கு அவ் ஆ வயிற்று அமரர் கணம் உவப்ப
      தீம் கனி நாவல் ஓங்கும் இ தீவினுக்கு 15-020
      ஒரு தான் ஆகி உலகு தொழ தோன்றினன்
      பெரியோன் பிறந்த பெற்றியை கேள் நீ
      இருது இளவேனிலில் எரி கதிர் இடபத்து
      ஒருபதின் மேலும் ஒருமூன்று சென்ற பின்
      மீனத்து இடைநிலை அகவையின்
      போதி தலைவனொடு பொருந்திய போழ்தத்து
      மண்அகம் எல்லாம் மாரி இன்றியும்
      புண்ணிய நல் நீர் போதொடு சொரிந்தது
      போதி மாதவன் பூமியில் தோன்றும்
      காலம் அன்றியும் கண்டன சிறப்பு என 15-030
      சக்கரவாள கோட்டம் வாழும்
      மிக்க மாதவர் விரும்பினர் வியந்து
      கந்து உடை நெடு நிலை கடவுள் எழுதிய
      அந்தில் பாவை அருளும் ஆயிடின்
      அறிகுவம் என்றே செறி இருள் சேறலும்
      மணிபல்லவத்திடை மன் உயிர் நீத்தோன்
      தணியா உயிர் உய சாவகத்து உதித்தனன்
      ஆங்கு அவன் தன் திறம் அறவணன் அறியும் என்று
      ஈங்கு என் நாவை வருத்தியது இது கேள்
      மண் ஆள் வேந்தன் மண்முகன் என்னும் 15-040
      புண்ணிய முதல்வன் திருந்து அடி வணங்கி
      மக்களை இல்லேன் மாதவன் அருளால்
      பெற்றேன் புதல்வனை என்று அவன் வளர்ப்ப
      அரைசு ஆள் செல்வம் அவன்பால் உண்மையின்
      நிரை தார் வேந்தன் ஆயினன் அவன் தான்
      துறக்க வேந்தன் துய்ப்பிலன்கொல்லோ
      அற கோல் வேந்தன் அருளிலன்கொல்லோ
      சுரந்து காவிரி புரந்து நீர் பரக்கவும்
      நலத்தகை இன்றி நல் உயிர்க்கு எல்லாம்
      அலத்தல்காலை ஆகியது ஆய் இழை 15-050
      வெண் திரை தந்த அமுதை வானோர்
      உண்டு ஒழி மிச்சிலை ஒழித்து வைத்தாங்கு
      வறன் ஓடு உலகின் வான் துயர் கெடுக்கும்
      அறன் ஓடு ஒழித்தல் ஆய் இழை தகாது என
      மாதவன் உரைத்தலும் மணிமேகலை தான்
      தாயர் தம்மொடு தாழ்ந்து பல ஏத்தி
      கைக்கொண்டு எடுத்த கடவுள் கடிஞையொடு
      பிக்குணி கோலத்து பெரு தெரு அடைதலும்
      ஒலித்து ஒருங்கு ஈண்டிய ஊர குறுமாக்களும்
      மெலித்து உகு நெஞ்சின் விடரும் தூர்த்தரும் 15-060
      கொடி கோசம்பி கோமகன் ஆகிய
      வடி தேர தானை வத்தவன் தன்னை
      வஞ்சம் செய்துழி வான் தளை விடீஇய
      உஞ்சையில் தோன்றிய யூகி அந்தணன்
      உருவுக்கு ஒவ்வா உறு நோய் கண்டு
      பரிவுறு மாக்களின் தாம் பரிவு எய்தி
      உதயகுமரன் உளம் கொண்டு ஒளித்த
      மதுமலர குழலாள் வந்து தோன்றி
      பிச்சை பாத்திரம் கையின் ஏந்தியது
      திப்பியம் என்றே சிந்தை நோய் கூர 15-070
      மண மனை மறுகில் மாதவி ஈன்ற
      அணி மலர பூங் கொம்பு அகம் மலி உவகையின்
      பத்தினி பெண்டிர் பண்புடன் இடூஉம்
      பிச்சை ஏற்றல் பெரு தகவு உடைத்து என
      குளன் அணி தாமரை கொழு மலர் நாப்பண்
      ஒரு தனிஓங்கிய திருமலர் போன்று
      வான் தருகற்பின் மனை உறை மகளிரின்
      தான் தனி ஓங்கிய தகைமையள் அன்றோ
      ஆதிரை நல்லாள் அவள் மனை இம்
      நீ புகல்வேண்டும் நேர் இழை என்றனள் 15-080
      வட திசை விஞ்சை மா நகர தோன்றி
      தென் திசை பொதியில் ஓர் சிற்றியாற்று அடைகரை
      மாதவன் தன்னால் வல் வினை உருப்ப
      சாவம் பட்டு தனி துயர் உறூஉம்
      வீவு இல் வெம் பசி வேட்கையொடு திரிதரும்
      காயசண்டிகை எனும் காரிகை தான் என் 15-086
      16. ஆதிரை பிச்சையிட்ட காதை
      ஈங்கு இவள் செய்தி கேள் என விஞ்சையர்
      பூங்கொடி மாதர்க்கு புகுந்ததை உரைப்போள்
      ஆதிரை கணவன் ஆய் இழை கேளாய்
      சாதுவன் என்போன் தகவு இலன் ஆகி
      அணி இழை தன்னை அகன்றனன் போகி
      கணிகை ஒருத்தி கைத்தூண் நல்க
      வட்டினும் சூதினும் வான் பொருள் வழங்கி
      கெட்ட பொருளின் கிளை கேடுறுதலின்
      பேணிய கணிகையும் பிறர் நலம் காட்டி
      காணம் இலி என கையுதிர்க்கோடலும் 16-010
      வங்கம் போகும் வாணிகர் தம்முடன்
      தங்கா வேட்கையின் தானும் செல்வுழி
      நளி இரு முந்நீர் வளி கலன் வௌவ
      ஒடி மரம் பற்றி ஊர் திரை உதைப்ப
      நக்க சாரணர் நாகர் வாழ் மலை
      பக்கம் சார்ந்து அவர் பான்மையன் ஆயினன்
      நாவாய் கேடுற நல் மரம் பற்றி
      போயினன் தன்னோடு உயிர் உ போந்தோர்
      இடை இருள் யாமத்து எறி திரை பெருங் கடல்
      உடை கல பட்டு ஆங்கு ஒழிந்தோர் தம்முடன் 16-020
      சாதுவன் தானும் சாவுற்றான் என
      ஆதிரை நல்லாள் ஆங்கு அது தான் கேட்டு
      ஊரீரேயோ ஒள் அழல் ஈமம்
      தாரீரோ என சாற்றினள் கழறி
      சுடலை கானில் தொடு குழிப்படுத்து
      முடலை விறகின் முளி எரி பொத்தி
      மிக்க என் கணவன் வினை பயன் உ
      புக்குழி புகுவேன் என்று அவள் புகுதலும்
      படுத்து உடன் வைத்த பாயல் பள்ளியும்
      உடுத்த கூறையும் ஒள் எரி உறா அது 16-030
      ஆடிய சாந்தமும் அசைந்த கூந்தலில்
      சூடிய மாலையும் தொல் நிறம் வழாது
      விரை மலர தாமரை ஒரு தனி இருந்த
      திருவின் செய்யோள் போன்று இனிது இருப்ப
      தீயும் கொல்லா தீவினையாட்டியேன்
      யாது செய்கேன் என்று அவள் ஏங்கலும்
      ஆதிரை கேள் உன் அரும் பெறல் கணவனை
      ஊர் திரை கொண்டு ஆங்கு உ போகி
      நக்க சாரணர் நாகர் வாழ் மலை
      பக்கம் சேர்ந்தனன் பல் யாண்டு இராஅன் 16-040
      சந்திரதத்தன் எனும் ஓர் வாணிகன்
      வங்கம் தன்னொடும் வந்தனன் தோன்றும்
      நின் பெரு துன்பம் ஒழிவாய் நீ என
      அந்தரம் தோன்றி அசரீரி அறைதலும்
      ஐ அரி உண் கண் அழு துயர் நீங்கி
      பொய்கை புக்கு ஆடி போதுவாள் போன்று
      மனம் கவல்வு இன்றி மனைஅகம் புகுந்து என்
      கண் மணி அனையான் கடிது ஈங்கு உறுக என
      புண்ணியம் முட்டாள் பொழி மழை தரூஉம்
      அரும் பெறல் மரபின் பத்தினி பெண்டிரும் 16-050
      விரும்பினர் தொழூஉம் வியப்பினள் ஆயினள்
      ஆங்கு அவள் கணவனும் அலைநீர் அடைகரை
      ஓங்கு உயர் பிறங்கல் ஒரு மர நீழல்
      மஞ்சு உடை மால் கடல் உழந்த நோய் கூர்ந்து
      துஞ்சு துயில்கொள்ள அ சூர் மலை வாழும்
      நக்க சாரணர் நயமிலர் தோன்றி
      பக்கம் சேர்ந்து பரி புலம்பினன் இவன்
      தானே தமியன் வந்தனன் அளியன்
      ஊன் உடை இவ் உடம்பு உணவு என்று எழுப்பலும்
      மற்று அவர் பாடை மயக்கு அறு மரபின் 16-060
      கற்றனன் ஆதலின் கடு தொழில் மாக்கள்
      சுற்றும் நீங்கி தொழுது உரையாடி
      ஆங்கு அவர் உரைப்போர் அருந்திறல் கேளாய்
      ஈங்கு எம் குருமகன் இருந்தோன் அவன்பால்
      போந்தருள் நீ என அவருடன் போகி
      கள் அடு குழிசியும் கழி முடை நாற்றமும்
      வெள் என்பு உணங்கலும் விரவிய இருக்கையில்
      எண்கு தன் பிணவோடு இருந்தது போல
      பெண்டுடன் இருந்த பெற்றி நோக்கி
      பாடையின் பிணித்து அவன் பான்மையன் ஆகி 16-070
      கோடு உயர் மர நிழல் குளிர்ந்த பின் அவன்
      ஈங்கு நீ வந்த காரணம் என் என
      ஆங்கு அவற்கு அலை கடல் உற்றதை உரைத்தலும்
      அருந்துதல் இன்றி அலை கடல் உழந்தோன்
      வருந்தினன் அளியன் வம்மின் மாக்காள்
      நம்பிக்கு இளையள் ஓர் நங்கையை கொடுத்து
      வெங் களும் ஊனும் வேண்டுவ கொடும் என
      அவ் உரை கேட்ட சாதுவன் அயர்ந்து
      வெவ்உரை கேட்டேன் வேண்டேன் என்றலும்
      பெண்டிரும் உண்டியும் இன்றுஎனின் மாக்கட்கு 16-080
      உண்டோ ஞாலத்து உறு பயன் உண்டுஎனின்
      காண்குவம் யாங்களும் காட்டுவாயாக என
      தூண்டிய சினத்தினன் சொல் என சொல்லும்
      மயக்கும் கள்ளும் மன் உயிர் கோறலும்
      கயக்கு அறு மாக்கள் கடிந்தனர் கேளாய்
      பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும்
      உறங்கலும் விழித்தலும் போன்றது உண்மையின்
      நல் அறம் செய்வோர் உலகு அடைதலும்
      அல் அறம் செய்வோர் அரு நரகு அடைதலும்
      உண்டு என உணர்தலின் உரவோர் களைந்தனர் 16-090
      கண்டனை ஆக என கடு நகை எய்தி
      உடம்பு விட்டு ஓடும் உயிர் உரு கொண்டு ஓர்
      இடம் புகும் என்றே எமக்கு ஈங்கு உரைத்தாய்
      அவ் உயிர் எவ்வணம் போ புகும் வகை
      செவ்வனம் உரை என சினவாது இது கேள்
      உற்றதை உணரும் உடல் உயிர் வாழ்வுழி
      மற்றைய உடம்பே மன் உயிர் நீங்கிடின்
      தடிந்து எரியூட்டினும் தான் உணராதுஎனின்
      உடம்பிடை போனது ஒன்று உண்டு என உணர் நீ
      போனார் தமக்கு ஓர் புக்கில் உண்டு என்பது 16-100
      யானோ அல்லேன் யாவரும் உணர்குவர்
      உடம்பு ஈண்டு ஒழிய உயிர் பல காவதம்
      கடந்து சேண் சேறல் கனவினும் காண்குவை
      ஆங்கனம் போகி அவ் உயிர் செய் வினை
      பூண்ட யாக்கையின் புகுவது தௌி நீ
      என்று அவன் உரைத்தலும் எரி விழி நாகனும்
      நன்று அறி செட்டி நல் அடி வீழ்ந்து
      கள்ளும் ஊனும் கைவிடின் இவ் உடம்பு
      உள் உறை வாழ் உயிர் ஓம்புதல் ஆற்றேன்
      தமக்கு ஒழி மரபின் சாவுறுகாறும் 16-110
      எமக்கு ஆம் நல் அறம் எடுத்து உரை என்றலும்
      நன்று சொன்னாய் நல் நெறி படர்குவை
      உன் தனக்கு ஒல்லும் நெறி அறம் உரைத்தேன்
      உடை கல மாக்கள் உயிர் உய்ந்து ஈங்கு உறின்
      அடு தொழில் ஒழிந்து அவர் ஆர் உயிர் ஓம்பி
      மூத்து விளி மா ஒழித்து எவ் உயிர்மாட்டும்
      தீத்திறம் ஒழிக என சிறுமகன் உரைப்போன்
      ஈங்கு எமக்கு ஆகும் இவ் அறம் செய்கேம்
      ஆங்கு உனக்கு ஆகும் அரும் பொருள் கொள்க என
      பண்டும் கலம் கவிழ் மாக்களை 16-120
      உண்டேம் அவர் தம் உறு பொருள் ஈங்கு இவை
      விரை மரம் மென் துகில் விழு நிதி குப்பையோடு
      இவை கொள்க என எடுத்தனன் கொணர்ந்து
      சந்திரதத்தன் என்னும் வாணிகன்
      வங்கம் சேர்ந்ததில் வந்து உடன் ஏறி
      இ நகர் புகுந்து ஈங்கு இவளொடு வாழ்ந்து
      தன் மனை நன் பல தானமும் செய்தனன்
      ஆங்கனம் ஆகிய ஆதிரை கையால்
      பூங் கொடி நல்லாய் பிச்சை பெறுக என
      மனைஅகம் புகுந்து மணிமேகலை தான் 16-130
      புனையா ஓவியம் போல நிற்றலும்
      தொழுது வலம் கொண்டு துயர் அறு கிளவியோடு
      அமுதசுரபியின் அகன் சுரை நிறைதர
      பார்அகம் அடங்கலும் பசி பிணி அறுக என
      ஆதிரை இட்டனள் ஆருயிர்மருந்து என் 16-135
      17. உலக அறவி புக்க காதை
      பத்தினி பெண்டிர் பாத்தூண் ஏற்ற
      பிச்சை பாத்திர பெருஞ் சோற்று அமலை
      அறத்தின் ஈட்டிய ஒண் பொருள் அறவோன்
      திறத்து வழிப்படூஉம் செய்கை போல
      வாங்கு கை வருந்த மன் உயிர்க்கு அளித்து
      தான் தொலைவு இல்லா தகைமை நோக்கி
      யானைத்தீ நோய் அகவயிற்று அடக்கிய
      காயசண்டிகை எனும் காரிகை வணங்கி
      நெடியோன் மயங்கி நிலமிசை தோன்றி
      அடல் அரு முந்நீர் அடைத்த ஞான்று 17-010
      குரங்கு கொணர்ந்து எறிந்த நெடு மலை எல்லாம்
      அணங்கு உடை அளக்கர் வயிறு புக்காங்கு
      இட்டது ஆற்றா கட்டு அழல் கடும் பசி
      பட்டேன் என் தன் பழ வினை பயத்தால்
      அன்னை கேள் நீ ஆர் உயிர் மருத்துவி
      துன்னிய என் நோய் துடைப்பாய் என்றலும்
      எடுத்த பாத்திரத்து ஏந்திய அமுதம்
      பிடித்து அவள் கையில் பேணினள் பெய்தலும்
      வயிறு காய் பெரும் பசி நீங்கி மற்று அவள்
      துயரம் நீங்கி தொழுதனள் உரைக்கும் 17-020
      மாசு இல்வாள் ஒளி வட திசை சேடி
      காசு இல் காஞ்சனபுர கடி நகர் உள்ளேன்
      விஞ்சையன் தன்னொடு என் வெவ் வினை உருப்ப
      தென் திசை பொதியில் காணிய வந்தேன்
      கடுவரல் அருவி கடும் புனல் கொழித்த
      இடு மணல் கான் யாற்று இயைந்து ஒருங்கு இருந்தேன்
      புரி நூல் மார்பின் திரி வார் சடை
      மரவுரி உடையன் விருச்சிகன் என்போன்
      பெருங் குலை பெண்ணை கருங் கனி அனையது ஓர்
      இருங் கனி நாவல் பழம் ஒன்று ஏந்தி 17-030
      தேக்கு இலை வைத்து சேண் நாறு பரப்பின்
      பூ கமழ் பொய்கை ஆட சென்றோன்
      தீவினை உருத்தலின் செருக்கொடு சென்றேன்
      காலால் அந்த கருங் கனி சிதைத்தேன்
      உண்டல் வேட்கையின் வரூஉம் விருச்சிகன்
      கண்டனன் என்னை கருங் கனி சிதைவுடன்
      சீர் திகழ் நாவலில் திப்பியம் ஆனது
      ஈர் ஆறு ஆண்டில் ஒரு கனி தருவது
      அ கனி உண்டோர் ஆறு ஈர் ஆண்டு
      மக்கள் யாக்கையின் வரும் பசி நீங்குவர் 17-040
      பன்னீராண்டில் ஒரு நாள் அல்லது
      உண்ணா நோன்பினேன் உண் கனி சிதைத்தாய்
      அந்தரம் செல்லும் மந்திரம் இழந்து
      தந்தி தீயால் தனி துயர் உழந்து
      முந்நால் ஆண்டில் முதிர் கனி நான் ஈங்கு
      உண்ணும் நாள் உன் உறு பசி களைக என
      அ நாள் ஆங்கு அவன் இட்ட சாபம்
      இ நாள் போலும் இளங்கொடி கெடுத்தனை
      வாடு பசி உழந்து மா முனி போய பின்
      பாடு இமிழ் அருவி பய மலை ஒழிந்து என் 17-050
      அலவலை செய்திக்கு அஞ்சினன் அகன்ற
      இலகு ஒளி விஞ்சையன் விழுமமோடு எய்தி
      ஆர் அணங்கு ஆகிய அரு தவன் தன்னால்
      காரணம் இன்றியும் கடு நோய் உழந்தனை
      வானூடு எழுக என மந்திரம் மறந்தேன்
      ஊன் உயிர் நீங்கும் உருப்பொடு தோன்றி
      வயிறு காய் பெரும் பசி வருத்தும் என்றேற்கு
      தீம் கனி கிழங்கு செழுங் காய் நல்லன
      ஆங்கு அவன் கொணரவும் ஆற்றேன்ஆக
      நீங்கல் ஆற்றான் நெடு துயர் எய்தி 17-060
      ஆங்கு அவன் எனக்கு அருளொடும் உரைப்போன்
      சம்பு தீவினுள் தமிழக மருங்கில்
      கம்பம் இல்லா கழி பெருஞ் செல்வர்
      ஆற்றா மாக்கட்கு ஆற்றும் துணை ஆகி
      நோற்றோர் உறைவது ஓர் நோன் நகர் உண்டால்
      பல நாள் ஆயினும் நிலனொடு போகி
      அ பதி புகுக என்று அவன் அருள்செய்ய
      இ பதி புகுந்து ஈங்கு யான் உறைகின்றேன்
      இந்திர கோடணை விழவு அணி வரு நாள்
      வந்து தோன்றி இம் மா நகர் மருங்கே 17-070
      என் உறு பெரும் பசி கண்டனன் இரங்கி
      பின் வரும் யாண்டு அவன் எண்ணினன் கழியும்
      தணிவு இல் வெம் பசி தவிர்த்தனை வணங்கினேன்
      மணிமேகலை என் வான் பதி படர்கேன்
      துக்கம் துடைக்கும் துகள் அறு மாதவர்
      சக்கரவாள கோட்டம் உண்டு ஆங்கு அதில்
      பலர் புக திறந்த பகு வாய் வாயில்
      உலக அறவி ஒன்று உண்டு அதனிடை
      ஊர்ஊர் ஆங்கண் உறு பசி உழந்தோர்
      ஆரும் இன்மையின் அரும் பிணி உற்றோர் 17-080
      இடுவோர தேர்ந்து ஆங்கு இருப்போர் பலரால்
      வடு வாழ் கூந்தல் அதன்பால் போக என்று
      ஆங்கு அவள் போகிய பின்னர் ஆய் இழை
      ஓங்கிய வீதியின் ஒரு புடை ஒதுங்கி
      வல முறை மும் வந்தனை செய்து அவ்
      உலக அறவியின் ஒரு தனி ஏறி
      பதியோர் தம்மொடு பலர் தொழுது ஏத்தும்
      முதியோள் கோட்டம் மும்மையின் வணங்கி
      கந்து உடை நெடு நிலை காரணம் காட்டிய
      தம் துணை பாவையை தான் தொழுது ஏத்தி 17-090
      வெயில் சுட வெம்பிய வேய் கரி கானத்து
      கருவி மா மழை தோன்றியதென்ன
      பசி தின வருந்திய பைதல் மாக்கட்கு
      அமுதசுரபியோடு ஆய் இழை தோன்றி
      ஆபுத்திரன் கை அமுதசுரபி இஃது
      யாவரும் வருக ஏற்போர் தாம் என
      ஊண் ஒலி அரவத்து எழுந்தன்றே
      யாணர பேர் ஊர் அம்பல மருங்கு என் 17-098
      18. உதயகுமரன் அம்பலம் புக்க காதை
      ஆங்கு அது கேட்டு அரும் புண் அகவயின்
      தீ துறு செங் கோல் சென்று சுட்டாங்கு
      கொதித்த உள்ளமொடு குரம்பு கொண்டு ஏறி
      விதுப்புறு நெஞ்சினள் வெய்து உயிர்த்து கலங்கி
      தீர்ப்பல் இவ் அறம் என சித்திராபதி தான்
      கூத்து இயல் மடந்தையர்க்கு எல்லாம் கூறும்
      கோவலன் இறந்த பின் கொடு துயர் எய்தி
      மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்தது
      நகுதக்கன்றே நல் நெடும் பேர் ஊர்
      இது தக்கு என்போர்க்கு எள் உரை ஆயது 18-010
      காதலன் வீய கடு துயர் எய்தி
      போதல்செய்யா உயிரொடு புலந்து
      நளி இரும் பொய்கை ஆடுநர் போல
      முளி எரி புகூஉம் முது குடி பிறந்த
      பத்தினி பெண்டிர் அல்லேம் பலர் தம்
      கைத்தூண் வாழ்க்கை கடவியம் அன்றே
      பாண் மகன் பட்டுழி படூஉம் பான்மை இல்
      யாழ் இனம் போலும் இயல்பினம் அன்றியும்
      நறு தாது உண்டு நயன் இல் காலை
      வறும் பூ துறக்கும் வண்டு போல்குவம் 18-020
      வினை ஒழிகாலை திருவின் செல்வி
      அனையேம் ஆகி ஆடவர துறப்பேம்
      தாபத கோலம் தாங்கினம் என்பது
      யாவரும் நகூஉம் இயல்பினது அன்றே
      மாதவி ஈன்ற மணிமேகலை வல்லி
      போது அவிழ் செவ்வி பொருந்துதல் விரும்பிய
      உதயகுமரன் ஆம் உலகு ஆள் வண்டின்
      சிதையா உள்ளம் செவ்விதின் அருந்த
      கைக்கொண்டு ஆங்கு அவள் ஏந்திய கடிஞையை
      பிச்சை மாக்கள் பிறர் கை காட்டி 18-030
      மற்று அவன் தன்னால் மணிமேகலை தனை
      பொன் தேர கொண்டு போதேன் ஆகின்
      சுடுமண் ஏற்றி அரங்கு சூழ் போகி
      வடுவொடு வாழும் மடந்தையர் தம்மோர்
      அனையேன் ஆகி அரங கூத்தியர்
      மனைஅகம் புகாஅ மரபினன் என்றே
      வஞ்சினம் சாற்றி நெஞ்சு புகையுயிர்த்து
      வஞ்ச கிளவி மாண்பொடு தேர்ந்து
      செறி வளை நல்லார் சிலர் புறம் சூழ
      குறு வியர் பொடித்த கோல வாள் முகத்தள் 18-040
      கடு தேர் வீதி காலில் போகி
      இளங்கோ வேந்தன் இருப்பிடம் குறுகி
      அரவ வண்டொடு தேன் இனம் ஆர்க்கும்
      தரு மணல் ஞெமிரிய திரு நாறு ஒரு சிறை
      பவழ தூணத்து பசும் பொன் செஞ் சுவர
      திகழ் ஒளி நித்தில சித்திர விதானத்து
      விளங்கு ஒளி பரந்த பளிங்கு செய் மண்டபத்து
      துளங்கும் மான் ஊர்தி தூ மலர பள்ளி
      வெண் திரை விரிந்த நிற சாமரை
      கொண்டு இரு மருங்கும் கோதையர் வீச 18-050
      இருந்தோன் திருந்து அடி பொருந்தி நின்று ஏத்தி
      திருந்து எயிறு இலங்க செவ்வியின் நக்கு அவன்
      மாதவி மணிமேகலையுடன் எய்திய
      தாபத கோலம் தவறு இன்றோ என
      அரிது பெறு சிறப்பின் குருகு கருவுயிர்ப்ப
      ஒரு தனி ஓங்கிய திரு மணி காஞ்சி
      பாடல்சால் சிறப்பின் பரதத்து ஓங்கிய
      நாடகம் விரும்ப நல் நலம் கவினி
      காமர் செவ்வி கடி மலர் அவிழ்ந்தது
      உதயகுமரன் எனும் ஒரு வண்டு உணீஇய 18-060
      விரைவொடு வந்தேன் வியன் பெரு மூதூர
      பாழ்ம்ம் பறந்தலை அம்பலத்து ஆயது
      வாழ்க நின் கண்ணி வாய் வாள் வேந்து என
      ஓங்கிய பௌவத்து உடைகல பட்டோன்
      வான் புணை பெற்றென மற்று அவட்கு உரைப்போன்
      மேவிய பளிங்கின் விருந்தின் பாவை இஃது
      ஓவி செய்தி என்று ஒழிவேன் முன்னர்
      காந்தள் அம் செங் கை தளை பிணி விடாஅ
      ஏந்து இள வன முலை இறை நெரித்ததூஉம்
      ஒத்து ஒளிர் பவளத்துள் ஒளி சிறந்த 18-070
      முத்து கூர்த்தன்ன முள் எயிற்று அமுதம்
      அருந்த ஏமாந்த ஆர் உயிர் தளிர்ப்ப
      விருந்தின் மூரல் அரும்பியதூஉம்
      மா இதழ குவளை மலர் புறத்து ஓட்டி
      காய் வேல் வென்ற கருங் கயல் நெடுங் கண்
      அறிவு பிறிதாகியது ஆய் இழை தனக்கு என
      செவிஅகம் புகூஉ சென்ற செவ்வியும்
      பளிங்கு புறத்து எறிந்த பவள பாவை என்
      உளம் கொண்டு ஒளித்தாள் உயிர காப்பிட்டு என்று
      இடை இருள் யாமத்து இருந்தேன் முன்னர 18-080
      பொன் திகழ் மேனி ஒருத்தி தோன்றி
      செங்கோல் காட்டி செய் தவம் புரிந்த
      அங்கு அவள் தன் திறம் அயர்ப்பாய் என்றனள்
      தெய்வம்கொல்லோ திப்பியம்கொல்லோ
      எய்யா மையலேன் யான் என்று அவன் சொல
      சித்திராபதி தான் சிறு நகை எய்தி
      அ திறம் விடுவாய் அரசு இளங் குருசில்
      கா கள்ளாட்டிடை மயக்குற்றன
      தேவர்க்கு ஆயினும் சிலவோ செப்பின்
      மாதவன் மடந்தைக்கு வருந்து துயர் எய்தி 18-090
      ஆயிரம் செங் கண் அமரர் கோன் பெற்றதும்
      மேரு குன்றத்து ஊரும் நீர சரவணத்து
      அரு திறல் முனிவர்க்கு ஆர் அணங்கு ஆகிய
      பெரும் பெயர பெண்டிர்பின்பு உளம் போக்கிய
      அங்கி மனையாள் அவரவர் வடிவு ஆ
      தங்கா வேட்கை தனை அவண் தணித்ததூஉம்
      கேட்டும் அறிதியோ வாள் திறல் குருசில்
      கன்னி காவலும் கடியின்
      தன் உறு கணவன் சாவுறின் காவலும்
      நிறையின் காத்து பிறர் பிறர காணாது 18-100
      கொண்டோன் அல்லது தெய்வமும் பேணா
      பெண்டிர் தம் குடியில் பிறந்தாள் அல்லள்
      நாடவர் காண நல் அரங்கு ஏறி
      ஆடலும் பாடலும் அழகும் காட்டி
      சுருப்பு நாண் கருப்பு வில் அருப்பு கணை தூவ
      செரு கயல் நெடுங் கண் சுருக்கு வலை படுத்து
      கண்டோர் நெஞ்சம் கொண்டு அகம் புக்கு
      பண் தேர் மொழியின் பயன் பல வாங்கி
      வண்டின் துறக்கும் கொண்டி மகளிரை
      பான்மையின் பிணித்து படிற்று உரை அடக்குதல் 18-110
      கோன்முறை அன்றோ குமரற்கு என்றலும்
      உதயகுமரன் உள்ளம் பிறழ்ந்து
      விரை பரி நெடு தேர்மேல் சென்று ஏறி
      ஆய் இழை இருந்த அம்பலம் எய்தி
      காடு அமர் செல்வி கடி பசி களைய
      ஓடு கைக்கொண்டு நின்று ஊட்டுநள் போல
      தீ பசி மாக்கட்கு செழுஞ் சோறு ஈத்து
      பாத்திரம் ஏந்திய பாவையை கண்டலும்
      இடங்கழி காமமொடு அடங்காண் ஆகி
      உடம்போடு என் தன் உள்ளகம் புகுந்து 18-120
      நெஞ்சம் கவர்ந்த வஞ்ச கள்வி
      நோற்றூண் வாழ்க்கையின் நொசி தவம் தாங்கி
      ஏற்றூண் விரும்பிய காரணம் என் என
      தானே தமியள் நின்றோள் முன்னர்
      யானே கேட்டல் இயல்பு என சென்று
      நல்லாய் என்கொல் நல் தவம் புரிந்தது
      சொல்லாய் என்று துணிந்துடன் கேட்ப
      என் அமர் காதலன் இராகுலன் ஈங்கு இவன்
      தன் அடி தொழுதலும் தகவு என வணங்கி
      அறைபோய் நெஞ்சம் அவன்பால் அணுகினும் 18-130
      இறை வளை முன்கை ஈங்கு இவன் பற்றினும்
      தொன்று காதலன் சொல் எதிர் மறுத்தல்
      நன்றி அன்று என நடுங்கினள் மயங்கி
      கேட்டது மொழியேன் கேள்வியாளரின்
      தோட்ட செவியை நீ ஆகுவை ஆம் எனின்
      பிறத்தலும் மூத்தலும் பிணிப்பட்டு இரங்கலும்
      இறத்தலும் உடையது இடும்பை கொள்கலம்
      மக்கள் யாக்கை இது என உணர்ந்து
      மிக்க நல் அறம் விரும்புதல் புரிந்தேன்
      மண்டு அமர் முருக்கும் களிறு அனையார்க்கு 18-140
      பெண்டிர் கூறும் பேர் அறிவு உண்டோ
      கேட்டனை ஆயின் வேட்டது செய்க என
      வாள் திறல் குருசிலை மடக்கொடி நீங்கி
      முத்தை முதல்வி முதியாள் இருந்த
      குச்சர குடிகை தன் அகம் புக்கு ஆங்கு
      ஆடவர் செய்தி அறிகுநர் யார் என
      தோடு அலர் கோதையை தொழுதனன் ஏத்தி
      மாய விஞ்சை மந்திரம் ஓதி
      காயசண்டிகை எனும் காரிகை வடிவு ஆய்
      மணிமேகலை தான் வந்து தோன்ற 18-150
      அணி மலர தாரோன் அவள்பால் புக்கு
      குச்சர குடிகை குமரியை மரீஇ
      பிச்சை பாத்திரம் பெரும் பசி உழந்த
      காயசண்டிகை தன் கையில் காட்டி
      மாயையின் ஒளித்த மணிமேகலை தனை
      ஈங்கு இம் மண்ணீட்டு யார் என உணர்கேன்
      ஆங்கு அவள் இவள் என்று அருளாய் ஆயிடின்
      பல் நாள் ஆயினும் பாடுகிடப்பேன்
      இன்னும் கேளாய் இமையோர் பாவாய்
      பவள செவ் வா தவள வாள் நகையும் 18-160
      அஞ்சனம் சேரா செங் கயல் நெடுங் கணும்
      முரிந்து கடை நெரிய வரிந்த சிலை புருவமும்
      குவி முள் கருவியும் கோணமும் கூர் நுனை
      கவை முள் கருவியும் ஆகி கடிகொள
      கல்வி பாகரின் காப்பு வலை ஓட்டி
      வல் வாய் யாழின் மெல்லிதின் விளங்க
      முதுக்குறை முதுமொழி எடுத்து காட்டி
      புது கோள் யானை வேட்டம் வாய்ந்தென
      முதியாள் உன் தன் கோட்டம் புகுந்த
      மதி வாள் முகத்து மணிமேகலை தனை
      ஒழி போகேன் உன் அடி தொட்டேன்
      இது குறை என்றனன் இறைமகன் தான் என் 18-172
      19. சிறைக்கோட்டம் அறக்கோட்டம் ஆக்கிய காதை
      முதியாள் திருந்து அடி மும்மையின் வணங்கி
      மது மலர தாரோன் வஞ்சினம் கூற
      ஏடு அவிழ் தாரோய் எம் கோமகள் முன்
      நாடாது துணிந்து நா நல்கூர்ந்தனை என
      வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினை
      சித்திரம் ஒன்று தெய்வம் கூறலும்
      உதயகுமரன் உள்ளம் கலங்கி
      பொதி அறை பட்டோர் போன்று மெய் வருந்தி
      அங்கு அவள் தன் திறம் அயர்ப்பாய் என்றே
      செங்கோல் காட்டிய தெய்வமும் திப்பியம் 19-010
      பை அரவு அல்குல் பலர் பசி களை
      கையில் ஏந்திய பாத்திரம் திப்பியம்
      முத்தை முதல்வி அடி பிழைத்தாய் என
      சித்திரம் உரைத்த இதூஉம் திப்பியம்
      இ நிலை எல்லாம் இளங்கொடி செய்தியின்
      பின் அறிவாம் என பெயர்வோன் தன்னை
      அகல் வாய் ஞாலம் ஆர் இருள் உண்ண
      பகல் அரசு ஓட்டி பணை எழுந்து ஆர்ப்ப
      மாலை நெற்றி வான் பிறை கோட்டு
      நீல யானை மேலோர் இன்றி 19-020
      காமர் செங் கை நீட்டி வண்டு படு
      பூ நாறு கடாஅம் செருக்கி கால் கிளர்ந்து
      நிறை அழி தோற்றமொடு தொடர முறைமையின்
      நகர நம்பியர் வளையோர் தம்முடன்
      மகர வீணையின் கிளை நரம்பு வடித்த
      இளி புணர் இன் சீர் எஃகு உளம் கிழி
      பொறாஅ நெஞ்சில் புகை எரி பொத்தி
      பறாஅ குருகின் உயிர்த்து அவன் போய பின்
      உறையுள் குடிகை உள்வரி கொண்ட
      மறு இல் செய்கை மணிமேகலை தான் 19-030
      மாதவி மகள் ஆய் மன்றம் திரிதரின்
      காவலன் மகனோ கைவிடலீ யான்
      காய்பசியாட்டி காயசண்டிகை என
      ஊர் முழுது அறியும் உருவம் கொண்டே
      ஆற்றா மாக்கட்கு ஆற்றும் துணை ஆகி
      ஏற்றலும் இடுதலும் இரப்போர் கடன் அவர்
      மேற்சென்று அளித்தல் விழுத்தகைத்து என்றே
      நூற்பொருள் உணர்ந்தோர் நுனித்தனர் ஆம் என
      முதியாள் கோட்டத்து அகவயின் இருந்த
      அமுதசுரபியை அங்கையின் வாங்கி 19-040
      பதிஅகம் திரிதரும் பை தொடி நங்கை
      அதிர் கழல் வேந்தன் அடி பிழைத்தாரை
      ஒறுக்கும் தண்டத்து உறு சிறைக்கோட்டம்
      விருப்பொடும் புகுந்து வெய்து உயிர்த்து புலம்பி
      ஆங்கு பசியுறும் ஆர் உயிர் மாக்களை
      வாங்கு கைஅகம் வருந்த நின்று ஊட்டலும்
      ஊட்டிய பாத்திரம் ஒன்று என வியந்து
      கோட்டம் காவலர் கோமகன் தனக்கு இ
      பாத்திர தானமும் பைந்தொடி செய்தியும்
      யாப்பு உடைத்தாக இசைத்தும் என்று ஏகி 19-050
      நெடியோன் குறள் உரு ஆகி நிமிர்ந்து தன்
      அடியில் படியை அடக்கிய அ நாள்
      நீரின் பெய்த மூரி வார் சிலை
      மாவலி மருமான் சீர் கெழு திரு மகள்
      சீர்த்தி என்னும் திரு தகு தேவியொடு
      போது அவிழ் பூம்பொழில் புகுந்தனன் புக்கு
      கொம்பர தும்பி குழல் இசை காட்ட
      பொங்கர் வண்டு இனம் நல் யாழ்செய்ய
      வரி குயில் பாட மா மயில் ஆடும்
      விரை பூம் பந்தர் கண்டு உளம் சிறந்தும் 19-060
      புணர் துணை நீங்கிய பொய்கை அன்னமொடு
      மட மயில் பேடையும் தோகையும் கூடி
      இரு சிறை விரித்து ஆங்கு எழுந்து உடன் கொட்பன
      ஒரு சிறை கண்டு ஆங்கு உள் மகிழ்வு எய்தி
      மாமணி வண்ணனும் தம்முனும் பிஞ்ஞையும்
      ஆடிய குரவை இஃது ஆம் என நோக்கியும்
      கோங்கு அலர் சேர்ந்த மாங்கனி தன்னை
      பாங்குற இருந்த பல் பொறி மஞ்ஞையை
      செம் பொன் தட்டில் தீம் பால் ஏந்தி
      பைங் கிளி ஊட்டும் ஓர் பாவை ஆம் என்றும் 19-070
      அணி மலர பூம்பொழில் அகவயின் இருந்த
      பிணவு குரங்கு ஏற்றி பெரு மதர் மழை கண்
      மடவோர்க்கு இயற்றிய மா மணி ஊசல்
      கடுவன் ஊக்குவது கண்டு நகை எய்தியும்
      பாசிலை செறிந்த பசுங் கால் கழையொடு
      வால் வீ செறிந்த மராஅம் கண்டு
      நெடியோன் முன்னொடு நின்றனன் ஆம் என
      தொடி சேர் செங் கையின் தொழுது நின்று ஏத்தியும்
      ஆடல் கூத்தினோடு அவிநயம் தெரிவோர்
      நாட காப்பிய நல் நூல் நுனிப்போர் 19-080
      பண் யாழ் நரம்பில் பண்ணு முறை நிறுப்போர்
      தண்ணுமை கருவி கண் எறி தெரிவோர்
      குழலொடு கண்டம் கொள சீர் நிறுப்போர்
      பழுநிய பாடல் பலரொடு மகிழ்வோர்
      ஆரம் பரிந்த முத்தம் கோப்போர்
      ஈரம் புலர்ந்த சாந்தம் திமிர்வோர்
      குங்கும வருணம் கொங்கையின் இழைப்போர்
      அம் செங்கழுநீர் ஆய் இதழ் பிணைப்போர்
      நல் நெடுங் கூந்தல் நறு விரை குடைவோர்
      பொன்னின் ஆடியில் பொருந்துபு நிற்போர் 19-090
      ஆங்கு அவர் தம்மோடு அகல் இரு வானத்து
      வேந்தனின் சென்று விளையாட்டு அயர்ந்து
      குருந்தும் தளவும் திருந்து மலர செருந்தியும்
      முருகு விரி முல்லையும் கருவிளம் பொங்கரும்
      பொருந்துபு நின்று திருந்து நகை செய்து
      குறுங் கால் நகுலமும் நெடுஞ் செவி முயலும்
      பிறழ்ந்து பாய் மானும் இறும்பு அகலா வெறியும்
      வம் என கூஉய் மகிழ் துணையொடு தன்
      செம்மலர செங் கை காட்டுபு நின்று
      மன்னவன் தானும் மலர கணை மைந்தனும் 19-100
      இன் இளவேனிலும் இளங்கால் செல்வனும்
      எந்திர கிணறும் இடும் கல் குன்றமும்
      வந்து வீழ் அருவியும் மலர பூம் பந்தரும்
      பரப்பு நீர பொய்கையும் கரப்பு நீர கேணியும்
      ஒளித்து உறை இடங்களும் பளிக்கறை பள்ளியும்
      யாங்கணும் திரிந்து தாழ்ந்து விளையாடி
      மகத வினைஞரும் மராட்ட கம்மரும்
      அவந்தி கொல்லரும் யவன தச்சரும்
      தண் தமிழ் வினைஞ்அர் தம்மொடு கூடி
      கொண்டு இனிது இயற்றிய கண் கவர் செய்வினை 19-110
      பவள திரள் கால் பல் மணி போதிகை
      தவள நித்தில தாமம் தாழ்ந்த
      கோண சந்தி மாண் வினை விதானத்து
      தமனியம் வேய்ந்த வகை பெறு வனப்பின்
      பைஞ் சேறு மெழுகா பசும் பொன் மண்டபத்து
      இந்திர திருவன் சென்று இனிது ஏறலும்
      வாயிலுக்கு இசைத்து மன்னவன் அருளால்
      சேய் நிலத்து அன்றியும் செவ்வியின் வணங்கி
      எஞ்சா மண் நசை இகல் உளம் துரப்ப
      வஞ்சியின் இருந்து வஞ்சி சூடி 19-120
      முறம் செவி யானையும் தேரும் மாவும்
      மறம் கெழு நெடு வாள் வயவரும் மிடைந்த
      தலை தார சேனையொடு மலைத்து தலைவந்தோர்
      சிலை கயல் நெடுங் கொடி செரு வேல் தட கை
      ஆர் புனை தெரியல் இளங்கோன் தன்னால்
      காரியாற்று கொண்ட காவல் வெண்குடை
      வலி கெழு தட கை மாவண்கிள்ளி
      ஒளியொடு வாழி ஊழிதோறு ஊழி
      வாழி எம் கோ மன்னவர் பெருந்தகை
      கேள் இது மன்னோ கெடுக நின் பகைஞர் 19-130
      யானைத்தீ நோய்க்கு அயர்ந்து மெய் வாடி இம்
      மா நகர திரியும் ஓர் வம்ப மாதர்
      அருஞ் சிறைக்கோட்டத்து அகவயின் புகுந்து
      பெரும் பெயர் மன்ன நின் வாழ்த்தி
      ஐ பாத்திரம் ஒன்று கொண்டு ஆங்கு
      மொய் கொள் மாக்கள் மொசிக்க ஊண் சுரந்தனள்
      ஊழிதோறு ஊழி உலகம் காத்து
      வாழி எம் கோ மன்னவ என்றலும்
      வருக மடக்கொடி தான் என்று
      அருள் புரி நெஞ்சமொடு அரசன் கூறலின் 19-140
      வாயிலாளரின் மடக்கொடி தான் சென்று
      ஆய் கழல் வேந்தன் அருள் வாழிய என
      தாங்கு அரு தன்மை தவத்தோய் நீ யார்
      யாங்கு ஆகியது இவ் ஏந்திய கடிஞை என்று
      அரசன் கூறலும் ஆய் இழை உரைக்கும்
      விரை தார் வேந்தே நீ நீடு வாழி
      விஞ்சை மகள் யான் விழவு அணி மூதூர்
      வஞ்சம் திரிந்தேன் வாழிய பெருந்தகை
      வானம் வாய்க்க மண் வளம் பெருகுக
      தீது இன்றாக கோமகற்கு ஈங்கு ஈது 19-150
      ஐ கடிஞை அம்பல மருங்கு ஓர்
      தெய்வம் தந்தது திப்பியம் ஆயது
      யானைத்தீ நோய் அரும் பசி கெடுத்தது
      ஊன் உடை மாக்கட்கு உயிர் மருந்து இது என
      யான் செயற்பாலது என் இளங்கொடிக்கு என்று
      வேந்தன் கூற மெல் இயல் உரைக்கும்
      சிறையோர் கோட்டம் சீத்து அருள் நெஞ்சத்து
      அறவோர்க்கு ஆக்குமது வாழியர் என
      அருஞ் சிறை விட்டு ஆங்கு ஆய் இழை உரைத்த
      பெரு தவர் தம்மால் பெரும் பொருள் எய்த
      கறையோர் இல்லா சிறையோர் கோட்டம்
      அறவோர்க்கு ஆக்கினன் அரசு ஆள் வேந்து என் 19-162
      20. உதயகுமரனை காஞ்சனன் வாளால் எறிந்த காதை
      அரசன் ஆணையின் ஆய் இழை அருளால்
      நிர கொடுஞ் சிறை நீக்கிய கோட்டம்
      தீ பிறப்பு உழந்தோர் செய் வினை பயத்தான்
      யாப்பு உடை நல் பிறப்பு எய்தினர் போல
      பொருள் புரி நெஞ்சின் புலவோன் கோயிலும்
      அருள் புரி நெஞ்சத்து அறவோர் பள்ளியும்
      அட்டில் சாலையும் அருந்துநர்
      கட்டு உடை செல்வ களிப்பு உடைத்து ஆக
      ஆய் இழை சென்றதூஉம் ஆங்கு அவள் தனக்கு
      வீயா விழு சீர் வேந்தன் பணித்ததூஉம் 20-010
      சிறையோர் கோட்டம் சீத்து அருள் நெஞ்சத்து
      அறவோர் கோட்டம் ஆக்கிய வண்ணமும்
      கேட்டனன் ஆகி அ தோட்டு ஆர் குழலியை
      மதியோர் எள்ளினும் மன்னவன் காயினும்
      பொதியில் நீங்கிய பொழுதில் சென்று
      பற்றினன் கொண்டு என் பொன் தேர் ஏற்றி
      கற்று அறி விச்சையும் கேட்டு அவள் உரைக்கும்
      முதுக்குறை முதுமொழி கேட்குவன் என்றே
      மது கமழ் தாரோன் மனம் கொண்டு எழுந்து
      பலர் பசி களைய பாவை தான் ஒதுங்கிய 20-020
      உலக அறவியின் ஊடு சென்று ஏறலும்
      மழை சூழ் குடுமி பொதியில் குன்றத்து
      கழை வளர் கான் யாற்று பழ வினை பயத்தான்
      மாதவன் மாதர்க்கு இட்ட சாபம்
      ஈர் ஆறு ஆண்டு வந்தது வாராள்
      காயசண்டிகை என கையறவு எய்தி
      காஞ்சனன் என்னும் அவள் தன் கணவன்
      ஓங்கிய மூதூர் உள் வந்து இழிந்து
      பூத சதுக்கமும் பூ மர சோலையும்
      மாதவர் இடங்களும் மன்றமும் பொதியிலும் 20-030
      தேர்ந்தனன் திரிவோன் ஏந்து இள வன முலை
      மாந்தர் பசி நோய் மாற்ற கண்டு ஆங்கு
      இன்று நின் கையின் ஏந்திய பாத்திரம்
      ஒன்றே ஆயினும் உண்போர் பலரால்
      ஆனைத்தீ நோய் அரும் பசி களைய
      வான வாழ்க்கையர் அருளினர்கொல் என
      பழைமை கட்டுரை பல பாராட்டவும்
      விழையா உள்ளமொடு அவன்பால் நீங்கி
      உதயகுமரன் தன்பால் சென்று
      நரை மூதாட்டி ஒருத்தியை காட்டி 20-040
      தண் அறல் வண்ணம் திரிந்து வேறாகி
      வெண் மணல் ஆகிய கூந்தல் காணாய்
      பிறை நுதல் வண்ணம் காணாயோ நீ
      நரைமையின் திரை தோல் தகையின்று ஆயது
      விறல் வில் புருவம் இவையும் காணாய்
      இறவின் உணங்கல் போன்று வேறாயின
      கழுநீர கண் காண் வழுநீர் சுமந்தன
      குமிழ் மூக்கு இவை காண் உமிழ் சீ ஒழுக்குவ
      நிரை முத்து அனைய நகையும் காணாய்
      சுரை வித்து ஏ பிறழ்ந்து போயின 20-050
      இலவு இதழ செவ் வாய் காணாயோ நீ
      புலவு புண் போல் புலால் புறத்திடுவது
      வள்ளை தாள் போல் வடி காது இவை காண்
      உள் ஊன் வாடிய உணங்கல் போன்றன
      இறும்பூது சான்ற முலையும் காணாய்
      வெறும் பை போல வீழ்ந்து வேறாயின
      தாழ்ந்து ஓசி தெங்கின் மடல் போல் திரங்கி
      வீழ்ந்தன இள வே தோளும் காணாய்
      நரம்பொடு விடு தோல் உகிர தொடர் கழன்று
      திரங்கிய விரல்கள் இவையும் காணாய் 20-060
      வாழை தண்டே போன்ற குறங்கு இணை
      தாழை தண்டின் உணங்கல் காணாய்
      ஆவ கணைக்கால் காணாயோ நீ
      மேவிய நரம்போடு என்பு புறம் காட்டுவ
      தளிர் அடி வண்ணம் காணாயோ நீ
      முளி முதிர் தெங்கின் உதிர் காய் உணங்கல்
      பூவினும் சாந்தினும் புலால் மறைத்து யாத்து
      தூசினும் அணியினும் தொல்லோர் வகுத்த
      வஞ்சம் தெரியாய் மன்னவன் மகன் என
      விஞ்சை மகளாய் மெல் இயல் உரைத்தலும் 20-070
      தற்பாராட்டும் என் சொல் பயன் கொள்ளாள்
      பிறன் பின் செல்லும் போல் நோக்கும்
      மது கமழ் அலங்கல் மன்னவன் மகற்கு
      முதுக்குறை முதுமொழி எடுத்து காட்டி
      பவள கடிகையில் தவள வாள் நகையும்
      குவளை செங் கணும் குறிப்பொடு வழாஅள்
      ஈங்கு இவன் காதலன் ஆதலின் ஏந்து இழை
      ஈங்கு ஒழிந்தனள் என இகல் எரி பொத்தி
      மற்றவள் இருந்த மன்ற பொதியிலுள்
      புற்று அடங்கு அரவின் புக்கு ஒளித்து அடங்கினன் 20-0810
      காஞ்சனன் என்னும் கதிர் வாள் விஞ்சையன்
      ஆங்கு அவள் உரைத்த அரசு இளங் குமரனும்
      களையா வேட்கை கையுதிர்க்கொள்ளான்
      வளை சேர் செங் கை மணிமேகலையே
      காயசண்டிகை ஆய் கடிஞை ஏந்தி
      மாய விஞ்சையின் மனம் மயக்குறுத்தனள்
      அம்பல மருங்கில் அயர்ந்து அறிவுரைத்த இவ்
      வம்பலன் தன்னொடு இவ் வைகு இருள் ஒழியாள்
      இங்கு இவள் செய்தி இடை இருள் யாமத்து
      வந்து அறிகுவன் என மனம் கொண்டு எழுந்து 20-090
      வான்தேர பாகனை மீன் திகழ் கொடியனை
      கருப்பு வில்லியை அருப்பு கணை மைந்தனை
      உயாவு துணையாக வயாவொடும் போகி
      ஊர் துஞ்சு யாமத்து ஒரு தனி எழுந்து
      வேழம் வேட்டு எழும் வெம் புலி போல
      கோயில் கழிந்து வாயில் நீங்கி
      ஆய் இழை இருந்த அம்பலம் அணைந்து
      வேக வெ தீ நாகம் கிடந்த
      போகு உயர் புற்று அளை புகுவான் போல
      ஆகம் தோய்ந்த சாந்து அலர் உறுத்த 20-100
      ஊழ் அடியிட்டு அதன் உள்ளகம் புகுதலும்
      ஆங்கு முன் இருந்த அலர் தார் விஞ்சையன்
      ஈங்கு இவன் வந்தனன் இவள்பால் என்றே
      வெஞ் சின அரவம் நஞ்சு எயிறு அரும்ப
      தன் பெரு வெகுளியின் எழுந்து பை விரித்தென
      இருந்தோன் எழுந்து பெரும் பின் சென்று அவன்
      சுரும்பு அறை மணி தோள் துணிய வீசி
      காயசண்டிகையை கைக்கொண்டு அந்தரம்
      போகுவல் என்றே அவள்பால் புகுதலும்
      நெடு நிலை கந்தின் இடவயின் விளங 20-110
      கடவுள் எழுதிய பாவை ஆங்கு உரைக்கும்
      அணுகல் விஞ்சை காஞ்சன
      மணிமேகலை அவள் மறைந்து உரு எய்தினள்
      காயசண்டிகை தன் கடும் பசி நீங்கி
      வானம் போவழி வந்தது கேளாய்
      அந்தரம் செல்வோர் அந்தரி இருந்த
      விந்த மால் வரை மீமிசை போகார்
      போவார் உளர்அனின் பொங்கிய சினத்தள்
      சாயையின் வாங்கி தன் வயிற்று இடூஉம்
      விந்தம் காக்கும் விந்தா கடிகை 20-120
      அம் மலைமிசை போய் அவள் வயிற்று அடங்கினள்
      கைம்மை கொள்ளேல் காஞ்சன இது கேள்
      ஊழ்வினை வந்து இங்கு உதயகுமரனை
      ஆர் உயிர் உண்டதுஆயினும் அறியாய்
      வெவ் வினை செய்தாய் விஞ்சை காஞ்சன
      அவ் வினை நின்னையும் அகலாது ஆங்கு உறும்
      என்று இவை தெய்வம் கூறலும் எழுந்து
      கன்றிய நெஞ்சில் கடு வினை உருத்து எழ
      விஞ்சையன் போயினன் விலங்கு விண் படர்ந்து என் 20-129
      21. கந்திற்பாவை வருவது உரைத்த காதை
      கடவுள் எழுதிய நெடு நிலை கந்தின்
      குடவயின் அமைத்த நெடு நிலை வாயில்
      முதியாள் கோட்டத்து அகவயின் கிடந்த
      மது மலர குழலி மயங்கினள் எழுந்து
      விஞ்சையன் செய்தியும் வென் வேல் வேந்தன்
      மைந்தற்கு உற்றதும் மன்ற பொதியில்
      கந்து உடை நெடு நிலை கடவுள் பாவை
      அங்கு அவற்கு உரைத்த அற்புத கிளவியும்
      கேட்டனள் எழுந்து கெடுக இவ் உரு என
      தோட்டு அலர குழலி உள்வரி நீங்கி 21-010
      திட்டிவிடம் உண நின் உயிர் போம் நாள்
      கட்டு அழல் ஈமத்து என் உயிர் சுட்டேன்
      உவவன மருங்கில் நின்பால் உள்ளம்
      தவிர்விலேன் ஆதலின் தலைமகள் தோன்றி
      மணிபல்லவத்திடை என்னை ஆங்கு உய்த்து
      பிணிப்பு அறு மாதவன் பீடிகை காட்டி
      என் பிறப்பு உணர்ந்த என்முன் தோன்றி
      உன் பிறப்பு எல்லாம் ஒழிவு இன்று உரைத்தலின்
      பிறந்தோர் இறத்தலும் இறந்தோர் பிறத்தலும்
      அறம் தரு சால்பும் மறம் துன்பமும் 21-020
      யான் நினக்கு உரைத்து நின் இடர் வினை ஒழி
      காயசண்டிகை வடிவு ஆனேன் காதல
      வை வாள் விஞ்சையன் மயக்கு உறு வெகுளியின்
      வெவ் வினை உருப்ப விளிந்தனையோ என
      விழு கிளவியின் வெய்து உயிர்த்து புலம்பி
      அழுதனள் ஏங்கி அயாஉயிர்த்து எழுதலும்
      செல்லல் சேயரி நெடுங்கண்
      அல்லி அம் தாரோன் தன்பால் செல்லல்
      நினக்கு இவன் மகனா தோன்றியதூஉம்
      மனக்கு இனியாற்கு நீ மகள் ஆயதூஉம் 21-030
      பண்டும் பல் பிறப்பு உளவால்
      கண்ட பிறவியே அல்ல காரிகை
      தடுமாறு பிறவி தாழ்தரு தோற்றம்
      விடுமாறு முயல்வோய் விழுமம் கொள்ளேல்
      என்று இவை சொல்லி இரு தெய்வம் உரைத்தலும்
      பொன் திகழ் மேனி பூங்கொடி பொருந்தி
      பொய்யா நாவொடு இ பொதியிலில் பொருந்திய
      தெய்வம் நீயோ திருவடி தொழுதேன்
      விட்ட பிறப்பின் வெய்து உயிர்த்து ஈங்கு இவன்
      திட்டிவிடம் உண செல் உயிர் போயதும் 21-040
      நெஞ்சு நடுங்கி நெடு துயர் கூர யான்
      விஞ்சையன் வாளின் இவன் விளிந்ததூஉம்
      அறிதலும் அறிதியோ அறிந்தனை ஆயின்
      பெறுவேன் தில்ல நின் பேர் அருள் ஈங்கு என
      ஐ அரி நெடுங் கண் ஆய் இழை கேள் என
      தெய்வ கிளவியில் தெய்வம் கூறும்
      காயங்கரை எனும் பேர் யாற்று அடைகரை
      மாயம் இல் மாதவன் வரு பொருள் உரைத்து
      மருள் உடை மாக்கள் மன மாசு கழூஉம்
      பிரமதருமனை பேணினிராகி 21-050
      அடிசில் சிறப்பு யாம் அடிகளுக்கு ஆக்குதல்
      விடியல் வேலை வேண்டினம் என்றலும்
      மாலை நீங்க மனம் மகிழ்வு எய்தி
      காலை தோன்ற வேலையின் வரூஉ
      நடை திறத்து இழுக்கி நல் அடி தளர்ந்து
      மடை கலம் சிதைய வீழ்ந்த மடையனை
      சீலம் நீங்கா செய் தவத்தோர்க்கு
      வேலை பிழைத்த வெகுளி தோன்ற
      தோளும் தலையும் துணிந்து வேறாக
      வாளின் தப்பிய வல் வினை அன்றே 21-060
      விரா மலர கூந்தல் மெல் இயல் நின்னோடு
      இராகுலன் தன்னை இட்டு அகலாதது
      தலைவன் காக்கும் தம் பொருட்டு ஆகிய
      அவல வெவ் வினை என்போர் அறியார்
      அறம் செய் காதல் அன்பினின் ஆயினும்
      மறம் செய்துளது எனின் வல் வினை ஒழியாது
      ஆங்கு அவ் வினை வந்து அணுகும்காலை
      தீங்கு உறும் உயிரே செய் வினை மருங்கின்
      மீண்டுவரு பிறப்பின் மீளினும் மீளும்
      ஆங்கு அவ் வினை காண் ஆய் இழை கணவனை 21-070
      ஈங்கு வந்து இவ் இடர் செய்து ஒழிந்தது
      இன்னும் கேளாய் இளங் கொடி நல்லாய்
      மன்னவன் மகற்கு வருந்து துயர் எய்தி
      மாதவர் உணர்த்திய வாய்மொழி கேட்டு
      காவலன் நின்னையும் காவல்செய்து ஆங்கு இடும்
      இடு சிறை நீக்கி இராசமாதேவி
      கூட வைக்கும் கொட்பினள் ஆகி
      மாதவி மாதவன் மலர் அடி வணங்கி
      தீது கூற அவள் தன்னொடும் சேர்ந்து
      மாதவன் உரைத்த வாய்மொழி கேட்டு 21-080
      காதலி நின்னையும் காவல் நீக்குவள்
      அரைசு ஆள் செல்வத்து ஆபுத்திரன்பால்
      புரையோர பேணி போகலும் போகுவை
      போனால் அவனொடும் பொருளுரை பொருந்தி
      மாநீர் வங்கத்து அவனொடும் எழுந்து
      மாயம் இல் செய்தி மணிபல்லவம் எனும்
      தீவகத்து இன்னும் சேறலும் உண்டால்
      தீவதிலகையின் தன் திறம் கேட்டு
      சாவக மன்னன் தன் நாடு அடைந்த பின்
      ஆங்கு அ தீவம் விட்டு அரு தவன் வடிவு ஆய் 21-090
      பூங் கொடி வஞ்சி மா நகர் புகுவை
      ஆங்கு அ நகரத்து அறி பொருள் வினாவும்
      ஓங்கிய கேள்வி உயர்ந்தோர் பலரால்
      இறைவன் எம் கோன் எவ் உயிர் அனைத்தும்
      முறைமையின் படைத்த முதல்வன் என்போர்களும்
      தன் உரு இல்லோன் பிற உரு படைப்போன்
      அன்னோன் இறைவன் ஆகும் என்போர்களும்
      துன்ப நோன்பு இ தொடர்ப்பாடு அறுத்து ஆங்கு
      இன்ப உலகு உச்சி இருத்தும் என்போர்களும்
      பூத விகார புணர்ப்பு என்போர்களும் 21-100
      பல் வேறு ச படிற்று உரை எல்லாம்
      அல்லி அம் கோதை கேட்குறும் அ நாள்
      இறைவனும் இல்லை இறந்தோர் பிறவார்
      அறனோடு என்னை என்று அறைந்தோன் தன்னை
      பிறவியும் அறவியும் பெற்றியின் உணர்ந்த
      நறு மலர கோதை எள்ளினை நகுதி
      எள்ளினை போலும் இவ் உரை கேட்டு இங்கு
      ஒள்ளியது உரை என உன் பிறப்பு உணர்த்துவை
      ஆங்கு நிற்கொணர்ந்த அரு தெய்வம் மயக்க
      காம்பு அன தோளி கனா மயக்கு உற்றனை 21-110
      என்று அவன் உரைக்கும் இளங் கொடி நல்லாய்
      அன்று என்று அவன் முன் அயர்ந்து ஒழிவாயலை
      தீவினை உறுதலும் செத்தோர் பிறத்தலும்
      வாயே என்று மயக்கு ஒழி மடவாய்
      வழு அறு மரனும் மண்ணும் கல்லும்
      எழுதிய பாவையும் பேசா என்பது
      அறிதலும் அறிதியோ அறியாய்கொல்லோ
      அறியாய் ஆயின் ஆங்கு அது கேளாய்
      முடித்து வரு சிறப்பின் மூதூர் யாங்கணும்
      கொடி தேர் வீதியும் தேவர் கோட்டமும் 21-120
      முது மர இடங்களும் நீர துறைகளும்
      பொதியிலும் மன்றமும் பொருந்துபு நாடி
      காப்பு உடை மா நகர காவலும் கண்ணி
      யாப்பு உடைத்தாக அறிந்தோர் வலித்து
      மண்ணினும் கல்லினும் மரத்தினும் சுவரினும்
      கண்ணிய தெய்வதம் காட்டுநர் வகுக்க
      ஆங்கு அ தெய்வதம் அவ் இடம் நீங்கா
      ஊன் கண்ணினார்கட்கு உற்றதை உரைக்கும்
      என் திறம் கேட்டியோ இளங் கொடி நல்லாய்
      மன் பெரு தெய்வ கணங்களின் உள்ளேன் 21-130
      துவதிகன் என்பேன் தொன்று முதிர் கந்தின்
      மயன் எனக்கு ஒப்பா வகுத்த பாவையின்
      நீங்கேன் யான் என் நிலை அது கேளாய்
      மாந்தர் அறிவது வானவர் அறியார்
      ஓவியச்சேனன் என் உறு துணை தோழன்
      ஆவதை இ நகர்க்கு ஆர் உரைத்தனரோ
      அவனுடன் யான் சென்று ஆடு இடம் எல்லாம்
      உடன் உறைந்தார் போல் ஒழியாது எழுதி
      பூவும் புகையும் பொருந்துவ கொணர்ந்து
      நா நனி வருந்த என் நலம் பாராட்டலின் 21-140
      மணிமேகலை யான் வரு பொருள் எல்லாம்
      துணிவுடன் உரைத்தேன் என் சொல் தேறு என
      தேறேன் அல்லேன் தெய்வ கிளவிகள்
      ஈறு கடைபோக எனக்கு அருள் என்றலும்
      துவதிகன் உரைக்கும் சொல்லலும் சொல்லுவேன்
      வருவது கேளாய் மட கொடி நல்லாய்
      மன் உயிர் நீங்க மழை வளம் கரந்து
      பொன் எயில் காஞ்சி நகர் கவின் அழிய
      ஆங்கு அது கேட்டே ஆர் உயிர் மருந்தாய்
      ஈங்கு இம் முதியாள் இடவயின் வைத்த 21-150
      தெய்வ பாத்திரம் செவ்விதின் வாங்கி
      தையல் நிற்பயந்தோர் தம்மொடு போகி
      அறவணன் தானும் ஆங்கு உளன் ஆதலின்
      செறி தொடி காஞ்சி மா நகர் சேர்குவை
      அறவணன் அருளால் ஆய் தொடி அவ் ஊர
      பிற வணம் ஒழிந்து நின் பெற்றியை ஆகி
      வறன் ஓடு உலகில் மழைவளம் தரூஉம்
      அறன் ஓடு ஏந்தி ஆர் உயிர் ஓம்புவை
      ஆய் தொடிக்கு அவ் ஊர் அறனொடு தோன்றும்
      ஏது நிகழ்ச்சி யாவும் பல உள 21-160
      பிற அறம் உரைத்தோர் பெற்றிமை எல்லாம்
      அறவணன் தனக்கு நீ உரைத்த அ நாள்
      தவமும் தருமமும் சார்பின் தோற்றமும்
      பவம் அறு மார்க்கமும் பான்மையின் உரைத்து
      மற இருள் இரிய மன் உயிர் ஏம் உற
      அற வெயில் விரித்து ஆங்கு அளப்பு இல் இருத்தியொடு
      புத்த ஞாயிறு தோன்றும்காறும்
      செத்தும் பிறந்தும் செம்பொருள் காவா
      இ தலம் நீங்கேன் இளங்கொடி யானும்
      தாயரும் நீயும் தவறு இன்றுஆக 21-170
      வாய்வதாக நின் மனப்பாட்டு அறம் என
      ஆங்கு அவன் உரைத்தலும் மொழி பிழையாய்
      பாங்கு இயல் நல் அறம் பலவும் செய்த பின்
      கச்சி முற்றத்து நின் உயிர் கடைகொள
      உத்தர மகதத்து உறு பிறப்பு எல்லாம்
      ஆண் பிறப்பு ஆகி அருளறம் ஒழியாய்
      மாண்பொடு தோன்றி மயக்கம் களைந்து
      பிறர்க்கு அறம் அருளும் பெரியோன் தனக்கு
      தலைச்சாவகன் ஆய் சார்பு அறுத்து உய்தி
      இன்னும் கேட்டியோ நல் நுதல் மடந்தை 21-180
      ஊங்கண் ஓங்கிய உரவோன் தன்னை
      வாங்கு திரை எடுத்த மணிமேகலா தெய்வம்
      சாதுசக்கரற்கு ஆர் அமுது ஈத்தோய்
      ஈது நின் பிறப்பு என்பது தௌிந்தே
      உவவன மருங்கில் நின்பால் தோன்றி
      மணிபல்லவத்திடை கொணர்ந்தது கேள் என
      துவதிகன் உரைத்தலும் துயர கடல் நீங்கி
      அவதி அறிந்த அணி இழை நல்லாள்
      வலை ஒழி மஞ்ஞையின் மன மயக்கு ஒழிதலும்
      உலகு துயில் எழுப்பினன் மலர் கதிரோன் என் 21-190
      22. சிறை செய் காதை
      கடவுள் மண்டிலம் கார் இருள் சீப்ப
      நெடு நிலை கந்தில் நின்ற பாவையொடு
      முதியோள் கோட்டம் வழிபடல் புரிந்தோர்
      உதயகுமரற்கு உற்றதை உரைப்ப
      சா துயர் கேட்டு சக்கரவாளத்து
      மாதவர் எல்லாம் மணிமேகலை தனை
      இளங்கொடி அறிவதும் உண்டோ இது- என
      துளங்காது ஆங்கு அவள் உற்றதை உரைத்தலும்
      ஆங்கு அவள் தன்னை ஆர் உயிர் நீங்கிய
      வேந்தன் சிறுவனொடு வேறு இடத்து ஒளித்து 22-010
      மா பெருங் கோயில் வாயிலுக்கு இசைத்து
      கோயில் மன்னனை குறுகினர் சென்று ஈங்கு
      உயர்ந்து ஓங்கு உச்சி உவா மதிபோல
      நிவந்து ஓங்கு வெண்குடை மண்ணகம் நிழல் செய
      வேலும் கோலும் அருட்கண் விழிக்க
      தீது இன்று உருள்க நீ ஏந்திய திகிரி
      நினக்கு என வரைந்த ஆண்டுகள் எல்லாம்
      மனக்கு இனிது ஆக வாழிய வேந்தே
      இன்றே அல்ல இ பதி மருங்கில்
      கன்றிய கா கள்ளாட்டு அயர்ந்து 22-020
      பத்தினி பெண்டிர்பால் சென்று அணுகியும்
      நல் தவ பெண்டிர்பின் உளம் போக்கியும்
      தீவினை உருப்ப உயிர் ஈறுசெய்தோர்
      பார் ஆள் வேந்தே பண்டும் பலரால்
      மன் மருங்கு அறுத்த மழு வாள் நெடியோன்
      தன் முன் தோன்றல் தகாது ஒழி நீ என
      கன்னி ஏவலின் காந்த மன்னவன்
      இ நகர் காப்போர் யார் என நினைஇ
      நாவல் அம் தண் பொழில் நண்ணார் நடுக்குற
      காவல் கணிகை தனக்கு ஆம் காதலன் 22-030
      இகழ்ந்தோர காயினும் எஞ்சுதல் இல்லோன்
      ககந்தன் ஆம் என காதலின் கூஉய்
      அரசு ஆள் உரிமை நின்பால் இன்மையின்
      பரசுராமன் நின்பால் வந்து அணுகான்
      அமர முனிவன் அகத்தியன் தனாது
      துயர் நீங்கு கிளவியின் யான் தோன்று அளவும்
      ககந்தன் காத்தல் காகந்தி என்றே
      இயைந்த நாமம் இ பதிக்கு இட்டு ஈங்கு
      உள்வரி கொண்டு அவ் உரவோன் பெயர் நாள்
      தெள்ளு நீர காவிரி ஆடினள் வரூஉம் 22-040
      பார்ப்பனி மருதியை பாங்கோர் இன்மையின்
      யாப்பறை என்றே எண்ணினன் ஆகி
      காவிரி வாயிலில் ககந்தன் சிறுவன்
      நீ வா என்ன நேர் இழை கலங்கி
      மண் திணி ஞாலத்து மழை வளம் தரூஉம்
      பெண்டிர் ஆயின் பிறர் நெஞ்சு புகாஅர்
      புக்கேன் பிறன் உளம் புரி நூல் மார்பன்
      மு தீ பேணும் முறை எனக்கு இல் என
      மா துயர் எவ்வமொடு மனைஅகம் புகாஅள்
      பூத சதுக்கம் புக்கனள் மயங்கி 22-050
      கொண்டோர் பிழைத்த குற்றம் தான் இலேன்
      கண்டோன் நெஞ்சில் கரப்பு எளிதாயினேன்
      வான் தரு கற்பின் மனையறம் பட்டேன்
      யான் செய் குற்றம் அறிகில்லேன்
      பொய்யினைகொல்லோ பூத சதுக்கத்து
      தெய்வம் நீ என சேயிழை அரற்றலும்
      மா பெரும் பூதம் தோன்றி மடக்கொடி
      நீ கேள் என்றே நேர் இழைக்கு உரைக்கும்
      தெய்வம் தொழா அள் கொழுநன் தொழுது எழுவாள்
      பெய் என பெய்யும் பெரு மழை என்ற அ 22-060
      பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்
      பிசியும் நொடியும் பிறர் வா கேட்டு
      விசி பிணி முழவின் விழா கோள் விரும்பி
      கடவுள் பேணல் கடவியை ஆகலின்
      மடவரல் ஏவ மழையும் பெய்யாது
      நிறை உடை பெண்டிர் தம்மே போல
      பிறர் நெஞ்சு சுடூஉம் பெற்றியும் இல்லை
      ஆங்கு அவை ஒழிகுவை ஆயின் ஆய் இழை
      ஓங்கு இரு வானத்து மழையும் நின் மொழியது
      பெட்டாங்கு ஒழுகும் பெண்டிரை போல 22-070
      கட்டாது உன்னை என் கடு தொழில் பாசம்
      மன் முறை எழு நாள் வைத்து அவன் வழூஉம்
      பின்முறை அல்லது என் முறை இல்லை
      ஈங்கு எழு நாளில் இளங்கொடி நின்பால்
      வாங்கா நெஞ்சின் மயரியை வாளால்
      ககந்தன் கேட்டு கடிதலும் உண்டு என
      இகந்த பூதம் எடுத்து உரைசெய்தது அ
      பூதம் உரைத்த நாளால் ஆங்கு அவன்
      தாதை வாளால் தடியவும் பட்டனன்
      இன்னும் கேளாய் இருங் கடல் உடுத்த 22-080
      மண் ஆள் செவத்து மன்னவர் ஏறே
      தருமதத்தனும் தன் மாமன் மகள்
      பெரு மதர் மழை கண் விசாகையும் பேணி
      தெய்வம் காட்டும் திப்பிய ஓவி
      கைவினை கடந்த கண் கவர் வனப்பினர்
      மைத்துனன் முறைமையால் யாழோர் மணவினைக்கு
      ஒத்தனர் என்றே ஊர் முழுது அலர் எழ
      புனையா ஓவியம் புறம் போந்தென்ன
      மனைஅகம் நீங்கி வாள் நுதல் விசாகை
      உலக அறவியினூடு சென்று ஏறி 22-090
      இலகு ஒளி கந்தின் எழுதிய பாவாய்
      உலகர் பெரும் பழி ஒழிப்பாய் நீ என
      மா நகருள்ளீர் மழை தரும் இவள் என
      நா உடை பாவை நங்கையை எடுத்தலும்
      தெய்வம் காட்டி தௌித்திலேன் ஆயின்
      மையல் ஊரோ மன மாசு ஒழியாது
      மைத்துனன் மனையாள் மறு பிறப்பு ஆகுவேன்
      இ பிறப்பு இவனொடும் கூடேன் என்றே
      நற்றாய் தனக்கு நல் திறம் சாற்றி
      மற்று அவள் கன்னி மாடத்து அடைந்த பின் 22-100
      தருமதத்தனும் தந்தையும் தாயரும்
      பெரு நகர் தன்னை பிறகிட்டு ஏகி
      தாழ்தரு துன்பம் தலையெடுத்தாய் என
      நா உடை பாவையை நலம் பல ஏத்தி
      மிக்கோர் உறையும் விழு பெருஞ் செல்வத்து
      தக்கண மதுரை தான் சென்று அடைந்த பின்
      தருமதத்தனும் தன் மாமன் மகள்
      விரி தரு பூங் குழல் விசாகையை அல்லது
      பெண்டிரை பேணேன் இ பிறப்பு ஒழிக என
      கொண்ட விரதம் தன்னுள் கூறி 22-110
      வாணிக மரபின் வரு பொருள் ஈட்டி
      நீள் நிதி செல்வன் ஆய் நில வேந்தனின்
      எட்டி பூ பெற்று இரு முப்பதிற்று யாண்டு
      ஒட்டிய செல்வத்து உயர்ந்தோன் ஆயினன்
      அந்தணாளன் ஒருவன் சென்று ஈங்கு
      என் செய்தனையோ இரு நிதி செல்வ
      பத்தினி இல்லோர் பல அறம் செய்யினும்
      புத்தேள் உலகம் புகாஅர் என்பது
      கேட்டும் அறிதியோ கேட்டனைஆயின்
      நீட்டித்திராது நின் நகர் அடைக என 22-120
      தக்கண மதுரை தான் வறிது ஆக
      இ பதி புகுந்தனன் இரு நில வேந்தே
      மற்று அவன் இவ் ஊர் வந்தமை கேட்டு
      பொன் தொடி விசாகையும் மனை புறம்போந்து
      நல்லாள் நாணாள் பல்லோர் நாப்பண்
      அல்லவை கடிந்த அவன்பால் சென்று
      நம்முள் நாம் அறிந்திலம் நம்மை முன் நாள்
      மம்மர் செய்த வனப்பு யாங்கு ஒளித்தன
      ஆறு ஐந்து இரட்டி யாண்டு உனக்கு ஆயது என்
      நாறு ஐங் கூந்தலும் நரை விராவுற்றன 22-130
      இளமையும் காமமும் யாங்கு ஒளித்தனவோ
      உளன் இல்லாள எனக்கு ஈங்கு உரையாய்
      இ பிறப்பு ஆயின் யான் நின் அடி அடையேன்
      அ பிறப்பு யான் நின் அடித்தொழில் கேட்குவன்
      இளமையும் நில்லாது யாக்கையும்
      வளவிய வான் பெருஞ் செல்வமும் நில்லா
      புத்தேள் உலகம் புதல்வரும் தாரார்
      மிக்க அறமே விழு துணை ஆவது
      தானம் செய் என தருமதத்தனும்
      மாமன் மகள்பால் வான் பொருள் காட்டி 22-140
      ஆங்கு அவன் அவளுடன் செய்த நல் அறம்
      ஓங்கு இரு வானத்து மீனினும் பலவால்
      குமரி மூத்த அ கொடுங் குழை நல்லாள்
      அமரன் அருளால் அகல் நகர் இடூஉம்
      படு பழி நீங்கி பல்லோர் நாப்பண்
      கொடி மிடை வீதியில் வருவோள் குழல்மேல்
      மருதி பொருட்டால் மடிந்தோன் தம்முன்
      கருகிய நெஞ்சினன் காமம் காழ்கொள
      சுரி இரும் பித்தை சூழ்ந்து புற தாழ்ந்த
      விரி பூ மாலை விரும்பினன் வாங்கி 22-150
      தொல்லோர் கூறிய மணம் ஈது ஆம் என
      எல் அவிழ் தாரோன் இடுவான் வேண்டி
      மாலை வாங்க ஏறிய செங் கை
      நீல குஞ்சி நீங்காது ஆகலின்
      ஏறிய செங் கை இழிந்திலது இந்த
      காரிகை பொருட்டு என ககந்தன் கேட்டு
      கடுஞ் சினம் திருகி மகன் துயர் நோக்கான்
      மைந்தன் தன்னை வாளால் எறிந்தனன்
      ஊழிதோறு ஊழி உலகம் காத்து
      வாழி எம் கோ மன்னவ என்று 22-160
      மாதவர் தம்முள் ஓர் மாதவன் கூறலும்
      வீயா விழு சீர் வேந்தன் கேட்டனன்
      இன்றே அல்ல என்று எடுத்து உரைத்து
      நன்று அறி மாதவிர் நலம் பல காட்டினிர்
      இன்றும் உளதோ இவ் வினை உரைம் என
      வென்றி நெடு வேல் வேந்தன் கேட்ப
      தீது இன்று ஆக செங்கோல் வேந்து என
      மாதவர் தம்முள் ஓர் மாதவன் உரைக்கும்
      முடி பொருள் உணர்ந்தோர் முது நீர் உலகில்
      கடி பட்டன ஐந்து உள அவற்றில் 22-170
      கள்ளும் பொய்யும் களவும் கொலையும்
      தள்ளாது ஆகும் காமம் தம்பால்
      ஆங்கு அது கடிந்தோர் அல்லவை என
      நீங்கினர் அன்றே நிறை தவ மாக்கள்
      நீங்கார் அன்றே நீள் நில வேந்தே
      தாங்கா நரகம் தன்னிடை உழப்போர்
      சே அரி நெடுங் கண் சித்திராபதி மகள்
      காதலன் உற்ற கடு துயர் பொறாஅள்
      மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்தனள்
      மற்று அவள் பெற்ற மணிமேகலை தான் 22-180
      முற்றா முலையினள் முதிரா கிளவியள்
      செய்குவன் தவம் என சிற்றிலும் பேர் இலும்
      ஐயம் கொண்டு உண்டு அம்பலம் அடைந்தனள்
      ஆங்கு அவள் அவ் இயல்பினளே ஆயினும்
      நீங்கான் அவளை நிழல் போல் யாங்கணும்
      காரிகை பொருட்டால் காமம் காழ்கொள
      ஆர் இருள் அஞ்சான் அம்பலம் அடைந்தனன்
      காயசண்டிகை வடிவு ஆயினள் காரிகை
      காயசண்டிகையும் ஆங்கு உளள் ஆதலின்
      காயசண்டிகை தன் கணவன் ஆகிய 22-190
      வாய் வாள் விஞ்சையன் ஒருவன் தோன்றி
      ஈங்கு இவள் பொருட்டால் வந்தனன் இவன் என
      ஆங்கு அவன் தீவினை உருத்தது ஆகலின்
      மதி மருள் வெண்குடை மன்ன நின் மகன்
      உதயகுமரன் ஒழியானாக
      ஆங்கு அவள் தன்னை அம்பலத்து ஏற்றி
      ஓங்கு இருள் யாமத்து இவனை ஆங்கு உய்த்து
      காயசண்டிகை தன் கணவன் ஆகிய
      வாய் வாள் விஞ்சையன் தன்னையும் கூஉய்
      விஞ்சை மகள்பால் இவன் வந்தனன் என 22-200
      வஞ்ச விஞ்சையன் மனத்தையும் கலக்கி
      ஆங்கு அவன் தன் கை வாளால் அம்பலத்து
      ஈங்கு இவன் தன்னை எறிந்தது என்று ஏத்தி
      மாதவர் தம்முள் ஓர் மாதவன் உரைத்தலும்
      சோழிக ஏனாதி தன் முகம் நோக்கி
      யான் செயற்பாலது இளங்கோன் தன்னை
      தான் செய்ததனால் தகவு இலன் விஞ்சையன்
      மாதவர் நோன்பும் மடவார் கற்பும்
      காவலன் காவல் இன்றுஎனின் இன்றால் `
      மகனை முறைசெய்த மன்னவன் வழி ஓர் 22-210
      துயர் வினையாளன் தோன்றினான் என்பது
      வேந்தர் தம் செவி உறுவதன் முன்னம்
      ஈங்கு இவன் தன்னையும் ஈமத்து ஏற்றி
      கணிகை மகளையும் காவல் செய்க என்றனன்
      அணி கிளர் நெடு முடி அரசு ஆள் வேந்து என் 22-215
      23. சிறை விடு காதை
      மன்னவன் அருளால் வாசந்தவை எனும்
      நல் நெடுங் கூந்தல் நரை மூதாட்டி
      அரசற்கு ஆயினும் குமரற்கு
      திரு நில கிழமை தேவியர்க்கு ஆயினும்
      கட்டுரை விரித்தும் கற்றவை பகர்ந்தும்
      பட்டவை துடைக்கும் பயம் கெழு மொழியினள்
      இலங்கு அரி நெடுங் கண் இராசமாதேவி
      கலங்கு அஞ்அர் ஒழி கடிது சென்று எய்தி
      அழுது அடி வீழாது ஆய் இழை தன்னை
      தொழுது முன் நின்று தோன்ற வாழ்த்தி 23-010
      கொற்றம் கொண்டு குடி புறங்காத்து
      செற்ற தெவ்வர் தேஎம் தமது ஆக்கியும்
      தருப்பையில் கிடத்தி வாளில் போழ்ந்து
      செரு புகல் மன்னர் செல்வுழி செல்க என
      மூத்து விளிதல் இ குடி பிறந்தோர்க்கு
      நா புடைபெயராது நாணு தகவுடைத்தே
      தன் மண் காத்தன்று பிறர் கொண்டன்று
      என் என படுமோ நின் மகன் மடிந்தது
      மன்பதை காக்கும் மன்னவன் தன் முன்
      துன்பம் கொள்ளேல் என்று அவள் போய பின் 23-020
      கையாற்று உள்ளம் கரந்து அகத்து அடக்கி
      பொய்யாற்று ஒழுக்கம் கொண்டு புறம் மறைத்து
      வஞ்சம் செய்குவன் மணிமேகலையை என்று
      அம் சில் ஓதி அரசனுக்கு ஒரு நாள்
      பிறர் பின் செல்லா பிக்குணி கோலத்து
      அறிவு திரிந்தோன் அரசியல் தான் இலன்
      கரும்பு உடை தட கை காமன் கையற
      அரும் பெறல் இளமை பெரும்பிறிதாக்கும்
      அறிவு தலைப்பட்ட ஆய் இழை தனக்கு
      சிறை தக்கன்று செங்கோல் வேந்து என 23-030
      சிறப்பின் பாலார் மக்கள் அல்லார்
      மறப்பின் பாலார் மன்னர்க்கு என்பது
      அறிந்தனைஆயின் இவ் ஆய் இழை தன்னை
      செறிந்த சிறை நோய் தீர்க்க என்று இறை சொல
      என்னோடு இருப்பினும் இருக்க இவ் இளங்கொடி
      தன் ஓடு எடுப்பினும் தகைக்குநர் இல் என்று
      அங்கு அவள் தனை கூஉய் தன்னோடு
      கொங்கு அவிழ் குழலாள் கோயிலுள் புக்கு ஆங்கு
      அறிவு திரித்து இவ் அகல் நகர் எல்லாம்
      எறிதரு கோலம் யான் செய்குவல் என்றே 23-040
      மயல் பகை ஊட்ட மறு பிறப்பு உணர்ந்தாள்
      அயர்ப்பது செய்யா அறிவினள் ஆ
      கல்லா இளைஞன் ஒருவனை கூஉய்
      வல்லாங்கு செய்து மணிமேகலை தன்
      இணை வளர் இள முலை ஏந்து எழில் ஆகத்து
      புணர் குறி செய்து பொருந்தினள் என்னும்
      பான்மை கட்டுரை பலர்க்கு உரை என்றே
      காணம் பலவும் கை நிறை கொடுப்ப
      ஆங்கு அவன் சென்று அவ் ஆய் இழை இருந்த
      பாங்கில் ஒரு சிறைப்பாடு சென்று அணைதலும் 23-050
      தேவி வஞ்சம் இது என தௌிந்து
      நா இயல் மந்திரம் நடுங்காது ஓதி
      ஆண்மை கோலத்து ஆய் இழை இருப்ப
      காணம் பெற்றோன் கடு துயர் எய்தி
      அரசர் உரிமை இல் ஆடவர் அணுகார்
      நிர கொடு மகள் நினைப்பு அறியேன் என்று
      அகநகர் கைவிட்டு ஆங்கு அவன் போயபின்
      மகனை நோய் செய்தாளை வைப்பது என் என்று
      உய்யா நோயின் ஊண் ஒழிந்தனள் என
      பொ நோய் காட்டி புழுக்கறை அடைப்ப 23-060
      ஊண் ஒழி மந்திரம் உடைமையின் அந்த
      வாள் நுதல் மேனி வருந்தாது இருப்ப
      ஐயென விம்மி ஆய் இழை நடுங்கி
      செய் தவத்தாட்டியை சிறுமை செய்தேன்
      என் மகற்கு உற்ற இடுக்கண் பொறாது
      பொன் நேர் அனையாய் பொறுக்க என்று அவள் தொழ
      நீலபதி தன் வயிற்றில் தோன்றிய
      ஏலம் கமழ் தார் இராகுலன் தன்னை
      அழற்கண் நாகம் ஆர் உயிர் உண்ண
      விழித்தல் ஆற்றேன் என் உயிர் சுடு நாள் 23-070
      யாங்கு இருந்து அழுதனை இளங்கோன் தனக்கு
      பூங்கொடி நல்லாய் பொருந்தாது செய்தனை
      உடற்கு அழுதனையோ உயிர்க்கு
      உடற்கு அழுதனையேல் உன்மகன் தன்னை
      எடுத்து புறங்காட்டு இட்டனர் யாரே
      உயிர்க்கு அழுதனையேல் உயிர் புகும் புக்கில்
      செயப்பாட்டு வினையால் தெரிந்து உணர்வு அரியது
      அவ் உயிர்க்கு அன்பினை ஆயின் ஆய் தொடி
      எவ் உயிர்க்கு ஆயினும் இரங்கல் வேண்டும்
      மற்று உன் மகனை மாபெருந்தேவி 23-080
      செற்ற கள்வன் செய்தது கேளாய்
      மடை கலம் சிதைய வீழ்ந்த மடையனை
      உடல் துணிசெய்து ஆங்கு உருத்து எழும் வல் வினை
      நஞ்சு விழி அரவின் நல் உயிர் வாங்கி
      விஞ்சையன் வாளால் வீட்டியது அன்றே
      யாங்கு அறிந்தனையோ ஈங்கு இது நீ எனின்
      பூங் கொடி நல்லாய் புகுந்தது இது என
      மொய்ம் மலர பூம்பொழில் புக்கது முதலா
      தெய்வ கட்டுரை தௌிந்ததை ஈறா
      உற்றதை எல்லாம் ஒழிவு இன்று உரைத்து 23-090
      மற்றும் உரை செயும் மணிமேகலை தான்
      மயல் பகை ஊட்டினை மறு பிறப்பு உணர்ந்தேன்
      அயர்ப்பதுசெய்யா அறிவினேன் ஆயினேன்
      கல்லா கயவன் கார் இருள் தான் வர
      நல்லாய் ஆண் உரு நான் கொண்டிருந்தேன்
      ஊண் ஒழி மந்திரம் உடைமையின் அன்றோ
      மாண் இழை செய்த வஞ்சம் பிழைத்தது
      அந்தரம் சேறலும் அயல் உரு கோடலும்
      சிந்தையில் கொண்டிலேன் சென்ற பிறவியில்
      காதலற் பயந்தோய் கடு துயர் களைந்து 23-100
      தீது உறு வெவ் வினை தீர்ப்பதுபொருட்டால்
      தையால் உன் தன் தடுமாற்று அவலத்து
      எய்யா மையல் தீர்ந்து இன் உரை கேளாய்
      ஆள்பவர் கலக்குற மயங்கிய நல் நாட்டு
      காருக மடந்தை கணவனும் கைவிட
      ஈன்ற குழவியொடு தான் வேறாகி
      மான்று ஓர் திசை போய் வரையாள் வாழ்வுழி
      புதல்வன் தன்னை ஓர் புரி நூல் மார்பன்
      பதியோர் அறியா பான்மையின் வளர்க்க
      ஆங்கு அ புதல்வன் அவள் திறம் அறியான் 23-110
      தான் புணர்ந்து அறிந்து பின் தன் உயிர் நீத்ததும்
      நீர் நசை வேட்கையின் நெடுங் கடம் உழலும்
      சூல் முதிர் மட மான் வயிறு கிழித்து ஓட
      கான வேட்டுவன் கடுங் கணை துரப்ப
      மான் மறி விழுந்தது கண்டு மனம் மயங்கி
      பயிர குரல் கேட்டு அதன் பான்மையன் ஆகி
      உயிர்ப்பொடு செங் கண் உகுத்த நீர் கண்டு
      ஓட்டி எய்தோன் ஓர் உயிர் துறந்ததும்
      கேட்டும் அறிதியோ வாள் தடங் கண்ணி
      கடாஅ யானைமுன் கள் காமுற்றோர் 23-120
      விடாஅது சென்று அதன் வெண் கோட்டு வீழ்வது
      உண்ட கள்ளின் உறு செருக்கு ஆவது
      கண்டும் அறிதியோ காரிகை நல்லாய்
      பொய்யாற்று ஒழுக்கம் பொருள் என கொண்டோர்
      கையாற்று அவலம் கடந்ததும் உண்டோ
      களவு ஏர் வாழ்க்கையர் உறூஉம் கடு துயர்
      இள வே தோளாய்க்கு இது என வேண்டா
      மன் பேர் உலகத்து வாழ்வோர்க்கு இங்கு இவை
      துன்பம் தருவன துறத்தல் வேண்டும்
      கற்ற கல்வி அன்றால் காரிகை 23-130
      செற்றம் செறுத்தோர் முற்ற உணர்ந்தோர்
      மல்லல் மா ஞாலத்து வாழ்வோர் என்போர்
      அல்லல் மாக்கட்கு இல்லது நிரப்புநர்
      திருந்து ஏர் எல் வளை செல் உலகு அறிந்தோர்
      வருந்தி வந்தோர் அரும் பசி களைந்தோர்
      துன்பம் அறுக்கும் துணி பொருள் உணர்ந்தோர்
      மன்பதைக்கு எல்லாம் அன்பு ஒழியார் என
      ஞான நல் நீர் நன்கனம் தௌித்து
      தேன் ஆர் ஓதி செவிமுதல் வார்த்து
      மகன் துயர் நெருப்பா மனம் விறகு ஆக 2 23-140
      அகம் சுடு வெ தீ ஆய் இழை அவிப்ப
      தேறு படு சில் நீர் போல தௌிந்து
      மாறு கொண்டு ஓரா மனத்தினள் ஆகி
      ஆங்கு அவள் தொழுதலும் ஆய் இழை பொறாஅள்
      தான் தொழுது ஏத்தி தகுதி செய்திலை
      காதலற் பயந்தோய் அன்றியும் காவலன்
      மாபெருந்தேவி என்று எதிர் வணங்கினள் என் 23-147
      24. ஆபுத்திரன் நாடு அடைந்த காதை
      மன்ன குமரனை வஞ்சம் புணர்த்த
      தொல் முது கணிகை தன் சூழ்ச்சியில் போயவன்
      விஞ்சையன் வாளின் விளிந்தோன் என்பது
      நெஞ்சு நடுக்குற கேட்டு மெய் வருந்தி
      மாதவி மகள் தனை வான் சிறை நீ
      காவலன் தேவி கால்கீழ் வீழ்ந்து ஆங்கு
      அரவு ஏர் அல்குல் அரு தவ மடவார்
      உரவோற்கு அளித்த ஒருபத்து ஒருவரும்
      ஆயிரம்கண்ணோன் அவிநயம் வழூஉக்கொள
      மா இரு ஞாலத்து தோன்றிய ஐவரும் 24-010
      ஆங்கு அவன் புதல்வனோடு அரு தவன் முனிந்த
      ஓங்கிய சிறப்பின் ஒருநூற்று நால்வரும்
      திரு கிளர் மணி முடி தேவர் கோன் தன் முன்
      உருப்பசி முனிந்த என் குலத்து ஒருத்தியும்
      ஒன்று கடை நின்ற ஆறு இருபதின்மர் இ
      தோன்று படு மா நகர தோன்றிய நாள் முதல்
      யான் உறு துன்பம் யாவரும் பட்டிலர்
      மாபெருந்தேவி மாதர் யாரினும்
      பூவிலை ஈத்தவன் பொன்றினன் என்று
      மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்ததும் 24-020
      பரந்து படு மனைதொறும் பாத்திரம் ஏந்தி
      அரங கூத்தி சென்று ஐயம் கொண்டதும்
      நகுதல் அல்லது நாட கணிகையர்
      தகுதி என்னார் தன்மை அன்மையின்
      மன்னவன் மகனே அன்றியும் மாதரால்
      இ நகர் உறூஉம் இடுக்கணும் உண்டால்
      உம்பளம் தழீஇய உயர் மணல் நெடுங் கோட்டு
      பொங்கு திரை உலாவும் புன்னை அம் கானல்
      கிளர் மணி நெடுமுடிக்கிள்ளி முன்னா
      இளவேனில் இறுப்ப இறும்பூது சான்ற 24-030
      பூ நாறு சோலை யாரும் இல் ஒரு சிறை
      தானே தமியள் ஒருத்தி தோன்ற
      இன்னள் ஆர்கொல் ஈங்கு இவள் என்று
      மன்னவன் அறியான் மயக்கம் எய்தா
      கண்ட கண்ணினும் கேட்ட செவியினும்
      உண்ட வாயினும் உயிர்த்த மூக்கினும்
      உற்று உணர் உடம்பினும் வெற்றி சிலை காமன்
      மயிலையும் செயலையும் மாவும் குவளையும்
      பயில் இதழ கமலமும் பருவத்து அலர்ந்த
      மலர் வாய் அம்பின் வாசம் கமழ 24-040
      பலர் புறங்கண்டோன் பணிந்து தொழில் கேட்ப
      ஒரு மதி எல்லை கழிப்பினும் உரையாள்
      பொரு அறு பூங்கொடி போயின அ நாள்
      யாங்கு ஒளித்தனள் அவ் இளங்கொடி என்றே
      வேந்தரை அட்டோன் மெல் இயல் தேர்வுழி
      நிலத்தில் குளித்து நெடு விசும்பு ஏறி
      சலத்தில் திரியும் ஓர் சாரணன் தோன்ற
      மன்னவன் அவனை வணங்கி முன் நின்று
      என் உயிர் அனையாள் ஈங்கு ஒளித்தாள் உளள்
      அன்னாள் ஒருத்தியை கண்டிரோ அடிகள் 24-050
      சொல்லுமின் என்று தொழ அவன் உரைப்பான்
      கண்டிலேன் ஆயினும் காரிகை தன்னை
      பண்டு அறிவுடையேன் பார்த்திப கேளாய்
      நாக நாடு நடுக்கு இன்று ஆள்பவன்
      வாகை வேலோன் வளைவணன் தேவி
      வாசமயிலை வயிற்றுள் தோன்றிய
      பீலிவளை என்போள் பிறந்த அ நாள்
      இரவி குலத்து ஒருவன் இணை முலை தோய
      கருவொடு வரும் என கணி எடுத்து உரைத்தனன்
      ஆங்கு அ புதல்வன் வரூஉம் அல்லது 24-060
      பூங்கொடி வாராள் புலம்பல் இது கேள்
      தீவக சாந்தி செய்யா நாள் உன்
      காவல் மா நகர் கடல் வயிறு புகூஉம்
      மணிமேகலை தன் வாய்மொழியால் அது
      தணியாது இந்திர சாபம் உண்டு ஆகலின்
      ஆங்கு பதி அழிதலும் ஈங்கு கெடுதலும்
      வேந்தரை அட்டோய் மெய் என கொண்டு இ
      காசு இல் மா நகர் கடல் வயிறு புகாமல்
      வாசவன் விழா கோள் மறவேல் என்று
      மாதவன் போயின அ நாள் தொட்டும் இ 24-070
      காவல் மா நகர் கலக்கு ஒழியாதால்
      தன் பெயர் மடந்தை துயருறுமாயின்
      மன் பெரு தெய்வம் வருதலும் உண்டு என
      அஞ்சினேன் அரசன் தேவி என்று ஏத்தி
      நல் மனம் பிறந்த நாட கணிகையை
      என் மனை தருக என இராசமாதேவி
      கள்ளும் பொய்யும் காமமும் கொலையும்
      உள்ள களவும் என்று உரவோர் துறந்தவை
      தலைமையா கொண்ட நின் தலைமை இல் வாழ்க்கை
      புலைமை என்று அஞ்சி போந்த பூங்கொடி 24-080
      நின்னொடு போந்து நின் மனை புகுதாள்
      என்னொடு இருக்கும் என்று ஈங்கு இவை சொல்வுழி
      மணிமேகலை திறம் மாதவி கேட்டு
      துணி கயம் துகள் பட துளங்கிய அதுபோல்
      தௌியா சிந்தையள் சுதமதிக்கு உரைத்து
      வளி எறி கொம்பின் வருந்தி மெ நடுங்கி
      அறவணர் அடி வீழ்ந்து ஆங்கு அவர் தம்முடன்
      மற வேல் மன்னவன் தேவி தன்பால் வர
      தேவியும் ஆயமும் சித்திராபதியும்
      மாதவி மகளும் மாதவர காண்டலும் 24-090
      எழுந்து எதிர்சென்று ஆங்கு இணை வளை கையால்
      தொழும்தகை மாதவன் துணை அடி வணங்க
      அறிவு உண்டாக என்று ஆங்கு அவன் கூறலும்
      இணை வளை நல்லாள் இராசமாதேவி
      அரு தவர்க்கு அமைந்த ஆசனம் காட்டி
      திருந்து அடி விளக்கி சிறப்பு செய்த பின்
      யாண்டு பல புக்க நும் இணை அடி வருந்த என்
      காண்தகு நல்வினை நும்மை ஈங்கு அழைத்தது
      நா தொலைவு இல்லைஆயினும் தளர்ந்து
      மூத்த இவ் யாக்கை வாழ்க பல்லாண்டு என 24-100
      தேவி கேளாய் செய் தவ யாக்கையின்
      மேவினேன் ஆயினும் வீழ் கதிர் போன்றேன்
      பிறந்தார் மூத்தார் பிணி நோய் உற்றார்
      இறந்தார் என்கை இயல்பே இது கேள்
      பேதைமை செய்கை உணர்வே அருஉரு
      வாயில் ஊறே நுகர்வே வேட்கை
      பற்றே பவமே தோற்றம் வினை பயன்
      இற்று என வகுத்த இயல்பு ஈர் ஆறும்
      பிறந்தோர் அறியின் பெரும் பேறு அறிகுவர்
      அறியாராயின் ஆழ் நரகு அறிகுவர் 24-110
      பேதைமை என்பது யாது என வினவின்
      ஓதிய இவற்றை உணராது மயங்கி
      இயற்படு பொருளால் கண்டது மறந்து
      முயற்கோடு உண்டு என கேட்டது தௌிதல்
      உலகம் மூன்றினும் உயிர் ஆம்
      அலகு இல பல் உயிர் அறு வகைத்து ஆகும்
      மக்களும் தேவரும் பிரமரும் நரகரும்
      தொக்க விலங்கும் பேயும் என்றே
      நல்வினை தீவினை என்று இரு வகையான்
      சொல்லப்பட்ட கருவினுள் தோன்றி 24-120
      வினை பயன் விளையும்காலை உயிர்கட்கு
      மன பேர் இன்பமும் கவலையும் காட்டும்
      தீவினை என்பது யாது என வினவின்
      ஆய் தொடி நல்லாய் ஆங்கு அது கேளாய்
      கொலையே களவே கா தீவிழைவு
      உலையா உடம்பில் தோன்றுவ முன்றும்
      பொய்யே குறளை கடுஞ் சொல் பயன் இல்
      சொல் என சொல்லில் தோன்றுவ நான்கும்
      வெஃகல் வெகுளல் பொல்லா காட்சி என்று
      உள்ளம் தன்னின் உருப்பன மூன்றும் என 24-130
      பத்து வகையால் பயன் தெரி புலவர்
      இ திறம் படரார் படர்குவர் ஆயின்
      விலங்கும் பேயும் நரகரும் ஆகி
      கலங்கிய உள்ள கவலையில் தோன்றுவர்
      நல்வினை என்பது யாது என வினவின்
      சொல்லிய பத்தின் தொகுதியின் நீங்கி
      சீலம் தாங்கித்தானம் தலைநின்று
      மேல் என வகுத்த ஒரு மூன்று திறத்து
      தேவரும் மக்களும் பிரமரும் ஆகி
      மேவிய மகிழ்ச்சி வினை பயன் உண்குவர் 24-140
      அரைசன் தேவியொடு ஆய் இழை நல்லீர்
      புரை தீர் நல் அறம் போற்றி கேண்மின்
      மறு பிறப்பு உணர்ந்த மணிமேகலை நீ
      பிற அறம் கேட்ட பின் நாள் வந்து உனக்கு
      இ திறம் பலவும் இவற்றின் பகுதியும்
      முத்து ஏர் நகையாய் முன்னுற கூறுவல்
      என்று அவன் எழுதலும் இளங்கொடி எழுந்து
      நன்று அறி மாதவன் நல் அடி வணங்கி
      தேவியும் ஆயமும் சித்திராபதியும்
      மாதவர் நல் மொழி மறவாது உய்ம்மின் 24-150
      இ நகர் மருங்கின் யான் உறைவேன் ஆயின்
      மன்னவன் மகற்கு இவள் வரும் கூற்று என்குவர்
      ஆபுத்திரன் நாடு அடைந்து அதன் பின் நாள்
      மாசு இல் மணிபல்லவம் தொழுது ஏத்தி
      வஞ்சியுள் புக்கு மா பத்தினி தனக்கு
      எஞ்சா நல் அறம் யாங்கணும் செய்குவல்
      எனக்கு இடர் உண்டு என்று இரங்கல் வேண்டா
      மனக்கு இனியீர் என்று அவரையும் வணங்கி
      வெந்துறு பொன் போல் வீழ் கதிர் மறைந்த
      அந்தி மாலை ஆய் இழை போகி 24-160
      உலக அறவியும் முதியாள் குடிகையும்
      இலகு ஒளி கந்தமும் ஏத்தி வலம் கொண்டு
      அந்தரம் ஆறா பறந்து சென்று ஆய் இழை
      இந்திரன் மருமான் இரும் பதி புறத்து ஓர்
      பூம்பொழில் அகவயின் இழிந்து பொறையுயிர்த்து
      ஆங்கு வாழ் மாதவன் அடி இணை வணங்கி
      இ நகர பேர் யாது நகர் ஆளும்
      மன்னவன் யார் என மாதவன் கூறும்
      நாகபுரம் இது நல் நகர் ஆள்வோன்
      பூமிசந்திரன் மகன் புண்ணியராசன் 24-170
      ஈங்கு இவன் பிறந்த அ நாள் தொட்டும்
      ஓங்கு உயர் வானத்து பெயல் பிழைப்பு அறியாது
      மண்ணும் மரனும் வளம் பல தரூஉம்
      உள் நின்று உருக்கும் நோய் உயிர்க்கு இல் என
      தகை மலர தாரோன் தன் திறம் கூறினன்
      அகை மலர பூம்பொழில் அரு தவன் தான் என் 24-176
      25. ஆபுத்திரனோடு மணிபல்லவம் அடைந்த காதை
      அரசன் உரிமையோடு அ பொழில் புகுந்து
      தருமசாவகன் தன் அடி வணங்கி
      அறனும் மறனும் அநித்தமும் நி
      திறனும் துக்கமும் செல் உயிர புக்கிலும்
      சார்பின் தோற்றமும் சார்பு அறுத்து உய்தியும்
      ஆரியன் அமைதியும் அமைவுற கேட்டு
      பெண் இணை இல்லா பெரு வனப்பு உற்றாள்
      கண் இணை இயக்கமும் காமனோடு இயங்கா
      அங்கையில் பாத்திரம் கொண்டு அறம் கேட்கும்
      இங்கு இணை இல்லாள் இவள் யார் என்ன 25-010
      காவலன் தொழுது கஞ்சுகன் உரைப்போன்
      நாவல் அம் தீவில் இ நங்கையை ஒப்பார்
      யாவரும் இல்லை இவள் திறம் எல்லாம்
      கிள்ளிவளவனொடு கெழுதகை வேண்டி
      கள் அவிழ் தாரோய் கலத்தொடும் போகி
      காவிரி படப்பை நல் நகர் புக்கேன்
      மாதவன் அறவணன் இவள் பிறப்பு உணர்ந்தாங்கு
      ஓதினன் என்று யான் அன்றே உரைத்தேன்
      ஆங்கு அவள் இவள் அவ் அகல் நகர் நீங்கி
      ஈங்கு வந்தனள் என்றலும் இளங்கொடி 25-020
      நின் கை பாத்திரம் என் புகுந்தது
      மன் பெருஞ் செல்வத்து மயங்கினை அறியாய்
      அ பிறப்பு அறிந்திலைஆயினும் ஆ வயிற்று
      இ பிறப்பு அறிந்திலை என் செய்தனையோ
      மணிப்பல்லவம் வலம் கொண்டால் அல்லது
      பிணிப்புறு பிறவியின் பெற்றியை அறியாய்
      ஆங்கு வருவாய் அரச நீ என்று அ
      பூங் கமழ் தாரோன்முன்னர புகன்று
      மை அறு விசும்பின் மடக்கொடி எழுந்து
      வெய்யவன் குடபால் வீழாமுன்னர் 25-030
      வான் நின்று இழிந்து மறி திரை உலாவும்
      பூ நாறு அடைகரை எங்கணும் போகி
      மணிப்பல்லவம் வலம் கொண்டு மடக்கொடி
      பிணிப்பு அறு மாதவன் பீடிகை காண்டலும்
      தொழுது வலம் கொள்ள அ தூ மணிப்பீடிகை
      பழுது இல் காட்சி தன் பிறப்பு உணர்த்த
      காயங்கரை எனும் பேர் யாற்று அடைகரை
      மாயம் இல் மாதவன் தன் அடி பணிந்து
      தருமம் கேட்டு தாள் தொழுது ஏத்தி
      பெருமகன் தன்னொடும் பெயர்வோர்க்கு எல்லாம் 25-040
      விலங்கும் நரகரும் பேய்களும் ஆக்கும்
      கலங்கு அஞர தீவினை கடிமின் கடிந்தால்
      தேவரும் மக்களும் பிரமரும் ஆகுதிர்
      ஆகலின் நல்வினை அயராது ஓம்புமின்
      புலவன் முழுதும் பொய் இன்று உணர்ந்தோன்
      உலகு உ கோடற்கு ஒருவன் தோன்றும்
      அ நாள் அவன் அறம் கேட்டோர் அல்லது
      இன்னா பிறவி இழுக்குநர் இல்லை
      மாற்று அருங் கூற்றம் வருவதன் முன்னம்
      போற்றுமின் அறம் என சாற்றி காட்டி 25-050
      நா கடிப்பு ஆக வா பறை அறைந்தீர்
      அவ் உரை கேட்டு நும் அடி தொழுது ஏத்த
      வெவ் உரை எங்கட்கு விளம்பினிர் ஆதலின்
      பெரியவன் தோன்றாமுன்னர் இ பீடிகை
      கரியவன் இட்ட காரணம் தானும்
      மன் பெரும் பீடிகை மாய்ந்து உயிர் நீங்கிய
      என் பிறப்பு உணர்த்தலும் என்று யான் தொழ
      முற்ற உணர்ந்த முதல்வனை அல்லது
      மற்று அ பீடிகை தன்மிசை பொறாஅது
      பீடிகை பொறுத்த பின்னர் அல்லது 25-060
      வானவன் வணங்கான் மற்று அவ்
      பெருமகற்கு அமைத்து பிறந்தார் பிறவியை
      தரும பீடிகை சாற்றுக என்றே
      அருளினன் ஆதலின் ஆய் இழை பிறவியும்
      இருள் அற காட்டும் என்று எடுத்து உரைத்தது
      அன்றே போன்றது அரு தவர் வாய்மொழி
      இன்று எனக்கு என்றே ஏத்தி வலம் கொண்டு
      ஈங்கு இவள் இன்னணம் ஆக இறைவனும்
      ஆங்கு அ பொழில் விட்டு அகநகர் புக்கு
      தந்தை முனியா தாய் பசு ஆக 25-070
      வந்த பிறவியும் மா முனி அருளால்
      குடர தொடர் மாலை சூழாது ஆங்கு ஓர்
      அடர பொன் முட்டையுள் அடங்கிய வண்ணமும்
      மா முனி அருளால் மக்களை இல்லோன்
      பூமிசந்திரன் கொடுபோந்த வண்ணமும்
      ஆய் தொடி அரிவை அமரசுந்தரி எனும்
      தாய் வா கேட்டு தாழ் துயர் எய்தி
      இறந்த பிறவியின் யாய் செய்ததூஉம்
      பிறந்த பிறவியின் பெற்றியும் நினைந்து
      செரு வேல் மன்னர் செவ்வி பார்த்து உணங்க 25-080
      அரைசு வீற்றிருந்து புரையோர பேணி
      நாடகம் கண்டு பாடல் பான்மையின்
      கேள்வி இன் இசை கேட்டு தேவியர்
      ஊடல் செவ்வி பார்த்து நீடாது
      பாடக தாமரை சீறடி பணிந்து
      தே மரு கொங்கையில் குங்குமம் எழுதி
      அம் கையில் துறு மலர் சுரி குழல் சூட்டி
      நறு முகை அமிழ்து உறூஉம் திரு நகை அருந்தி
      மதி மு கருங் கண் செங் கடை கல
      கருப்பு வில்லி அருப்பு கணை தூவ 25-090
      தருக்கிய கா கள்ளாட்டு இகழ்ந்து
      தூ அற துறத்தல் நன்று என சாற்றி
      தௌிந்த நாதன் என் செவிமுதல் இட்ட வித்து
      ஏதம் இன்றாய் இன்று விளைந்தது
      மணிமேகலை தான் காரணம் ஆக என்று
      அணி மணி நீள் முடி அரசன் கூற
      மனம் வேறு ஆயினன் மன் என மந்திரி
      சனமித்திரன் அவன் தாள் தொழுது ஏத்தி
      எம் கோ வாழி என் சொல் கேண்மதி
      நும் கோன் உன்னை பெறுவதன் முன் நாள் 25-100
      பன்னீராண்டு இ பதி கெழு நல் நாடு
      மன் உயிர் மடிய மழை வளம் கரந்து ஈங்கு
      ஈன்றாள் குழவிக்கு இரங்காளாகி
      தான் தனி தின்னும் தகைமையது ஆயது
      காய் வெங் கோடையில் கார் தோன்றியதென
      நீ தோன்றினையே நிரை தார் அண்ணல்
      தோன்றிய பின்னர் உயிர்கட்கு
      வானம் பொய்யாது மண் வளம் பிழையாது
      ஊன் உடை உயிர்கள் உறு பசி அறியா
      நீ ஒழிகாலை நின் நாடு எல்லாம் 25-110
      தாய் ஒழி குழவி போல கூஉம்
      துயர் நிலை உலகம் காத்தல் இன்றி நீ
      உயர் நிலை உலகம் வேட்டனை ஆயின்
      இறுதி உயிர்கள் எய்தவும் இறைவ
      பெறுதி விரும்பினை ஆகுவை அன்றே
      தன் உயிர்க்கு இரங்கான் பிற உயிர் ஓம்பும்
      மன் உயிர் முதல்வன் அறமும் ஈது அன்றால்
      மதி மாறு ஒர்ந்தனை மன்னவ என்றே
      முதுமொழி கூற முதல்வன் கேட்டு
      மணிபல்லவம் வலம் கொள்வதற்கு எழுந்த 25-120
      தணியா வேட்கை தணித்தற்கு அரிதால்
      அரசும் உரிமையும் அகநகர சுற்றமும்
      ஒரு மதி எல்லை காத்தல் நின் கடன் என
      கலம் செய் கம்மியர் வருக என கூஉய்
      இலங்கு நீர புணரி எறி கரை எய்தி
      வங்கம் ஏறினன் மணிபல்லவத்திடை
      தங்காது அ கலம் சென்று சார்ந்து இறுத்தலும்
      புரை தீர் காட்சி பூங்கொடி பொருந்தி
      அரைசன் கலம் என்று அகம் மகிழ்வு எய்தி
      காவலன் தன்னொடும் கடல் திரை உலாவும் 25-130
      தே மலர சோலை தீவகம் வலம் செய்து
      பெருமகன் காணாய் பிறப்பு உணர்விக்கும்
      தரும பீடிகை இது என காட்ட
      வலம் கொண்டு ஏத்தினன் மன்னவன் மன்னவற்கு
      உலந்த பிறவியை உயர் மணி பீடிகை
      கைஅகத்து எடுத்து காண்போர் முகத்தை
      மை அறு மண்டிலம் போல காட்ட
      என் பிறப்பு அறிந்தேன் இடர் தீர்ந்தேன்
      தென் தமிழ் மதுரை செழுங் கலை பாவாய்
      மாரி நடு நாள் வயிறு காய் பசியால் 25-140
      ஆர் இருள் அஞ்சாது அம்பலம் அணைந்து ஆங்கு
      இரந்தூண் வாழ்க்கை என்பால் வந்தோர்க்கு
      அருந்து ஊண் காணாது அழுங்குவேன் கையில்
      நாடு வறம் கூரினும் இவ் ஓடு கூராது
      ஏடா அழியல் எழுந்து இது கொள்க என
      அமுதசுரபி அங்கையில் தந்து என்
      பவம் அறுவித்த வானோர் பாவாய்
      உணர்வில் தோன்றி உரை பொருள் உணர்த்தும்
      மணி திகழ் அவிர் ஒளி மடந்தை நின் அடி
      தேவர் ஆயினும் பிரமர் 25-150
      நா மாசு கழூஉம் நலம் கிளர் திருந்து அடி
      பிறந்த பிறவிகள் பேணுதல் அல்லது
      மறந்து வாழேன் மடந்தை என்று ஏத்தி
      மன்னவன் மணிமேகலையுடன் எழுந்து
      தென் மேற்காக சென்று திரை உலாம்
      கோமுகி என்னும் பொய்கையின் கரை ஓர்
      தூ மலர புன்னை துறை நிழல் இருப்ப
      ஆபுத்திரனோடு ஆய் இழை இருந்தது
      காவல் தெய்வதம் கண்டு உவந்து எய்தி
      அருந்து உயிர் மருந்து முன் அங்கையில் கொண்டு 25-160
      பெரு துயர் தீர்த்த அ பெரியோய் வந்தனை
      அ நாள் நின்னை அயர்த்து போயினர்
      பின் நாள் வந்து நின் பெற்றிமை நோக்கி
      நின் குறி இருந்து தம் உயிர் நீத்தோர்
      ஒன்பது செட்டிகள் உடல் என்பு இவை காண்
      ஆங்கு அவர் இட உண்டு அவருடன் வந்தோர்
      ஏங்கி மெய் வைத்தோர் என்பும் இவை காண்
      ஊர் திரை தொகுத்த உயர் மணல் புதைப்ப
      ஆய் மலர புன்னை அணி நிழல் கீழால்
      அன்பு உடை ஆர் உயிர் அரசற்கு அருளிய 25-170
      என்பு உடை யாக்கை இருந்தது காணாய்
      நின் உயிர் கொன்றாய் உயிர்க்கு இரங்கி
      பின் நாள் வந்த பிறர் உயிர் கொன்றாய்
      கொலைவன் அல்லையோ கொற்றவன் ஆயினை
      பலர் தொழு பாத்திரம் கையின் ஏந்திய
      மடவரல் நல்லாய் நின் தன் மா நகர்
      கடல் வயிறு புக்கது காரணம் கேளாய்
      நாக நல் நாடு ஆள்வோன் தன் மகள்
      பீலிவளை என்பாள் பெண்டிரின் மிக்கோள்
      பனி பகை வானவன் வழியில் தோன்றிய 25-180
      புனிற்று இளங் குழவியொடு பூங்கொடி பொருந்தி இ
      தீவகம் வலம் செய்து தேவர் கோன் இட்ட
      மா பெரும் பீடிகை வலம் கொண்டு ஏத்துழி
      கம்பள செட்டி கலம் வந்து இறுப்ப
      அங்கு அவன்பால் சென்று அவன் திறம் அறிந்து
      கொற்றவன் மகன் இவன் கொள்க என கொடுத்தலும்
      பெற்ற உவகையன் பெரு மகிழ்வு எய்தி
      பழுது இல் காட்சி பைந்தொடி புதல்வனை
      தொழுதனன் வாங்கி துறை பிறக்கு ஒழிய
      கலம் கொண்டு பெயர்ந்த அன்றே கார் இருள் 25-190
      இலங்கு நீர் அடைகரை அ கலம் கெட்டது
      கெடு கல மாக்கள் புதல்வனை கெடுத்தது
      வடி வேல் கிள்ளி மன்னனுக்கு உரைப்ப
      மன்னவன் மகனுக்கு உற்றது பொறாஅன்
      நல் மணி இழந்த நாகம் போன்று
      கானலும் கடலும் கரையும் தேர்வுழி
      வானவன் விழா கோள் மா நகர் ஒழிந்தது
      மணிமேகலா தெய்வம் மற்று அது பொறாஅள்
      அணி நகர் தன்னை அலை கடல் கொள்க என
      இட்டனள் சாபம் பட்டது இதுவால் 25-200
      கடவுள் மா நகர் கடல் கொள பெயர்ந்த
      வடி வேல் தட கை வானவன் போல
      விரிதிரை வந்து வியல் நகர் விழுங்க
      ஒரு தனி போயினன் உலக மன்னவன்
      அரு தவன் தன்னுடன் ஆய் இழை தாயரும்
      வருந்தாது ஏகி வஞ்சியுள் புக்கனர்
      பரப்பு நீர பௌவம் பலர் தொழ காப்போள்
      உரைத்தன கேட்க உறுகுவை ஆயின் நின்
      மன் உயிர் முதல்வனை மணிமேகலா தெய்வம்
      முன் நாள் எடுத்ததும் அ ஆங்கு அவன் 25-210
      அற அரசு ஆண்டதும் அறவணன் தன்பால்
      மறு பிறப்பாட்டி வஞ்சியுள் கேட்பை என்று
      அந்தர தீவகத்து அரு தெய்வம் போய பின்
      மன்னவன் இரங்கி மணிமேகலையுடன்
      துன்னிய தூ மணல் அகழ தோன்றி
      ஊன் பிணி அவிழவும் உடல் என்பு ஒடுங்கி
      தான் பிணி அவிழா தகைமையது ஆகி
      வெண் சுதை வேய்ந்து அவண் இருக்கையின் இருந்த
      பண்பு கொள் யாக்கையின் படிவம் நோக்கி
      மன்னவன் மயங்க மணிமேகலை எழுந்து 25-220
      என் உற்றனையோ இலங்கு இதழ தாரோய்
      நின் நாடு அடைந்து யான் நின்னை ஈங்கு அழைத்தது
      மன்னா நின் தன் மறு பிறப்பு உணர்த்தி
      அந்தர தீவினும் அகன் பெரு
      நின் பெயர் நிறுத்த நீள் நிலம் ஆளும்
      அரசர் தாமே அருளறம் பூண்டால்
      பொருளும் உண்டோ பிற புரை தீர்த்தற்கு
      அறம் எனப்படுவது யாது என கேட்பின்
      மறவாது இது கேள் மன் உயிர்க்கு எல்லாம்
      உண்டியும் உடையும் உறையுளும் அல்லது 25-230
      கண்டது இல் என காவலன் உரைக்கும்
      என் நாட்டு ஆயினும் பிறர்
      நல் நுதல் உரைத்த அறம் செய்கேன்
      என் பிறப்பு உணர்த்தி என்னை நீ படைத்தனை
      நின்திறம் நீங்கல் ஆற்றேன் யான் என
      புன்கண் கொள்ளல் நீ போந்ததற்கு இரங்கி நின்
      மன் பெரு நல் நாடு வாய் எடுத்து அழைக்கும்
      வங்கத்து ஏகுதி வஞ்சியுள் செல்வன் என்று
      அந்தரத்து எழுந்தனள் அணி இழை தான் என் 25-239
      26 வஞ்சி மாநகர் புக்க காதை
      அணி இழை அந்தரம் ஆறா எழுந்து
      தணியா காதல் தாய் கண்ணகியையும்
      கொடை கெழு தாதை கோவலன் தன்னையும்
      கடவுள் எழுதிய படிமம் காணிய
      வேட்கை துரப்ப கோட்டம் புகுந்து
      வணங்கி நின்று குணம் பல ஏத்தி
      அற்பு கடன் நில்லாது நல் தவம் படராது
      கற்பு கடன் பூண்டு நும் முடித்தது
      அருளல் வேண்டும் என்று அழுது முன் நிற்ப
      ஒரு பெரும் பத்தினி கடவுள் ஆங்கு உரைப்போள் 26-010
      எம் இறைக்கு உற்ற இடுக்கண் பொறாது
      வெம்மையின் மதுரை வெவ் அழல் படு நாள்
      மதுராபதி எனும் மா பெரு தெய்வம்
      இது நீர் முன் செய் வினையின் பயனால்
      காசு இல் பூம்பொழில் கலிங்க நல் நாட்டு
      தாய மன்னவர் வசுவும் குமரனும்
      சிங்கபுரமும் செழு நீர கபிலையும்
      அங்கு ஆள்கின்றோர் அடல் செரு உறு நாள்
      மூ இரு காவதம் முன்னுநர் இன்றி
      யாவரும் வழங்கா இடத்தில் பொருள் வேட்டு 26-020
      பல் கலன் கொண்டு பலர் அறியாமல்
      எல் வளையாளோடு அரிபுரம் எய்தி
      பண்ட கலம் பகர் சங்கமன் தன்னை
      கண்டனர் கூற தையல் நின் கணவன்
      பார்த்திபன் தொழில் செயும் பரதன் என்னும்
      தீ தொழிலாளன் தெற்றென பற்றி
      ஒற்றன் இவன் என உரைத்து மன்னற்கு
      குற்றம் இலோனை கொலைபுரிந்திட்டனன்
      ஆங்கு அவன் மனைவி அழுதனள் அரற்றி
      ஏங்கி மெய்பெயர்ப்போள் இறு வரை ஏறி 26-030
      இட்ட சாபம் கட்டியது ஆகும்
      உம்மை வினை வந்து உருத்தல் ஒழியாது எனும்
      மெய்ம்மை கிளவி விளம்பிய பின்னும்
      சீற்றம் கொண்டு செழு நகர் சிதைத்தேன்
      மேற் செய் நல் வினையின் விண்ணவர சென்றேம்
      அவ் வினை இறுதியின் அடு சின பாவம்
      எவ் வகையானும் எய்துதல் ஒழியாது
      உம்பர் இல் வழி இம்பரில் பல் பிறப்பு
      யாங்கணும் இரு வினை உய்த்து உமை போல
      நீங்கு அரும் பிறவி கடலிடை நீந்தி 26-040
      பிறந்தும் இறந்தும் உழல்வோம் பின்னர்
      மறந்தும் மழை மறா மகத நல் நாட்டுக்கு
      ஒரு பெரு திலகம் என்று உரவோர் உரைக்கும்
      கரவு அரும் பெருமை கபிலை அம் பதியின்
      அளப்பு அரும் பாரமிதை அளவு இன்று நிறைத்து
      துளக்கம் இல் புத்த ஞாயிறு தோன்றி
      போதிமூலம் பொருந்தி வந்தருளி
      தீது அறு நால் வகை வாய்மையும் தெரிந்து
      பன்னிரு சார்பின் பகுதி தோற்றமும்
      அ நிலை எல்லாம் அழிவுறு வகையும் 26-050
      இற்று என இயம்பி குற்ற வீடு எய்தி
      எண் அருஞ் சக்கரவாளம் எங்கணும்
      அண்ணல் அற கதிர் விரிக்கும்காலை
      பைந்தொடி தந்தையுடனே பகவன்
      இந்திர விகாரம் ஏழும் ஏத்துதலின்
      துன்ப கதியில் தோற்றரவு இன்றி
      அன்பு உறு மனத்தோடு அவன் அறம் கேட்டு
      துறவி உள்ளம் தோன்றி தொடரும்
      பிறவி நீத்த பெற்றியம் ஆகுவம்
      அ திறம் ஆயினும் அநேக காலம் 26-060
      எத்திறத்தார்க்கும் இருத்தியும் செய்குவம்
      நறை கமழ் கூந்தல் நங்கை நீயும்
      முறைமையின் இந்த மூதூர் அகத்தே
      அவ்வவர் சமயத்து அறி பொருள் கேட்டு
      மெய் வகை இன்மை நினக்கே விளங்கிய
      பின்னர் பெரியோன் பிடக நெறி கடவாய்
      இன்னது இவ் இயல்பு என தாய் எடுத்து உரைத்தலும்
      இளையள் வளையோள் என்று உனக்கு யாவரும்
      விளை பொருள் உரையார் வேற்று உரு கொள்க என
      மை அறு சிறப்பின் தெய்வதம் தந்த 26-070
      மந்திரம் ஓதி ஓர் மாதவன் வடிவு ஆய்
      தேவ குலமும் தெற்றியும் பள்ளியும்
      பூ மலர பொழிலும் பொய்கையும் மிடைந்து
      நல் தவ முனிவரும் கற்று அடங்கினரும்
      நல் நெறி காணிய தொல் நூல் புலவரும்
      எங்கணும் விளங்கிய எயில் புற இருக்கையில்
      செங்குட்டுவன் எனும் செங்கோல் வேந்தன்
      பூத்த வஞ்சி பூவா வஞ்சியில்
      போர தொழில் தானை குஞ்சியில் புனைய
      நில நாடு எல்லை தன் மலை நாடென்ன 26-080
      கைம்மலை களிற்று இனம் தம்முள் மயங்க
      தேரும் மாவும் செறி கழல் மறவரும்
      கார் மயங்கு கடலின் கலி கொள கடைஇ
      கங்கை அம் பேர் யாற்று அடைகரை தங்கி
      வங்க நாவியின் அதன் வடக்கு இழிந்து
      கனக விசயர் முதல் பல வேந்தர்
      அனைவரை வென்று அவர் அம் பொன் முடி மிசை
      சிமையம் ஓங்கிய இமைய மால் வரை
      தெய்வ கல்லும் தன் திரு முடிமிசை
      செய் பொன் வாகையும் சேர்த்திய சேரன்
      வில் திறல் வெய்யோன் தன் புகழ் விளங்க
      பொன் கொடி பெயர படூஉம் நகர பொலிந்தனள்
      திருந்து நல் ஏது முதிர்ந்துளது ஆதலின்
      பொருந்து நால் வாய்மையும் புலப்படுத்தற்கு என் 26-094
      27. ச கணக்கர் தம் திறம் கேட்ட காதை
      நவை அறு நன் பொருள் உரைமினோ என
      ச கணக்கர் தம் திறம் சார்ந்து
      வைதிக மார்க்கத்து அளவை வாதியை
      எய்தினள் எய்தி நின் கடைப்பிடி இயம்பு என
      வேத வியாதனும் கிருதகோடியும்
      ஏதம் இல் சைமினி எனும் இவ் ஆசிரியர்
      பத்தும் எட்டும் ஆறும் பண்புற
      தம் வகையால் தாம் பகர்ந்திட்டனர்
      காண்டல் கருதல் உவமம் ஆகமம்
      ஆண்டைய அருத்தாபத்தியோடு இயல்பு 27-010
      ஐதிகம் அபாவம் மீட்சி ஒழிவறிவு
      எய்தி உண்டாம் நெறி என்று இவை தம்மால்
      பொருளின் உண்மை புலங்கொளல் வேண்டும்
      மருள் இல் காட்சி ஐ வகை ஆகும்
      கண்ணால் வண்ணமும் செவியால் ஓசையும்
      நண்ணிய மூக்கால் நாற்றமும் நாவால்
      சுவையும் மெய்யால் ஊறும் என சொன்ன
      இவை கண்டு கேட்டு உயிர்த்து உண்டு உற்று
      துக்கமும் சுகமும் என துயக்கு அற அறிந்து
      உயிரும் வாயிலும் மனமும் ஊறு இன்றி 27-020
      பயில் ஒளியொடு பொருள் இடம் பழுது இன்றி
      சுட்டல் திரிதல் கவர்கோடல் தோன்றாது
      கிட்டிய தேசம் நாமம் சாதி
      குணம் கிரியையின் அறிவது ஆகும்
      கருத்து அளவு ஆவது
      குறிக்கொள் அனுமானத்து அனுமே
      தகைமை உணரும் தன்மையது ஆகும்
      மூ வகை உற்று அது பொது எச்சம் முதல் ஆம்
      பொது எனப்படுவது சாதன சாத்தியம்
      இவை அந்நுவயம் இன்றாய் இருந்தும் 27-030
      கடம் திகழ் யானை கான ஒலி கேட்டோன்
      உடங்கு எழில் யானை அங்கு உண்டு என உணர்தல்
      எச்சம் என்பது வெள்ள ஏதுவினால்
      நிச்சயித்து அ தலை மழை நிகழ்வு உரைத்தல்
      முதல் என மொழிவது கருக்கொள் முகில் கண்டு
      இது மழை பெய்யும் என இயம்பிடுதல்
      என்னும் ஏதுவின் ஒன்று மு காலம்
      தன்னில் ஒன்றில் சார்ந்து உளதாகி
      மண்ட உயிர் முதல் மாசு இன்றாகி
      காண்டல் பொருளால் கண்டிலது உணர்தல் 27-040
      உவமம் ஆவது ஒப்புமை அளவை
      கவய மா ஆ போலும் என கருதல்
      ஆகம அளவை அறிவன் நூலால்
      போக புவனம் உண்டு என புலங்கொளல்
      அருத்தாபத்தி ஆய்க்குடி கங்கை
      இருக்கும் என்றால் கரையில் என்று எண்ணல்
      இயல்பு யானைமேல் இருந்தோன் தோட்டிற்கு
      அயல் ஒன்று ஈயாது அதுவே கொடுத்தல்
      ஐதிகம் என்பது உலகு மறை இம் மரத்து
      எய்தியது ஓர் பேய் உண்டு என தௌிதல் 27-050
      அபாவம் என்பது இன்மை ஓர் பொருளை
      தவாது அவ் இடத்து தான் இலை என்றல்
      மீட்சி என்பது இராமன் வென்றான் என
      மாட்சி இல் இராவணன் தோற்றமை மதித்தல்
      உள்ள நெறி என்பது நாராச திரிவில்
      கொள்ள தகுவது காந்தம் என கூறல்
      எட்டு உள பிரமாண ஆபாசங்கள்
      சுட்டுணர்வொடு திரி கோடல் ஐயம்
      தேராது தௌிதல் கண்டு உணராமை
      எய்தும் இல் வழக்கு உணர்ந்ததை உணர்தல் 27-060
      நினைப்பு என நிகழ்வ சுட்டுணர்வு எனப்படுவது
      எனை பொருள் உண்மை மாத்திரை காண்டல்
      திரி கோடல் ஒன்றை ஒன்று என்றல்
      விரி கதிர் இப்பியை வெள்ளி என்று உணர்தல்
      ஐயம் என்பது ஒன்றை நிச்சயியா
      மையல் தறியோ மகனோ என்றல்
      தேராது தௌிதல் செண்டு வௌியில்
      ஓராது தறியை மகன் என உணர்தல்
      கண்டு உணராமை கடு மா புலி ஒன்று
      அண்டலை முதலிய கண்டும் அறியாமை 27-070
      இல் வழக்கு என்பது முயற்கோடு ஒப்பன
      சொல்லின் மாத்திரத்தால் கருத்தில் தோன்றல்
      உணர்ந்ததை உணர்தல் உறு பனிக்கு தீ
      புணர்ந்திடல் மருந்து என புலம் கொள நினைத்தல்
      நினைப்பு எனப்படுவது காரணம் நிகழாது
      நினக்கு இவர் தாயும் தந்தையும் என்று
      பிறர் சொல கருதல் இ பெற்றிய அளவைகள்
      பாங்குறும் உலோகாயதமே பௌத்தம்
      சாங்கியம் நையாயிகம் வைசேடிகம்
      மீமாஞ்சகம் ஆம் சமய ஆசிரியர் 27-080
      தாம் பிருகற்பதி சினனே கபிலன்
      அக்கபாதன் கணாதன் சைமினி
      மெய்ப்பிரத்தியம் அனுமானம் சாத்தம்
      உவமானம் அருத்தாபத்தி அபாவம்
      இவையே இப்போது இயன்று உள அளவைகள்
      என்றவன் தன்னை விட்டு இறைவன் ஈசன் என
      நின்ற சைவ வாதி நேர்படுதலும்
      பரசும் நின் தெய்வம் எப்படித்து என்ன
      இரு சுடரோடு இயமானன் ஐம் பூதம் என்று
      எட்டு வகையும் உயிரும் யாக்கையு 27-090
      கட்டி நிற்போனும் கலை உருவினோனும்
      படைத்து விளையாடும் பண்பினோனும்
      துடைத்து துயர் தீர் தோற்றத்தோனும்
      தன்னில் வேறு தான் ஒன்று இலோனும்
      அன்னோன் இறைவன் ஆகும் என்று உரைத்தனன்
      பேர் உலகு எல்லாம் பிரம வாதி ஓர்
      தேவன் இட்ட முட்டை என்றனன்
      காதல் கொண்டு கடல்வணன் புராணம்
      ஓதினன் நாரணன் காப்பு என்று உரைத்தனன்
      கற்பம் கை சந்தம் கால் எண் கண் 27-100
      தெற்றென் நிருத்தம் செவி சிக்கை மூக்கு
      உற்ற வியாகரணம் முகம் பெற்று
      சார்பின் தோன்றா ஆரண வேதக்கு
      ஆதி அந்தம் இல்லை அது நெறி எனும்
      வேதியன் உரையின் விதியும் கேட்டு
      மெய்த்திறம் வழக்கு என விளம்புகின்ற
      எ திறத்தினும் இசையாது இவர் உரை என
      ஆசீவக நூல் அறிந்த புராணனை
      பேசும் நின் இறை யார் நூற்பொருள் யாது என
      எல்லை இல் பொருள்களில் எங்கும் எப்பொழுதும் 27-110
      புல்லி கிடந்து புலப்படுகின்ற
      வரம்பு இல் அறிவன் இறை நூற்பொருள்கள் ஐந்து
      உரம் தரும் உயிரோடு ஒரு நால் வகை அணு
      அவ் அணு உற்றும் கண்டும் உணர்ந்திட
      பெய் வகை கூடி பிரிவதும் செய்யும்
      நிலம் நீர் தீ காற்று என நால் வகையின
      மலை மரம் உடம்பு என திரள்வதும் செய்யும்
      வெவ்வேறு ஆகி விரிவதும் செய்யும்
      அவ் வகை அறிவது உயிர் என படுமே
      வற்பம் ஆகி உறும் நிலம் தாழ்ந்து 27-120
      சொற்படு சீதத்தொடு சுவை உடைத்தாய்
      இழினென நிலம் சேர்ந்து ஆழ்வது நீர் தீ
      தெறுதலும் மேல் சேர் இயல்பும் உடைத்து ஆம்
      காற்று விலங்கி அசைத்தல் கடன் இவை
      வேற்று இயல்பு எய்தும் விபரீதத்தால்
      ஆதி இல்லா பரமாணுக்கள்
      தீதுற்று யாவதும் சிதைவது செய்யா
      புதிதா பிறந்து ஒன்று ஒன்றில் புகுதா
      முது நீர் அணு நில அணுவா திரியா
      ஒன்று இரண்டாகி பிளப்பதும் செய்யா 27-130
      அன்றியும் அவல்போல் பரப்பதும் செய்யா
      உலாவும் தாழும் உயர்வதும் செய்யும்
      குலாம் மலை பிறவா கூடும் பலவும்
      பின்னையும் பிரிந்து தம் தன்மைய ஆகும்
      மன்னிய வயிரமா செறிந்து வற்பமும் ஆம்
      வேய் ஆ துளைபடும் பொருளா முளைக்கும்
      தேயா மதி போல் செழு நில வரைப்பு ஆம்
      நிறைந்த இவ் அணுக்கள் பூதமாய் நிகழின்
      குறைந்தும் ஒத்தும் கூடா வரிசையின்
      ஒன்று முக்கால் அரை கால் ஆய் உறும் 27-140
      துன்று மிக்கதனால் பெயர் சொலப்படுமே
      இ குணத்து அடைந்தால் அல்லது நிலன் ஆ
      சிக்கென்பதுவும் நீராய் இழிவதும்
      தீயா சுடுவதும் காற்றாய் வீசலும்
      ஆய தொழிலை அடைந்திடமாட்டா
      ஓர் அணு தெய்வ கண்ணோர் உணர்குவர்
      தேரார் பூ திரட்சியுள் ஏனோர்
      மாலை போதில் ஒரு மயிர் அறியார்
      சால திரள் மயிர் தோற்றுதல் சாலும்
      கருமம் பிறப்பும் கரு நீல 27-150
      பசும்ம் பிறப்பும் செம்ம்
      பொன்ன் பிறப்பும் வெண்ண்
      என்று இவ் ஆறு பிறப்பினும் மேவி
      பண்புறு வரிசையின் பாற்பட்டு பிறந்தோர்
      கழி வெண் பிறப்பில் கலந்து வீடு அணைகுவர்
      அழியல் வேண்டார் அது உறற்பாலார்
      இது செம்போக்கின் இயல்பு தப்பும்
      அது மண்டலம் என்று அறியல் வேண்டும்
      பெறுதலும் இழத்தலும் இடையூறு உறுதலும்
      உறும் இடத்து எய்தலும் துக்க சுகம் உறுதலும் 27-160
      பெரிது அவை நீங்கலும் பிறத்தலும் சாதலும்
      கருவில் பட்ட பொழுதே கலக்கும்
      இன்பமும் துன்பமும் இவையும் அணு என தகும்
      முன் உள ஊழே பின்னும் உறுவிப்பது
      மற்கலி நூலின் வகை இது என்ன
      சொல் தடுமாற்ற தொடர்ச்சியை விட்டு
      நிகண்ட வாதியை நீ உரை நின்னால்
      புகழும் தலைவன் யார் நூற்பொருள் யாவை
      அ பொருள் நிகழ்வும் கட்டும் வீடும்
      மெய்ப்பட விளம்பு என விளம்பல் உறுவோன் 27-170
      இந்திரர் தொழப்படும் இறைவன் எம்
      தந்த நூற்பொருள் தன்மாத்திகாயமும்
      அதன்மாத்திகாயமும் கால ஆகாயமும்
      தீது இல் சீவனும் பரமாணுக்களும்
      நல்வினையும் தீவினையும் அவ் வினையால்
      செய்வுறு பந்தமும் வீடும் இ திறத்த
      ஆன்ற பொருள் தன் தன்மையது ஆயும்
      தோன்று சார்வு ஒன்றின் தன்மையது ஆயும்
      அநித்தமும் நித்தமும் ஆகி நின்று
      நுனித்த குணத்து ஓர் கணத்தின் கண்ணே 27-180
      தோற்றமும் நிலையும் கேடும் என்னும்
      மாற்று அரு மூன்றும் ஆக்கலும் உரித்தாம்
      நிம்பம் முளைத்து நிகழ்தல் நித்தியம்
      நிம்பத்து அ பொருள் அன்மை அநித்தயம்
      பயற்று தன்மை கெடாது கும்மாயம்
      இயற்றி அ பயறு அழிதலும் ஏது
      தருமாத்திகாயம் தான் எங்கும் உளதாய்
      பொருள்களை நடத்தும் பொருந்த நித்தியமா
      அப்படித்தாகி அதன் மாத்திகாயமும்
      எ பொருள்களையும் நிறுத்தல் இயற்றும் 2 27-190
      காலம் கணிகம் எனும் குறு நிகழ்ச்சியும்
      ஏலும் கற்பத்தின் நெடு நிகழ்ச்சியும்
      ஆக்கும் ஆகாயம் எல்லா பொருட்கும்
      பூக்கும் இடம் கொடுக்கும் புரிவிற்று ஆகும்
      சீவன் உடம்போடு ஒத்து கூடி
      தா இல் சுவை முதலிய புலன்களை நுகரும்
      ஓர் அணு புற்கலம் புற உரு ஆகும்
      சீர்சால் நல்வினை தீவினை அவை செயும்
      வரு வழி இரண்டையும் மாற்றி முன்செய்
      அரு வினை பயன் அனுபவித்து அறுத்திடுதல் 27-200
      அது வீடு ஆகும் என்றனன் அவன்பின்
      இது சாங்கிய மதம் என்று எடுத்து உரைப்போன்
      தனை அறிவு அரிதாய் தான் மு குணமாய்
      மன நிகழ்வு இன்றி மாண்பு அமை பொதுவாய்
      எல்லா பொருளும் தோன்றுதற்கு இடம் என
      சொல்லுதல் மூல பகுதி சித்தத்து
      மான் என்று உரைத்த புத்தி வௌிப்பட்டு
      அதன்கண் ஆகாயம் வௌிப்பட்டு
      வாயு வௌிப்பட்டு அதன்கண் அங்கி
      ஆனது வௌிப்பட்டு அதன்கண் அப்பின் 27-210
      தன்மை வௌிப்பட்டு அதில் மண்
      அவற்றின் கூட்டத்தில் மனம் வௌிப்பட்டு
      ஆர்ப்புறு மனத்து ஆங்கார விகாரமும்
      ஆகாயத்தில் செவி ஒலி விகாரமும்
      வாயுவில் தொக்கும் ஊறு எனும் விகாரமும்
      அங்கியில் கண்ணும் ஒளியும் ஆம் விகாரமும்
      தங்கிய அப்பில் வாய் சுவை எனும் விகாரமும்
      நிலக்கண் மூக்கு நாற்ற விகாரமும்
      சொலப்பட்ட இவற்றில் தொக்கு விகாரமாய்
      வாக்கு பாணி பாதம் பாயுரு உபத்தம் என 27-220
      ஆக்கிய இவை வௌிப்பட்டு இங்கு அறைந்த
      பூத விகாரத்தால் மலை மரம் முதல்
      ஓதிய வௌிப்பட்டு உலகாய் நிகழ்ந்து
      வந்த வழியே இவை சென்று அடங்கி
      அந்தம் இல் பிரளயம் ஆய் இறும் அளவும்
      ஒன்றாய் எங்கும் பரந்து நித்தியம் ஆம்
      அறிதற்கு எளிதாய் மு குணம் அன்றி
      பொறி உணர்விக்கும் பொதுவும் அன்றி
      எ பொருளும் தோன்றுதற்கு இடம் அன்றி
      அ பொருள் எல்லாம் அறிந்திடற்கு உணர்வாய் 27-230
      ஒன்றாய் எங்கும் பரந்து நித்தியமாய்
      நின்று உள உணர்வாய் நிகழ்தரும் புருடன்
      புலம் ஆர் பொருள்கள் இருபத்தைந்து உள
      நிலம் நீர் தீ வளி ஆகாயம்மே
      மெய் வாய் கண் மூக்கு செவி தாமே
      உறு சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்மே
      வாக்கு பாணி பாதம் பாயுரு உபத்தம்
      ஆக்கும் மனோ புத்தி ஆங்கார சித்தம்
      உயிர் எனும் ஆன்மா ஒன்றொடும் ஆம் என
      செயிர் அற செப்பிய திறமும் கேட்டு 27-240
      வைசேடிக நின் வழக்கு உரை என்ன
      பொய் தீர் பொருளும் குணமும் கருமமும்
      சாமானியமும் விசேடமும் கூட்டமும்
      ஆம் ஆறு கூறு அதில் பொருள் என்பது
      குணமும் தொழிலும் உடைத்தாய் எ தொகை
      பொருளுக்கும் ஏது ஆம் அ பொருள் ஒன்பான்
      ஞாலம் நீர் தீ வளி ஆகாயம் திசை
      காலம் ஆன்மா மனம் இவற்றுள் நிலம்
      ஒலி ஊறு நிறம் சுவை நாற்றமொடு ஐந்தும்
      பயில் குணம் உடைத்து நின்ற நான்கும் 27-250
      சுவை முதல் ஒரோ குணம் அவை குறைவு உடைய
      ஓசை ஊறு நிறம் நாற்றம் சுவை
      மாசு இல் பெருமை சிறுமை வன்மை
      மென்மை சீர்மை நொய்ம்மை வடிவம்
      என்னும் நீர்மை பக்கம் முதல் அனேகம்
      கண்ணிய பொருளின் குணங்கள் ஆகும்
      பொருளும் குணமும் கருமம் இயற்றற்கு
      உரிய உண்மை தரும் முதல் பொதுத்தான்
      போதலும் நிற்றலும் பொது குணம் ஆதலின்
      சாதலும் நிகழ்தலும் அ பொருள் தன்மை 27-260
      ஒன்று அணு கூட்டம் குணமும் குணியும் என்று
      ஒன்றிய வாதியும் உரைத்தனன் உடனே
      பூத வாதியை புகல் நீ என்ன
      தாதகி பூவும் கட்டியும் இட்டு
      மற்றும் கூட்ட மது களி பிறந்தாங்கு
      உற்றிடும் பூதத்து உணர்வு தோன்றிடும்
      அவ் உணர்வு அ பூதத்து அழிவுகளின்
      வெவ் வேறு பிரியும் பறை ஓசையின் கெடும்
      உயிரொடும் கூட்டிய உணர்வு உடை பூதமும்
      உயிர் இல்லாத உணர்வு இல் பூதமும் 27-270
      அவ் அ பூத வழி அவை பிறக்கும்
      மெய் வகை இதுவே வேறு உரை விகற்பமும்
      உண்மை பொருளும் உலோகாயதன் உணர்வே
      கண்கூடு அல்லது கருத்து அளவு அழியும்
      இம்மையும் இம்மை பயனும் இ பிறப்பே
      பொய்ம்மை மறுமை உண்டாய் வினை துய்த்தல்
      என்றலும் எல்லா மார்க்கமும் கேட்டு
      நன்று அல ஆயினும் நான் மாறு உரைக்கிலேன்
      பிறந்த முன் பிறப்பை எய்த பெறுதலின்
      அறிந்தோர் உண்டோ என்று நக்கிடுதலும் 27-280
      தெய்வ மயக்கினும் கனா உறு திறத்தினும்
      மையல் உறுவார் மனம் வேறு ஆம் வகை
      ஐயம் அன்றி இல்லை என்றலும் நின்
      தந்தை தாயரை அனுமானத்தால் அலது
      இந்த ஞாலத்து எவ் வகை அறிவாய்
      மெய்யுணர்வு இன்றி மெ பொருள் உணர்வு அரிய
      ஐயம் அல்லது இது சொல்ல பெறாய் என
      உள்வரி கோலமோடு உன்னிய பொருள் உரைத்து
      ஐவகை சமயமும் அறிந்தனள் ஆங்கு என் 27-289
      28. கச்சி மாநகர் புக்க காதை
      ஆங்கு தாயரோடு அறவணர தேர்ந்து
      வாங்கு வில் தானை வானவன் வஞ்சியின்
      வேற்று மன்னரும் உழிஞை வெம் படையும்
      போல் புறம் சுற்றிய புறக்குடி கடந்து
      சுருங்கை தூம்பின் மனை வளர் தோகையர்
      கருங் குழல் கழீஇய கலவை நீரும்
      எந்திர வாவியில் இளைஞரும் மகளிரும்
      தம் தமில் ஆடிய சாந்து கழி நீரும்
      புவி காவலன் தன் புண்ணிய நல் நாள்
      சிவிறியும் கொம்பும் சிதறு விரை நீரும் 28-010
      மேலை மாதவர் பாதம் விளக்கும்
      சீல உபாசகர் செங் கை நறு நீரும்
      அறம் செய் மாக்கள் அகில் முதல் புகைத்து
      நிறைந்த பந்தல் தசும்பு வார் நீரும்
      உறுப்பு முரண் உறாமல் கந்த உத்தியினால்
      செறித்து அரைப்போர் தம் செழு மனை நீரும்
      என்று இ நீரே எங்கும் பாய்தலின்
      கன்றிய கராமும் இடங்கரும் மீன்களும்
      ஒன்றிய புலவு ஒழி உடம்பின ஆகி
      தாமரை குவளை கழுநீர் ஆம்பல் 28-020
      பூமிசை பரந்து பொறி வண்டு ஆர்ப்ப
      இந்திர தனு என இலங்கு அகழ் உடுத்து
      வந்து எறி பொறிகள் வகை மாண்பு உடைய
      கடி மதில் ஓங்கிய இடைநிலை வரைப்பில்
      பசு மிளை பரந்து பல் தொழில் நிறைந்த
      வெள்ளி குன்றம் உள் கிழிந்து அன்ன
      நெடு நிலைதோறும் நிலா சுதை மலரும்
      கொடி மிடை வாயில் குறுகினள் புக்கு
      கடை காப்பு அமைந்த காவலாளர்
      மிடைகொண்டு இயங்கும் வியன் மலி மறுகும் 28-030
      பல் மீன் விலைஞர் வெள் உப்பு பகருநர்
      கள் நொடையாட்டியர் காழியர் கூவியர்
      மை நிண விலைஞர் பாசவர் வாசவர்
      என்னுநர் மறுகும் இருங் கோவேட்களும்
      செம்பு செய்ஞ்ஞ்அரும் கஞ்சகாரரும்
      பைம்பொன் செய்ஞ்ஞ்அரும் பொன் செய் கொல்லரும்
      மரம் கொல் தச்சரும் மண்ணீட்டாளரும்
      வரம் தர எழுதிய ஓவிய மாக்களும்
      தோலின் துன்னரும் துன்ன வினைஞரும்
      மாலைக்காரரும் கால கணிதரும் 28-040
      நலம் தரு பண்ணும் திறனும் வாய்ப்ப
      நிலம் கலம் கண்டம் நிகழ காட்டும்
      பாணர் என்று இவர் பல் வகை மறுகும்
      விலங்கரம் பொரூஉம் வெள் வளை போழ்நரோடு
      இலங்கு மணி வினைஞ்அர் இரீஇய மறுகும்
      வேத்தியல் பொது இயல் என்று இவ் இரண்டின்
      கூத்து இயல்பு அறிந்த கூத்தியர் மறுகும்
      பால் வேறு ஆக எண் வகை பட்ட
      கூலம் குவைஇய கூல மறுகும்
      மாகதர் சூதர் வேதாளிகர் மறுகும் 28-050
      போகம் புரக்கும் பொதுவர் பொலி மறுகும்
      கண் நுழைகல்லா நுண் நூல் கைவினை
      வண்ண அறுவையர் வளம் திகழ் மறுகும்
      பொன் உரை காண்போர் நல் மனை மறுகும்
      பல் மணி பகர்வோர் மன்னிய மறுகும்
      மறையோர் அரு தொழில் குறையா மறுகும்
      அரைசு இயல் மறுகும் அமைச்சு
      எனை பெரு தொழில் செய் ஏனோர் மறுகும்
      மன்றமும் பொதியிலும் சந்தியும் சதுக்கமும்
      புது கோள் யானையும் பொன் தார புரவியும் 28-060
      கதிக்கு உற வடிப்போர் கவின் பெறு வீதியும்
      சேண் ஓங்கு அருவி தாழ்ந்த செய்குன்றமும்
      வேணவா மிகுக்கும் விரை மர காவும்
      விண்ணவர் தங்கள் விசும்பு இடம் மறந்து
      நண்ணுதற்கு ஒத்த நல் நீர் இடங்களும்
      சாலையும் கூடமும் தமனி பொதியிலும்
      கோலம் குயின்ற கொள்கை இடங்களும்
      கண்டு மகிழ்வுற்று கொண்ட வேடமோடு
      அந்தர சாரிகள் அமர்ந்து இனிது உறையும்
      இந்திர விகாரம் என எழில் பெற்று 28-070
      நவை அறு நாதன் நல் அறம் பகர்வோர்
      உறையும் பள்ளி புக்கு இறை வளை நல்லாள்
      கோவலன் தாதை மா தவம் புரிந்தோன்
      பாதம் பணிந்து தன் பாத்திர தானமும்
      தான பயத்தால் சாவக மன்னவன்
      ஊனம் ஒன்று இன்றி உலகு ஆள் செல்வமும்
      செல்வற் கொணர்ந்து அ தீவக பீடிகை
      ஒல்காது காட்ட பிறப்பினை உணர்ந்ததும்
      உணர்ந்தோன் முன்னர் உயர் தெய்வம் தோன்றி
      மனம் கவல் கெடுத்ததும் மா நகர் கடல் கொள 28-080
      அறவண அடிகளும் தாயரும் ஆங்கு விட்டு
      இறவாது இ பதி புகுந்தது கேட்டதும்
      சாவக மன்னன் தன் நாடு எய்த
      தீவகம் விட்டு இ திரு நகர் புகுந்ததும்
      புக்க பின் அந்த பொய் உருவுடனே
      தக்க சமயிகள் தம் திறம் கேட்டதும்
      அவ்வவர் சமயத்து அறி பொருள் எல்லாம்
      செவ்விது அன்மையின் சிந்தை வையாததும்
      நாதன் நல் அறம் கேட்டலை விரும்பி
      மாதவன் தேர்ந்து வந்த வண்ணமும் 28-090
      சொல்லினள் ஆதலின் தூயோய் நின்னை என்
      நல்வினை பயன்கொல் நான் கண்டது என
      தையல் கேள் நின் தாதையும் தாயும்
      செய்த தீவினையின் செழு நகர் கேடுற
      துன்புற விளிந்தமை கேட்டு சுகதன்
      அன்பு கொள் அறத்திற்கு அருகனேன் ஆதலின்
      மனைத்திறவாழ்க்கையை மாயம் என்று உணர்ந்து
      தினைத்தனை ஆயினும் செல்வமும் யாக்கையும்
      நிலையா என்றே நிலைபெற உணர்ந்தே
      மலையா அறத்தின் மா தவம் புரிந்தேன் 28-100
      புரிந்த யான் இ பூங் கொடி பெயர படூஉம்
      திருந்திய நல் நகர் சேர்ந்தது கேளாய்
      குட கோ சேரலன் குட்டுவர் பெருந்தகை
      விடர சிலை பொறித்த வேந்தன் முன் நாள்
      துப்பு அடு செவ் வா துடி இடையாரொடும்
      இ பொழில் புகுந்து ஆங்கு இருந்த எல்லையுள்
      இலங்கா தீவத்து சமனொளி என்னும்
      சிலம்பினை எய்தி வலம் கொண்டு மீளும்
      தரும சாரணர் தங்கிய குணத்தோர்
      கரு முகில் படலத்து ககனத்து இயங்குவோர் 28-110
      அரைசற்கு ஏது அவ் வழி நிகழ்தலின்
      புரையோர் தாமும் இ பூம்பொழில் இழிந்து
      கல் தலத்து இருந்துழி காவலன்விரும்பி
      முன் தவம் உடைமையின் முனிகளை ஏத்தி
      பங்க சேவடி விளக்கி பான்மையின்
      அங்கு அவர்க்கு அறு சுவை நால் வகை அமிழ்தம்
      பாத்திரத்து அளித்து பலபல சிறப்பொடு
      வேத்தவையாரொடும் ஏத்தினன் இறைஞ்சலின்
      பிறப்பின் துன்பமும் பிறவா இன்பமும்
      அறத்தகை முதல்வன் அருளிய வாய்மை 28-120
      இன்ப ஆர் அமுது இறைவன் செவிமுதல்
      துன்பம் நீங்க சொரியும் அ நாள்
      நின் பெரு தாதைக்கு ஒன்பது வழி முறை
      முன்னோன் கோவலன் மன்னவன் தனக்கு
      நீங்கா காதல் பாங்கன் ஆதலின்
      தாங்க நல் அறம் தானும் கேட்டு
      முன்னோர் முறைமையின் படைத்ததை அன்றி
      தன்னான் இயன்ற தனம் பல கோடி
      எழு நாள் எல்லையுள் இரவலர்க்கு ஈத்து
      தொழு தவம் புரிந்தோன் சுகதற்கு இயற்றிய 28-130
      வான் ஓங்கு சிமையத்து வால் ஒளி சயித்தம்
      ஈனோர்க்கு எல்லாம் இடர் கெட இயன்றது
      கண்டு தொழுது ஏத்தும் காதலின் வந்து இ
      தண்டா காட்சி தவத்தோர் அருளி
      காவிரி பட்டினம் கடல் கொளும் என்ற அ
      தூ உரை கேட்டு துணிந்து இவண் இருந்தது
      இன்னும் கேளாய் நல் நெறி மாதே
      தீவினை உருப்ப சென்ற நின் தாதையும்
      தேவரில் தோற்றி முன்செய் தவ பயத்தால்
      ஆங்கு அ தீவினை இன்னும் துய்த்து 28-140
      பூங்கொடி முன்னவன் போதியில் நல் அறம்
      தாங்கிய தவத்தால் தான் தவம் தாங்கி
      காதலி தன்னொடு கபிலை அம் பதியில்
      நாதன் நல் அறம் கேட்டு வீடு எய்தும் என்று
      அற்புத கிளவி அறிந்தோர் கூற
      சொல் பயன் உணர்ந்தேன் தோகை யானும்
      அ நாள் ஆங்கு அவன் அற நெறி கேட்குவன்
      நின்னது தன்மை அ நெடு நிலை கந்தில் துன்னிய
      துவதிகன் உரையின் துணிந்தனை அன்றோ
      தவ நெறி அறவணன் சாற்ற கேட்டனன் 28-150
      ஆங்கு அவன் தானும் நின் அறத்திற்கு ஏது
      பூங்கொடி கச்சி மா நகர் ஆதலின்
      மற்று அம் மா நகர் மாதவன் பெயர் நாள்
      பொன் தொடி தாயரும் அ பதி படர்ந்தனர்
      அன்னதை அன்றியும் அணி இழை கேளாய்
      பொன் எயில் காஞ்சி நாடு கவின் அழிந்து
      மன் உயிர் மடிய மழை வளம் கரத்தலின்
      அ நகர் மாதவர்க்கு ஐயம் இடுவோர்
      இன்மையின் இ நகர் எய்தினர் காணாய்
      ஆர் உயிர் மருந்தே அ நாட்டு அகவயின் 28-160
      கார் என தோன்றி காத்தல் நின் கடன் என
      அரு தவன் அருள ஆய் இழை வணங்கி
      திருந்திய பாத்திரம் செங் கையின் ஏந்தி
      கொடி மதில் மூதூர குடக்கண் நின்று ஓங்கி
      வட திசை மருங்கின் வானத்து இயங்கி
      தேவர் கோமான் காவல் மாநகர்
      மண் மிசை கிடந்தென வளம் தலைமயங்கிய
      பொன் நகர் வறிதா புல்லென்று ஆயது
      கண்டு உளம் கசிந்த ஒண் தொடி நங்கை
      பொன் கொடி மூதூர புரிசை வலம் கொண்டு 28-170
      நடு நகர் எல்லை நண்ணினள் இழிந்து
      தொடு கழல் கிள்ளி துணை இளங்
      செம் பொன் மா சினை திருமணி பாசடை
      பைம் பூம் போதி பகவற்கு இயற்றிய
      சேதியம் தொழுது தென்மேற்கு ஆக
      தாது அணி பூம்பொழில் தான் சென்று எய்தலும்
      வையம் காவலன் தன் பால் சென்று
      கைதொழுது இறைஞ்சி கஞ்சுகன் உரைப்போன்
      கோவலன் மடந்தை குணவதம் புரிந்தோள்
      நாவல் அம் தீவில் தான் நனி மிக்கோள் 28-180
      அங்கையின் ஏந்திய அமுதசுரபியொடு
      தங்காது இ பதி தருமதவனத்தே
      வந்து தோன்றினள் மா மழை போல் என
      மந்திர சுற்றமொடு மன்னனும் விரும்பி
      கந்திற்பாவை கட்டுரை எல்லாம்
      வாய் ஆகின்று என வந்தித்து ஏத்தி
      ஆய் வளை நல்லாள் தன்னுழை சென்று
      செங்கோல் கோடியோ செய் தவம் பிழைத்தோ
      கொங்கு அவிழ் குழலார் கற்பு குறைபட்டோ
      நலத்தகை நல்லாய் நல் நாடு எல்லாம் 28-190
      அலத்தல்காலை ஆகியது அறியேன்
      மயங்குவேன் முன்னர் ஓர் மா தெய்வம் தோன்றி
      உயங்காதொழி நின் உயர் தவத்தால் ஓர்
      காரிகை தோன்றும் அவள் பெருங் கடிஞையின்
      ஆருயிர் மருந்தால் அகல் நிலம் உய்யும்
      ஆங்கு அவள் அருளால் அமரர் கோன் ஏவலின்
      தாங்கா மாரியும் தான் நனி பொழியும்
      அன்னாள் இந்த அகல் நகர் புகுந்த
      பின் நாள் நிகழும் பேர் அறம் பலவால்
      கார் வறம் கூரினும் நீர் கூராது 28-200
      பார் அகம் விதியின் பண்டையோர் இழைத்த
      கோமுகி என்னும் கொழு நீர் இலஞ்சியொடு
      மா மணிபல்லவம் வந்தது ஈங்கு என
      பொய்கையும் பொழிலும் புனைமின் என்று அறைந்து அ
      தெய்வதம் போய பின் செய்து யாம் அமைத்தது
      இவ் இடம் என்றே அவ் காட்ட அ
      தீவகம் போன்ற காஅகம் பொருந்தி
      கண்டு உளம் சிறந்த காரிகை நல்லாள்
      பண்டை எம் பிறப்பினை பான்மையின் காட்டிய
      அங்கு அ பீடிகை இது என அறவோன் 28-210
      பங்க பீடிகை பான்மையின் வகுத்து
      தீவதிலகையும் திரு மணிமேகலா
      மா பெரு தெய்வமும் வந்தித்து ஏத்துதற்கு
      ஒத்த கோயிலுள் அத்தக புனைந்து
      விழவும் சிறப்பும் வேந்தன் இயற்ற
      தொழுதகை மாதர் தொழுதனள் ஏத்தி
      பங்க பீடிகை பசி பிணி மருந்து எனும்
      அங்கையின் ஏந்திய அமுதசுரபியை
      வைத்து நின்று எல்லா உயிரும் வருக என
      பைத்து அரவு அல்குல் பாவை தன் கிளவியின் 28-220
      மொய்த்த மூ அறு பாடை மாக்களில்
      காணார் கேளார் கால் முடம் ஆனோர்
      பேணா மாக்கள் பேசார் பிணித்தோர்
      படிவ நோன்பியர் பசி நோய் உற்றோர்
      மடி நல்கூர்ந்த மாக்கள் யாவரும்
      பல் நூறாயிரம் விலங்கின் தொகுதியும்
      மன் உயிர் அடங்கலும் வந்து ஒருங்கு ஈண்டி
      அருந்தியோர்க்கு எல்லாம் ஆர் உயிர் மருந்து ஆய்
      பெரு தவர் கை பெய் பிச்சையின் பயனும்
      நீரும் நிலமும் காலமும் கருவியும் 28-230
      சீர் பெற வித்திய வித்தின் விளைவும்
      பெருகியதென்ன பெரு வளம் சுரப்ப
      வசி தொழில் உதவி வளம் தந்தது என
      பசி பிணி தீர்த்த பாவையை ஏத்தி
      செல்லும்காலை தாயர் தம்முடன்
      அல்லவை கடிந்த அறவண அடிகளும்
      மல்லல் மூதூர் மன் உயிர் முதல்வி
      நல் அறச்சாலை நண்ணினர் சேறலும்
      சென்று அவர் தம்மை திருவடி வணங்கி
      நன்று என விரும்பி நல் அடி கழுவி 28-240
      ஆசனத்து ஏற்றி அறு சுவை நால் வகை
      போனகம் ஏந்தி பொழுதினில் கொண்டபின்
      பாசிலை திரையலும் பளிதமும் படைத்து
      வாய்வது ஆக என் மனப்பாட்டு அறம் என
      மாயை விட்டு இறைஞ்சினள் மணிமேகலை என் 28-245
      29. தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை
      இறைஞ்சிய இளங்கொடி தன்னை வாழ்த்தி
      அறம் திகழ் நாவின் அறவணன் உரைப்போன்
      வென் வேல் கிள்ளிக்கு நாகநாடு ஆள்வோன்
      தன் மகள் பீலிவளை தான் பயந்த
      புனிற்று இளங் குழவியை தீவகம் பொருந்தி
      தனி கல கம்பள செட்டி கை தரலும்
      வணங்கி கொண்டு அவன் வங்கம் ஏற்றி
      கொணர்ந்திடும் அ நாள் கூர் இருள் யாமத்து
      அடைகரைக்கு அணித்தா அம்பி கெடுதலும்
      மரக்கலம் கெடுத்தோன் மைந்தனை காணாது 29-010
      அரைசற்கு உணர்த்தலும் அவன் அயர்வுற்று
      விரைவனன் தேடி விழாக்கோள் மறப்ப
      தன் விழா தவிர்தலின் வானவர் தலைவன்
      நின் உயிர தந்தை நெடுங் குலத்து உதித்த
      மன் உயிர் முதல்வன் மகர வேலையுள்
      முன்னிய வங்கம் முங்கி கேடுற
      பொன்னின் ஊசி பசுங் கம்பளத்து
      துன்னியதென்ன தொடு கடல் உழந்துழி
      எழு நாள் எல்லை இடுக்கண் வந்து எய்தா
      வழுவா சீலம் வாழ்மையின் கொண்ட 29-020
      பான்மையின் தனாது பாண்டு கம்பளம்
      தான் நடுக்குற்ற தன்மை நோக்கி
      ஆதி முதல்வன் போதி மூலத்து
      நாதன் ஆவோன் நளி நீர பரப்பின்
      எவ்வம் உற்றான் தனது தீர் என
      பவ்வத்து எடுத்து பாரமிதை முற்றவும்
      அற அரசு ஆளவும் ஆழி உருட்டவும்
      பிறவிதோறு உதவும் பெற்றியள் என்றே
      சாரணர் அறிந்தோர் காரணம் கூற
      அந்த உதவிக்கு ஆங்கு அவள் பெயரை 29-030
      தந்தை இட்டனன் நினை தையல் நின் துறவியும்
      அன்றே கனவில் நனவென அறைந்த
      மென் பூ மேனி மணிமேகலா தெய்வம்
      என்பவட்கு ஒப்ப அவன் இடு சாபத்து
      நகர் கடல் கொள்ள நின் தாயரும் யானும்
      பகரும் நின் பொருட்டால் இ பதி படர்ந்தனம்
      என்றலும் அறவணன் தாள் இணை இறைஞ்சி
      பொன் திகழ் புத்த பீடிகை போற்றும்
      தீவதிலகையும் இ திறம் செப்பினள்
      ஆதலின் அன்ன அணி நகர் மருங்கே 29-040
      வேற்றுரு கொண்டு வெவ் வேறு உரைக்கும்
      நூல் துறை சமய நுண் பொருள் கேட்டே
      அவ் உரு என்ன ஐ வகை சமயமும்
      செவ்விது அன்மையின் சிந்தையின் வைத்திலேன்
      அடிகள் மெய்ப்பொருள் அருளுக என்ன
      நொடிகுவென் நங்காய் நுண்ணிதின் கேள் நீ
      ஆதி சினேந்திரன் அளவை இரண்டே
      ஏதம் இல் பிரத்தியம் கருத்து அளவு என்ன
      சுட்டுணர்வை பிரத்தியக்கம் என சொலி
      விட்டனர் நாம சாதி குணம் கிரியைகள் 29-050
      மற்று அவை அனுமானத்தும் அடையும் என
      காரண காரிய சாமானி கருத்து
      ஓரின் பிழைக்கையும் உண்டு பிழையாதது
      கனலில் புகைபோல் காரி கருத்தே
      ஏனை அளவைகள் எல்லாம் கருத்தினில்
      ஆன முறைமையின் அனுமானம் ஆம் பிற
      பக்கம் ஏது திட்டாந்தம் உபநயம்
      நிகமனம் என்ன ஐந்து உள அவற்றில்
      பக்கம் இம் மலை நெருப்புடைத்து என்றல்
      புகையுடைத்து ஆதலால் எனல் பொருந்து ஏது 29-060
      வகை அமை அடுக்களை போல் திட்டாந்தம்
      உபநயம் மலையும் புகையுடைத்து என்றல்
      நிகமனம் புகையுடைத்தே நெருப்புடைத்து என்றல்
      நெருப்புடைத்து அல்லாது யாதொன்று அது புகை
      பொருத்தம் இன்று புனல்போல் என்றல்
      மேவிய பக்கத்து மீட்சி மொழி ஆய்
      வைதன்மிய திட்டாந்தம் ஆகும்
      தூய காரிய ஏது சுபாவம்
      ஆயின் சத்தம் அநித்தம் என்றல்
      பக்கம் பண்ணப்படுதலால் எனல் 29-070
      பக்க தன்ம வசனம் ஆகும்
      யாதொன்று பண்ணப்படுவது
      அநித்தம் கடம் போல் என்றல் சபக்க
      தொடர்ச்சி யாதொன்று அநித்தம் அல்லாதது
      பண்ண படாதது ஆகாசம் போல் எனல்
      விபக்க தொடர்ச்சி மீட்சி மொழி என்க
      அநன்னுவயத்தில் பிரமாணம் ஆவது
      இவ் வெள்ளிடைக்கண் குடம் இலை என்றல்
      செவ்விய பக்கம் தோன்றாமையில் எனல்
      பக்க தன்ம வசனம் ஆகும் 29-080
      இன்மையின் கண்டிலம் முயற்கோடு என்றல்
      அ நெறி சபக்கம் யாதொன்று உண்டு அது
      தோற்றரவு அடுக்கும் கை நெல்லிபோல் எனல்
      ஏற்ற விபக்கத்து உரை எனல் ஆகும்
      இவ்வகை ஏது பொருள் சாதிப்பன
      என்னை காரியம் புகை சாதித்தது என்னின்
      புகை உள இடத்து நெருப்பு உண்டு என்னும்
      அன்னுவயத்தாலும் நெருப்பு இலா இடத்து
      புகை இல்லை என்னும் வெதிரேகத்தாலும்
      புகஈ நெருப்பை சாதித்தது என்னின் 29-090
      நேரிய புகையில் நிகழ்ந்து உண்டான
      ஊர்த்த சாமம் கௌடில
      வாய்த்த நெருப்பின் வரு காரியம் ஆதலின்
      மேல் நோக்கி கறுத்திருப்ப பகைத்திருப்ப
      தாமே நெருப்பை சாதிக்க வேண்டும்
      அன்னுவயம் சாதிக்கின் முன்னும்
      கழுதையையும் கணிகையையும்
      தம்மில் ஒருகாலத்து ஓர் இடத்தே
      அன்னுவயம் கண்டான் பிற்காலத்து
      கழுதையை கண்ட இடத்தே கணிகையை 29-100
      அனுமிக்க வேண்டும் அது கூடா நெருப்பு
      இலா இடத்து புகை இலை எனல் நேர் அ
      திருத்தகு வெதிரேகம் சாதிக்கும் என்னின்
      நாய் வால் இல்லா கழுதையின் பிடரில்
      நரி வாலும் இலையா காணப்பட்ட
      அதனையே கொண்டு பிறிதோர் இடத்து
      நரி வாலினால் நாய் வாலை அனுமித்தல்
      அரிதாம் அதனால் அதுவும் ஆகாது
      ஒட்டிய உபநயம் நிகமனம் இரண்டும்
      திட்டாந்தத்திலே சென்று அடங்கும் 29-110
      பக்கம் ஏது திட்டாந்தங்கள்
      ஒக்க நல்லவும் தீயவும் உள அதில்
      வௌிப்பட்டுள்ள தன்மியினையும்
      வௌிப்பட்டுள சாத்திய தன்மத்திறம்
      பிறிதின் வேறு ஆம் வேறுபாட்டினையும்
      தன்கண் சார்த்திய நயம் தருதல் உடையது
      நன்கு என் பக்கம் என நாட்டுக அது தான்
      சத்தம் அநித்தம் நித்தம் என்று ஒன்றை
      பற்றி நாட்டப்படுவது தன்மி
      சத்தம் சாத்திய தன்மம் ஆவது 29-120
      நித்த அநித்தம் நிகழும் நல் ஏது
      மூன்றா தோன்றும் மொழிந்த பக்கத்து
      ஊன்றி நிற்றலும் சபக்கத்து உண்டாதலும்
      விபக்கத்து இன்றியே விடுதலும் சபக்கம்
      சாதிக்கின் பொருள் தன்னால் பக்கத்து
      ஓதிய பொது வகை ஒன்றி இருத்தல்
      சத்த அநித்தம் சாத்தியம் ஆயின்
      ஒத்த அநித்தம் கட ஆதி போல் எனல்
      விபக்கம் விளம்பில் யாதொன்று
      அநித்தம் அல்லாதது பண்ண படாதது 29-130
      ஆ அகாசம் போல் என்று ஆகும்
      பண்ணப்படுதலும் செயலிடை தோன்றலும்
      நண்ணிய பக்கம் சபக்கத்திலும் ஆய்
      விபக்கத்து இன்றி அநித்தத்தினுக்கு
      மிக தரும் ஏதுவாய் விளங்கிற்று என்க
      ஏதம் இல் திட்டாந்தம் இரு வகைய
      சாதன்மியம் வைதன்மியம் என
      சாதன்மியம் எனப்படுவது தானே
      அநித்தம் கட ஆதி அன்னுவயத்து என்கை
      வைதன்மிய திட்டாந்தம் சாத்தியம் 29-140
      எய்தா இடத்தில் ஏதுவும் இன்மை
      இத்திறம் நல்ல சாதனத்து ஒத்தன
      தீய பக்கமும் ஏதுவும்
      தீய எடுத்துக்காட்டும் ஆவன
      பக்க போலியும் ஏது
      திட்டாந்த போலியும் ஆஅம் இவற்றுள்
      பக்கப்போலி ஒன்பது வகைப்படும்
      பிரத்தியக்க விருத்தம் அனுமான
      விருத்தம் சுவசன உலோக
      விருத்தம் ஆகம அப்பிர 29-150
      சித்த விசேடணம் அப்பிரசித்த
      விசேடியம் அப்பிரசித்த உபயம்
      அப்பிரசித்த சம்பந்தம் என
      எண்ணிய இவற்றுள் பிரத்தியக்க விருத்தம்
      கண்ணிய காட்சி மாறுகொளல் ஆகும்
      சத்தம் செவிக்கு புலன் அன்று என்றல்
      மற்று அனுமான விருத்தம் ஆவது
      கருத்து அளவையை மாறா கூறல்
      அநித்தி கடத்தை நித்தியம் என்றல்
      சுவசன விருத்தம் தன் சொல் மாறி இயம்பல் 29-160
      என் தாய் மலடி என்றே இயம்பல்
      உலக விருத்தம் உலகின் மாறாம் உரை
      இலகு மதி சந்திரன் அல்ல என்றல்
      ஆகம விருத்தம் தன் நூல் மாறு அறைதல்
      அநித்த வாதியா உள்ள வைசேடிகன்
      அநித்தியத்தை நித்தியம் என நுவறல்
      அப்பிரசித்த விசேடணம் ஆவது
      தத்தம் எதிரிக்கு சாத்தியம் தெரியாமை
      பௌத்தன் மாறாய் நின்ற சாங்கியனை
      குறித்து சத்தம் விநாசி என்றால் 29-170
      அவன் அவிநாசவாதி ஆதலின்
      சாத்திய விநாசம் அப்பிரசித்தம் ஆகும்
      அப்பிரசித்த விசேடியம் ஆவது
      எதிரிக்கு தன்மி பிரசித்தம் இன்றி
      இருத்தல் சாங்கியன் மாறாய் நின்ற
      பௌத்தனை குறித்து ஆன்மா சைதனியவான்
      என்றால் அவன் அநான்ம வாதி
      ஆதலின் தன்மி அப்பிரசித்தம்
      அப்பிரசித்த உபயம் ஆவது
      மாறு ஆனோர்க்கு தன்மி சாத்தியம் 29-180
      ஏறாது அப்பிரசித்தமாய் இருத்தல்
      பகர் வைசேடிகன் பௌத்தனை குறித்து
      சுகம் முதலிய தொகை பொருட்கு காரணம்
      ஆன்மா என்றால் சுகமும் ஆன்மாவும்
      தாம் இசையாமையின் அப்பிரசித்த உபயம்
      அப்பிரசித்த சம்பந்தம் ஆவது
      எதிரிக்கு இசைந்த பொருள் சாதித்தல்
      மாறு ஆம் பௌத்தற்கு சத்த அநித்தம்
      கூறில் அவன்ன் கொள்கை அஃது ஆகலில்
      வேறு சாதிக்க வேண்டாது ஆகும் 29-190
      ஏது போலி ஓதின் மூன்று ஆகும்
      அசித்தம் அநைகாந்திகம் விருத்தம்ம் என
      உபய அசித்தம் அன்னியதர
      சித்த அசித்தம் ஆசிரய
      என நான்கு அசித்தம் உபய
      சாதன ஏது இருவர்க்கும் இன்றி
      சத்தம் அநித்தம் கண் புலத்து என்றல்
      அன்னியதர அசித்தம் மாறு ஆய் நின்றாற்கு
      உன்னிய ஏது அன்றாய் ஒழிதல்
      சத்தம் செயலுறல் அநித்தம் என்னின் 29-200
      சித்த வௌிப்பாடு அல்லது செயலுறல்
      உய்த்த சாங்கியனுக்கு அசித்தம் ஆகும்
      சித்த அசித்தம் ஆவது
      ஏது சங்கயமா சாதித்தல்
      ஆவி பனி என ஐயுறா நின்றே
      தூய புகை நெருப்பு உண்டு என துணிதல்
      ஆசிரய அசித்தம் மாறு ஆனவனுக்கு
      ஏற்ற தன்மி இன்மை காட்டுதல்
      ஆகாசம் சத்த குணத்தால் பொருளாம் என்னின்
      ஆகாசம் பொருள் அல்ல என்பாற்கு 29-210
      தன்மி அசித்தம் அநைகாந்திகமும்
      சாதாரணம் அசாதாரணம் சபக்கைக
      தேசவிருத்தி விபக்க வியாபி
      விபக்கைகதேச விருத்தி சபக்க
      வியாபி உபயைகதேச விருத்தி
      விருத்த வியபிசாரி என்று ஆறு
      சாதாரணம் சபக்க விபக்கத்துக்கும்
      ஏது பொதுவாய் இருத்தல் சத்தம்
      அநித்தம் அறியப்படுதலின் என்றால்
      அறியப்படுதல் நித்த அநித்தம் இரண்டுக்கும் 29-220
      செறியும் கடம் போல் அநித்தத்து அறிவோ
      ஆகாசம் போல நித்தத்து அறிவோ
      என்னல் அசாதாரணம் ஆவது தான்
      உன்னிய பக்கத்து உண்டாம் ஏது
      சபக்க விபக்கம் தம்மில் இன்றாதல்
      சத்தம் நித்தம் கேட்கப்படுதலின்
      என்னின் கேட்கப்படல் எனும் ஏது
      பக்கத்து உள்ளதாயின் அல்லது
      சபக்க விபக்கத்து மீட்சித்து ஆதலின்
      சங்கயம் எய்தி அநேகாந்திகம் ஆம் 29-230
      சபக்கைகதேச விருத்தி விபக்க
      வியாபி ஆவது ஏது சபக்கத்து
      ஓர் இடத்து எய்தி விபக்கத்து எங்கும்
      உண்டாதல் ஆகும் சத்தம் செயலிடை
      தோன்றாதாகும் அநித்தம் ஆகலின்
      என்றால் அநித்தம் என்ற ஏது
      செயலிடை தோன்றாமைக்கு சபக்கம்
      மின்னினும் ஆகாசத்தினும் மின்னின்
      நிகழ்ந்து ஆகாசத்தில் காணாது ஆகலின்
      அநித்தம் கட ஆதியின் ஒத்தலின் கடம் போல் 29-240
      அழிந்து செயலில் தோன்றுமோ மின் போல்
      அழிந்து செயலில் தோன்றாதோ எனல்
      விபக்கைகதேச விருத்தி சபக்க
      வியாபி ஆவது ஏது விபக்கத்து
      ஓரிடத்து உற்று சபக்கத்து ஒத்து இயறல்
      சத்தம் செயலிடை தோன்றும் அநித்தம் ஆதலின் எனின்
      அநித்த ஏது செயலிடை தோன்றற்கு
      விபக்க ஆகாயத்தினும் மின்னினும்
      மின்னின் நிகழ்ந்து ஆகாசத்து காணாது
      சப கட ஆதிகள் தம்மில் 29-250
      எங்கும் ஆய் ஏகாந்தம் அல்ல மின் போல்
      அநித்தம் ஆ செயலிடை தோன்றாதோ கடம்போல்
      அநித்தம் ஆ செயலிடை தோன்றுமோ எனல்
      உபயைகதேச விருத்தி ஏது
      சபக்கத்தினும் விபக்கத்தினும் ஆகி
      ஓர் தேசத்து வர்த்தித்தல் சத்தம்
      நித்தம் அமூர்த்தம் ஆதலின் என்னின்
      அமூர்த்த ஏது நித்தத்தினுக்கு
      சபக்க ஆகாச பரமாணுக்களின்
      ஆகாசத்து நிகழ்ந்து மூர்த்தம் ஆம் 29-260
      பரமாணுவின் நிகழாமையானும்
      விபக்கமான கட சுக ஆதிகளில்
      சுகத்து நிகழ்ந்து கடத்து ஒழிந்தமையினும்
      ஏகதேசத்து நிகழ்வது ஏகாந்தம் அன்று
      அமூர்த்தம் ஆகாசம்போல நித்தமோ
      அமூர்த்தம் சுகம் போல் அநித்தமோ எனல்
      விருத்த வியபிசாரி திருந்தா ஏது ஆய்
      விருத்த ஏதுவிற்கும் இடம் கொடுத்தல்
      சத்தம் அநித்தம் செயலிடை தோன்றலின்
      ஒத்தது எனின் அ செயலிடை தோன்றற்கு 29-270
      சபக்கமாயுள்ள கட ஆதி நிற்க
      சத்தம் நித்தம் கேட்கப்படுதலின்
      சத்தத்துவம் போல் என சாற்றிடுதல்
      இரண்டினும் சங்கயம் ஆய் ஏகாந்தம் அல்ல
      விருத்தம் தன்னை திருத்தக விளம்பின்
      தன சொரூப விபரீத சாதனம்
      தன்ம விசேட விபரீத சாதனம்
      தன்மி சொரூப விபரீத சாதனம்
      தன்மி விசேட விபரீத சாதனம்
      என்ன நான்கு வகையது ஆகும் அ 29-280
      தன சொரூப விபரீத சாதனம்
      சொன்ன ஏதுவின் சாத்திய தன்மத்து
      உருவம் கெடுதல் சத்தம் நித்தம்
      பண்ணப்படுதலின் என்றால் பண்ண
      படுவது அநித்தம் ஆதலின் பண்ணப்பட்ட
      ஏது சாத்திய தன்ம நித்தத்தை விட்டு
      அநித்தம் சாதித்தலான் விபரீதம்
      தன்ம விசேட விபரீத சாதனம்
      சொன்ன ஏது சாத்திய தன்மம்
      தன்னிடை விசேடம் கெட சாதித்தல் 29-290
      கண் முதல் ஓர்க்கும் இந்திரியங்கள்
      எண்ணின் பரார்த்தம் தொக்கு நிற்றலினால்
      சயன ஆசனங்கள் போல என்றால்
      தொக்கு நிற்றலின் என்கின்ற ஏது
      சயன ஆசனத்தின் பராத்தம்போல் கண் முதல்
      இந்தியங்களியும் பரார்த்தத்தில் சாதித்து
      சயன ஆசனவானை போல் ஆகி
      கண் முதல் இந்தியத்துக்கும் பரனா
      சாதிக்கிற நிர் அவயவமாயுள்ள
      ஆன்மாவை சாவயவமாக 29-300
      சாதித்து சாத்திய தன்மத்தின்
      விசேடம் கெடுத்தலின் விபரீதம்
      தன்மி சொரூப விபரீத சாதனம்
      தன்மியுடைய சொரூப மாத்திரத்தினை
      ஏது தானே விபரீதப்படுத்தல்
      பாவம் திரவியம் கன்மம் அன்று
      குணமும் அன்று எ திரவியம் ஆம் எ
      குண கன்மத்து உண்மையின் வேறாதலால்
      சாமானிய விசேடம்போல் என்றால்
      பொருளும் குணமும் கருமமும் ஒன்றாய் 29-310
      நின்றவற்றின்னிடை உண்மை வேறு ஆதலால் என்று
      காட்டப்பட்ட ஏது மூன்றினுடை
      உண்மை பேதுப்படுத்தும் பொதுவாம்
      உண்மை சாத்தியத்து இல்லாமையினும்
      திட்டாந்தத்தில் சாமானியம் விசேடம்
      போக்கி பிறிதொன்று இல்லாமையானும்
      பாவம் என்று பகர்ந்த தன்மியினை
      அபாவம் ஆக்குதலான் விபரீதம்
      தன்மி விசேட விபரீத சாதனம்
      தன்மி விசேட அபாவம் சாதித்தல் 29-320
      முன்னம் காட்டப்பட்ட ஏதுவே
      பாவம் ஆகின்றது கருத்தாவுடைய
      கிரியையும் குணமும் ஆம் அதனை விபரீதம்
      ஆக்கியது ஆதலான் தன்மி விசேடம்
      கெடுத்தது தீய எடுத்துக்காட்டு ஆவன
      தாமே திட்டாந்த ஆபாசங்கள்
      திட்டாந்தம் இரு வகை படும் என்று முன்
      கூறப்பட்டன இங்கண் அவற்றுள்
      சாதன்மிய திட்டாந்த ஆபாசம்
      ஓதில் ஐந்து வகை உளதாகும் 29-330
      சாதன தன்ம விகலமும் சாத்திய
      தன்ம விகலமும் உபய
      விகலமும் அநன்னுவயம் விபரீதான்
      னுவயம் என்ன வைதன்மிய தி
      டாந்த ஆபாசமும் ஐ வகைய
      சாத்தியா வியாவிருத்தி
      சாதனா வியாவிருத்தி
      உபயா வியாவிருத்தி அவ்வெதிரேகம்
      விபரீத வெதிரேகம் என்ன இவற்றுள்
      சாதன தன்ம விகலம் ஆவது 29-340
      திட்டாந்தத்தில் சாதனம் குறைவது
      சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலான்
      யாதொன்று அமூர்த்தம் அது நித்தம்
      ஆதலான் காண்புற்றது பரமாணுவில் எனின்
      திட்டாந்த பரமாணு
      நித்தத்தோடு மூர்த்தம் ஆதலான்
      சாத்திய தன்ம நித்தத்துவம் நிரம்பி
      சாதன தன்ம அமூர்த்தத்துவம் குறையும்
      சாத்திய தன்ம விகலம் ஆவது
      காட்டப்பட்ட திட்டாந்தத்தில் 29-350
      சாத்திய தன்மம் குறைவுபடுதல்
      சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலால்
      யாதொன்று அமூர்த்தம் அது நித்தம்
      புத்திபோல் என்றால்
      திட்டாந்தமா காட்டப்பட்ட
      புத்தி அமூர்த்தம் ஆகி நின்றே
      அநித்தம் ஆதலான் சாதன அமூர்த்தத்துவம்
      நிரம்பி சாத்திய நித்தத்துவம் குறையும்
      உபய தன்ம விகலம் ஆவது
      காட்டப்பட்ட திட்டாந்தத்திலே 29-360
      சாத்திய சாதனம் இரண்டும் குறைதல்
      அன்றியும் அது தான் சன்னும் அசன்னும்
      என்று இரு வகையாம் இவற்றுள் சன்னா உள
      உபய தன்ம விகலம் ஆவது
      உள்ள பொருட்கண் சாத்திய சாதனம்
      கொள்ளும் இரண்டும் குறை காட்டுதல்
      சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலான்
      யாதொன்று அமூர்த்தம் அது நித்தம்
      கடம் போல் எனின் திட்டாந்தமா
      காட்டப்பட்ட கடம் தான் உண்டாகி 29-370
      சாத்தியமாய் உள நித்தத்துவமும்
      சாதனமாய் உள அமூர்த்தத்துவமும் குறையும்
      அசன்னா உள்ள உபய தன்ம விகலம்
      இல்லாப்பொருட்கண் சாத்திய சாதனம்
      என்னும் இரண்டும் குறை காட்டுதல்
      சத்தம் அநித்தம் மூர்த்தம் ஆதலான்
      யாதொன்று மூர்த்தம் அது அநித்தம்
      ஆகாசம் போல் எனும் திட்டாந்தத்து
      சாத்திய தன்மமாய் உள்ள அநித்தமும்
      சாதன தன்மமாய் உள்ள மூர்த்தமும் 29-380
      இரண்டும் ஆகாசம் அசத்து என்பானுக்கு
      அதன்கண் இன்மையானே குறையும்
      உண்டு என்பானுக்கு ஆகாசம் நித்தம்
      அமூர்த்தம் ஆதலால் அவனுக்கும் குறையும்
      அநன்னுவயம் ஆவது சாதன சாத்தியம்
      தம்மில் கூட்டம் மாத்திரம் சொல்லாதே
      இரண்டனுடைய உண்மையை காட்டுதல்
      சத்தம் அநித்தம் கிருத்தம் ஆதலின்
      யாதொன்று கிருத்தம் அது அநித்தம் எனும்
      அன்னுவயம் சொல்லாது குடத்தின்கண்ணே 29-390
      கிருத்த அநித்தம் காணப்பட்ட
      என்றால் அன்னுவயம் தெரியாதாகும்
      விபரீதான்னுவயம் வியாபகத்துடைய
      அன்னுவயத்தாலே வியாப்பியம் விதித்தல்
      சத்தம் அநித்தம் கிருத்தத்தால் எனின்
      யாதொன்று கிருத்தம் அநித்தம் என
      வியாப்பியத்தால் வியாபக்கத்தை கருதாது
      யாதொன்று அநித்தம் அது கிருத்தம் என
      வியாபகத்தால் வியாப்பியத்தை கருதுதல்
      அப்படி கருதின் வியாபகம் வியாப்பியத்தை 29-400
      இன்றியும் நிகழ்தலின் விபரீதம் ஆம்
      வைதன்மிய திட்டாந்தத்து
      சாத்தியா வியாவிருத்தி ஆவது
      சாதன தன்மம் மீண்டு
      சாத்திய தன்மம் மீளாதுஒழிதல்
      சத்தம் நித்தம் அமூர்த்தத்து என்றால்
      யாதொன்று நித்தமும் அன்று அது
      அமூர்த்தமும் அன்று பரமாணு போல் எனின்
      அப்படி திட்டாந்தமா காட்டப்பட்ட
      பரமாணு நித்தம் ஆய் மூர்த்தம் ஆதலின் 29-410
      சாதன அமூர்த்தம் மீண்டு
      சாத்திய நித்தம் மீளாதுஒழிதல்
      சாதனா வியாவிருத்தி ஆவது
      சாத்திய தன்மம் மீண்டு
      சாதன தன்மம் மீளாது ஒழிதல்
      சத்தம் நித்தம் அமூர்த்தத்து என்றால்
      யாதொன்று நித்தம் அன்று அஃது
      அமூர்த்தமும் அன்று கன்மம்போல் என்றால்
      வைதன்மிய திட்டாந்தமா
      காட்டப்பட்ட கன்மம் 29-420
      அமூர்த்தமாய் நின்றே அநித்தம் ஆதலின்
      சாத்தியமான நித்தியம் மீண்டு
      சாதனமான அமூர்த்தம் மீளாது
      உபயா வியாவிருத்தி காட்டப்பட்ட
      வைதன்மிய திட்டாந்தத்தினின்று
      சாதன சாத்தியங்கள் மீளாமை அன்றியும்
      உண்மையின் உபயா வியாவிருத்தி
      இன்மையின் உபயா வியாவிருத்தி
      என இருவகை உண்மையின்
      உபயா வியாவிருத்தி உள்ள பொருட்கண் 29-430
      சாத்திய சாதனம் மீளாதபடி
      வைதன்மிய திட்டாந்தம் காட்டல்
      சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலின்
      என்றாற்கு யாதொன்று நித்தம் அன்று
      அமூர்த்தமும் அன்று ஆகாசம்போல் என்றால்
      வைதன்மிய திட்டாந்தமா காட்டப்பட்ட
      ஆகாசம் பொருள் என்பாற்கு
      ஆகாசம் நித்தமும் அமூர்த்தமும் ஆதலான்
      சாத்திய நித்தமும் சாதனமா உள்ள
      அமூர்த்தமும் இரண்டும் மீண்டில இன்மையின் 29-440
      உபயா வியாவிருத்தி ஆவது
      சத்தம் அநித்தம் மூர்த்தம் ஆதலான்
      என்ற இடத்து யாதொன்று அநித்தம்
      மூர்த்தமும் அன்ன்று ஆகாசம் போல் என
      வைதன்மிய திட்டாந்தம் காட்டில்
      ஆகாசம் பொருள் அல்ல என்பானுக்கு
      ஆகாசம் தானே உண்மை இன்மையினால்
      சாத்திய அநித்தமும் சாதன மூர்த்தமும்
      மீட்சியும் மீளாமையும் இலையாகும்
      அவ்வெதிரேகம் ஆவது சாத்தியம் 29-450
      இல்லா இடத்து சாதனம் இன்மை
      சொல்லாதே விடுதல் ஆகும் சத்தம்
      நித்தம் பண்ணப்படாமையால் என்றால்
      யாதொன்று நித்தம் அன்று
      பண்ணப்படுவது அல்லாது அதுவும்
      அன்று எனும் இவ் வெதிரேகம் தெரி
      சொல்லாது குடத்தின்கண்ணே பண்ண
      படுதலும் அநித்தமும் கண்டேம் ஆதலான்
      என்னின் வெதிரேகம் தெரியாது
      விபரீத வெதிரேகம் ஆவது 29-460
      பிரிவை தலைதடுமாறா சொல்லுதல்
      சத்தம் நித்தம் மூர்த்தம் ஆதலின்
      என்றால் என்று நின்ற இடத்து
      யாதோர் இடத்து நித்தமும் இல்லை அவ்
      இடத்து மூர்த்தமும் இல்லை எனாதே
      யாதோர் இடத்து மூர்த்தமும் இல்லை அவ்
      இடத்து நித்தமும் இல்லை என்றால்
      வெதிரேகம் மாறுகொள்ளும் என கொள்க
      நாட்டிய இப்படி தீய சாதனத்தால்
      காட்டும் அனுமான ஆபாசத்தின்
      மெய்யும் பொய்யும் இத்திற விதியால்
      ஐயம் இன்றி அறிந்து கொள் ஆய்ந்து என் 29-472
      30. பவத்திறம் அறுகென பாவை நோற்ற காதை
      தானம் தாங்கி சீலம் தலைநின்று
      போன பிறப்பில் புகுந்ததை உணர்ந்தோள்
      புத்த தன்ம சங்கம் என்னும்
      மு திற மணியை மும்மையின் வணங்கி
      சரணாகதியா சரண் சென்று அடைந்தபின்
      முரணா திருவறமூர்த்தியை மொழிவோன்
      அறிவு வறிதாய் உயிர் நிறை காலத்து
      முடி தயங்கு அமரர் முறைமுறை இரப்ப
      துடிதலோகம் ஒழி தோன்றி
      போதி மூலம் பொருந்தியிருந்து 30-010
      மாரனை வென்று வீரன் ஆகி
      குற்றம் மூன்றும் முற்ற அறுக்கும்
      வாமன் வாய்மை ஏ கட்டுரை
      இறந்த காலத்து எண் இல் புத்தர்களும்
      சிறந்து அருள் கூர்ந்து திருவாய் மொழிந்தது
      ஈர் அறு பொருளின் ஈந்த நெறி உடைத்தா
      சார்பின் தோன்றி தத்தமில் மீட்டும்
      இலக்கு அண தொடர்தலின்
      மண்டில வகையாய் அறி காட்டி
      எதிர் முறை ஒப்ப மீட்சியும் ஆகி 30-020
      ஈங்கு இது இல்லாவழி இல்லாகி
      ஈங்கு இது உள்ளவழி உண்டு ஆகலின்
      தக்க சார்பின் தோற்றம் என
      சொற்றகப்பட்டும் இலக்கு அண தொடர்பால்
      கருதப்பட்டும் கண்டம் நான்கு உடைத்தாய்
      மருவிய சந்தி வகை மூன்று உடைத்தாய்
      தோற்றம் பார்க்கின் மூன்று வகை ஆய்
      தோற்றற்கு ஏற்ற காலம் மூன்று உடைத்தாய்
      குற்றமும் வினையும் பயனும் விளைந்து
      நிலையில வறிய துன்பம் என நோக்க 30-030
      உலையா வீட்டிற்கு உறுதி ஆகி
      நால்வகை வாய்மைக்கு சார்பு இடன் ஆகி
      ஐந்து வகை கந்தத்து அமைதி ஆகி
      மெய் வகை ஆறு வழக்கு முகம் எய்தி
      நயங்கள் நான்கால் பயன்கள் எய்தி
      இயன்ற நால்வகையால் வினா விடை உடைத்தாய்
      நின்மதி இன்றி ஊழ்பாடு இன்றி
      பின்போக்கு அல்லது பொன்ற கெடாதாய்
      பண்ணுநர் இன்றி பண்ண படாதாய்
      யானும் இன்றி என்னதும் 30-040
      போனதும் இன்றி வந்ததும்
      முடித்தலும் இன்றி முடிவும்
      வினையும் பயனும் பிறப்பும் வீடும்
      இனையன எல்லாம் தானே ஆகிய
      பேதைமை செய்கை உணர்வே அருஉரு
      வாயில் ஊறே நுகர்வே வேட்கை
      பற்றே பவமே தோற்றம் வினைப்பயன்
      இற்று என வகுத்த இயல்பு ஈர் ஆறும்
      பிறந்தோர் அறியின் பெரும்பேறு அறிகுவர்
      அறியார்ஆயின் ஆழ் நரகு அறிகுவர் 30-050
      பேதைமை என்பது யாது என வினவின்
      ஓதிய இவற்றை உணராது மயங்கி
      இயற்படு பொருளால் கண்டது மறந்து
      முயற்கோடு உண்டு என கேட்டது தௌிதல்
      உலகம் மூன்றினும் உயிர் ஆம்
      அலகு இல பல் உயிர் அறு வகைத்து ஆகும்
      மக்களும் தேவரும் பிரமரும் நரகரும்
      தொக்க விலங்கும் பேயும் என்றே
      நல்வினை தீவினை என்று இரு வகையால்
      சொல்லப்பட்ட கருவில் சார்தலும் 30-060
      கருவில் பட்ட பொழுதினுள் தோற்றி
      வினைப்பயன் விளையுங்காலை உயிர்கட்கு
      மன பேர் இன்பமும் கவலையும் காட்டும்
      தீவினை என்பது யாது என வினவின்
      ஆய் தொடி நல்லாய் ஆங்கு அது கேளாய்
      கொலையே களவே கா தீவிழைவு
      உலையா உடம்பில் தோன்றுவ மூன்றும்
      பொய்யே குறளை கடுஞ்சொல் பயன் இல்
      சொல் என சொல்லில் தோன்றுவ நான்கும்
      வெஃகல் வெகுளல் பொல்லா காட்சி என்று 30-070
      உள்ளம் தன்னின் உருப்பன மூன்றும் என
      பத்து வகையால் பயன் தெரி புலவர்
      இ திறம் படரார் படர்குவர் ஆயின்
      விலங்கும் பேயும் நரகரும் ஆகி
      கலங்கிய உள்ள கவலையின் தோன்றுவர்
      நல்வினை என்பது யாது என வினவின்
      சொல்லிய பத்தின் தொகுதியின் நீங்கி
      சீலம் தாங்கி தானம் தலைநின்று
      மேல் என வகுத்த ஒருமூன்று திறத்து
      தேவரும் மக்களும் பிரமரும் ஆகி 30-080
      மேவிய மகிழ்ச்சி வினைப்பயன் உண்குவர்
      உணர்வு எனப்படுவது உறங்குவோர் உணர்வின்
      புரிவு இன்றாகி புலன் கொளாததுவே
      அருஉரு என்பது அவ் உணர்வு சார்ந்த
      உயிரும் உடம்பும் ஆகும் என்ப
      வாயில் ஆறும் ஆயுங்காலை
      உள்ளம் உறுவிக்க உறும் இடன் ஆகும்
      ஊறு என உரைப்பது உள்ளமும் வாயிலும்
      வேறு புலன்களை மேவுதல் என்ப
      நுகர்வே உணர்வு புலன்களை நுகர்தல் 30-090
      வேட்கை விரும்பி நுகர்ச்சி ஆராமை
      பற்று எனப்படுவது பசைஇய அறிவே
      பவம் எனப்படுவது கரும ஈட்டம்
      தரும் முறை இது என தாம்தாம் சார்தல்
      பிறப்பு எனப்படுவது அ கரு பெற்றியின்
      உற புணர் உள்ளம் சார்பொடு கதிகளில்
      காரண காரிய உருக்களில் தோன்றல்
      பிணி எனப்படுவது சார்பின் பிறிது ஆய்
      இயற்கையின் திரிந்து உடம்பு இடும்பை புரிதல்
      மூப்பு என மொழிவது அந்தத்து அளவும் 30-100
      தாக்கும் நிலையாமையின் தாம் தளர்ந்திடுதல்
      சாக்காடு என்பது அருஉரு தன்மை
      யாக்கை வீழ் கதிரென மறைந்திடுதல்
      பேதைமை சார்வா செய்கை ஆகும்
      செய்கை சார்வா உணர்ச்சி ஆகும்
      உணர்ச்சி சார்வா அரூரு ஆகும்
      அருஉரு சார்வா வாயில் ஆகும்
      வாயில் சார்வா ஊறு ஆகும்மே
      ஊறு சார்ந்து நுகர்ச்சி ஆகும்
      நுகர்ச்சி சார்ந்து வேட்கை ஆகும் 30-110
      வேட்கை சார்ந்து பற்று ஆகும்மே
      பற்றின் தோன்றும் கரு தொகுதி
      கரு தொகுதி காரணமாக
      வருமே ஏனை வழிமுறை தோற்றம்
      தோற்றம் சார்பின் மூப்பு பிணி சாக்காடு
      அவலம் அரற்று கவலை கையாறு என
      தவல் இல் துன்பம் தலைவரும் என்ப
      ஊழின் மண்டிலமா சூழும் இ நுகர்ச்சி
      பேதைமை மீள செய்கை மீளும்
      செய்கை மீள உணர்ச்சி மீளும் 30-120
      உணர்ச்சி மீள அருஉரு மீளும்
      அருஉரு மீள வாயில் மீளும்
      வாயில் மீள ஊறு மீளும்
      ஊறு மீள நுகர்ச்சி மீளும்
      நுகர்ச்சி மீள வேட்கை மீளும்
      வேட்கை மீள பற்று மீளும்
      பற்று மீள கரு தொகுதி
      மீளும் கரு தொகுதி மீள
      தோற்றம் மீளும் மீள
      பிறப்பு மீளும் பிணி மூப்பு 30-130
      சாக்காடு அவலம் அரற்று கவலை
      கையாறு என்று இ கடை இல் துன்பம்
      எல்லாம் மீளும் இவ் வகையால் மீட்சி
      ஆதி கண்டம் ஆகும் என்ப
      பேதைமை செய்கை என்று இவை இரண்டும்
      காரண வகைய ஆதலானே
      இரண்டாம் கண்டம் ஆகும் என்ப
      உணர்ச்சி அருஉரு வாயில் ஊறே
      நுகர்ச்சி என்று நோக்கப்படுவன
      முன்னவற்று இயல்பான் துன்னிய ஆதலின் 30-140
      மூன்றாம் கண்டம் வேட்கை பற்று
      கரும ஈட்டம் என கட்டுரைப்பவை
      மற்று அ பெற்றி நுகர்ச்சி ஒழுக்கினுள்
      குற்றமும் வினையும் ஆகலானே
      நான்காம் கண்டம் பிறப்பே பிணியே
      மூப்பே சாவு என மொழிந்திடும் துன்பம்
      என இவை பிறப்பில் உழக்கு பயன் ஆதலின்
      பிறப்பின் முதல் உணர்வு ஆதி சந்தி
      நுகர்ச்சி ஒழுக்கொடு விழைவின் கூட்டம்
      புகர்ச்சி இன்று அறிவது இரண்டாம் சந்தி 30-150
      கன கூட்டத்தொடு வரு பிறப்பிடை
      முன்னி செல்வது மூன்றாம் சந்தி
      மூன்று வகை பிறப்பும் மொழியுங்காலை
      ஆன்ற பிற மார்க்கத்து ஆய உணர்வே
      தோன்றல் வீடு என துணிந்து தோன்றியும்
      உணர்வு உள் அடங்க உருவா தோன்றியும்
      உணர்வும் உருவும் உடங்க தோன்றி
      புணர்தரு மக்கள் தெய்வம் விலங்கு ஆகையும்
      காலம் மூன்றும் கருதுங்காலை
      இறந்த காலம் என்னல் வேண்டும் 30-160
      மறந்த பேதைமை செய்கை ஆனவற்றை
      நிகழ்ந்த காலம் என நேரப்படுமே
      உணர்வே அருஉரு வாயில் ஊறே
      நுகர்வே வேட்கை பற்றே பவமே
      தோற்றம் என்று இவை சொல்லுங்காலை
      எதிர்காலம் என இசைக்கப்படுமே
      பிறப்பே பிணியே மூப்பே சாவே
      அவலம் அரற்று கவலை கையாறுகள்
      குலவிய குற்றம் என கூறப்படுமே
      அவாவே பற்றே பேதைமை என்று இவை 30-170
      புனையும் அடை பவமும் வினை செயல் ஆகும்
      உணர்ச்சி அருஉரு வாயில் ஊறே
      நுகர்ச்சி பிறப்பு மூப்பு பிணி சாவு இவை
      நிகழ்ச்சி பயன் ஆங்கே நேருங்காலை
      குற்றமும் வினையும் பயனும் துன்பம்
      பெற்ற தோற்ற பெற்றிகள் நிலையா
      எப்பொருளுக்கும் ஆன்மா இலை என
      இப்படி உணரும் இவை வீட்டு இயல்பு ஆம்
      உணர்வே அருஉரு வாயில் ஊறே
      நுகர்வே பிறப்பே பிணி மூப்பு சாவே 30-180
      அவலம் அரற்று கவலை கையாறு என
      நுவல படுவன நோய் ஆகும்மே
      அ நோய் தனக்கு
      பேதைமை செய்கை அவாவே பற்று
      கரும ஈட்டம் இவை காரணம் ஆகும்
      துன்பம் தோற்றம் பற்றே காரணம்
      இன்பம் வீடே பற்றிலி காரணம்
      ஒன்றிய உரையே வாய்மை நான்கு ஆவது
      உருவு நுகர்ச்சி குறிப்பே பாவனை
      உள்ள அறிவு இவை ஐங்கந்தம் ஆவன 30-190
      அறுவகை வழக்கும் மறு இன்று கிளப்பின்
      தொகையே தொடர்ச்சி தன்மை மிகுத்துரை
      இயைந்துரை என்ற நான்கினும் இயைந்த
      உண்மை வழக்கும் இன்மை
      உள்ளது சார்ந்த உண்மை வழக்கும்
      இல்லது சார்ந்த இன்மை வழக்கும்
      உள்ளது சார்ந்த இன்மை வழக்கும்
      இல்லது சார்ந்த உண்மை வழக்கும் என
      சொல்லிய தொகை திறம் உடம்பு நீர் நாடு
      தொடர்ச்சி வித்து முளை தாள் என்று இ 30-200
      நிகழ்ச்சியில் அவற்றை நெல் என வழங்குதல்
      இயல்பு மிகுத்துரை ஈறுடைத்து என்றும்
      தோன்றிற்று என்றும் மூத்தது
      மூன்றின் ஒன்றின் இயல்பு மிகுத்துரைத்தல்
      இயைந்துரை என்பது எழுத்து பல கூட
      சொல் என தோற்றும் பல நாள் கூடிய
      எல்லையை திங்கள் என்று வழங்குதல்
      உள் வழக்கு உணர்வு இல் முயற்கோடு
      உள்ளது சார்ந்த உள் வழக்காகும்
      சித்தத்துடனே ஒத்த நுகர்ச்சி 30-210
      உள்ளது சார்ந்த இல் வழக்காகும்
      சித்தம் உற்பவித்தது மின்போல் என்கை
      இல்லது சார்ந்த உண்மை வழக்காகும்
      காரணம் இன்றி காரியம் நேர்தல்
      இல்லது சார்ந்த இல் வழக்கு ஆகும்
      முயற்கோடு இன்மையின் தோற்றமும் இல் எனல்
      நான்கு நயம் என தோன்றப்படுவன
      ஒற்றுமை வேற்றுமை புரிவின்மை இயல்பு என்க
      காரண காரியம் ஆகிய பொருள்களை
      ஒன்றா உணர்தல் ஒற்றுமை நயம் ஆம் 30-220
      வீற்று வீற்றாக வேதனை கொள்வது
      வேற்றுமை நயம் என வேண்டல் வேண்டும்
      பொன்ற கெடா அ பொருள் வழிப்பொருள்களுக்கு
      ஒன்றிய காரணம் உதவு காரியத்தை
      தருதற்கு உள்ளம் தான் இலை என்றல்
      புரிவின்மை நயம் என புகறல் வேண்டும்
      நெல் வித்து அகத்துள் முளை தோற்றும் எனல்
      நல்ல இயல்பு நயம் இவற்றில் நாம் கொள்பயன்
      தொக்க பொருள் அலது ஒன்று இல்லை என்றும்
      அ பொருளிடை பற்று ஆகாது என்றும் 30-230
      செய்வானொடு கோட்பாடு இலை என்றும்
      எய்து காரணத்து ஆம் காரியம் என்றும்
      அதுவும் அன்று அது அலாததும் என்றும்
      விதிமுறை தொகையினால் விரிந்த நான்கும்
      வினா விடை நான்கு உள
      துணிந்து சொல்லல் கூறிட்டு மொழிதல்
      வினாவின் விடுத்தல் வாய் வாளாமை என
      தோன்றியது கெடுமோ கெடாதோ என்றால்
      கேடு உண்டு என்றல் துணிந்து சொலல் ஆகும்
      செத்தான் பிறப்பானோ பிறவானோ 30-240
      என்று செப்பின்
      பற்று இறந்தானோ அல் மகனோ எனல்
      மி கூறிட்டு மொழிதல் என விளம்புவர்
      வினாவின் விடுத்தல் முட்டை முந்திற்றோ
      பனை முந்திற்றோ என கட்டுரை செய்
      என்றால் எம் முட்டைக்கு எ பனை என்றல்
      வாய் வாளாமை ஆகா பூ
      பழைதோ புதிதோ என்று புகல்வான்
      உரைக்கு மாற்றம் உரையாது இருத்தல்
      கட்டும் வீடும் அதன் காரணத்தது 30-250
      ஒட்டி தருதற்கு உரியோர் இல்லை
      யாம் மேல் உரைத்த பொருள்கட்கு எல்லாம்
      காமம் வெகுளி மயக்கம் காரணம்
      அநித்தம் துக்கம் அநான்மா அசுசி என
      தனித்து பார்த்து பற்று அறுத்திடுதல்
      மைத்திரி கருணா முதிதை என்று அறிந்து
      திருந்து நல் உணர்வான் செற்றம் அற்றிடுக
      சுருதி சிந்தனா பாவனா தரிசனை
      கருதி உய்த்து மயக்கம் கடிக
      இ நால் வகையான் மனத்திருள் நீங்கு என்று 30-260
      முன் பின் மலையா மங்கல மொழியின்
      ஞான தீபம் நன்கனம் காட்ட
      தவ திறம் பூண்டு தருமம் கேட்டு
      பவ திறம் அறுக என பாவை நோற்றனள் என் 30-264
      ------------------------------------------------------------------------
      23 . 2002

      .