பத்து பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு
      பாடியவர் கபிலர்
      திணை குறிஞ்சி துறை அறத்தொடு நிற்றல்
      பாவகை ஆசிரியப்பா மொத்த அடிகள் 261
      ------------------------------------------------------------------------
      ...
      .
      . ...
      .

      .
      .

      .
      ...
      - .
      .

      © 1999-2000


      .
      ..

      .
      ------------------------------------------------------------------------
      அன்னாய் வாழிவேண் டன்னை யண்ணுத
      லொலிமென் கூந்தலென் றோழி மேனி
      விறலிழை நெகிழ்த்த வீவருங் கடுநோ
      யகலு ளாங்க ணறியுநர் வினாயும்
      பரவியு தொழுதும் விரவுமலர் தூயும்
      வேறுபல் லுருவிற் கடவு பேணி
      நறையும் விரயு மோச்சியு மலவுற்
      றெய்யா மையலை நீயும் வருந்துதி
      நற்கவின் தொலையவு நறுந்தோ ணெகிழவும்
      புட்பிற ரறியவும் புலம்புவ தலைப்பவு .... 10
      முட்கர துறையு முய்யா வரும்படர்
      செப்பல் வன்மையிற் செறித்தியான் கடவலின்
      முத்தினு மணியினும் பொன்னினு மத்துணை
      நேர்வருங் குரைய கலங்கெடிற் புணருஞ்
      சால்பும் வியப்பு மியல்புங் குன்றின்
      மாசற கழீஇ வயங்குபுகழ் நிறுத்த
      லாசறு காட்சி யையர்க்கு மந்நிலை
      யெளிய வென்னார் தொன்மருங் கறிஞர்
      மாதரு மடனு மோராங்கு தணப்ப
      நெடுந்தே ரெந்தை யருங்கடி நீவி ...20
      யிருவே மாய்ந்த மன்ற லிதுவென
      நாமறி வுறாலிற் பழியு முண்டோ
      வாற்றின் வாரா ராயினு மாற்ற
      வேனையுல கத்து மியைவதா னமக்கென
      மானமர் நோக்கங் கலக்கி கையற்
      றானா சிறுமைய ளிவளு தேம்பு
      மிகன்மீ கடவு மிருபெரு வேந்தர்
      வினையிடை நின்ற சான்றோர் போல
      விருபே ரச்சமோ டியானு மாற்றலேன்
      கொடுப்பினன் குடைமையுங் குடிநிர லுடைமையும் .... 30
      வண்ணமு துணையும் பொரீஇ யெண்ணா
      தெமியே துணிந்த வேமஞ்சா லருவினை
      நிகழ்ந்த வண்ண நீநனி யுணர
      செப்ப லான்றிசிற் சினவா தீமோ
      நெற்கொ ணெடுவெதிர கணந்த யானை
      முத்தார் மருப்பி னிறங்குகை கடுப்ப
      துய்த்தலை வாங்கிய புனிறுதீர் பெருங்குர
      னற்கோ சிறுதினை படுபு ளோப்பி
      யெற்பட வருதிய ரென நீ விடுத்தலிற்
      கலிகெழு மரமிசை சேணோ னிழைத்த .... 40
      புலியஞ் சிதண மேறி யவண
      சாரற் சூரற் றகைபெற வலத்த
      தழலு தட்டையுங் குளிரும் பிறவுங்
      கிளிகடி மரபின வூழூழ் வாங்கி
      யுரவுக்கதிர் தெறூஉ முருப்பவி ரமயத்து
      விசும்பாடு பறவை வீழ்பதி படர
      நிறையிரும் பௌவங் குறைபட முகந்துகொண்
      டகலிரு வானத்து வீசுவளி கலாவலின்
      முரசதிர தன்ன வின்குர லேற்றொடு
      நிரைசெல னிவப்பிற் கொண்மூ மயங்கி .... 50
      யின்னிசை முரசிற் சுடர்ப்பூ சேஎ
      யன்னார கேந்திய விலங்கிலை யெ·கின்
      மின்மயங்கு கருவிய கன்மிசை பொழிந்தென
      வண்ண னெடுங்கோ டிழிதரு தெண்ணீ
      ரவிர்துகில் புரையு மவ்வெள் ளருவி
      தவிர்வில் வேட்கையே தண்டா தாடி
      பளிங்குசொரி வன்ன பாய்சுனை குடைவுழி
      நளிபடு சிலம்பிற் பாயம் பாடி
      பொன்னெறி மணியிற் சிறுபுற தாழ்ந்தவெம்
      பின்னிருங் கூந்தல் பிழிவன துவரி .... 60
      யுள்ளகஞ் சிவந்த கண்ணேம் வள்ளித
      ழொண்செங் காந்த ளாம்ப லனிச்ச
      தண குவளை குறிஞ்சி வெட்சி
      செங்கொடு வேரி தேமா மணிச்சிகை
      யுரிதுநா றவிழ்தொ துந்தூழ் கூவிள
      மெரிபுரை யெறுழஞ் சுள்ளி கூவிரம்
      வடவனம் வாகை வான்பூங் குடச
      மெருவை செருவிளை மணிப்பூங் கருவிளை
      பயினி வானி பல்லிணர குரவம்
      பசும்பிடி வகுளம் பல்லிணர காயா .... 70
      விரிமல ராவிரை வேரல் சூரல்
      குரீஇ பூளை குறுநறுங் கண்ணி
      குறுகிலை மருதம் விரிபூங் கோங்கம்
      போங்க திலக தேங்கமழ் பாதிரி
      செருந்தி யதிரல் பெருந்தண் சண்பகங்
      கரந்தை குளவி கடிகமழ் கலிமா
      தில்லை பாலை கல்லிவர் முல்லை
      குல்லை பிடவஞ் சிறுமா ரோடம்
      வாழை வள்ளி நீணறு நெய்த
      றாழை தளவ முட்டா டாமரை .... 80
      ஞாழன் மௌவ னறுந்தண் கொகுடி
      சேடல் செம்மல் சிறுசெங் குரலி
      கோடல் கைதை கொங்குமுதிர் நறுவழை
      காஞ்சி மணிக்குலை கட்கமழ் நெய்தல்
      பாங்கர் மராஅம் பல்பூ தணக்க
      மீங்கை யிலவ தூங்கிணர கொன்றை
      யடும்பம ராத்தி நெடுங்கொடி யவரை
      பகன்றை பலாசம் பல்பூம் பிண்டி
      வஞ்சி பித்திகம் சி துவாரம்
      தும்பை துழாஅய் சுடர்ப்பூ தோன்றி .... 90
      நந்தி நறவ நறும்புன் னாகம்
      பாரம் பீரம் பைங்குரு கத்தி
      யாரங் காழ்வை கடியிரும் புன்னை
      நரந்த நாக நள்ளிரு ணாறி
      மாயிருங் குருந்தும் வேங்கையும் பிறவு
      மரக்குவிரி தன்ன பரேரம் புழகுடன்
      மாலங் குடைய மலிவன மறுகி
      வான்கண் கழீஇய வகலறை குவைஇ
      புள்ளா ரியத்த விலங்குமலை சிலம்பின்
      வள்ளுயிர தெள்விளி யிடையிடை பயிற்றி .... 100
      கிள்ளை யோப்பியுங் கிளையிதழ் பறியா
      பைவரி யல்குற் கொய்தழை தைஇ
      பல்வே றுருவின் வனப்பமை கோதையெம்
      மெல்லிரு முச்சி கவின்பெற கட்டி
      யெரியவி ருருவி னங்குழை செயலை
      தாதுபடு தண்ணிழ லிருந்தன மாக
      வெண்ணெய் நீவிய சுரிவளர் நறுங்காழ
      தண்ணறு தகரங் கமழ மண்ணி
      யீரம் புலர விரலுளர பவிழா
      காழகி லம்புகை கொளீஇ யாழிசை .... 110
      யணிமிகு வரிமிஞி றார்ப்ப தேங்கலந்து
      மணிநிறங் கொண்ட மாயிருங் குஞ்சியின்
      மலையவு நிலத்தவுஞ் சினையவுஞ் சுனையவும்
      வண்ண வண்ணத்த மலராய்பு விரைஇய
      தண்ணறு தொடையல் வெண்போழ கண்ணி
      நலம்பெறு சென்னி நாமுற மிலைச்சி
      பைங்காற் பித்தக தாயித ழலரி
      யந்தொடை யருகாழ் வளைஇ செந்தீ
      யண்பூம் பிண்டி யருகாது செரீஇ
      யந்தளிர குவவுமொய்ம் பலைப்ப சாந்தருந்தி .... 120
      மைந்திறை கொண்ட மலர்ந்தே தகலத்து
      தொன்றுபடு நறுத்தார் பூணொடு பொலி
      செம்பொறி கேற்ற வீங்கிறை தடக்கையின்
      வண்ண வரிவில் லேந்தி யம்புதெரிந்து
      நுண்வினை கச்சை தயக்கற கட்டி
      யியலணி பொலிந்த வீகை வான்கழ
      றுயல்வரு தோறு திருந்தடி கலாவ
      முனைபாழ் படுக்கு துன்னரு துப்பிற்
      பகைபுறங் கண்ட பல்வே லிளைஞரி
      னுரவுச்சினஞ் செருக்கி துன்னுதொறும் வெகுளு .... 130
      முளைவா ளெயிற்ற வள்ளுகிர் ஞமலி
      திளையா கண்ண வளைகுபு நெரிதர
      நடுங்குவன மெழுந்து நல்லடி தளர்ந்தியா
      மிடும்பைகூர் மனத்தே மருண்டுபுலம் படர
      மாறுபொரு தோட்டிய புகல்வின் வேறுபுல
      தாகாண் விடையி னணிபெற வந்தெ
      மலமர லாயிடை வெரூஉத லஞ்சி
      மெல்லிய வினிய மேவர கிளந்தெ
      மைம்பா லாய்கவி னேத்தி யண்டொடி
      யசைமென் சாய லவ்வாங் குந்தி .... 140
      மடமதர் மழைக்க ணிளையீ ரிறந்த
      கெடுதியு முடையே னென்றென னதனெதிர்
      சொல்லே மாதலி னல்லாந்து கலங்கி
      கெடுதியும் விடீஇ ராயி னெம்மொடு
      சொல்லலும் பழியோ மெல்லிய லீரென
      நைவளம் பழுநிய பாலை வல்லோன்
      கைகவர் நரம்பி னிம்மென விமிரு
      மாதர் வண்டொடு சுரும்பு திறுத்த
      தாதவி ழலரி தாசினை பிளந்து
      தாறடு களிற்றின் வீறுபெற வோச்சி .... 150
      கல்லென் சுற்ற கடுங்குர லவித்தெஞ்
      சொல்லற் பாணி நின்றன னாக
      விருவி வேய்ந்த குறுங்காற் குரம்பை
      பிணையேர் நோக்கின் மனையோண் மடுப்ப
      தேம்பிழி தேறன் மாந்தி மகிழ்சிறந்து
      சேம மடிந்த பொழுதின் வாய்மடு
      திரும்புன நிழத்தலிற் சிறுமை நோனா
      தரவுற ழஞ்சிலை கொளீஇ நோய்மி
      குரவுச்சின முன்பா லுடற்சினஞ் செருக்கி
      கணைவிடு புடையூ கானங் கல்லென .... 160
      மடிவிடு வீளையர் வெடிபடு தெதிர
      கார்ப்பெய லுருமிற் பிளிறி சீர்த்தக
      விரும்பிணர தடக்கை யிருநிலஞ் சேர்த்தி
      சினந்திகழ் கடாஅஞ் செருக்கி மரங்கொல்பு
      மையல் வேழ மடங்கலி னெதிர்தர
      வுய்விட மறியே மாகி யய்யென
      திருத்துகோ லெல்வளை தெழிப்ப நாணுமறந்து
      விதுப்புறு மனத்தேம் விரைந்தவற் பொருத்தி
      சூருறு மஞ்ஞையி னடுங்க வார்கோ
      லுடுவுறும் பகழி வாங்கி கடுவிசை .... 170
      யண்ணல் யானை யணிமுக தழுத்தலிற்
      புண்ணுமிழ் குருதி முகம்பா திழிதர
      புள்ளி வரிநுதல் சிதைய நில்லா
      தயர்ந்துபுறங் கொடுத்த பின்னர் நெடுவே
      ளணங்குறு மகளி ராடுகளங் கடுப்ப
      திணிநிலை கடம்பின் றிரளரை வளைஇய
      துணையறை மாலையிற் கைபிணி விடேஎ
      நுரையுடை கலுழி பாய்தலி னுரவுத்திரை
      யடுங்கரை வாழையி னடுங்க பெருந்தகை
      யஞ்சி லோதி யசையல் யாவது .... 180
      மஞ்ச லோம்புநின் னணிநல நுகர்கென
      மாசறு சுடர்நுத னீவி நீடுநினை
      தென்முக நோக்கி நக்கன னந்நிலை
      நாணு முட்கு நண்ணுவழி யடைதர
      வொய்யென பிரியவும் விடாஅன் கவைஇ
      யாக மடைய முயங்கலி னவ்வழி
      பழுமிள குக்க பாறை நெடுஞ்சுனை
      முழுமுதற் கொக்கின் றீங்கனி யுதிர்ந்தென
      புள்ளெறி பிரசமொ டீண்டி பலவி
      னெகிழ்ந்துகு நறும்பழம் விளைந்த தேற .... 190
      னீர்செ தயின்ற தோகை வியலூர
      சாறுகொ ளாங்கண் விழவுக்கள நந்தி
      யரிக்கூ டின்னியங் கறங்க வாடுமகள்
      கயிறூர் பாணியிற் றளருஞ் சாரல்
      வரையர மகளிரிற் சாஅய் விழைதக
      விண்பொருஞ் சென்னி கிளைஇய காந்த
      டண்கம ழலரி தாஅய் நன்பல
      வம்புவிரி களித்திற் கவின்பெற பொலிந்த
      குன்றுகெழு நாடனெம் விழைதரு பெருவிற
      லுள்ள தன்மை யுள்ளினன் கொண்டு .... 200
      சாறயர தன்ன மிடாஅ சொன்றி
      வருநர்க்கு வரையா வளநகர் பொற்ப
      மலர திறந்த வாயில் பலருண
      பைந்நிண மொழுகிய நெய்ம்மலி யடிசில்
      வசையில் வான்றிணை புரையோர் கடும்பொடு
      விருந்துண் டெஞ்சிய மிச்சில் பெருந்தகை
      நின்னோ டுண்டலும் புரைவ தென்றாங்
      கறம்புணை யாக தேற்றி பிறங்குமலை
      மீமிசை கடவுள் வாழ்த்தி கைதொழு
      தேமுறு வஞ்சினம் வாய்மையிற் றேற்றி .... 210
      யந்தீ தெண்ணீர் குடித்தலி னெஞ்சமர
      தருவிட ரமைந்த களிறுதரு புணர்ச்சி
      வானுரி யுறையுள் வயங்கியோ ரவாவும்
      பூமலி சோலை யப்பகல் கழிப்பி
      யெல்லை செல்ல வேழூர் பிறைஞ்சி
      பல்கதிர் மண்டிலங் கல்சேர்பு மறைய
      மான்கண மரமுதற் றெவிட்ட வான்கணங்
      கன்றுபயிர் குரல மன்றுநிறை புகுதர
      வேங்குவயி ரிசைய கொடுவா யன்றி
      லோங்கிரும் பெண்ணை யகமட லகவ .... 220
      பாம்புமணி யுமிழ பல்வயிற் கோவல
      ராம்பல தீங்குழற் றெள்விளி பயிற்ற
      வாம்ப லாயிதழ் கூம்புவிட வளமனை
      பூந்தொடி மகளிர் சுடர்தலை கொளுவி
      யந்தி யந்தண ரயர கானவர்
      விண்டோய் பணவை மிசைஞெகிழி பொத்த
      வானமாமலை வாய்சூழ்பு கறுப்ப கானங்
      கல்லென் றிரட்ட புள்ளின மொலிப்ப
      சினைஇய வேந்தன் செல்சமங் கடுப்ப
      துனைஇய மாலை துன்னுதல் காணூஉ .... 230
      நேரிறை முன்கை பற்றி நுமர்தர
      நாடறி நன்மண மயர்கஞ் சின்னா
      கலங்க லோம்புமி னிலங்கிழை யீரென
      வீர நன்மொழி தீர கூறி
      துணைபுண ரேற்றி னெம்மொடு வந்து
      துஞ்சா முழவின் மூதூர் வாயி
      லுண்டுறை நிறுத்த பெயர்ந்தன னதற்கொண்
      டன்றை யன்ன விருப்போ டென்று
      மிரவரன் மாலைய னேவரு தோறுங்
      காவலர் கடுகினுங் கதநாய் குரைப்பினு .... 240
      நீதுயி லெழினு நிலவுவெளி படினும்
      வேய்புரை மென்றோ ளின்றுயி லென்றும்
      பெறாஅன் பெயரினு முனிய லுறாஅ
      னிளமையி னிகந்தன்று மிலனே வளமையிற்
      றன்னிலை தீர்ந்தன்று மிலனே கொன்னூர்
      மாய வரவி னியல்புநினைஇ தேற்றி
      நீரெறி மலரிற் சாஅயிதழ் சோரா
      வீரிய கலுழுமிவள் பெருமதர் மழைக்க
      ணாக தரிப்பனி யுறைப்ப நாளும்
      வலைப்படு மஞ்ஞையி னலஞ்செல சாஅய் .... 250
      நினைத்தொறுங் கலுழுமா லிவளே கங்கு
      லளைச்செறி யுழுவையு மாளியு முளியமும்
      புழற்கோ டாமான் புகல்வியுங் களிறும்
      வலியிற் றப்பும் வன்கண் வெஞ்சின
      துருமுஞ் சூரு மிரைதே ரரவமு
      மொடுங்கிருங் குட்ட தருஞ்சுழி வழங்குங்
      கொடுந்தாண் முதலையு மிடங்கருங் கராமு
      நூழிலு மிழுக்கு மூழடி முட்டமும்
      பழுவும் பாந்தளு முளப்பட பிறவும்
      வழுவின் வழாஅ விழுமமவர்
      குழுமலை விடரக முடையவா லெனவே. .... 261
      குறிஞ்சிப்பாட்டு முற்றிற்று
      -