திருவருட்பா அகவல்
      இராமலிங்க அடிகள் வள்ளலார் அருளியது
      அருட்பெருஞ் ஜோதி
      தனிப்பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி
      அருட்பெருஞ் ஜோதி அகவல்

      அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ்
      அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ்
      அருட்சிவ நெறிசாரருட்பெருஞ்ஜோதி
      அருட்சிவ பதியாமருட்பெருஞ்ஜோதி
      ஆகம முடிமேல் ஆரண
      ஆகநின் றோங்கிய வருட்பெருஞ்ஜோதி
      இகநிலை பொருளா பரநிலை பொருளாய்
      அகமற பொருந்திய வருட்பெருஞ்ஜோதி
      இனமின்றிகபரத்திரண்டின்மேற்பொருளாய்
      ஆனலின்றோங்கிய வருட்பெருஞ்ஜோதி .10
      உரைமனங் கடந்த வொருபெருவெளிமேல்
      அரைசுசெய் தோங்கு மருட்பெருஞ்ஜோதி
      ஊக்கமு முணர்ச்சியுமொளிதரு மாக்கையும்
      ஆக்கமு மருளிய வருட்பெருஞ்ஜோதி
      எல்லையில் பிறப்பெனு மிருங்கடல் கடத்தியென்
      அல்லலை நீக்கிய வருட்பெருஞ்ஜோதி
      ஏறா நிலைமிசை யேற்றியென் றனக்கே
      ஆறாறு காட்டிய வருட்பெருஞ்ஜோதி
      ஐயமுந்தி஡஢பு மறுத்தெனதுடம்பினுள்
      ஐயமு நீக்கிய வருட்பெருஞ்ஜோதி 20
      ஒன்றென விரண்டென வொன்றிரண்டெனவிவை
      யன்றென விளங்கிய வருட்பெருஞ்ஜோதி
      ஓதாதுணர்ந்திட வொளியளித்தெனக்கே
      ஆதாரமாகிய வருட்பெருஞ்ஜோதி
      ஒளவியமாதி யோராறு தவிர்த்தபேர்
      அவ்வியல் வழுத்து மருட்பெருஞ்ஜோதி
      திருநிலை தனிவெளி சிவவெளி யெனுமோர்
      அருள்வெளி பதிவள ரருட்பெருஞ்ஜோதி
      சுத்தசன் மார்க்க சுகத்தனிவெளியெனும்
      அத்தகை சிற்சபை யருட்பெருஞ்ஜோதி 30
      சுந்தமெஞ்ஞான சுகோதய வெளியெனு
      அத்துவிதச்ச்பை யருட்பெருஞ்ஜோதி
      துயெகலாந்த சுகந்தரு வெளியெனும்
      ஆயசிற் சபையி லருட்பெருஞ்ஜோதி
      ஞானயோகாந்த நடத்திருவெளியெனும்
      ஆனியில் சிற்சபை யருட்பெருஞ்ஜோதி
      விமல போதந்தமா மெய்ப்பொருள்வெளியெனும்
      அமல சிற்சபையி லருட்பெருஞ்ஜோதி
      பொ஢ய நாதந்த பெருநிலைவெளியெனும்
      அ஡஢யசிற்றம்பல தருட்பெருஞ்ஜோதி 40
      சுத்தவேதாந து஡஢யமேல்வெளியெனும்
      அத்தகு சிற்சபை யருட்பெருஞ்ஜோதி
      சுத்த சித்தாந்த சுகப்பெருவெளியெனும்
      அத்தனி சிற்சபை யருட்பெருஞ்ஜோதி
      தகரமெய்ஞ்ஞான தனிப்பெருவெளியெனும்
      அகர நிலைப்பதி யருட்பெருஞ்ஜோதி
      தத்துவாதீத தனிப்பொருள் வெளியெனும்
      அத்திருவம்பல தருட்பெருஞ்ஜோதி
      சச்சிதானந தனிப்பரவெளியெனும்
      அச்சிய லம்பல தருட்பெருஞ்ஜோதி 50
      சாகா கலைநிலை தழைத்திடுவெளியெனும்
      ஆகா தொளி ரருட்பெருஞ்ஜோதி
      காரண கா஡஢யங் காட்டிடு வெளியெனும்
      ஆரண சிற்சபை யருட்பெருஞ்ஜோதி
      ஏக மனேக மெனப்பகர் வெளியெனும்
      ஆக சிற்சபை யருட்பெருஞ்ஜோதி
      வேதா கமங்களின் விளைவுகட்கெல்லாம்
      ஆதாரமாஞ்சபை யருட்பெருஞ்ஜோதி
      என்றாதிய சுடர கியனிலையாயது
      வன்றாந்திருச்சபை யருட்பெருஞ்ஜோதி 60
      சமயங் கடந்த தனிப்பொருள் வெளியாய்
      அமையுந்திருச்சபை யருட்பெருஞ்ஜோதி
      முச்சுடர் களுமொளி முயங்குற வளித்தருள்
      அச்சுடராஞ்சபை யருட்பெருஞ்ஜோதி
      து஡஢யமுங்கடந்த சுகபூரணந்தரும்
      அ஡஢யசிற்றம்பல தருட்பெருஞ்ஜோதி
      எவ்வகை சுகங்களு மினிதுற வளித்தருள்
      அவ்வகை சிற்சபை யருட்பெருஞ்ஜோதி
      இயற்கையுண்மை யதாயியற்கையின்பமுமாம்
      அயர்ப்பிலா சிற்சபை யருட்பெருஞ்ஜோதி 70
      சாக்கிரா தீ தனிவெளியாய்நிறை
      வாக்கிய சிற்சபை யருட்பெருஞ்ஜோதி
      சுட்டுதற் கா஢தாஞ் சுகாதீத வெளியெனும்
      அட்டமேற் சிற்சபை யருட்பெருஞ்ஜோதி
      நவந்தவிர் நிலைகளு நண்ணுமோர் நிலையாய்
      அவந்தவிர் சிற்சபை யருட்பெருஞ்ஜோதி
      உபயப கங்களு மொன்றென காட்டிய
      அபயசிற் சபையி லருட்பெருஞ்ஜோதி
      சேகர மாம்பல சித்தி நிலைக்கெலாம்
      ஆகர மாஞ்சபை யருட்பெருஞ்ஜோதி 80
      மனாதிக கா஢ய மதாதீத வெளியாம்
      அனாதி சிற்சபையி லருட்பெருஞ்ஜோதி
      ஓதிநின்றுணர்ந்துணர்ந்துணர்தற்கா஢தாம்
      ஆதிசிற்சபையி லருட்பெருஞ்ஜோதி
      வாரமு மழியா வரமு தருந்திரு
      வாரமுதாஞ் சபை யருட்பெருஞ்ஜோதி
      இழியா பெருநல மெல்லா மளித்தருள்
      அழியா சிற்சபை யருட்பெருஞ்ஜோதி
      கற்பம் பலபல கழியுனு மழிவுறா
      அற்புத தருஞ்சபை யருட்பெருஞ்ஜோதி 90
      எனைத்து துன்பிலா வியலளித்தெண்ணிய
      வனைத்து தருஞ்சபை யருட்பெருஞ்ஜோதி
      பாணிப்பிலதா பரவினோர கருள்பு஡஢
      ஆணி பொனம்பல தருட்பெருஞ்ஜோதி
      எம்பல மெனத்தொழு தேத்தினோர கருள்பு஡஢
      அம்பலத்தாடல்செய் யருட்பெருஞ்ஜோதி
      தம்பர ஞான சிதம்பர மெனுமோர்
      அம்பர தோங்கிய அருட்பெருஞ்ஜோதி
      எச்சபை பொதுவென வியம்பின ரறிஞர்கள்
      அச்சபை யிடங்கொளு மருட்பெருஞ்ஜோதி ..100
      வாடுதனீக்கிய மணிமன் றிடையே
      ஆடுதல் வல்ல வருட்பெருஞ்ஜோதி
      நாடக திருச்செய நவிற்றிடு மொருபே
      ராடக பொதுவொளி ரருட்பெருஞ்ஜோதி
      கற்பனை முழுவதுங் கடந்தொளி தருமோர்
      அற்புத சிற்சபை யருட்பெருஞ்ஜோதி
      இன்றநற் றாயினு மினிய பெருந்தய
      வான்றசிற் சபையி லருட்பெருஞ்ஜோதி
      இன்புறு நானுள தெண்ணியாங் கெண்ணியாங்
      கன்புற தருசபை யருட்பெருஞ்ஜோதி ..110
      எம்மையு மென்னைவிட்டிறையும் பி஡஢யா
      தம்மை பனுமா மருட்பெருஞ்ஜோதி
      பிறிவுற் றறியா பெரும்பொருளாயென்
      னறிவு கறிவா மருட்பெருஞ்ஜோதி
      சாதியு மதமுஞ் சமயுமுங் காணா
      ஆதிய நாதியா மருட்பெருஞ்ஜோதி
      தநுகர ணாதிக டாங்கடந்தறியுமோர்
      அனுபவ மாகிய வருட்பெருஞ்ஜோதி
      உனுமுணர் வுணர்வா யுணர்வெலாங் கடந்த
      அநுபவா தீத வருட்பெருஞ்ஜோதி ..120
      பொதுவுணர் வுணரும் போதலாற் பி஡஢த்தே
      அதுவெனிற் றோன்றா வருட்பெருஞ்ஜோதி
      உளவினி லறிந்தா லொழியமற் றளக்கின்
      அளவினி லளவா வருட்பெருஞ்ஜோதி
      என்னையும் பணிகொண் டிறவா வரமளி
      தன்னையு ஡வந்த வருட்பெருஞ் ஜோதி
      ஓதியோ தாம ஡றவென களித்த
      ஆதியீ றில்லா வருட்பெருஞ் ஜோதி
      படியடி வான்முடி பற்றினு தோற்றா
      அடிமுடி யெனுமோ ரருட்பெருஞ் ஜோதி ..130
      பவன தினண்ட பரப்பினெங் கெங்கும்
      அவனு கவனா மருட்பெருஞ் ஜோதி
      திவளுற் றவண்ட திரளினெங் கெங்கும்
      அவளு கவளா மருட்பெருஞ் ஜோதி
      மதனுற் றவண்ட வரைப்பினெங் கெங்கும்
      அதனு கதுவா மருட்பெருஞ் ஜோதி
      எப்பா ஡மாய்வெளி யெல்லாங் கடந்துமேல்
      அப்பா ஡மாகிய வருட்பெருஞ் ஜோதி
      வல்லதா யெல்லா மாகியெல் லாமும்
      அல்லதாய் விளங்கு மருட்பெருஞ் ஜோதி ..140
      எப்பொருள் மெய்ப்பொரு ளென்பர் மெய்கண்டோ ர்
      அப்பொரு ளாகிய அருட்பெருஞ் ஜோதி
      தாங்ககி லாண்ட சராசர நிலைநின்
      றாங்குற விளங்கு மருட்பெருஞ் ஜோதி
      சத்தர் களெல்லா தழைத்திட வகம்புற
      தத்திசை விளங்கு மருட்பெருஞ் ஜோதி
      சத்திக ளெல்லா தழைக்கவெங் கெங்கும்
      அத்தகை விளங்கு மருட்பெருஞ் ஜோதி
      முந்துறு மைந்தொழின் மூர்த்திகள் பலர்க்கும்
      ஐந்தொழி லளிக்கு மருட்பெருஞ் ஜோதி ..150
      பொ஢தினும் பொ஢தா சிறிதினுஞ் சிறிதாய்
      அ஡஢தினு மா஢தா மருட்பெருஞ் ஜோதி
      காட்சியுங் காணா காட்சியு மதுதரும்
      ஆட்சியு மாகிய வருட்பெருஞ் ஜோதி
      இன்புறு சித்திக ளெல்லாம் பு஡஢கவென்
      றன்புட னெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
      இறவா வரமளி தென்னைமே லேற்றிய
      அறவா ழியாந்தனி யருட்பெருஞ் ஜோதி
      நான தமில்லா நலம்பெற வெனக்கே
      ஆன தநல்கிய வருட்பெருஞ் ஜோதி ..160
      எண்ணிய வெண்ணியாங் கியற்றுக வென்றெனை
      யண்ணியுள் ளோங்கு மருட்பெருஞ் ஜோதி
      மேயினை மெய்ப்பொருள் விளங்கினை நீயது
      வாயினை யென்றரு ளருட்பெருஞ் ஜோதி
      எண்ணிற் செழுந்தே னினியதெள் ளமுதென
      அண்ணி தினிக்கு மருட்பெருஞ் ஜோதி
      சிந்தையிற் றுன்பொழி சிவம்பெறு கெனத்தொழி
      லைந்தையு மெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
      எங்கெங் கிருந்துயி ரெதெது வேண்டினும்
      அங்கங் கிருந்தரு ளருட்பெருஞ் ஜோதி ..170
      சகமுதற் புறப்புற தங்கிய வகப்புறம்
      அகம்புற முற்றுமா மருட்பெருஞ் ஜோதி
      சிகரமும் வகரமுஞ் சேர்தனி யுகரமும்
      அகரமு மாகிய வருட்பெருஞ் ஜோதி
      உபரச வேதியி னுபயமும் பரமும்
      அபரமு மாகிய வருட்பெருஞ் ஜோதி
      மந்த்ண மிதுவென மறுவிலா மதியால்
      அந்தணர் வழுத்து மருட்பெருஞ் ஜோதி
      எம்பு கனியென வெண்ணுவா ஡஢தய
      வம்பு தமர்ந்த வருட்பெருஞ் ஜோதி ..180
      செடியறு தேதிட தேகமும் போகமும்
      அடியரு கேதரு மருட்பெருஞ் ஜோதி
      துன்புறு தொருசிவ து஡஢ய சுகந்தனை
      அன்பரு கேதரு மருட்பெருஞ் ஜோதி
      பொதுவது சிறப்பது புதியது பழயதென்
      றதுவது வாய்த்திக ழருட்பெருஞ் ஜோதி
      சேதன பெருநிலை திகழ்தரு மொருபரை
      யாதன தோங்கிய வருட்பெருஞ் ஜோதி
      ஓ திருவுரு வுவப்புட னளித்தென
      கா தடைதவி ரருட்பெருஞ் ஜோதி ..190
      எப்படி யெண்ணிய தென்கரு திங்கென
      கப்படி யருளிய வருட்பெருஞ் ஜோதி
      எத்தகை விழைந்தன வென்மன மிங்கென
      கத்தகை யருளிய வருட்பெருஞ் ஜோதி
      இங்குற தி஡஢ந்துள மிளையா வகையென
      கங்கையிற் கனியா மருட்பெருஞ் ஜோதி
      பாரு பு஡஢கென பணித்தென கருளியென்
      ஆருயிர குள்ளொளி ரருட்பெருஞ் ஜோதி
      தேவியுற் றொளிர்தரு தி஡஢வுரு வுடனென
      தாவியிற் கலந்தொளி ரருட்பெருஞ் ஜோதி ..200
      எவ்வழி மெய்வழி யென்பவே தாகமம்
      அவ்வழி யெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
      வையமும் வானமும் வாழ்த்திட வெனக்கருள்
      ஐயறி வளித்த வருட்பெருஞ் ஜோதி
      சாமா றனைத்து தவிர்த்திங் கெனக்கே
      ஆமா ரருளிய வருட்பெருஞ் ஜோதி
      சத்திய மாஞ்சிவ சத்தியை யீந்தென
      கத்திறல் வளர்க்கு மருட்பெருஞ் ஜோதி
      சாவா நிலையிது தந்தன முனக்கே
      ஆவா வெனவரு ளருட்பெருஞ் ஜோதி ..210
      சாதியு மதமுஞ் சமயமும் பொய்யென
      ஆதியி ஡ணர்த்திய வருட்பெருஞ் ஜோதி
      மயர்ந்திடேல் சிறிது மனந்தளர தஞ்சேல்
      அயர்ந்திடே லென்றரு ளருட்பெருஞ் ஜோதி
      தேசுற திகழ்தரு திருநெறி பொருளியல்
      ஆசற தொ஢த்த வருட்பெருஞ் ஜோதி
      காட்டிய வுலகெலாங் கருணையாற் சித்தியின்
      ஆட்டியல் பு஡஢யு மருட்பெருஞ் ஜோதி
      எங்குல மெம்மின மென்பதொண் ணு஦ற்றா
      றங்குல மென்றரு ளருட்பெருஞ் ஜோதி ..220
      எம்மத மெம்மிறை யென்ப வுயிர்த்திறள்
      அம்மத மென்றரு ளருட்பெருஞ் ஜோதி
      கூறிய கருநிலை குலவிய கீழ்மேல்
      ஆறிய லெனவுரை யருட்பெருஞ் ஜோதி
      எண்டர முடியா திலங்கிய பற்பல
      அண்டமு நிறைந்தொளி ரருட்பெருஞ் ஜோதி
      சாருயிர கெல்லா தாரக மாம்பரை
      யாருயிர குயிரா மருட்பெருஞ் ஜோதி
      வாழிநீடுழீ வாழியென் றோங்குபே
      ராழியை யளித்த வருட்பெருஞ் ஜோதி ..230
      மாய்ந்தவர் மீட்டும் வருநெறி தந்திதை
      யாய்ந்திடென் றுரைத்த வருட்பெருஞ் ஜோதி
      எச்ச நினக்கிலை யெல்லாம் பெறுகவென்
      அச்ச தவிர்த்தவென் னருட்பெருஞ் ஜோதி
      நீடுக நீயே நீளுல கனைத்தும்நின்
      றாடுக வென்றவென் னருட்பெருஞ் ஜோதி
      முத்திறல் வடிவமு முன்னியாங் கெய்துறு
      மத்திற லெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
      மூவகை சித்தியின் முடிபுகள் முழுவதும்
      ஆவகை யெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி ..240
      கருமசி திகளின் கலைபல கோடியும்
      அரசுற வெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
      யோகசி திகள்வகை யுறுபல கோடியும்
      ஆகவென் றெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
      ஞானசி தியின்வகை நல்வி஡஢ வனைத்தும்
      ஆனியின் றெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
      புடையுறு சித்தியின் பொருட்டே முத்தியை
      அடைவதென் றருளிய வருட்பெருஞ் ஜோதி
      முத்தியென் பதுநிலை முன்னுறு சாதனம்
      அத்தக வென்றவென் னருட்பெருஞ் ஜோதி ..250
      சித்தியென் பதுநிலை சேர்ந்த வநுபவம்
      அத்திற லென்றவென் னருட்பெருஞ் ஜோதி
      ஏகசிற் சித்தியே யியாற வனேகம்
      ஆகிய தென்றவென் னருட்பெருஞ் ஜோதி
      இன்பசி தியினிய லேக மனேகம்
      அன்பரு கென்றவென் னருட்பெருஞ் ஜோதி
      எட்டிரண் டென்பன வியாமுற் படியென
      அட்டநின் றருளிய வருட்பெருஞ் ஜோதி
      இப்படி கண்டனை யினியுறு படியெலாம்
      அப்படி யேயெனு மருட்பெருஞ் ஜோதி ..260
      படிமுடி கடந்தனை பா஡஢து பாரென
      அடிமுடி காட்டிய வருட்பெருஞ் ஜோதி
      ஜோதியு ஜோதியின் சொருபமே யந்த
      மாதியென் றருளிய வருட்பெருஞ் ஜோதி
      இந்தசிற் ஜோதியி நியாரு வாதி
      யந்தமென் றருளிய வருட்பெருஞ் ஜோதி
      ஆதியு மந்தமு மறிந்தனை நீயே
      ஆதியென் றருளிய வருட்பெருஞ் ஜோதி
      நல்லமு தென்னொரு நாவுளங் காட்டியென்
      அல்லலை நீக்கிய வருட்பெருஞ் ஜோதி ..270
      கற்பக மென்னுளங் கைதனிற் கொடுத்தே
      அற்புத மியற்றெனு மருட்பெருஞ் ஜோதி
      கதிர்நல மென்னிரு கண்களிற் கொடுத்தே
      அதிசய மியற்றெனு மருட்பெருஞ் ஜோதி
      அருளொளி யென்றனி யறிவினில் வி஡஢த்தே
      அருணெறி விளக்கெனு மருட்பெருஞ் ஜோதி
      பரையொளி யென்மன பதியினில் வி஡஢த்தே
      அரசது வியற்றெனு மருட்பெருஞ் ஜோதி
      வல்லப சத்திகள் வகையெலா மளித்தென
      தல்லலை நீக்கிய வருட்பெருஞ் ஜோதி ..280
      ஆ஡஢ய லகம்புற மகப்புறம் புறப்புறம்
      ஆரமு தெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
      சூ஡஢ய சந்திர ஜோதியு ஜோதியென்
      றா஡஢யர் புகழ்தரு மருட்பெருஞ் ஜோதி
      பிறிவே தினியுனை பிடித்தன முனக்குநம்
      மறிவே வடிவெனு மருட்பெருஞ் ஜோதி
      எஞ்சே ஡லகினில் யாதொன்று பற்றியும்
      அஞ்சே லென்றரு ளருட்பெருஞ் ஜோதி
      மாண்டுழ லாவகை வந்திளங் காலையே
      ஆண்டுகொண் டருளிய வருட்பெருஞ் ஜோதி ..290
      பற்றுக ளனைத்தையும் பற்றற தவிர்த்தென
      தற்றமு நீக்கிய வருட்பெருஞ் ஜோதி
      சமயங் குலமுதற் சார்பெலாம் விடுத்த
      அ தோன்றிய வருட்பெருஞ் ஜோதி
      வாய்தற் கு஡஢த்தெனு மறையா கமங்களால்
      ஆய்தற் கா஢ய வருட்பெருஞ் ஜோதி
      எல்லாம் வல்லசி தெனக்களி தெனக்குனை
      யல்லா திலையெனும் மருட்பெருஞ் ஜோதி
      நவையிலா வுளத்தி னாடிய நாடிய
      வவையெலா மளிக்கு மருட்பெருஞ் ஜோதி ..300
      கூற்றுதை தென்பாற் குற்றமுங் குணங்கொண்
      டாற்றன்மி களித்த வருட்பெருஞ் ஜோதி
      நன்றறி வறியா நாயினேன் றனையும்
      அன்றுவ தாண்ட வருட்பெருஞ் ஜோதி
      நாயினுங் கடையே னீயினு மிழிந்தேன்
      ஆயினு மருளிய வருட்பெருஞ் ஜோதி
      தோத்திரம் புகலேன் பாத்திர மல்லேன்
      ஆத்திர மளித்த வருட்பெருஞ் ஜோதி
      எச்சோ தனைகளு மியற்றா தெனக்கே
      அச்சோ வென்றரு ளருட்பெருஞ் ஜோதி ..310
      ஏறா நிலைநடு வேற்றியென் றனையீண்
      டாறாறு கடத்திய வருட்பெருஞ் ஜோதி
      தாப துயர தவிர்த்துல குறுமெலா
      ஆபத்தும் நீக்கிய வருட்பெருஞ் ஜோதி
      மருட்பகை தவிர்த்தெனை வாழ்வி தெனக்கே
      யருட்குரு வாகிய வருட்பெருஞ் ஜோதி
      உருவமு மருவமு முபயமு மாகிய
      அருணிலை தொ஢த்த வருட்பெருஞ் ஜோதி
      இருளறு தென்னுள தெண்ணியாங் கருளி
      அருளமு தளித்த வருட்பெருஞ் ஜோதி ..320
      தெருணிலை யிதுவென தெருட்டியென் னுளத்திரு
      அருணிலை காட்டிய வருட்பெருஞ் ஜோதி
      பொருட்பத மெல்லாம் பு஡஢ந்துமே லோங்கிய
      அருட்பத மளித்த வருட்பெருஞ் ஜோதி
      உருள்சக டாகிய வுளஞ்சலி யாவகை
      அருள்வழி நிறுத்திய வருட்பெருஞ் ஜோதி
      வெருள்மன மாயை வினையிரு ணீக்கியுள்
      அருள்விள கேற்றிய வருட்பெருஞ் ஜோதி
      சுருள்வி஡஢ வுடைமன சுழலெலா மறுத்தே
      அருளொளி நிரப்பிய வருட்பெருஞ் ஜோதி ..330
      வி஡஢ப்போ டிகாறு வெறுப்பு தவிர்த்தே
      அருட்பே றளித்த வருட்பெருஞ் ஜோதி
      அருட்பேர் தா஢த்துல கனைத்து மலர்ந்திட
      அருட்சீ ரளித்த வருட்பெருஞ் ஜோதி
      உலகெலாம் பரவவென் னுள்ள திருந்தே
      அலகிலா வொளிசெய் யருட்பெருஞ் ஜோதி
      விண்ணினுள் விண்ணாய் விண்ணடு
      அண்ணி நிறைந்த வருட்பெருஞ் ஜோதி
      விண்ணுறு விண்ணாய் விண்ணிலை
      அண்ணி வயங்கு மருட்பெருஞ் ஜோதி ..340
      காற்றினு காற்றா காற்றிடை காற்றாய்
      ஆற்ற விளங்கு மருட்பெருஞ் ஜோதி
      காற்றுறு காற்றா கானிலை காற்றாய்
      ஆற்ற விளங்கு மருட்பெருஞ் ஜோதி
      அனலினு ளனலா யனனடு வனலாய்
      அனாற விளங்கு மருட்பெருஞ் ஜோதி
      அனாறு மனலா யனனிலை யனலாய்
      அனாற வயங்கு மருட்பெருஞ் ஜோதி
      புனலினு புனலா புனலிடை புனலாய்
      அனையென வயங்கு மருட்பெருஞ் ஜோதி ..350
      புனாறு புனலா புனனிலை புனலாய்
      அனையென பெருகு மருட்பெருஞ் ஜோதி
      புவியினு புவியா புவிநடு புவியாய்
      அவைதர வயங்கு மருட்பெருஞ் ஜோதி
      புவியுறு புவியா புவிநிலை புவியாய்
      அவைகொள வி஡஢ந்த வருட்பெருஞ் ஜோதி
      விண்ணிலை சிவத்தின் வியனிலை யளவி
      அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
      வளிநிலை சத்தியின் வளர்நிலை யளவி
      அளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி ..360
      நெருப்பது நிலைநடு நிலையெலா மளவி
      அருப்பிட வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      நீர்நிலை திரைவளர் நிலைதனை யளவி
      ஆர்வுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      புவிநிலை சுத்தமாம் பொற்பதி யளவி
      அவையுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      மண்ணினிற் றிண்மையை வகுத்ததிற் கிடக்கை
      யண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
      மண்ணினிற் பொன்மை வகுத்ததி லைமையை
      அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி ..370
      மன்ணினி லைம்பூ வகுத்ததி லைந்திறம்
      அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
      மண்ணினி னாற்றம் வகுத்தது பல்வகை
      அண்ணுற பு஡஢ந்த வருட்பெருஞ் ஜோதி
      மண்ணினிற் பற்பல வகைகரு நிலையியல்
      அண்ணுற பு஡஢ந்த வருட்பெருஞ் ஜோதி
      மண்ணினி லைந்தியல் வகுத்ததிற் பல்பயன்
      அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      மண்ணிடை யடிநிலை வகுத்ததிற் பன்னிலை
      யண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி ..380
      மண்ணிலை தைந்து வகையுங் கலந்துகொண்
      டண்ணுற பு஡஢ந்த வருட்பெருஞ் ஜோதி
      மண்ணியற் சத்திகள் மண்செயற்
      அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      மண்ணுரு சத்திகள் மண்கலை
      அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      மண்ணொளி சத்திகள் மண்கரு
      அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      மண்கண சத்திகள் வகைபல பலவும்
      அண்கொள வமைத்த வருட்பெருஞ் ஜோதி ..390
      மண்ணிலை சத்தர்கள் வகைபல பலவும்
      அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
      மண்கரு வுயிர்த்தொகை வகைவி஡஢ பலவா
      அண்கொள வமைத்த வருட்பெருஞ் ஜோதி
      மண்ணினிற் பொருள்பல வகைவி஡஢ வெவ்வே
      றண்ணுற பு஡஢ந்த வருட்பெருஞ் ஜோதி
      மண்ணுறு நிலைபல வகுத்ததிற் செயல்பல
      அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
      மண்ணிடை பக்குவம் வகுத்ததிற் பயன்பல
      அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி ..400
      மண்ணியல் பலபல வகுத்ததிற் பிறவும்
      அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
      நீ஡஢னிற் றண்மையும் நிகழூ ரொழுக்கமும்
      ஆருற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      நீ஡஢னிற் பசுமையை நிறுத்தி யதிற்பல
      வாருற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      நீ஡஢டை பூவியல் நிகழுறு திறவியல்
      ஆர்தர வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      நீ஡஢னிற் சுவைநிலை நிரைத்ததிற் பலவகை
      ஆருற பு஡஢ந்த வருட்பெருஞ் ஜோதி ..410
      நீ஡஢னிற் கருநிலை நிகழ்த்திய பற்பல
      ஆருற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      நீ஡஢டை நான்கிய னிலவுவி ததிற்பல
      ஆர்தர வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      நீ஡஢டை யடிநடு நிலையுற வகுத்தன
      லார்தர பு஡஢ந்த வருட்பெருஞ் ஜோதி
      நீ஡஢டை யொளியியல் நிகழ்பல குணவியல்
      ஆர்தர வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      நீ஡஢டை சத்திகள் நிகழ்வகை பலபல
      ஆர்தர வகுத்த வருட்பெருஞ் ஜோதி ..420
      நீ஡஢னிற் சத்தர்க ணிறைவகை யுறைவகை
      ஆர்தர பு஡஢ந்த வருட்பெருஞ் ஜோதி
      நீ஡஢டை யுயிர்பல நிகழுறு பொருள்பல
      ஆருற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
      நீ஡஢டை நிலைபல நிலையுறு செயல்பல
      ஆர்கொள வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      நீருறு பக்குவ நிறைவுறு பயன்பல
      ஆருற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
      நீ஡஢யல் பலபல நிறைத்ததிற் பிறவும்
      ஆர்தர பு஡஢ந்த வருட்பெருஞ் ஜோதி ..430
      தீயினிற் சூட்டியல் சேர்தர செலவியல்
      ஆயுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      தீயினில் வெண்மை திகழியல் பலவா
      வாயுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      தீயிடை பூவெலா திகழுறு திறமெலாம்
      ஆயுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      தீயிடை யொளியே திகழுற வமைத்ததில்
      ஆய்பல வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      தீயிடை யருநிலை திருநிலை கருநிலை
      ஆயுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி ..440
      தீயிடை மூவியல் செறிவி ததிற்பல
      ஆய்வகை யமைத்த வருட்பெருஞ் ஜோதி
      தீயிடை நடுநிலை திகழ்நடு
      ஆயுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
      தீயிடை பெருந்திறற் சித்திகள் பலபல
      ஆயுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
      தீயிடை சித்துகள் செப்புறு மனைத்தும்
      ஆயுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
      தீயிடை சத்திகள் செறிதரு சத்தர்கள்
      ஆய்பல வகுத்த வருட்பெருஞ் ஜோதி ..450
      தீயிடை யுயிர்பல திகழுறு பொருள்பல
      ஆய்வகை யமைத்த வருட்பெருஞ் ஜோதி
      தீயிடை நிலைபல திகழ்செயல் பலபயன்
      ஆய்பல வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      தீயினிற் பக்குவஞ் சேர்குண மியற்குணம்
      ஆய்பல வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      தீயிடை யுருக்கியல் சிறப்பியல் பொதுவியல்
      ஆயுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      தீயியல் பலபல செறித்ததிற் பலவும்
      ஆயுற பு஡஢ந்த வருட்பெருஞ் ஜோதி ..460
      காற்றிடை யசையியல் கலையிய ஡யி஡஢யல்
      ஆற்றலி னமைத்த வருட்பெருஞ் ஜோதி
      காற்றிடை பூவியல் கருதுறு திறவியல்
      ஆற்றலின் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      காற்றினி ஡றெ஢யல் காட்டுறு பலபல
      ஆற்றிலி னமைத்த வருட்பெருஞ் ஜோதி
      காற்றினிற் பெருநிலை கருநிலை யளவில்
      ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      காற்றிடை யீ஡஢யல் காட்டி யதிற்பல
      ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி .470
      காற்றினி லிடைநடு கடைந்டு வகம்புறம்
      ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      காற்றினிற் குணம்பல கணம்பல வணம்பல
      ஆற்றலி னமைத்த வருட்பெருஞ் ஜோதி
      காற்றிடை சத்திகள் கணக்கில வுலப்பில
      ஆற்றவு மமைத்த வருட்பெருஞ் ஜோதி
      காற்றிடை சத்தர்கள் கணிதங் கடந்தன
      ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      காற்றிடை யுயிர்பல கதிபல கலைபல
      ஆற்றலி னமைத்த வருட்பெருஞ் ஜோதி ..480
      காற்றிடை நானிலை கருவிக ளனைத்தையும்
      ஆற்றுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      காற்றிடை யுணா஢யல் கருதிய லாதிய
      ஆற்றுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      காற்றிடை செயலெலாங் கருதிய பயனெலாம்
      ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      காற்றினிற் பக்குவ கதியெலாம் விளைவி
      தாற்றலின் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      காற்றினிற் காலங் கருதுறு வகையெலாம்
      ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி ..490
      காற்றியல் பலபல கணித்ததிற் பிறவும்
      ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      வெளியிடை பகுதியின் வி஡஢விய லணைவியல்
      அளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
      வெளியிடை பூவெலாம் வியப்புறு திறனெலாம்
      அளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
      வெளியினி லொலிநிறை வியனிலை யனைத்தும்
      அளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
      வெளியிடை கருநிலை வி஡஢நிலை யருநிலை
      அளிகொள வகுத்த வருட்பெருஞ் ஜோதி ..500
      வெளியிடை முடிநிலை விளங்குற வகுத்தே
      அளிபெற விளக்கு மருட்பெருஞ் ஜோதி
      வெளியினிற் சத்திகள் வியப்புற சத்தர்கள்
      அளியுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      வெளியிடை யொன்றே வி஡஢த்ததிற் பற்பல
      அளியுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      வெளியிடை பலவே வி஡஢த்ததிற் பற்பல
      அளிதர வமைத்த வருட்பெருஞ் ஜோதி
      வெளியிடை யுயி஡஢யல் வித்தியல் சித்தியல்
      அளிபெற வமைத்த வருட்பெருஞ் ஜோதி ..510
      வெளியி னனைத்தயும் வி஡஢த்ததிற் பிறவும்
      அளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
      புறநடுவொடு கடை புணர்ப்பி தொருமுதல்
      அறமுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      புறந்தலை நடுவொடு புணர்ப்பி தொருகடை
      அறம்பெற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      அகப்புற நடுக்கடை யணைவாற் புறமுதல்
      அகப்பட வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      அகப்புற நடுமுத லணைவாற் புறக்கடை
      அகப்பட வ்மைத்த வருட்பெருஞ் ஜோதி ..520
      கருதக நடுவொடு கடையணை தகமுதல்
      அருளுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
      தணியக நடுவொடு தலையனை தகக்கடை
      அணியுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      அகநடு புறக்கடை யணைந்தக புறமுதல்
      அகமுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      அகநடு புறத்தலை யணைந்தக புறக்கடை
      அகலிடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      அகநடு வதனா லகப்புற நடுவை
      அகமற வகுத்த வருட்பெருஞ் ஜோதி ..530
      அகப்புற நடுவா லணிபுற நடுவை
      அகப்பட வமைத்த வருட்பெருஞ் ஜோதி
      புறநடு வதனாற் புறப்புற நடுவை
      அறமுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      புகலரு மகண்ட பூரண நடுவால்
      அகநடு வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      புறப்புற கடைமுதற் புணர்ப்பாற் புறப்புற
      அறக்கணம் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      புறத்தியல் கடைமுதற் புணர்ப்பாற் புறத்துறும்
      அறக்கணம் வகுத்த வருட்பெருஞ் ஜோதி ..540
      அகப்புற கடைமுத லணைவா லக்கணம்
      அகத்துற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      அகக்கடை முதற்புணர பதனா லகக்கணம்
      அகத்திடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      வானிடை காற்றும் காற்றிடை நெருப்பும்
      ஆனற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      நெருப்பிடை நீரும் நீ஡஢டை புவியும்
      அருப்பிட வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      நீர்மேல் நெருப்பும் நெருப்பின்மே ஡யிர்ப்பும்
      ஆர்வுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி ..550
      புனன்மேற் புவியும் புவிமேற் புடைப்பும்
      அனன்மேல் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      பகுதிவான் வெளியிற் படர்ந்தமா பூத
      வகல்வெளி வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      உயிர்வெளி யிடையே வுரைக்கரும் பகுதி
      அயவெளி வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      உயிர்வெளி யதனை யுணர்கலை வெளியில்
      அயலற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      கலைவெளி யதனை கலப்பறு சித்த
      அலர்வெளி வகுத்த வருட்பெருஞ் ஜோதி ..560
      சுத்தநல் வெளியை து஡஢சறு பரவெளி
      அத்திடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      பரவெளி யதனை பரம்பர வெளியில்
      அரசுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      பரம்பர வெளியை பராபர வெளியில்
      அரந்தெற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      பராபர வெளியை பகர்பெரு வெளியில்
      அராவற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      பெருவெளி யதனை பெருஞ்சுக வெளியில்
      அருளுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி ..570
      குணமுதற் கருவிகள் கூடிய பகுதியில்
      அணைவுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      மனமுதற் கருவிகள் மன்னுயிர் வெளியிடை
      அனமுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      காலமே முதலிய கருவிகள் கலைவெளி
      ஆ஡ற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      து஡஢சறு கருவிகள் சுத்தநல் வெளியிடை
      அரசுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      இவ்வெளி யெல்லா மிலங்கவண் டங்கள்
      அவ்வயி னமைந்த வருட்பெருஞ் ஜோதி ..580
      ஓங்கிய வண்ட மொளிபெற முச்சுடர்
      ஆங்கிடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      சிருட்டி தலைவரை சிருட்டியண் டங்களை
      அருட்டிறல் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      காவல்செய் தலைவரை காவலண் டங்களை
      ஆவகை யமைத்த வருட்பெருஞ் ஜோதி
      அழித்தல்செய் தலைவரை யவரண் டங்களை
      அழுக்கற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
      மறைத்திடு தலைவரை மற்றுமண் டங்களை
      அறத்தொடு வகுத்த வருட்பெருஞ் ஜோதி ..590
      தெளிவுசெய் தலைவரை திகழுமண் டங்களை
      அளிபெற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      விந்துவாஞ் சத்தியை விந்தினண் டங்களை
      அந்திறல் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      ஓங்கார சத்திக ளுற்றவண் டங்களை
      ஆங்காக வமைத்த வருட்பெருஞ் ஜோதி
      ச தலைவரை சாற்றுமண் டங்களை
      அத்தகை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      நாதமாம் பிரமமும் நாதவண் டங்களும்
      ஆதரம் வகுத்த வருட்பெருஞ் ஜோதி ..600
      பகர்பரா சத்தியை பதியுமண் டங்களை
      அகமற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      பரசிவ பதியை பரசிவாண் டங்களை
      அரசுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
      எண்ணில்பல் சத்தியை யெண்ணிலண் டங்களை
      அண்ணிற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      அளவில்பல் சத்தரை யளவி லண்டங்களை
      அளவற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      உயிர்வகை யண்ட முலப்பில வெண்ணில
      அயர்வற வகுத்த வருட்பெருஞ் ஜோதி ..610
      களவில கடல்வகை கங்கில கரையில
      அளவில வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      கடலவை யனைத்துங் கரையின்றி நிலையுற
      அடலன லமைத்த வருட்பெருஞ் ஜோதி
      கடல்களு மலைகளு கதிகளு நதிகளும்
      அடாற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      கடலிடை பல்வளங் கணித்ததிற் பல்஡யிர்
      அடாற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      மலையிடை பல்வளம் வகுத்ததிற் பல்஡யிர்
      அலைவற வகுத்த வருட்பெருஞ் ஜோதி ..620
      ஒன்றினி லொன்றே யொன்றிடை யாயிரம்
      அன்றற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      பத்திடை யாயிரம் பகரதிற் கோடி
      அத்துற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      நு஦ற்றிடை யிலக்க நுவலதி லனந்தம்
      ஆற்றிடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      கோடியி லனந்த கோடிபல் கோடி
      ஆடுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      வித்திய லொன்றா விளைவியல் பலவா
      அத்தகை யமைத்த வருட்பெருஞ் ஜோதி ..630
      விளைவிய லனைத்தும் வித்திடை யடங்க
      அளவுசெய் தமைத்த வருட்பெருஞ் ஜோதி
      வித்தும் பதமும் விளையுப கா஢ப்பும்
      அத்திற லமைத்த வருட்பெருஞ் ஜோதி
      வித்திடை முளையும் முளையிடை விளைவும்
      அத்தக வமைத்த வருட்பெருஞ் ஜோதி
      வித்தினுள் வித்தும் வித்ததில்
      அத்திறம் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      விளைவினுள் விளைவும் விளைவதில்
      அளையுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி ..640
      முளையதின் முளையும் முளையினுண்
      அளைதர வமைத்த வருட்பெருஞ் ஜோதி
      வித்திடை பதமும் பதத்திடை வித்தும்
      அத்துற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
      பதமதிற் பதமும் பதத்தினு
      அதிர்வற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      ஒற்றுமை வேற்றுமை யு஡஢மைக ளனைத்தும்
      அற்றென வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      பொருணிலை யுறுப்புயல் பொதுவகை முதலிய
      அருளுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி ..650
      உறவினி ஡றவும் உறவினிற் பகையும்
      அறனுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      பகையினிற் பகையும் பகையினி ஡றவும்
      அகைவுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      பாதியு முழுதும் பதிசெயு மந்தமும்
      ஆதியும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      துணையு நிமித்தமு துலங்கதி னதுவும்
      அணைவுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      உருவதி னுருவும் உருவினுள் ளுருவும்
      அருளுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி ..660
      அருவினுள் ளருவும் மருவதி லருவும்
      அருளிய லமைந்த வருட்பெருஞ் ஜோதி
      கரணமு மிடமுங் கலைமுத லணையுமோர்
      அரணிலை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      உருவதி லருவும் மருவதி ஡ருவும்
      அருளுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
      வண்ணமு வடிவு மயங்கிய வகைபல
      அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      சிறுமையிற் சிறுமையும் பெருமையும்
      அறிதர வகுத்த வருட்பெருஞ் ஜோதி ..670
      பெருமையிற் பெருமையும் சிறுமையும்
      அருணிலை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      திண்மையிற் றிண்மையு திண்மை யினேர்மையும்
      அண்மையின் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      மென்மையின் மன்மையும் மென்மையில் வன்மையும்
      அன்மையிற் றமைத்த வருட்பெருஞ் ஜோதி
      அடியினுள் ளடியும் மடியிடை யடியும்
      அடியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
      நடுவினுண் ணடுவும் நடுவதி னடுவும்
      அடர்வுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி ..680
      முடியுனுண் முடியும் முடியினின்
      அடர்தர வமைத்த வருட்பெருஞ் ஜோதி
      அகப்பூ வகவுறு பாக்க வதற்கவை
      அகத்தே வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      புறப்பூ புறத்திற் புனையுரு வாக்கிட
      அறத்துடன் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      அகப்புற பூவக புறவுறு பியற்றிட
      அகத்திடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      புறப்புற பூவதிற் புறப்புற வுறுப்புற
      அறத்திடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி ..690
      பா஡஢டை வேர்வையிற் பையிடை முட்டையில்
      ஆருயி ரமைக்கு மருட்பெருஞ் ஜோதி
      ஊர்வன பறப்பன வுறுவன நடப்பன
      ஆர்வுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      அசைவில வசைவுள வாருயிர திரள்பல
      அசலற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      அறிவொரு வகைமுத லைவகை யறுவகை
      அறிதர வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      வெவ்வே றியலொடு வெவ்வேறு பயனுற
      அவ்வா றமைத்த வருட்பெருஞ் ஜோதி ..700
      சித்திர விசித்திர சிருட்டிகள் பலபல
      அத்தகை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      பெண்ணினுள் ளாணு மாணினு பெண்ணும்
      அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      பெண்ணினுண் மூன்று மாணினுள் ளிரண்டும்
      அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      பெண்ணிடை நான்கு மாணிடை மூன்றும்
      அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
      பெண்ணிய லாணு மாணியற் பெண்ணும்
      அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி ..710
      பெண்டிறல் புறத்து மாண்டிற லகத்தும்
      அண்டுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      பெண்ணியன் மனமு மாணிய லறிவும்
      அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      தனித்தனி வடிவினு தக்கவாண் பெண்ணுயல்
      அனைத்துற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      உனற்கரு முயிருள வுடாள வுலகுள
      வனைத்தையும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
      ஓவுறா வெழுவகை வுயிர்முத லனைத்தும்
      ஆவகை வகுத்த வருட்பெருஞ் ஜோதி ..720
      பைகளின் முட்டையிற் பா஡஢னில் வேர்வினில்
      ஐபெற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
      தாய்கரு பையினு டங்கிய வுயிர்களை
      ஆய்வுற காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
      முட்டைவா பயி஡ முழுவுயிர திரள்களை
      அட்டமே காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
      நிலம்பெறு முயிர்வகை நீள்குழு வனைத்தும்
      அலம்பெற காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
      வேர்வுற வுதித்த மிகுமுயிர திரள்களை
      ஆர்வுற காத்தரு ளருட்பெருஞ் ஜோதி ..730
      உடாறு பிணியா ஡யிருடல் கெடாவகை
      அடாற காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
      சிசுமுதற் பருவ செயல்களி னுயிர்களை
      அசைவற காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
      உயிருறு முடலையு முடாறு முயிரையும்
      அயர்வற காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
      பாடுறு மவத்தைகள் பலவினு முயிர்களை
      ஆடுற காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
      முச்சுட ராதியா லெச்சக வுயிரையும்
      அச்சற காத்தரு ளருட்பெருஞ் ஜோதி ..740
      வான்முகிற் சத்தியான் மழைபொழி வித்துயர்
      ஆனற காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
      இன்புற சத்தியா லெழின்மழை பொழிவி
      தன்புற காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
      எண்ணியற் சத்தியா லெல்லா வுலகினும்
      அண்ணுயிர் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
      அண்ட புறப்புற வமுதம் பொழிந்துயிர்
      அண்டுற காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
      தேவரை யெல்லா திகழ்புற வமுதளி
      தாவகை காத்தரு ளருட்பெருஞ் ஜோதி ..750
      அகப்புற வமுதளி தைவர்ரா திகளை
      அகப்பட காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
      தருமக வமுதாற் சத்திச தர்களை
      அருளினிற் காக்கு மருட்பெருஞ் ஜோதி
      காலமு நியதியுங் காட்டியெவ் வுயிரையும்
      ஆ஡ற காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
      விச்சையை யிச்சயை விளைவி துயிர்களை
      அச்சற காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
      போகமுங் களிப்பும் பொருந்துவி துயிர்களை
      ஆகமு காக்கு மருட்பெருஞ் ஜோதி ..760
      கலையறி வளித்து களிப்பினி ஡யிரெலாம்
      அலைவற காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
      விடய நிகழ்ச்சியான் மிகுமுயி ரனைத்தையும்
      அடைவுற காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
      துன்பளி தாங்கே சுகமளி துயிர்களை
      அன்புற காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
      கரணே தியத்தாற் களிப்புற வுயிர்களை
      அரணேர தளித்தரு ளருட்பெருஞ் ஜோதி
      எத்தகை யெவ்வுயி ரெண்ணின வவ்வுயிர
      கத்தகை யளித்தரு ளருட்பெருஞ் ஜோதி ..770
      எப்படி யெவ்வுயி ரெண்ணின வவ்வுயிர
      கப்படி யளித்தரு ளருட்பெருஞ் ஜோதி
      ஏங்கா துயிர்த்திர ளெங்கெங் கிருந்தன
      ஆங்காங் களித்தரு ளருட்பெருஞ் ஜோதி
      சொல்஡று மசு தொல்஡யிர கவ்வகை
      அல்லலிற் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
      சுத்தமு மசுத்தமு தோயுயிர கிருமையின்
      அத்தகை காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
      வாய்ந்திடுஞ் சுத்த வகையுயிர கொருமையின்
      ஆய்ந்துற காத்தரு ளருட்பெருஞ் ஜோதி ..780
      எவையெலா மெவையெலா மீண்டின வீண்டின
      அவையெலாங் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
      அண்ட து஡஢சையு மகில து஡஢சையும்
      அண்டற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
      பிண்ட து஡஢சையும் பேருயிர
      அண்டற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
      உயிருறு மாயையி னுறுவி஡஢ வனைத்தும்
      அயிரற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
      உயிருறு மிருவினை யுறுவி஡஢ வனைத்தும்
      அயர்வற வடக்கு மருட்பெருஞ் ஜோதி ..790
      கா புடைப்புயிர் கண்டொட ராவகை
      ஆமற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
      பொங்குற வெகுளி புடைப்புக ளெல்லாம்
      அங்கற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
      மதம்புரை மோகமு மற்றவு மாங்காங்
      கதம்பெற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
      வடுவுறு மசுத்த வாதனை யனைத்தையும்
      அடர்பற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
      சுத்தமு மசுத்தமு தோய்ந்தவா தனைகளை
      அத்தகை யடக்கு மருட்பெருஞ் ஜோதி ..800
      நால்வயிற் று஡஢சும் நண்ணுயி ராதியில்
      ஆலற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
      நால்வயிற் படைப்பு காப்பும்
      ஆலற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
      மூவிட திருமையின் முன்னிய தொழிற்கா஢ல்
      ஆவிட தடக்கு மருட்பெருஞ் ஜோதி
      மூவிட மும்மையின் முன்னிய தொழிற்கா஢ல்
      ஆவிட மடக்கு மருட்பெருஞ் ஜோதி
      தத்துவ சேட்டையு தத்துவ து஡஢சும்
      அத்தகை யடக்கு மருட்பெருஞ் ஜோதி ..810
      சுத்தமா நிலையிற் சூழுறு வி஡஢வை
      அத்தகை யடக்கு மருட்பெருஞ் ஜோதி
      கரைவின் மாமாயை கரும்பெரு திரையால்
      அரைசது மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
      பேருறு நீல பெருந்திரை யதனால்
      ஆருயிர் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
      பச்சை திரையாற் பரவெளி யதனை
      அச்சுற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
      செம்மை திரையாற் சித்துறு வெளியை
      அம்மையின் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி ..820
      பொன்மை திரையாற் பொருளுறு வெளியை
      அண்மையின் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
      வெண்மை திரையான் மெய்ப்பதி வெளியை
      அண்மையின் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
      கலப்பு திறையாற் கருதனு பவங்களை
      அலப்புற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
      விடய நிலைகளை வெவ்வேறு திரைகளால்
      அடர்புற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
      தத்துவ நிலைகளை தனித்தனி திரையால்
      அத்திற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி ..830
      திரைமறை பெல்லா தீர்த்தாங் காங்கே
      அரசுற காட்டு மருட்பெருஞ் ஜோதி
      தோற்றமா மாயை தொடர்பறு தருளி
      னாற்றலை காட்டு மருட்பெருஞ் ஜோதி
      சுத்தமா மாயை தொடர்பறு தருளி
      அத்தகை காட்டு மருட்பெருஞ் ஜோதி
      எனைத்தா ணவமுத லெல்லா தவிர்த்தே
      அனுக்கிர கம்பு஡஢ யருட்பெருஞ் ஜோதி
      விடய மறைப்பெலாம் விடுவி துயிர்களை
      அடைவுற தெருட்டு மருட்பெருஞ் ஜோதி ..840
      சொருப மறைப்பெலா தொலைப்பி துயிர்களை
      அருளினிற் றெருட்டு மருட்பெருஞ் ஜோதி
      மறைப்பின் மறந்தன வருவி தாங்கே
      அறத்தொடு தெருட்டு மருட்பெருஞ் ஜோதி
      எவ்வகை யுயிர்களு மின்புற வாங்கே
      அவ்வகை தெருட்டு மருட்பெருஞ் ஜோதி
      கடவுளர் மறைப்பை கடிந்தவர கின்பம்
      அடையுற தெருட்டு மருட்பெருஞ் ஜோதி
      சத்திகண் மறைப்பை தவிர்த்தவர கின்பம்
      அத்துற தெருட்டு மருட்பெருஞ் ஜோதி ..850
      சத்தர்கண் மறைப்பை தவிர்த்தவர கின்பம்
      அத்தகை தெருட்டும் மருட்பெருஞ் ஜோதி
      படைக்கு தலைவர்கள் பற்பல கோடியை
      அடைப்புற படைக்கும் அருட்பெருஞ் ஜோதி
      காக்கு தலைவர்கள் கணக்கில்பல் கோடியை
      ஆக்குற காக்கு மருட்பெருஞ் ஜோதி
      அடக்கு தலைவர்க ளளவிலர் தம்மையும்
      அடர்ப்பற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
      மறைக்கு தலைவர்கள் வகைபல கோடியை
      அறத்தொடு மறைக்கு மருட்பெருஞ் ஜோதி ..860
      தெருட்டு தலைவர்கள் சேர்பல கோடியை
      அருட்டிற தெருட்டு மருட்பெருஞ் ஜோதி
      ஐந்தொழி லாதிசெய் யைவரா திகளை
      ஐந்தொழி லாதிசெ யருட்பெருஞ் ஜோதி
      இறந்தவ ரெல்லா மெழுந்திட வுலகில்
      அறந்தலை யளித்த வருட்பெருஞ் ஜோதி
      செத்தவ ரெல்லாஞ் சி஡஢த்தாங் கெழுதிறல்
      அத்தகை காட்டிய வருட்பெருஞ் ஜோதி
      இறந்தவ ரெழுகவென் றெண்ணியாங் கெழுப்பிட
      அறந்துணை யெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி ..870
      செத்தவ ரெழுகவென செப்பியாங் கெழுப்பிட
      அத்திற லெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
      சித்தெலாம் வல்ல திறலளி தெனக்கே
      அத்தனென் றோங்கு மருட்பெருஞ் ஜோதி
      ஒன்றதி ரண்டது வொன்றினி
      ஒன்றினு ளொன்றது வொன்றெனு மொன்றே
      ஒன்றல ரண்டல வொன்றினி
      ஒன்றினு ளொன்றல வொன்றெனு மொன்றே
      ஒன்றினு லொன்றுள வொன்றினி லொன்றில
      ஒன்றுற வொன்றிய வொன்றெனு மொன்றே ..880
      களங்கநீ துலகங் களிப்புற மெய்நெறி
      விளங்கவென் னுள்ளே விளங்குமெ பொருளே
      மூவிரு நிலையின் முடிநடு முடிமேல்
      ஓவற விளங்கு மொருமைமெ பொருளே
      எழுநிலை மிசையே யின்புரு வாகி
      வழுநிலை நீக்கி வயங்குமெ பொருளே
      நவநிலை மிசையே நடுவுறு நடுவே
      சிவமய மாகி திகழ்ந்தமெ பொருளே
      ஏகா தசநிலை யாததி னடுவே
      ஏகா தனமிசை யிருந்தமெ பொருளே ..890
      திரையோ தசநிலை சிவவெளி நடுவே
      வரையோ தருசுக வாழ்க்கைமெ பொருளே
      இரெண் ணிலையென வியம்புமே னிலையிற்
      பூரண சுகமா பொருந்துமெ பொருளே
      எல்லா நிலைகளு மிசைந்தாங் காங்கே
      எல்லா மாகி யிலங்குமெ பொருளே
      மனாதிகள் பொருந்தா வானடு வானாய்
      அனாதியுண் மையதா யமர்ந்தமெ பொருளே
      தானொரு தானா தானே தானாய்
      ஊனுயிர் விளக்கு மொருதனி பொருளே ..900
      அதுவினு ளதுவா யதுவே யதுவா
      பொதுவினுள் நடிக்கும் பூரண பொருளே
      இயல்பினு ளியல்பா யியல்பே யியல்பா
      உயாற விளங்கு மொருதனி பொருளே
      அருவினு ளருவா யருவரு வருவாய்
      உருவினுள் விள்ங்கு மொருதனி பொருளே
      அலகிலா சித்தா யதுநிலை யதுவாய்
      உலகெலாம் விளங்கு மொருதனி பொருளே
      பொருளினு பொருளா பொருளது பொருளா
      யொருமையின் விளங்கு மொருதனி பொருளே ..910
      ஆடுறு சித்திக ளறுப துநான்கெழு
      கோடியும் விளங குலவுமெ பொருளே
      கூட்டுறு சித்திகள் கோடிபல் கோடியும்
      ஆட்டுற விளங்கு மரும்பெரும் பொருளே
      அறிவுறு சித்திக ளனந்தகோ டிகளும்
      பிறிவற விளக்கும் பெருந்தனி பொருளே
      வீடுக ளெல்லாம் விதிநெறி விளங்க
      ஆடல்செய் தருளு மரும்பெரும் பொருளே
      பற்றுக ளெல்லாம் பதிநெறி விளங்க
      உற்றரு ளாடல்செய் யொருதனி பொருளே ..920
      பரத்தினிற் பரமே பரத்தின்மேற்
      பரத்தினு பரமே பரம்பரம்
      பரம்பெறும் பரமே பரந்தரும்
      பரம்பதம் பரமே பரஞ் சிதம்பரமே
      பரம்புகழ் பரமே பரம்பகர்
      பரஞ்சுக பரமே பரஞ்சிவ
      பரங்கொள் சிற்பரமே பரஞ்செய் தற்பரமே
      தரங்கொள் பொற்பரமே தனிப்பெரும் பரமே
      வரம்பரா பரமே வணம்பரா
      பரம்பரா பரமே பதம்பரா ..930
      சத்திய பதமே சத்துவ
      நித்திய பதமே நிற்குண
      தத்துவ பதமே தற்பத
      சித்துறு பதமே சிற்சுக
      தம்பரம் பதமே தனிச்சுகம்
      அம்பரம் பதமே யருட்பரம்
      தந்திர பதமே சந்திர
      மந்திர பதமே மந்தண
      நவந்தரு பதமே நடந்தரு
      சிவந்தரு பதமே சிவசிவ ..940
      பிரமமெ கதியே பிரமமெ பதியே
      பிரமநிற் குணமே பிரமசிற்
      பிரமமே பிர பெருநிலை மிசையுறும்
      பரமமே பரம பதந்தருஞ் சிவமே
      அவனோ டவளா யதுவா யலவாய்
      நவமா நிலைமிசை நண்ணிய சிவமே
      எம்பொரு ளாகி யெமக்கருள் பு஡஢யுஞ்
      செம்பொரு ளாகிய சிவமே
      ஒருநிலை யிதுவே வுயர்நிலை யெனுமொரு
      திருநிலை மேவிய சிவமே ..950
      மெய்வை தழியா வெறுவெளி நடுவுற
      தெய்வ பதியாஞ் சிவமே
      புரைதவிர தெனக்கே பொன்முடி சூட்டி
      சிரமுற நாட்டிய சிவமே
      கல்வியுஞ் சாகா கல்வியு மழியா
      செல்வமு மளித்த சிவமே
      அருளமு தெனக்கே யளித்தரு ணெறிவா
      தெருளுற வளர்க்குஞ் சிவமே
      சத்தெலா மாகியு தானொரு தானாஞ்
      சித்தெலாம் வல்லதோர் திருவரு சிவமே ..960
      எங்கே கருணை யியற்கையி னுள்ளன
      அங்கே விளங்கிய வருட்பெருஞ் சிவமே
      யாரே யென்னினு மிரங்குகின் றார்க்கு
      சீரே யளிக்கிஞ் சிதம்பர சிவமே
      பொய்ந்நெறி யனைத்தினும் புகுத்தா தெனையரு
      செந்நெறி சொத்திய சிற்சபை சிவமே
      கொல்ல நெறியே குருவரு ணெறியென
      பல்கா லெனக்கு பகர்ந்தமெ சிவமே
      உயிரெலாம் பொதுவி னுளம்பட நோக்குக
      செயிரெலாம் விடுகென செப்பிய சிவமே ..970
      பயிர்ப்புறு கரண பா஢சுகள் பற்பல
      உயிர்த்திர ளொன்றென வுரைத்தமெ சிவமே
      உயிருள்யா மெம்மு ளுயி஡஢வை யுணர்ந்தே
      உயிர்நலம் பரவுகென் றுரைத்தமெ சிவமே
      இயலரு ளொளியோ ரேகதே சத்தினாம்
      உயிரொளி காண்கவென் றுரைத்தமெ சிவமே
      அருளலா தணுவு மசைந்திடா ததனால்
      அருணலம் பரவுகென் றறைந்தமெ சிவமே
      அ஡஢ளுறி னெல்லா மாகுமீ துண்மை
      அருளுற முயல்கவென் றருளிய சிவமே ..980
      அருணெறி யொன்றே தெருணெறி மற்றெலாம்
      இருணெறி யெனவென கியம்பிய சிவமே
      அருள்பெறிற் றுரும்புமோ ரைந்தொழில் பு஡஢யு
      தெருளிது வெனவே செப்பிய சிவமே
      அருளறி வொன்றே யறிவுமற் றெல்லாம்
      மருளறி வென்றே வகுத்தமெ சிவமே
      அருட்சுக மொன்றே யரும்பெறற் பெருஞ்சுகம்
      மருட்சுகம் பிறவென வகுத்தமெ சிவமே
      அருட்பே றதுவே யருபெறற் பெரும்பே
      றிருட்பே றருக்குமென் றியம்பிய சிவமே ..990
      அருட்டனி வல்லப மதுவே யெலாஞ்செய்
      பொருட்டனி சித்தென புகன்றமெ சிவமே
      அருளறி யார்தமை யறியார் எம்மையும்
      பொருளறி யாரென புகன்றமெ சிவமே
      அருணிலை யொன்றே யனைத்தும் பெறுநிலை
      பொருணிலை காண்கென புகன்றமெ சிவமே
      அருள்வடி வதுவே யழியா தனிவடி
      வருள்பெற முயாகென் றருளிய சிவமே
      அருளே நம்மிய லருளே நம்முரு
      அருளே நம்வடி வாமென் றசிவமே .1000
      அருளே நம்மடி யருளே நம்முடி
      அருளே நம்நடு வாமென் றசிவமே
      அருளே நம்மறி வருளே நம்மனம்
      அருளே நங்குண மாமென் றசிவமே
      அருளே நம்பதி யருளே நம்பதம்
      அருளே நம்மிட மாமென் றசிவமே
      அருளே நந்துணை யருளே நந்தொழில்
      அருளே நம்விரு பாமென் றசிவமே
      அருளே நம்பொரு ளருளே நம்மொளி
      அருளே நாமறி வாயென் றசிவமே .1010
      அருளே நங்குல மருளே நம்மினம்
      அருளே நாமறி வாயென் றசிவமே
      அருளே நஞ்சுக மருளே நம்பெயர்
      அருளே நாமறி வாயென் றசிவமே
      அருளொளி யடைந்தனை யருளமு துண்டனை
      அருண்மதி வாழ்கவென் றருளிய சிவமே
      அருணிலை பெற்றனை யருள்வடி வுற்றனை
      அருளர சியற்றுகென் றருளிய சிவமே
      உள்ளக தமர்ந்தென துயி஡஢ற் கலந்தருள்
      வள்ளல்சிற் றம்பலம் வளர்சிவ பதியே .1020
      நிகா஢லா வின்ப நிலைநடு வைத்தெனை
      தகவொடு காக்கு தனிச்சிவ பதியே
      சுத்தசன் மார்க்க சுகநிலை தனிலெனை
      சத்திய னாக்கிய தனிச்சிவ பதியே
      ஐவருங் காண்டற் கரும்பெரும் பொருளென்
      கைவர பு஡஢ந்த கதிசிவ பதியே
      துன்ப தொலைத்தரு ஜோதியால் நிறைந்த
      இன்ப மெனக்கரு ளெழிற்சிவ பதியே
      சித்தமும் வாக்குஞ் செல்லா பெருநிலை
      ஒத்துற வேற்றிய வொருசிவ பதியே .1030
      கையற வனைத்துங் கடிந்தெனை தேற்றி
      வையமேல் வைத்த மாசிவ பதியே
      இன்புற சிறியே னெண்ணுதோ றெண்ணுதோ
      றன்பொடன் கண்ணுறு மருட்சிவ பதியே
      பிழையெலாம் பொறுத்தெனு பிறங்கிய கருணை
      மழையெலாம் பொழிந்து வளர்சிவ பதியே
      உளத்தினுங் கண்ணினு முயி஡஢னு மெனது
      குளத்தினு நிரம்பிய குருசிவ பதியே
      பரமுட னபரம் பகர்நிலை யிவையின
      திரமுற வருளிய திருவரு குருவே .1040
      மதிநிலை யிரவியின் வளர்நிலை யனலின்
      றிதிநிலை யனைத்து தொ஢ந்தசற் குருவே
      கணநிலை யவற்றின் கருநிலை யனைத்துங்
      குணமுற தொ஢த்து குலவுசற் குருவே
      பதிநிலை பசுநிலை பாச நிலையெலாம்
      மதியுற தொ஢த்துள் வயங்குசற் குருவே
      பிரம ரகசியம் பேசியென் னுளத்தே
      தரமுற விளங்குஞ் சாந்தசற் குருவே
      பரம ரகசியம் பகர்ந்தென துளத்தே
      வரமுற வளர்த்து வயங்குசற் குருவே .1050
      சிவரக சியமெலா தொ஢வி தெனக்கே
      நவநிலை காட்டிய ஞானசற் குருவே
      சத்திய லனைத்துஞ் சித்தியன் முழுதும்
      அத்தகை தொ஢த்த வருட்சிவ குருவே
      அறிபவை யெல்லா மறிவித்தென் னுள்ளே
      பிறிவற விளங்கும் பொ஢யசற் குருவே
      கேட்பவை யெல்லாங் கேட்பி தெனுள்ளே
      வேட்கையின் விளங்கும் விமலசற் குருவே
      காண்பவை யெல்லாங் காட்டுவி தெனக்கே
      மாண்பத மளித்து வயங்குசற் குருவே .1060
      செய்பவை யெல்லாஞ் செய்வி தெனக்கே
      உய்பவை யளித்தெனு ளோங்குசற் குருவே
      உண்பவை யெல்லா முண்ணுவி தென்னுள்
      பண்பினில் விளங்கும் பரமசற் குருவே
      சாகா கல்வியின் றரமெலாங் கற்பி
      தேகா கரப்பொரு ளீந்தசற் குருவே
      சத்திய மாஞ்சிவ சித்திக ளனைத்தையும்
      மெய்த்தகை யளித்தெனுள் விளங்குசற் குருவே
      எல்லா நிலைகளு மேற்றி சித்தெலாம்
      வல்லா னெனவெனை வைத்தசற் குருவே .1070
      சீருற வருளா தேசுற வழியா
      பேருற வென்னை பெற்றநற் றாயே
      பொருந்திய வருட்பெரும் போகமே யுறுகென
      பெருந்தய வாலெனை பெற்றநற் றாயே
      ஆன்றசன் மார்க்க மணிபெற வெனைத்தான்
      இன்றமு தளித்த வினியநற் றாயே
      பசித்திடு தோறுமென் பாலணை தருளால்
      வசித்தமு தருள்பு஡஢ வாய்மைந்ற் றாயே
      தளர்ந்தோ றடியேன் சார்பணை தென்னை
      உளந்தெளி வித்த வொருமைநற் றாயே .1080
      அருளமு தேமுத லைவகை யமுதமும்
      தெருளுற வெனக்கருள் செல்வநற் றாயே
      இயலமு தேமுத லெழுவகை யமுதமும்
      உயாற வெனக்கரு ளு஡஢யநற் றாயே
      நண்புறு மெண்வகை நவவகை யமுதமும்
      பண்புற வெனக்கருள் பண்புடை தாயே
      மற்றுள வமுத வகையெலா மெனக்கே
      உற்றுண வளித்தரு ளோங்குநற் றாயே
      கலக்கமு மச்சமுங் கடிந்தென துளத்தே
      அலக்கணு தவிர்த்தரு ளன்புடை தாயே .1090
      துய்ப்பினி லனைத்துஞ் சுகம்பெற வளித்தென
      கெய்ப்பிலா தவிர்த்த வின்புடை தாயே
      சித்திக ளெல்லா தெளிந்திட வெனக்கே
      சத்தியை யளித்த தயவுடை தாயே
      சத்திநி பாத தனையளி தெனைமேல்
      வைத்தமு தளித்த மரபுடை தாயே
      சத்திச தர்களெலாஞ் சார்ந்தென தேவல்செய்
      சித்தியை யளித்த தெய்வநற் றாயே
      தன்னிக ஡஢ல்லா தலைவனை காட்டியே
      என்னைமே லேற்றிய வினியநற் றாயே .1100
      வெளிப்பட விரும்பிய விளைவெலா மெனக்கே
      யளித்தளி தின்புசெய் யன்புடை தாயே
      எண்ணக தொடுபுற தென்னையெஞ் ஞான்றுங்
      கண்ணென காக்குங் கருணைநற் றாயே
      இன்னரு ளமுதளி திறவா திறல்பு஡஢
      தென்னை வளர்த்திடு மின்புடை தாயே
      என்னுட லென்னுயி ரென்னறி வெல்லாம்
      தன்னவென் றாக்கிய தயவுடை தாயே
      தொ஢யா வகையாற் சிறியேன் றளர்ந்திட
      தா஢யா தணைத்த தயவுடை தாயே .1110
      சினமுத லனைத்தையு தீர்த்தெனை நனவினுங்
      கனவினும் பி஡஢யா கருணைநற் றாயே
      து஦க்கமுஞ் சோம்புமென் றுன்பமு மச்சமும்
      ஏக்கமு நீக்கிய வென்றனி தாயே
      துன்பெலா தவிர்த்துளே யன்பெலாம் நிரம்ப
      இன்பெலா மளித்த வென்றனி தந்தையே
      எல்லா நன்மையு மென்றென களித்த
      எல்லாம் வல்லசி தென்றனி தந்தையே
      நாயிற் கடையே னலம்பெற காட்டிய
      தாயிற் பொ஢து தயவுடை தந்தையே .1120
      அறிவிலா பருவ தறிவென களித்தே
      பிறவிலா தமர்ந்த பேரரு டந்தையே
      புன்னிக ஡஢ல்லேன் பொருட்டிவ ணடைந்த
      தன்னிக ஡஢ல்லா தனிப்பெரு தந்தையே
      அகத்தினும் புறத்தினு மமர்ந்தரு ஜோதி
      சகத்தினி லெனக்கே தந்தமெ தந்தையே
      இணையிலா களிப்புற் றிருந்திட வெனக்கே
      துணயடி சென்னியிற் சூட்டிய தந்தையே
      ஆதியீ றறியா வருளர சாட்சியிற்
      ஜோதிமா மகுடஞ் சூட்டிய தந்தையே .1130
      எட்டிரண் டறிவி தெனைத்தனி யேற்றி
      பட்டிமண் டபத்திற் பதித்தமெ தந்தையே
      தங்கோ லளவது தந்தரு ஜோதி
      செங்கோல் சொத்தென செப்பிய தந்தையே
      தன்பொரு ளனைத்தையு தன்னர சாட்சியில்
      என்பொரு ளாக்கிய என்றனி தந்தையே
      தன்வடி வனைத்தையு தன்னர சாட்சியில்
      என்வடி வாக்கிய என்றனி தந்தையே
      தன்சி தனைத்தையு தன்சமு கத்தினில்
      என்சி தாக்கிய என்றனி தந்தையே .1140
      தன்வச மாகிய தத்துவ மனைத்தையும்
      என்வச மாக்கிய வென்னுயிர தந்தையே
      தன்கையிற் பிடித்த தனியரு ஜோதியை
      என்கையிற் கொடுத்த என்றனி தந்தையே
      தன்னையு தன்னரு சத்தியின் வடிவையும்
      என்னையு மொன்றென வியற்றிய தந்தையே
      தன்னிய லென்னியல் தன்செய லென்செயல்
      என்ன வியற்றிய வென்றனி தந்தையே
      தன்னுரு வென்னுரு தன்னுரை யென்னுரை
      என்ன வியற்றிய வென்றனி தந்தையே .1150
      சதுர பேரரு டனிப்பெரு தலைவனென்
      றெதிரற் றோங்கிய வென்னுடை தந்தையே
      மனவா கறியா வரைப்பினி லெனக்கே
      இனவா கருளிய வென்னுயிர தந்தையே
      உணர்ந்துணர துணா஢னு முணரா பெருநிலை
      யணைந்திட வெனக்கே யருளிய தந்தையே
      து஡஢யவாழ் வுடனே சுகபூ ரணமெனும்
      பொ஢யவாழ் வளித்த பெருந்தனி தந்தையே
      இறிலா பதங்கள் யாவையுங் கடந்த
      பேறளி தாண்ட பெருந்தகை தந்தையே .1160
      எவ்வகை திறத்தினு மெய்துதற் கா஢தாம்
      அவ்வகை நிலையென களித்தநற் றந்தையே
      இனிப்பிற வாநெறி யெனக்களி தருளிய
      தனிப்பெரு தலைமை தந்தையே
      பற்றயர தஞ்சிய பா஢வுகண்ட ணைந்தெனை
      சற்றுமஞ் சேலென தாங்கிய துணையே
      தளர்ந்தவ தருணமென் றளர்வெலா தவிர்த்து
      கிளர்ந்திட வெனக்கு கிடைத்தமெ துணையே
      துறையிது வழியிது துணிவிது நீசெயும்
      முறையிது வெனவே மொழிந்தமெ துணையே .1170
      எங்குறு தீமையு மெனைத்தொட ராவகை
      கங்கு஡ம் பகாமெ காவல்செய் துணையே
      வேண்டிய வேண்டுய விருப்பெலா மெனக்கே
      யீண்டிரு தருள்பு஡஢ யென்னுயிர துணையே
      இகத்தினும் பரத்தினு மெனக்கிடர் சாரா
      தகத்தினும் புறத்தினு மமர்ந்தமெ துணையே
      அயர்வற வெனக்கே யருட்டுணை யாகியென்
      னுயி஡஢னுஞ் சிறந்த வொருமையென் னட்பே
      அன்பினிற் கலந்தென தறிவினிற் பயின்றே
      இன்பினி லளைந்தவென் னின்னுயிர் நட்பே .1180
      நான்பு஡஢ வனவெலா தான்பு஡஢ தெனக்கே
      வான்பத மளிக்க வாய்த்தநன் னட்பே
      உள்ளமு முணர்ச்சியு முயிருங் கலந்துகொண்
      டெள்ளுறு நெய்யிலென் னுள்ளுறு நட்பே
      செற்றமு தீமையு தீர்த்துநான் செய்த
      குற்றமுங் குணமா கொண்டவென் னட்பே
      குணங்குறி முதலிய குறித்திடா தெனையே
      அணங்கற கலந்த அன்புடை நட்பே
      பிணக்கும் பேதமும் பேயுல கோர்புகல்
      கணக்கு தீர்த்தெனை கலந்தநன் னட்பே .1190
      சவலைநெஞ் சகத்தின் றளர்ச்சியு மச்சமு
      கவலையு தவிர்த்தெனை கலந்தநன் னட்பே
      களப்பறி தெடுத்து கலக்க தவிர்த்தென
      கிளைப்பறி துதவிய வென்னுயி ருறவே
      தன்னை தழுவுறு தரஞ்சிறி தறியா
      வென்னை தழுவிய வென்னுயி ருறவே
      மனக்குறை நீக்கிநல் வாழ்வளி தென்றும்
      எனக்குற வாகிய என்னுயி ருறவே
      துன்னு மனாதியே சூழ்ந்தெனை பி஡஢யா
      தென்னுற வாகிய வென்னுயி ருறவே .1200
      என்றுமோர் நிலையாய் என்றுமோ ஡஢யலாய்
      என்றுமுள் ளதுவா மென்றனி சத்தே
      அனைத்துல கவைகளு மாங்காங் குணா஢னும்
      இனைத்தென வறியா வென்றனி சத்தே
      பொதுமறை முடிகளும் புகலவை
      இதுவென கா஢தா மென்றனி சத்தே
      ஆகம முடிகளு மவைபுகல் முடிகளும்
      ஏகுதற் கா஢தா மென்றனி சத்தே
      சத்தியஞ் சத்திய மெனவே
      இத்தகை வழுத்து மென்றனி சத்தே .1210
      து஡஢யமுங் கடந்ததோர் பொ஢யவான் பொருளென
      உரைசெய் வேதங்க ளுன்னுமெ சத்தே
      அன்றத னப்பா லதன்பர ததுதான்
      என்றிட நிறைந்த வென்றனி சத்தே
      என்றுமுள் ளதுவாய் எங்குமோர் நிறைவாய்
      என்றும் விளங்கிடு மென்றனி சித்தே
      சத்திகள் பலவா சத்தர்கள் பலவாய்
      இத்தகை விளங்கு மென்றனி சித்தே
      தத்துவம் பலவா தத்துவி பலவாய்
      இத்தகை விளங்கு மென்றனி சித்தே .1220
      படிநிலை பலவாய் பதநிலை
      இடிவற விளங்கிடு மென்றனி சித்தே
      மூர்த்தர்கள் பலவாய் மூர்த்திகள்
      ஏற்பட விளங்கிடு மென்றனி சித்தே
      உயிர்வகை பலவா யுடல்வகை பலவாய்
      இயாற விளக்கிடு மென்றனி சித்தே
      அறிவவை பலவா யறிவன பலவாய்
      எறிவற விளக்கிடு மென்றனி சித்தே
      நினைவவை பலவாய் நினைவன
      இனைவற விளக்கிடு மென்றனி சித்தே .1230
      காட்சிகள் பலவா காண்பன பலவாய்
      ஏட்சியின் விளக்கிடு மென்றனி சித்தே
      செய்வினை பலவா செய்வன
      எய்வற விளக்கிடு மென்றனி சித்தே
      அண்ட சராசர மனைத்தையும் பிறவையும்
      எண்டற விளக்கு மென்றனி சித்தே
      எல்லாம் வல்லசி தெனமறை புகன்றிட
      எல்லாம் விள்க்கிடு மென்றனி சித்தே
      ஒன்றதி லொன்றென் றுரைக்கவும் படாதாய்
      என்றுமோர் படித்தா மென்றனி யின்பே .1240
      இதுவது வென்னா வியாடை யதுவாய்
      எதிரற நிறைந்த வென்றனி யின்பே
      ஆக்குறு மவத்தைக ளனைத்தையுங் கடந்துமேல்
      ஏக்கற நிறைந்த வென்றனி யின்பே
      அறிவு கறிவினி லதுவது வதுவாய்
      எறிவற் றோங்கிய வென்றனி யின்பே
      விடய மெவற்றினு மேன்மேல் விளைந்தவை
      யிடையிடை யோங்கிய வென்றனி யின்பே
      இம்மையு மறுமையு மியம்பிடு மொருமையும்
      எம்மையு நிரம்பிடு மென்றனி யின்பே .1250
      முத்தர்கள் சித்தர்கள் சத்திகள் சத்தர்கள்
      எத்திற தவர்க்குமா மென்றனி யின்பே
      எல்லா நிலைகளி னெல்லா வுயிருறும்
      எல்லா வின்புமா மென்றனி யின்பே
      கரும்புறு சாறுங் கனிந்தமு கனியின்
      விரும்புறு மிரதமு மிக்கதீம் பா஡ம்
      குணங்கொள்கோற் றேனுங் கூட்டியொன் றாக்கி
      மணங்கொள பதஞ்செய் வகையுற வியற்றிய
      உணவென பல்கா ஡ரைக்கினு நிகரா
      வணமிறு மின்ப மயமே யதுவா .1260
      கலந்தறி வுருவா கருதுதற் கா஢தாய்
      நலந்தரு விளக்கமு நவிலரு தண்மையும்
      உள்ளதா யென்று முள்ளதாஅ யென்னுள்
      உள்ளதா யென்ற னுயிருள முடம்புடன்
      எல்லா மினிப்ப வியாறு சுவையளி
      தெல்லாம் வல்லசி தியற்கைய தாகி
      சாகா வரமு தனித்தபே ரறிவும்
      மாகா தலிற்சிவ வல்லப சக்தியும்
      செயற்கரு மனந்த சித்தியு மின்பமும்
      மயக்கற தருந்திறல் வண்மைய தாகி .1270
      பூரண வடிவா பொங்கிமேற் றதும்பி
      ஆரண முடுயுட னாகம முடியுங்
      கடந்தென தறிவாங் கனமேற் சபைநடு
      நடந்திகழ் கின்றமெய்ஞ் ஞானவா ரமுதே
      சத்திய வமுதே தனித்திரு
      நித்திய வமுதே நிறைசிவ
      சச்சிதா னந தனிமுத லமுதே
      மெய்ச்சிதா காச விளைவரு ளமுதே
      ஆனந்த வமுதே யருளொளி யமுதே
      தானந்த மில்லா தத்துவ வமுதே .1280
      நவநிலை தருமோர் நல்லதெள் ளமுதே
      சிவநிலை தனிலே திரண்டவுள் ளமுதே
      பொய்படா கருணை புண்ணிய வமுதே
      கைபடா பெருஞ்சீர கடவுள்வா னமுதே
      அகம்புற மகப்புற மாகிய புறப்புறம்
      உகந்தநான் கிடத்து மோங்கிய வமுதே
      பனிமுத னீக்கிய பரம்பர வமுதே
      தனிமுத லாய சிதம்பர வமுதே
      உலகெலாங் கொள்ளினு முலப்பிலா வமுதே
      அலகிலா பெருந்திற லற்புத வமுதே .1290
      அண்டமு மதன்மே லண்டமு மவற்றுள
      பண்டமுங் காட்டிய பரம்பர மணியே
      பிண்டமு மதி஡று மவற்றுள
      பண்டமுங் காட்டிய பராபர மணியே
      நினைத்தவை நினைத்தாங் கெய்துற
      அனைத்தையு தருமோ ரரும்பெறன் மணியே
      விண்பத மனைத்து மேற்பத முழுவதுங்
      கண்பெற நடத்துங் ககனமா மணியே
      பார்பத மனைத்தும் பகரடி முழுவதுஞ்
      சார்புற நடத்துஞ் சரவொளி மணியே .1300
      அண்டகோ டிகளெலா மரைக்கண தேகி
      கண்டுகொண் டிடவொளிர் கலைநிறை மணியே
      சராசர வுயிர்தொறுஞ் சாற்றிய பொருடொறும்
      விராவியுள் விளங்கும் வித்தக மணியே
      மூவரு முனிவரு முத்தருஞ் சித்தரு
      தேவரு மதிக்குஞ் சித்திசெய் மணியே
      தாழ்வெலா தவிர்த்து சகமிசை யழியா
      வாழ்வென களித்த வளரொளி மணியே
      நவமணி முதலிய நலமெலா தருமொரு
      சிவமணி யெனுமரு செல்வமா மணியே .1310
      வான்பெறற் கா஢ய வகையெலாம் விரைந்து
      நான்பெற வளித்த நாத திரமே
      கற்பம் பலபல கழியினு மழியா
      பொற்புற வளித்த புனித திரமே
      அகாரமு முகரமு மழியா சிகரமும்
      வகரமு மாகிய வாய்மை திரமே
      ஐந்தென வெட்டென வாறென நான்கென
      முந்துறு மறைமுறை மொழியு திரமே
      வேதமு மாகம வி஡஢வுக ளனைத்தும்
      ஓதநின் றுலவா தோங்கு திரமே .1320
      உடற்பிணி யனைத்தையு முயிர்ப்பிணி
      மடர்ப்பற தவிர்த்த வருட்சிவ மருந்தே
      சித்திக்கு மூலமாஞ் சிவமரு தெனவுள
      தித்திக்கு ஞான திருவருண் மருந்தே
      இறந்தவ ரெல்லா மெழுந்திட பு஡஢யுஞ்
      சிறந்தவல் லபமுறு திருவருண் மருந்தே
      மரண பெரும்பிணி வாரா வகைமிகு
      கரண பெருந்திறல் காட்டிய மருந்தே
      நரைதிரை மூப்பவை நண்ணா வகைதரும்
      உரைதரு பெருஞ்சீ ருடையநன் மருந்தே .1330
      என்றே யென்னினு மிளமையோ டிருக்க
      நன்றே தருமொரு ஞானமா மருந்தே
      மலப்பிணி தவிர்த்தருள் வலந்தரு கின்றதோர்
      நலத்தகை யதுவென நாட்டிய மருந்தே
      சிற்சபை நடுவே திருநடம் பு஡஢யும்
      அற்புத மருந்தெனு மானந்த மருந்தே
      இடையுற படாத வியற்கை விளக்கமா
      தடையொன்று மில்லா தகவுடை யதுவாய்
      மாற்றிவை யென்ன மதித்தள பா஢தாய்
      ஊற்றமும் வண்ணமு மொருங்குடை யதுவா .1340
      காட்சி கினியநற் கலையுடை யதுவாய்
      ஆட்சி கு஡஢யபன் மாட்சியு முடைத்தாய்
      கைதவிர் கனவினுங் காண்டற கா஢தா
      செய்தவ பயனா திருவருள் வலத்தால்
      உளம்பெறு மிடமெலா முதவுக வெனவே
      வளம்பட வாய்த்து மன்னிய பொன்னே
      புடம்படா தரமும் விடம்படா திறமும்
      வடம்படா நலமும் வாய்த்தசெம் பொன்னே
      மும்மையு தருமொரு செம்மையை யுடைத்தாய்
      இம்மையே கிடைத்திங் கிலங்கிய பொன்னே .1350
      எடுத்தெடு துதவினு மென்றுங் குறையா
      தடுத்தடு தோங்குமெய் யருளுடை பொன்னே
      தளர்ந்திடே லெடுக்கின் வளர்ந்திடு வேமென
      கிளர்ந்திட வுரைத்து கிடைத்தசெம் பொன்னே
      எண்ணிய தோறு மியற்றுக வென்றெனை
      யண்ணியென் கரத்தி லமர்ந்தபைம் பொன்னே
      நீகேண் மறக்கினு நின்னையாம் விட்டு
      போகே மெனவெனை பொருந்திய பொன்னே
      எண்ணிய வெண்ணியாங் கெய்திட வெனக்கு
      பண்ணிய தவத்தாற் பழுத்தசெம் பொன்னே .1360
      விண்ணியற் தலைவரும் வியந்திட வெனக்கு
      புண்ணி பயனாற் பூத்தசெம் பொன்னே
      நால்வகை நெறியினு நாட்டுக வெனவே
      பால்வகை முழுதும் பணித்தபைம் பொன்னே
      எழுவகை நெறியினு மியற்றுக வெனவே
      முழுவகை காட்டி முயங்கிய பொன்னே
      எண்ணிய படியெலா மியற்றுக வென்றனை
      புண்ணிய பலத்தாற் பொருந்திய பொன்னே
      ஊழிதோ றுழெ஢ யுலப்புறா தோங்கி
      வாழியென் றெனக்கு வாய்த்தநன் னிதியே .1370
      இதமுற வூழிதோ றெடுத்தெடு துலகோர
      குதவினு முலவா தோங்குநன் னிதியே
      இருநிதி யெழுநிதி யியனவ நிதிமுதற்
      றிருநிதி யெல்லா தருமொரு நிதியே
      எவ்வகை நிதிகளு மிந்தமா நிதியிடை
      அவ்வகை கிடைக்குமென் றருளிய நிதியே
      அற்புதம் விளங்கு மருட்பெரு நிதியே
      கற்பனை கடந்த கருணைமா நிதியே
      நற்குண நிதியே சற்குண
      நிற்குண நிதியே சிற்குண .1380
      பளகிலா தோங்கும் பளிக்குமா மலையே
      வளமெலா நிறைந்த மாணிக்க மலையே
      மதியுற விளங்கு மரகத மலையே
      வதிதரு பேரொளி வச்சிர மலையே
      உரைமனங் கடந்தாங் கோங்குபொன் மலையே
      து஡஢யமேல் வெளியிற் ஜோதிமா மலையே
      புற்புத திரைநுரை புரைமுத லிலதோர்
      அற்புத கடலே யமுதத்தண்
      இருட்கலை தவிர்த்தொளி யெல்லாம் வழங்கிய
      அருட்பெருங் கடலே யானந்த .1390
      பவக்கடல் கடந்துநான் பார்த்தபோ தருகே
      உவப்புறு வளங்கொண் டோ ங்கிய கரையே
      என்றுயர சோடைக ளெல்லா தவிர்த்துள
      நண்றுற விளங்கிய நந்தன காவே
      சேற்றுநீ ஡஢ன்றிநற் றீஞ்சுவை தருமோர்
      ஊற்றுநீர் நிரம்ப வுடையபூ தடமே
      கோடைவாய் வி஡஢ந்த குளிர்தரு நிழலே
      மேடைவாய் வீசிய மெல்லிய காற்றே
      களப்பற கிடைத்த கருணைநன் னீரே
      இளைப்புற வாய்த்த வின்சுவை யுணவே .1400
      தென்னைவா கிடைத்த செவ்விள நீரே
      தென்னைவான் பலத்திற் றிருகுதீம் பாலே
      நீர்நசை தவிர்க்கு நெல்லியங் கனியே
      வேர்விளை பலவின் மென்சுவை சுளையே
      கட்டுமாம் பழமே கதலிவான்
      இட்டநற் சுவைசெய் யிலந்தையங் கனியே
      புனிதவான் றருவிற் புதுமையாம் பலமே
      கனியெலாங் கூட்டி கலந்ததீஞ் சுவையே
      இதந்தரு கரும்பி லெடுத்ததீஞ் சாறே
      பத்ந்தரு வெல்ல பாகினின் சுவையே .1410
      சாலவே யினிக்குஞ் சர்க்கரை திரளே
      ஏலவே நாவு கினியகற் கண்டே
      உலப்புறா தினிக்கு முயர்மலை தேனே
      கலப்புறா மதுரங் கனிந்தகோற் றேனே
      நவையிலா தெனக்கு நண்ணிய நறவே
      சிவையெலா திரட்டிய துயெதீம் பதமே
      பதம்பெற காய்ச்சிய பசுநறும் பாலே
      இதம்பெற வுருக்கிய விளம்பசு நெய்யே
      உலர்ந்திடா தென்று மொருபடி தாகி
      மலர்ந்துநல் வண்ணம் வயங்கிய மலரே .1420
      இகந்தரு புவிமுத லெவ்வுல குயிர்களும்
      உகந்திட மணக்குஞ் சுகந்தநன் மணமே
      யாழுறு மிசையே யினியவின் னிசையே
      ஏழுறு மிசையே யியலரு ளிசையே
      திவளொளி பருவஞ் சேர்ந்தநல் லவளே
      அவளொடுங் கூடி யடைந்ததோர் சுகமே
      நாதநல் வரைப்பி னண்ணிய பாட்டே
      வேதகீ தத்தில் விளைதிரு பாட்டே
      நன்மார்க்கர் நாவி னவிற்றிய பாட்டே
      சன்மார்க்க சங்க தழுவிய பாட்டே .1430
      நம்புறு மாகம நவிற்றிய பாட்டே
      எம்பல மாகிய வம்பல பாட்டே
      என்மன கண்ணே என்னரு
      என்னிரு கண்ணே யென்கணுண் மணியே
      என்பெருங் களிப்பே யென்பெரும் பொருளே
      என்பெரு திறலே யென்பெருஞ் செயலே
      என்பெரு தவமே என்றவ பலனே
      என்பெருஞ் சுகமே யென்பெரும் பேறே
      என்பெரு வாழ்வே யென்றன்வாழ் முதலே
      என்பெரு வழக்கே யென்பெருங் கணக்கே .1440
      என்பெரு நலமே யென்பெருங் குலமே
      என்பெரு வலமே யென்பெரும் புலமே
      என்பெரு வரமே யென்பெரு தரமே
      என்பெரு நெறியே யென்பெரு நிலையே
      என்பருங் குணமே என்பெருங் கருத்தே
      என்பெரு தயவே யென்பெருங்கதியே
      என்பெரும் பதியே யென்னுயி ஡஢யலே
      என்பெரு நிறைவே யென்றனி யறிவே
      தோலெலாங் குழைந்திட சூழ்நரம் பனைத்தும்
      மேலெலாங் கட்டவை விட்டுவி டியங்கிட .1450
      என்பெலா நெக்குநெ கியலிடை நெகிழ்ந்திட
      மென்புடை த்சையெலா மெய்யுற தளர்ந்திட
      இரத்து மனைத்துமுள் ளிறுகிட சுக்கிலம்
      உரத்திடை பந்தி தொரு திரளாயிட
      மடலெலா மூளை மலர்ந்திட வமுதம்
      உடலெலா மூற்றெடு தோடி நிரம்பிட
      ஒண்ணுதல் வியர்த்திட வொளிமுக மலர்ந்திட
      தண்ணிய வுயிர்ப்பினிற் சாந்த ததும்பிட
      உண்ணகை தோற்றிட வுரோமம் பொடித்திட
      கண்ணினீர் பெருகி கால்வழி தோடிட .1460
      வாய்துடி தலறிட வளர்செவி துணைகளிற்
      கூயிசை பொறியெலாங் கும்மென கொட்டிட
      மெய்யெலாங் குளிர்ந்திட மென்மார் பசைந்திட
      கையெலாங் குவிந்திட காலெலாஞ் சுலவிட
      மனங்கனி துருகிட மதிநிறை தொளிர்ந்திட
      இனம்பெறு சித்த மியைந்து களித்திட
      அகங்கார மாங்காங் கதிபா஢ பமைந்திட
      சகங்காண வுள்ள தழைத்து மலர்ந்திட
      அறிவுறு வனைத்து மானந்த மாயிட
      பொறியுறு மான்மதற் போதமும் போயிட .1470
      தத்துவ மனைத்து தாமொருங் கொழிந்திட
      சத்துவா மொன்றே தனித்துநின் றோங்கிட
      உலகெலாம் விடய முளவெலா மறைந்திட
      அலகிலா வருளி னாசைமேற் பொங்கிட
      என்னுள தெழுந்துயி ரெல்லா மலர்ந்திட
      என்னுள தோங்கிய என்றனி யன்பே
      பொன்னடி கண்டரு புத்தமு துணவே
      என்னுள தெழுந்த வென்னுடை யன்பே
      தன்னையே யெனக்கு தந்தெரு ளொளியால்
      என்னைவே தித்த என்றனி யன்பே .1480
      என்னுளே யரும்பி யென்னுளே மலர்ந்து
      என்னுளே வி஡஢ந்த என்னுடை யன்பே
      என்னுளே விளங்கி யென்னுளே பழுத்து
      என்னுளே கனிந்த வென்னுடை யன்பே
      தன்னுளே நிறைவுறு தரமெலா மளித்தே
      என்னுளே நிறைந்த என்றனி யன்பே
      துன்புள வனைத்து தொலைத்தென துருவை
      யின்புரு வாக்கிய என்னுடை யன்பே
      பொன்னுடம் பெனக்கு பொருந்திடும் பொருட்டா
      என்னுளங் கலந்த என்றனி யன்பே .1490
      தன்வச மாகி ததும்பிமேற் பொங்கி
      என்வசங் கடந்த என்னுடை யன்பே
      தன்னுளே பொங்கிய தண்ணமு துணவே
      என்னுளே பொங்கிய என்றனி யன்பே
      அருளொளி விளங்கிட வாணவ மெனுமோர்
      இருளற வென்னுள தேற்றிய விளக்கே
      துன்புறு தத்துவ து஡஢செலா நீக்கிநல்
      லின்புற வென்னுள தேற்றிய விளக்கே
      மயலற வழியா வாழ்வுமேன் மோம்
      இயாற வென்னுள தேற்றிய விளக்கே .1500
      இடுவெளி யனைத்து மியலொளி விளங்கிட
      நடுவெளி நடுவே நாட்டிய விளக்கே
      கருவெளி யனைத்துங் கதிரொளி விளங்கிட
      உருவெளி நடுவே யொளிர்தரு விளக்கே
      தேற்றிய வே திருமுடி விளங்கிட
      ஏற்றிய ஞான வியளொளி விளக்கே
      ஆகம முடிமே லருளொளி விளங்கிட
      வேகம தறவே விளங்கொளி விளக்கே
      ஆ஡஢யர் வழுத்திய வருணிலை யனாதி
      கா஡஢யம் விளக்குமோர் காரண விளக்கே .1510
      தண்ணிய வமுதே தந்தென துளத்தே
      புண்ணியம் பலித்த பூரண மதியே
      உய்தர வமுத முதவியென் னுளத்தே
      செய்தவம் பலித்த திருவளர் மதியே
      பதியெலா தழைக்க பதம்பெறு மமுத
      நிதியெலா மளித்த நிறைதரு மதியே
      பாலென தண்கதிர் பரப்பியெஞ் ஞான்று
      மேல்வெளி விளங்க விளங்கிய மதியே
      உயங்கிய உள்ளமு முயிரு தழைத்திட
      வயங்கிய கருணை மழைபொழி மழையே .1520
      என்னையும் பணிகொண் டென்னுளே நிரம்ப
      மன்னிய கருணை மழைபொழி மழையே
      உளங்கொளு மெனக்கே யுவகைமேற் பொங்கி
      வளங்கொள கருணை மழைபொழி மழையே
      நலந்தர வுடாயிர் நல்லறி வெனக்கே
      மலர்ந்திட கருணை மழைபொழி மழையே
      து஦ய்மையா லெனது து஡஢செலா நீக்கிநல்
      வாய்மையாற் கருணை மழைபொழி மழையே
      வெம்மல விரவது விடிதரு ணந்தனிற்
      செம்மையி ஡தித்துள திகழ்ந்தசெஞ் சுடரே .1530
      திரையெலா தவிர்த்து செவ்வியுற் றாங்கே
      வரையெலாம் விளங்க வயங்குசெஞ் சுடரே
      அலகிலா தலவர்க ளரசுசெய் தத்துவ
      உலகெலாம் விளங்க வோங்குசெஞ் சுடரே
      முன்னுறு மலவிருள் முழுவது நீக்கியே
      என்னுள வரைமே லெழுந்தசெஞ் சுடரே
      ஆதியு நடுவுட னந்தமுங் கடந்த
      ஜோதியா யென்னுளஞ் சூழ்ந்தமெ சுடரே
      உள்ளொளி யோங்கிட வுயிரொளி விளங்கிட
      வெள்ளொளி காட்டிய மெய்யரு கனலே .1540
      நலங்கொள பு஡஢ந்திடு ஞானயா கத்திடை
      வலஞ்சுழி தெழுந்து வளர்ந்தமெ கனலே
      வேதமு மாகமு வி஡஢வும் பரம்பர
      நாதமுங் கடந்த ஞானமெ கனலே
      எண்ணிய வெண்ணிய வெல்லா தரவெனுள்
      நண்ணிய புண்ணிய ஞானமெ கனலே
      வலமுறு சுத்தசன் மார்க்க நிலைபெறு
      நலமெலா மளித்த ஞானமெ கனலே
      இரவொடு பகலிலா வியல்பொது நடுமிடு
      பரமவே தாந்த பரம்பரஞ் சுடரே .1550
      வரநிறை பொதுவிடை வளர்திரு நடம்பு஡஢
      பரமசி தாந்த பதிபரஞ் சுடரே
      சமரச சத்தி சபையி னடம்பு஡஢
      சமரச சத்தி தற்சுயஞ் சுடரே
      சபையென துளமென தனமர தெனக்கே
      அபய மளித்ததோ ரருட்பெருஞ் ஜோதி
      மருளெலா தவிர்த்து வரமெலாங் கொடுத்தே
      அருளமு தருத்திய வருட்பெருஞ் ஜோதி
      வாழிநின் பேரருள் பெருஞ்சீர்
      ஆழியொன் றளித்த வருட்பெருஞ் ஜோதி .1560
      என்னையும் பொருளென வெண்ணியென் னுளத்தே
      அன்னையு மப்பனு மாகிவீற் றிருந்து
      உலகியல் சிறிது முளம்பிடி யாவகை
      அலகில்பே ரருளா லறிவது விளக்கி
      சிறுநெறி செல்லா திறனளி தழியா
      துறுநெறி யுணர்ச்சித தொளியுற பு஡஢ந்து
      சாகா கல்வியின் றரமெலா முணர்த்தி
      சாகா வரத்தையு தந்துமேன் மோம்
      அன்பையும் விளைவி தருட்பே ரொளியால்
      இன்பையு நிறைவி தென்னையு நின்னையும் .1570
      ஓருரு வாக்கியா னுன்னிய படியெலாஞ்
      சீருற செய்துயிர திறம்பெற வழியா
      அருளமு தளித்தனை யருணிலை யேற்றினை
      அருளறி வளித்தனை யருட்பெருஞ் ஜோதி
      வெல்கநின் பேரருள் பொ஢ஞ்சீர்
      அல்கலின் றோங்கிய வருட்பெருஞ் ஜோதி
      உலகுயிர திரளெலா மொளிநெறி பெற்றிட
      இலகுமை தொழிலையும் யான்செ தந்தனை
      போற்றிநின் பேரருள் பெருஞ்சீர்
      ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி .1580
      மூவரு தேவரு முத்தருஞ் சித்தரும்
      யாவரும் பெற்றிடா வியலென களித்தனை
      போற்றிநின் பேரருள் பெருஞ்சீர்
      ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி
      சித்திக ளனைத்தையு தெளிவி தெனக்கே
      சத்திய நிலைதனை தயவினிற் றந்தனை
      போற்றிநின் பேரருள் பெருஞ்சீர்
      ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி
      உலகினி ஡யிர்களு குறுமிடை யூறெலாம்
      விலகநீ யடைந்து விலக்குக மகிழ்க .1590
      சுத்தசன் மார்க்க சுகநிலை பெறுக
      உத்தம னாகுக வோங்குக வென்றனை
      போற்றிநின் பேரருள் பெருஞ்சீர்
      ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி
      அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ்
      அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் .1596
      திருச்சிற்றம்பலம்
      வள்ளலார் அருளிய
      திருவொற்றியூர் வடிவுடை மாணிக்க மாலை
      கட்டளை களித்துறை
      காப்பு
      சீர்கொண்ட வொற்றி பதியுடை யானிடஞ் சேர்ந்தமணி
      வார்கொண்ட கொங்கை வடிவாம் பிகைதன் மலரடிக்கு
      தார்கொண்ட செந்தமிழ பாமாலை சா தமியனுக்கே
      ஏர்கொண்ட நல்லரு ளீயுங் குணாலய வேரம்பனே.
      நூல்
      கடலமு தேசெங்கரும்பெ அருட்கற் பசுக்கனியே
      உடலுயி ரேயுயிர குள்ளுணர் வேயுணர் வுள்ளெளியே
      அடல்விடை யாரொற்றி யாரிடங் கொண்ட அருமருந்தே
      மடலவிழ் ஞானமலரே வடிவுடை மாணிக்கமே. 1
      அணியே அணிபெறும் ஒற்றி தியாகர்தம் அன்புறுசற்
      குணியேஎம் வாழ்க்கை குலதெய்வ மேமலை கோன்தவமே
      பணியேன் பிழைபொறு தாட்கொண்ட தெய்வ பதிகொள்சிந்தா
      மணியேயென் கண்ணுண் மணியே வடிவுடை மாணிக்கமே. 2
      மானேர் விழிமலை மானேஎம் மானிடம் வாழ்மயிலே
      கானேர் அளக பசுங்குயி லேஅரு கட்கரும்பே
      தேனே திருவொற்றி மாநகர் வாழும் சிவசத்தியே
      வானே கருணை வடிவே வடிவுடை மாணிக்கமே. 3
      பொருளே அடியர் புகலிட மேஒற்றி பூரணன்தண்
      அருளேஎம் ஆருயிர காந்துணை யேவிண்ணவர் புகழும்
      தெருளேமெய்ஞ் ஞான தெளிவே மறைமுடி செம்பொருளே
      மருளேத நீக்கும் ஒளியே வடிவுடை மாணிக்கமே. 4
      திருமாலும் நான்முக தேவுமுன் னாள்மிக தேடிமன
      தருமா லுழக்க அனலுரு வாகி அமர்ந்தருளும்
      பெருமான்எம் மான்ஒற்றி பெம்மான்கைம்
      மருமான் இடங்கொள்பெண் மானே வடிவுடை மாணிக்கமே. 5
      உன்னேர் அருள்தெய்வம் காணேன் மனத்தும் உரைக்கப்படா
      பொன்னேஅ பொன்னற் புதஒளி யேமலர பொன்வணங்கும்
      அன்னேஎம் ஆருயிர கோர்உயி ரேஒற்றி யம்பதிவாழ்
      மன்னே ரிடம்வளர் மின்னே வடிவுடை மாணிக்கமே. 6
      கண்ணேஅ கண்ணின் மணியே மணியில் கலந்தொளிசெய்
      விண்ணே வியன்ஒற்றி யூர்அண்ணல் வாமத்தில் வீற்றிருக்கும்
      பெண்ணே மலைபெறும் பெண்மணி யேதெய்வ பெண்ணமுதே
      மண்நேயம் நீத்தவர் வாழ்வே வடிவுடை மாணிக்கமே. 7
      மலையான் தவஞ்செய்து பெற்றமத்தேஒற்றி வாழ்கனக
      சிலையோன் மணக்க மணக்குந்தெய் வீக திருமலரே
      அலையான் மலிகடல் பள்ளிகொண்டான்தொழும் ஆரமுதே
      வலையான் அருமை மகளே வடிவுடை மாணிக்கமே. 8
      காமம் படர்நெஞ் சுடையோர் கனவினும் காணப்படா
      சேமம் படர்செல்வ பொன்னே மதுர செழுங்கனியே
      தாமம் படர்ஒற்றி யூர்வாழ் பவள தனிமலையின்
      வாமம் படர்பைங் கொடியே வடிவுடை மாணிக்கமே. 9
      கோடா அருட்குண குன்றே சிவத்தில் குறிப்பிலரை
      நாடாத ஆனந்த நட்பேமெய் யன்பர் நயக்கும் இன்பே
      பீடார் திருவொற்றி பெம்மான் இடஞ்செய் பெருந்தவமே
      வாடா மணிமலர கொம்பே வடிவுடை மாணிக்கமே. 10
      நாலே எனுமறை அந்தங்கள் இன்னமும் நாடியெனை
      போலே வருந்த வெளிஒளி யாய்ஒற்றி புண்ணியர்தம்
      பாலே இருந்த நினைத்தங்கை யாக பகரப்பெற்ற
      மாலே தவத்தில் பெரியோன் வடிவுடை மாணிக்கமே. 11
      கங்கைகொண் டோ ன்ஒற்றி யூரண்ணல் வாமம் கலந்தருள்செய்
      நங்கைஎல்லா உல குந்தந்த நின்னைஅ நாரணற்கு
      தங்கைஎன் கோஅன்றி தாயர்என் கோசொல் தழைக்குமலை
      மங்கையங் கோமள மானே வடிவுடை மாணிக்கமே. 12
      சேலையி டார்வயல் ஊரொற்றி வைத்துத்தன் தொண்டர்பின்
      வேலையி டால்செயும் பித்தனை மெய்யிடை மேவுகரி
      தோலையி டாடும் தொழிலுடை யோனை துணிந்துமுன்னாள்
      மாலையி டாய்இஃதென்னே வடிவுடை மாணிக்கமே. 13
      தனையாள் பவரின்றி நிற்கும் பரமன் தனிஅருளாய்
      வினையாள் உயிர்மல நீக்கிமெய் வீட்டின் விடுத்திடுநீ
      எனையாள் அருளொற்றி யூர்வா ழவன்றன் னிடத்துமொரு
      மனையாள் எனநின்ற தென்னே வடிவுடை மாணிக்கமே. 14
      பின்னீன்ற பிள்ளையின் மேலார்வம் தாய்க்கென பேசுவர்நீ
      முன்னீன்ற பிள்ளையின் மேலாசை யுள்ளவர் மொய்யசுரர்
      கொன்னீன்ற போர்க்கிளம் பிள்ளையை ஏவ கொடுத்ததென்னே
      மன்னீன்ற ஒற்றி மயிலே வடிவுடை மாணிக்கமே. 15
      பையாளும் அல்குல் சுரர்மட வார்கள் பலருளும்இ
      செய்யாளும் வெண்ணிற மெய்யாளும் எத்தவம் செய்தனரோ
      கையாளும் நின்னடி குற்றேவல் செ கடைக்கணித்தாய்
      மையாளும் கண்ணொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே. 16
      இலையாற்று நீமலர காலால் பணிக்குங்குற் றேவலெலாம்
      தலையால் செயும்பெண்கள் பல்லோரில் பூமகள் தன்னை தள்ளாய்
      நிலையால் பெரியநின் தொண்டர்தம் பக்க நிலாமையினான்
      மலையாற் கருளொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே. 17
      கலைம களேநின்பணியைஅன் போடும் கடைப்பிடித்தாள்
      அலைமகளே அன் பொடிபிடி தாள்எற் கறைகண்டாய்
      தலைமகளே அரு டாயேசெவ் வாய்க்கரு தாழ்குழற்பொன்
      மலைமகளே ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே. 18
      பொன்னோடு வாணிஎன் போரிரு வோரும் பொருணற் கல்வி
      தன்னோ டருளு திறநின்குற் றேவலை தாங்கிநின்ற
      பின்னோ அலததன் முன்னோ தெளிந்திட பேசுகநீ
      மன்னோ டெழிலொற்றி யூர்வாழ் வடிவுடை மாணிக்கமே. 19
      கா டலர்திரு வொற்றிநின் னாயகன் கந்தைகற்றி
      யே டரையொடு நிற்பது கண்டும் இரங்கலர்போல்
      நீமட்டு மேப டுடுக்கின் றனைஉன்றன் நேயம்என்னோ
      மா டலர்குழல் மானே வடிவுடை மாணிக்கமே. 20
      வீற்றார்நின் றன்மண தம்மியின் மேல்சிறு மெல்லனிச்சம்
      ஆற்றாநின் சிற்றடி போதினை தூக்கிவை தாரெனின்மால்
      ஏற்றார் திருவொற்றி யுரார் களக்கறு பேற்றவரே
      மாற்றா இயல்கொண்மயிலே வடிவுடை மாணிக்கமே. 21
      பொருப்புறு நீலியென் பார்நின்னை மெய்அது போலும்ஒற்றி
      விருப்புறு நாயகன் பாம்பா பரணமும் வெண்தலையும்
      நெருப்புறு கையும் கனல்மேனி யுங்கண்டு நெஞ்சம் அஞ்சாய்
      மருப்புறு கொங்கை மயிலே வடிவுடை மாணிக்கமே. 22
      அனம்பொறு தான்புகழ் ஒற்றிநின் நாயகன் அங்குமிழி
      தனம்பொறு தாள்ஒரு மாற்றாளை தன்முடி தன்னில்வைத்தே
      தினம்பொறு தான்அது கண்டும் சினமின்றி சேர்ந்தநின்போல்
      மனம்பொறு தார்எவர் கண்டாய் வடிவுடை மாணிக்கமே. 23
      ஓருரு வாய்ஒற்றி யூர்அமர்ந்தார் நின் னுடையயவர்பெண்
      சீருரு வாகுநின் மாற்றாளை நீதெளி யாத்திறத்தில்
      நீருரு வாக்கி சுமந்தார் அதனை நினைந்திலையே
      வாருரு வார்கொங்கை நங்காய் வடிவுடை மாணிக்கமே. 24
      சார்ந்தேநின் பால்ஒற்றி யூர்வாழும் நாயகர் தாமகிழ்வு
      கூர்ந்தே குலாவும்அ கொள்கையை காணில் கொதிப்பளென்று
      தேர்ந்தேஅ கங்கையை செஞ்சடைமேல்சிறை செய்தனர்ஒண்
      வார்ந்தே குழைகொள் விழியாய் வடிவுடை மாணிக்கமே. 25
      நீயே எனது பிழைகுறி பாயெனில் நின்னடிமை
      பேயேன் செயும்வண்ணம் எவ்வண்ண மோஎன பெற்றளிக்கும்
      தாயே கருணை தடங்கட லேஒற்றி சார்முத
      வாயேர் சவுந்தர மானே வடிவுடை மாணிக்கமே. 26
      முப்போதும் அன்பர்கள் வாழ்த்தொற்றி யூர்எம் முதல்வர்மகிழ்
      ஒப்போ தருமலை பெண்ணமு தேஎன்று வந்துநினை
      எப்போதும் சிந்தி திடர்நீங்கி வாழ எனக்கருள்வாய்
      மைப்போ தனையகண் மானே வடிவுடை மாணிக்கமே. 27
      மீதல தோர்களுள் யார்வணங் காதவர் மேவுநடு
      பூதல தோர்களுள் யார்புக ழாதவர் போற்றிநிதம்
      பாதல தோர்களுள் யார்பணி யாதவர் பற்றிநின்றாள்
      மாதல தோங்கொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே. 28
      சேய்க்குற்றம் தாய்பொறு தேடா வருகென செப்புவள்இ
      நாய்க்குற்றம் நீபொறு தாளுதல் வேண்டும் நவின்மதியின்
      தேய்க்குற்றம் மாற்றும் திருவொற்றி நாதர்த தேவிஅன்பர்
      வாய்க்குற்றம் நீக்கும் மயிலே வடிவுடை மாணிக்கமே. 29
      செங்கம லாசனன் தேவிபொன் நாணும் திருமுதலோர்
      சங்கம தாமிடற் றோங்குபொன் நாணும் தலைகுனித்து
      துங்கமு றாதுஉளம் நாண திருவொற்றி தோன்றல்புனை
      மங்கல நாணுடை யாளே வடிவுடை மாணிக்கமே. 30
      சேடா ரியன்மணம் வீ செயன்மணம் சேர்ந்துபொங்க
      ஏடார் பொழிலொற்றி யூரண்ணல் நெஞ்சம் இருந்துவக்க
      வீடா இருளும் முகிலும்பின் னிட்டு வெருவவைத்த
      வாடா மலர்க்குழ லாளே வடிவுடை மாணிக்கமே. 31
      புரநோக்கி னால்பொடி தேக்கிய ஒற்றி புனிதர்கள
      கரநோக்கி நல்லமு தாக்கிநிற் போற்றுங் கருத்தினரா
      தரநோக்கி உள்ளிருள் நீக்கிமெய்ஞ் ஞான தனிச்சுகந்தான்
      வரநோக்கி ஆள்விழி மானே வடிவுடை மாணிக்கமே. 32
      உன்னும் திருவொற்றி யூருடை யார்நெஞ் சுவப்பஎழில்
      துன்னும் உயிர்ப்பயிர் எல்லா தழைக்க சுகக்கருணை
      என்னும் திருவமு தோயாமல் ஊற்றி எமதுளத்தின்
      மன்னும் கடைக்கண் மயிலே வடிவுடை மாணிக்கமே. 33
      வெள்ளம் குளிரும் சடைமுடி யோன்ஒற்றி வித்தகன்தன்
      உள்ளம் குளிரமெய் பூரிப்ப ஆனந்தம் ஊற்றெடுப்ப
      தெள்ளம் குளிர்இன் அமுதே அளிக்கும்செவ்வாய்க்குமுத
      வள்ளம் குளிர்முத்த மானே வடிவுடை மாணிக்கமே. 34
      மாநந்த மார்வயல் காழி கவுணியர் மாமணிக்கன்று
      ஆநந்த இன்னமு தூற்றும் திருமுலை ஆரணங்கே
      காநந்த வோங்கும் எழுவொற்றி யார்உ களித்தியலும்
      வான தருமிடை மானே வடிவுடை மாணிக்கமே. 35
      வான்தேட நான்கு மறைதேட மாலுடன் வாரிசமே
      வான்தேட மற்றை அருந்தவர் தேடஎன் அன்பின்மையால்
      யான்தேட என்னுளம் சேர்ஒற்றி யூர்எம் இருநிதியே
      மான்தேடும் வாட்கண் மயிலே வடிவுடை மாணிக்கமே. 36
      முத்தேவர் விண்ணன் முதல்தேவர் சித்தர் முனிவர்மற்றை
      எத்தே வருநின் அடிநினை வார்நினை கின்றிலர்தாம்
      செத்தே பிறக்கும் சிறியர்அன் றோஒற்றி தேவர்நற்றா
      மத்தேவர் வாம மயிலே வடிவுடை மாணிக்கமே. 37
      திருநாள் நினைத்தொழும் நன்னாள் தொ஡ழமல் செலுத்தியநாள்
      கருநாள் எனமழை எல்லாம் புகலும் கருத்தறிந்தே
      ஒருநா ளினுநின் றனைமற வார்அன்பர் ஒற்றியில்வாழ்
      மருநாண் மலர்க்குழல் மானே வடிவுடை மாணிக்கமே. 38
      வாணான் அடைவர் வறுமை யுறார்நன் மலமைக்கள்பொன்
      பூணாள் இடம்புகழ் போதம் பெறுவர்பின் புன்மைஒன்றும்
      காணார்நின் நாமம் கருதுநின் றோர்ஒற்றி கண்ணுதல்பால்
      மாணார்வம் உற்ற மயிலே வடிவுடை மாணிக்கமே. 39
      சீரறி வாய்த்திரு வொற்றி பரம சிவத்தைநினை
      போரறி வாய்அவ் அறிவாம் வெளிக்க புறத்துநின்றாய்
      யாரறி வார்நின்னைநாயேன் அறிவ தழகுடைத்தே
      வாரெறி பூண்முலை மானே வடிவுடை மாணிக்கமே. 40
      போற்றிடு வோர்தம் பிழையா யிரமும் பொறுத்தருள்செய்
      வீற்றொளிர் ஞான விளக்கே மரகத மென்கரும்பே
      ஏற்றொளிர் ஒற்றி யிடத்தார் இடத்தில் இலங்குமுயர்
      மாற்றொளி ரும்பகம் பொன்னே வடிவுடை மாணிக்கமே. 41
      ஆசைஉள் ளார்அயன் மால் ஆதி தேவர்கள் யாரும்நின்தாள்
      பூசையுள் ளார்எனில் எங்கே உலகர்செய் பூசைகொள்வார்
      தேசையுள் ளார்ஒற்றி யூருடை யார்இடஞ் சேர்மயிலே
      மாசையுள் ளார் புகழ் மானே வடிவுடை மாணிக்கமே. 42
      அண்டாரை வென்றுல காண்டுமெய்ஞ் ஞானம் அடைந்துவிண்ணில்
      பண்டாரை சூழ்மதி போலிரு போர்கள்நின் பத்தர்பாதம்
      கண்டாரை கண்டவர் அன்றோ திருவொற்றி கண்ணுதல்சேர்
      வண்டாரை வேலன்ன மானே வடிவுடை மாணிக்கமே. 43
      அடியார் தொழுநின் அடிப்பொடி தான்சற் றணியப்பெற்ற
      முடியால் அடிக்கு பெருமைபெற் றார்அம் முகுந்தன்சந்த
      கடியார் மலர்அயன் முன்னோர்தென் ஒற்றி கடவு செம்பால்
      வடியா கருணை கடலே வடிவுடை மாணிக்கமே. 44
      ஓவா தயன்முதலோர்முடி கோடி உறழந்துபடில்
      ஆவா அனிச்சம் பொறாமலர சிற்றடி ஆற்றக்கொலோ
      காவாய் இமயப்பொற் பாவாய் அருளொற்றி காமர்வல்லி
      வாவா எனும்அன்பர் வாழ்வே வடிவுடை மாணிக்கமே. 45
      இட்டார் மறைக்கும் உபநிட தத்திற்கும் இன்னுஞ்சற்றம்
      எட்டாநின் பொன்னடி போதெளி யேன்தலை கெட்டுங்கொலோ
      கட்டார் சடைமுடி ஒற்றிஎம் மான்நெஞ்ச சுத்தமர்ந்த
      மட்டார் குழன்மட மானே வடிவுடை மாணிக்கமே. 46
      வெளியாய் வெளிக்குள் வெறுவெளி யாய்ச்சிவ மேநிறைந்த
      ஒளியாய் ஒளிக்குள் ஒளியாம் பரைநினை ஒப்பவரார்
      எளியார கெளியர் திருவொற்றி யார்மெய் இனிதுபரி
      மளியார்நின் றோங்கு மருவே வடிவுடை மாணிக்கமே. 47
      விணங்காத லன்பர்தம் அன்பிற்கும் நின்புல விக்கும்அன்றி
      வணங்கா மதிமுடி எங்கள் பிரான்ஒற்றி வாணனும்நின்
      குணங்காதலித்துமெ கூறுதந்தான் என கூறுவர்உன்
      மணங்கா தலித்த தறியார் வடிவுடை மாணிக்கமே. 48
      பன்னும்பல் வேறண்டாம் எல்லாம்அவ் அண்ட பரப்பினின்று
      துன்னும் சராசரம் யாவையும் ஈன்றது சூழ்ந்தும் உன்னை
      இன்னும் இளந்தை அழியாத கன்னிகை என்பதென்னே
      மன்னும் சுகாநந்த வாழ்வே வடிவுடை மாணிக்கமே. 49
      சினங்கட தோர்உள்ள செந்தா மரையில் செழித்துமற்றை
      மனங்கட தோதும்அவ் வாக்கும் கடந்த மறைஅன்னமே
      தினங்கட தோர்புகழ் ஒற்றிஎம் மானிடம் சேரமுதே
      வனங்கட தோன்புகழ் மானே வடிவுடை மாணிக்கமே. 50
      வல்லாரும் வல்லவர் அல்லாரும் மற்றை மனிதர்முதல்
      எல்லாரும் நின்செயல் அல்லா தணுவும் இயக்கிலரேல்
      இல்லாமை யால்உழல் புல்லேன்செய் குற்றங்கள் ஏதுகண்டாய்
      மல்லார் வயல்ஒற்றி நல்லாய் வடிவுடை மாணிக்கமே. 51
      எழுதா எழில்உயிர சித்திர மேஇன் இசைப்பயனே
      தொழுதாடும் அன்பர்தம் உட்களி பேசிற் சுகக்கடலே
      செழுவார் மலர்ப்பொழில் ஒற்றிஎம் மான்தம் திருந்துணையே
      வழுவா மறையின் பொருளே வடிவுடை மாணிக்கமே. 52
      தெருட்பா லுறும்ஐங்கை செல்வர்க்கும் நல்லிளஞ் சேய்க்குமகிழ்ந்து
      அருட்பால் அளிக்கும் தனத்தனமேஎம் அகங்கலந்த
      இருட்பால் அகற்றும் இருஞ்சுடரேஒற்றி எந்தைஉள்ளம்
      மருட்பால் பயிலு மயிலே வடிவுடை மாணிக்கமே. 53
      அயிலேந்தும் பிள்ளைநற்றாயே திருவொற்றி ஐயர்மலர
      கயிலே தரும்பெறல் முத்தே இசையில் கனிந்தகுரல்
      குயிலே குயின்மென் குழற்பிடியே மலை கோன்பயந்த
      மயிலே மதிமுக மானே வடிவுடை மாணிக்கமே. 54
      செய்யகம் ஓங்கும் திருவொற்றியூரில் சிவபெருமான்
      மெய்யகம் ஓங்குநல் அன்பேநின்பால்அன்பு மேவுகின்றோர்
      கையகம் ஓங்கும் கனியே தனிமெ கதிநெறியே
      வையகம் ஓங்கு மருந்தே வடிவுடை மாணிக்கமே. 55
      தரும்பேர் அருளொற்றி யூருடையான்இடஞ் சார்ந்தபசுங்
      கரும்பே இனியகற் கண்டே மதுர கனிநறவே
      இரும்பேய் மனத்தினர் பால்இசை யாத இளங்கிளியே
      வரும்பேர் ஒளிச்செஞ் சுடரே வடிவுடை மாணிக்கமே. 56
      சேலேர் விழியருள் தேனே அடியருள் தித்திக்கும்செம்
      பாலே மதுரச்செம் பாகேசொல் வேத பனுவல்முடி
      மேலே விளங்கும் விளக்கே அருளொற்றி வித்தகனார்
      மாலே கொளும்எழில் மானே வடிவுடை மாணிக்கமே. 57
      எம்பால் அருள்வைத்தெழி லொற்றி யூர் கொண்டிருக்கும் இறை
      செம்பால் கலந்தபை தேனே கதலி செழுங்கனியே
      வெம்பாலை நெஞ்சருள் மேவா மலர்ப்பத மென்கொடியே
      வம்பால் அணிமுல்லை மானே வடிவுடை மாணிக்கமே. 58
      ஏமமு பேர்எ கென்றே இளைக்கில் எடுக்கவைத்த
      சேமவை பேஅன்பர் தேடுமெய்ஞ் ஞான திரவியமே
      காமமைக்கார் மலர கூந்தல் பிடிமென் தனிநடையாய்
      வாமநற் சீர்ஒற்றி மானே வடிவுடை மாணிக்கமே. 59
      மன்னேர் மலையன் மனையும் நற்காஞ்சன மாலையும் நீ
      அன்னே எனத்திரு வாயால் அழைக்கப்பெற்றார் அவர்தாம்
      முன்னே அருந்தவம் என்னே முயன்றனர் முன்னும் ஒற்றி
      வன்னேர் இளமுலை மின்னே வடிவுடை மாணிக்கமே. 60
      கணமொன்றி லேனும்என் உள்ள கவலைக்கடல்கடந்தே
      குணமொன்றி லேன்எது செய்கின்றேன் நின் உள்ள குறிப்பறியேன்
      பணமொன்று பாம்பணி ஒற்றிஎம்மானிட பாலில்தெய்வ
      மணமொன்று பச்சைக்கொடியே வடிவுடை மாணிக்கமே. 61
      கருவே தனையற என்னெஞ் சகத்தில் களிப்பொடொற்றி
      குருவே எனும்நின் கணவனும் நீயும் குலவும் அந்த
      திருவே அருள்செ முதற்பணி செய்யத்தந்த
      மருவே மருவு மலலே வடிவுடை மாணிக்கமே. 62
      எண்ணிய எண்ணங்கள் எல்லாம் பலிக்க எனக்குனருள்
      பண்ணிய உள்ளங்கொள் உள்ளும் புறம்பும் பரிமளிக்கும்
      புண்ணிய மல்லிகை போதே எழில்ஒற்றி பூரணர்பால்
      மண்ணிய பச்சை மணியே வடிவுடை மாணிக்கமே. 63
      தீதுசெய் தாலும்நின் அன்பர்கள் தம்முன் செருக்கிநின்று
      வாதுசெய் தாலும்நின் தாள்மறந்தாலும் மதியிலியேன்
      ஏதுசெய் தாலும் பொறுத்தருள் வாய்ஒற்றி யின்னிடைப்பூ
      மாதுசெய் தாழ்குழல் மானே வடிவுடை மாணிக்கமே. 64
      மருந்தினின் நான்ஒற்றி யூர்வாழும் நின்றன் மகிழ்நன்முன்னும்
      திருந்திநின் றார்புகழ் நின்முன்னும் நல்லருள் தேன்விழைந்தே
      விருந்தினின் றேன்சற்றும் உள்ளிரங் காத விதத்தைக்கண்டு
      வருந்திநின் றேன்இது நன்றோ வடிவுடை மாணிக்கமே. 65
      என்போல் குணத்தில் இழிந்தவர் இல்லைஎ போதும்எங்கும்
      நின்போல் அருளில் சிறந்தவர் இல்லைஇ நீர்மையினால்
      பொன்போலும் நின்னருள் அன்னே எனக்கும் புரிதிகண்டாய்
      மன்போல் உயர்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே. 66
      துன்பே மிகும்இவ் அடியேன் மனத்தில்நின் துய்யஅருள்
      இன்பே மிகுவதெ நாளோ எழிலொற்றி எந்தைஉயிர
      கன்பேமெ தொண்டர் அறிவே சிவநெறி கன்பிலர்பால்
      வன்பேமெ போத வடிவே வடிவுடை மாணிக்கமே. 67
      சற்றே யெனினும் நெஞ்ச துயரம் தவிரவும்நின்
      பொற்றே மலர்ப்பாதம் போற்றவும் உள்ளம் புரிதிகண்டாய்
      சொற்றேர் அறிஞர் புகழ்ஒற்றி மேவும் துணைவர்தஞ்செம்
      மற்றேர் புயத்தணை மானே வடிவுடை மாணிக்கமே. 68
      சந்தோட மாப்பிறர் எல்லாம் இருக்கவும் சஞ்சலத்தால்
      அந்தோ ஒருதமி யேன்மட்டும் வாடல் அருட்கழகோ
      நந்தோட நீக்கிய நங்காய் எனத்திரு நான்முகன்மால்
      வந்தோதும் ஒற்றி மயிலே வடிவுடை மாணிக்கமே. 69
      அடியேன் மிசைஎன் பிழையிரு தாலும் அவைபொறுத்து
      செடியேதம் நீக்கிநற் சீரருள் வாய்திகழ் தெய்வமறை
      கொடியே மரகத கொம்பே எழில்ஒற்றி கோமளமே
      வடியேர் அயில்விழி மானே வடிவுடை மாணிக்கமே. 70
      கண்ணப்பன் ஏத்துநற் காளத்தி யார்மங் கலங்கொள்ஒற்றி
      நண்ணப்பர் வேண்டும் நலமே பரானந்த நன்னறவே
      எண்ண பசும்பொன் வடிவே வடிவுடை மாணிக்கமே. 71
      கற்பே விகற்பம் கடியும்ஒன்றே எங்கள் கன்நிறைந்த
      பொற்பேமெ தொண்டர்தம் புண்ணியமே அரு போத இன்பெ
      சொற்பேர் அறிவு சுகப்பொரு ளேமெ சுயஞ்சுடரே
      மற்பேர் பெறும்ஒற்றி மானே வடிவுடை மாணிக்கமே. 72
      மிகவே துயர்க்கடல் வீழ்ந்தேனே நீகை விடுதலருள்
      தகவே எனக்குநற் றாயே அகில சராசரமும்
      சுகவேநஇ முழ்க திருவொற்றி யூரிட துன்னி பெற்ற
      மகவே எனப்புர கின்றோய் வடிவுடை மாணிக்கமே. 73
      வேதங்க ளாய்ஒற்றி மேவும் சிவத்தின் விளைவருளா
      பூதங்க ளா பொறி யாய்ப்புல னாகி புகல்கரண
      பேதங்க ளாய்உயிர் ஆகிய நின்னைஇ பேதைஎன்வாய்
      வாதங்க ளால்அறி வேனோ வடிவுடை மாணிக்கமே. 74
      மதியே மதிமுக மானே அடியர் மனத்துவைத்த
      நிதியே கருணை நிறைவே சுகாநந்த நீள்நிலையே
      கதியே கதிவழி காட்டுங்கண் ணேஒற்றி காவலர்பால்
      வதியேர் இளமட மானே வடிவுடை மாணிக்கமே. 75
      ஆறா துயர தழுந்துகின்றேனைஇங் கஞ்சல்என்றே
      கூறா குறைஎன்குறையே இனிநின் குறிப்பறியேன்
      தேறா சிறியர கரிதாம் திருவொற்றி தேவர்மகிழ்
      மாறா கருணை மழையே வடிவுடை மாணிக்கமே. 76
      எற்றே நிலைஒன்றும் இல்லா துயங்கும் எனக்கருள
      சற்றேநின் உள்ளம் திரும்பிலை யான்செ தக்கதென்னே
      சொற்றேன் நிறைமறை கொம்பேமெய்ஞ் ஞான சுடர்க்கொழுந்தே
      மற்றேர் அணியொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே. 77
      செவ்வேலை வென்றகண் மின்னே நின்சித்தம் திரும்பியென
      கெவ்வேலை செய்யேன் றிடினும் அவ்வேலை இயற்றுவல்காண்
      தெவ்வேலை வற்றச்செய் அவ்வேளை யீன்றொற்றி தேவர்நெஞ்சை
      வவ்வேல வார்குழல் மானே வடிவுடை மாணிக்கமே. 78
      தாயே மிகவும் தயவுடை யாள்என சாற்றுவர்இ
      சேயேன் படுந்துயர் நீக்கஎன்னேஉளம் செய்திலையே
      நாயேன் பிழைஇனி நாடாது நல்லருள் நல்கவரு
      வாயேஎம் ஒற்றி மயிலே வடிவுடை மாணிக்கமே. 80
      கல்லாரிடத்தில்என் இல்லாமை சொல்லி கலங்கிஇடர்
      நல்லாண்மை உண்டருள் வல்லாண்மை உண்டெனின் நல்குவையே
      வல்லார் எவர்கட்கும் திருவொற்றி வாணரொடு
      மல்லார் பொழில்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே. 81
      சுந்தர வாண்முக தோகாய் மறைகள் சொலுபைங்கிள்ளாய்
      சுந்தர வார்குழற் பூவாய் கருணை கடைக்கண்நங்காய்
      அந்தர நேரிடை பாவாய் அருள்ஒற்றி அண்ணல்மகிழ்
      மந்தர நேர்கொங்கை மங்கை வடிவுடை மாணிக்கமே. 82
      பத்தர்தம் உள்ள திருக்கோயில் மேவும் பரம்பரையே
      சுத்தமெய்ஞ் ஞானவொளிப்பிழம் பேசிற் சுகாநந்தமே
      நித்தநின் சீர்சொல எற்கருள் வாய்ஒற்றி நின்மலர்உன்
      மத்தர்தம் வாம மயிலே வடிவுடை மாணிக்கமே. 83
      பூவாய் மலர்க்குழல் பூவாய்மெய் அன்பர் புனைந்ததமிழ
      பாவாய் நிறைந்தபொற் பாவாய்செ தேனிற் பகர்மொழியாய்
      காவாய் எனஅயன்காவாய் பவனும் கருதுமலர்
      மாவாய் எழில்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே. 84
      தாதா உணவுடை எனப்புல்லர் தம்மிடைப்போய்
      மாதாகம் உற்றவர் வன்நெஞ்சில் நின்அடி வைகுங்கொலோ
      காதார் நெடுங்க கரும்பேநல் ஒற்றி கருத்தர்நட
      வாதா ரிடம்வளர் மாதே வடிவுடை மாணிக்கமே. 85
      களந்திரும் பாஇ கடையேனை ஆளக்கருணைகொண்டுன்
      உளத்திரும் பாமை கென் செய்கேன் துயர்க்கட லூடலைந்தேன்
      குளத்திரும் பாவிழி கோமா னொடுந்தொண்டர் கூட்டமுற
      வளந்திரும் பாவொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே. 86
      ஆரணம் பூத்த அருட்கோ மளக்கொடி அந்தரிபூ
      தோரணம் பூத்த எழில்ஒற்றி யுர்மகிழ் சுந்தரிசற்
      காரணம் பூத்த சிவைப்பார பதிநங் கெளரிஎன்னும்
      வாரணம் பூத்த தனத்தாய் வடிவுடை மாணிக்கமே. 87
      திருவல்லி ஏத்தும் அபிடேக வல்லிஎஞ் சென்னியிடை
      வருவல்லி கற்பக வல்லிஒண் பச்சை மணிவல்லிஎங்
      கருவல்லி நீக்குங் கருணாம் பகவல்லி கண்கொள்ஒற்றி
      மருவல்லி யென்று மறைதேர் வடிவுடை மாணிக்கமே. 88
      உடையென்ன ஒண்புலி தோல்உடை யார்கண்டுவக்குமிள
      நடையென்ன மேமலர பொன்முத லாம்பெண்கள் நாயகமே
      படையென்ன நீள்விழி மின்னேர் இடை பொற் பசுங்கிளியே
      மடைமன்னு நீரொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே. 89
      கற்பதும் கேட்பதும் எல்லாம்நின் அற்புத கஞ்சமலர
      பொற்பதங் காணும் பொருட்டென எண்ணுவர் புண்ணியரே
      சொற்பத மாய் அவை கப்புற மாய்நின்ற தூ சுடரே
      மற்பதம் சேரொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே. 90
      நின்னால் எனக்குள எல்லா நலனும் நினைஅடைந்த
      என்னால் உனக்குள தென்னைகண் டாய்எமை ஈன்றவளே
      முன்நால் வருக்கருள் ஒற்றிஎம் மான்கண் முழுமணியே
      மன்னால் மறையின் முடிவே வடிவுடை மாணிக்கமே. 91
      நன்றே சிவநெறி நாடுமெ தொண்டர்க்கு நன்மைசெய்து
      நின்றேநின் சேவடி குற்றேவல் செய்ய நினைத்தனன்ஈது
      என்றே முடிகுவ தின்றே முடியில் இனிதுகண்டாய்
      மன்றேர் எழில்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே. 92
      அத்தனை ஒற்றி கிறைவனை அம்பல தாடுகின்ற
      முத்தனை சேர்ந்தஒண் முத்தே மதிய முகவமுதே
      இத்தனை என்றள வேலாத குற்றம் இழைத்திடும்இம்
      மத்தனை ஆளல் வழக்கோ வடிவுடை மாணிக்கமே. 93
      கூறாத வாழ்க்கை சிறுமையை நோக்கி குறித்திடும்என்
      தேறாத விண்ணப்பம் சற்றேனும் நின்றன் திருச்செவியில்
      ஏறாத வண்ணம்என் ஒற்றி தியாகர் இடப்புறத்தின்
      மாறா தமர்ந்த மயிலே வடிவுடை மாணிக்கமே. 94
      ஓயா இடர்கொண் டுலைவேனு கன்பர குதவுதல் போல்
      ஈயா விடினும்ஓர் எள்ளள வேனும் இரங்குகண்டாய்
      சாயா அருள்தரும் தாயே எழில்ஒற்றி தற்பரையே
      மாயா நலம்அருள் வாழ்வே வடிவுடை மாணிக்கமே. 95
      பெரும்பேதை யேன்சிறு வாழ்க்கை துயர்எனும் பேரலையிற்
      துரும்பே எனஅலை கின்றேன் புணைநின் துணைப்பதமே
      கரும்பே கருணை கடலே அருண்மு கனிநறவே
      அரும்பேர் அருள்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே. 96
      காதரவால்உ கலங்கிநின் றேன்நின் கடைக்கண்அருள்
      ஆதர வால்மகிழ் கின்றேன் இனிஉன் அடைக்கலமே
      சீதரன் ஏத்தும் திருவொற்றி நாதர்தம் தேவிஎழில்
      மாதரசே ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே. 97
      பொன்னுடை யார் அன்றி போற்றுநற் கல்வி பொருளுடையார்
      என்னுடை யார்எனஏசுகின் றார்இஃ தென்னை அன்னே
      மின்னுடையாய் மின்னில் துன்னிடை யாய்ஒற்றி மேவுமுக்கண்
      மன்னுடை யாய்என் னுடையாய் வடிவுடை மாணிக்கமே. 98
      பொய்விட்டி டாதவன் நெஞ்சக தேனை புலம்பும்வண்ணம்
      கைவிட்டி டாதின்னும் காப்பாய் அதுநின் கடன்கரும்பே
      மெய்விட்டி டாருள் விளைஇன்ப மேஒற்றி வித்தகமே
      மைவிட்டி டாவிழி மானே வடிவுடை மாணிக்கமே. 99
      நேயானு கூல மனமுடை யாய்இனி நீயும்என்றன்
      தாயாகில் யான்உன் தனையனும் ஆகில் என் தன்உளத்தில்
      ஓயா துறந்துயர் எல்லாம் தவிர்த்தருள் ஒற்றியில்செவ்
      வாயார் அமுத வடிவே வடிவுடை மாணிக்கமே. 100
      வாழிநின் சேவடி போற்றிநின் பூம்பத வாரிசங்கள்
      வாழிநின் தாண்மலர் போற்றிநின் தண்ணளி வாழிநின்சீர்
      வாழிஎன் உள்ளத்தில் நீயநின் ஒற்றி மகிழ்நரும்நீ
      வாழிஎன் ஆருயிர் வாழ்வே வடிவுடை மாணிக்கமே. 101
      திருச்சிற்றம்பலம்