------------------------------------------------------------------------

      மலைபடுகடாம்
      ஆசிரியர் இரணிய முட்டத்து பெருங்குன்றூர பெருங்கெளசிகனார்
      ------------------------------------------------------------------------
      ------------------------------------------------------------------------
      ...

      . ...

      .
      .
      . ...

      .
      ...

      - .
      .
      .

      .
      2000 ...

      2000 .
      -8
      6 5
      -8 - .
      .
      .
      © 1999 - 2004


      .
      ..

      .
      ------------------------------------------------------------------------


      சங்க கால நூல்களான பத்து பாட்டுக்களில் பத்தாவதான
      மலைபடுகடாம்
      -----------------------
      பாடியவர் இரணிய முட்டத்து பெருங்குன்றூர பெருங்கெளசிகனார்
      பாடப்பட்டவன் நன்னன் வேண்மான்
      திணை பாடாண்திணை
      துறை ஆற்றுப்படை
      பாவகை ஆசிரியப்பா
      மொத்த அடிகள் 583
      -----------------------
      திருமழை தலைஇய இருணிற விசும்பின்
      விண்ணதிர் இமிழிசை கடு பண்ணமைத்து
      திண்வார் விசித்த முழவொ டாகுளி
      நுண்ணுரு குற்ற விளங்கடர பாண்டில்
      மின்னிரும் பீலி அணித்தழை கோட்டொடு
      கண்ணிடை விடுத்த களிற்றுயிர தூம்பின்
      இளிப்பயிர் இமிரும் குறும்பர தூம்பொடு
      விளிப்பது கவரும் தீங்குழல் துதைஇ
      நடுவுநின் றிசைக்கும் அரிக்குரல் தட்டை
      கடிகவர் பொலிக்கும் வல்வாய் எல்லரி ...10
      நொடிதரு பாணிய பதலையும் பிறவும்
      கார்கோ பலவின் காய்த்துணர் கடுப்ப
      நேர்சீர் சுருக்கி காய கலப்பையிர்
      கடுக்கலி தெழுந்த கண்ணகன் சிலம்பில்
      படுத்துவை தன்ன பாறை மருங்கின்
      எடுத்துநிறு தன்ன இட்டருஞ் சிறுநெறி
      தொடுத்த வாளியர் துணைபுணர் கானவர்
      இடுக்கண் செய்யா தியங்குநர் இயக்கும்
      அடுக்கல் மீமிசை அருப்பம் பேணாது
      இடிச்சுர நிவப்பின் இயவுக்கொண் டொழுகி ... 20
      தொடித்திரி வன்ன தொண்டுபடு திவவின்
      கடிப்பகை யனைத்தும் கேள்வி போகா
      குரலோர்த்து தொடுத்த சுகிர்புரி நரம்பின்
      அரலை தீர உரீஇ வரகின்
      குரல்வார தன்ன நுண்டுளை இரீஇ
      சிலம்பமை பத்தல் பசையொடு சேர்த்தி
      இலங்குதுளை செறிய ஆணி முடுக்கி
      புதுவது புனைந்த வெண்கை யாப்பமைத்து
      புதுவது போர்த்த பொன்போற் பச்சை
      வதுவை நாறும் வண்டுகமழ் ஐம்பால் ... 30
      மடந்தை மாண்ட நுடங்கெழில் ஆகத்து
      அடங்குமயிர் ஒழுகிய அவ்வாய் கடுப்ப
      அகடுசேர்பு பொருந்தி அளவினில் திரியாது
      கவடுபட கவைஇய சென்றுவாங் குந்தி
      நுணங்கர நுவறிய நுண்ணீர் மாமை
      களங்கனி யன்ன கதழ்ந்துகிளர் உருவின்
      வணர்ந்தேந்து மருப்பின் வள்ளுயிர பேரியாழ்
      அமைவர பண்ணி அருள்நெறி திரியாது
      இசைபெறு திருவின் வேத்தவை ஏற்ப
      துறைபல முற்றிய பைதீர் பாணரொடு ... 40
      உயர்ந்தோங்கு பெருமலை ஊறின் றேறலின்
      மதந்தபு ஞமலி நாவி நன்ன
      துளங்கியல் மெலிந்த கல்பொரு சீறடி
      கணங்கொள் தோகையிற் கதுப்பிகு தசைஇ
      விலங்குமலை தமர்ந்த சேயரி நாட்டத்து
      இலங்குவளை விறலியர் நிற்புறஞ் சுற்ற
      கயம்பு கன்ன பயம்படு தண்ணிழல்
      புனல்கால் கழீஇய மணல்வார் புறவில்
      புலம்புவி டிருந்த புனிறில் காட்சி
      கலம்பெறு கண்ணுளர் ஒக்கல் தலைவ ... 50
      தூமலர் துவன்றிய கரைபொரு நிவப்பின்
      மீமிசை நல்யாறு கடற்படர தாஅங்கு
      யாமவ ணின்றும் வருதும் நீயிரும்
      கனிபொழி கானம் கிளையொ டுணீஇய
      துனைபறை நிவக்கும் புள்ளின மான
      புனைதார பொலிந்த வண்டுபடு மார்பின்
      வனைபுனை எழின்முலை வாங்கமை திரடோ ள்
      மலர்போல் மழைக்கண் மங்கையர் கணவன்
      முனைபாழ் படுக்கும் துன்னரு துப்பின்
      இசைநுவல் வித்தின் நசையே ருழவர்க்கு ... 60
      புதுநிறை வந்த புனலஞ் சாயல்
      மதிமா றோரா நன்றுணர் சூழ்ச்சி
      வின்னவில் தடக்கை மேவரும் பெரும்பூண்
      நன்னன்சேய் நன்னற் படர்ந்த கொள்கையொடு
      உள்ளினிர் சேறிர் ஆயிற் பொழுதெதிர்ந்த
      புள்ளினிர் மன்ற எற்றா குறுதலின்
      ஆற்றின் அளவும் அசையுநற் புலமும்
      வீற்றுவளஞ் சுரக்குஅவ நாடுபடு வல்சியும்
      மலையும் சோலையும் மாபுகல் கானமும்
      தொலையா னல்லிசை உலகமொடு நிற ... 70
      பலர்புறங் கண்டவர் அருங்கல தரீஇ
      புலவோர்க்கு சுரக்கும்அவ நீகை மாரியும்
      இகழுநர பிணிக்கும் ஆற்றலும் புகழுநர்க்கு
      அரசுமுழுது கொடுப்பினும் அமரா நோக்கமொடு
      தூத்துளி பொழிந்த பொய்யா வானின்
      வீயாது சுரக்குமவ நாள்மகி ழிருக்கையும்
      நல்லோர் குழீஇய நாநவில் அவையத்து
      வல்லா ராயினும் புறமறைத்து சென்றோரை
      சொல்லி காட்டி சோர்வின்றி விளக்கி
      நல்லிதின் இயக்குமவன் சுற்ற தொழுக்கமும் ... 80
      நீரகம் பனிக்கும் அஞ்சுவரு கடுந்திறல்
      பேரிசை நவிர மேஎ யுறையும்
      காரிஉண்டி கட வுள தியற்கையும்
      பாயிருள் நீங்க பகல்செய்யா எழுதரு
      ஞாயி றன்னவவன் வசையில் சிறப்பும்
      இகந்தன ஆயினும் தெவ்வர் தேஎம்
      நுகம்பட கடந்து நூழி லாட்டி
      புரைத்தோல் வரைப்பின் வேனிழற் புலவோர்க்கு
      கொடைக்கடன் இறுத்தவன் தொல்லோர் வரவும்
      இரைதேர திவரும் கொடுந்தாள் முதலையொடு ... 90
      திரைபட குழிந்த கல்லகழ் கிடங்கின்
      வரைபுரை நிவப்பின் வான்றோய் இஞ்சி
      உரைசெல வெறுத்தவன் மூதூர் மாலையும்
      கேளினி வேளைநீ முன்னிய திசையே
      மிகுவளம் பழுநிய யாணர் வைப்பிற்
      புதுவது வந்தன் றிதுவதன் பண்பே
      வானமின்னு வசிவு பொழிய ஆனாது
      இட்ட வெல்லாம் பெட்டாங்கு விளை
      பெயலொடு வைகிய வியன்கண் இரும்புனத்து
      அகலிரு விசும்பி னாஅல் போல ... 100
      வாலிதின் விரிந்த புன்கொடி முசுண்டை
      நீல தன்ன விதைப்புன மருங்கின்
      மகுளி பாயாது மலிதுளி தழாலின்
      அகள தன்ன நிறைசுனை புறவிற்
      கெளவை போகிய கருங்காய் பிடியேழ்
      நெய்கொள வொழுகின பல்கவ ரீரெண்
      பொய்பொரு கயமுனி முயங்குகை கடுப்ப
      கொய்பத முற்றன குலவுக்குரல் ஏனல்
      விளைதயிர பிதிர்வின் வீவு கிருவிதொறும்
      குளிர்புரை கொடுங்காய் கொண்டன அவரை ... 110
      மேதி யன்ன கல்பிறங்கு இயலின்
      வாதிகை யன்ன கவைக்கதிர் இறைஞ்சி
      இரும்புகவர் வுற்றன பெரும்புன வரகே
      பால்வார்பு கெழீஇ பல்கவர் வளிபோழ்பு
      வாலிதின் விளைந்தன ஐவன வெண்ணெல்
      வேலீண்டு தொழுதி இரிவுற் றென்ன
      காலுறு துவைப்பிற் கவிழ்க்கனை திறைஞ்சி
      குறையறை வாரா நிவப்பி னறையுற்று
      ஆலை கலமரு தீங்கழை கரும்பே
      புயற்புனிறு போகிய பூமலி புறவின் ... 120
      அவற்பதங் கொண்டன அம்பொதி தோரை
      தொய்யாது வித்திய துளர்படு துடவை
      ஐயவி யமன்ற வெண்காற் செறுவின்
      மையென விரிந்தன நீணறு நெய்தல்
      செய்யா பாவை வளர்ந்துகவின் முற்றி
      காயங் கொண்டன இஞ்சிமா விருந்து
      வயவுப்பிடி முழந்தாள் கடுப்ப குழிதொறும்
      விழுமிதின் வீழ்ந்தன கொழுங்கொடி கவலை
      காழ்மண் டெஃகம் களிற்றுமுகம் பாய்ந்தென
      ஊழ்மல ரொழிமுகை உயர்முக தோ ... 130
      துறுகல் சுற்றிய சோலை வாழை
      இறுகுகுலை முறுக பழுத்த பயம்புக்கு
      ஊழுற் றலமரும் உந்தூழ் அகலறை
      கால மன்றியும் மரம்பயன் கொடுத்தலிற்
      காலின் உதிர்ந்தன கருங்கனி நாவல்
      மாறுகொள வொழுகின ஊறுநீ ருயவை
      நூறொடு குழீஇயின கூவை சேறுசிறந்து
      உண்ணுநர தடுத்தன தேமா புண்ணரிந்து
      அரலை உக்கன நெடுந்தாள் ஆசினி
      விரலூன்று படுகண் ஆகுளி கடுப்ப ... 140
      குடிஞை இரட்டு நெடுமலை அடுக்கத்து
      கீழு மேலுங் கார்வா தெதிரி
      கரஞ்செல் கோடியர் முழவிற் றூங்கி
      முரஞ்சுகொண் டிறைஞ்சின அலங்குசினை பலவே
      தீயி னன்ன ஒண்செங் காந்தள்
      தூவற் கலித்த புதுமுகை ஊன்செத்து
      அறியா தெடுத்த புன்புற சேவல்
      ஊஉ னன்மையி னுண்ணா துகுத்தென
      நெருப்பி னன்ன பல்லிதழ் தாஅய்
      வெறிக்களம் கடுக்கும் வியலறை தோறும் ...150
      மணஇல் கமழு மாமலை சாரல்
      தேனினர் கிழங்கினர் ஊனார் வட்டியர்
      சிறுக பன்றி பழுதுளி போக்கி
      பொருதுதொலை யானை கோடுசீ ராக
      தூவொடு மலிந்த காய கானவர்
      செழும்பல் யாணர சிறுகுடி படினே
      இரும்பே ரொக்கலொடு பதமிக பெறுகுவிர்
      அன்றவ ணசைஇ அற்சேர தல்கி
      கன்றெரி யொள்ளிணர் கடும்பொடு மலைந்து
      சேந்த செயலை செப்பம் போகி ... 160
      அலங்குகழை நரலும் ஆரி படுகர
      சிலம்படை திருந்த பாக்க மெய்தி
      நோனா செருவின் வலம்படு நோன்றாள்
      மான விறல்வேள் வயிரிய மெனினே
      நும்மில் போல நில்லாது புக்கு
      கிழவிர் போல கேளாது கெழீஇ
      சேட்புலம் பகல இனிய கூறி
      பரூஉக்குறை பொழிந்த நெய்க்கண் வேவையொடு
      குரூஉக்க ணிறடி பொம்மல் பெறுகுவிர்
      ஏறி தரூஉம் இலங்குமலை தாரமொடு ... 170
      வேய்ப்பெயல் விளையுள் தேக்க தேறல்
      குறைவின்று பருகி நறவுமகிழ்ந்து வைகறை
      பழஞ்செரு குற்றநும் அனந்தல் தீர
      அருவி தந்த பழஞ்சிதை வெண்காழ்
      வருவிசை தவிர்த்த கடமான் கொழுங்குறை
      முளவுமா தொலைச்சிய பைந்நிண பிளவை
      பிணவுநாய் முடுக்கிய தடியொடு விரைஇ
      வெண்புடை கொண்ட துய்த்தலை பழனின்
      இன்புளி கலந்து மாமோ ரா
      கழைவளர் நெல்லின் அரியுலை ஊழ்த்து ... 180
      வழையமை சாரல் கமழ துழைஇ
      நறுமலர் அணிந்த நாறிரு முச்சி
      குறமகள் ஆக்கிய வாலவிழ் வல்சி
      அகமலி உவகை ஆர்வமொ டளைஇ
      மகமுறை தடுப்ப மனைதொறும் பெறுகுவிர்
      செருச்செய் முன்பிற் குருசில் முன்னிய
      பரிசில் மறப்ப நீடலும் உரியிர்
      அனைய தன்றவன் மலைமிசை நாடே
      நிரையிதழ குவளை கடிவீ தொடினும்
      வரையர மகளிர் இருக்கை காணினும் ... 190
      உயிர்செல வெம்பி பனித்தலும் உரியிர்
      பலநா ணில்லாது நிலநாடு படர்மின்
      விளைபுன நிழத்தலிற் கேழல் அஞ்சி
      புழைதொறு மாட்டிய இருங்கல் அடாடர்
      அரும்பொறி உடைய வாறே நள்ளிருள்
      அலரிவிரிந்த விடியல் வைகினிர் கழிமின்
      நளிந்துபலர் வழங்கா செப்ப துணியின்
      முரம்புகண் உடைந்த பரலவற் போழ்வில்
      கரந்துபாம் பொடுங்கும் பயம்புமா ருளவே
      குறிக்கொண்டு மரங் கொட்டி நோக்கி ... 200
      செறிதொடி விறலியர் கைதொழூஉ பழிச்ச
      வறிதுநெறி ஓரீஇ வலஞ்செயா கழிமின்
      புலந்துபுனிறு போகிய புனஞ்சூழ் குறவர்
      உயர்நிலை இதணம் ஏறி கைபுடையூஉ
      அகன்மலை யிறும்பில் துவன்றிய யானை
      பகனிலை தவிர்க்கும் கவணுமிழ் கடுங்கல்
      இருவெதிர் ஈர்ங்கழை தத்தி கல்லென
      கருவிர லூகம் பார்ப்போ டிரிய
      உயிர்செகு மரபிற் கூற்ற தன்ன
      வரும்விசை தவிராது மரமறையா கழிமின் ... 210
      உரவுக்களிறு கரக்கும் இடங்கர் ஒடுங்கி
      இரவின் அன்ன இருள்தூங்கு வரைப்பின்
      குமிழி சுழலும் குண்டுகய முடுக்கர்
      அகழ்இழி தன்ன கான்யாற்று நடவை
      வழூஉமருங் குடைய வழாஅல் ஓம்பி
      பரூஉக்கொடி வலந்த மதலை பற்றி
      துருவி னன்ன புன்றலை மகாரோடு
      ஒருவிர் ஓம்பினிர் கழிமின்
      அழுந்துப டலமரும் புழகமல் சாரல்
      விழுந்தோர் மாய்க்குங் குண்டுக தருகா ... 220
      வழும்புகண் புதைத்த நுண்ணீர பாசி
      அடிநிலை தளர்க்கும் அருப்பமும் உடைய
      முழுநெறி பிணங்கிய நுண்கோல் வேரலோடு
      எருவை மென்கோல் கொண்டனிர் கழிமின்
      உயர்நிலை மாக்கற் புகர்முகம் புதைய
      மாரியி னிகுதரு வில்லுமிழ் கடுங்கணை
      தாரொடு பொலிந்த வினைநவில் யானை
      சூழியிற் பொலிந்த சுடர்ப்பூ விலஞ்சி
      ஓரியாற் றியவின் மூத்த புரிசை
      பராவரு மரபிற் கடவு காணிற் ... 230
      தொழாஅநிர் கழியின் அல்லது வறிது
      நும்மி தொடுதல் ஓம்புமின் மயங்குதுளி
      மாரி தலையுமவன் மல்லல் வெற்பே
      அலகை யன்ன வெள்வேர பீலி
      கலவ மஞ்ஞை கட்சியில் தளரினும்
      கடும்பறை கோடியர் மகாஅ ரன்ன
      நெடுங்கழை கொம்பர கடுவன் உகளினும்
      நேர்கொள் நெடுவரை நேமியின் தொடுத்த
      சூர்புகல் அடுக்கத்து பிரசங் காணினும்
      ஞெரேரென நோக்கல் ஓம்புமின் உரித்தன்று ... 240
      நிரைசெலல் மெல்லடி நெறிமாறு படுகுவிர்
      வரைசேர் வகுந்திற் கானத்து படினே
      கழுதிற் சேணோன் ஏவொடு போகி
      இழுதி னன்ன வானிணஞ் செருக்கி
      நிறப்புண் கூர்ந்த நிலந்தின் மருப்பின்
      நெறிக்கெட கிடந்த இரும்பிணர் எருத்தின்
      இருள்துணி தன்ன ஏனங் காணின்
      முளிகழை இழைந்த காடுபடு தீயின்
      நளிபுகை கமழா திறாயினிர் மிசைந்து
      துகளற துணிந்த மணிமருள் தெண்ணீர் ... 250
      குவளையம் பைஞ்சுனை அசைவிட பருகி
      மிகுத்து பதங்கொண்ட பரூஉக்க பொதியினிர்
      புட்கை போகிய புன்றலை மகாரோடு
      அற்கிடை கழிதல் ஓம்பி ஆற்றநும்
      இல்பு கன்ன கல்லளை வதிமின்
      அல்சேர தல்கி அசைதல் ஓம்பி
      வான்கண் விரிந்த விடிய லேற்றெழுந்து
      கானக பட்ட செந்நெறி கொண்மின்
      கயம்கண் டன்ன அகன்பை யங்கண்
      மைந்துமலி சினத்த களிறுமதன் அழிக்கும் ... 260
      துஞ்சுமரங் கடுக்கும் மாசுணம் விலங்கி
      இகந்துசே கமழும் பூவும் உண்டோ ர்
      மறந்தமை கல்லா பழனும் ஊழிறந்து
      பெரும்பயங் கழியினும் மாந்தர் துன்னார்
      இருங்கால் வீயும் பெருமர குழாமும்
      இடனும் வலனும் நினையினர் நோக்கி
      குறியறி தவையவை குறுகாது கழிமின்
      கோடுபல முரஞ்சிய கோளி யாலத்து
      கூடி தன்ன குரல்புணர் புள்ளின்
      நாடுகா ணனந்தலை மென்மெல அகன்மின் ... 270
      மாநிழற் பட்ட மரம்பயில் இறும்பின்
      ஞாயிறு தெறாஅ மாசு நனந்தலை
      தேஎ மருளும் அமைய மாயினும்
      இறாஅவன் சிலையர் மாதேர்பு கொட்கும்
      குறவரு மருளுங் குன்றத்து படினே
      அகன்க பாறை துவன்றி கல்லென
      இயங்கல் ஓம்பிநும் மியங்கள் தொடுமின்
      பாடின் அருவி பயங்கெழு மீமிசை
      காடுகா துறையுங் கானவர் உளரே
      நிலைத்துறை வழீஇய மதனழி மாக்கள் ... 280
      புனற்படு பூசலின் விரைந்துவல் லெய்தி
      உண்டற் கினிய பழனுங் கண்டோ ர்
      மலைதற் கினிய பூவுங் காட்டி
      ஊறு நிரம்பிய ஆறவர் முந்துற
      நும்மி னெஞ்ச தவலம் வீட
      இம்மென் கடும்போ டினியிர் ஆகுவிர்
      அறிஞர் கூறிய மாதிரங் கைக்கொள்பு
      குறியவும் நெடியவும் ஊழிழிபு புதுவோர்
      நோக்கினும் பனிக்கும் நோய்கூர் அடுக்கத்து
      அலர்தாய வரிநிழல் அசையினிர் இருப்பிற் ... 290
      பலதிறம் பெயர்பவை கேட்குவிர் மாதோ
      கலைதொடு பெரும்பழம் புண்கூர தூறலின்
      மலைமுழுதுங் கமழு மாதிர தோறும்
      அருவிய நுகரும் வானர மகளிர்
      வருவிசை தவிராது வாங்குபு குடைதொறும்
      தெரியிமிழ் கொண்டநும் இயம்போ லின்னிசை
      இலங்கேந்து மருப்பின் இனம்பிரி ஒருத்தல்
      விலங்கல் மீமிசை பணவை கானவர்
      புலம்பு குண்ணும் புரிவளை பூசல்
      சேயளை பள்ளி எஃகுறு முள்ளின் ... 300
      எய்தெற இழுக்கிய கானவர் அழுகை
      கொடுவரி பாய்ந்தென கொழுநர் மார்பின்
      நெடுவசி விழுப்புண் தணிமார் காப்பென
      அறல்வாழ் கூந்தற் கொடிச்சியர் பாடல்
      தலைநா பூத்த பொன்னிணர் வேங்கை
      மலைமா ரிடூஉம் ஏ பூசல்
      கன்றரை பட்ட கயந்தலை மடப்பிடி
      வலிக்குவரம் பாகிய கணவன் ஓம்பலின்
      ஒண்கேழ் வயப்புலி பாய்ந்தென கிளையொடு
      நெடுவரை இயம்பும் இடியுமிழ் தழங்குகுரல் ... 310
      கைக்கோண் மறந்த கருவிரன் மந்தி
      அருவிடர் வீழ்ந்ததன் கல்லா பார்ப்பிற்கு
      முறிமே யாக்கை கிளையொடு துவன்றி
      சிறுமை யுற்ற களையா பூசல்
      கலைகை யற்ற காண்பின் நெடுவரை
      நிலைபெய் திட்ட மால்புநெறி யாக
      பெரும்பயன் தொகுத்த தேங்கொள் கொள்ளை
      அருங்குறும் பெறிந்த கானவர் உவகை
      திருந்துவேல் அண்ணற்கு விருந்திறை சான்மென
      நறவுநா செய்த குறவர்தம் பெண்டிரொடு ... 320
      மான்றோற் சிறுபறை கறங கல்லென
      வான்றோய் மீமிசை அயருங் குரவை
      நல்லெழி னெடுந்தேர் இயவுவ தன்ன
      கல்யா றொலிக்கும் விடர்முழங் கிரங்கிசை
      நெடுஞ்சுழி பட்ட கடுங்கண் வேழத்து
      உரவுச்சின தணித்து பெருவெளிற் பிணிமார்
      விரவுமொழி பயிற்றும் பாக ரோதை
      ஒலிகழை தட்டை புடையுநர் புனந்தொறும்
      கிளிகடி மகளிர் விளிபடு பூசல்
      இனத்திற் றீர்ந்த துளங்கிமி னல்லேறு ... 330
      மலைத்தலை வந்த மரையான் கதழ்விடை
      மாறா மைந்தின் ஊறுபட தாக்கி
      கோவலர் குறவரோ டொருங்கியை தார்ப்ப
      வள்ளிதழ குளவியுங் குறிஞ்சியுங் குழைய
      நல்லேறு பொரூஉம் கல்லென் கம்பலை
      காந்தள் துடும்பிற் கமழ்மட லோச்சி
      வன்கோ பலவின் சுளைவிளை தீம்பழம்
      உண்டுபடு மிச்சிற் காழ்பயன் கொண்மார்
      கன்று கடாஅ வுறுக்கு மகாஅ ரோதை
      மழைகண் டன்ன ஆலைதொறு ஞெரேரென ... 340
      கழைகண் ணுடைக்குங் கரும்பி னேத்தமும்
      தினைகுறு மகளிர் இசைபடு வள்ளையும்
      சேம்பு மஞ்சளும் ஓம்பினர் காப்போர்
      பன்றி பறையுங் குன்றக சிலம்பும்
      என்றிவ் வனைத்தும் இயைந்தொருங் கீண்டி
      அவலவு மிசையவு துவன்றி பலவுடன்
      அலகை தவிர்த்த எண்ணரு திறத்த
      மலைபடு கடாஅ மாதிர தியம்ப
      குரூஉக்க பிணையல் கோதை மகளிர்
      முழவுத்துயில் அறியா வியலு ளாங்கண் ... 350
      விழவின் அற்றவன் வியன்கண் வெற்பே
      கண்ண் டண்ண்னென கண்டுங் கேட்டுங்
      உண்டற் கினிய பலபா ராட்டியும்
      இன்னும் வருவ தாக நமக்கென
      தொன்முறை மரபினி ராகி பன்மாண்
      செருமிக்கு புகலு திருவார் மார்பன்
      உருமுரறு கருவிய பெருமலை பிற்பட
      இறும்பூது கஞலிய இன்குரல் விறலியர்
      நறுங்கார் அடுக்கத்து குறிஞ்சி பாடி
      கைதொழூஉ பரவி பழிச்சினிர் கழிமின் ... 360
      மைபடு மாமலை பனுவலிற் பொங்கி
      கைதோய் வன்ன கார்மழை தொழுதி
      தூஉ யன்ன துவலை தூற்றலின்
      தேஎ தேறா கடும்பரி கடும்பொடு
      காஅ கொண்டநும் இயந்தொய் படாமற்
      கூவல் அன்ன விடரகம் புகுமின்
      இருங்கல் இகுப்ப திறுவரை சேராது
      குன்றிடம் பட்ட ஆரிடர் அழுவத்து
      நின்று நோக்கினும் கண்வாள் வெளவும்
      மண்கனை முழவின் தலைக்கோல் கொண்டு ... 370
      தண்டுகா லாக தளர்தல் ஓம்பி
      ஊன்றினிர் கழிமின் ஊறுதவ பலவே
      அயில்கா தன்ன கூர்ங்கற் பாறை
      வெயில்புற தரூஉம் இன்னல் இயக்கத்து
      கதிர்சின தணிந்த அமயத்து கழிமின்
      உரைசெல வெறுத்தவவ னீங்கா சுற்றமொடு
      புரைதவ உயரிய மழைமருள் பஃறோல்
      அரசுநிலை தளர்க்கும் அருப்பமும் உடைய
      பின்னி யன்ன பிணங்கரி னுழைதொறும்
      முன்னோன் வாங்கிய கடுவிசை கணைக்கோல் ... 380
      இன்னிசை நல்யாழ பத்தரும் விசிபிணி
      மண்ணார் முழவின் கண்ணு மோம்பி
      கைபிணி விடாஅது பைப கழிமின்
      களிறுமலை தன்ன கண்கூடு துறுகல்
      தளிபொழி கான தலைதவ பலவே
      ஒன்னா தெவ்வர் உலைவிட தார்த்தென
      நல்வழி கொடுத்த நாணுடை மறவர்
      செல்லா நல்லிசை பெயரொடு நட்ட
      கல்லேசு கவலை எண்ணுமிக பலவே
      இன்புறு முரற்கைநும் பாட்டுவிரு பாக ... 390
      தொன்றொழுகு மரபினும் மருப்பிகுத்து துனைமின்
      பண்டுநற் கறியா புலம்பெயர் புதுவிர்
      சந்து நீவி புன்முடி திடுமின்
      செல்லு தேஎத்து பெயர்மருங் கறிமார்
      கல்லெறி தெழுதிய நல்லரை மராஅத்து
      கடவு ளோங்கிய காடேசு கவலை
      ஒட்டா தகன்ற ஒன்னா தெவ்வர்
      சுட்டினும் பனிக்குஞ் சுரந்தவ பலவே
      தேம்பாய் கண்ணி தேர்வீசு கவிகை
      ஓம்பா வள்ளற் படர்ந்திகும் எனினே ... 400
      மேம்பட வெறுத்தவன் தொஃறிணை மூதூர்
      ஆங்கன மற்றே நம்ம னோர்க்கே
      அசைவுழி யசைஇ அஞ்சாது கழிமின்
      புலியுற வெறுத்ததன் வீழ்பிணை யுள்ளி
      கலைநின்று விளிக்குங் கானம் ஊழிறந்து
      சிலையொலி வெரீஇய செங்கண் மரைவிடை
      தலையிரும்பு கதழும் நாறுகொடி புறவின்
      வேறுபுலம் படர்ந்த ஏறுடை இனத்த
      வளையான் தீம்பால் மிளைசூழ் கோவலர்
      வளையோர் உவப்ப தருவனர் சொரிதலின் ... 410
      பலம்பெறு நசையொடு பதிவயிற் றீர்ந்தநும்
      புலம்புசேண் அகல புதுவிர் ஆகுவிர்
      பகர்விரவு நெல்லின் பலவரி யன்ன
      தகர்விரவு துருவை வெள்ளையொடு விரைஇ
      கல்லென் கடத்திடை கடலின் இரைக்கும்
      பல்யா டினநிரை எல்லினிர் புகினே
      பாலும் மிதவையும் பண்ணாது பெறுகுவிர்
      துய்ம்மயிர் அடக்கிய சேக்கை யன்ன
      மெய்யுரி தியற்றிய மிதியத பள்ளி
      தீத்துணை யாக சேந்தனிர் கழிமின் ... 420
      கூப்பிடு கடக்குங் கூர்நல் லம்பிற்
      கொடுவிற் கூளியர் கூவை காணிற்
      படியோர தேய்த்த பணிவில் ஆண்மை
      கொடியோள் கணவற் படர்ந்திகு மெனினே
      தடியுங் கிழங்கு தண்டினர் தரீஇ
      ஓம்புநர் அல்ல துடற்றுநர் இல்லை
      ஆங்குவியங் கொண்மின் அதுவதன் பண்பே
      தேம்பட மலர்ந்த மராஅமெல் லிணரும்
      உம்பல் அகைத்த ஒண்முறி யாவும்
      தளிரொடு மிடைந்த காமரு கண்ணி ... 430
      திரங்குமர னாரிற் பொலி சூடி
      முரம்புகண் ணுடைந்த நடவை தண்ணென
      உண்டனிர் ஆடி கொண்டனிர் கழிமின்
      செவ்வீ வேங்கை பூவி னன்ன
      வேய்கொள் அரிசி மிதவை சொரிந்த
      சுவல்விளை நெல்லின் அவரையம் பைங்கூழ்
      அற்கிடை உழந்தநும் வருத்தம் வீட
      அகலு ளாங்க கழிமிடை தியற்றிய
      புல்வேய் குரம்பை குடிதொறும் பெறுகுவிர்
      பொன்னறை தன்ன நுண்ணேர் அரிசி ... 440
      வெண்ணெறி தியற்றிய மாக்கண் அமலை
      தண்ணெ ணுண்ணிழு துள்ளீ டாக
      அசையினிர் சேப்பின் அல்கலும் பெறுகுவிர்
      விசையங் கொழித்த பூழி யன்ன
      உண்ணுநர தடுத்த நுண்ணிடி நுவணை
      நொய்ம்மர விறகின் ஞெகிழி மாட்டி
      பனிசேண் நீங்க இனிதுடன் துஞ்சி
      புலரி விடியற் புள்ளோர்த்து கழிமின்
      புல்லரை காஞ்சி புனல்பொரு புதவின்
      மெல்லவ லிருந்த ஊர்தொறு நல்லியாழ ... 450
      பண்ணுப்பெயர தன்ன காவும் பள்ளியும்
      பன்னா ணிற்பினும் சேந்தனிர் செலினும்
      நன்பல வுடைத்தவன் தண்பணை நாடே
      கண்புமலி பழனங் கமழ துழைஇ
      வலையோர் தந்த இருஞ்சுவல் வாளை
      நிலையோர் இட்ட நெடுநாண் தூண்டிற்
      பிடிக்கை யன்ன செங்கண் வராஅல்
      துடிக்கண் அன்ன குறையொடு விரைஇ
      பகன்றை கண்ணி பழையர் மகளிர்
      ஞெண்டாடு செறுவிற் றாரஅய்க்கண் வைத்த ... 460
      விலங்கல் அன்ன போர்முதற் றொலைஇ
      வளஞ்செய் வினைஞர் வல்சி நல்க
      துளங்குதசும்பு வாக்கிய பசும்பொதி தேறல்
      இளங்கதிர் ஞாயிற்று களங்கடொறும் பெறுகுவிர்
      முள்ளரி தியற்றிய வெள்ளரி வெண்சோறு
      வண்டுபட கமழு தேம்பாய் கண்ணி
      திண்டேர் நன்னற்கும் அயினி சான்மென
      கண்டோ ர் மருள கடும்புடன் அருந்தி
      எருதெறி களமர் ஓதையொடு நல்யாழ்
      மருதம் பண்ணி அசையினிர் கழிமின் ... 470
      வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ
      செங்கண் எருமை இனம்பிரி ஒருத்தல்
      கனைசெலல் முன்பொடு கதழ்ந்துவரல் போற்றி
      வனைகல திகிரியிற் குமிழி சுழலும்
      துனைசெலற் றலைவாய் ஓவிற தொலிக்கும்
      காணுநர் வயாஅங் கட்கின் சேயாற்றின்
      யாணர் ஒருகரை கொண்டனிர் கழிமின்
      நிதி துஞ்சு நிவந்தோங்கு வரைப்பிற்
      பதியெழ லறியா பழங்குடி கெழீஇ
      வியலிடம் பெறாஅ விழுப்பெரு நியமத்து ... 480
      யாறென கிடந்த செருவிற் சாறென
      இகழுநர் வெரூஉங் கவலை மறுகிற்
      கடலென காரென ஒலிக்குஞ் சும்மையொடு
      மலையென மழையென மாட மோங்கி
      துனிதீர் காதலின் இனிதமர துறையும்
      பனிவார் காவிற் பல்வண் டிமிரும்
      நனிசே தன்றவன் பழவிறன் மூதூர்
      பொருந்தா தெவ்வர் இருந்தலை துமி
      பருந்துபட கடக்கும் ஒள்வாண் மறவர்
      கருங்கடை எஃகஞ் சாத்திய புதவின் ... 490
      அருங்கடி வாயில் அயிராது புகுமின்
      மன்றில் வதியுநர் சேட்புல பரிசிலர்
      வெல்போர சேஎ பெருவிற லுள்ளி
      வந்தோர் மன்ற அளியர் தாமென
      கண்டோ ரெல்லாம் அமர்ந்தினிது நோக்கி
      விருந்திறை அவரவர் எதிர்கொள குறுகி
      பரிபுலம் பலைத்தநும் வருத்தம் வீட
      எரிகான் றன்ன பூஞ்சினை மராஅத்து
      தொழுதி போக வலிந்தக பட்ட
      மடநடை ஆமான் கயமுனி குழவி ... 500
      ஊமை எண்கின் குடாவடி குருளை
      மீமிசை கொண்ட கவர்பரி கொடுந்தாள்
      வரைவாழ் வருடை வன்றலை மாத்தகர்
      அரவுக்குறும் பெறிந்த சிறுகண் தீர்வை
      அளைச்செறி உழுவை கோளுற வெறுத்த
      மடக்கண் மரையான் பெருஞ்செவி குழவி
      அரக்குவிரி தன்ன செந்நில மருங்கிற்
      பரற்றவழ் உடும்பின் கொடுந்தாள் ஏற்றை
      வரைப்பொலி தியலும் மடக்கண் மஞ்ஞை
      கான கோழி கவர்குரற் சேவல் ... 510
      கான பலவின் முழவுமருள் பெரும்பழம்
      இடிக்கல பன்ன நறுவடி மாவின்
      வடிச்சேறு விளைந்த தீம்பழ தாரம்
      தூவற் கலித்த இவர்நனை வளர்கொடி
      காஅ கொண்ட நுகமரு ணூறை
      பரூஉப்பளிங் குதிர்த்த பலவுறு திருமணி
      குரூஉப்புலி பொருத புண்கூர் யானை
      முத்துடை மருப்பின் முழுவலி மிகுதிரள்
      வளையுடை தன்ன வள்ளிதழ காந்தள்
      நாக திலக நறுங்காழ் ஆரம் ... 520
      கருங்கொடி மிளகின் காய்த்துணர பசுங்கறி
      திருந்தமை விளைந்த தேக்கள் தேறல்
      கானிலை எருமை கழைபெய் தீந்தயிர்
      நீனிற வோரி பாய்ந்தென நெடுவரை
      நேமியிற் செல்லும் நெய்க்கண் இறாஅல்
      உடம்புணர்வு தழீஇய ஆசினி யனைத்தும்
      குடமலை பிறந்த தண்பெருங் காவிரி
      கடன்மண் டழுவத்து கயவாய் கடுப்ப
      நோனா செருவி னெடுங்கடை துவன்றி
      வான தன்ன வளமலி யானை ... 530
      தாதெரு ததைந்த முற்ற முன்னி
      மழையெதிர் படுகண் முழுவுகண் இகுப்ப
      கழைவளர் தூம்பின் கண்ணிடம் இமிர
      மருதம் பண்ணிய கருங்கோட்டு சீறியாழ்
      நரம்புமீ திறவா துடன்புணர தொன்றி
      கடவ தறிந்த இன்குரல் விறலியர்
      தொன்றொழுகு மரபிற் றம்மியல்பு வழாஅது
      அருந்திறற் கடவு பழிச்சிய பின்றை
      விருந்திற் பாணி கழிப்பி நீண்மொழி
      குன்றா நல்லிசை சென்றோர் உம்பல் ... 540
      இன்றிவ செல்லா துலகமொடு நிற்ப
      இடைத்தெரி துணரும் பெரியோர் மாய்ந்தென
      கொடைக்கட னிறுத்த செம்ம லோயென
      வென்றி பல்புகழ் விறலோ டேத்தி
      சென்றது நொடியவும் விடாஅன் நசைதர
      வந்தது சாலும் வருத்தமும் பெரிதென
      பொருமுரண் எதிரிய வயவரொடு பொலிந்து
      திருநகர் முற்றம் அணுகல் வேண்டி
      கல்லென் ஒக்கல் நல்வல திரீஇ
      உயர்ந்த கட்டில் உரும்பில் சுற்றத்து ... 550
      அகன்ற தா தஃகிய நுட்பத்து
      இலமென மலர்ந்த கைய ராகி
      தம்பெயர் தம்மொடு கொண்டனர் மாய்ந்தோர்
      நெடுவரை இழிதரு நீத்தஞ்சால் அருவி
      கடுவரற் கலுழி கட்கின் சேயாற்று
      வடுவாழ் எக்கர் மணலினும் பலரே
      அதனால் புகழொடுங் கழிகநம் வரைந்த நாளென
      பரந்திடங் கொடுக்கும் விசும்புதோய் உள்ளமொடு
      நயந்தனிர் சென்ற நும்மினு தான்பெரிது
      உவந்த உள்ளமோ டமர்ந்தினிது நோக்கி ... 560
      இழைமருங் கறியா நுழைநூற் கலிங்கம்
      எள்ளறு சிறப்பின் வெள்ளரை கொளீஇ
      முடுவல் தந்த பைந்நிண தடியொடு
      நெடுவெ ணெல்லின் அரிசிமு டாது
      தலைநாள் அன்ன புகலொடு வழிச்சிறந்து
      பலநாள் நிற்பினும் பெறுகுவிர் நில்லாது
      செல்வே தில்லவெ தொல்பதி பெயர்ந்தென
      மெல்லென கூறி விடுப்பின் நும்முள்
      தலைவன் தாமரை மலைய விறலியர்
      சீர்கெழு சிறப்பின் விளங்கிழை அணிய .... 570
      நீரி கன்ன நிரைசெலல் நெடுந்தேர்
      வாரி கொள்ளா வரைமருள் வேழம்
      கறங்குமணி துவைக்கும் ஏறுடை பெருநிரை
      பொலம்படை பொலிந்த கொய்சுவற் புரவி
      நிலந்தின கிடந்த நிதியமொ டனைத்தும்
      இலம்படு புலவர் ஏற்றகை நிறை
      கலம்பெ கவிழ்ந்த கழறொடி தடக்கையின்
      வளம்பிழை பறியாது வாய்வளம் பழுநி
      கழைவளர் நவிரத்து மீமிசை ஞெரேரென
      மழைசுர தன்ன ஈகை நல்கி
      தலைநாள் விடுக்கும் பரிசின் மலைநீர்
      வென்றெழு கொடியிற் றோன்றும்
      குன்றுசூழ் இருக்கை நாடுகிழ வோனே. 583
      ----------------------------
      மலைபடுகடாம் முற்றிற்று.
      ----------------------------
      ------------------------------------------------------------------------
      22 2000