கந்தர் அனுபூதி
      அருணகிரி நாதர் அருளியது
      காப்பு
      நெஞ்ச கனகல்லு நெகிழ துருக
      தஞ்ச தருள்சண் முகனு கியல்சேர்
      செஞ்சொற் புனைமாலை சிற திடவே
      பஞ்ச கரவானை பதம் பணிவாம்.
      நூல்
      ஆடும் பணிவே லணிசே வலென
      பாடும் பணிவே பணியா யருள்வாய்
      தேடுங் கயமா முகனை செருவிற்
      காடு தனியா னைசகோ தரனே. 1
      உல்லாச நிராகுல யோக வித
      சல்லாப விநோதனு நீயலையோ
      எல்லாமற என்னை யிழந்த நலஞ்
      சொல்லாய் முருகா கரபூ பதியே. 2
      வானோ புனல்பார் கனல்மா ருதமோ
      ஞானோ தயமோ நவில்நான் மறையோ
      யானோ மனமோ எனையாண் டவிட
      தானோ பொருளா வதுசண்முகனே. 3
      வளைபட்டகைம் மாதொடு மக்க ளெனு
      தளைப டழி தகுமோ
      கிளைப டெழுகு ருரமுங் கிரியு
      தொளைப டுருவ தொடுவே லவனே. 4
      மகமாயை களைந்திட வல்ல பிரான்
      முகமாறு மொழிந்து மொழி திலனே
      அகமாடை மடந்தைய ரென் றயருஞ்
      சகமாயையுள் நின்று தயங் குவதே. 5
      திணியா னமனோ சிலைமீ துனதாள்
      அணியா ரரவிந்த மரும்பு மதோ
      பணியா வென வள்ளி பதம் பணியு
      தணியா வதிமோத தயா பரனே. 6
      கெடுவாய் மனனை கதிகேள் கரவா
      திடுவாய் வடிவே லிறைதாள் நினைவாய்
      சுடுவாய் நெடுவே தனைதூள் படவே
      விடுவாய் வினையா வையுமே. 7
      அமரும் பதிதே ளகமா மெனுமி
      பிமரங் கெட்மெ பொருள் பேசியவா
      குமரன் கிரிராச குமாரி மகன்
      சமரம் பொரு தானவ நாசகனே. 8
      மட்டூர்குழல் மங்கையர் மையல் வலை
      பட்டூசல் படும் பரிசென் றொழிவேன்
      தட்டூ டறவேல் சயில தெறியும்
      திட்டூர நிராகுல நிர பயனே. 9
      கார்மா மிசைகா லன்வரிற் கலப
      தேர்மா மிகைவ தெதிர படுவாய்
      தார்மார்ப வலாரி தலாரி யெனுஞ்
      சூர்மா மடி தொடுவே லவனே. 10
      கூகா வெனவென் கிளைகூ டியழ
      போகா வகைமெ பொருள்பே சியவா
      தாகாசல வேலவ நாலு கவி
      தியாகா கரலோக சிகா மணியே. 11
      செம்மான் மகளை திருடு திருடன்
      பெம்மான் முருகன் பிறவா னிறவான்
      சும்மா இருசொல் லறவென் றலுமே
      அம்மா பொரு ளொன்று மறிந்திலனே. 12
      முருகன் தனிவேல் முனிநங் குருவென்
      றருள்கொண் டறியா ரறியு தரமோ
      உருவன் றருவன் றுளதன் றிலதன்
      றிருளன் றொளியன் றென்நின் றதுவே. 13
      கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்
      றுய்வாய் மனனே யொழிவா யொழிவாய்
      மெய்வாய் விழி நாசியொடுஞ் செவியாம்
      ஐவாய் வழி செல்லு மவாவினையே. 14
      முருகன் குமரன் குகனென்று மொழி
      துருகுஞ் செயல்த துணர்வென் றருள்வாய்
      பொருபுங் கவரும் புவியும் பரவுங்
      குருபுங்கவ எண்குண பஞ் சரனே. 15
      பேராசை யெனும் பிணியிற் பிணிப
      டோ ரா வினையே னுழல தகுமோ
      வீரா முதுசூர் படவே லெறியுஞ்
      சூரா சுரலோக துர தரனே. 16
      யாமோதிய கல்வியு மெம் மறிவு
      தாமே பெற வேலவர் தந்தனாற்
      பூமேல் மயல் போ யறமெ புணர்வீர்
      தாமேல் நடவீர் நடவீ ரினியே. 17
      உதியா மரியா வுணரா மறவா
      விதிமா லறியா விமலன் புதல்வா
      அதிகா வநகா வபயா வமரா
      பதிகா வலசூர் பயங் கரனே. 18
      வடிவு தனமும் மனமுங் குணமுங்
      குடியுங் குலமுங் குடிபோ கியவா
      அடி தமிலா அயில்வே லரசே
      மிடி யென்றொரு பாவி வௌ படினே. 19
      அரிதா கியமெ பொருளு கடியேண்
      உரிதா வுபதேச முணர தியவா
      விரிதாரண விக்ரம் வேளி மையோர்
      புரிதா ரக நாக புரந்தரனே. 20
      கருதா மறவா நெறிகாண என
      கிருதாள் வனச தரஎன் றிசைவாய்
      வரதா முருகா மயில்வா கனனே
      விரதா கரசூர விபாட ணனே. 21
      காளை குமரேச னென கருதி
      தாளை பணி தவமெய் தியவா
      பாளை சூழல் வள்ளி பதம்புணியும்
      வேளை சுரபூ
      அடியை குறியா தறியா மையினால்
      முடி கெடவோ முறையோ
      வடிவி ரமமேல் மகிபா குறமின்
      கொடியை புணருங் குணபூத ரனே 23
      கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே
      சேர்வே னருள் சேரவு மெண்ணுமதோ
      சூர்வே ரொடு குன்று தொளைத்தநெடும்
      போர்வேல புரத்தா பூப தியே. 24
      மெய்ய யெனவெவ் வினைவாழ் வையுக
      தையோ அடியே னலை தகுமோ
      கையோ அயிலோ கழலோ முழுதுஞ்
      செய்யோய் மயிலே றிய சேவகனே. 25
      ஆதார மிலே னருளை பெறவே
      நீதா னொரு சற்று நினைந்திலையே
      வேதாகம ஞான விநோ தமனோ
      கீதா சுரலோக சிகா மணியே. 26
      மின்னே நிகர்வாழ்வை விரும்பிய யான்
      என்னே விதியின் பயனிங் கிதுவோ
      பொன்னே மணியே பொருளே யருளே
      மன்னே மயிலேறிய வானவனே. 27
      ஆனா அமுதே அயில்வே லரசே
      ஞானா கரனே நவில தகுமோ
      யானாகிய வென்னை விழுங்கி வெறு
      தானாய் நிலைநின் றதுதற் பரவே. 28
      இல்லே யெனுமா யையி லிட்டனைநீ
      பொல்லே னறியாமை பொறு திலையே
      மல்லே புரி பன்னிரு வாகுவிலென்
      சொல்லே புனையுஞ் சுடர்வே லவனே. 29
      செல்வா னுருவிற் றிகழ்வே லவனன்
      றொவ்வா ததென வுணர்வி ததுதான்
      அவ்வா றறிவா ரறிகின் றதலால்
      எவ்வா றொருவர கிசைவி பதுவே. 30
      பாழ்வாழ் வெனுமி படுமா யையிலே
      வீழ்வா யென என்னை விதித்தனையே
      தாழ்வா னவைசெய் தனதா முளவோ
      வாழ்வா யினிநீ மயில்வா கனனே. 31
      கலையே பதறி கதறி தலையூ
      டலையே படுமா றதுவாய் விடவோ
      கொலையே புரி வேடர்குல பிடிதோய்
      மலையே மலை கூறிடு வாகையானே. 32
      சிந்தா குலவில் லொடுசெல் வமெனும்
      விந்தா டவியென்று விட பெறுவேன்
      மந்தா கினிதந்த வரோ தயனே
      கந்தா முருகா கருணா கரனே. 33
      சிங்கார மடந்தையர் தீநெறி போய்
      மங்கார லெனக்கு வரந்தருவாய்
      சங்க்ராம சிகா வலசண் முகனே
      கங்கா நதி பால க்ருபாகரனே. 34
      விதிகாணு முடம்பை விடா வினையேன்
      கதிகாண மலர்க்கழ லென் றருள்வாய்
      மதிவா ணுதல்வள்ளியையல் லதுபின்
      துதியா விரதா சுரபூ பதியே. 35
      நாதா குமரா நமவென் றரனார்
      ஓதா யெனவோ தியதெ பொருள்தான்
      வேதா முதல் விண்ணவர் சூடுமலர
      பாதா குறமின் பதசே கரனே. 36
      கிரிவாய் விடுவி ரம வேலிறையோன்
      பரிவா ரமெனும் பதமே வலையே
      புரிவாய் மனனே பொறையா மறிவால்
      அரிவா யடியொடு மக தையையே. 37
      ஆதாளிய யொன் றறியே னையற
      தீதாளியை யாண் டதுசெ புமதோ
      கூதாள கிராத குலி கிறைவா
      வேதாள கணம் புகழ்வே லவனே. 38
      மாவேழ் சனனங் கெடமா யைவிடா
      மூவேடணை யென்று முடி திடுமோ
      கோவே குறமின் கொடிதோள் புணரு
      தேவே சிவ சங்கர தேசிகனே. 39
      வினையோட விடுங் கதிர்வேல் மறவேன்
      மனையோடு தியங்கி மயங் கிடவோ
      கனையோ டருவி துறையோடு பசு
      தினையோ டிதணோடு திரி தவனே. 40
      சாகா தெனையே சரணங் களிலே
      காகா நமனார் கலகஞ் செயுநாள்
      வாகா முருகா மயில்வா கனனே
      யோகா சிவஞா னொபதே சிகனே. 41
      குறியை குறியாது குறித்தறியும்
      நெறியை தனிவோல நிகழ திடலுஞ்
      செறிவற் றுலகோ டுரைசி தையுமற்
      றறிவற் றறியா மையு மற்றதுவே. 42
      தூசா மணியு துகிலும் புனைவாள்
      நேசா முருகா நினதன் பருளால்
      ஆசா நிகள துகளா யின்பின்
      பேசா அநுபூதி பிற ததுவே. 43
      சாடு தனிவேல் முருகன் சரணஞ்
      சூடும் படித ததுசொல் லுமதோ
      வீடுஞ் சுரர்மா முடிவே தமும்வெங்
      காடும் புனமுங் கமழுங் கழலே. 44
      கரவா கியகல்வி யுளார் கடைசென்
      றிரவா வகைமெ பொருளீ குவையோ
      குரவா குமரா குலிசா யுதகுஞ்
      சரவா சிவயோக தயா பரனே. 45
      எந்தாயுமென கருள்தந்தையுநீ
      சிந்தா குலமா னவைதீர தெனையாள்
      கந்தா கதிர்வே லவனே யுமையாள்
      மைந்தா குமரா மறைநா யகனே. 46
      ஆறா றையுநீ ததன்மேல் நிலையை
      பேறா வடியேன் பெறுமா றுளதோ
      சீறா வருசூர் சிதைவி திமையோர்
      கூறா வுலகங் குளிர்வி தவனே. 47
      அறிவொன் றறநின் றறிவா ரறிவிற்
      பிறிவொன் றறநின் றபிரா னலையோ
      செறிவொன் றறவ திருளே சிதைய
      வெறிவென்றவ ரோடுறும் வேலவனே. 48
      தன்ன தனிநின் றதுதா னறிய
      இன்னம் மொருவர கிசைவி பதுவோ
      மின்னுங் கதிர்வேல் விகிர்தா நினைவார்
      கின்னங் களையும் க்ருபைசூழ் சுடரே. 49
      மதிகெட்டறவா டிமயங் கியற
      கதிகெட்டவமே கெடவோ கடவேன்
      நதிபுத்திர ஞான சுகா திபவ
      திதிபு திரர்வீ றடுசே வகனே. 50
      உருவா யருவா யுளதா யிலதாய்
      மருவாய் மலராய் மணியா யொளியாய்
      க்கருவா யுயிரா கதியாய்
      விதியாய்க்குருவாய் வருவா யருள்வாய் குகனே. 51
      திருச்சிற்றம்பலம்
      கந்தர் அலங்காரம்
      அருணகிரி நாதர் அருளியது
      காப்பு
      அடலருணை திரு கோபுர தேயந்த வாயிலுக்கு
      வட வருகிற் சென்று கண்டுகொண்டேன்வருவார் தலையில்
      தடபடெனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகை
      கடதட கும்பக களிற்று கிளைய களிற்றினையே.
      நூல்
      பேற்றை தவஞ் சற்றுமில்லாத வென்னைப்ர பஞ்ச மென்னுஞ்
      சேற்றை கழிய வழிவிட்ட வா. செஞ்சடாடவிமேல்
      ஆற்றை பணியை யிதழியை தும்பையை யம்புலியின்
      கீற்றை புனைந்த பெருமான் குமாரன் க்ருபாகரனே. 1
      அழித்து பிற கவொட்டாவயில் வேலன் கவியையன்பால்
      எழுத்து பிழையற கற்கின்றி வீரெரி மூண்டதென்ன
      விழித்து புகையெழ பொங்குவெங் கூற்றன் விடுங்கயிற்றாற்
      கழுத்திற் சுருக்கி டிழுக்குமன் றோகவி கற்கின்றதே. 2
      தேரணி யிட்டுபட புரமெரி தான்மகன் செங்கையில்வேற்
      கூரணி யிட்டணு வாகி கிரௌஞ்சங் குலைந்தரக்கர்
      நேரணி யிட்டு வளைந்த கடக நௌந்ததுசூர
      பேரணி கெட்டது தேவேந்தர லோகம் பிழைத்ததுவே. 3
      ஓரவொட்டாரொன்றை யுன்னவொட்டார்மலரிட்டுனதான்
      சேரவொட்டாரைவர் செய்வதென்யான் சென்று தேவரு
      சோரநி டூரனை சூரனை காருடல் சோரி
      கூரகட்டாரியி டோ ரிமை போதினிற் கொன்றவனே. 4
      திருந்த புவனங்களீன்ற பொற்பாவை திருமுலைப்பால்
      அருந்தி சரவண பூந்தொட்டி லேறி யறுவர்கொங்கை
      விரும்பி கடலழ குன்றழ சூரழ விம்மியழுங்
      குருந்தை குறிஞ்சி கிழவனென் றோதுங் குவலயமே. 5
      பெரும்பைம் புனத்தினு சிற்றேனல் காக்கின்ற பேதை கொங்கை
      விரும்புங் குமரனை மெய்யின்பி னான்மெல்ல மெல்லவுள்ள
      அரும்பு தனிப்பர மாநந்த தித்தி தறிந்தவன்றே
      கரும்பு துவர்த்துச்செ தேனும் புளித்தற கைத்ததுவே. 6
      சளத்திற் பிணிபட்டசட்டு க்ரியைக்கு டவிக்கு மென்றன்
      உளத்திற் ப்ரமத்தை தவிர்ப்பா யவுண ருரத்துதிர
      குளத்திற் குதித்து குளித்து களித்து குடித்துவெற்றி
      களத்திற் செருக்கி கழுதாட வேல்தொட்ட காவலனே. 7
      ஔயில் விளைந்த வுயர்ஞான பூதர துச்சியின்மேல்
      அளியில் விளைந்ததொரா நந தேனை யநாதியிலே
      வௌயில் விளைந்த வெறும்பாழை பெற்ற வெறுந்தனியை
      தௌய விளம்பிய வா.. முகமாறுடைத்தேசிகனே. 8
      தேனென்று பாகனெறுவமி கொணாமொழி தெய்வ வள்ளி
      கோனன் றெனக்குப தேசித்த தொன்றுண்டு கூறவற்றோ
      வானன்று காலன்று தீயன்று நீரன்று மண்ணுமன்று
      தானன்று நானன் றசிரீரி யன்று சரீரியன்றே. 9
      சொல்லுகை கில்லையென் றெல்லா மிழந்துசும்மாவிருக்கு
      மெல்லையு செல்ல எனைவிட்டவா இகல் வேலனல்ல
      கொல்லியை சேர்க்கின்ற சொல்லியை கல்வரை கொவ்வை
      செவ்வாய்வல்லியை புல்கின்ற மால்வரை தோளண்ணல் வல்லபமே. 10
      குசைநெகி ழாவெற்றி வேலோ னவுணர் குடர்குழம்ப
      கசையிடு வாசி விசைகொண்ட வாகன பீலியின்கொ
      தசைபடு கால்ப டசைந்து மேரு அடியிடவெண்
      டிசைவரை தூள்பட்ட அத்தூளின் வாரி திடர்பட்டே 11
      படைபட்ட வேலவன் பால்வந்த வாகை பதாகையென்னு
      தடைபட்ட சேவல் சிறகடி கொள்ள சலதிகழி
      துடைபட்ட தண்டகடாக முதிர்ந்த துடுபடலம்
      இடைப்பட்ட குன்றமு மாமேரு வெற்பு மிடிபட்டவே. 12
      ஒருவரை பங்கி லுடையாள் குமார னுடைமணிசேர்
      திருவரை கிண்கிணி யோசை படத்திடு கிட்டரக்கர்
      வெருவர திக்கு செவிப டெட்டு வெற்புங்கனக
      பருவரை குன்று மதிர்ந்தன தேவர் பயங் கெட்டதே. 13
      குப்பாச வாழ்க்கையு கூத்தாடு மைவரிற் கொட்படைந்த
      இப்பாச நெஞ்சனை ஈடேற்று வாயிரு நான்கு வெற்பும்
      அப்பாதி யாய் விழ மேருங் குலங்கவிண்ணாரு மு
      சப்பாணி கொட்டிய கையா றிரண்டுடை சண்முகனே. 14
      தாவடி யோட்டு மயிலிலு தேவர் தலையிலுமென்
      பாவடி யேட்டிலும் பட்டதன் றோபடி மாவலிபால்
      மூவடி கேட்டன்று மூதண்ட கூடி முகடுமுட்ட
      சேவடி நீட்டும் பெருமாள் சிற்றடியே. 15
      இடுங்கோ ளிருந்த படியிருங் கோளெரு பாருமு
      கொடுங்கோப சூருடன் குன்ற திறக்க தொளக்கலை வேல்
      விடுங்கொ னருள் வந்து தானே யுமக்கு வெளிப்படுமே. 16
      வேதா கமசித்ர வேலா யுதன்வெட்சி பூத்ததண்டை
      பாதார விந்த மரணாக அல்லும் பகலுமில்லா
      சூதான தற்ற வௌக்கே யொளித்துச்சும் மாவிருக்க
      போதா யினிமன மேதெரி யாதொரு பூதர்க்குமே. 17
      வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி வறிஞர்க்கென்றும்
      நொய்யிற் பிளவன வேனும் பகிர்மின்க ணுங்கட்கிங்ஙன்
      வெய்யிற் கொதுங்க வுதவா வுடம்பின் வெறுநிழல்போற்
      கையிற் பொருளு முதவாது காணுங் கடைவழிக்கே. 18
      சொன்ன கிரௌஞ்ச கிரியூ டுருவ தொளுத்தவைவேல்
      மன்ன கடம்பின் மலர்மாலை மார்பமௌ னத்தையுற்று
      நின்னை யுணர்ந்துணர தெல்லா மொருங்கிய நிர்க்குணம் பூண்
      டென்னை மறந்திரு தேனிற தேவிட்ட திவ்வுடம்பே. 19
      கோழி கொடிய னடிபணி யாமற் குவலயத்தே
      வாழ கருது மதியிலி காளுங்கள் வல்வினைநோய்
      ஊழிற் பெருவலி யுண்ணவொ டாதுங்க ளத்தமெல்லாம்
      ஆழ புதைத்துவை தால் வருமோநும் மடிப்பிறகே. 20
      மரணப்ர மாத நமக்கில்லை யாமென்றும் வாய்த்ததுணை
      கிரண கலாபியும் வேலுமுண் டேகிண் கிணிமுகுள
      சரணப்ர தாப சசிதேவி மங்கல்ய தந்துரக்ஷா
      பரணக்ரு பாகர ஞானா கரசுர பாஸ்கரனே. 21
      மொய்தர ரணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால்
      வைதா ரையுமங்கு வாழவை போன்வெய்ய வாரணம்போற்
      கைதா னிருப துடையான் தலைபத்துங் கத்தரிக்க
      எய்தான் மருகன் உமையாள் பயந்த இலஞ்சியமே. 22
      தெய்வ திருமலை செங்கோட்டில் வாழுஞ் செழுஞ்சுடரே
      வைவைத்த வேற்படை வானவ னே மறவேனுனைநான்
      ஐவர கிடம்பெற காலிரண்டோ ட்டி யதிலிரண்டு
      கைவைத்த வீடு குலையுமுன் னே வந்து காத்தருளே. 23
      கின்னங் குறித்தடி னேசெவி நீயன்று கேட்கச்சொன்ன
      குன்னங் குறிச்சி வௌயாக்கி விட்டது கோடுகுழல்
      சின்னங் குறி குறிஞ்சி கிழவர் சிறுமிதனை
      முன்னங் குறிச்சியிற் சென்றுகல் யாண முயன்றவனே. 24
      தண்டாயுதமு திரிசூல மும்விழ தாக்கியுன்னை
      திண்டாட வெட்டி விழவிடு வேன்செந்தில் வேலவனுக்கு
      தொண்டா கியவென் னவிரோத ஞான சுடர்வடிவாள்
      கண்டாய டாவந்த காவந்து பார்சற்றென் கை கெட்டவே. 25
      நீல சிகண்டியி லேறும் பிரானெந்த நேரத்திலுங்
      கோல குறத்தி யுடன்வரு வான் குருநாதன் சொன்ன
      சீலத்தை மௌள தௌந்தறி வார் சிவயோகிகளே
      காலத்தை வென்றிருப்பார் மரி பார்வெறுங்களே. 26
      ஓலையு தூதருங் கண்டுதிண்டாட லொழி தெனக்கு
      காலையு மாலையு முன்னிற்கு மேகந்த வேள் மருங்கிற்
      சேலையுங் கட்டிய சீராவுங் கையிற் சிவந்தசெச்சை
      மாலையுஞ் சேவற் பதாகையு தோகையும் வாகையுமே. 27
      வேலே விளங்குகை யான் செய்ய தாளினில் வீழ்ந்திறைஞ்சி
      மாலே கொளவிங்ஙன் காண்பதல் லான் மனவாக்குச்செய
      லாலே யடைதற் கரிதா யருவுரு வாகியொன்று
      போலே யிருக்கும் பொருளையெவ்வாறு புகல்வதுவே. 28
      கடத்திற் குறத்தி பிரானரு ளாற்கலங் காதசி
      திடத்திற் புணையென யான் கட தேன் சித்ர மாதரல்குற்
      படத்திற் கழுத்திற் பழுத்தசெவ்வாயிற் பனையிலுந்தி
      தடத்திற் றனத்திற் கிடக்கும் வெங்காம சமுத்திரமே. 29
      பாலென் பதுமொழி பஞ்னெ பதுபதம் பாவையர்கண்
      சேலென்ப தாக திரிகின்ற நீசெந்தி லோன்றிருக்கை
      வேலென் கிலைகொற்ற மயூர மென்கிலை வெட்சித்தண்டை
      காலென் கிலைமன மேயெங்ங னேமுத்தி காண்பதுவே. 30
      பொ குடிலிற் புகுதா வகைபுண்ட ரீகத்தினுஞ்
      செக்க சிவந்த கழல்வீடு தந்தருள் சிந்துவெந்து
      கொக்கு தறிப டெறிப டுதிரங் குமுகுமென
      கிரியுரு வக்கதிர் வேல் தொட்ட காவலனே. 31
      கிளைத்து புறப்பட்ட சூர்மார் புடன்கிரி யூடுருவ
      தொளைத்து புறப்பட்ட வேற்கந்த னே துற தோருளத்தை
      வளைத்து பிடித்து பதைக்க பதைத்த வதைக்குங் கண்ணார
      கிளைத்து தவிக்கின்ற என்னை யெந்தாள் வந்திரட்சிப்பையே. 32
      முடியா பிறவி கடலிற் புகார்முழு துங்கெடுக்கு
      மிடியாற் படியில் விதன படார்வெற்றி வேற்பெருமாள்
      அடியார்க்கு நல்ல பெருமாள் அவுணர் குலமடங்க
      பொடியா கியபெரு மாள் திரு நாமம் புகல்பவரே. 33
      பொட்டாக வெற்பை பொருதகந்தா தப்பி போனதொன்றற்
      கெட்டாத ஞான கலைதரு வாயிருங் காமவிடா
      பட்டா ருயிரை திருகி பருகி பசிதணிக்குங்
      கட்டாரி வேல்வழி யார்வலைக்கேமனங் கட்டுண்டதே. 34
      பத்திற் துறையிழி தாநந்த வாரி படிவதானால்
      புத்தி தரங்க தௌவதென் றோபொங்கு வெங்குருதி
      மெத்தி குதிகொள்ள வெஞ்சூ ரனைவிட்ட கட்டியிலே
      குத்தி தரங்கொண் டமரா வதிகொண்ட கொற்றவனே. 35
      கழித்தோடு மாற்றிற் பெருக்கானது செல்வ துன்பமின்பங்
      கழித்தோடு கின்றதெக்கால நெஞ் சேகரி கோட்டுமுத்தை
      கொழித்தோடு காவிரி செங்கோட னென்கிலை குன்றமெட்டுங்
      கிழித்தோடு வேலென் கிலையெங்ங னே முத்தி கிட்டுவதே. 36
      கண்டுண்ட சொல்லியர் மெல்லியர் கா கலவிக்கள்ளை
      மொண்டுண் டயர்கினும் வேன் மறவேன் முதுகூளித்திரள்
      குண்டுண் டுடுடுடு டூடூ டுண்டுடுண்டு
      டிண்டிண் டெனக்கொட்டி யாடவெஞ் சூர்க்கொன்ற ராவுத்தனே. 37
      நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
      கோளென் செயுங்கொடுங் கூற்றன் செயுங்கும ரேசரிரு
      தாளுஞ் சிலம்புஞ் சதங்கையு தண்டையுஞ் சண்முகமு
      தோளுங் கடம்பு மெனக்கு முன்னே வந்து தோன்றிடினே. 38
      உதித்தாங் குழல்வதுஞ் சாவது தீர்த்தெனை யுன்னிலொன்றா
      விதித்தாண் டருள்தருங் காலமுண் டோ வெற்பு நட்டுரக
      பதித்தாம்பு வாங்கிநின் றம்பரம் பம்பரம் பட்டுழல
      மதித்தான் திருமரு காமயி லேறிய மாணிக்கமே. 39
      சேல்ப டழிந்தது செந்துர் வயற்பொழில் தேங்கடம்பின்
      மால்ப டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன்
      வேல்ப டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்புமவன்
      கால்ப டழிந்ததிங் கென்றலை மேலயன் கையெழுத்தே. 40
      பாலே யனைய மொழியார்த மின்பத்தை பற்றியென்றும்
      மாலே கொண்டுய்யும் வகையறி யேன் மலர்த்தாள் தருவாய்
      காலே மிகவுண்டு யிலாத கணபணத்தின்
      மேலே துயில்கொள்ளு மாலோன் மருகசெவ்வேலவனே. 41
      நிணங்காட்டுங் கொட்டிலை விட்டொரு வீடெய்தி நிற்கநிங்குங்
      குணங்காட்டி யாண்ட குருதே சிகனங் குறச்சிறுமான்
      பணங்காட்டி மல்குற் குரகுங் குமரன் பதாம்புயத்தை
      வணங்லா தவைங்கி தெங்கே யெனக்கிங் ஙன் வாய்த்ததுவே. 42
      கவியாற் கடலடை தோன் மரு கொனை கணபணக்க
      செவியாற் பணியணி கோமான் மகனை திறலரக்கர்
      புவியார பெழத்தொட்ட போர்வேன் முருகனை போற்றி யன்பாற்
      குவியா கரங்கள் வந்தெங்கே யெனக்கிங்ஙன் கூடியவே. 43
      தோலாற் கவர்வைத்து நாலாறு காலிற் சுமத்தியிரு
      காலா லெழுப்பி வளைமுது கோட்டிக்கை நாற்றிநரம்
      பாலார்க்கை யிட்டு தசைகொண்டு மேய்ந்த அகம்பிரிந்தால்
      வேலாற் கிரிதொளை தோனிடி தாளன்றி வேறில்லையே. 44
      ஒருபூ தருமறி யாத்தனி வீட்டி லுரையுணர்வற்
      றிருபூத வீட்டி லிராமலென் றானிரு கோட்டொருகை
      பொருபூ தரமுரி தேகாச மிட்ட புராந்தகற்கு
      குருபூத வேலவ னிட்டூர சூர குலாந்தகனே. 45
      நீயான ஞான விநோத தனையென்று நீயருள்வாய்
      சேயான வேற்கந்த னேசெந்தி லாய் சித்ர மாதரல்குற்
      றோயா வுருகி பருகி பெருகி துவளுமிந்த
      மாயா விநோத மநோதுக்க மானது மாய்வயதற்கே. 46
      பத்தி திருமுக மாறுடன் பன்னிரு தோள்களுமா
      தித்தி திருக்கு மமுதுகண் டேன்செயன் மாண்டடங்க
      புத்தி கமல துருகி பெருகி புவனமெற்றி
      தத்தி கரைபுர ளும்பர மாநந்த சாகரத்தே. 47
      பத்தியை வாங்கிநின் பாதாம் புயத்திற் புகட்டியன்பாய்
      முத்திரை வாங்க அறிகின்றி லேன் முது சூர்நடுங்க
      சத்தியை வாங்க தரமோ குவடு தவிடுபட
      குத்திர காங்கேய னேவினை யேற்கென் குறித்தனையே. 48
      சூரிற் கிரியிற் கதிர்வே லெறிந்தவன் தொண்டர்சூழாஞ்
      சாரிற் கதியின்றி வேறிலை காண்தண்டு தாவடிபோ
      தேரிற் கரியிற் பரியிற் றிரிபவர் செல்வமெல்லாம்
      நீரிற் பொறியென் றறியாத பாவி நெடுநெஞ்சமே. 49
      படிக்கும் திருப்புகழ் போற்றுவன் கூற்றவன் பாசத்தினாற்
      பிடிக்கும் பொழுதுவ தஞ்சலென் பாய்பெரும் பாம்பினின்று
      நடிக்கும் பிரான்மரு காகொடுஞ் சூர னடுங்கவெற்பை
      இடிக்குங் கலாப தனிமயி லேறு மிராவுத்தனே. 50
      மலையாறு கூறெழ வேல்வாங்கி னானை வணங்கியபின்
      நிலையான மாதவஞ் செய்குமி னோநும்மை நேடிவரு
      தொலையா வழிக்கு பொதிசோறு முற்ற துணையுங்கண்டீர்
      இலையா யினும் வெந்த தேதா யினும்பகிர தேற்றவர்க்கே. 51
      சிகாராத்ரி கூறிட்ட வேலுஞ்செஞ் சேவலுஞ் செந்தமிழாற்
      பகரார்வமீ பணி பாசசங் க்ராம பணாமகுட
      நிகரா சமபட்ச பட்சி துரங்க ந்ருபகுமார
      குமரா சசபட்ச விட்சோப தீர குணதுங்கனே. 52
      வேடிச்சி கொங்கை விரும்புங் குமரனை மெய்யன்பினாற்
      பாடி கசிந்துள்ள போதே கொடாதவர் பாதகத்தாற்
      றேடி புதைத்து திருட்டிற் கொடுத்து திகைத்திளைத்து
      வாடி கிலேசித்து வாழ்நாளை வீணுக்கு மாய்ப்பவரே. 53
      சாகைக்கு மீண்டு பிறக்கைக்கு மன்றி தளர்ந்தவர்கொன்
      றீகை கெனை விதி தாயிலை யே யிலங் காபுரிக்கு
      போகைக்கு நீவழி காட்டென்று போய்க்கடல் தீக்கொளுந்த
      வாகை சிலைவளை தோன்மரு காமயில் வாகனனே. 54
      ஆங்கா ரமுமடங் காரொடுங் கார்பர மாநந்தத்தே
      தேங்கார் நினைப்பு மறப்பு மறார் தினை போதளவும்
      ஓங்கார துள்ளொளி குள்ளே முருக னுருவங்கண்டு
      தூங்கார் தொழும்புசெய்யா ரென்செய்வார் யம தூதருக்கே. 55
      கிழியும் படியடற் குன்றெறி தோன்கவி கேட்டுருகி
      இழியுங் கவிகற் றிடாதிரு பீரெரி வாய் நர
      குழியு துயரும் விடாப்பட கூற்றுவனூர குச்செல்லும்
      வழியு துயரும் பகரீர் மறந்தவர்க்கே. 56
      பொருபிடி யுங்களி றும் விளையாடும் புனச்சிறுமான்
      தருபிடி காவல சண்முக வாவென் சாற்றிநித்தம்
      இருபிடி சோகொண் டிட்டுண்டிருவினை யோமிறந்தால்
      ஒருபிடி சாம்பருங் காணாது மாயவுடம்பிதுவே. 57
      நெற்றா பசுங்கதிர செவ்வேனல் காக்கின்ற நீலவள்ளி
      முற்றா தனத்திற் கினிய பிரானிக்கு முல்லையுடன்
      பற்றாக்கை யும்வெந்து சங்க்ராம வேளும் படவிழியாற்
      செற்றார கினியவன் தேவேந்த்ர லோக சிகாமணியே. 58
      பொங்கார வேலையில் வேலைவி டோ னருள் போலுதவ
      எங்கா யினும்வரு மேற்பவர கிட்ட திடாமல்வைத்த
      வங்கா ரமுமுங்கள் சிங்கார வீடு மடந்தையருஞ்
      சங்காத மோகெடு வீருயிர் போ தனிவழிக்கே. 59
      சிந்தி கிலேனின்று சேவிக்கு லேன்றண்டை சிற்றடியை
      வந்தி கிலேனொன்றும் வாழ்த்துகி லேன் மயில் வாகனனை
      சந்தி கிலேன் பொய்யை நிந்தி கிலேனுண்மை சாதிக்கிலேன்
      புந்தி கிலேசமுங் கா கிலேசமும் போக்குதற்கே. 60
      வரையற் றவுணர் சிரமற்று வாரிதி வற்றச்செற்ற
      புரையற்ற வேலவன் போதி தவா பஞ்ச பூதமுமற்
      றுரையற் றுவர்வற் றுடலற் றுயிரற் றுபாயமற்று
      கரையற் றிருளற் றெனதற் றிருக்கு காட்சியதே. 61
      ஆலு கணிகலம் வெண்டலை மாலை யகிலமுண்ட
      மாலு கணிகலம் தண்ண துழாய்மயி லேறுமையன்
      காலு கணிகலம் வானோர் முடியுங் கடம்புங்கையில்
      வேலு கணிகலம் வேலையுஞ் சூரனு மேருவுமே. 62
      பாதி திருவுரு பச்சென் றவர்க்குத்தன் பாவனையை
      போதித்த நாதனை போர் வேலனைச்சென்று போற்றியு
      சோதித்த மெய்யன்பு பொய்யோ அழுது தொழுதுருகி
      சாதிதத புத்திவ தெங்கே யென கிங்ஙன் சந்தித்ததே. 63
      பட்டி கடாவில் வருமந்த காவுனை பாரறிய
      வெட்டி புறங்கண் டலாதுவிடேன் வெய்ய சூரனை போய்
      முட்டி பொருதசெவ் வேற்பொரு மாள் திரு முன்புநின்றேன்
      கட்டி புறப்பட டாசத்தி வாளென்றன் கையதுவே. 64
      வெட்டுங் கடாமிசை தோன்றும் வெங்கூற்றன் விடுங் கயிற்றாற்
      கட்டும் பொழுது விடுவிக்க வேண்டும் கராசலங்கள்
      எட்டுங் குலகிரி யெட்டும் வி டோ ட வெ டாதவெளி
      மட்டும் புதைய விரிக்குங் கலாப மயூரத்தனே. 65
      நீர்க்குமிழக்கு நிகரென்பர் யாக்கைநில்லாது செல்வம்
      பார்க்கு மிட தந்த மின் போலுமென்பர் பசித்துவந்தே
      ஏற்கு மவர்க்கிட வென்னினெங் கேனு மெழுந்திருப்பார்
      வேற்குமரற் கன்பிலாதவர் ஞான மிகவுநன்றெ. 66
      பெறுதற் கறிய பிறவியை பெற்றுநின் சிற்றடியை
      குறிகி பணிந்து பெறக்கற் றிலேன் மத கும்பகம்ப
      தறுக சிறுக சங்க்ராம சயில சரசவல்லி
      இறுக தழுவுங் கடகா சலபன் னிருபுயனே. 67
      சாடுஞ் சமர தனிவேல் முருகன் சரணத்திலே
      ஓடுங் கருத்தை யிருத்தவல் லார்க்குகம் போய்ச்சகம்போ
      பாடுங் கவுரி பவுரிகொண்டா டப்பசுபதின்
      றாடும் பொழுது பரமா யிருக்கு மதீதத்திலே. 68
      தந்தைக்கு முன்ன தனிஞான வாளொன்று சாதித்தருள்
      கந்த சுவாமி யெனை தேற் றிய பின்னர காலன்வெம்பி
      வந்தி பொழுதென்னை யென் செய்ய லாஞ்சத்தி வாளொன்றினாற்
      சிந துணிப்பன் தணிப்பருங் கோபத்ரி சூலத்தையே. 69
      விழிக்கு துணைதிரு மென்மலர பாதங்கள் மெய்ம்மை குன்றா
      மொழிக்கு துணைமுரு காவெனு நாமங்கள் முன்பு செய்த
      பழிக்கு துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி
      வழிக்கு துணைவடி வேலுஞ் செங்கோடன் மயூரமுமே. 70
      துருத்தி யெனும்படி கும்பித்து வாயுவை சுற்றிமுறி
      தருத்தி யுடம்பை யொறுக்கிலென் னாஞ்சிவ யோக மென்னுங்
      குருத்தை யறிந்து முகமா றுடைக்குரு நாதன்சொன்ன
      கருத்தை மனத்தி லிருந்துங்கண் டீர்முத்தி கைகண்டதே. 71
      சேந்தனை கந்தனை செங்கோட்டு வெற்பனை செஞ்சுடர்வேல்
      வேந்தனை செந்தமிழ் நூல்விரி தோனை விளங்குவள்ளி
      காந்தனை கந்த கடம்பனை கார்மயில் வாகனனை
      சாந்துணை போது மறவா தவர்க்கொரு தாழ்வில்லையே. 72
      போக்கும் வரவு மிரவும் பகலும் புறம்புமுள்ளும்
      வாக்கும் வடிவு முடிவுமில்லாத தொன்று வந்துவந்து
      தாக்கு மநோல தானே தருமெனை தன்வசத்தே
      ஆக்கு மறுமுக வாசொல் லொணாதிந்த ஆநந்தமே. 73
      அராப்புனை வேணியன் சேயருள் வேண்டு மவிழ்ந்த அன்பாற்
      குராப்புனை தண்டையந்தாள் தொழல் வேண்டுங் கொடிய ஐவர்
      பராக்கறல் வேண்டும் மனமும் பதைப்பறல் வேண்டுமென்றால்
      இராப்பக லற்ற இடத்தே யிருக்கை யௌதல்லவே. 74
      படிக்கின் றிலைபழு நித்திரு நாமம் படிப்பவர்தாள்
      முடிக்கின் றிலைமுருகா வென் கிலைமுசி யாமலிட்டு
      மிடிக்கின் றிலைபர மாநந்த மேற்கொள விம்மிவிம்மி
      நடிக்கின் றிலைநெஞ்ச மேதஞ்ச மேது நமக்கினியே. 75
      கோடாத வேதனு கியான்செய்த குற்றமென் குன்றெறிந்த
      தாடாள னெதென் தணிகை குமரநின் றண்டைந்தாள்
      சூடாத சென்னியு நாடாத கண்ணு தொழாதகையும்
      பாடாத நாவு மெனக்கே தெரிந்து படைத்தனனே. 76
      சேல்வாங்கு கண்ணியர் வண்ண் பயோதரஞ் சேரஎண்ணி
      மால்வாங்கி யேங்கி மயங்காமல் வௌளி மலையெனவே
      கால்வாங்கி நிற்குங் களிற்றான் கிழத்தி கழுத்திற்கட்டு
      நூல் வாங்கி டாதன்று வேல்வாங்கி பூங்கழல் நோக்கு நெஞ்சே. 77
      கூர்கொண்ட வேலனை போற்றாம லேற்றங்கொண்டாடுவிர்காள்
      போர்கொண்ட கால னுமைக்கொண்டு போமன்று பூண்பனவு
      தார்கொண்ட மாதரு மாளிகை யும்பண சாளிகையும்
      ஆர்கொண்டு போவரையே கெடுவீர்நும் மறிவின்மையே. 78
      பந்தாடு மங்கையர் செங்கயற் பார்வையிற் பட்டுழலுஞ்
      சிந்தா குலந்தனை தீர்த்தருள் வாய்செய்ய வேல்முருகா
      கொந்தார் கடம்பு புடைசூழ் திருத்தணி குன்றினிற்குங்
      கந்தா இளங்குமரா அமராவதி காவலனே. 79
      மாகத்தை முட்டி வருநெடுங் கூற்றன்வந்தா லென்முன்னே
      தோகை புரவியிற் றோன்நிற் பாய்சுத்த நித்தமுத்தி
      த்யாக பொருப்பை த்ரிபுரா தகனை த்ரியம்பகனை
      பாகத்தில் வைக்கும் பரமகல் யாணிதன் பாலகனே. 80
      தாரா கணமெனு தாய்மார் அறுவர் தருமுலைப்பால்
      ஆரா துமைமுலை பாலுண்ட பால னரையிற் கட்டுஞ்
      சீராவுங் கையிற் சிறுவாளும் வேலுமென் சிந்தையவே
      வாரா தகலந்த காவந்த போதுயிர் வாங்குவனே. 81
      தகட்டிற் சிவந்த கடம்பையு நெஞ்சையு தாளிணைக்கே
      புகட்டி பணி பணித்தரு ளாய்புண்ட ரீகனண்ட
      முகட்டை பிளந்து வளர்ந்திந்த்ர லோகத்தை முட்டவெட்டி
      பகட்டிற் பொருதிட்ட நிட்டூர சூர பயங்கரனே. 82
      தேங்கிய அண்ட திமையோர் சிறைவிட சிற்றடிக்கே
      பூங்கழல் கட்டும் பெருமாள் கலா புரவிமிசை
      தாங்கி நடப்ப முறிந்தது சூரன் தளந்தனிவேல்
      வாங்கி யினுப்பிட குன்றங்க ளெட்டும் வழிவிட்டவே. 83
      மைவருங் கண்டத்தர் மைந்தகந்தாவென்று வாழ்த்துமிந்த
      கைவரு தொண்டன்றி மற்றறியேன் கற்ற கல்வியும்போய்
      பைவரும் கேளும் பதியுங் கதற பழகிநிற்கும்
      ஐவருங் கைவிட்டு மெய்விடும் போதுன்னடைக்கலமே. 84
      காட்டிற் குறத்தி பிரான்ப தேகருத்தைப்புகட்டின்
      வீட்டிற் புகுதன் மிகவௌ தேவிழி நாசிவைத்து
      மூட்டி கபாலமூ லாதார நேரண்ட மூச்சையுள்ளே
      ஓட்டி பிடித்தெங்கு மோடாமற் சாதிக்கும் யோகிகளே. 85
      வேலாயுதன் சங்கு சக்ராயுதன் விரிஞ் சன்னறியா
      சூலா யுதன் தந்த கந்த சுவாமி சுடர்க்குடுமி
      காலா யுதக்கொடி யோனரு ளாய கவசமுண்டென்
      பாலா யுதம் வருமோய னோடு பகைக்கினுமே. 86
      குமரா சரணஞ் சரணமனெ றண்டர் குழாந்துதிக்கும்
      அமரா வதியிற் பெருமாள் திருமுக மாறுங்கண்ட
      தமராகி வைகு தனியான ஞான தபோதனர்க்கிங்
      கெமராசன் விட்ட கடையோடு வந்தினி யென்செயுமே. 87
      வணங்கி துதிக்க அறியா மனித ருடனிணங்கிக்குணங்
      கெட்ட துட்டனை யீடேற்றுவாய் கொடி யுங்கழுகும்
      பிணங்க துணங்கை யலகை கொண்டாட பிசிதர்தம்வாய்
      நிணங்கக்க விக்ரம வேலா யுத தொட்ட நிர்மலனே. 88
      பங்கே ருகனெனை பட்டோ லையிலிட பண்டுதளை
      தங்காலி லிட்ட தறிந்தில னோதனி வேலெடுத்து
      போங்கோதம் வாய்விட பொன்னஞ் சிலம்பு புலம்பவரும்
      எங்கோ னறியி னினிநான் முகனு கிருவிலங்கே. 89
      மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை வானவர்க்கு
      மேலான தேவனை மெய்ஞ்ஞான தெய்வத்தை மேதினியில்
      சேலார் வயற்பொழிற் செஙகோடனை சென்று கண்டுதொழ
      நாலா யிரங்கண் படைத்தில னேயந்த நான்முகனே. 90
      கருமான் மருகனை செம்மான் மகளை களவுகொண்டு
      வருமா குலவனை சேவற்கை கோளனை வானமு
      பொருமா வினை செற்ற போர்வேல னைக்கன்னி பூகமுடன்
      தருமா மருவுசெங் கோடனை வாழ்த்துகை சாலநன்றே. 91
      தொண்டர்கண் டண்டிமொண் டுண்டுரு குஞ்சுத்த ஞானமெனு
      தண்டயம் புண்டரி கந்தருவாய் சண்ட தண்ட வெஞ்சூர்
      மண்டலங் கொண்டுபண் டண்லரண் டங்கொண்டு மண்டிமிண்ட
      கண்டுருண் டண்டர்விண் டோ டாமல் வேல்தொட்ட காவலனே. 92
      மண்கம ழுந்தி திருமால் வலம்புரி யோசையந்த
      விண்கமழ் சோலையும் வாவியுங் கேட்டது வேலெடுத்து
      திண்கிரி சிந்த விளையாடும் பிள்ளை திருவரையிற்
      கிண்கிணி யோசை பதினா லுலகமுங் கேட்டதுவே. 93
      தௌளிய ஏனவிற் கிள்ளையை கள்ள சிறுமியெனும்
      வள்ளியை வேட்டவன் தாள் வேட்டிலை சிறு வள்ளைதள்ளி
      துள்ளிய கெண்டையை தொண்டையை தோத சொல்லைநல்ல
      வௌளிய நித்தில வித்தார மூரலை வேட்டநெஞ்சே. 94
      யான்றானெனுஞ்சொல் லிரண்டுங் கெட்டாலன்றி யாவருக்கு
      தோன்றாது சத்தி தொல்லை பெருநிலஞ் சூகரமா
      கீன்றான் மருகன் முருகன்க்ரு பாகரன் கேள்வியினாற்
      சான்றாரு மற்ற தனிவௌ கேவந்து சந்திப்பதே. 95
      தடக்கொற்ற வேள்மயி லேயிடர் தீர தனிவிடில்ந
      ணவடக்கிற் கிரிக்க புறத்துநின் றோகையின் வட்டமிட்டு
      கடற்க புறத்துங் கதிர்க்க கனகசக்ர
      திடர்க்க புறத்து திசைக்க புறத்து திரிகுவையே. 96
      சேலிற் றிகழ்வயற் செங்கோடை வெற்பன் செழுங்கலபி
      ஆலி தநந்தன் பணாமுடி தாக்க அதிர்ந்ததிர்ந்து
      காலிற் கிடப்பன மாணிக்க ராசியுங் காசினியை
      பாலிக்கு மாயனுஞ சக்ரா யுதமும் பணிலமுமே. 97
      கதிதனை யொன்றையுங் காண்கின்றி லேன் கந்த வேல்முருகா
      நதிதினை யன்னபொய் வாழ்விலன் பாய்நரம் பாற்பொதிந்த
      பொதிதனை யுங்கொண்டு திண்டாடு மாறெனை போதவிட்ட
      விதிதனை நொந்துநொ திங்கேயென் றன்மனம் வேகின்றதே. 98
      காவி கமல கழலுடன் சேர்த்தெனை காத்தருளாய்
      தாவி குலமயில் வாகன னேதுணை யேதுமின்றி
      தாவி படர கொழுகொம் பிலாத தனிக்கொடிபோல்
      பாவி தனிமன தள்ளாடி வாடி பதைக்கின்றதே. 99
      இடுதலை சற்றுங் கருதேனை போதமி லேனையன்பாற்
      கெடுதலி லாத்தொண் டரிற் கூ டியவா கிரௌஞ்ச வெற்பை
      அடுதலை சாதித்த வேலோன் பிறவி யறவிச்சிறை
      விடுதலை பட்டது விட்டது பாச வினைவிலங்கே. 100
      சலங்காணும் வேந்தர் தமக்கு மஞ்சார் யமன் சண்டைக்கஞ்சார்
      துலங்கா நர குழியணு கார்துட்ட நோயணுகார்
      கலங்கார் புலிக்குங் கரடிக்கும் யானைக்குங் கந்தனன்னூல்
      அலங்கார நூற்று ளொருகவி தான் கற்றறிந்தவரே. 101
      திருவடி யுந்தண்டை யுஞ்சிலம் புஞ்சிலம் பூடுருவ
      பொருவடி வேலுங் கடம்பு தடம்புயம் ஆறிரண்டும்
      மருவடி வாண வதனங்க ளாறும் மலர்க்கண்களுங்
      குருவடி வாய்வந்தென் னுள்ளங் குளிர குதிகொண்டவே. 102
      இராப்பக லற்ற இடங்காட்டி யானிரு தேதுதி
      குராப்புனை தண்டை தாளரு ளாய் கரி கூப்பிட்டநாள்
      கராப்புட கொன்ற கரிபோற்ற நின்ற கடவுள் மெச்சும்
      பராக்ரம வேல நிருதசங் கார பயங்கரனே. 103
      செங்கே ழடுத்த சிவனடி வேலு திருமுகமும்
      பங்கே நிரைத்தநற் பன்னிரு தோளும் பதுமமலர
      கொங்கே தரளஞ் சொரியுஞ்செங் கோடை குமரனென
      எங்கே நினைப்பினும் அங்கேயென் முன்வந்தெதிர் நிற்பனே. 104
      ஆவிக்கு மோசம் வருமா றறிந்துன் னருட்பதங்கள்
      சேவிக்க என்று நினைக்கின்றி லேன் வினை தீர்த்தருளாய்
      வாவி தடவயல் சூழு திருத்தணி மாமலைவாழ்
      சேவற் கொடியுடை யானே யமர சிகாமணியே. 105
      கொள்ளி தலையில் எறும்பது போல குலையுமென்றன்
      உள்ள துயரை யொழித்தரு ளாயொரு கோடிமுத்த
      தௌளி கொழிக்குங் கடற்செந்தின் மேவி
      வள்ளிக்கு வாய்த்தவ னே மயிலேறிய மாணிக்கமே. 106
      சூலம் பிடித்தெம பாசஞ் சுழற்றி தொடர்ந்துவருங்
      காலன் தனக்கொரு காலுமஞ் சேன்கடல் மீதெழுந்த
      ஆலங் குடித்த பெருமான் குமாரன் அறுமுகவன்
      வேலு திருக்கையு முண்ட நமக்கொரு மெய்த்துணையே. 107
      கந்தர் அலங்காரம் முற்றிற்று
      வேல் - மயில் சேவல் விருத்தம் 1
      அருணகிரி நாதர் அருளியது
      மயில் விருத்தம் - காப்பு
      நாட்டை - ஆதி 2 களை
      சந்தன பாளித குங்கும புளகித சண்பக கடக புய
      சமர சிகாவல குமர ஷடானன சரவண குரவணியும்
      கொந்தள பார கிராத புராதனி கொண்க எனப்பரவும்
      கூதள சீதள பாதம் எனக்கருள் குஞ்ஜரி மஞ்ஜரிதோய்
      கந்த க்ருபாகர கோமள கும்ப கராதிப மோகரத
      கரமுக சாமர கர்ண விசால கபோல விதான
      எந்த மகோதர முஷிக வாகன சிந்துர பத்மமுக
      சிவசுத கனபதி விக்ன வினாயக தெய்வ சகோதரனே
      கனபதி தெய்வ சகோதரனே வினாயக
      ---.
      சேவல் விருத்தம் - காப்பு
      கொந்தார் குழல்வரி வண்டோ லிடுமியல் கொண்டேழ் இசைமருள
      குதலை மொழிந்தருள் கவுரி சுதந்தரி குமரன் இதம்பெறு பொற்
      செந்தாமரை கடம் நந்தா வனமுள செந்தூர் எங்குமுளான்
      திலக மயிலில்வரு குமரன் வரிசைபெறு சேவல் தனைப்பாட
      வந்தே சமர்ப்பொரு மிண்டாகிய கய மா முகனை கோறி
      வன் கோடொன்றை ஒடித்து பாரதம் மா மேருவில் எழுதி
      பைந்தார் கொடு பல ராவணன் அன்பொடு பணி சிவ லிங்கம் அதை
      பார்மிசை வைத்த வினாயகன் முக்க பரமன் துணையாமே
      முக்க பரமன் துணையாமே வினாயகன்
      ---.
      வேல் விருத்தம் - 1
      கம்சத்வனி - கண்ட சாபு
      மகரம் அளறிடை புரள உரககண பணமவுலி
      மதியும் இரவியும் அலையவே
      வளரெழிலி குடருழல இமையவர்கள் துயரகல
      மகிழ்வு பெறும் அறு சிறையவான்
      சிகரவரை மனை மறுகு தொறு ஞுளைய மகளிர் செழு
      செனெல்களொடு தரளம் இடவே
      ஜகசிர பகிரதி முதல் நதிகள்கதி பெற உததி
      திடர் அடைய ஞுகரும் வடிவேல்
      தகர மிருகமதம் என மணமருவு கடகலுழி
      தரு கவுளும் உறு வள் எயிறுன்
      தழை செவியும் ஞுதல்விழியும் உடைய ஒருகடவுள் மகிழ்
      தரு துணைவன் அமரர் குயிலும்
      குகரமலை எயினர்க்குல மடமயிலும் என இருவர்
      குயமொடமர் புரியு முருகன்
      குமரன் அறுமுகன் எதிரும் விருது நிசிசரர் அணிகள்
      குலையவிடு கொடிய வேலே
      குமரன்விடு கொடிய வேலே அறுமுகவன் விடு
      ---.
      மயில் விருத்தம் - 1
      கம்சட்வனி - கண்ட சாபு
      சந்தான புஷப பரிமள கிண்கிணீ முக
      சரண யுகளமிர்த்த ப்ரபா
      சன்ற சேகர முஷிகாருட வெகுமோக
      சத்ய ப்ரியாலிங்கன
      சிந்தாமணி கலச கர கட கபோல த்ரி
      யம்பக வினாயகன் முதற்
      சிவனைவலம் வரும் அளவில் உலகடைய நொடியில் வரு
      சித்ர கலாப மயிலாம்
      மந்தா கினி பிரபவ தரங்க விதரங்க
      வன சரோதய கிர்த்திகா
      வர புத்ர ராஜீவ பரியங்க தந்திய
      வராசலன் குலிசாயு
      இந்த்ராணி மாங்கில்ய தந்து ரக்ஷாபரண
      இகல்வேல் வினோதன் அருள்கூர்
      இமையகிரி குமரிமகன் ஏரு நீலக்ரீவ
      ரத்ன கலாப மயிலே
      ரத்ன கலாப மயிலே
      ரத்ன கலாப மயிலே
      ---.
      சேவல் விரித்தம் - 1
      கம்சத்வனி கண்ட சாபு
      உலகில் அனுதினமும் வரும் அடியவர்கள் இடரகல
      உரிய பர கதி தெரியவே
      உரகமணி எனவுழலும் இருவினையும் முறைபடவும்
      இருள்கள்மிடி கெட அருளியே
      கலகமிடும் அலகைகுறள் மிகுபணிகள் வலிமையொடு
      கடினமுற வரில் அவைகளை
      கண்ணை பிடுங்கியுடல் தன்னை பிளந்து சிற
      கைக்கொட்டி நின்றா டுமாம்
      மலைகள் நெறு நெறென அலைகள் சுவறிட அசுரர்
      மடிய அயில் கடவு முருகன்
      மகுட வட கிரியலைய மலையுமுலை வனிதை குற
      வரிசையின மகள் அவளுடன்
      சிலைகுலிசன் மகள்மருவு புயன் இலகு சரவண
      சிறுவன் அயன் வெருவ விரகிற்
      சிரமிசையில் வெகு சினமொ அடியுதவும் அறுமுகவன்
      சேவற் திரு துவஜமே
      சேவற்திரு துவஜமே அறுமுகவன்
      ---.
      வேல் விருத்தம் - 2
      மோகனம் - கண்ட சாபு
      வெங காள கண்டர் கை சூலமுன் திருமாயன்
      வெற்றிபெறு சுடர் ஆழியும்
      விபுதர் பதி குலிசமும் சூரன் குலங கல்லி
      வெல்லா என கருதியே
      சங்க்ராம நீஜயித்து அருளென தேவரும்
      சதுர்முகனும் நின்றிரப்ப
      சயிலமொடு சூரனுடல் ஒருனொடியில் உருவியே
      தனி ஆண்மை கொண்ட நெடுவேல்
      கங்காளி சாமுண்டி வராகி இந்த்ராணி
      கெளமாரி கமலாசன
      கன்னி நாரணி குமரி த்ரிபுரை பயிரவி அமலை
      கெளரி காமாக்ஷி சைவ
      சிங்காரி யாமளை பவானி கார்த்திகை கொற்றி
      த்ரியம்பகி அளித்த செல்வ
      சிறுவன் அறுமுகன் முருகன் நிருதர்க்கள் குலாந்தகன்
      செம்பொட்ற்றிருக்கை வேலே
      முருகன் திருக்கை வேலே அறுமுகவன்
      ---.
      மயில் விருத்தம் - 2
      மோகனம் - கண்ட சாபு
      சக்ர ப்ரசண்ட கிரி முட்ட கிழிந்து வெளி
      பட்டு க்ரவுஞ்ச சயிலன்
      தகர பெருங கனக சிகர சிலம்புமெழு
      தனிவெற்பும் அம்புவியும் எண்
      திக்கு தடங்குவடும் ஒ குலுங்கவரு
      சித்ர பதம் பெயரவே
      சேடன்முடி திண்டாட ஆடல்புரி வெஞ்சூரர்
      திடுக்கிட நடிக்கு மயிலாம்
      பக்கத்தில் ஒன்றுபடு பச்சை பசுன் கவுரி
      பத பதங கமழ்தரும்
      பகீரதி ஜடில யொகீசுரர உரிய
      பரம உபதேசம் அறிவி
      கைக்கு செழும் சரவணத்திற் பிறந்த ஒரு
      கந்த சுவாமி தணிகை
      கல்லார கிரியுருக வரு கிரண மரகத
      கலாபத்தில் இலகு மயிலே
      கலாபத்தில் இலகு மயிலே
      மரகத கலாபத்தில் இலகு மயிலே
      ---.
      சேவல் விருத்தம் - 2
      மோகனம் - கண்ட சாபு
      எரியனைய வியனவிரம் உளகழுது பல பிரம
      ராக்ஷதர்கள் மிண்டுகள் செயும்
      ஏவல் பசாசு நனி பேயிற் கொலை
      ஈன பசாசு களையும்
      கரி முருடு பெரியமலை பணையெனவும் முனையின் உயர்
      ககனமுற நிமிரும் வெங்க
      கடிகளையும் மடமடென மறுகி அலறிட உகிர்
      கர தடர்த்து கொத்துமாம்
      தரணிபல இடமென்வன மதகரிகள் தறிகள்பணி
      சமணர் கிடு கிடென நடனம்
      தண்டைகள் சிலம்புகள் கலிங்கலினென சிறிய
      சரண அழகொடு புரியும் வேள்
      திரிபுரம் அதெரிய நகைபுரியும் இறையவன் மறைகள்
      தெரியும் அரன் உதவு குமரன்
      திமிர தினகர முருக சரவண பவன் குகன்
      சேவற் திரு துவஜமே
      சேவற்திரு துவஜமே குகன் சேவற் திரு
      ---.
      வேல் விருத்தம் - 3
      சாரங்கா - கண்ட சாபு
      வேதாள பூதமொடு காளி காளத்ரிகளும்
      வெகுளுறு பசாச கணமும்
      வென் கழுகுடன் கொடி பருந்து செம் புவனத்தில்
      வெம்பசி ஒழிக்கவந்தே
      ஆதார கமடமுங கணபண வியாளமும்
      அடக்கிய தட கிரியெலாம்
      அலைய நடமிடு நெடுன் தானவர் நிணத்தசை
      அருந்தி புரந்த வைவேல்
      தாதார் மலர்ச்சுவனி பழனிமலை சோலைமலை
      தனிப்பரங குன்றேரகம்
      தணிகை செந்தூரிடை கழி ஆவினங்குடி
      தடங கடல் இலங்கை அதனிற்
      போதார் பொழில் கதிர்க்கா தலத்தினை
      புகழும் அவரவர் நாவினிற்
      புந்தியில் அமர்ந்தவன் கந்தன் முருகன் குகன்
      புங்கவன் செங்கை வேலே
      கந்தங்குகன் செங்கை வேலே முருகன் குகன்
      ---.
      மயில் விருத்தம் - 3
      சாரங்கா - கண்டசாபு
      ஆதார பாதளம் பெயர அடி மு
      தண்ட முகடது பெயரவே
      ஆடரவ முடிபெயர எண்டிசைகள் பெயர எறி
      கவுட்கிரி சரம் பெயரவே
      வேதாள தாளங்களு கிசைய ஆடுவார்
      மிக்க ப்ரியப்பட விடா
      விழிபவுரி கவுரி கண உளமகிழ விளையாடும்
      விச்தார நிர்த்த மயிலாம்
      மாதானு பங்கியெனு மாலது சகோதரி
      மகீதரி கிராத குலிமா
      மறைமுனி குமாரி சாரங்கனன் தனிவந்த
      வள்ளிமணி ஞூபுர மலர்
      பாதார விந்த சேகரனேய மலரும் உற்
      பலகிரி அமர்ந்த பெருமாள்
      படைனிருதர் கடகம் உடைபட நடவு பச்சை
      பசுந்தோகை வாகை மயிலே
      பசுந்தோகை வாகை மயிலே
      பச்சை பசுந்தோகை வாகை மயிலே
      ---.
      சேவல் விருத்தம் - 3
      சார்ங்கா - கண்டசாபு
      கரி முரட்டடி வலை கயிறெடு தெயிறு பற்
      களை இறுக்கியு முறைத்து
      கலகமிட்டி யமன் முற் கரமுற துடரும் அ
      காலத்தில் வேலு மயிலும்
      குருபர குகனும் அப்பொழுதில் நட்புடன் வர
      குரலொலி அடியரிடை
      குலத்தலறு முக்கிற்சின பேய்களை கொத்தி
      வட்டத்தில் முட்ட வருமாம்
      அரிய கொற்கையன் உடற்கருகும் வெப்பகையை உற்
      பனமுறை தத மிகவுமே
      அமணரை கழுவில் வைத்தவரு மெ பொடிதரித்து
      அவனிமெ திட அருளதார்
      சிவபுர அவதரி தவமு தினமணி
      சிவிகை பெற்றினிய தமிழை
      சிவன புற விரித்துரை செய் விற்பனன் நிகற்
      சேவற்திரு துவஜமே
      சேவற்திரு துவஜமே
      குருபரன் சேவற்திரு துவஜமே
      ---.
      வேல் விருத்தம் - 4
      மனோலயம் - ஆதி
      அண்டர் உலகும் சுழல எண்திசைகளும்
      அங்கியும் உடன் சுழலவே
      அலைகடல்களும் சுழல அவுணர் உயிரும்
      அகில தலமும் சுழலவே
      மண்டல நிறைந்த ரவி சதகோடி மதி உதிர
      மாண பிறங்கி அணியும்
      மணி ஒலியினிற் சகல தலமு மருள சிரம
      வகை வகையினிற் சுழலும் வேல்
      தண்டம் உடனுங கொடிய பாசம் கரிய
      சந்தம் உடனும் பிறைகள்போல்
      தந்தமுட ஞும் தழலும் வெங்கண் உடனும் பகடு
      தன்புறம் வரும் சமனை யான்
      கண்டு குலையும் பொழுதில் அஞ்ஜலென மெஞ்சரண
      கஞ்ஜம் உதவும் கருணைவேள்
      கந்தன் முருகன் குமரன் வண்குறவர் தம்புதல்வி
      கணவன் அடல் கொண்ட வேலே
      கந்தன் அடல் கொண்ட வேலே
      முருகன் அடல் கொண்ட வேலே
      ---.
      மயில் விருத்தம் - 4
      மனோலயம் - ஆதி
      யுககோடி முடிவின் மண்டிய சண்ட மாருதம்
      உதித்த தென்ற் அயன் அஞ்ஜவே
      ஒருகோடி அண்டர் அண்டங்களும் பாதாள
      லோகமும் பொற் குவடுறும்
      வெகுகோடி மலைகளும் அடியினில் தகர இரு
      விசும்பிற் பறக்க விரினீர்
      வேலை சுவற சுரர் நடுக்கங கொளச்சிறகை
      வீசி பறக்கு மயிலாம்
      நககோடி கொண்டவுணர் நெஞ்ஜம் பிளந்த நர
      கேசரி முராரி திருமால்
      நாரணன் கேசவன் சீதரன் தேவகீ
      நந்தனன் முகுந்தன் மருகன்
      முககோடி நதிகரன் குருகோடி அனவரதம்
      முகிலுலவு நீலகிரிவாழ்
      முருகனுமை குமரன் அறு முகன் நடவு விகடதட
      முரி கலாப மயிலே
      விகடதட முரிக்கலாப மயிலே
      சிறகை வீசி பறக்கு மயிலாம்
      ---.
      சேவல் விருத்தம் - 4
      மனோலயம் - ஆதி
      அச்ச பட குரல் முழக்கி பகட்டி அல
      றி கொட்டமி அமரிடும்
      அற்ப குற பலிகள் வெட்டுக்கள் பட்டுகடி
      அறு குழைகளை கொத்தியே
      பிச்சு சின உதறி எட்டுத்திசை பலிகள்
      இட்டு கொதித்து விறலே
      பெற்று சுடர் சிறகு தட்டி குதித்தியல்
      பெற கொக்கரித்து வருமாம்
      பொய் சித்திர பலவும் உட்க திரை ஜலதி
      பொற்றை கறு அயில்விடும்
      புட்தி ப்ரியத்தன் வெகு வித்தை குணக்கடல்
      புகழ் செட்டி சுப்ரமணியன்
      செச்சை புயத்தன் நவ ரத்ன க்ரிடத்தன் மொழி
      தித்திக்கு மு தமிழினை
      தெரியவரு பொதிகைமலை முனிவர குரைத்தவன்
      சேவற் திரு துவஜமே
      சேவற்திரு துவஜமே
      சுப்ரமணியன் சேவற்திரு துவஜமே
      ---.
      வேல் விருத்தம் - 5
      பாகேஸ்ரீ - கண்ட சாபு
      ஆலமாய் அவுணரு அமரரு அமுதமாய்
      ஆதவனின் வெம்மை ஒளிமீது
      அரியதவ முனிவரு இந்துவில் தண்ணென்ற்
      அமைந அன்பருக்கு முற்றா
      முலமாம் வினை அறு அவர்கள் வெம் பகையினை
      முடி இந்திரர்க்கும் எட்டா
      முடிவில் ஆனந்த நல்கும் பதம் அளி எந்த
      முதண்டமும் புகழும் வேல்
      ஏலமா யானையின் கோடதிற் சொரிமுத்தும்
      இன்பணைகள் உமிழு முத்தும்
      இனிவாடை மான் மதம் அகிலோடு சந்தனம்
      இலவங்க நறவமாருன்
      தாலமா மரமுதற் பொருள் படை திடும் எயினர்
      தரு வனிதை மகிழ்னன் ஐயன்
      தனினடம் புரி சமர முருகன் அறுமுகன் குகன்
      சரவண குமரன் வேலே
      முதண்ட மும்புகழும் வேல்
      சரவண குமரன் வேலே
      ---.
      மயில் விருத்தம் - 5
      பாகேஸ்ரீ - கண்டசாபு
      ஜோதியிம வேதண்ட கன்னிகையர் தந்த அபி
      நய துல்ய சோம வதன
      துங்க த்ரிசூலதரி கங்காளி சிவகாம
      சுந்தரி பயந்த நிரைசேர்
      ஆதினெடு முதண்ட அண்ட பகிரண்டங்கள்
      யாவுங கொடுஞ்ஜ சிறகினால்
      அணையுன் தனது பேடை அண்டங்கள் என்னவே
      அணைக்குங கலப மயிலாம்
      நீதிமரை ஓதண்ட முப்பத்து முக்கோடி
      நித்தரும் பரவு கிரியாம்
      நீலகிரி வேலவன் நிராலம்பன் நிர்ப்பயன்
      நிர்வியாகுலன் சங்குவாள்
      மாதிகிரி கோதண்ட தண்டன் தரித்த புயன்
      மாதவன் முராரி திருமால்
      மதுகைட வாரி திரு மருகன் முருகன் குமரன்
      வரமுதவு வாகை மயிலே
      முருகன் கலாப மயிலே
      வரமுதவு வாகை மயிலே
      ---.
      சேவல் விருத்தம் - 5
      பாகேஸ்ரீ - கண்ட சாபு
      தான இடும்புசெயு மோகினி இடாகினி
      தரித்த வேதாஅள பூதம்
      சருவ சூனியமும் அங்கிரியினால் உதறி
      தடிந்து சந்தோட முறவே
      கோனாகி மகவானும் வனாள வனாடர்
      குலவு சிறை மீள அட்ட
      குலகிரிகள் அசுரர் கிளை பொடியாக வெஞ்ஜிறைகள்
      கொட்டி எட்டி கூவுமாம்
      மானாகம் அக்கறுகு மானுடையன் நிர்த்தமிடு
      மாதேவனற் குருபரன்
      வானீரம் அவனியழல் காலாய் நவ கிரகம்
      வாழ்னாள் அனைத்தும் அவனாம்
      சேனா பதி தலைவன் வேதாவினை சிறைசெய்
      தேவாதி க கரசு
      டேனான மைக்கடலின் மீனானவற் கினியன்
      சேவற் திரு துவஜமே
      சேவற் திரு துவஜமே
      குருபரன் சேவற் திரு துவஜமே
      ---.
      வேல் விருத்தம் - 6
      சிந்துபைரவி - கண்ட சாபு
      பந்தாடலிற் கழங காடலிற் சுடர் ஊசல்
      பாடலினொ டாடலின் எலாம்
      பழந்தெவ்வர் கட்கம் துணி இந்திரர அரசு
      பாலித்த திறல் புகழ்ந்தே
      சந்தாரு நாண்மலர் குழல் அரம்பையர்களும்
      சசிமங்கை அனையர்த்தாமுன்
      தன்னை அன்பொடு பாடி ஆடும் ப்ரதாபமும்
      தலைமையும் பெற்ற வைவேல்
      மந்தாகினி தரங்க சடிலரு அரிய
      மந்த்ற்ற உபதேச நல்கும்
      வரதேசிகன் கிஞ்சுக சிகா லங்கார
      வாரண கொடி உயர்த்தோன்
      கொந்தார் மலர கடம்பும் செச்சை மாலையும்
      குவளையும் செங காந்தளும்
      கூதாள மலரும் தொடுத்தணியு மார்பினன்
      கோல திருக்கை வேலே
      தேசிகன் கோல திருக்கை வேலே
      ---.
      மயில் விருத்தம் - 6
      சின்துப்கைரவி - கண்ட சாபு
      சங்கார காலமென அரிபிரமர் வெருவுற
      சகல லோகமு நடுங்க
      சந்த்ர சூரியர் ஒளித்து இந்த்ராதி அமரரும்
      சஞ்சல பட உமையுடன்
      கங்காளர் தனி நாடகம் செய்தபோ அந்த
      காரம் பிறன்டிட நெடும்
      ககன கூடமு மேலை முகடு முடிய பசுங
      கற்றை கலாப மயிலாம்
      சிங்கார குங்கும படீர ம்ருகமத யுகள
      சித்ர பயோதர கிரி
      தெய்வ வாரண வனிதை புனிதன் குமாரன்
      திருத்தணி மகீதரன் இருங
      கெங்கா தரன் கீதம் ஆகிய சுராலய
      க்ருபாகரன் கார்த்திகேயன்
      கீர்த்திமா அசுரர்கள் மடிய க்ரவுஞ்சகிரி
      கிழிபட நடாவு மயிலே
      பசுங கற்றை கலாப மயிலாம்
      ---.
      சேவல் விருத்தம் - 6
      சின்டுப்கைரவி - கண்ட சாபு
      பங்கமாகிய விட புயங்கமா படமது
      பறித்து சிவ அருந்தி
      பகிரண்ட முழுதும் பறந்து நிர்த்தங்கள் புரி
      பச்சை கலாப மயிலை
      துங்கமாய் அன்புற்று வன்புற்ற் அடர்ந்துவரு
      துடரும் பிரேத பூத
      தொகுதிகள் பசாசுகள் நிசாசரர் அடங்கலும்
      துண்ட பட கொத்துமாம்
      மங்கை யாமளை குமரி கங்கை மாலினி கவுரி
      வஞ்ஜி நான்முகி வராகி
      மலையரையன் உதவு அமலை திருமுலையில் ஒழுகுபால்
      மகிழ அமுதுண்ட பாலன்
      செங கணன் மதலையிடம் இங்குளான் என்னு நர
      சிங்கமாய் இரணியனுடல்
      சிந்த உகிரிற்கொடு பிளந்த மால் மருமகன்
      சேவற் திரு துவஜமே
      மால் மருமகன் சேவற்திரு துவஜமே
      வேல் விருத்தம் - 7
      பீம்பளா - கண்ட சாபு
      அண்டங்கள் ஒருகோடி ஆயினுங குலகிரி
      அனதமாயினு மேவினால்
      அடைய உருவி புறம் போவதல் லது தங்கல்
      அறியாது சூரனுடலை
      கண்டம் படப்பொருது காலனுங குலைவுறுங
      கடியகொலை புரியும் அது செங
      கனகா சலத்தை கடைந்து முனை யிட்டு
      கடுக்கின்ற துங்க நெடுவேல்
      தண்டன் தனு திகிரி சங்கு கட்கம் கொண்ட
      தானவான் தகன் மாயவன்
      தழல்விழி கொடுவரி பருவுடற் பற்றலை
      தமனி சுடிகையின் மேல்
      வண்டொன்று கமலத்து மங்கையும் கடல் ஆடை
      மகையும் பதம் வருடவே
      மதுமலர கண்துயில் முகுந்தன் மருகன் குகன்
      வாகை திருக்கை வேலே
      வாகை திருக்கை வேலே
      குகன் வாகை திருக்கை வேலே
      ---.
      மயில் விருத்தம் - 7
      பீம்பலா - கண்ட சாபு
      தீர பயோததி கதிக்கும் ஆகாயமும்
      ஜகதலமு நின்று சுழல
      திகழ்கின்ற முடிமவுலி சிதறிவிழ வெஞ்ஜிகை
      தீ கொப்புளிக்க வெருளும்
      பார பணாமுடி அனந்தன் முதல் அரவெலாம்
      பதைபதைத்தே நடுங்க
      படர்ச்சக்ர வாளகிரி துகள்பட வையாளிவரு
      பச்சை ப்ரவாள மயிலாம்
      ஆர ப்ரதாப புளகித மதன பாடீர
      அமிர்த்த கலச கொங்கையாள்
      ஆடுமயில் நிகர்வல்லி அபிராம வல்லி பர
      மானந்த வல்லி சிறுவன்
      கோர த்ரிசூல த்ரியம்பக ஜடாதார
      குருதரு திருத்தணிகை வேள்
      கொடிய நிசிசரர் உதரம் எரிபுகுத விபுதர் பதி
      குடிபுகுத நடவு மயிலே
      பச்சை ப்ரவாள மயிலாம்
      வைய்யளி வருபச்சை ப்ரவாள மயிலாம்
      ---.
      சேவல் விருத்தம் - 7
      பீம்பலா - கண்ட சாபு
      வீறான காரிகதி முன்னோடி பின்னோடி
      வெங்க குறும்புகள் தரும்
      விடு பேய்களே கழுவன் கொலைசாவு கொள்ளிவாய்
      வெம் பேய்களை துரத்தி
      பேறான ஏசரவண பவாஏ என்னு மந்திரம்
      பேசி உச்சாடனத்தார்
      பிடர் பிடித்து கொத்தி நகனுதியினால் உற
      பிய்ச்சு களி தாடுமாம்
      மாறாத முயலகன் வயிற்றுவலி குன்மம்
      மகோதரம் பெருவியாதி
      வாத பித்தம் சிலேர்ப்பனம் குட்ட முதலான
      வல்ல பிணிகளை மாற்றியே
      சீறாத ஓராறு திருமுக மலர அடியர்
      சி இருக்கு முருகன்
      சிலைகள் உரு இட அயிலை விடுகுமர குருபரன்
      சேவற் திரு துவஜமே
      செவற் திரு துவஜமே
      குருபரன் சேவற் திரு துவஜமே
      ---.
      வேல் விருத்தம் - 8
      மாண - கண்ட சாபு
      மாமுதல் தடிந்து தண் மல்குகிரி யூடு போய்
      வலிய தானவர் மார்பிடம்
      வழிகண்டு கமல பவனத்தனை சிறையிட்டு
      மகவான் தனை சிறைவிடுத்து
      ஓமவிருடி தலைவர் ஆசிபெற்ற் உயர்வானில்
      உம்பர் சொற்றுதி பெற்று நா
      உடைய கீரன் தனது பாடல் பெற்றுலகு தனில்
      ஒப்பில் புகழ் பெற்ற வைவேல்
      சோம கலச ப்ரபா லங்கார தர ஜடா
      சூடி காலாந்த காலர்
      துங்க ரக்ஷக த்ரோண கட்க குலிசஞ்சூல
      துரக கேசர மாம்பர
      சேம வடவாம்பு பரண சங்காபரண
      திகம்பர த்ரியம்பக மகா
      தேவ நந்தன கஜானன சகோதர குகன்
      செம்பொற்றிருக்கை வேல்
      ஒப்பில் புகழ் பெற்ற வைவேல்
      ---.
      மயில் விருத்தம் - 8
      மாண - கண்ட சாபு
      செக்கர் அளகேச சிகரத்ன புரி ராசினிரை
      சிந்த புராரி அமிர்த்தம்
      திரு பிறந்ததென ஆயிரம் பகுவாய்கள்
      தீவிஷங கொப்புளிப்ப
      சக்ரகிரி சூழவரு மண்டலங்கள் சகல
      சங்கார கோர நயன
      தறுகண் வாசுகி பணா முடி எடு உதருமொரு
      சண்ட பரசண்ட மயிலாம்
      விக்ரம கிராதகுலி புனமீ உலாவிய
      விருத்தன் திருத்தணிகை வாழ்
      வேலாயுதன் பழ வினைத்துயர் அறுத்தெனை
      வெளிப்பட உணர்த்தி அருளி
      துக்கசுக பேதமற வாழ்வித்த கந்த
      சுவாமி வாகனம் ஆனதோர்
      துரக கஜ ரதகடக விகடதட நிருதர் குல
      துஷடர் நிஷடுர மயிலே
      சண்ட ப்ரசண்ட மயிலாம்
      ---.
      சேவல் விருத்தம் - 8
      மாண - கண்ட சாபு
      வந்து அர்ப்பரிக்கும் அம்மிண்டுவகை தண்டதரன்
      வலிய தூதுவர் பில்லி பேய்
      வஞ்ஜினாற் பேதுற மகாபூதம் அஞ்ஜிட
      வாயினும் காலினாலும்
      பந்தாடியே மிதித்து கொட்டி வடவை செம்
      பவளமா அதிகாசாமா
      பசும் சிறைத்தலமிசை தணியயிற் குமரனை
      பார அன்புற கூவுமாம்
      முந ஆக பலகை சங்காகமத்தர் தொழ
      முன்பேறு முத்தி முருகன்
      முது கானக எயினர் பண்டோ அயிற் கணை
      முனிந்தே தொடுத்த சிறுவன்
      சிந்தா குலத்தை அடர் கந்தா எனப்பரவு
      சித்தர கிரங அறுமுகன்
      ஜெய வெற்றிவேள் புனிதன் நளினத்தன் முடி குற்றி
      சேவற் திரு துவஜமே
      சேவற் திரு துவஜமே
      ---.
      வேல் விருத்தம் - 9
      துர்கா - கண்ட சாபு
      தேடுதற அரிதான நவமணி அழுத்தியிடு
      செங்கரனை அமுதம் வாய்கொள்
      ஜயமளி அருள் என என உவப்பொடு வந்து
      சேவடி பிடித்த தெனவும்
      நீடுமை கடல் சுட்டதிற அடைந எழுகடலும்
      நீயெமை காக்க எனவும்
      நிபிடமுடி நெடியகிரி எந்தமை கா எனவும்
      நிகழ்கின்ற துங்க நெடுவேல்
      ஆடுமை கணபண கதிர்முடி புடை எயிற்று
      அடலெரிக்- கொடிய உக்ர
      அழால் விழி படுகொலை கடைய கட்செவியினுக்கு
      அரசினை தனியெடுத்தே
      சாடு மைப்புயல் என பசுனிற சிகரியில்
      தாய் திமி துட நடிக்கும்
      ஷமரமயில் வாகனன் அமரர்த்தொழு நாயகன்
      ஷண்முகன் தங்கை வேலே
      ஷண்முகன் தங்கை வேலே
      மயில் வாகனன் தங்கை வேலே
      ---.
      மயில் விருத்தம் - 9
      டுர்கா - கண்ட சாபு
      சிகர தமனிய மேருகிரி ரஜதகிரி நீல
      கிரி எனவும் ஆயிரமுக
      தெய்வனதி காளிந்தி என நீழலிட்டு வெண்
      திங்கள் சங்கெனவும் ப்ரபா
      நிகர் எனவும் எழுதரிய நேமியென உலகடைய
      நின்ற மா முகில் என்னவே
      நெடியமுது ககன முகடுற வீசி நிமிருமொரு
      நீல கலாப மயிலாம்
      அகரு மரு மணம் வீசு தணிகை அபிராம வேள்
      அடியவர்கள் மிடி அகலவே
      அடல் வேல் கரத்தசைய ஆறிரு புயங்களில்
      அலங்கற்குழாம் அசையவே
      மகரகன கோமள குண்டலம் பல அசைய
      வல்லவுணர் மனம் அசைய மால்
      வரை அசைய உரகபிலம் எண்டிசை
      வைய்யளி ஏறு மயிலே
      வையாளீ ஏறு மயிலே
      நீல கலாப மயிலாம்
      ---.
      சேவல் விருத்தம் - 9
      டுர்கா - கண்ட சாபு
      உருவாய் எவர்க்கு நினை அரிதாய் அனைத்துலகும்
      உளதாய் உயிர உயிரதாய்
      உணர்வாய் விரிப்பரிய உரைதேர் பரப்பிரம
      ஒளியாய் அருட்பொருளதாய்
      வரும் ஈசனை களப முகன் ஆதரி திசையை
      வலமாய் மதிக்க வருமுன்
      வளர்முருகனை கொண்டு தரணிவலம் வந்தான் முன்
      வைகு மயிலை புகழுமாம்
      குருமா மணித்திரள் கொழிக்கும் புனற் கட
      குன்றுதோ றாடல் பழனம்
      குலவு பழமுதிர் சோலை ஆவினன் குடி பரங
      குன்றிடம் திருவேரகம்
      திரையாழி முத்தை தரங கை சிந்தி
      தெறித்திடும் செந்தி நகர் வாழ்
      திடமுடைய அடியவர் தொழு பழையவன் குலவுற்ற
      சேவற் திரு துவஜமே
      சேவற் திரு துவஜமே
      பழையவன் சேவற் திரு துவஜமே
      ---.
      வேல் விருத்தம் - 10
      மத்யமாவதி - கண்ட சாபு
      வலாரி அலலாகுலம் இலா அகலவே கரிய
      மாலறியு நாலு மறை ஞூல்
      வலான் அலைவிலா நசிவிலான் மலைவிலான் இவர்
      மனோலய உலாசம் உறவே
      உலாவரு கலோல மகராலய ஜலங்களும்
      உலோகனிலை நீர்னிலை இலா
      ஒலாவொலி நிசாசரர் உலோகமதெலாம் அழல்உலாவிய நிலாவு கொலைவேல்
      சிலாவட கலா வினொதவா சிலிமுகா விலொச
      நா சின சிலா தணிவிலா
      சிலாமலர் எலா மதிய மோதி மதி சேலொழிய
      சேவக சராப முகிலாம்
      விலாச கலியாண கலை சேர பசு மேலைமுலை
      மேவிய விலாச அகலன்
      விலாழி யினிலாழி அகல் வானில் அனல் ஆரவிடு
      வேழம் இளைன்யன் கை வேலே
      வேலே வேழம் இளைன்யன் கை
      வேழம் இளைன்யன் கை வேலே
      ---.
      மயில் விருத்தம் - 10
      மத்யமாவதி - கண்ட சாபு
      நிராஜத விராஜத வரோதய பராபர
      நிராகுல நிராமய பிரா
      நிலாதெழு தலால் அறமிலா நெறி யிலா
      நிலாவிய உலாச இதயன்
      குராமலி விராவுமிழ் பராரை அமரா நிழல்
      குரானிழல் பராவு தணிகை
      குலாசல சராசரம் எலாம் இனிதுலாவிய
      குலாவிய கலாப மயிலாம்
      புராரி குமரா குருபரா எனும் வரோதய
      புராதன முராரி மருகன்
      புலோமஜை சலாமிடு பலாசன வலாரி புக
      லாகும் அயில் ஆயுத நெடுன்
      தராதல கிராதர்கள் குலாதவ அபிராம வல
      சாதனன் வினோத சமரன்
      தடாரி விகடாசுரன் குடாரித படா திகழ்
      ஷடானனன் நடாவு மயிலே
      மயிலே ஷடானனன் நடாவு
      ஷடானனன் நடாவு மயிலே
      ---.
      சேவல் விருத்தம் - 10
      மத்யமாவதி - கண்ட சாபு
      மகர ஜலனிதி சுவற உரகபதி முடிபதற
      மலைகள் கிடு கிடெனவே
      மகுடகுட வடசிகரி முகடு பட படபடென
      மதகரிகள் உயிர் சிதறவே
      ககனமுதல் அண்டங்கள் கண்ட துண்டப்பட
      கர்ஜி இரை அலறியே
      காரையாழின் நகரர் மாரை பிளந்து சிற
      கைக்கொட்டி நின்றாடுமாம்
      சுகவிமலை அமலை பரை இமையவரை தரு குமரி
      துடியிடை அனகை அசலையாள்
      சுதன் முருகன் மதுரமொழி உழைவனிதை
      இபவனிதை துணைவன் எனதிதய நிலையோன்
      திகுட திதிகுட தகுடதி தகுட
      செக்கண செ கண என
      திருனடனம் இடுமயிலில் வருகுமர குருபரன்
      சேவற் திரு துவஜமே
      துவஜமே சேவற் திரு
      சேவற் திரு துவஜமே
      ---.
      சேவல் விருத்தம் - 11
      மத்யமாவதி - கண்ட சாபு
      பூவிலியன் வாசவன் முர்ரரி முனிவோர் அமரர்
      பூசனை செய்வோர் மகிழவே
      பூதரமும் எழுகடலும் ஆட அமுதூற அனு
      போக பதினால் உலகமும்
      தாவுபுகழ் மீறிட நிசாசரர்கள் மாள வரு
      தானதவ ஞூல் தழையவே
      தாள் வலியதான பல பேய்கள் அஞ்ஜ சிறகு
      கொட்டி குரற் பயிலுமாம்
      காவுகனி வாழைபுளி மாவொடுயர் தாழை கமு
      காடவிகள் பரவு நடன
      காரண மெய்ன்யானபரி சீரணவ் அர அசன
      கனகமயில் வாகனன் அடற்
      சேவகன் இரஜத இலக்கண உமைக்கொரு
      சிகாமணி சரோருக முக
      சீதள குமார கிருபாகர மனோகரன்
      சேவற் திரு துவஜமே
      துவஜமே சேவற் திரு
      சேவற் திரு துவஜமே
      ---.
      மயில் விருத்தம் - 11
      மத்யமாவதி
      என்னாளும் ஒருசுனையில் இந்த்ர நீல போ
      இலங்கிய திருத்தணிகை வாழ்
      எம்பிரான் இமையவர்கள் தம்பிரான் ஏரும் ஒரு
      நம் பிரானான மயிலை
      பனாளும் அடிபரவும் அருணகிரி நாதன்
      பகர்ந்த அதிமதுர சித்ர
      பாடல்தரு மாசறு வேல்விருத்தம் ஒருபத்தும்
      மாசறு மயில் விருத்தம் ஒருபத்தும்
      படிப்பவர்கள் ஆதி மறை ஞூல்
      மன்னான் முகம் பெறுவர் அன்னம் ஏறப்பெறுவர்
      வாணி தழுவ பெறுவரால்
      மகராலயம் பெறுவர் உவணம் ஏறப்பெறுவர்
      வாரிஜ மடந்தை யுடன் வாழ்
      அன்னயகம் பெறுவர் அயிராவதம்
      அமுதா சனம் பெறுவர் மேல்
      ஆயிரம் பிறைதொழுவர் சீர் பெறுவர் பேர்
      அழியா வரம் பெறுவரே.
      அழியா வரம் பெறுவரே
      அழியா வரம் பெறுவரே
      ---.
      ------------
      தீறூ வாகூப்பூ -
      1. சீர்ப்பாத வகுப்பு
      காவடிச்சிந்து - கண்ட சாபு 212
      உததியிடை கடவு மரகத வருண குல துரக
      உபலளித கனகரத சதகோடி சூரியர்கள்
      உதயமென அதிகவித கலப கக மயிலின் மிசை
      யுகமுடிவின் இருளகல ஒருஜோதி வீசுவதும்
      உடலும் உடல் உயிரு நிலை பெறுதல் பொருளென உலகம்
      ஒருவிவரு மனுபவன சிவயோக சாதனையில்
      ஒழுகும் அவர் பிறிது பரவசம் அழிய விழி செருகி
      உணர்வு விழி கொடு நியதி தமதூடு நாடுவதும்
      உரு எனவும் அரு உளதெனவும் இலதெனவும்
      உழலுவன பரசமய கலை ஆரவாரம் அற
      உரை அவிழ உணர்வவிழ உளமவிழ உயிரவிழ
      உளபடியை உணருமவர் அனுபூதி ஆனதுவும்
      உறவுமுறை மனைவிமக எனும் அலையில் எனதிதய
      உருவுடைய மலினபவ ஜலராசி ஏறவிடும்
      உறுபுணையும் அறிமுகமும் உயரமரர் மணிமுடியில்
      உறைவதுவும் உலைவிலதும் அடியேன் மனோரதமும்
      இதழி வெகு முக ககன நதி அறுகு தறுகண் அர
      இமகிரண தருண உடு பதி சேர் ஜடாமவுலி
      இறைமகிழ உடைமணியொ அணிசகலமணி கலென
      இமையமயில் தழுவும் ஒரு திருமார்பில் ஆடுவதும்
      இமையவர்கள் நகரிலிறை குடிபுகுத நிருதர்வயிற்
      எறிபுகுத உரகர்ப்பதி அபிஷேகம் ஆயிரமும்
      எழுபிலமு நெறு நெறென முறிய வடகுவ இடிய
      இளைய தளர் நடை பழகி விளையாடல் கூருவதும்
      இனியகனி கடலைபயற் ஒடியல்பொரி அமுது செயும்
      இலகுவெகு கடவிகட தடபார மேருவுடன்
      இகலி முது திகிரிகிரி நெரிய வளை கடல் கதற
      எழு புவியை ஒரு நொடியில் வலமாக ஓடுவதும்
      எறுழி புலி கரடி அரி கரி கடமை வருடை உழை
      இரலை மரை இரவு பகல் இரைதேர் கடாடவியில்
      எயினர் இடும் இதண் அதனில் இளகு தினை கிளி கடிய
      இனிது பயில் சிறுமி வளர் புனமீ உலாவுவதும்
      முதல வினை முடிவில் இருபிறை எயிறு கயிறுகொடு
      முது வடவை விழி சுழல வருகால தூதர்க்கெட
      முடுகுவதும் அருணெறியில் உதவுவதும் நினையும் அவை
      முடிய வருவதும் அடியர் பகை கோடி சாடுவதும்
      மொகுமொகென மதுப முரல் குரவு விளவினது குறு
      முறியு மலர் வகுள தள முழுனீல தீவரமும்
      முருகு கமழ்வதும் அகில முதன்மை தருவதும் வ்ரத
      முனிவர் கருதரிய தவ முயல்வார் தபோ பலமும்
      முருக சரவண மகளிர் அறுவர் முலை ஞுகரும் அறு
      முக குமர சரணமென அருள்பாடி ஆடிமிக
      மொழி குழற அமுது தொழுதுர் உகுமவர் விழி அருவி
      முழுகுவதும் வருகவென அறைகூவி ஆளுவதும்
      முடிய வழி அடிமை எனும் உரிமை
      துல அறிய மழலை மொழி கொடு பாடும் ஆசுகவி
      முதல மொழிவன நிபுண மதுப முகர் இத மவுன
      முகுள பரிமள நிகில கவிமாலை சூடுவதும்
      மதசிகரி கதறி முது முதலை கவர்த்தர நெடிய
      மடு நடுவில் வெருவி ஒரு விசை ஆதிமுலம் என
      வருகருணை வரதன் இகல் இரணியனை ஞுதி உகிரின்
      வகிரும் அடல் அரி வடிவு குறளாகி மா பலியை
      வலிய சிறை இட வெளியின் முகடு கிழிபட முடிய
      வளரு முகில் நிருதன் இரு பது வாகு பூதரமும்
      மகுடம் ஒருபது முறிய அடு பகழி விடு குரிசில்
      மருக நிசிசரர் தளமும் வரு தாரகா சுரனும்
      மடிய மலை பிளவு பட மகர ஜலனிதி குறுகி
      மறுகி முறையிட முனியும் வடிவேல நீலகிரி
      மருவு குருபதி யுவதி பவதி பகவதி மதுர
      வசனி பயிரவி கவுரி உமையாள் த்ரிசூல தரி
      வனஜை மதுபதி அமலை விஜயை திரிபுரை புனிதை
      வனிதை அபினவை அனகை அபிராம நாயகி தன்
      மதலை மலை கிழவன் அனுபவன் அபயன் உபய சதுர்
      மறையின் முதல் நடு முடிவின் மணனாறு சீறடியே
      ---.
      2. தேவேந்திர சங்க வகுப்பு
      புன்னாக வராளி - சங்கீர்ண ருபகம் 2 களை 22
      தரணியில் அரணிய முரண் இரணியன் உடல்தனை நக ஞுதிகொடு
      சாடோ ங்கு நெடுன் கிரி ஓடேந்து பயங்கரி
      தமருக பரிபுர ஒலிகொடு நடனவில் சரணிய சதுர் மறை
      தாதாம்புய மந்திர வேதாந்த பரம்பரை
      சரிவளை விரிசடை எரிபுரை வடிவினள் சததள முகுளித
      தாம் ஆங்குச மென் திரு தாளாந்தர அம்பிகை
      தரு பதி சுரரொடு சருவிய அசுரர்கள் தட மணிமுடி பொடி
      தான் ஆம்படி செங்கையில் வாள் வாங்கிய சங்கரி
      இரண கிரண மட மயில் ம்ருகமத புளகித இளமுலை இள
      நீர் தாங்கி ஞுடங்கிய ஞூல்போன்ற மருங்கினள்
      இறுகிய சிறு பிறை எயிருடை யமபடர் எனதுயிர் கொள வரின்
      யான் ஏங்குதல் கண்டெதிர் தான் ஏன்று கொளும் குயில்
      இடுபலி கொடு திரி இரவலர் இடர் கெடவிடு மன கரதல
      ஏகாம்பரை இந்திரை மொகாங்க சுமங்கலை
      எழுதிய படமென இருள் அறு சுடரடி இணை தொழு மவுனிகள்
      ஏகாந்த சுகம் தரு பாசாங்குச சுந்தரி
      கரணமு மரணமு மலமொடும் உடல்படு கடுவினை கெடனினை
      காலாந்தரி கந்தரி நீலாஞ்ஜனி நஞ்சுமிழ்
      கனல் எரி கணபண குணமணி அணிபணி கனவளை மரகத
      காசாம்பர கஞ்சுளி தூசாம் படி கொண்டவள்
      கனைகழல் நினையலர் உயிரவி பயிரவி கவுரி கமலை குழை
      காதார்ந்த செழுங கழுனீர் தோய்ந்த பெருன் திரு
      கரைபொழி திருமுக கருணையில் உலகெழு கடனிலை பெறவளர்
      காவேந்திய பைங்கிளி மா சாம்பவி தந்தவன்
      அரணெடு வடவரை அடியொடு பொடிபட அலைகடல் கெட அயில்
      வேல் வாங்கிய செந்தமிழ் ஞூலோன் குமரன் குகன்
      அறுமுகன் ஒருபதொ இருபுயன் அபினவன் அழகிய குறமகள்
      தார்வேய்ந்த புயன் பகையா மாந்தர்கள் அந்தகன்
      அடன்மிகு கடதட விகடித மதகளிற் அனவரதமும்
      அகலா மாந்தர்கள் சிந்தையில் வாழ்வாம் படி செந்திலில்
      அதிபதி என வரு பொரு திரல் முருகனை அருள்பட மொழிபவர்
      ஆராய்ந்து வணங்குவர் தேவேந்திர சங்கமே.
      ---.
      3. வேல் வகுப்பு
      மோகனம் - ஆதி திச்ர நடை எடுப்பு அதீதம்
      பருத்த முலை சிறுத்த இடை வெளுத்த நகை
      கறுத்த குழல் சிவத்த இதழ் மற சிறுமி விழிக்கு நிகராகும்
      பனை கை முக பட கரட தவள
      கஜ கடவுள் பதத்திடு நிகளத்து முளை தெறிக்க அரமாகும்
      பழுத்த முது தமிழ பலகை இருக்கும் ஒரு
      கவி புலவன் இசை குருகி வரை குகையை இடித்து வழிகாணும்
      பசி அலகை முசி அழுது முறை படுதல்
      ஒழி அவுணர் உர உதிர நிண தசைகள் புசிக்க அருள் நேரும்
      சுரர்க்கு முனி வரர்க்கு மக பதிக்கும் விதி
      தனக்கும் அரி நரர் தமக்கும் உறும் இடுக்கண் வினை சாடும்
      சுடர பரிதி ஒளிப்ப நில ஒழுக்கு மதி
      ஒளிப்ப அலை அடக்கு தழல் ஒளிர் ஒளி பிரபை வீசும்
      துதிக்கும் அடியவர கொருவர் கெடுக்க இடர்
      நினைக்கின் அவர் குலத்தை முதல் அற களையும் எனக்கொர் துணை ஆகும்
      சொலற்கரிய திரு புகழை உரை அவரை
      அடுத்த பகை அறு எறிய உறுக்கி எழும் அறத்தை நிலை காணும்
      தருக்கி நமன் முருக்க வரின் எருக்கு மதி
      தரித்த முடி படைத்த விறல் இறை கழற்கு நிகராகும்
      தலத்தில் உள கண தொகுதி களிப்பின் உண
      அழை பதென மலர கமல கரத்தின் முனை விதிர்க்க வளைவாகும்
      தனித்து வழி நடக்குமென இடத்தும் ஒரு
      வலத்தும் இரு புறத்தும் அருகடு இரவு பகற்றுணைய தாகும்
      சலத்து வரும் அரக்கருடல் கொழுத்து வளர்
      பெருத்த குடர் சிவத்த தொடை என சிகையில் விருப்ப மொடு சூடும்
      திரை கடலை உடைத்து நிறை புனற் கடிது
      குடி உடையும் உடை படைய அடை உதிர நிறைத்து விளையாடும்
      திசை கிரியை முதற் குலிசன் அறுத்த சிறை
      முளைத்த தென முகட்டின் இடை பறக்க அற விசை அதிர ஓடும்
      சின அவுணர் எதிர்த்த ரண களத்தில் வெகு
      குறை தலைகள் சிரி எயிரு கடித்து விழி விழி அலற மோதும்
      திருத்தணியில் உதி அருளும் ஒருத்தன் மலை
      விருத்தன் என உளத்தில் உறை கருத்தன் மயில் நடத்து குகன் வேலே
      என உளத்தில் உறை கருத்தன் மயில் நடத்து குகன் வேலே
      ---.
      4. திருவேளைக்காரன் வகுப்பு
      நாதனாமக்ரிய - கண்ட சாபு 212
      ஆனபய பத்தி வழி பாடு பெறு முத்தி அது
      வாக நிகழ் பத்த ஜன வார காரனும்
      ஆர மதுரித்த கனி காரண முதல் தமைய
      நாருடன் உண கை பரி தீமை காரனும்
      ஆகமம் விளை அகில லோகமு நொடி பளவில்
      ஆசையொடு சுற்றும் அதி வே காரனும்
      ஆணவ அழு கடையும் ஆவியை விளக்கி அனு
      பூதி அடைவித்த தொரு பார்வை காரனும்
      ஆடலைவுப அமரர் நாடது பிழைக்க அம
      ராவதி புரக்கும் அடல் ஆண்மை காரனும்
      ஆடக விசித்ர கன கோபுர முகப்பில் அரு
      ணாபுரியில் நிற்கும் அடையாள காரனும்
      ஆயிர முகத்து நதி பாலனு மக அடிமை
      ஆனவர் தொடுத்த கவி மாலை காரனும்
      ஆறுமுக வித்தகனும் ஆறிருபு அரசும்
      ஆதி முடிவற்ற திரு நா காரனும்
      யானென தென சருவும் ஈன ச எவரும்
      யாரும் உணதற் கரிய நேர்மை காரனும்
      யாது நிலை அற்றலையும் ஏழு பிறவி கடலை
      ஏறவிடு நற்கருணை ஓட காரனும்
      ஏரகம் இடைக்கழி சிராமலை திரு பழனி
      ஏரணி செரு தணியில் வாச காரனும்
      ஏழையின் இரட்டை வினை ஆயதொருடர் சிறை
      இராமல் விடுவி அருள் நியா காரனும்
      யாமளை மணக்கு முக சாமளை மணி குயிலை
      யாயென அழை உருகு நே காரனும்
      ஏதம் அற நிச்சய மனோலய விளக்கொளியும்
      யாக முனிவர குரிய காவற் காரனும்
      ஈரிரு மரு புடைய சோனை மத வெற்பி வரும்
      யானை அளவில் துவளும் ஆசை காரனும்
      ஏடவிழ் கடப்ப மலர் கூதள முடிக்கும் இளை
      யோனும் அறிவிற் பெரிய மேன்மை காரனும்
      வானவர் பொருட்டு மகவானது மலர்
      வாவியில் உதித்த முக மா காரனும்
      வாரண பதி குதவு நாரணன் உவக்கு மரு
      மானும் அயனை கறுவு கோப காரனும்
      வாழி என நித்த மறவாது பரவிற் சரண
      வாரிஜம் அளிக்கும் உப கார காரனும்
      மாடமதில் சுற்றிய த்ரிகூட கிரியிற் கதிர் செய்
      மா நகரியிற் கடவுள் ஆ காரனும்
      வாள் எயிறதுற்ற பகுவாய் தொறு நெரு உமிழும்
      வாசுகி எடு உதறும் வாசி காரனும்
      மாசில் உயிரு உயிரும் ஆசில் உணர்வு உணர்வும்
      வானில் அணுவு அணு உபா காரனும்
      வாதனை தவிர்த்த குரு நாதனும் வெளிப்பட ம
      காடவியில் நிற்ப தோர் சகா காரனும்
      மீனவனு மிக்க்க புலவோரும் உறை பொற் பலகை
      மீதமர் தமிழ் த்ரய வினோத காரனும்
      வேரி மதுமத்த மதி தாதகி கடுக்கை புனை
      வேணியர் துதிப்ப தொரு கேள்வி காரனும்
      வேலை துகள் பட்டு மலை சூரன் உடல் பட்டுருவ
      வேலை உறவிட்ட தனி வேலை காரனும்
      மீனுலவு கிர்த்திகை குமாரனு நினைக்கும் அவர்
      வீடு பெறவை அருள் உதார காரனும்
      மேனை அரிவை குரிய பேரனு மதித்த திறல்
      வீரனும் அரக்கர் குல சூறை காரனும்
      வேதியர் வெறுக்கையும் அனாதி பர வச்துவும் வி
      சாகனும் விகற்ப வெகு ருப காரனும்
      வேடுவர் புனத்தில் உரு மாறி முனி சொற்படி வி
      யாகுல மனத்தினொடு போம்விற் காரனும்
      மேவிய புனத்தி தணில் ஓவியம் என திகழு
      மேதகு குறத்தி திரு வேளை காரனே.
      ---.
      5. பெருத்த வசன வகுப்பு
      காபி - ஆதி
      அருக்கன் உலவிய ஜக த்ரயமும் இசை
      அதிற்கொள் சுவை என அனைத்து நிறைவதும்
      அவச்தை பலவையும் அடக்கி அகிலமும்
      அவிழ்ச்சி பெற இனிதிருக்கு மவுனமும்
      அசட்டு வெறு வழி வழக்கர் அறுவரும்
      அரற்று வன பொருள் விகற்பம் ஒழிவதும்
      அழுக்கு மல இருள் முழுக்கின் உழல்வதை
      அடக்கி அவனெறி கடக்க விடுவதும்
      பெருத்த வசனமே அறுமுகவன்
      பெருத்த வசனமே
      சந்த்ரகெளஞ
      எருக்கும் இதழியு முடிக்கும் இறை குரு
      எமக்கும் இறையவன் என திகழு வதும்
      இரட்டை வினை கொடு திரட்டு மலவுடல்
      இணக்கம் அற ஒரு கணக்கை அருள்வதும்
      இருக்கு முதலிய சமச்த கலைகளும்
      இதற இதெதிரென இணைக்க அரியதும்
      இறக்க எனதெதிர் நடக்கும் யமபடர்
      கடக்க விடுவதொர் இயற்கை அருள்வதும்
      பெருத்த வசனமே அறுமுகவன்
      ரஞ்ஜனி
      நெருக்குவன உபனிடத்தின் இறுதிகள்
      நிரப்பு கடையினில் இருப்பை உடையதும்
      நெருப்பு நிலம் வெளி மருத்து வனமென
      நிறைத்த நெறி முறை கரக்கும் உருவமும்
      நினைப்பு நினைவது நினை பவனும் அறு
      நிலத்தில் நிலை பெற நிறுத்த உரியதும்
      நிலைத்த அடியவர் மலைத்தல் அதுகெட
      நிவிர்த்தி உற அனுபவிக்கு நிதியமும்
      பெருத்த வசனமே அறுமுகவன்
      வசந்தா
      உருக்கு திருவருள் திளைத்து மகிழ் தர
      உளத்தொ உரை செயல் ஒளித்து விடுவதும்
      ஒளிக்கும் ஒளியென வெளிக்கும் வெளியென
      உடிர்க்கும் உயிரென நிகழ்ச்சி தருவதும்
      உரத்த தனி மயில் உகைத்து நிசிசரர்
      ஒளிக்க அமர்ப்பொரு சமர்த்தன் அணி தழை
      உடுத்த குறமகள் மணக்கும் அறுமுகன்
      ஒருத்தன் அருளிய பெருத்த வசனமே
      பெருத்த வசனமே அறுமுகவன்
      ---.
      6. வேடிச்சி காவலன் வகுப்பு
      நீலாம்பரி - கண்ட சாபு 212
      உதர கமல தினிடை முதிய புவன த்ரயமும்
      உக முடிவில் வைக்கும் உமை யாள் பெற்ற பாலகனும்
      உமிழ் திரை பரப்பி வரு வெகு முக குல பழைய
      உதக மகள் பக்கல் வரு ஜோதி ஷடானனும்
      உவகையொடு கிர்த்திகையர் அறுவரும் எடுக்க அவர்
      ஒருவர் ஒருவர அவணொர் ஓர் புத்ரன் ஆனவனும்
      உதய ரவி வர்க நிகர் வன கிரண விர்த்த விதம்
      உடைய சத பத்ர நவ பீடத்து வாழ்பவனும்
      உறை சரவண கடவுள் மடுவில் அடர் வஜரதரன்
      உடைய மத வெற்புலைய வேதித்த வீரியனும்
      உரைபெற வகு அருணை நகரின் ஒரு பத்தன் இடும்
      ஒளிவளர் திரு புகழ் மதாணி க்ருபாகரனும்
      உரக கண சித்த கருட யக்ஷ
      உபனிடம் உரை தபடி பூஜிக்கும் வானவனும்
      ஒருவனும் மகிழ்ச்சி தரு குருபரனும் உத்தமனும்
      உபயம் உறும் அக்னி கர மீதிற் ப்ரபாகரனும்
      அதி மதுர சித்ர கவி நிருபனும் அகத்தியனும்
      அடிதொழு தமிழ் த்ரய வினோத கலாதரனும்
      அவரை பொரி எட்பயறு துவரை அவல் சர்க்கரையொ
      அமுது செயும் விக்ன பதி யானை சகோதரனும்
      அவுணர் படை கெட்டு முது மகரஜல வட்ட முடன்
      அபயமிட விற்படை கொ ஆயத்த மானவனும்
      அருணையில் இடை கழியில் உரக கிரியிற் புவியில்
      அழகிய செரு தணியில் வாழ் கற்ப காடவியில்
      அறிவும் அறி தத்துவமும் அபரிமித வித்தை களும்
      அறியென இமை பொழுதின் வாழ் வித்த வேதியனும்
      அரி பிரமருக்கு முதல் அரிய பரமற உயரும்
      அருமறை முடிப்பை உபதேசித்த தேசிகனும்
      அமலனும் எனக்கரசும் அதிகுணனும் நிர்குணனும்
      அகில புவன அமர சேனைக்கு நாயகனும்
      அனுபவனும் அத்புதனும் அனுகுணனும் அக்ஷரனும்
      அருமனம் ஒழிக்கும் அனு பூதி சுகோதயனும்
      இதம் அகிதம் விட்டுருகி இரவு பகல் அற்ற இடம்
      எனதற இருக்கை புரி யோக புராதனனும்
      எனது மனசிற் பரம சுக மவுன கட்கம் அதை
      யமன் முடி துணிக்க விதியா வைத்த பூபதியும்
      எழுமையும் எனை தனது கழல் பரவு பத்தனென
      இனிது கவி அப்படி ப்ரசாதித்த பாவலனும்
      இமையவர் முடி தொகையும் வனசரர் பொருப்பும் என
      இதயமு மணக்கும் இருபாத சரோருகனும்
      எழு தரிய கற்பதரு நிழலில் வளர் தத்தை தழு
      விய கடக வஜர அதிபார புயாசலனும்
      எதிரில் புலவர குதவு வெளி முகடு முட்ட வளர்
      இவுளி முகியை பொருத ராவுத்தன் ஆனவனும்
      எழுபரி ர இரவி எழு நிலமொ அக்கரிகள்
      இடர் பட முழக்கி எழு சேவற் பதாகையனும்
      இணையிலியும் நிர்ப்பயனும் மலமிலியும் நிஷகளனும்
      இளையவனும் விப்ரகுல யாக சபாபதியும்
      மதுகையொடு சக்ரகிரி முதுகு நெளி புவியை
      வளைய வரும் விக்ரம கலாப சிகாவலனும்
      வலிய நிகள தினொடு மறுகு சிறை பட்டொழிய
      வனஜ முனியை சிறிது கோபித்த காவலனும்
      வரு சுரர் மதிக்க ஒரு குருகு பெயர் பெற்ற கன
      வட சிகரி பட்டுருவ வேல் தொட்ட சேவகனும்
      வரதனும் அனுக்ரகனும் நிருதர் குல நிஷடுரனும்
      மனு பவன சித்தனு மனோதுக்க பேதனனும்
      வயிர் இசை முழக்க மிகு மழை தவழ் குறிச்சி தொரும்
      மகிழ் குரவையு திரியும் வேடிக்கை வேடுவனும்
      மரகத மணி பணியின் அணிதழை உடு உலவும்
      வனசரர் கொடிச்சி தனை யாசிக்கும் யாசகனும்
      மதனன் விடு புஷப சர படலம் உடல் அத்தனையும்
      மடல் எழுதி நிற்கும் அதி மோக தபோதனனும்
      வரிசிலை மலை குறவர் பரவிய புன இதணில்
      மயிலென இருக்கும் ஒரு வேடிச்சி காவலனே
      ---.
      7. சேவகன் வகுப்பு
      மாண - அங்கதாளம் 1412 2 112
      இருபிறை எயிரு நிலவெழ உடலம்
      இருள்படு சொருபம் உடைக்கோ விடவே
      இறுகிய கயிறு படவினை முடுகி
      எமபடர் பிடரி பிடித்தே கொடுபோய்
      அருமறி முறையின் முறை கருதி
      அதரிடை வெருவ ஒறுத்தால் வகையால்
      அறிவொடு மதுர மொழியது குழறி
      அவமரு பொழுதில் அழைத்தால் வருவாய்
      ஒருபது சிரமும் இருபது கரமும்
      விழ ஒரு பகழி தொடுத்தோன் மருகா
      உரமது பெரிய திரிபுரம் எரிய
      உயர்கன கிரியை வளைத்தோர் புதல்வா
      மருவளர் அடவி வனிதையர் பரவ
      மரகத இதணில் இருப்பாள் கணவா
      வளை கடல் கதற நிசிசரர் மடிய
      மலையொடு பொருத முழு சேவகனே
      ---.
      8. புய வகுப்பு
      ராகமாலிகை - 26 2 112 4
      யமுனா கலயாணி
      வசை தவிர் ககன சர சிவ கரண மகாவ்ருத
      சீல சால வரமுனி சித்தரை
      அஞ்ஜல் என்று வாழ் வித்து நின்றன
      மணிவட மழலை உடைமணி தபனிய நாண் அழ
      காக நாடி வகை கட்டு ம
      ருங்குடன் பொருந்து ரீதி கிசைந்தன
      வருணித கிரண வெகு தரு ணாதப
      ஜோதி ஆடை வடிவு பெற புனை
      திண் செழுன் குறங்கின் மேல் வை அசைந்தன
      வளை கடல் உலகை வலம் வரு பவுரி வினோத க
      லாப கோப மயில் வதனத்து வி
      ளங்கும் அங்குசம் கடாவி சிறந்தன
      வரை பக நிருதர் முடி மகர மகோததி
      தீயின் வாயின் மறுக விதிர அயில்
      வென்றி தங்கு துங்க வேலை புனைந்தன
      மதியென உதய ரவி என வளை படு தோல் வி
      சால நீலமலி பரிசை படை
      கொண்டு நின்ற் உழன்று சாதிக்க முந்தின
      மன குண சலன மலினமில் துரிய அதீத சு
      கானு பூதி மவுன நிரக்ஷர
      மந்திரம் பொருந்தி மார்பில் திகழ்ந்தன
      வகை குழுமி மொகு மொகென அனேக
      முக ராக மதுபம் விழ சிறு
      சண்பகம் செறிந்த தாரிற் பொலிந்தன
      கமீர்க்கல்யாணி
      மிசை கறுவி வெளிமுக அளவு நிசாசர
      சேனை தேடி விததி பெற சில
      கங்கணன் கறங்க மீதிற் சுழன்றன
      வெருவுவ வெருவ எரிசொரி விழியுள பூத பி
      சாசு போத மிகு தொனி பற்றி மு
      ழங்கு விஞ்சு கண்டை வாசிக்கை கொண்டன
      வித மிகு பரத சுர வனிதையர் கண மேல்தொறும்
      லீலையாக விமல ஜலத்தினை
      விண் திறந்து மொண்டு வீசி பொலிந்தன
      விதரண தருவின் மலரிடை செருகிய கூதள
      நீப மாலை விபுதர் குல குலி
      சன் பயந்த செங்கை யானை இசைந்தன
      விகசித தமர பரி புர முளரி தொழா அபி
      ராம வேடர் விமலை தினை புன
      மங்கை கொங்கை கண்டு வேளை புகுந்தன
      விதிர் தரு சமர முறி கர கமல நகாயுத
      கோழி வீற விதரண சித்ர
      அலங்க்ருதம் புனைந்து பூரி இலங்கின
      விரகுடை எனது மன துடன் அகில் பனினீர் புழு
      கோடளாவி ம்ருகமத கற்புர
      குங்குமன் கலந்து பூசி உதைந்தன
      வினைபுரி பவனி தொழு அழு உருகிய கோதையர்
      தூது போகவிடு மது பக்ஷண
      வண்டினன் திரண்டு சூழ படிந்தன
      பூர்விகல்யாணி
      இசைதனில் இனிய கயிசிகை கவுட வராளி த
      நாசி தேசி பயிரவி குஜஜரி
      பஞ்சுரன் தெரிந்து வீணை இசைந்தன
      இறுதியில் உதய ரவி கண நிகரென ஆறிரு
      காது தோயும் இலகு மணி கன
      விம்ப குண்டலங்கள் மேவி புரண்டன
      எதிர் படு நெடிய தரு அடு பெரிய கடாம் உமிழ்
      நாக மேகம் இடிபட மற்பொரு
      திண் சில அடங்க மோதி பிடுங்கின
      எழு தரும் அழகு நிறமலி திறல் இசையாக உ
      தார தீரம் என உரை பெற்ற
      அடங்கலும் சிறந்து சால ததும்பின
      இருள் பொரு கிரண இரணிய வட குல பாரிய
      மேரு ஜாதி இனமென ஒ உல
      கங்கள் எங்கணும் ப்ரகாசித்து நின்றன
      இயன் முனி பரவ ஒருவிசை அருவரையூ அதி
      பார கோர இவுளி முகத்தவள்
      கொங்கை கொண்ட சண்ட மார்பை பிளந்தன
      இபரத துரக நிசிசரர் கெட ஒரு சூரனை
      மார்பு பீறி அவன் உதிர புனல்
      செங்களன் துளங்கி ஆடி சிவந்தன
      எவை கருதில் அவை தரு
      யால் மணி மேகராசி சுரபி அவற்றொடு
      சங்க கஞ்ச பஞ்ச சாலத்தை வென்றன
      கல்யாணி
      அசைவற நினையும் அவர் பவம் அகலவெ மேல்வரு
      கால தூதரை உடையும் அப்படி
      அங்கும் இங்கும் எங்கும் ஓட துரந்தன
      அகிலமும் எனது செயலல இலையென யானென
      வீறு கூறி அறவு மிகு எழும்
      ஐம்புலன் தியங்கி வீழ திமிர்ந்தன
      அனலெழு துவஜம் உடுகுலம் உதிர வியோமமும்
      ஏழு பாரும் அசலமும் மிக்க பி
      லங்களுங குலுங்க ஆலி அதிர்ந்தன
      அடல் நெடு நிருதர் தளமது மடிய வலாரி தன்
      வானை ஆள அரசு கொடு அப
      யம் புகுந்த அண்டர் ஊரை புரந்தன
      அடவியில் விளவு தள வலர் துளவு குரா மகிழ்
      கோடல் பாடல் அளி முரல் செச்சை
      அலங்கல் செங கடம்பு நேசி அணிந்தன
      அரியதொர் தமிழ்கொ உரிமையொ அடிதொழுதே கவி
      மாலை யாக அடிமை தொடுத்திடு
      புஞ்சொல் ஒன்று நிந்தி யாமற் புனைந்தன
      அழகிய குமரன் உமை திரு மதலை பகீரதி
      மாதர் வாழும் அறுவர் ப்ரி படு
      கந்தன் எந்தை இந்த்ர நீல சிலம்பினன்
      அனுபவன் அனகன் அனனியன் அமலன் அமோகன்
      அனேகன் ஏகன் அபினவன் நித்தியன்
      அஞ்ஜலென் ப்ரசண்ட வாகை புயங்களே.
      ---.
      9. கடைக்கணியல் வகுப்பு
      கிந்தோளம் - ஆதிதிச்ர நடை 12
      அலை கடல் வளைந உடுத்த எழு புவி புரந்தி ருக்கும்
      அரசென நிரந்த ரிக்க வாழலாம்
      அளகை அரசன் தனக்கும் அமரர்
      அரசென அறன் செலுத்தி ஆளலாம்
      அடை பெறுவ தென்று முத்தி அதி மதுர சென் தமிழ்க்கும்
      அருள் பெற நினைந்து சித்தி ஆகலாம்
      அதிர வரும் என்று முட்ட அலகில் வினை சண்டை நிற்க
      அடல் எதிர் புரிந்து வெற்றி ஆகலாம்
      இலகிய நலம் செய் புஷபகமும் உடல் நிறம் வெளுத்த
      இப அரசெனும் பொருப்பும் ஏறலாம்
      இருவரவர் நின்றி டத்தும் எவர் இருந்தி
      ஒருவன் இவன் என்ற் உணர்ச்சி கூடலாம்
      எமபடர் தொடர அழைக்கில் அவருடன் எதிர்ந்துள் உட்க
      இடி என முழங்கி வெற்றி பேசலாம்
      இவை ஒழியவும் பலிப்ப அகலவிடும் உங்கள் வித்தை
      இனை இனிவிடும் பெருத்த பாருளீர்
      முலையிடை கிடந இளைப்ப மொகு மொகென வண்டிரைப்ப
      முகை அவிழ் கடம் படுத்த தாரினான்
      முதலி பெரி அம்பலத்துள் வரை அசல மண்டபத்துள்
      முனிவர் தொழ அன்று நிர்த்தம் ஆடினான்
      முனை தொறு முழங்கி ஒற்றி முகிலென இரங்க எற்றி
      முறை நெறி பறந்து விட்ட கோழியான்
      முதியவுணர் அன்று பட்ட முதிய குடர் நன்று சுற்று
      முது கழுகு பந்தர் இட்ட வேலினான்
      மலை மருவு பைம்பு நத்தி வளரும் இரு குன்ற மொத்தி
      வலிகுடி புகுன் திருக்கு மார்பினான்
      மழலைகள் விளம்பி மொய்த்த அறுவர் முலை உண்டு முற்றும்
      வடிவுடன் வளர்ன் திருக்கும் வாழ்வினான்
      மலை இறை மடந்தை பெற்ற ஒரு மதலை என்ற் உதித்து
      மலை இடியவுன் துணித்த தோளினான்
      மயிலையும் அவன் திருக்கை அயிலையும் கடை கண்
      இயலையு நினைன் திருக்க வாருமே
      வித்தை இனை இனி விடும் பெருத்த பாருளீர்
      கடை கண் இயலையு நினைன் திருக்க வாருமே
      ---.
      10. மயில் வகுப்பு
      ராகமாலிகை - சதுச்ர ஏகம் கண்ட நடை 10
      பைரவி
      ஆதவனும் அம்புலியும் மாசுற விழுங்கி உமிழ்
      ஆல மருவும் பணி இரண்டும் அழுதே
      ஆறுமுகன் ஐந்து முகன் ஆனை எங்கடவுள்
      ஆமென மொழிந அகல வென்று விடுமே
      ஆர்க்கலி கடைந அமுது வானவர் அருந்த அருள்
      ஆதி பகவன் துயில் அனந்தன் மணி சேர்
      ஆயிரம் இருந்தலை களாய் விரி பணன் குருதி
      ஆக முழுதுன் குலைய வந அறையுமே
      நடபைரவி
      வேத முழுதும் புகல் இராமன் ஒரு தம்பி மிசை
      வீடணன் அருந்தமையன் மைந்தன் இகலாய்
      வீசும் அரவன் சிதறி ஓட வரு வெங்கழுலன்
      மேல் இடி எனும்படி முழங்கி விழுமே
      மேதினி சுமந்த பெரு மாசுண மயங்க நக
      மேவு சரணங கொ உலகெங்கும் உழுமே
      வேலியென எண்டிசையில் வாழும் உரகன் தளர
      வே அழல் எனும் சினமுடன் படருமே
      ஆனந்தபைரவி
      போதினில் இருந்த கலை மாதினை மணந்த உயர்
      போதனை இரந்து மலர் கொண்டு முறையே
      பூசனை புரிந்து கொடியாகி மகிழ் ஒன்று துகிர்
      போல்முடி விளங்க வரும் அஞ்ஜம் அடுமே
      பூதரொடு கந்தருவர் நாதரொடு கிம்புருடர்
      பூரண கணங்களொடு வந்து தொழவே
      போரிடுவ வென்று வெகு வாரண கணங்கள் உயிர்
      போயினம் எனும்படி எதிர்ந்து விழுமே
      சிந்துபைரவி
      கோதகலும் ஐந்து மலர் வாளி மதனன் பொருவில்
      கோல உடலன் கருகி வெந்து விழவே
      கோபமொடு கண்ட விழி நாதர் அணியும் பணிகள்
      கூடி மனம் அஞ்ஜி வளை சென்று புகவே
      கூவியிர வந்தம் உணர் வாழி என நின்று பொரு
      கோழியொடு வென்றி முறை யும் பகருமே
      கோலம் உறு செந்தில் நகர் மேவு குமரன் சரண
      கோகனதம் அன்பொடு வணங்கு மயிலே
      குமரன் சரணம் அன்பொடு வணங்கு மயிலே
      முருகன் சரணம் அன்பொடு வணங்கு மயிலே
      குமரன் சரணம் அன்பொடு வணங்கு மயிலே
      ---.
      11. வீரவாள் வகுப்பு
      பீம்பளா - கண்ட சாபு212
      பூ வுளோனுக்கும் உயர் தேவர் கோனுக்கும் எழு
      பூவில் யாவர்க்கும் வரு துன்பு தீர திடுமே
      பூத சேனைக்குள் ஒரு கோடி சூர பிரபை
      போல மா கரிய கங்குல் நீக்கிடுமே
      பூதி பூசி பரமர் தோலை மேல் இட்ட தொரு
      போர்வை போல் நெட்டுறை மருங்கு சேர திடுமே
      போரிலே நிர்த்தம் இடு வீர மா லக்ஷமி மகிழ்
      பூஜை நேசித்து மலர் துமபை சா திடுமே
      பாவ ருப கொடிய சூரனார் பெற்ற பல
      பாலர் மாள தசைகள் உண்டு தேக்கிடுமே
      பானு கோ பகைன்யன் மேனி சோர குருதி
      பாயவே வெட்டி இரு துண்டமா கிடுமே
      பாடுசேர் யுத்தகள மீதிலே சுற்று நரி
      பாறு பேய் துய்த்திட நிணங்கள் ஊட்டிடுமே
      பாடி ஆடி பொருத போரிலே பத்திர க
      பாலி சூல படையை வென்றுதா கிடுமே
      ஆவலாக துதி செய் பாவலோர் மெ கலிக
      ளாம் அகோர களை களைந்து நீ கிடுமே
      யாருமே அற்றவன் என்மீதொர் ஆப உறவ
      ராமலே சுற்றிலும் இருந்து காத்திடுமே
      ஆடல் வேள் நற்படைகள் ஆணை யாவுக்கு முதல்
      ஆணையா வைத்து வலம் வந்து போற்றிடுமே
      ஆல காலத்தை நிகர் கால சூலத்தையும்
      அறாத பாசத்தையும் அரிந்து போட்டிடுமே
      மேவலார் முப்புரமும் நீறவே சுட்ட ஒரு
      மேருவாம் விற் பரமர் தந்த பாக்கியவான்
      வேடர் மானுக்கும் உயர் தேவயானைக்கும் இசை
      வேலர் தாளை தொழு உயர்ந்த வாழ கையினான்
      வீறு சேர் மிக்க கண நாதனார் எட்டு வகை
      வீரர் நே தமையன் என்ற தோட்டுணைவோன்
      மேன்மையாம் லக்ஷ ரத வீரர் பூஜிக்க வரு
      வீரவாகு தலைவன் வென்ற வா படையே
      ---.
      12. திருப்பழனி வகுப்பு
      மத்யமாவதி - சதுச்ர த்ருவம் 4 2 கண்ட நடை
      எந்த வினையும் பவமும் விடமும் படரும்
      எந்த இகலும் பழியும் வழுவும் பிணியும்
      எந்த இகழ்வுன் கொடிய வசியுன் சிறிதும் அணுகாமலே
      எந்த இரவுன் தனிமை வழியும் புகுத
      எந்த இடமுன் சபையில் முகமும் புகலும்
      எந்த மொழியுன் தமிழும் விசையும் பெருமை சிதறாமலே
      வந்தனை செய் துன் சரண நம்புதல் புரிந்த அருள்
      வந அனுதினன் தனிலும் நெஞ்ஜில் நினைவின் படி வ
      ரந்தர உவந்தருள் இதம் பெறுவதன்றி நெடு வலை வீசியே
      வஞ்ஜ விழி சண்டன் உறுகின்ற பொழுதுன் குமர
      கந்த என நங அறையவுன் தெளிவு தந்துயிர் வ
      ருந்து பயமுன் தனிமையுன் தவிர அஞ்ஜலென வரவேணுமே
      முருகேசனே வரவேணுமே
      முருகேசனே வரவேணுமே
      முருகேசனே வரவேணுமே
      தன் தனன டிண்டி
      குண்ட மட மண்ட மென நின்று
      சந்திமிலை பம்பைதுடி திண்டிம முழங்கும் ஒலி திசை வீறவே
      தண்ட அமர் மண்டசுரர் மண்டை நிணம் என்றலகை
      உண்டுமிழ்தல் கண்டமரர் இந்திரன் வணங்கு பத
      தண்டை சிறு கிங்கிணி புலம்பிட வரும் பவனி மயில் வாகனா
      சென் தளிரை முந்து படம் என்றுள மருண்டு நிறை
      சந்தன வனன் குலவு மந்தி குதிகொண அயல் செ
      றிந்த கமுகின் புடை பதுங்கிட வளைந்து நிமிர் மடல் சாடவே
      சிந்திய அரம்பை பல விங்கனியில் வந்து விழ
      மெங்கனி உடைந்த சுளை விண்ட நறை கொண்டு சிறு
      செண்பக வனங்கள் வளர் தென் பழனியம் பதியின் முருகேசனே
      வரவேணுமே முருகேசனே
      வரவேணுமே முருகேசனே
      வரவேணுமே முருகேசனே
      ---