சங்க கால நூல்களான பத்து பாட்டுக்களில் ஒன்றாவதான
      சிறுபாணாற்றுப்படை
      பாடியவர் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்
      பாடப்பட்டவன் ஓய்மானாட்டு நல்லியக்கோடன்
      திணை பாடாண்திணை
      துறை ஆற்றுப்படை
      பாவகை ஆசிரியப்பா
      மொத்த அடிகள் 269
      -----------------------
      மணிமலை பணைத்தோள் மாநில மடந்தை
      யணிமுலை துயல்வரூஉ மாரம் போல
      செல்புன லுழந்த சேய்வரற் கான்யாற்று
      கொல்கரை நறும்பொழிற் குயில்குடை துதிர்த்த
      புதுப்பூஞ் செம்மல் சூடி புடைநெறித்து
      கதுப்புவிரி தன்ன காழக நுணங்கற
      லயிலுரு பனைய வாகி யைதுநடந்து
      வெயிலுரு புற்ற வெம்பரல் கிழிப்ப
      வேனி னின்ற வெம்பத வழிநா
      காலைஞா யிற்று கதிர்கடா வுறு .
      பாலை நின்ற
      சுரன்முதன் மராஅத்த வரிநிழ லசைஇ
      யைதுவீ ழிகுபெய லழகுகொண் டருளி
      நெய்கனி திருளிய கதுப்பிற் கதுப்பென
      மணிவயின் கலாபம் பரப்பி பலவுடன்
      மயின்மயிற் குளிக்குஞ் சாயற் சாஅ
      யுயங்குநாய் நாவி னல்லெழி லசைஇ
      வயங்கிழை யுலறிய அடியி னடிதொடர
      தீர்ந்துநில தோயு மிரும்பிடி தடக்கையிற்
      சேர்ந்துடன் செறிந்த குறங்கிற் குறங்கென .
      மால்வரை யழுகிய வாழை வாழை
      பூவென பொலிந்த ஓதி
      நளிச்சினை வேங்கை நாண்மலர் நச்சி
      களிச்சுரும் பரற்றுஞ் சுணங்கிற் சுணங்குபிதிர
      தியாணர கோங்கி னவிர்முகை யெள்ளி
      பூணக தொடுங்கிய வெம்முலை முலையென
      வண்கோ பெண்ணை வளர்த்த நுங்கி
      னின்சே றிகுதரு மெயிற்றி னெயிறென
      குல்லையம் புறவிற் குவிமுகை யவிழ்ந்த
      முல்லை சான்ற கற்பின் மெல்லியல் .
      மடமா னோக்கின் வாணுதல் விறலியர்
      நடைமெலி தசைஇய நன்மென் சீறடி
      கல்லா விளையர் மெல்ல தைவர
      பொன்வார தன்ன புரியடங்கு நரம்பி
      னின்குரற் சீறியா ழிடவயிற் றழீஇ
      நைவளம் பழுநிய நயந்தெரி பாலை
      கைவல் பாண்மகன் கடனறி தியக்க
      வியங்கா வையத்து வள்ளியோர் நசைஇ
      துனிகூ ரெவ்வமொடு துயராற்று படுப்ப
      முனிவிக திருந்த முதுவா யிரவல .
      கொழுமீன் குறைய வொதுங்கி வள்ளிதழ
      கழுநீர் மேய்ந்த கயவா யெருமை
      பைங்கறி நிவந்த பலவி னீழல்
      மஞ்சண் மெல்லிலை மயிர்ப்புற தைவர
      விளையா விளங்க ணாற மெல்குபு பெயரா
      குளவி பள்ளி பாயல் கொள்ளுங்
      குடபுலங் காவலர் மருமா னொன்னார்
      வடபுல விமயத்து வாங்குவிற் பொறித்த
      எழுவுறழ் திணிதோ ளியறேர குட்டுவண்
      வருபுனல்வாயில் வஞ்சியும் வறிதே யதாஅன்று .
      நறவுவா யுறைக்கும் நாகுமுதிர் நுணவ
      தறைவா குறுந்துணி யயிலுளி பொருத
      கைபுனை செப்பங் கடைந்த மார்பிற்
      செய்பூங் கண்ணி செவிமுத றிருத்தி
      நோன்பக டுமண ரொழுகையடு வந்த
      மகாஅ ரன்ன மந்தி மடவோர்
      நகாஅ ரன்ன நளிநீர் முத்தம்
      வாள்வா யெருந்தின் வயிற்றக தடக்கி
      தோள்புற மறைக்கும் நல்கூர் நுசுப்பி
      னுளரிய லைம்பா லுமட்டிய ரீன்ற .
      கிளர்பூ புதல்வரொடு கிலுகிலி யாடு
      தத்துநீர் வரைப்பிற் கொற்கை கோமான்
      தென்புலங் காவலர் மருமா னொன்னார்
      மண்மாறு கொண்ட மாலை வெண்குடை
      கண்ணார் கண்ணி கடுந்தேர செழியன்
      தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின்
      மகிழ்நனைமறுகின் மதுரையும் வறிதே யுதாஅன்று
      நறுநீர பொய்கை யடைகரை நிவந்த
      துறுநீர கடம்பின் றுணையார் கோதை
      ஓவ தன்ன வுண்டுறை மருங்கிற் .
      கோவ தன்ன கொங்குசேர் புறைத்தலின்
      வருமுலை யன்ன வண்முகை யுடைந்து
      திருமுக மவிழ்ந்த தெய்வ தாமரை
      யாசி லங்கை யரக்குத்தோ தன்ன
      சேயிதழ் பொதிந்த செம்பொற் கொட்டை
      யேம வின்றுணை தழீஇ யிறகுளர்ந்து
      காமரு தும்பி காமரஞ் செப்பு
      தண்பணை தழீஇய தளரா இருக்கை
      குணபுலங் காவலர் மருமா னொன்னா
      ரோங்கெயிற் கதவ முருமுச்சுவல் சொறியு .
      தூங்கெயி லெறிந்த தொடிவிளங்கு தடக்கை
      நாடா நல்லிசை நற்றேர செம்பிய
      னோடா பூட்கை யுறந்தையும் வறிதே யதாஅன்று
      வானம் வாய்த்த வளமலை கவாஅற்
      கான மஞ்ஞைக்கு கலிங்க நல்கிய
      அருந்திற லணங்கி னாவியர் பெருமகன்
      பெருங்க னாடன் பேகனுஞ் சுரும்புண
      நறுவீ யுறைக்கு நாக நெடுவழி
      சிறுவீ முல்லைக்கு பெருந்தேர் நல்கிய
      பிறங்குவெள் ளருவி வீழுஞ் சாரல் .
      பறம்பிற் கோமான் பாரியுங் கறங்குமணி
      வாலுளை புரவியடு வையக மருள
      வீர நன்மொழி யிரவலர கீந்த
      வழறிகழ திமைக்கு மஞ்சுவரு நெடுவேற்
      கழறொடி தடக்கை காரியு நிழறிகழ்
      நீல நாக நல்கிய கலிங்க
      ஆலமர் செல்வற் கமர்ந்தனன் கொடுத்த
      சாவ தாங்கிய சாந்துபுலர் திணிதோ
      ளார்வ நன்மொழி யாயு மால்வரை
      கமழ்பூஞ் சாரற் கவினிய நெல்லி .
      யமிழ்துவிளை தீங்கனி யெளவை கீந்த
      வுரவுச்சினங் கனலுமொளிதிகழ் நெடுவே
      லரவக்கடற் றானை யதிகனுங் கரவாது
      நட்டோ ருவப்ப நடைப்பரி கார
      முட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கை
      துளிமழை பொழியும் வளிதுஞ்சு நெடுங்கோட்டு
      நளிமலை நாட னள்ளியு நளிசினை
      நறும்போது கஞலிய நாகுமுதிர் நாகக்து
      குறும்பொறை நன்னாடு கோடியர கீந்த
      காரி குதிரை காரியடு மலைந்த .
      வோரி குதிரை யோரியு மெனவாங்
      கெழுசமங் கடந்த வெழுவுறழ் திணிதோ
      ளெழுவர் பூண்ட வீகை செந்நுகம்
      விரிகடல் வேலி வியலகம் விளங்க
      வொருதான் றாங்கிய வுரனுடைய நோன்றா
      ணறுவீ நாககு மகிலு மாரமு
      துறையாடு மகளிர்க்கு தோட்புணை யாகிய
      பொருபுன றரூஉம் போக்கரு மரபிற்
      றொன்மா விலங்கை கருவொடு பெயரிய
      நன்மா விலங்கை மன்ன ருள்ளும் .
      மறுவின்றி விளங்கிய வடுவில் வாய்வா
      ளுறுபுலி துப்பி னோவியர் பெருமகன்
      களிற்றுத்தழும் பிருந்த கழறயங்கு திருந்தடி
      பிடிக்கணஞ் சிதறும் பெயல்மழை தடக்கை
      பல்லி கோடியர் புரவலன் பேரிசை
      நல்லி கோடனை நயந்த கொள்கையடு
      தாங்கரு மரபிற் றன்னு தந்தை
      வான்பொரு நெடுவரை வளனும் பாடி
      முன்நாள் சென்றன மாக விந்நா
      டிறவா கண்ண சாய்செவி குருளை .
      கறவா பால்முலை கவர்த னோனாது
      புனிற்றுநாய் குரைக்கும் புல்லெ னட்டில்
      காழ்சோர் முதுசுவர கணச்சித லரித்த
      பூழி பூத்த புழற்கா ளாம்பி
      யல்குபசி யுழந்த வொடுங்குநுண் மருங்குல்
      வளைக்கை கிணைமகள் வள்ளுகிர குறைத்த
      குப்பை வேளை யுப்பிலி வெந்ததை
      மடவோர் காட்சி நாணி கடையடை
      திருக்பே ரொக்கலொ டொருங்குடன் மிசையு
      மழிபசி வருத்தம் வீட பொழிகவு .
      டறுக பூட்கை தயங்குமணி மருங்கிற்
      சிறுகண் யானையடு பெருந்தே ரெய்தி
      யாமவ ணின்றும் வருதும் நீயிரு
      மிவண திருந்த விரும்பே ரொக்கற்
      செம்ம லூள்ளமொடு செல்குவி ராயி
      னலைநீர தாழை யன்னம் பூப்பவு
      தலைநா செருந்தி தமனியம் மருட்டவுங்
      கடுஞ்சூன் முண்டகங் கதிர்மணி கழாஅலவும்
      நெடுங்காற் புன்னை நித்திலம் வைப்பவும்
      கானல் வெண்மணல் கடலுலாய் நிமிர்தர .
      பாடல் சான்ற நெய்த னெடுவழி
      மணிநீர வைப்பு மதிலொடு பெயரிய
      பனிநீர படுவின் பட்டினம் படரி
      னோங்குநிலை யட்டக துயுன்மடி தன்ன
      வீங்குதிரை கொணர்ந்த விரைமர விறகிற்
      கரும்புகை செந்தீ மாட்டி பெருந்தோண்
      மதியே கறூஉம் மாசறு திருமுகத்து
      நுதிவே னோக்கி னுளைமக ளரித்த
      பழம்படு தேறல் பரதவர் மடுப்ப
      கிளைமலர படப்பை கிடங்கிற் கோமான் .
      தளையவிழ் தெரியற் றகையோற் பாடி
      யறற்குழற் பாணி தூங்கி யவரொடு
      வறற்குழற் சூட்டின் வயின்வயிற் பெறுகுவிர்
      பைந்நனை யவரை பவழங் கோப்பவுங்
      கருநனை காயா கணமயி லவிழவுங்
      கொழுங்கொடி முசுண்டை கொட்டங் கொள்ளவுஞ்
      செழுங்குலை காந்தள் கைவிரல் பூப்பவுங்
      கொல்லை நெடுவழி கோப மூரவு
      முல்லை சான்ற முல்லையம் புறவின்
      விடர்கா லருவி வியன்மலை மூழ்கி .
      சுடர்கான் மாறிய செவ்வி நோக்கி
      திறல்வே னுதியிற் பூத்த கேணி
      விறல்வேல் வென்றி வேலூ ரெய்தி
      னுறுவெயிற் குலைஇய வுருப்பவிர் குரம்பை
      யெயிற்றிய ரட்ட இன்புளி வெஞ்சோறு
      தேமா மேனி சில்வளை யாயமொ
      டாமான் சூட்டி னமைவர பெறுகுவிர்
      நறும்பூங் கோதை தொடுத்த நாட்சினை
      குறுங்காற் காஞ்சி கொம்ப ரேறி
      நிலையருங் குட்ட நோக்கி நெடிதிருந்து .
      புலவுக்கய லெடுத்த பொன்வாய் மணிச்சிரல்
      வள்ளுகிர் கிழித்த வடுவாழ் பாசடை
      முள்ளரை தாமரை முகிழ்விரி நாட்போது
      கொங்குகவர் நீல செங்க சேவல்
      மதிசே ரரவின் மான தோன்று
      மருதஞ் சான்ற மரு தண்பணை
      யந்தண ரருகா வருங்கடி வியனக
      ரந்தண் கிடங்கினவ னாமூ ரெய்தின்
      வலம்பட நடக்கும் வலிபுண ரெருத்தி
      னுரன்கெழு நோன்பக டுழவர் தங்கை .
      பிடிக்கை யன்ன பின்னுவீழ் சிறுபுறத்து
      தொடிக்கை மகடூஉ மகமுறை தடுப்ப
      விருங்கா ழுலக்கை யிரும்புமுக தேய்த்த
      அவைப்புமா ணரிசி யமலைவெண் சோறு
      கவைத்தா ளலவன் கலவையடு பெறுகுவி
      ரெரிமறி தன்ன நாவி னிலங்கெயிற்று
      கருமறி காதிற் கவையடி பேய்மக
      ணிணனுண்டு சிரித்த தோற்றம் போல
      பிணனுகைத்து சிவந்த பேருகிர பணைத்தா
      ளண்ணல் யானை யருவிதுக ளவிப்ப .
      நீறடங்கு தெருவினவன் சாறயர் மூதூர்
      சேய்த்து மன்று சிறிதுநணி யதுவே
      பொருநர காயினும் புலவர காயினு
      மருமறை நாவி னந்தணர காயினுங்
      கடவுண் மால்வரை கண்விடு தன்ன
      அடையா வாயிலவ னருங்கடை குறுகி
      செய்ந்நன்றி யறிதலுஞ் சிற்றின மின்மையு
      மின்முக முடையையு மினிய னாதலுஞ்
      செறிந்துவிளங்கு சிறப்பி னறிந்தோ ரேத்த
      அஞ்சினர களித்தலும் வெஞ்சின மின்மையு .
      மாணணி புகுதலு மழிபடை தாங்கலும்
      வாண்மீ கூற்றத்த்து வயவ ரேத்த
      கருதியது முடித்தலுங் காமுற படுதலு
      மொருவழி படாமையு மோடிய துணர்தலு
      மரியே ருண்க ணரிவைய ரேத்த
      அறிவுமடம் படுதலு மறிவுநன் குடைமையும்
      வரிசை யறிதலும் வரையாது கொடுத்தலும்
      பரிசில் வாழ்க்கை பரிசில ரேத்த
      பன்மீ னடுவ பான்மதி போல
      இன்னகை யாயமோ டிருந்தோற் குறுகி .
      பைங்க ணூகம் பாம்புபிடி தன்ன
      வங்கோட்டு செறிந்த வவிழ்ந்துவீங்கு திவவின்
      மணிநிரை தன்ன வனப்பின் வாயமைத்து
      வயிறுசேர் பொழுகிய வகையமை யகளத்து
      கான குமிழின் கனிநிறங் கடு
      புகழ்வினை பொலிந்த பச்சையடு தேம்பெய்
      தமிழ்துபொதி திலிற்று மடங்குபுரி நரம்பிற்
      பாடுதுறை முற்றிய பயன்றெரி கேள்வி
      கூடுகொ ளின்னியங் குரல்குர லாக
      நூனெறி மரபிற் பண்ணி யானாது .
      முதுவோர்க்கு முகிழ்த்த கையினை யெனவு
      மிளையோர்க்கு மலர்ந்த மார்பினை யெனவு
      மேரோர்க்கு நிழன்ற கோலினை யெனவு
      தேரோர கழன்ற வேலினை யெனவு
      நீசில மொழியா வளவை மாசில்
      காம்புசொலி தன்ன வறுவை யுடீஇ
      பாம்புவெகுண் டன்ன தேற னல்கி
      காவெரி யூட்டிய கவர்கணை தூணி
      பூவிரி கச்சை புகழோன் றன்முன்
      பனிவரை மார்பன் பயந்த நுண்பொரு .
      பனுவலின் வழாஅ பல்வே றடிசில்
      வாணிற விசும்பிற் கோண்மீன் சூழ்த்த
      விளங்கதிர் ஞாயி றெள்ளூ தோற்றத்து
      விளங்குபொற் கலத்தில் விரும்புவன பேணி
      யானா விருப்பிற் றனின் றூட்டி
      திறல்சால் வென்றியடு தெவ்வுப்புல மகற்றி
      விறல்வேன் மன்னர் மன்னெயின் முருக்கி
      நயவர் பாணர் புன்கண் டீர்த்தபின்
      வயவர் தந்த வான்கேழ் நிதியமொடு
      பருவ வானத்து பாற்கதிர் பரப்பி .
      யுருவ வான்மதி யூர்கொண் டாங்கு
      கூருளி பொருத வடுவாழ் நோன்குற
      டாரஞ் சூழ்ந்த வயில்வாய் நேமியடு
      சிதர்நனை முருக்கின் சேணோங்கு நெடுஞ்சினை
      ததர்பிணி யவிழ்ந்த தோற்றம் போல
      வுள்ளர கெறிந்த வுருக்குறு போர்வை
      கருந்தொழில் வினைஞர் கைவினை முற்றி
      யூர்ந்துபெயர் பெற்ற வெழினடை பாகரொடு
      மாசெல வொழிக்கு மதனுடை நோன்றாள்
      வாண்முக பாண்டில் வலவனொடு தரீஇ .
      யன்றே விடுக்குமவன் பரிசின் மென்றே
      டுகிலணி யல்குற் றுளங்கியன் மகளி
      ரகிலுண விரித்த வம்மென் கூந்தலின்
      மணிமயிற் கலாப மஞ்சிடை பரப்பி
      துணிமழை தவழு துயல்கழை நெடுங்கோ
      டெறிந்துரு மிறந்த வேற்றருஞ் சென்னி
      குறிஞ்சி கோமான் கொய்தளிர கண்ணி
      செல்லிசை நிலைஇய பண்பி
      நல்லி கோடனை நயந்தனிர் செலினே. .
      . .-----------------------
      . .சிறுபாணாற்றுப்படை முற்றிற்று
      . .-----------------------
      .
      ------------------------------------------------------------------------
      14 2000


      .64-