1. சிவபுராணம்
      திருப்பெருந்துறையில் அருளியது
      தற்சிறப்பு பாயிரம்
      நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
      இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
      கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
      ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
      ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5
      வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
      பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
      புறந்தார்க்கு சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
      கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
      சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10
      ஈசன் அடிபோற்றி எந்தை
      தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
      நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
      மா பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
      சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15
      ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
      சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
      அவன் அருளாலே தாள்
      சிந்தை மகிழ சிவ புராணம் தன்னை
      முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். 20
      கண் நுதலான் தன்கருணை கண்காட்ட வந்து எய்தி
      எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
      விண் நிறைந்தும் மண் மிக்காய் விளங்கு
      எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர்
      பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் 25
      புல்லாகி பூடா புழுவாய் மரமாகி
      பல் விருகமாகி பறவையா பாம்பாகி
      கல்லாய் மனிதரா பேயா கணங்களாய்
      வல் அசுரர் ஆகி முனிவரா தேவரா
      செல்லாஅ நின்ற இ தாவர சங்கமத்துள் 30
      எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான்
      மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
      உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
      மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
      ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35
      வெய்யாய் தணியாய் இயமானனாம் விமலா
      பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
      மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெ சுடரே
      எஞ்ஞானம் இல்லாதேன் இன பெருமானே
      அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 40
      ஆக்கம் அளவு இறுதி இல்லாய் அனைத்து உலகும்
      ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
      போக்குவாய் என்னை புகுவிப்பாய் நின் தொழும்பின்
      நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே
      மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45
      கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போல
      சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
      பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
      நிறங்கள் ஓர் ஐந்து உடையாய் விண்ணோர்கள் ஏத்த
      மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50
      மறைந்திட மூடிய மாய இருளை
      அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
      புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி
      மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
      மலங்க புலன் ஐந்தும் வஞ்சனையை செய்ய 55
      விலங்கு மனத்தால் விமலா உனக்கு
      கலந்த அன்பாகி கசிந்து உள் உருகும்
      நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
      நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி
      நாயிற் கடையா கிடந்த அடியேற்கு 60
      தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
      மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
      தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே
      பாசமாம் பற்று அறுத்து பாரிக்கும் ஆரியனே
      நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெட 65
      பேராது நின்ற பெருங்கருணை போராறே
      ஆரா அமுதே அளவிலா பெம்மானே
      ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
      நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
      இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70
      அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
      சோதியனே துன்னிருளே தோன்றா பெருமையனே
      ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
      ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
      கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் 75
      நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே
      போக்கும் வரவும் புணர்வும் இலா புண்ணியனே
      காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே
      ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
      தோற்ற சுடர் ஒளியா சொல்லாத நுண் உணர்வாய் 80
      மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
      தேற்றனே தேற்ற தெளிவே என் சிந்தனை உள்
      ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
      வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
      ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று
      போற்றி புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
      மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
      கள்ள புலக்குரம்பை கட்டு அழிக்க வல்லானே
      நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
      தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90
      அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
      சொல்லற்கு அரியானை சொல்லி திருவடிக்கீழ்
      சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
      செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ
      பல்லோரும் ஏத்த பணிந்து. 95
      திருச்சிற்றம்பலம்

      ------------------------------------------------------------------------
      2. கீர்த்தி திரு அகவல்
      தில்லையில் அருளியது - நிலைமண்டில ஆசிரியப்பா
      தில்லை மூதூர் ஆடிய திருவடி
      பல் உயிர் எல்லாம் பயின்றனன் ஆகி
      எண்இல் பல்குணம் எழில்பெற விளங்கி
      மண்ணும் விண்ணும் வானோர் உலகும்
      துன்னிய கல்வி தோற்றியும் அழித்தும் 5
      என்னுடை இருளை ஏறத்துரந்தும்
      அடியார் உள்ளத்து அன்பு மீதூர
      குடியா கொண்ட கொள்கையும் சிறப்பும்
      மன்னும் மாமலை மகேந்திரம் அதனில்
      சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும் 10
      கல்லா டத்து கலந்து இனிது அருளி
      நல்லா ளோடு நயப்புறவு எய்தியும்
      பஞ்ச பள்ளியில் பால்மொழி தன்னொடும்
      எஞ்சாது ஈண்டும் இன்அருள் விளைத்தும்
      கிராத வேடமொடு கிஞ்சுக வாயவள் 15
      விராவு கொங்கை நல்தடம் படிந்தும்
      கேவேடர் ஆகி கெளிறது படுத்தும்
      மாவேட்டு ஆகிய ஆகமம் வாங்கியும்
      மற்றவை தம்மை மகேந்திரத்து இருந்து
      உற்ற ஐம் முகங்களாள் பணித்து அருளியும் 20
      நந்தம் பாடியில் நான் மறையோனாய்
      அந்தமில் ஆரியனாய் அமர்ந்து அருளியும்
      வேறு உருவும் வேறுவேறு
      நூறு ஆயிரம் இயல்பினது
      ஏறு உடை ஈசன் இப்புவனியை உ 25
      கூறு உடை மங்கையும் தானும் வந்தருளி
      குதிரையை கொண்டு குடநாடு அதன்மிகை
      சதுர்பட சாத்தா தான் எழுந்தருளியும்
      வேலம் புத்தூர் விட்டேறு அருளி
      கோலம் பொலிவு காட்டிய கொள்கையும் 30
      தர்ப்பணம் அதனில் சாந்தம் புத்தூர்
      வில்பொரு வேடற்கு ஈந்த விளைவும்
      மொக்கணி அருளிய முழுத்தழல் மேனி
      சொக்கது ஆ காட்டிய தொன்மையும்
      அரியொடு பிரமற்கு அளவு அறி ஒண்ணான் 35
      நரியை குதிரை ஆக்கிய நன்மையும்
      ஆண்டுகொண்டருள அழகுறு திருவடி
      பாண்டியன் தனக்கு பரிமாவிற்று
      ஈண்டு கனகம் இசை பெறா அது
      ஆண்டான் எம்கோன் அருள்வழி இருப்ப 40
      தூண்டு சோதி தோற்றிய தொன்மையும்
      அந்தணன் ஆகி ஆண்டுகொண்டருளி
      இந்திர ஞாலம் காட்டிய இயல்பும்
      மதுரை பெருநல் மாநகர் இருந்து
      குதிரை சேவகன் ஆகிய கொள்கையும் 45
      ஆங்கது தன்னில் அடியவர்க்கு ஆக
      பாங்காய் மண் சுமந்தருளிய பரிசும்
      உத்தர கோச மங்கையுள் இருந்து
      வித்தக வேடங் காட்டிய இயல்பும்
      பூவணம் அதனில் பொலிந்து இருந்து அருளி 50
      தூவண மேனி காட்டிய தொன்மையும்
      வாத வூரினில் வந்து இனிது அருளி
      பாத சிலம்பொலி காட்டிய பண்பும்
      திரு ஆர் பொருந்துறை செல்வன் ஆகி
      கரு ஆர் சோதியில் கரந்த கள்ளமும் 55
      பூவலம் அதனில் பொலிந்து இனிது அருளி
      பாவம் நாசம் ஆக்கிய பரிசும்
      தண்ணீர பந்தல் சயம்பெற வைத்து
      நல்நீர சேவகன் ஆகிய நன்மையும்
      விருந்தினன் ஆகி வெண்காடு அதனில் 60
      குருந்தின் கீழ் அன்றிருந்த கொள்கையும்
      பட்ட மங்கையில் பாங்காய் இருந்து அங்கு
      அட்ட மாசித்தி அருளிய அதுவும்
      வேடுவன் ஆகி வேண்டு உரு கொண்டு
      காடு அது தன்னில் கரந்த உள்ளமும் 65
      மெ காட்டிட்டு வேண்டு உரு கொண்டு
      தக்கான் ஒருவன் ஆகிய தன்மையும்
      ஓரி ஊரில் உகந்து இனிது அருளி
      பாரிரும் பாலகன் ஆகிய பரிசும்
      பாண்டூர் தன்னில் ஈண்ட இருந்தும் 70
      தேவூர தென்பால் திகழ்தரு தீவில்
      கோவார் கோலம் கொண்ட கொள்கையும்
      தேன் அமர் சோலை திரு ஆரூரில்
      ஞானம் தன்னை நல்கிய நன்மையும்
      இடைமருது அதனில் ஈண்ட இருந்து 75
      படி பாதம் வைத்த அப்பரிசும்
      ஏகம் பத்தில் இயல்பாய் இருந்து
      பாகம் பெண்ணோடு ஆயின பரிசும்
      திருவாஞ்சியத்தில் சீர்பெற இருந்து
      மருவார் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும் 80
      சேவகன் ஆகி திண்சிலை ஏந்தி
      பாவகம் பலபல காட்டிய பரிசும்
      கடம்பூர் தன்னில் இடம்பெற இருந்தும்
      ஈங்கோய் மலையில் எழிலது காட்டியும்
      ஐயாறு அதனில் சைவன் ஆகியும் 85
      துருத்தி தன்னில் அருத்தியோடு இருந்தும்
      திருப்பனை ஊரில் விருப்பன் ஆகியும்
      கழுமலம் அதனில் காட்சி கொடுத்தும்
      கழுக்குன்று அதனில் வழுக்காது இருந்தும்
      புறம்பயம் அதனில் அறம்பல அருளியும் 90
      குற்றாலத்து குறியாய் இருந்தும்
      அந்தமில் பெருமை அழல் உரு கரந்து
      சுந்தர வேடத்து ஒருமுதல் உருவுகொண்டு
      இந்திர ஞாலம் போலவந்து அருளி
      எவ்வெவர் தன்மையும் தன்வயிள் படுத்து 95
      தானே ஆகிய தயாபரன் எம் இறை
      சந்திர தீபத்து சாத்திரன் ஆகி
      அந்திரத்து இழிந்து வந்து அழகு அமர் பாலையுள்
      சுந்தர தன்மையொடு துதைந்து இருந்தருளியும்
      மந்திர மாமலை மகேந்திர வெற்பன் 100
      அந்தம் இல் பெருமை அருள் உடை அண்ணல்
      எம் தமை ஆண்ட பரிசு அது பகரின்
      ஆற்றல் அதுவுடை அழகமர் திரு உரு
      நீற்று கோடி நிமிர்ந்து காட்டியும்
      ஊனம் தன்னை ஒருங்குடன் அறுக்கும் 105
      ஆன தம்மே ஆறா அருளியும்
      மாதில் கூறுஉடை மாப்பெரும் கருணையன்
      நாத பெரும்பறை நவின்று கறங்கவும்
      அழுக்கு அடையாமல் ஆண்டுகொண்டு அருள்பவன்
      கழு கடை தன்னை கைக்கொண்டு அருளியும் 110
      மூலம் ஆகிய மும்மலம் அறுக்கும்
      தூய மேனி சுடர்விடு சோதி
      காதலன் ஆகி கழுநீர் மாலை
      ஏறு உடைத்தாக எழில்பெற அணித்தும்
      அரியொடு பிரமற்கு அளவு அறியாதவன் 115
      பரிமாவின் மிசை பயின்ற வண்ணமும்
      மீண்டு வாராவழி அருள் புரிபவன்
      பாண்டி நாடே பழம்பதி ஆகவும்
      பக்தி செய் அடியாரை பரம்பரத்து உய்ப்பவன்
      உத்தர கோச மங்கை ஊர் ஆகவும் 120
      ஆதி மூர்த்திகளுக்கு அருள்புரிந்து அருளிய
      தேவ தேவன் திரு பெயர் ஆகவும்
      இருள கடிந்து அருளிய இன்ப ஊர்தி
      அருளிய பெருமை அருள்மலை யாகவும்
      எப்பெரு தமையும் எவ்வெவர் திறமும் 125
      அப்பரிசு அதனால் ஆண்டுகொண்டருளி
      நாயினேனை நலம்மலி தில்லையுள்
      கோலம் ஆர்தரு பொதுவினில் வருகஎன
      ஏல என்னை ஈங்கு ஒழி தருளி
      அன்று உடன் சென்ற அருள்பெறும் அடியவர் 130
      ஒன்ற உடன் கலந்து
      எய்த வந்திலாதார் எரியில் பாயவும்
      மாலது வாகி மயக்கம் எய்தியும்
      பூதலம் அதனில் புரண்டுவீழ்ந்து அலறியும்
      கால்விசைத்து ஓடி கடல்புக மண்டி 135
      நாத என்று அழுது
      பாதம் எய்தினர்
      பதஞ்சலி கருளிய பரமநாடக என்ற
      இதம் சலிப்பெய்த நின்று ஏங்கினர் ஏங்கவும்
      எழில்பெறும் இமயத்து இயல்புஉடை அம்பொன் 140
      பொலிதரு புலியூர பொதுவினில் நடம் நவில்
      கனிதரு செவ்வாய் உமையொடு காளிக்கு
      அருளிய திருமுகத்து அழகு உறு சிறுநகை
      இறைவன் ஈண்டிய அடியவ ரோடும்
      பொலிதரு புலியூர் புக்கு இனிது அருளினன் 145
      ஒலிதரு கைலை உயர்கிழ வோனே
      திருச்சிற்றம்பலம்

      ------------------------------------------------------------------------
      3. திருவண்ட பகுதி
      தில்லையில் அருளயது - இணை குறள் ஆசிரியப்பா
      அண்ட பகுதியின் உண்டை பிறக்கம்
      அளப்பு அரும் தன்மை வள பெருங் காட்சி
      ஒன்றனுக்கு ஒன்று நின்றெழில் பகரின்
      நூற்று ஒரு கோடியின் மேல்பட விரிந்தன
      இல்நுழை கதிரின் துன் அணு புரை 5
      சிறிய ஆக பெரியோன் தெரியின்
      வேதியன் தொகையொடு மாலவன் மிகுதியும்
      தோற்றமும் சிறப்பும் ஈற்றொடு புணரிய
      மாப்பேர் ஊழியும் நீக்கமும் நிலையும்
      சூக்கமொடு தூலத்து சூறை மாருதத்து 10
      எறியது வளியின்
      கொட்க பெயர்க்கும் குழகன் முழுவதும்
      படைப்போன் படைக்கும் பழையோன் படைத்தவை
      காப்போன் காக்கும் கடவுள் காப்பவை
      காப்போன் கரப்பவை கருதா 15
      கருத்துடை கடவுள் திருத்தகும்
      அறுவகை சமயத்து அறுவகை யோர்க்கும்
      வீடுபேறாய் நின்ற விண்ணோர் பகுதி
      கீடம் புரையும் கிழவோன் நாள் தொறும்
      அருக்கனின் சோதி அமைத்தோன் திருத்தகு 20
      மதியில் தண்மை வை தோன் திண்திறல்
      தீயில் வெம்மை செய்தோன் பொய்தீர்
      வானில் கலப்பு வைத்தோன் மேதகு
      காலின் ஊக்கம் கண்டோ ன் நிழல் திகழ்
      நீரில் இன்சுவை நிகழ்ந்தோன் வெளிப்பட 25
      மண்ணில் திண்மை வைத்தோன் என்று
      எனை பல கோடி
      அனைத்து அவ்வயின் அடைத்தோன்.
      முன்னோன் காண்க முழுதோன்
      தன்நேர் இல்லோன் தானே காண்க 30
      ஏனம் தொல் எயிறு அணிந்தோன் காண்க
      கானம் புலியுரி அரையோன் காண்க
      நீற்றோன் காண்க நினைதொறும்
      ஆற்றேன் காண்க அந்தோ கெடுவேன்
      இன்னிசை வீணையில் இசைத்தோன் காண்க 35
      அன்னது ஒன்று அவ் வயின் அறிந்தோன் காண்க
      பரமன் காண்க பழையோன்
      பிரமன்மால் காணா பெரியோன் காண்க
      அற்புதன் காண்க அநேகன்
      சொற்பதங் கடந்த தொல்லோன் காண்க 40
      சித்தமும் செல்லா சேட்சியன் காண்க
      பத்தி வலையில் படுவோன் காண்க
      ஒருவன் என்றும்
      விரிபொழில் முழுதாய் விரிந்தோன் காண்க
      அணுத்தரும் தன்மையில் ஐயோன் காண்க 45
      இணைப்பு அரும் பெருமையில் ஈசன் காண்க
      அரிய அதில் அரியோன்
      மருவி எப்பொருளும் வளர்ப்போன் காண்க
      நூல் உணர்வு உணரா நுண்ணியன் காண்க
      மேலோடு கீழாய் விரிந்தோன் காண்க 50
      அந்தமும் ஆதியும் அகன்றோன் காண்க
      பந்தமும் வீடும் படைப்போன் காண்க
      நிற்பதுஞ் செல்வதும் ஆனோன் காண்க
      கற்பதும் இறுதியும் கண்டோ ன் காண்க
      யாவரும் பெற உறும் ஈசன் காண்க 55
      தேவரும் அறியா சிவனே காண்க
      பெண்ஆண் அலிஎனும் பெற்றியன் காண்க
      கண்ணால் யானும் கண்டேன் காண்க
      அருள்நனி சுரக்கும் அமுதே காண்க
      கருணையின் பெருமை கண்டேன் காண்க 60
      புவனியல் சேவடி தீண்டினன் காண்க
      சிவன் என யானும் தேறினன் காண்க
      அவன் எனை ஆட்கொண்டு அருளினன் காண்க
      குவளை கண்ணி கூறன் காண்க
      அவளு தானும் உடனே காண்க 65
      பரமா னந்தம் பழம் கட லதுவே
      கருமா முகிலில் தோன்றி
      திருவார் பெருந்துறை வரையில் ஏறி
      திருத்தகு மின்ஒளி திசைதிசை விரிய
      ஐம்புலம் பந்தனை வாள்அரவு இரிய 70
      வெம் துயர் கோடை மாத்தலை கரப்ப
      நீடு எழில் தோன்றி வாள் ஒளி மிளிர
      எம்தம் பிறவியில் கோபம் மிகுந்து
      முரசு ஏறிந்து மாப்பெருங் கருணையில் முழங்கி
      பூப்புரை அஞ்சலி காந்தள் காட்ட 75
      எஞ்சா இன்னருள் நுண்துளி கொள்ள
      செஞ்சுடர் வெள்ளம் திசைதிசை தெவிட்ட வரையுற
      கேத குட்டம் கையற வோங்கி
      இருமு சமயத்து ஒரு பே தேரினை
      நீர்நசை தரவரும் நெடுங்கண் மான்கணம் 80
      தவப்பெரு வாயிடை பருகி தளர்வொடும்
      அவப்பெரு தாபம் நீங்காது அசைந்தன
      ஆயிடை வான பேரியாற்று அகவயின்
      பாய்ந்து எழுந்து இன்பம் பெருஞ்சுழி கொழித்து
      சுழித்து எம்பந்தம் மா கரைபொருது அலைத்திடித்து 85
      ஊழ் ஓங்கிய
      இருவினை மாமரம் வேர் பறித்து எழுந்து
      உருவ அருள்நீர் ஓட்டா அருவரை
      சந்தின் வான்சிறை கட்டி மட்டவிழ்
      வெறிமலர குளவாய் கோலி நிறையகில் 90
      மாப்புகை கரைசேர் வண்டுடை குளத்தின்
      மீக்கொள மேல்மேல் மகிழ்தலின் நோக்கி
      அருச்சனை வயல் உள் அன்புவித்து இட்டு
      தொண்ட உழவர் ஆர தந்த
      அண்டத்து அரும்பெறல் மேகன் வாழ்க 95
      கரும்பண கச்சை கடவுள் வாழ்க
      அரும்தவர்ககு அருளும் ஆதி வாழ்க
      அச்சம் தவிர்த்த சேவகன் வாழ்க
      நிச்சலும் ஈர்த்தா கொள்வோன் வாழ்க
      சூழ்இருள் துன்பம் துடைப்போன் வாழ்க 100
      எய்தினர்க்கு ஆர்அமுது அளிப்போன் வாழ்க
      கூர்இருள் கூத்தொடு குனிப்போன் வாழ்க
      பேர்அமை தோளி காதலன் வாழ்க
      ஏதிலார்ககு ஏதில்எம் இறைவன் வாழ்க
      காதலர்க்கு எய்ப்பினில் வைப்பு வாழ்க 105
      நச்சு அரவு ஆட்டிய நம்பன் போற்றி
      பிச்சு எமை ஏற்றிய பெரியோன் போற்றி
      நீற்றொடு தோற்ற வல்லோன் போற்றி நாற்றிசை
      நடப்பன நடாஅ கிடப்பன கிடாஅய்
      நிற்பன நிறீஇ 110
      சொல்பதம் கடந்த தொல்லோன்
      உள்ள துணர்ச்சியிற் கொள்ளவும் படாஅன்
      கண்முதல் புலனாற் காட்சியும் இல்லோன்
      விண்முதல் பூதம் வெளிப்பட வகுத்தோன்
      பூவில் நாற்றம் போன்றுயர தெங்கும் 115
      ஒழிவற நிறைந்து மேவிய பெருமை
      இன்று எனக்கு எளிவந்து அருளி
      அழிதரும் ஆக்கை ஒழியச்செய்த ஒண்பொருள்
      இன்றென கெளிவந்து இருந்தனன் போற்றி
      அளிதரும் ஆக்கை செய்தோன் போற்றி 120
      ஊற்றிருந்த துள்ளங் களிப்போன் போற்றி
      ஆற்றா இன்பம் அலர்ந்தலை போற்றி
      போற்றா ஆக்கையை பொறுத்தல் புகலேன்
      மரகத குவாஅல் மாமணி பிறக்கம்
      மின்ஒளி கொண்ட பொன்னொளி திகழ 125
      திசைமுகன் சென்று தேடினர்க்கு ஒளித்தும்
      முறையுளி ஒற்றி முயன்றவர்க்கு ஒளித்தும்
      ஒற்றுமை கொண்டு நோக்கும் உள்ளத்து
      உற்றவர் வருந்த உறைப்பவர்க்கு ஒளித்தும்
      மறைத்திறம் நோக்கி வருந்தினர்க்கு ஒளித்தும் 130
      இத்த திரத்தில் காண்டும் என்று இருந்தோர்க்கு
      அத்த திரத்தில் அவ்வயின் ஒளித்தும்
      முனிவு அற நோக்கி நனிவர கௌவி
      ஆணென தோன்றி அலியென பெயர்ந்து
      வாள்நுதல் பெண்என ஒளித்தும் சேண்வயின் 135
      ஐம்புலன் செலவிடுத்து அருவரை தொறும்போ
      துற்றவை துறந்த வெற்று உயிர் ஆக்கை
      அருந்தவர் காட்சியுள் திருந்த ஒளித்தும்
      ஒன்று உண்டில்லை யென்றறி வொளித்தும்
      பண்டே பயில்தொறும் இன்றே
      ஒளிக்கும் சோரனை கண்டனம்
      ஆர்மின் நாண்மலர
      தாள்தனை இடுமின் சுற்றுமின் சூழ்மின்
      தொடர்மின் விடேன்மின்
      பற்றுமின் என்றவர் பற்றுமுற்று ஒளித்தும் 145
      தன்நேர் இல்லோன் தானே ஆன தன்மை
      என் நேர் அனையோர் கேட்கவந்து இயம்பி
      அறைகூவி ஆட்கொண்டருளி
      மறையோர் கோலம் காட்டி அருளலும்
      உலையா அன்பு என்பு உருக ஓலமிட்டு 150
      அலைகடல் திரையில் ஆர்த்து
      தலை தடுமாறா வீழ்ந்துபுரண் டலறி
      பித்தரின் மயங்கி மத்தரின் மதித்து
      நாட்டவர் மருளவும் கேட்டவர் வியப்பவும்
      கடைக்களிறு ஏற்றா தடம்பெரு மதத்தின் 155
      ஆற்றேன் ஆக அவயவம் சுவைதரு
      கோற்றேன் கொண்டு செய்தனன்
      ஏற்றார் மூதூர் எழில்நகை எரியின்
      வீழ்வித்து ஆங்கு அன்று அருட்பெரு தீயின்
      அடியோம் அடிக்குடில் 160
      ஒருத்தரும் வழாமை யொடுக்கினன்
      தடக்கையின் நெல்லி கனியென காயினன்
      சொல்லுவது அறியேன் வாழி முறையோ
      தரியேன் நாயேன் தான் எனை செய்தது
      தெரியேன் ஆஆ செத்தேன் அடியேற்கு 165
      அருளியது அறியேன் பருகியும் ஆரேன்
      விழுங்கியும் ஒல்ல கில்லேன்
      செழுந்தண் பாற்கடல் திரைபுரை வித்து
      உவர்க்கடல் நள்ளும்நீர் உள்அகம் ததும்ப
      வாக்கு இறந்து அமுதம் மயிர்க்கால் தோறும் 170
      தேக்கிட செய்தனன் கொடியேன் ஊன்தழை
      குரம்பை தோறும் நாய் உடல் அகத்தே
      குரம்பைகொண்டு இன்தேன் பாய்த்தி நிரம்பிய
      அற்புதம் ஆன அமுத தாரைகள்
      எற்பு துளைதொறும் ஏற்றினன் உருகுவது 175
      உள்ளம் கொண்டோ ர் உருச்செய் தாங்கு எனக்கு
      அள் ஊறு ஆக்கை அமைத்தனன் ஒள்ளிய
      கன்னற் கனிதேர் களிறு என கடைமுறை
      என்னையும் இருப்பது ஆக்கினன் என்னில்
      கருணை வான்தேன் கலக்க 180
      அருளொடு பரா அமுது ஆக்கினன்
      பிரமன் மால் அறியா பெற்றி யோனே
      திருச்சிற்றம்பலம்

      ------------------------------------------------------------------------
      4. போற்றி திருஅகவல்
      தில்லையில் அருளியது - நிலைமண்டில ஆசிரியப்பா
      நான்முகன் முதலா வானவர் தொழுது எழ
      ஈர் அடியாலே மூவுலகு அளந்து
      நால் திசை முனிவரும் ஐம்புலன் மலர
      போற்றி செய் கதிர்முடி திருநெடுமால் அன்று
      அடிமுடி அறியும் ஆதரவு அதனில்
      கடும் முரண் ஏனம் ஆகிமுன் கலந்து
      ஏழ்தலம் உருவ இடந்து பின் எய்த்து
      ஊழி முதல்வ சயசய என்று
      வழுத்தியும் காணா மலர்அடி இணைகள்
      வழுத்துதற்கு எளிதாய் வார் கடல் உலகினில் 10
      யானை முதலா எறும்பு ஈறாய
      ஊனம் இல் யோனியின் உள்வினை பிழைத்தும்
      மானுட பிறப்பினுள் மாதா உதரத்து
      ஈனம் இல் கிருமி செருவினில் பிழைத்தும்
      ஒரு மதி தான்றியின் இருமையில் பிழைத்தும்
      இருமதி விளைவின் ஒருமையில் பிழைத்தும்
      மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்
      ஈர் இரு திங்களில் பேர் இருள் பிழைத்தும்
      அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்
      ஆறு திங்களில் ஊறு அலர் பிழைத்தும 20
      ஏழு திங்களில் தாழ் புவி பிழைத்தும்
      எட்டு திங்களில் கட்டமும் பிழைத்தும்
      ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்
      தக்க தசமதி தாயொடு தான்படும்
      துக்க சாகரம் துயர் இடைப்பிழைத்தும்
      ஆண்டுகள் தோறும் அடைந்த அக்காலை
      ஈண்டியும் இருத்தியும் எனைப்பல பிழைத்தும்
      காலை மலமொடு கடும்பகல் பசி நிசி
      வேலை நித்திரை யாத்திரை பிழைத்தும்
      கரும்குழல் செவ்வாய் வெள்நகை கார்மயில் 30
      ஒருங்கிய சாயல் நெருங்கி உள் மதர்த்து
      கச்சு அற நிமிர்ந்து கதிர்ந்து முன் பணைத்து
      எய்த்து இடைவருந்த எழுந்து புடைபரந்து
      ஈர்க்கு இடைபோகா இளமுலை மாதர்தம்
      கூர்த்த நயன கொள்ளையில் பிழைத்தும்
      பித்த உலகர் பெரும் துறை பரப்பினுள்
      மத்தம் களிறு எனும் அவாவிடை பிழைத்தும்
      கல்வி என்னும் பல்கடல் பிழைத்தும்
      செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும்
      நல்குரவு என்னும் தொல்விடம் பிழைத்தும் 40
      புல்வரம்பு ஆய பலதுறை பிழைத்தும்
      தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகி
      முனிவு இலாதது ஓர் பொருள் அது கருதலும்
      ஆறு கோடி மாயா சக்திகள்
      வேறு தம் மாயைகள்
      ஆத்தம் ஆனார் அயலவர் கூடி
      நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறினர்
      சுற்றம் என்னும் தொல்பசு குழாங்கள்
      பற்றி அழைத்து பதறினர் பெருகவும்
      விரதமே பரம் ஆக வேதியரும் 50
      சரதம் ஆகவே சாத்திரம் காட்டினர்
      சமய வாதிகள் தம்தம் தங்களே
      அமைவது ஆக அரற்றி மலைந்தனர்
      மிண்டிய மாயா வாதம் என்னும்
      சண்ட மாருதம் சுழிந்து அடித்து தாஅர்த்து
      உலோகாய தமெனும் ஒள் திறப்பாம்பின்
      கலா பேதத்த கடுவிடம் எய்தி
      அதில் பெருமாயை எனைப்பல சூழவும்
      தப்பாமே தாம் பிடித்தது சலியா
      தழலது கண்ட மெழுகு அது போல 60
      தொழுது உளம் உருகி அழுது உடல்கம்பித்து
      ஆடியும் அலறியும் பாடியும் பரவியும்
      கொடிறும் பேதையும் கொண்டது விடாதென
      படியே ஆகி நல் இடைஅறா அன்பின்
      பசுமரத்து ஆணி அறைந்தால் போல
      கசிவது பெருகி கடல் என மறுகி
      அகம் குழைந்து அனுகுலமாய் மெய் விதிர்த்து
      சகம் பேய் என்று தம்மை சிரிப்ப
      நாண் அது ஒழிந்து நாடவர் பழித்துரை
      பூண் அது ஆ கோணுதல் இன்றி 70
      சதுர் இழந்து அறிமால் கொண்டு சாரும்
      கதியது பரமா அதிசயம் ஆ
      கற்றா மனம் என கதறியும் பதறியும்
      மற்று ஓர் தெய்வம் கனவிலும் நினையாது
      அருபரத்து ஒருவன் அவனியில் வந்து
      குருபரன் ஆகி அருளிய பெருமையை
      சிறுமை என்று இகழாதே திருவடி இணையை
      பிறிவினை அறியா நிழல் அது போல
      முன் பின்னாகி முனியாது அத்திசை
      என்பு நைந்து உருகி நெக்கு ஏங்கி
      அன்பு எனும் ஆறு கரை அது புரள
      நன்புலன் ஒன்றி நாத என்று அரற்றி
      உரை தடுமாறி உரோமம் சிலிர்ப்ப
      கரமலர் மொட்டித்து இருதயம் மலர
      கண்களி கூர நுண் துளி அரும்ப
      சாயா அன்பினை நாள்தொரும் தழைப்பவர்
      தாயே ஆகி வளர்த்தனை போற்றி
      மெய் தரு வேதியன் ஆகி வினைகெட
      கைதரவல்ல கடவுள் போற்றி
      ஆடக மதுரை அரசே போற்றி 90
      கூடல் இலங்கு குருமணி போற்றி
      தென் தில்லை மன்றினுள் ஆடி போற்றி
      இன்று எனக்கு ஆர் அமுது ஆனாய் போற்றி
      மூவா நான்மறை முதல்வா போற்றி
      சேவார் வெல்கொடி சிவனே போற்றி
      மின் ஆர் உருவ விகிர்தா போற்றி
      கல் நார் உரித்த கனியே போற்றி
      காவாய் கன குன்றே போற்றி
      ஆ என்தனக்கு அருளாய்
      படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்றி 100
      இடரை களையும் எந்தாய் போற்றி
      ஈச போற்றி இறைவா
      தேச பளிங்கின் திரளே போற்றி
      அரைசே போற்றி அமுதே
      விரை சேர் சரண விகிர்தா போற்றி
      வேதி போற்றி விமலா
      ஆதி போற்றி அறிவே
      கதியே போற்றி கனியே
      நதி நேர் நெஞ்சடை நம்பா போற்றி
      உடையாய் போற்றி உணர்வே
      கடையேன் அடிமை கண்டாய் போற்றி
      ஐயா போற்றி அணுவே
      சைவா போற்றி தலைவா
      குறியே போற்றி குணமே
      நெறியே போற்றி நினைவே
      வானோர்க்கு அரிய மருந்தே போற்றி
      ஏனோர்க்கு எளிய இறைவா போற்றி
      மூவேழ் சுற்றமும் முரண் உறு நரகு இடை
      ஆழாமே அருள் அரசே போற்றி
      தோழா போற்றி துணைவா
      வாழ்வே போற்றி என் வைப்பே
      முத்தா போற்றி முதல்வா
      அத்தா போற்றி அரனே
      உரைஉணர்வு இறந்த ஒருவ போற்றி
      விரிகடல் உலகின் விளைவே போற்றி
      அருமையில் எளிய அழகே போற்றி
      கருமுகி லாகிய கண்ணே போற்றி
      மன்னிய திருவருள் மலையே போற்றி
      என்னையும் ஒருவ னாக்கி இருங்கழல்
      சென்னியில் வைத்த சேவக போற்றி 130
      தொழுதகை துன்ப துடைப்பாய் போற்றி
      அழிவிலா ஆனந்த வாரி போற்றி
      அழிவதும் ஆவதும் கடந்தாய் போற்றி
      முழுவதும் இறந்த முதல்வா போற்றி
      மான்நேர் நோக்கி மணாளா போற்றி
      வான்அகத்து அமரர் தாயே போற்றி
      பார்இடை ஐந்தா பரந்தாய் போற்றி
      நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
      தீயிடை மூன்றா திகழ்ந்தாய் போற்றி
      வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி 140
      வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி
      அளிபவர் உள்ளதது அமுதே போற்றி
      கனவிலும் தேவர்க்கு அரியாய் போற்றி
      நனவிலும் நாயேற்கு அருளினை போற்றி
      இடைமருது உறையும் எந்தாய் போற்றி
      சடைஇடை கங்கை தரித்தாய் போற்றி
      ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
      சீர் ஆர் திருவையாறா போற்றி
      அண்ணாமலை எம் அண்ணா போற்றி
      கண் ஆர் அமுத கடலே போற்றி 150
      ஏகம்பத்து உறை எந்தாய் போற்றி
      பாகம் பெண் உரு ஆனாய் போற்றி
      பரா துறை மேவிய பரனே போற்றி
      சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
      மற்று ஓர் பற்று இங்கு அறியோன் போற்றி
      குற்றாலத்து எம் கூத்தா போற்றி
      கோகழி மேவிய கோவே போற்றி
      ஈங்கோய் மலை எந்தாய் போற்றி
      பாங்கு ஆர் பழனத்து அழகா போற்றி
      கடம்பூர் மேவிய விடங்கா போற்றி 160
      அடைந்தவர்க்கு அருளும் அப்பா போற்றி
      இத்தி தன்னின் கீழ் இருமூவர்க்கு
      அத்திக்கு அருளிய அரசே போற்றி
      தென்னாடுடைய சிவனே போற்றி
      என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி
      ஏன குருளைக்கு அருளினை போற்றி
      மான கயிலை மலையாய் போற்றி
      அருளிட வேண்டும் அம்மான் போற்றி
      இருள் கெட அருளும் இறைவா போற்றி
      தளர்ந்தேன் அடியேன் தமியேன் போற்றி 170
      களம் கொள கருத அருளாய் போற்றி
      அஞ்சேல் என்று இங்கு அருளாய் போற்றி
      நஞ்சே அமுதா நயந்தாய் போற்றி
      அத்தா போற்றி ஐயா
      நித்தா போற்றி நிமலா
      பத்தா போற்றி பவனே
      பெரியாய் போற்றி பிரானே
      அரியாய் போற்றி அமலா
      மறையோர் கோல நெறியே போற்றி
      முறையோ தரியேன் முதல்வா போற்றி 180
      உறவே போற்றி உயிரே
      சிறவே போற்றி சிவமே
      மஞ்சா போற்றி மணாளா
      பஞ்சு ஏர் அடியான் பங்கா போற்றி
      அலந்தேன் நாயேன் அடியேன் போற்றி
      இலங்கு சுடர் எம் ஈசா போற்றி
      சுவைத்தலை மேவிய கண்ணே போற்றி
      குவைப்பதி மலிந்த கோவே போற்றி
      மலை நாடு உடைய மன்னே போற்றி
      கலை ஆர் அரிகேசரியாய் போற்றி 190
      திருக்கழு குன்றில் செல்வா போற்றி
      பொருப்பு அமர் பூவணத்து அரனே போற்றி
      அருவமும் உருவமும் ஆனாய் போற்றி
      மருவிய கருணை மலையே போற்றி
      துரியமும் இறந்த சுடரே போற்றி
      தெரிவு அரிது ஆகிய தெளிவே போற்றி
      தேளா முத்த சுடரே போற்றி
      ஆள் ஆனவர்களுக்கு அன்பா போற்றி
      ஆரா அமுதே அருளா போற்றி
      பேர் ஆயிரம் உடை பெம்மான் போற்றி 200
      தாளி அறுகின் தாராய் போற்றி
      நீள் ஒளி ஆகிய நிருத்தா போற்றி
      சந்தன சாந்தின் சுந்தர போற்றி
      சிந்தனைக்கு அரிய சிவமே போற்றி
      மந்திர மாமலை மேயாய் போற்றி
      எந்தமை உ கொள்வாய் போற்றி
      புலிமுலை புல் வாய்க்கு அருளினை போற்றி
      அலைகடல் மீ மிசை நடந்தாய் போற்றி
      கரும் குருவிக்கு அன்று அருளினை போற்றி
      இரும் புலன் புலர இசைந்தனை போற்றி 210
      படி உற பயின்ற பாவக போற்றி
      அடியொடு நடு ஈறு ஆனாய் போற்றி
      நரகொடு சுவர்க்க நானிலம் புகாமல்
      பரகதி பாண்டியற்கு அருளினை போற்றி
      ஒழவற நிறைந்த ஒருவ போற்றி
      செழு மலர சிவபுரத்து அரசே போற்றி
      கழு நீர் மாலை கடவுள் போற்றி
      தொழுவார் மையல் துணிப்பாய் போற்றி
      பிழைப்பு வாய்ப்பு ஒன்று அறியா நாயேன்
      குழைத்த சொல்மாலை கொண்டருள் போற்றி 220
      புரம்பல் எரித்த புராண போற்றி
      பரம் சோதி பரனே
      போற்றி புயங்க
      போற்றி புராண
      போற்றி சய
      திருச்சிற்றம்பலம்

      ------------------------------------------------------------------------
      5. திருச்சதகம்
      திருப்பெருந்துறையில் அருளியது
      1. மெய் உணர்தல் கட்டளை கலித்துறை
      மெய்தான் அரும்பி விதிர் விதிர்த்து உன் விரை ஆர் சுழற்கு என்
      கைதான் தலை வைத்து கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம்
      பொய்தான் தவிர்ந்து உன்னை போற்றி சய
      கைதான் நெகிழ விடேன் உடையாய் என்னை கண்டு கொள்ளே. 5
      கொள்ளேன் புரந்தரன் மால் அயன் வாழ்வு குடிகெடினும்
      நள்ளேன் நினது அடியாரொடு அல்லால் நரகம் புகினும்
      எள்ளேன் திருஅருளாலே இருக்க பெறின் இறைவா
      உள்ளேன் பிற தெய்வம் உன்னை அல்லாது எங்கள் உத்தமனே. 6
      உத்தமன் அத்தன் உடையான் அடியே நினைந்து உருகி
      மத்த மனத்தொடு மால் இவன் என்ன மனம் நினைவில்
      ஒத்தன சொல்லிட ஊரூர் திரிந்து
      தம் மனத்தன பேச எஞ்ஞான்று கொல் சாவதுவே.
      சாவ முன் நாள் தக்கன் வேள்வி தகர் தின்று நஞ்சம் அஞ்சி
      ஆவ எந்தாய் என்று அவிதா இடும் நம்மவர் அவரே
      மூவர் என்றே எம்பிரானொடும் எண்ணி விண் ஆண்டு மண்மேல்
      தேவர் என்றே இறுமாந்து என்ன பாவம் திரதவரே. 8
      தவமே புரிந்திலன் தண்மலர் இட்டுமுட்டாது இறைஞ்சேன்
      அவமே பிறந்த அருவினையேன் உனக்கு அன்பர் உள்ளாம்
      சிவமே பெறும் திரு எய்திற்றிலேன் நின் திருவடிக்கு ஆம்
      பவமே அருளு கண்டாய் அடியேற்கு எம்பரம்பரனே. 9
      பரந்து பல் ஆய்மலர் இட்டு முட்டாது அடியே இறைஞ்சி
      இரந்த எல்லாம் எமக்கே பெறலாம் என்னும் அன்பர் உள்ளம்
      கரந்து நில்லா கள்வனே நின்தன் வார்சுழற்கு அன்பு எனக்கும்
      நிரந்தரமாய் அருளாய் நின்னை ஏத்த முழுவதுமே. 10
      முழுவதும் கண்டவனை படைத்தான் முடிசாய்ந்து முன்னாள்
      செழு மலர் கொண்டு எங்கும் தேட அப்பாலன் இப்பால் எம்பிரான்
      கழுதொடு காட்டிடை நாடகம் ஆடி கதி இலியாய்
      உழுவையின் தோல் உடுத்து உன் மத்தம் மேல் கொண்டு உழிதருமே. 11
      உழிதரு காலுங் கனலும் புனலொடு மண்ணுவிண்ணும்
      இழிதரு காலமெ காலம் வருவது வந்ததற்பின்
      உழிதரு காலத்த உன்னடி யேன்செய்த வல்வினை
      கழிதரு காலமு மாயவை காத்தெம்மை காப்பேவனே. 12
      பவனெம் பிரான்பனி மாமதி கண்ணிவிண் ணோர்பெருமான்
      சிவனெம் பிரான்என்னை ஆண்டுகொண்டான் என் சிறுமைகண்டும்
      அவனெம் பிரானென்ன நானடி யேனென்ன இப்பரிசே
      புவனெம் பிரான்தெரி யும்பரிசாவ தியம்புகவே. 13
      புகவே தகேன்உன கன்பருள் யானென்பொல் லாமணியே
      தகவே யெனையுன காட்கொண்ட தன்மையெ புன்மையரை
      மிகவே உயர்த்திவிண் ணோரை பணித்திஅண் ணாவமுதே
      நகவே தகும்எம் பிரானென்னை நீசெய்த நாடகமே. 14
      2. அறிவுறுத்தல் தரவு கொச்ச கலிப்பா

      நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து நான் நடுவே
      வீடு அகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன்
      ஆடகம் சீர் மணிக்குன்றே இடை அறா அன்பு உனக்கு என்
      ஊடு அக தேநின்று உருக தந்தருள் எம் உடையானே. 15
      யான் ஏதும் பிறப்பு அஞ்சேன் இறப்பு அதனுக்கு என கடவேன்
      வான் ஏயும் பெறல் வேண்டேன் மண் ஆள்வான் மதித்தும் இரேன்
      தேன்ஏயும் மலர்க்கொன்றை சிவனே எம்பெருமான்எம்
      மானே உன் அருள் பெறும் நாள் என்று என்றே வருந்துவனே. 16
      வருந்துவன்நின் மலர்ப்பாதம் அவைகாண்பான் நாய்அடியேன்
      இருந்து நலம் மலர் புனையேன் ஏத்தேன் நாத்தழும்பு ஏற
      பொருந்திய பொன் சிலை குனித்தாய் அருள் அமுதம் புரியாயேல்
      வருந்துவன் அத்தமியேன் மற்று என்னேநான் ஆமாறே. 17
      ஆம்ஆறுஉன் திருவடிக்கே அகம்குழையேன் அன்பு உருகேன்
      பூமாலை புனைந்து ஏத்தேன் புகழ்ந்து உரையேன் புத்தேளிர
      கோமான் நின் திருக்கோயில் தூகேன் மெழுகேன் கூத்து ஆடேன்
      சாம் ஆறே விரைக்கின்றேன் சதுராலே சார்வோனே. 18
      வானாகி மண்ணாகி வளிஆகி ஒளிஆகி
      ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
      கோனாகி யான் எனது என்று அவரவரை கூத்தாட்டு
      வானாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே. 19
      வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான் மனம் நின்பால்
      தாழ்த்துவதும் தாம் உயர்ந்து தம்மை எல்லாம் தொழ வேண்டி
      சூழ்த்த மதுகரம் முரலும் தாரோயை நாய் அடியேன்
      பாழ்த்த பிறப்பு அறுத்திடுவான் யானும் உன்னை பரவுவனே. 20
      பரவுவார் இமையோர்கள் பாடுவன நால்வேதம்
      குரவுவார் குழல் மடவாள் கூறு உடையாள் ஒரு பாகம்
      விரவுவார் மெய் அன்பின் அடியார்கள் மேன்மேல் உன்
      அரவுவார் கழல் இணைகள் காண்பாரோ அரியானே. 21
      அரியானே யாவரக்கும் அம்பரவா அம்பலத்து எம்
      பெரியானே சிறியேனை ஆட்கொண்ட பெய்கழல் கீழ்
      விரைஆர்ந்த மலர்தூவேன் வியந்து அலறேன் நயந்துஉருகேன்
      தரியேன் நான் ஆம்ஆறுஎன் சாவேன் சாவேனே.
      வேனில் வேள் மலர்க்கணைக்கும் வெள் நகை செவ்வாய்க்கரிய
      பானல் ஆர் கண்ணியர்க்கும் பதைத்து உருகும் பாழ் நெஞ்சே
      ஊன் எலாம் நின்று உருக புகுந்து ஆண்டான் இன்றுபோய்
      வான் உளான் காணாய் நீ மாளா வாழ்கின்றாயே. 23
      வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே வல்வினைப்பட்டு
      ஆழ்கின்றாய் ஆழாமல் காப்பானை ஏத்தாதே
      சூழ்கின்றாய் கேடு உனக்கு சொல்கின்றேன் பல்காலும்
      வீழ்கின்றாய் நீ அவல கடல் ஆய வெள்ளத்தே. 24
      3. சுட்டறுத்தல் எண் சீர் ஆசிரிய விருத்தம்

      வெள்ளம் தாழ் விரிசடையாய் விடையாய் விண்ணோர்
      பெருமானே எனக்கேட்டு வெட்ட நெஞ்சாய்
      பள்ளம் தாழ் உறு புனலில் கீழ் மேல் ஆக
      பதைத்து உருகும் அவ நிற்க என்னை ஆண்டாய்க்கு
      உள்ளம்தான் நின்று உச்சி அளவும் நெஞ்சாய்
      உருகாதால் உடம்பு எல்லாம் கண்ணாய் அண்ணா
      வெள்ளம்தான் பாயாதால் நெஞ்சம் கல் ஆம்
      கண் இணையும் மரம் ஆம் தீ வினையினேற்கே. 25
      வினையிலே கிடந்தேனை புகுந்து நின்று
      போதுநான் வினை கேடன் என்பாய் போல
      இனையன் நான் என்று உன்னை அறிவித்து என்னை
      ஆட்கொண்டு எம்பிரான் ஆனாய்க்கு இரும்பின் பாவை
      அனைய நான் பாடேன் நின்று ஆடேன் அந்தோ
      அலறிடேன் உலறிடேன் ஆவி சோரேன்
      முனைவனே முறையோ நான் ஆனவாறு
      முடிவு அறியேன் முதல் அந்தம் ஆயினானே 26
      ஆயநான் மறையனும் நீயே ஆதல்
      அறிந்து யான் யாவரினும் கடையேன் ஆய
      நாயினேன் ஆதலையும் நோக்கி கண்டும்
      நாதனே நான் உனக்கு ஓர் அன்பன் என்பேன்
      ஆயினேன் ஆதலால் ஆண்டு கொண்டாய்
      அடியார் தாம் இல்லையே அன்றி மற்று ஓர்
      பேயனேன் இதுதான் நின்பெருமை அன்றே
      எம்பெருமான் என் சொல்லி பேசுகேனே. 27
      பேசின் தாம் ஈசனே எந்தாய் எந்தை
      பெருமானே என்று என்றே பேசி
      பூசின்தான் திருமேனி நிறை பூசி
      போற்றி எம்பெருமானே என்று பின்றா
      நேசத்தால் பிறப்பு இறப்பை கடந்தார் தம்மை
      ஆண்டானே அவா வெள்ளம் கள்வனேனை
      மாசு அற்ற மணிக்குன்றே எந்தாய் அந்தோ
      என்னை நீ ஆட்கொண்ட வண்ணம் தானே. 28
      வண்ணம்தான் சேயது அன்று வெளிதே
      அநேகன் ஏகன் அணு அணுவில் இறந்தாய் என்று அங்கு
      எண்ணம்தான் தடுமாறி இமையோர் கூட்டம்
      எய்துமாறு அறியாத எந்தாய் உன் தன்
      வண்ணம்தான் அது காட்டி வடிவு
      மலர்க்கிழல்கள் அவைகாட்டி வழி அற்றேனை
      திண்ணம்தான் பிறவாமல் காத்து ஆட்கொண்டாய்
      எம்பெருமான் என் சொல்லி சிந்துக்கேனே. 29
      சிந்தனை நின்தனக்கு ஆக்கி நாயினேன் தன்
      கண் இனை நின் திருப்பாத போதுக்கு ஆக்கி
      வந்தனையும் அம்மலர்க்கே ஆக்கி வாக்கு உன்
      மணிவார்த்தைக்கு ஆக்கி ஐம்புலன்கள் ஆர
      வந்தனை ஆட்கொண்டு உள்ளே புகுந்து விச்சை
      மால் அமுத பெரும் கடலே மலையே உன்னை
      தந்தனை செ தாமரைக்காடு அனைய மேனி
      தனிச்சுடரே இரண்டுமிலி இத்தனிய னேற்கே. 30
      தனியேனன் பெரும் பிறவி பௌவத்து எவ்வம்
      தடம் திரையால் எற்றுண்டு பற்று ஒன்று இன்றி
      கனியைநேர் துவர்வாயார் என்னும் காலால்
      கலக்குண்டு காம வான் சுறவின் வாய்ப்பட்டு
      இனி என்னே உய்யும் ஆற என்று
      அஞ்சு எழுத்தின் பணை பிடித்து கிடக்கின்றேனை
      முனைவனே முதல் அந்தம் இல்லா மல்லற்
      கரைகாட்டி ஆட்கொண்டாய் மூர்க்கனேற்கே. 31
      கேட்டு ஆரும் அறியாதான் கேடு ஒன்று இல்லான்
      கிளை இலான் கேளாதே எல்லாம் கேட்டான்
      நாட்டார்கன் விழித்திருப்ப ஞாலத்து உள்ளே
      நாயினுக்கு தவிசு இட்டு நாயினேற்கே
      காட்டாதன எல்லாம் காட்டி பின்னும்
      கேளாதான எல்லாம் கேட்பித்து என்னை
      மீட்டேயும் பிறவாமல் காத்து ஆட்கொண்டான்
      எம்பெருமான் செய்திட்ட விச்சைதானே. 32
      விச்சைதான் இது ஒப்பது உண்டோ கேட்கின்
      மிகுகாதல் அடியார்தம் அடியன் ஆக்கி
      அச்சம் தீர்த்து ஆட்கொண்டான் அமுதம் ஊறி
      அகம் நெகவே புகுந்து ஆண்டான் அன்பு கூர
      அச்சன் ஆண் பெண் அலி ஆகாசம் ஆகி
      ஆர் அழல் ஆய் அந்தம் அப்பால்
      செச்சை மலர் புரையும் மேனி எங்கள்
      சிவபெருமான் எம்பெருமான் தேவா கோவே. 33
      தேவர்க்கோ அறியாத தேவ தேவன்
      செழும் பொழில்கள் பயந்து காத்து அழிக்கும் மற்றை
      மூவர் கோனாய் நின்ற முதல்வன் மூர்த்தி
      மூதாதை மாது ஆளும் பாகத்து எந்தை
      யாவர் கோன் என்னையும் வந்து ஆண்டு கொண்டான்
      யாம் ஆர்க்கும் குடி அல்லோம் யாதும் அஞ்சோம்
      மேவினோம் அவன் அடியார் அடியரோடும்
      மேன்மேலும் குடைந்து ஆடி ஆடுவோமே. 34
      4. ஆத்ம சுத்தி அறுசீர் ஆசிரிய விருத்தம்

      ஆடுகின்றிலை கூத்து உடையான் கழற்கு அன்பு இலை என்புஉருகி
      பாடுகின்றிலை பதைப்பதும் செய்கிலை பணிகிலை பாதமலர்
      சூடுகின்றிலை சூட்டுகின்றதும் இலை துணை இலி பிண நெஞ்சே
      தேடிகின்றிலை தெருவுதோறு அலறிலை செய்வதொன்று அறியேனே 35
      அறிவு இலாத எனைப்புகுந்து ஆண்டு கொண்டு அறிவதை அருளிமேல்
      நெறிஎலாம் புலம் ஆக்கிய எந்தையை பந்தனை அறு பானை
      பிறிவு இலாத இன் அருள் கண் பெற்றிருந்தும் மாறி ஆடுதி பிண நெஞ்சே
      கிறி எலாம் மி கீழ்ப்படுத்தாய் கெடுத்தாய் என்னை கெடுமாறே. 36
      மாறிநின்று எனை கெட கிடந்தனையை எம் மிதி இலிமட நெஞ்சே
      தேறுகின்றிலம் இனி உனை சிக்கனெ சிவன் அவன் திரங் கோள் மேல்
      நீறு நின்றது கண்டனை ஆயினும் நெக்கிலை இக்காயம்
      கீறு நின்றிலை கெடுவது உன் பரிசு இது கேட்கவும் கில்லேனே. 37
      கிற்றவா மனமே கெடுவாய் உடையான் அடி நாயேனை
      விற்று எலாம் மிக ஆள்வதற்கு உரியவன் விரைமலர் திரு பாதம்
      முற்று இலா இளந்தளிர் பிரிந்திருந்து நீ உண்டன எல்லாம்
      அற்றவாறும் நின் அறிவும் நின்பெருமையும் அளவு அறு கில்லேனே. 38
      அளவு அறுப்பதற்கு அரியவன் இமையவர்க்கு
      அடியவர்க்கு எளியான் நம்
      களவு அறுத்து நின்று ஆண்டமை கருத்தினுள்
      கசிந்து உணர்ந்து இருந்தேயும்
      உள கறுத்து உனை நினைந்து உளம் பெரும் களன்
      செய்ததும் இலை நெஞ்சே
      பளகு அறுத்து அடையான் கழல் பணிந்திலை
      பரகதி புகுவானே. 39
      புகுவ தாவதும் போதர வில்லதும் பொன்னகர் புகப்போதற்
      குகுவ தாவதும் எந்தையெம் பிரானென்னை யாண்டவன் சுழற்கன்பு
      நெகுவ தாவதும் நித்தலும் அமுதொடு தேனொடு பால்கட்டி
      மிகுவ தாவதும் இன்றெனின் மற்றிதற் கென்செய்கேன் வினையேனே. 40
      வினையென் போலுடை யார்பிற ராருடை யானடி நாயேனை
      திசையின் பாகமும் பிரிவது திருக்குறி பன்றுமற் றதணாலே
      முனைவன் பாதநன் மலர்பிரி திருந்தும்நான்முட்டிலேன் தலைகீறேன்
      இனையன் பாவனை யிரும்புகல் மனஞ்செவி யின்னதென் றறியேனே. 41
      ஏனை யாவரும் எய்திட லுற்றமற் றின்ன தென் றறியாத
      தேனை ஆன்நெயை கரும்பின் இன் தேறலை சிவனையென் சிவலோ
      கோனை மான்அன நோக்கிதன் கூறனை குறுகிலேன் நெடுங்காலம்
      ஊனை யானிரு தோம்புகின் றேன்கெடு வேனுயி ரோயாதே. 42
      ஓய்வி லாதன உவமனில் இறந்தன ஒண்மலர தாள்தந்து
      நாயி லாகிய குலத்தினுங் கடைப்படும் என்னைநன் னெறிகாட்டி
      தாயி லாகிய இன்னருள் புரிந்தஎன் தலைவனை நனிகாணேன்
      தீயில் வீழ்கிலேன் திண்வரை உருள்கிலேன் செழுங்கடல் புகுவேனே. 43
      வேனில் வேள்கணை கிழித்திட மதிகெடும் அதுதனை நினையாதே
      மான்நி லாவிய நோக்கியர் படிறிடை மத்திடு தயிராகி
      தேன்நி லாவிய திருவருள் புரிந்தவென் சிவனகர் புகப்போகேன்
      ஊனில் ஆவியை ஓம்புதற் பொருட்டினும் உண்டுடு திருந்தேனே. 44
      5. கைம்மாறு கொடுத்தல் கலிவிருத்தம்
      இருகை யானையை ஒத்திரு தென்னுள
      கருவை யான்கண்டி லேன் கண்ட தெவ்வமே
      வருக வென்று பணித்தனை வானுளோர்க்கு
      ஒருவ னேகிற்றி லேன்கிற்பன் உண்ணவே. 45
      உண்டோ ர் ஒண்பொரு ளென்றுணர் வார்க்கெலாம்
      பெண்டிர் ஆண்அலி யென்றறி யொண்கிலை
      தொண்ட னேற்குள்ள வாவந்து தோன்றினாய்
      கண்டுங் கண்டிலேன் என்னகண் மாயமே. 46
      மேலை வானவ ரும்மறி யாததோர்
      கோல மேயெனை ஆட்கொண்ட கூத்தனே
      ஞால மேவிசும் பேயிவை வந்துபோம்
      கால மேயுளை யென்றுகொல் காண்பதே. 47
      காண லாம்பர மேக கிறந்ததோர்
      வாணி லா பொரு ளேயிங்கொர் பார்ப்பென
      பாண ளேன்படிற் றாக்கையை விட்டுனை
      பூணு மாற்றி யேன் புலன் போற்றியே. 48
      போற்றி யென்றும் புரண்டும் புகழ்ந்தும்நின்று
      ஆற்றன் மிக்கஅன் பாலழை கின்றிலேன்
      ஏற்று வந்தெதிர் தாமரை தாளுறுங்
      கூற்ற மன்னதொர் கொள்கையென் கொள்கையே. 49
      கொள்ளுங் கில்லெனை யன்பரிற் கூய்ப்பணி
      கள்ளும் வண்டும் அறாமலர கொன்றையான்
      நள்ளுங் கீழளும் மேலுளும் யாவுளும்
      எள்ளும் எண்ணெயும் போல்நின்ற எந்தையே. 50
      எந்தை யாயெம் பிரான்மற்றும் யாவர்க்கு
      தந்தை தாய்தம் பிரான்தன கஃதிலான்
      முந்தி யென்னுள் புகுந்தனன் யாவருஞ்
      சிந்தை யாலும் அறிவருஞ் செல்வனே. 51
      செல்வம் நல்குர வின்றிவிண் ணோர்புழு
      புல்வரம் பின்றி யார்க்கும் அரும்பொருள்
      எல்லை யில்கழல் கண்டும் பிரிந்தனன்
      கல்வ கைமன தேன்பட்ட கட்டமே. 52
      கட்டறுத்தெனை யாண்டுகண் ணாரநீறு
      இட்ட அன்பரொ டியாவருங் காணவே
      பட்டி மண்டபம் ஏற்றினை
      எட்டி னோடிரண் டும் அறி யேனையே. 53
      அறிவ னேயமு தேஅடி நாயினேன்
      அறிவ னா கொண்டோ எனை ஆண்டது
      அறிவி லாமையன் றேகண்ட தாண்டநாள்
      அறிவ னோவல்ல னோஅரு ளீசனே. 54
      6. அநுபோகசுத்தி அறுசீர் ஆசிரிய விருத்தம்
      ஈசனேயென் எம்மானே யெந்தை பெருமான் என்பிறவி
      நாசனே நான் யாதுமென் றல்லா பொல்லா நாயான
      நீசனேனை ஆண்டாய்க்கு நினைக்க மாட்டேன் கண்டாயே
      தேசனேஅம் பலவனே செய்வ தொன்றும் அறியேனே. 55
      செய்வ தறியா சிறுநாயேன் செம்பொற் பாத மலர்காணா
      பொய்யார் பெறும்பே றத்தனையும் பெறுதற் குரியேன் பொய்யிலா
      மெய்யர் வெறியார் மலர்ப்பாதம் மேவ கண்டுங் கேட்டிருந்தும்
      பொய்ய னேன்நான் உண்டுடுத்திங் கிருப்ப தானேன் போரேறே. 56
      போரேறேநின் பொன்னகர்வாய் நீபோந்தருளி இருள்நீக்கி
      வாரே றிளமென் முலையாளே டுடன்வ தருள அருள்பெற்ற
      சீரே றடியார் நின்பாதஞ் சேர கண்டுங் கண்கெட்ட
      ஊரே றாயிங் குழல்வேணே கொடியான் உயிர்தான் உளவாதே. 57
      உலவா கால தவமெய்தி உறுப்பும் வெறுத்திங் குனைக்காண்பான்
      பலமா முனிவர் நனிவாட பாவி யேனை பணிக்கொண்டாய்
      மலமா குரம்பை யிதுமாய்க்க மாட்டேன் மணியே உனைக்காண்பான்
      அலவா நிற்கும் அன்பிலேன் என்கொண்டெழுகேன் எம்மானே. 58
      மானேர் நோக்கி உமையாள் பங்கா வந்திங் காட்கொண்ட
      தேனே அமுதே கரும்பின் தெளிவே சிவனே தென்தில்லை
      கோனே உன்தன் திருக்குறிப்பு கூடு வார்நின் கழல்கூட
      ஊனார் புழுக்கூ டிதுகாத்திங் கிருப்ப தானேன் உடையானே. 59
      உடையா னேநின்றனையுள்கி உள்ளம் உருகும் பெருங்காதல்
      உடையா ருடையாய் நின்பாதஞ் சேர கண்டிங் கூர்நாயிற்
      கடையா னேன்நெஞ் சுருகாதேன் கல்லா மனந்தேன் கசியாதேன்
      முடையா புழுக்கூ டிதுகாத்திங் கிருப்ப தா முடித்தாயே. 60
      முடித்த வாறும் என்றைக்கே தக்க தேமுன் னடியாரை
      பிடித்த வாறுஞ் சோராமற் சோர னேனிங் கொருத்திவாய்
      துடித்த வாறுங் துகிலிறையே சோர்ந்த வாறும் முகங்குறுவேர்
      பொடித்த வாறு மிவையுணர்ந்து கேடென்றனக்கே சூழ்ந்தேனே. 61
      தேனை பாலை கன்னலின் தெளியை ஒளியை தெளிந்தார்தம்
      ஊனை உருக்கும் உடையானை உம்ப ரானை வம்பனேன்
      தானின் னடியேன் நீயென்னை ஆண்டா யென்றால் அடியேற்கு
      தானுஞ் சிரித்தே யருளலா தன்மை யாமென் தன்மையே. 62
      தன்மை பிறரா லறியாத தலைவா பொல்லா நாயன
      புன்மை யேனை ஆண்டையா புறமே போக விடுவாயோ
      என்மை நோக்கு வார்யாரே என்நான் செய்கேன் எம்பெருமான்
      பொன்னே திகழு திருமேனி எந்தா யெங்கு புகுவேனே. 63
      புகுவே னெனதே நின்பாதம் போற்றும் அடியா ருள்நின்று
      நகுவேன் பண்டு தோணோக்கி நாண மில்லா நாயினேன்
      நெடுமன் பில்லை நினைக்காண நீயாண்டருள் அடியேனு
      தகுவ னேயென் தன்மையே எந்தாய் அந்தோ தரியேனே. 64
      7. காருணியத்து இரங்கல் அறுசீர் ஆசிரிய விருத்தம்
      தரிக்கிலேன் காய வாழ்க்கை சங்கரா போற்றி வான
      விருத்தனே போற்றி எங்கள் விடலையே
      ஒருத்தனே போற்றி உம்பர் தம்பிரான்
      நிருத்தனே போற்றி எங்கள் நின்மலா போற்றி.
      போற்றியோ நமச்சி வாய புயங்களே மயங்கு கின்றேன்
      போற்றியோ நமச்சி சாய புகலிடம் பிறிதொன் றில்லை
      போற்றியோ நமச்சி வாய புறமென போக்கில் கண்டாய்
      போற்றியோ நமச்சி வாய சயசய போற்றி போற்றி. 66
      போற்றியென் போலும் பொய்யர் தம்மைஆ கொள்ளும் வள்ளல்
      போற்றிநின் பாதம் போற்றி நாதனே
      போற்றி நின் கருணை வெள்ளம் புதுமது புவனம் நீர்தீ
      காற்றிய மானன் வானம் இருசுடர கடவுளானே. 67
      கடவுளே போற்றி யென்னை கண்டுகொண் டருளு
      விடவுளே உருக்கி யென்னை ஆண்டிட வேண்டும் போற்றி
      உடலிது களைந்தி டொல்லை உம்பர்த தருளு போற்றி
      சடையுளே கங்கை வைத்த சங்கரா போற்றி போற்றி. 68
      சங்கரா போற்றி மற்றோர் சரணிலேன்
      பொங்கரா அல்குற் செவ்வாய் வெண்ணை கரிய வாட்கண்
      மங்கையோர் பங்க போற்றி மால்விடை யூர்தி
      இங்கிவ்வாழ் வாற்ற கில்லேன் எம்பிரான் இழித்திட்டேனே. 69
      இழித்தனன் என்னை யானே எம்பிரான் போற்றி
      பழித்தனன் உன்னை என்னை ஆளுடை பாதம் போற்றி
      பிழைத்தவை பொறுக்கை எல்லாம் பெரியவர் கடமை போற்றி
      ஒழித்திடில் வாழ்வு போற்றி உம்பர்நாட டெம்பி ரானே. 70
      எம்பிரான் போற்றி வான தவரவர் ஏறு
      கொம்பரார் மருங்குல் மங்கை கூறவெண் ணீற போற்றி
      செம்பிரான் போற்றி தில்லை திருச்சிற்றம் பலவ
      உம்பரா போற்றி என்னை ஆளுடை ஒருவ போற்றி. 71
      ஒருவனே போற்றி ஒப்பில் அப்பனே
      குருவனே போற்றி எங்கள் கோமள கொழுந்து
      வருவவென் றென்னை நின்பால் வாங்கிட வேண்டும் போற்றி
      தருகநின் பாதம் போற்றி தமியனேன் தீர்த்தே. 72
      தீர்ந்தஅன் பாய அன்பர கவரினும் அன்ப போற்றி
      பேர்ந்துமென் பொய்மை யாட்கொண்டருளும் பெருமை போற்றி
      வார்ந்தநஞ் சயின்று வானோர கமுதமா வள்ளல் போற்றி
      ஆர்ந்தநின் பாதம் நாயேற் கருளிட வேண்டும் போற்றி. 73
      போற்றி புவனம் நீர்தீர் காலொடு வான மானாய்
      போற்றியெவ் வுயிர்க்கு தோற்றம் ஆகிநீ தோற்ற மில்லாய்
      போற்றியெல் லாவுயிரக்கும் ஈறாயீ றின்மை யானாய்
      போற்றியைம் புலன்கள் நின்னை புணர்கிலா புணர்க்கை யானே. 74
      8. ஆனந்தத்து அழுத்தல் எழுசீர் ஆசிரிய விருத்தம்
      புணர்ப்பது ஒக்க எந்தை என்னை ஆண்டு பூண நோக்கினாய்
      புணர்ப்பது அன்று இது என்றபோது நின்னொடு என்னொடு என்இது ஆம்
      புணர்ப்பது ஆக அன்று இது அன்பு நின்கழல்
      புணர்ப்பது அது ஆக அம் கனாள் புங்கம் ஆன போகமே. 75
      போகம் வேண்டி வேண்டிலேன் புரந்தரஆதி இன்பமும்
      ஏகநின் கழல் இணை அலாது இலேன் எம்பிரான்
      ஆகம் விண்டு கம்பம் வந்து குஞ்சி அஞ்சலி கணே
      ஆக என் கை கண்கள் தாரை ஆறு அது ஐயனே.
      ஐய நின்னது அல்லது இல்லை மற்று ஓர் பற்று வஞ்சனேன்
      பொய் கலந்தது அல்லது இல்லை பொய்மையேன் என்பிரான்
      மை கலந்த கண்ணி பங்க வந்து நின் கழல் கணே
      மெய் கலந்த அன்பர் அன்பு எனக்கும் ஆகவேண்டுமே. 77
      வேண்டும் நின் கழல் கண் அன்பு பொய்மை தீர்த்து மெய்மையே
      ஆண்டு கொண்டு நாயினேனை ஆவ என்று அருளு நீ
      பூண்டு கொண்டு அடியனேனும் போற்றி
      மாண்டு வந்து மன்ன நின்
      வணங்கும் நின்னை மண்ணும் விண்ணும் வேதம் நான்கும் ஓலம் இட்டு
      உணங்கும் நின்னை எய்தல் உற்று மற்று ஓர் உண்மை இன்மையின்
      வணங்கியாம் விடேங்கள் என்ன வந்து நின்று அருளுதற்கு
      இணங்கு கொங்கை மங்கை பங்க என் கொலோ நினைப்பதே. 79
      நினைப்பது ஆக சிந்தை செல்லும் எல்லை ஆய வாக்கினால்
      தினை தனையும் ஆவது இல்லை சொல்லல் ஆவ கேட்பவே
      அனைத்து உலகும் ஆய நின்னை ஐம்புலன்கள் காண்கிலா
      எனைத்து அது எப்புறத்து எந்தை பாதம்
      எய்தல் ஆவது என்று நின்னை எம்பிரான் இவ்வஞ்சனேற்கு
      உய்தல் ஆவது உன் கண் அன்றி மற்று ஓர் உண்மை இன்மையில்
      பைதல் ஆவது என்று பாதுகாத்து இரங்கு பாவியேற்கு
      ஈது அல்லாது நின்கண் ஒன்றும் வண்ணம் இல்லை ஈசனே. 81
      ஈசனே நீ அல்லது இல்லை இங்கும் அங்கும் என்பதும்
      பேசினேன் ஓர் பேதம் இன்மை பேதையேன் என் எம்பிரான்
      நீசனேனை ஆண்டுகொண்ட நின்மலா ஓர் நின் அலால்
      தேசனே ஓர் தேவர் உண்மை சிந்தியாது சிந்தையே. 82
      சிந்தை செய்கை கேள்வி வாக்கு சீர் இல் ஐம்புலன்களால்
      முந்தை ஆன காலம் நின்னை எய்திடாத மூர்க்கனேன்
      வெந்து ஐயா விழுந்திலேன் என் உள்ளம் வெள்கி விண்டிலேன்
      எந்தை ஆய நின்னை இன்னம் எய்தல் உற்று இருப்பனே. 83
      இருப்பு நெஞ்சம் வஞ்சனேனை ஆண்டு கொண்ட நின்னதாள்
      கருப்புமட்டு வாய் மடுத்து எனை கலந்து போகவும்
      நெருப்பும் உண்டு யானும் இருந்தது உண்டது
      விருப்பும் உண்டு நின்கண் என்கண் என்பது என்ன விச்சையே. 84
      9. ஆனந்த பரவரசம் கலிநிலைத்துறை
      விச்சு கேடு பொய்க்கு ஆகாது என்று இங்கு இனை வைத்தாய்
      இச்சைக்கு ஆனார் எல்லாரும் வந்து உன்தாள் சேர்ந்தார்
      அச்சத்தாலே ஆழ்ந்திடுகின்றேன் ஆரூர் எம்
      மிச்சை தேவா என் நான் செய்தேன் பேசாயே. 85
      பேசப்பட்டேன் நின் அடியாரில் திருநீறே
      பூசப்பட்டேன் பூதரால் உன் அடியான் என்று
      ஏசப்பட்டேன் இனிப்படுகின்றது அமையாதால்
      ஆசைப்பட்டேன் ஆட்பட்டேன் உன் அடியேனே. 86
      அடியேன் அல்லேன் கொல்லோ தானெனை ஆட்கொண்டு இலை
      அடியார் ஆனார் எல்லாரும் வந்து உன்தாள் சேர்ந்தார்
      செடிசேர் உடலம் இது நீக்கமாட்டேன் எங்கள் சிவலோகா
      கடியேன் உன்னை கண்ணார காணுமாறு காணேனே. 87
      காணுமாறு காணேன் உன்னை அந்நாள் கண்டேனும்
      பாணே பேசி என் தன்னை படுத்தது என்ன பரஞ்சோதி
      ஆணே பெண்ணே ஆர் அமுதே அத்தா செத்தே போயினேன்
      ஏண் நாண் இல்லா நாயினேன் என்கொண்டு எழுகேன் எம்மானே. 88
      மான் நேர் நோக்கி உமையாள் பங்கா மறை ஈறு அறியா மறையானே
      தேனே அமுதே சிந்தைக்கு அரியாய் சிறியேன் பிழை பொறுக்கும்
      கோனே சிறிதே கொடுமை பறைந்தேன் சிவம் மாநகர் குறுக
      போனார் அடியார் யானும் பொய்யும் புறமே போந்தோமே. 89
      புறமே போந்தோம் பொய்யும் யானும் மெய் அன்பு
      பெறவே வல்லேன் அல்லா வண்ணம் பெற்றேன் யான்
      அறவே நின்னை சேர்ந்த அடியார் மற்று ஒன்று அறியாதார்
      சிறவே செய்து வழிவந்து சிவனே நின்தான் சேர்ந்தாரே. 90
      தாராய் உடையாய் அடியேற்கு உன்தான் இணை அன்பு
      போரா உலகம் புக்கார் அடியார் புறமே போந்தேன் யான்
      ஊர் ஆ மிலை குருட்டு ஆமிலைத்து இங்கு உன்தான் இணை அன்புக்கு
      ஆராய் அடியேன் அயலே மயல் கொண்டு அழுகேனே. 91
      அழுகேன் நின்பால் அன்பாம் மனம் ஆய் அழல் சேர்ந்த
      மெழுகே அன்னார் மின்ஆர் பொன் ஆர் கழல் கண்டு
      தொழுதே உன்னை தொடர்ந்தாரோடும் தொடராதே
      பழுதே பிறந்தேன் என் கொண்டு உன்னை பணிகேனே. 92
      பணிவார் பிணி தீர்ந்து அருளி பழைய அடியார்க்கு உன்
      அணி ஆர் பாதம் கொடுக்கி அதுவும் அரிது என்றால்
      திணி ஆர் மூங்கில் அனையேன் வினையை பொடி ஆக்கி
      தணி ஆர் பாதம் வந்து ஒல்லை தாராய் பொய்தீர் மெய்யானே. 93
      யானே பொய் என்நெஞ்சும் என்
      ஆனால் வினையேன் அழுதால் உன்னை பெறலாமே
      தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும்
      மானே அருளாய் அடியேன் உனை வந்து உறுமாறே. 94
      10. ஆனந்த அதீதம் எண்சீர் ஆசிரிய விருத்தம்
      மாறு இலாத மா கருணை வெள்ளமே
      வந்து முந்தி நின்மலர் கொள்தாள் இணை
      வேறு இலா பதம் பரிசு பெற்ற நின்
      மெய்ம்மை அன்பர் உன்
      ஈறு இலாத நீ எளியை ஆகி வந்து
      ஒளி செய் மானுடம் ஆக நோக்கியும்
      கீறு இலாத நெஞ்சு உடையேன் ஆயினன்
      கடையன் நாயினன் பட்ட கீழ்மையே. 95
      மை இலங்கு நல் கண்ணி பங்கனே
      வந்து என்னை பணிகொண்ட பின்மழ
      கை இலங்கு பொன் கிண்ணம் என்று அலால்
      அரியை என்று உனை கருது கின்றேன்
      மெய் இலங்கு வெண் நீற்று மேனியாய்
      மெய்ம்மை அன்பர் உன்
      பொய் இலங்கு எனை புகுதவிட்டு நீ
      போவதோ சொலாய் பொருத்தம் ஆவதே. 96
      பொருத்தம் இன்மையேன் வஞ்சம் உண்மையேன்
      போதஎன்றுஎனை புரிந்து நோக்கவும்
      வருத்தம் இன்மையேன் வஞ்சம் உண்மையேன்
      மாண்டிலேன் மலர கமல பாதனே
      அரத்த மேனியாய் அருள் செய் அன்பரும்
      நீயும் அங்கு எழுந்தருளி இங்கு எனை
      இருத்தினாய் முறையோ என் எம்பிரான்
      வம்பனேன் வினைக்கு இறுதி இல்லையே. 97
      இல்லை நின் கழற்கு அன்பு அது என் கணே
      ஏலம் ஏலும் நல் குழலி பங்கனே
      கல்லை மென்கனி ஆக்கும் விச்சை கொண்டு
      என்னை நின் கழற்கு அன்பன் ஆக்கினாய்
      எல்லை இல்லை நின் கருணை எம்பிரான்
      ஏதுகொண்டு நான் ஏது செய்யினும்
      வல்லையே எனக்கு இன்னும் உன் கழல்
      காட்டி மீட்கவும் மறு இல் வானனே. 98
      வான நாடரும் அறி ஒணாத நீ
      மறையில் ஈறும் முன் தொடர் ஒணாத நீ
      ஏனை நாடரும் தெரி ஒணாத நீ
      என்னை இன்னிதாய் ஆண்டு கொண்டவா
      ஊனை நாடகம் ஆடு வித்தவா
      உருகி நான் உனை பருக வைத்தவா
      ஞான நாடகம் ஆடு வித்தவா
      நைய வையகத்து உடைய விச்சையே. 99
      விச்சு அது இன்றியே விளைவமு செய்குவாய்
      விண்ணும் மண்ணகம் முழுதும் யாவையும்
      வைச்சு வாங்குவாய் வஞ்சக பெரும்
      புலையனேனை உன்கோயில் வாயிலிற்
      பிச்சன்ஆக்கினாய் பெரிய அன்பருக்கு
      உரியன் ஆக்கினாய் தாம் வளர்த்தது ஓர்
      நச்சு மாமரம் ஆயினும் கொலார்
      நானும் அங்கனே உடைய நாதனே. 100
      உடைய நாதனே போற்றி நின் அலால்
      பற்று மற்று எனக்கு ஆவது ஒன்று இனி
      உடையனே பணி போற்றி உம்பரார்
      தம் பராபரா போற்றி யாரினும்
      கடையன் ஆயினேன் போற்றி என் பெரும்
      கருணையாளனே போற்றி என்னை நின்
      அடியன் ஆக்கினாய் போற்றி ஆதியும்
      அந்தம் ஆயினாய் போற்றி அப்பனே. 101
      அப்பனே எனக்கு அமுதனே ஆனந்தனே
      அகம்நெக அள் ஊறு தேன்
      ஒப்பனே உனக்கு அரிய அன்பரில்
      உரியனாய் உனை பருக நின்றது ஓர்
      துப்பனே சுடர் முடியனே துணை
      யாளனே தொழும்பாளர் எய்ப்பனில்
      வைப்பனே எனை வைப்பதோ சொலாய்
      நைய வையகத்து எங்கள் மன்னனே. 102
      மன்ன எம்பிரான் வருக என் எனை
      மாலும் நான்முகத்து ஒருவன் யாரினும்
      முன்ன எம்பிரான் வருக என் எனை
      முழுதும் யாவையும் இறுதி உற்ற நான்
      பின்ன எம்பிரான் வருக என் எனை
      பெய் கழற் கண் அன்பாய் என் நாவினால்
      பன்ன எம்பிரான் வருக என் எனை
      பாவ நாச நின் சீர்கள் பாடவே. 103
      பாடவேன்டும் நான் போற்றி நின்னையே
      பாடிநைந்துறைந்துறுகி நெக்குநெக்கு
      ஆடவேன்டும் நான் போற்றி அம்பல
      தாடுநின்கழற்போது நாயினேன்
      கூடவேண்டும் நான்போற்றி யிப்புழு
      கூடு நீக்கெனை போற்றி பொய்யெலாம்
      வீடவேண்டும் நான் போற்றி வீடுத
      தருளு போற்றிநின் மெய்யர் மெய்யனே. 104
      திருச்சிற்றம்பலம்

      ------------------------------------------------------------------------
      6. நீத்தல் விண்ணப்பம்
      திருஉத்தரகோசமங்கையில் அருளியது- கட்டளை கலித்துறை
      கடையவ னேன கருணையி னாற் கல தாண்டுகொண்ட
      விடையவ னேவி டிடுதிகண்டாய்விறல் வேங்கையின் தோல்
      உடையவ னே மன்னும் உத்தரகோசமங்கைக்கரசே
      சடையவ னேதளர தேன்எம் பிரான்என்னை தாங்கிக்கொள்ளே. 105
      கொள்ளார் பிளவக லாத்தடங் கொங்கையர் கொவ்வைச்செவ்வாய்
      விள்ளேன் எனினும் விடுதிகண்டாய் விழுத்தொழுப்பின்
      உள்ளேன் புறமல்லேன் உத்தர கோசமங் கைக்கரசே
      கள்ளேன் ஒழியவும் கண்டுகொண்டாண்டதெ காரணமே. 106
      காருறு கண்ணியர் ஐம்புலன் ஆற்றங் கரைமரமாய்
      வேருறு வேனை விடுதிகண்டாய் விளங்குந்திருவார்
      ஊருறை வாய்மன்னும் உத்தரகோசமங்கை கரசே
      வாருறு பூண்முலை யாள்பங்க என்னை வளர்ப்பவனே. 107
      வளர்கின்ற நின்கருணைக்கையில் வாங்கவும் நீங்கியிப்பால்
      மிளிர்கின்ற என்னை விடுதிகண்டாய் வெண்மதிக்கொழுந்தொன்று
      ஒளிர்கின்ற நீள்முடி உத்தரகோசமங்கைக்கரசே
      தெளிகின்ற பொன்னுமின் னும் அன்னதோற்ற செழுஞ்சுடரே. 108
      செழிகின்ற தீப்புகு விட்டிலின் சில் மொழியாரில் பல்நாள்
      விழுகின்ற என்னை விடுதி கண்டாய் வெறி வாய் அறுகால்
      உழுகின்ற பூமுடி உத்தரகோசமங்கைக்கு அரசே
      வழிநின்று நின் அருள் ஆர் அமுது ஊட்ட மறுத்தனனே. 109
      மறுத்தனன் யான் உன் அருள் அறியாமையின் என் மணியே
      வெறுத்து எனை நீ விட்டிடுதி கண்டாய் வினையின் தொகுதி
      ஒறுத்து எனை ஆண்டுகொள் உத்தர கோச மங்கைக்கு அரசே
      பொறுப்பார் அன்றே பெரியோர் சிறுநாய்கள் தம் பொய்யினையே. 110
      பொய்யவனேனை பொருள் என ஆண்டு ஒன்று பொத்தி கொண்ட
      மெய்யவனே விட்டிடுதி கண்டாய் விடம் உண்மிடற்று
      மையவனே மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே
      செய்யவனே சிவனே சிறியேன் பவம் தீர்ப்பவனே. 111
      தீர்க்கின்றவாறு என் பிழையை நின்சீர் அருள் என்கொல்என்று
      வேர்க்கின்ற என்னை விடுதி கண்டாய் விரவார் வெருவ
      ஆர்க்கின்ற தார்விடை உத்தரகோச மங்கைக்கு அரசே
      ஈர்க்கின்ற அஞ்சொடு அச்சம் வினையேனை இருதலையே. 112
      இருதலைக்கொள்ளியன் உள்எறும்பு ஒத்து நினைப்பிரிந்த
      விரிதலையேனை விடுதி கண்டாய் வியன் மூவுலகுக்கு
      ஒருதலைவா மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே
      பொருதரு மூவிலைவேல் வலன் ஏந்தி பொலிபவனே. 113
      பொலிகின்ற நின்தாள் புகுத பெற்று ஆக்கையை போக்க
      மெலிகின்ற என்னை விடுதி கண்டாய் அளிதேர் விளிரி
      ஒலிகின்ற பூம்பொழில் உத்தரகோச மங்கைக்கு அரசே
      வலி நின்ற திண்சிலையால் எரித்தாய் புரம் மாறுபட்டே. 114
      மாறுபட்டு அஞ்சு என்னை வஞ்சிப்ப யான்உன்மணி மலர்த்தாள்
      வேறுபட்டேனை விடுதி கண்டாய் வினையேன் மனத்தே
      ஊறும் மட்டே மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே
      நீறுபட்டே ஒளி காட்டும் பொன்மேனி நெடுந்தகையே. 115
      நெடுந்தகை நீ என்னை ஆட்கொள்ள யான் ஐம்புலன்கள் கொண்டு
      விடும் தகையேனை விடுதி கண்டாய் விரவார் வெருவ
      அடும்தகை வேல்வல்ல உத்தரகோச மங்கைக்கு அரசே
      கடும் தகையேன் உண்ணும் தெள்நீர் அமுத பெருங்கடலே. 116
      கடலினுள் நாய் நக்கி அங்கு உன் கருணை கடலின் உள்ளம்
      விடல் அரியேனை விடுதி கண்டாய் இல்
      உடல் இலமே மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே
      மடலின் மட்டே மணியே அமுதே என்மது வெள்ளமே. 117
      வெள்ளத்துள் நாவற்றி ஆங்கு உன் அருள் பெற்று துன்பத்து இன்றும்
      விள்ளக்கிலேனை விடுதி கண்டாய் விரும்பும் அடியார்
      உள்ளத்து உள்ளாய் மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே
      கள்ளத்து உளேற்கு அருளாய் களியாத களி எனக்கே. 118
      களிவந்த சிந்தையோடு உன் கழல் கண்டும் கலந்தருள
      வெளிவந்திலேனை விடுதி கண்டாய் மெ சுடருக்கு எல்லாம்
      ஒளிவந்த பூம்கழல் உத்தரகோச மங்கைக்கு அரசே
      அளிவந்த எந்தைபிரான் என்னை ஆளுடை என் அப்பனே. 119
      என்னை அப்பா அஞ்சல் என்பவர் இன்றி நின்று எய்த்து அலைந்தேன்
      மின்னை ஒப்பாய் விட்டிடுதி கண்டாய் உவமிக்கின் மெய்யே
      உன்னை ஒப்பாய் மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே
      அன்னை ஒப்பாய் எனக்கு அத்தன் என் அரும் பொருளே.
      பொருளே தமியேன் புகல் இடமே நின் புகழ் இகழ்வார்
      வெருளே எனை விட்டிடுதி கண்டாய் மெய்ம்மையார் விழுங்கும்
      அருளே அணி பொழில் உத்தரகோச மங்கைக்கு அரசே
      இருளே வெளியே இகம் பரம் ஆகி இருந்தவனே. 121
      இருந்து என்னை ஆண்டுகொள் விற்றுக்கொள் ஒற்றிவை என்னின் அல்லால்
      விருந்தினனேனை விடுதி கண்டாய் மிக்க நஞ்சு அமுதாய்
      அருந்தினனே மன்னும் உத்திரகோச மங்கைக்கு அரசே
      மருந்தினனே பிறவி பிணிப்பட்டு மடங்கினர்க்கே. 122
      மடங்கஎன் வல்வினை காட்டை நின்மன் அருள் தீ கொளுவும்
      விடங்க என்தன்னை விடுதிகண்டாய் என் பிறவியை வேர்
      ஒடுங்களைந்து ஆண்டுகொள் உத்தரகோச மங்கைக்கு அரசே
      கொடும் கரிக்குன்று உரித்து அஞ்சுவித்தாய் வஞ்சி கொம்பினையே. 123
      கொம்பர் இல்லா கொடிபோல அலமந்தனன் கோமளமே
      வெம்புகின்றேனை விடுதிகண்டாய் விண்ணர் நண்ணுகில்லா
      உம்பர் உள்ளாய் மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே
      அம்பரமே நிலனே அனல் காலொடு அப்பு ஆனவனே. 124
      ஆனைவெம் போரில் குறும் தூறு எனப்புலனால் அலைப்புண்
      டேனை எந்தாய் விட்டிடுதி கண்டாய் வினையேன் மனத்து
      தேனையும் பாலையும் கன்னலையும் அமுத்தையும் ஒத்து
      ஊனையும் என்பினையும் உருக்காநின்ற ஒண்மையனே. 125
      ஒண்மையனே திருநீற்றை உத்தூளித்து ஒளி மிளிரும்
      வெண்மையனே விட்டிடுதி கண்டாய் மெய் அடியவர்கட்கு
      அண்மையனே என்றும் சேயாய் பிறர்க்கு அறிதற்கு அரிதாம்
      பெண்மையனே தொன்மை ஆண்மையனே அலி பெற்றியனே. 126
      பெற்றது கொண்டு பிழையே பெருக்கி சுருக்கும் அன்பின்
      வெற்று அடியேனை விடுதி கண்டாய் விடிலோ கெடுவேன்
      மற்று அடியேன் தன்னை தாங்குநர் இல்லை என்வாழ்முதலே
      உற்று அடியேன் மிக தேறி நின்றேன் எனக்கு உள்ளவனே. 127
      உள்ளவே நிற்க இல்லன செய்யும் மையல் துழனி
      வெள்ளன் அலேனை விடுதி கண்டாய் வியன் மாத்தடக்கை
      பொள்ளல் நல் வேழத்து விரியாய் புலன் நின் கண் போதல் ஒட்டா
      மெள்ளனவே மொய்க்கும் நெய்க்குடம் தன்னை எறும்பு எனவே. 128
      எறும்பிடை நாங்கூழ் எனப்புலனால் அரிப்புண்டு அலந்த
      வெறும் தமியேனை விடுதி கண்டாய் வெய்ய கூற்று ஒடுங்க
      உறும் கடிப்போது அவையே உணர்வு உற்றவர் உம்பர்
      பெறும் பதமே அடியார் பெயராத பெருமையனே. 129
      பெருநீர் அற சிறுமீன் துவண்டு ஆங்கு நினை பிரிந்த
      வெருநீர் மையேனை விடுதி கண்டாய் வியன் கங்கை பொங்கி
      வரும்நீர் மடுவுள் மலைச்சிறு தோணி வடிவின் வெள்ளை
      குருநீர் மதிபொதியும் சடை வான கொழு மணியே. 130
      கொழுமணியேர் நகை யார்கொங்கை குன்றிடை சென்றுகுன்றி
      விழுமடி யேனை விடுதிகண்டாய் மெய்ம் முழுதுங்கம்பித்து
      அழுமடி யாரிடை யார்த்துவை தாட்கொண் டருளியென்னை
      கழுமணி யேயினனுங் காட்டுகண்டாய் நின் புலன்கழலே. 131
      புலன்கள் திகைப்பிக்க யானு திகைத்திங்கொர் பொய்ந்நெறிக்கே
      விலங்குகின் றேனை விடுதிகண்டாய் விண்ணும் மண்ணுமெல்லாய்
      கலங்குமு நீர்நஞ் சமுதுசெய் தாய்க்கு கருணாகரனே
      துலங்குகின்றேனடி யேனுடையாயென் தொழுகுலமே. 132
      குலங்களை தாய்களை தாய்என்னை குற்றங்கொற் றச்சிலையாம்
      விலங்கலெ தாய்வி டிடுதிகண்டாய்பொன்னின் மின்னுகொன்றை
      அலங்கல தாமரை மேனியி பாவொப்பி லாதவனே
      மலங்களை தாற்கழல் வன்தயிரிற்பொரு மத்துறவே. 133
      மத்தறு தண்தயி ரிற்புலன் தீக்கது வக்கலங்கி
      வித்தறு வேனை விடுதிகண்டாய் வெண்டலையிலைச்சி
      கொத்தறு போது மிலைந்து குடர்நெடு மாலைசுற்றி
      தத்தறு நீறுட னார செஞ்சாந்தணி சச்சையனே. 134
      சச்சையனே மிக்க தண்புனல் விண்கால் நிலம்நெருப்பாம்
      விச்சையனே விட்டிடுதிகண்டாய் வெளியாய் கரியாய்
      பச்சையனே செய்ய மேனியனெ யொண்பட அரவ
      கச்சையனே கடந்தாய்தடந்தாள அடற்கரியே. 135
      அடற்கரி போல்ஐம்புலன்களுக்கஞ்சி அழிந்த என்னை
      விடற்கரியாய் விட்டிடுதி கண்டாய் விழுத்தொண்டர்கல்லால்
      தொடற்கரியாய் சுடர் மாமணியே கடு தீச்சுழல
      கடற்கரி தாயெழு நஞ்சமு தாக்குங் கறைக்கண்டனே. 136
      கண்டது செய்து கருணைமட்டுப்பரு கிக்களித்து
      மிண்டுகின்றேனை விடுதிகண்டாய் நின் விரைமலர்த்தாள்
      பண்டுதந்தாற்போற் பணித்து பணிசெ கூவித்தென்னை
      கொண்டெனெ தாய்களை யாய் களையாய குதுகுதுப்பே. 137
      குதுகுதுப்பின்றி றென்குறிப்பேசெய்து நின்குறிப்பில்
      விதுவிது பேனை விடுதிகண்டாய்விரை யார்ந்தினிய
      மதுமது போன்றென்னை வாழைப்பழத்தின் மனங்கனிவித்து
      எதிர்வதெ போது பயில்வி கயிலை பரம்பரனே. 138
      பரம்பரனே நின்பழஅடி யாரொடும் என்படிறு
      விரும்பரனே விட்டிடுதி கண்டாய்மென் முயற்கறையின்
      அரும்பர நேர்வை தணிந்தாய் பிறவியை வாயரவம்
      பொரும்பெரு மான்வினை யேன்மனம் அஞ்சி பொதும்புறவே. 139
      பொதும்புறு தீப்போற் புகைந்தெரியப்புலன் தீக்கதுவ
      வெதும்புறுவேனை விடுதி கண்டாய் விரை யார் நறவம்
      ததும்பு தாரத்தில் தாரம் பயின்று தம்முரல்வண்டு
      அதும்புங் கொழுந்தேன் அவிர்சடை வான தடலரைசே. 140
      அரைசே அறியா சிறியேன் பிழைக்கஞ்ச லென்னினல்லால்
      விரைசேர் முடியாய் விடுதிகண்டாய் வெண் ணகைக்கருங்கண்
      திரைசேர் மடந்தை மணந்த திருப்பொற் பதப்புயங்கா
      வரைசேர தடர்ந்தென்ன வல்வினை தான் வ தடர்வனவே. 141
      அடர்புலனால் நிற் பிரிந்தஞ்சி அஞ்சொல் நல்லாரவர்தம்
      விடர்விட லேனை விடுதிகண்டாய் விரி தேயெரியுஞ்
      சுடரனை யாய் சுடு காட்டரசே தொழும் பர்க்கமுதே
      தொடர்வரி யாம் தமியேன் தனி நீக்கு தனித்துணையே. 142
      தனித்துணை நீநிற்க யான் தருக்கித்தலை யால் நடந்த
      வினைத்துணை யேனை விடுதிகண்டாய் வினை யேனுடைய
      மனத்துணை யேஎன்தன் வாழ்முதலே என கெய்ப்பில்வைப்பே
      தினைத்துணை யேனும் பொறேன் துயராக்கையின் திண்வலையே. 143
      வலைத்தலை மானன்ன நோக்கியர் நோக்கின் வலையிற்பட்டு
      மிலைத்தலை தேனை விடுதிகண்டாய் வெண்மதியின் ஒற்றை
      கலைத்தலை யாய் கருணாகரனே கயிலாய மென்னும்
      மலைத்தலை வாமலை யாம்மணவாள என் வாழ்முதலே. 144
      முதலை செவ் வாய்ச்சியர் வேட்கைவெந்நீரிற் கடி பமூழ்கி
      விதலை செய்வேனை விடுதிகண்டாய் விட கூன்மிடைந்த
      சிதலை செய்காயம் பொறேன் சிவனே முறையோ
      திதலை செய்பூண்முலை மங்கைபங்கா என்சிவகதியே. 145
      கதியடி யேற்குன் கழல்தற்தருளவும் ஊன்கழியா
      விதியடி யேனை விடுதிகண்டாய் வெண்தலைமுழையிற்
      பதியுடை வாளர பார்த்திறை பைத்து சுருங்க அஞ்சி
      மதிநெடு நீரிற் குளித்தொளி குஞ்சடை மன்னவனே. 146
      மன்னவனே யொன்று மாற்றியாச்சிறியேன் மகிழ்ச்சி
      மின்னவனே விட்டிடுதி கண்டாய் மிக்க வேதமெய்ந்நூல்
      சொன்னவனே சொற் கழிந்தவனே கழியா தொழும்பர்
      முன்னவனே பின்னும் ஆனவனேயிம் முழுதையுமே. 147
      முழுதயில் வேற்கண்ணியரென்னும் மூரி தழல்முழுதும்
      விழுதனை யேனை விடுதிகண்டாய் நின்வெறி மலர்த்தாள்
      தொழுதுசெல்வான்நல்தொழும்பரிற் கூட்டிடு சோத்தெம்பிரான்
      பழுதுசெய்வேனை விடேலுடையாய் உண்னை பாடுவனே. 148
      பாடிற்றிலேன் பணியேன் மணிநீயொளி தாய்க்குப்பச்சூன்
      வீடிற்றிலேனை விடுதிகண்டாய் வியற் தாங்கலறி
      தேடிற்றிலேன் சிவனெவ்விடத்தான்எவர் கண்டனரென்று
      ஓடிற்றிலேன் கிடந்துள்ளுருகேன் நின்றுழைத்தனனே. 149
      உழைதரு நோக்கியர் கொங்கை பலாப்பழத்து ஈயினொப்பாய்
      விழைதரு வேனை விடுதிகண்டாய் விடின் வேலைநஞ்சுண்
      மழைதரு கண்டன் குணமிலி மானிடன் தேய்மதியன்
      பழைதரு மாபரனேன்றென் றறைவன் பழிப்பினையே. 150
      பழிப்பில்நின் பாத பழந்தொழும் பெய்தி விழப்பழித்து
      விழித்திரு தேனை விடுதிகண்டாய் வெண்மணிப்பணிலம்
      கொழித்துமந்தார மந்தாகினி நுந்தும்ப தப்பெருமை
      தழிச்சிறை நீரிற் பிறைக்கலஞ் சேர் தரு தாரவனே. 151
      தாரகை போலும் தலைத்தலை மாலை தழலரப்பூண்
      வீரஎன் தன்னை விடுதிகண்டாய் விடிலென்னைமிக்கார்
      ஆரடி யானென்னின் உத்தரகோச மங்கைக்கரசின்
      சீரடி யாரடி யானென்று நின்னை சிரிப்பிப்பனே. 152
      சிரிப்பிப்பின் சீறும் பிழைப்பை தொழும்பையும் ஈசற் கென்று
      விரப்பிப்ப னென்னை விடுதிகண்டாய் விடின் வெங்கரியின்
      உரிப்பிச்சன் தோலுடை பிச்சன்நஞ்சூண்பிச்சன் ஊர்ச்சுடுகாட்டு
      எரிப்பிச்சன் என்னையும்ஆளுடை பிச்சனென் றேசுவனே. 153
      ஏசினும் யானுன்னை யேத்தினும் என்பிழைக்கே குழைந்து
      வேசறு வேனை விடுதிகண்டாய் செம்பவள வெற்பின்
      தேகடை யாயென்னை ஆளுடையாய் சிற் றுயிர கிரங்கி
      காய்சின ஆலமுண்டாய் அமுதுண்ண கடையவனே. 154
      திருச்சிற்றம்பலம்

      ------------------------------------------------------------------------
      7. திருவெம்பாவை
      திருவண்ணாமலையில் அருளியது - சக்தியை வியந்தது
      வெண்டளையான் வந்த இயற்றவிணை கொச்ச கலிப்பா
      ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
      சோதியை யாம்பாடக்கேட்டேயும் வாள்தடங்கள்
      மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
      மாதேவன்வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
      வீதிவா கேட்டலுமே விம்மிவிம்மி மெய்மறந்து
      போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
      ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே
      ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய். 155
      பாசம் பரஞ்சோதிக்கு அன்பாய் இராப்பகல்நாம்
      பேசும்போ தெப்போது இ போதார் அமளிக்கே
      நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
      சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
      ஏசு மிடம்ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்கு
      கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
      தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
      ஈசனார கன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய். 156
      முத்தன்ன வெண்நகையாய் முன்வ தெதிரெழுந்தென்
      அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறி
      தித்திக்க பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
      பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர்
      புத்தடியோம் புன்மைதீர்த்து ஆட்கொண்டாற் பொல்லாதோ
      எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
      சித்தம் அழகியார் பாடாரோ நஞ்சிவனை
      இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய். 157
      ஒண்ணி திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
      வண்ண கிளிமொழியார் எல்லோரும் வந்தாரோ
      எண்ணிக்கொண்டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
      கண்ணை துயின்றவமே காலத்தை போக்காதே
      விண்ணு கொருமருந்தை வேத விருப்பொருளை
      கண்ணுக்கு இனியானை பாடி கசிந்துள்ளம்
      உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டொம் நீயேவந்து
      எண்ணி குறையில் துயிலேலோர் எம்பாவாய். 158
      மாலறியா நான்முகனுங் காணா மலையினை நாம்
      போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசும்
      பாலாறு தேன்வா படிறீ கடைதிறவாய்
      ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
      கோலமும் நம்மைஆ கொண்டருளி கோதாட்டுஞ்
      சீலமும் பாடி சிவனே சிவனேயென்று
      ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
      ஏல குழலி பரிசேலோர் எம்பாவாய். 159
      மானே நீ நென்னலை நாளை வந்துங்களை
      நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
      போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
      வானே நிலனே பிறவே அறிவரியான்
      தானேவ தெம்மை தலையளித்து ஆட்கொண்டருளும்
      வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்
      ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
      ஏனோர்க்கு தங்கோனை பாடேலோ ரெம்பாவாய். 160
      அன்னே இவையுஞ் சிலவோ பலவமரர்
      உன்னற்கு அரியான் ஒருவன் இருஞ்சீரான்
      சின்னங்கள் கேட்ப சிவனென்றே வாய்திறப்பாய்
      தென்னா என்னா முன்னம் தீசேர் மெழுகுஒப்பாய்
      என்னானை என்அரையன் இன்னமுதுஎன்று எல்லாமும்
      சொன்னோம்கேள் வெவ்வேறாய் இன்னம் துயிலுதியோ
      வன்னெஞ்ச பேதையர்போல் வாளா கிடத்தியால்
      என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய். 161
      கோழி சிலம்பு சிலம்பும் குருகுஎங்கும்
      ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்குஎங்கும்
      கேழில் பரஞ்சோதி
      கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
      வாழிஈ தென்ன உறக்கமோ வாய்திறவாய்
      ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
      ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
      ஏழைபங் காளனையே பாடேலோர் எம்பாவாய். 162
      முன்னை பழம்பொருட்கும்
      பின்னை புதுமைக்கும் போத்தும் அ பெற்றியனே
      உன்னை பிரானாக பெற்றவுன் சீரடியோம்
      உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
      அன்னவரே எம்கணவர் ஆவர் அவர்உகந்து
      சொன்ன பரிசே தொழும்பா பணி செய்தோம்
      இன்ன வகையே எமக்கு எம்கோன் நல்குதியேல்
      என்ன குறையும் இலோம்ஏலார் எம்பாவாய். 163
      பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர்
      போதார் புனைமுடியும் எல்லா பொருள்முடிவே
      பேதை ஒருபால் திருமேனி ஒன்று அல்லன்
      வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
      ஓத உலவா ஒருதோழன் தொண்டர்உளன்
      கோதில் குலத்தான் றன் கோயில் பிணாப்பிள்ளைகாள்
      ஏதவன்ஊர் ஏதவன்பேர் ஆர்உற்றார் ஆர்அயலார்
      ஏதவரை பாடும் பரிசேலார் எம்பாவாய். 164
      மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர்என்ன
      கையாற் குடைந்து குடைந்துஉன் கழல்பாடி
      ஐயா வழியடி யோம் வாழ்ந்தோம் காண் ஆர் அழல்போற்
      செய்யா வெண்ணீறாடி செல்வ சிறுமருங்குல்
      மையார் தடங்கண் மடந்தை மணவாளர்
      ஐயாநீ ஆட்கொண்டு அருளும் விளையாட்டின்
      உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உயர்ந்தொழி தோங்
      எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய். 165
      ஆர்த்த பிறவி துயர்கெடநாம் ஆர்த்துஆடும்
      தீர்த்தன் நற் றில்லை சிற்றம்பலத்தே தீயாடும்
      கூத்தன்இவ்வானும் குவலயமும் எல்லாமும்
      காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
      வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
      ஆர்ப்பரவம் செய்ய அணி குழல்மேல் வண்டார
      பூத்திகழும் பொய்கை குடைந்துஉடையான் பொற்பாதம்
      ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடேலோர் எம்பாவாய். 166
      பைங்குவளை கார்மலரால் செங்கமல பைம்போதால்
      அங்கம் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
      தங்கள் மலம்கழுவு வார் வந்து சார்தலினால்
      எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்று இசைந்த
      பொங்கும் மடுவில் புகப்பாய்ந்து பாய்ந்துநம்
      சங்கம் சிலம்ப சிலம்பு கலந்துஆர
      கொங்கைகள் பொங்க குடையும் புனல்பொங்க
      பங்க பூம்புனல்பா தாடேலோர் எம்பாவாய். 167
      காதார் குழையாட பைம்பூண் கலனாட
      கோதை குழலாட வண்டின் குழாம் ஆட
      சீத புனல்ஆடி சிற்றம் பலம்பாடி
      வேத பொருள்பாடி அப்பொருளா மாபாடி
      சோதித்திறம்பாடி சூழ்கொன்றை தார்பாடி
      ஆதி திறம்பாடி அந்தமா மாபாடி
      பேதித்து நம்மை வளர்த்துஎடுத்த பெய்வதைதன்
      பா திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய். 168
      ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
      சீரொருகால் வாய் ஓவாள் சித்தம் களிகூர
      நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனி
      பாரொருகால் வந்தனையான் விண்ணோரை தான் பணியாள்
      பேரரையற்கு இங்ஙனே பித்துஒருவர் ஆமாறும்
      ஆர்ஒருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
      வாருருவ பூண்முலையீர் வாயார நாம்பாடி
      ஏருருவ பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 169
      முன்னி கடலை சுருக்கி எழுந்துஉடையான்
      என்ன திகழ்ந்து எம்மை ஆளுடையான் இட்டிடையின்
      மின்ன பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
      பொன்னஞ் சிலம்பில் சிலம்பி திருப்புருவம்
      என்ன சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
      தன்னிற் பரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
      முன்னி யவன்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
      என்ன பொழியாய் மழையேலோர் எம்பாவாய். 170
      செங்க ணவன்பால் திசைமுகன் பால் தேவர்கள்
      எங்கும் இலாதோர் இன்பம்நம் பாலதா
      கொங்குஉண் சுருங்குழலி நந்தம்மை கோதாட்டி
      இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளி
      செங்கமல பொற்பாதம் தந்தருளும் சேவகனை
      அங்கள் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
      நங்கள் பெருமானை பாடி நலந்திகழ
      பங்க பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 171
      அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
      விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற்போல்
      கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்ப
      தண்ணார் ஒளிமயங்கி தாரகைகள் தாம் அகல
      பெண்ணாகி ஆணாய் அலியாய்ப பிறங்கொளிசேர்
      விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகி
      கண்ணார் அமுதமாய் நின்றான் கழல்பாடி
      பெண்ணே இ பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 172
      உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்று
      அங்க பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால்
      எங்கள் பெருமான் உனக்கென்று உரைப்போம் கேள்
      எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க
      எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
      கங்குல் பகல்எங்கண் மற்றொன்றும் காணற்க
      இங்கி பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
      எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய். 173
      போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
      போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
      போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
      போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
      போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
      போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம்
      போற்றியாம் உய்யஆ கொண்டருளும் பொன்மலர்கள்
      போற்றியாம் மார்கழிநீர் ஆடேலோர் எம்பாவாய். 174
      திருச்சிற்றம்பலம்

      ------------------------------------------------------------------------
      8. திரு அம்மானை
      திருவண்ணாமலையில் அருளியது -
      தரவு கொச்ச கலிப்பா ஆனந்த களிப்பு
      செங்கண் நெடுமாலுஞ் சென்றிடந்துங் காண்பரிய
      பொங்கு மலர்ப்பாதம் பூதலத்தே போந்தருளி
      எங்கள் பிறப்பறுத்தி டெந்தரமும் ஆட்கொண்டு
      தெங்கு திரள்சோலை தென்னன் பெருந்துறையான்
      அங்கணன் அந்தணனாய் அறைகூவி வீடருளும்
      அங்கருணை வார்கழலே பாடுதுங்காண் அம்மானாய். 175
      பாரார் விசும்புள்ளார் பாதாள தார்புறத்தார்
      ஆராலுங் காண்டற் கரியாற் கரியான் எமக்கெளிய
      பேராளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றி
      வாரா வழியருளி வந்தென் உளம்புகுந்த
      ஆரா அமுதாய் அலைகடல்வாய் மீன்விசிறும்
      பேராசை வாரியனை பாடுதுங்காண் அம்மானாய். 176
      இந்திரனும் மாலயனும் ஏனோரும் வானோரும்
      அந்தரமே நிற்க சிவனவனி வந்தருளி
      எந்தரமும் ஆட்கொண்டு தோட்கொண்ட நீற்றனா
      சிந்தனையை வந்தருக்குஞ் சீரார் பெருந்துறையான்
      பந்தம் பறி பரிமேற்கொண்டான்தந்த
      அந்தமிலா ஆனந்தம் பாடுதுங்காண் அம்மானாய். 177
      வான்வந்த தேவர்களும் மாலயனோ டிந்திரனும்
      கான்நின்று வற்றியும் புற்றெழுந்துங் காண்பரிய
      தான்வந்து நாயேனை தாய்போல் தலையளித்திட்டு
      ஊன்வந்துரோமங்கள் உள்ளே உயிர்ப்பெய்து
      தேன்வந்த முதின் தெளிவின் ஒளிவந்த
      வான்வந்த வார்கழலே பாடுதுங்காண் அம்மானாய். 178
      கல்லா மனத்து கடைப்பட்ட நாயேனை
      வல்லாளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றி
      கல்லை பிசைந்து கனியாக்கி தன்கருணை
      வெள்ள தழுத்தி வினைகடிந்த வேதியனை
      தில்லை நகர்புக்கு சிற்றம் பலம்மன்னும்
      ஒல்லை விடையானை பாடுதுங்காண் அம்மானாய். 179
      கேட்டாயோ தோழி கிறிசெய்த வாறொருவன்
      திட்டார் மதில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான்
      காட்டா தனவெல்லாங் காட்டி சிவங்காட்டி
      தாள்தா மரைகாட்டி தன்கருணை தேன் காட்டி
      நாட்டார் நகைசெய்ய நாம்மேலை வீடெய்த
      ஆள்தான்கொண்டாண்டவா பாடுதுங்காண் அம்மானாய். 180
      ஓயாதே உள்குவார் உள்ளிருக்கும் உள்ளானை
      சேயானை சேவகனை தென்னன் பெருந்துறையின்
      மேயானை வேதியனை மாதிருக்கும் பாதியனை
      நாயான நந்தம்மை ஆட்கொண்ட நாயகனை
      தாயான தத்துவனை தானே உலகேழும்
      ஆயானை ஆள்வான பாடுதுங்காண் அம்மானாய். 181
      பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும்
      பெண்சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான்
      விண்சுமந்த கீர்த்தி வியன்மண்ட லத்தீசன்
      கண்சுமந்த நெற்றி கடவுள் கலிமதுரை
      மண்சுமந்து கூலிகொண்டு அக்கோவால் மொத்துண்டு
      புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய். 182
      துண்ட பிறையான் மறையான் பெருந்துறையான்
      கொண்ட புரிநூலான் கோலமா ஊர்தியான்
      கண்டங் கரியான்செம் மேனியான் வெண்ணீற்றான்
      அண்டமுத லாயினான் அந்தமிலா ஆனந்தம்
      பண்டை பரிசே பழவடியார கீந்தருளும்
      அண்டம் வியப்புறுமா பாடுதுங்காண் அம்மானாய். 183
      விண்ணாளு தேவர்க்கு மேலாய வேதியனை
      மண்ணாளும் மன்னவர்க்கு மாண்பாகி நின்றானை
      தண்ணார் தமிழளிக்கு தண்பாண்டி நாட்டானை
      பெண்ணாளும் பாகனை பேணு பெருந்துறையிற்
      கண்ணார் கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட
      அண்ணா மலையானை பாடுதுங்காண் அம்மானாய். 184
      செப்பார் முலைபங்கன் தென்னன் பெருந்துறையான்
      தப்பாமே தாளடைந்தார் நெஞ்சுருக்கும் தன்மையினான்
      அப்பாண்டி நாட்டை சிவலோகம் ஆக்குவித்த
      அப்பார் சடையப்பன் ஆனந்த வார்கழலே
      ஒப்பாக ஒப்புவித்த உள்ளத்தா ருள்ளிருக்கும்
      அப்பாலை கப்பாலை பாடுதுங்காண் அம்மானாய். 185
      மைப்பொலியுங் கண்ணிகேள் மாலயனோ டிந்திரனும்
      எப்பிறவி யுந்தேட என்னையுந்தன் இன்னருளால்
      இப்பிறவி ஆட்கொண்டு இனிப்பிறவா மேகாத்து
      மெய்ப்பொருட்கண் தோற்றமாய் மெய்யே நிலைபேறாய்
      எப்பொருட்த தானேயாய் யாவைக்கும் வீடாகும்
      அப்பொருளாம் நஞ்சிவனை பாடுதுங்கான் அம்மானாய். 186
      கையார் வளைசிலம்ப காதர் குழையாட
      மையார் குழல்புரள தேன்பாய் வண்டொலிப்ப
      செய்யானை வெண்ணீ றணிந்தானை சேர்ந்தறியா
      கையானை எங்குஞ் செறிந்தானை அன்பர்க்கு
      மெய்யானை அல்லாதார கல்லாத வேதியனை
      ஐயா றமர்ந்தானை பாடுதுங்காண் அம்மானாய். 187
      ஆனையா கீடமாய் மானுடரா தேவராய்
      ஏனை பிறவா பிறந்திற தெ தேனை
      ஊனையும் நின்றுருக்கி என்வினையை ஒட்டுகந்து
      தேனையும் பாலையுங் கன்னலையும் ஒத்தினிய
      கோனவன்போல் வந்தென்னை தன்தொழும்பிற் கொண்டருளும்
      வானவன் பூங்கழலே பாடுதுங்காண் அம்மானாய். 188
      சந்திரனை தேய்த்தருளி தக்கன்தன் வேள்வியினில்
      இந்திரனை தோள்நெரித்தி டெச்சன் தலையரிந்து
      அந்தரமே செல்லும் அலர்கதிரோன் பல்தகர்த்து
      சிந்தி திசைதிசையே தேவர்களை ஓட்டுகந்து
      செந்தார பொழில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான்
      மந்தார மாலையே பாடுதுங்காண் அம்மானாய். 189
      ஊனாய் உயிராய் உணர்வாய்என்னுட்கலந்து
      தேனாய் அமுதமுமா தீங்கரும்பின் கட்டியுமாய்
      வானோ ரறியா வழியெமக்கு தந்தருளும்
      தேனார் மலர்க்கொன்றை சேவகனார் சீரொளிசேர்
      ஆனா அறிவாய் அளவிறந்த பல்லுயிர்க்கும்
      கோனாகி நின்றவா கூறுதுங்காண் அம்மானாய். 190
      சூடுவேன் பூங்கொன்றை சூடி சிவன்திரள்தோள்
      கூடுவேன் கூடிமுயங்கி மயங்கிநின்று
      ஊடுவேன் செவ்வா குருகுவேன் உள்ளுருகி
      தேடுவேன் தேடி சிவன்கழலே சிந்திப்பேன்
      வாடுவேன் பேர்த்தும் அலர்வேன் அனலேந்தி
      ஆடுவேன் சேவடியே பாடுதுங்காண் அம்மானாய். 191
      கிளிவந்த மென்மொழியாள் கேழ்கிளரும் பாதியானை
      வெளிவந்த மாலயனும் காண்பரிய வித்தகனை
      தெளிவந்த தேறால சீரார் பெருந்துறையில்
      எளிவ திருந்திரங்கி எண்ணரிய இன்னருளால்
      ஒளிவந்தென் உள்ளத்தின் உள்ளே ஒளி திகழ
      அளிவந்த அந்தணனனை பாடுதுங்காண் அம்மானாய். 192
      முன்னானை மூவர்க்கும் முற்றுமாய் முற்றுக்கும்
      பின்னானை பிஞ்ஞசுனை பேணு பெருந்துறையின்
      மன்னானை வானவனை மாதியலும் பாதியனை
      தென்னானை காவானை தெண்பாண்டி நாட்டானை
      என்னானை என்னப்பன் என்பார்க்க கின்னமுதை
      அன்னானை அம்மானை பாடுதுங்காண் அம்மானாய். 193
      பெற்றி பிறர்க்கரிய பெம்மான் பெருந்துறையான்
      கொற்ற குதிரையின்மேல் வந்தருளி தன்னடியார்
      குற்றங்கள் நீக்கி குணங்கொண்டு கோதாட்டி
      சுற்றிய சுற்ற தொடர் வறுப்பான் தொல்புகழே
      பற்றியி பாசத்தை பற்றறநாம் பற்றுவான்
      பற்றியபே ரானந்தம் பாடுதுங்காண் அம்மானாய். 194
      திருச்சிற்றம்பலம்

      ------------------------------------------------------------------------
      9. திருப்பொற் சுண்ணம் - ஆனந்த மனோலயம்
      தில்லையில் அருளியது - அறுசீர் ஆசிரிய விருத்தம்
      முத்துநல் தாழம்பூ மாலைதூக்கி
      முளைக்குட தூபம்நல் தீபம்வைம்மின்
      சக்தியும் சோமியும் பார்மகளும்
      நாமகளோடுபல்லாண்டிசைமின்
      சித்தியுங் கௌரியும் பார்ப்பதியும்
      கங்கையும் வந்து கவரிகொண்மின்
      அத்தன் ஐயாறன்அம்மானைபாடி
      ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே. 195
      பூவியல் வார்சடை எம்பிராற்கு
      பொற்றிரு சுண்ணம் இடிக்கவேண்டும்
      மாவின் வடுவகி ரன்ன கண்ணீர்
      வம்மின்கள் வந்துடன் பாடுமின்கள்
      கூவுமின் தொண்டர் புறநிலாமே
      குனிமின் தொழுமினெங் கோனெங்கூத்தன்
      தேவியு தானும்வந்தெம்மையாள
      செம்பொன்செய் சுண்ணம் இடித்துநாமே. 196
      சுந்தர நீறண தும்மெழுகி
      தூயபொன்சிந்தி நிதிநிரப்பி
      இந்திரன் கற்பகம் நாட்டியெங்கும்
      எழிற்சுடர் வைத்து கொடியெடுமின்
      அந்தார் கோன்அயன் தன்பெருமான்
      ஆழியான் நாதன்நல் வேலன்தாதை
      எந்தரம் ஆளுமை யாள்கொழுநற்
      கேய்ந்த பொற்சுண்ணம் இடித்துநாமே. 197
      காசணி மின்கள் உலக்கையெல்லாம்
      காம்பணி மின்கள் கறையுரலை
      நேசமுடைய அடியவர்கள்
      நின்று நிலாவுக என்றுவாழ்த்தி
      தேசமெல்லாம் புகழ தாடுங் கச்சி
      திருவேகம் பன்செம்பொற் கோயில்பாடி
      பாசவினையை பறிந்துநின்று
      பாடி பொற்சுண்ணம் இடித்துநாமே. 198
      அறுகெடுப்பார் அயனும்அரியும்
      அன்றிமற்றிந்திர னோடமரர்
      நறுமுது தேவர்கணங்கெளெல்லாம்
      நம்மிற்பின் பல்லதெடுக்க வொட்டோ ம்
      செறிவுடை மும்மதில் எய்தவில்லி
      திருவேகம் பன்செம்பொற் கோயில்பாடி
      முறுவற்செவ் வாயினீர் முக்கணப்பற்
      காடப்பொற்சுண்ணம் இடித்துநாமே. 199
      உலக்கை பலஒச்சு வார்பெரியர்
      உலகமெலாம்உரல் போதாதென்றே
      கலக்க அடியவர் வந்துநின்றார்
      காண உலகங்கள் போதாதென்றே
      நலக்க அடியோமை ஆண்டுகொண்டு
      நாண்மலர பாதங்கள் சூடந்தந்த
      மலைக்கு மருகனை பாடிப்பாடி மகிழந்து
      பொற்சுண்ணம் இடிந்தும்நாமே. 200
      சூடக தோள்வரை ஆர்ப்ப ஆர்ப்ப
      தொண்டர் குழாமெழு தார்ப்ப ஆர்ப்ப
      நாடவர் நந்தம்மை ஆர்ப்ப
      நாமும் அவர்தம்மை ஆர்ப்ப ஆர
      பாடக மெல்லடி யார்க்கு மங்கை
      பங்கினன் எங்கள் பராபரனுக்கு
      ஆடக மாமலை அன்னகோவு
      காட பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 201
      வாள்தடங்கண்மட மங்கைநல்லீர்
      வரிவளை ஆர்ப்பவண் கொங்கைபொங்க
      தோள்திரு முண்ட துதைந்திலங்க
      சோத்தெம்பி ரானென்று சொல்லிச்சொல்லி
      நாட்கோண்ட நாண்மலர பாதங்காட்டி
      நாயிற் கடைப்பட்ட நம்மையிம்மை
      ஆட்கொண்ட வண்ணங்கள் பாடிப்பாடி
      ஆட பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 202
      வையகம் எல்லாம் உரலதாக
      மாமேரு என்னும் உலக்கை நாட்டி
      மெய்யனும் மஞ்சள் நிறைய அட்டி
      மேதரு தென்னன் பெருந்துறையான்
      செய்ய திருவடி பாடிப்பாடி
      செம்பொன் உலக்கை வலக்கைபற்றி
      ஐயன் அணிதில்லை வாணனுக்கே
      ஆடப்பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 203
      முத்தணி கொங்கைகள் ஆடஆட
      மொய்குழல் வண்டினம் ஆடஆட
      சித்தஞ் சிவனொடும் ஆடஆட
      செங்கயற் கண்பனி ஆடஆட
      பித்தெம் பிரானொடும் ஆடஆட
      பிறவி பிறரொடும் ஆடஆட
      அத்தன் கருணையொ டாடஆட
      ஆடப்பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 204
      மாடு நகைவாள் நிலாவெறிப்ப
      வாய்திற தம்பவ ளந்துடி
      பாடுமின் நந்தம்மை ஆண்டவாறும்
      பணிகொண்ட வண்ணமும் பாடிப்பாடி
      தேடுமின் எம்பெருமானைத்தேடி
      சித்தங் களிப்ப திகைத்துத்தேறி
      ஆடுமின் அம்பல தாடினானு
      காடப்பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 205
      மையமர் கண்டனை வானநாடர்
      மருந்தினை மாணி கூத்தன்தன்னை
      ஐயனை ஐயர்பிரானைநம்மை
      அகப்படு தாட்கொண் டருமைகாட்டும்
      பொய்யர் தம் பொய்யனை மெய்யர் மெய்யை
      போதரி கண்ணினை பொற்றொடித்தோள்
      பையர வல்குல் மடந்தைநல்லீர்
      பாடி பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 206
      மின்னிடை செந்துவர் வாய்க்கருங்கண்
      வெண்ணகை பண்ணமர் மென்மொழியீர்
      என்னுடை ஆரமுதெங்களப்பன்
      எம்பெருமான் இம வான்மகட்கு
      தன்னுடை கேள்வன் மகன்தகப்பன்
      தமையன்எம் ஐயன் தாள்கள் பாடி
      பொன்னுடை பூண்முலை மங்கைநல்லீர்
      பொற்றிருச்சுண்ணம் இடித்தும்நாமே. 207
      சங்கம் அரற்ற சிலம்பொலிப்ப
      தாழ்குழல் சூழ்தரு மாலையாட
      செங்கனி வாயிதழுந்துடிப்ப
      சேயிழை யீர் சிவலோகம் பாடி
      கங்கை இரைப்ப அராஇரைக்குங்
      கற்றை சடைமுடி யான்கழற்கே
      பொங்கிய காதலிற் கொங்கை பொங்க
      பொற்றிருச்சுண்ணம் இடித்தும்நாமே. 208
      ஞான கரும்பின் தெளியை பாகை
      நாடற் கரிய நலத்தை நந்தா
      தேனை பழச்சுவை ஆயினானை
      சித்தம் புகுந்துதி திக்கவல்ல
      கோனை பிறப்பறு தாண்டுகொண்ட
      கூத்தனை நாத்தழும் பேறவாழ்த்தி
      பானல் தடங்கண் மடந்தைநல்லீர்
      பாடிப்பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 209
      ஆவகை நாமும் வந்தன்பர்தம்போ
      டாட்செய்யும் வண்ணங்கள் பாடிவிண்மேல்
      தேவர் கனாவிலுங் கண்டறியா
      செம்மலர பாதங்கள் காட்டுஞ் செல்வ
      சேவகம் ஏந்திய வெல்கொடியான்
      சிவபெரு மான் புரஞ் செற்றகொற்ற
      சேவகன் நாமங்கள் பாடிப்பாடி
      செம்பொன் செய்சுண்ணம் இடித்தும்நாமே. 210
      தேனக மாமலர கொன்றைபாடி
      சிவபுரம் பாடி திருச்சடைமேன்
      வானக மாமதி பிள்ளைபாடி
      மால்விடை பாடி வலக்கையேந்தும்
      ஊனக மாமழு சூலம்பாடி
      உம்பரும் இம்பரும் உய்யஅன்று
      போனக மாகநஞ் சுண்டல்பாடி
      பொற்றிச்சுண்ணம் இடித்தும்நாமே. 211
      அயன்தலை கொண்டுசெண்டாடல்பாடி
      அருக்கன் எயிறு பறித்தல்பாடி
      கயந்தனை கொன்றுரி போர்த்தல் பாடி
      காலனைக்காலால் உதைத்தல்பாடி
      இயைந்தன முப்புரம் எய்தல் பாடி
      ஏழை அடியோமை ஆண்டுகொண்ட
      நயந்தனை பாடிநின் றாடியாடி
      நாதற்கு சுண்ணம் இடித்தும்நாமே. 212
      வட்டமலர்க்கொன்றை மாலைபாடி
      மத்தமும்பாடி மதியம்பாடி
      சிட்டர்கள் வாழுந்தென் தில்லைபாடி
      சிற்றம் பலத்தெங்கள் செல்வம்பாடி
      கட்டிய மாசுணக்கச்சை பாடி
      கங்கணம் பாடி கவித்தகைம்மேல்
      இட்டுநின் றாடும் அரவம்பாடி
      ஈசற்குச்சுண்ணம் இடித்தும்நாமே. 213
      வேதமும் வேள்வியும் ஆயினார்க்கு
      மெய்ம்மையும் பொய்ம்மையும் ஆயினார்க்கு
      சோதிய மாய் இருள் ஆயினார்க்கு
      துன்பமுமாய் இன்பம் ஆயினார்க்கு
      பாதியு மாய் முற்றும் ஆயினார்க்கு
      பந்தமு மாய் வீடும் ஆயினார்க்கு
      ஆதியும் அந்தமும் ஆயினார்க்கு
      ஆடப்பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 214
      திருச்சிற்றம்பலம்

      ------------------------------------------------------------------------
      10. திருக்கோத்தும்பி - சிவனோடு ஐக்கியம்
      தில்லையில் அருளியது- நாலடி தரவு கொச்ச கலிப்பா
      பூவேறு கோனும் புரந்தரனும் பொற்பமைந்த
      நாவேறு செல்வியும் நாரணணும் நான் மறையும்
      மாவேறு சோதியும் வானவரு தாமறியா
      சேவேறு சேவடிக்கே சென்றுதாய் கோத்தும்பீ. 215
      நானார் என் உள்ளமார் ஞானங்க ளார் என்னை யாரறிவார்
      வானோர் பிரானென்னை ஆண்டிலனேல் மதிமயங்கி
      ஊனா ருடைதலையில் உண்பலிதேர் அம்பலவன்
      தேனார் கமலமே சென்றூதாய் கோத்தும்பீ. 216
      தினைத்தனை உள்ளதோர் பூவினில் தேன்உண்ணாதே
      நினைத்தொறும் காண்தொறும் பேசுந்தொறும் எப்போதும்
      அனைத்தெலும் புள்நெக ஆனந தேன் சொரியும்
      குனிப்புடையானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 217
      கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
      என்னப்பன் என்னொப்பில் என்னையும் ஆட்கொண்டருளி
      வண்ண பணித்தென்னை வாவென்ற வான் கருணை
      கண்ணப்பென் நீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 218
      அத்தேவர் தேவர் அவர்தேவ ரென்றிங்ஙன்
      பொய்த்தேவு பேசி புலம்புகின்ற பூதலத்தே
      பத்தேதும் இல்லாதென் பற்றறநான் பற்றிநின்ற
      மெய்த்தேவர் தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 219
      வைத்த நிதிபெண்டிர் மக்கள்குலங் கல்வியென்னும்
      பித்த உலகிற் பிறப்போ டிறப்பென்னுஞ்
      சித்த விகார கலக்கம் தெளிவித்த
      வித்தக தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 220
      சட்டோ நினைக்க மனத்தமுதாஞ் சங்கரனை
      கெட்டேன் மறப்பேனோ கேடுபடா திருவடியை
      ஒட்டாத பாவி தொழும்பரைநாம் உருவறியோம்
      சிட்டாய சிட்டற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 221
      ஒன்றாய் முளைத்தெழு தெத்தனையோ கவடுவிட்டு
      நன்றாக வைத்தென்னை நாய்சிவிகை ஏற்றுவித்த
      என்தாதை தாதைக்கும் எம்மனைக்கு தம்பெருமான்
      குன்றாத செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 222
      கரணங்கள் எல்லாங் கடந்துநின்ற கறைமிடற்றன்
      சரணங்க ளேசென்று சார்தலுமே தான்எனக்கு
      மரணம் பிறப்பென் றிவையிரண்டின் மயக்கறுத்த
      கருணை கடலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 223
      நோயுற்று மூத்துநான் நுந்துகன்றா யிங்கிருந்து
      நாயுற்ற செல்வம் நயந்தறியா வண்ணமெல்லா
      தாயுற்று வந்தென்னை ஆண்டுகொண்டதன்கருணை
      தேயுற்ற செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 224
      வன்னெஞ்ச கள்வன் மனவலியன் என்னாதே
      கல்நெஞ் சுருக்கி கருணையினால் ஆண்டுகொண்ட
      அன்னஞ் திளைக்கும் அணிதில்லை அம்பலவன்
      பொன்னங் கழலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 225
      நாயேனை தன்னடிகள் பாடுவித்த நாயகனை
      பேயேன துள்ள பிழைபொறுக்கும் பெருமையனை
      சீயேதும் இல்லாதென் செய்பணிகள் கொண்டருள
      தாயான ஈசற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 226
      நான்தன கன்பின்னை நானுந்தா னும் அறிவோம்
      தானென்னை ஆட்கொண்ட தெல்லாரு தாமறிவார்
      ஆன கருணையும் அங்குற்றே தானவனே
      கோனென்னை கூட குளிர்ந்தூதாய் கோத்தும்பீ. 227
      கருவாய் உலகினு கப்புறமாய் இப்புறத்தே
      மருவார் மலர்க்குழல் மாதினொடும் வந்தருளி
      அருவாய் மறைபயில் அந்தணனாய் ஆண்டுகொண்ட
      திருவான தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 228
      நானும்என் சிந்தையும் நாயகனு கெவ்விடத்தோம்
      தானுந்தன் தையலு தாழ்சடையோன் ஆண்டிலனேல்
      வானு திசைகளும் மாகடலும் ஆயபிரான்
      தேனுந்து சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 229
      உள்ள படாத திருஉருவை உள்ளுதலும்
      கள்ள படாத களிவந்த வான்கருணை
      வெள்ள பிரான்என் பிரான்என்னை வேறேஆ
      கொள்ள பிரானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 230
      பொய்யாய செல்வத்தே புக்கழுந்தி நாள்தோறும்
      மெய்யா கருதிக்கிடந்தேனை ஆட்கொண்ட
      ஐயாவென் ஆரூயிரே அம்பலவா என்றவன்றன்
      செய்யார் மலரடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 231
      தோலு துகிலுங் குழையுஞ் சுருள்தோடும்
      பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியுஞ்
      சூலமு தொக்க வளையு முடைத்தொன்மை
      கோலமே நோக்கி குளிர்ந்தூதாய் கோத்தும்பீ. 232
      கள்வன் கடியன் கலதியிவன் என்னாத
      வள்ளல் வரவர வந்தொழிந்தான் என் மனத்தே
      உள்ள துறதுய ரொன்றொழியா வண்ணமெல்லா
      தெள்ளுங் கழலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 233
      பூமேல் அயனோடு மாலும் புகலிரதென்று
      ஏமாறி நிற்க அடியேன் இறுமாக்க
      நாய்மேல் தவிசிட்டு நன்றா பொருட்படுத்த
      தீமேனி யானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 234
      திருச்சிற்றம்பலம்

      ------------------------------------------------------------------------

      1998
      12 2001
      13 . 2002

      -
      
      11. திருத்தெள்ளேணம்
      தில்லையில் அருளியது- நாலடி தரவு கொச்ச கலிப்பா
      திருமாலும் பன்றியா சென்றுணரா திருவடியை
      உருநாமம் அறியவோர் அந்தணனாய் ஆண்டுகொண்டான்
      ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமில்லாற் காயிர
      திருநாமம் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ. 235
      திருவார் பெருந்துறை மேயபிரான் என்பிறவி
      கருவேர் அறுத்தபின் யாவரையுங் கண்டதில்லை
      அருவாய் உருவமும் ஆயபிரான் அவன்மருவும்
      திருவாரூர் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ. 236
      அரிக்கும் பிரமற்கும் அல்லாத தேவர்கட்கும்
      தெரிக்கும் படித்தன்றி நின்றசிவம் வந்துநம்மை
      உருக்கும் பணிகொள்ளும் என்பதுகேட்டுலகமெல்லாம்
      சிரிக்கு திறம்பாடி தெள்ளேணங் கொட்டாமோ. 237
      அவமாய தேவர் அவகதியில் அழுந்தாமே
      பவமாயங் காத்தென்னை ஆண்டுகொண்ட பரஞ்சோதி
      நவமாய செஞ்சுடர் நல்குதலும் நாம்ஒழிந்து
      சிவமான வாபாடி தெள்ளேணங் கொட்டாமோ. 238
      அருமந்த தேவர் அயன்திருமாற் கரியசிவம்
      உருவந்து பூதலத்தோர் உகப்பெய்த கொண்டருளி
      கருவெந்து வீழ கடைக்கணித்தென் உளம்புகுந்த
      திருவந்த வாபாடி தெள்ளேணங் கொட்டாமோ. 239
      அரையாடு நாகம் அசைத்தபின் அவனியின்மேல்
      வரையாடு மங்கைதன் பங்கொடும்வ தாண்டதிறம்
      உரையாட உள்ளொளியாட ஒண்மாமலர கண்களில்நீர
      திரையாடு மாபாடி தெள்ளேணங் கொட்டாமோ. 240
      ஆவா அரிஅயன்இந்திரன் வானோர கரியசிவன்
      வாவாவென் றென்னையும் பூதலத்தேவலித்தாண்டுகொண்டான்
      பூவார் அடிச்சுவ டென்தலைமேற் பொறித்தலுமே
      தேவான வாபாடி தெள்ளேணங் கொட்டாமோ. 241
      கறங்கோலை போல்வதோர் காயப்பிறப்போ டிறப்பென்னும்
      அறம்பாவ மென்றிரண்ட சந்தவிர்த்தென்னை ஆண்டுகொண்டான்
      மறந்தேயு தன்கழல்நான் மறவாவண்ணம் நல்கிய அ
      திறம்பாடல் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ. 242
      கல்நா ருரித்தென்ன என்னையுந்தன் கருணையினால்
      பொன்னார் கழல்பணி தாண்டபிரான் புகழ்பாடி
      மின்னோர் நுடங்கிடை செந்துவர்வாய் வெண்ணகையீர்
      தென்னா தென்னாவென்று தெள்ளேணங் கொட்டாமோ. 243
      கனவேயு தேவர்கள் காண்பரிய கனைகழலோன்
      புனவே யனவளை தோளியோடும் புகுந்தருளி
      நனவே எனைப்பிடித்தா கொண்டவா நயந்துநெஞ்சம்
      சினவேற்கண்நீர் மல்க தெள்ளேணங் கொட்டாமோ. 244
      கயல்மாண்ட கண்ணிதன் பங்கன்எனைக்கல தாண்டலுமே
      அயல்மாண்ட ருவினை சுற்றமுமாண்ட வனியினமேல்
      மயல்மாண்டு மற்றுள்ள வாசகமாண் டென்னுடைய
      செயல்மாண்ட வாபாடி தெள்ளேணங் கொட்டாமோ. 245
      முத்தி குழன்று முனிவர்குழாம் நனிவாட
      அத்தி கருளி அடியேனை ஆண்டுகொண்டு
      பத்தி கடலு பதித்த பரஞ்சோதி
      தித்திக்கு மாபாடி தெள்ளேணங் கொட்டாமோ. 246
      பார்பாடும் பாதாளர் பாடும்விண்ணோர் தம்பாடும்
      ஆர்பாடுஞ் சாரா வகையருளி ஆண்டுகொண்ட
      நேர்பாடல் பாடி நினைப்பரிய தனிப்பெரியோன்
      சீர்பாடல் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ. 247
      மாலே பிரமனே மற்றொழிந்த தேவர்களே
      நூலே நுழைவரியான் நுண்ணியனாய் வந்தடியேன்
      பாலே புகுந்து பரிந்துருக்கும் பாவாகத்தால்
      சேலேர்கண் நீர்மல்க தெள்ளேணங் கொட்டாமோ. 248
      உருகி பெருகி உளங்குளிர முகந்துகொண்டு
      பருகற் கினிய பரங்கருணை தடங்கடலை
      மருவி திகழ்தென்னன் வார்கழலே நினைந்தடியாம்
      திருவை பரவிநாம் தெள்ளேணங் கொட்டாமோ. 249
      புத்தன் பரந்தராதி யர்அயன்மேல் போற்றிசெயும்
      பித்தன் பெருந்துறை மேயபிரான் பிறப்பறுத்த
      அத்தன் அணிதில்லை அம்பலவண் அருட்கழல்கள்
      சித்தம் புகுந்தவா தெள்ளேணங் கொட்டாமோ. 250
      உவலை சமயங்கள் ஒவ்வாத சாத்திரமாம்
      சவலை கடலுளனா கிடந்து தடுமாறும்
      கவலை கெடுத்து கழலிணைகள் தந்தருளும்
      செயலை பரவிநாம் தெள்ளேணங் கொட்டாமோ. 251
      வான்கெட்டு மாருதம் மாய்ந்தழல்நீர் மண்கெடினும்
      தான்கெட்ட லின்றி சலிப்பறியா தன்மையனுக்கு
      ஊன்கெ டுயிர்கெட்டுணவுகெட்டென் உள்ளமும்போய்
      நான்கெட்ட வாபாடி தெள்ளேணங் கொட்டாமோ. 252
      விண்ணோர் முழுமுதல் பாதாள தார்வித்து
      மண்ணோர் மருந்தயன் மாலுடைய வைப்படியோம்
      கண்ணார வந்துநின்றான் கருணை கழல்பாடி
      தென்னாதென்னாவென்று தெள்ளேணங் கொட்டாமோ. 253
      குலம்பாடி கொக்கிற கும்பாடி கோல் வளையாள்
      நலம்பாடி நஞ்சுண்ட வாபாடி நாள்தோறும்
      அலம்பார் புனல்தில்லை அம்பலத்தே ஆடுகின்ற
      சிலம்பாடல் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ. 254
      திருச்சிற்றம்பலம்

      ------------------------------------------------------------------------
      12. திருச்சாழல் - சிவனுடைய காருணியம்
      தில்லையில் அருளியது நாலடி தரவு கொச்ச கலிப்பா
      பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம்
      பேசுவதும் திருவாயால் மறைபோலுங் காணேடீ
      பூசுவதும் பேசுவதும் பூண்பதுவுங் கொண்டடென்னை
      ஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ. 255
      என்னப்பன் எம்பிரான் எல்லார்க்கு தானீசன்
      துன்னம்பெய் கோவணமா கொள்ளுமது என்னேடீ
      மன்னுகலை துன்னுபொருள் மறைநான்கே வான்சரடா
      தன்னையே கோவணமா சாத்தினன்காண் சாழலோ. 256
      கோயில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்லாடை
      தாயுமிலி தந்தையிலி தான் தனியன் காணேடீ
      தாயுமிலி தந்தையிலி தான்தனியன் ஆயிடினும்
      காயில் உலகனைத்துங் கற்பொடிகாண் சாழலோ. 257
      அயனை அனங்கனை அந்தகளை சந்திரனை
      வயனங்கள் மாயா வடுச்செய்தான் காணேடீ
      நயனங்கள் மூன்றுடை நாயகனே தண்டித்தால்
      சயமன்றோ வானவர்க்கு தாழ்குழலாய் சாழலோ. 258
      தக்கனையும் எச்சையும் தலையறுத்து தேவர்கணம்
      தொக்கனவ தவர்தம்மை தொலைத்ததுதான் என்னேடீ
      தொக்கனவ தவர்தம்மை தொலைத்தருளி அருள்கொடுத்தங்கு
      எச்சனுக்கு மிகைத்தலைமற் றருளினன் காண் சாழலோ. 259
      அலரவனும் மாலவனும் அறியாமே அழலுருவாய்
      நிலமுதற்கீழ் அண்டமுற நின்றதுதான் என்னேடீ
      நிலமுதற்கீழ் அண்டமுற நின்றிலனேல் இருவருந்தம்
      சலமுகத்தால் ஆங்கார தவிரார்காண் சாழலோ. 260
      மலைமகளை யொருபாகம் வைத்தலுமே மற்றொருத்தி
      சலமுகத்தால் அவன்சடையிற் பாயுமது என்னேடீ
      சலமுகத்தால் அவன்சடையிற் பாய்ந்திலளேல் தரணியெல்லாம்
      பிலமுகத்தே புகப்பாய்ந்து பெருங்கேடாஞ் சாழலோ. 261
      கோலால மாகி குரைகடல்வாய் அன்றெழுந்த
      ஆலாலம் உண்டான் அவன்சதுர்தான் என்னேடீ
      ஆலாலம் உண்டிலனேல் அன்றயன்மால் உள்ளிட்ட
      மேலாய தேவரெல்லாம் வீடுவர்காண் சாழலோ. 262
      தென்பா லுகந்தாடு தில்லைச்சிற் றம்பலவன்
      பெண்பா லுகந்தான் பெரும்பித்தன் காணேடீ
      பெண்பா லுகந்திலனேற் பேதாய் இரு நிலத்தோர்
      விண்பாலி யோகெய்தி வீடுவர்காண் சாழலோ. 263
      தானந்தம் இல்லான் தனையடைந்த நாயேனை
      ஆனந்த வெள்ள தழுத்துவித்தான் காணேடீ
      ஆனந்த வெள்ள தழுத்துவித்த திருவடிகள்
      வானுந்து தேவர்கட்கோர் வான்பொருள்காண் சாழலோ. 264
      நங்காய் இதென்னதவம் நரம்போ டெலும்பணிந்து
      கங்காள தோள்மேலே காதலித்தான் காணேடீ
      கங்காளம் ஆமாகேள் காலாந்த ரத்திருவர்
      தங்காலஞ் செ தரித்தனன்காண் சாழலோ. 265
      கானார் புலித்தோல் உடைதலைஊண் காடுபதி
      ஆனா லவனுக்கிங் காட்படுவார் ஆரேடி
      ஆனாலும் கேளாய் அயனு திருமாலும்
      வானாடர் கோவும் வழியடியார் சாழலோ. 266
      மலையரையன் பொற்பாவை வாள்நுதலான் பெண்திருவை
      உலகறி தீவேட்டான் என்னுமது என்னேடீ
      உலகறி தீவேளே தொழிந்தனனேல் உலகனைத்துங்
      கலைநவின்ற பொருள்களெல்லாங் கலங்கிடுங்காண் சாழலோ. 267
      தேன்புக்க தண்பனைசூழ் தில்லைச்சிற் றம்பலவன்
      தான்புக்கு நட்டம் பயிலுமது என்னேடீ
      தான்புக்கு நட்டம் பயின்றிலனேல் தரணியெல்லாம்
      ஊன்புக்க வேற்காளி கூட்டாங்காண் சாழலோ. 268
      கடகரியும் பரிமாவும் தேரும்உக தேறாதே
      இடபம்உக தேறியவா றெனக்கறிய இயம்பேடீ
      தடமதில்கள் அவைமூன்று தழலெரித்த அந்நாளில்
      இடபமதா தாங்கினான் திருமால்காண் சாழலோ. 269
      நன்றாக நால்வர்க்கும் நான்மறையின் உட்பொருளை
      அன்றாலின் கீழிருந்தங் கறமுரைத்தான் காணேடீ
      அன்றாலின் கீழிருந்தங் கறமுரைத்தான் ஆயிடினுங்
      கொன்றான்காண் புரமூன்றுங் கூட்டோ டே சாழலோ. 270
      அம்பலத்தே கூத்தாடி அமுதுசெ பலிதரியும்
      நம்பனையு தேவனென்று நண்ணுமது என்னேடீ
      நம்பனையும் ஆமாகேள் நான்மறைகள் தாமறியோ
      எம்பெருமான் ஈசாவென் றேத்தினகாண் சாழலோ. 271
      சலமுடைய சலந்தரன்தன் உடல்தடிந்த நல்லாழி
      நலமுடைய நாரணற்கன் றருளியவா றென்னேடீ
      நலமுடைய நாரணன்தன் நயனம்இட தானடிக்கீழ்
      அலராக இடஆழி அருளினன்காண் சாழலோ. 272
      அம்பரமாம் புள்ளித்தோல் ஆலாலம் ஆரமுதம்
      எம்பெருமான் உண்டசதுர் எனக்கறிய இயம்பேடீ
      எம்பெருமான் ஏதுடுத்தங் கேதமுது செய்திடினும்
      தம்பெருமை தானறியா தன்மையன்காண் சாழலோ. 273
      அருந்தவரு காலின்கீழ் அறமுதலா நான்கினையும்
      இருந்தவரு கருளுமது எனக்கறிய இயம்பேடீ
      அருந்தவரு கறமுதல்நான் கன்றருளி செய்திலனேல்
      திருந்தவரு குலகியற்கை தெரியாகாண் சாழலோ. 274
      திருச்சிற்றம்பலம்

      ------------------------------------------------------------------------
      13. திருப்பூவல்லி - மாயா விசயம் நீக்குதல்
      தில்லையில் அருளியது - நாலடி தரவு கொச்ச கலிப்பா
      இணையார் திருவடி என்தலைமேல் வைத்தலுமே
      துணையான சுற்றங்கள் அத்தனையும் துறந்தொழிந்தேன்
      அணையார் புனற்றில்லை அம்பலத்தே ஆடுகின்ற
      புணையாளன் சீர்பாடி பூவல்லி கொய்யாமோ. 275
      எந்தையெ தாய்சுற்றம் மற்றுமெல்லாம் என்னுடைய
      பந்தம் அறுந்தென்னை ஆண்டுகொண்ட பாண்டிப்பிரான்
      அந்த இடைமருதில் ஆனந தேனிருந்த
      பொந்தை பரவிநாம் பூவல்லி கொய்யாமோ. 276
      நாயிற் கடைப்பட்ட நம்மையுமோர் பொருட்படுத்து
      தாயிற் பெரிதுங் தயாவுடைய தம்பொருமான்
      மா பிறப்பறு தாண்டானென் வல்வினையின்
      வாயிற் பொடியட்டி பூவல்லி கொய்யாமோ. 277
      பண்பட்ட தில்லை பதிக்காசை பரவாதே
      எண்பட்ட தக்கன் அருக்கன் எச்சன் இந்துஅனல்
      விண்பட்ட பூத படைவீர பத்திரரால்
      புணப்பட்ட வாபாடி பூவல்லி கொய்யாமோ. 278
      தேனாடு கொன்றை சடைக்கணிந்த சிவபெருமான்
      ஊனாடி நாடிவ துள்புகுந்தான் உலகர்முன்னே
      நானாடி ஆடிநின் றோலமிட நடம்பயிலும்
      வானாடர் கோவுக்கே பூவல்லி கொய்யாமோ. 279
      எரிமூன்று தேவர கிரங்கியருள் செய்தருளி
      சிரமூன் றறத்தன் திருப்புருவம் நெரித்தருளி
      உருமூன்று மாகி உணர்வரிதாம் ஒருவனுமே
      புரமூன் றெரத்தவா பூவல்லி கொய்யாமோ. 280
      வணங்க தலை வைத்து வார்கழல்வாய் வாழ்த்தவைத்து
      இணங்தத்தன் சீரடியார் கூட்டமும்வை தெம்பெருமான்
      அணங்கொடணிதில்லை அம்பலத்தே ஆடுகின்ற
      குணங் கூர பாடிநாம் பூவல்லி கொய்யாமோ. 281
      நெறிசெய் தருளித்தன் சீரடியார் பொன்னடிக்கே
      குறிசெயது கொண்டென்னை ஆண்டபிரான் குணம்பரவி
      முறிசெய்து நம்மை முழுதுடற்றும் பழவினையை
      கிறிசெய்த வாபாடிபட பூவல்லி கொய்யாமோ. 282
      பன்னா பரவி பணிசெ பாதமலர்
      என்ஆகம் துன்னவைத்த பெரியோன் எழிற்சுடரா
      கல்நா ருரித்தென்னை யாண்டுகொண்டான் கழலிணைகள்
      பொன்னான வாபாடி பூவல்லி கொய்யாமோ. 283
      பேராசை யாமிந்த பிண்டமற பெருந்துறையான்
      சீரார் திருவடி யென் தலைமேல் வைத்தபிரான்
      காரார் கடல்நஞ்சை உண்டுகந்த காபாலி
      போரார் புறம்பாடி பூவல்லி கொய்யாமோ. 284
      பாலும் அமுதமு தேனுடனாம் பராபரமா
      கோலங் குளிர்ந்துள்ளங் கொண்டபிரான் குரைகழல்கள்
      ஞாலம் பரவுவார் நன்னெறியாம் அந்நெறியே
      போலும் புகழ்பாடி பூவல்லி கொய்யாமோ. 285
      வானவன் மாலயன் மற்றுமுள்ள தேவர்கட்கும்
      கோனவ னாய் நின்று கூடலிலா குணங்குறியோன்
      ஆன நெடுங்கடல் ஆலாலம் அமுதுசெ
      போனகம் ஆனவா பூவல்லி கொய்யாமோ. 286
      அன்றால நீழற்கீழ் அருமறைகள் தானருளி
      நன்றாக வானவர் மாமுனிவர் நாள்தோறும்
      நின்றார ஏத்தும் நிறைகழலோள் புனைகொன்றை
      பொன்தாது பாடிநாம் பூவல்லி கொய்யாமோ. 287
      படமாக என்னுள்ளே தன்னிணைப்போ தவையளித்திங்
      கிடமா கொண்டிரு தேகம்பம் மேயபிரான்
      தடமார் மதில்தில்லை அம்பலமே தானிடமா
      நடமாடு மாபாடி பூவல்லி கொய்யாமோ. 288
      அங்கி அருக்கன் இராவணன் அந்தகன் கூற்றன்
      செங்கண் அரிஅயன் இந்திரனுஞ் சந்திரனும்
      பங்கமில் தக்கனும் எச்சனுந்தம் பரிசழி
      பொங்கியசீர் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ. 289
      திண்போர் விடையான் சிவபுரத்தார் போரேறு
      மண்பால் மதுரையிற் பிட்டமுது செய்தருளி
      தண்டாலே பாண்டியன் தன்னை பணிகொண்ட
      புண்பாடல் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ. 290
      முன்னாய மாலயனும் வானவரும் தானவரும்
      பொன்னார் திருவடி தாமறியார் போற்றுவதே
      என்னாகம் உள்புகு தாண்டு கொண்டான் இலங்கணியாம்
      பன்னாகம் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ. 291
      சீரார் திருவடி திண்சிலம்பு சிலம்பொலிக்கே
      ஆராத ஆசையதாய் அடியேன் அகமகிழ
      தேராந்த வீதி பெருந்துறையான் திருநடஞ்செய்
      பேரான தம்பாடி பூவல்லி கொய்யாமோ. 292
      அத்தி யுரித்தது போர்த்தருளும் பெருந்துறையான்
      பித்த வடிவுகொண் டிவ்வுலகிற் பிள்ளையுமாம்
      முத்தி முழுமுதலு தரகோச மங்கைவள்ளல்
      புத்தி புகுந்தவா பூவல்லி கொய்யாமோ. 293
      மாவார வேறி மதுரைநகர் புகுந்தருளி
      தேவார்ந்த கோல திகழ பெருந்துறையான்
      கோவாகி வந்தெம்மை குற்றவேல் கொண்டருளும்
      பூவார் கழல்பரவி பூவல்லி கொய்யாமோ. 294
      திருச்சிற்றம்பலம்

      ------------------------------------------------------------------------
      14. திருஉந்தியார் - ஞான வெற்றி
      தில்லையில் அருளியது- கலித்தாழிசை
      வளைந்தது வில்லு விளைந்தது பூசல்
      உளைந்தன முப்புரம் உந்தீபற
      ஒருங்குடன் வெந்தவா றுந்தீபற. 295
      ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தங்கையில்
      ஓரம்பே முப்புரம் உந்தீபற
      ஒன்றும் பெருமிகை உந்தீபற. 296
      தச்சு விடுத்தலும் தாமடி யிட்டலும்
      அச்சு முறிந்ததென் றுந்தீபற
      அழந்தன முப்புரம் உந்தீபற. 297
      உய்யவல் லாரெரு மூவரை காவல்கொண்
      டெய்யவல் லானுக்கே உந்தீபற
      இளமுலை பங்கனென் றுந்தீபற. 298
      சாடிய வேள்வி சரிந்திட தேவர்கள்
      ஓடிய வாபாடி உந்தீபற
      உருந்திர நாதனு குந்தீபற. 299
      ஆவா திருமால் அவிப்பாகங் கொண்டன்று
      சாவா திருந்தானென் று தீபற
      சதுர்முகன் தாதையென் றுந்தீபற. 300
      வெய்யவன் அங்கி விழுங்கத்திரட்டிய
      கையை தறித்தானென் றுந்தீபற
      கலங்கிற்று வேள்வியென் றுந்தீபற. 301
      பார்ப்பதி யைப்பகை சாற்றிய தக்கனை
      பார்ப்பதென் னேயேடி யந்தீபற
      பணைமுலை பாகனு குந்தீபற. 302
      புரந்தர னாரொரு பூங்குயி லாகி
      மரந்தனி லேறினார் உந்தீபற
      வானவர் கோனென்றே உந்தீபற. 303
      வெஞ்சின வேள்வி வியாத்திர னார்தலை
      துஞ்சிய வாபாடி உந்தீபற
      தொடர்ந்த பிறப்பற உந்தீபற. 304
      ஆட்டின் தலையை விதிக்கு தலையா
      கூட்டிய வாபாடி உந்தீபற
      கொங்கை குலுங்கிநின் றுந்தீபற. 305
      உண்ண புகுந்த பகனொளி தோடாமே
      கண்ணை பறித்தவா றுந்தீபற
      கருக்கெட நாமெல்லாம் உந்தீபற. 306
      நாமகள் நாசி சிரம்மி மன்பட
      சோமன் முகன் நெரி துந்தீபற
      தொல்லை வினைகெட உந்தீபற. 307
      நான்மறை யோனும் அகத்திய மான்பட
      போம்வழி தேடுமா றுந்தீபற
      புரந்தரன் வேள்வியி லுந்தீபற. 308
      சூரிய னார்தொண்டை வாயினிற் பற்களை
      வாரி நெரித்தவா றுந்தீபற
      மயங்கிற்று வேள்வியென் றுந்தீபற. 309
      தக்கனா ரன்றே தலையிழ தார்தக்கன்
      மக்களை சூழநின் றுந்தீபற
      மடிந்தது வேள்வியென் றுந்தீபற. 310
      பாலக னார்க்கன்று பாற்கடல் ஈந்திட்ட
      கோல சடையற்கே யந்தீபற
      குமரன்தன் தாதைக்கே உந்தீபற. 311
      நல்ல மலரின்மேல் நான்முக னார்தலை
      ஒல்லை யரிந்ததென் றுந்தீபற
      உகிரால் அரிந்ததென் றுந்தீபற. 312
      தேரை நிறுத்தி மலையெடு தான்சிரம்
      ஈரைந்தும் இற்றவா றுந்தீபற
      இறுபதும் இற்றதென் றுந்தீபற. 313
      ஏகாசமிட்ட இருடிகள் போகாமல்
      ஆகாசங்காவலென் றுந்தீபற
      அதற்கப்பாலுங் காவலென் றுந்தீபற. 314
      திருச்சிற்றம்பலம்

      ------------------------------------------------------------------------
      15. திருத்தேள் நோக்கம் - பிரபஞ்ச சுத்தி
      தில்லையில் அருளியது - நாலடி தரவு கொச்ச கலிப்பா
      பூத்தாரும் பொய்கை புனலிதுவே எனக்கருதி
      பேய்த்தார் முகக்குறும் பேதைகுண மாகாமே
      தீர்த்தாய் திகழ்தில்லை அம்பலத்தை திருநடஞ்செய்
      கூத்தா உன் சேவடி கூடும்வண்ண தோணோக்கம். 315
      என்றும் பிறந்திற தாழாமே ஆண்டுகொண்டான்
      கன்றால் விளவெறி தான்பிரமன் காண்பரிய
      குன்றாத சீர்த்தில்லை அம்பலவன்குணம்பரவி
      துன்றார் குழலினீர் தோணோக்கம் ஆடாமோ. 316
      பொருட்பற்றி செய்கின்ற பூசனைகள் போல்விளங்கி
      செருப்புற்ற சீரடி வாய்க்கலசம் ஊனமுதம்
      விருப்புற்று வேடனார் சேடெறிய மெய்குளிர்த்தங்கு
      அருட்பெற்று நின்றவா தோணோக்கம் ஆடாமோ. 317
      கற்போலும் நெஞ்சங் கசிந்துருகி கருணையினால்
      நிற்பானை போலஎன நெஞ்சினுள்ளே புகுந்தருளி
      நற்பாற் படுத்தென்னை நாடறி தானிங்ஙன்
      சொற்பால தானவா தோணோக்கம் ஆடாமோ. 318
      நிலம்நீர் நெருப்புயிர் நீள்விசும்பு நிலாப்பகலோன்
      புலனாய மைந்தனோ டெண்வகையா புணர்ந்துநின்றான்
      உலகே ழெனத்திசை பத்தெனத்தா னொருவனுமே
      பலவாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ. 319
      புத்தன் முதலாய புல்லறிவிற் பல்சமயம்
      தத்தம் மதங்களில் தட்டுளுப்பு பட்டுநிற்க
      சித்தஞ் சிவமாக்கி செய்தனவே தவமாக்கும்
      அத்தன் கருணையிலனால் தோணோக்கம் ஆடாமோ. 320
      தீதில்லை மாணி சிவகருமஞ் சிதைத்தானை
      சாதியும் வேதியன் தாதையனை தாளிரண்டுஞ்
      சேதிப்ப ஈசன் திருவருளால் தேவர்தொழ
      பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம். 321
      மானம் அழிந்தோம் மதிமறந்தோம் மங்கைநல்லீர்
      வான தொழுந்தென்னன் வார்கழலே நினைத்தடியோம்
      ஆனந்த கூத்தன் அருள்பெறில் நாம் அவ்வணமே
      ஆனந்த மாகிநின் றாடாமே தோணோக்கம். 322
      எண்ணுடை மூவர் இராக்கதர்கள் எரிபிழைத்து
      கண்ணுதல் எந்தை கடைத்தலைமுன் நின்றதற்பின்
      எண்ணிலி இந்திரர் எத்தனையோ பிரமர்களும்
      மன்மிசை மால்பவர் மாண்டனர்காண் தோணோக்கம். 323
      பங்கயம் ஆயிரம் பூவினிலோர் பூக்குறை
      தங்கண் இடந்தான் சேவடிமேல் சாத்தலுமே
      சங்கரன் எம்பிரான் சக்கரமாற் கருளியவாறு
      எங்கும் பரவிநாம் தோணோக்கம் ஆடாமோ. 324
      காமனுடலுயிர் காலன்பற் காய்கதிரோன்
      நாமகள் நாசிசிரம் பிரமன் கரம்எரியை
      சோமன் கலைதலை தக்கனையும் எச்சனையு
      தூய்மைகள் செய்தவா தோணோக்கம் ஆடாமோ. 325
      பிரமன் அரியென் றிருவருக்கம் பேதைமையால்
      பரமம் யாம்பரமம் என்றவர்கள் பதைப்பொடுங்க
      அரனார் அழலுருவாய் அங்கே அளவிறந்து
      பரமாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ. 326
      ஏழை தொழும்பனேன் எத்தனையோ காலமெல்லாம்
      பாழு கிறைத்தேன் பரம்பரனை பணியாதே
      ஊழிமுதற் சிந்தாத நன்மணிவ தென்பிறவி
      தாழை பறித்தவா தோணோக்கம் ஆடாமோ. 327
      உரைமாண்ட உள்ளொளி உத்தமன்வ துளம்புகலும்
      கரைமாண்ட காமப்பெருங்கடலை கடத்தலுமே
      இரைமாண்ட இந்திரி பறவை இரிந்தோட
      துரைமாண்ட வாபாடி தோணோக்கம் ஆடாமோ. 328
      திருச்சிற்றம்பலம்

      ------------------------------------------------------------------------
      16. திருப்பொன்னூசல் - அரு சுத்தி
      தில்லையில் அருளியது - ஆறடித்தரவு கொச்ச கலிப்பா
      சீரார் பவளங்கால் முத்தங் கயிறாக
      ஏராரும் பொற்பலகை ஏறி இனிதமர்ந்து
      நாரா யணன் அறியா நாண்மலர்த்தான் நாயடியேற்கு
      ஊராக தந்தருளும் உத்தர கோசமங்கை
      ஆரா அமுதின் அருள்தா ளிணைப்பாடி
      போரார் கண்மடவீர் பொன்னூசல் ஆடாமோ. 329
      மூன்றங் கிலங்கு நயனத்தன் மூவாத
      வான்தங்கு தேவர்களுங் காணா மலரடிகள்
      தேனதங்கி தித்தி தமுதூறி தான்தெளிந்தங்கு
      ஊன்தங்கி நின்றுருக்கும் உத்தர கோசமங்கை
      கோன்தங் கிடைமருது பாடி குலமஞ்ஞை
      போன்றங் கனநடையீர் பொன்னூசல் ஆடாமோ. 330
      முன்னீறும் ஆதியு மில்லான் முனிவர்குழாம்
      பன்னூறு கோடி யிமையோர்கள் தாம் நிற்ப
      தன்னீ றெனக்குருளி தன்கருணை வெள்ளத்து
      மன்னூற மன்னுமணி யுத்தர கோசமங்கை
      மின்னேறு மாட வியன்மா ளிகைபாடி
      பொனனேறு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ. 331
      நஞ்சமர் கண்டத்தன் அண்ட தவர்நாதன்
      மஞ்சுதோய் மாடமணி உத்தரகோசமங்கை
      அஞ்சுசொலாள் தன்னோடுங் கூடி அடியவர்கள்
      நெஞ்சுளே நின்றமுத மூறி கருணைசெய்து
      துஞ்சல் பிறப்பறுப்பான் தூய புகழ்பாடி
      புஞ்சுமார் வெள்வளையீர் பொன்னூசல் ஆடாமோ. 332
      ஆணோ அலியோ அரிவையோ என்றிருவர்
      காணா கடவுள் கருணையினால் தேவர்குழாம்
      நாணாமே உய்யஆ கொண்டருளி நஞ்சுதனை
      ஊணாக உண்டருளும் உத்தர கோமங்கை
      கோணார் பிறைச்சென்னி கூத்தன் குணம்பரவி
      பூணார் வனமுலையீர் பொன்னூசல் ஆடாமோ. 333
      மாதாடு பாகத்தன் உத்தர கோசமங்கை
      தாதாடு கொன்றை சடையான் அடியாருள்
      கோதாட்டி நாயேனை ஆட்கொண்டென் தொல்பிறவி
      தீதோடா வண்ண திகழ பிறப்பறுப்பான்
      காதாடு குண்டலங்கள் பாடி கசிந்தன்பால்
      போதாடு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ. 334
      உன்னற் கரியதிரு வுத்தர கோசமங்கை
      மன்னி பொலிந்திருந்த மாமறையோன் தன்புகழே
      பன்னி பணிந்திறைஞ்ச பாவங்கள் பற்றறுப்பான்
      அன்னத்தின் மேலேறி ஆடுமணி மயில்போல்
      என்னத்தன் என்னையும் ஆட்கொண்டான் எழில்பாடி
      பொன்னொத்த பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ. 335
      கோலவரைக்குடுமி வந்து குவலத்து
      சால அமுதுண்டு தாழ்கடலின் மீதெழுந்து
      ஞால மிகப்பரிமேற் கொண்டு நமையாண்டான்
      சீல திகழு திருவுத்தர கோசமங்கை
      மாலு கரியானை வாயார நாம்பாடி
      பூலி தகழ்குழைந்து பொன்னூசல் ஆடாமோ. 336
      தெங்குலவு சோலை திருஉத்தர கோசமங்கை
      தங்குலவு சோதி தனியுருவம் வந்தருளி
      எங்கள் பிறப்பறுத்தி டெந்தரமும் ஆட்கொள்வான்
      பங்குலவு கோதையு தானும் பணிகொண்ட
      கொங்குலவு கொன்றை சடையான் குணம்பரவி
      பொங்குலவு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ. 337
      திருச்சிற்றம்பலம்

      ------------------------------------------------------------------------
      17. அன்னை பத்து - ஆத்தும பூரணம்
      தில்லையில் அருளியது - கலிவிருத்தம்
      வேத மொழியர்வெண் ணீற்றர்செம் மேனியர்
      நாத பறையினர் அன்னே என்னும்
      நாத பறையினர் நான்முகன் மாலுக்கும்
      நாதரி நாதனார் அன்னே என்னும். 338
      கண்ணஞ் சனத்தார் கருணை கடலினர்
      உள்நின் றுருக்குவர் அன்னே என்னும்
      உள்நின் றுருக்கி உலப்பிலா ஆனந்த
      கண்ணீர் தருவரால் அன்னே என்னும். 339
      நித்த மணாளர் நிரம்ப அழகியர்
      சி திருப்பரால் அன்னே என்னும்
      சி திருப்பவர் தென்னன் பெரும்துறை
      அத்தர்ஆ னந்தரால் அன்னே என்னும். 340
      ஆடர பூணுடை தோல்பொடி பூசிற்றோர்
      வேடம் இருந்தவா றன்னே என்னும்
      வேடம் இருந்தவா கண்டுகண் டென்னுள்ளம்
      வாடும் இதுவென்ன அன்னே என்னும். 341
      நீண்ட கரத்தர் நெறிதரு குஞ்சியர்
      பாண்டிநன் னாடரால் அன்னே என்னும்
      பாண்டிநன் னாடர் பரந்தெழு சிந்தையை
      ஆண்டன்பு செய்வரால் அன்னே என்னும். 342
      உன்னற் கரியசீர் உத்தர மங்கையர்
      மன்னுவ தென்நெஞ்சில் அன்னே என்னும்
      மன்னுவ தென்நெஞ்சில் மாலயன் காண்கிலார்
      என்ன அதியசம் அன்னே என்னும். 343
      வெள்ளை கலிங்கத்தர் வெண்திரு முண்டத்தர்
      பள்ளிக்கு பாயந்தர் அன்னே என்னும்
      பள்ளிக்கு பாயத்தர் பாய்பரி மேற்கொண்டான்
      உள்ளங் கவர்வரால் அன்னே என்னும். 344
      தாளி அறுகினர் சந்தன சாந்தினர்
      ஆளெம்மை ஆள்வரால் அன்னே என்னும்
      ஆளெம்மை ஆளும் அடிகளார் தங்கையில்
      தாள மிருந்தவா றன்னே என்னும். 345
      தையலோர் பங்கினர் தாபத வேடத்தர்
      ஐயம் புகுவரால் அன்னே என்னும்
      ஐயம் புகுந்தவர் போதலும் என்னுள்ளம்
      நையுமிது வென்னே அன்னே என்னும். 346
      கொன்றை மதியமும் கூவின மத்தமும்
      துன்றிய சென்னியர் அன்னே என்னும்
      துன்றிய சென்னியின் மத்தம்உன் மத்தமே
      இன்றென கானவா றன்னே என்னும். 347
      திருச்சிற்றம்பலம்

      ------------------------------------------------------------------------
      18. குயிற்பத்து - ஆத்தும இரக்கம்
      தில்லையில் அருளியது - ஆசிரிய விருத்தம்
      கீத மினிய குயிலே கேட்டியேல் எங்கள் பெருமான்
      பாத மிரண்டும் வினவில் பாதாளம் ஏழினு கப்பால்
      சோதி மணிமுடி சொல்லிற் சொல்லிறந்து நின்ற தொன்மை
      ஆதிகுண மொன்று மில்லான் அந்தமி லான்வர கூவாய். 348
      ஏர்தரும் ஏழுல கேத்த எவ்வுரு வுந்தன் னுருவாய்
      ஆர்கலி சூழ்தென் னிலங்கை அழகமர் வண்டோ தரிக்கு
      பேரருளின்ப மளித்த பெருந்துறை மேய பிரானை
      சீரிய வாயாற் குயிலே தென்பாண்டி நாடனை கூவாய். 349
      நீல வுருவிற் குயிலே நீள்மணி மாடம் நிலாவுங்
      கோல அழகில் திகழுங் கொடிமங்கை உள்ளுறை கோயில்
      சீலம் பெரிதும் இனிய திருவு தரகோச மங்கை
      ஞாலம் விளங்க இருந்த நாயக னைவர கூவாய். 350
      தேன்பழ சோலை பயிலுஞ் சிறுகுயி லேயிது கேள்நீ
      வான்பழி திம்மண் புகுந்து மனிதரை ஆட்கொண்ட வள்ளல்
      ஊன்பழி துள்ளம் புகுந்தென் உணர்வது வாய வொருத்தன்
      மான்பழி தாண்டமெல் நோக்கி மணாளனை நீவர கூவாய். 351
      சுந்தர தின்ப குயிலே சூழ்சுடர் ஞாயிறு போல
      அந்தர தேநின் றிழிந்திங் கடியவ ராசை அறுப்பான்
      முந்தும் நடுவும் முடிவு மாகிய மூவ ரறியா
      சிந்தூர சேவடி யானை சேவக னைவர கூவாய். 352
      இன்ப தருவன் குயிலே ஏழுல கும்முழு தாளி
      அன்பன் அமுதளி தூறும் ஆனந்தன் வான்வந்த தேவன்
      நன்பொன் மணிச்சுவ டொத்த நற்பரி மேல்வரு வானை
      கொம்பின் மிழற்றுங் குயிலே கோகழி நாதனை கூவாய். 353
      உன்னை உகப்பன் குயிலே உன்துணை தோழியும் ஆவன்
      பொன்னை அழிந்தநன் மேனி புகழில் திகழும் அழகன்
      மன்னன் பரிமிசை வந்த வள்ளல் பெருந்துறை மேய
      தென்னவன் சேரவன் சோழன் சீரப்புயங் கன்வர கூவாய். 354
      வாயிங்கே நீகுயிற் பிள்ளாய் மாலொடு நான்முகன் தேடி
      ஓவியவ ருன்னி நிற்ப ஒண்தழல் விண்பிள தோங்கி
      மேவிஅன் றண்டங் கடந்து விரிசுட ராய்நின்ற மெய்யன்
      தாவி வரும்பரி பாகன் தாழ்சடை யோன்வர கூவாய். 355
      காருடை பொன்திகழ் மேனி கடிபொழில் வாழுங் குயிலே
      சீருடை செங்கமலத்தில் திகழுரு வாகிய செல்வன்
      பாரிடை பாதங்கள் காட்டி பாசம் அறுத்தெனை யாண்ட
      ஆருடை அம்பொனின் மேனி அமுதினை நீவர கூவாய். 356
      கொந்தண வும்பொழிற் சோலை கூங்குயி லேயிது கேள்நீ
      அந்தண னாகிவந்திங்கே அழகிய சேவடி காட்டி
      எந்தம ராம்இவ னென்றிங் கென்னையும் ஆட்கொண்டருளும்
      செந்தழல் போல்திரு மேனி தேவர்பி ரான்வர கூவாய். 357
      திருச்சிற்றம்பலம்

      ------------------------------------------------------------------------
      19. திருத்தசாங்கம் - அடிமை கொண்ட முறைமை
      தில்லையில் அருளியது -நேரிசை வெண்பா
      ஏரார் இளங்கிளியே எங்கள் பெருந்துறைக்கோன்
      சீரார் திருநாமம் தேர்ந்துரையாய் - ஆரூரன்
      செம்பெருமான் வெண்மலாரான் பாற்கடலான் செப்புவபோல்
      எம்பெருமான் தேவர்பிரான் என்று. 358
      ஏதமிலா இன்சொல் மரகதமே ஏழ்பொழிற்கும்
      நாதன்மை ஆளுடையான் நாடுரையாய் - காதலவர்க்கு
      அன்பாண்டு மீளா அருள்புரிவான் நாடென்றும்
      தென்பாண்டி நாடே தெளி. 359
      தாதாடு பூஞ்சோலை தத்தாய் நமையாளும்
      மாதாடும் பாகத்தான் வாழ்பதியென் - கோதட்டி
      பத்தரெல்லாம் பார்மேற் சிவபுரம்போற் கொண்டாடும்
      உத்தர கோசமங்கை யூர். 360
      செய்யவா பைஞ்சிறகிற் செல்வீநஞ் சிந்தைசேர்
      ஐயன் பெருந்துறையான் ஆறுரையாய் - தையலாய்
      வான்வந்த சிந்தை மலங்கழுவ வந்திழியும்
      ஆனந்தங் காணுடையான் ஆறு. 361
      கிஞ்சுகவாய் அஞ்சுகமே கேடில் பெருந்துறைக்கோன்
      மஞ்சன் மருவும் மலைபகராய் - நெஞ்சத்து
      இருளகல வாள்வீசி இன்பமரும் முத்தி
      அருளுமலை என்பதுகாண் ஆய்ந்து. 362
      இப்பாடே வந்தியம்பு கூடுபுகல் என்கிளியே
      ஒப்பாடா சீருடையான் ஊர்வதென்னே - எப்போதும்
      தேன்புரையுஞ் சிந்தையரா தெய்வப்பெண் ணேத்திசைப்ப
      வான்புரவி யூரும் மகிழ்ந்து. 363
      கோற்றேன் மொழிக்கிள்ளாய் கோதில் பெருந்துறைக்கோள்
      மாற்றாறை வெல்லும் படைபகராய் - ஏற்றார்
      அழுக்கடையா நெஞ்சுருக மும்மலங்கள் பாயுங்
      கழுக்கடைகாண் கைக்கொள் படை. 364
      இன்பால் மொழிக்கிள்ளாய் எங்கள் பெருந்துறைக்கோள்
      முன்பால் முழங்கும் முரசியம்பாய் - அன்பாற்
      பிறவி பகைகலங்க பேரின்ப தோங்கும்
      பருமிக்க நாத பறை. 365
      ஆய மொழிக்கிள்ளாய் அள்ளூரும் அன்பர்பால்
      மேய பெருந்துறையான் மெய்த்தாரென் - தீயவினை
      நாளுமணு காவண்ணம் நாயேனை ஆளுடையான்
      தாளிஅறு காம் உவந்த தார். 366
      சோலை பசுங்கிளியே தூநீர பெருந்துறைக்கோன்
      கோலம் பொலியுங் கொடிகூறாய் - சாலவும்
      ஏதிலார் துண்ணென்ன மேல்விளங்கி ஏர்காட்டும்
      கோதிலா ஏறாம் கொடி. 367
      திருச்சிற்றம்பலம்

      ------------------------------------------------------------------------

      20. திருப்பள்ளியெழுச்சி - திரோதான சுத்தி
      திருப்பெருந்துறையில் அருளியது -எண்சீர் கழி நெழிலடி ஆசிரிய விருத்தம்
      போற்றியென் வாழ்முத லாகிய பொருளே
      புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண்
      டேற்றிநின் திருமுக தெமக்கருள் மலரும்
      எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்
      சேற்றிதழ கமலங்கள் மலரும்தண் வயல்சூழ்
      திருப்பெரு துறை உறை சிவபெருமானே
      ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய்
      எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே. 368
      அருணண்இந்திரன் திசை அணுகினன் இருள்போய்
      அகன்றது உதயம்நின் மலர்த்திரு முகத்தின்
      கருனையின் சூரியன் எழவெழ நயன
      கடிமலர் மலரமற்று அண்ணலங் கண்ணாம்
      திரள்நிரை அருள்பதம் முரல்வன இவையோர்
      திருப்பெரு துறையுறை சிவபெருமானே
      அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே
      அலைகடலே பள்ளி யெழுந்தருளாயே. 369
      கூவின பூங்குயில்
      குருகுகள் இயம்பின
      ஓவின தாரகை ஒளியொளி உதயத்து
      ஓருப்படு கின்றது விருப்பொடு நமக்கு
      தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய்
      திருப்பெரு துறையுறை சிவபெருமானே
      யாவரும் அறிவரி யாய்எ கெளியாய்
      எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே. 370
      இன்னிசை வீணையார் யாழினர் ஒருபால்
      இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
      துன்னிய பிணைமலர கையினர் துவள்கையர் ஒருபால்
      தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
      சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
      திருப்பெரு துறையுறை சிவபெரு மானே
      என்னையும் ஆண்டுகொண்டின்னருள் புரியும்
      எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே. 371
      பூதங்கள் தோறும்நின் றாய்எனின் அல்லால்
      போக்கிலன் வரவிலன் எனநினை புலவோர்
      கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
      கேட்டறி யோம்உனை கண்டறி வாரை
      சீதங்கொள் வயல்திரு பெருந்துறை மன்னா
      சிந்தனை கும்அரியாய் எங்கள் முன்வந்து
      ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
      எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே. 372
      பப்பற விட்டிருந்து உணரும்நின் அடியுர்
      பந்தனை வந்தறு தார் அவர் பலரும்
      மைப்பறு கண்ணியர் மானுட தியல்பின்
      வணங்குகின்றார் அணங் கின்மண வாளா
      செப்புறு கமலங்கண் மலரும்தண் வயல்சூழ்
      திருப்பெரு துறையுறை சிவபெருமானே
      இப்பிறப்பு அறுத்து எமை ஆண்டருள் புரியும்
      எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே. 373
      அது பழச்சுவையென அமுதென அறிதற்கு
      அரிதென எளிதென அமரும் அறியார்
      இது அவன் திருவுரு இவன்
      எங்களை ஆண்டுகொணடு இங் கெழுந்தருளும்
      மதுவளர் பொழில்திரு உத்தர கோச
      மங்கையுள்ளாய்திரு பெருந்துறை மன்னா
      எதுஎமை பணிகொளு மாறது கேட்போம்
      எம்பெருமான்பள்ளி யெழுந்தருளாயே. 374
      முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய்
      மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார்
      பந்தணை விரலியும் நீயும்நின்னடியார்
      பழங்குடில் தொறும்எழு தருளிய பரனே
      செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டி
      திருப்பெரு துறையறை கோயிலும் காட்டி
      அந்தணன் ஆவதும் காட்டிவ தாண்டாய்
      ஆரமுதே பள்ளி யெழுந்தருள்யே. 375
      விண்ணக தேவரும் நண்ணவும் மாட்டா
      விழுப்பொரு ளேயுன தொழுப்படி யோங்கள்
      மண்ணக தேவந்து வாழச்செய் தானே
      வண்திரு பெருந்துறை யாய்வழி யடியோம்
      கண்ணக தேநின்று களிதரு தேனே
      கடலமு தேகரும் பேவிரும் படியார்
      எண்ணக தாய்உல குக்குயி ரானாய்
      எம்பெருமான்பள்ளி எழுந்தருளாயே. 376
      புவனியில் போய்ப்பிற வாமையின் நாள்நாம்
      போக்குகின் றோம்அவ மேஇந்தப்பூமி
      சிவனு கொள்கின்ற வாறென்று நோக்கி
      திருப்பெரு துறையுறை வாய்திரு மாலாம்
      அவன்விரு பெய்தவும் மலரவன் ஆசை
      படவும்நின் அவர்தம்மெய்க்கருணையும் நீயும்
      அவணியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
      ஆரமு தேபள்ளி யெழுந்தருளாயே. 377
      திருச்சிற்றம்பலம்

      ------------------------------------------------------------------------
      21. கோயில் மூத்த திருப்பதிகம் - அநாதியாகிய சற்காரியம்
      தில்லையில் அருளியது -அறுசீர கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
      உடையாள் உன்தன் நடுவிருக்கும் நடுவுள்
      அடியேன் நடுவுள் இருவீரும் இருப்பதானால் அடியேன்உன்
      அடியார் நடுவுள் இருக்கும் அருளைப்புரி யாய் பொன்னம்பலத்தெம்
      முடியா முதலே என்கருத்து முடியும் வண்ணம் முன்னின்றே. 378
      முன்னின் றாண்டாய் எனை முன்னம் யானும் அதுவே முயல்வுற்று
      பின்னின் றேவல் செய்கின்றேன் பிற்ப டொழிந்தேன் பெம்மானே
      என்னின் றருளி வரநின்று போந்தி டென்னா விடில் அடியார்
      உன்னின் றிவனார் என்னாரோ பொன்னம் பலக்கூ துகந்தானே. 379
      உகந்தானே அன்புடை அடிமை குருகாவுள்ள துணிர்விலியேன்
      சகந்தான் அறிய முறையிட்டால் தக்கவாறன் றென்னாரோ
      மகந்தான் செய்து வழிவந்தார் வாழ வாழ்ந்தாய் அடியேற்குன்
      முகந்தான் தாரா விடின்முடிவேன் பொன்னம் பலத்தெம் முழுமுதலே. 380
      முழுமுத லேஐம் புலனுக்கும் மூவர்க்கும் என்தனக்கும்
      வழிமுதலேநின் பழவடி யார் திரள்வான் குழுமி
      கெழுமுத லேயருள் தந்தி ருக்கஇரங்குங்கொல்லோ என்று
      அழுமதுவேயன் றிமந்றென் செய்கேன் பொன்னம் பலத்தரைசே. 381
      அரைசே பொன்னம் பலத்தாடும் அமுதே என்றுன் அருள்நோக்கி
      இரைதேர் கொக்கொ திரவுபகல் ஏசற்றிருந்தே வேசற்றேன்
      கரைசேர் அடியார் களிசிறப்ப காட்சி கொடுத்துன் அடியேன்பால்
      பிரைசேர் பாலின் நெய்போல பேசா திருந்தால் ஏசாரோ. 382
      ஏசா நிற்பர் என்னைஉன கடியா னென்று பிறரெல்லாம்
      பேசா நிற்பர் யான்தானும் பேணா நிற்பேன் நின்னருளே
      தேசா நேசர் சூழ்ந்திருக்கு திருவோ லக்கஞ் சேவிக்க
      ஈசா பொன்னம் பலத்தாடும் எந்தாய் இனித்தான் இரங்காயே. 383
      இரங்கும் நமக்கம் பலக்கூத்தன் என்றென் றேமாந்திருப்பேனை
      அருங்கற் பனைகற் பித்தாண்டாய் ஆள்வா ரிலிமா டாவேனோ
      நெருங்கும் அடியார் களும்நீயும் நின்று நிலாவி விளையாடும்
      மருங்கே சார்ந்து வரஎங்கள் வாழ்வே வாவென்றருளுவாயே. 384
      அருளா தொழிந்தால் அடியேனை அஞ்சல் என்பார் ஆர்இங்கு
      பொருளா என்னை புகுந்தாண்ட பொன்னே பொன்னம்பலக்கூத்தா
      மருளார் மனத்தோ டுனைப்பிரிந்து வருந்துவேனை வாவென்றுன்
      தெருளார் கூட்டங் காட்டாயேல் செத்தே போனாற் சிரியாரோ. 385
      சிரிப்பார் களிப்பார் தேனிப்பார் திரண்டுதிரண்டுன் திருவார்த்தை
      விரப்பார் கேட்பார் மெச்சுவார் வெவ்வே றிருந்துன் திருநாமம்
      தரிப்பார் பொன்னம் பலத்தாடும் தலைவா என்பார் அவர்முன்னே
      தரிப்பாய் நாயேன் இருப்பேனோ நம்பி இனித்தான் நல்காயே. 386
      நல்கா தொழியான் நமக்கென்றும் நாமம் பிதற்றி நயனனீர்
      மல்கா வாழ்த்தா வாய்குழறா வணங்கா மனத்தால் நினைந்துருகி
      பல்காலுன்ன பாவித்து பரவி பொன்னம் பலமென்றே
      ஒல்கா நிற்கும் உயிர்க்கிரங்கி அருளாய் என்னை உடையானே. 387
      திருச்சிற்றம்பலம்

      ------------------------------------------------------------------------
      22. கோயில் திருப்பதிகம் - அனுபோக இலக்கணம்
      தில்லையில் அருளியது -
      எழுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்
      மாறிநின்றென்னை மயங்கிடும் வஞ்ச
      புலனைந்தின் வழியடை தமுதே
      ஊறிநின்றென்னுள் எழுபரஞ்சோதி
      உள்ளவா காணவந்தருளாய்
      தேறலின் தெளிவே சிவபெருமானே
      திருப்பெருந்துறையுறை சிவனே
      ஈறிலா பதங்கள் யாவையும் கடந்த
      இன்பமே என்னுடை அன்பே. 388
      அன்பினால் அடியேன் ஆவியோ டாக்கை
      ஆனந்த மா கசிந்துருக
      என்பாம் அல்லா இன்னருள் தந்தாய்
      யானிதற் கிலனொர்கைம்மாறு
      முன்புமா பின்னும் முழுதுமா
      பரந்த முத்தனே முடிவிலா முதலே
      தென்பெருந்துறையாய் சிவபெருமானே
      சீருடை சிவபுரத்தரைசே. 389
      அரைசனே அன்பர கடியனே னுடைய
      அப்பனே ஆவியோ டாக்கை
      புரைபுரை கனி புகுந்துநின்றுருக்கி
      பொய்யிருள் கடிந்த மெய்ச்சுடரே
      திரைபொரா மன்னும் அமு தெண்கடலே
      திருப்பெருந்துறையுறை சிவனே
      உரையுணர் விறந்துநின்றுணர்வதோர் உணர்வே
      யானுன்னை உரைக்குமா றுணர்த்தே. 390
      உணர்ந்த மாமுனிவர் உம்பரோ டொழிந்தார்
      உணர்வுக்கு தெரிவரும் பொருளே
      இணங்கிலி எல்லா உயிர்கட்கும் உயிரே
      எனை பிற பறுக்கும் எம்மருந்தே
      திணிந்ததோர் இருளில் தெளிந்ததூ வெளியே
      திருப்பெருந்துறையுறை சிவனே
      குணங்கள் தாமில்லா இன்பமே உன்னை
      குறுகினேற் கினியென்ன குறையே. 391
      குறைவிலா நிறைவே கோதிலா அமுதே
      ஈறிலா கொழுஞ்சுடர குன்றே
      மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தேன்
      மனத்திடை மின்னிய மன்னே
      சிறைபெறா நீர்போல் சிந்தைவாய்ப்பாயும்
      திருப்பெருந்துறையுறை சிவனே
      இறைவனே நீயென் உடலிடங் கொண்டாய்
      இனியுன்னை யென்னிர கேனே. 392
      இரந்திர துருக என்மன துள்ளே
      ஏகின்ற சோதியே இமையோர்
      சிரந்தனிற் பொலியுங் கமலச்சே வடியாய்
      திருப்பெருந்துறையுறை சிவனே
      நிரந்தஆகாயம் நீர்நிலம் தீகால்
      ஆயவை அல்லையாய் ஆங்கே
      கரந்ததோர் உருவே களித்தனன் உன்னை
      கண்ணுறங் கண்டுகொண்டின்றே. 393
      இன்றென கருளி இருள்கடிந்துள்ள
      தெழுகின்ற ஞாயிறே போன்று
      நின்றநின் தன்மை நினைப்பற நினைந்தேன்
      நீயலால் பிறிது மற்றின்மை
      சென்றுசென்றுணுவா தேய்ந்துதேய்ந்தொன்றாம்
      திருப்பெருந்துறையுறை சிவனே
      ஒன்றும் நீயல்லை அன்றியொன் றில்லை
      யாருன்னை அறியகிற்பாரே. 394
      பார்பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்து
      பரந்ததோர் படரொளி பரப்பே
      நீருறு தீயே நினைவதேல் அரிய
      நின்மலா நின்னருள் வெள்ள
      சீருறு சிந்தை எழுந்ததோர் தேனே
      திருப்பெருந்துறையுறை சிவனே
      ஆருற வெனக்கிய காரய லுள்ளார்
      ஆனந்தம் ஆக்குமென் சோதி. 395
      சோதியா தோன்றும் உருவமே அருவாம்
      ஒருவனே சொல்லுதற் கரிய
      ஆதியே நடுவே அந்தமே பந்தம்
      அறுக்கும் ஆனந்தமா கடலே
      தீதிலா நன்மை திருவருட்குன்றே
      திருப்பெருந்துறையுறை சிவனே
      யாதுநீ போவதோர் வகையெனக்கருளாய்
      வந்துநின் இணையடி தந்தே. 396
      தந்ததுன் தன்னை கொண்டதென் றன்னை
      சங்கரா ஆர்கொலோ சதுரர்
      அந்தமொன் றில்லா ஆனந்தம் பெற்றேன்
      யாதுநீ பெற்றதொன் றென்பால்
      சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான்
      திருப்பெருந்துறையுறை சிவனே
      எந்தையே ஈசா உடலிடங் கொண்டாய்
      யான் இதற் கிலன்ஓர்கைம் மாறே. 397
      திருச்சிற்றம்பலம்

      ------------------------------------------------------------------------
      23. செத்திலா பத்து
      சிவானந்தம் - அளவறுக்கொணாமை
      தில்லையில் அருளியது-
      எண் சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்
      பொய்யனேன் அகம்நெக புகுந்தமுதூறும்
      புகுமலர்க்கழலிணையடி பிரிந்தும்
      கையனேன் இன்னுஞ் செத்திலேன் அந்தோ
      விழித்திரு துள்ள கருத்தினை இழந்தேன்
      ஐயனே அரனே அருப்பெருங் கடலே
      அத்தனே அயன் மாற்கறி யொண்ணா
      செய்யமே னியனே செய்வகை அறியேன்
      திருப்பெருந்துறையுறை மேவிய சிவனே. 398
      புற்று மாய்மர மாய்ப்புனல் காலே
      உண்டி யாய் அண்ட வாணரும் பிறரும்
      மற்றியாரும் நின்மலரடி காணா
      மன்ன என்னையோர் வார்த்தையு படுத்து
      பற்றினாய் பதையேன் மனமிக உருகேன்
      பரிகிலேன் பரியாவுடல் தன்னை
      செற்றிலேன் இன்னு திரிதருகின்றேன்
      திருப்பெருந்துறையுறை மேவிய சிவனே. 399
      புலைய னேனையும் பொருளென நினைந்துன்
      அருள்புரிந்தனை புரிதலுங் களித்து
      தலையினால் நடந்தேன் விடைப்பாகா
      சங்கரா எண்ணில் வானவர்க்கெல்லாம்
      நிலையனே அலைநீர்விடமுண்ட நித்தனே
      அடையார்புர மெரிந்த
      சிலையனே யெனை செத்திட பணிவாய்
      திருப்பெருந்துறையுறை மேவிய சிவனே. 400
      அன்பராகிமற் றருந்தவம் முயல்வார்
      அயனும் மாலுமற் றழலுறு மெழுகாம்
      என்பராய் நினைவார் எனைப்பலர்
      நிற்க இங்கெனை எற்றினு கண்டாய்
      வன்பராய் முருடொக்கும் என்சிந்தை
      மரக்கண் என்செவி இரும்பினும் வலிது
      தென்பரா துறை யாய் சிவலோகா
      திருப்பெருந்துறையுறை மேவிய சிவனே. 401
      ஆட்டுத்தேவர் தம் விதியொழி தன்பால்
      ஐயனே என்றுன் அருள்வழி யிருப்பேன்
      நாட்டுத்தேவரும் நாடரும் பொருளே
      நாதனே உனை பிரிவறா அருளை
      காட்டித்தேவநின் கழலிணை காட்டி
      காயமாயத்தை கழிந்தருள் செய்யாய்
      சேட்டைத்தேவர்த தேவர்பிரானே
      திருப்பெருந்துறையுறை மேவிய சிவனே. 402
      அறுக்கிலேன் உடல்துணிபடத்தீப்பு
      கார்கிலேன் திருவருள் வகையறியேன்
      பொறுக்கிலேன்உடல் போக்கிடங் காணேன்
      போற்றி போற்றியென் போர்விடை பாகா
      இறக்கிலேன் உனைப்பிரிந்தினிதிருக்க
      எனசெய்கேன்இது செய்க என்றருளாய்
      சிறக்கணே புனல் நிலவிய வயல்சூழ்
      திருப்பெருந்துறையுறை மேவிய சிவனே. 403
      மாயனேமறிகடல்விடம் உண்ட
      வானவாமணி கண்டந்தெம் அமுதே
      நாயினேன் உனைநினையவும் மாட்டேன்
      நமச்சிவாய என் றுன்னடி பணியாய்
      பேயன் ஆகிலும் பெருநெறி காட்டாய்
      பிறைகுலாஞ்சடை பிஞ்ஞகனேயோ
      சேயனாகிநின்றலறுவ தழகோ
      திருப்பெருந்துறையுறை மேவிய சிவனே. 404
      போது சேரயன் பொருகடற் கிடந்தோன்
      புரந்த ராதிகள் நிற்கமற்றென்னை
      கோதுமாட்டிநின் குரைகழல் காட்டி
      குறிக்கொள் கென்றுநின்தொண்டரிற் கூட்டாய்
      யாது செய்வதென் றிருந்தனன் மருந்தே
      அடியனேன் இடர்ப்படுவதும் இனிதோ
      சீதவார்புனல் நிலவிய வயல்சூழ்
      திருப்பெருந்துறையுறை மேவிய சிவனே. 405
      ஞாலம் இந்திரன் நான்முகன் வானவர்
      நிற்க மற்றெனை நயந்தினி தாண்டாய்
      காலன் ஆர்உயிர்கொண்ட பூங்கழலாய்
      கங்கை யாய் அங்கி தங்கிய கையாய்
      மாலும் ஓலமிட்டலறும் அம்மலர்க்கே
      மரக்க ணேனேயும் வந்திட பணியாய்
      சேலும் நீலமும் நிலவிய வயல்சூழ்
      திருப்பெருந்துறையுறை மேவிய சிவனே. 406
      அளித்துவந்தென காவஎன்றருளி
      அச்சந்தீர்த்தநின் அருட்பெருங்கடலில்
      திளைத்துந்தேக்கியும் பருகியும் உருகேன்
      திருப்பெருந்துறையுறை சிவனே
      வளைக்கை யானொடு மலரவன் அறியா
      வான வாமலை மாதொரு பாகா
      களிப்பெலாம் மி கலங்கிடு கின்றேன்
      கயிலை மாமலை மேவிய கடலே. 407
      திருச்சிற்றம்பலம்

      ------------------------------------------------------------------------
      24. அடைக்கல பத்து - பக்குவ நிண்ணயம்
      திருப்பெருந்துறையில் அருளியது - கலவை பாட்டு
      செழுக்கமல திரளனநின் சேவடி நேர்ந்தமைந்த
      பழுத்தமன தடியருடன் போயினர் யான் பாவியேன்
      புழுக்கணுடை புன்குரம்பை பொல்லாக்கல்வி ஞானமிலா
      அழுக்குமன தடியேன் உடையாய் உன் அடைக்கலமே. 408
      வெறுப்பனவே செய்யும் என்சிறுமையைநின் பெருமையினாற்
      பொறுப்பவனே அரா பூண்பவனேபொங்க கங்கைசடை
      செறுப்பவனே நின்திருவருளால் பிறவியைவேர்
      அறுப்பவனே உடையாய்அடியேன்உன் அடைக்கலமே. 409
      பெரும்பெருமான்என் பிறவியை வேரறுத்து பெரும்பிச்சு
      தரும்பெருமான் சதுரப்பெருமான் என் மனத்தினுள்ளே
      வரும்பெருமான் மலரோன் நெடுமாலறியாமல் நின்ற
      அரும்பெருமான் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே. 410
      பொழிகின்ற துன புயல்வெள்ளத்தில்நின் கழற்புணைகொண்
      டிழிகின்ற அன்பர்கள் ஏறினர் வான்யான் இடர்க்கடல்வா
      சுழிசென்று மாதர திரைபொர கா சுறவெறிய
      அழிகின்றனன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே. 411
      சுருள்புரி கூழையர் சூழலிற் பட்டுன் திறம்மறந்திங்கு
      இருள்புரி யாக்கையிலேகிட தெய்த்தனன் மைத்திடங்கண்
      வெருள்புரிமான்அன்ன நோக்கிதன் பங்கவிண்ணோர்பெருமான்
      அருள்புரியாய் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே. 412
      மாழைமை பாவிய கண்ணியர் வன திடவுடைந்து
      தாழியை பாவு தயிர்போல் தளர்ந்தேன் தடமலர்த்தாள்
      வாழியெ போதுவந்தெந்நாள் வணங்குவன் வலவினையேன்
      ஆழி பாவுடை யாய் அடியேன் உன் அடைக்கலமே. 413
      மின்கணினார்நுடங்கும் இடையார் வெகுளிவலையில் அகப்பட்டு
      புன்கணனாய்ப்புரள் வேனை புரளாமற் புகுந்தருளி
      என்கணிலே அமுதூற்றித்தி தித்தென் பிழைக்கிரங்கும்
      அங்கணனே உடையாய் அடியேன் உன் அடைக்கலமே. 414
      மாவடு வகிரன்ன கண்ணியங் காநின் மலரடிக்கே
      கூவிடு வாய்கும்பி கேயிடு வாய் நின் குறிப்பறியேன்
      பாவிடையாடு குழல்போற் கரந்து பரந்த உள்ளம்
      ஆகெடுவேன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே. 415
      பிறிவறியார் அன்பாநின் அருட்பெய்கழல் தாளிணைக்கீழ்
      மறிவறியா செல்வம்வந்துபெற்றார் உன்னை வந்திப்பதோர்
      நெறியறி யேன் நின்னையே அறியேன்
      அறிவறி஧ன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே. 416
      வழங்குகின்றாய்க்குன் அருளார் அமுதத்தை வாரிக்கொண்டு
      விழுங்குகின்றேன்விக்கி஧ன் வினையேன் என்விதியின்மையால்
      தழங்கருந்தேனன்ன தண்ணீர் பருகத்த து கொள்ளாய்
      அழுங்குகின்றேன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே. 417
      திருச்சிற்றம்பலம்

      ------------------------------------------------------------------------
      25. ஆசைப்பத்து - ஆத்தும இலக்கணம்
      திருப்பெருந்துறையில் அருளியது
      -அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்
      கருடக்கொடியோன் காணமாட்டா கழற்சே வடியென்னும்
      பொருளை தந்திங் கென்னை யாண்ட பொல்லா மணியையோ
      இருளை துரந்தி டிங்கே வாவென்றங்கே கூவும்
      அருளை பெறுவான் ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 418
      மொய்ப்பால் நரம்பு கயிறாக மூளை என்பு தோல் போர்த்த
      குப்பாயம்பு கிருக்க கில்லேன் கூவிக்கொள்ளாய் கோவேயோ
      எப்பா லவர்க்கும் அப்பாலாம் என்னாரமுதேயோ
      அப்பா காண ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 419
      சீவார தீமொ தழுக்கொடு திரயுஞ் சிறுகுடில் இது சிதை
      கூவாய் கோவே கூத்தா காத்தா கொள்ளுங் குருமணியே
      தேவா தேவர கரியானே சிவனே சிறிதென் முகநோக்கி
      ஆவா வென்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 420
      மிடைந்தெலும் பூத்தை மிகக்கழு கூறல் வீறிலி நடைக்கூடம்
      தொடர்ந்தெனை நலி துயருறு கின்றேன் சோத்தம் எம்பெருமானே
      உடைந்துநை துருகி உன்னொளி நோக்கி உன்திரு மலர்ப்பாதம்
      அடைந்து நின்றிடவும் ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 421
      அளிபுண்ணகத்து புறந்தோல் மூடி அடியேனுடையாக்கை
      புளியம் பழமொ திருந்தேன் இருந்தும்விடையாய் பொடியாடி
      எளிவந்தென்னை ஆண்டுகொண்ட என்னாரமுதேயோ
      அளியேன் என்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 422
      எய்த்தேன் நாயேன் இனியிங் கிருக்ககில்லேன் இவ்வாழ்க்கை
      வைத்தாய் வாங்காய் வானோர் அறியா மலர்ச்சே வடியானே
      முத்தா உன்றன் முகவொளி நோக்கி முறுவல் நகைகாண
      அத்தா சால ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 423
      பாரோர் விண்ணோர் பரவியேத்தும் பரனே பரஞ்சோதி
      வாராய் வாரா வுலகந்தந்து வந்தாட்கொள்வானே
      பேராயிரமும் பரவி திரிந்தெம் பெருமான் என ஏத்த
      ஆரா அமுதே ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 424
      கையால் தொழுதென் கழற்சே வடிகள் கழு தழுவிக்கொண்டு
      எய்யா தென்றன்தலைமேல் வைத்தெம்பெருமான் பெருமானென்று
      ஐயா என்றன் வாயா லரற்றி அழல்சேர மெமுகொப்ப
      ஐயாற் றரசே ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 425
      செடியா ராக்கை திறமற வீசி சிவபுரநகர்புக்கு
      கடியார் சோதி கண்டுகொண்டென் கண்ணினை களிகூர
      படிதா னில்லா பரம்பரனே உன்பழஅடியார் கூட்டம்
      அடியேன் காண ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 426
      வெஞ்சேலனைய கண்ணார்தம் வெகுளிவலையில் அகப்பட்டு
      நைஞ்சேன் நாயேன் ஞான சுடரே நானோர் துணைகாணேன்
      பஞ்சேரடியாள் பாகத்தொருவா பவள திருவாயால்
      அஞ்சேல் என்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. 427
      திருச்சிற்றம்பலம்

      ------------------------------------------------------------------------
      26. அதிசி பத்து - முத்தி இலக்கணம்
      திருப்பெருந்துறையில் அருளியது -
      அறுசீர்க்கழி நெடிலுடி ஆசிரிய விருத்தம்
      வைப்பு மாடென்றும் மாணிக்க தொளியென்றும் மனத்திடை உருகாதே
      செப்பு நேர்முலை மடவரலியர்தங்கள் திரத்திடை நைவேனை
      ஒப்பிலாதான உவமணி லிறந்தன ஒண்மலர திருப்பாதத்து
      அப்பன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே. 428
      நீதியாவன யாவையும் நினைக்கிலேன் நினைப்பவ ரொடுங்கூடேன்
      ஏதமே பிறந்திறந்துழல்வேன் என்னடி யானென்று
      பாதி மாதொடுங் கூடிய பரம்பரன் நிரந்தர மாய் நின்ற
      ஆதிஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே. 429
      முன்னை என்னுடை வல்வினை போயிடமுக்கண துடையெந்தை
      தன்னை யாவரும் அறிவதற் கரியவன் எளியவன் அடியார்க்கு
      பொன்னை வென்றதோர் புரிசடை முடிதனில் இளமதியதுவைத்த
      அன்னை ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே. 430
      பித்த னென்றெனை உலகவர் பகர்வதோர் காரணம்இதுகேளீர்
      ஒத்து சென்றுதன் திருவரு கூடிடும் உபாயம தறியாமே
      செத்து போய்அருநரகிடை வீழ்வதற் கொருப்படு கின்றேனை
      அத்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே. 431
      பரவு வாரவர் பாடுசென் றணைகிலேன் பன்மலர் பறித்தேத்தேன்
      குரவு வார் குழலார் திறத்தே நின்றுகுடிகெடு கின்றேனை
      இரவு நின்றெறி யாடிய எம்மிறை எரிசடை மிளிர்கின்ற
      அரவன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே. 432
      எண்ணிலேன் திருநாமவஞ் செழுத்தும்என் ஏழைமை யதனாலே
      நண்ணிலேன் கலைஞானிகள் தம்மொடுநல்வினை நயவாதே
      மண்ணிலே பிறந்திறந்து மண்ணாவதற் கொருப்படு கின்றேனை
      அண்ணல் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே. 433
      பொத்தை ஊன்சுவர் புழுப்பொதி துளுத்தசும் பொழுகிய பொய்க்கூரை
      இத்தை மெய்யென கருதிநின்றிடர கடற் சுழித்தலை படுவேனை
      முத்து மாமணி மாணிக்க வயிரத்த பவளத்தின் முழுச்சோதி
      அத்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே. 434
      நீக்கி முன்னென்னை தன்னொடு நிலாவகை குரம்பையிற் புகப்பெய்து
      நோக்கி நுண்ணிய நொடியன சொற்செய்து நுகமின்றி விளாக்கைத்து
      தூக்கி முன்செய்த பொய்யற துகளறு தெழுதரு சுடர்ச்சோதி
      ஆக்கி ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே. 435
      உற்ற ஆக்கையின் உறுபொருள் நறுமலர் எழுதரு நாற்றம் போல்
      பற்றலாவ தோர் நிலையிலா பரம்பொருள் அகப்பொருள் பாராதே
      பெற்றவா பெற்ற பயனது நுகர்த்திடும் பித்தர்சொல் தெளியாமே
      அந்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே. 436
      இருள்திணிந்தெழுந்திட்டதோர் வல்வினை சிறுகுடிலிதுவித்தை
      பொருளெனக்களி தருநரகத்திடை விழப்புகுகின்றேனை
      தெருளும் மும்மதில் நொடிவரை யிடிதர சினப்ப தொடுசெந்தீ
      அருளும் மெய்ந்நெறி பொய்ந்நெறி நீக்கிய அதிசயங் கண்டாமே. 437
      திருச்சிற்றம்பலம்

      ------------------------------------------------------------------------
      27. புணர்ச்சிப்பத்து -அத்துவித இலக்கணம்
      திருப்பெருந்துறையில் அருளியது - ஆசிரிய விருத்தம்
      சுடர்பொற்குன்றை தோளாமுத்தை வாளா தொழும்பு கந்து
      கடைபட்டேனை ஆண்டுகொண்ட கருணாலயனை கருமால் பிரமன்
      தடைப டின்னுஞ் சார மாட்டா தன்னை தந்த என்னா ரமுதை
      புடைப டிருப்ப தென்றுகொல்லோஎன் பொல்லா மணியை புணர்ந்தே. 438
      ஆற்ற கில்லேன் அடியேன் அரசே அவனி தலத்ததை புலனாய
      சேற்றி லழுந்தா சிந்தைசெய்து சிவனெம் பெருமானென்றேத்தி
      ஊற்று மணல்போல் நெக்குநெ குள்ளே உருகி ஓலமிட்டு
      போற்றிநிற்ப தென்றுகொல்லோஎன் பொல்லா மணியை புணர்ந்தே. 439
      நீண்டமாலும் அயனும் வெருவ நீண்ட நெருப்பை விருப்பிலேனை
      ஆண்டுகொண்ட என் ஆரமுதை அள்ளுறுள்ள தடியார்முன்
      வேண்டு தனையும் வாய்விட்டலறி விரையார் மலர் தூவி
      பூண்டு கிடப்ப தென்று கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே. 440
      அல்லி கமல தயனும் மாலும் அல்லா தவரும் அமரர்கோனுஞ்
      சொல்லி பரவும் நா தானை சொல்லும் பொருளும் இறந்த சுடரை
      நெல்லி கனியை தேனை பாலை நிறையின் அமுதை அமுதின் சுவையை
      புல்லி புணர்வ தென்றுகொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே. 441
      திகழ திகழும் அடியும் முடியுங் காண்பான் கீழ்மேல் அயனும் மாலும்
      அகழ பறந்துங் காண மாட்டா அம்மான் இம்மா நிலமுழுதும்
      திகழ பணிகொண்டென்னை ஆட்கொண்டு ஆ என்ற
      புகழ பெறுவ தென்று கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே. 442
      பரிந்து வந்து பரமானந்தம் பண்டே அடியேற் கருள் செ
      பிரிந்து போந்து பெருமா நிலத்தில் அருமா லுற்றேன் என்றென்று
      சொரிந்த கண்ணீர் சொரிய உள்நீர் உரோமஞ் சிலிர்ப்ப உகந்தன்பா
      புரிந்து நிற்பதென்று கோல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே. 443
      நினையப்பிறரு கரிய நெருப்பை நீரை காலை நிலனை விசும்பை
      தனையொ பாரை யில்லாத தனியை நோக்கி தழைத்து தழு த்தகண்டம்
      கனை கண்ணீர் அருவி பா கையுங் கூப்பி கடிமலராற்
      புனை பெறுவதென்று கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே. 444
      நெக்குநெக்குள் உருகி நின்றும் இருந்தும் கிடந்தும்
      நக்கும் அழுதும் தொழுதும் வாழ்த்தி நானாவிதத்தாற் கூத்தும் நவிற்றி
      செக்கர்போலும் திருமேனிதிகழ நோக்கி சிலிர்சி லிர்த்து
      புக்கு நிற்ப தென்றுகொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே. 445
      தாதாய் மூவே ழுலகுக்குங் தாயே நாயேன் தனையாண்ட
      பேதாய் பிறவி பிணிக்கோர் மருந்தே பெருந்தேன் பில்க எப்போதும்
      ஏதா மணியே என்றென்றேத்தி இரவும் பகலும் எழிலார்பாத
      போதா தணைவதென்று கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே. 446
      காப்பாய் படைப்பாய் கரப்பாய் முழுதுங் கண்ணார் விசும்பின் விண்ணோர்க்கெல்லாம்
      முப்பாய மூவா முதலாய் நின்ற முதல்வா முன்னே எனையாண்ட
      பார்ப்பானே எம்பரமா என்று பாடி பணிந்து
      பூப்போதணைவ தென்று கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே. 447
      திருச்சிற்றம்பலம்

      ------------------------------------------------------------------------
      28. வாழாப்பத்து - முத்தி உபாயம்
      திருப்பெருந்துறையில் அருளியது -
      அறு சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்
      பாரொடு விண்ணா பரந்த எம்பரனே பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
      சீரொடு பொலிவாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே
      ஆரொடு நோகேன் ஆர்க்கெடு துரைக்கேன் ஆண்டநீ அருளிலை யானால்
      வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய் வருகஎன்றருள் புரியாயே. 448
      வம்பனேன் தன்னை ஆண்டமா மணியே மற்றுநான் பற்றிலேன் கண்டாய்
      உம்பரும் அறியா ஒருவனே இருவர குணர்விறந்துலக மூடுருவுஞ்
      செம்பெருமானே சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே
      எம்பெருமானே எனனையாள்வானே என்னைநீ கூவி கொண்டருளே. 449
      பாடிமால் புகழும் பாதமே அல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
      தேடிநீ ஆண்டாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே
      ஊடுவ துனனோ டுவப்பதும் உன்னை உணர்த்துவ துனக்கெனக்குறுதி
      வாடினேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய் வருகஎன்றருள் புரியாயே. 450
      வல்லைவாளரக்கர் புரமெரித்தானே மற்றுநான் பற்றிலேன் கண்டாய்
      தில்லைவாழ் கூத்தா சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே
      எல்லைமூவுலகும் உருவியன் றிருவர் காணும்நாள் ஆகியீ றின்மை
      வல்லையாய் வளர்ந்தாய் வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே. 451
      பண்ணினேர் மொழியாள் பங்கநீயல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
      திண்ணமே ஆண்டாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே
      எண்ணமே உடல்வாய் மூக்கொடு செவிகண் என்றினை நின்கணே வைத்து
      மண்ணின்மேல் அடியேன் வாழ்கிலேன் கண்டாய் வருகஎன்றருள் புரியாயே. 452
      பஞ்சின்மெல்லடியான் பங்கநீ யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
      செஞ்செவே ஆண்டாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே
      அஞ்சினேன் நாயேன் ஆண்டுநீ அளித்த அருளினை மருளினால் மறந்த
      வஞ்சனேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே. 453
      பரிதிவாழ் ஒளியாய் பாதமே யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
      திருவுயர்கோல சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே
      கருணையே நோக்கி கசிந்துளம் உருகி கலந்துநான் வாழுமா றறியா
      மருளனேன் உலகில் வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே. 454
      பந்தனை விரலாள் பங்கநீ யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
      செந்தழல் போல்வாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே
      அந்திமில் அமுதமே அருள்பெரும் பொருளே ஆரமுதே அடியேனை
      வந்துய்ய ஆண்டாய் வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே. 455
      பாவநாசாவுன் பாதமே யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
      தேவர் தந்தேவே சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே
      மூவுல குருவ இருவர்கீழ் மேலாய் முழங்கழலாய் நிமிர்ந்தானே
      மாவுரி யானே வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே. 456
      பழுதில்சொல் புகழால் பங்கநீயல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
      செழுமதி அணிந்தாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே
      தொழுவனோ பிறரை துதிப்பனோ எனக்கோர் துணையென நினைவனோ சொல்லாய்
      மழவிடையானே வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே. 457
      திருச்சிற்றம்பலம்

      ------------------------------------------------------------------------
      29. அருட்பத்து - மகாமாயா சுத்தி
      திருப்பெருந்துறையில் அருளியது -
      எழுசீர கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
      சோதியே சுடரே சூழொளி விளக்கே
      சுரிசூழற் பணைமுலை மடந்தை
      பாதியே பரனே பால்கொள்வெண்ணீற்றாய்
      பங்க தயனுமா லறியா
      நீதியே செல்வ திருப்பெருந்துறையில்
      நிறைமலர குருந்தமே வியசீர்
      ஆதியே அடியேன் ஆதரி தழைத்தால்
      அதெந்துவே என் றரு ளாயே. 458
      நிருத்தனே நிமலா நீற்றனே நெற்றி
      கண்ணனே விண்ணுளோர் பிரானே
      ஒருத்தனே உன்னை ஓலமிட்டலறி
      உலகெலா தேடியு காணேன்
      திருத்தமாம் பொய்கை திருப்பெருந்துறையில்
      செழுமலர குருந்தமே வியசீர்
      அருத்தமே அடியேன் ஆதரி தழைத்தால்
      அதெந்துவே என்றரு ளாயே. 459
      எங்கள்நாயகனே என்னுயிர தலைவா
      ஏலவார் குழலிமார் இருவர்
      தங்கள் நாயகனே தக்கநற்காமன்
      தனதுடல் தழலெழ விழித்த
      செங்கண்நாயகனே திருப்பெருந்துறையில்
      செழுமலர குருந்தமே வியசீர்
      அங்கணா அடியேன் ஆதரி தழைத்தால்
      அதெந்துவே என்றருளாயே. 460
      கமலநான்முகனுங் கார்முகில் நிறத்து
      கண்ணனும் நண்ணுதற்கரிய
      விமலனே எமக்கு வெளிப்படா யென்ன
      வியன்தழல் வெளிப்பட்ட எந்தாய்
      திமிலநான் மறைசேர் திருப்பெருந்துறையில்
      செழுமலர குருந்தமே வியசீர்
      அமலனே அடியேன் ஆதரி தழைத்தால்
      அதெந்துவே என்றரு ளாயே. 461
      துடிகொள்நே ரிடையாள் சுரிகுழல் மடந்தை
      துணைமுலை கண்கள்தோய் சுவடு
      பொடிகொள்வான் தழலிற் புள்ளிபோ லிரண்டு
      பொங்கொளி தங்குமார் பின்னே
      செடிகொள்வான் பொழிலசூழ் திருப்பெருந்துறையில்
      செழுமலர குருந்தமே வியசீர்
      அடிகளே அடியேன் ஆதரி தழைத்தால்
      அதெந்துவே என்றரு ளாயே. 462
      துப்பனே தூயாய் தூயவெண்ணீறு
      துதைந்தெழு துளங்கொளி வயிர
      தொப்பனே உன்னை உள்குவார் மனத்தின்
      உறுசுவை துளிக்கும் ஆரமுதே
      செப்பமா மறைசேர் திருப்பெருந்துறையில்
      செழுமலர குருந்தமே வியசீர்
      அப்பனே அடியேன் ஆதரி தழைத்தால்
      அதெந்துவே என்றரு ளாயே. 463
      மெய்யனே விகிர்தா மேருவே வில்லா
      மேலவர் புரங்கள் மூன்றெரித்த
      கையனே காலாற் காலனை காய்ந்த
      கடுந்தழற் பிழம்பன்ன மேனி
      செய்யனே செல்வ திருப்பெருந்துறையில்
      செழுமலர குருந்தமே வியசீர்
      ஐயனே அடியேன் ஆதரி தழைத்தால்
      அதெந்துவே என்றரு ளாயே. 464
      முத்தனே முதல்வா முக்கணா முனிவா
      மொட்டறா மலர்பறி திறைஞ்சி
      பத்தியாய் நினைந்து பரவுவார் தமக்கு
      பரகதி கொடுத்தருள் செய்யுஞ்
      சித்தனே செல்வ திருப்பெருந்துறையில்
      செழுமலர குருந்தமே வியசீர்
      அத்தனே அடியேன் ஆதரி தழைத்தால்
      அதெந்துவே என்றரு ளாயே. 465
      மருளனேன் மனத்தை மயக்கற நோக்கி
      மறுமையோ டிம்மையுங் கெடுத்த
      பொருளணே புனிதா பொங்குவா ளரவங்
      கங்கைநீர் தங்குசெஞ் சடையாய்
      தெருளுநான் மறைசேர் திருப்பெருந்துறையில்
      செழுமலர குருந்தமே வியசீர்
      அருளனே அடியேன் ஆதரி தழைத்தால்
      அதெந்துவே என்றரு ளாயே. 466
      திருந்துவார் பொழில்சூழ் திருப்பெருந்துறையில்
      செழுமலர குருந்தமே வியசீர்
      இருந்தவா றெண்ணி ஏசறா நினைந்தி
      டென்னுடை யெம்பிரான் என்றென்
      றருந்தவா நினைந்தே ஆதரி தழைத்தால்
      அலைகடல் அதனுளே நின்று
      பொருந்தவா கயிலை புகுநெறி இதுகாண்
      போதராய் என்றளு ளாயே. 467
      திருச்சிற்றம்பலம்

      ------------------------------------------------------------------------
      30. திருக்கழுக்குன்ற பதிகம் - குரு தரிசனம்
      திருக்கழுக்குன்றத்தில் அருளியது -
      ஏழுசீர கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
      பிணக்கிலாத பெருந்துறைப்பெரு மான் உன்நாமங்கள் பேசுவார
      கிணக்கிலாததோர் இன்ப மேவுரு துன்ப மேதுடை தெம்பிரான்
      உணக்கிலாததோர் வித்துமேல்யிளை யாமல் என்வினை ஒத்தபின்
      கணக்கி லாத்திருக்கோலம் நீவந்து காட்டினாய் கழுக்குன்றிலே. 468
      பிட்டுநேர்பட மண்சுமந்த பெரு துறைப்பெரும் பித்தனே
      சட்டநேர்பட வந்திலா சழக்கனேன் உனை சார்ந்திலேன்
      சிட்டனே சிவலோகனேசிறு நாயினுங்கடையாய வெங்
      கட்டனேனையும் ஆட்கொள்வான்வந்து காட்டினாய் கழுக்குன்றிலே. 469
      மலங்கினேன் கண்ணின்நீரை மாற்றி மலங்கெடுத்த பெருந்துறை
      விலங்கினேன் வினைக்கேடனேன் இனி மேல் விளைவதறிந்திலேன்
      இலங்குகின்றநின்சேவடிகள் இரண்டும் வைப்பிடமின்றியே
      கலங்கினேன் கலங்காமலேவந்து காட்டினாய் கழுக்குன்றிலே. 470
      பூணொணாததொரன்பு பூண்டு பொருந்திநாள்தொறும் போற்றரும்
      நாணொணாததொர்நாணம் எய்தி நடுக்கடலுள் அழுந்திநான்
      பேணொணாதபெருந்துறைப்பெரு தோணிபற்றியுகைத்தலுங்
      காணொணாத்திருக்கோலம் நீவந்து காட்டினாய் கழுக்குன்றிலே. 471
      கோலமேனிவராக மேகுணமாம் பெருந்துறைக்கொண்டலே
      சீலமேதும் அறிந்திலாத என் சிந்தை வைத்த சிகாமணி
      ஞாலமேகரியாக நானுனை நச்சி நச்சிட வந்திடுங்
      காலமேஉனை ஓதநீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே. 472
      பேதம் இலாததொர் கற்பளித்த பெருந்துறை பெருவெள்ளமே
      ஏதமேபல பேசநீஎனை ஏதிலார் முனம் என்செய்தாய்
      சாதல் சாதல்பொல் லாமையற்ற தனிச்சரண் சரணாமென
      காதலால் உனைஓதநீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே. 473
      இயக்கி மாரறு பத்து நால்வரை எண்குணம்செய்த ஈசனே
      மயக்க மாயதொர் மும்மலப்பழ வல்வினைக்குள் அழுந்தவும்
      துயக்கறுத்தெனை ஆண்டுகொண்டு நின் தூய்மலர்க்கழல் தந்தென
      கயக்க வைத்தடி யார்முனேவந்து காட்டினாய் கழுக்குன்றிலே. 474
      திருச்சிற்றம்பலம்

      ------------------------------------------------------------------------
      31. கண்டபத்து - நிருத்த தரிசனம்
      தில்லையில் அருளியது - தரவு கொச்ச கலிப்பா
      இந்திரிய வயமயங்கி இறப்பதற்கே காரணமாய்
      அந்தரமே திரிந்துபோய் அருநகரில் வீழ்வேற்கு
      சிந்தைதனை தெளிவித்து சிவமாக்கி எனையாண்ட
      அந்தமிலா ஆனந்தம் அணிகொள் தில்லை கண்டேனே. 475
      வினைப்பிறவி என்கின்ற வேதனையில் அகப்பட்டு
      தனைச்சிறுதும் நினையாதே தளர்வெய்தி கிடப்பேனை
      எனைப்பெரிதும் ஆட்கொண்டேன் பிறப்பறுத்த இணையிலியை
      அனைத்துலகு தொழுந்தில்லை அம்பலத்தே கண்டேனே. 476
      உருத்தெரியா காலத்தே உள்புகுந்தென் உளம்மன்னி
      கருத்திருத்தி ஊன்புக்கு கருணையினால் ஆண்டுகொண்ட
      திருத்திருத்தி மேயானை தித்திக்குஞ் சிவபதத்தை
      அருத்தியினால் நாயடியேன் அணிகொள்தில்லை கண்டேனே. 477
      கல்லாத புல்லறிவிற் கடைப்பட்ட நாயேனை
      வல்லாகி னாய்வந்து வனப்பெய்தி யிருக்கும் வண்ணம்
      பல்லோருங் காண என்றன் பசுபாசம் அறுத்தானை
      எல்லோரும் இறைஞ்சுதில்லை அம்பலத்தே கண்டேனே. 478
      சாதிகுலம் பிறப்பென்னுஞ் சுழிப்பட்டு தடுமாறும்
      ஆதமிலி நாயேனை அல்லலுறு தாட்கொண்டு
      பேதைகுணம் பிறருருவம் யானெனதென் னுரைமாய்த்து
      கோதிலமு தானானை குலாவுதில்லை கண்டேனே. 479
      பிறவிதனை அறமாற்றி பிணிமூப்பென் றிவையிரண்டும்
      உறவினொடும் ஒழியச்சென் றுலகுடைய ஒருமுதலை
      செறிபொழில்சூழ் தில்லைநகர திருச்சிற்றம்பலம் மன்னி
      மறையவரும் வானவரும் வணங்கிடநான் கண்டேனே. 480
      பத்திமையும் பரிசுமிலா பசுபாசம் அறுத்தருளி
      பித்தனிவன் எனஎன்னை ஆக்குவித்து பேராமே
      சித்தமெனு திண்கயிற்றால் திருப்பாதங் கட்டுவித்த
      வித்தகனார் வினையாடல் விளங்குதில்லை கண்டேனே. 481
      அளவிலா பாவகத்தால் அமுக்குண்டிங் கறிவின்றி
      விளைவொன்றும் அறியாதே வெறுவியனா கிடப்பேனுக்கு
      அளவிலா ஆனந்தம் அளித்தென்னை ஆண்டானை
      களவிலா வானவரு தொழுதில்லை கண்டேனே. 482
      பாங்கினொடு பரிசொன்றும் அறியாத நாயேனை
      ஓங்கியுள தொளிவளர உலப்பிலா அன்பருளி
      வாங்கிவினை மலம்அறுத்து வான்கருணை தந்தானை
      நான்குமறை பயில்தில்லை அம்பலத்தே கண்டேனே. 483
      பூதங்கள் ஐந்தாகி புலனாகி பொருளாகி
      பேதங்கள் அனைத்துமா பேதமில்லா பெருமையனை
      கேதங்கள் கெடுத்தாண்ட கிளரொளியை மரகதத்தை
      வேதங்கள் தொழுதேத்தும் விளங்குதில்லை கண்டேனே. 484
      திருச்சிற்றம்பலம்

      ------------------------------------------------------------------------
      32. பிரார்த்தனை பத்து
      திருப்பெருந்துறையில் அருளியது
      - அறுசீர கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்
      கலந்து நின்னடி யாரோ டன்று வாளா களித்திருந்தேன்
      புலர்ந்து போன காலங்கள் புகுந்துநின்ற திடர்பின்னாள்
      உலர்ந்து போனேன் உடையானே உலவா இன்ப சுடர்காண்பான்
      அலர்ந்து போனேன் அருள்செய்யாய் ஆர்வங் கூர அடியேற்கே. 485
      அடியார் சிலருன் அருள்பெற்றார் ஆர்வங் கூர யான் அவமே
      முடையார் பிணத்தின் முடிவின்றி முனிவால் அடியேன் மூக்கின்றேன்
      கடியேனுடைய கடுவினையை களைந்துன் கருணை கடல்பொங்க
      உடையாய் அடியேன் உள்ளத்தே ஓவா துருக அருளாயே. 486
      அருளா ரமுத பெருங்கடல்வாய் அடியா ரெல்லாம் புக்கழுந்த
      இருளா ராக்கை யிதுபொறுத்தே எய்த்தேன் கண்டாய் எம்மானே
      மருளார் மனத்தோர் உன்மத்தன் வருவாய் என்றிங் கெனைக்கண்டார்
      வெருளா வண்ணம் மெய்யன்பை உடையாய் பெறநான் வேண்டும்மே. 487
      வேண்டும் மெய்யடியா ருள்ளே விரும்பி எனை
      ஆண்டாய் அடியேன் இடர்களைந்த அமுதே அருமா மணிமுத்தே
      தூண்டா விளக்கின் சுடரனையாய் தொண்டனேற்கும் உண்டாங்கொல்
      வேண்டா தொன்றும் வேண்டாதுமிக்க அன்பே மேவுதலே. 488
      மேவும் உன்றன் அடியாருள் விரும்பி யானும் மெய்ம்மையே
      காவி சேருங் கயற்கண்ணான் பங்கா உன்றன் கருணையினால்
      பாவியேற்கும் உண்டாமோ பரமா னந்த பழங்கடல்சேர
      தாவி யாக்கை யானென்தன் றியாது மின்றி அறுதலே. 489
      அறவே பெற்றார் நின்னன்பர் அந்தமின்றி அகநெகவும்
      புறமே கிடந்து புலைநாயேன் புலம்பு கின்றேன் உடையானே
      பெறவே வேண்டும் மெய்யன்பு பேரா ஒழியாய் பிரிவில்லா
      மறவா நினையா அளவில்லா மாளா இன்ப மாகடலே. 490
      கடலே அனைய ஆனந்த கண்டா ரெல்லாங் கவர்ந்துண்ண
      இடரே பெருக்கி ஏசற்றிங் கிருத்த லழகோ அடிநாயேன்
      உடையாய் நீயே அருளிதியென் றுணர்த்தா தொழிந்தே கழிந்தொழிந்தேன்
      சுடரார் அருளால் இருள்நீங்க சோதி இனித்தான் துணியாயே. 491
      துணியா உருகா அருள்பெருக தோன்றும் தொண்டரிடைப்புகுந்து
      திணியார் மூங்கிற் சிந்தையேன் நின்று தேய்நின்றேன்
      அணியா ரடியா ருனக்குள்ள அன்பு தாராய் அருளளி
      தணியா தொல்லை வந்தருளி தளிர்ப்பொற் பாத தாராயே. 492
      தாரா அருளொன் றின்றியே தந்தாய் என்றுன் தமரெல்லாம்
      ஆரா நின்றார் அடியேனும் அயலார் போல அயர்வேனோ
      சீரார் அருளாற் சிந்தனையை திருத்தி ஆண்ட சிவலோகா
      பேரா னந்தம் பேராமை வைக்க வேண்டும் பெருமானே. 493
      மானோர் பங்கா வந்திப்பார் மதுர கனியே மனநெகா
      நானோர் தோளா சுரையொத்தால் நம்பி இத்தால் வாழ்ந்தாயே
      ஊனே புகுந்த உனையுணர்ந்த உருகி பெருகும் உள்ளத்தை
      கோனே அருளுங் காலந்தான் கொடியேற் கென்றோ கூடிவதே. 494
      கூடிக்கூடி உன்னடியார் குளிப்பார் சிரிப்பார் களிப்பாரா
      வாடி வழியற்றேன் வற்றல் மரம்போல்
      ஊடி உநடியாயொடு கலந்துள் ளுருகி
      ஆடிஆடி ஆனந்தம் அதுவே யாக அருள்கலந்தே. 495
      திருச்சிற்றம்பலம்

      ------------------------------------------------------------------------
      33. குழைத்த பத்து - ஆத்தும நிவேதனம்
      திருப்பெருந்துறையில் அருளியது -
      அறு சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்
      குழைத்தால் பண்டை கொடுவினைநோய்
      காவாய் உடையாய் கொடுவினையேன்
      உழைத்தா லுறுதியுண்டோ தான்
      உமையாள் கணவா எனை ஆள்வாய்
      பிழைத்தாற் பொறுக்க வேண்டாவோ
      பிறைசேர் சடையாய் முறையோவென்
      றழைத்தால் அருளா தொழிவதே
      அம்மானே உன்னடியேற்கே. 496
      அடியேன் அல்லல் எல்லாம்முன அகலஆண்டாய் என்றிருந்தேன்
      கொடியே ரிடையான் கூறாஎங்கோவே ஆவா என்றருளி
      செடிசேர் உடலை சிதையாத தெத்து கெங்கள் சிவலோகா
      உடையாய் கூவி பணிகொள்ளா தொறுத்தால் ஒன்றும் போதுமே. 497
      ஒன்றும் போதா நாயேனை உ கொண்ட நின்கருணை
      இன்றே இன்றி போய்த்தோதான் ஏழை பங்கா எங்கோவே
      குன்றே அனைய குற்றங்கள் குணமா மென்றே நீகொண்டால்
      என்றான் கெட்ட திரங்கிடாய் எண்தோள் முக்கண் எம்மானே. 498
      மானேர் நோக்கி மணவாளா மன்னே நின்சீர் மறப்பித்திவ்
      வூனே புகஎன்தனைநூக்கி உழல பண்ணு வித்திட்டாய்
      ஆனால் அடியேன் அறியாமை அறிந்துநீயே அருள்செய்து
      கோனே கூவி கொள்ளுநாள் என்றென் றுன்னை கூறுவதே. 499
      கூறும் நாவே முதலா கூறுங் கரணம் எல்லாம்நீ
      தேறும் வகைநீ திகைப்புநீ தீமைநன்மை முழுதும்நீ
      வேறோர் பரிசிங் கொன்றில்லை மெய்ம்மை உன்னை விரித்துரைக்கில்
      தேறும் வகைஎன் சிவலோகா திகைத்தால் தேற்ற வேண்டாவோ. 500
      வேண்டத்தக்க தறிவோய்நீ வேண்டமுழுது தருவோய்நீ
      வேண்டும் அயன்மாற் கரியோய்நீ வேண்டி என்னை பணிகொண்டாய்
      வேண்டி நீயா தருள்செய்தாய் யானும் அதுவே வேண்டின் அல்லால்
      வேண்டும் பரிசொன் றுண்டென்னில் அதுவும் உன்றன் விருப்பன்றே. 501
      அன்றே என்றன் ஆவியும் உடலும் எல்லாமுங்
      குன்றே அனையாய் என்னைஆ கொண்டபோதே கொண்டிலையோ
      இன்றோர் இடையூ றெனக்குண்டோ எண்தோள் முக்கண் எம்மானே
      நன்றே செய்வாய் பிழை நானோ இதற்கு நாயகமே.
      நாயிற் கடையாம் நாயேனை நயந்துநீயே ஆட்கொண்டாய்
      மா பிறவி உன்வசமே வைத்திட்டிருக்கும் அதுவன்றி
      ஆயக்கடவேன் நானோதான் என்ன தோஇங் கதிகாரங்
      கா திடுவாய் உன்னுடைய கழற்கீழ் வைப்பாய் கண்ணுதலே. 503
      கண்ணார் நுதலோய் கழலிணைகள் கண்டேன் கண்கள் களிகூர
      எண்ணா திரவும் பகலும்நான் அவைவே எண்ணும் அதுவல்லால்
      மண்மேல் யாக்கை விடுமாறும் வந்துன் கழற்கே புகுமாறும்
      அண்ணா எண்ண கடவேனோ அடிமைசால அழகுடைத்தே. 504
      அழகே புரிந்தி டடிநாயேன் அரற்று கின்றேன் உடையானே
      திகழா நின்ற திருமேனி காட்டி என்னை பணிகொண்டாய்
      புகழே பெரிய பதம்எனக்கு புராண நீ தருளாயே
      குழகா கோல் மறையோனே கோனே என்னை குழைத்தாயே. 505
      திருச்சிற்றம்பலம்

      ------------------------------------------------------------------------
      34. உயிருண்ணிப்பத்து - சிவனந்தம் மேலிடுதல்
      திருப்பெருந்துறையில் அருளியது - கலிவிருத்தம்
      பைந்நா பட அரவேரல்குல் உமைபாகம் தாய் என்
      மெய்ந்நாள்தொறும் பிரியா வினைக்கேடா விடைப்பாகா
      செந்நாவலர் பசும்புகழ திருப்பெருந்துறை உறைவாய்
      எந்நாட்களி தெந்நாள் இறுமாக்கேன் இனியானே. 506
      நானாரடி அணைவானொரு நாய்க்கு தவிசிட்டிங்கு
      ஊனாருடல் புகுந்தான்உயிர் கலந்தான் உளம்பிரியான்
      தேனார்சடை முடியான் மன்னு திருப்பெருந்துறை உறைவான்
      வானோர்களும் அறியாததோர் வளமீந்தனன் எனக்கே. 507
      எனைநானென்ப தறியேன்பகல் இரவாவதும் அறியேன்
      மனவாசகங் கடந்தான் எனை மத்தோன்மத்தனாக்கி
      சினமால்விடை உடையான் மன்னு திருப்பெருந்துறை உறையும்
      பனவன் னெனை செய்தபடி றறியேன் பரஞ் சுடரே. 508
      வினைக்கேடரும் உளரோபிறர் சொல்லீர் வியனுலகில்
      எனைத்தான்புகு தாண்டான்என் தென்பின்புரை யுருக்கி
      பினைத்தான்புகு தெல்லே பெருந்துறையில் உறைபெம்மான்
      மனத்தான் கண்ணின் அகத்தான் மறு மாற்றத்திடை யானே. 509
      பற்றாங்கவை அற்றீர்பற்றும் பற்றாங்கது பற்றி
      நற்றாங்கதி அடைவோமெனிற் கெடுவீரோடி வம்மின்
      தெற்றார்சடை முடியான் மன்னு திருப்பெருந்துறை இறைசீர்
      கூற்றாங்கவன் கழல்பேணின ரோடுகூடுமின் கலந்தே. 510
      கடலின்திரையதுபோல் வரு கலக்கம்மலம் அறுத்தென்
      உடலும்என துயிரும்புகு தொழியாவண்ணம் நிறைந்தான்
      சுடருஞ்சுடர் மதிசூடிய திருப்பெருந்துறை உறையும்
      படருஞ்சடை மகுடத்தெங்கள் பரன்தான் செய்த படிறே. 511
      வேண்டேன்புகழ் வேண்டேன் செல்வம்
      வேண்டேன் மண்ணும் விண்ணும்
      வேண்டேன் பிற பிறப்புச்சிவம் வேண்டார் தமைநாளும்
      தீண்டேன்சென்று சேர்ந்தேன்மன்னு திருப்பெருந்துறை இறைதாள்
      பூண்டேன்புறம் போகேன் இனி புறம்போகலொ டேனே. 512
      கோற்றேன்என கென்கோகுரை கடல்வாய் அமுதென்கோ
      ஆற்றேன்எங்கள் அரனே அருமருந்தே என தரசே
      சேற்றார்வயல் புடைசூழ் தரு திருப்பெருந்துறை உறையும்
      நீற்றார்தரு திருமேனிநின் மலனே உனையானே. 513
      எச்சம் அறிவேன்நான்என கிருக்கின்றதை அறியேன்
      அச்சோ எங்கள் அரனே அரு மருந்தே எனதமுதே
      செச்சைமலர் புரைமேனியன் திருப்பெருந்துறை உறைவான்
      நிச்சம்என நெஞ்சில்மன்னி யானாகிநின் றானே. 514
      வான்பாவிய உலகத்தவர் தவமே செய அவமே
      ஊன்பாவிய உடலை சுமந்தடவிமர மானேன்
      தேன்பாய்மலர கொன்றைமன்னு திருப்பெருந்துறை உறைவாய்
      நான்பாவியன் ஆனால் உனை நல்காயென லாமே. 515
      திருச்சிற்றம்பலம்

      ------------------------------------------------------------------------
      35. அச்சப்பத்து - ஆனந்தமுறுத்தல்
      தில்லையில் அருளியது -
      அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்
      புற்றிள்வாள் அரவும் அஞ்சேன் பொய்யர்தம் மெய்யும்
      கற்றைவார் சடைஎம் அண்ணல் கண்ணுதல் பாதம் நண்ணி
      மற்றும்ஓர் தெய்வ தன்னை உண்டென நினைந்தெம் பெம்மாற்கு
      அற்றிலா தவரை கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 516
      வெருவரேன் வேட்கை வந்தால் வினைக்கடல் கொளினும் அஞ்சேன்
      இருவரால் மாறு காணா எம்பிரான் தம்பிரா னாம்
      திருவுரு அன்றி மற்றோர் தேவரெ தேவ ரென்ன
      அருவரா தவரை கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 517
      வன்புலால் வேலும் அஞ்சேன் வளைக்கையார் கடைக்கண்
      என்பெலாம் உருக நோக்கி அம்பல தாடுகின்ற
      என்பொலா மணியை ஏத்தி இனிதருள் பருக மாட்டா
      அன்பிலா தவரை கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 518
      கிளியனார் கிளவி அஞ்சேன் அவர்கிறி முறுவல்
      வெளியநீ றாடும் மேனி வேதியன் பாதம் நண்ணி
      துளியுலாம் கண்ணராகி தொழுதழு துள்ளம் நெக்கிங்கு
      அளியிலா தவரை கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 519
      பிணியெலாம் வரினும் அஞ்சேன் பிறப்பினோ டிறப்பும்
      துணிநிலா அணியினான்தன் தொழும்பரோடழுந்தி அம்மால்
      திணிநிலம் பிளந்துங் காணா சேவடி பரவி வெண்ணீறு
      அணிகிலா தவரை கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 520
      வாளுலாம் எரியும் அஞ்சேன் வரைபுரண் டிடினும்
      தோளுலாம் நீற்றன் ஏற்றன் சொற்புதம் கடந்த அப்பன்
      தாளதா மரைகளேத்தி தடமலர் புனைந்து நையும்
      ஆளலா தவரை கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 521
      தகைவிலா பழியும் அஞ்சேன் சாதலை முன்னம்
      புகைமுக தெரிகை வீசி பொலிந்த அம்பலத்து ளாடும்
      முகைநகை கொன்றைமாலை முன்னவன் பாதமேத்தி
      அகம்நெகா தவரை கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 522
      தறிசெறி களிறும் அஞ்சேன் தழல்விழி உழுவை
      வெறிகமழ் சடையன் அப்பன் விண்ணவர் நண்ண மாட்டா
      செறிதரு கழல்கள் ஏத்தி சிறந்தினி திருக்கமாட்டா
      அறிவிலா தவரை கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 523
      மஞ்சுலாம் உருமும் அஞ்சேன் மன்னரோ டுறவும்
      நஞ்சமே அமுத மாக்கும் நம்பிரான் எம்பிரானா
      செஞ்செவே ஆண்டு கொண்டான் திருமுண்டம் தீட்ட மாட்டாது
      அஞ்சுவா ரவரை கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 524
      கோணிலா வாளி அஞ்சேன் கூற்றவன் சீற்றம்
      நீணிலா அணியினானை நினைந்து நைந்துருகி நெக்கு
      வாணிலாங் கண்கள் சோர வாழ்ந்தநின்றேத்த மாட்டா
      ஆணலா தவரை கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 525
      திருச்சிற்றம்பலம்

      ------------------------------------------------------------------------
      36. திருப்பாண்டி பதிகம் - சிவனந்த விளைவு
      தில்லையில் அருளியது - கட்டளை கலித்துறை
      பருவரை மங்கைதன் பங்கரை பாண்டியற் காரமுதாம்
      ஒருவரை ஒன்றுமில்லாதவ ரைக்கழற் போதிறைஞ்சி
      தெரிவர நின்றுரு கிப்பரி மேற்கொண்ட சேவகனார்
      ஒருவரை யன்றி உருவறியா தென்றன் உள்ளமதே. 526
      சதுரை மறந்தறி மால்கொள்வார் சார்ந்தவர் சாற்றி சொன்னோம்
      கதிரை மறைத்தனன் சோதி கழுக்கடை கைப்பிடித்து
      குதிரையின் மேல்வந்து கூடிடு மேற்குடி கேடுகண்டீர்
      மதுரையர் மன்னன் மறுபிற போட மறித்திடுமே. 527
      நீரின்ப வெள்ளத்துள் நீந்தி குளிக்கின்ற நெஞ்சங்கொண்டீர்
      பாரின்ப வெள்ளங் கொளப்பரி மேற்கொண்ட பாண்டியனார்
      ஓரின்ப வெள்ளத்துருக்கொண்டு தொண்டரை உள்ளங் கொண்டார்
      பேரின்ப வெள்ள து பெய்கழ லேசென்று பேணுமினே. 528
      செறியும் பிறவிக்கு நல்லவர் செல்லன்மின் தென்னன் நன்னாட்டு
      இறைவன் கிளர்கின்ற காலமி காலம் எ காலத்துள்ளும்
      அறிவொண் கதிர்வாள் உறைகழி தானந்த மாக்கடவி
      எறியும் பிறப்பை எதிர்த்தார் புரள இருநிலத்தே. 529
      காலமுண்டாகவே காதல்செய் துய்மின் கருதரிய
      ஞாலமுண்டானொடு நான்முகன் வானவர் நண்ணரிய
      ஆலமுண்டான்எங்கள் பாண்டிப்பிரான்தன் அடியவர்க்கு
      மூலபண்டாரம் வழங்குகின்றான்வந்து முந்துமினே. 530
      ஈண்டிய மாயா இருள்கெட எப்பொரு ளும் விளங்க
      தூண்டிய சோதியை மீனவனுஞ் சொல்ல வல்லன் அல்லன்
      வேண்டிய போதே விலக்கிலை வாய்தல் விரும்புமின்தான்
      பாண்டிய னாரருள் செய்கின்ற முத்தி பரிசிதுவே. 531
      மாய வனப்பரி மேல்கொண்டு மற்றவர் கைக்கொளலும்
      போயறும் இப்பிற பென்னும் பகைகள் புகுந்தவரு
      காய அரும்பெருஞ் சீருடை தன்னரு ளே அருளுஞ்
      சேய நெடுங்கொடை தென்னவன் சேவடி சேர்மின்களே. 532
      அழிவின்றி நின்றதோர் ஆனந்த வெள்ள திடையழுத்தி
      கழிவில் கருணையை காட்டி கடிய வினையகற்றி
      பழமலம் பற்றறு தாண்டவன் பாண்டி பெரும்பதமே
      முழுதுல குந்தரு வான்கொடை யேசென்று முந்துமினே. 533
      விரவிய தீவினை மேலை பிறப்புழு நீர்கடக்க
      பரவிய அன்பரை என்புரு கும்பரம் பாண்டியனார்
      புரவியின் மேல்வர புத்தி கொள பட்ட பூங்கொடியார்
      மரவியல் மேல்கொண்டு தம்மையும் தாம் அறியார் மறந்தே. 534
      கூற்றைவென் றாங்கைவர் கோக்களையும் வென்றிருந்தழகால்
      வீற்றிரு தான்பெரு தேவியு தானும் ஓர் மீனவன்பால்
      ஏற்றுவ தாருயி ருண்ட திறலொற்றை சேவகனே
      தேற்றமிலாதவர் சேவடி சிக்கென சேர்மின்களே. 535
      திருச்சிற்றம்பலம்

      ------------------------------------------------------------------------
      37. பிடித்த பத்து - முத்திக்கலப்புரைத்தல்
      திருத்தோணிபுரத்தில் அருளியது - எழுசீர் ஆசிரிய விருத்தம்
      உம்பர்கட்கரசே ஒழிவறநிறைந்த யோகமே ஊற்றையேன் தனக்கு
      வம்பென பழுத்தென் குடிமுழுதாண்டு வாழ்வற வாழ்வித்த மருந்தே
      செம்பொரு டுணிவே சீருடை கழலே செல்வமே சிவபெருமானே
      எம்பொரு டுன்னை சிக்கென பிடித்தேன் எங்கெழு தருளுவ தினியே. 536
      விடைவிடா துகந்த விண்ணவர் கோவே வினையனே னுடையமெ பொருளே
      முடைவிடா தடியேன் மூத்தறமண்ணாய் முழுப்புழு குரம்பையிற் கிடந்து
      கடைபடா வண்ணம் காத்தெனை ஆண்ட கடவுளே கருணைமா கடலே
      இடைவிடா துன்னை சிக்கென பிடித்தேன் எங்கெழு தருளுவ தினியே. 537
      அம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்த ஆரமுதே
      பொய்ம்மையே பெருக்கி பொழுதினை சுருக்கும் புழுத்தலை புலையனேன் தனக்கு
      செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே சிவபெருமானே
      இம்மையே உன்னை சிக்கென பிடித்தேன் எங்கெழு தருளுவ தினியே. 538
      அருளுடை சுடரே அளிந்ததோர் கனியே பெருந்திறல் அருந்தவர கரசே
      பொருளுடை கலையே புகழ்ச்சியை கடந்த போகமே யோகத்தின் பொலிவே
      தெருளிட தடியார் சிந்தையு புகுந்த செல்வமே சிவபெருமானே
      இருளிட துன்னை சிக்கென பிடித்தேன் எங்கெழு தருளுவ தினியே. 539
      ஒப்புன கில்லா ஒருவனே அடியேன் உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே
      மெய்ப்பதம் அறியா வீறிலியேற்கு விழுமிய தளித்ததோர் அன்பே
      செப்புதற் கரிய செழுந்சுடர் மூர்த்தீ செல்வமே சிவபெருமானே
      எய்ப்பிட துன்னை சிக்கென பிடித்தேன் எங்கெழு தருளுவ தினியே. 540
      அறவையேன் மனமே கோயிலா கொண்டாண்டு அளவிலா ஆனந்த மருளி
      பிறவிவே ரறுத்தென் குடிமுழு தாண்ட பிஞ்ஞகா பெரியஎம் பெருளே
      திறவிலே கண்ட காட்சியே அடியேன் செல்வமே சிவபெருமானே
      இறவிலே உன்னை சிக்கென பிடித்தேன் எங்கெழு தருளுவ தினியே. 541
      பாசவே ரறுக்கும் பழம்பொருள் தன்னை பற்றுமா றடியனேற் கருளி
      பூசனை உகந்தென் சிந்தையு புகுந்து பூங்கழல் காட்டிய பொருளே
      தேசுடை விளக்கே செழுஞ்சுடர் மூர்த்தீ செல்வமே சிவபெருமானே
      ஈசனே உன்னை சிக்கென பிடித்தேன் எங்கெழு தருளுவ தினியே. 542
      அத்தனே அண்டார் அண்டமாய் நின்ற ஆதியே யாதும்ஈ றில்லா
      சித்தனே பத்தர் சிக்கென பிடித்த செல்வமே சிவபெருமானே
      பித்தனே எல்லா உயிருமா தழைத்து பிழைத்தவை அல்லையாய் நிற்கும்
      எத்தனே உன்னை சிக்கென பிடித்தேன் எங்கெழு தருளுவ தினியே. 543
      பால்நினை தூட்டும் தாயினுஞ்சால பரிந்துநீ பாவியே னுடைய
      ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்த மாய
      தேனினை சொரிந்து புறம்புறந்திரிந்த செல்வமே சிவபெருமானே
      யானுனை தொடர்ந்து சிக்கென பிடித்தேன் எங்கெழு தருளுவ தினியே. 544
      புன்புலால் யாக்கை புரைபுரை கனி பொன்னெடுங் கோயிலா புகுந்தென்
      என்பெலாம் உருக்கி எளியையாய் ஆண்ட ஈசனே மாசிலா மணியே
      துன்பமே பிறப்பே இறப்போடு மயக்கா தொடக்கெலாம் அறுத்தநற்சோதி
      இன்பமே உன்னை சிக்கென பிடித்தேன் எங்கெழு தருளுவ தினியே. 545
      திருச்சிற்றம்பலம்

      ------------------------------------------------------------------------
      38. திருஏசறவு
      திருப்பெருந்துறையில் அருளியது - கொச்ச கலிப்பா
      இரும்புதரு மனத்தேனை ஈர்த்தீர்த்தென் என்புருக்கி
      கரும்புதரு சுவைஎனக்கு காட்டினைஉன் கழலினைகள்
      ஒருங்குதிரை உலவுசடை உடையானே நரிகளெல்லாம்
      பெருங்குதிரை ஆக்கியவா றன்றேஉன் பேரருளே. 546
      பண்ணார்ந்த மொழிமங்கை பங்காநின் ஆளானார்க்கு
      உண்ணார்ந்த ஆரமுதே உடையானே அடியேனை
      மண்ணார்ந்த பிறப்பறுத்தி டாள்வாய்நீ வாஎன்ன
      கண்ணார உய்ந்தவா றன்றேஉன் கழல்கண்டே. 547
      ஆதமிலி யான்பிற பிறப்பென்னும் அருநரகில்
      ஆர்தமரும் இன்றியே அழுந்துவேற் காவாவென்று
      ஓதமிலி நஞ்சுண்ட உடையானே அடியேற்குன்
      பாதமலர் காட்டியவா றன்றேஎம் பரம்பரனே. 548
      பச்சைத்தா லரவாட்டீ படர்சடையாய் பாதமலர்
      உச்சத்தார் பெருமானே அடியேனை உய்யக்கொண்டு
      எச்சத்தார் சிறுதெய்வம் எத்தாதே அச்சோஎன்
      சித்தத்தா றுய்ந்தவா றன்றேஉன் திறம் நினைந்தே. 549
      கற்றறியேன் கலைஞானம் கசிந்துருகேன் ஆயிடினும்
      மற்றறியேன் பிறதெய்வம் வாக்கியலால் வார்கழல்வ
      துற்றறிமா திருந்தேன்எம் பெருமானே அடியேற்கு
      பொற்றிவிசு நாய்க்கிடுமா றன்றேநின் பொன்னருளே. 550
      பஞ்சாய அடிமடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டு
      நஞ்சாய துயர்கூர நடுங்குவேன் நின்னருளால்
      உய்ஞ்சேன் எம் பெருமானே உடையானே அடியேனை
      அஞ்சேலென் றாண்டவா றன்றேஅம் பலத்தமுதே. 551
      என்பலை பிறப்பறுத்திங் கிமையவர கும் அறியவொண்ணா
      தென்பாலை திருப்பெரு துறையுறையஞ் சிவபெருமான்
      அன்பால்நீ அகம்நெகவே புகுந்தருளி ஆட்கொண்ட
      தென்பாலே நோக்கியவா றன்றேஎம் பெருமானே. 552
      மூத்தானே மூவாத முதலானே முடியில்லா
      ஓத்தானே பொருளானே உண்மையுமாய் இன்மையுமா
      பூத்தானே புகுந்திங்கு புரள்வேனை கருணையினால்
      பேர்த்தேநீ ஆண்டவா றன்றேஎம் பெருமானே. 553
      மருவினிய மலர்ப்பாதம் மனத்தில்வளர துள்ளுருக
      தெருவுதொறும் மிக அலறி சிவபெருமா னென்றேத்தி
      பருகியநின் பரங்கருணை தடங்கலிற் படிவாமாறு
      அருளெனக்கிங் கிடைமருதே இடங்கொண்ட அம்மானே. 554
      நானேயோ தவஞ் செய்தேன் சிவாயநம எனப்பெற்றேன்
      தேனாய்என் அமுதமுமா தித்திக்குஞ் சிவபெருமான்
      தானேவ தெனதுள்ளம் புகுந்தடியேற் கருள்செய்தான்
      ஊனாரும் உயிர்வாழ்க்கை ஒறுத்தன்றே வெறுத்திடவே. 555
      திருச்சிற்றம்பலம்

      ------------------------------------------------------------------------
      39. திருப்புலம்பல் - சிவானநத முதிர்வு
      திருவாரூரில் அருளியது - கொச்ச கலிப்பா
      பூங்கமல தயனெடுமால் அறியாத நெறியானே
      கோங்கலர்சேர் குவிமுலையாள் கூறாவெண் ணீறாடி
      ஓங்கெயில்சூழ் திருவாரூர் உடையானே அடியேன்நின்
      பூங்கழல்கள் அவையல்லா தெவையாதும் புகழேனே. 556
      சடையானே தழலாடீ தயங்குமூ விலைச்சூல
      படையானே பரஞ்சோதீ பசுபதீ மழவெள்ளை
      விடையானே விரிபொழில்சூழ் பெருந்துறையாய் அடியேன்நான்
      உடையானே உனையல்லா துறுதுணை மற் றறியேனே. 557
      உற்றாறை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்
      கற்றாறை யான்வேண்டேன் கற்பனவும் இனியமையும்
      குற்றால தமர்ந்துறையுங் கூத்தாஉன் குரைகழற்கே
      கற்றாவின் மனம்போல கசிந்துருக வேண்டுவனே. 558
      திருச்சிற்றம்பலம்

      ------------------------------------------------------------------------
      40. குலா பத்து - அனுபவம் இடையீடுபடாமை
      தில்லையில் அருளியது - கொச்ச கலிப்பா
      ஓடுங் கவந்தியுமே உறவென்றி டுள்கசிந்து
      தேடும் பொருளுஞ் சிவன்கழலே எனத்தெளிந்து
      கூடும் உயிரும் குமண்டையிட குனித்தடியேன்
      ஆடுங் குலாத்தில்லை ஆண்டானை கொண்டன்றே. 559
      துடியோர் இடுகிடை தூய்மொழியார் தோள்நசையால்
      செடியேறு தீமைகள் எத்தனையுஞ் செய்திடினும்
      முடியேன் பிறவேன் எனைத்தனதாள் முயங்குவித்த
      அடியேன் குலாத்தில்லை ஆண்டானை கொண்டன்றே. 560
      என்புள் ளுருக்கி இருவினையை ஈடழித்து
      துன்பங் களைந்து துவந்துவங்கள் தூய்மைசெய்து
      முன்புள்ள வற்றை முழுதழிய உள்புகுத்த
      அன்பின் குலாத்தில்லை ஆண்டானை கொண்டன்றே. 561
      குறியும் நெறியும் குணமுமிலார் குழாங்கள்தமை
      பிரியும் மனத்தார் பிரிவரிய பெற்றியனை
      செறியுங் கருத்தில் உருத்தமுதாஞ் சிவபதத்தை
      அறியுங் குலாத்தில்லை ஆண்டானை கொண்டன்றே. 562
      பேருங் குணமும் பிணிப்புறும்இ பிறவிதனை
      தூரும் பரிசு துரிசறுத்து தொண்ட ரெல்லாஞ்
      சேரும் வகையாற் சிவன்கருணை தேன்பருகி
      ஆருங் குலாத்தில்லை ஆண்டானை கொண்டன்றே. 563
      கொம்பில் அரும்பா குவிமலரா காயாகி
      வம்பு பழுத்துடலம் மாண்டிங்ஙன் போகாமே
      நம்புமென் சிந்தை நணுகும்வண்ணம் நானணுகும்
      அம்பொன் குலாத்தில்லை ஆண்டானை கொண்டன்றே. 564
      மதிக்கு திறலுடைய வல்லரக்கன் தோள்நெரிய
      மிதக்கு திருவடி என் தலைமேல் வீற்றிருப்ப
      கதிக்கும் பசுபாசம் ஒன்றுமிலோம் எனக்களித்திங்
      கதிர்க்குங் குலாத்தில்லை ஆண்டானை கொண்டன்றே. 565
      இடக்குங் கருமுரு டேனப்பின் கானகத்தே
      நடக்கு திருவடி என்தலைமேல் நட்டமையால்
      கடக்கு திறல்ஐவர் கண்டகர்தம் வல்லாட்டை
      அடக்குங் குலாத்தில்லை ஆண்டானை கொண்டன்றே. 566
      பாழ்ச்செய் விளாவி பயனிலியா கிடப்பேற்கு
      கீழ்ச்செய் தவத்தாற் கிழியீடு நேர்பட்டு
      தாட்செய்ய தாமரை சைவனுக்கென் புன்தலையால்
      ஆட்செய் குலாத்தில்லை ஆண்டானை கொண்டன்றே. 567
      கொம்மை வரிமுலை கொம்பனையாள் கூறனுக்கு
      செம்மை மனத்தால் திருப்பணிகள் செய்வேனுக்கு
      இம்பை தரும்பயன் இத்தனையும் ஈங்கொழிக்கும்
      அம்மை குலாத்தில்லை ஆண்டானை கொண்டன்றே. 568
      திருச்சிற்றம்பலம்

      ------------------------------------------------------------------------
      41. அற்புதப்பத்து - அனுபவமாற்றாமை
      திருப்பெருந்துறையில் அருளியது - அறுசீர கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்
      மைய லாய்இந்த மண்ணிடை வாழ்வெனும் ஆழியு ளகப்பட்டு
      தைய லாரெனுஞ் சுழித்தலை பட்டுநான் தலைதடு மாறாமே
      பொய்யெ லாம்விட திருவருள் தந்துதன் பொன்னடி யினைகாட்டி
      மெய்ய னாய்வெளி காட்டிமுன் நின்றதோர் அற்புதம் விளம்பேனே. 569
      ஏய்ந்த மாமல ரிட்டுமு டாததோர் இயல்பொடும் வணங்காதே
      சாந்த மார்முலை தையல்நல் லாரொடு தலைதடு மாறாகி
      போந்து யான்துயர் புகாவணம் அருள்செய்து பொற்கழலி னைகாட்டி
      வேந்த னாம்வெளியே என்முன் நின்றதோர் அற்புதம் விளம்பேனே. 570
      நடித்து மண்ணிடை பொய்யினை பலசெய்து நானென தெனும்மா
      கடித்த வாயிலே நின்றுமுன் வினைமி கழறியே திரிவேனை
      பிடித்து முன்னின்ற பெருமறை தேடிய அரும்பொருள் அடியேனை
      அடித்த டித்துஅ காரமுன் தீற்றிய அற்புதம் அறியேனே. 571
      பொருந்தும் இப்பிற பிறப்பிவை நினையாது பொய்களே புகன்றுபோ
      கருங் குழலினனார் கண்களால் ஏறுண்டு கலங்கியே கிடப்பேனை
      திருந்து சேவடி சிலம்பனை சிலம்பிட திருவொடும் அகலாத
      அருந்து ணைவனாய் ஆண்டுகொண் டருளிய அற்புதம் அறியனே. 572
      மாடுஞ் சுற்றமும் மற்றுள போகமும் மங்கையர் தம்மோடுங்
      கூடி அங்குள குணங்களால் ஏறுண்டு குலாவிய திரிவேனை
      வீடு தந்தென்றன் வெந்தொழில் வீட்டிட மென்மலர கழல்காட்டி
      ஆடு வித்தென தகம்புகு தாண்டதோர் அற்புதம் அறியேனே. 573
      வணங்கும் இப்பிற பிறப்பிவை நினையாது மங்கையர் தம்மோடும்
      பிணைந்து வாயிதழ பொருவெள்ள தழுந்திநான் பித்தனா திரிவேனை
      குணங்க ளுங்குறி களுமிலா குணக்கடல் கோமள தொடுங்கூடி
      அணைந்து வந்தெனை ஆண்டுகொண் டருளிய அற்புதம் அறியேனே. 574
      இப்பி றப்பினில் இணைமலர் கொய்துநான் இயல்பொடஞ் செழுத்தோதி
      தப்பி லாதுபொற் கழல்களு கிடாதுநான் தடமுலை யார்தங்கள்
      மைப்பு லாங்கண்ணால் ஏறுண்டு கிடப்பேனை மலரடி யிணைகாட்டி
      அப்பன் என்னைவ தாண்டுகொண் டருளிய அற்புதம் அறியேனே. 575
      ஊச லாட்டுமிவ் வுடலுயி ராயின இருவினை அறுத்தென்னை
      ஓசையா லுணர் வார்க்குணர் வரியவன் உணர்வுத தொளிவாக்கி
      பாச மானவை பற்றறு துயர்ந்ததன் பரம்பொருங் கருணையால்
      ஆசை தீர்த்தடி யாரடி கூட்டிய அற்புதம் அறியேனே. 576
      பொச்சை யானஇ பிறவியிற் கிடந்துநான் புழுத்தலை நாய்போல
      இச்சை யாயின ஏழையர கேசெய்தங் கிணங்கியே திரிவேனை
      இச்ச கத்தரி அயனுமெ டாததன் விரைமலர கழல்காட்டி
      அச்சன் என்னையும் ஆண்டுகொண் டருளிய அற்புதம் அறியேனே. 577
      செறியும் இப்பிறவி பிறப்பிவை நினையாது செறிகுழலார் செய்யுங்
      கிறியுங் கீழ்மையுங் கெண்டையங் கண்களும் உன்னியே கிடப்பேனை
      இறைவன் எம்பிரான் எல்லையில் லாததன் இணைமலர கழல்காட்டி
      அறிவு தந்தெனை ஆண்டுகொண் டருளிய அற்புதம் அறியேனே. 578
      திருச்சிற்றம்பலம்

      ------------------------------------------------------------------------
      42. சென்னிப்பத்து - சிவவிளைவு
      திருப்பெருந்துறையில் அருளியது - ஆசிரிய விருத்தம்
      தேவ தேவன்மெ சேவகன் தென்பெ ருந்துறை நாயகன்
      மூவ ராலும் அறியொணாமுத லாய ஆனந்த மூர்த்தியான்
      யாவ ராயினும் அன்பரன்றி அறியொ ணாமலர சோதியான்
      தூயமாமலர சேவடிக்கண்நம் சென்னி மன்னி சுடருமே. 579
      அட்டமூர்த்தி அழகன்இன்னமு தாய ஆனந்த வெள்ளத்தான்
      சிட்டன் மேயச்சிவ லோகநாயகன் தென்பெ ருந்துறை சேவகன்
      மட்டு வார்குழல் மங்கை யாளையோர் பாகம் வைத்த அழகன்தன்
      வட்ட மாமலர சேவடி கண்நம் சென்னி மன்னி மலருமே. 580
      நங்கை மீரெனை நோக்குமின் நங்கள் நாதன் நம்பணி கொண்டவன்
      தெங்கு சோலைகள் சூழ்பெரு துறை மேய சேவகன் நாயகன்
      மங்கை மார்கையில் வளையுங்கொண்டெம் உயிருங் கொண்டெம் பணிகொள்வான்
      பொங்கு மாமலர சேவடிக்கண்நம் சென்னி மன்னி பொலியுமே. 581
      பத்தர் சூழ பராபரன் பாரில் வந்துபார பானென
      சித்தர் சூழ சிவபிரான் தில்லை மூதூர் நடஞ்செய்வான்
      எத்தனாகிவ தில்புகுந்தெமை ஆளுங் கொண்டெம் பணிகொள்வான்
      வைத்த மாமலர சேவடிக்கண்நம் சென்னி மன்னி மலருமே. 582
      மாய வாழ்க்கையை மெய்யென் றெண்ணி மதித்திடா வகை நல்கியான்
      வேய தோளுமை பங்கன் எங்கள் திருப்பெ ருந்துறை மேவினான்
      கா துள்ளமு தூறஊறநீ கண்டு கொள்ளென்று காட்டிய
      சேய மாமலர சேவடிக்கண்நம் சென்னி மன்னி திகழுமே. 583
      சித்தமே புகு தெம்மையா கொண்டு தீவினை கெடு துய்யலாம்
      பத்தி தந்துதன் பொற்கழற்கணே பன்மலர் கொய்து சேர்த்தலும்
      முத்தி தந்திந்த மூவுலகுக்கும் அப்பு றத்தெமை வைத்திடும்
      அத்தன் மாமலர சேவடிக்கண்நம் சென்னி மன்னி மலருமே. 584
      பிறவி யென்னுமி கடலைநீ தத்தன் பேரருள்த தருளினான்
      அறவை யென்றடி யார்கள் தங்கள் அருட்கு ழாம்புக விட்டுநல்
      உறவு செய்தெனை உய்யக்கொண்ட பிரான்தன் உண்மை பெருக்கமாம்
      திறமை காட்டிய சேவடிக்கண்நம் சென்னி மன்னி திகழுமே. 585
      புழுவி னாற்பொதி திடுகுரம்பையிற் பொய் தனையொழி வித்திடும்
      எழில்கொள் சோதியெம் ஈசன்எம்பிரான் என்னு டையப்பன் என்றென்று
      தொழுத கையின ராகி துய்மலர கண்கள் நீர்மல்கு தொண்டர்க்கு
      வழுவி லாமலர சேவடிக்கண்நம் சென்னி மன்னி மலருமே. 586
      வம்ப னாய்த்திரி வேனைவாவென்று வல்வி னைப்பகை மாய்த்திடும்
      உம்ப ரான்உல கூடறுத்த புறத்தனாய் நின்ற எம்பிரான்
      அன்பரானவர்க்கருளி மெய்யடி யார்க கின்ப தழைந்திடுஞ்
      செம்பொன் மாமலர சேவடிக்கண்நம் சென்னி மன்னி திகழுமே. 587
      முத்த னைமுதற் சோதியைமுக்கண் அப்பனை முதல் வித்தனை
      சித்த னைச்சிவ லோகனைத்திரு நாமம்பாடி திரிதரும்
      பத்தர் காள்இங்கே வம்மின்நீர் உங்கள் பாசந்தீர பணியினோ
      சித்த மார்தருஞ் சேவடிக்கண்நம் சென்னி மன்னி திகழுமே. 588
      திருச்சிற்றம்பலம்

      ------------------------------------------------------------------------
      43. திருவார்த்தை - அறிவி தன்புறுத்தல்
      திருப்பெருந்துறையில் அருளியது -அறுசீர கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
      மாதிவர் பாகன் மறைபயின்ற வாசகன் மாமலர் மேயசோதி
      கோதில் பரங்கருணையடியார் குலாவுநீதி குண மாகநல்கும்
      போதலர் சோலை பெருந்துறையெம் புண்ணியன் மண்ணிடை வந்திழிந்து
      ஆதி பிரமம் வெளிப்படுத்த அருளறி வார் எம்பிரானாவாரே. 589
      மாலயன் வானவர் கோனும்வந்து வணங்க அவர்க்கருள் செய்தஈசன்
      ஞாலம் அதனிடை வந்திழிந்து நன்னெறி காட்டி நலம்திகழும்
      கோல மணியணி மாடநீடு குலாவு மிடைவை மடநல்லாட்கு
      சீல மிகக்கரு ணையளிக்கு திறமறி வார்எம் பிரானாவாரே. 590
      அணிமுடி ஆதி அமரர்கோமான் ஆனந்த கூத்தன் அறுசமயம்
      பணிவகை செய்து படவதேறி பாரொடு விண்ணும் பரவியேத்த
      பிணிகெடநல்கும் பெருந்துறையெம் பேரரு ளாளன்பெண் பாலுகந்து
      மணிவலை கொண்டுவான் மீன்விசிறும் வகையறிவார் எம்பிரானாவாரே. 591
      வேடுரு வாகி மகேந்திரத்து மிகுகுறை வானவர் வந்துதன்னை
      தேட இருந்த சிவபெருமான் சித்தனை செய்தடி யோங்களுய்ய
      ஆடல் அமர்ந்த பரிமாஎறி ஐயன் பெருந்துறை ஆதிஅந்நாள்
      ஏடர் களையெங்கும் ஆண்டுகொண்ட இயல்பறி வார்எம் பிரானாவாரே. 592
      வந்திமை யோர்கள் வணங்கியேத்த மாக்கரு ணைக்கட லாய்அடியார்
      பந்தணை விண்டற நல்கும்எங்கள் பரமன் பெருந்துறை ஆதி அந்நாள்
      உந்து திரைக்கட லைக்கடந்தன் றோங்கு மதிலிலங்கை அதினிற்
      பந்தணை மெல்லிர லாட்கருளும் பரிசளி வார்எம் பிரானாவாரே. 593
      வேவ திரிபுரஞ் செற்றவில்லி வேடுவனாய்க்கடி நாய்கள்சூழ
      ஏவற் செயல்செய்யு தேவர்முன்னே எம்பெருமான்தான் இயங்கு காட்டில்
      ஏவுண்ட பன்றி கிரங்கியீசன் எந்தை பெருந்துறை ஆதியன்று
      கேவலங் கேழலா பால்கொடுத்த கிடப்பறி வார்எம் பிரானாவாரே. 594
      நாதம் உடையதோர் நற்கமல போதினில் நண்ணிய நன்னுதலார்
      ஓதி பணிந்திலர் தூவியேத்த ஒளிவளர் சோதியெம் ஈசன் மன்னும்
      போதலர் சோலை பெருந்துறையெம் புண்ணியன் மண்ணிடை வந்து தோன்றி
      பேதங் கெடுத்தருள் செய்பெருமை அறியவல் லார்எம் பிரானாவாரே. 595
      பூவலர் கொன்றையும் மாலைமார்பன் போருகிர் வன்புலி கொன்றவீரன்
      மாதுநல் லாளுமை மங்கைபங்கன் வன்பொழில் சூழ்தென் பெருந்துறைக்கோன்
      ஏதில் பெரும்புகழ் எங்கள்ஈசன் இருங்கடல் வாணாற்கு தீயில்தோன்றும்
      ஓவிய மங்கையர் தோள்புணரும் உருவறி வார்எம் பிரானாவாரே. 596
      தூவெள்ளை நீறணி எம்பெருமான் சோதி மகேந்திர நாதன்வந்து
      தேவர் தொழும்பதம் வைத்தஈசன் தென்னன் பெருந்துறை ஆளிஅன்று
      காதல் பெரு கருணைகாட்டி தன்கழல் காட்டி கசிந்துரு
      கேதங் கெடுத்தென்னை ஆண்டருளும் கிடப்பறி வார்எம் பிரானாவாரே. 597
      அங்கணன் எங்கள் அமரர்பெம்மான் அடியார கமுதன் அவனிவந்த
      எங்கள் பிரான்இரும் பாசந்தீர இகபரம் ஆயதோர் இன்பமெய்த
      சங்கங் கவரந்நதுவண் சாத்தினோடுஞ் சதுரன் பெருந்துறை ஆளிஅன்று
      மங்கையர் மல்கும் மதுரைசேர்ந்த வகையறி வார்எம் பிரானாவாரே. 598
      திருச்சிற்றம்பலம்

      ------------------------------------------------------------------------
      44. எண்ணப்பதிகம் - ஒழியா இன்பத்துவகை
      தில்லையில் அருளியது - எழுசீர கழினெடிலடி ஆசிரிய விருத்தம்
      பாருரு வாய பிறப்பறவேண்டும் பத்திமை யும்பெற வேண்டும்
      சீருரு வாய சிவபெரு மானே செங் கமல மலர்போல்
      ஆருரு வாயஎன் னார முதேஉன் அடியவர் தொகை நடுவே
      ஓருருவாய நின் திருவருள் காட்டி என்னையும் உய்யக்கொண் டருளே. 599
      உரியேன் அல்லேன் உன கடிமை உன்னை பிரிந்திங் கொருபொழுதும்
      தரியேன் நாயேன் இன்னதென்று அறியேன் சங்கரா கருணையினாற்
      பெரியோன் ஒருவன் கண்டுகொள் என்றுன் பெய்கழல் அடிகாட்டி
      பிரியேன் என்றென் றருளிய அருளும் பொய்யோ எங்கள் பெருமானே. 600
      என்பே உருகநின் அருள்அளித்துன் இணைமலர் அடி காட்டி
      முன்பே என்னை ஆண்டுகொண்ட முனிவர்
      இன்பே அருளி எனையுருக்கி உயிருண் கின்ற எம்மானே
      நண்பே யருளாய் என்னுயிர் நாதா நின்னருள் நாணாமே 601
      பத்தில னேனும் பணிந்தில னேனும்உன் உயர்ந்தபைங் கழல் காண
      பித்தில னேனும் பிதற்றில பிறப்பறுப்பாய
      முத்தனை யானே மணியனை முதல்வ னேமுறை
      எத்தனை யானும் யான்தொடர துன்னை இனிப்பிரி தாற்றேனே. 602
      காணும தொழிந்தேன் நின்திரு பாதம் கண்டு கண் களிகூர
      பேணும தொழிந்தேன் பிதற்றம பின்னைஎம்
      தாணுவே அழிந்தேன் நின்னினை துருகு தன்மைஎன் புன்மைகளால்
      காணும தொழிந்தேன் நீயினி வரினுங் காணவும் நாணுவனே. 603
      பாற்றிரு நீற்றெம் பரமனை பரங்கரு ணையோடு எதிர்த்து
      தோற்றிமெய் யடியார கருட்டுரை யளிக்குஞ் சோதியை நீதி யிலேன்
      போற்றியென் அமுதே என நினை தேத்தி புகழ்ந்தழை தலறியென் னுள்ளே
      ஆற்றுவனாக உடையவ னேஎனை ஆவஎன் றருளாயே. 604
      திருச்சிற்றம்பலம்

      ------------------------------------------------------------------------
      45. யாத்திரை பத்து - அனுபவ அதீதம் உரைத்தல்
      தில்லையில் அருளியது - அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
      பூவார் சென்னி மன்னனெம் புயங்க பெருமான் சிறியோமை
      ஓவா துள்ளம் கலந்துணர்வாய் உருக்கும் வெள்ள கருணையினால்
      ஆவா என்ன பட்டன் பாய் ஆட்ப டீர்வ தொருப்படுமிள்
      போவோங் காலம் வந்ததுகாண் பொய்வி டுடையான் கழல்புகவே. 605
      புகவே வேண்டா புலன்களில்நீர் புயங்க பெருமான் பூங்கழல்கள்
      மிகவே நினைமின் மிக்கவெல்லாம் வேண்டா போக விடுமின்கள்
      நகவே ஞால துள்புகுந்து நாயே அனைய நமையாண்ட
      தகவே யுடையான் தனைச்சார தளரா திருப்பார் தாந்தாமே. 606
      தாமே தமக்கு சுற்றமும் தமக்கு
      யாமார் எமதார் பாசமார் என்னமாயம் இவைபோ
      கோமான் பண்டை தொண்டரோடும் அவன்தன் குறிப்பே குறிக்கொண்டு
      போமா றமைமின் பொய்நீக்க புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே. 607
      அடியார் ஆனீர் எல்லீரும் அகல விடுமின் விளையாட்டை
      கடிசே ரடியே வந்தடைந்து கடைக்கொண் டிருமின் திருக்குறிப்பை
      செடிசே ருடைல செலநீக்கி சிவலோகத்தே நமைவைப்பான்
      பொடிசேர் மேளி புயங்கன்தன் பூவார் கழற்கே புகவிடுமே. 608
      விடுமின் வெகுளி வேட்கைநோய் மிகவோர் காலம் இனியில்லை
      உடையான் அடிக்கீழ பெருஞ்சாத்தோடு உடன்போ வதற்கே ஒரு படுமின்
      அடைவோம் நாம்போ சிவபுரத்துள் அணியார் கதவ தடையாமே
      புடைபட்டுருகி போற்றுவோம் புயங்கள் ஆள்வான் புகழ்களையே. 609
      புகழ்மின் தொழுமின் பூப்புனைமின் புயங்கன் தானே புந்திவைத்திட்டு
      இகழ்மின் எல்லா அல்லலையும் இனியோர் இடையூ றடையாமே
      திகழுஞ் சீரார் சிவபுரத்து சென்று சிவன்தாள் வணங்கிநாம்
      நிகழும் அடியார் முன்சென்று நெஞ்சம் உருகி நிற்போமே. 610
      நிற்பார் நிற்கநில் லாவுலகில் நில்லோம் இனிநாம் செல்வோமே
      பொற்பால் ஒப்பா திருமேனி புயங்கன் ஆவான் பொன்னடிக்கே
      நிற்பீர் எல்லா தாழாதே நிற்கும் பரிசே ஒருப்படுமின்
      பிற்பால் நின்று பேழ்கணித்தாற் பெறுதற் கரியன் பெருமானே. 611
      பெருமான் பேரானந்தது பிரியா திருக்க பெற்றீர்காள்
      அருமா லுற்றி பின்னைநீர் அம்மா அழுங்கி அரற்றாதே
      திருமா மணிசேர் திருக்கதவங் திறந்தபோதே சிவபுரத்து
      திருமா லறியா திருப்புயங்கன் திருத்தாள் சென்று சேர்வோமே. 612
      சேர கருகி சிந்தனையை திருந்த வைத்து சிந்திமின்
      போரிற் பொலியும் வேற்கண்ணாள் பங்கன் புயங்கன் அருளமுதம்
      ஆர பருகி ஆராத ஆர்வங்கூர அழுந்துவீர்
      போர புரிமின் சிவன்கழற்கே பொய்யிற் கிடந்து புரளாதே. 613
      புரள்வார் தொழுவார் புகழ்வாராய் இன்றே வந்தான் ஆகாதீர்
      மருள்வீர் பின்னை மதிப்பாரார் மதியு கலங்கி மயங்குவீர்
      தெருள்வீராகில் இதுசெய்ம்மின் சிவலோ கக்கோன் திருப்புயங்கன்
      அருளார் பெறுவார் அகலிடத்தே அந்தோ அந்தோவே.
      திருச்சிற்றம்பலம்

      ------------------------------------------------------------------------
      46. திருப்படை எழுச்சி - பிரபஞ்ச போர்
      தில்லையில் அருளியது - கலிவிருத்தம்
      ஞானவாள் ஏந்தும்ஐயர் நாத பறையறைமின்
      மானமா ஏறும்ஐயர் பதிவெண் குடைகவிமின்
      ஆனநீற் றுக்கவசம் அடை புகுமின்கள்
      வானவூர் கொள்வோம்நாம் மாயப்படை வாராமே. 615
      தொண்டர்காள் தூசிசெல்லீர் பக்தர்காள் சூழப்போகீர்
      ஒண்திறல் யோகிகளே பேரணி உந்தீர்கள்
      திண்திறல் சித்தர்களே கடைக்கூழை செல்மின்கள்
      அண்டர்நா டாள்வோம் நாம் அல்லற்படை வாராமே. 616
      திருச்சிற்றம்பலம்

      ------------------------------------------------------------------------
      47. திருவெண்பா - அணைந்தோர் தன்மை
      திருப்பெருந்துறையில் அருளியது - நேரிசை வெண்பா
      வெய்ய வினையிரண்டும் வெந்தகல மெய்யுருகி
      பொய்யும் பொடியாகா தென்செய்கேன் செய்ய
      திருவார் பெருந்துறையான் தேனுந்து செந்தீ
      மருவா திருந்தேன் மனத்து. 617
      ஆர்க்கோ அரற்றுகோ ஆடுகோ பாடுகோ
      பார்க்கோ பரம்பரனே என்செய்தேன் தீர்ப்பரிய
      ஆனந்த மாலேற்றும் அத்தன் பெருந்துறையான்
      தானென்பர் ஆரொருவர் தாழ்ந்து. 618
      செய்த பிழையறியேன் சேவடியே கைதொழுதே
      உய்யும் வகையின் உயிர்ப்பறியேன் வை
      திருந்துறையுள் வேல்மடுத்தன் சிந்தனைக்கே கோத்தான்
      பெருந்துறையில் மேய பிரான். 619
      முன்னை வினையிரண்டும் வேரறுத்து முன்னின்றான்
      பின்னை பிறப்பறுக்கும் பேராளன் தென்னன்
      பெருந்துறையில் மேய பெருங்கருணை யாளன்
      வருந்துயர தீர்க்கும் மருந்து. 620
      அறையோ அறிவார கனைத்துலகும் ஈன்ற
      மறையோனும் மாலுமால் கொள்ளும் இறையோன்
      பெருந்துறையும் மேய பெருமான் பிரியா
      திருந்துறையும் என்னெஞ்ச தின்று. 621
      பித்தென்னை ஏற்றும் பிறப்பறுக்கும் பேச்சரிதாம்
      மத்தமே யாக்கும் வந்தென்மனத்தை அத்தன்
      பெருந்துறையாள் ஆட்கொண்டு பேரருளால் நோக்கும்
      மருந்திறவா பேரின்பம் வந்து. 622
      வாரா வழியருளி வந்தெனக்கு மாறின்றி
      ஆரா அமுதாய் அமைந்தன்றே சீரார்
      திருத்தென் பெருந்துறையான் என்சிந்தை மேய
      ஒருத்தன் பெருக்கும் ஒளி. 623
      யாவார்க்கும் மேலாம் அளவிலா சீருடையான்
      யாவர்க்கும் கீழாம் அடியேனை யாவரும்
      பெற்றறியா இன்பத்துள் வைத்தாய்க்கென் எம்பெருமான்
      மற்றறியேன் செய்யும் வகை. 624
      மூவரும் முப்பத்து
      தேவரும் காணா சிவபெருமான் மாவேறி
      வையகத்தே வந்திழிந்த வார்கழல்கள் வந்திக்க
      மெய்யகத்தே இன்பம் மிகும். 625
      இருந்தென்னை ஆண்டான் இணையடியே சிந்தி
      திருந்திரந்து கொள்நெஞ்சே எல்லாம் தருங்காண்
      பெருந்துறையின் மேய பெருங்கருணை யாளன்
      மருந்துருவாய் என்மனத்தே வந்து. 626
      இன்பம் பெருக்கி இருளகற்றி எஞ்ஞான்றும்
      துன்ப தொடர்வறுத்து சோதியாய் அன்பமைத்து
      சீரார் பெருந்துறையான் என்னுடைய சிந்தையே
      ஊரா கொண்டான் உவந்து. 627
      திருச்சிற்றம்பலம்

      ------------------------------------------------------------------------
      48. பண்டாய நான்மறை - அனுபவத்து ஐயமின்மை உரைத்தல்
      திருப்பெருந்துறையில் அருளியது - நேரிசை வெண்பா
      பண்டாய நான்மறையும் பாலணுகா மாலயனுங்
      கண்டாரு மில்லை கடையேனை தொண்டா
      கொண்டருளுங் கோகழிஎங் கோமாற்கு நெஞ்சமே
      உண்டாமோ கைம்மா றுரை. 628
      உள்ள மலமூன்றும்மாய உகுபெருந்தேன்
      வெள்ள தரும்பரியின் மேல்வந்து வள்ளல்
      மருவும் பெருந்துறையை வாழ்த்துமின்காள் வாழ்த்த
      கருவுங் கெடும்பிறவி காடு. 629
      காட்டகத்து வேடன் கடலில் வலைவாணன்
      நாட்டிற் பரிப்பாகன் நம்வினையை வீட்டி
      அருளும் பெருந்துறையான் அங்கமல பாதம்
      மருளுங் கெடநெஞ்சே வாழ்த்து. 630
      வாழ்ந்தார்கள் ஆவாரும் வல்வினையை மாய்ப்பாரு
      தாழ்ந்துலகம் ஏ தகுவாருஞ் சூழ்ந்தமரர்
      சென்றிறைஞ்சி ஏத்தும் திருவார் பெருந்துறையை
      நன்றிறைஞ்சி ஏத்தும் நமர். 631
      நண்ணி பெருந்துறையை நம்மிடர்கள் போயகல
      எண்ணி எழுகோ கழிக்கரசைப்-பண்ணின்
      மொழியாளோ டுத்தர கோசமங்கை மன்னி
      கழியா திருந்தவனை காண். 632
      காணுங் கரணங்கள் எல்லாம்பே ரின்பமென
      பேணும் அடியார் பிறப்பகல காணும்
      பெரியானை நெஞ்சே பெருந்துறையில் என்றும்
      பிரியானை வாயார பேசு. 633
      பேசும் மொருளு கிலக்கிதமா பேச்சிறந்த
      மாசில் மணியின் மணிவார்த்தை பேசி
      பெருந்துறையே என்று பிறப்பறுத்தேன் நல்ல
      மருந்தினடி என்மனத்தே வைத்து. 634
      திருச்சிற்றம்பலம்

      ------------------------------------------------------------------------
      49. திருப்படை ஆட்சி - சீவஉபாதி ஒழிதல்
      தில்லையில் அருளியது -சிவ உபாதி ஒழித்தல் -
      பன்னிரு சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
      கண்களிரண்டும் அவன்கழல் கண்டு களிப்பன ஆகாதே
      காரிகை யார்கள்தம் வாழ்விலென் வாழ்வு கடைப்படும் ஆகாதே
      மண்களில் வந்து பிறந்திடு மாறி மறந்திடும் ஆகாதே
      மாலறி யாமலர பாதம் இரண்டும் வணங்குதும் ஆகாதே
      பண்களி கூர்தரு பாடலொ டாடல் பயின்றிடும் ஆகாதே
      பாண்டிநன்னாடுடை யான்படை யாட்சிகள் பாடுதும் ஆகாதே
      விண்களி கூர்வதோர் வேதகம் வந்துவெளிப்படும் ஆகாதே
      மீன்வலை வீசிய கானவன் வந்து வெளிப்படும் ஆயிடிலே. 635
      ஒன்றினொ டொன்றுமோ ரைந்தினொ டைந்தும் உயிர்ப்பது மாகாதே
      கன்றை நினைந்தெழு தாயென வந்த கணக்கது வாகாதே
      காரணமாகும் அனாதி குணங்கள் கருத்தறு மாகாதே
      நன்றிது தீதென வந்த நடுக்கம் நடந்தன வாகாதே
      நாமுமெ லாமடி யாருட னேசெல நண்ணினு மாகாதே
      என்றுமென் அன்பு நிறைந்த பராவமு தெய்துவ தாகாதே
      ஏறுடை யான்எனை ஆளுடை நாயகன் என்னுள் புகுந்திடிலே. 636
      பந்த விகார குணங்கள் பறிந்து மறிந்திடு மாகாதே
      பாவனை யாய கருத்தினில் வந்த பராவமு தாகாதே
      அந்த மிலாத அகண்டமும் நம்முள் அகப்படு மாகாதே
      ஆதி முதற்பா மாய பரஞ்சுடர் அண்ணுவ தாகாதே
      செந்துவர் வாய்மட வாரிட ரானவை சிந்திடு மாகாதே
      சேலன கண்கள் அவன்திரு மேனி திளைப்பன வாகாதே
      இந்திர ஞால இடர்ப்பிற வித்துய ரேகுவ தாகாதே
      என்னுடைய நாயக னாகியஈசன் எதிர்ப்படு மாயிடிலே. 637
      என்னணி யார்முலை ஆகம் அளைந்துடன் இன்புறு மாகாதே
      எல்லையில் மாக்கரு ணைக்கடல் இன்றினி தாடுது மாகாதே
      நன்மணி நாதம் முழங்கியென் உள்ளுற நண்ணுவ தாகாதே
      நாதன் அணித்திரு நீற்றினை நித்தலும் நண்ணுவ தாகாதே
      மன்னிய அன்பரில் என்பணி முந்துற வைகுவ தாகாதே
      மாமறை யும் அறியாமலர பாதம் வணங்குது மாகாதே
      இன்னியற் செங்கழு நீர்மலர் என்தலை எய்துவ தாகாதே
      என்னை யுடைப்பெரு மான் அருள் ஈசன் எழுந்தரு ளப்பே றிலே. 638
      மண்ணினில் மாயை மதித்து வகுத்த மயக்கறு மாகாதே
      வானவ ரும்அறி யாமலர பாதம் வணங்குது மாகாதே
      கண்ணிலி காலம் அனைத்தினும் வந்த கலக்கறு மாகாதே
      காதல்செயும் அடியார்மனம் இன்று களித்திடு மாகாதே
      பெண்ணலி ஆணென நாமௌ வந்த பிணக்கறு மாகாதே
      பேரறி யாத அனேக பவங்கள் பிழைத்தன ஆகாதே
      எண்ணிலி யாகிய சித்திகள் வந்தெனை எய்துவ தாகாதே
      என்னையுடை பெருமான் அருள் ஈசன் எழுந்தருள பெறிலே. 639
      பொன்னிய லுந்திரு மேனிவெண் ணீறு பொலிந்திடு மாகாதே
      பூமழை மாதவர் கைகள் குவிந்து பொழிந்திடு மாகாதே
      மின்னியல் நுண்ணிடை யார்கள் கருத்து வெளிப்படுமாகாதே
      வீணை முரன்றெழும் ஓசையில் இன்பம் மிகுத்திடு மாகாதே
      தன்னடி யாரடி என்தலை மீது தழைப்பன ஆகாதே
      தானடி யோம் உடனேயுயவ தலைப்படு மாகாதே
      இன்னியம் எங்கும் நிறைந்தினி தாக இயம்பிடு மாகாதே
      என்னைமுன் ஆளுடை ஈசன்என் அத்தன் எழுந்தரு ளப்பெறிலே. 640
      சொல்லிய லாதெழு தூமணி யோசை சுவைதரு மாகாதே
      துண்ணென என்னுளம் மன்னியசோதி தொடர்ந்தெழு மாகாதே
      பல்லியல் பா பரப்பற வந்த பராபர மாகாதே
      பண்டறி யாதப ரானுப வங்கள் பரந்தெழு மாகாதே
      வில்லியல் நன்னுத லார்மயல் இன்று விளைந்திடு மாகாதே
      விண்ணவரும் அறியாத விழுப்பொருள் இப்பொரு ளாகாதே
      எல்லையி லாதன எண்குண மானவை எய்திடு மாகாதே
      இந்து சிகாமணி எங்களை ஆள எழுந்திரு ள பெறிலே. 641
      சங்கு திரண்டு முரன்றெழும் ஓசை தழைப்பன ஆகாதே
      சாதிவி டாதகுணங்கள் நம்மோடு சலித்திடு மாகாதே
      அங்கிது நன்றிது நன்றெனு மாயை அடங்கிடு மாகாதே
      ஆசைஎலாம் அடியாரடியோய் எனும் அத்தனை யாகாதே
      செங்கயல் ஒண்கண்மடந்தையர் சிந்தை திளைப்பன ஆகாதே
      சீரடியார்கள் சிவானுப வங்கள் தெரித்திடு மாகாதே
      எங்கும் நிறைந்தமு தூறு பரஞ்சுடர் எய்துவ தாகாதே
      ஈற்றி யாமறை யோன் எனைஆள எழுந்தரு ள பெறிலே. 642
      திருச்சிற்றம்பலம்

      ------------------------------------------------------------------------
      50. ஆனந்தமாலை - சிவானுபவ விருப்பம்
      தில்லையில் அருளியது - சிவானுபவ விருத்தம்
      அறுசீர கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
      மின்னே ரனைய பூங்கழல்கள் அடைந்தார் கடந்தார் வியனுலகம்
      பொன்னே ரனைய மலர்கொண்டு போற்றா நின்றார் அமரரெல்லாம்
      கல் நேரனைய மனக்கடையா கழிப்புண் டவல கடல்வீழ்ந்த
      என்னே ரனையேன் இனியுன்னை கூடும் வண்ணம் இயம்பாவே. 643
      என்னால் அறியா பதம்தந்தாய் யான தறியா தேகெட்டேன்
      உன்னால் ஒன்றுங் குறைவில்லை உடையாய் அடிமை காரென்பேன்
      பன்னாள் உன்னை பணிந்தேத்தும் பழைய அடியா ரொடுங்கூடா
      தென்நா யகமே பிற்பட்டிங் கிருந்தென் நோய்க்கு விருந்தாயே. 644
      சீல மின்றி நோன்பின்றி செறிவே யின்றி அறிவின்றி
      தோலின் பாவை கூத்தாட்டா சுழன்று விழுந்து கிடப்பேனை
      மாலுங் காட்டி வழிகாட்டி வாரா உலக நெறியேற
      கோலங் காட்டி ஆண்டானை கொடியேன் என்றோ கூடுவதே. 645
      கெடுவென் கெடுமா கெடுகின்றேன் கேடி லாதாய் பழிகொண்டாய்
      படுவேன் படுவ தெல்லாம்நான் பட்டாற் பின்னை பயனென்னே
      கொடுமா நரக தழுந்தாமே காத்தா கொள்ளுங் குருமணியே
      நடுவாய் நில்லா தொழிந்தக்கால் நன்றோ எங்கள் நாயகமே. 646
      தாயாய் முலையை தருவானே தாரா தொழிந்தாற் சவலையாய்
      நாயேன் கழிந்து போவேனோ நம்பி யினித்தான் நல்குதியே
      தாயே யென்றுன் தாளடைந்தேன் தயாநீ என்பால் இல்லையே
      நாயேன் அடிமை உடனாக ஆண்டாய் நான்தான் வேண்டாவோ. 647
      கோவே யருள வேண்டாவோ கொடியேன் கெடவே அமையுமே
      ஆவா வென்னா விடிலென்னை அஞ்சேல் என்பார் ஆரோதான்
      சாவா ரெல்லாம் என்னளவோ தக்க வாறன் றென்னாரோ
      தேவே தில்லை நடமாடீ திகைத்தேன் இனித்தான் தேற்றாயே. 648
      நரியை குதிரை பரியாக்கி ஞால மெல்லாம் நிகழ்வித்து
      பெரிய தென்னன் மதுரையெல்லாம் பிச்ச தேற்றும் பெருந்துறையாய்
      அரிய பொருளே அவிநாசி அப்பா பாண்டி வெள்ளமே
      தெரிய அரிய பரஞ்சோதி செய்வ தொன்றும் அறியேனே. 649
      திருச்சிற்றம்பலம்

      ------------------------------------------------------------------------
      51. அச்சோ பதிகம் - அனுபவவழி அறியாமை
      தில்லையில் அருளியது
      முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனை
      பத்திநெறி அறிவித்து பழவினைகள் பாறும்வண்ணம்
      சித்தமலம் அறுவித்து சிவமாக்கி எனைஆண்ட
      அத்தனென கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 650
      நெறியல்லா நெறிதன்னை நெறியாக நினைவேனை
      சிறுநெறிகள் சேராமே திருவருளே சேரும்வண்ணம்
      குறியொன்றும் இல்லாத கூத்தன்தன் கூத்தையெனக்கு
      அறியும்வண்ணம் அருளியவா றார்பெறுவார் அச்சோவே. 651
      பொய்யெல்லாம் மெய்யென்று புணர்முலையார் போகத்தே
      மையலுற கடவேனை மாளாமே காத்தருளி
      தையலிடங் கொண்டபிரான் தன்கழலே சேரும்வண்ணம்
      ஐயன்என கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 652
      மண்ணதனிற் பிறந்தெய்த்து மாண்டுவிழ கடவேனை
      எண்ணமிலா அன்பருளி எனையாண்டி டென்னையுந்தன்
      கண்ணவெண்ணீ றணிவித்து தூய்நெறியே சேரும்வண்ணம்
      அண்ணல்என கருளியவா றார்வபெறுவார் அச்சோவே. 653
      பஞ்சாய அடிமடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டு
      நெஞ்சாய துயர்கூர நிற்பேன்உன் அருள்பெற்றேன்
      உய்ஞ்சேன்நான் உடையானே அடியேனை வருகஎன்று
      அஞ்சேல்என் றருளியவா றார்பெறுவார் அச்சோவே. 654
      வெந்துவிழும் உடற்பிறவி மெய்யென்று வினைபெருக்கி
      கொந்துகுழல் கோல்வளையார் குவிமுலைமேல் வீழ்வேனை
      பந்தமறு தெனையாண்டு பரிசறஎன் துரிசுமறுத்து
      அந்தமென கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 655
      தையலார் மையலிலே தாழ்ந்துவிழ கடவேனை
      பையவே கொடுபோந்து பாசமெனு தாழுருவி
      உய்யும்நெறி காட்டுவித்தி டோ ங்கார துட்பொருளை
      ஐயன்என கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 656
      சாதல்பிற பென்னு தடஞ்சுழியில் தடுமாறி
      காதலின்மி கணியிழையார் கலவியிலே விழுவேனை
      மாதொருகூ றுடையபிரான் தன்கழலே சேரும்வண்ணம்
      ஆதியென கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 657
      செம்மைநலம் அறியாத சிதடரொடு திரிவேனை
      மும்மைமலம் அறுவித்து முதலாய முதல்வன்தான்
      நம்மையும்ஓர் பொருளாக்கி நாய்சிவிகை ஏற்றுவித்த
      அம்மையென கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 658
      செத்திடமும் பிறந்திடமு மினிச்சாவா திருந்திடமும்
      அத்தனையு மறியாதார் அறியுமறி வெவ்வறிவோ
      ஒத்தநில மொத்தபொருள் ஒருபொருளாய் பெரும்பயனை
      அத்ததென கருளியவா றார்பெறுவா ரச்சோவே. 659
      படியதினிற் கிடந்திந்த பசு பாச தவிர்ந்துவிடும்
      குடிமையிலே திறி தடியேன் கும்பியிலே விழாவண்ணம்
      நெடியவனும் நான்முகனும் நீர்கான்றுங் காணவொண்ணா
      அடிகளென கருளியவா றார்பெறுவா ரச்சாவே. 660
      பாதியெனு மிரவுதங்கி பகலெமக்கெ யிரைதேடி
      வேதனையி லகப்பட்டு வெந்துவிழ கடவேனை
      சாதிகுலம் பிறப்பறுத்து சகமறிய வெனையாண்ட
      ஆதியெனு கருளியவா றார்பெறுவா ரச்சாவே. 661
      திருச்சிற்றம்பலம்

      திருவாசகம் முற்றிற்று
      ------------------------------------------------------------------------

      1998
      12 2000
      13 .2002.

      திருக்கோவையார் திருச்சிற்றம்பல கோவையார்
      மாணிக்க வாசகர் அருளியது
      கட்டளை கலித்துறை யாப்பு
      விநாயகர் வணக்கம்
      எண்ணிறைந்த திங்கள் எழுகோ புரந்திகழ
      கண்ணிறைந்து நின்றருளும்கற்பகமே - நண்ணியசீர
      தேனூறு செஞ்சொல் திருக்கோவை என்கின்ற
      நானூறும் என்மனத்தே நல்கு 1
      நூற்சிறப்பு
      ஆரணங் காணென்பர் அந்தணர் யோகியர் ஆகமத்தின்
      காரணங் காணென்பர் காமுகர் காமநன் னூலதென்பர்
      ஏரணங் காணென்பர் எண்ணர் எழுத்தென்பர் இன்புலவோர்
      சீரணங் காயசிற் றம்பல கோவையை செப்பிடினே. 2
      களவியல் 1 முதல் 18 அதிகாரங்கள்
      முதல் அதிகாரம்
      1. இயற்கை புணர்ச்சி
      1. காட்சி
      திருவளர் தாமரை சீர்வளர் காவிகள் ஈசர்தில்லை
      குருவளர் பூங்குமிழ் கோங்குபைங் காந்தள்கொண்டு ஓங்குதெய்வ
      மருவளர் மாலையர் வல்லியின் ஒல்கி அனநடை வாய்ந்து
      உருவளர் காமன்தன் வென்றி கொடிபோன்று ஒளிர்கின்றதே. .. 1
      கொளு
      மதிவாணுதல் வளர்வஞ்சியை
      கதிர் வேலவன் கண்ணுற்றது
      2. ஐயம்
      போதா விசும்போ புனலோ பணிக ளதுபதியோ
      யாதோ அறிகுவது ஏதும் அரிதி யமன்விடுத்த
      தூதோ அனங்கன் துணையோ இணையிலி தொல்லைத்தில்லை
      மாதோ மடமயி லோஎன நின்றவர் வாழ்பதியே. .. 2
      கொளு
      தெரியஅரியதோர் தெய்வமன்ன
      அருவரைநாடன் ஐயுற்றது.
      3. தெளிதல்
      பாயும் விடையரன் தில்லையன் னாள்படை கண்ணிமைக்கும்
      தோயும் நிலத்தடி தூமலர் வாடும் துயரமெய்தி
      ஆயும் மனனே அணங்கல்லள் அம்மா முலைசுமந்து
      தேயும் மருங்குல் பெரும்பணை தோளி சிறுநுதலே. .. 3
      கொளு
      அணங்கல்லள்என்று அயில்வேலவன்
      குணங்களை நோக்கி குறித்துரைத்தது.
      4. நயப்பு
      அகல்கின்ற அல்குல் தடமது கொங்கை அவைஅலம்நீ
      புகல்கின்றது என்னைநெஞ்சு உண்டே இடைஅடை யார்புரங்கள்
      இகல்குன்ற வில்லில்செற் றோன்தில்லை ஈசன்எம் மான்எதிர்த்த
      பகல்குன்ற பல்உகு தோன்பழ னம்அன்ன பல்வளைக்கே. .. 4
      கொளு
      வண்டமர் புரிகுழல் ஒண்டொடி மடந்தையை
      நயந்த அண்ணல் வியந்துள் ளியது.
      5. உட்கோள்
      அணியும் அமிழ்தும்என் ஆவியம் ஆயவன் தில்லைச்சிந்தா
      மணிஉம்ப ரார்அறி யாமறை யோன்அடி வாழ்த்தலரின்
      பிணியும் அதற்கு மருந்தும் பிறழ பிறழமின்னும்
      பணியும் புரைமருங் குல்பெரு தோளி படைக்கண்களே. .. 5
      கொளு
      இறைதிரு கரத்து மறிமான் நோக்கி
      உள்ளக்கருத்து வள்ளல் அறிந்தது.
      6. தெய்வத்தை மகிழ்தல்
      வளைபயில் கீழ்கடல் நின்றிட மேல்கடல் வான்நுகத்தின்
      துளைவழி நேர்கழி கோத்தென தில்லைத்தொல் லோன்கயிலை
      கிளைவயின் நீக்கிஇ கொண்டைஅங் கண்ணியை கொண்டுதந்த
      விளைவயல் வால்விய வேன்நய வேன்தெய்வம் மிக்கனவே. .. 6
      கொளு
      அன்ன மென்னடை அரிவையை தந்த
      மன்னிரு தெய்வத்தை மகிழ்ந்து ரைத்தது.
      7. புணர்ச்சி துணிதல்
      ஏழுடை யான்பொழில் எட்டுடை யான்புயம் என்னைமுன்ஆள்
      ஊழுடை யான்புலி யூர்அன்ன பொன்இவ் உயிர்பொழில் ஆக
      சூழுடை ஆயத்தை நீக்கும் விதிதுணை யாமனனே
      யாழுடை யார்மணம் காண்அணங்கு ஆய்வந்து அகப்பட்டதே. .. 7
      கொளு
      கொவ்வை செவ்வா கொடியிடை பேதையை
      தெய்வ புணர்ச்சி செம்மல் துணிந்தது.
      8. கல்வியுரைத்தல்
      சொற்பால் அழுதிவள் யான்சுவை என்ன துணிந்திங்ஙனே
      நற்பால் வினைத்தெய்வம் தந்தின்று நானிவ ளாம்பகுதி
      பொற்பார் அறிவார் புலியூர புனிதன் பொதியில்வெற்பில்
      கற்பா வியவரை வாய்க்கடிது ஓட்ட களவகத்தே. .. 8
      கொளு
      கொலைவேலவன் கொடியிடையடு
      கலவியன்பம் கட்டுரைத்தது
      9. இருவயின் ஒத்தல்
      உணர்ந்தார்க்கு உணர்வரி யோன்தில்லை சிற்றம் பலத்தொருத்தன்
      குணந்தான் வெளிப்பட்ட கொவ்வைச்செவ் வாயி கொடியிடைதோள்
      புணர்ந்தால் புணரும் தொறும்பெரும் போகம்பின் னும்புதிதாய்
      மணந்தாழ் புரிகுழ லாள் அல்குல் போல வளர்கின்றதே. . 9
      கொளு
      ஆராஇன்பத்து அன்புமீதூர
      வாரார்முல்லை மகிழ்ந்துரைத்தது.
      10. கிளவி வேட்டல்
      அளவியை யார்க்கும் அறிவு அரி யோன்தில்லை அம்பலம்போல்
      வளவிய வான்கொங்கை வாள்தடங் கண்நுதல் மாமதியின்
      பிளவுஇயல் மின்இடை பேரமை தோளிது பெற்றியென்றால்
      கிளவியை யென்றோ இனிக்கிள்ளை யார்வாயிற் கேட்கின்றதே. .. 10
      கொளு
      அன்னம்அன்னவள் அவயவம் கண்டு
      மென்மொழி கேட்க விருப்புற்றது.
      11. நலம் புனைந்துரைத்தல்
      கூம்பலங் கைத்தலத்து அன்பர்என்பு ஊடுரு கக்குனிக்கும்
      பாம்பலங் கார பரன்தில்லை அம்பலம் பாடலரின்
      தேம்பலம் சிற்றிடை ஈங்கிவள் தீங்கனி வாய்கமழும்
      ஆம்பலம் போதுள வோஅளி காள்நும் அகன்பணையே. .. 11
      கொளு
      பொங்கிழையை புனைநலம் புகழ்ந்து
      அங்கதிர்வேலோன் அயர்வுநீங்கியது.
      12. பிரிவுணர்த்தல்
      சிந்தா மணிதெள் கடல்அமிர் தம்தில்லை யான்அருளால்
      வந்தால் இகழ படுமே மடமான் விழிமயிலே
      அந்தா மரையன்ன மேநின்னை யான் அகன்று ஆற்றுவனோ
      சிந்தா குலமுற்றென் னோஎன்னை வாட்டம் திருத்துவதே. .. 12
      கொளு
      பணிவரல்அல்குலை பயிர்ப்புறுத்தி
      பிணிமலர தாரோன் பிரிவுணர்த்தியது.
      13. பருவரல் அறிதல்
      கோங்கின் பொலிஅரும்பு ஏய்கொங்கை பங்கன் குறுகலர்ஊர்
      தீங்கில் புகச்செற்ற கொற்றவன் சிற்றம் பலம் அனையாள்
      நீங்கின் புணர்வுஅரிது என்றோ நெடிதுஇங்ங னேயிருந்தால்
      ஆங்குஇற் பழியாம் எனவோ அறியேன் அயர்கின்றதே. .. 13
      கொளு
      பிரிவுணர்ந்த பெண்கொடி தன்
      பருவரலின் பரிசு நினைந்தது.
      14. அருட்குணம் உரைத்தல்
      தேவரில் பெற்றநம் செல்வ கடிவடி வால்திருவே
      யாவரின் பெற்றினி யார்சிதை பார்இமை யாதமுக்கண்
      மூவரின் பெற்றவர் சிற்றம் பலம்அணி மொய்பொழில்வா
      பூஅரில் பெற்ற குழலிஎன் வாடி புலம்புவதே. .. 14
      கொளு
      கூட்டிய தெய்வ தின்அ ருட்குணம்
      வாட்டம் இன்மை வள்ளல் உரைத்தது.
      15. இடம் அணித்து கூறி வற்புறுத்தல்
      வருங்குன்றம் ஒன்றுரி தோன்தில்லை அம்பல வன்மலயத்து
      இருங்குன்ற வாணர் இளங்கொடி யேஇடர் எய்தல்எம்மூர
      பருங்குன்ற மாளிகை நுண்கள பத்தொளி பாயநும்மூர
      கருங்குன்றம் வெண்ணிற கஞ்சுகம் ஏய்க்கும் களங்குழையே. .. 15
      கொளு
      மடவரலை வற்புறுத்தி
      இடமணித்துஎன்று அவன்இயம்பியது.
      16. ஆடு இடத்து உய்த்தல்
      தெளிவளர் வான்சிலை செங்கனி வெண்முத்தம் திங்களின்வாய்ந்து
      அளிவளர் வல்லிஅன் னாய் முன்னி யாடுபின் யான்அளவா
      ஒளிவளர் தில்லை ஒருவன் கயிலை யுகுபெருந்தேன்
      துளிவளர் சாரல் கரந்துங்ங னேவந்து தோன்றுவனே. .. 16
      கொளு
      வன்புறையின் வற்புறுத்தி
      அன்புறு மொழியை அருகு அகன்றது.
      17. அருமை அறிதல்
      புணர்ப்போன் நிலனும் விசும்பும் பொருப்புந்தன் பூங்கழலின்
      துணர்ப்போ தெனக்கணி யாக்குந்தொல் லோன்தில்லை சூழ்பொழில்வாய்
      இணர்ப்போது அணிசூழல் ஏழைதன் நீர்மைஇ நீர்மையென்றால்
      புணர்ப்போ கனவோ பிறிதோ அறியேன் புகுந்ததுவே. .. 17
      கொளு
      கற்றமும் இடனும் சூழலும் நோக்கி
      மற்றவன் அருமை மன்னன் அறிந்தது.
      18. பாங்கியை அறிதல்
      உயிரொன்று உளமும்ஒன்று ஒன்றே சிறப்புஇவட்கு என்னோடென்ன
      பயில்கின்ற சென்று செவியுற நீள்படை கண்கள்விண்வா
      செயிர்ஒன்று முப்புரம் செற்றவன் தில்லைச்சிற் றம்பலத்து
      பயில்கின்ற கூத்தன் அருளென லாகும் பணிமொழிக்கே. .. 18
      கொளு
      கடல்புரை ஆயத்து காதல் தோழியை
      மடவரல் காட்ட மன்னன் அறிந்தது.
      இயற்கை புணர்ச்சி முற்றிற்று
      -------
      இரண்டாம் அதிகாரம்
      2. பாற்கற் கூட்டம்
      1. பாங்கனை நினைதல்
      பூங்கனை யார்புனல் தென்புலி யூர்புரிந்து அம்பலத்துள்
      ஆங்கெனை யாண்டுகொண் டாடும் பிரானடி தாமரைக்கே
      பாங்கனை யான்அன்ன பண்பனை கண்டுஇ பரிசுரைத்தால்
      ஈங்கெனை யார்தடு பார்மட பாவையை எய்துதற்கே. 19
      கொளு
      எய்துதற்கு அருமை ஏழையில் தோன்ற
      பையுள் உற்றவன் பாங்கனை நினைந்தது.
      2. பாங்கன் வினாதல்
      சிறைவான் புனல்தில்லை சிற்றம் பலத்தும்என் சிந்தையுள்ளம்
      உறைவான் உயர்மதில் கூடலின் ஆய்ந்தஒண் தீந்தமிழின்
      துறைவாய் நுழைந்தனை யோஅன்றி ஏழிசை சூழல்புக்கோ
      இறைவா தடவரை தோட்கென்கொ லாம்புகுந்து எய்தியதே. 20
      கொளு
      கலிகெழு திரள்தோள் மெலிவது கண்ட
      இன்னுயிர பாங்கன் மன்னனை வினாயது.
      3. உற்றது உரைத்தல்
      கோம்பிக்கு ஒதுங்கிமே யாமஞ்ஞை குஞ்சரம் கோளிழைக்கும்
      பாம்பை பிடித்து படங்கிழித்து ஆங்குஅ பணைமுலைக்கே
      தேம்பல் துடியிடை மான்மட நோக்கிதில் லை சிவன்தாள்
      ஆம்பொன் தடமலர் சூடும்என் ஆற்றல் அகற்றியதே. .. 21
      கொளு
      மற்றவன் வினவ உற்றது உரைத்தது.
      4. கழறியுரைத்தல்
      உளமாம் வகைநம்மை உய்யவந்து ஆண்டுசென்று உம்பர்உ
      களமாம் விடம்அமிர்து ஆக்கிய தில்லைத்தொல் லோன்கயிலை
      வளமாம் பொதும்பரின் வஞ்சித்து நின்றோர்வஞ் சிம்மருங்குல்
      இளமான் விழித்ததென் றோஇன்றெம் அண்ணல் இரங்கியதே. .. 22
      கொளு
      வெற்பனத்தன் மெய்ப்பதங்கன்
      கற்பனையில் கழறியது.
      5. கழற்றெதிர் மறுத்தல்
      சேணிற் பொலிசெம்பொன் மாளிகை தில்லைச்சிற்றம் பலத்து
      மாணி கூத்தன் வடவான் கயிலை மயிலைமன்னும்
      பூணிற் பொலிகொங்கை யாவியை ஒவி பொற்கொழுந்தை
      காணிற் கழறலை கண்டிலை மென்தோள் கரும்பினையே. .. 23
      கொளு
      ஆங்குயி ரன்ன பாங்கன் கழற
      வளந்தரு வெற்பன் உளந்தளர்ந்து உரைத்தது.
      6 கவன்றுரைத்தல்
      விலங்கலை கால்கொண்டு மேன்மேல் இடவிண்ணும் மண்ணும் முந்நீர
      கலங்கலை சென்றஅன் றுகலங் காய்கமழ் கொன்றைதுன்றும்
      அலங்கலை சூழ்ந்தசிற்றம்பல தான்அருள் இல்லவர்போல்
      தலங்கலை சென்றிதென் னோவள்ளல் உள்ளம் துயர்கின்றதே. .. 24
      கொளு
      கொலைகளிற் றண்ணல் குறைநயந்து உரைப்ப
      கலக்கங்செய் பாங்கன் கவன்று உரைத்தது.
      7. வலியழிவுரைத்தல்
      தலைப்படு சால்பினு கும்தள ரேன்சித்தம் பித்தனென்று
      மலைத்தறி வார்இல்லை யாரையும் தேற்றுவன் எத்துணையும்
      கலைச்சிறு திங்கள் மிலைத்தசிற் றம்பல வன்கயிலை
      மலைச்சிறு மான்விழி யால்அழி வுற்று மயங்கினனே. .. 25
      கொளு
      நிறைபொறை தேற்றம் நீதியடு சால்பு
      மறியறு நோக்கிற்கு வாடினேன் என்றது.
      8. விதியடு வெறுத்தல்
      நல்வினை யும்நயம் தந்தின்று வந்து நடுங்குமின்மேல்
      கொல்வினை வல்லன கோங்கரும் பாம்என்று பாங்கன் சொல்ல
      வல்வினை மேருவில் வைத்தவன் தில்லை தொழாரின் வெள்கி
      தொல்வினை யால்துய ரும்எனது ஆருயிர் துப்புறவே. .. 26
      கொளு
      கல்விமிகு பாங்கன் கழற வெள்கி
      செல்வமிகு சிலம்பன் தெரிந்து செப்பியது.
      9. பாங்கன் நொந்துரைத்தல்
      ஆலத்தி னால்அமிர்து ஆக்கிய கோன்தில்லை அம்பலம்போல்
      கோலத்தி னாள்பொரு டாக அமிர்தம் குணங்கெடினும்
      காலத்தி னால்மழை மாறினும் மாறா கவிகைநின்பொற்
      சீலத்தை நீயும் நினையாது ஒழிவதென் தீவினையே. .. 27
      கொளு
      இன்னுயிர பாங்கன் ஏழையை சுட்டி
      நின்னது நன்மை நினைந்திலை என்றது.
      10. இயல் இடங்கேட்டல்
      நின்னுடை நீர்மையும் நீயும்இவ் வாறு நினைத்தெருட்டும்
      என்னுடை நீர்மையிது என்னென்ப தேதில்லை யேர்கொள்முக்கண்
      மன்னுடை மால்வரை யோமல ரோவிகம் போசிலம்பா
      என்னிடம் யாதியல் நின்னையின் னேசெய்த ஈர்ங்கொடிக்கே. .. 28
      கொளு
      கழுமலம் எய்திய காதல் தோழன்
      செழுமலை நாடனை தெரிந்து வினாயது.
      11. இயலிடங் கூறல்
      விழியால் பிணையாம் விளங்கிய லான்மயி லாம்மிழற்று
      மொழியால் கிளியாம் முதுவா னவர்தம் முடித்தொகைகள்
      கழியா கழல்தில்லை கூத்தன் கயிலைமு தம்மலைத்தேன்
      கொழியா திகழும் பொழிற்குஎழி லாம்எங் குலதெய்வமே. .. 29
      கொளு
      அழுங்கல் எய்திய ஆருயிர பாங்கற்கு
      செழுங்கதிர் வேலோன் தெரிந்து செப்பியது.
      12. வற்புறுத்தல்
      குயிலை சிலம்படி கொம்பினை தில்லையெங் கூத்தப்பிரான்
      கயிலை சிலம்பில்பைம் பூம்புனம் காக்கும் கருங்கண்செவ்வாய்
      மயிலை சிலம்புகண்டு யான்போய் வருவன்வண் பூங்கொடிகள்
      பயில சிலம்பெதிர் கூய்ப்பண்ணை நண்ணும் பனிக்கறையே. .. 34
      கொளு
      பெயர்ந்துரைத்த பெருவரை நாடனை
      வயங்கெழு புகழோன் வற்புறுத்தியது.
      13. குறிவழி சேறல்
      கொடுங்கால் குலவரை ஏழ்ஏழ் பொழில்எழில் குன்றும்அன்றும்
      நடுங்கா தவனை நடுங்க நுடங்கு நடுவுடைய
      விடங்கால் அயிற்கண்ணி மேவுங்கொ லாம்தில்லை ஈசன் வெற்பில்
      தடங்கார் தருபெரு வான்பொழில் நீழலம் தண்புனத்தே. . 35
      கொளு
      அறைகழல் அண்ணல் அருளின வழியே
      நிறையுடை பாங்கன் நினைவொடு சென்றது.
      14. குறிவழிக்காண்டல்
      வடிக்கண் இவைவஞ்சி அஞ்சும் இடைஇது வாய்பவளம்
      துடிக்கின்ற வாவெற்பன் சொற்பரி சேயான் தொடர்ந்துவிடா
      அடிச்சந்த மாமலர் அண்ணல்விண் ணோர்வணங்கு அம்பலம்போல்
      படிச்ச தமும்இது வேஇவ ளேஅ பணிமொழியே. .. 36
      கொளு
      குளிர்வரை நாடன் குறிவழி சென்று
      தளிர்புரை மெல்லடி தையால கண்டது.
      15. தலைவனை வியந்துரைத்தல்
      குவளைக்களத்துஅம் பலவன் குரைகழல் போற்கமல
      தவளை பயங்கர மாகநின்று ஆண்ட அவயவத்தின்
      இவளைக்கண்டு இங்குநின்று அங்குவந்து அத்துனை யும்பகர்ந்த
      கவள களிற்றண்ண லேதிண்ணி யான்இ கடலிடத்தே. .. 37
      கொளு
      நயந்த உருவம் நலனும் கண்டு
      வியந்த வனையே மிகுத்துரைத்தது.
      16 கண்டமை கூறல்
      பணந்தாழ் அரவரை சிற்றம் பலவர்பைம் பொற்கயிலை
      புணர்ந்தாங்கு அகன்ற பொருகரி யுன்னி புனத்தயலே
      மணந்தாழ் பொழிற்கண் வடிக்கண் பரப்பி மடப்பிடிவாய்
      நிணந்தாழ் சுடரிலை வேல்கண் டேன்ஒன்று நின்றதுவே. .. 38
      கொளு
      பிடிமிசை வைத்து பேதையது நிலைமை
      அடுதிறல் அண்ணற்கு அறிய உரைத்தது.
      17. செவ்வி செப்பல்
      கயலுள வேகம லத்தவர் மீது கனிபவளத்து
      அயலுள வேமுத்தம் ஒத்த நிரைஅரன் அம்பலத்தின்
      இயலுள வேபிணை செப்புவெற் பாநினது ஈர்ங்கொடிமேல்
      புயலுள வேமலர் சூழ்ந்திருள் தூங்கி புரள்வனவே. .. 37
      கொளு
      அற்புதன் கைலை மற்பொலி சிலம்பற்கு
      அவ்வுரு கண்டவன் செவ்வி செப்பியது.
      18. அவ்விடத்து ஏகல்
      எயிற்குலம் முன்றுஇரும் தீஎய்த எய்தவன் தில்லையத்து
      குயிற்குலம் கொண்டுதொண் டைக்கனி வாய்க்குளிர் முத்தம்நிரைத்து
      அயிற்குல வேல்கம லத்திற் கிடத்தி அனம்நடக்கும்
      மயிற்குலம் கண்டதுண் டேல்அது என்னுடை மன்னுயிரே. .. 36
      கொளு
      அரிவையது நிலைமை அறிந்தவன் உரைப்ப
      எரிகதிர் வேலோன் ஏகியது
      19. மின்னிடை மெலிதல்
      ஆவியன் னாய்கவ லேல்அக லேம்என்று அளித்தொளித்த
      ஆவியன் னார்மி கவாயின ராய்க்கெழு மற்குஅழிவுற்று
      ஆவியன் னார்மன்னி ஆடிடம் சேர்வர்கொல் அம்பலத்தெம்
      ஆவியன் னான்பயி லுங்கயி லாயத்து அருவரையே. .. 37
      கொளு
      மன்னனை நினைந்து மின்னிடை மெலிந்தது.
      20. பொழில்கண்டு மகிழ்தல்
      காம்பிணை யால்களி மாமயி லால்கதிர் மாமணியால்
      வாம்பிணை யால்வல்லி ஒல்குத லான்மன்னும் அம்பலவன்
      பாம்பிணை யாக்குழை கொண்டோன் கயிலை பயில்புனமும்
      தேம்பிணை வார்குழ லாளென தோன்றும்என் சிந்தனைக்கே. .. 38
      கொளு
      மணங்கமழ் பொழிலின் வடிவுகண்டு
      அணங்கென நினைந்து அயர்வு நீங்கியது.
      21. உயிரென வியத்தல்
      நேயத்த தாய்நென்னல் என்னை புணர்ந்துநெஞ் சம்நெகப்போய்
      ஆயத்த தாய் அமிழ் தாய்அணங் காய்அரன் அம்பலம்போல்
      தேயத்த தாய்என்றன் சிந்தைய தாய்த்தெரி யிற்பெரிது
      மாயத்த தாகி இதோவந்து நின்றதுஎன் மன்னுயிரே. .. 39
      கொளு
      வெறியறு பொழிலின் வியன்பொ தும்பரின்
      நெறியறு குழலி நிலைமை கண்டது.
      22. தளர்வு அகன்று உரைத்தல்
      தாதிவர் போதுகொய் யார்தைய லார்அங்கை கூப்பநின்று
      சோதி வரிப்பந்து அடியார் கனைப்புனல் ஆடல்செய்யார்
      போதிவர் கற்பக நாடுபுல் வென்னத்தம் பொன்அடிப்பாய்
      யாதிவர் மாதவம் அம்பல தான்மலை எய்துதற்கே. .. 40
      கொளு
      பனிமதி நுதலியை பைம்பொ ழிலிடை
      தனிநிலை கண்டு தளர்வகன்று உரைத்தது.
      23. மொழிபெற வருந்தல்
      காவிநின்று ஏர்தரு கண்டர்வண் தில்லைக்கண் ணார்கமல
      தேவிஎன் றேஐயம் சென்றதுஅன் றேஅறி யச்சிறிது
      மாவியன் றன்னமென் னோக்கிநின் வாய்திற வாவிடின்என்
      ஆவியன் றேஅமிழ் தேஅணங் கேஇன்று அழிகின்றதே. .. 41
      கொளு
      கூடற்கு அரிதென வாடி யுரைத்தது.
      24. நாணி கண் புதைத்தல்
      அகலிடம் தாவிய வானோன் அறிந்திறைஞ்சு அம்பலத்தின்
      இகலிடம் தாவிடை ஈசன் தொழாரின்இன் னற்கிடமாய்
      உகலிடம் தான்சென்று எனதுயிர் நையா வகையதுங்க
      புகலிடம் தாபொழில் வாய்எழில் வாய்தரு பூங்கொடியே. .. 42
      கொளு
      ஆயிடை தனிநின்று ஆற்றாது அழிந்து
      வேயுடை தோளியோர் மென்கொடி மறைந்தது.
      25. கண் புதைக்க வருந்தல்
      தாழச்செய் தார்முடி தன்னடி கீழ்வை தவரைவிண்ணோர்
      சூழச்செய் தான்அம் பலங்கை தொழாரின்உள் ளந்துளங்க
      போழச்செய் யாமல்வை வேற்கண் புதைத்துப்பொன் னேஎன்னைநீ
      வாழச்செய் தாய்கற்று முற்றும் புதைநின்னை வாணுதலே. .. 43
      கொளு
      வேல்தருங் கண்ணினை மிளிர்வன அன்றுநின்
      கூற்றரு மேனியே கூற்றெனக்கு என்றது.
      26. நாண்விட வருந்தல்
      குருநாண் மலர்ப்பொழில் சூழ்தில்லை கூத்தனை ஏத்தலர்போல்
      வருநாள் பிறவற்க வாழியரோ மற்றென் கண்மணிபோன்று
      ஒருநாள் பிரியாது உயிரின் பழகி யுடன்வளர்ந்த
      அருநாண் அளிய அழல்சேர் மெழுகொத்து அழிகின்றதே. .. 44
      கொளு
      ஆங்ங னம்கண்டு ஆற்றா ளாகி
      நீங்கன நாணொடு நேரிழை நின்றது.
      27. மருங்கணைதல்
      கோல தனிக்கொம்பர் உம்பர்புக்கு அ·தே குறைப்பவர்தம்
      சீல தன்கொங்கை தேற்றகி லேம்சிவன் தில்லையன்னாள்
      நூலொத்த நேரிடை நொய்ம்மையெண் ணாதுநுண் தேன்நசையால்
      சால தகாதுகண் டீர்வண்டு காள்கொண்டை சார்வதுவே. .. 45
      கொளு
      ஒளிதிகழ் வார்குழல் அளிகுலம் விலக்கி
      கருங்களிற் றண்ணல் மருங்க ணைந்தது.
      28. இன்றியமையாமை கூறல்
      நீங்கரும் பொற்கழல் சிற்றம் பலவர் நெடுவிசும்பும்
      வாங்கிரு தெண்கடல் வையமும் எய்தினும் யான்மறவேன்
      தீங்ரும் பும்அமிழ் துஞ்செழு தேனும் பொதிந்துசெப்பும்
      கோங்கரும் பும்தொலைத்து என்னையும் ஆட்கொண்ட கொங்கைகளே. 46
      கொளு
      வென்றி வேலவன் மெல்லி யல்தனக்கு
      இன்றியமை யாமை எடுத்து ரைத்தது.
      29. ஆயத்து உய்த்தல்
      சூளா மணியும்பர்க்கு ஆயவன் சூழ்பொழில் தில்லையன்னாய்க்கு
      ஆளா ஒழிந்ததென் ஆருயிர் ஆரமிழ் தேஅணங்கே
      தோளா மணியே பிணையே பலசொல்லி என்னைதுன்னும்
      நாளார் மலர்பொழில் வாய்எழில் ஆயம் நணுகுகவே. .. 47
      கொளு
      தேங்கமழ் சிலம்பன் பாங்கிற் கூட்டியது. 29
      30. நின்று வருந்தல்
      பொய்யுடை யார்க்குஅரன் போல்அக லும்மகன் றாற்புணரின்
      மெய்யுடை யார்க்கவன் அம்பலம் போல மிகநணுகும்
      மையுடை வாட்கண் மணியுடை பூண்முலை வாணுதல்வான்
      பையுரை வாளர வத்து அல்குல் காக்கும்பைம் பூம்புனமே. 48
      கொளு
      பாங்கிற் கூட்டி பதிவயின் பெயர்வோன்
      நீங்கற்கு அருமை நின் று நினைந்தது.
      ------------
      மூன்றாம் அதிகாரம்
      3. இடந்தலை பாடு
      நூற்பா
      பொழிலிடை சேறல் இடந்தலை சொன்ன
      வழியடு கூட்டி வருந்திசி னோரே.
      1. பொழிலிடை சேறல்
      என்னறி வால்வந்தது அன்றிது முன்னும்இன் னும் முயன்றால்
      மன்னெறி தந்தது இருந்தன்று தெய்வம் வருந்தல் நெஞ்சே
      மின்எறி செஞ்சடை கூத்த பிரான்வியன் தில்லைமுந்நீர்
      பொன்னெறி வார்துறை வாய்ச்சென்று மின்தோய் பொழிலிடத்தே. .. 49
      கொளு
      ஐயரி கண்ணியை ஆடிட தேசென்று
      எய்துவன் எனநினைந்து ஏந்தல் சென்றது.
      -----------
      நான்காம் அதிகாரம்
      4. மதியுடம்படுத்தல்
      பேரின்ப கிளவி
      மதியுடன் படுத்தல் வரும்ஈ ரைந்தும்
      குருஅறி வித்த திருவருள் அதனை
      சிவத்துடன் கலந்து தெரிசனம் புரிதல்.
      1. பாங்கிடை சேறல்
      எளிதன்று இனிக்கனி வாய்வல்லி புல்லல் எழில்மதிக்கீற்று
      ஒளிசென்ற செஞ்சடை கூத்த பிரானைஉன் னாரின்என்கண்
      தெளிசென்ற வேற்கண் வருவித்த செல்லல்எல் லாம்தெளிவித்து
      அளிசென்ற பூங்குழல் தோழிக்கு வாழி அறிவிப்பனே. .. 50
      கொளு
      கரந்துறை கிளவியின் காதல் தோழியை
      இரந்துகுறை உறுவல்என்று ஏந்தல் சென்றது. 1
      2. குறையுற துணிதல்
      குவளை கருங்கண் கொடியேர் இடையி கொடிக்கடைக்கண்
      உவளை தனதுயிர் என்றது தன்னோடு உவமையில்லா
      தவளைத்தன் பால்வைத்த சிற்றம் பலத்தான் அருளிலர்போல்
      துவள தலைவந்த இன்னலின் னேயினி சொல்லுவனே. .. 51
      கொளு
      ஓரிடத்தவரை ஒருங்கு கண்டுதன்
      பேரிடர் பெருந்தகை பேச துணிந்தது.
      3. வேழம் வினாதல்
      இருங்களி யாய்இன்று யான்சிறு மாப்பஇன் பம்பணிவோர்
      மருங்குஅளி யாஅனல் ஆடவல் லோன்தில்லை யான்மலையீங்கு
      ஒருங்குஅளி யார்ப்ப உமிழ்மும் மதத்துஇரு கோட்டுஒருநீள்
      கருக்களி யார்மத யானையுண் டோவர கண்டதுவே. .. 52
      கொளு
      ஏழையர் இருவரும் இருந்த செவ்வியுள்
      வேழம் வினாஅய் வெற்பன் சென்றது.
      4. கலைமான் வினாதல்
      கருங்கண் ணனையறி யாமைநின் றோன்தில்லை கார்ப்பொழில்வாய்
      வருங்கள் நனையவண் டாடும் வளரிள வல்லியன்னீர்
      இருங்கண் அனைய கணைபொரு புண்புண ரிப்புனத்தின்
      மருங்கண் அனையதுண் டோவந்தது ஈங்கொரு வான்கலையே. .. 53
      கொளு
      சிலைமான் அண்ணல் கலைமான் வினாயது.
      5. வழி வினாதல்
      சிலம்பணி கொண்டசேர் சீறடி பங்கன்தன் சீரடியார்
      குலம்பணி கொள்ள எனைக்கொடு தோன்கொண்டு தான்அணியும்
      கலம்பணி கொண்டிடம் அம்பலம் கொண்டவன் கார்க்கயிலை
      சிலம்பணி கொண்டநும் சீறூர்க்கு உரைமின்கள் செல்நெறியே. .. 54
      கொளு
      கலைமான் வினாய கருத்து வேறறிய
      மலைமான் அண்ணல் வழிவி னாயது.
      6. பதி வினாதல்
      ஒருங்குஅட மூவெயில் ஒற்றை கணைகொள்சிற் றம்பலவன்
      கருங்கடம் மூன்றுகு நால்வா கரியுரி தோன்கயிலை
      இரும்கடம் மூடும் பொழில்எழில் கொம்பர்அன் னீர்களின்னே
      வருங்கள்தம் ஊர்பகர தால்பழி யோஇங்கு வாழ்பவர்க்கு. .. 55
      கொளு
      பதியடு பிறவினாய் மொழிபல மொழிந்து
      மதியுடம் படுக்க மன்னன் வலித்தது.
      7. பெயர் வினாதல்
      தாரென்ன வோங்கும் சடைமுடி மேல்தனி திங்கள்வைத்த
      காரென்ன ஆரும் கறைமிடற்று அம்பல வன்கயிலை
      ஊரென்ன என்னவும் வாய்திற வீர்ஒழி வீர்பழியேல்
      பேரென்ன வோஉரை யீர்விரை யீர்ங்குழற் பேதையரே. .. 56
      கொளு
      பேரமை தோளியர் பேர்வி னாயது.
      8. மொழி பெறாது கூறல்
      இரதம் உடைய நடம்ஆட்டு உடையவர் எம்முடையர்
      வரதம் உடைய அணிதில்லை அன்னவர் இப்புனத்தார்
      விரதம் உடையர் விருந்தொடு பேச்சின்மை மீட்டதன்றேல்
      சரத முடையர் மணிவாய் திறக்கில் சலக்கென்பவே. .. 57
      கொளு
      தேமொ ழியவர் வாய்மொழி பெறாது
      மட்டவிழ் தாரோன் கட்டு ரைத்தது.
      9. கருத்தறிவித்தல்
      வின்னிற வாணுதல் வேல்நிற கண்மெல் லியலைமல்லல்
      தன்னிறம் ஒன்றில் இருத்திநின் றோன்தனது அம்பலம்போல்
      மின்னிற நுண்ணிடை பேரெழில் வெண்ணகை பைந்தொடியீர்
      பொன்னிற அல்குலுக்கு ஆமோ மணிநிற பூந்தழையே. .. 58
      கொளு
      உரைத்தது உரையாது கருத்தறி வித்தது.
      10. இடை வினாதல்
      கலைக்கீழ் அகல்அல்குல் பாரமது ஆரம்கண் ஆர்ந்துஇலங்கு
      முலைக்கீழ சிறிதின்றி நிற்றல்முற் றாதுஅன்று இலங்கையர்கோன்
      மலைக்கீழ் விழச்செற்ற சிற்றம் பலவர்வண் பூங்கயிலை
      சிலைக்கீழ கணையன்ன கண்ணீர் எதுநுங்கள் சிற்றிடையே. .. 59
      கொளு
      வழிபதி பிறவினாய் மொழிபல மொழிந்தது.
      ---------------
      ஐந்தாம் அதிகாரம்
      5. இருவரும் உள்வழி அவன் வரவுணர்தல்
      நூற்பா
      ஐய நாடல் ஆங்கவை இரண்டும்
      மையறு தோழி அவன்வர வுணர்தல்.
      பேரின்ப கிளவி
      இருவரும் உள்வழி அவன்வர வுணர்தல்
      துறையோர் இரண்டும் சிவம்உயிர் விரவியது
      அருளே உணர்ந்திடல் ஆகும் என்ப.
      1. ஐயறுதல்
      பல்இல னாக பகலைவென் றோன்தில்லை பாடலர்போல்
      எல்இலன் நாகத்தோடு ஏனம் வினாஇவன் யாவன்கொலாம்
      வில்இலன் நாக தழைகையில் வேட்டைகொண் டாட்டம்மெய்ஓர்
      சொல்இலன் ஆகற்ற வாகட வான்இ சுனை புனமே. .. 60
      கொளு
      அடற்கதிர் வேலோன் தொடர்ச்சி நோக்கி
      தையல் பாங்கி ஐயம் உற்றது.
      2. அறிவு நாடல்
      ஆழமன் னோஉடைத்து இவ்வையர் வார்த்தை அனங்கன்நைந்து
      வீழமுன் நோக்கிய அம்பல தான்வெற்பின் இப்புனத்தே
      வேழமுன் னாய்க்கலை யாய்ப்பிற வாய்ப்பின்னும் மென்தழையாய்
      மாழைமெல் நோக்கி யிடையா கழிந்தது வந்துவந்தே. .. 61
      கொளு
      வெற்பன் வினாய சொற்பதம் நோக்கி
      நெறிகுழற் பாங்கி அறிவு நாடியது.
      -------------------
      ஆறாம் அதிகாரம்
      6. முன்னுற வுணர்தல்
      நூற்பா
      வாட்டம் வினாதீல் முன்னுற வுணர்தல்
      கூட்டி உணரும் குறிப்புரை யாகும்.
      பேரின்ப கிளவி
      முன்னுற உணர்தல் எனஇ·து ஒன்றும்
      சிவம்உயிர் கூடல் அருள்வினா வியது.
      1. வாட்டம் வினாதல்
      நிருத்தம் பயின்றவன் சிற்றம் பலத்துநெற் றித்தனிக்கண்
      ஒருத்தன் பயிலும் கயிலை மலையின் உயர்குடுமி
      திருத்தம் பயிலும் கனைகுடைந்து ஆடி சிலம்பெதிர்கூய்
      வருத்தம் பயின்றுகொல் லோவல்லி மெல்லியல் வாடியதே. .. 62
      கொளு
      மின்னிடை மடந்தை தன்னியல் நோக்கி
      வீங்கு மென்முலை பாங்கி பகர்ந்தது.
      --------------------
      ஏழாம் அதிகாரம்
      7. குறையுற வுணர்தல்
      நூற்பா
      குறையற்று நிற்றல் அவன்குறிப்பு அறிதல்
      அவள் குறிப்பு அறிதலோடு அவர்நினைவ எண்ணல்
      கூறிய நான்கும் குறையுற உணர்வென
      தேறிய பொருளிற் தெளிந்திசி னோரே.
      பேரின்ப கிளவி
      குறையுற உணர்தல் துறைஒரு நான்கும்
      உயிர்சிவத்து இடைசென்று ஒருப்படு தன்மை
      பணியாற் கண்டு பரிவால் வினாயது.
      1. குறையுற்று நிற்றல்
      மடுக்கோ கடலின் விடுதிமில் அன்றி மறிதிரைமீன்
      படுக்கோ பணிலம் பலகுளி கோபரன் தில்லைமுன்றில்
      கொடுக்கோ வளைமற்று நும்ஐயர்க்கு ஆயகுற் றேவல் செய்கோ
      தொடுக்கோ பணியீர் அணியீர் மலர்நும் கரிகுழற்கே. .. 63
      கொளு
      கறையற்ற வேலவன் குறையுற்றது.
      2. அவன் குறிப்பறிதல்
      அளியமன் னும்மொன்று உடைத்து அண்ணல் எண்ணரன் தில்லையன்னாள்
      கிளிமைமன்னுங்கடி செல்ல நிற்பின் கிளர்அளகத்து
      அளியமர்ந்து ஏறின் வறிதே யிருப்பின் பளிங்கடுத்த
      ஒளியமர தாங்கொன்று போன்றுறொன்று தோன்றும் ஒளிமுகத்தே. .. 64
      கொளு
      பொற்றொடி தோளிதன் சிற்றிடை பாங்கி
      வெறிப்பூஞ் சிலம்பன் குறிப்ப றிந்தது.
      3. அவள் குறிப்பறிதல்
      பிழைகொண்டு ஒருவி கெடாதுஅன்பு செய்யின் பிறவியென்னும்
      முழைகொண்டு ஒருவன்செல் லாமைநின்று அம்பலத்து ஆடுமுன்னோன்
      உழைகொண்டு ஒருங்குஇரு நோக்கம் பயின்றஎம் ஒண்ணுதல்மா
      தழைகொண்டு ஒருவன்என் னாமுன்னம் உள்ளம் தழைத்திடுமே. .. 65
      கொளு
      ஆங்கவள் குறிப்பு பாங்கி பகர்ந்தது.
      4. இருவர் நினைவும் ஒருவழி உணர்தல்
      மெய்யே இவற்குஇல்லை வேட்டையின் மேல்மனம் மீட்டு இவளும்
      பொய்யே புனத்தினை காப்பது இறைபுலி யூர்அனையாள்
      மையேர் குவளைக்கண் வண்டினம் வாழும்செ தாமரைவாய்
      எய்யேம் எனினும் குடைந்தின்ப தேனுண்டு எழில்தருமே. .. 66
      கொளு
      அன்புறு நோக்கு ஆங்கறிந்து
      இன்புறு தோழி எண்ணியது.
      -------------------
      எட்டாம் அதிகாரம்
      8. நாண நாட்டம்
      பேரின்ப கிளவி
      நாண நாட்ட துறையோர் ஐந்து
      மருள சிவத்தை அதிசயத்து உயிரின்
      பக்குவ தன்னை பலவும் வியந்தது.
      1. பிறை தொழுகென்றல்
      மைவார் கருங்கண்ணி செங்கரம் கூப்பு மறந்துமற்ற
      பொய்வா னவரிற் புகாதுதன் பொற்கழற் கேயடியேன்
      உய்வான் புகவொளிர் தில்லைநின் றோன்சடை மேலதுஒத்து
      செவ்வான் அடைந்த பசுங்கதிர் வெள்ளை சிறுபிறைக்கே. .. 67
      கொளு
      பிறைதொழு கென்று பேதை மாதரை
      நறுநுதற் பாங்கி நாண நாட்டியது 1
      2. வேறுபடுத்து கூறல்
      அக்கின்ற வாமணி சேர்கண்டன் அம்பல வன்மலயத்து
      இக்குன்ற வாணர் கொழுந்தி செழுந்தண் புனமுடையாள்
      அக்குன்ற ஆறுஅமர்ந்து ஆடச்சென் றாள்அங்கம் அவ்அவையே
      ஒக்கின்ற ஆரணங் கேஇணங் காகும் உனக்கவளே. .. 68
      கொளு
      வேய்வளை தோளியை வேறு பாடுகண்டு
      ஆய்வளை தோழி அணங்கென்றது.
      3. கனையாடல் கூறி நகைத்தல்
      செந்நிற மேனிவெண் ணீறணி வோன்தில்லை அம்பலம்போல்
      அந்நிற மேனிநின் கொங்கையில் அங்கழி குங்குமமும்
      மைந்நிற வார்குழல் மாலையும் தாதும் வளாய்மதஞ்சேர்
      இந்நிற மும்பெறின் யானும் குடைவன் இருஞ்சுனையே. .. 69
      கொளு
      மாண நாட்டிய வார்குழல் பேதையை
      நாண நாட்டி நகைசெய்தது.
      4. புணர்ச்சி உரைத்தல்
      பருங்கண் கவர்கொலை வேழ படையோன் படப்படர்தீ
      தருங்கண் ணுதல்தில்லை அம்பல தோன்தட மால்வரைவா
      கருங்கண் சிவப்ப கனிவாய் விளர்ப்பகண் ணார்அளிபின்
      வருங்கண் மலைமலர் சூட்டவற் றோமற்றவ் வான்கனையே. .. 70
      கொளு
      மணக்குறி நோக்கி புணர்ச்சி உரைத்தது.
      5. மதியுடம் படுதல்
      காகத்து இருகண் ணிற்கு ஒன்றே மணிகல தாங்குஇருவர்
      ஆகத்து ளோர்உயிர் கண்டனம் யாமின்றி யாவையுமாம்
      ஏகத்தொருவன் இரும்பொழில் அம்பல வன்மலையில்
      தோகைக்கும் தோன்றற்கும் ஒன்றாய் வரும்இன்ப துன்பங்களே. .. 71
      கொளு
      அயில்வே கண்ணியடு ஆடவன் தனக்கு உயிர் ஒன்றென
      மயிலியல் தோழி மதியுடம் பட்டது.
      ----------------
      ஒன்பதாம் அதிகாரம்
      9. நடுங்க நாட்டம்
      1.
      ஆவா இருவர் அறியா அடிதில்லை அம்பலத்து
      மூவா யிரவர் வணங்கநின் றோனையுன் னாரின் முன்னி
      தீவாய் உழுவை கிழித்ததுஅ தோசிறி தேபிழைப்பித்து
      ஆவா மணிவேல் பணிகொண்ட வாறின்றோர் ஆண்டகையே. .. 72
      கொளு
      நுடங்கிடைப்பாங்கி நடுங்க நாடியது.
      --------------------
      பத்தாம் அதிகாரம்
      10. மடல் திறம்
      பேரின்ப கிளவி
      மடல்துறை ஒன்பதும் சிவத்தினு மோக
      முற்ற உயிரருள் பற்றி உரைத்தது.
      1. ஆற்றாது உரைத்தல்
      பொருளா எனைப்புகுந்து ஆண்டு புரந்தரன் மாலயன்பால்
      இருளாய் இருக்கும் ஒளிநின்ற சிற்றம் பலமெனலாம்
      சுருளார் கருங்குழல் வெண்ணகை செவ்வா துடியிடையீர்
      அருளாது ஒழியின் ஒழியாது அழியும்என் ஆருயிரே. .. 73
      கொளு
      மல்லல்திரள் வரைத்தோளவன் சொல்லற்றாது சொல்லியது.
      2. உலகின்மேல் வைத்துரைத்தல்
      காய்சின வேலன்ன மின்னியல் கண்ணின் வலைகலந்து
      வீசின போதுள்ள மீனிழ தார்வியன் தென்புலியூர்
      ஈசன சாந்தும் எருக்கும் அணிந்தோர் கிழ்¢பிடித்து
      பாய்ச்சின மாவென ஏறுவர் சீறூர பனைமடலே. .. 74
      3. தன் துணிபு உரைத்தல்
      விண்ணை மடங்க விரிநீர் பரந்துவெற் புக்கரப்ப
      மண்ணை மடங்க வரும்ஒரு காலத்து மன்னிநிற்கும்
      அண்ணல் மடங்கல் அதள்அம் பலவன் அருளிலர்போல்
      பெண்ணை மடன்மிசை யான்வர பண்ணிற்றோர் பெண்கொடியே. .. 75
      கொளு
      மான வேலவன் மடம்மாமிசை
      யானும் ஏறுவன் என்ன உரைத்தது.
      4. மடலேறும் வகையரைத்தல்
      கழிகின்ற என்னையும் நின்றநின் கார்மயில் தன்னையும் யான்
      கிழியன்ற நாடி எழுதிக்கை கொண்டென் பிறவிகெட்டின்று
      அழிகின்றது ஆக்கிய தாள்அம் பலவன் கயிலையந்தேன்
      பொழிகின்ற சாரல்நும் சீறூர தெருவிடை போதுவனே. .. 76
      கொளு
      அடல்வேலன் அழிவுற்று
      மடலேறும் வகையுரைத்தது.
      5. அருளால் அரிதென விலக்கல்
      நடனாம் வணங்கும்தொல் லோன்எல்லை நான்முகன் மாலறியா
      கடனாம் உருவத்து அரன்தில்லை மல்லற் கண் ணார்ந்த பெண்ணை
      உடனாம் பெடையடுஆண் சேவலும் முட்டையும் கட்டழித்து
      மடனாம் புனைதரின் யார்கண்ண தோமன்ன இன்னருளே. ... 77
      கொளு
      அடல்வேல் அண்ணல் அருளுடை மையின்
      மடல் ஏற்றுனக்கு அரிதென்றது.
      6. மொழிநடை எழுதல் அரிதென விலக்கல்
      அடிச்சந்தம் மால்கண் டிலாதன காட்டிவந்து ஆண்டுகொண்டென்
      முடிச்சந்த மாமலர் ஆக்குமுன் னோன்புலி யூர்புரையும்
      கடிச்சந்த யாழ்கற்ற மென்மொழி கன்னி அனநடைக்கு
      படிச்சந்தம் ஆக்கும் படம்உள வோநும் பரிசகத்தே. .. 78
      கொளு
      அவயவம் அரிதின் அண்ணல் தீட்டினும்
      இவையிவை தீட்டல் இயலாது என்றது.
      7. அவயவம் எழுதல் அரிதென விலக்கல்
      யாழும் எழுதி எழில்முத்து இருளின்மென்பூ
      சூழும் எழுதியர் தொண்டையும் தீட்டியென் தொல்பிறவி
      ஏழும் எழுதா வகைசிதை தோன்புலி யூரிளமாம்
      போழும் எழுதிற்றொர் கொம்பருண் டேற்கொண்டு போதுகவே. .. 79
      கொளு
      அவயவம் ஆனவை இவைஇவை என்றது.
      8. உடம்படாது விலக்கல்
      ஊர்வாய் ஒழிவாய் உயர்பெண்ணை திண்மடல் நின்குறிப்பு
      சீர்வாய் சிலம்ப திருத்த இருந்திலம் ஈசாதில்லை
      கார்வாய் குழலிக்குன்ஆதரவு ஒதிக்கற் பித்துக்கண்டால்
      ஆர்வாய் தரின்அறி வார்பின்னை செய்க அறிந்தனவே. .. 80
      கொளு
      அடுபடை அண்ணல் அழிதுயர் ஒழிகென
      மடநடை தோழி மடல்வி லக்கியது.
      9. உடம்பட்டு விலக்கல்
      பைந்நாண் அரவன் படுகடல் வாய்ப்படு நஞ்சமுதாம்
      மைந்நாண் மணிகண்டன் மன்னும் புலியூர் மணந்தபொன்இம்
      மொய்ந்நாண் முதுதிரை வாயான் அழுந்தினும் என்னின்முன்னும்
      இந்நாள் இதுமது வார்குழ லாட்குஎன்கண் இன்னருளே. ... 81
      கொளு
      அரவரு நுண்ணிடை குரவரு கூந்தல் என்
      உள்ள கருத்து விள்ளாள் என்றது.
      -----------------------------
      பதினொன்றாம் அதிகாரம்
      11. குறை நயப்பு கூறல்
      பேரின்ப கிளவி
      குறைந புத்துறை அவை இரு நான்கும்
      சிவந்தோடு உயிரை சேர்க்க வேண்டி
      உயிர்ப்பரிவு எடுத்தெடுத்து உரைத்துஅறி உறுத்தல்.
      1. குறிப்பறிதல்
      தாதேய் மலர்க்குஞ்சி அஞ்சிறை வண்டுதன் தேன்பருகி
      தேதே எனும்தில்லை யோன்சேய் எனச்சின் வேல்ஒருவர்
      மாதே புனத்திடை வாளா மருவர்வந்து யாதும்சொல்லார்
      யாதே செயத்த கதுமது வார்குழல் ஏந்தியே. .. 82
      கொளு
      நறைவளர் கோதையை குறைந பித்தற்கு
      உள்ளறி குற்ற ஒள்ளிழை யுரைத்தது.
      2. மென்மொழியால் கூறல்
      வரிசேர் தடங்கண்ணி மம்மர்கைம் மிக்கென்ன மாயங்கோலோ
      எரிசேர் தளிரென்ன மேனியென் ஈர்ந்தழை யன்புலியூர
      புரிசேர் சடையோன் புதல்வன்கொல் பூங்கணை வேள்கொலென்ன
      தெரியேம் உரையன் பிரியான் ஒருவன்இ தேம்புனமே. .. 83
      கொளு
      ஒளிருறு வேலவன் தளர்வறு கின்றமை
      இன்மொழி யவட்கு மென்மொழி மொழிந்தது.
      3. விரவி கூறல்
      நீகண் டணையெனின் வாழலை நேரிழை அம்பலத்தான்
      சேய்கண் டனை யன்சென் றாங்கோர் அலவன்தன் சீர்ப்பெடையின்
      வாய்கண் டனையதோர் நாவற் கனிநனி நல்கக்கண்டு
      பேய்கண்டு அனையதொன் றாகிநின் றான்அ பெருந்தகையே. .. 84
      கொளு
      வன்மொழியன்மனம் மெலிவது அஞ்சி
      மென்மொழி விரவி மிகுந்து ரைத்தது.
      4. அறியாள் போறல்
      சங்கம் தருமுத்தி யாம்பெற வான்வழி தான்கெழுமி
      பொங்கும் புனற்கங்கை தாங்கி பொலிகழி பாறுலவு
      துங்க மலிதலை யேந்தலின் ஏந்திழை தொல்லைப்பன்மா
      வங்கம் மலிகலி நீர்தில்லை வானவன் நேர்வருமே. .. 85
      கொளு
      அறியாள் போன்று குறியாள் கூறியது.
      5. வஞ்சித்து உரைத்தல்
      புரங்கட தான்அடி காண்பான் புவிவிண்டு புக்கறியாது
      இரங்கிடுஎ தாய்என்று இரப்பத்தன் ஈரடிக்கு என்இரண்டு
      கரங்கள்த தான் ஒன்று காட்டமற்று ஆங்கதும் காட்டிடென்று
      வரங்கிட தான்தில்லை அம்பல முன்றில் அம் மாயவனே. .. 86
      கொளு
      நெஞ்சம் நெகிழ்வகை வஞ்சித்து இவையிவை
      செஞ்சடை யோன்புகழ் வஞ்சிக்கு உரைத்தது.
      6. புலந்து கூறல்
      உள்ள படுவன வுள்ளி உரைத்த கவர்க்குரைத்து
      மெள்ள படிறு துணிதுணி யேல்இது வேண்டுவல்யான்
      கள்ள படிறர்க்கு அருளா அரன்தில்லை காணலர்போல்
      கொள்ள படாது மறப்பது அறிவிலென் கூற்றுக்களே. .. 87
      கொளு
      திருந்திய சொல்லில் செவ்வி பெறாது
      வருந்திய சொல்லின் வகுத்து ரைத்தது.
      7. வன்மொழியாற் கூறல்
      மேவிஅம் தோல் உடு கும்தில்லை யான்பொடி மெய்யிற்கையில்
      ஓவியம் தோன்றும் கிழிநின் எழில்என்று உரையுளதால்
      தூவியம் தோகையன் னாய்என்ன பாவம்சொல் ஆடல்செய்யான்
      பாவிஅ தோபனை மாமடல் ஏறக்கொல் பாவித்ததே. .. 88
      கொளு
      கடல்உலகு அறி கமழல துறைவன்
      மடலே றும்என வன்மொழி மொழிந்தது.
      8. மனத்தொடு நேர்தல்
      பொன்னார் சடையோன் புலியூர் புகழார் எனப்புரிநோய்
      என்னால் அறிவில்லை யானொன்று உரைக்கிலன் வந்தயலார்
      சொன்னார் எனும்இ துரிகதுன் னாமை துணைமனனே
      என்ஆழ் துயர்வல்லை யேற்சொல்லு நீர்மை இனியவர்க்கே. .. 89
      கொளு
      அடல்வேலவன் ஆற்றானென
      கடல்அமிழ் தன்னவன் காணல் உற்றது.
      -----------------------
      பன்னிரண்டாம் அதிகாரம்
      12. சேட்படை
      பேரின்ப கிளவி
      சேட்படை இருப தாறு துறையும்
      கிடையா இன்பம் கிடைத்தலால் உயிரை
      அருமை காட்டி அறியாள் போல
      பலபல அருமை பற்றி உரைத்த
      அருளே சிவத்தோடு ஆக்க அருளல்.
      1. தழைகொண்டு சேறல்
      தேமென் கிளவிதன் பங்கத்து இறையுறை தில்லையன்னீர்
      பூமென் தழையும்அம் போதும்கொள் ளீர்தமி யேன்புலம்ப
      ஆமென்று அருங்கோடும் பாடுகள் செய்துநும் கண்மலராம்
      காமன் கணைகொண்டு அலைகொள்ள வோமுற்ற கற்றதுவே. .. 90
      கொளு
      கொய்ம் மலர குழலி குறைந யந்தபின்
      கையுறை யோடு காளை சென்றது.
      2. சந்தன தழை தகாதென்று மறுத்தல்
      ஆர தழையரா பூண்டுஅம் பலத்துஅன லாடிஅன்பர்க்கு
      ஆர தழையன்பு அருளிநின் றோன்சென்ற மாமலயத்து
      ஆர தழையண்ணல் தந்தால் இவைஅவள் அல்குல்கண்டால்
      ஆர தழைகொடு வந்தார் எனவரும் ஐயுறவே. .. 91
      கொளு
      பிறை நுதற் பே¨¡தயை குறைந பித்தது
      உள்ளறி குற்றம் ஒள்ளிழை யுரைத்தது.
      3. நிலத்தின்மை கூறிமறுத்தல்
      முன்தகர்த்து எல்லா இமையோரை யும்பின்னை தக்கன்முத்தீ
      சென்றுஅகத்து இல்லா வகைசினத்த தோன்திருந்து அம்பலவன்
      குன்றகத்து இல்லா தழைஅண் ணல்தந்தால் கொடிச்சியருக்கு
      இன்றுஅகத்து இல்லா பழிவந்து மூடும்என்று எள்குதுமே. .. 92
      கொளு
      கொங்கலர் தாரோய் கொணர்ந்த கொய்தழை
      எங்குல தாருக்கு ஏலாது என்றது.
      4. நினைவறிவு கூறி மறுத்தல்
      யாழார் மொழிமங்கை பங்கத்து இறைவன் எறிதிரைநீர்
      ஏழாய் எழுமொழி லாய்இரு தோன்நின்ற தில்லையன்ன
      சூழார் குழல்எழில் தொண்டைச்செவ் வாய்நவ்வி சொல்லறிந்தால்
      தாழாது எதிர்வந்து கோடும் சிலம்ப தரும்தழையே. ... 93
      கொளு
      மைதழை கண்ணி மனமறிந்து அல்லது
      கொய்தழை தந்தால் கொள்ளேம் என்றது.
      5. படைத்து மொழியான் மறுத்தல்
      எழில்வாய் இளவஞ்சி யும்விரும் பும்மற்று இறைகுறையுண்டு
      அழல்வாய் அவிரொளி அம்பலத்து ஆடும்அம் சோதி அம்தீம்
      குழல்வாய் மொழிமங்கை பங்கன்குற் றாலத்து கோலப்பிண்டி
      பொழில்வாய் தடவரை வாயல்லது இல்லைஇ பூந்தழையே. ... 94
      கொளு
      அருந்தழை மேன்மேல் பெருந்தகை கொணர
      படைத்துமொழி கிளவியில் தடுத்தவள் மொழிந்தது.
      6. நாணுரைத்து மறுத்தல்
      உறுங்கள்நி வந்த கணையுர வோன்பொடி யாய் ஒடுங்க
      தெறுங்கண்நி வந்தசிற்றம்பல வன்மலை சிற்றிலின்வாய்
      நறுங்கண்ணி சூட்டினும் நாணும்என் வாணுதல் நாகத்தொண்பூங்
      குறுங்கண்ணி வேயந்திள மந்திகள் நாணும்இ குன்றிடத்தே. .. 95
      கொளு
      வாணுதற் பேதையை நாணுதல் உரைத்தது
      7. இசையாமை கூறி மறுத்தல்
      நறமனை வேங்கையின் பூப்பயில் பாறையை நாகநண்ணி
      மறமனை வேங்கை எனநனி அஞ்சும்அஞ் சார்சிலம்பா
      குறமனை வேங்கை சுணங்கொடு அணங்கலர் கூட்டுபவோ
      நிறமனை வேங்கை அதள்அம் பலவன் நெடுவ ரையே. .. 96
      கொளு
      வசைநீர் குலத்திற்கு இசையாது என்றது.
      8. செவ்வியிலள் என்று மறுத்தல்
      சுற்றில கண்டன்னம் மென்னடை கண்மலர் நோக்கருள
      பெற்றில மென்பிணை பேச்சு பெறாகிள்ளை பிள்ளையின்றொன்று
      உற்றிபள் உற்றது அறிந்திலள் ஆகத்து ஒளிமிளுரும்
      புற்றில வாளர வன்புலி யூரன்ன பூங்கொடியே. ... 97
      கொளு
      நவ்வி நோக்கி செவ்வியிலள் என்றது.
      9. காப்புடைத்தென்று மறுத்தல்
      முனிதரும் அன்னையும் என்ஐயர் சாலவும் மூர்க்கர்இன்னே
      தனிதரும் இந்நில தன்றுஐய குன்றமும் தாழ்சடைமேல்
      பனிதரு திங்கள் அணிஅம் பலவர் பகைசெகுக்கும்
      குனிதரு திண்சிலை கோடுசென் றான்சுடர கொற்றவனே. .. 98
      கொளு
      காப்புடை தென்று சேட்ப டுத்தது.
      10. நீயே கூறென்று மறுத்தல்
      அந்தியின் வாயெழில் அம்பலத்து எம்பரன் அம்பொன்வெற்பின்
      பந்தியின் வாய்ப்பல வின்சுளை பைந்தே னொடும்கடுவன்
      மந்தியின் வாய்க்கொடுத்து ஓம்பும் சிலம்ப மனம்கனிய
      முந்தியின் வாய்மொழி நீயே மொழிசென்றம் மொய்குழற்கே. .. 99
      கொளு
      அஞ்சுதும் பெரும பஞ்சின்மெல் லடியை
      கூறுவ நீயே கூறு கென்றது.
      11. குலமுறை கூறி மறுத்தல்
      தெங்கம் பழம்கமு கின்குலை சாடி கதலிசெற்று
      கொங்கம் பழனத்து ஒளிர்குளிர் நாட்டினை நீயுமைகூர்
      பங்கம் பலவன் பரங்குன்றில் குன்றன்ன மாபதைப்ப
      சிங்கம் திரிதரு சீறூர சிறுமிஎம் தேமொழியே. .. 100
      கொளு
      தொழுகுலத்தீர் சொற்காகேம்
      இழிகுலத்தேம் என்வுரைத்தது.
      12. நகையாடி மறுத்தல்
      சிலையன்று வாணுதல் பங்கன்சிற் றம்பல வன்கயிலை
      மலையன்று மாமுகத்து எம்ஐயர் எய்கணை மண்குளிக்கும்
      கலையன்று வெங்கணை யோடு கடுகிட்ட தென்னிற்கெட்டேன்
      கொலையென்று திண்ணிய வாறுஐயர் கையிற் கொடுஞ்சிலையே. .. 101
      கொளு
      வாள்தழை எதிராது சேட்படு தற்கு
      மென்னகை தோழி இன்னகை செய்தது.
      13. இரக்கத்தோடு மறுத்தல்
      மைத்தழை யாநின்ற மாமிடற்று அம்பல வன்கழற்கே
      மெய்த்தழை யாநின்ற அன்பினர் போல விதிர்விதிர்த்து
      கைத்தழை யேந்தி கடமா வினா கையில் வில்லின்றியே
      பித்தழை யாநிற்ப ரால்என்ன பாவம் பெரியவரே. .. 102
      கொளு
      கையுறை எதிராது காதல் தோழி ஐய நீபெரிது அயர்த்தனை என்றது.
      14. சிறப்பின்மை கூறி மறுத்தல்
      அக்கும் அரவும் அணிமணி கூத்தன்சிற் றம்பலமே
      ஓக்கும் இவளது ஒளிர்உரு அஞ்சி மஞ் சார்சிலம்பா
      கொக்கும் சுனையும் குளிர்தளி ரும்கொழும் போதுகளும்
      இக்குன்றில் என்றும் மலர்ந்தறி யாத இயல்பினவே. .. 103
      கொளு
      மாந்தளிரும் மலர்நீலமும் ஏந்தல் இம்மலை இல்லை என்றது.
      15. இளமை கூறி மறுத்தல்
      உருகு தலைச்சென்ற உள்ளத்தும் அம்பல தும்ஒளியே
      பெருகு தலைச்சென்று நின்றோன் பெருந்துறை பிள்ளைகள்ளார்
      முருகு தலைச்சென்ற கூழை முடியா முலைபொடியா
      ஒருகு தலைச்சின் மழலை கென் னோஐய ஓதுவதே. .. 104
      கொளு
      முளைஎயிற்று அரிவை விளைவிலள் என்றது.
      16. மறைத்தமை கூறி நகைத்துரைத்தல்
      பண்டுஆல் இயலும் இலைவளர் பாலகன் பார்கிழித்து
      தொண்டால் இயலும் சுடர்க்கழ லோன்தொல்லை தில்லையின்வாய்
      வண்டால் இயலும் வளர்பு துறைவ மறைக்கின்என்னை
      கண்டால் இயலும் கடனில்லை கொல்லோ கருதியதே. .. 105
      கொளு
      என்னை மறைத்தபின் எண்ணியது அரிதென
      நன்னுதல் தோழி நகைசெய்தது.
      17. நகை கண்டு மகிழ்தல்
      மத்தகம் சேர்தனி நோக்கினன் வாக்கிறந்து ஊறமுதே
      ஒத்தகம் சேர்ந்தென்னை உய்யநின் றோன்தில்லை ஒத்திலங்கு
      முத்தகம் சேர்மென் னகை பெரு தோளி முகமதியின்
      வித்தகம் சேர்மெல்லென் நோக்கமன்றோஎன் விழுத்துணையே. .. 106
      கொளு
      இன்னகை தோழி மென்னகை கண்டு
      வண்ண கதிர்வேல் அண்ணல் உரைத்தது.
      18. அறியாள் போன்று நினைவு கேட்டல்
      விண்இற தார்நிலம் விண்டலர் என்றுமி கார்இருவர்
      கண்இற தார்தில்லை அம்பல தார்கழு குன்றினின்று
      தண்நறு தாதுஇவர் சந்தன சோலைப்ப தாடுகின்றார்
      எண்இற தார்அவர் யார்கண்ண தோமன்ன நின்னருளே. .. 107
      கொளு
      வேந்தன் சொன்ன மாந்தளிர் மேனியை
      வெறியார் கோதை யறியேன் என்றது.
      19. அவயவம் கூறல்
      குவவின கொங்கை குரும்பை குழல்கொன்றை கொவ்வைசெவ்வாய்
      கவவின வாள்நகை வெண்முத்தம் கண்மலர் செங்கழுநீர்
      தவவினை தீர்ப்பவன் தாழ்பொழில் சிற்றம்பலம் அனையாட்கு
      உவவின நாள்மதி போன்றொளிர் கின்றது ஒளிமுகமே. .. 108
      கொளு
      அவயவம் அவளுக்கு இவைஇவை என்றது
      20. கண் நயந்து உரைத்தல்
      ஈசற்கு யான்வைத்த அன்பின் அகன்றவன் வாங்கியஎன்
      பாசத்தின் காரென்று அவன்தில்லை யின்ஒளி போன்றவன்தோள்
      பூகஅ திருநீறு எனவெளுத்து அங்கவன் பூங்கழல்யாம்
      பேசுஅ திருவார்த்தை யிற்பெரு நீளம் பெருங்கண்களே. .. 109
      கொளு
      கண்இணை பிறழ்வன வண்ணம் உரைத்தது.
      21. தழையெதிர்தல்
      தோலா கரிவென்ற தற்கும் துவள்விற்கும் இல்லின்தொன்மைக்கு
      ஏலா பரிசுஉள வேயன்றி ஏலேம் இருஞ்சிலம்ப
      மாலார்க்கு அரிய மலர்க்கழல் அம்பல வன்மலையில்
      கோலா பிரசம் அன் னாட்குஐய நீதந்த கொய் தழையே. .. 110
      கொளு
      அகன்ற இடத்து ஆற்றாமை கண்டு கவன்ற தோழி கையுறை எதிர்ந்தது
      22. குறிப்பறிதல்
      கழைகாண் டலும்சுளி யுங்களி யானையன் னான்கரத்தில்
      தழைகாண் டலும்பொய் தழைப்பமுன் காண்பன்இன்று அம்பலத்தான்
      உழைகாண் டலும்நினை பாகும்மெல் நோக்கிமன் நோக்கங்கண்டால்
      இழைகாண் பணைமுலை யாய்அறி யேன்சொல்லும் ஈடவற்கே. .. 111
      கொளு
      தழை எதிராது ஒழிவதற்கோர்
      சொல்லறி யேனென பல்வளைக்கு உரைத்தது.
      23. குறிப்பறிந்து கூறல்
      தவளத்த நீறணி யும்தட தோள்அண்ணல் தன்னொருபால்
      அவள்அத்த னாம்மக னாம்தில்லை யான்அன்று உரித்ததன்ன
      கவளத்த யானை கடிந்தார் கரத்தகண் ணார்தழையும்
      துவள தகுவன வோசுரும் பார்குழல் தூமொழியே. .. 112
      கொளு
      ஏழைக்கு இருந்தழை தோழிகொண்டு உரைத்தது. 23
      24. வகுத்துறைத்தல்
      ஏறும் பழிதழை யேன்பின்மற்று ஏலா விடின்மடன்மா
      ஏறும் அவன்இட பங்கொடி ஏற்றிவந்து அம்பலத்துள்
      ஏறும் அரன்மன்னும் ஈங்கோய் மலைநம் இரும்புனம்காய்ந்து
      ஏறும் மலைதொலை தாற்குஎன்னை யாம்செய்வது ஏந்திழையே. .. 113
      கொளு
      கடித்தழை கொணர்ந்த காதல் தோழி
      மடக்கொடி மாதர்க்கு வகுத்துரைத்தது.
      25. தழையேற்பித்தல்
      தெவ்வரை மெய்யெரி காய்சிலை ஆண்டென்னை ஆண்டுகொண்ட
      செவ்வரை மேனியன் சிற்றம் பலவன் செழுங்கயிலை
      அவ்வரை மேலன்றி யில்லைகண் டாய்உள்ள வாறுஅருளான்
      இவ்வரை மேற்சிலம் பன்எளி தில்தந்த ஈர்ந்தழையே. .. 114
      கொளு
      கருங்குழல் மடந்தைக்கு அரும்பெறல் தோழி
      இருந்தழை கொள்கென விரும்பி கொடுத்தது.
      26. தழை விருப்புரைத்தல்
      பாச தளையறுத்து ஆண்டுகொண் டோன்தில்லை அம்பலம் சூழ்
      தேச தனசெம்மல் நீத தனசென்று யான்கொடுத்தேன்
      பேசிற் பெருகும் சுருங்கு மருங்குழல் பெயர்ந்தரைத்து
      பூசிற் றிலள்அன்றி செய்யா தனஇல்லை பூந்தழையே. .. 115
      கொளு
      விருப்பவள் தோழி பொருப்பற்கு உரைத்தது.
      ---------------
      பதின்மூன்றாம் அதிகாரம்
      13. பகற்குறி
      பேரின்ப கிளவி
      பகற்குறி துறைமு பதினோடு இரண்டு
      இயற்கைபோல் சிவத்தோடு இயலுறு கூட்டி
      பிரித்த அருளின் பெரும்பகற் குறியே.
      1. குறியிடங் கூறல்
      வானுழை வாள்அம்ப லத்தரன் குன்றென்று வட்கிவெய்யோன்
      தானுழை யாஇரு ளாய்ப்புற நாப்பண்வண் தாரகை போல்
      தேனுழை நாக மலர்ந்து திகழ்பளிங் கான்மதியோன்
      கானுழை வாழ்வுபெற் றாங்கெழில் காட்டுமொர் கார்ப்பொழிலே. .. 116
      கொளு
      வாடிடத்து அண்ணல் வண்தழை எதிர்ந்தவள்
      ஆடிடத்து இன்னியல்பு அறிய உரைத்தது.
      2. ஆடிடம் படர்தல்
      புயல்வளர் ஊசல்முன் ஆடிப்பொன் னேபின்னை போய்ப்பொலியும்
      அயல்வளர் குன்றில்நின் றேற்றும் அருவி திருவுருவில்
      கயல்வளர் வாட்கண்ணி போதரு காதரம் தீர்த்தருளும்
      தயல்வளர் மேனியன் அம்பல தான்வரை தண்புனத்தே. .. 117
      கொளு
      வண்தழை எதிர்த்த ஒண்டொடி பாங்கி
      நீடமை தோளியடு ஆடிடம் படர்ந்தது.
      3. குறியிடத்து கொண்டு சேறல்
      தினைவளங் காத்து சிலம்பெதிர் கூஉய்ச்சிற்றில் முற்றிழைத்து
      கனைவளம் பாய்ந்து துணைமலர் கொய்து தொழுதெழுவர்
      வினைவளம் நீறெழ நீறணி அம்பல வன்தன்வெற்பில்
      புனைவளர் கொம்பர்அன் னாய்அன்ன காண்டும் புனமயிலே. .. 118
      கொளு
      அணிவளர் ஆடிடத்து ஆய வெள்ளம்
      மணிவளர் கொங்கையை மருங்குஅ கன்றது.
      4. இடத்துய்த்து நீங்கல்
      நரல்வேய் இனநின தோட்டுஉடைந்து உக்கநன் முத்தம்சிந்தி
      பரல்வேய் அறையுறை கும்பஞ் சடிப்பரன் தில்லையன்னாய்
      வரல்வேய் தருவன்இங் கேநில்உங் கேசென்றுன் வார்குழற்குஈர்ங்
      குரல்வேய் அளிமுரல் கொங்கார் தடமலர் கொண்டுவந்தே. .. 119
      கொளு
      மடத்தகை மாதரை இடத்தகத்து உய்த்து
      நீங்கல் உற்ற பாங்கி பகர்ந்தது.
      5. உவந்துரைத்தல்
      படமா கணப்பள்ளி இக்குவ டாக்கி பங்கயக்கண்
      நெடுமால் எனஎன்னை நீநினை தோநெஞ்ச தாமரையே
      இடமா இருக்கலுற் றோதில்லை நின்றவன் ஈர்ங்கயிலை
      வடமார் முலைமட வாய்வந்து வைஇற்றுஇவ் வார்பொழிற்கே. .. 120
      கொளு
      களிமயிற் சாயலை ஒருசிறை கண்ட
      ஒளிமலர தாரோன் உவந்துரைத்தல். 5
      16. மருங்கணைதல்
      தொத்தீன் மலர்ப்பொழில் தில்லைத்தொல் லோன்அருள் என்னமுன்னி
      முத்தீன் குவளைமென் காந்தளின் மூடித்தன் ஏர்அளப்பான்
      ஒத்துஈர்ங் கொடியின் ஒதுங்குகின் றாள்மருங் குல்நெருங்க
      பித்தீர் பணைமுலை காள்என்னுக்கு இன்னும் பெருக்கின்றதே. .. 121
      கொளு
      வாணுதல் அரிவை நாணுதல் கண்ட
      கோதை வேலவன் ஆதர வுரைத்தது.
      7. பாங்கியறிவுரைத்தல்
      அளிநீடு அளகத்தின் அட்டிய தாதும் அணியணியும்
      ஒளிநீள் கரிகுழல் சூழ்ந்தஒண் மாலையும் தண்நறவுண்
      களிநீ யெனச்செய் தவன்கடல் தில்லையன் னாய்கலங்கல்
      தெளிநீ அனையபொன் னேபண்ணு கோலம் திருநுதலே. .. 122
      கொளு
      நெறி குழற் பாங்கி அறிவறி வித்தது.
      8. உண்மகிழ்ந்துரைத்தல்
      செழுநீர் மதிக்கண்ணி சிற்றம் பலவன் திருக்கழலே
      கெழுநீர் மையில்சென்று கிண்கிணி வா கொள்ளும் கள்ளகத்த
      கழுநீர் மலரிவள் யானதன் கண்மரு விப்பிரியா
      கொழுநீர் நறப்பரு கும்பெரு நீர்மை அளிகுவமே. .. 123
      கொளு
      தண்மலர கோதையை
      உண்மகிழ்ந்து உரைத்தது.
      9. ஆயத்து உய்த்தல்
      கொழுந்தா ரகைமுகை கொண்டலம் பாசடை விண்மடுவில்
      எழுந்தார் மதிக்கம லம்எழில் தந்தென இப்பிறப்பில்
      அழுந்தா வகையெனை ஆண்டவன் சிற்றம் பலம்அனையாய்
      செழுந்தாது அவிழ்பொழில் ஆயத்து சேர திருத்தகவே. .. 124
      கொளு
      கனைகடல் அன்ன கார்மயில் கணத்து
      புனைமட மானை புகவிட்டது.
      10. தோழி வந்து கூடல்
      பொன்அனை யான்தில்லை பொங்கர வம்புன் சடைமிடைந்த
      மின்னனை யான்அருள் மேலவர் போன்மெல் விரல் வருந்த
      மென்னனை யாய்மறி யேபறி யேல்வெறி யார்மலர்கள்
      இன்னன யான்கொணர தேன்மண தாழ்குழற்கு ஏய்வனவே. .. 125
      கொளு
      நெறியுறு குழலியை நின்றிடத்து உய்த்து
      பிறைநுதற் பாங்கி பெயர்ந்தவட்கு உரைத்தது.
      11. ஆடிடம் புகுதல்
      அறுகால் நிறைமலர் ஐம்பால் நிறையணி தேன் அணியார்
      துறுகான் மலர்த்தொத்து தோகைதொல் லாயம்மெல் லப்புகுக
      சிறுகால் மருங்குல் வருந்தா வகைமிக என்சிரத்தின்
      உறுகால் பிறர்க்குஅரி யோன்புலி யூரன்ன ஒண்ணுதலே. .. 126
      கொளு
      தனிவிளை யாடிய தாழ்குழல் தோழி
      பனிமதி நுதலியடு ஆடிடம் படர்ந்தது.
      12. தனிகண்டு உரைத்தல்
      தழங்கும் அருவிஎம் சீறூர் பெரும இதுமதுவும்
      கிழங்கும் அருந்தி இருந்து எம்மோடு இன்று கிளர்ந்துகுன்றர்
      முழங்கும் குரவை இரவிற்கண்டு ஏகுக முத்தன்முத்தி
      வழங்கும் பிரான்எரி யாடிதென் தில்லை மணிநகர்க்கே. .. 127
      கொளு
      வேயத்த தோளியை ஆயத்து உயத்து
      குனிசிலை அண்ணலை தனிகண்டு உரைத்தது.
      13. பருவங் கூறி வரவு விலக்கல்
      தள்ளி மணிசிந்தம் உந்தி தறுகண் கரிமருப்பு
      தெள்ளி நறவம் திசைதிசை பாயும் மலைச்சிலம்பா
      வெள்ளி மலையன்ன மால்விடை யோன்புலி யூர்விளங்கும்
      வள்ளி மருங்குல் வருத்துவ போன்ற வனமுலையே. .. 128
      கொளு
      மாந்தளிர் மேனியை வரைந்து எய்தாது
      ஏந்தல் இவ்வாறு இயங்கல் என்றது. 13
      14. வரைவு உடம்படாது மிகுத்து கூறல்
      மாடஞ்செய் பொன்னக ரும்நிக ரில்லைஇம் மாதர்க்கென்ன
      பீடஞ்செய் தாமரை யோன்பெற்ற பிள்ளையை உள்ளவரை
      கீடஞ்செய் தென்பிற புக்கெட தில்லைநின் றோன்கயிலை
      கூடஞ்செய் சாரல் கொடிச்சியென் றோநின்று கூறுவதே. .. 129
      கொளு
      வரைவு கடாய வாணுதல் தோழிக்கு
      விரைமலர தாரோன் மிகுத்துரைத்தது.
      15. உண்மை கூறி வரைவு கடாதல்
      வேய்தந்த வெண்முத்தம் சிந்துபைங் கார்வரை மீன்பரப்பி
      சேய்தந்த வானக மானும் சிலம்பதன் சேவடிக்கே
      ஆய்தந்த அன்புத தாட்கொண்ட அம்பல வன்மலையில்
      தாய்தந்தை கானவர் ஏனல்எங் காவல்இ தாழ்வரையே. .. 130
      கொளு
      கல்வரை நாடன் இல்லது உரைப்ப
      ஆங்கவள் உண்மை பாங்கி பகர்ந்தது.
      16. வருத்தங் கூறி வரைவு கடாதல்
      மன்னும் திருவரு தும்வரை யாவிடின் நீர்வரைவென்று
      உன்னும் அதற்கு தளர்ந்தொளி வாடுதிர் உம்பரெலாம்
      பன்னும் புகழ்ப்பர மன்பரஞ் சோதிசிற் றம்பலத்தான்
      பொன்னங் கழல்வழு தார்புலன் என்ன புலம்புவனே. .. 131
      கொளு
      கினங்குழை முகத்தவள் மனங்குழை வுணர்த்தி
      நிரைவளை தோளி வரைவு கடாயது.
      17. தாய் அச்சங்கூறி வரைவு கடாதல்
      பனித்துண்டம் சூடும் படர்சடை அம்பல வன்உலகம்
      தனித்துண் டவன்தொழும் தாளோன் கயிலை பயில்சிலம்பா
      கனித்தொண்டை வாய்ச்சி கதிர்முலை பாரிப்பு கண்டழிவுற்று
      இனிக்கண் டிலம்பற்று சிற்றிடைக்கு என்றஞ்சும் எம்அனையே. .. 132
      கொளு
      மடத்தகை மாதர்க்கு அடுப்பன அறியா
      வேற்கண் பாங்கி ஏற்க உரைத்தது.
      18. இற்செறி அறிவித்து வரைவு கடாதல்
      ஈவிளை யாட நறவிளைவு ஓர்ந்தெமர் மால்பியற்றும்
      வேய்விளை யாடும்வெற் பாவுற்று நோக்கிஎம் மெல்லியலை
      போய்விளை யாடல்என் றாள்அன்னை அம்பல தான்புரத்தில்
      தீவிளை யாட நின் றேவிளை யாடி திருமலைக்கே. .. 133
      கொளு
      விற்செறி நுதலியை இற்செறி உரைத்தது.
      19. தமர் நினைவு உரைத்து வரைவு கடாதல்
      சுற்றும் சடைக்கற்றை சிற்றம் பலவன் தொழாதுதொல்சீர்
      கற்றும் அறியல ரின்சிலம் பாஇடை நைவதுகண்டு
      எற்றும் திரையின் அமிர்தை இனித்தமர் இற்செறிப்பார்
      மற்றும் சிலபல சீறூர் பகர்பெரு வார்த்தைகளே. .. 134
      கொளு
      விற்செறி நுதலியை இற்செறி விப்பரென்று
      ஒளிவே லவற்கு வெளியே உரைத்தது.
      20. எதிர்கோள் கூறி வரைவு கடாதல்
      வழியும் அதுஅன்னை என்னின் மகிழ்வும்வந்து எந்தையும்நின்
      மொழியின் வழிநிற்கும் சுற்றம்முன்னேவயம் அம்பலத்து
      குழிஉம்பர் ஏத்தும்எம் கூத்தன்குற் றாலமுற் றும்அறி
      கெழி உம்ம வேபணை தோள்பல என்னோ கிளக்கின்றதே. .. 135
      கொளு
      ஏந்திழை தோழி ஏந்தலை முன்னி
      கடியா மாறு நொடிதுஏகு என்றது.
      21. ஏறுகோள் கூறி வரைவு கடாதல்
      படையார் கருங்கண்ணி வண்ண பயோதர பாரமும் நுண்
      இடையார் மெலிவுகண்டு அண்டர்கள் ஈர்முல்லை வேலிஎம்முர்
      விடையார் மருப்பு திருத்திவி டார்வியன் தென்புலியூர்
      உடையார் கடவி வருவது போலும் உருவினதே. .. 136
      கொளு
      என்னையர் துணிவு இன்னது என்றது.
      22. அயல் உரை உரைத்து வரைவு கடாதல்
      உருப்பனை அன்னகை குன்றொன்று உரித்துஉர ஊர்எரித்த
      நெருப்பனை அம்பலத்து ஆதியை உம்பர்சென்று ஏத்திநிற்கும்
      திருப்பனை யூர்அனை யாளைப்பொன் னாளை புனைதல் செப்பி
      பொருப்பனை முன்னின்று என் னோவினை யேன்யான் புகல்வதுவே. .. 137
      கொளு
      கயல்புரை கண்ணியை அயலுரை உரைத்தது.
      23. தினை முதிர்வு வரைவு கடாதல்
      மாதிடம் கொண்டுஅம் பலத்துநின் றோன்வட வான்கயிலை
      போதிடம் கொண்டபொன் வேங்கை தினைப்புனம் கொய்கஎன்று
      தாதிடம் கொண்டுபொன் வீசித்தன் கள்வாய் சொரியநின்று
      சோதிடம் கொண்டுஇதுஎம் மைக்கெடு வித்தது தூமொழியே. .. 138
      கொளு
      ஏனல் விளையாட்டு இனிஇல் லையென
      மானல் தோழி மடந்தைக்கு உரைத்தது.
      24. பகல் வரல் விலக்கி வரைவு கடாதல்
      வடிவார் வயல்தில்லை யோன்மல யத்துநின் றும்வருதேன்
      கடிவார் களிவண்டு நின்றலர் தூற்ற பெருங்கணியார்
      நொடிவார் நமக்கினி நோதக யான்உமக்கு என்னுரைக்கேன்
      தடிவார் தினைஎமர் காவேம் பெருமஇ தண்புனமே. .. 139
      கொளு
      அகல்வரை நாடனை பகல்வரல் என்றது.
      25. தினையடு வெறுத்து வரைவு கடாதல்
      நினைவித்து தன்னைஎன் நெஞ்சத்து இருந்துஅம் பலத்துநின்று
      புனைவித்த ஈசன் பொதியின் மலைப்பொரு பன்விருப்பில்
      தினைவித்தி காத்து சிறந்துநின் றேமுக்கு சென்றுசென்று
      வினைவித்தி காத்து விளைவுண்ட தாகி விளைந்ததுவே. .. 140
      கொளு
      தண்புன தோடு தளர்வுற்று
      பண்புனை மொழி பாங்கி பகர்ந்தது.
      26. வேங்கையடு வெறுத்து வரைவு கடாதல்
      கனைகடற் செய்தநஞ் சுண்டுகண் டார்க்குஅம் பலத்துஐ அமிழ்தாய்
      வினைகெட செய்தவன் விண்தோய் கயிலை மயிலனையாய்
      நனைகெட செய்தனம் ஆயின் நமைக்கெட செய்திடுவான்
      தினைகெட செய்திடு மாறும்உண் டோஇ திருக்கணியே. .. 141
      கொளு
      நீங்குக இனிநெடு தகையென
      வேங்கை மேல்வைத்து விளம்பியது
      27. இரக்கமுற்று வரைவு கடாதல்
      வழுவா இயல்எம் மலையர் விதைப்பமற்று யாம் வளர்த்த
      கொழுவார் தினையின் குழாங்கள்எல் லாம்எம் குழாம்வணங்கும்
      செழுவார் கழல்தில்லை சிற்றம் பலவரை சென்றுநின்று
      தொழுவார் வினைநிற்கி லேநிற்ப தாவதுஇ தொல்புனத்தே. .. 142
      கொளு
      செழுமலை நாடற்கு கழுமலுற்று இரங்கியது.
      28. கொய்தமை கூறி வரைவு கடாதல்
      பொருப்பர்க்கு யாம் ஒன்று மாட்டோம் புகல புகல்எமக்காம்
      விருப்பர்க்கு யாவர்க்கும் மேலவர்க்கு மேல்வரும் ஊர்எரித்த
      நெருப்பர்க்கு நீடுஅம் பலவருக்கு அன்பர் குலநிலத்து
      கருப்பற்று விட்டென கொய்தற்ற தின்றி கடிப்பினமே. .. 143
      கொளு
      நீடிரும் புனத்தினி ஆடேம் என்று
      வரைவு தோன்ற வுரைசெய்தது.
      29. பிரிவு அருமை கூறி வரைவு கடாதல்
      பரிவுசெய்து ஆண்டுஅம் பலத்து பயில்வோன் பரங்குன்றின்வாய்
      அருவிசெய் தாழ்புனத்து ஐவனம் கொய்யவும் இவ்வனத்தே
      பிரிவுசெய் தால்அரி தேகொள்க போயடும் என்றும்பெற்றி
      இருவிசெய் தாளின் இருந்துஇன்று காட்டும் இளங்கிளியே. .. 144
      கொளு
      மறைப்புற கிளவியின் சிறைப்புறத்து உரைத்தது.
      30. மயிலொடு கூறி வரைவு கடாதல்
      கணியார் கருத்தின்று முற்றிற்று யாம்சென்றும் கார்ப்புனமே
      மணியார் பொழில்காள் மறத்திற்கண் டீர்மன்னும் அம்பலத்தோன்
      அணியார் கயிலை மயில்காள் அயில்வேல் ஒருவர்வந்தால்
      துணியா தனதுணி தார்என்னும் நீர்மைகள் சொல்லுமினே. .. 145
      கொளு
      நீங்கரும் புனம்விடு நீள்பெரு துயரம்
      பாங்கி பகர்ந்து பருவரல் உற்றது.
      31. வறும்புனம் கண்டு வருந்தல்
      பொதுவினில் தீர்த்துஎன்னை யாண்டோன் புலியூர் அரன்பொருப்பே
      இதுவெனில் என்னின்று இருக்கின்ற வாறுஎம் இரும்பொழிலே
      எதநுமக்குஎய்தியது என்உற் றனிர்அறை ஈண்டருவி
      மதுவினில் கைப்புவை தாலொத்த வாமற்றுஇவ் வான்புனமே. .. 146
      கொளு
      மென்புனம் விடுத்து மெல்லியல் செல்ல
      மின்பொலி வேலோன் மெலிவுற்றது.
      32. பதி நோக்கி வருந்தல்
      ஆனந்த மாக்கடல் ஆடுசிற் றம்பலம் அன்னபொன்னின்
      தேனுந்து மாமலை சீறூர் இதுசெய்ய லாவதில்லை
      வானுந்து மாமதி வேண்டி அழும்மழ போலுமன்னோ
      நானு தளர்ந்தனன் நீயும் தளர்ந்தனை நன்னெஞ்சமே. .. 147
      கொளு
      மதிநுதல் அரிவை பதிபுகல் அரிதென
      மதிநனி கலங்கி பதிமிக வாடியது.
      ------------------------------
      பதினென்காம் அதிகாரம்
      14. இரவு குறி
      பேரின்ப கிளவி
      இரவு குறித்துறை முப்பத்திமூன்றும்
      அருளே சிவத்தோடு ஆக்கியல் அருமை
      தெரியவற் புறுத்தி சிவனது கருணையின்
      இச்சை பலவும் எடுத்தெடுத்து அருளல்.
      1. இரவு குறி வேண்டல்
      மருந்துநம் அல்லற் பிறவி பிணிக்குஅம் பலத்துஅமிர்தாய்
      இருந்தனர் குன்றின்நின்று ஏங்கும் அருவிசென்று ஏர்திகழ
      பொருந்தின மேகம் புதைத்திருள் தூங்கும் புனை இறும்பின்
      விருந்தின் யான்உங்கள் சீறூர் அதனுக்கு வெள்வளையே. .. 148
      கொளு
      நள்ளிருள் குறியை வள்ளல் நினைந்து
      வீங்கு மென்முலை பாங்கிற்கு உரைத்தது.
      2. வழியருமை கூறி மறுத்தல்
      விசும்பினுக்கு ஏணி நெறியன்ன சின்னெறி மேல்மழைதூங்கு
      அசும்பினில் துன்னி அளைநுழை தால் ஒக்கும் ஐயமெய்யே
      இசும் பினில் சிந்தைக்கும் ஏறற்கு அரிதுஎழில் அம்பலத்து
      பசும்பனி கோடு மிலைந்தான் மலயத்துஎம் வாழ்பதியே .. 149
      கொளு
      இரவரல் ஏந்தல் கருதி உரை
      பருவரல் பாங்கி அருமை உரைத்தது.
      3. நின்று நெஞ்சுடைதல்
      மாற்றேன் எனவந்த காலனை ஓலம் இடஅடர்த்த
      கோலதேன் குளிர்தில்லை கூத்தன் கொடுங்குன்றின் நீள்குடுமி
      மேல்தேன் விரும்பும் முடவனை போல மெலியும் நெஞ்சே
      ஆற்றேன் அரிய அரிவைக்கு நீவைத்த அன்பினுக்கே. .. 150
      கொளு
      பாங்கி விலங்க பருவரை நாடன்
      நீங்கி விலங்காது நெஞ்சு டைந்தது.
      4. இரவுக்குறி நேர்தல்
      கூளி நிரைக்கநின்று அம்பலத்து ஆடி குறைகழற்கீழ
      தூளி நிறைத்த சுடர்முடி யோஇவள் தோள்நசையால்
      ஆளி நிரைத்தடல் ஆனைகள் தேரும் இரவில்வந்து
      மீளி யுரைத்தி வினையேன் உரைப்பதென் மெல்லியற்கே. .. 151
      கொளு
      தடவரை நாடன் தளர்வு தீர
      மடநடை பாங்கி வகுத்துரைத்தது.
      5. உட்கோள் வினாதல்
      வரையன்று ஒருகால் இருகால் வளைய நிமிர்ந்துவட்கார்
      நிரையன்று அழல்எழ எய்துநின் றோன்தில்லை அன்னநின்னூர்
      விரையென்ன மென்னிழல் என்ன வெறியறு தாதிவர்போது
      உரையென்ன வோசிலம் பாநலம் பாவி ஒளிர்வனவே. .. 152
      கொளு
      நெறி விலக்கு உற்றவன் உறுதுயர் நோக்கி
      யாங்கொரு சூழல் பாங்கி பகர்ந்தது.
      6. உட்கொண்டு வினாதல்
      செம்மலர் ஆயிரம் தூய்க்கரு மால்திரு கண்அணியும்
      மொய்ம்மலர் ஈர்ங்கழல் அம்பல தோன்மன்னு தென்மலயத்து
      எம்மலர் சூடிநின்று எச்சாந்து அணிந்துஎன்ன நன்னிழல்வாய்
      அம்மலர் வாட்கண்நல் லாய்எல்லி வாய்நுமர் ஆடுவதே. .. 153
      கொளு
      தன்னை வினவ தான்அவள் குறிப்பறிந்து
      என்னை நின்னாட்டு இயல்அணி என்றது.
      7. குறியிடங்கூறல்
      பனைவளர் கைம்மா படாத்துஅம் பலத்தரன் பாதம்விண்ணோர்
      புனைவளர் சாரல் பொதியின் மலைப்பொலி சந்தணிந்து
      கனைவளர் காவிகள் சூடிப்பை தோகை துயில்பயிலும்
      சினைவளர் வேங்கைகள் யாங்கள்நின்று ஆடும் செழும்பொழிலே. .. 154
      கொளு
      இரவு குறியிவண் என்று பாங்கி
      அரவ கழலவற்கு அறிய வுரைத்தது.
      8. இரவு குறி ஏற்பித்தல்
      மலவன் குரம்பையை மாற்றிஅம் மால்முதல் வானர்க்கு அப்பால்
      செலஅன்பர்க்கு ஒக்கும் சிவன்தில்லை கானலிற் சீர்ப்பெடையோடு
      அலவன் பயில்வது கண்டுஅஞர் கூர்ந்துஅயில் வேல்உரவோன்
      செலஅந்தி வாய்க்கண் டனன்என்னது ஆங்கொல்மன் சேர்துயிலே. .. 155
      கொளு
      அரவ கழலவன் ஆற்றானென
      இரவு குறி ஏற்பித்தது.
      9. இரவரவு உரைத்தல்
      மோட்டங் கதிர்முலை பங்குடை தில்லைமுன் னோன்கழற்கே
      கோட்ட தரும்நம் குருமுடி வெற்பன் மழைகுழுமி
      நாட்டம் புதைத்தன்ன நள்ளிருள் நாகம் நடுங்க சிங்கம்
      வேட்டம் திரிசரி வாய்வரு வான்சொல்லு மெல்லியலே. .. 156
      கொளு
      குருவரு குழலிக்கு இரவர வுரைத்தது.
      10. ஏதங்கூறி மறுத்தல்
      செழுங்கார் முழவதிர் சிற்றம் பலத்து பெருந்திருமால்
      கொழுங்கான் மலரிட கூத்தயர் வோன்கழல் ஏத்தலர்போல்
      முழங்கார் அரிமுரண் வாரண வேட்டைசெய் மொய்இருள்வாய்
      வழங்கா அதரின் வழங்கென்று மோஇன்றுஎம் வள்ளலையே. .. 157
      கொளு
      இழுக்கம் பெரிதுஇர வரின்என
      அழுக்கம் எய்தி அரிவை உரைத்தது.
      11. குறை நேர்தல்
      ஓங்கும் ஒருவிடம் உண்டுஅம் பலத்துஉம்பர் உய்யஅன்று
      தாங்கும் ஒருவன் தடவரை வாய்த்தழங் கும்அருவி
      வீங்கும் கனைபுனல் வீழ்ந்துஅன்று அழங்க பிடித்தெடுத்து
      வாங்கும் அவர்க்குஅறி யேன்சிறி யேன்சொல்லும் வாசகமே. .. 158
      கொளு
      அலைவேல் அண்ணல் நிலைமை கேட்டு
      கொலைவேற் கண்ணி குறைந யந்தது.
      12. குறை நேர்ந்தமை கூறல்
      ஏனற் பசுங்கதிர் என்றூழ கழிய எழிலியுன்னி
      கான குறவர்கள் கம்பலை செய்யும்வம் பார்சிலம்பா
      யான்இற்றை யாமத்து நின்னருள் மேல்நிற்க லுற்று சென்றேன்
      தேனக்க கொன்றையன் தில்லை யுறார்செல்லும் செல்லல்களே. .. 159
      கொளு
      குறைந யந்தனள் நெறிகு ழலியென
      எறிவேல் அண்ணற்கு அறிய உரைத்தது.
      13. வரவுணர்ந்து உரைத்தல்
      முன்னும் ஒருவர் இரும்பொழில் மூன்றற்கு முற்றும்இற்றால்
      பின்னும் ஒருவர்சிற் றம்பல தார்தரும் பேரருள்போல்
      துன்னுமோர் இன்பம்என் தோகைதம் தோகைக்கு சொல்லுவபோல்
      மன்னும் அரவத்த வாய்த்துயில் பேரும் மயிலினமே. .. 160
      கொளு
      வளமயில் எடுப்ப இளமயிற் பாங்கி
      செருவேல் அண்ணல் வரவு ரைத்தது.
      14. தாய் துயில் அறிதல்
      கூடார் அரண்எரி கூட கொடுஞ்சிலை கொண்டஅண்டன்
      சேடார் மதின்மல்லல் தில்லைஅன் னாய்சிறு கண்பெருவெண்
      கோடார் கரிகுரு மாமணி ஊசலை கோப்பழித்து
      தோடார் மதுமலர் நாகத்தை நூக்குநம் சூழ்பொழிற்கே. .. 161
      கொளு
      ஊசல் மிசைவைத்து ஒள்அ மளியில்
      தாய துதுயில் தான் அறிந்தது.
      15. துயிலெடுத்து சேறல்
      விண்ணுக்கு மேல்வியன் பாதல கீழ்விரி நீர்உடுத்த
      மண்ணுக்கு நாப்பண் நயந்துதென் தில்லைநின் றோன் மிடற்றின்
      வண்ண குவளை மலர்க்கின் றனசிவ வாண்மிளிர்நின்
      கண்ணோர்க்கு மேற்கண்டு காண்வண்டு வாழும் கருங்குழலே. .. 162
      கொளு
      தாய்துயில் அறிந்துஆய் தருபவள்
      மெல்லியற்கு சொல்லியது.
      14. இடத்துய்த்து நீங்கல்
      நந்தீ வரமென்னும் நாரணன் நாண்மலர கண்ணிற்கு எ·கம்
      தந்தீ வரன்புலி யூரன்ன யாய்தடங் கண்கடந்த
      இந்தீ வரமிவை காணின் இருள்சேர் குழற்கெழில்சேர்
      சந்தீ வரமுறி யும்வெறி வீயும் தருகுவனே. .. 163
      கொளு
      மைத்தடங் கண்ணியை உய்த்திடத்து ஒருபால்
      நீங்கல் உற்ற பாங்கி பகர்ந்தது.
      17. தளர்வகன்று உரைத்தல்
      காமரை வென்றகண் ணோன்தில்லை பல்கதி ரோன்அடைத்த
      தாமரை இல்லின் இதழ்க்கத வம்திற தோதமியே
      பாமரை மேகலை பற்றி சிலம்பொது கிப்பையவே
      நாமரை யாமத்துஎன் னோவந்து வைகி நயந்ததுவே. .. 164
      கொளு
      வடுவகிர் அனைய வரிநெடுங் கண்ணியை
      நடுவரி அன்பொடு தளர்வகன்று உரைத்தது.
      18. மருங்கணைதல்
      அகலின் புகைவிம்மி ஆய்மலர் வேய்ந்துஅஞ் சனம்எழு
      தகிலும் தனிவடம் பூட்ட தகாள்சங் கரன்புலியூர்
      இகலும் அவரில் தளரும்இ தேம்பல்இடைஞெமி
      புகலும் மிகஇங்ங னேயிறு மாக்கும் புணர்முலையே. .. 165
      கொளு
      அன்பு மிகுதியின் அளவளாய் அவளை
      பொன்புனை வேலோன் புகழ்ந்துரைத்தது.
      19. முகங்கொண்டு மகிழ்தல்
      அழுந்தேன் நரகத்து யானென்று இருப்பவந்து ஆண்டுகொண்ட
      செழுந்தேன் திகழ்பொழில் தில்லை புறவில் செறுவகத்த
      கொழுந்தேன் மலர்வா குமுதம் இவள்யான் குருஉச்சுடர்கொண்டு
      எழுந்துஆங் கதுமலர தும்உயர் வானத்து இளமதியே. .. 166
      கொளு
      முகையவிழ் குழலி முகமதி கண்டு
      திகழ்வேல் அண்ணல் மகிழ்வுற்றது.
      20. பள்ளியிடத்து உய்த்தல்
      கரும்புறு நீலம் கொய்யல் தமிநின்று துயில்பயின்மோ
      அரும்பெறல் தோழியடு ஆயத்து நாப்பண் அமரர்ஒன்னார்
      இரும்புறு மாமதி பொன்இஞ்சி வெள்ளி புரிசையன்றோர்
      துரும்புற செற்றகொற் றத்துஎம் பிரான்தில்லை சூழ்பொழிற்கே. .. 167
      கொளு
      பிரிவது கருதிய பெருவரை நாடன்
      ஒள்ளிழை பாங்கியடு பள்ளிகொள் கென்றது.
      21. வரவு விலக்கல்
      நற்பகல் சோமன் எரிதரு நாட்டத்தன் தில்லையன்ன
      விற்பகைத்து ஓங்கும் புருவத்து இவளின் மெய்யேஎளிதே
      வெற்பக சோலையின் வேய்வளர் தீச்சென்று விண்ணினின்ற
      கற்பக சோலை கதுவுங்கல் நாடஇ கல்லதரே. .. 168
      கொளு
      தெய்வம் அன் னாளை திருந்துஅமளி சேர்த்தி
      மைவரை நாடனை வரவுவில கியது.
      22. ஆற்றாது உரைத்தல்
      பைவாய் அரவுஅரை அம்பலத்து எம்பரன் பைங்கயிலை
      செவ்வா கருங்கண் பெரும்பணை தோள்சிற் றிடைக்கொடியை
      மொய்வார் கமலத்து முற்றிழை இன்றென்முன் னைத்தவத்தால்
      இவ்வாறு இருக்கும்என் றேநிற்பது என்றும்என் இன்னுயிரே. .. 169
      கொளு
      வரைவு கடாய வாணுதல்தோழிக்கு
      அருவரை நாடன் ஆற்றாது உரைத்தது.
      23. இரக்கங்கூறி வரைவு கடாதல்
      பைவாய் அரவும் மறியும் மழுவும் பயின்மலர்க்கை
      மொய்வார் சடைமுடி முன்னவன் தில்லையின் முன்னினக்கால்
      செவ்வாய் கருவுயிர சேர்த்தி சிறியாள் பெருமலர்க்கண்
      மைவார் குவளை விடும்மன்ன நீண்முத்த மாலைகளே. .. 170
      கொளு
      அதிர்க ழலவன் அகன்றவழி
      எதிர்வது அறியாது இரங்கி உரைத்தது.
      24. நிலவு வெளிப்பட வருந்தல்
      நாகம் தொழஎழில் அம்பலம் நண்ணி நடம்வில்வோன்
      நாகம் இதுமதி யேமதி யேநவில் வேற்கைஎங்கள்
      நாகம் வரஎதிர் நாங்கொள்ளும் நள்ளிருள் வாய்நறவார்
      நாகம் மலிபொழில் வாயெழில் வாய்த்தநின் நாயகமே. .. 171
      கொளு
      தனிவே லவற்கு தந்தளர்வு அறி
      பனிமதி விளக்கம் பாங்கி பகர்ந்தது.
      25. அல்லகுறி அறிவித்தல்
      மின்அங்கு அலரும் சடைமுடி யோன்வியன் தில்லையன்னாய்
      என்அங்கு அலமரல் எய்திய தோஎழில் முத்தம்தொத்தி
      பொன்அங்கு அலர்புன்னை சேக்கையின் வாய்ப்புலம் புற்றுமுற்றும்
      அன்னம் புலரும் அளவும் துயிலாது அழுங்கினவே. .. 172
      கொளு
      வள்ளி யன்னவள் அல்ல குறிப்பொடு
      அறைப்புனல் துறைவற்கு சிறைப்புறத்து உரைத்தது.
      26. கடலிடை வைத்து துயர் அறிவித்தல்
      சோத்துன் அடியம் என் றோரை குழுமித்தொல் வானவர்சூழ்ந்து
      ஏத்தும் படிநிற்ப வன்தில்லை யன்னாள் இவள்துவள
      ஆர்த்துண் அமிழ்தும் திருவும் மதியும் இழந்தவம்நீ
      பேர்த்தும் இரைப்பொழி யாய்பழி நோக்காய் பெருங்கடலே. .. 173
      கொளு
      எறிகடல் மேல்வைத்து இரவரு துயரம்
      அறைக ழலவற்கு அறிய உரைத்தது.
      27. காமம் மிக்க கழிபடர் கிளவி
      மாதுற்ற மேனி வரையுற்ற வில்லிதில் லைநகர்சூழ்
      போதுற்ற பூம்பொழில் காள்கழி காள்எழிற் புள்ளினங்காள்
      ஏதுற்று அழிதிஎன் னீர்மன்னும் ஈர்ந்துறை வர்க்கு இவளோ
      தீதுற்றது என்னுக்குஎன் னீர்இது வோநன்மை செப்புமினே. .. 174
      கொளு
      தாமம் மிக்க தாழ்குழல் ஏழை
      காமம் மிக்க கழிபடர் கிளவி.
      28. காப்பு சிறைமிக்க கையறு கிளவி
      இன்னற வார்பொழில் தில்லை நகரிறை சீர்விழவில்
      பன்னிற மாலை தொகைபக லாம்பல் விளக்கிருளின்
      துன்னற வுய்க்கும்இல் லோரும் துயிலில் துறைவர்மிக்க
      கொன்னிற வேலொடு வந்திடின் ஞாளி குரை தருமே. .. 175
      கொளு
      மெய்யறு காவலில் கையறு கிளவி.
      29. ஆறுபார்த்துற்ற அச்ச கிளவி
      தாருறு கொன்றையன் தில்லை சடைமுடி யோன்கயிலை
      நீருறு கான்யாறு அளவில் நீந்திவ தால்நினது
      போருறு வேல்வ பொங்குரும் அஞ்சுகம் அஞ்சிவரும்
      சூருறு சோலையின் வாய்வரற் பாற்றன்று தூங்கிருளே. .. 176
      கொளு
      நாறு வார்குழல் நவ்வி நோக்கி
      ஆறுபார துற்ற அச்ச கிளவி.
      30. தன்னுள் கையாறு எய்திடு கிளவி
      விண்டலை யாவர்க்கும் வேந்தர்வண் தில்லைமெல் லங்கழிசூழ்
      கண்டலை யேகரி யாக்கன்னி புன்னை கலந்தகள்வர்
      கண்டிலை யேவர கங்குல்எல் லாம்மங்குல் வாய்விளக்கும்
      மண்டல மேபணி யாய்தமி யேற்கொரு வாசகமே. .. 177
      கொளு
      மின்னு புரையும் அந்நுண் மருங்குல்
      தன்னு கையாறு எய்திடு கிளவி.
      31. நிலைகண்டு உரைத்தல்
      பற்றொன்றி லார்பற்றும் தில்லை பரன்பரம் குன்றில்நின்ற
      புற்றொன்று அரவன் புதல்வ னெனநீ புகுந்துநின்றால்
      மற்றொன்று மாமலர் இட்டுன்னை வாழ்த்திவ தித்திலன்றி
      மற்றொன்று சிந்திப்ப ரேல்வல்ல ளோமங்கை வாழ்வகையே. .. 178
      கொளு
      நின்னின் அழிந்தனள் மின்னிடை மாதென
      வரைவு தோன்ற வுரை செய்தது.
      32. இரவுறு துயரம் கடலொடு சேர்த்தல்
      பூங்கணை வேளை பொடியாய் விழவிழி தோன்புலியூர்
      ஓங்கணை மேவி புரண்டு விழுந்தெழுந்து ஓலமிட்டு
      தீங்கணை தோர்அல்லும் தேறாய் கலங்கி செறிகடலே
      ஆங்கணை தார்நின்னை யும்உள ரோசென்று அகன்றவரே. .. 179
      கொளு
      எறிவேற் கண்ணி இரவரு துயரம்
      செறிக டலிடை சேர்த்தி யுரைத்தது.
      33. அலர் அறிவுறுத்தல்
      அலர்ஆ யிரம்தந்து வந்தித்து மால்ஆ யிரங்கரத்தால்
      அலரார் கழல்வழி பாடுசெய் தாற்குஅள வில்ஒளிகள்
      அலரா யிருக்கும் படைகொடு தோன்தில்லை யான்அருள்போன்று
      அலராய் விளைகின்றது அம்பல்கைம் மிக்குஐய மெய்யருளே. .. 180
      கொளு
      அலைவேல் அண்ணல் மனம கிழருள்
      பலரால் அறி பட்டது என்றது.
      -----------------------------
      பதினைந்தாம் அதிகாரம்
      15. ஒருவழி தணத்தல்
      பேரின்ப கிளவி
      ஒருவழி தணத்தல் ஒருபதின் மூன்றும்
      சிவனது கருணை அருள்தெரி வித்தது.
      1. அகன்று அணைவு கூறல்
      புகழும் பழியும் பெருக்கில் பெருகும் பெருகிநின்று
      நிகழும் நிகழா நிகழ்த்தின்அல் லால்இது நீநினைப்பின்
      அகழும் மதிலும் அணிதில்லை யோன்அடி போதுசென்னி
      திகழும் அவர்செல்லல் போலில்லை யாம்பழி சின்மொழிக்கே. .. 181
      கொளு
      வழிவேறு படமன்னும் பழிவேறு படும்என்றது.
      2. கடலொடு வரவு கேட்டல்
      ஆரம் பரந்து திரைபொரு நீர்முகில் மீன்பரப்பி
      சீரம் பரத்தின் திகழ்ந்தொளி தோன்றும் துறைவர்சென்றார்
      போரும் பரிசு புகன்றன ரோபுலி யூர்ப்புனிதன்
      சீரம்பல் சுற்றி எற்றி சிறந்தார்க்கும் செறிகடலே. .. 182
      கொளு
      மணந்தவர் ஒருவழி தணந்ததற்கு இரங்கி
      மறிதிரை சேரும் எறிகடற்கு இயம்பியது.
      3. கடலொடு புலத்தல்
      பாணிகர் வண்டினம் பாடப்பைம் பொன்தரு வெண்கிழிதம்
      சேணிகர் காவின் வழங்கும்புன் னைத்துறை சேர்ப்பர்திங்கள்
      வாணிகர் வெள்வளை கொண்டகன் றார்திறம் வாய்திறவாய்
      பூணிகர் வாளர வன்புலி யூர்சுற்றும் போர்க்கடலே. .. 183
      கொளு
      செறிவளை சின்மொழி எறிகடற்கு இயம்பியது.
      4. அன்னமோடு ஆய்தல்
      பகன்தர மரைக்கண் கெடக்கட தோன்புலி யூர்ப்பழனத்து
      அகன்தா மரையென்ன மேவண்டு நீல மணியணிந்து
      முகன்தாழ் குழைச்செம்பொன் முத்தணி புன்னகையின் னும்உரையாது
      அகன்றார் அகன்றே ஒழிவர்கொல் லோநம் அகன்துறையே. .. 184
      கொளு
      மின்னடை மடந்தை அன்னமோடு ஆய்ந்தது.
      5. தேர்வழி நோக்கி கடலொடு கூறல்
      உள்ளும் உருகி உரோமம் சிலிர்ப்ப உடையவன் ஆ
      கொள்ளும் அவரிலோர் கூட்டம்த தான்குனி கும்புலியூர்
      விள்ளும் பரிசுசென் றார்வியன் தேர்வழி தூரல்கண்டாய்
      புள்ளும் திரையும் பொரச்சங்கம் ஆர்க்கும் பொருகடலே. .. 185
      கொளு
      மீன்தோய் துறைவர் மீளும் அளவும்
      மான்தேர் வழியை அழியேல் என்றது.
      6. கூடல் இழைத்தல்
      ஆழி திருத்தும் புலியூர் உடையான் அருளின் அளித்து
      ஆழி திருத்தும் மணற்குன்றின் நீத்தகன் றார்வருகென்று
      ஆழி திருத்தி சுழிக்கணக்கு ஓதிநை யாமல்ஐய
      வாழி திருத்தி தரக்கிற்றி யோஉள்ளம் வள்ளலையே. .. 186
      கொளு
      நீடல துறையில் கூடல் இழைத்தது.
      7. சுடரொடு புலம்பல்
      கார்த்தரங் கம்திரை தோணி சுறாக்கடல் மீன்எறிவோர்
      போர்த்தருஅங் கம்துறைமானும் துறைவர்தம் போக்குமிக்க
      தீர்த்தர்அங் கன்தில்லை பல்பூம் பொழிற்செப்பும் வஞ்சினமும்
      ஆர்த்தர் அங் கம்செய்யு மால்உய்யு மாறுஎன்கொல் ஆழ்சுடரே. .. 187
      கொளு
      குணகடல் எழுசுடர் குடகடல் குளிப்ப
      மணமலி குழலி மனம்புலம் பியது.
      8. பொழுது கண்டு மயங்கல்
      பகலோன் கரந்தனன் காப்பவர் சேயர்பற் றவர்க்கு
      புகலோன் புகுநர்க்கு போக்கரி யோன்எவ ரும்புகல
      தகலோன் பயில்தில்லை பைம்பொழிற் சேக்கைகள் நோக்கினவால்
      அகலோங்கு இருங்கழி வாய்க்கொழு மீனுண்ட அன்னங்களே. .. 188
      கொளு
      மயல்தரு மாலை வருவது கண்டு
      கயல்தரு கண்ணி கவலை யுற்றது.
      9. பறவையடு வருந்தல்
      பொன்னும் மணியும் பவளமும் போன்று பொலிந்திலங்கி
      மின்னும் சடையோன் புலியூர் விரவா தவரினுள்நோய்
      இன்னும் அறிகில வால்என்னை பாவம் இருங்கழிவாய்
      மன்னும் பகலே மகிழ்ந்திரை தேரும்வண் டானங்களே. .. 189
      கொளு
      செறிபிணி கைம்மிக சிற்றிடை பேதை
      பறவைமேல் வைத்து பையுள்எய் தியது.
      10. பங்கயத்தோடு பரிவுற்று உரைத்தல்
      கருங்கழி காதல்பைங் கானவில் தில்லைஎம் கண்டர்விண்டார்
      ஒருங்கழி காதர மூவெயில் செற்றஒற் றைச்சிலைசூழ்ந்து
      அருங்கழி காதம் அகலும்என் றூழ்என்று அலந்துகண்ணீர்
      வருங்கழி காதல் வனசங்கள் கூப்பும் மலர்க்கைகளே. .. 190
      கொளு
      முருகவிழ் கானல் ஒடுபரி வுற்றது.
      11 அன்னமோடு அழிதல்
      மூவல் தழீஇய அருள்முத லோன்தில்லை செல்வன்முந்தீர்
      நாவல் தழீஇயஇ நானிலம் துஞ்சும் நயந்த இன்ப
      சேவல் தழீஇச்சென்று தான்துஞ்சும் யான்துயி லாச்செயிர்எம்
      காவல் தழீஇயவர்க்கு ஓதாது அளிய களியன்னமே. .. 191
      கொளு
      இன்ன கையவள் இரவரு துயரம்
      அன்னத்தோடு அழிந்துரைத்தது.
      12. வரவு உணர்ந்து உரைத்தல்
      நில்லா வளைநெஞ்சம் நெக்குரு கும்நெடுங் கண்துயிலது
      கல்லா கதிர்முத்தம் காற்றும் எனக்க டுரைக்கதில்லை
      தொல்லோன் அருள்களில் லாரிற்சென் றார்சென்ற செல்லல்கண்டாய்
      எல்லார் மதியே இதுநின்னை யான்இன்று இரக்கின்றதே. .. 192
      கொளு
      சென்றவர் வரவுணர்ந்து நின்றவள் நிலைமை
      சிறப்புடை பாங்கி சிறைப்புறத்து உரைத்தது.
      13. வருத்தமிகுதி கூறல்
      வளரும் கறியறி யாமந்தி தின்றுமம் மர்க்குஇடமா
      தளரும் தடவரை தண்சிலம் பாதனது அங்கம்எங்கும்
      விளரும் விழும்எழும் விம்மும் மெலியும்வெண் மாமதிநின்று
      ஒளிரும் சடைமுடி யோன்புலி யூர்அன்ன ஒண்ணுதலே. .. 193
      கொளு
      நீங்கி அணைந்தவற்கு பாங்கி பகர்ந்தது.
      --------------------------
      பதினாறாம் அதிகாரம்
      16. உடன் போக்கு
      பேரின்ப கிளவி
      உடன்போக்கு ஐம்பதோடு ஆறு துறையும்
      அருள்உயிர்க்கு அருமை அறிய உணர்த்தலும்
      ஆன தத்திடை அழுத்திற் திரோதை
      பரைவழி யாக பண்புணர தியது.
      1. பருவங் கூறல்
      ஓராகம் இரண்டெழி லாய்ஒளிர் வோன்தில்லை ஒண்ணுதல்அங்
      கராகம் பயின்று அமிழ் தம்பொதிந்து ஈர்ஞ்சுணங்கு ஆடகத்தின்
      பராகம் சிதர்ந்த பயோதரம் இப்பரி சேபணத்த
      இராகங்கண் டால்வள்ள லேஇல்லை யேஎமர் எண்ணுவதே. .. 194
      கொளு
      உருவது கண்டவள்
      அருமை உரைத்தது.
      2. மக பேச்சுரைத்தல்
      மணிஅக்கு அணியும் அரன்நஞ்சம் அஞ்சி மறுகிவிண்ணோர்
      பணி கருணை தரும்பரன் தில்லையன் னாள்திறத்து
      துணி கருதுவது இன்றே துணிதுறை வாநிறைபொன்
      அணி கருதுநின் றார்பலர் மேன்மேல் அயலவரே. .. 195
      கொளு
      படைத்துமொழி கிளவில் பணிமொழி பாங்கி
      அடற்கதிர் வேலோற்கு அறிய உரைத்தது.
      3. பொன்னணி உரைத்தல்
      பாப்பணி யோன்தில்லை பல்பூ மருவுசில் ஓதியைநற்
      காப்பணி தார்பொன் அணிவார் இனிக்கமழ் பூந்துறைவ
      கோப்பணிவான் தோய்கொடி முன்றில் நின்றிவை ஏர்குழுமி
      மாப்பணி லங்கள் முழுங்க தழங்கும் மணமுரசே. .. 196
      கொளு
      பலபரி சினமலும் மலர்நெடுங் கண்ணியை
      நன்னுதற் பாங்கி பொன்னணிவர் என்றது.
      4. அருவிலை உரைத்தல்
      எலும்பால் அணியிறை அம்பல தோன்எல்லை செல்குறுவோர்
      நலம்பா வியமுற்றும் நல்கினும் கல்வரை நாடர்அம்ம
      சிலம்பா வடிக்கண்ணி சிற்றிடை கேவிலை செப்பல்ஒட்டார்
      கலம்பா வியமுலை யின்விலை என்நீ கருதுவதே. .. 197
      கொளு
      பேதையர் அறிவு பேதைமை உடைத்தென
      ஆதர தோழி அருவிலை உரைத்தது.
      5. அருமை கேட்டழிதல்
      விசும்புற்ற திங்கட்கு அழும்மழ போன்றுஇனி விம்மிவிம்மி
      அசும்புற்ற கண்ணோடு அலறாய் கிடந்துஅரன் தில்லையன்னாள்
      குயம்புற் றரவுஇடை கூர்எயிற்று ஊறல் குழல்மொழியின்
      நயம்பற்றி நின்று நடுங்கி தளர்கின்ற நன்னெஞ்சமே. .. 198
      கொளு
      பெருமை நா டத்தவள் அருமைகேட்டு அழிந்தது.
      6. தளர்வறிந்துரைத்தல்
      மைதயங் கும்திரை வாரியை நோக்கி மடல்அவிழ்பூங்
      கைதை அங் கானலை நோக்கிக்கண் ணீர்கொண்டுஎங் கண்டர்தில்லை
      பொய்தயங் கும்நுண் மருங்குல்நல் லாரையெல் லாம்புல்லினாள்
      பைதயங் கும்அர வம்புரை யும்அல்குல் பைந்தொடியே. .. 199
      கொளு
      தண்துறைவன் தளர்வறிந்து கொண்டு நீங்கென குறித்துரைத்தது.
      7. குறிப்புரைத்தல்
      மாவைவ தாண்டமென் னோக்கிதன் பங்கர்வண் தில்லைமல்லற்
      கோவைவ தாண்டசெவ் வாய்க்கருங் கண்ணி குறிப்பறி யேன்
      பூவைத தாள்பொன்னம் பந்துத தாள்என்னை புல்லிக்கொண்டு
      பாவைத தாள்பைங் கிளியளி தாள்இன்றென் பைந்தொடியே. .. 200
      கொளு
      நறை குழலி குறிப்புரைத்தது.
      8. அருமை உரைத்தல்
      மெல்லியல் கொங்கை பெரியமின் நேரிடை மெல்லடிபூ
      கல்லியல் வெம்மை கடங்கடும் தீக்கற்று வானம்எல்லாம்
      சொல்லிய சீர்ச்சுடர் திங்கள் அங் கண்ணித்தொல் லோன்புலியூர்
      அல்லியங் கோதைநல் லாய்எல்லை சேய்த்துஎம் அகல்நகரே. .. 201
      கொளு
      கானின் கடுமையும் மானின் மென்மையும்
      பதியின் சேட்சியும் இதுவென உரைத்தது.
      9. ஆதரங் கூறல்
      பிணையும் கலையும்வன் பேய்த்தே ரினைப்பெரு நீர்நசையால்
      அணையும் முரம்பு நிரம்பிய அத்தமும் ஐயமெய்யே
      இணையும் அளவும் இல் லாஇறை யோன்உறை தில்லைத்தண்பூம்
      பணையும் தடமும்அன் றேநின்னோடு ஏகின்எம் பைந்தொடிக்கே. .. 202
      கொளு
      அழல்தடம் புரையும் அருஞ்சுரம் அதுவும்
      நிழல்தடம் அவட்கு நின்னொடுஏகின் என்றது.
      10. இறந்துபாடு உரைத்தல்
      இங்குஅயல் என்நீ பணிக்கின்றது ஏந்தல் இணைப்பதில்லா
      கங்கைஅம் செஞ்சடை கண்ணுதல் அண்ணல் கடிகொள்தில்லை
      பங்க பாசடை பாய்தடம் நீஅ படர்தடத்து
      செங்கயல் அன்றே கருங்கயல் கண்ணி திருநுதலே. .. 203
      கொளு
      கார தடமும் கயலும் போன்றீர்
      வார்த்தட முலையும் மன்னனும் என்றது.
      11. கற்பு நலன் உரைத்தல்
      தாயிற் சிறந்தன்று நாண்தைய லாருக்குஅ நாண்தகைசால்
      வேயிற் சிறந்தமென் தோளி திண் கற்பின் விழுமிதன்றுஈங்
      கோயில் சிறந்துசிற் றம்பலத்து ஆடும்எம் கூத்தப்பிரான்
      வாயில் சிறந்த மதியில் மதிநுதலே. .. 204
      கொளு
      பொய்யத்தஇடை போக்குத்துணிய
      வையத்திடை வழக்குரைத்தது.
      12. துணிந்தமை கூறல்
      குறப்பாவை நின்குழல் வேங்கையம் போதொடு கோங்கம்விராய்
      நறப்பா டலம்புனை வார்நினை வார்தம் பிரான்புலியூர்
      மறப்பான் அடுப்பதோர் தீவினை வந்திடின் சென்றுசென்று
      பிறப்பான் அடுப்பினும் பின்னும்துன் னத்தகும் பெற்றியரே. .. 205
      கொளு
      பொருவேல் அண்ணல் போக்கு துணிந்தமை
      செருவேற் கண்ணிக்கு சென்று செப்பியது.
      13. துணிவொடு வினாவல்
      நிழல்தலை தீநெறி நீரில்லை கானகம் ஓரிகத்தும்
      அழல்தலை வெம்பரற் றென்பர்என் னோதில்லை அம்பலத்தான்
      கழல்தலை வைத்துக்கை போதுகள் கூப்பக்கல் லாதவர்போல்
      குழல்தலை சொல்லிசெல் லக்குறி பாகும் நம்கொற்றவர்க்கே. .. 206
      கொளு
      சிலம்பன் துணிவொடு செல்கரம் நினைந்து
      கலம்புனை கொம்பர் கலக்க முற்றது.
      14. போக்கு அறிவித்தல்
      காயமும் ஆவியும் நீங்கள் சிற்றம்பல வன்கயிலை
      சீயமும் மாவும் வெரீஇவரல் என்பல் செறிதிரைநீர
      தேயமும் யாவும் பெறினும் கொடார்நமர் இன்னசெப்பில்
      தோயமும் நாடும்இல் லாச்சுரம் போக்கு துணிவித்தவே. .. 207
      கொளு
      பொருசுடர் வேலவன் போக்கு துணிந்தமை
      அரிவைக்கு அவள் அறிய உரைத்தது.
      15. நாணிழந்து வருந்தல்
      மற்பாய் விடையோன் மகிழ்புலி யூர்என் னொடும்வளர்ந்த
      பொற்பார் திருநாண் பொருப்பர் விருப்பு புகுந்துநுந்த
      கற்பார் கடுங்கால் கலக்கி பறித்தெறி யக்கழிக
      இற்பாற் பிறவற்க ஏழையர் வாழி எழுமையுமே. .. 208
      கொளு
      கற்பு நாணினும் முற்சிற தமையின்
      சேண்நெறி செல்ல வாணுதல் துணிந்தது.
      16. துணிவெடுத்து உரைத்தல்
      கம்பம் சிவந்த சலந்தரன் ஆகம் கறுத்ததில்லை
      நம்பன் சிவநகர் நற்றளிர் கற்சுரம் ஆகும்நம்பா
      அம்பஞ்சி ஆவம் புகமிக நீண்டுஅரி சிந்துகண்ணாள்
      செம்பஞ்சி யின்மிதி கிற்பதை கும்மலர சீறடிக்கே. .. 209
      கொளு
      செல்வ மாதர் செல்ல துணிந்தமை
      தொல்வரை நாடற்கு தோழிசொல் லியது.
      17. குறியிடங் கூறல்
      முன்னோன் மணிகண்டம் ஒத்தவன் அம்பலம் தம்முடிதாழ்த்து
      உன்னா தவர்வினை போல்பரந்து ஓங்கும் எனதுயிரே
      அன்னாள் அரும்பெறல் ஆவியன் னாய்அருள் ஆசையினால்
      பொன்னார் மணிமகிழ பூவிழ யாம்விழை பொங்கிருளே. .. 210
      கொளு
      மன்னிய இருளில் துன்னிய குறியில்
      கோங்கிவர் கொங்கையை நீங்குகொண் டென்றது.
      18. அடியடு வழிநினைந்து அவன் உளம் வாடல்
      பனிச்ச திரனொடு பாய்புனல் சூடும் பரன்புலியூர்
      அனிச்சம் திகழும் அம் சீறடி ஆவ அழல்பழுத்த
      கனிச்செ திரளன்ன கற்கடம் போந்து கடக்குமென்றால்
      இனி சந்த மேகலை யாட்குஎன்கொ லாம்புகுந்து எய்துவதே. .. 211
      கொளு
      நெறியுறு குழலியடு நீங்க துணிந்த
      உறுசுடர் வேலோன் உள்ளம் வாடியது.
      19. கொண்டு சென்று உய்த்தல்
      வைவந்த வேலவர் சூழ்வர தேர்வரும் வள்ளல்உள்ளம்
      தெய்வம் தரும்இருள் தூங்கும் முழுதும் செழுமிடற்றின்
      மைவந்த கோன்தில்லை வாழ்த்தார் மனத்தின் வழுத்துநர் போல்
      மொய்வந்த வாவி தெளியும் துயிலும்இம் முதெயிலே. .. 212
      கொளு
      வண்டமர் குழலியை கண்டுகொள் கென்றது.
      20. ஒம்படு துரைத்தல்
      பறந்திருந்து உம்பர் பதை படரும் புரங்கரப்ப
      சிறந்துஎரி யாடிதென் தில்லையன் னாள்திற துச்சிலம்பா
      அறம்திருந்து உன்னரு ளும்பிறி தாயின் அருமறையின்
      திறம்திரி தார்கலி யும்முற்றும் வற்றும்இ சேணிலத்தே. .. 213
      கொளு
      தேம்படு கோதையை ஓம்ப டுத்தது.
      21. வழிப்படுத்துரைத்தல்
      ஈண்டொல்லை ஆயமும் ஒளவையும் நீங்கஇவ் ஒர்கவ்வைதீர்த்து
      ஆண்டொல்லை கண்டிட கூடுக நும்மைஎம் மைப்பிடித்தின்று
      ஆண்டெல்லை தீர்இன்பம் தந்தவன் சிற்றம் பலம்நிலவு
      சேண்தில்லை மாநகர் வாய்ச்சென்று சேர்க திருத்தகவே. .. 214
      கொளு
      மதிநுதலியை வழிப்படுத்து
      பதிவயிற் பெயரும் பாங்கி பகர்ந்தது.
      22 மெல்ல கொண்டேகல்
      பேண திருத்திய சீறடி மெல்லச்செல் பேரரவம்
      பூண திருத்திய பொங்கொளி யோன்புலி யூர்புரையும்
      மாண திருத்திய வான்பதி சேரும் இருமருங்கும்
      காண திருத்திய போலும் முன் னாமன்னு கானங்களே. .. 215
      கொளு
      பஞ்சி மெல்லடி பணை தோளியை
      வெஞ்சுரத்திடை மெலிவு அகற்றியது.
      23. அடலெடுத்துரைத்தல்
      கொடித்தேர் மறவர் சூழாம்வெங் கரிநிரை கூடின்என்கை
      வடித்தேர் இலங்கெ·தின் வாய்க்குத வாமன்னும் அம்பலத்தோன்
      அடித்தேர் அலரென்ன அஞ்சுவன் நின்ஐயர் என்னின்மன்னும்
      கடித்தேர் குழன்மங்கை கண்டிடுஇவ் விண்தோய் கனவரையே. .. 216
      கொளு
      வரிசிலையவர் வருகுவரென
      புரிதரு குழலிக்கு அருளுவன் உரைத்தது.
      24. அயர்வு அகற்றல்
      முன்னோன் அருள்முன்னும் உன்னா வினையின் முகர்துன்னும்
      இன்னா கடறிதுஇ போழ்தே கடந்தின்று காண்டும்சென்று
      பொன்னார் அணிமணி மாளிகை தென்புலி யூர்ப்புகழ்வார்
      தென்னா எனஉடை யான்நட மாடுசிற் றம்பலமே. .. 217
      கொளு
      இன்னல் வெங்க டந்தெறி வேலவன்
      அன்னம் அன்னவள் அயர்வுஅ கற்றியது.
      25. நெறி விலக்கி கூறல்
      விடலைஉற் றாரில்லை வெம்முனை வேடர் தமியைமென்பூ
      மடலையுற் றார்குழல் வாடினள் மன்றுசிற் றம்பலவர்க்கு
      அடலையுற் றாரின் எறிப்புஒழி தாங்குஅரு கன்கருக்கி
      கடலையுற் றான்கட பாரில்லை இன்றி கடுஞ்சுரமே. .. 218
      கொளு
      சுரத்திடை கண்டவர் சுடர்க்குழை மாதொடு
      சரத்தணி வில்லோய் தங்கு கென்றது.
      26. கண்டவர் மகிழ்தல்
      அன்பணைத்து அம்சொல்லி பின்செல்லும் ஆடவன் நீடவன்தன்
      பின்பணை தோளி வரும்இ பெருஞ்சுரம் செல்வதன்று
      பொன்பணை தன்ன இறையுறை தில்லை பொலிமலர்மேல்
      நன்பணை தண்ணறவு உண்அளி போன்றொளிர் நாடகமே. .. 219
      கொளு
      மண்டழற் கடத்து கண்டவர் உரைத்தது.
      27. வழிவிளையாடல்
      கண்கள்தம் மாற்பயன் கொண்டனம் கண்டினி காரிகைநின்
      பண்கட மென்மொழி ஆர பருக வருகஇன்னே
      விண்கள்தம் நாயகன் தில்லையின் மெல்லியல் பங்கன்எங்கோன்
      தண்கடம் பைத்தடம் போற்கடுங் கானகம் தண்ணெனவே. .. 220
      கொளு
      வன்தழற் கடத்து வடிவேல் அண்ணல்
      மின்தங்கு இடையடு விளையாடி யது.
      28. நகரணிமை கூறல்
      மின்தங்கு இடையடு நீவியன் தில்லைச்சிற் றம்பலவர்
      குன்றம் கடந்துசென் றால்நின்று தோன்றும் குரூஉக்கமலம்
      துன்றுஅம் கிடங்கும் துறைதுறை வள்ளைவெள் ளைநகையார்
      சென்றுஅங்கு அடைதட மும்புடை சூழ்தரு சேண்நகரே. .. 221
      கொளு
      வண்டமர் குழலியடு கண்டவர் உரைத்தது.
      29. நகர் காட்டல்
      மின்போல் கொடிநெடு வான கடலுள் திரைவிரி
      பொன்போல் புரிசை வடவரை காட்ட பொலிபுலியூர்
      மன்போற் பிறையணி மாளிகை சூலத்த வாய்மடவாய்
      நின்போல் நடைஅன்னம் துன்னிமுன் தோன்றும்நல் நீள்நகரே. .. 222
      கொளு
      கொடுங்கடம் கடந்த குழைமுக மாதர்க்கு
      தடம்கி டங்குசூழ் தன்னகர் காட்டியது.
      30. பதிபரிசுரைத்தல்
      செய்குன்று உவைஇவை சீர்மலர் வாவி விசும்பியங்கி
      நைகின்ற திங்கள்எய்ப்பு ஆறும் பொழில்அவை ஞாங்கர்எங்கும்
      பொய்குன்ற வேதியர் ஓதிடம் உந்திடம் இந்திடமும்
      எய்குன்ற வார்சிலை அம்பல வற்குஇடம் ஏந்திழையே. .. 223
      கொளு
      கண்ணிவர் வளநகர் கண்டுசென்றுஅடைந்து
      பண்ணிவர் மொழிக்கு பதிபரிசுஉரைத்தது.
      31. செவிலி தேடல்
      மயிலென பேர்ந்துஇள வல்லியின் ஒல்கிமென் மான்விழித்து
      குயிலென பேசும்எங் குட்டன்எங் குற்றதென் னெஞ்சகத்தே
      பயிலென பேர்ந்தறி யாதவன் தில்லைப்பல் பூங்குழலாய்
      அயிலென பேருங்கண் ணாய்என் கொலாம்இன்று அயர்கின்றதே. .. 224
      கொளு
      கவலை யுற்ற காதல் தோழியை
      செவிலி யுற்று தெரிந்து வினாயது.
      32. அறத்தொடு நிற்றல்
      ஆளரி கும்அரி தாய்த்தில்லை யாவரு கும்எளிதாம்
      தாளர்இ குன்றில்தன் பாவைக்கு மேவி தழல்திகழ்வேல்
      கோளரி கும்நிகர் அன்னார் ஒருவர் குரூஉமலர்த்தார்
      வாளரி கண்ணிகொண் டாள்வண்டல் ஆயத்துஎம் வாணுதலே. .. 225
      கொளு
      சுடர்க்குழை பாங்கி படைத்துமொழி கிளவியல்
      சிறப்புடை செவிலிக்கு அறத்தொடு நின்றது.
      33. கற்பு நிலைக்கு இரங்கல்
      வடுத்தான் வகிர்மலர் கண்ணிக்கு தக்கின்று தக்கன்முத்தீ
      கெடுத்தான் கெடலில்தொல் லோன்தில்லை பன்மலர் கேழ்கிளர
      மடுத்தான் குடைந்தன் றழுங்க அழுங்கி தழீஇமகிழ்வுற்று
      எடுத்தாற்கு இனியன வேயினி யாவன எம்மனைக்கே. .. 226
      கொளு
      விற்புரை நுதலி கற்புநிலை கேட்டு
      கோடா யுள்ள நீடாய் அழுங்கியது
      34. கவன்றுரைத்தல்
      முறுவல்அ கால்தந்து வந்தென் முலைமுழு வித்தழுவி
      சிறுவல காரங்கள் செய்தஎல் லாம்முழு தும்திதை
      தெறுவல காலனை செற்றவன் சிற்றம் பலஞ்சிந்தியார்
      உறுவல கானகம் தான்படர் வானாம் ஒளியிழையே. .. 227
      கொளு
      அவள் நிலை நினைந்து செவிலி கவன்றது.
      35. அடிநினைந்திரங்கல்
      தாமே தமக்குஒப்பு மற்றில் லவர்தில்லை தண்அனிச்ச
      பூமேல் மிதிக்கின் பதைத்தடி பொங்கும்நங் காய் எரியும்
      தீமேல் அயில்போல் செறிபரல் கானிற் சிலம்படியாய்
      ஆமே நடக்க அருவினை யேன்பெற்ற அம்மனைக்கே. .. 228
      கொளு
      வெஞ்சுரமும் அவள் பஞ்சுமெல் அடியும்
      செவிலி நினைந்து கவலை யுற்றது.
      36. நற்றாய்க்கு உரைத்தல்
      தழுவின கையிறை சோரின் தமியம்என் றேதளர்வுற்று
      அழுவினை செய்யும்நை யாஅம்சொல் பேதை அறிவுவிண்ணோர்
      குழுவினை உய்யநஞ் சுண்டுஅம் பலத்து குனிக்கும்பிரான்
      செழுவின தாள்பணி யார்பிணி யாலுற்று தேய்வித்ததே. .. 229
      கொளு
      முகிழ்முலை மடந்தைக்கு முன்னியது அறி
      திகழ்மனை கிழத்திக்கு செவிலி செப்பியது.
      37. நற்றாய் வருந்தல்
      யாழியல் மென்மொழி வன்மன பேதையர் ஏதிலம்பின்
      தோழியை நீத்துஎன்னை முன்னே துறந்துதுன் னார்கண்முன்னே
      வாழிஇம் மூதூர் மறுகச்சென் றாள்அன்று மால்வணங்க
      ஆழித தான்அம் பலம்பணி யாரின் அருஞ்சுரமே. .. 230
      கொளு
      கோடாய் கூற நீடாய் வாடியது.
      38. கிளி மொழிக்கு இரங்கல்
      கொன்னுனை வேல்அம் பலவன் தொழாரின்குன் றம்கொடியோள்
      என்னணம் சென்றனள் சேரும் எனஅயரா
      என்னனை போயினள் யாண்டையள் என்னை பருந்தடும்என்று
      என்னனை போக்கன்றி கிள்ளைஎன் உள்ளத்தை ஈர்க்கின்றதே. .. 231
      கொளு
      மெய்த்தகை மாது வெஞ்சுரம் செல்ல
      தத்தையை நோக்கி தாய்புலம் பியது.
      39. சுடரோடு இரத்தல்
      பெற்றே னொடுங்கிள்ளை வாட முதுக்குறை பெற்றிமிக்கு
      நற்றேள் மொழியழல் கான்நட தாள்முகம் நானணுக
      பெற்றேன் பிறவி பெறாமற்செய் தோன்தில்லை தேன்பிறங்கு
      மற்றேன் மலரின் மலர்த்துஇர தேன்சுடர் வானவனே. .. 232
      கொளு
      வெஞ்சுர தணிக்கென செஞ்சுடர் அவற்கு
      வேயமர் தோளி தாயர் பராயது.
      40. பருவம் நினைந்து கவறல்
      வைம்மலர் வாட்படை யூரற்கு செய்யும்குற் றேவல்மற்றென்
      மைம்மலர் வாட்கண்ணி வல்லள்கொல் லாம்தில்லை யான்மலைவாய்
      மொய்ம்மலர காந்தளை பாந்தளென்று எண்ணித்துண் ணென்றொளித்து
      கைம்மல ரால்கண் புதைத்து பதைக்கும்எம் கார்மயிலே. .. 233
      கொளு
      முற்றா முலைக்கு நற்றாய் கவன்றது.
      41. நாட துணிதல்
      வேயின தோளி மெலியல்விண் ணோர்தக்கன் வேள்வியின்வா
      பாயின சீர்த்தியன் அம்பல தானை பழித்துமும்மை
      தீயினது ஆற்றல் சிரம்கண்இழிந்து திசைதிசைதாம்
      போயின எல்லையெல் லாம்புக்கு நாடுவன் பொன்னினையே. .. 234
      கொளு
      கோடாய் மடந்தையை நாட துணிந்தது.
      42. கொடிக்குறி பார்த்தல்
      பணங்கள்அஞ் சாலும் பருஅரவு ஆர்த்தவன் தில்லையன்ன
      மணங்கொள்அஞ் சாயலும் மன்னனும் இன்னஏ வரக்கரைந்தால்
      உணங்கல்அஞ் சாதுஉண்ண லாம்ஒள் நிணப்பலி ஒக்குவல்மா
      குணங்கள்அஞ் சாற்பொலி யும்நல சேட்டை குலக்கொடியே. .. 235
      கொளு
      நற்றாய் நயந்து சொற்பு பராயது.
      43. சோதிடங் கேட்டல்
      முன்னும் கடுவிடம் உண்டதென் தில்லைமுன் னோன்அருளால்
      இன்னும் கடியி கடிமனை கேமற்று யாம்அயர
      மன்னும் கடிமலர கூந்தலை தான்பெறு மாறும்உண்டேல்
      உன்னுங்கள் தீதின்றி ஓதுங்கள் நான்மறை உத்தமரே. .. 236
      கொளு
      சித்தம் தளர்ந்து தேடும் கோடாய்
      உய்த்துணர் வோரை உரைமின் என்றது.
      44. சுவடு கண்டறிதல்
      தெள்வன் புனற்சென்னி யோன்அம் பலம்சிந்தி யார்இனஞ்சேர்
      முள்வன் பரல்முரம் பத்தின்முன் செய்வினை யேன்எடுத்த
      ஒள்வன் படைக்கண்ணி சீறடி இங்கிவை உங்குவை அ
      கள்வன் பகட்டுர வோன்அடி யென்று கருதுவனே. .. 237
      கொளு
      சுவடுபடு கடத்து செவிலி கண் டறிந்தது.
      45. சுவடு கண்டிரங்கல்
      பாலொத்த நீற்றம் பலவன் கழல்பணி யார்பிணிவா
      கோல தவிசின் மிதிக்கின் பதைத்தடி கொப்புள்கொள்ளும்
      வேலொத்த வெம்பரல் கானத்தின் நின்றோர் விடலைபின்போம்
      காலொ தனவினை யேன்பெற்ற மாணிழை கால்மலரே. .. 238
      கொளு
      கடத்திடை காரிகை அடித்தலம் கண்டு
      மன்னருள் கோடாய் இன்னல் எய்தியது.
      46. வேட்ட மாதரை கேட்டல்
      பேதை பருவம் பின்சென் றதுமுன்றில் எனைப்பிரிந்தால்
      ஊதைக்கு அலமரும் வல்லி பாள்முத்தன் தில்லையன்னாள்
      ஏதிற் கரத்தய லானொடுஇன்று ஏகினள் கண்டனையே
      போதிற் பொலியும் தொழிற்புலி பல்குரல் பொற்றொடியே. .. 239
      கொளு
      மென்மலர் கொய்யும் வேட்ட மாதரை
      பின்வரு செவிலி பெற்றி வினாயது.
      47. புறவொடு புலத்தல்
      புயலன்று அலர்சடை ஏற்றவன் தில்லை பொருப்பரசி
      பயலன் தலைப்பணி யாதவர் போல்மிகு பாவம்செய்தேற்கு
      அயலன் தமியன்அம் சொல்துணை வெஞ்சுரம் மாதர்சென்றால்
      இயலன்று எனக்கிற் றிலைமற்று வாழி எழிற்புறவே. .. 240
      கொளு
      காட்டு புறவொடு வாட்டம் உரைத்தது.
      48. குரவொடு வருந்தல்
      பாயும் விடையோன் புலியூர் அனையஎன் பாவைமுன்னே
      காயும் கடத்திடை யாடி கடப்பவும் கண்டுநின்று
      வாயும் திறவாய் குழைஎழில் வீசவண்டு ஓலுறுத்த
      நீயும்நின் பாவையும் நின்று நிலாவிடும் நீள்குரவே. .. 241
      கொளு
      தேடி சென்ற செவிலி தாயர்
      ஆடற் குரவொடு வாடி உரைத்தது.
      49. விரதியரை வினாவல்
      கத்திய பொக்கணத்து என்புஅணி கட்டங்கம் சூழ்சடைவெண்
      பொத்திய கோலத்தி னீர்புலி யூர்அம் பலவர்க்குற்ற
      பத்தியர் போல பணைத்திறு மாந்த பயோதரத்தோர்
      பித்திதன் பின்வர முன்வரு மோஓர் பெருந்தகையே. .. 242
      கொளு
      வழிவரு கின்ற மாவிர தியரை
      மொழிமின்கள் என்று முன்னி மொழிந்தது.
      50. வேதியரை வினாவல்
      வெதிரேய் கரத்துமென் தோல்ஏய் சுவல்வெள்ளை நூலிற்கொண்மூ
      அதிரேய் மறையின்இவ் வாறுசெல் வீர்தில்லை அம்பலத்து
      கதிரேய் சடையோன் கரமான் எனஒரு மான்மயில்போல்
      எதிரே வருமே சுரமே வெறுப்பவொர் ஏந்தலோடே. .. 243
      கொளு
      மாதின்பின் வரும்செவிலி வேதியரை விரும்பி வினாவியது.
      51. புணர்ந்துடன் வருவோரை பொருந்தி வினாவல்
      மீண்டார் எனஉவ §ன்கண்டு நும்மைஇம் மேதகவே
      பூண்டார் இருவர்முன் போயின ரேபுலி யூர்எனைநின்று
      ஆண்டான் அருவரை ஆளியன் னாளுக்கண்டேன்அயலே
      தூண்டா விளக்கனை யாய்என்னை யோஅன்னை சொல்லியதே. .. 244
      கொளு
      புணர்ந்து டன்வரும் புரவலன் ஒருபால்
      அணங்கமர் கோதையை ஆராய்ந்தது.
      52. வியந்துரைத்தல்
      பூங்கயி லா பொருப்பன் திருப்புலி யூரதென்ன
      தீங்கை இலாச்சிறி யாள்நின்றது இவ்விடம் சென்றெதிர்ந்த
      வேங்கையின் வாயின் வியன்னகம் மடுத்து கிடந்தலற
      ஆங்குஅயி லாற்பணி கொண்டது திண்திறல் ஆண்தகையே. .. 245
      கொளு
      வேங்கை பட்டதும் பூங்கொடி நிலையும்
      நாடா வரும் கோடாய் கூறியது.
      53. இயைபு எடுத்துரைத்தல்
      மின்தொத்து இடுகழல் நூபுரம் வெள்ளைசெம் பட்டுமின்ன
      ஒன்றுஒ திடவுடை யாளடுஒன் றாம்புலி யூரன்என்றே
      நன்றுஒ தெழிலை தொழவுற் றனம்என்ன தோர்நன்மைதான்
      குன்ற திடைக்கண் டனம்அன்னை நீசொன்ன கொள்கையரே. .. 246
      கொளு
      சேயிழை யோடு செம்மல் போதர
      ஆயிழை பங்கன்என்று அயிர்த்தேம் என்றது.
      54. மீள உரைத்தல்
      மீள்வது செல்வதன்று அன்னைஇவ் வெங்கடத்து அக்கடமா
      கீள்வது செய்த கிழவோ னொடுங்கிளர் கெண்டையன்ன
      நீள்வது செய்தகண் ணாள்இ நெடுஞ்சுரம் நீந்தியெம்மை
      ஆள்வது செய்தவன் தில்லையின் எல்லை அணுகுவரே. .. 247
      கொளு
      கடுங்கடம் கடந்தமை கைத்தாய்க்கு உரைத்து
      நடுங்கன்மின் மீண்டும் நடமின் என்றது.
      55. உலகியல்பு உரைத்தல்
      கரும்பிவர் சந்தும் தொடுகடல் முத்தும்வெண் சங்கும்எங்கும்
      விரும்பினர் பாற்சென்று மெய்க்குஅணி யாம்வியன் கங்கையென்னும்
      பெரும்புனல் சூடும் பிரான்சிவன் சிற்றம் பலம்அனைய
      கரும்பன மென்மொழி யாரும்அ நீர்மையர் காணுநர்க்கே. .. 248
      கொளு
      செவிலியது கவலை தீர
      மன்னிய உலகியல் முன்னி உரைத்தது.
      56. அழுங்கு தாய்க்கு உரைத்தல்
      ஆண்டுஇல் எடுத்தவ ராம்இவர் தாம்அவர் அல்குவர்போ
      தீண்டில் எடுத்தவர் தீவினை தீர்ப்பவன் தில்லையின்வா
      தூண்டில் எடுத்தவ ரால்தொங்கொடு எற்ற பழம்விழுந்து
      பாண்டில் எடுத்தபல் தாமரை கீழும் பழனங்களே. .. 249
      கொளு
      செழும்பணை அணைந்தமை
      அழுங்கு தாய்க்கு உரைத்தது.
      ------------------------------
      பதினேழாம் அதிகாரம்
      17. வரைவு முடுக்கம்
      பேரின்ப கிளவி
      வரைவு முடுக்கம் ஒருபதி னாறும்
      சிவனது கருணை தெரிய உரைத்தல்
      இன்பம் பெறஅருள் எடுத்தியம் பியது.
      1. வருத்த மிகுதி கூறி வரைவு கடாதல்
      எழுங்குலை வாழையின் இன்கனி தின்றுஇள மந்திஅந்தண்
      செழுங்குலை வாழை நிழலில் துயில்சிலம் பாமுனைமேல்
      உழுங்கொலை வேல்திரு சிற்றம் பலவரை உன்னலர்போல்
      அழுங்குலை வேலன்ன கண்ணிக்குஎன் னோநின் னருள் வகையே. .. 250
      கொளு
      இரவு குறியிடத்து ஏந்திழை பாங்கி
      வரைவு வேண்டுதல் வரவு ரைத்தது.
      2. பெரும்பான்மை கூறி மறுத்தல்
      பரம்பயன் தன்னடி யேனுக்கு பார்விசும் பூடுருவி
      வரம்பயன் மாலறி யாத்தில்லை வானவன் வானகஞ்சேர்
      அரம்பையர் தம்மிட மோஅன்றி வேழத்தின் என்புநட்ட
      குரம்பையர் தம்மிட மோஇடம் தோன்றும்இ குன்றிடத்தே. .. 251
      கொளு
      குலம்புரி கொம்பர்க்கு சிலம்பின் செப்பியது.
      3. உள்ளது கூறி வரைவு கூடாதல்
      சிறார்கவண் வாய்த்த மணியிற் சிதை பெரு தேனிழும்என்று
      இறால்கழி வுற்றுஎம் சிறுகுடில் உந்தும் இடமிதுஎந்தை
      உறாவரை யுற்றார் குறவர்பெற் றாளும் கொடிச்சி உம்பர்
      பெறாஅருள் அம்பல வன்மலை காத்தும் பெரும்புனமே. .. 252
      கொளு
      இன்மை உரைத்த மன்னனுக்கு
      மாழை நோக்கி தோழி உரைத்தது.
      4. ஏதங்கூறி இரவரவு விலக்கல்
      கடந்தொறும் வாரண வல்சியின் நாடிப்பல் சீயம்கங்குல்
      இடம்தொறும் பார்க்கும் இயவொரு நீஎழில் வேலின்வந்தால்
      படந்தொறும் தீஅர வன்னம் பலம்பணி யாரின்எம்மை
      தொடர்ந்தொறும் துன்புஎன் பதேஅன்ப நின்னருள் தோன்றுவதே. .. 253
      கொளு
      இரவரு துயரம் ஏந்தலுக்கு எண்ணி
      பருவரல் எய்தி பாங்கி பகர்ந்தது.
      5. பழிவரவுரைத்தது பகல்வரவு விலக்கல்
      களிறுற்ற செல்லல் களைவயின் பெண்மரங் கைஞ்ஞெமிர்த்து
      பிளிறுற்ற வான பெருவரை நாட பெடைநடையோடு
      ஒளிறுற்ற மேனியின் சிற்றம் பலம்நெஞ் சுறாதவர்போல்
      வெளிறுற்ற வான்பழி யாம்பகல் நீசெய்யும் மெய்யருளே. .. 254
      கொளு
      ஆங்ஙனம் ஒழுகும் அடல்வேல் அண்ணலை
      பாங்கி ஐய பகல்வரல் என்றது.
      6. தொழுதிரந்து கூறல்
      கழிகண் தலைமலை வோன்புலி யூர்கரு தாதவர்போல்
      குழிகண் களிறு வெரீஇஅரி யாளி குழீஇவழங்கா
      கழிக டிரவின்வரல்கழல் கைதொழு தேயிரந்தேன்
      பொழிக புயலின் மயிலில் துவளும் இவள்பொருட்டே. .. 255
      கொளு
      இரவரவின் ஏதம் அஞ்சி
      சுரிதருகுழல் தோழி சொல்லியது.
      7. தாய் அறிவு கூறல்
      விண்ணும் செலவறி யாவெறி யார்கழல் வீழ்சடைத்தீ
      வண்ணன் சிவன்தில்லை மல்லெழில் கானல் அரையிரவில்
      அண்ணல் மணிநெடு தேர்வந்த துண்டாம் எனச்சிறிது
      கண்ணும் சிவந்தன்னை என்னையும் நோக்கினள் கார்மயிலே. .. 256
      கொளு
      சிறைப்பு றத்து செம்மல் கேட்ப
      வெறிக்குறல் பாங்கி மெல்லியற்கு உரைத்தது.
      8. மந்தி மேல் வைத்து வரைவு கடாதல்
      வான்தோய் பொழில்எழில் மாங்கனி மந்தியின் வாய்க்கடுவன்
      தேன்தோய்த்து அருத்தி மகிழ்வகண் டாள்திரு நீள்முடிமேல்
      மீன்தோய் புனற்பெண்ணை வைத்துடை யானையும் மேனியைத்தான்
      வான்தோய் மதில்தில்லை மாநகர் போலும் வரிவளையே. .. 257
      கொளு
      வரிவளையை வரைவு கடாவி
      அரிவை தோழி உரை பகர்ந்தது.
      9. காவல் மேல் வைத்து கண் துயிலாமை கூறல்
      நறைக்கண் மலிகொன்றை யோன்நின்று நாடக மாடுதில்லை
      சிறைக்கண் மலிபுனல் சீர்நகர் காக்கும்செவ் வேல்கிளைஞர்
      பறைக்கண் படும்படும் தோறும் படாமுலை பைந்தொடியாள்
      கறைக்கண் மலிகதிர் வேற்கண் படாது கலங்கினவே. .. 258
      கொளு
      நகர்காவலின் மிகுகழி காதல்.
      10. பகல் உடம்பட்டாள் போன்று இரவரவு விலக்கல்
      கரலா யினர்நினை யாத்தில்லை அம்பல தான்கழற்குஅன்
      பிலரா யினர்வினை போலிருள் தூங்கி முழங்கிமின்னி
      புலரா இரவும் பொழியா மழையும்புண் ணில்நுழைவேல்
      மலரா வரும்மரு தும்இல்லை யோநும் வரையிடத்தே. .. 259
      கொளு
      விரைதரு தாரோய் இரவரல் என்றது.
      11. இரவு உடம்பட்டாள் போன்று பகல் வரவு விலக்கல்
      இறவரை உம்பர கடவு பராய்நின்று எழிலியுன்னி
      குறவரை ஆர்க்கும் குளிர்வரை நாட கொழும்பவள
      நிறவரை மேனியன் சிற்றம் பலம்நெஞ்சு உறாதவர்போல்
      உறவரை மேகலை யாட்குஅலராம்பகல் உள்ளருளே. .. 260
      கொளு
      இகலடு வேலோய் பகல்வரல் என்றது.
      12. இரவும் பகலும் வரவு விலக்கல்
      கழியா வருபெரு நீர்சென்னி வைத்தென்னை தன்தொழும்பில்
      கழியா அருள்வைத்த சிற்றம் பலவன் கரந்தருமான்
      விழியா வரும்புரி மென்குழ லாள்திறத்து ஐயமெய்யே
      பழியாம் பகல்வரில் நீயிரவு ஏதும் பயனில்லையே. .. 261
      கொளு
      இரவும் பகலும் வரவொழி கென்றது.
      13. காலங் கூறி வரைவு கடாதல்
      மையார் கதலி வனத்து வருக்கை பழம்விழுதேன்
      எய்யாது அயின்றன மந்திகள் சோரும் இருஞ்சிலம்பா
      மெய்யா அரியதென் அம்பல தான்மதி யூர்கொள் வெற்பின்
      மொய்யார் வளரிள வேங்கைபொன் மாலையின் முன்னினவே. .. 262
      கொளு
      முந்திய பொருளை சிந்தையில் வைத்து
      வரைதரு கிளவியில் தெரிய உரைத்தது.
      14. கூறுவி குற்றல்
      தேமாம் பொழில்தில்லை சிற்றம் பலத்துவிண் ணோர்வணங்க
      நாமா தரிக்க நடம்பயில் வோனைநண் ணாதவரின்
      வாமாண் கலைசெல்ல நின்றார் கிடந்தநம் அல்லல்கண்டால்
      தாமா அறிகில ராயின்என்னாம் சொல்லும் தன்மைகளே. .. 263
      கொளு
      ஒத்தது ஒவ்வாது உரைத்த தோழி
      கொத்தவிழ் கோதையால் கூறுவி குற்றது.
      15. செலவு நினைந்து உரைத்தல்
      வல்சியின் எண்கு வளர்புற்று அகழமல் கும்இருள்வா
      செல்வுஅரி தன்றுமன் சிற்றம் பலவரை சேரலர்போல்
      கொல்கரி சீயங் குறுகா வகைபிடி தானிடைச்செல்
      கல்லதர் என்வந்த வாறென் பவர்ப்பெறின் கார்மயிலே. .. 264
      கொளு
      பாங்கி நெருங்க பணிமொழி மொழிந்து
      தேங்கமழ் சிலம்பற்கு சிறைபுற கிளவி.
      16 பொலிவழிவு உரைத்து வரைவு கடாதல்
      வாரி களிற்றின் மருப்புகு முத்தம் வரைமகளிர்
      வேரிக்கு அளிக்கும் விழுமலை நாட விரிதிரையிண்
      நாரிக்கு அளிக்கமர் நன்மா சடைமுடி நம்பர்தில்லை
      ஏரி களிக்கரு மஞ்ஞைஇ நீர்மைஎன் எய்துவதே. .. 265
      கொளு
      வரைவு விரும்பு மன்னுயிர பாங்கி
      விரைதரு குழலி மெலிவு ரைத்தது.
      -----------------------
      பதினெட்டாம் அதிகாரம்
      18. வரை பொரு பிரிதல்
      பேரின்ப கிளவி
      வரைபொரு பிரிதல் துறைமு பத்து
      மூன்றுங் கருணை தோன்ற அருளே
      உணர்த்தலும் உணர்தலும் திரோதையும் பரையும்
      தெரிசன மாகி திவ்விய இன்பம்
      கூடும் குறியும் குலவி யுணர்தல்.
      1. முலை விலை கூறல்
      குறைவிற்கும் கல்விக்கும் செல்விற்கும் நின்குல திற்கும் வந்தோர்
      நிறைவிற்கும் மேதகு நீதிக்கும் ஏற்பின்அல் லால்நினையின்
      இறைவிற் குலாவரை யேந்திவண் தில்லையன் ஏழ்பொழிலும்
      உறைவிற் குலாநுத லாள்விலை யோமெய்ம்மை யோதுநர்க்கே. .. 266
      கொளு
      கொலைவேற் கண்ணிக்கு விலையிலை என்றது.
      2. வருமது கூறி வரைவுடம்படுத்தல்
      வடுத்தன நீள்வகிர கண்ணிவெண் நித்தில வாள்நகைக்கு
      தொடுத்தன நீவிடு தெ துணியென்னை தன்தொழும்பிற்
      படுத்தநன் நீள்கழல் ஈசர்சிற் றம்பலம் தாம்பணியார்க்கு
      அடுத்தன தாம்வரின் பொல்லாது இரவின்நின் ஆரருளே. .. 267
      கொளு
      தொடுத்தன விடுத்து தோகை தோளெய்து
      இடுக்கண் பெரிது இரவரின் என்றது.
      3. வரைபொரு பிரிவை உரையென கூறல்
      குன்றங் கிடையும் கடந்துமர் கூறும் நிதிகொணர்ந்து
      மின்தங் கிடைநும் மையும் வந்து மேவுவன் அம்பலம்சேர்
      மன்தங்கு இடைமருது ஏகம்பம் வாஞ்சியம் அன்னபொன்ன
      சென்றுஅங்கு இடைகொண்டு வாடா வகைசெப்பு தேமொழியே. .. 268
      கொளு
      ஆங்க வள்வயின் நீங்கல் உற்றவன்
      இன்னுயிர தோழிக்கு முன்னி மொழிந்தது.
      4. நீயே கூறு என்றல்
      கேழ்ஏ வரையும்இல் லோன்புலி யூர்பயில் கிள்ளையன்ன
      யாழேர் மொழியாள் இரவரி னும்பகற் சேறியென்று
      வாழேன் எனஇரு கும்வரி கண்ணியை நீவருட்டி
      தாழேன் எனஇடை கண்சொல்லி ஏகு தனிவள்ளலே. .. 269
      கொளு
      காய்கதிர் வேலோய் கனங்குழை அவட்கு
      நீயே உரை நின்செலவு என்றது.
      5. சொல்லாது ஏகல்
      வருட்டின் திகைக்கும் வசிக்கின் துளங்கும் மனமகிழ்ந்து
      தெருட்டின் தெளியலள் செப்பும் வகையில்லை சீரருக்கன்
      குருட்டின் புகச்செற்ற கோன்புலி யூர்குரு கார்மனம் போன்று
      இருட்டிற் புரிகுழ லாட்குஎங்ங னேசொல்லி ஏகுவனே. .. 270
      கொளு
      நிரைவளை வாட உரையாது அகன்றது.
      6. பிரிந்தமை கூறல்
      நல்லாய் நமக்குற்றது என்னென்று உரைக்கேன் நமர்தொடுத்த
      எல்லா நிதியும் உடன்விடு பான்இமை யோர் இறைஞ்சும்
      மல்லார் கழல்அழல் வண்ணர்வண் தில்லை தொழார்கள் அல்லால்
      சொல்லா அழற்கடம் இன்றுசென் றார் சிறந்தவரே. .. 271
      கொளு
      தேங்கமழ் குழலிக்கு பாங்கி பகர்ந்தது.
      7. நெஞ்சொடு கூறல்
      அருந்தும் விடம்அணி யாம்மணிகண்டன்மற்று அண்டர்க்கெல்லாம்
      மருந்தும் அமிர்தமும் ஆகும்முன் னோன்தில்லை வாழ்த்தும்வள்ளல்
      திருந்தும் கடன்நெறி செல்லும்இவ் வாறு சிதைக்குமென்றால்
      வருந்தும் மடநெஞ்ச மேயென்ன யாம்இனி வாழ்வகையே. .. 272
      கொளு
      கல்வரை நாடன் சொல்லாது அகல
      மின்னொளி மருங்குல் தன்னொளி தளர்ந்து.
      8. நெஞ்சொடு வருந்தல்
      ஏர்ப்பின்னை தோள்முன் மணந்தவன் ஏத்த எழில்திகழும்
      சீர்ப்பொன்னை வென்ற செறிகழ லோன்தில்லை சூழ்பொழில்வா
      கார்ப்புன்னை பொன்னவிழ் முத்த மணலிற் கலந்தகன்றார்
      தேர பின்னை சென்றஎன்
      நெஞ்சுஎன் கொலாம்இன்று செய்கின்றதே. .. 273
      கொளு
      வெற்பன் நீங்க பொற்பு வாடியது.
      9. வருத்தம் கண்டு உரைத்தல்
      கானமர் குன்றர் செவியுற வாங்கு கணைதுணையா
      மானமர் நோக்கியர் நோக்கென மான்நல் தொடைமடக்கும்
      வானவர் வெற்பர்வண் தில்லையின் மன்னை வணங்கலர் போல்
      தேனமர் சொல்லிசெல் லார்செல்லல் செல்லல் திருநுதலே. .. 274
      கொளு
      அழலுறு கோதையின் விழுமுறு பேதையை
      நீங்கலரென பாங்கி பகர்ந்தது. 9
      10. வழியழுகி வற்புறுத்தல்
      மதுமலர சோலையும் வாய்மையும் அன்பும் மருவி வெங்கான்
      கதுமென போக்கும் நிதியின் அருக்குமுன் னிக்கலுழ்ந்தால்
      நொதுமலர் நோக்கமொர் மூன்றுடை யோன்தில்லை நோக்கலர்போல்
      இதுமலர பாவைக்குஎன் னோவந்த வாறென்பர் ஏந்திழையே. .. 275
      கொளு
      சூழிருங் கூந்தலை தோழி தெருட்டியது.
      11. வன்புறை எதிர் அழிந்து இரங்கல்
      வந்துஆய் பவரைஇல்லாமயில் முட்டை இளையமந்தி
      பந்தாடு இரும்பொழில் பல்வரை நாடன்பண் போஇனிதே
      கொந்தார் நறுங்கொன்றை கூத்தன்தென் தில்லை தொழார்குழுப்போல்
      சிந்தா குலமுற்ற பற்றின்றி நையும் திருவினர்க்கே. .. 276
      கொளு
      வன்கறை வேலோன் வரைவு நீட
      வன்புறை அழிந்தவள் மனம்அழுங் கியது.
      12. வாய்மை கூறி வருத்தம் தணித்தல்
      மொய்யென் பதேஇழை கொண்டவன் என்னைத்தன் மொய்கழற்குஆ
      செய்என் பதேசெய் தவன்தில்லை சூழ்கடற் சேர்ப்பர்சொல்லும்
      பொய்என்ப தேகருத்தாயின் புரிகுழற் பொற்றொடியாய்
      மெய்என்பது ஏதுமற்று இல்லைகொலாம்இவ் வியவிடத்தே. .. 277
      கொளு
      வேற்றடங் கண்ணியை ஆற்று வித்தது.
      13. தேறாது புலம்பல்
      மன்செய்த முன்னாள் மொழிவழி யேஅன்ன வாய்மைகண்டும்
      என்செய்த நெஞ்சும் நிறையும்நில் லாஎனது இன்னுயிரும்
      பொன்செய்த மேனியன் தில்லை யுறாரின் பொறைஅரிதாம்
      முன்செய்த தீங்குகொல் காலத்து நீர்மைகொல் மொய்குழலே. .. 278
      கொளு
      தீதறு குழலி தேற்ற தேறாது
      போதுறு குழலி புலம்பியது.
      14. காலம் மறைத்துரைத்தல்
      கருந்தினை ஓம்ப கடவுள் பராவி நமர்கலிப்ப
      சொரிந்தன கொண்மூ சுரந்ததன் பேரரு ளால்தொழும்பிற்
      பரிந்தெனை யாண்டசிற் றம்பல தான்பரங் குன்றில்துன்றி
      விரிந்தன காந்தள் வெருவரல் காரென வெள்வளையே. .. 279
      கொளு
      காந்தள் கருவுற கடவுள் மழைக்கென்று
      ஏந்திழை பாங்கி இனிதியம் பியது.
      15. தூது வர உரைத்தல்
      வென்றவர் முப்புரம் சிற்றம் பலத்திற்நின் றாடும்வெள்ளி
      குன்றவர் குன்றா அருள்தர கூடினர் நம்மகன்று
      சென்றவர் தூதுகொல் லோஇரு தேமையும் செல்லல்செப்பா
      நின்றவர் தூதுகொல் லோவந்து தோன்றும் நிரைவளையே. .. 280
      கொளு
      ஆங்கொரு தூதுவர பாங்கிகண் டுரைத்தது.
      16. தூது கண்டழுங்கல்
      வருவன செல்வன தூதுகள் ஏதில வான்புலியூர்
      ஒருவனது அன்பரின் இன்ப கலவிகள் உள்ளுருக
      தருவன செய்தனது ஆவிகொண்டு ஏகிஎன் நெஞ்சில்தம்மை
      இருவின காதலர் ஏதுசெய் வான்இன்று இருக்கின்றதே. .. 281
      கொளு
      அயலுற்ற தூதுவர கயலுற்றகண்ணி மயலுற்றது.
      17. மெலிவு கண்டு செவிலி கூறல்
      வேயின மென்தோள் மெலிந்தோளி வாடி விழிபிறிதா
      பாயின மேகலை பண்டையள் அல்லள் பவளச்செவ்வி
      ஆயின ஈசன் அமரர்க்கு அமரன்சிற் றம்பலத்தான்
      சேயினது ஆட்சியில் பட்டன ளாம்இ திருந்திழையே. .. 282
      கொளு
      வண்டமர் புரிகுழல் ஒண்டொடி மேவிய
      வாடா நின்ற கோடாய் கூறியது.
      18. கட்டு வைப்பித்தல்
      கணங்குற்ற கொங்கைகள் சூதுற் றிலசொல் தெளிவுற்றில
      குணங்குற்றம் கொள்ளும் பருவமு றாள்குறு காஅசுரர்
      நிணங்குற்ற வேல்சிவன் சிற்றம் பலநெஞ் சுறாதவர்போல்
      அணங்குற்ற நோய்அறி வுற்றுரை யாடுமின் அன்னையரே. .. 283
      கொளு
      மால்கொண்ட கட்டு கால்கொண்டது.
      19. கலக்கமுற்று நிறுத்தல்
      மாட்டியன் றேஎம் வயின்பெரு நாணினி மாக்குடிமா
      சூட்டியன் றேநிற்பது ஓடிய வாறுஇவள் உள்ளமெல்லாம்
      காட்டியன் றேநின்ற தில்லைச்தொல் லோனைக்கல் லாதவர்போல்
      வாட்டியன்று ஏர்குழ லார்மொழி யாதன வாய்திறந்தே. .. 284
      கொளு
      தெய்வத்தில் தெரியுமென
      எவ்வத்தின் மெலிவுற்றது.
      20. கட்டுவித்தி கூறல்
      குயிலிதன் றேயென்ன லாம்சொல்லி கூறன்சிற் றம்பலத்தான்
      இயலிதன் றேயென்ன லாகா இறைவிறற் சேய்கடவும்
      மயிலிதன் றேகொடி வாரணம் காண்கவன் சூர்தடிந்த
      அயிலிதன் றேயிதன் றேநெல்லில் தோன்றும் அவன்வடிவே. .. 285
      கொளு
      கட்டு வித்தி விட்டு ரைத்தது.
      21. வேலனை அழைத்தல்
      வேலன் புகுந்து வெறியா டுகவெண் மறியறுக்க
      காலன் புகுந்துஅவி யக்கழல் வைத்தெழில் தில்லைநின்ற
      மேலன் புகுந்தென்கண் நின்றான் இருந்தவெண் காடனைய
      பாலன் புகுந்தி பரிசினின் நிற்பித்த பண்பினுக்கே. .. 286
      கொளு
      வெறியாடிய வேலனை கூஉய்
      நெறியார் குழலி தாயர் நின்றது.
      22. இன்னல் எய்தல்
      அயர்ந்தும் வெறிமறி ஆவி செகுத்தும் விளர்ப்புஅயலார்
      பெயர்ந்தும் ஒழியா விடின்என்னை பேசுவ பேர்ந்திருவர்
      உயர்ந்தும் பணிந்தும் உணரானது அம்பலம் உன்னலரின்
      துயர்ந்தும் பிறிதின் ஒழியினென் ஆதும் துறைவனுக்கே. .. 287
      கொளு
      ஆடிய வெறியிற் கூடுவது அறியாது
      நன்னறுங் கோதை இன்னல் எய்தியது.
      23. வெறி விலக்குவிக்க நினைதல்
      சென்றார் திருத்திய செல்லல்நின் றார்கள் சிதைப்பரென்றால்
      நன்றா அழகிதன் றேஇறை தில்லை தொழாரின்நைந்தும்
      ஒன்றாம் இவட்கும் மொழிதல்இல் லேன்மொழி யாதும்உய்யேன்
      குன்றார் துறைவர்க்கு உறுவேன் உரைப்பன் இ கூர்மறையே. .. 288
      கொளு
      அயல்திரு வெறியின் மயல்தரு மென
      விலக்கல் உற்ற குலக்கொடி நினைந்தது.
      24. அறத்தொடு நிற்றலை உரைத்தல்
      யாயும் தெறுக அயலவர் ஏசுக ஊர்நகுக
      நீயும் முனிக நிகழ்ந்தது கூறுவல் என்னுடைய
      வாயும் மனமும் பிரியா இறைதில்லை வாழ்த்துநர்போல்
      தூயன் நினக்கு கடுஞ்சூள் தருவன் சுடர்க்குழையே. .. 289
      கொளு
      வெறித்தலை வெரீஇ வெருவரு தோழிக்கு
      அறத்தொடு நின்ற ஆயிழை உரைத்தது.
      25. அறத்தொடு நிற்றல்
      வண்டலுற் றேம்எங்கண் வந்தொரு தோன்றல் வரிவளையீர்
      உண்டலுற் றேமென்று நின்றதோர் போழ்துஉடை யான்புலியூர
      கொண்டலுற்று ஏறும் கடல்வர எம்உயிர் கொண்டுதந்து
      கண்டலுற்று ஏர்நின்ற சேரிச்சென் றான்ஓர் கழலவனே. .. 290
      கொளு
      செய்த வெறியின் எய்துவது அறியாது
      நிறத்தொடி தோழிக்கு அறத்தொடு நின்றது.
      26. ஐயந்தீர கூறல்
      குடிக்கலர் கூறினும் கூறா வியன்தில்லை கூத்தன்தாள்
      முடிக்குஅல ராக்கும்மொய் பூந்துறை வற்கு முரிபுருவ
      வடிக்கலர் வேற்கண்ணி வந்தன சென்றுநம் யாய்அறியும்
      படிக்கல ராம்இவை என்நாம் மறைக்கும் பரிசுகளே. .. 291
      கொளு
      விலங்குதல் விரும்பு மேதரு தோழி
      அலங்கற் குழலிக்கு அறிய உரைத்தது.
      27. வெறி விலக்கல்
      விதியுடை யார்உண்க வேரி விலக்கலம் அம்பலத்து
      பதியுடை யான்பரங் குன்றினில் பாய்புனல் யாம் ஒழு
      கதியுடை யான்கதிர தோள்நிற்க வேறு கருதுநின்னின்
      மதியுண்டை யார்தெய்வ மேயில்லை கொல்இனி வையகத்தே. .. 292
      கொளு
      அறத்தொடு நின்ற திறத்தினிற் பாங்கி
      வெறி விலக்க பிறிதுரைத்தது.
      28. செவிலிக்கு தோழி அறத்தொடு நிற்றல்
      மனக்களி யாய்இன் றியான்மகிழ் தூங்கத்தன் வார்கழல்கள்
      எனக்களி யாநிற்கும் அம்பல தோன்இரு தண்கயிலை
      சினக்களி யானை கடிந்தார் ஒருவர்செவ் வாய்ப்பசிய
      புனக்கிளி யாங்கடி யும்வரை சாரற் பொருப்பிடத்தே. .. 293
      கொளு
      சிறப்புடை செவிலிக்கு அறத்தொடு நின்றது.
      29. நற்றாய்க்கு செவிலி அறத்தொடு நிற்றல்
      இளையாள் இவளைஎன் சொல்லி பரவுதும் ஈர்எயிறு
      முளையா அளவின் முதுக்குறை தாள்முடி சாய்த்திமையோர்
      வளையா வழுத்தா வருதிரு சிற்றம் பலத்துமன்னன்
      திளையா வரும்அரு விக்கயி லைப்பயில் செல்வியையே. ... 294
      கொளு
      கற்பினின் வழாமை நிற்பித்து எடுத்தோள்
      குலக்கொடி தாயர்க்கு அறத்தொடு நின்றது.
      30. தேர் வரவு கூறல்
      கள்ளினம் ஆர்த்துண்ணும் வண்கொன்றை யோன்தில்லை கார்க்கடல்வா
      புள்ளினம் ஆர பொருதிரை யார புலவர்கள்தம்
      வள்ளினம் ஆர்ப்ப மதுகரம் வலம்புரியின்
      வெள்ளினம் ஆர்ப்ப வரும்பெரும் தேரின்று மெல்லியலே. ... 295
      கொளு
      மணிநெடு தேரோன் அணிதிணின் வருமென
      யாழியல் மொழிக்கு தோழி சொல்லியது.
      31. மணமுரசு கேட்டு மகிழ்ந்துரைத்தல்
      பூரண பொற்குடம் வைக்க மணிமுத்தம் பொன்பொதிந்த
      தோரணம் நீடுக தூரியம் ஆர்க்கதொன் மால்அயற்கும்
      காரணன் ஏரணி கண்ணுத லோன்கடல் திலலையன்ன
      வாரண வும்முலை மன்றலென்று ஏங்கும் மணமுரசே. ... 296
      கொளு
      நிலங்காவலர் நீண்மணத்தின்
      நலங்கண்டவர் நயந்துரைத்தது.
      32. ஐயுற்று கலங்கல்
      அடற்களி யாவர்க்கும் அன்பர்க்கு அளிப்பவன் துன்பஇன்பம்
      படக்களி யாவண் டறைபொழில் தில்லை பரமன்வெற்பில்
      கடக்களி யானை கடிந்தவர கோஅன்றி நின்றவர்க்கோ
      விடக்களி யாம்நம் விழுநகர் ஆர்க்கும் வியன்முரசே. ... 297
      கொளு
      நல்லவர் முரசுமற்று அல்லவர் முரசென
      தெரிவ ரிதென அரிவை கலங்கியது.
      33. நிதி வரவு கூறா நிற்றல்
      என்கடை கண்ணினும் யான்பிற ஏத்தா வகையிரங்கி
      தன்கடை கண்வைத்த தண்தில்லை சங்கரன் தாழ்கயிலை
      கொன்கடை கண்தரும் யானை கடிந்தார் கொணர்ந்திறுத்தார்
      முன்கடை கண்ணிது காண்வந்து தோன்றும் முழுநிதியே. ... 298
      கொளு
      மகிழ்தரு மனத்தொடு வண்புகழ தோழி
      திகழ் நிதி மடந்தைக்கு தெரிய உரைத்தது.
      -----------------------------
      கற்பியல் 19 - 25 அதிகாரங்கள்
      பத்தொன்பதாம் அதிகாரம்
      19. மணம் சிறப்புரைத்தல்
      பேரின்ப கிளவி
      மணஞ்சிற புரைத்தல் வரும் ஓர் ஒன்பதும்
      உயிர்சிவ மணம்பெற்று உண்மைஇன் பாகிய
      பரைகட தின பண்பாய் நிற்றல்.
      1. மணமுரசு கூறல்
      பிரசம் திகழும் வரைபுரை யானையின் பீடழித்தார்
      முரசம் திகழும் முருகியம் நீங்கும் எவர்க்குமுன்னாம்
      அரசுஅம் பலத்துநின்று ஆடும் பிரானருள் பெற்றவரின்
      புரைசந்த மேகலை யாய்துயர் தீர புகுந்துநின்றே. ... 299
      கொளு
      வரைவு தோன்ற மகிழ்வுறு தோழி
      நிரைவ ளைக்கு நின்று ரைத்தது.
      2. மகிழ்ந்துரைத்தல்
      இருந்துதி என்வயின் கொண்டவன் யான்எ பொழுதும்உன்னும்
      மருந்து திசைமுகன் மாற்கரி யோன்தில்லை வாழ்த்தினர்போல்
      இருந்து திவண்டன வால்எரி முன்வலம் செய்துஇடப்பால்
      அருந்துதி காணும் அளவும் சிலம்பன் அருந்தழையே. ... 300
      கொளு
      மன்னிய கடியிற் பொன்னறுங் கோதையை
      நன்னுதல் தோழி தன்னின் மகிழ்ந்தது.
      3. வழிபாடு கூறல்
      சீரியல் ஆவியும் யாக்கையும் என்ன சிறந்தமையால்
      காரியல் வாட்கண்ணி எண்ணக லார்கம லங்கலந்த
      வேரியம் சந்தும் வியல்த தெனக்கற்பின் நிற்பர்அன்னே
      காரியல் கண்டவர்வண் தில்லை வணங்கும்எம் காவலரே. ... 301
      கொளு
      மணமனை காண வந்தசெவி லிக்கு
      துணைமலர குழலி தோழி சொல்லியது.
      4. வாழ்க்கை நலங்கூறல்
      தொண்டினம் மேவும் கடர்க்கழ லோன்தில்லை தொல்நகரில்
      கண்டின மேவும்இல் நீஅவள் நின்கொழு நன்செழுமெல்
      தண்டின மேவுதிண் தோளவன் யானவள் தற்பணிவோள்
      வண்டின மேவும் குழலாள் அயல்மன்னும் இவ்அயலே. ... 302
      கொளு
      மணமனை சென்று மகிழ்தரு செவிலி
      அணிமனை கிழத்திக்கு அதன்சிறப்பு உரைத்தது.
      5. காதல் கட்டுரைத்தல்
      பொட்டணி யான்நுதல் போயிறும் பொய்போல் இடையெனப்பூண்
      இட்டணி யான்தவி சின்மலர் அன்றி மிதிப்ப கொடான்
      மட்டணி வார்குழல் வையான் மலர்வண் டுறுதல் அஞ்சி
      கட்டணி வார்சடை யோன்தில்லை போலிதன் காதலனே. ... 303
      கொளு
      சோதி வேலவன் காதல்க டுரைத்தது.
      6. கற்பறிவித்தல்
      தெய்வம் பணிகழ லோன்தில்லை சிற்றம் பலம்அனையாள்
      தெய்வம் பணிந்தறி யாள்என்று நின்று திறைவழங்கா
      தெய்வம் பணியச்சென் றாலும்மன் வந்தன்றி சேர்ந்தறியான்
      பெளவம் பணிமணி யன்னார் பரிசுஇன்ன பான்மைகளே. ... 304
      கொளு
      விற்பொல நுதலி கற்பறி வித்தது.
      7. கற்பு பயப்புரைத்தல்
      சிற்பம் திகழ்தரு திண்மதில் தில்லை சிற்றம்பலத்து
      பொற்பந்தி யன்ன சடையவன் பூவணம் அன்னபொன்னின்
      கற்பந்தி வாய்வட மீனும் கடக்கும் படிகடந்தும்
      இற்பந்தி வாயன்றி வைகல் செல்லாதவன் ஈர்ங்களிறே. ... 305
      கொளு
      கற்பு பயந்த அற்புதம் உரைத்தது.
      8. மருவுதல் உரைத்தல்
      மன்னவன் தெம்முனை மேற்செல்லு மாயினும் மாலரியேறு
      அன்னவன் தேர்புறத்து அல்கல்செல் லாது வரகுணனாம்
      தென்னவன் ஏத்துசிற்றம் பலம் தான்மற்றை தேவர்க்கெல்லாம்
      முன்னவன் மூவல்அன் னாளும்மற்று ஓர் தெய்வம் முன்னலளே. ... 306
      கொளு
      இருவர் காதலும் மருவுதல் உரைத்தது.
      9. கலவி இன்பம் கூறல்
      ஆனந்த வெள்ளத்து அழுந்தும்ஓர் ஆருயிர் ஈருரு கொண்டு
      ஆனந்த வெள்ள திடைத்திளை தால்ஒக்கும் அம்பலஞ்சேர்
      ஆனந்த வெள்ளத்து அறைகழ லோன்அருள் பெற்றவரின்
      ஆனந்த வெள்ளம்வற் றாதுமுற்றாதுஇவ் வணிநலமே. ... 307
      கொளு
      நன்னுதல் மடந்தை தன்னலங் கண்டு
      மகிழ்தூங்கு உளத்தோடு இகுளை கூறியது.
      ------------------
      இருபதாம் அதிகாரம்
      20. ஓதற் பிரிவு
      பேரின்ப கிளவி
      கல்வியில் பிரிவொரு நான்கும் காதல்
      புல்லும் ஆனந்த இன பூரணம்
      சொல்லும் பயனின் திறம்பா ராட்டல்.
      1. கல்வி நலங்கூறல்
      சீரள வில்லா திகழ்தரு கல்விச்செம் பொன்வரையின்
      ஆரள வில்லா அளவுசென் றார்அம் பலத்துள்நின்ற
      ஓரள வில்லா ஓருவன் இருங்கழல் உன்னினர்போல்
      ஏரள வில்லா அளவினர் ஆகுவர் ஏந்திழையே. ... 308
      கொளு
      கல்விக்கு அகல்வர் செல்வ தவரென
      செறிகுழற் பாங்கிக்கு அறிவறி வித்தது.
      2. பிரிவு நினைவுரைத்தல்
      வீதலுற் றார்தலை மாலையன் தில்லைமி கோன்கழற்கே
      காதலுற் றார்நன்மை கல்விசெல் வீதரும் என்பதுகொண்டு
      ஓதலுற் றார்உற் றுணர்தலுற் றார்செல்லல் மல்லழற்கான்
      போதலுற் றார்நின் புணர்முலை யுற்ற புரவலரே. ... 309
      கொளு
      கல்விக்கு அகல்வர் செல்வ தவரென
      பூங்குழல் மடந்தைக்கு பாங்கி பகர்ந்தது.
      3. கலக்கம் கண்டுரைத்தல்
      கற்பா மதில் தில்லை சிற்றம் பலமது காதல்செய்த
      விற்பா விலங்கல்எங் கோனை விரும்பலர் போலஅன்பர்
      சொற்பா விரும்பினர் என்னமெல் லோதி செவிப்புறத்து
      கொற்பா இலங்கிலை வேல்குளி தாங்கு குறுகியதே. ... 310
      கொளு
      ஓதற்கு அகல்வர் மேத கவரென
      பூங்கொடி கலக்கம் பாங்கிகண்டு உரைத்தது.
      4. வாய்வழி கூறி தலைமகள் வருந்தல்
      பிரியா மையும்உயிர் ஒன்றா வதும்பிரி யிற்பெரிதும்
      தரியா மையும்ஒருங் கேநின்று சாற்றினர் தையல்மெய்யிற்
      பிரியாமை செய்து நின்றோன் தில்லை பேரியல் ஊரர்அன்ன
      புரியா மையும்இது வேயினி என்னாம் புகல்வதுவே. ... 311
      கொளு
      தீதறு கல்விக்கு செல்வன் செல்லுமென
      போதுறு குழலி புலம்பியது.
      ---------------------
      இருபத்தொன்றாம் அதிகாரம்
      21. காவற்பிரிவு
      பேரின்ப கிளவி
      காவற் பிரிவு துறையோர் இரண்டும்
      இன்ப திறத்தை எங்கும் காண்டல்.
      1. பிரிவு அறிவித்தல்
      மூப்பான் இளையவன் முன்னவன் பின்னவன் முப்புரங்கள்
      வீப்பான் வியன்தில்லை யான்அரு ளால்விரி நீர்உலகம்
      காப்பான் பிரி கருதுகின் றார்நமர் கார்கயற்கண்
      பூப்பால் நலம்ஒளி ரும்புரி தாழ்குழல் பூங்கொடியே. ... 312
      கொளு
      இருநிலம் காவற்கு ஏகுவர் நமரென
      பொருகடர் வேலோன் போக்குஅறி வித்தது.
      2. பிரிவு கேட்டு இரங்கல்
      சிறுகண் பெருங்கைத்திண் கோட்டு குழைசெவி செம்முகமா
      தெறுக டழியமுன் னுய்யச்செய் தோர்கரு புச்சிலையோன்
      உறுகண் தழலுடை யோன்உறை அம்பலம் உன்னலரின்
      துறுகள் புரிகுழ லாய்இது வோஇன்று சூழ்கின்றதே. ... 313
      கொளு
      மன்னவன் பிரிவு நன்னுதல் அறிந்து
      பழங்கண் எய்தி அழுங்கல் சென்றது. 2
      -----------------
      இருபத்திரண்டாம் அதிகாரம்
      22. பகை தணி வினை பிரிவு
      பேரின்ப கிளவி
      பகைதணி வித்தல் துறையோர் இரண்டும்
      எங்கும் இன்ப கனமென் றியறல்.
      1. பிரிவு கூறல்
      மிகைதணி தற்குஅரி தாம்இரு வேந்தர்வெம் போர்மிடைந்த
      பகைதணி தற்கு படர்தலுற் றார்நமர் பல்பிறவி
      தொகைதணி தற்குஎன்னை ஆண்டுகொண் டோன்தில்லை சூழ்பொழில்வாய்
      முகைதணி தற்குஅரி தாம்புரி தாழ்தரு மொய்குழலே. ... 314
      கொளு
      துன்னு பகை தணிப்ப மன்னவன் பிரிவு
      நன்னறுங் கோதைக்கு முன்னி மொழிந்தது.
      2. வருத்தம் தணித்தல்
      நெருப்புறு வெண்ணெயும் நீருறும் உப்பு மெனஇங்ஙனே
      பொருப்புறு தோகை புலம்புறல் பொய்யன்பர் போக்குமிக்க
      விருப்புறு வோரைவிண் ணோரின் மிகுத்துநண் ணார்கழி
      திருப்புறு சூலத்தி னோன்தில்லை போலும் திருநுதலே. ... 315
      கொளு
      மணிப்பூண் மன்னவன் தணப்ப தில்லை
      அஞ்சல் பொய்யென வஞ்சியை தணித்தது.
      ----------------
      இருபத்திமூன்றாம் அதிகாரம்
      23. வேந்தற்கு உற்றுழி பிரிவு
      பேரின்ப கிளவி
      உற்றுழி பிரிவார் எட்டும் ஆனந்தம்
      பெற்றவா ராமை முற்றும் உரைத்தல்.
      1. பிரிந்தமை கூறல்
      போது குலாய புனைமுடி வேந்தர்தம் போர்முனைமேல்
      மாது குலாயமென் னோர்க்கிசென் றார்நமர் வண்புலியூர
      காதுகுலாய குழைஎழி லோனை கருதலர்போல்
      ஏதுகொ லாவிளை கின்றதுஇன்று ஒன்னார் இடுமதிலே. ... 316
      கொளு
      விறல்வேந்தர் வெம்முணைக்கண்
      திறல் வேந்தர் செல்வர் என்றது.
      2. பிரிவாற்றாமை கார்மிசை வைத்தல்
      பொன்னி வளைத்த புனல்சூழ் நிலவி பொலிபுலியூர்
      வன்னி வளைத்த வளர்சடை யோனை வணங்கலர்போல்
      துன்னி வளைத்தநம் தோன்றற்கு பாசறை தோன்றுங் கொலோ
      மின்னி வளைத்து விரிநீர் கவரும் வியன்முகிலே. ... 317
      கொளு
      வேந்தற்கு உற்றுழி விறலோன் பிரிய
      ஏந்திழை பாங்கிக்கு எடுத்து ரைத்தது.
      3. வான் நோக்கி வருந்தல்
      கோலி திகழ்கிறகு ஒன்றின் ஒடுக்கி பெடை குருகு
      பாலி திரும்பனி பார்ப்பொடு சேவல் பயில்இரவின்
      மாலி தனையறி யாமறை யோன்உறை அம்பலமே
      போலி திருநுத லாட்குஎன்ன தாங்கொல்என் போதரவே. ... 318
      கொளு
      மானோக்கி வடிவு நினைத்தோன்
      வானோக்கி வருந்தியது.
      4. கூதிர் கண்டு கவறல்
      கருப்பினம் மேவும் பொழில்தில்லை மன்னன்கண் ணார்அருளால்
      விருப்பினம் மேவச்சென் றார்க்கும்சென்று அல்குங்கொல் வீழ்பனிவாய்
      நெருப்பினம் மேய்நடு மால்எழில் தோன்றச்சென் றாங்குநின்ற
      பொருப்பினம் ஏறி தமியரை பார்க்கும் புயலினமே. ... 319
      கொளு
      இருங்கூதிர் எதிர்வு கண்டு
      கருங்குழலி கவலை யுற்றது.
      5. முன் பனிக்கு நொந்துரைத்தல்
      கற்றின வீழ்பனி தூங்க துவண்டு துயர்கஎன்று
      பெற்றவ ளேஎனை பெற்றாள் பெடைசிற கான்ஒடுக்கி
      புற்றில வாளர வன்தில்லை புள்ளும்தம் பிள்ளைதழீஇ
      மற்றினம் சூழ்ந்து துயில பெறும்இம் மயங்கிருளே. ... 320
      கொளு
      ஆன்றபனிக்கு ஆற்றாது அழிந்து
      ஈன்றவளை ஏழை நொந்தது.
      6. பின்பனி நினைந்து இரங்கல்
      புரமன்று அயர பொருப்புவில் ஏந்தி பு தேளிர்நாப்பண்
      சிரம்அன்று அயனைச்செற் றோன்தில்லை சிற்றம்பலம்அனையாள்
      பரம்அன்று இரும்பனி பாரித்த வாபரந்து எங்கும்வையம்
      சரமின்றி வான்தரு மேலாக்கும் மிக்க தமியருக்கே. ... 321
      கொளு
      இரும்பனியின் எதிர்வு கண்டு
      கரும்பிவர் குழலி துயரம் நினைந்தது.
      7. இளவேனில் கண்டு இன்னல் எய்தல்
      வாழும் படியன்றும் கண்டிலம் வாழிஇம் மாம்பொழில்தேன்
      சூழும் முகச்சுற்றும் பற்றின வால்தொண்டை யங்கனிவாய்
      யாழின் மொழிமங்கை பங்கன்சிற் றம்பலம் ஆதரியா
      கூழின் மலிமனம் போன்றுஇருளா நின்ற கோகிலமே. ... 322
      கொளு
      இன்னிள வேனில் முன்னுவது கண்டு
      மென்னகை பேதை இன்னல் எய்தியது.
      8. பருவங் காட்டி வற்புறுத்தல்
      பூண்பதென் றேகொண்ட பரம்பன் புலியூர் அரன் மிடற்றின்
      மாண்பதென் றேஎன வானின் மலரும் மணந்தவர்தேர்
      காண்பதன் றேயின்று நாளையிங் கேவர கார்மலர்த்தேன்
      பாண்பதன் தேர்குழ லாய்எழில் வாய்த்த பனிமுகிலே. ... 323
      கொளு
      கார்வருமென கலங்கு மாதரை தேர் வருமென தெளிவித்தது.
      9. பருவம் அன்று என்று கூறல்
      தெளிதரல் காரென சீர்அனம் சிற்றம் பலத்தடியேன்
      களிதர கார்மிடற் றோன்நட மாடக்கண் ணார்முழவம்
      துளிதரல் காரென ஆர்த்தன ஆர்ப்பத்தொக்கு உன்குழல்போன்று
      அளிதர காந்தளும் பாந்தளை பாரித்து அலர்ந்தனவே. ... 324
      கொளு
      காரென கலங்கும் ஏரெழில் கண்ணிக்கு
      இன்துணை தோழி அன்றென்று மறுத்தது.
      10. மறுத்து கூறல்
      தேன்திக்கு இலங்கு கழல்அழல் வண்ணன்சிற் றம்பலத்துஎங்
      கோன்திக்கு இலங்குதிண் தோள் கொண்டல் கண்டன் குழைஎழில்நாண்
      போன்றுஇ கடிமலர காந்தளும் போந்தவன் கையனல் போல்
      தோன்றி கடிமல ரும்பொய்ம்மை யோமெய்யில் தோன்றுவதே. ... 325
      கொளு
      பருவம் அன்றென்று பாங்கி பகர
      மருவமர் கோதை மறுத்து ரைத்தது.
      11. தேர் வரவு கூறல்
      திருமால் அறியா செறிகழல் தில்லை சிற்றம்பலத்துஎம்
      கருமால் விடையடை யோன்கண்டம் போற்கொண்டல் எண்டிசையும்
      வருமால் உடன்மன் பொருந்தல் திருந்த மணந்தவர்தேர்
      பொருமால் அயிற்கண்நல் லாய்இன்று தோன்றும்நம் பொன்னாகர்க்கே. ... 326
      கொளு
      பூங்கொடி மருள பாங்கி தெருட்டியது.
      12. வினை முற்றி நினைதல்
      புயலோங்கு அலர்சடை ஏற்றவன் சிற்றம் பலம்புகழும்
      மயலோங்கு இருங்களி யானை வரகுணண் வெற்பின்வைத்த
      கயலோங்கு இருஞ்சிலை கொண்டுமன் கோபமும் காட்டிவரும்
      செயலோங்கு எயில்எரி செய்தபின் இன்றோர் திருமுகமே. ... 327
      கொளு
      பாசறை முற்றி படைப்போர் வேந்தன்
      மாசறு பூண்முலை மதிமுகம் நினைந்தது.
      13. நிலைலமை நினைந்து கூறல்
      சிறப்பின் திகழ்சிவன் சிற்றம் பலஞ்சென்று சேர்ந்தவர்தம்
      பிறப்பின் துனைந்து பெருகுக தேர்பிறங் கும்ஒளியார்
      நிறப்பொன் புரிசை மறுகினில் துன்னி மடநடைப்புள்
      இறப்பின் துயின்றுமுற் றத்துஇரை தேரும் எழில் நகர்க்கே. ... 328
      கொளு
      பொற்றொடி நிலைமை மற்றவன் நினைந்து
      திருந்துதேர் பாகற்கு வருந்து புகன்றது.
      14. முகிலொடு கூறல்
      அருந்துஏர் அழிந்தனம் ஆலம்என்று ஓல மிடும்இமையோர்
      மருந்துஏர் அணிஅம் பலத்தோன் மலர்த்தாள் வணங்கலர்போல்
      திருந்துஏர் அழிந்து பழங்கண் தரும்செல்வி சீர்நகர்குஎன்
      வரும்தேர் இதன்முன் வழங்கேல் முழங்கேல் வளமுகிலே. ... 329
      கொளு
      முனைவற்கு உற்றுழி வினைமுற்றி வருவோன்
      கழுமல் எய்தி செழுமுகிற்கு உரைத்தது.
      15. வரவெடுத்துரைத்தல்
      பணிவார் குழைஎழி லோன்தில்லை சிற்றம் பலம்அனைய
      மணிவார் குழல்மட மாதே பொலிகநம் மன்னர்முன்னா
      பணிவார் திறையும் பகைத்தவர் சின்னமுரம் கொண்டுவண்தேர்
      அணிவார் முரிசினொடு ஆலிக்கும் மாவோடு அணுகினரே. ... 330
      கொளு
      வினைமுற்றிய வேந்தன் வரவு
      புழையிழை தோழி பொற்றொடிக்கு உரைத்தது.
      16. மறவாமை கூறல்
      கருங்குவ ளைக்கடி மாமலர் முத்தங் கலந்திலங்க
      நெருங்கு வளைக்கிள்ளை நீங்கற் றிலள்நின்று நான்முகனோடு
      ஒருங்கு வளைக்கர தான் உண ராதவன் தில்லையப்பாய்
      மருங்கு வளைத்துமன் பாசறை நீடிய வைகலுமே. ... 331
      கொளு
      பாசறை முற்றி பைந்தொடியோடு இருந்து
      மாசறு தோழிக்கு வள்ளல் உரைத்தது.
      ------------------
      இருபத்திநான்கம் அதிகாரம்
      24. பொருள் வயின் பிரிவு
      பேரின்ப கிளவி
      பொருட்பிரிவு இருபதும் அருட்பிரி வுயிரே
      ஆனந்த மாகி அதுவே தானா
      தானே அதுவா பேசிய கருணை.
      1. வாட்டங் கூறல்
      முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்னான் முடியுமென
      பனிவருங் கண்பர மன்திரு சிற்றம் பலமனையாய்
      துனிவரு நீர்மையிது என்னென்று தூநீர் தெளித்தளிப்ப
      நனிவரு நாளிது வோஎன்று வந்திக்கும் நன்னுதலே. ... 332
      கொளு
      பிரிவு கேட்ட அரிவை வாட்டம்
      நீங்கல் உற்றவன் பாங்கிக்கு உரைத்தது.
      2. பிரிவு நினைவுரைத்தல்
      வறியார் இருமை அறியார் எனமன்னும் மாநிதிக்கு
      நெறியார் அருஞ்சுரம் செல்லலுற் றார்நமர் நீண்டிருவர்
      அறியா அளவுநின் றோன்தில்லை சிற்றம்பலம் அனைய
      செறிவார் கருங்குழல் வெண்ணகை செவ்வா திருநுதலே. ... 333
      கொளு
      பொருள்வயின் பிரியும் பொருவே லவனென
      கருளுறு குழலிக்கு தோழி சொல்லியது.
      3. ஆற்றாது புலம்பல்
      சிறுவாள் உகிருற்று உறாமுன்னம் சின்ன படுங்குவளைக்கு
      எறிவாள் கழித்தனள் தோழி எழுதிற் கரப்பதற்கே
      அறிவாள் ஒழுகுவது அஞ்சனம் அம்பல வர்ப்பணியார்
      குறியாழ் நெறிசெல்வர் அன்பரென்று அம்ம கொடியவளே. ... 334
      கொளு
      பொருள்தர பிரியும் அருள்தரு பவளென
      பாங்கி பகர பூங்கொடி புலம்பியது.
      4. ஆற்றாமை கூறல்
      வான கடிமதில் தில்லைஎம் கூத்தனை ஏத்தலர்போல்
      கான கடஞ்செல்வர் காதலர் என்ன கதிர்முலைகள்
      மான கனகம் தரும்மலர கண்கள்மு தம்வளர்க்கும்
      தேனக்க தார்மன்னன் என்னோ இனி சென்று தேர்பொருளே. ... 335
      கொளு
      ஏழை யழுங்க தோழி சொல்லியது.
      5. திணை பெயர்த்து உரைத்தல்
      கருள்தரு செஞ்சடை வெண்சுடர் அம்பல வன்மலயத்து
      இருள்தரு பூம்பொழில் இன்னுயிர் போல கலந்திசைத்த
      அருள்தரும் இன்சொற்கள் அத்தனை யும்மறந்து அத்தம்சென்றோ
      பொருள்தர கிற்கின் றதுவினை யேற்கு புரவலரே. ... 336
      கொளு
      துணைவன் பிரி துயருறு மனத்தோடு
      திணை பெயர்த்திட்டு தேமொழி மொழிந்தது.
      6. பொருத்தம் அறிந்து உரைத்தல்
      மூவர்நின்று ஏத்த முதலவன் ஆடமு பத்துமுல்லை
      தேவர்சென்று ஏத்தும் சிவன்தில்லை அம்பலம் சீர்வழுத்தா
      பாவர்சென்று அல்கும் நரகம் அனைய புனையழற்கான்
      போவர்நம் காதலர் என்நாம் உரைப்பது பூங்கொடியே. ... 337
      கொளு
      பொருள்வயின் பிரிவோன் பொருத்த நினைந்து
      கருளுறு குழலிக்கு தோழி சொல்லியது.
      7. பிரிந்தமை கூறல்
      தென்மா திசைவசை தீர்தர தில்லைச்சிற் றம்பலத்துள்
      என்மா தலைக்கழல் வைத்தெரி யாடும் இறைதிகழும்
      பொன்மா புரிசை பொழில்திரு பூவணம் அன்னபொன்னே
      வன்மா களிற்றொடு சென்றனர் இன்றுநம் மன்னவரே. ... 338
      கொளு
      எதிர் நின்று பிரியின் கதிர் நீ வாடுதற்கு
      உணர்த்தாது அகன்றான் மணித்தேரோன் என்றது.
      8. இரவுறு துயரத்திற்கு இரங்கி உரைத்தல்
      ஆழியன்று ஈர்அடி யும்இலன் பாகன்மு கண்தில்லையோன்
      ஊழியன் றாதன நான்கும்ஐம் பூதமும் ஆறொடுங்கும்
      ஏழியன் றாழ்கட லும்எண் திசையும் திரிந்திளைத்து
      வாழியன் றோஅரு கன்பெரு தேர்வந்து வைகுவதே. ... 339
      கொளு
      அயில்தரு கண்ணியை பயில்தரும் இரவினுள்
      தாங்குவது அரிதென பாங்கி பகர்ந்தது.
      9. இகழ்ச்சி நினைந்து அழிதல்
      பிரியார் எனஇகழ தேன்முன்னம் யான்பின்னை எற்பிரியின்
      தரியாள் எனஇகழ தார்மன்னர் தாந்தக்கன் வேள்விமிக்க
      எரியார் எழில்அழி கும்எழில் அம்பல தோன்எவர்க்கும்
      அரியான் அருளிலர் போலன்ன என்னை அழிவித்தவே. ... 340
      கொளு
      உணர்த்தாது பிரிந்தாரென
      மணித்தாழ் குழலி வாடியது.
      10. உறவு வெளிப்பட்டு நிற்றல்
      சேணும் திகழ்மதில் சிற்றம் பலவன்தெண் ணீர கடல்நஞ்சு
      ஊணும் திருத்தும் ஒருவன் உலகின்னல்லாம்
      காணும் திசைதொறும் கார்க்கய லும்செங் கனியடுபைம்
      பூணும் புணர்முலை யுங்கொண்டு தோன்றுமொர் பூங்கொடியே. ... 341
      கொளு
      பொருள்வயின் பிரிந்த ஒளியுறு வேலவன்
      ஓங்கழற் கடத்து பூங்கொடியை நினைந்தது.
      11. நெஞ்சொடு நோதல்
      பொன்னணி ஈட்டிய ஒட்டரும் நெஞ்சம்இ பொங்குவெங்கா
      னின்னணி நிற்கும்இது என்னென்ப தேஇமை யோர்இறைஞ்சும்
      மன்னணி தில்லை வளநகர் அன்னஅன் ன நடையாள்
      மின்னணி நுண்ணிடை கோபொரு கோநீ விரைகின்றதே. ... 342
      கொளு
      வல்லழற் கடத்து மெல்லியலை நினைந்து
      வெஞ்சுடர் வேலோன் நெஞ்சொடு நொந்தது.
      12. நெஞ்சொடு புலத்தல்
      நாய்வயின் உள்ள குணமும்இல் லேனைநற் றொண்டுகொண்ட
      தீவயின் மேனியன் சிற்றம் பலமன்ன சின்மொழியை
      பேய்வயி னும்அரி தாகும் பிரிவுஎளி தாக்குவித்து
      சேய்வயின் போந்தநெஞ் செஅஞ்ச தக்கதுஐஉன் சிக்கெனவே. ... 343
      கொளு
      அழறகடத்து அழுக்க மிக்கு நிழற்கதிர் வேலோன் நீடு வாடியது.
      13. நெஞ்சொடு மறுத்தல்
      தீமே வியநிரு தன்திரு சிற்றம் பலம்அனைய
      பூமே வியபொன்னை விட்டுப்பொன் தேடியி பொங்குவெங்கான்
      நாமே நடக்க ஒழிந்தனம் யாம்நெஞ்சம் வஞ்சியன்ன
      வாமே கலையைவி டோபொருள் தேர்ந்தெம்மை வாழ்விப்பதே. ... 344
      கொளு
      நீணெறி சென்ற நாறிணர தாரோன்
      சேணெறி யஞ்சி மீணெறி சென்றது.
      14. நாள் எண்ணி வருந்தல்
      தெண்ணீர் அணிசிவன் சிற்றம் பலம்சிந்தி யாதவரின்
      பண்ணீர் மொழியிவ ளைப்பையுள் எய்த பனித்தடங்கண்
      உண்ணீர் உகஒளி வாடிய நீடுசென் றார்சென்றநாள்
      எண்ணீர் மையின்நிலனுங் குழி யும்விரல் இட்டறவே. ... 345
      கொளு
      சென்றவர் திறத்து நின்றுநணி வாடும்
      குழிருங் கூந்தற்கு தோழிநனி வாடியது.
      15. ஏறு வரவு கண்டு இரங்கி உரைத்தல்
      சுற்றம் பலம்இன்மை காட்டித்தன் தொல்கழல் தந்ததொல்லோன்
      சிற்றம் பலமனை யாள்பர மன்றுதிண் கோட்டின்வண்ண
      புற்றங்கு உதர்த்துநல் நாகொடும் பொன்னார் மணிபுலம்ப
      கொற்றம் மருவுகொல் ஏறுசெல்லா நின்ற கூர்ஞ்செக்கரே. ... 346
      கொளு
      நீடிய பொன்னின் நெஞ்சம் நெகிழ்ந்து
      வாடியவன் வரவுற்றது.
      16. பருவங் கண்டு இரங்கல்
      கண்ணுழை யாதுவிண் மேகம் கலந்து கணமயில்தொக்கு
      எண்ணுழை யாத்தழை கோலிநின்று ஆலும் இனமலர்வாய்
      மண்ணுழை யாவும் அறிதில்லை மன்னனது இன்னருள்போல்
      பண்ணுழை யாமொழி யாள்என்ன ளாங்கொல்மன் பாவியற்கே. ... 347
      கொளு
      மன்னிய பருவம் முன்னிய செலவின்
      இன்னல் எய்தி மன்னன் ஏகியது.
      17. முகிலொடு கூறல்
      அற்படு காட்டில்நின்று ஆடிசிற் ற்ம்பல தான்மிடற்றின்
      முற்படு நீள்முகில் என்னின்முன் னேல்முது வோர்குழுமி
      விற்படு வாணுத லாள்செல்லல் தீர்ப்பான் விரைமலர்தூய்
      நெற்படு வான்பலி செய்துஅய ராநிற்கும் நீள்நகர்க்கே. ... 348
      கொளு
      எனைப்பல துயரமோடு ஏகா நின்றவன்
      துனைக்கார் அதற்கு துணிந்துசொல் லியது.
      18. தேர் வரவு கூறல்
      பாவியை வெல்லும் பரிசில்லை யேமுகில் பாவையஞ்சீர்
      ஆவியை வெல்ல கறுக்கின்ற போழ்தத்தின் அம்பலத்து
      காவியை வெல்லும் மிடற்றோன் அருளிற் கதுமென போய்
      மேவிய மாநிதி யோடுஅன்பர் தேர்வந்து மேவினதே. ... 350
      கொளு
      வேந்தன் பொருளோடு விரும்பி வருமென
      ஏந்திழை பாங்கிஇனிதுஇயம் பியது.
      19. இளையர் எதிர்கோடல்
      யாழின் மொழிமங்கை பங்கன்சிற் றம்பல தான்அமைத்த
      ஊழின் வலியதொன்று என்னை ஒளிமே கலையுகளும்
      வீழும் வரிவளை மெல்லியல் ஆவிசெல் லாதமுன்ன
      சூழும் தொகுநிதி யோடுஅன்பர் தேர்வந்து தோன்றியதே. ... 351
      கொளு
      செறிக ழலவன் திருநகர் புகுதர
      ஏறிவேல் இளைஞர் எதிர்கொண்டது.
      20. உள் மகிழ்ந்து உரைத்தல்
      மயில் மன்னு சாயல்இம் மானை பிரிந்து பொருள்வளர்ப்பான்
      வெயில் மன்னு வெஞ்சுரம் சென்றதெல்லாம் விடை யோன்புலியூர
      குயில் மன்னு சொல்லிமென் கொங்கைஎன் அங்க திடைகுளிப்ப
      துயில் மன்னு பூவணை மேலணை யாமுன் துவள் உற்றதே. ... 352
      கொளு
      பெருநிதி யோடு திருமனை புகுந்தவன்
      வளமனை கிழத்தியோடு உள்மகிழ்ந்து உரைத்தது.
      ---------------
      இருபத்தைந்தாம் அதிகாரம்
      25. பரத்தையிற் பிரிவு
      பேரின்ப கிளவி
      பரத்தையிற் பிரிதல் எண்ணாறு ஒன்றும்
      உரைத்த சிவானந்தம் உற்றது வாம்பின்
      எப்பதம் எவ்வுயிர் எவ்வுலகு யாவும்
      அப்படி யேகண்டு அறிவு பூரணம்
      ஆகி நின்று அளவில் அனுபவம் பெற்று
      நின்ற தன்மை நிலைமை உரைத்தது.
      1. கண்டவர் கூறல்
      உடுத்தணி வாளர வன்தில்லை யூரன் வரஓருங்கே
      எடுத்தணி கையே றினவளை ஆர்ப்ப இளமயிலேர்
      கடுத்தணி காமர் கரும்புரு வச்சிலை கண்மலர் அம்பு
      அடுத்தணி வாள்இளை யோர்சுற்றும் பற்றினர் மாதிரமே. ... 352
      கொளு
      உரத்தகு வேலோன் பரத்தையிற் பிரி
      திண்தேர் வீதியில் கண்டோர் உரைத்தது.
      2. பொறை உவந்து உரைத்தல்
      கரும்புறு கொன்றையன் தொல்புலி யூர்சுருங் கும்மருங்குல்
      பெரும்பொறை யாட்டியை யென்இன்று பேசுவ பேரொலிநீர
      கரும்புறை யுரன் கலந்தகன் றானென்று கண்மணியும்
      அரும்பொறை யாகும்என் ஆலியும் தேய்வுற்று அழிகின்றதே. ... 353
      கொளு
      கள்ளவிழ கோதையை காதல் தோழி
      உள்ளவிழ் பொறைகண்டு உவந்து ரைத்தது.
      3. பொதுப்பட கூறி வாடி யழுங்கல்
      அப்புற்ற சென்னியன் தில்லை உறாரின் அவர்உறுநோய்
      ஒப்புற்று எழில்நலம் ஊரன் கவரஉள் ளும்புறம்பும்
      வெப்புற்று வெய்துயிர புற்றத்தம் மெல்லணை யேதுணையா
      செப்புற்ற கொங்கையர் யாவர்கொல் ஆருயிர் தேய்பவரே. ... 354
      கொளு
      பொற்றிகழ் அரவன் மற்றிகழ் தில்லை
      பிரிந்த ஊரனோடு இருந்துவா டியது.
      4. கன விழந்து உரைத்தல்
      தேவா சுரர்இறைஞ் சும்கழ லோன்தில்லை சேரலர்போல்
      ஆவாகனவும் இழந்தேன் நனவென்று அமளியின்மேல்
      பூவார் அகலம்வந்து ஊரன் தரப்புலம் பாய்நலம்பாய்
      பாவாய் தழுவிற் றிலேன் விழி தேன்அரும் பாவியனே. ... 355
      கொளு
      சினவில் தடக்கை தீம்புனல் ஊரனை
      கனவில் கண்ட காரிகை உரைத்தது.
      5. விளக்கொடு வெறுத்தல்
      செய்ம்முக நீல மலர்தில்லை சிற்றம் பலத்தரற்கு
      கைம்முகங் கூம்ப கழல்பணி யாரிற் கலந்தவர்க்கு
      பொய்ம்முகங் காட்டி கரத்தல் பொருத்தம்அன்று என்றில்லையே
      நெய்ம்முக மாந்தி இருள்முகங் கீழும் நெடுஞ்சுடரே. ... 356
      கொளு
      பஞ்சணை துயின்ற பஞ்சின் மெல்லடி
      அன்பனோடு அழுங்கி செஞ்சுடர்க்கு உரைத்தது.
      6. வாரம் பகர்ந்து வாயில் மறுத்துரைத்தல்
      பூங்குவ ளைப்பொலி மாலையும் ஊரன்பொற் றோளிணையும்
      ஆங்கு வளைத்துவை தாரேனும் கொள்கநள் ளார் அரணம்
      தீங்கு வளைத்தவில் லோன்தில்லை சிற்றம் பலத்தயல்வாய்
      ஓங்கு வளைக்கர தார்க்கடு தோம்மன் உறாவரையே. ... 357
      கொளு
      வார்புன லூரன் ஏர்திகழ் தோள்வயின்
      கார்புரை குழலி வாரம் பகர்ந்தது.
      7. பள்ளியிடத்து ஊடல்
      தவஞ்செய் திலாதவெ தீவினை யேம்புன்மை தன்மைக்குஎள்ளாது
      எவம்செய்து நின்றுஇனி இன்றுஉனை நோவதுஎன் அத்தன்முத்தன்
      சிவன்செய்த சீரரு ளார்தில்லை யூரநின் சேயிழையார்
      நவம்செய்த புல்லங்கள் மாட்டேம் தொடல்விடு நற்கலையே. ... 358
      கொளு
      பீடிவர் கற்பின் தோடிவர் கோதை
      ஆடவன் தன்னோடு ஊடி உரைத்தது.
      8. செவ்வணி விடுக்க இல்லோர் கூறல்
      தணியுற பொங்கும்இ கொங்கைகள் தாங்கி தளர்மருங்குல்
      பிணியுற பேதைசென்று இன்றெய்து மால்அர வும்பிறையும்
      அணியுற கொண்டவன் தில்லைத்தொல் லாயநல் லார்கண்முன்னே
      பணியுற தோன்றும் நுடங்கிடை யார்கள் பயின்மனைக்கே. ... 359
      கொளு
      பாற்செலு மொழியார் மேற்செல விரும்பல்
      பொல்லா தென்ன இல்லோர் புகன்றது.
      9. அயல் அறிவுரைத்து அவள் அழுக்கம் எய்தல்
      இரவணை யும்மதி யேர்நுத லார்நுதி கோலஞ் செய்து
      குரவணை யுங்குழல் இங்குஇவ ளால்இ குறியறிவித்து
      அரவணை யும்சடை யோன்தில்லை யூரனை ஆங்கொருத்தி
      தரஅணை யும்பரி சாயின வாறுநம் தன்மைகளே. ... 360
      கொளு
      உலகியல் அறி செலவிடல் உற்ற
      விழுத்தகை மாதர்க்கு அழுக்கஞ் சென்றது. 9
      10. செவ்வணி கண்ட வாயிலவர் கூறல்
      சிவந்தபொன் மேனி மணிதிரு சிற்றம் பலமுடையான்
      சிவந்தஅம் தாளணி ஊரற்கு உலகிய லாறுரைப்பான்
      சிவந்தபைம் போதும் அம் செம்மலர பட்டும்க டார்முலைமேல்
      சிவந்தஅ சாந்தமும் தோன்றின வந்து திருமனைக்கே. ... 361
      கொளு
      மணிக்குழை பூப்பியல் உணர்த்த வந்த
      ஆயிழையை கண்ட வாயிலவர் உரைத்தது.
      11. மனை புகல் கண்ட வாயிலவர் கூறல்
      குராப்பயில் கூழை இவளின்மிக்கு அம்பல தான்குழையாம்
      அராப்பயில் நுண்ணிடை யார்அடங் கார்எவ ரேயினிப்பண்டு
      இராப்பகல் நின்றுணங்கு ஈர்ங்கடை யித்துணை போழ்திற்சென்று
      கராப்பயில் பூம்புன லூரன் புகும்இ கடிமனைக்கே. ... 362
      கொளு
      கடனறிந்து ஊரன் கடிமனை புகுதர
      வாய்ந்த வாயி லவர்ஆய்ந்து உரைத்தது.
      12. முகமலர்ச்சி கூறல்
      வந்தான் வயலணி ஊரன் எனச்சின வாள்மலர்க்கண்
      செந்தா மரைச்செவ்வி சென்றசிற்றம்பல வன்அருளான்
      முந்தா யினவியன்நோக்கெதிர் நோக்க முகமடுவின்
      பைந்தாள் குவளைகள் பூத்திருள் சூழ்ந்து பயின்றனவே. ... 363
      கொளு
      பூம்புன லூரன் புகமுகம் மலர்ந்த
      தேம்புனை கோதை திறம்பிறர் உரைத்தது.
      13. கால நிகழ்வு உரைத்தல்
      வில்லிகை போதின் விரும்பா அரும்பா வியர்கள் அன்பில்
      செல்லிகை போதின் எரியுடை யோன்தில்லை அம்பலம்சூழ்
      மல்லிகை போதின்வெண் சங்கம்வண்டு ஊதவிண் தோய்பிறையோடு
      எல்லிகை போதியல் வேல்வயல் ஊரற்கு எதிர் கொண்டதே. ... 364
      கொளு
      இகழ்வது எவன்கொல் நிகழ்வதில் வாறென
      செழுமலர கோதை உழையர் உரைத்தது.
      14. எய்தல் எடுத்துரைத்தல்
      புலவி திரைபொர சீறடி பூங்கலம் சென்னி உய்ப்ப
      கலவிக்கடலுள் கலிங்கஞ் சென்று எய்தி கதிர்கொள்முத்தம்
      நிலவி நிறைமது ஆர்ந்துஅம் பலத்துநின்றோன் அருள்போன்று
      உலவிய லாத்தனம் சென்றெய்தல் ஆயின ஊரனுக்கே. ... 365
      கொளு
      சீரியல் உலகில் திகழ்கர கூடி
      வார்புனல் ஊரன் மகிழ்வுற்றது.
      15. கலவி கருதி புலத்தல்
      செவ்வாய் துடிப்பக்கருங்கண் பிறழச்சிற் றம்பலத்துஎம்
      மொய்வார் சடையோன் அருளின் முயங்கி மயங்குகின்றாள்
      வெவ்வாய் உயிர்ப்பொடு விம்மி கலுழ்ந்து புலந்துநைந்தாள்
      இவ்வாறு அருள்பிறர்க்கு ஆகு மென நினைந்து இன்னகையே. ... 366
      கொளு
      மன்னிய உலகில் துன்னிய அன்பொடு
      கலவி கருதி புலவி எய்தியது.
      16. குறிப்பறிந்து புலந்தமை கூறல்
      மலரை பொறாஅடி மானும் தமியன்மன் னன்ஒருவன்
      பலரை பொறாதுஎன்று இழிந்துநின் றாள்பள்ளி காமன்எய்த
      அலரை பொறாதுஅன்று அழல்விழி தோன்அம்பலம் வணங்கா
      கலரை பொறாச்சிறி யாள்என்னை கொல்லோ கருதியதே. ... 367
      கொளு
      குறப்பினிற் குறிப்பு நெறிப்பட நோக்கி
      மலர்நெடுங் கண்ணி புலவி யுற்றது.
      17. வாயிலவர் வாழ்த்தல்
      வில்லை பொலிநுதல் வேற்பொலி கண்ணி மெலிவறிந்து
      வல்லை பொலிவொடு வந்தமை யான்நின்று வான்வழுத்தும்
      தில்லை பொலிசிவன் சிற்றம்பலம்சிந்தை செய்பவரின்
      மல்லை பொலிவய லூரன்மெய்யேதக்க வாய்மையனே. ... 368
      கொளு
      தலை மகனது தகவுடைமை
      நிலைதரு வாயில் நின்றோர் உரைத்தது.
      18. புனல் வரவுரைத்தல்
      சூன்முதிர் துள்ளு நடைப்பெடைக்கு இல்துணை சேவல் செய்வான்
      தேன்முதிர் வேழத்தின் மென்பூக்குதர் செம்ம லூரன் திண்தோள்
      மான்முதிர் நோக்கின்நல் லார்மகிழ தில்லை யான் அருளே
      போன்முதிர் பொய்கையில் பாய்ந்தது வாய்ந்த புதுப்புனலே. ... 369
      கொளு
      புனலா டுகஎன புனைந்து கொண்டு
      மனைபுகு தவனை வையம் உரைத்தது.
      19. தேர் வரவு கண்டு மகிழ்ந்து கூறல்
      சேயே எனமன்னு தீம்புன லூரன்திண் தோள்இணைகள்
      தோயீர் புணர்தவம் தொன்மைசெய் தீர்சுடர் கின்றகோலம்
      தீயே எனமன்னு சிற்றம்பலவர்தில்லைந்நகர் வாய்
      வீயே எனஅடி யீர்நெடு தேர்வந்து மேவினதே. ... 370
      கொளு
      பயில்மணி தேர்செல பரத்தையர் சேரி
      கயல் மணி கண்ணியர் கட்டுரைத்தது.
      20. புனல் விளையாட்டில் தம்முள் உரைத்தல்
      அரமங் கையரென வந்து விழாப்புகும் அவ்வவர்வான்
      அரமங் கையரென வந்தணு கும்அவள் அன்றுஉகிரால்
      சிரம்அங்கு அயனை செற்றோன் தில்லை சிற்றம் பலம்வழுத்தா
      புரமங் கையரின்நை யாதுஐய காத்துநம் பொற்பரையே. ... 371
      கொளு
      தீம்புனல் வாயில் சேயிழை வருமென
      காம்பன தோளியர் கலந்து கட்டுரைத்தது.
      21. தன்னை வியந்துரைத்தல்
      கனலூர் கணைதுணை யூர்கெட செற்றசிற் றம்பலத்தெம்
      அனலூர் சடையோன் அருள்பெற் றவரின் அமரப்புல்லும்
      மினலூர் நகையவர் தம்பால் அருள்வில காவிடின்யான்
      புனலூ ரனை பிரி யும்புன லூர்கண பூங்கொடியே. ... 372
      கொளு
      அர துவர்வா பரத்தை தலைவி
      முனிவு தோன்ற நனிபு கன்றது.
      22. நகைத்துரைத்தல்
      இறுமாப்பு ஒழியும்அன் றேதங்கை தோன்றின்என் எங்கையங்கை
      சிறுமான் தரித்தசிற் றம்பல தான்தில்லை யூரன்திண்தோள்
      பெறு மா தொடும்தன்ன பேரணு குப்பெற்ற பெற்றியனோடு
      இறுமாப்பு ஒழிய ஒழிந்த இணைமுலையே. ... 373
      கொளு
      வேந்தன் பிரிய ஏந்திழை மடந்தை
      பரத்தையை நோக்கி விரித்து ரைத்தது.
      23. நாணுதல் கண்டு மிகுத்துரைத்தல்
      வேயாது செப்பின் அடைத்து தமிவைகும் வீயன்அன்ன
      தீயாடி சிற்றம் பலமனை யாள்தில்லை யூரனுக்கின்று
      ஏயா பழியென நாணியென் கண்ணிங்ங னேமறைத்தாள்
      யாயாம் இயல்பிவள் கற்புநற் பால இயல்புகளே. ... 374
      கொளு
      மன்னவன் பிரிய நன்மனை கிழத்தியை
      நாணுதல் கண்ட வாணுதல் உரைத்தது.
      24. பாணன் வரவுரைத்தல்
      விறலியும் பாணனும் வேந்தற்கு தில்லை இறைஅமைத்த
      திறலியல் யாழ்கொண்டு வந்துநின் றார்சென் றிராத்திசைபோம்
      பறலியல் வாவல் பகலுறை மாமரம் போலும்மன்னோ
      அறலியல் கூழைநல் லாய் தமியோமை யறிந்திலரே. ... 375
      கொளு
      இகல்வே லவன் அகல்வு அறியா பாணனை
      பூங்குழல் மாதர்க்கு பாங்கி உரைத்தது.
      25. தோழி இயற்பழித்தல்
      திக்கின் இலங்குதண் தோள்இறை தில்லைச்சிற் றம்பலத்து
      கொக்கின் இறகது அணிந்துநின் றாடிதென் கூடலன்ன
      அக்கின் நகையிவள் நைய அயல்வயின் நல்குதலால்
      தக்கின் றிருந்ததிலன் நின்றசெவ்வேல் எம் தனிவள்ளலே. ... 376
      கொளு
      தலைமகனை தகவிலன்என
      சிலைநுதற் பாங்கி தீங்கு செப்பியது.
      26. உழையர் இயற்பழித்தல்
      அன்புடை நெஞ்சத்து இவள்பே துற அம் பலத்தடியார்
      என்பிடை வந்துஅமிழ்து ஊறநின்று ஆடி இருஞ்சுழியல்
      தன்பெடை நை தகவழிந்து அன்னம் சலஞ்சலத்தின்
      வன்பெடை மேல்துயி லும்வய லூரன் வரம்பிலனே. ... 377
      கொளு
      அரத்தவேல் அண்ணல் பரத்தையிற் பிரி
      குழைமுக தவளுக்கு உழையர் உரைத்தது.
      பாடபேதம்
      அரத்தவேல் அண்ணல் பரத்தையிற் பிரி
      திண்தேர் வீதியில் கண்டோர் உரைத்தது.
      27. இயற்பட மொழிதல்
      அஞ்சார் புரஞ்செற்ற சிற்றம் பலவர்அ தண்கயிலை
      மஞ்சார் புனத்தன்று மாந்தழை யேந்திவ தார்அவரென்
      நெஞ்சார் விலக்கினும் நீங்கார் நனவு கனவும்உண்டேல்
      பஞ்சார் அமளி பிரிதலுண் டோஎம் பயோதரமே. ... 378
      கொளு
      வரிசிலை யுரன் பரிசு பழித்த
      உழையர் கேட்ப எழில்நகை உரைத்தது.
      28. நினைந்து வியந்துரைத்தல்
      தெள்ளம் புனற்கங்கை தங்கும் சடையன்சிற் றம்பலத்தான்
      கள்ளம் புகுநெஞ்சர் காணா இறையுறை காழியன்னாள்
      உள்ளம் புகும்ஒரு காற்பிரி யாதுள்ளி உள்ளுதொறும்
      பள்ளம் புகும்புனல் போன்றுஅக தேவரும் பான்மையளே. ... 379
      கொளு
      மெல்லியற் பரத்தையை விரும்பி மேவினோன்
      அல்லியற் கோதையை அகனமர்ந்து உரைத்தது.
      29. வாயில் பெறாது மகன் திறம் நினைதல்
      தேன்வண்டு உறைதரு கொன்றையன் சிற்றம்பலம் வழுத்தும்
      வான்வள் துறைதரு வாய்மையன் மன்னு குதலை யின்வா
      யான்வள் துறைதரு மால்அமு தன்னவன் வந்தணையான்
      நான்வண்டு உறைதரு கொங்கைஎவ் வாறுகொல் நண்ணுவதே. ... 380
      கொளு
      பொற்றொடி மாதர் நற்கடை குறுகி
      நீடிய வாயிலின் வாடினள் மொழிந்தது.
      30. வாயிற்கண் நின்று தோழிக்கு உரைத்தல்
      கயல்வந்த கண்ணியர் கண்ணிணை யால்மிகு காதரத்தால்
      மயல்வந்த வாட்டம் அகற்றா விரதம்என் மாமதியின்
      அயல்வந்த ஆடரவு ஆடவை தோன்அம் பலம்நிலவு
      புயல்வந்த மாமதில் தில்லைநன் னாட்டு பொலிபவரே. ... 381
      கொளு
      பெருந்தகை வாயில் பெறாது நின்று
      அருந்தகை பாங்கிக்கு அறிய உரைத்தது.
      31. வாயில் வேண்ட தோழி கூறல்
      கூற்றா யினசின ஆளியெண் ணீர்கண்கள் கோள்இழித்தால்
      போல்தான் செறியிருள் பொக்கம்எண் ணீர்கன்று அகன்றபுனிற்று
      ஈற்றா வெனநீர் வருவது பண்டுஇன்றுஎம் ஈசர்தில்லை
      தேற்றார் கொடிநெடுவீதியில் போதிர்அ தேர்மிசையே. ... 382
      கொளு
      வைவேல் அண்ணல் வாயில் வேண்ட
      பையரவு அல்குல் பாங்கி பகர்ந்தது.
      32. தோழி வாயில் வேண்டல்
      வியந்தலை நீர்வையம் மெய்யே இறைஞ்சவிண் தோய்குடைக்கீழ்
      வயந்தலை கூர்ந்தொன்றும் வாய்திற வார்வந்த வாளரக்கன்
      புயந்தலை தீர புலியூர் அரன்இரு கும்பொருப்பிற்
      கயந்தலை யானை கடிந்த விருந்தினர் கார்மயிலே. ... 383
      கொளு
      வாயில் பெறாது மன்னவன் நிற்ப
      ஆயிழை அவட்கு தோழி சொல்லியது.
      33. மனையவர் மகிழ்தல்
      தேவியங் கண்திகழ் மேனியன் சிற்றம் பலத்தெழுதும்
      ஓவியம் கண்டன்ன ஒண்ணுத லாள்தனக்கு ஒகையுய்ப்பான்
      மேவியம் கண்டனை யோவ தனன்என வெய்துயிர்த்து
      காவியம் கண்கழு நீர்ச்செவ்வி வெளவுதல் கற்றனவே. ... 384
      கொளு
      கன்னி மானோக்கி கனன்று நோக்க
      மன்னிய மனையவர் மகிழ்ந்து ரைத்தது.
      34. வாயின் மறுத்துரைத்தல்
      உடைமணி கட்டி சிறுதேர் உருட்டி உலாத்தரும்இ
      நடைமணி யைத்தந்த பின்னர்முன் நான்முகன் மால்அறியா
      விடைமணி கண்டர்வண் தில்லைமென் தோகையன் னார்கண்முன்நம்
      கடைமணி வாள்நகை யாய்இன்று கண்டனர் காதலரே. ... 385
      கொளு
      மடவரல் தோழி வாயில் வேண்ட
      அடல்வே லவனார் அருளு ரைத்தது.
      35. பாணனொடு வெகுளுதல்
      மைகொண்ட கண்டர் வயல்கொண்ட தில்லைமல்கு ஊரர்நின்வாய்
      மெய்கொண்ட அன்பினர் என்பதென் விள்ளா அருள்பெரியர்
      வைகொண்ட ஊசிகொல் சேரியில் விற்றெம்இல் வண்ணவண்ண
      பொய்கொண்டு நிற்கலுற் றோபுலை ஆத்தின்னி போந்ததுவே. ... 386
      கொளு
      மன்னியாழ பாணன் வாயில் வேண்ட
      மின்னிடை மடந்தை வெகுண்டு ரைத்தது.
      36. பாணன் புலந்துரைத்தல்
      கொல்லாண் டிலங்கு மழுப்படை யோன்குளிர் தில்லையன்னாய்
      வில்லாண் டிலங்கு புருவம் நெரியச்செல் வாய்துடிப்ப
      கல்லாண்டு எடேல்கருங் கண்சிவ பாற்று கறுப்பதன்று
      பல்லாண்டு அடியேன் அடிவலம் கொள்வன் பணிமொழியே. ... 387
      கொளு
      கருமமலர கண்ணி கனன்றுக டுரை
      புரியாழ பாணன் புறப்பட்டது.
      37. விருந்தொடு செல்ல துணிந்தமை கூறல்
      மத்த கரியுரி யோன்தில்லை யூரன் வரவெனலும்
      தத்தை கிளவி முகத்தா மரைத்தழல் வேல்மிளிர்ந்து
      முத்தம் பயக்கும் கழுநீர் விருந்தொடென் னாதமுன்னம்
      இந்த கருங்குவ ளை செவ்வி யோடி கெழுமினவே. ... 388
      கொளு
      பல்வளை பரிசுகண்டு இல்லோர் இயம்பியது.
      38. ஊடல் தணிவித்தல்
      கவலங்கொள் பேய்த்தொகை பாய்தர காட்டிடை ஆட்டுவந்த
      தவலங்கிலாச்சிவன் தில்லையன் னாய்தழு விம்முழுவி
      கவலங் கிருந்தநம் தோன்றல் துணையென தோன்றுதலால்
      அவலங் களைந்து பணிசெயற் பாலை அரசனுக்கே. ... 389
      கொளு
      தோன்றலை துணையடு தோழி கண்டு
      வான்தகை மடந்தையை வருத்தம் தணித்தது.
      39. அணைந்த வழி யூடல்
      சேல்தான் திகழ்வயல் சிற்றம் பலவர்தில் லைநகர்வாய்
      வேல்தான் திகழ்கண் இளையார் வெகுள்வர்மெ பாலன்செய்த
      பால்தான் திகழும் பரிசினம் மேவும் படிறுஉவவேம்
      கால்தான் தொடல்தொட ரேல்விடு தீண்டல் எம் கைத்தலமே. ... 390
      கொளு
      தெளிபுனல் ஊரன் சென்றணை தவழி
      ஒளிமதி நுதலி ஊடி உரைத்தது. 39
      40. புனலாட்டுவித்தமை கூறி புலத்தல்
      செந்தார் நறுங்கொன்றை சிற்றம் பலவர்தில் லைநகரோர்
      பந்தார் விரலியை பாய்புன லாட்டிமன் பாவி எற்கு
      வந்தார் பரிசும் அன் றாய்நிற்கும் ஆறென் வளமனையில்
      கொந்தார் தடந்தோள் விடங்கால் அயிற்படை கொற்றவரே. ... 391
      கொளு
      ஆங்கதனுக்கு அமுக்கம் எய்தி
      வீங்கு மென்முலை விட்டுரைத்தது.
      41. கலவி கருதி புலத்தல்
      மின்துன் னியசெஞ் சடைவெண் மதியன் விதியுடையோர்
      சென்றுன் னிய கழற் சிற்றம் பலவன்தென்னம் பொதியில்
      நன்றும் சிறியவர் இல்எமது இல்லம்நல் லூரமன்னோ
      இன்றுன் திருவருள் இத்துணை சாலுமன் எங்களுக்கே. ... 392
      கொளு
      கலைவளர் அல்குல் தலைமகன் தன்னொடு
      கலவி கருதி புலவி புகன்றது.
      42. மிகுத்துரைத்து ஊடல்
      செழுமிய மாளிகை சிற்றம் பலவர்சென்று அன்பர்சிந்தை
      கழுமிய கூத்தர் கடிபொழில் ஏழினும் வாழியரோ
      விழுமிய நாட்டு நல்லூர் விழுக்குடியீர்
      வழுமிய அல்லகொல் லோஇன்ன வாறு விரும்புவதே. ... 393
      கொளு
      நாடும் ஊரும் இல்லும் சுட்டி
      ஆடற் பூங்கொடி ஊடி உரைத்தது.
      43. ஊடல் நீட வாடி உரைத்தல்
      திருந்தேன் உயநின்ற சிற்றம் பலவர்தென் னம்பொதியில்
      இருந்தேன் உயவந்து இணைமலர கண்ணின்இன் நோக்கருளி
      பெருந்தேன் எனநெஞ் சுகப்பிடித்து ஆண்டநம் பெண்ணமிழ்தம்
      வருந்தேல் அதுவன்று இதுவோ வருவதோர் வஞ்சனையே. ... 394
      கொளு
      வாடா ஊடல் நீடா வாடியது.
      44. துனியழிந்து உரைத்தல்
      இயல்மன்னும் அன்புத தார்க்குஎன் நிலைஇமை யோர்இறைஞ்சும்
      செயல்மன்னும் சீர்க்கழல் சிற்றம் பலவர்தென் னம்பொதியில்
      புயல்மன்னு குன்றில் பொருவேல் துணையாப்பொம் மென்இருள்வாய்
      அயல்மன்னும் யானை துரந்துஅரி தேரும் அதரகத்தே. ... 395
      கொளு
      தகுதியின் ஊரன் மிகுபதம் நோக்கி
      பனிமலர்க்கோதை துனிய ழிந்தது.
      45. புதல்வன்மேல் வைத்து புலவிதீர்தல்
      கதிர்த்த நகைமன்னும் சிற்றவ்வை மார்களை கண்பிழைப்பித்து
      எதிர்த்துஎங்கு நின்றுஎ பரிசளி தான்இமை யோர்இறைஞ்சும்
      மதுத்தங் கியகொன்றை வார்சடை ஈசர்வண் தில்லைநல்லார்
      பொதுத்தம்ப லங்கொணர தோபுதல்வர் எம்மை பூசிப்பதே. ... 396
      கொளு
      புதல்வனது திறம்புகன்று
      மதரரி கண்ணி வாட்ட தவிர்ந்தது.
      46. கலவி இடத்து ஊடல்
      சிலைமலி வாணுதல் எங்கையது ஆகம் என செழும்பூண்
      மலைமலி மார்பின் உதைப்பத்த தான்தலை மன்னர்தில்லை
      உலைமலி வேற்படை ஊரனின் கள்வர்இல் என்ன உன்னி
      கலைமலி காரிகை கண்முத்த மாலை கலுழ்ந்தனவே. ... 397
      கொளு
      சீறடிக்கு உடைந்த நாறிணர் தாரவன்
      தன்மை கண்டு பின்னும் தளர்ந்தது.
      47. முன்னிகழ்வு உரைத்து ஊடல் தீர்தல்
      ஆறூர் சடைமுடி அம்பலத்து அண்டர்அண்டம்பெறினும்
      மாறூர் மழலிடை யாய்கண் டிலம்வண் கதிர்வெதுப்பு
      நீறூர் கொடிநெறி சென்றி செறிமென் முலைநெருங்க
      சீறூர் மரையத ளில்தங்கு கங்குற் சிறுதுயிலே. ... 398
      கொளு
      முன்னி கழ்ந்தது நன்னுதற்கு உரைத்து
      மன்னு புனலூரன் மகிழ்வுற்றது.
      48. பரத்தையை கண்டமை கூறி புலத்தல்
      ஐயுர வாய்நம் அகன்கடை கண்டுவண் தேர் உருட்டும்
      மையுறு வாட்கண் மழவை தழுவமற்று உன்மகனே
      மெய்யுற வாம்இதுன் இல்லே வருகென வெள்கிச்சென்றாள்
      கையுறு மான்மறி யோன்புலி யூரன்ன காரிகையே. ... 399
      கொளு
      பரத்தையை கண்ட பவளவாய் மாதர்
      அரத்த நெடுவேல் அண்ணற்கு உரைத்தது. 48.
      49. ஊதியம் எடுத்துரைத்து ஊடல் தீர்த்தல்
      காரணி கற்பகம் கற்றவர் நற்றுணை பாணர்ஒக்கல்
      சீரணி சிந்தா மணியணி தில்லை சிவனடிக்கு
      தாரணி கொன்றையன் தக்கோர்தம் சங்க நிதிவிதிசேர்
      ஊருணி உற்றவர்க்கு ஊரன்மற்று யாவர்க்கும் ஊதியமே. ... 400
      கொளு
      இரும்பரிசில் ஏற்றவர்க்கு அருளி
      விரும்பினர் மகிழ மேவுதல் உரைத்தது.
      திருச்சிற்றம்பலக்கோவையார் முற்று பெற்றது.
      திருச்சிற்றம்பலம்
      ------------------------------------------------------------------------
      9 2000

      ------------------------------------------------------------------------

      -8

      - .

      .
      .

      .
      2000 ...

      2000 .
      -8
      4.6 5
      -8 - .
      .

      © 1999-2000

      .
      ..